இரண்டாவது மனைவிக்கு சட்டப்பூர்வ உரி
இரண்டாவது மனைவிக்கு சட்டப்பூர்வ உரிமை
இந்தியச் சட்டத்தின் படி முஸ்லிம் ஆண்கள் மட்டும் தான் முதல் மனைவி இருக்கும் போது இரண்டாவது திருமணம் செய்ய முடியும். மற்ற மதத்து ஆண்கள் இரண்டாவது திருமணம் செய்தால் அது பயங்கர குற்றம்; அவ்வாறு செய்வோர் கடுமையாகத் தண்டிக்கப்படுவர்; அவர்கள் அரசு ஊழியராக இருந்தால் வேலை போய்விடும் என்றெல்லாம் நாட்டில் சட்டம் இருப்பதாகச் சொல்லி ஒரு கூட்டம் பிரச்சாரம் செய்து வருகிறது. முஸ்லிம்களுக்கு மட்டும் சட்டத்தில் சிறப்புச் சலுகை உள்ளதாக பிரச்சாரம் செய்து நாட்டுமக்களிடையே கசப்புணர்வை அதிகரிக்க இதையே முக்கியப் பிரச்சாரமாகச் செய்து வருகின்றனர்.
அவை அணைத்தும் பொய் என்பது நேற்று சுப்ரீம் கோர்ட் அளித்த தீர்ப்பின் மூலம் அம்பலமாகி விட்டது.
இது குறித்து தினமலர் நாளிதழில் 22-11-2009 வந்த செய்தி:
புதுடில்லி:முதல் மனைவி சம்மதம் தரும் பட்சத்தில், இரண்டாவது மனைவிக்கு அரசு வேலை வழங்குவதில் தவறு இல்லை' என, சுப்ரீம் கோர்ட் தீர்ப்பு அளித்துள்ளது.கர்நாடக மாநிலத்தை சேர்ந்தவர் அனுமந்த கவுடா. ஆயுதப்படையில் தலைமைக் காவலராக பணியாற்றி வந்தார். இவரது மனைவி அனுசுயா; இரண்டாவதாக, லட்சுமி என்பவரையும் அனுமந்த கவுடா திருமணம் செய்து கொண்டார்.
கடந்த 88ல், அனுமந்த கவுடா மரணமடைந்தார். அவரது சொத்துக்களுக்கு, இரு மனைவியரும் உரிமை கோரினர்.இது தொடர்பாக மாவட்ட செஷன்ஸ் கோர்ட்டில் நடந்த வழக்கில், முதல் மனைவிக்கு சாதகமாக தீர்ப்பு கூறப்பட்டது. எதிர்த்து, கர்நாடக ஐகோர்ட்டில், இரண்டாவது மனைவி லட்சுமி மேல்முறையீடு செய்தார்.வழக்கு நிலுவையில் இருந்த காலத்தில், இருவரும் சமரசம் செய்து கொண்டனர். அதன்படி, பென்ஷன் தொகை உட்பட சொத்துக்களை சரிசமமாக பிரித்துக் கொள்வதாக முடிவு செய்து கொண்டனர். சொத்துக்களை முதல் மனைவி எடுத்துக் கொள்வது என்றும், அனுமந்த கவுடா அரசு வேலையில் இருந்தபோது இறந்து விட்டதால், கருணை அடிப்படையில், அவரது வேலையை லட்சுமிக்கு விட்டுக் கொடுப்பது என்றும் முடிவு செய்யப்பட்டது.
இதையடுத்து, லட்சுமிக்கு அரசு வேலை வழங்க, மாநில அரசுக்கு ஐகோர்ட் பரிந்துரை செய்தது. ஆனால், இதை எதிர்த்து, சுப்ரீம் கோர்ட்டில் மாநில அரசு மேல் முறையீடு செய்தது. இந்த வழக்கு விசாரணை நேற்று நீதிபதிகள் மார்கண்டேய கட்ஜு, லோதா ஆகியோர் முன்னிலையில் விசாரணைக்கு வந்தது.இந்த வழக்கை விசாரித்த நீதிபதிகள், இரு மனைவிகள் சமரசம் செய்து கொண்டு விட்டால், அதில் தலையிட அரசுக்கு என்ன உரிமை இருக்கிறது? இதைப் பற்றி அரசு ஏன் கவலைப்படவேண்டும்? முதல் மனைவி ஒப்புதல் அளிக்கும் பட்சத்தில், இரண்டாவது மனைவிக்கு தாராளமாக கருணை அடிப்படையில் அரசுப் பணி வழங்கலாம்' என்று தீர்ப்பு வழங்கினர்.
இது தான் அந்தச் செய்தி. சுப்ரீம் கோர்ட் ஒரு தீர்ப்பளித்து விட்டால் அதன் பின் அது தான் நாட்டின் சட்டமாகும்.
இரண்டு மனைவியருடன் வாழ்க்கை நடத்திய இந்து மத அரசு ஊழியர் மரணிக்கும் வரை அரசு ஊழியராகவே இருந்துள்ளார் என்பது இதில் இருந்து தெரிகிறது. இதனால் அவரது வேலைக்கும் பாதிப்பு வரவில்லை.
மேலும் பென்சன் தொகையை சரிசமமாகப் பிரித்துக் கொண்டுள்ளனர். இந்துச் சட்டப்படி இரண்டாவது மனைவி மனைவியே அல்ல. அப்படி இருந்தும் இரண்டாவது மனைவிக்கு அரசுப்பணி அளிக்கலாம் என்றும் இத்தீர்ப்பு கூறுகிறது. ஒருவரது வேலையை இன்னொருவருக்கு மாற்றும் உரிமை யாருக்கும் இல்லை. அப்படி இருக்கும் போது இறநதவரின் வேலையை இரண்டாவது ,மனைவிக்கு அளிக்கலாம் என்றால் அவரை சட்டம் மனைவியாக அங்கீகரித்து விட்டது என்பதே பொருள்.
இந்தியாவில் முஸ்லிம்கள் மட்டுமின்றி முஸ்லிம் அல்லாத் ஆண்களும் இரண்டாம் திருமணம் செய்யலாம். இரண்டாம மனைவிக்கு மனைவி என்ற சட்ட அந்தஸ்து உண்டு என்பது இதன் மூலம் உறுதியாகின்றது.
22.11.2009. 12:56
