ஏகத்துவம் டிசம்பர் 2015

தலையங்கம்

இஸ்லாத்தை அழிப்பதே ஐ.எஸ். அமைப்பின் இலக்கு!

ஓர் இஸ்லாமிய அரசாங்கம் போர் செய்வது, அதற்குரிய தயாரிப்புகளைச் செய்வது, அந்தப் போரில் முஸ்லிம்கள் புறமுதுகு காட்டாமல் இருப்பது, போரில் வீர மரணம் அடைவது போன்ற போர் சம்பந்தமான பல்வேறு விஷயங்களைப் பற்றி இஸ்லாம் பேசுகிறது. அதேசமயம், போர் ஏன்? எதற்கு? எப்படி? என்ற தெளிவான சட்டங்களையும் இஸ்லாம் வகுத்துள்ளது.

வம்புச் சண்டைக்கு வருவோருடன் தான் போர்!

உங்களிடம் போருக்கு வருவோருடன் அல்லாஹ்வின் பாதையில் நீங்களும் போர் செய்யுங்கள்! வரம்பு மீறாதீர்கள்! வரம்பு மீறியோரை அல்லாஹ் நேசிக்க மாட்டான்.

அல்குர்ஆன் 2:190

தமது உடன்படிக்கைகளை முறித்து, இத்தூதரை (முஹம்மதை) வெளியேற்றவும் திட்டமிட்டார்களே அக்கூட்டத்தினர் தாங்களாக உங்களுடன் (யுத்தத்தைத்) துவக்கியுள்ள நிலையில் அவர்களுடன் போர் செய்ய வேண்டாமா?

அல்குர்ஆன் 9:13

"போர் தொடுக்கப்பட்டோர் அநீதி இழைக்கப்பட்டுள்ளனர்'' என்ற காரணத்தால் அவர்களுக்கு (எதிர்த்துப் போரிட) அனுமதியளிக்கப்பட்டுள்ளது. அல்லாஹ் அவர்களுக்கு உதவிட ஆற்றல் உடையவன்.

அல்குர்ஆன் 22:39

சொந்த ஊரை விட்டு விரட்டியடித்தவர்களுடன் தான் போர்!

அவர்கள் உங்களை வெளியேற்றியவாறு நீங்களும் அவர்களை வெளியேற்றுங்கள்!

அல்குர்ஆன் 2:191

"எங்கள் இறைவன் அல்லாஹ் தான்'' என்று அவர்கள் கூறியதற்காகவே நியாயமின்றி அவர்களின் இல்லங்களிலிருந்து வெளியேற்றப்பட்டனர். மனிதர்களில் ஒருவர் மூலம் மற்றவரை அல்லாஹ் தடுத்திருக்கா விட்டால் மடங்களும், ஆலயங்களும், வழிபாட்டுத் தலங்களும், அல்லாஹ்வின் பெயர் அதிகமாகத் துதிக்கப்படும் பள்ளி வாசல்களும் இடிக்கப்பட்டிருக்கும். தனக்கு உதவி செய்வோருக்கு அல்லாஹ்வும் உதவுகிறான். அல்லாஹ் வலிமை உள்ளவன்; மிகைத்தவன்.

அல்குர்ஆன் 22:40

அநீதி இழைக்கப்படும் பலவீனர்களுக்காகவே போர்!

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?

அல்குர்ஆன் 4:7

போர் செய்வதற்கு இதுபோன்ற நியாயமான காரணங்கள் இருந்தாலும் ஓர் அரசாங்கம் தான் போர் தொடுக்க வேண்டும். தனி நபர்களோ, குழுக்களோ போர் செய்வதற்கு இஸ்லாத்தில் எள்ளளவும் அனுமதி இல்லை.

ஆனால் இன்று திருக்குர்ஆனின் இந்தக் கட்டளைகளுக்கு மாற்றமாக சில பகுதிகளில் சிறு சிறு குழுக்கள் ஜிஹாத் என்ற பெயரில் அப்பாவி மக்கள் மீது போர் தொடுத்துக் கொண்டிருக்கின்றன. அண்மையில் பாரிஸிலும், மாலியிலும் ஐ.எஸ்.ஐ.எஸ். என்ற அராஜக அமைப்பு நடத்திய தாக்குதல்கள் இந்த வகையைச் சேர்ந்தவை தான். இந்த அமைப்பினர் முஸ்லிம்களின் பெயரில் இஸ்ரேல் மற்றும் அமெரிக்க உளவுத்துறையால் உருவாக்கப்பட்ட இயக்கம் என்ற கருத்து தற்போது பரவலாக விவாதிக்கப்பட்டு வருகின்றது. எனினும் இவர்களும் இதைப் போன்ற மற்ற இயக்கங்களும் தங்கள் நடவடிக்கைகளுக்கு ஆதரவாகப் பயன்படுத்துவது ஜிஹாத் தொடர்பான வசனங்களைத் தான்.

ஐ.எஸ். அமைப்பினர் பாரிஸில் அல்ல! மாலியில் அல்ல! உலகில் உள்ள ஒட்டுமொத்த முஸ்லிம்கள் மீதும் போர் தொடுத்துள்ளனர். முஸ்லிம்களைப் பாதுகாப்பதற்காகப் போர் தொடுப்பதாக இவர்கள் கூறிக் கொண்டாலும் உண்மையில் முஸ்லிம்களை அழிப்பதற்காகத் தான் இவர்கள் இதுபோன்ற தாக்குதல்களில் ஈடுபடுகின்றார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷி இறை மறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா எனும் இடத்தில் தமது தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு) விட்டுத் தமது தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், "வரும் ஆண்டில், தாம் (தம் தோழர்களுடன்) உம்ரா செய்ய (அனுமதிக்கப்பட) வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம்' என்னும் நிபந்தனையின் பேரில் அவர்களுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படியே அடுத்த ஆண்டு உம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை (மக்காவை விட்டு) வெüயேறும் படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெüயேறி விட்டார்கள்.

நூல்: புகாரி 4252

ஹிஜ்ரி ஆறாம் ஆண்டு முஹம்மத் (ஸல்) அவர்கள் தமது தோழர்களுடன் மக்காவிற்கு உம்ரா எனும் வணக்கத்தைச் செய்ய வருகின்றார்கள். அப்போது மக்காவிற்குள் நுழைய விடாமல் அவர்களை மக்காவிலிருந்து இணை வைப்பாளர்கள் தடுக்கின்றார்கள். அந்த ஆண்டு நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யாமலேயே திரும்புகிறார்கள்.

நபி (ஸல்) அவர்களும், அவர்களது தோழர்களும் அவ்வாறு தடுக்கப்பட்ட போது, அந்த மக்களை எதிர்த்துப் போர் செய்யக் கூடிய எல்லா நியாயங்களும் இருந்தன. எதிரிகளை அழிக்கும் அளவுக்கு வலிமையும் இருந்தது. ஆனாலும் முஸ்லிம்களைப் போர் செய்ய விடாமல் தடுத்ததற்கு ஒரே காரணம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதை மறைத்துக் கொண்டு மக்காவில் வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களைக் கருத்தில் கொண்டு தான் நபி (ஸல்) அவர்கள் போர் செய்யவில்லை.

அவர்கள் தாம் (ஏகஇறைவனை) மறுத்தார்கள். மஸ்ஜிதுல் ஹராமை விட்டு உங்களைத் தடுத்தார்கள். தடுத்து நிறுத்தப்பட்ட பலிப்பிராணி அதற்குரிய இடத்தை அடைவதையும் (தடுத்தார்கள்.) உங்களுக்குத் தெரியாத நம்பிக்கை கொண்ட ஆண்களையும், பெண்களையும் நீங்கள் தாக்கி, (அவர்கள்) அறியாமல் அவர்களால் உங்களுக்குத் துன்பம் ஏற்படும் என்பது இல்லாவிட்டால் (போரிட அனுமதித்திருப்பான்). தான் நாடியோரைத் தனது அருளில் அல்லாஹ் நுழையச் செய்வான். அவர்கள் (நல்லவர்கள்) தனியாகப் பிரிந்திருந்தால் அவர்களில் (நம்மை) மறுத்தோரைக் கடும் வேதனையால் தண்டித்திருப்போம்.

அல்குர்ஆன் 48:25

போரில் எதிரிகளை அழிக்கும் போது, அடையாளம் தெரியாத அத்தகைய முஸ்லிம்களையும் கொன்று விடக்கூடாது என்பதற்காகத் தான் நபி (ஸல்) அவர்களையும், அவர்களது தோழர்களையும் அல்லாஹ் தடுத்து நிறுத்தினான்.

மக்காவாசிகளின் கொடுமைக்குப் பயந்து, தங்களை  வெளிப்படுத்தாமல் மறைந்து வாழ்ந்து கொண்டிருந்த முஸ்லிம்களைத் தாக்கிவிடக் கூடாது என்பதற்காக, பாதிக்கப்பட்ட நிலையிலும் போர் செய்ய வேண்டாம் என்று ஓர் இஸ்லாமிய அரசாங்கத்தையே அல்லாஹ் தடுத்திருக்கும் போது, இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களையே கொத்துக் கொத்தாகக் கொன்று குவிக்கின்றனர். இவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

நம்பிக்கை கொண்டவரை வேண்டுமென்று கொலை செய்பவனது கூலி நரகமே! அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவன் மீது அல்லாஹ் கோபம் கொண்டான். அவனைச் சபித்தான். அவனுக்குக் கடுமையான வேதனையைத் தயாரித்துள்ளான்.

அல்குர்ஆன் 4:93

தெரிந்து, வேண்டுமென்றே முஸ்லிம்களைக் கொல்பவர்களுக்கு நிரந்தர நரகம் என்று அல்லாஹ் கூறுகின்றான். இந்த அடிப்படையிலும் இவர்கள் முஸ்லிம்கள் அல்லர் என்பது தெளிவாகின்றது.

அப்படியானால் முஸ்லிம் அல்லாதவர்களைக் கொல்லலாமா? என்ற கேள்வி இங்கு எழலாம். இஸ்லாம் எந்த ஓர் உயிரையும் அநியாயமாகக் கொலை செய்வதற்கு அனுமதிக்கவில்லை.

அல்லாஹ் தடை செய்துள்ள உயிர்க் கொலையை, தக்க காரணமின்றி செய்யாதீர்கள்!

அல்குர்ஆன் 17:33

இந்த வசனத்தின் அடிப்படையில் மனித உயிர் அனைத்துமே புனிதமானது தான். குற்றவியல் தண்டனை, போர் போன்றவை அரசாங்கத்திற்கான விதிவிலக்குகள். இதையே, "தக்க காரணமின்றி' என்று மேற்கண்ட வசனம் குறிப்பிடுகின்றது. இதைத் தவிர எந்த உயிரையும் கொல்வதற்கு யாருக்கும் அதிகாரம் இல்லை.

எனினும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களைக் கொல்கிறார்கள் என்று நாம் இங்கு குறிப்பிட்டுக் கூறுவதற்குக் காரணம், இவர்கள் உண்மையில் முஸ்லிம்களாக இருந்தால் மேற்கண்ட வசனத்தில் கூறப்படும் நிரந்தர நரகம் என்ற தண்டனையைக் கவனத்தில் கொண்டிருப்பார்கள் என்பதை இங்கு விளக்குவதற்காகத் தான்.

ஓர் இஸ்லாமிய அரசாங்கமே போர் செய்ய வேண்டிய நிலை ஏற்பட்டாலும் அதில் முதியவர்களைக் கொல்லக் கூடாது; பெண்கள், குழந்தைகளைக் கொல்லக் கூடாது; மதகுருமார்களைக் கொல்லக்கூடாது; சொத்துக்களைச் சூறையாடக்கூடாது என்பன உள்ளிட்ட பல்வேறு நிபந்தனைகளை இஸ்லாம் விதித்துள்ளது. இஸ்லாம் கூறும் இந்த நிபந்தனைகளைப் பின்பற்றாமல் போரிடுவதாகக் கூறுபவர்கள் எப்படி முஸ்லிம்களாக இருக்க முடியும்?

தெரிந்தே ஒரு முஸ்லிமைக் கொல்பவருக்கு நிரந்தர நரகம் என்று திருக்குர்ஆன் கூறியிருக்கையில், இந்தப் பயங்கரவாதிகள் கொத்துக் கொத்தாக முஸ்லிம்களையே கொல்வது, இவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்பதையே காட்டுகின்றது.

இந்தப் பயங்கரவாதிகள் நேரடியாக முஸ்லிம்களைக் கொல்கின்ற கொடுமையுடன் எதிர்விளைவாகவும் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கின்றனர்.

இவர்களின் தாக்குதலுக்குப் பழிவாங்குவதற்காக இப்போது பிரான்ஸ், சிரியாவின் மீது தாக்குதல் தொடுத்துள்ளது. இந்த வான்வெளித் தாக்குதலில் கொல்லப்படுவது ஐ.எஸ். பயங்கரவாதிகள் மட்டும் கிடையாது. சிரியாவிலுள்ள அப்பாவி மக்கள், குறிப்பாகப் பெண்கள், குழந்தைகள் போன்ற பலவீனர்கள் தான் அதிகமாகக் கொல்லப்படுகின்றனர். இப்படி எதிர்விளைவின் மூலமாகவும் இவர்கள் முஸ்லிம்களைத் தான் அழிக்கின்றார்கள்.

இத்தகைய எதிர்விளைவால், பெற்றோரை இழந்து அனாதைகளான பிள்ளைகள், பிள்ளைகளைப் பலி கொடுத்த பெற்றோர்கள், கணவனை இழந்த மனைவிமார்கள் என்று பாதிக்கப்படும் முஸ்லிம்களின் பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது.

இந்தக் கொடுமையைத் தாங்க முடியாமல் ஐரோப்பாவை நோக்கி, உரிய பயண ஆவணங்கள் இல்லாமல், உடுத்திய துணியோடு, வாரிச் சுருட்டிய படுக்கையோடு அகதிகளாக சிரியாவிலிருந்து முஸ்லிம்கள் வெளியேறி வருகின்றனர்.  பாதுகாப்பான வாகனங்களில் செல்லாமல் படகுகளில் செல்வதால் கடும் குளிரில் உறைந்து, கடலில் விழுந்து முஸ்லிம்கள் சாவதற்கும் இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் தான் காரணம்.

துருக்கி கடற்கரையில் கரை ஒதுங்கிய மூன்று வயதுச் சிறுவன் அய்லான் குர்தியின் உடல் இதற்கு ஒரு சாட்சியாகும். அய்லான் குர்தியின் உடல், உலகில் வாழ்கின்ற முஸ்லிம்களின் உள்ளங்களை மட்டுமல்ல! அனைத்து சமுதாய மக்களின் உள்ளங்களையும் உலுக்கி விட்டது. கண்களில் கண்ணீரை உதிர வைத்துவிட்டது.

இரக்கமும், ஈரமும் கொண்ட ஐரோப்பிய மக்கள் லட்சக்கணக்கான சிரிய அகதிகளுக்கு அடைக்கலம் கொடுக்க முன்வருகின்ற வேளையில் அந்த வாசலையும் அடைக்கின்ற வேலையை பாரிஸ் தாக்குதல் மூலம் இந்த ஐ.எஸ். அமைப்பு அரங்கேற்றியுள்ளது.

இது மட்டுமல்லாமல் உலகெங்கிலும் உள்ள மார்க்க அறிவற்ற இளைஞர்களை ஜிஹாத் என்ற போர்வையில் அழைத்து, அவர்களைத் தற்கொலைச் சாவில் மடிய வைக்கின்றது. இந்த வகையிலும் முஸ்லிம்களை இந்த இயக்கம் அழித்து வருகின்றது.

சஹ்ல் பின் சஅத் அஸ் ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க் களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகளில்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், "இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை'' என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "அவரோ நரகவாசியாவார்'' என்று கூறினார்கள்.

அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், "நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு)'' என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாகக் காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வாளின் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வாளின் மீது தன்        உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்.

நூல்: புகாரி 2898

போரில் கூட தற்கொலை செய்து கொள்வதை இஸ்லாம் தடை செய்துள்ளது. ஆனால் இந்த பயங்கரவாதிகளோ சர்வசாதாரணமாக தற்கொலைத் தாக்குதல் என்ற பெயரில் முஸ்லிம்களை அழித்துக் கொண்டிருக்கிறார்கள்.

இந்த லட்சணத்தில் இவர்கள் கிலாபத் ஆட்சியை அமைக்கப் போவதாகக் கூறிக் கொள்கிறார்கள்.

இந்தியா போன்ற நாடுகளில் முஸ்லிம்களின் வாழ்வுரிமை சங்பரிவாரக் கும்பல்களால் கேள்விக்குறியாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் இந்தியாவில், அதிலும் குறிப்பாகத் தமிழகத்திலும் இந்தத் தற்கொலைப் படையில் சிலர் இருப்பதாக ஊடகங்கள் பரப்பி வருகின்றன. இது இங்கு வாழ்கின்ற முஸ்லிம்களை அதிர்ச்சிக்குள்ளாக்கி உள்ளது. சங்பரிவார்கள் இதைச் சாக்காகப் பயன்படுத்தி இங்குள்ள முஸ்லிம்களைக் காயப்படுத்திக் கொண்டிருக்கிறார்கள்.

அமெரிக்காவின் இரட்டைக் கோபுரத் தாக்குதலுக்குப் பிறகு, உலகெங்கிலும் வாழ்கின்ற முஸ்லிம்கள் ஒருவிதமான அச்சத்தில் தான் வாழ்ந்து கொண்டிருக்கின்றனர். அவர்களை இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் மேலும் இன்னலுக்கு உள்ளாக்கி வருகின்றனர்.

அல்காயிதா செய்த செயல்களின் எதிர்விளைவுகளை விட்டு இந்த முஸ்லிம் சமுதாயம் இப்போது தான் கொஞ்சம் கொஞ்சமாக விடுபட்டு, நிம்மதிப் பெருமூச்சு விட்டுக் கொண்டிருக்கும் இந்த வேளையில் தற்போது ஐ.எஸ். அமைப்பினரின் எதிர்விளைவுகளில் முஸ்லிம்கள் மாட்டித் தவிக்கின்றனர்.

இவையெல்லாம் நமக்குத் தெளிவாக உணர்த்துகின்ற பாடம், இவர்கள் முஸ்லிம்களின் பாதுகாப்பிற்காகப் போரிடவில்லை. உலகில் உள்ள முஸ்லிம்களை அழிப்பதற்காகத் தான் போரிடுகின்றனர். எனவே இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களாக இருக்க முடியாது என்பதையே இவர்களின் நடவடிக்கைகள் நமக்கு உணர்த்துகின்றன.

இங்குள்ள பரேலவிகள் ஐ.எஸ். அமைப்பின் மீது மக்களுக்கு ஏற்பட்டுள்ள வெறுப்புணர்வை தங்களுக்கு சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, வஹ்ஹாபிகள் தான் இந்த அமைப்பில் இருக்கிறார்கள் என்று போகிற போக்கில் அடித்து விடுகின்றார்கள். ஊடகங்களும் இதை அப்படியே வாந்தியெடுக்கின்றன. வஹ்ஹாபிகள் என்று இவர்கள் குறிப்பிடுவது ஏகத்துவவாதிகளைத் தான்.

திருக்குர்ஆனுக்கும், நபிகளாரின் ஹதீஸ்களுக்கும் மாற்றமாகச் செயல்பட்டு வரும் ஐ.எஸ். பயங்கரவாதிகள் முஸ்லிம்களே அல்ல என்பது தான் நமது நிலைப்பாடு! இவர்கள் எப்படி ஏகத்துவவாதிகளாக இருக்க முடியும்?

இந்த ஐ.எஸ். பயங்கரவாதிகளைப் பற்றி முகநூலில் வலம் வரும் ஒரு செய்தியை இங்கு தருகிறோம்.

ஒரு மலைப்பாதையில் காரில் சென்று கொண்டிருந்த ஒரு குடும்பத்தை ஐ.எஸ். தீவிரவாதிகள் சிலர் வழிமறித்து, "நீங்கள் எந்த மதம்?'' என்று கேட்டார்கள். காரில் இருந்தவர்கள், "நாங்கள் இஸ்லாமியர்கள்'' என்றனர்.

உடனே தீவிரவாதிகள், "அப்படியானால் குர்ஆனிலிருந்து சில வரிகளைச் சொல்லுங்கள், பார்க்கலாம்'' என்றனர். காரில் இருந்தவர்கள் குலை நடுங்கி விட்டனர். உடனே காரில் இருந்த ஒரு குழந்தை, பைபிளில் இருந்து சில வரிகளைச் சொல்லிவிட்டது. "செத்தோம்' என்று காரில் இருந்த மற்றவர்கள் அதிர்ச்சியடைய, தீவிரவாதிகளோ, "சரியாகச் சொன்னாய், நீங்கள் செல்லலாம்'' என்றனர்.

சிறிது தூரம் சென்றதும், காரில் இருந்தவர்கள் குழந்தையிடம், "எப்படி நீ கொஞ்சம் கூடப் பயமில்லாமல் குர்ஆனுக்குப் பதில் பைபிள் வரிகளைச் சொன்னாய்? ஒருவேளை அந்தத் தீவிரவாதிகள் கண்டுபிடித்திருந்தால் நம் நிலை என்னவாகியிருக்கும்?'' என்று கடிந்து கொண்டனர்.

"அவர்களுக்குக் குர்ஆன் தெரியாது''

"எப்படிச் சொல்கிறாய்''

"அவர்கள் குர்ஆனை முழுவதுமாகப் படித்து உணர்ந்திருந்தால், இப்படி ஆயுதம் ஏந்தி அப்பாவி மக்களை ஈவு இரக்கமின்றி கொலை செய்யும் தீவிரவாதிகளாக மாறியிருக்க மாட்டார்கள். எந்தவொரு மதமும் கொலை செய்யச் சொல்லி தூண்டுவதில்லை. தீவிரவாதிகளுக்கு மதமும் கிடையாது, மனமும் கிடையாது''

மேற்கண்ட சம்பவம் கற்பனையாக இருந்தாலும் யதார்த்தம் இதுதான்.

தூதரின் பக்கம் திரும்புவோம்

- எம். முஹம்மது சலீம் (எம்.ஐ.எஸ்.சி), மங்கலம்

எந்தவொரு செய்தியாக இருந்தாலும் எல்லோரும் அதை ஒரே விதமாகப் புரிந்து கொள்ள மாட்டார்கள். சிலர் விளங்கிக் கொள்வதில் கூடுதல் குறைவு இருக்கும். சிலர் சரியாகப் புரிந்து கொள்வார்கள்; சிலர் தவறாகப் புரிந்து கொள்வார்கள். இதனால்தான், சில விஷயங்களில் மக்களிடையே பல்வேறு விதமான கருத்துகள் வருகின்றன. இதுவே யதார்த்தம்.

எனவே இதை மனதில் நிறுத்திக் கொண்டு எந்தச் செய்தியையும் சரியான முறையில் அணுக வேண்டும். அது உலகம் தொடர்பாக இருந்தாலும் சரி; மார்க்க தொடர்பாக இருந்தாலும் சரி!

நமக்கு மத்தியில் மார்க்க ரீதியான முடிவுகளில் பல்வேறு கருத்து வேறுபாடுகள் இருக்கின்றன. இதுபோன்ற தருணங்களில், எவ்வாறு மார்க்கச் செய்தியை அணுக வேண்டும்; எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பது குறித்தும் மார்க்கத்தில் வழிமுறை சொல்லப்பட்டு உள்ளது.

எந்த விவகாரமாக இருந்தாலும், இறைத்தூதரின் வழிகாட்டுதல்படி முடிவெடுத்துச் செயல்பட வேண்டும் என்பதே அந்த வழிமுறையின் சுருக்கம். இது தொடர்பாக சில முக்கியச் செய்திகளை இப்போது காண்போம்.

இறைத்தூதருக்குக் கட்டுப்படுங்கள்

முஹம்மது நபி (ஸல்) அவர்களை இறைத்தூதராக அனுப்பி, அல்லாஹ் நமக்கு அருள் புரிந்து இருக்கிறான். வாழ்க்கை எனும் கலையை நபிகளார் நமக்கு முழுமையாகக் கற்றுத் தந்திருக்கிறார்கள்.

வழிகேடு எனும் இருளில் இருந்து தப்பித்து நேர்வழி எனும் ஒளிமிக்க பாதையில் பயணிக்கும் பயிற்சி அளித்திருக்கிறார்கள். அனைவருக்கும் அனைத்து விஷயத்திலும் அண்ணலாரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது.

ஆகவே, மார்க்க வழிகாட்டி எனும் தூதருக்குரிய இடத்தை வேறு யாருக்கும் கடுகளவும் கொடுத்துவிடக் கூடாது. அவரின் சொல், செயல், அங்கீகாரத்தின் அடிப்படையில்தான் மார்க்கத்தை நாம் கடைப்பிடிக்க வேண்டும்.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிலிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன்.

திருக்குர்ஆன் 59:7

அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர்.

திருக்குர்ஆன் 24:51

தூதரைப் புறக்கணிப்பது வழிகேடு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஆணைக்கு அடிபணிந்து வாழ வேண்டும் என்று இஸ்லாம் கூறுகிறது. அவர்களின் கட்டளைக்குக் கட்டுப்பட்டு வாழ்வது அவசியம் என்று மட்டுமல்ல, அதற்கு மாறு செய்வது மிகப் பெரும் குற்றம் என்றும் எச்சரிக்கிறது.

இதற்குப் புறம்பாக, தூதருடைய தீர்ப்புகளைத் தூக்கி எறிந்து விட்டு மற்ற மனிதர்களின் முடிவுகளுக்கு முக்கியத்துவம் கொடுப்பது அப்பட்டமான வழிகேடு என்பதில் எள்ளளவும் ஐயமில்லை. இதுபோன்ற பண்பு ஒருபோதும் முஃமின்களிடம் இருக்கவே கூடாது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறுசெய்பவர் தெளிவாக வழிகெட்டு விட்டார்.

திருக்குர்ஆன் 33:36

(முஹம்மதே!) உம் இறைவன் மேல் ஆணையாக! அவர்கள் தமக்கிடையே ஏற்பட்ட சண்டையில் உம்மை நீதிபதியாக ஏற்று, பின்னர் நீர் வழங்கிய தீர்ப்பில் தமக்குள் அதிருப்தி கொள்ளாமல், முழுமையாகக் கட்டுப்படும் வரை அவர்கள் நம்பிக்கை கொள்ள மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 4:65

மதீனாவாசிகளின் பேரீச்சந் தோப்புகளுக்கு நீர்பாய்ச்சி வந்த "ஹர்ரா' (என்னும் இடத்திலிருந்த) கால்வாய் விஷயத்தில் அன்சாரிகளில் ஒருவர் (என் தந்தை) ஸுபைர் (ரலி) அவர்களுடன் சச்சரவு செய்தார். அந்த அன்சாரித் தோழர், "தண்ணீரைத் திறந்து ஓட விடு'' என்று கூறினார். ஸுபைர் (ரலி) அவர்கள் (தண்ணீரைத் திறந்துவிட) மறுத்து விட்டார்கள். (இந்தத் தகராறையொட்டி) நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக்காக இருவரும் சென்றபொழுது நபி (ஸல்) அவர்கள், "ஸுபைரே! உங்கள் தோப்புக்குத் தண்ணீர் பாய்ச்சிக் கொண்டு, பிறகு உங்கள் பக்கத்துத் தோப்புக்காரருக்கு தண்ணீரை அனுப்பி விடுங்கள்'' என்று கூறினார்கள். இதனைக் கேட்ட அந்த அன்சாரித் தோழர் கோபம் கொண்டு, "உங்கள் அத்தை மகன் என்பதாலா (அவருக்கு முதலில் நீர் பாய்ச்சிக் கொண்டு பிறகு எனக்குத் திறந்து விடும்படி அவருக்குச் சாதகமாக தீர்ப்புக் கூறுகிறீர்கள்)?'' என்று கேட்டார்.  இதைச் செவியுற்ற நபி (ஸல்) அவர்களின் முகம் நிறம் மாறி (கோபத்தால் சிவந்து) விட்டது. அவர்கள் ஸுபைர் (ரலி) அவர்களை நோக்கி, "உங்கள் மரங்களுக்கு நீர் பாய்ச்சிக் கொள்ளுங்கள். பிறகு, வரப்புகளைச் சென்றடையும் வரை தண்ணீரைத் தடுத்து நிறுத்திக் கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள். (என்னிடம்) இந்த நிகழ்ச்சியைக் கூறிவிட்டு ஸுபைர் (ரலி) அவர்கள், "இறைவன் மீதாணையாக! "(முஹம்மதே!) உங்கள் இறைவன் மீது சத்தியமாக! அவர்கள் தங்களுக்கு இடையே ஏற்பட்ட பிணக்குகளில் உங்களை நீதிபதியாக ஏற்றுக் கொண்டு, பின்னர், நீங்கள் அளிக்கின்ற தீர்ப்பு குறித்து தம் உள்ளங்களில் எத்தகைய அதிருப்தியும் கொள்ளாமல், முற்றிலும் அதற்கு அடிபணியாதவரை அவர்கள் நம்பிக்கை கொண்டவர்கள் ஆகமாட்டார்கள்' என்னும் (4:65) திருக்குர்ஆன் வசனம் இந்த விவகாரத்தில் தான் இறங்கியது என்று நான் எண்ணுகிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)

நூல்: புஹாரி 2359, 2360

தூதரின் தீர்ப்பே தீர்வு தரும்

இறைத் தூதர் (ஸல்) அவர்களைப் பின்பற்றுவதன் முக்கியத்துவத்தை மேற்கண்ட செய்திகள் மூலம் விளங்க முடிகிறது. அவர்களின் நெறிமுறைக்கு மாற்றமாகச் செயல்படுவதன் விபரீதத்தைப் புரிந்து கொள்ள இயலுகிறது.

ஆதலால்தான், அன்றைய கால மக்கள் அல்லாஹ்வின் தூதருக்கு இருக்கும் கண்ணியத்தை நினைவில் கொண்டு செயல்பட்டார்கள். தங்களுக்கு மத்தியில் ஏதேனும் மார்க்க ரீதியாகப் பிணக்குகள் வந்தால் தூதரிடம் கொண்டு சென்றார்கள். அவரின் தீர்ப்புக்கு மதிப்பளித்து வாழ்ந்தார்கள். அவரின் ஆலோசனைகள், அறிவுரைகளை ஏற்றுக் கொண்டார்கள்.

நபியின் தோழமை நமக்கு இருக்கிறது எனும் காரணத்திற்காகத் தங்களுக்குள் சுயமாக முடிவெடுத்து கொண்டு மனம்போன போக்கில் நடக்கவில்லை. அல்லாஹ்வின் தூதரிடமே அழகிய முன்மாதிரி இருக்கிறது என்பதை அனைவருக்கும் தெரியப்படுத்தும் வகையில் அவர்களின் வாழ்க்கை இருந்தது. இதற்குரிய சான்றாக சில சம்பவங்களை மட்டும் காண்போம்.

இறைவேதம் தொடர்பான பிரச்சனை

திருக்குர்ஆனை ஓதுவது, அதை அணுகுவது, அதன் வசனங்களைப் பயன்படுத்துவது, அதற்கு கண்ணியம் கொடுப்பது போன்ற பல்வேறு விசயங்களில் பல வகையில் கருத்துகள் இருப்பதை மறுக்க இயலாது. இது மாதிரியான நேரங்களில், நபித்தோழர்கள் தங்கள் பிரச்சனையை நபிகளாரிடமே எடுத்துச் சென்றார்கள். அவர்களிடமே அதற்குரிய தீர்ப்பை எதிர்பார்த்தார்கள். அதன் மூலம் எளிதாகத் தெரிந்து கொண்டார்கள்.

அன்சாரிகளில் (குல்ஸும் பின் ஹித்ம் எனும்) ஒருவர் குபா பள்ளிவாசலில் மக்களுக்கு தலைமை தாங்கித் தொழுவிப்பவராக (இமாமாக) இருந்தார். (அல்ஃபாத்திஹா அத்தியாயத்திற்குப் பின்) ஓதப்படும் அத்தியாயத்தை ஓதி மக்களுக்கு அவர் தொழுவிக்க ஆரம்பிக்கும் போதெல்லாம் அந்த அத்தியாயத்தை ஆரம்பிப்பதற்கு முன் "குல் ஹுவல்லாஹு அஹத்' (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தை ஓதியே ஆரம்பிப்பார்; (அதாவது "குல்ஹுவல்லாஹு அஹத்' அத்தியாயத்தை ஓதிய) பிறகுதான் மற்ற அத்தியாயத்தை ஓதுவார். ஒவ்வொரு ரக்அத்திலும் அவர் இவ்வாறு செய்வது வழக்கம். இது குறித்து அவரிடம் மக்கள், "நீங்கள் இந்த (குல் ஹுவல்லாஹு அஹத்) அத்தியாயத்தை ஓத ஆரம்பிக்கின்றீர்கள். பிறகு அது போதாதென்று மற்றோர் அத்தியாயத்தையும் ஓதுகிறீர்களே! ஒன்று இந்த அத்தியாயத்தை மட்டும் ஓதுங்கள்! அல்லது இதை விட்டுவிட்டு மற்றோர் அத்தியா யத்தை மட்டும் ஓதுங்கள் (இரண்டையும் ஓதாதீர்கள்)'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "நான் இ(ந்த அத்தியாயத்)தை ஓதுவதைக் கைவிடமாட்டேன். நீங்கள் விரும்பினால் இவ்வாறு (ஓதி தலைமை தாங்கித் தொழுவிக்கும் பணியைச்) செய்கிறேன். (இதை) நீங்கள் வெறுத்தால் நான் உங்களை  விட்டுவிடுவேன் (உங்களுக்குத் தொழுவிக்க மாட்டேன்)'' என்றார். அம்மக்கள் அவரைத் தங்களில் சிறந்தவராகத் கருதிக் கொண்டிருந்தனர். அவரல்லாத மற்றொருவர் தங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிப்பதை அவர்கள் விரும்பவில்லை. ஆகவே, நபி (ஸல்) அவர்கள் தங்களிடம் வந்த நேரத்தில் இந்தச் செய்தியை அவர்களிடம் தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (அந்த மனிதரிடம்), "இன்னாரே! உங்கள் தோழர்கள் உங்களைப் பணிப்பது போன்று நீங்கள் ஏன் செய்யக்கூடாது? என்ன காரணத்தால் ஒவ்வொரு ரக்அத்திலும் இந்த அத்தியாயத்தை கட்டாயப்படுத்திக் கொண்டீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர், "நான் இந்த அத்தியாயத்தை நேசிக்கிறேன்'' என்று சொன்னார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அ(ந்த அத்தியாயத்)தை நீர் நேசிப்பது உம்மைச் சொர்க்கத்தில் சேர்க்கும்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புஹாரி 774

குர்ஆனை உளூ இல்லாமல் ஓதலாமா? நோயுற்றவர்களுக்கு ஓதி காசு வாங்கலாமா? இறந்தவர்களுக்கு குர்ஆனை ஓதி நன்மை சேர்க்க இயலுமா? என்று பல்வேறு கேள்விகள் பலருக்கும் இருக்கும்.

இவற்றில் சரியான கருத்தைத் தெரிந்து கொள்ள முஃமின்கள் குழப்பம் அடைய அவசியமே இல்லை. இவற்றுள் எதற்கெல்லாம் நபிகளாரின் வழிகாட்டுதல் இருக்கிறது? எப்படி இருக்கிறது? என்று கவனித்துப் பாருங்கள். திருக்குர்ஆன் தொடர்பாக சமூகத்தில் இருக்கும் சடங்குகள் பெரும்பாலும் ஆதாரமற்றவை என்பதை எளிதில் தெரிந்து கொள்ளலாம்.

பொருளாதாரம் தொடர்பான பிரச்சனை

பொருளாதாரம் சம்பந்தமாக எப்போதும் ஏகப்பட்ட சந்தேகங்கள் இருக்கவே செய்கின்றன. அனுமதி இருக்கும் வியாபாரம், தடையாக இருக்கும் வியாபாரம், லாபத்தை பெற்றுக் கொள்வது, செலவழிக்கும் வகை, தொழில் நடத்தும் விதம் என்று செல்வம் ரீதியாக எண்ணற்ற கேள்விகள் எழுந்து கொண்டே இருக்கின்றன.

இம்மாதிரியான வினாக்களுக்கும் விடையை நபிகளாரிடம் தேடிச் செல்ல வேண்டும். இதை முஸ்லிம் சமுதாயத்தின் முதல் தலைமுறையினர் நன்கு விளங்கி வைத்து இருந்தார்கள். நபிகளார் கொடுத்த பதிலை மறுக்காமல் ஏற்றுக் கொண்டார்கள்.

நானும் என் தந்தையும் என் பாட்டனாரும் நபி (ஸல்) அவர்களிடம் (இஸ்லாத்தை ஏற்று) உறுதிமொழிப் பிரமாணம் (பைஅத்) செய்திருந்தோம். நபி (ஸல்) அவர்கள் எனக்குப் பெண் பேசித் திருமணம் செய்தும் வைத்தார்கள். அவர்களிடம் நான் ஒரு தடவை ஒரு பிரச்சினையைக் கொண்டு சென்றேன்.  அதாவது, என் தந்தை யஸீத் தர்மம் செய்வதற்காக சில தீனார்களை எடுத்துக் கொண்டு சென்று அதைப் பள்ளிவாசலில் இருந்த ஒருவருக்கு அருகில் வைத்துவிட்டார். நான் சென்று அதை எடுத்து வந்துவிட்டேன். உடனே என்  தந்தை, "அல்லாஹ்வின் மீது ஆணையாக! அந்த தர்மம் உனக்கல்லவே'' என்றார்கள். உடனே நான் அவரை அழைத்துக்கொண்டு  நபி (ஸல்) அவர்களிடம் வந்து தீர்வு கேட்டேன். அதற்கவர்கள் " யஸீதே! உமது (தர்ம) எண்ணத்திற்கான நற்பலன் உனக்கு உண்டு; மஅனே! நீர் எடுத்த (பொருளான)து உமக்கே!'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஅன் பின் யஸீத் (ரலி),

நூல்: புஹாரி 1422

எனக்கு அப்துல்லாஹ் பின் அபீஹத்ரத் (ரலி) அவர்கள் தர வேண்டியிருந்த கடன் ஒன்றை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைத்து திருப்பிச் செலுத்தும்படி கேட்டேன். (இது தொடர்பாக எங்களிடையே வாக்குவாதம் ஏற்பட்டு)  எங்கள்  இருவரின் குரல்களும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வீட்டிலிருந்தபடியே அதைக் கேட்கும் அளவிற்கு உயர்ந்தன. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் இருவரையும் நோக்கிப் புறப்பட்டார்கள். (இதற்காக)  தமது அறையின் திரையை விலக்கி, "கஅப் பின் மாலிக்! கஅப்!''  என்று அழைத்தார்கள். உடனே நான், "இதோ வந்துவிட்டேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்றேன். அப்போது அவர்கள் "உன் கடனிலிருந்து பாதியைத் தள்ளுபடி செய்வீராக' என்று சைகை செய்தார்கள். "அவ்வாறே செய்து விட்டேன், அல்லாஹ்வின் தூதரே!'' என்று நான் கூறினேன். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் அபீ ஹத்ரத்தை நோக்கி), "எழுந்து சென்று கடனைச் செலுத்துங்கள்'' என்றார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் மாலிக் (ரலி)

நூல்: புஹாரி 471

வட்டி, வரதட்சனையை வாங்கலாமா? அதை ஆதரித்து துணை போகலாமா? குத்தகை, அடமானம் ஆகியவற்றை எப்படிக் கையாள்வது? என்றெல்லாம் பொருளாதாரம் பற்றிய சிக்கல்களை தீர்ப்பதற்குரிய போதனைகள் திருத்தூதரின் வாழ்விலே இருக்கின்றன.

முஸ்லிம் சமுதாயத்தில் எத்தனை பேர் இதை நினைவில் வைத்து செயல்படுகிறார்கள்? மனோ இச்சைக்கு இசைவாக நடந்து கொள்வதைக் கைவிட்டு அனைவரும் மாமனிதர் பாதையில் பயணம் செய்ய முன்வர வேண்டும்.

பொய்த்துப் போன பைபிளின் முன்னறிவிப்புகள்!

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

தவ்ஹீத் ஜமாஅத் அண்மையில் கிறித்தவ மத போதகர்களுடன் சென்னையில் ஒரு விவாதத்தைச் சந்தித்தது.

பைபிள் இறைவேதமா? குர்ஆன் இறைவேதமா என்பது விவாதத்தின் தலைப்புகள்.

அல்லாஹ்வின் அருளால் குர்ஆன் இறைவேதமே என்பதும், பைபிள் இறைவேதமே அல்ல என்பதும் அடுக்கடுக்கான பல சான்றுகளுடன் விவாதத்தில் நிரூபிக்கப்பட்டது.

நமது தரப்பிலிருந்து குர்ஆன் இறைவேதமே என்பதை நிரூபிக்க, குர்ஆன் கூறும் அறிவியல் சான்றுகள் பலவற்றை அடுக்கினோம்.

மனித உடலின் தோல்களில் தான் வேதனையை உணரும் நரம்புகள் உள்ளன - அல்குர்ஆன் 4:56

படுவேகமாகச் சுழலும் பூமியை அதிர்விலிருந்து காக்கும் முளைகளாக மலைகள் உள்ளன -  அல்குர்ஆன் 15:19, 16:15, 21:31, 27:61,

குழந்தையின் பாலினத்தைத் தீர்மானிப்பது ஆண்களின் உயிரணுக்களே - அல்குர்ஆன் 75:39

விண்வெளிப் பயணம் மேற் கொள்ளும்போது மனித இதயம் சுருங்கும் - அல்குர்ஆன் 6:125

விண்வெளியில் எவ்வளவு தொலைவு மனிதனால் செல்ல முடிந்தாலும், பூமிக்கு அடியில் மலையின் உயரம் அளவுக்குச் செல்ல இயலாது - அல்குர்ஆன் 17:37

இவை நாம் நாம் முன்வைத்த ஆதாரங்களில் சில துளிகளாகும்.

இவற்றைக் குறிப்பிட்டு நாம் முன்வைத்த பிரதான வாதம் என்னவென்றால்,

தற்போதைய விஞ்ஞான அறிவில் நூற்றில் ஒரு பங்கு கூட 1400 ஆண்டுகளுக்கு முன்பு இருந்ததில்லை.

அப்படியிருக்க, தற்காலத்தில் பல்வேறு ஆராய்ச்சிகளுக்குப் பிறகு கண்டுபிடிக்கப்பட்ட இந்த அரிய விஞ்ஞான உண்மைகள் 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர்ஆனில் குறிப்பிடப்பட்டிருப்பது எப்படி சாத்தியம்?

அனைத்தையும் அறிந்த இறைவன் வழங்கிய வேதமாக, வார்த்தையாக அல்குர்ஆன் இருக்கும் காரணத்தால் தான் இது சாத்தியமானது. எனவே குர்ஆன் இறைவேதம் என்பது சத்தியமானது.

இவ்வாறு நாம் வாதம் வைத்தோம்.

இதற்கு கிறித்தவ மதபோதகர்களால் மழுப்பலையும், உளறலையும் தவிர வேறு எந்தப் பதிலையும் அளிக்க இயலவில்லை.

அது மட்டுமின்றி பைபிள் இறைவேதமே என்பதையும் அவர்களால் நிறுவ முடியவில்லை.

ஆதாரம் என்று அவர்கள் முன்வைத்த சிலவற்றைக் குறிப்பிடுகிறோம். இதிலிருந்தே அவர்களின் தரம் என்ன? திறம் என்ன? என்பதை வாசகர்கள் அறிந்து கொள்ளலாம்.

கணவன் மனைவி அன்பாக இருக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.

உழைப்பாளிகளுக்கு வார விடுமுறை அளிக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.

அரசுக்கு வரி செலுத்த வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.

பெண்களை மதிக்க வேண்டும் என்று பைபிள் சொல்கிறது.

எனவே பைபிள் இறைவேதமே!!!

இவ்வாறு கிறித்தவ மதபோதகர்கள் தங்கள் வாதத்தை எடுத்து வைத்தனர்.

இதைப் படித்ததும் சிரிப்பு வருகிறதல்லவா? கிறித்தவ மத போதகர்கள் இவ்வாதங்களை வைத்த போது அதே சிரிப்பொலி தான் விவாத அரங்கிலும் ஒலித்தது.

ஒரு பானை சோற்றுக்கு ஒரு சோறு பதம் என்பதைப் போல அவர்களின் வாதத் திறமையை எடுத்துக் காட்ட இது ஒன்றே போதுமானது எனக் கருதுகிறோம்.

மேலும் விவாதத்தில் முன் வைக்கப்பட்ட நமது வாதங்கள், எதிர்  தரப்பாளர்களின் வாதங்கள், உளறல்கள், கேள்விகள் அதற்கு நமது பதில்கள் என முழுமையாக அறிந்து கொள்ள நமது இணைய தளத்தையும் உணர்வு வார இதழையும் பார்வையிடுங்கள்.

இந்தக் கட்டுரையில் நாம் விளக்க முற்படுவது குறிப்பிட்ட ஒரு அம்சத்தைப் பற்றி மட்டுமே!

இறைவேதம் என்று ஒரு புத்தகத்தைச் சொல்ல வேண்டுமானால் அதற்குப் பல தகுதிகள் இருக்க வேண்டும். அவற்றில் முதன்மைத் தகுதியானது, வேதம் என்று கருதப்படுவதில் சொல்லப்பட்டுள்ள முன்னறிவிப்புகளில் எந்த ஒன்றும் பொய்யாகி விடக் கூடாது. எல்லா முன்னறிவிப்புகளும் நிறைவேறி இருக்க வேண்டும். இதுவே இறைவேதத்திற்கான முக்கிய  அளவுகோலாகும்.

இறைவேதத்திற்கான இந்த ஒரு அளவுகோலின் படி பைபிளை நாம் அணுகினால் அது இறைவேதமல்ல என்பதை தன்னைத் தானே நிரூபிப்பதைக் காணலாம்.

பைபிள் உண்மையிலேயே இறைவனின் வேதம் என்றால் அதில் சொல்லப்பட்ட முன்னறிவிப்புகள் நிறைவேறியிருக்க வேண்டும் அல்லவா?

ஆனால் பைபிளில் சொல்லப்பட்டுள்ள பல முன்னறிவிப்புகள் நிறைவேறாமல், பொய்த்துப் போயுள்ளது. அவற்றில் சிலவற்றை, குறிப்பாக நாம் விவாதத்தில் மேற்காள் காட்டியதை ஆதாரங்களுடன் இக்கட்டுரையில் அறியத் தருகிறோம்.

முன்னறிவிப்பு: 1

விருத்தசேதனம் செய்யாதோர் ஜெருசலத்திற்குள் செல்வதில்லையா?

எழும்பு, எழும்பு, சீயோனே, உன் வல்லமையைத் தரித்துக்கொள்; பரிசுத்த நகரமாகிய எருசலேமே, உன் அலங்கார வஸ்திரங்களை உடுத்திக் கொள்; விருத்தசேதனமில்லாதவனும் அசுத்தனும் இனி உன்னிடத்தில் வருவதில்லை.

ஏசாயா, அதிகாரம் 52, வசனம் 1

இந்த வசனத்தில் கடவுளாகிய கர்த்தர் ஜெருசலம் பற்றி ஒரு முன்னறிவிப்பு செய்கிறார்.

விருத்தசேதனமில்லாதவன் மற்றும் அசுத்தமானவன் எவனும் இனி ஜெருசலத்திற்குள்ளே வரமுடியாது என்பது தான் கர்த்தர் செய்யும் முன்னறிவிப்பாகும்.

இந்த முன்னறிவிப்பு மெய்யானதா? பொய்யானதா?

இனி விருத்தசேதனமில்லாதவர்கள் யாரும் ஜெருசலத்திற்குள் வரமுடியாது என்றால் அது சொல்லப்பட்டதிலிருந்து இதுவரையிலும், இறுதி வரையிலும் அப்படிப்பட்ட யாரும் அங்கே செல்லக் கூடாது என்று அர்த்தம்.

விருத்தசேதனம் (கத்னா) செய்யப்படாதோர் யாரும் ஜெருசலத்திற்குள் இப்போது பிரவேசிப்பதில்லையா?

ஏன் அங்கிருக்கும் கிறித்தவ மக்களே (அதிகம்) விருத்த சேதனம் செய்யாதவர்கள் தானே? தமிழக அரசின் சார்பில் ஜெருசலம் செல்ல இலவச ஏற்பாடு செய்யப்பட்டு பலர் அங்கே சென்று வருகின்றனர். அவர்களில் யாரும் விருத்த சேதனம் செய்தவர்கள் அல்லர்.

அடுத்து அசுத்தமானவர்களும் அங்கே இனி செல்ல முடியாதாம்.

அசுத்தமானவன் என்பது கொள்கையைக் குறிக்கும் என்றால் கிறித்தவ கொள்கையை ஏற்காத யாரும் ஜெருசலத்திற்குள் பைபிள் செய்த முன்னறிவிப்பின் படி செல்ல முடியாமல் இருக்க வேண்டும். ஆனால் நடப்பு நிலவரம் அவ்வாறல்ல.

விருத்த சேதனம் செய்யாதோர், அசுத்தமானவர்கள் என இரு சாராருமே ஜெருசலத்திற்குள் ஒவ்வொரு நாளும் சென்று கொண்டுதான் இருக்கிறார்கள்.

அப்படியிருக்கும் போது  இவர்களில் யாரும் இனி உன்னிடத்தில் வர மாட்டார் என்று பைபிள் சொன்னது என்னவானது?

பைபிள் சொன்ன முன்னறிவிப்பு பொய்த்துப் போனது என்பதைத் தான் இது படம் பிடித்துக் காட்டுகிறது.

முன்னறிவிப்பு: 2

யூதர்களுக்கென சொந்த தேசம் இருக்குமா?

பைபிள் செய்யும் மற்றொரு முன்னறிவிப்பு யாதெனில் யூதர்களுக்கு என்று எல்லாக் காலத்திலும் சொந்த தேசம், நாடு இருக்கும். அது அவர்களிடமிருந்து எப்போதும் பிடுங்கப்படாது என்பதாகும்.

இதோ பைபிள் கூறுவதைப் பாருங்கள்.

என் ஜனமாகிய இஸ்ரவேலின் சிறையிருப்பைத் திருப்புவேன்; அவர்கள் பாழான நகரங்களைக் கட்டி, அவைகளில் குடியிருந்து, திராட்சத் தோட்டங்களை நாட்டி, அவைகளுடைய பழரசத்தைக் குடித்து, தோட்டங்களை உண்டாக்கி, அவைகளின் கனிகளைப் புசிப்பார்கள். அவர்களை அவர்கள் தேசத்திலே நாட்டுவேன்; நான் அவர்களுக்குக் கொடுத்த தேசத்திலிருந்து அவர்கள் இனி பிடுங்கப்படுவதில்லையென்று உன் தேவனாகிய கர்த்தர் சொல்லுகிறார் என்றார்.

ஆமோஸ், அதிகாரம் 9, வசனம் 14, 15

யூதர்களுக்கு என்று ஒரு தேசம் கர்த்தரால் வழங்கப்படும் என்றும் அது ஒருபோதும் அவர்களிடமிருந்து பிடுங்கப்படாது என்றும் பைபிளின் இவ்வசனங்கள் முன்னறிவிப்பு செய்கிறது.

இதுவாவது நிறைவேறியதா?

அதுவும் இல்லை. இவ்வசனத்தில் சொல்லப்பட்டபடி யூதர்களுக்கென்று தேசம் வழங்கப்பட்டது. ஆனால் அவர்களிடம் அது நிலைத்திருக்கவில்லை. பல காலகட்டங்களில் அது அவர்களிடமிருந்து பிடுங்கப்பட்டுள்ளது.

யூதர்களுக்கென்று சொந்தமாக எந்த நாடும் இல்லாத காலமும் உண்டு என்பதை வரலாறு மெய்ப்பிக்கின்றது. அப்படியானால் பைபிள் செய்த முன்னறிவிப்பின் கதி என்ன? அதோ கதி தான். இதை தனியாக வேறு சொல்லவும் வேண்டுமா?

பொய்த்துப் போன முன்னறிவிப்புகளை உள்ளடக்கிய மனித நூலே பைபிள். அது இறைவேதமல்ல என்பதை இது காட்டுகின்றது.

முன்னறிவிப்பு 3

இயேசு காலத்திலிருந்து இன்று வரை உயிரோடிருக்கும் நபர்கள் உண்டா?

அடுத்து பைபிள் இன்னொரு விநோதமான முன்னறிவிப்பு ஒன்றையும் செய்கிறது. வழக்கம் போல் அதுவும் காலத்தால் பொய்ப்பிக்கப்பட்டுள்ளது.

காலத்தால் மட்டுமல்ல, படிக்கும் போதே இது என்ன முன்னறிவிப்பு? இது முழுக்க முட்டாள்தனம் என்பதை எளிதில் அறிந்து விடலாம்.

இதோ விநோத முன்னறிவிப்பைச் சொல்லும் பைபிளின் வசனங்கள்.

மனுஷகுமாரன் தம்முடைய பிதாவின் மகிமைபொருந்தினவராய்த் தம்முடைய தூதரோடுங்கூட வருவார்; அப்பொழுது, அவனவன் கிரியைக்குத் தக்கதாக அவனவனுக்குப் பலனளிப்பார். இங்கே நிற்கிறவர்களில் சிலர் மனுஷகுமாரன் தம்முடைய ராஜ்யத்தில் வருவதைக் காணுமுன், மரணத்தை ருசி பார்ப்பதில்லை என்று, மெய்யாகவே உங்களுக்குச் சொல்லுகிறேன் என்றார்.

மத்தேயு, அதிகாரம் 16, வசனம் 27, 28.

இதில் என்ன சொல்லப்படுகிறது என்பதைக் கூர்ந்து கவனியுங்கள்.

தம் வாழ்நாளில் உள்ள மக்களை நோக்கி இயேசு முழங்குகிறார்.

இறுதி காலத்தின் நெருக்கத்தில் மீண்டு(ம்) வருவேன். அப்போது நான் வருவதைப் பார்க்கும் வரை உங்களில் சிலர் உயிரோடு இருப்பீர்கள். அதுவரையிலும் அந்தச் சிலர் மரணிக்க மாட்டீர்கள் என்கிறார்.

இந்த முன்னறிவிப்பின் படி இயேசுவின் காலத்திலிருந்து தற்போது வரை ஏதேனும் சில நபர்கள் உயிரோடு, மரணத்தைச் சுவைக்காமல் வாழ்ந்து கொண்டிருக்க வேண்டும்.

அந்த நபர்கள் யார்?

ஏனெனில் இயேசு தம் ராஜ்யத்தில் இன்னும் வரவில்லை. நான் ராஜ்யத்தில் வருவதைக் காணாமல் நீங்கள் மரணிக்க மாட்டீர்கள் என்று தம் காலத்தில் உள்ள சிலருக்கு  தீர்க்கதரிசனமாக, முன்னறிவிப்பாகச் சொல்லியுள்ளார்.

பைபிள் கூறிய இந்த முன்னறிவிப்பு நிறைவேற வேண்டும் என்றால் இயேசுவின் காலத்தில் உள்ள அந்த ஒரு சிலர் தற்போது வரையிலும் உயிரோடு இருந்திருக்க வேண்டும். இயேசு ராஜ்யத்தில் வரும் வரை மரணிக்காமல் இருக்க வேண்டும்.

இதை இன்னும் எளிமைப்படுத்துவதாக இருந்தால் இயேசு இந்த முன்னறிவிப்பைச் சொல்லும் போது ஒருவருக்கு வயது 40 என்றும் இயேசுவுக்கு வயது 40 என்றும் வைத்துக் கொண்டால் இந்நேரம் அவருக்கு வயது 1975. இந்த வயதில் உயிரோடு இருக்க வேண்டும்.

இந்த உதாரணத்தின் படி உலகத்தில் 1975 வயதில் யாராவது ஒரு சிலராவது இருக்க வேண்டும் என்பது பைபிளின் முன்னறிவிப்பு. அப்படி யாரும் உண்டா?

இருந்தால் பைபிள் இறைவேதம் என்பதற்கு அதுவே மிகப்பெரிய அத்தாட்சியாக இருந்திருக்குமே.

உலகின் எந்த மூலையில் அவர் இருந்திருந்தாலும் மீடியாவின் கழுகுப் பார்வைக்கு இரையாகி இந்நேரம் நம் பார்வைக்கு விருந்தாகியிருப்பாரே!

நம் நாட்டுப் பெண்கள் அவரைக் கடவுளாக்கி ஒரு மரத்தடியில் அமர வைத்து பூஜை, பரிகாரங்களையெல்லாம் செய்யத் துவங்கியிருப்பார்களே!

ஊருக்கு ஊர் அவர் பெயரில், அவர் உருவத்தில் சிலைகள் வடித்திருப்பார்களே!

ஆனால் இவற்றில் எதுவும் நடக்கவில்லை. காரணம் இயேசுவின் காலத்திலிருந்து தற்போது வரையிலும் உயிரோடு வாழும் ஒருவரும் இல்லை என்பது எல்.கே.ஜி. படிக்கும் சிறுபிள்ளைக்கும் தெரிந்த விஷயம்.

பைபிள் செய்த இந்த முன்னறிவிப்பு பொய்த்துப் போனது மட்டுமல்ல, கேலிக்கூத்தாகி நிற்பதிலிருந்து பைபிள் இறைவேதமே அல்ல என்பது இன்னும் தெளிவாகிறது.

குர்ஆனின் முன்னறிவிப்புகள்

பைபிள் செய்த முன்னறிவிப்புகள் வார்த்தைக்கு வார்த்தை பொய்யாகி அது இறைவேதமல்ல என்பது நிரூபணமாவதால், கூனிக்குறுகி நின்று கொண்டிருக்கும் வேளையில் குர்ஆன் தன்னைத் தானே இறைவேதம் என்பதை தனது முன்னறிவிப்புகளால் நிரூபித்து, கம்பீரமாக நிமிர்ந்து நிற்பதையும் பார்க்கிறோம்.

குர்ஆனில் சொல்லப்பட்ட ஒவ்வொரு முன்னறிவிப்பும் அச்சரம் பிசகாமல் நிறைவேறியுள்ளது. நிறைவேறிக் கொண்டும் இருக்கிறது.

அவற்றில் ஒரு சிலதை இங்கே சுருக்கமாகக் காண்போம்.

அபய பூமி கஅபா

உலகில் இறைவனை வணங்குவதற்காக முதன் முதலில் எழுப்பப்பட்ட ஆலயம் கஅபா. இந்த ஆலயம் மக்களின் அபய பூமியாகத் திகழும் எனத் திருக்குர்ஆன் தெரிவிக்கின்றது.

இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக!

அல்குர்ஆன் 2:125

கஅபா, அபய பூமி என அறிவிக்கப்பட்டு 14 நூற்றாண்டுகளைக் கடந்த பின்பும், எத்தனையோ ஆட்சி மாற்றங்கள் நடந்த பின்பும் அது இன்றளவும் அபய பூமியாகவே இருந்து வருகிறது.

14 நூற்றாண்டுகளாக எந்தத் தாக்குதலுக்கும் உள்ளாகாத வரலாற்றுச் சிறப்புமிக்க ஆலயமாகவும், அப்படித் தாக்க வந்தால் அவர்களை முறியடிக்கக் கூடியதாகவும் அது இருந்து வருகிறது. திருக்குர்ஆன் கூறியவாறு அது அபய பூமியாகவே நீடித்து வருகிறது.

யூத, கிறித்தவர்கள் இதை முறியடிக்க என்னென்னவோ செய்து பார்த்தும் கஃபாவின் பாதுகாப்புத் தன்மைக்கு ஒரு பங்கமும் ஏற்படவில்லை.

இந்த வகையில் தான் செய்த முன்னறிவிப்பை நிரூபித்து, தான் இறைவேதமே என்று உலக மக்களுக்கு அல்குர்ஆன் கர்ஜனை செய்கிறது.

முஸ்லிம்கள் வெற்றி பெறுவர் என்ற முன்னறிவிப்பு

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவில் மிகவும் சிரமத்திற்குரிய நிலையிலும், பலவீனமான நிலையிலும் இருந்தபோது பிற்காலத்தில் முஸ்லிம் களின் ஆட்சி அமையும் என்று திருக்குர்ஆன் முன்னறிவிப்பு செய்தது.

உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் அருளைத் தேடி பூமியில் பயணம் செய்வோரும், அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரும் உருவாவார்கள் என்பதை அவன் அறிந்து வைத்துள்ளான்.

அல்குர்ஆன் 73:20 

"உங்களில் நோயாளிகளும், அல்லாஹ்வின் பாதையில் போரிடு வோரும் இனிமேல் உருவாவார்கள் என்பதை அல்லாஹ் அறிந்து வைத்திருக்கிறான்'' என அல்லாஹ் கூறுகிறான்.

நோயாளிகள் உருவாவதை யாரும் சொல்லி விட முடியும். முஸ்லிம்களாக வாழ்வதே சிரமமாக இருந்த காலகட்டத்தில் இந்தச் சமுதாயத்தில் அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர்கள் உருவாவார்கள் என்று இவ்வசனம் கூறுகிறது.

அல்லாஹ்வின் பாதையில் போரிடுவது என்பது ஒரு ஆட்சியை அமைத்து படைதிரட்டிப் போர் புரிவதைக் குறிக்கும்.

இப்படிப் போர் புரிவோர் உருவாவார்கள் என்பதை அன்றைய சூழ்நிலையில் கணிக்கவே முடியாது. ஆனாலும் இறைவன் கூறியவாறு மிகச் சில வருடங்களிலேயே மாபெரும் இஸ்லாமிய ஆட்சி அமைந்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர் உருவானார்கள்.

இவ்வாறு முன்னறிவிப்புச் செய்த படியே நடந்தேறியது, திருக்குர்ஆன் இறைவனின் வேதம் என்பதற்குரிய சான்றுகளில் ஒன்றாகும்.

மக்காவின் வறுமை நீங்கும்

நம்பிக்கை கொண்டோரே! இணை கற்பிப்போர் அசுத்தமானவர்களே. எனவே அவர்கள் மஸ்ஜிதுல் ஹராமை இவ்வாண்டுக்குப் பின் நெருங்கக் கூடாது. நீங்கள் வறுமையைப் பயந்தால் அல்லாஹ் நாடினால் தனது அருளால் பின்னர் உங்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்குவான். அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.

அல்குர்ஆன் 9:28

மக்கா நகரம் அன்றைய அரபுகளின் மிகப் பெரிய புண்ணியத் தலமாக இருந்தது. பாலைவனமாக இருந்ததால் இந்த ஆலயத்திற்கு வரும் பயணிகள் மூலமாகவே உள்ளூர்வாசிகள் வருவாய் ஈட்டி வந்தனர். அதிக அளவில் பயணிகள் வந்தால் தான் அதிக வருவாய் கிடைக்கும் என்று எண்ணி எல்லா விதமான தீமைகளையும் அங்கு அனுமதித்தனர்.

இந்தச் சந்தர்ப்பத்தில் தான், "அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள் இந்த ஆலயத்திற்கு வரக் கூடாது' என்று இவ்வசனத்தின் (9:28) மூலம் இறைவன் தடை செய்தான்.

இந்தத் தடையினால் பயணிகளின் கூட்டம் குறைந்து அதனால் தங்கள் வருவாய் பாதிக்கும் என்று மக்காவாசிகள் அஞ்சினார்கள்.

இவர்களது அச்சத்தைப் போக்கும் விதமாகவே இவ்வசனத்தில் "நீங்கள் வறுமையை அஞ்ச வேண்டாம்; நான் உங்களைச் செல்வந்தர்களாக்குவேன்' என்று இறைவன் புறத்திலிருந்து உத்தரவாதம் அளிக்கப்பட்டது.

இணை கற்பிப்போர் கஅபாவுக்கு வரக் கூடாது என்ற கட்டளைக்குப் பின்னர், இறைவன் வாக்களித்தது போல் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றனர். முன்பிருந்ததை விடப் பன்மடங்கு அதிகமாகப் பயணிகள் கஅபாவுக்கு வரலாயினர். மக்காவாசிகளின் செல்வநிலையும் உயர்ந்து இந்த முன்னறிவிப்பு நிறைவேறியது. அந்த நிலை இன்றும் நீடித்து திருக்குர்ஆன் இறைவேதமே என்பதை உலகுக்கு அறிவித்து கொண்டிருக்கிறது.

(இது போன்ற, குர்ஆனின் நடந்தேறிய அனைத்து முன்னறிவிப்புகள் பற்றி விரிவாக அறிந்து கொள்ள  பி.ஜே அவர்களின் திருக்குர்ஆன் மொழிபெயர்ப்பைக்  காணவும்)

இப்போது இரண்டையும் ஒப்பிட்டுப் பாருங்கள்.

பைபிள் செய்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றும் பொய்த்துப் போய் விட்டது.

குர்ஆன் செய்த முன்னறிவிப்புகள் ஒவ்வொன்றும் உண்மையாகியுள்ளது.

இந்த இரண்டையும் ஒப்பிட்டுப் பார்க்கும் அறிவுஜீவிகள் யாவரும் பைபிள் இறைவேதம் அல்ல என்பதையும் திருக்குர்ஆன் இறை வேதமே என்பதையும் உறுதியாக ஏற்றுக் கொள்வார்.

எத்தி வைக்கும் யுக்தி    - 3

வீரியமுள்ள பிரச்சாரம் வீழ்கின்ற தருணங்கள்

எம்.எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல்இர்ஷாத் மகளிர் இஸ்லாமியக் கல்வியகம்

மார்க்கத்தை எத்திவைப்பதற்கு வெட்கம் ஒரு தடையாக இருந்துவிடக் கூடாது என்பது பற்றிக் கடந்த இதழில் கண்டோம். மேலும் நமது பிரச்சாரங்களுக்கு இழுக்கை ஏற்படுத்தக் கூடிய பயிற்சியின்மை பற்றி இவ்விதழில் நாம் காண இருக்கின்றோம்.

சொற்பொழிவுகளில் ஏற்படும் தவறான வார்த்தைப் பிரயோகத்தினால், முறையான பயிற்சியின்மையினால் சிலரது பிரச்சாரம் சில நேரங்களில் எதிர்மறையான விளைவை ஏற்படுத்தி விடுகின்றது. எனவே இது குறித்து பேச்சாளர்கள் அறிந்து கொள்வதும், இவற்றில் கவனம் செலுத்துவதும் அவசியமாகும்.

உரையில் பயன்படுத்துகின்ற குர்ஆன் வசனங்களிலோ, ஹதீஸ்களிலோ தவறிழைத்து விடக் கூடாது. அதற்கேற்றாற் போல் முறையாக குர்ஆன் மற்றும் ஹதீஸ் வாசகங்களைப் பயிற்சி எடுத்த பின்னரே சொற்பொழிவாற்றுவதற்குச் செல்ல வேண்டும்.

சிலர் குர்ஆன் வசனங்களை, ஹதீஸ் என்றும் ஹதீஸ் வாசகங்களை இது குர்ஆனில் இடம் பெறுகின்றது என்றும் தவறுதலாகப் பயன்படுத்தி விடுகின்றனர்.

மேலும் குர்ஆன், ஹதீஸ் மற்றும் துஆக்களை அரபியில் பயன்படுத்தும் போது தப்பும், தவறுமாகப் பயன்படுத்தி விடுகின்றனர். இது மார்க்க அடிப்படையில் தவறாகும். பேச்சாளர்களுக்குரிய அழகும் கிடையாது

அதீ பின் ஹா(த்)திம் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கள் அருகில் உரையாற்றினார். அப்போது "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் கீழ்ப்படிந்து நடக்கின்றாரோ அவர் நேர்வழி அடைந்துவிட்டார். யார் அவர்கள் இருவருக்கும் மாறு செய்கின்றாரோ அவர் வழிதவறி விட்டார்'' என்று குறிப்பிட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நீர் ஒரு மோசமான சொற்பொழிவாளர். "யார் அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும் மாறு செய்கின்றாரோ' என்று (பிரித்துக்) கூறுவீராக!'' என்றார்கள். 

நூல்: முஸ்லிம் 1578

"அல்லாஹ்விற்கும் அவன் தூதருக்கும்' என்ற வார்த்தையை மீண்டும் பயன்படுத்தும் போது "அவ்விருவருக்கும்' என்று நபித்தோழர் பேசியதற்குத் தான் இவ்வளவு   பெரிய கண்டனத்திற்கு அவர்கள் ஆளானார்கள். இந்த இடத்தில் இவர்கள் செய்த தவறு தான் என்ன என்று உற்று நோக்கும் போது தான் அல்லாஹ்வின் அந்தஸ்தில் அல்லாஹ்வின் தூதரை வைத்துப் பயன்படுத்தி விட்டார்கள் என்ற கருத்து இதில் அடங்குகின்றது.

இந்த ஒரு சான்றே நாம் சொற்பொழிவில் எவ்வளவு கவனம் செலுத்த வேண்டும் என்பதையும், நாம் பயானில் எவ்வளவு தவறுகளைச் செய்கின்றோம் என்பதையும் சிந்திக்கத் தூண்டுகின்றது.

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது: என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீ உன் படுக்கைக்குச் செல்லும்போது தொழுகைக்காக உளூச் செய்வது போன்று உளூச் செய்து கொள். பிறகு உன் வலப் பாகத்தின் மீது சாய்ந்து படுத்துக்கொள். பிறகு இறைவா! உன்னிடம் நான் என்னை ஒப்படைத் தேன். எனது காரியத்தை உன் பொறுப்பில் விட்டுவிட்டேன். என் முதுகை உன்னளவில் சார்ந்திருக்கச் செய்தேன். உன் மீதுள்ள ஆவலிலும் அச்சத்திலும் தான் (இவற்றை நான் செய்தேன்). உன்னை விட்டும் தப்பிச் செல்லவும் உன்னை விட்டும் ஒதுங்கி விடவும் உன்னிடம் தவிர வேறு போக்கிடமில்லை. நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன். நீ அனுப்பிய உன் "நபி'யை நான் நம்பினேன்'' என்று பிரார்த்தித்துக் கொள்! (இவ்வாறு நீ பிரார்த்தனை செய்துவிட்டு உறங்கி) அந்த இரவில் நீ இறந்துவிட்டால் நீ இயற்கை நெறியில் (இஸ்லாத்தின் தூய வழியில்) ஆகிவிடுகிறாய். இந்தப் பிரார்த்தனையை உன் (இரவின்) கடைசிப் பேச்சாக ஆக்கிக்கொள்!

இந்நபிமொழியின் அறிவிப்பாளரான பராஉ (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் நபி (ஸல்) அவர்களிடம் இந்தப் பிரார்த்தனையை திரும்ப ஓதிக் காண்பித்தேன். "நீ இறக்கியருளிய உனது வேதத்தை நான் நம்பினேன்' என்ற இடத்தை அடைந்ததும் ("உன் நபியை' என்பதற்கு பதிலாக) "உன் ரசூலை' என்று (மாற்றிச்) சொல்லிவிட்டேன். (உடனே) நபி (ஸல்) அவர்கள், "இல்லை. (அவ்வாறு சொல்லாதே!) "நீ அனுப்பிய உன் நபியை நம்பினேன்' என்று சொல்'' என (எனக்குத் திருத்திச்) சொன்னார்கள்.

நூல்: புகாரி 247

நபி என்ற வார்த்தைக்கும், ரசூல் என்ற வார்த்தைக்கும் பெரிய அளவில் எந்த வித்தியாசமும் இல்லை. இரண்டுமே ஒரே பொருள் தருகின்ற இரு வார்த்தைகளாகும். ஆனாலும் கற்றுக் கொடுத்த அந்த துஆவை அப்படியே வார்த்தை பிசகாமல் பயன்படுத்துமாறு அந்த நபித் தோழருக்கு நபியவர்கள் கற்றுக் கொடுத்துள்ளார்கள். எனவே உரையில் வார்த்தைகளை பயன்படுத்தும் போது இது போன்ற தவறுகளைக் கூட நாம் செய்துவிடக்கூடாது.

எதையேனும் ஒன்றை பேசித் தான் ஆகவேண்டும் என்பதற்காக இட்டுக் கட்டப்பட்ட செய்திகளைப் பேசிவிடக் கூடாது. மேலும் சொற்பொழிவாற்றுவதற்கு முன்பு நாம் பேசுவதற்கு எடுத்துள்ள ஹதீஸ்கள் சரியான செய்தியா? அல்லது பலவீனமான செய்தியா? என்பதை ஆய்வு செய்த பிறகே சொற்பொழிவாற்ற வேண்டும்.

அரபு மூலத்துடன் வாசித்து பொருள் செய்து உரையாற்றும் ஆற்றலுள்ளவர்கள் குர்ஆன் வசன எண்ணையோ, ஹதீஸ் எண்ணையோ குறிப்பிடாமல் பேசலாம். மூலத்தை வாசித்துக் காட்டுவதால் அதில் மக்களின் நம்பிக்கைக்குப் பாதகம் ஏற்படாது.

ஆனால் அரபு மூலத்தை வாசித்துப் பொருள் செய்ய இயலாதவர்கள் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களைப் பயன்படுத்தும் போது அத்தியாய எண், மற்றும் வசன எண்களையும், ஹதீஸ்கள் எந்த நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளதோ அவற்றையும் ஹதீஸ்களின் எண்களையும் தெளிவாகக் குறிப்பிட வேண்டும். இதுவே நமக்கும், மற்ற அமைப்பினருக்கும் உள்ள வித்தியாசமாகும்.

வசன எண்களையும், ஹதீஸ் எண்களையும் நாம் தவறாகப் பயன்படுத்தினால் அது நமது உரையில் நம்பகத்தன்மையைக் கேள்விக்குறியாக்கி விடும்.

பாமர மக்களிடமும் குர்ஆன், ஹதீஸ் பற்றிய விழிப்புணர்வு ஏற்பட்டு, அவற்றுக்கான மொழிபெயர்ப்புகள் வெளிவந்துவிட்ட இந்தக் காலத்தில் நாம் கூறும் வசனத்தையோ, ஹதீஸ்களையோ உடனடியாகச் சென்று அதன் மொழிபெயர்ப்புகளில் தேடிப் பார்க்க விழைவார்கள். நாம் குறிப்பிட்ட எண்களில் அந்த வசனம் இல்லாத பட்சத்தில் நமது மொத்த உரையையும் அது சந்தேகத்திற்குரியதாக ஆக்கிவிடும்.

சொற்பொழிவாற்றும் போது நாம் சொல்கின்ற தகவல்கள் உண்மையான செய்திகள் தானா? என்பதை ஆய்வு செய்யாமல் கண்மூடித்தனமாக பேசிவிடக் கூடாது. ஏனெனில் அது வதந்தியைப் பரப்புவதாக அமைந்துவிடும்

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள் வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள்.

அல்குர்ஆன்: 4:83

மார்க்கத்தை மென்மையான முறையில் பிறருக்கு எத்திவைக்க வேண்டும்

"அவனிடம் மென்மையான சொல்லையே இருவரும் சொல்லுங்கள்! அவன் படிப்பினை பெறலாம். அல்லது (என்னை) அஞ்சலாம்'' (என்றும் கூறினான்.)

அல்குர்ஆன் 20:44

தன்னையே கடவுள் என்று கூறிக் கொண்டு தனது ஆட்சிப் பீடத்திற்கு எவரும் வந்துவிடக்கூடாது என்பதற்காக பனூ இஸ்ரவேலர்களின் ஆண் பிள்ளைகளைக் கொன்று குவித்து, அவர்களை அடிமைப்படுத்தி, சித்ரவதை செய்து கொண்டிருந்த கொடுங்கோல் மன்னனான பிர்அவ்னிடம் கூட மென்மையான முறையில் எடுத்துச் சொல்லுங்கள் என்றே மூஸா நபியவர்களுக்கு இறைவன் கட்டளையிடுகின்றான்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு கிராமவாசி எழுந்து பள்ளிவாசலுக்குள் சிறுநீர் கழித்துவிட்டார். உடனே மக்கள் அவரைக் கண்டித்தனர். நபி (ஸல்) அவர்கள் "அவரை விட்டுவிடுங்கள்; அவர் கழித்த சிறுநீர் மீது ஒரு வாளித் தண்ணீரை ஊற்றிவிடுங்கள். நீங்கள் நளினமாக எடுத்துச் சொல்லக் கூடியவர்களாக அனுப்பப் பட்டுள்ளீர்கள். கடினமாக எடுத்துச் செல்லக் கூடியவர்களாக நீங்கள் அனுப்பப்படவில்லை'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி 220

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாதம் அல்லது இருபத்தொன்பது நாட்கள் தம் துணைவியரிடமிருந்து விலகியிருந்தார்கள். பிறகு "நபியே! உங்கள் துணைவியரிடம் கூறுங்கள்'' என்று தொடங்கி, "உங்களிலுள்ள நல்லவர்களுக்காக மகத்தான நற்பலனை அல்லாஹ் தயார் செய்துள்ளான்'' என்று முடியும் (33:28,29) இந்த வசனங்கள் அவர்களுக்கு அருளப்பெற்றன. இதையடுத்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரம்பமாக ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று, "ஆயிஷா! நான் உன்னிடம் ஒரு விஷயத்தை முன்வைக்க விரும்புகிறேன். அது தொடர்பாக நீ உன் பெற்றோரிடம் ஆலோசனை கேட்காத வரை அவசரப்பட்டு (எந்த முடிவுக்கும் வந்து)விடக் கூடாது என விரும்புகிறேன்'' என்று கூறினார்கள். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "அது என்ன, அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த (33:28ஆவது) வசனத்தை ஓதிக் காட்டினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! உங்கள் (உறவைத் துண்டிக்கும்) விஷயத்திலா நான் என் பெற்றோரிடம் ஆலோசனை கேட்க வேண்டும்? இல்லை! நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் மறு உலகத்தையுமே தேர்ந்தெடுக்கிறேன்'' என்று சொல்லிவிட்டு, "நான் கூறியதைத் தாங்கள் மற்ற துணைவியரில் எவரிடமும் தெரிவிக்க வேண்டாமென உங்களைக் கேட்டுக் கொள்கிறேன்'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்களில் எவரேனும் என்னிடம் (நீ சொன்னதைப் பற்றிக்) கேட்டால் நான் அவர்களிடம் அதைத் தெரிவிக்காமல் இருக்க மாட்டேன். அல்லாஹ் என்னைக் கடினமான போக்கு உள்ள வனாகவோ, எவரையும் வழிதவறச் செய்பவனாகவோ அனுப்பவில்லை. மாறாக, (இறை நெறியை) எளிதாக்கிச் சொல்லும் ஆசானாகவே என்னை அனுப்பியுள்ளான்'' என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 2946

நன்மை மற்றும் சொர்க்கத்தின் பக்கம் ஆர்வமூட்டி மக்களின் தவறுகளைத் திருத்த வேண்டுமே தவிர அவர்களைப் பயமுறுத்தி மார்க்கத்தை விட்டுமே விரண்டு ஓடச் செய்துவிடக் கூடாது

அபூ புர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும், முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள், "யமன் இரு மாகாணங்களாகும்'' என்று சொன்னார்கள். பிறகு, "(மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி கூறுங்கள். வெறுப்பேற்றி விடாதீர்கள்'' என்று (அறிவுரை) கூறினார்கள்.

நூல்: புகாரி 4341

தர்மம் செய்தல், மென்மையைக் கடைபிடித்தல் போன்ற நம் செயல்களாலும் மார்க்கத்தைப் பிறருக்கு எத்திவைக்கலாம். ஏனெனில் நபிகளாரின் செயல்களினாலும் பலர் இஸ்லாத்தை ஏற்றனர்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (வந்து) இரு மலைகளுக்கிடையே இருக்கும் (அளவுக்கு அதிகமான) ஆடுகளை (நன்கொடையாகக்) கேட்டார். நபி (ஸல்) அவர்கள் அவற்றைக் கொடுத்தார்கள். அவர் தம் சமுதாயத்தாரிடம் சென்று, "என் மக்களே! நீங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மத் அவர்கள் வறுமையை அஞ்சாமல் தாராளமாக நன்கொடைகள் வழங்குகிறார்'' என்று கூறினார்.

நூல்: முஸ்லிம் 4630

நம்முடைய செயல்கள் இஸ்லாம் காட்டித் தந்த அடிப்படையில் சரியான முறையில் இருக்குமானால் அதைப் பார்த்து முஸ்லிமல்லாத மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள முன்வருவார்கள்.

ஒரு மனிதர் உலக ஆதாயத்திற்காக இஸ்லாத்தை ஏற்றிருந்தாலும், இஸ்லாத்தைத் தழுவிய சிறிது காலத்திற்குள் அவருக்கு இஸ்லாம் இந்த உலகத்தையும் அதிலிருப்பவற்றையும் விட மிகவும் உவப்பானதாக ஆகிவிடும்.

அல்லாஹ்வின் தூதருடைய நடவடிக்கைகளைப் பார்த்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட சுமாமா (ரலி) அவர்களின் சம்பவத்தை இங்கு குறிப்பிடுவது மிகப் பொருத்தமாகும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "நஜ்த்' பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் "பனூ ஹனீஃபா' குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, "(உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே?'' என்று கேட்டார்கள். அவர், "நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொல்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள்'' என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்தபோது அவரிடம், "ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியதுதான்: நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள்'' என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்தபோது, "நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே!'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், "நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன்'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள்'' என்று சொன்னார்கள். உடனே ஸுமாமா, பள்üவாசலுக்கு அருகில் இருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்துவிட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை' என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், "முஹம்மது, அல்லாஹ்வின் தூதர்' என்றும் நான் உறுதி கூறுகிறேன்'' என்று மொழிந்துவிட்டு, "முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களுடைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்று வரை) உங்கள் மார்க்கத்தை விட என் வெறுப்புக்குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர்'' என்று சொல்லிவிட்டு, "மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ராச் செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்?'' என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், "நீ மதம் மாறிவிட்டாயா?'' என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், "இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்லிமாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது'' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி 4372

உணவளிப்போம்!  உயர்வு பெறுவோம்!

முஹம்மது ஒலி, எம்.ஐ.எஸ்.சி.

மனிதர்கள் இறைவனால் படைக்கப்பட்டாலும் இந்தப் படைப்புகளில் பொருளாதார ரீதியில் உயர்வு, தாழ்வு இருக்கத்தான் செய்கிறது. இந்த ஏற்றத்தாழ்வுகளின் மூலம் இறைவன் மனிதர்களில் ஒருவர் மற்றவர்களுக்கு உதவக்கூடிய மனிதாபிமானத்தைத் தான் நம்மிடம் எதிர்பார்க்கிறான்.

பொருளாதாரத்தில் நல்ல நிலையில் இருப்பவர்கள் கூட இயற்கைச் சீற்றங்களினால் அனைத்தும் இழந்து ஏழைகளாக மாறிவிடுகின்றனர். இந்த நேரத்தில் நம்மிடம் உதவக் கூடிய நல்லுள்ளத்தை இறைவன் எதிர்பார்க்கிறான்.

சமீபத்தில் தமிழகத்தில் பரவலாகப் பெய்த கனமழையின் காரணமாக சென்னை, கடலூர் போன்ற சில மாவட்டங்கள் அதிகளவில் பாதிக்கப்பட்டன. அங்கு வசிக்கும் மக்களின் வீடுகள் நீரில் மிதந்தன. மின்சாரம் துண்டிக்கப்பட்டது. மக்களின் இயல்பு வாழ்க்கையே முடங்கிப் போனது. மக்கள் தங்களின் அத்தியாவசியத் தேவைக்காக வீதியில் இறங்கிப் போராடக்கூடிய நிலை ஏற்பட்டது. இதில் தமிழக அரசு தன்னால் இயன்ற சில உதவிகளைத் தான் செய்தது.

ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதுபோன்ற நிலையில் மனிதர்கள் எவ்வாறு நடக்க வேண்டும் என்பதில் அழகிய முறையில் நமக்கு வழிகாட்டியுள்ளது.

இஸ்லாத்தில் சிறந்த செயல்

இஸ்லாம் மார்க்கம் மனித வாழ்க்கைக்குத் தேவையான பல்வேறு கருத்துகளைக் கூறினாலும் அதில் சிறந்ததாக பசித்தோருக்கு உணவளிக்கும் செயலைக் குறிப்பிடுகிறது. நாம் மட்டும் உண்டு கழித்து சுகபோகத்தில் வாழக்கூடிய சுய நலத்தை நமக்குக் கற்றுத் தரவில்லை.

இது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறும்போது,

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "இஸ்லாமி(யப் பண்புகளி)ல் சிறந்தது எது' எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(பசித்தோருக்கு) நீர் உணவளிப்பதும் நீர் அறிந்தவருக்கும் அறியாதவருக்கும் சலாம் (முகமன்) கூறுவதுமாகும்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), 

நூல்: புகாரி 12

ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்

''ஏழைகளின் சிரிப்பில் இறைவனைக் காணலாம்'' - இது மனிதர்கள் சொல்லும் பழமொழி (இறைவனை இவ்வுலகில் யாரும் காண முடியாது என்பது இஸ்லாத்தின் ஆழமான நம்பிக்கை). ஆனால் இதன் சிறப்பை உணர்ந்து மக்கள் நடப்பது போல் தெரியவில்லை. ஆனால் இஸ்லாம் மார்க்கம் இதன் சிறப்பை அழகிய முறையில் எடுத்துரைக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), "ஆதமின் மகனே! (மனிதா!) நான் நோயுற்றிருந்தபோது என்னை உடல்நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)?'' என்று கேட்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல்நலம் விசாரிப்பேன்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனை உடல்நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய்'' என்று கூறுவான். மேலும் அல்லாஹ், "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை'' என்பான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்துகொள்: அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான். மேலும் "ஆதமின் மகனே! (மனிதா!) நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை'' என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், "என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்?'' என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், "என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்: அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய்'' என்று கூறுவான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: முஸ்லிம் 5021

உணவளிக்காதவன் நரகம் செல்வான்

மறுமையில் நரகம் செல்வதற்குரிய கெட்ட செயல்களை இறைவன் தன் திருமறையில் பல இடங்களில் கூறியுள்ளான். அதில் மறுமையில் சொர்க்கவாசிகள், நரகவாசிகளிடம் கேட்கும் சில கேள்விகளும் அடங்கும்.

இது பற்றி இறைவன் கூறும்போது,

அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் "உங்களை நரகத்தில் சேர்த்தது எது?'' என்று விசாரிப்பார்கள். நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை'' எனக் கூறுவார்கள். (வீணில்) மூழ்கியோருடன் மூழ்கிக் கிடந்தோம். தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதி வந்தோம். உறுதியான காரியம் (மரணம்) எங்களிடம் வரும் வரை'' (எனவும் கூறுவார்கள்).

அல்குர்ஆன் 77:42-47

மறுப்போரின் பண்பு

இறைவனை மறுப்போர் எப்படி இவ்வுலக வாழ்வில் நடப்பார்கள் என்பதற்கு இறைவன் பல பண்புகளை திருமறையில் கூறியுள்ளான். இந்தப் பண்புகள் முஸ்லிம்களாகிய நமது வாழ்க்கையில் வராமல் இருப்பதற்கு அதிகக் கவனத்தோடு வாழ்வது நம் அனைவரின் பொறுப்பாகும்.

இது குறித்து இறைவன் தன் திருமறையில் கூறும்போது,

அல்லாஹ் உங்களுக்கு வழங்கியதிலிருந்து (நல்வழியில்) செலவிடுங்கள்! என்று அவர்களிடம் கூறப்படும் போது "(இல்லாதவருக்கு) நாங்கள் உணவளிக்க வேண்டுமா? அல்லாஹ் நாடியிருந்தால் அவர்களுக்கு உணவளித்திருப்பானே! தெளிவான வழிகேட்டிலேயே நீங்கள் இருக்கிறீர்கள்'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் நம்பிக்கை கொண்டோரிடம் கூறுகின்றனர்.

அல்குர்ஆன் 36:47

உணவளிக்கத் தூண்டாதவனின் நிலை

பசித்தோருக்கு உணவளிப்பது என்பது பொருளாதாரத்தில் சிறந்து விளங்கக்கூடியவர்களும், நடுத்தரத்தில் இருப்பவர்களும் செய்ய வேண்டிய அவசியமான பண்பாகும். ஆனால் பொருளாதாரத்தில் கீழ் நிலையில் இருப்பவர்களால் இந்தக் காரியத்தைச் செய்ய முடியாவிட்டாலும் பிறரிடத்தில் எடுத்துக் கூறியாவது பசித்தோரின் பசி போக்கப் பாடுபட வேண்டும்.

இந்தக் கருத்தில் இறைவன் பல வசனங்களை தன் திருமறையில் கூறியுள்ளான்.

புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரிய வில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்).  அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவும் இல்லை.

அல்குர்ஆன் 69:25-34

அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள். அவ்வாறில்லை! பூமி தூள் தூளாக நொறுக்கப்படும் போது, வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது, அந்நாளில் நரகம் கொண்டு வரப்படும். அந்நாளில் தான் மனிதன் (உண்மையை) உணர்வான். (அப்போது) இந்தப் படிப்பினை எப்படிப் பயன் தரும்?

அல்குர்ஆன் 89:17-23

தீர்ப்பு நாளைப் பொய்யெனக் கருதியவனைப் பார்த்தீரா? அவன் அனாதையை விரட்டுகிறான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

அல்குர்ஆன் 107:1-3

நபிகளாரிடம் முன்மாதிரி

அகிலத்தாருக்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங்களிலும் முன்மாதிரியாக இருப்பது போல் ஏழைகளுக்கு உணவளிக்கும் விஷயத்திலும் முன்மாதிரியாகத் திகழ்ந்துள்ளார்கள். தன்னிடத்தில் உணவளிக்க ஏதும் இல்லாதிருந்த போதும் கூட பிறரிடம் எடுத்துக் கூறி மற்றவர்களின் பசி போக்க அதிக முனைப்பு காட்டினார்கள்.

இதனைப் பின்வரும் செய்தி நமக்குத் தெளிவுபடுத்துகிறது.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்களிடம் சொல்-அனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?''... அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?''... என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று சொன்னார்.

அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று சொன்னார்.

அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாளியான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்

...அல்லது வியப்படைந்தான்'' என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், "தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்'' என்னும் (59:9ம்) வசனத்தை அருளினான்.

நூல்: புகாரி 3798

மேலே குறிப்பிடப்பட்ட  செய்திகள் அனைத்தும் மற்றவர்கள் பசியோடிருக்க நாம் மட்டும் உண்டு கழித்து சுயநலத்தோடு வாழ்வதை இஸ்லாம் விரும்பவில்லை என்பதைத் தெளிவாகக் குறிப்படுகிறது. இத்தகைய செய்திகளை உணர்ந்து பொது நலத்துடன் வாழ்ந்து இஸ்லாத்தின் சிறப்புத் தன்மையை அனைத்து மக்களுக்கும் எடுத்துக் காட்டுவது நம் அனைவரின் கடமையாகும்.

இணை கற்பித்தல்                       தொடர்: 36

இறந்த பிறகு அற்புதம் செய்ய முடியுமா?

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

அற்புதங்கள் நபிமார்களுக்கு மட்டுமல்லாமல் மற்ற மனிதர்களுக்கும் நடக்கும் என்பதற்குப் பல சான்றுகளைப் பார்த்தோம்.

நபிமார்கள் அல்லாத வேறு யாராவது நான் அற்புதங்கள் செய்யும் ஆற்றல் உள்ளவன் என்று சொன்னால் அது பொய்யாகத் தான் இருக்கும். நபிமார்கள் கூட தாங்களாகவே அற்புதங்களைச் செய்ய  முடியாது. அல்லாஹ் நாடினால், நபிமார்கள் மூலமாக அற்புதங்களை நிகழ்த்திக் காட்டுவான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும்.

எந்த ஒரு அற்புதத்தையும் நான் இப்போது இந்த மாதிரியாக செய்து காட்டப் போகிறேன் என்று சொல்லிவிட்டு அந்த அற்புதத்தைச் செய்கின்ற ஆற்றலை இறைவன்  நபிமார்களுக்குத் தான் வழங்கியிருக்கிறான். அவர்களைத் தவிர்த்து வேறு யாருக்கும் இந்த ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை.

மற்றபடி நல்லவர்களுக்கும் கெட்டவர்களுக்கும் உலக வாழ்க்கையில் சில அதிசயங்கள் நடக்கும். ஆனால் அந்த அதிசயங்களை அவர்கள் சொல்லி வைத்து செய்வது கிடையாது. அவர்கள் அறியாமலேயே அது நடக்கும். இவ்வாறு நடக்கப் போகின்றது என அவர்களுக்கே தெரியாது. இது தான் இரண்டிற்கும் உள்ள வித்தியாசம்.

அடுத்ததாக நாம் கவனத்தில் கொள்ள வேண்டிய முக்கியமான விஷயம், இந்த அற்புதங்களெல்லாம் அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் நிகழும்.

அற்புதங்களை நபிமார்கள் செய்வதாக இருந்தாலும் சரி, மனிதர்களுக்கு அவர்களிடமிருந்தே அவர்கள் அறியாமலே அல்லாஹ் வெளிப்படுத்துவதுகின்ற அற்புதங்களாக இருந்தாலும் சரி! இவை அனைத்துமே அவர்கள் உயிருடன் இருக்கும் போது தான் செய்ய முடியும். அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முடிந்து விடுகிறது.

ஆனால் நம் சமுதாய மக்கள், அவ்லியாக்கள் உயிருடன் இருக்கும் போதும், மரணித்த பிறகும் அவர்களிடமிருந்து அற்புதங்கள் நிகழும் என்று எண்ணிக் கொண்டிருக்கிறார்கள்.

அதிலும் குறிப்பாக, அவர்கள்  உயிருடன் இருக்கும் போது செய்த அற்புதங்களை விட இறந்த பின்னர் தான் அவர்களுக்கு  அதிகமாக அற்புதங்கள் செய்யும் ஆற்றல் பெற்றதாக நினைக்கிறார்கள். உயிருடன் இருக்கும் போது நாம் செய்வதை அறியாத அவ்லியாக்கள் இறந்த பிறகு நாம் செய்வதை மட்டுமல்ல, உலகில் எங்கு எது நடந்தாலும் அனைத்தையும் அறிகிறார் என்று நம்புகின்றனர்.

உயிருடன் இருக்கும் போது நபிமார்களைத் தவிர வேறு யாருக்கும் அற்புங்கள் செய்யும் ஆற்றலை அல்லாஹ் வழங்கவில்லை. அதே நேரத்தில் நபிமார்களாக இருந்தாலும் எந்தவொரு மனிதர்களாக இருந்தாலும் இறந்த பிறகு அற்புதங்கள் செய்ய முடியுமா? அல்லது அவர்களிடமிருந்து அற்புதங்கள் நிகழுமா என்றால் நிகழாது. அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள  வேண்டும்.

நபிமார்களாக இருந்தாலும் இறந்த பிறகு உலகத்தில் நடக்கக்கூடிய எதையும் அவர்கள் அறிய மாட்டார்கள் என்பதற்குக் குர்ஆனில் உள்ள பல வசனங்கள்  சான்றாக அமைகின்றன. அவற்றை நாம் ஒவ்வொன்றாக பார்ப்போம்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்.

(அல்குர்ஆன் 7.194)

அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். உலகில் உள்ள அனைத்து மக்களும் ஒன்று சேர்ந்து ஒரே நேரத்தில் தங்களுடைய கோரிக்கையை வைத்தாலும் அவன் அத்தனை தேவைகளையும் ஒரு வினாடியில் நிறைவேற்றக் கூடியவன். அனைவரையும் அல்லாஹ் தான் படைத்தான். அவ்லியாக்கள் என்று இவர்கள் நினைக்கும் அவர்களையும் அல்லாஹ் தான் படைத்தான். அனைவரும் அவனது அடிமைகளே!

அவனல்லாத மற்றவர்கள் யாராக இருந்தாலும், அவர்கள் நமது தேவைகளை நிறைவேற்றுவது இரண்டாவது விஷயம். முதலில் நாம் அவர்களை அழைத்தால் அதைச் செவியேற்க கூட அவர்களுக்கு சக்தி இல்லை. அப்படியே செவியேற்றாலும் அதற்கு பதிலளிக்கவும் முடியாது என்று சொல்லிக் காட்டுகிறான்.

நாம் இவர்களிடத்தில் கேட்பது என்னவென்றால், தர்ஹாக்களில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு சக்தி, ஆற்றல் இருக்கிறது என்று நீங்கள் வாதிப்பது உண்மையானால் அல்லாஹ் விடக்கூடிய இந்த அறைகூவலை ஏற்கத் தயாரா?

அவர்கள் செவியேற்பார்கள் என்றால் தர்காவிற்குச் சென்று அவர்களை அழையுங்கள்? அவர்கள் உங்களுக்குப் பதிலளிக்கின்றார்களா என்று பார்ப்போம். நீங்கள் உங்களுக்குத் தேவையான ஏதாவது ஒரு பொருளை அவர்களிடத்தில் கேளுங்கள். அவர்கள் உங்களுக்கு கப்ரில் இருந்து கொண்டே உங்களுடைய கையில் நீங்கள் கேட்ட பொருளை கொண்டு வந்து தரட்டும். இந்த மாதிரி உலகத்தில் எங்காவது யாருக்காவது நடந்திருக்கிறதா? என்று ஒரு செய்தியை நீங்கள் காட்ட முடியுமா?

இவ்வாறு செய்து காட்டி, நீங்கள் உண்மையாளர்கள், உங்களுடைய கடவுள்களும் உண்மையானது என்று நிருபிக்கத் தயாரா?

இதை நீங்கள்  ஒருபோதும் செய்து காட்ட முடியாது என்று அல்லாஹ் உறுதியாகக் கூறிவிட்டான்.

மேலும், இன்னொரு வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான்,

தூதர்களை அல்லாஹ் ஒன்று திரட்டும் நாளில் உங்களுக்கு என்ன பதிலளிக்கப்பட்டது? என்று கேட்பான். எங்களுக்கு (இது பற்றி) எந்த அறிவும் இல்லை. நீயே மறைவானவற்றை அறிபவன் என்று அவர்கள் கூறுவார்கள்.

(அல்குர்ஆன் 5:109)

அல்லாஹ் ஒவ்வாரு சமுதாயத்திற்கும் அந்தந்த சமுதாயத்தில் உள்ளவர்களைத் தேர்ந்தெடுத்து இறைச் செய்தியை எடுத்துச் சொல்லக் கூடிய தூதராக அனுப்புகிறான். அவ்வாறு அவர்கள் உயிருடன் வாழும் காலத்தில் யார் யார் தன்னுடைய கொள்கையை ஏற்றுக் கொண்டார்கள்? யார் யார் ஏற்றுக் கொள்ளவில்லை? கொள்கையை ஏற்றுக் கொண்ட மாதிரி நடித்தவர்கள் (முனாஃபிக்குள்) யார்? என்னென்ன துன்பங்கள் ஏற்பட்டது? அந்த துன்பங்களின் போது உறுதியாக இருந்தவர்கள் யார்? விரண்டோடி யவர்கள் யார்? இந்தக் கொள்கையை எதிர்த்த எதிரிகள் யார்? என்பதை தங்களது சக்திக்கு உட்பட்டு நபிமார்கள் அறிந்து வைத்திருந்தனர். சிலவற்றை அல்லாஹ்வே அறிவித்துக் கொடுத்தான்.

ஆனால் அந்த நபிமார்கள் இறந்த பிறகு இவற்றில் எந்த ஒன்றையும் அறிந்து வைத்திருக்கவில்லை. அந்த ஆற்றல் வழங்கப்படவில்லை. அல்லாஹ் மறுமை நாளில் அனைத்து நபிமார்களிடத்திலும் கேட்பது, நீங்கள் இறந்த பிறகு உங்களுடைய சமுதாய மக்களின் நிலை என்ன? என்பதுதான். அதற்கு அவர்கள், இறைவா! அதைப் பற்றிய அறிவு எங்களுக்கு கிடையாது. நாங்கள் எதையும் அறிந்திருக்கவில்லை. யார் யார் கொள்கையில் இருந்தார்கள்? யார் கொள்கையை விட்டு வெளியேறினார்கள்? அல்லாஹ்வை மட்டும் வணங்கியவர்கள் யார்? சிலைகளை வணங்கியவர்கள் யார்? என்பதை நாங்கள் உயிருடன் இருக்கும் போது தான் அறிந்து வைத்திருந்தோம். இறந்த பிறகு அதை அறியக்கூடிய ஆற்றல் உனக்கு தான் இருக்கின்றது என்று சொல்லி விடுவார்கள்.

ஆக, நபிமார்களாகவே இருந்தாலும் அவர்கள் மரணித்து விட்டால் அவர்களுக்கும் இந்த உலகத்திற்கும் உள்ள தொடர்பு முறிந்து விடுகிறது. அதைத் தான் மேற்கண்ட வசனம் நமக்குத் தெளிவுபடுத்துகின்றது.

மேலும் இறைவன் சொல்லிக் காட்டுகிறான்.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணை கற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

(அல்குர்ஆன் 35:14)

அவ்லியாக்கள் என்ற பெயரில் சமாதிகளில் அடக்கம் செய்யப்பட்டவர்களுக்கு அத்தனையும் அறியக் கூடிய ஆற்றல், கோரிக்கைகளை நிறைவேற்றக்கூடிய ஆற்றல் இருக்கிறது என்றால், எதற்காக மறுமையில் இறைவனிடத்தில் அவர்கள் மறுக்க வேண்டும்?

நீங்கள் அவ்லியாக்களை (?) அழைத்ததை, அவர்களிடத்தில் பிரார்த்தித்ததை, கோரிக்கைகளை முன் வைத்ததை ஏன் மறுக்க வேண்டும்? அவர்களுக்கு ஆற்றல் உண்டு என்றால் அல்லாஹ்விடத்தில், "எனக்கும் உன்னைப் போன்ற ஆற்றல், வல்லமை இருக்கிறது. உன்னிடத்தில் அவர்கள் கேட்பதை நீ கொடுப்பது போன்று என்னாலும் கொடுக்க முடியும்' என்று சொல்லியிருக்க வேண்டியது தானே!

ஆனால், மேற்கண்ட வசனத்தில் "நான் யாரையும் என்னை வணங்குமாறு சொல்லவில்லை. என்னை அழைக்குமாறு, என்னிடத்தில் கோரிக்கைகளை முன் வைக்குமாறு சொல்லவில்லை. நாங்கள் அதனை மறுத்து விடுகின்றோம்' என்று அந்த அவ்லியாக்கள் சொல்லி விடுவதாக இறைவன் கூறிக் காட்டுகின்றான்.

அவர்கள் இறந்த பிறகு இந்த உலகத்தில் நடந்தது எதுவும் தெரியாது என்ற காரணத்தினால் தான் இந்த மக்கள் செய்த இணைவைப்புக் காரியங்களை அல்லாஹ்விடம் மறுத்து விடுகின்றார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

தொடர்: 8             ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

நோய் நிவாரணம் தருவது யார்?

எம். ஷம்சுல்லுஹா

உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாத்திமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர்களுக்கு ஸலாம் சொல்கின்றேன். ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் (என்ற இந்தக் கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.

இவை ஹுஸைன் மவ்லிதில் இடம்பெறும் வரிகளாகும்.

பொதுவாக எந்த ஒரு மவ்லிதாக இருந்தாலும் அந்த மவ்லிதின் ஆரம்ப வரிகள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி அவனைப் பாராட்டியும் அதன் பின் முஹம்மது (ஸல்) அவர்கள் மீது ஸலாம், ஸலவாத்துச் சொல்லியும் ஏகத்துவத்தின் அடிப்படையில் தான் அருமையாகத்  துவங்கும். இவற்றைப் படிக்கவும், பாடவும் ஆரம்பித்தவர், இவை தன்னை ஏகாந்த லயிப்பிலும், ரசிப்பிலும் ஏகத்துவ உலகத்திற்கு இழுத்துச்  செல்வதைப் போன்ற ஒரு ஸ்பரிசத்தை உணர்வார்.

அதன் பிறகு வரக்கூடிய இணை வைப்புப் பாடல் வரிகள் முன்னால் சொன்ன ஏகத்துவக் கருத்துகளை  அப்படியே தலைகீழாகப் புரட்டி விடும். அப்போது, இணைவைப்பு என்னும் இருட்டறைக்கு, குமட்டலைத் தருகின்ற பிண வாடை வீசும் பிணக் கிடங்கிற்கு நாம் வந்து விட்டோம் என்று உணர்வார். அந்த அவலத்தையும் அலங்கோலத்தையும் தான் இப்போது நாம் இந்தக் கவிதை வரிகளில் பார்க்கின்றோம்.

உயர் நாயனின் அருள், தூதர், குடும்பத்தார், தோழர்கள், ஃபாதிமாவின் பிள்ளைகள் மீது உண்டாகட்டுமாக! நான் அவர்களுக்கு ஸலாம் சொல்கின்றேன். இந்தக் கவிதை வரிகளில் எந்தப் பிரச்சனையும் இல்லை.  இதன் பின்னால் வருகின்ற விஷயம் தான் தவ்ஹீத் கருத்தைக் குழி தோண்டி புதைப்பதாக உள்ளது.

ஹுசைனின் ஆன்மாவைப் போற்றுகின்றேன். வேண்டுதல் முன் வைக்கப்படுபவரான அவரிடம் தான் இப்னு அஹ்மத் என்ற (இந்த கவிஞனின்) நோய்க்கு நிவாரணம் இருக்கின்றது.

இதை எழுதிய காயல்பட்டினத்தைச் சார்ந்த முஹம்மது பின் அஹ்மத் என்பவர்  "வேண்டுதல் வைக்கப் படக்கூடியவர் ஹுசைன் (ரலி)' என்று கூறுகின்றார்.

முதலில் இந்தக் கவிஞன் செய்கின்ற குற்றம், இறந்து போன ஹுசைனிடம் உதவி தேடுவதாகும். இது மாபெரும் இணை வைப்பாகும்.,

ஏனெனில், எல்லாம் வல்ல அல்லாஹ் தனது திருக்குர்ஆனில்

அல்லாஹ்வையன்றி யாரை அழைக்கிறார்களோ அவர்கள் எதையும் படைக்க மாட்டார்கள். அவர்களே படைக்கப்படுகின்றனர். அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்" என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:20, 21

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற்பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

அல்குர்ஆன் 35:14

இந்த வசனங்கள் இன்னும் இதே கருத்தில் அமைந்த வசனங்கள் மிகத் தெளிவாக இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று கூறுகின்றன. இந்த அடிப்படையில், இறந்தவர்கள் செவியுறுகின்றார்கள் என்று இந்தக் கவிஞர் நம்புவது வல்ல அல்லாஹ்வுக்கு வைக்கின்ற முதல் இணை வைப்பாகும்.

வேண்டுதல் முன் வைக்கப்படுபவர் ஹுசைன் என்ற வார்த்தையை இவர் பயன்படுத்துகின்றார். ஆனால், வல்ல நாயன் தனது திருக்குர்ஆனில்,

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும் போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக அல்குர்ஆன் 2:186) என்று கூறுகின்றான்.

இந்த வசனத்தில் அடியார்கள் தன்னிடம் தான் பிரார்த்திக்க வேண்டும் என்று அல்லாஹ் கூறுகின்றான்.

"பிரார்த்தனை தான் வணக்கமாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு "என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்'' (40:59) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர்: நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல்: திர்மிதீ 3170, 2895, 3294

இந்த ஹதீஸில், நபி (ஸல்) அவர்களும், துஆ ஒரு வணக்கமாகும் என்று குறிப்பிடுகின்றார்கள்.

ஆனால், இவரோ ஹுசைனிடத்தில் பிரார்த்திக்க வேண்டும் என்று கூறுகின்றார். இந்த அடிப்படையில் இவர் இறைவனுக்கு வைக்கின்ற இரண்டாவது இணை வைப்பாகும்.

அடுத்து, நோய் நிவாரணம் ஹுசைனிடம் தான் இருக்கின்றது என்று கூறுகின்றார். இது அடுத்த இந்தக் கவிஞர் செய்கின்ற அடுத்த இணை வைப்பாகும்.

மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.

இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.

இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

(அல்குர்ஆன் 26:80)

நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயைத் தாமே நீக்கிக் கொள்ள வில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பிய போது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.

எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன் 21:83)

துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 6:17)

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக்கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்

(அல்குர்ஆன் 10:49)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:38)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள்.

நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ்களிலிருந்து நாம் அறியலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், "நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால் அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புகாரி 2839, 4423

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். "அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா' என்று கூறினேன். அதற்கவர்கள் "ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)

நூல்: புகாரி 5648, 5660, 5667

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய்வாய்ப் பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750

பொருள்:

"இறைவா! மனிதர்களின் இரட்ச கனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!'

நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி அவர்களை நோய் விசாரிக்கச் சென்ற போது "இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு' என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5659

அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.

அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.

அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன.

நூல்: புகாரி 1248

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர் தான் விட முடிந்தது. நோயைத் நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

ஆனால் ஹுஸைன் மவ்லிதை எழுதிய இந்தக் கவிஞரோ நோய் நிவாரணம் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் இருக்கின்றது என்று கூறுகின்றார்.

திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த மவ்லிதைப் பாடுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

குடும்பவியல் தொடர்: 29

ஆண்களின் வருமானமும் அல்லாஹ்வின் அபிவிருத்தியும்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி

இஸ்லாமியக் குடும்பவியலில் ஆண்கள் நிர்வாகம் செய்யும் பொறுப்பை ஏற்றிருக்கிறார்கள் என்பதையும், பொருளாதாரப் பிரச்சனை கள் அனைத்திற்கும் ஆண்களே பொறுப்பாளர்கள் என்பதையும் இதுவரை நாம் பார்த்துள்ளோம்.

குடும்ப நிர்வாகத்தை ஏற்று வழிநடத்துகிற ஆண்கள் எந்தக் கட்டத்திலும் தங்களது மனைவிமார் களை வேலைக்கு அனுப்பி, அவர்களுக்கு இரட்டைச் சுமையை சுமத்தி, அவர்களது இயல்புக்கு மாறான சிரமங்களையும் கஷ்டங்களை யும் கொடுத்துவிடக் கூடாது. அந்தக் கஷ்டங்களை நாமே சுமந்து கொண்டு, அவர்களைச் சிறந்த முறையில் கவனிக்க வேண்டும் என்பதற்குரிய பல காரணங்களைப் பார்த்தோம்.

பொதுவாக முஸ்லிம்கள் பெண்களை வேலைக்கு அனுப்பக் கூடாது என்பதில் மற்றவர்களை விடவும் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.

ஏனெனில் இருவரின் சம்பாத்தியமும் சேர்ந்து கிடைத்தால் தற்போது வாழ்வதை விடவும் செழிப்பாக வாழலாம் என்பதே வேலைக்கு அனுப்புபவர்களின் மனநிலையாக உள்ளது. இதில் காசு பணம் சம்பாதிப்பதைத் தவிர வேறு எந்த நோக்கமும் இருப்பதாகத் தெரியவில்லை.

ஆண் போன்று இன்னொரு மடங்கு பெண்களின் சம்பாத்தியத்தின் மூலம் கிடைத்தால் சொத்து சுகங்களைச் சேர்த்துக் கொள்ளலாம், வசதிகளைப் பெருக்கிக் கொள்ளலாம் என்பதுதான் பெண்களை வேலைக்கு அனுப்புபவர்களின் அடிப்படை நோக்கமாக இருக்கிறது.

இது இஸ்லாமிய சமூகமல்லாத மற்ற மக்களுக்குரிய வழியாகும். அவர்கள் உலகப் பொருளாதாரக் கணக்குப் போடுவது அவர்களுக்குச் சரியாகத் தான் தெரியும். ஏனெனில் அவர்கள் உலகத்தையே நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே அதில் ஆச்சரியத்திற்கு ஒன்றுமில்லை.

ஆனால் முஸ்லிம்களாகிய நாம் மறுமையை நோக்கமாகக் கொண்டவர்கள். எனவே ரிஸ்க்கைத் தருகிறவன் அல்லாஹ் என்று நம்புகிறோம். ரிஸ்க் என்றால் வெறுமனே உணவு என்று மட்டும் அர்த்தம் வைத்துவிடக் கூடாது. உணவு, ஆடை, அழகு, அலங்காரம், வாகனங்கள், பண்புகள் என்று எதுவெல்லாம் மனித வாழ்க்கைக்கு அடிப்படை ஆதாரங்களாக உள்ளதோ அவை அனைத்துக்குமே ரிஸ்க் என்று சொல்லப்படும். அதை வழங்குகிற இறைவனுக்கு ராஸிக் (ரிஸ்க்கை வழங்குபவன்) என்றும் ரஸ்ஸாக் (அளவு கடந்து ரிஸ்க்கை வாரிவழங்குபன்) என்றும் அல்லாஹ் தன்னைப் பற்றி திருக்குர்ஆனில் பல இடங்களில் கூறுகிறான்.

எது பரக்கத்?

அல்லாஹ் நமக்குத் தந்த ரிஸ்க்கில் பரக்கத் என்ற மறைமுகமான அருளைத் தருகிறான் என்று நம்பிச் செயல்பட வேண்டும். நிறைய பொருளாதாரத்தைத் தந்து, அதில் நமது தேவைகள் நிறைவேறாமல் ஆகிவிட்டால், அந்த நிறைய பொருளாதாரத்தினால் எந்த நன்மையும் கிடையாது. இலட்சக் கணக்கான ரூபாய் வருமானம் வந்து, அதை விடவும் இலட்சக் கணக்கான வகையில் செலவாகிவிட்டால் அதிகமான வருமானத்தினால் எந்த நன்மையும் நமக்குக் கிடைக்கப் போவதில்லை.

பத்தாயிரம் வருமானம் வந்து, 12 ஆயிரம் செலவானால் இந்தப் பத்தாயிரத்தில் நன்மை இல்லை என்று பொருள். அதே நேரத்தில் 5000 வருமானம் வந்து 4000 ரூபாயில் நமது தேவைகள் அனைத்தும் நிறைவேற்றப்பட்டால் அதுதான் நமக்குக் கிடைத்த பெரிய நன்மை. ஏனெனில் ஆயிரம் ரூபாய் மிச்சமாகும்.

ஆக முஸ்லிம்களைப் பொறுத்த வகையில், ஆண்கள்தான் குடும்பப் பொருளாதாரத்தைச் சுமக்க வேண்டும் என்று அல்லாஹ் சொன்னதை கொள்கையளவில் ஒத்துக் கொண்டு செயல்பட்டால் அல்லாஹ் அத்தகைய ஆண்களுக்கு மறைமுகமாக அருள் செய்கிறான்.

ஆண்கள் மட்டும் வருமானத்தை ஈட்டி குடும்பத்தைப் பார்க்கிற நமது சமூகம் இருக்கிற செழிப்பைப் போன்று ஆணும் பெண்ணும் சேர்ந்து சம்பாதிக்கிற வேறு சமூகங்களில் செழிப்பு இல்லாமல் இருப்பதையும் கண்கூடாகப் பார்க்கிறோம்.

ஆணும் பெண்ணும் சம்பாதிப்பதால் சொகுசாக வாழலாம் என்று நினைக்கிறார்கள். ஆனால் அவர்களை ஆய்வு செய்து பார்த்தால் அவர்கள் பெறுகிற சம்பளத்திற்கேற்ற செழிப்பு அவர்களது வாழ்க்கையில் தெரிவதில்லை. அவர்களது வாழ்க்கையில் பல சிரமங்களைத் தான் அன்றாடம் அனுபவித்துக் கொண்டுள்ளார்கள்.

அதே நேரத்தில் முஸ்லிம் சமூகத்தை ஆய்வு செய்து பார்த்தால், பிற சமூகங்களைப் போல் பெரிய படிப்பு படித்திருக்க மாட்டார்கள். 5000, 6000 ரூபாய் மாதச் சம்பளத்திற்கு வேலை பார்ப்பவர்களாக அதிகமான முஸ்லிம்கள் இருக்கிறார்கள். இந்தச் சம்பளத்தில் தான் தானும் சாப்பிட்டு, மனைவி மக்களுக்கும் சாப்பாடு கொடுத்துக் கொண்டு, பிள்ளைகளைப் படிக்க வைத்து, மனைவிமார்களுக்கு நகை நட்டுகளெல்லாம் அணிவித்து நல்லபடியாக வைத்துள்ளார்கள்.

ஒரு நபரின் சம்பாத்தியத்திலேயே குடும்ப உறுப்பினர்களின் சாப்பாடு, ஆடைகள் உள்ளிட்ட முக்கியத் தேவைகளையெல்லாம் அல்லாஹ் நிறைவேற்றித் தருகிறான்.

தொகை அதிகமாக வந்தால் இன்னும் நன்றாக வாழலாம் என்று தப்பாக ஒரு முஸ்லிம் கணக்குப் போடவே கூடாது. தொகை கூடுதல் குறைவு என்பது விஷயமல்ல. குறைவோ, கூடுதலோ எப்படியிருந்தாலும் அல்லாஹ் அதில் பரக்கத் என்ற மறைமுக அருளைச் செய்கிறானா? என்று தான் பார்க்க வேண்டும்.

ஒரு இலட்ச ரூபாயைத் தந்து, 2 இலட்சத்திற்கு நோயையும் சேர்த்துக் கொடுத்தால் ஒரு இலட்சத்திற்கு எந்த மதிப்பும் கிடைக்காது. ஒரு இலட்சமும் தராமல், நோயும் வராமல் இருந்தால் நமக்கு மிச்சம் தான். எனவே ஒவ்வொரு முஸ்லிமும், அல்லாஹ் நமக்கு இப்படியொரு ஏற்பாட்டைச் செய்து வைத்திருக்கிறான். இதில் நமது தேவைகள் அனைத்தையும் நிறைவேற்றி வைப்பான், நம்மைச் சிரமத்தில் விட்டுவிட மாட்டான் என்று அல்லாஹ்வின் பரக்கத்தை நம்ப வேண்டும்.

இறைவனின் மறைமுக உதவி யான பரக்கத்தைப் பற்றித் தெரிந்து கொள்ள பின்வரும் உதாரணத்தைப் பார்ப்போம்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இறை மறுப்பாளர் ஒருவர் விருந்தாளியாக வந்து தங்கினார். அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஆட்டிலிருந்து பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள். அவ்வாறே கற(ந்து அவரிடம் கொடு)க்கப்பட்டது. அவர் அந்தப் பாலைப் பருகினார். பிறகு மற்றோர் ஆட்டில் பால் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். பிறகு மீண்டும் ஓர் ஆட்டில் கறக்கப்பட்டது. அதையும் பருகினார். இவ்வாறாக ஏழு ஆடுகளிலிருந்து கறக்கப்பட்ட பாலை அவர் பருகினார். மறு நாள் காலையில் அவர் இஸ்லாத்தைத் தழுவினார். அப்போது ஓர் ஆட்டில் பால் கறந்து அவருக்கு வழங்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட, அவர் அந்தப் பாலைப் பருகினார். மற்றோர் ஆட்டில் பால் கறந்து கொடுக்கும்படி உத்தரவிட்டபோது, அவரால் அதை முழுவதுமாகப் பருக முடியவில்லை. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இறை நம்பிக்கை யாளர் ஒரே குடலில் பருகுவார். இறைமறுப்பாளன் ஏழு குடல்களில் பருகுவான்'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 4189, புகாரி 5397

இன்னும் இச்செய்தி புகாரியில் 5393, 5394, 5395, 5396 யிலும் முஸ்லிமில் 4185, 4186, 4187, 4188 ஆகிய அறிவிப்புக்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இப்படி நபியவர்கள் கண்முன்னே நடந்த அதிசயத்தைப் பார்த்துவிட்டுத் தான் அல்லாஹ் முஸ்லிமுக்குச் செய்யும் மறைமுக அருளான பரக்கத்தை விளக்குகிறார்கள், ஒரு ஆட்டின் பாலிலிருந்தே முஃமினுக்கு வயிறும் நிறைந்து விடுகிறது, மனதும் போதுமாக்கிக் கொள்கிறது, அதிலிருந்து கிடைக்க வேண்டிய சத்துக்களும் சரியாகக் கிடைத்து விடுகிறது.

முஃமினல்லாதவருக்கு அதிகம் வயிறு கொள்கிற அளவுக்கு சாப்பிட்டும், மனதும் வயிறும் நிரம்பாத நிலை உள்ளது.

எனவே பரக்கத் என்ற மறைமுக அருளைத் தான் முஃமின் ஒரு குடலில் சாப்பிடுவதாகவும் மற்றவர்கள் ஏழு குடலுக்குச் சாப்பிடுவதாகவும் சொல்கிறார்கள்.

இந்த நன்மையை முஸ்லிம் சமூகம் இன்றுவரை அனுபவித்துக் கொண்டு தான் இருக்கிறது. எத்தனையோ சமூகங்கள் கணவன் வேலைக்குச் செல்வதைப் போன்று மனைவியைச் சம்பாதிப்பதற்கு அனுப்புவார்கள். இப்படிக் குடும்பத்துடன் உழைத்தும் சாதாரண நிலையில் தான் அவர்களது வாழ்க்கை இருக்கிறது. குடிசைகளிலும் ஓட்டு வீடுகளிலும்தான் இருக்கிறார்கள்.

நமது சமூகம் வெளிநாடுகளில் அற்ப சம்பளத்திற்கு இருந்தாலும் வீட்டைக் கட்டுகிறார்கள். காரை வீடுகளிலும் மாடிவீடுகளிலும் சொகுசாக வசிக்கிறார்கள். முஸ்லிமல்லாதவர்கள் ஒரு பொட்டு தங்கத்திற்குக் கூட வழியில்லாமல் இருப்பார்கள். நமது சமூதாயப் பெண்கள் காதுக்கு, மூக்குக்கு, கைகளுக்கு என்று தங்கத்தை அடுக்கிக் கொள்கிற அளவுக்கு இருக்கிறார்கள். ஆனாலும் பிற சமூக மக்களோடு ஒப்பிடுகையில் நாம் தான் மிகவும் வருமானத்தில் பின்தங்கியிருக்கிறோம். நமக்குக் கிடைக்கும் பொருளாதாரம் குறைவாக இருந்தாலும் அதற்குள்ளேயே நமது தேவைகள் நிறைவேறி, மிச்சத்தைச் சேமிக்கும் வகையில் அல்லாஹ் நமக்கு அமைத்துத் தருகிறான்.

கல்யாணத்திற்குப் பிற சமூக மக்கள் பத்தாயிரத்திற்கு நகை போட்டதைப் பெரிதாகச் சொல்வார்கள். முஸ்லிம் சமூக மக்களுக்கு கல்யாண வீட்டில் பெண் உடுத்துகிற பட்டுக்கே பத்தாயிரம் பற்றாமல் இருக்கிறது. கல்யாணப் பெண்ணுக்கு நகை போட்டால் அரைக் கிலோ, ஒருகிலோ தங்கம் என்று போடுகிறார்கள். வரதட்சணை வாங்குவதையும் கொடுப்பதையும் இந்த மார்க்கம் தடுக்கிறது. இருப்பினும் முஸ்லிம் சமூகத்தின் செழிப்பை விளங்கிக் கொள்வதற்காக இதைச் சொல்ல வேண்டியிருக்கிறது.

எனவே அதிகமான பொருளாதாரம் நமக்குக் கிடைக்கும் என்பதற்காக பெண்களை வேலைக்கு அனுப்பும் நோய் நமக்கு வந்து விடக்கூடாது என்பதைப் புரிந்து கொண்டு செயல்பட வேண்டும்.

அல்லாஹ் ஏற்படுத்திய இயற்கை மரபுக்கு மாற்றமாக பொருளாதாரத்திற்கு ஆசைப்பட்டால், மாத வருமானம் இரட்டிப்பாகக் கிடைக்கலாம். ஆனால் அதை விட அதிகமாகச் செலவாகி விடும்.

இப்படி மனைவியை வேலைக்கு அனுப்பி சம்பாதிப்பதால் அல்லாஹ் பரக்கத்தை தடுத்துவிட்டுத் தான் தருவான். கடைசியில் கணக்கைக் கூட்டிக் கழித்துப் பார்த்தால் மிச்சம் ஒன்றுமிராது. கையைப் பிடிக்கிற மாதிரித்தான் இருக்கும்.

எனவே முஸ்லிம்களைப் பொறுத்த வரை, குடும்பச் செலவுக்கான பொருளாதாரப் பொறுப்பை ஆண்களின் மீது அல்லாஹ் சுமத்தியிருப்பதினால் நாம் தான் அந்தப் பொறுப்பைச் சுமக்க வேண்டும் என்பதையும் அப்படிச் சுமந்தால் அல்லாஹ்வின் உதவியும் மறைமுகமான அருளும் இருக்கிறது என்பதையும் நம்பிச் செயல்பட்டால் எந்தக் கட்டத்திலும் நமது மனைவிமார்களை வேலைக்கு அனுப்ப வேண்டிய சூழல் வராது.

அதுபோக, நாம் உலகத்திற்காக வாழ்கின்ற சமூகம் கிடையாது. இதுவரை கடந்த இதழ்களில் கூறப்பட்டவைகள் அனைத்திலும் உலகக் கணக்கின் அடிப்படையில் பெண்களை வேலைக்கு அனுப்பி சம்பாதிக்கக் கூடாது என்பதை விளக்கியிருந்தோம்.

முஸ்லிம்கள் மறுமையை இலக்காகக் கொண்ட சமுதாயம் என்பதால் இந்த உலகத்தில் வறுமையிலும் கஷ்டத்திலும் உழன்றாலும் அதற்காக இஸ்லாமிய நெறிமுறைகளை மீறிவிடவே கூடாது.

உதாரணத்திற்கு, ஒரு குடும்பத்தில் கணவர் மட்டும் உழைக்கிறார். அவரது சம்பாத்தியத்தில் சோறு, தண்ணீர் மட்டும் தான் குடித்து வாழ முடிகிறது, மற்றபடி பெரியளவுக்குத் தேவைகளை கணவரது சம்பாத்தியத்தில் ஒன்றும் செய்யமுடியாத சூழல் இருந்தால் அதை அப்படியே பொருந்திக் கொண்டு வாழவேண்டியது தான். அவர்கள் அப்படியிருக்கிறார்கள்; இவர்கள் இப்படியிருக்கிறார்கள் என்று மற்றவர்களைப் பார்த்துப் பொறாமை கொள்ளத் தேவையில்லை.

இதற்கு மிகச் சிறந்த ஆதாரம், ஒரு முஸ்லிம் தனது வாழ்வில் அனைத்திற்கும் முன்மாதிரியாக அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை எடுத்துக் கொள்ள வேண்டும். நபிகளார் நபித்துவ வாழ்வில் வறுமையும் ஏழ்மையும் தான் நிறைந்து காணப்படுகிறது. நபிகள் நாயகத்தின் குடும்பத்தினரது ஒருநாள் உணவு ஒரு பேரீச்சம் பழம் என்ற அளவில் தான் இருந்தது. வெறும் தண்ணீரையும் பேரீச்சம் பழங்ளையும் உண்டு, பாலைப் பருகித் தங்களது வாழ்க்கையை நகர்த்தியிருக்கிறார்கள்.

சொகுசாக வாழ்வதற்காக, டீவி, மிக்ஸி, கிரைண்டர், வாஷிங்மிஷின்  போன்றவை வாங்க வேண்டும் என்பதற்காகக் குடும்பப் பெண்களை சம்பாதிக்க அனுப்பக் கூடாது. நன்றாகவும், நவீன வசதிகளோடும், சொகுசாகவும் வாழ்வதற்கு ஆண்களே மார்க்கம் அனுமதித்த வழியில் கூடுதலாக சம்பாதிப்பதற்கு, உழைப்பதற்கு முயற்சிக்கலாம். இதில் தவறேதும் கிடையாது. இன்னும் சொல்வதெனில் மார்க்கம் அதை வலியுறுத்தவே செய்கிறது.

ஆனால் மனைவியை வேலைக்கு அனுப்பித்தான் சம்பாதிக்க வேண்டும் என்ற முடிவை ஒருக்காலும் எடுத்துவிடவே கூடாது. ஏனெனில் நபிமார்களும் நபிகள் நாயகமும் அவர்களது தோழர்களும் பட்ட சிரமங்களை இன்றைய காலத்தில் நம்மில் ஒருவர் கூட நிச்சயம் அடைந்திருக்க மாட்டார். அவ்வளவு பெரிய வறுமையில் தான் வாழ்ந்துள்ளார்கள் என்பதையும் இந்தக் குடும்பவியல் தலைப்பில் புரிந்து கொள்ளவேண்டும்.

சமூக பாதிப்பு

பெண்களைச் சம்பாதிப்பதற்காக வேலைக்கு அனுப்புவதால், சமூகத்திற்கும் நாட்டுக்கும் பொருளாதார ரீதியாக பெரிய நஷ்டம் ஏற்படுகிறது. நாட்டு மக்களுக்கே நட்டம் தான். ஏனெனில் வேலையில்லாத் திண்டாட்டம் இன்று பலநாடுகளில் காணப்படுகிறது. இந்த நேரத்தில் ஒரு ஆண் வேலைக்குச் சென்றால், மனைவி மக்கள், தன் குடும்பத்தையெல்லாம் காப்பாற்றிக் கொள்கிறான். அந்தக் குடும்பத்திற்கு ஒரு வேலை என்றாகி விடுகிறது.

ஆனால் நடைமுறையில் இன்றைக்குக் கணவர் வேலைக்குச் சென்றால், தனது செல்வாக்கில் மனைவியையும் வேலைக்குச் சேர்த்து விடுகிறார். அப்படியெனில் ஒரு குடும்பத்திற்கு இரண்டு வேலையாகி விடுகிறது. இப்போது, இந்தப் பெண்ணுக்குக் கிடைத்த வேலை வேறொரு ஆணுக்குக் கிடைத்தால் அவனைக் கொண்டு ஒரு குடும்பமே நன்றாக வாழும். பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஆண்களுக்கு வேலையில்லாத் திண்டாட்டம் ஏற்படுகிறது.

ஒரு ஆண் வேலைக்குச் செல்வது ஒரு ஆணுக்கு மட்டும் உரிய வேலை கிடையாது. ஒரு குடும்பத்தின் வேலையாகும். அப்படியெனில் ஒரு ஆணுக்கு வேலை கொடுத்தால் அது ஆணுக்கும் பெண்ணுக்கும் சேர்த்துத் தான் வேலை கொடுக்கிறோம் என்றாகும். ஏனெனில் தாய், மனைவி போன்ற பெண்களைப் பார்ப்பதும் ஒரு ஆண்மகனின் வேலை தான்.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஒரு குடும்பத்திலுள்ள இருவர் வேலை செய்வார்கள். அதே நேரத்தில் இன்னொரு குடும்பத்திலுள்ள ஆணுக்கு வேலையில்லாத் திண்டாட்டமாக இருக்கும்.

அடுத்ததாக, பெண்களுக்கு இன்னும் ஒரு முக்கியமான பலவீனம் இருக்கிறது. பெண்கள் இயற்கையாகவே மாதவிடாய்க் காலத்தில் இயல்புக்கு மாற்றமாகவே இருப்பார்கள். டென்ஷனாகவும் கோபமாகவும் இருப்பதைப் பார்க்கலாம். மாதவிடாய் நேரத்தில் சாதாரண நாட்களில் இருப்பதை விடவும் அதிகமாக ஓய்வை எதிர்பார்ப்பார்கள். பெண்கள் வேலைக்குப் போகாமல் வீட்டிலேயே இருந்தார்கள் எனில் சிறிய வேலைகளைச் செய்துவிட்டு ஓய்வெடுத்துக் கொள்வார்கள்.

ஆனால் ஏதேனும் நிறுவனத்தில் வேலைக்குப் போகிற பெண்ணாக இருந்தால் மாதம் முழுவதும் எல்லா நாட்களிலும் வேலைக்குச் சென்றுதான் ஆகவேண்டும். நினைத்த நேரத்திற்கெல்லாம் ஓய்வை எடுக்க முடியாது. இந்நேரத்தில் பெண்கள் அளவுக்கு அதிகமான சுமைகளைத் தாங்கக் கூடாது என்றும் இலகுவாக வேலைகளை அமைத்துக் கொள்ள வேண்டும் என்றும் மருத்துவர்களும் உடற்கூறு ஆய்வு செய்கிற விஞ்ஞானிகளும் சொல்லத்தான் செய்கின்றனர்.

அதேபோன்று பொதுவாக பெண்கள் 45 வயதை அடைய ஆரம்பித்தால் மாதவிடாய்க்கான சுரப்பிகள் குறையத் துவங்கி ஏறத்தாழ 50 வயதுக்குள் பெரும்பாலும் மாதவிடாய் நின்றுவிடும். இந்தக் கால இடைவெளியில் உடல் ரீதியாக பல சிதைவு மாற்றங்கள் ஏற்படும். அப்போதெல்லாம் கடுமையாகக் கோபப்படுவார்கள். மாதவிடாய் நின்றதும் உடலிலுள்ள வியர்வை சுரப்பிகள் அளவுக்கு அதிகமாக சுரக்க ஆரம்பித்துவிடும். இவ்வளவு பலவீனங்களுள்ள ஒரு பெண்ணை வேலைக்கு அனுப்புவது நியாயமற்ற செயல்.

இதில் நிறைய விஷயங்கள் உள்ளன. மாதவிடாய் மூலம் என்னென்ன பிரச்சனைகள் இருக்கிறது என்று ஆய்வு செய்தால் இன்னும் அதிகமான பிரச்சனைக்குரிய காரணகளைச் சொல்கிறார்கள்.

மாதவிடாய் நிற்கும் பருவத்தில் உள்ள பெண்கள் விஷயத்தில் கணவன்மார்கள், குடும்பத்தினர் கூடுதலான அக்கறை எடுத்துக் கொள்ள வேண்டும். அளவுக்கு அதிகமான கோபம் தெரியும். அதையெல்லாம் சகித்துக் கொண்டு தான் வாழவேண்டும். எப்போதையும் விட அதிக பரிவையும் கரிசனத்தையும் அன்பையும் அவர்கள் மீது பொழிய வேண்டும்.

எனவே இவற்றையெல்லாம் கவனத்தில் கொண்டு பார்த்தால், இஸ்லாம் ஆண்கள் மீது பொருளீட்டும் பொறுப்பைச் சுமத்தியிருப்பது அறிவுப்பூர்வமான தாகவும் நாட்டுக்கும் வீட்டுக்கும் நன்மை செய்யக் கூடியதாகவும் மனித குலத்திற்கு நன்மை செய்யக் கூடியதாகவும் இருப்பதை விளங்கிக் கொள்ளலாம்.

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?

தொடர்: 23

இஹ்யாவில் இடம்பெற்ற இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள்

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

இதுவரை பலவீனமான ஹதீஸ்களைக் கொண்டு அமல் செய்யக்கூடாது என்று விரிவாகப் பார்த்தோம். எல்லாவற்றிற்கும் மேலாக பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் ஏற்படுகின்ற பயங்கர விளைவுகள் பற்றியும் குர்ஆன் ஹதீஸ் வெளிச்சத்தில் பார்த்தோம்.

இந்த அடிப்படை விஷயத்திற்கு மாற்றமாக கஸ்ஸாலி தனது இஹ்யாவில் அள்ளிக் கொட்டியிருக்கின்ற பொய்யான, இட்டுக்கட்டப்பட்ட, அறிவிப்பாளர் தொடரில்லாத சில ஹதீஸ்களைப் பார்ப்போம்.

பொய்யான ஹதீஸ் - 1

நான் அறிவுமிக்கவன். ஒவ்வொரு அறிவுமிக்கவனையும் நான் நேசிக்கின்றேன் என்று இப்ராஹீம் நபிக்கு கண்ணியமும் மகத்துவம் நிறைந்த அல்லாஹ் வஹீ அருளினான் என்று நபி (ஸல்) கூறினார்கள்.

இப்னு அப்துல் பர்ரு இந்தச் செய்தியை தொடர்பு அறுந்ததாகக் குறிப்பிடுகின்றார். இதற்கு நான் எந்த தொடரையும் காணவில்லை என்று  ஹாபிழ் இராக்கீ தெரிவிக்கின்றார்கள்.

இப்னு சுபுக்கியும் இதை அறிவிப்பாளர் தொடர் கிடைக்காத ஹதீஸ்களின் நூலான தபக்காத் என்ற நூலில் கொண்டு வருகின்றார்.

பொய்யான ஹதீஸ் - 2

சீனா சென்று கூட கல்வி தேடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதை இப்னு அதிய்யி பதிவு செய்திருக்கின்றார்.  அனஸ் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸை பைஹகி மத்கல், ஷுஃபுல் ஈமான் நூலில் பதிவு செய்து, "இந்த ஹதீஸ் பிரபலமானது; ஆனால் இதன் அறிவிப்பாளர் தொடர்கள் பலவீனமானவை' என்று தெரிவிக்கின்றார்கள்.

இவ்வாறே இது தொடர்பாக ஹாபிழ் இராக்கி அவர்களும் தெரிவிக்கின்றார்கள்.

இது தவறான செய்தியாகும். இப்னுல் ஜவ்ஸி அவர்கள் இதை தனது மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்ட செய்திகள்) என்ற நூலில் கொண்டு வருகின்றார் என அல்பானி அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

சீனம் சென்றேனும் ஞானம் தேடு என்று கவிதை நடையில் தமிழக ஆலிம்கள் தங்கள் பயான்களில் அடித்து விடுவார்கள். ஆலிம்களும் இஸ்லாமியப் பேச்சாளர்களும் கல்வியைப் பற்றிப் பேசும் போது இந்த ஹதீஸைச் சொல்லாமல் விட மாட்டார்கள். அந்த அளவுக்கு இந்தப் பொய்யான ஹதீஸுக்கு மதிப்பும் மரியாதையும் மக்களிடம் பெற்றிருக்கின்றது.

பொய்யான ஹதீஸ் - 3

"ஆயிரம் ரக்அத்துகள் தொழு வதை விடவும் ஆயிரம் நோயாளிகளை நலம் விசாரிப்பதை விடவும் ஆயிரம் ஜனாஸாக்களில் கலந்து கொள்வதை விடவும் ஓர் ஆலிமின் அவையில் வருகை அளிப்பது மிகச் சிறந்ததாகும்'' என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே!  குர்ஆன் ஓதுவதை விடவுமா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு, "கல்வி இல்லாமல் குர்ஆன் பயனளிக்குமா?'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

இது இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸாகும். அதுவும் உமர் (ரலி) அறிவிப்பதாகத் தான் இந்த ஹதீஸ் வருகின்றது. கஸ்ஸாலி குறிப்பிடுவது போன்று அபூதர் (ரலி) வழியாக இந்த இட்டுக்கட்டப்பட்ட செய்தி அறிவிக்கப்படவில்லை.

இமாம் இப்னுல் ஜவ்ஸி அவர்கள் மவ்லூஆத் என்ற நூலில் இதைக் கொண்டு வந்துள்ளார்கள் என  ஹாபிழ் இராக்கி அவர்கள் தெரிவிக்கின்றார்கள்.

இப்படி ஒரு செய்தியை நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்று இதைப் பார்த்த மாத்திரத்தில் புரிந்து கொள்ளலாம். 

ரசூல் (ஸல்) அவர்கள் ஆயிரம் ரக்கஅத்துகள் அளவிற்கு தொழ வேண்டும் என்று சிறப்பித்துச் சொன்ன எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண முடியாது. அதே சமயம், கடமையல்லாத உபரியான தொழுகைகளின் பெயர் குறிப்பிட்டும் பெயர் குறிப்பிடாமலும் நபி (ஸல்) அதிகம் அதிகம் கூறியிருக்கின்றார்கள்.

நோயாளியை நலம் விசாரிப்பது, ஜனாஸா தொழுகையில் கலந்து கொள்வது, குர்ஆன் ஓதுவது குறித்தும் நபி (ஸல்) சிறப்பித்துக் கூறிய ஹதீஸ்கள் ஏராளமாக உள்ளன. இவை ஒவ்வொன்றுக்கும் ஒரு ஹதீஸ் வீதம் எடுத்துக்காட்டாகப் பார்ப்போம்.

யார் இரவு பகலில் பன்னிரண்டு ரக்கஅத்துகள் தொழுகின்றாரோ அவருக்கு அதற்குப் பதிலாக சொர்க்கத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என்று  ரசூல் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர்: உம்மு ஹபீபா (ரலி)

நூல்: முஸ்லிம் 1198 

"ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்தேன். என்னை நீ விசாரிக்கவில்லையே?' என்று (அடியானிடம்) அல்லாஹ்  மறுமை நாளில் விசாரிப்பான். "இறைவா! நீ அகிலத்தின் ரட்சகன் ஆயிற்றே! (நீ எப்படி நோயுறுவாய்) உன்னை நான் எப்படி விசாரிக்க முடியும்?' என்று அடியான் கேட்பான். அதற்கு அல்லாஹ், "என்னுடைய இன்ன அடியான் நோயுற்றிருந்தான். அவனை நீ விசாரித்திருந்தால் என்னைக் கண்டிருப்பாய்' என்று பதில் அளிப்பான்.

அறிவிப்பவர். அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 4661

"ஜனாஸா தொழுகையில் பங்கேற் கிறவருக்கு ஒரு கீராத் நன்மையுண்டு: அடக்கம் செய்யப்படும் வரை கலந்து கொள்கிறவருக்கு இரண்டு கீராத்கள் நன்மை உண்டு' என்று இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "இரண்டு கீராத்கள் என்றால் என்ன?' என வினவப்பட்டது. அதற்கவர்கள், "இரண்டு பெரிய மலைகளைப் போன்ற அளவு (நன்மை) என்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி 1325

குர்ஆனை மனனமிட்டு(ச் சிரமமின்றி) ஓதி வருபவர்  கண்ணியம் நிறைந்த தூதர்க(ளான வானவர்க)ளைப் போன்றவராவார். குர்ஆனை (மனனம் செய்திரா விட்டாலும் அதனைச்) சிரமத்துடன் தொடர்ந்து ஓதி வருகிறவருக்கு இரண்டு மடங்கு நன்மைகள் உண்டு'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி 4937

இவை ஒவ்வொன்றும் இஹ்யாவில் இடம்பெற்ற மேற்கண்ட பொய்யான ஹதீஸில் கூறப்பட்ட அமல்களுக்கு ரசூல்  (ஸல்) அவர்கள் கூறிய சிறப்புகளாகும்.

இந்தச் சிறப்புகளை எல்லாம் ஓரங்கட்டும் வகையில் தான் இந்த இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் அமைந்துள்ளது.  அத்துடன், ஆலிம்கள் என்ற பெயரில் உள்ள இன்றைய கப்ரு வணக்கப் பேர்வழிகளுக்கு குறிப்பாக அப்துல்லாஹ் ஜமாலி போன்ற ஆட்களுக்கு  முன்னால் அமர்ந்தால் அதன் இலட்சணம் எப்படியிருக்கும்? என்று நினைத்துப் பாருங்கள். இந்த பலே ஆசாமிகளின் முன்னால் அமர்ந்தால், இவர்கள் நம்மை நிச்சயமாக நிரந்தர நரகத்தின் கொள்ளிக் கட்டைகளாக  மாற்றி விட்டுத் தான் நகர்வார்கள் என்பதில் எள்ளளவும் சந்தேகமில்லை.

இப்படி நரகத்தில் நம்மைக் கொண்டு போய் தள்ளுகின்ற நாசகார நச்சுக் கருத்தை நபி (ஸல்) அவர்கள் ஒரு போதும் சொல்லியிருக்க மாட்டார்கள் என்பதைச் சாதாரண பாமரனும் உணர்கின்றான். இதை கல்விக் கடலான கஸ்ஸாலியால் உணர முடியவில்லை. அத்துடன் இது, ஸனது அடிப்படையில் ஆதாரமில்லாத, இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பது மட்டுமல்லாமல், கருத்து அடிப்படையிலும் அபத்தமான, மிகவும் ஆபத்தான ஹதீஸாகும். 

மொத்தத்தில், இந்தப் பொய்யான ஹதீஸ் நபி (ஸல்) அவர்கள் எந்தத் தனி நபர் வழிபாட்டைத் தகர்த்தெறிந்தார்களோ அந்தத் தனி மனித வழிபாட்டை ஊக்குவிக்கின்ற விதத்தில் அமைந்துள்ளது. இந்த அடிப்படையிலும் இந்த ஹதீஸ் பாதகமான ஹதீஸாகும்.

இப்படிப்பட்ட பொய்யான ஹதீஸ்களைத் தான் கஸ்ஸாலி இஹ்யாவில்  பரவ விட்டிருக்கின்றார்.

பொய்யான ஹதீஸ் - 4

"எனது சமுதாயம் கொள்கின்ற கருத்து வேறுபாடு (இறைவனின்) அருட்கொடையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இது எந்த அடிப்படையும் இல்லாத செய்தியாகும். ஹதீஸ் கலை அறிஞர்கள் இதற்கு ஒரு ஸனதைத் தேடி பெருமுயற்சி எடுத்துவிட்டார்கள். ஆனால் அவர்களால் இதற்கு எந்த ஒரு ஸனதையும் கண்டு பிடிக்க முடியவில்லை.

"இப்படி ஒரு செய்தி ஹதீஸ் கலை அறிஞரிடத்தில் அறியப்பட வில்லை. இதற்கு எந்த ஒரு ஆதாரமான, பலவீனமான ஏன் இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் நான் காணவில்லை' என்று சுபுக்கீ கூறியதாக மனாவீ தெரிவிக்கின்றார்.

தஃப்ஸீர் பைளாவியின் அடிக்குறிப்பில் ஷைகு ஜகரிய்யா அல் அன்சாரி இதை மேலும் உறுதிப்படுத்துகின்றார். இப்னு ஹஸ்மு அவர்கள், இது ஹதீஸே கிடையாது என்று தெரிவித்து விட்டுப் பின்வருமாறு கூறுகின்றார்கள்:

எல்லாவற்றிற்கும் மேலாக, இந்தக் கருத்து படுமோசமான கருத்தாகும்.  "சமுதாயத்தில் நிலவும் கருத்து  வேறுபாடுகள் இறைவனின் அருட் கொடை' என்றால் ஒற்றுமை, ஒத்தக் கருத்து என்பது அவனுடைய சாபக்கேடு என்ற பாதகமான கருத்தை இது தருகின்றது. இப்படி ஒரு கருத்தை ஒரு முஸ்லிம் கூறமுடியாது.

ஏனெனில், கருத்து வேறுபாடு இருந்தால், கருத்து ஒற்றுமை இருக்காது. அருட்கொடை இருந்தால் சாபக்கேடு இருக்காது என்று இப்னு ஹஸ்மு குறிப்பிடுகின்றார். மற்றொரு இடத்தில், இது பொய்யான செய்தியாகும் என்றும் தெரிவிக்கின்றார்.

உண்மையில் இப்படி ஒரு செய்தியை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கவே முடியாது. இஸ்லாமிய மார்க்கமே முரண்பாடுகளால் சூழப்பட்டுள்ளது போன்ற ஒரு கருத்தை இந்தச் செய்தி தருகின்றது. சுன்னத் வல் ஜமாஅத்தினர் தங்கள் மத்ஹபுகளில் உள்ள கருத்து வேறுபாடுகளை நியாயப்படுத்துவதற்கு, கஸ்ஸாலி பதிந்துள்ள இந்தப் பொய்யான செய்தியையே ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

ஆனால் வல்ல அல்லாஹ்வோ, ஒரு விஷயத்தில் கருத்து வேறுபாடு ஏற்பட்டால் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸில் அதற்குத் தீர்வு இருக்கின்றது என்று கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

அல்குர்ஆன் 4:59

பொய்யான ஹதீஸ் - 5

"குறைந்த இறை உதவி, அதிகமான கல்வியை விடச் சிறந்ததாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இப்படி ஒரு ஹதீஸை கஸ்ஸாலி இஹ்யாவில் அளந்து விடுகின்றார். இது பற்றி ஹாபிழ், இதற்கு எந்த ஓர் அடிப்படையையும் நான் காணவில்லை என்று குறிப்பிடுகின்றார்கள்.

தான் நாடியோருக்கு ஞானத்தை (அல்லாஹ்) வழங்குகிறான். ஞானம் வழங்கப்பட்டவர் ஏராளமான நன்மைகள் வழங்கப்பட்டு விட்டார். அறிவுடையோரைத் தவிர (யாரும்) சிந்திப்பதில்லை. (அல்குர்ஆன் 2:269) என்று அல்லாஹ் கூறுகின்றான்.

இந்த வசனத்திற்கு நேர்மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.

கஸ்ஸாலி இது போன்று மார்க்கத்தின் பெயரால் பொய்யான ஹதீஸ்களை இன்னும் ஏராளமாக இஹ்யாவில் கொட்டியிருக்கின்றார். அவற்றையும் இனி பார்ப்போம், இன்ஷா அல்லாஹ்.

December 29, 2015, 10:16 AM

ஏகத்துவம் அடோபர் 2015

ஏகத்துவம் அடோபர் 2015

தலையங்கம்

அம்பேத்கார் கண்ட ஆலய மறுப்பு!

இந்துத்துவ பாஜக ஆளுகின்ற  அரியானா மாநிலத்தில் அண்மையில் இரு தலித் குழந்தைகள் உயர் ஜாதிக்காரர்களால்  உயிருடன் எரித்துக் கொல்லப்பட்டனர்.

தொடர்ந்து படிக்க November 1, 2015, 6:39 PM

அக்டோபர் ஏகத்துவம் 2015

தலையங்கம்

அல்லாஹ்வின் ஆலயத்தில் அனைவரும் சமமே!

சேஷ சமுத்திரம் கிராமத்தில் தேரிழுப்பது தொடர்பாக நடைபெற்ற கலவரம் குறித்து ஆர்.எஸ்.எஸ். அமைப்பு தனது விஜயபாரதம்  இதழில் பின்வருமாறு தலையங்கம் தீட்டியுள்ளது.

தொடர்ந்து படிக்க October 7, 2015, 11:10 AM

செப்டம்பர் ஏகத்துவம் 2015

தலையங்கம்

சிலை வழிபாடு!

சீரழிக்கும் வழிகேடு!

உலகம் முழுவதிலும் இருந்து மக்காவை நோக்கி ஹஜ் செய்வதற்காக மக்கள் சென்று கொண்டிருக்கின்ற ஹஜ் காலம் இது!

இந்த ஹஜ் காலம், உலகத்தில் வாழ்கின்ற ஒவ்வொரு முஸ்லிமுடைய, குறிப்பாக ஹஜ் செய்கின்ற முஸ்லிம்களுடைய மனக்கண் முன்னால் இப்ராஹீம் (அலை) அவர்களைக் கொண்டு வந்து நிறுத்தி விடுகின்றது.

சிலை வணக்கத்திற்கு எதிராக அந்தச் சிந்தனைவாதி நடத்திய யுத்தம், அதற்காக அவர்கள் சந்தித்த தீக்குண்டம், அதற்காக அவர்கள் செய்த ஹிஜ்ரத் எனும் நாடு துறத்தல் போன்ற அவர்களின் தியாகங்கள் மனக்குதிரைகளில் திரும்பத் திரும்ப ஓடிக் கொண்டிருக்கின்றன.

தனியோன் அல்லாஹ்வுக்காக தனித்துக் களம் கண்ட தன்னிகரற்ற போராளி அவர். அந்தப் போராளியிடம் தான் அல்லாஹ், தனது ஏகத்துவக் கொள்கையை நிலைநிறுத்துவதற்காக புனித கஅபா ஆலயத்தைப் புனர் நிர்மாணம் செய்யச் சொல்கின்றான்.

மணல் திட்டாகக் காட்சியளித்த அவனது முதல் ஆலயத்தை மாபெரும் ஆலயமாக மாற்றி யமைத்தார்கள். இணை வைப்பை வீழ்த்தி, ஏகத்துவ ஆலயத்தை அல்லாஹ்வின் ஆணைப்படி நிர்மாணிக்கின்றார்கள். இந்த வசனம் இதை எடுத்துரைக்கின்றது.

இந்த ஆலயத்தை மக்களின் ஒன்று கூடுமிடமாகவும், பாதுகாப்பு மையமாகவும் நாம் அமைத்ததை நினைவூட்டுவீராக! மகாமு இப்ராஹீமின் ஒரு பகுதியில் தொழு மிடத்தை ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! "தவாஃப் செய்வோருக்காகவும், இஃதிகாஃப் இருப்போருக்காகவும், ருகூவு, ஸஜ்தா செய்வோருக்காகவும் இருவரும் எனது ஆலயத்தைத் தூய்மைப்படுத்துங்கள்!'' என்று இப்ராஹீமிடமும், இஸ்மாயீலிடமும் உறுதிமொழி வாங்கினோம்.

அல்குர்ஆன் 2:125

சிந்தனையைச் செயலிழக்கச் செய்து சீரழிக்கும் சிலை வணக்கத்திற்கு எதிராக இறுதி வரை போராடிய அவர்கள் பின்வரும் பிரார்த்தனை யையும் செய்கின்றார்கள்.

"இறைவா! இவ்வூரை அபயமளிப் பதாக ஆக்குவாயாக! என்னையும், என் பிள்ளைகளையும் சிலைகளை வணங்குவதை விட்டும் காப்பாயாக!'' என்று இப்ராஹீம் கூறியதை நினைவூட்டுவீராக! இறைவா! இவை (சிலைகள்) மனிதர்களில் அதிகமா னோரை வழிகெடுத்து விட்டன. என்னைப் பின்பற்றுபவர் என்னைச் சேர்ந்தவர். எனக்கு யாரேனும் மாறுசெய்தால் நீ மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 14:35, 36

ஏகத்துவவாதிகளாகிய நாம் இந்த துஆவைக் கேட்கக் கடமைப் பட்டிருக்கிறோம்.

காரணம், சிலை மீதுள்ள பிரியம் மக்களின் கண்களை மறைக்கச் செய்துவிடுகின்றது. இதற்குக் கீழ்க்காணும் நிகழ்வு நிதர்சனமான எடுத்துக்காட்டாகும்.

"உங்கள் கடவுள்களை விட்டு விடாதீர்கள்! வத்து, ஸுவாவு, யகூஸ், யவூக், நஸ்ர் ஆகியவற்றை (தெய்வங்களை) விட்டுவிடாதீர்கள்!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.  "அதிகமானோரை அவர்கள் வழி கெடுத்து விட்டனர். எனவே அநீதி இழைத்தோருக்கு வழி கேட்டைத் தவிர வேறு எதையும் அதிகமாக் காதே!" (என்றும் பிரார்த்தித்தார்.)

அல்குர்ஆன் 71:23, 24

இந்த வசனம் பனூ இஸ்ர வேலர்கள் சிலை மீது கொண்டிருந்த வெறியை எடுத்துரைக்கின்றது.

இஸ்ராயீலின் மக்களைக் கடல் கடந்து செல்ல வைத்தோம். அப்போது தமது சிலைகளுக்கு வழிபாடு நடத்திக் கொண்டிருந்த கூட்டத்திடம் அவர்கள் வந்தனர். "மூஸாவே! அவர்களுக்கு இருக்கும் கடவுள்கள் போல் எங்களுக்கும் கடவுளை எற்படுத்தித் தருவீராக!'' என்று கேட்டனர்.

"நீங்கள் அறிவு கெட்ட கூட்டமாகவே இருக்கின் றீர்கள்'' என்று அவர் கூறினார். அவர்கள் எதில் இருக்கிறார்களோ, அது அழியும். அவர்கள் செய்து வந்தவையும் வீணானது. "அல்லாஹ் அல்லாதவர்களையா உங்களுக்குக் கடவுளாகக் கற்பிப்பேன்? அவனே உங்களை அகிலத்தாரை விட சிறப்பித்திருக்கிறான்'' என்று (மூஸா) கூறினார்.

அல்குர்ஆன் 7:138-140

ஃபிர்அவ்னை விட்டு மக்களைக் காப்பாற்றி, அவர்களைக் கடலில் நடக்கச் செய்த காரியம் ஒரு சாதாரண விஷயம் அல்ல. அலையடிக்கும் கடல் மலை போல் எழுந்து அவர்களைக் காத்து, கரை சேர்த்த ஈரம் கூடக் காய்ந்திருக்காது. அதற்குள்ளாக பனூ இஸ்ரவேலர்கள் சிலைகளைக் கண்ட மாத்திரத்தில் நிலை தடுமாறியதை இந்த வசனங்கள் படம் பிடித்துக் காட்டுகின்றன.

உங்களிடம் நாம் உடன்படிக்கை எடுத்ததை எண்ணிப் பாருங்கள்! தூர் மலையை உங்களுக்கு மேல் உயர்த்தினோம். "உங்களுக்கு நாம் வழங்கியதைப் பலமாகப் பிடித்துக் கொள்ளுங்கள்! செவிமடுங்கள்!'' (எனக் கூறினோம்). "செவியுற்றோம்; மாறுசெய்தோம்'' என்று அவர்கள் கூறினர். (நம்மை) மறுத்ததால் அவர்களின் உள்ளங்களில் காளைக் கன்றின் பக்தி ஊட்டப்பட்டது. "நீங்கள் (சரியான) நம்பிக்கை கொண்டிருந்தால் உங்கள் நம்பிக்கை உங்களுக்குக் கெட்டதையே கட்டளை இடுகின்றதே'' என்று கேட்பீராக!

அல்குர்ஆன் 2:93

இது பனூ இஸ்ரவேலர்களின் சிலை வெறிக்கு மற்றொரு எடுத்துக்காட்டாகும்.

நபித்தோழர்கள் சிலை வணக் கத்தில் சிக்கவில்லை. ஆனால் நினைவுச் சின்னங்கள் பக்கம் அவர்களுடைய சிந்தனைகள் நீளவும் நீந்தவும் துவங்கியதற்குக் கீழ்க்காணும் சம்பவம் ஆதாரமாக அமைந்துள்ளது.

நாங்கள் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்களாக இருக்க, நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் யுத்தத்திற்குச் சென்றோம். அங்கு இணை வைப்பவர்களுக்கென்று ஒரு இலந்தை மரம் இருந்தது. அங்கு அவர்கள் (பரகத்தை) நாடி தங்களின் போர்க் கருவிகளைத் தொங்கவிட்டு அங்கு தங்கி (இஃதிகாஃப்) இருப்பார்கள். "தாத் அன்வாத்' என்று அதற்குச் சொல்லப்படும். நாங்கள் அந்த மரத்தின் பக்கம் சென்ற போது நபி (ஸல்) அவர்களிடத்தில் "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கு "தாத் அன்வாத்' என்று இருப்பதைப் போன்று எங்களுக்கும் ஏற்படுத்துங்கள்'' என்று கூறினோம்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள் "சுப்ஹானல்லாஹ்! இவையெல்லாம் (அறியாமைக் கால) முன்னோர்களின் செயல் ஆகும்'' என்று சொல்லி, "என் உயிர் யார் கைவசம் இருக்கிறதோ அவன் மீது ஆணையாக! நீங்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில் பனூ இஸ்ரவேலர்கள் கேட்டதைப் போல் கேட்கிறீர்கள். (அதாவது) பனூ இஸ்ராயீல்கள் நபி மூஸா (அலை) அவர்களிடத்தில், "மூஸாவே! அவர்களுக்குப் பல கடவுள்கள் இருப்பதைப் போல் எங்களுக்கும் கடவுளை ஏற்படுத்துங்கள்' என்று கேட்டார்கள், (7:138) இதைப் போலவே, நீங்களும் கூறியுள்ளீர்கள். நிச்சயமாக, நீங்கள் உங்களுக்கு முன்னவர்களின் வழிமுறையைப் படிப்படியாகப் பின்பற்றுவீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூவாஹித்அல்லைசி(ரலி)

நூல் : திர்மிதீ 2180

இந்த ஹதீஸ், சின்னங்கள் நபித்தோழர்களின் உள்ளத்தில் ஏற்படுத்திய பாதிப்பைப் படம்பிடித்துக் காட்டுகின்றது.

ஆனால் நபி (ஸல்) அவர்கள் அந்தச் சிந்தனையை முளையிலேயே கிள்ளி எறிந்து விடுகின்றார்கள். சிலைகள், சின்னங்கள் என்று வருகின்ற போது அவற்றில் கப்ரு வழிபாடுகளும் உள்ளடங்கி விடுகின்றது. இன்று சமாதி வழிபாட்டுக்காரர்கள், தர்ஹாக்களை எழுப்பியிருப்பதெல்லாம் நினைவுச் சின்னங்கள் என்ற அடிப்படையில் தான்.

இவற்றையெல்லாம் பின்னணி யாகக் கொண்டு இறைத்தூதர் (ஸல்) அவர்கள், சிலைகளையும், சமாதி களையும் அடித்துத் தகர்க்கவும் தரைமட்டமாக்கவும் உத்தரவிட்டுச் சென்றார்கள்.

அபுல்ஹய்யாஜ் அல்அசதீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அலீ பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் என்னிடம், ''அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அலுவலுக்காக என்னை அனுப்பி னார்களோ அந்த அலுவலுக்காக உம்மை நான் அனுப்புகிறேன். (அந்த அலுவல் என்னவென்றால்) எந்த உருவச் சிலைகளையும் நீர் அழிக்காமல் விட்டுவிடாதீர்; (தரையைவிட) உயர்ந்துள்ள எந்தக் கப்றையும் தரை மட்டமாக்காமல் விடாதீர்!'' என்று கூறினார்கள்.

நூல்: முஸ்லிம் 1609

ஷைத்தானுக்கு வழிபாடுகள் கிடைக்கின்ற அத்தனை வாசல் களையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அடைத்து விட்டார்கள்.

எனவே, சீரழிவைத் தருகின்ற சிலைகள், நினைவுச் சின்னங்கள், தர்ஹாக்கள் போன்றவற்றின் பாதிப்புகளை விட்டு நாம் இப்ராஹீம் (அலை) அவர்கள் போன்று பிரார்த்தனை செய்யக் கடமைப் பட்டிருக்கிறோம்.

இப்ராஹீம் அவர்களின் நினைவு அலைகளைப் பரவச் செய்கின்ற இந்த ஹஜ் கால மாதங்களில் அவர்களின் இந்தப் பிரார்த்தனையையும், இன்னும் திருக்குர்ஆன் கற்றுத் தருகின்ற அவர்கள் செய்த பல்வேறு பிரார்த்தனைகளையும் நாம் நினைவு கூர்வோம். அவர்கள் கற்றுத் தந்த வழியில் ஏகத்துவத்தை நிலைநாட்டுவோம்.

 

உத்தம நபி உயிருடன் உள்ளார்களா?

மனாருல் ஹுதாவிற்கு மறுப்பு

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

சமீபத்தில் மனாருல் ஹுதா எனும் மாத இதழ், "வரலாற்று ஆய்வில் புனித ரவ்ளா' எனும் தலைப்பில் ஒரு கட்டுரையை எழுதியிருந்தது.

அதில் இஸ்லாத்திற்கு முரணான, பரேலவிசக் கருத்துக்களை பக்கம் பக்கமாக நிரப்பியிருந்தனர்.

"கஅபாவை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அடக்கம் செய்யப் பட்ட ரவ்ளா சிறந்தது' என்ற அடிப்படையற்ற வாதத்தையும் அதற்கு ஆதாரமாக சில தவறான செய்திகளையும் அதில் அவர்கள் முன் வைத்திருந்தனர்.

அவர்களது அபத்தமான இக்கருத்திற்கு, தக்க மறுப்பை முந்தைய ஏகத்துவம் இதழில்  அளித்திருந்தோம்.

நபிகள் நாயகம் மரணிக்கவில்லை, இன்னும் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து கொண்டிருக்கின்றார்கள் என்ற வழிகெட்ட கருத்தையும் மனாருல் ஹுதா அக்கட்டுரையில் தெரிவித்திருந்தது.

இதற்கு ஆதாரம் என்ற பெயரில் சில வாதங்களையும் வைத்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய மார்க்கச் சான்றுகளை முந்தைய ஏகத்துவம் இதழில் விளக்கி விட்டோம்.

இனி அவர்கள் ஆதாரம் என்ற பெயரில் எடுத்து வைக்கும் செய்திகளுக்கு உரிய விளக்கத்தை விரிவாகக் காண்போம்.

கஃபுல் அஹ்பார் செய்தி ஆதாரமாகுமா?

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்கிறார்கள் எனும் தங்கள் கருத்துக்கு ஆதாரமாக கஃபுல் அஹ்பாரின் பின்வரும் செய்தியைக் குறிப்பிடுகிறார்கள்.

ஒருமுறை கஃபுல் அஹ்பார், ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றார்கள். மக்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை நினைவு கூர்ந்தார்கள். அப்போது கஃபுல் அஹ்பார் அவர்கள், "சூரியன் உதிக்கின்ற எந்தவொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் வானிலிருந்து இறங்காமல் இருப் பதில்லை. அவ்வானவர்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கப்ரை தங்கள் இறக்கைகளை அடித்தவாறு சூழ்ந்து கொண்டு நபிகள் நாயகத்திற்காக ஸலவாத் ஓதி அருள் வேண்டுகிறார்கள். மாலையானதும் அவர்கள் மேலேறி விடுகிறார்கள். அவர்களைப் போன்றே மற்றொரு வானவர் கூட்டம் (மாலையில்) இறங்குகின்றனர். அவர்களும் அவர்களை போன்றே பிரார்த்தனை செய்கின்றனர்.

இறுதியில் பூமி அவர்களை விட்டும் பிளந்து விடும். எழுபதாயிரம் வானவர்கள் நபி (ஸல்) அவர்களை சூழ்ந்து இருக்கும் நிலையில் நபி (ஸல்) அவர்கள் வெளிப்படுவார்கள்.

இந்த செய்தி தாரமியில் (ஹதீஸ் எண்: 95) பதிவு செய்யப்பட்டுள்ளது.

நபியவர்கள் இறக்கவில்லை என்ற தங்களின் கொள்கை நிலைப்பாட்டிற்கு இத்தகைய செய்தியை ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள் எனில் மனாருல் ஹுதா வகையறாக்களின் தரம் என்ன என்பதை எளிதாக விளங்க முடிகிறது.

ஏனெனில் இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும். பல காரணங்களால் இந்தச் செய்தி பலவீனமடைகிறது.

முதலாவது, இந்தச் செய்தி கஃபுல் அஹ்பாரின் சொந்தக் கருத்தாகவே சொல்லப்பட்டுள்ளது. இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கான எந்த வாசகமும் இந்தச் செய்தியில் இல்லை.

மேலும் கஃபுல் அஹ்பார் என்பார் நபித்தோழரல்ல.

ஒரு நபித்தோழர் நபிகள் நாயகத்திடமிருந்து அறிவிக்காமல் தனது சொந்தச் கருத்தை அறிவித்தால் அதையே ஆதாரமாகக் கொள்ள இயலாது. அப்படியிருக்கும் போது நபித்தோழரல்லாத, தாபியியான கஃபுல் அஹ்பார் கூறுவதை வைத்துக் கொண்டு இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதை எப்படி உறுதிப்படுத்த இயலும். ஒரு போதும் உறுதிப்படுத்த இயலாது. இதை எப்படி மார்க்க ஆதாரமாக ஏற்றுக் கொள்ள முடியும்?

மேலும், தான் யாரிடமிருந்து கேட்டார் என்பதையும் அவர் தெளிவு படுத்தவில்லை.

எனவே நபிகள் நாயகத்தின் கருத்தாக இல்லாமல் கஃபுல் அஹ்பார் எனும் தாபியின் சொந்தக் கருத்தாக இருப்பது இச்செய்தியின் முதல் குறையாகும்.

இரண்டாவது, இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசையில் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.

இவரைப் பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

இவரைப் பற்றி இமாம் ஹிப்பான் கூறுகிறார்:

இவருடைய ஹதீஸ்கள் முற்றிலும் நிராகரிக்கத்தக்கதாகும். நம்பகமான அறிவிப்பாளர்கள் வழியாக அவர் களுடைய ஹதீஸில் இல்லாதவற்றை அறிவிப்பார். இவர் தன்னளவில் நல்லவராக இருந்தாலும் இவருடைய அண்டை வீட்டுக்காரர் மூலமாக இவருடைய செய்திகளில் மறுக்கத் தக்கவை புகுந்துவிட்டது. ஷைஹ் அப்துல்லாஹ் பின் ஸாலிஹ் என்பார் மீது அவர் அண்டை வீட்டுக்காரர் ஹதீஸை இட்டுக்கட்டி அவருடைய எழுத்தைப் போன்றே எழுதி அவருடைய வீட்டிலே அவருடைய புத்தகங்களுக்கு மத்தியில் நுழைத்து விடுவார். அப்துல்லாஹ் அதை தன்னுடைய எழுத்து என்று எண்ணி அறிவித்து விடுவார்.

இப்னு அதீ கூறுகிறார்: இவர் என்னிடத்தில் ஹதீஸ்களில் உறுதி யானவர் என்றாலும் இவருடைய ஹதீஸில் அறிவிப்பாளர் தொடர் களிலும், கருத்திலும் குழப்பங்கள் நிகழ்ந்து விட்டது. இவர் திட்டமிட்டு பொய்யுரைக்க மாட்டார்.

ஸாலிஹ் இப்னு முஹம்மத் கூறுகிறார்: இப்னு மயீன் இவரை நம்பகமானவர் என்று உறுதிப் படுத்தியுள்ளார். ஆனால் நான் இவரை ஹதீஸ்களில் பொய்யுரைப் பவர் என்றே கருதுகிறேன்.

இப்னுல் மதீனி கூறுகிறார்: இவருடைய ஹதீஸை நான் எழுதினேன். ஆனால் அவரிட மிருந்து எதையும் நான் அறிவிக்க மாட்டேன்.

அஹ்மத் இப்னு ஸாலிஹ் கூறுகிறார்: இவர் தவறிழைக்கக் கூடியவர். ஒரு பொருட்டாகக் கொள்ளத்தக்கவரில்லை.  

இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.

இவர் ஹதீஸ்களில் பலவீன மானவர் என்று இமாம் ஹாகிம் கூறுகிறார்.

பார்க்க: அல்லுஅஃபாஉ வல் மத்ரூகீன் 2:127,

தஹ்தீபுத் தஹ்தீப்  5:256

எனவே இது இச்செய்தியின் பலவீனத்தை அதிகரிக்கும் இரண்டாவது காரணமாகும்.

இந்தச் செய்தியினை கஃபுல் அஹ்பார் என்பாரிடமிருந்து நுபைஹ் பின் வஹ்ப் என்பார் அறிவிப்பதாக உள்ளது. ஆனால் நுபைஹ் என்பவர் கஃபுல் அஹ்பாரை அடையவில்லை என்ற குற்றச்சாட்டையும் சில அறிஞர்கள் முன் வைத்துள்ளனர். இது உண்மையாக இருக்கும் பட்சத்தில் மூன்றாவது குறையாகும்.

எப்படிப் பார்த்தாலும் இது ஆதாரமாகக் கொள்ள ஏற்புடைய செய்தி அல்ல என்பது தெளிவு.

மேலும் இந்தச் செய்தியின் கருத்தை நன்கு கவனித்துப் பாருங்கள்.

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்று கூறப்பட்டுள்ளதா? அவ்வாறு சொல்லப்படவில்லை.

மறுமை நிகழ்வு ஏற்படும் போது நபிகள் நாயகம் எழுப்பப்பட்டு வெளிவருவார்கள் என்றுதான் உள்ளது. அப்படியென்றால் நபிகள் நாயகம் தற்போது உயிருடன் இல்லை என்ற கருத்து தான் வருமே தவிர மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்ற கருத்து இதில் வராது.

மறுமையில் பூமி பிளந்து நபிகள் நாயகம் வெளிவருவார்கள் எனும் வாசகத்திலிருந்து அவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்று புரிந்து கொண்டால் உலகில் இறந்துவிட்ட ஏனைய மனிதர்களும் அவ்வாறே உயிருடன் உள்ளார்கள் என்று புரிய முடியும்.

ஏனெனில் பொதுவாக மனிதர்களைப் பற்றி இறைவன் கூறும் போதும் இதே வாசகத்தைப் பயன்படுத்தியுள்ளான்.

அவர்களை விட்டு பூமி பிளந்து அவர்கள் விரைவார்கள். அதுதான் ஒன்று திரட்டப்படும் நாள். இது நமக்கு எளிதானது.

அல்குர்ஆன் 50:44

ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத்தலத்திலிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.)

அல்குர்ஆன் 36:51, 52

இந்த வசனங்களில் பூமி பிளந்து சமாதிகளிலிருந்து மனிதர்கள் வெளிப்படுவார்கள் என்று சொல்லப் பட்டுள்ளது. இதன் காரணத்தினால் இவர்கள் உயிருடன் உள்ளார்கள் என்றாகி விடுமா?

எனவே மறுமையில் கப்ரிலிருந்து வெளிவருவார்கள் என்பதை வைத்துக் கொண்டு நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்று வாதம் வைப்பது மடமைத்தனமான வாதமாகும்.

ஒரு வாதத்திற்கு இவர்கள் கூறும் கருத்து இந்தச் செய்தியில் நேரடியாகக் கூறப்பட்டிருந்தால் கூட பலவீனமான செய்தியாக இருப்பதால் இது ஆதாரமாகாது. அவ்வாறிருக்க இந்தச் செய்தி எப்படி ஆதாரமாகும்?

அறிவுக்கும் தங்களுக்கும் துளியும் சம்பந்தமில்லை என்பதை இந்த நவீன பரேலவிகள் இதன் மூலம் தெளிவுபடுத்தி விட்டனர்.

நபிமார்களின் உடல்களை மண் தின்பதில்லையே!

இந்த அறிவிலிகள் எதை ஆதாரமாகக் குறிப்பிடுவது என்ற அடிப்படை அறிவற்றவர்களாகவே இருக்கிறார்கள்.

காரணம், நபிமார்களின் உடல்களை மண் தின்றுவிடாது  என்பதைத் தங்கள் கருத்துக்கு அதாவது நபிகள் நாயகம் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து கொண்டிருக்கிறார்கள் என்ற தங்கள் அபத்தக் கருத்திற்கு ஆதாரமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபிமார்களின் உடல்களை பூமி தின்று விடாது என்பது உண்மையே. நபியவர்கள் இதை விளக்கியுள்ளார்கள்.

உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் (அலை) படைக்கப் பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ், நூல்: நஸாயீ 1357

நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாது என்பதால் அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்று பொருளாகாது.

நபிமார்களின் உடல்களை பூமி தின்றுவிடாத வகையில் அல்லாஹ் பாதுகாப்பு ஏற்பாடு செய்துள்ளான் என்பதைத் தான் இதிலிருந்து விளங்க முடிகிறதே தவிர நபிமார்கள் உயிருடன் உள்ளார்கள் என ஒரு போதும் விளங்க முடியாது. அறிவுடையோர் அவ்வாறு விளங்க மாட்டார்கள்.

பிர்அவ்னின் உடலை அல்லாஹ் பாதுகாத்துள்ளான் என்று முஸ்லிம் சமூகம் நம்புகிறது. இது குறித்த சரியான விளக்கத்தை இந்த இணைப்பில் காணலாம்.

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/வ்ன்ழ்ஹய்-ல்த்-ற்ட்ஹம்ண்க்ஷ்ஹந்ந்ஹம்-ற்ட்ஹஜ்ட்ங்ங்க்/ஸ்ண்ப்ஹந்ந்ஹய்ஞ்ஹப்-ய்ங்ஜ்/217ஜல்ஹற்ட்ன்ந்ஹந்ஹல்ஹற்ற்ஹஜச்ண்ழ்ஹஸ்ய்ண்ய்ஜன்க்ஹப்/-.யக்ண்க்ப7ஃவ்வ்ந்ர்

<ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/வ்ன்ழ்ஹய்-ல்த்-ற்ட்ஹம்ண்க்ஷ்ஹந்ந்ஹம்-ற்ட்ஹஜ்ட்ங்ங்க்/ஸ்ண்ப்ஹந்ந்ஹய்ஞ்ஹப்-ய்ங்ஜ்/217ஜல்ஹற்ட்ன்ந்ஹந்ஹல்ஹற்ற்ஹஜ ச்ண்ழ்ஹஸ்ய்ண்ய்ஜன்க்ஹப்/>

மக்களின் நம்பிக்கை பிரகாரம் பிர்அவ்ன் உடல் பாதுகாக்கப் பட்டுள்ளது என்பதால் பிர்அவ்ன் உயிருடன் வாழ்ந்து வருகிறான் என்று பொருளாகுமா?

இரசாயனக் கலவைகள் மூலம் இன்றைக்குப் பல உடல்கள் அழியாத படி பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்றா அர்த்தம்?

அரசின் சார்பில் எத்தனையோ உடல்கள் பாதுகாக்கப்படுகின்றன. அதனால் அவர்கள் அனைவரும் உயிருடன் இருக்கிறார்கள் என்றாகி விடுமா?

அப்படி ஒரு வாதம் வைத்தால் அது மூளையுள்ளவர்களின் கருத்தாக இருக்க முடியுமா?

ஓர் உடல் அழியாத வகையில் பாதுகாக்கப்படுகிறது என்றால் உடல் (ஜடம்) பாதுகாக்கப்படுகிறது என்று தான் ஆகுமே தவிர உயிருடன் அவர் வாழ்கிறார் என்று ஒரு போதும் ஆகாது.

எனவே இவர்களின் இந்த வாதமும் சரியானதாக இல்லை.

ஒருவர் உயிருடன் இருந்தால் அவரை மண் சாப்பிடுவதில்லை. அவர் உயிருடன் இருப்பதே அவரை மண் சாப்பிடுவதில் இருந்து தடுத்து விடும். உலகில் 700 கோடி மக்கள் வாழ்கிறோம். இவர்களில் யாரையாவது மண் தின்றுள்ளதா? உயிருடன் இருப்பவனை மண் சாப்பிடாது என்பது அனைவருக்கும் தெரிந்த உண்மை.

நபி (ஸல்) அவர்கள் உயிருடன் இருக்கிறார்கள் என்றால் இந்தக் கேள்வியே எழாது. ஏனென்றால் உயிருடன் இருப்பவரை மண் சாப்பிடாதல்லவா?

அவர்கள் உயிருடன் இல்லை என்பதால் தான் அவர்களின் உடலை மண் சாப்பிடுமா என்ற கேள்வியே பிறக்கிறது. இதற்கு, "நபிமார்கள் இறந்து விட்டாலும் அவர்களது உடலை மண் சாப்பிடாது'' என்ற கருத்தில் நபிகள் நாயகம் பதிலளிக்கிறார்கள். எனவே இது நபிமார்கள் உயிருடன் இல்லை என்பதற்குத்தான் ஆதாரமாக அமைந்துள்ளது.

சப்தம் போடாதே!

நபிகள் நாயகம் முன்னிலையில் குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்பதையும் அவர்கள் மண்ணறையில் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு ஆதாரமாகக் குறிப்பிடுகிறார்கள்.

இப்போது நபி அடக்கம் செய்யப்பட்டிருக்கும் இடத்திற்கு முன்பு நின்று கொண்டு குரலை உயர்த்திப் பேசக் கூடாது என்கிறார்கள். ஏனெனில் நபி உயிருடன் உள்ளார்களாம்.

இவர்களுக்கு எந்த அளவு மூளை வறண்டு போய் விட்டது என்பதற்குச் சிறந்த எடுத்துக்காட்டு இது.

குரலை உயர்த்தக் கூடாது எனும் விதியை, நபிகள் நாயகத்தை மதிக்கும் வகையில் அவர்கள் வாழும் காலத்தில்  கடைப்பிடிக்கப்பட வேண்டிய ஒழுங் காகவே இறைவன் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

நம்பிக்கை கொண்டோரே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரிடம் சப்தமிடுவது போல் அவரிடம் சப்தமிட்டுக் கூறாதீர்கள்! நீங்கள் அறியாத நிலையில் உங்கள் செயல்கள் (இதனால்) அழிந்து விடும்.

அல்குர்ஆன் 49 2

இந்த வசனத்தை நன்கு கூர்ந்து படியுங்கள். இது நபிகள் நாயகம் நம்மிடையே வாழும் போது கடைப்பிடிக்க வேண்டிய ஒழுக் கத்தையே கற்றுத் தருகிறது.

"நபியின் குரலை விட உங்கள் குரலை உயர்த்தாதீர்கள்' என்று கூற வேண்டும் என்றால் நபி நம்மிடையே வாழ்ந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் நம்மிடம் பேச வேண்டும். அப்போது தான் அவர்களது குரலை விட சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்று சொல்ல முடியும்.

இதற்கு அடுத்து வரக்கூடிய வசனங்கள் யாவும் இக்கருத்தை உறுதிப்படுத்துகின்றது.

அல்லாஹ்வின் தூதரிடம் தமது குரல்களைத் தாழ்த்திக் கொள் வோரின் உள்ளங்களை (இறை) அச்சத்துக்காக அல்லாஹ் பரிசுத்தப் படுத்தி விட்டான். அவர்களுக்கு மன்னிப்பும், மகத்தான கூலியும் இருக்கிறது.

அல்குர்ஆன் 49:3

 (முஹம்மதே!) அறைகளுக்கு வெளியே இருந்து உம்மை அழைப்பவர்களில் அதிகமானோர் விளங்காதவர்கள்.

அல்குர்ஆன் 49:4

இதன் தொடர்ச்சியில் 7ம் வசனத்தில் "உங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார் என்பதை அறிந்து கொள்ளுங்கள்' என்று அல்லாஹ் கூறுகின்றான்.

அப்படி என்றால் அல்லாஹ்வின் தூதர் நம்மிடையே இருந்து, அவர்களது குரலை நாம் செவிமடுக்கும் வகையில் இருக்கும் போது நாம் எப்படி நடக்க வேண்டும் என்பதைத் தான் இது பேசுகிறது.

நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் எனும் இறைவார்த்தை இக்கருத்தை தெளிவாகப் பறைசாற்றுகின்றது.

இன்றைக்கு நபிகள் நாயகம் நம்முடன் இல்லை. அவர்களது குரலை நம்மால் செவிமடுக்க இயலாது. எனவே இச்சட்டம் இப்போது பொருந்தாது.

நபியின் குரலுக்கு மேல் உங்கள் சப்தத்தை உயர்த்தாதீர்கள் என்றால் இது எப்படி நபிகள் நாயகம் உயிருடன் உள்ளார்கள் என்பதற்கு ஆதாரமாகும்?

இவர்களுக்கு சிந்திக்கும் திறன் கொஞ்சமேனும் இருந்திருந்தால் இப்படி ஒரு வாதத்தை வைத்திருப்பார்களா?

அது சரி! சமாதி வழிபாட்டை ஆதரிப்பவர்களிடம் எப்படி சிந்தனைத் திறனை எதிர்பார்க்க முடியும்?

நபியின் மனைவியரை மணக்க அனுமதியில்லை

நபிகள் நாயகம் உயிருடன் மண்ணறையில் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு அவர்கள் எடுத்துக் காட்டும் அடுத்த ஆதாரம், நபிகள் நாயகத்தின் மனைவிமார்களை நாம் திருமணம் செய்து கொள்ளக் கூடாது என்பதைக் குறிப்பிடுகிறார்கள்.

உயிருடன் உள்ளபோது அவர்களின் மனைவிமார்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் அது சரி. நபிகள் நாயகம் இறந்ததற்குப் பிறகும் அவர்களது மனைவியர்களைத் திருமணம் செய்யக் கூடாது என்றால் என்ன பொருள்? நபிகள் நாயகம் இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று தானே அர்த்தம்.

இவ்வாறு இந்த நவீன பரேலவிகள் பிதற்றுகிறார்கள்.

நபிகள் நாயகத்திற்கு அல்லாஹ் பல்வேறு தனிச்சிறப்புகளை வழங்கி யிருக்கிறான். அவர்களது உடலை மண் தின்றுவிடாது என்பதைப் போன்று அவர்களது இறப்பிற்குப் பிறகு அவர்களது மனைவியரை மணக்கக் கூடாது என்பதையும் அல்லாஹ் ஒரு சிறப்புச் சட்டமாக ஆக்கி வைத்துள்ளான்.

நபியின் மரணத்திற்குப் பிறகு அவர்களின் மனைவியர்களை மணக்கக் கூடாது என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் குறிப்பிடுகிறான்.

இதிலிருந்து நபிகள் நாயகம் உயிருடன் இல்லை என்பது தான் தெளிவே தவிர அவர்கள் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று புரிந்து கொள்ள முடியாது.

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப் பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக் காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண் டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான். (நபியின் மனைவியரான) அவர்களிடம் எதையேனும் நீங்கள் கேட்டால் திரைக்கப்பால் இருந்தே கேளுங்கள்! இதுவே உங்கள் உள்ளங்களுக்கும், அவர்களின் உள்ளங்களுக்கும் தூய்மையானது. அல்லாஹ்வின் தூதரை நீங்கள் தொந்தரவு செய்யக் கூடாது. அவருக்குப் பின் ஒருபோதும் அவரது மனைவியரை நீங்கள் மணக்கவும் கூடாது. இது அல்லாஹ்விடம் மகத்தானதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33:53

அவருக்குப் பின் அவரது மனைவியரை மணக்கக் கூடாது என்றால் அதன் பொருள் என்ன?

நபிகள் நாயகம் இறந்து விடுவார்கள். அவரது இறப்பிற்குப் பிறகு யாரும் அவர்களது மனைவியர்களை மணக்க கூடாது என்பது தானே இதன் பொருள்.

நபிகள் நாயகம் இறந்து விட்டார்கள். உயிருடன் இல்லை என்பதை எந்த வசனம் தெளிவாகப் பறை சாற்றுகின்றதோ அதையே நபிகள் நாயகம் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்பதற்கு இவர்கள் ஆதாரம் காட்டுகிறார்கள் எனில் இவர்கள் எந்த அளவுக்கு மூடர்கள் என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

மேலும் இறைமறை வசனம் நபிகள் நாயகம் மரணிப்பவரே என்பதை தெளிவாக எடுத்துரைத்து விட்டது.

(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.

அல்குர்ஆன் 39:30

(முஹம்மதே!) உமக்கு முன் எந்த மனிதருக்கும் நாம் நிரந்தரத்தை ஏற்படுத்தவில்லை. நீர் மரணித்து விட்டால் அவர்கள் நிலையாக இருப்பவர்களா? ஒவ்வொருவரும் மரணத்தைச் சுவைப்பவரே. நன்மை, தீமையின் மூலம் பரீட்சித்துப் பார்ப்பதற்காக உங்களைச் சோதிப்போம். நம்மிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

அல்குர்ஆன் 21:34, 35

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் காலத்திலேயே மரணத்தைத் தழுவி "பர்ஸக்' எனும் திரை மறைவு வாழ்க்கைக்குச் சென்று விட்டார்கள்.

(நபியவர்கள் மரணித்த போது) அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றி விட்டு, "எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் "அல்லாஹ் (என்றும்) உயிராய் இருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். மேலும், "(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே' என்னும் (39:30) இறை வசனத்தையும், "முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்' என்னும் (3:144) இறை வசனத்தையும் ஓதினார்கள். உடனே மக்கள் (துக்கத்தால் தொண்டையடைக்க) விம்மியழுதார்கள்.

நூல்: புகாரி 3668

நபிகள் நாயகம் மரணித்து விட்டார்கள் - உயிருடன் இல்லை என்பதை சஹாபாக்கள் உறுதியாக அறிந்து கொண்ட காரணத்தினால் தான் அபூபக்கர் (ரலி) அவர்களை ஆட்சியாளராக ஒருமித்து ஏற்றுக் கொண்டார்கள்.

பர்ஸக் வாழ்க்கைக்கு சென்று விட்ட நபிகள் நாயகத்தை உலகத்தில் உள்ளதைப் போன்று இன்னும் உயிருடன் வாழ்ந்து வருகிறார்கள் என்று சொன்னால் அது குர்ஆனுக்கு எதிரான கருத்தாகும். பகிரங்க வழிகேடாகும்.

 

குடும்பவியல்                          தொடர்: 26

பெண்கள் வேலைக்குச் செல்வதால் ஏற்படும் அவலங்கள்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்கள் இரண்டு சுமைகளைச் சுமக்கும் நிலைக்கு ஆளாகிறார்கள்.

வேலைக்குச் செல்வதால் வீட்டில் சோறு, குழம்பு காய்ச்சுவது இல்லாமல் ஆகிவிடுமா? வீட்டைக் கவனிக்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா? பிள்ளையை வயிற்றில் சுமக்கும் வேலை இல்லாமல் ஆகிவிடுமா? குழந்தையைப் பெற்றெடுத்த பிறகு பால் கொடுக்கும் வேலை இல்லாமல் போய்விடுமா? அந்தக் குழந்தையைச் சீராட்டி தாலாட்டி வளர்க்கும் வேலைகள் இல்லாமல் ஆகிவிடுமா?

நாங்கள் வேலைக்குப் போவதால் நீங்கள் பிள்ளையைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று கணவரிடம் பெண்களால் சொல்ல முடியுமா? அப்படியெல்லாம் சொல்ல முடியாது. ஏனெனில் பால் கொடுப்பவர்களாகவும், பிள்ளையை வயிற்றில் சுமப்பவர் களாகவும் இறைவன் ஆண்களைப் படைக்கவில்லை.

எனவே இவ்வளவு பொறுப்புக் களையும் சுமக்கும் பெண்கள், பொருளாதாரத்திற்காக வேலை பார்க்க வேண்டும் என்ற சுமையையும் சுமக்க நேர்ந்தால் இரட்டைச் சுமைகளாகி மனஅழுத்தத்திற்கு ஆளாகி விடுவ தையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

பெண்களை விடவும் உடல் திடகாத்திரமாகவும் அறிவுக் கூர்மையாகவும் இறைவனால் படைக்கப்பட்டிருக்கின்ற ஆணுக்கு, பொருளாதாரம் சம்பாதிக்கும் ஒரு வேலை தான். ஆனால் ஆண்களை விடவும் பலவீனமாகப் படைக்கப் பட்டிருக்கிற பெண்களுக்கு இரு வேலைகள் எனில் அது நியாயமானதாக இல்லை.

வேலைக்குச் செல்லும் பெண்களும், வேலைக்குச் செல்லாத பெண்களும் வீட்டு வேலைகளைக் கவனிக்கும் நிர்வாகத்தை அன்றாடம் நடத்திக் கொண்டுதான் இருக்கிறார்கள். வேலைக்குச் செல்லாத பெண்களுக்கு, வீட்டு நிர்வாகத்தைக் கவனிப்பது மட்டும் தான் அவர்களது பணி. இத்துடன் சம்பாதிக்கும் வேலையையும் சேர்த்துச் செய்கின்ற பெண்ணுக்கு மேலும் பணிச்சுமை கூடி அதிகப்படியாகச் சம்பாதிக்கும் வேலையினால் அவளுக்குச் சிரமம் தான் ஏற்படுகிறது.

பெரிய வசதி படைத்தவர்கள் வேண்டுமானால் துணி துவைப் பதற்கும், பாத்திரங்களைத் தேய்ப்பதற்கும், வீட்டு வேலைகளைச் செய்வதற்கும் கூலிக்கு ஆள் வைத்துப் பார்ப்பார்கள். இருப்பினும் சொந்தமாகப் பார்க்கிற மனதிருப்தியும், அதில் பெண்கள் அடைகிற இயற்கை ஆனந்தமும் வேலையாள் வைத்துப் பார்ப்பதில் இருக்காது. எப்படி யிருப்பினும் பெண்களுக்கு இரட்டைச் சுமைதான்.

இன்னும் சொல்வதாக இருப்பின், ஆண்கள் திருமணத்திற்காக பெண் பார்க்கும் போதே, வேலையில் இருக்கிற பெண்ணாக இருக்கிறாளா? என்றும், அதுவும் அரசாங்க வேலையில் இருக்கிற பெண்ணாக இருக்கிறாளா? என்றும் பார்க்கிற பலவீனமான ஆண்களை அதிகமாகப் பார்க்கிறோம்.

படித்த பெண் தான் வேண்டும் என்றால் அதையாவது ஏற்றுக் கொள்ளலாம். வேலையில் உள்ள பெண்களைத் தேடுவது என்பது அந்த ஆணின் பலவீனத்தையும் அவளது சம்பாத்தியத்தை எதிர்பார்க்கிற கையாலாகாத தன்மையையும் தான் காட்டுகின்றது. அதாவது பெண்ணின் வருமானத்தில் வாழ நினைக்கிறான்.

நாம் சம்பாதிப்பதற்கு எந்த முயற்சியும் எடுக்கத் தேவையில்லை என்றோ, அல்லது நாம் இன்னும் அதிகமாகச் சம்பாதிக்கலாம் என்றோ நினைத்துப் பெண் தேடுபவர்களை நடைமுறையில் அதிகம் பார்க்கிறோம்.

இஸ்லாமியக் குடும்பவியலுக்கு இது தகுதி கிடையாது. வேலைக்குச் செல்லாத பெண் தான் தனக்கு மனைவியாக வரவேண்டும் என ஒரு ஆண் மகன் தேடவேண்டும். ஏனெனில் மனைவி என்பவள் கணவனின் அரவணைப்பில் வாழ வேண்டும் என்று நபியவர்கள் கூறுகிறார்கள்.

அதாவது இஸ்லாமிய மார்க்கம் குடும்பவியல் நிர்வாகத்தை இரண்டாகப் பிரித்து, பொருள் தேடும் நிர்வாகமான வரவு செலவு வகைகள் அனைத்தையும் கணவன் நிர்வகிப்பான் என்றும், வீட்டு நிர்வாகத்தை மனைவி நிர்வகிப்பாள் என்றும் பிரித்து வைத்துள்ளது.

ஒவ்வொருவருக்கும் ஒவ்வொரு வகையான பொறுப்புக்கள் உண்டு என்று கூறுகிறது. அப்போதுதான் அந்தச் குடும்பம் சீராக இயங்கும். அவரவர் பொறுப்பை அவரவர் சரியாகப் பேணினாலே போதுமானது. எந்தப் பிரச்சனைகளும் வராது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாüயே. நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப் படுவீர்கள். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே தம் குடிமக்கள் குறித்து அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மக(னான குடும்பத் தலைவ)னும் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாüயே. அவன் தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவரது வீட்டிற்குப் பொறுப்பாüயாவாள். அவளுடைய பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாளர் தன் எசமானின் செல்வத் திற்குப் பொறுப்பாüயாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப் படுவான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ர-),

புகாரி 893, 2554, 2558, 2751, 5188, 5200

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நினைவில் கொள்க! நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பிலுள்ளவை பற்றி (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள். ஆட்சித் தலைவர் மக்களின் பொறுப்பாளர் ஆவார். அவர் தம் குடிமக்கள் குறித்து விசாரிக்கப் படுவார். ஓர் ஆண், தன் குடும்பத்தாருக்குப் பொறுப்பாளன் ஆவான். அவன் தன் பொறுப்புக்குட்பட்டவர்கள் குறித்து விசாரிக்கப்படுவான்.

ஒரு பெண், தன் கணவனின் இல்லத்துக்கும், அவனுடைய குழந்தைக்கும் பொறுப்பாளி ஆவாள். அவள் அவர்கள் குறித்து விசாரிக்கப்படுவாள். பணியாள் தன் உரிமையாளரின் செல்வத்திற்குப் பொறுப்பாளியாவான். அவன் அது குறித்து விசாரிக்கப்படுவான். நினைவில் கொள்க! உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளியே. உங்களில் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்புக்குட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி),

நூல்: முஸ்லிம் 3733

பெண்கள் கணவனின் வீட்டை நிர்வகிப்பார்கள். கணவன் பொருளா தாரத்தைக் கொடுத்துவிடுவான். மனைவிமார்கள்தான் வீட்டுக்குத் தேவையான அன்றாடம் பயன் படுத்தும் பொருட்களான அரிசி, பருப்பு, சீனி, புளி, மசாலா சாமான்கள், சாப்பாட்டுக்குத் தேவையான பொருட்கள் என்று பார்த்து பார்த்து வாங்கிக் கொள்வார்கள். நம்மிடம் பொருள் பட்டியல் தந்தால் வாங்கிக் கொடுக்கலாம். அல்லது அவர் களாகவே வாங்கிக் கொள்ளலாம். வாங்கிய பொருளை உணவாக சமைப்பதும் பெண்களின் பொறுப்பு தான். வீட்டைச் சுத்தமாக வைத்துக் கொள்வதும் அவர்களைச் சார்ந்த பொறுப்புதான். அதுபோக வயதான முதியவர்களை அரவணைப்பது, சீராட்டுவது, குழந்தைகளை வளர்ப்பது, அவர்களுக்குக் கல்வி கொடுப்பது, அவர்களைத் தொடர்ச்சியாகக் கண்காணிப்பது, ஒழுங்காக வருகிறார்களா? போகிறார்களா? என்று கவனிப்பது போன்ற இந்த வேலைகளையெல்லாம் ஆண்கள் பார்க்க முடியாது.

ஏனெனில் அவன் தான் இத்தனை வேலைக்குமான பொருளாதாரத்தை ஈட்டிக் கொண்டு வர வேண்டும். அதற்கான வேலையில் அவன் ஈடுபட்டிருப்பதால் ஆண்களுக்கு மேற்சொன்ன மற்ற வேலைகளைப் பார்க்கவே முடியாது. எனவே வீட்டிலிருந்து கண்காணிக்க வேண்டிய அத்தனை விஷயங்களும் பெண்களின் கட்டுப்பாட்டில் தான் இருக்கிறது என்று இஸ்லாம் இரண்டாகப் பிரித்து பொறுப்பைக் கொடுத்திருக்கிறது.

எனவே இஸ்லாமிய அமைப்பில் யாரெல்லாம் வேலைக்குப் போகும் பெண்களை திருமணத்திற்காகத் தேடுகிறார்களோ அல்லது வேலைக்கு அனுப்பலாம் என்பதற்காகப் படித்த பெண்களைத் தேடுகிறார்களோ அவர்கள் தங்களது ஆண்மைத் தன்மையை விட்டுக் கொடுத்தவர்கள்; தரம் தாழ்ந்தவர்கள். பெண்களுக்குப் படிப்பறிவு இருந்தால் பிள்ளைகளை நன்றாக வளர்ப்பார்கள் என்று நினைத்துப் படித்த பெண்களைத் தேடலாம்.

பெண்களுக்கு ஏற்படும் பாதிப்புகள்

ஒரு மனிதன் தற்போது 8 மணி நேரம் வேலை செய்கிறான். இன்றைய உலகில் அப்படித்தான் நேரம் குறித்து வைத்திருக்கிறார்கள். இதை உலகம் முழுவதும் சட்டமாக்கி விட்டார்கள். 8 மணி நேரம் தூக்கம், 8 மணி நேரம் பொழுதைக் கழிக்கும் கேளிக்கைகள், ஓய்வு என்று சந்தோஷமாக இருப்பது என்றெல்லாம் பிரித்து நடைமுறைப்படுத்துகிறார்கள்.

உலகம் முழுவதும் ஆய்வு செய்து, மனிதன் உடற்கூறு எதை ஏற்றுக் கொள்ளும்? எதை ஏற்றுக் கொள்ளாது? என்றெல்லாம் பரிசோதித்துத் தான் 8 மணி நேரம் வேலை செய்ய வேண்டும் என்ற இந்த முடிவை எடுத்துள்ளனர். இது மனித உரிமையாகப் பேணப்பட்டு, சட்டமாக நடைமுறைப்படுத்தப்பட்டு வருகிறது. இதுதான் மனிதன் நிம்மதி யாக வாழ்வதற்கு வழிவகுக்கும்.

8 மணி நேரத்திற்கு மேல் அதிகப்படியான நேரம் (ஞஸ்ங்ழ் பண்ம்ங்) வேலை பார்த்தால் மனிதன் நிம்மதியாக வாழ முடியாது. மன அழுத்தம் வந்துவிடும்.

பெண்கள் வேலைக்குப் போய் சம்பாதிப்பதால் முதலாவது விளைவு, பெண்கள் 16 மணி நேரம் வேலை பார்க்கும் சூழல் ஏற்படுகிறது. ஆண்களே 8 மணி நேரம்தான் வேலைக்குச் செல்ல முடியும் என்கிற நிலையில், பெண்கள் வேலைக்குச் செல்பவளாக இருந்தால், காலையில் எழுந்து பம்பரமாகச் சுழன்று தன்னுடைய சுயதேவைகளையும் கடமைகளையும் முடித்துவிட்டு, குடும்பத்திற்குத் தேவையான சமையல் வேலைகள், துணி துவைக்கும் வேலைகள் என்றெல்லாம் அவசர அவசரமாகச் செய்ய வேண்டும்.

பிறகு குடும்பத்திற்கும் தனக்கும் மதிய உணவையும் சேர்த்துச் செய்து கொண்டு, தனது உணவை கட்டிக் கொள்ள வேண்டும். இத்தனையும் செய்துவிட்டு அலுவலகத்திற்கு குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண் டும் என்பதற்காக ஆட்டோவைப் பிடிப்பதற்கும், பஸ்ஸைப் பிடிப்ப தற்கும், புகை வண்டியைப் பிடிப்பதற்கும் பதறிப் பதறி ஓடுகிற காட்சிகள் நம்மை உருக்குகிறது.

இதற்கிடையில் தான் கணவனுக் கும் பிள்ளைகளுக்கும் துணி தேய்த்துக் கொடுக்க வேண்டும், பிள்ளைகளைக் குளிக்க வைக்க வேண்டும், அவர்களுக்கான அனைத்துத் தேவைகளையும் வேக வேகமாகச் செய்ய வேண்டும். ஆனால் பெண்களின் சுபாவமே மெதுவாகச் செய்வது தான் என்பதை இவ்விடத்தில் கவனிக்கத் தவறி விடுகிறோம்.

ஆண்கள்தான் வேகவேகமாகப் பணிகளைச் செய்யும் விதமாக இறைவனால் உடற்கூறு வழங்கப் பட்டுள்ளனர். பெண்களின் இயல்புத் தன்மையே மெதுவாகவும் இலகு வாகவும் செய்யும் வகையில் தான் இறைவன் அவளது உடற்கூற்றைப் படைத்துள்ளான். அதற்கு மாற்றமாக ஆண்களைப் போன்று வேகமாகச் செய்யப்பழகுகிறாள்.

அதன் பிறகு பதறிப் பதறி ஓடி, பறந்து வேலைக்குச் சென்று விடுகிறாள். அங்கே எவ்வளவு சிரமங்களைக் கையாளுகிறாளோ அதையும் தாங்கிக் கொண்டு, வேலை முடித்து வந்த பிறகு உடனே மீண்டும் கணவனுக்கும் பிள்ளை களுக்கும் பணிவிடை செய்கிறாள். அதன் பிறகு இரவு உணவு சமைக்கும் வேலையில் ஈடுபடுகிறாள்.

ஆண்கள் வேலைக்குச் சென்றுவிட்டு ஓய்வு எடுப்பதைப் போன்று பெண்களுக்கு எடுக்க முடியாது. ஆண்கள் அங்கே இங்கே என்று வெளியில் செல்வார்கள். தனது மூளைக்கு ஓய்வளிப்பார்கள்.

ஆனால் பெண்கள் தங்களது இயல்புத் தன்மைக்கு மாற்றமாக காலை 6 மணியிலிருந்து இரவு 10 மணி வரைக்கும் செய்யும் வேலை மொத்தம் 16 மணி நேர வேலையாகும். அதுவும் இடைவிடாத வேலை. இவ்வாறு செய்வது பெண்களின் தன்மைக்குக் கேடு விளைக்கும் என்பதை முதலாவது விளங்கிக் கொள்ள வேண்டும்.

இதனால் ஏற்படும் முக்கிய விளைவு மன உளைச்சல் தான். சாப்பாட்டில் ஈடுபாட்டுடன் சாப்பிட மாட்டார்கள். ஒருவகையான வெறுப்பை தொடர்ச்சியாக வெளிக்காட்டுவார்கள். வெகு விரைவாகக் கோபப்படுவார்கள். ஆத்திரமடைவார்கள். இன்னும் சொல்வதெனில் இப்படி வேலைக்குச் செல்பவர்களில் பலர் கணவனுடன் குடும்ப உறவில் சந்தோஷமாக ஈடுபட வேண்டும் என்கிற எண்ணம் குன்றிவிடும். இல்லற வாழ்வைக் கூட இழக்க வேண்டிய சூழல் ஏற்பட்டுவிடும்.

இவ்வளவு வேலைகளைச் செய்துவிட்டுப் போய் படுக்கையில் விழுந்தோம், படுத்தோம், தூங்கினோம் என்பதாக வாழ்க்கை இயந்திரத்தைப் போன்றாகிவிடும். இதனால்தான் கணவன் வேறுமாதிரியாக சுற்ற ஆரம்பித்து விடுகிறான். இப்படி இல்லற வாழ்க்கையில் கூட நாட்டமில்லாத வகையில் மன அழுத்தம் உண்டாகி விடுகிறது. மேலும் குடல் அளற்சி என்ற நோய்கூட பெண்களுக்கு வருவதாகச் சொல்கிறார்கள்.

அதே நேரத்தில் குழந்தையைப் பெற்றிருந்தால் அந்தக் குழந்தையை விட்டும் 8 மணி நேரம் பிரிகிறார்கள். உடலால் தாய் பிள்ளையைப் பிரிந்து இருந்தாலும் மனதால் தனது குழந்தையின் மீதே பற்றுதல் உடையவர்களாக இருப்பார்கள். இதனால் வேலையையும் சரியாகக் கவனிக்க முடியாமல், குழந்தையையும் ஒழுங்காகப் பராமரிக்க முடியாத மனச் சிதைவு நிலையை அடைகிறார்கள்.

பெண்களின் இயற்கைத் தன்மை என்னவெனில், இரவில் நடுநிசியில் ஆழ்ந்து தூங்கிக் கொண்டிருந்தாலும் குழந்தையின் அழுகுரல் கேட்ட அடுத்த கணத்திலேயே எழுந்து விடுவார்கள். ஆனால் ஆண்களால் அப்படி எழுந்திருக்க முடியாது. அதாவது உளப்பூர்வமாக தாய்க்கும் சேய்க்கும் மத்தியில் இனம்புரியாத ஒரு தொடர்பு இருக்கிறது. வேலைக்குப் போகிற பெண்களின் உடல் தான் அலுவலகத்தில் இருக்குமே தவிர மனது முழுவதும் தன் குழந்தை குறித்தே ஏங்கிக் கொண்டிருக்கும்.

அதிலும் பால் குடிப் பருவத்திலுள்ள 2 வயதிற்குட்பட்ட குழந்தையாக இருந்தால், குறிப்பிட்ட நேரத்திற்குள் பால் கொடுத்தாக வேண்டும். இந்நேரத்தில் வேலைக்குச் சென்ற பெண் என்ன மாதிரியான மனநிலையில் உழல்வாள்? 8 மணி நேரத்திற்கும் தாய்ப்பால் கிடைக்காமல் அந்தக் குழந்தை வேறு வகையான செயற்கை உணவைத் தான் உட்கொள்ள வேண்டிய நிர்ப்பந்தம் ஏற்படும்.

ஆனால் இன்றைய அறிவியலும் மருத்துவமும் தாய்ப்பாலுக்கு இணையான உணவு உலகில் வேறு இல்லவே இல்லை என்கிறார்கள். எல்லாவிதமான நோய் எதிர்ப்பு சக்தியும் அதில்தான் உள்ளது. அப்படியெனில் தாய்ப்பாலை உரிய பருவத்தில் சரியான அளவுக்குக் கொடுத்து, நோய் எதிர்ப்புத் தன்மையுடைய குழந்தையாக வளர்ப்பதற்கு வேலைக்குச் செல்லும் பெண்களால் முடியுமா? அப்படி நடப்பதற்கு வாய்ப்பே கிடையாது.

இதனால் நீண்ட நேரத்திற்கு பால்குடிக்காமல் இருந்தால் அந்தக் குழந்தையும் ஏக்கம் அடைகிறது. அதுமட்டுமல்ல, தாய்க்குப் பால் சுரந்து விட்டால் சுரக்க சுரக்க பிள்ளைக்குக் கொடுத்துவிட வேண்டும். 8 மணி நேரம் வேலை, போவதற்கு 1 மணி நேரமும் வீட்டிற்கு திரும்ப வருவதற்கு 1 நேரம் கணக்கிட்டால் மொத்தம் 10 மணிநேரம் குழந்தையைப் பிரிந்து வாழ்கிற தாய், சுரக்கிற பாலைக் குழந்தைக்குக் கொடுக்காமல் செயற்கையாக கட்டுப்படுத்த முயற்சித்தால் தாய்ப்பால் சுரப்பது குறையும்.

எந்த அளவுக்குப் பால் கொடுக் கிறார்களோ அந்தளவுக்குத் தாய்க்குப் பால் உற்பத்தியாகிக் கொண்டே இருக்கும். கிணறு, இறைக்க இறைக்க ஊறுவதைப் போன்றுதான் தாய்ப்பால் சுரப்பையும் இறைவன் படைத்து வைத்துள்ளான்.

மேலும் பால் கொடுக்காமல் கட்டுப்படுத்துவதால் பலருக்குப் பால் கட்டி உறைந்து விடுகிறது. இது தேவையற்ற வலியையும் மனஉளைச்சலையும்  ஏற்படுத்துகிறது. மேலும் மார்பகப் புற்று நோய் ஏற்படுவதற்கும் இது காரணமாக அமைகின்றது.

இதனால் தாய்க்குத் தேவையற்ற கோபம் வருவதாகவும், உடல் சிதைவில் பல மாற்றங்களினால் தேவையில்லாத ரசாயண மாற்றங்கள் உண்டாவதாகவும் ஆரோக்கியத்திற்கு கேடு என்றெல்லாம் பல விஷயங்களை இன்றைய மருத்துவ ஆராய்ச்சியாளர்கள் கண்டறிந்து வெளியிட்டுள்ளனர். இத்தனை விளைவுகளையும் வேலைக்குப் போகின்ற பெண் சுமக்க நேரிடுகிறது.

குழந்தைக்கு, தாய்ப் பாசம் என்பது இன்றியமையாத தேவை. பால் கொடுப்பதை விடவும் இதுதான் முக்கியம். தாய் என்றால் பிள்ளையை அணைத்து அரவணைத்து, சிரித்து, கொஞ்சிப் பேச வேண்டும். இது குழந்தைக்கு ஒரு டானிக் போன்ற மருந்து தான். இப்படி கொஞ்சுவதையும் சிரிப்பதையும் தூக்கி அரவணைப்பதையும் எல்லாக் குழந்தைகளுமே எதிர்பார்க்கும். எந்த வீட்டில் குழந்தைகளை ஆசையுடன் தூக்கிக் கொஞ்சி, சிரிப்புக் காட்டி வளர்க்கிறார்களோ அந்த வீட்டுக் குழந்தைகள் நல்ல குழந்தைகளாக, நல்ல சூழ்நிலையுடன் வளர்வதாகக் கண்டறிந்துள்ளனர் ஆய்வாளர்கள்.

இதற்கு மாறாக வேலைக்குச் செல்கிற தாய் வளர்க்கிற பிள்ளைகளைப் பார்த்தால், பெரும் பாலும் தறுதலை களாவும், முரடர்களாவும், அன்புக்கு ஏங்குகிறவர்களாகவும் இருப்பார்கள். இந்தச் சூழலில் வளர்கின்ற பிள்ளைகள் நல்லவர்களாக வளர்வ தற்கு வாய்ப்பு மிக மிகக் குறைவு என்றும் கண்டுபிடித்துள்ளனர்.

ஆக, குடும்ப வாழ்க்கை வேண்டும் என்று திருமணம் முடித்துவிட்டு, அதன் வழியாகப் பிள்ளையையும் பெற்றெடுத்துவிட்டு, யாரோ வளர்த்துக் கொள்வார்கள் என்று விட்டுவிட்டுச் சென்றால், அதற்காகவா இவர்கள் திருமணம் முடித்தார்கள்? அதற்காகவா குடும்ப வாழ்க்கையில் ஈடுபட்டார்கள்?

எனவே பிள்ளைகளுக்குச் சரியான பாச உணர்வு ஊட்டப்படாமல் கண்ட மாதிரி வளர்வதால் பிள்ளைகள் பாச உணர்வற்றவர்களாக வளர்வது குழந்தைக்கும் கேடு, தாய்க்கும் கேடு,  இந்தச் சமூகத்திற்கும் கேட்டை விளைவிக்கின்றது.

பெண்கள் வேலைக்குச் செல்வதால் அவர்களுக்கு ஏற்படும் இன்னும் பல்வேறு பாதிப்புகளைப் பற்றி இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

 

இணைவைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா?

கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

இணை வைப்பாளர்கள் அறுத்த பிராணிகளைச் சாப்பிடலாமா? என்பது குறித்து தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களிடையே கருத்து வேறுபாடு இருந்து வந்தது. இது குறித்து ஆய்வு செய்து அறிவிக்கப்படும் என்று தவ்ஹீத் ஜமாஅத் அறிவிப்பு செய்திருந்தது.

இது குறித்து சில அமர்வுகள் கடந்த காலங்களில் கூட்டப்பட்டன. இது ஹலால் ஹராம் சம்பந்தப்பட்ட விஷயமாக உள்ளது. நமது முடிவு ஹலாலை ஹராமாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது; ஹராமை ஹலாலாக்கும் வகையிலும் இருக்கக் கூடாது என்பதால் ஆகஸ்ட் மாதம் இறுதி அமர்வில் இது குறித்த எல்லா சந்தேகங்களையும் தீர்க்கும் வகையில் ஆதாரங்களைத் திரட்டி வருமாறு அறிஞர்களுக்கு அறிவிக்கப்பட்டது.

அதன் அடிப்படையில் இது தொடர்பாக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அறிஞர்களின் ஆய்வுக் கூட்டம் ஆகஸ்ட் 13, 14 ஆகிய தேதிகளில் மாநிலத் தலைமையகத்தில் நடைபெற்றது. இந்த ஆய்வரங்கில்  குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களின் அடிப்படையில் எடுக்கப்பட்ட  முடிவுகளையும், கருத்துக்களையும் மக்களின் பார்வைக்குச் சமர்ப்பிக்கின்றோம்.

இது குறித்துப் பின்வரும் திருக் குர்ஆன் வசனங்கள் பேசுகின்றன.

நீங்கள் அல்லாஹ்வின் வசனங் களை நம்பியவர்களாக இருந்தால் அவன் பெயர் கூறப்பட்(டு அறுக்கப்பட்)டதை உண்ணுங்கள்!

திருக்குர்ஆன் 6:118

அல்லாஹ்வின் பெயர் கூறப் பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? நீங்கள் நிர்பந்திக்கப்படும் போது தவிர (மற்ற நேரங்களில்) உங்களுக்கு அவன் தடை செய்ததைத் தெளிவுபடுத்தி விட்டான். அதிகமா னோர் அறிவில்லாமல் தமது மனோ இச்சைகள் மூலம் வழிகெடுக்கின் றனர். வரம்பு மீறியோரை உமது இறைவன் மிக அறிந்தவன்.

திருக்குர்ஆன் 6:119

அல்லாஹ்வின் பெயர் கூறப் படாததை உண்ணாதீர்கள்! அது குற்றமாகும். உங்களுடன் தர்க்கம் செய்யுமாறு ஷைத்தான்கள் தமது தோழர்களுக்குக் கூறுகின்றனர். நீங்கள் அவர்களுக்குக் கட்டுப் பட்டால் நீங்கள் இணை கற்பிப்பவர்களே.

அல்குர்ஆன் 6:121

ஒருவன் திருக்குர்ஆனை நம்புகிறானா? இல்லையா? என்பதற்கான அளவுகோலில் ஒன்று அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்பதாகும் என்ற கருத்தை 6:118 வசனம் கூறுகிறது. "நீங்கள் அல்லாஹ்வின் வசனங்களை நம்பியவர்களாக இருந்தால் அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்'' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது.

உண்ண அனுமதிக்கப்பட்ட பிராணிகள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டுள்ளன என்பது தெரிய வந்த பின் அதை உண்ண மறுப்பது குர்ஆனை மறுப்பதாகும் என்று இவ்வசனம் கடுமையான விஷயமாக குறிப்பிடுகிறது.

6:119 வசனம் இன்னும் அழுத்தமாக இக்கருத்தை முன்வைக்கிறது. அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை நீங்கள் உண்ணாமல் இருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று இவ்வசனத்தில் கூறப்படுகிறது. அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்ட பின்னர் அதை உண்ண மறுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்ற கருத்தில் இவ்வசனம் அமைந்துள்ளது.

6:121 வசனம், அல்லாஹ்வின் பெயர் கூறப்படாமல் சாகடிக்கப்பட்டதை உண்ணக் கூடாது என்று தடை விதிக்கின்றது.

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டால் உண்ணலாம்; உண்ண வேண்டும்; உண்பதை தடுக்கப்பட்டதாக கருதக் கூடாது. அல்லாஹ்வின் பெயர் கூறப் படாவிட்டால் அதை உண்ணக் கூடாது என்று இம்மூன்று வசனங்களிலும் கூறப்படுகிறது.

அல்லாஹ்வின் பெயரைக் கூறுபவனுக்குரிய தகுதி

அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்கப்பட்டதைத் தான் உண்ண வேண்டும் என்பது தெளிவான சொற்களால் கூறப்பட்டு இருந்தாலும் இதில் ஒரு சந்தேகம் எழுகின்றது.

அல்லாஹ்வை நம்பும் சிலர் அல்லாஹ்வுக்கு இணை கற்பிப் பவர்களாக உள்ளனர். இவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததாக ஆகுமா? என்பதுதான் இந்தச் சந்தேகம். இந்தச் சந்தேகத்துக்கு அடிப்படையும் இருக்கிறது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வுக்காக எந்த வணக்கத்தைச் செய்தாலும் அல்லாஹ் ஏற்க மாட்டான். இணை கற்பித்தால் எல்லா நல்லறங்களும் அழிந்து விடும் என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் கூறுகிறது.

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். அதற்குக் கீழ் நிலையில் உள்ள (பாவத்)தை, தான் நாடியோருக்கு மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் மிகப் பெரிய பாவத்தையே கற்பனை செய்தார்.

திருக்குர்ஆன் 4:48

தனக்கு இணைகற்பிக்கப்படுவதை அல்லாஹ் மன்னிக்க மாட்டான். இதற்குக் கீழ் நிலையில் உள்ளதை, தான் நாடியோருக்கு அவன் மன்னிப்பான். அல்லாஹ்வுக்கு இணைகற்பிப்பவர் (உண்மையை விட்டும்) தூரமான வழிகேட்டில் விழுந்து விட்டார்.

திருக்குர்ஆன் 4:116

அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்போருக்கு சொர்க்கத்தை அல்லாஹ் தடைசெய்து விட்டான். அவர்கள் சென்றடையும் இடம் நரகம். அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளர்களும் இல்லை''

திருக்குர்ஆன் 5:72

இதுவே அல்லாஹ்வின் வழி. தனது அடியார்களில் தான் நாடி யோரை இதன் மூலம் நேர்வழியில் செலுத்துகிறான். அவர்கள் இணை கற்பித்திருந்தால் அவர்கள் செய்த (நல்ல)வை அவர்களை விட்டும் அழிந்திருக்கும்.

திருக்குர்ஆன் 6:88

"நீர் இணைகற்பித்தால் உமது நல்லறம் அழிந்து விடும்; நீர் நட்டமடைந்தவராவீர். மாறாக, அல்லாஹ்வையே வணங்குவீராக! நன்றி செலுத்துவோரில் ஆவீராக!'' என்று (முஹம்மதே!) உமக்கும், உமக்கு முன் சென்றோருக்கும் தூதுச் செய்தி அறிவிக்கப்பட்டது.

திருக்குர்ஆன் 39:65

இணை கற்பிப்போர் தமது (இறை)மறுப்புக்கு, தாமே சாட்சி கூறிக் கொண்டிருக்கும் நிலையில் அல்லாஹ்வின் பள்ளிவாசல்களை நிர்வகிப்பது தகாது. அவர்கள் செய்தவை அழிந்து விட்டன. அவர்கள் நரகில் நிரந்தரமாக இருப்பார்கள்.

திருக்குர்ஆன் 9:17

அல்லாஹ்வுக்கு இணைகற்பிக்காத நிலையில் செய்யும் காரியங்கள் தான் இறைவனால் ஏற்கப்படும் என்பதை இவ்வசனங்கள் தெளிவாகக் கூறுகின்றன. இதனடிப்படையில் பார்க்கும் போது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தாலும் அதை எப்படி உண்ண முடியும்? என்ற சந்தேகம் எழுகின்றது.

வணக்க வழிபாடுகளைப் பொறுத்த வரை இந்தச் சந்தேகம் சரியானது என்றாலும் பிராணிகளை அறுக்கும் விஷயத்துக்கு இது பொருந்தாது என்பது தான் சரியானதாகத் தெரிகிறது.

மேலே நாம் எடுத்துக் காட்டிய வசனங்களில் அல்லாஹ்வின் பெயரை முஸ்லிம்களாகிய நீங்கள் கூறி அறுத்ததை உண்ணுங்கள் எனக் கூறவில்லை. மாறாக அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள் என்று செயப்பாட்டு வினையாகக் கூறப்பட்டுள்ளது.

அல்லாஹ்வின் பெயர் கூறப்பட வேண்டும் என்பதுதான் முக்கியம்; கூறுபவர் யார் என்பது முக்கியமில்லை என்ற கருத்து இதில் அடங்கியுள்ளது.

இவ்வசனங்கள் மக்காவில் அருளப்பட்டவையாகும். முஸ்லிம்கள் மிக குறைவாக இருந்த அந்தக் காலத்தில் முஸ்லிம்களின் உறவினர்கள் இணைகற்பிப்பவர்களாக இருந்தனர்.     இணை கற்பிப்பவர் களைச் சார்ந்தும் இருந்தனர். அவர்கள் தரும் மாமிச உணவுகளை உண்ணக் கூடிய நிலையை அவர்கள் சந்தித்தனர்.

அவர்கள் சந்தித்த பிரச்சனைக்குத் தீர்வாகவே இவ்வசனங்கள் அருளப்பட்டன.

இணை கற்பித்தவர்கள் தரும் மாமிச உணவை உண்ணக் கூடாது என்பது அல்லாஹ்வின் நோக்கமாக இருந்தால் முஸ்லிம்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ, நீங்கள் அறுத்ததை மட்டும் உண்ணுங்கள் என்றோ காபிர்கள் அறுத்ததை உண்ணாதீர்கள் என்றோ அல்லது இது போன்ற தெளிவான வார்த்தைகளால் அல்லாஹ் கட்டளையிட்டு இருப்பான்.

ஆனால் அவ்வாறு கூறாமல் அறுப்பவர் யார் என்பதை அலட்சியப் படுத்தும் வகையில் "அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதை உண்ணுங்கள்' என்று அல்லாஹ் கூறுகிறான்.

இணை கற்பித்துக் கொண்டு இருந்த அன்றைய மக்கள் அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுத்து வந்தனர். அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுத்து வந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயர்  கூறாமல் அறுத்தால் அதை உண்ணாதீர்கள்! அல்லாஹ்வின் பெயரைக் கூறி அவர்கள் அறுத்ததை உண்ணுங்கள் என்ற     கருத்தைத் தரும் வகையில் மேற்கண்ட வசனங்கள் அமைந்துள்ளன.

மேற்கண்ட மூன்று வசனங்களும் முஸ்லிம்களுக்கு இருந்த ஒரு தயக்கத்தை நீக்கும் வகையில் அமைந்துள்ளன.  நீங்கள் எப்படி உண்ணாமல் இருக்கலாம்? உண்ணாமலிருக்க உங்களுக்கு என்ன வந்தது? என்ற வாசகங்களில் இருந்து இதை அறியலாம்.

முஸ்லிம்களுக்கு எதில் தயக்கம் இருந்திருக்கும்?

அல்லாஹ்வின் பெயரைக் கூறித்தான் முஸ்லிம்கள் அறுப்பார்கள். அதை உண்ணலாமா என்ற சந்தேகமோ, தயக்கமோ அன்றைய முஸ்லிம்களுக்கு இருந்திருக்க முடியாது.

எதில் அவர்களுக்குத் தயக்கமும், சந்தேகமும் இருந்திருக்கும்? இணை கற்பிப்பவர்கள் அறுத்து விட்டார்களே? அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அவர்கள் இணை கற்பித்து வருகிறார்களே? அதை எப்படி உண்பது என்ற தயக்கம் தான் இருந்திருக்கும்.

இந்தத் தயக்கத்தைப் போக்கும் வகையில் தான் இவ்வசனங்களின் வாசக அமைப்பு அமைந்துள்ளது.

மக்காவில் வாழ்ந்த இணை கற்பிப்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி எப்படி அறுத்திருப்பார்கள்? அவர்கள் தங்களின் தெய்வங்கள் பெயரைச் சொல்லித்தானே அறுத்திருப்பார்கள்? என்ற சந்தேகம் எழலாம். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறாமலும் அறுப்பார்கள். அல்லாஹ்வின் பெயர் கூறியும் அறுப்பார்கள் என்பதை திருக்குர்ஆனிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.

சில கால்நடைகளில் சவாரி செய்வது தடுக்கப்பட்டுள்ளது எனவும், சில கால்நடைகள் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம் எனவும் அவன் மீது இட்டுக்கட்டிக் கூறுகின்றனர். அவர்கள் இட்டுக்கட்டிக் கொண்டி ருந்ததால் அவர்களை அவன் தண்டிப்பான்.

திருக்குர்ஆன் 6:138

"சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூற மாட்டோம்'' என்ற வாசகத்தில் இருந்தே ''மற்ற சில கால்நடைகளின் மீது அல்லாஹ்வின் பெயரைக் கூறுவார்கள்'' என்பதை நாம் அறிந்து கொள்ள முடிகிறது.

அவர்கள் சில கால்நடைகளை அறுக்கும் போது அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறாமல் இருப்பதை அல்லாஹ் இடித்துரைக் கிறான். அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அது வரவேற்கத் தக்கது என்பதும் இதிலிருந்து தெரிகிறது.

இதே அடிப்படையை பின்வரும் நபிமொழியும் போதிக்கின்றது.

இரத்தத்தை ஓடச் செய்கின்ற எந்த ஆயுதத்தால் அறுக்கப் பட்டிருந்தாலும் (பிராணி அறுக்கப் படும் போது) அதன் மீது அல்லாஹ் வின் பெயர் கூறப்பட்டிருக்கும் பட்சத்தில் அதை உண்ணுங்கள்; பற்களாலும் நகங்களாலும் அறுக்கப் பட்டதைத் தவிர.

அறிவிப்பவர்: ராஃபிவு பின் கதீஜ் (ரலி)

நூல்: புகாரி (2488)

மேற்கண்ட நபிமொழியிலும் அல்லாஹ்வின் பெயரைக் கூற வேண்டும் என்பதுதான் கட்டளை யாகக் கூறப்பட்டுள்ளதே தவிர அதனைக் கூறுபவர் யார்? அவருடைய கொள்கை என்ன? என்பதைக் கவனிப்பதற்கு அல்லாஹ் கட்டளையிடவில்லை.

எனவே அல்லாஹ்வை நம்பிய நிலையில் அல்லாஹ்விற்கு இணை கற்பிக்கும் காரியங்களைச் செய்பவர் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் நாம் தாராளமாகச் சாப்பிடலாம் என்ற முடிவிற்கே நாம் வரமுடியும். இதுதான் இறை வசனத்தின் அடிப்படையில் சரியான முடிவாகும்.

அபூஜஹ்ல் போன்றவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்திருந்தால் அதையே சாப்பிடலாம் என்றால் முஸ்லிம் சமுதாயத்தில் இருந்து கொண்டு அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்கள், தர்கா வழிபாடு செய்பவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம் என்பது தான் சரியான கருத்தாக தெரிகிறது.

நமது நாட்டிலும் முஸ்லிம் அல்லாத மக்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தால் உண்ணலாமா என்ற சந்தேகத்தையும் நாம் தெளிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.

இணை கற்பித்த மக்காவாசி களுக்கும், ந்மது நாட்டில் வாழும் முஸ்லிமல்லாதவர்களுக்கும் பெரிய வித்தியாசம் உள்ளது.

மக்காவில் வசித்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ் என்று ஒருவன் இருக்கிறான் என்று நம்பினார்கள். அவன் தான் படைத்தவன் என்றும், எல்லா அதிகாரமும் அவனுக்கே உரியது என்றும் நம்பினார்கள். அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்பதற்காகவே குட்டி தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள். இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து அறியலாம்.

"வானத்திலிருந்தும், பூமியிலி ருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப்புலனையும், பார்வை களையும் தன் கைவசம் வைத்திருப் பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதி லிருந்து உயிரற்றதையும் வெளிப் படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?' என்று கேட்பீராக! "அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா?' என்று நீர் கேட்பீராக!

திருக்குர்ஆன் 10:31

"பூமியும், அதில் உள்ளோரும் யாருக்குச் சொந்தம்? நீங்கள் அறிந்தால் (பதிலளியுங்கள்!)' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "அல்லாஹ் வுக்கே' என்று அவர்கள் கூறுவார்கள். "சிந்திக்க மாட்டீர்களா?' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:84,85

"ஏழு வானங்களுக்கும் அதிபதி, மகத்தான அர்ஷுக்கும் அதிபதி யார்?' எனக் கேட்பீராக! "அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா?' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:86,87

"பாதுகாப்பவனும், (பிறரால்) பாதுகாக்கப்படாதவனும், தன் கைவசம் ஒவ்வொரு பொருளின் அதிகாரத்தை வைத்திருப்பவனும் யார்? நீங்கள் அறிந்தால் (பதில் கூறுங்கள்!)' என்று கேட்பீராக! "அல்லாஹ்வே' என்று கூறுவார்கள். "எவ்வாறு மதி மயக்கப்படுகிறீர்கள்?' என்று கேட்பீராக!

திருக்குர்ஆன் 23:88,89

"வானங்களையும், பூமியையும் படைத்தவனும், சூரியனையும், சந்திரனையும் தன் கட்டுப்பாட்டில் வைத்திருப்பவனும் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்' என்று கூறுவார்கள். அப்படியாயின் "எவ்வாறு அவர்கள் திசை திருப்பப்படுகிறார்கள்?'

திருக்குர்ஆன் 29:61

"வானத்திலிருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

திருக்குர்ஆன் 29:63

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்' என்று அவர்கள் கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்' என்று கூறுவீராக! எனினும் அவர்களில் அதிமானோர் அறிய மாட்டார்கள்.

திருக்குர்ஆன் 31:25

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர் களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்' என்று கூறுவார்கள். "அல்லாஹ்வை யன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்!' என்று கேட்பீராக! "அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 39:38

"வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்?' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "மிகைத்தவனாகிய அறிந்தவனே இவற்றைப் படைத்தான்' எனக் கூறுவார்கள்.

திருக்குர்ஆன் 43:9

அவர்களைப் படைத்தவன் யார் என்று அவர்களிடமே நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். எவ்வாறு திசை திருப்பப் படுகின்றனர்?

திருக்குர்ஆன் 43:87

இவ்வசனங்கள் கூறுவது என்ன? மக்காவில் வாழ்ந்த இணை கற்பித்தவர்கள் அல்லாஹ்வைத் தான் படைத்தவன் என்று நம்பினார்கள் என்று தெளிவுபடக் கூறுகின்றன.

அப்படியானால் எதற்காக குட்டி தெய்வங்களை ஏற்படுத்திக் கொண்டார்கள்? அதைத் திருக்குர்ஆன் பின்வருமாறு விளக்குகிறது.

அல்லாஹ்வையன்றி தமக்குத் தீமையும், நன்மையும் செய்யாத வற்றை வணங்குகின்றனர். "அவர்கள் அல்லாஹ்விடம் எங்களுக்குப் பரிந்துரை செய்பவர்கள்' என்றும் கூறுகின்றனர். "வானங்களிலும், பூமியிலும் அல்லாஹ்வுக்குத் தெரியாததை அவனுக்குச் சொல்லிக் கொடுக்கிறீர்களா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:18

கவனத்தில் கொள்க! தூய இம் மார்க்கம் அல்லாஹ்வுக்கே உரியது. அவனையன்றி பாதுகாவலர்களை ஏற்படுத்திக் கொண்டோர் 'அல்லாஹ்விடம் எங்களை மிகவும் நெருக்கமாக்குவார்கள் என்பதற் காகவே தவிர இவர்களை வணங்கவில்லை' (என்று கூறுகின் றனர்). அவர்கள் முரண்பட்டது பற்றி அவர்களிடையே அல்லாஹ் தீர்ப்பளிப்பான். (தன்னை) மறுக்கும் பொய்யனுக்கு அல்லாஹ் நேர்வழி காட்ட மாட்டான்.

திருக்குர்ஆன் 39:3

மக்காவில் வாழ்ந்த அன்றைய மக்கள் இஸ்லாத்தை ஏற்காவிட்டாலும் அல்லாஹ்வை நம்பி இருந்தார்கள். அவன் தான் மாபெரும் ஆற்றல் மிக்கவன் என்று நம்பினார்கள். அத்துடன் குட்டி தெய்வங்களையும் ஏற்படுத்தி அவர்கள் அல்லாஹ்விடம் பரிந்து பேசுவார்கள் என்று கருதி அவர்களை வணங்கினார்கள் என்பது இதிலிருந்து தெரிகிறது.

நமது நாட்டில் உள்ள இணை கற்பிக்கும் பிற மதத்தினருக்கு இந்த நம்பிக்கை இல்லை. அல்லாஹ்வைப் பற்றிய நம்பிக்கை அறவே இல்லை. ஒரு கடவுள் தான் உலகுக்கு இருக்கிறான் என்ற நம்பிக்கையும் இல்லை. எனவே அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுக்க மாட்டார்கள். அல்லாஹ் என்ற சொல்லை அவர்கள் கூறினாலும் அதன் பொருளைக் கருத்தில் கொள்ளாமல் மந்திரச் சொல்லாக மட்டுமே சொல்வார்கள். கிளிப்பிள்ளை அல்லாஹ்வின் பெயரைச் சொல்வதற்கு ஒப்பாக இது அமைந்துள்ளது. எனவே அல்லாஹ் என்று ஒருவன் இருப்பதை ஏற்றுக் கொள்ளாமல் அல்லாஹ்வின் பெயர் கூறி ஒருவர் அறுத்தால் அதை உண்ணக் கூடாது.

நமது நாட்டில் உள்ள பிற மதத்தில் உள்ளவர்கள் அகில உலகுக்கும் ஒரு கடவுள் தான் இருக்கிறான் என்று மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதை உண்ணலாம்.

மக்காவாசிகள் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த காரணத்தால் அவர்கள் மறுமையில் நிரந்தர நரகை அடைவார்கள் என்றாலும் உலகில் அவர்களின் பிரார்த்தனையைக் கூட அல்லாஹ் ஏற்றுக் கொள்கிறான்.

அவர்கள் கப்பலில் ஏறிச் செல்லும் போது பிரார்த்தனையை அவனுக்கே உளத்தூய்மையுடன் உரித்தாக்கி அல்லாஹ்வைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்கள் இணை கற்பிக்கின்றனர்.

திருக்குர்ஆன் 29:65

முகடுகளைப் போல் அலைகள் அவர்களை மூடும் போது உளத் தூய்மையுடன் வணக்கத்தை உரித் தாக்கி அவனைப் பிரார்த்திக்கின்றனர். அவர்களைக் காப்பாற்றி நிலத்தில் சேர்த்ததும் அவர்களில் நேர்மையாக நடப்பவரும் உள்ளனர். நன்றி கெட்ட சதிகாரர்களைத் தவிர வேறு எவரும் நமது சான்றுகளை நிராகரிப்பதில்லை.

திருக்குர்ஆன் 31:32

நெருக்கடியான நேரத்தில் துன்பத்தைப் போக்குமாறு பிரார்த்தனை செய்தால் அல்லாஹ் அதை ஏற்று அவரகளுக்கு உதவிபுரிகிறான் என்று இவ்வசனங்கள் கூறுகின்றன.

இதுபோல் தான் அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததையும் அல்லாஹ் எடுத்துக் கொள்கிறான். அவர்களின் நல்லறங்கள் பாழாகும் என்பது வேறு. அவர்கள் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்ததை உண்ணலாம் என்பது வேறு.

வேதம் கொடுக்கப் பட்டோரின் உணவு

அல்லாஹ்வை நம்பியிருந்தும் அல்லாஹ்வுக்கு இணை கற்பித்த மக்காவாசிகள் அறுத்ததை உண்ணலாம் என்று மக்காவில் அருளப்பட்ட வசனத்தின் மூலம் தெளிவுபடுத்தப்பட்டது.

மதீனாவில் வேதம் கொடுக்கப் பட்ட மக்கள் வாழ்ந்தனர். அவர்கள் அறுத்த்தை உண்ணலாமா என்று ஏற்படும் சந்தேகத்தை நீக்கும் வகையில் அவர்கள் அறுத்ததையும் உண்ணலாம் என்று அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான்.

தூய்மையானவை உங்களுக்கு இன்று அனுமதிக்கப்பட்டுள்ளன. வேதம் கொடுக்கப்பட்டோரின் உணவு உங்களுக்கு அனுமதிக்கப் பட்டுள்ளது. உங்கள் உணவு அவர் களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது

அல்குர்ஆன் 5:5

இவ்வசனத்தில் வேதம் கொடுக்கப் பட்டோரின் உணவு ஹலால் என்று சொல்லப்பட்டுள்ளது.

இங்கே உணவு என்று சொல்லப் படுவது சைவ வகை உணவைத்தான் குறிக்கும் என்றும், அறுத்து உண்ணப்படும் பிராணிகளை இது குறிக்காது என்றும், வேதம் கொடுக்கப்பட்டவர்களின் அசைவ உணவுகளை உண்ணக் கூடாது என்றும் சிலர் கூறுகின்றனர். இது தவறாகும்.

சைவ உணவுகளைப் பொறுத்த வரை வேதம் கொடுக்கப் படாதவர்களின் உணவு கூட அனுமதிக்கப்பட்டவைகளே! அரிசி, பருப்பு, காய்கறி போன்றவற்றை எவர் வீட்டிலும் உண்ணலாம்.

வேதம் கொடுக்கப்பட்டோர் அறுத்த பிராணிகள் பற்றியே இங்கே கூறப்படுகிறது. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யூதர்களின் மாமிச உணவைச் சாப்பிட்டுள்ளனர்.

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்களிடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பளிப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபி (ஸல்) அவர்களிடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள்

நூல்: புகாரி (2617)

இந்த ஹதீஸிலிருந்து வேதம் கொடுக்கப்பட்டோரின் மாமிச உணவை நபியவர்கள் சாப்பிட்டுள்ளார்கள் என்பதை அறிய முடிகிறது.

இறைவனுக்கு இணை கற்பிக்கும் ஒருவர் அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்துள்ளாரா? என்பதை நாம் தெளிவு படுத்திய பிறகுதான் அதனைச் சாப்பிட வேண்டும். ஆனால் வேதக்காரர்கள் நமக்கு மார்க்கம் அனுமதித்த உணவுப் பொருளைக் கொடுத்தால் அதனை நாம் ஆய்வு செய்ய வேண்டியதில்லை. அதனை நாம் தாராளமாக உண்ணலாம் என்பதே மேற்கண்ட வசனத்தின் கருத்தாகும்.

வேதக்காரர்கள் மார்க்கத்திற்கு மாற்றமான முறையில் அறுத் துள்ளார்கள் என்று தெளிவாகத் தெரியும் பட்சத்தில்தான் அவர்களின் உணவை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டும்.

வேதமுடையோர் அனுமதிக்கப் பட்ட பிராணியின் மாமிச உணவை நமக்குத் தந்தால் அதனை நாம் தாரளாமாக உண்ணலாம். பின்வரும் ஹதீசும் இதனை நமக்கு உணர்த்துகிறது.

அப்துல்லாஹ் பின் முஃகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் தினத்தன்று எங்களை நோக்கி ஒரு தோல் பை வீசப்பட்டது. அதில் உணவுப் பொருளும் கொழுப்பும் இருந்தன. அதை எடுப்பதற்காக நான் குதித்தோடினேன். பிறகு திரும்பிப் பார்த்தேன். அங்கே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அவர்களைக் கண்டு நான் வெட்கமடைந்தேன்.

நூல் : முஸ்லிம் 3636

''அது உனக்குத்தான்'' என்று நபியவர்கள் கூறியதாக பைஹகிக்குரிய ''சுனனுஸ் ஸகீரில்'' 2867வது ஹதீஸில் இடம் பெற்றுள்ளது.

கைபர் போர் என்பது யூதர்களுடன் நடைபெற்ற யுத்தமாகும். யூதர்களிடம் இருந்து வீசப்பட்ட கொழுப்பை அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் உண்பதற்காக எடுத்துக் வைத்துக் கொண்டதை நபியவர்கள் கண்டிக்கவில்லை. மாறாக அது உனக்குத் தான் என்று கூறி அவருக்கே கொடுத்துள்ளார்கள்.

எனவே நமக்குத் தடை செய்யப்படாத உணவுப் பொருட்களை வேதக்காரர்கள் தந்தால் அதை நாம் உண்ணலாம். அல்லாஹ் அனுமதித்த ஒன்றை நாமாகத் தடை செய்யக்கூடாது.

வேதம் கொடுக்கப்பட்டோர் யார்?

வேதம் கொடுக்கப்பட்டோர் யார் என்பதில் பலரும் தவறான விளக்கத்தையே தருகின்றனர்.

இதன் நேரடிப் பொருள் வேதங்களை நம்பும் அனைவரையும் குறிக்கும் என்றாலும் திருக்குர்ஆன் யூதர்களையும், கிறித்தவர்களையுமே வேதக்காரர்கள் எனக் கூறுகிறது.

பொதுவாக யூதர்களையும், கிறித்தவர்களையும் குறிப்பிடுகிறது என்று இதை விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனெனில் ஈஸா நபியவர்களும், யூதர்களுக்கு அனுப்பப்பட்ட நபிமார்களும் இஸ்ரவேல் சமுதாயத்துக்கு மட்டுமே அனுப்பப்பட்டார்கள். தவ்ராத், இஞ்ஜீல் ஆகிய வேதங்கள் இஸ்ரவேலர் களுக்காகவே வழங்கப்பட்டன. இஸ்ரவேலர்கள் தரும் உணவுகளை மட்டுமே இது குறிக்கும்.

இஸ்ரவேலர் அல்லாத யூத கிறித்தவர்களுக்காக அந்த வேதங்கள் அருளப்படாததால் அவர்கள் அல்லாஹ்வின் பார்வையில் வேதக் காரர்களாக முடியாது. எனவே இஸ்ரவேலர் அறுத்ததை உண்ணலாம். இஸ்ரவேலர் அல்லாத யூத, கிறித்தவர்கள் அறுத்ததை உண்ண லாகாது என்பதே சரியான கருத்தாகும்.

இஸ்ரவேலர்களாக இல்லாத யூத கிறித்தவர்கள் மக்காவாசிகள் நம்பியது போல் நம்பி அல்லாஹ்வின் பெயர் கூறி அறுத்தால் அதையும் உண்ணலாம்.

தர்ஹாக்களில் அறுக்கப்பட்ட பிராணிகள்

உமது இறைவனைத் தொழுது அவனுக்காக அறுப்பீராக

அல்குர்ஆன் (108:2)

'யார் அல்லாஹ் அல்லாத மற்றவர்களுக்காக அறுக்கின்றானோ, அவனை அல்லாஹ் சபிக்கிறான்' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர்.

நூல்: முஸ்லிம் 4001, 4002, 4003

மேற்கண்ட இறைவசனம் மற்றும் நபி மொழி அல்லாஹ்விற்கு மட்டுமே அறுத்துப் பலியிட வேண்டும் என்று கட்டளையிடுகின்றது.

ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக ஒரு பிராணியை அறுத்தால் அதனை அல்லாஹ்வின் பெயர் கூறியே அறுக்க வேண்டும.

அல்லாஹ்விற்காக ஒரு பிராணியை அறுத்தல் என்றால் இறைவன்   இட்ட கட்டளைக்காக அறுத்துப் பலியிடுவதாகும்.

ஹஜ்ஜுப் பெருநாளில் நிறை வேற்றும் குர்பானி வணக்கம், பிராணியை அறுத்துப் பலியிட வேண்டும் என்று நேர்ச்சை செய்தல், மற்றும் அகீகா போன்றவை வணக்கங்களாகும்.

ஒருவன் தன்னுடைய உணவுத் தேவைக்காக அல்லாமல் வணக்கமாக அறுப்பதாக இருந்தால் அல்லாஹ் விற்காக மட்டுமே மார்க்கம் அனுமதித்த அறுத்துப் பலியிடும் வணக்கங்களைச் செய்ய வேண்டும்.

அதுவல்லாமல் ஒருவன் தர்ஹாக்களிலோ அல்லது அவுலியாக் களுக்காகவோ அறுத்துப் பலியிட்டால் அது நிரந்தர நரகத்தில் சேர்க்கும் இணைவைப்புக் காரியமாகும்.

எனவே ஒருவன் இறைவனுக்காக அறுத்துப் பலியிடுவதைப் போன்று இறைவன் அல்லாதவர்களுக்கு அறுத்துப் பலியிட்டால் அதனை உண்பது கூடாது. அவன் அல்லாஹ்வின் பெயரைக் கூறி அறுத்தாலும் அது ஹராமானதாகும்.

 

இணை கற்பித்தல்                     தொடர்: 33

தீயோருக்கு நிகழ்ந்த அற்புதங்கள்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

நபிமார்களுக்கு அற்புதங்கள் நிகழ்வதைப் போன்று, நபிமார்கள் அல்லாத மற்ற சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு நாம் இதுவரை ஏராளமான சான்றுகளைப் பார்த்து வருகின்றோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு சம்பவத்தைப் பற்றி அல்லாஹ் கூறுகின்றான். ஒரு மனிதர் பயணம் செய்து சென்று கொண்டிருக்கும் போது கட்டடங்கள் இடிந்து போன, பாழடைந்த, அங்கு குடியிருந்ததற்கான எந்த ஒரு அடையாளமும் இல்லாத, சிதிலமடைந்த ஒரு ஊரைக் கடந்து செல்கிறார். அதைப் பார்த்து விட்டு அந்த மனிதர், "இப்படிப் சிதைந்து போய் கிடக்கின்ற இந்த ஊரை எவ்வாறு அல்லாஹ் மீண்டும் உயிர்ப்பிப்பான்?' என்று தனக்குள் கேட்டுக் கொள்கிறார். உடனே அல்லாஹ் தன்னுடைய அற்புதத்தை (வல்லமையை) காட்டுவதற்காக அவரை அந்த இடத்திலேயே மரணிக்கச் செய்கின்றான். அந்தச் சம்பவம் பின்வருமாறு.

ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. "இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?'' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து "எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். "ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார். "அவ்வாறில்லை! நூறு ஆண்டுகளைக் கழித்து விட்டீர்! உமது உணவும், பானமும் கெட்டுப் போகாமல் இருப்பதைக் காண்பீராக! (செத்து விட்ட) உமது கழுதையையும் கவனிப்பீராக! மக்களுக்கு உம்மை எடுத்துக் காட்டாக ஆக்குவதற்காக (இவ்வாறு செய்தோம். கழுதையின்) எலும்புகளை எவ்வாறு திரட்டு கிறோம் என்பதையும், அதற்கு எவ்வாறு மாமிசத்தை அணிவிக் கிறோம் என்பதையும் கவனிப்பீராக!'' என்று அவன் கூறினான். அவருக்குத் தெளிவு பிறந்த போது "அல்லாஹ் அனைத்துப் பொருட் களின் மீதும் ஆற்றலுடையவன் என்பதை அறிகிறேன்'' எனக் கூறினார்.

(அல்குர்ஆன் 2.259)

இப்ராஹீம் நபிக்கு, அவர்களின் மன நிம்மதிக்காக  இறைவன் சில அற்புதங்களைச் செய்து காட்டியது போன்று இந்த நல்லடியாருக்கும் அற்புதங்களை நிகழ்த்திக் காட்டியிருக்கிறான். நூறு ஆண்டுகள் கழித்த பிறகு உயிர்த்தெழுந்த அந்த நல்லடியார், தான் எவ்வளவு காலம் உறங்கினேன்? என்பதை அறியாமல் இருந்திருக்கிறார். ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சில மணி நேரமே உறங்கியிருப்போம் என்றும் சொல் கிறார் என்றால். இந்த அற்புதம் அவர் அறியாத விதத்தில் தான் நடந்திருக்கின்றது.

இதில் நாம் கவனிக்க வேண்டிய முக்கியமான விஷயம் என்ன வென்றால், பூமிக்கு மேல் தூங்கிக் கொண்டிருந்த, குர்ஆனில் நல்லடியார் என்று சொல்லப்பட்ட ஒரு மனிதரால் நூறு ஆண்டுகளாக உலகத்தில் என்ன நடந்திருக்கின்றது என்பதைக் கூட அறியாதவராக இருந்திருக்கிறார் என்றால், பூமிக்குள் புதைக்கப் பட்டிருக்கின்ற, நல்லடியார் என்று சொல்லப்படாத ஒருவரால் எவ்வாறு உலகில் நடக்கக்கூடியதை அறிய முடியும்? அவரை நல்லலடியார், மகான்  என்று நம்மால் எவ்வாறு சொல்ல முடியும்?

ஆனால் நாம், இறந்து போனவர்கள் மண்ணோடு மண்ணாகிப் போனவர்கள் உலகில் நடக்கின்ற வற்றை பார்ப்பார்கள்; நாம் பேசுவதைக் கேட்பார்கள்; நம்முடைய கோரிக்கையை நிறைவேற்றுவார்கள்; கப்ருக்குள் இருந்து கொண்டே நாம் செய்யக்கூடியதைப் பார்க்கும் ஆற்றல் உள்ளவர்கள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறோம். ஆனால் குர்ஆனில் கூறப்பட்ட அந்த நல்லடியாருக்கு உணவு கெட்டுப் போகாமல் இருந்தது தெரியவில்லை. கழுதை இறந்து எழும்புக் கூடானதும் தெரியவில்லை.

ஆக, இதுவும் நபிமார்கள் அல்லாமல் சாதாரண மனிதர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு ஆதாரமாகும்.

இப்ராஹீம் நபியினுடைய மனைவி சாரா அவர்கள் சம்பவமும் இது போன்றதுதான்.

அந்தச் சம்பவம் வருமாறு..

ஒரு நாள் இப்ராஹீம் (அலை) அவர்களும் (அவர்களின் துணைவி யார்) சாரா (அலை) அவர்களும் கொடுங்கோல் மன்னர்களில் ஒருவ னுடைய வழியாகச் சென்றார்கள். அப்போது அந்த மன்னனிடம் (அவர்களைக் குறித்து) "இங்கு ஒருவர் வந்திருக்கிறார்: அவருடன் அவரின் அழகான மனைவியும் இருக்கிறாள்'' என்று கூறப்பட்டது. உடனே, இப்ராஹீம்(அலை) அவர்களை அழைத்து வரச் சொல்லி அந்த மன்னன் சாரா (அலை) அவர்களைக் கூப்பிட்டு அனுப்பினான்.

சாரா (அலை) அவர்கள் அவனிடம் சென்ற போது அவன் அவரைத் தன் கையால் அள்ள முயன்றான். உடனே, அவன் (வலிப்பு நோயால்) தண்டிக்கப்பட்டான். அவன் (சாரா அவர்களிடம்), "அல்லாஹ்விடம் எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) பிரார்த்தனை செய். நான் உனக்குக் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். உடனே, சாரா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப்பட்டான்.

பிறகு, இரண்டாவது முறையாக அவர்கள் அணைக்க முயன்றான். முன்பு போன்றே மீண்டும் தண்டிக்கப் பட்டான். அல்லது அதை விடக் கடுமையாகத் தண்டிக்கப்பட்டான். அப்போதும், "எனக்காக (என் கைகளை குணப்படுத்தும்படி) அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய். நான் உனக்குத் தீங்கு செய்ய மாட்டேன்'' என்று சொன்னான். அவ்வாறே அவர் பிரார்த்திக்க, அவன் (வலிப்பிலிருந்து) விடுவிக்கப் பட்டான்.

பிறகு, தன் காவலன் ஒருவனை அழைத்து, "நீங்கள் என்னிடம் ஒரு மனிதரைக் கொண்டு வரவில்லை; ஒரு ஷைத்தானைத் தான் கொண்டு வந்துள்ளீர்கள்'' என்று சொன்னான். பிறகு, ஹாஜர் அவர்களை, சாரா (அலை) அவர்களுக்குப் பணியாளாகக் கொடுத்தான்.

சாரா (அலை) அவர்கள், இப்ராஹீம் (அலை) அவர்களிடம் அவர்கள் தொழுது கொண்டிருக்கும் போது வந்தார்கள். இப்ராஹீம் (அலை) அவர்கள் கைகளால் சைகை செய்து, "என்ன நடந்தது?' என்று கேட்டார்கள். அவர், "அல்லாஹ் நிராகரிப்பாளனின்.. அல்லது தீயவனின்... சூழ்ச்சியை முறியடித்து, அவன் மீதே திருப்பி விட்டான். ஹாஜிராவைப் பணிப் பெண்ணாக அளித்தான் என்று கூறினார்கள்' என்று இறைத் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ ஹுரைரா(ரலி)

நூல்: புகாரி 3358

மேற்கண்ட சம்பவமும், நபிமார் அல்லாத மற்றவர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்கு ஆதாரமாகத் திகழ்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பனூ இஸ்ராயீல் குலத்தாரில் மூன்று பேர்: (ஒருவர்) தொழு நோய் பிடித்தவராகவும் (மற்றொருவர்) வழுக்கைத் தலையராகவும் (இன்னொருவர்) குருடராகவும் இருந்தனர். அல்லாஹ் அவர்களை சோதிக்க நாடி வானவர் ஒருவரை அவர்கüடம் அனுப்பினான்.

அவர் தொழு நோயாüயிடம் வந்து, "உனக்கு மிகவும் விருப்பமானது எது?'' என்று கேட்க அவர், "நல்ல நிறம், நல்ல தோல் (தான் எனக்கு மிகவும் விருப்பமானவை).  மக்கள் (என் வியாதியின் காரணத்தால்) என்னை அருவருக்கிறார்கள்'' என்று சொன்னார். உடனே அவ்வானவர் அவரை (தம் கரங்களால்) தடவ அந்த வியாதி அவரை விட்டுச் சென்றுவிட்டது. அவருக்கு அழகிய நிறமும் அழகிய தோலும் தரப்பட்டன. பிறகு அவ்வானவர், "எந்தச் செல்வம் உங்களுக்கு மிகவும் விருப்பமானது?'' என்று கேட்க அவர், "ஒட்டகம் தான் (எனக்கு மிகவும் விருப்பமானதாகும்)'' என்று பதிலüத்தார்.  கருத்தரித்த ஒட்டகம் அவருக்கு கொடுக்கப்பட்டது. அவ்வானவர், "இதில் உனக்கு பரக்கத்  (வளர்ச்சி) வழங்கப்படும்'' என்று சொன்னார்.

பிறகு அவ்வானவர் வழுக்கைத் தலையரிடம் சென்றார். "உனக்கு மிகவும் விருப்பமானது எது?'' என்று கேட்டார். அவர், "அழகான முடியும் இந்த வழுக்கை என்னை விட்டுப் போய் விடுவதும் தான் (எனக்கு மிகவும் விருப்ப மானது.) மக்கள் என்னை அருவருத்து (ஒதுக்கி வைத்து) விட்டார்கள்'' என்று சொன்னார். உடனே அவ்வானவர், அவரது தலையைத் தடவிக் கொடுக்க, அவருக்கு அழகான முடி வழங்கப்பட்டது. அவ்வானவர், "எந்தச் செல்வம் உனக்கு விருப்பமானது?'' என்று கேட்டார். அவர், "மாடு தான் எனக்கு மிக விருப்பமான செல்வம்'' என்று சொன்னார். உடனே வானவர் அந்த வழுக்கைத் தலையருக்கு கர்ப்பமான மாடு ஒன்றைக் கொடுத்து, "இதில் உனக்கு வளர்ச்சி வழங்கப்படும்'' என்று சொன்னார்.

பிறகு, அவ்வானவர் குருடரிடம் சென்று, "உனக்கு மிகவும் விருப்ப மானது எது?'' என்று கேட்டார். அவர், "அல்லாஹ் என் பார்வையை எனக்குத் திரும்பச் செய்வதும் அதைக் கொண்டு மக்களை நான் பார்ப்பதும் தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதிலüத்தார். அவ்வானவர் அவரைத் தடவிட, அல்லாஹ் அவருக்கு அவரது பார்வையைத் திருப்பித் தந்தான். அவ்வானவர், "உனக்கு எந்தச் செல்வம் விருப்பமானது?'' என்று கேட்க அவர், "ஆடு தான் (எனக்கு மிகவும் விருப்பமானது)'' என்று பதில் அüத்தார். உடனே, அவ்வானவர் அவருக்குக் கருவுற்ற ஆடு ஒன்றைக் கொடுத்தார்.

அந்த இருவரும் (ஒட்டகம் வழங்கப் பட்டவரும் மாடு வழங்கப் பட்டவரும்) நிறைய குட்டிகள் ஈன்றிடப் பெற்றனர். இவர் (ஆடு வழங்கப்பட்டவர்) நிறையக் குட்டிகள் பெற்றார். தொழு நோயாüயாய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஒட்டகங்களும்,  வழுக்கைத் தலையராய் இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப மாடுகளும், குருடராக இருந்தவருக்கு ஒரு கணவாய் நிரம்ப ஆடுகளும் (பெருமளவில்) கிடைத்தன.

பிறகு அவ்வானவர் தொழு நோயாüயாய் இருந்தவரிடம் தமது பழைய தோற்றத்திலும் அமைப்பிலும் சென்று, "நான் ஓர் ஏழை மனிதன். என் பயணத்தில் என் வாழ்வாதாரம் அறுபட்டு விட்டது. (செலவுக்குப் பணம் தீர்ந்து போய்விட்டது.) இன்று உதவிக்கான வழி வகை (எனக்கு) அல்லாஹ்வையும் பிறகு உன்னையும் தவிர வேறெவருமில்லை. உனக்கு  அழகிய நிறத்தையும் அழகிய தோலையும் செல்வத்தையும் கொடுத்த(இறை)வனின் பெயரால் உன்னிடம் ஓர் ஒட்டகத்தைக் கேட்கின்றேன். அதன் வாயிலாகப் பயணத்தில் நான் போக வேண்டிய இடத்தைச் சென்றடைவேன்'' என்று சொன்னார்.

அதற்கு அந்த மனிதர், "(எனக்குக்) கடமைகள் நிறைய இருக்கின்றன. (எனவே, என்னால் நீ கேட்டதைத் தர முடியாது)'' என்றார். உடனே அவ்வானவர், "உன்னை எனக்குத் தெரியும் போலுள்ளதே. மக்கள் அருவருக்கின்ற தொழு நோயாü யாக நீ இருக்கவில்லையா? நீ ஏழையாக இருக்கவில்லையா? பிறகு அல்லாஹ் உனக்கு (செல்வத்தைக்) கொடுத்தான் அல்லவா?'' என்று கேட்டார். அதற்கு அவன், "(இல்லையே; நான் இந்த அழகான நிறத்தையும் தோலையும் மற்றும் திரண்ட இந்தச் செல்வத்தையும்) வாழையடி வாழையாக (என் முன்னோர் கüடமிருந்து) வாரிசாகப் பெற்றேன்'' என்று பதிலüத்தான். உடனே அவ்வானவர், "நீ (இக்கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படி இருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று சொன்னார்.

பிறகு வழுக்கைத் தலையரிடம் தமது (பழைய) தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து முன்பு இவரிடம் (தொழு நோயாüயிடம்) சொன்னதைப் போன்றே சொன்னார். அவனும் முதலாமவன் அவருக்கு பதிலüத்ததைப் போன்றே பதிலüத்தான். வானவரும், "நீ (உன் கூற்றில்) பொய்யனாயிருந்தால் நீ முன்பு எப்படியிருந்தாயோ அப்படியே உன்னை அல்லாஹ் மாற்றி விடட்டும்'' என்று சொன்னார்.

பிறகு (இறுதியாக), குருடரிடம் தமது தோற்றத்திலும் அமைப்பிலும் வந்து, "நான் ஓர் ஏழை மனிதன்; வழிப் போக்கன். என் வாழ்வாதாரம் (வழிச் செலவுக்கான பணம்) தீர்ந்துபோய் விட்டது. இன்று உதவிக்கான வழிவகை (எனக்கு) அல்லாஹ் வையும், பிறகு உன்னையும் தவிர வேறெவரு மில்லை. என் பயணத்தில் என் தேவையைத் தீர்த்துக் கொள்ள உதவும் ஆடு ஒன்றைத் தரும்படி உனக்குப் பார்வையைத்  திரும்பத் தந்தவன் பெயரால் கேட்கின்றேன்'' என்று சொன்னார்.

(குருடராயிருந்து பார்வை பெற்ற) அந்த மனிதர் வானவரிடம், "நான் குருடனாகத் தான் இருந்தேன். அல்லாஹ் என் பார்வையைத் திருப்பித் தந்தான். நான் ஏழையாக இருந்தேன்; என்னைச் செல்வந்தனாக் கினான். ஆகவே, நீ விரும்புவதை எடுத்துக் கொள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இன்று நீ எடுக்கின்ற எந்தப் பொருளையும் திருப்பித் தரும்படி அல்லாஹ்விற்காக சிரமப்படுத்த மாட்டேன்.'' என்று சொன்னார்.

உடனே அவ்வானவர், "உன் செல்வத்தை நீயே வைத்துக் கொள். இது உங்களைச் சோதிப்பதற்காகத் தான். அல்லாஹ் உன்னைக் குறித்து திருப்தி யடைந்தான். உன் இரு தோழர்கள் (தொழு நோயாü மற்றும் வழுக்கைத் தலையன்) மீது கோபம் கொண்டான்'' என்று சொன்னார்.

இதை அபூஹுரைரா (ர-) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 3464

மேற்கண்ட சம்வத்தில் அந்த குருடரைத் தவிர மற்ற இருவரும் தீய மனிதர்களாக இருந்துள்ளனர். ஆனால் அவர்களுக்கும் அல்லாஹ் ஒரு மாடு மற்றும் ஆட்டை வழங்கி அதனை பல்கிப் பெருகச் செய்திருக்கிறான். இது ஓர் அற்புதமாகும். இதன் மூலம் தான் நாடியோருக்கு அருளை தாராளமாக வழங்குவான் என்பதற்கு இது ஒரு சான்றாக அமைந்திருக்கிறது.

மேலும் தீயவர்களுக்கும் அற்புதங்களை வழங்குவான் என்பதற்கும் இது சான்றாக அமைகின்றது.     

மேலும். நபி (ஸல்) அவர்களுடைய காலத்திற்கு முன்னால் உள்ள நபிமார்கள் அல்லாத சில மனிதர் களுக்கு அல்லாஹ் ஒரு ஆற்றலை வழங்கியிருந்தான். அல்லாஹ் ஒரு செய்தியை அந்த மனிதர்களுக்கு அறிவிப்பதாக இருந்தால் மலக்கு மார்கள் மூலமாக அறிவிக்காமல் நேரடியாக அவர்களுடைய உள்ளத்தில் உதிக்கச் செய்வான். முந்தைய சமுதாயத்தில் சில ஆட்களை அல்லாஹ் தேர்ந்தெடுத்து இவ்வாறு சில அற்புதங்களை வழங்கியதாக நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

"உங்களுக்கு முன்பிருந்த சமுதா யங்களில் அகத்தூண்டல் மூலம் (உண்மைகள்) அறிவிக்கப்பட்டவர்கள் இருந்துள்ளார்கள். என் சமுதாயத் தாரில் அத்தகையவர் யாரேனும் இருந்தால், அவர்களில் உமர் பின் அல்கத்தாப் ஒருவராக இருப்பார்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவந்தார்கள்.

நூல்: முஸ்லிம் 4769

இந்த மாதிரியான அம்சங்களை வைத்து அவ்லியாக்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்று எடுத்துக் கொள்ளக்கூடாது. இது மாதிரி யாருக்கு வேண்டுமானாலும் நடக்கும்.

 

அண்ணலாரின் அச்சம்

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

மனித குலத்திற்கு மிகச்சிறந்த முன்மாதிரியாக இருப்பவர், முஹம்மது நபி (ஸல்) அவர்கள். அவர்களுடைய வாழ்க்கையிலே அனைவரும் அறிந்து கொள்ள வேண்டிய அறநெறிகளும், அறிவுரைகளும் நிறைந்து இருக் கின்றன. அண்ணலார் அவர்களுடைய சிந்தனைகள், செயல்பாடுகள் அனைத்திலும் அழகிய வழி காட்டுதல்கள் அமைந்துள்ளன. அந்த வகையில், ஒரு முக்கியமான போதனையை இங்கு தெரிந்து கொள்ள இருக்கிறோம்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது வாழ்க்கையிலே பல்வேறு காரியங்களைப் பற்றி அஞ்சி இருக்கிறார்கள். பல சமயங்களில் சமுதாயத்தின் நிலை குறித்தும் தமது அச்சத்தை, பயத்தை வெளிபடுத்தி இருக்கிறார்கள். நபிகளாருக்கு இருந்த அச்சம் நமக்கும் இருக்க வேண்டும். நாமும் அந்தக் காரியங்களை, பண்புகளை விட்டு விலகி வாழ வேண்டும். ஆனால், அதிகமான மக்கள் அவற்றை அறியாமல் இருக்கிறார்கள். அறிந்து கொண்டாலும், அவர்களிடம் இருக்கும் அச்ச உணர்வு அரிதாகவும் அர்த்தமற்றதாகவும் இருக்கிறது. ஆகவே, அது குறித்து சில செய்திகளை இப்போது பார்ப்போம்.

பொதுநலத்தைப் பற்றிய அச்சம்

வாழ்க்கையில் தவறான சிந்தனை களை விதிமுறையாக வகுத்துக் கொண்டு செயல்படும் மக்கள் இருக்கிறார்கள். எதற்காகவும் மற்றவர்களுக்காக என்னை மாற்றிக் கொள்ள வேண்டிய தேவை எனக்கு இல்லை என்று எப்போதும் சுயநலமாக நடக்கும் நபர்கள் இருக்கிறார்கள். இவர்கள் சர்வ சாதாரணமாக பொதுமக்களுக்குத் தொல்லை கொடுக்கிறார்கள்; இடையூறு விளைவிக்கிறார்கள்.

இத்தகைய நடவடிக்கை நம்பிக்கைக் கொண்டவர்களிடம் இருக்கவே கூடாது. நம்மைச் சுற்றியிருக்கும் மக்களுக்கு எவ் விதமான சிரமத்தையும் தரக்கூடாது. மார்க்க விஷயம், உலக விவகாரம் என்று எதிலும் எவருக்கும் மோசமான பாதிப்பை, நெருக்கடியை ஏற்படுத்தி விடக் கூடாது. இவ்வாறு, பொதுநலம் கலந்த அச்சம் நமக்கு இருக்க வேண்டும். இந்த அழகிய அறிவுரை மாமனிதர் நபிகளாருடைய வாழ்க்கையில் பரவிக் கிடக்கிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் (நாள்) இரவு இஷாத் தொழுகையைத் தாமதப்படுத் தினார்கள். (பள்ளியில் எதிர்ப்பார்த்துக் காத்துக் கொண்டிருந்த) மக்கள் உறங்குவதும் விழிப்பதும் மீண்டும் உறங்குவதும் விழிப்பதுமாக இருந்தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் எழுந்து "தொழுகைக்கு வாருங்கள்'' என்று   (நபிகளாரை) அழைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தலையிலிருந்து நீர் சொட்டத் தம் கையை தலையில் வைத்(து தமது தலையிலிருந்து தண்ணீரைத் துடைத்)தவர்களாக புறப்பட்டு வந்ததை இன்றும் நான் பார்ப்பது போன்றுள்ளது. அப்போது அவர்கள், "என் சமுதாயத்தாருக்கு சிரமம் ஏற்பட்டுவிடும் என்ற அச்சம் எனக்கு இல்லையாயின் அவர்களை இவ்வாறே (இந்த நேரத்திலேயே) தொழுமாறு  பணித்திருப்பேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புஹாரி (571) முஸ்லிம் (1121)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒருநாள் நள்ளிரவில் (வீட்டிலிருந்து) புறப்பட்டுச் சென்று பள்ளியில் தொழுதார்கள். அப்போது சிலர் அவர்களைப் பின்பற்றித் தொழலாயினர். காலையில் மக்கள் இது பற்றிப் பேசலானார்கள். (மறு நாள்) முந்திய நாளைவிட அதிக மக்கள் திரண்டு நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று தொழுதனர். (மூன்றாம் நாள்) காலையிலும் இது பற்றிப் பேசிக்கொண்டனர். அந்த மூன்றாம் நாள் இரவிலும் பள்ளிவாசலுக்கு வந்தவர்களின் கூட்டம் இன்னும் அதிகமானது. அன்றும் அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்தபோது அவர்களைப் பின்பற்றித் தொழுதனர். நான்காம் நாள் இரவு வந்தபோது மக்கள் அதிகரித்ததால் பள்ளி இடம் கொள்ளவில்லை.  (அன்று இரவு நபிகளார் அவர்கள் பள்ளிக்கு வரவில்லை) சுப்ஹுத் தொழு கைக்குத்தான் அவர்கள் வந்தார்கள். ஃபஜ்ர் தொழுகையை முடித்ததும் மக்களை முன்னோக்கி ஏகத்துவ உறுதிமொழி கூறியபின் "அம்மா பஅத்' (இறைவாழ்த்துக்குப் பின்...) எனக் கூறிவிட்டு, நீங்கள் வந்திருந்தது எனக்குத் தெரியாமல் இல்லை; எனினும் (இது) உங்கள் மீது கடமையாக்கப்பட்டு அதை உங்களால் நிறைவேற்ற இயலாமல் போய்விடுமோ என்று நான் அஞ்சினேன் (ஆகவே தான் நேற்றிரவு நான் இரவுத் தொழுகைக் காக பள்ளிக்கு வரவில்லை)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (729), (924), (1124)

என் சமுதாயத்திற்கு அல்லது மக்களுக்கு   நான் சிரமத்தை ஏற்படுத்தி விடுவேனோ என்று (அச்சம்) இல்லையாயின் ஒவ்வொரு தொழுகைக்கும் பல் துலக்க வேண்டுமென நான் அவர்களுக்கு கட்டளை பிறப்பித்திருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (887)

என் சமுதாயத்தாருக்குச் சிரமம் ஏற்பட்டு விடும் என்னும் அச்சம் மட்டும் எனக்கில்லாவிட்டால் நான் எந்தச் சிறு படைக் குழுவிலிருந்தும் (அதில் கலந்து கொள்ளாமல்) பின்தங்கியிருக்க மாட்டேன். ஆயினும், என்னைச் சுமந்து செல்லும் வாகனமும் என்னிடம் இல்லை. என் தோழர்களை ஏற்றிச் செல்ல (போதிய) வாகன வசதியும் என்னிடம் இல்லை. ஆனால், அவர்கள் என்னுடன் (போருக்கு) வர முடியாமல் பின்தங்க வேண்டி யிருப்பது எனக்கு மனவேதனை அளிக்கின்றது. மேலும், நான் அல்லாஹ்வின் பாதையில் போரிட்டு அதனால் கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட்டு மீண்டும் (இறை வழியில் போரிட்டுக்) கொல்லப்பட்டு, மீண்டும் உயிராக்கப்பட (இவ்வாறே மீண்டும் மீண்டும் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்ய) வேண்டும் என்று விரும்புகிறேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (36) (2972), முஸ்லிம் (3819)

இஸ்லாமிய மார்க்கத்தில் இருக்கும் சட்டங்கள் அனைத்தும் எளிமை யானவை. மக்களுக்கு அவர்களின் சக்திக்கு மீறி சிரமம் கொடுக்காதவை. இந்நிலையில், குர்ஆன் ஹதீஸை மட்டும் முழுமையாக ஏற்க மறுத்து அல்லது மறைத்து மக்களை வழிகெடுக்கும் மத்ஹபுவாதிகள் மேலிருக்கும் செய்திகளை சிறிதாவது சிந்திப்பார்களா? காரணம், இவர்கள் இதற்கு இந்த நன்மை, அதற்கு அந்தச் சிறப்பு என்றெல்லாம் பொய்யாகக் கதையளந்து பித்அத்கள் மூலம் மக்களுக்கு கஷ்டம் கொடுக்கிறார்கள்.

இதுபோன்று, அரசியலையும் ஜிஹாதையும் பற்றி மட்டும் கண்மூடித்தனமாக வாய்கிழியப் பேசும் போலிகள், மார்க்கத்திற்கு புறம்பாக தனிமனிதனை மட்டுமல்ல ஒட்டு மொத்த சமுதாயத்தையே மோசமான நிலைக்குத் தள்ளுகிறார்கள். இவர்கள் எல்லாம் கண்டிப்பாக நபிகளாரிடம் இருந்து பாடம் கற்றுக் கொள்ள வேண்டும்.

அலட்சியத்தைப் பற்றிய அச்சம்

மறுமை வெற்றிக்காக வாழும் முஃமின்கள், மார்க்க கடமைகளை மிகவும் கவனத்தோடு கடைபிடிக்க வேண்டும். நன்மையான காரியங்களில் ஆர்வத்துடன் திகழ வேண்டும். சந்தர்ப்பம் வாய்க்கும் போது அதைத் தொலைத்துவிடாமல் நல்ல முறையில் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

தொழுகை, நோன்பு, ஜகாத் என்று மார்க்கத்தில் இருக்கும் எந்தவொரு வணக்க வழிபாட்டிலும், நற்காரியத்திலும் பொடும்போக்குத் தன்மைக்கு இடம் தரக்கூடாது. கவனக் குறைவான தன்மைகளில் ஏமாந்து விடாமல் விழிப்போடு இருக்க வேண்டும். அலட்சியம் ஆபத்தானது என்ற அச்சம் நமக்கு இருக்கும் போது, அது எல்லாக் காலத்திலும் நன்மையின் பக்கம் விரைவதற்கும் குறைகளைச் சரிசெய்து கொள்வதற்கும் உதவியாக இருக்கும்.

"அல்லாஹ்வுக்கு எவரையும் இணையாக்காதவராக எவர் (மரணத் திற்குப் பிறகு) அல்லாஹ்வைச் சந்திக்கின்றாரோ, அவர் உறுதியாக சொர்க்கம் புகுவார்'' என முஆத் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு முஆத் (ரலி) அவர்கள் "இந்த நற்செய்தியை நான் மக்களுக்குச் சொல்லட்டுமா?'' என்று கேட்க, "(இல்லை) வேண்டாம். மக்கள் (இதை மட்டும் நம்பிக்கொண்டு நல்லறங்கள் புரியாமல்) அசட்டையாக இருந்து விடுவார்களோ என நான் அஞ்சுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (129)

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஓர் இரவில் (பயணம்) சென்று கொண்டிருந்தோம். அப்போது மக்களில் சிலர், "அல்லாஹ்வின் தூதரே! (பயணத்தை சற்று நிறுத்தி) எங்களை இளைப்பாறச் செய்ய லாமே!'' என்று கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் (ஃபஜ்ர்) தொழாமல் உறங்கிவிடுவீர்களோ என நான் அஞ்சுகிறேன்'' என்றார்கள். அப்போது பிலால் (ரலி) அவர்கள், "உங்களை நான் விழித்தெழச் செய்கிறேன்'' என்று கூறினார்கள். எனவே அனைவரும் (பயனத்தை நிறுத்தி) படுத்துக்கொண்டனர். பிலால் (ரலி) அவர்கள் தமது முதுகைத் தமது வாகனத்தின் மீது சாய்த்துக் கொண்டிருந்தபோது தம்மையும் மீறி கண்ணயர்ந்து உறங்கிவிட்டார்கள். சூரிய வட்டத்தின் ஒரு பகுதி உதித்துவிட்ட நிலையில் நபி (ஸல்) அவர்கள் (முதன் முதலில்) உறக்கத்திலிருந்து விழித்தார்கள். உடனே, "பிலால்! நீங்கள் சொன்னது என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள். "இது போன்று உறக்கம்  எனக்கு எப்போதும் ஏற்பட்ட தில்லை'' என்று பிலால் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

அப்போது நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் தான் நாடும்போது உங்கள் உயிர்களை கைப்பற்றிக் கொள்கிறான்; தான் நாடும்போது உங்களிடம் திருப்பித் தருகின்றான்'' என்று கூறிவிட்டு, "பிலால்! எழுந்து, பாங்கு சொல்லி தொழுகைக்கு மக்களை அழைப்பீராக!'' என்று கூறினார்கள். பின்னர் அங்கசுத்தி (உளூ) செய்து, சூரியன் உயர்ந்து தெளிவாகத் தென்பட்டபோது (ஃபஜ்ர்) தொழு(கையை முன்னின்று நடத்)திடலானார்கள்.

அறிவிப்பவர்: அபூகத்தாதா (ரலி)

நூல்: புஹாரி (595)

நபி (ஸல்) அவர்கள் வேலைப் பாடு மிக்க (சதுரமான) கறுப்புக் கம்பளி ஆடை ஒன்றை அணிந்து கொண்டு தொழுதார்கள். (தொழுது கொண்டிருக்கும் போது) அதன் வேலைப்பாடுகளை  ஒரு முறை கூர்ந்து கவனித்தார்கள். தொழுது முடித்ததும், "எனது இந்த கறுப்புக் கம்பளி ஆடையை (இதை எனக்கு அன்பளித்த) அபூஜஹ்மிடம் கொடுத்து விட்டு, அபூஜஹ்மிடம் இருக்கும் (வேலைப்பாடுகளற்ற) "அன்பிஜான்' (நகர எளிய) ஆடையை என்னிடம் (வாங்கிக்) கொண்டு வாருங்கள். இந்த ஆடை சற்று முன்னர் எனது தொழுகையி லிருந்து என் கவனத்தை ஈர்த்து விட்டது'' என்று சொன்னார்கள். ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து வரும் மற்றோர் அறிவிப்பில், "நான் தொழுது கொண்டிருக்கும் போதே அதன் வேலைப்பாடுகளைக் கூர்ந்து கவனித்துக்கொண்டு  இருந்தேன். அது என்னைக்  குழப்பிவிடுமோ என நான் அஞ்சினேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (373)

பாவங்களைப் பற்றிய அச்சம்

மனித இனத்திற்குத் தீங்கு தரும் அனைத்தையும் இஸ்லாம் தடுத்துள்ளது. நம்மிடம் இருக்கக் கூடாத தவறுகள், பாவங்கள் தொடர்பாக திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் தெளிவாகச் சொல்லப்பட்டு உள்ளன. அவ்வாறான, அநீதியான, அநியாயமான செயல்களை விட்டும் நாம் அகன்று இருக்க வேண்டும். சிறிய பாவம் தானே செய்கிறோம் என்று எதிலும் அசட்டையாக இருந்துவிடக் கூடாது.

எந்தக் காலகட்டத்திலும் மார்க்கத்தின் அனுமதி இல்லாத பாதையில் நமது வாழ்க்கை பயணம் இருந்துவிடக் கூடாது. இந்த எச்சரிக்கைக் கலந்த பயம் என்றும் நம்மிடம் இருக்க வேண்டும். இந்த அச்சம் இல்லாதவர்கள் தர்ஹா, மவ்லூது, வட்டி, வரதட்சனை, மோசடி போன்ற தடுக்கப்பட்ட காரியங்களில் வீழ்ந்து விடுக்கிறார்கள். பாவங்களுக்கு பலியாகி விடுகிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் பாதையில் கிடந்த ஒரு பேரீச்சம் பழத்தைக் கடந்து சென்றார்கள். "இது ஸதகா (தர்ம)ப் பொருளாக இருக்குமோ என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் இதை நான் தின்றிருப்பேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (2431)

நான் என் வீட்டாரிடம் திரும்பி விடுகின்றேன். என் படுக்கையின் மீது பேரீச்சம் பழம் விழுந்திருப்பதைப் பார்த்து அதைத் தின்பதற்காக எடுக்கின்றேன். அதற்குள் அது ஸதகாப் பொருளாக இருக்குமோ என்னும் அச்சம் எனக்கு ஏற்படுகின்றது; உடனே அதைப் போட்டு விடுகின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (2432)

"நாங்கள் இந்த (வேட்டை) நாய்களின் மூலம் வேட்டையாடும் ஒரு சமுதாயத்தார் ஆவோம்'' என்று நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறி (அதன் சட்டம் என்னவென்று) வினவினேன். அதற்கு அவர்கள், "பயிற்சி அளிக்கப்பட்ட உங்கள் (வேட்டை) நாய்களை அல்லாஹ்வின் பெயர் சொல்லி (வேட்டையாட) நீங்கள் அனுப்பி யிருந்தால் உங்களுக்காக அவை கவ்விப் பிடித்து வைத்திருப்பவற்றை நீங்கள் உண்ணலாம்; அவை அதைக் கொன்றுவிட்டாலும் சரியே! நாய் தின்று விட்டதை மட்டும் உண்ணாதீர்கள்! ஏனென்றால், அது தனக்காக அதைப் பிடித்து வைத்திருக்குமோ என நான் அஞ்சுகிறேன். இவ்வாறே வேறு நாய்கள் அதனுடன் கலந்து விட்டிருந்தாலும் (அது வேட்டை யாடிக் கொண்டு வரும் பிராணியை) உண்ணாதீர்கள்!

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்திம் (ரலி)

நூல்: புஹாரி (5483), முஸ்லிம் (3900)

"உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுவதெல்லாம் சிறிய இணை வைப்பைத் தான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (அதற்கு நபித்தோழர்கள்) "சிறிய இணை வைப்பு என்றால் என்ன? அல்லாஹ் வின் தூதரே'' என்று கேட்டார்கள். "அது, (ஒரு நல்லறத்தைப் பிறருக்கு காட்ட வேண்டுமென) முகஸ் துதிக்குச் செய்வதாகும்'' என்று பதிலளித்தார்கள். மேலும், "மனிதர் களுக்கு கூலிகள் வழங்கப்படும் மறுமை நாளில் (முகஸ்திக்காக அமல் செய்த) நபர்களிடம், பூமியில் யாருக்கு காட்டுவதற்காக அமல் செய்தீர்களோ அவர்களிடம் சென்று, நீங்கள் கூலியை பெறுவீர்களா கவனியுங்கள் என அல்லாஹ் கூறுவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஹ்மூத் பின் லபீத் (ரலி)

நூல்: அஹ்மத்  (22523)

குழப்பத்தைப் பற்றிய அச்சம்

நம்பிக்கையாளர்கள் அல்லாஹ் வையும் அவனது தூதரையும் மட்டும் பின்பற்றுவதில் உறுதியாக இருக்க வேண்டும். எந்தவொரு உலக விவகாரத்தையும் மார்க்கத்திற்கு உட்பட்ட வகையில் கையாள வேண்டும்.

சமுதாயத்தில் அனைவரும் ஒரே மாதிரியாக இருக்க மாட்டார்கள். மக்களுக்கு மத்தியில் பலவிதமான பிரச்சனைகள், நெருடல்கள் இருக்கவே செய்யும். இந்நிலையில் முற்போக்கு சிந்தனையோடும் சமூக அக்கறையோடும் நடந்து கொள்ள வேண்டும். எக்காரணம் கொண்டும் நாசத்தை, சீர்கேட்டை ஏற்படுத்திவிடக் கூடாது.

குறிப்பாக, சிக்கல்களை முடிந்தளவு தீர்க்க வேண்டுமே தவிர, ஒருபோதும் எரிகிற நெருப்பில் எண்ணெய் ஊற்றும் வகையில் நடந்து கொள்ளக் கூடாது. தனிப்பட்ட வாழ்விலும் சமூக வாழ்விலும் எவ்வித சந்தேகத்தையும் குழப்பத்தையும் கிளறிவிடக் கூடாது என்ற சுதாரிப்பான பயம் இருக்க வேண்டும். நபிகளாரின் பின்வரும் உலகம் தொடர்பான நிகழ்வுகளில் நமக்குப் படிப்பினை இருக்கிறது.

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் கடைசிப் பத்து நாட்களில் இஃதிகாஃப் இருக்கும்போது அவர் களைச் சந்திக்க நான் செல்வேன். சற்று நேரம் அவர்களுடன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள். பள்ளியின் வாசலுக்கு அருகிலிருந்த உம்மு சலமாவின் வாசலை அடைந்தபோது அன்ஸாரிகளில் இருவர் நடந்து சென்றனர். நபி (ஸல்) அவர்களுக்கு சலாம் கூறினர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், "நில்லுங்கள்; இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த் ஹுயை ஆவார்'' எனக் கூறினார்கள். அவ்விருவரும் (ஆச்சரியத்துடன்) "சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்றனர். இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் கூறியது அவ்விருவருக்கும் உறுத்தியது. அப்போது நபி (ஸல்) அவர்கள், "நிச்சயமாக ஷைத்தான் மனிதனின் ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கிறான்; உங்கள் உள்ளங்களில் தவறான எண்ணத்தை அவன் போட்டுவிடுவான் என நான் அஞ்சினேன்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்கள்: ஸஃபிய்யா (ரலி)

நூல்: புஹாரி (2035) (2038) (3101)

நான் நபி (ஸல்) அவர்களிடம் கஅபாவின் அருகிலுள்ள ஒரு (வளைந்த சிறு) சுவரைப் பற்றி, "இது கஅபாவில் சேர்ந்ததா?'' எனக் கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம்!'' என்றார்கள். பிறகு நான் "எதற்காக அவர்கள் இதனை கஅபாவோடு இணைக்கவில்லை?'' எனக் கேட்டேன். அதற்கவர்கள் "உனது சமூகத்தாருக்குப் பொருளா தார நெருக்கடி ஏற்பட்டதால்தான்!'' என்று பதிலளித்தார்கள். நான் "கஅபாவின் வாசலை உயரத்தில் வைத்திருப்பதற்குக் காரணம் என்ன?'' எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், தங்களுக்கு வேண்டியவர் களை உள்ளே அனுமதிப்பதற்காகவும்  தங்களுக்கு வேண்டாதவர்களைத் தடுத்துவிடுவதற்காகவும்தான் உனது கூட்டத்தினர் அவ்வாறு செய்தார்கள். "உன் கூட்டத்தினர் புதிதாக இஸ்லாத்தை ஏற்றவர்களாக இருப்பதால், அவர்களின் உள்ளத்தில் வெறுப்பு தோன்றும் என்ற அச்சம் எனக்கில்லாவிட்டால் நான் இச்சுவரை கஅபாவினுள் இணைத்து அதன் கதவைக் கீழிறக்கி பூமியோடு சேர்ந்தாற் போலாக்கியிருப்பேன்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி 1584, 7243, முஸ்லிம் 2592

உலக மோகத்தைப் பற்றிய அச்சம்

உலகம் என்பது மறுமை வாழ்வுக்கான சோதனைக் களம். இதை நினைவில் கொண்டு மறுமை வெற்றியை நோக்கியே நமது பயணம் இருக்க வேண்டும். இம்மையின் தேவைகளுக்கான தேடலில் மொத்தமாக மூழ்கிவிடக் கூடாது; சொர்க்கத்தின் இலக்கை மறந்துவிடக் கூடாது.

பணம், பதவி போன்ற சுக போகங்களுக்குப் போட்டிப் போட்டு ஈமானை, இறையச்சத்தை இழந்துவிடக் கூடாது. இங்கு இன்பமாக இருப்பதற்காக மறுமையில் துன்பம் தரும் செயல்கள் பக்கம் போய்விடக் கூடாது; வரம்புகளை மீறிவிடக்கூடாது.

மக்களை உலக மோகம் வழிகெடுத்து விடும்; அவர்களை ஆடம்பர ஆசை அழித்துவிடும் என்பதால் அது குறித்து அல்லாஹ் வின் தூதர் அவர்கள் அதிகம் அஞ்சி இருக்கிறார்கள். அச்சமூட்டி எச்சரிக்கை செய்திருக்கிறார்கள்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போதவர்கள் "என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலக வளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.  ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?'' எனக்கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள்.

உடனே அந்த நபரிடம், "என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி (ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி (ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!'' எனக் கேட்கப்பட்டது. நாங்கள் நபி (ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப் படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே?'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால் நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; -பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும். எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர் களுக்கும் கொடுத்துக் கொண்டி ருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ - அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்ற வனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புஹாரி (1465) (2842)

உலக மோகத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இன்னும் பல்வேறு சந்தர்ப்பங்களில் அச்சமூட்டி எச்சரிக்கை செய்துள் ளார்கள். அவற்றை இன்ஷா அல்லாஹ் வரும் இதழில் காண்போம்.

 

சென்ற இதழின் தொடர்ச்சி...

எழுச்சி கண்ட வீழ்ச்சி

எம். எஸ். ஜீனத் நிஸா

ஆசிரியை, அல் இர்ஷாத் மகளிர் இஸ்லாமிய கல்வியகம்,  மேலப்பாளையம்

சமுதாயப் பணி

இரத்த தான முகாம், ஆம்புலன்ஸ் சேவைகள், இலவச மருத்துவ முகாம்கள், கல்வி உதவிகள், கல்வி கருத்தரங்குகள், வட்டியில்லாக் கடன் உதவி, ஜகாத் நிதியிலிருந்து ஏழை மக்களுக்கு வாழ்வாதார உதவிகள், ஒடுக்கப்பட்ட முஸ்லிம் சமுதாயத் திற்காக அறவழிப் போராட்டங்கள் இது போன்ற எண்ணற்ற அரும் பணிகளை தழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் எவ்வித சுயநலமுமின்றி செய்து வருகின்றது. இது போன்றுள்ள சமுதாயப் பணிகளில் ஒன்று தான் திருமணத்தை நடத்தி வைப்பதும் ஆகும். 

திருமணம் என்பது ஒர் ஆண், பெண் சம்மந்தப்பட்ட பிரச்சனை இல்லை. மாறாக இது ஒரு சமுதாயப் பிரச்சனை. ஆணோ பெண்ணோ வழி தவறாமல் இருப்பதற்கும் சமுதாயம் ஒழுக்கக்கேட்டில் செல்லாமல் இருப்பதற்கும் திருமணம் தான் வடிகாலாகும். இதை உரிய முறையில் நடத்தி வைக்கவில்லையென்றால் சமுதாயம் சீர்குலைந்து விடும்.

இரத்தத் துளிகளால் வளர்ந்த ஏகத்துவம், குஃப்ரில் உள்ள பெண்களைக் கரம் பிடிப்பதால் அழிந்துவிடக் கூடாது. இதற்குக் காதல் என்ற சீர்கேடே காரணம். குடும்பச் சூழல் மற்றும் வறுமையின் காரணமாக மணமுடிக்கப்படாத ஆண்களுக்கும், பெண்களுக்கும் திருமணத்தை நடத்தி வைக்குமாறு இறைவன் கட்டளையிடுகிறான்.

உங்களில் வாழ்க்கைத் துணை யற்றவர்களுக்கும், நல்லோரான உங்களின் ஆண் அடிமைகளுக்கும், பெண் அடிமைகளுக்கும் திருமணம் செய்து வையுங்கள்! அவர்கள் ஏழைகளாக இருந்தால் அல்லாஹ் தனது அருளால் அவர்களைத் தன்னிறைவு பெற்றோராக ஆக்கு வான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.

அல்குர்ஆன் 24:32

தமீமுத்தாரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள், "மார்க்கம் (தீன்) என்பதே "நலம் நாடுவது' தான்'' என்று கூறினார்கள். நாங்கள், "யாருக்கு (நலம் நாடுவது)?'' என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வுக்கும், அவனுடைய வேதத்துக்கும், அவனு டைய தூதருக்கும், முஸ்லிம்களின் தலைவர்களுக்கும், அவர்களில் பொதுமக்களுக்கும்'' என்று பதிலளித்தார்கள்.

நூல்: முஸ்லிம் 95

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் நிர்வாகிகள் தமது வாழ்க்கையிலும், தனது குடும்பத்தினர் திருமண விஷயத்திலும் ஏகத்துவத்தில் உள்ள பெண்களுக்கு முன்னுரிமை வழங்கி  முன்மாதிரியாகத் திகழ வேண்டும்.  இது போன்ற விஷயங்களில் மக்களுக்கு செயல் முறைகள் தான் சிறந்த மாற்றங்களை ஏற்படுத்தும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அனைத்து விஷயங் களுக்கும் முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காக நபியவர்களது வளர்ப்பு மகன் ஸைத் தனது மனைவியை விவாகரத்துச் செய்த பிறகு ஸைனப் (ரலி) அவர்களை நபியவர்களுக்கு திருமணம் முடித்து வைக்கிறான்.

யாருக்கு அல்லாஹ் அருள் புரிந்து (முஹம்மதே!) நீரும் அவருக்கு அருள் புரிந்தீரோ, அவரிடம் "உமது மனைவியை உம்மிடமே வைத்துக் கொள்! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்'' என்று நீர் கூறியதை எண்ணிப் பார்ப்பீராக! அல்லாஹ் வெளிப்படுத்த இருந்ததை உமது மனதுக்குள் மறைத்துக் கொண்டீர். மனிதருக்கு அஞ்சினீர்! நீர் அஞ்சுவதற்கு அல்லாஹ்வே தகுதியானவன். ஸைத் என்பார் அவரிடம் தன் தேவையை முடித்துக் கொண்ட போது உமக்கு அவரை மணமுடித்துத் தந்தோம். வளர்ப்பு மகன்கள் தம் மனைவி யரிடம் தமது தேவையை முடித்துக் கொண்டால் (விவாகரத்துச் செய்தால்) அவர்களை (வளர்ப்புத் தந்தையரான) நம்பிக்கை கொண்டோர் மணந்து கொள்வது குற்றமாக ஆகக் கூடாது என்பதற்காக (இவ்வாறு செய்தோம்). அல்லாஹ்வின் கட்டளை செய்து முடிக்கப்பட வேண்டியதாக இருக்கிறது.

அல்குர்ஆன் 33:37

அன்றைய அரபிகளிடத்தில் வளர்ப்பு மகனின் மனைவியைத் திருமணம் முடிப்பது கேவலமாகப் பார்க்கப்பட்டது. போலியான உறவுகளுக்கு இஸ்லாத்தில் எந்த உரிமைகளும் கிடையாது என்பதை மக்களுக்கு உணர்த்துவதற்காகத் தான் அல்லாஹ் இத்திருமணத்தை நடத்தி வைத்தான்.

இதை இங்கு குறிப்பிடுவதற்குக் காரணம், நமது ஜமாஅத்தின் நிர்வாகிகள் திருமண விஷயத்தில் உறுதியாகச் செயல்பட்டு மக்களுக்கு முன்மாதிரியாகத் திகழ வேண்டும் என்பதற்காகத் தான்.

எழுச்சியும் வீழ்ச்சியும்

1. பொதுவாக, ஒரு பெண்ணால் தன் பெற்றோரிடம் தனது திருமணத்தைப் பற்றி கருத்துச் சொல்ல முடியாது. ஆனாலும் அல்லாஹ்வின் கட்டளைகளை நடைமுறைப்படுத்து வதற்காக பெற்றோரை எதிர்த்து ஒரு ஏகத்துவவாதியைத் தான் திருமணம் செய்து கொள்வேன் என்று பெண்கள் கூறுவது ஏகத்துவம் ஏற்படுத்திய எழுச்சியாகும்.

ஆனால் இதற்கு மாற்றமாக எந்த ஒரு  விஷயத்திலும் பெற்றோர் பேச்சைக் கேட்காத ஆண்களோ திருமணப் பொறுப்பை மட்டும் தாய், தந்தையரிடம் ஒப்படைக்கத் துடிப்பது எதனால்? தனது பெற்றோர் தனக்கு அழகான, அந்தஸ்தான பெண்ணை மணமுடித்துத் தருவாள் என்பதற்காகத் தானே? இது தவ்ஹீத் கண்ட வீழ்ச்சியாகும்.

2. தனது மகளுக்கு முஷ்ரிக்கை மணமுடித்து வைத்தால் அவனுடன் அவள் தொடர்ந்து வாழமாட்டாள் என்பதை அவளது பெற்றோர்கள் புரிந்து கொள்ளுமளவிற்கு ஒரு பெண் போராடுகிறாள். இறுதியில் தனது பெற்றோர்கள் முஷ்ரிக்கைத் திருமணம் முடித்து வைப்பதில் தான் தீவிரமாக இருக்கிறார்கள் என்பதை உணர்ந்த உடன் தவ்ஹீத் மாப்பிள்ளையைப் பார்த்து தருமாறு மூன்றாவது நபரிடம் ஒரு பெண் கேட்கின்றாளே! இது பெண்களிடத்தில் ஏற்பட்ட எழுச்சி.

ஆனால் ஆண்களோ, இணை வைப்பவர்களின் வீட்டில் பெண் எடுக்கின்றார்கள். அவர்களைப் பொறுத்த வரை இது இரட்டிப்பு மகிழ்ச்சி. ஒரே கல்லில் இரண்டு மாங்காய். 1. வரதட்சனை கொடுக்கத் தேவையில்லை. 2. தவ்ஹீதை எதிர்ப்பவர்களுக்கே, அவர்கள் எவ்வித முயற்சியும் செய்யாமல் தவ்ஹீத் மாப்பிள்ளை.

அப்படியானால் ஏகத்துவவாதியைத் தவிர வேறு மாப்பிள்ளையை மணக்க மாட்டேன் என்ற உறுதியுடன் வாழ்ந்து கொண்டிருக்கும் தவ்ஹீத் பெண்கள் யாரைத் திருமணம் முடிப்பது? என்ற கேள்விக்கு பதிலளியுங்கள். ஏகத்துவ வாதியைத் தான் மணமுடிப்போம் என்பவர்களைக் கை கழுவி விட்டு முஷ்ரிக் வீட்டில் கை நனைக்கின்றீர்கள்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட இந்தப் பெண்கள், அல்லாஹ்வையும் அவனது தூதரையும் காதலித்ததற்காகத் தான் இந்த சத்தியப் போராட்டமே தவிர சில கழிசடைகளை நேசித்ததற்காக அல்ல!

ஒரு சமயம் அந்தப் பெண் பெற்றோர்களின் நிர்ப்பந்தத்திற்கு உட்பட்டு சோதனையில் சோர்வடைந்து ஒரு முஷ்ரிக்கை மணமுடித்துவிட்டால் அந்தப் பாவத்தை சுமப்பது யார்?

அதிகமான இளைஞர்களைக் கொண்ட அமைப்பு, தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தான். போராட்டங்களில் மிகைத்துக் காணப்படும் இளை ஞர்களில் பலரை மணமகன் போட்டோக்களில் காண முடிவதில்லை.

எனவே ஒவ்வொரு இளைஞனும் மணமுடித்தால் கொள்கைவாதிப் பெண்ணை தான் மணமுடிப்பேன் என்று இத்தருணத்தில் உறுதி மொழி எடுக்க வேண்டும்.

ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றொருவருக்கு முன்னோடியாக முன்மாதிரியாகத் திகழ்வதற்கு அல்லாஹ்விடம் உதவி தேடுவோமாக!

"எங்கள் இறைவா! எங்கள் வாழ்க்கைத் துணைகளிலிருந்தும், சந்ததிகளிலிருந்தும் எங்களுக்குக் கண் குளிர்ச்சியைத் தருவாயாக! (உன்னை) அஞ்சுவோருக்கு முன்னோடியாகவும் எங்களை ஆக்குவாயாக!'' என்று அவர்கள் கூறுகின்றனர்.

அல்குர்ஆன்25:74

 

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                   தொடர்: 21

பலவீனமான ஹதீஸைப் பின்பற்றுபவர்கள்

முல்லாக்கள் அல்ல! முட்டாள்கள்!

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பது, அவற்றின்படி அமல் செய்வது தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் என்ற நூலின் முன்னுரையில் குறிப்பிட்ட கருத்துக்களைப் பற்றி மக்ராவி குறிப்பிட்ட விமர்சனத்தைக் கடந்த இதழில் கண்டோம்.

ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை இங்கு வெளியிட விருந்த வேளையில், அல்ஜாமிவுஸ் ஸகீர் என்ற நூலில் இடம்பெற்ற அல்பானி அவர்களின் முன்னுரை கிடைத்தது. அந்த முன்னுரை, ஸஹீஹ் தர்கீப் வத்தர்ஹீப் நூலின் முன்னுரையை விட எளிதில் புரிந்து கொள்ளக்கூடிய வகையில் அதிகமான விளக்கங்கள் உள்ளன. எனவே அதையும் இணைத்துக் கூறினால் வாசகர்களுக்குப் பயனுள்ளதாக அமையும் என்ற அடிப்படையில் அதையும் இங்கு அளிக்கிறோம்.

இன்ன அமல் செய்தால் இவ்வளவு நன்மை என்று அமல் களைச் சிறப்பித்துக் கூறுகின்ற ஹதீஸ்களின் அடிப்படையில் அமல்கள், வணக்கங்கள் செய்யலாம். ஆனால் இவ்வாறு அமல் செய்வது வரையறுக்கப்பட்ட நிபந்தனைகளுக்கு உட்பட்டது. இவ்வாறு ஹதீஸ் கலை அறிஞர்கள் தெரிவிப்பதாக ஜாமிவுஸ் ஸகீருக்கு, அல்ஃபத்ஹுல் கபீர் என்ற பெயரில் இணைப்பு நூல் வெளியிட்ட அறிஞர் யூசுப் அன்னப்ஹானி கூறியுள்ளார்.

அவருடைய இந்தக் கருத்துக்கு எதிராக நான் இரண்டு விமர்சனங்களை அவர் முன்வைக்கிறேன்.

பலவீனமான ஹதீஸ்களை, அமல் களின் சிறப்புகளில் செயல்படுத்தலாம் என்று பொதுவாகச் சொல்லும் போது, இதில் எவ்வித கருத்து வேறுபாடும் அறவே இல்லை என்று பெரும் பான்மையான மக்கள் விளங்கிக் கொள்கின்றனர். ஆனால் உண்மை அவ்வாறில்லை. ஹதீஸ் கலையில் விரிவாகக் கூறப்பட்டது போன்று இதில் மிகுந்த கருத்துவேறுபாடு உள்ளது.

இதற்கு அஷ்ஷைகு ஜமாலுத்தீன் அல்காணம் ரஹிமஹுல்லாஹ் அவர்களின் ஹதீஸ் சட்டங்கள் என்ற நூலை உதாரணமாக எடுத்துக் கொள்ளலாம்.

பலவீனமான ஹதீஸை அடிப் படையாகக் கொண்டு அமல் செய்யலாம் என்ற கருத்தை, அனைவருக்கும் உரிய பொதுவான அனுமதியாக அறிஞர்கள் எடுத்துக் கொள்ளவில்லை.

இமாம் இப்னு மயீன், இமாம் புகாரி, இமாம் முஸ்லிம், சட்ட அறிஞர் அபூபக்கர் இப்னு அரபி ஆகியோர் இந்தக் கருத்தில் உடன்பாடு கொள்ளவில்லை என்று ஷைஹ் ஜமாலுத்தீன் அவர்கள் அந்நூலில் குறிப்பிடுகின்றார்கள். இப்னு ஹஸ்மு அவர்களும் இதே கருத்தில் தான் உள்ளார்கள்.

"பொய்யர் அல்லது மெத்தனப் போக்குள்ளவர் அல்லது யாரென்ற நிலை அறியப்படாத ஒருவர் ஓர் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறுகின்றார். இந்த அறிவிப்புத் தொடரை கிழக்கு நாட்டவர் அறிவிக்கின்றார்கள்; மேற்கு நாட்டவர் அறிவிக்கின்றார்கள்; இந்தத் தொடரை ஒரு கூட்டம் மற்றொரு கூட்டத்திடமிருந்து அறிவிக்கின்றது; ஒரு நம்பகமானவர் மற்றொரு நம்பகமானவரிடமிருந்து அறிவிக்கின்றார். இப்படியே நபி (ஸல்) அவர்கள் வரை அந்தத் தொடர் செல்கின்றது.

எனவே அப்படிப்பட்ட தொடரைக் கொண்டு அமைந்த ஹதீஸை ஏற்றுக் கொள்ளலாம் என்று சில முஸ்லிம்கள் கூறுகின்றனர். ஆனால் அந்த ஹதீஸை அறிவிப்பது நமக்கு ஆகுமானது (ஹலால்) அல்ல. அதை நம்புவதும் அதைக் கொண்டு செயல்படுவதும் கூடாது என்று தனது அல்மிலல் வன்னிஹல் என்ற தமது நூலில் இப்னு ஹஸ்மு தெரிவிப்பதாக அறிஞர் ஜலாலுத்தீன் அவர்கள் பதிவு செய்துள்ளார்கள்.

(ஜாமிவுஸ்ஸகீர் முன்னுரை)

முஸ்லிம் இமாம் கூறும் முட்டாள்கள்

அபுல்ஹுசைன் முஸ்லிம் பின் அல்ஹஜ்ஜாஜ் ஆகிய நான் கூறுகிறேன்:

சந்தேகத்திற்குரிய அறிவிப் பாளர்கள் குறித்தும், அவர்களுடைய குறைகள் குறித்தும் (நபிமொழி) அறிஞர்கள் குறிப்பிட்டுள்ள இதைப் போன்ற தகவல்கள் ஏராளம் உள்ளன. அவற்றையெல்லாம் முழுமையாகக் குறிப்பிட இந்த ஏடு போதாது. நாம் இதுவரை எடுத்துரைத்த தகவல்கள் இந்த விஷயத்தில் நபிமொழி அறிஞர்களின் கோட்பாடு என்ன என்பதை அறிந்துகொள்ள விரும்பு வோருக்குப் போதுமானவை ஆகும்.

நபிமொழி அறிவிப்பாளர்களிடம் காணப்பட்ட குறைகளை எடுத் துரைப்பதையும், தங்களிடம் வினவப்பட்டபோது அவற்றைத் தெளிவாகக் கூறுவதையும் நபிமொழி அறிஞர்கள் கட்டாயமாக்கிக் கொண்டதற்குக் காரணமே, அ(வற்றை மறைப்ப)தில் உள்ள மாபெரும் கேடுதான். ஆம்! மார்க்கச் செய்தி என்பதே அனுமதிக்கப்பட்டது (ஹலால்), தடை செய்யப்பட்டது (ஹராம்), செய்யத் தூண்டுவது (அம்ர்), தடுப்பது (நஹ்யு), ஆவலூட்டுவது (தர்ஃகீப்), எச்சரிப்பது (தர்ஹீப்) ஆகியவற்றில் ஒன்றாகத் தான் இருக்கும்.

இந்நிலையில் மார்க்கச் செய்தி களை அறிவிப்பவர் உண்மைக்கும் நம்பகத் தன்மைக்கும் எடுத்துக் காட்டாக இல்லாமலிருந்தால் நிலைமை என்னவாகும்? அவரைப் பற்றித் தெரிந்த ஒருவர் அவரிடமிருந்து மார்க்கச் செய்திகளை அறிவிக்கப் போய், அவரிடமுள்ள குறைகளை விவரம் தெரியாத மக்களிடம் மறைத்தால், அது பாவம் மட்டுமல்ல; முஸ்லிம் பொதுமக்களுக்குச் செய்யும் துரோகமும் ஆகும்.

ஏனெனில், அச்செய்திகள் அனைத்துமோ பெரும்பாலானவையோ அடிப்படையற்ற பொய்யான தகவல்களாக இருக்க, அவற்றைக் கேட்கும் சிலர் அப்படியே அவற்றைச் செயல் படுத்திவிடலாம்; அல்லது சிலவற்றையாவது செயல்படுத்தி விடலாம். அதே நேரத்தில், நம்பத் தகுந்த, திருப்தி தருகின்ற அறிவிப்பாளர்கள் வாயிலாகக் கிடைத்துள்ள சரியான தகவல்கள் ஏராளம் உள்ளன. அப்படியிருக்க, நம்பத் தகாத, திருப்தி கொள்ள முடியாத அறிவிப்பாளர்களின் செய்திகளுக்கு என்ன அவசியம் நேர்ந்தது?

பலவீனமான ஹதீஸ்களையும் அடையாளம் தெரியாத அறிவிப்பாளர் தொடர்களையும் தெரிந்துகொண்டே அறிவிப்பதில் சிலர் முனைப்புக் காட்டுகின்றனர். இவர்களில் பெரும்பாலோர் பொதுமக்களிடம் தங்களை அதிக அறிவுபடைத்தவர்கள் என்று காட்டிக்கொள்ள வேண்டுமென விரும்புகிறார்கள் என்றே கருதுகிறேன். இன்னார் எத்துணை எத்துணை ஹதீஸ்களை அறிந்துள்ளார்; ஏராள மான ஹதீஸ்களைத் திரட்டியுள்ளார் என்று (சிலாகித்துக்) கூறப்பட வேண்டும் என்பதே அவர்களின் இந்த அறிவிப்புகளுக்குக் காரணம்.

(ஹதீஸ் எனும்) கல்வித் துறையில் இந்தப் பாதையைத் தேர்ந்தெடுத்துக் கொண்ட எவருக்கும் விமோசனமே கிடையாது. இவர்களை "அறிஞர்கள்' என்று குறிப்பிடுவதைவிட "முட்டாள்கள்' என்று கூறுவதே பொருத்தமாக இருக்கும்.

(தர்கீப் வத்தர்ஹீப் முன்னுரை)

"ஆர்வமூட்டுகின்ற மற்றும் அச்சமூட்டுகின்ற ஹதீஸ்களை மார்க்கச் சட்டங்களைச் சொல்பவரிடமிருந்தே தவிர மற்றவர்களிடமிருந்து அறிவிக் காதீர்கள்'' என்ற கருத்தைத் தான் முஸ்லிம் ஹதீஸ் நூலில் இடம்பெற்ற இமாம் முஸ்லிம் அவர்களின் முன்னுரை தெரிவிக்கின்றது என்று ஹாபிழ் இப்னு ரஜப் அவர்கள் திர்மிதியின் விரிவுரையில் குறிப்பிடுகின்றார்கள்.

அதனால் தான் அமல்களின் சிறப்புகளிலும், விரும்பத்தக்கவை என்று வரக்கூடிய அமல்களிலும் பலவீனமான ஹதீஸை அடிப் படையாக வைத்து எந்தவொரு அமலையும் செய்யக்கூடாது என்ற நிலைப்பாட்டை நோக்கி நான் (அல்பானி) மக்களை அழைக்கிறேன். இந்த நிலைப்பாட்டையே மார்க்கமாகக் கடைப்பிடிக்கும்படி அவர்களிடம் நான் வேண்டுகிறேன்.

இதற்கு அடிப்படைக் காரணம், பலவீனமான ஹதீஸ் என்பது யூகம் மற்றும் சந்தேகத்திற்குரியதாகவே இருக்கின்றது. உண்மை இவ்வாறிருக்கையில் யூகத்தை அடிப்படையாகக் கொண்டு எப்படி அமல் செய்ய முடியும்?

அல்லாஹ் தனது திருமறையில் கூறுகின்றான்.

அவர்களுக்கு இது பற்றி எந்த அறிவும் இல்லை. ஊகத்தைத் தவிர (வேறு எதையும்) அவர்கள் பின்பற்றுவதில்லை. ஊகம் உண்மைக்கு எதிராக ஒரு பயனும் தராது.

அல்குர்ஆன் 53:28

அவை வெறும் பெயர்கள் தவிர வேறு இல்லை. நீங்களும், உங்கள் மூதாதையருமே அந்தப் பெயரைச் சூட்டினீர்கள். இது பற்றி அல்லாஹ் எந்த சான்றையும் அருளவில்லை. ஊகத்தையும், மனோ இச்சைகளையும் தவிர வேறு எதையும் அவர்கள் பின்பற்றவில்லை. அவர்களுக்கு அவர்களின் இறைவனிடமிருந்து நேர்வழி வந்து விட்டது.

அல்குர்ஆன் 53:23

யூகத்தின் அடிப்படையில் செயல்படுவதை இறைவன் பல வசனங்களில் கண்டிக்கிறான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் இதையே கூறுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(பிறர் மீது) கெட்ட எண்ணம் கொள்வது குறித்து உங்களை நான் எச்சரிக்கிறேன். ஏனெனில், கெட்ட எண்ணம்தான் பேச்சுக்கüலேயே மிகவும் பொய்யானதாகும். (மற்ற வர்கüன் குற்றங்குறைகளை) துருவித் துருவி ஆராயாதீர்கள். ஒட்டுக் கேட்காதீர்கள். ஒருவரோடொருவர் பகைத்துக் கொள்ளாதீர்கள். (அல்லாஹ்வின் அடியார்களே!) சகோதரர்களாய் இருங்கள்.

நூற்கள்: புகாரி 5144, முஸ்லிம் 4646

பொதுவாக, பலவீனமான ஹதீஸை அறிவிக்கக் கூடாது என்ற என்னுடைய நிலைப்பாட்டிற்கு மாற்ற மான கொள்கை கொண்டவர்களிடம் இதற்குக் குர்ஆன் ஹதீஸிலிருந்து எந்த ஆதாரமும் இல்லை.

இதற்குப் பதிலளிக்க வந்த பிந்தைய கால அறிஞர்களாலும் எந்த ஆதாரத்தையும் அளிக்க முடிய வில்லை. அவர்கள் அளித்த ஒரு சில ஆதாரங்களில் முரண்பாடுகள் உள்ளன. இதற்குக் கீழ்க்கண்ட இரண்டு செய்திகளை உதாரணமாகக் கூறலாம்.

விரும்பத்தக்க அமல்களை பலவீன மான ஹதீஸ்களின் அடிப்படையில் செய்யலாம். இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள் மூலம் செய்யக்கூடாது என்று இப்னு ஹம்மாம் கூறுகின்றார்.

(தொழுகை, நோன்பு போன்ற) ஐந்து கடமைகளின் சட்டங்களை பலவீனமான ஹதீஸ்கள் மூலம் எடுக்க முடியாது என்று அறிஞர்கள் ஏகோபித்த முடிவில் உள்ளனர். விரும்பத்தக்க அமல்களும் இந்த வகையைச் சார்ந்தது தான் என்று ஜலாலுத்தீன் அத்தவானி கூறுகின்றார்.

இந்த இரு செய்திகள் இவர்களின் முரண்பாட்டுக்குச் சிறந்த எடுத்துக்காட்டாகும்.

அதே சமயம் இந்த எடுத்துக்காட்டில் நாம் கண்ட அறிஞர்களின் ஏகோபித்த முடிவு நேர்மையான கருத்தாகும். இதற்குக் காரணம், பலவீனமான ஹதீஸிலிருந்து பெறப்படுகின்ற யூகத்தின் அடிப் படையில் செயல்படக்கூடாது என்று முன்னர் நாம் கண்ட நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கை தான்.

வஸீலா தேடுவதின் தெளிவான சட்டங்கள் என்ற நூலில் இடம்பெறுகின்ற, ஷைகுல் இஸ்லாம் இப்னு தைமிய்யா அவர்களின் கருத்து இதைத் தான் வலியுறுத்துகின்றது. அதை இப்போது பார்ப்போம்.

ஸஹீஹ் மற்றும் ஹஸன் அல்லாத பலவீனமான ஹதீஸ்களை மார்க்கத்தில் ஆதாரமாகக் கொள்வது கூடாது. எனினும் ஒரு ஹதீஸ் பொய்யான ஹதீஸ் என்று அறியப்படவில்லை. அதே சமயம் அந்த ஹதீஸ் உறுதியான ஹதீஸ் என்றும் அறியப்படவில்லை. இத்தகைய ஹதீஸை அறிவிப்பது கூடும் என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் மற்றும் ஏனைய அறிஞர்கள் கூறுகின்றனர்.

இதற்குக் காரணம், மார்க்க ஆதார அடிப்படையில் ஓர் அமல் அமைந்து, இதன் சிறப்பு குறித்து, பொய் என்று சொல்ல முடியாத ஒரு ஹதீஸ் அறிவிக்கப்பட்டால் அதற்குக் கூலி கிடைக்கலாம் என்பது தான். (இப்னு தைமிய்யா அவர்களின் இந்த நிலைப் பாட்டில் தவ்ஹீத் ஜமாஅத்திற்கு உடன் பாடில்லை) பலவீனமான ஹதீஸ் அடிப்படையில் செய்யப்படும் ஒரு அமலை கடமை என்றோ, விரும்பத்தக்கது என்றோ எந்தவொரு அறிஞரும் கூறவில்லை.

அப்படியொரு கருத்தை யாராவது சொன்னால் அவர் இது தொடர்பான அறிஞர்களின் ஏகோபித்தக் கருத்துக்கு மாற்றமாக நடந்தவர் ஆவார்.

அஹ்மத் பின் ஹன்பல் மற்றும் அவரைப் போன்ற அறிஞர்கள் மார்க்கத்தில் இதுபோன்ற ஹதீஸ்களை ஆதாரமாகக் கொண்டதில்லை. பலவீனமான ஹதீஸை அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் மார்க்க விஷயங்களுக்கு ஆதாரமாகக் கொண்டார் என்று யாராவது சொன்னால் அது சரியான கருத்தல்ல. அவர் தவறான கருத்தைக் கூறியவராவார்.

இவ்வாறு இப்னு தைமிய்யா அவர்கள் குறிப்பிடுகின்றார்கள்.

இதுதொடர்பாக அறிஞர் அஹ்மத் ஷாகிர் என்பார், அல்ஃபாயிலுல் ஹஸீஸ் என்ற நூலில் கூறுவதாவது:

ஹலால், ஹராம் தொடர்பாக நாம் அறிவிக்கும் போது அந்த ஹதீஸின் தரம் குறித்து நாம் கடுமை காட்டுவோம். சிறப்புகள் போன்ற வற்றைக் குறித்து அறிவிக்கும் போது ஹதீஸின் தரம் குறித்து நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம் என்று அஹ்மத் பின் ஹன்பல், அப்துர்ரஹ்மான் பின் மஹ்தி, அப்துல்லாஹ் பின் அல்முபாரக் ஆகியோர் கூறியுள்ளார்கள்.

இதனால் அவர்கள் பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ள லாம் என்று கூறுவதாக இதை நாம் எடுத்துக் கொள்ளக்கூடாது.

மாறாக, சில ஹதீஸ்கள் ஸஹீஹ் என்ற தரத்தை விடக் குறைந்து ஹஸன் என்ற தரத்தில் அமைந்திருக்கும். அப்படி ஹஸன் என்ற தரத்தில் அமைந்த அத்தகைய ஹதீஸ்களைக் கண்டுகொள்ளாமல் விட்டு விடுவோம் என்று அவர்கள் கூறியிருப்பதாகவே நான் கருதுகிறேன்.

ஆரம்ப கால கட்டத்தில் ஒரு ஹதீஸை ஸஹீஹ் (சரியானது) அல்லது லயீஃப் (பலவீனமானது) என்று தான் தரம் பிரித்தனர். ஹதீஸ் கலை உருவான பின்னர் தான், ஸஹீஹான ஹதீஸை விடக் கொஞ்சம் தரத்தில் குறைந்ததை ஹஸன் என்று தரம் பிரிக்கும் வழக்கம் உருவானது. இதுதான் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் இவ்வாறு கூறியதற்கு அடிப்படைக் காரணமாகும் என்று நான் நினைக்கிறேன். அல்லாஹ் மிக அறிந்தவன்.

இவ்வாறு அறிஞர் அஹ்மத் ஷாகிர் அவர்கள் கூறுகின்றார்கள்.

"ஹலால், ஹராம் தொடர்பாக அறிவிக்கும் போது அந்த ஹதீஸின் தரம் குறித்து நாம் கடுமை காட்டுவோம். சிறப்புகள் குறித்து அறிவிக்கும் போது ஹதீஸின் தரம் குறித்து நாம் கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவோம்' என்று கூறிய அஹ்மத் பின் ஹன்பல், அப்துர் ரஹ்மான் பின் மஹ்தி, அப்துல்லாஹ் பின் அல்முபாரக் போன்ற அறிஞர்களுக்கு நான் ஒரு விளக் கத்தைக் கொடுக்க நினைக்கின்றேன்.

கண்டு கொள்ளாமல் விடுவது என்றால் அதன் பொருள், அந்த ஹதீஸ்களின் பலவீனத்தை அவர்கள் சொல்லாமல் விட்டுவிடுவதாகும். அதே சமயம் அந்த ஹதீஸ்களின் அறிவிப்பாளர் தொடரை விட்டுவிட மாட்டார்கள். அந்த அறிவிப்பாளர்கள் தொடர் மூலம் அதில் இடம்பெறும் பலவீனமான அறிவிப்பாளர்களை அடையாளம் கண்டு, அந்த ஹதீஸ் பலவீனமானது என்ற முடிவுக்கு ஒருவர் வந்து விடலாம்.

ஆனால் அறிவிப்பாளர்கள் தொடரைக் குறிப்பிடாமல் விட்டு விட்டார்கள் என்றால் அவர்கள் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ள வேண்டும். கடந்த காலத்தில் ஹதீஸ் கலையில் ஈடுபட்ட மார்க்க அறிஞர்கள், அறிவிப்பாளர் தொடருடன் தான் ஹதீஸ்களைப் பதிவு செய்தார்கள். இதுதான் ஹதீஸ் துறையைப் பாதுகாத்து வருகின்றது.

இந்த அடிப்படையில் இதைப் புரிந்து கொண்டால் மேற்கண்ட அறிஞர்கள் பலவீனமான ஹதீஸ் களைக் கண்டுகொள்ளாமல் இருந்தார்கள் என்ற தவறான கண்ணோட்டம் ஏற்படுவதைத் தவிர்க்க முடியும்.

நமது விமர்சனம்

தமிழக ஆலிம்கள் மூச்சுக்கு முன்னூறு தடவை இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் என்று குறிப்பிடுவார்கள். அவர்களது நூற்களைப் பற்றிக் குறிப்பிடும் போது புகாரி ஷரீப், முஸ்லிம் ஷரீப் என்று போற்றிப் புகழ்ந்து கூறுகின்றனர். ஆனால் நடைமுறையில் இந்த இமாம்களுக்கு மாற்றமாக நடக்கின்றனர். பலவீனமான ஹதீஸ் பற்றி புகாரி இமாமின் பார்வையை விளக்கவோ, விவரிக்கவோ தேவையில்லை. அதுபோல் தான் இமாம் முஸ்லிம் அவர்களின் பார்வையும்!

"பலவீனமான ஹதீஸ்களின் பாதையைத் தேர்வு செய்து, அந்தப் பாதையில் தானும் சென்று, ஒரு சமுதாயத்தையும் வழிகேட்டின்பால் தாரை வார்க்கின்ற இந்த முல்லாக்கள் ஆலிம்கள் அல்ல, அறிவிலிகள்! முதிர்ந்த சிந்தனையுடையவர்கள் அல்ல, முட்டாள்கள்'' என்று இமாம் முஸ்லிம் அவர்கள் தமது நூலான முஸ்லிமின் முன்னுரையில் கடுமையாகச் சாடுகின்றார்கள்.

இமாம் முஸ்லிம் போன்றோர் கூறிய ஹதீஸ் துறை இலக்கணத்தின் அடிப்படையில் ஒவ்வொரு அடியையும் எடுத்து வைக்கின்ற தவ்ஹீத் ஜமாஅத்தை இந்த முல்லாக்கள் பழிப்பது தான் இதில் வேடிக்கை.

உண்மையில் இவர்கள் தான் பழிப்பதற்கும் பரிகாரத்திற்கும் உரியவர்கள். இதை மக்கள் நன்கு புரிந்து கொண்டிருக்கிறார்கள்.

நாம் இங்கு கருத்தில் கொள்ள வேண்டிய விஷயம், இவர்கள் மூச்சுக்கு முன்னூறு தரம் இமாம் புகாரி, இமாம் முஸ்லிம் என்றெல்லாம் சொல்வது கள்ள வேடம், கபட நாடகம் ஆகும்.

September 10, 2015, 4:04 PM

ஆகஸ்ட் ஏகத்துவம் 2015

தலையங்கம்

என்றும் நாங்கள் இப்ராஹீம் நபியின் வாரிசுகள்

இன்று ஒரு சில அனாமதேயங்கள், அரசியல் சமுதாய ரீதியிலான அநாதைகள் சகோதரர் பி.ஜே. இஸ்லாத்தை விட்டு வெளியேறி விட்டார் என்று கூறியுள்ளனர்.

"டி.என்.டிஜே. அமைப்பின் அமைப்பாளர் பி.ஜே. என்பவர் இஸ்லாமிய கொள்கைளுக்கு விரோத மாக பிரச்சாரங்களில் ஈடுபட்டு, இஸ்லாமிய சமுதாய மக்களை வழிகெடுத்து வரும் காரணத்தால் இவர் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார் என்று இச்சபை அறிவித்து, இவரைப் பின்பற்றியோர் தவ்பா செய்து (பாவமன்னிப்பு) தேடி மீள வேண்டும் என்று இச்சபை கேட்டுக் கொள்கிறது''

சமுதாயத்தில் ஒரு சல்லிக்காசு மதிப்புக்குத் தேறாத இவர்கள் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளனர். இவரைப் பின்பற்றுபவர்கள் தவ்பாச் செய்து இவரை விட்டு விலக வேண்டும் என்றும் அவர்கள் தெரிவித்துள்ளனர்.

இந்த அனாமதேயங்கள் சொல்ல வேண்டிய வார்த்தை பி.ஜே.யும் அவர்களது ஆதரவாளர்களும் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார்கள் என்று சொல்லியிருக்க வேண்டும்.

ஆனால் இவர்களால் ஒரு போதும் இவ்வாறு சொல்ல முடியாது. அப்படியே சொன்னாலும் அது செல்லவும் செல்லாது.

காரணம் தகப்பனார் பள்ளி முதவல்லியாக, பஞ்சாயத்துத் தலைவராக இருந்தால் தனயன் தவ்ஹீது ஜமாஅத்தில் இருக்கின்றார்.

மாமன் சுன்னத் ஜமாஅத் என்றால் மருமகன் தவ்ஹீது ஜமாஅத்.

அண்ணன் அந்தப் பக்கம் என்றால் தம்பி இந்தப் பக்கம்.

இன்னும் சொல்லப்போனால் பள்ளியின் இமாம் சுன்னத் ஜமாஅத் என்றால் பையன் தவ்ஹீத் ஜமாஅத்.

தவ்ஹீதுக் கொள்கை துளிர் விட்டு, தளிர்நடை போடுகின்ற சிறு ஊர்களில் இது எதிரொலிக்காமல் இருக்கலாம். ஆனால் தவ்ஹீது வளர்ந்துள்ள பெரும் பெரும் ஊர்களில் இதன் எதிரொலியும் எதிர்விளைவும் மிகக் கடுமையாகவே இருக்கும்.

அதைப் புரிந்து கொண்டுதான் இந்த கூழ்முட்டைகள் விவேகத்துடன் காய் நகர்த்துகின்றோம்; விவரத்துடன் காரியத்தைக் கையாளுகின்றோம் என்று நினைத்துக் கொண்டு பி.ஜே.வை மட்டும் இஸ்லாத்தை விட்டும் நீங்கி விட்டார் என்று இந்த இணைவைப்புக் கொள்கை அரைவேக்காடுகள் தெரிவித்துள்ளன.

அல்லாஹ்வின் அருளால் இன்றைக்கு ஏகத்துவக் கொள்கை வாதிகள் தனி சமுதாயமாக வாழ்கின்றார்கள். அதில் உள்ள எந்த ஒரு கடைமட்டத் தொண்டனும் அவரை தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டும் தனித்து பார்க்க மாட்டான். தன்னுடைய சத்தியக் கொள்கைச் சகோதரனாகவே பார்க்கின்றான். பி.ஜே.வுக்கென்று தனிக் கொள்கை எதுவும் கிடையாது. தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கை தான் பி.ஜே.யின் கொள்கை, அதைத் தான் இதிலுள்ள ஒவ்வொரு தொண்டனும் பின்பற்றுகிறான்.

எனவே பி.ஜே. மட்டும் இஸ்லாத்தை விட்டு நீங்கி விட்டார்; மற்றவர்களெல்லாம் நீங்கவில்லை என்ற இவர்களது முதுகெலும்பில்லாத அறிவிப்பு எவ்வளவு கேலிக்கூத்து என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

சுயமரியாதை இழந்த இந்த சுரண்டல் கூட்ட அறிவிப்பு சுன்னத் ஜமாஅத்தின் கூட்டத்திற்குள் கூட முழுமையாகப் போய்ச் சேரவில்லை. அப்படியே சேர்ந்தாலும் அதனால் ஒரு சிறு அதிர்வு ஒருபுறமிருக்கட்டும். ஒரு மயிர் அளவு அசைவு கூட ஏற்படவில்லை.

தமிழகம் எங்கும் தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய பெருநாள் திடல் தொழுகைகளில் ஆண்கள் பெண்கள் அலைஅலையாய் பெருக்கெடுத்து உள்ளார்கள்.

ஆரம்ப காலத்தில் இருந்து இந்த ஏகத்துவவாதிகள் சிறு கூட்டமாக இருக்கும் போதே அவர்களைத் தடுத்து, தகர்த்து, தடம் தெரியாமல் துடைத்து விட வேண்டும் என்று  தான் நினைத்தார்கள். ஆனால் அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீது வாதிகள் அபரிமிதமான வளர்ச்சியைக் கண்டு கொண்டிருக்கின்றார்கள்.

இதிலிருந்து பாடம் பெற்று தங்கள் வாயைப் பொத்திக் கொண்டு தங்கள் வழியைப் பார்த்துக் கொண்டு போக வேண்டும் அல்லவா? ஆனால் அவர்கள் அவ்வாறு அப்படி போகாமல் மீண்டும் தவ்ஹீத் வாதிகளை வழிமறித்து வம்புக்கு இழுத்துக் கொண்டிருக்கின்றார்கள். இது உண்மையில் மென்மேலும் தவ்ஹீத் கொள்கைக்கு மாபெரும் வளர்ச்சியைக் கொடுத்துக் கொண்டிருக்கின்றது. இதற்காக தவ்ஹீத் ஜமாஅத்தினர் அல்லாஹ் வுக்கு நன்றி செலுத்துகின்றனர்.

"உங்களை விட்டும், அல்லாஹ் வையன்றி எதனை வணங்குகிறீர் களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கி றோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது.

திருக்குர்ஆன் 60:4

இதில் வேடிக்கை என்ன வென்றால் தவ்ஹீதுவாதிகள் அங்கொன்றும் இங்கொன்றுமாக நான்கைந்து பேர்களாக இருந்து கொண்டிருக்கும் போதே இப்றாஹீம் (அலை) அவர்கள் பாணியில், பாதையில் சென்று இந்த வசனத்தைச் சொல்லி, உனக்கும் எனக்கும் எந்த வரவு செலவும் இல்லை. ஒட்டும் உறவும் இல்லை என்று முழங்கி விட்டனர்; விவாகரத்துச் செய்து விட்டனர்.

இன்று இந்த அனாமதேயங்கள் ஆங்காங்கே மாநாடு போட்டு உங்களை விட்டு விலகி விட்டோம் என்று இப்போது மானங்கெட்டுப் போய் சொல்கின்றனர்.

விவாகரத்து செய்யப்பட்ட வாழாவெட்டிப் பெண்ணொருத்தி பல வருடங்கள் கழித்து தனது கணவனைப் பார்த்து, உங்களை ஒதுக்கி வைத்து விட்டேன். உங்களை விட்டும் விலகி விட்டேன் என்று சொல்கின்ற கதையாக உள்ளது.

அன்றே உங்களை விட்டு விலகி  ஊர் நீக்கம், வழக்கு என்று பல்வேறு சோதனைகளைச் சந்தித்து இன்று அல்லாஹ்வின் அருளால் தனியொரு சமுதாயமாக நிற்கின்றோம். இந்நிலையில் மக்களை எங்களுக்கு எதிராகத் திரட்டி ஏகத்துவப் படையை குலைநடுங்கச் செய்துவிடலாம், அவர்களது வளர்ச்சிக்கு அணை போட்டு விடலாம் என்று நப்பாசை கொள்ளாதீர்கள்.

என்ன தான் மக்கள் சக்தி எங்களுக்கு எதிராக ஒன்று திரட்டப்பட்டாலும் நாங்கள் தொடர்ந்து இப்ராஹீம் (அலை) அவர்கள் மார்க்கத்தில் நிலைத்து நிற்கின்றோம். அல்லாஹ்வின் அருளால் இனியும் நிற்போம்.

தன் முகத்தை அல்லாஹ்வுக்குப் பணியச் செய்து, நல்லறம் செய்து, உண்மை வழியில் நின்ற இப்ராஹீமின் மார்க்கத்தைப் பின்பற்றி நடந்தவரை விட அழகிய மார்க்கத்திற்குரியவர் யார்? அல்லாஹ் இப்ராஹீமை உற்ற தோழராக்கிக் கொண்டான்.

திருக்குர்ஆன் 4:125

"அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும், உங்களுக்குமிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்ற வீரமிக்க இந்த ஏகத்துவப் பிரகடனத்தைச் செய்த இப்ராஹீம் (அலை) மார்க்கத்தில் இந்தியாவில், ஏன்? உலகத்தில் செயல்படுவது இந்த ஜமாஅத் தான்.

கடந்த காலத்தில் ஒரு குடும்பம் விருந்துக்கு அழைக்கப்பட்டால் அதற்கு மகிழ்ச்சியுடன் பதிலளித்தது. ஆனால் இன்று என்ன விருந்து? எதற்காக? வரதட்சணை கல்யாணமா? என்று விசாரணை செய்கின்றது.

வினாக்களால் விருந்துக்கு அழைத் தவரைத் துளைத்து எடுக்கின்றது. இதற்குச் சரியான விடை அளித்தால் விருந்தை ஏற்கின்றனர். இல்லையேல் புறக்கணிக்கின்றனர். இது யாருடைய வேலை? எவருடைய வேலை?

ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்கள் (நபித்துவ காலத்திற்கு முன்பு) இறையில்லம் கஅபாவின் மீது சாய்ந்து கொண்டு நின்றபடி, "குறைஷிக் குலத்தாரே! அல்லாஹ்வின் மீதாணையாக! என்னைத் தவிர உங்கüல் எவரும் இப்ராஹீம் (அலை) அவர்களுடைய மார்க்கத்தின்படி நடக்கவில்லை'' என்று சொல்-க் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். மேலும், அவர், உயிரோடு புதைக்கப்படவிருந்த பெண் குழந்தைகளைக் காப்பாற்றி வாழவைத்து வந்தார். எவரேனும் தன் பெண்மகவைக் கொல்ல நாடினால் அவரிடம், "அவளைக் கொல்லாதே. அவளுடைய செலவுக்கு உன்னிடம் நான் பொறுப்பேற்கிறேன்'' என்று சொல்-விட்டு, அந்தப் பெண் குழந்தையை (தாமே வளர்க்க) எடுத்துக் கொள்வார். அவள் வளர்ந்ததும் அவளது தந்தையிடம் (சென்று), "நீ விரும்பினால் இவளை உன்னிடம் ஒப்படைத்து விடுகிறேன்; நீ விரும்பினால் அவளது செலவுக்குப் பொறுப்பேற்று (பழையபடி நானே பராமரித்து)க் கொள்கிறேன்'' என்று சொல்வார்.

அறிவிப்பவர்: அஸ்மா  (ரலி)

நூல்: புகாரி 3828

ஸைது பின் அம்ரின் இந்தச் செய்கை பெண்ணினத்தைக் காக்கின்ற பெரும் சேவை. இப்ராஹீம் (அலை) அவர்களின் செய்கை, பெண்ணினக் காவல் சேவையைப் பறை சாற்றுகின்றது.

வரதட்சணை தான் சிசு முதல் பெரிய மனுஷி வரை உள்ள பெண்களை அழிப்பதற்குப் பெரிய காரணியாக, கருவியாக அமைந்துள்ளது. அதனால் பாவத்தின் கரை தன் மீது  கடுகளவு கூட படியக் கூடாது என்பதற்காகவே வரதட்சணை கல்யாணத்தை தவ்ஹீத் ஜமாஅத்தினர் புறக்கணிக்கின்றனர்.

சிசு முதல் பெரிய மனுஷி வரையிலான பெண்ணினம் அழிவதற் குரிய கொள்ளிக் கட்டையாக பெண் வீட்டு விருந்து இருந்து கொண்டிருக்கின்றது.

அதனால் அந்தப் பாவத்தில் பலியாகி, பாவியாகி விடக்கூடாது என்பதற்காகப் பெண் வீட்டு விருந்து புறக்கணிப்பை அமல்படுத்தும் ஒரே அமைப்பு தவ்ஹீத் ஜமாஅத்தான்.

ஏன் எதனால்? இப்ராஹீம் நபியின் மார்க்கத்தில் இருப்பதினால் ஆகும்.

அடுத்து வீடு குடிபுகும் விருந்து,

ஒரு குடும்பத்தை வீடேறி அழைக்க வந்து விட்டால் மவ்லித் ஓதினீர்களா? அல்லாஹ் அல்லாதவர்களை அழைத்து ராத்திபு நடந்ததா? அதற்கு அறுத்து பலியிட்டீர்களா?  என்று வினாக்கள் தொடர்கின்றன. திருப்தியான பதில் என்றால் விருந்து ஏற்கப்படுகிறது. இல்லையேல் புறக்கணிக்கப்படுகிறது.

ஏன்? எதற்கு?

நபி (ஸல்) அவர்கள், தமக்கு வேத வெüப்பாடு (வஹீ) அருளப் படுவதற்கு முன்பு  பல்தஹ் எனும் அடிவாரத்தில் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் அவர்களைச்  சந்தித் தார்கள். அப்போது (குறைஷிகüன்) பயண உணவு ஒன்று நபி (ஸல்) அவர்கள் முன்னிலையில் பரிமாறப் பட்டது. அந்த உணவை ஸைத் பின் அம்ர் உண்ண மறுத்து விட்டார். பிறகு ஸைத் (உணவைப் பரிமாறிய குறைஷிகüடம்), "நீங்கள் உங்கள் (சிலைகளுக்கு ப-யிடும்) ப-பீடக் கற்கüல் வைத்து அறுப்பவற்றை நான் உண்ண மாட்டேன். (அறுக்கும் போது) அல்லாஹ்வின் பெயர் எதன் மீது கூறப்பட்டதோ அதைத் தவிர வேறெதையும் உண்ண மாட்டேன்'' என்று சொன்னார்கள். ஸைத் பின் அம்ர் அவர்கள், குறைஷிகளால் (சிலைகளுக்காக) அறுக்கப்பட்ட வற்றைக் குறை கூறிவந்தார்கள். மேலும், "ஆட்டை அல்லாஹ்வே படைத்தான்; அதற்காக, வானத்தில் இருந்து தண்ணீரைப் பொழிந்தான்; அதற்காக, பூமியி-ருந்து (புற் பூண்டுகளை) முளைக்கச் செய்தான். (இத்தனைக்கும்) பிறகு நீங்கள் அல்லாஹ்வின் பெயரல்லாத மற்ற (கற்பனைத் தெய்வங்கüன்) பெயர் சொல்- அதை அறுக்கிறீர்கள்; இறைவனின் அருட்கொடையை நிராகரிக்கும் விதத்திலும் அல்லாஹ் அல்லாதவரை கண்ணியப்படுத்தும் விதத்திலும் இப்படிச் செய்கிறீர்கள்'' என்று கூறி வந்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 3826

இப்படி எல்லா வகையிலும் இப்ராஹீம் வாரிசுகளான இந்த ஜமாஅத்தைப் பார்த்து, வழிகெட்டது; இஸ்லாத்தை விட்டும் வெளியேறி விட்டது என்று சொன்னால் அவன் யார்?

இதோ இதற்கு அல்லாஹ்வே பதிலளிக்கின்றான்.

தன்னை அறிவிலியாக்கிக் கொண்டவனைத் தவிர யார் இப்ரா ஹீமின் மார்க்கத்தைப் புறக்கணிக்க முடியும்? அவரை இவ்வுலகில் நாம் தேர்வு செய்தோம். அவர் மறுமையில் நல்லோரில் இருப்பார்.

திருக்குர்ஆன் 2:130

எனவே தவ்ஹீத் ஜமாஅத்தின் வளர்ச்சி காரணமாக பாதிப்புக்குள்ளான இந்தப் பைத்தியங்களின் உளறல்கள் மக்களிடத்தில் எந்தப் பாதிப்பையும் பிரதிபலிப்பையும் ஏற்படுத்தப் போவ தில்லை என்று உரக்கச் சொல்கிறோம்.

அவர்கள் கொண்டிருக்கும் இணை வைப்புப் கொள்கை அணுஅணுவாக செத்துக் கொண்டிருக்கின்றது. அது அறவே எழுந்திருக்கப் போவதில்லை என்பதை உலகுக்கு எடுத்துச் சொல்லவும் ஊசலாடிக் கொண்டிருக் கும் அதன் கொஞ்ச நஞ்ச உயிரோட்டத்தை ஓய்ப்பதற்கும் வருகின்ற ஜனவரி 31ல் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை தவ்ஹீது ஜமாஅத் நடத்த உள்ளது.

அது உண்மையில் "சத்தியம் வந்தது அசத்தியம் அழிந்தது. அசத்தியம் அழிந்தே தீரும் (திருக்குர்ஆன் 34:49)'' என்பதை உலகுக்கு உணர்த்தும்.

 

இறுதி நபி இறப்பில்லாதவர்களா?

மனாருல் ஹுதாவிற்கு மறுப்பு

கே.எம். அப்துல் நாஸர், எம்.ஐ.எஸ்.சி.

கப்ரை வணங்கும் பரேலவிகளுக்கு எதிரானவர்களாகத் தங்களைக் காட்டிக் கொள்ளும் தேவ்பந்திகளிலும் வழிகெட்ட பரேலவிகள் அதிகமதிகம் ஊடுறுவியுள்ளனர். அதற்குத் தெளிவான சான்றுதான் "மனாருல் ஹுதா மே 2015'' மாத இதழில் "ரவ்ளா கஅபாவை விட புனிதமானது'' என்றும், நபியவர்கள் மரணிக்க வில்லை. அவர்கள் மண்ணறையில் உயிரோடு தான் உள்ளார்கள் என்றும் எழுதியுள்ளனர். இது மிகப்பெரும் வழிகேடும், நிரந்தர நரகத்தில் தள்ளும் இணைவைப்புக் கொள்கையுமாகும்.

"நபியவர்களின் மண்ணறை கஅபாவை விடப் புனிதமானது'' என்ற வழிகெட்ட கருத்திற்குரிய தெளிவான மறுப்பை ஜூன் 2015 ஏகத்துவம் மாத இதழில் நாம் தெளிவு படுத்தியிருந்தோம்.

"நபியவர்கள் மரணிக்கவில்லை. அவர்கள் கப்ரில் உயிரோடுதான் உள்ளார்கள்'' என்ற இணைவைப்புக் கொள்கைக்கு எதிரான நபிவழிச் சான்றுகளை நாம் இந்த இதழில் விரிவாகக் காண உள்ளோம்.

நபியவர்கள் மரணிக்கவில்லை என்ற வழிகெட்ட கொள்கையைத் திணிப்பதற்காக மனாருல் ஹுதா மாத இதழ் பல இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களையும், தவறான வாதங்களையும் முன்வைத்துள்ளது. சில சரியான ஹதீஸ்களின் கருத்தைத் திரித்துக் கூறியுள்ளனர்.

அவர்கள் எடுத்து வைத்துள்ள வாதங்களுக்குரிய பதில்களைக் காண்பதற்கு முன்னால் நம் உயிரினும் மேலான உத்தம நபி அவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதற்குரிய சான்றையும், அவர்கள் கியாமத் நாளில் தான் உயிர் கொடுத்து எழுப்பப் படுவார்கள் என்பதற்குரிய சான்றுகளையும் காண்போம்.

நபியும் மரணிப்பவரே! திருக்குர்ஆன் பிரகடனம்

(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே. பின்னர் நீங்கள் உங்கள் இறைவனிடம் கியாமத் நாளில் வழக்குரைப்பீர்கள்.

(அல்குர்ஆன் 39:30)

இந்த இறைவசனம் நபியவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நோக்கிப் பேசுகின்ற இறைவசனம் ஆகும்.

இவ்வுலகில் படைத்த அனைத்து மனிதர்களும் எவ்வாறு மரணத்தைத் தழுவக்கூடியவர்களோ அது போன்றே முஹம்மது (ஸல்) அவர்களும் மரணத்தைத் தழுவக்கூடியவர்கள் என்பதை மேற்கண்ட இறைவசனம் மிகத் தெளிவாக எடுத்துரைக்கிறது.

மரணம் என்பதில் பிற மனிதர்களுக்கும், நபி (ஸல்) அவர்களுக்கும் மத்தியில் எந்த வித்தியாசமும் இல்லை என்பதே இஸ்லாத்தின் அடிப்படை என்பதை மேற்கண்ட வசனத்திலிருந்து தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இறைத்தூதர் இறந்தாலும் இஸ்லாம் நிலைத்திருக்கும்

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான்.

(அல்குர்ஆன் 3:144)

உஹது யுத்தக் களத்தில் நபியவர்கள் கொல்லப்பட்டுவிட்டார்கள் என்ற வதந்தி பரவிய போது சிலர் இஸ்லாத்தை விட்டே வெளியேற நினைத்தனர். நபியவர்கள் கொல்லப் பட்ட பிறகு நாம் எதற்காகப் போர் செய்ய வேண்டும் என்று எண்ணினர். அந்த நேரத்தில்தான் அல்லாஹ் மேற்கண்ட இறைவசனத்தை அருளினான்.

முஹம்மது (ஸல்) அவர்கள் மரணித்தாலும் இஸ்லாம் நிலைத் திருக்கும். எனவே முஹம்மது நபி இறந்து விட்டாலும் நீங்கள் இஸ்லாத்தை விட்டு வெளியேறி விடுவீர்களா? அப்படி வெளியேறினால் அது உங்களுக்குத்தான் நஷ்டம் என்பதை நபித்தோழர்களுக்குத் திருக்குர்ஆன் தெளிவுபடுத்தியது.

நபியவர்கள் உயிருடன் வாழும் காலகட்டத்திலேயே அவர்கள் மரணிக்கக் கூடியவர்கள் தான் என்பதை இந்த இறைவசனம் நபித்தோழர்களுக்கு முன்னறிவிப்புச் செய்தது.

உண்மையை உணர்த்திய உண்மையாளர் அபூபக்கர்

"எவர் முஹம்மத் (ஸல்) அவர்களை வணங்கிக் கொண்டிருந் தாரோ அவர் முஹம்மத் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். அல்லாஹ்வை எவர் வணங்கிக் கொண்டிருந்தாரோ அவர் அல்லாஹ் (என்றும்) உயிராயிருப்பவன்; அவன் இறக்கமட்டான் என்பதைப் புரிந்து கொள்ளட்டும்'' என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வரும் வசனங்களை ஓதிக்காட்டினார்கள்.

"(முஹம்மதே!) நீர் மரணிப்பவரே. அவர்களும் மரணிப்போரே.'' (39:30)

முஹம்மத், தூதர் தவிர வேறு இல்லை. அவருக்கு முன் தூதர்கள் சென்று விட்டனர். அவர் இறந்து விட்டால் அல்லது கொல்லப்பட்டு விட்டால் வந்த வழியில் திரும்பி விடுவீர்களா? வந்த வழியே திரும்புவோர் அல்லாஹ்வுக்கு எந்தக் கேடும் செய்யவே முடியாது. நன்றியுடன் நடப்போருக்கு அல்லாஹ் கூலி வழங்குவான் (3:144)

(நூல்: புகாரி 3668)

மேற்கண்ட வார்த்தைகள் நபியவர்கள் மரணித்த நேரத்தில் உண்மையாளர் அபூபக்கர் சித்தீக் (ரலி) அவர்கள் கூறிய அற்புத வார்த்தைகளாகும். திருக்குர்ஆன் போதிக்கும் அற்புத உண்மையை நபியவர்கள் மரணித்த வேளையிலே அன்புத்தோழர்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

மற்றொரு முறையிலும் நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை அபூபக்கர் (ரலி) நயமாக மக்களுக்கு எடுத்துரைத்தார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்கள் (அங்கே) வந்து அல்லாஹ்வின் தூதரைப் போர்த்தியிருந்த போர்வையை விலக்கி அவர்களை (நெற்றியில்) முத்தமிட்டு, "தங்களுக்கு என் தந்தையும், என் தாயும் அர்ப்பண மாகட்டும்! நீங்கள் உயிராயிருந்த போதும் நறுமணம் கமழ்ந்தீர்கள். இறந்த நிலையிலும் மணம் கமழ்கிறீர்கள். என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது ஆணையாக! அல்லாஹ் ஒரு போதும் இரண்டு மரணங்களை உங்களைச் சுவைக்கச் செய்ய  மாட்டான்'' என்று சொல்லிவிட்டு வெளியேறினார்கள்.

(நூல்: புகாரி 3667)

"நபி (ஸல்) அவர்கள் இறக்க வில்லை என்று தான் தோன்றுகிறது. அவர்களை அல்லாஹ் (இப்போதே) நிச்சயம் எழுந்திருக்கச் செய்வான். அப்போது அவர்கள் (நபி அவர்கள் இறந்து விட்டார்கள் என்று கூறிய) பலரின் கைகளையும், கால்களையும் துண்டிப்பார்கள்'' (புகாரி 3667) என்று உமர் (ரலி) அவர்கள் நபி மீது கொண்ட பாசத்தினால் நிலை தவறிப் பேசிய பொழுதான் அபூபக்கர் (ரலி) மேற்கண்ட உண்மையை ஓங்கி உரைத்தார்கள்.

நபியவர்கள் மரணித்துவிட்டார்கள் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பது இணைவைப்புக் கொள்கை என்பதனை இறைத்தூதர் இறந்த நேரத்தில் குகைத்தோழர் ஆற்றிய உரையிலிருந்து நாம் தெளிவாக அறிந்து கொள்ள முடிகிறது.

இறப்பு நெருங்கியதை உணர்த்திய இறைவசனம்

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். ஆகவே, (ஒருநாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், "எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்கின்றனர்'' என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும்'' என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னிடம், "(நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும் போது...'' எனும் (110:1, 2) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், "(இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவித்தான்'' என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்து கொண்டதையே நானும் அறிந்து கொண்டேன்'' என்று சொன்னார்கள்

(நூல்: புகாரி 4430)

இறைத்தூதர் இறந்துவிட்டார்கள் என்பதுதான் நபித்தோழர்களின் கொள்கையாக இருந்தது என்பதை மேற்கண்ட ஹதீஸிலிருந்து நாம் அறிந்து கொள்ள முடிகிறது. இறைத் தூதர் இறக்கவில்லை என்று நம்புவது இஸ்லாத்திற்கு எதிரான கொள்கை என்பதும் தெளிவாகி விட்டது.

மரணம் நெருங்கிவிட்டதை மகளுக்கு உணர்த்திய இறைத்தூதர்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயில் தம்முடைய மகள் ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து, எதையோ இரகசியமாக அவர்களிடம் சொன்னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். பிறகு அவர்களை அழைத்து மீண்டும் ஏதோ இரகசியமாகக் கூற அவர்கள் சிரித்தார்கள். நான் அதைப் பற்றி ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியமாக, (அப்போது) தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வலியிலேயே தாம் இறக்கவிருப் பதாகத் தெரிவித்தார்கள். அதனால், நான் (துக்கம் தாளாமல்) அழுதேன். பிறகு அவர்களின் வீட்டாரில் முதலா வதாக அவர்களைத் தொடர்ந்து (இறைவனிடம்) செல்லவிருப்பது நான் தான்' என்று இரகசியமாக எனக்குத் தெரிவித்தார்கள். அதனால் நான் (மகிழ்ச்சியடைந்து) சிரித்தேன் என்று பதிலளித்தார்கள்.

நூல்: புகாரி (3625, 3626)

நபியவர்கள் மரணித்து விட்டார்கள் என்பதை மேற்கண்ட நபிமொழியும் மிகத் தெளிவாக உரைக்கின்றது. இவ்வளவு தெளிவான சான்றுகளைக் கண்ட பின்னரும் அவர்கள் மரணிக்கவில்லை என்றுரைப்பவர்கள் உண்மையான முஃமின்களாக இருக்க முடியுமா? மக்களே சிந்தித்துப் பாருங்கள்.

மரணம் நெருங்கிவிட்டதை மக்களுக்கு உணர்த்துதல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய இறுதிக் காலகட்டத்தில் தாம் மரணிக்கப் போகிறோம் என்பதையும் தன்னுடைய இறப்பிற்குப் பிறகு நபித்தோழர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் பல்வேறு செயல்பாடுகளின் மூலம் மக்களுக்கு உணர்த்தியுள்ளார்கள்.

உஹுதுப் போர் தியாகிகளுக்குத் தொழுகை நடத்தி விட்டு, தாம் மரணிக்கப் போவதையும் அடுத்த சந்திப்பு மஹ்ஷரில்தான் என்பதையும் நபியவர்கள் தமது தோழர்களுக்கு உணர்த்தினார்கள்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து இறந்தவர்களுக்காகத் தொழுவிப் பதைப் போன்று உஹுதுப் போர் உயிர்த் தியாகிகளுக்காகத் தொழ வைத்தார்கள். பிறகு சொற்பொழிவு (மிம்பர்) மேடைக்குத் திரும்பிவந்து உங்களுக்காக நிச்சயம் நான் (மறுமையில்) காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இப்போது (அல்கவ்ஸர்' எனும்) எனது தடாகத்தைக் காண்கின்றேன். எனக்கு "பூமியின் கருவூலத் திறவுகோல்கள்' அல்லது "பூமியின் திறவுகோல்கள்' வழங்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்குப் பின்னால் நீங்கள் (இறைவனுக்கு) இணை வைப்போராக மாறிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை. ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவருக் கொருவர் போட்டியிட்டு (மோதி)க் கொள்வீர்களோ என்றுதான் நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (6426)

"எனக்குப் பின்னால்'' என்று நபியவர்கள் கூறியது "அவர்களுடைய இறப்பிற்குப் பின்னால்'' என்பதாகும்.

மேலும் தம்முடைய இறுதி ஹஜ்ஜின் போதும் தாம் விரைவில் மரணித்துவிடக்கூடும்  என்பதை இறைத்தூதர் (ஸல்) அவர்கள் மக்களுக்கு உணர்த்தினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாவது) நாளில் தமது வாகன ஒட்டகத்தில் அமர்ந்தவாறு (ஜம்ரத் துல் அகபாவின் மீது) கல் எறிவதை நான் கண்டேன். மேலும் அவர்கள், "நீங்கள் உங்களது ஹஜ்ஜின் கிரியைகளை (என்னிடமிருந்து இந்த ஆண்டிலேயே) கற்றுக்கொள்ளுங் கள். ஏனெனில் நான், எனது இந்த ஹஜ்ஜிற்குப் பிறகு ஹஜ் (செய்வேனா) செய்ய மாட்டேனா என்பதை அறியமாட்டேன்'' என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

நூல்: முஸ்லிம் (2497)

இறக்கப் போவதை உரக்கச் சொன்ன இறைத்தூதர்

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் (இறப்பதற்கு முன் நோய்வாய்ப்பட்டிருந்த போது மக்களுக்கு) உரை நிகழ்த்தினார்கள். அதில், "இந்த உலகம், அல்லது தன்னிடமிருப்பது - இவ்விரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி தூயோன் அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்தான். அ(ந்த அடியாரான)வர், அல்லாஹ்விடம் இருப்பதையே தேர்ந்தெடுத்துக் கொண்டார்' என்று சொன்னார்கள்.

(இதைக் கேட்ட) உடன், அபூபக்ர் (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நான் எனக்குள்ளே, "இந்த உலகம் அல்லது தன்னிடமிருப்பது - ஆகிய இரண்டில் ஏதேனும் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக்கொள்ள அல்லாஹ் ஓர் அடியாருக்கு சுயாதிகாரம் அளித்த போது அவர் அல்லாஹ்விடமிருப்பதை தேர்ந்தெடுத்துக் கொண்டால் அதற்காக இந்தப் பெரியவர் ஏன் அழவேண்டும்?' என்று வினவிக் கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாம் அந்த (சுயாதிகாரம் அளிக்கப்பட்ட) அடியாராக இருந்தார்கள். (நபி (ஸல்) அவர்கள் தமது இறப்பைப் பற்றியே குறிப்படுகிறார்கள் என்பதை அபூபக்ர் (ரலி) அவர்கள் அறிந்து கொண்டார்கள். (ஏனெனில்) அபூபக்ர் (ரலி) அவர்கள் எங்களில் மிகவும் அறிந்தவராக இருந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபூபக்ர் அவர்களே! அழாதீர்கள் என்று கூறிவிட்டு, "தன் நட்பிலும் தனது செல்வத்திலும் எனக்கு மக்களிலேயே பேருதவியாளராக இருப்பவர் அபூபக்ரேயாவார். (என் இறைவனல்லாத வேறு) ஒருவரை சமுதாயத்தாரில் நான் உற்ற நண்பராக ஆக்கிக்கொள்ள விரும்பியிருந்தால் அபூபக்ர் அவர்களேயே ஆக்கிக் கொண்டிருப்பேன். ஆயினும், (அதைவிடச் சிறந்த) இஸ்லாத்தின் சகோதரத்துவமும் அதனால் ஏற்படும் பாச உணர்வும் (எனக்கும் அபூபக்ருக்குமிடையே ஏற்கெனவே) இருக்கத்தான் செய்கிறது. (எனது) இந்தப் பள்ளிவாசலில் எந்த வாசலும் அடைக்கப்படாமல் இருக்க வேண்டாம்; அபூபக்ரின் வாசலைத் தவிர' என்று சொன்னார்கள்.

நூல்: புகாரி (466)

இறைச் செய்தியை நிறுத்திய இறைத்தூதரின் இறப்பு

இறைத்தூதர் இறந்து விட்டதால் இனி இறைச் செய்தி (வஹீ) வராதே என்றெண்ணி அருமை ஸஹாபாக்கள் கண்ணீர் வடித்துள்ளனர். 

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்புக்குப் பின் (கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "நம்மை (அம்மையார்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சந்தித்து வந்ததைப் போன்று நாமும் சந்தித்துவருவோம்'' என்று கூறினார்கள்.

அவ்வாறே உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் நாங்கள் சென்றபோது அவர்கள் அழுதார்கள். அப்போது அவர்கள் இருவரும், "ஏன் அழுகிறீர்கள்? (நம்மிடம் இருப்பதை விட)  அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாயிற்றே?'' என்று கேட்டார்கள்.

அதற்கு உம்மு அய்மன் (ரலி) அவர்கள், "அல்லாஹ்விடம் இருப்பது அவனுடைய தூதர் (ஸல்) அவர்களுக்குச் சிறந்ததாகும் என்பதை நான் அறியாமல் அழ வில்லை. மாறாக, (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் இறப்போடு) வானிலிருந்து இறைச் செய்தி (வஹீ) வருவது நின்றுவிட்டதே! (அதற்காகத் தான் அழுகிறேன்)'' என்று கூறி, அவர்கள் இருவரையும் அழச்செய்து விட்டார்கள். அவருடன் சேர்ந்து அவர்கள் இருவரும் அழலாயினர்.

நூல்: முஸ்லிம் (4849)

இறுதித் தூதர் கூறிய இறுதி வார்த்தை

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை என்று நான் நபி (ஸல்) அவர் களிடமிருந்து செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குரலில்), "அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத் தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன்' எனும் (4:69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே, இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டிலொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப் பட்டது' என்று நான் எண்ணிக் கொண்டேன்.

நூல்: புகாரி (4435)

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்) என்று பிரார்த்தித்தார்கள்.

நூல்: புகாரி (4437)

மரண வேதனையை அனுபவித்த மாநபி

நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க் கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது

நூல்: புகாரி 4449

இறந்து விட்ட இறைத்தூதர்

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமிடையே சாய்ந் திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒரு போதும் நான் வருந்துவதில்லை.

நூல்: புகாரி 4446

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி 4466

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:  முப்பது ஸாவு' வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

நூல்: புகாரி 4467

குளிப்பாட்டிய நபித்தோழர்கள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். "மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து விட்டு குளிப்பாட்டுவது போல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா என்பது தெரியவில்லை' என்று பேசிக் கொண்டனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். "நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள்' என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்குத் தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீரை ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 2733, ஹாகிம்3/59

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மரணித்த காரணத்தினால் தான் நபித்தோழர்கள் அவர்களுடைய ஜனாஸாவைக் குளிப்பாட்டினார்கள். இறைத்தூதர் மரணிக்காமல் உயிரோடு இருந்திருந்தால் அவர்களுடைய ஜனாஸாவை ஏன் நபித்தோழர்கள் குளிப்பாட்ட வேண்டும்? என்பதை இவர்கள் சிந்திக்கக் கடமைப் பட்டுள்ளனர்.

இறுதி நபியவர்கள் இறப்பை எய்திவிட்டார்கள் என்பதைக் கூறும் குர்ஆன், ஹதீஸ் ஆதாரங்களை இதுவரை பார்த்தோம்.

நபியவர்கள் இறக்கவில்லை என்பதற்கு மாற்றுக்கருத்துடையவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரங்களையும் அவற்றுக்கான விளக்கத்தையும் இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காண்போம்.

 

ஸைபுத்தீன் ராபிளிக்கு மந்திரிகளே முன்மாதிரி

அல்லாஹ்வின் அருளால் நெல்லை மாவட்டம் மேலப் பாளையத்தில் கடந்த மே 31 அன்று நடைபெற்ற ஹதீஸ் மாநாடு மாபெரும் வரலாறு படைத்தது. ஜின்னா திடல் இதுவரை கண்டிராத மக்கள் கடலைச் சந்தித்தது.

இதே இடத்தில் இரண்டு மாநாடுகளை பரேலவிகள் கூட்டம் நடத்தியது. இலட்சக்கணக்கான ரூபாய் செலவில் விளம்பரம் செய்து, பிரியாணி பொட்டலங்கள் வினியோகம் செய்து பேருக்கு ஒரு கூட்டம் கூடியதே தவிர சொல்லும்படியான கூட்டம் கூடவில்லை. வழக்கமாக அவர்கள் நடத்தும் மாநாடுகளில் பொய்யர்களின் தலைவன் ஸைபுத்தீன் ரஷாதி தான் பிரதான கதாநாயகன்.

அவர்களது முதல் கூட்டம் நடைபெற்ற போது நமது ஜமாஅத்திலிருந்து அப்பாஸ் அலீ என்பவர் விலை போய் வெளியேறிய சமயம். இதைச் சாதகமாகப் பயன்படுத்திக் கொண்டு, "தவ்ஹீத் ஜமாஅத்திலிருந்து ஆலிம்கள் ஒவ்வொருவராக வெளியேறிக் கொண்டிருக்கின்றனர்; இன்னும் ஆலிம்களில் ஒரு கூட்டம் வெளியேறக் காத்துக் கொண்டிருக் கின்றது' என்று ஸைபுத்தீன் ராபிளி கதையளந்தார்; காதில் பூச்சுற்றினார்.

இதற்கு சம்மட்டி அடி கொடுக்கும் விதமாக, "என்னைக் கவர்ந்த ஏகத்துவம்' என்ற தலைப்பில் ஆலிம்களின் சங்கமம் நிகழ்ச்சியை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது.

அத்துடன் அம்மாநாட்டில் ஸைபுத்தீன் ராபிளி வைத்த வாதங்களுக்கு அவரை விடவும் அனுபவத்திலும் வயதிலும் இளைஞரான, இஸ்லாமியக் கல்லூரி பேராசிரியர் அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி. பதிலடி கொடுத்தார்.

தவ்ஹீத் ஜமாஅத்தை விட்டு ஆலிம்கள் வெளியேறிக் கொண்டி ருக்கின்றார்கள் என்று ஸைபுத்தீன் ராபிளி சொன்ன பொய்யைத் தவிடுபொடியாக்கும் வகையில், இதோ இத்தனை ஆலிம்கள் சத்தியத்தில் சங்கமித்திருக்கிறார்கள்; இன்னும் ஆலிம்கள் வந்து கொண்டிருக் கிறார்கள் என்று பதிலடி கொடுத்தோம். ஆலிம்களின் இந்த சங்கம நிகழ்ச்சி, தவ்ஹீதுக் கொள்கையின் வளர்ச்சியை யும் எழுச்சியையும் தமிழகமெங்கும் பறைசாற்றியது. இதற்குப் பரேலவிகளின் அசத்தியக் கூடாரத்திலிருந்து எந்தப் பதிலும் வரவில்லை.

இக்கால கட்டத்திலும் இதற்கு முன்னரும் தவ்ஹீத் ஜமாஅத்தினர் ஹதீஸ் மறுப்புக் கொள்கை யுடையவர்கள் என்ற குற்றச்சாட்டை நமது எதிரிகள் சொல்லி வருகின் றார்கள். இதற்குப் பதிலளிக்கும் விதமாக, ஹதீஸின் பெயரிலேயே ஒரு மாநாட்டை தவ்ஹீத் ஜமாஅத் நடத்தியது. உண்மையில் இந்த ஹதீஸ் மாநாடு தமிழக வரலாற்றில் ஒரு மைல்கல்லாகும். மேலப்பாளையம் ஜின்னா திடல் இப்படி ஒரு மக்கள் கடலைச் சந்திக்கவில்லை எனுமள வுக்கு மக்கள் எழுச்சியுடன் இந்த மாநாட்டில் பங்கேற்றனர்.

இதைப் பொறுக்க முடியாத பரேலவிகள் கூட்டம் பஜார் திடலில் ஒரு கூட்டத்தை ஏற்பாடு செய்து நடத்தியது. வழக்கமாக ஸைபுத்தீன் ராபிளி கலந்து கொண்டு, பி.ஜே.வைக் கரித்துக் கொட்டினார்; வாய்க்கு வந்தபடி திட்டித் தீர்த்தார்.

ஏற்கனவே இவர் பேசும் போது, தவ்ஹீத் ஜமாஅத்தினர் நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டி, சோளக்காட்டுப் பொம்மை போல் நிற்கிறார்கள் என்று கிண்டலடித்துப் பேசினார்.

இதற்கு ஹதீஸ் மாநாட்டில் பதிலளித்துப் பேசிய மவ்லவி ஷம்சுல்லுஹா, "நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டுவது பலவீனமான ஹதீஸ் என்றே வைத்துக் கொள்வோம்; உங்கள் வாதப்படி பலவீனமான ஹதீஸ் அடிப்படையில் அமல் செய்யலாம் அல்லவா? அதன்படி நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டும் ஹதீஸைச் செயல்படுத்தாவிட்டாலும் பரவாயில்லை, அதைக் கிண்டல் செய்யலாமா? இது ஹதீஸ் மறுப்பை விட மோசமான செயல் அல்லவா?'' என்று கேள்வி எழுப்பினார்.

இதற்கு ஸைபுத்தீன் ராபிளியின் பதிலைப் பாருங்கள்:

தொப்புளுக்குக் கீழ் கட்டுவதில் தான் அதிக மரியாதை என்பதற்கு ஒரு ஆதாரம் சொல்லவா? ஜெயலலிதாவுக்கு முன்னால் மந்திரிகள் நிற்பார்கள் பாருங்கள். முதலமைச்சருக்கு முன்னால் அமைச்சர்கள் எல்லாரும் நெஞ்சில் கையைக் கட்டிக் கொண்டா நிற்கிறார்கள்? தொப்புளுக்குக் கீழ் கட்டிக் கொண்டு தான் நிற்பார்கள். ஏன்? மரியாதைக்காக அப்படி நிற்கிறான். அது ஒரு பண்பு; ஒரு வெளிப்பாடு!

இதுதான் தொப்புளுக்குக் கீழ் தக்பீர் கட்டுவதற்கு ஸைபுத்தீன் ராபிளி எடுத்து வைக்கும் மிகப் பெரிய ஆதாரம்(?).

இவர் தன்னுடைய பேச்சு முழுவதிலும், ஹதீஸைக் கிண்டலடிக்க வில்லை என்று கூறிக்கொண்டே, தான் அடித்த கிண்டலைக் கடைசி வரைக்கும் நியாயப்படுத்திப் பேசுகின்றார்.

நெஞ்சுக்கு மேல், கீழ், தொப்புளுக்குக் கீழ் தக்பீர் கட்டுகின்ற மூன்று ஹதீஸ்களும் பலவீனம் என்றால் மூன்றையும் சம அளவில் பாவித்துச் செயல்படவேண்டும். அவ்வாறு செயல்படாமல் ஏதேனும் ஒன்றை விட்டாலும் அதைக் கேலி செய்யக்கூடாது.

ஆனால் இந்த உரையில் முன்பைவிட இன்னும் மோசமாகக் கேலி செய்கின்றார். அதை நியாயப்படுத்துகின்றார். எல்லா வற்றிற்கும் மேலாக தனக்கு யார் முன்மாதிரி என்பதையும் இந்த ராபிளி போட்டு உடைக்கின்றார்.

அசத்தியவாதிகளை அடையாளம் தெரிந்து கொள்வதற்கு அல்லாஹ் ஏதாவது ஓர் அடையாளத்தை வைத்திருக்கின்றான். தஜ்ஜாலுக்கு வலது கண்ணைக் குருடாக ஆக்கி, நெற்றியில் காஃபிர் என்ற வார்த்தையைப் பதிய வைத்து அடையாளப்படுத்தியிருக்கிறான். அதுபோல் ஸைபுத்தீன் ராபிளிக்கு அல்லாஹ் ஏற்படுத்தியுள்ள அடை யாளம் இதுபோன்ற உளறல்களாகும்.

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வுக்கு முன்னால் எப்படி கைகட்டி நிற்க வேண்டும் என்று ஒரு முறையைக் காட்டித் தந்து விட்டார்கள். இதைப் பின்வரும் ஹதீஸ் தெளிவுபடுத்துகின்றது.

"நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலது புறமும் இடது புறமும் திரும்பியதை நான் பார்த்துள்ளேன். மேலும் அவர்கள் இதைத் தமது நெஞ்சின் மீது வைத்ததையும் நான் பார்த்துள்ளேன்'' என்று ஹுல்ப் அத்தாயீ (ரலி) அறிவிக்கிறார்.

யஹ்யா என்ற அறிவிப்பாளர் "இதைத் தமது நெஞ்சின் மீது'' என்று கூறும் போது, வலது கையை இடது கை மணிக்கட்டின் மேல் வைத்து விளக்கிக் காட்டினார்.

நூல்: முஸ்னத் அஹ்மத் 22610

தவ்ஹீத் ஜமாஅத் சொல்கின்றது; அதனால் அதை ஏற்க முடியாது என்று வீம்புக்கு மறுத்துவிட்டு, முதலமைச்சருக்கு முன்னால் மந்திரிகள் கைகட்டி நிற்பதை மார்க்கத்திற்கு உதாரணமாகக் காட்டுகின்றார்கள்.

ஜெயலலிதா காலடியில் மந்திரிகள் நெடுஞ்சாண் கிடையாகக் குப்புற விழுந்து வணங்குகின்றார்கள். பரேலவிகள் தங்கள் ஷைகுமார்களின் காலடியில் விழுந்து வணங்குகின் றார்கள். இதற்கும் அதுதான் உதாரணமாக அமைந்துள்ளது.

அதாவது, பிற மதக் கலாச்சாரம் இவர்களின் வணக்க வழிபாடுகளுக்கு ஆதாரமாக உள்ளது என்பதற்கு இது ஓர் எடுத்துக்காட்டாகும்.

பிறமதக் கலாச்சாரத்தை ஸைபுத்தீன் ராபிளி வலுவாகக் கடைப்பிடித்து, தனக்கு முன்மாதிரி முஹம்மத் (ஸல்) அவர்கள் இல்லை, மங்குனி அமைச்சர்கள் தான் என்பதை உறுதிப் படுத்தியுள்ளார். இவர் வழிகேடர் என்பதற்கு இதைவிட வேறு என்ன ஆதாரம் வேண்டும்?

மூளை வறட்சி! மூத்திரப் புரட்சி!

அண்மையில் ஒரு பலவீனமான ஹதீஸைக் காட்டி, "ஒரு நபித்தோழியர் நபி (ஸல்) அவர்களின் மூத்திரத்தைக் குடித்தார்' என்று ஸைபுத்தீன் ராபிளி ஒரு சொற்பொழிவில் பேசுகின்றார்.

மூத்திரம் அசுத்தம் என்று நபி (ஸல்) அவர்கள் போதிக்கின்றார்கள். அதைக் கழுவ வேண்டும் என்றும் வழிகாட்டியிருக்கின்றார்கள். இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் எப்படி நடப்பார்கள் என்ற சிந்தனை கூட இந்த ராபிளிக்கு இல்லை.

இப்படி மூத்திரத்தை நபித்தோழியர் குடித்தார்கள் என்று ஒரு புரட்சி (?) கருத்தைச் சொல்லும் அளவுக்கு இவருக்கு மூளை வறட்சி கண்டு விட்டது. இப்படி ஒரு பலவீனமான ஹதீஸை ஆதாரமாகக் கொள்வது அப்துல்லாஹ் ஜமாலி போன்ற கடைந்தெடுத்த பரேலவி களின் கூட்டம் தான்.

இதுபோன்ற ஹதீஸ்களை இவர் ஆதாரம் காட்டிப் பேச ஆரம்பித்திலிருந்து இவரை ராபிளி என்று நாம் அழைப்பது எவ்வளவு பொருத்தமானது என்பதைப் புரிந்து கொள்ளலாம்.

பலவீனமான மூத்திர ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு ஒரு மூத்திரப் புரட்சி படைத்தாலும் படைப்பேன். ஆனால் ஒரு வாதத்திற்குக் கூட நெஞ்சுக்கு மேல் தக்பீர் கட்டும் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு செயல்பட மாட்டேன்; அதைக் கிண்டலும் செய்வேன் என்று கூறுகின்றார் என்றால் இவர்கள் எப்படிப்பட்ட ஹதீஸ் மறுப்பாளர்கள் என்பதை இதிலிருந்து நாம் தெளிவாகப் புரிந்து கொள்ளலாம்.

 

காற்று இறைவனின் சான்றே!

எம். முஹம்மது சலீம், எம்.ஐ.எஸ்.சி, மங்கலம்

காற்று இறைவனின் சான்று என்பதையும், காற்றின் முக்கியத்துவம், காற்றின் அற்புதங்கள், அதன் செயல்பாடுகள் பற்றியும் கடந்த இதழ்களில் கண்டோம். அதன் தொடர்ச்சியை இப்போது பார்ப்போம்.

காற்று கடுமையாக வீசும்போது...

எந்தவொரு நிகழ்வுகளிலும் நேரங்களிலும் படைத்தவனை மறக்காதவர்களாகவும் அவனிடமே முறையிடுபவர்களாகவும் நாம் இருக்க வேண்டும்.

அதன் ஒரு பகுதியாக, காற்று கடுமையாக, பலமாக வீசும் போதும் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து அவனிடமே ஆதரவை, பாதுகாப்பைத் தேட வேண்டும். இந்தப் பாடத்தை நபிகளாரின் வாழ்க்கையில் இருந்து பெற்றுக் கொள்ள முடிகிறது.

காற்றின் வேகம் வீரியமாக இருக்கும் சந்தர்ப்பங்களில் நாம் சொல்ல வேண்டிய துஆவை நபிகளார் கற்றுத் தந்துள்ளார்கள்.

கடுமையான காற்று வீசும்போது அது (பற்றிய கலக்கத்தின் ரேகை) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் காணப்படும்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல்: புஹாரி (1034)

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒருநாள்) நான், "அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும்போது அது மழை மேகமாக இருக்கலாம் என்று எண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும்போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், "ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. ("ஆத்'' எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, "இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம்' என்றே கூறினர்'' என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புஹாரி (4829)

நபி (ஸல்) அவர்கள் சூறாவளிக் காற்று வீசும்போது, "இறைவா, இந்தக் காற்றின் நன்மையையும் அதனுள்ளே மறைந்திருக்கும் நன்மையையும் அது எதனுடன் அனுப்பப் பெற்றுள்ளதோ அதன் நன்மை யையும் உன்னிடம் வேண்டுகிறேன். இந்தக் காற்றின் தீங்கிலிருந்தும், அதனுள்ளே மறைந்திருக்கும் தீங்கிலிருந்தும், அது எதனுடன் அனுப்பப்பெற்றுள்ளதோ அதன் தீங்கிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்'' என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் (1640)

மறுமை வாழ்வில்

காற்றின் பங்கு

இந்தப் பூமியில் நமது வாழ்க்கை மாற்றத்திற்கும் இயற்கைக்கும் பெரும் தொடர்பு இருக்கிறது. இதில், காற்றுக்கும் பங்கு இருப்பதை மறுத்து விட முடியாது. இந்த அம்சம் மறுமை வாழ்விலும் தொடரும்.

நரகத்திலே வீசும் காற்று அனல் நிறைந்ததாக இருக்கும். தேகத்தைச் சுட்டெரிக்கும். சுவாசிப்பதற்குத் தடுமாறும் வகையில் நச்சுத் தன்மை கொண்டிருக்கும். இதற்கு மாற்றமாக, சொர்க்கமோ சொக்க வைக்கும் நிலையில் இருக்கும்.  நறுமணம் கொண்டிருக்கும். அங்கு முழுவதும் தென்றல் காற்று தவழும். சொர்க்க வாசிகளைத் தழுவும் காற்று அவர்களுக்கு அழகையும் புதுப் பொலிவையும் அள்ளித் தரும்.

எனவே, இம்மையில் மட்டுமல்ல மறுமையிலும் காற்றால் நேரும் அசம்பாவிதங்களில் மாட்டிக் கொள்ளக் கூடாது. இதற்கு ஒரே வழி, அசத்தியக் கொள்கைகளை, சிந்தனைகளைத் தூக்கி எறிந்துவிட்டு இஸ்லாத்தின்படி வாழ்வது மட்டுமே!

இடது புறத்தில் இருப்பவர்கள்! இடது புறத்தில் இருப்போர் என்பது என்ன?  அவர்கள் அனல் காற்றிலும், கொதி நீரிலும், அடர்ந்த புகை நிழலிலும் இருப்பார்கள். அதில் குளிர்ச்சியும் இல்லை. இனிமையும் இல்லை. இதற்கு முன் அவர்கள் சொகுசாக வாழ்ந்து கொண்டிருந் தனர். பெரும் பாவத்தில் பிடிவாதமாக இருந்தனர்.

(திருக்குர்ஆன் 56:41-46)

(நரகத்திற்குரியவர்களில் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டி ருந்தவர்களை நரகத்திலிருந்து வெளியேற்றுமாறு மறுமையில் இறைவன் கட்டளையிடுவான். அவ்வாறே வானவர்கள் அவர்களை வெüயேற்றுவார்கள்) இறுதியாக ஒரே ஒரு மனிதன் சொர்க்கத்திற்கும் நரகத்திற்கும் இடையே எஞ்சி நிற்பான். அவன்தான் நரகவாசிகளில் கடைசியாக சொர்க்கத்திற்கு செல்பவன். அவன் நரகத்தை முன்னோக்கியபடி "இறைவா! நரகத்தை விட்டும் என் முகத்தை திருப்புவாயாக! அதன் நச்சுக் காற்று என்னை அழித்துவிட்டது. அதன் ஜுவாலை என்னைக் கரித்து விட்டது.'' என்று கூறுவான். அப்போது அல்லாஹ், "(உனது கோரிக்கைப்படி) இவ்வாறு உனக்கு செய்து கொடுக்கப்பட்டால் வேறு எதனையும் நீ கேட்காதிருப்பாயா?'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! (வேறுறெதையும் கேட்கமாட்டேன்)'' என்பான். அந்தமனிதன் அல்லாஹ் விடம் தான் நாடிய உறுதி மொழியையும் வாக்குறுதிகளையும் வழங்குவான். அல்லாஹ் நரகத்தை விட்டும் அம்மனிதனுடைய முகத்தை திருப்பிவிடுவான். சொர்க்கத்தை நோக்கி அவனுடைய முகத்தை திருப்பியதும் அம்மனிதன் சொர்க்கத்தின் செழிப்பைப் பார்த்துக் கொண்டு அல்லாஹ் நாடிய அளவு நேரம் அமைதியாக இருப்பான். பிறகு "இறைவா! என்னைச் சொர்க்கத்தின் வாசலருகே செல்ல வைப்பாயாக!'' என்று கேட்பான். அதற்கு இறைவன், "முன்பு கேட்டதைத் தவிர வேறெதையும் நீ என்னிடம் கேட்கமாட்டேன் என்று கூறி உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே?'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இறைவா! நான் உன் படைப்புக்களிலேயே நற்கதியற்றவனாய் ஆகிவிடக் கூடாது!'' என்று கூறுவான். அதற்கு இறைவன், "(நீ கேட்டது) உனக்கு வழங்கப்பட்டால் வேறு எதையும் நீ கேட்காமலிருப்பாயா?'' என்பான். அம்மனிதன், "இல்லை, உன் கண்ணியத்தின் மீதாணையாக! இதல்லாத வேறெதையும் நான் கேட்க மாட்டேன்'' என்பான். இதுகுறித்து இறைவனிடம் உறுதிமொழியும் வாக்குறுதியும் அந்த மனிதன் அளிப்பான். உடனே இறைவன் அந்த மனிதனை சொர்க்கத்தின் வாசல் வரை செல்ல வைப்பான். அதன் வாசலை அவன் அடைந்ததும் அதன் ரம்மியத்தைக் காண்பான்; அதிலுள்ள செழுமையை யும் (மனதிற்கு) மகிழ்ச்சி (தரத் தக்கவை)யையும் காண்பான். பிறகு அல்லாஹ் நாடிய அளவுக்கு அவன் அமைதியாக இருப்பான். அதன்பின் அந்த மனிதன், "இறைவா! என்னை சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதிப் பாயாக!'' என்று கூறுவான். அதற்கு உன்னதனாகிய அல்லாஹ், "ஆதமின் மகனே! உனக்கு என்ன கேடு! ஏன் வாக்கைக் காப்பாற்றத் தவறி விட்டாய்? முன்பு வழங்கப்பட்டதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என உறுதிமொழியும் வாக்குறுதியும் அளித்தாயே!'' என்று கேட்பான். அதற்கு அம்மனிதன், "இறைவா! உன் படைப்புகளிலேயே என்னை நற்கதியற்றவனாய் ஆக்கி விடாதே!'' என்பான். இம்மனிதனின் நிலை கண்டு சிரிப்பான். பிறகு அவனுக்கு சொர்க்கத்திற்குள் செல்ல அனுமதியளித்துவிடுவான். அதன் பின் இறைவன் அம்மனிதனிடம், "நீ ஆசைப்படுவதைக் கேள்!'' என்று கூறுவான். அம்மனிதனும் தான் ஆசைப்படுவதை கூறுவான். இறுதியில் அவன் தன் ஆசைகள் யாவும் முற்றுப் பெறும்போது (அவனிடம்) இறைவன், "இதைவிட அதிகத்தை நீ ஆசைப்படு!'' என்று சொல்-க் கொடுப்பான். இறுதியில் ஆசைகள் முற்றுப் பெற்றுவிடும் போது உன்னதனாகிய அல்லாஹ் "உனக்கு இதுவும் உண்டு. இதைப் போன்று இன்னொரு மடங்கும் உண்டு'' என்பான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா(ரலி)

நூல்: புஹாரி (806)

சொர்க்கத்தில் (மக்கள் ஒன்று கூடும்) சந்தை ஒன்று உண்டு. அங்கு ஒவ்வொரு வெள்ளிக்கிழமையும் சொர்க்கவாசிகள் வருவார்கள். அப்போது வட பருவக் காற்று வீசி அவர்களுடைய முகங்களிலும் ஆடையிலும் (கஸ்தூரி மண்ணை) வாரிப் போடும். உடனே அவர்கள் மேன்மேலும் அழகும் பொலிவும் பெறுவார்கள். பிறகு அழகும் பொலிவும் அதிகமாகப் பெற்ற நிலையில் அவர்கள் தங்கள் துணைவியரிடம் திரும்பிச் செல்வார் கள். அப்போது அவர்களிடம் அவர்களுடைய துணைவியர், "எங்களிடமிருந்து சென்ற பின்னர் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றுவிட்டீர்களே!'' என்று கூறுவர். அதற்கு அவர்கள், "அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் சென்ற பிறகு நீங்களும்தான் கூடுதலான அழகும் பொலிவும் பெற்றிருக்கிறீர்கள்'' என்று கூறுவர் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: முஸ்லிம் (5448)

காற்று கற்றுத் தரும் பாடம்

திருக்குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் காற்றுடன் தொடர்புபடுத்திப் பல்வேறு செய்திகள் சொல்லப்பட்டுள்ளன. எளிதாகப் புரிந்து கொள்வதற்குக் காற்று உதாரணமாகப் சொல்லப்பட்டு உள்ளது.

வெப்பம் நிறைந்த காற்றினால் பயிர்கள் எரிந்து கருகி பாழாகிப் போவது போன்று இறை மறுப்பாளர்களின் நன்மைகள் அழிந்துவிடும். அல்லாஹ்விற்கு இணை வைப்பவர்கள் இடம் தெரியாமல் தடம் தெரியாமல் போய் விடுவார்கள். காற்றைப் போன்று துன்பங்கள் குழப்பங்கள் வரும் என்று என்றென்றும் கவனத்தில் கொள்ள வேண்டிய தகவல்கள் காற்றின் வாயிலாக கற்றுத் தரப்பட்டுள்ளன.

இவ்வுலக வாழ்க்கையில் அவர் கள் செலவிடுவதற்கு உதாரணம் வெப்பக் காற்றாகும். தமக்குத் தாமே தீங்கு இழைத்த கூட்டத்தின் பயிர்களில் அக்காற்று பட்டு அவற்றை அழித்து விடுகிறது. அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்தனர்.

(திருக்குர்ஆன் 3:117)

அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலிருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய்ப் போட்டவனைப் போல் ஆவான்.

(திருக்குர்ஆன் 22:31)

ஓர் இறைநம்பிக்கையாளரின் நிலையானது இளம் பயிர் போன்றதாகும். காற்றடிக்கும் திசையில் அதன் இலை சாயும். காற்று (அடிப்பது) நின்றுவிட்டால் நேராக நிற்கும். இவ்வாறுதான் இறை நம்பிக்கையாளரும் சோதனைகளின் போது அலைக்கழிக்கப்படுகின்றார். (எனினும், அவர் பொறுமை காப்பார்.) இறைமறுப்பாளனின் நிலையானது உறுதியாக நிமிர்ந்து நிற்கும் தேவதாரு மரத்தைப் போன்றதாகும். தான் நாடும் போது அதை அல்லாஹ் (ஒரேயடியாக) உடைத்து (சாய்த்து) விடுகின்றான் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புஹாரி (5643), (7466)

அபூஇத்ரீஸ் அல்கவ்லானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹுதைஃபா பின் அல்யமான் (ரலி) அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! நான், எனக்கும் யுக முடிவு நாளுக்குமிடையே நிகழப் போகும் குழப்பங்கள் குறித்து மக்களிலேயே நன்கு அறிந்தவன் ஆவேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதைக் குறித்து எனக்குச் சிலவற்றை இரகசியமாகச் சொல்லியிருந்ததே அதற்குக் காரணமாகும். மற்றவர்கள் அவற்றை அறிவிக்கவில்லை. எனினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் அவையில் குழப்பங்கள் குறித்துப் பேசினார்கள். அங்கு நானும் இருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நிகழப்போகும்) குழப்பங் களை எண்ணிக் கணக்கிட்டபடி, "அவற்றில் மூன்று குழப்பங்கள் உள்ளன. அவை எதையுமே விட்டுவைக்காது. அவற்றில் இன்னும் சில குழப்பங்கள் உள்ளன. அவை கோடைகால (வெப்பக்) காற்றைப் போன்றவையாகும். அவற்றில் சிறிய குழப்பங்களும் உள்ளன; பெரிய குழப்பங்களும் உள்ளன'' என்று கூறினார்கள். (இந்தச் செய்தியைச் செவியுற்ற) அக்குழுவினரில் என்னைத் தவிர மற்ற அனைவரும் (இறந்து) போய்விட்டனர்.

நூல்: முஸ்லிம் (5541)

காற்றுள்ள போதே தூற்றிக் கொள் என்று சொல்வார்கள். உடம்பில் உயிர்க்காற்று உள்ள போதே முடிந்தளவு நற்காரியங்களைச் செய்து கொள்ள  வேண்டும் என்பதற்காக இவ்வாறு சொல்லப்பட்டது.

அல்லாஹ்வை அறிந்து கொள்ளவும் அவனது ஆற்றலை விளங்கிக் கொள்ளவும் காற்று நம்மைத் தூண்டக் கூடியாத இருக்கிறது. அதன் அடிப்படையில் பல்வேறு செய்திகளை அறிந்து கொண்டோம். இந்தச் செய்திகளை மனதில் நிறுத்திக் கொண்டு சிறப்பாக செயல்பட்டு ஈருலகிலும் வெற்றி பெறுவோமாக!

 

குடும்பவியல்                          தொடர்: 25

பொருள் திரட்டும் பொறுப்பு ஆண்களுக்கே!

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: முஹம்மது தாஹா எம்.ஐ.எஸ்.சி.

இதுவரை ஆண்களைப் பற்றியும் அவர்கள் மனைவிமார்களிடத்தில் எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்பதைப் பற்றியும் பார்த்துள்ளோம். அதாவது ஆண்கள் தான் குடும்ப நிர்வாகத்தை அதிகாரம் செலுத்து பவனாக இருப்பான். ஆண்கள் சொல்வதைப் பெண்கள் கேட்டு நடக்க வேண்டும். அதே நேரத்தில் ஆண்கள் பெண்களை அடிமைத்தனமோ அடக்குமுறையோ செய்துவிடக் கூடாது. பெண்களிடம் ஆலோசனை களைக் கேட்டுக் கொள்ளவேண்டும். கடைசிக் கட்டத்தில் என்ன முடிவு எடுக்க வேண்டும் என்று குழப்பம் வந்தால் அப்போது இறுதிகட்ட முடிவை எடுத்துச் செயல்படுத்துகின்ற அதிகாரத்தைக் கணவனுக்கே இஸ்லாம் கொடுக்கிறது என்பதுதான் குடும்பவியலில் முதலாவது விஷயம்.

இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கியமான விசயம், குடும்பத்திற்குத் தேவையான அனைத்து வகையான பொருளா தாரத்தைத் தேடுவதும் திரட்டுவதும் செலவு செய்வதும் ஆண்கள் மீதுதான் சுமத்தப்பட்டுள்ளது. வேறு எந்தக் கோட்பாட்டிலும் குடும்ப அமைப்பிலும் இது சட்டமாக இல்லை. இஸ்லாத்தில் மட்டும்தான் இப்படி சட்டம் சொல்லப்பட்டுள்ளது.

அதாவது மனைவிக்கும் பிள்ளை குட்டிகளுக்கும் தாய் தந்தையருக்கும் பொருளாதார ரீதியிலான அனைத் துக்கும் ஆண்களே பொறுப்பாவார்கள். இது குடும்பத்தில் இரண்டாவது நிபந்தனை. எந்தளவுக்கு எனில் இது பற்றிக் குர்ஆனில் பல இடங்களில் இறைவன் சுட்டிக்காட்டுகிறான்.

பாலூட்ட வேண்டும் என்று விரும்புகிற (கண)வனுக்காக (விவாகரத்துச் செய்யப்பட்ட) தாய்மார்கள் தமது குழந்தைகளுக்கு முழுமையாக இரண்டு ஆண்டுகள் பாலூட்ட வேண்டும். அவர்களுக்கு நல்ல முறையில் உணவும் உடையும் வழங்குவது குழந்தையின் தந்தைக்குக் கடமை.

(அல்குர்ஆன் 2:233)

இவ்வசனத்தில் விவாகரத்துச் செய்யப்பட்ட மனைவிக்குக் கணவன் செலவு செய்யவேண்டும், உணவும் ஆடையும் வழங்க வேண்டும் என்று இறைவன் சொல்வதிலிருந்து, விவாக ரத்துச் செய்யாமல் மனைவியுடன் கணவன் வாழ்ந்தால் இன்னும் கூடுதலாக மனைவிக்கு கணவன் மார்கள் பொருளாதார அடிப்படையில் செய்ய வேண்டும் என்பது தெளிவாகின்றது.

பெண்கள் விஷயத்தில் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங் கள்; நீங்கள் அல்லாஹ்வின் அமானிதத்தைக் கொண்டு அவர்களை அடைந்துள்ளீர்கள். அல்லாஹ்வின் வார்த்தையைக் கொண்டு அவர்களின் மறை விடங்களை அனுமதியாக்கிக் கொண்டீர்கள்; அவர்கள் உங்களுக்குச் செய்யும் கடமை, நீங்கள் வெறுப்பவர்களை உங்களது வீடுகளுக்குள் அனுமதிக்கக் கூடாது. அவர்கள் இதை மீறினால் வலிக்காத வகையில் அவர்களை அடித்துக் கொள்ளுங்கள். (அதே நேரத்தில்) நீங்கள் அவர்களுக்குச் செய்யும் கடமை, அவர்களுக்கு நல்ல முறையில் அவர்களுக்கு உணவளிப் பதும் ஆடை அணிவிப்பதுமாகும் என நபியவர்கள் இறுதி ஹஜ்ஜின் போது உரை நிகழ்த்தினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் 

நூல்: முஸ்லிம் 2137

நல்ல முறையில் வழங்குவது என்றால், கணவன்மார்கள் தங்களது சக்திக்கு உட்பட்டவாறு வழங்க வேண்டும் என்று பொருள். நல்ல முறையில் நீதமான முறையில் செலவு செய்வது என்றால், கணவன்மார்களும் பாதிக்காத வகையில் பெண்களும் பாதிக்காத வகையிலும் குடும்ப உணவுக்காகவும் சாப்பாட்டிற்காகவும் செலவு செய்வது கணவன் மீது கடமை என்று மார்க்கம் அறிவுறுத்துகிறது.

மனைவிக்குக் கணவன் சரிவர உணவளிக்கவில்லை என்றால் அந்த ஒரு காரணத்திற்காகவே மனைவி கணவனை விட்டு விலகிவிட மார்க்கம் பெண்ணுக்கு அனுமதியளிக்கிறது. சரிவர உணவளிக்காத உடையளிக்காத கணவனை பெண்கள் வேண்டாம் என்று விவாகரத்து கேட்டு வந்தால் அது நியாயமாக இருக்கும் பட்சத்தில் அந்த பெண்ணின் விவகாரத்தை ஜமாஅத்துக்களில் ஏற்றுக் கொள்வது தான் நியாயமாகும்.

தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். (வாங்கும்) தாழ்ந்த கையை விட (கொடுக்கும்) உயர்ந்த கையே மேலானது. மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக! நபியவர்களிடத்தில், "யாருக்கு நான் செலவிடுவது?'' என்று கேட்டதற்கு "உனது மனைவிக்குத்தான்'' என்று கூறினார்கள். மேலும், "எனக்கு உணவளி அல்லது என்னை விவாகரத்து செய்துவிடு என்று (சொல்லாமல்) சொல்லிக் கொண்டிருக் கிறாள். அதே போன்று உனது வேலையாளும் எனக்கு உணவளி, என்னை நல்ல முறையில் பயன்படுத்திக் கொள் என்று சொல்லிக் கொண்டிருக்கிறான்..'' என்று நபியவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

தாரகுத்னீ பாகம்: 4, பக்கம்: 453

எனவே ஒரு மனைவி கணவனிடத்தில் எந்த ஒப்பந்தத்தில் வாழ்கிறாள் எனில், "எனக்கு நல்ல முறையில் உணவளிக்கவும் நல்ல முறையில் ஆடை தரவும் உன்னால் முடிந்தால் என்னை மனைவியாக வைத்துக் கொள்; உனக்கு முடியாவிட்டால் என்னை விட்டு விடு. அதாவது விவாகரத்துச் செய்துவிடு' என்று ஒவ்வொரு மனைவியும் கணவனிடத்தில் சொல்லாமல் சொல்கிறாள் என நபியவர்கள் கூறினார்கள். திருமண ஒப்பந்தத்தின் அர்த்தம் என்ன? என்பதை நபியவர்கள் தெளிவுபடுத்துகிறார்கள்.

திருமணத்தின் பொருளே அது தான். மனைவிக்கு நான்தான் அவளின் எந்தத் தேவையையும் நிறைவேற்று வேன், நான்தான் செலவு செய்வேன் என்று கணவன் ஒப்பந்தம் செய்கிறான். மனைவி எதற்கும் செலவு செய்ய வேண்டிய அவசியமும் கட்டாயமும் கிடையாது என்று இஸ்லாமியக் குடும்பவியல் கூறுகிறது. மனைவி பெரிய செல்வமிக்க சீமாட்டியாக இருந்தாலும் அவள் தனது தேவைகளை நிறைவேற்றிக் கொள்வதற்கு, குடும்பச் செலவுகளுக்கு கணவனிடம் தான் கேட்க வேண்டும்; கணவன் கொடுக்க வேண்டும் என்று இஸ்லாம் குடும்பவியலில் முக்கிய அடிப்படையைக் கொண்டுள்ளது. மனைவி மனமுவந்து தானாக விட்டுக் கொடுத்தால் அதற்கு மார்க்கம் அனுமதிக்கிறது; அவ்வளவுதான்!

அதேபோன்று நபியவர்கள் தமது இறுதிப் பேருரையில் ஆண் பெண் உரிமைகள் பற்றி மிகவும் வலியுறுத்திச் சொன்னார்கள்.

உங்களுக்கு உங்கள் மனைவி யரிடத்தில் உரிமை இருப்பது போன்று உங்கள் மனைவியருக்கும் உங்களிடத்தில் உரிமை உள்ளது. உங்கள் மனைவியரிடம் உங்களது உரிமை, நீங்கள் வெறுப்பவர்களை உங்களது விரிப்பில் உட்கார வைத்துவிடக் கூடாது. உங்களுக்கு விருப்பமில்லாதவரை உங்களது வீட்டுக்குள் வர அனுமதிக்கக் கூடாது. உங்களிடத்தில் பெண்களுக் குரிய உரிமை, அவர்களுக்கு ஆடையிலும் உணவிலும் அழகிய முறையில் நடத்தவேண்டும்.

அறிவிப்பவர்: அம்ர் இப்னுல் அஹ்வஸ் 

நூல்: திர்மிதீ 3012,1083

கணவன் விரும்பாத ஆட்களை, உறவினர்களை வீட்டுக்குள் மனைவி அனுமதிக்கக் கூடாது. இந்தக் கட்டளையைக் கணவன் மனைவிக்கு இடலாம். அப்படிக் கணவன் கூறினால் முரண்டு பிடிக்காமல் மனைவி அதை ஏற்றுச் செயல்பட வேண்டும். அதேபோன்று வீட்டுச் செலவுக்கும், உணவு, ஆடை விசயத்தில் ஆடம்பரம் இல்லாமலும், அதே நேரத்தில் கஞ்சத் தனமாக இல்லாமலும் கணவன் தனது சக்திக்குத் தகுந்த மாதிரி அவர்களுக்கு நியாயமான முறையில் உணவும் ஆடையும் வழங்க வேண்டும்.

அதேபோன்று நபியவர்களிடத்தில் ஒருவர் வந்து, மனைவிமார்களுக்கு கணவன்மார்கள் என்னென்ன கடமைகளைச் செய்ய வேண்டும் என்று கேட்டதற்கு நபியவர்கள் சொன்ன பதிலே இதற்கு ஆதாரமாக இருக்கிறது.

அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் தனது மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமை என்ன? என்று கேட்டார். அதற்கு நபியவர்கள், நீர் உண்ணும் போது உமது மனைவிக்கும் உண்ணக் கொடு, நீர் ஆடையணியும் போது அவளுக்கும் ஆடை அணியக் கொடு, (மனைவியை) முகத்தில் அடித்து விடாதே, அவளை ஒரேயடியாக வெறுத்து விடாதே, வீட்டில் வைத்தே தவிர (மற்ற இடங்களில்) அவளைக் கண்டிக்காதே, வெறுக்காதே என்று பதிலளித்தார்கள்.

கணவன் சோற்றுக்கில்லாமல் பட்டினி கிடந்தால், அப்போது மனைவியும் பட்டினி கிடப்பது பிரச்சனை இல்லை. இருந்தால்தானே கொடுக்க முடியும். ஆனால் கணவன் சாப்பிட்டுவிட்டு மனைவியைப் பட்டினி போட்டுவிடக் கூடாது. வறுமையில் இருக்கிற குடும்பத்தில் கணவன் இப்படிச் சொல்லும் போது மனைவி அதை அனுசரித்துத்தான் ஆக வேண்டும்.

பெருநாள் போன்ற நல்ல நாட்கள் வரும் போது மனைவி ஆடை எடுத்துக் கேட்கும் போது, எனக்கும் ஆடை எடுப்பதற்கு வழியில்லாமல் தான் இருக்கிறேன். எனவே நீயும் இந்தப் பெருநாளைக்கு ஆடை கேட்காதே என்று கணவன் சொன்னால் அதை அனுசரித்துத்தான் மனைவி போகவேண்டும். அதே நேரத்தில் கணவன் நேரத்திற்குச் சரியாகச் சாப்பிட்டுவிட்டு, மனைவியைப் பட்டினி போடுவதை மார்க்கம் தடுக்கிறது. கணவன் விதவிமாகப் புத்தாடை எடுத்துவிட்டு மனைவிக்குச் சரியாக ஆடை கொடுக்கவில்லையெனில் அவன் கணவன் என்ற பொறுப்பை சரியாகப் பேணாதவன் என்று மார்க்கம் கண்டிக்கிறது.

எனவே பெண்களுக்கு உணவு உடை மட்டுமன்றி அவர்களது அனைத்துத் தேவைகளையும் நிறைவேற்றுவது கணவனின் பொறுப்பு என இஸ்லாமிய மார்க்கம் பெரிய பொறுப்பை கணவன் மீது சுமத்துகிறது.

மேற்கண்ட ஆதாரங்களனைத்தும் பெண்களுக்கு ஆண்கள்தான் உணவையும் உடையையும் அவர்களது தேவைகளையும் நிறைவேற்ற வேண்டும் என்று உணர்த்துகிறது.

இன்னும் சொல்வதாக இருப்பின், தனக்குக் கீழிருப்பவருக்கு உணவளிக் காத பாவமே ஒரு மனிதன் பாவியாகப் போவதற்கு தக்க காரணமாகும். ஒரு ஆண் பாவியாவதற்குக் கொலையோ கொள்ளையோ விபச்சாரமோ செய்து பாவியாக வேண்டும் என்கிற அவசியமில்லை. தனக்குக் கீழுள்ள மனைவிக்கு உணவு கொடுக்காமல் இருந்தாலேயே அவன் பெரும் பாவியாகி விடுவதாக நபியவர்கள் எச்சரிக்கிறார்கள்.

கைஸமா பின் அப்திர் ரஹ்மான் பின் அபீசப்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள்  அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுடைய கருவூலக் காப்பாளர் வீட்டுக்குள் வந்தார். அவரிடம் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் "அடிமைகளுக்கு உணவு கொடுத்து விட்டாயா?'' என்று கேட்டார்கள். அவர், "இல்லை' என்றார். "உடனே சென்று அவர்களுக்கு உணவு கொடு'' என்று அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறிவிட்டுப் பின்வருமாறு கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவரது உணவு எவரது அதிகாரத்தில் உள்ளதோ அவர், அவருக்கு உணவளிக்க மறுப்பதே அவர் பாவி என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

நூல்: முஸ்லிம் 1819

ஏற்கனவே முந்தைய கட்டுரை களில் பெண்களை விட ஆண்களுக்கு ஒருசில உயர்வுகள் உள்ளது என்று அல்லாஹ் சொன்ன வசனத்திலும் இந்தக் காரணத்தைச் சொல்கிறான்.

சிலரை மற்றும் சிலரை விட அல்லாஹ் சிறப்பித்திருப்பதாலும், ஆண்கள் தமது பொருட்களைச் செலவிடுகிறார்கள் என்பதாலும் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்பவர்கள்.... (அல்குர்ஆன் 4:34)

ஆண்கள் பொருளாதாரத்தைச் செலவழிக்கிற காரணத்தினாலும், உடல் ரீதியாக மேலோங்கியவர்களாக இருப்பதினாலும் தான் ஆண்கள் பெண்களை நிர்வாகம் செய்கின்றனர்.

ஆக இஸ்லாமியக் குடும்ப அமைப்பில், மனைவியைக் கவனிக்கிற எல்லாப் பொறுப்புகளும் ஆண்களைச் சார்ந்தது. இது இஸ்லாமியக் குடும்பவியலில் இரண்டாவது முக்கிய நிபந்தனை யாகும். இந்த அஸ்திவாரத்தின் மீதுதான் இஸ்லாமிய குடும்ப அமைப்பு எழுப்பப்பட்டுள்ளது.

ஆனால் உலகத்தில் இந்தச் சட்டம் பலரால் மீறப்பட்டு வருகிறது. பெண்களை ஆண்கள் தான் கவனிக்க வேண்டும் என்பதை விளங்காமல், பெண்களைச் சம்பாதிப்பதற்கு அனுப்புகின்ற காட்சிகளை அன்றாடம் காண்கிறோம்.

பெண்களும் நமக்கு கணவன் மார்கள்தான் பொறுப்பாளிகள், அவர்கள் நம்மைப் பாதுகாத்துக் கொள்வார்கள் என்பதை விளங்கிக் கொள்ளாமல் நம் வயிற்றுக்கு நாம்தான் சம்பாதிக்க வேண்டும் என்று தவறாக விளங்கிக் கொண்டு வேலைக்குச் செல்வதைப் பார்க்கிறோம்.

பல இடங்களில் வேலைக்கும், தொழில் பார்ப்பதற்கும் பெண்களை அனுப்பி சம்பாதிக்கும் நிலை தான் உள்ளது. இப்படி ஏற்படுத்தி வைத்திருக்கும் இந்தப் பழக்கம் உண்மையில் நல்லதா? என்பதை ஆராய்ந்தால், திருமணத்திற்கு முன்பாக பெண்களைக் காக்கின்ற தந்தை என்கிற ஆண் இல்லாவிட்டால், திருமணத்திற்குப் பின்னால் அசாதாரண சூழ்நிலை ஏற்பட்டு பெண்களைக் காக்கிற கணவன் இல்லையென்றால் அப்போது நிர்பந்தம் என்ற நிலையில் வேறு வழியில்லாமல் பெண்கள் வேலைக்குச் செல்வதில் எந்தத் தவறுமில்லை.

ஒரு பெண்ணுக்கு யாரும் பொறுப்பாளி இல்லை. அவள் உழைத்தால் தான் சாப்பிட முடியும், ஆடை அணிகலன்களை வாங்கிக் கொள்ள முடியும் என்றால் அப்போது அந்தப் பெண் உழைப்பது அவளுக்கு நிர்பந்தமாகிவிடும்.

வேறு வழியில் லாமல் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிப்பதற்குத் தான் மார்க்கம் அனுமதிக்கிறதே தவிர, மற்றபடி கணவன்மார்கள் பொறுப்பாளியாக இருந்தும் பெண்கள் வேலைக்குச் சென்று சம்பாதிக்க வேண்டும் என்கிற சிந்தாந்தம் வெறும் வறட்டுச் சித்தாந்தமாகவே பார்க்கிறோம்.

பெண்களுக்கு எவ்வளவு பெரிய தேவைகள் இருந்தாலும் கணவனிடம் தான் கேட்டுப் பெறவேண்டும். அதை விட்டுவிட்டுப் பெண்கள் வேலைக்குச் செல்வது தனிமனித சுதந்திரம், இது சுதந்திற்கான அடையாளம், இது முற்போக்கு சிந்தனை, இதுதான் உலகிற்கு சிறந்தது என்றெல்லாம் நினைத்துக் கொண்டு பெண்கள் வேலைக்குச் செல்வது இன்றைய கலாச்சாரமாகிவிட்டது.

பெண்கள் வேலைக்குச் செல்வது உண்மையில் அவர்களுக்கு நன்மை என்றால் நிச்சயம் இஸ்லாம் ஒருபோதும் எந்த நன்மையையும் தடுக்காது. அல்லாஹ் யார் யாருக்கு எது தேவையோ அவைகளுடன்தான் படைத்திருக்கிறான். இதனடிப்படையில் பெண்கள் வேலைக்குச் செல்வது ஒருக்காலும் நன்மையைப் பெற்றுத் தரவே தராது. அதை இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில் காணலாம்.

 

இணை கற்பித்தல்                      தொடர்: 32

அனைவருக்கும் நிகழும் அற்புதங்கள்

உரை: பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்தாக்கம்: ரூபான் எம்.ஐ.எஸ்.சி.

சென்ற இதழில், குகைவாசிகளின் சம்பவம் பற்றிய திருக்குர்ஆன் வசனங்களைப் பார்த்தோம்.

அந்தக் குகைவாசிகள் குகையில் பல ஆண்டுகளாக உறங்கியிருக் கிறார்கள். அதற்குப் பிறகு அல்லாஹ் அவர்களுக்கு உயிர் கொடுத்து எழுப்புகிறான். ஒரு மனிதன் சாகாமல் பல ஆண்டுகளாக உண்ணாமல், பருகாமல் உயிருடன் இருந்த நிலையில் தூங்கியிருப்பது ஒரு அற்புதமாகும்.

ஒரு மனிதன் எத்தனை மணி நேரம் தூங்கினாலும் அவனுக்குப் பசி வந்து விட்டால் அவன் தூக்கத்திலிருந்து எழுந்து விடுவான். ஆனால் இந்தக் குகைவாசிகள் பல ஆண்டுகளாக எதையும் சாப்பிடமால், குடிக்காமல் உயிருடன் இருந்த நிலையில் தூங்கியிருக்கிறார்கள். அதிலும் எந்த மனிதனாவது ஒரு புறமாகவே சாய்ந்து பல நாட்கள் படுத்துக் கிடந்தாலே உடல் வெப்பத்தினால் வெந்து போய் விடும். சில நோயாளிகளுக்குத் தண்ணீர் படுக்கை (வாட்டர் பெட்) போட்டால் கூட அவரால் தாங்கிக் கொள்ள முடியவில்லை. ஆனால் இவர்கள் பல ஆண்டுகளாக ஒரே இடத்தில் படுத்துக் கிடக்கின்றார்கள். ஆனால் எந்த விதமான விளைவுகளோ, பாதிப்புகளோ ஏற்படவில்லை. அல்லாஹ் தான் அவர்களை இடது புறமாகவும் வலது புறமாகவும் புரட்டியதாகச் சொல்கின்றான். அதன் காரணத்தால், சூரியன் உதிக்கும் போதும் அவர்கள் மீது படவில்லை. சூரியன் மறையும் போதும் அவர்கள் மீது படவில்லை.

அல்லாஹ் அவர்களைப் பல வருடங்களாகத் தூங்க வைத்து, அவர்கள் அழைத்து வந்த ஒரு நாயைக் காவலுக்கு வைத்து இந்த அற்புதங்களைச் செய்து காட்டியிருக்கிறான்.

அதற்குப் பிறகு அவர்கள் பல வருடங்கள் கழித்து எழுந்திருக் கிறார்கள். அப்போது தான் அவர்களுக்குப் பசி ஏற்படுகின்றது. சாப்பிட ஏதாவது வாங்கி வருவதற்காக காசு கொடுத்து சாப்பாடு வாங்க ஆள் அனுப்புகிறார்கள். ஆனால் அந்த ஊர் மக்கள் அந்தக் காசுகளை செல்லாது என்று சொல்லி அனுப்பி விடுகிறார்கள்.

பிறகு அவர்கள் திரும்பி வந்து, நாம் எவ்வளவு நேரம் இங்கே உறங்கியிருப்போம்? நாம் ஒரு நாள் அல்லது அரைநாள் தூங்கியிருப்போம். அதற்குள் உலகமே மாறிவிட்டது. நாம் சாப்பாடு வாங்குவதற்காகக் கொண்டு போன பணமும் செல்லாக் காசாகி விட்டது என்று தங்களுக்குள் பேசிக் கொள்கிறார்கள்.

முன்னூறு வருடமாகத் தூங்கியவர் களுக்கு, தாங்கள் எத்தனை வருடம் தூங்கினோம் என்பது கூடத் தெரியவில்லை. அவர்களிடத்தில் தான் அற்புதம் நடந்திருக்கிறது. ஆனால் அதைப் பற்றிய அறிவு அவர்களிடத்தில் இல்லை. பணத்தைக் கொண்டு போய் சாமான்கள் வாங்குவதற்குக் கடைக்கு செல்லும் போதுதான் அவர்களுக்கு விபரமே தெரிய வருகிறது.

இவ்வாறு நபிமார்கள் அல்லாத, நல்லடியார்களுக்கும் அற்புதங்கள் நிகழ்ந்திருக்கின்றது. ஆனால் இது அவர்கள் மூலமாக நடந்த அற்புதமா என்றால் இல்லை. அவர்கள் அறியாமலேயே அல்லாஹ் அற்புதங்களை நிகழ்த்தியிருக்கிறான். நபிமார்களுக்கு எவ்வாறு அற்புதங்கள் நிகழுமோ அந்த மாதிரி இவர்களுக்கு நிகழவில்லை. இவர்களாகவும் நிகழ்த்திக் காட்டவுமில்லை. நபிமார்களுக்கு அல்லாஹ் அனுமதி கொடுத்து, "செய்' என்று சொல்வான். அவர்கள் அல்லாஹ்வின் அனுமதி யுடன் அதைச் செய்து காட்டுவார்கள்.

அது போன்று, நபிமார்கள் அல்லாத மற்றவர்களுக்கும் அற்புதங்கள் நிகழும் என்பதற்குக் கீழ்க்காணும் சம்பவத்தை நாம் உதாரணமாகக் கூறலாம்.

இறைத் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேர் நடந்து சென்று கொண்டிருந்தனர். அப்போது திடீர் என மழை பிடித்தது. எனவே, அம்மூவரும் மலைப் பகுதியில் அமைந்திருந்த குகை ஒன்றில் தஞ்சம் புகுந்தனர். (எதிர்பாராத விதமாக) பெரும்பாறை ஒன்று மலையிலிருந்து உருண்டு வந்து அந்தக் குகையின் வாயிலை மூடிக் கொண்டது. (இதனைக் கண்ட) அவர்கள் தமக்குள், 'நாம் (வேறெவரின் திருப்திக்காகவுமின்றி) அல்லாஹ்வுக்காக என்று தூய்மை யான முறையில் செய்த நற்செயல் களை நினைத்துப் பார்த்து, அவற்றை (வசீலாவாக - துணைச் சாதனமாக)க் கொண்டு அல்லாஹ்விடம் பிரார்த்திப் போம். அவன் இந்தப் பாறையை நம்மைவிட்டு அகற்றி விடக் கூடும்" என்று பேசிக் கொண்டனர்.

அவர்களில் ஒருவர் இவ்விதம் இறைவனிடம் மன்றாடலானார்;

இறைவா! எனக்கு முதிர்ந்த வயதுடைய தாய் தந்தையர் இருந்தனர். சிறு குழந்தைகளும் இருந்தனர். அவர்களைப் பராமரிப் பதற்காக நான் ஆடுகளை மேய்த்துக் கொண்டிருந்தேன். மாலையில் நான் திரும்பி வந்தபின் ஆட்டின் பாலைக் கறந்து கொண்டுவந்து என் குழந்தைகளுக்குக் கொடுப்பதற்கு முன்பாக என் தாய் தந்தையர்க்கு அதைப் புகட்டுவேன். ஒரு நாள் நான் தாமதமாகத் திரும்பி வந்தேன். (நான் வீட்டை அடைந்தபோது) நெடு நேரம் கழிந்து இரவாகி விட்டிருந்தது. (என் தாய் தந்தை) இருவரும் உறங்கி விட்டிருக்கக் கண்டேன்.

வழக்கமாக நான் கறந்து வந்ததைப் போன்றே அன்றைக்கும் (ஆட்டுப்) பாலைக் கறந்து எடுத்துக் கொண்டு வந்தேன். அவர்களை (தூக்கத்திலிருந்து) எழுப்பிட மனமில்லாமல் அவர்களின் தலை மாட்டில் நின்று கொண்டேன். என் (தாய் தந்தையர்க்கு முதலில் புகட்டாமல் என்) குழந்தைகளுக்கு முதலில் புகட்டிட எனக்கு விருப்பமில்லை. என் குழந்தைகளோ (என்) காலுக்கு அடியில் பாலுக்காக அழுது பரிதவித்துக் கொண்டிருந் தனர். இதே நிலையில் வைகறை நேரம் உதயமாகிவிட்டது.

நான் இச்செயலை உன் திருப்தியை நாடியே செய்திருக் கிறேன் என்று நீ கருதினால் எங்களுக்கு இந்தப் பாறையை சற்றே நகர்த்திக் கொடுப்பாயாக! அதன் வழியாக நாங்கள் வானத்தைப் பார்த்துக் கொள்வோம்.

அவ்வாறே அல்லாஹ் (அவர்களுக்கு) சிறிதளவு நகர்த்தித் தந்தான். அதன் வழியாக அவர்கள் வானத்தைப் பார்த்தார்கள்.

மற்றொருவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! எனக்கு என் தந்தையின் சகோதரருடைய மகள் (ஒன்றுவிட்ட சகோதரி - முறைப் பெண்) ஒருத்தி இருந்தாள். ஆண்கள் பெண்களை எப்படி ஆழமாக நேசிப்பார்களோ அப்படி நான் அவளை நேசித்தேன். நான் அவளிடம் என்னுடன் உடலுறவு கொள்ள வருமாறு அழைத்தேன். நான் அவளுக்கு நூறு தீனார்கள் (பொற்காசுகள்) கொடுத்தாலே தவிர என்னுடன் உறவு கொள்ள முடியாது என்று அவள் மறுத்தாள். நான் அ(ந்தப் பணத்)தை மிகவும் சிரமப்பட்டுச் சேகரித்தேன். நான் (அந்தப் பணத்துடன் சென்று) அவளுடைய இரண்டு கால்களுக் கும் இடையே அமர்ந்தபோது அவள், 'அல்லாஹ்வின் அடியானே! அல்லாஹ்வுக்கு அஞ்சு. முத்திரையை (கற்பு உறுப்பை) அதற்குரிய (மண பந்த) உரிமையின்றி திறக்காதே" என்று கூறினாள். உடனே நான் (உடலுறவு கொள்ளாமல்) எழுந்து விட்டேன். (இறைவா! உன் அச்சத்தால் நான் புரிந்த) இந்த நற்செயலை நான் உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்ததாக நீ கருதினால் இந்தப் பாறையை எங்களைவிட்டு (இன்னும்) சற்று நீக்கி விடுவாயாக!

உடனே, பாறை இன்னும் சற்று விலகியது.

மூன்றாமவர் பின்வருமாறு மன்றாடிப் பிரார்த்தனை புரிந்தார்:

இறைவா! நான் ஒரு ஃபரக் அளவு நெல்லைக் கூலியாக நிர்ணயித்துக் கூலியாள் ஒருவரை வேலை செய்ய அழைத்துச் சென்றேன். அவர் தம் வேலை முடிந்தவுடன், 'என்னுடைய உரிமையை (கூலியைக்) கொடு" என்று கேட்டார். நான் (நிர்ணயம் செய்திருந்த) அவரின் கூலியை அவர் முன் வைத்தேன். அவர் அதை ஏற்க மறுத்துவிட்டார்.

(அவர் சென்றபின்) அதை நான் தொடர்ந்து நிலத்தில் விதைத்து விவசாயம் செய்து வந்தேன். எது வரை என்றால் அதன் வருவாயிலிருந்து பல மாடுகளையும் இடையர்களையும் நான் சேகரித்து விட்டேன். சில காலங்களுக்குப் பிறகு அந்த மனிதர் (கூலியாள்) என்னிடம் வந்து, "அல்லாஹ்வுக்கு அஞ்சு' என்று கூறினார். நான் அவரிடம், "அந்த மாடுகளிடமும் இடையர் களிடமும் சென்று அவற்றை எடுத்துக்கொள்' என்றேன்.

அதற்கு அம்மனிதர், "அல்லாஹ் வுக்கு அஞ்சு! என்னைப் பரிகாசம் செய்யாதே' என்று கூறினார். நான், "உன்னை நான் பரிகாசம் செய்ய வில்லை. நீ இவற்றை எடுத்துக் கொள்' என்று பதிலளித் தேன். அவர் அவற்றை எடுத்துச் சென்றார். நான் இந்த நற்செயலை உன் திருப்தியைப் பெற விரும்பியே செய்திருந்ததாக நீ கருதினால் மீதமுள்ள அடைப்பையும் நீக்குவாயாக!

(இந்தப் பிரார்த்தனையைச் செவியற்றவுடன்) அல்லாஹ் (அப்பாறையை முழுவதுமாக அகற்றி) மீதியிருந்த அடைப்பையும் நீக்கிவிட்டான்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரி 2333

இந்தச் சம்பவம் மேலும் புகாரியில் 2063, 2111, 2165, 3206, 5517 ஆகிய இடங்களில் பதிவு செய்யப் பட்டிருக்கின்றன.

மேற்கண்ட சம்பவத்தில், அந்த மூன்று பேர் கேட்ட துஆவினால் பாறை அகன்ற அந்த அற்புதம்  நிகழ்ந்ததாக நபிகளார் கூறுகிறார்கள். அந்த மூன்று பேரும் சராசரி மனிதர்கள் தானே தவிர அதிகம் அதிகம் நன்மைகள் செய்து,  நாள் முழுவதும் இறை வணக்கத்தில் ஊறித் திளைத்த, காசு பணத்தை தர்மமாக வாரி இறைத்த, தியாகம் செய்த  பெரிய அவ்லியாக்களோ, மகான்களோ அல்லர். தங்களின் நல்லறங்களில் அல்லாஹ்வுக்காக மட்டும் செய்த ஒரு நல்லறம் உண்டா என்று தேடிப் பார்க்கும் அளவுக்குக் குறைந்த நல்லறம் செய்தவர்கள். ஒரு நேரத்தில் அல்லாஹ்வை அஞ்சி, பயந்து ஒரு நற்செயலைச் செய்திருக்கிறார்கள். அவ்வளவுதான்.

ஆக, அல்லாஹ் நாடினால் யாருக்கும் இவ்வுலகில் அற்புதங் களைச் செய்வான். அவன் நல்லவனாக இருந்தாலும் சரி தீயவனாக இருந்தாலும் சரியே!

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

தொடர்: 6                            ஹுசைன் மவ்லிது ஓர் ஆய்வு

அனைத்தையும் தீர்க்கும் ஐந்து கடவுள்கள்

எம். ஷம்சுல்லுஹா

புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்குகளையும், பழிவாங்கல் களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன்.

இந்தக் கவிதை வரிகளைப் படியுங்கள். மீண்டும் ஒரு தடவை படியுங்கள். இது உண்மையில் நாளை நரகில் நம்மைக் கரிக்கும் நெருப்புப் பொறிகள் என்று புரிந்து கொள்ளலாம்.

புனித மிக்க ஐவர் யார்? இதை இன்னொரு கவிதை வரிகள் உங்களுக்குத் தெளிவைத் தரும்.

எனக்கு ஐவர் இருக்கின்றனர். அவர்களை வைத்து தகர்த்தெறியும் எரி நெருப்பின் வெப்பத்தை விட்டும் என்னை நான் காத்துக் கொள்வேன். முஸ்தபா (முஹம்மத்-ஸல்), முர்தளா (அலீ), இவ்விருவரின் பிள்ளைகள் (ஹஸன், ஹுஸைன்), பாத்திமா ஆகியோர் தான் அந்த ஐவர்.

இந்த ஐந்து கடவுள் கொள்கையைத் தான் ஹுஸைன் மவ்லிது நிலைநாட்டுகின்றது. இதை ஏதோ ஒரு புறம்போக்குப் புலவன் புலம்பிய வார்த்தைகள் என்று புறந்தள்ளி விடமுடியாது. கண்டு கொள்ளத் தேவையில்லாத ஒரு கவிஞனின் அர்த்தமற்ற கவிதை வரிகள் என்று அலட்சியம் செய்ய முடியாது.

இந்த வரிகள் ஷியா விஷச் சிந்தனையை வெளிச்சம் போட்டுக் காட்டுகின்ற ஷியாக்களின் வேத வரிகள். இவை தான் ஹுஸைன் மவ்லிது என்ற கிதாபில் இடம்பெற்றுள்ளன.

சுன்னத் வல்ஜமாஅத்தினர் ஷியாக்களின் வார்ப்புகள், அவர்களின் மறுபதிப்புகள் என்பதற்கு இவை யெல்லாம் அச்சடித்த சான்றுத் தடயங்கள்.

இந்த ஐவரையும் நாங்கள் எப்போது கடவுள் ஆக்கினோம்? என்று நாக்கூசாமல் இவர்கள் நம்மிடம் கேட்பார்கள். இந்த ஐவரையும் கடவுளாக ஆக்கியுள்ளார்கள் என்பதற்கு முஹர்ரம் மாதத்தில் இவர்கள் எடுக்கும் பஞ்சாவே ஆதாரமாகும்.

அவற்றை வரிசையாகப் பார்ப்போம்.

ஐவரைக் குறிக்கின்ற ஐந்து விரல் படங்கள்

பஞ்சா என்று சொல்லப்படும் ஐந்து விரல்கள் கொண்ட வெள்ளி கைச் சின்னம் மரத்தினால் செய்யப்பட்ட ஒரு சட்டத்தினுள் ஜரிகைத் தாளைப் பின்னணியாகக் கொண்டு குடி கொண்டிருக்கும். இதைச் சுற்றிலும் மல்லிகைப் பூக்கள் வளைத்து நிற்கும். இதுதான் பஞ்சா என்ற ஏவுகணையின் உடல் கட்டமைப்பாகும். அப்படியே இந்துக்கள் எடுக்கும் சப்பரத்திற்கு ஒப்பாக இந்தப் பஞ்சா அமைந்திருக்கும்.

தங்கத்தையொத்த ஜரிகைத் தாள் ஒட்டப்பட்ட பஞ்சாவின் சட்டத்தில் பொருத்தப்பட்டிருக்கும் மஞ்சள் நிற விளக்கு, அதில் மின்னும் கதிர்கள் பன்மடங்கு பரிமாணத்தில் பிரதிபலித்துக் கொண்டிருக்கும்.

அதன் நடுவில் நடுநாயகமாக ஐவிரல் அடங்கிய வெள்ளிக்கை விரல்கள் கொலு வீற்றிருக்கும். சந்தேகமில்லாமல் இந்த ஐந்து விரல்கள் யாரைக் குறிக்கின்றன?

பஞ்சா என்றால் ஐந்து என்று பொருள். ஐந்து ஆறுகள் ஓடுவதால் ஒரு மாநிலத்திற்கு பஞ்சாப் என்று பெயர். கிராமத்தில் பிரச்சனைகளைத் தீர்த்து வைப்பதற்கு அமைக்கப்படும் ஐந்து பேர் கொண்ட கமிட்டி பஞ்சாயத் என்று அழைக்கப்டுகின்றது.

அது போன்று தான் இந்த ஐந்து விரல்களும் சிம்பாலிக்காக முஹம்மத் (ஸல்), அலீ, பாத்திமா, ஹஸன், ஹுசைன் (ரலி) ஆகியோரைக் குறிக்கும். சுருக்கமாகச் சொல்லப் போனால் இந்த ஐந்து பேர்களும் கடவுளாக உருவகப்படுத்தப் பட்டுள்ளனர்.

அதனால் தான் ஹுஸைன் மவ்லிதின் இந்தக் கவிதையில், "எனக்கு ஐந்து பேர்கள் இருக்கிறார் கள், அவர்கள் என்னை நரகிலிருந்து காப்பார்கள். அவர்கள் தாம் முஸ்தபா, முர்தளா (அலீ), பாத்திமா, அவர்களின் பிள்ளைகள் ஹசன், ஹுசைன்'' என்று பாடியுள்ளான்.

கவிதை வடிவமும்

கை வடிவமும்

"தப்பத் யதா மன் யுசவ்விர் யதா ஸுபைத்தில் முனவ்விர்'

"ஒளிவீசும் ஹுஸைனின் கைகளை வடிவமைத்தவரின் கைகள் நாசமாகட்டும்'' என்று அந்த ஹுஸைன் மவ்லிதில் இடம்பெற்றுள்ளது.

ஹுஸைனின் கைகளை வடி வமைத்தவரை ஹுஸைன் மவ்லிதே கண்டித்து விட்டதால் அந்த ஐவரையும் கடவுளாக்கியதில் ஹுஸைன் மவ்லிதுக்குப் பங்கில்லை என்று யாராவது முண்டாசு கட்டிக் கொண்டு முட்டுக் கொடுக்கலாம். ஆனால் அவ்வாறு முட்டுக் கொடுக்க முடியாது.

மக்களிடத்தில் ஹுஸைன் (ரலி) மீது ஒரு பிரம்மாண்டமான பிம்பத்தை இந்த மவ்லிது ஏற்படுத்திக் கொடுத்திருக்கின்றது. இதர மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிதுகளின் கதாநாயகர்களைப் போல, ஹுஸைன் (ரலி)யை, "கைகொடுத்து காப்பாற்றும் ரட்சகர்' என்று அவருக்கு தெய்வத் தன்மையை இந்த ஹுஸைன் மவ்லிதே ஏற்றி விடுகின்றது.

இந்த மவ்லிதை இயற்றியதற்குக் காரணமே, இதன் ஆசிரியர் ஒரு நோயினால் பாதிக்கப்பட்டிருந்தாராம். அதனைத் தொடர்ந்து இந்த இணைவைப்புக் கவிதைகள் மூலம் ஹுஸைனைப் புகழ்ந்த காரணத்தால் தான் அந்த நோயிலிருந்து நிவாரணம் அடைந்ததாக இதை எழுதிய ஆசான் தனது மவ்லிதின் ஏழாவது ஹிகாயத்தில் வாக்குமூலம் தருகின்றார்.

மவ்லிது ஆசான் கவிதை வடிவில் தனது கதாநாயகரைக் கடவுளாக வழிபடுகின்றார் என்றால் பஞ்சா ஆசான்கள் கைவடிவத்தில் தங்கள் கதாநாயகரான ஹுஸைனைக் கடவுளாக வழிபடுகின்றனர். இது தான் வித்தியாசம்.

அதனால் இந்தக் கை வழிபாட்டுக் கோலத்தை வெறும் வார்த்தை ஜாலத்தால் கண்டிப்பதும் கடிவதும் எல்லாம் வெறும் கண்துடைப்பாகுமே தவிர உண்மையான கண்டனமாகாது என்பதைத் தெளிவாக நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

நாட்டத்தை நிறைவேற்றும் ஹுஸைன் (ரலி)

இந்த ஐவரும் கடவுளாக்கப் பட்டுள்ளனர் என்பதை வெறும் ஒப்புக்காகச் சொல்லவில்லை. உண்மை யாகவே சொல்கிறோம் என்பதற்கு அடுத்த எடுத்துக்காட்டு ஏழாம் நாள் பஞ்சாவாகும்.

தனக்கு ஓர் ஆண் குழந்தை பிறந்தால் முஹர்ரம் ஏழாம் நாளன்று பஞ்சாவின் குதிரையில் ஏற்றுவேன் என்று பெற்றோர்கள் நேர்ச்சை செய்வர். இதன்படி ஏழாம் நாளன்று நேர்ச்சை செய்யப்பட்ட பையனைக் குதிரையில் ஏற்றி பஞ்சா ஊர்வலத்தில் வலம் வரச் செய்வார்கள். ஒரு பச்சை முக்காடு போட்டு, குதிரையில் சுற்றி வருகின்ற இந்தப் பையன் அல்லாஹ் தந்த வரமல்ல! ஹுஸைன் தந்த வரம் என்று கருதி ஹுஸைனைக் கடவுளாக்கும் அநியாயமும் அக்கிரமும் இங்கு அரங்கேறுகின்றது.

ஆனால் எல்லாம் வல்ல அல்லாஹ் குழந்தை பாக்கியத்தைக் கொடுப்பது தன் கைவசமுள்ள தனி அதிகாரம் என்று குறிப்பிடுகின்றான்.

வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண் (குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை) களை வழங்குகிறான்.

அல்லது ஆண்களையும், பெண் களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 42:49, 50

அல்லாஹ்வுக்குரிய இந்த அதிகாரத்தை ஹுஸைனுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர் ஷியா போர்வையில் உள்ள சுன்னத் வல் ஜமாஅத்தினர்.

கொழுக்கட்டை முதல் கோழி வரை

ஹுஸைன் (ரலி) குழந்தை கொடுக்கும் கடவுளாக மட்டும் இவர்கள் சித்தரிக்கவில்லை. அவரை நேர்ச்சை நிறைவேற்றுகின்ற நிவாரண நாயகராகவும் சித்தரிக்கின்றார்கள்.

புரதச் சத்து குறைவாக இருந்தால் உடலில் உண்ணிகள் தோன்றி துருத்திக் கொண்டிருக்கும். இதற்கு வைத்தியம் எல்லாம் பார்க்கத் தேவையில்லை. இந்த உண்ணி போக வேண்டும் என்று நேர்ந்து கொண்டு, பஞ்சா அலுவலகத்தில் கொண்டு போய், உப்பையும் மிளகையும் படைத்து விட்டு வந்தால் போதும். மின்னிக் கொண்டிருக்கும் உடல் உண்ணிகள் பறந்து போய் விடும். அப்படி ஒரு நம்பிக்கை!

குழந்தைகள் வேண்டி கொழுக்கட்டை லிங்கம்

ஆண் குழந்தை வேண்டுமா? ஆணுறுப்பு வடிவத்தில் கொழுக் கட்டை செய்து பத்தாம் நாளன்று இந்த ஊர்வலத்தில் கலந்து கொள்ளும் மக்களிடம் விநியோகித் தால் போதும். ஆண் குழந்தை பிறந்து விடும். (பெண் குழந்தைகளை யாரும் வேண்டுவதில்லை.) யார் இந்த மாவு லிங்கத்தைப் பெறுகின்றாரோ அவர் பாக்கியம் பெற்றவராவார். இது தவிர ஹஸன், ஹுசைனின் வாள், வேல் போன்ற வடிவத்திலும் கொழுக் கட்டைகள் செய்து வீசப்படும்.

அது போல் முஹர்ரம் 10 நாட்களும் கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக் கூடாது என்று தடையையும் ஏற்படுத்தி வைத்துள்ளார்கள். இந்தத் தடை இதற்கு மட்டுமல்ல! முக்கியமான மூன்று மவ்லிதுகளான சுப்ஹான மவ்லிது, முஹய்யித்தீன் மவ்லிது, ஷாகுல் ஹமீது மவ்லிது போன்ற மவ்லிதுகள் ஓதும் நாட்களிலும் இந்தத் தடை அமுலில் இருக்கும்.

இந்தத் தடைகளை மீறி யாரேனும் மீன் சாப்பிட்டு விட்டால் அல்லது தாம்பத்தியத்தில் ஈடுபட்டு விட்டால் அதற்குப் பரிகாரமாக பஞ்சா எடுக்கும் பக்கீர்களுக்கு ஆடு, கோழி போன்றவற்றைக் காணிக்கை செலுத்த வேண்டும்.

கணவனைத் தரும் கடவுள் ஹுஸைன்

இதில் வேடிக்கை என்ன வென்றால் இவர்கள் ஹுஸைனிடம் குழந்தை பாக்கியத்தை மட்டும் கேட்கவில்லை. கணவன் பாக்கியத்தை, மணாளன் என்ற பாக்கியத்தையும் சேர்த்தே கேட்பது தான்.

தனக்கு நல்ல கணவன் அமைந்தால் முஹர்ரம் பத்தாம் நாள் வந்து தீக்குளிப்பதாக பருவ வயதுப் பெண் நேர்ச்சை செய்வாள். நல்ல மாப்பிள்ளை வாய்த்த பின்னர் அந்தப் பெண்ணும், அவளது தாயாரும் பஞ்சாவுக்கு வந்து தங்களது தலைகளில் நெருப்பை அள்ளிக் கொட்டி நேர்ச்சைகளை நிறைவேற்றிக் கொள்வார்கள்.

கோயில் திருவிழாக்களில் தீமிதி நடப்பது போன்று தங்கள் பாவங்கள் தீர, நாட்டம் நிறைவேற தீமிதியும் நடத்துகின்றனர்.

பின்னர் அவர்கள் தம்மிடம் உள்ள அழுக்குகளை நீக்கட்டும்! தமது நேர்ச்சைகளை நிறைவேற்றட்டும்!

அல்குர்ஆன் 22:29

நேர்ச்சை என்பது அல்லாஹ்வுக்கு மட்டுமே செய்கின்ற ஒரு வணக்கமாகும். இதைத் தான் இந்த வசனம் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

அந்த வணக்கத்தை ஹுஸைன் (ரலி) அவர்களுக்குக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர். இதைத் தான் இந்தக் கவிஞன் ஹுஸைன் மவ்லிதில், "புனித மிக்க ஐவர் மூலம் அனைத்து தீங்கு களையும், பழிவாங்கல்களையும் எங்களை விட்டும் நான் தடுத்துக் கொள்வேன்'' என்று கூறுகின்றான்.

கடிவாளக் குதிரை

கடவுளாகும் விந்தை

இதில் இன்னொரு வேடிக்கை, நேர்ச்சை செய்யப்பட்ட பையனைச் சுமந்து வரும் குதிரைக்கும் ஹுஸைன் (ரலி)யின் பொருட்டால் கடவுள் தன்மை கிடைத்து விடுகின்றது. அதனால் தான் மக்கள் இதன் குளம்புகளில் குடம் குடமாகக் குடிநீரைக் கொட்டுகின்றனர்.

இந்த வகையில் குதிரைக்கும் ஹுஸைனின் கடவுள் தன்மை கிடைத்து விட்டது. அதனால் கடிவாளக் குதிரை கடவுளான விந்தை என்று குறிப்பிடுவதைத் தவிர வேறு என்று என்ன கூற முடியும்?

நித்திய ஜீவன் ஹுஸைன்

மக்கள் தங்கள் நாட்டங்களையும், தேட்டங்களையும் ஹுஸைன் (ரலி) அவர்களிடம் கோருவதன் மூலம், அவர்கள் பெயரில் நேர்ச்சை செய்வதன் மூலம் அவரை ஒரு நித்திய ஜீவனாக ஆக்கிவிட்டனர். அல்லாஹ் காப்பாற்ற வேண்டும். உண்மையில் இந்தத் தன்மையும் மாண்பும் எல்லாம் வல்ல ஏக இறைவனான அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியதாகும்.

ஆனால் சுன்னத் வல் ஜமாஅத் என்ற பெயர்தாங்கிகள் இந்தத் தன்மையும் மாண்பையும் ஹுஸைனுக்குத் தூக்கிக் கொடுத்து அவரைக் கடவுளாக்கி விட்டனர்.

அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை அழைக்கிறீர்களோ அவர்கள் உங்களைப் போன்ற அடிமைகளே. நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் அவர்களை அழைத்துப் பாருங்கள்! அவர்கள் உங்களுக்குப் பதில் தரட்டும்!

அவர்களுக்கு நடக்கின்ற கால்கள் உள்ளனவா? அல்லது பிடிக்கின்ற கைகள் உள்ளனவா? அல்லது பார்க்கின்ற கண்கள் உள்ளனவா? அல்லது கேட்கின்ற காதுகள் உள்ளனவா? "உங்கள் தெய்வங்களை அழைத்து எனக்கெதிராகச் சூழ்ச்சி செய்யுங்கள்! எனக்கு எந்த அவகாசமும் தராதீர்கள்!'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் 7:194, 195

அவர்கள் இறந்தவர்கள்; உயிருடன் இருப்போர் அல்லர். "எப்போது உயிர்ப்பிக்கப்படுவார்கள்" என்பதை அவர்கள் அறிய மாட்டார்கள்.

அல்குர்ஆன் 16:21

இந்த வசனத்தின் அடிப்படையில் ஹுஸைன் (ரலி) மரணித்து மண்ணோடு மண்ணாகிப் போய் விட்டார் என்பதை இவர்கள் வசமாக மறந்து விட்டனர்.

அல்லாஹ் விதித்த தடைகள்

முஹர்ரம் பத்து நாட்களிலும் மீன் சாப்பிடக் கூடாது. கணவன், மனைவி தாம்பத்தியத்தில் ஈடுபடக்கூடாது என்று அல்லாஹ் விதிக்காத தடைகளை இவர்களாக விதித்தும் ஹுஸைன் (ரலி)க்குப் புனிதம் ஏற்றி விடுகின்றனர்.

இவை அனைத்தும் தெளிவாக உணர்த்தும் உண்மைகள் என்ன வென்றால் இவர்கள் ஹுஸைனைக் கடவுளாக ஆக்கி விட்டார்கள் என்பது தான். இதைத் தான் இந்த ஹுஸைன் மவ்லிது ஆசிரியரும் குறிப்பிடுகின்றார்.

இந்த மவ்லிது ஆசிரியர், ஹுஸைன் (ரலி)யை அனைத்தையும் தீர்க்கின்ற ஆபத் பாந்தவானாகப் பார்க்கின்றார்.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்தி விட்டால் அவன் அனைத்துப் பொருட்களின் மீது ஆற்றலுடையவன்.

அல்குர்ஆன் 6:17

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 10:107

இந்த வசனங்களில் அல்லாஹ் கூறுவதை இவர்கள் கவனிக்கத் தவறிவிட்டார்கள்.

"அல்லாஹ்விடமிருந்து என்னை எவரும் காப்பாற்ற மாட்டார். அவனன்றி ஒதுங்குமிடத்தையும் காணமாட்டேன்'' என்றும் கூறுவீராக!

அல்குர்ஆன் 72:22

அல்லாஹ்வின் இந்த வசனத்தை யும் ஹுஸைன் மவ்லிதின் ஆசிரியர் மறந்து விட்டார். அதனால் தான் "ஐவர் மூலம் அனைத்து தீங்குகளை விட்டும் தடுத்துக் கொள்வேன்'' என்று துணிந்து கூறுகின்றார்.

பொதுவாக அல்லாஹ்வுக்கு இணைவைப்பவர்களுக்கு அறிவு வேலை செய்யாது. அதற்கு ஓர் எடுத்துக்காட்டாக இந்த மவ்லிது ஆசிரியரும் உள்ளார்.

ஹுஸைன் (ரலி) அவர்களுடன் சேர்ந்து 72 பேர்கள் கர்பலா களத்தில் கொல்லப்படுகிறார்கள். ஹுஸைன் (ரலி)யின் மகனான சின்ன அலீ என்று அழைக்கப்படும் ஜைனுல் ஆபிதீனைத் தவிர அத்தனை பேர்களும் கொல்லப்படுகின்றார்கள். இந்தச் சம்பவத்தில் ஹுஸைன் (ரலி) தன்னையும் காப்பாற்ற முடியவில்லை. தன்னுடன் உள்ள 72 பேரையும் காப்பாற்ற முடியவில்லை.

இது நமக்கு எதை உணர்த்துகின்றது? ஹுஸைன் (ரலி) அவர்களுக்கென்று எந்த ஒரு தனி சக்தியும் இல்லை. ரசூல் (ஸல்) அவர்களின் பேரர் என்பதற்காக வேண்டி அல்லாஹ்விடமிருந்து எந்தவொரு சலுகையும் இல்லை. அவனது விதிக்கு முன்னால் எல்லா அடியார்களும் சமம் தான் என்பதையே இது உணர்த்துகின்றது. அதிலும் குறிப்பாக அவர்கள் உயிருடன் இருக்கும் போதே இந்த நிலை என்றால் இப்போது இறந்த பிறகு அவர்களால் எதுவும் செய்ய முடியாது.  இதைத் திருக்குர்ஆன் தெளிவாகத் தெரிவிக்கின்றது.

எதையும் படைக்காதவற்றையா அவர்கள் (இறைவனுக்கு) இணை கற்பிக்கின்றனர்? அவர்களே படைக்கப்படுகின்றனர். இவர்களுக்கு உதவிட அவர்களுக்கு இயலாது. தமக்கே கூட அவர்கள் உதவிக் கொள்ள முடியாது.

அல்குர்ஆன் 7:191, 192

(எதையும்) தெரிவிக்க அவர்களை நீங்கள் அழைத்தால் அவர்கள் உங்களைப் பின்பற்ற மாட்டார்கள். நீங்கள் அவர்களை அழைப்பதும், மௌனமாக இருப்பதும் உங்களைப் பொறுத்த வரை சமமானதே!

அல்குர்ஆன் 7:193

இந்த வசனம் நெற்றிப் பொட்டில் அடித்தாற்போல் உண்மையைப் போட்டு உடைக்கின்றது. இந்த வசனங்கள் மீது இந்த மவ்லிது ஆசிரியருக்கு எள்ளளவேனும் நம்பிக்கை இருந்தால் ஐவர் மூலமாக அனைத்துத் தீங்கை விட்டும் காத்துக் கொள்வேன் என்று சொல்ல மாட்டார்.

குப்புற விழும்

குருட்டுக் கூட்டம்

ஹுஸைன் மவ்லிதை எழுதிய இந்த அரைவேக்காடுக் கவிஞன் இறை மறுப்பில் விழுந்து விட்டான் என்றால் அதை ஆமோதித்து வழிமொழிந்து, வலிந்து வலிந்து ஓதுகின்ற இந்த ஆலிம் கூட்டத்தை என்னவென்று சொல்வது?

அவர்கள் தமது இறைவனின் வசனங்கள் மூலம் அறிவுறுத்தப் பட்டால் அவற்றின் மீது செவிடர்களாகவும், குருடர்களாகவும் விழ மாட்டார்கள்.

அல்குர்ஆன் 25:73

தனது வசனங்களில் கூட குருட்டுத்தனமாகவும் செவிட்டுத் தனமாகவும் விழக்கூடாது என்று என்று அல்லாஹ் கூறியிருக்கும் போது, இந்த ஆலிம் கூட்டம் இந்தக் குருட்டுக் கவிஞனின் குஃப்ரான, இணை வைப்பு வார்த்தைகளில் வீழ்ந்து விட்டது. ஒவ்வொரு வருடமும் முஹர்ரம் மாதத்தில் இந்த மவ்லிதை பக்திப் பரவசத்துடன் ஓதி மகிழ்கின்றது என்றால் இவ்களும் ஷியாக் கூட்டம் என்பதைத் தவிர்த்து வேறெதுவும் இருக்க முடியாது.

இவர்களும் இந்த ஐந்து பேரைக் கடவுளாக ஆக்கிக் கொண்டுள்ளார்கள் என்பதை இதன் மூலம் நாம் தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம்.

சென்ற இதழின் தொடர்ச்சி...

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

மார்க்கச் சட்டங்களை எடுத்துக் கூறும் பல குர்ஆன் வசனங்களை சுன்னத் ஜமாஅத் ஆலிம்கள் மறுக்கின்றார்கள், மக்களிடம் அவற்றை எடுத்துச் சொல்லாமல் மறைக்கிறார்கள் என்பதை கடந்த தொடரில் கண்டோம்.

இஸ்லாமியக் கொள்கை  மற்றும் இறைவனின் பண்பு குறித்து இன்னும் பல குர்ஆன் வசனங்களை நேரடியாக இந்த ஆலிம்கள் கூட்டம் மறுக்கின்றது. அத்தகைய குர்ஆன் வசனங்கள் என்ன கொள்கையை, நிலைப்பாட்டை போதிக்கின்றதோ அதற்கு நேர் எதிரான நிலைப்பாடுகளை எடுத்து அதனையே மக்களிடையே பிரச்சாரம் செய்கிறது இந்த உலமா (?) கூட்டம். அவை எந்தெந்த வசனங்கள்? ஆலிம்கள் கூட்டம் என்ன சொல்கிறது என்பது  தொடர்பான விளக்கத்தை இத்தொடரில் காண்போம்.

மறைவான ஞானம்

மறைவில் நடப்பவற்றை அறிந்து கொள்ளும் ஆற்றல் அல்லாஹ் ஒருவனுக்கே உள்ளது. அவனைத் தவிர வேறு யாரும் மறைவானவற்றை அறிந்து கொள்ள மாட்டார்.

இந்தக் கருத்தை எண்ணற்ற இறை வசனங்கள் விளக்குகின்றன.

மறைவானவற்றின் திறவுகோல்கள் அவனிடமே உள்ளன. அவனைத் தவிர யாரும் அதை அறிய மாட்டார்.

திருக்குர்ஆன் 6:59

"வானங்களிலும், பூமியிலும் மறைவானதை அல்லாஹ்வைத் தவிர யாரும் அறிய மாட்டார்கள். தாங்கள் எப்போது உயிர்ப்பிக்கப்படுவோம் என்பதையும் அவர்கள் அறிய மாட்டார்கள்'' என்று கூறுவீராக!

திருக்குர்ஆன் 27:65

(அவன்) மறைவானதையும், வெளிப்படையானதையும் அறிபவன்; பெரியவன்; உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 13:9

மறைவானதை அல்லாஹ்வை தவிர வேறு யாரும் அறிய மாட்டார் என்பது குர்ஆன் கூறும் அடிப்படை இறைக் கோட்பாடாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உட்பட எந்த ஒரு இறைத்தூதரும் இறைவன் அறிவித்து கொடுத்தாலே தவிர மறைவானவற்றை தாமாக அறிந்து கொள்ளும் ஆற்றலைப் பெற்றிருக்கவில்லை.

இதை மக்கள் மனதில் பதிய வைக்கவே எங்களுக்கு மறைவானதை அறியும் சக்தி இல்லை என்று சமுதாய மக்களிடயே உரக்கச்  சொல்லுமாறு அல்லாஹ் பல இறைத்தூதர்களுக்குப் பணித்திருக்கிறான். அவர்களும் அவ்வாறே பகன்றுள்ளார்கள் என்பதை திருக்குர்ஆன் வாயிலாக அறிகிறோம்.

"அல்லாஹ் நாடினால் தவிர எனக்கே நன்மை செய்யவோ, தீமை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை. நான் மறை வானதை அறிந்து கொள்பவனாக இருந்திருந்தால் நன்மைகளை அதிகம் அடைந்திருப்பேன். எந்தத் தீங்கும் எனக்கு ஏற்பட்டிருக்காது. நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நான் எச்சரிப்பவனாகவும், நற்செய்தி கூறுபவனாகவுமே இருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 7:188

"இவரது இறைவனிடமிருந்து இவருக்குச் சான்று அருளப்பட்டிருக்க வேண்டாமா?'' என்று அவர்கள் கேட்கின்றனர். "மறைவானவை அல்லாஹ்வுக்கே உரியன. நீங்களும் எதிர்பாருங்கள்! நானும் உங்களுடன் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறேன்'' என்று (முஹம்மதே!) கூறுவீராக!

திருக்குர்ஆன் 10:20

"என்னிடம் அல்லாஹ்வின் கருவூலங்கள் உள்ளன என்று உங்களிடம் கூற மாட்டேன். மறை வானவற்றையும் அறிய மாட்டேன். நான் வானவர் என்றும் கூற மாட்டேன்.

திருக்குர்ஆன் 11:31

அல்லாஹ்வைத் தவிர மறை வானவற்றை வேறு யாரும் அறிய மாட்டார் என்பது தான் குர்ஆன் கூறும் இறைக் கொள்கையாகும் என்பதை மேற்கண்ட பல வசனங்கள் மூலம் எளிதாக அறிகிறோம்.

இத்தனை வசனங்களையும் இந்தப் போலி ஆலிம்கள் மறுக்கிறார்கள்.

மறைவானவற்றை நபிமார்கள் அறிவார்கள், அவ்லியாக்கள் (?) அறிவார்கள் என்ற தவறான நம்பிக்கையை மக்களிடையே விதைத்து அதைத் தொடர்ந்து பிரச்சாரம் செய்யும் வண்ணம் தங்கள் செயல்பாடுகளை அமைத்துள்ளார்கள்.

நபிகள் நாயகம் மறைவானதை அறிவார்கள் என்று தாங்கள் ஓதும் மவ்லிதுகளில் புகழ்மாலை (?) சூடி அதை இறையில்லத்தில் வைத்தே மன உறுத்தலின்றி பாடிக் கொண்டிருக்கின்றனர்.

முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி உள்ளிட்ட இதர இறையடி யார்களைப் புகழும் போது மறைவானதை அறிவார்கள் என்று புகழ்கிறார்கள்.

இதையெல்லாம் ஆலிம்களின் தலைமையில் அவர்களின் பேராதரவுடனே செய்து வருகிறார்கள்.

இறந்தவர்களுக்கும், உயிருடன் உள்ளவர்களுக்கும் மறைவானதை அறியும் ஆற்றல் உண்டு என இவர்கள் கூறுவார்களேயானால் அல்லாஹ்வைத் தவிர மறைவானதை வேறு யாரும் அறிய மாட்டார் என்று கூறும் வசனங்களின் நிலை என்ன?

இது நாள் வரை இவர்கள் அந்த வசனங்களைப் படிக்கவில்லை என்று பொருள் கொள்ள இயலுமா? அவ்வசனங்கள் தரும் கருத்தை நம்புவதற்கு இவர்கள் தயாராக இல்லை என்பதே இதன் உள்ளர்த்தம்.

மறைவானதை அல்லாஹ் மட்டுமே அறிவான் என்று கூறும் பல வசனங்களை இந்த ஆலிம்கள் கூட்டம் மறைக்கின்றது, மறுக்கின்றது என்பது இதன் மூலம் தெரிய வரும் பேருண்மையாகும்.

இறந்தவர்கள் செவியேற்பார்களா?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்பது இஸ்லாம் கூறும் கொள்கைப் பிரகடனமாகும்.

ஏனெனில் பெரும்பாலான இணை வைப்பு செயல்கள்  நடந்தேறுவதற்கு இறந்தவர்கள் செவியேற்கிறார்கள் என்ற தவறான நம்பிக்கையே காரணமாகத் திகழ்கின்றது.

எங்கோ அடக்கம் செய்யப் பட்டிருக்கும் முஹ்யித்தீன் என்பவரை தமிழகத்தில் இருக்கும் முஸ்லிம்கள் அழைக்கிறார்கள். அதுவும் சாதாரண மாக அல்ல, தங்களுக்கு ஏதேனும் துன்பம் நேரும் போது யா முஹ்யித்தீன் என்று அழைக் கின்றார்கள். கேட்டால் அவர்கள் எங்களின் அழைப்பை இறந்த பிறகும் செவியேற்று துன்பம் தீர்த்து வைக்கின்றார்கள் என்கிறார்கள்.

இப்படி பல இணைவைப்பு செயல்கள் நடந்தேறுவதற்கு இறந் தவர்கள் செவியேற்கிறார்கள் என்ற நம்பிக்கை ஒரு முக்கிய காரணியாகும்.

குர்ஆன் இந்த நம்பிக்கையைத் தவறு என்கிறது. இறந்தவர்களுக்கு செவியேற்கும் ஆற்றல் இல்லை என்பதை ஆணித்தரமாக எடுத்துரைக்கின்றது.

நீர் இறந்தோரைச் செவியேற்கச் செய்ய முடியாது! அழைப்பைப் புறக்கணித்து ஓடும் செவிடர்களைக் கேட்கச் செய்ய உம்மால் முடியாது.

திருக்குர்ஆன் 27:80

போதனையை கேட்க மறுத்து ஓடும் இறைமறுப்பாளர்களை செவியேற்க செய்ய முடியாது என்பதை நபிக்கு அல்லாஹ் விளக்கும் போது, இறந்தவர்களை உம்மால் செவியேற்கச் செய்ய முடியாதது போல் இவர்களையும் செவியேற்கச் செய்ய முடியாது என்று உதாரணம் கூறி அல்லாஹ் விளக்குகிறான்.

இறந்தவர்களுக்குச் செவியேற்கும் ஆற்றல் இல்லை என்பதை அல்லாஹ் இந்த உதாரணத்தின் வாயிலாக தெளிவுபடுத்தி விட்டான்.

உயிருடன் உள்ளோரும், இறந்தோரும் சமமாக மாட்டார்கள். தான் நாடியோரை அல்லாஹ் செவியேற்கச் செய்கிறான். மண்ணறைகளில் உள்ளவர்களை நீர் செவியேற்கச் செய்பவராக இல்லை.

திருக்குர்ஆன் 35:22

அல்லாஹ்வையன்றி அழைக்கப் படுபவர்களைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அவர்கள் செவியுற மாட்டார்கள் என்பதை உறுதியாகத் தெரிவிக்கிறான்.

நீங்கள் அவர்களை அழைத்தால் உங்கள் அழைப்பை அவர்கள் செவியுற மாட்டார்கள். செவியேற் பார்கள் என்று வைத்துக் கொண்டாலும் உங்களுக்குப் பதில் தர மாட்டார்கள். கியாமத் நாளில் நீங்கள் இணைகற்பித்ததை அவர்கள் மறுத்து விடுவார்கள். நன்கறிந்த (இறை)வனைப் போல் உமக்கு எவரும் அறிவிக்க முடியாது.

திருக்குர்ஆன் 35:14

கியாமத் நாள் வரை தமக்குப் பதில் தராத, அல்லாஹ் அல்லாதோரை அழைப்பவரை விட மிகவும் வழிகெட்டவர் யார்? அவர்களோ தம்மை அழைப்பது பற்றி அறியாது உள்ளனர்.

திருக்குர்ஆன் 46:5

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் எனத் திருக்குர்ஆனின் தெளிவான பிரகடனத்தை அறிந்த பிறகு இந்த ஆலிம்கள் என்ன செய்கிறார்கள் என அறிந்து கொள்ள வேண்டாமா?

இறந்து போன நல்லடியார்கள் செவியேற்பார்களாம், மக்களின் கோரிக்கையைப் புரிந்து கொண்டு, அல்லாஹ்விடத்தில் பரிந்து பேசுவார்களாம், பதிலளிப்பார்களாம். இது தான் உலக ஆதாயத்திற்காக மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தும் இந்தக் கேடு கெட்ட ஆலிம்களின் நிலைப்பாடு.

பல ஊர்களில் சுன்னத் ஜமாஅத் பள்ளிவாசல்களோடு சேர்த்து வெவ்வேறு பெயர்களில் தர்ஹாக்கள் கட்டப்பட்டுள்ளது. சில மக்கள் கூட்டம் வந்து தங்கள் தேவைகளை அங்கே அடக்கம் செய்யப்பட்டிருப்பவர்களிடம் முறையிடுகிறார்கள். இதையெல்லாம் இந்த ஆலிம்கள் எதிர்ப்பதில்லை என்பதை விட இந்தச் செயலுக்குக் காரணமே இவர்களின் மேற்கண்ட நிலைப்பாடு தான் என்பதை சொல்லிப் புரிய வேண்டியதில்லை.

இதற்கெல்லாம் மேலாக முஹ்யித்தீன் என்பவரைப் பற்றி இவர்கள் எழுதி வைத்துள்ள புளுகல் உலகறிந்த விஷயம்.

ஆயிரம் முறை முஹ்யித்தீன் என்பவரை அழைத்தால் அழைத்த வருக்கு விரைவாக முஹ்யித்தீன் பதிலளிப்பாராம். இவ்வாறு மவ்லிதுகளில் எழுதி வைத்து அந்த இணைவைப்புப் பாடலை பள்ளியில் வைத்தே ஓதிக் கொண்டிருக்கிறார்கள்.

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் எனத் திருக்குர்ஆன் தெளிவாகக் கூறியதன் பின்னாலும் இவர்கள் இறந்தவர்களை அழைத்துப் பிரார்த்திப்பார்களேயானால் இவர்கள் குர்ஆன் வசனங்களை மறுக்கிறார்கள் என்று முடிவெடுக்காமல் வேறு எப்படி முடிவெடுப்பது?

பர்ஸக் வாழ்க்கை

முடிவில் அவர்களில் யாருக் கேனும் மரணம் வரும்போது "என் இறைவா! நான் விட்டு வந்ததில் நல்லறம் செய்வதற்காக என்னைத் திருப்பி அனுப்புங்கள்!'' என்று கூறுவான். அவ்வாறில்லை! இது (வாய்) வார்த்தை தான். அவன் அதைக் கூறுகிறான். அவர்கள் உயிர்ப்பிக்கப்படும் நாள் வரை அவர்களுக்குப் பின்னால் திரை298 உள்ளது.

திருக்குர்ஆன் 23:100

ஒருவர் இறந்து விட்டால் அவருக்கும் இவ்வுலகத்திற்குமான அனைத்து தொடர்புகளும் அறுந்து போகின்றன. அவர் தமது இறப்பிற்குப் பிறகு பர்ஸக் எனும் திரைமறை வாழ்வில் புகுந்து விடுகிறார்.

இறந்தவர்களுக்கும் நமக்கும் இடையில் இறைவன் ஏற்படுத்தும் பலமான திரையே பர்ஸக் எனப்படுகிறது.

சாதாரண திரைக்கு அப்பால் இருந்தாலே எதிரில் நடப்பவற்றை அறிந்து கொள்ள இயலவில்லை என்றால் பர்ஸக் எனும் பலமான திரைக்கு அப்பால் இருக்கும் இறந்தவர்கள் இங்கு நடப்பவற்றை எப்படி அறிந்து கொள்வார்கள்?

இறந்தவர்கள் யாவரும் பர்ஸக் வாழ்க்கையில் புகுந்து விட்டார்கள் எனும்போது பர்ஸக் எனும் இறைவன் ஏற்படுத்திய பலமான திரையை, தடுப்பைத் தாண்டி இறந்தவர்கள் செவியேற்பார்களா? அப்படி ஒரு முஸ்லிம் நம்பலாமா?

முஹ்யித்தீன் விஷயத்தில் முஸ்லிம் களின் நம்பிக்கை அப்படித்தான் உள்ளது.

ஆயிரம் முறை அழைத்தால் முஹ்யித்தீன் பதிலளிப்பார் என்றால் எப்படி?

இறந்தவர்கள் செவியேற்க மாட்டார்கள் என்று பல வசனங்கள் கூறியதன் பிறகு முஹ்யித்தீன் மக்களின் அழைப்பை எவ்வாறு செவியேற்பார்?

பர்ஸக் எனும் திரைமறை வாழ்க்கையில் இருக்கும் முஹ்யித்தீன் அவரது பக்தர்களுக்கு எப்படி விரைவாகப் பதிலளிப்பார்?

இப்படி நம்பக் கூடாது; இது தெளிவான, நரகில் தள்ளும் இணை வைப்பு என்று மக்களிடையே பிரச்சாரம் செய்ய வேண்டிய ஆலிம்கள் இக்கருத்தை மறைக்கிறார்கள், மக்களின் இணைவைப்பு செயலுக்குப் பக்கபலமாக நிற்கிறார்கள்.

அது மட்டுமின்றி நபிகள் நாயகத்தைக் கனவிலும் நனவிலும் (?) கண்டு களிக்கும் பாக்கியத்தைத் தங்கள் துஆக்களில் வேண்டி மக்களிடம் போலி வேஷமிடுகிறார்கள்.

நபிகள் நாயகத்தை நனவில் பார்த்தவர்களால் தான் கனவில் காண இயலும். அவர்கள் காலத்தில் வாழாத அவர்களை முன்பின் பார்த்திராத நாம் எப்படி அவர்களைக் கனவில் காண இயலும்?

அது ஒரு புறமிருக்க தற்போது நபிகள் நாயகத்தை நனவில் பார்ப்பது சாத்தியமான ஒன்றா? பர்ஸக் எனும் திரைமறை வாழ்க்கையில் இருக்கும் நபிகள் நாயகம் இறைவன் ஏற்படுத்திய பலமான திரையை உடைத்துக் கொண்டு நமக்கு நனவில் காட்சியளிக்க முடியுமா? அல்லாஹ்வை விட நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வலுவானவர்களா?

இப்படி ஒரு பிரார்த்தனையை குர்ஆன் அறிவுள்ள பாமரன் கூட வேண்ட மாட்டான் எனும் போது ஆலிம்கள் என்போர் கண்ணீர் மல்க இப்பிரார்த்தனையை வேண்டுகிறார்கள் எனில் இவர்கள் தான் குர்ஆனை மதிப்பவர்களா?

மவ்லித் வரிகளைச் சரிகாணும் பஸாதி ஆலிம்கள் உட்பட இத்தகு ஆலிம்கள் அனைவரும் குர்ஆனை மறுக்கின்ற கூட்டமே என்பதில் துளியும் சந்தேகமில்லை.

இத்தனையையும் மீறி இறந்தவர்கள் செவியேற்பார்கள் என்று நம்புபவன் இறைவனின் பாதுகாப்பை பலவீனமாகவும் இறைவனையே பலவீனனாகவும் நினைக்கிறார் என்று பொருள். அல்லாஹ் அத்தகைய மோசமான இறைக் கொள்கை யிலிருந்து நம்மைக் காப்பானாக!

இறைவனுக்கு உருவம்

மறைவான ஞானம், இறந்தவர்கள் செவியேற்பு தொடர்பாக பல குர்ஆன் வசனங்களை மறுத்து இறைவனுக்கு இணை கற்பிப்பதைச் சரிகாணும் போலி ஆலிம்கள் கூட்டம் இறைவனது உருவம் தொடர்பிலும் பல குர்ஆன் வசனங்களை மறுக்கின்றார்கள்.

இறைவனின் உருவம் தொடர்பாக குர்ஆனுக்கு எதிரான நிலைப்பாட்டை இந்த ஆலிம்கள் எடுப்பதன் மூலம்  அவ்வசனங்களை மறுக்கின்றார்கள்.

அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு; ஆனால் அது எதைப்போன்றும் கிடையாது, அதற்கு உதாரணம் கூற இயலாது என்பதுவே இறைவனின் உருவம் தொடர்பாக குர்ஆனின் நிலைப்பாடாகும்.

அல்லாஹ்விற்கு உருவம் உண்டு என்பதைப் பல குர்ஆன் வசனங்கள் சான்றளிக்கின்றன. அனைத்தையும் இடம்பெறச் செய்வதற்கு பக்கங்கள் போதாது என்பதால் சில சான்றுகளை மட்டும் தருகிறோம்.

இறைவன் அர்ஷில் அமர்ந்திருக் கிறான் என்பதைப் பல வசனங்கள் தெரிவிக்கின்றன.

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வே வானங்களையும், பூமியையும் ஆறு நாட்களில் படைத்தான். பின்னர் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 7:54

அளவற்ற அருளாளன் அர்ஷின் மீது அமர்ந்தான்.

திருக்குர்ஆன் 20:5

மேலும் பார்க்க: 32:4, 57:4

அர்ஷில் அமர்ந்திருக்கிறான் என்பதிலிருந்து அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு என்பது தெளிவு. உருவம் இல்லையாயின் அமர்தல் என்ற பேச்சுக்கே இடமில்லை.

அல்லாஹ்வுக்கு கால் உண்டு என்பது பின்வரும் இரு வசனங்களிலிருந்து அறியலாம்.

வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது...

திருக்குர்ஆன் 89:22

கெண்டைக்கால் திறக்கப்பட்டு ஸஜ்தாச் செய்ய அழைக்கப்படும் நாளில் அவர்களுக்கு அது இயலாது.

திருக்குர்ஆன் 68:42

பின்வரும் இரு வசனங்கள் உள்பட ஏராளமான இறைவசனங்கள் அல்லாஹ்வுக்கு கைகள் இருக்கின்றன என்பதை தெளிவுபடுத்துகின்றன.

"இப்லீஸே! எனது இரு கைகளால் நான் படைத்தவருக்கு நீ பணிவதை விட்டும் எது உன்னைத் தடுத்தது? அகந்தை கொண்டு விட்டாயா? அல்லது உயர்ந்தவனாக ஆகி விட்டாயா?'' என்று (இறைவன்) கேட்டான்.

திருக்குர்ஆன் 38:75

அல்லாஹ்வை அவனது கண்ணியத்துக்கு ஏற்ப அவர்கள் கண்ணியப்படுத்தவில்லை. கியாமத் நாளில் பூமி முழுவதும் அவனது ஒரு கைப்பிடிக்குள் அடங்கும். வானங்கள் அவனது வலது கையில் சுருட்டப்பட்டிருக்கும். அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் அவன் உயர்ந்தவன்.

திருக்குர்ஆன் 39:67

அல்லாஹ் செவியேற்பவன், பார்ப்பவன் என்று பல வசனங்கள் கூறுகின்றன. அவற்றிலிருந்து அல்லாஹ்வுக்குக் கண்கள் மற்றும் செவிகள் உண்டு என புரியலாம்.

அல்லாஹ் செவியுறுபவன்; பார்ப்பவன்.

திருக்குர்ஆன் 22:75, 31:28

இன்னும் பல சான்றுகளின் அடிப்படையில் அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு; ஆனால் அது படைப்பினங்களை போன்று கிடையாது என்று நாம் கூறுகிறோம்.

அவனைப் போல் எதுவும் இல்லை.

திருக்குர்ஆன் 42:1

"அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை.

திருக்குர்ஆன் 112:1-4

ஆனால் நபியின் வாரிசுகள் என்று தங்களைக் கூறிக் கொள்ளும் ஆலிம்கள் அத்தனை வசனங்களையும் மறுத்து அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்று கூறிவருகிறார்கள்.

அதிகமான ஆலிம்கள் மற்றும் பொதுமக்களின் நிலைப்பாடு அல்லாஹ்வுக்கு உருவமில்லை என்பதாகவே இருக்கிறது.

உருவமற்ற இறைவனுக்கு உண்மையானவர் என்று பாட்டெழுதிப் படிக்கும் அளவு இந்தக் கருத்து மக்களிடம் ஓங்கியுள்ளது.

ஆலிம்கள் என்போர் அல்லாஹ் வின் உருவம் தொடர்பாக குர்ஆன் கூறும் இக்கருத்தை மக்களிடம் எடுத்துக் கூற திராணியற்றவர்களாக இருக்கிறார்கள். இன்னும் ஒரு சிலரோ அல்லாஹ்வுக்கு உருவம் உண்டு ஆனால் இல்லை, அதைப் பற்றி பேசவே கூடாது என பூசி மொழுகும் அற்ப வேலையைச் செய்கின்றனர்.

மக்கள் நிலை என்னவோ அதற்கேற்பவே தங்கள் நிலைப் பாட்டை வடித்துக் கொள்கிறார்கள். குர்ஆனின் போதனைகளைக் கண்டு அதற்கேற்ப தங்கள் நிலைப்பாட்டை அமைத்துக் கொள்வது கிடையாது.

அல்லாஹ்வுக்கு உருவம் இல்லை என்ற இவர்களது இந்நிலைப்பாட்டின் மூலம் உருவம் உண்டு எனக் கூறும் பல குர்ஆன் வசனங்களை இவர்கள் மறுத்துள்ளார்கள் என்பதை இதன் மூலம் அறியத் தருகிறோம்.

பாவமன்னிப்பு மற்றும் இரட்சிப்பு

இந்தப் போலி ஆலிம்கள் தவ்ஹீத் ஜமாஅத்தை எதிர்க்கும் அளவு சமுதாயத்தில் மலிந்து கிடக்கும் இணைவைப்புகளை ஒரு போதும் எதிர்ப்பது கிடையாது.

இவர்களது பார்வையில் தர்கா கட்டி வழிபாடு செய்வது, மவ்லித் ஓதுவது, தாயத்து தொங்க விடுவது என எதுவுமே இணைவைப்பு கிடையாது.

இவைகளை எல்லாம் உற்சாகத்திற்காக செய்து கொள்ளலாம் என்ற புல்லரிக்கும் ஃபத்வாவை வழங்கி தங்கள் ஜுப்பா பாக்கெட்டுகளை புல்லாக்கிக் கொள்ளும் புத்திசாலிகள்.

மக்கள் செய்யும் எல்லா இணைவைப்பு செயல்களையும் ஆதரித்து பேசும் நாடக நடிகர்கள்.

இவர்கள் ஆதரிக்கும் பல மவ்லித்களில் தாங்கள் செய்த பாவங்களை மன்னிக்குமாறு, தங்களை இரட்சிக்குமாறு நபிகள் நாயகத்திடம், முஹ்யித்தினீடம் முறையிடும் வரிகள் ஏராளம் உண்டு.

உதாரணத்திற்கு சில வரிகளை இங்கே தருகிறோம்.

யாகுத்பாவில் முஹ்யித்தீன் அவர்களை புழ்ந்து இடம் பெறும் சில வரிகள்

"காப்பாற்றிக் கரை சேர்க்கும் மகத்தான இரட்சகரே! (என்னை) நெருங்கி (என்னுடன்) ஒன்றி விடுவீராக! இப்பிரபஞ்சத்தில் பளீரென்று பிரகாசிக்கும் நிலையில் நீரே எனது கலீஃபாவாக இருக்கிறீர்' என்ற இறைவனின் உரையாடல் நிச்சயமாக உம்மை வந்தடைந்தது; அதை நீங்கள் செவியுற்றீர்கள். முஹ்யித்தீன் அவர்களே! (இறைவனா லேயே மகத்தான இரட்சகரே என்று அழைக்கப் பட்டதன் மூலம்) நீங்கள் மகத்துவம் மிக்க திருநாமம் ஒன்றைச் சூட்டப்பட்டு விட்டீர்கள்.

சுப்ஹான மவ்லிதில் நபிகள் நாயகத்தை நோக்கி புகழ்ந்து சொல்லப்படும் கவி வரிகள்.

என் பாவங்களை நன்மைகளாக மாற்றுங்கள்!

என் தீமைகளை அலட்சியம் செய்யுங்கள்!

உங்களின் மன்னிப்பை என் மீது சொரிந்து என் மீது அருள் புரியுங்கள்.

நபிகள் நாயகம் (ஸல்), முஹ்யித்தீன் அப்துல் காதர் ஜீலானி ஆகியோர்களிடம் தங்கள் பாவங்களை மன்னித்து, தங்களை இரட்சிக்குமாறு வேண்டக் கூடிய இன்னும் பல கவிதை வரிகளைக் காண இந்த இணைப்பில் சென்று பார்க்கவும்.

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/க்ஷர்ர்ந்ள்/ள்ன்க்ஷட்ஹய்ஹ-ம்ஹஸ்ப்ண்க்/-.யக்ஷஙகஓஃநவ்வ்ந்ர் <ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/க்ஷர்ர்ந்ள்/ள்ன்க்ஷட்ஹய்ஹ-ம்ஹஸ்ப்ண்க்/>

ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/க்ஷர்ர்ந்ள்/ஹ்ஹந்ன்ற்ட்க்ஷஹ-ர்ழ்-ஹஹ்ஸ்ன்/-.யக்ஷஙகடவ்நவ்வ்ந்ர் <ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/க்ஷர்ர்ந்ள்/ஹ்ஹந்ன்ற்ட்க்ஷஹ-ர்ழ்-ஹஹ்ஸ்ன்/>

<ட்ற்ற்ல்://ஜ்ஜ்ஜ்.ர்ய்ப்ண்ய்ங்ல்த்.ஸ்ரீர்ம்/க்ஷர்ர்ந்ள்/ம்ன்ட்ஹ்ண்க்ங்ங்ய்ஜம்ஹன்ப்ண்க்ஜர்ழ்ஜஹஹ்ஸ்ன்/>

இத்தகைய மல்லிதுகளை இவர்கள் சரி காண்பதற்கும் இத்தகு மவ்லிதுகளை மக்கள் தொடர்ந்து ஓதத் தங்கள் மேலான ஆதரவைத் தொய்வின்றி வழங்குதவற்கும் அடிப்படை காரணம் நபிகள் நாயகம் பாவங்களை மன்னிப்பார் என்ற நம்பிக்கையே ஆகும்.

நபிகள் நாயகம் மட்டுமின்றி முஹ்யித்தீன் போன்ற நல்லடியார் களிடமும் பாவமன்னிப்பு கோரலாம். அவர்களும் பாவங்களை மன்னிப் பார்கள் என்ற நம்பிக்கையில் இவர்கள் உள்ளார்கள். ஜமாலி போன்றோர் அதை வெளிப்படுத்தி சொல்வார்கள், ரஷாதி போன்றவர்களோ வருமானம் பாதிக்காத வகையில் இது விஷயத்தில் நடந்து கொள்வார்கள். மற்றபடி இவர்களுக்கிடையில் பெரிய கொள்கை வேறுபாடு என்று எதுவும் இல்லை. அனைவரும் ஒரே குட்டையில் ஊறிய மட்டைகளே.

பாவங்களை மன்னிப்பவனும் மக்களை இரட்சிப்பவனும் அல்லாஹ் ஒருவன் மட்டுமே. அல்லாஹ்வை யன்றி பாவங்களை மன்னிப்பவன் யாரும் கிடையாது.

இந்தக் கொள்கை முழக்கத்தை பல குர்ஆன் வசனங்கள் எடுத்தியம்புகின்றன.

அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 3:135)

தமக்கு எதிராக வரம்பு மீறிய எனது அடியார்களே! அல்லாஹ்வின் அருளில் நம்பிக்கையிழந்து விடாதீர்கள்! அல்லாஹ் பாவங்கள் அனைத்தையும் மன்னிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடை யோன் என்று (அல்லாஹ் கூறுவதைத் தெரிவிப்பீராக!

(அல்குர்ஆன் 39:53)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காலத்தில் நியாயமான காரணமின்றிப் போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூன்று நபித்தோழர்களின் குற்றத்தை இறைவன் மன்னித்து விட்டதாக அறிவிக்கும் வரை அம்மூவரையும் நபிகள் நாயகம் விலக்கி வைத்தார்கள். இறைவன் அவர்களை மன்னித்துவிட்டதாக அறிவித்த பின்பே அவர்களை இணைத்துக் கொண்டார்கள்.

தீர்ப்பு நிறுத்தி வைக்கப்பட்ட அந்த மூவரையும் (இறைவன் மன்னித்தான். பூமி விசாலமானதாக இருந்தும் அவர்களைப் பொறுத்த வரை அது சுருங்கி விட்டது. அவர்களது உள்ளங்களும் சுருங்கி விட்டன. அல்லாஹ்வை விட்டு (தப்பிக்க அவனிடமே தவிர வேறு போக்கிடம் இல்லை என்று அவர்கள் நம்பினார்கள். பின்னர் அவர்கள் திருந்துவதற்காக அவர்களை மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

அல்குர்ஆன் 9:118

(பார்க்க புகாரி 4418, 4677.)

மன்னிக்கும் அதிகாரம் அல்லாஹ் வுக்கு மட்டுமே உரியது என்பதால் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இவ்வாறு நடந்துள்ளனர். நபிகள் நாயகத்திற்கு பாவங்களை மன்னிக்கும் அதிகாரம் உண்டென்று இருக்கு மானால் தன் காலத்தில் குற்றமிழைத்த அம்மூவர்களையும் அல்லாஹ்வின் தூதர் மன்னித்திருப்பார்கள். அல்லாஹ் மன்னிக்கும் வரை காத்திருக்க வேண்டிய அவசியமில்லை.

எனவே பாவங்களை மன்னித்து மக்களை இரட்சிப்பது அல்லாஹ் ஒருவன் மட்டுமே!

இந்த சத்திய முழக்கத்தைத் தான் மேற்கண்ட இறைவசனங்கள் இயம்புகின்றன. அதை எல்லாம் கவனத்தில் கொள்ளாமல் முழுக்க முழுக்க உலக ஆதாயத்திற்காக மட்டுமே இந்த ஆலிம்கள் இணை வைப்பு வரிகள் அடங்கிய மவ்லிதுகளை ஆதரிக்கின்றார்கள். இதன் மூலம் குர்ஆன் வசனங்களை மறுத்துக் கொண்டிருக்கின்றார்கள்.

இவர்கள் குர்ஆனை மதிப்பது உண்மையானால் தாங்கள் பணி செய்யும் பள்ளிகளில் ஒரு ஜும்ஆ உரையில், ஒரு பொது மேடையில் மவ்லிதின் அபத்தங்களை, அதில் உள்ள இணை வைப்பு வரிகளை பற்றி மக்களுக்கு விளக்கி ஒரு உரை நிகழ்த்தி காட்டட்டும் பார்க்கலாம்.

தவ்ஹீத் ஜமாஅத்தின் இந்த சவாலை ஏற்குமாறு ஆலிம்களுக்கு அழைப்பு விடுக்கிறோம். எங்களின் இந்த அழைப்பை ஏற்று நீங்கள் குர்ஆனை மறுப்பவர்களில்லை குர்ஆனை மதிப்பவர்களே என்பதை நிரூபியுங்கள் பார்க்கலாம்.

இந்த லட்சணத்தில், குர்ஆனை மறுக்கும் கேடு கெட்ட ஆலிம்கள் கூட்டத்தின் எட்டு கழிசடைகள் சேர்ந்து, அறிஞர் பி.ஜேவை காஃபிர் என்று ஃபத்வா வழங்கியுள்ளதாம்.

மனநோயின் உச்சத்தில் இருக் கிறார்கள் என்பது மட்டும் தெளிவாகப் புரிகிறது.

தெளிவான இணை வைப்பு காரியங்களைக் கூட உற்சாகத்திற்காக செய்யலாம் என்று புல்லரிக்கும் ஃபத்வா வழங்கி தீனை நிலைநாட்டிய இவர்கள் எந்த அடிப்படையில் அறிஞர் பி.ஜே அவர்களைக் காபிர் என ஃபத்வா வழங்கிட்டார்கள்?

இது ஒருபுறமிருக்க இவர்களே முதலில் உண்மை முஸ்லிம்களில்லை என்கிறோம்.

குர்ஆனுக்கு எதிரான பல நிலைப்பாடுகள் கண்டு தெளிவாகக் குர்ஆன் வசனங்களை மறுக்கும் கூட்டம் இது.

நபிமொழிகளுக்கு எதிரான பல செயல்பாடுகளை ஆதரித்து, அவற்றைச் செய்வதன் மூலம் பல நபிமொழிகளை சகட்டு மேனிக்கு மறுக்கும் கூட்டம்.

இமாம்கள், பெரியார்களின் பெயரால் அல்லாஹ்வையும் ரசூலையும் அவமதிக்கும் கூட்டம் இது.

இந்தக் கூட்டத்தில் உள்ள எட்டுக் கழிசடைகள் பி.ஜே அவர்களை காஃபிர் என ஃபத்வா வழங்குவது தான் உண்மையில் உலகம் மெச்சும் ஆச்சரியம் ஆகும்.

இன்னொன்றையும் சொல்லிக் கொள்கிறோம். இவர்களது உலக அதிசய காபிர் ஃபத்வா எங்களுக்கு எந்தக் கலக்கத்தையும் ஏற்படுத்த வில்லை. எந்த நோக்கத்திற்காக இந்த எட்டு அடிமுட்டாள்கள் (தவ்ஹீத் ஜமாஅத்தை மக்களை விட்டும் தனிமைப்படுத்துவதற்காக) இந்த அரிய (?) ஃபத்வாவை வழங்கினார்களோ அதையெல்லாம் கண்டு ஒரு போதும் இந்த ஏகத்துவப்படை அஞ்சாது.

உலக மக்கள் அனைவரும் ஓரணியில் திரண்டு எங்களை எதிர்த்தாலும் அதைக் கண்டு எங்கள் ஈமான் அதிகரிக்குமே தவிர குறைந்து விடாது.

ஏனெனில் இந்த ஏகத்துவக் கொள்கைவாதிகள் மக்கள் கூட்டத்திற்கும் மக்கள் சக்திக்கும் ஒரு போதும் அஞ்ச மாட்டார்கள்.

"மக்கள் உங்களுக்கு எதிராகத் திரண்டு விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சிக் கொள்ளுங் கள்!'' என்று அவர்களிடம் சில மனிதர்கள் கூறினர். இது அவர்களுக்கு நம்பிக்கையை அதிகமாக்கியது. "எங்களுக்கு அல்லாஹ் போதுமானவன்; அவன் சிறந்த பொறுப்பாளன்'' என்று அவர்கள் கூறினர்.

திருக்குர்ஆன் 3:173

குர்ஆனை மறுக்கும் கூட்டத்திற்கு காஃபிர் பத்வா ஒரு கேடா? என்ற கேள்வியுடன் இக்கட்டுரையை முடித்துக் கொள்கிறோம்.

 

இஹ்யாவை ஏன் எரிக்க வேண்டும்?                   தொடர்: 20

ராபிளிய்யாவின் தகிய்யா கொள்கை

மூலம்: முஹம்மது பின் அப்துர்ரஹ்மான் அலீ மக்ராவி

தமிழில்: எம். ஷம்சுல்லுஹா

ராபிளிய்யாக்களின் மார்க்கம் "தகிய்யா' ஆகும். அதாவது தங்களுடைய கொள்கையின் பக்கம் மக்களை அழைக்கும் போது தங்களது உண்மையான கொள்கையை மறைத்து விடுவார்கள். இவர்களது பிரச்சாரத்தை ஏற்று மக்கள் உள்ளே நுழைந்ததும் அப்போது தங்களது உண்மையான கொள்கையை வெளியிடுவார்கள். இதற்குப் பெயர் தான் தகிய்யா எனப்படுகின்றது.

இவ்வாறு பொய் சொல்லி பிரச்சாரம் செய்வதை ராபிளிய்யாக்கள் ஒப்புக் கொண்டிருக்கிறார்கள். உண்மையில் இது நயவஞ்சகக் கொள்கையும் நாசக் கொள்கையுமாகும்.

இந்த நயவஞ்சகக் கொள்கையைக் கொண்ட இவர்கள் தங்களை முஃமின்கள், இறை நம்பிக்கையாளர் கள் என்று பிதற்றிக் கொள்கிறார்கள். முந்திச் சென்ற நல்லோர்களை தடம் மாறியவர்கள் என்றும் நயவஞ்சகர்கள் என்று இவர்கள் விமர்சிக்கிறார்கள்.

இவ்வாறு ஹாபிழ் தஹபீ அவர்கள் கூறுகின்றார்கள்.

திருடனைப் பிடிப்பதற்குத் துரத்தி வருபவர்களையே திருடர்களாகச் சித்தரிக்கும் ஒரு திருடனின் கதையைப் போன்று இவர்களது கதை உள்ளது.

இதுதான் கேடுகெட்ட ராபிளிய்யாக் களின் கொள்கையும் இலட்சணமும் ஆகும். நபி (ஸல்) அவர்கள் மீது ஹதீஸ்களை இட்டுக்கட்டுவதில் இவர்கள் முதல் இடத்தில் இருக்கிறார்கள். இதற்கு அடுத்த இடத்தில் இருப்பவர்கள் சூஃபிகள் ஆவர்.

சூஃபிகள்

இவர்கள் ராபிளிய்யாக்களின் மறு அவதாரமாகச் செயல்பட்டனர். இஸ்லாத்திற்கு எதிரான சதித் திட்டத்திற்கு ஒரு முழுமையான செயல்வடிவம் கொடுத்தவர்கள் இவர்கள் தான். பொய்யான, பலவீனமான ஹதீஸ்களை இட்டுக் கட்டுதல் என்பது இந்த சதித் திட்டத்தின் ஒரு பகுதியாகும்.

இந்தச் சதிகாரர்கள் ஒரு படையாகவே கிளம்பி பல்வேறு தலைப்புகளில், பல்வேறு பெயர்களில் நூல்களை இயற்றினர். கூத்துல் குலூப் - உள்ளங்களின் உணவு என்பது இந்த வகையில் உள்ள ஒரு நூலாகும். இதை இயற்றியவன் மக்கீ பின் அபூதாலிப் என்பவன். அடர்த்தியான இந்த நூலில் பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களைப் போட்டு நிரப்பியுள்ளான். இந்த நூலை இஸ்லாமிய மற்றும் இஸ்லாம் அல்லாத நாடுகளுக்குப் பரவச் செய்தான்.

இந்த நூலைச் சுற்றி கற்பனை செய்ய முடியாத, வினோதமான வாதங்களை சூஃபிய்யாக்கள் அளந்தும் அடித்தும் விட்டனர். தற்கால ஆசாமிகளும் இந்தச் சதி வலையில் தங்களை இணைத்துக் கொண்டனர். வரிந்து கட்டிக் கொண்டு, வலிந்து வலிந்து இதைப் படிக்குமாறு மக்களுக்கு அறிவுரை கூறினர்.

போலியாகவும், பொய்யாகவும் புனையப்பட்ட தங்களுடைய இந்தக் குப்பைகளின் ஒரு பகுதிக்கு நபிவழி என்று பெயரிட்டு அதைப் படிக்கத் தூண்டினர்.

சாபத்திற்குரிய இந்த சதித் திட்டத்தைப் பற்றி இன்ஷா அல்லாஹ் இந்நூலின் பிற்பகுதியில் விளக்கு வோம். இந்த விஷமக் கருத்தை வேதக் கருத்தாகப் பரப்பிய நூல்கள் பல உள்ளன. அவற்றில் தலையாய பங்கு வகிப்பதும், முதல் இடத்தைப் பிடிப்பதும் இஹ்யா உலூமித்தீன் தான்.

இந்நூல் முதல் பக்கத்திலிருந்து இறுதிப் பக்கம் வரை ஆயிரக் கணக்கான ஹதீஸ்களைக் கொண் டுள்ளது. இதில் இடம் பெற்றிருக்கும் ஹதீஸ்களின் லட்சணங்களை அடையாளம் காட்டுவதற்காகவும், அம்பலப்படுத்துவதற்காகவும் இரண்டு நூல்களை ஹதீஸ் கலை திறனாய்வாளர் ஹாபிழ் இராக்கி அவர்கள் இயற்றியுள்ளார்கள். அதில் ஒன்று பெரிய நூல், மற்றொன்று சிறிய நூலாகும்.

இஹ்யாவின் ஓரம் அல்லது அடிக்குறிப்பாக இடம்பெற்றிருக்கும் அன்னாரின் ஆய்வுக் குறிப்பு, நடுத்தரமிக்க ஒரு விமர்சன வெளியீடாகும்.

நம்மைப் பொறுத்தவரை இஹ்யாவுக்கு இந்த ஆய்வு வெளியீடு மட்டும் போதாது. அதில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களை இடத்திற்குத் தக்கவாறு, இன்னும் மேலதிகமான திறனாய்வு செய்வது இன்றியமையாத ஒன்றாகும்.

இப்னு சுப்கீயின் மதிப்பீடு

இப்னு சுப்கீ என்பவர் கஸ்ஸாலியின் அதிதீவிர ஆதரவாளர்; பக்தர். கஸ்ஸாலியின் மீது கொண்ட அளவு கடந்த காதல் காரணமாக சுன்னத் வல் ஜமாஅத்தினரின் (நபிவழியில் நடக்கின்ற உண்மையான சுன்னத் ஜமாஅத்தினர்) பகைமையைச் சம்பாதித்தவர் ஆவார்.

"இஹ்யாவின் ஹதீஸ்களை ஆய்வு செய்த போது அவற்றில் பெரும்பாலானவற்றிற்கு அறவே அறிப்பாளர் தொடர் இல்லை. எந்த ஓர் அடிப்படையும் இல்லை என்று தெரிந்து கொண்டேன்'' என தன்னுடைய தபகாத் என்ற நூலில் குறிப்பிடுகின்றார்.

இது அல்லாமல், அறிவிப்பாளர் தொடருடன் கூடிய இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்கள், பலவீனமான ஹதீஸ்கள் ஒரு பெரிய அளவில் கிடக்கின்றன என்றும் அவர் குறிப்பிடுகின்றார்.

நூலாசிரியர் மக்ராவி குறிப்பிடுகின்றார்:

அல்லாஹ் எனக்கு வாழ்நாளை நீட்டிக் கொடுத்தால் இஹ்யாவில் இடம்பெற்றிருக்கும் ஹதீஸ்களை அடையாளம் காட்டுவதற்காக ஒரு பெரிய முழுமையான நூல் வெளியிடுவேன். அதில் இஹ்யாவில் பதிவான மவ்ளூஃ, லயீஃப், ஸஹீஹ், ஹஸன் போன்ற ஹதீஸ்களை விவரிப்பேன். அப்போது தான் சமுதாயம் இஹ்யாவில் விபரீதத் திலிருந்து விழித்துக் கொள்ளும். எனினும், இப்போது எழுதியிருக்கும் இந்த நூலில் இஹ்யாவில் இடம்பெற்ற பொய்யான, போலியான, இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ்களின் எடுத்துக்காட்டுகளை இங்கு கொண்டு வந்திருக்கின்றேன்.

இவ்வாறு மக்ராவி கூறுகின்றார்.

இஹ்யாவில் இறக்குமதியான பொய்யான ஹதீஸ்கள், ராபிளிய் யாக்கள் மற்றும் சூஃபிய்யாக்கள் இஸ்லாத்திற்கு எதிராகப் பின்னிய சதிவலையின் ஓர் அங்கம் என்பதை இங்கு நினைவுபடுத்திக் கொள்கிறோம்.

ஹாபிழ் தஹபி அவர்களின் ஸியரு அஃலாமின் நுபலா என்ற நூலில் இடம்பெற்ற ஹதீஸ்களைத் தர ஆய்வு செய்து, அதில் அடிக்குறிப்பு எழுதிய திறனாய்வாளர் பேராசிரியர் ஷுஐப் அல் அர்னவூத் அவர்கள் குறிப்பிடுவதாவது:

"சுப்கீ அவர்கள், இஹ்யாவின் ஹதீஸ்களை ஆய்வு செய்த போது பல ஹதீஸ்களுக்கு அறிவிப்பாளர் தொடரே இல்லை என்று கண்டறிந்தார். அவர் கண்டறிந்த, தொடரே இல்லாத அந்த ஹதீஸ்களின் எண்ணிக்கை கிட்டத்தட்ட 943 ஆகும்.

ஹிஜ்ரி 806ல் மரணமடைந்த ஹாபிழ் அபுல் ஃபழ்லு அப்துர்ரஹீம் இராக்கி அவர்கள், "அல்முக்னீ அன் ஹம்லில் அஸ்ஃபார் ஃபில் அஸ்ஃபாரி ஃபீ தக்ரீஜி மா ஃபில் இஹ்யாஇ மினல் அக்பார்'' - "இஹ்யாவில் இடம் பெற்றுள்ள ஹதீஸ்களுக்கு மூல நூல்களைத் தேடும் பயணத்தில் பல நூல்களைப் புரட்டுவதைத் தவிர்க்கின்ற ஒரு தன்னிறைவு நூல்'' என்ற பெயரில் இஹ்யாவில் உள்ள அனைத்து ஹதீஸ்களையும் தனது நூலில் பதிவு செய்து, அந்த ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ள மூல நூல்களையும் குறிப்பிட்டுள்ளார். அந்த ஹதீஸ்களின் தரத்தையும் அவர் தெரிவித்துள்ளார். பலவீனமானது, இட்டுக்கட்டப்பட்டது, அடிப்படையே இல்லாதது என்றெல்லாம் அந்த ஹதீஸ்களை அடையாளமும் காட்டியுள்ளார்.

எழுத்தாளர்கள், பேச்சாளர்கள், ஆசிரியர்கள், அறிவுரை கூறுவோர் அத்தனை பேரும் ஹாபிழ் இராக்கி அவர்களின் திறனாய்வுத் தீர்ப்பைப் பார்க்காமல், படிக்காமல் இஹ்யாவின் ஹதீஸ்களை மேற்கோள் காட்டவோ, ஆதாரமாகக் கொள்ளவோ வேண்டாம்''

இது தற்கால ஹதீஸ் கலை திறனாய்வாளர் ஷுஐப் அல் அர்னவூத் அவர்கள் குறிப்பிடுகின்ற கருத்தாகும்.

ஒரு ஹதீஸின் தன்மை மற்றும் அதன் தரம் குறித்து ஆய்வு செய்த, மக்களுக்கு நன்கு அறிமுகமான ஹதீஸ் கலை அறிஞர்களின் தீர்ப்பைப் பார்க்காமல் அந்த ஹதீஸை ரசூல் (ஸல்) அவர்களுடன் இணைத்துக் கூறக்கூடாது.

ஹதீஸ் கலை அறிஞரின் அத்தகைய தீர்ப்பைப் பார்க்காமல், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்' என்று ஒருவர் சொன்னால் அவர் திட்டமிட்டு நபியவர்கள் மீது பொய் கூறிய பாவத்தைச் செய்தவராகின்றார்.

"என் மீது கூறும் பொய் (உங்களில்) ஒருவர் மீது கூறும் பொய்யைப் போன்றதன்று. யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக் கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்'

நூற்கள்: புகாரி 1291, முஸ்லிம் 5

இந்த ஹதீஸ் கூறும் எச்சரிக்கை வட்டத்திற்குள் அவர் வந்து விடுகின்றார்.

இவ்வாறு பத்ருத்தீன் அல் ஹுஸைனி என்ற அறிஞர் தெரிவிக்கின்றார்.

மவ்ளூவு அல்லாத இதர பலவீனமான ஹதீஸ்களை அறிவிப்பது தொடர்பான முடிவு:

இட்டுக்கட்டப்பட்ட ஹதீஸ் என்ற தரத்தில் இல்லாமல், அதே சமயம் பலவீனமாக அமைந்திருக்கும் ஹதீஸ் அடிப்படையில் அமல் செய்யலாமா? என்றால் இது தொடர்பாக அறிஞர் நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் தர்கீப் (ஆர்வமூட்டல்) தர்ஹீப் (அச்சமூட்டல்) என்ற நூலில் ஓர் அருமையான முன்னுரையை எழுதியுள்ளார்கள்.

ஒரு பலவீனமான ஹதீஸின் நிலையைத் தெரிவித்து, அதைவிட்டும் மக்களை எச்சரிப்பதற்காகவே தவிர அதை அறிவிக்கக்கூடாது என்ற நம்முடைய நிலைப்பாட்டிற்கு ஏற்ப அறிஞர் அல்பானி அவர்கள் அந்த முன்னுரையில் அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றின் ஒரு பகுதியை நாம் பார்க்கவிருக்கின்றோம்.

அல்பானியின் முன்னுரைக்குள் செல்வதற்கு முன்னர், பலவீனமான ஹதீஸைப் பற்றிய தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாட்டை நாம் தெரிந்து கொள்ள வேண்டும். 

"ஹலால், ஹராம், கொள்கை சம்பந்தப்பட்ட விஷயங்களில் பலவீன மான ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது. அமல்களைச் செய்ய ஆர்வமூட்டும் வகையில் (தர்கீப்) அவற்றின் சிறப்புகளைக் கூறுவது, தீமைகளைத் தடுக்கும் விதத்தில் அதன் தண்டனைகளைக் கூறுவது (தர்ஹீப்) தொடர்பாக வரும் பலவீனமான ஹதீஸ்களை அறிவிக் கலாம்'' என்ற கருத்தில் அறிஞர்களின் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீது ஜமாஅத் அதற்கு நேர் எதிரான நிலைப்பாட்டில் உள்ளது.

"யார் என் மீது வேண்டுமென்றே பொய்யுரைக்கின்றானோ அவன் தன் இருப்பிடத்தை நரகத்தில் ஆக்கிக் கொள்ளட்டும்'

என்ற அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு எந்தக் கட்டத்திலும் பலவீனமான ஹதீஸை அறவே ஆதாரமாகக் கொள்வதில்லை என்ற நிலைப்பாட்டில் அன்றிலிருந்து இன்றுவரை உறுதியாக உள்ளது.

ஹாபிழ் இப்னு ஹஜர் போன்று மாமேதைகள் கூட, வரலாறுகளில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக வருகின்ற செய்திகளை ஏற்றுக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டில் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொறுத்தவரை வரலாறாக இருந்தாலும் அதில் நபி (ஸல்) அவர்கள் தொடர்பாக வருகின்ற செய்திக்கு அறிவிப்பாளர் வரிசை இல்லை என்றால் அதை ஏற்றுக் கொள்ளக்கூடாது. அறிவிப்பாளர் வரிசை இருந்தாலும் அதன் தரத்தை அலசிப் பார்க்காமல் அந்தச் செய்தியை ஏற்பதில்லை.

ஹதீஸ்களில் கடுமையான பலவீனம், இலேசான பலவீனம் என்று பிரித்து, இலேசான பலவீனம் என்ற நிலையில் அமைந்த ஹதீஸ்களை அமல்களின் சிறப்பு மற்றும் எச்சரிக்கை விஷயங்களில் ஆதாரமாகக் கொள்ளலாம் என்ற நிலைப்பாட்டிலும் அறிஞர்களில் ஒரு சாரார் உள்ளனர். ஆனால் தவ்ஹீத் ஜமாஅத் இந்த நிலைப்பாட்டிற்கும் எதிராக உள்ளது.

உமக்கு அறிவு இல்லாததை நீர் பின்பற்றாதீர்! செவி, பார்வை, உள்ளம் ஆகிய அனைத்துமே விசாரிக்கப் படுபவையாகும். (அல்குர்ஆன் 17:36)

இந்த வனத்தில் அல்லாஹ் குறிப்பிடுவது போன்று சந்தேகத்தின் சாயல்படுகின்ற, படிகின்ற எந்தச் செய்தியையும் கொள்கை, ஹராம் ஹலால் போன்ற சட்ட விஷயங் களிலும், வணக்க வழிபாடுகள், சிறப்புகள், எச்சரிக்கைகள் போன்ற எந்தவொரு விஷயத்திற்கும் ஆதாரமாகக் கொள்வதில்லை. இதை இங்கு குறிப்பிடுவதற்கான காரணம், இங்கு இடம் பெறுகின்ற அறிஞர் அல்பானியின் முன்னுரையோ, அல்லது அவர்களது வேறு எந்த ஆக்கத்திலோ நம்முடைய நிலைப்பாட்டிற்கு மாற்றமான கருத்து பதிவானால் அதை தவ்ஹீத் ஜமாஅத் ஆதரிக்கின்றது என்று யாரும் தவறாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்பதற்காகவே இதை இங்கு குறிப்பிடுகின்றோம்.

பொதுவாக, பலவீனமான ஹதீஸை அறிவிப்பது, அதன்படி அமல் செய்வது பற்றிய அறிஞர்களின் கருத்துக்கள், கண்ணோட்டங்கள் எப்படி உள்ளன என்பதை கொள்கைச் சகோதரர்கள் தெரிந்து கொள்ள வேண்டும் என்பதற்காக இது தொடர்பான செய்திகள் இங்கு அளிக்கப்படுகின்றன என்ற விளக்கத் துடன், அறிஞர் அல்பானியின் முன்னுரையில் இடம்பெற்றுள்ள கருத்தைப் பார்ப்போம்.

August 8, 2015, 2:16 PM

ஜுலை ஏகத்துவம் 2015

தலையங்கம்

வஹீ மட்டுமே வழிபாடு!

வஹீ அல்லாதது வழிகேடு!

ஆதம் (அலை) அவர்களை அல்லாஹ் இந்தப் பூமிக்கு அனுப்பியதும் அவர்களுடன் மொத்த மனித சமுதாயமும் சேர்ந்தே பூமியில் இறங்கியது. அப்போது அவர்களுக்கு அருளிய கட்டளை இதோ:

"இங்கிருந்து அனைவரும் இறங்கி விடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும்போது எனது நேர்வழியைப் பின்பற்று வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.

அல்குர்ஆன் 2:38

இதை அல்லாஹ் இன்னும் தெளிவுபடுத்தும் விதமாகப் பின்வரும் வசனத்தில் தெரிவிக்கின்றான்.

ஆதமுடைய மக்களே! எனது வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்து உங்களிடம் வரும்போது (என்னை) அஞ்சி, திருந்திக் கொள்வோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்.

அல்குர்ஆன் 7:35

இந்த வசனங்கள் நமக்கு இடுகின்ற கட்டளை, என்னுடைய வஹீச் செய்தியை மட்டும் பின்பற்ற வேண்டும் என்பது தான்.

அந்த வஹீச் செய்தி அல்லாஹ்வின் வேதத்தின் வழி யாகவும், தூதர்கள் வழியாகவும் வரும் என்பதை இந்த வசனங்கள் தெளிவுபடுத்துகின்றன.

இந்த உலகத்தில் மனித சமுதாயம் பின்பற்ற வேண்டியது இவ்விரு விதமான வஹீயை மட்டும் தான். இது தான் இறைவனுக்குச் செய்கின்ற வழிபாடாகும். இவை அல்லாதது வழிகேடாகும். அது நரகத்தில் கொண்டு போய்ச் சேர்த்துவிடும். இதற்குத் திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் ஏராளமான சான்றுகள் உள்ளன.

ஒரு மனிதர் இறந்து அவர் கப்ரில் வைக்கப்படும் போது, "உங்களிடம் தூதராக அனுப்பப்பட்ட இந்த மனிதர் யார்?' என்ற ஒரு கேள்வியும் கேட்கப்படும். அப்போது அவர், "அல்லாஹ்வின் வேதத்தைப் படித்து அவரை நம்பி உண்மைப் படுத்தினேன்' என்று பதில் கூறுவார். (ஹதீஸ் சுருக்கம்)

அறிவிப்பவர்: பர்ராஃ பின் ஆஸிப் (ரலி)

நூல்: அபூதாவூத் 4127,

முஸ்னத் அஹ்மத் 17803

இன்ன இமாம், இன்ன பெரியார் எனக்குக் கற்றுத் தந்தார் என்று இந்த நல்லடியார் கப்ரில் பதில் கூறவில்லை. அல்லாஹ்வின் வேதத்தைப் படித்துத் தெரிந்து கொண்டேன் என்று தான் கூறுகின்றார். ஆக, ஒரு மனிதர் இறந்து கப்ரில் வைக்கப்பட்டதும் அவருக்குக் கை கொடுப்பது குர்ஆன் எனும் இறைச்செய்தி தான் என்பதை இதிலிருந்து நாம் தெரிந்து கொள்ளலாம்.

இத்துடன் மட்டும் குர்ஆன் நிற்கவில்லை. நரகம் வரை அதன் பயணம் தொடர்கின்றது.

இறை வசனங்களை ஏற்க மறுத்த மனிதன், நாளை மஹ்ஷர் மைதானத்தில் வந்து நிற்கும் போது புலம்பும் புலம்பலை அல்லாஹ் எடுத்துக் கூறுகிறான்.

நீங்கள் அறியாத நிலையில் திடீரென்று உங்களிடம் வேதனை வருவதற்கு முன்னரும், "அல்லாஹ் வின் கடமையில் நான் குறை வைத்ததற்காக எனக்குக் கேடு தான்; நான் கேலி செய்தவனாகி விட்டேனே'' என்று எவரும் கூறுவதற்கு முன்னரும், "அல்லாஹ் எனக்கு நேர்வழி காட்டியிருந்தால் (அவனை) அஞ்சுவோரில் ஆகியிருப்பேனே'' என்று கூறுவ தற்கு முன்னரும், வேதனையைக் காணும் நேரத்தில் "திரும்புதல் எனக்கு இருந்தால் நல்லோரில் ஆகியிருப்பேனே'' என்று கூறுவதற்கு முன்னரும் உங்கள் இறைவனிடமிருந்து உங்களுக்கு அருளப்பட்ட அழகானதைப் பின்பற்றுங்கள்!

அல்குர்ஆன் 39:55-57

நாளை மறுமையில் வந்து நின்று இதுபோன்று மனிதன் புலம்பக்கூடாது என்பதால் இறைவன் முற்கூட்டியே எச்சரிக்கை செய்கின்றான். அத்துடன், என்னுடைய வசனங்கள் உன்னிடம் வந்தன என்றும் குறிப்பிடுகின்றான். அல்லாஹ்வின் வசனங்களைத் தான் இது குறிக்குமே தவிர வேறு எந்தப் பெரியாரின், இமாம்களின் வார்த்தைகளையும் குறிக்காது.

அடுத்து, மக்கள் நரகத்திற்கு இழுத்து வரப்படும்போது நரகத்தின் காவலர்கள் அவர்களை நோக்கிக் கேட்கும் கேள்வி இதோ:

(ஏகஇறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலிருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்க வில்லையா?'' என்று அதன் காவலர்கள் கேட்பார்கள். அதற்கு அவர்கள் 'ஆம்' என்பார்கள். எனினும் (ஏகஇறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகி விட்டது.

அல்குர்ஆன் 39:71

நரகத்தை நோக்கி மக்கள் வீசி எறியப்படும் போதும் அவர்களிடம் மலக்குகள் கேட்கின்ற கேள்வி, உங்களிடம் தூதர் வரவில்லையா? என்பது தான்.

கோபத்தால் அது வெடித்திட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவ லர்கள் அவர்களைக் கேட்பார்கள்.

அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய் யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. நீங்கள் பெரிய வழிகேட்டிலேயே இருக் கிறீர்கள் என்று கூறினோம்'' எனக் கூறுவார்கள்.

நாங்கள் செவிமடுத்திருந்தாலோ, விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 67:8-10

குற்றவாளிகள் நரகத்தில் நுழையும் போது, தங்களுக்கு அளிக்கப்படும் தண்டனை நியாயமானது தான் என்று உணர்த்துகின்ற, உரைக்கின்ற வகையில் இந்தக் கேள்விகளை மலக்குகள் அவர்களிடம் தொடுக்கின்றனர்.

இமாமின் எச்சரிக்கை வந்ததா? இந்தத் தலைவரின் அறிவுரை வந்ததா? அந்தப் பெரியாரின் போதனை வந்ததா? என்று மலக்குகள் கேட்கவில்லை. அல்லாஹ்வின் வசனங்கள் வந்தனவா? அவனுடைய வசனங்களை தூதர்கள் கொண்டு வரவில்லையா? என்று தான் மலக்குகள் கேட்கிறார்கள்.

இவை அனைத்தும் உணர்த்தும் விஷயங்கள் ஒன்றே ஒன்று தான். நாளை மறுமையில் ஆதாரமாக வந்து நிற்கப்போவது அல்லாஹ்வின் வேதமான வஹீ தான்.

கப்ர், மஹ்ஷர், நரக வாசல் என பல்வேறு பகுதிகளில் மலக்குகள் கேட்ட கேள்வியையும் அதற்கு மக்கள் அளித்த பதில்களையும் பார்த்தோம்.

நரகத்தில் அவர்கள் வேதனையில் உழன்று கொண்டிருக்கும் போது அவர்களின் புலம்பல்களைக் கொஞ்சம் காதில் கேட்போம்.

நரகத்தில் அவர்கள் தர்க்கம் செய்து கொள்ளும்போது "உங்களைத் தானே நாங்கள் பின்பற்றிக் கொண்டிருந்தோம். எனவே நரகத்திலிருந்து சிறிதளவை எங்களை விட்டும் தடுப்பவர்களாக இருக்கிறீர்களா?'' என்று பலவீனர்கள் பெருமையடித்தோரை நோக்கிக் கேட்பார்கள். "நாம் அனைவருமே இதில் தானே இருக்கிறோம். அல்லாஹ் அடியார்களிடையே தீர்ப்பு அளித்து விட்டானே'' என்று பெருமையடித்தோர் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 40:47, 48

தங்களுக்குள் புலம்பிக் கொண்டி ருக்கும் அவர்கள் மலக்குகளிடம் வேதனையைக் குறைக்கும்படி கெஞ்சுகின்றனர்.

"உங்கள் இறைவனிடம் பிரார்த்தனை செய்யுங்கள்! இவ் வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்'' என்று நரகத்தில் கிடப்போர் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.

"உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றுகளைக் கொண்டு வரவில்லையா?'' என்று அவர்கள் கேட்பார்கள். அதற்கு இவர்கள் ''ஆம்'' என்று கூறுவார்கள். அப்படி யானால் நீங்களே பிரார்த்தியுங்கள்! என்று (நரகின் காவலர்கள்) கூறுவார்கள். (ஏகஇறைவனை) மறுப்போரின் பிரார்த்தனை வீணாகவே முடியும்.

அல்குர்ஆன் 40:49, 50

இங்கும் உங்களிடம் நபித் தோழர்கள், இமாம்கள், பெரியார்களின் விளக்கங்கள் வரவில்லையா? என்று கேட்கவில்லை. உங்களிடம் உங்கள் தூதர்கள் தெளிவான சான்றைக் கொண்டு வரவில்லையா? என்று தான் மலக்குகள் கேட்கிறார்கள்.

அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப் பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள்.

"எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார் களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழிகெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். "எங்கள் இறைவா! அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப் பாயாக! அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' (எனவும் கூறுவார்கள்.)

அல்குர்ஆன் 33:66-68

இந்த வசனங்களில் நரக   வாசிகள் தெளிவாகவே போட்டு உடைக்கின்றார்கள்.

இவை அனைத்தும் உணர்த்து கின்ற உண்மை, நாளை நம்மை நரகிலிருந்து காப்பது அல்லாஹ்வின் வேதம் என்ற வஹீ தான். அவனது தூதருக்கு அளித்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனும் வஹீ தான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மறுமை நாüல் இறைநம்பிக்கை யாளர்கள் ஒன்று கூடி, "(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கüலிருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)'' என்று (தங்கüடையே) பேசிக் கொள்வார்கள்.....

....(பல நபிமார்களிடம் சென்று விட்டுப் பின்னர்) அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், "என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பிலிருந்து) "உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்க ளுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும்.

அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன்.

பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், "குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறை மறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை'' என்று சொல்வேன்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

புகாரி 4476, 656, 7410, முஸ்லிம் 284

இந்த ஹதீஸ் நபி (ஸல்) அவர்களின் பரிந்துரையை விவரிக்கின்றது. குர்ஆன் தடை விதித்தவர்களைத் தவிர ஏனையவர்கள் நரகத்திலிருந்து காக்கப்படுகின்றனர்.

மேற்கண்ட குர்ஆன் வசனங்கள் மற்றும் ஹதீஸ்கள் தரக்கூடிய பாடமும் படிப்பினையும் என்ன?

நாளை நடுநாயகமாக, நடுவராக வந்து நிற்கப் போவதும் காக்கப் போவதும் குர்ஆன் என்ற வஹீ தான். அதற்கு விளக்கமாக அமைந்த ஆதாரப்பூர்வமான ஹதீஸ் எனும் வஹீ தான்.

புறக்கணித்தவர்களை நரகத்தில் கொண்டு போய் கவிழ்க்கப் போவதும் இந்தக் குர்ஆன், ஹதீஸ் எனும் வஹீ தான்.

இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ தான். வஹீ என்பது இஸ்லாத்தின் உயிர்மூச்சும் அதன் பேச்சுமாகும். அதைத் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தனது கொள்கையாகக் கொண்டிருக்கின்றது.

குர்ஆன் எனும் வஹீ இறங்கிய இம்மாதத்தில் மிகவும் பொருத்த மாகவே, "இஸ்லாத்தின் ஆதாரம் இறைவனின் வஹீ மட்டுமே!'' என்ற தலைப்பில் ஸஹர் நேரத்தில் உலகெங்கும் உள்ள மக்களை இந்தக் கொள்கையின்பால் அழைத்துக் கொண்டிருக்கின்றது.

நரகத்தை விட்டும் நம்மைக் காக்கின்ற இத்தூய கொள்கையின்பால் மக்களே வாரீர்! வாரீர்! என்று இம்மாதத்தில் ஏகத்துவமும் தன் பங்குக்கு அழைப்பு விடுக்கின்றது.

 

அல்குர்ஆனை மறுக்கும் ஆலிம்கள் கூட்டம்

ஆர். அப்துல் கரீம் எம்.ஐ.எஸ்.சி.

அருள்மிகு ரமலான் மாதம் இது! இந்த மாதம் முழுவதும் நோன்பு நோற்பதன் மூலம் மக்கள் குர்ஆனின் பக்கம் ஈர்க்கப்படுகின்றனர்.  இது உலகம் முழுவதும் இறைவன் செய்திருக்கின்ற சிறந்த ஏற்பாடாகும். இன்னும் சொல்லப்போனால் ஒரு மாத காலம் அல்லாஹ் நடத்துகின்ற அகில உலக திருக்குர்ஆன் மாநாடாகும்.

அப்படிப்பட்ட திருக்குர்ஆன் அருளப்பட்ட மாதத்தில் மார்க்கத்தின் காவலர்கள், மாநபியின் வாரிசுகள், அல்குர்ஆனை மனனம் செய்த ஹாபிழ்கள் என்று பறை சாற்றுகின்ற, ஆலிம்கள் என்று மார்தட்டுகின்ற இந்த மவ்லானா மவ்லவிகள் குர்ஆனுக்கு நேர் முரணான பாதையில் பயணம் செய்கின்றார்கள்.  இதைப் படம் பிடித்துக் காட்டுவ தற்காக இந்த ஆக்கம் ஏகத்துவ இதழில் அளிக்கப்படுகின்றது.

இவர்கள் தங்களை தீனைக் காக்கின்ற தூண்களாக சித்தரிக் கின்றார்கள். அதோடு நின்றால் பரவாயில்லை. கடவுள் கொள்கை முதல் இஸ்லாத்தின் ஒவ்வொரு வணக்க வழிபாடு வரை உள்ள அனைத்து விஷயங்களிலும் குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் நடக்கின்ற தவ்ஹீது ஜமாஅத்தினர் மீது  வழி கெட்டவர்கள் என்ற முத்திரையைக் குத்தி, சத்தியத்தின் பக்கம் மக்கள் வருவதைத் தடுக்கலாம் என்று கருதுகின்றனர்.

அதனால் இவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்டுவது காலத்தின் கட்டாயமாகின்றது. அதிலும் குறிப்பாக குர்ஆன் பெயரைச் சொல்லி ஏமாற்றும் இவர்களை அந்தக் குர்ஆன் இறங்கிய இம்மாதத்தில் அடையாளம் காட்டுவது பொருத்தமாக அமையும் என்ற அடிப்படையில் இக்கட்டுரையை இடம் பெறச் செய்கிறோம்.

மத்ஹபுவாதிகள் ஒரு புறம் நம்மை ஹதீஸ் மறுப்பாளர்கள் என்று பொய்யாக விமர்சித்துக் கொண்டே பகிரங்கமாக எண்ணற்ற ஹதீஸ்களை அவர்கள் மறுத்துக் கொண்டிருக் கிறார்கள். அவற்றை நமது முந்தைய இதழ்களில் தனிக்கட்டுரையாக விளக்கி உள்ளோம். அதுமட்டுமின்றி அவர்கள் திருமறைக் குர்ஆனின் பல்வேறு வசனங்களையும் மறு