ஷியாக்களின் கொள்கையும் வரலாறும்

ஷியாக்களின் கொள்கையும் வரலாறும் ஷியாக்கள் ஓர் ஆய்வு -1 யூத வேர்களில் உதயமான ஷியா விருட்சம்

"ஈரானில் இமாம் குமைனியின் இஸ்லாமியப் புரட்சி', "ஈரான் இஸ்லாமிய வீராங்கனைகளின் ஆயுதப் பயிற்சி' என்ற புகழார வசனங்கள் தமிழக இஸ்லாமிய ஏடுகளில் மாறி மாறி எழுதப்பட்டன. தற்போது அவை நூல் வடிவில் மாறி உலா வந்து கொண்டிருக்கின்றன. அவற்றை வெளியிடும் இயக்கங்கள் ஈரானை இமயத்தில் கொண்டு போய் நிறுத்தின.

அப்போதே அந்த இயக்கங்களின் ஆபத்துக்களை உணர்ந்து ஈரானை ஆளும் ஷியாக் கொள்கையானது குர்ஆன், ஹதீசுக்கு எதிரான கொள்கை என்பதை தவ்ஹீது ஜமாஅத் தனது ஏடுகளில் இனம் காட்டியது.

தொடர்ந்து படிக்க October 20, 2011, 5:05 PM

அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்

அல்குர்ஆனும் முரண்படும் ஹதீஸ்களும்

(ஏப்ரல் 2007) (தொடர் 1)

சில வருடங்களுக்கு முன்னால் நமது அனைத்து முயற்சிகளும் இணை வைப்பு மற்றும் பித்அத்தான காரியங்களை ஒழிப்பதற்காக முடுக்கி விடப்பட்டன. இந்தக் காலக்கட்டத்தில் எதிர் கொள்கையில் இருந்தவர்கள் நமது பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக பல முயற்சிகளை எடுத்தார்கள். இதையெல்லாம் முறியடித்து மக்களை வென்றெடுத்தோம், அல்ஹம்து லில்லாஹ்!

தொடர்ந்து படிக்க October 20, 2011, 9:46 AM

அல்லாஹ் உருவமற்றவனா?

அல்லாஹ் உருவமற்றவனா?

அபூஉஸாமா

பொதுவாகவே உலகிலுள்ள அனைத்து மொழிகளிலும் ஒரு வழக்கம் உண்டு. ஒரு வார்த்தையை அதன் நேரடிப் பொருளில் பயன்படுத்துவது, அதே வார்த்தையை இலக்கியமாக பயன்படுத்துவது.

உதாரணமாக, அதிகமாகப் பேசுபவர்களைப் பார்த்து, ‘அவருக்கு வாய் நீளம்‘ என்று கூறுவார்கள். வாய் நீளம் என்றால் வாயின் அளவு நீளமாக இருக்கும் என்பது அதன் நேரடிப் பொருள். என்றாலும் இந்த இடத்தில் அந்த அர்த்தத்தில் சொல்லப்படவில்லை. அவர் அதிகம் பேசக் கூடியவர் என்ற கருத்தில் இந்த சொற்றொடர் பயன்படுத்தப் படுகின்றது. இவ்வாறு பயன்படுத்தப்படுவது எல்லா மொழிகளுக்கும் பொதுவான, உலகம் முழுவதும் ஒப்புக் கொள்ளப்பட்ட ஒரு விஷயமாகும்.

தொடர்ந்து படிக்க October 20, 2011, 9:40 AM

ஆடைகள்

ஆடைகள் (தொடர் 1) (ஜூன் 2007)

அல்லாஹ் தன்னுடைய அடியார்களுக்கு வானம் மற்றும் பூமியில் உள்ள அனைத்தையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். இன்னும் அவர்களுக்கு உணவுகளையும், குடிபானங்களையும், ஆடைகளையும் வசப்படுத்திக் கொடுத்திருக்கின்றான். எனினும் அதில் சில வரையறைகளை ஏறபடுத்தி இருக்கிறான். அந்த வரையறைகளைப் பேணி நடந்து கொள்ள வேண்டும்.

தொடர்ந்து படிக்க October 20, 2011, 9:28 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top