சின்ன வீடு'களுக்கும் ஜீவனாம்சம்
இஸ்லாத்தை உண்மைப்படுத்தும் நாட்டு நடப்புகள்
சின்ன வீடு'களுக்கும் ஜீவனாம்சம்
இஸ்லாம் கூறும் அனைத்துச் சட்டங்களும் போதனைகளும் மனிதனால் உருவாக்கப்படாமல் இறைவனால் உருவாக்கப்பட்டதால் அது எக்காலத்துக்கும் பொருந்தக் கூடியதாக அமைந்துள்ளது.
உடனடியாக இதை மற்ற சமுதாயத்தினர் உணராவிட்டாலும் நீண்ட அனுபவத்துக்குப் பின் இந்த உண்மையை உணர்கின்றனர்.
இது போன்ற செய்திகள் கண்ணுக்குத் தென்படும் போது இப்பகுதியில் அது குறித்து விளக்கப்படும்.
இன்று 26-10-2009 அன்று தினமலரில் வெளியான செய்தி இஸ்லாத்தை மெய்ப்படுத்துவதைக் காணுங்கள்!
சின்ன வீடு'களுக்கும் ஜீவனாம்சம் தர சட்டம் வருமா? தேசிய மகளிர் கமிஷன் பரிந்துரை
அக்டோபர் 26,2009,00:00 IST
புதுடில்லி : சட்டப்படி திருமணம் செய்து குடும்பம் நடத்திய மனைவிக்கு மட்டுமல்ல, பிரச்னை என்று வந்தால்,கள்ளத்தொடர்பு' கொண்டிருந்த இரண்டாவது, மூன்றாவது மனைவிக்கும், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கும் கூட ஜீவனாம்சம் தர வேண்டும். இதுதொடர்பாக சட்டத் திருத்தம் கொண்டு வர வேண்டும்.- தேசிய மகளிர் கமிஷன், இப்படி ஒரு அதிரடி பரிந்துரையை செய்துள்ளது. ஜீவனாம்ச விஷயத்தில் இது புதிய சர்ச்சையை கிளப்பும் என்று தெரிகிறது.
கணவன் - மனைவி என்ற தம்பதிக்கு உரிய சட்டப்பூர்வ விளக்கம், அரசின் பல சட்டத்திருத்தங்களில் வகை செய்யப்பட்டுள்ளது. பிரச்னை ஏற்படும் போது, தம்பதிகளில் பிரிவு ஏற்பட்டால், வாழ்வாதாரத்துக்குரிய ஜீவனாம்ச தொகை தருவது தொடர்பாகவும் சட்டத்தில் விளக்கம் தரப்பட்டுள்ளது.சட்டப்படி திருமணம் செய்து வாழ்ந்த மனைவி தொடர்பாக மட்டும் தான் சட்டத்தில் ஜீவனாம்சம் தொடர்பாக விளக்கம் அளிக்கப்பட்டுள்ளது. ஆனால், மனைவியை தவிர, குடும்பத்தலைவர் கள்ளத்தொடர்பு வைத்திருக்கும் பெண் அல்லது பெண்கள், அவர்கள் மூலம் பிறந்த குழந்தைகளுக்கு பிரச்னை வந்தால், அவர்களுக்கு சட்டப்படி எந்த வழியும் கூறப்படவில்லை.சட்டப்படியான மனைவியை தவிர, கள்ளத்தொடர்பில் வந்த பெண் அல்லது பெண்களை குற்றவாளியாகவே சட்டப்படி பார்க்கப்பட்டு வருகிறது.
அவர்களுக்கு ஜீவனாம்ச உரிமை கிடையாது. இந்திய குற்ற நடைமுறை சட்டம் 125 (5)ன் கீழ், சட்டப்பூர்வமில்லா, இரண்டாவது, மூன்றாவது மனைவிகளுக்கு உரிமை இல்லை என்று வரையறுக்கப்பட்டுள்ளது. இது தொடர்பாக தேசிய மகளிர் கமிஷன் சமீபத்தில் முழுமையாக ஆலோசித்தது. சட்டப்படியில்லாமல், ஒருவருடன் குடும்பம் நடத்தி வந்த பெண், அவர் மூலம் பிறந்த குழந்தைக்கு, அவர்களுக்கு வாழ்வதற்கு பாதுகாப்பு தர வேண்டியது சட்டப்படி கடமையாகிறது. பிரச்னையால் இவர்கள் பாதிக் கப்பட்டால், சம்பந்தப்பட்ட ஆண், கண்டிப்பாக ஜீவனாம்சம் தர வேண்டும் என்று கமிஷன் பரிந்துரை செய்துள்ளது.சட்டப்படி திருமணம் செய்த மனைவிக்கு மட்டுமல்ல, அனாதரவாக விடப்பட்ட தாத்தா, பாட்டிகள், வளர்ப்பு தாய், வளர்ப்பு மகன், மகள்கள் ஆகியோருக்கும் வாழ்வாதாரம் அடிப்படையில் குறிப்பிட்ட தொகையை அளிக்க வேண்டும் என்றும் பரிந்துரை செய்யப்பட்டுள்ளது.
குற்ற நடைமுறை சட்டத்தில்,சட்டப்பூர்வமில்லாத உறவு...' என்று கூறப்பட்டுள்ளதையே நீக்க வேண்டும். இப்போதுள்ள சூழ்நிலைக்கு ஏற்ப இதில் திருத்தம் கொண்டு வர வேண்டும். சட்டப்பூர்வ மனைவி மட்டுமின்றி, தொடர் புள்ள மற்ற பெண்கள் விஷயத்திலும் சட்டப்பூர்வ அணுகுமுறையை கொண்டு வர வேண் டும். அவர்கள் நிராதரவாக விடப் படாமல், வாழ வழி செய்ய வேண்டும்' என்றும் பரிந்துரையில் கூறப்பட்டுள்ளது.டில்லியில் உள்ள சில அமைப்புகள், இந்த பரிந்துரையை மறைமுகமாக எதிர்த்து வருகின்றன. இதை ஏற்றுக்கொண்டால், எங்கள் சம்பளத்தையும் தாண்டி ஜீவனாம்சம் தர வேண்டியிருக்கும்' என்று ஒரு ஆண்கள் சங்கம் கருத்து தெரிவித்துள்ளது.இருப்பினும், மத்திய அரசு இது தொடர்பாக இன்னும் ஆலோசனை செய்யவில்லை. எனினும், சட்ட அமைச்சகத்தின் கருத்தும் கோரப்பட்டுள்ளது.
வைப்பாடிகளுக்கும் ஜீவனாம்சம் கொடுக்க வேண்டும்; அவர்களுக்குப் பிறந்த குழந்தைகளுக்கும் சட்டப்பூர்வ உரிமை வழங்க வேண்டும் என்றால் வைப்பாட்டியை மனைவியாக அங்கீகரிக்கச் சொல்கிறார்கள். இஸ்லாம் முட்டுவதற்கு முன் குணியச் சொல்கிறது. இவர்கள் முட்டிவிட்டு குணிகிறார்கள். இது தான் வேறுபாடு.
இது குறித்து இஸ்லாத்தின் நிலையை விரிவாக அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்
26.10.2009. 01:22
