பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்

பிறமதக் கலாச்சாரத்தைப் புறக்கணிப்போம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

முஸ்லிம்களாக இருக்கும் நம்மைச் சுற்றிலும், ஏராளமான பிறமத சகோதரர்கள் வாழ்ந்து வருகிறார்கள். தீபாவளி, கிறிஸ்துமஸ், பொங்கல் என்று அவர்கள் கொண்டாடும் பண்டிகைகள் அடிக்கடி வந்து போகின்றன. அவற்றில் கலந்து கொள்ள அவர்களும் நம்மை ஆர்வத்துடன் அழைக்கிறார்கள். அவசியம் கலந்து கொள்ள வேண்டும் என்று அன்போடு வேண்டுகோள் விடுக்கிறார்கள்.

தொடர்ந்து படிக்க March 6, 2015, 7:18 AM

வரதட்சணைக்கு எதிராக வாய் திறக்காத திருச்சபை

வரதட்சணைக்கு எதிராக வாய் திறக்காத திருச்சபை

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் இமாலய வளர்ச்சிக்கு அடிப்படைக் காரணங்களாக அமைந்தவற்றில் ஒன்று வரதட்சணைக்கு எதிரான போர் முழக்கமாகும்.

தொடர்ந்து படிக்க March 6, 2015, 7:13 AM

இறைப் பொருத்தம்

இறைப் பொருத்தம்

அமீன் பைஜி, கடையநல்லூர்

உலகில் பிற மனிதர்களின் நெருக்கம், அவர்களின் பொருத்தம் கிடைக்க வேண்டுமென்று நாம் பெரிதும் ஆசைப்படுகிறோம். ஒவ்வொரு செயலிலும் தமது விருப்பு வெறுப்புகளைத் தாண்டி, பிறர் இதைப் பொருந்திக் கொள்வார்களா என்ற எண்ணமே அதிகமான மனிதர்களிடம் மேலாங்கி உள்ளது.

தொடர்ந்து படிக்க March 6, 2015, 7:08 AM

பூமி நிலையாக நிற்கிறதா? இஸ்லாமிய அறிஞரின் அறியாமை

பூமி நிலையாக நிற்கிறதா? இஸ்லாமிய அறிஞரின் அறியாமை

அபூ அதீபா

சூரியனை மையமாகக் கொண்டு அனைத்துக் கோள்களும் சுற்றுகின்றன என்ற சூரிய மையக் கோட்பாட்டை விஞ்ஞான ரீதியில் உலகிற்கு முதலில் கூறியவர் கலிலியோ என்ற அறிஞர் ஆவார். இவர் இத்தாலியில் 1564 ஆம் ஆண்டு பிப்ரவரி 15ல் பிறந்தார்.

தொடர்ந்து படிக்க March 6, 2015, 7:00 AM

பரவும் பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு அல்லாஹ்விடமே!

பரவும் பன்றிக் காய்ச்சல் பாதுகாப்பு அல்லாஹ்விடமே!

காட்டுத் தீயை விட மேலாகக் காற்றில் பறக்கும் நோயாக பன்றிக் காய்ச்சல் தற்போது பரவி வருகின்றது. இந்தியாவெங்கும் பரவிக் கொண்டிருக்கும் இந்தக் காய்ச்சலுக்கு ஜனவரி முதல் பிப்ரவரி 20ஆம் தேதி வரை தெலுங்கானா மாநிலத்தில் மட்டும் 1600 பேர் பாதிக்கப்பட்டுள்ளார்கள். 60 பேர் பலியாகியுள்ளார்கள்.

தொடர்ந்து படிக்க March 6, 2015, 6:57 AM

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

அழகிய தோற்றமுடைய வமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்ன் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?.

(திருக்குர்ஆன் 53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.

இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார்.

(திருக்குர்ஆன் 53:13-18)

இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம்.

(திருக்குர்ஆன்17:60)

இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.

அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.

எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்ம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மிஃராஜ் நடந்தது எப்போது?

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.

ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது.

உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள்.

யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்.

ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.

எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் துôதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை

நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்?

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்

எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.

ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.

"மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்'' என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.

அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.

அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.

இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்பட வேண்டியதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 

நூல்: புகாரீ (2697)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 

நூல்: முஸ்லிம் (3243)

இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா?

(திருக்குர்ஆன் 49:16)

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.

லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும் சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும். இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.

இவ்விருவர்களும் கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா நமக்குத் தெரியப் போகின்றது? அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா?

யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான்.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

(திருக்குர்ஆன் 59:7)

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்த அறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தை நாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகி விடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக!

(திருக்குர்ஆன் 3:31, 32)

எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும் சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்!

(திருக்குர்ஆன் 7:205)

உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்.

(திருக்குர்ஆன் 7:55)

ஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: நஸயீ (1560)

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!

மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்

மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக் கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, "சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்'' என்று அல்லாஹ் கூறினானாம்.

2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். "என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?'' என்று நபிகளார் கேட்ட போது, "இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனே நான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினாராம்.

3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, "முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்'' என்று அபூபக்ர் (ரலி)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான்? என்று நபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளே போய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ் இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, "நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறினானாம். "அபூபக்ரின் குரல் கேட்டதே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, "நீர் பயந்து விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்று ஒரு மலக்கைப் பேச வைத்தேன்'' என்று அல்லாஹ் கூறினானாம்.

4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் பதில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டு ரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று ஜிப்ரீல் நினைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று அல்லாஹ்வும் நினைத்தானாம். உடனே நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம்.

5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ் என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் இரண்டு வகையுண்டாம். உடல்லாமல் உயிர் மட்டும் அல்லாஹ்வை தரிசிக்கும் தரிசனத்திற்கு ரூஹானியத்தான மிஃராஜ் என்றும், நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மிஃராஜ் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் கதை விட்டுள்ளார்கள்.

6. ரூஹானிய்யத்தான மிஃராஜ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய நபிமார்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமின்றி ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், அவுலியாக்கள் போன்ற நல்லடியார்களுக்கும் இந்த ரூஹானிய்யத்தான மிஃராஜ் ஏற்பட்டுள்ளது என்று கதை விட்டு, மாபெரும் அற்புத நிகழ்வான நபிகள் நாயகத்தின் விண்ணுகப் பயணத்தையே கேலிக் கூத்தாக்கியுள்ளனர்.

7. நபி (ஸல்) அவர்களுக்கு ரூஹானிய்யத்தான மிஃராஜ் 33 தடவை ஏற்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாம். முஹைதீன் அப்துல் காதர் ஜீலானிக்கு ரூஹானியத்தான மிஃராஜ் ஏற்பட்ட போது முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினானாம். அப்போது நடந்த உரையாடல் நாசூத், மலகூத், ஜபரூத், லாஹுத் என்பதையெல்லாம் அல்லாஹ் முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கற்றுக் கொடுத்தானாம்.

இன்னும் இது போன்ற ஏராளமான கதைகளையும், கப்ஸாக்களையும் மிஃராஜின் பெயரால் அவிழ்த்து விட்டுள்ளனர்.

சில சம்பவங்களை விமர்சிக்கும் போது, இந்த வசனத்திற்கு இந்தச் சம்பவம் மாற்றமாக அமைந்துள்ளது என்றும், இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் விளக்கமளிப்போம். ஆனால் குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டு விளக்க முடியாத அளவுக்கு, சாதாரண மக்கள் இவற்றைப் படித்தால் கூட கப்ஸாக்கள் என்று விளங்கும் அளவுக்கு இந்தக் கதைகள் அமைந்துள்ளன.

அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் காட்டுவதற்காக, நபி (ஸல்) அவர்களுக்கு அவன் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புதத்தைக் கூற வந்தவர்கள் அல்லாஹ்வைக் கே செய்யும் விதமாக, அவனைப் பலவீனமானவனாக சித்தரிக்கக் கூடிய கதைகளை எழுதி வைத்து, பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

முஃமின்களின் ஈமானைச் சோதிப்பதற்காக மிஃராஜ் எனும் அற்புதத்தை அல்லாஹ் நிகழ்த்தினான். ஆனால் இவர்களோ ஈமானுக்கே வேட்டு வைக்கக் கூடிய விதத்தில் அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும், ஜிப்ரீல் (அலை) அவர்களையும் மட்டம் தட்டி எழுதி வைத்துள்ளது தான் வேதனை!

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்?

(அல்குர்ஆன் 7:37)

"என் மீது பொய் சொல்வதென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி),

நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் மாபாதகச் செயலாகும். எனவே இது போன்ற கதைகளைப் புறக்கணிப்போமாக!

குறிப்பு : 2004 செப்டம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 15, 2015, 7:00 AM

அண்ணல் நபியின் விண்ணுலப் பயணம்

அண்ணல் நபியின் விண்ணுலப் பயணம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிலிருந்து பைத்துல் முகத்தஸுக்கு இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்ட அற்புத நிகழ்ச்சி இஸ்ரா - இரவில் கூட்டிச் செல்லுதல் - என்று சொல்லப்படும். பின்னர் பைத்துல் முகத்தஸிலிருந்து விண்ணுலகத்திற்கு அழைத்துச் செல்லப்பட்ட அற்புத நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது.

தொடர்ந்து படிக்க January 15, 2015, 6:40 AM

மனத் தூய்மையும் மகத்தான கூலியும்

மனத் தூய்மையும் மகத்தான கூலியும்

எம். ஷம்சுல்லுஹா

மனிதன் இறைவனை வணங்கும் போது அந்த வணக்கத்தை அவனுக்காகவே தவிர வேறு யாருக்காகவும் ஆக்கி விடக்கூடாது என்ற நிபந்தனையை முக்கியமான நிபந்தனையாக இறைவன் விதித்திருக்கிறான். ஒரு வணக்கத்தைச் செய்யும் போது அவனை இன்னொரு மனிதன் மெச்ச வேண்டும் என்பதற்காகவும், புகழவேண்டும் என்பதற்காகவும், அல்லது உலகப் பலனை அடைய வேண்டும் என்பதற்காகவும் செய்தால் அந்த வணக்கத்தை இறைவன் தூக்கி எறிந்து விடுகின்றான். இதை நபி (ஸல்) அவர்களின் ஹதீஸ்கள் மிகத் தெளிவாக விளக்குகின்றன.

செயல்கள் எண்ணங்களைக் கொண்டு தான் அமைகின்றன. ஒவ்வொரு மனிதருக்கும் அவர் எண்ணியதே கிடைக்கும். யாருடைய (நாட்டை விட்டு வெளியேறும்) பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைகின்றதோ அவரது பயணம் அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் அமைந்து விடுகிறது. எவரது பயணம் உலகத்தை அடைவதற்காகவோ அல்லது பெண்களை மணம் முடிப்பதற்காகவோ அமையுமெனில் அவரது பயணம், அவர் எந்த நோக்கத்திற்காகப் பயணம் செய்தாரோ அதற்காகவே அமைந்து விடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி), 

நூல்: புகாரி 1

சுத்தமான அமல் சோதனையின் போது அரண்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

"(முற்காலத்தில்) மூன்று மனிதர்கள் நடந்து சென்றனர். அப்போது மழை பொழிந்தது. அவர்கள் மலையிலுள்ள குகையில் நுழைந்தனர். ஒரு பெரிய பாறை உருண்டு வந்து குகையின் வாசலை அடைத்தது. அப்போது அவர்கள், "நீங்கள் செய்த நல்லறங்களில் மிகச் சிறந்ததைக் கூறி அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்யுங்கள்'' என்றனர்.

அவர்களில் ஒருவர், "இறைவா! எனக்கு வயது முதிர்ந்த பெற்றோர் இருந்தனர். நான் ஆடு மேய்க்க வெளியே சென்று விட்டுப் பிறகு வந்து பால் கறந்து, பால் பாத்திரத்தைப் பெற்றோர்களிடம் கொண்டு வருவேன். அவர்கள் அருந்துவார்கள். பிறகு குழந்தைகளுக்கும் குடும்பத்தாருக்கும் என் மனைவிக்கும் கொடுப்பார்கள். ஓர் இரவு நான் தாமதமாக வந்தேன். பெற்றோர் உறங்கி விட்டனர். அவர்களை எழுப்புவதை நான் விரும்பவில்லை. குழந்தைகள் பசியால் என் காலடியில் அழுதனர். விடியும் வரை இதே நிலை நீடித்தது. இறைவா! நான் இதை உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் நாங்கள் வானத்தைப் பார்க்கும் வகையில் ஓர் இடைவெளியை ஏற்படுத்து!'' என்று கூறினார்.

மற்றொருவர், "இறைவா! எனது தந்தையின் உடன் பிறந்தாரின் மகளை எந்த ஆணும் எந்தப் பெண்ணையும் விரும்புவதை விட அதிகமாக விரும்பினேன் என்பதை நீ அறிவாய். அவள் தனக்கு நூறு தீனார் தரும் வரை தன்னை அடையக் கூடாது என்றாள். நான் உழைத்து நூறு தீனாரைத் திரட்டினேன். அவளது இரு கால்களுக்கிடையில் நான் அமர்ந்த போது, "அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! உரிய முறையின்றி முத்திரையை உடைக்காதே!'' என்று அவள் கூறினாள். உடனே நான் அவளை விட்டு எழுந்து விட்டேன். இதை உனது திருப்தியை நாடி செய்திருப்பதாக நீ அறிந்தால் இந்தச் சிரமத்தை நீக்கு!'' என்று கூறினார். அல்லாஹ் அவர்களை விட்டும் மூன்றில் இரண்டு பங்கு நீக்கினான்.

மற்றொருவர், "இறைவா! நான் மூன்று ஸாஉ (ஒருவகை அளவைப் பாத்திரம்) கேழ் வரகு கூலிக்கு ஒரு வேலையாளை அமர்த்தினேன். கூலியை நான் கொடுத்த போது அதை அவர் வாங்க மறுத்து விட்டார். அந்தக் கேழ் வரகைப் பயிர் செய்தேன். அதன் வருமானத்தில் மாடுகளையும் அதை மேய்ப்பவரையும் விலைக்கு வாங்கினேன். பிறகு அவர் வந்து, "அல்லாஹ்வின் அடிமையே! எனது கூலியைக் கொடு!'' என்று கூறினார். "இந்த மாடுகள், அதை மேய்ப்பவர்கள் எல்லாம் உமக்குரியவை. எடுத்துச் செல்லும்'' என்று கூறினேன். அதற்கவர், "என்னைக் கேலி செய்கின்றீரா?'' என்று கேட்டார். "நான் உம்மைக் கேலி செய்யவில்லை. இவை உமக்குரியவை தான்'' எனக் கூறினேன். இறைவா! இதை நான் உனது திருப்தியை நாடிச் செய்திருப்பதாக நீ அறிந்தால் எங்களை விட்டு இந்தச் சிரமத்தை நீக்கு'' என்று கூறினார். சிரமம் முழுமையாக விலகியது.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), 

நூல்: புகாரி 2215

எண்ணத்திற்கேற்பவே இறுதி நாளில் கூலி

"ஒரு படையினர் கஅபாவின் மீது படையெடுப்பார்கள். வெட்ட வெளியான ஒரு பூமியில் அவர்கள் இருக்கும் போது அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை பூமிக்குள் புதையுண்டு போவார்கள்'' என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை எவ்வாறு புதையுண்டு போவார்கள்? அங்கே அவர்களைச் சேராதவர்களும் இருப்பார்கள். கடைவீதிகளும் இருக்குமே?'' என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர்களில் முதலாமவர் முதல் கடைசி நபர் வரை புதையுண்டு போகத் தான் செய்வார்கள். எனினும் பின்னர் அவரவரது எண்ணத்திற்கேற்ப எழுப்பப்படுவார்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 

நூல்: புகாரி 2118

ஊரில் இருந்தாலும் போரில் கலந்த நன்மை

நபி (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போரில் ஈடுபட்டிருந்தார்கள். அப்போது அவர்கள், "மதீனாவில் (போருக்கு வர வேண்டும் என்ற எண்ணமிருந்தும் வர முடியாமல் ஆகி விட்ட) சிலர் இருக்கிறார்கள். நாம் எந்த மலைக் கணவாயையும், பள்ளத்தாக்கையும் அவர்கள் நம்முடன் இருக்கும் நிலையிலேயே தவிர நாம் கடக்கவில்லை. சில காரணங்களே அவர்களை (போரில் கலந்து கொள்ள முடியாமல்) தடுத்து விட்டன'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), 

நூல்: புகாரி 2839

தபூக் யுத்தத்திலிருந்து திரும்பி வரும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மணி மொழிகளை உதிர்க்கின்றார்கள். போரில் கலந்து கொண்டு போராட எண்ணம் இருந்தது. ஆனால் நோய் வாய்ப்பட்டிருந்ததால் போரில் கலந்து கொண்டு பங்கெடுக்க இயலவில்லை. இந்த எண்ணத்திற்காகவே அல்லாஹ் அவர்களுக்குப் போரில் பங்கெடுத்த கூலிகளை, ஒவ்வொரு பள்ளத்தாக்கையும் கடந்து சென்ற நன்மையைப் பரிசாக அளிக்கின்றான்.

கை மாறினாலும் கூலி மாறாது

ஒருவர் நான் தர்மம் செய்யப் போகிறேன் என கூறிக்கொண்டு இரவில் தர்மத்துடன் வெளியே வந்து (தெரியாமல்) ஒரு திருடனிடம் கொடுத்து விட்டார். காலையில் மக்கள், "இன்றிரவு திருடனுக்கு தர்மம் வழங்கப் பட்டுள்ளது'' என்று கூறினர். (இதைக் கேட்ட) அவர் "அல்லாஹ்வே! உனக்கே சகல புகழும் (நாளை) நான் தர்மம் செய்வேன்'' என்று கூறினார். மறுநாள் அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு விபச்சாரியிடம் கொடுத்து விட்டார். மறுநாள் காலை மக்கள் "இன்றிரவு விபச்சாரிக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது'' என பேசிக் கொண்டனர். அதற்கு அவர் "அல்லாஹ்வே! விபச்சாரிக்கு தர்மம் செய்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்'' என்று கூறினார். (மூன்றாம் நாள்) அவர் தர்மத்துடன் வெளியே வந்து ஒரு பணக்காரனின் கையில் கொடுத்து விட்டார். காலையில் மக்கள் "பணக்காரருக்கு தர்மம் கொடுக்கப் பட்டுள்ளது'' என பேசிக் கொண்டனர். உடனே அவர் "அல்லாஹ்வே! திருடனிடமும் விபச்சாரியிடமும் செல்வந்தனிடமும் தர்மம் கொடுத்ததற்காக உனக்கே எல்லாப் புகழும்'' எனக் கூறினார். அப்போது ஒருவர் அவரிடம் வந்து "நீர் திருடனுக்குக் கொடுத்த தர்மம் அவன் திருடுவதை விட்டுத் திருந்தக் காரணமாகலாம். நீர் விபச்சாரிக்குக் கொடுத்த தர்மம் அவள் விபச்சாரத்திலிருந்து விடுபடக் காரணமாகலாம். செல்வந்தனுக்குக் கொடுக்கப்பட்ட தர்மத்தினால் அவன் படிப்பினை பெற்று அதனால் அவன் தனக்கு அல்லாஹ் வழங்கியதிலிருந்து தர்மம் செய்யக் கூடும்'' என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : புகாரி 1421

என்னுடைய தந்தை யஸீது, தர்மம் செய்வதற்காக தீனார்களை எடுத்துச் சென்று பள்ளியில் ஒருவருக்கு அருகில் வைப்பது வழக்கம். நான் (பள்ளிக்கு) வந்து அந்த தீனார்களை எடுத்துக் கொண்டு (வீட்டுக்கு) வந்து விட்டேன். என்னுடைய தந்தை (இந்த தர்மத்தை) உன்னை நாடி நான் வழங்கவில்லை என்று சொன்னார். இந்த வழக்கை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தேன். நபி (ஸல்) அவர்கள் என் தந்தையை நோக்கி, "யஸீதே! நீ எண்ணிய நன்மை உனக்கு கிடைக்கும். மஃனே! நீ எடுத்த தீனார்கள் உனக்குத் தான்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூ யஸீது பின் மஃன் (ரலி), 

நூல் : புகாரி

நன்மை செய்ய நினைப்பதே நன்மை

நபி (ஸல்) அவர்கள் தமது இறைவனைப் பற்றி அறிவிக்கையில் பின்வருமாறு கூறினார்கள்.

அல்லாஹ் நன்மைகளையும் தீமைகளையும் எழுதி விட்டான். பிறகு அவன் அதனை விவரித்தான். அதாவது ஒருவர் ஒரு நன்மை செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணி விட்டாலே - அவர் அதைச் செய்யாவிட்டாலும் - அவருக்காகத் தன்னிடம் அதை ஒரு முழு நன்மையாகப் பதிவு செய்கின்றான். அதை அவர் எண்ணியதுடன் செயல்படுத்தியும் விட்டால் அந்த ஒரு நன்மையைத் தன்னிடம் பத்து நன்மைகளாக, எழுநூறு மடங்காக, இன்னும் அதிகமாக பதிவு செய்கின்றான். ஆனால் ஒருவர் ஒரு தீமையைச் செய்ய எண்ணி, அதைச் செய்யாமல் கை விட்டால், அதற்காக அவருக்குத் தன்னிடம் ஒரு முழு நன்மையை அல்லாஹ் எழுதுகின்றான். எண்ணியபடி அந்தத் தீமையை அவர் செய்து முடித்து விட்டாலோ அதற்காக ஒரேயொரு குற்றத்தையே அல்லாஹ் எழுதுகின்றான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), 

நூல்: புகாரி 6491

குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 14, 2015, 8:23 AM

நபிகள் நாயகத்தை கனவில் காண முடியுமா

நபிகள் நாயகத்தை கனவில் காண முடியுமா

மனிதன் தன் வாழ்வில் காணும் காட்சிகள், தன் நினைவில் நிற்கும் நினைவுகள் இவைகள் எல்லாம் அவனுக்குக் கனவாகத் தோன்றுவதைப் பார்க்கிறோம். நாம் ஒருவரை விரும்புகிறோம் என்றால் அவர் நம் கனவிலும் விருப்பத்திற்குரியவராகவே தோன்றுகிறார். நாம் ஒருவரை எதிரியாக, தீயவராக நினைக்கிறோம் என்றால் அந்நபர் நமக்குக் கனவிலும் தீயவராகவே தோன்றுகிறார்.

ஒவ்வொரு மனிதனின் சிந்தனை எப்படி இருக்கின்றதோ அதற்கேற்பவே கனவும் நிகழ்ந்து விடுகின்றது. சில வேளைகளில் இவனுடைய சிந்தனைக்கு அப்பாற்பட்டும் கனவுகளில் நிகழும். சில வேளைகளில் எந்தவித உதவியும் இல்லாமல் பறப்பதைப் போன்று கனவு காண்பான். ஆனால் உண்மையில் அவ்வாறு பறக்க முடியாது. மிருகங்கள் பேசுவதைப் போன்று கனவு காண்பான். ஆனால் மிருகங்கள் பேசாது என்பது தெரியும். இருந்தும் கூட உலக நியதிக்கு மாற்றமாக கனவு தோன்றி விடுகின்றது.

மிகவும் அரிதாக ஏதாவது ஒன்றிரண்டு விஷயங்கள் கனவில் நமக்குத் தோன்றி எதிர்காலத்தில் நடக்கவிருப்பதை முன்னறிவிப்பு செய்து விடுகின்றன. இந்த அறிவிப்பைக் கூட மனிதன் நேரடியாக காணும் போது தான் அவன் கண்ட கனவு உண்மை என்று நம்புவானே தவிர நிகழ்வைக் காண்பதற்கு முன்னர் கனவை உண்மை என்று நம்ப மாட்டான். ஏனென்றால் கனவில் காண்பதெல்லாம் நிகழ்ந்து விடாது என்பதை எல்லா மனிதனும் ஏற்றுக் கொண்டுள்ளான்.

இப்படி கனவு என்பது அவரவர்களின் எண்ணங்களுக்கு ஏற்ப தோன்றுகின்றது. எண்ணங்களுக்கு அப்பாற்பட்டும் தோன்றுகின்றது. நிகழ்வதற்கு சாத்தியமற்ற விஷயங்களும் தோன்றுகின்றன. இவ்வளவு சிக்கல் நிறைந்த கனவில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காண முடியும் என்று நினைப்பது பல குழப்பங்களுக்கு வழி வகுக்கும்.

நம்முடைய இஸ்லாமிய சகோதரர்கள் இந்தச் செயலுக்கு மார்க்கத்தில் அங்கீகாரம் உண்டா? நாம் எதைச் சொல்கிறோம்? இந்தச் சொல் சரியானதா? என்று நினைத்துப் பார்க்காமல் மனம் சொல்வதையெல்லாம் சொல்லி விடுகின்றனர்.

மார்க்கத்தைக் கற்றறிந்த அறிஞர்கள் கூட தவறான வாசகங்களை உபயோகித்து மக்களை குழப்பத்தில் ஆழ்த்தி விடுகின்றார்கள். மக்கள் நேர்வழி பெறுவதும் வழி கெடுவதும் மார்க்க அறிஞர்கள் கையில் தான் இருக்கின்றது. எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், "எனது உம்மத்தில் வழிகெடுக்கக் கூடிய தலைவர்களை நான் பயப்படுகின்றேன்'' என்று கூறினார்கள்.

எனவே மக்கள் தவறாக விளங்கி செயல்படுவதற்கு இவர்களே காரணமாகவும் அமைந்து விடுகின்றார்கள். இவ்வாறு, சொல்வதை விளங்காத காரணத்தினால் தான் மவ்லித் போன்ற பித்அத்தான காரியங்கள் தோன்றின.

இன்னும் சிலர் பெருமானாரின் பிரியத்தைப் பெற வேண்டும் என்பதற்காக பயன்படுத்தக் கூடாத, மார்க்கம் தடுத்த சில வார்த்தைகளைப் பயன்படுத்தி விடுகின்றனர். இதனால் இந்த வார்த்தைகளைச் சொல்பவர்கள் (அதன் பொருளை உணராவிட்டாலும்) இணை வைத்தல் என்ற பெரும் பாவத்தைச் செய்தவர்களாகி விடுகின்றனர்.

இதுபோன்ற தொடர்களில் உள்ளது தான் "இறைவா! நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவிலும் நினைவிலும் காணும் பாக்கியத்தைத் தந்தருள்வாயாக!'' எனும் வாக்கியமாகும்.

கனவின் ஒரு முக்கிய அம்சம் என்னவென்றால் ஒரு மனிதரை நாம் நேரில் பார்த்திருந்தால் தான் அவரைக் கனவிலும் பார்க்க முடியும். அப்படியிருக்க நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரடியாகப் பார்க்காமல் அவர்களைக் கனவில் காண வேண்டும் என்பது அபத்தமான விஷயமாகும். அப்படியே காண முடியும் என்று வைத்துக் கொண்டாலும், வந்தது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தான் என்று எப்படி அறிய முடியும்?

ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் காண முடியும் என்று கூறுபவர்கள், கனவில் வந்தவர் நபிகள் நாயகம் தான் என்பதற்கு ஆதாரமாக ஒரு ஹதீஸை முன் வைக்கின்றார்கள். "என் வடிவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய ஹதீஸை இதற்கு ஆதாரமாக முன் வைக்கின்றனர்.

இதுவும் கூட தவறான சிந்தனையாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், என் உருவத்தில் ஷைத்தான் தோன்ற மாட்டான் என்று தான் கூறினார்களே தவிர, மற்றவர்கள் உருவத்தில் ஷைத்தான் வந்து, தான் நபி என்று கூற மாட்டான் என்று ஒருபோதும் கூறவில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தில் ஷைத்தான் வராவிட்டாலும் வேறு ஒருவரின் உருவத்தில் தோன்றி குழப்பதை விளைவிக்கலாம் அல்லவா!

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் வடிவத்தைப் பற்றி ஹதீஸ்களில் வந்துள்ளது. எனவே இந்த ஹதீஸ்களின் உதவியால் கம்ப்யூட்டரைப் பயன்படுத்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தைப் பார்க்க முடியுமல்லவா? அதைக் கனவில் காணலாமே என்று சிலர் நினைக்கலாம். ஆனால் அப்படிச் செய்தால் அது வெறும் யூகமே தவிர வேறொன்றும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் உருவத்தை எவ்வளவு கணிணிகளைப் பயன்படுத்தி வரைந்தாலும் சரியான முறையில் வரைய முடியாது. வரைந்தாலும் அது வெறும் கற்பனை தான். வரையப்பட்ட உருவம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் போல் உள்ளதா? என்பதை நம்மில் யாராலும் உறுதியாகக் கூற முடியாது. நபிகள் நாயகத்தை ஏற்கனவே கண்ட ஒருவர் தான் அதை உறுதி செய்ய வேண்டும். ஆனால் அப்படி யாரும் நம்மில் கிடையாது.

ஹதீஸ்களில் வந்திருக்கும் வர்ணனைகளை வைத்து இப்படித் தான் இருப்பார்கள் என்று முடிவு செய்தாலும் கூட அதுவும் யூகம் தான். யூகத்தைப் பின்பற்றக் கூடாது என்று திருமறையும் நபிமொழியும் தெளிவாகவே கூறுகின்றன.

"உனக்கு உறுதியாகத் தெரியாததை நீ பின்பற்றாதே!'' (17:36) என்று திருக்குர்ஆனும், "உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தக் கூடியதை விட்டு விட்டு சந்தேகத்தை ஏற்படுத்தாத விஷயத்தை முன்னோக்கு'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறுகின்றார்கள்.

இப்படியிருக்க நாம் கற்பனையாக ஓர் உருவத்தை வரைந்து விட்டு இது தான் நபிகள் நாயகம் என்று சொல்வது மாபெரும் குழப்பத்தை விளைவிக்கும். எனவே யூகத்தை ஒதுக்கித் தள்ளுவது அவசியம் என்பது இந்த ஹதீஸின் மூலம் நமக்குத் தெரிகின்றது.

"என்னை யார் கனவில் கண்டாரோ அவர் என்னை விழிப்பிலும் காண்பார்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை நபிகள் நாயகத்தைக் கனவில் காண முடியும் என்பதற்கு ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.

இதுவும் தவறான வாதமாகும். ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நேரில் வருவார்கள் என்று நம்புவது இஸ்லாத்தின் அடிப்படைக்கும் குர்ஆனுக்கும் மாற்றமானதாகும்.

இறந்தவர்கள் திரும்ப வர முடியாது, நான் நல்லமல் செய்யப் போகின்றேன் என்று கெஞ்சினால் கூட அனுமதி கிடைக்காது என்று தான் குர்ஆன் கூறுகின்றது.

"என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை உள்ளது. 

(அல்குர்ஆன் 23:100)

இதுபோல் நல்லவர்கள் தனக்குக் கிடைத்த வெற்றியை தன் குடும்பத்தினரிடத்தில் சொல்வதற்கு அனுமதி கேட்டால் கூட அல்லாஹ் அனுமதி வழங்க மாட்டான் என்றும் மார்க்கம் கூறுகின்றது. நபி (ஸல்) அவர்கள் நினைவில் வருவார்கள் என்றால் அது குர்ஆன் கூறும் கருத்துக்கு மாற்றமாக உள்ளது.

யார் எப்போது நினைத்தாலும் உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்சி தருவார்கள் என்று நம்புவது இணை வைத்தலாகும். கிறித்தவர்கள் தான் இயேசு காட்சி தருவார் என்று கூறுவார்கள். நபிகள் நாயகம் சொல்லாததை நாம் சொன்னால் நமக்கும் கிறித்தவர்களுக்கும் வேறுபாடின்றிப் போய் விடுகின்றது.

எனவே கனவில் காட்சி தருவார் என்று சொல்வதை விட நினைவில் காட்சி தருவார் என்று கூறுவது மிகப் பெரிய பாவமாகும். விழிப்பிலும் என்னைக் காண்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் கருத்து, அவர்களது காலத்தில் வாழ்ந்த மக்களுக்கு மட்டும் தான் பொருந்தும்.

அதாவது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் பார்த்த ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் கண்டாரேயானால், அவர் விழித்தபிறகு மீண்டும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் காணாமல் இருக்க மாட்டார் என்பது தான் இந்த ஹதீஸின் பொருள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நேரில் சந்திப்பதற்கு, கனவு ஒரு அறிவிப்பாகத் தான் அந்த மக்களுக்கு இருந்தது.

இன்னும் சில நபர்கள், விழிப்பில் என்னைப் பார்ப்பார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதற்கு மறுமை நாளில் பார்ப்பார் என்று விளக்கம் கூறுகின்றனர். இதுவும் தவறான கருத்தாகும்.

ஏனென்றால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் கனவில் பார்த்தவர்கள் தான் பார்ப்பார்கள் என்றால் மற்ற நல்லவர்கள் எல்லாம் பார்க்க மாட்டார்களா? கனவில் பார்த்தவர்களும் பார்க்காதவர்களும் எல்லோருமே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை மறுமையில் பார்ப்பார்கள்.

இவ்வளவு வாதங்களும் பிரச்சனைகளும் ஏன்? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுகத்தைக் கனவில் கண்டு விடுவதால் ஒரு மிகப் பெரிய பாக்கியம் இருக்கின்றது என்றால், நேரடியாக - கண்கூடாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் திருமுகத்தை அன்றாட வாழ்வில் சாதாரணமாகப் பார்த்துக் கொண்டிருந்த அபூலஹப், அபூஜஹ்ல் ஆகியோர் எல்லாம் இஸ்லாத்தில் இணையும் பாக்கியத்தைப் பெற்றிருக்க வேண்டும். ஆனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களது திருமுகத்தை நேரடியாகப் பார்த்துள்ள அபூலஹபை அல்லாஹ் சபித்து ஓர் அத்தியாயத்தை இறக்கி விட்டானே!

மேலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இஸ்லாத்தின் ஆரம்பத்தில் ஓர் உறுதுணை இருந்தது என்று சொன்னால் அது அபூதாலிப் அவர்கள் தான். அபூதாலிப் உயிருடன் இருக்கும் வரை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை யாராலும் எதுவும் செய்ய இயலவில்லை. எல்லா விஷயங்களிலும் மிக்க உறுதுணையாக நின்றார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட, நீங்கள் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை என்று மட்டும் கூறி விடுங்கள். மற்ற அனைத்தையும் அல்லாஹ்விடம் நான் பார்த்துக் கொள்கிறேன் என்று கூறினார்கள். இந்த அளவுக்கு நெருக்கத்தைப் பெற்று, ஒன்றோடு ஒன்றாக இருந்து அவர்களின் திருமுகத்தை நேரடியாகப் பார்த்த அபூதாலிபிற்கே வெற்றி இல்லை என்றால் நபிகள் பெருமானாரை கனவில் பார்ப்பதனால் என்ன சிறப்பு இருக்கின்றது? நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்ப்பதால் சிறப்பு கிடைக்கும் என்று நம்புவது எப்படி அறிவார்ந்த, சிறப்பம்சம் பொருந்திய காரியமாக ஆக முடியும்.

மவ்லித் ஓதும் போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வருகை தருகின்றார்கள் என்று நினைத்து, எழுந்து நின்று ஓதுவதை எப்படி தவறு என்று நினைக்கின்றோமோ அதே போன்று இதுவும் தவறாகும்.

இவ்வாறு அர்த்தமற்ற செயல்களைச் செய்வதாலோ சொல்வதாலோ எந்தச் சிறப்பும் ஏற்படப் போவதில்லை. மாறாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நம்பிக்கை கொண்டு அவர்கள் வாழ்ந்து காட்டிய வழிப்படி நடப்பதில் தான் சிறப்பு இருக்கின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூட தமது தோழரிடத்தில், "உங்களுக்குப் பின்னால் ஒரு கூட்டத்தினர் வருவார்கள். அவர்கள் என்னைப் பார்க்காமலேயே என்னை ஈமான் கொண்டு செயல்படுவார்கள்'' என்று புகழ்ந்து கூறியிருக்கின்றார்கள். எனவே சிறப்பு என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைப் பார்ப்பதை விடப் பின்பற்றுவதில் தான் இருக்கின்றது.

அல்லாஹ் தான் வலிமை மிக்கவன் ஆயிற்றே! அவன் தான் நாடியவற்றையெல்லாம் செய்பவன் அல்லவா! எனவே அவனிடம் நபிகள் நாயகத்தைக் கனவில் காட்டும் பாக்கியத்தைக் கேட்டால் அவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நமது கனவில் காட்ட முடியாதா? என்ற எண்ணம் கூட நம்மில் பலருக்கு ஏற்படும்.

பிரார்த்தனை என்றால் அதற்கென்று ஒரு குறிப்பிட்ட வரையறை உள்ளது. இறந்தவர்கள் பூமிக்கு வர முடியாது என்று தெளிவாகக் கூறி விட்ட பிறகு அல்லாஹ்விடம், இறந்தவர்களை பூமிக்குத் திரும்ப அனுப்பு என்று கேட்பது மிகப் பெரும் தவறாகும்.

உதாரணமாக லஞ்சம் வாங்கக் கூடாது என்று அரசாங்கம் உத்தரவு போட்டிருக்கும் போது, அரசாங்கத்திடமே போய் லஞ்சம் வாங்குவதற்கு அனுமதி வேண்டும் என்று கேட்பதை அறிவுக்குப் பொருத்தமான விஷயம் என்று யாரும் கூற மாட்டோம். லஞ்சம் வாங்கக் கூடாது என்று கூறிய அரசாங்கமே லஞ்சம் வாங்குவதற்கு அனுமதியளிக்குமா? அனுமதி வழங்க அரசாங்கத்தால் முடியும் என்றால் கூட அவ்வாறு அனுமதி வழங்குவதில்லை.

இதுபோன்று இறைவனால் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவில் கொண்டு வந்து நிறுத்த முடியும். என்றாலும் அவ்வாறு செய்ய மாட்டேன் என்று திருமறையில் திட்டவட்டமாகக் கூறி விட்டான். இதன் பிறகும் நாம் அல்லாஹ்விடம் தானே கேட்கிறோம் என்று நினைத்து யாரும் இது போன்ற பிரார்த்தனைகளை செய்யக் கூடாது.

நபி (ஸல்) அவர்கள் கூட இவ்வாறு வரம்பு மீறி பிரார்த்தனை செய்வதைத் தடுத்துள்ளார்கள். "உளூவிலும் பிரார்த்தனையிலும் வரம்பு மீறும் கூட்டம் தோன்றுவார்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அவர்கள் கூறியது போலவே இன்று மார்க்க அறிஞர்களே பிரார்த்தனையில் வரம்பு மீறுகின்றார்கள்.

பிரார்த்தனையில், "இறைவா! எனக்குச் சுவனத்தில் வலது பகுதியைக் கொடு'' என்று கேட்பது கூட வரம்பு மீறுதலாகும் என்று ஹதீஸில் வந்துள்ளது. அப்படியிருக்க அல்லாஹ் தடுத்திருப்பதையே கேட்பது எவ்வளவு பெரிய வரம்பு மீறுதல் என்பதைச் சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மேலும் செயலில் மட்டும் ஏகத்துவம் இருப்பது போதுமானதல்ல! மாறாக சொல்லிலும் கூட ஏகத்துவம் இருக்க வேண்டும். சொல்லிலும் செயலிலும் ஏகத்துவத்தைக் கடைப்பிடிக்கும் பாக்கியத்தை நம் அனைவருக்கும் ஏக இறைவன் தந்தருள்வானாக! 

குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 14, 2015, 8:18 AM

ரகசியம் ஓர் அமானிதமே!

ரகசியம் ஓர் அமானிதமே!

எம். ஷம்சுல்லுஹா

"நண்பா! ஒரு முக்கியமான செய்தியை உன்னிடம் சொல்ல விரும்புகின்றேன். தயவு செய்து அந்தச் செய்தியை உன்னுடன் ரகசியமாக வைத்துக் கொள். அதை நீ யாரிடமும் சொல்லி விடக் கூடாது'' என்ற வேண்டுகோளுடன், நிபந்தனையுடன் ஒருவர் தன் நண்பரிடம் ஒரு செய்தியைத் தெரிவிப்பார். அவரும் இதை ஒப்புக்கொண்டு அந்தச் செய்தியைச் செவியுறுவார். மீண்டும் அவர் தனது வேண்டுகோளைப் புதுப்பித்தவராக, "நீ இதை யாரிடமும் சொல்லி விடாதே!'' என்று கேட்டுக் கொள்வார்.

இப்படி ஒருமுறை இரண்டு முறையல்ல! பல தடவை இவ்வாறு கேட்டுக் கொள்ளும் போது, சொல்ல மாட்டேன் என்று தலையாட்டி விட்டு, செய்தியைச் சொன்னவர் இடத்தைக் காலி செய்த அடுத்த நிமிடத்தில் மற்றொரு நண்பரிடம் இதைக் கூறி விடுவார். அதுவும், இதை யாரிடமும் சொல்லி விடாதே! என்ற நிபந்தனையுடன் இந்த ரகசியத்தைச் சொல்வார். கொஞ்சமும் மன உறுத்தலின்றி, கொடுத்த வாக்குறுதியைப் பற்றிய கவலையின்றி அப்படியே அந்தச் செய்தியைக் கொட்டி விடுவார். கொட்ட வேண்டியதையெல்லாம் கொட்டி விட்டு கடைசியில், "இதை அவர் யாரிடமும் சொல்ல வேண்டாம் என்று சொன்னார், எனவே நீ யாரிடமும் சொல்லாதே!'' என்று கேட்டுக் கொள்வார். இவரிடம் கேட்டவர் இதே நிபந்தனையுடன் அடுத்த நபரிடம் இவ்வாறே முடிச்சவிழ்ப்பார்.

ரகசியத்தைப் பரப்புவது ஓர் அமானித மோசடி!

ரகசியத்தைப் பரப்புவதில் மேற்கண்ட ரகத்தினர் ஒரு வகை! இன்னொரு வகையினர் இருக்கின்றனர். இவர்கள் ரகசியத்தைப் பரப்புவதில் தனக்கு ஆர்வமில்லாததைப் போல் நடிப்பார்கள்.

"இன்னார் என்னிடம் ஒரு செய்தியைக் கூறினார். அதை நான் பரப்ப விரும்பவில்லை'' என்று கூறி நிறுத்தி விடுவார்கள். அருகிலிருப்பவர் அதை அறிந்து கொள்வதற்கு ஆர்வம் காட்டுவார்கள். அவர்கள் பலமுறை கெஞ்சிக் கேட்கும் நிலைக்கு வந்ததும், தனக்கு விருப்பமில்லாதது போல் சொல்லி முடிப்பார்கள். ரகசியத்தைப் பரப்புவதில் இவர்கள் மிகவும் ஆபத்தானவர்கள்.

ரகசியத்தைப் பரப்புவதில் மற்றொரு ரகத்தினர், "சொல்லட்டுமா? சொல்லட்டுமா?'' என்று கேட்டு, வழிப்பறிக்காரன் கத்தியைக் காட்டி மிரட்டுவது போல் மிரட்டிக் கொண்டிருப்பார். இதன் மூலம் அவனிடத்தில் பணம் பறிப்பது அல்லது அவனை அடிமைப்படுத்தி அவனிடத்திலிருந்து ஏதாவது ஒரு வகையான இலாபத்தை அடைந்து கொண்டிருப்பார்.

இத்தகையோரிடம், நீ சொல்லடா என்று சொல்லி அவனது பயமுறுத்தல் என்ற இரும்புச் சங்கிலியை தகர்த்தெறிந்து விட்டு வெளியே வந்து விடும் போது, அவன் சொல்லாததைச் சொன்னதாகச் சொல்லி ஊர் முழுக்க அல்ல! உலகம் முழுக்க பரப்பி விடுவார். இதற்கெல்லாம் காரணம் என்ன?

ஒருவரிடம் ரகசியம் சொல்பவர், யாரிடமும் சொல்லாதே என்ற நிபந்தனையிட்டே அந்தச் செய்தியைச் சொல்கின்றார். அவரும் அதை ஒப்புக் கொண்டு, யாரிடமும் சொல்ல மாட்டேன் என்று வாக்குறுதி அளித்த பின்னர் தான் அந்தச் செய்தியைப் பெறுகின்றார். அதன் பின்னர் தெரிந்தோ, தெரியாமலோ அல்லது திட்டமிட்டோ அதைப் பரப்புகின்றார் என்றால் இவர் கொடுத்த வாக்குறுதியைக் காற்றில் பறக்க விடுகின்றார் என்று தான் அர்த்தம்.

வாக்கை நிறைவேற்றுங்கள்! வாக்கு விசாரிக்கப்படும்.

(அல்குர்ஆன்17:34)

இந்த வசனத்தின்படி வாக்குறுதிக்கு மாறு செய்ததற்காக மறுமையில் பதில் சொல்லியே ஆக வேண்டும். மேலும் இவர் செய்கின்ற இந்தப் பாவம் அல்லாஹ்வுக்குச் செய்த பாவம் மட்டுமல்லாமல் அடியாருக்குச் செய்த பாவமாகும். அல்லாஹ் தனக்கு ஓர் அடியான் செய்த பாவத்தை அவன் நாடினால் மன்னித்து விடுவான். ஆனால் இந்தப் பாவம் ஒரு அடியான் இன்னோர் அடியானுக்குச் செய்த பாவமாகும். இதை சம்பந்தப்பட்ட அடியான் மன்னிக்காத வரை அல்லாஹ் மன்னிக்கவே மாட்டான்.

செல்லுபடியாகாத செலவாணிகள்

பாதிக்கப்பட்ட அடியான் மன்னிக்கவில்லையெனில் அதற்கு ஈடு செய்ய மறுமை உலகில் எந்தக் கரன்சியும் - செலவாணியும் செல்லுபடியாகாது. அமல்கள் என்ற செலவாணியைத் தவிர! அப்போது இதுபோன்று வாக்குறுதிக்கு மாறாக ரகசியத்தை வெளியிட்டவன் மலை மலையாகச் செய்த அமல்கள் அவனிடமிருந்து பறிக்கப்பட்டு, பாதிக்கப்பட்டவனின் கணக்கில் வரவு வைக்கப்படும். அமல்கள் என்ற கரன்சி காலியாகி விட்டால் உலகில் பாதிக்கப்பட்டவனின் பாவங்கள் இவன் தலையில் கட்டப்பட்டு நரகில் தூக்கி எறியப்படுவான் என்பதைக் கீழ்க்கண்ட ஹதீஸ் விளக்குகின்றது.

"திவாலாகிப் போனவர் யார் என்று நீங்கள் அறிந்திருக்கின்றீர்களா?'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்ட போது. "யாரிடத்தில் பணமும் பண்ட பாத்திரங்களும் இல்லாமல் இருக்கின்றதோ அவர் தான்'' என்று நபித்தோழர்கள் பதிலளித்தனர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "எனது சமுதாயத்திலிருந்து திவாலாகிப் போனவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஜகாத் ஆகியவற்றைக் கொண்டு வருவார். மேலும் அவர் இன்னொருவரைத் திட்டியிருப்பார். அவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். அவரது பொருளைச் சாப்பிட்டிருப்பார். அவரது ரத்தத்தை ஓட்டியிருப்பார். அவரை அடித்திருப்பார். எனவே (பாதிக்கப்பட்ட) அவருக்கு இவரது நன்மைகளிலிருந்து அல்லாஹ் வழங்கி விடுவான். இன்னாருக்கு அவரது நன்மைகளை வழங்கி விடுவான். அவர் மீது உள்ள வழக்கு தீர்க்கப்படும் முன் அவரது நன்மைகள் தீர்ந்து போய் விட்டால் (பாதிக்கப்பட்ட) அவர்களின் பாவங்கள் எடுக்கப்பட்டு இவர் மீது எறியப்பட்டுப் பின்னர் நரகத்தில் தூக்கி எறியப்படுவார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : முஸ்லிம் 4678

ரகசியத்தைப் பேணிய அபூபக்ர் (ரலி)

உமர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் உஸ்மான் பின் அஃப்பான் அவர்களைச் சந்தித்து (என் மகள்) ஹஃப்ஸாவைக் குறித்து எடுத்துக் கூறி, "நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவை உங்களுக்குத் திருமணம் செய்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அதற்கு உஸ்மான் (ரலி), "இந்த விஷயத்தில் நான் யோசிக்க வேண்டியுள்ளது'' என்று கூறினார்கள். சில நாட்கள் பொறுத்திருந்தேன். பிறகு உஸ்மானைச் சந்தித்த போது, "இப்போது திருமணம் செய்து கொள்ள வேண்டாம் என்றே எண்ணியுள்ளேன்'' என்று கூறினார்கள்.

ஆகவே நான் அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்தித்தேன். (அவர்களிடம்) "நீங்கள் விரும்பினால் என் மகள் ஹஃப்ஸாவைத் தங்களுக்குத் திருமணம் முடித்து வைக்கிறேன்'' என்று கூறினேன். அபூபக்ர் அவர்கள் அமைதியாக இருந்தார்கள். எனக்கு அவர்கள் எந்த பதிலையும் கூறவில்லை. எனவே உஸ்மான் அவர்களை விட அபூபக்ர் அவர்கள் மீதே நான் மிகவும் மன வருத்தம் கொண்டவனாக இருந்தேன். சில நாட்கள் பொறுத்திருந்தேன்.

பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) ஹஃப்ஸாவைப் பெண் கேட்டார்கள். எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹஃப்ஸாவைத் திருமணம் செய்து வைத்தேன். பிறகு (ஒருநாள்) அபூபக்ர் அவர்கள் என்னைச் சந்தித்த போது, "நீங்கள் என்னிடம் ஹஃப்ஸா குறித்து சொன்ன போது நான் உங்களுக்குப் பதில் எதுவும் கூறாததால் உங்களுக்கு என் மீது வருத்தம் இருக்கக் கூடும்'' என்று கூறினார்கள். நான், ஆம் என்றேன்.

அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், "நீங்கள் கூறிய போது நான் உங்களுக்குப் பதில் கூறாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஃப்ஸா அவர்களை (தாம் மணம் புரிந்து கொள்வது) பற்றிப் பேசியதை நான் அறிந்திருந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இந்த இரகசியத்தை நான் வெளிப்படுத்தவும் விரும்பவில்லை. (எனவே தான் உங்களுக்குப் பதில் ஏதும் கூறவில்லை.) நபி (ஸல்) அவர்கள் ஹஃப்ஸாவை (திருமணம் செய்யாமல்) விட்டிருந்தால் உறுதியாக அவர்களை நான் (மனைவியாக) ஏற்றுக் கொண்டிருந்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் இப்னு உமர் (ரலி), 

நூல் : புகாரி (4005)

ரகசியம் பாதுகாத்த ஃபாத்திமா (ரலி)

(நபி-ஸல் அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்த போது) நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார்.

அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே அமைந்திருந்தது. ஃபாத்திமாவைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், "என் மகளே! வருக!'' என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரைத் தமது வலப்பக்கத்தில் அல்லது இடப்பக்கத்தில் அமர்த்திக் கொண்டு, அவரிடம் ரகசியமாக ஏதோ சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், "எங்களை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே'' என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய ரகசியம் பற்றி ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை பரப்ப நான் விரும்பவில்லை'' என்று கூறி விட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது ஃபாத்திமா அவர்களிடம் நான், "உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த ரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும்'' என்றேன். ஃபாத்திமா, "சரி இப்போது (தெரிவிக்கிறேன்)'' என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்.

முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் ரகசியம் சொன்ன போது, "எனக்கு ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒருமுறை குர்ஆனை ஓதிக் காட்டி நினைவூட்டுவார். ஆனால் அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். என் இறப்பு நெருங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே நீ அல்லாஹ்வை அஞ்சிக் கொள். பொறுமையாக இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி சென்று விடுவேன்'' என்று சொன்னார்கள். ஆகவே தான் நான் உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட போது, நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, "ஃபாத்திமா! "இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு' அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு' நீ தலைவியாக இருக்க விரும்பவில்லையா?'' என்று ரகசியமாகக் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 6285, 6286, 3263

ரகசியம் காத்த அனஸ் (ரலி)

நான் சிறுவர்களுடன் விளையாடிக் கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து எங்களுக்கு ஸலாம் சொன்னார்கள். பிறகு என்னை ஒரு காரியமாக அனுப்பி வைத்தார்கள். அதனால் நான் என்னுடைய தாயாரிடம் வர தாமதமாகி விட்டேன். பிறகு வந்ததும், "தாமதமானதற்கான காரணம் என்ன?'' என்று என் தாயார் வினவினார். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு காரியமாக என்னை அனுப்பி வைத்தார்கள்'' என்று பதிலளித்தேன். "அவர்களுடைய அந்தக் காரியம் என்ன?'' என்று கேட்டார். "அது ரகசியமாகும்'' என்றேன். "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் ரகசியத்தை யாரிடமும் தெரிவிக்காதே'' என்று கூறினார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), 

நூல்: முஸ்லிம் 4533

மாபெரும் அமானித மோசடி

இன்று மணமுடித்த மாப்பிள்ளை தனது முதலிரவில் அனுபவித்த ரகசியத்தைப் பற்றி நண்பர்களிடம் சர்வ சாதாரணமாகப் பகிர்ந்து கொள்கின்றான். அது போல் பெண்ணும் முதலிரவு ரகசியத்தைப் பற்றி தன் தோழிகளிடம் பகிர்ந்து கொள்கின்றாள். நான்கு பெண்கள் ஓரிடத்தில் கூடிவிட்டால் அவர்களிடத்தில் அதிகமாக உலவும் பேச்சு இந்த வகையான பேச்சு தான். இந்த வக்கிரமான, அக்கிரமமான ஆபாச வர்ணனைகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிக வன்மையாகக் கண்டிக்கின்றார்கள்.

தானும் தனது மனைவியும் இல்லறத்தில் ஈடுபட்ட பின்னர் அவளது அந்தரங்கத்தைப் பரப்புபவன் தான் மறுமையில் அல்லாஹ்விடம் மிக மிகக் கெட்ட ரக மனிதனாவான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), 

நூல்: முஸ்லிம் 2597

எனவே ரகசியங்களைக் காத்து, இத்தகைய அமானித மோசடியிலிருந்து விலகிக் கொள்வோமாக!

குறிப்பு : 2004 ஆகஸ்ட் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 14, 2015, 7:47 AM

ஜமாஅத் தொழுகை

ஜமாஅத் தொழுகை

எம். ஷம்சுல்லுஹா

நயவஞ்சகரின் அடையாளம்

சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்குப் பாரமான தொழுகை வேறு எதுவும் இல்லை. அந்த இரு தொழுகைகளையும் (ஜமாஅத்தாகத்) தொழுவதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைக்கு வந்து விடுவார்கள். இகாமத் சொல்லுமாறு நான் முஅத்தினுக்குக் கட்டளையிட்டு, பின்னர் ஒருவரை இமாமாக நின்று தொழுவிக்குமாறு கூறி அதன் பின்பு யாராவது தொழுகைக்கு வராமல் இருந்தால் அவர்களைத் தீயிட்டுக் கொளுத்த நான் நினைத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : புகாரி (657)

(ஜமாஅத்திற்குப் போகாமல்) தன் வீட்டிலேயே தங்கியிருந்து இன்னார் தொழுவது போல் உங்கள் வீடுகளிலேயே நீங்கள் தொழுவீர்களானால் நிச்சயமாக நீங்கள் உங்கள் நபிவழியை விட்டவராவீர்கள். உங்கள் நபிவழியை விட்டீர்களானால் நீங்கள் வழிகெட்டுப் போய் விடுவீர்கள். எந்த ஒரு மனிதரும் அழகுற உலூச் செய்து இந்தப் பள்ளிகள் ஏதேனும் ஒன்றை நோக்கி வருகின்ற போது, அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு அடிக்கும் அல்லாஹ் ஒரு நன்மையை எழுதி ஓர் அந்தஸ்தை உயர்த்தி அதன் மூலம் ஒரு தீமையை அழிக்காமல் இருப்பதில்லை. நன்கு அறியப்பட்ட நயவஞ்சகரைத் தவிர இந்த ஜமாஅத் தொழுகைக்கு வேறு யாரும் வராமல் இருப்பது கிடையாது. ஒருவர், இரண்டு பேரின் கைத்தாங்கலாக (பள்ளிக்கு) கொண்டு வரப்பட்டு வரிசையில் நிறுத்தப் படுவதை நாங்கள் கண்டிருக்கிறோம்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), 

நூல் : முஸ்லிம்

இதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் அவர் பிரகடனப் படுத்தப் பட்ட ஒரு நயவஞ்சகர் என்பது தெளிவாகின்றது. நாம் இந்த நயவஞ்சகத் தன்மையிலிருந்து நம்மைக் காப்பாற்றிக் கொள்ள வேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விஷயத்தில் மிகவும் கடுமையானவர்களாக இருந்துள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! விறகுகளைக் கொண்டு வந்து, கள்ளிகளாக உடைக்கும் படி உத்தரவு பிறப்பித்து விட்டு, பின்னர் தொழுகைக்காக அறிவிப்பு செய்யும் படி ஆணையிட்டு, பின்னர் மக்களுக்குத் தொழுவிக்கும் படி ஒருவருக்குக் கட்டளையிட்டு விட்டு, (ஜமாஅத் தொழுகைக்கு வராத) மனிதர்களைத் தேடிச் சென்று அவர்களுடைய வீடுகளை அவர்களுடன் சேர்த்து எரித்து விட வேண்டுமென நான் எண்ணியதுண்டு. என் உயிர் எவன் கைவசத்திலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! உங்களில் ஒருவருக்கு சதைத் திரட்சியுள்ள ஒரு எலும்போ அல்லது ஆட்டின் இரு குளம்புகளோ கிடைக்கும் என்றிருந்தாலும் கூட அவர் இஷா தொழுகையில் கலந்து கொள்வார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : புகாரி 644, 7224

ஜமாஅத் தொழுகை விஷயத்தில் எந்த அளவுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கண்டிப்பாக இருந்துள்ளார்கள் என்பதை நாம் இந்த ஹதீஸிலிருந்து அறிந்து கொள்ள முடிகின்றது.

பாங்கு சப்தம் கேட்டு விட்டால் உடனே பள்ளிக்கு வந்து விடவேண்டும். பாங்கு சப்தம் கேட்ட பின் வீட்டில் தொழுவதற்கு அனுமதி கிடையாது. இந்தக் காலத்தில் பாங்கு சப்தம் கேட்காத பகுதியே இல்லை என்று சொல்லும் வண்ணம் எங்கு பார்த்தாலும் ஒலி பெருக்கி வசதிகள் உள்ளன. அப்படியிருந்தும் நாம் பள்ளிக்குச் செல்ல முன்வருவதில்லை.

அபூஹுரைரா (ரலி) அறிவிக்கும் ஹதீஸைப் பாருங்கள் :

கண் தெரியாத ஒரு நபித் தோழர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! பள்ளிக்கு அழைத்து வரும் வழிகாட்டி எனக்கு இல்லை'' என்று குறிப்பிட்டு, தனக்கு வீட்டில் தொழ அனுமதி வழங்கும் படி கேட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள் அனுமதி வழங்கினார்கள். அவர் திரும்பிச் செல்லும் போது நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூப்பிட்டு, "நீ தொழுகைக்கான அழைப்பைச் செவியுறுகின்றாயா?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர் ஆம் என்றார். அப்படியானால் நீ பள்ளிக்கு வந்து விடு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(நூல் : முஸ்லிம்)

கண் தெரியாத நபித்தோழருக்கே நபி (ஸல்) அவர்கள் வீட்டில் தொழுவதற்கு அனுமதிக்கவில்லை என்பதை இங்கு கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே பாங்கு சப்தம் கேட்டு விட்டால் பள்ளிக்கு வந்தாக வேண்டும் என்ற கட்டளையை நாம் தெளிவாக உணர முடிகின்றது. இந்தக் கட்டளையைத் தெரிந்த பின்பும் நாம் பள்ளிக்கு ஜமாஅத் தொழுகைக்கு வரவில்லையெனில் நாம் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் மாறு செய்கின்றோம் என்று தான் பொருள். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

27 மடங்கு நன்மைகள்

"தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உமர் (ரலி), 

நூல் : புகாரி (645)

ஒருவர் தன் கடையில் அல்லது வீட்டில் தொழுவதை விட அவர் பள்ளிவாச-ல் ஜமாஅத்துடன் தொழும் தொழுகைக்கு 27 மடங்கு நன்மை அதிகம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

ஷைத்தானின் ஆதிக்கம்

"ஒரு நகரத்திலோ கிராமத்திலோ மூன்று பேர் இருந்து அவர்களுக்கு மத்தியில் தொழுகை நிலை நாட்டப் படவில்லையாயின் அத்தகையவர்களிடம் ஷைத்தான் ஆதிக்கம் செலுத்தாமல் விட மாட்டான். எனவே நீங்கள் ஜமாஅத்தை வலுவாகப் பிடித்துக் கொள்ளுங்கள். நிச்சயமாக ஓநாய் அடித்துத் தின்னுவது தனித்த ஆட்டைத் தான்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : அபூதர்தா (ரலி), 

நூல் : அபூதாவூத்

ஒவ்வொரு காலடிக்கும் நன்மைகள்

உங்களில் ஒருவர் ஜமாஅத்துடன் தொழுவது, அவரது வீட்டிலோ, கடைவீதியிலோ தனியாகத் தொழுவதை விட இருபதுக்கும் அதிகமான மடங்கு சிறந்ததாகும். ஏனெனில், அவர் உளூச் செய்து, அதை அழகுறச் செய்து, பிறகு பள்ளிவாசலுக்கு வருகின்றார். தொழுகையைத் தவிர வேறு எதுவும் அவரை (பள்ளிக்கு) எழுந்து செல்ல வைக்கவில்லை. அவர் எடுத்து வைக்கும் ஒவ்வொரு காலடிக்கும் ஒரு படித்தரம் (அந்தஸ்து) அவருக்கு உயர்த்தப் படுகின்றது. அல்லது ஒரு தவறு அவரை விட்டு நீக்கப் படுகின்றது.

மேலும் உங்களில் ஒருவர் தொழக்கூடிய இடத்தில் அமர்ந்திருக்கும் வரை வானவர்கள் அவருக்காக துஆ செய்கின்றனர். அங்கே அவரது காற்று பிரிந்து, உளூ நீங்கி விடாமல் இருக்கும் வரை, (பிறருக்கு) துன்பம் தரும் எதையும் அவர் செய்யாமல் இருக்கும் வரை. "இறைவா! இவர் மீது கருணை செய்வாயாக! இவருக்கு இரக்கம் காட்டுவாயாக!'' என்று வானவர்கள் பிரார்த்திக்கின்றார்கள். உங்களில் ஒருவர் தொழுகைக்காகக் காத்திருக்கும் வரை அவர் தொழுகையிலேயே இருக்கின்றார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : புகாரி (2119)

எவர் தன்னுடைய வீட்டில் உலூச் செய்து விட்டு, பிறகு அல்லாஹ்வின் கடமைகளில் ஒரு கடமையை நிறைவேற்றுவதற்காக அல்லாஹ்வின் இல்லங்களில் ஏதேனும் ஒன்றை நோக்கிச் செல்லும் போது அவர் எடுத்து வைக்கும் எட்டுக்கள் ஒரு தீமையை அழித்து விடுகின்றது. ஓர் அந்தஸ்தை உயர்த்தி விடுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), 

நூல் : முஸ்லிம்

அன்சாரிகளில் ஒருவர் இருந்தார். பள்ளியை விட்டு அவர் தூரமாக இருந்ததைப் போல் வேறு யாரும் தூரமாக இருக்க நான் அறிந்திருக்கவில்லை. ஆனால் அவருக்கு ஒரு தொழுகை கூட விடுபடுவது கிடையாது. "கும்மிருட்டிலும் கடும் வெப்பத்திலும் ஏறி வருவதற்காக ஒரு கழுதையை வாங்க வேண்டியது தானே?'' என்று அவரிடம் கேட்கப்பட்டது.

அதற்கு அவர், "என்னுடைய வீடு பள்ளிக்கு அருகில் இருப்பது எனக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை. பள்ளிக்கு வரும் போது என் வருகையும் என்னுடைய குடும்பத்தாரிடம் திரும்பிச் செல்லும் போது என்னுடைய திரும்புதலும் பதியப் பட வேண்டும் என்று நான் விரும்புகின்றேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உனக்கு இந்த நன்மைகள் அனைத்தையும் வழங்குவானாக!'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : உபை இப்னு கஅப் (ரலி), 

நூல் : முஸ்லிம்

பள்ளியைச் சுற்றியுள்ள பகுதிகள் கா-யாகி இருந்தன. சலமா கிளையினர் பள்ளிக்கருகில் வந்து விட விரும்பினர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியதும், அவர்களை நோக்கி, "நீங்கள் பள்ளிக்கு அருகில் வந்து விட விரும்புகின்றீர்களாமே!'' என்று வினவினார்கள். அதற்கு அவர்கள் "ஆம் அல்லாஹ்வின் தூதரே! இடம் பெயர்ந்து வருவதை நாங்கள் விரும்புகின்றோம்'' என்று கூறினர்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "ஸலமா கிளையினரே! உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப் படுகின்றன. உங்கள் வீடுகள் தூரமாக இருப்பதால் உங்கள் அடிச்சுவடுகள் பதியப் படுகின்றன'' என்று கூறினார்கள். உடனே சலமா கிளையினர் "நாங்கள் மாறி வருவது எங்களுக்கு மகிழ்ச்சியளிக்கவில்லை'' என்று பதிலளித்தனர்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : முஸ்லிம்

பள்ளி தூரமாக இருப்பதால் ஒருவர் வீட்டி-ருந்து புறப்பட்டு வரும் போது அவருடைய பாதங்கள் சாலையில் மட்டும் சுவடுகளைப் பதியவில்லை. அல்லாஹ்வின் ஏட்டில் நன்மைகளையும் பதிவு செய்கின்றன என்ற விளக்கத்தை நபி (ஸல்) அவர்களிடமிருந்து பெற்ற சலமா கிளையினர் தங்கள் வீடுகளைப் பள்ளிக்கருகில் கொண்டு வரும் திட்டத்தையே கைவிட்டு விட்டார்கள் என்றால் மறுமையின் மீது அவர்கள் எந்த அளவுக்குப் பிடிப்பும் பக்தியும் கொண்டிருந்தார்கள் என்பதை நாம் அறிய முடிகின்றது.

யார் நீண்ட தூரத்தி-ருந்து நடந்து தொழுகைக்கு வருகின்றாரோ அவருக்கு மற்ற எல்லோரையும் விட அதிகம் நன்மை உண்டு. யார் ஜமாஅத் தொழுகையை எதிர் பார்த்து இருந்து இமாமுடன் தொழுகின்றாரோ அவருக்குத் தனியாகத் தொழுது விட்டுத் தூங்கி விடுபவரை விட அதிகம் நன்மை உண்டு என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி), 

நூல் : புகாரி (651)

மனிதனின் ஒவ்வொரு மூட்டிற்காகவும் ஒவ்வொரு நாளும் தர்மம் செய்வது கடமையாகும். ஒருவருக்கு அவரது வாகனத்தில் ஏறிட உதவுவது, அல்லது அவரது வாகனத்தின் மீது அவரது மூட்டை முடிச்சுகளை ஏற்றி வைப்பது கூட தர்மமாகும். நல்ல சொல்லும், தொழுகைக்கு நடந்து செல்ல எடுத்து வைக்கும் ஒவ்வோர் அடியும், பாதையை அறிவித்துத் தருவதும் தர்மமாகும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (2891)

குபாவில் உள்ள பனூ அம்ர் பின் அவ்ஃப் உடைய பள்ளியில் நான் தொழுது விட்டு வரும் போது நடந்து வந்து கொண்டிருந்த அப்துல்லாஹ் பின் உமர் (ர-)யைச் சந்தித்தேன். அவரைக் கண்டதும் நான் என் கோவேறுக் கழுதையி-ருந்து இறங்கி, "என் சிறிய தந்தையே! இதில் ஏறிக் கொள்ளுங்கள்'' என்று சொன்னேன். அதற்கு அவர், "என்னுடைய சகோதரரின் மகனே! இந்த வாகனத்தில் நான் ஏற வேண்டுமானால் (எனது வாகனத்திலேயே) ஏறி வந்திருப்பேன். எனினும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளியை நோக்கி வந்து அதில் தொழுகின்ற வரை அவர்கள் நடந்து வரத் தான் கண்டிருக்கின்றேன். எனவே அதைப் போல் நானும் பள்ளியை நோக்கி நடந்து வருவதையே விரும்புகின்றேன்'' என்று பதில் அளித்தார்கள். வாகனத்தில் ஏறி வர மறுத்து தன் வழியிலேயே சென்று விட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் கைஸ் பின் மக்ரமா, 

நூல் : அஹ்மத்

இரவு முழுவதும் தொழுத நன்மை

உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) மக்ரிப் தொழுகைக்குப் பின் பள்ளியில் நுழைந்து அவர்கள் மட்டும் தனியே அமர்ந்திருந்தார்கள். அவர்களுக்கு அருகில் நான் அமர்ந்தேன். அப்போது அவர்கள், "எனது சகோதரன் மகனே! யார் இஷா தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவின் நடுப் பகுதி வரை நின்று தொழுதவர் போலாவார். யார் சுப்ஹு தொழுகையை ஜமாஅத்துடன் தொழுகின்றாரோ அவர் இரவு முழுவதும் நின்று தொழுதவர் போலாவார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அபீ அம்ரா

நூற்கள் : முஸ்-ம், அபூதாவூத்

இந்த ஹதீஸ்களின் அடிப்படையில் ஜமாஅத் தொழுகையைப் பேணி நன்மைகளை அடைவோமாக!

குறிப்பு : 2004 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:59 AM

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

குடும்பப் பெண்கள் கொஞ்சிப் பேசலாமா?

எம். ஷம்சுல்லுஹா

"பொம்பள சிரிச்சாப் போச்சு'' என்ற பேச்சு தமிழ் பேசும் மக்களிடம் சர்வ சாதாரணமாகச் சுற்றி வருகின்ற ஓர் எச்சரிக்கைச் சொல்லாகும். இது எதைக் குறிக்கின்றது? ஒரு பெண்ணிடத்தில் உரையாடுகின்ற எந்த ஒரு ஆடவனும் முற்றிலும் துறந்த முனிவனாகப் பேச மாட்டான். அப்படிப்பட்ட இயல்பில் மனிதன் படைக்கப்படவும் இல்லை.

ஒரு பெண்ணிடம் பேசும் போது அவளின் கண் சாடை கிடைக்காதா? செவ்விதழ்கள் விரித்து சிரிக்க மாட்டாளா? என சிரிப்புக்காக தவம் கிடப்பான். சிரித்து விட்டால் போதும் அது தனது காமப் பசியைத் தீர்ப்பதற்காக கொடுக்கப்பட்ட பகிரங்க அழைப்பு என்று எடுத்துக் கொண்டு அடுத்தக்கட்ட நடவடிக்கையில் இறங்கி விடுவான். எனவே ஒரு பெண் எப்போதும் ஆடவனிடம் கண்டிப்பாகவும், கடுமையாகவும் இருக்க வேண்டும் என்பதைத் தான் இந்தப் பழமொழி தெரிவிக்கின்றது.

ஒரு பெண் ஓர் ஆணிடம் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்று நாம் வாழும் சமுதாய அமைப்பு முறை மேற்கண்டவாறு கோடிட்டுக் காட்டுகின்றது. ஆடவனிடம் பெண்கள் கண்டிப்பாக நடக்க வேண்டும் என்ற நிலைபாட்டை சமுதாயம் அங்கீகரிக்கின்றது. காரணம் இதைச் சமுதாயம் தன் அனுபவத்தின் மூலம் உணர்ந்திருக்கின்றது.

இஸ்லாமிய மார்க்கம் இதைத் தான் வலியுறுத்திக் கூறுகின்றது. பெண்கள் ஆண்களிடம் குழைந்து, கொஞ்சி, நயந்து பேசினார்கள் என்றால் அது அவர்கள் சபல உணர்வுகளுக்குக் காட்டும் பச்சைக் கொடியாகி விடும் என்று திருக்குர்ஆனில் அல்லாஹ் கூறுகின்றான்.

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:32)

அதுவும் அல்லாஹ் யாரை நோக்கிக் கூறுகின்றான்? சதாவும் வஹீயின் பாதுகாப்பில் இருந்து கொண்டிருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மனைவியரை நோக்கிக் கூறுகின்றான் எனும் போது மற்றவர்களின் நிலைமை எம்மாத்திரம்?

அல்லாஹ் பெண்களை வியாபாரம், தொழில், கல்வி, குடும்ப விவகாரங்கள் தொடர்பாக வெளியே செல்வதைத் தடுக்கவில்லை. ஆனால் இந்த விவகாரங்களில் வரைகளையும், வரம்புகளையும் ஏற்படுத்தியிருக்கிறான். ஆனால் இந்த வரம்புகள் இன்று காற்றில் பறக்க விடப்பட்டுள்ளன.

தொடரும் அவலங்கள்

பெண்கள் இன்று வெளியே ஆட்டோ, கார், பஸ் ஆகியவற்றில் பயணம் செய்கின்றனர். இவற்றிற்கு மார்க்கத்தில் தடையில்லை. ஆனால் ஆட்டோ, கார், பஸ் டிரைவர்கள் கண்டக்டர்களிடம் அநாவசியமான பேச்சுக்கள்.

மளிகை, துணி, காய்கறி கடைகளில் சென்று பொருட்கள் வாங்குவதற்கு மார்க்கம் தடை விதிக்கவில்லை. ஆனால் அந்தக் கடைகளில் அதிலும் குறிப்பாக ஏ.சி. போடப்பட்ட நகைக் கடைகளில் ஒய்யாரமாக, உல்லாசமாக உட்கார்ந்து ஊர்பட்ட கதைகளைப் பேசிக் கொண்டிருப்பது.

மேற்கண்ட வியாபாரிகள் வீடுகளுக்கு வருகின்றனர். இதல்லாமல் கணவனின் நண்பர்கள் என்று பலர் வருகின்றனர். இத்தகையோரிடம் கட்டுப்பாடற்ற முறையில் பேச்சுக்கள் நீள்கின்றன.

தொலைபேசியில் தொடரும் பேச்சுக்கள்

இன்று தொலைபேசி முக்கியமான தகவல் தொடர்பு சாதனமாகும். தொழில், வியாபாரம், குடும்பம், மருத்துவம் இன்னும் எண்ணிலடங்கா துறைகள் ரீதியிலான இதன் பயன்பாடுகளை நாம் பட்டியலிட முடியாது. இன்று வெளிநாட்டில் இருக்கும் சகோதரர்களின் ஒரேயொரு ஆறுதல் தொலைபேசியில் தங்கள் துணைவியருடன் உரையாடுதல் தான். ஒரு தடவை மனைவியுடன் போனில் பேசி விட்டால் ஏதோ தாயகம் சென்று திரும்பிய ஒரு திருப்தி கிடைக்கின்றது.

இப்படிப்பட்ட இந்தத் தொலைபேசி, முன் பின் தெரியாத பலருடன் பல கட்டங்களில் நீண்ட நேரம் பேசுவதற்குப் பயன்படுத்தப் படுகின்றது. வட்டிக் கடைக்காரர்கள், வீடியோ கேஸட் விநியோகிஸ்தர்கள், கேபிள் டிவி ஆபரேட்டர்கள் போன்றவர்களிடம் பேசுவதற்காக இந்தத் தொலைபேசிகள் சர்வ சாதாரணமாகப் பயன்படுத்தப் படுகின்றன.

பாட்டு கேட்டு போன் செய்தல்

டிவிக்கள் அதிலும் கலர் டிவிக்கள் ஒவ்வொரு வீட்டிலும் சீரழிய ஆரம்பித்த பின் மார்க்கோனி கண்டுபிடித்த ரேடியோவுக்கு மவுசு இல்லாமல் போனது. நூற்றுக்கணக்கான தொலைக்காட்சி அலைவரிசைகள். தமிழகத்தில் உள்ள மக்களை நரகப் படுகுழியில் கொண்டு போய் தள்ளுவதற்காக சன் நெட்வொர்க் நிறுவனத்தார் சன் டிவி, கேடிவி என்று எக்கச்சக்க சேனல்கள் ஆரம்பித்தது போதாது என்று சுமங்கலி போன்ற கேபிள் டிவிக்களையும் தொடங்கி நடத்திக் கொண்டிருக்கின்றனர்.

பார்ப்பதற்கு வாய்ப்புள்ள இடங்களில் எல்லாம் பார்த்துக் கெட்டுப் போங்கள்! பார்த்துக் கெட முடியாத இடங்களில் கேட்டுக் கொண்டே கெட்டுப் போங்கள் என்று சூரியன் எஃப்.எம். ஆரம்பித்துள்ளனர்.

உங்களை நாங்கள் கெடுக்காமல் சும்மா விட மாட்டோம் என்று இந்த எஃப்.எம். அலைவரிசைகள் கங்கணம் கட்டிக் கொண்டு களத்தில் இறங்கியிருக்கின்றன.

இப்போது இரண்டு சக்கர வாகனங்களில் செல்லக் கூடியவர்களும் ஒரு ரேடியோவை கட்டிக் கொண்டு பாட்டைக் கேட்டுக் கொண்டு பயணத்தைத் தொடர்கின்றனர்.

இந்த எஃப்.எம். ரேடியோக்கள் கையாளும் புது முறை, கலாச்சாரத்தை மேலும் சீரழிக்கத் துவங்கியுள்ளது. வீட்டுப் பெண்களிடம் போன் செய்து உங்களுக்குப் பிடித்த பாட்டு என்ன? என்று கேட்கின்றனர். அதற்கு பாத்திமா பீவியும், பரக்கத் நிஸாவும் எங்களுக்கு இன்ன பாட்டு வேண்டும் என்று கேட்கின்றனர். இந்தப் பாட்டை விரும்புவதற்குக் காரணம்? என்று கேட்கும் போது, நாங்கள் திருமணம் முடித்ததும் முதன் முதலில் பார்த்த படத்தில் இந்தப் பாடல் இடம் பெற்றுள்ளது என்று பதில்.

அடுத்து நிலைய அறிவிப்பாளர், உங்களுக்குப் பிடித்த நடிகர் யார்? என்று கேட்கிறார். உடனே இந்தப் பெண், விஜய் என்றோ அஜீத் என்றோ தங்களுக்குப் பிடித்த நடிகரைக் கூறுகின்றார்கள். டிவியிலும் இது போன்ற கேள்விக்குப் பதில் சொல்லும் பெண்களுக்கு அருகில் கணவனும் வெட்கம் கெட்டுப் போய் நிற்கின்றான்.

இது மாதிரி சொல்லும் போது இப்படிப்பட்டவளை இழுத்துப் பிடித்து சாத்தாமல் எருமை மாடு போல் அட்டியின்றி ஆத்திரமின்றி அப்படியே அசையாமல் நிற்கின்றான். ஒரு பெண்ணின் உள்ளம் அனைத்தும் தான் கொண்ட கணவனுக்கே சொந்தம் என்ற நிலை மாறி அடுத்தவனுக்கும் அங்கு இடமிருக்கின்றது என்றாகி விடுகின்றது. அதாவது தனது கணவனை விட அஜீத் தான் தனக்குப் பிரியம் என்ற படுமோசமான நிலைக்கு இவள் போகின்றாள் என்பதை அவளுடைய வார்த்தையே எடுத்துக் காட்டுகின்றது.

பெண்களைப் பற்றி இங்கு எழுதுவதால் ஆண்கள் ரொம்ப சுத்தம் என்று எண்ணிக் கொள்ளக் கூடாது. அடுத்து அப்படியே மைக்கைத் திருப்பி கணவனிடம், உங்களுக்குப் பிடித்த நடிகை யார்? என்று கேட்கிறார்கள். இந்த ஆடவனும் வெட்கமில்லாமல் ஏதேனும் ஒரு விபச்சாரியின் பெயரைக் கூறுகின்றான். டி.வி. அறிவிப்பாளர்களைப் பொறுத்தவரை குடும்பக் கலாச்சாரத்தை குழி தோண்டிப் புதைப்பது என்ற தீர்மானத்தோடு தான் வருகின்றார்கள். அதனால் தான் ஆணிடத்தில் கேட்கும் போது, பிடித்த நடிகை யார்? என்று கேட்பதும் பெண்ணிடத்தில், பிடித்த நடிகன் யார்? என்று கேட்பதும் இவர்களது வாடிக்கையாக உள்ளது.

இப்போது விஷயத்திற்கு வருவோம். எஃப்.எம். ரேடியோ வந்த பிறகு அனைத்துப் பேருந்துகளிலும், டீக்கடைகளிலும் இந்தக் குரல் தான் ஓங்கி ஒலிக்கின்றது.

இந்தப் பெண்மணி வீட்டிலிருந்து பேசுகின்ற இந்தப் பேச்சைக் கேட்டு பேருந்தில் பயணம் செய்யும் முஸ்லிம்கள் வெட்கித் தலை குனிய வேண்டியிருக்கின்றது. இதில் இந்தப் பெண் தான் வசிக்கின்ற முகவரி, தன் கணவர் பார்க்கும் வேலை, தன்னுடைய குடும்பத்தில் நடக்கும் மாமியார் மருமகள் சண்டை உட்பட எதையும் விடாது சொல்லித் தொலைக்கின்றாள்.

இதில் நிலைய அறிவிப்பாளரிடம் பேசும் போது கொஞ்சுகின்ற கொஞ்சல், சிணுங்குகின்ற சிணுங்கல், குழைகின்ற குழைவு இத்தனையும் கேட்கும் போது உண்மையில் நம்மால் பேருந்தில் இருக்க முடியவில்லை. கணவனிடம் காட்ட வேண்டிய கொஞ்சலையும் குழைவையும் யாரோ ஒரு நிலைய அறிவிப்பாளரிடம் காட்டுவது மட்டுமல்லாமல் அதைப் பகிரங்கமாக, பலர் கேட்கும் அளவுக்குக் காட்டுகின்றார்கள்.

இதில் பெயர், முகவரியை வேறு தெளிவாக அதிலேயே அறிவித்து விடுகின்றார்கள். இதைக் கேட்பவர்களில் அல்லாஹ் கூறுவது போல் உள்ளத்தில் நோயுள்ளவர்கள், சபல புத்தியுள்ளவர்கள் என்ன நினைப்பார்கள்? சந்தர்ப்பம் கிடைக்காதா என்று சதி வலை பின்ன மாட்டார்களா?

நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தமது பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார். ஒரு ஆண் மகன் தன் குடும்பத்திற்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி அவனும் விசாரிக்கப்படுவான். ஒரு பெண், கணவனின் வீட்டில் உள்ளவர்களுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தனது பொறுப்பில் உள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள். ஒரு ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தனது பொறுப்பு பற்றி விசாரிக்கப்படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), 

நூல்: புகாரி 893

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது போல் இத்தகைய பெண்கள் மறுமையில் அல்லாஹ்விடம் பதில் சொல்லியே ஆக வேண்டும்.

அவர்களின் நாவுகளும், கைகளும், கால்களும் அவர்களுக்கு எதிராக அவர்கள் செய்தவை குறித்து சாட்சியமளிக்கும். அன்றைய தினம் அவர்களது உண்மையான கூலியை அவர்களுக்கு அல்லாஹ் கொடுப்பான். அல்லாஹ் உண்மையானவன்; தெளிவு படுத்தக்கூடியவன் என்பதை அவர்கள் அறிந்து கொள்வார்கள்.

(அல்குர்ஆன் 24:24,25)

இந்த வசனத்தின் படி மறுமையில் இவர்களது நாவுகளே அல்லாஹ்விடம் பேசும். அப்போது அல்லாஹ்விடமிருந்து தப்ப முடியாது. எனவே அல்லாஹ்வைப் பயந்து கொள்ளுங்கள் என்று இத்தகைய பெண்களுக்கு நாம் அறிவுரை கூறக் கடமைப்பட்டுள்ளோம்.

குறிப்பு : 2004 ஜூலை மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:54 AM

பொய்யென்று தெரிந்த பின்பும்...

பொய்யென்று தெரிந்த பின்பும்...

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சத்திய இஸ்லாத்தை எடுத்துச் சொன்ன போது அசத்தியவாதிகள் மூன்று அணிகளாக நின்று மூர்க்கத்தனமாக எதிர்த்தார்கள். மக்கத்து முஷ்ரிக்குகள், வேதம் கொடுக்கப்பட்ட யூதர்கள் மற்றும் கிறித்தவர்கள் ஆகியோரே இந்த மூன்று சாரார்.

இவர்கள் மூவரும் தாங்கள் தான் சரியான பாதையில் இருப்பதாகத் தம்பட்டம் அடித்துக் கொண்டனர். மூன்று சாராருமே சத்தியத்தில் இருப்பதாகச் சாதித்தது மக்களை வெகுவாகப் பாதித்தது. எது சத்தியம்? யார் சொல்வது சத்தியம்? என்று மக்கள் தடுமாறினர். உண்மையிலேயே தூய இஸ்லாத்தை நோக்கி வருவதற்கு இது தடைக்கல்லாக அமைந்தது.

அல்லாஹ் இந்தத் தருணத்தில் அசத்தியவாதிகளை எதிர்கொள்வதற்கு தன் தூதருக்கு ஓர் ஆயுதத்தை வழங்கினான்.

விவேகத்துடனும், அழகிய அறிவுரையுடனும் உமது இறைவனின் பாதையை நோக்கி அழைப்பீராக! அவர்களிடம் அழகிய முறையில் விவாதம் செய்வீராக! உமது இறைவன் தனது பாதையை விட்டு விலகியோரை அறிந்தவன்; அவன் நேர் வழி பெற்றோரையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 16:125)

இது தான் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் அளித்த வலுவான ஆயுதமாகும். இந்த ஆயுதத்தை அல்லாஹ் இப்ராஹீம் நபி அவர்களுக்கும் வழங்கியிருந்தான். இதைக் கொண்டு அவர்கள் அரசனின் கண்களில் விரலை விட்டு அசைத்தார்கள். அசத்தியத்திற்கு ஆதரவாக ஆணவத்தில் அவன் எடுத்து வைத்த வாதத்திற்கு இப்ராஹீம் நபி ஆப்பு வைத்ததை வெகுவாக அல்லாஹ் பாராட்டிச் சொல்கிறான்.

தனக்கு அல்லாஹ் ஆட்சியைக் கொடுத்ததற்காக இப்ராஹீமிடம் அவரது இறைவன் குறித்து தர்க்கம் செய்தவனை நீர் அறியவில்லையா? "என் இறைவன் உயிர் கொடுப்பவன்; மரணிக்கச் செய்பவன்'' என்று இப்ராஹீம் கூறிய போது, "நானும் உயிர் கொடுப்பேன்; மரணிக்கச் செய்வேன்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் கிழக்கில் சூரியனை உதிக்கச் செய்கிறான். எனவே நீ மேற்கில் அதை உதிக்கச் செய்!'' என்று இப்ராஹீம் கேட்டார். உடனே (ஏக இறைவனை) மறுத்த அவன் வாயடைத்துப் போனான். அநீதி இழைத்த கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 2:258)

அசத்தியத்தில் இருக்கும் துரோகிகளுக்கு, அநியாயக்காரர்களுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான் என்றும் வாக்குறுதி தருகின்றான். இதன் மூலம் அசத்தியத்தில் இருப்பவர்கள் கூட தங்கள் வாதத் திறமையினால் ஜெயித்து விடுவார்கள் என்ற கருத்துக்கு மரண அடி கொடுக்கின்றான்.

இங்கு அழகிய முறையில் விவாதம் செய்வீராக என்று நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வழிகாட்டியதுடன் அப்படி வாதம் செய்த போது, அசத்தியவாதிகள் தோற்று ஓடியதையும் அழகாக எடுத்துரைத்து, நபி (ஸல்) அவர்களுக்குத் தெம்பூட்டுகின்றான்.

அல்லாஹ் கூறும் அழகிய விவாதம் என்ற ஆயுதத்தைக் கையிலெடுக்கும் போது அசத்தியவாதிகளிடமிருந்து இரண்டு விதமான வெற்றி கிடைக்கும். ஒன்று அவர்கள் வந்து தோற்று ஓடி அசடு வழிவது! இன்னொன்று வாதத்திற்கு வராமலேயே வழுவி நழுவி ஓடுவது! இந்த இரு கட்டங்களிலுமே சத்தியமே வெற்றி பெறுகின்றது.

இதன் படி நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு அசத்தியவாதிகளுக்கு எதிராக அறை கூவல் விடுத்த போது மக்கத்து முஷ்ரிக்குகள் இதற்கு முன்வரவில்லை. அதனால் சத்தியத்திற்கு அது மாபெரும் வெற்றியாக அமைந்தது.

ஆனால் இதற்குப் பின்னாலும் யூத, கிறித்தவர்கள் வாதத்திற்கு வராததுடன் வாய் மூடி நிற்கவில்லை. தங்கள் மார்க்கங்கள் தான் சரியானவை என்று குருட்டுத் தனமாக சாதித்துக் கொண்டிருந்தனர்.

அப்போது தான் அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு இரண்டாவது ஆயுதத்தை வழங்குகின்றான். அது தான் முபாஹலா ஆகும்.

உமக்கு விளக்கம் வந்த பின் இது குறித்து உம்மிடம் யாரேனும் விதண்டாவாதம் செய்தால் "வாருங்கள்! எங்கள் பிள்ளைகளையும், உங்கள் பிள்ளைகளையும், எங்கள் பெண்களையும், உங்கள் பெண்களையும் அழைப்போம். நாங்களும் வருகிறோம். நீங்களும் வாருங்கள்! பின்னர் இறைவனிடம் இறைஞ்சி பொய்யர்கள் மீது அல்லாஹ்வின் சாபத்தைக் கேட்போம்'' எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 3:61)

இந்த வசனத்தின் மூலம் முபாஹலாவுக்கு அழைப்பு விடுக்குமாறு நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிடுகின்றான்.

வேதக்காரர்கள் தங்கள் அணியின் பக்கம் சத்தியம் இருக்கின்றது என்றால் அவர்கள் இந்த முபாஹலாவுக்கு வரவேண்டுமல்லவா? ஆனால் அவர்கள் வரவில்லை. வரவும் முடியாது. இது சத்தியத்திற்கு உள்ள வீரியம்! அசத்தியத்திற்குள்ள வீண் பிடிவாதம்! எனவே சத்தியம் வென்றது. அசத்தியம் அழிந்தது.

இதன் பிறகு இஸ்லாம் தான் அரபகத்தின் இறுதியான மார்க்கமானது. மக்கள் இஸ்லாத்திற்கு எதிரான ஷிர்க், யூத, கிறித்தவ கொள்கைகளைத் தூக்கி எறிந்தனர்.

(அல்லாஹ் வழங்கியுள்ள இந்த இரண்டு ஆயுதங்கள் முஸ்லிமல்லாதவர்களிடம் பயன்படுத்துவதற்கு மட்டுமல்ல. முஸ்லிம்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் உண்மை அறியும் கருவியாக, மெட்டல் டிடெக்டராக இந்த ஆயுதங்களைத் தந்திருக்கின்றான் என்பதை இதே இதழில் கேள்வி பதில் பகுதியில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது)

முஸ்லிம்கள் தங்களுக்கு மத்தியில் ஏற்படும் விவகாரங்களுக்கும் இதை ஒரு சிறந்த முன்மாதிரியாகக் கொண்டு, மாற்றுக் கருத்துள்ளவர்களை விவாதத்திற்கு அழைக்க வேண்டும். அதற்கு வரவில்லை என்றால் வர மறுப்பவர்களின் சாயம் அங்கேயே நன்றாக வெளுத்து விடும். அதற்கு மேலும் அவர்கள் தங்கள் நிலையைச் சரி கண்டால் அடுத்த வழி முபாஹலா தான்.

இதற்கும் மாற்றுக் கருத்துள்ளவர்கள் வரவில்லை என்றால் அவர்களிடம் உண்மை அறவே இல்லை என்பதை நாம் எளிதாக விளங்கிக் கொள்ளலாம். இந்த நிலையில் இந்த இரண்டு தரப்பைக் குறித்து இறை நம்பிக்கையாளர்கள் என்ன முடிவெடுக்க வேண்டும்? அதையும் அல்லாஹ்வே கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 49:9)

இரண்டு தரப்பினர் சண்டையிட்டுக் கொள்ளும் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு இருப்பது இரண்டே வழிகள் தான். இரண்டு கூட்டத்தினரிடையே இணக்கத்தை ஏற்படுத்துதல், அதில் ஒரு கூட்டம் வரம்பு மீறியிருந்தால் அந்தக் கூட்டத்திற்கு எதிராகக் களம் இறங்குதல். இந்த இரண்டைத் தவிர மூன்றாவது வழியில்லை என்பதை நாம் இங்கு தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

தற்போது தவ்ஹீது ஜமாஅத்தின் மீது புழுதி வாரித் தூற்றப்பட்ட போது யார் சொல்வது உண்மை என்று அறிய முடியாமல் மக்கள் தடுமாறினார்கள். அப்போது குர்ஆன் ஹதீஸ் அடிப்படையில் உண்மையின் மீது நாம் கொண்டிருக்கும் உறுதிப்பாட்டின் அடிப்படையில் நாம் அவர்களை விவாதத்திற்கு அழைத்தோம். வரவில்லை.

ஏதேதோ சாக்கு சொன்னார்கள். இரண்டு தரப்பும் மூளையைப் போட்டு கசக்கும் ஆய்வு விவகாரங்கள் எல்லாம் இதில் இல்லை, பேசப்போவது உலக விஷயம் தான். இதற்கு வாதத் திறமையும் தேவையில்லை, ஆதாரங்கள் தான் தேவை என்றெல்லாம் சமாதானம் சொல்லி அழைத்துப் பார்த்தோம். அப்போதும் வர மறுத்தார்கள். மறு வார்த்தையில் சொல்ல வேண்டுமானால் எங்களிடம் உண்மையில்லை என்று தங்களது மவுனத்தின் மூலம் ஒப்புதல் வாக்குமூலம் தந்தார்கள்.

இதிலேயே அவர்களது முகத்திரை கிழிந்து அல்லாஹ் உண்மையின் பக்கம் வெற்றியைத் தந்தான். ஆனால் இதற்குப் பிறகும் தங்களை நியாயப்படுத்தி வந்ததால் அடுத்த ஆயுதமாக முபாஹலாவைக் கையிலெடுத்தோம். அதற்கும் மவுனத்தையே பதிலளித்தார்கள். வேறொரு வார்த்தையில் சொல்ல வேண்டுமென்றால் நாங்கள் பொய்யர்கள் என்பதைப் போட்டுடைத்து விட்டார்கள்.

இதற்குப் பின் இறை நம்பிக்கையாளர்களின் பணி என்ன? அல்லாஹ் 49:9 வசனத்தில் கூறுவது போல் இவர்களை எதிர்த்துப் போராட வேண்டும். உண்மை என்று தெரிந்ததால் ஆயிரம் ஆண்டு கால மத்ஹபுகளை விட்டு வெளியேற முடிந்தவர்களால் 10 ஆண்டு கால இயக்கத்தை விட்டு வெளியேற முடியாதா? அவ்வாறு வெளியேறவில்லை என்றால் சத்தியத்தை விட அசத்தியத்தில் அதிக பிடிமானம் இருக்கின்றது என்று தான் அர்த்தம். அல்லாஹ் நம்மைக் காப்பாற்ற வேண்டும்.

இன்னொரு சாரார் இதுவும் வேண்டும், அதுவும் வேண்டும் என்ற நிலைப்பாட்டில் இருக்கின்றார்கள். அதாவது அநீதி இழைக்கப்பட்டவனும் வேண்டும், அநியாயக்காரனும் வேண்டும், செருப்பால் அடித்தவனும் வேண்டும், அடி வாங்கியவனும் வேண்டும் என்ற நிலைபாடு தான் இது!

இந்த சாரார் இரண்டுமே வேண்டாம் என்று முடிவெடுத்தால் கூட அதை வரவேற்கத்தக்க அம்சம் என்று கூறலாம். ஆனால் இரண்டுமே வேண்டும் என்று சொல்வது நயவஞ்சக நிலைக்கு நம்மை இழுத்துச் செல்லும் முடிவு தானே தவிர அல்லாஹ்வின் வசனத்திற்கு ஒப்பான முடிவல்ல.

எனவே இது போன்ற இரட்டை நிலை எடுப்பதை விடுத்து, குர்ஆனும் ஹதீசும் கூறும் வழியில் சத்தியத்தின் பக்கம் நின்று ஏகத்துவத்தைக் காக்கும் ஒரே நிலையை எடுக்க வேண்டும். அல்லாஹ் நம்மை நேர்வழியில் செலுத்துவானாக! 

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:20 AM

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

தர்மம் வழங்காதவர் அடையும் தண்டனைகள்

எம். ஷம்சுல்லுஹா

தர்மம் வழங்குவதன் சிறப்புகளையும் அதற்குக் கிடைக்கும் நன்மைகளையும் கடந்த இதழ்களில் பார்த்தோம். தர்மம் வழங்காதவர்கள் அடையும் தண்டனைகளைப் பற்றி குர்ஆனும் ஹதீசும் என்ன சொல்கின்றது என்பதை இப்போது பார்ப்போம். 

வள்ளலுக்கும் கஞ்சனுக்கும் உதாரணம் 

"கஞ்சனுக்கும் தர்மம் செய்பவனுக்கும் உதாரணமாவது, மார்பிலிருந்து கழுத்து வரை இரும்பாலான அங்கிகள் அணிந்த இரு மனிதர்களைப் போன்றதாகும். தர்மம் செய்பவர் தர்மம் செய்யும் போதெல்லாம் அவருடைய அங்கி விரிந்து விரல்களை மறைத்துக் கால்களை மூடி, தரையில் இழுபடும் அளவுக்கு விரிவடையும். கஞ்சன் செலவு செய்யக் கூடாது என்று எண்ணும் போதெல்லாம் அவ்வங்கியின் ஒவ்வொரு வளையமும் அதற்குரிய இடத்தை நெருக்கும் அவன் அதை விரிக்க முயன்றாலும் அது விரியாது'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 1443, 1444, 5797 

ஜகாத் கொடுக்காதவரின் தண்டனை

உலகில் ஒட்டகம் வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லையாயின் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து, தனது கால்களால் அவனை மிதிக்கும். மேலும் அது போலவே உலகில் ஆடு வளர்த்தவன் அதற்கான கடமையை நிறைவேற்றவில்லை என்றால் அது கியாமத் நாளில் முன்பிருந்ததை விட நல்ல நிலையில் வந்து தனது குளம்புகளால் அவனை மிதித்துத் தனது கொம்புகளால் அவனை முட்டும். மேலும் உங்களில் யாரும் கியாமத் நாளில் கத்திக் கொண்டிருக்கும் ஆட்டைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, (அபயம் தேடிய வண்ணம்) முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன். மேலும் யாரும் (கியாமத் நாளில்) குரலெழுப்பிக் கொண்டிருக்கும் ஒட்டகத்தைத் தமது பிடரியில் சுமந்து கொண்டு வந்து, முஹம்மதே என்று கூற, நான் "அல்லாஹ்விடம் உனக்காக எதையும் செய்ய எனக்கு அதிகாரம் இல்லை'' என்று கூறும் படியான நிலை ஏற்பட வேண்டாம். நிச்சயமாக நான் அறிவித்து விட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 1402 

நிதி சேகரிப்பு! நெருப்பில் சஞ்சரிப்பு!

அவர்கள் ஒருவருக்கொருவர் காட்டப்படுவார்கள். அந்நாளின் வேதனைக்கு ஈடாக தன் மகன்களையும், தனது மனைவியையும், தனது சகோதரனையும், தன்னை அரவணைத்த உறவினர்களையும், பூமியில் உள்ள அனைவரையும், பணயம் வைத்து பின்னர் விடுதலையாகலாம் என்று குற்றவாளி விரும்புவான். அவ்வாறில்லை! அது பெரும் நெருப்பாகும். அது தோலை உரிக்கும். பின்வாங்கிப் புறக்கணித்தவனையும், (செல்வத்தை) சேர்த்துப் பாதுகாத்தவனையும் அது அழைக்கும். (அல்குர்ஆன் 70:11-18) 
குறை கூறி புறம் பேசும் ஒவ்வொருவனுக்கும் கேடு தான். அவன் செல்வத்தைத் திரட்டி அதைக் கணக்கிடுகிறான். தனது செல்வம் தன்னை நிலைத்திருக்கச் செய்யும் என்று எண்ணுகிறான். அவ்வாறில்லை! ஹுதமாவில் அவன் எறியப்படுவான். ஹுதமா என்பது என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மூட்டப்பட்ட அல்லாஹ்வின் நெருப்பு. அது உள்ளங்களைச் சென்றடையும். நீண்ட கம்பங்களில் அது அவர்களைச் சூழ்ந்திருக்கும்.

(அல்குர்ஆன் 104:1-9) 

செலவிடாதவர்கள் நஷ்டவாளிகள் 

நான் நபி (ஸல்) அவர்களிடம் போய்ச் சேர்ந்தேன். அப்போது அவர்கள் கஅபாவின் நிழலில் இருந்தவாறு, "கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள். கஅபாவின் அதிபதி மீது சத்தியமாக அவர்கள் நஷ்டவாளிகள்'' என்று சொல்லத் தொடங்கினார்கள். நான், "என் நிலை என்ன? என் தொடர்பாக அவர்களுக்கு ஏதேனும் காட்டப்படுகின்றதா? என் நிலை என்னாவது?'' என்று சொல்லிக் கொண்டே அவர்கள் அருகில் அமர்ந்தேன். அப்போது நபியவர்கள், "என்னால் பேசமாலிருக்க இயலவில்லை. அல்லாஹ் நாடிய ஏதோ ஒன்று என்னைச் சூழ்ந்து கொண்டது'' என்று கூறினார்கள். உடனே நான், "என் தந்தையும் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "அதிகச் செல்வம் படைத்தவர்கள். ஆனால் (நல்வழியில் செலவிட்ட) சிலரைத் தவிர'' என்று கூறியவாறு இவ்வாறு இவ்வாறு இவ்வாறு கைகளால் சைகை செய்தார்கள். 
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), 

நூல்: புகாரி 6638 

சேர்த்து வைப்போருக்குப் போடப்படும் சூடு 

நம்பிக்கை கொண்டோரே! மதகுருமார்களிலும், பாதிரிகளிலும் அதிகமானோர் மக்களின் செல்வங்களைத் தவறான முறையில் உண்ணுகின்றனர். அல்லாஹ்வின் வழியை விட்டும் (மக்களைத்) தடுக்கின்றனர். "அல்லாஹ்வின் பாதையில் செலவிடாமல் தங்கத்தையும், வெள்ளியையும் சேர்த்து வைப்போருக்கு துன்புறுத்தும் வேதனை உண்டு'' என்று எச்சரிப்பீராக! அவை அந்நாளில் நரக நெருப்பில் பழுக்கக் காய்ச்சப்பட்டு, அதனால் அவர்களின் நெற்றிகளிலும், விலாப்புறங்களிலும், முதுகுகளிலும் சூடு போடப்படும். "இதுவே உங்களுக்காக நீங்கள் சேகரித்தது. எனவே நீங்கள் சேகரித்தவற்றை அனுபவியுங்கள்!'' (என்று கூறப்படும்)

அல்குர்ஆன் 9:34,35) 

இன்றைய பணமழை நாளைய பாம்பு மாலை 

அல்லாஹ் யாருக்கேனும் செல்வத்தைக் கொடுத்து அவன் அதற்கான ஜகாத்தை நிறைவேற்றவில்லையாயின் கியாமத் நாளில் அச்செல்வம் கடுமையான நஞ்சுடைய பாம்பாக மாறும். அது அவனது கழுத்தில் சுற்றிக் கொண்டு தனது இரு விஷப்பற்களால் அவனது தாடையைக் கொத்திக் கொண்டே, "நான் தான் உனது செல்வம், நான் தான் உனது புதையல்'' என்று கூறும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். பின்னர், அல்லாஹ் தமக்கு வழங்கிய அருளில் கஞ்சத் தனம் செய்வோர், "அது தங்களுக்குச் சிறந்தது' என்று எண்ண வேண்டாம். மாறாக அது அவர்களுக்குத் தீயது. அவர்கள் எதில் கஞ்சத்தனம் செய்தார்களோ அதன் மூலம் கியாமத் நாளில் கழுத்து நெரிக்கப்படுவார்கள். வானங்கள் மற்றும் பூமியின் உரிமை அல்லாஹ்வுக்குரியது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் என்ற (அல்குர்ஆன் 3:180) வசனத்தை நபி (ஸல்) அவர்கள் ஓதினார்கள். 

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 1403 

ஏழைக்கு வழங்காத பொருள் எரிந்து போகும்

அந்தத் தோட்டத்துக்குரியோரைச் சோதித்தது போல் இவர்களையும் நாம் சோதித்தோம். "காலையில் அதை அறுவடை செய்வோம்'' என்று அவர்கள் சத்தியம் செய்து கூறினர். இறைவன் நாடினால் (அறுவடை செய்வோம்) என்று அவர்கள் கூறவில்லை. எனவே அவர்கள் உறங்கிக் கொண்டிருந்த போது உமது இறைவனிட மிருந்து சுற்றி வளைக்கக் கூடியது அ(த்தோட்டத்)தைச் சுற்றி வளைத்தது. அது காரிருள் போல் ஆனது. 

"நீங்கள் அறுவடை செய்வதாக இருந்தால் உங்கள் விளை நிலத்துக்குச் செல்லுங்கள்! இன்று உங்களிடம் எந்த ஏழையும் நுழைந்து விட வேண்டாம்'' என்று அவர்கள் குறைந்த சப்தத்தில் பேசிக் கொண்டே காலையில் ஒருவரையொருவர் அழைக்கலானார்கள். தடுக்க ஆற்றலுடையோராகவே அவர்கள் சென்றார்கள். அழிக்கப்பட்ட அ(த்தோட்டத்)தைக் கண்ட போது, "நாம் வழி மாறி (வேறு இடம்) வந்து விட்டோம்'' என்றனர். இல்லை! நாம் (அனைத்தையும்) இழந்து விட்டோம். 

அவர்களில் நடுநிலையாக நடந்து கொண்டவர், "நீங்கள் இறைவனைத் துதித்திருக்க வேண்டும்'' என்று நான் உங்களிடம் கூறவில்லையா? என்று கேட்டார். "எங்கள் இறைவன் தூயவன். நாங்கள் அநீதி இழைத்து விட்டோம்'' என்றனர். அவர்களில் ஒருவர் மற்றவரிடம் குறை கூறியோராக முன்னோக்கினார்கள். "எங்களுக்குக் கேடு ஏற்பட்டு விட்டதே! நாங்கள் வரம்பு மீறிவிட்டோமே!'' என்றனர். "இதை விடச் சிறந்ததை எங்கள் இறைவன் எங்களுக்குப் பகரமாக்கித் தரக் கூடும். நாங்கள் எங்கள் இறைவனிடம் நம்பிக்கை வைப்பவர்கள்'' (என்றும் கூறினர்) இப்படித் தான் (நமது) வேதனை இருக்கும். மறுமையின் வேதனை மிகப் பெரியது. அவர்கள் அறிய வேண்டாமா?

(அல்குர்ஆன் 68:17-33) 

பூகம்பத்தில் புதைந்த பொருளாதாரம் 

காரூன், மூஸாவின் சமுதாயத்தில் ஒருவனாக இருந்தான். அவர்களுக்கு அநீதி இழைத்தான். அவனுக்குக் கருவூலங்களை வழங்கினோம். அவற்றின் சாவிகளைச் சுமப்பது வலிமை மிக்க கூட்டத்தினருக்குச் சிரமமாக இருக்கும். "மமதை கொள்ளாதே! மமதை கொள்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான்'' என்று அவனிடம் அவனது சமுதாயத்தினர் கூறியதை நினைவூட்டுவீராக! அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்). "என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். இவனை விட அதிக வலிமையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான் என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள். தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர். "உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர். அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம். அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

(அல்குர்ஆன்28:76-81)

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 8:02 AM

வீட்டை விற்றேனும் ஒரு விருந்து

வீட்டை விற்றேனும் ஒரு விருந்து

எம். ஷம்சுல்லுஹா 

நமது சமுதாயத்தில் பல்வேறு விருந்துகள் நீண்ட காலமாக நடைபெற்று வருகின்றன. பெயர் சூட்டு விழா விருந்து, கத்னா விருந்து, சடங்கு விருந்து, கல்யாண விருந்து, புதுமனைப் புகுவிழா விருந்து, பிள்ளைப் பேறு விருந்து, இறந்தவர் வீட்டில் அவர் அடக்கம் செய்யப்பட்டதும் விருந்து, மூன்றாம் நாள் பாத்திஹா விருந்து, ஏழாம் நாள் பாத்திஹா விருந்து, நாற்பதாம் நாள் பாத்திஹா விருந்து, ஹஜ்ஜுக்குச் செல்லும் விருந்து என விருந்து மழைகள் பொழிந்து கொண்டிருக்கின்றன. மக்கள் அம்மழையில் நனைந்த வண்ணமிருக்கின்றனர். 

இந்த விருந்துகளில் திருமணம் மற்றும் புதுமனை புகுவிழா விருந்துகள் மார்க்கம் அனுமதிக்கின்ற விருந்துகளாகும். மற்ற விருந்துகள் மார்க்கத்திற்கு முரணானவையாகும். அதிலும் குறிப்பாக இறந்தவர் வீட்டில் அன்றைய தினமே நடத்தப்படும் விருந்து ஈவு இரக்கம் ஆகியவற்றுக்கு எதிராக விடுக்கப்படும் சவாலாகும். 

மார்க்கத்திற்கு முரணான, சம்பிரதாய விருந்துகள் இன்று சமூக நிர்ப்பந்தங்களாகி விட்டன. மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட திருமணம், புதுமனை புகுவிழா விருந்துகள் கூட கடன் வாங்கி வைக்கப்படும் போது அவையும் சமூக நிர்ப்பந்தங்களாகி விடுகின்றன. 

கடன் வாங்கிக் கல்யாணம்

இன்று சமுதாயத்தில் கல்யாண வீட்டில் விருந்து நடத்தப்படுவது ஒரு தன்மானப் பிரச்சனையாகி விட்டது. அதனால் எப்படியாவது, கடன் வாங்கியாவது விருந்தை நடத்தி விடுகின்றனர். எங்குமே கடன் கிடைக்கவில்லையெனில் இருக்கும் வீட்டை விற்று விருந்து வைக்கின்றனர். கண்ணை விற்று சித்திரம் வாங்குதல் என்ற பழமொழிக்கேற்ப இன்று வீட்டை விற்றேனும் விருந்து வைக்கும் கலாச்சாரம் தலைவிரித்தாடுகின்றது. 

உதாரணத்திற்கு வீட்டில் இரு சகோதரர்களுக்கு மத்தியில் பாகப்பிரிவினை ஏற்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். நான்கு இலட்சம் பெறுமான வீட்டில் இரண்டு இலட்சம் ரூபாயை அண்ணன் தம்பியிடம் வழங்குகின்றார். வீட்டில் தன்னுடைய பாகத்திற்காக வாங்கிய இரண்டு இலட்ச ரூபாயில் ஒரு இலட்சத்திற்கு ஒரு நிலத்தை வாங்கி விட்டு, மீதி ஒரு இலட்சத்தை வாடகை முன்பணமாக செலுத்தினால் அதை நாம் பாராட்டலாம். அல்லது ஒரு இலட்சம் ரூபாயை வாடகை முன்பணமாக செலுத்தி விட்டு மீதியில் ஒரு தொழில் தொடங்குகின்றான் என்றால் அதையும் நாம் பாராட்டலாம். 

ஆனால் என்ன நடக்கின்றது? ஒரு இலட்சத்தை வாடகை முன்பணமாக செலுத்தி விட்டு, மீதியை விருந்து வைத்தே காலியாக்குகின்றான். விருந்து வைப்பது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டிருந்தாலும் இது போன்று வாடகைக்குக் குடி போகும் போதெல்லாம் விருந்து வைக்க வேண்டும் என்று மார்க்கம் யாரையும் நிர்ப்பந்திக்கவில்லை. பொதுவாக திருமண விருந்து உட்பட அனுமதிக்கப்பட்ட எந்த விருந்தையும் கடன் வாங்கி வைக்க வேண்டும் என்றோ அல்லது குடும்பத்தின் தேவையைப் புறக்கணித்து விட்டு விருந்து வைக்க வேண்டும் என்றோ மார்க்கம் வலியுறுத்தவேயில்லை. 

நிச்சயமாக இந்த மார்க்கம் எளிதானது. இம்மார்க்கத்தை யாரும் (தம்மீது) சிரமமானதாக ஆக்கிக் கொண்டால் அவரை அது மிகைத்து விடும். எனவே நடுநிலைமையை மேற்கொள்ளுங்கள். இயன்றவற்றைச் செய்யுங்கள். நற்செய்தியையே சொல்லுங்கள். காலையிலும் மாலையிலும் இரவில் சிறிது நேரமும் (அல்லாஹ்விடம்) உதவி தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 

நூல்: புகாரி 39 

வலீமா ஒரு வணக்கம் 

அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் மதீனவுக்கு வந்த போது, அவர்களையும் ஸஅது பின் ரபீஉ (ரலி) அவர்களையும் நபி (ஸல்) அவர்கள் சகோதரர்களாக ஆக்கினார்கள். ஸஅது (ரலி) வசதி படைத்தவர்களாக இருந்தார். அவர், அப்துர்ரஹ்மான் (ரலி)யிடம், "எனது செல்வத்தை சரிபாதியாகப் பிரித்துத் தருகிறேன். (என் மனைவியரில் ஒருத்தியை விவாகரத்துச் செய்து) உமக்கு மணம் முடித்துத் தருகின்றேன்'' என்று கூறினார். அதற்கு அப்துர்ரஹ்மான் (ரலி), "உமது குடும்பத்திலும் செல்வத்திலும் அல்லாஹ் பரக்கத் செய்வானாக! எனக்குக் கடைவீதியைக் காட்டுங்கள்'' என்று கூறினார். அவர் பாலாடைக் கட்டியையும் நெய்யையும் இலாபமாகப் பெற்று அவர் தங்கியிருந்த வீட்டாரிடம் கொண்டு வந்தார். சிறிது காலத்திற்குள் நறுமணப் பொருளின் கறையுடன் வந்தார். அவரிடம் நபி (ஸல்) அவர்கள், "என்ன விசேஷம்?'' என்று கேட்டார்கள். அதற்கவர், "அல்லாஹ்வின் தூதரே! நான் ஒரு அன்சாரிப் பெண்ணை மணமுடித்துக் கொண்டேன்'' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அவருக்கு என்ன மஹர் கொடுத்தீர்கள்?'' என்று கேட்டார்கள். "ஒரு பேரீச்சங் கொட்டை எடைக்குத் தங்கம்'' என்று பதில் கூறினார். அதற்கு, "ஓர் ஆட்டையேனும் மணவிருந்தாக அளிப்பீராக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), 

நூல்: புகாரி 2048, 2049 

இந்த ஹதீஸின்படி ஒருவர் திருமண விருந்து வைக்கின்றார் என்றால் நிச்சயமாக அது அல்லாஹ்விடத்தில் கூலி வழங்கப்படக் கூடிய, செலவழித்த பணத்துக்கெல்லாம் பரிகாரம் கிடைக்கக்கூடிய ஒரு வணக்கமாக அமைந்து விடுகின்றது. ஆனால் மார்க்கத்தில் கடமையான ஒன்றல்ல! ஹஜ் போன்ற கடமையான வணக்கத்தைக் கூட கடன் வாங்கியோ அல்லது இருக்கின்ற வீட்டை விற்றோ செய்ய வேண்டும் என்று மார்க்கம் கூறாத போது இது போன்ற விருந்துக்காக கடன் வாங்குவது அல்லது வீட்டை விற்பது எந்த அடிப்படையில் சரியாகும்? 

விருந்து மயமும் விமர்சன பயமும் 

இப்படி எங்கும் விருந்து எதிலும் விருந்து என தொற்றிக் கொண்ட விருந்து மயம் தொடர்வதற்கு உரிய காரணங்கள் இரண்டு! முதலாவது காரணம் விமர்சன பயமும் வெட்கமும் ஆகும். 

"நான் இந்த உறவினர் வீட்டில் சாப்பிட்டேன். அந்த வீட்டில் சாப்பிட்டேன். அவர்களெல்லாம் நீ ஏன் விருந்து வைக்கவில்லை என்று கேட்டால் நான் என்ன பதில் சொல்வேன்? என்னப்பா ஒரு சாப்பாடு போடக் கூடாதா? என்று கேட்டால் எனக்கு மானம் போகிற மாதிரி இருக்கின்றதே!' இது தான் விருந்து வைப்பவர்கள் கூறும் காரணமும் பதிலும் ஆகும். 

இத்தனைக்கும் அந்த வீட்டிலெல்லாம் சாப்பிட்டு விட்டு அதற்கான கட்டணத்தை அன்பளிப்பு என்ற பெயரில் மொய்யாக செலுத்தி விட்டுத் தான் வந்திருப்பார். இந்த அடிப்படையில் ஒரு உணவு விடுதியில் சாப்பிடுவது போல் காசைக் கொடுத்து விட்டு சாப்பிட்டு விட்டு வருகின்றார். இது எப்படி விருந்தாகும் என்று யோசிக்காமல், அவர் விருந்து போட்டார், இவர் விருந்து போட்டார், நானும் விருந்து போடாவிட்டால் என்னை எல்லோரும் விமர்சிப்பார்கள் என்று மக்களின் விமர்சனத்துக்குப் பயந்து இவ்வளவு பெரிய விருந்து போடுகின்றார். கடன் வாங்கி விருந்து போடுகின்றார். அல்லது தன்னுடைய குடும்ப முன்னேற்றத்திற்கான ஓர் அத்தியாவசியத் தேவையைப் புறந்தள்ளி விட்டு அல்லது தனது வீட்டை விற்றுத் தீர்த்து விட்டு விருந்து வைக்கின்றார். இங்கு இந்த விருந்து நன்மையை நாடப்படாத விருந்தாகி விடுகின்றது. இங்கு இறையச்சம் காற்றில் பறக்க விடப்படுகின்றது. இவர் மக்களுக்கு அஞ்சுகின்றார். 

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக்கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். 

(அல்குர்ஆன் 33:37) 

இந்த வசனத்தில் எல்லாம் வல்ல அல்லாஹ் நபி (ஸல்) அவர்களை நோக்கி விமர்சனத்துக்கு அஞ்சாமல் தன்னையே அஞ்சும்படி கட்டளையிடுகின்றான். அந்த விமர்சன பயம் தான் இன்று மக்களை, இந்த அளவுக்குப் பொருளாதாரத்தைச் செலவு செய்வதற்குக் காரணமாக அமைகின்றது.

அடுத்த காரணம் புகழ்ச்சி! எதற்கும் மயங்காத மனிதன் புகழுக்கு மயங்கி விடுகின்றான். யார் எந்த வணக்கத்தைச் செய்யும் போதும் மக்கள் புகழ வேண்டும் என்பதற்காக செய்யத் துவங்கி விட்டால் நிச்சயமாக அது முகஸ்துதியாக ஆகி விடும். ஒரு மனிதன் தான் இறந்த பிறகும் புகழப்பட வேண்டும் என்பதற்காக தன்னையே அழித்து, தன்னுடைய உயிரைக் கூட தியாகம் செய்கின்றான். புகழுக்காக உயிரையே தியாகம் செய்யும் போது சொத்துக்களை ஏன் விற்க மாட்டான். 

இவர் இத்தனை பேருக்கு விருந்து போட்டார், அவர் ஊரை அழைத்து விருந்து போட்டார் என்றெல்லாம் புகழப்பட வேண்டும் என்பதற்காகவும் இந்த விருந்துகள் வைக்கப்படுகின்றன. அதனால் தான் சொத்துக்களை விற்று அல்லது கடன் வாங்கி இந்த விருந்துகளை வைக்கின்றார்கள். 

எனவே விமர்சன பயம் அல்லது புகழ் ஆகிய இரண்டுக்காக வலீமா எனும் வணக்கத்தை நாம் செய்கின்ற போது அதில் இக்லாஸ் அடிபட்டுப் போகின்றது. அத்தகைய வணக்கம் மறுமையில் மேற்கண்ட நபரின் முகத்தில் வீசி எறியப்படுகின்றது. எனவே இது போன்ற அடிப்படையிலான விருந்துகளிலிருந்து நாம் விலகிக் கொள்ள வேண்டும். 

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனாவுக்கும் இடையில் (உள்ள சத்துஸ்ஸஹ்பா என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மணமுடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர்களுடன் வீடு கூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா - மணவிருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல் விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட அவ்வாறே அது விரிக்கப்பட்டது. பிறகு பேரீச்சம்பழம், பாலாடைக்கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனப்படும் எளிமையான உணவைத் தயாரித்து மக்களுக்கு விருந்தளித்தார்கள்) 

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), 

நூல்: புகாரி 4213 

திருமணம் போன்ற அனுமதிக்கப்பட்ட விருந்தாக இருந்தாலும் நம்முடைய சக்திக்கு உட்பட்டுத் தான் வைக்க வேண்டும். கடன் வாங்கியோ அல்லது கையில் உள்ளதை விற்றோ வைக்கக் கூடாது. மேற்கண்ட ஹதீஸைப் பின்பற்றி நமது சக்திக்கு உட்பட்டு இருப்பதை வைத்து விருந்து கொடுத்துக் கொள்ளலாம். 

எளிய திருமணத்தின் இனிய முன்மாதிரிகள் 

80களுக்குப் பின்னால் எழுந்த ஏகத்துவ எழுச்சியின் பயனாய், இன்று சமுதாயத்தில் மார்க்கத்திற்கு முரணான விருந்துகளுக்கு ஓரளவுக்கு மூடு விழா நடத்தப்பட்டு வருகின்றன. இது ஒரு நல்ல சமுதாய மாற்றம்! மறுமலர்ச்சி! ஆனால் அனுமதிக்கப்பட்ட விருந்துகளைப் பொறுத்த வரை ஏகத்துவ இளைஞர்களையும் மீள முடியாத அளவுக்குக் கவ்விப் பிடித்திருக்கும் மயக்கமாக இந்த விருந்து மயக்கம் அமைந்துள்ளது. அதாவது கடன் வாங்கியாவது விருந்து வைக்க வேண்டும் என்ற நிர்ப்பந்தம் உள்ளது.

இந்த நிர்ப்பந்தங்களை உடைத்தெறிந்து, எளிய திருமணங்களை நடத்திக் காட்டும் பொறுப்பு இளைய ஏகத்துவவாதிகளுக்கு இருக்கின்றது. 

அனாச்சாரமில்லாத, பித்அத்துகள் இல்லாத ஆனால் அதே சமயம் பெரிய அளவிலான விருந்துகள் வைத்து நடத்தப்படும் திருமணங்கள் நிறையவே நடக்கின்றன. இன்றைய தேவையும் அவசியமும் எளிமையான முறையில் நடத்தப்படும் முன்மாதிரி திருமணங்கள் தான். இந்த முன்மாதிரியைப் படைப்பது இன்றைய ஏகத்துவ இளைஞர்களின் கடமையாகும். 

வலீமா விருந்து என்பது ஒரு சுன்னத் என்ற அடிப்படையில் தான் இந்த விருந்துகள் நடத்தப்படுகின்றன. இந்த சுன்னத்தைப் புறக்கணிக்க வேண்டும் என்று நாம் கூறவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்திலும் இந்த சுன்னத் பேணப்பட்டது. ஆனால் நபித்தோழர்கள் எதற்கு முன்னுரிமை அளிக்க வேண்டுமோ அதற்கு முன்னுரிமை அளித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது போன்று உறவினர்களை ஆதரித்தார்கள். 

ஒருவருக்கொருவர் கருணை புரிவதிலும் அன்பு செலுத்துவதிலும் இரக்கம் காட்டுவதிலும் இறைநம்பிக்கையாளர்களை ஓர் உடலைப் போன்று நீ காண்பாய். (உடலின்) ஓர் உறுப்பு சுகவீனமடைந்தால் அதனுடன் மற்ற உறுப்புகளும் (சேர்ந்து கொண்டு) உறங்காமல் விழித்துக் கொண்டிருக்கின்றன. அத்துடன் (உடலும்) காய்ச்சல் கண்டு விடுகின்றது 

(நூல்: புகாரி 6011)

என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவது போல்

சமுதாயத்தின் ஓர் உறுப்பு கடன் பட்டான் என்றால் அவனைக் கை கொடுத்து நபித்தோழர்கள் தூக்கினார்கள். 

ஆனால் இன்று என்ன நடக்கின்றது? தன் மகன் மருத்துவக் கல்லூரியில் சேர்வதற்கு அல்லது பொறியியல் கல்லூரியில் சேர்வதற்கென்று ஒரு லட்சம் தேவை என்று ஒருவர் கேட்கும் போது உறவினர்களில் பணக்கார உறவினர் அவரை ஏறெடுத்தும் பார்க்க மாட்டார். ஆனால் அதே சமயம் ஊர் மெச்சும் அளவுக்குப் பந்தல் போட்டு பல லட்ச ரூபாயில் பந்தி பரிமாறுவார். 

நம்முடன் நமது தெருவில் வாழும் ஒரு சமுதாய உறுப்பினர்

கடன் பட்டு தன் வீட்டை விற்பான். தன் கடனைக் கழிக்க முடியாமல் கண்ணீர் மல்க வீட்டை விற்பான். ஆனால் அதே தெருவில் வசிக்கும் செல்வந்தர் பல இலட்ச ரூபாய் செலவில் விருந்து போடுவார். இப்படியொரு நிலை நபித்தோழர்கள் காலத்தில் நடந்ததில்லை. இது போன்று பாதிக்கப்பட்டவர்களுக்கு அவர்கள் உதவி செய்யத் தவறியதில்லை. 

அந்த நிலை என்றைக்கு நம்மிடம் வருகின்றதோ அன்றைக்குத் தான் இந்த வலீமா விருந்து, சுன்னத் என்று சொல்லப்படுவதற்கு ஒரு சரியான அர்த்தம் இருக்க முடியும். அப்படி ஒரு நிலையைக் கொண்டு வருவது ஏகத்துவ இளைஞர்களின் கைவசத்தில் தான் இருக்கின்றது. அவர்கள் இத்தகைய சமூக நிர்ப்பந்தங்களுக்கு சமாதி கட்டி எளிமைத் திருமணங்களின் முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.

குறிப்பு : 2004 ஜூன் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 11, 2015, 7:55 AM

இரவுத் தொழுகை

இரவுத் தொழுகை

புனித மிக்க ரமளானில் அல்லாஹ் தன் அடியார்களுக்கு அபரிமிதமான நன்மைகளை அளிக்கின்றான். இம்மாதத்தின் பகல் காலங்களில் நோன்பு நோற்பதற்கும் இரவில் நின்று வணங்குவதற்கும் மகத்தான கூலிகளை வழங்குகின்றான். ரமளானில் இரவு நேரத்தில் முந்திய பகுதிகளில் தொழும் வழக்கம் தற்போது நடைமுறையில் உள்ளது. பிந்திய இரவில் தொழுவது தான் மிகச் சிறப்பான வணக்கமாகும். எனவே பிந்திய நேரங்களில் தொழுவதன் சிறப்பைத் தெரிந்து கொண்டு அதைச் செயல்படுத்தி,அல்லாஹ்வின் அருளைப் பெறுவோமாக! ரமளான் மாதத்தில் விடாது கடைப்பிடிக்கும் இந்த இரவுத் தொழுகையை ரமளானுக்குப் பின்னரும் தொடர்வோமாக!

விலகி விடும் விலாப்புறங்கள்

அச்சத்துடனும், எதிர்பார்ப்புடனும் தமது இறைவனைப் பிரார்த்திக்க அவர்களின் விலாப்புறங்கள் படுக்கைகளிலிருந்து விலகும். நாம் வழங்கியவற்றிலிருந்து (நல் வழியில்) செலவிடுவார்கள். அவர்கள் செய்து கொண்டிருந்ததற்குப் பரிசாக கண்குளிரும் வகையில் அவர்களுக்காக மறைத்து வைக்கப்பட்டுள்ளதை எவரும் அறிய மாட்டார்.

(அல்குர்ஆன் 32:16,17)

நரகத்திலிருந்து பாதுகாப்பு

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். நானும் ஒரு கனவு கண்டு, அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க ஆசைப்பட்டேன். அப்போது நான் இளைஞனாகவும் பள்ளிவாசலில் உறங்கக் கூடியவனாவும் இருந்தேன். இரண்டு மலக்குகள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணற்றுக்குச் சுவர் கட்டப்பட்டது போல் அந்த நரகத்திற்கும் கட்டப் பட்டிருந்தது. அதற்கு இரண்டு கொம்புகள் இருந்தன. இதில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் கிடந்தனர். அப்போது நான் நரகத்தை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுகின்றேன் என்று கூறினேன். அப்போது வேறு ஒரு மலக்கு என்னைச் சந்தித்து நீர் பயப்படாதீர் என்று கூறினார். இவ்வாறு நான் கனவு கண்டேன். இக்கனவை ஹஃப்ஸா (ரலி) யிடம் கூறினேன். அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் இரவில் தொழுபவராக இருந்தால் அவர் மனிதர்களிலேயே மிகவும் நல்லவர்!'' என்று கூறினார்கள். அதன் பின்னர் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி),

நூல் : புகாரி 1121, 1122

பொறாமை கொள்ளத்தக்க அமல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டு விஷயங்களைத் தவிர வேறெதற்காகவும் பொறாமை கொள்ளக் கூடாது.

1. ஒரு மனிதருக்கு அல்லாஹ் வேத ஞானத்தை வழங்கியுள்ளான். அதனை அவர் இரவு நேரங்களில் ஓதி வழிபடுகின்றார்.

2. இன்னொரு மனிதருக்கு அல்லாஹ் செல்வத்தை அளித்துள்ளான். அவர் அதனை இரவு, பகல் எல்லா நேரங்களிலும் தானம் செய்கின்றார்.

அறவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல் : புகாரி 5025

வல்ல இறைவனின் வானுலக வருகை

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நமது இறைவன் ஒவ்வொரு இரவும் கீழ் வானத்திற்கு இறங்கி இரவில் மூன்றில் ஒரு பகுதி இருக்கும் போது, "என்னிடம் யாரேனும் பிரார்த்தித்தால் அதை நான் அங்கீகரிக்கின்றேன். யாரேனும் என்னிடம் கேட்டால் நான் அவருக்குக் கொடுக்கின்றேன். யாரேனும் என்னிடம் பாவமன்னிப்பு கோரினால் அவரை நான் மன்னிக்கின்றேன்'' என்று கூறுவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 1145

கேட்டது கிடைக்கும் நேரம்

நிச்சயமாக இரவில் ஒரு நேரமுண்டு! ஒரு முஸ்லிமான மனிதர் சரியாக இந்த நேரத்தில் இம்மை, மறுமை தொடர்பான எந்த நன்மையை வேண்டினாலும் அதை இறைவன் அவருக்கு வழங்காமல் இருப்பதில்லை. இது ஒவ்வொரு இரவிலும் நடக்கின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : முஸ்லிம் 1259

தொழுகையில் சிறந்தது

நோன்பில் ரமளானுக்குப் பிறகு சிறந்தது அல்லாஹ்வுடைய முஹர்ரம் மாத நோன்பாகும். கடமையான தொழுகைக்குப் பிறகு தொழுகைகளில் சிறந்தது இரவுத் தொழுகையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் 1982

ஸலாமைப் பரப்புங்கள்! ஏழைகளுக்கு உணவளியுங்கள்! மக்கள் தூங்கும் போது தொழுங்கள்! (இதனால்) சொர்க்கத்தில் நுழையுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி),

நூல் : திர்மிதீ 2409

தொழத் தொடங்கியவர் விடலாகாது

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "அப்துல்லாஹ்வே! இரவில் தொழும் வழக்கமுடையவர் திடீரென அதை விட்டதைப் போல் ஆகி விடாதீர்!'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ரு பின் ஆஸ் (ரலி),

நூல் : புகாரி 1152

ரமளானில் இரவுத் தொழுகை

யார் நம்பிக்கை கொண்டு (நற்கூலியை) எதிர்பார்த்து ரமளான் மாதத்தில் நின்று வணங்குகின்றாரோ அவரது முந்தைய பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்பட்டு விடும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி 37

(குறிப்பு : 2003 நவம்பர் மாதம் ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)

January 10, 2015, 7:21 PM

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

வீட்டுப் பெண்களின் வீடியோ போஸ்

எம். ஷம்சுல்லுஹா

ஆஹா! இதோ பார்! சூப்பர் ஃபிகர்! ஸ்டில் போடப்பா என்று ஒருவர் சொல்கின்றார். மற்றொருவர் ரீவைண்ட் பண்ணப்பா! தூள் பரத்துகிறது என்கிறார். ஏ இது யாரப்பா? இவர் சம்சுகனி சம்சாரம். அது யாரப்பா? ஆள் அசத்தலா இருக்கே? இது நம்ம காதர் தங்கச்சி!

தங்களுக்கு முன்னால் ஓடிக் கொண்டிருக்கும் வீடியோ காட்சிகளுடன் மேற்கண்ட வீடியோ கமென்டரி உரையாடல்களும் கலகலப்பாக ஓடிக் கொண்டிருக்கும். இவை எல்லாம் எங்கு நடக்கின்றன என்கிறீர்களா? சாதி சமய பேதமற்று எம்மதமும் சம்மதம் என்ற கோட்பாட்டின்படி சர்வ சமயத்தவரும் சங்கமமாகி தங்கியிருக்கும் அபரக நாட்டின் அறைகளில் தான்

(அரபு நாடு என்றவுடன் அங்கு பணிபுரியும் எல்லோருமே இப்படித் தான் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. மார்க்கப் பணிகளுக்காகவும், மார்க்கப் பிரச்சாரத்தைக் கேட்பதற்காகவும் மட்டுமே தங்கள் விடுமுறை நாட்களை அர்ப்பணிக்கும் சகோதரர்களும் அரபகத்தில் இருக்கின்றார்கள். இங்கு நாம் குறிப்பிடும் சங்கதிகளும் அரபகத்தில் நடக்காமல் இல்லை. வீடியோவில் பெண்கள் போஸ் கொடுப்பதால் ஏற்படும் விளைவுகளைச் சுட்டிக் காட்டுவதே இக்கட்டுரையின் நோக்கம்)

ஆக அந்த அறையே ஒரு சிறிய வீடியோ திரையரங்காக மாறி நிற்கும். இந்த வீடியோ படப்பிடிப்பு எங்கு நிகழ்ந்தவை? எல்லாம் நம் வீட்டுத் திருமணத்தில் எடுக்கப்பட்ட வீடியோ தான்.

நம் வீட்டில் கல்யாணம் என்றதும் வீடு களை கட்டி நிற்கின்றது. வீடியோ இல்லாத திருமணமா? என்று கேட்கும் அளவுக்கு வீடியோ கலாச்சாரமும் அநாச்சாரமும் கொடி கட்டிப் பறக்கின்றது.

வீதியில் உலாவரும் வீடியோ கேமரா

கல்யாணம் வீட்டில் நடந்தாலும் முதன்முதலில் காட்சியாவது முச்சந்தியில் நிற்கும் பள்ளிவாசல் அல்லது தர்ஹா மற்றும் ஊரின் புகழைச் சொல்கின்ற புராதனச் சின்னங்கள் தான். இதன் பின் காலையில் கல்யாண வீட்டுக்குள் கேமரா நுழைந்து டீ காப்பி சப்ளை, டிபன், மணமகன் மணமகள் அலங்காரம் என்று மணமகனும் மணமகளும் மணவறையில் நுழைகின்ற வரை கேமரா பின் தொடர்ந்து சென்று ஒரு வழியாக்கி விட்டுத் தான் வெளியேறும்.

மணமகன் இல்லத்திலிருந்து துவங்கி, வீதி வீதியாகச் சென்று மணமகள் இல்லத்திற்கு அல்லது மண்டபத்திற்குச் சென்று திருமண ஒப்பந்தம் முடியும் வரையிலும் அத்தனையும் படமாக்கப்படுகின்றன.

குறிப்பாக இந்தக் கேமரா, பெண்கள் விருந்து பரிமாறும் போது, அங்க அசைவுகள் அனைத்தையும் கிளிக் செய்யத் தவறுவதில்லை. அதாவது அங்கிங்கு அசைந்து, வந்த விருந்தாளிகளை விழுந்தடித்துக் கவனிக்கும் பெண்களை கேமராமேன் குறி தவறாது பார்த்துக் கொண்டிருக்கின்றான். பற்றாக்குறைக்கு அவனுக்குப் பக்க துணையாக லைட் பிடிக்க இன்னொரு எடுபிடியாள் வேறு!

வேலை செய்கின்ற பெண்களுக்கு நிர்ப்பந்தமாக ஆடை விலகல் நடைபெறத் தான் செய்யும். ஆனால் இவையெல்லாம் ஒளிப்பதிவாகிக் கொண்டிருக்கின்றன என்பது தான் வேதனைக்குரிய விஷயமாகும்.

திருமணத்தில் கலந்து கொள்ளும் பெண்கள் முதலில் கேமரா மேன்களின் பார்வைகளுக்கு செழிக்க செழிக்க விருந்தாகின்றனர்.

அதன் பின்னர் துவக்கத்தில் நாம் கூறியது போல் அறைகளில் பலரும் உட்கார்ந்து கிரிக்கெட் கமென்டரியைப் போன்ற வர்ணனையுடன் ரசித்துப் பார்க்கும் ஆடவர்களின் பார்வைக்கு இப்பெண்கள் விருந்தாகின்றனர். இவ்வாறு பார்வைகளில் படரவும் தொடரவும் இந்த வீடியோப் பதிவுகள் வகை செய்கின்றன.

இவை எல்லாவற்றிற்கும் மேலாக திருமணம் செய்து கொள்ளப் போகும் மணமகன் கூட பெண்ணைப் பார்த்திருக்க மாட்டான். அதற்கு முன்பாகவே கேமராமேன் மணப்பெண்ணை ரசித்துப் பார்த்து விடுகின்றான். பவுடர் பூசி, நகைகள் அணிந்து, வண்ண ஆடைகளுடன் முழு நிலவைப் போல் அமர வைக்கப்பட்டிருக்கும் இந்த மணப்பெண்ணை நோக்கித் தான் கேமரா நிலைகுத்தி நிற்கின்றது.

இப்படி மணப்பெண் முதற்கொண்டு, நமது மனைவி மக்கள், சகோதரிகள், கொழுந்தியாக்கள் என்று அனைவர் மீதும் பாயும் கேமராவைப் போன்றே இந்த கேமராமேனின் பார்வையும் வளைத்து நிற்கின்றது. இதில் மிகமிக வேதனைக்குரிய விஷயமும் வெட்கக்கேடான விஷயமும் என்னவென்றால் இந்த வீடியோக்களுக்கு நம் வீட்டுப் பெண்கள் கூச்ச நாச்சமின்றி போஸ் கொடுப்பது தான்.

ஆரம்ப கால முஹாஜிர் பெண்களுக்கு அல்லாஹ் கருணை புரிவானாக! "(நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக!) தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்'' என்ற (24:31) வசனத்தை அல்லாஹ் அருளிய போது, அவர்கள் தங்கள் கீழாடை(யின் ஒரு பகுதி)யைக் கிழித்து அதைத் துப்பட்டா ஆக்கிக் கொண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 4758

இதே கருத்தைக் கொண்ட செய்தி அபூதாவூதில் 3577வது ஹதீஸாகப் பதிவாகியுள்ளது. அதில் ஆயிஷா (ரலி) அவர்கள் அன்சாரிப் பெண்களைப் பாராட்டுவதாக இடம் பெற்றுள்ளது.

தன்னை மறைத்துக் கொள்வதில் முன்னணியில் நின்ற அந்த நபித்தோழியர் எங்கே? இன்று வீடியோவுக்குப் போஸ் கொடுக்கும் இந்தப் பெண்கள் எங்கே?

ஒரு காலத்தில் ஒரு பெண் சினிமாவில் காட்சியளிக்கின்றாள் என்றால் சமூகம் அவளைக் காறித் துப்பியது. ஆனால் இன்றோ நடிகைகளுக்கெல்லாம் சமூக அந்தஸ்து வழங்கப்பட்டது போல் ஒரு போலித் தோற்றம் ஏற்படுத்தப் பட்டுவிட்டது. இப்படி ஒரு போலித் தோற்றம் இருந்தாலும் மற்ற சமுதாய மக்களிடத்தில் கூட, ஒரு பெண் பல பேர் முன்னிலையில் நேரிலோ அல்லது வீடியோவிலோ காட்சியளிப்பது வெறுப்பிற்குரிய காரியமாகவே கருதப்படுகின்றது. இவர்களிடத்திலேயே வெட்கம் தன் வேலையைக் காட்டும் போது ஒரு முஸ்லிமிடத்தில் இந்த வெட்க உணர்வு எப்படி இருக்க வேண்டும்?

ஈமான் (இறை நம்பிக்கை) அறுபதுக்கும் மேற்பட்ட கிளையாக உள்ளது. வெட்கம் என்பது ஈமானின் ஒரு கிளையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: புகாரி 9

இந்த ஹதீஸின் அடிப்படையில் ஓர் இறைநம்பிக்கை கொண்ட பெண் அடுத்தவர் முன் காட்சியளிக்க முன்வர முடியுமா? இப்படிப்பட்ட பெண்களுக்கு நபி (ஸல்) அவர்கள் சுவனத்தின் வாடை கூட நுகர முடியாது என்று எச்சரிக்கை செய்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு சாராரை (இன்னும்) நான் கண்டதில்லை. ஒரு சாரார், அவர்களிடம் மாட்டு வால்களைப் போன்ற சாட்டைகள் இருக்கும். அவற்றைக் கொண்டு மக்களை அடித்துக் கொண்டிருப்பர். இன்னொரு சாரார் பெண்கள் ஆவர். இவர்கள் ஆடை அணிந்தும் நிர்வாணமாக இருப்பார்கள். தளுக்கு நடை போட்டு ஆண்களை வளைத்துப் போடுவார்கள். அவர்களின் தலைகள் ஒட்டகத்தின் திமில்களைப் போன்று (கொண்டை போடப்பட்டு) இருக்கும். எவ்வளவோ தொலைவுக்கு சொர்க்கத்தின் நறுமணம் வீசும். ஆனால் இவர்கள் அதன் வாடையைக் கூட நுகர மாட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), 
நூல்: முஸ்லிம் 3971

பெண்கள் ஆண்களின் முன்னால் காட்சிப் பொருளாகத் தோன்றுவதன் மூலம் சுவனத்தில் நுழையும் பாக்கியத்தை இழந்து விடக் கூடாது. இப்படி வீடியோவில் பதிவாகி காட்சிப் பொருளாகும் பெண்கள் ஒரு தடவை மட்டும் பாவம் செய்யவில்லை. அந்த வீடியோ கேஸட்டுகள் எப்போதெல்லாம் ஆண்களால் பார்க்கப்படுகின்றதோ அப்போதெல்லாம் பாவம் பதியப்படும் நிலையை அடைகின்றார்கள்.

ரோஷம் இழந்த ஆண்கள்

இஸ்லாம் மனிதர்களுக்கு ரோஷ உணர்வை ஊட்டுகின்றது. பின்வரும் ஹதீஸில் நபி (ஸல்) அவர்கள் இதைத் தெளிவாக உணர்த்துகின்றார்கள்.

"என் மனைவியுடன் ஓர் ஆண் இருக்கக் கண்டால் வாளின் முனையாலேயே அவனை நான் வெட்டுவேன்'' என்று ஸஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் கூறினார்கள். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது, "ஸஅதின் ரோஷத்தைக் கண்டு நீங்கள் வியப்படைகின்றீர்களா? அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அவரை விட அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் என்னை விடவும் அதிக ரோஷமுள்ளவன். அல்லாஹ் தன் ரோஷத்தின் காரணத்தால் தான் வெளிப்படையான மற்றும் மறைவான மானக்கேடான செயல்கள் அனைத்தையும் தடை செய்து விட்டான். (திருந்துவதற்கு வாய்ப்பளித்து) விட்டுப்பிடிப்பதை மிகவும் விரும்புபவர் அல்லாஹ்வை விட வேறெவரும் இல்லை. அதனால் தான் நற்செய்தி சொல்பவர்களையும் எச்சரிக்கை செய்பவர்களையும் அல்லாஹ் அனுப்பி வைத்தான். அல்லாஹ்வை விட மிகவும் புகழை விரும்புபவர்கள் வேறெவருமில்லை. அதனால் தான் அல்லாஹ் சொர்க்கத்தை அளிப்பதாக வாக்களித்துள்ளான்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி), 
நூல்: புகாரி 6846, 7416

ஒரு மனிதனுக்கு ரோஷம் எவ்வளவு முக்கியம் என்பதை இந்த ஹதீஸ் தெளிவாக உணர்த்துகின்றது. ஆனால் இந்த விஷயத்தில் ஆண்கள் ரோஷமிழந்து நிற்கின்றார்கள். அதனால் தான் மணம் முடிக்கப் போகும் தானே சரியாகப் பார்த்திராத நிலையில் ஒரு கேமராக்காரன் பார்த்து அவளது அழகை ரசிப்பதற்கு அனுமதிக்கின்றான். இதுபோன்று தனது வீட்டுப் பெண்கள் அனைவரையும் காட்சிப் பொருளாக ஆக்கி, அதை அடுத்தவர்களின் பார்வைகளுக்கு விருந்தாகப் படைக்கின்றான்.

இது இவனது ரோஷ உணர்வு முற்றிலும் உலர்ந்து போய் செத்து விட்டது என்பதையே காட்டுகின்றது. இதில் ஏகத்துவவாதி என்று கூறுவோர் கூட விதிவிலக்காக இல்லை. அவர்களது வீட்டிலும் திருமண உரை என்ற பெயரில் வீடியோ எடுக்கப்பட்டு, அதில் குடும்பப் பெண்களை எல்லாம் அரங்கேற்றும் அவலத்தை நடத்தி விடுகின்றார்கள்.

திருமணங்களில் வீடியோ கலாச்சாரம், ஏழை பணக்காரன் என்ற பாகுபாடு இல்லாமல் இஸ்லாமிய சமூகத்தைத் தொற்றி நிற்கும் ஒரு கொடிய தொற்று நோயாகும். அந்நிய ஆடவர்களின் பார்வைகளில் நம்முடைய பெண்கள் விருந்தாகும் வீடியோ கலாச்சாரத்தையும் இதை அடிப்படையாகக் கொண்ட திருமணங்களையும் ஏகத்துவவாதிகள் புறக்கணிக்க வேண்டும். இத்தகைய கலாச்சார சீரழிவை விட்டும் நமது சமுதாயத்தைக் காக்க வேண்டும்.

போட்டோக்கள்

கல்யாண வீட்டில் வீடியோ எடுப்பது சமீபத்தில் வந்த புதிய கலாச்சாரம் என்றால் போட்டோ எடுத்தல் என்பது புரையோடிப் போன ஒரு பழக்கமாக நீண்ட காலமாக நமது சமுதாயத்தில் உள்ளது.

இங்கும் மணமகளை கேமராக்காரன் முதன்முதலில் பார்த்து தனது கேமராவைப் போலவே கண் சிமிட்டிக் கொள்கின்றான். வீடியோ கேஸட்டாவது பிளேயரில் போட்டால் தான் படம் தெரியும். ஆனால் இந்த போட்டோக்களோ ஆல்பங்களில் சேகரிக்கப்பட்டு அவரவர் தங்கியிருக்கும் அறைகளிலுள்ள மேஜைகளில் பார்வைக்கு வைக்கப்படுகின்றது.

போட்டோக்கள் விஷயத்தில் பாஸ்போர்ட், அடையாள அட்டை, டிரைவிங் லைசன்ஸ் போன்ற அவசியத் தேவைகளுக்காகவும், ஆதாரங்களுக்காகவும் பயன்படுத்துவதில் தவறில்லை. ஆனால் இவையன்றி அநாவசியமாக போட்டோ எடுத்து அதைப் பாதுகாத்து வைப்பதன் மூலம் நாம் பாவமான காரியம் செய்தவர்களாகின்றோம். இத்தகைய உருவப் படங்கள் வீட்டில் இருக்கையில் மலக்குகள் வருவது கிடையாது.

நாயோ உருவப்படமோ உள்ள வீட்டில் வானவர்கள் நுழைய மாட்டார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூதல்ஹா (ரலி), 
நூல்: புகாரி 3322

ஆயிஷா (ரலி) வீட்டுக்கு நபி (ஸல்) அவர்கள் வருகின்ற போது உருவப்படங்களைக் கண்டு உள்ளே பிரவேசிக்க மறுக்கின்றார்கள் என்பதை புகாரி 3226 ஹதீஸில் காண முடிகின்றது.

எனவே நமது வீட்டில் அருளைச் சுமந்து வரும் மலக்குகள் உள்ளே வருவதற்குத் தடையாக அமைகின்ற இந்த உருவப் படங்களை விட்டும் நாம் தவிர்ந்திருக்க வேண்டும்.

இது மட்டுமின்றி நாம் ஏற்கனவே குறிப்பிட்டபடி திருமண வீடியோவினால் ஏற்படும் அனைத்து தீமைகளும் திருமண போட்டோக்களாலும் ஏற்படும் என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும். எனவே இது போன்ற தீமைகளை விட்டும் நாம் விலகியிருப்போமாக!

 

குறிப்பு: 2004 மே மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 10, 2015, 8:16 AM

மவ்லிது ஒரு வணக்கமா?

மவ்லிது ஒரு வணக்கமா?

ஒரு முதலாளியிடம் ஒருவன் வேலை செய்கின்றான். அந்த முதலாளிக்குக் காலையில் 6 மணிக்கு டீ தேவை, 9 மணிக்கு டிபன் தேவை. ஆனால் இந்தப் பணியாளனோ 6 மணிக்கு டிபனையும் 9 மணிக்கு டீயையும் கொண்டு போய் கொடுக்கின்றான். இதுபோலவே அந்த முதலாளிக்குச் செய்ய வேண்டிய காரியங்கள், பணிவிடைகளில் அவரது விருப்பத்திற்குத் தக்க இவன் நடக்காமல் இவனது விருப்பத்திற்குத் தக்க அவருக்குப் பணிவிடைகள் செய்கின்றான் என்று வைத்துக் கொள்வோம். இதை அந்த முதலாளி ஏற்றுக் கொள்வாரா? நிச்சயமாக ஏற்றுக் கொள்ள மாட்டார்.

இந்த உதாரணத்திலிருந்து நாம் விளங்கிக் கொள்ளும் அடிப்படையான விஷயம் முதலாளியின் விருப்பத்திற்குத் தக்க தொழிலாளி தன்னுடைய கடமைகளை வகுத்துக் கொள்ள வேண்டுமே தவிர தொழிலாளி தனது விருப்பத்திற்கு ஏற்ப அவரது கடமைகளை வகுத்துக் கொள்ளக் கூடாது.

நாம் வணங்கும் அல்லாஹ் என்ற அந்த எஜமான் மனிதத் தேவைகளுக்கும் பலவீனங்களுக்கும், இதுபோன்ற உதாரணங்களுக்கும் அப்பாற்றபட்டவன். எனினும் அவன் இன்னின்ன காரியங்களை எனக்குச் செய்யுங்கள் என்று நமக்குச் சில வணக்க வழிபாடுகளைக் கடமையாக்கியுள்ளான். இதுதான் அவனுடைய விருப்பம். அவனுடைய விருப்பத்திற்குத் தக்கவாறு தான் நாம் வணங்க வேண்டுமே தவிர நம்முடைய விருப்பத்திற்குத் தக்க அவனை வணங்கக்கூடாது. இது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையாகும்.

இந்த அம்சத்தைப் பொறுத்த வரை மற்ற மதங்கள் அனைத்தும் இஸ்லாத்தை விட்டு வேறுபட்டு நிற்கின்றன. மக்கள் நினைத்த மாதிரியெல்லாம் வணங்குவது தான் பிற மதங்களிலுள்ள அம்சமாகும். ஆனால் அல்லாஹ் நினைத்தது போல் மக்கள் அவனை வணங்குவது தான் இஸ்லாத்தின் தனிச் சிறப்பாகும்.

வணக்கமாகி விட்ட மவ்லிதுகள்

இப்போது ரபீஉல் அவ்வல் மாதம் நடைபெற்றுக் கொண்டிருக்கின்றது. தமிழகத்தின் பல்வேறு பகுதிகளிலே அல்லாஹ்வின் பள்ளிகளிலும், தங்களின் வீடுகளிலும் மக்கள் மவ்லிதுகளை சங்கையாக ஓதிக் கொண்டிருப்பார்கள். பள்ளிகளானாலும் வீடுகளானாலும் அங்கு மேற்கட்டி கட்டப்பட்டு, அதில் பூமாலைகள் தொங்கிக் கொண்டிருக்கும். சந்தனக் கிண்ணம், சாம்பிராணி கிண்ணங்களும் மவ்லிது சபையைக் கலக்கி, சம அளவில் மனமேற்றிக் கொண்டிருக்கும். இன்னொரு பக்கத்தில் ஊதுபத்தியின் நறுமண வாடை கமழ்ந்து கொண்டிருக்கும். இதுபோக அத்தர் போன்ற வாசனைத் திரவியங்களும் தங்கள் பங்கிற்கு சுகந்தத்தைப் பரப்பிக் கொண்டிருக்கும்.

மவ்லிது கிதாபும் கையுமாக அலையக் கூடிய மவ்லவிகளுக்கு கிராக்கியான மாதம்! இவ்வாறு கிராக்கியான காலத்தில் அவர் மவ்லிது ஓதும் போது தொண்டை காய்ந்து விடக் கூடாது என்பதற்காக இடையிடையே பால், டீ, காபி, பாயாசம் போன்ற குடிபானங்கள்! மவ்லிது முடித்து கிறங்கிப் போய் விடக் கூடாது என்பதற்காக இறைச்சி சகிதம் அடங்கிய உணவுப் படைப்புகள்!

ஜகாத்தைக் கொடுக்க மறந்த சமுதாயம்

மக்கள் மவ்லிதுக்கென்று ஒரு பெருந்தொகையை செலவு செய்கின்றனர். இந்த ரபீஉல் அவ்வல் மாதத்தில் 12 நாட்களும் வீட்டில் ஆட்டிறைச்சி தான்! மறந்தும் இந்த மாதத்தில் மீன் உள்ளே புகுந்து விடக் கூடாது. மீன் மவ்லிதுக்குரிய தூய்மையை மாசுபடுத்தி விடும். ஒரு மாதிரியான நாற்றம் வெளிப்படும் என்பதற்காக மீனுக்கு இப்படி ஒரு தடை, கட்டுப்பாடு! அல்லாஹ் ஹலாலாக்கிய இந்த மாமிச உணவுகளுக்கு மத்தியில் இப்படி ஒரு பாரபட்சம்!

குர்ஆன் ஓதுவதற்கு இந்தக் கட்டுப்பாடுகள், நிபந்தனைகள் இருக்குமா என்றால் இருக்காது. காய்ந்த கருவாடு சாப்பிட்டு விட்டும் குர்ஆன் ஓதலாம். ஆனால் காயாத மீனைக் கூட மவ்லிது ஓதும் வீடுகளில் சாப்பிடக் கூடாது என்று நிபந்தனை வைத்துள்ளார்கள்.

இதைவிடக் கொடூர சட்டம் என்னவென்றால், மவ்லிது ஓதப்படும் வீடுகளில் கணவன், மனைவி இல்லறத்தில் ஈடுபடக் கூடாது என்ற நிபந்தனை தான். இந்த அளவுக்கு இதற்குப் புனிதமும் புண்ணியமும் ஏற்றப்பட்டதால் இந்த மக்கள் இஸ்லாம் கொடுக்கச் சொன்ன ஜகாத்தைக் கூட கொடுக்காமல் இந்த மவ்லிதுக்கென்று மலையளவுக்குச் செலவு செய்கின்றனர்.

பெரும்பெரும் தர்ம ஸ்தாபனங்களில், வக்பு சொத்து நிறுவனங்களின் கல்வெட்டுக்களில் மாதாந்திர மவ்லிது செலவுக்கென்று ஒரு தொகையைச் செய்ய வேண்டும் என்று பதிவு செய்துள்ளனர். இஸ்லாம் கடமையாக்கிய ஜகாத்திற்கு கதவைச் சாத்தி விட்டனர். இந்த அளவுக்கு சமுதாயத்தில் அந்தஸ்தை இந்த மவ்லிது பெற்றுவிட்டதற்குக் காரணம், இது மக்களிடம் வணக்கம் என்ற தோற்றத்தைப் பெற்றிருப்பது தான்.

மவ்லவிமார்கள் வருவாய்க்காகவும், வயிற்றுப் பிழைப்புக்காகவும் இதை வணக்க வழிபாடாக ஆக்கி, இதற்காக இதுவரை வக்காலத்து வாங்கிக் கொண்டிருக்கின்றனர். இப்படி வக்காலத்து வாங்குவதற்கு இந்த மவ்லிதுகள் ஒரு வணக்கமாக இல்லை என்பதை விட மார்க்கத்திற்கு எந்த வகையிலும் சம்பந்தமில்லாத ஒரு பாவத்திற்குத் தான் மவ்லவிகள் பரிந்து பேசுகின்றனர்.

முழுமை பெற்று விட்ட மார்க்கம்

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

இந்த வசனம் வணக்கங்களுக்கு முற்றுப்புள்ளி வைக்கப்பட்டு விட்டது என்பதைத் தெளிவாகக் கூறுகின்றது. எது எதைச் செய்தால் நன்மை கிடைக்கும் என்ற வணக்கம் தொடர்பான அனைத்தையும், அதாவது தனக்குப் பிடித்தமான வணக்கங்கள் அனைத்தையும் தெளிவாக, அல்லாஹ் தனது தூதருக்குக் காண்பித்துக் கொடுத்து விட்டான்.

எனக்குப் பிடித்த விதத்தில் அல்லாஹ்வை நான் வணங்கப் போகின்றேன் என்று யாரேனும் ஒருவர் கூறி எவராவது வணங்கினால் அந்த வணக்கம் நிராகரிக்கப்படும், தூக்கி முகத்தில் எறியப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எச்சரிக்கை விடுக்கின்றார்கள்.

நமது இந்த மார்க்கத்தில் இல்லாத ஒன்றை யாரேனும் உருவாக்கினால் அது நிராகரிக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரி 2697, முஸ்லிம் 3242

நமது உத்தரவின்றி யாரேனும் ஒரு அமலைச் செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: முஸ்லிம் 3243

மேற்கண்ட ஹதீஸ்களின் படி எந்த ஒரு புது வணக்கத்தையும் எவரும் தன் விருப்பத்திற்கேற்ப நன்மை என்ற பெயரில் தோற்றுவித்தால் உருவாக்கிவன் முகத்திலேயே அதைத் தூக்கி எறிந்து விட வேண்டும். அப்படி மீறி எவராவது அதைச் செய்தால் அந்த அமல் அல்லாஹ்வினால் அவரது முகத்தில் தூக்கி எறியப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

எனவே நபி (ஸல்) அவர்களின் காலத்திற்குப் பின்னால் சுமார் ஆயிரம் ஆண்டுகள் கழித்துத் தோன்றிய இந்த மவ்லிதுகள் நிச்சயமாக ஒரு இபாதத் அல்ல! அது ஒரு பித்அத் ஆகும்.

குறிப்பு: 2004 மே மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 10, 2015, 8:10 AM

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா

இஸ்லாத்தின் பார்வையில் மீலாது விழா

இஸ்லாம் என்பது அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் காட்டித் தந்த வழிமுறைகள்தான். இது நபி(ஸல்) அவர்கள் காலத்தோடு முழுமைப் படுத்தப்பட்டு விட்டது

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். 
(அல் குர்ஆன் 5:3)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

நான் உங்களை (மார்க்கம்) வெண்மையான(தாக இருக்கும்) நிலையில் விட்டுச் செல்கின்றேன். அதனுடைய இரவும் பகலைப் போன்றதாகும். அழியக் கூடியவனைத் தவிர வேறு யாரும் எனக்குப் பிறகு அதை விட்டும் வழி தவற மாட்டார்கள்.

அறிவிப்பவர்: இர்பாள் பின் ஸாரியா(ரலி), 
நூல்: அஹ்மத் (16519)

இப்படிப்பட்ட தெளிவான இஸ்லாமிய மார்க்கத்தில் இன்றைக்கு நபி(ஸல்) அவர்கள் காட்டித் தராத எத்தனையோ புதுப்புது வழிமுறைகள், வழிபாடுகள் புகுந்துவிட்டன. ஒவ்வொரு மாதத்திற்கும் ஒரு பித்அத்(நூதனமான அனுஷ்டானங்க)களை உருவாக்கி வைத்துள்ளனர்.

ரபியுல் அவ்வல் மாதம் வந்து விட்டால் போதும். ஒவ்வொரு பள்ளிவாசல்களிலும் பிறை 1 முதல் 12 வரை மௌலூதுகள் ஓதி மீலாது விழா கொண்டாடி வருகின்றனர். நபி(ஸல்) அவர்களின் புகழைப் பாடவேண்டும். அவர்களின் மீது நாம் கொண்டுள்ள நேசத்தை வெளிப்படுத்தவேண்டும். என்ற அடிப்படையில்தான் இந்த விழாக்களை கொண்டாடி வருகின்றனர்.

இந்த மீலாது விழாக்களில் ஊர்வலம் என்ற பெயரில் போதையால் மதி மயங்கியவர்களாக கேடு கெட்ட வாசகங்களைப் பயன்படுத்தி கோசமிடுவது, தெருவாரியாக வசூல் செய்து மௌலூது, பாதிஹா ஓதி நேர்ச்சை விநியோகிப்பது, அன்றை தினம் இசைக்கருவிகளுடன் பாட்டுக் கச்சேரி நடத்துவது இன்னும் பற்பல அனாச்சாரங்களை ஊருக்கு ஊர் வித்தியாசமாக நடைமுறைப்படுத்திக் கொண்டிருப்பதைக் காண முடிகிறது.

ஒரு முஸ்லிம் ஒரு காரியத்தைச் செய்கிறானென்றால், அவன் செய்யும் அக்காரியத்திற்கு உரை கல்லாக அவன் குர்ஆனையும் நபி(ஸல்) அவர்களின் வாழ்வில் ஒரு முன்மாதிரியையும் வைத்து செயல்படவேண்டும். அப்போதுதான் அவன் செய்யும் செயலுக்கு நன்மை பரிசாகக் கிடைக்கும். இல்லையேல், அது தீமையாகவே அமைந்துவிடும்.

இவர்கள் கொண்டாடும் இந்த மீலாது விழாவுக்கு மார்க்க அங்கீகாரம் உள்ளதா என்றால் இல்லவே இல்லை. குர்ஆன், நபி(ஸல்) அவர்களுக்கு முன் சென்ற நபிமார்களின் வரலாற்றைச் சொல்லிக்காட்டும் போது யாருடய பிறந்த நாளைப் பற்றியும் கூறவேயில்லை. அதிசயமாகப் பிறந்தவர் என்ற அடிப்படையில் நபி ஈஸா(அலை) அவர்களைக் கூறும்போது,

நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது நிம்மதி இருக்கிறது (என்றார்) 
(அல்குர்ஆன் 19:33)

என்று கூறப்படுகிறது. அதிலும் கூட பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுத்து விழா எடுக்கச் சொல்லவில்லையே... அதைப் போன்று நபி(ஸல்) அவர்கள், முன் சென்ற நபிமார்கள் ஆதம், நூஹ், இப்றாஹீம்(அலை) மற்றும் பல நபிமார்களின் வரலாற்றைக் கூறும்போது அவரவர் பிறந்த நாளைப் பற்றியும் அவைகளின் முக்கியத்துவத்தைப் பற்றியும் கூறவே இல்லை. அவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடி நமக்கு முன்மாதிரி காட்டிடவும் இல்லை.

நபி(ஸல்) அவர்கள் தம் வாழ்நாளில் தன் பிறந்த நாளையோ தன் பிள்ளைகளின் பிறந்த நாளையோ தாமும் கொண்டாடியதில்லை. பிறரைக் கொண்டாடும்படி கூறவும் இல்லை. நபி (ஸல்) அவர்களுக்குப் பிறந்த பிள்ளைகளின் பிறந்த தினத்தின் குறிப்புக்கூட ஹதீஸ்களில் இல்லை. அவர்களது மகன் இப்றாஹீடைய மரணக் குறிப்பு இருக்கிறதேயொழிய பிறப்பைப் பற்றி உள்ள செய்திகள் இல்லை.

இப்ராஹீம் (ரலி) அவர்கள் மரணமடைந்த நேரத்தில் சூரியக் கிரகணம் ஏற்படுகிறது. அதைக் கூட மக்கள் இவர் இறந்ததினால் தான் சூரியக் கிரகணம் ஏற்பட்டுவிட்டது என்று கூறினார்கள். தனது அருமை மகன் இறந்த துக்கத்தில் இருந்த அந்த நேரத்தில் கூட நபி (ஸல்) அவர்கள் அதைக் கண்டிக்கின்றார்கள். அவ்வாறு கூறுவது அறிவுக்கு ஏற்றதல்ல. மூடப்பழக்கத்தை ஏற்படுத்துகின்ற வார்த்தைகள் என்பதைச் சுட்டிக் காட்டும் வகையில், சூரியனும் சநதிரனும் அல்லாஹ்வுடைய இரண்டு அத்தாட்சிகளாகும். அவை யாருடைய பிறப்பிற்காகவும் இறப்பிற்காகவும் கிரகணம் பிடிக்கவில்லை என்று கூறுகின்றார்கள். அதன் மூலம் பிறந்த நாளுக்கு எந்தவொரு சிறப்போ முக்கியத்துவமோ இல்லை என்பதையே காட்டுகின்றார்கள்.

நபி(ஸல்) அவர்களின் காலத்தில் (அவர்களது மகன்) இப்றாஹீம்(ரலி) மரணித்த அன்று சூரிய கிரகணம் ஏற்பட்டது. இப்றாஹீமின் மரணத்திற்காகவே சூரிய கிரகணம் ஏற்பட்டதாக மக்கள் பேசிக் கொண்டணர். அப்போது நபி(ஸல்) அவர்கள் சூரியனுக்கும் சந்திரனுக்கும் எவரது பிறப்பிற்காகவும் இறப்பிற்காகவும் கிரகணம் பிடிப்பதில்லை. எனவே, நீங்கள் (கிரகணத்தை) கண்டால் தொழுது அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள் என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: முகீரா பின் ஷுஉபா (ரலி), 
நூல்: புகாரீ(1043)

இவ்வளவு ஏன்? நபி(ஸல்) அவர்களை எல்லா அம்சங்களிலும் நூற்றுக்கு நூறு பின்பற்றி வந்த நபித்தோழர்கள் நபி(ஸல்) அவர்களுடைய பிறந்த நாளுக்கு முக்கியத்துவம் கொடுக்கவுமில்லை. விழா கொண்டாடவும் இல்லை. மாறாக, ஆண்டுக் கணக்கை ஏற்படுத்த எதை வைத்துத் துவங்கலாம் என்ற ஆலோசனை நடத்தும்போது நபி(ஸல்) அவர்களின் பிறந்த நாளை அடிப்படையாக வைத்துத் துவக்குவதை விட்டுவிட்டு, இஸ்லாத்திற்கு மிகவும் திருப்புமுனையாகத் திகழந்த ஹிஜ்ரத் நிகழ்ச்சியை முன்வைத்தே துவக்கியுள்ளதை இஸ்லாமிய வரலாற்றில் காணமுடிகிறது.

உலகத்திலுள்ள எத்தனையோ பேருக்கு பிறந்த நாள் கொண்டாடப்படுகிறது. முகவரி இல்லாதவர்களுக்கே பிறந்த நாள் கொண்டாடப்படும் போது அகில உலக மக்களுக்கோர் அருட்கொடையாக வந்த இறுதித் தூதர் நபி(ஸல்) அவர்களுக்குப் பிறந்த நாள் கொண்டாடினால் என்ன? என்ற வாதத்தை முன் வைக்கின்றார்கள். இந்த வாதம் கேட்பதற்கு நன்றாகவே இருக்கிறது.

ஆனால், அல்லாஹ்வின் தூதரிடத்தில் தான் அழகிய முன்மாதிரி உள்ளது. ஒரு மனிதன் அல்லாஹ்வை நேசிப்பது உண்மையாக இருந்தால் அவன் நபி (ஸல்) அவர்களைப் பின்பற்ற வேண்டும் என்று குர்ஆன் மூலமாக அல்லாஹ் கூறுகிறான். அதுவே இறைநேசத்தின் சத்தும் சாரமும் அடையாளமும் குறிக்கோளுமாகும் என்ற கருத்தில் அமைந்த குர்ஆன் வரியின் வகைக்கு மாற்றமாக அல்லவா இந்த நூதன அனுஷ்டானம் அமைகிறது.

நபி (ஸல்) அவர்களின் சொல், செயல், அங்கீகாரம் இல்லாமல் நல்லதுதானே, சிறப்புத்தானே என்று நாமே நம் இஷ்டத்திற்கு உருவாக்கும் எல்லாச் செயலும் பித்அத்தான நூதன வழிகேடு என்றல்லவா மார்க்கம் கூறுகிறது. அதுவே நரகத்திற்கு கொண்டு சென்று சேர்க்கும் செயலென்று நபி(ஸல்) அவர்களுடைய சொல்லும் கூறுகிறது.

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: புகாரீ (2697)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), 
நூல்: முஸ்லிம் (3243)

நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), 
நூல்: நஸயீ (1560)

எல்லோரும் செய்கிறார்கள், பிற சமுதாயத்தவர்களும் செய்கிறார்கள். நாமும் செய்தால் என்ன என்று நாம் மீலாது விழா போன்ற காரியங்களைச் செய்தால் அது மாற்றுமதத்தவர்களின் வழிமுறையைப் பின்பற்றிவர்களாக ஆகிவிடுவோமல்லவா? இதற்கு நபி(ஸல்) அவர்களுடைய காலத்தில் நடந்த சம்பவம் நமக்கு சரியான பாடத்தைப் புகட்டி, மாற்றுக் கலாச்சாரத்தை நம்மவர்கள் காப்பியடிப்பதை வன்மையாகக் கண்டிக்கிறது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க நபி(ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணைவைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க்கருவிகளை தொங்கவிட்டு அங்கு தங்கி(இஃதிகாஃப்) இருப்பார்கள். தாத்து, அன்வாத் என்று அதற்கு சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்றபோது நபி(ஸல்) அவர்களிடத்தில் அல்லாஹ்வின்தூதரே.. அவர்களுக்கு தாத்து, அன்வாத்து என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள் என்று கூறினோம்.

அதற்கு நபி(ஸல்) அவர்கள் சுப்ஹானல்லாஹ்... அல்லாஹு அக்பர்.. இவையெல்லாம் (அறியாமைக் காலத்தவரின்) முன்னோர்களின் செயல் ஆகும் என்று சொல்லி, என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக நீங்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா(அலை) அவர்களிடத்தில், மூஸாவே அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள் என்று கேட்க, அதற்கு மூஸா(அலை) அவர்கள், நீங்கள் ஒன்றுமறியாத விபரமற்றவர்கள் என்று பதிலளித்தார்கள். இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையை படிப்படியாக பின்பற்றுவீர்கள் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூ வாக்கிதுல்லைசி (ரலீ), 
நூல்: திர்மிதி

மேலும், நபி(ஸல்) அவர்களிடத்தில் திங்கள்கிழமை நோன்பு (ஏன் பிடிக்கவேண்டும் என்பது) பற்றி கேட்கப்பட்டது. அப்போது அதற்கு நபி(ஸல்) அவர்கள் பதிலளித்துக் கூறுகையில் இப்படிச் சொல்கிறார்கள்.... "அதில்தான் நான் பிறந்தேன். அதில் நான் நபியாக அனுப்பப்பட்டேன். அதிலே எனக்கு குர்ஆன் அருளப்பட்டது'' என்கிறார்கள்.

அறிவிப்பாளர்: அபூ கதாதா (ரலீ), 
நூல்: முஸ்லிம்

இந்த ஹதீஸ் நபி பிறந்த தினத்தை கொண்டாடக்கூடாது என்று கூறுவதோடு மட்டுமில்லாது நோன்பு பிடிப்பது நபிவழி என்றும் அதுவே, நபியை நேசிப்பதற்கு உகந்த வழி என்றும் சொல்கிறது. ஆனால், நம்மவர்கள் நோன்பைப் பிடிக்காமல் இருந்தாலாவது பரவாயில்லை. சிறப்பாக, மிக விஷேசமாக நபி(ஸல்) அவர்களுடைய பிரியத்தை முன்வைத்து விருந்து சமைத்து அரபிப் பாட்டுப் பாடி பெரிய கூத்தும் கொண்டாட்டமும் நடத்துகின்றார்கள். நீங்கள் நோன்பையா பிடிக்கச் சொன்னீர்கள்? நாங்கள் அதற்கு மாற்றமாகத்தான் நடப்போம் என்று சொல்வது போல் நடந்துகொண்டு எங்களுக்கு தீன் முக்கியமல்ல. தீனி தான் முக்கியம் என்றே பரவலாக முஸ்லிம்கள் நடந்து வருவதைக் காணமுடிகிறது.

இன்னும் சொன்னப்போனால், ரபியுல் அவ்வல் பிறை பன்னிரண்டில் (அதில் தான் நபி(ஸல்) அவர்கள் பிறந்தார்கள் என்று எண்ணிக்கொண்டு) மற்ற ஊர்களில் விழா எடுத்துக் கொண்டாட்டம் நடத்தினாலும் மேலப்பாளையம் போன்ற முஸ்லிம்கள், மார்க்க அறிஞர்கள் (?) அதிகம் வாழுகின்ற பகுதியில் அந்த மாதம் பிறை பன்னிரண்டில் திங்கள்கிழமை வராவிட்டால், அதற்குப் பின்வரும் திங்கட்கிழமையன்று தான் ஊர் முழுவதும் ஊர் கந்தூரி கொண்டாடி சாப்பாடு ஆக்கி மௌலூது ஓதி உண்டு மகிழ்வார்கள். இதுவே, அவ்வூரில் தொன்றுதொட்டு நடந்துவரும் பழக்கமாக இன்றும் இருந்து வருகிறது. இவையெல்லாம், நபி(ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று உண்டு மகிழ்வதைக் காட்டுகின்றதா அல்லது அவர்கள் மீதுள்ள பொய்யான நேசத்தைக் காட்டுகின்றதா.. அல்லாஹ்வுக்கே வெளிச்சம்....

எனவே, உண்மையான நேசம் என்பது, நபி(ஸல்) அவர்களின் மீது அன்பு கொண்டுள்ளோம் என்பதற்கு அடையாளம் அவர்களின் வழியைப் பின்பற்றி நடப்பதும் அவர்கள் காட்டிய மார்க்கத்தைத் தானும் எடுத்து நடந்து மற்றவர்களுக்கும் எடுத்துப் போதிப்பதேயாகும் என்பதைக் கீழ்க்காணும் இறைவசனங்களும் நபிமொழிகளும் காட்டுகின்றன.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக! "அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித் தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! 
(அல்குர்ஆன் 3:31,32)

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். 
(அல்குர்ஆன் 59:7)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார். 
(அல்குர்ஆன் 33:36)

"உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்'' என்று கூறுவீராக!
(அல்குர்ஆன் 9:24)

உங்களில் ஒருவருக்கு அவரது தந்தை, அவரது குழந்தைகள், ஏனைய மக்கள் அனைவரையும் விட நான் மக்கள் அனைவரையும் விட மிகவும் பிரியத்திற்குரியவராக ஆகும் வரை அவர் உண்மையான ஈமான் கொண்டவராக ஆகமாட்டார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), 
நூல்: புகாரி 15

எனவே, நபி(ஸல்) அவர்களை ஒரு சில நாட்கள் மட்டும் எண்ணிப் பார்க்காமல் அவர்களுடைய வாழ்க்கையையும் அவர்களுடைய நற்பண்புகளையும் நம்முடைய வாழ்க்கை நெறியாகப் பின்பற்றி உலகம் முழுமைக்கும் பரப்புவோமாக,, இம்மையிலும் மறுமையிலும் இறைவன் நம்மை நேசித்து அவன் மன்னிப்பைப் பெறுவோமாக! 

குறிப்பு: 2004 மே மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 10, 2015, 7:52 AM

சத்தியப் பாதை சமூக மரியாதை

சத்தியப் பாதை சமூக மரியாதை

நூஹை, அவரது சமுதாயத்திடம் அனுப்பினோம். "நான் உங்களுக்குப் பகிரங்கமாக எச்சரிக்கை செய்பவன்'' (என்று அவர் கூறினார்.)

அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) வணங்காதீர்கள்! துன்புறுத்தும் நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன் (எனவும் கூறினார்).

"எங்களைப் போன்ற ஒரு மனிதராகவே உம்மைக் காண்கிறோம். எங்களில் சிந்தனைக் குறைவுடைய தாழ்ந்தவர்களே உம்மைப் பின்பற்றுவதைக் காண்கிறோம். உங்களுக்கு எங்களை விட எந்தச் சிறப்பும் இருப்பதாக நாங்கள் கருதவில்லை. மாறாக உங்களைப் பொய்யர்களாகவே கருதுகிறோம்'' என்று அவரது சமுதாயத்தில் (ஏக இறைவனை) மறுத்த பிரமுகர்கள் கூறினர்.

"என் சமுதாயமே! நான் என் இறைவனிடமிருந்து பெற்ற சான்றின் அடிப்படையில் இருந்து, அவன் தனது அருளையும் எனக்கு வழங்கியிருந்து, அது உங்களுக்கு மறைக்கப்பட்டு, நீங்கள் அதை வெறுத்தால் உங்கள் மீது அதை நாங்கள் திணிக்க முடியுமா? என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' என்று (நூஹ்) கேட்டார்.

"என் சமுதாயமே! இதற்காக நான் உங்களிடம் எந்தச் செல்வத்தையும் கேட்கவில்லை. எனது கூலி அல்லாஹ்விடமே உள்ளது. நம்பிக்கை கொண்டோரை நான் விரட்டுபவனாகவும் இல்லை. அவர்கள் தமது இறைவனைச் சந்திப்பவர்கள். எனினும் உங்களை அறியாத கூட்டமாகவே நான் கருதுகிறேன்''

என் சமுதாயமே! நான் அவர்களை விரட்டியடித்தால் அல்லாஹ்விடமிருந்து என்னைக் காப்பாற்றுபவன் யார்? சிந்திக்க மாட்டீர்களா?

"என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறைவானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் உங்களிடம் கூற மாட்டேன். உங்கள் கண்கள் இழிவாகக் காண்போருக்கு அல்லாஹ் எந்த நன்மையும் அளிக்கவே மாட்டான் எனவும் கூற மாட்டேன். அவர்களின் உள்ளங்களில் உள்ளதை அல்லாஹ் மிக அறிபவன். (அவ்வாறு கூறினால்) நான் அநீதி இழைத்தவனாகி விடுவேன்'' (எனவும் கூறினார். 
(அல்குர்ஆன் 11:25-31)

மேற்காணும் வசனங்கள் நம்மிடம் படம் பிடித்துக் காட்டுகின்ற செய்தி, சத்தியத்தை முதன்முதலில் பின்பற்றுபவர்கள் சமூகத்தில் எந்த அந்தஸ்தும் இல்லாதவர்கள் தான். சத்தியத்தை ஏற்க மறுப்பவர்கள் சமூக அந்தஸ்தைக் கொண்ட செல்வாக்கு படைத்தவர்கள். இவர்கள் தான் சத்தியப் பாதைக்குக் குறுக்கே வந்து நிற்கின்றார்கள் என்பதை மேற்கண்ட வசனங்களில் நாம் காண முடிகின்றது. நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கை வரலாற்றிலும் இதை நாம் காண முடியும்.

பொதுவாக சமூகத்தில் மரியாதை பெற்றிருப்பவர்கள் இந்த மார்க்கத்தில் இணையும் போது அவர்களுக்கு அந்த சமூக அந்தஸ்து, மரியாதை பறி போய் விடும். இதன் காரணமாகவே இவர்கள் சத்தியப் பாதைக்கு வருவதில்லை. அதுமட்டுமின்றி சத்தியத்தையும், அதில் உள்ளவர்களையும் மிகக் கடுமையாக எதிர்க்கத் துவங்கி விடுகின்றார்கள்.

எந்த ஊருக்கு எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பினாலும் "எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளீர்களோ அதை நாங்கள் மறுப்பவர்கள்'' என்று அங்கே சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. 
(அல்குர்ஆன் 34:34)

"இவர் உங்களைப் போன்ற ஒரு மனிதர் தவிர வேறில்லை. நீங்கள் உண்பதையே இவரும் உண்ணுகிறார். நீங்கள் அருந்துவதையே இவரும் அருந்துகிறார்'' என்று அவரது சமுதாயத்தில் யார் (ஏக இறைவனை) மறுத்து, மறுமையின் சந்திப்பைப் பொய்யெனக் கருதி, இவ்வுலக வாழ்வில் யாருக்கு சொகுசான வாழ்வை வழங்கினோமோ அந்தப் பிரமுகர்கள் கூறினர். 
(அல்குர்ஆன் 23:33)

இவ்வாறே எந்த ஊருக்கும் எச்சரிக்கை செய்பவரை நாம் அனுப்பும் போதெல்லாம் "எங்கள் முன்னோர்களை ஒரு வழியில் நாங்கள் கண்டோம். நாங்கள் அவர்களின் அடிச்சுவடுகளைப் பின் பற்றுபவர்கள்'' என்று அவ்வூரில் சொகுசாக வாழ்ந்தோர் கூறாமல் இருந்ததில்லை. 
(அல்குர்ஆன் 43:23)

எனவே சமூக மரியாதை என்பது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல் என்பதை நாம் விளங்கிக் கொள்ளலாம். இந்த சமூக மரியாதை என்பது செல்வத்தினால் மட்டுமல்லாது இன்னபிற பதவி, பொறுப்புகளின் மூலமாகவும் கிடைக்கும்.

அல்லாஹ் சத்தியப் பாதையில் உள்ளவர்களை பலவிதமான சோதனைகளைக் கொண்டு சோதிக்கின்றான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! 
(அல்குர்ஆன்2:155)

இந்த வசனத்தில் அல்லாஹ் குறிப்பிடும் சோதனைகளின் பட்டியலில் "பலன்களைப் பறித்தல்' என்ற சோதனையையும் குறிப்பிடுகின்றான்.

இதன்படி ஓர் ஏகத்துவவாதிக்குக் கிடைத்திருக்கும் சமூக மரியாதை என்பது அல்லாஹ்வால் அளிக்கப்பட்ட ஒரு பலனாகும். அநதப் பலனை அந்த ஏகத்துவவாதியிடமிருந்து பறிக்கும் சூழலை அல்லாஹ் உருவாக்குவான். ஏகத்துவமா? அல்லது சமூக மரியாதையா? மார்க்கமா? அல்லது மக்களிடம் கிடைக்கும் அந்தஸ்தா? என்ற ஒரு சோதனையை அல்லாஹ் ஏற்படுத்துவான்.

இதுபோன்ற கட்டங்களில் ஓர் ஏகத்துவவாதி, தான் ஏற்றிருக்கும் கொள்கைக்கு ஆபத்து வந்து விட்டால் இந்த சமூக மரியாதையைத் தூக்கி எறிந்துவிட முன் வருவான். இத்தகைய தியாகிகளுக்கு முன்னுதாரணம், அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) ஆவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு வருகை தந்திருக்கும் செய்தி அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்களுக்கு (அவர்கள் யூதராயிருந்த போது) எட்டியது. உடனே அவர், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "தங்களிடம் மூன்று விஷயங்களைப் பற்றிக் கேட்கப் போகின்றேன். அவற்றை ஓர் இறைத் தூதர் மட்டுமே அறிவார்'' என்று கூறினார்.

பிறகு, "1. இறுதி நாளின் அடையாளங்களில் முதலாவது அடையாளம் எது? 2. சொர்க்கவாசி முலில் உண்ணும் உணவு எது? 3. குழந்தை தன் தந்தையை ஒத்திருப்பது எதனால்? அது தாயின் சதோதரர்களின் (சாயலை) ஒத்திருப்பது எதனால்?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "சற்று முன்பு தான் இது குறித்து ஜிப்ரீல் எனக்குத் தெரிவித்தார்'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் அவர்கள், "வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே'' என்று கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இறுதி நாளின் அடையாளங்களில் முதல் அடையாளம் ஒரு நெருப்பாகும். அது மக்களை கிழக்கிலிருந்து மேற்கு திசையில் ஒன்று திரட்டும். சொர்க்கவாசிகளின் முதல் உணவு பெரிய மீனின் ஈரல் பகுதியில் உள்ள அதிகப்படியான சதையாகும். குழந்தையிடம் காணப்படும் சாயலுக்குக் காரணம், ஆண் தன் மனைவியுடன் உடலுறவு கொள்ளும் போது, அவனது நீர் முந்தி விட்டால் குழந்தை அவனது சாயலில் பிறக்கின்றது. பெண்ணின் நீர் முந்திக் கொண்டால் அவளது சாயலில் பிறக்கின்றது'' என்று கூறினார்கள்.

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி), "தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்கள். பிறகு "அல்லாஹ்வின் தூதரே, யூதர்கள் பொய்யில் ஊறித் திளைத்த சமுதாயத்தினர் ஆவர். தாங்கள் என்னைப் பற்றி அவர்களிடம் கேட்கும் முன்பாக நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை அவர்கள் அறிந்தால் என்னைப் பற்றி தங்களிடம் பொய்யுரைப்பார்கள்'' என்று கூறினார்.

அப்போது யூதர்கள் வந்தார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வீட்டினுள் புகுந்து மறைந்து கொண்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (யூதர்களிடம்) "உங்களில் அப்துல்லாஹ் பின் ஸலாம் எத்தகைய மனிதர்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அவர் எங்களில் ஞானம் மிக்கவரும், எங்களில் அறிவு மிக்கவரின் மகனும் ஆவார். எங்களில் அனுபவமும் விவரமும் மிக்கவரும், எங்களில் அனுபவமும் விபரமும் மிக்கவரின் மகனும் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அப்துல்லாஹ் (பின் ஸலாம்) இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார் என்றால் நீங்கள் என்ன நினைப்பீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "அல்லாஹ் அவரை அதிலிருந்து காப்பானாக'' என்று கூறினார்கள். உடனே அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) வெளியே வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நான் சாட்சி கூறுகின்றேன். மேலும் முஹம்மத் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் சாட்சி கூறுகின்றேன்'' என்று கூறினார்.

உடனே யூதர்கள், "இவர் எங்களில் கெட்டவரும், கெட்டவரின் மகனும் ஆவார்'' என்று சொல்லி விட்டு அவரைக் குறித்து அவதூறு பேசலானார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), 
நூல்: புகாரி 3329

அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி) அவர்களுக்கு யூத சமுதாயத்தில் எத்தகைய மதிப்பும் மரியாதையும் இருந்தது என்பதை இந்த ஹதீஸிலிருந்து விளங்கலாம். ஆனால் சத்தியம் என்று வருகின்ற போது, அந்த சமூக அந்தஸ்தை, மரியாதையைத் தூக்கி எறிந்து விடுகின்றார்கள்.

அவ்வாறு சமூக மரியாதையைத் தூக்கி எறிந்து சத்தியப் பாதையைத் தேர்ந்தெடுக்கும் போது, அதுவரை மதிப்பு மரியாதை கொடுத்து வந்தவர்கள் கூட அவரைப் பற்றி அவதூறுகளைக் கூறி, வாய்க்கு வந்தபடியெல்லாம் பேசத் துவங்கி விடுவதையும் இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது.

இதுபோன்ற கட்டத்தில் அவர் இந்த இழப்பிற்காக பொறுமையை மேற்கொள்கின்றார். இத்தகையவர்களுக்கு அல்லாஹ் தன் திருமறை மூலம் ஆறுதல் அளிக்கின்றான்.

தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர். (அல்குர்ஆன்2:156,157)

எனவே ஓர் ஏகத்துவவாதி அவனது கொள்கைக்கு, ஏகத்துவத்திற்கு ஆபத்து வருகின்ற போது, அதற்காக அந்தஸ்து, மரியாதை உள்ளிட்ட எந்தத் தியாகத்தையும் செய்யத் தயங்கி விடக் கூடாது.

அப்படி ஒரு தயக்கம் நம்மிடம் வந்து விடுமானால், நம்முடைய அந்தஸ்துகள் நமது சத்தியப் பாதைக்கு ஒரு தடைக்கல்லாக அமைந்து விடுமானால் அல்லாஹ் வைத்த சோதனையில் தோற்று விட்டதாகத் தான் அர்த்தம். அல்லாஹ் நம்மைக் காப்பானாக!

 

குறிப்பு: 2004 மே மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை

January 10, 2015, 7:29 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top