உலக மொழிகளில் ஆன்லைன் பி.ஜே

கூகுளின் தானியங்கி ஆன்லைன் மொழிபெயர்ப்பு சேவை (google translate)  நேற்றைய முன்தினம் தமிழ் மொழிக்கான மொழிபெயர்ப்பு சேவையை துவங்கியது.

இதன் மூலம் நமது இணையதளத்தை ஆங்கிலம், அரபி, உருது போன்ற நீங்கள் விரும்பும் பிற மொழிகளில் படித்துக் கொள்ளலாம்.

இனிமேல் உங்கள் நண்பர் தமிழ் மொழி தெரியாதவராக இருந்தால் அவரிடம் நீங்கள் தஃவா செய்ய சிரமப்படத் தேவையில்லை.

உங்கள் நண்பர்கள், உறவினர்களுக்கு தெரிந்த மொழிகளிலேயே நமது ஆன்லைன் பி.ஜே இணையதளத்தின் கட்டுரைகள், புத்தகங்கள் ஆகியவற்றை அவர்களுக்கு அனுப்பலாம். படிக்கக் கொடுக்கலாம்.

இதற்கான வசதி நமது இணையதளத்தின் முகப்பில் செய்யப்பட்டுள்ளது. தங்களுக்கு தேவையான மொழியைத் தேர்வு செய்து படித்துக் கொள்ளலாம். முகப்பில் குறிப்பிடப்படாத மொழிகளிலும் தாங்கள் விரும்பினால் படித்துக் கொள்ளலாம்.



தமிழ் மொழிபெயர்ப்பு சேவையை கூகுள் மற்ற மொழிகளைப் போன்று தற்சயம் மிகத் துல்லியமானதாகத் தரவில்லை. சோதனை முறையிலேயே அறிமுகப்படுத்தியுள்ளது. அனைத்து மொழிபெயர்ப்புகளும் மிகச் சரியானதாக இருக்காது.

எனவே மொழிபெயர்ப்புகளில் தவறுகள் ஏதும் இருப்பின், அல்லது மொழிபெயர்ப்பு சரியில்லை எனில் இது கூகுளின் தொழில் நுட்பத்தால் தானாக மொழிமாற்றம் செய்யப்பட்டது என்பதையும் நமது ஆன்லைன்பிஜே இணையதளம் அதை மொழிபெயர்க்கவில்லை என்பதையும் நினைவில் கொள்ளவும்.

எனினும் நாளடைவில் மற்ற மொழிகளைப் போன்று தமிழ் மொழிபெயர்ப்பும் மிகத் துல்லியமானதாக மாறிவிடும் என கூகுள் தெரிவித்துள்ளது குறிப்பிடத்தக்கது.

மொழிபெயர்ப்பில் தாங்கள் ஏதும் தவறைக் கண்டால் அதை தாங்களே கூகுளுக்கு சுட்டிக்காட்டி திருத்தம் செய்யலாம். இதற்கான வசதியையும் கூகுள் செய்துள்ளது.

நேயர்களுக்கு இது தொடர்பாக சந்தேகம் இருப்பின் இணையதளத்தின் உங்கள் கருத்து பகுதியில் தொடர்பு கொள்ளவும்.
 

ஒரு சந்தேகமும் விளக்கமும்

”இறை” என்பதற்கு ஜீசஸ் என்றும் ”வேதம்” என்பதற்கு பைபிள் என்றும் கூகுள் மொழிபெயர்க்கின்றது. 
 
ஏற்கனவே செய்யப்பட்ட தமிழ் ஆங்கில மொழியெர்ப்புகளை வைத்துத் தான் கூகுள் தானியங்கி முறையில் மொழிபெயர்ப்புகளை வழங்குகின்றது. யாரும் சொல்லிக் கொடுத்தோ அல்லது இன்ன வார்த்தைக்கு இன்ன ஆர்த்தம் தான் வர வேண்டும் என்ற ப்ரோகிறாமோ செய்யப்படவில்லை.
 
இந்த விளக்கத்தை பின்வரும் வீடியோவில் கூகுள் நிறுவனம் தருகின்றது.
 
 
ஏற்கனவே செய்யப்பட்ட தமிழ் ஆங்கில மொழிபெயர்ப்புகளில் கிறிஸ்துவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு அதிகமாக இருப்பதால் பெரும்பான்மையான இடங்களில் வரும் அதிகப்படியான வார்த்தையை கூகுள் தானாக எடுத்துக் கொண்டு இது போன்று மொழிபெயர்க்கின்றது.
 
இஸ்லாமிய நூல்களின் தமிழ் மொழியெர்ப்புகளை விட கிறிஸ்தவர்களின் தமிழ் மொழிபெயர்ப்பு தான் இணையதளம் மற்றும் இன்ன பிற ஊடங்களில் அதிகம் உள்ளதால் இது போன்று ஏற்படுகின்றது.
 
இதே நேரத்தில் இதே வாசகத்தை இது இறை வேதம்” அரபியில் பைபில் என்றோ ஜீசஸ் என்றோ கூகுள் மொழிபெயர்க்கவில்லை
 
தமிழ் மொழியாக்கத்தை கூகுள் இன்னும் முழுவதுமாக மற்ற மொழிபெயர்ப்புகளை போன்று கொண்டு வரவில்லை. ஆரம்பத்திலேயே இதை நாம் ஆன்லைன்பிஜே இணையதளத்தில் குறிப்பிட்டோம். முழுமை அடைந்தவுடன் இது போன்று தவறு நிகழ வாய்ப்பில்லை!
 
இவைகளை சரி செய்ய 
என்ன செய்யலாம்?

இதை சரி செய்யவும் கூகுள் வழிவகை செய்துள்ளது எல்லா மொழிபெயர்ப்பு வார்த்தைகளுக்கு கீழும் ”contribute a better translation" என்ற ஒரு வசதியை செய்துள்ளது. ”இதை விட நல்ல மொழிபெயர்ப்பை எங்களுக்கு தெரியப்படுத்தி உதவுங்கள்” 

இதில் நாம் சரியான மொழியெர்ப்பைக் கொடுத்தால் சில நாட்களில் அது தானாக மாறி விடும் 

பல நபர்கள் இதைச் சுட்டிக்காட்டினால் சீக்கிரம் அது தானாக மாறி விடும். எந்த அளவிற்கு அதிகமான நபர்கள் சுட்டிக்காட்டுகின்றார்களோ அந்த அளவிற்கு மாற்றம் ஆவது இருக்கும்.

நம் சகோதரர்கள் மூலம் சிறந்த மொழிபெயர்ப்பை கூகுளுக்கு அனுப்ப செய்யலாம்

(இதை நாம் கட்டாயம் செய்ய வேண்டும் இது ஒரு சதகத்துல் ஜாரியா போன்ற நன்மையை பெற்று தரும் ஏனெனில் கூகுளின் இந்த சேவை உலகம் முழுவதும் பலரால் பயன்படுத்தப்படும் நாம் இதில் செய்யும் சிறிய அளவிலான செயல் பெரிய நன்மை பெற்று தரும் பலரும் உண்மை இஸ்லாத்தை அறிந்து கொள்ள உதவியாக இருக்கும்)

அல்லது இந்த கூகுளின் தானியங்கி மொழிபெயர்ப்பு லிங்கை நம் இணையதளத்தில் இருந்து நீக்கிவிடலாம். நேயர்கள் தங்கள் கருத்தை பதிவு செய்யலாம்

 இது குறித்த தங்களின் கருத்தை பின்வரும் மின்னஞ்சல் முகவரியில் பதிவு செய்யவும்

googletrans@onlinepj.com

23.06.2011. 08:50




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
29 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி