தீன்குலப் பெண்மணி டிசம்பர் 2011
தீன்குலப் பெண்மணி டிசம்பர் 2011
தலையங்கம்
கட்டண உயர்வு யார் காரணம்?
தமிழகத்தில் யாரும் எதிர்பாராத நேரத்தில் மிக கடுமையாக பால், பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. ஏரத்தாள நூறு சதவிகத்திற்கு நெருக்கமாக பேருந்து கட்டணங்கள் உயர்த்தப்பட்டுள்ளன. கட்சி வேறுபாடின்றி இந்த உயர்வை மக்கள் எதிர்த்துள்ளனர். தொடர்ந்து படிக்க 05.12.2011. 10:35 தலையங்கம் ஆட்சி அதிகாரத்தில் சிறிய அளவில் பயன்பெறும் வாய்ப்பை இந்த உள்ளாட்சி தேர்தல் மக்களுக்கு வழங்கியுள்ளது. தற்போது நடந்த உள்ளாட்சி தேர்தலில் யாரும் எதிர்பாரத வகையில் ஒவ்வொரு கட்சியும் ஏறத்தாழ தனித்தே போட்டியிட்டுள்ளன. இதே முறையை சட்டமன்றம் பாராளுமன்றத்திலும் கடைப்பிடித்தால் ஒரு கட்சியின் உண்மையான சக்தி என்ன என்பதைத் தெரிந்து கொள்ளலாம். தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் தேர்தலில் போட்டியிடவில்லை. போட்டியிடக்கூடாது என்பதைக் கொள்கையாக வைத்துள்ள இந்த ஜமாஅத்தை பல வகையில் எதிர்த்தவர்கள் இந்த தேர்தலில் போட்டியிட்டுள்ளனர். நாம் ஒற்றுமையைக் குலைப்பதாக குற்றம் சாட்டியவர்களின் சாயம் இந்த தேர்தலில் வெளுத்துவிட்டது. உலக ஆதாயத்திற்காகவே நம்மை எதிர்த்தார்கள் என்பதை இந்த்த் தேர்தல் வெளிச்சம் போட்டுக் காட்டிவிட்டது. உண்மையில் இவர்கள் ஒற்றுமையை வலியுறுத்துபவர்கள் என்றால் ஏன் அனைவரும் சேர்ந்து ஒரு வேட்பாளரை நிறுத்தவில்லை? ஒரு வார்டில் மட்டும் பத்துக்கும் மேற்பட்ட முஸ்லிம் வேட்பாளர்கள் நிறுத்தப்பட்டிருப்பது ஒற்றுமையின் அடையாளமா? தங்களின் சுய லாபத்திற்காகவே தவ்ஹீத் ஜமாஅத்தை அவர்கள் எதிர்க்கிறார்கள் என்பதை மக்கள் இந்த்த் தேர்தல் மூலம் நன்றாக உணர்ந்துள்ளார்கள். சட்டமன்றத் தேர்தலில் நின்று இரண்டு இடங்களை வெற்றி கொண்டவர்கள் சட்டமன்றத்தில் முஸ்லிம் சமுதாயத்திற்காக செய்த நன்மைகள் என்ன? இந்த சமுதாயத்திற்காக குறைந்த பட்சம் குரலையாவது உயர்த்திப் பேசினார்களா? ஆளும் கட்சி வேட்பாளரை விட அம்மா புகழ்பாடியவர்கள் என்று பாராட்டு மட்டும் தான் அவர்கள் செய்த சாதனை. இவர்களும் இந்த உள்ளாட்சித் தேர்தலில் நிற்கிறார்கள். இவர்கள் வந்து என்ன கிழிக்கப் போகிறார்கள் என்று தெரியவில்லை. வார்ட் உறுப்பினருக்குப் போட்டி போடும் உறுப்பினர் அளிக்கும் வாக்குறுதிகளைப் பார்த்தால் இவர்கள் எவ்வளவு பெரிய பொய்யர்கள் என்பதையும் பதவிக்காக எதையும் சொல்வார்கள் என்பதையும் விளங்கலாம். ஒரு வார்ட் உறுப்பினரின் அதிகாரம் என்ன? அவரால் என்ன செய்ய முடியும்? என்பதைக் கூட அவர்கள் விளங்காமல் வாக்குகளை அள்ளி வீசுவார்கள். இந்தப் பகுதியில் பெரிய பாலத்தைக் கட்டுவேன் என்பார். இதை அவர் செய்திட முடியுமா? அதற்கு சட்டத்தில் இடம் உண்டா? அவர் பகுதியில் ஒரு குப்பைத் தொட்டியை வேண்டுமானால் கொண்டு வர முயற்சிக்கலாம். இன்னும் சிலர் எனக்கு வாக்களித்தால் இந்த பகுதிக்கு இரயில் போக்குவரத்தைக் கொண்டு வருவேன் என்பார். ரயில்வே மத்திய அரசின் கட்டுப்பாட்டில் உள்ளது என்பதைக் கூட தெரியாத வார்ட் உறுப்பினர் அள்ளிவீசும் இது போன்று வாக்குறுதி அளித்தவர்கள் வெற்றி பெற்று வந்து என்ன செய்வார்கள்? இப்படி நடக்க முடியாத, சாத்தியமற்ற தம்மால் செய்ய முடியாத பல திட்டங்களைத் தான் வாக்குறுதியாக சொல்லி ஓட்டு கேட்டுள்ளார்கள். அவர்கள் வெளியிட்ட துண்டுப்பிரசுரங்கள், வாக்குறுதிகள் இவற்றையெல்லாம் வைத்துக் கொண்டு வார்ட் உறுப்பினராக வந்த பின்னர் நீங்கள் அளித்த வாக்குறுதிகளை ஏன் நிறைவேற்றவில்லை என்று தொடர்ந்து கேட்டுக் கொண்டிருங்கள். இவ்வாறு கேட்டால் தான் அவர்களுக்குப் புத்திவரும். மேலும் மக்களிடமும் இவர்களின் ஏமாற்று வாக்குறுதிகளை அம்பலப்படுத்துங்கள். தொடர் : 3 நில மோசடி ராஜ் முஹம்மத் எம்.ஐ.எஸ்.ஸி, தேவைக்கு அதிகமாக யாசிப்பவனுக்குரிய தண்டனை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : (தம் தேவைக்கு அதிகமாக) மக்களிடம் யாசிப்பவன் தன் முகத்தில் சிறிதளவு கூடச் சதை இல்லாதவனாக மறுமை நாளன்று வருவான். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 1474, 1475 மோசடி செய்பவனுக்குரிய தண்டனை வாக்கு மீறுவதும், நம்பிக்கை மோசடி செய்வதும் எந்த ஒரு முஸ்லிமிடமும் இருக்கக் கூடாது. நம்முடைய எதிரிகளாக இருந்தாலும் அவர்களிடம் செய்த ஒப்பந்தத்தைப் பேணுவதும் அவர்களுக்குரிய பொருளை முறையாகக் கொடுத்து விடுவதும் அவசியமாகும். அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரண்டு கூட்டாளிகளில் ஒருவர் தன்னுடைய தோழருக்கு மோசடி செய்யாத வரை நான் அவர்களுடன் மூன்றாவது (கூட்டாளி) ஆவேன். ஆனால் மோசடி செய்தால் அவ்விருவரிடமிருந்து நான் வெளியேறி விடுகிறேன். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் 2936 மோசடி செய்வது எந்த நபிக்கும் தகாது. மோசடி செய்தவர் மோசடி செய்த பொருளை கியாமத் நாளில் கொண்டு வருவார். பின்னர் ஒவ்வொருவருக்கும் அவர் செய்தது முழுமையாக வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். அல்குர்ஆன் 3:161 "ஒரு முஸ்லிமின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்பவன் (மறுமையில்) தன் மீது இறைவன் கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனைச் சந்திப்பான்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே, "எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட உடன்படிக்கையையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எந்த நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது' (3:77) என்னும் குர்ஆன் வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதை நான் மக்களிடம் சொல்லிக் கொண்டிருந்த போது) அஷ்அஸ் (ரலி) அவர்கள் வந்து (மக்களை நோக்கி), "அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத்) உங்களிடம் என்ன சொல்லிக் கொண்டிருக்கிறார்? இந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது. என் தந்தையின் சகோதரர் மகனுடைய நிலத்தில் எனக்குக் கிணறு ஒன்று இருந்தது. (அந்தக் கிணறு தொடர்பாக) எனக்கும் என் ஒன்று விட்ட சகோதரருக்கும் இடையே சச்சரவு ஏற்பட்டது. (அதற்காகத் தீர்ப்புக் கேட்டு நபி (ஸல்) அவர்கüடம் நான் வந்தேன்.) அப்போது நபி (ஸல்) அவர்கள், "(உன் வாதத்தை நிரூபிக்க) உன்னுடைய சாட்சிகள் (எங்கே)?' என்று கேட்டார்கள். நான், "என்னிடம் சாட்சிகள் இல்லை' என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், பிரதிவாதி (அந்த நிலம் என்னுடையது தான்' என்று) சத்தியம் செய்ய வேண்டும்' என்று சொன்னார்கள். நான், "அப்படியென்றால் அவர் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்வாரே' என்று கூறினேன். அப்போது தான், நபி (ஸல்) அவர்கள் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் உங்களுக்கு அறிவித்த) இந்த ஹதீஸைக் கூறினார்கள். உடனே, அல்லாஹ் நபியவர்களின் கூற்றை உண்மைப்படுத்தி (மேற்சொன்ன 3:77 ஆம்) குர்ஆன் வசனத்தை அருüனான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி 2356 & 235 எனக்கும் வேறு சிலருக்கும் இடையே ஒரு நிலம் சம்பந்தமான தகராறு இருந்து வந்தது. அதை நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர்கள் சொன்னார்கள்: அபூசலமாவே! (பிறரது) நிலத்தை (எடுத்துக் கொள்வதைத்) தவிர்த்துக் கொள்ளுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள், "எவர் ஓர்அங்குலம் அளவு நிலத்தை அநியாயமாக அபகரித்துக் கொள்கிறாரோ (மறுமையில்) அவர் கழுத்தில் ஏழு நிலங்கள் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூசலமா (ரலி), நூல் : புகாரி 2453, 3195 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது: எவன் ஒரு நிலத்திலிருந்து ஒரு பகுதியைத் தனக்கு உரிமையின்றி எடுத்துக் கொண்டானோ அவன் மறுமை நாளில் ஏழு பூமிகளுக்குக் கீழே அழுந்திப் போய் விடுவான். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 2454 நபி (ஸல்) அவர்கள் கூறியதாவது : மோசடி செய்பவன் ஒவ்வொருவனுக்கும் ஒரு கொடி உண்டு. (உலகில்) அவன் செய்த மோசடி(யை வெளிச்சமிட்டு)க் (காட்டுவதற்)காக மறுமை நாளில் அது நடப்படும். அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி 3188 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒரு சாண் அளவு நிலத்தை அநியாயமாக அபகரிக்கிறாரோ, அவரது கழுத்தில் அல்லாஹ் மறுமை நாளில் அந்த நிலத்தி(ன் மேற்பகுதியி)லிருந்து ஏழு பூமிகள் வரை (செல்லும் பகுதியை) மாலையாக மாட்டுவான். அறிவிப்பவர் : சயீத் பின் ஸைத் பின் அம்ர் பின் நுஃபைல் (ரலி), நூல் : முஸ்லிம் 3289 முகஸ்துதிக்காக நற்செயல் செய்பவருக்குரிய தண்டனை நான் நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் சென்றேன். அப்போது அவர்கள் "யார் விளம்பரத்திற்காக நற்செயல் புரிகிறாரோ அவர் (உடைய நோக்கம்) பற்றி அல்லாஹ் (மறுமை நாளில்) விளம்பரப்படுத்துவான். யார் முகஸ்துதிக்காக நற்செயல் புரிகிறாரோ அவரை அல்லாஹ் (மறுமை நாளில்) அம்பலப்படுத்துவான்'' என்று கூறியதைக் கேட்டேன். அறிவிப்பவர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் : புகாரி 6499, முஸ்லிம் 5709 காணாத கனவைக் கண்டதாக கூறுபவருக்குரிய தண்டனை காணாத கணவை கண்டதாகப் பொய்யுரைப்பது குற்றமாகும். இக்குற்றத்திற்கு மறுமையில் தண்டனை வழங்கப்படும். சிலர் இப்படி கணவு கண்டேன், அப்படி கணவு கண்டேன் என்று பொய் சொல்லி மக்களை நம்ப வைத்து, அதன் மூலம் காரியம் சாதிக்கவும் இலாபம் அடையவும் விரும்பவர். சிலர் தாம் பெரிய மனிதர் என்று காட்டிக் கொள்வதற்காக போலிக் கணவுகளை மக்களிடையே பரப்புவர். ஒருவர் தாம் காணாத கனவைக் கண்டதாக வலிந்து சொல்வாரானால், அவர் (மறுமையில்) இரண்டு வாற்கோதுமைகளை (ஒன்றுடன் ஒன்றைச் சேர்த்து) முடிச்சுப் போடும்படி நிர்ப்பந்திக்கப்படுவார். ஆனால், அவரால் ஒரு போதும் (அப்படிச்) செய்ய முடியாது. (அவருக்கு அளிக்கப்படும் வேதனையும் நிற்காது.). . . என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 7042 ஒட்டுக் கேட்பவர்களுக்குரிய தண்டனை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : "தாம் கேட்பதை மக்கள் விரும்பாத நிலையில்' அல்லது "தம்மைக் கண்டு மக்கள் வெருண்டோடும் நிலையில்' யார் அவர்களது உரையாடைலைக் காது தாழ்த்தி (ஒட்டு)க் கேட்கிறாரோ அவரது காதில் மறுமை நாளில் ஈயம் உருக்கி ஊற்றப்படும். அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி), நூல் : புகாரி 7042 பொய் சொல்பவருக்குரிய தண்டனை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உண்மை, நிச்சயமாக நன்மைக்கு வழிகாட்டும். நன்மையானது நிச்சயம் சொர்க்கத்திற்கு வழிகாட்டும். ஒரு மனிதர் உண்மை பேசிக்கொண்டே இருப்பார். இறுதியில் அவர் "வாய்மையாளர்' (சித்தீக்- எனும் பெயருக்கு உரியவர்) ஆகிவிடுவார். (இதைப் போன்றே) பொய் நிச்சயமாகத் தீமைக்கு வழிவகுக்கும்; தீமை நரகத்திற்கு வழிவகுக்கும். ஒரு மனிதர் பொய் பேசிக் கொண்டேயிருப்பார். இறுதியில் அவர் அல்லாஹ்விடம் "பெரும் பொய்யர்' எனப் பதிவு செய்யப்பட்டுவிடுவார். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல் : புகாரி (6094) பெருமையடிக்கும் ஏழைக்குரிய தண்டனை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப் படுத்தவுமாட்டான், அவர்களைப் பார்க்கவுமாட்டான் அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை தான் உண்டு: விபசாரம் புரிகின்ற முதியவர், பொய் சொல்கின்ற அரசன், பெருமையடிக்கும் ஏழை ஆகியோர் (தாம் அம்மூவரும்) அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் 172 பொய் சத்தியம் செய்து வியபாரம் செய்பவனுக்குரிய தண்டனை நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவுமாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவுமாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவுமாட்டான்; அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு'' என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகி விட்டனர்; நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (கணுக்காலுக்கு)க் கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்லிக் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர் (தாம் அம்மூவரும்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : முஸ்லிம் 171 தற்கொலை செய்பவருக்குரிய தண்டனை இன்பமும் துன்பமும் கலந்தது தான் வாழ்க்கை. ஒரு சிலரின் வாழ்க்கை இன்பப் பூஞ்சோலையாகிறது. ஆனால் சிலரின் வாழ்க்கை துன்பம் தரும் அனலாக மாறிவிடுகிறது. ஒவ்வொரு மனிதனும் தனக்கு பிரச்சனை ஏற்படக்கூடாது என்றே நினைக்கின்றான். ஏதாவது பிரச்சனை நேர்ந்தால் அதற்கு மரணம் தான் தீர்வு என்று எண்ணி தன்னைத் தானே மாய்த்துக் கொள்கின்றான். இன்றைய செய்தித் தாள்களைப் புரட்டினால் நாள் தோறும் தற்கொலை செய்திகள் வந்த வண்ணமே உள்ளன. இவ்வாறு தற்கொலை நடப்பதற்காள காரணங்களை ஆராய்ந்து பார்த்தால்.. ஊ வரதட்சனைக் கொடுமையால் தீக்குளித்து சாவு ஊ காதல் தோல்வியால் காதல் ஜோடிகள் தற்கொலை ஊ தேர்வில் தோல்வியால் மாணவர் தற்கொலை ஊ வறுமையால் ஏழை விவசாயி தற்கொலை என இது போன்ற பல காரணத்தால் பெரியவர், சிறியவர், ஏழை, பணக்காரர், முஸ்லிம், இந்து என்ற எந்த வேறுபாடுகளும் இல்லாமல் தற்கொலை செய்துக் கொள்வதை அவ்வப்போது செய்தித் தாள்களில் பார்க்கிறோம். தற்கொலை செய்து கொள்ளும் கோழைச் செயல் மறுமை நாளில் நிரந்தர நரகத்திற்கு கொண்டு சேர்த்துவிடும் என்பதை முஸ்லிம்கள் மனதில் வைக்க வேண்டும். பிரச்சனைகளுக்கு தற்கொலை தான் தீர்வு என்றால் மறுமை நாளில் தற்கொலைக்கு தண்டனை நிரந்தர நரகமாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் ஒரு (கூரான) ஆயுதத்தால் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் தமது கையில் அந்த கூராயுதத்தை வைத்துக் கொண்டு நரக நெருப்பில் தமது வயிற்றில் தாமே என்றென்றும் நிரந்தரமாக அதனால் குத்திக் கொண்டேயிருப்பார். யார் விஷம் குடித்துத் தற்கொலை செய்து கொள்கிறாரோ அவர் (விஷத்தை கையில் வைத்துக் கொண்டு) நரக நெருப்பில் என்றென்றும் நிரந்தரமாக அதைக் குடித்துக் கொண்டேயிருப்பார். யார் மலையின் மீதிலிருந்து கீழே குதித்துத் தற்கொலை செய்துகொள்கிறாரோ அவர் நரக நெருப்பில் (தள்ளப்பட்டு மேலிருந்து கீழே) என்றைக்கும் நிரந்தரமாகக் குதித்துக் கொண்டேயிருப்பார். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : முஸ்லிம் 175, புகாரி 5778 யார் வேண்டுமென்றே பொய்யான விஷயத்தில் சத்தியம் செய்யும் போது (நான் சொல்வது பொய்யென்றால்) இஸ்லாம் அல்லாத வேறு மார்க்கத்தில் உள்ளவனாவேன் என்று கூறுகிறாரோ அவர் கூறியது போல் (வேறு மார்க்கத்தில்) ஆவார். மேலும் யார் இரும்பு ஆயுதத்தால் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் அதே ஆயுதத்தால் நரகில் வேதனை செய்யப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர் : ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி), நூல் : புகாரி (1363) "யார் தமது கழுத்தை நெரித்துத் தற்கொலை செய்து கொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தமது கழுத்தை நெரித்துக் கொண்டிருப்பார். யார் தம்மைத் தாம் (ஆயுதத்தால்) தாக்கித் தற்கொலை செய்துகொள்கின்றாரோ அவர் நரகத்திலும் தம்மை ஆயுதத்தால் தாக்கிக் கொண்டிருப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (1365) மேற்கூறப்பட்ட நபிமொழிகள் தற்கொலை எவ்வளவு பெரிய பாவம் என்பதை மிகத் தெளிவாக எடுத்துக் காட்டுகிறது. எனவே இந்த தற்கொலை என்ற பெரும் பாவத்தின் பக்கம்கூட செல்லாதவர்களாக நாம் இருப்போம். வளரும் இன்ஷா அல்லாஹ் கவிதையில் ஷைத்தான் உரை : பி.ஜைனுல் ஆபிதீன் எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர் திருக்குர்ஆனின் சின்னஞ்சிறிய அத்தியாயங்களின் வரிசையில் 113,114 ஆகிய அத்தியாயங்களின் விரிவுரையைப் பார்த்து வருகிறோம். இவ்விரண்டு அத்தியாயங்களும் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுவதற்குக் கற்றுத்தரும் அத்தியாயங்களாகும். மனித உள்ளங்களில் மறைந்திருந்து தீய எண்ணங்களை ஏற்படுத்தும் ஷைத்தானின் தீங்கிலிலிருந்து பாதுகாப்புத் தேடுவதைக் கற்றுத்தரும் வகையில் நாஸ் அத்தியாயம் அமைந்துள்ளது. ஷைத்தான் எப்படி தீய எண்ணங்களைப் போடுவான் என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு விளக்கியுள்ளனர். கவிதை மூலம் தீய எண்ணம் கவிதை பாடுவதில் மனிதனை ஷைத்தான் இலகுவாகக் கெடுத்து விடுகிறான். உதாரணமாகச் சொல்வதாக இருந்தால், தொழுகையின் சிறப்பைப் பற்றி உரைநடையில் பேசவோ எழுதவோ சொன்னால் அதைப் பற்றி பேசுவோம், எழுதுவோம். ஆனால் தொழுகை கூடாது என்பதைப் பற்றிப் பேசச் சொன்னால் நாம் பேச மாட்டோம். ஆனால் கவிஞர்கள் "கூடும்" என்று ஏதேனும் ஒரு விசயத்திற்கு கவிதை எழுதுவார்கள். அதே விசயத்தையே "கூடாது" என்றும் கவிதை வடிப்பார்கள். மதுபானம் கூடாது என்று பேசுவோம். எழுதுவோம். ஆனால் மது குடிப்பது சிறப்பு என்று பேசுவோமா? என்றால் பேச மாட்டோம். ஆனால் கவிஞர்கள் நேர் எதிரான இரண்டு கருத்துக்களுக்கும் கவிதை இயற்றுவார்கள். மது குடிப்பதற்கும் கவிதை எழுதுவார்கள். மது குடிக்கக் கூடாது என்பதற்கும் கவிதை எழுதுவார்கள். கடவுள் இருக்கிறான் என்பதற்கும், கடவுள் இல்லை என்பதற்கும் கவிதை பாடுவார்கள். முன்னுக்குப்பின் முரண்படுகிறதே என்றெல்லாம் பார்க்க மாட்டார்கள். மொழிப் புலமையை மட்டுமே காண்பார்கள். உதாரணமாக சினிமா துறையை எடுத்துக் கொண்டால், ஒரே கவிஞர்கள் தான் பல முரண்பட்ட கவிதைகளையும் பாடல்களையும் எழுதுவார்கள். ஒரு தடவை சோஷியலிசம் சரி என்பார்கள். இன்னொரு தடவை கம்ப்யூனிசம் தான் வாழ்க்கைக்கு ஒத்துவரும் என்பார்கள். இன்னொரு தடவை முதலாளியிசத்தையும் பாராட்டுவார்கள். ஆபாசத்தை ஒரு பக்கம் விதைத்து விட்டு, இன்னொரு பக்கம் ஆபாசத்திற்கு எதிராகவும் கவிதை படிப்பார்கள். இப்படி எதை வேண்டுமானாலும் எழுதுபவர்கள் தான் கவிஞர்கள். அதனால் தான் நபியவர்கள் முரண்பாடான மனித சமூகத்திற்கு ஊறுவிளைவிக்கின்ற கவிஞர்களைக் கடுமையாக எச்சரித்துள்ளார்கள். (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் "அல்அர்ஜ்' எனுமிடத்தில் பயணம் செய்து கொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக் கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சீழ்சலத்தால் நிரம்பியிருப்பது நன்று'' என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 4548 ஒரு மனிதரின் வயிற்றில், புரையோடும் அளவுக்குச் சீழ் சலம் நிரம்பியிருப்பது, கவிதையால் நிரம்பியிருப்பதை விடச் சிறந்ததாகும். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்கள் : முஸ்லிம் 4547, 4546 புகாரி: 6154,6155 அல்லாஹ்வும் தனது திருமறையில் கூறுகிறான். ஷைத்தான்கள் யார் மீது இறங்குவார்கள் என்பதை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? இட்டுக்கட்டும் ஒவ்வொரு பாவியின் மீதும் இறங் குகின்றனர். அவர்கள் ஒட்டுக் கேட்கின்றனர். அவர்களில் அதிகமானோர் பொய்யர்கள். கவிஞர்களை வீணர்களே பின்பற்றுவார்கள். அவர்கள் ஒவ்வொரு பள்ளத்தாக்கிலும் தட்டழிந்து திரிவதை நீர் அறியவில்லையா? அவர்கள் செய்யாததைக் கூறுகின்றனர். நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அல்லாஹ்வை அதிகம் நினைத்து, அநீதி இழைக்கப்பட்ட பின் பழி தீர்த்துக் கொண்ட(புல)வர்களைத் தவிர. எந்த இடத்திற்குத் தாங்கள் செல்லவிருக்கிறோம் என்பதை அநீதி இழைத்தோர் அறிந்து கொள்வார்கள். (அல்குர்ஆன்: 26:221...227) அதே நேரத்தில் கவிதை ஒரேயடியாகத் தடுக்கப்பட்டதுமில்லை என்பதை மேற்சொன்ன வசனமே நமக்குச் சொல்லுகிறது. அல்லாஹ்வை நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்து அதிமதிகம் இறைவனை நினைவுகூர்பவர்கள் வரம்பு மீறி கவிதை எழுத மாட்டார்கள் என்றும் அத்தகைய கவிஞர்கள் சரியான கருத்தை எழுதுவார்கள் என்றும் மேற்கண்ட வசனம் அனுமதிக்கிறது. இத்தகைய நல்ல கவிஞர்கள் அல்லாஹ்வைப் பாராட்டித் தான் கவிதை எழுதுவார்கள். இறைவனைப் பழிப்பதற்கு அதைப் பயன்படுத்த மாட்டார்கள். மது குடிப்பது கூடாது என்று தான் எழுதுவார்கள். மது கூடும் என்று எழுத மாட்டார்கள். எனவே கவிதைப் புலமை என்பது மிகக் கவனமாகக் கையாள வேண்டிய விசயம். கருத்தைக் கவனிக்காமல் எதுகை, மோனை, அடுக்கு மொழி என்று மொழிவிளையாட்டின் பக்கம் ஷைத்தான் நம்மை கொண்டு போகாமல் இருக்க இறைவனிடம் பாதுகாப்புத் தேட வேண்டும். எனவே குர்ஆன் மற்றும் ஹதீஸின் கருத்தைத் தாண்டாமல் நம்மைப் பாதுகாத்துக் கொள்ள வேண்டும். கோபத்தின் மூலம் ஊசலாட்டம் ஷைத்தான் நம்மை அதிமாக வீழ்த்துவது கோபத்தின் மூலமாகத் தான். ஏனெனில் எப்போதும் நாம் எவரையும் திட்டவோ அசிங்கமான வார்த்தையால் பழிக்கவோ மாட்டோம். ஆனால் கோபம் வந்தால் திட்டுகிறோம். ரொம்பக் கோபம் வந்தால் அசிங்கமான வார்த்தையைக் கூட பயன்படுத்தி விடுகிறோம். அதனால் தான் ஆத்திரக்காரனுக்கு புத்தி மட்டு என்றொரு பழமொழியும் கூட தமிழில் பயன்படுத்துவதுண்டு. கெட்டவார்த்தை பேசாதவனைக் கூட கெட்ட பேச்சு பேசவைக்க வேண்டுமானால் அவனுக்குக் கோபத்தை அதிமாக்கினால் பேசி விடுவான். இப்படி ஷைத்தான் நம்மைக் கோபப்பட வைப்பதின் மூலம் நாம் அவனது கட்டுப்பாட்டுக்குள் சென்று விடுகிறோம். நாம் அவனது கட்டுப்பாட்டுக்குள் செல்லும் போது கண்மூக்குத் தெரியாமல் எதை வேண்டுமானாலும் செய்யத் துணிந்து விடுகிறோம். அதனால் தான் சண்டையின் போது ஒருவன் கத்தியெடுக்கிறான், துப்பாக்கியைத் தூக்குகிறான். மனைவியை அடிக்கிறான், அப்பா அம்மாவை ஏசுகிறான். எனவே தான் இதிலிருந்து பாதுகாப்புத் தேடுவதையும் நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். நான் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தேன். அப்போது இரண்டு மனிதர்கள் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டிருந்தனர். அவர்களில் ஒருவரின் முகம் (கோபத்தால்) சிவந்து விட்டது. அவருடைய தொண்டை நரம்பு புடைத்துக் கொண்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள், "எனக்கு ஒரு வார்த்தை தெரியும். அதை இவர் சொல்வாராயின் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும், "ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் நான் பாதுகாப்புக் கோருகிறேன்' என்று இவர் பிரார்த்தித்தால் இவருக்கு ஏற்பட்டுள்ள கோபம் போய்விடும்'' என்று கூறினார்கள். ஆகவே, மக்கள் அந்த மனிதரிடம், "நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோரு' என்று கூறினார்கள்'' எனத் தெரிவித்தார்கள் அதற்கு அவர், "எனக்குப் பைத்தியம் பிடித்திருக்கிறதா?'' என்று கேட்டார். அறிவிப்பவர்: சுலைமான் பின் சுரத் (ரலி) நூல்: 3282, 6048, 6115 எனவே கோபம் வருகிற போது அவூது பில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் என்று சொன்னால் கண்டிப்பாகக் கோபம் குறையும். கோபத்திலிருந்து நமது மனநிலை இறங்கிவிடும். அல்லாஹ்வுடைய தூதர் சொல்லித் தருவதை மனப்பூர்வமாக ஏற்றுக் கொண்டு ஒருவன் சொன்னால் கண்டிப்பாகக் கோபம் நீங்கும் என்பதை நாம் உறுதியாக நம்ப வேண்டும் கோபத்தை அடக்காவிட்டால் அதனால் ஏற்படும் தீய விளைவுகளில் இருந்து நல்ல மனிதர்கள் கூட தப்பிக்க முடியாது என்பதற்கு மூஸா நபியின் சம்பவத்தை உதாரணமாக்க் கொள்ளலாம். இரண்டு நபர்கள் சண்டையிட்டுக் கொண்டு இருக்கிறார்கள். அதில் ஒரு நபர் மூஸா நபியின் கூட்டமான இஸ்ராயீலைச் சார்ந்தவர். இன்னொருவர் மூஸா நபியின் எதிரி கூட்டத்தில் உள்ளவர். மூஸா நபியைச் சார்ந்தவர் மூஸா நபியிடம் உதவி கேட்கிறார். பிரச்சனை என்ன? யார் பக்கம் நியாயம் இருக்கிறது? யார் அநீதி இழைக்கப்பட்டவர்? யார் அநீதி இழைத்தவர்? என்றெல்லாம் விசாரிக்காமல், கோபப்பட்டு மூஸா நபி அவர்கள் எதிரி சமுதாயத்தைச் சேர்ந்தவர் மீது ஒரு குத்து விடுகிறார்கள். அடி வாங்கியவர் உடனே இறந்து விடுகிறார். உடனே மூஸா நபி, இது ஷைத்தானின் வேலை என்று கூறுகிறார்கள். ஷைத்தான் தனக்குக் கோபத்தை ஏற்படுத்தி விட்டதாகவும், தன்னை ஷைத்தான் வென்று விட்டதாகவும் சொல்கிறார்கள். இந்தச் சம்பவம் மூஸா நபியவர்கள் நபியாவதற்கு முன்னால் நடந்ததாகும். அவ்வூரார் கவனமற்று இருந்த நேரத்தில் அவர் அங்கே சென்றார். அங்கே இரண்டு மனிதர்கள் சண்டையிட்டுக் கொண்டிருந்ததைக் கண்டார். ஒருவர் இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர். இன்னொருவர் இவரது எதிரியின் சமுதாயத்தைச் சேர்ந்தவர். இவரது சமுதாயத்தைச் சேர்ந்தவர் எதிரிச் சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக இவரிடம் உதவி தேடினார். உடனே மூஸா ஒரு குத்து விட்டார். உடனே அவன் கதை முடிந்துவிட்டது. "இது ஷைத்தானின் வேலை. அவன் வழிகெடுக்கும் தெளிவான எதிரி'' என்றார். (அல்குர்ஆன்: 28:15) இல்லறத்திலும் ஷைத்தானின் ஊசலாட்டம் ஒருவனின் இல்லற (உடலுறவு) வாழ்விலும் கூட ஷைத்தான் கெடுத்து விடுவதை அன்றாடம் பார்த்து வருகிறோம். மார்க்கத்திற்கு முரணாண வகையில் மனைவியர் அல்லாதவர்களிடத்தில் தவறான கள்ளத்தனமான உறவு வைத்துக் கொள்வதின் மூலமோ, அல்லது மனைவியிடத்திலேயே மார்க்கம் தடை செய்த காலங்களில் கட்டுப்பாடில்லாத உறவைத் தூண்டுவதின் மூலமோ மனிதனை ஷைத்தான் ஆட்டிப் படைக்கிறான். இன்னும் சொல்வதென்றால், கணவன் மனைவி இல்லறத்தில் ஈடுபடும் போதும் இறைவனை மறந்து விடாமலிருக்க நபியவர்கள் அழகிய பிரார்த்தனையைக் கற்றுத் தந்துள்ளார்கள். அந்தப் பிரார்த்தனையை மறப்பதுவும் அதை சொல்லாமல் விட்டுவிடுவதும் கூட ஷைத்தானின் ஊசலாட்டமே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் தம் மனைவியுடன் (தாம்பத்திய உறவு கொள்ளும் எண்ணத்தில்) செல்லும் போது "பிஸ்மில்லாஹ்-அல்லாஹ்வின் திருப்பெயரால்... இறைவா! ஷைத்தானை எங்களை விட்டு விலகியிருக்கச் செய்! எங்களுக்கு நீ அளிக்கின்ற குழந்தைச் செல்வத்திலிருந்தும் ஷைத்தானை விலகியிருக்கச் செய்!'' என்று பிரார்த்தித்து (விட்டு உறவு கொண்டாரெனில்,) அதன் மூலம் அவ்விருவருக்கும் குழந்தை வழங்கப்படுமானால் அக்குழந்தைக்கு ஷைத்தான் தீங்கு விளைவிப்பதில்லை. அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: புகாரி 141, 3271, 6388, 7396 முஸ்லிம் 2825 எனவே யார் இறைவனின் பெயரை உச்சரித்து இந்தப் பிரார்த்தனையைச் செய்து இல்லறம் நடத்துகிறாரோ அவ்விருவருக்கும் அவர்களது குழந்தைக்கும் இறைவனின் பாதுகாப்பு கிடைக்கிறது. கொட்டாவியும் ஷைத்தானின் ஊசலாட்டமே ஷைத்தான் நம்மைக் கெடுப்பதற்கு பெரிய பெரிய விசயமெல்லாம் தேவைப்படாது. சின்னச்சின்ன விசயத்தை வைத்தே நம்மை அவனது ஆளுகைக்குட்படுத்தி விடுகிறான். எல்லோருக்கும் சர்வ சாதரணமாக வருகிற கொட்டாவி ஷைத்தானால் ஏற்படுவதாகும். சோர்வினால் வருவதாக நம்மை நம்ப வைத்து நமது காரியங்களையும் கவனங்களையும் திசை திருப்புவதற்கான கருவி தான் கொட்டாவி. இரண்டு கொட்டாவி வந்தாலேயே நமது மனம் சொல்லுகிறது, நீ போய் தூங்கு என்று. இங்குதான் ஷைத்தான் நம்மை ஜெயித்து விடுகிறான். இதிலிருந்தும் நாம் இறைவனிடம் பாதுகாப்புத் தேட நபியவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். கொட்டாவி வரும் போது "ஹா ஹா' என்று சப்தத்துடன் விடக் கூடாது. அதே போன்று கொட்டாவி விடும் போது வாயைக் கையினால் மூடிக்கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கொட்டாவி ஷைத்தானிடமிருந்து வருவதாகும். உங்களில் எவரேனும் கொட்டாவி விட்டால் தம்மால் முடிந்த வரை அவர் அதை அடக்கிக் கொள்ளட்டும். ஏனெனில், எவரேனும் "ஹா' என்று (கொட்டாவியால்) சத்தம் போட்டால் ஷைத்தான் சிரிக்கின்றான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3289,6223,6226,முஸ்லிம் 5718 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவருக்குக் கொட்டாவி ஏற்பட்டால், அவர் தமது வாயின் மீது கையை வைத்து அதைத் தடுக்கட்டும். ஏனெனில், ஷைத்தான் (அப்போது வாய்க்குள்) நுழைகின்றான். அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல்: முஸ்லிம் 5719, 5720, 5721 கழுதை கனைப்பும் சேவல் கூவலும் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் சேவல்கள் கூவுகின்ற சத்தத்தைக் கேட்டால் அல்லாஹ்விடம் அவனது அருளைக் கேளுங்கள்: ஏனெனில், அவை வானவரைப் பார்த்திருக்கின்றன. (அதனால் தான் கூவுகின்றன.) கழுதை கத்தும் சத்தத்தை நீங்கள் கேட்டால் ஷைத்தானிடமிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புக் கோருங்கள். ஏனெனில், அது ஷைத்தானைப் பார்த்திருக்கின்றது. (அதனால் தான் கத்துகின்றது.) அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3303, முஸ்லிம் 5275 ஷைத்தானிடமிருந்து பாதுகாப்புத் தேடுவது இந்த அத்தியாயங்களில் ஷைத்தானின் தூண்டுதலிலிருந்து (மின் ஷர்ரில் வஸ்வாஸ்) பாதுகாப்புத் தேடச் சொல்லி அல்லாஹ் கட்டளையிடுகிறான். பொதுவாகவே ஷைத்தானிடமிருந்து எப்படியெல்லாம் பாதுகாப்பாக இருக்க வேண்டும் என்பதை நபிகள் நாயகம் பலவிதமான செய்திகளின் மூலமாக நமக்குக் கற்றுத் தந்துள்ளார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணை யாரும் இல்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழ் அனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றிற்கும் வலிமையுடையவன் - லா இலாஹ இல்லல்லாஹ், வஹ்தஹு லாஷரீக்க லஹு, லஹுல் முல்க்கு வலஹுல் ஹம்து, வஹுவ அலா குல்லி ஷய்இன் கதீர் - என்று எவர் ஒரு நாளில் நூறு முறை சொல்கிறாரோ அவருக்கு, அது பத்து அடிமைகளை விடுதலை செய்வதற்குச் சமமா(க நற்பலன் பெற்றுக் கொடுப்பதா)கும். மேலும், அவருக்கு நூறு நன்மைகள் எழுதப்படும். அவரது கணக்கிலிருந்து (அவர் புரிந்த) நூறு தீமைகள் அழிக்கப்படும். மேலும், அவருடைய அந்த நாளின் மாலை நேரம் வரும் வரை ஷைத்தானிடமிருந்து (பாதுகாக்கும்) அரணாக அது அவருக்கிருக்கும். மேலும், அவர் புரிந்த சிறந்த நற்செயலை எவரும் செய்ய முடியாது; ஒருவர் இதை விட அதிகமான (தடவைகள் இதை ஓதினால் அல்லது மிக முக்கியமான) ஒரு நற்செயல் புரிந்தாலே தவிர. அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: புகாரி 3293, 6403, முஸ்லிம் 5221 இல்லங்களிலும் ஷைத்தானின் ஊசலாட்டம் நம்முடைய இல்லங்களை மையமாக வைத்தும் ஷைத்தான் நம்மை வழிகெடுத்து வருகிறான். அதிலி-ருந்து பாதுகாப்புத் தேடும் வழிமுறையையும் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் நமக்குக் கற்றுத் தந்துள்ளனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கள் இல்லங்களை (தொழுகை, ஓதல் நடைபெறாத) சவக்குழிகளாக ஆக்கி விடாதீர்கள். "அல்பகரா' எனும் (இரண்டாவது) அத்தியாயம் ஒதப்படும் இல்லத்திலிருந்து ஷைத்தான் வெருண்டோடி விடுகிறான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: முஸ்லிம் 1430 வீடுகளை மையமாக வைத்து ஷைத்தான் எப்படி வழிகெடுக்கிறான் என்பதை நம் சமுதாய மக்களின் நடவடிக்கைகளில் இருந்து நாம் அறிந்து கொள்ளலாம். உதாரணமாகச் சொல்வதாக இருந்தால் வீடுகட்டும் போதோ அதற்குப் பிறகோ பூசணிக்காயில் கண், மூக்கு, வாய் என்று விருப்பம் போல் விகாரமாக மையினால் படம் வரைந்து தொங்க விடுகின்றனர். பழைய சட்டை பேண்டை எடுத்து அதற்குள் வைக்கோலைத் திணித்து விகாரமாக படம் வரைந்து தொங்க விடுகின்றனர். எலுமிச்சம் பழம், படிகாரக்கல், எண்ணெய் பாட்டிலை வீட்டின் மூலைமுடுக்குகளில் தொங்க விடுகின்றனர். வீட்டின் முன் பகுதியில் அல்லது நடுவீட்டில் சங்கு எனும் சிப்பியைப் பதிக்கிற முஸ்லிம்களும் இருக்கின்றனர். புது வீடு கட்டினால் தச்சு கழிக்கிறோம் என்ற பெயரில் இந்துமத பூஜையை நடத்தி இஸ்லாத்தை விட்டே வெளியேறும் செயலையும் செய்கின்றனர். இப்படியெல்லாம் ஷைத்தான் நம்மை வழிகெடுக்காமல் பாதுகாத்துக் கொள்வதற்குத் தான் நபிகள் நாயகம் அவர்கள் சொல்லித் தந்தபடி சூரத்துல் பகராவை தொழுகையின் மூலமாகவோ அல்லது தனியாகவோ தினமும் ஓதி ஷைத்தானிடமிருந்து நமது வீடுகளைப் பாதுகாப்போம். அனைத்து தீமைகளில் இருந்தும் பாதுகாப்பு கோரல் மதுபானம் குடிக்கிற, சிகரெட் அடிக்கிற சிலர் மனம் திருந்தி விட்டிருப்பார்கள். ஆனால் அவர்களது மனது மீண்டும் குடித்துப் பார்க்கலாமே என்றோ அல்லது மது குடிக்காமல் நம்மால் இருக்க முடியாது என்றோ சொல்-லிக் கொண்டிருந்தால் அவரால் நிரந்தரமாக அப்பழக்கத்தை விடமுடியாது. காரணம் இப்படி தீங்கிலிருந்து விலகியவர்களிடம் கெட்ட எண்ணங்களை விதைப்பதும் ஷைத்தானின் ஊசலாட்டம் தான். இப்படி எண்ணங்கள் வருகிற போது அவூதுபில்லாஹி மினஷ் ஷைத்தானிர் ரஜீம் (எடுத்தெறியப்பட்ட ஷைத்தானின் தீங்கிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்) என்று சொல்லிப் பார்த்தால் அந்த எண்ணம் வராது. ஷைத்தானின் தாக்கம் உமக்கு ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (இறைவனை) அஞ்சுவோருக்கு ஷைத்தானின் தாக்கம் ஏற்பட்டால் உடனே சுதாரித்துக் கொள்வார்கள்! அப்போது அவர்கள் விழித்துக் கொள்வார்கள். (அல்குர்ஆன்: 7:200,201) ஷைத்தானிடமிருந்து உமக்கு ஏதும் தீண்டுதல் ஏற்பட்டால் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடுவீராக! அவன் செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன்: 41:36) இந்த வசனங்கள் மூலம் அனைத்து தீமைகளில் இருந்தும் விடுபட ஷைத்தனை விட்டு பாதுகாப்பு வேண்டுவது தான் ஒரே வழி என அல்லாஹ் சொல்லித்தருகிறான். மனிதர்களின் வஸ்வாஸ் இந்த அத்தியாயத்தின் இறுதியில் ஷைத்தானிடமிருந்தும் மனிதர்களிடமிருந்தும் பாதுகாப்புத் தேடச் சொல்லி முடிக்கிறான். وَمِنَ الْجِنَّةِ وَالنَّاسِ - இத்தகையோர் மனிதர்களிலும் ஜின்களிலும் இருக்கின்றனர். ஷைத்தான் மறைந்திருந்து நமது உள்ளத்தில் தீய எண்ணங்களை விதைப்பான் என்பது போல் மனிதர்களிலும் மறைந்திருந்து தீய எண்ணங்களை விதைப்பவர்கள் உள்ளனர். இதை நாம் நம்முடைய அனுபவங்கள் மூலம் அறிந்து கொள்ளலாம். நாம் வீதிகளில் நடக்கும் போது ஆபாசப் போஸ்டர்களைப் பார்த்தவுடன் நமது எண்ணங்கள் மாறி விடுகின்றன. இது போன்று சினிமாக்களிலும் நாடகங்களிலும் பாடல்களிலும் காட்டுகிற ஆபாசக் காட்சிகளினாலும், ஆபாச போஸ்டர்களினாலும் எழுத்துக்களினாலும் நமது உள்ளங்களில் தீய எண்ணங்களை விதைத்து நம்மை தவறில் விழச்செய்து விடுகின்றனர். நேரடியாக வந்து நம்மை தவறுக்கு வா என்று யாரும் அழைப்பதில்லை. எந்தத் திரைப்பட நடிகர்களும் நடிகைகளும் போஸ்டர் அருகில் நின்று கொண்டு நம்மை நேரடியாக ஆபாசத்திற்கு அழைக்கவில்லை. அப்படியெனில் வழிகெடுக்கிற மனிதர்களும் மறைந்திருந்து நம்மைக் கெடுக்கிறார்கள் என்று தான் அர்த்தம். இதிலிருந்து நாமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ள இயலாது. எனவே தான் அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத் தேடவேண்டும் என்று அல்லாஹ் நமக்குக் கற்றுத்தருகிறான். கவிதைகளையும் பாடல்களையும் எழுதியவர்களும் மியூசிக் அடித்தவர்களும் நமக்கருகில் இருப்பதில்லை என்றாலும் நம்மை விடாமல் பஸ்ஸிலும், கார்களிலும், ரேடியோக்களிலும், இப்போது எப்எம் ரேடியோவிலும் விரட்டி விரட்டி கேட்க வைக்கின்றனர். இப்படியெல்லாம் கேட்பது பற்றாக்குறையாகி சிலர் மற்ற கவனம் தங்களை ஈர்க்காத அளவுக்கு காதுகளில் ஹெட்போன்களையும் மாட்டிக்கொண்டு திரிகின்றனர். எனவே ஆபாசங்களையும் அதற்குத் தகுந்தாற்போல இசையையும் உருவாக்கியவர்கள் பாடல்களாக எழுதியவர்கள் நேரடியாக நமக்கருகில் இல்லாமலேயே நம்மை விட்டு மறைந்திருந்து வழிகெடுக்க முயற்சி செய்து கொண்டிருக்கின்றனர் என்பதை விளங்க வேண்டும். நேரடியாக நம்மிடம் ஒருவர் பாட்டுப்பாடியும் ஆடியும் இசை அமைத்தும் வழிகெடுக்க முயற்சிக்கிற எதிரிகளை நம்மால் தடுக்க முடியும். ஆனால் மறைந்திருந்து வழிகெடுக்கும் போது அதிலிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடத்தான் அல்லாஹ் நமக்கு இந்த அத்தியாயங்களின் மூலம் சொல்லித் தருகிறான். இது அவனுக்கிருக்கின்ற ஆற்றல் என்பதை விளங்கி பாதுகாப்புத்தேட வேண்டும். இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். (முஹம்மதே) உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டுவிடுவீராக! (அல்குர்ஆன்: 6:112) இது போன்று மறைந்திருந்து தீயஎண்ணங்களை விதைக்கிற செயல்கள் இஸ்லாமிய மார்க்கத்தின் பெயரால் நடத்தப்படுகிற எத்தனையோ தில்லுமுல்லுகளைச் சொல்லலாம். தாயத்து, தகடு, பில்லிசூனியம், பேய்பிசாசு ஓட்டுதல், இப்படி எத்தனை எத்தனையோ சொல்லலாம். தாயத்துப் போடுவதினால் வீரம் வரும் என்றும், நோய் நீங்கும் என்றெல்லாம் நம்புவதும் அதைச் செயல்படுத்துவதும் மறைந்திருந்து தாக்குதலை ஏற்படுத்துவதான். ஏதாவது ஒன்றைச் சொல்லி பயங்காட்டி நம்மை வழிகெடுக்கின்றனர். இது போன்று தவறான கொள்கைகளைச் சரியென்று பேசுதல், தர்ஹா வழிகேடு போன்ற கெட்ட செயல்களை மார்க்கத்தில் நன்மை என்று வர்ணித்தல் போன்றவைகளெல்லாம் மனித மனங்களில் தாக்கத்தை உண்டு பண்ணி மறைந்திருந்து அவனை ஆட்டிப் படைக்கிறது. ஜோதிடம், சகுனம் பார்ப்பது போன்றவைகளும் கூட மறைந்திருந்து ஊசலாட்டம் ஏற்படுத்துவது தான். ஜோதிடம் பார்ப்பவன் எதையாவது சொல்லிவிட்டு செல்கிறான். அந்தக் கருத்து மனிதனை வாட்டி வதைக்கிறது. அது போன்று ஏதேனும் வியாபாரத்திற்குச் சென்றாலோ நல்லகாரியத்திற்குச் சென்றாலோ பூனை குறுக்காகச் சென்றால் சகுனமே சரியில்லை என்கிறான். இதுவும் கூட மனிதனால் ஏற்படுத்தப்பட்ட மறைவான தாக்குதலேயாகும். ஆனால் உண்மை அதுவல்ல. பூனை தனது வேட்டைப் பிராணி எலியைத் தேடிப்போகலாம். அல்லது ஏதேனும் தனது தேவையைப் பூர்த்திசெய்ய சென்றிருக்கலாம். அதுக்கென்று ஒரு உலகம் இருக்கிறது என்று நினைப் பதை விட்டுவிட்டு இதை ஒரு பிரச்சனையாக்கி தேவையில்லாத பயத்தை உருவாக்கிக் கொண்டு தன்னையே பலவீனப் படுத்திக் கொள்கிறான் மனிதன். இதற்குக் காரணம், பூனை குறுக்கச் சென்றால் நேரம் சரியில்லை என்று பேசிப்பேசி நம்மை கேட்க வைத்து நமது எண்ணங்களில் தவறான தாக்கத்தை ஏற்படுத்தி விட்டனர். ஆனால் இப்படி தவறான எண்ணத்தை ஏற்படுத்தியவன் நம்முன் இல்லாமலேயே நம்மை ஊசலாட வைக்கின்றான். இந்தத் தவறான எண்ணங்களை பூனை உண்டாக்கவில்லை. மனிதனே உண்டாக்கினான் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். இப்படியெல்லாம் மறைந்திருந்து மனித உள்ளங்களில் ஊசலாட்டத்தை விதைக்கும் மனிதர்கள் ஷைத்தானின் கூட்டாளிகள், அவனது படைகள் என்பதை விளங்கிக் கொள்ள வேண்டும். எனவே இதிலிருந்தெல்லாம் நாமாக நம்மைப் பாதுகாத்துக் கொள்ள நம்மால் இயலாது. அனைத்தையும் படைத்த அல்லாஹ்விடமே இதலிருந்து பாதுகாப்புத் தேடவேண்டும். இன்னும் சொல்லலாம், அரசியல்வாதிகளும் நமக்கு ஊசலாட்டத்தை ஏற்படுத்தி அவர்களுக்குப் பின்னால் போக வைக்கின்றனர். "உங்களுக்கு உதவ எங்களுக்கு கட்டளையிடுங்கள்' என்று அரசியல்வாதி பேசியவுடன், அவரது பேச்சைக் கேட்ட பாமரருக்கு பேசியவர் மீது அளவுகடந்த பாசஉணர்வு பொங்கி அவர் என்ன சொன்னாலும் சிந்திக்காமல் தலையாட்டுகிற மாடுகளாகி விடுகின்றனர். இப்படிப் பேசிய வார்த்தை நம்மில் சிலரது உள்ளத்தில் தவறான மாறுதல்களை ஏற்படுத்தி அரசியல்வாதிகளுக்குப் பின்னால் செல்ல வைப்பதை நிதர்சனமாகப் பார்க்கிறோம். இன்னும் சொல்லப் போனால் அரசியல்வாதிகள் இரட்டை முகம் கொண்டவர்களாகத் தான் பெரும்பாலும் இருப்பார்கள். இங்கு ஒருமாதிரியும் அங்கு ஒரு மாதிரியும் தனக்குத்தானே முரணாகப் பேசுவார்கள். இவர்கள் நயவஞ்சககர்கள் என்பதில் எந்த மாற்றுக் கருத்துக்கும் இடமில்லை. ஆனால் இதை பாமர மக்கள் புரிந்த கொள்ள மாட்டார்கள். இப்படி பாமரமக்களின் பலவீனத்தைப் பயன்படுத்தித் தான் அரசியல்வாதி ஆதாயம் தேடுகின்றனர். பிறகு கொஞ்சம் கொஞ்சமாக எல்லா தவறுகளையும் சரிகாண ஆரம்பித்து ஒரேயடியாக இஸ்லாத்தை விட்டே வெளியேற்றவும் மனிதனே மனிதனுக்குக் காரணமாக அமைந்துவிடுகின்றனர். இதிலிருந்தெல்லாம் அல்லாஹ்விடம் தான் பாதுகாப்புத் தேடவேண்டும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்களை நீங்கள் சுரங்கங்களாகக் காண்கிறீர்கள். அவர்களில் அறியாமைக் காலத்தில் சிறந்தவர்களாயிருந்தவர்கள் இஸ்லாத்திற்கு வந்த பின்பும் சிறந்தவர்களாயிருப்பார்கள்; மார்க்க அறிவைப் பெற்றுக்கொண்டால். இந்த (ஆட்சி அதிகாரத்தின்) விஷயத்தில் மக்களிடையே சிறந்தவர்கள். அவர்களில் அதிகமாக இதை வெறுப்பவர்கள் தாம். மேலும், மக்களிலேயே (மிகத்) தீயவனாக இரு முகங்கள் கொண்டவனை நீங்கள் காண்பீர்கள். அவன் இவர்களிடம் ஒரு முகத்துடனும் அவர்களிடம் மற்றொரு முகத்துடனும் செல்வான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி 3493, 3494, முஸ்-லிம் 5076, 5077, 5078 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நயவஞ்சகனின் நிலை இரு கிடாக்களிடையே சுற்றிவரும் பெட்டை ஆட்டின் நிலையைப் போன்றதாகும். ஒரு முறை இதனிடம் செல்கிறது; மறுமுறை அதனிடம் செல்கிறது. (மற்றொரு அறிவிப்பில்) ஆயினும் அதில், "ஒரு முறை இதற்கு இணங்குகிறது; மறுமுறை அதற்கு இணங்குகிறது'' என்று இடம்பெற்றுள்ளது. அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல்: முஸ்லிம் 5369 அதனால் தான் நாம் லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் ( لَا حَوْلَ وَلاَ قُوَّةَ اِلَّا بِالَّلهِ) இறைவனின் ஆற்றலின் (நாட்டத்தின்) படியே தீமையிலிருந்து விலகுவதற்கும் நன்மை செய்வதற்கும் நாம் சக்தி பெற மாட்டோம் என்று சொல்லுகிறோம். இப்படி நன்மையைச் செய்யவும் தீமையிலிருந்து விலகவும் கூட இறைவனின் உதவியால் மட்டுமே முடியும் என்பதை உணர்ந்து கொண்டு அல்லாஹ்விடத்தில் பாதுகாப்புத்தேட வேண்டும். எனவே மனிதர்களிலும் மறைந்திருந்து வஸ்வாஸ் ஏற்படுத்துகின்றனர் என்பதை இதிலிருந்து விளங்கிக் கொள்ளலாம். இது போன்று மனிதர்கள் மறைந்திருந்து ஏற்படுத்தும் ஊசலாட்டத்திற்கு மனிதன் பிறந்ததிலிருந்து சாகும்வரை ஏற்படுகின்ற நிகழ்வுகளிலும் நடைமுறைகளிலும் ஏராளமான உதாணரங்களைச் சொல்லலாம். விளங்கிக் கொள்ள இதுவே போதுமானது. இன்னும் தெளிவாகச் சொன்னால், ஷைத்தான் மனிதனைக் கெடுப்பதை விட மனிதனால் பிற மனிதன் கெடுக்கப்படுவதே அதிகம். நம்மில் ஒவ்வொருவரும் பிறரைக் கெடுக்கக் கூடாது என்று சபதம் எடுத்துக் கொண்டாலேயே அதிமான பிரச்சனைகளைத் தீர்த்து விடலாம். எனவே இது மனிதனும் பிறமனிதனை மறைந்திருந்து கெடுப்பான் என்ற வசனத்தின் விளக்கம். வளரும் இன்ஷா அல்லாஹ் தாக்கப்பட்ட நபிகளார் உஹுத் போரில் எதிரிகள் வேறு வழியில் திடீரென தாக்கியதால் நபித்தோழர்கள் பலர் கொல்லப்படும் நிலை ஏற்பட்டது. அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) நபி (ஸல்) அவர்களின் அன்புத் தோழர்களில் ஒருவரான ஜாபிர் (ரலி) அவர்களின் தந்தை அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஹராம் (ரலி) அவர்களும் மிக கடுமையாக தாக்கப்பட்டு உஹுத் போரில் கொல்லப்பட்டார்கள். ஜாபிர் (ர) அவர்கள் கூறியதாவது : (உஹுதுப் போரின் போது) என் தந்தை, உடல் சிதைக்கப்பட்ட நிலையில் நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு வரப்பட்டு அவர்கள் முன்னே வைக்கப்பட்டார். நான் என் தந்தையின் முகத்தி-ருந்து (துணியை) விலக்கச் சென்றேன். என் குலத்தார் என்னைத் தடுத்தார்கள். அப்போது ஒப்பாரி வைத்து அழும் பெண் ஒருத்தியின் குரலை நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், அம்ரு (ரலி) அவர்களின் மகள் என்றோ - அவர்களுடைய சகோதரி என்றோ கூறப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஏன் அழுகிறாய்?'' நீ அழுதாலும் அழாவிட்டாலும் வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அப்துல்லாஹ்வுக்கு நிழல் கொடுத்துக் கொண்டேயிருப்பார்கள்'' என்று கூறினார்கள். யமான் (ரலி) நபி (ஸல்) அவர்களின் ரகசிய தோழர் என்று அழைக்கப்பட்ட ஹுதைஃபா (ரலி) அவர்களின் தந்தை யமான் (ரலி) அவர்களும் இந்தப் போர்க்களத்தில் நபித்தோழர் என்று தெரியாமல் முஸ்லிம்களால் கொல்லப்பட்டார்கள். ஆயிஷா (ர) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரின் (தொடக்கத்தின்) போது இணை வைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ், "அல்லாஹ்வின் அடியார்களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர்களைக் கவனியுங்கள்'' என்று கத்தினான். உடனே, முஸ்ம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ர), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்ம்களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, "அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை!'' என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பு தான் அவர்கள் (அவரை விட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), "அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக!'' என்று சொன்னார்கள். நூல் : புகாரி (4605) ஹம்சா (ரலி) உஹுத் போரில் கொல்லப்பட்ட நபித்தோழர்களில் முக்கியமானவர்களில் நபிகளாரின் பெரிய தந்தை ஹம்சா (ரலி) அவர்களும் ஒருவர். இவர்கள் தொடர்பாக ஆதாரப்பூர்வமான செய்திகளும் பலவீனமான செய்திகளும் ஹதீஸ் நூல்களில் கூறப்பட்டுள்ளது. அவற்றை காண்போம். ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ அவர்கள் கூறியதாவது: நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு வந்து சேர்ந்த போது என்னிடத்தில், உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், "(உஹுதுப் போரின் போது ஹம்ஸா -ரலி- அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே!'' என்று கூறினார்கள். நான், சரி என்றேன். வஹ்ஷீ அவர்கள் ஹிம்ஸில் வசித்துக் கொண்டிருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். "அவர் தமது அந்த கோட்டைக்குள் இருக்கிறார். அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார்'' என்று எங்களிடம் கூறப்பட்டது. பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு, அவருக்கு நாங்கள் சலாம் சொன்ன போது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் சொன்னார். உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியினால், தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெதையும் வஹ்ஷீ அவர்கள் பார்க்க முடியாத அளவிற்கு சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், "வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா?'' என்று கேட்டார்கள். அப்போது வஹ்ஷீ, உபைதுல்லாஹ் அவர்களைப் பார்த்தார். பிறகு, "அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் கியார் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார். அவருக்கு, "உம்மு கித்தால் பின்த் அபில் ஈஸ்' என்று சொல்லப்படும். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும் செவிலித்தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டு பிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது நான் பார்த்தேன்.) உன் இரு பாதங்களைப் பார்த்தால் அது போலவே இருக்கிறது'' என்று கூறினார். அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, "ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா?'' என்று கேட்டார்கள். வஹ்ஷீ, "சரி' (சொல்கிறேன்)'' என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:) ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் கியார் என்பாரைக் கொலை செய்திருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், "என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ(அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய்'' என்று கூறினார். ஆகவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் -அய்னைன் என்பது உஹுது மலைக் கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்குமிடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு - (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்ற போது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்ற போது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியை விட்டு) முன்னால் வந்து, "(என்னோடு) தனியே மோதுபவர் உண்டா?'' என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்தில் முத்தலிப் (ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா?'' என்று கேட்டார்கள். பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போய் விட்ட நேற்றைய தினம் போல் (மடிந்தவனாக) ஆகி விட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெüயேறியது. அது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப்வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். அப்போது, என்னிடத்தில், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்; (எனவே, தூதுக் குழுவினருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்)'' என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்ட போது, "நீ வஹ்ஷி தானே?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்'' என்று கூறினேன். "நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்?'' என்று கேட்டார்கள். நான், "உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மை தான்'' என்று கூறினேன். அப்போது அவர்கள், "(உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா?'' என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டு விட்டேன். நபி (ஸல்) அவர்கள் இறந்துவிட்ட போது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸைலமா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு காலித் பின் வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), "நிச்சயம் நான் முஸைலமாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல(வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம்'' என்று கூறிக் கொண்டேன். (அபூபக்ர்-ரலி அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது. அப்(போரின்) போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந்தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றிருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன் தான் முஸைலமா.) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: (முஸைலமா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, "அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்து விட்டான்'' என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள். (நூல் : புகாரி 4072) ஹம்சா (ரலி) கொல்லப்பட்டது தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகள் 1. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றுவிட்டு அவர்களின் ஈரலை வெட்டி எடுத்துக் கொண்டு ஹிந்த் அவர்களிடம் கொண்டு சென்றார். அவர் அதை கடித்து விழுந்த முயற்சித்து தோற்றுப் போனார் என்ற ஒரு செய்தி இப்னு கஸீர் அவர்களின் அல்பிதாயா வந்நிகாயா என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. ஆனால் இந்த செய்திக்கு இமாம் இப்னு கஸீர் அவர்கள் அறிவிப்பாளர் தொடர் குறிப்பிடாததால் இந்த செய்தி பலவீனம் அடைகிறது. 2. ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை ஹிந்த் அவர்களே வெட்டி எடுத்தார்கள் என்றும் உஹுத் போரில் கலந்துகொண்ட முஸ்லிம் ஆண்களின் காதுகளையும் மூக்குகளையும் வெட்டி கால் சலங்கைகளாக மாற்றிக் கொண்டார்கள் என்ற செய்தி இப்னு ஹிஷாம் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்தச் செய்தியும் முழு அறிவிப்பாளர் வரிசை இல்லாமல் இடம் பெற்றுள்ளதால் இதுவும் பலவீனம் அடைகிறது. 3. ஹம்சா (ரலி) அவர்களைக் கொன்ற வஹ்ஷீ அவர்கள் தம்முடைய எஜமான், ஜுபைர் பின் முத்இம் அவர்களிடம் காட்டுவதற்காக ஹம்சா (ரலி) அவர்களின் ஈரலை மக்காவிற்கு எடுத்துச் சென்றார் என்று வாகிதி அவர்களின் மகாஸீ என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. மகாஸீ என்ற நூலை எழுதி வாகிதி என்பவர் பொய்யர் என்று குற்றம் சுமத்தப்பட்டவர். எனவே இந்தச் செய்தியும் ஆதாரத்திற்கு ஏற்றது கிடையாது. ஹம்சா (ரலி) அவர்களை வஹ்ஷீ அவர்கள் கொன்றது உண்மை, ஆனால் அவர்களின் உடலை வெட்டி ஈரலை எடுத்த ஹிந்த் அவர்கள் கடித்து துப்பியதாக வரும் மூன்று செய்திகளும் ஆதாரமற்றது. வஹ்ஷீ அவர்களும், ஹிந்த் அவர்களும் பின்னர் இஸ்லாத்தை ஏற்று விட்டனர் என்பது முக்கிய செய்தியாகும். உஹுத் போரில் கொல்லப்பட்ட சில நபித்தோழர்கள் பெயர்கள் ஹன்ளலா பின் அபீ ஆமிர் (ரலி), (நூல் : அல்இஸாபா பாகம் : 2, பக்கம் : 137), ஸஅத் பின் அபீ ரபீவு (ரலி) (நூல் : அல்இஸாபா பாகம் :3, பக்கம் : 58), அம்ர் பின் அல்ஜமூஹ் (ரலி), (நூல் : அல்இஸாபா பாகம் : 4, பக்கம் : 616), கைஸமா பின் அல்ஹாரிஸ் (ரலி), (நூல் : அல்இஸாபா பாகம் : 2, பக்கம் : 30) ஆகியோர் உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களில் முக்கியமானவர்கள். கொல்லப்பட்ட நபித்தோழர்களின் எண்ணிக்கை உஹுத் போரில் அன்சாரிகளில் மட்டும் சுமார் எழுபது நபித்தோழர்கள் கொல்லப்பட்டனர். முஹாஜிர்களில் நான்கு நபர்கள் மட்டுமே கொல்லப்பட்டதாக கூறப்படுகிறது. அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: உஹுதுப் போரில் அன்சாரிகüல் எழுபது பேர் கொல்லப்பட்டனர். "பிஃரு மஊனா' போரின் போது எழுபது பேரும், யமாமா போரின் போது எழுபது பேரும் கொல்லப்பட்டனர். நூல் : புகாரி (4078) நபித்தோழர்கள் அடக்கம் உஹுத் போரில் கொல்லப்பட்ட நபித்தோழர்கள் அடக்கம் செய்வதற்கு போதிய துணிகள் கூட இல்லாமலும் ஒரே குழியில் இருவராகவும் அடக்கம் செய்யப்பட்டார்கள். ஒருநாள், அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவரது உணவு கொண்டு வந்து வைக்கப்பட்டது. உடனே அவர், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டபோது -அவர் என்னைவிடச் சிறந்தவராக இருந்தார்- அவரது உடலில் சாத்துவதற்கு ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. ஹம்ஸா (ரலி) அல்லது வேறொருவர் கொல்லப்பட்ட போது -அன்னாரும் என்னை விடச் சிறந்தவரே- அவரது உடலில் சாத்துவதற்கும் ஒரு சால்வையைத் தவிர வேறெதுவும் கிடைக்கவில்லை. எனவே நல்லவை(க்கான நற்கூலி)களெல்லாம் எனக்கு இவ்வுலக வாழ்விலேயே முன்கூட்டியே கொடுக்கப்பட்டு விடுமோ என நான் அஞ்சுகிறேன்!'' எனக் கூறிவிட்டு அழ ஆரம்பித்துவிட்டார். அறிவிப்பவர் : இப்ராஹீம் பின் அப்திர்ரஹ்மான், நூல் : புகாரி (1274), "உஹுதுப் போரில் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து(க் கஃபனிட்டு) இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்?'' என நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரது உடலை உட்குழியில் முதலில் வைப்பார்கள். மேலும், "மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன்'' என்று கூறிவிட்டு, அவர்களுடைய இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தரவிட்டார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுகை) தொழவுமில்லை; அவர்கள் நீராட்டப்படவுமில்லை. அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி), நூல் : புகாரி (4079) எட்டு ஆண்டுக்கு பின்னர் ஜனாசா தொழுகை உஹுத் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு நபிகளார் அவர்கள் எட்டு ஆண்டுகளுக்கு பின்னர் அவர்கள் அடக்கம் செய்யப்பட்ட இடத்தில் தொழுவித்தார்கள். உக்பா பின் ஆமிர் (ர) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர்களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, "நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன்.(என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப்படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன்'' என்று சொன்னார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது. நூல் : புகாரி (4042) யார் இவர்? 1. நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன்'' என்று சபதம் எடுத்தவர். 2. இவரிடம் நபி (ஸல்) அவர்கள் உன் செல்வத்தில் ஒரு பகுதியை உனக்காக வைத்துக் கொள். அது உனக்கு நல்லது என்று கூறினார்கள் 3. இவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை என்று முஆத் பின் ஜபல் (ர-லி) கூறியுள்ளார்கள். 4. பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒருபோதும் தப்பித்துக் கொள்ள முடியாது என்று உணர்ந்து, உண்மையைச் சொன்னவர். 5. தபூக் போரில் கலந்து கொள்ளாமல் பின் தங்கி விட்டவர்களில் இவரும் ஒருவர் 6. இந்த நபித் தோழர் நபி (ஸல்) அவர்களுடன் பத்ர் மற்றும் தபூக் போரில் மாத்திரம் கலந்து கொள்ளாமல் இருந்தவர். 7. உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான். என்று நபி (ஸல்) அவர்கள் இவரைப் பார்த்து சொன்னார்கள் 8. இவரிம் யாரும் பேசக்கூடாது என்று நபி (ஸல்) வைத்த போது "ஃகஸ்ஸான்' அரசனால் அவரோடு சேர்ந்து கொள்ளும் படி அழைப்பு விடுக்கப்பட்டவர். 9. அல்லாஹ் இவர் இன்னும் இரு நபித் தோழர்கள் விசயத்தில் அல்குர்ஆனின் 9:118 ஆவது வசனத்தை இறக்கினான். 10. கூர்மையான கல்லால் அறுக்கப்பட்ட ஆட்டை உண்ணலாமா? என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டவர். உறவைப் பேணி வாழ்வாள் 11வது குணம் தாய் மற்றும் தந்தையரின் உறவினர்களுடன் நல்லுறவு பாராட்டுவது ِعَنْ عَبْدِ اللَّهِ بْنِ دِينَارٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ رَجُلًا مِنْ الْأَعْرَابِ لَقِيَهُ بِطَرِيقِ مَكَّةَ فَسَلَّمَ عَلَيْهِ عَبْدُ اللَّهِ وَحَمَلَهُ عَلَى حِمَارٍ كَانَ يَرْكَبُهُ وَأَعْطَاهُ عِمَامَةً كَانَتْ عَلَى رَأْسِهِ فَقَالَ ابْنُ دِينَارٍ فَقُلْنَا لَهُ أَصْلَحَكَ اللَّهُ إِنَّهُمْ الْأَعْرَابُ وَإِنَّهُمْ يَرْضَوْنَ بِالْيَسِيرِ فَقَالَ عَبْدُ اللَّهِ إِنَّ أَبَا هَذَا كَانَ وُدًّا لِعُمَرَ بْنِ الْخَطَّابِ وَإِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ أَبَرَّ الْبِرِّ صِلَةُ الْوَلَدِ أَهْلَ وُدِّ أَبِيهِ رواه مسلم அப்துல்லாஹ் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களை, கிராமவாசிகளில் ஒருவர் மக்கா செல்லும் சாலையில் சந்தித்தபோது, அவருக்கு அப்துல்லாஹ் முகமன் (சலாம்) கூறி, அவரைத் தாம் பயணம் செய்துவந்த கழுதையில் ஏற்றிக் கொண்டார்கள். மேலும், அவருக்குத் தமது தலைமீதிருந்த தலைப்பாகையை (கழற்றி)க் கொடுத்தார்கள். அப்போது நாங்கள் அவர்களிடம், "அல்லாஹ் உங்களைச் சீராக்கட்டும்! இவர்கள் கிராமவாசிகள். இவர்களுக்குச் சொற்ப அளவு கொடுத்தாலே திருப்தியடைந்து விடுவார்கள்'' என்று கூறினோம். அதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், "இவருடைய தந்தை (என் தந்தை) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களின் அன்புக்குரியவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நல்லறங்களில் மிகவும் சிறந்தது, ஒரு பிள்ளை தன் தந்தையின் அன்புக்குரியவர்களுடன் நல்லுறவு பாராட்டுவதாகும்' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்'' எனக் கூறினார்கள். அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) நூல் : முஸ்லிம் 4989 12வது குணம் சொந்தக்காரர்களுடன் நல்லுறவு பாரட்டி வாழ வேண்டும். சொந்த பந்தங்களை துண்டித்து வாழ்வதை பயந்த நிலையிலேயே இருக்க வேண்டும். அல்லாஹ் கூறுகிறான் : நீங்கள் புறக்கணித்து பூமியில் குழப்பம் ஏற்படுத்தவும், உங்கள் உறவுகளை முறிக்கவும் முயல்வீர்களா? அவர்களையே அல்லாஹ் சபித்தான். அவர்களைச் செவிடாக்கினான். அவர்களின் பார்வைகளைக் குருடாக்கினான். அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர்களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா? அல்குர்ஆன் 47 : 22, 23, 24 அல்லாஹ் கூறுகிறான் : அவர்கள் அல்லாஹ்வின் உடன்படிக்கையை உறுதிப்படுத்திய பின் முறிக்கின்றனர். இணைக்கப்பட வேண்டுமென அல்லாஹ் கட்டளையிட்டதை (உறவை) முறிக்கின்றனர். பூமியில் குழப்பம் விளைவிக்கின்றனர். அவர்களே நஷ்டமடைந்தவர்கள். அல்குர்ஆன் 2:27 அல்லாஹ் கூறுகிறான் : அல்லாஹ்விடம் உறுதி மொழி எடுத்த பின் அதை முறிப்போர், இணைத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிட்டதைத் துண்டிப்போர், மற்றும் பூமியில் குழப்பம் விளைவிப்போருக்கு சாபம் உள்ளது. அவர்களுக்கு அவ்வுலகில் கேடு உண்டு. அல்குர்ஆன் 13:25 عَنْ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ قَدِمَتْ عَلَيَّ أُمِّي وَهِيَ مُشْرِكَةٌ فِي عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاسْتَفْتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُلْتُ وَهِيَ رَاغِبَةٌ أَفَأَصِلُ أُمِّي قَالَ نَعَمْ صِلِي أُمَّكِ متفق عليه என்னிடம், என் தாயார் அல்லாஹ்வின் தூதருடைய காலத்தில் வந்திருந்தார்கள். அப்போது அவர்கள் இணைவைப்பவராக இருந்தார்கள். நான் அல்லாஹ்வின் தூதரிடம், "என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார். என் தாயிடம் அவரது உறவைப் பேணி நல்லமுறையில் நடந்து கொள்ளட்டுமா?'' என்று கூறி மார்க்கத் தீர்ப்பு கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி அவருடன் நல்ல முறையில் நடந்து கொள்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) நூல் : புகாரீ 2620 முஸ்லிம் عَنْ أَبِي أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ لِلنَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ قَالَ مَا لَهُ مَا لَهُ وَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَبٌ مَا لَهُ تَعْبُدُ اللَّهَ وَلَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ متفق عليه நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, "என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்'' எனக் கேட்டார். அப்போது நபித் தோழர்கள் (வியப்புற்று) "இவருக்கென்ன (ஆயிற்று)? இவருக்கென்ன (ஆயிற்று)?'' என்றனர். நபி (ஸல்) அவர்கள் "இவருக்கு ஏதோ தேவையிருக்கிறது (போலும்)!"'' (என்று கூறிவிட்டு அவரிடம்), "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : அபூ அய்யூப் (ரலி) நூல் : புகாரீ 1396 عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ سَرَّهُ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ أَوْ يُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ متفق عليه அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் செல்வ வளம் தமக்கு வழங்கப்பட வேண்டும் அல்லது தமது வாழ்நாள் அதிகரிக்கப்படவேண்டும் என்று விரும்பினால் அவர் தமது உறவினர் களுடன் சேர்ந்து வாழட்டும். அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி) நூல் : புகாரீ 2067 إِنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான். அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல் : புகாரீ 5984 13வது குணம் தொழுகை விஷயத்தில் பேணுதலுடையவளாக இருப்பாள். நம்பிக்கை கொண்டோர் வெற்றி பெற்று விட்டனர். (அவர்கள்) தமது தொழுகையில் பணிவைப் பேணுவார்கள். அல்குர்ஆன் 23:1,2 மேலும் அவர்கள் தமது தொழுகைகளைப் பேணிக் கொள்வார்கள். பிர்தவ்ஸ் எனும் சொர்க்கத்திற்கு அவர்களே உரிமையாளர்கள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். அல்குர்ஆன் 23:9,10,11 மனிதன் பதறக் கூடியவனாகப் படைக்கப்பட்டுள்ளான். அவனுக்குத் தீங்கு ஏற்பட்டால் திடுக்கிடுகிறான். அவனுக்கு நன்மை ஏற்பட்டால் கொடுக்காமல் தடுப்பவனாக ஆகிறான். தொழுகையாளிகளைத் தவிர. அவர்கள் தமது தொழுகையில் நிலைத்திருப்பார்கள் அல்குர்ஆன் 70:19,20,21,22,23 அவர்கள் தமது தொழுகையைப் பேணுவார்கள். அல்குர்ஆன் 70:34 உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். அல்குர்ஆன் 33:33 (முஹம்மதே!) உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு செல்வத்தை அளிக்கிறோம். (இறை)அச் சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு. அல்குர்ஆன் 20:132 عَنْ عَائِشَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَيْهَا وَعِنْدَهَا امْرَأَةٌ قَالَ مَنْ هَذِهِ قَالَتْ فُلَانَةُ تَذْكُرُ مِنْ صَلَاتِهَا قَالَ مَهْ عَلَيْكُمْ بِمَا تُطِيقُونَ فَوَاللَّهِ لَا يَمَلُّ اللَّهُ حَتَّى تَمَلُّوا وَكَانَ أَحَبَّ الدِّينِ إِلَيْهِ مَادَامَ عَلَيْهِ صَاحِبُهُ رواه البخاري என்னிடத்தில் ஒரு பெண்மணி அமர்ந்திருக்கும்போது நபி (ஸல்) அவர்கள் (வீட்டுக்கு) வந்தார்கள். "யார் இவர்?'' என்று கேட்டார்கள். நான் "இவர் இன்னவர்?' என்று கூறிவிட்டு அவரது தொழுகை பற்றி ("அவர் அதிகம் வணங்குபவர்' என்று புகழ்ந்து) கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "போதும் நிறுத்து! (வணக்கவழிபாடுகள் உள்ளிட்ட) நற்செயல்களில் உங்களால் முடிந்தவற்றைச் செய்துவாருங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் சலிப்படையாதவரை அல்லாஹ் சலிப்படையமாட்டான். மேலும் மார்க்கத்தின் நல்லறங்களில் அல்லாஹ்விற்கு மிக விருப்பமானது, நிரந்தரமாகச் செய்யும் நற்செயல்கள்தான்'' என்று கூறினார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் ; புகாரீ 43 أُمَّ حَبِيبَةَ تَقُولُ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ صَلَّى اثْنَتَيْ عَشْرَةَ رَكْعَةً فِي يَوْمٍ وَلَيْلَةٍ بُنِيَ لَهُ بِهِنَّ بَيْتٌ فِي الْجَنَّةِ قَالَتْ أُمُّ حَبِيبَةَ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَقَالَ عَنْبَسَةُ فَمَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ أُمِّ حَبِيبَةَ وَقَالَ عَمْرُو بْنُ أَوْسٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَنْبَسَةَ وَقَالَ النُّعْمَانُ بْنُ سَالِمٍ مَا تَرَكْتُهُنَّ مُنْذُ سَمِعْتُهُنَّ مِنْ عَمْرِو بْنِ أَوْسٍ حَدَّثَنِي أَبُو غَسَّانَ الْمِسْمَعِيُّ حَدَّثَنَا بِشْرُ بْنُ الْمُفَضَّلِ حَدَّثَنَا دَاوُدُ عَنْ النُّعْمَانِ بْنِ سَالِمٍ بِهَذَا الْإِسْنَادِ مَنْ صَلَّى فِي يَوْمٍ ثِنْتَيْ عَشْرَةَ سَجْدَةً تَطَوُّعًا بُنِيَ لَهُ بَيْتٌ فِي الْجَنَّةِ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: யார் ஒவ்வொரு நாளும் பன்னிரண்டு ரக்அத்கள் (சுன்னத்) தொழுகின்றாரோ அதற்காக அவருக்குச் சொர்க்கத்தில் ஒரு மாளிகை எழுப்பப்படுகிறது. இதை உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்பசா பின் அபீசுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்பசா (ரஹ்) அவர்களிடமிருந்து கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் விட்டதேயில்லை. அறிவிப்பாளர் நுஅமான் பின் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்: இதை நான் அம்ர் பின் அவ்ஸ் (ரஹ்) அவர்களிடம் கேட்டதிலிருந்து அந்தப் பன்னிரண்டு ரக்அத்களை நான் கைவிட்டதேயில்லை. அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி) நூல் : முஸ்லிம் 1319 14வது குணம் தன்னுடைய செல்வத்திற்குரிய ஜகாத்தை முறையாக நிறைவேற்றுவதில் பேணுதலானவளாக இருப்பாள். அல்லாஹ் கூறுகிறான் : (பெண்களே) உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப் படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான். அல்குர்ஆன் 33:33 தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! உங்களுக்காக முன் கூட்டி அனுப்பும் எந்த நன்மையையும் அல்லாஹ்விடம் பெற்றுக் கொள்வீர்கள். நீங்கள் செய்வதை அல்லாஹ் பார்ப்பவன். அல்குர்ஆன் 2:110 அல்லாஹ் கூறுகிறான் நம்பிக்கை கொண்டு, நல்லறங்கள் புரிந்து, தொழுகையை நிலை நாட்டி, ஸகாத்தையும் கொடுத்து வருவோருக்கு அவர்களின் கூலி அவர்களின் இறைவனிடம் உள்ளது. அவர்களுக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள். அல்குர்ஆன் 2:277 أَنَّ أَبَا صَالِحٍ ذَكْوَانَ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا مِنْ صَاحِبِ ذَهَبٍ وَلَا فِضَّةٍ لَا يُؤَدِّي مِنْهَا حَقَّهَا إِلَّا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ صُفِّحَتْ لَهُ صَفَائِحُ مِنْ نَارٍ فَأُحْمِيَ عَلَيْهَا فِي نَارِ جَهَنَّمَ فَيُكْوَى بِهَا جَنْبُهُ وَجَبِينُهُ وَظَهْرُهُ كُلَّمَا بَرَدَتْ أُعِيدَتْ لَهُ فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ فَيَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالْإِبِلُ قَالَ وَلَا صَاحِبُ إِبِلٍ لَا يُؤَدِّي مِنْهَا حَقَّهَا وَمِنْ حَقِّهَا حَلَبُهَا يَوْمَ وِرْدِهَا إِلَّا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ أَوْفَرَ مَا كَانَتْ لَا يَفْقِدُ مِنْهَا فَصِيلًا وَاحِدًا تَطَؤُهُ بِأَخْفَافِهَا وَتَعَضُّهُ بِأَفْوَاهِهَا كُلَّمَا مَرَّ عَلَيْهِ أُولَاهَا رُدَّ عَلَيْهِ أُخْرَاهَا فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ فَيَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالْبَقَرُ وَالْغَنَمُ قَالَ وَلَا صَاحِبُ بَقَرٍ وَلَا غَنَمٍ لَا يُؤَدِّي مِنْهَا حَقَّهَا إِلَّا إِذَا كَانَ يَوْمُ الْقِيَامَةِ بُطِحَ لَهَا بِقَاعٍ قَرْقَرٍ لَا يَفْقِدُ مِنْهَا شَيْئًا لَيْسَ فِيهَا عَقْصَاءُ وَلَا جَلْحَاءُ وَلَا عَضْبَاءُ تَنْطَحُهُ بِقُرُونِهَا وَتَطَؤُهُ بِأَظْلَافِهَا كُلَّمَا مَرَّ عَلَيْهِ أُولَاهَا رُدَّ عَلَيْهِ أُخْرَاهَا فِي يَوْمٍ كَانَ مِقْدَارُهُ خَمْسِينَ أَلْفَ سَنَةٍ حَتَّى يُقْضَى بَيْنَ الْعِبَادِ فَيَرَى سَبِيلَهُ إِمَّا إِلَى الْجَنَّةِ وَإِمَّا إِلَى النَّارِ قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالْخَيْلُ قَالَ الْخَيْلُ ثَلَاثَةٌ هِيَ لِرَجُلٍ وِزْرٌ وَهِيَ لِرَجُلٍ سِتْرٌ وَهِيَ لِرَجُلٍ أَجْرٌ فَأَمَّا الَّتِي هِيَ لَهُ وِزْرٌ فَرَجُلٌ رَبَطَهَا رِيَاءً وَفَخْرًا وَنِوَاءً عَلَى أَهْلِ الْإِسْلَامِ فَهِيَ لَهُ وِزْرٌ وَأَمَّا الَّتِي هِيَ لَهُ سِتْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ ثُمَّ لَمْ يَنْسَ حَقَّ اللَّهِ فِي ظُهُورِهَا وَلَا رِقَابِهَا فَهِيَ لَهُ سِتْرٌ وَأَمَّا الَّتِي هِيَ لَهُ أَجْرٌ فَرَجُلٌ رَبَطَهَا فِي سَبِيلِ اللَّهِ لِأَهْلِ الْإِسْلَامِ فِي مَرْجٍ وَرَوْضَةٍ فَمَا أَكَلَتْ مِنْ ذَلِكَ الْمَرْجِ أَوْ الرَّوْضَةِ مِنْ شَيْءٍ إِلَّا كُتِبَ لَهُ عَدَدَ مَا أَكَلَتْ حَسَنَاتٌ وَكُتِبَ لَهُ عَدَدَ أَرْوَاثِهَا وَأَبْوَالِهَا حَسَنَاتٌ وَلَا تَقْطَعُ طِوَلَهَا فَاسْتَنَّتْ شَرَفًا أَوْ شَرَفَيْنِ إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ عَدَدَ آثَارِهَا وَأَرْوَاثِهَا حَسَنَاتٍ وَلَا مَرَّ بِهَا صَاحِبُهَا عَلَى نَهْرٍ فَشَرِبَتْ مِنْهُ وَلَا يُرِيدُ أَنْ يَسْقِيَهَا إِلَّا كَتَبَ اللَّهُ لَهُ عَدَدَ مَا شَرِبَتْ حَسَنَاتٍ قِيلَ يَا رَسُولَ اللَّهِ فَالْحُمُرُ قَالَ مَا أُنْزِلَ عَلَيَّ فِي الْحُمُرِ شَيْءٌ إِلَّا هَذِهِ الْآيَةَ الْفَاذَّةُ الْجَامِعَةُ فَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ خَيْرًا يَرَهُ وَمَنْ يَعْمَلْ مِثْقَالَ ذَرَّةٍ شَرًّا يَرَهُ و حَدَّثَنِي يُونُسُ بْنُ عَبْدِ الْأَعْلَى الصَّدَفِيُّ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ حَدَّثَنِي هِشَامُ بْنُ سَعْدٍ عَنْ زَيْدِ بْنِ أَسْلَمَ فِي هَذَا الْإِسْنَادِ بِمَعْنَى حَدِيثِ حَفْصِ بْنِ مَيْسَرَةَ إِلَى آخِرِهِ غَيْرَ أَنَّهُ قَالَ مَا مِنْ صَاحِبِ إِبِلٍ لَا يُؤَدِّي حَقَّهَا وَلَمْ يَقُلْ مِنْهَا حَقَّهَا وَذَكَرَ فِيهِ لَا يَفْقِدُ مِنْهَا فَصِيلًا وَاحِدًا وَقَالَ يُكْوَى بِهَا جَنْبَاهُ وَجَبْهَتُهُ وَظَهْرُهُ رواه مسلم 1803 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: "பொன், வெள்ளி ஆகியவற்றைச் சேகரித்து வைத்துக்கொண்டு அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றாமல் இருப்பவருக்கு, மறுமை நாளில் நரக நெருப்பில் அவற்றைப் பழுக்கக் காய்ச்சி, உலோகப் பாளமாக மாற்றி, அவருடைய விலாப் புறத்திலும் நெற்றியிலும் முதுகிலும் சூடு போடப்படும். அவை குளிர்ந்து விடும்போதெல்லாம் மீண்டும் அவ்வாறே (பழுக்கக் காய்ந்த பாளமாக) மாறிவிடும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஒட்டகங்களின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஒட்டகங்களின் உரிமையாளர் அவற்றிலிருந்து அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறை வேற்றாவிட்டால் - தண்ணீர் புகட்டும் நாளில் பால் கறந்து ஏழைகளுக்கு வழங்குவதும் அவற்றுக்குரிய கடமைகளில் ஒன்றாகும்- மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். அந்த ஒட்டகங்களில் பால்குடி மறந்த குட்டி உள்பட ஒன்றுகூட விடுபடாமல் எல்லாம் வந்து அவரைக் கால் குளம்புகளால் மிதிக்கும்; வாயால் கடிக்கும். அவற்றில் கடைசி ஒட்டகம் மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முதல் ஒட்டகம் அவர்மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய செர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! ஆடு, மாடுகளின் நிலை என்ன? (அவற்றுக்குரிய கடமையை நிறைவேற்றாவிட்டால் என்ன தண்டனை?)'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "ஆடு, மாடுகளின் உரிமையாளர் அவற்றுக்குரிய கடமையை (ஸகாத்) நிறைவேற்றவில்லையாயின் மறுமை நாளில் அவர் ஒரு விசாலமான மைதானத்தில் தூக்கியெறியப்படுவார். கொம்பு வளைந்த, கொம்பு இல்லாத, காதுகள் கிழிக்கப்பட்ட அவருடைய ஆடு, மாடுகள் ஒன்றுவிடாமல் வந்து அவரை முட்டித் தள்ளும்; காலால் அவரை மிதிக்கும். அவற்றில் கடைசிப் பிராணி அவரை மிதித்துவிட்டுச் சென்றதும் மீண்டும் முத-ல் சென்ற பிராணி அவர் மீது ஏவிவிடப்படும். இவ்வாறு ஒரு நாள் அவர் தண்டிக்கப்படுவார். அ(ந்)த (ஒரு நாளி)ன் அளவு ஐம்பது ஆயிரம் ஆண்டுகளாகும். இறுதியில் அடியார்களிடையே இறுதித் தீர்ப்பு வழங்கப்படும். அப்போது தாம் செல்ல வேண்டிய சொர்க்கத்தின் பாதையை, அல்லது நரகத்தின் பாதையை அவர் காண்பார்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே! குதிரைகள் (நிலை என்ன)?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு "குதிரை மூன்று வகையாகும். அது ஒரு மனிதருக்குப் பாவச் சுமையாகும்; மற்றொரு மனிதருக்கு (பொருளாதார)ப் பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும்; இன்னொரு மனிதருக்கு (இறைவனிடமிருந்து) நற்பலனைப் பெற்றுத்தருவதாகும்: குதிரை பாவச் சுமையாக மாறும் மனிதன் யாரெனில், பகட்டுக்காகவும் பெருமைக்காகவும் இஸ்லாமியருடன் பகைமை பாராட்டுவதற்காகவும் அதை வைத்துப் பராமரித்து வந்த மனிதன் ஆவான். அது அவனுக்குப் பாவச் சுமையாகும். குதிரை (பொருளாதாரப்) பாதுகாப்பு அளிக்கக்கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், அவர் அதை இறைவழியில் பயன்படுத்துவதற்காகக் கட்டிவைத்திருந்தார். பிறகு அதனுடைய பிடரியின் (பராமரிப்பின்) விஷயத்திலும், (அதனால் தாங்கவியலும் சுமையை மட்டுமே) அதன் முதுகின் (மீது தூக்கிவைக்கும்) விஷயத்திலும் அல்லாஹ்வின் கட்டளையை (நிறைவேற்ற) மறக்காதவர் ஆவார். இப்படிப்பட்டவருக்கு அந்தக் குதிரை பாதுகாப்பு அளிக்கக்கூடியதாகும். குதிரை நற்பலனைப் பெற்றுத்தரக் கூடியதாக மாறும் மனிதர் யாரெனில், இஸ்லாமியருக்காக இறைவழியில் அதைப் பசும்புல் வெளியில் கட்டிவைத்துப் பராமரித்து வந்தவர் ஆவார். எந்த அளவிற்கு "அந்தப் பசும்புல் வெளியில்' அல்லது "அந்தத் தோட்டத்தில்' அது மேயுமோ அந்த அளவிற்கு அவருக்கு நன்மைகள் கிடைக்கும். அதன் கெட்டிச் சாணம், சிறுநீர் ஆகியவற்றின் அளவிற்கு அவருக்கு நன்மைகள் எழுதப்படும். அது தன் நீண்ட கயிற்றினைத் துண்டித்துக்கொண்டு ஓரிரு முறை குதித்து (அல்லது ஒன்றிரண்டு மேடுகளைக் கடந்து) சென்றால், அதன் பாதச் சுவடுகள், கெட்டிச் சாணங்கள் அளவிற்கு நன்மைகளை அவருக்கு இறைவன் எழுதாம-ருப்பதில்லை. அதன் உரிமையாளரான அந்த மனிதர் அதை ஓட்டிக்கொண்டு ஓர் ஆற்றைக் கடந்து செல்லும்போது, அதிலிருந்து அது தண்ணீர் குடித்தால் அதற்குத் தண்ணீர் புகட்டும் எண்ணம் அவருக்கு இல்லாமலிருந்தாலும் அது குடித்த தண்ணீரின் அளவிற்கு அவருக்கு அல்லாஹ் நன்மைகளை எழுதாமல் இருப்பதில்லை'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது "அல்லாஹ்வின் தூதரே, கழுதைகளின் நிலை என்ன?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், கழுதைகள் குறித்து எந்தக் கட்டளையும் எனக்கு அருளப்பெறவில்லை; "எவர் அணுவளவு நன்மை செய்திருந்தாரோ அவர் அத(ன் நற்பல)னைக் கண்டுகொள்வார். மேலும், எவர் அணுவளவு தீமை புரிந்திருந்தாரோ அவரும் அத(ற்கான தண்ட)னை(யை)க் கண்டுகொள்வார்' எனும் தனித்துவம் வாய்ந்த ஒருங்கிணைந்த இந்த (99:7,8) வசனங்களைத் தவிர'' என்று சொன்னார்கள். நூல் : முஸ்லிம் 1803 இவ்வுலகம் முதல் மறுமை வரை எம். சல்மான் கான், மேட்டுப்பாளையம் மனிதன் இவ்வுலகில் தோன்றியதிலிருந்து தான் முக்கியமாக கருதும் அனைத்தையும் எழுதி வைக்கும் பழக்கம் அவனிடத்தில் இருந்தது. தான் பேசும் மொழியை எழுதி வைத்து மற்றவர்களுக்கு கற்றுக்கொடுத்தான். நிலங்கள் மற்றும் சொத்துக்கள் யாருக்கு சொந்தம் என்பதை ஆரம்ப காலத்தில் கற்களிலும் பின் தோல்களிலும் பிறகு பேப்பரிலும் எழுதிவைத்தார்கள். இவ்வாறு ஒவ்வொன்றையும் பதிவு செய்யும் பழக்கம் விஞ்ஞான முன்னேற்றம் அடைந்துவிட்ட இக்காலத்தில் எல்லா விஷயங்களும் மிக இலகுவாக கம்யூட்டர் மூலம் மற்றும் சிப்பிலும் (ஸ்ரீட்ண்ல்) லும் பதியப்படுகின்றன . அதிலும் குறிப்பாக குற்றச்செயல்கள் புரிபவர்கள் யார் என்று தெரிந்து கொள்வதற்காக ரயில் நிலையங்கள், விமான நிலையங்கள் போன்ற முக்கியமான இடங்களில் கண்காணிப்பு கேமராக்கள் வைக்கப்பட்டு பதியப்படுகிறது. இதை கொண்டு குற்றம் செய்பவர்கள் கண்டுபிடிக்கப்பட்டு தண்டிக்கப்படுகின்றனர். இது இவ்வுலகில் மனிதனால் ஏற்படுத்தப்பட்ட கண்காணிக்கும் வழிமுறைகளாகும்! ஆனால் (முஸ்லிம்களுக்கு) இறைவன் மனிதன் செய்யும் அனைத்தையும் பதிவு செய்ய ஒரு இனத்தையே படைத்துள்ளான். அவர்கள் மலக்குமார்கள் எனும் வானவர்கள் ஆவர் . நன்மை தீமைகளை பதிவாக்குதல் அல்லாஹ்வை வணங்குவது மட்டுமல்லாமல் மனிதனோடு தொடர்புள்ள பல பொருப்புகளை வானவர்களுக்கு அல்லாஹ் வழங்கியுள்ளான். அதிலே மனிதர்களை கண்கானித்து நன்மை தீமைகளை பதிவு செய்வதும் ஒன்றாகும். ஒவ்வொருவர் மீதும் காண்காணிப்பாளர் இல்லாமல் இல்லை. அல் குர்ஆன் 86 :4 வலப்புறமும், இடப்புறமும் எடுத்தெழுதும் இருவர் அமர்ந்து எடுத்தெழுதும் போது, அவன் எந்தச் சொல்லைப் பேசினாலும் அவனிடம் கண்காணிக்கும் எழுத்தாளர் இல்லாமல் இருப்பதில்லை. அல்குர்ஆன் 50:17,18 அவர்களது இரகசியத்தையும், அதை விட ரகசியத்தையும் நாம் செவியுறவில்லை என்று அவர்கள் நினைக்கிறார்களா? அவ்வாறில்லை! அவர்களிடம் உள்ள நமது தூதர்கள் பதிவு செய்கின்றனர். (அல் குர்ஆன் 43 : 80) உங்கள் மீது மரியாதைக்குரிய எழுத்தர்களான கண்காணிப்பாளர்கள் உள்ளனர். நீங்கள் செய்வதை அவர்கள் அறிவார்கள். (அல் குர்ஆன் 82 :10, 11 ,12) இல்லிய்யீன் ஸிஜ்ஜீன் இவ்வாறு மனிதனின் செயல்கள் உலகில் வாழும்போது ஒன்றுவிடாமல் வானவர்களால் பதியப்படுகின்றது . இப்படி அவனுடைய ஒட்டு மொத்த வாழ்க்கையும் கணக்கெடுத்து இவன் நல்லவனா? கெட்டவனா? என்று இறந்த பின் மீண்டும் ஒரு முறை வானத்திற்கு அவனுடைய ரூஹ் எடுத்துச் செல்லப்பட்டு பதிவாகிறது. இதோ அதைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் . ஒரு அன்சாரித் தோழரின் ஜனாஸாவை அடக்கம் செய்வதற்காக நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். கப்ரடியில் சென்ற போது உட்குழி தோண்டப்படாத நிலையில் இருந்ததால் நபி (ஸல்) அவர்கள் கப்ருக்கு அருகில் அமர்ந்து கொண்டு ஒரு குச்சியால் கிளரிக்கொண்டிருந்தார்கள் .எங்களின் தலைகளின் மீது பறவைகள் அமர்ந்திருப்பது போன்று (அமைதியாக) நாங்களும் அந்த கப்ருகளுக்கு அருகில் அமர்ந்தோம் .(திடீரென) நபி (ஸல்) அவர்கள் தன் தலையை உயர்த்தி நீங்கள் கப்ரின் வேதனையி-லிருந்து அல்லாஹ்விடம் பாதுகாப்பு தேடுங்கள் என இரண்டு அல்லது மூன்று முறை கூறி பின்வரும் வார்த்தைகளை கூறினார். இறைவிசுவாசியான அடியான் ஒருவன் உலகத்தொடர்புகளைத் துண்டித்துக் கொண்டு மறுமையை எதிர்நோக்கி கொண்டிருக்கையில் (சக்கராத்தின் நேரத்தில்) சூரிய ஒளிக்கு ஒப்பான பிரகாசம் கொண்ட முகத்துடன் வானத்திலிருந்து வானவர்கள் சிலர் அவரிடம் வருவார்கள் இவர்கள் தங்களது சுவர்க்கத்துக்கு கபன் துணிகளிலிருந்து ஒரு கபன் துணியையும் சுவர்க்கத்தின் நறுமணத்திலிருந்து நறுமணத்தையும் வைத்து கொண்டு அவருடைய பார்வைக்கு எட்டும் தூரமளவு அமர்ந்திருப்பார்கள். அப்பொழுது உயிரை கைப்பற்றும் வானவர் வந்து அவரருகில் அமர்வார். அவரை நோக்கி நல்ல ஆத்மாவே! ஏக இறைவனுடைய மன்னிப்பை நோக்கியும் அவனுடைய திருப்தியை நோக்கியும் இந்த உடலிலிருந்து வெளியேறி விடு என கூறுவார். தோல்பையி-லிருந்து (அதனை வளைத்தால்) நீர் வழிந்து விழுவது போல அந்த (ஆத்மா உடலிலிருந்து இலகுவாக) வெளியேறிவிடும் . அந்த உயிரை எடுத்தவுடன் கொஞ்சநேரம் கூட கையில் வைத்து கொள்ளாமல் அந்த கபனில் கொண்டு வந்த நறுமணத்தோடு வைத்து விடுவார்கள். (பின்பு அந்த உயிரை) அல்லாஹ்விடம் கொண்டு செல்வார்கள்) வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகாமையில் அந்த உயிரை கொண்டு போகும் போதெல்லாம் இது யாருடைய நல்ல உயிர்? என அவ்வானவர்கள் கேட்பார்கள். அதற்கு இவருக்கு சொல்லப்பட்ட நல்ல பெயரைக் கொண்டு இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். இவருக்காக முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர் கூறுவார். வானம் திறக்கப்படும். இப்படி ஏழு வானம் திறக்கப்படும். அப்போது அல்லாஹ் என் அடியானுடைய செயல்களை நல்லவர்களுடைய ஏடான இல்லியீனிலே பதிவு செய்யுங்கள், அந்த ஆத்மாவை மீண்டும் பூமிக்கு கொண்டு வந்து அவனுடைய கப்ரில் சேருங்கள் என்று கூறுவான். (ஹதீஸ் சுருக்கம், நூல் : அஹ்மத் 17803) நிராகரிப்பவன் மரண வேளையை நெருங்கிவிட்டால் கருத்த முகத்துடன் சில வானவர்கள் வந்து கண் பார்வை எட்டும் தூரத்தில் அமர்ந்துவிடுவார்கள். அவர்களிடத்தில் ஒரு கம்பளி இருக்கும். உயிரைக் கைப்பற்றக்கூடிய மலக்கு வந்து அவனை நோக்கி கெட்ட ஆத்மாவே! அல்லாஹ் கொடுக்க இருக்கும் இழிவை நோக்கியும் அவனுடைய கோபத்தை நோக்கியும் நீ வெளியேறி வா! என்று கூறுவார். அப் பொழுது அவ்வுயிர் ஒளிந்து கொள்வதற்காக உடல் முழுவதும் ஒட ஆரம்பித்துவிடும். நனைத்த கம்பளியிலிருந்து முள் கம்பியை பிடுங்கி எடுப்பது போல் அவனுடைய உடலிலிருந்து உயிர் கைப்பற்றப்டும். கொஞ்ச நேரம் கூட (அவ்வானவர்) தன் கையில் வைக்க மாட்டார். உடனே கம்பளிதுணியில் வைத்துவிடுவார். பின்பு அந்த உயிர் முதல் வானத் திற்கு எடுத்துச் செல்லப்படும். இவ்வுலகில் வீசும் துர்நாற்றத்தை விட அதிகமாக துர்நாற்றம் அதிலி-ருந்து வீசும். பின்பு அந்த உயிரை முதல் வானத்திற்கு கொண்டு செல்வார். வானவர்கள் இருக்கும் கூட்டத்திற்கு அருகில் கொண்டு செல்கின்ற போது எவனுடைய கெட்ட உயிர்? என அங்குள்ள வானவர்கள் கேட்டார்கள். இன்னாருடைய மகன் இன்னார் என்று சொல்லப்படும். முதல் வானத்தை திறக்கும் படி அவ்வானவர் கேட்பார். அவனுக்காக வானம் திறக்கப்படாது என்று கூறிவிட்டு பின்வரும் வசனத்தை ஒதிக் காட்டினார்கள். நமது வசனங்களைப் பொய்யெனக் கருதி, அதைப் புறக்கணிப்போருக்கு வானத்தின் வாசல்கள் திறக்கப்பட மாட்டாது . ஊசித் துவாரத்தில் ஒட்டகம் நுழையும் வரை அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள். இவ்வாறே குற்றவாளிகளைத் தண்டிப்போம். அல் குர்ஆன் 7:40 ஏக இறைவன் உயிரைச் சுமந்து வந்த வானவரைப் பார்த்து அவனுடைய செயல்களை பூமியின் அடிப்பாகத்திலுள்ள ஸிஜ்ஜீன் என்ற இடத்திற்கு எறியப்படும். பிறகு பின்வரும் வசனத்தை ஒதிக்காட்டினார்கள் . அல்லாஹ்வுக்கு அர்ப்பணித்து, அவனுக்கு இணை கற்பிக்காதோராக (ஆகுங்கள்!) அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவன் வானத்திலி-ருந்து விழுந்து பறவைகள் தூக்கிச் சென்றவனைப் போல், அல்லது காற்று தூரமான இடத்தில் கொண்டு போய் வீசிய ஒருவனைப் போல் ஆவான். அல்குர்ஆன் 22:31 இவ்வாறு (கெட்டவர்களின் ஏடான) ஸிஜ்ஜீனில் அவனுடைய செயல்கள் பதியப்படும் (ஹதீஸ் சுருக்கம்) நூல் : அஹ்மத் 17803) மறுமையில் வரும் பதிவேடு மண்ணறை வாழ்க்கையை தொடர்ந்து மீண்டும் விசாரணைச் செய்யப்படும் நாளில் அனைவரும் இறைவன் முன்னிலையில் கொண்டுவரப்படுவார்கள். எந்தளவிற்கென்றால் ஆதம் (அலை) அவர்களிலி-ருந்து நூஹ் (அலை), ஸாலி-ஹ் (அலை), இப்ராஹிம் (அலை), இஸ்ஹாக் (அலை), யஃகூப் (அலை), யூசுஃப் (அலை), சுலைமான் (அலை), மூஸா (அலை), ஈஸா (அலை), இறுதி நபி முஹம்மத் (ஸல்) அவர்கள் வரை உள்ள அனைத்து சமுதாயங்களும் இறைவன் முன் குழுமியிருப்பார்கள். இத்தனை சமுதாயங்களும் அவரவர் காலத்தில் என்னென்ன காரியங்கள் செய்தார்களோ அத்தனையும் அடங்கிய கிதாபை ஒவ்வொருவரிடமும் கொடுக்கப்படும். அதைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான் . ஸூர் ஊதப்படும். அல்லாஹ் நாடியோரைத் தவிர வானங்களிலும், பூமியிலும் இருப்போர் அப்போது மூர்ச்சையாவார்கள். பின்னர் மீண்டும் ஒரு முறை அது ஊதப்படும். உடனே அவர்கள் எழுந்து பார்ப்பார்கள். (அல்குர்ஆன் 39:68) பூமி தனது இறைவனின் ஒளியால் பிரகாசிக்கும். (பதிவுப்) புத்தகம் (முன்) வைக்கப்படும். நபிமார்கள் மற்றும் சாட்சிகள் கொண்டு வரப்படுவார்கள். அவர்களிடையே நியாயமாகத் தீர்ப்பு வழங்கப்படும். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 30 :68,69) ஒவ்வொரு சமுதாயத்தையும் மண்டியிட்டவர்களாக நீர் காண்பீர்! ஒவ்வொரு சமுதாயமும் தனது (பதிவுப்) புத்தகத்தை நோக்கி அழைக்கப்படும். நீங்கள் செய்து கொண்டிருந்ததற்கு இன்று கூலி கொடுக்கப்படுவீர்கள். (அல் குர்ஆன் 45:28) உண்மையை மட்டும் பேசும் உத்தம ஏடு நம்மால் பதியப்படும் எண்ணற்ற செய்திகளை நாமே அழித்துவிடலாம், மாற்றிவிடலாம். குற்றம் செய்தவனை காவல் நிலையத்தில் முதல் தகவல் அறிக்கையில் பெரிய குற்றவாளி என்று பதியப்படுகின்றது. கொடுக்க வேண்டியதை கொடுத்தால் அந்த அறிக்கையில் சாதாரண குற்றச்செயல் செய்தவர் என்று மாற்றிவிடுகின்றனர். ஒருவருடைய சொத்தை மற்றொருவர் சர்வ சாதாரணமாக மாற்றி எழுதிவிடுகின்றனர். இப்படி பல்வேறு விஷயங்களுக்காக பதியப்படுகின்ற அனைத்தும் பொய்யாய் போவதைப் பார்க்கலாம். ஆனால் இறைவனால் நியமிக்கப்பட்ட வானவர்கள் மூலம் எழுதப்பட்ட தகவல்கள் அடங்கிய அறிக்கையில் உண்மை மட்டுமே இருக்கும். அதில் உள்ளதை யாராலும் மாற்றவும் முடியாது, திருத்தவும் முடியாது. உள்ளது உள்ளபடி இருக்கும். எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். நம்மிடம் உண்மையைப் பேசும் ஏடு உள்ளது. அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள். (அல்குர்ஆன் 23 :62) இதுவே நமது புத்தகம். உங்களுக்கு எதிராக இது உண்மையைப் பேசுகிறது. நீங்கள் செய்து கொண்டிருந்தவற்றை நாம் பதிவு செய்வோராக இருந்தோம். (அல்குர்ஆன் 45:29) பதிவேட்டை பார்த்து பயம் கொள்ளும் மனிதன் உமது இறைவனிடம் அவர்கள் வரிசையாக நிறுத்தப்படுவார்கள். ஆரம்பத்தில் உங்களை நாம் படைத்தது போலவே நம்மிடம் வந்து விட்டீர்கள். எச்சரிக்கப்பட்ட இடத்தை உங்களுக்கு ஏற்படுத்த மாட்டோம் என்று நினைத்தீர்கள் (எனக் கூறப்படும்). அந்தப் புத்தகம் வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! "இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ, பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே!'' எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18 :48,49) மனிதன் தனக்கு வழங்கப்பட்டதை பார்த்து ஏன் பயப்படுகிறான்? அவன் இவ்வுலகில் நல்லவனாக வாழவில்லை. அல்லாஹ்வுக்கு இணைவைத்தல், கொலை, கொள்ளை, மது, சூது, விபச்சாரம், மோசடி, அவதூறு, புறம், கேலிகூத்துகள், கோள் இப்படி சிறிய பாவங்கள் முதல் பெரிய பாவங்கள் வரை அனைத்தையும் ஒன்று விடாமல் செய்தான். அதனால் தான் இந்த இழிநிலை. நாம் நம்மிடம் கொடுக்கப்படும் கிதாபை பார்த்து பயப்படக்கூடியவராக ஒருக்காலும் இருக்கக்கூடாது. கழுத்தில் மாட்டப்படும் புத்தகம் ஒவ்வொரு மனிதனுக்கும் அவனது கழுத்தில் அவனது குறிப்பேட்டை மாட்டியுள்ளோம். கியாமத் நாளில் அவனுக்காக ஒரு புத்தகத்தை வெளிப்படுத்துவோம். அதை விரிக்கப்பட்டதாக அவன் காண்பான். (அல் குர்ஆன் 17:13) செயல்களை கணக்கெடுக்க நீயே போதுமானவன் "உனது புத்தகத்தை நீ வாசி! உன்னைப் பற்றி கணக்கெடுக்க நீயே போதுமானவன்'' (என்று கூறப்படும்). அல் குர்ஆன் 17 :14 இடது கையில் வழங்கப்பட்டால் : புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் "எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே'' எனக் கூறுவான். அவனைப் பிடியுங்கள்! அவனுக்கு விலங்கு மாட்டுங்கள்! பின்னர் நரகில் கருகச் செய்யுங்கள்! பின்னர் எழுபது முழம் கொண்ட சங்கிலியால் அவனைப் பிணையுங்கள்! (எனக் கூறப்படும்.) அவன் மகத்தான அல்லாஹ்வை நம்பாதவனாக இருந்தான். ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டவுமில்லை. இன்று இங்கே அவனுக்கு உற்ற நண்பன் எவனும் இல்லை. சீழைத் தவிர வேறு உணவும் இல்லை. குற்றவாளிகள் தவிர மற்றவர்கள் அதை உண்ண மாட்டார்கள். அல் குர்ஆன் 69:25 -37 முதுகுக்குப் பின்னால் கொடுக்கப்பட்டால் : முதுகுக்குப் பின் புறமாக எவனுக்கு அவனது பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவன் அழிவை அழைப்பான். நரகிலும் கருகுவான். அவன் (இவ்வுலகில்) தனது குடும்பத்தினருடன் மகிழ்ச்சியுடன் இருந்தான். "தான் (இறைவனிடம்) மீளவே மாட்டேன்'' என்று அவன் எண்ணினான். அல்குர்ஆன் 84:10-14 வலது கையில் கொடுக்கப்பட்டால் : யாருக்கு வலது கையில் பதிவுப் புத்தகம் கொடுக்கப்படுகிறதோ அவர் எளிதான முறையில் விசாரிக்கப்படுவார். அவர் தனது குடும்பத்தினரிடம் மகிழ்ச்சியுடன் செல்வார். (அல்குர்ஆன் 84: 7,8,9) அந்நாளில் (விசாரணைக்காக) நிறுத்தப்படுவீர்கள். உங்களிடமிருந்து எதுவும் மறையாது. எனவே தமது வலது கையில் புத்தகம் வழங்கப்பட்டவர் "வாருங்கள்! எனது புத்தகத்தை வாசியுங்கள்! நான் எனது விசாரணையைச் சந்திப்பவன் என்பதை நம்பிக் கொண்டிருந்தேன்'' எனக் கூறுவார். அவர் திருப்தியான வாழ்க்கையிலும், உயரமான சொர்க்கச் சோலையிலும் இருப்பார். அதன் கனிகள் தாழ்ந்திருக்கும். சென்ற நாட்களில் நீங்கள் முற்படுத்தியவை காரணமாக நீங்கள் மகிழ்வுடன் உண்ணுங்கள்! பருகுங்கள்! (எனக் கூறப்படும்) அல் குர்ஆன் 69 :18 -24 ஒவ்வொரு மனிதனின் செயல்கள் அனைத்தும் கண்காணித்து எழுதப்படுகின்றது. அவ்வாறு எழுதப்பட்ட ஏடானது மறுமை வரை தொடர்கிறது. வலது கையில் கொடுக்கப்பட்டால் விசாரணை எளிதாகி சொர்க்கம் செல்கிறார். இடது கையில் கொடுக்கப்பட்டால் விசாரணை கடுமையாகி நரகம் செல்கிறார் .மறுமையில் இந்த இரண்டில் ஒன்றை கண்டிப்பாக அடைந்தே தீருவார். எனவே நாம் செய்யக்கூடிய ஒவ்வொன்றும் வலப்பக்கம் கொடுக்கக்கூடிய கிதாபில் பதியக்கூடிய வகையில் நல்அமல்களை அதிகமாக செய்து மறுமையின் வெற்றியைப் பெறுவோம் . தூய்மை இன்று உலகில் எங்கு நோக்கினும் ஆபாசங்களும் அசுத்தங்களும் நம்பிக்கை மோசடியும் நிறைந்து காணப்படுகின்றது. உடலளவிலும் மனதளவிளும் தூய்மையாக வாழ்பவர்கள் விரல்விட்டு எண்ணும் அளவில் மக்களில் கணிசமானவர்களாக இருக்கின்றனர் இஸ்லாம் தூய்மையாக வாழவேண்டும் என்பதை வலியுறுத்துகின்றது . தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். அல்குர்ஆன் 87:14 தூய்மை என்பது விரிந்த பொருள் கொண்ட வார்த்தையாகும். இது ஒருவன் தன் உடல் மற்றும் அவனுடைய பொருட்கள் மற்றும் சுற்றுப்புற சூழலை தூய்மையாக வைத்திருப்பதையும், பெற்றோர் மற்றும் உறவினர்கள், அண்டை, அயலார் மற்றும் நம் வாழ்க்கையில் சந்திக்கக்கூடிய அனைவரிடமும் நேர்மையாக, நீதியாக, நம்பிக்கைக்குரியவராக, ஒழுக்கமிக்கவராக இருப்பதையும், மற்றவர்களுக்கு உபதேசம் செய்வதையும் நம்முடைய பொருட்களுக்கான ஜகாத்தை உரிய முறையில் வழங்குவதையும் மொத்தத்தில் அந்தரங்க மற்றும் வெளிப்படையான வாழ்க்கையில் தூய்மையாக இருப்பதையும் குறிக்கும் சொல்லாகும். உடல் தூய்மை காலையில் எழுந்தது முதல் இரவு தூங்கும் வரை இஸ்லாம் நமக்கு தூய்மையாக வாழ கற்றுக்கொடுக்கிறது .ஆன்மீகத்தின் பெயரால் நகங்களை வெட்டாமல் இருப்பதும் முடிகளை சீர்செய்யாமல் இருப்பதும் இஸ்லாத்திற்கு புறம்பான செயலாகும். பல் துலக்குதல், குளித்தல், உளுச்செய்தல், ஆடைகளை துவைத்தல், வீட்டை தூய்மைப்படுத்துதல் போன்ற தூய்மைக்கு முக்கியத்துவப்படுத்தும் விஷயத்திலும் சிலர் அசட்டையாக இருப்பதை நாம் காண்கின்றோம். பாத்திரங்களை கழுவ வேண்டும் என்பதற்காகவே ஹோட்டலில் உணவுப்பொருட்களை வாங்கும் அளவிற்கு சோம்பேறியாக உள்ளனர். காலையில் எழுந்தவுடன் கைகளை கழுவுதல் : காலையில் எழுந்ததும் பல்துலக்காமல் கைகளை கழுவாமல் சாப்பிடும் வழக்கம் மக்களிடத்தில் காணப்படுகின்றது. இது சிறந்த நடைமுறையாகவும் கருதப்படுகின்றது. இதற்கு பெட் காஃபி என்று கூறிக் கொண்டு பலதுலக்காமல் அருந்துவதைப் பார்க்கிறோம். இது தூய்மையற்ற ஒரு நடைமுறையாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் உளூச் செய்தால் தமது மூக்கிற்கு நீர் செலுத்தி (மூக்கை அசைத்து)ச் சிந்தட்டும். மலஜலம் கழித்துவிட்டு கற்களால் சுத்தம் செய்பவர் ஒற்றைப்படையாகச் செய்யட்டும். உங்களில் ஒருவர் உறக்கத்திலிருந்து விழித்தெழுந்தால் அவர் தாம் உளூ செய்யப்போகும் பாத்திரத்திற்குள் கையை நுழைப்பதற்கு முன்னால் கையை கழுவிக்கொள்ளட்டும். ஏனென்றால் உங்களில் எவரும் இரவில் (உறங்கும்போது) தமது கை எங்கே கிடந்தது என்பதை அறியமாட்டார். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 162 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தூக்கத்தி-ருந்து எழுந்து உளூ செய்தால் மூன்று முறை (நீர் செலுத்தி) நன்கு மூக்கைச் சிந்தி (தூய்மைப் படுத்தி)க்கொள்ளுங்கள். ஏனெனில், நீங்கள் (தூங்கும்போது) மூக்கின் உட்பகுதிக்குள் ஷைத்தான் தங்கியிருக்கின்றான். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர), நூல் : புகாரி 3295 பல் துலக்குதல் : ஹுதைஃபா (ரலி-) அவர்கள் கூறியதாவது : நபி (ஸல்) அவர்கள் இரவில் (தொழுகைக்காக) எழும்போது பல்துலக்கு(ம் குச்சியால் வாயை சுத்தம் செய்)வார்கள். நூல் : புகாரி 889 ஷுரைஹ் அவர்கள் கூறியதாவது: நான் ஆயிஷா (ர-) அவர்களிடம், "நபி (ஸல்) அவர்கள் வீட்டுக்குள் நுழைந்ததும் அவர்கள் செய்யும் முதல் வேலை எது?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், "பல் துலக்குவது' என்று பதிலளித்தார்கள். நூல் : முஸ்லிம் :423 கழிவறைக்குச்செல்லும் போது : கழிவறைக்குச் செல்லும் போது என்ன ஒழுக்கங்களை பேண வேண்டும் என்ற முறைகளை இஸ்லாம் கற்றுகொடுக்கின்றது. மர்ம உறுப்பை வலது கையால் தொடக்கூடாது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் சிறுநீர் கழிக்கும்போது பிறவிஉறுப்பைத் தமது வலக் கரத்தால் தொட வேண்டாம்; வலக் கரத்தால் சுத்தம் செய்யவும் வேண்டாம். (ஏதேனும் ஒன்றைப் பருகும்போது) பாத்திரத்திற்குள் மூச்சு விடவும் வேண்டாம். அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி), புகாரி :154 குளித்தல் உடலில் உள்ள அசுத்தங்களை தூய்மை செய்யும் முறையில் மிக முக்கியமான ஒன்று தான் குளிப்பதாகும். அது சாதாரண குளிப்பாக இருந்தாலும், கடமையான குளிப்பாக இருந்தாலும் சரியே ! குளிப்பை நிறைவேற்றிய பிறகே தொழுகை : நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும் போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்! உங்கள் தலைகளை (ஈரக்கையால்) தடவிக் கொள்ளுங்கள்! குளிப்புக் கடமையானோராக நீங்கள் இருந்தால் (குளித்து) தூய்மையாகிக் கொள்ளுங்கள்! நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால், அல்லது உங்களில் ஒருவர் கழிப்பறையிலிருந்து வந்தால், அல்லது (உடலுறவின் மூலம்) பெண்களைத் தீண்டினால் தண்ணீர் கிடைக்காத போது தூய்மையான மண்ணைத் தொட்டு அதில் உங்கள் முகங்களையும், கைகளையும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு எந்தச் சிரமத்தையும் ஏற்படுத்த விரும்பவில்லை. மாறாக நீங்கள் நன்றி செலுத்துவதற்காக உங்களைத் தூய்மைப்படுத்தவும், தனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தவுமே விரும்புகிறான். அல்குர்ஆன் :5:6 குளிப்பு கடமையாக இருக்கும் போது கடைபிடிக்க வேண்டியது குளிப்பு கடமையாக இருக்கும் போது உண்ணுவதற்கும் உறங்குவதற்கும் விரும்பினால் உளுச் செய்வது சிறந்ததாகும். ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி) இருக்கும்போது உண்ணவோ உறங்கவோ விரும்பினால் (முன்னதாக) தொழுகைக்கு அங்கத் தூய்மை (உளூ) செய்வதைப் போன்று அங்கத் தூய்மை செய்துகொள்வார்கள். நூல் : முஸ்லிம் : 513 அப்துல்லாஹ்பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கüடம் உமர் (ரலி) அவர்கள், "எங்களில் ஒருவர் குளியல் கடமையானவராக இருக்கும் நிலையில் (குளிக்காமல்) உறங்கலாமா?'' என கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம்; உளூ செய்துவிட்டு (உறங்கலாம்.)'' என்று பதிலüத்தார்கள். நூல் : புகாரி :289 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள், இரவு நேரத்தில் தமக்கு பெருந்துடக்கு ஏற்பட்டு (குளியல் கடமையாகி)விடுவது பற்றிக் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்'' உளூ செய்யுங்கள்; உங்கள் பிறப்புறுப்பைக் கழுவுங்கள்; பிறகு உறங் குங்கள்'' என்றார்கள். நூல் : புகாரி : 290 கடமையான குளிப்பின் போது : மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்கள் குüப்பதற்குத் தண்ணீர் ஊற்றினேன். அவர்கள் தமது வலக் கரத்தால் நீர் அள்ü இடக்கையின் மீது ஊற்றி இருகைகளையும் கழுவினார்கள்; பிறகு தமது மர்மஸ்தலத்தைக் கழுவினார்கள். பிறகு தமது கையைப் பூமியில் மண் கொண்டு தேய்த்து பிறகு அதை (நீரால்) கழுவினார்கள். பிறகு வாய் கொப்பüத்து மூக்கிற்குத் தண்ணீர் செலுத்தி (ச் சிந்தி)னார்கள். பிறகு தம் முகத்தைக் கழுவி, தலையில் தண்ணீர் ஊற்றினார்கள். பிறகு சற்று நகர்ந்து தம்மிரு பாதங்களையும் கழுவினார்கள். பிறகு (துடைத்துக்கொள்ள) துண்டு கொடுக்கப் பட்டது. ஆனால் அதன் மூலம் அவர்கள் துடைத்துக் கொள்ளவில்லை. நூல் : புகாரி : 259 கை நன்றாகச் சுத்தமாவதற்காகக் கையை தேய்த்துக் கழுவுதல்: மைமூனா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பெருந்துடக்கிற்காக (கடமையானக் குüயலைக்) குüக்கும்போது (முதரில்) தமது மர்மஸ்தலத்தை கையினால் கழுவினார்கள். பிறகு கையைத் தேய்த்து கழுவினார்கள். பிறகு தொழுகைக்காக உளூ செய்வது போன்று உளூ செய்தார்கள். குüத்து முடித்து (இறுதியில்) தம்மிரு கால்களையும் கழுவினார்கள். நூல் : புகாரி : 260 ஆயிஷா (ரலி-) அவர்கள் கூறியதாவது: அஸ்மா பின்த் ஷகல் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம், மாதவிடாய்க் குளியல் பற்றிக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்களில் ஒருவர் (மாதவிடாய்க் குளியரின் போது) தண்ணீரையும் இலந்தை இலைகளையும் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள்ளட்டும். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி நன்றாகத் தேய்த்து தலையின் சருமம் நனையும்வரைக் கழுவட்டும். பிறகு உடம்புக்குத் தண்ணீர் ஊற்றட்டும். அதன் பின்னர் கஸ்தூரி தடவப் பட்ட பஞ்சுத்துண்டு ஒன்றை எடுத்து சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று சொன்னார்கள். அதற்கு அஸ்மா (ரலி) அவர்கள், "அதை வைத்து அவள் எவ்வாறு சுத்தம் செய்வாள்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்!). அதனால் சுத்தம் செய்துகொள்ளட்டும்'' என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே நான், "இரத்தம் படிந்த இடத்தில் தடவிக்கொள்' என்று -பிறர் காதில் விழாதவாறு அதை இரகசியமாகச்- சொன்னேன். மேலும், அஸ்மா நபி (ஸல்) அவர்களிடம், பெருந்துடக்கிற்காகக் குளிக்கும் முறை பற்றிக் கேட்டார். அதற்கு அவர்கள், "தண்ணீர் எடுத்து நன்கு சுத்தம் செய்துகொள். பிறகு தலைக்குத் தண்ணீர் ஊற்றி தலையின் சருமம் நனையும் அளவுக்கு நன்கு தேய்த்துக்கொள். பின்னர் உன் (மேனியின்) மீது தண்ணீர் ஊற்று!'' என்றார்கள். நூல் : முஸ்லிம் 552 தூய்மை தொடரும் .... 26.10.2011. 06:28 தலையங்கம் நரேந்திர மோடியின் நாடகம் ஆரங்கேறியது 2002ஆம் ஆண்டு குஜராத் மாநிலம் தீப்பற்றி எரிந்தது. அதில் எரிந்தவர்கள் எல்லாம் முஸ்லிம்கள். குஜராத்தில் சிறுபான்மையாக இருந்த முஸ்லிம்களை ஆட்சி அதிகாரத்தை பயன்படுத்தி கொத்துக் கொத்தாக படுகொலை செய்தவன் இந்த நரேந்திரமோடி. தொடர்ந்து படிக்க 05.10.2011. 04:47 தொடரட்டும் ஈறையச்சம் இறைவனின் பேரருளால் அருள்மழை பொழியும் ரமலான் மாதத்தை நிறைவு செய்துள்ளோம். இம்மாதத்தில் நம்மால் முடிந்த அளவு இறைவணக்கத்தையும் நல்லறங்களையும் செய்துள்ளோம். வேறு எந்த மாதங்களிலும் செய்யாத அளவு வணக்கவழிபாடுகளில் ஈடுபட்டதோடு ஷைத்தானின் தீய செயல்களிலிலிருந்து விடுப்பட்டும் இருந்துள்ளோம். தொடர்ந்து படிக்க 30.08.2011. 09:38 ஆயிரம் மாதங்களை விட சிறப்புமிக்க லைலத்துல் கத்ரும் ஏரளாமான நன்மைகளை ஈட்டித்தரும் இந்த மாதத்தில் நன்மைகளை அள்ளித்தரும் பணிகளை நாம் செய்ய வேண்டும். தொடர்ந்து படிக்க 09.08.2011. 17:51 தலையங்கம் இறைச்சத்துடன் கூடிய உலகக் கல்வி தமிழகத்தில் ஆட்சி மாற்றத்திற்கு பின்னர் கல்விக் கூடங்களும் திறக்கப்பட்டுவிட்டன. ஏறத்தாள அனைத்து கல்வி நிலையங்களும் திறப்பட்டு படங்கள் நடத்தப்பட்டு வருகின்றனர். பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளை அவர்களின் பார்வையில் சிறந்தவையாக தேன்றியவைகளில் சேர்த்து உள்ளனர். தொடர்ந்து படிக்க 05.06.2011. 07:45 ஐந்தாண்டு கால திமுக ஆட்சி முடிவுக்கு வந்து அதிமுக ஆட்சி காலம் துவங்கியுள்ளது. இந்த முறை நடந்த தேர்தலில் திமுக மிகப்பெரிய தோல்வியை சந்தித்துள்ளது. தொடர்ந்து படிக்க 04.06.2011. 13:56 தொடர்ந்து படிக்க 14.04.2011. 07:22 தேர்தல் வந்துவிட்டால் நாடே களை கட்டிவிடும். தேசிய கட்சியிருந்து சுயேட்சைகள் வரை ஒரு கலக்கு கலக்கிவிடுவார்கள். தேர்தல் முடியும் வரை மக்கள் நிம்மதியாக உறங்கக்கூட முடியாது. தேரரணங்கள் என்ன? வானவேடிக்கைகள் என்ன? என்று திருவிழாவை விட விமர்சையாக கொண்டப்படும் மிகப்பெரிய திருவிழா இந்த தேர்தல்தான். தொடர்ந்து படிக்க 13.04.2011. 03:31 துனீசியா நாட்டில் கடந்த 23 ஆண்டுகளாக ஆட்சி நடத்திய அதன் அதிபர் ஜைனுல் ஆபிதீன் பின் அலி அந்நாட்டு மக்களின் எழுச்சியால் தூக்கி எறியப்பட்ட பின்னர் எகிப்திலும் மிகப்பெரிய புரட்சி ஏற்பட்டது. அதைத் தொடர்ந்து பல நாடுகளில் இன்று போராட்டங்கள் நடந்து வருகின்றன தொடர்ந்து படிக்க 26.02.2011. 10:10 விலைவாசி உயர்வுக்கு என்ன காரணம்? ஏழைகளின் வயிற்றில் ஏறி மிதிக்கும் அளவுக்கு விலைவாசி உயர்ந்து கொண்டே போகிறது. மேலே சென்ற பொருட்கள் கீழே வந்தாக வேண்டும் என்ற நியூட்டனின் விதியை இங்கு எதிர்பார்க்க முடியாது என்ற நிலை ஏற்பட்டுள்ளது தொடர்ந்து படிக்க 07.02.2011. 04:31தீன்குலப்பெண்மணி நவம்பர் 2011
உள்ளாட்சித் தேர்தல்
குற்றங்களும் தண்டனைகளும்
நாஸ் மற்றும் ஃபலக் அத்தியாயத்தின் விரிவுரை
தொடர் : 5
நபிகளார் சந்தித்த உஹுத் போர்
தொடர் : 2
தகவல் களஞ்சியம்
தீன்குலப் பெண்ணின் குணங்கள்
தொடர் 7
மறுமை பதிவேடு
அக்டோபர் தீன்குலப் பெண்மணி 2011
தீன்குலப் பெண்மணி 2011 செப்டம்பர்
தீன்குலப்பெண்மணி ஆகஸ்ட் 2011
அருள்மிகு ரமலானும் ஆற்ற வேண்டிய பணிகளும்
ஜுலை 2011 தீன்குலப் பெண்மணி
ஜுன் தீன்குலப்பெண்மணி
தலையங்கம்
நல்லாட்சி கிடைக்குமா?
மே 2011 தீன் குலப்பெண்மணி
கோடைகால விடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்
கோடைகாலமும் வரும் போது கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ,மாணவிகளுக்கு ஓய்வு அளிக்கிறது கல்வித் துறை. இந்த ஓய்வு காலத்தை பெரும்பாலும் வீணான காரியங்களிலே வீணாக்கின்றனர் மாணவ,மாணவிகள்.
மனிதர்கüல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப் பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.
1. ஆரோக்கியம். 2. ஓய்வு.2
என்று நபிமொழி, இன்றைய கோடைகாலத்தை வீணாக்குபவர்களுக்கு சொன்னதைப் போன்று அமைந்துள்ளது.
மனிதனுக்கு கிடைக்கும் ஓய்வு நேரத்தையும் ஆரோக்கியமான காலத்தை நல்ல காரியங்கள் செய்வதற்கு பயன்படுத்திக் கொள்ள வேண்டும். ஒரு காலத்தில் நாம் நல்ல காரியங்கள் செய்ய நினைத்தாலும் நமக்கு ஓய்வு கிடைக்காமல் போய்விடும். சில நேரங்களில் உடல் ஒத்துழைக்காது. எனவே நாமக்கு கிடைக்கும் ஓய்வு நேரங்களை நல்ல செயல்கள் செய்வதற்கு பயன்படுத்தக் கொள்ளவேண்டும்.
குறிப்பாக இன்றைய காலத்தில் இளைஞர்கள், சிறுவர்,சிறுமிகள் கெட்டுப் போவதற்கும் கொள்கையை விட்டு போவதற்கும் ஏராளமான வாய்ப்புகள் உள்ள சூழ்நிலையில் பெற்றோர்கள், தம் பிள்ளைகளை நல்ல பிள்ளைகளாக, ஓரிறைக் கொள்கையில் உறுதி உள்ள பிள்ளைகளாக மாற்றுவதற்குரிய அனைத்து முயற்சிகளை செய்ய கடமைபட்டுள்ளார்கள்.
விஞ்ஞான வளர்ச்சியின் பயனாக ஏராளமான சின்னத்திரைகள் புற்றீசல்கள் போல் உருவாகியுள்ளது. மற்ற மாநிலங்களை ஒப்பிடும் போது தமிழகத்தில்தான் அளவுக்கு அதிகமான சின்னத்திரை சேனல்கள் உருவாகி உள்ளன. மேலும் பல சேனல்கள் வருவதற்குரிய முயற்சிகள் நடந்தது வருகின்றன.
விஞ்ஞான வளர்ச்சியின் பரிசான இந்த சின்னத்திரைகள் மக்களின் அறிவையும் பண்பாட்டையும் நல்லொழுக்கத்தையும் உயர்த்தி இருந்தால் பெரிதும் மகிழ்ச்சியடையலாம். ஆனால் அறிவை மழுங்கடிக்கும் வகையில் சமூகச் சீரழிவை ஏற்படுத்தும் வகையிலும்தான் அதன் நிகழ்ச்சிகள் அமைந்துள்ளன.
கோடைகால விடுமுறையில் சமூகத்தை சீரழிக்கும் பல வகையான நிகழ்ச்சிகள் தயாராகிக் கொண்டிருக்கின்றனர். மேலும் சிறுவயது குழந்தைகளை கவரும் வண்ணம் பல நிகழ்ச்சிகள் தயாரிக்கப்படுகின்றனர்.
பார்வையாளர்களை கவர்வதற்காக புதுமையான நிகழ்ச்சிகளை சின்னத்திரை தயாரிப்பாளர்கள் உருவாக்கி வருகிறார்கள். குறிப்பாக சிறுவர்களை மையமாக வைத்து நிகழ்ச்சிகளும் தனிச் சேனல்களும் உருவாகி சிறுவர்களின் உள்ளங்களில் இடம் பிடித்துள்ளனர்.
குழந்தைகளுக்கு என்று உருவாக்கப்பட்டிருக்கும் சேனல்களை மட்டுமே குழந்தைகள் விரும்பி பார்ப்பதால் அவர்கள் வேறு எந்த விஷயங்கள் மீதும் கவனம் செலுத்துமுடியாத அளவுக்கு அவர்களின் அறிவுத்திறன் முடங்கிப் போகிறது.
எனவே ஓய்வு நேரத்தை நல்வழியில் மாணவ,மாணவிகள் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் வருடம் தோறும் கோடைகால நல்லொழுக்க பயிற்சி வகுப்புகளை நடத்திவருகிறது. இதன் மூலம் ஆயிக்கணக்கான மாணவர்கள் வருடம்தோறும் பயன்பெற்று செல்கின்றனர்.
இது போன்ற நல்ல சந்தர்ப்பங்களை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். இது போன்ற நல்ல காரியங்களுக்கு பொருளாதர உதவிகளையும் நாம் வாரி வழங்கி இம்மை மறுமை நன்மைகளை பெற முயற்சிப்போம்.
ஏப்ரல் தீன்குலப் பெண்மணி - 2011
தேர்தல் கமிஷனின் கெடுபிடிகள் தொடராதா?
தீன்குலப் பெண்மணி மார்ச்2011 பிப்ரவரி 20
தலையங்கம்ஆட்சியாளருக்கு ஏதிராக மக்கள் ஏழுச்சி
தீன்குலப் பெண்மணி பிப்ரவரி 2011
தலையங்கம்
