786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும்

786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும் கூடுமா 

786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஆனால் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரை பீஜே என்று சுருக்கிச் சொல்வது போல் இதை எடுத்துக் கொள்ள் முடியாதா?

நஸ்ருத்தீன்

பதில்

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதற்குப் பதிலாக 786 என்று குறிப்பிடும் முறை நம் சமுதாயத்தில் பலரிடம் உள்ளது. ஒருவரின் பெயரில் உள்ள ஆரம்ப எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கமும் உள்ளது. இந்த இரண்டும் ஒன்று தானே என்று நீங்கள் கேட்கிறீர்கள்.

இந்த இரண்டு முறைகளுக்கும் இடையே உள்ள வேறுபாடுகளை அறிந்து கொண்டால் முதல் முறை தவறானது என்பதும் இரண்டாவது முறை அனுமதிக்கப்பட்டது என்பதும் தெளிவாகிவிடும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்று எழுதி துவங்குவது இஸ்லாம் கற்றுக் கொடுத்த ஒரு வணக்கம். இஸ்லாமிய வணக்க முறைகளை நம் இஷ்டத்துக்கு செய்யக் கூடாது. குர்ஆன் ஹதீஸில் கூறப்பட்டவாறே செய்ய வேண்டும்.

பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பதை 786 என்று குறிப்பிடலாம் என குர்ஆனிலோ நபிகளாரின் பொன்மொழிகளிலோ கூறப்படவில்லை. எனவே இவ்வாறு குறிப்பிடுவது மார்க்கத்தில் இல்லாத அநாச்சாரமாகும்.

அடுத்து பிஸ்மில்லாஹிர் ரஹ்மானிர் ரஹீம் என்பது அரபுச் சொல்லாகும். இந்த அரபுச் சொல்லை 786 என்ற எண்ணில் குறிப்பிடுவதாக இருந்தால் இவ்வாறு குறிப்பிடும் வழக்கம் அரபு மொழியில் இருக்க வேண்டும். ஆனால் இவ்வாறு எழுதும் வழக்கம் அரபுமொழியில் அறவே கிடையாது. தமிழ் மொழி பேசக்கூடிய நமது சமுதாயத்திலும் இப்படியொரு வழக்கம் இல்லை.

ஒரு சொல்லில் உள்ள ஒவ்வொரு எழுத்துக்களுக்கும் குறிப்பிட்ட எண்களை வழங்கி மொத்த எண்களையும் கூட்டி கிடைக்கும் எண்ணால் அச்சொல்லை குறிப்பிடும் இம்முறை யூதர்கள் கண்டுபிடித்த முட்டாள்தனமான முறையாகும்.

ஒருவரின் பெயரைச் சுருக்கி அழைப்பது இது போன்றதல்ல. மனிதப் பெயர்களைச் சொல்வது வணக்கமில்லை. வணக்கமில்லாத விஷயங்களில் நமது இஷ்டப்படி செய்வது தவறில்லை.

மேலும் பெயரில் உள்ள முதல் எழுத்துக்களை மட்டும் குறிப்பிட்டு அழைக்கும் வழக்கம் மொழியில் இருக்கின்றது. பலர் இவ்வாறு அழைக்கப்படுகிறார்கள். கடைகளுக்கும் பேருந்துகளுக்கும் கூட இவ்வாறு பெயர் வைக்கப்படுகின்றது. எனவே இதுவும் 786 என்று எழுதுவதுவும் ஒரே மாதிரியானதல்ல.

மேலும் இது குறித்து அறிய

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/786emral_enna/

http://onlinepj.com/kelvi-pathil-wmv-mp3-3gp/786_artham_enna/

27.10.2011. 13:33




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
44 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி