பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்

கேள்வி  எந்த ஒரு காரியம் செய்ய துவங்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி துவங்குவது சிறந்தது. சாப்பிட துவங்கும் முன் அதே போல் சொல்வதே நல்லது. அப்படி சொல்ல மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் முன் சொல்ல வேண்டிய பிஸ்மில்லாஹ்வை கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி ஆகிரிஹி என்று சொல்லலாமா?

ரஃபீக் நாகர் கோயில்

பதில் 

1781    حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنْ أُمِّ كُلْثُومٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ وَبِهَذَا الْإِسْنَادِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ طَعَامًا فِي سِتَّةٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ أَعْرَابِيٌّ فَأَكَلَهُ بِلُقْمَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ لَوْ سَمَّى لَكَفَاكُمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأُمُّ كُلْثُومٍ هِيَ بِنْتُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ رواه الترمدي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  உங்களில் ஒருவர் உணவைச் சாப்பிட்டால் (ஆரம்பத்தில்) பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். அதன் ஆரம்பத்திலே பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறட்டும்.

அறிவிப்பவர்  ஆயிஷா (ரலி)

நூல் திர்மிதி (1781) 

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்தான் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். மற்ற விஷயங்களுக்கு அவ்வாறு கற்றுத்தரவில்லை.

மற்ற காரியங்களைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். மறந்து விட்டால் அதற்காக வேறு எதனையும் கூற வேண்டியதில்லை. வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை பொதுவான ஆதாரம் இருந்தால் அது போன்ற அனைத்துக்கும் அதைப் பொருத்திக் கொள்ளாம். குறிப்பிட்ட ஒரு காரியம் தொடர்பாக கூறப்பட்டதை மற்ற காரியங்களுக்குப் பொருத்திக் கொள்ளக் கூடாது.

17.01.2012. 00:16




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
43 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி