பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்

பிஸ்மில்லாஹ் கூற மறந்துவிட்டால்

கேள்வி  எந்த ஒரு காரியம் செய்ய துவங்கும் போது பிஸ்மில்லாஹ் என்று சொல்லி துவங்குவது சிறந்தது. சாப்பிட துவங்கும் முன் அதே போல் சொல்வதே நல்லது. அப்படி சொல்ல மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி ஆகிரிஹி என்று சொல்கிறோம். அதே போல் பிற காரியங்களைச் செய்யும் முன் சொல்ல வேண்டிய பிஸ்மில்லாஹ்வை கூற மறந்தால் விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி ஆகிரிஹி என்று சொல்லலாமா?

ரஃபீக் நாகர் கோயில்

பதில் 

1781    حَدَّثَنَا أَبُو بَكْرٍ مُحَمَّدُ بْنُ أَبَانَ حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا هِشَامٌ الدَّسْتُوَائِيُّ عَنْ بُدَيْلِ بْنِ مَيْسَرَةَ الْعُقَيْلِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُبَيْدِ بْنِ عُمَيْرٍ عَنْ أُمِّ كُلْثُومٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا أَكَلَ أَحَدُكُمْ طَعَامًا فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فَإِنْ نَسِيَ فِي أَوَّلِهِ فَلْيَقُلْ بِسْمِ اللَّهِ فِي أَوَّلِهِ وَآخِرِهِ وَبِهَذَا الْإِسْنَادِ عَنْ عَائِشَةَ قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْكُلُ طَعَامًا فِي سِتَّةٍ مِنْ أَصْحَابِهِ فَجَاءَ أَعْرَابِيٌّ فَأَكَلَهُ بِلُقْمَتَيْنِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَمَا إِنَّهُ لَوْ سَمَّى لَكَفَاكُمْ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَأُمُّ كُلْثُومٍ هِيَ بِنْتُ مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ الصِّدِّيقِ رَضِيَ اللَّهُ عَنْهُ رواه الترمدي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்  உங்களில் ஒருவர் உணவைச் சாப்பிட்டால் (ஆரம்பத்தில்) பிஸ்மில்லாஹ் என்று கூறட்டும். அதன் ஆரம்பத்திலே பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறட்டும்.

அறிவிப்பவர்  ஆயிஷா (ரலி)

நூல் திர்மிதி (1781) 

மேற்கண்ட ஹதீஸில் நபியவர்கள் சாப்பிடும் போது பிஸ்மில்லாஹ் கூற மறந்து விட்டால்தான் பிஸ்மில்லாஹி ஃபீ அவ்வலிஹி வஆகிரிஹி என்று கூறவேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள். மற்ற விஷயங்களுக்கு அவ்வாறு கற்றுத்தரவில்லை.

மற்ற காரியங்களைத் துவக்கும் போது பிஸ்மில்லாஹ் கூற வேண்டும். மறந்து விட்டால் அதற்காக வேறு எதனையும் கூற வேண்டியதில்லை. வணக்க வழிபாடுகளைப் பொருத்தவரை பொதுவான ஆதாரம் இருந்தால் அது போன்ற அனைத்துக்கும் அதைப் பொருத்திக் கொள்ளாம். குறிப்பிட்ட ஒரு காரியம் தொடர்பாக கூறப்பட்டதை மற்ற காரியங்களுக்குப் பொருத்திக் கொள்ளக் கூடாது.

17.01.2012. 00:16

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்ட

பிற்காலத்தில் உண்டாக்கப்பட்ட கொண்டாட்டங்கள் கூடுமா

நபி (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம் மிஃராஜ் பயணம் அவர்களின் பிறப்பு மக்கா வெற்றி மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் ஆகிய வரலாற்றுச் சம்பவங்கள் நினைவூ கூறும் விதமாக கொண்டாடுவது தவறல்ல என்று யூசுஃப் அல்கர்ளாவி என்பவர் கூறியதாகச் சொல்கிறார்கள். இது பற்றி உங்கள் கருத்து என்ன?

பதில்

குர்ஆன், ஹதீஸ் ஆகிய இரண்டைத் தவிர்த்து வேறு யாருடைய கூற்றையும் மார்க்க ஆதாராமாக எடுக்க்க்கூடாது. யூசுஃப் கர்ளாவி கொடுக்கும் தீர்ப்பைக் கண்மூடிக்கொண்டு ஏற்பதற்கு அவர் ஒன்றும் அல்லாஹ்வின் தூதரில்லை.

எல்லோரையும் போன்று அவரும் சாதாரண மனிதர். மார்க்கத் தீர்ப்பு வழங்குவதில் மற்ற அறிஞர்களிடம் தவறு ஏற்பட்டிருப்பதைப் போன்று இவருடைய தீர்ப்புகளிலும் நிறைய தவறு இருக்கின்றது. வட்டி போன்ற பெரும்பாவமான காரியங்களை தற்காலத்தில் செய்யலாம் என்று தவறான தீர்ப்பை வழங்கியுள்ளார்.

சமகாலத்தில் வாழும் பிரபலமானவர்களில் அறிவுத்திறனும் ஆராய்ச்சித் திறனும் அற்ற கூறு கெட்டவராக இவர் காட்சியளிக்கிறார்.

எனவே இவர் மட்டுமல்ல மார்க்கத்திற்கு மாற்றமான கருத்தை யார் சொன்னாலும் அந்தக் கருத்து தூக்கி எறியப்பட வேண்டியது.

இஸ்லாத்தில் கொண்டாடி மகிழ்வதற்கு இரண்டு பெருநாட்களைத் தவிர வேறு எதுவுமில்லை என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் திட்டவட்டமாக தெரிவித்து விட்டார்கள்.

மதீனாவாசிகள் அவர்களாக பெருநாட்களை உருவாக்கி கொண்டாடி வந்தனர். இதை விட்டுவிட்டு அல்லாஹ் கற்றுக்கொடுத்த நோன்புப் பெருநாள் ஹஜ்ஜுப் பெருநாள் ஆகிய இரண்டை மட்டுமே பெருநாளாக ஆக்கிக் கொள்ளுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

959 حَدَّثَنَا مُوسَى بْنُ إِسْمَعِيلَ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ حُمَيْدٍ عَنْ أَنَسٍ قَالَ قَدِمَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْمَدِينَةَ وَلَهُمْ يَوْمَانِ يَلْعَبُونَ فِيهِمَا فَقَالَ مَا هَذَانِ الْيَوْمَانِ قَالُوا كُنَّا نَلْعَبُ فِيهِمَا فِي الْجَاهِلِيَّةِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ قَدْ أَبْدَلَكُمْ بِهِمَا خَيْرًا مِنْهُمَا يَوْمَ الْأَضْحَى وَيَوْمَ الْفِطْرِ رواه أبو داود

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மதினாவிற்கு வந்தார்கள்.  (மதீனத்து) மக்களுக்கு இரண்டு நாட்கள் (பெருநாட்களாக) இருந்தன.  அதில் அவர்கள் விளையாடுவார்கள். இந்த இரண்டு நாட்களும் என்ன? என்று நபிகள் நாயகம் (ஸல்) கேட்டார்கள்.  அறியாமைக் காலத்தில் நாங்கள் அந்த இரண்டு நாட்களிலும் விளையாடுவோம் என்று மக்கள் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அல்லாஹ், அவ்விரண்டையும் விட சிறந்ததை அவ்விரண்டிற்கும் பதிலாக உங்களுக்குத் தந்திருக்கின்றான்.  அவை ஹஜ்ஜுப் பெருநாளும் நோன்புப் பெருநாளுமாகும்'' என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (959)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஹிஜ்ரத் பயணம், மிஃராஜ் பயணம், அவர்களின் பிறப்பு, மக்கா வெற்றி, மற்றும் அவர்கள் சந்தித்த போர்கள் இது போன்ற முக்கியமான நிகழ்வுகள் நடந்த நாட்களைக் கொண்டாடலாம் என்றால் இறைத்தூதர் (ஸல்) அவர்கள் இதை ஏன் சமுதாயத்துக்குக் கற்றூக் கொடுக்கவில்லை? இவை அநாச்சாரம் என்பதற்கு இந்த ஒரு கேள்வியே போதுமானது.

இஸ்லாமிய வரலாற்றில் சிறப்புமிக்க சம்பவங்கள் நிறைய இருக்கின்றன. அவற்றைப் படித்து படிப்பினை பெறுவது தான் அறிவாளியின் செயல். இதை விடுத்து கணக்கின்றி கொண்டாட்டங்களை அடுக்கிக்கொண்டு போது நரகத்தில் இழுத்துச் செல்லும் பித்அத்தாகும்.

11.01.2012. 23:08

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ்

நலம் விசாரித்தால் அல்ஹம்துலில்லாஹ் கூறுவது ஏன்

ஷேக் மைதீன்

பதில்

நம் நலனைப் பற்றி யாராவது விசாரித்தால் அவருக்கு அல்ஹம்துலில்லாஹ் என்று பதிலளிக்கும் நடைமுறை பலரிடம் உள்ளது. இவ்வாறு தான் பதிலளிக்க வேண்டும் என மார்க்கம் கட்டளையிடவில்லை. இது நாமாக ஏற்படுத்திக்கொண்ட சொல் வழக்காகும். நம்மிடம் நலம் விசாரிக்கும் போது இவ்வாறு தான் கூற வேண்டும் அது தான் சுன்னத் என்று நினைத்தால் அவ்வாறு சொல்லாதவர்களை சுன்னத்தை விட்டவர்கள் போல் கருதும் நிலை இருந்தால் அதுபித் அத்தாக ஆகி விடும்.

 

நான் நன்றாக இருக்கிறேன் அதற்காக அல்லாஹவைப் புகழ்கிறேன் என்ற கருத்தில் சுன்னத் என்று கருதாமல் தன்னிச்சையாக இவ்வாரு கூறினால் அது குற்றமாகாது.   

நபிகள் நாயகம் ஸல் அவர்களை இவ்வாறு யாரும் நோய் விசரிக்கும் போது இவ்வாறு கூறியதாகவோ அல்லது அவர்கள் நோய் விசாரித்த போது மற்றவர்கள் அவர்களிடம் இவ்வாறு கூறியதாகவோ நாம் தேடியவரை எந்த ஆதாரத்தையும் காண முடியவில்லை.

மேலும் கூடுதல் விளக்கத்துக்கு இதையும் பார்க்கவும்

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/eid_mubarak/

http://onlinepj.com/bidath/pernal_vazthu/

http://onlinepj.com/kelvi_pathil/bidath_kelvi/bidath_nafil_verubadu/

01.01.2012. 12:19

786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும்

786 கூடாது என்றால் பீஜெ என்பது மட்டும் கூடுமா 

786 குறித்த உங்களின் விளக்கத்தை நான் அறிவேன். ஆனால் பீ.ஜைனுல் ஆபிதீன் என்ற பெயரை பீஜே என்று சுருக்கிச் சொல்வது போல் இதை எடுத்துக் கொள்ள் முடியாதா?

தொடர்ந்து படிக்க 27.10.2011. 13:33

ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் க

 ஜும்மா உரையில் கலீபாக்களின் பெயர் கூற வேண்டுமா

தொடர்ந்து படிக்க 13.05.2011. 13:54

ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில

ஒருவர் இறந்து விட்டால் அவரது வீட்டில் அடுப்பு எரியக்கூடாதா 

அனூத்

தொடர்ந்து படிக்க 29.03.2011. 00:02

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா

இறந்தவருக்கு யாஸீன் ஓத ஆதாரம் உண்டா 

யாஸீன் மற்றும் குர்ஆன் தமாம் செய்வது குறித்த தெளிவான ஹதீஸைக் கூறவும். எனது நண்பர் தமாம் செய்வதற்கு ஆதாரம் உண்டு என்று ஹதீஸைக் காட்டுகிறார். இதனால் எனக்கு குழப்பம் ஏற்படுகிறது

தொடர்ந்து படிக்க 28.03.2011. 13:07

வீட்டின் முன் அல்லாஹு அக்பா் என்று எ

 கேள்வி

வீட்டின் முன் அல்லது வீட்டின் உள்ளே அல்லாஹு அக்பர் என்று அல்லது லாஇலாஹ இல்லலல்லாஹ் முஹம்மதுர் ரஸுலுல்லாஹ் என்று எழுதலாமா? பிரேம் போட்டு தொங்க விடலாமா?  விளக்கம் தேவை.

தொடர்ந்து படிக்க 12.08.2010. 11:44

புர்தா ஓதலாமா?

 புர்தா ஓதலாமா?

மார்க்க அறிவு சிறிதுமற்ற பூசிரி என்னும் கவிஞனால் எழுதப்பட்டதே புர்தா எனும் நூல்.  இதை அல்லாஹ்வுடைய வேதத்தை விட மேலானதாகவும், அல்லது அதற்குச் சமமானதாகவும் விபரமறியாத முஸ்லிம்கள் நம்புகின்றனர்.

தொடர்ந்து படிக்க 01.04.2010. 12:51

ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது?

ஹிஜ்ரி ஆண்டு எப்போது ஆரம்பம் ஆனது? அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தார்களா?

ஷாஹுல்

ஹிஜ்ரி ஆண்டு எனும் ஆண்டைக் கணக்கிடும் முறை இஸ்லாமிய ஆண்டு என்று கூறப்பட்டாலும் குர்ஆனிலோ ஹதீஸிலோ இதற்கு ஆதாரம் இல்லை.

தொடர்ந்து படிக்க 09.01.2010. 01:05

புதுமனை புகுவிழா கொண்டாடலாமா

? புதுமனை புகுவிழா கொண்டாடலாமா? கடன் வாங்கிக் கட்டியிருக்கும் வீட்டிற்கும் இது பொருந்துமா? விருந்தும் வைக்க வேண்டுமா?

புதுமனைப் புகுவிழா என்ற ஒன்று மார்க்கத்தில் இல்லை. புதுமனைப் புகுவிழா என்ற பெயரில் மவ்லிது பாத்திஹா ஓதுதல் போன்ற மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடைபெறுகின்றன. புது வீட்டில் முதன் முதலில் பால் காய்ச்ச வேண்டும் என்ற நம்பிக்கையும் உள்ளது.

தொடர்ந்து படிக்க 17.10.2009. 22:30

ஈத் முபாரக்

ஈத் முபாரக் சொல்லலாமா

(பெருநாள் வாழ்த்து என்று சொல்வது ஆசி வழங்குவது போல் உள்ளது என்பதால் அதைத் தவிர்க்க வேண்டும் என்று நாம் இந்த ஆக்கத்தில் தெரிவித்திருந்தோம்.

தொடர்ந்து படிக்க 28.09.2009. 01:25

3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள்

ஒரு நபித்தோழர் மரணித்த அன்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்த நபித்தோழரின் வீட்டில் உணவு உண்டார்கள் என்று ஹதீஸ் உள்ளது; எனவே 3, 7, 10, 40 ஃபாத்திஹாக்கள் மற்றும் வருடப் பாத்திஹா ஓதி சாப்பாடு உண்ணலாம்; தவறில்லை என்று ஒருவர் கூறுகின்றார். இது சரியா?

இது தவறாகும்.
விபரத்துக்கு இங்கே கிளிக் செய்யவும்

09.09.2009. 18:27

சுதந்திர தினத்தை முன்னிட்டு

சுதந்திர தினத்தை முன்னிட்டு பல்வேறு முஸ்லிம் அமைப்பினர் இரத்த தானம் செய்து வருகின்றனர். நாட்டில் விஷேசமாகக் கொண்டாடப்படும் ஒரு தினத்தைத் தேர்ந்தெடுத்து இரத்த தானம் செய்வது பித்அத் இல்லையா?

தொடர்ந்து படிக்க 26.08.2009. 18:10

786 என்றால் என்ன?

786 என்றால் என்ன? இஸ்லாத்திற்கும் இதற்கும் என்ன சம்மந்தம்? இதை பயன்படுத்தலாமா?

தொடர்ந்து படிக்க 26.08.2009. 05:48

மார்க்க முரணான காரியங்கள்

மார்க்க முரணான காரியங்கள் நடக்கும் சபைகளில் பங்கேற்பது

மாற்று மத சகோதரர்களின் திருமணம் மற்றும் இதர விசேஷங்களிலும், விருந்துகளிலும் கலந்து கொள்வது மார்க்கத்திற்கு முரணான காரியமா? அவர்கள் வரதட்சணை வாங்கித் திருமணம் முடித்தாலும் கலந்து கொள்ளலாமா?

தொடர்ந்து படிக்க 15.08.2009. 06:22

பைஅத் குறித்து எதிர்க்கருத்து சரியா?

பைஅத் குறித்து எதிர்க்கருத்து சரியா?

உமர் அலி என்பவர் பைஅத் அவசியம் என்று பேசி வருகிறார். 48:10, 9:103 வசனங்களை ஆதாரமாகக் காட்டுகிறார்.

தொடர்ந்து படிக்க 06.05.2010. 23:12

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா

மாப்பிள்ளை தேடவே பூப்பெய்தல் விழா
பெண்கள் பருவமடையும் போது அதை விளம்பரம் செய்தால் தான் பெண் கேட்டு வருவார்கள். இந்த வீட்டில் திருமணத்துக்கு தகுதியான ஒரு பெண் இருக்கிறாள் என்பது அப்போது தான் தெரியும் என்று இதற்கு காரணம் கூறுகிறார்கள். இது சரியா?

தொடர்ந்து படிக்க 19.01.2011. 00:55

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா

தினமும் வாகிஆ அத்தியாயம் ஓதலாமா

தினசரி வாகிஆ அத்தியாயம் ஓதினால் ஆரோக்கியம் கிடைக்கும் என்கிறார்கள். அது சரியா? சரி இல்லை என்றால் இரவில் எதை ஓதுவது?

தொடர்ந்து படிக்க 31.12.2010. 11:43

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுப

பித்அத்துக்கும் நஃபிலுக்கும் வேறுபாடு என்ன?

தொடர்ந்து படிக்க 06.12.2010. 04:37

<< First < Previous [1 / 2] Next > Last >>



செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
88 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி