ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் க

 ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா

ஜும்மா உரையில் அபூபக்ர் உமர் உஸ்மான் அலி ஆகிய நபித்தோழர்களின் பெயர்களைக் கூறி துஆ செய்வது நபிவழியா

நியாஸ் மீரா சாஹிப்

பதில்

அபூபக்ர் (ரலி) உள்ளிட்ட நான்கு கலீபாக்களின் பெயர்களையும், நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முஸ்லிம் உறவினர்களின் பெய்ரகளையும் வாசித்து வாரம் தோறும் குத்பாவில் துஆ செய்யும் வழக்கம் நபிகள் நாயகம் ஸல் காலத்தில் இருக்கவில்லை. இருந்திருக்கவும் முடியாது. மேற்கண்ட தோழர்கள் கலீபாக்களாக நியமிக்கப்பட்ட காலத்திலும் இப்படி ஒரு ந்டைஅ முறை அவர்களால் அமுல்படுத்தப்படவில்லை. மிகவும் பிற்காலத்தில் வந்தவர்கள் தான் இப்படி ஒரு வழக்கத்தை ஏற்படுத்தினார்கள். ஜும்மா உரையில் நபித்தோழர்களின் வரலாறைக் கூற நேர்ந்தால் அவர்கள் பெயரைக் குறிப்பிடும் போது அல்லாஹ் அவர்களை பொருந்திக் கொள்வானாக என்று துஆ செய்யலாம். ஆனால் ஒவ்வொரு வாரமும் அந்த நபித்தோழர்களின் பெய்ரக்ளைக் குறிப்பிட்டே ஆக வேண்டும் என்பதும் அவர்களுக்காக துஆ செய்வது ஜும்மாவின் விதிமுறைகளில் ஒன்றாகும் என்ற நிலையை ஏற்படுத்துவது பித் அத்தாகும் இது பாவமான செயலாகும். இதை கட்டாயம் தவிர்க்க வேண்டும்

இன்றைக்கு சுன்னத் வல் ஜமாஅத் என்று சொல்லிக்கொள்பவர்கள் மக்களுக்கு புரியாத அரபு பாஷையில் ஒவ்வொரு ஜும்ஆவிலும் இதை மந்திரமாக ஓதிவருகின்றனர்.

இதை ஒவ்வொரு ஜும்ஆவிலும் ஓத வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஆற்றி உரையில் இது போன்று ஒரு தடவை சொன்னதாகக் கூட சான்றுகள் இல்லை. எனவே இது மார்க்கத்தில் இல்லாத பித்அத்தாகும்.

13.05.2011. 13:54




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
41 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி