ஏகத்துவம் செப்டம்பர் 2004

செப்டம்பர் 2004 ரஜப் 1425
மிஃராஜ் சிறப்பிதழ்
பொருளடக்கம்

அண்ணல் நபியின் விண்ணுலகப் பயணம்..........................2

இஸ்ரா........................................................4

மிஃராஜ்............................................................7

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்..............17

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்களா?.......27

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்...................36

கேள்வி பதில்..........................................42

தஸ்பீஹ் தொழுகை................................51


அண்ணல் நபியின் விண்ணுலப் பயணம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்காவிருந்து பைத்துல் முகத்தஸுக்கு இரவோடு இரவாக அழைத்துச் செல்லப்பட்ட அற்புத நிகழ்ச்சிக்கு இஸ்ரா - இரவில் கூட்டிச் செல்லுதல் - என்று சொல்லப்படும். பின்னர் பைத்துல் முகத்தஸிருந்து விண்ணுலகத்திற்குச் சென்ற அற்புத நிகழ்ச்சி மிஃராஜ் என்று அழைக்கப்படுகின்றது.

இது எந்த மாதத்தில் எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கான துல்யமான வரலாற்றுக் குறிப்பு எதுவும் கிடையாது. எனினும் நபி (ஸல்) அவர்கள் தூதுத்துவம் பெற்ற பின் மக்காவில் இருக்கும் போது நடந்தது என்பதைப் பின்வரும் திருக்குர்ஆன் வசனம் தெளிவாகக் குறிப்பிடுகின்றது.

மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 17:1)

இஸ்ரா, மிஃராஜ் என்ற வரலாற்றுப் புகழ் பெற்ற இந்த அற்புத நிகழ்ச்சிகளில் கற்பனைச் சரக்குகள், கட்டுக் கதை கழிவுகள், கலப்படங்கள் அதிகமாகக் கலக்கப் பெற்று உண்மை எது? பொய் எது? என்று இனம் பிரிக்க முடியாத அளவுக்கு அவை ஆக்கப்பட்டு விட்டன.

குர்ஆன், ஹதீஸ் பார்வையில் சரியான சத்தியக் கருத்துக்களை மட்டும் மாதந்தோறும் இதழ் வடிவில் தந்து கொண்டிருக்கும் ஏகத்துவம் இம்மாதம் இஸ்ரா, மிஃராஜ் பற்றி சரியான வடிவத்தில் தருகின்றது.

அல்குர்ஆன், புகாரி, முஸ்லிம் மற்றும் இன்ன பிற ஆதாரப்பூர்வமான ஹதீஸ் நூற்களிருந்து இஸ்ரா, மிஃராஜ் பற்றி தெளிந்த நீரோடையென பளிச்சென்று தெரிகின்ற உண்மை நிகழ்வுகளை மட்டும் இன்ஷா அல்லாஹ் இவ்விதழில் நாம் காணவுள்ளோம்.

இங்கே வாசகர்கள் ஒரு வினாவைத் தொடுக்கலாம். இஸ்ரா, மிஃராஜ் எப்போது நடந்தது என்பதற்குத் துல்லியமான வரலாற்றுக் குறிப்பில்லை எனக் குறிப்பிட்டு விட்டு, வழக்கமாக தொன்று தொட்டு அன்று முதல் இன்று வரை தென்னகத்தில் - இந்தியா, இலங்கை, சிங்கப்பூர், மலேசியா இன்னும் இதர நாடுகளில் ரஜப் மாதம் 27ஐ மிஃராஜ் என்று படு விமரிசையாகக் கொண்டாடி அனுஷ்டிக்கும் போது, இந்தச் சிறப்பிதழ் அதை உறுதி செய்வது போல் ஆகாதா? என்பது தான் அந்த வினா!

நபி (ஸல்) அவர்கள் பிறந்த தின விழா சீசன் வரும் போது, மீலாது விழா தொடர்பான பித்அத்களை மக்களிடம் பிரகாசமாகப் பிரச்சாரம் செய்வது போல் இந்த மிஃராஜுடைய சீசனில் இது பற்றிய உண்மை விபரங்களை மக்களுக்கு வழங்கவிருக்கின்றோம்.

புகாரி, முஸ்லிம் இன்னும் பிற ஆதார நூல்களில் இஸ்ரா, மிஃராஜ் பற்றிய நிகழ்வுகள் அனைத்தையும் உள்ளடக்கி வரும் எந்த ஒரு ஹதீஸையும் நாம் காண முடியவில்லை. மிஃராஜ் பற்றி ஒரு ஹதீஸில் வராத விபரம் மற்றொரு ஹதீஸில் இடம் பெறுகின்றது. அதில் வராத விபரம் வேறொரு ஹதீஸில் வருகின்றது. இது போன்று பல்வேறு ஹதீஸ்களில் இடம் பெறும் பல்வேறு துண்டுகளை இணைத்து ஒரு சரமாகத் தொடுத்து இஸ்ரா, மிஃராஜ் பற்றிய ஒரு தொகுப்பை வழங்க முயற்சித்துள்ளோம்.

இந்த விண்வெளிப் பயணத்தின் போது நடைபெற்ற சம்பவங்களின் வரிசைக் கிரமம் பற்றிய ஒரு செய்தியை இங்கு குறிப்பிடுவது அவசியம். அதாவது, இப்போது நாம் தொகுத்திருக்கும் இந்த வரிசைப்படி தான் மிஃராஜின் போது நிகழ்வுகள் நடைபெற்றன என்று உறுதி கூற முடியாது. ஏனென்றால், ஒரு ஹதீஸில் பைத்துல் மஃமூரைப் பற்றி கூறப்பட்ட பிறகு ஸித்ரத்துல் முன்தஹாவைப் பற்றி கூறப்படுகின்றது. ஆனால் மற்றொரு ஹதீஸில் ஸித்ரத்துல் முன்தஹா பற்றி சொல்லப்பட்ட பிறகு பைத்துல் மஃமூர் இடம் பெறுகின்றது.

இங்கு நாம் கவனிக்க வேண்டிய அம்சம் என்னவென்றால், மிஃராஜின் போது நடைபெற்ற சம்பவங்கள் குறித்து ஆதாரப்பூர்வமான பல்வேறு ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ள செய்திகள் அனைத்தும் உண்மையானவை என்பதை நாம் நம்ப வேண்டும். அவை எந்த வரிசையில் நடைபெற்றன என்பதை நாம் கவனிக்க வேண்டியதில்லை. இவை அனைத்தும் நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் எடுத்துக் காட்டிய அற்புதங்கள் என்பது தான் இங்கு முக்கியமான விஷயமே தவிர, வரிசை ஒரு பெரிய பிரச்சனை அல்ல என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

இவை தவிர, மிஃராஜைப் பற்றி மக்களிடம் நிலவும் தவறான நம்பிக்கைகளைப் பற்றியும், மிஃராஜின் பெயரால் நிலவும் கதைகளைப் பற்றியும் இவ்விதழில் விளக்கப்பட்டுள்ளது.

இஸ்ரா = கஅபாவிருந்து அக்ஸா வரை

மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 17:1)

ஜிப்ரீல் வருகை - வீட்டு முகடு திறக்கப்படுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

"நான் மக்காவில் இருந்த போது என்னுடைய வீட்டு முகடு திறக்கப்பட்டது. (அதன் வழியாக) ஜிப்ரீல் (அலை) இறங்கினார்கள். என்னுடைய நெஞ்சைப் பிளந்தார்கள். அதை ஸம்ஸம் தண்ணீரால் கழுவினார்கள். பின்னர் ஈமான் மற்றும் ஞானத்தால் நிரப்பப்பட்ட ஒரு தங்கத் தட்டைக் கொண்டு வந்து என்னுடைய நெஞ்சில் கொட்டி விட்டு அதை மூடி விட்டார்கள்"

(அறிவிப்பவர்: அபூதர் r(ரலி),

நூல்: புகாரி 349)

(பின்வரும் ஹதீஸில் கஅபாவில் இருக்கும் போது நெஞ்சைப் பிளக்கும் நிகழ்ச்சி நடந்ததாகக் கூறப்படுகின்றது. இரண்டையும் இணைத்துப் பார்க்கையில் நபி (ஸல்) அவர்களை வீட்டிருந்து ஜிப்ரீல் (அலை) கஅபாவிற்கு அழைத்துச் சென்று அங்கு இந்நிகழ்ச்சி நடந்ததாக விளங்கிக் கொள்ளலாம்)

புராக்

"நான் கஅபாவில் (ஹம்சா, ஜஃபர் ஆகிய) இரண்டு மனிதர்களுக்கிடையே (பாதி) தூக்கமாகவும் (பாதி) விழிப்பாகவும் இருந்த போது....(இந்த நிகழ்ச்சி நடந்தது)..... கோவேறுக் கழுதையை விடச் சிறியதும், கழுதையை விடப் பெரியதுமான புராக் எனும் வாகனம் ஒன்று என்னிடம் கொண்டு வரப்பட்டது''

(அறிவிப்பவர்: மாக் பின் ஸஃஸஆ (ரலி),

நூல்: புகாரி 3207)

கடிவாளம் பூட்டப்பட்டு, சேணமிடப்ட்டவாறு புராக் கொண்டு வரப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் அதில் ஏற சிரமப்பட்டார்கள். அப்போது ஜிப்ரீல், "முஹம்மதிடம் நீ ஏன் இவ்வாறு செய்கின்றாய்? அவரை விட அல்லாஹ்விடம் மதிப்பிற்குரிய எவரும் உன் மீது ஏறியதில்லையே'' என்று (அதை நோக்கி) கூறியதும், அதன் மேனி வியர்த்து வழிந்தோடத் துவங்கி விட்டது.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),

நூல்: திர்மிதீ 3056)

"தன் பார்வை எட்டிய தூரத்தில் அது தன் குளம்பை எடுத்து வைக்கின்றது''

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி), நூல்: முஸ்லிம் 234)

மூஸா (அலை) அவர்களைக் காணுதல்

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட இரவில் செம்மண் குன்றுக்கு அருகே மூஸா (அலை) அவர்களைக் கடந்து சென்றேன். அப்போது அவர்கள் தம்முடைய கப்ரில் தொழுது கொண்டிருந்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 4379, அஹ்மத் 12046, நஸயீ 1613

பைத்துல் முகத்தஸிற்குச் செல்தல்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து, சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை (முஹம்மதை) அழைத்துச் சென்றவன் தூயவன். அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 17:1)

பைத்துல் முகத்தஸுக்கு வந்ததும் நபிமார்கள் (வாகனத்தை) கட்டும் வளையத்தில் புராக்கை நான் கட்டினேன். பிறகு பள்ளியில் நுழைந்தேன்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 234, அஹ்மத் 12047)

பைத்துல் முகத்தஸில்...

என்னை நபிமார்களின் கூட்டத்தில் இருக்கக் கண்டேன். அப்போது மூஸா (அலை) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் ஷனூஆ குலத்தைச் சோந்த மனிதரைப் போன்று நல்ல தோற்றமும், நடுத்தர உயரமும் உள்ள மனிதராக இருந்தார்கள். அப்போது ஈஸா (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் மக்களில் கிட்டத்தட்ட உர்வா பின் மஸ்ஊத் சகபீயைப் போன்று இருந்தார்கள். அப்போது இப்ராஹீம் (அலை) அவர்களும் தொழுது கொண்டிருந்தார்கள். அவர்கள் உங்களுடைய தோழரை (முஹம்மத்) போன்றிருந்தார்கள்.

(அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 251)

நான் அழைத்துச் செல்லப்பட்ட இரவில் மூஸா (அலை) ஷனூஆ குலத்தைச் சேர்ந்த மனிதரைப் போன்று பழுப்பு நிறமுடைய உயரமான சுருள் முடி கொண்ட மனிதராகக் கண்டேன். ஈஸா (அலை) அவர்களை நடுத்தர உயரமும் சிகப்பும் வெண்மையும் சார்ந்த மிதமான சரும அமைப்பு கொண்டவர்களாகவும், படிந்த, தொங்கலான தலை முடியுடையவர்களாகவும் கண்டேன். நரகத்தின் காவலரான மாக்கையும், (இறுதிக் காலத்தில் வரவிருக்கும்) தஜ்ஜாலையும் கண்டேன். இவையெல்லாம் அல்லாஹ் எனக்குக் காண்பித்த அவனுடைய சான்றுகளில் அடங்கியவை. "அவரை (மூஸாவை) சந்தித்ததில் நீர் சந்தேகம் கொள்ளாதீர்'' (அல்குர்ஆன் 32:23)

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்கள்: புகாரி 3239, முஸ்லிம் 239)

நபிமார்களுக்கு இமாமாக நின்று தொழுவித்தல்

அப்போது தொழுகைக்கு நேரமாகி விட்டது. நான் அவர்களுக்குத் தொழுவித்தேன். நான் தொழுது முடித்ததும், "முஹம்மதே! இதோ மாக்! நரகத்தின் அதிபதி! இவருக்கு ஸலாம் சொல்லுங்கள்'' என்று ஒருவர் சொன்னார். உடனே அவர் பக்கம் திரும்பினேன். அவர் முதலில் எனக்கு (ஸலாம்) சொல்லி விட்டார்.

(முஸ்லிம் 251)

(இந்தச் செய்தி இப்னு ஜரீர் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது)

மிஃராஜ் விண்ணுலகப் பயணம்

ஜிப்ரீல் (அலை) என் கையைப் பிடித்து என்னை அழைத்துக் கொண்டு வானத்திற்கு ஏறிச் சென்றார்கள். (பூமிக்கு) அண்மையிலுள்ள (முதல்) வானத்தை அடைந்த போது, வானத்தின் காவலரிடம், "திறங்கள்'' என்று கூறினார்கள். அதற்கு அவர், "யார் அது?'' என்று கேட்டார். "இதோ ஜிப்ரீல்'' என்று ஜிப்ரீல் (அலை) பதிலளித்தார். அதற்கு "உங்களுடன் வேறெவராவது இருக்கின்றாரா?'' என்று கேட்கப்பட்டது. அவர், "என்னுடன் முஹம்மது இருக்கின்றார்'' என்று பதிலளித்தார். "(அவரை அழைத்து வரச் சொல்லி) அவரிடம் (உம்மை) அனுப்பப்பட்டிருந்ததா?'' என்று கேட்கப்பட்டது. அவர், "ஆம், திறங்கள்'' என்றார்.

(முதல் வானத்தின் கதவு திறக்கப்பட்டு) நாங்கள் வானத்தில் மேலே சென்ற போது அங்கே ஒரு மனிதர் இருந்தார். அவரது வலப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். இடப்பக்கத்திலும் மக்கள் இருந்தனர். அவர் தனது வலப்பக்கம் பார்க்கும் போது சிரித்தார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுதார். (பிறகு என்னைப் பார்த்து), "நல்ல இறைத் தூதரே! வருக! நல்ல மகனே வருக!'' என்று கூறினார். நான், "ஜிப்ரீலே! இவர் யார்?'' என்று கேட்டேன். அவர், "இவர் ஆதம் (அலை) அவர்கள். அவருடைய வலப்பக்கமும் இடப்பக்கமும் இருக்கும் மக்கள் அவருடைய சந்ததிகள். அவர்களில் வலப்பக்கம் இருப்பவர் சொர்க்கவாசிகள். இடப்பக்கத்தில் இருப்பவர்கள் நரகவாசிகள். ஆகவே தான் அவர் வலப்பக்கத்திலுள்ள தம் மக்களைப் பார்க்கும் போது சிரிக்கின்றார். இடப்பக்கம் பார்க்கும் போது அழுகின்றார்'' என்று பதிலளித்தார்.

(அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: புகாரி 3342)

பிறகு நாங்கள் இரண்டாம் வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.

பிறகு நான் ஈஸா (அலை) அவர்களிடமும், யஹ்யா (அலை) அவர்களிடமும் சென்றேன். அவ்விருவரும், "சகோதரரும் நபியுமாகிய உங்களின் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் மூன்றாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.

பிறகு நான் யூசுஃப் (அலை) அவர்களிடம் அழைத்துச் செல்லப்பட்டேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் நான்காவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.

நான் இத்ரீஸ் (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்களுக்கு ஸலாம் உரைத்தேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள்.

(அறிவிப்பவர்: மாக் பின் ஸஃஸஆ (ரலி),

நூல்: புகாரி 3207)

"அவரை உயரமான தகுதிக்கு உயர்த்தினோம்'' என்ற (19:57) வசனத்தை ஓதினேன்.

(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)

பிறகு நாங்கள் ஐந்தாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.

பிறகு நாங்கள் ஹாரூன் (அலை) அவர்களிடத்தில் சென்றோம். நான் அவர்களுக்கு ஸலாம் சொன்னேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல்வரவாகட்டும்'' என்று சொன்னார்கள்.

பிறகு நாங்கள் ஆறாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல்வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.

நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், "சகோதரரும் நபியுமாகிய உங்கள் வரவு நல் வரவாகட்டும்'' என்று வாழ்த்தினார்கள். நான் அவர்களைக் கடந்து சென்ற போது அவர்கள் அழுதார்கள். "நீங்கள் ஏன் அழுகின்றீர்கள்?'' என்று அவர்களிடம் கேட்கப்பட்டது. அவர், "இறைவா! என் சமுதாயத்தினரில் சொர்க்கம் புகுபவர்களை விட அதிகமானவர்கள் எனக்குப் பிறகு அனுப்பப்பட்ட இந்த இளைஞரின் சமுதாயத்திருந்து சொர்க்கம் புகுவார்கள்'' என்று பதிலளித்தார்.

பிறகு நாங்கள் ஏழாவது வானத்திற்குச் சென்றோம். "யார் அது?'' என்று வினவப்பட்டது. அவர், "ஜிப்ரீல்'' என்று பதிலளித்தார். "உங்களுடன் இருப்பவர் யார்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "முஹம்மத்'' என்று பதிலளித்தார். ''அவரிடம் ஆள் அனுப்பப்பட்டதா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "ஆம்'' என்று பதிலளித்தார். "அவரது வரவு நல் வரவாகட்டும். அவரது வருகை மிக நல்ல வருகை'' என்று சொல்லப்பட்டது.

நான் இப்ராஹீம் (அலை) அவர்களிடம் சென்று ஸலாம் உரைத்தேன். அவர்கள், "மகனும், நபியுமாகிய உங்கள் வரவு நல் வரவாகட்டும்'' என்று சொன்னார்கள். பிறகு பைத்துல் மஃமூர் எனும் வளமான இறையில்லம் எனக்குக் காட்டப்பட்டது.

(புகாரி 3207)

இப்ராஹீம் (அலை) அவர்கள் பைத்துல் மஃமூரில் சாய்ந்து கொண்டிருந்தார்கள்.

(முஸ்லிம் 234, அஹ்மத் 12047)

பைத்துல் மஃமூர்

நான் அதைக் குறித்து ஜிப்ரீடம் கேட்டேன். அவர், "இது தான் அல் பைத்துல் மஃமூர் ஆகும். இதில் ஒவ்வொரு நாளும் எழுபதாயிரம் வானவர்கள் தொழுகின்றார்கள். அவர்கள் இதிருந்து வெளியே சென்றால் திரும்ப இதனிடம் வர மாட்டார்கள். அதுவே அவர்கள் கடைசியாக நுழைந்ததாகி விடும்'' என்று கூறினார்.

ஸித்ரத்துல் முன்தஹா

பிறகு "ஸித்ரத்துல் முன்தஹா' (என்ற இலந்தை மரம்) எனக்குக் காட்டப்பட்டது. அதன் பழங்கள் ஹஜ்ர் என்ற இடத்தின் கூஜாக்கள் போல் இருந்தன. அதன் இலைகள் யானைகளின் காதுகள் போல் இருந்தன.

(புகாரி 3207)

அல்லாஹ்வின் கட்டளைப்படி அதை மூட வேண்டியது மூடியதும் அது சிவப்பு மாணிக்கங்களாக அல்லது பச்சை மரகதங்களாக அல்லது அவற்றைப் போன்றதாக அது மாறி விட்டது.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),

நூல்: அஹ்மத் 11853)

அதன் வேர் பகுதியில் நான்கு ஆறுகள் இருந்தன. (ஸல்ஸபீல், கவ்ஸர் ஆகிய) இரண்டு ஆறுகள் உள்ளே இருந்தன. மற்றும் (யூப்ரடீஸ், நைல் ஆகிய) இரண்டு ஆறுகள் வெளியே இருந்தன. நான் ஜிப்ரீடம் அவற்றைக் குறித்துக் கேட்டேன். அவர், "உள்ளேயிருப்பவை இரண்டும் சொர்க்கத்தில் உள்ளவையாகும். வெளியே இருப்பவை இரண்டும் நைல் நதியும், யூப்ரடீஸ் நதியும் ஆகும்'' என்று பதிலளித்தார்.

(புகாரி 3207)

மூன்று பாத்திரங்களில் மூன்று பானங்கள்

அப்போது என்னிடம் மூன்று கிண்ணங்கள் கொண்டு வரப்பட்டன. பால் கிண்ணம், தேன் கிண்ணம், மதுக் கிண்ணம் ஆகியன தாம் அவை. நான் பால் இருந்த கிண்ணத்தை எடுத்து அருந்தினேன். அப்போது என்னிடம், "நீங்களும் உங்களுடைய சமுதாயத்தாரும் இயற்கை மரபை அடைந்துள்ளீர்கள்'' என்று சொல்லப்பட்டது.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),

நூல்: புகாரி 5610)

சிர்க்க வைக்கும் ஜிப்ரீன் இயற்கைத் தோற்றம்

நட்சத்திரம் மறையும் போது அதன் மேல் ஆணை! உங்கள் தோழர் (முஹம்மத்) பாதை மாறவில்லை. வழி கெடவுமில்லை. அவர் மனோ இச்சைப்படிப் பேசுவதில்லை. அ(வர் பேசுவ)து அறிவிக்கப்படும் செய்தியைத் தவிர வேறில்லை.

அழகிய தோற்றமுடைய வமை மிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்லின் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்தது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:1-18)

(இங்கு நபி (ஸல்) அவர்கள் பார்த்தது அல்லாஹ்வைத் தான் என்ற கருத்தில் மஸ்ரூக் என்பார், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் வினவிய போது ஆயிஷா (ரலி) கூறியதாவது) இந்தச் சமுதாயத்தில் முதன் முதலில் விசாரித்தது நான் தான். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அவர் ஜிப்ரீல் தான். ஜிப்ரீலை அவர் படைக்கப்பட்ட அந்த இயற்கையான தோற்றத்தில் மேற்கண்ட அந்த இரு சந்தர்ப்பங்களில் தவிர வேறு சந்தர்ப்பத்தில் நான் கண்டது கிடையாது'' என்று சொன்னார்கள்.

(அறிவிப்பவர்: மஸ்ரூக்,

நூல்: முஸ்லிம் 259)

(புகாரியில் 4855வது ஹதீஸிலும் இது கூறப்பட்டுள்ளது. இது தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைக் கண்டார்களா? என்ற தலைப்பில் விரிவாகப் பார்ப்போம்)

நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),

நூல்: புகாரி 4856)

பச்சை இலைகளில் மழைத் துளிகள் நிற்பது போல், முத்தைப் போன்று ஜிப்ரீல் தன் கால்களின் சுவடு தரையில் படியாதவாறு நின்றார்கள்.

(அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி),

நூல்: இப்னுஜரீர்)

சுவனத்தில் நுழைக்கப்படுதல்

பின்னர் நான் சுவனத்தில் நுழைக்கப்பட்டேன். அதில் முத்துக்களினால் ஆன கயிறுகளைப் பார்த்தேன். சுவர்க்கத்தின் மண் கஸ்தூரியாக இருந்தது.

(அறிவிப்பவர்: அபூதர் (ரலி),

நூல்: புகாரி 349)

அல்கவ்ஸர் தடாகம்

நான் சொர்க்கத்தில் பயணம் செய்தேன். அப்போது அங்கு ஓர் ஆறு இருந்தது. அதன் இரு மருங்கிலும் துளையுள்ள முத்துக் கலசங்கள் காணப்பட்டன. அப்போது நான், "ஜிப்ரீலே! இது என்ன?'' என்று கேட்டேன். அவர், "இது தான் உங்கள் இறைவன் உங்களுக்கு வழங்கிய அல்கவ்ஸர்'' என்று கூறினார். அதன் மண் அல்லது அதன் வாசனை நறுமணம் மிக்க கஸ்தூரியாகும்.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல்கள்: புகாரி 6581, அஹ்மத் 11570)

நான் சொர்க்கத்தை எட்டிப் பார்த்தேன். அங்கு குடியிருப்போரில் அதிகமானவர்களாக ஏழைகளையே கண்டேன். நரகத்தையும் எட்டிப் பார்த்தேன். அதில் குடியிருப்போரில் அதிகமானவர்களாக பெண்களையே கண்டேன்.

அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுசைன் (ரலி),

நூல்: புகாரி 3241, 5198, 6449, 6546, முஸ்லிம் 4920, திர்மிதீ 2527, 2528, அஹ்மத் 1982

மகத்துவமும், கண்ணியமும் நிறைந்த இறைவன் என்னை மிஃராஜுக்கு அழைத்துச் சென்ற போது நான் ஒரு சமுதாயத்தைக் கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பினால் நகங்கள் இருந்தன. (அவற்றால்) தங்கள் முகங்களையும், மார்புகளையும் அவர்கள் காயப்படுத்திக் கொண்டிருந்தனர். "ஜிப்ரீலே! இவர்கள் யார்?'' என்று நான் கேட்டேன். "இவர்கள் (புறம் பேசி) மக்களின் இறைச்சி சாப்பிட்டு, அவர்களின் தன்மான உணர்வுகளைக் காயப்படுத்திக் கொண்டிருந்தவர்கள்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி)

நூல்கள்: அபூதாவூத் 4235, அஹ்மத் 12861

இறுதி எல்லையும் இறை அலுவலகமும்

ஜிப்ரீல் என்னை அழைத்துக் கொண்டு மேலே சென்றார்கள். நான் ஓர் உயரமான இடத்திற்கு வந்த போது, அங்கு நான் (வானவர்களின்) எழுதுகோல்களின் ஓசையைச் செவியுற்றேன்.

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: புகாரி 3342)

ஸித்ரத்துல் முன்தஹா ஒரு விளக்கம்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்ட போது ஸித்ரத்துல் முன்தஹா வரை கொண்டு செல்லப்பட்டார்கள். இது ஆறாவது வானத்தில் அமைந்திருக்கின்றது. பூமியிருந்து வானத்திற்கு ஏற்றிச் செல்லப்படுபவை இங்கு வந்து சேர்ந்ததும் கைப்பற்றப்படுகின்றன. அதற்கு மேருந்து இறங்குபவை இங்கு வந்து சேர்ந்ததும் கைப்பற்றப்படுகின்றன. ஸித்ரத்துல் முன்தஹாவை தங்க விரிப்பு மூடியிருக்கும்.

(அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி),

நூல்: முஸ்லிம் 252)

(குறிப்பு: முஸ்லிம் 234வது ஹதீஸில் ஸித்ரத்துல் முன்தஹா 7வது வானத்தில் இருப்பதாகக் கூறப்படுகின்றது. ஆனால் இங்கு 6வது வானத்தில் என்று இடம் பெறுகின்றது. இதற்கு ஹாஃபிழ் இப்னு ஹஜர் அவர்கள் தமது ஃபத்ஹுல் பாரியில், ஸித்ரத்துல் முன்தஹா ஆறாவது வானத்தில் தொடங்கி ஏழாவது வானத்தில் அதன் கிளைகள் விரிந்து கிடக்கின்றது என்று கருத்துக் கொள்ளலாம் என்று விளக்கமளிக்கின்றார்கள்)

அல்லாஹ் விதித்த கடமை

பிறகு என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப்பட்டன. நான் முன்னேறிச் சென்று மூஸா (அலை) அவர்களை அடைந்தேன். அவர்கள், "என்ன செய்தீர்கள்?'' என்று கேட்டார்கள். நான், "என் மீது ஐம்பது தொழுகைகள் கடமையாக்கப் பட்டுள்ளன'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "எனக்கு மக்களைப் பற்றி உங்களை விட அதிகமாகத் தெரியும். நான் பனூ இஸ்ராயீல்களுடன் பழகி நன்கு அனுபவப்பட்டுள்ளேன். உங்கள் சமுதாயத்தினர் (இதைத்) தாங்க மாட்டார்கள். ஆகவே உமது இறைவனிடம் திரும்பிச் சென்று அவனிடம் குறைத்துத் தரும்படி கேளுங்கள்'' என்று சொன்னார்கள்.

நான் திரும்பச் சென்று இறைவனிடம் அவ்வாறே கேட்டேன். அதை அவன் நாற்பதாக ஆக்கினான். பிறகும் முதல் சொன்னவாறே நடந்தது. மீண்டும் முப்பதாக ஆக்கினான். மீண்டும் அதைப் போலவே நடக்க இறைவன் இருபதாக ஆக்கினான். பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்ற போது அவர்கள் முன்பு போலவே சொல்ல, (இறைவனிடம் நான் மீண்டும் குறைத்துக் கேட்ட போது) அவன் அதை ஐந்தாக ஆக்கினான்.

பிறகு நான் மூஸா (அலை) அவர்களிடம் சென்றேன். அவர்கள், "என்ன செய்தீர்கள்?'' என்று கேட்க, "அதை இறைவன் ஐந்தாக ஆக்கி விட்டான்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள் முன்பு கூறியதைப் போலவே கூறினார்கள். அதற்கு, "நான் ஒப்புக் கொண்டு விட்டேன்'' என்று பதிலளித்தேன்.

அப்போது, "நான் எனது விதியை அமல் படுத்தி விட்டேன். என் அடியார்களுக்கு இலேசாக்கி விட்டேன். ஒரு நற்செயலுக்குப் பத்து நன்மைகளை வழங்குவேன்'' என்று அறிவிக்கப்பட்டது.

(புகாரி 3207)

"ஒவ்வொரு பகல், இரவிலும் அவை ஐந்து நேரத் தொழுகைகள்! ஒவ்வொன்றுக்கும் பத்து நன்மைகள் (வீதம்) ஐம்பதாகும். ஒருவர் ஒரு நன்மையைச் செய்ய வேண்டும் என்று (மனதில்) எண்ணி விட்டாலே - அவர் அதைச் செய்யாவிட்டாலும் - அவருக்காக ஒரு முழு நன்மை பதிவு செய்யப்படுகின்றது. அதைச் செயல்படுத்தி விட்டால் அவருக்கு அது பத்து நன்மைகளாகப் பதியப்படுகின்றது.

ஒருவர் ஒரு தீமையைச் செய்ய வேண்டும் என்று எண்ணி அதைச் செய்யாமல் விட்டு விட்டால் எதுவும் பதியப்படுவதில்லை. அவர் அந்தத் தீமையைச் செய்து விட்டால் அதற்காக ஒரேயொரு குற்றமே பதிவு செய்யப்படுகின்றது'' என்று அல்லாஹ் கூறினான்.

(அறிவிப்பவர்: அனஸ் பின் மாக் (ரலி),

நூல்: முஸ்லிம் 234)

அப்போது அவன் தன் தூதருக்கு மூன்றை வழங்கினான்.

1. ஐந்து நேரத் தொழுகைகள்

2. சூரத்துல் பகராவில் இறுதி வசனங்கள்

3. நபி (ஸல்) அவர்களின் சமுதாயத்தைச் சார்ந்த, அல்லாஹ்வுக்கு எதையும் இணை வைக்காதவருக்கு பெரும் பாவங்கள் மன்னிப்பு

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)

நூல்கள்: முஸ்லிம் 252, திர்மிதீ 3198, நஸயீ 448, அஹ்மத் 3483

குறைஷிகள் நம்ப மறுத்தல்

என்னை குறைஷிகள் நம்ப மறுத்த போது நான் கஅபாவின் ஹிஜ்ர் பகுதியில் நின்றேன். அல்லாஹ் எனக்கு பைத்துல் முகத்தஸைக் காட்சியளிக்கச் செய்தான். அப்போது அதைப் பார்த்தபடியே நான் அவர்களுக்கு அதன் அடையாளங்களை விவரிக்கலானேன்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்துல்லாஹ் (ரலி)

நூல்: புகாரி 3886

நான் மிஃராஜுக்கு அழைத்துச் செல்லப்பட்டு காலையில் மக்காவில் இருந்த போது என்னுடைய இந்த (பயண) விஷயமாக நான் தாங்க முடியாத கவலை கொண்டிருந்தேன். மக்கள் என்னைப் பொய்யராக்கி விடுவார்கள் என்று அறிந்திருந்தேன் (என்று கூறும் நபி (ஸல்) அவர்கள்) தனியாகக் கவலையுடன் அமர்ந்திருக்கும் போது, அங்கு சென்று கொண்டிருந்த அல்லாஹ்வின் விரோதி அபூஜஹ்ல் நபி (ஸல்) அவர்களின் அருகில் வந்து அமர்ந்தான்.

நபி (ஸல்) அவர்களிடம், "என்ன? ஏதேனும் புதுச் செய்தி உண்டா?'' என்று கிண்டலாகக் கேட்டான். நபி (ஸல்) அவர்கள், ஆம் என்றார்கள். அது என்ன? என்று அவன் கேட்டான். "இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவன் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்றான். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

தனது கூட்டத்தாரை அழைத்து வந்ததும் (அவர்களது முன்னிலையில்) நபி (ஸல்) அவர்கள் அதை மறுத்து விடுவார்களோ என்று பயந்த அவன், அந்தச் செய்தியைப் பொய்ப் படுத்துவதாகக் காட்டிக் கொள்ளவில்லை.

"உம்முடைய கூட்டத்தாரை நான் அழைத்துக் கொண்டு வந்தால் என்னிடம் அறிவித்ததை அவர்களிடமும் அறிவிப்பீரா?'' என்று கேட்டான். அதற்கும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள்.

உடனே அபூஜஹ்ல், "பனீ கஅப் பின் லுவை கூட்டத்தாரே! வாருங்கள்!'' என்று கூறினான். அவனை நோக்கி சபைகள் கிளர்ந்தெழுந்து வரத் துவங்கி அவ்விருவருக்கும் மத்தியில் அமர்ந்தனர். "என்னிடம் அறிவித்ததை உம்முடைய கூட்டத்தாரிடம் அறிவியுங்கள்'' என்று அபூஜஹ்ல் கூறினான்.

"இன்று இரவு நான் அழைத்துச் செல்லப்பட்டேன்'' என்று கூறினார்கள். எங்கே? என்று அவர்கள் வினவிய போது, "பைத்துல் முகத்தஸ்'' என்று பதிலளித்தார்கள். "அதற்குப் பிறகு இப்போது நீங்கள் எங்களுடன் இருக்கின்றீர்கள்?'' என்று அக்கூட்டத்தினர் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம் என்றார்கள்.

சிலர் கை தட்டியவர்களாகவும், சிலர் இதைக் கேட்டு ஆச்சரியமடைந்து தன் தலையில் கை வைத்துக் கொண்டும், "நீர் அந்தப் பள்ளியை எங்களிடம் வர்ணனை செய்ய முடியுமா?'' என்று கேட்டனர். அந்த ஊருக்குச் சென்று பள்ளியைப் பார்த்தவரும் அந்தச் சபையில் இருந்தனர்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நான் வர்ணிக்கத் துவங்கி, தொடர்ந்து வர்ணித்துக் கொண்டிருக்கும் போது வர்ணனையில் எனக்கு சிறிது தடுமாற்றம் ஏற்பட்டு விட்டது. நான் பார்த்துக் கொண்டிருக்கும் போது இகால் அல்லது உகைல் வீட்டு அருகில் பள்ளி கொண்டு வந்து வைக்கப்பட்டது. இப்போது அதை நான் பார்த்துக் கொண்டு, அதைப் பார்த்தவாறே வர்ணித்தேன். நான் நினைவில் வைத்திராத வர்ணனையும் இத்துடன் அமைந்திருந்தது. (இதைக் கேட்ட) மக்கள், "வர்ணனை விஷயத்தில் அல்லாஹ்வின் மீதாணையாக இவர் சரியாகத் தான் சொன்னார்'' என்று கூறினர்.

(அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: அஹ்மத் 2670)

மிஃராஜும் தவறான நம்பிக்கைகளும்

பி.எம். முஹம்மது அலீ ரஹ்மானி

மிஃராஜ் என்பது நபி (ஸல்) அவர்களின் நபித்துவ வாழ்வில் நடந்த மிகப் பெரிய அற்புதமாகும். வேறு எந்த மனிதருக்கும், ஏன் வேறு எந்த நபிக்கும் கூட வழங்கப்படாத மாபெரும் அற்புதமாக இந்த விண்ணுலகப் பயணம் அமைந்துள்ளது.

மிஃராஜ் ஓர் அற்புதம்

மஸ்ஜிதுல் ஹராமிருந்து சுற்றுப்புறத்தைப் பாக்கியம் மிக்கதாக நாம் ஆக்கிய மஸ்ஜிதுல் அக்ஸா வரை தனது சான்றுகளைக் காட்டுவதற்காக ஓர் இரவில் தனது அடியாரை அழைத்துச் சென்றவன் தூயவன் அவன் செவியுறுபவன் பார்ப்பவன். (17:1)

ஓர் இரவில் மஸ்ஜிதுல் ஹராம் என்ற மக்காவிருந்து ஜெருஸலத்திலுள்ள மஸ்ஜிதுல் அக்ஸா வரை அழைத்துச் சென்ற செய்தியை இவ்வசனத்தில் அல்லாஹ் கூறிக் காட்டுகிறான்.

ஒரேயொரு இரவில் இவ்வளவு பெரிய தொலைவைக் கடந்து செல்வது என்பது சாத்தியமற்ற செயல் என்று பலர் நினைத்தாலும் ரப்புல் ஆலமீனாகிய இறைவனுக்கு இது சாத்தியமானதே!

அழகிய தோற்றமுடைய வமைமிக்கவர் (ஜிப்ரில்) அதைக் கற்றுக் கொடுக்கிறார். அவர் (தெளிவான) அடிவானத்தில் இருக்கும் நிலையில் நிலை கொண்டார். பின்னர் இறங்கி நெருங்கினார். அது வில்லின் இரு முனையளவு அல்லது அதை விட நெருக்கமாக இருந்நது. தனது அடியாருக்கு அவன் அறிவிப்பதை அவன் அறிவித்தான். அவர் பார்த்ததில் அவர் உள்ளம் பொய்யுரைக்கவில்லை. அவர் கண்டது பற்றி அவரிடத்தில் தர்க்கம் செய்கிறீர்களா?. (53:5-12)

ஜிப்ரில் என்னும் வானவரை நபி (ஸல்) அவர்கள் முதன் முதல் சந்தித்ததை இறைவன் மேற்கூறிய வசனங்களில் கூறுகின்றான். இந்தச் சந்திப்பு நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது நடந்தது.

இந்த வசனங்களைத் தொடர்ந்து வரும் வசனங்களில் ஜிப்ரீலை மற்றொரு முறை நபி (ஸல்) அவர்கள் சந்தித்ததாகக் கூறுகிறான்.

ஸித்ரதுல் முன்தஹாவுக்கு அருகில் மற்றொரு தடவையும் அவரை இறங்கக் கண்டார். அங்கே தான் சொர்க்கம் எனும் தங்குமிடம் உள்ளது. அந்த இலந்தை மரத்தை மூட வேண்டியது மூடிய போது, அவரது பார்வை திசை மாறவில்லை; கடக்கவுமில்லை. தமது இறைவனின் பெரும் சான்றுகளை அவர் கண்டார். (53:13-18)

இந்தச் சந்திப்பு ஸித்ரத்துல் முன்தஹா என்னும் இடத்தில் நடந்ததாகவும் அந்த இடத்தில் தான் சுவர்க்கம் இருப்பதாகவும் கூறுகிறான். நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்னும் விண்வெளிப் பயணம் சென்றதைத் தான் இவ்வசனங்கள் கூறுகின்றன. இல்லையெனில் வானுலகில் உள்ள ஸித்ரத்துல் முன்தஹாவுக்கு அருகில் நபி (ஸல்) அவர்கள் ஜிப்ரீலைப் பார்த்திருக்க முடியாது. எனவே இதுவும் மிஃராஜ் பற்றியே கூறுகிறது.

(முஹம்மதே) உமக்கு நாம் காட்டிய காட்சியை குர்ஆனில் மனிதர்களுக்கு சோதனையாகவே ஆக்கியுள்ளோம். (17:60)

இவ்வசனத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு ஒரு காட்சியைக் காட்டி அதை மனிதர்களுக்கு சோதனையாக அமைத்ததாக அல்லாஹ் குறிப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் விண்ணுலகப் பயணத்திற்குக் கொண்டு செல்லப்பட்டு அங்கு பல காட்சிகளைக் கண்டார்கள். அந்தக் காட்சிகளை மக்களிடம் சொன்ன போது மக்கள் அதை ஏற்க மறுத்தனர்.

நபி (ஸல்) அவர்களை ஏற்றிருந்த பலர் இந்த நிகழ்ச்சியைக் கூறிய பொழுது மதம் மாறிச் சென்றனர். அதைத் தான் இவ்வசனத்தில் மனிதர்களுக்குச் சோதனையாகவே அக்காட்சியை உமக்குக் காட்டினோம் என்று குறிப்பிடுகிறான்.

அக்காட்சியை நபி (ஸல்) அவர்களுக்குக் காட்டி அவர் மக்களுக்கு கூறும் பொழுது மக்கள் நம்புகிறார்களா? என்று சோதித்து உறுதியான நம்பிக்கை உள்ளவர்கள் யார்? பலவீன நம்பிக்கை உள்ளவர்கள் யார்? என்பதை அடையாளம் காட்ட இதைச் செய்ததாக இறைவன் குறிப்பிடுகிறான்.

எனவே நபி (ஸல்) அவர்களின் வாழ்வில் உண்மையான இறை நம்பிக்கையாளர்களைப் பிரித்து அடையாளம் காட்டிய நிகழ்ச்சியாக மிஃராஜ் என்னும் நிகழ்ச்சி அமைந்துள்ளது.

மிஃராஜ் என்னும் விண்ணுலகப்பயணம் பற்றி ஏராளமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றைப் பற்றி இந்த இதழில் விரிவாக விளக்கப்பட்டுள்ளது. இந்த அற்புத நிகழ்வைப் பற்றி முஸ்லிம்களிடம் பரவலாக நிலவி வரும் தவறான நம்பிக்கைகளை அடையாளம் காட்டுவதே இந்தக் கட்டுரையின் நோக்கம்.

மிஃராஜ் நடந்தது எப்போது?

மிஃராஜ் பயணம் இந்த நாளில் தான் நடந்தது என்று எவராலும் குறிப்பிட்டுச் சொல்ல முடியாது. ஏனென்றால் அறிஞர்கள் இந்த விஷயத்தில் கருத்து வேறுபாடு கொண்டுள்ளனர். இதற்குச் சரியான ஆதாரம் குர்ஆனிலும், ஹதீஸிலும் இல்லை

நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக அனுப்பப்படுவதற்கு சுமார் பத்து வருடங்களுக்கு முன்பே மிஃராஜ் நடந்து விட்டது என்று வரலாற்று ஆசிரியர் இப்னு இஸ்ஹாக் என்பவர் குறிப்பிடுகின்றார்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவுக்கு ஹிஜ்ரத் செய்வதற்கு ஒரு வருடத்திற்கு முன்பு நடைபெற்றது என ஸுஹ்ரீ அறிவிப்பதாக பைஹகீயில் இடம் பெற்றுள்ளது.

ஹிஜ்ரத் நடப்பதற்கு 16 மாதங்களுக்கு முன்னால் தொழுகை கடமையாக்கப் பட்டது. எனவே துல்காயிதா மாதத்தில் தான் மிஃராஜ் நடந்தது என்று இஸ்மாயீல் ஸதீ என்பவர் அறிவிப்பதாக ஹாகிமில் கூறப்பட்டுள்ளது.

உர்வா, ஸுஹ்ரீ ஆகியோர் ரபிய்யுல் அவ்வல் மாதம் நடைபெற்றதாகக் கூறுகின்றார்கள்.

யானை ஆண்டில் திங்கட்கிழமை ரபிய்யுல் அவ்வல் பிறை 12ல் மிஃராஜ் நடைபெற்றது என்று ஜாபிர், இப்னு அப்பாஸ் (ரலி) ஆகியோர் கூறுகின்றார்கள்.

ரஜப் மாதம் 27ல் நடைபெற்றது என்று ஹாபிழ் அப்துல் கனி இப்னு ஸுரூருல் முகத்தஸ் கூறுகின்றார். ரஜப் மாதம் முதல் ஜும்ஆ இரவில் நடைபெற்றது என்று வேறு சிலர் குறிப்பிடுகின்றார்கள்.

இவற்றில் எதற்குமே எந்த அடிப்படையும் கிடையாது என்று இமாம் இப்னு கஸீர் தமது பிதாயா வன்னிஹாயாவில் குறிப்பிடுகின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களின் விண்ணுலப் பயணம் எந்த ஆண்டு, எந்த மாதத்தில், எந்த நாளில் நடைபெற்றது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் ஆதாரம் இல்லை.

எனவே இந்த விண்ணுலகப் பயணம் நடந்தது உண்மை என்று நம்பி அல்லாஹ்வின் வல்லமையை நாம் ஈமான் கொள்ள வேண்டுமே தவிர அது எந்த நாளில் நடைபெற்றது என்பதை ஆராய்ந்து பார்க்க வேண்டிய அவசியம் இல்லை. அந்த நிகழ்ச்சி நடந்த நாளுக்கு சிறப்பு இருந்தால் அந்த நாளை தெளிவாக அறிவித்து, ஒவ்வொரு ஆண்டும் அதைக் கொண்டாட வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் நமக்குக் கட்டளையிட்டிருப்பார்கள். ஆனால் இதற்கென்று குறிப்பிட்ட நாளில், குறிப்பிட்ட அமல்களைச் செய்வதற்கு அல்லாஹ்வோ அவன் தூதர் (ஸல்) அவர்களோ கூறிடவில்லை

நபி (ஸல்) அவர்களோ, நபித்தோழர்களோ அந்நாளில் சிறப்பாக எந்த ஓரு அமலையும் செய்ததாக எந்த ஹதீஸ் குறிப்பும் கிடைக்கவில்லை. அந்த நிகழ்ச்சி எந்த நாளில் நடந்தது என்று அல்லாஹ்வும் அவனுடைய துôதருமே குறிப்பிடாத போது எப்படி நம்மால் கணிக்க முடியும்?

மிஃராஜ் இரவின் பெயரால் பித்அத்கள்

எல்லா வணக்க வழிபாடுகளிலும் பித்அத் எனும் புதுமையைப் புகுத்தி விட்ட இந்தச் சமுதாயம் மிஃராஜின் பெயராலும் பல்வேறு பித்அத்களைச் செய்து வருகின்றது.

ரஜப் 27ம் இரவு தான் இந்த மிஃராஜ் நடைபெற்றது என்று தவறாக விளங்கிக் கொண்டு, அந்த இரவில் மார்க்கம் கற்றுத் தராத பல நூதன அனுஷ்டானங்களை பித்அத்தான விஷயங்களைச் செய்கின்றனர்.

"மிஃராஜ் இரவில் வானத்திருந்து ஆயிரக்கணக்கான வானவர்கள் இறங்கி இறையொளியைத் தட்டில் ஏந்தி, பூமிக்கு இறங்கி, ஒவ்வொரு வீட்டிலும் நுழைந்து, இறையோனின் நினைவில் ஈடுபட்டுள்ளவர் மீது இறையொளியைப் பொழிகின்றனர்'' என்று எந்த அடிப்படையும் ஆதாரமும் இல்லாமல் சிலர் எழுதி வைத்துள்ளனர்.

இதனால் சிறப்புத் தொழுகைகள், சிறப்பு நோன்புகள், உம்ராக்கள், தர்மங்கள், பித்அத்தான காரியங்களான ராத்திப் மஜ்ஸ்கள், மவ்த் வைபவங்கள் போன்ற காரியங்களைச் செய்து தீமையைச் சம்பாதிப்பதை பரவலாக நடைமுறைப்படுத்தி வருகின்றார்கள்.

அந்த இரவில் இவ்வாறு எழுந்து நின்று தொழுதால் தனிச் சிறப்பு உண்டு என்று எண்ணுகின்றனர். எப்பொழுதும் வழமையாக ஒருவர் இரவில் தொழுது வருகிறாரென்றால் அவ்விரவில் தொழுவது தவறல்ல. ஆனால் பிரத்யேகமாக இந்த இரவுக்கு தனிச் சிறப்பு இருக்கின்றது என்று நினைத்து வணங்குவது தான் தவறு.

அதிலும் வழக்கமான தஹஜ்ஜத் தொழுகையைத் தொழுதால் கூட பரவாயில்லை. புதிய புதிய முறைகளில் தொழுகையைத் தாங்களாக உருவாக்கி தொழுவது தான் இதில் வேதனைக்குரிய விஷயம்.

6 ஸலாமைக் கொண்டு 12 ரக்அத் தொழ வேண்டும். அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் குல்ஹுவல்லாஹு சூராவை 5 தடவை ஓத வேண்டும். 3ம் கமா 100 தடவையும், இஸ்திஃபார் 100 தடவையும் ஓத வேண்டும்.

3 ஸலாமைக் கொண்டு 6 ரக்அத் தொழ வேண்டும். ஒவ்வொரு ரக்அத்திலும் 7 தடவை குல்ஹுவல்லாஹு சூராவை ஓத வேண்டும்.

இரண்டு ரக்அத் தொழ வேண்டும். அதில் அலம் தர கைஃபவும், ஈலாஃபி குறைஷ் சூராவை ஓத வேண்டும் என்றெல்லாம் மனதிற்குத் தோன்றிய படி தொழுகை முறையை மாற்றி, இதைத் தொழுதால் ஏராளமான நன்மைகள் என்றும் எழுதி வைத்துள்ளனர்.

இது மட்டுமல்லாமல் அந்நாளில் நோன்பு நோற்கின்றனர்.

இவைகளெல்லாம் நல்ல செயல்கள் தானே ஏன் தடுக்க வேண்டும் என்று கேட்பவர்களும் உள்ளனர். எவ்வளவு பெரிய நற்செயலாக இருந்தாலும் அதைப் பற்றி அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் எதையும் சொல்லவில்லையென்றால் அதை மறுத்துவிட வேண்டுமென்று நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.

அல்லாஹ்வுக்கே கற்றுக் கொடுப்பதா?

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: யார் நமது மார்க்கத்தில் இல்லாத ஒன்றை அதில் புதிதாக ஏற்படுத்துகிறாரோ அது மறுக்கப்படவேண்டியதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரீ (2697)

நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: நம் கட்டளையில்லாத காரியத்தை யார் செய்கிறாரோ, அது (அல்லாஹ்வால்) மறுக்கப்படும்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: முஸ்லிம் (3243)

இவையெல்லாம் நல்ல செயல் தானே ஏன் செய்யக் கூடாது? என்று கேட்பவர்களிடம் அல்லாஹ் ஒரு கேள்வியைக் கேட்கின்றான்

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்கு நீங்கள் கற்றுக் கொடுக்கின்றீர்களா? (49:16)

அல்லாஹ் சொல்லாத ஒரு விஷயத்தை நாம் மார்க்கம் என்று நினைத்தால் நாம் அல்லாஹ்வுக்கு மார்க்கத்தைக் கற்றுத் தருவதற்குச் சமமாக ஆகி விடும்.

லைலத்துல் கத்ர் எனும் இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது என்று அல்லாஹ் தன் திருமறையில் கூறுகிறான். அது போல் இந்த மிஃராஜ் இரவுக்கும் சிறப்புண்டு என்று கூறியிருக்க வேண்டும். இந்த நாளில் சிறப்புத் தொழுகைகள் தொழுது, நோன்பு வைத்தால் அதிக நன்மை உண்டு என்று அல்லாஹ் கூறியிருக்க வேண்டும். அல்லது நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்களா என்று பார்க்க வேண்டும்.

இவ்விருவர்களும் கூறவில்லையென்றால் இவர்களுக்குத் தெரியாத நல்ல விஷயமா நமக்குத் தெரியப் போகின்றது? அல்லது அல்லாஹ்வும் நபி (ஸல்) அவர்களும் நல்ல விஷயத்தை கற்றுக் கொடுப்பதில் குறை வைத்து விட்டார்களா?

யாரைப் பின்பற்ற வேண்டும் என்பதையும் அல்லாஹ் கூறுகின்றான்.

இத்தூதர் உங்களுக்கு எதைக் கொடுத்தாரோ அதை வாங்கிக் கொள்ளுங்கள்! எதை விட்டும் உங்களைத் தடுத்தாரோ (அதிருந்து) விலகிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன். (59:7)

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் இரவுக்கு சிறப்புள்ளது என்று கூறியதாக எந்த அறிவிப்பும் இல்லை. இதையெல்லாம் மீறி நாம் மீண்டும் இது நற்செயல் தானே என்று சொன்னால் இந்த வசனத்தின் அடிப்படையில் அல்லாஹ்வின் பிரியத்தை நாம் பெற முடியாது. மாறாக நாம் அல்லாஹ்வை வெறுத்ததாக ஆகி விடும். ஏனெனில் அல்லாஹ் கூறுகிறான்.

"நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

"அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் புறக்கணித்தால் அல்லாஹ் (தன்னை) மறுப்போரை விரும்ப மாட்டான்'' எனக் கூறுவீராக! (3:31, 32)

எனவே அல்லாஹ்வின் பிரியம் வேண்டுமென்றால் அல்லாஹ்வின் தூதர் கற்றுத் தராத இந்தச் செயல்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இவ்வளவு மறுப்புகளிருக்க இன்னும் சிலர் இந்த இரவிலே பள்ளிகளில் திக்ரு என்ற பெயரில் சப்தமிட்டு நபி (ஸல்) அவர்களின் வழிக்கு மாற்றமாக நடந்து வருகின்றனர். இப்படி சப்தமிட்டு திக்ரு செய்வது மிகப்பெரிய தவறு என்று அல்லாஹ் கண்டித்துக் கூறுகிறான்.

உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்ல் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (7:205)

உங்கள் இறைவனை பணிவுடனும் இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள். (7:55)

ஆனால் இந்த ஆயத்துகளுக்கு மாற்றமாக பணிவில்லாமல் எழுந்து நின்று குதித்து திக்ரும் பிரார்த்தனையும் செய்கின்றனர். இரகசியமாகக் கேட்காமல் அந்தரங்கமாக திக்ரு செய்யாமல் கூச்சலும் கத்தலுமாக பகிரங்கமாக திக்ரு செய்கின்றனர். இதுவெல்லாம் நபி (ஸல்) அவர்கள் தடுத்துள்ள, நரகத்திற்குக் கொண்டு செல்லக் கூடிய காரியங்களாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்: செய்திகளில் மிகவும் உண்மையானது அல்லாஹ்வுடைய வேதமாகும். நடைமுறையில் மிகவும் சிறந்தது முஹம்மது (ஸல்) அவர்களுடைய நடைமுறையாகும். காரியங்களில் தீயது (மார்க்கம் என்ற பெயரில்) புதிதாக உருவானவையாகும். புதிதாக உருவாகக் கூடியவைகள் அனைத்தும் பித்அத்துகள் ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும்.

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி),

நூல்: நஸயீ (1560)

எனவே மிஃராஜ் எனும் விண்ணுலப் பயணத்தை நம்பி, அல்லாஹ்வுடைய வல்லமையைப் புரிந்து, அவன் கூறிய பிரகாரமும் நபி (ஸல்) அவர்களின் வழிமுறைகளையும் பின்பற்றி சுவனம் செல்ல முயற்ச்சிப்போமாக!

மிஃராஜின் பெயரால் கப்ஸாக்கள்

மிஃராஜ் என்ற பெயரில் எப்படி மார்க்கத்திற்கு முரணான காரியத்தைச் செய்து வருகிறார்களோ அது போன்று இஸ்லாத்தின் அடிப்படைக்கே வேட்டு வைக்கின்ற கட்டுக் கதைகளையும் நம்பமுடியாத செய்திகளையும் எழுதி வைத்திருப்பதையும் பார்க்க முடிகிறது.

1. நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் உரையாடிக் கொண்டிருந்த போது, "சப்தமிட்டு பேசாதே! அடக்கிப் பேசு! முஹையத்தீன் தொட்டில் உறங்குகின்றார்'' என்று அல்லாஹ் கூறினானாம்.

2. நபி (ஸல்) அவர்களுக்கு வழிகாட்டியாக வந்த ஜிப்ரீல், ஹிஜாபுல் அக்பர் என்ற இடத்தை அடைந்தவுடன் பின் வாங்கி நபி (ஸல்) அவர்களை மட்டும் தனியாக விட்டு விட்டுப் போய் விட்டாராம். "என்ன ஜிப்ரீலே, என்னுடன் வராமல் பின் வாங்குகின்றீரே?'' என்று நபிகளார் கேட்ட போது, "இதற்கு மேல் ஒரு எட்டு முன்னேறினாலும் உடனே நான் கரிந்து சாம்பலாகி விடுவேன். அதனால் நீங்கள் மட்டும் செல்லுங்கள்'' என்று ஜிப்ரீல் கூறினாராம்.

3. நபி (ஸல்) அவர்கள் மிஃராஜுக்குச் சென்ற போது, "முஹம்மதே, கொஞ்சம் நில்லுங்கள். உமது இரட்சகன் தொழுது கொண்டிருக்கின்றான்'' என்று அபூபக்ர் (ரலி)யின் குரல் கேட்டதாம். அல்லாஹ் யாரைத் தொழப் போகின்றான்? என்று நபி (ஸல்) அவர்கள் திடுக்குற்றார்களாம். உள்ளே போய் பார்த்தால் முட்டையின் மஞ்சள் கருவைச் சுற்றி வெள்ளைக் கரு இருப்பதைப் போல் திரும்பிப் பார்க்கும் இடத்திலெல்லாம் அல்லாஹ் இருந்தானாம். அல்லாஹ் தொழுததைப் பற்றி கேட்ட போது, "நான் யாரைத் தொழப் போகின்றேன். உம் மீது ஸலவாத் சொன்னேன். அது தான் தொழுததாக உமக்குக் கூறப்பட்டது'' என்று அல்லாஹ் கூறினானாம். "அபூபக்ரின் குரல் கேட்டதே'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, "நீர் பயந்து விடக் கூடாது என்பதற்காக அபூபக்ரைப் போன்று ஒரு மலக்கைப் பேச வைத்தேன்'' என்று அல்லாஹ் கூறினானாம்.

4. ஜிப்ரீல் பாங்கு சொல்ல, அல்லாஹ் அதற்குப் பதில் கூறினானாம். நபி (ஸல்) அவர்கள் இமாமாக நின்று தொழுவிக்க, ஜிப்ரீலும் மலக்குகள் அனைவரும் பின்பற்றித் தொழுதார்களாம். இரண்டு ரக்அத் முடிந்தவுடன் தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று ஜிப்ரீல் நினைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் எழுந்து மூன்றாவது ரக்அத் தொழுதார்களாம். தனக்கு ஒரு பங்கு வேண்டும் என்று அல்லாஹ்வும் நினைத்தானாம். உடனே நபி (ஸல்) அவர்கள் கையை உயர்த்தி குனூத் ஓதினார்களாம். இப்படித் தான் வித்ருத் தொழுகை உருவானதாம்.

5. மிஃராஜில் ரூஹானியத்தான மிஃராஜ் என்றும் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் இரண்டு வகையுண்டாம். உடலில்லாமல் உயிர் மட்டும் அல்லாஹ்வை தரிசிக்கும் தரிசனத்திற்கு ரூஹானியத்தான மிஃராஜ் என்றும், நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட மிஃராஜ் ஜிஸ்மியத்தான மிஃராஜ் என்றும் கதை விட்டுள்ளார்கள்.

6. ரூஹானிய்யத்தான மிஃராஜ் நபி (ஸல்) அவர்களுக்கு மட்டுமன்றி ஏனைய நபிமார்களுக்கும் ஏற்பட்டுள்ளதாம். அது மட்டுமின்றி ஸஹாபாக்கள், தாபியீன்கள், இமாம்கள், அவுயாக்கள் போன்ற நல்லடியார்களுக்கும் இந்த ரூஹானிய்யத்தான மிஃராஜ் ஏற்பட்டுள்ளது என்று கதை விட்டு, மாபெரும் அற்புத நிகழ்வான நபிகள் நாயகத்தின் விண்ணுகப் பயணத்தையே கேக் கூத்தாக்கியுள்ளனர்.

7. நபி (ஸல்) அவர்களுக்கு ரூஹானிய்யத்தான மிஃராஜ் 33 தடவை ஏற்பட்டதாக ஊர்ஜிதம் செய்யப்பட்டுள்ளதாம். முஹைதீன் அப்துல் காதர் ஜீலானிக்கு ரூஹானியத்தான மிஃராஜ் ஏற்பட்ட போது முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானியுடன் அல்லாஹ் பேசினானாம். அப்போது நடந்த உரையாடல் நாசூத், மலகூத், ஜபரூத், லாஹுத் என்பதையெல்லாம் அல்லாஹ் முஹைதீன் அப்துல் காதிர் ஜீலானிக்குக் கற்றுக் கொடுத்தானாம்.

இன்னும் இது போன்ற ஏராளமான கதைகளையும், கப்ஸாக்களையும் மிஃராஜின் பெயரால் அவிழ்த்து விட்டுள்ளனர்.

சில சம்பவங்களை விமர்சிக்கும் போது, இந்த வசனத்திற்கு இந்தச் சம்பவம் மாற்றமாக அமைந்துள்ளது என்றும், இந்த ஹதீசுக்கு முரணாக அமைந்துள்ளது என்று நாம் விளக்கமளிப்போம். ஆனால் குர்ஆன், ஹதீஸோடு ஒப்பிட்டு விளக்க முடியாத அளவுக்கு, சாதாரண மக்கள் இவற்றைப் படித்தால் கூட கப்ஸாக்கள் என்று விளங்கும் அளவுக்கு இந்தக் கதைகள் அமைந்துள்ளன.

அல்லாஹ்வின் வல்லமையை எடுத்துக் காட்டுவதற்காக, நபி (ஸல்) அவர்களுக்கு அவன் நிகழ்த்திக் காட்டிய இந்த அற்புதத்தைக் கூற வந்தவர்கள் அல்லாஹ்வைக் கே செய்யும் விதமாக, அவனைப் பலவீனமானவனாக சித்தரிக்கக் கூடிய கதைகளை எழுதி வைத்து, பிரச்சாரமும் செய்து வருகின்றனர்.

முஃமின்களின் ஈமானைச் சோதிப்பதற்காக மிஃராஜ் எனும் அற்புதத்தை அல்லாஹ் நிகழ்த்தினான். ஆனால் இவர்களோ ஈமானுக்கே வேட்டு வைக்கக் கூடிய விதத்தில் அல்லாஹ்வையும், நபி (ஸல்) அவர்களையும், ஜிப்ரீல் (அலை) அவர்களையும் மட்டம் தட்டி எழுதி வைத்துள்ளது தான் வேதனை!

அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவனை விட, அல்லது அவனது வசனங்களைப் பொய்யெனக் கருதியவனை விட மிகப் பெரிய அநீதி இழைத்தவன் யார்? (அல்குர்ஆன் 7:37)

"என் மீது பொய் சொல்வதென்பது வேறு யார் மீதும் பொய் சொல்வதைப் போன்றதல்ல. என் மீது வேண்டுமென்று பொய் சொல்பவர் தன் இருப்பிடத்தை நரகத்தில் அமைத்துக் கொள்ளட்டும்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : முகீரா (ரலி),

நூல் : முஸ்லிம்

அல்லாஹ்வின் மீதும், அவனது தூதரின் மீதும் பொய்யை இட்டுக் கட்டிக் கூறுவது நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும் மாபாதகச் செயலாகும். எனவே இது போன்ற கதைகளைப் புறக்கணிப்போமாக!

விண்ணுலகப் பயணத்தில் அல்லாஹ்வை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்களா?

எம்.ஐ. சுலைமான்

ரஜப் மாதம் வந்து விட்டால் பெரும்பாலான பள்ளிகளில் நபி (ஸல்) அவர்கள் சென்ற மிஃராஜ் என்ற விண்ணுலகப் பயணத்தைப் பற்றி பல விதமான பயான்கள் நடைபெறும். அதில் பெரும்பாலும் பொய்யான கற்பனைக் கதைகள், ஆதாரமற்றச் செய்திகள், பலவீனமான செய்திகள் என பல வகைகள் நிறைந்திருக்கும். அவற்றில் ஒன்று தான் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை மிஃராஜ் பயணத்தின் போது நேரடியாகப் பார்த்தார்கள் என்பது.

நபி (ஸல்) அவர்கள் மிஃராஜ் என்ற பயணம் மேற்கொண்டு அங்கு அல்லாஹ்விடம் உரையாடியது உண்மையான, திருக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களின் செய்தியாகும். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை திரையின்றி நேரடியாகப் பார்த்தார்கள் என்று கூறுவது தவறான செய்தியாகும். மேலும் திருமறைக் குர்ஆன் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களுக்கு எதிரான கருத்தாகும்.

அல்லாஹ்வை இவ்வுலகில் யாரும் பார்க்க முடியாது என்பதற்கு திருமறைக் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களில் சான்றுகள் நிறைந்துள்ளன.

வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன்42:51)

இவ்வசனத்தில் அல்லாஹ் மனிதர்களிடம் மூன்று வழிகளில்தான் பேசுவான் என்று தெளிவாக கூறுகிறான். இவை அல்லாத வேறு வழிகள் இல்லை என்பதை விளக்கமாகக் குறிப்பிடுகிறான்.

இறைவன் மனிதர்களிடம் பேசும் முறைகள் மூன்று. அவை. 1. வஹீயின் மூலம் 2. திரைக்கு அப்பால் இருந்து 3. ஒரு தூதரை அனுப்பி

இந்த வழிகளில் நேரடியாக பேசுவதைப் பற்றி கூறாததிருந்து அல்லாஹ் அவ்வழியை அடைத்து விட்டான் என்பதை விளங்கலாம். ஏனெனில் நமது கண்களுக்கு அவனைப் பார்க்கும் அளவிற்கு சக்தி கிடையாது.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 6:103)

இக்கருத்தை இன்னும் தெளிவாக நபி (ஸல்) அவர்கள் பின்வரும் செய்தியில் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே நின்று ஐந்து விஷயங்களைச் சொன்னார்கள். அவை: 1. வல்லமையும் மாண்புமிக்க அல்லாஹ் உறங்க மாட்டான். உறங்குவது அவனுக்குத் தகாது. 2. அவன் தராசைத் தாழ்த்துகிறான்; உயர்த்துகிறான். 3. (மனிதன்) இரவில் புரிந்த செயல் பகல் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 4. (மனிதன்) பகல் செய்த செயல் இரவில் புரிந்த செயலுக்கு முன்பே அவனிடம் மேலே கொண்டு செல்லப்படுகிறது. 5. ஒளியே (அவனைப் பார்க்கவிடாமல் தடுக்கும்) அவனது திரையாகும். (மற்றொரு அறிவிப்பில், நெருப்பே அவனது திரையாகும் என்று காணப்படுகிறது.) அத்திரையை அவன் விலக்கி விட்டால் அவனது பார்வை எட்டும் தூரம் வரையுள்ள அவனுடைய படைப்பினங்களை அவனது ஒளிச்சுடர் சுட்டெரித்துவிடும்.

அறிவிப்பவர்: அபூமூஸா (ரலி),

நூல்: முஸ்லிம் 293, அஹ்மத் 18765,18806

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று கேட்ட போது அல்லாஹ் கூறிய வார்த்தையிருந்தும் அந்தச் சம்பவத்திருந்தும் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை அறியலாம்.

நாம் வாக்களித்த இடத்துக்கு மூஸா வந்து, அவரிடம் அவரது இறைவன் பேசிய போது "என் இறைவா! (உன்னை) எனக்குக் காட்டுவாயாக! நான் உன்னைப் பார்க்க வேண்டும்'' எனக் கூறினார். அதற்கு (இறை வன்) "என்னை நீர் பார்க்கவே முடியாது. எனினும் அந்த மலையைப் பார்ப்பீராக! அது அதற்குரிய இடத்தில் நிலையாக இருந்தால் நீர் என்னைப் பார்க்கலாம்'' என்று கூறினான். அவரது இறைவன் அந்த மலைக்குக் காட்சி தந்த போது அதைத் தூளாக்கினான். மூஸா மூர்ச்சித்து விழுந்தார். அவர் தெளிவடைந்த போது "நீ தூயவன். உன்னிடம் மன்னிப்புக் கேட்கிறேன். நம்பிக்கை கொண்டோரில் நான் முதலாமவனாக இருக்கிறேன்'' எனக் கூறினார். (அல்குர்ஆன்7:143)

மூஸா (அலை) அவர்கள் அல்லாஹ்விடம் உன்னை நான் பார்க்க வேண்டும் என்று கோரிக்கை வைத்த போது "என்னை நீர் பார்க்கவே முடியாது'' என்று இறைவன் பதிலளித்துள்ளான். அல்லாஹ் மலைக்கு காட்சியளித்த போது நபி மூஸா (அலை) அவர்கள் மூர்ச்சித்து விழுந்தார்கள்.

இச்சம்பவம் இறைத்தூதர்கள் உட்பட யாரும் இவ்வுலகத்தில் நேரடியாக அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்பதை ஐயத்திற்கிடமின்றி தெளிவுபடுத்துகிறது.

யாரும் இறந்து மறு உலகை அடையாமல் அல்லாஹ்வைப் பார்க்க முடியாது எனவும் நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

உங்களில் எவரும் தன் இறைவனை அவர் இறக்காத வரை பார்க்க முடியாது என்பதை அறிந்து கொள்ளட்டும் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: முஸ்லிம் 5215)

மேலும் நபி (ஸல்) அவர்களே மிகத் தெளிவாக நான் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று கூறிய செய்தி ஹதீஸ் நூற்களில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டுள்ளது.

நான் நபி (ஸல்) அவர்களிடம் நீங்கள் உங்கள் இறைவனைப் பார்த்தீர்களா? என்று கேட்டேன். அதற்கு "அவன் ஒளியாயிற்றே நான் எப்படி பார்க்க முடியும்?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூதர் (ரலி)

நூற்கள்: முஸ்லிம் 291, திர்மிதீ 3204, அஹ்மத் 20427, 20522, 20547

நபி (ஸல்) அவர்கள் இவ்வளவு தெளிவாகத் தீôப்பளித்திருக்க பல ஆம் பெருந்தகைகள் தங்கள் பயானில் நபி (ஸல்) அவர்கள் மிராஜின் போது அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று கூறுவது வியப்பாக இருக்கிறது.

நபி (ஸல்) அவர்களின் அன்பு மனைவியான அன்னை ஆயிஷா (ரலி) அவர்களும் இதே கருத்தை கூறியுள்ளதை ஸஹீஹுல் புகாரியில் பார்க்க முடிகிறது.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை நேரில் பார்த்தார்கள் என்று கூறுபவன் பெரிய தவறு புரிந்து விட்டான். எனினும் அவர்கள் ஜிப்ரீல் (அலை) அவர்களை அவர்களுடைய (உண்மையான) தோற்றத்திலும் அமைப்பிலும் வான விளிம்பு முழுவதையும் அடைத்தபடி (தோற்றமளிக்கக்) கண்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 3234

இதே செய்தி ஸஹீஹ் முஸ்லிமில் மிகத் தெளிவாக விரிவாகக் கூறப்பட்டுள்ளது.

நான் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் சாய்ந்து அமர்ந்திருந்தேன். அப்போது அவர்கள் (என்னிடம்) "அபூ ஆயிஷாவே, மூன்று விஷயங்கள் உள்ளன. அவற்றில் எந்த ஒன்றை யார் கூறினாலும் அவர் அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக்கட்டியவர் ஆவார். என்று கூறினார்கள். அவை எவை? என்று கேட்டேன் அதற்கு அவர்கள், "யார் முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று கூறுகின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது மிகப்பெரும் பொய்யை இட்டுக்கட்டி விட்டார்'' என்று சொன்னார்கள். உடனே சாய்ந்து அமர்ந்து கொண்டிருந்த நான் எழுந்து (நேராக) அமர்ந்து, "இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே, நிதானித்துக் கொள்ளுங்கள். அவசரப்படாதீர்கள். வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ், "திண்ணமாக அவனைத் தெளிவான அடிவானத்தில் அவர் கண்டார்'' (81:23) என்றும் "அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார்'' (53:13) என்றும் கூறவில்லையா?'' என்று கேட்டேன். அதற்கு அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் பின்வருமாறு விளக்கமளித்தார்கள்.

இந்தச் சமுதாயத்தில் இது தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேள்வி கேட்ட முதல் ஆள் நான் தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அது (வானவர்) ஜிப்ரீலை (நான் பார்த்ததை)யே குறிக்கிறது. நான் ஜிப்ரீலை அவர் படைக்கப்பெற்றுள்ள (உண்மைத்) தோற்றத்தில் இந்த இரு தடவைகள் தவிர வேறேப்போதும் பார்த்ததில்லை. அவர் வானிருந்து (பூமிக்கு) இறங்கிக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அப்போது அவருடைய பிரமாண்டமான தோற்றம் வானம் பூமிக்கிடையேயுள்ள இடைவெளியை அடைத்துக் கொண்டிருந்தது'' என்று கூறினார்கள்.

மேலும் ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது கருத்துக்குச் சான்றாக) அல்லாஹ் (பின்வருமாறு) கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா? என்று கேட்டார்கள்.

அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். அவன் நுட்பமானவன்; நன்கறிந்தவன். (6:103)

அல்லது (பின்வருமாறு) அல்லாஹ் கூறுவதை நீங்கள் செவியுறவில்லையா?

"வஹீயின் மூலமோ, திரைக்கப்பால் இருந்தோ அல்லது ஒரு தூதரை அனுப்பி தனது விருப்பப்படி தான் நாடியதை அறிவிப்பதன் மூலமோ தவிர (வேறு வழிகளில்) எந்த மனிதரிடமும் அல்லாஹ் பேசுவதில்லை. அவன் உயர்ந்தவன்; ஞானமிக்கவன்.'' (42:51)

(பின்னர் தொடர்ந்து மீதமுள்ள இரண்டு விஷயங்களையும் கூறினார்கள்)

அறிவிப்பவர்: மஸ்ரூக்,

நூல்: முஸ்லிம் 287

அறிவுச் சுடராக இருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூட நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் பார்த்தார்கள் என்று யாராவது கூறினால் அவர் "அல்லாஹ் பொய்யைக் கூறி விட்டான்'' என்ற அபாண்டத்தைச் சுமத்தி விட்டார் என்று திருமறை குர்ஆன் சான்றுகளுடன் கூறியிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்கவில்லை என்பதற்கு இதை விட வமையான சான்றுகள் எதுவும் தேவையில்லை.

அன்னை அயிஷா (ரலி) அவர்கள் எடுத்து வைக்கும் வமையான சான்றுகள் நபி (ஸல்) அவர்களும் மற்ற எவரும் இவ்வுலகில் அல்லாஹ்வை நேரடியாகப் பார்க்க முடியாது என்பதை எடுத்துரைக்கிறது.

இத்தனை சான்றுகள் இருந்தும் சிலர் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேரடியாகப் பார்த்தார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸைச் சான்றாகக் கூறுகின்றனர்.

முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனைப் பார்த்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறிய போது "அவனைக் கண்கள் பார்க்காது. அவனோ கண்களைப் பார்க்கிறான். என்று அல்லாஹ் கூறவில்லையா?'' என்று நான் கேட்டேன். "நாசமாய் போக! அ(வனைக் கண்கள் பார்க்காது என்ப)து அவன் தனது இயற்கையான ஒளியில் காட்சி தரும் போது தான்'' என்று கூறி விட்டு "இரண்டு முறை அவனை (அல்லாஹ்வை) அவர்களுக்கு காட்டப்பட்டது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: இக்ரிமா,

நூல்: திர்மிதீ 3201

இச்செய்தி நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல. மேலும் நபி (ஸல்) அவர்களே நான் அல்லாஹ்வைப் பார்க்கவில்லை என்று கூறியுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.

நபி (ஸல்) அவர்கள் உள்ளத்தால் அல்லாஹ்வைக் கண்டார்களா?

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள்; அதற்குச் சான்றுகள் உள்ளன என கூறி சில ஹதீஸ்களை எடுத்து வைக்கின்றனர். அவற்றின் விவரங்களைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை உள்ளத்தால் பார்த்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 284

(நபியின்) உள்ளம், அவர் கண்டது தொடர்பாகப் பொய்யுரைக்கவில்லை (53:11), நிச்சயமாக அவர் மற்றொரு முறையும் அவனைக் கண்டார் (53:13) ஆகிய வசனங்கள் குறித்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்

நபி (ஸல்) அவர்கள் தம் இறைவனை இரண்டு முறை தமது உள்ளத்தால் பார்த்தார்கள்

அறிவிப்பவர்: அபுல் ஆயா,

நூல்: முஸ்லிம் 285, திர்மிதீ 3203, அஹ்மத் 1855

நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை உள்ளத்தால் பார்த்தார்கள் என்ற கருத்து ஏற்கும் வகையில் இல்லை. ஏனெனில் இக்கருத்தை நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. மேலும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் 53:13) வசனத்தின் விளக்கமாகத் தான் இதைக் கூறுகிறார்கள். ஆனால் அவ்வசனத்தின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களே கூறியுள்ளார்கள். முஸ்லிம் (287) செய்தியில் நபி (ஸல்) அவர்கள் கண்டதாகக் கூறப்படுவது ஜிப்ரீல் (அலை) அவர்களைத் தான். இதை நபி (ஸல்) அவர்களே விளக்கியுள்ளதால் நபி (ஸல்) அவர்களின் விளக்கவுரையே சரியானது. எனவே இப்னு அப்பாஸ் (ரலி) விளக்கம் ஏற்புடையதல்ல.

நபி (ஸல்) அவர்கள் கனவில் அல்லாஹ்வைக் கண்டார்களா?

சிலர் நபி (ஸல்) அவர்கள் கனவில் அல்லாஹ்வைக் கண்டார்கள் என்று கூறுகின்றனர். அதற்குச் சில சான்றுகளைச் சமர்ப்பிக்கின்றனர். அவை சரியா எனப் பார்ப்போம்.

நாங்கள் சூரிய உதயத்தைப் பார்த்து விடுவோமோ என்ற அளவிற்கு ஒரு நாள் காலை சுப்ஹுத் தொழுûக்கு வராமல் நபி (ஸல்) அவர்கள் தடங்கலுக்கு உள்ளானார்கள். பின்னர் விரைவாக வந்தார்கள், தொழுகைக்கு இகாமத் சொல்லப்பட்டது. நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தார்கள். அத்தொழுகையை சுருக்கமாகத் தொழுதார்கள். ஸலாம் கூறிய போது உயர்ந்த சப்தத்தில், "உங்கள் வரிசையிலேயே நில்லுங்கள்'' என்று கூறி எங்கள் பக்கம் திரும்பினார்கள். பிறகு பின்வருமாறு கூறினார்கள்.

காலையில் உங்களிடம் வருவதை விட்டும் தடங்கலான விஷயத்தை நான் உங்களுக்கு அறிவிக்கிறேன். நான் இரவில் எழுந்து உளூச் செய்தேன். எனக்கு விதியாக்கப்பட்ட அளவிற்குத் தொழுதேன். எனக்குத் தொழுகையில் சிறு தூக்கம் ஏற்பட்டுப் பின்னர் அதில் ஆழ்ந்து போய் விட்டேன். அப்போது என்னுடைய இறைவன் அழகிய தோற்றத்தில் இருக்கக் கண்டேன். "முஹம்மதே'' என்றான். நான், "என் இறைவா, லப்பைக் (ஆஜராகி விட்டேன்)'' என்றேன். "உயர்ந்த (வானவர்) கூட்டத்தினர் எதற்குச் சண்டையிடுகிறார்கள் என்று உமக்குத் தெரியுமா?'' என்று கேட்டான். நான், "தெரியாது'' என்றேன். இவ்வாறு மூன்று முறை கேட்டான். பின்னர் அவன் முன் கையை என் தோள் புஜத்தில் வைத்தான். அவனின் விரல்களின் குளிர்ச்சியை என் நெஞ்சில் உணர்ந்தேன். ஒவ்வொரு பொருளும் எனக்காகக் காட்சியளித்தது, நான் அறிந்து கொண்டேன்...

அறிவிப்பவர்: முஆத் (ரலி),

நூல்: திர்மிதீ 3159, அஹ்மத் 2103

இச்செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. இச்செய்தி முரண்பட்ட அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றுள்ளது. இக்கருத்து தொடர்பாக வரும் எதுவும் ஆதாரப்பூர்வமானது அல்ல. அனைத்தும் குழப்பம் நிறைந்ததாகும் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் தனது இலல் என்ற நூல் அனைத்து அறிவிப்புகளை எடுத்தெழுதி ஆய்வு செய்து இவ்வாறு கூறியுள்ளார்கள். (பார்க்க: இலல் தாரகுத்னீ, பாகம் 6, பக்கம் 56)

எனது இறைவனைக் கனவில் கம்பீரமான இளைஞன் தோற்றத்தில் பசுமையானதில் பார்த்தேன். தங்கத்தாலான செருப்பு இருந்தது. அவன் முகத்தில் தங்கத்தாலான திரை இருந்தது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்

அறிவிப்பவர்: உம்மு துஃபைல் (ரலி),

நூல்: தப்ரானீ கபீர் (பாகம் 25, பக்கம் 143)

இச்செய்தியில் இடம் பெறும் அம்மாரா என்பவர் உம்மு துஃபைல் (ரலி) அவர்களிடமிருந்து எதையும் செவியுற்றதில்லை. எனவே இச்செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகிறது.

"நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா?'' என்று நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கவர்கள் ஆம் என கூறி, முத்துக்களாலான முடிகளுடன் இளைஞர் தோற்றத்தில் அவனைப் பார்த்தார்கள். அவனுடைய இரண்டு பாதங்களும் பசுமையான (தோட்டத்)தில் இருந்ததைப் போன்றிருந்தது.

அறிவிப்பவர்: இக்ரிமா,

நூல்: தப்ரானீ அவ்ஸத் (பாகம் 5. பக்கம் 93)

இச்செய்தியில் இடம் பெறும் ஜைத் பின் அஸ்ஸகன் என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர் என்று அஸ்தீ அவர்கள் குறிபிட்டுள்ளார்கள். (ஸானுல் மீஸான் பாகம் 2, பக்கம் 507)

"நபி (ஸல்) அவர்கள் இறைவனைப் பார்த்தார்களா?'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் விசாரித்து வருமாறு (ஒரு மனிதரை) அனுப்பினார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், ஆம் என்று சொல் அனுப்பினார்கள். "எப்படிப் பார்த்தார்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி), "மனித தோற்றத்தில் தங்தத்தாலான நாற்காயில் அமர்ந்திருந்தான். அதை நான்கு வானவர்கள் சுமந்து கொண்டிருந்தார்கள். அதில் ஒருவர் மனிதத் தோற்றத்திலும் இன்னொரு வானவர் சிங்கத் தோற்றத்திலும் இன்னொரு வானவர் காளைத் தோற்றத்திலும் இன்னொரு வானவர் இராஜாளி பறவைத் தோற்றத்திலும் இருந்தனர். அவன் பசுமையான பூங்காவில் இருந்தான். அவன் மேல் தங்கத்தாலான திரை இருந்தது'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அபீ ஸலமா,

நூல்: அல்இலலுல் முத்தநாஹியா (பாகம் 1, பக்கம் 38), அஸ்ஸுன்னா (பாகம்1, பக்கம் 176)

இச்செய்தியை அஸ்ஸுன்னா என்ற நூல் பதிவு செய்த இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்களின் மகனார் அப்துல்லாஹ் அவர்கள் இச்செய்தியின் இறுதியில் இதன் அறிவிப்பாளர் வரிசை பலவீனமானதாகும். மேலும் அறிவிப்பாளர் வரிசை துண்டிக்கப்பட்டதாகும் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (பார்க்க: அஸ்ஸுன்னா பாகம் 1, பக்கம் 176)

யார் தனது இறைவனைக் கனவில் பார்க்கிறாரோ அவர் சுவர்க்கம் சொல்வார்.

அறிவிப்பவர்: இப்னு ஸீரீன்,

நூல்: தாரமீ 2057

இச்செய்தியில் இடம்பெறும் யூஸூஃப் பின் மைமூன் என்பவர் பலவீனமானவர். இவரை இமாம் புகாரீ, அபூ ஹாத்தம் ஆகியோர் உட்பட பலர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளனர். (பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 11, பக்கம் 375) மேலும் இது நபி (ஸல்) அவர்களின் கூற்று அல்ல. இதை அறிவிக்கும் இப்னு ஸீரீன் என்பவர் தாபியீ (நபித் தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) ஆவார்.

சிலர் தங்கள் இமாமின் மதிப்பை மக்கள் மத்தியில் உயர்த்த வேண்டும் என்ற எண்ணத்துடன் எங்கள் இமாம் அல்லாஹ்வைக் கனவில் பல தடவை பார்த்துள்ளார்கள் என்று பொய்யான செய்திகளையும் கூறியுள்ளனர்.

அபூஹனீபா அவர்கள் கனவில் இறைவனைப் பார்த்தது தொடர்பாக பிரபலமான கதை ஒன்று உள்ளது. இதை ஹாபிழ் அந்நஜ்முல் கைத்தீ அவர்கள் கூறியுள்ளார்கள். அந்தக் கதை இதோ:

இமாம் அபூஹனீபா அவர்கள் கூறுகிறார்கள்: நான் இறைவனை 99 தடவை கனவில் பார்த்தேன். பின்னர் 100வது தடவை பார்த்தால் மறுமை நாளில் உன்னுடைய வேதனையிருந்து படைப்பினங்கள் எதைக் கொண்டு வெற்றியடையும்? என்று கேட்பேன் என்று நான் மனதில் கூறிக் கொண்டேன்...

(ரத்துல் முக்தார், முன்னுரை)

இவ்வாறு பல கதைகள் மக்கள் மன்றத்தில் உலா வருகின்றன. நபி (ஸல்) அவர்களே அல்லாஹ்வைப் பார்க்க முடியாது என்றால் மற்றவர்கள் எம்மாத்திரம்? எப்படி இப்படிப்பட்ட கதைகள் உலா வருகின்றன?

இவ்வுலகில் அல்லாஹ்வைப் பார்க்க முடியாவிட்டாலும் மறுமையில் அனைவரும் பார்க்க முடியும் என்பதற்கு திருமறைக்குர்ஆன், ஆதாரப்பூர்மான ஹதீஸ்களில் ஏராளமான சான்றுகள் உள்ளன என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

அன்பு மனைவியரின் அழகிய அணுகுமுறைகள்

எம்.ஷம்சுல்லுஹா

"என்னங்க! கேட்டீங்களா? உங்க அம்மா பேசிய பேச்சை! உங்கம்மா பண்ணுற வேலையைக் கண்டும் காணாமல் இருக்கின்றீர்களே! இது அநியாயம் இல்லையா?'' என்று வீட்டுக்குள் வந்ததும் வராததுமாய் கணவனிடம் மனைவிமார்கள் எள்ளும் கொள்ளுமாக வெடிக்கும் பழக்கம் இன்றும் பல வீடுகளில் நடந்தேறி வருகின்றது.

அந்தக் கணவர் அலுவலகத்தில் பணியாற்றி விட்டு, மேலதிகாரியின் ஏச்சுக்கும், பேச்சுக்கும் ஆளாகி விட்டு அசதியாகவும், மனச் சுமையாகவும் திரும்பும் ஓர் அதிகாரியாக இருப்பார். சரியாகப் படிக்காத மாணவர்களிடம் காலையிருந்து மாலை வரை மாரடித்து விட்டு மனக் கஷ்டத்துடன் திரும்பும் ஆசிரியராகக் கூட அவர் இருப்பார். அல்லது குழப்பவாதிகள் பேசும் ஃபித்னா, ஃபஸாதுகளைப் பற்றி சங்கடப்பட்டுக் கொண்டே திரும்பும் பொது வாழ்வில் ஈடுபட்டுள்ள ஒருவராக இருப்பார். அல்லது இரவெல்லாம் கண் விழித்து காரோட்டி விட்டு வீடு திரும்பும் ஒரு டிரைவராகக் கூட அவர் இருப்பார்.

இப்படிப்பட்டவர்கள் மன அமைதியையும் நிம்மதியையும் தங்கள் மனைவியரிடம் நாடியே வீடு திரும்புவார்கள். ஆனால் இங்கோ அவர் வந்ததும் எரிமலையை எதிர்நோக்க வேண்டிய நிர்ப்பந்தத்திற்குத் தள்ளப்பட்டு நிம்மதியின்றி தவிப்பார்.

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது:

அபூ தல்ஹாவின் மகன் நோயுற்றிருந்தார். ஒரு நாள் அபூ தல்ஹா (ரலி) வேளியே சென்றிருந்த போது குழந்தை இறந்து விட்டது. இதைக் கண்ட அபூ தல்ஹா (ரலி) அவர்களின் மனைவி, உடனே கொஞ்சம் உணவைத் தயாரித்தார். பிறகு மய்யித்தை வீட்டின் மூலையில் வைத்தார். வெளியே சென்றிருந்த அபூ தல்ஹா (ரலி) வீடு திரும்பியதும், மகன் எவ்வாறு இருக்கின்றான்? என்று விசாரித்தார். அதற்கு அவரது மனைவி, "அமைதியாகி விட்டான். நிம்மதி பெற்று விட்டிருப்பான் என்பதே என் எதிர்பார்ப்பு'' என்று பதிலளித்தார். அபூ தல்ஹா (ரலி) தம் மனைவி கூறியது உண்மை தான் என்றெண்ணி (நிம்மதியுடன்) தம் மனைவியோடு இரவைக் கழித்தார். பொழுது விடிந்து குளித்து விட்டு வெளியே செல்ல நாடிய போது மகன் இறந்து விட்டதை மனைவி கூறினார். அபூ தல்ஹா (ரலி) நபி (ஸல்) அவர்களோடு தொழுது விட்டுத் தம் வீட்டில் நடந்த சம்பவத்தை நபி (ஸல்) அவர்களிடம் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இந்த இரவு நடந்தவற்றில் அல்லாஹ் உங்கள் இருவருக்கும் அருள் செய்யக் கூடும்'' என்று கூறினார்கள்.

"அந்த இருவருக்கும் ஒன்பது குழந்தைகள் இருப்பதை நான் பார்த்தேன். அவர்கள் அனைவரும் குர்ஆனை ஓதுபவர்களாக இருந்தனர் என்று மதீனாவைச் சேர்ந்த அன்சாரிகளில் ஒருவர் கூறினார்'' என்று சுஃப்யான் கூறுகின்றார்.

(நூல்: புகாரி 1301)

இதே ஹதீஸ் முஸ்லிமில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.

உம்மு சுலைம் மூலமாக அபூ தல்ஹாவுக்குப் பிறந்த குழந்தை இறந்து விடுகின்றது. உடனே உம்மு சுலைம் தம் குடும்பத்தாரை நோக்கி, அவரது மகனின் (இறப்புச்) செய்தியை நான் அவரிடம் தெரிவிக்கும் வரை நீங்கள் தெரிவிக்காதீர்கள் என்று சொன்னார். அவர் வந்ததும் இரவு உணவை வழங்கினார். அவர் சாப்பிட்டு முடித்து நீர் பருகவும் துவங்கினார். பிறகு உம்மு சுலைம் இதற்கு முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு அபூ தல்ஹாவிடம் காட்சியளித்தார். அவர் நன்றாக சாப்பிட்டு விட்டு இல்லறத்தில் ஈடுபட்டதும்,

"அபூ தல்ஹாவே! ஒரு கூட்டத்தார் ஒரு பொருளை ஒரு வீட்டாரிடம் இரவலாகக் கொடுக்கின்றனர். பின்னர் தாங்கள் இரவல் கொடுத்த பொருளைத் திருப்பிக் கேட்கும் போது, அவ்வீட்டார் கொடுக்காமல் இருப்பது முறையாகுமா?'' என்று கேட்கின்றார். அதற்கு அபூ தல்ஹா (ரலி), "கூடாது'' என்று பதிலளித்தார். "(அது போலத் தான்) உங்கள் மகனின் நிலையைக் கருதிக் கொள்ளுங்கள்'' என்று சொல்கின்றார்.

அதற்கு அபூ தல்ஹா (ரலி), "என்னை நீ அசுத்தமடைய விட்டு விட்டு இப்போது என்னுடைய மகனைப் பற்றி அறிவிக்கின்றாயே?'' என்று கோபப்படுகின்றார். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததைத் தெரிவிக்கின்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "சென்று விட்ட அந்த இரவில் அல்லாஹ் உங்களுக்கு பரக்கத் செய்வானாக'' என்று துஆச் செய்தார்கள். அது போல் அவர்களுக்குக் குழந்தை பிறக்கின்றது. நபி (ஸல்) அவர்களிடம் அந்தச் செய்து எடுத்துச் சொல்லப்படுகின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பேரீச்சம்பழத்தை மென்று கொடுத்து அப்துல்லாஹ் என்று பெயர் வைத்தார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி),

நூல்: முஸ்லிம் 4496

பொதுவாக பிள்ளைகளைப் பறி கொடுத்த பெண்கள் தங்களைக் கட்டுப்படுத்துவது மிகவும் அரிது! அதனால் அழுது தீர்ப்பதோடு அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளைக் கூட அள்ளி வீசுவார்கள். ஆனால் இங்கு உம்மு சுலைம் (ரலி) தமது கணவரிடம், பொய்யைத் தவிர்ப்பதற்காக, "அமைதியடைந்து விட்டான், நிம்மதியடைந்து விட்டான் என்று கருதுகின்றேன்'' என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்துகின்றார்கள். மேலும் இரவல் பற்றிய பீடிகையைப் போட்டு நேரமறிந்து, மகன் இறந்த செய்தியை எவ்வளவு பக்குவமாக எடுத்து வைக்கின்றார்கள் என்று நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற ஒரு பக்குவத்தையும் அணுகுமுறையையும் தமது கணவனிடம் பெண்கள் மேற்கொள்ள வேண்டும்.

கதீஜா (ரலி)யின் கனிவான ஆறுதல்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதன் முதல் மிகப் பாரமான இறை வஹீயைப் பெற்று விட்டு நடுநடுங்கிக் கொண்டு வந்த நேரத்தில் கதீஜா (ரலி) உதிர்த்த வார்த்தைகள் இஸ்லாமிய வரலாற்றில் அழியாத வைர வரிகள் ஆகும்.

(நபி (ஸல்) அவர்களுக்கு முதன் முதல் வஹீ அறிவிக்கப்பட்ட போது) இதயம் படபடத்தவர்களாக - அந்த வசனங்களுடன் (தமது துணைவியார்) குவைதின் மகள் கதீஜா (ரலி)யிடம் வந்து, "என்னைப் போர்த்துங்கள். என்னைப் போர்த்துங்கள்'' என்று கூறினார்கள். கதீஜா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் போர்த்தினார்கள். (நடுக்கம் தீர்ந்ததும்) கதீஜா (ரலி)யிடம், நடந்த செய்தியைத் தெரிவித்து விட்டு, தமக்கு ஏதும் நேர்ந்து விடுமோ என்று தாம் உறுதியாக அஞ்சுவதாகவும் கூறினார்கள். அப்போது கதீஜா (ரலி), "அவ்வாறு கூறாதீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக உங்களை ஒரு போதும் அல்லாஹ் இழிவு படுத்த மாட்டான். நீங்கள் உறவினர்களுடன் இணங்கி இருக்கின்றீர்கள். (சிரமப்படுவோரின்) சுமைகளைத் தாங்கள் சுமந்து கொள்கின்றீர்கள். வறியவர்களுக்காக உழைக்கின்றீர்கள். விருந்தினர்களை உபசரிக்கின்றீர்கள். உண்மையான சோதனைகளில் (ஆட்பட்டோருக்கு) உதவி புரிகின்றீர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல்: புகாரி 3

உம்மு ஸலமா (ரலி)யின் உயரிய ஆலோசனை

நபி (ஸல்) அவர்களும் தோழர்களும் உம்ராச் செய்ய வந்த போது தடுத்து நிறுத்தப்படுகின்றார்கள். இதைத் தொடர்ந்து ஹுதைபிய்யா உடன்படிக்கை கையெழுத்தாகின்றது. கையெழுத்தான இந்த உடன்படிக்கையின் ஷரத்துக்கள் முஸ்லிம்களுக்குப் பாதிப்பைத் தரும் அம்சங்களாக இருந்தன.

இந்த நேரத்தில் நபித்தோழர்கள் சோகத்தில் மூழ்கிப் போயிருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எழுந்திருங்கள்! அறுத்துப் பயிடுங்கள்! தலைகளை மழித்துக் கொள்ளுங்கள்!'' என்று கட்டளையிடுகின்றார்கள். ஆனால் ஒருவரும் எழுந்திருக்கவில்லை. கட்டளைக்கு மாறு செய்ய வேண்டும் என்பது நபித்தோழர்களின் நோக்கமல்ல! ஒப்பந்தத்தில் இருக்கும் பாதகமான அம்சங்களை மறு பரிசீலனை செய்ய வேண்டும் என்பது தான் அவர்களின் எதிர்பார்ப்புகள்! அதனால் தான் அசையாமல் உட்கார்ந்திருந்தார்கள். அப்போது உம்மு ஸலமா (ரலி) யோசனை வழங்குகின்றார்கள்.

"அல்லாஹ்வின் தூதரே! பப் பிராணியை அறுத்து விட்டு, தலைமுடி களைந்து கொள்ள வேண்டும் என்று விரும்புகின்றீர்களா? புறப்படுங்கள். நீங்கள் குர்பானி ஒட்டகங்களை அறுத்து விட்டு உங்கள் நாவிதரை அழைத்து. அவர் உங்கள் முடியைக் களையும் வரை அவர்களில் எவருடனும் ஒரு வார்த்தையும் பேசாதீர்கள்'' என்று உம்மு ஸலமா (ரலி) கூறினார்கள்.

உடனே நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு ஒட்டகங்களைக் குர்பானி கொடுத்து விட்டு, தம் நாவிதரை அழைத்துத் தலைமுடியைக் களைந்து கொண்டார்கள். அதுவரை அவர்கள் எவரிடமும் பேசவில்லை. இவற்றைக் கண்டவுடன் மற்ற நபித்தோழர்களும் எழுந்து சென்று பப் பிராணிகளை அறுத்து. ஒருவர் மற்றவரின் தலை முடியைக் களையத் துவங்கினார்கள். ஒருவர் மற்றவைர நெரிசலால் சாகடித்து விடுவார்களோ எனும் அளவுக்குப் போட்டி போட்டுக் கொண்டு (பப் பிராணிகளை அறுக்கவும் முடி களையவும்) சென்றனர்.

அறிவிப்பவர்: உமர் (ரலி),

நூல்: புகாரி 2732

இந்த நெருக்கடியான கட்டத்தில் உம்மு ஸலமா (ரலி) அவர்களின் புத்திக் கூர்மை மிக்க யோசனை உண்மையில் சாதாரணமான ஒரு பிரச்சனை அல்ல! போர் தவிர்க்கப்பட்டு சமாதானம் உருவாவதற்கு அடிப்படையாக அமைந்தது.

மனைவிமார்களின் அணுகுமுறை உம்மு ஸலமா (ரலி)யின் அணுகுமுறை போன்று அறிவு ரீதியானதாகவும், கணவன் ஈடுபட்டிருக்கும் துறைக்கு உகந்ததாகவும், அவர் மாட்டியிருக்கும் சிக்கலைத் தீர்ப்பதாகவும் அமைந்திருக்க வேண்டும். கணவன் சந்திக்கும் பிரச்சனைகள் அரசியல் பிரச்சனையாகவும் இருக்கலாம். சதாரணமான வீட்டுப் பிரச்சனையாகவும் இருக்கலாம்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாளியாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காக) தமது மனைவிமார்களிடம் சொல்யனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தனர். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவரை சேர்த்துக் கொள்பவர் யார்?'' அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?'' என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கின்றேன்)'' என்று கூறி அவரை அழைத்துக் கொண்டு தமது மனைவியிடம் சென்றார்.

"அல்லாஹ்வின் தூதருடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று (தம் மனைவியிடம்) கூறினார். அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று கூறினார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று கூறினார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கைச் சரி செய்வது போல் நின்று விளக்கை அணைத்து விட்டார்.

பிறகு (இருக்கும் உணவை விருந்தாளியை உண்ணச் செய்து விட்டு) அவரும் அவரது மனைவியும் உண்பது போல் அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரித் தோழர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு சிரித்துக் கொண்டான்'' அல்லது "வியப்படைந்தான்'' என்று கூறினார்கள்.

அப்போது அல்லாஹ், "தமக்கு வறுமை இருந்த போதும் தம்மை விட (பிறருக்கு) முன்னுரிமை அளிக்கின்றனர். தன்னிடமுள்ள கஞ்சத்தனத்திருந்து காக்கப்படுவோரே வெற்றி பெற்றோர்'' எனும் (59:9) வசனத்தை அருளினான்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி 3798

இது போன்று எல்லாப் பிரச்சனைகளுக்கும் மனைவியரின் அணுகுமுறைகள் மேற்கண்ட ஹதீஸின் அடிப்படையில் அமைந்திருக்குமானால் இம்மையிலும் மறுமையிலும் மாபெரும் வெற்றி கிடைப்பதற்கு இது காரணமாக அமையும் என்பதில் சந்தேகமில்லை.

கேள்வி பதில்

? பள்ளிவாசல் வியாபாரம் செய்வதற்குத் தடை உள்ளது. (புலூகுல் மராம்) ஆனால் மார்க்கப் புத்தகங்களையும், தொப்பி, அத்தர் போன்றவற்றையும் பள்ளிவாசல் விற்கின்றார்கள். இது கூடுமா?

கே. முஹம்மது ஜாஃபர், செங்கோட்டை

பள்ளிவாசல் விற்பவரையோ, வாங்குபவரையோ கண்டால், "அல்லாஹ் உமது வியாபாரத்தில் இலாபமில்லாமல் ஆக்கட்டும்'' என்று கூறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: திர்மிதீ 1242

இந்த ஹதீஸின் படி பள்ளிவாசல் எந்தப் பொருளையும் விற்பதோ வாங்குவதோ கூடாது. மார்க்கப் புத்தகங்களானாலும் பள்ளிக்கு வெளியில் தான் விற்க வேண்டும்.

? போரில் கூட பெண்களைக் கொல்லக் கூடாது என்று இஸ்லாம் கூறுகின்றது. ஆனால் இப்போது இருக்கும் சூழ்நிலையில் சங்பரிவார அமைப்பினர் துர்கா வாஹினி போன்ற பெண்கள் அமைப்பை ஏற்படுத்தி பயிற்சியளித்து வருகின்றனர். இது போன்ற பெண்கள் அமைப்பினர் ஆண்களைக் கொல்ல வந்தால் அந்தச் சூழ்நிலையில் என்ன செய்வது?

எம். செய்யது அப்துர் ரஹ்மான், புளியங்குடி

உங்களிடம் வரம்பு மீறியோரிடம் அவர்கள் வரம்பு மீறியது போன்ற அதே அளவு நீங்களும் வரம்பு மீறுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள்! (தன்னை) அஞ்சுவோருடனே அல்லாஹ் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்! (அல்குர்ஆன் 2:194)

எதிரிகள் வரம்பு மீறும் போது அதே போன்று நாமும் வரம்பு மீறுவதில் தவறில்லை என்பதை இந்த வசனம் சுட்டிக் காட்டுகின்றது.

போரில் பெண்களைக் கொல்வதற்குத் தடை இருந்தாலும் நீங்கள் குறிப்பிடுவது போன்ற நிர்ப்பந்தமான சூழநிலைகளில் நம்மைத் தற்காத்துக் கொள்வது மார்க்க அடிப்படையில் மட்டுமல்ல. இந்திய அரசியல் சட்டத்தின் அடிப்படையிலும் தவறில்லை.

? ஒத்திக்கு வீடு பிடிக்கக் கூடாது என்பதற்குக் குர்ஆனிலும் ஹதீஸிலும் ஆதாரம் இல்லை என்று சிலர் கூறுகின்றார்களே? இதற்குப் பதில் என்ன?

யாஸீன் தாரிக், மதுரை

ஒருவருக்கு பத்தாயிரம் ரூபாய் பணம் தேவைப்படுகின்றது என்று வைத்துக் கொள்வோம். இவர் தன்னிடம் இருக்கும் வீட்டை ஒருவரிடம் அடைமானமாகக் கொடுத்து, தனக்குத் தேவையான பணத்தைப் பெற்றுக் கொள்கின்றார். கடன் வாங்கியவருக்கு வசதி வரும் போது அந்தப் பணத்தைத் திருப்பிச் செலுத்தி விட்டு தனது வீட்டை வாங்கிக் கொள்கிறார். இது அடைமானமாகும். கொடுக்கின்ற பணத்திற்கு ஈடாக ஒரு பொருளை வாங்கி வைத்துக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் பணம் கொடுத்தவர் அந்தப் பொருளை உபயோகப்படுத்தாமல் இருக்க வேண்டும்.

அந்தப் பொருளை அவர் உபயோகிக்க ஆரம்பித்து விட்டால் அது வட்டியாகி விடுகின்றது. அதாவது அந்த வீட்டை அவர் உபயோகிப்பதற்காகக் கொடுக்க வேண்டிய வாடகையை, தான் கொடுத்துள்ள பணத்திற்கு வட்டியாக எடுத்துக் கொள்கின்றார். நடைமுறையில் ஒத்தி என்ற பெயரில் வழக்கத்தில் இருப்பது இது தான்.

ஒத்தி என்பது தெளிவான வட்டிதான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை. இதற்கு மார்க்கத்தில் அனுமதி இல்லை. உயிருள்ள பிராணிகளை அடகு வைத்தால் மட்டுமே அவற்றைப் பயன்படுத்திக் கொள்ள அனுமதி உண்டு. அதுவும் அந்தப் பிராணியை வளர்ப்பதற்கு ஆகும் பராமரிப்புச் செலவுக்குப் பிரதியாக மட்டுமே பயன்படுத்த வேண்டும்.

"அடகு வைக்கப் பட்ட பிராணியை, அதற்காகும் (பராமரிப்புச்) செலவுக்குப் பிரதியாக (அடகு வாங்கியவர்) வாகனமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். பால் தரும் பிராணி அடகு வைக்கப் பட்டிருப்பின் அதன் பாலை (அடகு வாங்கியவர்) அருந்தலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) ,

நூல் : புகாரி

இந்த ஹதீஸில் அடகு வைக்கப்பட்ட பிராணியை அதற்காகும் செலவுக்குப் பிரதியாக அதைப் பயன்படுத்தலாம் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகின்றார்கள். இது உயிருள்ள பிராணிகளுக்கு மட்டுமே பொருந்தும். ஏனெனில் கால்நடைகளைப் பொறுத்தவரை அவற்றை வளர்ப்பதற்கு ஒரு குறிப்பிட்ட தொகை செலவிட்டாக வேண்டும். இந்தச் செலவுகளை அடைமானமாகப் பெற்றவர் தனது சொந்தச் செலவிருந்து செய்ய முடியாது. எனவே தான் அந்தச் செலவுக்குப் பிரதியாக அந்தப் பிராணிகளைப் பயன்படுத்த நபி (ஸல்) அவர்கள் அனுமதியளிக்கின்றார்கள்.

வீடு, நிலம் போன்றவற்றிற்கு இது போன்ற பராமரிப்புச் செலவுகள் எதுவும் இல்லை என்பதால் அவற்றை அடைமானமாகப் பெற்றால் பயன்படுத்தக் கூடாது. அவ்வாறு பயன்படுத்துவது அதற்கான வாடகையை வட்டியாக வாங்குவதற்குச் சமம். மேற்கண்ட ஹதீஸில் பிராணிகளைப் பயன்படுத்தலாம் என்று மேலோட்டமாகச் சொல்லாமல் "அதற்காகும் செலவுக்குப் பகரமாக' என்பதையும் சேர்த்துச் சொல்வதிருந்தே வீடு, நிலம் போன்றவற்றை அடைமானம் பெற்றவர் பயன்படுத்தக் கூடாது என்பது தெளிவாகின்றது. அதே சமயம் அந்த வீட்டிற்கான வாடகையை நில உரிமையாளருக்குக் கொடுத்து விட்டு அந்த நிலத்தைப் பயன்படுத்திக் கொள்வதில் தவறில்லை.

? வக்து தொழுகைக்கு பாங்கு சொல்வதை பள்ளியில் உள்ளே சொல்லலாமா? பள்ளிக்கு வெளியே தான் சொல்ல வேண்டும். பள்ளிக்கு உள்ளே நின்று சொல்லக் கூடாது என்று சிலர் கூறுகின்றார்கள். இது சரியா?

எம். சமீயிர்ரஹ்மான், திருமுல்லைவாசல்

தொழுகை நேரம் வந்தால் பாங்கு சொல்ல வேண்டும் என்பதை வயுறுத்தி ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் பள்ளிவாசன் உள்ளே பாங்கு சொல்வதற்குத் தடையோ, அல்லது பள்ளிக்கு வெளியே தான் பாங்கு சொல்ல வேண்டும் என்ற கட்டளையோ ஹதீஸ்களில் காணப்படவில்லை. பள்ளியின் உள்ளே பாங்கு சொன்னதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

மழையினால் சேறு ஏற்பட்டிருந்த ஒரு நாளில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஜும்ஆ பிரசங்கம் செய்தார்கள். பாங்கு சொல்பவர், ஹய்ய அலஸ்ஸலாஹ் என்று சொல்ல ஆரம்பித்த போது, உங்கள் கூடாரங்களிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று மக்களுக்கு அறிவிக்குமாறு கட்டளையிட்டார்கள். அப்போது அங்கிருந்தவர்கள் சிலர் சிலரை ஆச்சரியமாகப் பார்த்தார்கள். இந்த பாங்கு சொல்பவரை விடவும் சிறந்தவர்களான நபி (ஸல்) அவர்கள் ஜும்ஆ கட்டாயமானதாக இருந்தும் அவ்வாறு செய்திருக்கின்றார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) கூறினார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஹாரிஸ்,

நூல்: புகாரி 616

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் பிரசங்கத்திற்காக மிம்பரில் ஏறிய பிறகு முஅத்தினிடம், உங்கள் வீடுகளிலேயே தொழுது கொள்ளுங்கள் என்று கூறுமாறு கட்டளையிடுகின்றார்கள். முஅத்தின் பள்ளியில் உள்ளே நின்று பாங்கு சொல்யிருந்தால் தான் இது சாத்தியமாகும். எனவே பள்ளியின் உள்ளே பாங்கு சொல்வதற்குத் தடை இல்லை என்பதை அறியலாம்.

? வியாபாரத்தில் எவ்வளவு இலாபம் வைக்க வேண்டும் என்பதற்கு குர்ஆன் ஹதீஸில் வரைமுறை எதுவும் உள்ளதா? விளக்கவும்.

எஸ். அக்பர் பாதுஷா, மேலப்பாளையம்

வியாபாரத்தில் இவ்வளவு தான் இலாபம் வைக்க வேண்டும் என்று வரைமுறை எதுவும் மார்க்கத்தில் கூறப்படவில்லை. விற்பவரும் வாங்குபவரும் பொருந்திக் கொள்வது தான் வியாபாரம். விற்பவர் எவ்வளவு இலாபம் வைத்திருந்தாலும் அதை வாங்குபவர் பொருந்திக் கொண்டால் அது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்ட வியாபாரம் தான்.

விற்பவரும் வாங்குபவரும் பிரியாமருக்கும் வரை வியாபாரத்தை முறித்துக் கொள்ளும் உரிமை இருவருக்கும் உண்டு. அவ்விருவரும் உண்மை பேசி, குறைகளைத் தெளிவு படுத்தியிருந்தால் அவர்களுடைய வியாபாரத்தில் பரக்கத் அளிக்கப்படும். குறைகளை மறைத்துப் பொய் சொல்யிருந்தால் அவர்களின் வியபாரத்தில் உள்ள பரக்கத் நீக்கப்படும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஹகீம் பின் ஹிஸாம் (ரலி),

நூல்: புகாரி 2079

வியாபாரி கூறும் விலையை வாங்குபவர் ஏற்றுக் கொண்டால் பொருளை வாங்கலாம். அந்த விலையில் உடன்பாடில்லை என்றால் அந்தப் பொருளை வாங்காமல் விட்டு விடலாம். இதில் இவ்வளவு தான் விலை வைக்க வேண்டும் என்று மார்க்கம் எந்த நிபந்தனையையும் விதிக்கவில்லை. ஆனால் அதே சமயம் மேற்கண்ட ஹதீஸில் கூறப்படுவது போல், குறைகளை மறைக்காமல், பொய் சொல்லாமல் விற்க வேண்டும்.

உள்நாட்டுப் பொருளை வெளிநாட்டுப் பொருள் என்று கூறியோ, அல்லது தரமில்லாத ஒரு பொருளை தரமானது என்று கூறியோ விற்பனை செய்யக் கூடாது. அதே போல் அதிக இலாபம் கிடைக்க வேண்டும் என்பதற்காக பதுக்கி வைக்கவும் கூடாது.

யார் விலையை ஏற்றுவதற்காக வியாபாரம் செய்யாமல் பதுக்கி வைக்கின்றாரோ அவர் தவறிழைத்து விட்டார் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: மஃமர் (ரலி),

நூல்: முஸ்லிம் 3012

? சூனியம் என்பது இப்போது இருக்கும் கண்கட்டி வித்தையைப் போன்றதா? அல்லது தாயத்து தகடு போன்றவற்றில் மந்திரித்து வைப்பது போன்றதா?

பீர் முஹம்மது, திருவனந்தபுரம்

மேஜிக் எனப்படும் கலை தான் ஸிஹ்ர் எனும் சூனியமே தவிர வேறில்லை. சூனியம் என்ற வித்தை மூலம் பாரதூரமான காரியங்களைச் செய்ய முடியும் என்று பலரும் எண்ணுகின்றனர். இருப்பதை இல்லாமல் ஆக்கவோ, இல்லாததை உருவாக்கவோ, ஒன்றை வேறொன்றாக மாற்றவோ உலகில் எந்த வித்தையும் கிடையாது.

தாயத்து, தகடு போன்றவற்றால் கையை முடக்குவேன், காலை முடக்குவேன் என்றும், இல்லாததை உண்டாக்குவேன் என்றும் புளுகக் கூடியவர்கள், தங்கள் மந்திர சக்தியினால் பெரும் வசதி படைத்தவர்களாக ஆக முடியவில்லை. மக்களை ஏமாற்றிப் பணம் பறித்து வேண்டுமானால் பணக்காரர்களாக சிலர் ஆகியிருக்க முடியும்.

தந்திரம் செய்து இப்படி ஒரு தோற்றத்தை ஏற்படுத்த முடியும். இருக்கும் பொருளையே யாருக்கும் தெரியாத வகையில் மறைத்துப் பின்னர் எடுத்துக் காட்ட முடியும்.

அவர்கள் (தமது வித்தை களைப்) போட்ட போது மக்களின் கண்களை வயப்படுத்தினார்கள். மக்களுக்கு அச்சத்தையும் ஏற்படுத்தினார்கள். பெரும் சூனியத்தை அவர்கள் கொண்டு வந்தனர். (அல்குர்ஆன் 7:116)

இந்த வசனத்தில் சூனியக்காரர்கள் மக்களின் கண்களை ஏமாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

அவர்களின் கயிறுகளும், கைத்தடிகளும் அவர்களது சூனியத்தினால் சீறுவதைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது. (அல்குர்ஆன் 20:66)

கயிறுகளைப் பாம்புகளாக அவர்கள் மாற்றினார்கள் என்று அல்லாஹ் கூறவில்லை. பாம்பைப் போல் அவருக்குத் தோற்றமளித்தது என்று அல்ôஹ் கூறுகின்றான். அதாவது பாம்பைப் போல் கற்பனையான தோற்றத்தை ஏற்படுத்தினார்கள் என்பது தான் இதன் பொருள்.

உமது வலது கையில் உள்ளதைப் போடுவீராக! அவர்கள் செய்தவற்றை அது விழுங்கி விடும். அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான். (அல்குர்ஆன் 20:69)

இங்கு சூனியம் என்பது ஒரு சூழ்ச்சி, தந்திரம் என்று அல்லாஹ் கூறுகிறான். மேலும் இது கண்கட்டு வித்தை என்பதால் தான், போட்டி என்று வந்தால் சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான் என்றும் அல்லாஹ் கூறுகின்றான்.

எனவே சூனியம் என்பது வெறும் மேஜிக் எனப்படும் கண்கட்டு வித்தை தான் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

? ஆகஸ்ட் 2004 இதழில், தீபாவளியன்று பூஜை செய்யாத பொருட்களை மாற்று மதத்தினர் தந்தால் சாப்பிடலாம் என்று கூறியிருக்கின்றீர்கள். அப்படியானால் மவ்து, ஃபாத்திஹா, கந்தூரி போன்றவற்றில் வழங்கப்படும் உணவுகளையும் சாப்பிடலாமா? இரண்டு தரப்பினரின் நோக்கமும் ஒன்று தானே? என்று என் நண்பர் வினவுகின்றார். விளக்கவும்.

கே.எம்.ஏ. முஹம்மது ஞானியார், மேலப்பாளையம்

மாற்று மதத்தினர் பண்டிகையின் போது படைப்பதற்கும், நம்மவர்கள் மவ்துக்குப் படைப்பதற்கும் பெரிய வித்தியாசம் உள்ளது. மாற்று மதத்தினர் உணவைத் தயாரிக்கும் போதே சாமிக்குப் படைக்கும் நோக்கத்தில் மட்டும் தயாரிப்பதில்லை. இதில் படைக்காமல் தனியாக எடுத்து முஸ்லிம்களுக்குக் கொடுக்க வேண்டும் என்ற நோக்கத்திலேயே செய்கின்றார்கள். அந்த நோக்கத்தை நம்மிடம் வெளிப்படுத்தவும் செய்கின்றார்கள்.

ஆனால் மவ்து, கந்தூரி, ஃபாத்திஹா போன்றவற்றிற்காக உணவு தயாரிப்பவர்கள் அந்த உணவு முழுவதுமே பரக்கத் நிறைந்தது என்று கருதியே தயாரிக்கின்றார்கள். முழு உணவையும் வைத்து மவ்து ஓதாமல் சிறிதளவு எடுத்து வைத்து ஓதினாலும் முழு உணவையும் தபர்ரூக் என்றே குறிப்பிடுவார்கள். அதற்கென்று தனி மகத்துவம் இருப்பதாகவே நினைக்கின்றார்கள். இரண்டு தரப்பினரின் நோக்கத்திற்கும் அடிப்படை வித்தியாசம் உள்ளது. எனவே முழு உணவையும் எடுத்து வைத்து மவ்து ஓதாவிட்டாலும் அது நேர்ச்சையாக எண்ணியே தயாரிக்கப்படுவதால் அதைச் சாப்பிடக் கூடாது.

? பெண்களின் கணவரோ அல்லது தந்தை, சகோதரன் போன்ற மணம் முடிக்க தடுக்கப்பட்ட பிற உறவினர்களோ இமாமாக நின்று தொழுவிக்கும் போது பெண்கள் பின்னால் நின்று தொழுதால் தொழுகை ஏற்றுக் கொள்ளப்படுமா? அல்லது இமாம் மறைவான இடத்தில் தான் நிற்க வேண்டுமா?

எம். சமீரா அஜீஸ், அதிராம்பட்டிணம்

கணவர், தந்தை போன்ற உறவினர்கள் மட்டுமல்லாது வேறு அந்நிய ஆண்கள் தொழுவிக்கும் போதும் பெண்கள் பின்னால் நின்று தொழுவதற்கு மார்க்கத்தில் தடை இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் கடமையான தொழுகைக்காக பெண்களும் பள்ளிக்கு வருவார்கள். அவர்கள் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வார்கள் என்பதற்கு ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன.

(கூட்டுத் தொழுகையில்) ஆண்களுடைய வரிசைகளில் சிறந்தது முதல் வரிசையாகும். அவற்றில் தீயது கடைசி வரிசையாகும். பெண்களுடைய வரிசைகளில் சிறந்தது கடைசி வரிசையாகும். அவற்றில் தீயது முதல் வரிசையாகும் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: முஸ்லிம் 664

இந்த ஹதீஸின்படி பெண்கள் கூட்டுத் தொழுகையில் பங்கேற்கும் போது, ஆண்களின் வரிசைக்குப் பின்னால் கடைசி வரிசையில் நிற்க வேண்டும். மறைவான இடத்தில் நின்றால் தான் பெண்களுக்குத் தொழுகை கூடும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லை. ஆண்களுக்குப் பின் வரிசையில் பெண்கள் நின்று தொழுததற்குப் பல சான்றுகள் உள்ளன.

சில ஆண்கள் நபி (ஸல்) அவர்களுடன் தொழுது கொண்டிருந்தனர். அவர்கள் சிறுவர்களைப் போன்று தங்களுடைய (சிறிய) வேஷ்டியை தங்களுடைய கழுத்தில் கட்டியிருந்தனர். (இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் ஆண்களின் பின்னால் தொழுது கொண்டிருந்த) பெண்களிடத்தில், "ஆண்கள் சுஜூதிருந்து எழுந்து அமர்வது வரை நீங்கள் உங்களுடைய தலையை சுஜூதிருந்து உயர்த்த வேண்டாம்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅது (ரலி),

நூல்: புகாரி 362

? நபி (ஸல்) அவர்கள் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை யமன் நாட்டிற்கு ஆளுநராக அனுப்பும் போது, முஆத் (ரலி), குர்ஆன் மற்றும் ஹதீஸில் தீர்வு கிடைக்கவில்லை என்றால் எனது சிந்தனையைக் கொண்டு முடிவு எடுப்பேன் என்று கூறுகின்றார்கள். இதை நபி (ஸல்) அவர்களும் அனுமதிக்கின்றார்கள். இதைத் தான் மத்ஹபுவாதிகள் எடுத்துக் கொண்டு மத்ஹபுச் சட்டங்களை இயற்றலாம் என்று கூறுகின்றார்கள். இதற்கு விளக்கம் என்ன?

இரா. ரிஸ்வான் அஹ்மத், தஞ்சாவூர்

குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் இஜ்திஹாத் (ஆய்வு) செய்து தீர்ப்பளிப்பதற்கு மார்க்கத்தில் அனுமதி உள்ளது. ஆனால் நீங்கள் குறிப்பிடும் இந்த ஹதீஸில் குர்ஆன் ஹதீஸ் இல்லாமல் சொந்தமாக மார்க்க விஷயத்தில் தீர்ப்பளிக்கலாம் என்ற கருத்தில் உள்ளது. இந்த ஹதீஸ் பல்வேறு நூற்களில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான ஹதீஸாகும்.

நபி (ஸல்) அவர்கள், முஆத் (ரலி)யை யமனுக்கு அனுப்பும் போது, நீ எவ்வாறு தீர்ப்பளிப்பாய்? என்று கேட்டார்கள். நான் அல்லாஹ்வுடைய வேதத்தில் இருப்பதைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) பதிலளித்தார். அல்லாஹ்வுடைய வேதத்தில் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அல்லாஹ்வுடைய தூதரின் சுன்னத்தைக் கொண்டு தீர்ப்பளிப்பேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வின் தூதருடைய சுன்னத்திலும் இல்லையென்றால்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, என்னுடைய சிந்தனையைக் கொண்டு இஜ்திஹாத் (ஆய்வு) செய்வேன் என்று முஆத் (ரலி) கூறினார். அல்லாஹ்வுடைய தூதருடைய தூதருக்கு அருள் செய்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

முஆத் பின் ஜபல் (ரலி) அறிவிக்கும் இந்த ஹதீஸ் திர்மதீ, அபூதாவூத், அஹ்மத், தாரமீ, பைஹகீ உள்ளிட்ட பல்வேறு நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்த அனைத்து அறிவிப்புகளிலுமே ஹாரிஸ் இப்னு அம்ர் என்பவர் இடம் பெறுகின்றார். இவர் பலவீனமானவர் என்று பல ஹதீஸ் கலை அறிஞர்கள் கூறுகின்றார்கள். மேலும் இவர் யாரிடமிருந்து அறிவிக்கின்றாரோ அவரது பெயரைக் குறிப்பிடாமல் அறிவித்துள்ளார். எனவே இந்த ஹதீஸ் பலவீனமானதாகும்.

தஸ்பீஹ் தொழுகை

எம்.ஐ. சுலைமான் தொடர் - 2

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக பல்வேறு நபித்தோழர்கள் வழியாக அறிவிக்கப்படும் ஏழு அறிவிப்புகளைக் கடந்த இதழில் கண்டோம். இந்த இதழில் மேலும் சில அறிவிப்புகளையும் அவற்றின் தரத்தையும் பார்ப்போம்.

8. ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி)அறிவிக்கும் செய்தி

நான்கு ரக்அத்கள் அதை நீ செய்தால் ....... (என்று தொடங்கும் தஸ்பீஹ் தொழுகையைப் பற்றிய ஹதீஸை) பழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அபூ ராஃபிவு அறிவிக்கும் செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் அல்குர்பான் என்ற நூல் குறிப்பிடுகிறார்கள். (மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம் 1. பக்கம் 642)

9. உம்மு ஸலமா (ரலி)அறிவிக்கும் செய்தி

நபி (ஸல்) அவர்கள் எனக்குரிய நாளில் இருந்த போது நண்பகல் அப்பாஸ் (ரலி) அவர்கள் வந்தார்கள். அப்போது யார் இவர் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்பாஸ் பின் அப்துல் முத்தப் என்று தோழர்கள் கூறினார்கள். "அல்லாஹ் மிகப் பெரியவன். இந்த நேரத்தில் அவர் வந்ததற்கான காரணம் என்ன?'' என்று கேட்டார்கள். அப்போது அப்பாஸ் (ரலி) அவர்கள் நுழைந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் "எனது தந்தையின் உடன்பிறந்தவரே! இந்த நேரத்தில் என்ன காரியமாக வந்திருக்கிறீர்கள்?'' (என்று கூறி தஸ்பீஹ் தொழுகையில் வந்துள்ளதைப் போன்று) கூறினார்கள் என உம்மு ஸலமா (ரலி) அறிவித்த செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்1, பக்கம் 643 )

9. அப்பாஸ் பின் அப்துல் முத்தப் (ரலி) அறிவிக்கும் செய்தி

உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். இதற்கு முன்னர் யாருக்கும் வழங்காத உலகப் பொருளிருந்து ஏதாவது ஒன்றை தருவார்கள் என்று நான் எண்ணினேன்.

அப்போது நான்கு ரக்அத்தில் உனக்கு நான் கற்றுத்தருவதை அதில் கூறினால் அல்லாஹ் உன்னை மன்னிப்பான். (தொழுகையை) அல்லாஹ் அக்பர் என்று கூறி ஆரம்பம் செய். பிறகு பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது.

பின்னர் ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்து ல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று 15 தடவை கூறு. நீ ருகூவு செய்யும் போது இதைப்போன்று 10 தடவை கூறு. ஸமிஅல்லாஹ மன் ஹமிதா என்று கூறும் போது அதைப் போன்று 10 தடவை கூறு. ஸஜ்தா செய்யும் போது அதைப்போன்று 10 தடவைக் கூறு. ஸஜ்தாவிருந்து தலையை உயர்த்தி நிலைக்கு வருவதற்கு முன்னால் அதைப்போன்று 10 தடவைக் கூறு.

பின்னர் இரண்டாவது ரக்அத்தில் முதல் ரக்அத்தில் செய்ததைப் போன்று செய். மேலும் இருப்பில் அமரும் போது அத்தஹிய்யாத் ஓதுவதற்கு முன்னால் அதனை 10 தடவை சொல். இதைப் போன்று மீதமுள்ள இரண்டு ரக்அத்திலும் செய்து கொள்.

(இத்தொழுகையை) ஒவ்வொரு நாளும் செய்ய முடியுமானால் (அவ்வாறே செய்) முடியவில்லையானால் வாரத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் மாதத்தில் ஒரு முறை. அதுவும் முடியவில்லையானால் இரண்டு மாதத்திற்கு ஒருமுறை. அதுவும் முடியவில்லையானால் வருடத்தில் ஒருமுறை (தொழுது கொள்)

அறிவிப்பவர்: அப்பாஸ் பின் அப்துல் முத்தப் (ரலி)

நூல்: அல்மவ்லூஆத் இப்னுல் ஜவ்ஸீ

தஸ்பீஹ் தொழுகையை தொடர்பாக இத்தனை செய்திகள் இடம் பெற்றுள்ளன. இச்செய்திகளை ஆய்வு செய்த அறிஞர்கள், தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக நான்கு விதமான கருத்துக்களை தெரிவித்துள்ளனர்.

1. தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் உள்ளதுதான் அதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளன.

2. தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்திகள் இட்டுக்கட்டப்பட்டவை. எனவே மார்க்கத்தில் தஸ்பீஹ் தொழுகை என்பது இல்லை.

3. தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக வரும் செய்திகள் பலவீனமானவையாக இருந்தாலும் பல வழிகளில் இடம்பெறுவதால் அது ஹஸன் எனும் தரத்தில் அமைகிறது.

4. தஸ்பீஹ் தொழுகை தொடர்பான அனைத்து செய்திகளும் பலவீனமானதாகும். எனவே பலவீனமான செய்தியை ஆதாரமாகக் கொண்டு செயல்படக் கூடாது.

இந்த நான்கு கருத்துக்களில் எது சரியானது என்பதை விரிவான விளக்கத்துடன் பார்ப்போம்.

தஸ்பீஹ் தொழுகை மார்க்கத்தில் உண்டு என் வாதிடுவோர் எடுத்து வைக்கும் ஆதாரங்களில் ஒன்றாக நாம் முதலாவதாக எடுத்து வைத்த அபூராஃபிவு (ரலி) அவர்களின் ஹதீஸின் தரத்தைப் பற்றி ஆய்வு செய்வோம்.

அபூராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி திர்மிதீ, இப்னுமாஜா, இமாம் பைஹகீ அவர்களின் அஸ்ஸுனுஸ் ஸுக்ரா, இமாம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீர் ஆகிய நான்கு நூற்களில் இடம்பெற்றுள்ளது. அனைத்து நூற்களிலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெறகிறார். அந்த நூற்களின் அரபி மூலத்தைக் கீழே தருகிறோம். மூஸா பின் உபைதா இடம் பெற்ற இடத்தை கேடிட்டுக் காட்டியுள்ளோம்.

1. திர்மிதீயின் அறிவிப்பு

2. இப்னுமாஜாவின் அறிவிப்பு

3. தப்ரானீ - அல்முஃஜமுல் கபீரின் அறிவிப்பு

4. பைஹகீ - அஸ்ஸுனுஸ் ஸுக்ராவின் அறிவிப்பு

தஸ்பீஹ் தொழுகை தொடர்பாக அபூராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி நான்கு நூற்களில் இடம்பெற்றுள்ளதையும் அவை அனைத்திலும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவரே இடம் பெற்றுள்ளார் என்பதையும் மேலே குறிப்பிட்டுள்ள அரபி மூலத்திருந்து நாம் அறிந்துகொள்ளலாம். இதில் இடம்பெறும் மூஸா பின் உபைதா பின் நஷீத் அர்ரபதீ என்பவர் நம்பகமானவரா? ஆதாரத்திற்கு ஏற்றுக்கெள்ளும் அளவிற்கு நம்பிக்கைக்குரியவரா? என்பதை பற்றி ஹதீஸ்கலை வல்லுநர்கள் என்ன கூறுகிறார்கள் என்பதைப் பார்ப்போம். (வளரும் இன்ஷா அல்லாஹ்)  கேள்வி பதில்நம்பிக்கை தொடர்புடையவைஏகத்துவம்

Published on: June 27, 2011, 4:06 PM Views: 12725


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top