மார்ச் தீன்குலப்பெண்மணி

மலிவு விலை சிற்றுண்டிகள்

இந்தியாவில் விலைவாசி உயர்வு வரலாறு காணாத வகையில் உயர்ந்துள்ளது. இதை ஆளும் கட்சிகள் கூட மறுக்கமுடியவில்லை. இந்த விலைவாசி உயர்வால் ஏழை, நடுத்தர வர்க்கத்தினர் பெரும் பாதிப்புக்கு உள்ளாகியுள்ளனர். வருமானத்திற்கு மேல் ஏற்படும் அத் தியாவசிய செலவுகளை ஈடுகட்ட முடியாமல் தவிக்கும் நேரத்தில் மக்களுக்கு நன்மை செய்ய வேண்டுமென்ற எண்ணத்தில் மலிவு விலை சிற்றுண்டிகளை தமிழக முதல்வர் திறந்துள்ளார்.

சென்னை மாநகரில் வாழும் ஏழை மக்கள், கூலிப்பணியாளர்கள். ஓட்டுனர்கள், பாரம் தூக்குபவர்கள், பணி நிமித்தமாக சென்னை வந்து செல்பவர்கள் என அனைவரும் உணவை, மலிலி வு விலையில் பெறும் வகையில், சென்னை முழுவதும், 1,000 மலிலி வு விலை சிற்றுண்டி உணவகங்களை துவங்க, முதல்வர் ஜெயலலிலி தா உத்தரவிட்டார்.

இத்திட்டத்தின்படி, வார்டுக்கு ஒரு உணவகம் வீதம், 200 உணவகங்கள் துவக்கப்படுகின்றன. இதன் ஒரு பகுதியாக, சென்னை மாநகராட்சியில் உள்ள, 15 மண்டலங்களிலும், மண்டலத்திற்கு ஒன்று என, 15 உணவகங்கள் துவக்கப்பட்டன.

ஒரு இட்லிலி ஒரு ரூபாய், தயிர் சாதம் மூன்று ரூபாய், சாம்பார் சாதம் ஐந்து ரூபாய்க்கு கிடைக்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது. இன்றைய உணவகங்கள் அடிக்கும் கொள்ளைக்கு அளவில்லாத வகையில் இருக்கும் போது இந்த அறிவிப்பு நிச்சயமாக ஏழைகளுக்கு மகிழ்ச்சியை அளிக்கும் என்பதில் சந்தேகமில்லை. அதே நேரத்தில் அந்த உணவுகள் தரமானதாகவும் சுகாதாரமானதாகவும் இருக்கும் வரை இந்த ஏற்பாடு சிறந்ததே.

ஆனால் இதுபோன்ற அறிவிப்புகள் குறைந்த நாட்கள் வரையே செயல்படுத்தப்படுகின்றன. அல்லது தரமற்ற முறையில் தயார் செய்து கொடுத்து மக்களே வெறுக்கும் நிலைக்கு கொண்டுவந்துவிடுகின்றனர்.

மம்தா பானர்ஜி ரயில்வே மந்திரியாக இருந்த போது ஜனதா சாப்பாடு என்ற திட்டத்தை கொண்டுவந்தார்.

7 பூரி, 150 கிராம் உருளைகிழங்கு மசால், ஊறுகாய், ஒரு மிளகாயுடன் பத்து ரூபாய்க்கும், 300 கிராம் எடையுடன் புளி, எலுமிச்சம், தயிர், சாம்பார், தக்காளி சாதம், 13 ரூபாய்க்கும் விற்கப்பட்டது. இது பெரிய ரயில் நிலையங்களில் மட்டும் வழங்கப்பட்டது.

பின்னர் ஜனதா சாப்பாடு விலை உயர்த்தப்பட்டது. 7 பூரி, உருளை கிழங்கு மசால் அதே பத்து ரூபாய்க்கும், 300 கிராம் எடையுள்ள சாம்பார், தயிர், தக்காளி சாதம், 15 ரூபாய், புளி, எலுமிச்சம் சாதம், 16 ரூபாய்க்கு விற்கப்பட்டது.

தற்போது ஜனதா சாப்பாடு விலை மேலும் அதிகரிக்கப்பட்டுள்ளது. 7 பூரி, மசால் கிழங்கு அதே பத்து ரூபாய், தயிர் சாதம்லி17, சாம்பார் சாதம்லி19, தக்காளி சாதம்லி13, எலுமிச்சம் சாதம்லி18, புளி சாதம்லி20 ரூபாய் என விற்கப்படுகிறது.

குறைந்த அளவில் தயார் செய்வதால் குறைந்த நேரத்திலேயே விற்று தீர்ந்துவிடுகிறது. எல்லா மக்களுக்கும் இதன் பயன்கிடைப்பதில்லை. எல்லா ரயில் நிலையங்களிலும் குறிப்பாக ரயில்பெட்டிகளில் தயார் செய்யப்படும் உணவுகள் குறைந்த விலைக்கு கொடுத்தால் நன்றாக இருக்கும். ரயில் பெட்டிகளில் தயார் செய்யப்படும் உணவுகள் மிக குறைந்த அளவு, அதே நேரத்தில் அதிகவிலைக்கு விற்கப்படுகிறது. மேலும் டீ,காஃபி போன்றவைகள் சுடுதண்ணீர் போன்றே இருக்கிறது.

இதே போன்ற நிலை இந்த சிற்றுண்டிகளுக்கும் வந்துவிடக்கூடாது.

இதைபோன்று நீண்ட தூரம் செல்லும் பேருந்துகள் நிறுத்தும் உணவகங்களின் தரம் மற்றும் கட்டணங்களை அரசு கவனித்தால் நன்றாக இருக்கும்.

தமிழகத்தில் நீண்ட தூர பேருந்து சேவையில் அரசு விரைவு போக்கு வரத்துகழகம் மற்றும் தமிழ்நாடு அரசுப்போக்குவரத்து கழக பேருந்துகளும் செயல்படுகின்றன. இது தவிர்த்து தனியார் ஆம்னி பேருந்துகள் என தினசரி லட்சக் கணக்கான பயணிகள் செல்கின்றனர்.

 
பயணக் களைப்பில் பசியாறவும், களைப்பு மற்றும் உடல் சோர்வைப் போக்கவும் சாலையோர உணவகங்களில் பேருந்துகள் நிற்பதுண்டு. தேர்வு செய்ய வேறு வாய்ப்பு பயணிகளுக்கு இல்லாதபோது அதிகமான விலைகொடுத்து டீ, காபி, டிபன், குளிர்பானங்கள் வாங்குவதும், புலம்பிக் கொண்டே தரமோ சுவையோ இல்லாத உணவுவகைகளை சாப்பிடவும் நேர்கிறது. குறிப்பிட்ட உணவகங்களில் குறிப்பிட்ட பேருந்துகள் நிற்பதற்கு காரணம் அங்கு ஓட்டுநர், நடத்தனர்களுக்கு இலவசமாக டீ, காபி, டிபன் தருவது மட்டுமே என்பது ஊரறிந்த ரகசியம். இதனை முடிவுக்கு கொண்டு வருவதாகவும், இதன் மூலம் அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் பார்க்கிறோம் என்றும் கழகத்தின் வணிகப்பிரிவுகள் களமிறங்கின.

டெபாசிட் தொகை ரூ.10 லட்சம் முதல் 12 லட்சம் வரை செலுத்த வேண்டும். தினசரி குறிப்பிட்ட பேருந்துகள் அந்தந்த கடைகளில் நிறுத்தப்படும். ஒரு வண்டிக்கு ரூ.40, ரூ.45, ரூ.55 என ஏதோ ஒரு கணக்கில் மாதாந்திர தொகை கட்டணமாக செலுத்த வேண்டும் என்று வரையறுத்தனர். கடந்த 2012 ஜனவரி 10 அன்று இந்த அறிவிப்பு வெளியானது. பின்னர் பிப்ரவரி 10 முதல் கறாராக அமல்படுத்தப்படுவது என்ற பெயரில் உணவகங்களில் கட்டாயம் பேருந்துகளை நிறுத்த வேண்டும் என உத்தரவிடப்பட்டது.

அரசுப்போக்குவரத்துக் கழகத்திற்கு வருமானம் தானே என்று பார்த்தால், அவை முழுவதும் பயணிகள் பாக்கெட்டையே பதம் பார்க்கிறது. ஏற்கனவே பஸ்கட்டண உயர்வால் சுமார் 80 சதவீதம் கூடுதலாகச் செலவிடும் பயணிகள் தலையில் உணவகங்களும் விலை ஏற்றி அதிகாரப்பூர்வமாய் இப்போது கொள்ளையடிக்கிறார்கள்.

 
உணவகத்தில் விலைபட்டியல் கிடையாது, தரமான உணவுகள் கிடையாது மேலும் கட்டணம் அவர்கள் விருப்பத்திற்கு ஏற்ப நிர்ணயிக்கப்படுகிறது. இவற்றை கவனத்தில் கொண்டு முதல்வர் அவர்கள் நியாயமான கட்டணத்தில் உணவுகள் தருவதற்கு ஏற்பாடு செய்தால் மக்கள் மகிழ்ச்சி அடைவார்கள்.
 
கொள்கை பேசும் அத்தியாயம்

அத்தியாயத்தின் பொருள் :

இந்த அத்தியாயத்தின் உள்ளே இருக்கிற விபரம் என்னவெனில்,
1. அல்லாஹ்வின் உதவி உனக்குக் கிடைக்கும். 2. மக்கா வெற்றி கிடைக்கும். 3. தனித்தனியாக இல்லாமல் கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தைத் தழுவார்கள்.

அல்லாஹ்வின் வேதத்தை நிரூபிக்கும் அத்தியாயம்

அல்லாஹ்வின் வேதம் என்பதை நபிகள் நாயகம் காலத்தில் நிரூபித்த அத்தியாயம் இது. எப்படியெனில், இந்த அத்தியாயம் ஹிஜ்ரி எட்டிலோ அல்லது அதற்கு முன்னாலோ அதாவது மக்கா வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்னாலேயே அருளப்பட்டிருக்க வேண்டும். இந்த அத்தியாயம் அருளப்பட்டு நபியவர்கள் இரண்டு ஆண்டுகள் உயிருடன் வாழ்ந்தும் இருக்கிறார்கள். நபியவர்களுக்கு இந்த அத்தியாயம் இறங்கியதிலிலி ருந்து மரணத்திற்கும் இடையில் இரண்டு ஆண்டுகள் இருந்தன. அதில் மக்கள் இஸ்லாத்தில் கூட்டம் கூட்டமாக சேரவில்லை என்றால், இஸ்லாம் பொய் என்றாகியிருக்கும். எனவே இதுபோன்ற விசயத்தை சொந்தமாக இட்டுக்கட்டிச் சொல்வதாக இருப்பின், இவ்வளவு பெரிய அறிவிப்பை ஒருவரால் தைரியமாகச் சொல்லவே முடியாது.

அப்படி நபியவர்கள் இந்த அத்தியாயத்தின் மூலம் சொன்ன இரண்டு முக்கிய செய்தி, எந்த ஊர்வாசிகள் என்னை ஊரை விட்டு விரட்டியடித்தார்களோ என்னிடம் பலமுறை போர் செய்ய வந்தார்களோ அந்த ஊரை (மக்காவை) வெற்றி கொள்வேன் என்கிற முன்னறிவிப்பும், அத்துடன் வெற்றி கொள்வதோடு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் இணைவார்கள் என்றும் பிரகடனப்படுத்தினார்கள். ஒருவேளை நபிகள் நாயகம் சுயமாகச் சொல்லியிருந்து அப்படிச் சொன்னதைப் போன்று எதுவும் நடக்காமல் இருந்திருந்தால், அன்றைக்கே இஸ்லாம் ஒன்றுமில்லாமல் போயிருக்கும்.

ஒருவேளை நபிகள் நாயகத்தின் மரணத்திற்கு முன்னால் மக்கா வெற்றி கொள்ளப்படாமலும் அதன் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுவதும் நடக்காமல் இருந்திருந்தால் ஏற்கனவே இஸ்லாத்தை ஏற்றவர்களும் இதனால் வெளியேறியிருப்பார்கள்.

எனவே இந்த முன்னறிவிப்புச் செய்தியை அல்லாஹ்தான் சொன்னான் என்பதற்கு இந்த அத்தியாயம் தெளிவான சான்றாக அமைந்திருக்கிறது. மேலும் முஹம்மது நபியவர்கள் இந்த திருக்குர்ஆனைச் சொந்தமாக இட்டுக் கட்டவில்லை. இறைவன்தான் அவர்களுக்கு இதை அருளியுள்ளான் என்பதையும் மேலும் முஹம்மது நபியவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட இறுதித் தூதர்தான் என்பதையும் இந்த அத்தியாயம் மெய்ப்பிக்கிறது.

எனவே நபியவர்கள் வாழ்நாளில் சொன்னவைகளும் அவர்களது மரணத்திற்குப் பின்னால் நடக்கும் என்றும் சொன்னவைகளும் நடந்து கொண்டே வருவதினால்தான் இன்றைய காலம் வரைக்கும் இஸ்லாம் நிலைத்து நிற்பதற்கு ஒரு காரணம் என்பதை விளங்கிக் கொள்ளவேண்டும்.

ஆக, நபியவர்களுக்கு இந்த வசனம் இறங்கிய மிக குறுகிய காலத்திலேயே மக்காவை வெற்றி கொள்கிறார்கள். அதே போன்று, கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தை நோக்கி வந்தார்களா? என்று இஸ்லாமிய வரலாற்றை ஆய்வு செய்தால், ஹிஜ்ரி ஒன்பதாவது (9) வருடத்திற்கு ஸனத்துல் உஃபூத் என்று சொல்லுவார்கள். அதற்கு அர்த்தம் கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுதல் என்று அர்த்தம்.

நஸ்ரு : அத்தியாத்திற்கு முன் அத்தியாயத்திற்குப் பின் இந்த அத்தியாயத்தின் முன்னறிவிப்பு அறிவிக்கப்படுவதற்கு முன் இஸ்லாத்தை ஏற்றவர்களின் எண்ணிக்கையுடன் இந்த அத்தியாயம் அறிவித்த முன்னறிவிப்பான மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பிறகு நபியவர்கள் மரணிக்கும் வரையிலுள்ள இடைப்பட்ட அந்த இரண்டு ஆண்டுகளில் இஸ்லாத்தை மக்கள் ஏற்றுக் கொண்டது பல நூறு பல ஆயிரம் மடங்கு அதிகமாக இருந்தது.

அதாவது இந்த இதா ஜாஅ என்ற அத்தியாயம் இறங்கும் வரைக்கும் அங்கொன்றும் இங்கொன்றுமாகத்தான் இஸ்லாத்தை ஒரு நபர் இரண்டு நபருமாகத்தான் ஏற்றுக் கொண்டார்கள். நாமாகத் தேடிப் போய்தான் சொல்ல வேண்டும். நபியவர்கள் மக்காவில் வாழ்ந்த 13 வருடமும் பிறகு மதினாவிற்கு வந்த 8 வருடங்களிலும் நபியவர்கள் பிரச்சாரத்திற்கு சில தோழர்களைத் தேர்ந்தெடுத்து அனுப்புவார்கள். உதாரணத்திற்கு முஆத் பின் ஜபல், ஜஃபர் பின் அபீதாலிலி ப், போன்றவர்களைச் சொல்லலாம்.

அப்படி அனுப்பப்பட்டவர்கள் தங்களது பகுதியில் இஸ்லாத்தைச் சொல்லுவார்கள். அவர்கள் அடி உதை வாங்குவார்கள். பிறகு ஒன்றும் இரண்டுமாய் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுவார்கள். இப்படித்தான் மக்காவிலிருந்து மதினாவிற்கு வந்த முதல் 8 வருட காலமும் மக்கா வாழ்கையும் இருந்தது.

ஆனால் இந்த அத்தியாயம் இறங்கிய பிறகு நபியவர்கள் மரணிக்கும் வரையிலுமுள்ள இரண்டு ஆண்டுகளில், மக்கள் கூட்டம் கூட்டமாக கோத்திரம் கோத்திரமாக வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள். இதற்கு ஆதாரமாகச் சொல்வதாக இருப்பின், ஹள்ரமவ்த் என்கிற பகுதியிலுள்ள மக்கள் வாயில் இப்னு ஹ‚ஜ்ர் என்பவரது தலைமையில் இஸ்லாத்தைத் தழுவினார்கள். இப்படி இவர்கள் இஸ்லாத்தை ஏற்ற சம்பவம் நடந்த ஆண்டு ஹிஜ்ரி ஒன்பதுதான். அதே போன்று பனூ தமீம் என்கிற பெயருடைய கூட்டம் அவர்கள் இஸ்லாத்தைத் தழுவியதும் ஹிஜ்ரி ஒன்பதில்தான். அதேபோன்று நஜ்ரான் என்கிற பகுதியிலிருந்தும், பனூ ஹனீஃபா கூட்டம், அப்துல் கைஸ் கூட்டம், இப்படி இதுபோன்று மக்காவையும் மதினாவையும் சுற்றியிருக்கிற அனைத்து கோத்திரங்களும் கிளைக் கோத்திரங்களும் குடும்ப வம்சத்தினர்களும் ஊர்வாசிகளும் கிராம மற்றும் நகரவாசிகளும் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளுகிற சம்பவங்கள் ஹிஜ்ரி ஒன்பதில்தான் நடக்கிறது. இவர்களில் யாருக்கும் போய் சொல்லாமலே அவர்களாகவே தானாகவே முன்வந்துதான் இஸ்லாத்தை ஏற்கின்றனர் என்பதையும் இஸ்லாமிய வரலாற்றில் நம்மால் பார்க்க முடிகிறது.

எனவே நபியவர்களின் மரணத்திற்கு முன்னுள்ள கடைசி இரண்டு வருடத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியை, நபியவர்களின் மக்கா மதீனா வாழ்க்கையின் 21 வருட வளர்ச்சியுடன் ஒப்பிட்டால் கடைசி இரண்டு வருடங்களில் ஏற்பட்ட வளர்ச்சிதான் மிகப் பெரியது என்று சொல்லிவிடலாம்.

எந்த அளவிற்கென்றால், யமன், பஹ்ரைன் போன்ற பல்வேறு குட்டி நாடுகளாக இன்று இருக்கக் கூடிய அரேபிய தீபகற்பகங்கள் அனைத் துமே இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டது, நபியவர்களின் கடைசி இரண்டு ஆண்டுகளில்தான். இன்னும் கூடுதலாகச் சொல்வதாக இருப்பின் கடைசி இரண்டு வருடம் என்று கூட சொல்ல முடியாது. ஏனெனில் நபியவர்கள் ஹிஜ்ரி 10 வது ஆண்டில் ரபிய்யுல் அவ்வலில் நபியவர்கள் மரணித்து விடுகிறார்கள். அதன்பிறகு அந்த ஆண்டில் இன்னும் எட்டு மாதங்கள் மீதமிருக்கின்றன. அப்படியெனில் ஹிஜ்ரி ஒன்பதும் ஹிஜ்ரி பத்தில் நான்கு மாதங்களும் என்று கணக்கிட்டால் இந்த அத்தியாயம் அருளப்பட்டு சுமார் 16 மாதங்களில்தான் இஸ்லாம் தாறுமாறாக வளர்ந்தது எனலாம்.

இதை நாம் சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும். நபியவர்களின் அந்தக் காலகட்டத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பது கற்பனையில் எட்டாத செய்தியாக இருந்தது. ஏனெனில் அன்றைய காலத்தில் செய்யப்பட்ட பிரச்சாரத்தின் நிலையையும் மக்கள் இருந்த நிலையையும் கவனித்துப் பார்த்தால், யாராவது ஒருவர் ஒரு சமூகத்தில் போய் சொல்லுவார்கள். அவர்கள் அவரை அடித்து உதைப்பார்கள். அதில் ஒருவரோ இருவரோ இஸ்லாத்தை ஏற்பார்கள். பிறகு இன்னொருவர் அங்கு போய் சொல்லுவார். அவரும் அதைப் போன்றே பழிவாங்கப்படுவார். பிறகு ஒருவரோ இருவரோ இஸ்லாத்தை ஏற்பார்கள். இப்படித்தான் அன்று நடந்துகொண்டிருந்தது. அவ்வாறு இருக்கும் போது மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்பார்கள் என்று எப்படி கற்பனை செய்ய முடியும்? நிச்சயமாக முடியாதுதான்.

இந்நிலையில்தான் இந்த அத்தியாயம் எதிர்பார்க்க முடியாத ஒரு சூத்திரத்தை அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் அஃப்வாஜன் என்று கூட்டம் கூட்டமாக மக்கள் இஸ்லாத்தில் நுழைவார்கள் என்று முன்னறிவிப்பாகச் சொல்லுகிறான். இப்படிக் கூட்டம் கூட்டமாக வருவதற்கு ஒரு தத்துவார்த்த ரீதியான காரணமும் கூட இருக்கிறது. இவ்வளவு காலத்திலும் இல்லாமல் கடைசி இரண்டு வருடத்தில் மட்டும் ஏன் மக்கள் கூட்டம் கூட்டமாக வரவேண்டும்? என்பதை சிந்தித்தால் நாம் விளங்கிக் கொள்ளலாம்.

கூட்டம் கூட்டமாக வந்ததின் மர்மம் என்ன?

அரேபிய மக்களிடம் ஒரு மனநிலை இருந்தது. நபிகள் நாயகம் இறுதித் தூதராகத் தேர்ந்தெடுப்பதற்கு முன்பாகவே கஅபா ஆலயத்தை மிகவும் புனிதமானதாக அரேபியர்கள் அனைவருமே கருதிவந்தனர். இப்ராஹீம் கட்டிய அந்த ஆலயத்தின் புனிதத் தன்மை பற்றி சரியாக விளங்கியிருக்காவிட்டாலும், இன்று நாம் செய்வதைப் போன்று ஹஜ் செய்யாமல் தவறான முறையில் ஹஜ் செய்து வந்தார்கள். நிர்வாணமாகவும் கைதட்டிக் கொண்டும் ஹஜ் என்று தவறாக விளங்கி பல்வேறு கிறுக்குத் தனங்களை செய்து வந்தனர். இருப்பினும் அந்த கஅபா ஆலயத்திற்குரிய மரியாதையும் மதிப்பும் அரபு மக்கள் அனைவரிடமும் இருக்கத்தான் செய்தது. அதில் முக்கியமான ஒரு நம்பிக்கைதான், இந்த கஅபா ஆலயம் யார் கையில் இருக்கிறதோ அவர்கள்தான் சத்தியவாதி என்றும் அதை அசத்தியவாதி வெற்றி கொள்ள முடியாது என்றும் விடாப்பிடியாக நம்பினார்கள்.

இப்படி கஅபாவை அளவுக்கதிகமாக அரேபியர்கள் நம்புவதற்குக் காரணம், கஅபா ஆலயத்தை இடிப்பதற்கு படைதிரட்டி வந்த ஆப்ரஹா மன்னனும் அவனது படைகளும் சவக்குழியாக்கப்பட்டார்கள் என்கிற ஒரு நிகழ்ச்சிதான் காரணம்.

கஅபா என்ற ஆலயத்தில் மக்கள் ஒன்று கூடியதும், யமன் என்ற நாட்டில் ஸன்ஆ என்ற ஊரைத் தலைநகராகக் கொண்டு ஆப்ரஹா என்ற மன்னன் ஆட்சி செய்துவந்தான். தற்போது யமன் என்பதை ஏமன் என்று அழைக்கப்படுகிறது. இந்த சம்பவம் குறித்தே ஒரு அத்தியாயம் குர்ஆனில் இருக்கிறது. அது அல்ஃபீல் என்ற அத்தியாயமாகும். இந்த சம்பவத்தை விரிவாக அந்த அத்தியாயத்தின் விளக்கவுரையில் பார்ப்போம்.

இந்த ஆப்ரஹா மன்னன் என்பவன் தன் நாட்டில் ஒரு ஆலயத்தைக் கட்டி வைத்துக் கொண்டான். ஆனால் மக்கள் செல்வாக்கு அதில் இல்லை என்பதைத் தெரிந்து கொண்டவன், கஅபா ஆலயத்தை தரைமட்டமாக்கிட வேண்டும் என்றெண்ணி யானைப் படைகளைத் திரட்டி வருகிறான். அப்போது மக்காவிலிருந்தவர்கள் இந்த மன்னனை எதிர்த்து போர் செய்வதற்கு ஆயத்தமாகவில்லை.

மேலும் மக்கத்து காஃபிர்கள் அல்லாஹ்வை அறவே நம்பாதவர்கள் என்று நினைத்துவிடக்கூடாது. அல்லாஹ்தான் பெரிய கடவுள். இந்த சிலைகளெல்லாம் சிறிய கடவுள்கள் என்று தவறாக நம்பினார்கள். இருப்பினும் கஅபா ஆலயம் அல்லாஹ்விற்குரியது என்றும் எனவே அல்லாஹ் அதைக் காப்பாற்றிக் கொள்வான் என்பதிலும் அசையாத நம்பிக்கை வைத்தனர்.

இருப்பினும் ஆப்ரஹா மன்னின் யானைப் படைகளை சிறிய பறவைகளை அனுப்பி இறைவன் அழிக்கிறான். இந்நிகழ்ச்சியை அரேபியர்கள் நேரடியாகக் காண்கின்றனர். எனவே மக்காவிலுள்ள கஅபா இறைவனுக்குரியது என்பதையும் அதை இறைவனே காப்பாற்றுவான் என்பதையும் ஆழமாக நம்பினர். மேலும் கஅபா ஆலயத்தை தீய சக்திகள் ஒருபோதும் வெற்றி கொள்ளவே முடியாது என்றும் நம்பினர்.

இது அரேபியர்களின் மிக முக்கிய அளவுகோலாகவும் இருந்தது. எனவேதான் இந்த முஹம்மது என்பவர் மக்காவை வெற்றி கொண்டு அதிலுள்ள கஅபா ஆலயத்தை தன் வசப்படுத்திக் கொண்டால் நிச்சயமாக அவர் சத்தியக் கொள்கையில்தான் இருக்கிறார் என்பதை சந்தேகத்திற்கு இடமில்லாமல் நம்பிவிடலாம் என்பதே அரேபியர்களின் தத்துவார்த்தமாக இருந்தது.

எனவே மக்காவும் மக்காவிலுள்ள கஅபாவும் யாரிடம் இருக்கிறதோ அவர்களின் பக்கம்தான் நாம் இருக்க வேண்டும் என்பது அரேபியர்களிடம் உள்ள நம்பிக்கையாக இருந்ததினால் மக்கா வெற்றியை அல்லாஹ் நபிகள் நாயகத்திற்குக் கொடுத்தவுடனேயே அரேபியர்களில் அனைத்துக் கோத்திரத்தாரும் சாரை சாரையாக இஸ்லாத்திற்குள் நுழைந்துவிட்டனர்.

ஏனெனில் ஏற்கனவே மக்காவையும் மக்காவிலுள்ள கஅபா ஆலயத்தையும் கைப்பற்றுவதற்காக வந்த ஆப்ரஹா மன்னனையும் அவனது படைகளையும் இறைவன் அழித்ததைப் போன்று இந்த முஹம்மதையும் அவரது படைகளையும் ஏன் இறைவன் அழிக்கவில்லை. அப்படியெனில் இந்த முஹம்மதுவும் அவரது கூட்டமும் சத்தியவான்கள்தான். இவர்கள் ஆப்ரஹா போன்ற தீய சக்தி கிடையாது என்பதினால்தான் அல்லாஹ் இவர்களை அழிக்கவில்லை என்கிற செய்தியைக் கேள்விப்பட்டதும் அரேபியர்கள் இஸ்லாத்தை சாரை சாரையாக ஏற்றார்கள். எனவே 21 வருடம் பிரச்சாரம் செய்து இஸ்லாத்தை ஏற்றவர்களை விட இந்த கஅபா ஆலயம் வெற்றி கொள்ளப்பட்ட நிகழ்ச்சியினால் இஸ்லாத்தை ஏற்றவர்கள்தான் அதிகமாக இருந்தனர். எனவே அரேபியர்களின் முக்கிய அளவுகோலாக இருந்த கஅபா ஆலயம் நபியவர்களால் கைப்பற்றப் பட்டதினால்தான் தானாக வந்து இஸ்லாத்தை அனைவரும் ஏற்றுக் கொண்டனர். அதனைத்தான் இந்த வசனத்தில் அல்லாஹ் சொல்லுகிறான்.

இந்த அத்தியாயத்தில் இருக்கிற முன்னறிவிப்பும் இதுதான். வரலாற்றுக் குறிப்பும் இதுதான். முன்னாலேயே சொன்னதை வைத்து முன்னறிவிப்பு என்கிறோம். இந்நிகழ்ச்சி நடந்ததினால் அதை வரலாறு என்கிறோம். நபிகள் நாயகத்திற்குப் பின்னால் வாழ்கிற மக்களாகிய நமக்குத்தான் இந்த இரண்டும் இருக்கும். ஆனால் நபிகள் நாயகம் உயிருடன் இருக்கிற போது இந்த வசனம் அருளப்பட்ட காலத்தில் அதில் முன்னறிவிப்பு மட்டும்தான் இருந்தது. அதாவது எந்த வரலாறும் அதில் கிடையாது. அந்த காலத்தில் வாழ்ந்த மக்களின் மனநிலை எப்படியிருந்திருக்கும் என்றால், அல்லாஹ் இப்படி சொல்லியிருக்கிறான். இது எப்போது நடக்கும் என்கிற எதிர்ப்பார்ப்பு இருந்திருக்கும். நடக்காவிட்டால் என்னவாகும் என்கிற பயம்கூட சிலருக்கு இருந்திருக்கலாம். அதை விளங்கிக் கொள்ள வேண்டுமானால் இங்கிருந்து கொண்டே அப்படியே ஹிஜ்ரி எட்டுக்கு திரும்பிச் சென்று பார்ப்போமானால் நமக்கு அந்த சூழ்நிலை புரிந்துவிடும்.

அருளப்பட்ட காலத்தில் வெறுமனே முன்னறிவிப்பாக இருந்தது நபிகள் நாயகத்தின் மரணத்திற்குப் பின் முன்னறிவிப்பாகவும் அந்த முன்னறிவிப்பு நடைபெற்ற வரலாற்று நிகழ்வாகவும் பதிவாகிவிடுகிறது. எனவே இதிலிலிருந்து மக்கா வெற்றியையும் தெரிந்து கொள்கிறோம். மக்காவிலுள்ள கஅபா ஆலயம் நபிகளாரின் கட்டுப்பாட்டுக்குள் வந்ததையும் அதன் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தைத் தழுவியதையும் தெரிந்து கொள்ளமுடிகிறது. இதுதான் இந்த அத்தியாயத்திலிருந்து பெறக்கூடிய விளக்கம்.
 
إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ லி அல்லாஹ்வின் உதவியும் வரும் போது,

وَالْفَتْحُ லி அந்த வெற்றியும் (மக்கா வெற்றியும்) வரும் போது,

வரும் போது என்றால் கிடைக்கும் போது என்று அர்த்தம். தமிழில் வெற்றி கிடைக்கும் என்று சொல்வோம். அரபியில் வெற்றி வந்தது என்ற சொல்லுவார்கள். ஒவ்வொரு மொழிக்கும் ஒருவித நடைமுறை இருக்கும். அதுபோன்றுதான் இதுவும். வெற்றி வரும்போது என்பதனை வெற்றி கிடைக்கும் போது என்று தமிழுக்குத் தகுந்தமாதிரி மொழிபெயர்த்துக் கொள்ளலாம்.

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا லி அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்க்கும் போதும்,

இப்படி இறைவனின் உதவியும் வெற்றியும் கிடைத்து மக்கள் இந்த மார்க்கத்தில் கூட்டம் கூட்டமாக வரும் போது. அதாவது வருவதைப் பார்க்கும் போது,

فَسَبِّحْ லி அப்போது (காணும் போது) போற்றுவீராக! துதிப்பீராக!

بِحَمْدِ رَبِّك லி உமது இறைவனின் புகழை

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ லி உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!

وَاسْتَغْفِرْه லி அவனிடத்தில் மன்னிப்பும் கோருவீராக!

إِنَّهُ كَانَ تَوَّابًا லி அவன் மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான்.

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا லி உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அவனே பாவமன்னிப்பு வழங்குபவனாக இருக்கிறான்.

பொருள்: அல்லாஹ்வின் உதவியும் அந்த வெற்றியும் (மக்கா வெற்றியும்) வரும் போதும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்க்கும் போதும், உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அவனே பாவமன்னிப்பு வழங்குபவனாக இருக்கிறான்.

கொள்கை விளக்கம்

இந்த அத்தியாயத்திலிருந்து நாம் பெறக் கூடிய கொள்கைத் தெளிவு என்னவெனில், மனிதனின் சுபாவம் குறித்த மிக முக்கியமான ஒரு அம்சம் பேசப்படுகிறது. பொதுவாக யாராக இருந்தாலும் ஒரு காரியத்தைத் துவக்கும் போது அதற்காக இறைவனை மிகவும் நெருங்குவான்.

அழுது அழுது இறைவனிடம் பிரார்த்திப்பான். உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், ஒருவர் ஏதேனும் ஒரு வியாபாரத்தை ஆரம்பிக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவர் அந்த வியாபாரத்தைத் துவங்கும் போது இறைவனை நினைப்பார். அதே நபர் ஒரு வருடத்திலோ அல்லது இரண்டு வருடத்திலோ வியாபாரம் தாறுமாறாக வளர்ந்து பெரிய செல்வந்தனாக மாறிவிட்டால், இறைவனையும் அவனது அருளையும் மறந்து, எனது திறமை எப்படி? என்று சட்டையைத் தூக்கிவிட்டுக் கொள்வதை நம்மால் பார்க்க முடிகிறது. இதுவெல்லாம் நமது திறமையின் மூலம் வந்ததாகவும் சொல்லிக் கொள்வதையும் பார்க்கிறோம். இப்படி ஒவ்வொருவரும் ஆரம்பிக்கும் போது இறைவனை நெருங்குபவர்கள், அதில் வெற்றி கண்டதும் எனது திறமையினால்தான், எனது செல்வத்தினால் தான், எனது நிர்வாகத்தினால்தான் என்று இறைவனைப் புகழ்வதை மறந்துவிடுகிறார்கள் அல்லது தனக்குத் தானே தற்பெருமை கொள்வதின் மூலம் இறைவனை நெருங்க மறுக்கிறார்கள்.

எனவே நெருக்கடியான காலகட்டங்களிலெல்லாம் அல்லாஹ்வை நினைக்கிறான் ஒருவன். நெருக்கடியான நிலை நீங்கி கை ஓங்கும் போதெல்லாம் தன்னால்தான் நடந்ததாக நினைக்கிறான் மனிதன்.

ஆக இறைநம்பிக்கை என்ற அடிப்படையில் இல்லாமல் வரலாற்று ரீதியில், மக்கா வெற்றியை ஆராய்ந்தால் அந்த வெற்றிக்குச் சொந்தக்கார ராக நபிகள் நாயகம்தான் இருப்பார்கள். வெறுமனே நேற்று உருவாக்கி இன்று கிடைத்த வெற்றி என்று மக்கா வெற்றியை நினைத்துவிடக் கூடாது. ஏறத்தாழ சுமார் 21 ஆண்டுகளாக கொள்கைப் பிரச்சாரம் செய்து, அதில் பலரது உயிரை இழந்து, பல்வேறு வகையான சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்ட பிறகுதான் இந்த வெற்றி கிடைத்தது என்பதை இலாபகமாக மறந்துவிடக்கூடாது. மேலும் 21 ஆண்டுகளாக பக்குவப்பட்ட தோழர்களை உருவாக்கியதினால்தான் அந்த வெற்றி கிடைத்தது.
 
இந்தக் கருத்தை நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்கிற எவரும் ஒத்துக் கொள்வார். உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின் தி ஹன்டர்டு (நூறு மனிதர்கள்) என்ற புத்தகத்தை எழுதிய மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்துவ வரலாற்றுப் பேராசிரியர், முஹம்மது நபிக்கு முதல் இடத்தைக் கொடுத்துவிட்டு அதைக் கொடுப்பதற்குக் காரணமாக அவரது வெற்றிக்கு அவர் மட்டுமே என்று சொல்லுகிறார். முஹம்மது அவர்களே பிரச்சாரம் செய்தார்கள், அவர்களாகவே பிரச்சனையை எதிர்கொண்டார்கள், அவர்கள்தான் களத்திலும் நின்றார்கள், திட்டமிடுவதும் அவர்கள்தான், ஜனாதிபதியும் அவர்தான், தளபதியும் அவர்தான், சுப்ரீம் கோர்ட் நீதிபதியும் அவர்தான் என்று எல்லாமே அவர்தான் என்று சொல்லுகிறார். மேலும் அவர், மற்ற தலைவர்களின் வெற்றியை ஆராய்ந்தால், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஆலோசகர், நிர்வாகத்தினர், மேலும் பலரது கூட்டு முயற்சிகள் என்று இருக்கின்றன. முஹம்மது நபியின் வெற்றியில் அவருக்கு மட்டும்தான் பங்கு இருக்கிறது. முஹம்மது நபி ஜனாதிபதியாகவும் இருப்பார், யுத்தம் போர் என்று வந்தால் அவரே முதலில் வாள்பிடித்து நிற்கிற முதல் போர் வீரனாகவும் இருப்பார். இதுபோன்ற ஆற்றல்மிக்க மனிதராக நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் நாம் பார்க்கவில்லை. அதனால் தான் அவருக்கு முதல் இடம் என்றும் விவரிக்கிறார்.
 
ஒரு தண்ணீர் பல சுவைகள்

மழை பொழியும் விதத்திலும் சான்று

மழை உண்டாவதில் மட்டுமல்ல, மழை பொழியும் விதத்திலும் இறைவனைப் பற்றிய சான்றுகள் நிறைந்துள்ளன. மேகத்தின் மடை திறந்து மழை கொட்டும் போது ஒட்டுமொத்தமாக ஒரே இடத்தில் பொழிவதில்லை. மழை பொழியும் அளவும்கூட இடத்திற்கு இடம் மாறுபடும். நகரத்தின் ஒரு பகுதியில் மழை கனமாக பொழிந்து கொண்டிருக்கும். அதே நகரத்தின் மற்றொரு பகுதியில் மழை தூரல் மட்டும் விழுந்து கொண்டிருக்கும். இன்னும் சில இடங்களில் மழை நன்றாக பொழிந்து கொண்டிருக்கும் நேரத்தில், அங்கிருந்து அரை கி.மீ தொலைவில் மழையே இல்லாமல் இருக்கும். உதாரணமாக தமிழகம் முழுவதும் மழை பொழிந்தாலும் சென்னையில் பெய்யும் மழைக்கும் தென்காசியில் பெய்யும் மழைக்கும் அளவிலே வித்தியாசம் இருக்கும். இந்த தருணத்தில், பெய்யும் மழையின் அளவை செ.மீ போன்ற அளவீடுகள் மூலமாக மனிதர்களால் அளப்பதற்கு மட்டுமே இயலுமே தவிர, எல்லா இடத்திலும் ஒரே அளவாக அவர்களால் அதை பொழிய வைக்க முடியாது. இவ்வாறு இடத்திற்கு இடம் மழை பொழிவதில் வேறுபாடுகள் இருப்பதற்கும், சில இடங்களில் மழையே இல்லாமல் இருப்பதற்கும் காரணம் என்ன? இறைவன், தான் விரும்பியவர்களுக்கு மழையை தருகிறான்; விரும்பாதவர்களுக்கு மழையைத் தருவதில்லை என்பதுதான் நிதர்சனம். இதோ திருமறையில் இறைவன் பேசுவதை கேளுங்கள்.

"வறண்ட பூமியை நோக்கி தண்ணீரை நாமே ஓட்டிச் செல்கிறோம்''  என்பதை அவர்கள் காணவில்லையா? அதன் மூலம் பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அதிலிருந்து அவர்களும், அவர்களது கால்நடைகளும் சாப்பிடுகின்றனர். அவர்கள் சிந்திக்க மாட்டார்களா?

(அல்குர்ஆன் 32 : 27)

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்கு வதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா? அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்! வானத்திலிருந்து அதில் உள்ள (பனி) மலைகளிலிருந்து ஆலங்கட்டியையும் இறக்குகிறான். தான் நாடியோருக்கு அதைப் பெறச் செய்கிறான். தான் நாடியோரை விட்டும் திருப்பி விடுகிறான்.

(திருக்குர்ஆன் 24 : 43 முதல் 45 வரை)

மழையால் கிடைக்கும் பசுமை

பூமியின் பரப்பிலே பல்வேறு விதமான பகுதிகள் இருக்கின்றன. ஒரு பகுதி காடுகள், வயல்கள், பூஞ்சோலைகள் நிறைந்து பசுமையாக இருப்பதற்கும் மற்றொரு பகுதி பாலைவனம், தரிசுநிலங்கள் கொண்டு வறண்டதாக காணப்படுவதற்கும் முக்கிய அடிப்படையே அங்கு பொழியும் மழையாகும். மழைப் பொழிவின் அளவிற்கேற்ற அந்த பகுதிகள் பசுமையாக இருக்கின்றன. இவ்வாறு இறைவன் நமது சுகபோகமான நிம்மதியான வாழ்விற்காக மழையின் மூலம் வடிவத்திலும் சுவையிலும் வேறுபடும் தாவரங்களை செடிகொடிகளை முளைக்கச் செய்கிறான். இந்த நடமாடாத ஜீவராசிகள் உருவாவதற்கும் உயிர்வாழ்வதற்கும் மழை முக்கியம் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆதலால்தான், மழையின் மூலம் விளைச்சல்கள் விளைந்து பூமியை பச்சைப் போர்வை போர்த்தியது போன்று மாறுவதிலும் சான்றுகள் இருக்கின்றன என்றும், இதை நானே செய்கிறேன் என்றும் இறைவன் கூறுகிறான்.

தானியத்தையும், தாவரத்தையும், அடர்த்தியான சோலைகளையும் நாம் வெளிப்படுத்துவதற்காக கார் மேகங்களிலி ருந்து அதிகமான நீரை இறக்கி வைத்தோம்.
 
(திருக்குர்ஆன் 78 : 14)

அவனே வானிலிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம். அதிலிலிருந்து பசுமையான பயிர்களை வெளிப்படுத்துகிறோம். அடுக்கி வைக்கப்பட்ட தானியத்தை அப்பயிர்களில் வெளிப்படுத்துகிறோம். பேரீச்சை மரத்தின் பாளைகளில் தொங்கும் பழக்குலைகளையும், திராட்சைத் தோட்டங்களையும், ஒலி வமரம், மாதுளை ஆகியவற்றையும் (வெளிப்படுத்துகிறோம்.) அவ்விரண்டும் (தோற்றத்தில்) ஒன்றுபட்டதாகவும், (தன்மையில்) வேறுபட்டதாகவும் உள்ளன. அது பலன் கொடுக்கும் போது அதன் பலனையும், அது கனிவதையும் கவனியுங்கள்! நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு இதில் பல சான்றுகள் உள்ளன.
(அல்குர்ஆன் 6 : 99)

நீங்கள் பார்க்கக் கூடிய தூண் இன்றி வானங்களைப் படைத்தான். உங்களைச் சாய்த்து விடாதிருக்க பூமியில் முளைகளைப் போட்டான். அதில் ஒவ்வொரு உயிரினத்தையும் பரவச் செய்தான். வானிலிலி ருந்து தண்ணீரை இறக்கினோம். அதில் மதிப்பு மிக்க ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்தோம்.
 
(திருக்குர்ஆன் 31 : 10)

அல்லாஹ்வே வானத்திலிலி ருந்து தண்ணீரை இறக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட கனிகளை வெளியாக்கினோம். மலைகளில் வெண்மையும், சிவப்பும் மாறுபட்ட நிறங்களைக் கொண்டதுமான பாதைகள் உள்ளன. கருப்பு நிறமுடையவைகளும் உள்ளன.
 
(திருக்குர்ஆன் 35 : 27)

அல்லாஹ் வானத்திலிருந்து நீரை இறக்கி அதைப் பூமியில் ஊற்றுக்களாக ஓடச் செய்கிறான் என்பதை நீர் அறியவில்லையா? பின்னர் அதன் மூலம் மாறுபட்ட நிறங்களைக் கொண்ட பயிர்களை வெளிப்படுத்துகிறான். பின்னர் அது காய்ந்து, மஞ்சள் நிறமாக ஆவதைக் காண்கிறீர். பின்னர் அதைச் சருகுகளாக ஆக்குகிறான். அறிவுடையோருக்கு இதில் அறிவுரை உள்ளது.

(திருக்குர்ஆன் 39 : 21)

வானங்களையும், பூமியையும் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கடலிலி ல் செல்லும் கப்பலி லும், அல்லாஹ் வானத்திலிருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவ விட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 2 : 164)

இன்னும் சில பகுதிகளில் மழை பொழிந்தாலும் அதன் மூலம் கடுகளவும் செடி கொடிகள் முளைக்காமல் பொட்டல் காடுகளாகவே இருப்பதை பார்க்கிறோம். உதாரணமாக, வளைகுடா நாடுகள் போன்ற பாலைவனங்கள் நிறைந்த பகுதிகளில் அரிதாக அடை மழை பொழிந்தாலும் அதன் மூலம் அதிகமான தாவர இனங்கள் உற்பத்தியாகாமல் இருப்பதை பார்க்கிறோம். இதற்கு காரணம், மழையை கொடுக்கும் இறைவன்,

அந்தப் பகுதிகளில் தான் விரும்பும் மாற்றத்தை ஏற்படுத்துவதற்கு ஏற்ப அந்த மழையின் தன்மையை ஆக்குகிறான். ஆகையால் தான், இறைவன், திருக்குர்ஆனிலே மழையைப் பற்றி பேசும் இடங்களில் எல்லாம் மழையின் மூலம் ஏற்படுத்தும் மாற்றத்தையும் எடுத்துச் சொல்கிறான். இறைவன் நினைத்தால் மழையை கொடுத்தும் வெட்ட வெளியாகவே நமது பகுதிகளை வைத்திருக்க முடியும். இதன் மூலமும் பஞ்சத்தை வறுமையை கொடுக்க இயலும். இதை பின்வரும் செய்திகள் மூலமாக விளங்கிக் கொள்ளலாம்.

தாவரங்கள், தனது இறைவனின் விருப்பப்படி நல்ல பூமியில் வெளிப்படுகிறது. கெட்ட பூமியில் அற்பமானதைத் தவிர வேறெதுவும் வெளிப்படாது. நன்றி செலுத்தும் சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளை விளக்குகிறோம்.

(திருக்குர்ஆன் 7 : 57, 58)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மழை பொய்த்துவிடுவதற்குப் பெயர் பஞ்சமன்று. மாறாக, பஞ்சம் என்பது, மழை பெய்து கொண்டேயிருந்தும் பூமியில் (புற்பூண்டுகள்) எதுவும் முளைக்காமலிருப்பதாகும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி ),
 
ஆதாரம் : புகாரி (5563)

உயிர்வாழ உதவும் மழை

மழை பொழிவதாலேயே தாவரங்கள் விளைந்து நமக்கு உணவு கிடைக்கின்றன. தாவரவகைகள் முளைக்காமல் இருந்தால் நாமெல்லாம் உணவில்லாமல் தவிக்கும் பரிதாபமான நிலை ஏற்பட்டுவிடும். இதுமட்டுல்ல, சாப்பிடுவதற்கு உணவும் பருகுவதற்கு நீரும் கிடைக்காமல் விலங்கி னங்கள் மடிந்துவிடும். நமக்கு மாமிச உணவும் கிடைக்காது. தாவர உணவு, மாமிச உணவு இரண்டும் இல்லாமல் நீரை குடித்துக் கொண்டு உயிர்வாழ்ந்து விடலாம் என்று நினைத்தாலும் அதற்கு மழை பொழிவது அவசியம். சுருக்கமாக சொல்வதெனில் உயிர்வாழ உணவும் குடிநீரும் நமக்கு வேண்டுமாயின் கண்டிப்பாக மழை பொழிந்தே தீரவேண்டும். ஆகையால்தான், மழை கொடுப்பதைப் பற்றி கூறும்போது வானிலிலிருந்து உணவை கொடுக்கிறோம் என்று இறைவன் குறிப்பிடுகிறான்.

அவனே தனது சான்றுகளை உங்களுக்குக் காட்டுகிறான். வானத்திலிருந்து உணவை உங்களுக்கு இறக்கி வைக்கிறான். திருந்துபவர் தவிர மற்றவர் படிப்பினை பெறுவதில்லை.

(திருக்குர்ஆன் 40 : 13)

"வானத்திலிருந்தும், பூமியிலிருந்தும் உங்களுக்கு உணவளிப்பவன் யார்? செவிப் புலனையும், பார்வைகளையும் தன் கைவசம் வைத்திருப்பவன் யார்? உயிரற்றதிலிருந்து உயிருள்ளதையும், உயிருள்ளதிலிருந்து உயிரற்றதையும் வெளிப்படுத்துபவன் யார்? காரியங்களை நிர்வகிப்பவன் யார்?'' என்று கேட்பீராக! அல்லாஹ் என்று கூறுவார்கள். "அஞ்ச மாட்டீர்களா'' என்று நீர் கேட்பீராக!

(திருக்குர்ஆன் 10 : 31)

தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலிருந்து தூய்மையான தண்ணீரை இறக்கினோம். இறந்த ஊரை அதன் மூலம் நாம் உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்த கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை நாம் புகட்டுவதற்காகவும் (மழையை இறக்கினோம்). அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம். மனிதர்களில் அதிகமானோர் (நம்மை) மறுப்போராகவே உள்ளனர்.

(திருக்குர்ஆன் 25 : 48 50)

அவனே வானத்திலிலி ருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. அதன் மூலம் பயிர்களையும், ஒலிவ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.

(அல்குர்ஆன் 16 : 10)

சுவை மிகுந்த மழைநீர்

கடல், ஆறு, குளம் போன்ற பலதரப்பட்ட சுவை கொண்ட நீர் நிலைகளில் இருந்து நீர் ஆவியாக சென்று மேகம் உருவாகி மழையாக வந்தாலும், மழை நீரானது உப்பு இல்லாமல் சுவை மிக்கதாக இருப்பதைப் பார்க்கிறோம்.

இவ்வாறு இருக்கும் மழை நீரின் தன்மையை சிந்தித்தாலேயே இதைக் கொண்டு வரும் இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதை விளங்கிக் கொள்ளலாம். அந்த அருளாளன் நினைத்தால் எங்கும் உப்பு நீரை மழையாக பொழிய வைக்க முடியும். இன்னும் ஏன்? அவனால் அந்த மழையை அழிக்கும் அமில மழையாக இறக்கவும் முடியும். ஆதலால் அவன், தமது கருணையை கொடையை உணர்ந்து தமக்கு தவறாமல் நன்றி செலுத்தும்படி அருள்மறையிலே ஆணையிடுகிறான்.

அவனே வானத்திலி ருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. அதன் மூலம் பயிர்களையும், ஒலிலி வ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.

(அல்குர்ஆன் 16 : 10)

நீங்கள் அருந்தும் தண்ணீரைப் பற்றிச் சிந்தித்தீர்களா? மேகத்திலிலி ருந்து அதை நீங்கள் இறக்கினீர்களா? அல்லது நாம் இறக்கினோமா? நாம் நினைத்திருந்தால் அதை உப்பு நீராக்கியிருப்போம். நன்றி செலுத்த மாட்டீர்களா?

(திருக்குர்ஆன் 56 : 68)

நிலத்தடிநீராக மாறும் மழைநீர்

பூமிப்பந்தின் மேற்பரப்பிலே தண்ணீர் தேங்கியிருப்பது போல் பூமியின் அடியிலும் பெரிய பெரிய ஆறுகளைப் போன்று ஏராளமான தண்ணீரும் சேமிக்க வைக்கப்பட்ட நிலையில் இருக்கிறது. இவ்வாறு நிலத்தின் கீழ்ப்பகுதியில் இருக்கும் நீரைப் பற்றி ஆராம்ப காலத்தில் சரியான அறிவு இல்லாதவர்களாகவே மனிதர்கள் இருந்தார்கள். இந்த நிலத்தடி நீர் கடல் வழியாக பூமிக்கு வருவதாகத் தான் முதலில் நினைத்துக் கொண்டிருந்தார்கள். உண்மையில், ஆகாயத்திலிருந்து பெய்யும் மழை நீரானது ஆங்காங்கே பூமியால் உறிஞ்சப்பட்டு அந்த நீர் தான் பூமிக்கு அடியில் நிலத்தடி நீராக இருந்து கொண்டிருக்கிறது என்று இப்போது கண்டுபிடித்துள்ளார்கள். இந்த உண்மையை தெரிந்த பிறகே, நிலத்தடி நீரைச் சேமிப்பதற்கான பலவிதமான நடவடிக்கைகளையும் மனிதர்கள் மேற்கொள்கிறார்கள். அதற்கான ஆலோசனைகளை உதவிகளை அரசுகள் எடுத்து வருகின்றன. இந்தப் பேருண்மைகளை திருக்குர்ஆன் பின்வரும் இந்த வசனங்களின் மூலம் பல நூறு ஆண்டுகளுக்கு முன்பாகவே தெளிவுபடுத்தி விட்டது. விண்ணிலிருந்து மண்ணில் விழும் மழை நீரை உறிஞ்சுவதற்கு தோதுவாக வீடுகளையும் ஊர்களையும் அமைத்துக் கொள்ள வேண்டும் என்ற மறைமுகமான வழி காட்டுதலை முன்வைத்துவிட்டது.

வானத்திலிலிருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

(திருக்குர்ஆன் 23 : 18 )

"உங்கள் தண்ணீர் வற்றி விட்டால் ஊறி வரும் நீரை உங்களுக்குக் கொண்டு வருபவன் யார் என்பதற்குப் பதில் சொல்லுங்கள்!'' எனக் கேட்பீராக!

(திருக்குர்ஆன் 67 : 30)

வானத்திலிலி ருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள். அதன் மூலம் பேரீச்சை, மற்றும் திராட்சைத் தோட்டங்களை உங்களுக்காக உருவாக்கினோம். அவற்றில் ஏராளமான கனிகள் உங்களுக்கு உள்ளன. அவற்றை உண்ணுகின்றீர்கள்.

(திருக்குர்ஆன் 23 : 18)

மழையெனும் மாபெரும் வாழ்வாதாரம்

நீரின்றி அமையாது உலகு என்பார்கள். நீர்வளம் இல்லாமல் இந்த வையகம் நொடிப்பொழுதும் சரியான முறையில் இயங்காது என்பதை நாம் ஒவ்வொருவரும் அறிந்தே வைத்துள்ளோம். இந்த மழையின் சுழற்சியை இறைவன் நிறுத்திவிட்டால் இந்த பூமியே பொலிவிழந்துவிடும். ஜீவராசிகள் எல்லாம் மண்ணோடு மண்ணாக மடிந்துவிடும். மழை மூலம் கிடைக்கும் நீர் இல்லாத இந்த உலகத்தை கற்பனை செய்வதற்கே மிகக் கோரமாக கொடூரமாக இருக்கும். நாம் வாழ்வதற்கு வழங்கப்பட்டிருக்கும் கொடைகளுள் முக்கியமான ஒன்றாக மழை இருக்கிறது என்பதை நாம் முதலில் புரிந்து கொள்ள வேண்டும். ஆகையால்தான், மனிதர்களுக்குக் கொடுக்கப்படும் வாழ்க்கை வசதிகளின் பட்டியலி ல் இந்த மழையையும் இறைவன் இணைத்துக் குறிப்பிடுகிறான்.

இவர்களுக்கு முன் எத்தனையோ தலைமுறையினரை அழித்திருக்கிறோம் என்பதை இவர்கள் அறியவில்லையா? உங்களுக்குச் செய்து தராத வசதிகளை அவர்களுக்குப் பூமியில் செய்து கொடுத்திருந்தோம்.

அவர்கள் மீது தொடர்ந்து வானத்தை மழை பொழியச் செய்தோம். அவர்களுக்குக் கீழ் ஆறுகளை ஓடச் செய்தோம். அவர்களது பாவங்களின் காரணமாக அவர்களை அழித்தோம். அவர்களுக்குப் பின்னர் வேறு தலைமுறையினரை உருவாக்கினோம்.

(அல்குர்ஆன் 6 : 6)

வாழ்வில் ஏற்றம் தரும் மழை

மழை பொழிவதினால் தான் கடல் ஆறு போன்ற நீர்நிலைங்கள் ஏற்படுகின்றன். மீண்டும் அவற்றில் இருந்து நீர் ஆவியாக சென்று மீண்டும் மழையாக பொழிகின்றது. இப்படி இறைவன் மழையின் சுழற்சியை நடத்துவதின் மூலம் ஏராளமான பயன்கள் மனிதர்களுக்கு கிடைக்கின்றன. குறிப்பாக, இந்த மழை நீர் மனிதனின் விஞ்ஞான வளர்ச்சிக்கு பெரும் துணை புரிகிறது. நீரில் பயணிப்பதற்காக மனிதன் கப்பல் போன்ற சாதனங்களை கண்டுபிடிக்கிறான். நீரிலி ருந்து மின்சாரத்தை தாயாரிக்கிறான்.

பொருளாதாரம் பெருக்கிக் கொள்கிறான். இப்படி எதற்கெல்லாம் மழையை பயன்படுத்துகிறோம்? அதன் மூலம் என்னென்ன பயன்கள் கிடைக்கின்றன? என்பதை பக்கம் பக்கமாக பட்டியல் போட்டுக் கொண்டே போகலாம். இதை இறைவனே இரத்தினச் சுருக்கமாக சில வசனங்களில் தெளிவுபடுத்துவதைப் பார்ப்போம்

இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானிலிலி ருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.

(திருக்குர்ஆன் 45 : 5)

அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிலி ருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப் படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலி ல் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.

(அல்குர்ஆன் 14 : 32)

மனிதன் தனது உணவைக் கவனிக்கட்டும்! நாமே தண்ணீரை (வானிலிருந்து) ஊற்றினோம். பின்னர் பூமியை முறையாகப் பிளந்தோம். உங்களுக்கும், உங்கள் கால்நடைகளுக்கும் பயன்படுவதற்காக தானியத்தையும், திராட்சையையும், புற் பூண்டையும், ஒலிவ மரத்தையும், பேரீச்சை மரத்தையும், அடர்ந்த தோப்புகளையும், கனிகளையும், தீவனங்களையும் அதில் முளைக்கச் செய்தோம்.

(திருக்குர்ஆன் 80 : 24முதல் 32 வரை)

வளரும் இன்ஷா அல்லாஹ்

 
ஹனஃபி மத்ஹப் சட்டநூல் ஹிதாயாவின் தவறுகள்

மனிதன் என்ற அடிப்படையில் ஏற்படும் சிலதவறுகளைக்கூட பூதகரமாக மாற்றி இவர்களின் பேச்சை கேட்கலாமா? அவர்களை பின்பற்றலாமா? என்று தவ்ஹீத் கொள்கைக்கு எதிராக பிரச்சாரம் செய்யும் மத்ஹப்வாதிகள் நடந்து கொள்கிறார்கள். ஆனால் நம்மிடம் ஏற்படும் சிற்சில தவறுகளைவிட மிகப்பெரிய தவறுகளை இவர்கள் மதிக்கும் இமாம்கள் செய்துள்ளார்கள். ஆனால் அவர்கள் செய்யும் மாபெரும் தவறுகள் இவர்கள் கண்களுக்கு தவறாக தெரிவதில்லை. அந்த இமாம்களின் சொற்களையும் அவர்கள் எழுதிய நூல்களையும் ஆதாரமாகக் கொண்டு செயல்படுகிறார்கள். இவர்களின் உண்மை முகத்தை தெளிவுபடுத்தவே இந்த கட்டுரை எழுதப்படுகிறது.

ஹனஃபி மத்ஹபினரின் மிக முக்கிய சட்ட நூலாக கருதப்படும் ஹிதாயா என்ற நூலிலி ல் அவர் சொல்லும் சட்டங்களுக்கு நபிமொழி மற்றும் நபித்தோழர்களின் கூற்றுகளை ஆதாரமாக காட்டுகிறார். ஆனால் காட்டும் பல ஆதாரங்கள் நபிமொழி தொகுப்புகளில் இருக்கவில்லை. இவரின் நூலை ஆய்வு செய்த இமாம் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானி அவர்கள் அத்திராயா ஃபீ அஹாதீஸில் ஹிதாயா என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் நோக்கமே ஹிதாயா என்ற நூலில் இடம்பெறும் செய்திகள் எங்குள்ளது என்பதை ஆய்வு செய்வதுதான். இதை ஆய்வு செய்த ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் 200க்கும் மேற் பட்ட செய்திகளுக்கு ஆதாரம் இல்லை என்பதை குறிப்பிட்டுள்ளார்கள். அவற்றில் சிலதை நாம் இதில் கோடிட்டு காட்டியுள்ளோம்.

(ஹனஃபி மத்ஹபைச் சார்ந்த ஜமாலுத்தீன் அபூமுஹம்மத் அப்துல்லாஹ் பின் யூசுப் (இறப்பு ஹிஜ்ரீ 762) என்பவர் ஹிதாயாவில் உள்ள ஹதீஸ்களின் நிலையை ஆய்வு செய்து நஸ்புர் ராயா ஃபீ அஹாதீஸில் ஹிதாயா என்ற நூலை எழுதியுள்ளார். இந்த நூலின் சுருக்கம்தான் ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் எழுதிய அத்திராயா ஃபீ அஹாதீஸில் ஹிதாயா என்று கூறப்படுகிறது.)

முதலில் ஹனஃபி மத்ஹபின் சட்ட நூலான ஹிதாயாவைப் பற்றி சுருக்கமாக தெரிந்து கொள்வோம்.

ஹனஃபி மத்ஹபின் மிக முக்கியமான சட்ட நூலாக கருதப்படுவது ஹிதாயா என்ற நூலாகும். இந்நூல் இன்றும் ஹனஃபி மத்ரஸாக்களில் படித்துக் கொடுக்கப்படுகிறது.

இந்நூலை அலீ பின் அபீபக்ர் பின் அப்துல் ஜலீல் என்பவர் எழுதியுள்ளார். இவர் ஹிஜ்ரி 511ல் பிறந்து 593ல் இறந்தவர்.

இவர் ஆரம்பத்தில் குதூரீ என்ற நூலையும் அல்ஜாமிவுஸ் ஸகீர் என்ற நூலையும் ஒன்றிணைத்து அத்துடன் அவசியமான சில சட்டங்களை அதிகமாக்கி பிதாயத்துல் முப்ததீ என்ற நூலை தொகுத்தார். பின்னர்

அந்த நூலுக்கு அவரே விரிரையும் எழுதினார். அதற்கு கிஃபாயா என்று பெயரிட்டார். இது எண்பது பாகங்களை கொண்டதாக இருந்தது. பின்னர் இந்த நூலை சுருக்கி 13 ஆண்டுகளில் ஹிதாயா என்ற நூலை உருவாக்கினார்.

(ஆதாரம் : நஸ்புர் ராயா,பாகம் :1, பக்கம் : 14)

அல்லாஹ் விரும்புகிறான் என்பதற்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 28)
18 லி حَدِيث إِن الله يحب التَّيَامُن فِي كل شَيْء لم أَجِدهُ هَكَذَا وَإِنَّمَا الحَدِيث فِي الصَّحِيحَيْنِ عَن عَائِشَة أَن رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ كَانَ يحب التَّيَامُن فِي كل شَيْء الحَدِيث

ஒவ்வொரு விஷயத்திலும் வலது புறத்தில் செய்வதை அல்லாஹ் விரும்புகிறான் என்ற நபி மொழி (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு (அல்லாஹ் கூறியதாக) நான் பெற்றுக் கொள்ளவில்லை. நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு விஷயத்திலும் வலதுபுறத்தில் செய்வதை விரும்புவார்கள் என்றே ஆயிஷா (ரலிலி ) அவர்கள் அறிவிக்கும் செய்தி புகாரி, முஸ்லிலி மில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

ஹதஸ் என்பதற்கு நபிமொழியில் உள்ளதாக கூறும் ஹிதாயா ஆசிரியரின் கூற்றுக்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 30)
19 லி حَدِيث سُئِلَ رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ مَا الْحَدث فَقَالَ مَا يخرج من السَّبِيلَيْنِ لم أَجِدهُ

ஹதஸ் என்றால் என்ன? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்கப்பட்டது. இரண்டு வழிகளில் வெளியேறுவது என்ற நபிமொழி. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

நபிகளார் வாந்தி எடுத்தார்கள் உளூச் செய்யவில்லை என்பதற்கு ஆதாரம் இல்லை

20 - حَدِيث أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قاء فَلم يتَوَضَّأ لم أَجِدهُ

நபி (ஸல்) அவர்கள் வாந்தி எடுத்தார்கள் உளூச் செய்யவில்லை. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

நபிகளார் கடமை என்று கூறினார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 47)
31 லி حَدِيث الْمَضْمَضَة والإستنشاق فرضان فِي الْجَنَابَة سنتَانِ فِي الْوضُوء لم أَجِدهُ

கடமையான குளிப்பின்போது வாய்கொப்பளிப்பதும் நாசிக்கு தண்ணீர் செலுத்துவதும் கடமையாகும். உளூச் செய்யும் போது சுன்னதாகும் என்ற நபிமொழி.(ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

கொதிக்கப்பட்ட இலந்தை இலை என்பதற்கு ஆதாரம் இல்லை

الدراية في تخريج أحاديث الهداية (1/ 55)
قَوْله لِأَن الْمَيِّت يغسل بِالْمَاءِ الَّذِي أَغْلَى فِيهِ السدر بذلك وَردت السّنة لم أَجِدهُ بِقَيْد الغلي

மய்யித்தை இலந்தை இலை கொண்டு கொதிக்கவைக்கப்பட்ட தண்ணீரைக் கொண்டு கழுவப்படும். இவ்வாறு நபிமொழி வந்துள்ளது. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : கொதிக்க வைக்கப்பட்ட என்ற நிபந்தனை வாசகத்தை நான் பெற்றுக் கொள்ளவில்லை.

தூய்மையின் குறைந்த பட்ச அளவு தொடர்பாக ஆதாரம் இல்லை
الدراية في تخريج أحاديث الهداية (1/ 88)
قَوْله رَوَى عَن إِبْرَاهِيم النَّخعِيّ قَالَ أقل الطُّهْر خَمْسَة عشر يَوْمًا لم أَجِدهُ

தூய்மையின் குறைந்த பட்ச காலம் பதினைந்து நாட்களாகும் என்று இப்ராஹீம் நகயீ அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

ஹிதாயா ஆசிரியர் கூறிய நபித்தோழர்கள் இடம்பெறவில்லை
الدراية في تخريج أحاديث الهداية (1/ 121)
125 லி قَوْله قَالَ النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم لا بني أبي مليكَة إِذا سافرتما فأذنا وأقيما لم أَجِدهُ وَإِنَّمَا فِي الصَّحِيحَيْنِ أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ قَالَ ذَلِك لمَالِك بن الْحُوَيْرِث وَابْن عَمه وَقد ذكره المُصَنّف عَلَى الصَّوَاب فِي كتاب الصّرْف

நபி (ஸல்) அவர்கள் அபு முலைக்காவின் இருமகன்களிடம், நீங்கள் பயணித்தால் நீங்கள் இருவரும் பாங்கு சொல்லுங்கள், நீங்கள் இருவரும் இகாமத் கூறுங்கள் என்று கூறினார்கள். (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை. புகாரி, முஸ்லிலி மில் நபி (ஸல்)அவர்கள் மாலி க் பின் ஹுவைரிஸ் (ரலி ) அவர்களிடமும் அவரின் தந்தையின் உடன்பிறந்தவரின் மகனிடமும் கூறியதாகத்தான் இடம்பெற்றுள்ளது. இந்த சரியான கருத்தை நாணயம் மாற்றல் என்ற பாடத்தில் (ஹிதாயா) ஆசிரியரும் கூறியுள்ளார்.

வித்ரு தொழுகையில் முடிக்க வேண்டிய தஸ்பீஹ்
الدراية في تخريج أحاديث الهداية (1/ 147)
176 லி حَدِيث أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ كَانَ يخْتم بالوتر فِي تسبيحات الرُّكُوع وَالسُّجُود لم أَجِدهُ

நபி (ஸல்) அவர்கள் வித்ரு தொழுகையை ருகூவு,ஸஜ்தாவின் தஸ்பீஹ்களைக் கொண்டு முடிப்பார்கள். (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

தொழுகையில் கைகளை உயர்த்துதல்
الدراية في تخريج أحاديث الهداية (1/ 149)
قَوْله وَرَوَى عَن ابْن الزبير أَنه حمل مَا رَوَى عَن الرّفْع فِي الصَّلَاة عَلَى الإبتداء لم أَجِدهُ

கைகளை உயர்த்த வேண்டும் என்ற நபிமொழியின் கருத்து ஆரம்ப (தக்பீருக்கு மட்டும்) உரியது என்று கருத்திக் கொள்ளவேண்டுமென இப்னு சுபைர் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

பகலி ன் தொழுகை சப்தமில்லாமல் இருப்பதாகும் என்ற நபிமொழி (ஹிதாயா)

الدراية في تخريج أحاديث الهداية (1/ 160)
193 லி حَدِيث صَلَاة النَّهَار عجماء لم أَجِدهُ وَهُوَ عِنْد عبد الرَّزَّاق من قَول مُجَاهِد وَمن قَول أبي عُبَيْدَة بن عبد الله بن مَسْعُود مَوْقُوفا عَلَيْهِمَا
ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை. இக்கருத்து அப்துர்ரஸ்ஸாக்கில் முஜாஹிதின் கூற்றாகவும் அபுஉபைதா பின் அப்துல்லாஹ் பின் மஸ்வூதின் கூற்றாகவும் இடம்பெற்றுள்ளது. (நபிமொழியாக இடம்பெறவில்லை)

இறையச்சமுள்ள ஆலிமுக்கு பின்னால் தொழுவது

الدراية في تخريج أحاديث الهداية (1/ 168)
حَدِيث من صَلَّى خلف عَالم تَقِيّ فَكَأَنَّمَا صَلَّى خلف نَبِي لم أَجِدهُ

இறையச்சமுள்ள ஆலிமுக்கு பின்னால் தொழுவது நபிக்கு பின்னால் தொழுவதைப் போன்றதாகும். (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

லுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத் தொழாமல் இருப்பது

الدراية في تخريج أحاديث الهداية (1/ 205)
حَدِيث من ترك الْأَرْبَع قبل الظّهْر لم تنله شَفَاعَتِي لم أَجِدهُ
லுஹருக்கு முன்னால் நான்கு ரக்அத் தொழுவதை விட்டுவிட்டவருக்கு என்னுடைய பரிந்துரை கிடைக்காது என்ற நபிமொழி. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

ஜுமுஆ தொழுகை பெருநகரங்களில் தவிர கிடையாது
الدراية في تخريج أحاديث الهداية (1/ 214)
275 லி حَدِيث لَا جُمُعَة وَلَا تَشْرِيق وَلَا فطر وَلَا أَضْحَى إِلَّا فِي مصر جَامع لم أَجِدهُ . . . وَقَالَ الْبَيْهَقِيّ لَا يروي عَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ فِي ذَلِك شَيْء
ஜுமுஆ, தக்பீர் கூறுதல், நோன்பு பெருநாள் தொழுகை,ஹஜ்ஜுப் பெருநாள் ஆகியவை பெருநகரங்களில் தவிர இல்லை என்ற நபிமொழி. (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை... இது தொடர்பாக நபி(ஸல்) அவர்கள் வழியாக எந்த ஒரு செய்தியும் அறிவிக்கப்படவில்லை என்று பைஹகீ அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபிகளார் பட்டுமெத்தையில் அமர்ந்தார்களா?
الدراية في تخريج أحاديث الهداية (2/ 221)
حَدِيث أَن النَّبِي صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ جلس عَلَى مرفقة حَرِير لم أَجِدهُ
நபி (ஸல்) அவர்கள் பட்டுமெத்தையில் அமர்ந்திருந்தார்கள் என்ற நபிமொழி (ஹிதாயா)

ஹாபிழ் இப்னு ஹஜர் (ரஹ்) : இவ்வாறு நான் பெற்றுக் கொள்ளவில்லை.

இதுபோன்ற இன்னும் எத்தனையோ தவறுகள் ஹிதாயாவில் மலிந்து கிடக்கின்றன.
 
இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை
ராஜ்முஹம்மத், சுவாமிமலை

இன்று அரிதாகி வரும் நற்பண்புகளில், யாவரும் எளிதாகப் பெற முடியாத ஒன்று தான் பொறுமை என்னும் நற்பண்பு. பொறுமை என்பது சொல்லளவில் மிகச் சிறியதே. வெகு சொற்பமாகவே சிலரிடத்தில் காணப்படும் "பொறுமை" என்ற இக்குணம் பலருக்கு வெறும் வார்த்தையாகவே உள்ளது.

பொறுத்தார் பூமியாள்வார்,
பொறுமை கடலினும் பெரிது,
பொறுமை பூமியைக் காட்டிலும் பெரியது,
வலிமை உடையவரை விட பொறுமை உடையவரே மேலானவர்,
"ஒறுத்தார்க் கொருநாளை யின்பம் பொறுத்தார்க்குப்
பொன்றுந் துணையும் புகழ்."

திருக்குறளின் பொருள் : பிறர் செய்யும் தீமையைப் பொறுத்துக் கொள்ளாது தண்டித்தவர்க்கு ஒரு நாள் மட்டுமே இன்பம் கிட்டும். அதனை பொறுத்தக்கொண்டவரின் புகழ், உலகம் உள்ளவரைக்கும் நிலைத்து நிற்கும்.

போன்ற அறிவுரைகள் பொறுமையின் பெருமைகளை எடுத்துக் காட்டுவதாக பல உதாரணங்கள் அமைந்துள்ளன.

பொறுமைக்கு இவ்வாறு பல உதாரணங்கள் கூறப்பட்டாலும், துன்பம், கவலை, துக்கம் போன்ற நிகழ்வுகள் வரும் போது எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இதை விட மிக அழகிய வழிமுறைகளை இஸ்லாம் கூறுகிறது.

பொறுமை ஒரு வெளிச்சம்

மனிதன் எதை இழந்தாலும் பெற்றுவிடலாம், ஆனால் பொறுமையை இழந்தவன் வாழ்க்கையையே இழந்தவனாகிறான் என்ற பழமொழிக்கு ஏற்ப பொறுமையை இழந்து கோபப்படும் போது வாழ்க்கையே ஒரு கேள்விக் குறியாகிவிடுகிறது. இருள்களிலி ருந்து வெளிச்சம் எவ்வாறு வழிகாட்டுகிறதோ அதே போல் இன்னல்களிலிருந்து காப்பாற்ற ஓர் வெளிச்சமாக பொறுமை இருக்கும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தூய்மை இறைநம்பிக்கையில் பாதியாகும். "அல்ஹம்துலில்லாஹ்' (எல்லாப் புகழும் அல்லாஹ்வுக்கே!) என்(று இறைவனைத் துதிப்)பது, (நன்மை மற்றும் தீமைகளை நிறுக்கக்கூடிய) தராசை நிரப்பக்கூடியதாகும். "சுப்ஹானல்லாஹி, வல்ஹம்துலில்லாஹி' (அல்லாஹ் தூயவன்; எல்லாப் புகழும் அவனுக்கே உரியது) என்(று அவனைத் துதிப்)பது வானங்கள் மற்றும் பூமிக்கிடையேயுள்ள இடத்தை நிரப்பிவிடக்கூடிய (அளவிற்கு அபரிமிதமான நன்மைகளைக் கொண்ட)தாகும். தொழுகை (வழிகாட்டும்) ஒளியாகும். தானதர்மம் சான்றாகும். பொறுமை ஒரு வெளிச்சமாகும். குர்ஆன் ஒன்று உனக்கு ஆதரவான சான்றாகும்; அல்லது எதிரான சான்றாகும். மக்கள் அனைவரும் காலையில் புறப்பட்டுச் சென்று தம்மை விற்பனை செய்கின்றனர். சிலர் தம்மை (இறைவனிடம் விற்று நரகத்திலிருந்து தம்மை) விடுவித்துக் கொள்கின்றனர். வேறு சிலர் (ஷைத்தானிடம் விற்று) தம்மை அழித்துக்கொள்கின்றனர்.

அறிவிப்பவர் : அபூமாலிக் அல்அஷ்அரீ (ரலி),
 
நூல் : முஸ்லிலி ம் 381

பொறுமை ஓர் அருட்கொடை

ஓரிறைக்கொள்கையை ஏற்றுக்கொண்டால் பல விதமான சோதனைகளை அல்லாஹ் ஏற்படுத்துவான். அவ்வாறு அல்லாஹ் சோதிக்கும் போது அதை பொறுத்துக் கொண்டால், அதுவே விசாலமான அருட்கொடை என்றும், அதை விட வேற எதுவும் விசாலமான ஓர் அருட்கொடை இல்லை என்றும் நபி நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அன்சாரிகளில் சிலர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (பசிக்கு உணவும் செலவுக்குப் பணமும்) கேட்டார்கள். அவர்களுக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். பிறகு (மீண்டும் மீண்டும்) அவர்கள் கேட்ட போதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள். இறுதியாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்த அனைத்தும் (கொடுத்துத்) தீர்ந்து விட்டபோது, "என்னிடத்தில் உள்ள எந்தச் செல்வத்தையும் உங்களுக்கு வழங்காமல் நான் சேமித்து வைக்கப்போவதில்லை. (இருப்பினும்,) யார் சுயமரியாதையோடு நடந்துகொள்கிறாரோ அவரை அல்லாஹ் தன்மானத்துடன் வாழச்செய்வான். யார் பிறரிடம் தேவையாகாமல் (தன்னிறைவுடன்) இருக்கிறாரோ அவரை அல்லாஹ் தன்னிறைவு உள்ளவராக ஆக்குவான். யார் (இன்னல்களைச்) சகித்துக்கொள்கிறாரோ அவருக்கு அல்லாஹ் (மேலும்) சகிப்புத் தன்மையை வழங்குவான். பொறுமையைக் காட்டிலும் மேலான விசாலமானதோர் அருட்கொடை வேறெதுவும் எவருக்கும் வழங்கப்படுவதில்லை'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி ),
 
நூல் : முஸ்லிம் 1902

இறைநம்பிக்கையாளரின் பண்பு

உங்கள் முகங்களை கிழக்கு நோக்கியோ, மேற்கு நோக்கியோ திருப்புவது நன்மையன்று. மாறாக அல்லாஹ், இறுதி நாள், வானவர்கள், வேதம், மற்றும் நபிமார்களை நம்புவோரும் உறவினர்கள், அனாதைகள், ஏழைகள், நாடோடிகள், யாசிப்போருக்கும், மற்றும் அடிமைகளை விடுதலை செய்வதற்கு (மன) விருப்பத்துடன் செல்வத்தை வழங்குவோரும், தொழுகையை நிலை நாட்டுவோரும், ஸகாத்தை வழங்குவோரும், வாக்களித்தால் தமது வாக்கை நிறைவேற்றுவோரும், வறுமை, நோய், மற்றும் போர்க்களத்தில் சகித்துக் கொள்வோருமே நன்மை செய்பவர்கள். அவர்களே உண்மை கூறியவர்கள். அவர்களே (இறைவனை) அஞ்சுபவர்கள்.

அல்குர்ஆன் 2:177

மேற்கண்ட வசனத்தில் நன்மையான விஷயங்களை அல்லாஹ் பட்டியலிடுகிறான். அதில் ஒன்று தான் யார் தனக்கு வறுமை, நோய் வரும் போது பொறுமையை கடைபிடிக்கின்றாரோ அவர் நன்மை செய்பவர், உண்மையை கூறுபவர், இறைவனை அஞ்சுபவர் என்று அல்லாஹ் கூறியுள்ளான். அதாவது இறைநம்பிக்கையாளரின் பண்புகளில் ஒன்றாகும்.

நல்லவர்களின் பண்பு

நன்மையும், தீமையும் சமமாகாது. நல்லதைக் கொண்டே (பகைமையை) தடுப்பீராக! எவருக்கும், உமக்கும் பகை இருக்கிறதோ அவர் அப்போதே உற்ற நண்பராகி விடுவார். பொறுமையை மேற்கொண்டோர் தவிர மற்றவர்களுக்கு இது (இந்தப் பண்பு) வழங்கப்படாது. மகத்தான பாக்கியம் உடையவர் தவிர (மற்றவர்களுக்கு) இது வழங்கப்படாது.

அல்குர்ஆன் 41:35

பொறுமை என்பது ஓர் வெளிச்சம், அருட்கொடை, இறைநம்பிக்கையாளரின் பண்பு, நல்லவர்களின் பண்பு என பொறுமைக்கு பல உதாரணங்களை இஸ்லாம் கூறுகிறது.

பொறுமையின் மூலம் உதவி தேடுதல்சோதனைகள் வரும் போது பொறுமையாக இருந்து, தொழுகையின் மூலமும் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து பாதுகாப்பு தேட வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனங்கள் உணர்த்துகின்றன.

பொறுமை, மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! பணிவுடையோரைத் தவிர (மற்றவர்களுக்கு) இது பாரமாகவே இருக்கும்.
 
அல்குர்ஆன் 2:45

நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான்.

அல்குர்ஆன் 2:153

சோதனைகள் வருகின்ற வழிகளையும், அப்போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் இஸ்லாம் கூறுகிறது.

சோதனைகளைப் பொறுத்துக் கொள்வது

செல்வங்களை சேதப்படுத்தி, வறுமையை ஏற்படுத்தி, உயிர்கள் பறிக்கப்பட்டு சோதனைக்கு உள்ளாக்கப்படுவோம். பல்வேறு சோதனைகளைக் கொண்டு இறை நம்பிக்கையாளர்கள் சோதிக்கப்படுவார்கள் என்று கீழ்க்கண்ட வசனம் கூறுவதுடன், அந்த சோதனையின் போது கடைபிடிக்க வேண்டிய வழிமுறைகளையும் அல்லாஹ் கற்றுத்தருகிறான்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும், செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

அல்குர்ஆன் 2:155, 157

உங்களில் தியாகம் செய்தோரையும், பொறுமையாளரையும் அடையாளம் காட்டிட உங்களைச் சோதிப்போம். உங்கள் செய்திகளையும் சோதிப்போம்.

அல்குர்ஆன் 47:31

உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 3:186

இழப்புகள் ஏற்படும் போது சகித்துக் கொள்வது

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: நான் என் அடியானை, அவனது பிரியத்திற்குரிய இரு பொருட்களை(ப் பறித்து)க்கொண்டு சோதித்து, அவன் பொறுமை காப்பானேயானால், அவற்றுக்கு பதிலாக சொர்க்கத்தை நான் அவனுக்கு வழங்குவேன். (அவனுடைய பிரியத்திற்குரிய இரு பொருட்கள்' என்பது) அவருடைய இரு கண்களைக் குறிக்கும்.

அறிவிப்பவர் : அனஸ் பின் மாலிக் (ரலி),
 
நூல் : புகாரி 5653

இந்த உலகத்தில் அல்லாஹ் தந்த செல்வங்களை நாம் அனுபவிக்க வேண்டும் என்றால் அதற்கு கண்கள் மிகவும் அவசியமாகும். உதாரணமாக நாம் இந்த கண்ணிருப்பதால் தான் அதிகம் பணம் சம்பாதிக்கிறோம், அதிக செலவு செய்கிறோம். நாம் அழகான ஆடை வாங்குகிறோம். அழகான வீட்டை வாங்குகிறோம். எல்லாப் பொருளையும் அழகானதென்று தேர்ந்தெடுத்து வாங்குவதற்கு காரணம் இந்த கண் தான். எனவே இந்த ஒரு மிகப்பெரிய பாக்கியத்தை அல்லாஹ்விற்காக நாம் இழப்பதின் காரணத்தினால் அல்லாஹ் நமக்கு செர்க்கத்தை தருகிறேன் என்று கூறுகிறான். அதற்காக நாம் புலம்பக் கூடாது. அல்லாஹ்வை திட்டாமல், நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அப்படி இருந்தால் தான் நமக்குச் சுவனம் கிடைக்கும்.

குழந்தைகள் மரணிப்பதை சகித்துக் கொள்வது

இஸ்லாமிய மார்க்கம் மறுமை நம்பிக்கையை அடிப்படையாகக் கொண்டது. ஒருவர் இழந்து விட்ட இழப்புக்கு ஓர் ஈடாக, அவர் சந்தித்த சோதனைக்கு பரிகாரமாக சுவனத்தை பரிசாக அளிக்கின்றான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு முஸ்லிமுக்கு பருவமடையாத மூன்று (குழந்தைகள்) இறந்துவிட்டால் அவர், அக்குழந்தைகளின் மீது காட்டிய இரக்கத்தின் காரணத்தால் அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் பிரவேசிக்கச் செய்வான்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி ),
 
நூல் : புகாரி 1248

ஒருவர் மரணித்து விட்டால் மறுமையின் நன்மையைக் கவனத்தில் கொண்டு அதனை பொறுமையுடன் சகித்துக் கொண்டால் மறுமையில் செர்க்கத்தை நாம் அடைய அதுவே காரணமாக அமைந்து விடும் அந்த அளவிற்கு உயர்ந்த செயலாக இதை இறைவன் மதிப்பிடுகிறான்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஒரு முஸ்லி ரிமுடைய பிள்ளைகளில் மூவர் (பருவ வயதுக்கு முன்பே) இறந்துபோனால், அந்த மனிதரை நரகம் தீண்டாது; ("உங்களில் யாரும் நரகத்தைக் கடக்காமல் செல்ல முடியாது' என்று அல்லாஹ் செய்துள்ள) சத்தியத்தைச் செயல்படுத்துவதற்காக (நரகத்தின் வழியே செல்வதை)த் தவிர.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி ),
 
நூல் : முஸ்லிலி ம் 5128

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் கூறுகிறான்: இறைநம்பிக்கையுள்ள என் அடியார், அவருக்குப் பிரியமான ஒருவரது உயிரை நான் கைப்பற்றிவிடும் போது நன்மையை நாடிப் பொறுமை காப்பாரானால், சொர்க்கமே அவருக்கு நான் வழங்கும் பிரதிபலனாக இருக்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
 
நூல் : புகாரி 6424

வறுமை மற்றும் நோயைச் சகித்துக் கொள்வது வறுமை என்பது மனிதர்களை சோதிப்பதற்காக இறைவன் தருவது.

அதற்கு பகரமாக மறுமையில் அவர்களுக்கு அனைத்து சுகங்களும் தரப்படும். அதே போல் இன்று தமிழகத்தில் பரவி வரும் டெங்கு, சிக்குன் குன்யா, மற்றும் விஷக் காய்ச்சல் எல்லாம் அல்லாஹ்வின் சோதனையாகும். இந்த சோதனையின் போது பொறுமையை மேற்கொள்ள வேண்டும்.

அல்லாஹ்வுக்கு எதிரான வார்த்தைகளை சொல்லாமல் சோதனைகளைத் தாங்கிக் கொண்டு அல்லாஹ்விடம் பிராத்தனை செய்ய வேண்டும்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் (பிளேக், காலரா போன்ற) கொள்ளை நோய் பற்றிக் கேட்டேன் அதற்கு அவர்கள், "அது, தான் நாடியவர்கள் மீது அல்லாஹ் அனுப்புகின்ற வேதனையாகும். அல்லாஹ் அதை இறை நம்பிக்கையாளர்களுக்கு கருணையாக ஆக்கியுள்ளான்'' என்று தெரிவித்தார்கள். மேலும், "கொள்ளை நோய் பரவிய இடத்தில் இருப்பவர் எவராயினும் அவர் பொறுமையுடனும், இறைவெகுமதியை விரும்பியவராகவும் அல்லாஹ் நமக்கு எழுதியுள்ள(விதிப்படி நம்மைப் பீடிக்க விருப்ப)தைத் தவிர வேறெதுவும் நம்மைப் பீடிக்காது என்னும் நம்பிக்கை கொண்டவராகவும் தன் ஊரிலேயே தங்கியிருப்பாராயின் இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவர் பெறுவதைப் போன்ற நற்பலன் அவருக்கும் நிச்சயம் கிடைக்கும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),
 
நூல் : புகாரி 3474, 5734

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்கüடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம்; உங்கüல் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்'' என்று சொன் னார்கள்.

நான், "(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?'' என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, "ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்துவிடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி),
 
நூல் : புகாரி 5660

அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான் "சரி! (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், "(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணி தான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலி ப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன்.

அப்போது (என் உடலிலிலி ருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்குப் பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்'' என்று சொன்னார்கள். இப்பெண்மணி "நான் பொறுமையாகவே இருந்து விடுகிறேன். ஆயினும், (வலிப்பு வரும் போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலிருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்'' என்றார்கள்.

நூல் : முஸ்லிலி ம் 5032

இன்று போன்ற வறுமை மற்றும் நோய்களின் மூலம் சோதனைகள் வரும் போது நமக்கு ஏற்பட்டுள்ள நோய்க்கு பகரமான உடல் நலத்தை, அல்லது வேறு விதமான நன்மைகளை வழங்குவான் என்ற நம்பிக்கையுடன் பொறுமையாக இருக்க வேண்டும்.

நம்மை யாராவது அடித்தால் அல்லது திட்டினால் பொறுத்துக் கொள்கிறோம். ஆனால் அல்லாஹ் நமக்கு கஷ்டத்தைக் கொடுத்து சோதிக்கும் போது, இதை நாம் பொறுத்துக் கொள்ளாமல் தன்னை தானே மாய்த்துக்கொள்கிறோம். இவ்வாறு செய்வதை நபி (ஸல்)
அவர்கள் கண்டித்துள்ளார்கள்.

ஹசன் அல்பஸ்ரீ அவர்கள் கூறியதாவது: உங்களுக்கு முன்னிருந்த (பனூ இஸ்ராயீல்) மக்களிடையே ஒருவர் இருந்தார். அவருடைய உடலில் ஒரு கொப்புளம் கிளம்பியது. அது அவரைத் தொல்லைபடுத்திய போது (பொறுமை இழந்த) அவர் தமது அம்புக் கூட்டிரிருந்து ஓர் அம்பை உருவி கொப்புளத்தில் பாய்ச்சினார். (கொப்புளம் உடைந்து) இரத்தம் நிற்காமல் கொட்டிக் கொண்டிருந்தது. இறுதியில் அவர் இறந்து போனார். உங்கள் இறைவன் "(என் அடியான் அவசரப்பட்டு தன்னை அழித்துக்கொண்டதால்) அவன் மீது நான் சொர்க்கத்தைத் தடை செய்துவிட்டேன்'' என்று கூறினான்.

(இதை ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து அறிவிக்கும் ஷைபான் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:)

பிறகு ஹசன் அல்பஸ்ரீ (ரஹ்) அவர்கள் (பஸ்ராவிலுள்ள) பள்ளிவாசலை நோக்கித் தமது கையை நீட்டியவாறு, "ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து இந்த ஹதீஸைத் தாம் செவியுற்றதாக இந்தப் பள்ளிவாசலில் வைத்துத்தான் எனக்கு அறிவித்தார்கள்'' என்றார்கள்.

அறிவிப்பவர் : ஜுன்தப் பின் அப்தில்லாஹ் (ரலி),
 
நூல் : முஸ்லிலி ம் 180

மன வேதனையின் போது சகித்துக் கொள்வது மனிதன் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். பொறுமை மேற்கொள்வது இறைநம்பிக்கையாளனின் கடமையாகும். ஆனால் பல துன்ப நேரங்களில் கன்னத்தில் அறைந்து கொள்வதும், சட்டையைக் கிழித்துக் கொள்வதும், ஒப்பாரி வைத்து  அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர். துன்பங்கள் நேரும் போது படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என்றெண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து, இறைவா இந்த சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு. இதை விட சிறந்ததை வழங்கு என்று கூற வேண்டும்.

ஓரளவு அச்சத்தாலும், பசியாலும் செல்வங்கள், உயிர்கள், மற்றும் பலன்களைச் சேதப்படுத்தியும் உங்களைச் சோதிப்போம். பொறுத்துக் கொண்டோருக்கு நற்செய்தி கூறுவீராக! தமக்கு ஏதேனும் துன்பம் ஏற்படும் போது "நாங்கள் அல்லாஹ்வுக்கே உரியவர்கள்; நாங்கள் அவனிடமே திரும்பிச் செல்பவர்கள்'' என்று அவர்கள் கூறுவார்கள். அவர்களுக்கே தமது இறைவனின் அருள்களும், அன்பும் உள்ளன. அவர்களே நேர் வழி பெற்றோர்.

(அல்குர்ஆன் 2:155லி157)

பிறர் தரும் தொல்லைகளைப் சகித்துக் கொள்வது ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்தால் பல துன்பங்களையும், கஷ்டங்களையும் சந்திக்க நேரிடும், அவ்வாறு அடையும் போது பொறுமையை கடைபிடிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் ஏகத்துவக் கொள்கையை வெளிப்படையாக கூறும் போது கடுமையான துன்பத்திற்கு ஆளாகியுள்ளார்கள். அதே போல் நாமும் ஏகத்துவ கொள்கையில் உறுதியாக இருந்தால் பிறர் தரும் துன்பத்தையும், சங்கடத்தையும் சகித்துக் கொள்ள வேண்டும் என்று கீழ்க்கண்ட வசனத்தின் மூலம் அல்லாஹ் உணர்த்துகிறான்.

உங்கள் செல்வங்களிலும், உயிர்களிலும் சோதிக்கப்படுவீர்கள். உங்களுக்கு முன் வேதம் கொடுக்கப்பட்டோரிடமிருந்தும், இணை கற்பித்தோரிடமிருந்தும் ஏராளமான சங்கடம் தரும் சொற்களைச் செவியுறுவீர்கள். நீங்கள் சகித்துக் கொண்டு (இறைவனை) அஞ்சினால் அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 3:186

(முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப்படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது.

அல்குர்ஆன் 6:34

(முஹம்மதே!) அவர்கள் கூறுவதைச் சகித்துக் கொள்வீராக! பலம் பொருந்திய நமது அடியார் தாவூதை நினைவூட்டுவீராக! அவர் (நம்மிடம்) திரும்புபவராக இருந்தார்.

அல்குர்ஆன் 38:17

யார் பொறுமையை மேற்கொண்டு மன்னிக்கிறாரோ அது உறுதி மிக்க காரியங்களில் ஒன்றாகும்.

அல்குர்ஆன் 42:43

போரில் துன்பங்களை சகித்துக் கொள்வது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க ஆசைப்படாதீர்கள். அவர்களை நீங்கள் (போர்க்களத்தில்) சந்திக்க நேர்ந்தால் (போரின் துன்பங்களைக் கண்டு) நிலைகுலைந்து விடாமல் பொறுமையாக இருங்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),
 
நூல் : புகாரி 3026, 2833

உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்கüன் அடிமையாகவும் அவர்களுடைய எழுத்தராகவும் இருந்த சாலிம் அபுந் நள்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: உமர் பின் உபைதில்லாஹ் (ரஹ்) அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கடிதம் எழுதினார்கள். அதில் எழுதியிருந்ததை நான் படித்துக் காட்டினேன். (அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எதிரிகளைப் போர்க்களத்தில் சந்தித்த நாட்கüல் ஒருமுறை சூரியன் உச்சி சாயும் வரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள்.

பிறகு மக்கüடையே எழுந்து நின்று உரை நிகழ்த்தலானார்கள்: மக்களே! (போர்க்களம் சென்று) எதிரிகளைச் சந்திக்க வேண்டுமென்று ஆசைப்படாதீர்கள். அல்லாஹ்விடம் (போரைத் தவிர்க்க வாய்ப்பüத்து) அமைதி நிலை தரும்படி கேளுங்கள். (அதையும் மீறி) எதிரிகளை (போர்க்களத்தில்) சந்திக்க நேரிட்டால் நிலைகுலைந்து விடாமல் போரின் துன்பங்களைச் சகித்துக் கொண்டு பொறுமையாயிருங்கள். மேலும், சொர்க்கம் வாட்கüன் நிழல்கüல் இருக்கின்றது என்பதை அறிந்து கொள்ளுங்கள்'' என்று கூறிவிட்டு, "இறைவா! வேதத்தை அருள்பவனே! மேகத்தை நகர்த்திச் செல்பவனே! படைகளைத் தோற்கடிப்பவனே! இ(ப்பகை)வர்களைத் தோற்கடித்து இவர்களுக்கெதிராக எங்களுக்கு உதவுவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

நூல் : புகாரி 2956, 2966

போர்க்களத்தில் எதிரிகளை எதிர்த்து பொறுமையுடனும், (இறைவனுக்காக) தூய எண்ணத்துடனும், புறமுதுகிட்டு ஓடாமலும் போர் செய்தால் பாவங்கள் மன்னிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு முறை) எங்களிடையே நின்று, "அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவதும் அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வதும் நற்செயல்களிலேயே மிகவும் சிறந்ததாகும்'' என்று கூறினார்கள். அப்போது ஒரு மனிதர் எழுந்து, "அல்லாஹ்வின் தூதரே! நான் அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) கொல்லப்பட்டால், என் பாவங்கள் அனைத்தும் மன்னிக்கப்படுமா, கூறுங்கள்?'' என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஆம், நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் பொறுமையுடனும் (இறைவனுக்காக எனும்) தூய எண்ணத்துடனும் புறமுதுகிட்டு ஓடாமல் முன்னோக்கிச் சென்று கொல்லப்பட்டால், (உங்கள் அனைத்துப் பாவங்களும் மன்னிக்கப்படும்)'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூகத்தாதா (ரலி),
 
நூல் : முஸ்லிம் 3830

இறை உதவி வரும் வரை பொறுமையைக் கடைப்பிடித்தல்

(முஹம்மதே!) உமக்கு அறிவிக்கப்படுவதைப் பின்பற்றுவீராக! அல்லாஹ் தீர்ப்பு அளிக்கும் வரை பொறுமையாக இருப்பீராக! அவன் தீர்ப்பளிப்போரில் மிகவும் சிறந்தவன்.

அல்குர்ஆன் 10:109

உமது இறைவனின் தீர்ப்புக்காகப் பொறுத்திருப்பீராக! மீனுடையவர் (யூனுஸ்) போல் நீர் ஆகி விடாதீர்! அவர் துக்கம் நிறைந்தவராக (இறைவனை) அழைத்தார்.

அல்குர்ஆன் 68:48

வணக்கங்களை நிறைவேற்றுவதில் ஏற்படும் சிரமங்களைச் சகித்துக் கொள்வது

வானங்கள், பூமி மற்றும் அவற்றுக்கு இடையே உள்ளவற்றுக்கும் (அவனே) இறைவன். எனவே அவனை வணங்குவீராக! அவனது வணக்கத்திற்காக (சிரமங்களைச்) சகித்துக் கொள்வீராக! அவனுக்கு நிகரானவனை நீர் அறிகிறீரா?

அல்குர்ஆன் 19:65

(முஹம்மதே!) தொழுமாறு உமது குடும்பத்தினரை ஏவுவீராக! அதில் (ஏற்படும் சிரமங்களை) சகித்துக் கொள்வீராக! உம்மிடம் நாம் செல்வத்தைக் கேட்கவில்லை. நாமே உமக்குச் செல்வத்தை அளிக்கிறோம். (இறை) அச்சத்திற்கே (நல்ல) முடிவு உண்டு.

அல்குர்ஆன் 20:132

நபி (ஸல்) அவர்கள் பஹ்ரைனுடைய தரிசு நிலங்களை (அன்சாரிகளுக்கு) வருவாய் மானியமாகத் தர விரும்பினார்கள். அதற்கு அன்சாரிகள், (அல்லாஹ்வின் தூதரே!) நீங்கள் எங்களுக்கு வருவாய் மானியம் வழங்குவதைப் போன்றே எங்கள் முஹாஜிர் சகோதரர்களுக்கும் வருவாய் மானியம் வழங்காத வரை (நாங்கள் அவற்றை ஏற்றுக் கொள்ள மாட்டோம்) என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "(அன்சாரிகளே!) எனக்குப் பின் (சிறிது காலத்திற்குள்ளாகவே ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதை நீங்கள் பார்ப்பீர்கள். ஆகவே, என்னை (மறுமையில்) நீங்கள் சந்திக்கும் (காலம்) வரை பொறுமையைக் கடைப்பிடியுங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),
 
நூல் : புகாரி 2376

வளரும் இன்ஷா அல்லாஹ

 
சொற்பொழிவு குறிப்புகள்

நேர்மை

நீதியை நிலைநாட்ட வேண்டுமென்பது இறைவனின் கட்டளை
قُلْ أَمَرَ رَبِّي بِالْقِسْطِ وَأَقِيمُوا وُجُوهَكُمْ عِنْدَ كُلِّ مَسْجِدٍ وَادْعُوهُ مُخْلِصِينَ لَهُ الدِّينَ كَمَا بَدَأَكُمْ تَعُودُونَ(29) سورة الأعراف

"எனது இறைவன் நீதியைக் கட்டளையிட்டுள்ளான்'' எனக் கூறுவீராக! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்களின் கவனங்களை ஒருமுகப்படுத்திக் கொள்ளுங்கள்! வணக்கத்தை அவனுக்கே உளத்தூய்மையுடன் செய்து, அவனிடமே பிரார்த்தியுங்கள்! உங்களை அவன் முதலில் படைத்தவாறே மீள்வீர்கள்!
 
(அல்குர்ஆன் 7:29)

إِنَّ اللَّهَ يَأْمُرُ بِالْعَدْلِ وَالإِحْسَانِ وَإِيتَاءِ ذِي الْقُرْبَى وَيَنْهَى عَنْ الْفَحْشَاءِ وَالْمُنكَرِ وَالْبَغْيِ يَعِظُكُمْ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ(90) سورة النحل

நீதி, நன்மை, மற்றும் உறவினருக்குக் கொடுப்பதை அல்லாஹ் கட்டளையிடுகிறான். வெட்கக்கேடானவை, தீமை, மற்றும் வரம்பு மீறுவதை உங்களுக்குத் தடுக்கிறான். நீங்கள் நல்லுணர்வு பெறுவதற்காக உங்களுக்கு அறிவுரை கூறுகிறான்.

(அல்குர்ஆன் 16:90)

நீதியை ஏவுவனே சிறந்தவன்

وَضَرَبَ اللَّهُ مَثَلًا رَجُلَيْنِ أَحَدُهُمَا أَبْكَمُ لَا يَقْدِرُ عَلَى شَيْءٍ وَهُوَ كَلٌّ عَلَى مَوْلَاهُ أَيْنَمَا يُوَجِّهُّ لَا يَأْتِ بِخَيْرٍ هَلْ يَسْتَوِي هُوَ وَمَنْ يَأْمُرُ بِالْعَدْلِ وَهُوَ عَلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(76) سورة النحل

இரண்டு மனிதர்களை அல்லாஹ் உதாரணம் காட்டுகிறான்.

அவர்களில் ஒருவன் ஊமை. எதற்கும் சக்தி பெற மாட்டான். அவன் தனது எஜமானனுக்குப் பாரமாக இருக்கிறான். எங்கே அவனை அனுப்பினாலும் நன்மையைக் கொண்டு வர மாட்டான். இ(த்தகைய)வனும், நேரான வழியில் இருந்து கொண்டு, நீதியை ஏவுபவனும் சமமாவார்களா?

(அல்குர்ஆன் 16:76)

மக்களிடம் நேர்மையாக தீர்ப்பளியுங்கள்

إِنَّ اللَّهَ يَأْمُرُكُمْ أَنْ تُؤَدُّوا الْأَمَانَاتِ إِلَى أَهْلِهَا وَإِذَا حَكَمْتُمْ بَيْنَ النَّاسِ أَنْ تَحْكُمُوا بِالْعَدْلِ إِنَّ اللَّهَ نِعِمَّا يَعِظُكُمْ بِهِ إِنَّ اللَّهَ كَانَ سَمِيعًا بَصِيرًا(58) سورة النساء
அமானிதங்களை அதற்குரியோரிடம் ஒப்படைக்க வேண்டும் எனவும், மக்கள் மத்தியில் தீர்ப்பளிக்கும் போது நீதியாக நீங்கள் தீர்ப்பளிக்க வேண்டும் எனவும் அல்லாஹ் உங்களுக்குக் கட்டளையிடுகிறான்.

அல்லாஹ்வின் இந்த அறிவுரை உங்களுக்கு மிகவும் நல்லது. அல்லாஹ் செவியுறுபவனாகவும், பார்ப்பவனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 4:58)

سَمَّاعُونَ لِلْكَذِبِ أَكَّالُونَ لِلسُّحْتِ فَإِنْ جَاءُوكَ فَاحْكُمْ بَيْنَهُمْ أَوْ أَعْرِضْ عَنْهُمْ وَإِنْ تُعْرِضْ عَنْهُمْ فَلَنْ يَضُرُّوكَ شَيْئًا وَإِنْ حَكَمْتَ فَاحْكُمْ بَيْنَهُمْ بِالْقِسْطِ إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ(42) سورة المائدة

பொய்யையே அவர்கள் அதிகம் செவியுறுகின்றனர். தடுக்கப்பட்டதையே அதிகம் சாப்பிடுகின்றனர். அவர்கள் உம்மிடம் வந்தால் அவர்களிடையே நீர் தீர்ப்பு வழங்கலாம். அல்லது அவர்களை அலட்சியம் செய்யலாம்.

அவர்களை நீர் அலட்சியம் செய்தால் அவர்களால் உமக்கு எந்தத் தீங்கும் தர முடியாது. நீர் தீர்ப்பளித்தால் அவர்களிடையே நீதியான முறையில் தீர்ப்பளிப்பீராக! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 5:42)

நீதிக்கு சாட்சியாக இருங்கள்

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا كُونُوا قَوَّامِينَ لِلَّهِ شُهَدَاءَ بِالْقِسْطِ وَلَا يَجْرِمَنَّكُمْ شَنَآنُ قَوْمٍ عَلَى أَلَّا تَعْدِلُوا اعْدِلُوا هُوَ أَقْرَبُ لِلتَّقْوَى وَاتَّقُوا اللَّهَ إِنَّ اللَّهَ خَبِيرٌ بِمَا تَعْمَلُونَ(8) سورة المائدة

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டு, நீதிக்குச் சாட்சிகளாக ஆகி விடுங்கள்! ஒரு சமுதாயத்தின் மீதுள்ள பகை நீங்கள் நீதியாக நடக்காமலிருக்க, உங்களைத் தூண்ட வேண்டாம். நீதியாக நடங்கள்! அதுவே இறையச்சத்திற்கு நெருக்கமானது. அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

(அல்குர்ஆன் 5:8)

உறவினருக்கு எதிராக இருந்தாலும் நேர்மையாக நடங்கள்

وَلَا تَقْرَبُوا مَالَ الْيَتِيمِ إِلَّا بِالَّتِي هِيَ أَحْسَنُ حَتَّى يَبْلُغَ أَشُدَّهُ وَأَوْفُوا الْكَيْلَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ لَا نُكَلِّفُ نَفْسًا إِلَّا وُسْعَهَا وَإِذَا قُلْتُمْ فَاعْدِلُوا وَلَوْ كَانَ ذَا قُرْبَى وَبِعَهْدِ اللَّهِ أَوْفُوا ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَذَكَّرُونَ(152) سورة المائدة

அனாதையின் செல்வத்தை அவன் பருவமடையும் வரை அழகிய முறையில் தவிர நெருங்காதீர்கள்! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவேற்றுங்கள்! எவரையும் அவரது சக்திக்கு மேல் சிரமப்படுத்த மாட்டோம். உறவினராகவே இருந்தாலும் பேசும் போது நீதியையே பேசுங்கள்! அல்லாஹ்வின் ஒப்பந்தத்தை நிறைவேற்றுங்கள்! நீங்கள் படிப்பினை பெறுவதற்காக அவன் இதையே உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன் 5:152)

மனைவியிடம் நேர்மையாக நடங்கள்

وَإِنْ خِفْتُمْ أَلَّا تُقْسِطُوا فِي الْيَتَامَى فَانكِحُوا مَا طَابَ لَكُمْ مِنَ النِّسَاءِ مَثْنَى وَثُلَاثَ وَرُبَاعَ فَإِنْ خِفْتُمْ أَلَّا تَعْدِلُوا فَوَاحِدَةً أَوْ مَا مَلَكَتْ أَيْمَانُكُمْ ذَلِكَ أَدْنَى أَلَّا تَعُولُوا(3) سورة النساء
அனாதைகள் விஷயத்தில் நேர்மையாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் உங்களுக்குப் பிடித்த பெண்களை இரண்டிரண்டாக, மும்மூன்றாக, நான்கு நான்காக மணந்து கொள்ளுங்கள்! (மனைவியரிடையே) நீதியாக நடக்க மாட்டீர்கள் என்று அஞ்சினால் ஒருத்தியை அல்லது உங்களுக்கு உடைமையாக உள்ள அடிமைப் பெண்களை (போதுமாக்கிக் கொள்ளுங்கள்!). இதுவே நீங்கள் வரம்பு மீறாமலிருக்க நெருக்கமான வழி.

(அல்குர்ஆன் 4:3)

சண்டையிடுபவர்களிடம் நேர்மையான முறையில் இணக்கத்தை ஏற்படுத்துங்கள்

وَإِنْ طَائِفَتَانِ مِنْ الْمُؤْمِنِينَ اقْتَتَلُوا فَأَصْلِحُوا بَيْنَهُمَا فَإِنْ بَغَتْ إِحْدَاهُمَا عَلَى الْأُخْرَى فَقَاتِلُوا الَّتِي تَبْغِي حَتَّى تَفِيءَ إِلَى أَمْرِ اللَّهِ فَإِنْ فَاءَتْ فَأَصْلِحُوا بَيْنَهُمَا بِالْعَدْلِ وَأَقْسِطُوا إِنَّ اللَّهَ يُحِبُّ الْمُقْسِطِينَ(9) سورة الحجرات

நம்பிக்கை கொண்டோரில் இரண்டு கூட்டத்தினர் சண்டையிட்டுக் கொண்டால் அவற்றுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அவற்றுள் ஒன்று மற்றொன்றின் மீது வரம்பு மீறினால் வரம்பு மீறிய கூட்டம் அல்லாஹ்வின் கட்டளையை நோக்கித் திரும்பும் வரை அதை எதிர்த்துச் சண்டையிடுங்கள்! அக் கூட்டம் திருந்தினால் நீதியான முறையில் இருவருக்கிடையே நல்லிணக்கத்தை ஏற்படுத்துங்கள்! நீதி செலுத்துங்கள்! நீதி செலுத்துவோரை அல்லாஹ் விரும்புகிறான்.

(அல்குர்ஆன் 49:9)

வியாபாரத்தில் நேர்மையை கடைபிடியுங்கள்

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمْ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ(25) سورة الحديد

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம். அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் இறக்கினோம். இரும்பையும் இறக்கினோம். அதில் கடுமையான ஆற்றலும், மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும், தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வலிலி மை உள்ளவன்; மிகைத்தவன்.

(அல்குர்ஆன் 57:25)

وَيَاقَوْمِ أَوْفُوا الْمِكْيَالَ وَالْمِيزَانَ بِالْقِسْطِ وَلَا تَبْخَسُوا النَّاسَ أَشْيَاءَهُمْ وَلَا تَعْثَوْا فِي الْأَرْضِ مُفْسِدِينَ(85) سورة هود

"என் சமுதாயமே! அளவையும், நிறுவையையும் நேர்மையாக நிறைவாக்குங்கள்! மக்களுக்கு அவர்களின் பொருட்களைக் குறைத்து விடாதீர்கள்! இப்பூமியில் குழப்பம் விளைவித்துத் திரியாதீர்கள்!''

(அல்குர்ஆன் 11:85)

وَيْلٌ لِلْمُطَفِّفِينَ(1)الَّذِينَ إِذَا اكْتَالُوا عَلَى النَّاسِ يَسْتَوْفُونَ(2)وَإِذَا كَالُوهُمْ أَوْ وَزَنُوهُمْ يُخْسِرُونَ(3)أَلَا يَظُنُّ أُولَئِكَ أَنَّهُمْ مَبْعُوثُونَ(4)لِيَوْمٍ عَظِيمٍ(5) سورة المطففين

அளவு, நிறுவையில் குறைவு செய்வோருக்குக் கேடு தான்! அவர்கள் மக்களிடம் அளந்து வாங்கும் போது நிறைவாக வாங்கிக் கொள்கின்றனர். மக்களுக்கு அளந்தோ, நிறுத்தோ கொடுத்தால் குறைத்து விடுகின்றனர். மகத்தான நாளில் அவர்கள் உயிர்ப்பிக்கப்பட உள்ளனர் என்பதை எண்ணிப் பார்க்க வேண்டாமா?
 
(அல்குர்ஆன் 83:1லி5)

பிள்ளைகளிடம் நேர்மையாக நடங்கள்

2587 حَدَّثَنَا حَامِدُ بْنُ عُمَرَ حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ حُصَيْنٍ عَنْ عَامِرٍ قَالَ سَمِعْتُ النُّعْمَانَ بْنَ بَشِيرٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا وَهُوَ عَلَى الْمِنْبَرِ يَقُولُ أَعْطَانِي أَبِي عَطِيَّةً فَقَالَتْ عَمْرَةُ بِنْتُ رَوَاحَةَ لَا أَرْضَى حَتَّى تُشْهِدَ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَتَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ إِنِّي أَعْطَيْتُ ابْنِي مِنْ عَمْرَةَ بِنْتِ رَوَاحَةَ عَطِيَّةً فَأَمَرَتْنِي أَنْ أُشْهِدَكَ يَا رَسُولَ اللَّهِ قَالَ أَعْطَيْتَ سَائِرَ وَلَدِكَ مِثْلَ هَذَا قَالَ لَا قَالَ فَاتَّقُوا اللَّهَ وَاعْدِلُوا بَيْنَ أَوْلَادِكُمْ قَالَ فَرَجَعَ فَرَدَّ عَطِيَّتَهُ رواه البخاري

ஆமிர் பின் ஷர்ஹபீல் அவர்கள் கூறியதாவது: நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு, "என் தந்தை அன்பüப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த்து ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த்து ரவாஹாவின் வாயிலாக, எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பüப்பு ஒன்றைக் கொடுத்தேன்; அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, "இல்லை'' என்று பதிலüத்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ் வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். உங்கள் பிள்ளைகüடையே நீதி செலுத்துங்கள்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, தனது அன்பüப்பை ரத்து செய்தார்.

நூல் : புகாரி (2587)

ஏழை, பணக்காரன் என்ற பாகுபாடின்றி தீர்ப்பு வழங்கவேண்டும்

3475 حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا أَنَّ قُرَيْشًا أَهَمَّهُمْ شَأْنُ الْمَرْأَةِ الْمَخْزُومِيَّةِ الَّتِي سَرَقَتْ فَقَالُوا وَمَنْ يُكَلِّمُ فِيهَا رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالُوا وَمَنْ يَجْتَرِئُ عَلَيْهِ إِلَّا أُسَامَةُ بْنُ زَيْدٍ حِبُّ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَكَلَّمَهُ أُسَامَةُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَتَشْفَعُ فِي حَدٍّ مِنْ حُدُودِ اللَّهِ ثُمَّ قَامَ فَاخْتَطَبَ ثُمَّ قَالَ إِنَّمَا أَهْلَكَ الَّذِينَ قَبْلَكُمْ أَنَّهُمْ كَانُوا إِذَا سَرَقَ فِيهِمْ الشَّرِيفُ تَرَكُوهُ وَإِذَا سَرَقَ فِيهِمْ الضَّعِيفُ أَقَامُوا عَلَيْهِ الْحَدَّ وَايْمُ اللَّهِ لَوْ أَنَّ فَاطِمَةَ بِنْتَ مُحَمَّدٍ سَرَقَتْ لَقَطَعْتُ يَدَهَا رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: (மக்கா வெற்றியின் போது) மக்ஸூமீ குலத்துப் பெண் ஒருத்தி (ஃபாத்திமா பின்த் அல் அஸ்வத்) திருட்டுக் குற்றம் செய்திருந்தாள். அவள் விஷயமாக குறைஷிகள் மிகவும் கவலைக்குள்ளாயினர். "அவள் விஷயமாக அல்லாஹ்வின் தூதரிடம் யார் பேசுவார்கள்?'' என்று தமக்குள் பேசிக் கொண்டனர். அவர்கüல் சிலர், "அல்லாஹ்வின் தூதருடைய செல்லப் பிள்ளையான உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தவிர இதற்கு யாருக்குத் துணிவு வரும்?'' என்று கூறினர். (உஸாமா (ரலி) அவர்கüடம் பரிந்துரை செய்யும்படி அவர்கள் கேட்டுக் கொள்ள, அவ்வாறே) உஸாமா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கüடம் (அவள் விஷயமாகப்) பேசினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் தண்டனைகüல் ஒரு தண்டனையின் விஷயத்திலா (அதைத் தளர்த்தும்படி என்னிடம்) நீ பரிந்துரை செய்கிறாய்'' என்று (கோபத்துடன்) கேட்டுவிட்டு, பிறகு எழுந்து நின்று உரை நிகழ்த்தினார்கள். பிறகு (அவ்வுரையில்), "உங்க ளுக்கு முன்னிருந்தவர்கள், அழிக்கப்பட்டதெல்லாம் அவர்கüல் உயர் குலத்தவன் திருடிவிட்டால் அவர்கள் அவனை (தண்டிக்காமல்) விட்டு வந்தார்கள்; அவர்கüல் பலவீனமான (பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விட்டால் அவனுக்கு தண்டனையüத்து வந்தார்கள் என்பதால் தான். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதின் மகள் ஃபாத்திமா திருடி விட்டிருந்தாலும் அவரது கையையும் நான் துண்டித்திருப்பேன்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3475)

2352 حَدَّثَنَا أَبُو الْيَمَانِ أَخْبَرَنَا شُعَيْبٌ عَنْ الزُّهْرِيِّ قَالَ حَدَّثَنِي أَنَسُ بْنُ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهَا حُلِبَتْ لِرَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ شَاةٌ دَاجِنٌ وَهِيَ فِي دَارِ أَنَسِ بْنِ مَالِكٍ وَشِيبَ لَبَنُهَا بِمَاءٍ مِنْ الْبِئْرِ الَّتِي فِي دَارِ أَنَسٍ فَأَعْطَى رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الْقَدَحَ فَشَرِبَ مِنْهُ حَتَّى إِذَا نَزَعَ الْقَدَحَ مِنْ فِيهِ وَعَلَى يَسَارِهِ أَبُو بَكْرٍ وَعَنْ يَمِينِهِ أَعْرَابِيٌّ فَقَالَ عُمَرُ وَخَافَ أَنْ يُعْطِيَهُ الْأَعْرَابِيَّ أَعْطِ أَبَا بَكْرٍ يَا رَسُولَ اللَّهِ عِنْدَكَ فَأَعْطَاهُ الْأَعْرَابِيَّ الَّذِي عَلَى يَمِينِهِ ثُمَّ قَالَ الْأَيْمَنَ فَالْأَيْمَنَ رواه البخاري

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்தி விட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்கüன் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் இடப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராம வாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, "உங்கüடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்து விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே!'' என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்து விட்டு, "(முதலில்) வலப் பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப் பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (352)

நேர்மையின்றி, பேச்சு திறமையால் வெற்றிபெற்றவர்

2458 حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنِي إِبْرَاهِيمُ بْنُ سَعْدٍ عَنْ صَالِحٍ عَنْ ابْنِ شِهَابٍ قَالَ أَخْبَرَنِي عُرْوَةُ بْنُ الزُّبَيْرِ أَنَّ زَيْنَبَ بِنْتَ أُمِّ سَلَمَةَ أَخْبَرَتْهُ أَنَّ أُمَّهَا أُمَّ سَلَمَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا زَوْجَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَخْبَرَتْهَا عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ سَمِعَ خُصُومَةً بِبَابِ حُجْرَتِهِ فَخَرَجَ إِلَيْهِمْ فَقَالَ إِنَّمَا أَنَا بَشَرٌ وَإِنَّهُ يَأْتِينِي الْخَصْمُ فَلَعَلَّ بَعْضَكُمْ أَنْ يَكُونَ أَبْلَغَ مِنْ بَعْضٍ فَأَحْسِبُ أَنَّهُ صَدَقَ فَأَقْضِيَ لَهُ بِذَلِكَ فَمَنْ قَضَيْتُ لَهُ بِحَقِّ مُسْلِمٍ فَإِنَّمَا هِيَ قِطْعَةٌ مِنْ النَّارِ فَلْيَأْخُذْهَا أَوْ فَلْيَتْرُكْهَا رواه البخاري

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது அறையின் வாசலுக்கருகே (சிலர்) சச்சரவிட்டுக் கொண்டிருந்ததைச் செவியுற்றார்கள். அவர்கüடம் சென்று, "நான் ஒரு மனிதனே. என்னிடம் வழக்காடுபவர்கள் வருகின்றார்கள். உங்கüல் ஒருவர் மற்றவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கலாம். அவர்தான் உண்மையைப் பேசியுள்ளார் என்று கருதி, நான் அவருக்கு சாதகமாகத் தீர்ப்பüத்து விடுவேனாயின், எவருக்கு ஒரு முஸ்லிமின் உரிமையை எடுத்துக் கொள்ளும்படி (யதார்த்த நிலை அறியாமல்) நான் தீர்ப்பüக்கின்றேனோ (அவருக்கு) அது நரக நெருப்பின் ஒரு துண்டேயாகும். அவன் (விரும்பினால்) அதை எடுத்துக் கொள்ளட்டும்; அல்லது அதை (எடுத்துக் கொள்ளாமல்) விட்டு விடட்டும்'' என்று கூறினார்கள்.

நூல் : புகாரி (2458)

நேர்மையாக நடந்தவருக்கு கிடைக்கும் பரிசு

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَزُهَيْرُ بْنُ حَرْبٍ وَابْنُ نُمَيْرٍ قَالُوا حَدَّثَنَا سُفْيَانُ بْنُ عُيَيْنَةَ عَنْ عَمْرٍو يَعْنِي ابْنَ دِينَارٍ عَنْ عَمْرِو بْنِ أَوْسٍ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو قَالَ ابْنُ نُمَيْرٍ وَأَبُو بَكْرٍ يَبْلُغُ بِهِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَفِي حَدِيثِ زُهَيْرٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ الْمُقْسِطِينَ عِنْدَ اللَّهِ عَلَى مَنَابِرَ مِنْ نُورٍ عَنْ يَمِينِ الرَّحْمَنِ عَزَّ وَجَلَّ وَكِلْتَا يَدَيْهِ يَمِينٌ الَّذِينَ يَعْدِلُونَ فِي حُكْمِهِمْ وَأَهْلِيهِمْ وَمَا وَلُوا رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நேர்மையான ஆட்சியாளர்கள், வல்லமையும் மாண்பும் மிக்க அளவற்ற அருளாளன் அல்லாஹ்வின் வலப் பக்கத்தில் ஒளியாலான மேடைகளில் இருப்பார்கள். அவனுடைய இரு கைகளுமே வலக்கரமே (வள மிக்கதே). அவர்கள் தமது நிர்வாகத்திலும், குடும்பத்திலும், தாம் பொறுப்பேற்றுக்கொண்ட (அனைத்)திலும் நியாயமாக நடந்துகொண்டனர் (என்பதே இச்சிறப்புக்குக் காரணம்).

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி),

நூல் : முஸ்லிலி ம் (3731)

 
மறுக்கப்படும் நன்மைகள்

நன்மை செய்தவருக்கு அது போன்ற பத்து மடங்கு உண்டு. தீமை செய்தவர், தீமை அளவே தண்டிக்கப்படுவார். அவர்கள் அநீதி இழைக்கப்பட மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 6:160)

நன்மை செய்தவருக்கு பத்துமடங்கு கூலிலி என்ற இறைவாக்கு ஈமானுடன் மனத் தூய்மையாக செய்யும் செயல்களுக்கு மட்டுமே. உள்ளத்தில் ஈமான் இல்லாமல் உலக வாழ்வின் அலங்காரத்தையும் அதில் கிடைக்கும் புகழ்ச்சிகளை மட்டும் நாடியவனாக செய்கின்றவனின் கூலி ஒருபோதும் இறைவனிடம் ஏற்றுக் கொள்ளப்படாது. அவனால் புறக்கணிக்கப்படும். இவ்வாறு இறைவன் புறக்கணித்து விடும் நன்மைகள் சிலவற்றை இக்கட்டுரையில் பார்ப்போம்.

செய்த தர்மத்தை சொல்லிக் காட்டுதல்

தர்மம் என்பது மக்களின் வறுமை நிலையினை கருதியும் தானாக மனமுவந்தும் மறுமையில் இறைவன் தரக்கூடிய மிகப்பெரும் கூலிலி யான சொர்க்கத்தை நாடியும் தர்மங்கள் இருக்க வேண்டும். ஆனால் தற்போதைய உலகில் மனிதர்கள் தர்மம் என்ற பெயரில் மனிதர்களுக்கு கொடுத்து உதவிய பொருட்களையும் பணத்தொகையினையும் மேடைப் பேச்சுகளிலும் பொது இடங்களிலும் தனது தகுதியினை உணர்த்தும் விதமாகவும் உயர்த்தும் விதமாகவும் கூறுவருகிறார்கள். இவ்வாறு செய்வதால் அவன் செய்த தர்மங்கள் சிறிதோ பெரிதோ ஒன்றுக்கும் பயன் இல்லாமல் போய்விடுகிறது.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பாது மக்களுக்குக் காட்டுவதற்காக தனது செல்வத்தைச் செலவிடுபவனைப் போல், உங்கள் தர்மங்களைச் சொல்லிலி க் காட்டியும், தொல்லை தந்தும் பாழாக்கி விடாதீர்கள்! இவனுக்கு உதாரணம் மேலே மண் படிந்திருக்கும் வழுக்குப் பாறை. அதன் மேல் மழை விழுந்ததும் மேலே ஒன்றுமில்லாமல் ஆக்கி விடுகிறது. தாம் பாடுபட்ட எதன் மீதும் அவர்கள் சக்தி பெற மாட்டார்கள். (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் நேர் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 2:264)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நபி (ஸல்) அவர்கள் "மூன்று பேரிடம் மறுமை நாளில் அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும்மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும்மாட்டான்;

அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனைதான் உண்டு'' என்று கூறினார்கள். இதையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூன்று முறை கூறினார்கள். நான், "(அவ்வாறாயின்) அவர்கள் இழப்புக்குள்ளாகிவிட்டனர்;

நஷ்டமடைந்து விட்டனர்; அவர்கள் யார் அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்டேன். அதற்கு, "தமது ஆடையை (தரையில் படுமாறு) கீழே இறக்கிக் கட்டியவர், (செய்த உபகாரத்தைச்) சொல்ரிலி க் காட்டுபவர், பொய்ச் சத்தியம் செய்து தமது சரக்கை விற்பனை செய்பவர் ஆகியோர்(தாம் அம்மூவரும்)'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ரலி),
 
நூல் : முஸ்லிலி ம் 171

பெருமைக்காக செய்தல்

பெருமை மற்றும் புகழ் அல்லாஹ் ஒருவனுக்கு மட்டுமே உரியன.அதில் மனிதர்கள் போட்டிபோடக்கூடாது. தாம் செய்யும் தர்மங்கள், நற்காரியங்கள் தற்பெருமையை காட்டுவதற்காக அமைந்தால் செய்த நன்மைகள் அழிந்து போய்விடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கண்ணியம், அ(ந்த இறை)வனுடைய கீழாடையாகும். பெருமை அவனுடைய மேலாடையாகும். (அல்லாஹ் கூறினான்:) ஆகவே, (அவற்றில்) யார் என்னோடு போட்டியிடுகிறானோ அவனை நான் வேதனை செய்வேன்.

அறிவிப்பவர் : அபூசயீத் அல்குத்ரீ (ரலி),
 
நூல் : முஸ்லிம் (5114)

ஒருவர் 10000 ரூபாய் தர்மம் செய்யும் போது அதைப்பார்த்த இன்னொருவர் 20000 ரூபாய் தர்மம் செய்கிறார். ஆனால் அவரின் நோக்கம், நான்தான் பெரிய மனிதர், நான்தான் பணக்காரன் என்பதை காட்டுவதற்காக இருந்தால் கண்டிப்பாக அவரின் தர்மத்திற்கு நன்மை கிடைக்காது.

அதே நேரத்தில் பெருமையை நாடமல் நம்மைவிட பொருளாதாரத்தில் கீழ் நிலையில் உள்ளவரே இவ்வளவு தர்மம் செய்தால் நாம் கூடுதலாக செய்யவேண்டும், இறைவனிடம் கூடுதல் நன்மையை பெறவேண்டும் என்ற எண்ணம் இருந்தால் நிச்சயம் இவர்களுக்கு நன்மை கிடைக்கும்.

இது போன்று நடந்த காரூன் என்பவனை அல்லாஹ் தண்டித்ததை திருக்குர்ஆனில் விளக்கிக்காட்டியுள்ளான்.

அல்லாஹ் உனக்குத் தந்தவற்றில் மறுமை வாழ்வைத் தேடு! இவ்வுலகில் உன் கடமையை மறந்து விடாதே! அல்லாஹ் உனக்கு நல்லுதவி செய்தது போல் நீயும் நல்லுதவி செய்! பூமியில் குழப்பத்தைத் தேடாதே! குழப்பம் செய்வோரை அல்லாஹ் விரும்ப மாட்டான் (என்றும் கூறினர்).

"என்னிடம் உள்ள அறிவின் காரணமாகவே இது எனக்குத் தரப்பட்டுள்ளது'' என்று அவன் கூறினான். "இவனை விட அதிக வலிலி மையும், ஆள் பலமும் கொண்ட பல தலைமுறையினரை இவனுக்கு முன்பு அல்லாஹ் அழித்திருக்கிறான்'' என்பதை இவன் அறியவில்லையா? அவர்களின் பாவங்கள் பற்றி இக்குற்றவாளிகள் விசாரிக்கப்பட மாட்டார்கள்.

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.
"உங்களுக்குக் கேடு தான். நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தவருக்கு அல்லாஹ்வின் கூலி தான் சிறந்தது. பொறுமையாளர்கள் தவிர மற்றவர்களுக்கு அது வழங்கப்படாது'' என்று கல்வி வழங்கப்பட்டோர் கூறினர்.

அவனை அவனது வீட்டோடு சேர்த்து பூமிக்குள் புதையச் செய்தோம்.
அல்லாஹ்வையன்றி அவனுக்கு உதவி செய்யும் ஒரு கூட்டத்தினரும் இருக்கவில்லை. அவன் உதவி பெறுபவனாகவும் இல்லை.

"அந்தோ! தனது அடியார்களில் தான் நாடியோருக்குச் செல்வத்தை அல்லாஹ் தாராளமாகவும் வழங்குகிறான். குறைத்தும் வழங்குகிறான். அல்லாஹ் நம்மீது அருள் புரிந்திருக்காவிட்டால் நம்மையும் பூமியில் புதையச் செய்திருப்பான். "அந்தோ! (ஏக இறைவனை) மறுப்போர் வெற்றி பெற மாட்டார்கள்'' என்று முதல் நாள் அவனது நிலைமைக்கு ஆசைப்பட்டோர் அன்று காலையில் கூறலானார்கள். பூமியில் ஆணவத்தையும், குழப்பத்தையும் விரும்பாதவர்களுக்காக அந்த மறுமை வாழ்வை ஏற்படுத்தியுள்ளோம். நல்ல முடிவு (இறைவனை) அஞ்சுவோர்க்கே.
 
(அல்குர்ஆன் 28:77லி83)

பிறர் மெச்சுவதற்காக செலவிடுதல்

நாம் செய்த காரியத்தை பார்த்து மற்றவர்கள் புகழ்ந்து பாரட்ட வேண்டும் என்பதற்காக இறை திருப்தியை மறந்து செய்யும் எல்லா செயல்களின் நன்மைகளும் அழிந்துவிடும். மறுமையில் அல்லாஹ் விசாரிக்கும் போது செய்த நற்செயல்கள் படைத்தவனின் திருப்திக்காக இல்லை படைப்பினங்களின் திருப்திக்காக செய்யப்பட்டவை என்று அவை நிராகரிக்கப்பட்டுவிடும்.

உங்கள் விசயத்தில் நான் மிகவும் பயப்படும் விசயம் சிறிய இணைவைப்பாகும்.

அல்லாஹ்வின் தூதரே! சிறிய இணைவைப்பு என்றால் என்ன? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு, முகஸ்துதி (அடுத்தவர்கள் மெச்ச வேண்டுமென்பதற்காக செய்வது) என்று கூறிவிட்டு. மறுமை நாளில் மக்களுக்கு அவர்கள் செய்த அமல்களுக்கு கூலி வழங்கப்படும்போது நீங்கள் உலகத்தில் யார் பார்ப்பதற்காக செய்தீர்களோ அவர்களிடம் செல்லுங்கள் உங்களுக்கு கூலி வழங்கப்படுகிறதா? என்பதை பாருங்கள் என்று அல்லாஹ் கூறிவிடுவான் என்று நபிகளார் கூறினார்கள்.

அறிவிப்பவர் : மஹ்மூத் பின் லபீத் (ரலி ),

நூல் : அஹ்மத் (22523)

(ஒரு முறை) அபூஹுரைரா (ரலிலி ) அவர்களிடம் மக்கள் (கூடி, அவை) கலைந்தபோது, சிரியாவாசியான நாத்தில் பின் கைஸ் என்பவர், "பெரியவரே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நீங்கள் செவியுற்ற ஹதீஸ் எதையேனும் எங்களுக்குத் தெரிவியுங்கள்'' என்று கேட்டார். அதற்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள், "ஆம் (தெரிவிக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பின்வருமாறு) கூறியதை நான் கேட்டுள்ளேன் என் றார்கள்: மறுமை நாளில் மக்களில் முதல் முதலில் தீர்ப்பு வழங்கப்படுபவர் யாரெனில், இறைவழியில் உயிர்த் தியாகம் செய்தவரே ஆவார். அவர் இறைவனிடம் கொண்டுவரப்படும்போது, அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல் பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) உனக்காக நான் அறப் போரில் ஈடுபட்டு என் உயிரையே தியாகம் செய்தேன்'' என்று பதிலளிப்பார்.

இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (நீ எனக்காக உயிர்த் தியாகம் செய்யவில்லை.) மாறாக, "மாவீரன்' என்று (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ போரிட்டாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப் பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு கல்வியைத் தாமும் கற்று அதைப் பிறருக்கும் கற்பித்தவரும் குர்ஆனைக் கற்றுணர்ந்தவருமான (மார்க்க அறிஞர்) ஒருவர் (இறைவனிடம்) கொண்டுவரப் படுவார். அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்து கொள்வார். பிறகு "அந்த அருட் கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அவர், "(இறைவா!) கல்வியை நானும் கற்று, பிறருக்கும் அதை நான் கற்பித்தேன். உனக்காகவே குர்ஆனை ஓதினேன்'' என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய். (எனக்காக நீ கல்வியைக் கற்கவு மில்லை; கற்பிக்கவுமில்லை.) "அறிஞர்' என்று சொல் லப்பட வேண்டும் என்பதற்காகவே நீ கல்வி கற்றாய்; "குர்ஆன் அறிஞர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ குர்ஆனை ஓதினாய். அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது (உனது நோக்கம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

பிறகு இறைவன் தாராளமான வாழ்க்கை வசதிகளும் அனைத்து விதமான செல்வங்களும் வழங்கியிருந்த பெரிய செல்வர் ஒருவர் இறைவனிடம் கொண்டுவரப்படுவார்.

அவருக்குத் தான் வழங்கியிருந்த அருட்கொடைகளை இறைவன் எடுத்துரைப்பான். அவற்றை அவர் அறிந்துகொள்வார். பிறகு, "அந்த அருட்கொடைகளில் நீ எவ்விதம் செயல்பட்டாய்?'' என்று இறைவன் கேட்பான். அதற்கு அவர், "நீ எந்தெந்த வழிகளில் எல்லாம் பொருள் செலவழிக்கப்படுவதை விரும்புகிறாயோ, அந்த வழிகளில் எதையும் விட்டுவிடாமல் அனைத்திலும் நான் உனக்காக எனது பொருளைச் செலவிட்டேன்'' என்று பதிலளிப்பார்.

அதற்கு இறைவன், "(இல்லை) நீ பொய் சொல்கிறாய் "இவர் ஒரு புரவலர்' என (மக்களிடையே) பேசப்படுவதற்காகவே நீ இவ்வாறு (செலவு) செய்தாய். (உன் எண்ணப்படி) அவ்வாறு சொல்லப்பட்டுவிட்டது. (உனது எண்ணம் நிறைவேறிவிட்டது)'' என்று கூறிவிடுவான். பிறகு இறைவனின் கட்டளைப்படி முகம் குப்புற இழுத்துச் செல்லப்பட்டு, அவர் நரகத்தில் எறியப்படுவார்.

 
அறிவிப்பவர் : சுலைமான் பின் யஸார்,
 
நூல் : முஸ்லிம் (3865)

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நம் இறைவன் (காட்சியüப்பதற்காகத்) திரையை அகற்றித் தன் காலை வெüப்படுத்தும் அந்த (மறுமை) நாüல், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வோர் ஆணும், இறைநம்பிக்கையுள்ள ஒவ்வொரு பெண்ணும் அவனுக்கு முன்னால் சிரவணக்கம் (சஜ்தா) செய்வார்கள். முகஸ்துதிக்காகவும், மக்கüன் பாராட்டைப் பெறுவதற்காகவும் இவ்வுலகில் (தொழுது) சஜ்தா செய்து வந்தவர்கள் மட்டுமே எஞ்சியிருப்பர். அப்போது அவர்கள் சஜ்தா செய்ய முற்படுவார்கள். (ஆனால்,) அவர்களது முதுகு (குனிய முடியாதவாறு) ஒரே கட்டையைப் போல் மாறிவிடும்.

அறிவிப்பவர் : அபூசயீத் (ரலி),

நூல் : புகாரி (4919)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்கüடையே ஒரு கூட்டத்தினர் கிளம்புவார்கள். அவர்களது தொழுகையுடன் உங்களுடைய தொழுகையையும், அவர்களது நோன்புடன் உங்களுடைய நோன்பையும், அவர்கüன் நற்செயல்களுடன் உங்கüன் நற்செயல்களையும் ஒப்பிட்டுப் பார்த்து உங்களுடைய தொழுகை, நோன்பு மற்றும் நற்செயல்களை அற்பமானவையாகக் கருதுவீர்கள். (அந்த அளவிற்கு அவர்களது வழிபாடு கலைகட்டியிருக்கும்.) மேலும், அவர்கள் குர்ஆனை ஓதுவார்கள். ஆனால், அது அவர்கüன் தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. வேட்டைப் பிராணியை விட்டு (அதன் உடலைத் துளைக்கின்ற) அம்பு (உடலி ன் மறுபுறம்) வெüப்பட்டு சென்று விடுவதைப் போல மார்க்கத் திலிருந்து அவர்கள் வெüயேறிவிடுவார்கள்.

(அந்தப் பிராணியின் உடலைத் துளைத்து வெüவந் ததற்கான அடையாளம் ஏதுமிருக்கிறதா என்று) அம்பின் முனையைப் பார்ப்பார். அதில் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு அம்பின் (அடிப்பாகக்) குச்சியைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். பிறகு, அம்பின் இறகைப் பார்ப்பார். அதிலும் (அடையாளம்) ஏதும் காணமாட்டார். அம்பி(ன் முனையி)ல் நாணைப் பொருத்தும் இடம் தொடர்பாகவும் (அது வேட்டைப் பிராணியைத் தைத்ததா) என்று சந்தேகம்கொள்வார். (அந்த அளவிற்கு அம்பில் எந்தத் சுவடும் இராது.)

அறிவிப்பவர் : அபூ சயீத் அல்குத்ரீ (ரலி),

நூல் : புகாரி (5058)

Published on: March 12, 2013, 1:52 PM Views: 1485

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top