ஜனவரி தீன்குலப் பெண்மணி

தலையங்கம்
கேள்விக்குரியாகும் பெண்களின் பாதுகாப்பு
இந்தியாவில் பெருநகரங்களில் பெண்களின் கற்பு சூறையாடப்படும் நிகழ்வுகள் அதிகரித்து வருகின்றன. சமீபத்தில் இந்தியாவின் தலைநகர் தில்லி -யில் நடந்த சம்பவம் இதை மேலும் உறுதி செய்கிறது.
நமது நண்பர்களுடன் நள்ளிரவில் பேருந்தில் பயணம் செய்த மாணவி பா-லி யல் பலாத்காரம் செய்யப்பட்டு பேருந்தி-லி ருந்து தள்ளிவிடப்பட்டு படுகாயத்துடன் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருக்கிறார். இது தொடர்பாக நான்கு நபர்கள் கைது செய்யப்பட்டுள்ளனர்.
இது போன்ற நிகழ்வுகள் தொடர்ந்து தில்லி -யில் நடைபெற்று வருவது வாடிக்கையாகி விட்டது. சில மாதங்களுக்கு முன்னர் கேளிக்கை விடுதியில் ஒரு பெண் மானபங்கம் செய்யப்பட்டது பரபரப்பை ஏற்படுத்தியது. மேலும் கால்சென்டரில் வேலை முடித்துவிட்டு இரவு நேரத்தில் வீட்டுக்குச் சென்ற ஒரு பெண்மணி பாலி -யல் வன்முறைக்கு இலக்கானார்.
கடந்த ஆண்டு தில்-லி காவல்துறை வெளியிட்ட புள்ளிவிவரப்படி, தில்லி -யில் 18 மணி நேரத்திற்கு ஒரு பா-லி யல் பலாத்கார சம்பவமும், 14 மணி நேரத்திற்கு ஒரு பெண் மானபங்கப்படுத்தப்படுவதும் நடைபெறுகிறது.
2010-ம் ஆண்டில் மட்டும், தேசிய தலைநகரில் 414 பாலி -யல் பலாத்கார வழக்குகள் பதிவாயின. அதாவது, சராசரியாக ஒரு நாளைக்கு குறைந்தபட்சம் ஒரு பா-லி யல் பலாத்கார சம்பவம் என்ற அளவில் மோசமான நிலை. நாட்டில் உள்ள 35 பெரிய நகரங்கள் எவற்றிலும் இந்த அளவுக்கு பா-லி யல் பலாத்கார சம்பவங்கள் நிகழவில்லை.
இவ்வளவு மோசமான பாதுகாப்பு நிலை இந்தியாவின் தலைநகரில் உள்ளது. இதற்கு காரணம்
அரசை குறை சொல்-லி பயனில்லை. காரணம் இது போன்று பாலி -யல் பலாத்காரத்திற்கு பெண்களே காரணமாக இருக்கிறார்கள்.
பாய் ஃபிரண்டுடன் தனிமையில் வருவது, நள்ளிரவில் அந்நிய ஆண்களுடன் ஆட்டம்போடுவது. கிளப்புகளில் மது அருந்துவிட்டு தனிமையில் செல்வது போன்ற மோசமான காரியங்களில் பெண்களே ஈடுபடுகின்றனர்.
இவர்களை பார்க்கும் சபல புத்தியுள்ள ஆண்கள் நள்ளிரவில் தைரியமாக தனித்து வருகிறாள், மது அருந்துகிறாள் எனவே தன் வலையில் இலகுவாக வீழ்ந்துவிடுவாள் என்று எண்ணுவதால்தான் இது போன்ற காரியங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன.
எனவே பெண்கள் தங்களின் கற்பை பாதுகாக்க ஆடைகளில் ஒழுங்குகள், பழக்கவழக்கத்தில் ஒழுங்குகள் வெளியில் செல்லும் நேரங்களில் ஒழுகுங்கள் இவற்றை பேணினால் இதுபோன்ற நிகழ்வுகள் ஏற்படாது.

தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம்

வழிகெடுக்கும் பெற்றோர்கள்
கருவறையை சிந்தித்துப் பார் விண்வெளியை சிந்தித்துப் பார் ஒவ்வொன்றிலும் நீ பயன் தரத்தக்க கோடான கோடி செய்திகள் உனக்கு அறிவியல் ஆராய்ச்சியில் ஈடுபடுமாறு திருமறைக் குர்ஆன் அந்த அறிஞர்களை சிந்திக்கத் தூண்டியது. அதன் காரணமாக
அவர்கள் சிந்தித்துப் பார்த்து திருமறைக் குர்ஆனைப் படித்தார்கள்.
அதன் மூலமாக உலகத்திற்கு ஏராளமான அறிவியல் அருட்கொடைகளை நம்முடைய முன்னோர்கள் அள்ளி வழங்கினார்கள்.
இப்னு அலீ ஸீனா என்று வரலாற்றில் இடம் பெற்றுள்ளவர். இவரை வரலாற்றுப் புத்தங்களில் அபி ஸன்னா என்றும் அழைக்கப்படும். இவர் ஒரு இஸ்லாமியப் பேரறிஞர் மருத்துவர்களுக்கெல்லாம் மருத்துவர் என்று இன்றைக்கு மருத்துவ உலகம் இவருக்கு புகழ்சூட்டி அழைத்துக் கொண்டிருக்கிறது. அப்படிப்பட்ட மிகப் பெரிய மருத்துவர் அவர் கி,பி பத்தாம் நூற்றாண்டில் எழுதிய ஒரு மருத்துவ நூலை சென்ற நூற்றாண்டில் (கி,பி பத்தொன்பதாம் நூற்றாண்டு) மொழிபெயர்த்து வெளியிட்டிருக்கின்
றார்கள். ஒவ்வொரு நாளும் மருத்துவத்தின் வளர்ச்சி அபரிதமாக வளர்ந்து வந்து கொண்டிருக்கின்ற இன்றைய காலத்தில் பத்து நுற்றாண்டுகளுக்கு முன்னர் எழுதப்பட்ட புத்தகம் ஒன்று இந்த நூற்றாண்டிலே இன்றைக்கு
வாழ்கிற அறிஞர்களால் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றது என்று சொன்னால் அவர் அன்றைக்கு சொல்-லி ச் சென்ற மருத்துவக் குறிப்புக்கள் எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்தாக இருந்துள்ளது. என்பதை இந்த மொழிபெயர்ப்பு நமக்கு எடுத்துக் காட்டுகின்றது.
அந்தக் கருத்துக்களை எப்படி சொன்னார்? எங்கிருந்து சொன்னார்? என்று நாம் யாராவது என்றைக்காவது சிந்தித்துப் பார்த்திருப்போமா? அவருக்கு மாத்திரம் இன்றி இந்த உலகில் வாழும் அனைத்து மக்களுக்கும் திருமறைக் குர்ஆன் சிந்திக்குமாறும் ஆராய்ச்சி செய்யுமாறும் அறிவுறுத்துகின்றது. இந்த கண்டு பிடிப்புக்கள் அனைத்
தையும் அவர் திருமறைக் குர்ஆனில் இருந்தும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனையில் இருந்தும் கண்டு பிடித்துக் கூறினார். இன்று வரைக்கும் அல்லாஹ்வின் அற்புதமான வேதம் அள்ளிக் கொடுத்துக் கொண்டிருக்கிறது. நாமோ கேட்கும் போதல்லாம் நேரமில்லை, என்னுடைய வேலைகளைப் பார்ப்பதற்கே நேரம் சரியாகி விடுகிறது என்று ஒரு காரணத்தைச் சொல்லுகிறோம்.
 ஆனால் தொலைக் காட்சி பார்ப்பதற்கு மாத்திரம் நமக்கு ஏராளமான நேரங்கள் இருக்கின்றன. டிவியில் படம் பார்ப்பதற்கும் தொலைக்காட்சி சீரியல்களைப் பார்ப்பதற்கும் நேரமிருக்கிறது. சீடிகளில் வகை வகையான காமக் களியாட்டங்களைப் பார்ப்பதற்கு நேரமிருக்கின்றது. இப்படி வீணாக தொலைக்காட்சி சீரியல்களுக்கு நேரத்தை ஒதுக்கிற நாம் குர்ஆனைப் படிப்பதற்கு நேரத்தை ஒதுக்கவுமில்லை. நபிகள் நாயகத்தின் போதனைகளை அதனுடைய மூல மொழிகளில் ஆய்வு செய்தோ அல்லது மொழி பெயர்ப்பு நூல்களில் இருந்தோ கற்றுக் கொள்ள முயற்சி எடுக்கவில்லை. இப்படி இஸ்லாம் காட்டித் தந்த போதனைகளை விட்ட காரணத்தினால் இந்த சமுதாயம் தன்னுடைய அறிவியல் ஆராய்ச்சிகளையும் கண்டு பிடிப்புக்களையும் இந்த உலகத்திற்கு அள்ளிக் கொடுத்த எத்தனையோ விஞ்ஞான உண்மைகளைகளையும் இந்த சமுதாயம் தொலைத்து விட்டு நிற்கிறது.
அல்லாஹ்வால் இந்த சமுதாயத்திற்கு வழங்கப்பட்ட மிகப் பெரிய அருட்கொடை நேரம் இது பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வருமாறு நமக்கு போதனை செய்கிறார்கள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கüல் அதிகமானோர்
இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகிவிடுகின்றனர்.
1.உடல் ஆரோக்கியம் 2. ஓய்வு
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-) ஆதாரம் புகாரி 6412
 அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் காலத்தைப் பற்றி பின்வருமாறு கூறுகின்றான்.
 காலத்தின் மீது சத்தியமாக! மனிதன் நஷ்டத்தில் இருக்கிறான்.
நம்பிக்கை கொண்டு நல்லறங்கள் செய்வோரையும், உண்மையைப் போதித்து பொறுமையையும் போதித்துக் கொள்வோரையும் தவிர.                              அல்குர்ஆன் 103:1,2,3
 காலத்தைப் பயன்படுத்துகிற விதத்தில் பயன்படுத்தாக காரணத்தினாலும் எதற்கு செலவழிக்க வேண்டுமோ அதற்கு செலவளிக்காமலும் எதற்கெல்லாம் செலழிக்கக் கூடாதோ அதில் காலத்தையும் நேரத்தையும் செலவழித்து வீணடிக்கும் ஒரு சமுதாயமாக இருக்கிறோம். இதன் காரணமாக மறுமைப் பேறுகளை கொஞ்சம் கொஞ்சமாக இழக்கிறோம். காலத்தை நாம் முறையாக பயன்படுத்தக் கற்றுக் கொள்ள இஸ்லாமிய மார்க்கம் எண்ணற்ற வழிமுறைகளை நமக்கு கடைப்பிடிக்குமாறு கூறி அதற்கு செயல் வடிவத்தையும் கொடுத்தது போன்று வேறு எந்த சித்தாந்தமும் சொல்லவில்லை இதனால் தான் ஒவ்வொரு தொழுகைக்கும் ஒரு குறிப்பிட்ட நேரத்தைக் குறிப்பிட்டு அதை நிறைவேற்றுவது இஸ்லாத்தில் உன்னதமிக்க செயல் என்பதையும் அல்லாஹ்வும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் காட்டித் தந்துள்ளார்கள்.
 நம்பிக்கை கொண்டோர் மீது தொழுகை நேரம் குறிக்கப்பட்ட கடமையாகவுள்ளது.                அல்குர்ஆன் 4:103
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.: நான் நபி (ஸல்) அவர்கüடம், "அல்லாஹ்விற்கு மிகவும் விருப்பமான செயல் (அமல்) எது?'' என்று கேட்டேன். அவர்கள், "உரிய நேரத்தில் தொழுகையை நிறைவேற்றுவது'' என்றார்கள்.
ஆதாரம் புகாரி 527
 நேரத்தின் படி வழிபாட்டை அமைத்துக் கொண்டு நேரத்தை பயன்படுத்த கற்றுக் கொள்ள வேண்டும். என்று இறை வழிபாட்டின் மூலம் இஸ்லாம் கற்றுத் தருகிறது. முஸ்-லி ம் சமுதாயம் நேரத்தின் அருமை பெருமை தெரியாமல் மார்க்கத்தைப் படிப்பதற்கும் அதை மற்றவர்களுக்கு கற்றுக் கொடுப்பதற்கும் அறிவைப் பெருக்குவதற்கு நேரத்தை பயன்படுத்த வேண்டியவர்கள் சீரழிவின் பால் கொண்டு சொல்லும் வீணான போழுது போக்குகளிலே நேரத்தையும் காலத்தையும் செலவழிப்பதை வன்ûமாயகக் கண்டிக்கிறது. இதை அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்.
 அல்லாஹ்வின் பாதையைக் கேலி -யாகக் கருதி அதை விட்டும் மக்களை அறிவின்றி வழி கெடுப்பதற்காக வீணான செய்திகளை விலைக்கு வாங்குவோர் மனிதர்களில் உள்ளனர். அவர்களுக்கே இழிவு படுத்தும் வேதனை உள்ளது.
 அல்குர்ஆன் 31:06
தொலைக் காட்சியின் தீமையில் இருந்து குழந்தைச் செல்வங்களைப் பாதுகாப்போம்.
தொலைக்காட்சியில் ஏற்படும் சீரழிவில் இருந்து வருங்கால சமுதாயத்தை வளர்த்தெடுக்க வேண்டிய ஒரு கட்டாயத்தில் நாம் இருக்கிறோம். எனவே குழந்தைச் செல்வங்களை இதில் இருந்து காப்பாற்ற வேண்டிய முக்கிய பொறுப்பு பெற்றெடுத்த தாûயும் தந்தையையும் சாரும் என்பதையும் கவனத்தில் எடுக்க வேண்டும்.
தமிழில் கூட ஒரு பாடல் பாடப்படுகிறது. எந்தக் குழந்தையும் நல்ல குழந்தைதான் மண்ணில் பிறக்கையிலே பின் நல்லவராவதும் தீயவராவதும் அன்னை வளர்ப்பதிலே. இப்பாடல் பாடப்படுவதற்கு முன்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் 1400 வருடங்களுக்கு முன்னர் ஒவ்வொரு குழந்தையும் இவ்வுலகில் எவ்வாறு பிறக்கின்றது என்பதைப் பற்றி அழகான ஒரு பொன் மொழியை நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள்.
பிறக்கும் போது எல்லாக் குழந்தைகளும் நல்ல குழந்தைகளாகவே பிறக்கின்றார்கள். அவர்கள் நேர்வழியில் செல்வதும் வழிகேட்டில் செல்வதற்கும் அடிப்படையான காரணம் அவர்களுடைய வளர்ப்பு முறை தான். பிள்ளைகளின் வளர்ப்பில் முக்கியப் பங்காற்றுபவர்கள் பெற்றோர்கள் தான். இதனை நபி (ஸல்) அவர்கள் மிக அற்புதமாகக் குறிப்பிட்டுள்ளார்கள்.
 ஒரு விலங்கு எப்படி முழுவளர்ச்சி பெற்ற விலங்கைப் பெற்றெடுக்கிறதோ அதைப்போல, எல்லாக் குழந்தைகளுமே இயற்கையான (மார்க்கத்)தில் தான் பிறக்கின்றன. விலங்குகள் அங்கக்குறைவுடன் பிறப்பதை நீங்கள் பார்த்திருக்கிறீர்களா? (முழுமையான விலங்கை அங்க சேதப்படுத்துவதுபோல்) பெற்றோர்கள்தாம் குழந்தைகளை (இயற்கையான மார்க்கத்தைவிட்டுத் திருப்பி) யூதர்களாகவோ கிறித்தவர்களாகவோ நெருப்பு வணங்கிகளாகவோ ஆக்கிவிடுகின்றனர்
ஆதாரம் புகாரி 1358
குழந்தைகள் வளர்ப்பு முறையைப் பொறுத்து தான் அவர்களின் எதிர்காலம் தீர்மானிக்கப்படுகிறது என்பதை மேற்கண்ட நபிமொழியிலி -ருந்து நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடியும்.
இதன் காரணமாகத்தான் குழந்தை வளர்ப்பிற்கு இஸ்லாம் மிகவும் முக்கியத்துவம் வழங்கியுள்ளது. எதிர்காலச் சமுதாயம் இன்றைய குழந்தைகள் தான். எதிர்காலச் சமுதாயம் சிறந்த சமுதாயமாக உருவாக வேண்டும் என்றால் இளம் பிராயத்திலேயே அக்குழந்தைகளுக்கு நல்லொழுக்கங்கள் போதிக்கப்பட வேண்டும். இன்றைக்கு நமது சமுதாயத்தில் நம்முடைய குழந்தைகளை தேவையில்லாத காட்சிகளைப் பார்க்க வைத்து அவர்களின் எதிர்கால வாழ்க்கையை சீரழித்து சின்னாபின்னமாக்கிவிடுகிறோம். நம்முடைய குழந்தைகளை திருமறைக் குர்ஆனையும் அல்லாஹ்வின் தூதரின் பொன் மொழிகளையும் கூறி அவர்களைத் தாலாட்ட வேண்டிய நம் சமுதாயத்தின் தாய்மார்கள் தொலைக்காட்சிகளுக்கும் வானொ-லி களுக்கும் போன் போட்டுக் கொடுத்து என்னுடைய குழந்தைக்கு இந்தப் பாடலைப் பிடிக்கும் இந்தப் பாடலைக் கேட்டால்தான் அவனுக்கு தூக்கம் வரும், அவன் சாப்பிட ஆரம்பிப்பான். எனவே இந்தப் பாடலை அவனுக்காக போடுமாறு சொல்-லி எத்தனையோ தாய்மார்கள் பிஞ்சு உள்ளத்தில் நஞ்சை வளர்ப்பதை இன்று வாழும் முஸ்லி -ம் தாய்மார்களிடம் காணக் கூடியதாக இருக்கின்றது.
வீட்டிற்கு வரும் விருந்தினர்களை முகமன் சொல்லி - அழைக்க வேண்டும் என்று கற்றுக் கொடுக்க வேண்டிய தாய்மார்கள் அதற்கு வெட்கப்பட்டு குட்மார்னிங் என்றும் நமஸ்காரம் என்று கூறி அழைப்பதற்கு கற்றுக் கொடுக்கின்றார்கள். என்றால் எந்த அளவிற்கு இந்த சமுதாயம் அன்னியர்களின் கலாச்சாரத்தைப் பின்பற்றி நம்முடைய கலாச்சாரங்களை விட்டும் நெறி பிளந்து பின்னோக்கிச் சென்று கொண்டு இருக்கின்றது. என்று நம்மை சிந்திக்க வைக்கின்றது.
குர்ஆனை ஓது என்று சொல்ல வேண்டிய வயதில் ரஜினி மாமா, கமல் மாமா, அஜித் மாமா ஆடுவது போல் ஆடி பாட்டுப் பாடு என்று சொல்லி - அதைப் பார்த்து பெற்றெடுத்த தாயும் தந்தையும் மகிழும் காட்சிகளைப் பார்க்கின்றோம். என்னுடைய குழந்தை சிறப்பாகப் பாடுகின்றது நடனமாடுகின்றது என்று கூறுகின்றோம். எந்த பெற்றோராவது என்னுடைய குழந்தை திருமறைக் குர்ஆனின் இந்த அத்தியாயத்தை சிறப்பாக ஓதுகின்றது. என்று கூறி உள்ளத்தால் பூரிப்படைந்தவர்கள் எத்தனை பேர்கள்? இருக்கின்றார்கள். எதில் எல்லாம் சந்தோசப் படவேண்டுமோ அதில் ஆனந்தம் அடையாமல் மார்க்கத்திற்கு விரோதமான மறுமை வாழ்வைச் சிரழிக்கின்ற காரியங்களை பார்த்து சந்தோசப்படுகின்றோம். இது தான் நிரந்தர தர்மம் என்றும் எண்ணிக் கொண்டிருக்கின்றோம்.
நாளை மறுமையில் நடக்கும் நிகழ்வுகளை எல்லாம் அல்லாஹ் சொல்லுவதை நாம் அறியவில்லையா? வழிகெடுப்பவர்களைப் பற்றி அல்லாஹ் எவ்வாறெல்லாம் எச்சரிக்கை செய்கிறான். என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டாமா? யார் யாரை வழிகெடுக்கின்றார்களோ அவர்களுக்கு அல்லாஹ்விடம் இரண்டு மடங்கு தண்டனையை வழங்குமாறு கூறுவார்கள் என்று அல்லாஹ் வழிகெடுத்தவர்களைப் பற்றி கூறுகிறான்.
அவர்களின் முகங்கள் நரகில் புரட்டப்படும் நாளில் "நாங்கள் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா? இத்தூதருக்குக் கட்டுப்பட்டிருக்கக் கூடாதா?'' எனக் கூறுவார்கள் "எங்கள் இறைவா! எங்கள் தலைவர்களுக்கும், எங்கள் பெரியார்களுக்கும் நாங்கள் கட்டுப்பட்டோம். அவர்கள் எங்களை வழி கெடுத்து விட்டனர்'' எனவும் கூறுவார்கள். எங்கள் இறைவா!
அவர்களுக்கு இருமடங்கு வேதனையை அளிப்பாயாக!
அவர்களை மிகப் பெரிய அளவுக்குச் சபிப்பாயாக!'' எனவும் கூறுவார்கள்.
அல்குர்ஆன் 33:66,67,68
 நாம் நம்முடைய குழந்தைகளை தவறான பாதையில் இட்டுச் சென்றால் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் இரு மடங்கு தண்டனை வழங்குமாறு பிராத்திப்பார்கள். நாளை மறுமையில் சில முகங்கள் நரகத்தில் போட்டுப் புரட்டப்படும் போது நாங்கள் அல்லாஹ்வுக்கு கட்டுப்பட்டிருக்க வேண்டுமே அவனுடைய தூதருக்கு கட்டுப் பட்டிருக்க வேண்டும் என்று அழுது புலபும் காட்சிகளை காணக்கூடிதாக இருக்கும் ஒவ்வொரு குழந்தைகயும் தன் பெற்றோர்களுக்கு எதிராக இறைவா என்னுடைய பெற்றோர்கள் என்னை வழி நடத்த வேண்டிய விதத்தில் வழிநடத்தாமல் தொலைக்காட்சிகளைப் பார்ப்பதற்கும் அதில் நடக்கும் ஆபாசக் காட்சிகளைக் கண்டு கழிப்பதற்குடங காரணமாக இருந்தார்கள் அதில் அவர்கள் என்னை எந்த விதமான ஒரு எச்சரிக்கையும் கண்டும் காணதது போன்று நடந்து எங்களின் தவறுகளைத் திருத்த உதவி செய்யாமல் எங்களை வழிகெடுத்து விட்டார்கள். என்று அல்லாஹ்விடம் முறையிட்டார்கள் என்றால் நமது நிலை என்னவாகும் என்பதை ஒரு கணம் சிந்தித்துப் பாருங்கள்.
இன்னும் சில குடும்பங்களைப் பார்க்கிறோம் குழந்தைகளை நல்ல முறையில் வளர்க்கிறோம் என்று சொல்-லி நீ டிவி பார்க்காதே என்று குழந்தைகளுக்கு சொல்-லி விட்டு பெற்றொர்கள் பார்ப்பதை காணலாம்.
தீன்குலப் பெண்ணின் குணங்கள் விருந்தாளியை உபசரிப்பாள்
عَنْ أَبِي هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தர வேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தினரைக் கண்ணியப்படுத்தட்டும்.
அல்லாஹ்வையும் மறுமைநாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய்மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி ) நூல் : புகாரி 6136, முஸ்-லி ம்
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّ رَجُلًا أَتَى النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَبَعَثَ إِلَى نِسَائِهِ فَقُلْنَ مَا مَعَنَا إِلَّا الْمَاءُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ يَضُمُّ أَوْ يُضِيفُ هَذَا فَقَالَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ أَنَا فَانْطَلَقَ بِهِ إِلَى امْرَأَتِهِ فَقَالَ أَكْرِمِي ضَيْفَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَتْ مَا عِنْدَنَا إِلَّا قُوتُ صِبْيَانِي فَقَالَ هَيِّئِي طَعَامَكِ وَأَصْبِحِي سِرَاجَكِ وَنَوِّمِي صِبْيَانَكِ إِذَا أَرَادُوا عَشَاءً فَهَيَّأَتْ طَعَامَهَا وَأَصْبَحَتْ سِرَاجَهَا وَنَوَّمَتْ صِبْيَانَهَا ثُمَّ قَامَتْ كَأَنَّهَا تُصْلِحُ سِرَاجَهَا فَأَطْفَأَتْهُ فَجَعَلَا يُرِيَانِهِ أَنَّهُمَا يَأْكُلَانِ فَبَاتَا طَاوِيَيْنِ فَلَمَّا أَصْبَحَ غَدَا إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ ضَحِكَ اللَّهُ اللَّيْلَةَ أَوْ عَجِبَ مِنْ فَعَالِكُمَا فَأَنْزَلَ اللَّهُ وَيُؤْثِرُونَ عَلَى أَنْفُسِهِمْ وَلَوْ كَانَ بِهِمْ خَصَاصَةٌ وَمَنْ يُوقَ شُحَّ نَفْسِهِ فَأُولَئِكَ هُمْ الْمُفْلِحُونَ
அபூஹுரைரா (ர-லி ) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் (விருந்தாüயாக) வந்தார். நபி (ஸல்) அவர்கள் (அவருக்கு உணவளிப்பதற்காகத்) தம் மனைவிமார்கüடம் சொல்லி யனுப்பினார்கள். அப்போது அவர்கள், "எங்களிடம் தண்ணீரைத் தவிர வேறெதுவும் இல்லை'' என்று பதிலளித்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), "இவரை (தம்முடன் உணவில்) சேர்த்துக் கொள்பவர் யார்?''...
அல்லது "இவருக்கு விருந்தளிப்பவர் யார்?''... என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "நான் (விருந்தளிக்கிறேன்)'' என்று சொல்-லி அவரை அழைத்துக் கொண்டு தம் மனைவியிடம் சென்றார். (மனைவியிடம்) "அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்களுடைய விருந்தாளியைக் கண்ணியப்படுத்து'' என்று சொன்னார்.
அதற்கு அவருடைய மனைவி, "நம்மிடம் நம் குழந்தைகளின் உணவைத் தவிர வேறெதுவுமில்லை'' என்று சொன்னார். அதற்கு அந்த அன்சாரித் தோழர், "உன் (குடும்பத்திற்கான) உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு விளக்கை ஏற்றி(விடுவதைப் போல் பாவனை செய்து அணைத்து)விடு. உன் குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களைத் தூங்கச் செய்து விடு'' என்று சொன்னார். அவ்வாறே அவருடைய மனைவியும் உணவைத் தயாராக எடுத்து வைத்து, விளக்கை ஏற்றி விட்டுத் தம் குழந்தைகளைத் தூங்கச் செய்து விட்டார். பிறகு விளக்கை சரி செய்வது போல் நின்று (பாவனை செய்து கொண்டே) விளக்கை அணைத்து விட்டார். பிறகு அவரும் அவரின் மனைவியும் உண்பது போல் (விருந்தாüயான) அந்த மனிதருக்கு (பாவனை) காட்டலானார்கள். பிறகு இருவரும் (உணவு உண்ணாமல்) வயிறு ஒட்டியவர்களாக இரவைக் கழித்தனர். காலையானதும் அந்த அன்சாரி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கüடம் சென்றார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் இருவரும் செய்ததைக் கண்டு அல்லாஹ் இன்றிரவு (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண்டான்
...அல்லது வியப்படைந்தான்'' என்று சொன்னார்கள். அப்போது அல்லாஹ், "தமக்கே தேவை இருந்தும் கூட, தம்மை விடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குகிறார்கள். உண்மையில், எவர் தன் உள்ளத்தின் கருமித்தனத்தி-ருந்து பாது காக்கப்பட்டு விட்டார்களோ அவர்கள் தாம் வெற்றியாளர்கள்'' என்னும் (59:9ம்) வசனத்தை அருüனான்.
நூல் : புகாரி 3798, முஸ்-லி ம்
عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي بَكْرٍ أَنَّ أَصْحَابَ الصُّفَّةِ كَانُوا أُنَاسًا فُقَرَاءَ وَأَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ كَانَ عِنْدَهُ طَعَامُ اثْنَيْنِ فَلْيَذْهَبْ بِثَالِثٍ وَإِنْ أَرْبَعٌ فَخَامِسٌ أَوْ سَادِسٌ وَأَنَّ أَبَا بَكْرٍ جَاءَ بِثَلَاثَةٍ فَانْطَلَقَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِعَشَرَةٍ قَالَ فَهُوَ أَنَا وَأَبِي وَأُمِّي فَلَا أَدْرِي قَالَ وَامْرَأَتِي وَخَادِمٌ بَيْنَنَا وَبَيْنَ بَيْتِ أَبِي بَكْرٍ وَإِنَّ أَبَا بَكْرٍ تَعَشَّى عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ثُمَّ لَبِثَ حَيْثُ صُلِّيَتْ الْعِشَاءُ ثُمَّ رَجَعَ فَلَبِثَ حَتَّى تَعَشَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَجَاءَ بَعْدَ مَا مَضَى مِنْ اللَّيْلِ مَا شَاءَ اللَّهُ قَالَتْ لَهُ امْرَأَتُهُ وَمَا حَبَسَكَ عَنْ أَضْيَافِكَ أَوْ قَالَتْ ضَيْفِكَ قَالَ أَوَمَا عَشَّيْتِيهِمْ قَالَتْ أَبَوْا حَتَّى تَجِيءَ قَدْ عُرِضُوا فَأَبَوْا قَالَ فَذَهَبْتُ أَنَا فَاخْتَبَأْتُ فَقَالَ يَا غُنْثَرُ فَجَدَّعَ وَسَبَّ وَقَالَ كُلُوا لَا هَنِيئًا فَقَالَ وَاللَّهِ لَا أَطْعَمُهُ أَبَدًا وَايْمُ اللَّهِ مَا كُنَّا نَأْخُذُ مِنْ لُقْمَةٍ إِلَّا رَبَا مِنْ أَسْفَلِهَا أَكْثَرُ مِنْهَا قَالَ يَعْنِي حَتَّى شَبِعُوا وَصَارَتْ أَكْثَرَ مِمَّا كَانَتْ قَبْلَ ذَلِكَ فَنَظَرَ إِلَيْهَا أَبُو بَكْرٍ فَإِذَا هِيَ كَمَا هِيَ أَوْ أَكْثَرُ مِنْهَا فَقَالَ لِامْرَأَتِهِ يَا أُخْتَ بَنِي فِرَاسٍ مَا هَذَا قَالَتْ لَا وَقُرَّةِ عَيْنِي لَهِيَ الْآنَ أَكْثَرُ مِنْهَا قَبْلَ ذَلِكَ بِثَلَاثِ مَرَّاتٍ فَأَكَلَ مِنْهَا أَبُو بَكْرٍ وَقَالَ إِنَّمَا كَانَ ذَلِكَ مِنْ الشَّيْطَانِ يَعْنِي يَمِينَهُ ثُمَّ أَكَلَ مِنْهَا لُقْمَةً ثُمَّ حَمَلَهَا إِلَى النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَصْبَحَتْ عِنْدَهُ وَكَانَ بَيْنَنَا وَبَيْنَ قَوْمٍ عَقْدٌ فَمَضَى الْأَجَلُ فَفَرَّقَنَا اثْنَا عَشَرَ رَجُلًا مَعَ كُلِّ رَجُلٍ مِنْهُمْ أُنَاسٌ اللَّهُ أَعْلَمُ كَمْ مَعَ كُلِّ رَجُلٍ فَأَكَلُوا مِنْهَا أَجْمَعُونَ
திண்ணைத் தோழர்கள் வறிய மக்களாக இருந்தார்கள். (ஒருமுறை) நபி (ஸல்) அவர்கள் ""எவரிடம் இரண்டு பேருக்கான உணவு உள்ளதோ, அவர் மூன்றாமவ(ராக திண்ணைத் தோழர் ஒருவ)ரை(த் தம்முடன்) அழைத்துச் செல்லட்டும். நான்கு பேருக்குரிய உணவு (யாராவது ஒருவரிடம்) இருந்தால் (அவர் தம்முடன்) ஐந்தாமவரையும் (ஐந்து பேருக்குரிய உணவு இருந்தால்) ஆறாம் வரையும் அழைத்துச் செல்லட்டும்'' என்று கூறினார்கள்.
(என் தந்தை) அபூபக்ர் (ர-லி ) அவர்கள் (திண்ணைத் தோழர்கள்) மூவருடன் (இல்லத்திற்கு) வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் பத்துப்பேருடன் (தம் இல்லம் நோக்கி) நடந்தார்கள்.
(என் தந்தை வீட்டிற்கு வந்தபோது வீட்டில்) நானும் (அப்துர் ரஹ்மான்), என் தந்தையும் (அபூபக்ர்), என் தாயும் (உம்மு ரூமான்), எங்கள் வீட்டிற்கும் (என் தந்தை) அபூபக்ர் (ரலி -) அவர்கüன் வீட்டிற்கும் கூட்டாகப் பணிபுரிந்து வந்த பணியாளரும்தாம் இருந்தோம்.
-இதன் அறிவிப்பாளரான அபூஉஸ்மான் (அப்துர்ரஹ்மான் பின் மல்) அந்நஹ்தீ அவர்கள் கூறுகின்றார்கள்:
"என் மனைவியும்... (இருந்தார்)' என அப்துர் ரஹ்மான் பின்
அபுபக்ர் (ர-லி ) அவர்கள் கூறினார்களா என்று எனக்கு (உறுதியாகத்) தெரியவில்லை (சந்தேகமாகவே இருக்கிறது).
அபூபக்ர் (ர-லி ) அவர்கள் (விருந்தினருக்கு உணவüக்குமாறு தம் வீட்டாரிடம் கூறிவிட்டு) நபி (ஸல்) அவர்கüடம் (சென்று) இரவு உணவு அருந்தினார்கள். பிறகு இஷாத் தொழுகை நடைபெறும் வரை அங்கேயே இருந்துவிட்டுப் பிறகு நபி (ஸல்) அவர்கள் இரவு உணவு அருந்தும் வரை காத்திருந்துவிட்டு இரவில்
அல்லாஹ் நாடிய ஒரு பகுதி கழிந்த பிறகு அபூபக்ர் (ரலி -)
அவர்கள் (தம் வீட்டுக்கு) வந்தார்கள். அவர்களுடைய துணைவியார் (என் தாயார்) அபூபக்ர் (ரலி -) அவர்களிடம், " "உங்கள் விருந்தாளிகளை' அல்லது "உங்கள் விருந்தாளியை' (உபசரிக்க வராமல்) தாமதமானதற்கு என்ன காரணம்?'' என்று கேட்டார்கள். அபூபக்ர் (ர-லி ) அவர்கள், "விருந்தினருக்கு உணவளித்தாயா?'' என்று கேட்டார்கள்.
அதற்கு என் தாயார், "நீங்கள் வரும்வரை உண்ணமாட்டோம் என்று அவர்கள் மறுத்துவிட்டார்கள். அவர்கüடம் எடுத்துச் சொல்-லி யும் அவர்கள் (உண்ண மறுத்து)விட்டார்கள்'' என்று பதிலüத்தார்கள்.
(என் தந்தை அபூபக்ர் (ரலி -) அவர்கள் நான் விருந்தாளிகளைச் சரியாகக் கவனிக்கவில்லை என்று என்னைக் கண்டிப்பார்கள் என்றஞ்சி) நான் சென்று ஒளிந்துகொண்டேன்.
அப்போது (என் தந்தை) அபூபக்ர் (ர-லி ) அவர்கள், "விவரங்கெட்டவனே!-(என்றழைத்து என்னை) "உன் காதறுந்து போக!' என்று கூறி ஏசினார்கள்.
(அவர்கள் உணவருந்த தாமதமானதற்கு அவர்களே காரணம் என்று அறிந்துகொண்டபோது) "நீங்கள் தாராளமாக உண்ணுங்கள்'' என்று (தம் விருந்தினரிடம்) கூறிவிட்டு (தம் வீட்டாரை நோக்கி, "என்னை எதிர் பார்த்துத்தானே இவ்வளவு நேரம் தாமதம் செய்தீர்கள்!) அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஒருபோதும் இதை உண்ணப் போவதில்லை'' என்று சொன்னார்கள்.
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் (பாத்திரத்திலி -ருந்து) ஒரு கவளத்தை எடுக்கும் போதெல்லாம் அதன் கீழ்ப்பகுதியி-ருந்து அதைவிட அதிகமாகப் பெருகிக்கொண்டே வந்தது. இறுதியில் அவர்கள் அனைவரும் பசியாறினர். அப்போது அந்த உணவு முன்பிருந் ததைவிட கூடி இருந்தது. அபூபக்ர் (ர-லி ) அவர்கள் அ(ந்த பாத்திரத்)தைப் பார்த்தார்கள். அப்போது அது முன்பிருந்த அளவு, அல்லது அதைவிட அதிகமாகக் காணப்பட்டது. உடனே அபூபக்ர் (ர-லி ) அவர்கள் (என் தாயாரிடம்), "பனூ ஃபிராஸ் குலத்தாரின் சகோதரியே! என்ன இது?'' என்று வினவ, அதற்கு என் தாயார், "எனது கண் குüர்ச்சியின் மீதாணையாக! இது இப்போது முன்பிருந்ததைவிட மூன்று மடங்கு அதிகமாகிவிட்டிருக்கிறது'' என்று சொன்னார்கள்.
அதி-லி ருந்து அபூபக்ர் (ர-லி ) அவர்களும் உண்டார்கள். மேலும், "(நான் ஒரு போதும் இதை உண்ண மாட்டேன் என்று என்னை சத்தியம் செய்யவைத்தது) ஷைத்தான்தான்'' என்று கூறிவிட்டு அதிலி -ருந்து இன்னும் ஒரு கவளம் உண்டார்கள். பிறகு அ(ந்தப் பாத்திரத்)தை
எடுத்துக்கொண்டு நபி (ஸல்) அவர்கüடம் சென்றார்கள்.
பிறகு அது நபி (ஸல்) அவர்களிடம் இருக்கலாயிற்று.
எங்களுக்கும் ஒரு சமுதாயத்திற்குமிடையே சமாதான ஒப்பந்தம் இருந்து வந்தது. அந்த ஒப்பந்த தவணை முடிவுற்றது. (இனி அவர்கள் போருக்கு வந்தால், அவர்களை எதிர் கொள்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் எங்களைப் பன்னிரண்டு பேராகப் பிரித்து ஒவ்வொருவரிடமும் சில படை வீரர்களை ஒப்படைத்தார்கள். ஒவ்வொருவருடனும் எவ்வளவு பேர் இருந்தனர் என்பதை அல்லாஹ்வே அறிவான். (அவ்வளவு பெரிய படையினருடன் அந்த உணவுப் பாத்திரத்தையும் கொடுத்தனுப்பினார்கள்)
அப்போது அவர்கள் அனைவரும் அதில் உண்டனர். (இவ்வாறோ அல்லது) வேறொரு முறையிலோ இதை அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் (ர-லி ) அவர்கள் அறிவித்தார்கள் என அறிவிப்பாளர்
அபூஉஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அப்துர் ரஹ்மான் பின் அபூபக்ர் (ர-லி )
நூல் : புகாரி 602, முஸ்-லி ம்
அண்டைவீட்டாருக்கு கண்ணியப்படுத்துவாள் மற்றும் நல்லது செய்வாள்
عَنْ أَبِي شُرَيْحٍ الْعَدَوِيِّ قَالَ سَمِعَتْ أُذُنَايَ وَأَبْصَرَتْ عَيْنَايَ حِينَ تَكَلَّمَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ جَائِزَتَهُ قَالَ وَمَا جَائِزَتُهُ يَا رَسُولَ اللَّهِ قَالَ يَوْمٌ وَلَيْلَةٌ وَالضِّيَافَةُ ثَلَاثَةُ أَيَّامٍ فَمَا كَانَ وَرَاءَ ذَلِكَ فَهُوَ صَدَقَةٌ عَلَيْهِ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
அபூஷுரைஹ் அல்அதவீ (ர-லி ) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பேசியபோது என் காதுகளால் கேட்டேன்; என் கண்களால் பார்த்தேன். அப்போது அவர்கள், "அல்லாஹ் வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாரைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாüக்குத் தமது கொடையைக் கண்ணியமாக வழங்கட்டும்'' என்று கூறினார்கள்.
அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவருடைய கொடை என்ன? ''என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், "(அவருடைய கொடை) ஒரு பகல் ஓர் இரவு (உபசரிப்பது) ஆகும். விருந்துபசாரம் மூன்று தினங்களாகும். அதற்கு மேல் (அüக்கும் உணவும் உபசரிப்பும்) அவருக்குத் தர்மமாக அமையும். மேலும், அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்'' என்று கூறினார்கள்.                    நூல் : புகாரி 6019
عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا نِسَاءَ الْمُسْلِمَاتِ لَا تَحْقِرَنَّ جَارَةٌ لِجَارَتِهَا وَلَوْ فِرْسِنَ شَاةٍ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: முஸ்-ம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக்காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பளிப்பாகக்) கொடுத்தாலும் அதை(க் கொடுப்பதையும், பெறுவதையும் அவர்கள்) இழிவாகக் கருத வேண்டாம்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி -) நூல் : புகாரி 2566
عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلَا يُؤْذِ جَارَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيُكْرِمْ ضَيْفَهُ وَمَنْ كَانَ يُؤْمِنُ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ فَلْيَقُلْ خَيْرًا أَوْ لِيَصْمُتْ
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ் வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் அண்டை வீட்டாருக்குத் தொல்லை தரவேண்டாம். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் தம் விருந்தாளியைக் கண்ணியப்படுத்தட்டும். அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர் (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி ) நூல் : புகாரி 6018
عَنْ أَبِي شُرَيْحٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ وَاللَّهِ لَا يُؤْمِنُ وَاللَّهِ لَا يُؤْمِنُ وَاللَّهِ لَا يُؤْمِنُ قِيلَ وَمَنْ يَا رَسُولَ اللَّهِ قَالَ الَّذِي لَا يَأْمَنُ جَارُهُ بَوَايِقَهُ
அபூஷுரைஹ் (ர-லி ) அவர்கள் கூறியதாவது: "அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்.
அல்லாஹ்வின் மீதாணையாக! அவன் இறைநம்பிக்கையாளன் அல்லன்'' என்று (மூன்று முறை) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அவன் யார்? அல்லாஹ்வின் தூதரே!'' என்று கேட்கப்பட்டது. அதற்கு நபி (ஸல்) அவர்கள் "எவனுடைய நாசவேலைகளிலி -ருந்து அவனுடைய அண்டை வீட்டார் பாதுகாப்பு உணர்வைப் பெறவில்லையோ அவன்தான்'' என்று பதிலளித்தார்கள்.    நூல் : புகாரி 6016
عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَا زَالَ يُوصِينِي جِبْرِيلُ بِالْجَارِ حَتَّى ظَنَنْتُ أَنَّهُ سَيُوَرِّثُهُ
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அண்டை வீட்டார் குறித்து என்னிடம் (வானவர்) ஜிப்ரீல் அறிவுறுத்திக்கொண்டேயிருந்தார். எந்த அளவிற்கென்றால், (எங்கே) அண்டை வீட்டாரை எனக்கு வாரிசாக்கி விடுவாரோ என்று கூட நான் எண்ணினேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-லி ) நூல் : புகாரி 6014
கோழையாக இல்லாமல் வீரப் பெண்மணியாக இருப்பாள்
عَنْ ثَابِتٍ عَنْ أَنَسٍ أَنَّ أُمَّ سُلَيْمٍ اتَّخَذَتْ يَوْمَ حُنَيْنٍ خِنْجَرًا فَكَانَ مَعَهَا فَرَآهَا أَبُو طَلْحَةَ فَقَالَ يَا رَسُولَ اللَّهِ هَذِهِ أُمُّ سُلَيْمٍ مَعَهَا خِنْجَرٌ فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَا هَذَا الْخِنْجَرُ قَالَتْ اتَّخَذْتُهُ إِنْ دَنَا مِنِّي أَحَدٌ مِنْ الْمُشْرِكِينَ بَقَرْتُ بِهِ بَطْنَهُ فَجَعَلَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَضْحَكُ قَالَتْ يَا رَسُولَ اللَّهِ اقْتُلْ مَنْ بَعْدَنَا مِنْ الطُّلَقَاءِ انْهَزَمُوا بِكَ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا أُمَّ سُلَيْمٍ إِنَّ اللَّهَ قَدْ كَفَى وَأَحْسَنَ و حَدَّثَنِيهِ مُحَمَّدُ بْنُ حَاتِمٍ حَدَّثَنَا بَهْزٌ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ أَخْبَرَنَا إِسْحَقُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي طَلْحَةَ عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ فِي قِصَّةِ أُمِّ سُلَيْمٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِثْلَ حَدِيثِ ثَابِتٍ
அனஸ் (ர-லி ) அவர்கள் கூறியதாவது: (என் தாயார்) உம்மு சுலைம் (ர-லி ) அவர்கள் ஹுனைன் போர் தினத்தன்று பிச்சுவாக் கத்தி ஒன்றை எடுத்து, தம்முடன் வைத்திருந்தார். அதைப் பார்த்த (என் தாயாரின் கணவர்) அபூதல்ஹா (ர-லி ) அவர்கள் (நபி (ஸல்) அவர்களிடம் சென்று), "அல்லாஹ்வின் தூதரே! உம்மு சுலைம் தம்முடன் பிச்சுவாக் கத்தி ஒன்றை வைத்திருக்கிறார்'' என்று கூறினார்கள். அவரிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள், "இந்தப் பிச்சுவாக் கத்தி எதற்கு?'' என்று கேட்டார்கள். அதற்கு உம்மு சுலைம் (ர-லி ) அவர்கள், "இணைவைப்பாளர்களில் யாரேனும் என்னை நெருங்கினால் அவரது வயிற்றை நான் பிளந்துவிடுவேன். அதற்காகத்தான் அதை வைத்துள்ளேன்'' என்று கூறினார். அதைக் கேட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரிக்கலானார்கள்.
உம்மு சுலைம் (ர-லி ) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! நம்மவரைத் தவிர (மக்கா வெற்றியின்போது) தங்களிடம் சரணடைந்து தங்களால் (பொது மன்னிப்பளிக்கப்பட்டு) விடுவிக்கப்பட்டவர்களைத் தாங்கள் கொன்றுவிடுங்கள்'' என்று கூறினார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்
போதுமானவனாக ஆகிவிட்டான். அவன் உபகாரமும் செய்துவிட்டான். (இந்த ஹுனைன் போரில் நமக்குச் சரிவு ஏற்பட்டாலும் பெருத்த பாதிப்பு ஏதுமில்லாமல் அல்லாஹ் காப்பாற்றிவிட்டான்)'' என்று கூறினார்கள்.                 நூல் : முஸ்-லி ம் 3697
عَنْ أَبِي نَوْفَلٍ رَأَيْتُ عَبْدَ اللَّهِ بْنَ الزُّبَيْرِ عَلَى عَقَبَةِ الْمَدِينَةِ قَالَ فَجَعَلَتْ قُرَيْشٌ تَمُرُّ عَلَيْهِ وَالنَّاسُ حَتَّى مَرَّ عَلَيْهِ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَوَقَفَ عَلَيْهِ فَقَالَ السَّلَامُ عَلَيْكَ أَبَا خُبَيْبٍ السَّلَامُ عَلَيْكَ أَبَا خُبَيْبٍ السَّلَامُ عَلَيْكَ أَبَا خُبَيْبٍ أَمَا وَاللَّهِ لَقَدْ كُنْتُ أَنْهَاكَ عَنْ هَذَا أَمَا وَاللَّهِ لَقَدْ كُنْتُ أَنْهَاكَ عَنْ هَذَا أَمَا وَاللَّهِ لَقَدْ كُنْتُ أَنْهَاكَ عَنْ هَذَا أَمَا وَاللَّهِ إِنْ كُنْتَ مَا عَلِمْتُ صَوَّامًا قَوَّامًا وَصُولًا لِلرَّحِمِ أَمَا وَاللَّهِ لَأُمَّةٌ أَنْتَ أَشَرُّهَا لَأُمَّةٌ خَيْرٌ ثُمَّ نَفَذَ عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ فَبَلَغَ الْحَجَّاجَ مَوْقِفُ عَبْدِ اللَّهِ وَقَوْلُهُ فَأَرْسَلَ إِلَيْهِ فَأُنْزِلَ عَنْ جِذْعِهِ فَأُلْقِيَ فِي قُبُورِ الْيَهُودِ ثُمَّ أَرْسَلَ إِلَى أُمِّهِ أَسْمَاءَ بِنْتِ أَبِي بَكْرٍ فَأَبَتْ أَنْ تَأْتِيَهُ فَأَعَادَ عَلَيْهَا الرَّسُولَ لَتَأْتِيَنِّي أَوْ لَأَبْعَثَنَّ إِلَيْكِ مَنْ يَسْحَبُكِ بِقُرُونِكِ قَالَ فَأَبَتْ وَقَالَتْ وَاللَّهِ لَا آتِيكَ حَتَّى تَبْعَثَ إِلَيَّ مَنْ يَسْحَبُنِي بِقُرُونِي قَالَ فَقَالَ أَرُونِي سِبْتَيَّ فَأَخَذَ نَعْلَيْهِ ثُمَّ انْطَلَقَ يَتَوَذَّفُ حَتَّى دَخَلَ عَلَيْهَا فَقَالَ كَيْفَ رَأَيْتِنِي صَنَعْتُ بِعَدُوِّ اللَّهِ قَالَتْ رَأَيْتُكَ أَفْسَدْتَ عَلَيْهِ دُنْيَاهُ وَأَفْسَدَ عَلَيْكَ آخِرَتَكَ بَلَغَنِي أَنَّكَ تَقُولُ لَهُ يَا ابْنَ ذَاتِ النِّطَاقَيْنِ أَنَا وَاللَّهِ ذَاتُ النِّطَاقَيْنِ أَمَّا أَحَدُهُمَا فَكُنْتُ أَرْفَعُ بِهِ طَعَامَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَطَعَامَ أَبِي بَكْرٍ مِنْ الدَّوَابِّ وَأَمَّا الْآخَرُ فَنِطَاقُ الْمَرْأَةِ الَّتِي لَا تَسْتَغْنِي عَنْهُ أَمَا إِنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ حَدَّثَنَا أَنَّ فِي ثَقِيفٍ كَذَّابًا وَمُبِيرًا فَأَمَّا الْكَذَّابُ فَرَأَيْنَاهُ وَأَمَّا الْمُبِيرُ فَلَا إِخَالُكَ إِلَّا إِيَّاهُ قَالَ فَقَامَ عَنْهَا وَلَمْ يُرَاجِعْهَا
அபூநவ்ஃபல் முஸ்-லி ம் பின் அபீஅக்ரப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: (ஹஜ்ஜாஜ் பின் யூசுஃபின் படையால் கொல்லப்பட்டு, பேரீச்ச மரத்தில் சிலுவையிலேற்றித் தலைகீழாகத் தொங்கவிடப்பட்டிருந்த) அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ர-லி ) அவர்களது உடலை நான் மதீனா(விலி -ருந்து மக்கா வரும் வழியிலுள்ள) "அகபா' பள்ளத்தாக்கில் கண்டேன்.
அப்போது குறைஷியரும் மற்ற மக்களும் அவரது உடலை(ப் பார்த்துவிட்டு)க் கடந்து செல்லலானார்கள். இறுதியில் அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி ) அவர்கள் வந்து அவர்களுக்கு அருகில் நின்று, "அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூகுபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும்; அபூ குபைபே! உம்மீது சாந்தி உண்டாகட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் (ஆட்சியாளருக்கெதிரான போராட்டத்தில்) ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்து வந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! இதில் ஈடுபட வேண்டாமென உம்மை நான் தடுத்துவந்தேனே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அறிந்த வரை நீர் அதிகமாக நோன்பு நோற்பவராகவும் அதிகமாக நின்று வழிபடக்கூடியவராகவும் உறவுகளை அரவணைக்கக்கூடியவராகவும் இருந்தீர்! அல்லாஹ்வின் மீதாணையாக! சமுதாயத்தில் நீர் மிகவும் தீயவர் என்றால், (இன்றைய) மக்களில் வேறு யார் நல்லவர்கள்?'' என்று கூறிவிட்டுப் பிறகு அங்கிருந்து சென்றுவிட்டார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி ) அவர்கள் (இப்னுஸ் ஸுபைருக்கு அருகில்) நின்றதைப் பற்றியும் அவர்கள் பேசியதைப் பற்றியும் ஹஜ்ஜாஜுக்குச் செய்தி எட்டியபோது, உடனே அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைரின் உடலை நோக்கி ஆளனுப்பினார்.
அவரது உடல் மரத்தி-லி ருந்து இறக்கப்பட்டு, யூதர்களின் மையவாடியில் போடப்பட்டது. பிறகு அப்துல்லாஹ் பின் அஸ் ஸுபைர் (ரலி -) அவர்களின் தாயார் அஸ்மா பின்த் அபீபக்ர் (ர-லி ) அவர்களைத் தம்மிடம் வரும்படி ஹஜ்ஜாஜ் ஆளனுப்பினார். ஆனால், ஹஜ்ஜாஜிடம் வர அஸ்மா (ரலி லி -) அவர்கள் மறுத்துவிட்டார்கள். மீண்டும் தம் தூதரை அனுப்பி, "ஒன்று நீயாக வருகிறாயா, அல்லது உமது சடையைப் பிடித்து இழுத்துவரக்கூடியவரை உன்னிடம் நான் அனுப்பட்டுமா?'' என்று ஹஜ்ஜாஜ் கேட்டார்.
அப்போதும் அஸ்மா (ர-லி ) அவர்கள் வர மறுத்ததோடல்லாமல், "அல்லாஹ்வின் மீதாணையாக! எனது சடையைப் பிடித்து என்னை இழுத்துக் கொண்டுவரக்கூடியவரை நீர் அனுப்பாத வரையில் நான் உம்மிடம் வரப்போவதில்லை'' என்று கூறிவிட்டார்கள்.
உடனே ஹஜ்ஜாஜ், "என் செருப்புகள் எங்கே?'' என்று கூறி அதைப் பெற்று (அணிந்து) கொண்டு, பிறகு (இறுமாப்போடு) விரைவாக நடந்து அஸ்மா (ர-லி ) அவர்களிடம் வந்தார். பிறகு "அல்லாஹ்வின் விரோதியை (உமது மகனை) என்ன செய்தேன் பார்த்தாயா?'' என்று கேட்டார்.
அதற்கு அஸ்மா (ர-லி ) அவர்கள் கூறினார்கள்: நீ (என் மகன்) அப்துல்லாஹ்வின் இம்மையைச் சீரழித்துவிட்டாய்; அவரோ உன் மறுமையைச் சீரழித்துவிட்டார் என்றே நான் கருதுகிறேன். நீ அவரை "இரு கச்சுடையாளின் புதல்வரே!' என (நகைப்போடு) அழைப்பாய் என்று எனக்குத் தகவல் கிடைத்தது. (ஆம்) அல்லாஹ்வின் மீதாணையாக! இரு கச்சுடையாள் நான்தான். (மக்காவிலி ருந்து மதீனாவுக்கு ஹிஜ்ரத் மேற்கொண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உணவையும், (என் தந்தை) அபூபக்ர் (ரலி -) அவர்களின் உணவையும் அவ்விரு கச்சுகளில் ஒன்றால் கட்டி எடுத்துச்சென்றேன். மற்றொன்று ஒரு பெண்ணிடம் அவசியம் இருக்க வேண்டிய கச்சாகும்.
நினைவிற்கொள்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், "ஸகீஃப் குலத்தாரில் மகா பொய்யன் ஒருவனும் நாசகாரன் ஒருவனும் இருப்பார்கள்'' என்று கூறினார்கள். மகா பொய்யனை (முக்தார் பின் அபீஉபைத்) நாங்கள் பார்த்து விட்டோம். அந்த நாசகாரன் நீதான் என்றே நான் கருதுகிறேன்'' என்று கூறினார். உடனே ஹஜ்ஜாஜ் அங்கிருந்து எழுந்து சென்றுவிட்டார்; அஸ்மா (ர-லி ) அவர்களுக்குப் பதிலேதும் சொல்லவில்லை.
நூல் : முஸ்-லி ம் 4975
                                                     வளரும் இன்ஷா அல்லாஹ்
 
வானவர்கள்
வேதனையைக் கொண்டு வரும் வானவர்கள்
மார்க்கத்தின் சட்ட்திட்டங்களை மனிதர்களுக்கு கொண்டு வருவதுடன் சில நேரங்களில் மார்க்கச் சட்டத்துடன் தொடர்பில்லாத அறிவிப்புக்களையும் அல்லாஹ்வின் புறத்தி-லி ருந்து கொண்டு வருவதும் மலக்குகளின் பணியாகும்.
குழந்தை பிறத்தல் போன்ற செய்திகளை நபிமார்கள் மற்றும் நல்லடியார்களுக்குத் தெரிவிப்பதற்கு ஜிப்ரீல் (அலை) அல்லாத வேறு மலக்குகளை அல்லாஹ் அனுப்பியுள்ளான். இப்படி இப்ராஹீம் (அலை), மர்யம் (அலை) போன்றவர்களுக்கு குழந்தை பாக்கியம் கிடைக்கவிருப்பதை தெரிவிப்பதற்கு மலக்குகள் வந்துள்ளார்கள். ஆயிஷா (ரலி -) அவர்களை மணமுடிக்கப் போகும் தகவல் மலக்குகள் மூலமாக நபி (ஸல்) அவர்களுக்கு கிடைத்தது. இவ்வாறான நற்செய்திகளும் எச்சரிக்கைகளும் மலக்குகள் மூலமாக சொல்லப்படும். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தி கொண்டு வந்தனர்.
ஸலாம் என்று அவர்கள் கூறினர். அவரும் ஸலாம் என்றார். தாமதமின்றி பொரிக்கப்பட்ட கன்றுக் குட்டியைக் கொண்டு வந்தார். அவர்களின் கைகள் (உண்பதற்கு) அதை நோக்கிச் செல்லாததைக் கண்ட போது, அறிமுகமற்ற இனமாக
அவர்களைக் கருதினார். அவர்களைப் பற்றி மனதுக்குள் பயந்தார். "பயப்படாதீர்! நாங்கள் லூத் உடைய சமுதாயத்திற்காக
அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள் கூறினர்.
 (அல்குர்ஆன் 11 : 69)
இப்ராஹீமின் மரியாதைக்குரிய விருந்தினர்கள் பற்றிய செய்தி உமக்குக் கிடைத்ததா? அவரிடம் அவர்கள் வந்து ஸலாம் கூறிய போது அவரும் ஸலாம் கூறினார். அவர்கள் அறிமுகமில்லாத சமுதாயம்! தமது குடும்பத்தாரிடம் விரைந்து சென்று பொரித்த காளைக் கன்றைக் கொண்டு வந்தார். அதை அவர்களின் அருகில் வைத்து "சாப்பிட மாட்டீர்களா?'' என்றார். அவர்களைப் பற்றிப் பயந்தார். "பயப்படாதீர்!'' என்று அவர்கள் கூறினர். அறிவாளியான ஆண் குழந்தை பற்றி அவருக்கு நற்செய்தி கூறினர்.
உடனே அவரது மனைவி சப்தமிட்டவராக வந்து முகத்தில் அடித்துக் கொண்டு, "நான் மலட்டுக் கிழவியாயிற்றே'' என்றார்.
அதற்கவர்கள் "அப்படித்தான் உமது இறைவன் கூறினான். அவன் ஞானமிக்கவன். அறிந்தவன்'' என்றனர்.
(அல்குர்ஆன் 51 : 24 முதல் 30)
இப்ராஹீமின் விருந்தினர் பற்றியும் அவர்களுக்குக் கூறுவீராக! அவர்கள், அவரிடம் சென்று ஸலாம் கூறினர். அதற்கு அவர் "நாம் உங்களைப் (பார்த்துப்) பயப்படுகிறோம்'' என்றார். "நீர் பயப்படாதீர்! அறிவுடைய ஆண் குழந்தை பற்றி உமக்கு நாங்கள் நற்செய்தி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறினர்.
 (அல்குர்ஆன் 15 : 51.52,53)
நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்தபோது "அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ் வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்'' என்றனர்.
(அல்குர்ஆன் 29 : 31)
"எங்கள் இறைவன் அல்லாஹ்வே'' என்று கூறி பின்னர் உறுதியாகவும் இருந்தோரிடம் வானவர்கள் இறங்கி "அஞ் சாதீர்கள்! கவலைப்படாதீர்கள்! உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட சொர்க்கம் பற்றிய நற்செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள்!'' எனக் கூறுவார்கள்.                   
(அல்குர்ஆன் 41 : 30)
அவர் தொழுமிடத்தில் நின்று தொழுது கொண்டிருந்த போது "யஹ்யாவைப் பற்றி அல்லாஹ் உமக்கு நற்செய்தி கூறுகிறான்.
அல்லாஹ்வின் வார்த்தையை அவர் உண்மைப்படுத்துவார். தலைவராகவும், ஒழுக்கக் கட்டுப்பாடுமிக்கவராகவும், நபியாகவும், நல்லவராகவும் இருப்பார்'' என்று அவரை வானவர்கள் அழைத்துக் கூறினர்.                       (அல்குர்ஆன் 3 : 39)
"மர்யமே! அல்லாஹ் உம்மைத் தேர்வு செய்து தூய்மையாக்கி அகிலத்துப் பெண்களை விட உம்மைச் சிறப்பித்தான்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் 3 : 42)
"மர்யமே! அல்லாஹ் தன் வார்த்தை பற்றி உமக்கு நற்செய்தி கூறுகிறான். மர்யமின் மகனான ஈஸா எனும் மஸீஹ் என்பது அவரது பெயர். இவ்வுலகிலும், மறுமையிலும் தகுதி மிக்கவராகவும், (இறைவனுக்கு) நெருக்கமானவராகவும் இருப்பார்'' என்று வானவர்கள் கூறியதை நினைவூட்டுவீராக!
(அல்குர்ஆன் 3 : 45)
இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும்
அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார். "நான், உமக்குப் பரிசுத்தமான புதல்வனை அன்பளிப்புத் தருவதற்காக (வந்த) உமது இறைவனின் தூதன்'' என்று அவர் கூறினார்.
(அல்குர்ஆன் 19 : 16 லி 19)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு மனிதர் தம் (கொள்கை)ச்
சகோதரரைச் சந்திப்பதற்காக வேறோர் ஊருக்குச் சென்றார். அல்லாஹ், அவர் செல்லும் வழியில் அவரை எதிர்பார்த்தபடி வானவர் ஒருவரை அமரச் செய்தான். அந்த மனிதர் அவரிடம் வந்தபோது, "எங்கே செல்கிறாய்?'' என்று அந்த வானவர் கேட்டார். அதற்கு அந்த மனிதர், "இந்த ஊரிலுள்ள என் சகோதரர் ஒருவரைச் சந்திப்பதற்காகச் செல்கிறேன்'' என்று கூறினார். அதற்கு அவ்வானவர், "அவர் உமக்குச் செலுத்த வேண்டிய பிரதியுபகாரம் ஏதேனும் உள்ளதா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "இல்லை; எனினும் நான் வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ்வுக்காக அவரை நேசிக்கிறேன்'' என்று கூறினார். அதற்கு அந்த வானவர், "நீ அல்லாஹ்வுக்காக அவரை நேசித்ததைப் போன்றே அல்லாஹ்வும் உன்னை நேசிக்கிறான் என்பதைத் தெரிவிக்க அல்லாஹ்வால் உம்மிடம் அனுப்பப்பெற்ற தூதர் ஆவேன் நான்'' என்று சொன்னார்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி -), ஆதாரம் : முஸ்லி -ம் (5016)
 (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கüடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்தார்கள். "அல்லாஹ்வின் தூதரே! இதோ, கதீஜா தம்முடன் ஒரு பாத்திரத்தில் குழம்பு ...அல்லது உணவு... அல்லது பானம் எடுத்துக் கொண்டு உங்களை நோக்கி வந்து கொண்டிருக்கிறார். அவர் உங்கüடம் வந்தவுடன் அவருக்கு அவருடைய இறைவனின் தரப்பிலி ருந்தும் என் தரப்பிலி ருந்தும் சலாம் கூறி அவருக்கு சொர்க்கத்தில் கூச்சல் குழப்பமோ, களைப்போ காண முடியாத முத்து மாüகை ஒன்று தரப்படவிருப்பதாக நற்செய்தி சொல்லுங்கள்'' என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி -), ஆதாரம் : புகாரி (3820)
 (என்னிடம்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (நான் உன்னை மணப்பதற்கு முன்னால்) இரண்டு தடவை உன்னை நான் கனவில் கண்டேன். ஒரு மனிதர் (உடைய தோற்றத்
திலி -ருந்த வானவர்) உன்னை ஒரு பட்டுத் துண்டில் எடுத்துச் செல்கிறார். அப்போது அவர் "இவர் உங்கள் (வருங்கால) மனைவி'' என்று கூறினார். உடனே நான் அந்தப் பட்டுத் துண்டை விலக்கிப் பார்க்கிறேன். அதில் இருந்தது நீதான்.
அப்போது நான் (என் மனதிற்குள்) "இக்கனவு அல்லாஹ்வின் தரப்பிலி ருந்து வந்ததாயின், இதனை அல்லாஹ் நனவாக்குவான்'' என்று சொல்-க்கொண்டேன்.
அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி -), ஆதாரம் : புகாரி (5078)
வேதனையைக் கொண்டுவருதல் :
அல்லாஹ்வை வணங்காமல் அவனால் அனுப்பப்பட்ட தூதரின் வழிமுறையைப் பின்பற்றாமல் வரம்புமீறி தறிகெட்டு வாழ்ந்த முன்சென்ற பல சமுதாயங்களைப் பூமியிலேயே அல்லாஹ் அழித்துள்ளான். வெள்ளம், பூகம்பம் போன்றவற்றின் மூலம் இறைமறுப்பாளர்களைக் கடுமையாக தண்டித்துள்ளான். இவ்வாறு இறைநெறியை மறுத்து மனோ இச்சையின் பாதையில் பயணிக்கும் மக்களை எச்சரிப்பதற்கும் தண்டிப்பதற்கும்
அல்லாஹ் மலக்குகளை அனுப்பியுள்ளான். அதன்படி மலக்குகள் பூமிக்கு வந்து தங்களுக்கு கொடுக்கப்பட்ட தண்டிக்கும் பணியைச் சிறப்பாக செய்து முடித்துச் செல்வார்கள்.
இதற்கான ஆதாரங்களைக் காண்போம்.வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவனின் கட்டளை வருவதைத்தான் அவர்கள் எதிர்பார்க்கி றார்களா? அவர்களுக்கு முன் சென்றோரும் இவ்வாறே செய்தனர்.
அல்லாஹ் அவர்களுக்குத் தீங்கு இழைக்கவில்லை. மாறாக அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டிருந்தனர்.
(அல்குர்ஆன் 16 : 33)
"என் இறைவா! சீரழிக்கும் இந்தச் சமுதாயத்துக்கு எதிராக எனக்கு உதவுவாயாக!'' என்று அவர் கூறினார். நமது தூதர்கள் இப்ராஹீமிடம் நற்செய்தியைக் கொண்டு வந்த போது "அவ்வூரார் அநியாயக்காரர்களாக உள்ளனர்; அவ்வூராரை நாங்கள் அழிக்கப் போகிறோம்'' என்றனர். (அல்குர்ஆன் 29 : 30, 31)
"தூதர்களே! உங்கள் விஷயம் என்ன?'' என்று கேட்டார். "வரம்பு மீறி குற்றம் புரிந்த கூட்டத்தின் மீது உமது இறைவனால்
அடையாளமிடப்பட்ட களிமண் கற்களை எறிவதற்காக நாங்கள் அவர்களிடம் அனுப்பப்பட்டுள்ளோம்'' என்று அவர்கள்
கூறினர்.                  (அல்குர்ஆன்51 : 31, 32, 33)
நமது தூதர்கள் லூத்திடம் வந்த போது, அவர்கள் விஷயத்தில் அவர் கவலைப்பட்டார். அவர்களுக்காக மனம் வருந்தினார். "இது மிகவும் கடினமான நாள்'' எனவும் கூறினார். அவரது சமுதாயத்தினர் அவரிடம் விரைந்து வந்தனர். இதற்கு முன் அவர்கள் தீமைகளைச் செய்து வந்தனர். "என் சமுதாயமே! இதோ என் புதல்விகள் உள்ளனர். அவர்கள் உங்களுக்கு, தூய்மையானோர்.
அல்லாஹ்வை அஞ்சுங்கள்! எனது விருந்தினர் விஷயத்தில் எனக்குக் கேவலத்தை ஏற்படுத்தி விடாதீர்கள்! உங்களில் நல்ல ஓர் ஆண் மகன் கூட இல்லையா?'' என்று கேட்டார். "உமது புதல்விகளிடம் எங்களுக்கு எந்தத் தேவையுமில்லை என்பதை நீர் உறுதியாக அறிவீர்! நாங்கள் விரும்புவதையும் நீர் அறிவீர்'' என்றனர். "உங்கள் விஷயத்தில் எனக்குச் சக்தி இருக்கக் கூடாதா? அல்லது பலமான ஆதரவை நான் பெற்றிருக்கக் கூடாதா?'' என்று அவர் கூறினார். "லூத்தே! நாங்கள் உமது இறைவனின் தூதர்கள். அவர்கள் உம்மை நெருங்கவே முடியாது. உமது மனைவியைத் தவிர உமது குடும்பத்தாருடன் இரவின் ஒரு பகுதியில் புறப் படுவீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம்.
அவர்களுக்கு ஏற்படக்கூடியது அவளுக்கும் ஏற்படும். அவர்களின் காலக்கெடு வைகறைப் பொழுது. வைகறைப் பொழுது சமீபத்தில் இல்லையா?'' என்றனர்.
                          (அல்குர்ஆன் 11 : 77 முதல் 81 வரை)
(அதற்கு லூத் நபியிடம் வானவர்கள்) "அவ்வாறில்லை!
அவர்கள் சந்தேகம் எழுப்பியதை உம்மிடம் கொண்டு வந்துள்ளோம்; உண்மையையே உம்மிடம் கொண்டு வந்தோம்; நாங்கள் உண்மை கூறுபவர்கள்; இரவின் ஒரு பகுதியில் உமது குடும்பத்தாருடன் செல்வீராக! அவர்களைப் பின் தொடர்ந்து (கடைசியில்) நீர் செல்வீராக! உங்களில் எவரும் திரும்பிப் பார்க்க வேண்டாம். கட்டளையிட்டவாறு செய்து முடியுங்கள்!'' என்று
கூறினார்கள்.                     (அல்குர்ஆன் 15 : 63)
(முஹம்மதே!) வானவர்கள் அவர்களிடம் வருவதை, அல்லது உமது இறைவன் வருவதை, அல்லது உமது இறைவனின் சில சான்றுகள் வருவதைத் தான் அவர்கள் எதிர்பார்க்கிறார்களா? உமது இறைவனின் சில சான்றுகள் வரும்நாளில் ஏற்கனவே நம்பிக்கை கொண்டவர்களையும், நம்பிக்கையோடு நல்லறங் களை செய்தவர்களையும் தவிர எவருக்கும் அவரது நம்பிக்கை பயன்தராது, "நீங்களும் எதிர்பாருங்கள்! நாங்களும் எதிர்பார்த்துக் கொண்டிருக்கிறோம்'' எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 6 : 158)
சொர்க்கவாசிகளுக்குப் பணிவிடை செய்தல் :
இந்த உலகில் இறைக்கட்டளைக்கு கட்டுப்பட்டு வாழ்ந்தவர்களுக்கு மறுமையில் மகத்தான நற்கூலி - இருக்கின்றது. அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் அடிபணிந்து வாழ்ந்த அவர்கள் மறுமையிலே சொர்க்கத்தில் சுகபோகமான சந்தோசமான வாழ்க்கையை அனுபவிப்பார்கள். இவ்வாறு சொர்க்கத்தில் இருக்கும் மக்களுக்குப் பணிவிடை செய்யும் பணிக்காக பல மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அந்த வானவர்கள் சொர்க்கத்திற்குள் வரும் நல்லடியார்களான மனிதர்களை வரவேற்பார்கள். அவர்களுக்குக் கிடைத்திருக்கும் பெரும் பாக்கியத்திற்காக நல்வாழ்த்துக்களைக் கூறுவார்கள்.
அந்த மலக்குகள் அல்லாஹ்வின் உத்தரவுக்கு ஏற்ப அவர்களுக்கு தேவையான விருப்பமானதைக் கொடுத்து மகிழ்விப்பார்கள். இதற்கான சான்றுகளை இனிக் காண்போம்.
சொர்க்கவாசிகளை வரவேற்று வாழ்த்து கூறுவார்கள் :
அபூஹுரைரா (ர-லி ) அவர்கள் கூறியதாவது :"இரு ஜோடி (பொருள்)களை அல்லாஹ்வின் பாதையில் செலவழித்தவர்களை சொர்க்கத்தின் காவலர்(களான வானவர்)கள் "இன்னாரே! இங்கே வாருங்கள்' என்று அழைப்பார்கள்'' என நபி (ஸல்)
அவர்கள் கூறினார்கள். இதைக் கேட்ட அபூபக்ர் (ர-) அவர்கள், "இப்படிப்பட்டவருக்குக் கவலையே கிடையாதே'' என்று கூறி னார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் அவர்கüல் ஒருவராயிருப்பீர்கள் என்று நான் நம்புகிறேன்'' என்று சொன் னார்கள்.                  
ஆதாரம் : புகாரி (3216)
அவர்களின் உள்ளங்களில் இருந்த குரோதத்தை எடுத்து விடுவோம். அவர்களுக்குக் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். "நமக்கு இத்தகைய வழி காட்டிய அல்லாஹ்வுக்கே புகழனைத்தும். அல்லாஹ் எங்களுக்கு நேர்வழி காட்டியிருக்காவிட்டால் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம். நமது இறைவனின் தூதர்கள் உண்மையையே கொண்டு வந்தனர்'' என அவர்கள் கூறுவார்கள். "உங்கள் செயல்களின் காரணமாக உங்களுக்கு உரிமையாக்கப்பட்டுள்ள சொர்க்கம் இதுவே'' என்று அவர்களுக்கு (வானவர்களிடம் இருந்து பதில்) கூறப்படும்.                           
(அல்குர்ஆன்7 : 43)
"அச்சமற்று நிம்மதியுடன் இதில் நுழையுங்கள்!'' (என்று
கூறப்படும்).                        
(அல்குர்ஆன் 15 : 46)
அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும்
அவர்களிடம் நுழைவார்கள். நீங்கள் பொறுமையாக இருந்ததால் உங்களுக்கு ஸலாம் உண்டாகட்டும். இவ்வுலகின் தீர்ப்பு (உங்களுக்கு) நல்லதாக உள்ளது (என்று வானவர்கள் கூறுவார்கள்).
(அல்குர்ஆன் 13 : 23, 24)
மாபெரும் திடுக்கம் அவர்களைக் கவலையில் ஆழ்த்தாது. வானவர்கள் அவர்களை எதிர்கொள்வார்கள். "இதுவே உங்களுக்கு வாக்களிக்கப்பட்ட நாள்'' (எனக் கூறுவார்கள்).
(அல்குர்ஆன் 21 : 103 )
சொர்க்கவாசிகளுக்கு பணிவிடை செய்வார்கள் :
அவர்களும், அவர்களின் பெற்றோர், மனைவியர் மற்றும் சந்ததிகளில் நல்லோரும் நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழைவார்கள். வானவர்கள் ஒவ்வொரு வாசல் வழியாகவும்
அவர்களிடம் நுழைவார்கள்.              
(அல்குர்ஆன் 13 : 23)
இவ்வுலக வாழ்க்கையிலும், மறுமையிலும் நாங்கள் உங்கள் உதவியாளர்கள். நிகரற்ற அன்புடைய மன்னிப்பவனின் விருந்தாக நீங்கள் ஆசைப்படுபவை உங்களுக்குக் கிடைக்கும். நீங்கள் கேட்பதும் உங்களுக்கு உண்டு என்றும் (வானவர்கள்) கூறுவர்.
(அல்குர்ஆன் 41 : 31)
(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலி ருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?'' என்று அதன் காவலர்கள் (வானவர்கள்) கேட்பார்கள். அதற்கு அவர்கள் "ஆம்'' என்பார்கள். எனினும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகிவிட்டது. "நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்!'' என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது. தமது இறைவனை அஞ்சியோர் சொர்க்கத்திற்கு கூட்டம் கூட்டமாக ஓட்டிச் செல்லப்படுவார்கள். அதன் வாசல்கள் திறக்கப்பட்டு அவர்கள் அங்கே வந்ததும் "உங்கள் மீது ஸலாம் உண்டாகட்டும். நீங்கள் மகிழ்ச்சியடைவீர்கள்! நிரந்தரமாக இருக்கும் நிலையில் இதில் நுழையுங்கள்!'' என
அதன் காவலர்கள் (வானவர்கள்) அவர்களிடம் கூறுவார்கள்.
(அல்குர்ஆன் 39 : 71 முதல் 73 )
நரகவாசிகளைத் தண்டித்தல் :
ஏக இறைவனை மறுத்து மறந்து திருத்தூதரைப் பின்பற்றாமல் புறக் கணித்துத் திரிந்தவர்கள் மறுமையில் கருக்கும் நரகிலே துன்புறுத்தும் வேதனையில் தவித்துக் கொண்டிருப்பார்கள். அங்கே அவர்களுக்கு கடுமையான தண்டனைகளைக் கொடுப்பதற்காக கொடூரமான மலக்குகள் நியமிக்கப்பட்டுள்ளார்கள். அவர்கள் குற்றவாளிகளுக்கு அவர்களின் பாவங்களுக்கேற்ப விதவிதமான வேதனைகளைத் தருவார்கள்.
அல்லாஹ்வின் ஆணைப்படி நரகவாசிகளுக்கு அவர்களின் பாவங்களுக்கு தோதுவாக மலக்குமார்கள் நரகிலே வாட்டி வதைப்பார்கள். கடுமையாகத் தண்டிப்பார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
(மறுமைநாüல்) கருமை கலந்த வெண்ணிற ஆடு ஒன்றின் தோற்றத்தில் மரணம் கொண்டுவரப்படும். அப்போது அறிவிப்புச் செய்யும் (வானவர்கüல்) ஒருவர், "சொர்க்கவாசிகளே!' என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அறிவிப்புச் செய்பவர், "இதை (இந்த ஆட்டை) நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்பார். அவர்கள், "ஆம்! இதுதான் மரணம்'' என்று பதிலüப்பார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்திருக்கிறார்கள். பிறகு அவர் நரகவாசிகளை நோக்கி: "நரகவாசிகளே!' என்று அழைப்பார். அவர்கள் தலையை நீட்டிப் பார்ப்பார்கள். அவர் "இதை நீங்கள் அறிவீர்களா?'' என்று கேட்பார். அவர்கள், "ஆம் (அறிவோம்); இதுதான் மரணம்'' என்று பதில் சொல்வார்கள். அவர்கள் அனைவரும் அதை (முன்பே) பார்த்துள்ளனர். உடனே அது (ஆட்டின் உருவத்திலுள்ள மரணம்) அறுக்கப்பட்டுவிடும். பிறகு அவர், "சொர்க்கவாசிகளே! நிரந்தரம்; இனி மரணமே இல்லை. நரகவாசிகளே! நிரந்தரம்; இனி மரணம் என்பதே இல்லை'' என்று கூறுவார். இதைக் கூறிவிட்டு நபி (ஸல்)
அவர்கள், "(நபியே!) நியாயத் தீர்ப்பüக்கப்படும் துக்கம் நிறைந்த அந்நாளைப் பற்றி•நீங்கள் அவர்களை எச்சரியுங்கள்! எனினும், (இன்று உலக வாழ்வில்) இவர்கள் கவலையற்றிருக்கிருக்கின்றனர்.
ஆதலால் இவர்கள் நம்பிக்கைகொள்ளவே மாட்டார்கள்'' எனும் (19:39ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள். மேலும், "இன்று உலகில் வசிக்கும் இவர்கள் கவலையற்று, அசட்டையாக உள்ளனர்.
ஆகவே இவர்கள் நம்பிக்கைகொள்ள மாட்டார்கள்'' என்றும் நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.
ஆதாரம் : புஹாரி (4730)
(ஏக இறைவனை) மறுத்தோர் கூட்டம் கூட்டமாக நரகத்திற்கு ஓட்டிச் செல்லப்படுவார்கள். அவர்கள் அங்கே வந்ததும் அதன் வாசல்கள் திறக்கப்படும். "உங்கள் இறைவனின் வசனங்களை உங்களுக்குக் கூறும் தூதர்கள் உங்களிலி ருந்தே உங்களுக்கு வரவில்லையா? இந்த நாளை நீங்கள் சந்திக்க வேண்டியது வரும் என்பதை உங்களுக்கு அவர்கள் எச்சரிக்கவில்லையா?'' என்று அதன் காவலர்கள் (வானவர்கள்) கேட்பார்கள். அதற்கு அவர்கள் "ஆம்'' என்பார்கள். எனினும் (ஏக இறைவனை) மறுப்போருக்கு வேதனை என்ற கட்டளை உறுதியாகிவிட்டது. "நரகத்தின் வாசல்களில் நுழையுங்கள்!'' என்று கூறப்படும். அதில் அவர்கள் நிரந்தரமாக இருப்பார்கள். பெருமையடித்தோரின் தங்குமிடம் மிகவும் கெட்டது.               (அல்குர்ஆன் 39 : 71 - 73)
"உங்கள் இறைவனிடம் (எங்களுக்காக) பிரார்த்தனை செய்யுங்கள்! இவ்வேதனையை ஒரே ஒரு நாள் அவன் இலேசாக்குவான்'' என்று (மறுமையில்) நரகத்தில் கிடப்பவர்கள் நரகத்தின் காவலர்களிடம் கூறுவார்கள்.                      (அல்குர்ஆன் 40:49)
ஸூர் ஊதப்படும். இதுவே எச்சரிக்கப்பட்ட நாள். ஒவ்வொருவரும், இழுத்துச் செல்பவருடனும் சாட்சியுடனும் வருவர். இதில் தான் நீ அலட்சியமாக இருந்தாய். உன்னை விட்டும் உனது திரையை நீக்கி விட்டோம். இன்று உனது பார்வை கூர்மையாகவுள்ளது. (எழுதும் வானவராகிய) அவரது கூட்டாளி "இதோ என்னிடம் எழுதப்பட்ட ஏடு இருக்கிறது'' என்பார்.   அல்குர்ஆன் 50:20,23
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்யமாட்டார்கள். கட்டளையிடப்பட்டதைச் செய்வார்கள்.                     (அல்குர்ஆன் 66 : 6)
கோபத்தால் அது வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள்.                (அல்குர்ஆன்67:8)
நரகத்தின் காவலர்களை வானவர்களாகவே தவிர நாம் ஆக்கவில்லை. அவர்களின் எண்ணிக்கையை (நம்மை) மறுப்போருக்குச் சோதனையாகவே தவிர நாம் ஆக்கவில்லை.
(அல்குர்ஆன் 74 : 31)
அவன் தனது சபையோரை அழைக்கட்டும். நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.         (அல்குர்ஆன் 96 : 18)
இப்னு மஸ்ஊத் (ரலி -) அவர்கள் அறிவிப்பதாவது : அன்றைய நாளில் நரகம் எழுபதாயிரம் சங்கி-லி களால் பிணைக்கப்பட்டுக் கொண்டு வரப்படும். ஒவ்வொரு சங்கிலி -யுடனும் எழுபதாயிரம் வானவர்கள் இருந்து, இழுத்து வருவார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : முஸ்-லி ம் (5464)
அஸ்மா பின்த்து அபீபக்ர் (ர-லி ) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் சூரிய கிரகணத் தொழுகை தொழுதார்கள்; பிறகு சொன்னார்கள்: என்னை நரகம் நெருங்கி வந்தது. (எந்த அளவுக்கென்றால்) நான், "இறைவா! நானும் அவர்களுடன் (நரகவாசிகளுடன்) இருக்கப் போகிறேனோ?' என்று (மருண்டு போய்க்) கேட்டேன். அப்போது (நரகத்தில்) ஒரு பெண் இருந்தாள். அந்தப் பெண்ணைப் பூனை ஒன்று (தன் நகங்களால்) பிறாண்டிக் கொண்டிருந்தது. "இவளுக்கு என்ன ஆயிற்று? (இவள் ஏன் இப்படி வேதனைப்படுத்தப்படுகிறாள்?)'' என்று நான் கேட்டேன். அதற்கு (அங்கிருந்த வானவர்கள்), "இந்தப் பூனையை, அது பசியால் வாடிச் செத்துவிடும் வரை இந்தப் பெண் கட்டி வைத்திருந்தாள்'' என்று பதிலüத்தனர்.
ஆதாரம் : புகாரி (2364)
அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி ) அவர்கள் அறிவிப்பதாவது : நபி (ஸல்) அவர்கள் வாழ்ந்த காலத்தில் ஒருவர் கனவு கண்டால் அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைப்பது வழக்கம். ஆகவே, நானும் ஒரு கனவு கண்டு அதை நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைக்க வேண்டும் என்று ஆசைப்பட்டேன். அப்போது நான் (மணமாகாத) இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்களது காலத்தில் நான் பள்ளிவாசலி ல் உறங்கக் கூடியவனாக இருந்தேன். (ஒருநாள்) நான் கனவில் இவ்வாறு கண்டேன்: இரு வானவர்கள் என்னைப் பிடித்து நரகத்திற்குக் கொண்டு சென்றார்கள். கிணறுக்குச் சுற்றுச் சுவர் இருப்பது போன்று அந்த நரகத்திற்கும் சுற்றுச் சுவர் எழுப்பப்பட்டிருந்தது. அந்த நரகத்திற்கு இரு தூண்களும் இருந்தன. அந்த நரகத்தில் எனக்குத் தெரிந்த சில மனிதர்களும் இருந்தனர். உடனே நான் "நரகத்திலி ருந்து பாதுகாக்கும்படி அல்லாஹ்விடம் வேண்டுகிறேன்'' என்று பிராத்திக்கலானேன். அப்போது எங்களை மற்றொரு வானவர் சந்தித்தார். அவர் என்னிடம் "இனி ஒருபோதும் நீர் பீதியடைய மாட்டீர்'' என்று கூறினார். இதை நான் (என் சகோதரியும் நபி (ஸல்) அவர்களின் துணைவியாருமான) ஹஃப்ஸா (ர-லி ) அவர்களிடம் விவரித்தேன். ஹஃப்ஸா (ரலி -) அவர்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் விவரித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் "அப்துல்லாஹ் (பின் உமர்) அவர் ஒரு சிறந்த மனிதர். அவர் இரவின் ஒரு பகுதியில் தொழுபவராயிருந்தால் (நன்றாயிருக்கும்)'' என்று கூறினார்கள். அதன் பின்னர் இரவில் குறைந்த நேரமே தவிர நான் உறங்குவதில்லை.
ஆதாரம் : புகாரி (1121, 1156)
அல்லாஹ்வின் அர்ஷை சுமத்தல் :
அகிலத்தின் அதிபதியாக இருக்கும் அல்லாஹ், அர்ஷ் எனும் மாபெரும் ஆசனத்தில் அமர்ந்து கொண்டிருக்கிறான். அங்கு இருந்து கொண்டே அனைத்தையும் பரிபாலி -த்துக் கொண்டிருக்கிறான். வானங்களையும் பூமியையும் உள்ளடக்கும் வகையில் பிரமாண்டமாக பரந்து விரிந்திருக்கும் அந்த ஆசனத்தைச் சுமக்கும் பணி சில மலக்குகளிடம் ஒப்படைக்கப்பட்டுள்ளது. அந்த மலக்குகள் ஆசனத்தைச் சுமந்து கொண்டிருக்கிறார்கள. மறுமை நாளில் மனிதர்களை விசாரிப்பதற்கு ரப்புல் ஆலமீன் வரும்போதும்
அந்த மலக்குகள் அவனது ஆசனத்தை சுமந்தவர்களாக இருப்பார்கள். இதற்கான சான்றுகளைக் காண்போம்.
அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர்.
"எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர்.
(அல்குர்ஆன் 40 : 7)
வானவர்கள் அதன் ஓரங்களில் இருப்பார்கள். அந்நாளில் (முஹம்மதே!) உமது இறைவனின் அர்ஷை தம் மீது எட்டுப் பேர் (வானவர்கள்) சுமப்பார்கள்.       
(அல்குர்ஆன் 69 : 17 )
மலைகளை கண்காணித்தல் :
அல்லாஹ்வின் ஆற்றலை மகத்துவத்தை அவனது படைப்பினங்களைப் பற்றி சிந்திப்பதன் மூலம் அறிந்து கொள்ளலாம். அந்த வகையில், அவனது அளப்பறிய ஆற்றலைப் பறைசாற்றும் அத்தாட்சிகளாக மலைகள் திகழ்கின்றன. தலைநிமிர்ந்து நிற்கும் மலைகள் இருப்பதாலேயே பூமிப்பந்தின் மேல் இருக்கும் நிலதட்டுகள் இடம் நகரால் இருக்க அதன் மீது நாமெல்லாம் நிம்மதியாக வாழ்ந்து கொண்டிருக்கிறோம். இந்த மலைகளைப் பாதுகாப்பதும் மலக்குகள் செய்யும் பணிகளுள் முக்கியமான ஒன்றாகும். இந்தப் பணிக்கென்றே மலக்கு ஒருவர் நியமிக்கப்ட்டுள்ளார். இதற்குச் சான்றாக இருக்கும் தகவலை இனி காண்போம்.
 (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்கüடம், "(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்களைச் சந்தித்துவிட்டேன்.
அவர்களால் நான் சந்தித்த துன்பங்கüலேயே மிகக் கடுமையானது
"அகபா (தாயிஃப்) உடைய நாளன்று சந்தித்த துன்பமேயாகும். ஏனெனில், அன்று நான் என்னை ஏற்றுக் கொள்ளும்படி (தாயிஃப் நகரத் தலைவரான கினானா) இப்னு அப்தி யாலீல் பின் அப்தி குலால் என்பவருக்கு எடுத்துரைத்தேன். அவர் நான் விரும்பியபடி எனக்கு பதிலüக்கவில்லை. ஆகவே, நான் கவலையுடன் எதிர்ப்பட்ட திசையில் நடந்தேன். "கர்னுஸ் ஸஆ-ப்' என்னுமிடத்தை நான் அடையும்வரை நான் சுய உணர்வுக்கு வரவில்லை.
அங்கு வந்து சேர்ந்தவுடன் என் தலையை உயர்த்தினேன்.
அப்போது (அங்கே வானத்தில்) ஒரு மேகம் என் மீது நிழ-ட்டுக் கொண்டிருந்தது. நான் கூர்ந்து கவனித்தபோது அதில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் இருந்தார்கள். அவர்கள் என்னை அழைத்து, "உங்கள் சமுதாயத்தார் உங்களிடம் சொன்னதையும் அவர்கள் உங்களுக்கு அüத்த பதிலையும் அல்லாஹ் கேட்டான். அவர்களை நீங்கள் விரும்பியபடி தண்டிப்பதற்கு ஆணையிடுவதற்காக மலைகளுக்கான வானவரை அல்லாஹ் உங்கüடம் அனுப்பியுள்ளான்'' என்று கூறினார்கள். உடனே, மலைகளை நிர்வகிக்கும் வானவர் என்னை அழைத்து எனக்கு சலாம் சொல்-, பிறகு, "முஹம்மதே! நீங்கள் விரும்பியபடி கட்டளையிடலாம். (இந்த நகரத்தின் இரு மருங்கிலுமுள்ள) இந்த இரு மலைகளையும் அவர்கள் மீது நான் புரட்டிப் போட்டு விட வேண்டுமென்று நீங்கள் விரும்பினாலும் (சரி, உங்கள் கட்டளைப்படி செயல்பட நான் தயாராக உள்ளேன்)'' என்று கூறினார். உடனே, "(வேண்டாம்;) ஆயினும், இந்த (நகரத்து) மக்கüன் சந்ததிகüல் அல்லாஹ்வுக்கு எதையும் இணை கற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்குபவர்களை
அல்லாஹ் உருவாக்குவான் என்று நான் நம்புகிறேன் (ஆகவே, அவர்களை தண்டிக்க வேண்டாம்)'' என்று சொன்னேன்.
 
அறிவிப்பவர் : ஆயிஷா (ர-லி ),
ஆதாரம் : புகாரி (3231)
                                                    
                                                     வளரும் இன்ஷா அல்லாஹ்
மக்களின் சந்தேகங்கள்
கேள்வி பதில்
?மஃரிப் நேரத்தில் ஷைத்தான் வருவான்: எனவே பிள்ளைகளை வெளியில் அனுப்பக்கூடாது என்று நபிமொழி உள்ளதா? விளக்கவும்.
எஸ்.ஏ. ஷர்புன்னிசா, கிள்ளை
இது தொடர்பாக நபிமொழிகளில் சில செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "இரவின் இருள் படரத் தொடங்கி விட்டால் உங்கள் குழந்தைகளை (வெüயே திரிய விடாமல்) தடுத்து விடுங்கள். ஏனெனில், ஷைத்தான்கள்
அப்போதுதான் (பூமியெங்கும்) பரவி விடுகின்றன. இரவு வேளையில் சிறிது நேரம் கழிந்து விட்டால் அவர்களை (வெüயே செல்ல) விட்டு விடுங்கள். மேலும், (இரவு நேரத்தில்) கதவை மூடிவிடு. (அப்போது) அல்லாஹ்வின் பெயரைச் சொல். (உறங்கச் செல்கையில்) விளக்கை அணைத்து விடு. (அப்போதும்)
அல்லாஹ்வின் பெயரைச் சொல். தண்ணீர்ப் பையைச் சுருக்கிட்டு மூடி விடு. (அப்போதும்) அல்லாஹ்வின் பெயரைச் சொல். பாத்திரத்தை மூடி வை. (அதை முழுவதும் மூட இயலாவிட்டாலும்) அதன் மீது எதையாவது குறுக்காக வைத்தேனும் மூடி விடு. (அப்போதும்)
அல்லாஹ்வின் பெயரைச் சொல்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி ), நூல் :புகாரி (3280,3304,5623)
இதே கருத்தில் வேறு நபிமொழி நூல்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதில் கூறப்பட்டிருக்கும் ஷைத்தான் என்பது நாம் விளங்கி வைத்திருக்கும் ஷைத்தானைக் குறிப்பிடுபவை அல்ல. மாறாக மனிதனுக்கு இடையூறு செய்யும் விஷஜந்துக்களைப் பற்றியதாகும்.
கெட்ட காரியங்களையும், வெறுப்பிற்குரிய விஷயங்களையும் ஷைத்தானுடன் தொடர்புபடுத்திக் கூறும் வழக்கம் குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் அரபு மொழியிலும் உள்ளது.
இருள் பரவத் தொடங்கும் போது சிறுவர்களை வெளியே விட வேண்டாம் என்றும் இரவில் சிறிது நேரம் கழிந்த பிறகு வெளியில் விடலாம் என்றும் கூறப்படுகிறது. ஆங்காங்கே சுற்றித் திரியும் விஷ ஜந்துக்கள் இரவில் ஓய்வெடுப்பதற்காக இந்த நேரத்தில் தான் தனது இருப்பிடத்தை நோக்கி விரைகின்றன. மாலை நேரம் வந்து விட்டால் பறைவைகள் உட்பட எல்லா உயிரினங்களும் தனது இருப்பிடத்தை நோக்கிச் செல்வதை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
சிறுவர்கள் விபரம் அற்றவர்கள் என்பதால் அவர்கள் கவனக் குறைவாக இந்த விஷப் பிராணிகளை மிதித்து விட்டால் அல்லது வவ்வால் போன்றவை மோதி விட்டால் அதனால் பெரும்பாதிப்பு ஏற்பட்டுவிடும். எனவே தான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அந்தக் குறிப்பிட்ட நேரத்தில் மட்டும் வெளியே விட வேண்டாம் என்கிறார்கள்.
மேலும் இந்த ஹதீஸில் இந்தத் தடையுடன் பல பாதுகாப்பு நடவடிக்கைகளை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நமக்கு கற்றுத் தருகிறார்கள். அவற்றைப் பார்க்கும் போது இந்த இடத்தில் ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் போன்றவை தான் என்று புரிந்து கொள்ளும் வகையில் உள்ளன.
இரவில் உறங்கும் போது கதவுகளைப் பூட்டி விட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிவிட்டு ஷைத்தான் பூட்டப்பட்ட கதவைத் திறக்க மாட்டான் என்றும் கூறுகிறார்கள். இந்த ஹதீஸில் கூறப் பட்டுள்ள ஷைத்தான் என்பது விஷ ஜந்துக்கள் தான் என்பதை இது தெளிவாக விளக்குகிறது.
ஏனெனில் ஷைத்தான் மனதில் ஊடுருவி கெட்ட எண்ணங்களை ஏற்படுத்த வல்லவன். கதவைப் பூட்டி விடுவதால் அவனுடைய வருகையை யாராலும் தடுத்துவிட முடியாது. மாலை மயங்கும் போது கதவைப் பூட்டிவிட்டால் தனது இருப்பிடத்துக்கு திரும்பும் விஷ ஜந்துக்களும் இடைஞ்சல் தரும் பிராணிகளும் உள்ளே வராது என்பது தான் இதன் கருத்தாக இருக்க முடியும்.
முஸ்-லி மில் இடம்பெற்றுள்ள ஒரு அறிவிப்பு இந்தக் கருத்தை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.
3755حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا لَيْثٌ ح و حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ رُمْحٍ أَخْبَرَنَا اللَّيْثُ عَنْ أَبِي الزُّبَيْرِ عَنْ جَابِرٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ غَطُّوا الْإِنَاءَ وَأَوْكُوا السِّقَاءَ وَأَغْلِقُوا الْبَابَ وَأَطْفِئُوا السِّرَاجَ فَإِنَّ الشَّيْطَانَ لَا يَحُلُّ سِقَاءً وَلَا يَفْتَحُ بَابًا وَلَا يَكْشِفُ إِنَاءً فَإِنْ لَمْ يَجِدْ أَحَدُكُمْ إِلَّا أَنْ يَعْرُضَ عَلَى إِنَائِهِ عُودًا وَيَذْكُرَ اسْمَ اللَّهِ فَلْيَفْعَلْ فَإِنَّ الْفُوَيْسِقَةَ تُضْرِمُ عَلَى أَهْلِ الْبَيْتِ بَيْتَهُمْ رواه مسلم
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :பாத்திரங்களை மூடி வையுங்கள்; தண்ணீர் தோல் பையின் வாயைச் சுருக்கிட்டுக் கட்டி விடுங்கள்; கதவைத் தாழிட்டு விடுங்கள்; விளக்கை அணைத்து விடுங்கள்; ஏனெனில், ஷைத்தான் (சுருக்கிட்டு மூடிவைக்கப்பட்ட) எந்தப் பையையும் அவிழ்ப்பதில்லை; மூடப்பட்ட எந்தக் கதவையும் திறப்பதில்லை; (மூடி வைக்கப்பட்ட) எந்தப் பாத்திரத்தையும் திறப்பதில்லை. உங்களில் ஒருவர் தமது பாத்திரத்தின் மீது ஒரு குச்சியைக் குறுக்காக வைத்தாவது
அல்லாஹ்வின் பெயர் சொல்லி - மூடிவைக்க முடியுமானால் அவ்வாறே
அவர் செய்து கொள்ளட்டும். ஏனென்றால், எலி - (விளக்கின் திரியை இழுத்துச் சென்று) வீட்டாரோடு சேர்த்து வீட்டை எரித்து விடும். அறிவிப்பவர்: ஜாபிர் (ர-லி ), நூல் : முஸ்-லி ம் (4099)
ஷைத்தான் எந்த பையையும் அவிழ்க்க மாட்டான். மூடப்பட்ட எந்தக் கதவையும் பாத்திரத்தையும் திறக்க மாட்டான் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். எனவே நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கெடுதல் தரும் பிராணிகளைத் தான் ஷைத்தான்கள் என்று கூறியுள்ளார்கள். எ-லி யின் அபாயத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்திருப்பதும் நமது விளக்கத்தை மேலும் வலுவூட்டுகிறது.
ஷைத்தான் உள்ளங்களையும் ஊடுறுவுபவன் என்ற கருத்துக்கு முரண்படக் கூடாது என்பதற்காகவும் தீய சக்திகளை ஷைத்தான் எனக்
கூறுவ்தற்கு ஆதாரம் உள்ளதாலும் நாம் இப்படி புரிந்து கொள்வதே முரண்பாடில்லாததாக அமையும்.
மேலும் இன்றைக்கு விஞ்ஞானம் கண்டுபிடிக்காத எத்தனையோ விஷயங்கள் இருக்கின்றன. நமக்குத் தெரியாத இன்னும் பல வகையான பாதிப்புகள் இந்த நேரத்தில் ஏற்படலாம். இது எதிர்காலத்தில் கண்டு பிடிக்கப்படலாம்.
? குங்குமம், விபூதி, முகத்துக்கு பூசும் மஞ்சள் விற்க இஸ்லாத்தில் அனுமதி உண்டா?
ஏ.யாஸ்மீன் நிஹார், அம்மாபட்டிணம்
ஒரு பொருள், மார்க்கம் அனுமதித்தவற்றிக்கும் மார்க்கம் தடைசெய்தவற்றிக்கும் பயன்படுத்தும் வகையில் அமைந்திருந்தால்
அந்த பொருட்களை விற்பதில் எந்தக் குற்றமும் இல்லை. உதாரணமாக கத்தி. இது மனிதனைக் கொலை செய்வதற்கும் காய்கறி வெட்டுவதற்கும் பயன்படுகிறது. மனிதனை கொலை செய்யப்பயன்படுகிறது என்பதற்காக அதை விற்கக்கூடாது என்று நாம் கூறமாட்டோம். ஏனெனில் இந்த கத்தி காய்கறி வெட்ட மற்றும் பல நல்ல காரியங்களுக்கும் பயன்படுகிறது என்பதால் அதை விற்பனை செய்வதை அனுமதிக்கிறோம்.
இது போல் கடவுள் சிலைகள். இதை விற்பனை செய்யலாமா? என்றால்
நாம் கூடாது என்று கூறுவோம். ஏனெனில் இந்தச் சிலைகள் வணங்குதற்குத் தவிர மார்க்கம் அனுமதித்த வேறு பயன்பாட்டுக்கு உபயோகப்படுவதில்லை. எனவே இதை விற்பனை செய்யக்கூடாது என்று கூறுகிறோம். இந்த விதியைக் கவனத்தில் கொண்டு குங்குமம், விபூதி, மஞ்சள் போன்றவற்றை விற்பனை செய்யலாமா? என்பதைக் காண்போம்.
குங்குமம் என்பது விர-லி மஞ்சள், வெண்காரம், படிகாரம், கஸ்தூரி மஞ்சள் ஆகியன சேர்ந்து அரைக்கப்பட்ட பொடியுடன் நல்லெண்ணய் கலக்கி குங்குமம் தயாரிக்கப்படுகிறது. மஞ்சளும் காரமும் வேதிவினையாற்றி சிவப்பு நிறம் கிடைக்கிறது.
இது இந்துப் பெண்கள், கடவுளை வணங்கிய பின்னர் தங்கள் நெற்றியில் வைப்பதற்கு பயன்படுகிறது. இது தவிர வேறு பயன்பாட்டிற்கு உபயோகப்படுவதாகத் தெரியவில்லை.
விபூதி என்பது மாட்டின் சாணத்தை எரித்து உருவாக்கப்படுகிறது. இதுவும் இந்துக்கள் கடவுளை வணங்கிய பின்னர் நெற்றியில் வைப்பதற்கு பயன்படுகிது. இது தவிர வேறு பயன்பாடு இருப்பதாகத் தெரியவில்லை.
பெண்கள் பூசிக் கொள்ளும் மஞ்சள் என்பது (ஈன்ழ்ஸ்ரீன்ம்ஹ ப்ர்ய்ஞ்ஹ) ஒரு மருத்துவ மூலி -கையாகும். இது 60 முதல் 90 செ.மீ. உயரம் வரை வளரும் ஒரு பூண்டு வகைச்செடி. இதன் இலைகள் கொத்தாக இருக்கும். தண்டில் உள்ள முளையிலி ருந்து கிளைத்து மண்ணுக்குள் செல்லும் நீண்ட வேர்தான் மஞ்சள் கிழங்கு.
இதை இந்துக்கள் மதச் சடங்களில் புனிதப் பொருட்களாக பயன்படுத்தி னாலும் மருத்துவம், உணவு போன்றவற்றிக்கும் பயன்படுத்தப்படுவதால் இதை விற்பனை செய்வதில் தவறில்லை.
?வெளியில் செல்லும் போது பெண்கள் வாசனை திரவியங்களை பயன்படுத்தலாமா?
யு.சம்லா, கோவை
நறுமணப் பொருட்கள் இரு வகைகளில் உள்ளன.
தனது உடலி -ல் துர்வாடை இருக்கக் கூடாது என்பதற்காக பயன்படுத்தும் மென்மையான நறுமணமும் உண்டு. ஆட்களை தன் பக்கம் இழுக்கும் வகையிலான நறுமணமும் உண்டு. முதல் வகையான நறுமணம் அருகில் நெருங்கி வருவோருக்கும் மட்டுமே உணர முடியும். இரண்டாம் வகை நறுமணம் தூரத்தில் போகும் நபரையும் சுண்டி இழுத்து திரும்பிப் பார்க்க வைக்கும்.
பெண்கள் வீட்டுக்குள் இருக்கும் போது இரண்டு வகையான நறுமணங்களையும் பூசிக் கொள்ளலாம். ஆனால் வெளியே செல்லும் போது முதல் வகையான நறுமணப் பொருட்களை மட்டுமே பயன்படுத்தலாம்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்தில் ஆண்களுக்கும் பெண்களுக்கும் இரண்டு வகையான நறுமணப்பொருட்கள் இருந்துள்ளன.
و حدثنا عمرو بن سواد العامري حدثنا عبد الله بن وهب أخبرنا عمرو بن الحارث أن سعيد بن أبي هلال وبكير بن الأشج حدثاه عن أبي بكر بن المنكدر عن عمرو بن سليم عن عبد الرحمن بن أبي سعيد الخدري عن أبيه أن رسول الله صلى الله عليه وسلم قال غسل يوم الجمعة على كل محتلم وسواك ويمس من الطيب ما قدر عليه إلا أن بكيرا لم يذكر عبد الرحمن وقال في الطيب ولو من طيب المرأة
வெள்ளிக்கிழமை குளிப்பதும் பல் துலக்குவதும் பருவமடைந்த அனைவர் மீதும் கடமையாகும். மேலும் தன்னால் இயன்ற நறுமணத்தையும் பூசிக் கொள்ள வேண்டும். (நறுமணப் பொருள் இல்லாத பட்சத்தில்) பெண்களுக்கான நறுமணப் பொருளையாவது பூசிக் கொள்ள வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.              நூல் முஸ்-லி ம் 1400
ஆண்களின் நறுமணமும் பெண்களின் நறுமணமும் அன்று தனித்தனியாக இருந்துள்ளன என்பதையும் அதை நபிகள் நாயகம் (ஸல்)
அவர்கள் அங்கீகரித்துள்ளார்கள் என்பதையும் இதில் இருந்து அறிந்து கொள்ளலாம்.
حدثنا محمد بن بشار حدثنا يحيى بن سعيد القطان عن ثابت بن عمارة الحنفي عن غنيم بن قيس عن أبي موسى عن النبي صلى الله عليه وسلم قال كل عين زانية والمرأة إذا استعطرت فمرت بالمجلس فهي كذا وكذا يعني زانية وفي الباب عن أبي هريرة قال أبو عيسى هذا حديث حسن صحيح
ஒவ்வொரு கண்ணும் விபச்சாரம் செய்கிறது. ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு (ஆண்களின்) சபைக்குச் சென்றால் அவள் விபச்சாரம் செய்பவள் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.              நூல் : திர்மிதி 2710
கண்கள் விபச்சாரம் செய்கிறது எனக் கூறி விட்டு பெண்கள் நறுமணம் பூசுவது பற்றி நபிகள் நாயகம் கூறுவதால் ஆண்கள் சபைக்குச் சென்று அவர்கள் அப்பெண்ணை ஏறெடுத்துப் பார்க்கும் நிலையை ஏற்படுத்துவதால் அவளும் விபச்சாரி எனக் கூறியுள்ளனர்.
மற்றொரு ஹதீஸில்
أخبرنا إسمعيل بن مسعود قال حدثنا خالد قال حدثنا ثابت وهو ابن عمارة عن غنيم بن قيس عن الأشعري قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة استعطرت فمرت على قوم ليجدوا من ريحها فهي زانية
தனது நறுமணத்தை மற்றவர்கள் நுகர வேண்டும் என்ற நோக்கத்துக்காக ஒரு பெண் நறுமணம் பூசிக் கொண்டு சென்றால்
அவள் விபச்சாரி என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகின்றனர்.                         நஸாயீ 5036
அன்னிய ஆண்களைக் கவரும் நோக்கத்தில் நறுமணம் பூசி செல்வதையே நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள் என்பதையும்
அவ்வாறு இல்லாமல் நறுமணம் பூசிக் கொண்டு செல்ல தடை இல்லை என்பதையும் இதில் இருந்து ஊகம் செய்யலாம். இன்னும் சொல்லப் போனால் தெளிவாக அனுமதிக்கும் ஹதீஸ்களும் உள்ளன.
 حدثنا أبو بكر بن أبي شيبة حدثنا يحيى بن سعيد القطان عن محمد بن عجلان حدثني بكير بن عبد الله بن الأشج عن بسر بن سعيد عن زينب امرأة عبد الله قالت قال لنا رسول الله صلى الله عليه وسلم إذا شهدت إحداكن المسجد فلا تمس طيبا
உங்களில் ஒருத்தி பள்ளிவாசலுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக முஸ்லி -ம் 674 வது ஹதீஸ் கூறுவதைப் பொதுவான தடைக்கு ஆதாரமாக சிலர் காட்டுவது ஏற்க முடியாததாகும்.
ஏனெனில் இது இஷாத் தொழுகைக்கு அதாவது இரவுக்கு மட்டும் உள்ள தடை என்பதைப் பின்வரும் ஹதீஸ்கள் விளக்குகின்றன.
حدثنا هارون بن سعيد الأيلي حدثنا ابن وهب أخبرني مخرمة عن أبيه عن بسر بن سعيد أن زينب الثقفية كانت تحدث عن رسول الله صلى الله عليه وسلم أنه قال إذا شهدت إحداكن العشاء فلا تطيب تلك الليلة
உங்களில் ஒருத்தி இஷாவுக்கு வருவதாக இருந்தால் அவர் நறுமணம் பூச வேண்டாம் என்று நபிகள் நாயகம் ஸல் கூறி
னார்கள்.                           முஸ்-லி ம் 673
இந்த ஹதீஸையும் முந்திய ஹதீஸையும் ஸைனப் என்ற சஹாபி தான் அறிவிக்கிறார். எனவே அவர் பொதுவாக அறிவிப்பதை விட குறிப்பாக அறிவிப்பதைத் தான் எடுத்துக் கொள்ள வேண்டும். மேலும் இந்த அறிவிப்பை அபூஹுரைரா அவர்களின் அறிவிப்பும் உறுதி செய்கின்றது. அது வருமாறு:
حدثنا يحيى بن يحيى وإسحق بن إبراهيم قال يحيى أخبرنا عبد الله بن محمد بن عبد الله بن أبي فروة عن يزيد بن خصيفة عن بسر بن سعيد عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم أيما امرأة أصابت بخورا فلا تشهد معنا العشاء الآخرة
எந்தப் பெண்ணாவது நறு மணப் புகை பூசிக் கொண்டால் அவள் நம்மோடு இஷா தொழுகைக்கு வர வேண்டாம் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் அபூ ஹுரைரா (ர-லி ) நூல் முஸ்லி -ம் 675
எனவே இஷா தொழுகைக்குப் போகும் போது நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்றால் அது இஷாவுக்கு மட்டும் உரியது என்று புரிந்து கொள்ளலாம். அது இரவில் நறுமணம் பூசிக் கொண்டு செல்லக் கூடாது என்ற கருத்தையும் தரும் என்றும் புரிந்து கொள்ளலாம். மற்ற நேரங்களில் பெண்கள் ஆண்களைச் சுண்டி இழுக்கும் வகையிலான நறுமணமாக இல்லாமல் சாதாரண நறுமணம் பூசி வெளியே செல்ல
அனுமதி உண்டு என்பதை இந்த ஹதீஸ்கள் உணர்த்துகின்றன.
? கண்தானம் பெண்கள் செய்யலாமா?
எம்.சாஜிதா, கோவை
கண்தெரியாதவருக்கு நமது கண்ணைப் பொருத்தி பார்வை வர ஏற்பாடு செய்யும் நவீன வசதிகள் தற்போதுதான் கண்டுபிடிக்கப்பட்டுள்ளன. எனவே இது தொடர்பான நேரடி ஆதாரங்கள் திருக்குர்ஆன், நபிமொழி தொகுப்புகளில் பார்க்க முடியாது. எனவே இது போன்ற விஷயங்களில் இவ்வாறு செய்யக்கூடாது என்று மறைமுகமான ஆதாரங்கள் ஏதும் உண்டா? என்பதை கவனித்து தடை இருப்பது தெரியவந்தால் கூடாது என்று கூற வேண்டும். இல்லையென்றால் அனுமதிக்க வேண்டும். கண்தானம் தொடர்பாக திருக்குர்ஆனிலோ அல்லது நபிமொழியிலோ தடைசெய்வதற்கான எந்த ஆதாரத்தையும் நாம் காணமுடியவில்லை. எனவே கண்தானம் செய்யக்கூடாது என்று சொல்லமுடியாது.

விரல் அசைத்தல் விரிவான ஆய்வு
விரலை எவ்வாறு அசைக்க வேண்டும்?
எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் நம்மால் பதில் கூறவே முடியாது என்று நினைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாத கேள்விகளை நம்மிடத்தில் கேட்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு கியாமத் நாள் வரை பதில் சொல்ல முடியாது என்று வீண் சவடாலும் விடுகின்றனர்.
வ் விரலசைத்தல் எந்தத் திசையை நோக்கி இருக்க வேண்டும்.
வ் விரலை நீட்டி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா? அல்லது குறுக்கி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா?
விரலை மேலும் கீழுமாக அசைக்க வேண்டுமா?
முன்னாலும் பின்னாலுமாக ஆட்ட வேண்டுமா?
தொடர்ந்தா அல்லது விட்டுவிட்டா?
வேகமாகவா அல்லது மெதுவாகவா?
வலது பக்கமா? அல்லது இடது பக்கமா?
இது போன்ற கிறுக்குத்தனமாக கேள்விகள் இவர்களிடத்திலும் எழுமே என்ற அறிவு கூட இவர்களுக்கு இல்லை. இவர்கள் விரலை
அசைக்காமல் நீட்டி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்கள். இப்போது இவர்கள் நம்மிடம் கேட்டது போன்ற கேள்வியை இவர்களிடம் கேட்க முடியும்.
விரலை நீட்ட வேண்டும் என்றால் எந்தத் திசையை நோக்கி நீட்ட வேண்டும்?
வலது பக்கமாக நீட்ட வேண்டுமா?
இடது பக்கமாக நீட்ட வேண்டுமா?
விரலை வானத்தை நோக்கி மேலே இருக்கும் வண்ணம் நீட்ட வேண்டுமா?
தரையை நோக்கி இருக்குமாறு கீழே நீட்ட வேண்டுமா?
அல்லது இரண்டுக்கும் மத்தியில் சீராக நீட்ட வேண்டுமா?
இதுபோன்ற கேள்விகளைக் கேட்பவர்கள் நபிமொழியை உதாசீனப்படுத்தி நபிவழியைக் கிண்டல் செய்பவர்கள். ஒரு நல்ல ஆய்வாளரிடத்தில் இப்படிப்பட்ட கேள்விகள் வர முடியாது.
இது தொடர்பாக வந்துள்ள நபிமொழிகளை இறையச்சத்துடன் படித்தால் விரலசைக்கும் விதத்தை அறிந்து கொள்ள முடியும்.
எந்தத் திசையை நோக்கி விரலசைக்க வேண்டும்?
நபி (ஸல்) அவர்கள் இஷாரா செய்தார்கள் என்ற கருத்தில் வருகின்ற ஹதீஸ்களை நாம் ஏற்றுக் கொள்வோம். விரலசைப்பது தொடர்பாக வரும் ஹதீசும் இஷாரா செய்தார்கள் என்று கூறும் ஹதீசும் ஒரே பொருள் கொண்டவை என்பது நமது நிலைப்பாடு.
இந்த ஹதீஸில் விரல் கிப்லாவின் திசையை நோக்கி இருக்க வேண்டும் எனக் கூறப்பட்டுள்ளது.
1148أَخْبَرَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ قَالَ حَدَّثَنَا إِسْمَعِيلُ وَهُوَ ابْنُ جَعْفَرٍ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عُمَرَ أَنَّهُ رَأَى رَجُلًا يُحَرِّكُ الْحَصَى بِيَدِهِ وَهُوَ فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ قَالَ لَهُ عَبْدُ اللَّهِ لَا تُحَرِّكْ الْحَصَى وَأَنْتَ فِي الصَّلَاةِ فَإِنَّ ذَلِكَ مِنْ الشَّيْطَانِ وَلَكِنْ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ وَكَيْفَ كَانَ يَصْنَعُ قَالَ فَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَأَشَارَ بِأُصْبُعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ فِي الْقِبْلَةِ وَرَمَى بِبَصَرِهِ إِلَيْهَا أَوْ نَحْوِهَا ثُمَّ قَالَ هَكَذَا رَأَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ رواه النسائي
அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : "நபி (ஸல்) அவர்கள் தமது வலக்கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, பெருவிரலுக்கு அடுத்துள்ள (சுட்டு) விரலால் "கிப்லா' பக்கம் சைகை செய்தார்கள். தமது பார்வையை
அதை நோக்கி அல்லது அதன் பக்கம் செலுத்தினார்கள்'' என்று பதிலளித்தார்கள். பின்னர் அவர்கள், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்ததை நான் பார்த்தேன்'' என்றும் கூறினார்கள்.                     நூல் : நஸாயீ (1148)
விரல் கிப்லாவை முன்னோக்கி இருக்க வேண்டும் என்றால் வலது பக்கமாகவோ இடது பக்கமாகவோ அசைக்கக் கூடாது என்பதை இந்த நபிமொழி தெளிவுபடுத்துகின்றது.
அப்படியானால் விரலசைத்தல் மேலும் கீழுமாகத் தான் இருக்க வேண்டும் என்பதையும் இந்த ஹதீஸி-லி ருந்து அறிந்துகொள்ள முடிகின்றது.
விரலை முன்னாலும் பின்னாலும் ஆட்ட வேண்டுமா? என்ற கேள்வி பொருத்தமற்றதாகும். வலது கையை வலது தொடையின் மீது வைத்திருக்கும் போது விரல் மட்டும் முன்னாலும் பின்னாலும் செல்ல முடியுமா? என்பதை இவர்கள் உணர வேண்டும்.
விரலை நீட்டி வைத்துக்கொண்டா? குறுக்கி வைத்துக் கொண்டா?
விரலசைப்பதற்கு நாம் ஆதாரமாக்க் காட்டும் வாயில் பின் ஹுஜ்ர் அவர்களுடைய ஹதீஸில் விரலை நீட்டி அசைக்க வேண்டும் என்று தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் (அல்லது அழைப்பது போல்) அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.                  நஸாயீ (870)
தொடர்ந்தா? விட்டுவிட்டா?
அத்தஹிய்யாத்து இருப்பில் அந்த அமர்வு முடியும் வரை தொடர்ந்து விரலை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும். விரலசைத்தல் தொடர்பாக வரும் செய்தியை முழுமையாகப் படித்தால் இதற்கு ஆதாரம் இருப்பதை தெளிவாக அறியலாம்.
பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் (அல்லது அழைப்பது போல்) அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.            நஸாயீ (870)
நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி ) அவர்கள் கூறுகி
றார்கள். எனவே தொடர்ந்து விரலசைக்க வேண்டும் என்பதற்கு இது தெளிவான ஆதாரம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் இஷாரா செய்தார்கள் என்ற கருத்தில் பல ஹதீஸ்கள் உள்ளன. இங்கே கூறப்படும் இஷாரா என்பது விரலசைப்பது தான் என்பதை ஆதாரங்களுடன் நாம் தெளிவுபடுத்தியுள்ளோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் அமர்ந்தவுடன் அதன் ஆரம்பித்திலி -ருந்து இறுதிவரை இஷாரா செய்து கொண்டிருப்பார்கள் என்று ஹதீஸ் கூறுகின்றது.
14828حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رَاشِدٍ أَبِي سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ فَدَعَا وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ ثُمَّ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ رواه أحمد
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்துவிட்டால் பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் தனது வலக்கையை தொடையின் மீது வைத்து தன் விரலால் இஷாரா செய்து கொண்டிருப்பார்கள்.       நூல் : அஹ்மது 14828
எனவே இருப்பு முழுவதிலும் தொடர்ந்து விரலசைப்பதற்கு இந்த நபிமொழியும் ஆதாரமாக அமைந்துள்ளது.
ஒரு பேச்சுக்கு விரலை அசைத்தார்கள் என இங்கே பொருள் கொள்ளாவிட்டாலும் அப்போதும் தொடர்ந்து விரலை அசைக்க வேண்டும் என்ற கருத்தையே இந்தச் செய்தி உள்ளடக்கியுள்ளது.
இந்தச் செய்தி தொழுகையில் விரலசைப்பதைப் பற்றி மட்டும் பேசவில்லை. தொழுகையில் உள்ள மற்ற பல நிலைகளைப் பற்றியும் பேசுகின்றது.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிலையில் நிற்கும்போது வலது கையை இடது கையின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் இவர்கள் நிலையில் வலது கையை இடது கையின் மீது வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ருகூவில் இருக்கும் போது கைகளை முட்டுக்கால்களின் மீது வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. முட்டுக்கால்களின் மீது வைத்துக்கொண்டே இருந்தார்கள் என்று கூறப்படவில்லை.
விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் இவர்கள் ருகூவில் முட்டியின் மீது கையை வைத்துவிட்டு அந்த நிலையில் இருக்கும் போதே கைகளை கீழே தொங்கவிட்டுவிட வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சஜ்தாவில் தம் உள்ளங்கைகளை காதுகளுக்கு நேராக வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக்கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதை புரிந்தால் இவர்கள் சஜ்தாவில் காதுகளுக்கு நேராக கைகளை வைத்துவிட்டு சஜ்தாவில் இருக்கும் போதே கைளை உயர்த்திக்கொள்ள வேண்டும்.
மேற்கண்ட செய்தியில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத்தில் தமது வலது கையை வலது தொடையின் மீதும் இடது கையை இடது தொடையின் மீதும் வைத்தார்கள் என்று தான் கூறப்பட்டுள்ளது. வைத்துக் கொண்டே இருந்தார்கள் எனக் கூறப்படவில்லை. விரலசைத்தார்கள் என்ற வாசகத்தை இவர்கள் புரிந்து கொண்டதைப் போன்று இதைப் புரிந்தால் தொடையின் மீது கையை வைத்துவிட்டு அந்ந நிலையில் இருக்கும்போதே கைகளை கீழே விட்டுவிட வேண்டும்.
ஆனால் இவ்வாறு யாரும் புரிந்து கொள்ள மாட்டோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஒரு நிலையில் ஒரு செயலைச் செய்தால்
அந்த நிலையிலி ருந்து வேறு நிலைக்கு மாறுகின்ற வரை அந்தச் செயலைத் தொடர வேண்டும் என்று புரிந்து கொள்கிறோம். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விரலசைத்தார்கள் என்பதையும் இவ்வாறே புரிந்துகொள்ள வேண்டும்.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைத்தார்கள் என்றால் அந்த அமர்வு முழுவதிலும் விரலை
அசைத்தார்கள் என்ற அர்த்தம் அதனுள் அடங்கியுள்ளது.
மேலும் வருங்கால வினைச் சொல்லாக பயன்படுத்தப்பட்டுள்ளதால்
அசைத்துக் கொண்டு இருந்தார்கள் என்று தான் பொருள் கொள்ள வேண்டும் என்பதை முன்னர் விளக்கியுள்ளோம். அதுவும் இந்தக் கேள்விக்கு பதிலாக அமைந்துள்ளது.
வேகமாகவா? அல்லது மெதுவாகவா?
இந்தக் கேள்வியும் அர்த்தமற்றது. ஒரு செயலை நபியவர்கள் கற்றுக்கொடுத்து அதில் ஒரு அம்சத்தை அவர்கள் மூடலாக விட்டுவிட்டால் அந்த விசயத்தில் நடுநிலையைப் பேணிக்கொள்ள வேண்டும்.
அதி வேகமாகவும் அசைக்கக்கூடாது. அசைப்பது தெரியாத அளவுக்கு மிக மெதுவாகவும் அசைக்கக்கூடாது. இதில் நடுநிலையை பேணிக் கொள்ள வேண்டும்.
எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் மனமுரண்டாக நம்மிடம் இந்தக் கேள்வியை கேட்டுள்ளார்கள்.
இருப்பில் விரலை நீட்டி வைக்க வேண்டும் என்பது இவர்களின் நிலைப்பாடு. இப்போது இவர்களிடம் ஒருவர் விரலை விரைப்பாக நீட்ட வேண்டுமா? அல்லது சாதாரணமாக நீட்டினால் போதுமா? என்று கேட்டால் சாதாரணமாக நீட்டினால் போதுமானது என்று கூறுவார்கள்.
இவர்கள் ஏற்றுக்கொண்ட ஒரு விசயத்துக்கு எதிராக நம்மிடம் கேள்வி கேட்பது நியாயமற்ற செயல்.
இருப்பில் எப்போது இஷாரா செய்ய வேண்டும்?
விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் இஷாரா என்று கூறுபவர்கள் இருப்பின் ஆரம்பத்திலி ருந்து இந்தச் செயலைச் செய்வதில்லை. அத்த ஹிய்யாத்தில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூற வேண்டிய இடம் வரும்போது தான் ஆட்காட்டி விரலை உயர்த்துவார்கள். இதற்கு முன்பு விரலை உயர்த்த மாட்டார்கள்.
இவ்வாறு இருப்பின் இடையி-லி ருந்து விரலை உயர்த்துவதற்கு ஆதாரப்பூர்வமான எந்த நபிமொழியும் இல்லை. ஏன் இட்டுக்கட்டப்பட்ட பொய்யான செய்தியைக் கூட இதற்கு ஆதாரமாகக் காட்ட முடியாது.
ஆனால் இன்றைக்கு சிலர் விசித்திரமான விளக்கங்களைக் கூறி இச்செயலுக்கு ஆதாரம் இருப்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்துகின் றார்கள். பின்வரும் பலவீனமான செய்தியை அடிப்படையாக வைத்து தவறான விளக்கத்தை கொடுக்கின்றார்கள்.
1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي
அப்துல்லாஹ் பின் ஜ‚பைர் (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தனது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள். நூல் : நஸாயீ (1253)
துஆ செய்யும் போது இஷாரா செய்வார்கள் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் தான் துஆ என்று கூறுகின்றனர். கலி -மாவின் வாசகம் ஹதீஸ்களில் துஆ என்ற வார்த்தையால் கூறப்பட்டுள்ளது என்று சில ஹதீஸ்களையும் சுட்டிக் காட்டுகின்றனர்.
எனவே இருப்பில் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது இஷாரா செய்ய வேண்டும் என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் மனோ இச்சையை மார்க்கமாக்கிக் கொண்டவர்கள் என்பதை இந்த விளக்கத்தைப் படிக்கும் யாரும் அறிந்து கொள்வார்கள்.
அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்பதை துஆ எனக் கூறலாம் என்ற இவர்களின் வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இதன் மூலம் இவர்களின் செயலை நியாயப்படுத்த முடியாது.
ஏனென்றால் அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்ற வாசகம் உட்பட இருப்பில் ஓதப்படும் அனைத்துக்கும் துஆ என்று ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது.
இருப்பில் அத்தஹிய்யாத்து லி -ல்லாஹி என்று துவங்கி இறைவனைப் புகழ்கிறோம். கலி மா துஆ என்றால் இது துஆ இல்லையா?
மேலும் நபியே உங்கள் மீது சாந்தியும் அல்லாஹ்வின் அருளும் கருணையும் உண்டாகட்டும். எங்கள் மீதும் அல்லாஹ்வின் நல்லடியார்கள் மீதும் சாந்தி உண்டாகட்டும் என்று இருப்பில் கூறுகிறோம். இது தெளிவான பிரார்த்தனையாக இருந்தும் இந்த இடங்களில் இவர்கள் இஷாரா செய்வதில்லை. ஏன் இவையெல்லாம் துஆ இல்லையா?
பின்வரும் ஹதீஸ்கள் இருப்புக்கு வந்தவுடன் இஷாரா செய்ய வேண்டும் என்றும் துஆ என்பது அத்தஹிய்யாத் அமர்வு முழுவதையும் குறிக்கும் என்பதையும் தெளிவாகக் கூறுகின்றது.
910حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا لَيْثٌ عَنْ ابْنِ عَجْلَانَ قَالَ ح و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَاللَّفْظ لَهُ قَالَ حَدَّثَنَا أَبُو خَالِدٍ الْأَحْمَرُ عَنْ ابْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا قَعَدَ يَدْعُو وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَيَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى وَأَشَارَ بِإِصْبَعِهِ السَّبَّابَةِ وَوَضَعَ إِبْهَامَهُ عَلَى إِصْبَعِهِ الْوُسْطَى وَيُلْقِمُ كَفَّهُ الْيُسْرَى رُكْبَتَهُ رواه مسلم
அப்துல்லாஹ் பின் அஸ்ஸுபைர் (ர-லி ) அவர்கள் கூறுகி
றார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழும்போது (அத்தஹிய்யாத்) அமர்வில் பிரார்த்திக்க உட்கார்ந்தால் தமது வலக் கையை வலது தொடையின் மீதும், இடக் கையை இடது தொடையின் மீதும் வைத்துச் சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
                        நூல் : முஸ்-லி ம் (1015)
912و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا يُونُسُ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا حَمَّادُ بْنُ سَلَمَةَ عَنْ أَيُّوبَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا قَعَدَ فِي التَّشَهُّدِ وَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى رُكْبَتِهِ الْيُمْنَى وَعَقَدَ ثَلَاثَةً وَخَمْسِينَ وَأَشَارَ بِالسَّبَّابَةِ رواه مسلم
இப்னு உமர் (ரலி -) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தஹிய்யாத் அமர்வில் உட்கார்ந்தால் தமது இடக் கையை இடது கால் மூட்டின் மீதும் வலக் கையை வலது கால் மூட்டின் மீதும் வைப்பார்கள். (அரபியர் வழக்கில்) ஐம்பத்து மூன்று என எண்ணுவதைப் போன்று (சிறு விரல், மோதிர விரல், நடு விரல் ஆகிய மூன்று விரல்களையும் உள்ளங்கையுடன் சேர்த்து) சுட்டு விரலால் சைகை செய்வார்கள்.
நூல் : முஸ்லி -ம் (1017)
911و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا رواه مسلم
இப்னு உமர் (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.                             நூல் : முஸ்லி -ம் (1016)
913حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى قَالَ قَرَأْتُ عَلَى مَالِكٍ عَنْ مُسْلِمِ بْنِ أَبِي مَرْيَمَ عَنْ عَلِيِّ بْنِ عَبْدِ الرَّحْمَنِ الْمُعَاوِيِّ أَنَّهُ قَالَ رَآنِي عَبْدُ اللَّهِ بْنُ عُمَرَ وَأَنَا أَعْبَثُ بِالْحَصَى فِي الصَّلَاةِ فَلَمَّا انْصَرَفَ نَهَانِي فَقَالَ اصْنَعْ كَمَا كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ فَقُلْتُ وَكَيْفَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَصْنَعُ قَالَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ كَفَّهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَقَبَضَ أَصَابِعَهُ كُلَّهَا وَأَشَارَ بِإِصْبَعِهِ الَّتِي تَلِي الْإِبْهَامَ وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى رواه مسلم
இப்னு உமர் (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்)
அமர்வில் உட்கார்ந்தால், தம்முடைய வலது முன் கையை வலது தொடையின் மீது வைத்துத் தம் (வலக்கை) விரல்கள் அனைத்தையும் மடக்கிக்கொண்டு, பெரு விரலை ஒட்டியுள்ள (சுட்டு) விரலால் சைகை செய்வார்கள். இடது முன் கையை இடது தொடையில் வைப்பார்கள்'' என்று சொன்னார்கள்.
நூல் : முஸ்-லி ம் (1018)
902حَدَّثَنَا عَلِيُّ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ إِدْرِيسَ عَنْ عَاصِمِ بْنِ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ رَأَيْتُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ حَلَّقَ بِالْإِبْهَامِ وَالْوُسْطَى وَرَفَعَ الَّتِي تَلِيهِمَا يَدْعُو بِهَا فِي التَّشَهُّدِ رواه إبن ماجه
நபி (ஸல்) அவர்கள் தஷஹ்ஹுதில் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி )
நூல் : இப்னு மாஜா (902)
14828حَدَّثَنَا جَرِيرٌ عَنْ مَنْصُورٍ عَنْ رَاشِدٍ أَبِي سَعْدٍ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبْزَى عَنْ أَبِيهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ فَدَعَا وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ ثُمَّ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ رواه أحمد
அப்துர் ரஹ்மான் பின் அப்ஸா (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் இருப்புக்கு வந்தால் பிரார்த்தனையில் ஈடுபடுவார்கள். தமது வலது கையை தொடையின் மீது வைத்து தமது விரலால் சமிக்கை செய்து கொண்டிருப்பார்கள்.           நூல் : அஹ்மது (14828)
எனவே அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹ் என்று கூறும் போது மட்டும் ஆட்காட்டி விரலால் இஷாரா செய்வது பித்அத்தாகும். நபிவழியில் இதற்கு ஆதாரம் இல்லை.
விரலசைப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயலா?
இஷாரா என்றால் நாம் சொல்ல விரும்பும் கருத்தை செயலால் சொல்வதாகும். தொழுகையில் ஆட்காட்டி விரலை இஷார செய்வதன் மூலம் இறைவன் ஒருவன் தான் என்ற கருத்தை நமது செயலால் வெளிப்படுத்துகிறோம்.
எனவே இருப்பில் விரலை அசைக்காமல் நீட்டி வைப்பது தான் ஏகத்துவத்தை வெளிப்படும் செயல் என்றும். விரலை அசைத்துக் கொண்டிருப்பது ஏகத்துவத்துக்கு எதிரான செயல் என்றும் வாதிடுகின்றனர்.
இவர்களுடைய மனோஇச்சை விரலசைப்பதை ஏற்றுக் கொள்ளவில்லை என்பதால் இதை ஏகத்துவத்துக்கு எதிரான செயல் என்று வாதிடுகிறார்கள்.
முதலில் இருப்பில் விரலசைப்பதற்கான காரணம் இது தான் என்பதை அல்லாஹ்வோ அல்லாஹ்வின் தூதரோ கூறவில்லை. காரணம் தெரிந்தாலும் தெரியாவிட்டாலும் நபி (ஸல்) அவர்கள் இதைச் செய்திருப்பதால் மறு பேச்சு பேசாமல் இதற்குக் கட்டுப்படுவது அவசியம்.
ஒரு பேச்சுக்கு ஏகத்துவத்தை வெளிப்படுத்துவதற்காகத் தான் இஷாரா செய்கிறோம் என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் அது நமது நிலைப்பாட்டுக்கு எதிரான வாதம் இல்லை.
ஏனென்றால் ஒரு விரலை அசைப்பதால் இரண்டு இறைவன் என்ற கருத்தோ இறைவனே இல்லை என்ற கருத்தோ வராது. மாறாக இதுவும் ஓரிறைக் கொள்கையை வெளிப்படுத்தும் செயலாகும். விரலை அசைக்கும் போது தான் இறைவன் ஒருவன் என்ற கருத்தை பல முறை வெளிப்படுத்துகிறோம்.
ஒரு விரலை அசைப்பதற்கு பதிலாக இரண்டு விரலை அசைத்தால் அது ஏகத்துவத்துக்கு எதிரானது என்று கூறலாம். ஒரு விரலை அசைப்பதை இவ்வாறு கூற முடியாது.
இது ஓரிறைக் கொள்கைக்கு மாற்றமான செயலாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்திருக்க மாட்டார்கள். அவர்கள் காலத்தில் நபித்தோழர்களும் இதை செய்திருக்க மாட்டார்கள்.
எனவே ஹதீஸிற்கு எதிரான இவர்களுடைய யூகத்தைக் கொண்டு நபிவழியை மறுத்துவிடக் கூடாது.
இரண்டாம் பகுதி
இந்தப் பகுதியில் விரலை அசைக்கக் கூடாது என்று கூறுபவர்கள் இதற்கு ஆதாரமாக அவர்கள் காட்டும் ஹதீஸ்கள் என்ன? அந்த ஹதீஸ்கள் அவர்களின் கருத்துக்கு ஆதாரமாக அமைந்துள்ளதா? என்பதை தெளிவுபடுத்துவோம்.
இருப்பில் விரலசைக்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கிடையே விரலை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.
சிலர் இருப்பின் ஆரம்பித்தி-லி ருந்து விரலை நீட்டி வைக்க வேண்டும் என்கின்றனர்.
சிலர் அஷ்ஹது அன்லாயிலாஹ என்று சொல்லும் போது விரலை நீட்டி சலாம் கொடுக்கும் வரை இவ்வாறே விரலை வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்.
சிலர் லாயிலாஹ என்று சொல்லும் போது விலை உயர்த்தி இல்லல்லாஹ் என்று சொல்லும் போது விரலை விட்டுவிட வேண்டும் என்கின்றனர்.
ஹதீஸ்களை சரியான முறைப்படி விளங்காத காரணத்தால் இவர்களிடத்தில் இத்தகைய குழப்பம் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் விரலசைப்பதில் குழப்பம் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.
இந்தக் குழப்பமான சட்டங்களுக்கு இவர்கள் ஹதீஸி-லி ருந்து நேரடியாக ஆதாரங்களைக் காண்பிக்க முடியாது.
விரலை அசைக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாக்க் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்கள் பலதாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரே கருத்தைத் தரக்கூடியவை.
விரலசைக்கக் கூடாது என்பதற்கு பல ஆதாரங்கள் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகி றார்கள்.
 
                                                     வளரும் இன்ஷா அல்லாஹ்

Published on: February 6, 2013, 12:51 PM Views: 1540

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top