டிசம்பர் தீன்குலப் பெண்மணி 2015

தலையங்கம்

பருவ மழையைப் பாழாக்கிய தமிழகம்

கொட்டித் தீர்த்தது மழை, சென்னை வெள்ளத்தில் மிதக்கிறது, பள்ளிகளுக்கு தொடர் விடுமுறை என்ற செய்திகள் பத்திரிக்கை, தொலைக்காட்சிகளில் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

உண்மையில் தமிழகத்திற்குத் தேவையான மழைபெய்ந்து விட்டதா? என்றால் நிச்சயம் இல்லை என்று சொல்லலாம். இதை வரும் கோடைகாலங்களில் நாம் உணருவோம்.

வடகிழக்குப் பருவமழைதான் தமிழகத்தின் தண்ணீர் தேவையை ஓரளவு பூர்த்தி செய்கிறது.

அக்டோபர் முதல் டிசம்பர் வரையிலான காலம் இந்தியத் தீபகற்பத்தில் வடகிழக்கு பருவமழைக் காலம்  என்றழைக்கப்படுகின்றது. இக்காலமே. தென்னிந்திய தீபகற்பத்தின் முக்கிய மழைக்காலமாகும்.

குறிப்பாக ஆந்திரா, ராயலசீமா, தமிழ்நாடு, புதுச்சேரி ஆகியவையின் தேவையை இந்த மழைதான் பூர்த்தி செய்கிறது.  தமிழ்நாட்டின் மிக முக்கிய மழைக்காலமான இப்பருவமழையின் போது மட்டும் வருடத்தின் மொத்த மழையளவில் 48 % சராசரியாகப் பொழிகிறது. தமிழகத்தின் கரையோரப் பகுதிகளில் 60 % மழையளவும் உள்மாவட்டங்களில் 40-50% மழையளவும் இக்காலத்தில் பொழிகிறது

இறைவன் தரும் அந்த அருட்கொடையைப் பாதுகாத்து, வரும் வருடங்களில் அதைப் பயன்படுத்த நம் முன்னோர்கள் செய்த ஏற்பாட்டைச் சரியாக நாம் பயன்படுத்திக் கொள்ளவில்லை.

மழைநீரைப் பாதுகாக்க குளம், ஏரி, கண்மாய் என்று ஏராளமான நீர்தேக்கங்களை தமிழகத்தில் நம் முன்னோர்கள் ஏற்படுத்தி வைத்திருந்தனர். ஆனால் அவற்றில் 40 விழுக்காட்டிற்கும் மேலாக இன்று காணாமல் போய்விட்டது.

ஆக்கிரமிப்பு, ரியல் எஸ்டேட் அதிபர்களின் கொள்ளைகள் என்று ஏராளமான நீர்த் தேக்கங்கள் காணாமல் போனதால்தான் இன்று சென்னை போன்ற நகரங்கள் தத்தளிக்கின்றன.

இருக்கும் குளம், கண்மாய், ஏரி போன்றவற்றையாவது தூர்வாரி ஆழப்படுத்தி தண்ணீர் தேக்கி வைப்பதற்குரிய வேலையைச் செய்திருக்க வேண்டும். ஆனால் அரசு அந்த வேலையைச் செய்யவில்லை.

சில இடங்களில் பெயருக்கு தூர்வாரி உள்ளனர். இது யானைப் பசிக்கு சோளப்பொறி கொடுப்பது போலாகி விட்டது. இதனால்தான் சிறிய கொள்ளளவுடன் தண்ணீர் நிரம்பி இடம் இல்லை என்று சாலைக்கு தண்ணீர் வந்துவிட்டது.

குளம், குட்டை, ஏரி, கண்மாய், கால்வாய் போன்றவை முற்புதர்கள் நிரம்பி இருப்பதால் தண்ணீர் முழுமையாக உள்ளடங்க முடிவதில்லை.

தமிழகத்தில் குறிப்பிடத்தக்க அளவு ஏரிகள் உள்ளன. தமிழ்நாட்டில் மொத்தம் 39,202 ஏரிகள் உள்ளன. இவற்றுள் 13,710 ஏரிகள் நீர்வள ஆதாரத்துறையின் கட்டுப்பாட்டில் உள்ளன.

ஆக்கிரமிப்பால் நீர்நிலைகளுக்கு தண்ணீர் செல்லும் கால்வாய்கள் மூடப்பட்டு விட்டன. நீர்நிலைகள் தூர்வாரப்பட்டு பல ஆண்டுகளாகி விட்டன. இதன் காரணமாக எப்போதாவது பெய்யும் மழை நீரைச் சேமிக்க முடியாமல் அவை வீணாகக் கடலில் கலக்கின்றன.

தேவையான மழை பொழிந்தும் தமிழகம் தண்ணீருக்கு கையேந்தும் நிலை ஏற்படுகிறது.

கடந்த 2007-08 ஆம் ஆண்டு ஏரி, குளம் ஆகியவற்றைப் பாதுகாக்க சட்டம் கொண்டு வரப்பட்டது. ஆனால், 2009 ஆம் ஆண்டு ஆக்கிரமிப்பு பகுதியில் 10 ஆண்டாகக் குடியிருந்தவர்களுக்கு பட்டா வழங்கப்பட்டது. எனவே, பெரும்பாலான ஏரி, குளங்கள் மாயமாகி விட்டன. இது போன்ற அரசியல் காரணங்களும் தண்ணீரைச் சேமிப்பதற்குத் தடையாக இருக்கிறது.

குளங்கள், ஏரிகள் காணாமல் போனதற்கும், தூர் வாராமல் இருந்ததற்கும் காரணமான அரசியல்வாதிகள், அதிகாரிகள் மீது அதிகபட்ச நடவடிக்கை எடுத்து, ஆக்கிரமிப்புப் பகுதிகளை அப்புறப்படுத்தி, தூர்வாரி, ஆழப்படுத்தி தண்ணீர் சேமிக்கும் வழியை ஏற்படுத்தினால் அடுத்தவனிடம் கையேந்தும் நிலை தமிழகத்திற்கு வராது.

 

தனித்து பயணம் செய்யலாமா?

-பாத்திமா ஜவாஹிரா, காயல்பட்டிணம்

ஒரு முஸ்லிம் யாருடைய துணையுமின்றி வெளியூர்ப் பயணம் செல்லக் கூடாது. இரண்டு நபர்களாகவும் பிரயாணம் செய்யக் கூடாது. குறைந்த பட்சம் மூன்று நபர்கள் இருந்தால் தான் பிரயாணம் செய்ய அனுமதி உண்டு என்று சில அறிஞர்கள் கூறுகின்றனர். இதற்கு ஆதாரமாகப் பின்வரும் ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

سنن الترمذى - مكنز (6/ 440، بترقيم الشاملة آليا)

حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ مُوسَى الأَنْصَارِىُّ حَدَّثَنَا مَعْنٌ حَدَّثَنَا مَالِكٌ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ حَرْمَلَةَ عَنْ عَمْرِو بْنِ شُعَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ جَدِّهِ أَنَّ رَسُولَ اللَّهِ -صلى الله عليه وسلم- قَالَ « الرَّاكِبُ شَيْطَانٌ وَالرَّاكِبَانِ شَيْطَانَانِ وَالثَّلاَثَةُ رَكْبٌ யு. قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ لاَ نَعْرِفُهُ إِلاَّ مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ عَاصِمٍ وَهُوَ ابْنُ مُحَمَّدِ بْنِ زَيْدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ وَحَدِيثُ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو حَدِيثٌ حَسَنٌ.

"வாகனத்தில் தனியாகப் பயணம் செய்யும் ஒரு வாகனப் பயணி ஷைத்தான் ஆவார். இரு வாகனப் பயணிகள் இரு ஷைத்தான்களாவர். மூன்று பயணிகளே பயணிகள் ஆவர்" என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அம்ரு இப்னு ஷுஐப் (ரலி)

ஆதாரம்:  திர்மிதி 1595, அபூதாவூத் 2243, முஸ்னத் அஹ்மத் 6572, 6831, ஹாகிம் 2426, அஸ்ஸுனனுல் குப்ரா (நஸஈ) 8527, அஸ்ஸுனனுல் குப்ரா (பைஹகி) 9590.

இதன் அறிவிப்பாளர் தொடரில் குறைபாடு உள்ளதாலும், இதன் கருத்து ஆதாரப்பூர்வமான பல ஹதீஸ்களுக்கு முரணாக இருப்பதாலும் இது ஏற்கத் தகாத ஹதீஸாகும்.

மேற்கண்ட அனைத்து நூல்களிலும் உள்ள அறிவிப்பாளர் தொடரில் அப்துர்ரஹ்மான் இப்னு ஹர்மலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب - ابن حجر (6/ 146)

 330 - م 4 مسلم والأربعة عبد الرحمن بن حرملة بن عمرو بن سنة الأسلمي أبو حرملة ஞ்ஞ் قال يحيى بن سعيد عنه كنت سيء الحفظ فرخص لي سعيد في الكتابة قال يحيى بن سعيد محمد بن عمر وأحب إلي من بن حرملة وكان بن حرملة يلقن وقال بن خلاد الباهلي سألت القطان عنه فضعفه ولم يدفعه وقال إسحاق عن بن معين صالحوقال أبو حاتم يكتب حديثه ولا يحتج به قال النسائي ليس به بأس وذكره بن حبان في الثقات وقال يخطىء وقال بن سعد توفي سنة خمس وأربعين ومائة قال محمد بن عمرو كان ثقة كثير الحديث روى له مسلم حديثا واحدا متابعة في القنوت قلت وقال الساجي صدوق يهم في الحديث وقال بن عدي لم أر في حديثه حديثا منكرا ونقل بن خلفون عن بن نمير أنه وثقه وقال الطحاوي لا يعرف له سماع من أبي علي الهمداني

இவரைப் பற்றி  இப்னு அதீ அவர்கள், "இவர் உறுதியானவர் அல்ல" என்றும், அபூ ஜஅஃபர் மற்றும் யஹ்யா பின் ஸஈத் அல்கத்தான் ஆகியோர் இவரை 'பலவீனமானவர்' என்றும், அபூ ஹாத்தம் அர்ராஸி அவர்கள், 'இவர் ஆதாரமாக எடுத்துக் கொள்ளப்படத் தக்கவர் அல்ல' என்றும் விமர்சித்துள்ளனர். எனவே இந்த ஹதீஸ் ஏற்கத் தக்கது அல்ல. (தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் : 6, பக்கம்: 146

மேலும் இந்த ஹதீஸ் கீழ்க்காணும் குர்ஆன் வசனங்களுக்கும், வலுவான ஹதீஸ்களுக்கும்  முரணாக உள்ளது.

தனியாகப் பயணம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்கள்:

.....ஒரு கிராமத்தைக் கடந்து சென்றவரைப் பற்றி (நீர் அறிவீரா?) அந்த ஊர் அடியோடு வீழ்ந்து கிடந்தது. 'இவ்வூர் அழிந்த பிறகு அல்லாஹ் எவ்வாறு இதை உயிராக்குவான்?' என்று அவர் நினைத்தார். உடனே அவரை அல்லாஹ் நூறு ஆண்டுகள் மரணிக்கச் செய்தான். பின்னர் அவரை உயிர்ப்பித்து ''எவ்வளவு நாளைக் கழித்திருப்பீர்?'' என்று கேட்டான். ''ஒரு நாள் அல்லது ஒரு நாளில் சிறிதளவு நேரம் கழித்திருப்பேன்'' என்று அவர் கூறினார்.....

(அல்குர்ஆன் 2:259)

ஒரு நல்லடியார் தன்னந்தனியாகப் பயணம் செய்ததாக இவ்வசனம் கூறுகிறது. அவருடன் யாரும் இருக்கவில்லை என்பது இவ்வசனத்தில் தெளிவாகத் தெரிகிறது.

மதீனாவில் திடுக்கம் ஏற்பட்ட போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தன்னந்தனியாகப் புறப்பட்டுப் போய் நிலவரத்தை அறிந்து திரும்பியதாக ஹதீஸ் உள்ளது.

நபி (ஸல்) அவர்கள், மக்களிலேயே அழகானவர்களாக, வீரமிக்கவர்களாக இருந்தார்கள். மதீனா நகர மக்கள் ஓரிரவு (எதிரிகள் படையெடுத்து வருவதாக வதந்தி பரவி) பீதிக்குள்ளானார்கள். ஆகவே, அவர்கள் சத்தம் வரும் திசையை நோக்கிப் புறப்பட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், அதற்குள் செய்தியைத் தீர விசாரித்து விட்டு அபூதல்ஹா (ரலி) அவர்களின் சேணம் பூட்டப்படாத குதிரை மீது சவாரி செய்தவர்களாக வந்து கொண்டிருந்தார்கள். அவர்களுடைய கழுத்தில் வாள் (மாட்டப்பட்டுத்) தொங்கிக் கொண்டிருந்தது. அவர்கள், "பயப்படாதீர்கள். பயப்படாதீர்கள்" என்று கூறிக் கொண்டிருந்தார்கள். பிறகு, "நாம் இந்தக் குதிரையைத் தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியதாகக் கண்டோம்" என்று கூறினார்கள். அல்லது, "இந்தக் குதிரை தங்குதடையின்றி வேகமாக ஓடக் கூடியது" என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி 2908

நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா மன்னருக்கு எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா (ரலி) என்ற நபித்தோழரிடம் கொடுத்து அனுப்பியுள்ளார்கள்.

இறைத்தூதர் (ஸல்) அவர்கள், (பாரசீக மன்னர் 'குஸ்ரூ' எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் இப்னு ஹுதாஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர்களிடம் கொடுத்து, (அதைக் கிஸ்ராவிடம் கொடுத்துவிடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள். பஹ்ரைன் ஆளுநர் அக்கடிதத்தை கிஸ்ராவிடம் ஒப்படைத்தார். கிஸ்ரா அதைப் படித்ததும் அதை(த் துண்டு துண்டாக)க் கிழித்துப் போட்டுவிட்டார்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்கள்: புகாரி 4424, முஸ்னத் அஹ்மத் 2185

ஹீராவிலிருந்து தன்னந்தனியாகப் பிரயாணம் மேற்கொண்டு, கஃபாவை தவாஃப் செய்ய வந்த பெண்ணை நபி (ஸல்) அவர்கள், 'இறையச்சமுடைய பெண்' எனச்   சிலாகித்துச் சொல்லியுள்ளார்கள்.

நான் நபி (ஸல்) அவர்களிடம் இருந்தபோது ஒரு மனிதர் அவர்களிடம் வந்து, (தன்னுடைய) வறுமை நிலை பற்றி முறையிட்டார். பிறகு மற்றொருவர் அவர்களிடம் வந்து, வழிப்பறி பற்றி முறையிட்டார். உடனே நபி (ஸல்) அவர்கள், "அதீயே! நீ 'ஹீரா'வைப் பார்த்ததுண்டா?'' என்று கேட்டார்கள். "நான் அதைப் பார்த்ததில்லை. ஆனால், அது பற்றி எனக்கு சொல்லப்பட்டிருக்கிறது'' என்று  பதிலளித்தேன். அவர்கள், "நீ நீண்ட நாள் வாழ்ந்தால், நீ நிச்சயம் பார்ப்பாய். ஒட்டகச் சிவிகையில் அமர்ந்திருக்கும் ஒரு பெண் இறையில்லம் கஅபாவை தவாஃப் செய்வதற்காகப் பயணித்து ஹீராவிலிருந்து வருவாள். அவள் (வழியில்) அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்கும் அஞ்ச மாட்டாள்'' என்று சொன்னார்கள். நான் என் மனதிற்குள், "அப்படியென்றால் நாட்டையே தன் அராஜகத்தால் நிரப்பிவிட்ட "தய்யி' குலத்து வழிப்பறிக் கொள்ளையர்கள் (அப்போது) எங்கே சென்று விட்டிருப்பார்கள்?'' என்று கேட்டுக் கொண்டேன்.

அறிவிப்பவர்: அதீ பின் ஹாத்தம் (ரலி),

நூல்: புகாரி 3595

இருவர் சேர்ந்து பயணம் செய்யலாம் என்பதற்கான ஆதாரங்கள்:

''இரண்டு கடல்கள் சந்திக்கும் இடத்தை அடையும்வரை சென்று கொண்டே இருப்பேன். அல்லது என் பயணத்தை நீண்ட காலம் தொடர்வேன்'' என்று மூஸா தமது ஊழியரிடம் கூறியதை நினைவூட்டுவீராக!

இரண்டு கடல்கள் சங்கமம் ஆகும் இடத்தை அவ்விருவரும் அடைந்தபோது தமது மீனை மறந்தனர். அது கடலைப் பிளந்து தனது பாதையை அமைத்துக் கொண்டது.

அவ்விருவரும் கடந்து சென்ற போது ''காலை உணவைக் கொண்டு வாரும்! இந்தப் பயணத்தில் பெரும் சிரமத்தை அடைந்து விட்டோம்'' என்று தமது ஊழியரிடம் (மூஸா) கூறினார்.

''நாம் அப்பாறையில் இளைப்பாறிய போது கவனித்தீரா? நான் மீனை மறந்து விட்டேன். அதை உம்மிடம் கூறுவதை விட்டும் ஷைத்தான் என்னை மறக்கச் செய்து விட்டான். அது கடலில் தனது பாதையை ஆச்சரியமாக அமைத்துக் கொண்டது'' என்று (ஊழியர்) கூறினார்.

''அதுவே நாம் தேடிய இடம்'' என்று (மூஸா) கூறினார். இருவரும் பேசிக் கொண்டே வந்த வழியே திரும்பினார்கள்.

(அல்குர்ஆன் 18:60-64)

உமர் (ரலி) அவர்களும், அம்மார் இப்னு யாஸிர் (ரலி) அவர்களும் சேர்ந்து பயணம் மேற்கொண்டுள்ளார்கள். அப்போது தமக்கு ஏற்பட்ட சூழ்நிலையைக் குறித்து நபிகளாரிடமும் தெரிவித்துள்ளார்கள். 

ஒரு மனிதர் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, ''எனக்கு குளிப்பு கடமையாகி விட்டது. தண்ணீர் கிடைக்கவில்லை'' என்று கூறினார். அங்கே இருந்த அம்மார் இப்னு  யாஸிர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, ''உங்களுக்கு நினைவிருக்கின்றதா? நானும் நீங்களும் ஒரு பயணத்தில் இருந்தோம். நீங்கள் தொழாமல் இருந்தீர்கள். நானோ மண்ணில் புரண்டு விட்டு தொழுதேன். இதை நபி (ஸல்) அவர்களிடம் நான் கூறிய போது, தமது உள்ளங்கைகளால் தரையில் அடித்து வாயால் அதில் ஊதி விட்டு, இரு கைகளால் முகத்தையும், முன் கைகளையும் தடவிக் காட்டி, "இப்படிச் செய்வது உமக்குப் போதுமே'' எனக் கூறினார்கள்'' என்று தெரிவித்தார்கள்.

அறிவிப்பவர்: அப்துர்ரஹ்மான் இப்னு  அப்ஸா (ரலி)

நூல்கள்: புகாரி 338,  முஸ்லிம் 552

எனவே, தனியாகப் பயணம் செய்வது சம்பந்தமாக  அம்ரு இப்னு ஷுஐப் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. விரும்பினால் தனித்தும், பலருடன் சேர்ந்தும் பயணிக்கலாம்.

 

கேள்வி பதில்

பிற்காலத்தில் ஒரு மனிதர் வருவார். அவர் இஸ்லாத்துக்காக பல்வேறு தொண்டாற்றி மக்களால் நன்கு புகழப்படுவார். பின்னர் அல்லாஹ் அவரை வழிகெடுக்க, பிறரை முஷ்ரிக் எனக் கூறி அவர்களுடன் சண்டையிடுவார். அவரை குறித்து எச்சரிக்கை செய்ததாக இப்னு ஹிப்பானில் வரும் ஒரு செய்தியை ஆதாரமாக வைத்து இவ்வாறு எச்சரிக்கை செய்யப்பட்டவர்கள்தான் தவ்ஹீத் ஜமாஅத்தினர். நபிகளார் சொன்னது போன்று இவர்கள் மக்கள் மத்தியில் நற்பெயர் பெற்ற பின்னர் நபிமொழியை நம்புவோரை முஷ்ரிக் என பத்வா வழக்கி குழப்பம் விளைவிக்கின்றனர் என்று சிலர் விமர்சனம் செய்கின்றனர். அவர்கள் சுட்டிக்காட்டும் அந்த செய்தி சஹீஹானதா? அந்த நபிமொழியின் விளக்கம் என்ன? விளக்கவும்.

-முஹம்மது இஹ்சாஸ், இலங்கை.

صحيح ابن حبان بترتيب ابن بلبان ـ مشكول (1/ 282(

81- أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عَلِيِّ بْنِ الْمُثَنَّى ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مَرْزُوقٍ ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَكْرٍ ، عَنِ الصَّلْتِ بْنِ بَهْرَامَ ، حَدَّثَنَا الْحَسَنُ ، حَدَّثَنَا جُنْدُبٌ الْبَجَلِيُّ فِي هَذَا الْمَسْجِدِ ، أَنَّ حُذَيْفَةَ حَدَّثَهُ قَالَ : قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ : إِنَّ مَا أَتَخَوَّفُ عَلَيْكُمْ رَجُلٌ قَرَأَ الْقُرْآنَ حَتَّى إِذَا رُئِيَتْ بَهْجَتُهُ عَلَيْهِ ، وَكَانَ رِدْئًا لِلْإِسْلاَمِ ، غَيَّرَهُ إِلَى مَا شَاءَ اللَّهُ ، فَانْسَلَخَ مِنْهُ وَنَبَذَهُ وَرَاءَ ظَهْرِهِ ، وَسَعَى عَلَى جَارِهِ بِالسَّيْفِ ، وَرَمَاهُ بِالشِّرْكِ ، قَالَ : قُلْتُ : يَا نَبِيَّ اللَّهِ ، أَيُّهُمَا أَوْلَى بِالشِّرْكِ ، الْمَرْمِيُّ أَمِ الرَّامِي ؟ قَالَ : بَلِ الرَّامِي.

நான் உங்கள் விசயத்தில் பயப்படுவது ஒரு மனிதரைப் பற்றிதான். அவர் குர்ஆனை ஓதுவார். அதன் பொலிவு அவரிடம் காணப்படும். அல்லாஹ் நாடிய அளவுக்கு இஸ்லாத்தில் பக்கபலமாக இருப்பார். பின்னர் அந்தப் பொலிவு நீங்கிவிடும். அவர் அதை முதுக்குப் பின்னால் வீசிவிடுவார். பக்கத்துவிட்டாரை கொல்ல முயற்சிப்பார். அவரை இணை வைப்பவர் என்று குற்றம் சுமத்துவார் என்று நபிகளார் கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதரே, இவ்விருவரில் இணை வைப்புக்கு தகுதியானவர் யார்? குற்றம் சுமத்தப்பட்டவனா? குற்றம் சுமத்தியவனா? என்று நான் கேட்டேன். குற்றம் சுமத்தியவன்தான் என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஹுதைஃபா (ரலி),

நூல் ஸஹீஹ் இப்னு ஹிப்பான், பாகம் 1, பக்கம் 282

இதே செய்தி பஸ்ஸார், தப்ரானீ, அபூயஃலா, முஸ்னத் ஷாமியீன் ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தச் செய்தியில் ஐந்து விசயங்கள் கூறப்பட்டுள்ளன.

1. திருக்குர்ஆனை அழகுற ஓதுவான்

2. இஸ்லாத்திற்கு பக்கபலமாக இருப்பான்

3. பின்னர் அவனின் திருக்குர்ஆன் ஓதும் பொலிவு நீக்கப்படும்.

4. பக்கத்து வீட்டானைக் கொலை செய்ய முயற்சிப்பான்.

5. பக்கத்து வீட்டானை இணை வைப்பவர் என்று கூறுவான்.

இந்தச் செய்தியில் ஒரு தனி மனிதனைப் பற்றி பேசப்படுகிறதே தவிர, ஒரு அமைப்பைப் பற்றி பேசவில்லை என்பதை கவனத்தில் கொள்க.

இஸ்லாத்திற்கு பக்கபலமாக இருக்கிறது என்று தவ்ஹீத் ஜமாஅத்தைச் சொல்லலாம். திருக்குர்ஆனை நம்மைவிட சுன்னத் வல்ஜமாஅத்தை சார்ந்தவர்கள்தான் அழகுற ஓதுகிறார்கள்.

பக்கத்துவீட்டாரை நாம் கொலை செய்ய முயற்சி செய்யவில்லை. மேலும் பக்கத்து வீட்டார்களை நாம் இணை வைப்பவர் என்றும் சொல்லவில்லை. திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான செய்திகள் எதை இணைவைப்பு என்று சொல்கிறதோ அவற்றை இணை வைப்பு என்றும் அந்த காரியங்களை செய்பவர்கள் இணை வைப்பவர் என்றும் சொல்கிறோம். எங்களுக்குப் பிடிக்காதவர்களை நாங்கள் இணை வைப்பவர்கள் என்று சொல்லவில்லை. எதற்கும் ஆதாரத்துடனே விளக்கம் அளிக்கிறோம். எனவே இந்தச் செய்தி தவ்ஹீத் ஜமாஅத்தைப் பற்றி பேசுகிறது என்று சொல்வதற்கு சிறிதளவுகூட அதில் ஆதாரம் இல்லை.

சவூதியில் தொழுகைக்கு வரும் நபர்களுக்காக முதல் சஃபில் சாய்ந்து கொள்ள சில வசதிகள் செய்து உள்ளார்கள். இது மார்க்க அடிப்படையில் கூடுமா ?

-முஹம்மது ஃபாஷில், கிளியனூர் கிளை

தொழ வருபவர்களுக்கு வசதிகளைச் செய்து கொடுப்பதற்கு மார்க்கத்தில் எந்த தடையும் இல்லை. விரிப்பு, பாய், குடிநீர் என்று தொழுகையாளிகளுக்கு வசதிகள் செய்வது எந்தக் குற்றமும் இல்லை. நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இதுபோன்ற வசதிகள் செய்து கொடுக்கப்பட்டுள்ளன.

நான் திருமணம் செய்து கொள்வதற்கு முன்னால் இளம் வயது வாலிபனாய் இருந்த சமயம் பள்ளிவாசலே என் வீடாய் இருந்தது.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி),

நூல் புகாரி (7028)

மக்களில் சிலர் (ரிஅல், தக்வான், உஸய்யா, பனூ லஹ்யான் ஆகிய கூட்டத்தார்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "எங்களுக்குக் குர்ஆனையும் "சுன்னா'வையும் கற்பிப்பதற்காக எங்களுடன் சிலரை அனுப்பி வையுங்கள்'' என்று கேட்டுக் கொண்டனர். அதற்கிணங்க அன்சாரிகளில் எழுபது பேரை அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் அனுப்பிவைத்தார்கள். அவர்கள் குர்ஆன் அறிஞர்கள் (அல்குர்ராஉ) எனப்படுவர். அவர்களில் என் தாய்மாமா ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும் ஒருவர் ஆவார். அவர்கள் (எழுபது பேரும்) இரவில் குர்ஆனை ஓதுவார்கள்; ஒருவருக்கொருவர் கற்றுக் கொடுக்கவும் கற்றுக் கொள்ளவும் செய்வார்கள். பகல் நேரங்களில் (அருந்துவோருக்காகவும், அங்கத் தூய்மை செய்வோருக்காகவும்) தண்ணீர் கொண்டுவந்து (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் வைப்பார்கள். விறகு சேகரித்து வந்து அதை விற்றுக் காசாக்கி அதன் மூலம் திண்ணைவாசிகளுக்கும் ஏழைகளுக்கும் உணவு வாங்கிக் கொடுப்பார்கள்.

அறிவிப்பவர் அனஸ் (ரலி),

நூல் முஸ்லிம் (3860)

 

ஃபாத்திமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு முன்பு இறந்தார்களா? பின்பு இறந்தார்களா? முன்பு என்றே மௌலவிகள் பயான் செய்து வருகிறார்களே? விளக்கம் தாருங்கள்.

-அபூ ஜாஸிம், கொல்லாபுரம்.

பாத்திமா (ரலி) அவர்கள் நபிகளாருக்குப் பிறகே மரணிப்பார்கள் என்பதை நபி (ஸல்) அவர்கள் தங்கள் வாழ்நாளிலேயே முன்அறிவிப்பு செய்துவிட்டுச் சென்றுள்ளார்கள்.   மேலும் பாத்திமா (ரலி) அவர்கள் நபிகளார் மரணித்து ஆறுமாதம் கழித்து இறந்தார்கள் என்ற செய்தியும் தெளிவாகப் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியர்களான எங்களில் ஒருவர் கூட விடுபடாமல் நாங்கள் அனைவரும் நபி (ஸல்) அவர்களின் இறப்பு நெருங்கிக் கொண்டிருந்தபோது அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வியார்) ஃபாத்திமா (ரலி) நடந்து வந்தார். அல்லாஹ்வின் மீதாணையாக! அவரின் நடை நபி (ஸல்) அவர்களின் நடைக்கு ஒத்ததாகவே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள், என் மகளே! வருக! என்று வாழ்த்தி வரவேற்றார்கள். பிறகு அவரை தமது வலப் பக்கத்தில்' அல்லது இடப் பக்கத்தில்' அமர்த்திக் கொண்டு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்ட போது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய துக்கத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியம் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியரிடையே இருந்து கொண்டு ஃபாத்திமாவிடம், எங்களை விட்டுவிட்டு உங்களிடம் மட்டும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே! என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தவுடன் அவர்கள் கூறிய அந்த இரகசியம் குறித்து ஃபாத்திமாவிடம் கேட்டேன். அதற்கு ஃபாத்திமா அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய இரகசியத்தைப் பரப்ப நான் விரும்பவில்லை என்று கூறிவிட்டார். பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது ஃபாத்திமா அவர்களிடம் நான், உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்துக் கேட்கிறேன். அந்த இரகசியம் என்ன என்று நீங்கள் சொல்லியே ஆக வேண்டும் என்றேன். ஃபாத்திமா, சரி. இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்) என்று கூறிவிட்டு (பின்வருமாறு) தெரிவித்தார்:

முதலாவது முறை என்னிடம் நபி (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்ன போது (பின் வருமாறு) சொன்னார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஒரு முறை குர்ஆனை ஓதிக்காட்டி நினைவூட்டுவார். ஆனால், அவர் இந்த ஆண்டு இரண்டு முறை அதனை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கி விட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடி (இவ்வுலகை விட்டு) சென்றுவிடுவேன்.

ஆகவேதான், உங்களுக்கு முன்னிலையில் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட போது நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, ஃபாத்திமா! இறை நம்பிக்கையுள்ள பெண்களுக்கு' அல்லது இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு' தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா? என்று இரகசியமாகக் கேட்டார்கள். (ஆகவே, நான் மகிழ்ந்து சிரித்தேன்.)

நூல் : புகாரி (6285,6286)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு ஆறு மாதங்களே ஃபாத்திமா வாழ்ந்தார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி),

நூல் புகாரி (3093)

 

ஒருவர் குடித்துவிட்டு அல்லது சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்ததை மற்ற சகோதரர்கள் சாப்பிடலாமா?

-அப்துல்லாஹ், சென்னை

ஒருவர் குடித்துவிட்டு அல்லது சாப்பிட்டுவிட்டு மீதம் வைத்ததை மற்றவர்கள் சாப்பிடுவதற்கு மார்க்கத்தில் எந்தத் தடையும் இல்லை.

நபியவர்கள் தாம் சாப்பிட்டு விட்டு மீதமானதை பிற நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

حَدَّثَنَا سَعِيدُ بْنُ عُفَيْرٍ قَالَ حَدَّثَنِي اللَّيْثُ قَالَ حَدَّثَنِي عُقَيْلٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ حَمْزَةَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّ ابْنَ عُمَرَ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ بَيْنَا أَنَا نَائِمٌ أُتِيتُ بِقَدَحِ لَبَنٍ فَشَرِبْتُ حَتَّى إِنِّي لَأَرَى الرِّيَّ يَخْرُجُ فِي أَظْفَارِي ثُمَّ أَعْطَيْتُ فَضْلِي عُمَرَ بْنَ الْخَطَّابِ قَالُوا فَمَا أَوَّلْتَهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ الْعِلْمَ  رواه البخاري

நான் உறங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என்னிடம் ஒரு பால் பாத்திரம் கொண்டு வரப்பட்டது. (அதிலிருந்த பாலை) நான் (தாகம் தீர) அருந்தினேன். இறுதியில் எனது நகக்கண்கள் ஊடே (பால்) பொங்கிவரக் கண்டேன். பிறகு (நான் அருந்தியது போக இருந்த) மிச்சத்தை உமர் பின் அல்கத்தாப் அவர்களுக்குக் கொடுத்தேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் இதற்கு (இந்தப் பாலுக்கு) தாங்கள் என்ன விளக்கம் கண்டீர்கள், அல்லாஹ்வின் தூதரே? என்று கேட்க, அதற்கு அவர்கள் அறிவு என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் இப்னு உமர் (ரலி)  நூல்  புகாரி (82)

இது நபியவர்களின் கனவில் நடந்த சம்பவமாக இருந்தாலும் இதில் கூறப்பட்டவை மார்க்கமாகும்.

நபிமார்களின் கனவுகள் இறைச் செய்தியாகும். அது மட்டுமல்ல  நடைமுறையில் எது ஆகுமானதோ அதைத்தான் நபிமார்கள் கனவிலும் காண்பார்கள்.

நபியவர்கள் தாம் அருந்தியது போக இருந்த மிச்சத்தை இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு வழங்கியுள்ளார்கள். இதிலிருந்து ஒருவர் மீதம் வைத்த உணவை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

பல்வேறு சந்தர்ப்பங்களில் நபியவர்கள் தாம் அருந்தியது போக மீதமிருந்ததை நபித்தோழர்களுக்கு வழங்கியுள்ளார்கள்.

2352  حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنْ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَدَحَ فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ الْقَدَحَ مِنْ فِيهِ وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ وَخَافَ أَنْ يُعْطِيَهُ الْأَعْرَابِيَّ أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ فَأَعْطَاهُ الْأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ ثُمَّ قَالَ الْأَيْمَنَ فَالْأَيْمَنَ  رواه البخاري

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:  நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பாத்திரம் கொண்டு வரப்பட்டது. அதிலிருந்து அவர்கள் (பால்) குடித்தார்கள். அப்போது அவர்களுடைய வலப் பக்கம் மக்களில் மிகக் குறைந்த வயதுடைய சிறுவர் ஒருவரும் இடப் பக்கம் வயது முதிர்ந்தவர்களும் இருந்தனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் (அச்சிறுவரை நோக்கி), சிறுவனே! நான் இதை முதியவர்களுக்குக் கொடுத்து விட எனக்கு நீ அனுமதியளிக்கிறாயா? என்று கேட்டார்கள்.

அதற்கு அச்சிறுவர், அல்லாஹ்வின் தூதரே! தங்களிடமிருந்து எனக்குக் கிடைக்கக் கூடிய மீதத்தை எவருக்கும் நான் விட்டுக் கொடுக்க மாட்டேன் என்று கூறினார். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், (அந்தப் பால்) தாம் (குடித்து) மீதம் வைத்ததை அந்தச் சிறுவருக்கே கொடுத்து விட்டார்கள்.

நூல்  புகாரி (2352)

453   حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ قَالَا حَدَّثَنَا وَكِيعٌ عَنْ مِسْعَرٍ وَسُفْيَانَ عَنْ الْمِقْدَامِ بْنِ شُرَيْحٍ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ كُنْتُ أَشْرَبُ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ فَيَشْرَبُ وَأَتَعَرَّقُ الْعَرْقَ وَأَنَا حَائِضٌ ثُمَّ أُنَاوِلُهُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَيَضَعُ فَاهُ عَلَى مَوْضِعِ فِيَّ وَلَمْ يَذْكُرْ زُهَيْرٌ فَيَشْرَبُ  رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருக்கும்போது நான் (ஏதேனும் பானத்தைப்) பருகிவிட்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் கொடுப்பேன். அப்போது அவர்கள் நான் வாய் வைத்த இடத்தில் தமது வாயை வைத்து அருந்துவார்கள். மாதவிடாய் எற்பட்டிருந்த நான் இறைச்சியுள்ள எலும்புத் துண்டைக் கடித்துவிட்டு அதை நபியவர்களிடம் கொடுப்பேன். நான் வாய் வைத்த இடத்தில் அவர்கள் தமது வாயை வை(த்துப் புசி)ப்பார்கள்.

நூல் :  முஸ்லிம் (505)

மேற்கண்ட நபியவர்களின் செயல்பாடுகளிலிருந்து ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் சாப்பிடுவதில் தவறில்லை என்பதை விளங்கிக் கொள்ளலாம்.

அதே ஒருவரிடம் உள்ள அசுத்தம் மற்றும் பொருத்தமான ஏனைய  காரணங்களினால் ஒருவர் மீதம் வைத்ததை மற்றொருவர் வெறுத்தால் அதைக் குறை கூற முடியாது.

ஃபர்லான தொழுகைக்கும், சுன்னத்தான் தொழுகைக்கும் உள்ள வித்தியாசம் என்ன? கட்டாயமான சுன்னத் என்பது ஃபர்ல் ஆகுமா?

ஃபர்லான தொழுகை என்பது நாம் ஒவ்வொரு நாளும் தொழுகின்ற ஐந்து நேரத் தொழுகைகளாகும்.

இவை கட்டாயக் கடமை என நபியவர்கள் கட்டளையிட்டுள்ளார்கள்.

இதனை பின்வரும் நபிமொழியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

46  حَدَّثَنَا إِسْمَاعِيلُ قَالَ حَدَّثَنِي مَالِكُ بْنُ أَنَسٍ عَنْ عَمِّهِ أَبِي سُهَيْلِ بْنِ مَالِكٍ عَنْ أَبِيهِ أَنَّهُ سَمِعَ طَلْحَةَ بْنَ عُبَيْدِ اللَّهِ يَقُولُ جَاءَ رَجُلٌ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ أَهْلِ نَجْدٍ ثَائِرَ الرَّأْسِ يُسْمَعُ دَوِيُّ صَوْتِهِ وَلَا يُفْقَهُ مَا يَقُولُ حَتَّى دَنَا فَإِذَا هُوَ يَسْأَلُ عَنْ الْإِسْلَامِ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَمْسُ صَلَوَاتٍ فِي الْيَوْمِ وَاللَّيْلَةِ فَقَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَصِيَامُ رَمَضَانَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهُ قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ وَذَكَرَ لَهُ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الزَّكَاةَ قَالَ هَلْ عَلَيَّ غَيْرُهَا قَالَ لَا إِلَّا أَنْ تَطَوَّعَ قَالَ فَأَدْبَرَ الرَّجُلُ وَهُوَ يَقُولُ وَاللَّهِ لَا أَزِيدُ عَلَى هَذَا وَلَا أَنْقُصُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَفْلَحَ إِنْ صَدَقَ  رواه  البخاري

தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்த்வாசிகளில் ஒருவர் தலைவிரி கோலத்துடன் (பயணம் முடிந்த கையோடு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார். (தூரத்திலிருந்து) அவருடைய குரலின் எதிரொலி செவியில் ஒலித்தது. ஆனால் அவர் என்ன சொல்கிறார் என்று எங்களால் விளங்க முடியவில்லை. அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அருகில் வந்ததும் இஸ்லாமைப் பற்றிக் கேட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பகலிலும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்) என்றார்கள்.

அவர் இதைத் தவிர வேறு (தொழுகை) ஏதாவது என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) தொழுகையைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். மேலும் ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உடனே அவர், இதைத் தவிர வேறு ஏதேனும் (நோன்பு) என்மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? எனக் கேட்க, இல்லை, நீ தானாக விரும்பி நோற்கும் (கூடுதலான) நோன்பைத் தவிர என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸகாத் பற்றியும் அவருக்கு எடுத்துரைத்தார்கள். அவர், இதைத் தவிர வேறு (ஸகாத்) ஏதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை, நீ தானாக விரும்பிச் செய்யும் (கூடுதலான) வேறு தர்மத்தைத் தவிர என்றார்கள்.

அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இவற்றைவிட கூட்டவும் மாட்டேன்; குறைக்கவும் மாட்டேன் என்று கூறியவாறு திரும்பிச் சென்றுவிட்டார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால் அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.

நூல்  புகாரி (46)

கட்டாயக் கடமையான இந்த ஐந்து நேரத் தொழுகைகளை விடுவது மிகப் பெரும் பாவமாகும்.

இணை வைத்தல் மற்றும் இறை மறுப்புக்கும் (முஸ்லிமான) அடியானுக்கும் இடையில் உள்ள வேறுபாடு தொழுகையை விடுவதாகும்' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். 

அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)

நூல்: முஸ்லிம் 116 

கடமையான தொழுகையை ஒருவர் விடுவது அவரை நரகத்தில் கொண்டு சேர்க்கப் போதுமான காரணமாகும்.

 அவர்கள் சொர்க்கச் சோலைகளில் இருப்பார்கள். குற்றவாளிகளிடம் 'உங்களை நரகத்தில் சேர்த்தது எது?' என்று விசாரிப்பார்கள். 'நாங்கள் தொழுவோராகவும், ஏழைக்கு உணவளிப்போராகவும் இருக்கவில்லை' எனக் கூறுவார்கள்.

அல்குர்ஆன் 74:41-43

ஒரு மனிதரின் தலை நசுக்கப்படுவதை நபி (ஸல்) அவர்கள் கனவில் கண்டார்கள். அது பற்றி அவர்கள் விளக்கும் போது, 'அவர் குர்ஆனைக் கற்று அதைப் புறக்கணித்து, கடமையான தொழுகையைத் தொழாமல் உறங்கியவர்' என்று விளக்கமளித்தார்கள்.

அறிவிப்பவர்: ஸமுரா (ரலி)

நூல்: புகாரீ 1143

சுன்னத் தொழுகை என்பது நபியவர்கள் செய்து காட்டிய கடமையல்லாத தொழுகைகளாகும்.  இவற்றைத் தொழுதால் நமக்கு ஏராளமான நன்மைகள் கிடைக்கும். இவற்றைத் தொழாவிட்டால் எந்தப் பாவமும் ஏற்படாது.

உதாரணமாக ஐந்து நேரத் தொழுகைகளுக்கு முன்பாகவும் பின்பாகவும் நபியவர்கள் செய்து காட்டிய தொழுகைகள், வித்ர் தொழுகை போன்றவற்றைக் கூறலாம்.

கட்டாயமான சுன்னத்துகள் என்று நபியவர்கள் எந்தத் தொழுகையையும் கற்றுத் தரவில்லை. நபியவர்கள் சில சுன்னத் தொழுகைகளுக்கு அதிகமான நன்மைகள் கிடைக்கும் என்று போதித்துள்ளார்கள். அத்தகைய சுன்னத் தொழுகைகளை கட்டாயமான சுன்னத் என்றும் வலியுறுத்தப்பட்ட சுன்னத் என்றும் நடைமுறையில் குறிப்பிடுகின்றனர்.

ஃபஜ்ருடைய முன்சுன்னத் இரண்டு ரக்அத்துகளுக்கு நபியவர்கள் மிகப் பெரும் சிறப்பைக் குறிப்பிட்டுள்ளார்கள்.

நபியவர்கள் ஃபஜ்ர் நேரத்தில் தொழும் (சுன்னத்) இரண்டு ரக்அத்கள் பற்றி குறிப்பிடுகையில் "அவ்விரண்டு ரக்அத்துகளும் உலகிலுள்ள அனைத்தையும் விட எனக்கு மிகவும் விருப்பமானவையாகும்” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்  ஆயிஷா (ரலி)

நூல்  முஸ்லிம் (1315)

மேலும் ஒருவர் ஆகிய பன்னிரண்டு ரக்அத்துகளை முறையாகப் பேணித் தொழுது வந்தால் அவருக்கு சொர்க்கத்தில் அல்லாஹ் ஒரு வீட்டைக் கட்டுகிறான் என்று நபியவர்கள்  சிறப்பித்துக் கூறியுள்ளார்கள்.

யார் இரவிலும், பகலிலும் பன்னிரண்டு ரக்அத்துகள் தொழுகின்றாரோ அவருக்காக சுவனத்தில் ஒரு வீடு கட்டப்படுகின்றது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூற நான் செவியுற்றேன்.

அறிவிப்பவர் : உம்மு ஹபீபா (ரலி),

நூல் : முஸ்லிம் (1198)

 

திருக்குர் ஆனில் அறிவியல் கருத்துக்கள் கூறப்பட என்ன காரணம்? திருக்குர் ஆன் அருளப்பட்ட நோக்கம் என்ன?

-நிஹாம் முஸ்தஃபா, மதுரை

திருக்குர்ஆன் என்பது விஞ்ஞானக் கண்டுபிடிப்புக்காக அருளப்பட்ட வேதமல்ல. மாறாக மனித சமுதாயம் இவ்வுலகில் எவ்வாறு இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்ற போதனைகளையும், மனிதனுக்கு தேவையான அறிவுரைகளையும், மறுமையில் வெற்றி பெறுவதற்குரிய வழிகாட்டுதல்களையும், இறைவனுக்கு கட்டுப்பட்டு நடக்க மறுத்தால் விளையும் கேடுகளை எச்சரிக்கை செய்வதற்காகவும் அருளப்பட்ட வேதம்தான் திருக்குர்ஆன்.

இது வேதம். இதில் எந்தச் சந்தேகமும் இல்லை. (இறைவனை) அஞ்சுவோருக்கு (இது) வழி காட்டி.

(அல்குர்அன் 2 : 2)

இது மனிதர்களுக்கு விளக்கமும், நேர் வழியும், (இறைவனை) அஞ்சுவோருக்கு அறிவுரையுமாகும்.

(அல்குர்ஆன் 3 : 38)

மனிதர்களே! உங்களுக்கு உங்கள் இறைவனிடமிருந்து அறிவுரையும், உள்ளங்களில் உள்ளதற்கு நோய் நிவாரணமும், நம்பிக்கை கொண்டோருக்கு நேர் வழியும், அருளும் வந்து விட்டன.

 (அல்குர்ஆன் 10 : 57)

இது அகிலத்தாருக்கு அறிவுரை தவிர வேறில்லை.

(அல்குர்ஆன் 12 : 104)

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில்தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும்

(அல்குர்ஆன் 2 : 185)

மனிதர்களை அவர்களது இறைவனின் விருப்பப்படி இருள்களிலிருந்து வெளிச்சத்திற்கும், புகழுக்குரிய மிகைத்தவனின் பாதைக்கும் நீர் கொண்டு செல்வதற்காக உமக்கு இவ்வேதத்தை அருளினோம்.

(அல்குர்ஆன் 14 : 1)

இவ்வேதத்தை ஒவ்வொரு பொருளுக்கும் விளக்கமாகவும், நேர் வழியாகவும், அருளாகவும், முஸ்லிம்களுக்கு நற்செய்தியாகவும் உமக்கு அருளினோம்.  நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

(அல்குர்ஆன் 14 : 89,90)

இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழி காட்டுகிறது. ''நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது'' என்று நற்செய்தியும் கூறுகிறது.

(அல்குர்ஆன் 17 : 9)

அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்து விட்டன .அவனது திருப்தியை நாடுவோருக்கு இதன் மூலம் அல்லாஹ் ஈடேற்றத்தின் வழிகளைக் காட்டுகிறான். தன் விருப்பப்படி அவர்களை இருள்களிலிருந்து வெளிச்சத்திற்குக் கொண்டு செல்கிறான். அவர்களுக்கு நேரான வழியைக் காட்டுகிறான்.

(அல்குர்ஆன் 5 : 15, 16)

இது, தாய் கிராமத்தை (மக்காவை)யும், அதைச் சுற்றியுள்ளவர் களையும் (முஹம்மதே!) நீர் எச்சரிப்பதற்காக நாம் அருளிய வேதம். பாக்கியம் பெற்றதும், தனக்கு முன் சென்றவற்றை உண்மைப்படுத்தக் கூடியதுமாகும். மறுமையை நம்புவோர் இதை நம்புகின்றனர். அவர்கள் தமது தொழுகையில் பேணுதலாகவும் உள்ளனர்.

(அல்குர்ஆன் 6 : 92)

மேற்கண்ட வசனங்கள் திருக்குர்ஆன் அருளப்பட்டதின் நோக்கத்தை தெளிவாக மனித சமுதாயத்திற்குப் பிரகடனம் செய்கிறது.

அதே நேரத்தில் இது படைத்த இறைவனின் வார்த்தைகள்தாம் என்பதற்கு பல்வேறு சான்றுகளும் இறைவேதத்தில் நிறைந்து காணப்படுகிறது.

குர்ஆன் கூறும் எந்த ஒன்றையும் கியாமத் நாள் வரை நவீன விஞ்ஞானம் பொய் என்று நிரூபிக்க முடியாது என்பதுதான் நம்முடைய வாதமே தவிர, அனைத்து விஞ்ஞானக் கருத்துகளையும் குர்ஆன் கூறியுள்ளது என்பதல்ல?

அதில் ஒரு அம்சம்தான் எவ்வித விஞ்ஞான வளர்ச்சியும், மனிதக் கண்டுபிடிப்புகளும் இல்லாத காலகட்டத்தில்  எழுதவும், படிக்கவும் தெரியாத உம்மி நபிக்கு அருளப்பட்ட திருக்குர்ஆன் கூறிய விசயங்கள் இன்றைய விஞ்ஞான உலகில் வாழக்கூடிய மனிதர்கள் பல்லாண்டுகள் ஆய்வு செய்து கூறும் விசயங்களையெல்லாம் அட்சரம் பிசகாமல் தெளிவாகப் பேசியுள்ளது.

மனிதக் கருவியல் முதல் பூகோளங்களின் அமைப்பு வரை திருக்குர்ஆன் கூறிய எந்த ஒரு கருத்தையும் நிரூபிக்கப்பட்ட விஞ்ஞான உண்மைகள் மறுக்கவில்லை. பொய்யென்று நிரூபிக்கவில்லை.

1400 ஆண்டுகளுக்கு முன்னால் வாழ்ந்த முஹம்மது என்ற மனிதர், தமக்கு இறைவனிடமிருந்து செய்திகள் வருவதாக வாதிட்டார். அன்றைய மக்கள் அவரது நாற்பதாண்டு கால தூய்மையான வாழ்க்கையைக் கண்டு அவர் மேல் மதிப்பு வைத்திருந்ததால் அவரை இறைவனின் தூதர் என்று நம்பினார்கள்.

எந்தச் செய்திகள் இறைவனிடமிருந்து வருகிறது என்று முஹம்மது அவர்கள் கூறினார்களோ அது தான் திருக்குர்ஆன். இந்தக் குர்ஆனைத் தான் முஹம்மது நபியவர்கள் வேதம் என்று கூறினார்கள் என்பதை நிரூபிக்க தாஷ் கண்ட், இஸ்தான்பூல் ஆகிய நகரங்களில் உள்ள அருங்காட்சியகங்களில் பாதுகாக்கப்பட்டு வரும் மூலப் பிரதிகள் சான்று கூறிக் கொண்டிருக்கின்றன.

முஹம்மது நபி அவர்கள் எதை இறைவனின் செய்திகள் என்று கூறினார்களோ அந்தச் செய்திகளைப் பார்க்கும்போது எந்தப் பகுத்தறிவாளனும் திருக்குர்ஆன் முஹம்மது அவர்களின் வார்த்தை என்ற முடிவுக்கு வரமாட்டான். அகில உலகையும் படைத்து பராமரிக்கும் பேரறிவாளனாகிய இறைவனின் கூற்றாக இருக்க முடியும் என்ற முடிவுக்குத்தான் வருவான்.

நபிகள் நாயகம் காலத்தில் பூமி உருண்டை வடிவமானது என்ற அறிவு மனிதனுக்கு இருக்கவில்லை. ஆனால் பூமி உருண்டை என்பதையும், கோள்களும், துணைக் கோள்களும் சுழல்கின்றன, சுற்றுகின்றன என்பதையும் திருக்குர்ஆன் கூறுகிறது. நாத்திகர்களின் பாஷையில் சொல்வதாக இருந்தால் இதனை முஹம்மது நபி கூறினார்.

அன்றைக்கு வாழ்ந்த எந்த மனிதனும் அன்றைக்கு இருந்த அறிவைக் கொண்டு இதைக் கூற முடியாது என்று நாங்கள் பகுத்தறிவோடு முடிவு செய்கிறோம். மனிதனை விட பேராற்றல் மிகுந்தவனிடமிருந்து தான் இச்செய்தி வந்திருக்க வேண்டும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம்களாகிய நாம்  முடிவு செய்கிறோம்.

சூரியன் பல்லாயிரக் கணக்கான மைல் வேகத்தில் அதன் கோள்களை இழுத்துக் கொண்டு ஓடிக்கொண்டே இருக்கிறது என்ற அறிவியல் உண்மை முஹம்மது நபியின் காலத்து மக்களுக்குத் தெரியவில்லை. ஆனால் திருக்குர்ஆன் இதைத் தெளிவான வார்த்தைகளால் கூறுகிறது.

எந்த மனிதனும் இந்த அறிவைப் பெற்றிராத காலத்தில் இதை முஹம்மது நபி எவ்வாறு கூறமுடியும்?

பூமியின் ஈர்ப்பு விசை குறித்த அறிவு முஹம்மது நபியின் காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதைப் பற்றி குர்ஆன் பேசுகிறது. எனவே இதை முக்காலமும் அறிந்த பேரறிவாளன் இறைவன்தான் கூறியிருக்க முடியும் என்று பகுத்தறிவைப் பயன்படுத்தி முஸ்லிம்கள் நம்புகிறோம்.

பெரு வெடிப்புக் கொள்கை பற்றியும் அண்ட சராசரங்கள் உருவான விதம் பற்றியும் முஹம்மது நபியின் காலத்து மக்கள் அறிந்திருக்கவில்லை. ஆனால் இதை எப்படி முஹம்மது நபியவர்கள் சுயமாகக் கூறியிருக்க முடியும்?

இரண்டு கடல்களுக்கிடையே கண்களுக்குப் புலப்படாத திரை ஒன்று உள்ளது. அதன் காரணமாக இரண்டும் ஒன்றுடன் ஒன்று கலப்பதில்லை என்று இன்றைய விஞ்ஞானிகள் கண்டறிந்துள்ளனர். இந்த ஞானம் முஹம்மது நபி காலத்து மக்களுக்கு இருக்கவில்லை. ஆனால் இதை தெளிவான வார்த்தைகளால் திருக்குர்ஆன் கூறுவது எப்படி?

தேனீயின் வாய் வழியாக தேன் உற்பத்தியாகிறது என்று மக்கள் நம்பிக் கொண்டிருந்த காலத்தில், தேனீ உணவாக உட்கொண்ட குளுக்கோஸ் செரிமானம் ஆகி அதன் வயிற்றிலிருந்து தான் தேன் வெளிப்படுகிறது என்ற அறிவியல் உண்மையை 1400 ஆண்டுகளுக்கு முன் வாழ்ந்த மனிதரால் எப்படிச் சொல்ல முடிந்தது?

விண்வெளிப் பயணம் சாத்தியம் என்பதையும் அதற்கேற்ற சாதனத்தின் மூலம் தான் செல்ல இயலும் என்பதையும், அன்றைக்கே திருக்குர்ஆண் சொன்னது எப்படி?

இன்றைய விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ள பல விஷயங்களை அன்றைக்கே திருக்குர்ஆண்  கூறியதை சிந்திக்கும் எவரும் இது முஹம்மது நபியின் கூற்று அல்ல அது உண்மையான இறைவனின் வார்த்தைகள்தான் என்பதை தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.

ஆயிரம் ஆண்டுகளுக்கு முன்பே உள்ளதாகக் கருதப்படும் திருக்குறள், பைபிள், மற்றும் புராணங்களில் கூறப்பட்ட கருத்துகள் எல்லாம் இன்றைய விஞ்ஞான உலகத்தோடு ஒப்பிட்டுப் பார்க்கையில் பொய்யானவை என்றும் நடைமுறைச் சாத்தியமற்றவை என்றும் தெளிவாக நிரூபித்துவிட முடியும்.

ஆனால் அவ்வாறு திருக்குர்ஆனில் எந்த ஒரு அம்சத்தையும் எடுத்து வைத்து விவாதித்து நிரூபிக்க முடியாது.

 

இரவு நேரங்களில் மூன்று காரணங்களுக்காகவே தவிர விழித்திருக்கக் கூடாது என்று ஹதீஸ்களில் உள்ளதே. ஆனால் சில கம்பெனிகளில் இருபத்தி நான்கு மணிநேரமும் வேலை நடக்கிறதே? விளக்கம் தரவும்.

-ஹக்கிம், கேரளா

மூன்று காரணங்களுக்காக இரவில் விழித்திருக்கலாம் என்று வரக்கூடிய ஹதீஸ்கள் அனைத்தும் பலவீனமானவையாகவே உள்ளன.

இது தொடர்பாக வரக்கூடிய செய்திகள் அஹ்மத் (3421, 3722, 4023, 4187) திர்மிதி (2654)  மேலும் இன்னும் பல நூல்களில் இடம் பெற்றுள்ளன. அனைத்து நூல்களிலும் நாம் குறிப்பிட்டுள்ள அறிவிப்பாளர்கள் வரிசையிலேயே இந்த ஹதீஸ் இடம் பெற்றுள்ளது.

3421 حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ خَيْثَمَةَ عَنْ رَجُلٍ مِنْ قَوْمِهِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا سَمَرَ بَعْدَ الصَّلَاةِ يَعْنِي الْعِشَاءَ الْآخِرَةَ إِلَّا لِأَحَدِ رَجُلَيْنِ مُصَلٍّ أَوْ مُسَافِرٍ    رواه أحمد

4023   حَدَّثَنَا يَحْيَى عَنْ سُفْيَانَ حَدَّثَنِي مَنْصُورٌ عَنْ خَيْثَمَةَ عَمَّنْ سَمِعَ ابْنَ مَسْعُودٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا سَمَرَ إِلَّا لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ  رواه أحمد

3722    حَدَّثَنَا عَفَّانُ حَدَّثَنَا شُعْبَةُ أَخْبَرَنِي مَنْصُورٌ قَالَ سَمِعْتُ خَيْثَمَةَ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا سَمَرَ إِلَّا لِأَحَدِ رَجُلَيْنِ لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ  رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் (இரவில் நின்று) தொழுபவர், பயணி ஆகிய இருவரைத் தவிர (வேறு யாருக்கும்) இரவு நேரப் பேச்சு என்பது கூடாது.

அறிவிப்பவர்  அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)

நூல்  அஹ்மத்

இதன் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிப்பவர் யாரென்றே அறியப்படாதவர் ஆவார்.

மேலும் அஹ்மத் (3722, 4187) ஆகிய செய்திகளில் யாரென்றே அறியப்படாத இந்த அறிவிப்பாளர் விடுபட்டுள்ளார்.

எனவே இது ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாத பலவீனமான செய்தியாகும்.

இதே செய்தி வேறோரு அறிவிப்பாளர் வரிசையில் தப்ரானியுடைய அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது.

المعجم الأوسط - (ج 6 / ص 36)

 5721 - حدثنا محمد بن عبد الله الحضرمي قال نا إبراهيم بن يوسف الصيرفي قال ثنا سفيان بن عيينة عن منصور عن حبيب يعني بن أبي ثابت عن زياد بن حدير عن عبد الله بن مسعود قال قال رسول الله صلى الله عليه و سلم لا سمر إلا لمصل أو مسافر لم يرو هذا الحديث عن سفيان بن عيينة إلا إبراهيم بن يوسف الصيرفي [ ص 37 ]

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரில்  ஹபீப் பின் அபீ ஸாபித் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார்.

இவர் முதல்லிஸ் ஆவார்.  அதாவது தன்னுடைய ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்திகளைக் கேட்டதைப் போன்று அறிவிப்பார்.

 تقريب التهذيب - (ج 1 / ص 150)

1084- حبيب ابن أبي ثابت قيس ويقال هند ابن دينار الأسدي مولاهم أبو يحيى الكوفي ثقة فقيه جليل وكان كثير الإرسال والتدليس من الثالثة مات سنة تسع عشرة ومائة ع

 இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இவர் முதல்லிஸ் என்பதை தம்முடைய தக்ரீபில் (பாகம் 1 பக்கம் 150) தெளிவு படுத்தியுள்ளார்கள்.

எனவே மேற்கண்ட செய்தியும் பலவீனமானதாகும்.

மேலும் இதே செய்தி ஆயிஷா (ரலி)  அவர்கள் வாயிலாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

مسند أبي يعلى - (ج 8 / ص 289)

 4879 - قال معاوية : وحدثني أبو عبد الله الأنصاري : عن عائشة زوج النبي صلى الله عليه و سلم قالت : السمر لثلاثة : لعروس أومسافر أو متجهد بالليل

قال حسين سليم أسد : إسناده منقطع

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்  இரவு நேரப் பேச்சு மூன்று வகையினருக்குரியதாகும். 1. புது மாப்பிள்ளை 2. பயணி 3. இரவில் வணக்க வழிபாடுகளில் ஈடுபடுபவர்

நூல்  முஸ்னத் அபீ யஃலா பாகம்  8 பக்கம் 289

இந்தச் செய்தி நபியவர்கள் கூறியது கிடையாது. இது ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாகும்.

மேலும் இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபு அப்தில்லாஹ் அல்அன்சாரி என்பவர் யாரென்றே அறியப்படாத மஜ்ஹூலான அறிவிப்பாளர் ஆவார்.

இவரைப் பற்றி அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற அறிவிப்பாளர் விமர்சன நூலில் பின்வருமாறு கூறப்பட்டுள்ளது.

الجرح والتعديل - (ج 9 / ص 400)

1912 - أبو عبد الله الأنصاري روى عن عائشة قالت السمر لثلاث لمتهجد بالقرآن من الليل أو مسافر أو لعروس روى عنه معاوية بن صالح سمعت أبى يقول ذلك

இவர் ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து இரவு நேரப் பேச்சு தொடர்பான செய்தியை அறிவிக்கின்றார். இவரிடமிருந்து முஆவியா என்பவர் அறிவிக்கின்றார்.

அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் 9 பக்கம் 400

 இவரைப் பற்றி எந்த நிறை குறையும் கூறப்படவில்லை.

எனவே இது ஆயிஷா (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக இருப்பதினாலும், இதன் அறிவிப்பாளர் தொடரில் நம்பகத் தன்மை நிரூபிக்கப்படாத அறிவிப்பாளர் இடம் பெற்றிருப்பதினாலும் இது ஆதாரத்திற்கு ஏற்றது இல்லை என்பது மிகவும் தெளிவானதாகும்.

 மேற்கண்ட செய்திகள் பலவீனமாக இருந்தாலும் பொதுவாக இஷாத் தொழுகைக்குப் பிறகு பேசிக் கொண்டிருப்பதை நபியவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது.

و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا   رواه البخاري

இஷாத் தொழுகையை இரவின் மூன்றில் ஒரு பகுதி வரை பிற்படுத்துவதை நபி (ஸல்) அவர்கள் பொருட்படுத்த மாட்டார்கள்; (அதை விரும்புவார்கள்.) இஷாத் தொழுகைக்கு முன் உறங்குவதையும் இஷாத் தொழுகைக்குப் பின் பேசிக் கொண்டிருப்பதையும் அவர்கள் விரும்ப மாட்டார்கள்.

அறிவிப்பவர்  அபூபர்ஸா அல்அஸ்லமீ (ரலி)

நூல் புகாரி (771)

694  حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا أَبُو عَامِرٍ قَالَا حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْلَى الطَّائِفِيُّ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ قَالَتْ مَا نَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَبْلَ الْعِشَاءِ وَلَا سَمَرَ بَعْدَهَا   رواه ابن ماجة

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.  நபி (ஸல்) அவர்கள் இஷாவிற்கு முன்னால் தூங்கியதும் இல்லை மேலும் இஷாவிற்குப் பிறகு இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டதும் இல்லை.

நூல்  இப்னு மாஜா (694)

 நபியவர்கள் இஷா தொழுகைக்குப் பிறகு இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டதில்லை என்று ஆயிஷா (ரலி) அவர்கள் குறிப்பிடுவது நபியவர்களுடன் அவர்களுடைய அனுபவத்தை வைத்துத்தான். (ஏனெனில் நபியவர்கள் இரவு நேரப் பேச்சில் ஈடுபட்டதாக வேறு ஹதீஸ்களில் வந்துள்ளது)

மேற்கண்ட ஹதீஸ்களில் பொதுவாக இஷாவிற்குப் பிறகு இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபடுவதை நபியவர்கள் விரும்ப மாட்டார்கள் என்று வந்திருந்தாலும் இது வீணாகப் பேசிக் கொண்டிருப்பதைத்தான் குறிக்கும்.

ஏனென்றால் நபியவர்கள் சில முக்கிய விசயங்களுக்காக ஸஹாபாக்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள்.

154  حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ عُمَرَ بْنِ الْخَطَّابِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْمُرُ مَعَ أَبِي بَكْرٍ فِي الْأَمْرِ مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ وَأَنَا مَعَهُمَا وَفِي الْبَاب عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَوْسِ بْنِ حُذَيْفَةَ وَعِمْرَانَ بْنِ حُصَيْنٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عُمَرَ حَدِيثٌ حَسَنٌ وَقَدْ رَوَى هَذَا الْحَدِيثَ الْحَسَنُ بْنُ عُبَيْدِ اللَّهِ عَنْ إِبْرَاهِيمَ عَنْ عَلْقَمَةَ عَنْ رَجُلٍ مِنْ جُعْفِيٍّ يُقَالُ لَهُ قَيْسٌ أَوْ ابْنُ قَيْسٍ عَنْ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ هَذَا الْحَدِيثَ فِي قِصَّةٍ طَوِيلَةٍ وَقَدْ اخْتَلَفَ أَهْلُ الْعِلْمِ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَالتَّابِعِينَ وَمَنْ بَعْدَهُمْ فِي السَّمَرِ بَعْدَ صَلَاةِ الْعِشَاءِ الْآخِرَةِ فَكَرِهَ قَوْمٌ مِنْهُمْ السَّمَرَ بَعْدَ صَلَاةِ الْعِشَاءِ وَرَخَّصَ بَعْضُهُمْ إِذَا كَانَ فِي مَعْنَى الْعِلْمِ وَمَا لَا بُدَّ مِنْهُ مِنْ الْحَوَائِجِ وَأَكْثَرُ الْحَدِيثِ عَلَى الرُّخْصَةِ قَدْ رُوِيَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا سَمَرَ إِلَّا لِمُصَلٍّ أَوْ مُسَافِرٍ  رواه الترمدي

முஸ்லிம்களுடைய விசயம் தொடர்பாக நபியவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபடுபவர்களாக இருந்தார்கள்.  நானும் அவ்விருவருடன் இருந்தேன்.

அறிவிப்பவர்  உமர் (ரலி)

நூல் திர்மிதி (154)

நபியவர்கள் ஆட்சித் தலைவராக இருந்த காரணத்தினால் மக்களுடைய நிலை தொடர்பாகவும், போர்கள் தொடர்பாகவும், தேவையான பல விசயங்கள் தொடர்பாகவும் முக்கியமான ஸஹாபாக்களுடன் இரவு நேரப் பேச்சுகளில் ஈடுபட்டுள்ளார்கள் என்பதை நாம் மேற்கண்ட செய்தியிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இதிலிருந்து இஷாத் தொழுகைக்குப் பிறகு வீணாண பேச்சுகளில் ஈடுபட்டிருப்பதுதான் நபிகள் நாயகம் வெறுத்த விசயமே தவிர, அவசியமான காரியங்களுக்காக விழித்திருப்பதில் தவறில்லை.

இன்றைக்கு இஸ்லாமிய சமுதாயத்தினர் இரவின் பெரும் பகுதியினை வீணான தொலைக்காட்சி நிகழ்ச்சிகளிலும், கேளிக்கைகளிலும், வீணான காரியங்களிலும் கழிப்பது மார்க்கத்திற்கு எதிரானது என்பதில் எவ்விதச் சந்தேகமும் இல்லை. நபியவர்கள் விரும்பாத இத்தகைய செயல்களை கைவிடுவதே நாம் உண்மையான இறை நம்பிக்கையாளர்கள் என்பதற்கு அடையாளமாகும்.

அதுபோன்று இரவு நேரங்களில் நாம் நமக்காக சம்பாதிப்பதும் உழைப்பில் ஈடுபடுவதும் இறைவன் அனுமதித்ததே. பின்வரும் இறைவசனங்கள் அதற்குச் சான்றாகும்.

وَمِنْ رَحْمَتِهِ جَعَلَ لَكُمُ اللَّيْلَ وَالنَّهَارَ لِتَسْكُنُوا فِيهِ وَلِتَبْتَغُوا مِنْ فَضْلِهِ وَلَعَلَّكُمْ تَشْكُرُونَ  [القصص/73]

நீங்கள் அமைதி பெறவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்தவும் இரவு, பகலை ஏற்படுத்தியிருப்பது அவனது அருளில் உள்ளது.

 (அல்குர்ஆன் 28  73)

وَمِنْ آَيَاتِهِ مَنَامُكُمْ بِاللَّيْلِ وَالنَّهَارِ وَابْتِغَاؤُكُمْ مِنْ فَضْلِهِ إِنَّ فِي ذَلِكَ لَآَيَاتٍ لِقَوْمٍ يَسْمَعُونَ  [الروم/23]

இரவிலும், பகலிலும் நீங்கள் உறங்குவதும், அவனது அருளைத் தேடுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. செவியுறும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 30  23)

மேற்கண்ட வசனத்தில் இரவிலும் பகலிலும் இறைவனுடைய அருளைத் தேடுவது இறைவனுடைய அத்தாட்சிகளிலும் உள்ளதும் இறைவனுடைய அருள் என்றும் கூறுகின்றான்.

இறைவனுடைய அருளைத் தேடுவதில் நாம் நம்முடைய வாழ்க்கைக்காக சம்பாதிப்பதும் உள்ளடங்கும்.

ஜூம்ஆ தொழுகைக்கு பாங்கு சொன்னவுடன் நாம் வியாபாரத்தையும் இன்ன பிற காரியங்களையும் விட்டு விட வேண்டும் என்பது இறைவனுடைய கட்டளை. ஜூம்ஆ தொழுகை முடிந்த பிறகு நாம் நம்முடைய வாழ்க்கைக்காக வியாபாரம் மற்றும் ஏனைய காரியங்களில் ஈடுபடலாம்.

நம்பிக்கை கொண்டோரே! வெள்ளிக் கிழமையில் தொழுகைக்காக அழைக்கப் பட்டால் அல்லாஹ்வை நினைப்பதற்கு விரையுங்கள்! வியாபாரத்தை விட்டு விடுங்கள்! நீங்கள் அறிந்தால் இதுவே உங்களுக்கு நல்லது. தொழுகை முடிக்கப்பட்டதும் பூமியில் அலைந்து அல்லாஹ்வின் அருளைத் தேடுங்கள்! அல்லாஹ்வை அதிகம் நினையுங்கள்! நீங்கள் வெற்றி பெறுவீர்கள்.

 (அல்குர்ஆன்   62  9, 10)

தொழுகை முடிந்தவுடன் நாம் வியாபாரம் மற்றும் உலக விசயங்களில் ஈடுபடலாம் என்பதை இறைவனுடைய அருளைத் தேடுங்கள் என்ற வார்த்தையின் மூலம் அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான்.

எனவே இரவு நேரங்களில் வியாபாரம் மற்றும் தொழிற்துறைகளில் ஈடுபடுவது மார்க்கத்திற்கு எதிரானது அல்ல. அதே நேரத்தில் இறைவனுக்குச் செய்ய வேண்டிய வணக்க வழிபாடுகளில் பாதிப்பு ஏற்படாதவாறு நம்முடைய காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும்.

 

முரண்படும் ஹதீஸ்களும் முரணில்லா விளக்கமும்

தொடர் 1

அப்துல் கரீம் MISc

குர்ஆனுக்கு முரண்படும் செய்திகளை நபிகள் நாயகம் (ஸல்) கூறியதாக ஏற்கக் கூடாது என்று நாம் கூறிவருகிறோம்.

இதன் கருத்து ஹதீஸ்கள் குர்ஆனுக்கு மேலோட்டமாக முரண்படுவதைப் போன்று தோன்றிவிட்டாலே அந்தச் செய்திகளை எல்லாம் மறுத்து விடவேண்டும் என்பதல்ல. அவ்வாறு நாம் கூறவில்லை.

மாறாக குறிப்பிட்ட குர்ஆன் வசனத்திற்கும், ஹதீஸிற்கும் இடையில் முரண்பாட்டை களையும் விதமாக ஏதும் விளக்கம் அளிக்க இயலுமா? என முடிந்த வரை ஆய்வு செய்ய வேண்டும்.

அது தொடர்பான அனைத்து விவரங்களையும் திரட்டி முழுமையான ஆய்வு பார்வையை அந்த ஹதீஸ்களில் செலுத்திட வேண்டும்.

முரண்பாட்டை களையும் விதத்தில் தெளிவான விளக்கத்தை யாரும் அளித்திருப்பார்களேயானால் அதையும் பரிசீலிக்க வேண்டும்.

இப்படி முரண்பாட்டை நீக்குவதற்கு என்னென்ன வழிமுறைகள் உள்ளனவோ அந்த வழிகள் அனைத்தையும் பயன்படுத்திய பின்னரும் இதற்கு எந்த விளக்கமும் அளிக்க முடியாது என்பது தெளிவாகத் தெரிய வரும்போது மாத்திரமே குர்ஆனுக்கு முரண்படும் அந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியிருக்க மாட்டார்கள் என்று முடிவெடுக்க வேண்டும்.

இதுபோன்ற நேரத்தில் இப்படி முடிவெடுப்பதே நமது ஈமானிய சிந்தனைக்கு உகந்ததாகவும், பாதுகாப்பானதாகவும் அமையும்.

இதுதான் நமது கொள்கை நிலையாகும். நமது நிலைப்பாடு இதுவாக இருக்க, ஒரு சிலர் வேண்டும் என்றே நம்மீது தவறான அபிப்பிராயத்தை ஏற்படுத்திட முனைகின்றனர்.

முரண்படுவதைப் போன்று தோன்றிவிட்டாலே மறுக்கும் ஆயுதத்தை கையிலெடுத்து விடுகிறார்கள் என்பதுதான் இவர்கள் நம்மீது பதிய முயற்சிக்கும் புதிய முத்திரையாகும்.

இது முழுக்க முழுக்க உண்மைக்குப் புறம்பான போலி முத்திரை. ஏனெனில் மேலோட்டமாக குர்ஆனுக்கு முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்கும் எண்ணற்ற ஹதீஸ்களை சரியான விளக்கம் அளித்து இணக்கம் காணவே செய்கிறோம். அந்த ஹதீஸ்களை எல்லாம் சரியான விளக்கத்தோடு மக்களிடையே இவர்களை விட பன்மடங்கு வீரியத்துடன் பிரச்சாரம் செய்யவே செய்கிறோம்.

(இதனடிப்படையில் நாமே ஹதீஸ் காப்பாளர்கள். நம்மை விமர்சிப்பவர்கள் தங்களை ஹதீஸ் காப்பாளர்களாகப் பிதற்றிக் கொள்வதில் ஊசி முனையளவும் உண்மையில்லை என்பது வேறு விஷயம்.)

சரி. நீங்கள் சொல்வதைப் போன்று எத்தனை ஹதீஸ்களை முரண்பாட்டை களைந்து விளக்கம் கொடுத்துள்ளீர்கள்?

விளக்கம் கொடுத்து இணக்கம் காணும் ஹதீஸ்களின் பட்டியலைத் தர இயலுமா? என்றால் மிக அதிகமாகவே நம்மால் குறிப்பிட இயலும்.

அவற்றை அறியத்தருவது தான் இக்கட்டுரையின் முதற்கண் நோக்கமும் கூட என்றாலும் அதற்கு முன் முன்னோட்டமாக சில விஷயங்களை அறிந்து கொள்வது நலம்.

குர்ஆன் வசனத்திற்கு ஒரு ஹதீஸ் முரண்படுவதைப் போன்று தோற்றம் அளிக்க என்ன காரணம்? முரண்பாடு என்று எதனைக் குறிப்பிடுவது? என்பன போன்ற அடிப்படை தகவலை அறிந்து கொண்டால் இது தொடர்பான நம் அறிவை விசாலப்படுத்திக் கொள்ள அது உதவும்.

இனி விஷயத்திற்கு வருவோம். துவக்கமாக முரண்பாடு தோன்ற என்னென்ன காரணங்கள் உள்ளன என்பதை சில உதாரணங்களுடன் காண்போம்.

முரண்பாடு தோன்ற முதலாவது காரணம்

குர்ஆன், ஹதீஸ் என இரு மார்க்க ஆதாரங்களில் ஒன்று பொதுவான வாசக அமைப்பிலும் மற்றொன்று குறிப்பான வாசக அமைப்பிலும் வரும்.

இந்நேரத்தில் ஒன்றுக்கொன்று முரணாகத் தோன்றும்.

அதாவது பொதுவாகச் சொல்லப்பட்டதற்கு எதிராக குறிப்பாக சொல்லப்பட்டது முரண்படுவதைப் போன்று தோற்றமளிக்கும்.

அதேபோல  சில நேரத்தில் சட்டம் சொல்லும் வாசக அமைப்பு பொதுவாக வரும். ஆனால் அங்கே வாசக அமைப்பு கவனிக்கப்படாமல் யாருக்கு சொல்லப்பட்டது என்று குறிப்பிட்ட சில நபர்கள் மட்டுமே கவனத்தில் கொள்ளப்படுவார்கள்.

இதை பகுத்துப் பார்க்காத தருணங்களிலும்  முரண்பாடு எட்டிப்பார்க்கும்.

கருத்தை மட்டும் கவனிப்பதாலே முரண்பாடு போல் தோற்றமளிக்கும் இந்த நிலை ஏற்படுகிறது. நுணுக்கமாக அணுகினால் உண்மையில் இவ்வித ஆதாரங்களுக்கிடையில் எந்த முரண்பாடும் இல்லை என்பதை அறியலாம்.

இதை வார்த்தையாக சொல்லிக் கொண்டு வந்தால் ஒன்றும் புரியாததை போல இருக்கும். எனவே பின்வரும் வசனத்தையும் அதையடுத்த விளக்கத்தையும் ஆழ்ந்து படியுங்கள்.

ஒரு குற்றத்திற்கு இருவுலக தண்டனையா?

கொல்லப்படுவது, அல்லது சிலுவையில் அறையப்படுவது, அல்லது மாறுகால், மாறுகை வெட்டப்படுவது, அல்லது நாடு கடத்தப்படுவது ஆகியவையே அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை. இது அவர்களுக்கு இவ்வுலகில் ஏற்படும் இழிவாகும். அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது. 

அல்குர்ஆன் 5 33

அல்லாஹ்வுடனும், அவனுடைய தூதருடனும் போர் புரிபவர்களுக்கு கொல்லப்படுதல், சிலுவையில் அறையப்படுதல் போன்ற உலக ரீதியான தண்டனைகள் வழங்கப்படும். அத்துடன் முடிந்து போகாமல் மறுமையிலும் அவர்களுக்குத் தண்டனை உண்டு என்று இவ்வசனத்தில் சொல்லப்படுகிறது.

இவ்வசனத்தைப் பொதுவாக நோக்கும்போது ஒருவனுக்கு தான் செய்த குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை வழங்கப்பட்டால் அது அவனுக்கு போதுமானதாக அமையாது, மாறாக அவன் மறுமையிலும் தண்டிக்கப்படுவான் என்கிறது. உலகத்தில் குற்றத்திற்குரிய தண்டனை பெறுவதால் மறுமையின் தண்டனையிலிருந்து தப்ப இயலாது எனும் கருத்து இவ்வசனத்தில் வெளிப்படுகிறது.

ஆனால் பின்வரும் நபிமொழியை வாசித்தால் மேற்கண்ட குர்ஆன் வசனம் கூறும் கருத்திற்கு முரணான கருத்து அதில் சொல்லப்பட்டதை உணரலாம்.

'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள். உங்களில், (அவற்றை) நிறைவேற்றுகிறவரின் நற்கூலி அல்லாஹ்விடம் உள்ளது. மேற்கூறப்பட்ட (குற்றங்களில்) எதையாவது ஒருவர் செய்து, (அதற்காக) இவ்வுலகில் தண்டிக்கப்பட்டால் அது அவருக்குப் பரிகாரமாகி விடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையாவது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் இருக்கிறார். அவன் நாடினால் அவரை மன்னிப்பான்; அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்' இறைத்தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றித் தோழர்களில் ஒரு குழு அமர்ந்திருக்கும்போது கூறினார்கள்.

அறிவிப்பவர் உபாதா பின் ஸாமித்  (ரலி),

நூல் : புகாரி 18

ஒரு குற்றத்திற்காக உலகில் தண்டிக்கப்பட்டு விட்டால் அதுவே அக்குற்றத்திற்குரிய பரிகாரமாக ஆகி விடும் என்று இந்நபிமொழியில் சொல்லப்பட்டுள்ளது.

குற்றத்திற்குரிய பரிகாரமாக ஆகி விடும் என்றால் மறுமையில் தண்டனை இல்லை என்பதுதான் அதன் அர்த்தம்.

இதனடிப்படையில் முதலில் பார்த்த வசனத்திற்கு முரணாக இந்த ஹதீஸ் தென்படுகிறது.

உலகில் தண்டனை வழங்கப்பட்டால் அது பரிகாரமாகாது, மாறாக மறுமையிலும் தண்டனை கிடைக்கும் என்று குர்ஆன் கூறுகிறது.

உலகில் தண்டனை வழங்கப்பட்டால் அதுவே பரிகாரமாகி விடும் என்று நபிமொழி கூறுகிறது.

இப்படி ஒன்றுக்கொன்று முரண்பாடாக தோற்றமளிக்க நாம் மேலே சொன்ன தவறான அணுகுமுறையே காரணம்.

அதாவது எது பொதுவாகச் சொல்லப்பட்டது? எது குறிப்பாகச் சொல்லப்பட்டது? என்பதைப் பகுத்து அறியாமல் குறிப்பாக சொல்லப்பட்டதை பொதுவாக்குவதே இம்முரண்பாட்டிற்கான காரணியாகும்.

முதலில் குர்ஆன் வசனத்தை எடுத்துக் கொள்ளுங்கள்

குர்ஆன் வசனம் என்ன சொல்கிறது?

அவர்களுக்கு மறுமையில் கடும் வேதனை உள்ளது. 

(அல்குர்ஆன் 5 : 33)

அல்லாஹ், ரசூலுடன் எதிர்த்து போர் செய்பவர்களுக்கு உலகத்திலும் தண்டனை உண்டு, மறுமையிலும் தண்டனை உண்டு என்று இவ்வசனம் சொல்கிறது.

இதை வைத்துக் கொண்டு செய்த குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை வழங்கப்பட்டாலும் அது பரிகாரமாக அமைவதில்லை. மாறாக மறுமையிலும் தண்டனை உண்டு என்று பொது சட்டம் எடுத்து அதை அனைவருக்கும் பொருத்தியதே இதற்கான காரணமாகும்.

ஏனெனில் இவ்வசனம் அல்லாஹ், ரசூலை எதிர்த்து போர் செய்யும் இறை மறுப்பாளர்களைப் பற்றி பேசுகிறது.

அல்லாஹ்வுடனும், அவனது தூதருடனும் போர் செய்து பூமியில் குழப்பம் செய்ய முயற்சிப்போருக்குரிய தண்டனை

(அல்குர்ஆன் 5 : 33)

இவ்வசனத்தின் துவக்கத்தில் அல்லாஹ் ரசூலுடன் போர் செய்பவர்களின் தண்டனை என்று துவங்குகிறது.

காபிர்களே அல்லாஹ் ரசூலுடன் போர் செய்ய முன்வருவார்கள். எனவே இவ்வசனம் இறை மறுப்பாளர்களை பற்றி குறிப்பிடுகிறது என்பது தெளிவு.

இறை மறுப்பாளர்கள் இவ்வுலகத்தில் தண்டனை பெற்றாலும் அவர்களிடம் இணை வைப்பு இருக்கிற காரணத்தினால் மறுமையில் தண்டனை பெறுவதிலிருந்து தப்ப இயலாது. எந்தக் குற்றத்திற்காக அவர்கள் உலகில் தண்டிக்கப்பட்டாலும் குஃப்ர் இருக்கிற காரணத்தினால் மறுமையிலும் அவர்கள் தண்டனையை அனுபவிக்கவே செய்வார்கள்.

எனவேதான் அல்லாஹ் இத்தகைய காபிர்களுக்கு மறுமையிலும் பெரும் வேதனை உள்ளது என்று கூறுகிறான்.

ஆனால் உபாதா ரலி அறிவிக்கும் நபிமொழியோ முஸ்லிம்களைப் பற்றி விவரிக்கின்றது.

ஹதீஸின் துவக்கம் கூட ஷிர்க் வைக்க மாட்டோம் என்று என்னிடத்தில் பைஅத் செய்யுங்கள் என்றே துவங்குகிறது.

'அல்லாஹ்விற்கு இணையாக எதனையும் கருதுவதில்லை; திருடுவதில்லை; விபச்சாரம் செய்வதில்லை; உங்கள் குழந்தைகளைக் கொல்வதில்லை; நிகழ்காலத்திலும் வருங்காலத்திலும் (யார் மீதும்) அவதூறு கூறுவதில்லை; எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்வதில்லை என்று என்னிடம் ஒப்பந்தம் செய்யுங்கள்.

அறிவிப்பவர் உபாதா பின் ஸாமித் (ரலி),

நூல் : புகாரி 18

நபிகள் நாயகத்திடம் இவ்விதமாக பைஅத் செய்பவர் சர்வ நிச்சயம் முஸ்லிமாகவே இருப்பார் என்பதில் துளியும் சந்தேகமில்லை.

அத்தகைய முஸ்லிம் ஒருவர் ஒரு குற்றத்தைச் செய்து அதற்காக இவ்வுலத்தில் தண்டனையையும் பெற்று விடுவாரேயானால், அத்தண்டனை அவரது குற்றத்திற்குரிய பரிகாரமாக அமைந்து விடும் என்று நபிகள் நாயகம் முஸ்லிம்களின் நிலையைப் பற்றி இதில் தெரிவிக்கின்றார்கள்.

சுருக்கமாகச் சொல்வதெனில் ஒரு குற்றத்திற்காக உலகத்தில் தண்டனை பெற்றால் அதுவே பரிகாரமாக அமைந்து விடும் என்பது முஸ்லிம்களுக்கானது. இறை மறுப்பாளர்களுக்கானது அல்ல.

உலகத்தில் வழங்கப்படும் தண்டனையோடு சேர்த்து மறுமையிலும் பெரும் வேதனை உண்டு என்று அல்லாஹ் சொல்வது இறை மறுப்பாளர்களுக்கானது. முஸ்லிம்களுக்கானது அல்ல.

இப்படி காஃபிர்களுக்கு சொல்லப்பட்டதை அனைத்து மக்களுக்குமான பொது சட்டம் என்றும் முஸ்லிம்களுக்கு சொல்லப்பட்டதை காபிர்கள் உட்பட அனைவருக்கும் உரியது எனவும் தவறாகப் புரிந்து கொள்வதே இந்தத் தற்காலிக முரண்பாட்டிற்கான காரணமாகும்.

எது குறிப்பாக சொல்லப்பட்டது? எது பொதுவாகச் சொல்லப்பட்டது? என்பதைப் பிரித்து அறியும்போது மேற்கண்ட குர்ஆன் வசனத்திற்கும் நபிமொழிக்கும் மத்தியில் எவ்வித முரண்பாடும் இல்லை என்பதை விளங்கலாம்.

இதே பாணியில் இன்னும் பல உதாரணங்களைச் சொல்ல இயலும் என்றாலும் முரண்பாடு தோன்ற இது முதற்காரணம் என்பதை விளங்கிக் கொள்ள இவ்வுதாரணம் ஒன்றே போதுமானது.

இரண்டாம் காரணம்

குர்ஆன், ஹதீஸிற்கு இடையில் மேலோட்டமாக முரண்பாடுபோல் காட்சியளிக்க மற்றுமொரு காரணம் என்னவெனில் இரு ஆதாரங்களில் ஒன்று பொதுவானதாகவும், மற்றொரு ஆதாரம் நிபந்தனையுடன் சொல்லப்பட்டதாகவும் அமையப் பெற்றிருக்கும்.

பொதுவாகச் சொல்லப்பட்டதை - நிபந்தனையுடன் சொல்லப்பட்டதுடன் ஒப்பு நோக்கி ஒன்றுக்கொன்று முரணாக இருப்பதாக எண்ணிக் கொள்வோம்.

இதுவும் தெளிவான முரண்பாடு அல்ல.

பொதுவாக சொல்லப்பட்ட அந்த ஆதாரத்தைப் பொதுவாக எடுக்காமல்  மற்றொரு ஆதாரத்தில் சொல்லப்பட்ட நிபந்தனையை எடுத்து அதில் பொருத்தி எடுத்துக் கொள்வோமேயானால், மெலிதாக எட்டிப்பார்த்த முரண்பாடு முழுமையாய் மறைந்து போவதைப் பார்க்கலாம்.

இவ்வித முரண்பாடு எப்படித் தோன்றி, மறைகிறது என்பதையும் உதாரணங்களின் மூலம் அணுகுவோம்.

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் தொழுகைக்காகத் தயாராகும்போது உங்கள் முகங்களையும், மூட்டுக்கள் வரை உங்கள் கைகளையும், கரண்டை வரை உங்கள் கால்களையும் கழுவிக் கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 5 : 6)

தொழுகைக்காக தயாராகும் அனைத்து முஃமின்களும் உழு செய்ய வேண்டும் என்று பொதுவாக இவ்வசனம் கட்டளையிடுகிறது.

அதாவது ஒவ்வொரு முறை தொழுகைக்குத் தயாராகும் போதெல்லாம் உழு செய்ய வேண்டும் எனும் கருத்து இதனுள் அடங்கியுள்ளது.

ஆனால் பின்வரும் நபிமொழியை மோலோட்டமாக அணுகும் போது மேற்கண்ட வசனத்திற்கு முரண்போல் தோன்றும்.

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தன்று ஒரு முறை செய்த உளூவினால் பல நேரத் தொழுகைகளைத் தொழுதார்கள். அப்போது (கால்களைக் கழுவாமல் ஈரக் கையால்) காலுறைகள் மீது தடவி (மஸ்ஹு செய்து) கொண்டார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், முன்னெப்போதும் செய்யாத ஒன்றை இன்றைக்குத் தாங்கள் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், செய்ய வேண்டுமென்றுதான் செய்தேன், உமரே! என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இரு அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது

அறிவிப்பவர் : புரைதா ரலி,

நூல் : முஸ்லிம் 466

இந்த நபிமொழியில் பல தொழுகைகளை நபிகள் நாயகம் ஒரு உழுவில் தொழுதுள்ளார்கள் என்பதை அறிகிறோம்.

ஒரு தொழுகைக்குத் தயாராகும்போது நபிகள் நாயகம் உழு செய்துள்ளார்கள். ஏனைய தொழுகைக்கு தயாராகும்போது உழு செய்யவில்லை. முந்தைய உழுவைக் கொண்டே தொழுதுள்ளார்கள் என்பது இதன் பொருள்.

இதன்படி பார்க்கும்போது தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்ற குர்ஆன் வசனம் கூறும் கட்டளைக்கு மாற்றமாக நபியவர்களின் இந்தச் செயல் அமைந்துள்ளது.

குர்ஆன் வசனத்திற்கு முரணாக இந்த ஹதீஸ் உள்ளது போன்று வெளிப்படையில் தோன்றுகிறது.

தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்ற குர்ஆன் வசனம் கூறும் பொதுக் கட்டளைக்கு  முரணாக பின்வரும் நபிமொழியும் அமைந்துள்ளதை உணரலாம்.

'கைபர் போர் நடந்த வருடம் நபி (ஸல்) அவர்களுடன் கைபருக்குச் சென்றோம். 'ஸஹ்பா' எனும் இடத்தை அடைந்ததும் நபி(ஸல்) அவர்கள் எங்களுக்கு (அஸர்) தொழுகை நடத்தினார்கள். தொழுது முடித்ததும் (பயண) உணவைக் கொண்டு வரும்படி கூறினார்கள். அப்போது மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்படவில்லை. நாங்கள் சாப்பிட்டோம்; குடித்தோம். பின்னர் மக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்து, உளூச் செய்யாமலேயே எங்களுக்கு மக்ரிப் தொழுகை நடத்தினார்கள்"

அறிவிப்பவர் ஸுவைத் இப்னு நுஃமான்(ரலி),

நூல் : புகாரி 215

(இப்படி பல செய்திகள் உள்ளது. உதாரணத்திற்கு இரு செய்திகளை பதிந்துள்ளோம்.)

ஆக தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்று குர்ஆன் கட்டளையிடுகிறது.

ஆனால் நபிகள் நாயகமோ தொழுகைக்குத் தயாராகும் போது உழு செய்யவில்லை. (முந்தைய உழுவைக் கொண்டே தொழுதுள்ளார்கள்.) உழு இருந்தாலும் இந்தத் தொழுகைக்கு தயாராகும்போது உழு செய்யவில்லை எனும் கருத்தில் முரண்பாடு போல் உருவகம் ஏற்படுகிறது.

உண்மையில் இதுவும் தெளிவான முரண்பாடு அல்ல.

ஏனெனில் தொழுகைக்குத் தயாராகும்போது உழு செய்ய வேண்டும் என்று பொதுவாக சட்டம் சொன்ன குர்ஆன் வசனத்தில் என்ன நிபந்தனை சேர்க்கப்பட வேண்டும் என்பது இந்நபிமொழிகளில் சொல்லப்பட்டுள்ளது.

உழு இல்லாமல் இருக்கும் நிலையில் என்பது தான் இந்த நபிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனையாகும்.

நிபந்தனை சொல்லப்படாமல் பொதுச் சட்டம் கூறும் வசனத்தை (அல்குர்ஆன் 5 6) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நமக்கு எடுத்துரைத்தார்கள்.

நபிகள் நாயகம் அதற்குரிய செயல் விளக்கமாக ஒரு உழுவில் பல தொழுகைகளைத் தொழுதுள்ளார்கள் என்றால் இதன் மூலம் நமக்கு பொதுச்சட்டத்தில் சேர்க்க வேண்டிய ஒரு நிபந்தனையை விளக்கித் தருகிறார்கள்.

உழு இல்லாமல் இருக்கும் நிலையில் தொழுகைக்கு தயாராகும் போதுதான் உழு செய்து கொள்ள வேண்டும்.

உழு இருக்கும் நிலையில் தொழுகைக்குத் தயாராகும் போது உழு செய்யத் தேவையில்லை.

தொழுகைக்கு தயாராகும் போது உழு செய்ய  வேண்டும் என்று அவ்வசனம் குறிப்பிடுவது உழு இல்லாமல் இருக்கும்போதுதான் எனும் நிபந்தனையை தம் செயல் மூலம் நமக்கு விளக்கித் தருகிறார்கள்.

எனவே பொதுவாக சட்டம் சொன்ன குர்ஆன் வசனத்தில் ஹதீஸ்களில் சொல்லப்பட்டிருக்கும் இந்த நிபந்தனையைப் பொருத்திப் பார்க்கும்போது இரண்டுக்கும் இடையில் எந்த முரண்பாடும் இல்லாமல் போகிறது

இதே விஷயத்தை பின்வரும் விவகாரத்திலும் பார்க்கலாம்.

பாலூட்டிய அன்னையர்கள் திருமணம் முடிக்க தடை செய்யப்பட்டவர்கள் என்று குர்ஆன் கூறுகிறது.

(பார்க்க, அல்குர்ஆன் 4 : 23)

இவ்வசனம் பொதுவாகவே உள்ளது. எத்தனை முறை பாலூட்டியிருக்க வேண்டும் என்று எந்தத் தகவலும் இல்லை.

இந்த வசனத்தின்படி ஒரு முறை, ஒரு மிடறு அருந்தினால் கூட அப்பெண்மணி அவரது வாரிசுகள் திருமணம் முடிக்கத் தடை என்று கருத்து வரும். ஏனெனில் வசனத்தில் இத்தனை முறை என்றோ - இந்த அளவு என்றோ - இத்தனை வயதில் என்றோ எந்த நிபந்தனையும் சொல்லப்படவில்லை.

ஆனால் நபிமொழிகளில் பார்க்கும்போது இவ்வசனத்தில் சொல்லப்பட்ட சட்டத்திற்கான நிபந்தனைகள் கூறப்பட்டுள்ளது.

குறைந்த பட்சம் மூன்று தடவைகள் பாலருந்த வேண்டும்.

வயிறு நிரம்ப அருந்த வேண்டும்.

இரண்டு வயதிற்குள் பாலருந்தியிருக்க வேண்டும் என்று ஹதீஸ்களில் நிபந்தனைகளை நபியவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

(ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்தபோது, ஒரு கிராமவாசி வந்தார். அவர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! எனக்கு ஏற்கெனவே ஒரு மனைவி இருக்கும் நிலையில் நான் மற்றொரு பெண்ணை மணந்துகொண்டேன். என்னுடைய முதல் மனைவி, "நான் உம்முடைய புதிய மனைவிக்கு ஒரு தடவையோ அல்லது இரு தடவைகளோ பாலூட்டியிருக்கிறேன். (எனவே, இந்தத் திருமணம் செல்லாது) என்று கூறுகிறார்'' எனத் தெரிவித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஒரு தடவையோ இரு தடவைகளோ மட்டும் (உறிஞ்சிக் குடிக்கும் வகையில்) பாலூட்டுவதால் (மணமுடிக்கத் தகாத) நெருங்கிய உறவு ஏற்பட்டுவிடாது'' என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் மூன்று அறிவிப்பாளர் தொடர்களில் வந்துள்ளது.

அறிவிப்பவர் உம்முல் ஃபள்ல் (ரலி),

நூல் : முஸ்லிம் 2870

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மார்பகத்தின் வழியாக (குழந்தையின்) வயிறை நிரப்பும் அளவிற்குப் பால் புகட்டுவதினாலே பால்குடி உறவு ஏற்படும். இன்னும் (இவ்வாறு) பால் புகட்டுவது பால் குடிகாலம் 2 வருடம் முடிவடைவதற்கு) முன்னால் இருக்க வேண்டும்.

அறிவிப்பவர் : உம்மு சலமா (ரலி)

நூல் : திர்மிதி (1072)

குர்ஆனில் சொல்லப்பட்ட பொதுச்சட்டத்தை அப்படியே அணுகாமல் நபிமொழிகளில் சொல்லப்பட்டிருக்கும் நிபந்தனைகளுடன் பொருத்தி அணுக வேண்டும் என்பதற்கு இது ஓர் சிறந்த எடுத்துக் காட்டு.

இந்த விஷயத்தை அப்படி அணுகவில்லையென்றால் என்னவாகும்?

பாலருந்தி விட்டால் திருமணம் முடிக்க ஹராம் என்று திருக்குர்ஆன் பொதுவாகச் சொல்கிறது.

ஆனால் ஹதீஸோ இரண்டு முறை பாலருந்தினாலும் ஹராம் என்பது ஏற்படாது என்று குர்ஆனுக்கு முரணாக சட்டம் கூறுகிறது என்று முரண் கற்பிக்க ஆரம்பித்து விடுவோம்.

எனவே குர்ஆனுக்கும் ஹதீஸிற்கும் மத்தியில் முரண்போன்ற பிம்பம் ஏற்பட பொதுவாக சொல்லப்பட்ட ஒரு ஆதாரத்தை நிபந்தனையுடன் சொல்லப்பட்டுள்ள ஆதாரத்துடன் இணைத்து புரியாமல் இருப்பதும் ஒரு காரணம் என்பதை இதன் மூலம் விளங்கி கொள்ள வேண்டும்.

(வளரும் இன்ஷா அல்லாஹ்...)

 

கேள்வி கேட்பது குற்றமா?

தொடர் 1

எம். முஹம்மது சலீம், MISc, மங்கலம்.

இஸ்லாம் என்பது அறிவுப்பூர்வமான மார்க்கம். ஏன்? எதற்கு? எப்படி? என்று சிந்தித்து தெளிவு பெறுவதை ஊக்குவிக்கும் சித்தாந்தம். இத்தகைய சிறப்பான கொள்கையில் இருக்கும் சிலரோ, மார்க்கம் குறித்து கேள்வி கேட்பதை எதிர்க்கிறார்கள், தடுக்கிறார்கள். திருமறையை, நபிமொழியைப் படித்து சந்தேகத்தை கேட்கும் தன்மை வழிகேட்டில் விட்டுவிடும் என்று பாமர மக்களை பயமுறுத்துகிறார்கள்.

தங்களுடைய கருத்துக்கு ஆதாரம் என்று சில செய்திகளை எடுத்துக் காட்டுகிறார்கள். அந்தச் செய்திகள் பற்றிய விளக்கத்திற்கு முன்பாக, மார்க்கம் தொடர்பான கேள்விகளைத் தொடுப்பதற்கு ஏதேனும் தடை இருக்கிறதா என்பது பற்றி சுருக்கமாகக் காண்போம்.

கேள்வி ஞானத்தை ஊக்குவிக்கும் இஸ்லாம்

அல்லாஹ் ஒருவன் மட்டுமே அனைத்தையும் அறிந்தவன். எல்லாம் தெரிந்த மனிதர் யாருமில்லை. அனைவருக்கும் அனைத்து விசயங்களும் தெரியாது. சிலருக்குத் தெரியாமல் இருப்பதை சிலர் தெரிந்து வைத்திருப்பார்கள். நமக்குத் தெரியாத செய்திகளை பிறரிடம் கேட்டு தெரிந்து கொள்வதில் எந்தவொரு தவறும் இல்லை. முக்கியமான விசயங்களை தெரிந்தவர்களிடம் கேள்வி கேட்டு தெரிந்து கொள்வது என்பது பாராட்டுதலுக்குரிய பண்பு.

இந்த வகையில், ஒருவர் மார்க்கம் பற்றிய சந்தேகங்களை மற்றவர்களிடம் கேள்வி கேட்டு கற்றுக் கொள்வதை இஸ்லாம் ஒருபோதும் எதிர்க்கவில்லை. மாறாக, இதற்கு அனுமதி கொடுத்து ஆர்வமூட்டும் வகையில் திருக்குர்ஆன் வசனங்கள் அமைந்து இருக்கின்றன. அறிந்து கொள்ள சிலவற்றை மட்டும் காண்போம்.

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(திருக்குர் ஆன் 16:43, 44)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்கு தூதுச் செய்தி அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்!

(திருக்குர் ஆன் 21:7)

எத்தனை தெளிவான சான்றுகளை அவர்களுக்கு வழங்கியிருந்தோம் என இஸ்ராயீலின் மக்களிடம் கேட்பீராக! அல்லாஹ்வின் அருட்கொடை தன்னிடம் வந்த பின்பு மாற்றி விடுபவனைத் தண்டிப்பதில் அல்லாஹ் கடுமையானவன்.

(திருக்குர் ஆன் 2: 211)

கேள்விகளுக்குப் பதிலளிக்கும் வசனங்கள்

இன்றைய காலத்தைப் போலவே, நபிகளார் காலத்திலும் இஸ்லாத்தை எடுத்துச் சொல்லும்போது அன்றைய மக்கள் ஏராளமான எதிர்க் கேள்விகளைக் கேட்டார்கள். அவர்களின் அறியாமை நிறைந்த வாதங்களுக்கு விளக்கம் கொடுக்கும் வகையில் அதிகமான வசனங்கள் அருளப்பட்டு இருப்பதை அருள்மறையில் காண முடிகிறது. இதோ பாருங்கள்:

பூமியை இரண்டு நாட்களில் படைத்தவனையா மறுக்கிறீர்கள்? மேலும் அவனுக்கு நிகரானவர்களைக் கற்பனை செய்கிறீர்கள். அவனே அகிலத்தின் அதிபதியாவான்'' என்று கூறுவீராக! நான்கு நாட்களில் அதன் மேலே முளைகளை ஏற்படுத்தினான். அதில் பாக்கியம் செய்தான். அதன் உணவுகளை அதில் நிர்ணயம் செய்தான். கேள்வி கேட்போருக்குச் சரியான விடை இதுவே.

(திருக்குர் ஆன் 41:9,10)

தகுதிகள் உடைய அல்லாஹ்விடமிருந்து (ஏக இறைவனை) மறுப்போருக்கு நிகழக் கூடிய வேதனை குறித்துக் கேள்வி கேட்பவன் கேட்கிறான். அதை (வேதனையை) தடுப்பவன் யாருமில்லை.

(திருக்குர் ஆன் 70:1-3)

பிறைகளைப் பற்றி (முஹம்மதே!) உம்மிடம் கேட்கின்றனர். "அவை மக்களுக்கும், (குறிப்பாக) ஹஜ்ஜுக்கும் காலம் காட்டிகள்'' எனக் கூறுவீராக! வீடுகளுக்குள் அதன், பின் வழியாக வருவது நன்மை அன்று. (இறைவனை) அஞ்சுவதே நன்மை. எனவே வீடுகளுக்கு வாசல்கள் வழியாகவே செல்லுங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். இதனால் வெற்றி பெறுவீர்கள்.

(திருக்குர் ஆன் 2:189)

கேள்விக்குப் பிறகு இறங்கிய இறைச்செய்தி

இஸ்லாத்திற்கு எதிராக வாதங்களை வைத்தவர்களுக்கு பல்வேறு வசனங்களின் மூலம் அல்லாஹ் பதிலடி கொடுத்தான். இதுபோன்று, நபியவர்களிடம் வந்து மக்கள் கேள்வி எழுப்பிய போது அவர்களுக்குப் பதில் சொல்வதற்கு அல்லாஹ்விடம் இருந்து இறைச் செய்தி அருளப்பட்டது. கேள்வி கேட்டதையும், கேட்டவர்களையும் கண்டிக்காமல் வஹீ மூலம் விளக்கம் கொடுக்கப்பட்டதை கவனிப்போருக்கு கேள்வி கேட்பது குற்றமில்லை என்பதை விளங்கிக் கொள்ள முடியும்.

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் மிம்பரில் அமர்ந்தார்கள். நாங்களும் அவர்களைச் சுற்றி அமர்ந்தோம். அப்போது அவர்கள் "என் வாழ்விற்குப் பின், உங்களுக்கிடையே உலகவளங்களும் அதன் கவர்ச்சிப் பொருட்களும் தாராளமாகத் திறந்து விடப்படுவதைப் பற்றியே நான் அஞ்சுகிறேன்'' எனக் கூறினார்கள்.  ஒருவர் "அல்லாஹ்வின் தூதரே! (செல்வம் என்ற) நன்மை தீமையை உருவாக்குமா?'' எனக் கேட்டதும் நபி(ஸல்) அவர்கள் மௌனமாகி விட்டார்கள். உடனே அந்த நபரிடம், " என்ன ஆனது உமது நிலைமை? நீர் நபி(ஸல்) அவர்களிடம் பேசுகிறீர்; ஆனால் நபி(ஸல்) அவர்களோ உம்மிடம் பேசாமலிருக்கிறார்களே!'' எனக் கேட்கப்பட்டது.

நாங்கள் நபி(ஸல்)  அவர்களுக்கு வஹீ அருளப்படுகிறது எனக் கருதினோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் வியர்வையைத் துடைத்துவிட்டு, "கேள்வி கேட்டவர் எங்கே?'' என அவரைப் பாராட்டுவது போன்று கேட்டார்கள். பிறகு, "நன்மையானது தீமையை உருவாக்காதுதான்; நிச்சயமாக, நீர்நிலைகளின் கரைகளில் விளைகின்ற தாவரங்களில் சில, (தம் நச்சுத் தன்மையால் அவற்றை மேய்கின்ற) கால்நடைகளைக் கொன்று விடுகின்றன; அல்லது மரணத்தின் விளிம்புக்கே (அவற்றைக்) கொண்டு போகின்றன; பசுமையான (நல்ல வகைத்) தாவரங்களைத் தின்பவற்றைத் தவிர! அவற்றைக் கால்நடைகள் வயிறு புடைக்கத் தின்று சூரிய ஒளியை முன்னோக்குகின்றன. மேலும் சாணம் போட்டு, சிறுநீர் கழித்து, மீண்டும் மேய்கின்றன. (இது போலவே உலகிலுள்ள) இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதும் ஆகும்.

எனவே ஒரு முஸ்லிம், தன் செல்வத்திலிருந்து ஏழைகளுக்கும் அநாதைகளுக்கும் வழிப்போக்கர்களுக்கும் கொடுத்துக் கொண்டிருக்கும் வரை அது அவனுக்குச் சிறந்த தோழனாகும். யார் முறையின்றி அதை எடுத்துக் கொள்கின்றானோ, அவன் உண்டும் வயிறு நிரம்பாதவனைப் போன்றவனாவான். மேலும் மறுமை நாளில் அந்தச் செல்வம் அவனுக்கு எதிராக சாட்சியம் சொல்லும்'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி)

நூல்: புகாரி (1465)

நபி (ஸல்) அவர்கள் ஜிஇர்ரானா எனுமிடத்தில் இருக்கும்போது வாசனை திரவியத்தின் அடையாளமோ அல்லது மஞ்சள் நிறமோ இருந்த சட்டை அணிந்திருந்த ஒருவர் அவர்களிடம் வந்து, "உம்ராவில் நான் என்ன செய்ய வேண்டும் எனக் கட்டளையிடுகிறீர்கள்?' எனக் கேட்டார். அப்போது அல்லாஹ் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ அறிவித்தான். எனவே நபி (ஸல்) அவர்கள் போர்வையால் மூடப்பட்டார்கள். நான் நபி (ஸல்) அவர்களுக்கு வஹீ வருவதைப் பார்க்க வேண்டும் என ஆவல் கொண்டிருந்தேன். உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் வஹீ அருளும்போது அவர்களைப் பார்க்க வேண்டும் என்று விரும்புகிறாயா?' எனக் கேட்டார். நான் "ஆம்' என்றேன். உடனே அவர் நபி (ஸல்) அவர்கள்) மூடப்பட்டிருந்த ஆடையின் ஒரு புறத்தை நீக்கியதும் நான் நபி (ஸல்) அவர்களை உற்று நோக்கினேன். அப்போது ஒட்டகத்தின் குறட்டை போன்ற சப்தம் அவர்களிடமிருந்து வந்ததாக நான் எண்ணுகின்றேன். பிறகு (வஹீயின்) அந்நிலை அவர்களை விட்டு நீங்கி விட்டபொழுது, அவர்கள், "உம்ராவைப் பற்றிக் கேள்வி கேட்டவர் எங்கே?'' எனக் கேட்டுவிட்டு (அவரிடம்), "உமது இச்சட்டையைக் கழற்றி வாசனை திரவியத்தின் அடையாளத்தைக் கழுவிவிட்டு, மஞ்சள் நிறத்தையும் அகற்றிவிடும்! மேலும் நீர் ஹஜ்ஜில் செய்வதைப் போன்று உம்ராவிலும் செய்வீராக!'' எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர்: யஅலா பின் உமய்யா (ரலி)

நூல்: புகாரி (1789)

நான் மதீனாவில் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு வேளாண் பூமியில் இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மட்டை ஒன்றின் மீது (கையை) ஊன்றியபடி நின்றிருந்தார்கள். பிறகு நபி  (ஸல்) அவர்கள் யூதர்கள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களில் ஒருவர், "இவரிடம் உயிரைப் பற்றிக் கேளுங்கள்'' என்று சொன்னார். மற்றொருவர், "நீங்கள் அவரிடம் கேட்காதீர்கள்; ஏனெனில் நீங்கள் விரும்பாத பதிலை அவர் உங்களுக்குத் சொல்லிவிடக் கூடாது'' என்று சொன்னார்.

பின்னர் அவர்கள் (அனைவரும் சேர்ந்து) நபி (ஸல்) அவர்களிடம் எழுந்து சென்று, "அபுல் காசிமே! உயிரைப் பற்றி எங்களுக்குத் தெரிவியுங்கள்!'' என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் எழுந்து நின்று கூர்ந்து பார்த்தார்கள். உடனே நான், "அவர்களுக்கு வஹீ (வேதஅறிவிப்பு) அறிவிக்கப்படுகின்றது என்று புரிந்து கொண்டேன். ஆகவே, வஹீ வருவதற்கு வசதியாக நான் அவர்களைவிட்டு சற்றுப் பின்தள்ளி நின்றேன். பிறகு, நபி (ஸல்) அவர்கள் (தமக்கு அருளப்பெற்ற) "நபியே! உயிரைப் பற்றி உங்களிடம் அவர்கள் வினவுகின்றார்கள். உயிர் என்பது என் இறைவனின் கட்டளையால் உருவானது என்று கூறுங்கள்'' எனும் (17:85ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: புகாரி (7297)

கேள்விகளுக்கு பதிலளித்த நபிகளார்

சத்தியத்தை ஏற்றுக் கொள்ளாதவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அநேகமான கேள்விகளை எழுப்பினார்கள். அதேசமயம், முஸ்லிம்களும் பல்வேறு கேள்விகளைக் கேட்டார்கள். ஆண்களைப் போன்று பெண்களும் வினா மூலம் மார்க்கத்தை சரிவர புரிந்து கொண்டார்கள்.

மார்க்கம் தொடர்பாக தங்களிடம் கேட்கும் கேள்விகளுக்கு சரியான பதில் இல்லை என்பதால் கேள்வி கேட்கக் கூடாது என்று சொல்லி சிலர் தப்பிக்க நினைக்கிறார்கள். நபிகளாரிடம் நபித்தோழர்களும் பொதுமக்களும் மார்க்கம் குறித்து பல்வேறு சந்தேகங்களைக் கேட்டார்கள். அவர்களை அதட்டாமல் அகற்றாமல் அவர்களுக்கு அழகிய முறையில் நபிகளார் பதில் கொடுத்தார்கள் என்பதற்கு எண்ணற்ற நபிமொழிகள் சாட்சிகளாக இருக்கின்றன. இதற்கு ஆதாரமாக சில செய்திகளை இப்போது காண்போம்.

என் தோழர்கள் (நன்மை தரும் செயல்களைப் பற்றி அதிகமாகக் கேள்விகள் கேட்டு நபி (ஸல்) அவர்களிடமிருந்து) நன்மையைக் கற்றுக் கொண்டார்கள். நான் (தவிர்ந்து கொள்ள வேண்டும் என்ற ஆர்வத்தில் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் திரும்பக் கேட்டு இனி வரவிருக்கும்) தீமையைப் பற்றித் தெரிந்து  கொண்டேன்.

அறிவிப்பவர்: ஹுதைஃபா பின் யமான் (ரலி)

நூல்: புகாரி (3607)

ஒரு கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களிடம், "(கிராமத்திலிருந்து) சிலர் எங்களிடம் இறைச்சி கொண்டு வருகிறார்கள். (அதை அறுக்கும்போது) அல்லாஹ்வின் பெயர் கூறப்பட்டதா, இல்லையா என்று எங்களுக்குத் தெரியாது. (இந்த நிலையில் நாங்கள் அதை உண்ணலாமா?)'' என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அதன் மீது அல்லாஹ்வின் பெயர் சொல்லி அதை உண்ணுங்கள்'' என்று பதில் சொன்னார்கள். கேள்வி கேட்ட கூட்டத்தார் இறை மறுப்பை அப்போதுதான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்தைத் தழுவியிருந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: புகாரி (5507)

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர் (தனிப்பட்ட) கோபத்தினால் போரிடுகின்றார். (மற்றொருவர்) இன மாச்சர்யத்தினால் போரிடுகின்றார். இவற்றில் அல்லாஹ்வின் பாதையில் செய்யப்படும் போர் எது?' என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவரை நோக்கித் தம் தலையை உயர்த்தி, "எவர் அல்லாஹ்வின் வாக்கே மேலோங்கியதாய் இருக்க வேண்டும் என்பதற்காகவே போரிடுகின்றாரோ அவர்தாம் வலிவும் மாண்பும் மிக்க அல்லாஹ்வின் பாதையில் போரிடுபவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள். கேள்வி கேட்டவர் நின்று கொண்டிருந்ததால்தான் நபி (ஸல்) அவர்கள் தம் தலையை உயர்த்திப் பார்த்தார்கள்.

அறிவிப்பவர்: அபூ மூசா (ரலி)

நூல் : புகாரி (123)

நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, "என் தாயார் ஹஜ் செய்வதற்காக நேர்ச்சை செய்திருந்தார். ஆனால், ஹஜ்ஜை நிறைவேற்றுவதற்குள் அவர் இறந்துவிட்டார். நான் அவர் சார்பாக ஹஜ் செய்யலாமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "ஆம்; அவர் சார்பாக ஹஜ் செய்'' (எனக் கூறிவிட்டு) "உன் தாயார் மீது கடன் இருந்தால் நீ அதை (அவர் சார்பாக) நிறைவேற்றுவாய் அல்லவா?'' என்று கேட்டார்கள். அந்தப் பெண், "ஆம் (நிறைவேற்றுவேன்)'' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் (நேர்ச்சையின் மூலம்) அல்லாஹ்வுக்குச் செலுத்த வேண்டியதை நிறைவேற்றுங்கள். ஏனெனில், வாக்கு நிறைவேற்றப்பட அல்லாஹ்வே மிகவும் அருகதையுடையவன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (7315)

ஓர் அவையில் நபி (ஸல்) அவர்கள் மக்களிடம் (மார்க்க விஷயமாகப்) பேசிக்கொண்டிருக்கும் போது அவர்களிடம் கிராமவாசி ஒருவர் வந்து,  "மறுமை நாள் எப்போது?'' எனக் கேட்டார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு பதிலளிக்காமல்) தமது பேச்சைத் தொடர்ந்து கொண்டிருந்தார்கள். அப்போது (அங்கிருந்த) மக்களில் சிலர், "நபி (ஸல்) அவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுற்றார்கள்; ஆயினும் அவர் கேட்ட கேள்வியை நபி (ஸல்) அவர்கள் விரும்பவில்லை' என்று கூறினர். மற்ற சிலர், "நபியவர்கள் அந்த மனிதர் கூறியதைச் செவியுறவில்லை' என்றனர். நபி (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்துவிட்டு, "மறுமை நாளைப் பற்றி (என்னிடம் கேள்வி) கேட்டவர் எங்கே?'' என்று கேட்டார்கள். உடனே அவர் "அல்லாஹ்வின் தூதரே! இதோ நான்தான்' என்றார். நபி (ஸல்) அவர்கள், "அமானிதம் (அடைக்கலம்) பாழ்படுத்தப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்!'' என்று சொன்னார்கள். அதற்கவர், "அது எவ்வாறு பாழ்படுத்தப்படும்?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அதிகாரங்கள் தகுதியற்றோரிடம் ஒப்படைக்கப்பட்டால் நீர் மறுமை நாளை எதிர்பாரும்!'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (59)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "விடைபெறும்' ஹஜ்ஜின்போது மினாவில் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம் மக்கள் கேள்விகள் கேட்டுக்கொண்டிருந்தனர். அப்போது ஒருவர் நபி (ஸல்)  அவர்களிடம் வந்து "நான் (சட்டம்) தெரியாமல் குர்பானி (பலி) கொடுப்பதற்கு முன்னால் என் தலைமுடியை மழித்துவிட்டேன்'' என்றார். அதற்கு அல்லாஹ்வின்   தூதர் (ஸல்) அவர்கள், "பரவாயில்லை; இப்போது குர்பானி கொடுத்துக் கொள்வீராக!'' என்றார்கள்.

மற்றொருவர் வந்து "நான் தெரியாமல் கல் எறிவற்கு முன்பே குர்பானி கொடுத்து விட்டேன்'' என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பரவாயில்லை; இப்போது கல் எறிந்து கொள்வீராக!'' என்றார்கள். (அன்றைய தினம்) (பிற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் முற்படுத்திச் செய்யப்பட்டு விட்டதாகவும் (முற்படுத்திச் செய்யப்பட வேண்டிய) சில கிரியைகள் பிற்படுத்திச் செய்யப்பட்டுவிட்டதாகவும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்ட போதெல்லாம் "பரவாயில்லை; (விடுபட்டதைச்) செய்யுங்கள்!' என்றே சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)

நூல்: புகாரி (83) (84)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு கிராமவாசி வந்து, "(வெள்ளை நிறத்தவனான எனக்கு) என் மனைவி கறுப்பான மகனைப் பெற்றெடுத்தாள்; அவனை நான் (என் மனத்தில்) ஏற்க மறுத்துவிட்டேன்'' என்று சொன்னார். அதற்கு அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உன்னிடம் ஒட்டகங்கள் உள்ளனவா?'' என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, "ஆம்'' என்று பதிலளித்தார்.

நபி (ஸல்) அவர்கள் "அவற்றின் நிறம் என்ன?'' என்று கேட்டார்கள். அவர், "சிவப்பு'' என்று சொன்னார். "அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்களும் உள்ளனவா?'' என்று நபி (ஸல்) அவர்கள் கேட்க, அவர் "(ஆம்) அவற்றில் சாம்பல் நிற ஒட்டகங்கள் இருக்கவே செய்கின்றன'' என்று பதிலளித்தார். "(தாயிடம் இல்லாத) அந்த (சாம்பல்) நிறம் அவற்றுக்கு மட்டும் எவ்வாறு வந்ததென நீ கருதுகிறாய்?'' என்று கேட்டார்கள். அந்தக் கிராமவாசி, "ஆண் ஒட்டகத்தின் பரம்பரை காரணமாக வந்திருக்கலாம், அல்லாஹ்வின் தூதரே!'' என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள் "(உன்னுடைய) இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தைக் கொண்டிருக்கக் கூடும்'' என்று கூறி, அவன் தன்னுடையவன் அல்லன் என்று மறுக்க அந்தக் கிராமவாசியை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: புகாரி (7314)

கேள்வி ஞானம் நேர்வழி தரும்

அல்லாஹ்வின் தூதரிடம் அனைத்து விசயங்களைப் பற்றியும் மக்கள் கேட்டு தெரிந்து கொண்டார்கள். படைத்தவன் - படைப்பினங்கள், தனிமனிதன் - சமூகம், ஆண்கள் - பெண்கள், இம்மை - மறுமை, நம்பிக்கையாளர்கள் - மறுப்பாளர்கள், நேர்வழி - வழிகேடு, நன்மை - தீமை என்று எல்லா விதமான கோணங்களிலும் வினாக்களை எழுப்பி மார்க்கத்தைக் கற்றுக் கொண்டார்கள். இப்படி எதையும் சீர்தூக்கி ஆராய்ந்து, கேள்வி கேட்டு தெளிந்து பின்பற்றுவது என்பது நம்மை நேர்வழிக்கு அழைத்துச் செல்லும். தீய காரியங்களை விட்டு விலகுவதற்கு வழிகாட்டும். மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்டு உண்மையைத் தெரிந்து தங்களைத் திருந்திக் கொள்பவர்கள் எல்லாக் காலத்திலும் இருக்கிறார்கள். ஷிர்க், பித்அத்தான காரியங்களில் இருந்து கொண்டு தவ்ஹீதை எதிர்த்து கேள்வி கேட்ட பலர் இன்று அதன் காப்பாளர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். இந்தக் கருத்தை உறுதிப்படுத்தும் நிகழ்வொன்றைப் பார்ப்போம்.

நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்தபோது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளி(யின் வளாகத்தி)ல் ஒட்டகத்தைப் படுக்கவைத்து அத(ன் முன்னங்காலி)னை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் "உங்களில் முஹம்மது அவர்கள் யார்?' என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள். "இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளைநிற மனிதர்தாம்' என்று நாங்கள் சொன்னோம்.

உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை "அப்துல் முத்தலிபின் (மகனின்) புதல்வரே!' என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் "என்ன விஷயம்?'' என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் "நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "உம் மனதில் பட்டதைக் கேளும்!'' என்றார்கள்.

உடனே அம்மனிதர் "உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா?' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம், அல்லாஹ் சாட்சியாக!'' என்றார்கள். அடுத்து அவர் "அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (நாளொன்றுக்கு) ஐவேளைத் தொழுகைகளைத் தொழுது வரவேண்டுமென்று உமக்கு(ம் மக்களுக்கும்) கட்டளையிட்டிருக்கின்றானா?'' என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் "ஆம், அல்லாஹ் சாட்சியாக'' என்றார்கள். அவர் "அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம், அல்லாஹ் சாட்சியாக!' என்றார்கள். அவர், "அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "ஆம், அல்லாஹ் சாட்சியாக!' என்றார்கள்.

(இவற்றைக் கேட்டுவிட்டு) அம்மனிதர் "நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கின்றேன்'' என்று கூறிவிட்டு "நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான்தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா'' என்றும் கூறினார்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி)

நூல் : புகாரி (63)

மார்க்கம் பற்றி கேள்வி கேட்பது குற்றமா?

மார்க்கம் என்று எந்தவொரு செய்தியைச் சொன்னாலும் ஆதாரம் கேட்டு அது குறித்து சிந்தித்து முடிவெடுக்கும் சிறந்த நிலைக்கு மக்கள் வந்திருக்கிறார்கள். இச்சூழ்நிலையில் சிலர், மக்களின் ஆய்வுச் சிந்தனையை மழுங்கடிக்க முனைகிறார்கள். மார்க்கம் பற்றிய கேள்விகளைக் கேட்கக் கூடாது; அந்தப் பண்பு நம்மைச் சீரழித்து விடும் என்று சில செய்திகளை முன்வைக்கிறார்கள். அதன் உண்மைத் தன்மையை இப்போது பார்ப்போம்.

வாதம் 1:

மார்க்கத்தைப் போதிப்பவர்களிடம் எந்தவொரு எதிர்க் கேள்வியும் கேட்கக் கூடாது என்று சொல்பவர்கள் 5:101 வசனத்தை ஆதாரமாக எடுத்துக் காட்டுகிறார்கள்.

விளக்கம் 1:

மார்க்கம் தொடர்பாக கேள்வி கேட்பது தவறு என்ற கருத்தில் மேற்கண்ட இறைவசனம் அமையவில்லை. மாறாக, இறைவனிடம் இருந்து இறைத்தூதருக்கு இறைச் செய்தி அருளப்படும் நேரங்களில் கேள்வி கேட்பதைத்தான் குறிக்கிறது. மேலும் அதற்காக காரணமும் அதிலே தெளிவாக சொல்லப்பட்டுள்ளது. அந்தக் காரணத்திற்கு வலுசேர்க்கும் வகையில் நபிமொழியும் இருக்கிறது.

நம்பிக்கை கொண்டோரே! சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள்! அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்குத் தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டு விடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன்; சகிப்புத் தன்மையுள்ளவன். உங்களுக்கு முன் சென்ற சமுதாயத்தினர் இவ்வாறு கேள்வி கேட்டனர். பின்னர் அவர்கள், அவற்றை மறுப்போராக ஆகி விட்டனர்.

(திருக்குர் ஆன் 5:101, 102)

சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விளையாட்டாகக் கேள்வி கேட்பது வழக்கம். இவ்வாறாக ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், "என் தந்தை யார்?'' என்று கேட்டார். தமது ஒட்டகம் காணாமற்போய் விட்ட  இன்னொருவர் "என் ஒட்டகம் எங்கே?'' என்று கேட்டார். அப்போதுதான் அல்லாஹ், அவர்கள் விஷயத்தில் இந்த வசனத்தை அருளினான்:

இறைநம்பிக்கை கொண்டவர்களே! சில விஷயங்களைப் பற்றி (துருவித் துருவிக்) கேட்காதீர்கள். (ஏனெனில்,) அவை உங்களிடம் வெளிப்படுத்தப்பட்டால் அவை உங்களுக்கு மன வருத்தத்தை ஏற்படுத்தும். குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருக்கும் வேளையில் அவற்றைப் பற்றி நீங்கள் வினவினால் அப்போது அவை உங்களுக்கு வெளிப்படையாகக் கூறப்பட்டுவிடும். நீங்கள் (இதுவரை விளையாட்டுத் தனமாக) வினவியவற்றை அல்லாஹ் மன்னித்து விட்டான். அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனாகவும் சகிப்புத் தன்மையுடையவனாகவும் இருக்கின்றான்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: புகாரி (92) (4622) (7295)

என்னுடைய தந்தை யார்? என்றுகூட சில நபர்கள் இறைத் தூதர் (ஸல்) அவர்களிடம் சகட்டு மேனிக்கு கேள்வியைக் கேட்டனர். இது மாதிரியான போன்ற கேள்விகள் கேட்கப்படும்போது, தம் தந்தை என இவர் யாரை நினைக்கிறாரோ அவர் அல்லாதவர் ஒருவேளை தந்தையாக இருந்து விட்டால் வீணான மனச் சங்கடத்தை கவலையை அவர் சந்திக்க வேண்டி இருக்கும். எனவேதான் இறைத்தூதரிடம் சில விஷயங்கள் குறித்து கேள்வி கேட்கக் கூடாது என மார்க்கத்தில் தடை விதிக்கப்பட்டது.

(தொடரும் இன்ஷா அல்லாஹ்...)

January 2, 2016, 12:04 PM

செப்டம்பர் தீன்குலப் பெண்மணி 2015

ஷிர்க் ஒழிப்பு மாநாடு ஏன்?

எதிர்வரும் 2016 ஜனவரி 31 அன்று தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் திருச்சி மாநகரில் மாபெரும் ஷிர்க் ஒழிப்பு மாநாட்டை இன்ஷா அல்லாஹ் நடத்தவுள்ளது.

தொடர்ந்து படிக்க October 20, 2015, 7:25 PM

அகடோபர் தீன்குலப் பெண்மணி 2015

தொடர்ந்து பழிவாங்கும் அரசும், நீதிமன்றங்களும்

குடியரசுத் தலைவர் பிரணாப் முகர்ஜி மார்ச் 2015ல், மகாராஷ்டிர மாநில கால்நடைகள் பாதுகாப்பு (திருத்த) சட்டம்-1995க்கு ஒப்புதல் அளித்த பிறகு, மாட்டிறைச்சி வியாபாரத்தின் மீது, மகாராஷ்டிர மக்கள் மீது கடுமையான தாக்குதலை பாஜக அரசு தொடுத்துள்ளது.

இச்சட்டத்தின் படி, மாட்டிறைச்சி வைத்திருப்போர் மற்றும் விற்போருக்கு 5 ஆண்டுகள் சிறைத் தண்டனையும் அபராதமும் விதிக்கப்படும். மேலும், மாட்டிறைச்சி  உண்பதுகூட குற்றச் செயலாகிறது.

கால்நடைகளில் மீது இரக்கம் காட்டுகிறோம் என்ற பெயரில் மக்களைக் கொடுமைப்படுத்தும் செயலை பாஜக செய்கிறது.

மகாராஷ்டிராவைத் தொடர்ந்து, அரியானாவின் பாஜக அரசானது, மாடுகளைக் கொல்வதை அனைத்து கால்நடைகளுக்கும் விரிவுபடுத்தி, 10 ஆண்டுகள் சிறைத் தண்டனை என சட்டம் இயற்றியுள்ளது.

பாஜக ஆட்சி செய்யும் ராஜஸ்தான், ஜார்கண்ட் மாநில அரசுகளும் இத்தகைய சட்டங்களை இயற்றுவதற்குத் தயாராகி வருகின்றன. பசுவைத் தாயாக அறிவிக்கக் கோரி, பாஜக எம்பி யோகி ஆதித்யநாத் “மிஸ்டு கால்’ பிரச்சார சேவையைத் தொடங்கியுள்ளார்; சமீபத்தில், கேதர்நாத் கோவிலுக்குச் சென்ற இராகுல் காந்தி மாட்டுக்கறியைச் சாப்பிட்டுவிட்டு சென்றதால்தான் நேப்பாள நிலநடுக்கம் ஏற்பட்டது என்று திருவாய் மலர்ந்துள்ளார்.

மாட்டிறைச்சியை உண்பவர்கள் நமது நாட்டு மக்கள் தொகையில் பாதிக்கும் மேற்பட்டவர்கள் ஆவர். தலித்துகள் மற்றும் பழங்குடியினர், முஸ்லிம்கள், கிறித்துவர்கள் ஆகியோரில் பெரும்பான்மையினரும், கணிசமான ஏழை இந்துக்களும் மாட்டிறைச்சியை உணவாகக் கொண்டுள்ளனர்.

கேரளாவில் மட்டும் இந்து மதத்தைச் சார்ந்த 72 சாதிகள் மாட்டுக் கறியை உண்கின்றனர். மலிவான விலையில் கிடைக்கிற புரதச் சத்துமிக்க உணவு என்பது இதற்கான காரணமாகும்.

மாட்டிறைச்சித் தடை, மக்களின் உணவு உரிமை மீது, ஆரோக்கியத்தின் மீது, ஏழ்மையின் மீது தொடுக்கப்படுகிற தாக்குதலாகும். இது கிலோ ரூ.400க்கும் கூடுதலாக விற்கப்படும் ஆட்டிறைச்சியை வாங்க சக்தியில்லாத மக்களை ரசாயன முறையில் நஞ்சாக உருவாக்கப்படுகிற பிராய்லர் கோழி நுகர்வை நோக்கி தள்ளும் நடவடிக்கையாகும்.

இதுபோன்று மோசமான செயல்களில் அரசு ஈடுபடும் போது நீதிமன்றங்கள் பாதிக்கப்பட்டவனுக்கு உதவும் என நீதிமன்றங்களுக்குச் சென்றால் அரசைவிட மோசமாக, காயப்பட்டவனின் கண்களில் குத்துவதுபோல் நீதி மன்றம் நடந்து கொள்கிறது.

மாட்டிறைச்சிக்குத் தடைவிதிக்க வேண்டுமென ஜம்மு - காஷ்மீர் உயர்நீதி மன்றத்தில் பொதுநலன் வழக்கு போட்டவுடன் எப்போது இது போன்ற வழக்குகள் வரும் என்ற எதிர்பார்த்தது போல் உடனடியாக மாட்டிறைச்சி விற்பனைக்குத் தடைவிதித்து, மாடுகளை இறைச்சிக்காக கொல்பவர்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், இதற்காக மாநிலம் முழுவதிலும் கண்காணிப்பை தீவிரப்படுத்த வேண்டும் என்றும் நீதிபதிகள் உத்தரவிட்டுள்ளனர்.

இந்தியாவில் அதிக முஸ்லிம்கள் வாழும் முதல் மாநிலம் கஷ்மீர். அந்த மாநிலத்தில்கூட அவர்கள் விரும்பும் உணவைச் சாப்பிட அனுமதி மறுக்கப்படுகிறது.

எத்தனையோ அவசர வழக்குகளை எல்லாம் காலம் தாழ்த்தும் நீதிமன்றம் முஸ்லிம்களுக்கு எதிராக வழக்கு வந்துவிட்டால் உடனே விசாரித்து முஸ்லிம்களுக்கு எதிராகத் தீர்ப்பும் வழங்கிவிடுகிறது.

இதைப்போன்று பக்ரீத் பண்டிகை வருவதால் அந்த நாட்களில் மாட்டிறைச்சி விற்பனைக்கு விதிவிலக்கு அளிக்க வேண்டும் என்று மும்பை நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்து, மனுதாரர்கள் தரப்பில் ஆஜரான வக்கீல்கள், ‘‘விலங்குகளைக் கொன்று அதன் இறைச்சியை ஏழைகளுக்கு வழங்குவது முஸ்லிம் மத விழாக்களின்போது மேற்கொள்ளப்பட வேண்டிய முக்கியமான அங்கம். ஜெயின் சமூகத்தினரின் ‘பர்யுசான்’ பண்டிகையையொட்டி இரண்டு நாட்கள் இறைச்சி விற்பனைக்கு தடை விதிக்கும் மாநில அரசு, மாட்டிறைச்சி மீது விதிக்கப்பட்ட தடையை ஏன் இரண்டு நாட்களுக்கு நீக்கக் கூடாது?’’ என்று வாதிட்டனர்.

வாதத்தைக் கேட்டறிந்த நீதிபதிகள், இந்தத் தருணத்தில் மாட்டிறைச்சி தடை மீது எந்த நிவாரணத்தையும் நாங்கள் அளிக்க முடியாது. அவ்வாறு தளர்வு கொண்டு வந்தால், அது மராட்டிய விலங்குகள் தடை சட்டத்துக்கு தடை விதித்ததாக ஆகி விடும் என்று கூறி (எத்தனையோ அரசு இயற்றிய சட்டங்களுக்கு தடைவிக்கும் போது இது நினைவுக்கு வருவதில்லை. முஸ்லிம்கள் என்றால் மட்டும்தான் நீதிபதிகளுக்கு இவை நினைவுக்கு வருகிறது) இந்த வழக்கின் அடுத்தகட்ட விசாரணையை அக்டோபர் 12-ந் தேதிக்கு தள்ளி வைத்தனர்.

மேலும், இந்த விவகாரத்தில் பிரதிவாதிகள் அனைவரும் விரிவான பிரமாணப்பத்திரம் தாக்கல் செய்த பின்னர் தான் விசாரணையை முன் எடுத்து செல்ல முடியும் என்று நீதிபதிகள் தெரிவித்துள்ளனர்.

முஸ்லிம்மல்லாதவர்களுக்கு என்றால் உடனே தடைவிதிக்கும் நீதிமன்றம், இரண்டு நாட்கள் மட்டும் அனுமதி வழங்குங்கள் என்ற கேட்ட போது. தளர்த்த முடியாது என்று வழக்கைத் தள்ளிவைக்கிறது.

பன்முகத் தன்மை வாய்ந்த நாட்டில் இந்நாட்டின் குடிமக்களாக இருக்கும் முஸ்ஸிம்களுக்கு மட்டும் எதிராக மோடி மற்றும் மோடியின் கொள்கைகளைப் பின்பற்றி நடக்கும் நீதிபதிகள், நிச்சயம் பதில் சொல்லும் காலம் வரும்.

 

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என நம்புவது இணைவைத்தலே!

சூனியத்தால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் குற்றமாக அமைந்துள்ளது.

அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கக் கூடாது என்பதை நாம் அறிந்து வைத்துள்ளோம்.

இரண்டு கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ, மூன்று கடவுள்களில் அல்லாஹ்வும் ஒருவன் என்றோ நம்புவதுதான் இணை கற்பித்தல் என்று சிலர் நினைக்கின்றனர். இதுவும் இணை கற்பித்தல் தான் என்றாலும் இணை கற்பித்தல் இதை விட விரிவான அர்த்தம் கொண்டதாகும்.

அல்லாஹ்வுக்கு ஏராளமான பண்புகள் உள்ளன. அந்தப் பண்புகளில் ஏதாவது ஒரு பண்பு அல்லாஹ்வுக்கு இருப்பது போல் ஒரு மனிதனுக்கு உள்ளது என்று ஒருவன் நம்பினால் அந்தப் பண்பு விஷயத்தில் அல்லாஹ்வைப் போல் அந்த மனிதனைக் கருதியவர்களாக ஆகிவிடுவான். அதாவது அல்லாஹ்வுக்கு இணை கற்பித்தவனாகி விடுவான்.

இதைப் பின்வரும் வசனங்களில் இருந்து நாம் அறிந்து கொள்ள இயலும்.

அவன் நமக்கு உதாரணம் கூறுகிறான். அவனை (நாம்) படைத்திருப்பதை மறந்து விட்டான். "எலும்புகள் மக்கிய நிலையில் அதை உயிர்ப்பிப்பவன் யார்?'' என்று கேட்கிறான்.

திருக்குர்ஆன் 36:78

அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.                               திருக்குர்ஆன் 42:11

அவனுக்கு நிகராக யாருமில்லை.             திருக்குர்ஆன் 112:4

அல்லாஹ்வைப் போல் கேட்பவன் இல்லை. அவனைப் போல் பார்ப்பவன் இல்லை. அவனைப் போல் செயல்படுபவன் இல்லை என்பது இதன் கருத்தாகும்.

அல்லாஹ் ஒரு மனிதனின் காலை முறிக்க நினைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். பெரிய அரிவாளை எடுத்து வந்து அந்த மனிதனின் காலை அல்லாஹ் வெட்ட மாட்டான். அந்த மனிதனைத் தொடாமலே எந்தக் கருவியையும் பயன்படுத்தாமலே முறிந்து போ என்பான். அது முறிந்து விடும்.

ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனின் காலை முறிக்க நினைத்தால் அரிவாளையோ, உருட்டுக்கட்டையையோ எடுத்து வந்து காலைத் தாக்கியே முறிக்க முடியும்.

அல்லாஹ், ஒருவனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் மன நோயாளியாக ஆகு என்பான். உடனே அந்த மனிதன் மன நோயாளியாக ஆகிவிடுவான். ஆனால் ஒரு மனிதன் இன்னொரு மனிதனை மன நோயாளியாக ஆக்க நினைத்தால் அதற்குரிய மாத்திரைகளை அல்லது மருந்தை அவனுக்குள் செலுத்தி, அல்லது மூளை சிதையும் அளவுக்கு தலையில் தாக்கியே மன நோயாளியாக ஆக்க முடியும்.

இந்த விஷயத்தில் அல்லாஹ்வுக்கும், மனிதனுக்கும் உள்ள வித்தியாசம் பளிச்சென்று தெரிகிறது.

அவன் எதைச் செய்ய நாடுகிறானோ ஆகு என்பான்; உடனே ஆகிவிடும் என்று அல்லாஹ் திருக்குர்ஆனில் 2:117, 3:47, 3:59, 6:73, 16:40, 19:35, 36:82, 40:68, ஆகிய வசனங்களில் தெளிவுபடக் கூறுகிறான்.

ஆகு என்று சொல்லி ஆக்கும் வல்லமை அல்லாஹ்வுக்கு மட்டுமே உண்டு. ஆனால் சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புவோர் சூனியக்காரனை எந்த இடத்தில் வைக்கிறார்கள்?

சூனியக்காரன் உருட்டுக்கட்டையால் காலை முறிப்பான் என்று நம்புவதில்லை. அல்லாஹ்வைப் போல் ஆகு என்று கட்டளையிட்டு பாதிப்பை ஏற்படுத்துவான் என்றுதான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் எந்த மருந்தையும் செலுத்தாமல் ஆகு எனக் கூறி ஒருவனைப் பைத்தியமாக ஆக்க வல்லவன் என்று நம்புகிறார்கள்.

ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கவலைப்படுத்த, காயப்படுத்த உலகில் எந்த வழிமுறைகள் உள்ளனவோ அவற்றில் எதையும் பயன்படுத்தாமல் மந்திர சக்தியின் மூலமாக ஒருவன் மற்றவனுக்குப் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்புகின்றனர்.

உதாரணமாக ஒரு மனிதன் இன்னொரு மனிதனைக் கத்தியால் குத்தலாம். அல்லது இருவருமே கத்தியால் குத்திக் கொள்ளலாம். இதனால் ஒருவருக்கோ அல்லது இருவருக்குமோ பாதிப்பு ஏற்படும்.

இதுபோன்று ஒருவருக்கொருவர் பாதிப்புகளை ஏற்படுத்தலாம்.

ஒருவர் இன்னொருவரைத் திட்டுகின்றார்; அல்லது அவதூறு சொல்கின்றார் என்றால், யாரைத் திட்டுகின்றாரோ அல்லது அவதூறு சொல்கின்றாரோ அவரைக் கவலையடையச் செய்யலாம்.

இதுபோன்ற வழிகளில் ஒரு மனிதன் இன்னொரு மனிதன் மீது பாதிப்பை ஏற்படுத்தலாம். இதைச் செய்வதற்காக தனியாக கற்றுத்தேறும் அவசியம் இல்லை. யாருக்கு எதிராக யாரும் இதைச் செய்ய முடியும்.

உலகத்தில் மனிதர்கள் சக மனிதர்களுக்குப் பாதிப்பு ஏற்படுத்துவதற்கு அல்லாஹ் எந்த வழிமுறையை ஏற்படுத்தியுள்ளானோ அந்த வழிமுறைகள் தவிர மற்ற அனைத்து வழிமுறைகளும் அல்லாஹ்வுக்குச் சொந்தமானவை.

பாதிப்பு ஏற்படுத்தப்பட வேண்டிய நபரைத் தொடாமல், அருகில் வராமல், அவரைப் பார்க்காமல் எங்கோ ஓரிடத்தில் இருந்து கொண்டு அவருக்குப் பாதிப்பை ஏற்படுத்துவார் என்று நம்புகின்றனர்.

யாருக்குப் பாதிப்பை ஏற்படுத்த வேண்டுமோ அவரின் சட்டை, வியர்வை, காலடி மண், தலைமுடி இது போன்றவற்றை வைத்துக் கொண்டு அதனை பொம்மை போல் செய்து பாதிப்பு ஏற்படுத்த வேண்டியவரின் பெயரை அந்தப் பொம்மைக்கு வைத்து அந்த பொம்மையின் வயிற்றில் குத்தினால் அவரது வயிற்றுக்கு பாதிப்பு ஏற்படும். அந்தப் பொம்மையின் கண்ணைக் குத்தினால் இவரின் கண்ணுக்கு பாதிப்பு ஏற்படும். இது தான் சூனியம் என்று மக்கள் நம்புகின்றனர். உடலுக்கு மட்டுமின்றி மனதிலும் பாதிப்பை ஏற்படுத்த சூனியக்காரனால் இயலும் என்று நம்புகின்றனர்.

ஒருவருக்குப் பாதிப்பை ஏற்படுத்த எந்த வழிமுறைகளை அல்லாஹ் ஏற்படுத்தியுள்ளானோ அவற்றில் எந்த ஒன்றையும் சூனியக்காரன் செய்ய மாட்டான்.

சூனியத்தால் பாதிப்பு ஏற்படுத்த முடியும் என்று நம்பக் கூடியவர்கள் சூனியக்காரன், அல்லாஹ்வைப் போல் செயல்படும் திறன் படைத்தவன் என்றுதான் நம்புகிறார்கள்.

சூனியக்காரன் தனது சுயமான ஆற்றலால் இப்படிச் செய்யவில்லை. அல்லாஹ் அவனுக்கு அந்த ஆற்றலைக் கொடுத்துள்ளதால்தான் அப்படிச் செய்ய முடிகிறது. இது எப்படி இணை வைத்தலாகும்? என்று விதண்டாவாதம் செய்கின்றனர்.

நாங்களும் தவ்ஹீத்வாதிகள்தான் என்று சொல்லிக் கொள்ளும் கூட்டத்தினரும் இதே பதிலைச் சொல்லி இணைவைப்பை நியாயப்படுத்தப் பார்க்கின்றனர்.

இந்த வாதத்தைப் பார்க்கும்போது இவர்கள் ஏகத்துவத்தின் அரிச்சுவடியைக் கூட படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.

எல்லா படைப்பினங்களின் செயல்பாடுகளும் அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் நடப்பவைதான்.

நாம் பேசுகிறோம்; பார்க்கிறோம்; கேட்கிறோம்; உண்ணுகிறோம்; பருகுகிறோம்; ஓடுகிறோம்; ஆடுகிறோம்; இல்லறத்தில் ஈடுபடுகிறோம் என்றால் அவை அனைத்துமே நாமாக உருவாக்கிக் கொண்டதல்ல. அல்லாஹ் கொடுத்த அடிப்படையில் தான் இவற்றை நாம் செய்ய முடிகிறது.

ஆனால் அல்லாஹ், மனிதனுக்கு ஏராளமான ஆற்றலைக் கொடுத்து இருந்தாலும் ஒருக்காலும் தனக்கு இருப்பது போன்ற ஆற்றலை யாருக்கும் கொடுக்க மாட்டான். எனக்கு இணை இல்லை என்று அல்லாஹ் சொல்வதில் இது அடங்கியுள்ளது.

"சந்ததியை ஏற்படுத்திக் கொள்ளாத அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்.  ஆட்சியில் அவனுக்குப் பங்காளி இல்லை. உதவியாளன் எனும் இழிவும் அவனுக்கு இல்லை'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! அவனை அதிகம் பெருமைப்படுத்துவீராக!

திருக்குர்ஆன் 17:111

அவனுக்கே வானங்கள் மற்றும் பூமியின் அதிகாரம் உள்ளது. அவன் பிள்ளையை ஏற்படுத்திக் கொள்ளவில்லை.  அதிகாரத்தில் அவனுக்கு எந்தப் பங்காளியும் இல்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தான். அதைத் திட்டமிட்டு அமைத்தான்.

திருக்குர்ஆன் 25:2

தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் யாருக்கும் அல்லாஹ் கொடுக்க மாட்டான் என்பதை அழகான உதாரணத்தின் மூலம் அல்லாஹ் மேலும் விளக்குவதைப் பாருங்கள்!

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா இவர்கள் நிராகரிக்கிறார்கள்?

திருக்குர்ஆன் 16:71

அல்லாஹ் மனிதர்களுக்கு எந்த அளவு ஆற்றலை அளிப்பான் என்று இங்கே அல்லாஹ் தெளிவுபடுத்துகிறான். அதாவது தனக்கே உரித்தான எந்தத் தன்மையையும் அல்லாஹ் யாருக்கும் கொடுக்கவே மாட்டான் என்பதுதான் அந்த அடிப்படை.

இந்த அடிப்படையை விளங்கிக் கொண்ட யாரும் தன்னைப் போன்று செயல்படும் ஆற்றலை அல்லாஹ் சூனியக்காரனுக்கு வழங்குவான் என்று சொல்லவே மாட்டார்.

இந்த மனிதன் குழந்தையைக் கொடுப்பான்; ஆனால் அவனாகக் கொடுப்பதில்லை. அல்லாஹ் கொடுத்த ஆற்றல் மூலம் இதைச் செய்கிறான் என்று சொல்லி விட்டால் அது இணை வைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா? என்பதை இவர்கள் சிந்திக்க வேண்டும்.

ஒருவன் சூரியனை வணங்குகிறான். சூரியனுக்கு சுயமான ஆற்றல் இல்லை. ஆனால் அல்லாஹ் சூரியனுக்கு அந்த ஆற்றலை வழங்கியுள்ளான் என்று சேர்த்துக் கொண்டால் அது இணை வைத்தல் இல்லை என்று ஆகிவிடுமா?

மக்காவில் வாழ்ந்த காஃபிர்களும் அல்லாஹ்வை நம்பினார்கள். அத்துடன் வேறு சிலரையும் வணங்கி வந்தனர்.

இவ்வாறு மற்றவர்களை வணங்கும்போது அவர்களெல்லாம் கடவுள்கள் என்ற நம்பிக்கையோ, அவர்களுக்கு அனைத்து ஆற்றலும் உண்டு என்ற நம்பிக்கையோ அவர்களிடம் இருக்கவில்லை.

எனவே இது இணை கற்பித்தலில் சேராது என்று வாதிட்டு அவர்களும் இதே நியாயத்தைத்தான் சொன்னார்கள். அல்லாஹ் அதை ஏற்றுக் கொள்ளவில்லை.

மேலும் சூனியக்காரனுக்கு எந்த ஆற்றலும் இல்லை என்று திருக்குர்ஆன் தெளிவாகச் சொல்கிறது.

அவர்கள் செய்திருப்பது சூனியக்காரனின் சூழ்ச்சி. (போட்டிக்கு) வரும் போது சூனியக்காரன் வெற்றி பெற மாட்டான்''

(அல்குர்ஆன் 20:69)

"நீங்கள் கொண்டு வந்திருப்பது சூனியமாகும். அல்லாஹ் அதை ஒழிப்பான். குழப்பவாதிகளின் செயலை அல்லாஹ் மேலோங்கச் செய்வதில்லை''                                        (அல்குர்ஆன் 10:81,82)

மழையைப் பொழிவிக்கும் அதிகாரம் அல்லாஹ்விற்குரியது. இந்த ஆற்றல் நட்சத்திரத்திற்கு இருப்பதாக நம்பும் நட்சத்திர ஜோசியத்தை சூனியக்கலை என்றும், அவ்வாறு நம்புபவர்கள் காஃபிர்கள் என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : யார் நட்சத்திர ஜோசியத்தைக் கற்றுக் கொள்கிறாரோ அவர் அதன் மூலம் சூனியத்தின் ஒரு பகுதியைத் தவிர வேறெதையும் கற்றுக் கொள்ளமாட்டார். (கற்பதை) அதிகப்படுத்துபவன் (சூனியத்தை கற்பதை) அதிகப்படுத்திக் கொள்கிறான்.            அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : நஸாயீ (2000)

ஸைத் பின் காலித் அல்ஜுஹனீ (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபியா எனுமிடத்தில் எங்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அன்றிரவு மழை பெய்திருந்தது. தொழுது முடித்ததும் மக்களை நோக்கி நேராகத் திரும்பி, "உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், "அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள்'' என்று கூறினர். அப்போது "என்னை நம்பக் கூடியவர்களும் (என்னை) மறுக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரு பிரிவினராக) உள்ளனர். "அல்லாஹ்வின் தயவாலும் அவன் கருணையாலும்தான் நமக்கு மழை பொழிந்தது' எனக் கூறியவர்கள் என்னை நம்பி இராசிபலனை மறுத்தவர்களாவர். இன்ன இன்ன ராசிபலனால் (எங்களுக்கு மழை பொழிந்தது) எனக் கூறியவர்கள் என்னை மறுத்து, ராசிபலனை நம்பியவர்களாவர்' என இறைவன் கூறினான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி 1038

இராசிபலன் என்பது சூனியக்கலை ஆகும். அது ஒரு ஏமாற்று வித்தையாகும். அதனால் நன்மையோ தீமையோ ஏற்படும் என்று நம்புவது இணை வைத்தலாகும் என்பதை மேற்கண்ட நபிமொழிகளிலிருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : விதியை மறுப்பவன், நிரந்தரமாக மது அருந்துபவன், சூனியத்தை உண்மை என்று நம்புபவன், (பெற்றோருக்கு) மாறு செய்பவன் ஆகியோர் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி)  நூல் : அஹ்மது (26212)

எனவே சூனியத்தினால் பாதிப்பு ஏற்படும் என்று நம்புவது இணை வைப்புக் கொள்கையாகும். இது போன்ற இணைவைப்புக் கொள்கையிலிருந்து அல்லாஹ் நம்மை பாதுகாப்பானாக.

 

ஷைத்தான்கள் யார்?

மனிதர்கள் நேர்வழியில் நடப்பதற்கு அழகிய அறிவுரைகளை எடுத்துரைக்கும் நூல் திருக்குர்ஆன். மனிதனுக்கு சிறந்த வழிகாட்டுதல்களை வழங்கும் திருக்குர்ஆனில் பல சொற்பிரயோகம் உள்ளன. அவற்றில் சில நேரடிப் பொருளிலும் சில இலக்கியமாகவும் பயன்படுத்தப்பட்டுள்ளன. திருக்குர்ஆனைப் படிக்கும்போது அதன் நடை, முன்பின் வசனங்கள், இஸ்லாத்தின் அடிப்படைகள் இவற்றைக் கவனித்து அதற்கு நேரடிப் பொருள் வழங்க வேண்டுமா? அல்லது இலக்கியப் பொருள் வழங்க வேண்டுமா? என்பதை முடிவு செய்யலாம்.

மனிதர்களை நேர்வழியிலிருந்து கெடுப்பதற்கு உருவாக்கப்பட்டவன் இப்லீஸ். மனிதர்களை இறைவழியிலிருந்து தடுப்பதே இவனது முக்கிய குறிக்கோளாகும்.

“என் இறைவா! என்னை நீ வழிகேட்டில் விட்டதால் பூமியில் (தீமைகளை) அழகாக்கிக் காட்டுவேன். அவர்களில் உன்னால் தேர்ந்தெடுக்கப்பட்ட உனது அடியார்களைத் தவிர (மற்றவர்கள்) அனைவரையும் வழிகெடுப்பேன்’’ என்று (இப்லீஸ்) கூறினான்.

(அல்குர்ஆன் 15: 39,40)

வழிகெடுக்கும் இந்த ஷைத்தான்களைப் பற்றி குறிப்பிடும் ஷைத்தான் என்ற சொல்லை, திருக்குர்ஆன் இரண்டு பொருள்களில் பயன்படுத்தியுள்ளது.

ஆதமுடைய மக்களே! உங்கள் பெற்றோர் இருவரையும் ஷைத்தான் சொர்க்கத்திலிருந்து வெளியேற்றியதுபோல் உங்களையும் அவன் குழப்பிவிட வேண்டாம். அவர்களின் வெட்கத்தலங்களை அவர்களுக்குக் காட்ட ஆடைகளை அவர்களை விட்டும் அவன் கழற்றினான். நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம்.                    (அல்குர்ஆன் 7: 27)

நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர் என்ற வசனத்தின் அடிப்படையில் அமைந்துள்ள உண்மையான ஷைத்தான் ஒருவகை.

ஷைத்தானின் காரியங்களைச் செய்யும் மனிதர்களையும் ஷைத்தான் என்று திருக்குர்ஆன் பயன்படுத்தியுள்ளது. இது இன்னொரு வகை.

இவ்வாறே மனிதர்களிலும், ஜின்களிலும் உள்ள ஷைத்தான்களை ஒவ்வொரு நபிக்கும் பகைவர்களாக ஆக்கினோம். ஏமாற்றுவதற்காக கவர்ச்சிகரமான சொற்களை அவர்களில் ஒருவர் மற்றவருக்கு அறிவிக்கின்றனர். உமது இறைவன் நாடியிருந்தால் அவர்கள் இதைச் செய்திருக்கமாட்டார்கள். அவர்கள் இட்டுக்கட்டுவதோடு அவர்களை விட்டு விடுவீராக!           (அல்குர்ஆன் 6:112)

மனிதர்களிலும் ஷைத்தான்கள் உள்ளன என்று மேற்சொன்ன வசனத்தில் தெளிவாக அல்லாஹ் கூறியிருப்பது, ஷைத்தானின் தூண்டுதலினால் கெட்ட செயல்களைச் செய்யும் மனிதர்களை என்று புரிந்து கொள்ள வேண்டும்.

திருக்குர்ஆனிலோ, நபிமொழிகளிலோ ஷைத்தான் என்ற சொல் பயன்படுத்தப்பட்டால் அதை நேரடிப் பொருளில்தான் புரிந்து கொள்ள வேண்டும்.

நேரடிப் பொருள் கொள்வது திருக்குர்ஆனின் மற்ற வசனங்களுக்கோ, நபிமொழிகளுக்கோ, இஸ்லாத்தின் அடிப்படைக்கோ முரணாக இருந்தால் அப்போது மட்டும் ஷைத்தான் என்ற சொல் கெட்ட மனிதன் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்று புரிந்து கொள்ள வேண்டும்.

அதன் அடிப்படையில் உண்மையான ஷைத்தான்கள் என்று பொருள் கொள்ள முடியாத வகையில் பின்வரும் வசனங்கள் மனிதர்களுக்கு பயன்படுத்தப்பட்டுள்ளன.

நம்பிக்கை கொண்டோரை அவர்கள் சந்திக்கும்போது “நம்பிக்கை கொண்டுள்ளோம்‘’ எனக் கூறுகின்றனர். தமது ஷைத்தான்களுடன் தனித்திருக்கும்போது “நாங்கள் உங்களைச் சேர்ந்தவர்களே. நாங்கள் (அவர்களை) கேலி செய்வோரே’’ எனக் கூறுகின்றனர்.

(அல்குர்ஆன் 2:14)

நயவஞ்சகர்கள் முஃமின்களை சந்திக்கும்போது நாங்கள் உங்கள் கொள்கையில் உள்ளவர்கள் என்றும் காபிர்களை சந்திக்கும்போது நாங்கள் உங்கள் கருத்தில்தான் இருக்கிறோம் என்றும் கூறுகின்றனர்.

இதைத்தான் அல்லாஹ் ஷைத்தான்களுடன் தனித்திருக்கும் போது என்று ஷைத்தான்கள் என்ற வாசகத்தை நயவஞ்சகர்கள் மீது பயன்படுத்துகிறான்.

அவர்கள் சந்தித்துக் கூறியது உண்மையான ஷைத்தான்கள் அல்ல. ஏனென்றால் ஷைத்தான்களை நாம் பார்க்க முடியாது என்று திருக்குர்ஆன் கூறியுள்ளது. முஃமின்களிடம் நடித்தவர்கள் காபிர்களைப் பார்த்து கூறியுள்ளதால் அவர்கள் கெட்ட மனிதர்கள் என்று இங்கு விளங்கிக்கொள்ள வேண்டும்.

ஸுலைமானின் ஆட்சியில் ஷைத்தான்கள் கூறியதை இவர்கள் பின்பற்றினார்கள்.                            (அல்குர்ஆன் 2:102)

இந்த வசனத்தில் உள்ள ஷைத்தான் என்பதையும் கெட்ட மனிதர்கள் என்றே விளங்கிக் கொள்ள வேண்டும். மக்களிடம் வந்து நேரடியாக பல கெட்ட செயல்களை அவர்கள் கற்றுக் கொடுத்தார்கள் என்று இந்த வசனம் கூறுவதால் நேரடியாக வந்தது உண்மையான ஷைத்தான்கள் அல்ல. கெட்ட மனிதர்கள் என்ற புரிந்துகொள்ள வேண்டும்.

நபி (ஸல்) அவர்களும் கெட்ட மனிதர்களை ஷைத்தான் என்று சொல்லியுள்ளார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 149)

3274- حَدَّثَنَا أَبُو مَعْمَرٍ ، حَدَّثَنَا عَبْدُ الْوَارِثِ ، حَدَّثَنَا يُونُسُ عَنْ حُمَيْدِ بْنِ هِلاَلٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي سَعِيدٍ قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم إِذَا مَرَّ بَيْنَ يَدَيْ أَحَدِكُمْ شَيْءٌ وَهُوَ يُصَلِّي فَلْيَمْنَعْهُ فَإِنْ أَبَى فَلْيَمْنَعْهُ فَإِنْ أَبَى فَلْيُقَاتِلْهُ فَإِنَّمَا هُوَ شَيْطَانٌ.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : நீங்கள் தொழுது கொண்டிருக்கும்போது உங்கள் முன்னால் எவராவது நடந்து செல்ல முனைந்தால் அவரைத் தடுங்கள். அவர் மறுத்தால் அப்போதும் அவரைத் தடுங்கள். அவர் மீண்டும் மறுத்தால் அப்போது அவருடன் சண்டையி(ட்டுத் த)டுங்கள். ஏனெனில், அவர்தான் ஷைத்தான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரி 3275

தொழுது கொண்டிருக்கும்போது குறுக்கே செல்லும் மனிதர்களை ஷைத்தான்கள் என்று இந்தச் செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

6032حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ الثَّقَفِىُّ حَدَّثَنَا لَيْثٌ عَنِ ابْنِ الْهَادِ عَنْ يُحَنِّسَ مَوْلَى مُصْعَبِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِى سَعِيدٍ الْخُدْرِىِّ قَالَ بَيْنَا نَحْنُ نَسِيرُ مَعَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- بِالْعَرْجِ إِذْ عَرَضَ شَاعِرٌ يُنْشِدُ فَقَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم«خُذُوا الشَّيْطَانَ أَوْ أَمْسِكُوا الشَّيْطَانَ لأَنْ يَمْتَلِئَ جَوْفُ رَجُلٍ قَيْحًا خَيْرٌ لَهُ مِنْ أَنْ يَمْتَلِئَ شِعْرًا

 (ஒரு முறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் “அல்அர்ஜ்’ எனுமிடத்தில்  பயணம் செய்துகொண்டிருந்தோம். அப்போது கவிஞர் ஒருவர் கவிதைகளைப் பாடிக்கொண்டு எதிரில் வந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், “அந்த ஷைத்தானைப் பிடியுங்கள். ஒரு மனிதருடைய வயிறு கவிதையால் நிரம்பியிருப்பதைவிடச் சீழ்சலத்தால் நிரம்பியிருப்பது நன்று’’ என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல் : புகாரி (4548)

கெட்ட கவிதைகளைப் படித்த மனிதரைப் பார்த்த நபிகளார், அவனை ஷைத்தான் என்று கூறியுள்ளார்கள்.

/ 132)2311 - وَقَالَ عُثْمَانُ بْنُ الْهَيْثَمِ أَبُو عَمْرٍو ، حَدَّثَنَا عَوْفٌ ، عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ وَكَّلَنِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم بِحِفْظِ زَكَاةِ رَمَضَانَ فَأَتَانِي آتٍ فَجَعَلَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ وَقُلْتُ وَاللَّهِ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ : إِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ وَلِي حَاجَةٌ شَدِيدَةٌ قَالَ فَخَلَّيْتُ عَنْهُ فَأَصْبَحْتُ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ ، قَالَ : قُلْتُ يَا رَسُولَ اللهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَعَرَفْتُ أَنَّهُ سَيَعُودُ لِقَوْلِ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم إِنَّهُ سَيَعُودُ فَرَصَدْتُهُ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم قَالَ : دَعْنِي فَإِنِّي مُحْتَاجٌ وَعَلَيَّ عِيَالٌ لاَ أَعُودُ فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم يَا أَبَا هُرَيْرَةَ مَا فَعَلَ أَسِيرُكَ قُلْتُ يَا رَسُولَ اللهِ شَكَا حَاجَةً شَدِيدَةً وَعِيَالاً فَرَحِمْتُهُ فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ أَمَا إِنَّهُ قَدْ كَذَبَكَ وَسَيَعُودُ فَرَصَدْتُهُ الثَّالِثَةَ فَجَاءَ يَحْثُو مِنَ الطَّعَامِ فَأَخَذْتُهُ فَقُلْتُ لأَرْفَعَنَّكَ إِلَى رَسُولِ اللهِ صلى الله عليه وسلم وَهَذَا آخِرُ ثَلاَثِ مَرَّاتٍ أَنَّكَ تَزْعُمُ لاَ تَعُودُ ثمَّ تَعُودُ قَالَ دَعْنِي أُعَلِّمْكَ كَلِمَاتٍ يَنْفَعُكَ اللَّهُ بِهَا قُلْتُ مَا هُوَ قَالَ إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} حَتَّى تَخْتِمَ الآيَةَ فَإِنَّكَ لَنْ يَزَالَ عَلَيْكَ مِنْ اللهِ حَافِظٌ ، وَلاَ يَقْرَبَنَّكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ فَخَلَّيْتُ سَبِيلَهُ فَأَصْبَحْتُ فَقَالَ لِي رَسُولُ اللهِ صلى الله عليه وسلم مَا فَعَلَ أَسِيرُكَ الْبَارِحَةَ قُلْتُ يَا رَسُولَ اللهِ زَعَمَ أَنَّهُ يُعَلِّمُنِي كَلِمَاتٍ يَنْفَعُنِي اللَّهُ بِهَا فَخَلَّيْتُ سَبِيلَهُ قَالَ مَا هِيَ قُلْتُ قَالَ لِي إِذَا أَوَيْتَ إِلَى فِرَاشِكَ فَاقْرَأْ آيَةَ الْكُرْسِيِّ مِنْ أَوَّلِهَا حَتَّى تَخْتِمَ {اللَّهُ لاَ إِلَهَ إِلاَّ هُوَ الْحَىُّ الْقَيُّومُ} وَقَالَ لِي لَنْ يَزَالَ عَلَيْكَ مِنَ اللهِ حَافِظٌ ، وَلاَ يَقْرَبَكَ شَيْطَانٌ حَتَّى تُصْبِحَ وَكَانُوا أَحْرَصَ شَيْءٍ عَلَى الْخَيْرِ فَقَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم أَمَا إِنَّهُ قَدْ صَدَقَكَ وَهُوَ كَذُوبٌ تَعْلَمُ مَنْ تُخَاطِبُ مُنْذُ ثَلاَثِ لَيَالٍ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ : لاَ قَالَ ذَاكَ شَيْطَانٌ.

நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன் என்று கூறுகிறேன். அதற்கவன், நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்றார்கள். மீண்டும் வருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கியபோது அவனைப் பிடித்தேன். உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப்போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்! என்றான். அவன்மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்.

விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன் என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான் என்றார்கள்.

மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன். (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன் என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய் என்று கூறினேன்.

அதற்கவன், என்னை விட்டுவிடும்! அல்லாஹ் உமக்குப் பயளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்! என்றான். அதற்கு நான், அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும்வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க  மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசிவரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற(வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க  மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன். -நபித்தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத்தான் அவன் சொல்லியிருக்கின்றான்! மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன்தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி),

நூல்: புகாரி (2311)

ரமலான் பித்ரா பொருட்களை மூன்று நாட்கள் தொடர்ந்து திருடிய மனிதனை நபி (ஸல்) அவர்கள் ஷைத்தான் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த ஹதீஸில் ஷைத்தான் என்று கூறப்பட்டிருப்பது உண்மையான ஷைத்தான் என்று சொல்ல முடியாது. ஏனெனில் அவனுக்கு குடும்பம் உள்ளதாகவும் அவர்களுக்கு உணவளிக்க வேண்டும் என்றும் அவன் கூறியுள்ளான். ஷைத்தான்களின் உணவு நாம் சாப்பிடும் உணவுகள் அல்ல. மேலும் உண்மையான ஷைத்தான்களை நாம் பார்க்க முடியாது. அவனுக்கு உணவுகள் தேவை இருக்குமானால் நாம் பார்க்காத நிலையில் அதை எடுத்துச் சென்றியிருக்கலாம். அவ்வாறு நடக்காததால் அங்கு வந்தது மனிதர்களில் உள்ள கெட்டவன் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

இதைப் போன்று தீங்கு தரும் விஷஜந்துக்களையும் ஷைத்தான் என்று நபிகளார் குறிப்பிட்டுள்ளார்கள்.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 155(

3304- حَدَّثَنَا إِسْحَاقُ ، أَخْبَرَنَا رَوْحٌ ، أَخْبَرَنَا ابْنُ جُرَيْجٍ قَالَ : أَخْبَرَنِي عَطَاءٌ سَمِعَ جَابِرَ بْنَ عَبْدِ اللهِ ، رَضِيَ اللَّهُ عَنْهُمَا ، قَالَ : رَسُولُ اللهِ صلى الله عليه وسلم : إِذَا كَانَ جُنْحُ اللَّيْلِ ، أَوْ أَمْسَيْتُمْ - فَكُفُّوا صِبْيَانَكُمْ فَإِنَّ الشَّيَاطِينَ تَنْتَشِرُ حِينَئِذٍ فَإِذَا ذَهَبَ سَاعَةٌ مِنَ اللَّيْلِ فَحُلُّوهُمْ وَأَغْلِقُوا الأَبْوَابَ وَاذْكُرُوا اسْمَ اللهِ فَإِنَّ الشَّيْطَانَ لاَ يَفْتَحُ بَابًا مُغْلَقًا.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரவின் முற்பகுதி வந்து விட்டால் -அல்லது நீங்கள் மாலை நேரத்தை அடைந்தால்- உங்கள் குழந்தைகளை (வெளியே அனுப்பாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், அப்போது ஷைத்தான்கள் (வெளியே) பரவுகின்றன. இரவில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (சுதந்திரமாக வெளியே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவுகளைப் பூட்டி விடுங்கள். அப்போது, அல்லாஹ்வின் பெயரைச் சொல்லுங்கள், ஏனெனில், ஷைத்தான் மூடப்பட்ட கதவைத் திறக்க  மாட்டான்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி), நூல் புகாரி (3304)

உண்மையான ஷைத்தான்கள் எல்லா நேரத்திலும் மக்களைக் கெடுத்துக் கொண்டுதான் இருக்கிறார்கள். இரவு நேரம் வரும்போது மட்டும் மக்களை வழிகெடுக்கும் வேலை செய்வதில்லை.

இந்த நபிமொழியில் சொல்லப்பட்டுள்ள ஷைத்தான்கள் விஷஜந்துக்கள். அவைதான் இரவானதும்  வெளியே வருகின்றன. இதனால் குழந்தைகளைக் கடிப்பதற்கும், அவர்கள் உயிரிழப்பதற்கும் காரணமாகிவிடும் என்பதால் இரவு நேரம் துவங்கும்போது குழந்தைகளை வெளியே அனுப்பாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் அறிவுரை வழங்கினார்கள். இதைப் போன்று கதவுகளைத் தாழிட்டுக் கொள்ளுங்கள் என்றும் தாழிட்டுக் கொண்டால் அவை வருவதில்லை என்றும் நபிகளாரின் கூற்று உண்மையான ஷைத்தானைப் பற்றியதல்ல என்பதை உணர்த்துகிறது.

இரும்புக் கோட்டைக்குள்ளும் ஷைத்தான்கள் நுழைந்து கெடுத்து விடுவார்கள். எனவே விஷஜந்துக்கள்தான் கதவு தாழிட்டுவிட்டால் வழியில்லை என்று வேறு பகுதிக்கு போய்விடும்.

திருக்குர்ஆனிலும் நபிமொழியிலும் ஷைத்தான் என்ற வார்த்தை உண்மையான ஷைத்தான்களுக்கும் கெட்ட மனிதர்களுக்கும் தீங்கிழைக்கும் விஷஜந்துக்களுக்கும் பயன்படுத்தப்பட்டுள்ளன. இக்கருத்து அகராதி நூல்களிலும் கூறப்பட்டுள்ளது.

لسان العرب - (13 / 237)

فإِن العرب تسمي بعض الحيات شيطاناً

அரபு நாட்டவர்கள் சில வகை பாம்புகளை ஷைத்தான் என்று குறிப்பிடுவர்.     நூல்: லிஸானுல் அரப், பாகம்:13, பக்கம் : 237

الصحاح في اللغة - (1 / 357)

وكلُّ عاتٍ من الإنس والجنّ والدوابّ شَيْطان.

மனிதன், ஜின், கால்நடைகள் இவற்றில் வரம்புமீறி நடக்கும் ஒவ்வொன்றும் ஷைத்தான் ஆகும்.

நூல் : அஸ்ஸிஹாஹ் ஃபில் லுகா, பாகம்:1 , பக்கம் :357

 

நபிகளார் கூறிய உண்மை நிகழ்வுகள்

மக்களை நல்வழிப்படுத்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல வழிகளைக் கையாண்டார்கள். அவற்றில் ஒன்று, அவர்கள் காலத்திற்கு முன் நடந்த உண்மைச் சம்பவங்களை மக்களுக்கு எடுத்துரைத்து அவர்களைச் சீர்படுத்தியது.

நபிகளார் கூறிய உண்மைச் சம்பவங்கள் புகாரி, முஸ்லிம் உட்பட பல நூல்களில் ஆதாரப்பூர்வமாக இடம்பெற்றுள்ளன. இந்தச் சம்பவங்கள் மக்களைப் பக்குவப்படுத்துவதற்கும், பண்படுத்துவதற்கும் உதவின. இதனால்தான் அல்லாஹுத் தஆலா திருக்குர்ஆனில் நபிமார்கள் உட்பட பல நல்லவர்களின் நிகழ்வுகளை எடுத்துக் காட்டி அதில் படிப்பினை பெற வேண்டுமெனக் கட்டளையிடுகிறான்.

அவர்களின் வரலாற்றில் அறிவுடையோருக்குப் படிப்பினை இருக்கிறது.                             (திருக்குர்ஆன் 12:111)

மக்களைப் பண்படுத்தும் நிகழ்வுகளில் ஒன்றாக முந்தைய சமுதாயத்தில் நடந்த ஒரு செய்தியை நபிகளார் கூறுவதைக் கேளுங்கள்!

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (4 / 212)

3472- حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ نَصْرٍ ، أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ عَنْ مَعْمَرٍ ، عَنْ هَمَّامٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : قَالَ النَّبِيُّ صلى الله عليه وسلم اشْتَرَى رَجُلٌ مِنْ رَجُلٍ عَقَارًا لَهُ فَوَجَدَ الرَّجُلُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ فِي عَقَارِهِ جَرَّةً فِيهَا ذَهَبٌ فَقَالَ لَهُ الَّذِي اشْتَرَى الْعَقَارَ خُذْ ذَهَبَكَ مِنِّي إِنَّمَا اشْتَرَيْتُ مِنْكَ الأَرْضَ وَلَمْ أَبْتَعْ مِنْكَ الذَّهَبَ وَقَالَ الَّذِي لَهُ الأَرْضُ إِنَّمَا بِعْتُكَ الأَرْضَ وَمَا فِيهَا فَتَحَاكَمَا إِلَى رَجُلٍ فَقَالَ الَّذِي تَحَاكَمَا إِلَيْهِ أَلَكُمَا وَلَدٌ قَالَ أَحَدُهُمَا لِي غُلاَمٌ وَقَالَ الآخَرُ لِي جَارِيَةٌ قَالَ : أَنْكِحُوا الْغُلاَمَ الْجَارِيَةَ وَأَنْفِقُوا عَلَى أَنْفُسِهِمَا مِنْهُ وَتَصَدَّقَا.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (பனூ இஸ்ராயீலில்) ஒரு மனிதர் இன்னொரு மனிதரிடமிருந்து அவருக்கிருந்த அசையாச் சொத்து (நிலம்) ஒன்றை வாங்கினார். அந்த நிலத்தை வாங்கிய மனிதர் தனது நிலத்தில் தங்கம் நிரம்பிய (களிமண்) ஜாடி ஒன்றைக் கண்டெடுத்தார். நிலத்தை வாங்கியவர் (நிலத்தை) விற்றவரிடம், என்னிடமிருந்து உன் தங்கத்தை எடுத்துக் கொள். (ஏனெனில்), உன்னிடமிருந்து நான் நிலத்தைத்தான் வாங்கினேன்; இந்தத் தங்கத்தை வாங்கவில்லை என்று கூறினார். நிலத்தின் (முந்தைய) உரிமையாளர், நிலத்தை, அதிலிருப்பவற்றுடன் சேர்த்துத்தான் உனக்கு நான் விற்றேன். (ஆகவே, இந்தத் தங்கம் உனக்குத்தான் உரியது) என்று கூறினார். மற்றொரு மனிதரிடம் தீர்ப்புக் கேட்டு சென்றனர். அவர்கள் இருவரும் தீர்ப்புக் கேட்டு சென்ற அந்த மனிதர், உங்கள் இருவருக்கும் பிள்ளைகள் உள்ளனரா? என்று கேட்டார். அவ்விருவரில் ஒருவர், எனக்குப் பையன் ஒருவன் இருக்கிறான் என்று சொன்னார். மற்றொருவர், எனக்குப் பெண் பிள்ளை இருக்கிறது என்று சொன்னார். தீர்ப்புச் சொல்பவர், அந்தப் பையனுக்கு அந்தப் பெண்ணை மணமுடித்து வையுங்கள். அவர்கள் இருவருக்காகவும் அதிலிருந்து செலவழியுங்கள்; தான தர்மம் செய்யுங்கள் என்று தீர்ப்பளித்தார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் : புகாரி (3472), முஸ்லிம் (3544)

நபிகளார் கூறிய இந்தச் சம்பவம் பல அரிய பண்புகளை நமக்குப் போதிக்கிறது. இந்நிகழ்ச்சியில் இடம்பெறும் இருவரின் பெருந்தன்மை நமக்கு நெகிழ்வூட்டுகிறது. பணம், பணம் என்று அலையும் இவ்வுலுகில் புதையல் நமக்குரியது அல்ல என்று எண்ணி அதை உரியவரிடம் ஒப்படைக்க எண்ணும் அந்த நல்லுள்ளமும். தங்கத்தைக் கொண்டு வந்து கொடுத்தவுடன் நல்ல வேளை மிகப்பெரிய செல்வம் நம்மைவிட்டுப் போக வேண்டிய நிலையில் ஒரு ஏமாளி நம்மிடம் ஒப்படைத்து விட்டான் என்று சந்தோஷம் அடையாமல் இல்லை அது உமக்குரியது தான் என்று கூறும் பெருந்தன்மையும் நம்மை வியப்பில் ஆழ்த்தாமல் இருக்காது.

அடுத்தவரின் பொருள் சிறிதோ, பெரிதோ அதை நாம் நியாமின்றி எடுக்கக்கூடாது என்றும் அவ்வாறு எடுத்தால் மறுமையில் மாட்டிக் கொள்வோம் என்ற இறையச்சமும்தான் அவர்களை இது போன்று பேசச் செய்துள்ளது.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (3 / 170)

2452- حَدَّثَنَا أَبُو الْيَمَانِ ، أَخْبَرَنَا شُعَيْبٌ ، عَنِ الزُّهْرِيِّ ، قَالَ : حَدَّثَنِي طَلْحَةُ بْنُ عَبْدِ اللهِ أَنَّ عَبْدَ الرَّحْمَنِ بْنَ عَمْرِو بْنِ سَهْلٍ أَخْبَرَهُ أَنَّ سَعِيدَ بْنَ زَيْدٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَمِعْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم يَقُولُ : مَنْ ظَلَمَ مِنَ الأَرْضِ شَيْئًا طُوِّقَهُ مِنْ سَبْعِ أَرَضِينَ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் பிறரது நிலத்தில் ஒரு பகுதியை அபகரித்துக் கொண்டாரோ அவர் ஏழு நிலங்களை (மறுமையில்) கழுத்தில் மாலையாகக் கட்டித் தொங்க விடப்படுவார்.

அறிவிப்பவர் ஸயீத் பின் ஸைத் (ரலி),

நூல்கள் : புகாரி (2452), முஸ்லிம் (3289)

நபிகளாரின் இதுபோன்ற எச்சரிக்கை அனைவரின் உள்ளத்திலும் பதிந்துவிடுமானால் அடுத்தவரின் பொருளுக்கு ஒரு போதும் ஆசைப்பட மாட்டோம்.

அடுத்தவர் பொருளுக்கு ஆசைப்படுவதற்கு இன்னொரு காரணம் பேராசை. இன்னும் வேண்டும் இன்னும் வேண்டும் என்ற எண்ணம். இந்த எண்ணம் இருக்கும் வரை பணத்தாசை நம்மைவிடாது. அது தவறான செயல்கள் செய்வதற்கும் நரகப்படுகுழியில் தள்ளவும் காரணமாக அமைந்துவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மனிதன் (வளர்ந்து) பெரியவனாக ஆக அவனுடன் இரண்டு ஆசைகளும் வளர்கின்றன:

1. பொருளாசை.

2. நீண்ட நாள் வாழ வேண்டும் என்ற ஆசை.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),

நூல் : புகாரி (6421)

அவ்வாறில்லை! நீங்கள் அனாதையை மதிப்பதில்லை. ஏழைக்கு உணவளிக்கத் தூண்டுவதில்லை. வாரிசுச் சொத்துக்களை நன்றாக உண்டு வருகிறீர்கள். செல்வத்தை அதிகம் விரும்புகிறீர்கள்.

அல்குர்ஆன் 89:17-20

மண்ணறைகளைச் சந்திக்கும்வரை அதிகமாக (செல்வத்தை)த் தேடுவது உங்கள் கவனத்தைத் திருப்பி விட்டது.

அல்குர்ஆன் 102:1,2

அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் மக்காவில் சொற்பொழிவு மேடையில் (மிம்பரில்) உரையாற்றும்போது சொல்லக் கேட்டேன்: மக்களே! நபி (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: ஆதமின் மகனுக்கு (மனிதனுக்கு) ஒரு நீரோடை நிறைய பொன் வழங்கப்பட்டாலும், அதனுடன் இரண்டாவது நீரோடை கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். இரண்டாவது நீரோடை அவனுக்கு வழங்கப்பட்டால் அதனுடன் மூன்றாவது கிடைக்க வேண்டுமென்று அவன் விரும்புவான். ஆதமின் மகனுடைய வயிற்றை மண்ணை (மரணத்தை)த் தவிர வேறெதுவும் மூடாது. மேலும், (மேற்கண்ட பேராசை போன்ற பாவங்களிலிருந்து) திருந்தி பாவமன்னிப்புக் கோரி மீண்டு விட்டவரின் கோரிக்கையை அல்லாஹ் ஏற்றுக்கொள்கிறான்.

அறிவிப்பவர் : அப்பாஸ் பின் சஹ்ல் பின் சஅத், நூல் புகாரி (6438)

இது போன்ற எச்சரிக்கை நமது மனதில் ஆழமாகப் பதியுமானால் பொருளாசை நம்மை அடிமையாக்காது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொற்காசு, வெள்ளிக் காசு, பூம்பட்டுத் துணி, சதுர கருப்புத் துணி ஆகியவற்றுக்கு அடிமையாகி விட்ட மனிதன் துர்பாக்கியவானாவான். அவனுக்கு (செல்வம்) கிடைத்தால் திருப்தியடைவான்; செல்வம் வழங்கப்படாவிட்டால் அதிருப்தியடைவான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (2886)

இதுபோன்ற அடிப்படை கருத்துக்களை நபித்தோழர்களுக்கு வலியுறுத்தி நபிகளாரின் பொன்மொழிகள் அவர்களின் வாழ்க்கையிலும் எதிரொலித்தது. இதற்கு ஹகீம் பின் ஹிஷாம் (ரலி) அவர்கள் சிறந்த எடுத்துக்காட்டு.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (2 / 152)

1472 - وَحَدَّثَنَا عَبْدَانُ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ ، أَخْبَرَنَا يُونُسُ ، عَنِ الزُّهْرِيِّ ، عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ وَسَعِيدِ بْنِ الْمُسَيَّبِ أَنَّ حَكِيمَ بْنَ حِزَامٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، قَالَ : سَأَلْتُ رَسُولَ اللهِ صلى الله عليه وسلم فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ سَأَلْتُهُ فَأَعْطَانِي ثُمَّ قَالَ يَا حَكِيمُ إِنَّ هَذَا الْمَالَ خَضِرَةٌ حُلْوَةٌ فَمَنْ أَخَذَهُ بِسَخَاوَةِ نَفْسٍ بُورِكَ لَهُ فِيهِ ، وَمَنْ أَخَذَهُ بِإِشْرَافِ نَفْسٍ لَمْ يُبَارَكْ لَهُ فِيهِ كَالَّذِي يَأْكُلُ ، وَلاَ يَشْبَعُ الْيَدُ الْعُلْيَا خَيْرٌ مِنَ الْيَدِ السُّفْلَى قَالَ حَكِيمٌ ، فَقُلْتُ : يَا رَسُولَ اللهِ وَالَّذِي بَعَثَكَ بِالْحَقِّ لاَ أَرْزَأُ أَحَدًا بَعْدَكَ شَيْئًا حَتَّى أُفَارِقَ الدُّنْيَا فَكَانَ أَبُو بَكْرٍ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، يَدْعُو حَكِيمًا إِلَى الْعَطَاءِ فَيَأْبَى أَنْ يَقْبَلَهُ مِنْهُ ثُمَّ إِنَّ عُمَرَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، دَعَاهُ لِيُعْطِيَهُ فَأَبَى أَنْ يَقْبَلَ مِنْهُ شَيْئًا فَقَالَ عُمَرُ إِنِّي أُشْهِدُكُمْ يَا مَعْشَرَ الْمُسْلِمِينَ عَلَى حَكِيمٍ أَنِّي أَعْرِضُ عَلَيْهِ حَقَّهُ مِنْ هَذَا الْفَيْءِ فَيَأْبَى أَنْ يَأْخُذَهُ فَلَمْ يَرْزَأْ حَكِيمٌ أَحَدًا مِنَ النَّاسِ بَعْدَ رَسُولِ اللهِ صلى الله عليه وسلم حَتَّى تُوُفِّيَ.

ஹகீம் பின் ஹிஸாம் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் நபி (ஸல்) அவர்களிடம் (உதவி) கேட்டேன். அவர்கள் எனக்கு வழங்கினார்கள்; மீண்டும் (உதவி) கேட்டேன் வழங்கினார்கள். மீண்டும் கேட்டேன்; வழங்கிவிட்டு, ஹகீமே! நிச்சயமாக இந்தச் செல்வம் பசுமையானதும் இனிமையானதுமாகும். யார் இதைப் போதுமென்ற உள்ளத்துடன் எடுத்துக்கொள்கிறாரோ அவருக்கு இதில் பரகத் ஏற்படுத்தப்படும்; யார் இதைப் பேராசையுடன் எடுத்துக் கொள்கின்றாரோ, அவருக்கு அதில் பரகத் ஏற்படுத்தப்படாது. அவன் உண்ட பின்பும் வயிறு நிரம்பாதவன் போலாவான். உயர்ந்த கை தாழ்ந்த கையைவிடச் சிறந்தது என்று கூறினார்கள்.

அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! உங்களைச் சத்தியத்துடன் அனுப்பி வைத்தவன் மீதாணையாக! உங்களுக்குப் பின் உலகைப் பிரியும்வரை வேறு யாரிடமும் நான் எதையும் கேட்க மாட்டேன் எனக் கூறினேன்.

ஆபூபக்ர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சிக் காலத்தில்) ஸகாத் பெறுமாறு ஹகீமை அழைத்தார்கள். அவர் அதை ஏற்றுக்கொள்ள மறுத்து விட்டார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது ஆட்சியில்) ஸகாத் பெறுமாறு அவரை அழைத்தார்கள். அவர் எதையும் ஏற்க மறுத்தார். அப்போது உமர் (ரலி) அவர்கள் முஸ்லிம் சமுதாயமே! தமது உரிமையைப் பெற்றுக்கொள்ளுமாறு நான் ஹகீமை அழைக்கிறேன். அவரோ அதைப் பெற்றுக்கொள்ள மறுக்கிறார். இதற்கு நீங்களே சாட்சி!’ எனக் கூறினார்கள். ஹகீம் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வேறு யாரிடமும் தாம் மரணிக்கும்வரை எதையும் கேட்கவேயில்லை என சயீத் பின் அல்முஸய்யப்  அவர்கள் கூறுகிறார்கள்.

நூல் : புகாரி (1472)

போதும் என்ற எண்ணம் அதிகரித்தால் போராசை என்ற நச்சு மனதிலிருந்து விலகிவிடும். ஏழை, பணக்காரன் என எல்லா மக்களும் பயன்படும் பொருத்தமான நபிகளாரின் பொன்மொழி இதோ :

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(வாழ்க்கை) வசதிகள் அதிகமாக இருப்பது செல்வமன்று; மாறாகப் போதுமென்ற மனமே (உண்மையான) செல்வமாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல்கள் : புகாரி (6446), முஸ்லிம் (1898)

 

 

பார்த்தவுடன் தெரியும் பொய்ச் செய்திகள்!

1400 ஆண்டுகளுக்கு முன்னர் உலக மக்களை நல்வழிப்படுத்த வந்த நபிகளாரின் கொள்கைகளும், அறிவுரைகளும் மக்களை வெகுவாக ஈர்த்தது. அதன் விளைவாக இஸ்லாத்தை நோக்கி மக்கள் கூட்டம் கூட்டமாக வரத் துவங்கினர்.

இவற்றைக் கண்டு எரிச்சலடைந்த இஸ்லாமிய விரோதிகள் நேரடியாக மோதத் துணிவில்லாமல் பின்வாசல் வழியாக மோதத் துவங்கினர். அவற்றில் ஒன்று தான் நபிகளார் சொல்லாத அறிவு ஏற்றுக் கொள்ளாத பல செய்திகளை இவர்களாகத் தயார் செய்து நபிகளார் கூறியது என்று மக்களிடம் பரப்பியதாகும்.

இதுபோன்ற செய்திகளைப் படிக்கும் மக்கள், நபிகளார் மீது தப்பெண்ணம் கொண்டு இஸ்லாத்தை வெறுப்பார்கள் என்பது அவர்கள் நம்பிக்கை. இந்த நம்பிக்கையை அடித்து நொறுக்கும் வகையில் நபிகளார் கூறிய உண்மைச் செய்திகள் எவை? பொய்ச் செய்திகள் எவை என்பதை அன்றைய கால அறிஞர்கள் அறிவுப்பூர்வமாக ஆதாரத்துடன் விளக்கி இவர்களின் எண்ணத்தில் மண்ணை வாரிப் போட்டனர்.

நபிகளார் பெயரில் இட்டுக்கட்டப்பட்ட செய்திகள் எவை? அதன் காரணம் என்ன? என்பதை பல அறிஞர்கள் நூல் வடிவிலும் தொகுத்தளித்துள்ளனர். அவற்றில் சில முக்கியமான செய்திகளை உங்களுக்கு தொகுத்துத் தருகிறோம்.

இறைவன் எப்படி உருவானான்?

قال أخبرت عن محمد بن سجاع التلخى [ شجاع البلخى ] قال أخبرني حبان ابن هلال عن حماد بن سلمة عن أبى المهزم عن أبى هريرة قال: « قيل يا رسول الله مم ربنا من ما مرور قال لامن الارض ولا من سماء، خلق خيلا فأجراها فعرقت فخلق نفسه من ذلك العرق « وقد رواه عبد العزيز بن محمد بن أحمد بن منده عن محمد بن سجاع [ شجاع ] فقال فيه: « إن الله عزوجل خلق الفرس فأجراها

فبرقت [فعرقت ] ثم خلق نفسه منها))

هذا حديث لا يشك في وضعه، وما وضع مثل هذا مسلم، وإنه لمن أرك الموضوعات وأدبرها، إذ هو مستحيل لان الخالق لا يخلق نفسه.

அல்லாஹ்வின் தூதர் அவர்களே அல்லாஹ் எதிலிருந்து உருவானான்? என்று கேட்கப்பட்டது. அவன் பூமியிலோ வானத்திலோ உருவாகவில்லை. ஓடும் தண்ணீரிலிருந்து உருவானான்.

(எப்படி எனில்) குதிரையை இறைவன் படைத்து வேகமாக ஓடச் செய்தான். அதிலிருந்து வேர்வை வந்தது. அதிலிருந்து தன்னை படைத்துக் கொண்டான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),நூல் அல்மவ்ளூஆத், பாகம்:1, பக்கம் :105)

படிக்கும் போதே இது பொய்யான செய்தி என்பதை நமது அறிவு சொல்லிவிடும். குதிரையைப் படைத்து அதன் வேர்வையில் அல்லாஹ் தன்னைப் படைத்தான் என்றால் குதிரைக்கு முன்னரே இறைவன் இருந்தான் என்பது தெளிவாக விளங்கும். இது புத்தியற்றவனின் உளறல் என்று நமக்குத் தெரிந்தாலும் இதை இட்டுக்கட்டியவன் யார் என்ற விவரத்தையும் அறிஞர்கள் நமக்கு தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இதை பதிவு செய்த இப்னுல் ஜவ்ஸி அவர்கள் பின்வருமாறு கூறுகிறார்கள்.

الموضوعات لابن الجوزي - (1 / 105(وقد اتهم علماء الحديث بوضع هذا الحديث محمد بن سجاع ) شجاع

இந்தச் செய்தியை முஹம்மத் பின் ஷஜா என்பவன்தான் இட்டுக்கட்டி கூறியுள்ளான் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறியுள்ளார்கள்.      நூல் அல்மவ்ளூஆத், பாகம் :1, பக்கம்:105

முஹம்மத் பின் ஷஜா என்பவன் இட்டுக்கட்டிச் சொல்லும் பழக்கமுள்ளவன் என்பதை இப்னு அதீ அவர்கள் அல்காமில் என்ற நூலில் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

அழுவதாக நடியுங்கள்!

1327حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ أَحْمَدَ بْنِ بَشِيرِ بْنِ ذَكْوَانَ الدِّمَشْقِيُّ حَدَّثَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ حَدَّثَنَا أَبُو رَافِعٍ عَنْ ابْنِ أَبِي مُلَيْكَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ السَّائِبِ قَالَ قَدِمَ عَلَيْنَا سَعْدُ بْنُ أَبِي وَقَّاصٍ وَقَدْ كُفَّ بَصَرُهُ فَسَلَّمْتُ عَلَيْهِ فَقَالَ مَنْ أَنْتَ فَأَخْبَرْتُهُ فَقَالَ مَرْحَبًا بِابْنِ أَخِي بَلَغَنِي أَنَّكَ حَسَنُ الصَّوْتِ بِالْقُرْآنِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ هَذَا الْقُرْآنَ نَزَلَ بِحُزْنٍ فَإِذَا قَرَأْتُمُوهُ فَابْكُوا فَإِنْ لَمْ تَبْكُوا فَتَبَاكَوْا وَتَغَنَّوْا بِهِ فَمَنْ لَمْ يَتَغَنَّ بِهِ فَلَيْسَ مِنَّا   رواه ابن ماجة

இந்தக் குர்ஆன் கவலையை ஏற்படுத்துவதற்கே இறங்கியது. எனவே நீங்கள் அதை ஓதினால் அழுங்கள். அழாவிட்டாலும் அழுவதுபோல் நடியுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸஅத் பின் அபீ வக்காஸ் (ரலி),

நூல் : இப்னுமாஜா (1327)

இதே செய்தி பைஹகீ, அபூயஃலா அல்மூஸிலீ ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

திருக்குர்ஆன் முழுக்க முழுக்க கவலையை அளிப்பதற்காக இறக்கப்படவில்லை. நற்செய்தியையும் கூறியுள்ளது. மகிழ்ச்சியடையவும் சொல்லியுள்ளது.

இந்தக் குர்ஆன் நேரானதற்கு வழிகாட்டுகிறது. “நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோருக்கு பெரிய கூலி உள்ளது’’ என்று நற்செய்தியும் கூறுகிறது.                (அல்குர்ஆன் 17:9)

திருக்குர்ஆன் ஒதும்போதும், செவியுறும்போதும் என்ன செய்ய வேண்டுமென இரண்டு இடங்களில் அல்லாஹ் அழகிய வழிகாட்டுதலைக் கூறியுள்ளான்.

குர்ஆனை ஓதும்போது விரட்டப்பட்ட ஷைத்தானை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாப்புத் தேடிக்கொள்வீராக!

(அல்குர்ஆன் 16:98)

குர்ஆன் ஓதப்படும்போது அதைச் செவிமடுங்கள்! வாய் மூடுங்கள்! நீங்கள் அருள் செய்யப்படுவீர்கள்!           (அல்குர்ஆன் 7:204)

வேறு எந்த இடங்களிலும் திருக்குர்ஆன் ஓதினால் அழுங்கள் என்றோ அல்லது அழுமாறு நடியுங்கள் என்றோ கூறப்படவில்லை.

இஸ்லாத்தின் அடிப்படை அல்லாஹ்விற்கு உண்மையுள்ளவனாக இருக்க வேண்டும். நடிப்பதை இஸ்லாம் ஏற்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ், உங்கள் தோற்றங்களையோ, உங்கள் செல்வங்களையோ பார்ப்பதில்லை. மாறாக, உங்களுடைய உள்ளங்களையும், செயல்களையுமே அவன் பார்க்கிறான்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),  நூல் : முஸ்லிம் (5012)

திருக்குர்ஆனின் அறிவுரைகள், நபிகளாரின் பொன்மொழிகள் திருக்குர்ஆன் ஓதும்போது அழுவதுபோல் நடிக்க வேண்டும் என்ற கருத்தை உறுதியாக மறுக்கிறது. மேலும் அதன் அறிவிப்பாளர் வரிசையிலும் குறைகள் உள்ளன.

இச்செய்தியின் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் அஸ்ஸாயிப் என்பவரின் நம்பகத் தன்மையை  எந்த அறிஞரும் உறுதிப்படுத்தவில்லை.

இதைப் போன்று அதன் மூன்றாவது அறிவிப்பாளர் அபூராஃபிவு என்ற இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவர் பலவீனமானவராவார்.

تقريب التهذيب - (1 / 107) 442- إسماعيل ابن رافع ابن عويمر الأنصاري المدني [القاص] نزيل البصرة يكنى أبا رافع ضعيف الحفظ من السابعة مات في حدود الخمسين بخ ت ق

இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவர் நினைவாற்றில் பலவீனமானவராவார்.  நூல் தக்ரீபுத் தஹ்தீப், பாகம் : 1, பக்கம்:107

தும்மினால் உண்மையாகும்

المعجم الكبير للطبراني - (19 / 467)

1117 - حَدَّثَنَا مُحَمَّدُ بن رُزَيْقِ بن جَامِعٍ، نا عَبْدَةُ بن عَبْدِ الرَّحِيمِ الْمَرْوَزِيُّ، ثَنَا بَقِيَّةُ بن الْوَلِيدِ، نا مُعَاوِيَةُ بن يَحْيَى، عَنْ أَبِي الزِّنَادِ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:யுمَنْ حَدَّثَ بِحَدِيثٍ فَعَطَسَ عِنْدَهُ، فَهُوَ حَقٌّயு. لَمْ يَرْوِ هَذَا الْحَدِيثَ عَنْ أَبِي الزِّنَادِ إِلا مُعَاوِيَةُ بن يَحْيَى، تَفَرَّدَ بِهِ: بَقِيَّةُ. وَلا يُرْوَى عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، إِلا بِهَذَا الإِسْنَادِ

ஒரு செய்தியைச் சொல்லும்போது அவர் தும்மினால் அது உண்மையானதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபூஹுரைரா (ரலி),நூல் : தப்ரானீ, பாகம் 19,பக்கம்: 467

எந்தச் செய்தியையும் அதன் உண்மைத் தன்மையை ஆராயாமல் ஏற்றுக் கொள்ளக்கூடாது. குறிப்பாக ஐயம் ஏற்படும் போது கண்டிப்பாக அதை ஆய்வு செய்த பின்னரே ஏற்க வேண்டுமென திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! குற்றம் புரிபவன் உங்களிடம் ஒரு செய்தியைக் கொண்டு வந்தால் ஒரு சமுதாயத்திற்கு அறியாமையால் நீங்கள் தீங்கிழைக்காதிருப்பதற்காக அதைத் தெளிவுபடுத்திக் கொள்ளுங்கள்! (இல்லையேல்) நீங்கள் செய்ததற்காகக் கவலைப்படுவீர்கள்.                        (அல்குர்ஆன் 49 :6)

பாதுகாப்பு அல்லது பயம் பற்றிய செய்தி அவர்களுக்குக் கிடைத்தால் அதைப் பரப்புகின்றனர். அதை இத்தூதரிடமும், (முஹம்மதிடமும்) தங்களில் அதிகாரமுள்ளோரிடமும் கொண்டு சென்றிருந்தால் ஆய்வு செய்வோர் அதை அறிந்து கொள்வார்கள். அல்லாஹ்வின் அருளும், அவனது அன்பும் உங்களுக்கு இல்லாதிருந்தால் சிலரைத் தவிர (மற்றவர்கள்) ஷைத்தானைப் பின்பற்றியிருப்பீர்கள். 

(அல்குர்ஆன் 4 : 83)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒருவர் தாம் கேள்விப்பட்டதையெல்லாம் (பிறருக்கு) அறிவிப்பதே அவர் பொய்யர் என்பதற்குப் போது(மான சான்றாகு)ம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (6)

இந்த அறிவுரைகள், ஆராயாமல் செய்திகளை நம்பக்கூடாது என்பதைத் தெளிவுபடுத்துகிறது. ஒருவர் தும்மிவிட்டால் அவர் சொன்ன செய்தி எப்படி நம்பகமானதாக ஆகும்? தும்முவதற்கும் ஒரு செய்தி உண்மையாக இருப்பதற்கும் என்ன தொடர்பு இருக்கிறது?

தும்மும் போது நபிகளார் என்ன செய்ய வேண்டுமென என்பதை அறிவிக்கும் ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

صحيح البخاري ـ حسب ترقيم فتح الباري - (8 / 61(

6224- حَدَّثَنَا مَالِكُ بْنُ إِسْمَاعِيلَ ، حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ ، أَخْبَرَنَا عَبْدُ اللهِ بْنُ دِينَارٍ ، عَنْ أَبِي صَالِحٍ ، عَنْ أَبِي هُرَيْرَةَ ، رَضِيَ اللَّهُ عَنْهُ ، عَنِ النَّبِيِّ صلى الله عليه وسلم قَالَ : إِذَا عَطَسَ أَحَدُكُمْ فَلْيَقُلِ الْحَمْدُ لِلَّهِ وَلْيَقُلْ لَهُ أَخُوهُ ، أَوْ صَاحِبُهُ يَرْحَمُكَ اللَّهُ فَإِذَا قَالَ لَهُ يَرْحَمُكَ اللَّهُ فَلْيَقُلْ يَهْدِيكُمُ اللَّهُ وَيُصْلِحُ بَالَكُمْ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் தும்மினால், அல்ஹம்து லில்லாஹ்’ (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே) என்று சொல்லுங்கள். (இதைக் கேட்கும்) உங்கள் சகோதரர்’ அல்லது நண்பர்’ யர்ஹமுக்கல்லாஹ் (அல்லாஹ் உங்களுக்குக் கருணை புரியட்டும்) என்று சொல்லட்டும். அவர் உங்களுக்காக யர்ஹமுக்கல்லாஹ்’ என்று சொன்னால், நீங்கள் (அவருக்காக) யஹ்தீக்குமுல்லாஹ் வ யுஸ்லிஹ் பாலக்கும்‘ (அல்லாஹ் உங்களுக்கு நல்வழி காட்டட்டும்! உங்கள் நிலையைச் சீராக்கட்டும்) என்று சொல்லுங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (6224)

தும்மினால் இப்படித்தான் நடக்க நபிகளார் சொன்னார்களே தவிர தும்மினால் அந்தச் செய்தி உண்மை என்று கூறவில்லை.

மேலும் அந்தச் செய்தியின் அறிவிப்பாளர் முஆவியா பின் யஹ்யா என்பவர் பலவீனமானவராகவும் இருக்கிறார்.

الكامل في ضعفاء الرجال - (8 / 137) 1885- معاوية بن يَحْيى الصدفي يقال دمشقي ويقال مصري ، يُكَنَّى أبا روح.

حَدَّثَنَا مُحَمد بن علي ، حَدَّثَنا عثمان بن سَعِيد ، قالَ : قُلتُ ليحيى بن مَعِين فالصدفي معاوية بن يَحْيى قال ليس بشيء.

ஞ்حَدَّثَنَا مُحَمد بن خلف ، حَدَّثَنا أبو العباس القرشي سمعت علي بن المديني يقول معاوية بن يَحْيى الصدفي ضعيف.

ஞ் قال السعدي معاوية بن يَحْيى الصدفي ذاهب الحديث. وقال النسائي معاوية بن يَحْيى الصدفي ضعيف

முஆவியா பின் யஹ்யா என்பவர் எந்த மதிப்புமற்றவர் என்று யஹ்யா பின் மயீன் அவர்களும். பலவீனமானவர் என்று ஸஅதீ மற்றும் நஸாயீ அவர்களும் கூறியுள்ளார்கள்.

நூல்: அல்காமில் ஃபில் லுஅஃபா, பாகம்:8, பக்கம் : 137

எனவே இந்தச் செய்தி நபிகளார் மீது இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தி என்பதில் ஐயமில்லை.

 

நபிகளாரின் கட்டளை

வாகனக் கூட்டத்திற்கா? மக்களுக்கா?

பிறையைக் கண்ணால் பார்த்து மாதத்தை தீர்மானிக்க வேண்டும் என்பதை தவ்ஹீத் ஜமாஅத் கொள்கையாகக் கொண்டுள்ளது.

ஒவ்வொரு பகுதியில் உள்ளவர்களும் தத்தமது பகுதியில் பிறையைப் பார்த்து அதன் அடிப்படையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்வதே பிறை தொடர்பாக குர்ஆன், ஹதீஸ் கூறும் நிலைப்பாடாகும்.

இதற்கு மாற்றமாக உலகில் பிறை எங்கு தென்பட்டாலும் அது அனைவரையும் கட்டுப்படுத்தும் எனும் சர்வதேச பிறை நிலைப்பாடு முற்றிலும் தவறான கருத்தாக்கமாகும்.

இதற்குரிய சான்றுகளை பல நேரங்களில் தெளிவுபடுத்தியுள்ளோம்.

லீttஜீ://ஷ்ஷ்ஷ்.ஷீஸீறீவீஸீமீஜீழீ.நீஷீனீ/தீஷீஷீளீs/ஜீவீக்ஷீணீவீ-ஷீக்ஷீ-ஸ்வீறீணீளீணீனீ/#.க்ஷியீரீழீ0tரிஹீஹீளீஷீ

வாகனக் கூட்டம் ஹதீஸ்

ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை அந்தப் பகுதியை மட்டுமே கட்டுப்படுத்தும். அது ஏனைய பகுதிகளைக் கட்டுப்படுத்தாது என்கிறோம்.

இதற்குரிய ஆதாரங்களில் ஒன்றாக வாகனக் கூட்டம் பிறை பார்த்ததாக சாட்சியம் அளிக்கும் ஹதீஸை நாம் குறிப்பிடுகிறோம்.

அந்த ஹதீஸையும் அதிலிருந்து நாம் வைக்கும் வாதத்தையும் புரிந்தால்தான் தொடர்புடைய இதர விஷயங்களையும் புரிய முடியும்.

அந்த ஹதீஸ் இதுதான்.

மேக மூட்டம் காரணமாக ஷவ்வால் பிறை எங்களுக்குத் தென்படவில்லை. எனவே நோன்பு நோற்றவர்களாக நாங்கள் காலைப் பொழுதை அடைந்தோம். பகலின் கடைசி நேரத்தில் ஒரு வாகனக் கூட்டத்தினர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து நேற்று நாங்கள் பிறை பார்த்தோம் என்று கூறினார்கள். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவர்களது நோன்பை விட்டுவிடுமாறும் விடிந்ததும் அவர்களது பெருநாள் திடலுக்குச் செல்லுமாறும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள்.

அறிவிப்பவர்: அபூ உமைர், நூல்: அபூதாவூத் 977

இதிலிருந்து நாம் வைக்கும் வாதம் பின்வருமாறு

நமது வாதம்

நபி (ஸல்) அவர்களுக்கும் மக்களுக்கும் மேகமூட்டத்தின் காரணத்தினால் பிறை தென்படவில்லை என்பதால் மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து நோன்பு நோற்ற நிலையில் உள்ளனர்.

அப்போது வாகனக் கூட்டத்தினர் பகலின் இறுதிக் கட்டத்தில் வந்து நேற்று பிறை பார்த்தோம் என்று கூறுகிறார்கள். இவர்களது கூற்றை ஏற்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாகனக் கூட்டத்திற்கு மட்டுமே நோன்பை விடுமாறு கட்டளை இடுகிறார்கள்.

நாங்கள் நோன்பு நோற்றோம். எங்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்பது ஹதீஸின் வாசகமாக இருந்தால் வெளியூர் சாட்சியத்தை ஏற்று உள்ளூர் மக்களை நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம்.

அல்லது மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறப்பட்டிருந்தால் வெளியூர் கூட்டம் வந்து அளித்த சாட்சியத்தை ஏற்று எல்லா மக்களையும் நோன்பை விடச் சொன்னார்கள் என்று வாதிடலாம். (எதிர்த் தரப்பினர் அவ்வாறு வாதிடுகின்றனர்.)

எங்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்,

மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் கூறாமல்,

யார் சாட்சியம் அளித்தார்களோ அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றுதான் கூறப்பட்டுள்ளது.

எனவே வெளியூரில் பிறை பார்த்த பின்பும் நோன்பை விடாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வந்து விளக்கம் கேட்ட வாகனக் கூட்டத்தார்களுக்கு மட்டுமே நோன்பை விடுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிடுகிறார்கள் என்பதை அறிகிறோம்.

நபிகளாரின் கட்டளை ஒட்டு மொத்த மக்களுக்கானது அல்ல. சாட்சியம் அளித்த வாகனக் கூட்டத்திற்குரியது மட்டுமே.

இக்கருத்தை ஹதீஸில் உள்ள அமரஹூம் - அவர்களுக்கு கட்டளையிட்டார்கள் எனும் வாசகம் வலியுறுத்துகிறது.

எனவே எந்தப் பகுதியில் பிறை தென்பட்டதோ அப்பிறை அப்பகுதியைச் சேர்ந்தவர்களைத் தான் கட்டுப்படுத்தும். அப்பகுதியைச் சேராதவர்களை அறவே கட்டுப்படுத்தாது என்பதற்கு இந்த ஹதீஸ் ஆதாரமாக அமைந்துள்ளது.

இதற்கு மாற்றமாக - அமரன் நாஸ் - மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று சில அறிவிப்புகள் வருகின்றது.

இச்செய்தி சரியானதாக இருந்தால் எதிர்த்தரப்பினரின் வாதத்தில் நியாயம் உள்ளது எனலாம்.

ஆனால் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் எனும் அறிவிப்புகள் பலவீனமானவையாக உள்ளதால் ஒரு பகுதியில் தென்படும் பிறை அனைத்து பகுதியையும் கட்டுப்படுத்தும் என்ற எதிர்த்தரப்பினரின்  வாதம் தவறானது.

இவ்வாறு நமது வாதத்தை காரண - காரியங்களுடன் பிறை ஓர் விளக்கம் எனும் நூலிலும் விளக்கியிருந்தோம்.

விதண்டாவாதம்

இதற்கு மறுப்பளிக்க புகுந்தவர்கள் நபிகள் நாயகம் வாகனக் கூட்டத்தின் சாட்சியை ஏற்றுக்கொண்டு மக்களுக்கு கட்டளையிட்டார்கள் - அமரன் நாஸ் - என்று வரும் அறிவிப்பு சரியானதே. தவ்ஹீத் ஜமாஅத் வாதிப்பதைப் போன்று அது பலவீனமானது அல்ல. எனவே ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை உலகின் ஏனைய பகுதிகளையும் கட்டுப்படுத்தும் என்று வாதிடுகிறார்கள்.

இது சரியா? அவர்கள் கூறுவது போல் அமரன் நாஸ் - மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று வரும் அறிவிப்பு சரியான அறிவிப்பா?

வாகனக் கூட்டம் ஹதீஸில் நாம் வைத்த வாதம் பிழையா? என்பதைத் தெளிவாகக் காண்போம்

குர்ஆனின் கருத்து

அமரன் நாஸ் - நபிகள் நாயகம் மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்ற செய்தி அறிவிப்பு ரீதியாக சரியா? பலவீனமா? என்பதை அலசும் முன் நாம் புரிந்து கொள்ள வேண்டிய அடிப்படையான விஷயம் ஒன்றுள்ளது.

அது என்னவெனில் தத்தமது பகுதியில் பிறை பார்க்கப்பட வேண்டும், ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை இன்னோர் பகுதிக்கு பொருந்தாது என்பதற்கு இந்த ஹதீஸ் மட்டும்தான் ஆதாரமாக உள்ளது என்றில்லை. அவ்வாறு தவறாக விளங்கி விடக்கூடாது.

வானக்கூட்டம் ஹதீஸ் அல்லாத இன்னும் சிலதையும் மேற்சொன்ன கருத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது. அதாவது ஒரு பகுதியில் பிறை தென்பட்டால் அது உலகின் எல்லா பகுதிகளையும் கட்டுப்படுத்தாது என்ற கருத்தை வாகனக் கூட்டம் ஹதீஸ் அல்லாத இன்னும் சில ஆதாரங்களும் தெளிவாக எடுத்து சொல்கின்றன.

மிகக் குறிப்பாக குர்ஆன் கூறும் கருத்தும் இது தான்.

இவற்றை பிறை ஓர் விளக்கம் எனும் நூலில் தெளிவாக விளக்கியிருக்கிறோம்.

ரமாலானை யார் அடைவாரோ . . .

இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் அருளப்பட்டது. (இது) மனிதர்களுக்கு நேர்வழி காட்டும். நேர்வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும். நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்லாஹ் உங்களுக்கு எளிதானதையே நாடுகிறான். சிரமமானதை உங்களுக்கு நாடமாட்டான். எண்ணிக்கையை நீங்கள் முழுமையாக்குவதற்காகவும், உங்களுக்கு நேர்வழி காட்டியதற்காக நீங்கள் அல்லாஹ்வைப் பெருமைப்படுத்திடவும், நன்றி செலுத்திடவும் (வேறு நாட்களில் நோற்கும் சலுகை வழங்கப்பட்டது)          திருக்குர்ஆன் : 2:185

இந்த இறை வசனத்தில் அல்லாஹ் கூறிய அர்த்தமுள்ள வார்த்தைகளை நன்றாக கவனித்துப் பாருங்கள்.

உங்களில் அம்மாதத்தை அடைபவர் அதில் நோன்பு நோற்கட்டும்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்றால் உங்களில் அம்மாதத்தை அடையாதவர்களும் இருப்பார்கள் என்பது இதன் பொருளாகும்.

இந்த வசனங்களில் மட்டுமின்றி திருக்குர்ஆனின் எந்த வசனங்களில் எல்லாம் யார் அடைகிறாரோ யார் போகிறாரோ என்பது போல் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அத்தனை இடங்களையும் இப்படித் தான் புரிந்து கொள்ள முடியும்.

*அம்மாதத்தை ஒருவர் அடைந்திருக்கும்போது மற்றவர் அடைந்திருக்க மாட்டார்.

*ஒருவர் ரமளானை அடைந்த பின் இன்னொருவர் ரமளானை அடைவார்.

இப்படி இருந்தால் மட்டுமே யார் ரமளானை அடைகிறாரோ என்று கூற முடியும்.

அனைவரும் ஒரே நேரத்தில் ரமளானை அடைகிறார்கள் என்று வைத்துக் கொள்வோம். எல்லோருமே அடைந்திருக்கும்போது உங்களில் யார் அடைகிறாரோ என தேவையில்லாமல் அல்லாஹ் ஏன் கூற வேண்டும்? (நஊது பில்லாஹ்)

உலகில் பிறை எங்கு தென்பட்டாலும் முழு உலகமும் மாதத்தை அடைந்து விடும் என்றிருந்தால் யார் அடைவாரோ எனும் இறைவார்த்தை கேலிக்குரியதாகி விடும்.

இறைவார்த்தையில் எந்த ஒரு வீணாண  வார்த்தையும் இருக்காது என்பதைக் கவனத்தில் கொண்டு இந்த வசனத்தைப் படித்தால் ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை ஏனைய பகுதிக்குப் பொருந்தாது என்பதைத் தான் இவ்வசனம் தெரிவிக்கின்றது என்பதை அறியலாம்.

ஒரே நாளில், ஒரே நேரத்தில் எப்போதும் முழு உலகமும் ரமலானை அடைய முடியாது. ஒரு நேரத்தில் ரமலானை அடைந்தவர்கள் இருப்பதை போன்று அதே நேரத்தில் ரமலானை அடையாதவர்களும் இருப்பார்கள் என்பது தான் இவ்வசனத்தின் பொருள்

அதை உணர்த்தும் விதமாகத்தான் யார் அம்மாதத்தை அடைகிறாரோ என்று அல்லாஹ் கூறியுள்ளான். எனவே சர்வதேசப் பிறை நிலைப்பாட்டை இவ்வசனம் தகர்ப்பதோடு தத்ததமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தையும் இது தெரிவிக்கின்றது.

சிரியாவும் மதீனாவும்

உம்முல் ஃபழ்ல் (ரலி) அவர்கள் என்னை சிரியாவிலிருந்த முஆவியா (ரலி) அவர்களிடம் அனுப்பி வைத்தனர். நான் சிரியாவுக்குச் சென்று அவரது வேலையை முடித்தேன். நான் சிரியாவில் இருக்கும்போது ரமளானின் தலைப்பிறை தென்பட்டது. வெள்ளிக்கிழமை இரவு நான் பிறையைப் பார்த்தேன். பின்னர் அம்மாதத்தின் கடைசியில் மதீனாவுக்கு வந்தேன். இப்னு அப்பாஸ் (ரலி) என்னிடம் (பயணம் குறித்து) விசாரித்தார்கள். பின்னர் பிறையைப் பற்றி பேச்சை எடுத்தார்கள். நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?’’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்‘’ என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?’’ என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்’’ என்று கூறினேன்.

அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில் தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்‘’ என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?’’ என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித்தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்’’ என்று விடையளித்தார்கள்.

அறிவிப்பவர்: குரைப், நூல் : முஸ்லிம் 1983

ஒரு பகுதியில் பிறை காணப்பட்டால் அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்ற சர்வதேச பிறை நிலைப்பாட்டிற்கு எதிராக இந்தச் செய்தியும் அமைந்துள்ளது.

சிரியாவில் தானும் பிறை பார்த்து, முஆவியா மற்றும் மக்களும் பிறை பார்த்த விபரத்தை குரைப் கூறுகிறார். இதற்குப் பிறகும் இப்னு அப்பாஸ் (ரலி) அத்தகவலை ஏற்க மறுக்கிறார்கள். எங்கள் பகுதியில் பிறையை நாங்கள் காண வேண்டும். இல்லாவிட்டால் முப்பது நாட்கள் என்று முடிவு செய்து கொள்வோம் என்று விடையளிக்கிறார்கள்.

இவ்வளவு பேர் பார்த்திருக்கிறோமே அது போதாதா என்று கேட்டதற்கு போதாது என்று விடையளித்து விட்டு இப்படித் தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டனர் எனக் காரணத்தைக் கூறுகிறார்கள்.

தத்தமது பகுதியில் பிறை பார்க்கப்பட வேண்டும் என்பதற்கு ஆதாரமாக இந்தச் செய்தி அமைந்துள்ளது.

சர்வதேசப் பிறை என்று சவூதிப் பிறைக்கு வக்காலத்து வாங்குபவர்களுக்கு இந்த ஹதீஸ் தெளிவான மறுப்பாகவும் அமைந்துள்ளது.

இப்னு அப்பாஸின் யூகமா?

இந்தச் செய்தி சர்வதேசப் பிறை நிலைப்பாட்டில் உள்ளவர்களுக்கு நெற்றிப்பொட்டில் அறைந்தார் போல சத்தியத்தை எடுத்துச் சொல்வதால் இதை ஓய்க்கும் வேலையை கணகச்சிதமாக செய்கின்றனர்.

பிறையைக் கண்ணால் பார்க்க வேண்டும் என்பது தான் நபிகள் நாயகம் சொன்னதாகும். தத்தமது பகுதியில் பார்க்க வேண்டும் என்பதும் ஒரு பகுதியில் பார்த்தது மற்றோர் பகுதிக்கு பொருந்தாது என்பதும் இப்னு அப்பாஸின் சொந்த யூகமே என்று இதிலிருந்து வாதிடுகின்றனர்.

இப்படித்தான் நபிகள் நாயகம் கட்டளையிட்டார்கள் என்று இப்னு அப்பாஸ் கூறுவது பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும் எனும் செய்தி குறித்து தான் இவ்வாறு கூறுகிறார். ஒரு பகுதியில் பார்த்தது இன்னொரு பகுதிக்கு பொருந்தாது என நபிகள் நாயகம் கூறியதாகவோ, கட்டளையிட்டதாகவோ இப்னு அப்பாஸ் ரலி சொல்லவில்லை. பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் எனும் நபிகள் நாயகத்தின் வார்த்தையைத்தான் இவ்விதம் இப்னு அப்பாஸ் தவறாகப் புரிந்து கொண்டார்கள். 

இவ்வாறு சர்வதேச பிறை நிலைப்பாட்டாளர்கள் கூறுகிறார்கள்.

பதில்

மேற்கண்ட செய்தியில் இடம் பெறும் வாசகத்தை நன்கு படியுங்கள்.

நீங்கள் எப்போது பிறையைப் பார்த்தீர்கள்?’’ என்று (என்னிடம்) கேட்டார்கள். நாங்கள் வெள்ளிக்கிழமை இரவில் பிறையைப் பார்த்தோம்‘’ என்று கூறினேன். நீயே பிறையைப் பார்த்தாயா?’’ என்று கேட்டார்கள். ஆம், (நான் மட்டுமல்ல) மக்களும் பார்த்தார்கள். நோன்பு பிடித்தார்கள். முஆவியா (ரலி) அவர்களும் நோன்பு பிடித்தார்கள்’’ என்று கூறினேன். அதற்கவர்கள் ஆனால் நாங்கள் சனிக்கிழமை இரவில்தான் பிறையைப் பார்த்தோம். எனவே நாங்கள் (மறு) பிறையைப் பார்க்கும் வரை அல்லது முப்பது நாட்களை முழுமையாக்கும் வரை நோன்பு பிடித்துக் கொண்டிருப்போம்‘’ என்றார்கள். முஆவியா (ரலி) அவர்கள் பிறை பார்த்ததும் அவர்கள் நோன்பு பிடித்ததும் உங்களுக்குப் போதாதா?’’ என்று கேட்டேன். அதற்கவர்கள், போதாது! நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இப்படித்தான் எங்களுக்குக் கட்டளையிட்டுள்ளார்கள்’’

குரைப், முஆவியா, மற்றும் சிரியா மக்கள் சிரியாவில் வெள்ளிக்கிழமை பிறை பார்த்ததாக இப்னு அப்பாஸிடம் சொல்லப்படுகிறது.

அதற்கு இப்னு அப்பாஸ் அவர்கள் மதீனாவில் நாங்கள் சனிக்கிழமை தான் பிறை பார்த்தோம் என்கிறார். அப்படியெனில் என்ன பொருள்.

ஒரு பகுதியில் பார்த்தது இன்னொரு பகுதியைக் கட்டுப்படுத்தாது என்றுதானே அர்த்தம்?

ஒரு பகுதியில் பார்த்தது அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்படுத்தும் என்று இருந்திருந்தால் சிரியாவில் ஒரு நாள் முன்னரே பிறை பார்த்த தகவல் சொல்லப்பட்டதும் இப்னு அப்பாஸ் தாங்கள் தவறிழைத்து விட்டதாக தெரிவித்திருப்பார்கள். அதற்குரிய தீர்வை பற்றி பேசியிருப்பார்கள். ஆனால் அப்படிக் கூறாமல் தாங்கள் சனிக்கிழமை பிறை பார்த்ததின் அடிப்படையில் செயல்பட்டது சரிதான் என்று வாதிடுகிறார்கள்.

மேலும் சிரியாவில் முஆவியாவும் மக்களும் பார்த்தது போதாதா என்று தெளிவான வார்த்தைகளுடன் கேள்வி கேட்கப்பட்ட பிறகும் போதாது இப்படித்தான் நபிகள் நாயகம் எங்களுக்கு கட்டளையிட்டதாக தெரிவிக்கின்றார்கள்.

அதாவது சிரியாவில் பார்த்த பிறைத் தகவலை ஏற்க மறுத்ததற்கு காரணமாக நாங்கள் எங்கள் பகுதியில் பிறை பார்க்க வேண்டும், அல்லது முப்பது நாட்களாகப் பூர்த்தி செய்வோம் என்று கூறிவிட்டு இது நபிகளாரின் வழிகாட்டல் என்றும் குறிப்பிடுகிறார்.

இவ்வளவு தெளிவாக சொல்லப்படும் தகவலை இப்னு அப்பாஸின் சொந்த யூகம் என்று கூறுவது தங்கள் நிலைப்பாட்டை தக்க வைப்பதற்காக மக்களைக் குழப்பத்தில் ஆழ்த்தும் செயலேயாகும்.

எனவே இப்னு அப்பாஸின் இந்தச் செய்தி தத்தமது பகுதியில் பிறை பார்க்கப்பட வேண்டும் என்கிற கருத்தை சந்தேகமற தெளிவாக எடுத்துரைக்கின்றது.

தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என நபிகள் நாயகம் கூறியதாக இப்னு அப்பாஸ் நேரடி வார்த்தைகளைக் கூறவில்லை.

ஒரு வாதத்திற்கு இக்கருத்து இப்னு அப்பாஸின் புரிதல்தான் என்றாலும் கூட ஏனைய சான்றுகளின் அடிப்படையில் அவர்களது புரிதல் சரியானது என்பதே நமது வாதமாகும்.

உங்களில் யார் அம்மாதத்தை அடைகிறாரோ எனும் இறைவசனமும் மேக மூட்டம் ஏற்பட்டால் எனும் நபிமொழி உள்ளிட்ட இன்னும் சில ஹதீஸ்களும் இப்னு அப்பாஸ் அவர்களின் புரிதல் சரியானதே என்பதை உறுதி செய்கிறது.        (விளக்கம் பின்னர் காண்க)

சர்வதேசப் பிறை நிலைப்பாட்டாளர்களின் வாதப்பிரகாரம் இப்னு அப்பாஸ் சொன்னது அவர்களது சொந்தக் கருத்தாகவே இருந்தாலும் எந்தச் சான்றுகளின் அடிப்படையில் இப்னு அப்பாஸின் கருத்தை தவறு என்கிற முடிவிற்கு வந்தார்கள்?

அதற்குரிய மார்க்கச் சான்றுகள் என்ன?

ஸஹாபாக்களின் புரிதலும் மார்க்கம் என்ற கொள்கையில் இருக்கும் இவர்களுக்கு இப்னு அப்பாஸின் புரிதலை ஏற்பதில் என்ன தடை?

நபித்தோழர்களை விட நாம் நன்கு புரிய முடியாது என்பவர்களுக்கு இதில் என்ன பிரச்சனை?

இக்கேள்விகளுக்கு மனோ இச்சையைத் தவிர்த்து அவர்களிடம் வேறு எந்தச் சான்றும் இல்லை. எந்தப் பதிலும் இல்லை.

மேக மூட்டம் ஏற்படும் போது . . .

அதை (பிறையை) நீங்கள் காணும்போது நோன்பு பிடியுங்கள். அதை (மறு பிறையைக்) காணும்போது நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் ஷஃபான் மாதத்தை முப்பது நாட்களாக முழுமைப்படுத்துங்கள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி?), நூல் : புகாரி 1909

ஒரு பகுதியில் பார்க்கப்படும் பிறை உலகின் அனைத்துப் பகுதிகளையும் கட்டுப்படுத்தாது என்ற கருத்திற்கு ஆதரவாக இந்த ஹதீசும் இருக்கின்றது.

ஏனெனில் உலகில் எங்காவது பிறை பார்த்தால் போதும் என்று இருக்குமானால் உங்களுக்கு மேகம் ஏற்பட்டால் முப்பது நாட்களாக எண்ணிக் கொள்ளுங்கள் என்ற அண்ணலாரின் வாசகம் தேவையற்றதாக, அர்த்தமற்றதாக ஆகிவிடும்.

ஏனெனில் உலகம் முழுவதும் எப்போதும் மேகமூட்டமாக இருக்காது. எங்காவது மேகமில்லாத பகுதி இருக்கும். அங்கே பிறை பார்த்து உலகுக்கு அறிவிக்கலாம். எனவே நபிகளாரின் ‘உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால்’ என்ற வாசகம் ஒவ்வொரு பகுதியிலும் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை உள்ளடக்கியே நிற்கிறது.

உலகில் எங்கு பிறை பார்த்தாலும் அது முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்றிருந்தால் மேகமூட்டம் ஏற்பட்டால் என்ன செய்வது என்பது பற்றி நபிகள் நாயகம் சொல்ல வேண்டிய தேவையே இல்லை. காரணம் முழு உலகிலும் மேக மூட்டம் ஏற்படும் வாய்ப்பு இல்லை.

இதன் அடிப்படையில் சர்வதேசப் பிறை நிலைப்பாடு தவறு என்பதையும், ஒவ்வொரு பகுதியினரும் தத்தமது பகுதியில் பிறை பார்த்து நோன்பு வைக்க வேண்டும். காணப்படா விட்டால் அம்மாதத்தை முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ள வேண்டும் என்பது தான் இந்த ஹதீஸின் பொருள் என்பதை விளங்கலாம்.

மாதத்திற்கு எத்தனை நாட்கள்?

மாதத்திற்கு இருபத்தி ஒன்பது நாட்களாகும். எனவே பிறையைக் காணாமல் நோன்பு பிடிக்காதீர்கள். உங்களுக்கு மேக மூட்டம் ஏற்பட்டால் எண்ணிக்கையை முப்பதாக முழுமைப்படுத்துங்கள்’’ என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1907

இந்த நபிமொழியும் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தையே தாங்கி நிற்கிறது.

இந்த நபிமொழியின் கருத்துப்படி எந்த மாதத்துக்கும் 28 நாட்களோ அல்லது 31 நாட்களோ இருக்க முடியாது. மாதத்தின் குறைந்த பட்ச அளவு 29 நாட்கள்; அதிகபட்ச அளவு 30 நாட்கள்; இதைத் தவிர வேறில்லை.

நோன்பின் எண்ணிக்கை 29ஐ விடக் குறைவாகவோ, 30ஐ விட அதிகமாகவோ இருக்கக் கூடாது என்பதை மேற்கண்ட நபிமொழி கூறுகிறது.

ஒரு பகுதியில் பிறை தென்படுவதால் முழு உலகுக்கும் மாதம் பிறந்து விட்டது எனும் சர்வதேச பிறை நிலைப்பாட்டால் இந்த நபிமொழி நிராகரிக்கப்படும் நிலை ஏற்படுகிறது.

எப்படியெனில் சவூதியில் மாலை ஏழு மணியாக இருக்கும் போது காலை ஏழு மணியாக உள்ள ஊரை உதாரணத்துக்கு எடுத்துக் கொள்வோம்.

மாலை 7 மணிக்கு சவூதியில் ரமளான் பிறை பார்த்து அறிவித்து விட்டார்கள். இவர்களின் வாதப்படி அந்த நேரத்தில் முழு உலகுக்கும் ரமளான் பிறந்து விட்டது.

சவூதியில் மாலை 7மணியாக இருக்கும்போது அங்காரா (அமெரிக்கா) பிரதேசத்தார் காலை ஏழு மணியை அடைந்திருப்பார்கள். அதாவது இவர்கள் ரமளானின் முதல் நாள் பகலை அடைந்து விட்டனர். சுப்ஹுக்கு முன்னர் நிய்யத் அவசியம் என்ற நஸாயியில் உள்ள ஹதீஸின் படி இவர்கள் அன்று நோன்பு நோற்க முடியாது. சுப்ஹுக்குப் பின்னர் தான் அவர்கள் ரமளானை அடைகிறார்கள்.

இவர்களின் வாதப்படி, ரமளான் பிறந்திருந்தும் உண்டு, பருகி இவர்கள் மகிழ்வார்கள். யார் ரமளானை அடைகிறாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தை அப்பட்டமாக மீறிக் கொண்டிருக்கும் மாபெரும் குற்றத்தைச் செய்து கொண்டிருப்பார்கள்.

இப்படியே 29ம் நாள் முடிந்து 30ம் இரவு வருகிறது. அந்த இரவு ஏழு மணிக்கு தலைப்பிறை சவூதியில் தெரிந்து விடுகிறது. சவூதிக்காரர்களுக்கு பிரச்சனை இல்லை. அமெரிக்காவின் நிலை என்ன? அவர்கள் இந்த நேரத்தில் 29ம் நாள் நோன்பைப் பிடித்து சுப்ஹு தொழுதுவிட்டு வெளியே வருவார்கள். இப்போது அரை மணி நேரத்துடன் நோன்பை விட்டு விட்டு பெருநாள் தொழுகைக்குச் சென்றுவிட வேண்டும். 28 நோன்பை முடித்தவுடன் இவர்களுக்குப் பெருநாள் வந்து விட்டது.

குறைந்த பட்சம் 29 நோன்புகள் நோற்க வேண்டும் என்ற நபிமொழிக்கு மாற்றமான நிலை இங்கே ஏற்படுகிறது. நாம் பார்த்த பிறை முழு உலகையும் கட்டுப்படுத்தும் என்று கூறினால் உலகின் பல பகுதியினர் 28 நோன்பு தான் பிடிக்க முடியும். ஏதோ தவறுதலாக எப்போதோ 28 நோன்பு பிடிப்பது போன்றதாக இதை எடுத்துக் கொள்ள முடியாது. எந்த மாதம் 29 நாட்களுடன் முடிகின்றதோ அந்த மாதங்களில் காலமெல்லாம் இந்தத் தவறை உலகில் பாதிப்பேர் செய்து கொண்டிருப்பார்கள்.

உலகமெங்கும் ஒரே நாளில்தான் நோன்பு எனவும், ஓர் ஊரிலிருந்து பிறை பார்த்த தகவல் கிடைத்தால் எல்லா ஊர்களுக்கும் பிறை பிறந்து விட்டதாகப் பொருள் எனவும் வாதம் புரிவோர் தங்கள் வாதத்தின் காரணமாக 28 நோன்பு என்ற நிலையை ஏற்படுத்துகிறார்கள்.

இதிலிருந்தும் சர்வதேசப் பிறை நிலைப்பாடு தவறானது என்பதும் தத்தமது பகுதியில் பிறை பார்க்கப்பட வேண்டும் என்பதுவே சரியானதும் என்பது உறுதியாகிறது.

ஏனிந்த தகவல்கள்?

நாம் இப்போது குறிப்பிட்ட குர்ஆன் வசனம் மற்றும் ஹதீஸ்கள் அனைத்தும் தத்தமது பகுதியில் பிறை பார்க்காமல் எங்கோ பிறை பார்த்த செய்தியை ஏற்றுக் கொள்பவர்களுக்கு மறுப்பாக அமைந்துள்ளன.

இவை யாவும் பிறை ஓர் விளக்கம் எனும் நூலில் பி.ஜே அவர்கள் முன்னரே எழுதிய தகவல்களே.

இவற்றைச் சுருக்கமாக மீள்பதிவு செய்திருப்பதன் காரணம் தத்தமது பகுதியில் பிறை பார்க்கப்பட வேண்டும் என்கிற கருத்தை வாகனக் கூட்டம் ஹதீஸ் மட்டுமே எடுத்து சொல்வதாக தவறாக எண்ணி விடக்கூடாது என்பதற்காகவே. இந்தக் கருத்தை நிலைநாட்ட அந்த ஒரு ஹதீஸைத் தவிர்த்து வேறு எந்த ஆதாரமும் இல்லை என்று கருதி விடக்கூடாது. வாகனக் கூட்டம் ஹதீஸ் அல்லாத இவ்வளவு ஆதாரங்களையும் குறிப்பிடுகிறோம் என்பதற்காகவே இந்தத் தகவலை மீண்டும் நினைவுபடுத்துகிறோம்.

இப்போது விஷயத்திற்கு வருவோம்.

வாகனக் கூட்டம் ஹதீஸ் இல்லையென்றால் கூட நமது நிலைப்பாட்டில் எந்த மாற்றமும் வரப்போவதில்லை. ஏனெனில் நாம் கூறும் தத்தமது பகுதியில் பிறை பார்த்தல் எனும் கருத்தை பிரதிபலிக்கும் வகையில் பல ஆதாரங்கள் உள்ளன.

வாகனக் கூட்டம் ஹதீஸில் அமரன் நாஸ் எனும் அறிவிப்பு பலவீனமானது அல்ல என்று சொல்லிவிட்டால் மட்டும் சர்வதேசப் பிறை சரி என்றாகிவிடாது.

உங்களில் யார் அம்மாதத்தை அடைவாரோ எனும் இறைவசனத்திற்கு உளறாமல் பதில் சொல்ல வேண்டும்.

மேக மூட்டம் ஏற்பட்டால் முப்பதாகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்ற ஹதீஸிற்கு அறிவுப்பூர்வமாகப் பதிலளிக்க வேண்டும்.

சிரியா - மதீனா தொடர்புடைய குரைபின் ஹதீஸிற்கு ஆக்கப்பூர்வமான பதிலை அளிக்க வேண்டும்.

மாதத்திற்கு 29 நாட்கள் என்ற ஹதீஸிற்கு முரணாகச் செயல்படும் போக்கிற்கு பதிலளிக்க வேண்டும்.

இப்படி (சர்வதேசப் பிறைக்கு எதிராக) தத்தமது பகுதியில் பிறை பார்ப்பதற்கு என்னென்ன ஆதாரங்கள் அமைந்துள்ளனவோ அவை அனைத்திற்கும் முறையான பதிலை அளித்தால் மட்டுமே சர்வதேசப் பிறை நிலைப்பாடு சரி என்றாகும்.

அதை விட்டு விட்டு வாகனக் கூட்டம் ஹதீஸிற்கு மட்டும் மூன்று மணி நேரம் பதில் என்ற பெயரில் பயான் செய்வதால் மாத்திரம் சர்வதேசப் பிறையைச் சரிகண்டு விட முடியாது.

எமது அனைத்து வாதங்களுக்கும் பதில் அளிக்காமல் தத்தமது பகுதியில் பிறை பார்க்க வேண்டும் என்ற கருத்தை ஒரு போதும் குறை கூற முடியாது என்பதை மனதில் ஆழப்பதித்து கொள்வோம்.

இப்போது வாகனக் கூட்டம் ஹதீஸ் பற்றி அறிவிப்பு ரீதியாக அலசுவோம்.

அறிவிப்பு ரீதியாக . . .

வாகனக் கூட்டம் ஹதீஸை வைத்து நாம் என்ன வாதத்தை முன் வைக்கிறோம், எதிர்த் தரப்பினர் என்ன வாதத்தை எழுப்புகின்றனர் என்பதையெல்லாம் துவக்கத்தில் கண்டோம்.

வாகனக் கூட்டம் ஹதீஸில் நாம் முடிவு செய்ய வேண்டிய விஷயம் என்னவெனில் நபிகள் நாயகம் திடலுக்குச் செல்லுமாறு அவர்களுக்கு (வாகனக் கூட்டத்திற்கு) கட்டளையிட்டார்களா? அல்லது மக்களுக்கு கட்டளையிட்டார்களா? என்பதைத்தான்.

அமரஹூம் - அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பது சரியானால் பிறை பார்த்த வாகனக் கூட்டத்திற்கு மட்டும் பெருநாள் தொழும்படி கட்டளையிட்டார்கள். வெளியூரில் பார்த்த அத்தகவலை ஏற்றுக் கொள்ளவில்லை என்றாகி விடும்.

அமரன் நாஸ் - மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்பது சரியாக இருந்தால் வெளியூரிலிருந்து வந்த பிறைத் தகவலை ஏற்று அனைத்து மக்களுக்கும் பெருநாள் என அறிவித்துள்ளார் என்றாகும்.

இதன் அடிப்படையில் எங்கிருந்து பிறை கண்டதாக வரும் தகவலையும் ஏற்கலாம் என்பது சர்வதேசப் பிறை நிலைப்பாட்டாளர்களின் வாதம்.

இதுதான் வாகனக் கூட்டம்  ஹதீஸை மையமாக வைத்து நகரும் கருத்து வேறுபாடுகள் ஆகும்.

எது சரி?

வாகனக் கூட்டம் பிறை பார்த்தது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸை அபூபிஷ்ரிடமிருந்து மூன்று நபர்கள் அறிவிக்கின்றார்கள்.

அபூஅவானா

ஷூஃபா

ஹூஷைம்

இதில் அபூஅவானாவின் அறிவிப்பில் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் - அமரன் நாஸ் என்றே உள்ளது.

8455- أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِىُّ بْنُ مُحَمَّدٍ الْمُقْرِئُ أَخْبَرَنَا الْحَسَنُ بْنُ مُحَمَّدِ بْنِ إِسْحَاقَ حَدَّثَنَا يُوسُفُ بْنُ يَعْقُوبَ الْقَاضِى حَدَّثَنَا أَبُو الرَّبِيعِ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ أَبِى بِشْرٍ عَنْ أَبِى عُمَيْرِ بْنِ أَنَسٍ عَنْ عُمُومَةٍ لَهُ مِنْ أَصْحَابِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- قَالَ : أَصْبَحَ أَهْلُ الْمَدِينَةِ صِيَامًا فِى آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ عَلَى عَهْدِ النَّبِىِّ -صلى الله عليه وسلم- فَقَدِمَ رَكْبٌ مِنْ آخِرِ النَّهَارِ فَشَهِدُوا عِنْدَ رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- : أَنَّهُمْ رَأَوُا الْهِلاَلَ بَالأَمْسِ فَأَمَرَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- النَّاسَ أَنْ يُفْطِرُوا وَيَغْدُوا إِلَى مُصَلاَّهُمْ.

இதில் இடம்பெறும் அனைத்து அறிவிப்பாளர்களின் நம்பகத்தன்மையும் அறிஞர்களால் உறுதி செய்யப்பட்டுள்ளது.

ஷூஃபாவின் அறிவிப்பு

ஷூஃபாவிடமிருந்து மொத்தம் 15 மாணவர்கள் இந்தச் செய்தியினை அறிவிக்கின்றார்கள்.

அவர்கள் யார்? யார்? எப்படி அறிவிக்கின்றார்கள்? என்கிற விவரம் உங்கள் பார்வைக்கு. (நீளம் கருதி அரபியைத் தவிர்த்துள்ளோம்)

சுலைமான் பின் ஹர்ப் - மக்களுக்கு   (தாரீகு பக்தாத் 1696)

நள்ர் பின் ஷூமைல் - அவர்களுக்கு ( தாரகுத்னீ 2204)

வஹ்ப் பின் ஜரீர் - அவர்களுக்கு ( தாரகுத்னீ 2204)

ரவ்ஹ் பின் உபாதா - அவர்களுக்கு ( தாரகுத்னீ 2204)

அபுன் நள்ர் - அவர்களுக்கு ( தாரகுத்னீ 2204)

பகிய்யா பின் வலீத் - அவர்களுக்கு (அல்குனா வல்அஸ்மாஃ 3/105)

அம்ர் பின் மர்சூக் - எதுவுமில்லை (அல்ஃபவாயிதுஷ் ஷஹீர் 210)

ஸயீத் பின் ஆமிர் - இரண்டும் (இப்னு ஹிப்பான் 3456, அஹ்மத் 14006)

சுஃப்யான் - மக்களுக்கு (தாரகுத்னீ 2203)

அஃப்பான் -அவர்களுக்கு (அல்ஃபவாயிதுஷ் ஷஹீர் 209)

அபுல் வலீத் (ஹிஷாம்பின்அப்துல்) அவர்களுக்கு ( மஃரிஃபதுஸ் ஸூனன் 2005)

யஹ்யா - அவர்களுக்கு (நஸாயீ 1557)

ஹஃப்ஸ் பின் உமர் - அவர்களுக்கு (அபூதாவூத் 1159)

முஹம்மத் பின் ஜஃபர் - அவர்களுக்கு ( அஹ்மத் 20598)

அலீ பின் அல்ஜஃத் -அவர்களுக்கு (முஸ்னது இப்னுல் ஜஃத் 1712)

இதுதான் அவர்களின் விபரம்.

இதில் மக்களுக்கு கட்டளையிட்டார்கள் என்று அறிவிப்பவர்கள் சுலைமான் பின் ஹர்ப், சுஃப்யான், ஸயீத் பின் ஆமிர் ஆகிய மூன்று மாணவர்கள் மட்டுமே.

சுலைமான் பின் ஹர்ப் அறிவிப்பு

சுலைமான் பின் ஹர்ப் என்பவரது அறிவிப்பில் அஹ்மத் பின் ஜஃபர் அபுல் ஃபர்ஜ் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரது நம்பகத்தன்மை அறிஞர்களிடம் உறுதி செய்யப்படவில்லை.

மட்டுமின்றி வாகனக் கூட்டம் வந்தார்கள் என்பதற்கு பதிலாக ஒரு நபர் வந்தார் என அதில் இடம் பெற்றுள்ளது.

எனவே இது கவனத்தில் கொள்ளத்தகாதது.

ஸயீத் பின் ஆமிர்

அடுத்து ஸயீத் பின் ஆமிர் வழியாக மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும், அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் எனவும் இரு விதமாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

ஸயீத் பின் ஆமிர் வழியாக அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கப்படும் பஸ்ஸாரின் அறிவிப்பு.

مسند البزار - (2 / 338)

7164- حَدَّثنا يعقوب بن إبراهيم ، حَدَّثنا سعيد بن عامر ، حَدَّثنا شعبة ، عَن قَتادة ، عَن أَنَس ؛ أَن قوما شهدوا عند النبي صلى الله عليه وسلم على رؤية الهلال - هلال شوال- فأمرهم أن يفطروا وأن يغدوا على عيدهم.

وهذا الحديث أخطأ فيه سعيد بن عامر وإنما رواه شعبة ، عَن أبي بشر ، عَن أبي عمير بن أنس : أن عمومة له شهدوا عند النبي صلى الله عليه وسلم.

ஸயீத் பின் ஆமிர் வழியாக மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கப்படும் அஹ்மதின் அறிவிப்பு

14006 - حدثنا يعقوب بن إبراهيم الدورقي قال حدثني سعيد بن عامر عن شعبة عن قتادة عن أنس : ان عمومة له شهدوا عند النبي صلى الله عليه و سلم على رؤية الهلال فأمر الناس ان يفطروا وان يخرجوا إلى عيدهم من الغد

(இரண்டின் அறிவிப்பாளர் தொடரும் ஒன்று என்பதும் கவனிக்கத்தக்கது.)

மேலும் இவர் நம்பகமானவராக இருந்தாலும் இவரது ஹதீஸ்களில் சில தவறுகள் உள்ளன என்று அபூஹாதம் உள்ளிட்ட அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்.

ذيل ميزان الاعتدال - (1 / 117)

424 سعيد بن عامر الضبعي البصري ( ع )  روى عن شعبة وسعيد بن أبي عروبة وغيرهما  روى عنه أحمد وإسحاق وابن المديني وغيرهم  قال أبو حاتم كان رجلا صالحا وكان في حديثه بعض الغلط وهو صدوق

மேற்கண்ட செய்தியின் அறிவிப்பாளர் தொடரையும் தவறாக மாற்றியே அறிவித்துள்ளார்.

அபூபிஷ்ர், அபூ உமைர் இப்னு அனஸ் என்று சொல்வதற்கு பதிலாக கதாதா, அனஸ் என்று தவறாக அறிவித்துள்ளார். இதை இமாம் பஸ்ஸார் அவர்கள் தனது நூலில் குறிப்பிடுகிறார்.

7164- حَدَّثنا يعقوب بن إبراهيم ، حَدَّثنا سعيد بن عامر ، حَدَّثنا شعبة ، عَن قَتادة ، عَن أَنَس ؛ أَن قوما شهدوا عند النبي صلى الله عليه وسلم على رؤية الهلال - هلال شوال- فأمرهم أن يفطروا وأن يغدوا على عيدهم.

وهذا الحديث أخطأ فيه سعيد بن عامر وإنما رواه شعبة ، عَن أبي بشر ، عَن أبي عمير بن أنس : أن عمومة له شهدوا عند النبي صلى الله عليه وسلم.

முஸ்னது பஸ்ஸார் பாகம் 2 பக் 338

இமாம் தாரகுத்னீ அவர்களும் ஸயீத் பின் ஆமிரின் இந்தத் தவறைச் சுட்டிக் காட்டியுள்ளார்கள்.

العلل للدارقطني - (12 / 134)

فقال : يرويه سعيد بن عامر ، عن شعبة ، عن قتادة ، عن أنس.وخالفه أصحاب شعبة ؛ رووه عن شعبة ، عن أبي بشر ، عن أبي عمير بن أنس ، عن عمومة له ، عنِ النَّبيِّ صَلَّى الله عَلَيه وسَلم. وكذلك رواه أبو عوانة ، وهشيم ، عن أبي بشر . وهو الصواب.

அல்இலல் 12 134

எனவே இது போன்ற நேரத்தில் இவரது அறிவிப்பை வைத்து உறுதி செய்ய இயலாது என்பதால் ஷூஃபாவின் மாணவர்களில் ஒருவர் (சுஃப்யான்) மட்டுமே மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்ற வாசகத்தை அறிவிக்கின்றார்கள் என்ற முடிவு வருகிறது.

மீதமுள்ள 12 மாணவர்களில் 11 மாணவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றே அறிவிக்கின்றார்கள்.

ஒருவர் (அம்ர் பின் மர்சூக்) மட்டும் அவர்களுக்கு என்றோ, மக்களுக்கு என்றோ எதையும் குறிப்பிடாமல் நபிகள் நாயகம் நோன்பை விடுமாறு கட்டளை இட்டார்கள் என்று மட்டுமே கூறுகிறார்.

அம்ர் பின் மர்சூக் மீது அறிஞர்களின் விமர்சனம் உள்ளது குறிப்பிடத்தக்கது.

ஷூஃபாவிடமிருந்து அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவிக்கக் கூடிய 11 மாணவர்களில் பகிய்யா பின் அல்வலீத் என்பவரும் ஒருவர்.

இவரையும் அறிஞர்கள் விமர்சித்துள்ளனர். எனினும் இப்னு ஸஃத், அபூசுர்ஆ, யஃகூப் போன்ற அறிஞர்கள் இவர் நம்பகமானவர்களிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பு சரியானது என்றும் நம்பகத்தன்மை உறுதி செய்யப்படாத நபர்களிடமிருந்து அறிவித்தால் அந்தச் செய்தியே பலவீனம் என்றும் தெளிவுபடுத்தி குறை கூறியுள்ளனர்.

பார்க்க தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 1 பக் 417

இங்கே ஷூஃபா எனும் உறுதியானவரிடமிருந்துதான் இந்தச் செய்தியை அறிவித்துள்ளார். இந்த அறிஞர்களின் பார்வையில் இது பிரச்சனைக்குரிய செய்தி அல்ல.

இதன்படி பகிய்யாவின் செய்தியை ஏற்றாலும் அல்லது பலவீனம் என்று ஒதுக்கினாலும் ஷூஃபாவின் மாணவர்களில் மிக அதிகமானவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவித்துள்ளார்கள் என்பது உறுதியிலும் உறுதியானதாகும்.

ஒரு ஆசிரியரிடமிருந்து பல மாணவர்கள் ஒரு செய்தியை அறிவிக்கும்போது பலர் அறிவிப்பதற்கு மாற்றமாக அதற்குக் குறைவானவர்கள் அறிவித்தால் அந்த அறிவிப்பு பலவீனமானதாகும். இந்த வகை ஹதீஸ்கள் ஹதீஸ் கலையில் ஷாத் எனப்படும்.

எனவே ஷூஃபாவின் (சுஃப்யானை தவிர) எல்லா மாணவர்களும் இந்தச் செய்தியை அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறியிருக்கும்போது இருவர் மட்டும் மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறுவதால் இந்த இருவரின் அறிவிப்பு பலவீனமாகிறது.

இதன் மூலம் ஷூஃபா, அமரஹூம் - அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றே அறிவித்துள்ளார்கள் என்பது உறுதியாகிறது.

இதை எதிர்த்தரப்பினரும் ஒப்புக் கொள்வதால் பிரச்சனை ஏதுமில்லை.

ஷூஃபாவின் உறுதியான மாணவர்

அதுமட்டுமின்றி ஷூஃபாவின் மாணவர்களில் மிக உறுதியானவர் என்று பெயர் பெற்றவர் முஹம்மது பின் ஜஃபர் ஆவார்.

இக்கருத்தினை இமாம் இஜ்லீ, இமாம் இப்னு மஹ்தீ மற்றும் இப்னுல் முபாரக் ஆகியோர் வழிமொழிந்துள்ளனர்.

தஹ்தீபுத் தஹ்தீப் 9 84

تهذيب التهذيب ـ محقق - (9 / 84)

129 - ع (الستة) محمد بن جعفر الهذلي مولاهم أبو عبد الله البصري المعروف بغندر (1) صاحب الكرابيس.روى عن شعبة فأكثر وجالسه نحوا من عشرين سنة وكان ربيبه  وقال العجلي بصري ثقة وكان من أثبت الناس في حديث شعبة

تهذيب التهذيب ـ محقق - (9 / 85)

قال ابن مهدي غندر أثبت في شعبة مني وقال ابن المبارك إذا اختلف الناس في حديث شعبة فكتاب غندر حكم بينهم

இந்த முஹம்மத் பின் ஜஃபர், அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று ஷூஃபா கூறியதாக அறிவித்துள்ளதும் குறிப்பிடத்தக்கது.

ஷூஃபாவின் அதிகமான மாணவர்கள் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்று அறிவித்துள்ளார்கள்.

ஷூஃபாவின் உறுதியான மாணவர் என்று பெயர் பெற்றவரும் அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றே அறிவித்துள்ளார்.

இவ்விரண்டின் மூலம் ஷூஃபாவின் அறிவிப்பு அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் - வாகனக் கூட்டத்திற்குக் கட்டளையிட்டார்கள் என்பது தான் என உறுதியாகிறது.

ஆக அபூபிஷ்ரின் மூன்று மாணவர்களில் ஒருவர் (ஷூஃபா) அவர்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும், இன்னொருவர் (அபூஅவானா) மக்களுக்குக் கட்டளையிட்டார்கள் என்றும் அறிவித்துள்ளார்கள்.

இந்நிலையில் இரண்டு கருத்தும் சமமான அந்தஸ்தைப் பெறுகின்றன. மீதமுள்ள ஒரு மாணவர் எப்படி அறிவிக்கின்றார் என்பதைப் பொறுத்தே இரு கருத்தில் ஒரு கருத்து வலுப்பெறும் நிலை உள்ளது.

மீதமுள்ள அந்த ஒருவர் எப்படி அறிவிக்கின்றார் என்பதை பார்ப்போம்.                     

வளரும் இன்ஷாஅல்லாஹ்

 

நபிமொழித் தொகுப்புகள்

எண் புத்தகத்தின் பெயர்   ஆசிரியர்களின் பெயர்     பிறப்பு (ஹிஜ்ரீ) இறப்பு (ஹிஜ்ரீ)  

1          صحيح البخاري  ஸஹீஹுல் புகாரி   محمد بن إسماعيل முஹம்மத் பின் இஸ்மாயீல்    194      256    

2          صحيح مسلم  ஸஹீஹு முஸ்லிம்   مسلم بن الحجاج  முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ்  204    261           

3          سنن الترمذي  ஸுனன் திர்மிதீ        محمد بن عيسى  முஹம்மத் பின் ஈஸா      209    279           

4          سنن النسائي  ஸுனன் நஸாயீ  أحمد بن شعيب أبو عبد الرحمن النسائي  அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ      215    303    

5          سنن أبي داود  ஸுனன் அபூதாவூத்    سليمان بن  الأشعث சுலைமான் பின் அஷ்அஸ்    202      275    

6          سنن ابن ماجه  ஸுனன் இப்னுமாஜா  محمد بن يزيد  முஹம்மத் பின் யஸீத்      209    273           

7          مسند أحمد  முஸ்னத் அஹ்மத் أحمد بن محمد بن حنبل  அஹ்மத் பின் முஹம்மத் பின் ஹன்பல்  164    241    

8          الموطأ  அல் முஅத்தா  مالك بن أنس  மாலிக் பின் அனஸ்    93      179    

9          سنن الدارمي  ஸுனன் தாரிமி   عبد الله بن عبد الرحمن  அப்துல்லாஹ் பின் அப்துர்ரஹ்மான்        181  255    

10        صحيح ابن حبان  ஸஹீஹ் இப்னு ஹிப்பான்     محمد بن حبان البستي  முஹம்மத் பின் ஹிப்பான் அல்பஸதீ 270    354    

11        المستدرك على الصحيحين   அல்முஸ்தத்ரக் அலஸ்ஸஹீஹைனி     محمد بن عبدالله   முஹம்மத் பின் அப்துல்லாஹ்        321    405    

12        المصنف عبد الرزاق  அல்முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக்       أبو بكر عبد الرزاق بن همام الصنعاني  அபூபக்கர் அப்துர்ரஸ்ஸாக் பின் ஹம்மாம்      126     211    

13        مسند الحميدي  முஸ்னதுல் ஹுமைதீ عبد الله بن الزبير  அப்துல்லாஹ் பின் ஜுபைர்     -      219   

14        مستخرج أبي عوانة  முஸ்தஹ்ரஜ் அபீ அவானா   يعقوب بن إسحاق بن إبراهيم أبو عوانة الإسفراينى النيسابورى  யஃகூப் பின் இஸ்ஹாக்   230    316    

15        صحيح ابن خزيمة  ஸஹீஹ் இப்னு ஹுஸைமா محمد بن إسحاق بن خزيمة أبو بكر السلمي النيسابوري  முஹம்மத் பின் இஸ்ஹாக் பின் ஹுஸைமா   223    311    

16        سنن الدارقطني  ஸுனன்தாரகுத்னீ     أبو الحسن علي بن عمر الدارقطني  அபுல் ஹஸன் அலீ பின் உமர் அத்தாரகுத்னீ  306    385    

17        سنن الصغرى للنسائي  ஸுனன் அஸ்ஸுக்ரா  أحمد بن شعيب بن علي الخراساني، النسائي  அஹ்மத் பின் ஷுஐப்     215     303    

18        السنن الصغير  அஸ்ஸுனனுஸ்ஸகீர்       أحمد بن الحسين بن علي بن موسى أبو بكر البيهقي  அஹ்மத் பின் அல்ஹுஸைன் அல்பைஹகீ    384    458    

19        السنن الكبرى   அஸ்ஸுனனுல் குப்ரா      أحمد بن الحسين بن علي بن موسى أبو بكر البيهقي  அஹ்மத் பின் அல்ஹுஸைன் அல்பைஹகீ    384    458    

20        السنن الكبرى   அஸ்ஸுனனுல் குப்ரா      أحمد بن شعيب أبو عبد الرحمن النسائي  அஹ்மத் பின் ஷுஐப் அந்நஸாயீ   215    303    

21        سنن سعيد بن منصور   ஸுனன் ஸயீத் பின் அல் மன்சூர்      أبو عثمان سعيد بن منصور الجوزجاني  அபூஉஸ்மான் ஸயீத் பின் மன்சூர்    -    227   

22        مصنف ابن أبي شيبة  முஸன்னப் இப்னு அபீஷைபா     أبوبكر ابن أبي شيبة  அபூபக்கர் இப்னு அபீஷைபா       -    235   

October 6, 2015, 8:46 PM

ஏப்ரல் தீன்குலப் பெண்மணி 2015

நிலம் கையகப்படுத்தும் அவசரச் சட்டம்

120 வருடங்களுக்கு முன் ஆங்கிலேய ஏகாதிபத்திய எஜமானர்களால் 1894ஆம் ஆண்டு கொண்டு வந்த நிலம் கையகப்படுத்தும் சட்டம் இன்று பல மாற்றங்களைக் கண்டு மோடி அரசால் அவசரச் சட்டமாகக் கொண்டுவரப்பட்டு மாநிலங்களைவில் நிறைவேறுமா? நிறைவேறாதா? என்ற நிலையில் இருக்கிறது.

விவசாயிகளிடமிருந்து வலுக்கட்டாயமாக நிலங்கள் அபகரிக்கப்படுவதைப் பொது நோக்கமாக இந்த சட்டம் கொண்டுள்ளது. இதற்கு முந்தைய காங்கிரஸ் அரசு இந்தச் சட்டத்தில் சில திருத்தங்களைக் கொண்டு வந்தது. இப்போது அந்தத் திருத்தங்களும் போதாது என்று கூடுதலாக பல திருத்தங்கள் செய்து, பெரும் நிறுவனங்களின் மனதில் பாலை வார்த்திருகிறார் மோடி.

நிலம் கையகப்படுத்துதலுக்கான அவசரச் சட்டத்தால் விவசாயிகள் பாதிக்கப்படமாட்டார்கள் என்று மத்திய நிதி அமைச்சர் அருண் ஜெட்லி கூறியிருக்கிறார். இது முழுப் பூசணிக்காயைச் சோற்றில் மறைக்கும் செயலாகும். முந்தைய ஐக்கிய முற்போக்குக் கூட்டணி ஆட்சியில் கொண்டு வரப்பட்ட, நிலம் கையகப்படுத்துதலில் வெளிப்படைத் தன்மை இருந்தது. நியாயமான இழப்பீடு பெறும் உரிமையும் இருந்தது. மறுவாழ்வு மற்றும் மறு குடியமர்த்தல் சட்டத்தின் படி அரசு மற்றும் தனியார் துறை கூட்டாண்மைத் திட்டங்களுக்காக நிலங்களைக் கையகப்படுத்தும்போது, அந்த நிலங்களின் உரிமையாளர்களில் 70 விழுக்காட்டினரின்  ஒப்புதல் பெறப்பட வேண்டும். ஆனால், இப்போது அந்த நிபந்தனை நீக்கப்பட்டிருக்கிறது.

அதுமட்டுமின்றி, நிலங்களைப் பெரிய அளவில் கையகப்படுத்தும்போது, அதனால் ஏற்படும் சமூகத் தாக்கம் குறித்து கண்டிப்பாக ஆய்வு செய்யப்பட வேண்டும் என்ற பிரிவும் அவசரச் சட்டத்தில் அகற்றப்பட்டிருக்கிறது. இதற்கெல்லாம் மேலாக, பாசன வசதியுள்ள பல்வகைப் பயிர்கள் விளையும் தன்மையுள்ள நிலங்களை கையகப்படுத்தக் கூடாது என்று முந்தைய சட்டத்தில் இருந்த விதியும் நீக்கப்பட்டிருக்கிறது. சுருக்கமாகச் சொன்னால் மத்திய அரசு நினைத்தால் எந்த நிலத்தையும் எதிர்ப்பின்றி கைப்பற்றிக் கொள்ள முடியும்.

விசாயம் அழிந்துவரும் காலத்தில் அதை உயிர்ப்பிக்க வேண்டிய அரசு பெரும் நிறுவனங்களின் ஆசையை நிறைவேற்ற விவசாயிகளின் வயிற்றில் அடிக்க முனைந்து விட்டது. மேலும் பொதுமக்களும் இதனால் பெரும் பாதிப்பிற்கு உள்ளாகப் போகிறார்கள். விவசாயம் அழியும் போது வெளிநாட்டில் உணவுக்கு கையேந்தும் நிலை ஏற்படப் போகிறது. வெறும் தொழிற்சாலைகள் மட்டுமே இந்தியாவில் இருக்கும். விவசாயம் முற்றிலும் அழிந்து போய்விடும்.

விவசாயிகள், பொதுமக்கள், எதிர்க்கட்சியினர் என்று அனைவரும் எதிர்க்கும் இந்தச் சட்டத்தை மோடி அரசு எப்படியும் சட்டமாக்கிவிடத் துடிப்பது எதற்கு என்பது மக்களுக்கு புரியத் துவங்கியுள்ளது. இதன் விளைவு அடுத்த தேர்தலில் வெளிப்படும். இன்ஷாஅல்லாஹ்

 

தொடர் 4

ஜிஹாத் ஏன்? எதற்கு? எப்படி?

போருக்கு முன்....

போருக்கு முன் ஆட்சியதிகாரம் ஏற்படுத்துதல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மதீனாவிற்குப் போனபிறகு அங்கு ஓர் ஆட்சி, அரசாங்கம் உருவானது. இதன் பின்னர்தான் போர் செய்யும் கட்டளை வந்தது. போர் செய்யுமாறு யாருக்கு அல்லாஹ் கட்டளையிடுகிறான் என்பதைப் பாருங்கள்!

وَمَا لَكُمْ لَا تُقَاتِلُونَ فِي سَبِيلِ اللَّهِ وَالْمُسْتَضْعَفِينَ مِنْ الرِّجَالِ وَالنِّسَاءِ وَالْوِلْدَانِ الَّذِينَ يَقُولُونَ رَبَّنَا أَخْرِجْنَا مِنْ هَذِهِ الْقَرْيَةِ الظَّالِمِ أَهْلُهَا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ وَلِيًّا وَاجْعَل لَنَا مِنْ لَدُنْكَ نَصِيرًا(75)

"எங்கள் இறைவா! அநீதி இழைத்தோர் உள்ள இவ்வூரிலிருந்து எங்களை வெளியேற்றுவாயாக! உன்னிடமிருந்து பொறுப்பாளரை எங்களுக்கு ஏற்படுத்துவாயாக! உன்னிடமிருந்து உதவியாளரையும் எங்களுக்கு ஏற்படுத்துவாயாக!'' என்று கூறிக் கொண்டிருக்கின்ற ஆண்களில் பலவீனமானவர்கள், பெண்கள், மற்றும் சிறுவர்களுக்காக அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க உங்களுக்கு என்ன நேர்ந்தது?                         (அல்குர்ஆன் 4:75)

இந்த வசனத்தைத் திறந்த மனதோடு சிந்தித்துப் பாருங்கள். அல்லாஹ் ஒரு எழுத்தைக்கூட வீணுக்காகப் பேசமாட்டான் என்கிற நம்பிக்கையுடன் இந்த வசனத்தைப் பாருங்கள். ஒரு ஊரில் பலவீனர்கள் பலமிக்கவர்களால் பாதிக்கப்பட்டு, இறைவா! எங்களை இவர்களிடமிருந்து காப்பாற்றிவிடு என்று கேட்டுக் கொண்டிருப்பதாகச் சொல்கிறான். அந்த ஊர் நிச்சயமாக மதீனாவைக் குறிக்காது. மக்காவையே குறிக்கும். ஏனெனில் மதீனாவில் இஸ்லாமிய ஆட்சி நடக்கிறது. மதீனாவாசிகளுக்குத் தலைவராக நபிகள் நாயகம் (ஸல்) இருக்கிறார்கள். அப்படியெனில் போர் செய்யுங்கள் என்ற இந்த உத்தரவு மதீனாவாசிகளுக்குரியது. யாருக்காகப் போர் செய்ய வேண்டும்? மக்காவிலுள்ள முஸ்லிம்களான பலவீனர்களுக்காக.

நீங்கள் ஹிஜ்ரத் செய்து வந்தபிறகும் சிலர் அங்கு தங்கியிருக்கிறார்களே அந்த பலவீனர்களுக்காகவும், அந்தப் பெண்களுக்காகவும், அந்தச் சிறுவர்களுக்காகவும் ஏன் போர் செய்ய செய்யவில்லை என்று கேட்கிறான்.

அப்படியெனில் ஒரு பகுதியில் அடி வாங்குகிறவர்கள், இன்னொரு பகுதியில் ஆட்சியில் இருப்பவர்கள் என்று இரண்டு பகுதி இருந்தால், அடி வாங்குகிறவர்களுக்காக ஆட்சியில் இருப்பவர்கள் போர் செய்ய வேண்டும் என்பதுதான் கட்டளை. அப்படியெனில் போர் செய்வது என்ற கட்டளை ஆட்சியில் இருப்பவர்களுக்குத்தான்.

எனவே அடி வாங்கிக் கொண்டிருப்பவர்களுக்கு அல்லாஹ் ஏன் உத்தரவு போடவில்லை? ஏன் இன்னும் அடிக்காமல் இருக்கிறீர்கள்? ஏன் இன்னும் திருப்பிக் கொடுக்காமல் இருக்கிறீர்கள்? ஏன் இன்னும் ஆயுதத்தை ஏந்தாமல் இருக்கிறீர்கள்? என மக்காவில் அடி வாங்கிக் கொண்டிருந்த மக்களிடம் அல்லாஹ் கேட்கவில்லை. ஆட்சி நடக்கிற மதீனாவிற்குத்தான் சட்டம் போடுகிறான்.

இந்த வசனத்திலிருந்து யுத்தம் செய்வது ஒரு அரசாங்கத்தின் வேலை. அரசுக்குத்தான் அது முடியும். ஒரு அரசுக்குத்தான் அது கடமை. ஒரு வாதத்திற்கு ஆயிரம் பேர் இருக்கிற இடத்தில் 50 பேரைத் திருப்பித் தாக்கச் சொன்னால், இருக்கிற 50 பேரையும் காலியாக்கி விடுவார்கள். அத்தோடு கதை முடிந்துவிடும். இந்த இடத்தில் பொறுமை (ஸப்ரு) காப்பது குறைந்த சேதத்தை ஏற்படுத்தும். பதிலடி என்பது ஒன்றுமே இல்லாமல் ஆக்கிவிடும்.

இந்தக் கருத்தைத்தான் அல்லாஹ் இந்த வசனத்தில் நமக்குக் கட்டளையிடுகிறான். இந்தக் காரணம் இல்லை என்று வைத்துக் கொண்டாலும், அரசாங்கத்திற்குத்தான் போர் செய்வது கடமையாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அடி உதை வாங்கும்போதும் அல்லாஹ் திருப்பித் தாக்குங்கள் எனக் கூறவில்லை. நபியவர்களுக்குப் பின்னால் மக்காவில் உள்ளவர்களையும் திருப்பித் தாக்குமாறு ஏவவில்லை.

மதீனாவில் ஆட்சி அமைத்த நபிகள் நாயகத்துக்குத்தான் அல்லாஹ் போர் செய்யக்கட்டளையிட்டான். ஏனெனில் நபியவர்களிடம் அரசாங்கம் இருக்கிறது. பொருளாதாரம் இருக்கிறது. படை வீரர்கள் இருக்கிறார்கள். ஒட்டகப் படை இருக்கிறது. குதிரைப் படை இருக்கிறது. இவ்வளவும் இருந்தும் ஏன் கோழைகளாக இருக்கிறீர்கள்? என்று கேட்டு போருக்குச் செல்லச் சொல்கிறான் இறைவன்.

இன்றைக்கும் கியாமத் நாள் வரைக்கும் இந்தச் சட்டம் செயல்படுத்தப் படவேண்டியது என்பதில் இரு கருத்துக்கு இடமில்லை.

ஆனால் முஸ்லிம்கள் ஏதாவது ஒரு நாட்டில் துன்புறுத்தப்பட்டு தாக்குதலுக்கு ஆளாக்கப்பட்டால் அதே நேரத்தில் ஒரு இஸ்லாமிய அரசாங்கம் வேறொரு நாட்டில் இருக்குமேயானால், அந்த அரசாங்கம் பாதிக்கப்பட்ட இந்த முஸ்லிம்களுக்காகப் போர் செய்வது அந்த இஸ்லாமிய ஆட்சியின் கடமை. இதே கடமையைத்தான் அல்லாஹ் நபியவர்களுக்கும் கட்டளையிடுகிறான்.

அதேபோன்று இன்னொரு வசனத்தில் இதைத் தெளிவாக்குகிறான். ஒரு பெயர் குறிப்பிடப்படாத நபியைப் பற்றி அல்லாஹ் கூறுகிறான்.

أَلَمْ تَرَ إِلَى الْمَلَإِ مِنْ بَنِي إِسْرَائِيلَ مِنْ بَعْدِ مُوسَى إِذْ قَالُوا لِنَبِيٍّ لَهُمْ ابْعَثْ لَنَا مَلِكًا نُقَاتِلْ فِي سَبِيلِ اللَّهِ قَالَ هَلْ عَسَيْتُمْ إِنْ كُتِبَ عَلَيْكُمْ الْقِتَالُ أَلَّا تُقَاتِلُوا قَالُوا وَمَا لَنَا أَلَّا نُقَاتِلَ فِي سَبِيلِ اللَّهِ وَقَدْ أُخْرِجْنَا مِنْ دِيَارِنَا وَأَبْنَائِنَا فَلَمَّا كُتِبَ عَلَيْهِمْ الْقِتَالُ تَوَلَّوْا إِلَّا قَلِيلًا مِنْهُمْ وَاللَّهُ عَلِيمٌ بِالظَّالِمِينَ(246)

மூஸாவுக்குப் பின்னர் இஸ்ராயீலின் மக்களில் (உருவான) ஒரு சமுதாயத்தைப் பற்றி நீர் அறியவில்லையா? "எங்களுக்கு ஒர் ஆட்சியாளரை நியமியுங்கள்! அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோம்'' என்று தமது நபியிடம் கூறினர். "உங்களுக்குப் போர் கடமையாக்கப்பட்டால் போரிடாமல் இருக்கமாட்டீர்கள் அல்லவா?'' என்று அவர் கேட்டார். "எங்கள் ஊர்களையும், பிள்ளைகளையும் விட்டு நாங்கள் வெளியேற்றப்பட்டிருக்கும் போது அல்லாஹ்வின் பாதையில் போரிடாமலிருக்க எங்களுக்கு என்ன வந்தது?'' என்று அவர்கள் கூறினர். அவர்களுக்குப் போர் கடமையாக்கப்பட்ட போது அவர்களில் சிலரைத் தவிர (மற்றவர்கள்) புறக்கணித்தனர். அல்லாஹ் அநீதி இழைத்தோரை அறிந்தவன்.

(அல்குர்ஆன் 2:246)

மூஸா நபிக்குப் பிறகு ஒரு சமூதாயத்திற்கு ஒரு நபியை அல்லாஹ் அனுப்புகிறான். அவர் பிரச்சாரம் செய்து சில தோழர்களை வென்றெடுக்கிறார். ஆனால் அந்த சமூக மக்கள் அவரையும் அவரது தோழர்களையும் ஊரை விட்டு வெளியேற்றி விடுகிறார்கள். உடனே அந்த மக்கள் அவர்களது நபியிடம், அல்லாஹ்வின் பாதையில் போர் செய்வதற்கு அனுமதி கேட்டு எங்களுக்கு ஒரு மன்னரை நியமியுங்கள் என்று கேட்கின்றனர். இவர்கள் வெளியேறிய பிறகு தங்களுக்கு ஒரு ஆட்சியாளர் வேண்டும் எனக் கேட்பதிலிருந்தே தனி நபராகவோ குழுக்களாகவோ தானாகச் சென்று தாக்கவோ போரிடவோ மார்க்கத்தில் அனுமதியில்லை என்று அறியலாம். அதனால்தான் ஒரு அரசாங்கத்தைக் கேட்டனர் அம்மக்கள். இது அவர்களாக விளங்கிக் கொண்டதுதானே என்று தள்ளிவிட்டுப் போக முடியாது. ஏனெனில் அவர்களாக விளங்கியிருந்தாலும் அதை அல்லாஹ் ஏற்றுக் கொள்வதினால் இந்த வசனம் நல்லதொரு சான்றாக அமைகிறது.

وَقَالَ لَهُمْ نَبِيُّهُمْ إِنَّ اللَّهَ قَدْ بَعَثَ لَكُمْ طَالُوتَ مَلِكًا قَالُوا أَنَّى يَكُونُ لَهُ الْمُلْكُ عَلَيْنَا وَنَحْنُ أَحَقُّ بِالْمُلْكِ مِنْهُ وَلَمْ يُؤْتَ سَعَةً مِنْ الْمَالِ قَالَ إِنَّ اللَّهَ اصْطَفَاهُ عَلَيْكُمْ وَزَادَهُ بَسْطَةً فِي الْعِلْمِ وَالْجِسْمِ وَاللَّهُ يُؤْتِي مُلْكَهُ مَنْ يَشَاءُ وَاللَّهُ وَاسِعٌ عَلِيمٌ(247)

"தாலூத் என்பவரை அல்லாஹ் உங்கள் ஆட்சியாளராக நியமித்துள்ளான்'' என்று அவர்களின் நபி அவர்களிடம் கூறினார். "எங்கள் மீது அவருக்கு எப்படி ஆட்சியதிகாரம் இருக்க முடியும்? அவரை விட ஆட்சிக்கு நாங்களே தகுதியானவர்கள். அவருக்குப் பொருள் வசதியும் வழங்கப்படவில்லை'' என்று அவர்கள் கூறினர். "உங்களை விட அவரை அல்லாஹ் தேர்வு செய்து விட்டான். அவருக்கு கல்வி மற்றும் உடல் (வலுவை) அதிகமாக வழங்கியிருக்கிறான். தான் நாடியோருக்கு அல்லாஹ் அதிகாரத்தை வழங்குவான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்'' என்று அவர் கூறினார்.

(அல்குர்ஆன் 2:247)

உங்கள்மீது யுத்தத்தை அல்லாஹ் கடமையாக்கிவிட்டால் நீங்கள் போர் செய்யாமல் இருக்கமாட்டீர்களல்லவா? என்று அந்த நபி அவர்களைப் பார்த்துக் கேட்கிறார். அதற்கு அம்மக்கள் எங்களுடைய பிள்ளை குட்டிகளை விட்டும் எங்களது வீடுகளை விட்டும் வெளியேற்றப்பட்டிருக்கும்போது நாங்கள் எப்படி போர் செய்யாமல் இருப்போம்? என்று வீரதீரமாகப் பேசியதாக அல்லாஹ் கூறுகிறான். அல்லாஹ்விடம் ஒரு மன்னரைக் கேட்டதினால் தாலுத் என்பவரை அல்லாஹ் மன்னராக நியமிக்கிறான். அந்த நபியை அல்லாஹ் மன்னராக ஆக்கவில்லை. அரசாங்கம் என்பது வேறு. நபியுடைய வேலையும் அரசாங்கத்தை உருவாக்குவது இல்லை. நபி பிரச்சாரம் செய்கிறார். அந்த நபி பிரச்சாரத்திற்குத் தகுதியானவராக இருந்திருப்பார். மன்னர் பொறுப்புக்குத் தகுதியில்லாதவராக இருந்திருப்பார். அதனால்தான் தாலுத் என்பவரை அல்லாஹ் மன்னராக்குகிறான்.

தாலுத் என்பவர் நபி கிடையாது. உடனே அம்மக்கள் அவர் எங்களில் வசதி வாய்ப்பனவராக இல்லாதபோது அவரை எப்படி மன்னராக நாங்கள் ஏற்றுக் கொள்ளமுடியும்? என்று கேட்டதற்கு, அவருக்கு அல்லாஹ் கல்வியையும் நல்ல உடல் வலிமையையும் கொடுத்திருக்கிறான் என்று அந்த நபி பேசியதாக குர்ஆன் கூறுகிறது.

அதே நேரத்தில் போர் கடமையாக்கப்பட்ட பிறகு குறைவான நபர்களைத் தவிர மற்றவர்கள் ஓட்டம் பிடித்துவிட்டதாக அல்லாஹ் கூறுகிறான்.

இங்கே கவனிக்க வேண்டிய விசயம், போர் செய்யுங்கள் என்று வெறுமனே சொல்லாமல் ஒரு மன்னரை ஆட்சியாளரை நியமித்துவிட்டுத்தான் போரை அல்லாஹ் கடமையாக்குகிறான். அவர்கள் நபியிடம் மன்னரைக் கேட்டு கோரிக்கை வைத்ததும் மன்னரெல்லாம் தேவையில்லை. என் தலைமையில் போர் செய்வோம் என்று அந்த நபி சொன்னாரா? இல்லை. மேலும் அவர்கள் நபியிடம் கோரிக்கை வைத்ததும் அவரும் அந்தக் கோரிக்கையை ஏற்றுத்தான் மன்னரை இறைவனிடம் கேட்டதாகவும் அல்லாஹ் மன்னரை நியமித்ததாகவும் இவ்வசனம் நமக்கு அறிவுறுத்துகிறது.

அப்படியெனில் யுத்தம் என்ற பெயரிலோ ஜிஹாத் என்ற பெயரிலோ போர் செய்வதாக இருந்தால் அது ஒரு அரசாங்கத்திற்கு உரியதாகத்தான் இருக்க முடியும் என்று குர்ஆனின் அனைத்து வசனங்களும் சொல்கிறது. எனவே ஜிஹாதை புனிதப் போரை தவறாகப் பயன்படுத்திவிடக் கூடாது.

யுத்தமும் ஜிஸ்யா வரியும்

எந்த யுத்தம் முடிந்தாலும் இஸ்லாமியப் படைகளுக்கு வெற்றி கிடைத்தால் அந்த யுத்ததத்திற்குப் பிறகு அந்த ஊரோ நாடோ இஸ்லாமியர்களின் ஆளுகைக்குள் கொண்டு வரப்படும். அவரவர் விரும்பிய மதப்பிரகாரம் வாழ்ந்து கொள்வதாக இருப்பின், அவர்கள் ஜிஸ்யா வரியை இஸ்லாமிய அரசிற்கு செலுத்திக் கொண்டு நிம்மதியாக பயமற்று வாழலாம். அதே நேரத்தில் அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்களெனில் ஜகாத் அவர்களின் மீது கடமையாக்கப்பட்டுவிடும். இந்த ஜிஸ்யா என்கிற வரியை வெற்றி பெற்ற அந்த அரசாங்கம்தான் வசூலிக்க வேண்டும்.

ஜிஹாத் என்ற பெயரில் மூளைச் சலவை செய்பவர்கள் ஜிஸ்யா வரியை வசூலிக்க சக்தி பெற்றவர்களா? 

قَاتِلُوا الَّذِينَ لَا يُؤْمِنُونَ بِاللَّهِ وَلَا بِالْيَوْمِ الْآخِرِ وَلَا يُحَرِّمُونَ مَا حَرَّمَ اللَّهُ وَرَسُولُهُ وَلَا يَدِينُونَ دِينَ الْحَقِّ مِنْ الَّذِينَ أُوتُوا الْكِتَابَ حَتَّى يُعْطُوا الْجِزْيَةَ عَنْ يَدٍ وَهُمْ صَاغِرُونَ(29) 

வேதம் கொடுக்கப்பட்டோரில் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது, அல்லாஹ்வும், அவனது தூதரும் விலக்கியவற்றை விலக்கிக் கொள்ளாது, உண்மையான மார்க்கத்தைக் கடைப்பிடிக்காதோர் சிறுமைப்பட்டு ஜிஸ்யா வரியைத் தம் கையால் கொடுக்கும்வரை அவர்களுடன் போரிடுங்கள்!

(அல்குர்ஆன் 9:29)

ஒரு ஊரில் இரண்டு கூட்டங்கள் சண்டையிடுகிறது. அதில் ஒரு கூட்டம் வெற்றி பெறுகிறது. இன்னொரு கூட்டம் தோற்கிறது. தோற்றவர்களிடம் வெற்றி பெற்றவர்கள் ஜிஸ்யா வரியை வாங்க சக்தி பெற வேண்டும். இல்லையெனில் அது அரசாங்கம் செய்த போராக எடுத்துக் கொள்ளப்படாது. இதற்குப் பெயர் ஜிஹாதும் கிடையாது. இவ்வசனத்தில் ஜிஸ்யாவை வசூலிக்கிற வரைக்கும் போரிடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான். ஜிஸ்யா வசூலிக்கும் வரைக்கும் போரிடுங்கள் என்பது அரசாங்கத்திற்குப் பொருந்துமா? தனி நபருக்கோ அல்லது ஒரு குழுவுக்கோ பொருந்துமா? சிந்தித்துப் பாருங்கள்.

நபியவர்கள் யூதர்களிடத்தில் ஜிஸ்யா வரியை வாங்கினார்கள். அப்படியெனில் ஜிஸ்யா வரியைப் பெறும் வரைக்கும் போரிட வேண்டும் என்றிருப்பதின் மூலம் முதலில் அரசாங்கம் இருக்க வேண்டும். பிறகு அந்த அரசாங்கத்திற்கு இராணுவப் படை இருக்க வேண்டும். அப்படி வைத்துக் கொண்டு போர் செய்தால் நமது எல்லைக்குள் வருகிறவர்களிடம் ஜிஸ்யா வசூலிக்கலாம்.

இவ்விடத்தில் நாம் இதைச் சொல்வதற்குக் காரணம், ஜிஹாத் என்பதை மறுப்பதற்காக இல்லை. இவைகளுக்கெல்லாம் தகுந்த விளக்கத்தைச் சொல்லிவிட்டு இந்தியா போன்ற நாடுகளில் ஜிஹாத் செய்யலாம் என்று நிரூபித்துக் காட்டட்டும். அதன் பிறகு அவர்களது கருத்து சரி என்றால் நாமும் சேர்ந்து அதைப் பிரச்சாரம் செய்வோம். அல்லது ஜிஹாத் செய்வோம்.

அதாவது அல்லாஹ் நமக்கு இப்படியொரு ஆட்சியைத் தந்து, இராணுவத்தைத் தந்தானேயானால், அப்போது எங்காவது முஸ்லிம்கள் பழிவாங்கப்பட்டு தாக்கப்பட்டார்களானால், அநியாயமாக பாதிக்கப்பட்டார்களானால், அப்போது நம் உயிரையும் பொருட்படுத்தாமல் களத்தில் இறங்கிப் போராடவேண்டும். நபி காலத்திலிருந்து இன்றளவுக்கும் கியாமத் நாள் வரைக்கும் இந்தச் சட்டம் இருக்கிறது. அதனை யாராலும் மறுக்கவே முடியாது.

திருடினால் கையை வெட்ட வேண்டும் என்கிற சட்டம் எப்படி இருக்கிறதோ, அதுபோன்று ஜிஹாத் என்கிற சட்டமும் கியாமத் நாள் வரைக்கும் இருக்கத்தான் செய்கிறது.

எனவே அல்லாஹ் சொல்கிற ஜிஹாதுக்குரிய நிபந்தனைகளை மறந்துவிட்டு, மறுத்துவிட்டு மொட்டையாக ஜிஹாத், ஜிஹாத் என்று சொல்லி அதில் பலர் தங்களை நாசமாக்கிக் கொண்டால் இவ்வுலகிலும் நஷ்டம். மறுமையிலும் எந்தக் கூலியும் கிடைக்காமல் போய்விடும். மனத்தூய்மை எவ்வளவுக்கு முக்கியமோ அதை விடவும் எதுவும் குர்ஆன், ஹதீஸ் என்ற இரண்டின் ஆதாரத்தின் அடிப்படையில் இருப்பது மிகமிக அவசியம். எனவே இதையும் கவனத்தில் கொண்டு ஜிஹாது என்ற தலை சிறந்த வணக்கத்தைச் செய்யவேண்டும்.

யுத்தத்திற்கான தயாரிப்பு

ஜிஹாத் செய்வதற்கு ஜிஸ்யாவும் மன்னர் என்கிற ஆட்சியாளரை நியமிப்பதையும் விடவும் முக்கியமான இன்னொரு நிபந்தனையிருக்கிறது. ஜிஹாதுக்கு முன்னால் செய்ய வேண்டியதுதான் அது. முதலில் ஹிஜ்ரத் செய்ததற்குப் பின்னால்தான் ஜிஹாத் என்பதே கடமையாகும். இதுதான் அறிவுப்பூர்வமானதும் கூட. கலந்திருக்கும்போது ஜிஹாத் செய்யக் கூடாது. பிரித்தெடுக்கப்பட்டால்தான் ஜிஹாத் செய்ய வேண்டும். கலந்திருக்கும்போது ஓடுவதற்கோ ஒதுங்குவதற்கோ சக்தி பெற்றவர்கள் ஓடிவிடுவார்கள். ஒன்றுக்கும் வழியில்லாதவர்கள் அத்தனை பேரும் தாறுமாறாக உயிரிழக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

எனவே ஜிஹாத் என்றால் முதலில் இருக்கிற இடத்தை விட்டு காலியாகிவிட வேண்டும். இதை இறைவன் நமக்கு தனது திருமறையில் அப்படித்தான் சட்டம் இயற்றுகிறான்.

إِنَّ الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوا وَنَصَرُوا أُوْلَئِكَ بَعْضُهُمْ أَوْلِيَاءُ بَعْضٍ وَالَّذِينَ آمَنُوا وَلَمْ يُهَاجَرُوا مَا لَكُمْ مِنْ وَلَايَتِهِمْ مِنْ شَيْءٍ حَتَّى يُهَاجِرُوا وَإِنْ اسْتَنصَرُوكُمْ فِي الدِّينِ فَعَلَيْكُمْ النَّصْرُ إِلَّا عَلَى قَوْمٍ بَيْنَكُمْ وَبَيْنَهُمْ مِيثَاقٌ وَاللَّهُ بِمَا تَعْمَلُونَ بَصِيرٌ(72)

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவிகள் செய்தோரும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். நம்பிக்கை கொண்டு ஹிஜ்ரத் செய்யாதோர், ஹிஜ்ரத் செய்யும் வரை அவர்களிடம் உங்களுக்கு எந்த விதமான நட்பும் இல்லை. மார்க்க விஷயத்தில் அவர்கள் உங்களிடம் உதவி தேடினால் (அவர்களுக்கு) உதவுதல் உங்களுக்குக் கடமை. நீங்கள் உடன்படிக்கை செய்த சமுதாயத்திற்கு எதிராகத் தவிர. அல்லாஹ் நீங்கள் செய்பவற்றைப் பார்ப்பவன்.

(அல்குர்ஆன் 8:72)

وَالَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ وَالَّذِينَ آوَوا وَنَصَرُوا أُوْلَئِكَ هُمْ الْمُؤْمِنُونَ حَقًّا لَهُمْ مَغْفِرَةٌ وَرِزْقٌ كَرِيمٌ(74)وَالَّذِينَ آمَنُوا مِنْ بَعْدُ وَهَاجَرُوا وَجَاهَدُوا مَعَكُمْ فَأُوْلَئِكَ مِنْكُمْ وَأُوْلُوا الْأَرْحَامِ بَعْضُهُمْ أَوْلَى بِبَعْضٍ فِي كِتَابِ اللَّهِ إِنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(75)

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோரும், அடைக்கலம் தந்து உதவியோருமே உண்மையாக நம்பிக்கை கொண்டவர்கள். அவர்களுக்கு மன்னிப்பும், கண்ணியமான உணவும் உண்டு.

இதன் பின்னர் நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, உங்களுடன் இணைந்து போரிட்டோரே உங்களைச் சேர்ந்தவர்கள். இரத்த பந்தமுடையோர் ஒருவர் மற்றவருக்கு அல்லாஹ்வின் வேதத்தில் உள்ளபடி நெருக்கமானோர். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 8:74,75)

الَّذِينَ آمَنُوا وَهَاجَرُوا وَجَاهَدُوا فِي سَبِيلِ اللَّهِ بِأَمْوَالِهِمْ وَأَنفُسِهِمْ أَعْظَمُ دَرَجَةً عِنْدَ اللَّهِ وَأُوْلَئِكَ هُمْ الْفَائِزُونَ(20)

நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் செய்து, தமது செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுவோர், அல்லாஹ்விடம் மகத்தான பதவிக்குரியவர்கள். அவர்களே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 9:20)

ثُمَّ إِنَّ رَبَّكَ لِلَّذِينَ هَاجَرُوا مِنْ بَعْدِ مَا فُتِنُوا ثُمَّ جَاهَدُوا وَصَبَرُوا إِنَّ رَبَّكَ مِنْ بَعْدِهَا لَغَفُورٌ رَحِيمٌ(110)

சோதனைக்குள்ளாக்கப்பட்ட பின் ஹிஜ்ரத் செய்து, அறப்போர் செய்து, பொறுமையைக் கடைப்பிடிப்போருக்கு உமது இறைவன் இருக்கிறான். இதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.             (அல்குர்ஆன் 16:110)

ஜிஹாதுக்கு முன்னால் முதலில் நம்பிக்கை, இரண்டாவது ஹிஜ்ரத், அதன் பிறகுதான் ஜிஹாத். இப்படித்தான் அல்லாஹ் வசனங்களில் வார்த்தைகளை வரிசைப்படுத்துகிறான். எங்கெல்லாம் இறைவன் ஜிஹாதைப் பற்றிப் பேசுகிறானோ அங்கெல்லாம் முதலில் ஹிஜ்ரத் செய்யுங்கள் என்றே சொல்கிறான். அதன் பிறகுதான் ஜிஹாதுடைய சூழ்நிலை உருவாகிறது.

தாக்கப்படும் இடத்தில் இருந்துகொண்டே ஏன் ஜிஹாதை இறைவன் அனுமதிக்கவில்லையெனில், முதலில் மக்களைப் பிரித்து எடுக்க வேண்டும். அதன் பிறகுதான் படையை உருவாக்க முடியும். அப்போதுதான் படையில் கலந்து கொள்ள முடியாத பொதுமக்களைக் காப்பாற்ற முடியும். சேதாரங்களைக் குறைக்க முடியும்.

யுத்தத்திற்கு ஆற்றல் தேவை

பொறுத்துக் கொண்டு, பிறகு ஹிஜ்ரத் செய்து, பிறகு அரசாங்கத்தை உருவாக்கிய பிறகு இராணுவம் அமைத்து படைபலத்தை உருவாக்க வேண்டும். அதன் பிறகுதான் ஜிஹாதைப் பற்றிப் பேசவேண்டும்.

இன்னும் சொல்வதெனில் யுத்தம் செய்வதற்கு சில பொருட்களையும் தயாரிக்கச் சொல்கிறான். உங்களால் இயன்ற அளவுக்கு குதிரைப் படைகளையும் காலாட் படைகளையும் தயாரிக்க வேண்டும். எந்தளவுக்கு எனில் இறைவனின் எதிரிகளையும் உங்களது எதிரிகளையும் பயமுறுத்தும் வகையில் ஆற்றலை வளர்க்க வேண்டும்.

وَأَعِدُّوا لَهُمْ مَا اسْتَطَعْتُمْ مِنْ قُوَّةٍ وَمِنْ رِبَاطِ الْخَيْلِ تُرْهِبُونَ بِهِ عَدُوَّ اللَّهِ وَعَدُوَّكُمْ وَآخَرِينَ مِنْ دُونِهِمْ لَا تَعْلَمُونَهُمْ اللَّهُ يَعْلَمُهُمْ وَمَا تُنفِقُوا مِنْ شَيْءٍ فِي سَبِيلِ اللَّهِ يُوَفَّ إِلَيْكُمْ وَأَنْتُمْ لَا تُظْلَمُونَ(60)

உங்களால் இயன்ற அளவு பலத்தையும், போர்க்குதிரைகளையும் அவர்களுக்கு எதிராக தயாரித்துக் கொள்ளுங்கள்! அதன் மூலம் அல்லாஹ்வின் எதிரிகளையும், உங்களின் எதிரிகளையும் அவர்கள் அல்லாத மற்றவர்களையும் நீங்கள் அச்சமடையச் செய்யலாம். அவர்களை நீங்கள் அறிய மாட்டீர்கள்! அல்லாஹ்வே அவர்களை அறிவான். அல்லாஹ்வின் பாதையில் நீங்கள் எதைச் செலவிட்டாலும் அது உங்களுக்கு முழுமையாக வழங்கப்படும். நீங்கள் அநீதி இழைக்கப்படமாட்டீர்கள்.

(அல்குர்ஆன் 8:60)

அச்சுறுத்தும் அளவுக்கு யாரால் ஆயுதங்களையும் படைகளையும் தயாரிக்க முடியும். நாம் ஒரு ஜான் கத்தி தயாரிக்கும்போதே நம்மைக் கைது செய்துவிடுவார்கள். எதிரிகள் அணுகுண்டை வைத்து நம்மைத் தாக்குவதற்குத் தயாரிப்புடன் இருந்தால் அதை விடவும் பெரியதாக நம்மிடம் அணுகுண்டு இருக்க வேண்டும். நாம் யாரை அச்சுறுத்தும் வகையில் போர் செய்ய இருக்கிறோமோ அவர்கள் வைத்திருக்கும் ஆயுதங்களையும் போர் முறைகளையும் விடவும் நம்மிடம் அதிகமாகவும் அதை விடவும் வலுவானதாகவும் இருக்க வேண்டும் என்பதுதான் இவ்வசனத்தின் பொருள்.

நாம் ஒரு அரைக் கிலோ வெடி பொருட்களையும் வயரையும் வாங்கினாலே நம்மைத் தீவிரவாதி என்று பிடித்துவிடுவார்கள் எனில் நம்மால் எப்படி ஆயுதங்களையும் இராணுவத்தையும் தயாரிக்க முடியும் என்பதை ஜிஹாதின் பெயரால் போலி வாதங்களை வைப்பவர்கள் விளக்குவார்களா?

இன்றைக்கு போக்ரானில் ஒரு அணுகுண்டு வெடித்துக் காட்டினார்கள். ஒரு பேச்சுக்குச் சொல்வதாக இருப்பின் நாம் ஒரு போக்ரானைப் போட்டுக் காட்ட வேண்டும். அப்போதுதான் நாம் அரசாங்கம் என்ற கணக்கில் வருவோம்.

எனவே போர் செய்கிற அளவுக்கு நமக்குச் சக்தியில்லை எனில் நாமாக முன்வந்து தற்கொலை செய்கிற குற்றத்திற்கு ஆளாகிவிடுவோம். அப்படியொரு சட்டத்தை இறைவன் மனித சமூகத்திற்கு வழங்கவே மாட்டான். ஆயுதங்களைத் தயாரிப்பதற்கும், இராணுவத்தை உருவாக்குவதற்கும் ஒரு அரசாங்கம் இருந்தால்தான் சாத்தியமாகும். யாராலும் நமக்குக் குறுக்கீடு இருக்காது. சின்ன அரசாங்கமாக இருந்தாலும் எதையும் வாங்குவதற்கும் உருவாக்குவதற்கும் அழிப்பதற்கும் சக்தி பெற்றிருப்பார்கள்.

அதே நேரத்தில் ஒரு அரசாங்கத்திற்குக் கீழ் வாழ்கிறவர்களில் ஒரு குறிப்பிட்ட குழுவினர் இதைச் செய்வதற்கு இயலாது. எந்த நாடும் இதை அனுமதிக்காது. இஸ்லாமிய ஆட்சி நடக்கிறபோதும் ஒரு குறிப்பிட்ட குழுவினர் ஆயுதத்தைத் தயாரிப்பதற்கோ தனி இராணுவம் அமைப்பதற்கோ முடியாது. முடியாது என்கிறபோது எப்படி ஜிஹாத் என்கிற சட்டம் நமக்கு வரும்?

இதை விட முக்கியமான ஒரு விசயம் இருக்கிறது. நீங்கள் போர் செய்யும் போது உங்களில் சரியான 1 நபர் எதிரிகளில் 10 பேர்களை வெல்வீர்கள் என்று ஆரம்பத்தில் அல்லாஹ் கூறினான். ஆனால் இப்போது உங்களிடம் 1 நபர் இருந்தால் எதிரிகளில் 2 பேரைத்தான் வெல்வீர்கள் என்று சட்டத்தை அல்லாஹ் மாற்றினான். எதிரியின் பலத்தில் சரி பாதியாவது நாம் இருந்தால் தான் ஜிஹாத் கடமை. இந்தச் சட்டமும் அரசாங்கத்திற்குத்தான்.

எதிரிகள் 90 சதவீதம் என்றும், நம்மவர்கள் 10 சதவீதம் என்றும் வைத்துக் கொள்வோம். இந்த 10 சதவீம் 90 சதவீதத்துடன் போர் செய்யப் புறப்பட்டால் இருக்கிற 10 சதமும் ஒட்டுமொத்தமாக அழிக்கப்பட்டுவிடும்.

இஸ்லாமிய அரசிடம் 100 பேர் இருந்து எதிரிகளிடம் 300 பேர்கள் இருந்தால் கூட இந்த அரசாங்கத்திற்கு போர் செய்ய வேண்டிய எந்தக் கடமையும் கிடையாது. மாறாக தனது நாட்டிலுள்ளவர்களைக் காப்பாற்றுவதற்காக அவர்களுடன் சில விசயங்களில் விட்டுக் கொடுத்துப் போவது தவறில்லை. இந்த நிபந்தனைகளை நாம் சொல்லவில்லை. அல்லாஹ்வே சொல்கிறான்.

انفِرُوا خِفَافًا وَثِقَالًا وَجَاهِدُوا بِأَمْوَالِكُمْ وَأَنفُسِكُمْ فِي سَبِيلِ اللَّهِ ذَلِكُمْ خَيْرٌ لَكُمْ إِنْ كُنتُمْ تَعْلَمُونَ(41)

(படைபலம்) குறைவாக இருந்த போதும், அதிகமாக இருந்த போதும் புறப்படுங்கள்! உங்கள் செல்வங்களாலும், உயிர்களாலும் அல்லாஹ்வின் பாதையில் போரிடுங்கள்! நீங்கள் அறிந்தால் இது உங்களுக்குச் சிறந்தது.

(அல்குர்ஆன் 9:41)

இந்தச் சட்டம்தான் முதலில் இருந்தது. பின்னர் சட்டம் மாற்றப்பட்டது.

يَاأَيُّهَا النَّبِيُّ حَرِّضْ الْمُؤْمِنِينَ عَلَى الْقِتَالِ إِنْ يَكُنْ مِنْكُمْ عِشْرُونَ صَابِرُونَ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ يَغْلِبُوا أَلْفًا مِنْ الَّذِينَ كَفَرُوا بِأَنَّهُمْ قَوْمٌ لَا يَفْقَهُونَ(65)الْآنَ خَفَّفَ اللَّهُ عَنكُمْ وَعَلِمَ أَنَّ فِيكُمْ ضَعْفًا فَإِنْ يَكُنْ مِنْكُمْ مِائَةٌ صَابِرَةٌ يَغْلِبُوا مِائَتَيْنِ وَإِنْ يَكُنْ مِنْكُمْ أَلْفٌ يَغْلِبُوا أَلْفَيْنِ بِإِذْنِ اللَّهِ وَاللَّهُ مَعَ الصَّابِرِينَ(66)

நபியே! (முஹம்மதே!) நம்பிக்கை கொண்டோருக்கு போர் செய்ய ஆர்வமூட்டுவீராக! உங்களில் சகித்துக் கொள்கின்ற இருபது பேர் இருந்தால் இருநூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் நூறு பேர் இருந்தால் (ஏக இறைவனை) மறுப்போரில் ஆயிரம் பேரை வெல்வார்கள். அவர்கள் புரிந்து கொள்ளாத கூட்டமாக இருப்பதே இதற்குக் காரணம்.

இப்போது அல்லாஹ் உங்களுக்கு எளிதாக்கி விட்டான். உங்களிடம் பலவீனம் இருப்பதை அவன் அறிவான். எனவே உங்களில் சகிப்புத் தன்மையுடைய நூறு பேர் இருந்தால் இரு நூறு பேரை அவர்கள் வெல்வார்கள். உங்களில் ஆயிரம் பேர் இருந்தால் அல்லாஹ்வின் விருப்பப்படி இரண்டாயிரம் பேரை வெல்வார்கள். அல்லாஹ் சகிப்புத் தன்மையுடையோருடன் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 8:65,66)

இவ்வளவு தெளிவாக திருக்குர்ஆன் நமக்குச் சொல்கிறது.

பலவீனம் வந்துவிட்டதால் 100 க்கு 200 என்று அல்லாஹ் ஆக்கி சிரமத்தை இலேசாக்கிவிட்டதாகச் சொல்கிறான்.

இப்போது ஒரு அரசாங்கம் இருந்து அது போர் செய்யும் போதுதான் இந்த நிபந்தனையாகும். ஒரு பேச்சுக்கு ஜிஹாதுக்கு அரசாங்கம் தேவையில்லை என்று சொல்வதாக வைத்துக் கொண்டாலும் அப்போதுகூட இந்தியாவில் ஜிஹாத் என்கிற சட்டமே வராது. அரசாங்கம் என்கிற விளக்கம் தவறாகத் தெரிகிறது, அதனால் ஏற்றுக் கொள்ள முடியாது என்று சொல்கிற மனப்பாங்குடையவராக இருந்தாலும் பாதிக்குப் பாதி இருக்க வேண்டும் என்கிற நிபந்தனையை ஒருவர் மறுத்தால் இறைவசனத்தை மறுத்த காஃபிராகி விடுவார். அதன்பிறகு இந்த வசனத்தை நிராகரித்துக் கொண்டு ஜிஹாத் என்றால் அவரது ஈமானும் அவரது வணக்க வழிபாடும் அவர் எதை ஜிஹாத் என்று நினைத்துச் செய்யச் சொல்கிறாரோ அவைகள் அனைத்துமே மறுமையில் எந்தக் கூலியையும் பெற்றுத்தராது.

ஆக சிலதை மட்டும்தான் ஏற்றுக் கொள்வோம், சிலதை மறுப்போம் என்றால் இவர்கள் இஸ்லாத்திற்கும், முஸ்லிம் சமூகத்திற்கும் அபாயகரமானவர்கள் என்பதை இந்த சமூகம் விளங்கி இத்தகையவர்களைப் புறக்கணிக்க வேண்டும்.

இந்த வசனத்திற்கு என்ன விளக்கத்தை இவர்களால் சொல்ல முடியும்? குர்ஆன் ஹதீஸிலிருந்து ஆதாரங்களுடன் விளக்கம் தரட்டும்? குர்ஆன், ஹதீஸை விட்டுவிட்டு குஜராத்தைப் பார்த்தீர்களா? ஆப்கானிஸ்தானைப் பார்த்தீர்களா? என்று கேட்கக் கூடாது. மறுமையில் குஜராத்தைப் பார்த்தீர்களா? என்று இறைவன் நம்மிடம் விசாரிக்க மாட்டான். அல்லாஹ்வாகிய நான் சொன்னதைச் செய்தாயா? என்றுதான் கேட்பான்.

அல்லது இந்த வசனம் பழைய சட்டம் என்று சொல்லித் தப்பிக்கவும் முடியாது. ஏனெனில் பழைய சட்டத்தைச் சொல்லித்தான் அல்லாஹ் புதிய சட்டத்தையும் சொல்கிறான். இன்னும் சொல்வதெனில் இந்த வசனத்தில் اَلْآنَ (தற்போது) என்ற வார்த்தையின் மூலமாக ஏற்கனவே உள்ள சட்டம் மாற்றப்படுகிறது என்ற பொருளைத்தான் குறிக்கும்.

300க்கு 1000 பேர் கணக்கில் கொண்டு நடந்த பத்ருப் போரை சிலர் ஆதாரமாகக் கொண்டு போர் செய்யலாம் என்பார்கள்.

அது ஆரம்பத்திலுள்ள நிலைதான். அதற்குப் பிறகு வந்த வசனம்தான் இது. அதற்கு என்ன ஆதாரம் எனில், இஸ்லாமிய வரலாற்றில் முதலாவதாக நடந்த போர்தான் பத்ரு. அல்லாஹ் இந்த வசனத்தில் ஏற்கனவே செய்த ஒரு போரைச் சொல்லித்தான் அந்தச் சட்டம் மாற்றப்பட்டு விட்டது எனக் கூறி இரண்டாவது வசனத்தில் மாற்றிய சட்டத்தைச் சொல்கிறான். அப்படியெனில் ஒரு போருக்குப் பின்னால்தான் இதை இறைவன் சொல்ல முடியும். எப்படியிருந்தாலும் பத்ருப் போருக்குப் பின்னால்தான் இவ்வசனம் வரமுடியும். ஏனெனில் இரண்டாவது மூன்றாவது போராக பத்ருப் போர் இருந்தால் கூட அவர்களது வாதம் ஏற்கத் தக்கதாக இருக்கும். அதற்கும் வாய்ப்பில்லாமல் போய்விட்டது.

ஸஹாபாக்களிடமே பலவீனம் இருப்பதாக இவ்வசனத்தில் இறைவன் கூறுகிறான். ஸஹாபாக்களும் நாங்களும் ஒன்றா? என்று சிலர் கேட்பது இவர்களின் குறை மதியைக் காட்டுகிறது. வீடு வாசல்களை விட்டும் காஃபிர்களால் விரட்டியடிக்கப்பட்ட ஸஹாபாக்கள், நபியவர்களை நேரடியாகப் பார்த்துப் பழகிய ஸஹாபாக்கள், இஸ்லாத்தை அனைத்து மக்களுக்கும் கொண்டு போய்ச் சேர்த்த ஸஹாபாக்களிடம் பலவீனம் வந்ததாக அல்லாஹ் சொல்லும்போது, நாமெல்லாம் எம்மாத்திரம்? போர் செய்ய வேண்டும் என்று வாய்கிழியப் பேசினால் மட்டும் போதாது, அந்தக் களம் வருகிற போது பின்வாங்கி விடாமல் இருப்பதுதான் மிக முக்கியமான அம்சம்.

எனவே அல்லாஹ் போர் செய்வதற்கு ஒன்றுக்குப் பாதி என்று சொன்ன பிறகு எப்படி இந்தக் கொள்கையைப் பிரச்சாரம் செய்ய முடியும்? இதை ஒரு இலட்சியமாகக் கொள்வது எப்படி? இதைப் பரப்புவதற்கு ஒரு இயக்கமாக செயல்படுவது நியாயமா? ஆக யார் உங்களுக்கு இந்தக் கொள்கையை எடுத்துச் சொல்லியிருந்தாலும் அவர்களிடம் கேட்டாவது இந்த வசனத்திற்குரிய சரியான பொருளைக் கொண்டு வாருங்கள்.

எவ்வளவு வசனங்களில் ஜிஹாதைச் சொன்ன இறைவன் இவ்வசனத்தில் ஏன் எண்ணிக்கையைக் குறிப்பிட்டுக் காட்டி சொல்ல வேண்டும்? நாமாக எதையும் செய்து விடாமல் நம்முடைய சுய கருத்துக்களையும் உணர்வுகளையும் அடக்கிக் கொண்டு சற்று இவ்வசனத்தின் உண்மை நிலையைத் தெரிந்த பிறகுதான் நாம் ஒரு முடிவுக்கு வரவேண்டும்.

ஒரு மனிதன் சொந்த அபிப்ராயத்தில் சொன்னால் அதை ஏற்கவேண்டிய எந்த அவசியமும் கிடையாது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

ஸலவாத் பெயரில் பித்அத்கள்

நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பிறகு முஸ்லிம்களிடத்தில் மார்க்கம் என்ற பெயரில் எத்தனையோ பித்அத்துகள் நுழைந்து விட்டன. அதில் ஒன்றுதான் ”தரூத் தாஜ்” என்ற பெயரில் ஒரு ஸலவாத் ஓதுவது.

”தரூத்” என்றால் ”ஸலவாத்” என்று பொருள்.

”தரூத் தாஜ்” (கிரீட ஸலவாத்) என்பது இஸ்லாத்தில் இல்லாத ஒன்றாகும். இதற்கு குர்ஆனிலோ, நபிவழியிலோ எந்த ஆதாரங்களும் கிடையாது. இது இஸ்லாத்தின் எதிரிகளால், வழிகேடர்களால் உருவாக்கப்பட்ட ஒன்றாகும்.

இதனை நம்பி ஓதிய நிலையில் ஒருவன் மரணித்தால் நிச்சயமாக அவன் நிரந்தர நரகத்திற்குரியவனாக ஆகிவிடுவான்.  ஏனென்றால் இந்த ஸலவாத்தின் வாசகங்கள் அனைத்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை இறைவனுக்கு நிகரான கடவுளாக இணையாக்குகின்ற வாசகங்கள் தான்.

இதனை ஓதினால் செல்வம் பெருகும், நோய் நீங்கும் என்ற நம்பிக்கையில் இஸ்லாமிய (?) பெருமக்கள் தங்கள் வீடுகளில் லெப்பைமார்களை அழைத்து மிக விமரிசையாக ஓதி வருகின்றனர்.

இந்த நரகத்து ஸலவாத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களோ, ஸஹாபாக்களோ அல்லது நான்கு இமாம்களில் யாருமோ ஓதியதில்லை. மாறாக இது பிற்காலத்தில் மார்க்கத்தை விற்றுப் பிழைப்பு நடத்தக்கூடிய சில முல்லாக்களால் பிழைப்புக்காக உருவாக்கப்பட்ட ஒன்று தான்.

இந்த நரகத்து ஸலவாத்தின் கருத்துக்கள் எந்த அளவிற்கு மார்க்கத்துடன் மோதுகின்றன என்பதைப் பாருங்கள்.

اَللّٰهُمَّ صَلِّ عَلى سَيِّدِنَا وَ مَوۡلٰنَا مُحَمَّدِ صَاحِبِ التَّاجِ وَ الۡمِعۡرَاجِ وَ الۡبُرَاقِ وَ الۡعَلَمِ  دَافِعِ الۡبَلَآءِ وَ الۡوَبَآءِ وَ الۡقَحۡطِ وَ الۡمَرَضِ وَ الۡاَلَمِ  اِسۡمُہٗ مَکۡتُوۡبٌ مَّرۡفُوۡعٌ مَّشۡفُوۡعٌ مَّنۡقُوۡشٌ فِي اللَّوۡحِ وَ الۡقَلَمِ  سَيِّدِ الۡعَرَبِ وَ الۡعَجَمِ  جِسۡمُہٗ مُقَدَّسٌ مُّعَطَّرٌ مُّطَهَّرٌ مُّنَوَّرٌ فِي الۡبَيۡتِ وَ الۡحَرَمِ  شَمۡسِ الضُّحى بَدۡرِ الدُّجى صَدۡرِ الۡعُلٰى نُوۡرِ الۡهُدىٰ  کَهۡفِ الۡوَرىٰ مِصۡبَاحِ الظُّلَمِ  جَمِيۡلِ الشِّيَمِ شَفِيۡعِ الۡاُمَمِ  صَاحِبِ الۡجُوۡدِ وَ الۡکَرَمِ   وَ اللهُ عَاصِمُہٗ  وَ جِبۡرِيۡلُ خَادِمُہٗ  وَ الۡبُرَاقُ مَرۡکَبَہٗ   وَ الۡمِعۡرَاجُ سَفَرُہٗ وَ سِدۡرَةُ الۡمُنۡتَهى مَقَامُہٗ   وَ قَابَ قَوۡسَيۡنِ مَطۡلُوۡبُہٗ  وَ الۡمَطۡلُوۡبُ مَقۡصُوۡدُہٗ وَ الۡمَقۡصُوۡدُ مَوۡجُوۡدُہٗ  سَيِّدِ الۡمُرۡسَلِيۡنَ  خَاتَمَ النَّبِيِّيۡنَ شفيع المذنبين  اَنِيۡسِ الۡغَرِيۡبِيۡنَ رَحۡمَةً لِّلۡعَالَمِيۡنَ   رَاحَةِ الۡعَاشِقِيۡنَ  مُرَادِ الۡمُشۡتَاقِيۡنَ  شَمۡسِ الۡعَارِفِيۡنَ  سِرَاجِ السَّالِکِيۡنَ  مِصۡبَاحِ الۡمُقَرَّبِيۡنَ  مُحِبِّ الۡفُقَرَآءِ وَ الۡغُرَبَآءِ واليتماء وَ الۡمَسَاکِيۡنِ سَيِّدِ الثَّقَلَيۡنِ  نَبِيِّ الۡحَرَمَيۡنِ  اِمَامِ الۡقِبۡلَتَيۡنِ  وَ سِيۡلَتِنَا فِي الدَّارَيۡنِ  صَاحِبِ قَابَ قَوۡسَيۡنِ  مَحۡبُوۡبِ رَبِّ الۡمَشۡرِقَيۡنِ وَ رَبِّ الۡمَغۡرِبَيۡنِ  سيد جَدِّ الۡحَسَنِ وَ الۡحُسَيۡنِ  مَوۡلٰنَا وَ مَوۡلَي الثَّقَلَيۡنِ اَبِي الۡقَاسِمِ مُحَمَّدِ بۡنِ عَبۡدِ اللهِ  نُوۡرٌ مِّنۡ نُوۡرِ اللهِ  يَآ اَيُّهَا الۡمُشۡتَاقُوۡنَ بِنُوۡرِ جَمَالِہٖ  صَلُّوۡا عَلَيۡہِ وَاٰلِہٖ وَ اَصۡحٰبِہٖ  وَ سَلِّمُوۡا تَسۡلِيۡمًا

இதைத்தான் அவர்கள் ”தரூத் தாஜ்” என்ற பெயரில் ஓதி வருகின்றனர்.

இதில் நாம் கோடிட்டு காட்டிய வாசகத்தின்  பொருள் :

دَافِعِ الۡبَلَآءِ وَ الۡوَبَآءِ وَ الۡقَحۡطِ وَ الۡمَرَضِ وَ الۡاَلَمِ

”முஹம்மது (ஸல்) அவர்கள் ”சோதனைகள், பெரு நோய்கள், பஞ்சம், நோய்கள், வேதனைகள்” அனைத்தையும் தடுக்கக்கூடியவர்கள்.”

இவ்வாறு கூறுவது இறைவனுக்கு இணை கற்பிக்கின்ற மாபாதக பாவமாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள்தான் நோய்களைக் குணமாக்குபவர்கள் என்றும், பஞ்சத்தை நீக்குபவர்கள் என்றும், சோதனைகளைத் தடுப்பவர்கள் என்றும் கூறுவது இஸ்லாத்தின் அடிப்படையைத் தகர்ப்பதாகும்.

மனிதனுக்கு நோய்களை ஏற்படுத்துபவனும், அதை நீக்குபவனும் அல்லாஹ் தான். இதில் நபிமார்கள் உட்பட யாருக்கும் அதிகாரம் இல்லை என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை.

திருக்குர்ஆனிலும், ஹதீஸ்களிலும் இதற்கான சான்றுகளை ஏராளமாக நாம் காணலாம்.

இப்ராஹீம் (அலை அவர்கள் மிகச் சிறந்த இறைத்தூதராவார்கள். திருக்குர்ஆனில் அவர்களைப் பல இடங்களில் இறைவன் புகழ்ந்து பேசுகிறான். அவர்களின் மார்க்கத்தைப் பின்பற்றுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்கு இறைவன் கட்டளையிடுவதிலிருந்து அவர்களின் மதிப்பு எத்தகையது என்று நாம் உணர முடியும்.

இப்ராஹீம் (அலை அவர்கள் ஏகத்துவப் பிரச்சாரம் செய்த போது இறைவனின் இலக்கணத்தைப் பின்வருமாறு விளக்கினார்கள்.

நான் நோயுறும் போது அவனே எனக்கு நிவாரணம் தருகிறான்.

(அல்குர்ஆன் 26 :80)

நோய்களை நீக்கும் அதிகாரம் இறைவனுக்குரியது என இப்ராஹீம் (அலை அவர்கள் மிகத் தெளிவாக விளக்கியுள்ளனர்.

அய்யூப் நபியவர்கள் நீண்ட காலம் நோய்வாய்ப்பட்ட போது தமது நோயை தாமே நீக்கிக் கொள்ளவில்லை. மாறாக இறைவனிடம் தான் அவர்கள் முறையிட்டனர். இறைவன் விரும்பியபோது அவர்களின் நோயைக் குணமாக்கினான்.

எனக்குத் துன்பம் நேர்ந்துவிட்டது. நீ கருணையாளர்களுக் கெல்லாம் கருணையாளன் என அய்யூப் தமது இறைவனை அழைத்தபோது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

(அல்குர்ஆன் 21:83)

துன்பங்களையும், நோய்களையும் நீக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கும் இல்லை. அது இறைவனின் தனிப்பட்ட அதிகாரத்தில் உள்ளது என்று திருக்குர்ஆன் பல வசனங்களில் குறிப்பிடுகிறது.

அல்லாஹ் உமக்குத் துன்பத்தை ஏற்படுத்தினால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. அவன் உமக்கு நன்மையை ஏற்படுத்திவிட்டால், அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

(அல்குர்ஆன் 6:17)

அல்லாஹ் நாடியதைத் தவிர எனக்கே தீங்கு செய்யவோ நன்மை செய்யவோ நான் அதிகாரம் பெற்றிருக்கவில்லை என்று (முஹம்மதே! கூறுவீராக! ஒவ்வொரு சமுதாயத்துக்கும் ஒரு காலக் கெடு உள்ளது. அவர்களின் காலக்கெடு வரும்போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள்

(அல்குர்ஆன் 10:49)

அல்லாஹ் உமக்கு ஒரு தீங்கை அளித்தால் அவனைத் தவிர அதை நீக்குபவன் யாருமில்லை. உமக்கு அவன் ஒரு நன்மையை நாடினால் அவனது அருளைத் தடுப்பவன் யாரும் கிடையாது. தனது அடியார்களில் நாடியோருக்கு அதை அளிப்பான். அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 10:107)

வானங்களையும், பூமியையும் படைத்தவன் யார்? என்று அவர்களிடம் நீர் கேட்டால் அல்லாஹ் என்று கூறுவார்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் பிரார்த்திப்பவற்றைப் பற்றிக் கூறுங்கள்! என்று கேட்பீராக! அல்லாஹ் எனக்கு ஒரு தீங்கை நாடி விட்டால் அவனது தீங்கை அவர்கள் நீக்கி விடுவார்களா? அல்லது அவன் எனக்கு அருளை நாடினால் அவர்கள் அவனது அருளைத் தடுக்கக் கூடியவர்களா? அல்லாஹ் எனக்குப் போதும். சார்ந்திருப்போர் அவனையே சார்ந்திருப்பார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:38)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பல்வேறு சந்தர்ப்பங்களில் பல போர்களைச் சந்தித்தார்கள். எதிரிகளைச் சந்திக்க வேண்டிய இந்த இக்கட்டான நேரத்தில் பல நபித்தோழர்கள் நோய்வாய்ப்பட்டுப் போரில் பங்கெடுக்க முடியாத நிலையில் இருந்தார்கள். நபியவர்களுக்கு நோய் தீர்க்கும் ஆற்றல் இருந்திருந்தால் இந்த நெருக்கடியான நேரத்தில் நோயுற்ற நபித்தோழர்களுக்கு நிவாரணம் அளித்திருப்பார்கள். அவர்களையும் போரில் பங்கெடுக்கச் செய்திருப்பார்கள். படை வீரர்கள் பற்றாக்குறையாக இருந்த இந்தக் கட்டத்தில் கூட அவ்வாறு செய்யவில்லை என்பதைப் பல ஹதீஸ் களிலிருந்து நாம் அறியலாம்.

நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் ஒரு போரில் பங்கெடுத்தோம். அப்போது அவர்கள், 'நிச்சயமாக மதீனாவில் சில மக்கள் உள்ளனர். நீங்கள் சம தரையையோ, பள்ளத்தாக்கையோ கடந்து சென்றால். அவர்களும் (கூலி பெறுவதில் உங்களுடன் உள்ளனர். ஏனெனில் நோய் அவர்களைத் தடுத்து விட்டது' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அனஸ் (ரலி

நூல்: புகாரி 2839, 4423

சில சமயங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களே நோய்களுக்கு ஆளானதுண்டு. நோயிலிருந்து தாமே அவர்கள் நிவாரணம் பெற்றதில்லை. நோய் நீக்கும் ஆற்றலை அல்லாஹ் அவர்களுக்கு வழங்கியிருந்தால் அவர்களே நோய்க்கு ஆளாகியிருக்க மாட்டார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குக் காய்ச்சல் ஏற்பட்டிருந்த போது அவர்களிடம் சென்றேன். 'அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் கடுமையான காய்ச்சலால் பீடிக்கப்பட்டுள்ளீர்களா' என்று கூறினேன். அதற்கவர்கள் 'ஆம் உங்களில் இருவருக்கு ஏற்படும் காய்ச்சல் அளவுக்கு எனக்கு ஏற்பட்டுள்ளது' என்றார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூது (ரலி)

நூல்: புகாரி 5648, 5660, 5667

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் குடும்பத்தினரும் நோய் வாய்ப்பட்டனர். அவர்களில் யாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நோய் நிவாரணம் தேடவில்லை. நான் குணப்படுத்துகிறேன் என்று அவர்களிடம் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கூறவில்லை. இறைவன் மட்டுமே நோய் தீர்க்கும் அதிகாரம் படைத்தவன் என்பதை அவர்கள் அப்போது கூறிய வார்த்தை ஐயமற விளக்குகின்றது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவரை நோய் விசாரிக்கச் சென்றனர். தமது வலது கரத்தால் தடவிவிட்டு. அல்லாஹும்ம ரப்பன்னாஸ் அத்ஹிபில் பஃஸ இஷ்ஃபி அன்தஷ்ஷாஃபி, லாஷிஃபாஅ இல்லா ஷிஃபாவுக ஷிஃபா அன் லா யுகாதிரு ஸகமன் என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி

நூல்: புகாரி 5675, 5742, 5743, 5750

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதன் பொருள்:

'இறைவா! மனிதர்களின் இரட்சகனே! இந்நோயை நீக்குவாயாக! நீ நிவாரணம் அளிப்பாயாக! நீயே நிவாரணம் அளிப்பவன்! உனது நிவாரணத்தைத் தவிர வேறு நிவாரணம் ஏதுமில்லை. நோயை விட்டு வைக்காத வகையில் நிவாரணம் வழங்கு!'

நோய் தீர்ப்பவன் அல்லாஹ் மட்டுமே என்பதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அழுத்தம் திருத்தமாக இதன் மூலம் அறிவித்து விட்டனர்.

ஸஃது பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்களை நோய் விசாரிக்கச் சென்றபோது 'இறைவா! ஸஃதுக்கு நோய் நிவாரணம் வழங்கு' என்றே மும்முறை பிரார்த்தனை செய்தார்கள். இதை ஸஃது அவர்களே தெரிவிக்கிறார்கள்.

நூல்: புகாரி 5659

அல்லாஹ் ஒருவன் மட்டுமே நோய்களை நீக்கக் கூடியவன் என்பதையே அவர்கள் மக்களுக்குப் போதனை செய்தார்கள். அல்லாஹ் அனுமதிக்கும் போது மிக மிகக் குறைந்த சந்தர்ப்பங்களில் அற்புதம் என்ற அடிப்படையில் அல்லாஹ்விடமே கோரி நிவாரணம் பெற்றுத் தந்துள்ளனர்.

அல்லாஹ் அனுமதிக்காத பல நூறு சந்தர்ப்பங்களில் அல்லாஹ்விடம் முறையிட்டார்கள். தாமே நோய் தீர்க்க வல்லவர் என்று சொன்னதே இல்லை.

அவர்கள் உயிருடன் வாழ்ந்த காலத்தில் அவர்களை நேரில் சந்தித்து நோய் விலகிட இறைவனிடம் துஆச் செய்யுமாறு பல நபித்தோழர்கள் கேட்டதுண்டு. ஆனால் நீங்களே குணப்படுத்துங்கள் என்று கேட்டதில்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஒரு மகள், தமது மகன் மரணத்தை நெருங்கிவிட்டதாகவும் உடனே வரவேண்டும் என்றும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சொல்லியனுப்பினார்... நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் அக்குழந்தை கொடுக்கப்பட்டது. அக்குழந்தையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது மடியில் கிடத்தினார்கள். அதன் உயிர் மூச்சு தடுமாறியது. இதைக் கண்டு அவர்களின் கண்கள் கண்ணீர் சொரிந்தன.       நூல்: புகாரி 1248

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது குடும்பத்தில் ஒருவருக்கு நோய் ஏற்பட்ட போது கண்ணீர்தான் விட முடிந்தது. நோயை நீக்க முடியவில்லை என்பதை இந்த ஹதீஸ் தெளிவுபடுத்துகிறது.

திருக்குர்ஆனுக்கும், நபிவழிக்கும் முரணாக அமைந்த இந்த ஸலவாத்தை ஓதுவது நன்மை தருமா? பாவத்தில் தள்ளுமா? என்று சிந்தித்துப் பாருங்கள்!

உணவளிக்கும் அதிகாரம் நபிகள் நாயகத்துக்கு உண்டா?

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பஞ்சத்தை நீக்கிவிடுவார்கள். அதாவது உணவளிப்பார்கள் என்று மேற்கண்ட ஸலவாத்தில் வந்துள்ளது.

மனிதர்களுக்கும், மற்ற உயிரினங்களுக்கும் உணவளிப்பவன் அல்லாஹ் தான் என்பது இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை. திருக்குர்ஆன் நெடுகிலும் இந்தக் கொள்கை பரவலாக வலியுறுத்தப்பட்டுள்ளது.

பெற்றோருக்கு உதவுங்கள்! வறுமையின் காரணமாக உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! உங்களுக்கும், அவர்களுக்கும் நாமே உணவளிக்கிறோம்.

(அல்குர்ஆன் 6:151)

மக்கள் உங்களை வாரிச் சென்று விடுவார்களோ என அஞ்சி, குறைந்த எண்ணிக்கையில் இப்பூமியில் நீங்கள் இருந்ததை எண்ணிப் பாருங்கள்! அவன் உங்களை அரவணைத்தான். தனது உதவியால் உங்களைப் பலப்படுத்தினான். நீங்கள் நன்றி செலுத்திட தூய்மையானவற்றை உங்களுக்கு உணவாக அளித்தான்.

(அல்குர்ஆன் 8:26)

பூமியில் உள்ள உயிரினம் எதுவாக இருந்தாலும். அவற்றுக்கு உணவளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகும். அவற்றின் வசிப்பிடத்தையும், அவை சென்றடையும் இடத்தையும் அவன் அறிவான். ஒவ்வொன்றும் தெளிவான பதிவேட்டில் உள்ளது.

(அல்குர்ஆன் 11:6)

தான் நாடியோருக்கு அல்லாஹ் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான்.

(அல்குர்ஆன் 13:26)

அல்லாஹ்தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

(அல்குர்ஆன் 14:32)

உங்களுக்கும், நீங்கள் யாருக்கு உணவளிப்போராக இல்லையோ. அவர்களுக்கும் அதில் வாழ்வதற்குத் தேவையானவற்றை அமைத்தோம்.

(அல்குர்ஆன் 15:20)

உங்களில் ஒருவரை விட மற்றவரை செல்வத்தில் அல்லாஹ் சிறப்பித்திருக்கிறான். (செல்வத்தால்) சிறப்பிக்கப்பட்டோர் தமது செல்வத்தைத் தமது அடிமைகளிடம் கொடுத்து, தங்களுக்குச் சமமாக அவர்களை ஆக்குவதில்லை. அல்லாஹ்வின் அருட்கொடையையா நிராகரிக்கிறார்கள்?

(அல்குர்ஆன் 16:71)

தான் நாடியோருக்கு உமது இறைவன் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் தனது அடியார்களை நன்கறிந்தவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான். வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

(அல்குர்ஆன் 17:30, 31)

(முஹம்மதே! உமது குடும்பத்தினரைத் தொழுமாறு ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்கு செல்வத்தை அளிக்கிறோம். (இறைஅச்சத்திற்கே) நல்ல முடிவு உண்டு.

(அல்குர்ஆன் 20:132)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்! என்று கேட்பீராக!                (அல்குர்ஆன் 27:64)

அல்லாஹ்வையன்றி நீங்கள் கற்பனையாகப் படைத்த சிலைகளையே வணங்குகிறீர்கள். அல்லாஹ்வையன்றி நீங்கள் யாரை வணங்குகிறீர்களோ அவர்கள் உங்களுக்குச் செல்வம் வழங்க இயலாது. எனவே அல்லாஹ்விடமே செல்வத்தைத் தேடுங்கள்! அவனையே வணங்குங்கள்! அவனுக்கு நன்றி செலுத்துங்கள்! அவனிடமே திரும்பக் கொண்டு வரப்படுவீர்கள்!

(அல்குர்ஆன் 29:17)

எத்தனையோ உயிரினங்கள் தமது உணவைச் சுமந்து செல்வதில்லை. அல்லாஹ்வே அவற்றுக்கும், உங்களுக்கும் உணவளிக்கிறான். அவன் செவியுறுபவன்; அறிந்தவன்.

(அல்குர்ஆன் 29:60)

அல்லாஹ் தனது அடியார்களில், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அளவுடனும் வழங்குகிறான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்                         (அல்குர்ஆன் 29:62)

தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும், குறைத்தும் வழங்குகிறான் என்பதை அவர்கள் பார்க்கவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.                             (அல்குர்ஆன் 30:37)

வானங்களிலும், பூமியிலும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? என்று (முஹம்மதே! கேட்டு, அல்லாஹ் என்று கூறுவீராக! நாமோ அல்லது நீங்களோ நேர்வழியிலோ பகிரங்கமான வழிகேட்டிலோ இருக்கிறோம்.                          (அல்குர்ஆன் 34:24)

என் இறைவன், தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். எனினும் மனிதர்களில் அதிகமானோர் அறிய மாட்டார்கள் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:36)

எனது இறைவன் தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தைத் தாராளமாக வழங்குகிறான். தான் நாடியோருக்கு அதை குறைத்தும் கொடுக்கிறான். நீங்கள் எப்பொருளை (நல் வழியில் செலவிட்டாலும் அவன் அதற்கான பிரதிபலனை அளிப்பான். அவன் வழங்குவோரில் சிறந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 39:39)

மனிதர்களே! உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருளை எண்ணிப் பாருங்கள்! வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிக்கிறான். அல்லாஹ்வைத் தவிர படைப்பவன் உண்டா? அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எவ்வாறு திசை திருப்பப்படுகிறீர்கள்?

(அல்குர்ஆன் 35:3)

தான் நாடியோருக்கு செல்வத்தைத் தாராளமாகவும், குறைத்தும் அல்லாஹ் வழங்குகிறான் என்பதை அவர்கள் அறியவில்லையா? நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 39:52)

வானங்கள் மற்றும் பூமியின் திறவு கோல்கள் அவனுக்கே உரியன. தான் நாடியோருக்குச் செல்வத்தை அவன் தாராளமாக வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அவன் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்.

(அல்குர்ஆன் 42:12)

அவன் தனது உணவை நிறுத்திவிட்டால் உங்களுக்கு உணவளிப்பவன் உண்டா? மாறாக வரம்பு மீறுவதிலும் வெறுப்பிலுமே அவர்கள் மூழ்கி விட்டனர்.

(அல்குர்ஆன் 67:21)

மனிதன் படைக்கப்படுவதற்கு முன்பே அவனது உணவு மற்றும் வசதிகள் இறைவனால் முடிவு செய்யப்பட்டு விடுகின்றன என்று கூறும் நபிமொழிகள் ஏராளமாக உள்ளன.

நூல்: புகாரி 318, 3333, 6595

உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உள்ள தனிப்பட்ட அதிகாரம். அதில் நபிமார்கள் உள்ளிட்ட எவருக்கும் எந்தப் பங்கும் இல்லை என்று இந்த வசனங்கள் சந்தேகத்திற்கு இடமின்றி அறிவிக்கின்றன. அல்லாஹ்வின் இந்தப் பிரகடனத்துக்கு எதிராக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் ஏகத்துவப் பிரச்சாரத்தை எதிர்த்து வந்த காபிர்கள், பல தெய்வங்களை வழிபட்டு வந்த முஷ்ரிக்குகள்கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே உரியது என்று நம்பி வந்ததாகத் திருக்குர்ஆன் கூறுகின்றது.

வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்? என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். அஞ்ச மாட்டீர்களா? என்று நீர் கேட்பீராக!

(அல்குர்ஆன் 10:31)

மக்கத்துக் காபிர்கள் கூட உணவளிக்கும் அதிகாரம் அல்லாஹ்வுக்கு மட்டுமே சொந்தமான தனியுரிமை என்று நம்பியிருந்தார்கள் என்பதற்கு இவ்வசனம் சான்றாக உள்ளது. உணவளிக்கும் அதிகாரம் தனக்கு மட்டுமே உரியது என்பதை அல்லாஹ் பல இடங்களில் தெளிவாகக் குறிப்பிடுகிறான்.

அல்லாஹ்வே உங்களைப் படைத்தான். பின்னர் உங்களுக்கு உணவளித்தான். பின்னர் உங்களை மரணிக்கச் செய்வான். பிறகு உங்களை உயிர்ப்பிப்பான். உங்கள் தெய்வங்களில் இவற்றில் ஏதேனும் ஒன்றைச் செய்வோர் உள்ளனரா? அவன் தூயவன். அவர்கள் இணை கற்பிப்பதை விட்டும் உயர்ந்தவன்.

(அல்குர்ஆன் 30:40)

படைத்தல், மரணிக்கச் செய்தல், மீண்டும் உயிர்ப்பித்தல் ஆகியவை எப்படி இறைவனின் தனிப்பட்ட உரிமையோ அது போன்று உணவளிப்பதும் அவனது தனிப்பட்ட உரிமையாகும். இந்த நான்கில் எந்த ஒன்றையும் எவரும் செய்ய முடியாது என்று தெளிவான பிரகடனம் இது.

இந்த உரிமை இறைவனுக்கு மாத்திரம் சொந்தமானது என்பதால் தான் எத்தனையோ நபிமார்களை இறைவன் வறுமையில் வைத்திருந்தான். நபித்தோழர்கள் பசியால் துடித்திருக்கின்றனர்.

நபியவர்களுக்கு வறுமையை விரட்டும் அதிகாரம் இருந்திருந்தால் அவர்களே வறுமையில் வாடியிருக்க மாட்டார்கள்.

பல நாட்கள் பட்டினி கிடந்த நபித்தோழர்கள்,

வயிற்றில் கற்களைக் கட்டிக் கொண்டவர்கள்,

ஒரேயொரு பேரீச்சம் பழத்தைச் சாப்பிட்டு உயிரைத் தக்க வைத்துக் கொண்டவர்கள்,

தங்குவதற்குக் கூட சொந்த இடமில்லாமல் பள்ளிவாசலில் தங்கியவர்கள்,

இறந்த பின் போர்த்துவதற்குக் கூடப் போதிய ஆடையில்லாமல் புல் பூண்டுகளால் மறைக்கப்பட்டவர்கள்,

ஒட்டுப்போட்ட ஆடைகளை அணிந்தவர்கள்,

வீட்டில் விளக்கெரிக்கக் கூட வழியில்லாதவர்கள்,

வெறும் தண்ணீரைக் கொடுத்து குழந்தைகளை உறங்க வைத்தவர்கள்

என்று பல்வேறு வகைகளில் வறுமை அவர்களை ஆட்டிப் படைத்தது.

அவர்களில் எவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் தங்கள் வறுமையை நீக்குமாறு வேண்டவில்லை. அல்லாஹ்விடமே வேண்டினார்கள். அவனிடமே வேண்டுமாறு தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் போதித்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உயிருடன் இருந்தும் அவர்களை நேரில் கண்டிருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் வறுமையை நீக்குமாறு கோரவில்லை.

ஆனால் இந்த நரகத்து ஸலவாத்தில் வறுமையை நீக்குமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பிரார்த்திக்கப்படுகின்றது. அவர்கள் தான் வறுமையை நீக்க முடியும் என்று கூறப்படுகின்றது.

எனவே இந்த ”தரூத் தாஜ்”  திருக்குர்ஆன் வசனங்களுடன் நேரடியாக மோதுகின்றதா? இல்லையா? சிந்தியுங்கள்!

கிறித்தவர்கள் மர்யமின் மைந்தர் ஈசாவை (அளவுக்கு மீறிப் புகழ்ந்து கடவுள் நிலைக்கு) உயர்த்தி விட்டதைப் போல் நீங்கள் என்னை உயர்த்தி விடாதீர்கள். ஏனெனில் நான் அல்லாஹ்வின் அடியார் தான். அல்லாஹ்வின் அடியார் என்றும் அல்லாஹ்வின் தூதர் என்றும் சொல்லுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என மிம்பரின்மீது அமர்ந்தபடி உமர் (ரலி) அவர்கள் சொல்ல நான் கேட்டிருக்கிறேன்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) 

நூல்: புகாரி 3445

இந்த நரகத்து ஸலவாத்தை ஓதினால் நரகம்தான் பரிசாகக் கிடைக்கும்..

ஒரு வாதத்திற்கு இதில் இணை கற்பிக்கும் வரிகள் இல்லையென்றாலும் இதனை நாம் ஓதுவது கூடாது. ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் கற்றுத்தராத, மற்றவர்களால் உருவாக்கப்பட்ட அனைத்துமே பித்அத் ஆகும். அவற்றை நாம் மார்க்கமாக கருதுவது கூடாது.

அப்படியானால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது கொண்டுள்ள அன்பை வெளிப்படுத்த வேறு வாய்ப்பே இல்லையா? என்றால் நிச்சயமாக இருக்கின்றது. அவர்கள் மீது கொண்ட அன்பை வெளிப்படுத்துவதற்கு அல்லாஹ் ஒரு வடிகாலைத் தந்துள்ளான். அது தான் அவர்களுக்காக அல்லாஹ்விடம் அருளை வேண்டக் கூடிய ஸலவாத்

அல்லாஹ் இந்த நபிக்கு அருள் புரிகிறான். வானவர்கள் அவருக்காக அவனது அருளை வேண்டுகின்றனர். நம்பிக்கை கொண்டோரே! நீங்களும் அவருக்காக (இறை) அருளை வேண்டுங்கள்! ஸலாமும் கூறுங்கள்!

அல்குர்ஆன் 33:56

இந்த வசனத்தைக் கண்டவுடன் அல்லாஹ்வின் தூதருக்காக ஸலவாத், ஸலாம் சொல்ல வேண்டும் என்று தோன்றுகின்றது. இதற்காக நமது சொந்த வார்த்தைகளைக் கொண்டு புகழ் மாலை தொடுக்கும்போது நிச்சயமாக அது யூத, கிறித்தவர்கள் புகுந்த பாதையில் கொண்டு போய்ச் சேர்த்து விடும். பாழாய்ப் போன ஷிர்க் என்னும் பெரும் பாவத்தில் நம்மைப் புதைத்து விடும். அதனால் தான் மேற்கண்ட வசனம் இறங்கியவுடன் நபித் தோழர்கள் ஸலவாத் சொல்வது எப்படி என்று நபி (ஸல்) அவர்களிடமே கேட்டு, கற்றுக் கொள்கின்றார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! தங்கள் மீது ஸலாம் கூறுவது என்றால் என்ன என்பதை நாங்கள் அறிவோம். ஸலவாத் கூறுவது எப்படி? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின் கமா ஸல்லைத்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத், அல்லாஹும்ம பாரிக் அலா முஹம்மதின் வஅலா ஆலி முஹம்மதின் கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று சொல்லுங்கள் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல்: புகாரி 4797

எங்கள் தொழுகையில் நாங்கள் எவ்வாறு ஸலவாத் சொல்வது? என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நபி (ஸல்) அவர்கள் இந்த ஸலவாத்தைக் கற்றுக் கொடுத்ததாக முஸ்னத் அஹ்மதில் ஹதீஸ் (16455) இடம் பெற்றுள்ளது.

தொழுகை அல்லாத சமயங்களில் ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் என்றோ ஸல்லல்லாஹு அலா முஹம்மது வ ஸல்லம் என்றோ கூறுவதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளது.

(பார்க்க: நஸயீ 2728)

யார் அல்லாஹ்விடம் என் மீது அருள் புரியுமாறு ஒரு தடவை துஆச் செய்கின்றாரோ அவர் மீது அல்லாஹ் பத்து தடவை அருள் புரிகின்றான் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகின்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: முஸ்லிம் 577

முஅத்தினின் பாங்கை நீங்கள் செவியுறும்போது, அவர் சொல்வது போன்றே நீங்களும் சொல்லுங்கள்.  பிறகு நீங்கள் என் மீது ஸலவாத் சொல்லுங்கள்.  ஏனெனில் நிச்சயமாக என் மீது யார் ஸலவாத் சொல்கின்றாரோ அவருக்கு அல்லாஹ் பத்து தடவை அருள் செய்கின்றான். பிறகு எனக்காக வஸீலாவைக் கேளுங்கள்.  நிச்சயமாக அது சுவனத்தில் உள்ள தகுதியாகும் (அல்லது வீடாகும்). அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்கே தவிர வேறு யாருக்கும் அது கிடைக்காது. (அதை அடையும்) அடியாராக நான் ஆக வேண்டும் என்று ஆதரவு வைக்கின்றேன். யார் எனக்காக அந்த வஸீலா வேண்டி பிரார்த்திக்கின்றாரோ அவருக்கு என்னுடைய பரிந்துரை ஏற்பட்டு விட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அம்ர் பின் அல்ஆஸ்(ரலி)

நூல்: முஸ்லிம் (628)

பாங்கு சொல்லப்படும்போது அதற்குப் பதில் கூறி, அதன் இறுதியில் நபி (ஸல்) அவர்கள் மீது ஸலவாத்தும், அவர்களுக்காக வஸீலா வேண்டிப் பிரார்த்தனையும் செய்பவருக்கு மறுமையில் நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத் உறுதியாகி விட்டது என்பதை இந்த ஹதீஸ் தெரிவிக்கின்றது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பரிந்துரைக்காக மக்கள் அலைமோதும் மறுமை நாளில் நமக்குப் பரிந்துரையைப் பெற்றுத் தரும் சாதனமாக இந்த ஸலவாத் அமைந்துள்ளது.

நபி (ஸல்) அவர்களின் ஷஃபாஅத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலவாத்தை விட்டு விட்டு, அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் ஸலாத்தை இனியும் ஓதலாமா?

ஒரு தொண்டன் தனது தலைவரின் கவனத்தை ஈர்ப்பதற்காக, தனது தலைவருக்கு தனது அன்பின் பரிமாணம் தெரிய வேண்டும் என்பதற்காக மிகப் பெரிய முயற்சிகளை மேற்கொள்வதைப் பார்க்கிறோம். உடல் உறுப்புக்களைச் சேதப்படுத்துதல், தன்னையே அழித்துக் கொள்ளுதல் போன்ற ஆபத்தான அழிவுப் பாதையை இதற்காகத் தேர்ந்தெடுக்கின்றான். இஸ்லாம் இந்த உளவியல் ரீதியான பிரச்சனையை உரிய வகையில் கையாள்கின்றது.

உங்களது நாட்களில் மிகச் சிறந்த நாள் வெள்ளிக் கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம் நபி படைக்கப்பட்டார்கள். அந்நாளில் அவர்களது உயிர் கைப்பற்றப்பட்டது. அந்நாளில் ஸூர் ஊதுதல் நிகழும். அந்நாளில் மக்கள் மூர்ச்சையாகுதல் நிகழும். எனவே அந்நாளில் என் மீது ஸலவாத்தை அதிகமாக்குங்கள். உங்களது ஸலவாத் என்னிடம் எடுத்துக் காட்டப்படுகின்றது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! எங்களது ஸலவாத் உங்களுக்கு எப்படி எடுத்துக் காட்டப்படும்? நீங்கள் தான் அழிந்து விட்டிருப்பீர்களே! என்று நபித்தோழர்கள் கேட்ட போது, நிச்சயமாக அல்லாஹ் நபிமார்களின் உடல்களை பூமி அரிப்பதை விட்டும் தடுத்து விட்டான் என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் 

நூல்: அபூதாவூத் 883

நிச்சயமாகப் பூமியில் சுற்றித் திரியும் மலக்குகள் அல்லாஹ்விடம் உள்ளனர். அவர்கள் என்னிடம் ஸலாமை எடுத்துரைக்கின்றார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்ஊத் (ரலி)

நூல்: நஸாயீ 1265

அல்லாஹ்வின் சாபத்தைப் பெற்றுத் தரும் இந்த ஸலாத்தை விட்டு விட்டு, அவனது அருளை அள்ளித் தரும் ஸலவாத்தைக் கூறுவோம். அளப்பரிய நன்மைகளை அடைவோம்.

குறிப்பு: நமது ஸலவாத், ஸலாம் நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்துக் காட்டப்படுகின்றது என்பதை வைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கள் தற்போதும் உயிருடன் இருக்கின்றார்கள் என்றோ அல்லது இறந்தவர்கள் செவியேற்கின்றார்கள் என்றோ விளங்கிக் கொள்ளக் கூடாது.

நீங்கள் சொல்லும் ஸலவாத்தை நான் கேட்கின்றேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. இதற்கென நியமிக்கப்பட்டிருக்கும் மலக்குகள் மூலம் இது தனக்கு எடுத்துக் காட்டப்படுவதாக நபி (ஸல்) அவர்கள் விளக்கமளிப்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும். மேலும் இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டும் அல்லாஹ் வழங்கிய தனிச் சிறப்பாகும். வேறு யாருக்கும் இது கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

 

தெரிந்த செய்திகள், தெரியாத உண்மைகள்!

ஸஹீஹ் முஸ்லிம் நூலுக்கு பாடம் அமைத்தவர் யார்?

ஆதாரப்பூர்வமான நபிமொழித் தொகுப்புகளில் இரண்டாமிடத்தில் இருப்பது ஸஹீஹ் முஸ்லிம் ஆகும்.

இதன் ஆசிரியரின் இயற்பெயர் முஸ்லிம் பின் ஹஜ்ஜாஜ். இவர்கள் ஹிஜ்ரி 206ல் பிறந்து 261ல் இறையடி சேர்ந்தார்கள்.

இவர்கள் சிறந்த ஹதீஸ் கலை வல்லுநராக இருந்தவர்கள். பல நூல்களை அவர்கள் தொகுத்துள்ளார்கள். அதில் மிகவும் பிரபலமானது ஸஹீஹ் முஸ்லிம் என்று மக்களால் அறியப்பட்ட நபிமொழித் தொகுப்பாகும்.

மற்ற நபிமொழித் தொகுப்புகளுக்கும் முஸ்லிம் அவர்களின் ஸஹீஹ் முஸ்லிமின் தொகுப்புக்கும் பல வித்தியாசங்கள் உள்ளன. அவற்றில் ஒன்று பதிவு செய்யப்பட்ட நபிமொழிகளுக்கு அவர்கள் பாடத் தலைப்பிடாததாகும்.

மற்ற நபிமொழித் தொகுப்பாளர்கள். நபிமொழியை பதிவு செய்தால் அந்த நபிமொழி தரும் கருத்தை தலைப்பிடுவார்கள். இந்த வேலையை முஸ்லிம் அவர்கள் செய்யவில்லை.

தவறான கருத்தை நாம் பதிவு செய்துவிடுவோமா என்ற அச்சமோ அல்லது படிப்பவர்களே அதன் கருத்தை தெரிந்து கொள்ளட்டும் என்ற எண்ணமோ அல்லது இதுவல்லாத வேறு காரணங்கள் இருந்திருக்கலாம்.

ஆனால் தற்போது நமது கையில் இருக்கும் ஸஹீஹ் முஸ்லிம் நூலில் அத்தியாயம் மற்றும் பாடத் தலைப்பிட்டு இருப்பதை நாம் காணலாம்.

ஸஹீஹ்  முஸ்லிமுக்கு தலைப்பிட்டு வெளியிட்டவர்கள் யார்?

இந்தக் கேள்விக்கு பல பதில்கள் உண்டு. முஸ்லிம் அவர்களிடம் கேட்டு எழுதியவர்கள் இதற்கு தலைப்பிட்டு இருக்க வாய்ப்புண்டு.

மேலும் ஸஹீஹ் முஸ்லிம் நூலுக்கு விரிவுரை எழுதியவர்கள் இதற்குத் தலைப்பிட்டுள்ளார்கள். குறிப்பாக நவவீ அவர்களைச் சொல்லலாம்.

நவவீ அவர்களின் ஸஹீஹ் முஸ்லிம் நூலுக்கு விரிவுரை எழுதிய மின்ஹாஜ் என்ற நூலின் வாசகங்கள் இதை தெளிவுபடுத்துகிறது.

شرح النووي على مسلم ـ مشكول - (2 / 152)

فِيهِ حَدِيث اِسْتِخْلَاف النَّبِيّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ أَبَا بَكْر رَضِيَ اللَّه عَنْهُ ، وَقَدْ قَدَّمْنَا فِي آخِر الْبَاب السَّابِق دَلِيل مَا ذَكَرْته فِي التَّرْجَمَة .

நபி (ஸல்) அவர்கள் அபுபக்ர் (ரலி) அவர்களை பொறுப்பாளராக்கினார்கள் என்று இந்தச் செய்தியில் உள்ளது. (நபிமொழிக்கு முன்பு பாடமாக) நாம் தலைப்பிட்டு கூறியுள்ளதற்குரிய ஆதாரத்தை முன்னர் குறிப்பிட்டுள்ளோம்.

(ஷரஹீந் நவவி, பாகம் 2, பக்கம் 152)

1673 - قَوْله صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ :( كُلّ مَعْرُوف صَدَقَة (أَيْ لَهُ حُكْمهَا فِي الثَّوَاب .وَفِيهِ بَيَان مَا ذَكَرْنَاهُ فِي التَّرْجَمَة

பாடத்தலைப்பில் நாம் குறிப்பிட்டுள்ளதற்குரிய ஆதாரம் இதில் உள்ளது.          (ஷரஹீந் நவவி, பாகம் 3, பக்கம் 445)

பாடத்தலைப்பில் நாம் குறிப்பிட்டுள்ளோம் என்று நவவீ அவர்கள் கூறியிருப்பது. முஸ்லிம் அவர்கள் பாடத் தலைப்பிடவில்லை என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

மேலும் தெளிவான வாசகங்களிலும் நவவீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

شرح النووي على مسلم - (1 / 21) ثم ان مسلما رحمه الله رتب كتابه على أبواب فهو مبوب في الحقيقة ولكنه لم يذكر تراجم الابواب فيه لئلا يزداد بها حجم الكتاب أو لغير ذلك قلت وقد ترجم جماعة أبوابه بتراجم بعضها جيد وبعضها ليس بجيد إما لقصور في عبارة الترجمة واما لركاكة لفظها واما لغير ذلك وانا ان شاء الله أحرص على التعبير عنها بعبارات تلييق بها في مواطنها والله أعلم

முஸ்லிம் அவர்கள் சில நேரங்களில் தன்னுடைய புத்தகத்தை பாடங்களின் வரிசையில் தொகுத்துள்ளார்கள். அது உண்மையில் பாடங்கள் வரிசையில் உள்ளதுதான். ஆனால் அவர்கள் அந்த பாடங்களின் விளக்கங்களைக் குறிப்பிடவில்லை.

இந்நூலுக்கு பலர் பாடங்கள் அமைத்துள்ளனர். அதில் சிலது சிலதைவிட சிறந்ததாக அமைந்துள்ளது.

சில நன்றாக இல்லை. ஏனெனில் பாடத் தலைப்புகள் சுருக்கமாக இருப்பதால் அல்லது வார்த்தைகள் நன்றாக இல்லாமலிருப்பதால் அல்லது இது அல்லாத வேறு காரணங்கள்தான்.

இன்ஷா அல்லாஹ் (இவ்வாறு இருக்காமல்) சிறந்த முறையில் பாடத் தலைப்புகள் அமைய நபிமொழிகளுக்கு ஏற்ப) அதன் இடங்களில் அதற்கு ஏற்றாற்போல் பாடத்தலைப்புகளை அமைக்க ஆசைப்படுகிறேன்.      

(ஷரஹீந் நவவி, பாகம் 1, பக்கம் 21)

முஸ்லிம் அவர்கள் தான் தொகுத்த இந்த நூலுக்கு பாடத் தலைப்பிடவில்லை என்றும் வேறு சிலர்தான் பாடத் தலைப்பிட்டார்கள் என்று மேற்சொன்ன செய்தி தெளிவுபடுத்துகிறது.

இதைப்போன்று ஹதீஸ்கலை நூலின் முன்னோடியாகத் திகழ்ந்த இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் ஸியானத்து முஸ்லிம் என்ற நூலில் பின்வருமாறு கூறுகிறார்கள்.

ثم إن مسلما رحمه الله وإيانا رتب كتابه على الأبواب فهو مبوب في الحقيقة ولكنه لم يذكر فيه تراجم الأبواب لئلا يزداد بها حجم الكتاب (صيانة صحيح مسلم)

முஸ்லிம் அவர்கள் சில நேரங்களில் தன்னுடைய புத்தகத்தை பாடங்களின் வரிசையில் தொகுத்துள்ளார்கள். அது உண்மையில் பாடங்கள் வரிசையில் உள்ளதுதான். ஆனால் அவர்கள் அந்த பாடங்களின் விளக்கங்களை அவர்கள் குறிப்பிடவில்லை. புத்தகம் பெரிதாகிவிடக்கூடாது என்பதால்தான்.

(நூல் ஸியானத்து முஸ்லிம்)

முஸ்லிம் அவர்களின் தொகுப்பு பாடவரிசையில் இருப்பதைப் போன்றுதான் உள்ளது. என்றாலும் முஸ்லிம் அவர்கள் இதற்கு பாடத் தலைப்பிடவில்லை என்று ஹிஜ்ரி 577ல் பிறந்த இப்னுஸ் ஸலாஹ் அவர்கள் தெளிபடுத்தியுள்ளார்கள்.

நவவீ அவர்களைப் போன்று குர்துபீ, காழீ இயாள், மாஸூரி என்று அறியப்பட்ட முஹம்மத் பின் அலீ மற்றும் அபூநுஐம் ஆகியோரும் ஸஹீஹ் முஸ்லிம் நூலுக்குத் தலைப்பிட்டுள்ளனர்.

அபூநுஐம் அவர்கள் அல் முஸ்னதுல் முஸ்தக்ரஜ் அலா ஸஹீஹ் முஸ்லிம் என்ற ஒரு நூலைத் தொகுத்துள்ளார்கள்.

இந்த நுநூல் முஸ்லிம் அவர்கள் தொகுத்த நூலில் உள்ள செய்திகளில் தன்னுடைய ஆசிரியர் வழியாகக் கிடைத்த செய்திகளை பதிவு செய்து அதற்கு அல்முஸ்னதுல் முஸ்தக்ரஜ் அலா ஸஹீஹ் முஸ்லிம் என்று பெயரிட்டுள்ளார்கள்.

இதில் அவர்களின் தலைப்புக்கும் நவவீ அவர்களின் தலைப்புக்கும் வேறுபாடு இருப்பதைக் காணலாம். உதாரணத்திற்கு சில

அபுநுஐம் அவர்களின் தலைப்பு

باب في الإيمان

باب قصة وفد عبد القيس

باب في فضل الجود وإكرام الضيف

நவவி அவர்களின் தலைப்பு

باب مَعْرِفَةِ الإِيمَانِ وَالإِسْلاَمِ وَالْقَدَرِ وَعَلاَمَةِ السَّاعَةِ

باب الأَمْرِ بِالإِيمَانِ بِاللَّهِ وَرَسُولِهِ وَشَرَائِعِ الدِّينِ وَالدُّعَاءِ إِلَيْهِ

باب بَيَانِ تَحْرِيمِ إِيذَاءِ الْجَارِ

இது போன்று பல பாடத் தலைப்புகளில் மாறுபட்டு காணப்படுவது. முஸ்லிம் அவர்கள் பாடத்தலைப்பிடவில்லை என்பதை மீண்டும் உறுதிப்படுகிறது.

இதை கவனத்தில் கொண்டு ஸஹீஹ் முஸ்லிமில் தலைப்பிட்ட ஒன்றை, முஸ்லிம் அவர்கள்தான் தலைப்பிட்டுள்ளார்கள். அதுதான் அவர்களின் கருத்து என்று எடுத்துக் கொள்ளக்கூடாது.

உதாரணமாக முஸ்லிம் இடம்பெறும் 671 செய்தியை கவனியுங்கள்.

வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தொழுகையை ஆரம்பித்தபோது தம்மிரு கைகளையும் உயர்த்தித் தக்பீர் கூறியதை நான் பார்த்தேன்.

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹம்மாம் அவர்கள் "இரு காதுகளுக்கு நேராக' என்று விவரித்தார்கள்.-

பின்னர் தமது ஆடையால் (இரு கைகளையும்) மூடி இடக் கையின் மீது வலக் கையை வைத்தார்கள். அவர்கள் "ருகூஉ'ச் செய்ய விரும்பியபோது தம் கைகளை ஆடையிலிருந்து வெளியே எடுத்துப் பின்னர் அவற்றை உயர்த்தித் தக்பீர் கூறி ருகூஉச் செய்தார்கள். (ருகூஉவிலிருந்து நிமிரும்போது) "சமிஅல்லாஹு லிமன் ஹமிதஹ்' என்று கூறுகையில் (முன் போன்றே) தம்மிரு கைகளையும் உயர்த்தினார்கள். பிறகு சஜ்தா செய்யும்போது தம்மிரு உள்ளங்கை(ளை நிலத்தில் வைத்து அவை)களுக்கிடையே (நெற்றியை வைத்து) சஜ்தா செய்தார்கள்.

நூல் முஸ்லிம் (671)

இந்த நபிமொழி, தொழுகையின் பல சட்டங்களைத் தெளிவுபடுத்துகிறது. இந்த நபிமொழிக்கு நவவீ அவர்கள் பின்வருமாறு தலைப்பிட்டுள்ளார்கள்.

பாடம் : 15

தொழுகையின் ஆரம்பத்தில்) தக்பீரத்துல் இஹ்ராம் கூறிய பின் நெஞ்சுக்குக் கீழ் தொப்புளுக்கு மேல் உள்ள பகுதியில் இடக் கைமீது வலக் கையை வைப்பதும், சஜ்தாவில் தோள்களுக்கு நேராக நிலத்தில் இரு கைகளையும் (விரித்து) வைப்பதும் (விரும்பத் தக்கதாகும்.

இதில் நெஞ்சுக்குக் கீழ் தொப்புளுக்கு மேல் உள்ள பகுதியில் இடக் கைமீது வலக் கையை வைப்பது  என்று தலைப்பிட்டிருப்பது  நபிமொழியில் இல்லாதது. தொழுபவர் இந்த நபிமொழியின் அடிப்படையில் வயிற்றுப் பகுதியில் கைகளை கட்டிக் கொள்ள வேண்டுமென நவவி அவர்கள் குறிப்பிடுகிறார்.

நவவீ அவர்கள் ஷாபீ மத்ஹபைச் சார்ந்தவர் என்பதால் அவரின் மத்ஹபின்படி தன் கருத்தை இதில் இணைத்துள்ளார்.

பாரமர மக்கள் ஸஹீஹ் முஸ்லிமைப் படிக்கும்போது வயிற்றில் கைகளை கட்டிக் கொள்வது முஸ்லிம் அவர்களின் கருத்து என்று எடுத்துக் கொள்வார்கள். எனவே  ஸஹீஹ் முஸ்லிம் நூலைப் படிப்பவர்கள் அதன் தலைப்பிற்கும் முஸ்லிம் அவர்களுக்கும் எந்தத் தொடர்பும் இல்லை என்பதைத் தெரிந்து கொள்ள வேண்டும்.

இந்த விபரம் முஸ்லிம் நூலின் முன்னுரையில் இடம் பெறலாம். நம் வாசகர்களுக்கு இது அவ்வளவு ரசிக்காது. பயனற்றதாகத் தெரியும். மாத இதழுக்கு இது தேவையா என்றும் கவனிக்கவும்.

­

கேள்விகள் ஒருவிதம் பதில்கள் பலவிதம்

நபி (ஸல்) அவர்களிடம் நபித்தோழர்களும், ஏனைய கொள்கையைச் சார்ந்தவர்களும் பல்வேறு கேள்விகளை எழுப்பியுள்ளார்கள். அத்தனை கேள்விகளுக்கும் நபி (ஸல்) அவர்கள் அழகான முறையில் பதிலளித்துள்ளர்கள். கேள்விகள் எப்படி அமைந்தனவோ அதற்கு ஏற்றாற்போல் பதிலும் அமைந்திருந்தன.

கேள்விக்குரிய பதிலும் கூடுதல் விளக்கமும்

கேள்விக்கான பதிலைச் சொல்லிவிடலாம். அல்லது கேள்விக்கான பதிலையும் சொல்லிவிட்டு, அதைவிக் கூடுதலான செய்திகளையும் சொல்லலாம்.

ஒரு முறை நபி (ஸல்) அவர்களிடம் கடல் தண்ணீரைப் பற்றி கேள்வி கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் தண்ணீர் தூய்மையானதுதான் என்று சொல்லிவிட்டு. கடலில் தாமாக செத்தவையும் உங்களுக்கு ஆகுமானதுதான் என்ற தகவலையும் கூடுதலாகச் சொன்னார்கள்.

(திர்மிதீ 64)

கடல் தண்ணீரைப் பற்றி மட்டும்தான் கேட்டார்கள். ஆனால் நபி (ஸல்) அவர்கள் அதற்குரிய பதிலுடன் அதில் உள்ள மீனுக்கும் சேர்த்து பதிலளித்தார்கள்.

கேட்ட கேள்வியைவிட அதைவிட முக்கியமான செய்தியை தெளிவுபடுத்துதல்:

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும், அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும், நாடோடிகளுக்காகவும், (செலவிட வேண்டும்) நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை அறிந்தவன் எனக் கூறுவீராக.

அல்குர்ஆன் 2:215

மக்கள் கேட்ட கேள்வி எதைச் செலவிட வேண்டும் என்றுதான். ஆனால் அல்லாஹ் கேள்விக்கான பதிலையும் சொல்லிவிட்டு யாருக்காக செலவிட வேண்டும் என்பதை முக்கியத்துவப்படுத்தி பதிலளிக்கின்றான்.

எதிர்மறை பதில்

சில நேரங்களில் கேள்விக்கான பதிலை நேரடியாகச் சொல்லாமல் எதிர்மறையான பதிலை நபி (ஸல்) அவர்கள் கூறியிருக்கிறார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து "அல்லாஹ்வின் தூதரே! இஹ்ராம் கட்டியவர் எதையெதை அணியலாம்?'' என்று கேட்டார். அதற்கு நபி(ஸல்) அவர்கள் "சட்டை, தலைப்பாகை, முழுக்கால் சட்டை, (முக்காடுள்ள) முழுநீள அங்கி (அல்லது தொப்பி), காலுறை ஆகியவற்றை அணியக் கூடாது. செருப்பு கிடைக்காதவர், தம் காலுறையின் (மேலிருந்து) கரண்டைக்குக் கீழ் வரையுள்ள பகுதியை வெட்டிவிட்டு அதை அணிந்து கொள்ளலாம். குங்குமப்பூச் சாயம் மற்றும் வர்ஸ் எனும் செடியின் சாயம் தோய்க்கப்பட்ட ஆடையை அணியாதீர்!'' என்றார்கள்.

(புகாரி 1542)

நபி (ஸல்) அவர்களிடம் இஹ்ராம் அணிந்தவர் எவற்றையெல்லாம் அணியலாம் என்று கேட்ட கேள்விக்கு அணியக்கூடாதவை எவை என்பதை நபி (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கேட்ட கேள்விக்கு எந்தெந்த ஆடைகளை அணிய வேண்டும் என்று சொல்லாமல் அணியக் கூடாததை சொல்லிவிட்டார்கள்.

அனுமதிக்கப்பட்டவை ஏராளமாக இருக்கின்றன. ஆனால் அனுமதிக்கப்படாதவை விரல்விட்டு எண்ணக்கூடிய அளவுதான் இருக்கிறது எனும்போது குறைவானதை சொல்வதுதான் புத்திசாலித்தனமான பதிலாக இருக்க முடியும். அந்த அடிப்படையில்தான் நபியவர்களன் பதிலும் அமைந்திருந்தன.

முழுமையாக விளங்கும் ஆற்றல் இல்லாத போது சுருக்கமாக பதில் அளித்தல் :

(முஹம்மதே) உயிரைப் பற்றி அவர்கள் உம்மிடம் கேட்கின்றனர். உயிர் என்பது இறைவனின் கட்டளைப்படி உள்ளது. நீங்கள் குறைவாகவே கல்வி கொடுக்கப்பட்டுள்ளீர்கள் என்று கூறுவீராக.

(அல்குர்ஆன் 17:85)

தேவையற்ற கேள்விகள்

இம்மை மறுமைக்கு பயனில்லாத மற்றும் அசியமில்லாத கேள்விகள் நன்மைக்குப் பதில் தீமையைத் தந்துவிடும்.

நம்பிக்கை கொண்டோரே சில விஷயங்களைப் பற்றி கேள்வி எழுப்பாதீர்கள். அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டால் உங்களுக்கு தீங்கு தரும். குர்ஆன் அருளப்படும் நேரத்தில் அவை பற்றி நீங்கள் கேள்வி கேட்டால் அவை உங்களுக்கு வெளிப்படுத்தப்பட்டுவிடும். அவற்றை அல்லாஹ் மன்னித்தான். அல்லாஹ் மன்னிப்பவன். சகிப்புத்தன்மையுள்ளவன்.

அல்குர்ஆன் 5:101

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் தடை விதிக்கப்படாத ஒன்றைப் பற்றிக் கேள்வி கேட்டு, அவர் கேள்வி கேட்ட காரணத்தாலேயே அது தடை செய்யப்பட்டு விடுமானால் அவர்தாம் முஸ்லிம்களிலேயே பெருங்குற்றம் புரிந்தவர் ஆவார்.

அறிவிப்பவர் : சஅத் பின் அபீவக்காஸ் (ரலி)

 நூல் : புகாரி 7289

பதில் போதுமானதாக இருந்தும் தேவையற்ற கேள்விகள் கேட்டு நன்மையை இழந்த மூஸா (அலை) அவர்களின் கூட்டத்தார்.

"ஒரு மாட்டை நீங்கள் அறுக்க வேண்டும் என அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்'' என்று மூஸா, தமது சமுதாயத்திடம் கூறியபோது "எங்களைக் கேலிப் பொருளாகக் கருதுகிறீரா?'' என்று கேட்டனர். அதற்கு அவர், "அறிவீனனாக நான் ஆவதை விட்டும் அல்லாஹ்விடம் பாதுகாவல் தேடுகிறேன்'' என்றார்.

"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது கிழடும், கன்றும் அல்லாத இரண்டுக்கும் இடைப்பட்ட மாடு என்று அவன் கூறுகிறான். எனவே உங்களுக்குக் கட்டளையிடப்பட்டதைச் செய்யுங்கள்!'' என்று அவர் கூறினார்.

"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அதன் நிறம் என்ன' என்பதை எங்களுக்கு அவன் விளக்குவான்'' என்று அவர்கள் கேட்டனர். "அது பார்ப்போரைப் பரவசப்படுத்துகிற கருமஞ்சள் நிற மாடு என்று அவன் கூறுகிறான்'' என்றார்.

"உமது இறைவனிடம் எங்களுக்காக வேண்டுவீராக! "அது எத்தகையது' என்பதை அவன் எங்களுக்குத் தெளிவுபடுத்துவான். அந்த மாடு எங்களைக் குழப்புகிறது. அல்லாஹ் நாடினால் நாங்கள் வழி காண்போம்'' என்று அவர்கள் கூறினர்.

"அது நிலத்தை உழவோ, விவசாயத்துக்கு நீரிறைக்கவோ பழக்கப்படுத்தப்படாத மாடு; குறைகளற்றது; தழும்புகள் இல்லாதது'' என்று அவன் கூறுவதாகக் (மூஸா) கூறினார். "இப்போதுதான் சரியாகச் சொன்னீர்'' என்று கூறி செய்ய முடியாத நிலையிலும் (மிகுந்த சிரமப்பட்டு) அம்மாட்டை அவர்கள் அறுத்தனர்.

(அல்குர்ஆன் 2:67-71)

கோமாளிகளின் வாதங்களுக்கு பதில்கள்

மவ்லிதும் மீலாதும்

இஸ்லாம் கடுமையாகக் கண்டித்த ஷிர்க் என்ற மகா பாதகமான செயல்களை சர்வசாதரணமாகச் செய்யலாம் என்றும் அதற்கு நன்மையும் உண்டும் என்றும் அதற்கு திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஆதாரம் உண்டு என்றும் சில கோமாளிக் கூட்டங்கள் மேடை போட்டும் புத்தகமாகவும் சொல்லி வருகிறார்கள்.

அவர்களின் அபத்தமான ஆபத்தான வாதங்களை இந்த தொடரில் தோலுரித்துக் காட்ட உள்ளோம். இன்ஷா அல்லாஹ்.

கோமளி வாதம்

நபி (ஸல்) அவார்கள் காலத்தில் மவ்லூத் ஓதப்பட்டது. பல நபித்தோழர்கள் மவ்லூத் ஓதியுள்ளார்கள். அதற்குரிய ஆதாரம் இதோ:

ஹைஸம் பின் அபீசினான் அவர்கள் கூறியதாவது: அபூஹுரைரா (ரலி) அவர்கள் பேசிக்கொண்டிருந்தபோது தமது பேச்சினிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிக் குறிப்பிட்டார்கள். (அப்போது) உங்கள் சகோதரர் தவறானவற்றைக் கூறுபவர் அல்லர் என -அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டு - கூறிவிட்டு, அவர் நபி (ஸல்) பற்றி இயற்றிய (பின்வரும்) பாடலை எடுத்துக் கூறினார்கள்:

"எங்களிடையே அல்லாஹ்வின் தூதர் இருக்கிறார்கள். வைகறைப் பொழுது புலரும் நேரம் அவர்கள் இறைவேதத்தை ஓதுகிறார்கள்; குருட்டுத் தனத்தில் இருந்த எங்களுக்கு அவர்கள் நேர்வழி காட்டினார்கள். அவர்கள் கூறியது நிச்சயம் நிகழும் என எங்கள் உள்ளங்கள் உறுதியாக நம்புகின்றன. இணைவைப்பாளர்கள் இரவில் படுக்கை விரிப்பில் அழுந்திக் கிடக்கும்போது அன்னார் படுக்கையிலிருந்து எழுந்து தொழுவார்கள்.'

நூல் : புகாரி (1155)

நமது பதில்

நபி (ஸல்) அவர்களையும் நாமும் பயான்களில் புகழ்ந்து கூறத்தான் செய்கிறோம். அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் சொன்னதைப்போன்று நாமும் பிரச்சாரங்களில் கூறத்தான் செய்கிறோம். அவ்வாறு இருந்தும் நாம் மவ்லூத் ஓதுகிறோம் என்று யாரும் கூறுவதில்லை. காரணம் மவ்லூத் என்றால் என்ன என்பதை மக்கள் வேறு விதமாக விளங்கி வைத்துள்ளார்கள்.

ரபீவுல் அவ்வல் மாதத்தில் குறிப்பிட்ட புத்தகத்தை வைத்து சுற்றி தின்பண்டங்கள், பாதார்த்தங்கள் வைத்துப் பாடுவதும். அவ்வாறு பாடினால் நன்மை கிடைக்கும், செல்வம் பெருகும் என்பதே மவ்லூத் என்று மக்கள் அறிந்து வைத்திருக்கிறார்கள்.

இது தொடர்பாக தேங்கை சர்புத்தீன் என்ற ஆலிம் எழுதிய சுந்தரத் தமிழல் சுப்ஹான மவ்லித் என்று நூலில் கூறப்பட்டக் கருத்தை பாருங்கள்.

மவ்லூது ஓதுவது அந்த வருடம் முழுவதும் பாதுகாப்பாகவும் நாட்டத்தையும் நோக்கத்தையும் அடையச் செய்வதின் மூலமாக உடனடியான நற்செய்தியாகவும் அமைந்திருப்பது மவ்லூதின் தனித்தன்மைகளைச் சார்ந்ததென்று அனுபவத்தின் வாயிலாக அறியப்பட்டிருக்கின்றதென இமாம் கஸ்தலானி (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

”திருநபி (ஸல்) அவர்களின் மவ்லூது சபைக்கு ஒருவர் வருகை தந்து, அவர்களின் மகத்துவத்தை ஒருவர் கண்ணியப்படுத்தினால்,  அவர், ஈமானின் மூலம் வெற்றி பெற்றுவிட்டார்”

(ஆதாரம்:சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 11)

”மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்காக ஒருவர் உணவு தயாரித்து முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டினார். அந்த மவ்லிதைக் கண்ணியப்படுத்துவதற்காக நறுமணம் பூசினார். புத்தாடை புனைந்தார். தன்னையும் சபையையும் அலங்கரித்தார். விளக்குகள் ஏற்றினாரென்றால் அத்தகையவரை மறுமை நாளில் நபிமார்கள் அடங்கிய முதல் பிரிவுடன் அல்லாஹ் எழுப்புவான். மேலும் அவர் நல்லோரின் ஆன்மா ஒதுங்கும் இல்லிய்யீன் திருத்தலத்தின் உயர்நிலையில் இருப்பார்”

(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்கள் மீது மவ்லிது நிகழ்ச்சி நடத்துவதற்காக ஒருவர் தங்கம் அல்லது வெள்ளி நாணயங்களைத் தனியாக உண்டியலில் சேமித்து மவ்லிது நிகழ்ச்சி நடத்தியபின் எஞ்சிய நாணயங்களுடன் கலந்து விட்டாரெனில் இந்த நாணயங்களின் ‘பரக்கத்’ ஏனைய நாணயங்களிலும் ஏற்பட்டுவிட்டது. இந்த நாணயம் வைத்திருப்பவர் வறுமை நிலை அடையமாட்டார்.மாநபி (ஸல்) மவ்லிதின் பரக்கத்தினால் இவரின் கை நாணயங்களை விட்டுக் காலியாகாது”.

(ஆதாரம்: சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் :12)

”எந்த இடத்தில் எம்பெருமானார் (ஸல்) அவர்களின் மவ்லிது ஓதப்படுகிறதோ அந்த இடத்தை ஒருவர் நாடினால் நிச்சயமாக அவர் சுவனப்பூங்காக்களில் இருந்தும் ஒரு பூங்காவை நாடிவிட்டார். (ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”நாயகம் (ஸல்) அவர்களின் மவ்லிதுக்காக ஒருவர் தனியிடத்தை ஒதுக்கி, முஸ்லிம் சகோதரர்களைத் திரட்டி உணவு தயாரித்து வழங்கி உபகாரம் பல செய்து மாநபி (ஸல்) மவ்லிது ஓதுவதற்குக் காரணமாக இருந்தால் இத்தகையவரை மறுமைநாளில் மெய்யடியார்கள், ஷுஹதாக்கள் ஸலாஹீன்கள் குழுவினருடன், அல்லாஹ் எழுப்புவான். மேலும் ‘நயீம்’ எனும் சுவனத்தில் மறுமையில் இவர் இருப்பார்” என்று எமன் நாட்டு மாமேதை இமாம் யாஃபிஈ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 12)

”எந்தவொரு வீட்டிலோ பள்ளிவாசலிலோ, மஹல்லாவிலோ மாநபி (ஸல்) மவ்லிது ஓதப்பட்டால் அவ்விடத்தைச் சார்ந்தவர்களை மலக்குகள் சூழ்ந்தே தவிர இல்லை. அவர்களைத் தன் கருணையினால் அல்லாஹ் சூழ வைத்துவிடுகிறான்”

(ஆதாரம் : சுந்தரத் தமிழில் சுப்ஹான மவ்லித் பக்கம் : 13)

மேற்சொன்ன நபிக்கையின் அடிப்படையில்தான் அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் பாடினார்களா?

ரபீவுல் அவ்வல் மாதத்தில் ஓதினார்கள் என்று உள்ளதா? அல்லது திண்பண்டங்கள் வைத்து ஓதினார்கள் என்றுள்ளதா? இவ்வாறு ஓதினால் நன்மை கிடைக்கும் என்று கூறினார்களா?

நபி (ஸல்) அவர்கள் பற்றிய கருத்தை கவிதை நடையில் கூறினார்கள். அவ்வளவுதான் உள்ளது. இதை மவ்லித் என்று சொல்பவர்கள் மண்டையில் ஏதாவது இருக்கும் என்று கூறமுடியுமா?

கோமாளி வாதம்

மவ்லிதுகளில் உணவுகள் பரிமாறப்படுவது இனிப்புகள் வழங்கப்படுவது அனைத்தும் தான தர்மத்தின் கீழ் கட்டுப்பட்டதுதான். குர்ஆன், ஹதீஸ் அடிப்படையில் உள்ளதுதான். வண்ண வண்ண மலர்கள் வண்ண விளக்குகளைக் கொண்டு அலங்கரிப்பது இஸ்லாத்திற்கு மாற்றமான காரியம் அல்ல.

நமது பதில்

கோவில்களில் வழங்கப்படும் அன்னதானமும் தான தர்மத்தின் அடிப்படையில் வழங்கப்படுவதுதான். எனவே அது கூடும் என்று கோமாளிகள் கூறுவார்களா?

மவ்லித் சபையில் பாரிமாறப்படும் உணவுக்குத் தனிச் சிறப்புள்ளது. அதைச் சாப்பிட்டால் பரகத் கிடைக்கும் என்று நம்பப்படுவதும் சாதரண தர்மமும் ஒன்றாகுமா?

மார்க்கம் அனுமதி வழங்கிய காரியத்திற்கே வண்ண வண்ண மலர்கள், வண்ண விளக்குகள் போன்றவை பயன்படுத்தி வீண் விரயம் செய்ய அனுமதியில்லாதபோது மார்க்கம் அனுமதிக்காத நபிகளார் காட்டித்தராத ஒன்றுக்கு எப்படி வீண் விரயம் செய்யலாம்?

கோமாளி வாதம்

நபித்தோழர்கள் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் மவ்லித் ஓதியுள்ளார்கள். நபிமார்களுக்கும் மவ்லித் ஓதியுள்ளார்கள். அதற்குரிய ஆதாரம் இதோ

நபித்தோழர்கள் நபிகளாரை எதிர்பார்த்து அமர்ந்திருந்தனர். அப்போது (நபிமார்களைப் பற்றி புகழ்ந்து) இப்ராஹீம் நபி அல்லாஹ்வின் உற்றத் தோழர், மூஸா (அலை) அவர்களை (கடல் பிளந்து) அல்லாஹ் காப்பாற்றினான். ஈஸா (அலை) அவர்கள், அல்லாஹ்வின் ரூஹாகவும் அவனின் கட்டளையாகவும் உள்ளார்கள். இதைப்போன்று ஆதம் (அலை) அவர்களையும் அல்லாஹ் தேர்ந்தெடுத்துக் கொண்டான் என்று கூறியபோது (நபிகளார் வந்து) ஆம் நான் அல்லாஹ்வின் நேசத்திற்குரியவனாவேன் என்று கூறினார்கள்.

(திர்மிதீ 3549)

3549حَدَّثَنَا عَلِيُّ بْنُ نَصْرِ بْنِ عَلِيٍّ الْجَهْضَمِيُّ حَدَّثَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عَبْدِ الْمَجِيدِ حَدَّثَنَا زَمْعَةُ بْنُ صَالِحٍ عَنْ سَلَمَةَ بْنِ وَهْرَامٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ جَلَسَ نَاسٌ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَنْتَظِرُونَهُ قَالَ فَخَرَجَ حَتَّى إِذَا دَنَا مِنْهُمْ سَمِعَهُمْ يَتَذَاكَرُونَ فَسَمِعَ حَدِيثَهُمْ فَقَالَ بَعْضُهُمْ عَجَبًا إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ اتَّخَذَ مِنْ خَلْقِهِ خَلِيلًا اتَّخَذَ إِبْرَاهِيمَ خَلِيلًا وَقَالَ آخَرُ مَاذَا بِأَعْجَبَ مِنْ كَلَامِ مُوسَى كَلَّمَهُ تَكْلِيمًا وَقَالَ آخَرُ فَعِيسَى كَلِمَةُ اللَّهِ وَرُوحُهُ وَقَالَ آخَرُ آدَمُ اصْطَفَاهُ اللَّهُ فَخَرَجَ عَلَيْهِمْ فَسَلَّمَ وَقَالَ قَدْ سَمِعْتُ كَلَامَكُمْ وَعَجَبَكُمْ إِنَّ إِبْرَاهِيمَ خَلِيلُ اللَّهِ وَهُوَ كَذَلِكَ وَمُوسَى نَجِيُّ اللَّهِ وَهُوَ كَذَلِكَ وَعِيسَى رُوحُ اللَّهِ وَكَلِمَتُهُ وَهُوَ كَذَلِكَ وَآدَمُ اصْطَفَاهُ اللَّهُ وَهُوَ كَذَلِكَ أَلَا وَأَنَا حَبِيبُ اللَّهِ وَلَا فَخْرَ وَأَنَا حَامِلُ لِوَاءِ الْحَمْدِ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَأَنَا أَوَّلُ شَافِعٍ وَأَوَّلُ مُشَفَّعٍ يَوْمَ الْقِيَامَةِ وَلَا فَخْرَ وَأَنَا أَوَّلُ مَنْ يُحَرِّكُ حِلَقَ الْجَنَّةِ فَيَفْتَحُ اللَّهُ لِي فَيُدْخِلُنِيهَا وَمَعِي فُقَرَاءُ الْمُؤْمِنِينَ وَلَا فَخْرَ وَأَنَا أَكْرَمُ الْأَوَّلِينَ وَالْآخِرِينَ وَلَا فَخْرَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ رواه الترمذي

இறைத்தூதர்களை அல்லாஹ் எப்படிப் புகழ்ந்துள்ளானோ அதே வார்த்தைகளைத்தான் நபித்தோழர்கள் கூறினார்கள். வரம்பு மீறி வார்த்தைகள் எதுவும் இல்லை. மேலும் இன்று நடப்பதைப் போன்று உணவுத் தட்டுக்களை வைத்துக் கொண்டும் வண்ண விளக்குகள், வண்ணக் காகிதங்கள் கொண்டு அலங்கரித்தும் பாடல்கள் பாடினார்களா? இது எப்படி மவ்லித் ஓதுவதற்கு ஆதாரமாகும்?

மேலும் அந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது இல்லை. இந்தச் செய்தியில் இடம்பெறும் ஸம்ஆ பின் ஸாலிஹ் என்பவர் பலவீனமான அறிவிப்பாளராவார்.

கோமாளி வாதம்

எல்லா நபிமார்களையும் அழைத்து நபிகளாருக்கு அல்லாஹ் மீலாது விழா கொண்டினான். ஆதாரம் இதோ

"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் தூதர் உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதிமொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்டபோது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான். இதன் பிறகு புறக்கணிப்போரே குற்றம் புரிந்தவர்கள்.

(அல்குர்ஆன் 3:81,82)

நமது பதில்

இவ்வசனத்தில் (3:81) நபிமார்களிடம் இறைவன் எடுத்த ஒரு உறுதிமொழி பற்றிக் கூறப்படுகிறது.

"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் இன்னொரு தூதர் உங்களிடம் வந்தால் நீங்கள் அவரை ஏற்று உதவ வேண்டும்'' என்பதுதான் உடன்படிக்கை.

"உங்களிடம் ஒரு தூதர் வந்தால்' என்று இவ்வசனத்தில் கூறப்பட்டுள்ளது. ஒரு நபி வாழ்ந்து கொண்டிருக்கும்போது அவரிடம் இன்னொரு நபி வருவதையே இவ்வாசகம் குறிக்கிறது.

"உங்களை நான் நபியாக நியமனம் செய்து விட்டேன்; இது உங்கள் தகுதியினாலோ, உழைப்பினாலோ கிடைத்தது அல்ல. மாறாக, நானாக உங்களுக்கு வழங்கியதாகும். நபியாக நியமனம் செய்யப்பட்டதால் இனிமேல் நமது தகுதிக்கு எந்தக் குறையும் ஏற்படாது என்று நீங்கள் நினைத்து விடாதீர்கள்! நீங்கள் நபியாக இருக்கும்போதே உங்களிடம் இன்னொரு தூதரை நான் அனுப்பினால் உடனே அவரை நீங்கள் ஏற்க வேண்டும். அவருக்கு உதவி செய்திட முன் வர வேண்டும். இந்த நிபந்தனையின் அடிப்படையிலேயே உங்களுக்கு அந்தத் தகுதி வழங்கப்படுகிறது'' என்பதுதான் இவ்வசனத்தின் கருத்தாகும்.

இதில் எங்கு அல்லாஹ் மீலாது கொண்டினான் என்றுள்ளது?

அல்லாஹ்வின் மீதே துணிந்து பொய் சொல்லும் கோமாளிகளை அடையாளம் கண்டுகொள்ளுங்கள்.

மொட்டைத் தலைக்கும் முழங்காலுக்கும் முடித்து போடுவது என்று இதைத்தான் சொல்கிறார்களா?            வளரும் இன்ஷா அல்லாஹ்

 

கற்பா? கல்லூரியா?

பெற்றோர்கள் தங்கள் பெண் குழந்தைகளை உயர்நிலை, மேல்நிலைப் பள்ளிப் படிப்பையும் தாண்டி கல்லூரிப் படிப்பில் சேர்ப்பதற்குப் பெரும் முயற்சி மேற்கொள்கிறார்கள்;

பெரும்பாடு படுகிறார்கள். பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு ஒன்றும் தடையில்லை. குறைந்தபட்சம் ஒரு பெண்ணுக்குப் பத்தாம் வகுப்பு வரை கட்டாயம் கல்வி தேவை என்பதில் மாற்றுக் கருத்தில்லை. ஆனால் பள்ளிப் படிப்புக்கு மேலான படிப்புக்குச் செல்லும் பெண் பிள்ளைகள் கற்பைப் பறி கொடுக்கும் பேரபாயம் காத்திருக்கின்றது என்பதைப் பின்வரும் சில எடுத்துக் காட்டுகள் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

ஆட்டோ அல்லது வேன் பயணம்.

சிலர் தங்களது பருவமடைந்த வயதுப் பெண்களை தன்னந்தனியாக, காரில் அல்லது ஆட்டோவில் அனுப்பி வைக்கின்றனர். சிலர் ஆட்டோவில் நான்கைந்து சக வயதுப் பெண்களுடன் அனுப்பி வைக்கின்றனர். ஆட்டோ ஓட்டுனர்களும் வாலிப வட்டங்கள்தான் என்பதைப் பெற்றோர் கவனிக்கத் தவறி விடுகின்றனர்.

ஆட்டோ பறக்கின்றபோது, ஆட்டோவே அதிர்கின்ற வகையில், அமர்க்களப்படுகின்ற வகையில் துள்ளிசைப் பாடல்கள் காதுகளைப் பிளக்கின்றன. பாடல் வரிகள் அத்தனையும் கொத்துக் கொத்தாய் ஆபாச வார்த்தைகளை வெடித்துத் தள்ளுகின்றன. உள்ளிருக்கைகள் நிரம்பி வழிந்து, ஓட்டுனரை ஒட்டியிருக்கின்ற பலகையில் பருவ வயதுப் பெண்கள் உட்கார்ந்து கொண்டு ஒட்டுகின்ற விரச விளையாட்டுக்கள்.

பள்ளியில் கொண்டு விட்ட பின்னர் மாலையில் படிப்பு முடிந்ததும் மாணவிகள் - நம் சமுதாயப் பெண்கள் வெளியே வருகின்றனர்.

வாசலில் ஆட்டோவுடன் காத்து நிற்கின்றான் ஆட்டோ ஓட்டுனர். அவனுக்குரிய காக்கிச் சீருடையை அணியாமால் கலர் கலர் பேண்ட், சர்ட் அணிந்து இன் செய்து, சீவிச் சிங்காரித்து எடுப்பாக நிற்கின்றான்.

பள்ளிக்கூடத்தில் மாணவிகளை விடுவது 4 மணி, நான்கரை மணி, 5 மணி என்று முறை வைத்து விடுகின்றார்கள். அல்லது டியூசன் போன்ற காரணங்களால் மாணவிகளின் வருகை நேரம் மாறுபடுகின்றது. இந்த ஆட்டோக்காரன் கடைசி அணி வருகின்ற வரை, ஏற்கனவே வந்த பிள்ளைகளுடன் கொஞ்சிக் குலாவிக் கொண்டிருக்கின்றான்.

மீண்டும் அதே உரசலுடன் நம் பிள்ளைகளை வீட்டில் விட்டுச் செல்கிறான். அதன் பின்னர் ஆட்டோ டிரைவர் கரையேறி விட்டாலும் அவனைத் துரத்துகின்ற கனவு அலைகளிலிருந்து அவன் கரையேறுவதில்லை. மறுநாள் காலையில் அதே சொகுசுப் பயணம். வேன் டிரைவர்களும் இதே போன்றுதான். இதில் ஒன்றிரண்டு விதிவிலக்கு இருக்கலாம். ஆனால் பெரும்பகுதி இந்த நிலைதான். இப்போது சிந்தியுங்கள் இந்தக் கல்லூரிப் படிப்பு தேவையா என்று!

ஆட்டோ, வேன் பயணம்தான் இப்படியென்றால் பஸ் பயணமும் பாதுகாப்பாக இல்லை. நகரத்தை நோக்கி வருகின்ற பஸ்கள் தன்னுடைய கொள்ளளவையும் தாண்டியே ஆட்களை நிரப்புகின்றன. இங்கும் பெண் பித்தர்கள் சபலபுத்தியுடன் பெண்களின் உடல் உரசலுக்கு வாய்ப்பு கிடைக்காதா என்று எதிர்பார்த்து ஏங்கியே பயணிக்கின்றனர். நடத்தை கெட்ட சில நடத்துனர்கள், ஓட்டுனர்களுடன் வழிதவறும் பெண்களும் இருக்கிறார்கள். இது போன்ற விவகாரங்களும் சமுதாயத்தில் சந்தி சிரிக்கின்றன.

பட்டப்படிப்புக்காக வெளியூர்களுக்குச் செல்லும்போது, குழுவாகச் செல்லும் இப்பெண்களின் ராஜ்யம் கொடிகட்டிப் பறக்கின்றது. ஆர்ப்பரித்துச் சப்தமிடுவது, பாடல்களைப் பாடி ஆடுவது, கும்மாளமிடுவது என கல்லூரிப் பெண்கள் நடத்தும் அத்துமீறல்களுக்கு அளவே இல்லை. பேருந்து நடத்துனர்களுக்குக் கொண்டாட்டம்தான். கணவன், மனைவிபோல் அருகருகே அமர்ந்து கொண்டு கொஞ்சிக் குலாவுவது சர்வ சாதாரணமான ஒன்று!

பள்ளி, கல்லூரியில் மட்டுமல்ல! வருகின்ற வழிப் பயணத்திலும், வழிப் பாதையிலும் பெண்களின் கற்புகளைப் பறிப்பதற்கு ஷைத்தான் தன் பரிவாரங்களுடன் முற்றுகையிட்டு நிற்கின்றான். இப்படி ஆபத்துக்கிடையில் பெண்களுக்குக் கல்லூரிப் படிப்பு தேவையா என்பதைப் பெற்றோர்கள் சிந்திக்க வேண்டும்.

பாடமா? படமா?

உயர்நிலை மற்றும் கல்லூரியில் படிக்கின்ற மாணவிகள், தங்கள் சக மாணவிகளைப் பார்க்கப் போகின்றேன் என்று சொல்லிவிட்டு, பாய் ஃபிரண்ட்ஸ் - ஆண் நண்பர்களுடன் திரையரங்குகளுக்குச் செல்கின்றனர். அருகருகே அமர்ந்து படம் பார்க்கின்றனர். சினிமாக்களைப் பொறுத்தவரை ஒவ்வொரு காலத்திலும் காமக் களியாட்டங்கள் அதிகரித்துக் கொண்டுதான் இருக்கின்றன.

முப்பது வருடங்களுக்கு முன்னால் உள்ள மக்கள் எதை ஆபாசம், விரசம் என்று கருதினார்களோ அதை சினிமாவில் காட்டினார்கள். தற்காலத்தில் உள்ள மக்கள் எதனை காமக் களியாட்டம் என்று வெறுக்கின்றார்களோ அதை தற்போதுள்ள சினிமாக்களில் காட்டுகின்றனர். இந்தப் படத்தைத்தான் நமது அருமை மகள் திரையரங்கில், திரை வெளிச்சத்தைத் தவிர வேறு வெளிச்சமில்லாமல் கொட்டிக் கிடக்கும் கும்மிருட்டில் அருகில் ஒருவனுடன் அமர்ந்து படம் பார்க்கும் காட்சியை பெற்றோர்கள் தங்கள் மனக்கண் முன்னால் சற்று ஓட விட்டுப் பார்க்கட்டும். இரத்தம் கொதிக்கும்; கையில் செருப்பை அல்ல, அரிவாளைக் கூட எடுக்க நினைப்போம்.

இப்போது நினைத்துப் பாருங்கள். இப்படி ஒரு கல்வி தேவையா?

பிற மதத்தவருடன் காதல் பயணம்.

கல்லூரிக்குச் செல்லும் வயதுப் பெண்களின் அவலம் இத்துடன் நிற்கவில்லை. பிற மதத்தவருடன் கற்பைப் பகிர்கின்ற, உள்ளத்தை உறையச் செய்யும் படுபாதகச் செயலும் பகிரங்கமாகவே நடைபெறுகின்றது. இவ்வாறு கூறுகையில், நம் சமுதாய ஆண்களுடன் ஓடலாமா? என்று கேட்கலாம். யாருடன் சென்றாலும் விபச்சாரம் தான். ஆனால் பிற மதத்தவருடன் ஓடும்போது கொள்கையும் சேர்ந்தே போய் விடுகின்றது.

கொள்கை மாறுதல் என்பது இஸ்லாத்தில் கொடிய பாவமாகும்.

உங்களில் தனது மார்க்கத்தை விட்டும் மாறி (ஏக இறைவனை) மறுப்போராக மரணித்தவரின் செயல்கள் இவ்வுலகிலும் மறுமையிலும் அழிந்துவிடும். அவர்கள் நரகவாசிகள். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள்.

(அல்குர்ஆன் 2:217)

ஓடும் பெண்களும் வாடும் பெற்றோரும்.

இவ்வளவு பெரிய கொடுமைகளுக்கு வித்திட்டது எது? இந்தக் கல்லூரிப் படிப்பு பெற்றோர்களின் கண்டு கொள்ளாத போக்கு! இம்மை வாழ்விற்காக மறுமையைப் பலியாக்கி நம்முடைய பிள்ளைகளை நரகப் படுகுழியின் விறகுகளாக்கத் துணிந்து விட்டோம்.

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும், கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.

(அல்குர்ஆன் 66:6)

இந்த வசனத்தைக் கவனிக்கத் தவறி விட்டோம்.

தமிழகத்தின் தென் பகுதியில் முஸ்லிம்கள் நிறைந்த ஒரு சில ஊர்களில் கல்லூரி, உயர்நிலைப் பள்ளிகளில் படிக்கும் முஸ்லிம் பெண்கள் பிற மதத்தவர்களுடன் ஓடுவது சர்வ சாதாரணமான ஒன்றாகி விட்டது.

பெண் பிள்ளைகள் ஓடுகின்றனர்; பெற்றோர்களோ வாடிக் கொண்டிருக்கின்றனர். கண்ணீரும் கம்பலையுமாக கவலையில் ஆழ்ந்து கிடக்கின்றனர். பள்ளிப் படிப்புக்கே இந்தக் கதி என்றால் கல்லூரிப் படிப்பிற்கு என்ன கதி?

ஒரு முஸ்லிம் கல்லூரி நீண்ட காலம் ஆண்கள் மட்டும் படிக்கும் கல்லூரியாகச் செயல்பட்டது. அப்போது கல்லூரி சீருடனும் சிறப்புடனும் செயல்பட்டது. இக்கல்லூரியில் பெண்கள் படிப்பதற்கு அனுமதிக்கப்பட்டனர். இக்கல்லூரி நிர்வாகம் பெண்களுக்காக தனிக் கல்லூரியைத் துவங்கியிருக்கலாம். ஆனால் அதை விட்டுவிட்டு, ஆண்களும் பெண்களும் சேர்ந்து படிக்கும் கோ எஜுகேஷன் முறையைக் கொண்டு வந்தது. அதன் விளைவு என்ன?

பிற சமுதாய மாணவர்களுடன் நமது சமுதாயப் பெண்கள் சேர்ந்து வழி தவறுகின்றனர். சமுதாயப் பெண்களின் கற்பு மட்டுமல்ல! சமுதாயத்தின் கண்ணியமும் கவுரவமும் சேர்ந்தே காற்றில் பறக்கின்றது. மேலும் இஸ்லாத்தைவிட்டே இந்தப் பெண்கள் வெளியேறும் நிலையும் ஏற்படுகின்றது. இதன்படிப் பார்க்கும்போது கல்லூரியா? கற்பா? என்ற கேள்வியைத் தாண்டி, கல்வியா? இறை மறுப்பா? என்று கேட்க வேண்டியுள்ளது.

அத்துடன் இங்கு நாம் இன்னொரு விளைவையும் உணர்ந்தாக வேண்டும். இது போன்று நமது சமுதாயப் பெண்கள் பிற சமுதாயத்தவருடன் ஓடும்போது அதைத் தட்டிக் கேட்பதற்காகச் சில இளைஞர்கள் கிளம்புகின்றனர்; சட்டத்தைக் கையில் எடுக்கின்றனர்.

இது, இஸ்லாமிய சமுதாயத்திற்கும் பிற சமுதாயத்திற்கும் மத்தியில் ஒரு விதமான மோதல் போக்கை உருவாக்கும் அபாயத்தை ஏற்படுத்துகின்றது. இதனால் வகுப்புக் கலவரம் ஏற்பட்டு விடுமோ என்று அஞ்ச வேண்டிய சூழலும் ஏற்படுகின்றது.

எனவே இத்தகைய விளைவுகளைக் கருத்தில் கொண்டு பெற்றோர்கள் ஒரு பெண்ணுக்கு அவசியத் தேவை கற்பா? கல்லூரியா? ஈமானா? இறை மறுப்பா? என்று சிந்திக்க வேண்டும்.

நம் மகள் கற்பிழந்தால், அல்லது மதம் மாறினால், அவள் செய்த பாவத்தில் நமக்குப் பங்கில்லை என்று நாம் தப்ப முடியாது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கஜல் ஒவ்வொருவரும் பொறுப்பாளர் ஆவார். தன் பொறுப்புக்கு உட்பட்டவை பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆட்சித் தலைவரும் பொறுப்பாளரே.

தன் குடிமக்கள் பற்றி அவர் விசாரிக்கப்படுவார். ஆண் மகன் (குடும்பத் தலைவன்) தன் மனைவி மக்களின் பொறுப்பாளன் ஆவான். தன் பொறுப்புக்கு உட்பட்டவர்கள் பற்றி அவன் விசாரிக்கப்படுவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டிற்குப் பொறுப்பாளியாவாள். தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து அவள் விசாரிக்கப்படுவாள். பணியாள், தன் எஜமானின் உடைமைகளுக்குப் பொறுப்பாளியாவான். அவனும் தன் பொறுப்புக்கு உட்பட்டவை குறித்து விசாரிக்கப்படுவான்.

(நூல்: புகாரி 2409)

இந்த ஹதீஸின்படி பெற்றோர்களும் அந்தப் பாவத்தின் சுமையை மறுமையில் சுமந்தே ஆக வேண்டும்.

கண்ணை விற்றுச் சித்திரம் வாங்க வேண்டுமா என்று சிந்திக்க வேண்டும்.

ஒரு பெண்ணை உயர் கல்வி படிக்க வைக்கும் போது சாதகங்களை விட, பாதகங்களைத்தான் பார்க்க வேண்டும். அப்படியே ஒருவர் தமது மகளைப் படிக்க வைக்க வேண்டுமானால்...

1. குறைந்தபட்சம் அந்தப் பள்ளி அல்லது கல்லூரி ஊருக்குள்ளேயே அமைந்திருக் வேண்டும். நம்முடைய கண்காணிப்பு அதிகமாக இருக்க வேண்டும்.

2. உள்ளூராக இருந்தாலும், வெளியூராக இருந்தாலும் பெண்கள் மட்டும் படிக்கும் பள்ளி அல்லது கல்லூரியாக இருக்க வேண்டும். (அதிலும் ஆண் நிர்வாகிகள் ஆட்டம் போடுகின்ற, வயதுப் பெண்களிடம் சில்மிஷம் செய்கின்ற பள்ளிகள், கல்லூரிகள் உள்ளன என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்)

3. தூரத்தில் இருந்தால் ஆட்டோ, கார் அல்லது வேன் போன்றவற்றில் தனித்துச் செல்லக் கூடாது.

(அந்நிய)ஆணும் பெண்ணும் தனித்திருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் (அங்கு) இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

(அஹ்மத் 109)

4. இந்தப் பெண்கள் ஆட்டோ அல்லது வேனில் பயணம் செய்ய வேண்டிய அவசியம் ஏற்பட்டால் டிரைவர் திருமணம் முடித்த, வயதானவர்களாக, ஒழுக்கமானவர்களாக இருக்க வேண்டும்.

இதுபோன்ற நிபந்தனைகளுக்கு ஒத்து வரவில்லையென்றால், பத்தாம் வகுப்புடன் பெண்கள் கல்வியை நிறுத்திக் கொண்டு மார்க்கக் கல்வியைப் பயிற்றுவிப்பது அவர்களுக்கு இம்மையிலும் மறுமையிலும் நன்மையைப் பயக்கும்.

ஒரு சில கட்டங்களில் பட்டப்படிப்பு படித்த பெண்களுக்கு மாப்பிள்ளை கிடைப்பது சிரமமாக உள்ளது. பட்ட மேல்படிப்பு படித்த பெண்களுக்கு அதைவிடச் சிரமமாக உள்ளது. அப்படியே மாப்பிள்ளை அமைந்தாலும் ஒரு குழந்தை, இரு குழந்தைகளுடன் விவாக ரத்தில் போய் முடிகின்றது.

எனவே இப்படிப்பட்ட பின்விளைவுகளை ஏற்படுத்தும் பெண்களின் கல்லூரிப் படிப்பின் சாதக பாதகங்களைப் பெற்றோர்கள் தூக்கிப் பார்க்க வேண்டும். அல்லாஹ்வைப் பயந்து கொள்ள வேண்டும்.

கற்பா? கல்லூரியா? என்ற இந்தத் தலைப்பில் கல்லூரிப் படிப்பில் ஏற்படுகின்ற பாதகங்களைப் பட்டியலிடும்போது கல்லூரியில் படித்த பெண்கள் எல்லாம் தவறானவர்கள் என்று விளங்கிக் கொள்ளக்கூடாது.

இங்கு எழுதப்பட்டவை அனைத்தும் நடப்பவை, நடந்து கொண்டிருப்பவை. இந்தத் தீமைகளைக் கண்டு நெஞ்சு பொறுக்காமல் இந்தக் கட்டுரை இங்கே பதியப்பட்டுள்ளது

August 15, 2015, 6:49 PM

ஆகஸ்ட் தீன் குலப் பெண்மணி 2015

ஹெல்மட்டும் நீதிமன்றமும்

ஆட்சியாளர்கள், வசதி படைத்தவர்கள், அதிகாரம் படைத்தவர்கள் யார் தவறிழைத்தாலும் நீதிமன்றத்தில் சென்று நியாயத்தைக் கேட்கலாம். அவர்கள் நீதி வழங்குவார்கள் என்ற கொஞ்சமாக இருந்த நம்பிக்கையை மக்களிடத்திலிருந்து அடியோடு போக்கும் வகையில் தற்போது ஏராளமான தீர்ப்புகள் வந்து கொண்டுள்ளன.

எந்த ஆதாரமும் இல்லை என்று அறிவித்துவிட்டு கூட்டு மனசாட்சியின் அடிப்படையில் அப்சல் குரு என்ற ஒரு அப்பாவியை உச்சநீதிமன்றமே தூக்கில் போட்டது இது இந்தியாவில் நீதி செத்துவிட்டது என்பதை உலக நாடுகளுக்கு வெளிச்சம் போட்டுக் காட்டியது. ஆண்டிக்கு ஒரு சட்டம் அரசனுக்கு ஒரு சட்டம் என்ற நிலை நமது இந்திய நீதிமன்றத்தில் உள்ளது.

ஹெல்மட் போன்ற விசயங்களில் நீதிமன்றங்கள் பல விசித்திரமான தீர்ப்புகளை வழங்கி மக்கள் மன்றத்தில் இருந்த மரியாதையைப் போக்கிக் கொள்கிறது.

சாலை விபத்துக்கான இழப்பீடு கோரி தாக்கல் செய்யப்பட்ட வழக்கு ஒன்றை விசாரித்த நீதிபதி என்.கிருபாகரன் பிறப்பித்த உத்தரவில், தலைக்கவசம் அணிவது தொடர்பாக இந்த நீதிமன்றம் சில உத்தரவுகளைப் பிறப்பிக்கிறது. ஜூலை 1-ஆம் தேதி முதல் இரு சக்கர வாகன ஓட்டிகள் கட்டாயம் தலைக்கவசம் அணிய வேண்டும் என்பதை ஜூன் 18-ஆம் தேதிக்கு முன்னர் பொது மக்களுக்கு தமிழக உள்துறைச் செயலர், மாநில காவல் துறைத் தலைவர் இருவரும் தெரிவிக்க வேண்டும். அவ்வாறு தெரியப்படுத்தத் தவறினால், உள்துறைச் செயலரும், டிஜிபியும் ஜூன் 19-ஆம் தேதி நீதிமன்றத்தில் நேரில் ஆஜராக வேண்டும். இது தவிர, இரண்டு மாதங்களுக்கு ஒரு முறை, பதிவு செய்யப்பட்ட வழக்குகள், இதர தகவல்களை நீதிமன்றத்தில் தாக்கல் செய்ய வேண்டும்.

அனைத்து மாநிலங்களிலும் தலைக்கவசம் அணிவதைக் கட்டாயமாக்கி, அதைக் கண்காணித்து நடவடிக்கை எடுக்குமாறு மத்திய அரசு உத்தரவிட வேண்டும். ஹெல்மட் அணியாவிட்டால், ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் மேலும், தலைக்கவசம் அணிவதன் முக்கியத்துவம் குறித்து துண்டுப் பிரசுரங்கள், குறும்படங்கள், விளம்பரங்கள் மூலம் விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும் என்று நீதிபதி தனது உத்தரவில் தெரிவித்துள்ளார்.

விபத்துக்கான இழப்பீடு தொடர்பான வழக்கு வந்தால் அதற்குரிய இழப்பீடு தொடர்பாக உத்தரவு போடாமல் ஹெல்மட் அணியாததால்தான் விபத்துக்கள் ஏற்படுகிறது. எனவே ஹெல்மட் போடவேண்டும். போடாதவர்களின் ஆவணங்களை பறிமுதல் செய்ய வேண்டும் ஓட்டுனர் உரிமத்தை ரத்து செய்ய வேண்டும் என்று உத்தரவு பிறப்பித்து மக்களின் உயிரின் மீது அதிக அக்கரை உள்ளது போல் சென்னை உயர்நீதிமன்றம் காட்டிக் கொண்டுள்ளது.

வாகனத்தில் செல்பவர் உயிரிழக்கக் காரணம் ஹெல்மட்டுதான் காரணமா? குண்டும் குழியுமாக இருக்கும் சாலைகள் இல்லையா? எதிர்த் தரப்பில் வரும் வாகனத்தின் கட்டுங்கடங்காத ஒளிகள் இல்லையா? குறுகலான சாலைகள் இல்லையா? போதையில் வாகனம் ஓட்டுவது காரணமில்லையா? சில நேரங்களில் உயிரிழக்க ஹெல்மெட்டுகளே காரணமாக இருக்கவில்லையா?

இது போன்ற எத்தனையோ காரணங்கள் இருக்க, ஹெல்மட்டை  மட்டும் தூக்கிப் பிடிக்க என்ன காரணம்?

நீதிமன்றத்திற்கு உண்மையான அக்கறை இருந்தால் சாலைகளை உடனடியாகச் சரிசெய்ய வேண்டும். செய்யவில்லையானால் சம்பந்தப்பட்ட அதிகாரிகள் பணிநீக்கம் செய்யப்படுவார்கள் என்று சொல்ல நீதிமன்றத்திற்குத் துணிவு உண்டா?

கோடிகள் வருகின்றன என்பதற்காக தெருக்கள் முழுவதும் டாஸ்மாக் மதுக்கடைகளைத் திறந்து மக்களின் உயிருடன் விளையாடும் மாநில அரசைக் கண்டித்து, உயிரழப்பை காரணம் காட்டி டாஸ்மாக் மதுக்கடைகளை நீதிமன்றம் தடைசெய்ய முன்வருமா?

மக்கள் நிறைந்த பகுதியில் மதுக்கடையால் பிரச்சனை ஏற்பட்டு அதை மூட சாலைமறியல் வரை சென்றாலும் மதுக்கடைகளை மூடமுடியவில்லை. இது போன்ற பிரச்சனைகளில் நீதிமன்றம் தலையிட்டு மதுக்கடைகளை மூட நடவடிக்கை எடுக்குமா?

மக்களின் உயிரைப் பறிக்கும் மதுபான உற்பத்தி ஆலைகளுக்கு அனுமதி வழங்கி இளைஞர்களையும் பள்ளி மாணவ, மாணவிகளையும் கெடுக்கும் அரசுக்கு கடிவாளம் போட நீதிமன்றம் முன்வருமா?

புற்று நோய் உட்பட பல நோய்களுக்குக் காரணமான சிகரெட், பீடி, புகையிலை போன்றவற்றைத் தடைசெய்து உத்தரவு பிறப்பிக்குமா நீதிமன்றம்?

20 அல்லது 30 கிலோ மீட்டர் வேகத்தில் செல்லும் வகையில் உள்ள நகரங்களில் என்ன விபத்து ஏற்படப் போகிறது? அதில் இந்த ஹெல்மட் என்ன உதவி செய்யப்போகிறது? நெடும் தூரம் செல்லும் வாகனங்களுக்கு வேண்டுமானால் இந்த ஹெல்மட் பயனளிக்கலாம். 30 கிலோ மீட்டர் வேகத்தில் கூட போக முடியாத குண்டும் குழியுமான சாலைகளுக்கு ஹெல்மட் எதற்கு என்பதை நீதிமன்றம் சிந்திக்க வேண்டும்.

 

குலத்தால் பெருமை இல்லை

இன்றைய சவூதி அரேபியாவில் உள்ள மக்கா நகரில் கி.பி.571 ஆம் ஆண்டு நபிகள் நாயகம் பிறந்தார்கள். சிறுவயதில் தமது பெற்றோரை இழந்த நபிகள் நாயகம் பாட்டனார் பொறுப்பிலும் அவர் மரணித்த பின் பெரிய தந்தையின் பொறுப்பிலும் வளந்தார்கள்.

40 வயது  வரை ஒரு வணிகராகவும், சராசரி மனிதராகவும் திகழ்ந்த நபிகள் நாயகம் அவர்கள் நாற்பதாம் வயதில் தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்தார்கள்.

ஒரே கடவுளை மட்டும் வணங்க வேண்டும்

பெற்றோரைப் பேண வேண்டும்

பொய், புரட்டு மோசடி கூடாது.

மனிதனுக்குக் கேடு விளைவிக்கும் மதுபானங்கள் உள்ளிட்ட அனைத்தும் விலக்க வேண்டும்.

கடவுளுக்கும் மனிதனுக்குமிடையே இடைத்தரகர் கூடாது.

என்றெல்லாம் கடவுளிடமிருந்து தமக்குச் செய்தி வருவதாக அறிவித்தார்கள். இந்தப் பிரச்சாரம் கடுமையான எதிர்ப்பை ஏற்படுத்தியது.

பத்து ஆண்டுகள் சொல்லொனாத் துன்பத்தை அனுபவித்தார்கள். முடிவில் ஊரை விட்டே விரட்டப்படடார்கள். மதீனா என்ற நகரில் தஞ்மடைந்து 13 ஆண்டுகள் அங்கே வாழந்து 63 ஆம் வயதில்  மரணித்தார்கள்.

இவ்வுலகில் எத்தனையோ தலைவர்கள் தோன்றி சாதனைகள் பல படைத்துள்ளார்கள். எனினும் நபிகள் நாயகம் அவர்களின் சாதனைகள் பல வகைகளில் தனித்து விளங்குகின்றன.

ஒரு தலைவரின் கட்டளைகளையும், நடைமுறைகளையும் அவர் வாழும் போது சிலர் கடைப்பிடித்திருப்பார்கள். அந்தத் தலைவரின் மரணத்திற்குப் பின் அவரை அப்படியே பின்பற்றுவோர் இருக்க மாட்டார்கள். இருந்ததில்லை.

நபிகள் நாயகம் மட்டும்தான் உலக வரலாற்றில் இதை மாற்றிக் காட்டிய ஒரே தலைவராக இருக்கின்றார்.

வணக்க வழிபாடுகளில் மட்டுமன்றி தங்களின் வாழ்வில் சந்திக்கும் அனைத்துப் பிரச்சினைகளையும் நபிகள் நாயகத்தின் கடடளைப்படியே பல கோடி முஸ்லிம்கள் இன்றளவும் நடத்தி வருகின்றனர். உண்ணுதுல், பருகுதல், மலஜலம் கழித்தல் போன்ற சிறிய காரியங்களைக் கூட அவர்கள் காட்டிய வழியிலேயே செய்யக்கூடிய மக்களை 14 நூற்றாண்டுகளாகப் பெற்றுவரும் ஒரே தலைவராக நபிகள் நாயகம் திகழ்கிறார்கள். இதற்கு அவர்களிடம் காணப்பட்ட தனித் தகுதிகள் காரணமாக அமைந்தன.

தம்மைக் கடவுளின் தூதர் என்று பிரகடனம் செய்வதற்கு முன் ஊரிலேயே பெரும் செல்வந்தராக இருந்த நபிகள் நாயகம் 23 ஆண்டுகாலப் பொது வாழ்வில் அனைத்தையும் இழந்தார்கள். மரணித்த போது இன்றைய மதிப்பில் 5000 ரூபாய் கூடத் தேறாத எளிய பொருட்களைத்தான் விட்டுச் சென்றார்கள். அதையும் கூட தமது வாரிசுகள் பயன்படுத்தக் கூடாது. பொது நிதியில் சேர்த்து விட வேண்டும் என்று கட்டளையிட்டு இருந்தார்கள்.

இந்த நம்பகத்தன்மைதான் அவர்களை முஸ்லிம்கள் அப்படியே அடியொற்றி நடப்பதற்குக் காரணமாக இருந்தது.

மனிதன் வேறு, கடவுள் வேறு என்று உரத்துச் சொன்னவர் நபிகள் நாயகம். மனிதன் ஒருக்காலும் கடவுளாக ஆகவே முடியாது என்பதை உறுதிபட அவர்கள் அறிவித்தார்கள். மக்களில் சிலர் நபிகள் நாயகத்தையே கடவுள் நிலைக்கு உயர்த்த முற்பட்ட போது அதைக் கடுமையான முறையில் எச்சரித்துத் தடுத்து நிறுத்தினார்கள்.

அவரது வாழ்நாளில் ஒருவரும் அவரது காலில் விழுந்ததில்லை.

அல்லாஹ்விடம் தாமும் பிரார்த்தனை செய்து மற்றவர்களையும் பிரார்த்திக்கக் கூறியதைத் தவிர யாருக்கும் ஆசி வழங்கியதில்லை அவர்களுக்காக யாரும் எழுந்து நின்றதில்லை.

அவர்களுக்கு பராக் சொல்லக் கூடியவர்கள் யாரும் முன்னும் பின்னும் நடந்து சென்றதில்லை.

அவர்களின் குடிசை வீட்டுக்கு வாயிற் காப்போன் யாருமில்லை.

இன்றைக்கு மிகவும் அடித்தளத்தில் இருக்கும் மனிதன் எப்படி சாதாரணமாக இருப்பானோ அதைவிடப் பல மடங்கு சாதராணமானவராகத்தான் நபிகள் நாயகம் திகழ்ந்தார்கள்.

எதைக் தமது வாழ்வில் அவர்கள் போதித்தார்களோ,அதைத் தாமே முதலில் கடைப்பிடித்தார்கள். கடைப்பிடிக்காத ஒரு செய்தியையும் அவர்கள் கூறியதில்லை. கூறிய எதையும் கடைப்பிடிக்காமல் இருந்ததில்லை.

சொல்லுக்கும், செயலுக்கும் வேறுபாடு இல்லாத இந்தத் தன்மையும் அவர்கள் இன்றளவும் அப்படியே பின்பற்றப்படுவதற்குக் காரணம்.

அவர்களது ஆட்சியில் தமக்கோ தமது உறவினருக்கோ, வேண்டியவருக்கோ சட்டத்திலிருந்து எந்த விலக்கையும் உருவாக்கிக் கொள்ளவில்லை. என் மகள் திருடினாலும் அவரது கையை நான் வெட்டுவேன் என்று தெளிவாகவே பிரகடனம் செய்தார்கள்.

வட்டியைத் தடைசெய்த போது அன்றைக்கு மிகப்பெரிய வட்டித் தொழில் செய்து வந்த தமது பெரிய தந்தையிலிருந்து அதைத் துவக்கினார்கள். தமது பெரிய தந்தையிடம் வட்டிக்குக் கடன் வாங்கியவர்கள் அசலை மட்டும் செலுத்தலாம் எனப் பிரகடனம் செய்தார்கள்.

மாபெரும் ஆன்மிகத் தலைவராக இருந்து கொண்டே ஆன்மிகத்தின் பெயரால் நடக்கும் மாயம், மந்திரம், சோதிடம், புரோகிதம் ஆகிய அனைத்தையும் எதிர்த்தார்கள்.

அன்றைக்கு உயர்ந்த குலமாகக் கருதப்பட்ட குறைஷி குலத்தில் பிறந்திருந்தும் குலத்தால் எந்தப் பெருமையும் இல்லை என்று அடித்துக் கூறினார்கள். பள்ளிவாசலில் பாங்கு சொல்லும் புனிதப் பணியை அன்றைக்கு தீண்டத் தகாதவராகக் கருதப்பட்ட பிலாலிடம் ஒப்படைத்தார்கள்.

தமது தாய்மொழி அரபு மொழியாக இருந்தும் அந்த மொழிக்கும் நிகர் வேறில்லை என்ற கர்வம் அன்றைய மக்களிடம் இருந்தும், அரபு மொழிக்கு என எந்தச் சிறப்பும் இல்லை என்றார்கள். எல்லா மொழிகளும் எல்லா மொழிகளைப் பேசுவோரும் சமமானவர்களே என்று பிரகடனம் செய்தார்கள்.

இது போன்ற சிறப்புத் தகுதிகளின் அடிப்படையில்தான் நபிகள் நாயகம் அவர்களை முஸ்லிம்கள் தமது உயிரை விடவும் மேலாக மதிக்கின்றனர்.

உலகில் சீர்திருத்தம் செய்த தலைவர்கள் ஒரு சில துறைகளில் மட்டும் கருத்துக் கூறிவிட்டு மற்றவற்றில் இருந்து ஒதுங்கிக் கொள்வார்கள். இதில் தமக்கு எந்தக் கருத்தும் இல்லை என்று கூறிவிடுவார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் அவர்களுக்கு மனிதர்கள் சந்திக்கின்ற எந்தப் பிரச்சினை குறித்தும் ஒரு கருத்து இருந்தது. அவர்கள் கருத்துச் சொல்லாத எந்தப் பிரச்சினையும் இல்லை. இன்றைக்கு நாம சந்திக்கின்ற நவீனப் பிரச்சினைகளுக்குக்கூட அவர்களின் கருத்து என்ன என்பதை யாராலும் அறிய முடியும். இது நபிகளின் தனிச்சிறப்பு.

சில தீமைக்களுக்கு எதிராகக் கருத்துச் சொன்னால் சிலரது ஆதரவை இழக்க நேரிடுமோ என்று கருத்தை மறைப்பவர்களே மலிந்துள்ள நிலையில் யாரைப் பற்றியும், எந்த விளைவைப் பற்றியும் கவலைப்படாமல் தமது கருத்து இதுதான் என்று அறிவித்த தலைவர் நபிகள் நாயகம்.

அவர்கள் வலியுறுத்தாத நல்ல காரியங்கள் எதுவும் இல்லை. எதிர்க்காத ஒரு தீமையும் இல்லை.

இதுபோன்ற இன்னும் பல தனிச்சிறப்புகள் காரணமாகவே உலகம் அவர்களை மாமனிதர் என்கிறது. முஸ்லிம் சமுதாயம் தமது நிரந்தர வழிகாட்டியாக அவர்களைக் கருதுகிறது.

 

ஸலவாத் - ஆதாரப்பூர்வமான செய்திகளும் ஆதாரமற்ற செய்திகளும்

முஸ்லிம்கள் அனைவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களை உயிரினும் மேலாக நேசிக்க வேண்டும். அதன் வெளிப்பாடாக அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளோம்.

அத்துடன் நில்லாமல் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொடர்பாக நாம் அறிந்து கொள்ள வேண்டிய மற்றுமொரு முக்கிய விஷயம் என்னவெனில் அவர்கள் மீது அதிகமாக ஸலவாத் கூற வேண்டும் என்பதுதான்.

நாம் நபிகள் நாயகத்திற்குச் செய்ய வேண்டிய மற்றுமொரு முக்கிய கடமையாக அவர்கள் மீது ஸலவாத் எனும் இறையருள் வேண்டி பிரார்த்தனை செய்வது அவசியமானதாக அமைந்துள்ளது.

பாங்கிற்குப் பிறகு, தொழுகையின் அத்தஹிய்யாத் அமர்வின் போது உள்ளிட்ட மார்க்கம் எங்கெல்லாம் நபிகள் நாயகத்தை அவசியம் நினைவு கூற வேண்டும் என்று உத்தரவிட்டுள்ளதோ அங்கெல்லாம் தவறாமல் அவர்களுக்காக ஸலவாத் எனும் அல்லாஹ்வின் அருள் வேண்டி பிரார்த்தனை புரிவது மிகுந்த அவசியமானதாகும்.

அது போன்ற இடங்களில் ஸலவாத் கூற மறுத்தால் அவர்கள் நாசத்தை, இழப்பைச் சந்திக்க வேண்டி நேரிடும் என்று மார்க்கம் எச்சரிக்கின்றது.

3468حَدَّثَنَا أَحْمَدُ بْنُ إِبْرَاهِيمَ الدَّوْرَقِيُّ حَدَّثَنَا رِبْعِيُّ بْنُ إِبْرَاهِيمَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ إِسْحَقَ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَغِمَ أَنْفُ رَجُلٍ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ دَخَلَ عَلَيْهِ رَمَضَانُ ثُمَّ انْسَلَخَ قَبْلَ أَنْ يُغْفَرَ لَهُ وَرَغِمَ أَنْفُ رَجُلٍ أَدْرَكَ عِنْدَهُ أَبَوَاهُ الْكِبَرَ فَلَمْ يُدْخِلَاهُ الْجَنَّةَ  رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவனிடம் என்னைப் பற்றிக் கூறப்பட்டு அவன் என் மீது ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால், அவனுடைய மூக்கு மண்ணைக் கவ்வட்டும். ஒருவன் ரமளான் மாதத்தை அடைந்து அவனது பாவங்கள் மன்னிக்கப்படாமல் அம்மாதம் கழிந்தால் அவனுடைய மூக்கும் மண்ணை கவ்வட்டும். ஒருவன் வயது முதிர்ந்த பெற்றோர்களைப் பெற்றும் அவனை அவர்கள் சொர்க்கத்திற்குள் கொண்டு செல்லவில்லையென்றால் அவனுடைய மூக்கும் மண்ணைக் கவ்வட்டும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : திர்மிதீ (3468)

3469حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى وَزِيَادُ بْنُ أَيُّوبَ قَالَا حَدَّثَنَا أَبُو عَامِرٍ الْعَقَدِيُّ عَنْ سُلَيْمَانَ بْنِ بِلَالٍ عَنْ عُمَارَةَ بْنِ غَزِيَّةَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَلِيِّ بْنِ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ أَبِيهِ عَنْ حُسَيْنِ بْنِ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ عَنْ عَلِيِّ بْنِ أَبِي طَالِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْبَخِيلُ الَّذِي مَنْ ذُكِرْتُ عِنْدَهُ فَلَمْ يُصَلِّ عَلَيَّ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ غَرِيبٌ رواه الترمذي

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒருவனிடம் என்னைப் பற்றி கூறப்பட்டு என் மீது அவன் ஸலவாத்துச் சொல்லவில்லையென்றால் அவனே கஞ்சனாவான்.

அறிவிப்பவர் : அலீ பின் அபீ தாலிப் (ரலி),

நூல் : திர்மிதீ (3469)

இவ்விரு ஆதாரப்பூர்வமான நபிமொழிகளும் மார்க்கம் நினைவூட்டும் குறித்த இடங்களில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் அவசியத்தை தெளிவாக எடுத்துரைக்கின்றது.

அந்நேரங்களில் ஸலவாத் கூற மறுப்பவன் கஞ்சன் என்றும் இந்நபிமொழிகள் எச்சரிப்பதை அறியலாம்.

சிறப்பு

ஒருவர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஒரு முறை ஸலவாத் கூறுவதால் அல்லாஹ்வின் அளப்பரிய அருளுக்குரியவராகிறார். ஏனெனில் ஒரு முறை ஸலவாத் கூறுபவருக்கு அல்லாஹ் பத்து முறை அருள்புரிகிறான். இவ்வாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் சிறப்பை மார்க்கம் எடுத்துரைக்கின்றது.

صحيح مسلم ـ مشكول وموافق للمطبوع - (2 / 4)

616 - حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سَلَمَةَ الْمُرَادِىُّ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ وَهْبٍ عَنْ حَيْوَةَ وَسَعِيدِ بْنِ أَبِى أَيُّوبَ وَغَيْرِهِمَا عَنْ كَعْبِ بْنِ عَلْقَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ جُبَيْرٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرِو بْنِ الْعَاصِ أَنَّهُ سَمِعَ النَّبِىَّ -صلى الله عليه وسلم- يَقُولُ « إِذَا سَمِعْتُمُ الْمُؤَذِّنَ فَقُولُوا مِثْلَ مَا يَقُولُ ثُمَّ صَلُّوا عَلَىَّ فَإِنَّهُ مَنْ صَلَّى عَلَىَّ صَلاَةً صَلَّى اللَّهُ عَلَيْهِ بِهَا عَشْرًا ثُمَّ سَلُوا اللَّهَ لِىَ الْوَسِيلَةَ فَإِنَّهَا مَنْزِلَةٌ فِى الْجَنَّةِ لاَ تَنْبَغِى إِلاَّ لِعَبْدٍ مِنْ عِبَادِ اللَّهِ وَأَرْجُو أَنْ أَكُونَ أَنَا هُوَ فَمَنْ سَأَلَ لِىَ الْوَسِيلَةَ حَلَّتْ لَهُ الشَّفَاعَةُ யு.

நபி( (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொழுகை அறிவிப்பாளரின் அறிவிப்பை நீங்கள் செவியுற்றால் அவர் கூறுவதைப் போன்றே நீங்களும் கூறுங்கள். பின்பு என்மீது "ஸலவாத்' சொல்லுங்கள். ஏனெனில், என்மீது யார் ஒருமுறை "ஸலவாத்' சொல்கிறாரோ அதன் காரணத்தால் அவருக்குப் பத்து முறை அல்லாஹ் அருள்புரிகின்றான். பின்பு எனக்காக அல்லாஹ்விடம் "வஸீலா'வைக் கேளுங்கள். "வஸீலா' என்பது சொர்க்கத்திலுள்ள (உயர்) பதவியாகும்; அல்லாஹ்வின் அடியார்களில் ஒருவருக்குத்தான் அது கிடைக்கும். அந்த ஒருவர் நானாகவே இருக்க விரும்புகிறேன். எனவே, எனக்காக அந்தப் பதவியை (அல்லாஹ் விடம்)  கேட்பவருக்கு (மறுமை நாளில்) எனது பரிந்துரை அவசியம் கிடைக்கும்.

அறிவிப்பவர் அப்துல்லாஹ் பின் அம்ர்(ரலி), நூல் : முஸ்லிம் 616

இதனடிப்படையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவது சிறப்பிற்குரிய, அல்லாஹ்வின் அருளை பெற்றுத்தருகிற ஓர் உன்னதச் செயல் என்பதை சந்தேகமின்றி அறிகிறோம்.

السنن الكبرى للنسائي - (2 / 77(

1221- أَخْبَرَنَا إِسْحَاقُ بْنُ مَنْصُورٍ ، قَالَ : أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ ، حَدَّثَنَا يُونُسُ بْنُ أَبِي إِسْحَاقَ ، عَنْ بُرَيْدِ بْنِ أَبِي مَرْيَمَ ، حَدَّثَنَا أَنَسُ بْنُ مَالِكٍ قَالَ : قَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ صَلَّى عَلَيَّ صَلاَةً وَاحِدَةً ، صَلَّى اللَّهُ عَلَيْهِ عَشْرَ صَلَوَاتٍ ، وَحُطَّتْ عَنْهُ عَشْرُ خَطِيئَاتٍ ، وَرُفِعَتْ لَهُ عَشْرُ دَرَجَاتٍ.

யார் என் மீது ஒரு முறை ஸலவாத் சொல்கிறாரோ அவர் மீது அல்லாஹ் பத்து முறை அருள் புரிகிறான். அவருடைய பத்து தவறுகளை அழிக்கின்றான். பத்து உயர்வுகள் அவருக்கு அளிக்கப்படுகின்றன என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் ரலி,

நூல் : நஸாயீ 1280

இதுவும் ஸலவாத் ஓதுவதால் கிடைக்கும் சிறப்பை எடுத்துரைக்கின்ற ஆதாரப்பூர்வமான நபிமொழியாகும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் ஓதுவதால் நமது பாவங்கள் சில மன்னிக்கப்பட்டு நமது அந்தஸ்தும் இறைவனிடத்தில் உயர்கின்றது என்பதை இந்த ஹதீஸ் விளக்குகின்றது.

எனவே ஒரு முஸ்லிம் தமக்கு வாய்ப்பு கிடக்கும் போதெல்லாம் நாம் உயிரினும் மேலாக நேசிக்கின்ற நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது அல்லாஹ்வின் அருளை வேண்டி பிரார்த்தனை செய்யும் ஸலாவத்தை ஓத வேண்டும்.

எது ஸலவாத்?

ஸலவாத் ஓதுவதால் மேற்கண்ட சிறப்புகளை அடைய வேண்டும் என்றால் அது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கற்றுத்தந்த ஸலவாத்தாக இருக்க வேண்டும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தனக்காக எவ்வாறு ஸலவாத் ஓத வேண்டும் என்பதைப் பின்வரும் நபிமொழியில் கற்றுத் தந்துள்ளார்கள்.

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். அப்போது நான் உங்களுக்கு ஓர் அன்பளிப்பு வழங்கட்டுமா? என்று கேட்டுவிட்டு (பின்வருமாறு) கூறினார்கள்:

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். அப்போது (அவர்களிடம்) நாங்கள், (அல்லாஹ்வின் தூதரே!) உங்களுக்கு நாங்கள் எப்படி சலாம் கூற வேண்டுமென அறிந்திருக்கின்றோம். ஆனால், உங்கள்மீது நாங்கள் எப்படி ஸலவாத் கூற வேண்டும்? என்று கேட்டோம்.

அப்போது அவர்கள், அல்லாஹும்ம ஸல்லி அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா ஸல்லய்த்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத். அல்லாஹும்ம, பாரிக் அலா முஹம்மதின் வ அலா ஆலி முஹம்மதின், கமா பாரக்த அலா ஆலி இப்ராஹீம இன்னக்க ஹமீதும் மஜீத் என்று கூறுங்கள் என்றார்கள்.

(பொருள்: இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ கருணை புரிந்ததைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ கருணை புரிவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியனும் பெருமைக்குரிய வனுமாவாய். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்களுடைய குடும்பத்தாருக்கு நீ சுபிட்சம் வழங்கியதைப் போன்று முஹம்மத் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடைய குடும்பத்தாருக்கும் நீ சுபிட்சம் வழங்குவாயாக. நிச்சயமாக நீ புகழுக்குரியவனும் பெருமைக்குரியவனுமாவாய்).

அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபீலைலா நூல் :முஸ்லிம் 683

இன்றைக்கு நடைமுறையில் முஸ்லிம்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டித்தராததை எல்லாம் ஸலவாத் என்ற பெயரில் ஓதிக் கொண்டிருக்கின்றனர். ஸலாதுன் நாரிய்யா எனும் பெயரில் அல்லாஹ்வுக்கு இணை கற்பிக்கும் வகையிலான வாசகங்களை உள்ளடக்கி ஒரு ஸலவாத் (?) ஒன்றை மக்கள் ஓதிக் கொண்டிருக்கின்றனர். அதற்கும் இஸ்லாத்திற்கும் துளியும் சம்பந்தமில்லை.

ஸலாத்துன் நாரிய்யா எனும் நரகத்து ஸலவாத்தை ஓதினால் நரகம் செல்வது நிச்சயமே ஒழிய மேற்கண்ட சிறப்புகளை ஒரு போதும் பெற முடியாது என்பதை என்றும் முஸ்லிம்கள் மனதில் கொள்ள வேண்டும்.

பொய்யான செய்திகள்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் கூறுவதன் சிறப்பு குறித்து ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் பல நாம் மேலே கண்டோம். உலமாக்கள் அதை மக்களிடையே போதிப்பதை விட்டு விட்டு  ஆதாரமற்ற, பொய்யான செய்திகளை மக்களிடையே போதிக்கின்றனர். அத்தகைய தவறான செய்திகள் குறித்து நாம் அறிந்து கொள்வோம்.

செய்தி 1

من صلى علي في يوم [الجمعة] ألف مرة ؛ لم يمت حتى يرى مقعده من الجنة.

என் மீது யார் ஒரு (ஜூம்ஆ) நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுவாரோ அவர் சொர்க்கத்தில் உள்ள தமது இருப்பிடத்தை காணாமல் மரணிக்க மாட்டார் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அனஸ் பின் மாலிக் (ரலி).

இந்த செய்தி அல்அமாலி பாகம் 1 பக் 172, அத்தர்கீப் பாகம் 1 பக் 22 மற்றும் இன்னும் பல நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

இது முழுக்க பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹகம் பின் அதிய்யா பலவீனமானவர் ஆவார்.

நஸாயீ, அபுல் வலீத் உள்ளிட்ட அறிஞர்கள் இவர் பலவீனமானவர். இவரை ஆதாரம் கொள்ளக் கூடாது என்று விமர்சித்துள்ளார்கள்.

பார்க்க அல்ஜரஹ் வத்தஃதீல் பாக 3 பக் 125

அபூஹாதம் அவர்கள் இவர் உறுதியானவர் அல்ல; எனவே இவரை ஆதாரம் கொள்ளக்கூடாது என்று விமர்சித்துள்ளார்.

அல்லுஆஃபாஉ வல்மத்ரூகீன்  1 228

இமாம் புகாரி மற்றும் உகைலீ ஆகியோர் தமது பலவீனமானவர்கள் எனும் (நூலில்) பட்டியலில் இவரைக் கொண்டு வந்துள்ளார்கள்.

மேலும் இதன் மற்றொரு அறிவிப்பாளரான முஹம்மத் பின் அப்துல் அஸீஸ் அத்தீனவரிய்யு என்பவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர், பலவீனமானவர் என்றும், இவர் உறுதியானவர் அல்ல பல தவறான செய்திகளைக் கொண்டு வந்துள்ளார் என்றும் இமாம் தஹபீ குறிப்பிட்டுள்ளார். இந்த கருத்தையே இப்னு ஹஜர் அவர்களும் கூறியுள்ளார்கள்.

மீஸானுல் இஃதிதால் பாக 3  பக் 629, லிஸானுல் மீஸான் பாகம் 7 பக் 306

இமாம் உஸ்பஹானீ அவர்களின் அத்தர்கீப் வத்தர்ஹீப் பாகம் 1 பக் 504 லிலும் இந்தச் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது. அதில் மேற்கண்ட பலவீனமான அறிவிப்பாளர் ஹகம் பின் அதிய்யா இடம் பெறுவதுடன் முஹம்மத் பின் அப்துல்லாஹ் பின் ஸினான் என்பவரும் இடம் பெற்றுள்ளார். இவர் யாரென்று அறியப்படாதவர் ஆவார்.

எனவே ஒரு நாளில் ஆயிரம் முறை ஸலவாத் கூறுபவர் சொர்க்கத்தில் உள்ள தன் இருப்பிடத்தைப் பார்க்காமல் மரணிக்க மாட்டார் எனும் செய்தி முற்றிலும் பலவீனமான செய்தியாகும்.

செய்தி 2

شعب الإيمان - (4 / 435(

2773 - أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ عَلِيُّ بْنُ مُحَمَّدِ بْنِ عَلِيِّ بْنِ السِّقَاءِ الْمُقْرِئُ، حَدَّثَنَا وَالِدِي أَبُو عَلِيٍّ، حَدَّثَنَا أَبُو رَافِعٍ أُسَامَةُ بْنُ عَلِيِّ بْنِ سَعِيدٍ الدَّارِمِيُّ بِمِصْرَ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ إِسْمَاعِيلَ بْنِ سَالِمٍ الصَّائِغُ، حَدَّثَتْنَا حَكَامَةُ بِنْتُ عُثْمَانَ بْنِ دِينَارٍ، أَخِي مَالِكِ بْنِ دِينَارٍ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، خَادِمِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " إِنَّ أَقْرَبَكُمْ مِنِّي يَوْمَ الْقِيَامَةِ فِي كُلِّ مَوْطِنٍ أَكْثَرُكُمْ عَلَيَّ صَلَاةً فِي الدُّنْيَا مَنْ صَلَّى عَلَيَّ فِي يَوْمِ الْجُمُعَةِ وَلَيْلَةِ الْجُمُعَةِ، قَضَى اللهُ لَهُ مِائَةَ حَاجَةٍ، سَبْعِينَ مِنْ حَوَائِجِ الْآخِرَةِ، وَثَلَاثِينَ مِنْ حَوَائِجِ الدُّنْيَا، ثُمَّ يُوَكِّلُ اللهُ بِذَلِكَ مَلَكًا يُدْخِلُهُ فِي قَبْرِهِ كَمَا يُدْخِلُ عَلَيْكُمُ الْهَدَايَا، يُخْبِرُنِي مَنْ صَلَّى عَلَيَّ بِاسْمِهِ وَنَسَبِهِ إِلَى عَشِيرَتِهِ فَأُثْبِتُهُ عِنْدِي فِي صَحِيفَةٍ بَيْضَاءَ "

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். உலகில் அதிமாக என் மீது ஸலவாத் கூறியவரே மறுமை நாளில் உங்களிலே எல்லா வகையிலும்  எனக்கு நெருக்கமானவர் ஆவார். ஜூம்ஆ பகலிலும் இரவிலும் என் மீது ஸலவாத் கூறியவரின் நூறு தேவைகளை அல்லாஹ் பூர்த்தி செய்து விடுவான்.

எழுபது தேவைகள் மறுமை தொடர்புடையதாகவும், முப்பது தேவைகள் உலகத் தொடர்புடையதாகவும் இருக்கும். பிறகு இதற்கென ஒரு வானவரை அல்லாஹ் நியமிப்பான். அவர் பலிப்பிராணிகள் உங்களிடம் நுழைந்து வருவதைப் போன்று எனது கப்ரில் நுழைந்து வருவார். என் மீது ஸலவாத் கூறியவரின் பெயர், அவரது பாரம்பரியம் என அவரது குடும்பத்தார் உள்ளிட்ட தகவல்கள் அனைத்தையும் எனக்கு அவ்வானவர் தெரிவிப்பார். என்னிடத்தில் உள்ள வெள்ளைப் பதிவேட்டில் அவற்றை நான் குறித்துக் கொள்வேன்.             அறிவிப்பவர் அனஸ் ரலி

இந்தச் செய்தி ஷூஅபுல் ஈமான் 2773, அல்ஃபவாயித் பக் 71,  அத்தர்கீப் வத்தர்ஹீப் பாக1 பக் 525 ஹயாதுல் அம்பியா பாக 1 பக் 94 இன்னும் பிற நூல்களில் சில வார்த்தைகள் மாறுபட்ட நிலையில் பதிவாகியுள்ளது.

இதன் எல்லா அறிவிப்புகளிலும் ஹக்காமா என்பவர் தம் தகப்பனார் உஸ்மான் பின் தீனார் வழியாக அறிவிப்பதாகவே உள்ளது.

ஹக்காமா என்பவர் ஹதீஸ் துறையில் எந்த மதிப்பும் அற்றவர் என்று இப்னு ஹிப்பான் விமர்சனம் செய்துள்ளார். ஸிகாத் பாகம் 7 பக் 194

أحاديث حكامة تشبه حديث القصاص ليس لها أصول

ஹக்காமாவின் செய்திகள் கதைகளுக்கு ஒப்பானது. அதற்கு எவ்வித அடிப்படைகளும் கிடையாது என்று இமாம் உகைலீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

அல்லுஅஃபா லில் உகைலீ பாக 3  பக் 200

الضعفاء للعقيلي - (3 / 200(

1199- عثمان بن دينار أخو مالك بن دينار تروى عنه حكامه ابنته أحاديث بواطيل ليس لها أصل.

ஹக்காமா தம் தந்தை வழியாக பொய்யான செய்திகளை அறிவித்துள்ளார். அவைகளுக்கு எந்த அடிப்படையும் கிடையாது என்றும் உகைலீ விமர்சித்துள்ளார்.

பார்க்க : அல்லுஅஃபாஉல் கபீர்  பாக 6 பக் 94

ஹக்காமாவின் தந்தை உஸ்மான் பின் தீனார் எந்த மதிப்பும் இல்லாதவர்; அவரது செய்தி தெளிவான பொய் என்று இமாம் தஹபீ விமர்சித்துள்ளார். அதையே இப்னு ஹஜர் அவர்கள் வழிமொழிந்துள்ளார்.

பார்க்க : மீஸானுல் இஃதிதால் பாக 3 பக் 33, லிஸானுல் மீஸான் பாகம் 5 பக் 387

எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல. மிகவும் பலவீனமான செய்தியாகும். சில அறிஞர்கள் இந்தச் செய்தியை இட்டுக்கப்பட்ட செய்தி என்று விமர்சித்து உள்ளதும் கவனிக்கத்தக்கது.

மற்றொரு அறிவிப்பு

மேலும் இதே செய்தி ஜாபிர் (ரலி) அவர்களின் அறிவிப்பாகவும் ஜலாஉல் அஃப்ஹாம் பாக 1 பக் 431 என்ற நூலில் பதிவாகியுள்ளது.

அதில் அபூபக்கர் அல்ஹூதலீ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை பல அறிஞர்கள் பலவீனமானவர் என்று விமர்சித்துள்ளார்கள்.

இவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று நஸாயீயும், இமாம் அஹ்மத் மற்றும் அபூஹாதம் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்றும் நம்பகமானவர் அல்ல என்று இமாம் இப்னு மயீன் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

பார்க்க : மீஸானுல் இஃதிதால் பாகம் 4 பக் 497

அதே ஜலாஉல் அஃப்ஹாம் பாக 1 பக் 430 ல் சுப்ஹ் மற்றும் மக்ரிப் தொழுத பிறகு யாரிடத்திலும் பேசாமல் நூறு முறை ஸலவாத் கூறினால் அவரின் 100 தேவைகள் அல்லாஹ்வால் பூர்த்தி செய்யப்படும் என்று ஒரு செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

இதில் இப்றாஹீம் பின் அஷ்அஸ் குராஸானீ எனும் பலவீனமானவர் இடம் பெற்றுள்ளார்.

எனவே மேற்கண்ட செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் இல்லை.

செய்தி 3

 (من صلى علي حين يصبح عشراً وحين يمسي عشراً أدركته شفاعتي يوم القيامة)).

யார் காலையிலும் மாலையிலும் என் மீது பத்து முறை ஸலவாத் கூறுகிறாரோ மறுமையில் அவருக்கு எனது பரிந்துரை கிடைக்கும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அபுத்தர்தா (ரலி), அஸ்ஸலாது அலன் நபி பாக 1 பக் 48

இதுவும் பலவீனமான செய்தியாகும். ஏனெனில் இந்தச் செய்தியில் சில குறைபாடுகள் உள்ளன.

முதலாவது இதில் அறிவிப்பாளர் வரிசை தொடர்பு அறுந்து உள்ளது.

காலித் பின் மஃதான் என்பவர் அபுத்தர்தா (ரலி) அவர்களிடம் செவியுறவில்லை என்று இமாம் அஹ்மத் கூறுகிறார். (ஜாமிஉத் தஹ்ஸீல்)

167 - خالد بن معدان الحمصي يروي عن أبي عبيدة بن الجراح ولم يدركه قال أحمد بن حنبل لم يسمع من أبي الدرداء

காலிதிற்கும், அபுத்தர்தா அவர்களுக்கும் இடையில் யாரோ விடுபட்டுள்ளார்கள். அவர் யாரென்று அறியப்படவில்லை. இதனடிப்படையில் பல அறிஞர்கள் இச்செய்தியை பலவீனம் என்று குறிப்பிட்டுள்ளார்கள். இது இந்த செய்தியில் உள்ள முக்கிய குறைபாடாகும்.

அடுத்து இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான பகிய்யா பின் வலீத் என்பவர் முதல்லிஸ் - இருட்டடிப்பு செய்பவர் ஆவார். இவர் தாம் நேரடியாகச் செவியேற்றதை குறிக்கும் வார்த்தைகளைக் கூறவில்லை. ஹதீஸ்கலை விதிப்பிரகாரம் இருட்டடிப்பு செய்பவர் குறிப்பிட்ட செய்தியை தன் ஆசிரியரிடமிருந்து நேரடியாக்க் கேட்டதைக் குறிக்கும் வார்த்தைகளை கூறாவிடில் அந்த செய்தி ஏற்கப்படாது. எனவே இதுவும் இந்தச் செய்தியில் குறைவை ஏற்படுத்துவதால் செய்தி பலவீனமாகிறது.

செய்தி 4

الترغيب والترهيب لقوام السنة - (2 / 329(

1696- أخبرنا أبو الحسن: علي بن أحمد المؤذن المديني الزاهد بنيسابور، ثنا أحمد بن علي الحافظ، ثنا أبو بكر: محمد بن الحسين بن جعفر البخاري -قدم حاجاً- أن أبا حسان: عيسى بن عبد الله حدثهم قال: ثنا محمد بن رزام، ثنا محمد بن عمرو، ثنا #330# مالك بن دينار وأبان، عن أنس -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم :((من صلى علي في كل يوم جمعة أربعين مرة محا الله عنه ذنوب أربعين سنة، ومن صلى علي مرة واحدة فتقبلت منه، محا الله عنه ذنوب ثمانين سنة،)).

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஒவ்வொரு ஜூம்ஆ நாளிலும் நாற்பது முறை யார் என் மீது ஸலவாத் ஓதுகிறாரோ அவரது நாற்பது வருட பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுகிறான். ஒரு முறை என் மீது ஸலவாத் ஓதினால் அது அவரிடமிருந்து ஏற்றுக் கொள்ளப்பட்டு எண்பது வருட பாவங்களை அல்லாஹ் அழித்து விடுகிறான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி)

நூல் : அத்தர்கீப் வத்தர்ஹீப், பாகம் : 2, பக்கம்: 329

இதில் முஹம்மத் பின் ரஸாம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர். ஆகையினால் ஹதீஸ் கலை நிபுணர்கள் இவரைப் புறக்கணித்து விட்டனர் என்று அஸதீ அவர்களும், இவர் தவறான செய்திகளை அறிவிப்பவர் என்று தாரகுத்னீ அவர்களும் விமர்சித்துள்ளனர்.

الضعفاء والمتروكين لابن الجوزي - (3 / 58(

 محمد بن رزام أبو عبد الملك البصري يروي عن محمد بن عبد الله الأنصاري قال الأزدي ذاهب الحديث تركوه وقال الدراقطني يحدث بالباطيل

நூல் : அல்லுஅஃபா வல்மத்ரூகீன் பாகம்: 3 பக்கம்: 58

இமாம் தஹபீ அவர்கள், இவர் ஹதீஸில் இட்டுக்கட்டுபவர்; சந்தேகிக்கப்படுபவர் என்று கூறியுள்ளார். (நூல்: மீஸானுல் இஃதிதால் பாகம்: 3, பக்கம் :545)

இதிலிருந்து இது மிகவும் பலவீனமான செய்தி என்பது தெளிவாகிறது.

செய்தி 5

மேற்கண்ட வாசகத்தை உள்ளடக்கியதுடன் ஸலவாத் தொடர்பான மற்றுமொரு செய்தி அத்தர்கீப் ஃபீ பழாயிலி அஃமால் எனும் நூலில் பின்வருமாறு பதிவாகியுள்ளது.

الصلاة علي نور على الصراط

என் மீது ஸலவாத் சொல்வது (மறுமையின் இருள் நிறைந்த) ஸிராத் எனும் பாலத்தில் ஒளி தருவதாகும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இதில் அவ்ன் பின் உமாரா, ஹஜ்ஜாஜ் பின் ஸினான், மற்றும் அலி பின் ஜைத் ஆகிய மூன்று பலவீனமான அறிவிப்பாளர்கள் இடம் பெற்றுள்ளனர்.

இவர்களை எண்ணற்ற ஹதீஸ் கலை அறிஞர்கள் கடுமையாக விமர்சனம் செய்துள்ளார்கள்.

பார்க்க : தஹ்தீபுல் கமால், பாகம்: 20, பக்கம்: 439, லிஸானுல் மீஸான் பாகம்:2, பக்கம்: 263, தஹ்தீபுத் தஹ்தீப், பாகம்:8, பக்கம் :173

தாரகுத்னீ, இப்னு ஹஜர் உள்ளிட்ட பல அறிஞர்கள் இந்தச் செய்தி மிக பலவீனமான செய்தி என்று விளக்கியுள்ளார்கள்.

செய்தி 6

المعجم الكبير للطبراني - (19 / 181(

447 - حَدَّثَنَا أَحْمَدُ , قَالَ: نا إِسْحَاقُ بن وَهْبٍ الْعَلافُ , قَالَ: نا بِشْرُ بن عُبَيْدِ اللَّهِ الدَّارِسِيُّ , قَالَ: نا حَازِمُ بن بَكْرٍ، عَنْ يَزِيدَ بن عِيَاضٍ، عَنِ الأَعْرَجِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:"مَنْ صَلَّى عَلَيَّ فِي كِتَابٍ لَمْ تَزَلِ الْمَلائِكَةُ تَسْتَغْفِرُ لَهُ مَا دَامَ اسْمِي فِي ذَلِكَ الْكِتَابِ"

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யார் என் மீது புத்தகத்தில் (எழுத்தில்) ஸலவாத் சொல்வாரோ அப்புத்தகத்தில் என் பெயர் இருக்கும் வரை  மலக்குமார்கள் அவருக்காக பாவமன்னிப்பு கோரிக் கொண்டே இருப்பார்கள்.

அறிவிப்பவர் அபூஹூரைரா (ரலி).

இந்தச் செய்தி தப்ரானீ 447, முஃஜமுல் அவ்ஸத் 1835, ஆகிய நூற்களில் பதிவு  செய்யப்பட்டுள்ளது.

இது மிகவும் பலவீனமான செய்தியாகும். இதன் அறிவிப்பில் உள்ள யஸீத் பின் இயாழ் என்பவரை அனைத்து அறிஞர்களும் பலவீனமானவர் என்று சான்றளித்துள்ளனர்.

இவரை இமாம் புகாரி ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்றும் இமாம் மாலிக், இப்னு மயீன் ஆகியோர்  இவர் ஹதீஸில் பொய் கூறுபவர் என்றும் விமர்சித்துள்ளனர். இன்னும் எண்ணற்ற அறிஞர்கள் இவரைக் கடுமையாக விமர்சித்துள்ளனர்.

பார்க்க : மீஸானுல் இஃதிதால், பாகம்: 4,பக்கம்: 436

ஆகவே இந்தச் செய்தி முற்றிலும் பலவீனமான, இட்டுக்கட்டுப்பட்ட தரத்தில் அமைந்த செய்தியாகும்.

மேற்கண்ட அதே செய்தி அத்தர்கீப் வத்தர்ஹீப் எனும் நூலில் பாகம்: 2, பக்கம்: 330ல் பதிவாகியுள்ளது. எனினும் இதன் அறிவிப்பும் பலவீனமாகவே உள்ளது.

الترغيب والترهيب لقوام السنة - (2 / 330(

1697- أخبرنا عبد الواحد بن إسماعيل، أنبأ أبو محمد الخبازي ثنا أبو محمد: عبد الله بن أحمد الحفصي، ثنا إبراهيم بن إسماعيل الزاهد -المعروف بالخزاز- ثنا عبد السلام بن محمد المصري بمصر، ثنا سعيد بن عفير قال: حدثني محمد بن إبراهيم بن أمية القرشي المديني، عن عبد الرحمن بن عبد الله الأعرج، عن أبي هريرة -رضي الله عنه- قال: قال رسول الله صلى الله عليه وسلم :((من صلى علي في كتاب لم تزل الملائكة يستغفرون له ما دام اسمي في ذلك الكتاب)).

இதில் அப்துஸ் ஸலாம் பின் முஹம்மத் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என்று இமாம் தாரகுத்னீ அவர்களும், மறுக்கப்பட வேண்டிய செய்திகள் கொண்டவர் என்று இமாம் கதீப் அவர்களும் விமர்சித்துள்ளார்கள்.

நூல்:லிஸானுல் மீஸான்,  பாகம்: 5,  பக்கம்: 179

எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானது என்பதில் எந்த சந்தேகமும் இல்லை.

 

துஆக்களின் சிறப்பும், ஏற்றுக் கொள்ளப்படும் நேரங்களும்

 

வணக்கங்களில் மிக முக்கியமானதும், வணக்கங்களில் மிக அடிப்படையானதும் ”துஆ” எனும் பிரார்த்தனையாகும்.

அல்லாஹ் ஒருவன்தான் நம்முடைய எஜமானன். அல்லாஹ்வைத் தவிர உள்ள அனைத்தும் இறைவனின் படைப்புகளே, அவனுடைய அடிமைகளே என்ற ஓரிறைக் கொள்கைக்கு அடிப்படையாய்த் திகழ்வது பிரார்த்தனைதான்.

ஒருவன் அல்லாஹ்விடம் மட்டும் தன்னுடைய தேவைகளைக் கேட்கும் போது, தன்னுடைய பாவங்களுக்கு மன்னிப்புக் கோரும் போது அல்லாஹ் எஜமானன் என்பதையும், தான் அல்லாஹ்வின் அடிமை என்பதை அவன் இறைவனிடம் ஒப்புக் கொள்கிறான்.

எல்லாம் வல்ல இறைவனின் உதவிக்கு மேல் வெறொன்றும் கிடையாது. அத்தகைய அல்லாஹ்வின் உதவியை நமக்குப் பெற்றுத் தருவது பிரார்த்தனைதான்.

அல்லாஹ் தன்னுடைய திருமறையில் கூறுகிறான்.

وَقَالَ رَبُّكُمُ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ  (سورة الغافر 40:59)

என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள்'' என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.

(அல்குர்ஆன் 40 : 59).

وَإِذَا سَأَلَكَ عِبَادِي عَنِّي فَإِنِّي قَرِيبٌ أُجِيبُ دَعْوَةَ الدَّاعِ إِذَا دَعَانِ فَلْيَسْتَجِيبُواْ لِي وَلْيُؤْمِنُواْ بِي لَعَلَّهُمْ يَرْشُدُونَ (سورة البقرة  2:186)

என்னைப் பற்றி எனது அடியார்கள் உம்மிடம் கேட்டால் "நான் அருகில் இருக்கிறேன். பிரார்த்திப்பவன் என்னைப் பிரார்த்திக்கும்போது பிரார்த்தனைக்குப் பதிலளிக்கிறேன். எனவே என்னிடமே பிரார்த்தனை செய்யட்டும்! என்னையே நம்பட்டும். இதனால் அவர்கள் நேர்வழி பெறுவார்கள்'' (என்பதைக் கூறுவீராக!)

(அல்குர்ஆன் 2 : 186)

இதன் காரணமாகத்தான் நபி (ஸல்) அவர்கள் பிரார்த்தனை எனும் துஆவை மிக முக்கியமான வணக்கமாக நமக்கு வழிகாட்டியுள்ளார்கள்.

عَنْ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ قَالَ سَمِعْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ الدُّعَاءُ هُوَ الْعِبَادَةُ ثُمَّ قَرَأَ وَقَالَ رَبُّكُمْ ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ إِنَّ الَّذِينَ يَسْتَكْبِرُونَ عَنْ عِبَادَتِي سَيَدْخُلُونَ جَهَنَّمَ دَاخِرِينَ (رواه الترمدي )

”பிரார்த்தனைதான் வணக்கமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிவிட்டு, பிறகு ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; எனது வணக்கத்தை விட்டும் பெருமையடிப்போர் நரகத்தில் இழிந்தோராக நுழைவார்கள் என்று உங்கள் இறைவன் கூறுகிறான்.”( 40 : 59) என்ற வசனத்தை ஓதினார்கள்.

அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : திர்மிதீ 3170,2895, 3294

பிரார்த்தனைகளின் சிறப்புகள் தொடர்பாக நபியவர்கள் கூறியதாக செய்திகள் வந்துள்ளன. அவற்றில் ஸஹீஹான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. அது பற்றிய விவரங்களைக் காண்போம்.

பிரார்த்தனை இறைவனிடம் மதிப்பு மிக்கது ?

حَدَّثَنَا عَبَّاسُ بْنُ عَبْدِ العَظِيمِ العَنْبَرِيُّ قَالَ: حَدَّثَنَا أَبُو دَاوُدَ الطَّيَالِسِيُّ قَالَ: حَدَّثَنَا عِمْرَانُ القَطَّانُ، عَنْ قَتَادَةَ، عَنْ سَعِيدِ بْنِ أَبِي الحَسَنِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: «لَيْسَ شَيْءٌ أَكْرَمَ عَلَى اللَّهِ تَعَالَى مِنَ الدُّعَاءِ (رواه الترمدي 3292)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையை விட இறைவனிடம் மதிப்பு மிக்கது வேறொன்றுமில்லை.

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி) நூல் : திர்மிதி (3292)

இந்தச் செய்தி பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் இரண்டு பலவீனங்கள் உள்ளன.

முதலாவது இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ”கதாதா” என்பவர் ”முதல்லிஸ்” ஆவார். அதாவது தமது ஆசிரியரிடமிருந்து கேட்காத செய்தியையும் நேரடியாகக் கேட்டதைப் போன்று அறிவிப்பவர் ஆவார்.

இதுபோன்ற முதல்லிஸ் என்ற நிலையில் உள்ளவர்கள் ”ஸமிஃத்து” (நான் செவியேற்றேன்), ”ஹத்தஸனா” ”அஹ்பரனா” (எங்க்களுக்கு அறிவித்தார்) போன்ற சந்தேகமே இல்லாமல் நேரடியாகச் செவியுற்றதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதனை ஆதாரமாக்க் கொள்ள முடியும். மாறாக ”கால” (சொன்னார்), அல்லது ”அன்” (இன்னார் வழியாக) என்பது போன்ற வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால் அது ஏற்றுக் கொள்ளப்படாது.

تهذيب التهذيب ـ محقق (8 / 317) :وقال أبو داود الطيالسي عن شعبة كان قتادة إذا جاء ما سمع قال حدثنا وإذا جاء ما لم يسمع قال قال فلان

கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை அறிவித்தால் ”ஹத்தஸனா” (இன்னார் எங்களுக்கு அறிவித்தார்) என்று கூறுவார். தான் நேரடியாகக் கேட்காததை அறிவித்தால் ”கால ஃபுலான்” (இன்னார் சொன்னார்) என்று கூறுவார் என ”ஷுஃபா” அவர்களிடமிருந்து அபூதாவூத் தயாலிஸி அவர்கள் கூறியுள்ளார்கள்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8, பக்கம் : 317

تهذيب التهذيب ـ محقق (8 / 318) :

وقال أبو حاتم اثبت اصحاب انس الزهري ثم قتادة قال وهو أحب إلي من أيوب ويزيد الرشك إذا ذكر الخبر يعني إذا صرح بالسماع

அனஸ் அவர்களின் மாணவர்களில் மிகவும் நம்பகமானவர்கள் ஷுஹ்ரி என்பாரும் பிறகு கதாதா அவர்களும் ஆவார்கள்.  கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி செய்தியை அறிவித்தால் அய்யூப் மற்றும் யஸீத் ஆகியோரை விட எனக்கு நேசத்திற்குரியவர் ஆவார் என இமாம் அபூ ஹாத்திம் கூறியுள்ளார்கள். நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 318

سير أعلام النبلاء [ مشكول + موافق للمطبوع ] (9 / 325) :وَهُوَ حُجّةٌ بِالإِجْمَاعِ إِذَا بَيَّنَ السَّمَاعَ، فَإِنَّهُ مُدَلِّسٌ مَعْرُوْفٌ بِذَلِكَ، وَكَانَ يَرَى القَدَرَ - نَسْأَلُ اللهَ العَفْوَ

கதாதா அவர்கள் தான் நேரடியாகக் கேட்டதை தெளிவுபடுத்தி அறிவித்தால் ஏகோபித்த அடிப்படையில் அவர் ஆதாரத்திற்குரியவர் ஆவார். அவர் அறியப்பட்ட முதல்லிஸ் ஆவார். இன்னும் விதியை மறுக்கும் கொள்கையைச் கொண்டிருந்தார். அல்லாஹ்விடம் அவருக்கு மன்னிப்பைக் கோருவோம் என இமாம் தஹபி கூறுகிறார். நூல்:ஷியரு அஃலாமு அன் நுபலாவு பாகம்:9 பக்கம் : 325

இது வரை நாம் பார்த்த விமர்சனங்களிலிருந்து கதாதா அவர்கள் முதல்லிஸ் என்பது தெளிவாகிவிட்டது. அவர் நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தைகளைப் பயன்படுத்தி அறிவித்தால்தான் அதை ஆதாரமாகக் கொள்ள முடியும் என்பது தெளிவாகிறது.

ஆனால் மேற்கண்ட செய்தியின் எந்த அறிவிப்பிலும் கதாதா அவர்கள் தன்னுடைய ஆசிரியரான ”ஸயீது இப்னு அபில் ஹஸன்” என்பாரிடமிருந்து நேரடியாகக் கேட்டதற்குரிய வார்த்தையைப் பயன்படுத்தி அறிவிக்கவில்லை.

எனவே இந்தச் செய்தி பலவீனம் என்பது உறுதியாகிவிட்டது.

இரண்டாவது இந்தச் செய்தியின் மற்றொரு அறிவிப்பாளரான ”இம்ரான் அல்கத்தான்” என்பவர் பலவீனமானவர் ஆவார். இவருடைய முழுப் பெயர் ”இம்ரான் இப்னு தவார் அல்கத்தான் அபுல் அவ்வாம்” என்பதாகும்.

تهذيب التهذيب (8/ 131) وقال الدوري عن بن معين ليس بالقوي وقال مرة ليس بشيء لم يرو عنه يحيى بن سعيد  ..وقال الآجري عن أبي داود هو من أصحاب الحسن وما سمعت إلا خيرا وقال مرة ضعيف ...وقال النسائي ضعيف ....وقال الترمذي قال البخاري صدوق بهم.... وقال الدارقطني كان كثير المخالفة والوهم

”இவர் உறுதியானவர் இல்லை” என்றும், இவர் ஒரு பொருட்டாகக் கொள்ளத் தக்கவரில்லை என்றும், யஹ்யா இப்னு ஸயீத் இவரிடமிருந்து அறிவிக்கவில்லை என்றும் இமாம் யஹ்யா இப்னு முயீன் அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

”இவர் பலவீனமானவர்” என்று இமாம் அபூதாவூத், மற்றும் இமாம் நஸாயீ விமர்சித்துள்ளார்கள்.

”இவர் உண்மையாளர் தவறிழைக்கக்கூடியவர்” என்று இமாம் புகாரி விமர்சித்துள்ளதாக இமாம் திர்மிதி கூறுகிறார்.

இவர் அதிகம் முரண்படக்கூடியவர் மற்றும் தவறிழைப்பவர் என்று இமாம் தாரகுத்னீ விமர்சித்துள்ளார்கள்.

((நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் : 8 பக்கம் 131)

மேற்கண்ட விமர்சனங்களின் அடிப்படையில் இந்தச் செய்தி பலவீனமானது என்பது உறுதியாகிறது.

அல்லாஹ் கோபப்படுகின்றான்?

حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا حَاتِمُ بْنُ إِسْمَعِيلَ عَنْ أَبِي الْمَلِيحِ عَنْ أَبِي صَالِحٍ عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ لَمْ يَسْأَلْ اللَّهَ يَغْضَبْ عَلَيْهِ  (رواه الترمدي 3295)

யார் அல்லாஹ்விடம் கேட்கவில்லையோ அவன் மீது அல்லாஹ் கோபப்படுகின்றான் என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறியுள்ளனர்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூல்: திர்மிதீ 3295

மேற்கண்ட செய்தி இப்னு மாஜா, அஹ்மத், ஹாகிம் போன்ற கிரந்தங்களிலும் இதே அறிவிப்பாளர் தொடரில் இடம் பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் ”அபூ ஸாலிஹ் அல்ஹவ்சிய்யு” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமான அறிவிப்பாளர் ஆவார்.

تهذيب التهذيب (12/ 131) 613- "بخ ت ق - أبو صالح" الخوزي عن أبي هريرة حديث من لا يسأل الله تعالى يغضب عليه وعنه أبو المليح الفارسي الخراط قال ابن الدورقي عن ابن معين ضعيف قلت وقال أبو زرعة لا بأس به.

இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்களும், இவரிடம் பிரச்சினையில்லை என்று இமாம் அபூ சுர்ஆ அவர்களும் கூறியுள்ளார்கள்.     (தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 12 பக்கம் 131)

تقريب التهذيب (ص: 649)

8172- أبو صالح الخوزي لين الحديث من الثالثة بخ ت ق

இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என இமாம் இப்னு ஹஜர் விமர்சித்துள்ளார்கள்.           (தக்ரீபுத் தஹ்தீப் பக்கம் 649)

இந்த அபூஸாலிஹ் என்பாருக்கு இந்த ஒரு அறிவிப்பைத் தவிர வேறு எந்த அறிவிப்புகளும் கிடையாது. மேலும் இவரை இமாம் இப்னு மயீன் பலவீனப்படுத்தியுள்ளார்கள். எனவே இவர் யாரென்றே அறியப்படாதவர் என்ற நிலையில் உள்ளவராவார். இதன் அடிப்படையிலும் இது மேலும் பலவீனமாகிறது.

துன்பம் நீங்கும் வரை பிரார்த்தித்தல் வணக்கங்களில் சிறந்தது என்ற செய்தி

حَدَّثَنَا بِشْرُ بْنُ مُعَاذٍ الْعَقَدِيُّ الْبَصْرِيُّ حَدَّثَنَا حَمَّادُ بْنُ وَاقِدٍ عَنْ إِسْرَائِيلَ عَنْ أَبِي إِسْحَقَ عَنْ أَبِي الْأَحْوَصِ عَنْ عَبْدِ اللَّهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ سَلُوا اللَّهَ مِنْ فَضْلِهِ فَإِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يُحِبُّ أَنْ يُسْأَلَ وَأَفْضَلُ الْعِبَادَةِ انْتِظَارُ الْفَرَجِ قَالَ أَبُو عِيسَى هَكَذَا رَوَى حَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا الْحَدِيثَ وَقَدْ خُولِفَ فِي رِوَايَتِهِ وَحَمَّادُ بْنُ وَاقِدٍ هَذَا هُوَ الصَّفَّارُ لَيْسَ بِالْحَافِظِ وَهُوَ عِنْدَنَا شَيْخٌ بَصْرِيٌّ وَرَوَى أَبُو نُعَيْمٍ هَذَا الْحَدِيثَ عَنْ إِسْرَائِيلَ عَنْ حَكِيمِ بْنِ جُبَيْرٍ عَنْ رَجُلٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُرْسَلًا وَحَدِيثُ أَبِي نُعَيْمٍ أَشْبَهُ أَنْ يَكُونَ أَصَحَّ

அல்லாஹ்வின் அருட்கொடையை அவனிடம் நீங்கள் கேளுங்கள்! ஏனெனில் தன்னிடம் கேட்கப்படுவதை அல்லாஹ் பெரிதும் விரும்புகிறான். (இறைவன் அல்லாதவர்களிடம் கையேந்திவிடாமல்) துன்பம் நீங்கும் வரை (பிரார்த்தித்தவனாக இறையருளை) எதிர்பார்ப்பதுதான் வணக்கங்களில் மிகச் சிறந்ததாகும்” என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி) நூல்: திர்மிதீ 3494

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர்களில் ஒருவராக ”ஹம்மாத் இப்னு வாகித்” என்பார் இடம் பெற்றுள்ளார். இந்தச் செய்தியை பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்களே ”இவர் (ஹதீஸ்களை) மனனம் செய்தவராக இல்லை” என்று விமர்சித்துள்ளார்கள்.

تهذيب التهذيب (3/ 21) 23- "ت - حماد" بن واقد2 العيشي أبو عمرو والصفار البصري ....قال عمرو بن علي كثير الخطاء كثير الوهم ليس ممن يروي عنه وقال ابن معين ضعيف وقال البخاري منكر الحديث وقال الترمذي ليس بالحافظ عندهم وقال أبو زرعة لين الحديث وقال أبو حاتم ليس بقوي لين الحديث يكتب حديثه على الاعتبار وبابه عثمان بن مطر ويوسف بن عطية وقال ابن عدي عامة ما يرويه مما لا يتابعه عليه الثقات له عند الترمذي حديث واحد وهو في انتظار الفرج وأعله قلت وقال الحاكم أبو أحمد ليس بالقوي عندهم وقال ابن حبان لا يجوز الاحتجاج بخبره إذا انفرد وقال العقيلي يخالف في حديثه.           

இவர் அதிகம் தவறிழைப்பவர், பிழை விடுபவர், இவரிடம் இருந்து அறிவிப்பதற்கு தகுதியானவர் கிடையாது என்று அம்ருப்னு அலி என்பார் கூறியுள்ளார்.

இவர் பலவீனமானவர் என்று இமாம் இப்னு மயீன் அவர்களும், ”ஹதீஸ்களில் நிராகரிக்கத் தகுந்தவர்” என்று இமாம் புகாரி அவர்களும் கூறியுள்ளனர்.

இவர் ஹாஃபிளாக (ஹதீஸ்களில் தேர்ந்தவராக) இல்லை என்று இமாம் திர்மிதி கூறியுள்ளார்.

இவர் ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று இமாம் அபூ சுர்ஆ அவர்களும், இவர் உறுதியானவர் கிடையாது ஹதீஸ்களில் பலவீனமானவர் என்று இமாம் அபூ ஹாதிம் அவர்களும் கூறியுள்ளனர்.

இவர் அறிவிக்கும் பெரும்பான்மையான அறிவிப்புகள் நம்பகமானவர் வழியாக வருவதில்லை என்று இப்னு அதீ விமர்சித்துள்ளார்.

இவர் உறுதியானவர் இல்லை என்று இமாம் ஹாகிம் அவர்களும்,  இவர் தனித்து வரும் போது இவரைக் ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இமாம் இப்னு ஹிப்பான் அவர்களும் கூறியுள்ளனர். இவர் தான் அறிவிக்கும் செய்தியில் முரண்படுபவர் என்று இமாம் இஜ்லீ விமர்சித்துள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் பாகம் 3 பக்கம் : 21)

மேற்கண்ட இமாம்களின் விமர்சனங்களின் அடிப்படையில் இந்தச் செய்தி மிகப் பலவீனமானது என்பது தெளிவாகிறது.

”ஹம்மாத் இப்னு வாகித்” என்பார் இடம்  பெறாத மற்றொரு அறிவிப்பாளர் தொடரில் இதே செய்தி வந்துள்ளது. ஆனால் அது முர்ஸல் எனும் தரத்தில் அமைந்தது என இமாம் திர்மிதி அவர்கள் இந்தச் செய்தியின் அடிக்குறிப்பில் தெளிவு படுத்தியுள்ளார்கள் . முர்ஸல் என்பது நபித்தோழர் விடுபட்ட செய்தியாகும்.

பிரார்த்தனை வணக்கங்களின் மூளை?

حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ أَخْبَرَنَا الْوَلِيدُ بْنُ مُسْلِمٍ عَنْ ابْنِ لَهِيعَةَ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ أَبِي جَعْفَرٍ عَنْ أَبَانَ بْنِ صَالِحٍ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ مِنْ هَذَا الْوَجْهِ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ ابْنِ لَهِيعَةَ (رواه الترمدي 3293)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி) நூல் : திர்மிதி (3293)

இந்தச் செய்தியும் பலவீனமானதாகும். இதன் அறிவிப்பாளர் தொடரில் ”இப்னு லஹீஆ” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் ஆவார்.

346 - عبد الله بن لهيعة بن عقبة أبو عبد الرحمن البصري ضعيف   :الضعفاء والمتروكين - النسائي (ص 64)

 (நூல்: அல்லுஃபாவு வல் மத்ரூகீன்-நஸயீ, பாகம்: 1, பக்கம்: 64

இதே ஹதீஸ் மற்றொரு அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

نهاية المراد من كلام خير العباد (1/ 52)

51 - أَخْبَرَنَا أَبُو مُوسَى، أنبا الْحَسَنُ بْنُ أَحْمَدَ بْنِ الْحَسَنِ، أَنَا الْفَضْلُ بْنُ مُحَمَّدِ بْنِ سَعِيدٍ، ثنا أَبُو مُحَمَّدِ بْنُ حِبَّانَ، ثنا عَبْدَانُ، ثنا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ، ثنا أَبُو مُعَاوِيَةَ. ح قَالَ أَبُو مُحَمَّدِ بْنُ حِبَّانَ، وَنَا الْفَضْلُ بْنُ الْعَبَّاسِ، ثنا الْقَوَارِيرِيُّ، نا عَبْدُ اللَّهِ بْنُ دَاوُدَ، جَمِيعًا، عَنِ الأَعْمَشِ، عَنْ ذَرٍّ، عَنْ يُسَيْعٍ، عَنِ النُّعْمَانِ بْنِ بَشِيرٍ، قَالَ: قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:  «الدُّعَاءُ مُخُّ الْعِبَادَةِயு , ثُمَّ قَرَأَ: {ادْعُونِي أَسْتَجِبْ لَكُمْ} [غافر: 60)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பிரார்த்தனையாகிறது வணக்கங்களின் மூளையாகும். பிறகு ”என்னை அழையுங்கள்! உங்களுக்குப் பதிலளிக்கிறேன்; ( 40 : 59) என்ற வசனத்தை ஓதினார்கள்          அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : நிஹாயத்துல் முராத் மின் கலாமி ஹைரில் இபாத் பாகம் : 1 பக்கம் : 52)

இதன் அறிவிப்பாளர் தொடரில் ”அல்பள்லு இப்னு முஹம்மத் இப்னு ஸயீத்” என்பார் இடம் பெற்றுள்ளார். இவர் ”யாரென்றே அறியப்படாதவர் ஆவார்”. எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.            

(தொடரும் இன்ஷா அல்லாஹ்)

 

அல்அஹ்சாப் என்ற அகழ் யுத்தம்

 

அல்அஹ்சாப் என்று அறியப்படும் யுத்தம் ஹிஜிரி 5ஆம் ஆண்டு நடைபெற்ற யுத்தம் ஆகும்.

பனூ நளீர் குலத்து யூதர்களுடன் நடைபெற்ற போரில் முஸ்லிம்களுக்கு வெற்றி கிடைத்தது. இதனால் பனூ குறைழா என்ற யூதர்கள் மிகவும் கவலையடைந்தனர். முஸ்லிம்களை அழிப்பதற்காக பல்வேறு சதித்திட்டங்களைத் தீட்டினர்.

முஸ்லிம்களுக்கு எதிராக குரைஷிகள், மற்றும் பல்வேறு குலத்தினரை ஒன்று திரட்டுவதில் யூதர்கள் வெற்றி கண்டனர்.

முஸ்லிம்களுக்கு எதிராகப் பல்வேறு குலத்தினரும் பெரும்படை திரட்டி வந்ததினால் இப்போருக்கு ”அல்- அஹ்சாப்- கூட்டுப் படை என்ற பெயர் வந்தது.

இப்பெரும் படை முஸ்லிம்களின் மீது போர்தொடுக்க மதீனாவை நோக்கி வந்தது.

பெரும்படை மதீனாவைத் தாக்க வருகின்ற செய்திகள்  கிடைத்தவுடன் நபி (ஸல்) அவர்கள் உடனடியாக ஓர் உயர்மட்ட ஆலோசனைக் குழுவைக் கூட்டினார்கள். மதீனாவையும் முஸ்லிம்களையும் எப்படி தற்காத்துக் கொள்ள வேண்டும் என்பதைப் பற்றி ஆலோசனை நடத்தினார்கள். பல கருத்துப் பரிமாற்றங்களுக்குப் பின் மதீனாவைச் சுற்றிலும் அகழ் தோன்ற வேண்டும் என்று முடிவு செய்யப்பட்டது. இதனால் இதற்கு ”அகழ் யுத்தம்” என்றும் பெயர் கூறப்பட்டுள்ளது. இந்தக் கருத்தை முன்வைத்தவர்கள் ஸல்மான் ஃபார்ஸி (ரழி) என்று வரலாற்று ஆசிரியர்கள் குறிப்பிட்டுள்ளனர்.

இந்த முடிவு எடுக்கப்பட்டவுடன் முஸ்லிம்கள் மிகுந்த உற்சாகத்துடன் அகழ் தோண்டுவதில் ஈடுபட்டார்கள். நபியவர்கள் முஸ்லிம்களுக்கு ஆர்வமூட்டி வந்தார்கள்.

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,

இறைவா! மறுமை வாழ்வைத்தவிர வேறு (நிரந்தர) வாழ்வு கிடையாது. ஆகவே, (அதற்காக உழைக்கும்) முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக! என்று (பாடியபடி) கூறினார்கள்                      நூல் : புகாரி (4098)

அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் போது) அகழ் (வெட்டும் பணி நடக்கும் இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது முஹாஜிர்களும் அன்சாரிகளும் (கடும்) குளிரான காலை நேரத்தில் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தார்கள். அந்தப் பணியை அவர்களுக்காகச் செய்திட அவர்களிடம் அடிமை(ஊழியர்)கள் இல்லை. அவர்களுக்கு ஏற்பட்டிருந்த களைப்பையும் பசியையும் கண்ட போது நபி (ஸல்) அவர்கள்,

இறைவா! (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கை தான். ஆகவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ மன்னிப்பளி என்று (பாடிய வண்ணம்) கூறினார்கள். இதைக் கேட்ட நபித் தோழர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளித்தவண்ணம்,

நாங்கள் வாழும் காலமெல்லாம் இறைவழியில் அறப்போர் புரிந்து கொண்டிருப்போம்' என்று முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி தந்துள்ளோம் என்று (பாடிய படி) கூறினார்கள்.

நூல் : புகாரி (2834)

பராஉ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போரின் போது அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டு செல்வதை நான் பார்த்தேன். மண் அவர்களுடைய வயிற்றின் வெண்மையை மறைத்(துப் படிந்)திருந்தது. அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்:

(இறைவா!) நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்; தருமம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட் டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும்போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது அக்கிரமம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

நூல் : புகாரி 2837

கடுமையான பசி பட்டினிக்கு ஆளாகி இருந்தும் முஸ்லிம்கள் சுறுசுறுப்பாக அகழ் தோண்டுவதில் ஈடுபட்டிருந்தனர்.

இதைப் பற்றி அனஸ் (ரழி) கூறுகிறார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்றமடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்.

நூல் : புகாரி (4100)

அபூ தல்ஹா (ரழி) அறிவிக்கிறார்கள் : எங்களின் பசியைப் பற்றி நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டோம். எங்களது வயிற்றில் ஒரு கல்லைக் கட்டி இருந்ததைக் காட்டினோம். நபி (ஸல்) அவர்களோ தங்களது வயிற்றில் இரண்டு கற்கள் கட்டி இருந்ததைக் காட்டினார்கள்.        நூல் : திர்மிதி (2293)

மேலும் பல அற்புதங்களும் அகழ் யுத்தத்தின் போது நடந்தது.

ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள் ; நாங்கள் அகழ்ப் போரின் போது அகழ் தோண்டிக் கொண்டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுபற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் இறங்கிப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டிருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் குந்தா - எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது.

நூல் : புகாரி (4101)

மற்றொரு அற்புதமும் நடந்தது

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா? என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியிலிட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப் படுத்திவிட வேண்டாம். (உணவு கொஞ்சம் தானிருக்கிறது' என்று கூறிவிடுங்கள்) என்று சொன்னாள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ஸாவு' அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள் என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் -ரலி- அவர்களிடம்), நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம் என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி -ஸல்- அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) ஊதினார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் வாயால் ஊதி பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:  அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்த மெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது  புகாரி (4102)

எதிரிப் படைகள் மதீனாவை அடைவதற்கு முன்பாகவே அகழ் தோண்டும் பணியை முஸ்லிம்கள் முடித்து விட்டனர்.

முஸ்லிம்கள் இந்தக் கூட்டுப் படையைக் கண்ட போது அவர்களின் இறைநம்பிக்கை அதிகரித்து. அவர்கள் சிறிதும் அஞ்சவில்லை. இதைப் பற்றி அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

நம்பிக்கை கொண்டோர் கூட்டுப் படையினரைக் கண்ட போது "இதுவே அல்லாஹ்வும், அவனது தூதரும் நமக்கு வாக்களித்தது. அல்லாஹ்வும், அவனது தூதரும் உண்மையே சொன்னார்கள்'' என்று கூறினர். நம்பிக்கையையும், கட்டுப்படுதலையும் தவிர வேறெதனையும் அவர்களுக்கு (இது) அதிகமாக்கவில்லை

(அல்குர்ஆன் 33 : 22)

ஆனால் முனாஃபிக்கீன்கள் இந்தப் படையைப் பார்த்து அஞ்சி நடுங்கினர். இதைப் பற்றியும் அல்லாஹ் திருக்குர்ஆனில் கூறுகின்றான்.

 அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்).

 (அல்குர்ஆன் 33:12)

எதிரிகள் முஸ்லிம்களைத் தாக்கவும், மதீனாவில் நுழையவும் நாடிய போது அதற்குத் தடையாக அகழ் இருப்பதைப் பார்த்தனர். வேறு வழியின்றி முஸ்லிம்களை முற்றுகையிடுவோம் என்ற முடிவில் அனைவரும் அகழைச் சூழ்ந்து கொண்டனர். 

இணைவைப்பவர்கள் மிகக் கோபத்துடன் அகழைச் சுற்றி வந்தார்கள். எங்காவது ஒரு சிறு வழி கிடைத்தால் அதன் மூலம் சென்று விடலாம் என்று முயன்றனர். ஆனால், முஸ்லிம்கள் அகழின் பக்கம் எதிரிகளை நெருங்கவிடாமல் அம்பால் தாக்கினர்.

எதிரிகள் அங்கு முற்றுகையிட்டிருந்த சில நாட்களில் பலமுறை அகழியில் இறங்குவதற்கும், அதன் மீது பாதை அமைப்பதற்கும் மிகத் தீவிரமாக முயன்றனர். ஆனால், முஸ்லிம்களின் அம்பு மழைக்கு எதிராக அவர்களின் அனைத்து முயற்சிகளும் தோல்வியடைந்தன. இதுபோன்ற தற்காப்பில் தீவிரமாக ஈடுபட்டிருந்ததால் நபி (ஸல்) அவர்களுக்கும் முஸ்லிம்களுக்கும் சில நேரத் தொழுகைகள் தவறின.

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:அகழ்ப் போரின் போது உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்கள் குறைஷிக் குல இறைமறுப்பாளர்களை ஏசிக் கொண்டே வந்து, சூரியன் மறையத் தொடங்கும் வரை என்னால் அஸ்ர் தொழுகையை தொழ முடியாமல் போய்விட்டது என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! நானும் (இதுவரை) அஸ்ர் தொழவில்லை என்று கூறினார்கள். பின்னர் புத்ஹான் எனும் பள்ளத்தாக்கை நோக்கி நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உளூ செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸ்ர் தொழுதார்கள். அதன் பின்னர் மஃக்ரிப் தொழுதார்கள். (அவர்களுக்குப் பின் நின்று நாங்களும் தொழுதோம்).

நூல் : புகாரி 596)

தொழுகைகள் தவறியதற்குக் காரணமாயிருந்த இணைவைப்பவர்களுக்கு எதிராக நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்தார்கள். இது குறித்து அலீ (ரலி) கூறுகிறார்கள்:

அஹ்ஸாப் (அரபுக் குலங்கள் அனைத்தும் ஒன்றுதிரண்டு தாக்க வந்த அகழ்ப்) போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ் (எதிரிகளுடைய) வீடுகளையும் புதை குழிகளையும் நெருப்பால் நிரப்புவனாக! அவர்கள் சூரியன் மறையும் நேரம் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை) யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பி விட்டார்கள் என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2931)

இதிலிருந்து நமக்குத் தெரியவருவது என்னவெனில்: எதிரிகள் அகழைக் கடக்க முயற்சி செய்ததும், முஸ்லிம்கள் அதை எதிர்த்ததும் பல நாட்களாக நீடித்தது. ஆனால் இரு படைகளுக்கும் இடையில் அகழ் தடையாக இருந்ததால் நேரடியான சண்டையோ, பலத்த சேதமோ யாருக்கும் ஏற்படவில்லை. இரு தரப்பிலிருந்தும் அம்பெறிந்தே தாக்குதல் நடந்தது.

இவ்வாறு இருதரப்பினரும் அம்பெய்து கொண்டதில் விரல்விட்டு எண்ணும் அளவுக்கு இரு தரப்பிலும் ஒரு சிலர் கொல்லப்பட்டனர்.

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் பின் அரிஃகா என்றழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி) விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலிலேயே (அவருக்குக்) கூடாரமொன்றை அமைத்தார்கள்.

(புகாரி 4122)

இந்நிலையில் மதீனாவில் முஸ்லிம்களுக்கு மிக அருகில் இருந்த பனூ குறைழா குலத்து யூதர்கள் முஸ்லிம்களுக்கு எதிராக மறைமுகமாக உதவி செய்து கொண்டு இருந்தாலும் வெளிப்படையாக நபியவர்களுடன் செய்திருந்த ஒப்பந்தத்தை ஒருதலைப்பட்சமாக முறித்தனர். முஸ்லிம்களுக்கு எதிராகத் தாக்குதல் நடத்த முற்பட்டனர். 

முஸ்லிம்களுக்கு இது மிக இக்கட்டான நிலையாக இருந்தது. குரைளா யூதர்கள் பின்புறத்திலிருந்து தாக்குதல் நடத்தினால் அதைத் தடுக்கவும் முடியாது. எதிர்த் திசையிலோ மிகப் பெரிய படை. அதை விட்டு எங்கும் செல்லவும் முடியாது.

முஸ்லிம்களுடன் இருந்த சில நயவஞ்சகர்களின் வஞ்சகத்தனம் அப்போது வெளிப்பட்டது. அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்றும் ‘‘எங்களின் வீடு பாதுகாப்பின்றி இருக்கின்றது. எனவே, நாங்கள் போரிலிருந்து திரும்பி விடுகிறோம். எங்களது வீடுகள் மதீனாவிற்கு வெளியில் இருக்கின்றன'' என்று முனாஃபிக்கீன்கள் கூறினர். இவர்களைப் பற்றியே பின்வரும் குர்ஆன் வசனம் இறக்கப்பட்டது.

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஏமாற்றும் வாக்குறுதியையே அளித்தனர்'' என்று நயவஞ்சகர்களும், உள்ளங்களில் நோய் உள்ளோரும் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்) . யஸ்ரிப் (மதீனா)வாசிகளே! உங்களால் (எதிர்த்து) நிற்க முடியாது. எனவே திரும்பிச் செல்லுங்கள்!'' என்று அவர்களில் ஒரு சாரார் கூறிய போதும் (சோதிக்கப்பட்டனர்). பாதுகாப்பானவையாக இருந்தும் "எங்கள் வீடுகள் பாதுகாப்பற்றவையாக உள்ளன'' எனக் கூறி நபியிடம் அவர்களில் ஒரு பிரிவினர் அனுமதி கோரினார்கள். அவர்கள் வெருண்டோடுவதைத் தவிர வேறெதனையும் விரும்பவில்லை.

 (அல்குர்ஆன் 33:12, 13)

இந்த இக்கட்டான நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் மன்றாடினார்கள்.

அப்துல்லாஹ் பின் அபீஅவ்ஃபா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

(அரபுக் குலங்கள் அனைத்தும் திரண்டு வந்த அகழ்ப் போரான) அஹ்ஸாப்' போர் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! வேதம் அருளியவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! இந்தக் குலங்களைத் தோற்கடிப்பாயாக! அவர்களை நடுக்கத்திற்குள்ளாக்குவாயாக! என்று பிரார்த்தனை புரிந்தார்கள்                      நூல் : புகாரி (7489)

அல்லாஹ் நபி (ஸல்) அவர்களின் வேண்டுதலை ஏற்று எதிரிப்படைகளை நிலைகுலையச் செய்தான். அவர்களுக்கு மத்தியில் பிரிவினை ஏற்பட்டது. அது மிகவும் கடுமையான குளிர்காலமாகவும் இருந்தது. இதனால் எதிரிப்படையினர் மிகவும் பலவீனமடைந்தனர். எனவே அவர்கள் மக்காவை நோக்கித் திரும்ப ஆயத்தமாகினர். 

அல்லாஹ் தனது இஸ்லாமியப் படைக்குக் கண்ணியத்தையும் வெற்றியையும் வழங்கினான். தனது அடியாருக்கு உதவி செய்தான். எதிரி ராணுவங்களை அவனே தோற்கடித்தான். நபியவர்கள் தங்களது படையுடன் மதீனா திரும்பினார்கள்.

இந்த அகழ்ப்போரில் பெரும் நஷ்டங்கள் ஏதும் ஏற்படவில்லை. இதில் கடுமையான மோதலும், சேதங்களும் ஏற்படவில்லை. இருப்பினும் இது இஸ்லாமிய வரலாற்றில் மிக முக்கியமான போராக விளங்குகிறது.

எதிரிப் படைகள் வெளியேறிய பின் நபியவர்கள் பின்வருமாறு கூறினார்கள்.

சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :(அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய போது இப்போது (போர் புரிவதானால்) நாம் தாம் அவர்களுடன் போர் புரியவேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரியமுடியாது; நாம் தாம் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.

புகாரி (4110)

 

உறவு ஓர் அருட்கொடை

எந்த ஒரு மனிதனும் உறவுகள் இல்லாமல் உறவுகளே வேண்டாம் என்று சொல்லி தன்னந்தனியாக வாழ்ந்துவிட முடியாது.

உறவுகள் பெரும் சுமையாக பலநேரங்களில் இருந்தாலும் உறவுகள்தான் மனிதனின் மிகப் பெரும் பலம்.

ஆபத்துகளில் கைகொடுக்கும், துயரங்களில் ஆறுதல் கூறும்,இன்ப துன்பங்களில் அக்கரையோடு பங்கெடுக்கும் ஒன்றுதான் உறவுகள்.

இன்றைக்கு உறவுகளின் அவசியத்தையும்,முக்கியத்துவத்தையும் உணராமல் உறவுகளோடு சேர்ந்து வாழாமல் உறவுகளை முறித்துக் கொண்டும் பகைத்துக் கொண்டும் மனித சமுதாயம் வாழ்ந்து கொண்டிருக்கிறது.

உறவுகள் என்றால் யார்? அவர்களால் என்ன பயன் என்பதை விளங்காமல் உறவுகளால் நமக்கு சிக்கலும், சிரமமும்தான் ஏற்படுகிறது என்று சொல்லி உறவுகளோடு சேர்ந்து வாழாமல் இருக்கிறார்கள்.

இஸ்லாமிய மார்க்கம்தான் உறவுகளின் முக்கியத்துவத்தையும்,உறவுகளால் ஏற்படும் நன்மைகளையும் தெளிவுபடுத்துகிறது.

அல்லாஹ் தனது திருமறையில் உறவுகளின்முக்கியத்துவத்தைப் பற்றி பல இடங்களில் கூறுகிறான்.

உறவினர்களுக்கு உபகாரம் செய்தல்

உறவுகளுக்குப் பொருளாதரம் தேவைப்படும்போது பொருள் மூலமாகவும், சில நேரங்களில் உடல் உழைப்பின் மூலமாகவும், சில நேரங்களில் உறவுகளுக்கு சலாம் கூறுவதன் மூலமாகவும், சில நேரங்களில் சிரித்த முகத்தோடு அவர்களைச் சந்திப்பதின் மூலமாகவும், சில நேரங்களில் அவர்களுக்கு நல்ல உபதேசங்கள் செய்வதன் மூலமாகவும், சில நேரங்களில் அவர்களுக்கு ஏற்படும் அநீதிகளுக்கு எதிராக உதவி செய்வதன் மூலமாகவும், சில நேரங்களில் அவர்கள் தங்களுக்கு தீங்கிழைத்துவிட்டால் அவற்றை மன்னிப்பது இதுபோன்ற ஏராளமான காரியங்களின் மூலமாக உறவினர்களுக்கு நாம் நன்மை செய்யலாம். இதுதான் உறவினர்களுக்கு உபகாரம் செய்வதின் பொருளாகும்.

அல்லாஹ் கூறுகிறான் :

அல்லாஹ்வை வணங்குங்கள், அவனுக்கு எதையும் இணையாகக் கருதாதீர்கள். பெற்றோர்களுக்கும்,உறவினர்களுக்கும், அனாதைகளுக்கும், ஏழைகளுக்கும்,நெருங்கிய அண்டைவீட்டாருக்கும், தூரமான அண்டைவீட்டாருக்கும், பயணத் தோழருக்கும்,நாடோடிகளுக்கும், உங்கள் அடிமைகளுக்கும் நன்மை செய்யுங்கள். பெருமையடித்து கர்வம் கொள்பவரை அல்லாஹ் நேசிக்கமாட்டான்.

அல்குர்ஆன் 4:36

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவரின் உரிமையை வழங்குவீராக. ஒரேயடியாக வீண்விரயம் செய்யாதீர்.

அல்குர்ஆன் 17:26

உறவினருக்கும், ஏழைக்கும், நாடோடிக்கும் அவர்களின் உரிமையை வழங்குவீராக. அல்லாஹ்வின் முகத்தை நாடுவோருக்கு இதுவே சிறந்தது.அவர்களே வெற்றி பெற்றோர்.

அல்குர்ஆன் 30:38

தாம் எதைச் செலவிட வேண்டும் என்று உம்மிடம் கேட்கின்றனர். நல்லவற்றிலிருந்து நீங்கள் எதைச் செலவிட்டாலும் பெற்றோருக்காகவும், உறவினருக்காகவும்,அனாதைகளுக்காகவும், ஏழைகளுக்காகவும்,நாடோடிகளுக்காகவும் (செலவிடவேண்டும்). நீங்கள் எந்த நன்மையைச் செய்தாலும் அல்லாஹ் அதை நன்கறிந்தவன் எனக் கூறுவீராக.         அல்குர்ஆன் 2:215

மேற்கண்ட பல வசனங்களில் உறவினர்களுக்கு நன்மை செய்ய வேண்டும் என்றும், அவர்களின் உரிமையை வழங்க வேண்டும் என்றும், இதுதான் சிறந்தது என்றும், நன்மையானது என்றும் அல்லாஹ் வலியுறுத்துகிறான்.

உறவினர்களுக்கு நன்மை செய்யாவிட்டால், அவர்களுக்குரிய உரிமையை வழங்காவிட்டால்  இறைவனின் தண்டனைதான் நமக்கு கிடைக்கும் என்பதை யாரும் மறந்துவிடக்கூடாது.

அல்லாஹ் கூறுகிறான் :

உறவினர்கள் விஷயத்தில் நீங்கள் (அஞ்சுங்கள்) அல்லாஹ் உங்களை கண்காணிப்பவனாக இருக்கிறான்.

அல்குர்ஆன் 4:1

ஆயுள் அதிகமாகும்

பொருளாதார வசதியுடனும், செல்வச் சீமானாக வாழ வேண்டும். அதே நேரத்தில் நீண்ட ஆயுளோடும் வாழ வேண்டும் என்றுதான் மனிதன் ஆசைப்படுகிறான்.

அவனது ஆசைக்கேற்ப அவனுக்கு அமைய வேண்டுமானால் இஸ்லாம் சில காரியங்களைச் செய்ய வேண்டும் என்று வலியுறுத்துகிறது. அவற்றை செய்துவிட்டாலே அவன் நினைக்கும் பாக்கியங்களை அல்லாஹ் அவனுக்கு வழங்குகின்றான்.

أَنَسُ بْنُ مَالِكٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ أَحَبَّ أَنْ يُبْسَطَ لَهُ فِي رِزْقِهِ وَيُنْسَأَ لَهُ فِي أَثَرِهِ فَلْيَصِلْ رَحِمَهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதையும், வாழ்நாள் நீட்டிக்கப்படுவதையும் விரும்புகின்றவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல் : புகாரீ 5986, முஸ்லிம்

முதல் பிரச்சாரம்

நபி (ஸல்) அவர்கள் நபித்துவம் கொடுத்து அனுப்பப்பட்டதும் சொந்தபந்தங்களை அரவணைக்க வேண்டும், அவர்களோடு ஒட்டி உறவாட வேண்டும் என்பதைத்தான் மக்களுக்கு மத்தியில் பிரச்சாரம் செய்தார்கள்.

قَالَ مَاذَا يَأْمُرُكُمْ قُلْتُ يَقُولُ اعْبُدُوا اللَّهَ وَحْدَهُ وَلَا تُشْرِكُوا بِهِ شَيْئًا وَاتْرُكُوا مَا يَقُولُ آبَاؤُكُمْ وَيَأْمُرُنَا بِالصَّلَاةِ وَالزَّكَاةِ وَالصِّدْقِ وَالْعَفَافِ وَالصِّلَةِ

அபீசீனியாவில் ஹிர்கல் மன்னர் தன்னுடைய நாட்டிற்கு வந்த முஸ்லிம்களிடம் நபிகளாரின் நபித்துவத்தைப் பற்றியும்,அவர்களின் பிரச்சாரத்தைப் பற்றியும் கேட்கும்போது அவர் உங்களுக்கு என்ன செய்யும்படி கட்டளையிடுகிறார்? என்று கேட்டார். அதற்கு முஸ்லிம்கள் அல்லாஹ் ஒருவனையே வழிபடுங்கள். அவனுக்கு எதனையும் யாரையும் இணையாக்காதீர்கள் உங்கள் மூதாதையர் சொல்லிவருகின்ற (அறியாமைக்கால) கூற்றுகளையெல்லாம் விட்டுவிடுங்கள் என்று கூறுகின்றார். தொழுகையை நிறைவேற்றும்படியும்,ஸகாத் கொடுக்கும்படியும், உண்மை பேசும்படியும்,தன்மானத்துடன் வாழும் படியும், உறவுகளைப் பேணும்படியும் எங்களுக்கு அவர் கட்டளையிடுகின்றார் என்று சொன்னேன்.                    நூல் : புகாரீ 7

நபித்துவம் கொடுக்கப்படுவதற்கு முன்பு நபிகளாரின் குணங்களில் ஒன்று உறவுகளை அரவணைப்பது

நபி (ஸல்) அவர்களுக்கு ஆரம்பமாக வஹீ வந்தபோது பயந்தவர்களாக கதீஜா (ரலி) அவர்களிடம் வந்த போது ஆறுதல் வார்த்தையாக சொல்லும்போது கூறிய வார்த்தை ஞாபகம் கொள்ள வேண்டும்.

فَقَالَ زَمِّلُونِي زَمِّلُونِي فَزَمَّلُوهُ حَتَّى ذَهَبَ عَنْهُ الرَّوْعُ فَقَالَ لِخَدِيجَةَ وَأَخْبَرَهَا الْخَبَرَ لَقَدْ خَشِيتُ عَلَى نَفْسِي فَقَالَتْ خَدِيجَةُ كَلَّا وَاللَّهِ مَا يُخْزِيكَ اللَّهُ أَبَدًا إِنَّكَ لَتَصِلُ الرَّحِمَ وَتَحْمِلُ الْكَلَّ وَتَكْسِبُ الْمَعْدُومَ وَتَقْرِي الضَّيْفَ وَتُعِينُ عَلَى نَوَائِبِ الْحَقِّ

(அச்சத்தால்) இதயம் படபடக்க அந்த வசனங்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் துணைவியர்) கதீஜா பின்த் குவைலித் (ரலி) அவர்களிடம் வந்து எனக்குப் போர்த்துவிடுங்கள் எனக்குப் போர்த்துவிடுங்கள் என்றார்கள். அவ்வாறே வீட்டாரும் அவர்களுக்குப் போர்த்திட அச்சம் அவர்களைவிட்டு அகன்றது. பின்னர் கதீஜாவிடம் நடந்தவற்றை தெரிவித்துவிட்டு எனக்கேதும் நேர்ந்துவிடுமோ என நான் அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கதீஜா (ரலி) அவர்கள் அப்படியொன்றும் ஆகாது. அல்லாஹ்வின் மீதாணையாக உங்களை அல்லாஹ் ஒருபோதும் இழிவுபடுத்தமாட்டான். (ஏனெனில்) தாங்கள் உறவுகளைச் சேர்ந்து வாழ்ந்துவருகிறீர்கள் (சிரமப்படுவோரின்) பாரத்தைச் சுமக்கிறீர்கள்; வறியவர்களுக்காகப் பாடுபடுகிறீர்கள்;விருந்தினர்களை உபசரிக்கிறீர்கள்; சத்திய சோதனையில் ஆட்பட்டோருக்கு உதவி செய்கிறீர்கள் (அதனால் நீங்கள் அஞ்ச வேண்டியதில்லை)'' என்று (ஆறுதல்) சொன்னார்கள்                    நூல் : புகாரீ 3

சொர்க்கத்தில் நுழையலாம்

عَنْ أَبِي أَيُّوبَ قَالَ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ و حَدَّثَنِي عَبْدُ الرَّحْمَنِ بْنُ بِشْرٍ حَدَّثَنَا بَهْزُ بْنُ أَسَدٍ حَدَّثَنَا شُعْبَةُ حَدَّثَنَا ابْنُ عُثْمَانَ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ مَوْهَبٍ وَأَبُوهُ عُثْمَانُ بْنُ عَبْدِ اللَّهِ أَنَّهُمَا سَمِعَا مُوسَى بْنَ طَلْحَةَ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا قَالَ يَا رَسُولَ اللَّهِ أَخْبِرْنِي بِعَمَلٍ يُدْخِلُنِي الْجَنَّةَ فَقَالَ الْقَوْمُ مَا لَهُ مَا لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرَبٌ مَا لَهُ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ تَعْبُدُ اللَّهَ لَا تُشْرِكُ بِهِ شَيْئًا وَتُقِيمُ الصَّلَاةَ وَتُؤْتِي الزَّكَاةَ وَتَصِلُ الرَّحِمَ ذَرْهَا قَالَ كَأَنَّهُ كَانَ عَلَى رَاحِلَتِهِ

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு (நற்) செயலை எனக்குக் கூறுங்கள்'' என்று கேட்டார். அப்போது மக்கள், "இவருக்கென்ன நேர்ந்தது? இவருக்கென்ன நேர்ந்தது?'' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவருக்கு ஏதேனும் தேவை இருக்கலாம்'' என்று (மக்களை நோக்கிச்) சொல்லிவிட்டு (அந்த மனிதரை நோக்கி), "நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதையும் இணையாக்கக் கூடாது; (கடமையான) தொழுகையையும் (கடமையான) ஸகாத்தையும் நிறைவேற்ற வேண்டும். உறவைப் பேணி வாழ வேண்டும்'' என்று கூறிவிட்டு, "உமது  வாகனத்தை (உமது வீடு நோக்கி) செலுத்துவீராக'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் :அபூஅய்யூப் அல்அன்சாரி (ரலி)

நூல் : புகாரீ 5983

இறைநம்பிக்கையாளரின் பண்பு

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும்  நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்  தம் இரத்தபந்த உறவுகளைப் பேணி வாழட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி) நூல் : புகாரீ 6138

இணைவைப்பாளராக இருந்தாலும் உறவைப் பேண வேண்டும்

حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ حَدَّثَنَا هِشَامُ بْنُ عُرْوَةَ أَخْبَرَنِي أَبِي أَخْبَرَتْنِي أَسْمَاءُ بِنْتُ أَبِي بَكْرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَتْ أَتَتْنِي أُمِّي رَاغِبَةً فِي عَهْدِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَسَأَلْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ آصِلُهَا قَالَ نَعَمْ قَالَ ابْنُ عُيَيْنَةَ فَأَنْزَلَ اللَّهُ تَعَالَى فِيهَا لَا يَنْهَاكُمْ اللَّهُ عَنْ الَّذِينَ لَمْ يُقَاتِلُوكُمْ فِي الدِّينِ

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்களுடன் குறைஷியர் சமாதான ஒப்பந்தம் செய்துகொண்டிருந்த காலத்தில் இணைவைப்பவராக இருந்த என் தாயார் தம் தந்தையுடன் (என்னைப் பார்க்க) வந்தார். நான், "என் தாயார் என்னிடம் ஆசையுடன் வந்துள்ளார்; நான் அவருடன் உறவு கொண்டாடலாமா?'' என்று நபி (ஸல்) அவர்களிடம் தீர்ப்புக் கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம். நீ உன் தாயின் உறவைப் பேணி நடந்துகொள்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரீ 5979

அல்லாஹ்வின் பாராட்டு

حَدَّثَنِي بِشْرُ بْنُ مُحَمَّدٍ أَخْبَرَنَا عَبْدُ اللَّهِ أَخْبَرَنَا مُعَاوِيَةُ بْنُ أَبِي مُزَرِّدٍ قَالَ سَمِعْتُ عَمِّي سَعِيدَ بْنَ يَسَارٍ يُحَدِّثُ عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّ اللَّهَ خَلَقَ الْخَلْقَ حَتَّى إِذَا فَرَغَ مِنْ خَلْقِهِ قَالَتْ الرَّحِمُ هَذَا مَقَامُ الْعَائِذِ بِكَ مِنْ الْقَطِيعَةِ قَالَ نَعَمْ أَمَا تَرْضَيْنَ أَنْ أَصِلَ مَنْ وَصَلَكِ وَأَقْطَعَ مَنْ قَطَعَكِ قَالَتْ بَلَى يَا رَبِّ قَالَ فَهُوَ لَكِ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاقْرَءُوا إِنْ شِئْتُمْ فَهَلْ عَسَيْتُمْ إِنْ تَوَلَّيْتُمْ أَنْ تُفْسِدُوا فِي الْأَرْضِ وَتُقَطِّعُوا أَرْحَامَكُمْ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:  அல்லாஹ் படைப்பினங்களை படைத்து முடித்தபோது உறவானது (எழுந்து இறைவனின் அரியாசனத்தின் கால்களைப் பற்றிக் கொண்டு) "உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரியே இப்படி நிற்கிறேன்'' என்று கூறி(மன்றாடி)யது.

அல்லாஹ், "ஆம். உன்னை(உறவை)ப் பேணி நடந்து கொள்பவனுடன் நானும் நல்ல முறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுபவனை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்கவில்லையா?''என்று கேட்டான். அதற்கு உறவு, "ஆம் (திருப்தியே) என் இறைவா!'' என்று கூறியது. அல்லாஹ், "இது உனக்காக நடக்கும்'' என்று சொன்னான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீங்கள் விரும்பினால் "(நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு  பூமியில் குழப்பம் விளைவிக்கவும் உங்கள் உறவுகளைத் துண்டித்துவிடவும் முனைகிறீர்களா?' எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக்கொள்ளுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்:  அபூஹுரைரா (ரலி)நூல் : புகாரீ 5987

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الرَّحِمُ شِجْنَةٌ فَمَنْ وَصَلَهَا وَصَلْتُهُ وَمَنْ قَطَعَهَا قَطَعْتُهُ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே, "அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்தபோது இறைவன் சொன்னான்).

அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி) நூல் : புகாரீ 5989

இரு கூலிகள்

عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ فَذَكَرْتُهُ لِإِبْرَاهِيمَ ح فَحَدَّثَنِي إِبْرَاهِيمُ عَنْ أَبِي عُبَيْدَةَ عَنْ عَمْرِو بْنِ الْحَارِثِ عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ بِمِثْلِهِ سَوَاءً قَالَتْ كُنْتُ فِي الْمَسْجِدِ فَرَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ تَصَدَّقْنَ وَلَوْ مِنْ حُلِيِّكُنَّ وَكَانَتْ زَيْنَبُ تُنْفِقُ عَلَى عَبْدِ اللَّهِ وَأَيْتَامٍ فِي حَجْرِهَا قَالَ فَقَالَتْ لِعَبْدِ اللَّهِ سَلْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَيْكَ وَعَلَى أَيْتَامٍ فِي حَجْرِي مِنْ الصَّدَقَةِ فَقَالَ سَلِي أَنْتِ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَانْطَلَقْتُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَجَدْتُ امْرَأَةً مِنْ الْأَنْصَارِ عَلَى الْبَابِ حَاجَتُهَا مِثْلُ حَاجَتِي فَمَرَّ عَلَيْنَا بِلَالٌ فَقُلْنَا سَلْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَيَجْزِي عَنِّي أَنْ أُنْفِقَ عَلَى زَوْجِي وَأَيْتَامٍ لِي فِي حَجْرِي وَقُلْنَا لَا تُخْبِرْ بِنَا فَدَخَلَ فَسَأَلَهُ فَقَالَ مَنْ هُمَا قَالَ زَيْنَبُ قَالَ أَيُّ الزَّيَانِبِ قَالَ امْرَأَةُ عَبْدِ اللَّهِ قَالَ نَعَمْ لَهَا أَجْرَانِ أَجْرُ الْقَرَابَةِ وَأَجْرُ الصَّدَقَةِ

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களின் மனைவி ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் பள்ளிவாசலில் இருந்தபோது நபி(ஸல்) அவாகள், "பெண்களே! உங்களின் ஆபரணங்களிலிருந்தேனும் தர்மம் செய்யுங்கள்'' எனக் கூறினார்கள். நான் என் (கணவர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுக்கும் மற்றும் என் அரவணைப்பில் உள்ள அநாதைகளுக்கும் செலவழிப்பவளாக இருந்தேன். எனவே என் கணவரிடம், நான் உங்களுக்காகவும் எனது அரவணைப்பில் வளரும்  அநாதைகளுக்காகவும் எனது பொருளைச் செலவழிப்பது ஸதகாவாகுமா என நபி(ஸல்) அவர்களிடம் கேட்டு வாருங்கள் எனக் கூறினேன்.

அப்துல்லாஹ் (ரலி-) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரிடம் நீயே கேள்'  எனக் கூறிவிட்டார். எனவே நான் நபி(ஸல்) அவர்களிடம் சென்றேன். அவர்கள் வீட்டுவாயிலில் ஓர் அன்ஸாரிப் பெண் இருந்தார். அவரது நோக்கமும் எனது நோக்கமாகவே இருந்தது. அப்போது எங்களிடையே பிலால்(ரலி) வந்தார். அவரிடம் நான் எனது கணவருக்கும் எனது பராமரிப்பில் உள்ள அநாதைகளுக்கும் நான் செலவழிப்பது தர்மமாகுமா? என நபி(ஸல்) அவர்களிடம் கேளுங்கள்; நாங்கள் யார் என்பதைத் தெரிவிக்க வேண்டாம் எனக் கூறினோம். உடனே அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்று கேட்டபோது நபி (ஸல்) அவர்கள், "அவ்விருவரும் யார்?எனக் கேட்டதற்கு அவர் "ஸைனப்' எனக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் "எந்த ஸைனப்?'' எனக் கேட்டதும் பிலால் (ரலி), "அப்துல்லாஹ்வின் மனைவி' எனக் கூறினார். உடனே நபி (ஸல்) "ஆம்! ஸைனபுக்கு இரு நன்மைகளுண்டு. ஒன்று நெருங்கிய உறவினரை அரவணைத்ததற்குரியது; மற்றொன்று தர்மத்திற்குரியது'' எனக் கூறினார்கள்.    நூல் : புகாரீ 1466

மிகப் பெரும் நன்மை

حَدَّثَنَا يَحْيَى بْنُ بُكَيْرٍ عَنْ اللَّيْثِ عَنْ يَزِيدَ عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ أَنَّ مَيْمُونَةَ بِنْتَ الْحَارِثِ رَضِيَ اللَّهُ عَنْهَا أَخْبَرَتْهُ أَنَّهَا أَعْتَقَتْ وَلِيدَةً وَلَمْ تَسْتَأْذِنْ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا كَانَ يَوْمُهَا الَّذِي يَدُورُ عَلَيْهَا فِيهِ قَالَتْ أَشَعَرْتَ يَا رَسُولَ اللَّهِ أَنِّي أَعْتَقْتُ وَلِيدَتِي قَالَ أَوَفَعَلْتِ قَالَتْ نَعَمْ قَالَ أَمَا إِنَّكِ لَوْ أَعْطَيْتِهَا أَخْوَالَكِ كَانَ أَعْظَمَ لِأَجْرِكِ وَقَالَ بَكْرُ بْنُ مُضَرَ عَنْ عَمْرٍو عَنْ بُكَيْرٍ عَنْ كُرَيْبٍ إِنَّ مَيْمُونَةَ أَعْتَقَتْ

அன்னை மைமூனா  பின்த்து ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் ஓர் அடிமைப் பெண்ணை விடுதலை செய்தேன். ஆனால், நபி (ஸல்) அவர்களிடம் அதற்காக அனுமதி கேட்கவில்லை. என்னிடம் நபி (ஸல்) அவர்கள் தங்குகின்ற முறை வந்தபோது, "அல்லாஹ்வின் தூதரே! அடிமைப் பெண்ணை விடுதலை செய்துவிட்டேனே,அறிவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீ (விடுதலை) செய்து விட்டாயா?'' என்று கேட்க, நான் "ஆம், (விடுதலை செய்து விட்டேன்)'' என்று கூறினேன்.  நபி (ஸல்) அவர்கள், "நீ உன் தாயின் சகோதரர்களுக்கு (தாய் மாமன்களுக்கு அன்பளிப்பாக) அவளைக் கொடுத்து விட்டிருந்தால் உனக்குப் பெரும்  நற்பலன் கிடைத்திருக்கும்''என்று கூறினார்கள்.

நூல் :புகாரீ 2592

உறவைப் பேணி வாழ்வதற்கு மாற்றமாக உறவைத் துண்டித்து வாழ்வது, உறவுக்காரர்களை வெறுப்பது, அவர்களுக்கு உபகாரம் செய்யாமல் இருப்பது பாவமான காரியமாகும். இதனால் தீமைகள் தான் நமக்கு கிடைக்கும். தீமைக்குரிய பரிசு நரகம்தான்.

நரகம்தான் கிடைக்கும்

جُبَيْرِ بْنِ مُطْعِمٍ قَالَ إِنَّ جُبَيْرَ بْنَ مُطْعِمٍ أَخْبَرَهُ أَنَّهُ سَمِعَ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ لَا يَدْخُلُ الْجَنَّةَ قَاطِعٌ

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழைய மாட்டான்.

அறிவிப்பவர் :ஜுபைர் பின் முத்இம் (ரலி) நூல் : புகாரீ 5984

இன்றைக்கு பெரும்பான்மையான முஸ்லிம்கள் உறவுகளுக்கு முக்கியத்துவம் கொடுக்காமல், உறவைப் பேணாமல் உறவைத் துண்டித்து வாழக்கூடிய சூழ்நிலையில்தான் இருக்கின்றோம். இவ்வாறு நாம் நடந்து கொண்டால் நமக்கு இறுதியாக நரகம்தான் கிடைக்கும் என்பதில் எந்தச் சந்தேகமும் இல்லை.

உறவுகளைப் பேணுவதில் சிலர் சுயநலம் கருதி உறவைப் பேணக்கூடிய சூழ்நிலையும் நம்மிடத்தில் இருக்கிறது.

நம்முடைய உறவுகளில் சிலர் மிகப் பெரிய செல்வந்தராகவோ,அல்லது ஏதாவது முக்கியமான பொறுப்பிலோ இருப்பார்கள் அவர்களுடன் உறவைப் பேணுவார்கள். காரணம் அதனால் நமக்கு பொருளாதார உதவி கிடைக்கும். பொறுப்பின் மூலமாக நாம் பயன்பெற்றுக் கொள்ளலாம் என்ற குருகிய மனப்பான்மையுடன் உறவைப் பேணக்கூடிய சூழ்நிலை நம்மிடத்தில் வந்துவிடக் கூடாது. சிலர் அந்த உறவுக்காரர் பணமோ, பொருளோ உதவி செய்தார். எனவே அவர் உதவி செய்ததினால் நாமும் பதிலுக்கு உதவி செய்ய வேண்டும் என்ற நினைப்பும் வந்துவிடக்கூடாது. இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ كَثِيرٍ أَخْبَرَنَا سُفْيَانُ عَنْ الْأَعْمَشِ وَالْحَسَنِ بْنِ عَمْرٍو وَفِطْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ سُفْيَانُ لَمْ يَرْفَعْهُ الْأَعْمَشُ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَرَفَعَهُ حَسَنٌ وَفِطْرٌ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَيْسَ الْوَاصِلُ بِالْمُكَافِئِ وَلَكِنْ الْوَاصِلُ الَّذِي إِذَا قُطِعَتْ رَحِمُهُ وَصَلَهَا

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல் : புகாரீ 5991

உண்மையில் உறவைப் பேணுபவர் பிரதிபலன் எதிர்பார்க்காமல் பேணுவதுதான் உறவைப் பேணுவது என்பதை நபி (ஸல்) அவர்கள் தெளிவான வழிகாட்டுதலை சொன்னார்கள்.

ஒவ்வொரு மனிதனும் தாய், தந்தை, அண்ணன், தங்கை,மாமா,மாமி போன்ற பல்வேறு உறவுகளோடுதான் வடிவமைக்கப்பட்டுள்ளான். உறவுகளோடு வடிவமைக்கப்பட்டவன் அந்த உறவுகளுக்குக் கொடுக்க வேண்டிய மரியாதையையும். உரிமையையும் சரிவர நிறைவேற்ற வேண்டும். அவ்வாறு நிறைவேற்றும் போது மார்க்கம் சொல்லக்கூடிய அத்துனை அருட்கொடைகளையும் அல்லாஹ் வழங்குவான். அதற்கு மாற்றமாக செயல்படும்போது நரகம் தான் பரிசாகக் கிடைக்கும் என்பதை நினைவில் கொண்டு உறவுகளோடு ஒன்றிணைந்து மகிழ்ச்சியாக நமது வாழ்க்கையை வாழ்வோம். இம்மையிலும் மறுமையிலும் வெற்றி பெறுவோம். அல்ஹம்துலில்லாஹ்!

 

பெண்கள் சம்பந்தமான நபிமொழிகள்

ஹதீஸ் எண் : 1

عَنْ أَبِي سَعِيدٍ الْخُدْرِيِّ قَالَ خَرَجَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي أَضْحَى أَوْ فِطْرٍ إِلَى الْمُصَلَّى فَمَرَّ عَلَى النِّسَاءِ فَقَالَ يَا مَعْشَرَ النِّسَاءِ تَصَدَّقْنَ فَإِنِّي أُرِيتُكُنَّ أَكْثَرَ أَهْلِ النَّارِ فَقُلْنَ وَبِمَ يَا رَسُولَ اللَّهِ قَالَ تُكْثِرْنَ اللَّعْنَ وَتَكْفُرْنَ الْعَشِيرَ مَا رَأَيْتُ مِنْ نَاقِصَاتِ عَقْلٍ وَدِينٍ أَذْهَبَ لِلُبِّ الرَّجُلِ الْحَازِمِ مِنْ إِحْدَاكُنَّ قُلْنَ وَمَا نُقْصَانُ دِينِنَا وَعَقْلِنَا يَا رَسُولَ اللَّهِ قَالَ أَلَيْسَ شَهَادَةُ الْمَرْأَةِ مِثْلَ نِصْفِ شَهَادَةِ الرَّجُلِ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكِ مِنْ نُقْصَانِ عَقْلِهَا أَلَيْسَ إِذَا حَاضَتْ لَمْ تُصَلِّ وَلَمْ تَصُمْ قُلْنَ بَلَى قَالَ فَذَلِكِ مِنْ نُقْصَانِ دِينِهَا رواه البخاري 304-1462 رواه مسلم 79

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஹஜ்ஜுப் பெருநாள்' அல்லது "நோன்புப் பெருநாள்' தினத்தன்று முஸல்லா எனும் தொழுகைத்திடலுக்குப் புறப்பட்டு வந்தார்கள். (ஆண்களுக்கு உரை நிகழ்த்திய) பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, "பெண்கள் சமூகமே!தான தர்மங்கள் செய்யுங்கள். ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை எனக்குக் காட்டப்பட்டது'' என்று குறிப்பிட்டார்கள். "அல்லாஹ்வின் தூதரே!ஏன் (எங்களுக்கு இந்த நிலை)?'' எனப் பெண்கள் கேட்டதும். "நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; மனக் கட்டுப்பாடுமிக்க கூரிய அறிவுடைய ஆண்களின் புத்தியை, அறிவிலும் மார்க்க(த் தின் கடமையி)லும் குறையுடையவர்களான நீங்கள் போக்கி விடுவதையே நான் காண்கின்றேன்'' என்று கூறினார்கள். அப்போதும் அப்பெண்கள், "மார்க்த்திலும் அறிவிலும் எங்களுடைய குறைபாடு என்ன, அல்லாஹ்வின் தூதரே?''என்று கேட்டார்கள். "பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா?'' என்று  நபி (ஸல்) அவர்கள் கேட்க, அப்பெண்கள், "ஆம் (பாதியளவுதான்)'' என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அதுதான் அவளது அறிவின் குறைபாடாகும்:'' என்று கூறிவிட்டு ஒரு பெண்ணுக்கு மாதவிடாய் ஏற்பட்டால் (தூய்மையாகும் வரை) அவள் தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை அல்லவா?'' என்று கேட்க, மீண்டும் அப்பெண்கள் "ஆம் (தொழுவதில்லை; நோன்பு நோற்பதில்லை)'' என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அதுதான் அவளது மார்க்கத்தி(ன் கடமையி)லுள்ள குறைபாடாகும்'' என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி) நூல் : புகாரீ 304

ஹதீஸ் எண் : 2

أَنَّ أَبَا هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَامَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حِينَ أَنْزَلَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَأَنْذِرْ عَشِيرَتَكَ الْأَقْرَبِينَ قَالَ يَا مَعْشَرَ قُرَيْشٍ أَوْ كَلِمَةً نَحْوَهَا اشْتَرُوا أَنْفُسَكُمْ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا بَنِي عَبْدِ مَنَافٍ لَا أُغْنِي عَنْكُمْ مِنْ اللَّهِ شَيْئًا يَا عَبَّاسُ بْنَ عَبْدِ الْمُطَّلِبِ لَا أُغْنِي عَنْكَ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا صَفِيَّةُ عَمَّةَ رَسُولِ اللَّهِ لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا وَيَا فَاطِمَةُ بِنْتَ مُحَمَّدٍ سَلِينِي مَا شِئْتِ مِنْ مَالِي لَا أُغْنِي عَنْكِ مِنْ اللَّهِ شَيْئًا تَابَعَهُ أَصْبَغُ عَنْ ابْنِ وَهْبٍ عَنْ يُونُسَ عَنْ ابْنِ شِهَابٍ رواه البخاري 2753-4771 رواه مسلم 206

"உங்கள் நெருங்கிய உறவினர்களை அச்சுறுத்தி எச்சரியுங்கள்'' என்னும் (26:214) இறைவசனத்தை அல்லாஹ் அருளிய பொழுது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, "குறைஷிக் குலத்தாரே!' என்றோ அது போன்ற ஒரு சொல்லையோ கூறி (அழைத்து), "ஓரிறை வணக்கத்தையும், நற்செயல்களையும் விலையாகத் தந்து உங்களுக்கு (நரக நெருப்பிலிருந்து) விடுதலை வாங்கிக் கொள்ளுங்கள். அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து சிறிதளவும் உங்களைக் காப்பாற்ற என்னால் முடியாது. அப்து மனாஃபின் மக்களே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் காப்பாற்ற முடியாது. அப்துல் முத்தலிபின் மகன் அப்பாஸே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால்  சிறி தளவும் காப்பாற்ற  முடியாது. அல்லாஹ்வின் தூதருடைய அத்தை (மாமி) ஸஃபிய்யாவே! உங்களை அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால்  சிறிதளவும் காப்பாற்ற முடியாது. முஹம்மதின் மகள் ஃபாத்திமாவே! என் செல்வத்திலிருந்து நீ விரும்பியதைக் கேள் (தருகிறேன்).  (ஆனால்,) அல்லாஹ்வின் தண்டனையிலிருந்து என்னால் சிறிதளவும் உன்னை காப்பாற்ற முடியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் :அபூஹுரைரா (ரலி)

நூல் ; புகாரீ 2753

ஹதீஸ் எண் : 3

عَنْ سَهْلِ بْنِ سَعْدٍ قَالَ كَانَ رِجَالٌ يُصَلُّونَ مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَاقِدِي أُزْرِهِمْ عَلَى أَعْنَاقِهِمْ كَهَيْئَةِ الصِّبْيَانِ وَيُقَالُ لِلنِّسَاءِ لَا تَرْفَعْنَ رُءُوسَكُنَّ حَتَّى يَسْتَوِيَ الرِّجَالُ جُلُوسًا رواه البخاري 362-1215 رواه مسلم 441

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:சில ஆண்கள்  சிறுவர்களைப் போன்று தங்களது சிறிய வேஷ்டியை தங்கள் கழுத்தில் கட்டிக் கொண்டு நபி (ஸல்) அவர்களுடன் தொழுவார்கள். (இதைக் கண்ட நபியவர்கள்) பெண்களிடம், "ஆண்கள் (சஜ்தாவிலிருந்து எழுந்து) உட்காரும்வரை நீங்கள் (சஜ்தாவிலிருந்து) தலையை உயர்த்தாதீர்கள்' என்று சொன்னார்கள்

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி)

 நூல் : புகாரீ 362

ஹதீஸ் எண் : 4

عَنْ ابْنِ عُمَرَ قَالَ كَانَتْ امْرَأَةٌ لِعُمَرَ تَشْهَدُ صَلَاةَ الصُّبْحِ وَالْعِشَاءِ فِي الْجَمَاعَةِ فِي الْمَسْجِدِ فَقِيلَ لَهَا لِمَ تَخْرُجِينَ وَقَدْ تَعْلَمِينَ أَنَّ عُمَرَ يَكْرَهُ ذَلِكَ وَيَغَارُ قَالَتْ وَمَا يَمْنَعُهُ أَنْ يَنْهَانِي قَالَ يَمْنَعُهُ قَوْلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَمْنَعُوا إِمَاءَ اللَّهِ مَسَاجِدَ اللَّهِ رواه البخاري 900

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் (ஆத்திகா எனும்) ஒருவர் சுப்ஹு, இஷா ஆகிய தொழுகைளைப் பள்ளியில் ஜமாஅத்தில் தொழச் செல்வார். அவரிடம், "(உங்கள் கணவர்) உமர் (ரலி) அவர்கள் இ(வ்வாறு செல்வ)தை வெறுக்கிறார்கள்; ரோஷப்படுகிறார்கள் என்று தாங்கள் அறிந்திருந்தும் நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர், "(என்னைப் பள்ளிக்குச் செல்ல வேண்டாமென்று கூறவிடாமல்) அவரை எது தடுக்கிறது?'' என்று கேட்க, "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "பெண்கள் பள்ளிவாசல்களுக்குச் செல்வதைத் தடுக்காதீர்கள் என்று கூறியதே உமர் (ரலி) அவர்களைத் தடுக்கிறது'' என்று பதில் வந்தது.

அறிவிப்பவர் ; இப்னு உமர் (ரலி) நூல் : புகாரீ 900

ஹதீஸ் எண் : 5

عَنْ سَهْلٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسَلَ إِلَى امْرَأَةٍ مِنْ الْمُهَاجِرِينَ وَكَانَ لَهَا غُلَامٌ نَجَّارٌ قَالَ لَهَا مُرِي عَبْدَكِ فَلْيَعْمَلْ لَنَا أَعْوَادَ الْمِنْبَرِ فَأَمَرَتْ عَبْدَهَا فَذَهَبَ فَقَطَعَ مِنْ الطَّرْفَاءِ فَصَنَعَ لَهُ مِنْبَرًا فَلَمَّا قَضَاهُ أَرْسَلَتْ إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّهُ قَدْ قَضَاهُ قَالَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَرْسِلِي بِهِ إِلَيَّ فَجَاءُوا بِهِ فَاحْتَمَلَهُ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَوَضَعَهُ حَيْثُ تَرَوْنَ رواه البخاري 2569

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது: தச்சு வேலை தெரிந்த அடிமை ஒருவனை வைத்திருந்த முஹாஜிர் பெண் ஒருவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஆள் அனுப்பி, "மிம்பருக்கு(மேடைக்குத் தேவையான மரச் சட்டங்களை செய்து தரும்படி உன் அடிமைக்குக் கட்டளையிடு'' என்று கூறினார்கள்.  அவ்வாறே, அப்பெண்மணி தன் அடிமைக்குக் கட்டளையிட, அவ்வடிமை (காட்டிற்குச்) சென்று, (இறகு போன்ற கிளைகளையுடைய) ஒருவகை (நொய்தல் நில) சவுக்கு மரத்தை வெட்டியெடுத்து வந்து நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பர் ஒன்றைச் செய்தார். அதைச் செய்து முடித்தபின் அப் பெண்மணி நபி (ஸல்) அவர்களுக்கு மிம்பரை அவர் செய்து முடித்துவிட்டதாகத் தகவல் சொல்லி அனுப்பினார். நபி (ஸல்) அவர்கள் அதைக் கொடுத்தனுப் புமாறு சொன்னார்கள். பின்னர் அதைக் கொண்டு வந்தனர். நபி (ஸல்) அவர்கள் அதைச் சுமந்து சென்று இப்போது நீங்கள் பார்க்கும் இடத்தில் வைத்தார்கள்.

அறிவிப்பவர் : சஹ்ல் பின் சஅத் (ரலி) நூல் : புகாரீ 2569

ஹதீஸ் எண் : 6

عَنْ حَفْصَةَ قَالَتْ كُنَّا نَمْنَعُ عَوَاتِقَنَا أَنْ يَخْرُجْنَ فِي الْعِيدَيْنِ فَقَدِمَتْ امْرَأَةٌ فَنَزَلَتْ قَصْرَ بَنِي خَلَفٍ فَحَدَّثَتْ عَنْ أُخْتِهَا وَكَانَ زَوْجُ أُخْتِهَا غَزَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثِنْتَيْ عَشَرَةَ غَزْوَةً وَكَانَتْ أُخْتِي مَعَهُ فِي سِتٍّ قَالَتْ كُنَّا نُدَاوِي الْكَلْمَى وَنَقُومُ عَلَى الْمَرْضَى فَسَأَلَتْ أُخْتِي النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعَلَى إِحْدَانَا بَأْسٌ إِذَا لَمْ يَكُنْ لَهَا جِلْبَابٌ أَنْ لَا تَخْرُجَ قَالَ لِتُلْبِسْهَا صَاحِبَتُهَا مِنْ جِلْبَابِهَا وَلْتَشْهَد الْخَيْرَ وَدَعْوَةَ الْمُسْلِمِينَ فَلَمَّا قَدِمَتْ أُمُّ عَطِيَّةَ سَأَلْتُهَا أَسَمِعْتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَتْ بِأَبِي نَعَمْ وَكَانَتْ لَا تَذْكُرُهُ إِلَّا قَالَتْ بِأَبِي سَمِعْتُهُ يَقُولُ يَخْرُجُ الْعَوَاتِقُ وَذَوَاتُ الْخُدُورِ أَوْ الْعَوَاتِقُ ذَوَاتُ الْخُدُورِ وَالْحُيَّضُ وَلْيَشْهَدْنَ الْخَيْرَ وَدَعْوَةَ الْمُؤْمِنِينَ وَيَعْتَزِلُ الْحُيَّضُ الْمُصَلَّى قَالَتْ حَفْصَةُ فَقُلْتُ الْحُيَّضُ فَقَالَتْ أَلَيْسَ تَشْهَدُ عَرَفَةَ وَكَذَا وَكَذَا رواه البخاري 324-980

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:நாங்கள் இரு பெருநாள்களிலும் (தொழுமிடத்திற்கு) புறப்பட்டு வருவதை விட்டும் எங்கள் குமரிப் பெண்களை  தடுத்துக்கொண்டிருந்தோம்.  இந்நிலையில் ஒரு பெண்மணி வந்து பனூ கலஃப் குலத்தாரின் மாளிகையில் தங்கியிருந்தார். அவர் தம் சகோதரி (உம்மு அத்தியா- ரலி) வழியாக வந்த செய்தியை அறிவித்தார்.

என்னுடைய சகோதரி (உம்மு அத்திய்யா (ரலி) அவர்களின் கணவர் நபி (ஸல்) அவர்களோடு பன்னிரண்டு போர்களில் கலந்துகொண்டார். இதில் என் சகோதரி ஆறுபோர்களில் தம் கணவரோடு இருந்தார்.-

என் சகோதரி (உம்மு அத்திய்யா) கூறினார்:(பெண்களாகிய) நாங்கள் நபி (ஸல்) அவர்களின் காலத்தில் நடந்த போர்களில் காயமுற்றவர்களுக்கு மருந்திடுவோம்; நோயாளிகளைக் கவனித்தோம். நான் நபி (ஸல்) அவர்களிடம் "எங்களில் ஒரு பெண்ணுக்கு மேலங்கி இல்லாவிட்டால் (பெருநாள் தொழுகைக்குச்) செல்லாமல் (வீட்டிலேயே இருப்பது) குற்றமா?''என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஒரு பெண்ணிடம் மேலங்கி இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது மேலங்கிகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்! அவள் நன்மையான காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரச்சாரங்களிலும் கலந்து கொள்ளட்டும்!'' என்று சொன்னார்கள்.

ஹஃப்ஸா பின்த் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் (என்னிடம்) வந்தபோது "நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூற நீங்கள் செவியுற்றீர்களா?'' என்று நான் கேட்டேன் அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் "என் தந்தை நபியவர்களுக்கு அர்ப்பணமாகட்டும்! ஆம். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்றேன்'' என்று சொன்னார்கள் -உம்மு அத்திய்யா, நபி (ஸல்) அவர்களின் பெயரைக் கூறும்போதேல்லாம் "நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்'' என்பதையும் சேர்த்தே கூறுவார்.

-நபி (ஸல்) அவர்களுக்கு என் தந்தை அர்ப்பணமாகட்டும்-

"வயது வந்த பெண்களும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களும் மாதவிடாயுள்ள பெண்களும் (பெருநாள் தினத்தன்று) வெளியே சென்று நன்மையான செயல்களிலும் இறை நம்பிக்கையாளர்களின் காரியங்களிலும் இறைநம்பிக்கையாளர்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ளட்டும்! மாதவிடாயுள்ள பெண்கள் தொழும் இடத்தை விட்டு ஒதுங்கி இருப்பார்கள்'' என்று கூறினார்கள்'' என்றார் உம்மு அத்திய்யா.

(இதை அறிவித்த உம்மு அத்திய்யா அவர்களிடம்) நான், "மாதவிடாயுள்ள பெண்களுமா (பெருநாள் தொழுகை நடக்கும் இடத்திற்குச் செல்வார்கள்)?'' என்று கேட்டேன். அதற்கு உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள், "மாதவிடாயுள்ள பெண் அரஃபாவுக்கும் (மினா, முஸ்தலிஃபா, போன்ற) இன்ன இன்ன இடங்களுக்கும் செல்வதில்லையா?'' என்று (திருப்பிக்) கேட்டார்கள்.

அறிவிப்பவர் : உம்மு அதிய்யா (ரலி) நூல் : புகாரீ 324, 980

ஹதீஸ் எண் : 7

عَنْ عَبْدِ اللَّهِ بْنِ بُرَيْدَةَ قَالَ قَالَ سَمُرَةُ بْنُ جُنْدُبٍ لَقَدْ كُنْتُ عَلَى عَهْدِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ غُلَامًا فَكُنْتُ أَحْفَظُ عَنْهُ فَمَا يَمْنَعُنِي مِنْ الْقَوْلِ إِلَّا أَنَّ هَا هُنَا رِجَالًا هُمْ أَسَنُّ مِنِّي وَقَدْ صَلَّيْتُ وَرَاءَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى امْرَأَةٍ مَاتَتْ فِي نِفَاسِهَا فَقَامَ عَلَيْهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي الصَّلَاةِ وَسَطَهَا وَفِي رِوَايَةِ ابْنِ الْمُثَنَّى قَالَ حَدَّثَنِي عَبْدُ اللَّهِ بْنُ بُرَيْدَةَ قَالَ فَقَامَ عَلَيْهَا لِلصَّلَاةِ وَسَطَهَا رواه مسلم 1603

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் ளது காலத்தில் சிறுவனாக இருந்தேன். நான் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (பல தகவல்களை) மனனமிட்டுவந்தேன். இங்கு என்னைவிட வயதில் பெரியவர்கள் இருப்பதே என்னை அவற்றைச் சொல்லவிடாமல் தடுக்கிறது. நான் (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் நின்று, பிரசவ இரத்தப்போக்கில் இறந்துபோன பெண்ணிற்காக ஜனாஸாத் தொழுகை தொழுதிருக்கிறேன். அத்தொழுகையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரேதத்தின் மையப் பகுதிக்கு நேராக நின்று தொழுவித்தார்கள்

அறிவிப்பவர் : சமுரா பின் ஜுன்துப் நூல் : முஸ்லிம் 1759

ஹதீஸ் எண் : 8

عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّهَا قَالَتْ يَا رَسُولَ اللَّهِ يَرْجِعُ أَصْحَابُكَ بِأَجْرِ حَجٍّ وَعُمْرَةٍ وَلَمْ أَزِدْ عَلَى الْحَجِّ فَقَالَ لَهَا اذْهَبِي وَلْيُرْدِفْكِ عَبْدُ الرَّحْمَنِ فَأَمَرَ عَبْدَ الرَّحْمَنِ أَنْ يُعْمِرَهَا مِنْ التَّنْعِيمِ فَانْتَظَرَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِأَعْلَى مَكَّةَ حَتَّى جَاءَتْ رواه البخاري 2984 رواه مسلم 1211

நபி (ஸல்) அவர்களுடன் ஹஜ் செய்யச் சென்றபோது நான், "அல்லாஹ்வின் தூதரே! தங்கள் தோழர்கள் ஹஜ் மற்றும் உம்ராவின் நற்பலனைப் பெற்றுத் திரும்புகிறார்கள். ஆனால், நானோ ஹஜ்ஜை விட அதிகமாக (உம்ரா எதையும்) செய்யவில்லையே!''”என்று (ஏக்கத்துடன்) கேட்டேன். நபி (ஸல்) அவர்கள் என்னிடம்,  "நீ (உம்ரா செய்யப்) போ! உன்னை (உன் சகோதரர்) அப்துர் ரஹ்மான் (வாகனத்தில் தனக்குப்) பின்னால் உட்கார வைத்துக் கொள்ளட் டும்''’என்று கூறிவிட்டு, அப்துர் ரஹ்மான் அவர்களை "தன்யீம்' என்னுமிடத்தி-ருந்து என்னை உம்ராவுக்கு அழைத்துச் செல்லும்படி கட்டளையிட்டார்கள். நான் (உம்ராவை நிறைவேற்றி விட்டுத் திரும்பி) வரும்வரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை எதிர்பார்த்து மக்காவின் மேற்பகுதியில் காத்திருந் தார்கள்

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரீ 2984, முஸ்லிம்

 

August 8, 2015, 2:07 PM

ஜுலை தீன்குலப் பெண்மணி 2015

குற்றவாளிகளுக்கு சிவப்பு கம்பளம் விரிக்கும் பாஜக!

இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளிக்கு வெளியுறவு அமைச்சரும், மாநில முதல் அமைச்சரும் உதவியது பெரும் சர்ச்சையை சமீபத்தில் ஏற்படுத்தியுள்ளது.

ஐ.பி.எல். கிரிக்கெட் என்ற பெயரில் பல வெளிநாட்டு மட்டை பந்து வீச்சாளர்களை வைத்து விளையாட்டை நடத்தி பல கோடி ரூபாய்களை கிரிக்கெட் வாரியத்திற்கும் தனக்கும் சம்பாதித்துக் கொண்ட பெரிய கோடீஸ்வரர் லலித் மோடி.

இந்த லலித் மோடி மீது சட்ட விரோத பணப்பரிமாற்றம், வரி ஏய்ப்பு உள்ளிட்ட குற்றச்சாட்டுகளால்  தேடப்படும் குற்றவாளியாக மத்திய அமலாக்கத் துறை  அறிவித்துள்ளது. அவர் லண்டனில் தங்கி இருக்கிறார்.

லலித் மோடி  இங்கிலாந்தில் இருந்து போர்ச்சுக்கல் செல்ல பயண ஆவணங்கள் வழங்க   சுஷ்மா சுவராஜ் உதவிய செய்தி மக்களை அதிர்ச்சிக்கு உள்ளாக்கியுள்ளது.

இந்திய அரசால் தேடப்படும் ஒரு குற்றவாளிக்கு வெளியுறவு அமைச்சர் ஒருவர் உதவியிருப்பது அதிர்ச்சியையும் ஆத்திரத்தையும் ஏற்படுத்துகிறது.

உதவியதற்குச் சொல்லும் காரணம் இன்னும் கோபத்தை மக்களிடம் ஏற்படுத்தியுள்ளது. மனித நேயத்தின் அடிப்படையில் உதவியதாக வெளியுறவு அமைச்சர் சுஷ்மா சுவராஜ் தெரிவிக்கிறார்.

மனிதநேயத்துடன் உதவும் சுஷ்மா அவர்கள் உள்ளநாட்டிலும் வெளிநாட்டிலும் கஷ்டப்படும் மக்களுக்கு ஏதாவது உதவியிருப்பாரா?

கோடிகள் கொட்டும் மனிதருக்கு மட்டும்தான் மனிதநேயம் வருமா? அதுவும் குற்றவாளிக்குத்தான் வருமா?

மிக மிக மோசமான காரியத்தைச் செய்த சுஷ்மாவை பதவி நீக்கம் செய்யாமல் அதற்கும் ஆதரவு தெரிவிக்கும் பாஜக தலைவர்களை என்ன சொல்வது?

இந்தச் செயல்பாடு ஊழல்களுக்கும் குற்றவாளிகளுக்கும் இவர்கள் ஆதாரவாளர்கள்தான் என்பதை வெளிச்சத்திற்குக் கொண்டு வந்துள்ளது.

இந்த பெரும் பிரச்சனைகள் ஓடிக்கொண்டிருக்க லலித் மோடி இங்கிலாந்தில் தங்கியிருப்பதற்கு ராஜஸ்தான் முதல்வர் வசுந்தரா ராஜே உதவியதும் வெளிச்சத்திற்கு வந்துள்ளது.

திருடர்களுக்கு உதவுவதற்கு இப்படி போட்டி போட்டுக் கொண்டு மத்திய, மாநில அமைச்சர்கள் ஆர்வப்படுவது ஏன்?

இதைப் போன்று ஒரு ஏழை, அல்லது நடுத்தர வர்க்கத்தினர் பாதிக்கப்பட்டிருந்தால் இந்த அமைச்சர்கள் உதவுவார்களா?

காங்கிரஸை விட பாஜக மிக மோசமானது என்பதை மக்கள் தெரிந்து கொள்ள துவங்கி விட்டார்கள்.

 

கப்ரு வணங்கிகளின் குருட்டு வாதங்கள்!

இறந்து விட்ட மனிதரின் மண்ணறைக்கு மேல் இஸ்லாத்தின் பார்வையில் கட்டடம் கட்டுவது கூடாது. அவர்கள் நபிமார்களாகவோ, உயிர்த் தியாகிகளாகவோ இருந்தாலும் சரியே. அவர்களின் கப்ருக்கு  மேல் கட்டடம் கட்டுவது முற்றிலும் இஸ்லாத்தில் தடைசெய்யப்பட்டுள்ளது.

இதைப் பின்வரும் நபிமொழிகளிலிருந்து அறியலாம்.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا حَفْصُ بْنُ غِيَاثٍ عَنْ ابْنِ جُرَيْجٍ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ قَالَ نَهَى رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ يُجَصَّصَ الْقَبْرُ وَأَنْ يُقْعَدَ ‏عَلَيْهِ وَأَنْ يُبْنَى عَلَيْهِ رواه مسلم

ஜாபிர் பின் அப்துல்லா் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : கப்ருகள் காரையால் (சுண்ணாம்புக் கலவையால்) பூசப்படுவதையும், அதன் மீது உட்காருவதையும், அதன் மீது கட்டடம் எழுப்பப்படுவதையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

நூல் : முஸ்லிம் (1765)

عَنْ أَبِي الْهَيَّاجِ الْأَسَدِيِّ قَالَ قَالَ لِي عَلِيُّ بْنُ أَبِي طَالِبٍ أَلَا أَبْعَثُكَ عَلَى مَا بَعَثَنِي عَلَيْهِ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنْ لَا تَدَعَ تِمْثَالًا إِلَّا طَمَسْتَهُ وَلَا قَبْرًا ‏مُشْرِفًا إِلَّا سَوَّيْتَهُ   رواه مسلم

அபுல்ய்யாஜ் அல்அசதீ அவர்கள