இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப

தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் டெங்கு பரவுகிறது: ஆய்வில் தகவல்!
 
 இஸ்லாத்தை  உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள்

தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் கொசுக்கள்  கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள்  வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  

கொசுக்களால் பரவும் டெங்கு, சிக்குன்குனியா போன்ற நோய்கள் இந்தியா முழுவதும் வேகமாக பரவி வருகின்றன. இதில் டெங்கு காய்ச்சலுக்கு ஏராளமானவர்கள் பலியாகிவிட்டனர். ஏழை, பணக்காரர்கள் என்ற பாகுபாடு இல்லாமல் டெங்கு பரவி வருகிறது.

இந்த அளவுக்கு டெங்கு பரவியதற்கு காரணம், ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் கட்டுக்கடங்காமல் பெருகியதுதான். இந்த நிலையில், ஆசிய டைகர் எனப்படும் புதிய ரக கொசுக்களும் டெங்குவை பரப்புவது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது. ஏடிஸ் ஏஜிப்டி ரக கொசுக்கள் வீட்டுக்குள் தேங்கி இருக்கும் தண்ணீரில் உருவாகும். ஆனால், ஆசிய டைகர் ரக கொசுகள் திறந்த வெளியில் தேங்கி இருக்கும் தண்ணீரில் முட்டையிட்டு பெருகுகிறது.

இதுபோல கொசுக்கள்  அதிகமாக உற்பத்தி ஆவதற்கு  காரணம் தவளைகள் எண்ணிக்கை  கணிசமாக குறைந்ததுதான்  என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கண்டுபிடித்துள்ளனர். தவளைகள் எண்ணிக்கை குறைந்ததால் கொசுகள் அதிகமாக பெருகிவருகிறது. தவளைகள் அதிகமாக இருந்தால்  தண்ணீரில் மிதக்கும் கொசுகளின் லார்வாக்களை அவை  சாப்பிட்டுவிடும். அண்மையில் டெல்லியில் நடத்திய ஆய்வில் இந்தியாவில் பெரும்பாலான பகுதிகளில் தவளைகளே இல்லை என்று தெரியவந்துள்ளது. இதனால், தவளைகளை காப்பாற்ற வேண்டும் என்று சுற்றுச்சூழல் ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர். நபி (ஸல்) அவர்கள்  தவளையை கொல்வதை தடைசெய்தார்கள்.
நூல் : தாரமீ (1914)

 நபிகள் நாயகம் (ஸல்)  அவர்கள் தவளைகளை கொல்வதை  தடை செய்துள்ளார்கள் என்று  மேற்கண்ட ஆதாரப்பூர்வமான  செய்தி தெளிவுபடுத்துகின்றது.

அப்படியானால் தவளைகளின்  காரணமாக ஏற்படும் நன்மைகளை கருத்தில் கொண்டுதான் அல்லாஹ்வுடைய தூதர் அவர்கள் தவளைகளைக்  கொல்ல வேண்டாம் என்ற கட்டளையை பிறப்பித்துள்ளார்கள்.     தவளைகளால் எப்படிப்பட்ட நன்மைகள் விளைகின்றன என்பதை அப்போதுள்ள மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் தற்போது நம்மால் அறிந்து கொள்ள முடிகின்றது. இஸ்லாம் இறைவனின் மார்க்கம்தான் என்பதை மேற்கண்ட ஆய்வு முடிவுகள் உண்மைப்படுத்துகின்றன.


இஸ்லாத்தைஉண்மைபடுத்தும்நாட்டு நடப்புகள்இஸ்லாம் இறைவனின்மார்க்கம்

Published on: December 17, 2012, 3:55 PM Views: 1950

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top