தீய செயலுக்கு மரபணுதான் காரணமா?
தீய செயலுக்கு மரபணுதான் காரணமா?
கேள்வி
ஓரினச் சேர்க்கை செய்பவர்கள் இதை அவர்களாகத் தேர்வு செய்து செய்வதில்லை. குழந்தை பருவத்திலிருந்தே அவர்களின் மனதில் இந்த சிந்தனை இயற்கையாகத் தோன்றுகிறது. எனவே ஒருவர் ஓரினச் சேர்க்கை செய்தால் அது அவருடைய குற்றம் என்று சொல்ல முடியாது. இது இறைவன் ஏற்படுத்திய குறைபாடாகும் என்று சொல்கிறார்கள். இது உண்மையா?
சாந்தி
பதில்
நீங்கள் சொல்வது போல் ஒரு ஆய்வு செய்யப்பட்டுள்ளது உண்மை தான். ஆனால் ஓரினச் சேர்க்கைக்கு மட்டும் அவ்வாறு சொல்லப்படவில்லை. மனிதனிடம் காணப்படும் நல்ல பண்புகளுக்கும் தீய பண்புகளுக்கும் கூட மரபணுவில் உள்ள புரோக்ராம்கள் தான் காரணம் என்று தான் அந்த ஆய்வு கூறுகிறது. இது இஸ்லாம் கூறும் விதி எனும் நம்பிக்கையை மெய்ப்படுத்தவதாக உள்ளது.
ஒருவன் திருடினால் அவனுக்குள் அந்தச் சிந்தனை இயல்பாக தோன்றுகிறது. அவனது மரபணு அவனை அப்படி சிந்திக்கத் தூண்டுகிறது என்றும்
ஒருவன் கொலை செய்கிறான் என்றால் அதற்கேற்ற வகையில் அவனுடைய மரபனுக்கள் அமைந்துள்ளன என்றும்
இன்னும் மனிதன் செய்யும் எல்லா நல்ல கெட்ட செயல்களுக்கும் மரபணுக்கள் தான் காரணம் என்றும் விஞ்ஞானிகள் இப்போது கூறுகின்றனர். அந்த அடிப்படையில் ஓரினச் சேர்க்கைக்கும் இதே காரணத்தைக் கூறுகிறார்கள். இந்தக் கண்டு பிடிப்பு ஊகத்தின் அடிப்படையிலானது என்பதை முதலில் நாம் விளங்கிக் கொள்ள வேண்டும்.
இது அப்படியே உண்மை என்று ஒப்புக் கொண்டால் அனைத்து விஷயங்களிலும் இதை ஒப்புக் கொள்ள வேண்டும்.
உங்கள் பொருளை ஒருவன் திருடி விட்டால், அல்லது உங்கள் குடும்பத்தில் ஒருவரைக் கொலை செய்து விட்டால் அவன் குற்றவாளி அல்ல என்று நீங்கள் கூற வேண்டும். அவனைத் தண்டிக்காமல் நீங்கள் விட்டு விட வேண்டும். மற்ற விஷயங்களில் மட்டும் இதை மறுத்து விட்டு ஓரினச் சேர்க்கைக்கு மட்டும் பொருத்துவது எப்படிச் சரியாகும்?
இந்த விஞ்ஞான ஊகத்தை உலகம் ஏற்றுக் கொண்டால் எல்லா நாடுகளும் குற்றவியல் சட்டங்களை நீக்கி விட வேண்டும். எந்தக் குற்றத்தை ஒருவன் செய்தாலும் அது அவன் செய்தது அல்ல. இயற்கையாக அவனுக்கு அப்படித் தோன்றுவதால் தான் அவன் செய்துள்ளான். எனவே எந்தக் குற்றத்துக்காகவும் யாரையும் தண்டிக்கக் கூடாது எனக் கூற வேண்டும். இப்படிக் கூறும் போது தான் ஓரினச் சேர்க்கை விஷயத்திலும் இது போல் கூற முடியும்.
இந்தக் கண்டு பிடிப்பு உண்மை என்று நிரூபணம் ஆனால் விதி குறித்து இஸ்லாம் சொல்வதை நிரூபிக்கும் சான்றாக இது அமையும்.
விதி என்பது புரிந்து கொள்ள முடியாத ஒரு தத்துவம். அது உண்மை என்றாலும் அதை நாம் முழுமையாகப் புரிந்து கொள்ள முடியாது என்று இஸ்லாம் சொல்கிறது. இது உண்மை என்பதற்கு அசைக்க முடியாத ஆதாரமாக இந்த ஆய்வு அமையும்.
விதி இருக்கிறது என்றும் இஸ்லாம் கூறுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனது செயலுக்கு தானே பொறுப்பாளி எனவும் கூறுகிறது. இவை இரண்டும் ஒன்றுக்கொன்று முரண் என்று தோன்றுகிறது. முரண் போல் தோன்றினாலும் அது குறித்து சர்ச்சை செய்யாமல் ஏற்றுக் கொள்ள வேண்டும் எனவும் இஸ்லாம் கூறுகிறது.
மனிதனின் எல்லா செயல்களுக்கும் அவனது மரபணு தான் காரணம் என்று திட்டவட்டமாக நிரூபணம் ஆனாலும் அதை உலகம் ஏற்றுக் கொண்டாலும் அதற்கு ஏற்ப குற்றவியல் சட்டங்களை நீக்க மாட்டார்கள். மனிதனின் செயலுக்கு மனிதன் பொறுப்பாளி அல்ல என்று கூறிக் கொண்டே மனிதனைப் பொறுப்பாளியாக ஆக்கி மனிதனைத் தண்டிக்கத்தான் செய்வார்கள்.
இஸ்லாம் விதி பற்றி பேசும் போது எந்தக் கேள்வியைக் கேட்டு நெஞ்சு நிமிர்த்தினார்களோ அதே கேள்விக்கு தங்களையும் உள்ளாக்கி விதியை மெய்யாக்குகின்றனர்.
இதுவும் முரன்பாடு தானே? இந்த முரண்பாட்டுக்கு எந்த மனிதனும் விளக்கம் சொல்ல முடியாது. இதற்கான ஒரே விடை இதற்கான விடை தெரியாது என்பது தான்.
எனவே இஸ்லாம் விதியைப் பற்றி கூறுவதை யாரும் இனி விமர்சிக்க முடியாது.
26.09.2011. 13:18
எஜமானியைப் பெற்றெடுக்கும் தாய்
எஜமானியைப் பெற்றெடுக்கும் தாய்
ஒரு பெண் தன் எஜமானியைப் பெற்றெடுத்தால் அது யுக முடிவு நாளின் அடையாளங்களுள் ஒன்றாகும் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூஹூரைரா (ரலி)
நூல் : புகாரி 4777
மேற்கண்ட ஹதீஸுக்கு நாம் கீழ்க்கண்ட வகையில் விளக்கம் கொடுத்து வருகின்றோம்.
பெற்ற தாயைக் கவனிக்கக் கடமைப்பட்ட புதல்வர்கள் தாயைக் கவனிக்காமல் விட்டு விடுவார்கள். இதனால் தாய் தனது மகளைச் சார்ந்து மகளின் தயவில் வாழும் நிலை ஏற்படும் என்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் செய்த முன்னறிவிப்புக்களில் ஒன்றாகும்.
எஜமான்னை ஒருத்தி பெற்றெடுப்பாள் என்பதை இன்றைய நவீன உலகம் வேறுவகையில் நிரூபித்து வருகிறது.
தற்போதுள்ள காலகட்டத்தில், வாடகைத்தாய் முறை அதிகரித்து வருகின்றது. கணவனின் விந்தணுவையும், மனைவியின் கரு முட்டையையும், (IVF முறையில் ஒன்று சேர்த்து) வேறொரு வாடகைப் பெண்ணின் கருவறைக்குள் வைத்து கரு வளர்த்தெடுக்கப்படுகின்றது. அந்த வாடகைத் தாய்க்கு, அந்த 10 மாதங்களுக்கு மாதச் சம்பளமும், பெற்றெடுத்த பின் ஒரு குறிப்பிட்ட தொகையும் வழங்கப்படுகின்றது. ஹிந்தி நடிகர் அமீர்கான் தம்பதியினருக்கு தற்போது அவ்வாறு குழந்தை பிறந்துள்ளது சமீபத்திய தகவல்.
அதாவது வயிற்றில் இருக்கும் குழந்தை சம்பளம் கொடுக்கும் எஜமானியாகவும் பெற்றவள் சம்பளம் வாங்குபவளாகவும் இருக்கிறாள். இந்த வகையிலும் நபிகள் நாயகம் ஸல் அவர்களின் முன்னறிவிப்பு பொருந்திப் போகிறது.
தகவல் பைசல் ரியாத்
தகவல் ஃபெய்ஸல், ரியாத்
28.12.2011. 12:14
வாழ்நாளை அதிகமாக்கும் நோன்பு
வாழ்நாளை அதிகமாக்கும் நோன்பு
வாரத்தில் இரண்டு நாட்கள் நோன்பு பிடித்தால் அதிக நாட்கள் வாழலாம்
வாரத்தில் ஒன்று இரண்டு நாட்கள் உணவு உட்கொள்வதைத் தவிர்ப்பதன் மூலம் அதிக நாட்கள் உயிரோடு வாழலாம் என்று ஒரு புதிய ஆய்வு கண்டுபிடித்துள்ளது.
National Institute on Ageing என்ற நிறுவனத்தின் ஆராய்சியாளர்கள் "வாரம் ஒன்று அல்லது இரண்டு நாட்கள் விரதம் இருப்பதன் மூலம் அதிக நாள் வாழலாம். மூளையில் ஏற்படும் வயோதிக நோய்களான அல்ஜீமர் நோய் (alzheimer ' s disease ), பார்கின்சன் நோய் (parkinson disease ), மற்றும் மூளை தேய்மான நோய்களான degenerative disease களில் இருந்து இந்த விரதம் மூலம் பாதுகாப்பு பெறலாம். கலோரிகளைக் குறைத்துக் கொள்வதின் மூலம், மூளையில் உள்ள இரசாயன தூதுகள் எனப்படும் Chemical messengers தூண்டப்படுகிறது" என்று குறிப்பிடுகிறார்கள் ..
நபிகள் நாயகம் ஸல் அவர்கள் திங்கள் மற்றும் வியாழக்கிழமைகளில் நோன்பு நோற்பார்கள் – ஆதாரம் நஸாயீ 2320, 2321, 2322
The Daily Telegraph’ என்ற பத்திரிகை இவ்வாறு கூறுகிறது
"உணவை அதிகம் குறைத்து கலோரிகளைக் கடுமையான வரையறைக்குள் வைப்பது வாழ்நாளை அதிகரிக்கும் என்பது எலி போன்ற ஆய்வகப் பிராணிகளில் நட்த்திய சோதனை மூலம் பல ஆண்டுகளுக்கு முன்பே கண்டுபிடிக்கப்பட்டது. இருந்தாலும், இந்த அதே விளைவு மனிதனிலும் இருக்க வாய்ப்பு உள்ளது என்பதை வெறும் ஊகம் மூலம் மட்டுமே நம்பி இருந்தனர்.
இந்தக் கோட்பாடு மனிதர்கள் விஷயத்தில் செய்முறை மூலமும் ஆய்வின் மூலமும் உறுதி செய்யப்படாமல் இருந்தது. ஆனால் இப்போது ஆராய்ச்சியாளர்கள் இந்த நேர்மறையான (positive effect ) விளைவைக் கண்டுபிடித்து விட்டனர்" ‘
தற்போது பேராசிரியர் மார்க் மாட்சொன், neurosciences ஆய்வக நிறுவனத்தின் தலைவர் Prof Mark Mattson, head of the institute's laboratory of neurosciences இவ்வாறு கூறுகிறார் "கலோரிகளைக் குறைப்பதன் மூலம் உங்கள் மூளைக்கு உங்களால் உதவ முடியும். மூளைகளின் பல நோய்களையும் தடுக்க முடியும்.. ஆனால் தொடர்ந்து பட்டினி கிடந்தால், இந்த நன்மைகள் உங்கள் மூளைக்குக் கிடைக்காது.intermittent bouts of fasting, என்ற இடைவெளி விட்ட விரதம், அதாவது, கொஞ்ச இடைவெளியில் எந்த உணவையும் அறவே தடுப்பது, அதற்க்கு அப்புறம் தனக்கு வேண்டியதை , தேவை நிறைவேறும் வரை உண்பது என்ற கோட்பாடு மூலமே இந்த நன்மை கிடைக்கும்" என்று கூறுகிறார்.
இந்த ஆய்வு முஸ்லிம்கள் நோற்கும் நோன்புக்கு மட்டுமே பொருந்தும். மற்ற சமயத்தவர்களின் நோன்பில் இந்த அம்சம் இல்லை. மற்றவர்களின் விரதம் நீண்ட நேரத்தைக் கொண்ட்தாக இருப்பதில்லை. சில மணி நேரங்கள் மட்டுமே அதிகமான விரதங்கள் உள்ளன. மேலும் பிற சமய விரதத்தின் போது திட உணவுகள் தான் தவிர்க்கப்படுகின்றன. திரவ உணவுகள் உண்ணப்படுகின்றன. இதன் மூலம் வழக்கமான க்லோரிகள் கிடைத்து விடும். மேலும் சில விரதங்களின் போது சமைக்கப்பட்டதை தவிர்த்தால் போதும். பழங்கள் போன்றவ்ற்றை சாப்பிடலாம் என்று உள்ளது. எனவே இதனாலும் மேற்கண்ட ஆய்வின் பலனை அடைய முடியாது. இன்னும் சில விரதங்கள் அசைவம் மட்டும் சாப்பிடாமல் இருந்தால் போதும் என்று உள்ளது. இதனாலும் மேற்கண்ட ஆய்வின் நனமையை அடைய முடியாது.
ஆனால் முஸ்லிம்களின் நோன்பில் அசைவமோ சைஅவமோ திடமோ திரவமோ எதுவானாலும் சாப்பிடக் கூடாது. உண்வாக கருதப்படாத பச்சைத்தண்ணீர் கூட அருந்தக் கூடாது. மேலும் சுமார் பன்னிரண்டு மணி நேரம் என்ற் அளவில் ஓரளவு நீண்ட நேரம் கொண்ட்தாக இது அமைந்துள்ளதால் மேற்கண்ட ஆய்வின் பலனை முழுமையாக பெற முடிகிறது. அதே நேரத்தில் காலவறையற்ற அல்லது சாகும் வரை உண்ணாவிரதம் போல் இருந்து மனிதனைக் கொல்லாமல் இரவு முழுவதும் விருமியதை உண்ணலாம் என்று இஸ்லாமிய நோன்பில் உள்ளது.
பொதுவாக மற்றவர்களை விட முஸ்லிம்கள் கட்டுபாடில்லாம அதிக அசைவ உணவை உட்கொண்டாலும், மற்றவர்களுடன் ஒப்பிடும் போது அவர்களின் வாழ்நாட்கள் குறைவதாக இல்லை. இது நோன்பினால் கிடைத்த நன்மையாக இருக்கக் கூடும்.
டாக்டர் த முஹம்மது கிஸார்
16.03.2012. 21:32
கர்ப்பப்பை புற்று நோய் தடுக்கும் இஸ்
அதிகரிக்கும் புற்று நோய்ப் பலிகள் - தடுக்கும் இஸ்லாம்
த ஹிந்து பத்திரிக்கையில், மார்ச் 29 - ஆம் தேதி புற்று நோய்பற்றி ஓர் ஆய்வுக் கட்டுரை வெளியிடப்பட்டிருந்தது. அதில் கர்ப்பப்பை வாய்ப்புற்றுநோய் முஸ்லிம் பெண்களுக்கு மிக மிக்க் குறைவாக்க் காணப்படுகின்றது. இதற்குக் காரணம் முஸ்லிம் ஆண்கள் (சுன்னத் எனும்) விருத்தசேதனம் (circumcision) செய்து கொள்வதுதான் எனக் குறிப்டப்பட்டுள்ளது.
இஸ்லாத்தின் கொள்கைகளை உண்மைப்படுத்தும் இந்த ஆய்வின் விபரம்....
கடந்த 2010-ல் இந்தியாவில் 5,56,400 பேர் புற்று நோய் (கேன்ஸர்) நோயால் இறந்துள்ளனர். இது இந்தியாவின் மொத்த இறப்பில் 8 % ஆகும். புற்று நோயால் இறப்பவர்களில் 71 % பேர் 30 வயது முதல் 69 வயதைச் சேர்ந்தவர்கள்.
மார்ச் 28 -ல் "The Lancet" என்ற பத்திரிக்கையில் வெளியிடப்பட்ட ஆய்வுக் கட்டுரையில் இந்தத் தகவல்கள் குறிப்பிடப்பட்டுள்ளன. 2001 - 2003 வரை இந்தியாவில் புற்று நோயால் இறந்தவர்கள் 7,137. ஆனால் 2010-ல் 5,56,400 பேர். புற்று நோயால் இறக்கும் மக்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதிவேகமாக அதிகரித்து வருகின்றது.
ஆண்களில் அதிகமான பேர் (23 % பேர்) , வாயில் ஏற்படும் புற்று நோயால் (oral cancer) இறக்கின்றனர். இது புகையிலை, பாக்கு, பீடி, சிகரெட், போன்ற போன்றவற்றைப் பயன்படுத்துவதால் ஏற்படுகின்றது.
பெண்களில் அதிகமான பேர் (17 % பேர்) "Cervical cancer" எனப்படும் கருப்பப்பை வாய்ப் புற்றுநோயால் இறக்கின்றனர். இப்படி அதிகமான பெண்களைப் பழிவாங்கும் கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் முஸ்லிம் பெண்களிடம் மிக மிக குறைவாகக் காணப்படுகின்றது.
75 % முஸ்லிம்கள் வாழும் ஜம்மு காஷ்மீரிலும், 40 % முஸ்லிம்கள் வாழும் அஸ்ஸாமிலும் நடத்தப்பட்ட ஆய்வில் முஸ்லிம் பெண்களுக்கு கருப்பப்பை வாய்ப் புற்றுநோய் மிக மிகக் குறைவாக இருப்பது கண்டுபிடிக்கப்பட்டுள்ளது, (தேசிய அளவில் இறப்பவர்களின் சதவீதத்தில் கால்வாசி பங்கு கூட இல்லை).
இதற்கு முக்கியக் காரணம் உலகம் முழுவதும் உள்ள முஸ்லிம் ஆண்கள் விருத்தசேதனம் (circumcision) செய்வதுதான். விருத்தசேதனம் செய்வதால் பாலின சேர்க்கையின் போது HPV என்னும் வைரஸ் பரவுதல் முற்றிலுமாக தடுத்து நிறுத்தப்படுகின்றது.
மேலும் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் வாய்ப்புற்று நோயும் முஸ்லிம்களுக்கு குறைவாகவே ஏற்படுகின்றது. (இஸ்லாம் மார்க்க ரீதியாகவே பீடி, சிகரெட், புகையிலையை தடை செய்துள்ளதால் இவற்றைப் பயன்படுத்தும் முஸ்லிம்களின் எண்ணிக்கை குறைவாக உள்ளது, எனவே இதனால் பாதிக்கப்படும் முஸ்லிம்களும் குறைவாக உள்ளனர்).
நலமான வாழ்விற்கு அழகான வழியைக் காட்டும் இஸ்லாம் :
மனிதன் சுகாராதமான முறையில் சுகமாக வாழ, மனிதனைப் படைத்த இறைவனான அல்லாஹ்வுடைய மார்க்கம் இஸ்லாம் அழகிய வழிமுறையை மனித குலத்திற்கு காட்டுகின்றது.
இஸ்லாம் கட்டளையிட்டபடி அனைத்து ஆண்களும் விருத்தசேதனம் (circumcision) செய்தால் பெண்களுக்கு அதிமாக ஏற்படும் கருப்பப்பை வாய்ப் புற்றுநோயை முற்றிலுமாக ஒழித்துவிட முடியும்.
அதே போல் இஸ்லாம் தடை செய்த பீடி, சிகரெட், புகையிலை, மற்றும் இன்ன பிற போதை வஸ்துக்களை தடைசெய்தால் ஆண்களுக்கு அதிகமாக ஏற்படும் வாய்புற்று நோயை முற்றாக ஒழித்துவிடலாம
மனிதனுக்கு ஏற்ற மார்க்கம் இஸ்லாம் மட்டும் தான் என்பது மேற்கண்ட ஆய்வு முடிவுகளில் தெளிவாக விளங்குகின்றது.
S.சித்தீக்.M.Tech
04.04.2012. 13:26
விவாகரத்தை எளிமையாக்க புதிய சட்டம்
விவாகரத்தை எளிமையாக்க புதிய சட்டம்
மனிதன் சந்திக்கும் ஒவ்வொரு பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வைச் சொல்லும் மார்க்கம் இஸ்லாம் மட்டுமே! காரணம், இது இறைவனுடைய மர்க்கம். மனிதனுடைய வாழ்வில் என்னென்ன பிரச்சனைகள் வரும்; அந்தப் பிரச்சனைகளுக்கு என்னென்ன தீர்வு என்பது படைத்த இறைவனுக்கு மட்டுமே தெரியும். அதனால் தான் அனைத்தையும் அறிந்த இறைவனின் சட்டதிட்டங்கள், அனைத்துப் பிரச்சனைகளுக்கும் சரியான தீர்வாக அமைந்திருப்பதை நாம் அனுபவப்பூர்வமாகக் கண்டு வருகின்றோம்.
வல்ல இறைவன் மனித குலத்திற்கு வழங்கியுள்ள வழிகாட்டுதல்களில் முக்கியமான சட்டதிட்டங்களில் ஒன்றுதான் தலாக் – என்னும் விவகாரத்துச் சட்டம். இஸ்லாம் வழங்கியுள்ள இந்த தலாக் சட்டத்தைத் தான், இஸ்லாத்தின் எதிரிகள் பலரும் விமர்சனம் செய்து வந்தார்கள். இவர்கள் எதெற்கெடுத்தாலும் தலாக் – தலாக் – தலாக் என்று கூறி விவாகரத்து செய்து விடுகின்றார்கள். இது சரியில்லை என்பதுதான் அவர்களுடைய பிரதான குற்றச்சாட்டு.
ஆனால். இப்படி இலகுவான முறையில் தலாக் கூறிப் பிரிவது என்பது ஏதோ பெண்களுக்கு இழைக்கப்படும் அநீதி என்பது போன்றும், இதனால் பெண்கள் பாதிக்கப்படுகின்றனர்; இஸ்லாம் இவ்வாறாக பெண்களுக்கு அநீதி இழைக்கின்றது என்றும் கூக்குரல் போட்டனர். யார் இவ்வாறெல்லாம் கூக்குரல் போட்டார்களோ அவர்களையே அவர்களது வாயலேயே, விவாகரத்துச் செய்யும் வழிமுறையில் இஸ்லாம் கூறும் வழிமுறைதான் சரியானது என்று வல்ல இறைவன் சொல்ல வைத்துள்ளான்.
கடந்த வாரம் மத்திய அரசாங்கம் வெளியிட்ட செய்திக் குறிப்பில் கூறியுள்ளதாவது :
பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெறும் வகையில், புதிய சட்ட மசோதா கொண்டு வரப்படுகிறது. இதற்கு, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது.
திருமணச் சட்டத்திருத்த மசோதா, கடந்த 2010ல், ராஜ்யசபாவில் தாக்கல் செய்யப்பட்டது. பின்னர், இந்த மசோதா சட்டம் மற்றும் நீதித்துறைக்கான பார்லிமென்ட் நிலைக் குழுவின் பரிசீலனைக்கு அனுப்பப்பட்டது. இதைப் பரிசீலித்த நிலைக் குழு, இந்த மசோதாவில் நான்கு திருத்தங்களைச் செய்யும்படி பரிந்துரை செய்துள்ளது. இதற்கு ஏற்ப, மசோதாவை மாற்றி அமைக்க, மத்திய அமைச்சரவை நேற்று ஒப்புதல் அளித்துள்ளது. இதன்படி, பிரிந்த தம்பதியர் விரைவில் விவாகரத்து பெற வழிவகை செய்யப்பட்டுள்ளது. தற்போது, பிரிந்த தம்பதியர் பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், குறைந்தபட்சம் ஆறு மாதம் முதல் 18 மாதங்கள் வரை, அவர்கள் விவாகரத்து பெற காத்திருக்க வேண்டும். இனி அந்த நிலைமை இருக்காது. "
இனி சேர்ந்து வாழவே முடியாத திருமணம்' என்ற புதிய விதிமுறை, சட்டத்தில் சேர்க்கப்பட்டுள்ளதால், பிரிந்தவர்கள் விரைவில் விவாகரத்து பெற்று விட முடியும். அவர்கள் இனி ஒன்று சேர முடியாது என, கோர்ட் தீர்மானித்தால், உடனடியாக விவாகரத்து வழங்கலாம். இதன் மூலம், ஆறு மாதம் முதல் 18 மாதம் வரை காத்திருக்க வேண்டிய நிலை ஏற்படாது. பரஸ்பரம் விவாகரத்து கோரி விண்ணப்பித்தால், உடனே கிடைக்கும். இதே போல, "சேரவே முடியாது' என்ற புதிய பிரிவின்படி, கணவன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை. மேற்கண்டவாறு மத்திய அரசின் செய்திக் குறிப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.
அதாவது, மிக இலகுவான முறையில் விவகாரத்துப் பெறுவதற்காக இஸ்லாம் ஏற்படுத்தியுள்ள வழிமுறைகளை விமர்சனம் செய்தவர்கள், தற்போது இந்திய அரசாங்கம் வகுத்து வைத்துள்ள விவாகரத்துப் பெறும் நடைமுறைகளில் ஏற்படும் பின்னடைவுகளையும், பிரச்சனைகளையும் கண்கூடாகக் கண்டுவிட்டு இத்தகைய புதிய மசோதாவை உருவாக்கியுள்ளார்கள் என்றால் இவர்களது இந்த மசோதா, இஸ்லாம் கூறும் வழிகாட்டுதல்கள் தான் மனிதனது பிரச்சனைகளுக்கு சரியான வழியைக் காட்டக்கூடியதாக அமைந்துள்ளன என்பதற்கு சான்று பகரக்கூடியதாக அமைந்துள்ளது என்று சொன்னால் அது மிகையல்ல.
தற்போது நடைமுறையில் ஒருவர் விவாகரத்து பெற விரும்பினால் அவர் 6 மாதங்கள் முதல் 18 மாதங்கள் வரை காத்திருக்க வேண்டும் என்ற நடைமுறையுள்ளது என்று அரசு கூறுவது சரிஅல்ல அதைவிட அதிகமான மாதங்கள் வருடங்கள் கூட காத்திருக்கும் நிலைதான் நடைமுறையில் உள்ளது. இப்படி ஒருவன் விவாகரத்துச் செய்ய விரும்பும் போது பல மாதங்கள் அல்லது பல வருடங்கள் அவன் தனது இந்தப் பிரச்சனைகளுக்கு ஒரு முடிவு தெரியாமல் இருந்தால், இதனால் ஏற்படும் விபரீதங்கள் என்னென்ன? இதனால் ஒரு பெண் எப்படியெல்லாம் பாதிக்கப்படுகின்றால் என்பதை நாம் ஏற்கனவே பல நிகழ்வுகளில் தெளிவுபடுத்தியுள்ளோம்
சின்ன வீட்டை செட்டப் செய்ய தூண்டும் விவாகரத்து முறை :
மனைவியைப் பிடிக்காத நிலையில் 'விவாகரத்துப் பெறுவதற்காகக் காலத்தையும், நேரத்தையும், பொருளாதாரத்தையும் ஏன் வீணாக்க வேண்டும்' என்று எண்ணுகின்ற ஒருவன், அவனுக்குப் பிடித்தமான மற்றொருத்தியைச் சின்ன வீடாக அமைத்துக் கொள்கிறான். கட்டிய மனைவியுடன் இல்வாழ்வைத் தொடர்வதுமில்லை. அவளைப் பராமரிப்பதுமில்லை. இவன் மாத்திரம் தகாத வழியில் தன் உணர்வுகளுக்குத் தீனி போட்டுக் கொள்கிறான்.
இவள் பெயரளவுக்கு மனைவி என்று இருக்கலாமே தவிர, பிடிக்காத கணவனிடமிருந்து இல்லற சுகம் அவளுக்குக் கிடைக்காது. வாழ்க்கைச் செலவினங்களும் கூட மறுக்கப்படும். இவை மிகையான கற்பனை இல்லை. நாட்டிலே நடக்கும் உண்மை நிகழ்ச்சிகள் தாம். மனைவி என்ற உரிமையோடு இதைத் தட்டிக் கேட்டால் அடி உதைகள்! இத்தகைய அபலைகள் ஏராளம்!
பெயரளவுக்கு மனைவி என்று இருந்து கொண்டு அவளது உணர்வுக்கும், தன்மானத்துக்கும், பெண்மைக்கும் சவால் விடக் கூடிய வறட்டு வாழ்க்கை வாழ தள்ளப்படுவதன் மூலம் பெண்கள் சித்திரவைதைக்கு உள்ளாகின்றார்கள்.
எளிதாக விவாகரத்துப் பெறும் முறை இருந்தால் இந்தக் கொடூர எண்ணம் கொண்ட ஆண் அவளை விடுவித்து விடுவான். அவளுக்கும் நிம்மதி; அவள் விரும்பும் மறு வாழ்வையும் தேடிக் கொள்ளலாம். இப்படி அழகான வழியில் பிரச்சனையை தீர்ப்பதை விட்டுவிட்டு பலவருடங்கள் நீதிமன்றத்திற்கு நாம் அலைவானேன்? நல்ல(?) சின்ன வீடு ஒன்றை செட்டப் செய்து கொண்டால் தொல்லை ஒழிந்தது என்ற முடிவை சில கேடுகெட்டவர்கள் எடுக்க இந்த விவாகரத்து இழுத்தடிப்பு முறை தான் காரணம் என்பதை சொல்லித்தான் தெரிய வேண்டுமா?
அபலைகள் மீது அவதூறு சொல்லவைக்கும் அற்புதச்(?)சட்டம் :
விவாகரத்துப் பெறுவதற்காக நீதிமன்றத்தை அவன் அணுகுகிறான். எந்த மாதிரியான காரணம் கூறினால் விரைந்து விவாகரத்து கிடைக்குமோ அது போன்ற காரணத்தைப் பொய்யாகப் புனைந்து கூறத் துணிகிறான். தன் மனைவி நடத்தை கெட்டவள் என்று நா கூசாமல் கூறுகின்றான். இதற்கான பொய்யான சாட்சிகளையும், சான்றுகளையும் தயார் செய்கின்றான்.
அவனுக்குப் பிடிக்கவில்லை என்ற நிலையில் விவாகரத்தையும் அவன் பெற்று விடுவதோடு, அவளது கற்புக்குக் களங்கம் ஏற்பட்டு, அவளுக்கு தலைக்குனிவும் ஏற்படுவதற்கும், அபலைகள் மீது அவதூறுகளை செட்டப் செய்து சொல்ல வைப்பதற்கும் தற்போதுள்ள இழுத்தடிப்பு விவாகரத்து நடைமுறை தானே காரணம்.
இளம் பெண்களுக்கு மட்டும் ஸ்டவ் வெடிக்க காரணம் என்ன? :
நீதிமன்றம் முடிவு செய்யும் வரை காத்திருக்கப் பொறுமை இல்லாதவன், அதற்காகப் பணத்தைச் செலவு செய்ய விரும்பாதவன், மற்றொரு வழியைத் தேர்ந்தெடுக்கிறான். இது முந்தைய இரண்டு வழிகளை விட மிகவும் கொடுமையானது கொடூரமானது!
பெட்ரோல் ஊற்றிக் கொளுத்தி விட்டு சமையல் செய்யும் போது ஏற்பட்ட விபத்து என்று நாடகமாடுகின்றான். இப்படிச் சாவூருக்கு அனுப்பப்பட்ட அபலைகளின் எண்ணிக்கை கணக்கில் அடங்காது. ஸ்டவ் வெடித்து இளம் பெண் சாவு என்று செய்திகள் இடம் பெறாத நாளிதழ் இல்லை. தினமும் பல நூறு சம்பவங்கள்! அது ஏன் இளம்பெண்கள் மட்டும் பற்ற வைக்கும் ஸ்டவ்கள் மட்டும் வெடிக்கின்றன. கிழவிகள் ஸ்டவ்களை பற்ற வைத்தால் அவை வெடிக்காதா? ஏன் இளம் பெண்கள் பற்ற வைக்கும் ஸ்டவ்கள் மட்டும் வெடிக்கின்றன என்று இப்poழுது புரிகின்றதா? .
கணவனும், மனைவியும் தனித்திருப்பதை உலகம் அனுமதிப்பதால் அந்தத் தனிமையில் அவளை எது வேண்டுமானாலும் அவனால் செய்து விட முடியும். இது போன்ற கொடூரக் கொலைகளை நிரூபிக்கவும் முடியாமல் போய் விடுகின்றது. இந்தக் கொடுமைக்குகளுக்கும் தற்போதுள்ள விவாகரத்து நடைமுறைகள் தான் காரணம் என்பதை யாராலும் மறுக்க முடியுமா?
இப்படி நடக்கக்கூடிய பிரச்சனைகளை ஆய்வு செய்துவிட்டுத்தான், இவ்வளவு பிரச்சனைகளுக்கும் மூலக்காரணமாக அமைந்திருப்பது நம் நாட்டிலுள்ள “விவாகரத்து சட்ட முறை” மிக்க் கடினமாக இருப்பதுதான் என்பதை உணர்ந்து தான் இந்த முடிவை மத்திய அரசு எடுத்துள்ளது. இப்போதாவது இந்த முடிவை மத்திய அரசு எடுத்திருப்பது உண்மையிலேயே பாராட்டத்தக்க ஒரு விஷயம்.
இத்தகைய கொடூரங்களும், சித்திரவதைகளும் நடந்துவிடக்கூடாது என்பதற்காகத்தான் ஆண்களின் கொடூரத்தை உணர்ந்த இஸ்லாம், பெண்களின் உயிரும், உடமையும், மானமும், மரியாதையும் காக்கப்பட வேண்டுமென்று கருதி 'உனக்குப் பிடிக்காவிட்டால் அவளைக் கொன்று விடாதே! அவளது இல்லற சுகத்துக்குத் தடையாக இராதே! பிரச்சனை ஏதுமின்றி விவாக ஒப்பந்தத்தை ரத்து செய்து கொள்!' என்று இலகுவான முறையில் விவாகரத்து முறையை அனுமதிக்கின்றது.
இதனால் தான் முஸ்லிம் பெண்கள் எவரும் ஸ்டவ் வெடித்துச் சாவதில்லை. எந்தச் சமுதாயத்தில் தலாக் அனுமதிக்கப்படவில்லையோ, அல்லது கடுமையான நிபந்தனைகளுடன் அனுமதிக்கப்படுகின்றதோ அந்தச் சமுதாயப் பெண்களை மாத்திரம் தேர்ந்தெடுத்து ஸ்டவ் வெடிக்கிறது.
இவர்கள் முட்டிவிட்டு குனிந்துள்ளனர்; இவர்கள் முட்டிவிட்டு குனிவதைக் காட்டிலும், முட்டுவதற்கு முன்பே குனிந்து கொள்ளுங்கள் என்று இஸ்லாம் வழிகாட்டுகின்றது. இந்த மசோதாவை மத்திய அரசு நடைமுறைப்படுத்தினால், சின்னவீடு செட்டப் செய்யும் நடைமுறைகள் தானாக குறைந்து விடும்; இளம்பெண்களை மட்டும் குறிவைத்து வெடிக்கும் ஸ்டவ் அடுப்புகள் தானாக அமர்ந்து விடும்; அபலைகள் மீது கணவன்மார்கள் சொல்லும் அவதூறுகளும் அகன்று விடும். இப்போதுதான் இஸ்லாம் காட்டும் வழிமுறைகளை நோக்கி இந்த விஷயத்தில் அடியெடுத்து வைக்க ஆரம்பித்துள்ளது மத்திய அரசு!
இது குறித்த பிரச்சனைகளுக்குத் தீர்வு என்ன என்பதை பல வழிகளில் ஆய்வு செய்துவிட்டு இஸ்லாம் கூறக்கூடிய சட்டம் தான் மனித வாழ்வுக்கு உகந்தது என்றும், திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் காட்டித்தந்த வழிமுறைகளைத்தான் மத்திய அரசு இந்த விஷயத்தில் அச்சரம் பிசகாமல் அப்படியே காப்பியடித்துள்ளது என்பதற்கு இந்த மசோதாவில் கூறப்பட்டுள்ள மற்றொரு அம்சமும் சான்று பகருகின்றது.
"சேரவே முடியாது' என்ற புதிய பிரிவின்படி, கணவன் விவாகரத்து கேட்டால், அதை எதிர்க்க, மனைவிக்கு உரிமை உண்டு. ஆனால், மனைவி இதே காரணத்திற்காக விவாகரத்து கோரும் போது, அதை எதிர்க்க கணவனுக்கு உரிமை இல்லை என்ற சட்டம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தந்த அதே வழிமுறையை அப்படியே பின்பற்றி இயற்றப்பட்டுள்ளது.
பெண்கள் தங்களது கணவனைப் பிடிக்கவில்லை என்று விவாகரத்து கோரினால் அந்தப் பெண்ணிடத்தில் காரணம் கேட்கத் தேவையில்லை என்பதும், கணவன் அவளோடு சேர்ந்து வாழ விரும்பினால் கூட பெண்களுக்கு அவர்களுக்கு விவாகரத்து உரிமையை வழங்கிவிட வேண்டும் என்றும் இஸ்லாம் சொல்லும் தீர்வுதான் இதிலும் சரியானது என்பதை இந்தச் சட்ட்த்திருத்தம் நிரூபிக்கின்றது.
கூடிய விரைவில் இஸ்லாம் காட்டும் வழிகாட்டுதல்கள் தான் அனைத்து விஷயங்களிலும் சரியானது என்பதை உணர்ந்து மக்களும் ஆட்சியாளர்களும் இஸ்லாத்தை நோக்கித் திரும்பு காலம் வெகு தூரத்தில் இல்லை.
இவர் அல்லாஹ்வின் தூதராவார். தூய்மையான ஏடுகளை ஓதுகிறார். அதில் நேரான சட்டங்கள் உள்ளன.
அல்குர்-ஆன் 98 : 2,3
28.03.2012. 12:11
