ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில

ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா 

அனூத்

பதில்

ஒருவர் இறந்து விட்டால் அவ்வீட்டார் சோகமாக இருப்பார்கள். அவர்கள் சமைக்கும் மன நிலையில் இருக்க மாட்டார்கள். எனவே அவர்களுக்காக மற்றவர்கள் உணவளிக்க வேண்டும் என்பது இஸ்லாமியச் சட்டம். இந்த அர்த்த்தில் மய்யித் வீட்டில் அடுப்பெரியக் கூடாது என்று கூறினால் அதில் தவறில்லை.

ஜஃபர் (ரலி) அவர்கள் மூத்தா போரில் கொல்லப்பட்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள். மேலும் ஜஃபரின் வீட்டினருக்கு கவலை தரும் செய்தி வந்து விட்டதால் அவரது குடும்பத்தாருக்காக உணவு சமைத்து கொடுங்கள் என்று கூறினார்கள்.

 அறிவிப்பபவர் : அப்துல்லாஹ் பின் ஜஃôபர் (ரலி) -

 நுôல் : திர்மிதீ (919)

ஒரு வீட்டில் யாரேனும் இறந்து விட்டால் அவ்வீட்டிலுள்ளவர்கள் சோகத்தில் இருப்பார்கள். இந்நிலையில் அவர்களுக்கு அண்டை வீட்டாரோ அல்லது உறவினர்களோ உணவு சமைத்து கொடுக்குமாறு மார்க்கம் கூறுகிறது.

ஆனால் இறந்தவருடைய வீட்டிலேயே விருந்து ஏற்பாடு செய்யப்பட்டு அங்கு உறவினர்கள் அண்டை வீட்டார்கள் போய் சாப்பிடும் நிலை மக்களிடம் உள்ளது. இது நபிவழிக்கு முரணானதும் மனிதாபிமானமற்ற செயலுமாகும்.

எந்தத் தேவைக்காகவும் அடுப்பெரிக்கக் கூடாது என்ற அர்த்தத்தில் இப்படி கூறினால் அது தவறாகும். மூட நம்பிக்கையாகும்.

29.03.2011. 00:02




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
38 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி