பிப்ரவரி 2013 தீன்குலப் பெண்மணி

தலையங்கம்

மது விற்பனையை ஊக்குவிக்கும் மாநில அரசு

ஒரு காலத்தில் மது அருந்துபவர்களும் மதுக்கடை வைத்திருப்பவர்களும் வெட்கப்பட்டு ஊரின் கடைக்கோடியில் கடை வைத்து மது அருந்தி வந்தார்கள். ஆனால் இன்று, கல்விக் கூடங்களை நடத்தி மக்களுக்கு நல்வழிகாட்ட வேண்டிய அரசு நாடு முழுவதும் மதுக்கடைகளை அதுவும் ஊரின் மையப் பகுதியில் திறந்து குடி(?)மக்களின் வருகையை அதிகரித்துள்ளது.

பணம் மட்டுமே குறிக்கோளாகக் கொண்டு செயல்படும் அரசு மக்களின் நலன்களை கண்டுகொள்வதில்லை. மதுவின் தீமைகளை அரசு தெரியாமலி -ல்லை. குடி குடியை கெடுக்கும் குடி பழக்கம் உடல் நலத்தை கெடுக்கும் என்ற அழகிய அறிவுரைகள் மதுக்கடைகளிலும் மதுபாட்டி-லி லும் அச்சிடப்பட்டுள்ளன. இவ்வளவு தெளிவாக தெரிந்திருந்தும் மதுக்கடைகளை அனைத்து ஊர்களிலும் திறந்து வைத்து கண்களை விற்று சித்திரம் வாங்குவது போல் அரசு நடந்து கொள்கிறது.

மதுவினால் எத்தனையோ குடும்பங்கள் நடுத்தெருவில் நிற்கின்றன. மதுவின் கேடால் பாலியல் வன்முறைகள் அதிகரித்து வருகின்றன. உடல் ரீதியாக ஏராளமான நோய்கள் ஏற்படுகின்றன. ஒட்டுமொத்த சமுதாயத்திற்கும் கேடாக இருக்கும் இந்த மதுவை ஒழிக்க அரசு முன்வராத காரணம் என்ன?

அரசுக்கு வருடத்திற்கு இருபத்தைந்தாயிரம் கோடி ரூபாய் இந்த மதுவால் வருமானம் கிடைக்கிறது. மேலும் அரசியல் வாதிகள்,அதிகாரிகளுக்கு பத்தாயிரம் கோடி ரூபாய் வரை முறைகேடாக கிடைக்கிறது. இதனால்தான் இந்த மதுக்கடைகளை மூட அரசும், லாபம் அடையும் அதிகாரிகளும் மறுக்கின்றனர்.

ஊரின் மையப்பகுதியில் மதுக்கடைகளை திறப்பதனால் பல பிரச்சினைகளை மக்கள் சந்திக்கின்றனர். அவற்றை மூட வேண்டுமென மக்கள் தொடர்ந்து போராட்டங்களை நடத்தி வரும் நிலையில் அதிர்ச்சி தரும் செய்தி பத்திரிக்கையில் வந்துள்ளது.

"டாஸ்மாக்கில், மதுபான விற்பனை இலக்கை பூர்த்தி செய்யாத, 18 அதிகாரிகள் பணிமாற்றம், "சஸ்பெண்ட்' உள்ளிட்ட நடவடிக்கைகளுக்கு உட்படுத்தப்பட்டுள்ளன. இந்நிலையில், முதல் கட்டமாக, 322 சூப்பர்வைசர்கள், சஸ்பெண்ட் செய்யப்பட்டனர்.

மது விற்பனை 25 சதவிகிதம் குறைந்துள்ளதால் இந்த அதிரடி நடவடிக்கை எடுத்துள்ளது அரசு. மக்கள் குறைவாக குடிக்கி றார்களே என்று மகிழ்ச்சியடையாமல் மக்களை அதிகம் குடிக்கச் செய் இல்லையெனில் பணியிடைநீக்கம் செய்யப்படுவீர்கள் என்று அரசு எச்சரிக்கை செய்கிறது.

மது விற்பனை ஒவ்வொரு ஆண்டு அதிகரிக்க  வேண்டும் என்ற எண்ணம் அரசிடம் இருந்தால் மக்களை மது அடிமைத்தனத் திலி -ருந்து காப்பாற்ற முடியுமா? மதுக்கு மக்கள் அடிமையானால் அது நாட்டுக்கும் கேடு என்பதை பட்டபின்னர்தான் புரிந்து கொள்வார்களா!

நம்பிக்கை கொண்டோரே! மது, சூதாட்டம், பலி பீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! மது, மற்றும் சூதாட்டம் மூலம் உங்களுக்கிடையே பகைமையையும், வெறுப்பையும் ஏற்படுத்தவும், அல்லாஹ்வின் நினைவை விட்டும், தொழுகையை விட்டும் உங்களைத் தடுக்கவுமே ஷைத்தான் விரும்புகிறான். எனவே விலகிக் கொள்ள மாட்டீர்களா?

(அல்குர்ஆன் 5:90,91)

திருக்குர்ஆன் விரிவுரை  சூரத்துந் நஸ்ர்

மக்கா வெற்றி எப்போது? நடந்தது?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

நஸ்ரு அத்தியாயமும் நான்கு விசயங்களும்

இந்த அத்தியாயத்தில் நான்கு செய்திகள் சொல்லப்படுகின்றன.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் இறுதித் தூதர் என்பதையும் அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட திருக்குர்ஆன் இறைவனிடம் இருந்துதான் வந்தது என்பதையும் சுட்டிக் காட்டுகிற முன்னறிவிப்பு இதில் இருக்கிறது.

சில வரலாற்றுக் குறிப்புகளும் இந்த அத்தியாயத்திற்குள் அடங்கியிருக்கின்றன.

இஸ்லாத்தின் கொள்கை விளக்கமும் இந்த அத்தியாயத்திற்குள் இருக்கிறது.

மனிதனை ஆன்மிகத்தில் பக்குவப்படுத்துகின்ற அறிவுரையும் போதனையும் இந்த அத்தியாயத்தில் இருக்கிறது.

மேற்சொன்ன இந்த நான்கு விசயங்களுக்குள் செல்வதற்கு முன்னால் இந்த அத்தியாயம் எப்போது அருளப்பட்டது? ஏன் அருளப்பட்டது? என்கிற விசயங்களைப் பார்த்து விடுவோம்.

அத்தியாயம் அருளப்பட்ட விவரமும் காரணமும்

இந்த அத்தியாயம் நபியவர்களின் மதீனா வாழ்க்கையில் அருளப்பட்டது. இந்த அத்தியாயம் அருளப்பட்ட வருடம், மாதம், தேதி போன்றவைகளுக்கு குறிப்புகள் இல்லாவிட்டாலும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்காவை வெற்றி கொள்வதற்கு முன்னால் அருளப்பட்டது என்பதற்குரிய ஆதாரங்கள் உள்ளன.

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ - அல்லாஹ்வின் உதவியும் அந்த வெற்றியும் வரும் போது

இந்த அத்தியாயத்தில் "வெற்றி வரும் போது" என்ற சொற்றொடர் வருகிறது. வெற்றி இன்னும் வரவில்லை இனி வரவுள்ளது என்பது இதன் கருத்தாகும். இங்கு முன்னறிவிப்பு செய்யப்படும் வெற்றி மக்கா வெற்றியைத்தான் குறிக்கிறது என்று இப்னு அப்பாஸ் (ர-லி ) விளக்கம் சொன்னதாக ஸஹீஹுல் புகாரியில் இடம்பெற்றுள்ளது. மக்காவை முஸ்லி -ம்கள் வெற்றி கொள்வார்கள் என்று சொல்வதாக இருந்தால் மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்னால் சொல்ல முடியாது. மக்கா வெற்றி கொள்ளப்படுவதற்கு முன்னால்தான் சொல்ல முடியும்.

ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமலான் மாதத்தில்தான் மக்கா வெற்றி கொள்ளப்பட்டது.

பத்ருப் போர் எவ்வாறு ரமலான் மாதத்தில் நடந்ததோ அதுபோன்று மக்கா வெற்றியும் ரமலான் மாதத்தில் நடந்தது. ஹிஜ்ரி எட்டாம் ஆண்டு ரமலான் மாதத்துக்கு முன் இது அருளப்பட்டிருக்கிறது என்பதற்கு இது ஆதாரமாக உள்ளது.

ஆனால் இமாம் பைஹகீ அவர்கள், ஹிஜ்ரி பத்தாம் ஆண்டான ஹஜ்ஜத்துல் விதாவுடைய (இறுதி ஹஜ் ஆண்டு) ஆண்டில் அய்யாமுத் தஷ்ரீக்குடைய நாட்களான துல்ஹஜ் 11,12.13 ஆகிய நாட்களில் 12 வது நாளில் இறங்கியதாக ஒரு செய்தியைப் பதிவு செய்கிறார்.

9964-أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللَّهِ الْحَافِظُ وَأَبُو مُحَمَّدٍ : عَبْدُ الرَّحْمَنِ بْنُ أَبِى حَامِدٍ الْمُقْرِئُ قَالاَ حَدَّثَنَا أَبُو الْعَبَّاسِ : مُحَمَّدُ بْنُ يَعْقُوبَ حَدَّثَنَا أَبُو عَلِىٍّ : الْحَسَنُ بْنُ إِسْحَاقَ بْنِ يَزِيدَ الْعَطَّارُ حَدَّثَنَا زَيْدُ بْنُ الْحُبَابِ أَخْبَرَنِى مُوسَى بْنُ عُبَيْدَةَ الرَّبَذِىُّ أَخْبَرَنِى صَدَقَةُ بْنُ يَسَارٍ عَنِ ابْنِ عُمَرَ رَضِىَ اللَّهُ عَنْهُمَا قَالَ : أُنْزِلَتْ هَذِهِ السُّورَةُ (إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ) عَلَى رَسُولِ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى وَسَطِ أَيَّامِ التَّشْرِيقِ وَعَرَفَ أَنَّهُ الْوَدَاعُ فَأَمَرَ بِرَاحِلَتِهِ الْقَصْوَاءِ فَرُحِلَتْ لَهُ فَرَكِبَ فَوَقَفَ بِالْعَقَبَةِ وَاجْتَمَعَ النَّاسُ فَقَالَ :யி يَا أَيُّهَا النَّاسُ ஞீ. فَذَكَرَ الْحَدِيثَ فِى خُطْبَتِهِ. السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي  (5 / 152)

பைஹகீயின் அறிவிப்பில் உள்ள மூஸா இப்னு உபைதா அர்ரப்தீ பலவீனமானவர் என்று அலீ இப்னுல் மதீனி கூறுகிறார். மேலும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள், இவர் மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிக்கிறார் என்று விமர்சிக்கிறார்.

நூல்: அள்ளுஅஃபாவுல் உஸ்புஹானீ பாகம்: 1, பக்கம்: 135

மேலும் அஹ்மத் இப்னு ஹன்பல் அவர்கள், இவரது அறிவிப்பை அறிவிப்பது ஹலால் ஆகாது என்றும், இவரது ஹதீஸ்கள் எழுதுவதற்குக் கூட தகுதியானவை இல்லை என்றும் கூறிவிட்டு எனவே நான் அவரது செய்தியில் எதனையும் வெளியிடமாட்டேன் என்றும் குறை கூறுகிறார். மேலும் இவர் மறுக்கப்பட வேண்டிய ஹதீஸ்களை அறிவிப்பவர் என்றும் (முன்கருல் ஹதீஸ்) குறை கூறுகிறார்.

யஹ்யா இப்னு மயீன் அவர்கள், இவரது ஹதீஸ் பலவீனமானது என்றும் இவரது ஹதீஸ்களை ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்வது கூடாது என்றும் இவர் மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிக்கிறார் என்றும் குறை கூறுகிறார்.

இன்னும் பல்வேறு இமாம்களும் இவரை பலவீனமானவர் என்றும் இவர் வலுவானவராக இல்லை என்றும் இவர் ஹதீஸ் கலையில் முற்றிலும் பலவீனமானவர் என்றும் குறை கூறுகின்றனர்.

நூல்: தஹ்தீபுல் கமால் பாகம்: 29, பக்கம்: 104 -ருந்து 112 வரை

எனவே இமாம் பைஹகீ அறிவிக்கும் செய்தி பலவீனமாக இருக்கிறது. அதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான, மூஸா பின் உபைதா என்பவர் பொய்யராகவும் இட்டுக்கட்டக் கூடியவராகவும் இருப்பதினால் அந்தச் செய்தி பலவீனமான செய்தியாகும்.

இந்த அத்தியாயத்தில்,

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا - மேலும் அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்க்கும் போது,

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا  - உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அவனே பாவமன்னிப்பு வழங்குபவனாக இருக்கிறான் என்று சொல்லப்படுகிறது.

அதாவது இந்த அத்தியாயம் அருளப்பட்ட பின்னர் மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவார்கள் என்று இந்த வாக்கியம் முன்னறிவிப்பு செய்கிறது. ஆனால் இது இறுதி ஹஜ்ஜின் போது அருளப்பட்டது என்று சொன்னால் இறுதி ஹஜ்ஜுக்குப் பின்னர் மகத்தான் வெற்றி கிடைத்து இருக்க வேண்டும். இதுவரை இல்லாத அளவுக்கு மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைந்து இருக்க வேண்டும். ஆனால் அப்படி எந்த ஆதாரமும் இல்லை.

கடைசி ஹஜ்ஜை நபியவர்கள் முடித்துவிட்டு முஹர்ரம் மாதத்தில் மதீனாவிற்குத் திரும்புகிறார்கள். மதீனா வந்த பிறகு ஸஃபர் மாதம் மட்டும்தான் வாழ்கிறார்கள். ஸஃபருக்கு அடுத்த மாதமாக இருக்கிற ரபீவுல் அவ்வல் மாதத்தில் மரணித்து விட்டார்கள்.

எனவே நபியவர்கள் ஹஜ்ஜ்ஜுக்குப் போனதற்கும் அவர்களது மரணத்திற்கும் இடைப்பட்ட கால அவகாசம் ஒரு மாதம் அல்லது ஒன்றரை மாதங்கள்தான். இந்த அத்தியாத்தில் சொல்லப்பட்ட அனைத்தும் அந்த ஒன்றரை மாதங்களுக்குள் நடந்திருக்க வேண்டும் என்ற நிர்பந்த நிலையையும் இந்த அறிவிப்பு ஏற்படுத்துகிறது.

ஆனால் மக்கா வெற்றிக்கு முன்னர் என்று வைத்துக் கொண்டால் அதன் பின்னர் கிடைத்த மக்கா வெற்றி பற்றிய முன்னறிவிப்பாக அமைகின்றது. மக்கா வெற்றிக்குப் பின்னர் மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தும் இருக்கிறார்கள். எனவே கருத்து அடிப்படையிலும் பைஹகியின் இந்த அறிவிப்பு தவறாக உள்ளது.

இப்னு அப்பாஸ் இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்ட வெற்றி என்பது மக்கா வெற்றிதான் என்று சொன்னதினாலும், பைஹகீயின் அறிவிப்பாளர் தொடர் வரிசை பலவீனமாக இருப்பதினாலும், மேலும் அந்தச் செய்தியின் கருத்து சரியில்லை என்பதினாலும் பைஹகீ அவர்கள் பதிவு செய்த, இறுதி ஹஜ்ஜில்தான் இந்த அத்தியாயம் அருளப்பட்டது என்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள முடியாது.

எனவே இந்த அத்தியாயம் எங்கே அருளப்பட்டது என்கிற கேள்விக்குப் பதில் மதீனா என்பதாகும். எனவே இந்த அத்தியாயத்திற்கு முன்னால் மதனீ என்று போட்டிருப்பார்கள். இது சரியான கருத்துதான். இதில் குறை சொல்ல முடியாது.

இந்த அத்தியாயத்தின் நேரடிப் பொருளைப் பார்த்தாலேயே நமக்கு இது விளங்கும்.

إِذَا جَاءَ - வரும் போது

 نَصْرُ اللَّهِ - அல்லாஹ்வின் வெற்றி

 وَالْفَتْح - அந்த வெற்றியும் (வரும்போது)

إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ - அல்லாஹ்வின் உதவியும் அந்த வெற்றியும் (மக்கா வெற்றியும்) வரும் போது

وَرَأَيْتَ النَّاسَ - நீர் மக்களைக் காணும் போதும்,

 يَدْخُلُونَ - நுழைபவர்களாக,

 فِي دِينِ اللَّه - அல்லாஹ்வின் மார்க்கத்தில்

 أَفْوَاجًا - கூட்டம் கூட்டமாக

وَرَأَيْتَ النَّاسَ يَدْخُلُونَ فِي دِينِ اللَّهِ أَفْوَاجًا - அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்க்கும் போதும்,

فَسَبِّحْ - அப்போது (காணும் போது) போற்றுவீராக! துதிப்பீராக!

 بِحَمْدِ رَبِّك - உமது இறைவனின் புகழை

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ - உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக!

 وَاسْتَغْفِرْه - அவனிடத்தில் மன்னிப்பும் கோருவீராக!

 إِنَّهُ كَانَ تَوَّابًا - அவன் மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான்.

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا  - உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அவனே பாவமன்னிப்பு வழங்குபவனாக இருக்கிறான்.

முழுமையான பொருள்: அல்லாஹ்வின் உதவியும் அந்த வெற்றியும் (மக்கா வெற்றியும்) வரும் போதும், அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் பார்க்கும் போதும், உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அவனே பாவமன்னிப்பு வழங்குபவனாக இருக்கிறான்.

இதுதான் இந்த அத்தியாயத்தின் நேரடிப் பொருளாகும். மொழி பெயர்த்தவுடனே இந்த அத்தியாயத்தின் நேரடிப் பொருள் எல்லாருக்கும் நன்றாகத்தான் விளங்குகிறது. ஆனால் இந்த அத்தியாயம் மறைமுகமாக இன்னொரு அர்த்தத்தையும் தருகிறது.

மறைமுக அர்த்தமென்ன?

உமர் (ரலி) அவர்கள் தமது ஆட்சிக் காலத்தில் பத்ருப் போரில் பங்கெடுத்துக் கொண்டவர்களைப் பார்த்துப் பார்த்து தேர்ந்தெடுத்து அவர்களை தமது ஆலோசனை சபையினராக உமர் அவர்கள் தனக் குப் பக்கத்திலேயே வைத்துக் கொள்வார்கள். ஆனால் அந்த சபையில் சிறிய வயதினராக உள்ள பத்ருப் போரில் கலந்து கொள்ளாத இப்னு அப்பாஸையும் சேர்த்துக் கொள்வார்கள். நபியவர்கள் மரணிக்கும் போதெல்லாம்கூட சிறிய வயதுடையவராகத்தான் இருந்தார் எனில், பத்ருப் போர் நடக்கும் நேரத்தில் சுமார் 3 அல்லது 4 வயதுடையவராகத்தான் இருந்திருப்பார். எனவே அந்த வயதில் பத்ருப் போரில் இப்னு அப்பாஸ் அவர்கள் கலந்து கொண்டிருக்க வாய்ப்பு ஏதுமில்லை.

எனவே பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுக்கு முக்கியத்துவம் கொடுக்கின்ற சபையில் எதற்காக இவ்வளவு சிறிய வயதுடையவரை நம் சபையில் சேர்த்து வைத்திருக்க வேண்டும் என உமர் (ரலி) அவர்களிடத்தில் மூத்த ஸஹாபாக்கள் குறைகூறினார்கள். மேலும் இவர் வயதில் எங்களது குடும்பத்திலும் நிறைய சிறு வயதுடையவர்கள் இருக்கத்தானே செய்கிறார்கள் என்றும் உமரிடத்தில் மற்ற ஸஹாபாக்கள் கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள் இவரை நமது சபையின் ஆலோசகர்களில் முக்கிய இடத்தை இவருக்குக் கொடுத்திருப்பதற்கு ஒரு காரணம் இருக்கிறது என்று கூறி, அங்கிருந்த பெரிய ஸஹாபாக்களிடம், இதா ஜாஅ நஸ்ருல்லாஹி என்று துவங்குகிற 110 வது அத்தியாயத்தின் விளக்கத்தைக் கேட்கிறார்கள். அந்த சபையில் இருந்த அனைத்துத் தோழர் களும், இந்த அத்தியாயத்தை வாசித்து விட்டு அதிலிருந்து தங்களுக்கு என்ன விளங்கியதோ அதையெல்லாம் சொன்னார்கள்.

3627 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ عَرْعَرَةَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بِشْرٍ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ كَانَ عُمَرُ بْنُ الْخَطَّابِ رَضِيَ اللَّهُ عَنْهُ يُدْنِي ابْنَ عَبَّاسٍ فَقَالَ لَهُ عَبْدُ الرَّحْمَنِ بْنُ عَوْفٍ إِنَّ لَنَا أَبْنَاءً مِثْلَهُ فَقَالَ إِنَّهُ مِنْ حَيْثُ تَعْلَمُ فَسَأَلَ عُمَرُ ابْنَ عَبَّاسٍ عَنْ هَذِهِ الْآيَةِ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ فَقَالَ أَجَلُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَعْلَمَهُ إِيَّاهُ قَالَ مَا أَعْلَمُ مِنْهَا إِلَّا مَا تَعْلَمُ روه ا البخاري 4430

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது: உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் எப்போதும் என்னைத் தம் அருகிலேயே வைத்திருப்பார்கள். ஆகவே, அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், "எங்களுக்கு அவரைப் போன்ற மகன்கள் (பலர்) இருக்கிறார்களே '' என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அது உங்களுக்குத் தெரிகின்ற (அவர் ஒரு கல்வியாளர் என்ற) காரணத்தால் தான்'' என்று பதிலளித்தார்கள். பிறகு என்னிடம், "அல்லாஹ்வின் உதவியும் (அவன் தரும்) வெற்றியும் வந்துவிடும் போது' என்னும் (110:1-வது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட்டார்கள். அதற்கு நான், "அது "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாழ்நாள் முடியப்போகிறது' என்று அவர்களுக்கு அல்லாஹ் அறிவித்த வசனமாகும்'' என்று பதிலளித்தேன். உடனே உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் அறிகின்றதையே அதிலிருந்து நானும் அறிகின்றேன்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 3627

இப்னு அப்பாஸ் (ர-லி ) அவர்கள் கூறியதாவது: உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், "எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், "அவர் நீங்கள் அறிந்து வைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர்'' என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், "இதா ஜாஅ  நஸ்ருல்லாஹி..... (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம்  கூட்டமாக இறைமார்க்கத்தில் இணைவதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரையுங்கள்; மேலும், அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள்)'' என்னும் (திருக்குர்ஆனின் 110-வது "அந்நஸ்ர்') அத்தியாயத்தை இறுதி வரை ஓதிக்காட்டி, "இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், "நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம்'' என்று (விளக்கம்) கூறினர். சிலர், "எங்களுக்குத் தெரியாது'' என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், "இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித்தான் கூறுகிறீர்களா?'' என்று கேட்டார்கள். நான், "இல்லை'' என்றேன். அவர்கள், "அப்படியென்றால் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். நான், "அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து' என்பதில் உள்ள "வெற்றி' என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றிதான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான்' என்பதே இதன் கருத்தாகும்'' என்று சொன்னேன். உமர் (ரலி) அவர்கள், "நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன்'' என்று சொன்னார்கள்.

புகாரி 4294, 4970

மற்ற ஸஹாபாக்கள் நேரடியாக வசனத்தில் சொல்லப்பட்டதை மட்டும் விளங்கினார்கள். ஆனால் இப்னு அப்பாஸ் (ர-லி ) அவர்கள் அந்த வசனத்தில் சொல்லப்பட்ட நேரடி அர்த்தத்தையும் விளங்குகிறார். அதற்குள் மறைந்திருக்கிற விளக்கத்தையும் வெளிப்படுத்திக் காட்டுகிறார்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இந்த அத்தியாயம் இறங்கியவுடன் தமது மகள் ஃபாத்திமாவைக் கூப்பிட்டு எனக்கு மரணம் நெருங்கிவிட்டது என்கிற செய்தியைச் சொல்கிறார்கள். ஆனாலும் இன்ன தேதியில்தான் மரணிப்பேன் என்று எந்தத் தேதியையும் குறிப்பிட்டுச் சொல்லவில்லை. ஏனெனில் இந்த வசனம் அருளப்பட்ட அடுத்த நாளிலோ வாரத்திலோ மாதத்திலோ நபியவர்கள் மரணிக்கவில்லை. இந்த வசனம் அருளப்பட்டு சுமார் இரண்டு வருடத்திற்கு நெருக்கமாக நபியவர்கள் வாழ்ந்தார்கள்.

அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுகிறார்கள். இந்தக் காட்சியை நபியவர்களின் மனைவிமார்களில் சிலர் தூரத்திலிருந்து பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். கொஞ்சம் நேரம் சென்று ஃபாத்திமா (ரலி) சிரிக்கிறார்கள். இந்நிகழ்வு முடிந்த பிறகு நபியவர்களின் மனைவிமார்கள் கேட்கிறார் கள். எதற்காக அழுதீர்கள்? எதற்காக சிரித்தீர்கள்? என்று கேட்டதற்கு, நபியவர்கள் தான் மரணிக்கப் போவதாகச் சொன்னார்கள். அதனால் அழுதேன் என்றும், ஆனாலும் என் குடும்பத்தில் என்னை முத-ல் சந்திக்கப் போகிற நபர் நீதான் என்று சொன்னதும் நான் சிரித்தேன் என்று பதிலளித்தார்கள். நபிகள் நாயகம் சொன்ன மாதிரியே, நபிகள் நாயகம் மரணித்த ஆறு மாத காலத்தில் ஃபாத்திமா (ரலியும் மரணித்து விட்டார்கள்.

நபியவர்களின் குடும்பத்திலுள்ள அவர்களது மனைவிமார்கள், பிள்ளைகளில் கடைசிப் பிள்ளையாக இருக்கிற ஃபாத்திமாதான் முதலில் மரணித்தார்கள். எனவே நபியவர்கள் மரணிப்பதையும் இந்த செய்தி சொல்லுகிறது. அதே நேரத்தில் ஃபாத்திமா (ரலி) அவர்களும் சீக்கிரத்தில் மரணிக்க இருக்கிறார்கள் என்பதையும் நபியவர்களுக்கு அல்லாஹ் சொல்லிக் கொடுத்திருக்கிறான் என்பதையும் நம்மால் விளங்கிக் கொள்ள முடிகிறது.

ஃபாத்திமா (ரலி) அவர்கள் தமது மரணத்தைக் கேட்டு சிரித்ததைத் தவறாகப் புரிந்து கொள்ளக் கூடாது. நாமாக இருந்தால், நமது தந்தை மரணிப்பார்கள் என்று தெரிந்தால் அழுவோம். தந்தைக்கடுத்ததாக நீதான் மரணிப்பாய் என்று சொன்னால் இன்னும் அதிகமாக அழுவோம். ஆனால் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிரிக்கிறார்கள் என்றால் அது உண்மையான நம்பிக்கையின் வெளிப்பாடாகும்.

எனவே மறுமை என்பதை அடுத்த ஊர் என்று நினைக்காமல், அருகிலி -ருக்கும் பக்கத்து ஊருக்குப் போவதைப் போன்று நம்பவேண்டும். இப்படி மறுமையின் மீது வலுவான நம்பிக்கை ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு இருந்த காரணித்தினால்தான் தமது மரணச் செய்தியைக் கேட்டு சிரித்திருக்கிறார்கள்.

79 أَخْبَرَنَا سَعِيدُ بْنُ سُلَيْمَانَ عَنْ عَبَّادِ بْنِ الْعَوَّامِ عَنْ هِلَالِ بْنِ خَبَّابٍ عَنْ عِكْرِمَةَ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ لَمَّا نَزَلَتْ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ دَعَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَاطِمَةَ فَقَالَ قَدْ نُعِيَتْ إِلَيَّ نَفْسِي فَبَكَتْ فَقَالَ لَا تَبْكِي فَإِنَّكِ أَوَّلُ أَهْلِي لِحَاقًا بِي فَضَحِكَتْ فَرَآهَا بَعْضُ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَقُلْنَ يَا فَاطِمَةُ رَأَيْنَاكِ بَكَيْتِ ثُمَّ ضَحِكْتِ قَالَتْ إِنَّهُ أَخْبَرَنِي أَنَّهُ قَدْ نُعِيَتْ إِلَيْهِ نَفْسُهُ فَبَكَيْتُ فَقَالَ لِي لَا تَبْكِي فَإِنَّكِ أَوَّلُ أَهْلِي لَاحِقٌ بِي فَضَحِكْتُ وَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ وَجَاءَ أَهْلُ الْيَمَنِ هُمْ أَرَقُّ أَفْئِدَةً وَالْإِيمَانُ يَمَانٍ وَالْحِكْمَةُ يَمَانِيَةٌ - سنن الدارمي

இதா ஜாஅ நஸ்ருல்லாஹி வல்ஃபத்ஹு என்ற அத்தியாயம் அருளப்பட்டவுடன் நபியவர்கள் தனது மகள் ஃபாத்திமாவை அழைத்து, நான் (விரைவில்) மரணிப்பதாக எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது என்று சொன்னவுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அழுதார்கள். அப்போது நபியவர்கள், நீ அழாதே! ஏனெனில் நீதான் எனது குடும்பத்தில் என்னை முத-லி ல் சந்திப்பவளாக இருக்கிறாய் என்று சொன்னதும் ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிரிக்கலானார்கள். இதைப் பார்த்துக் கொண்டிருந்த நபிமார்களின் மனைவிமார்களில் சிலர் பாத்திமாவே! என்று அழைத்த போது  நீ அழுவதாகவும் பிறகு சிரிப்பதாகவும் உன்னை நாங்கள் பார்த்தோமே அது என்ன செய்தி என்று எங்களுக்குச் சொல் என்று கேட்டார்கள். அதற்கு ஃபாத்திமா (ரலி) அவர்கள், நபியவர்கள் (என்னை அழைத்து), தான் கூடிய விரைவில் மரணிக்க இருப்பதாக அல்லாஹ்வின் புறத்திலிருந்து அறிவிக்கப்பட்டுள்ளேன் என்று சொன்னதினால் அழுதேன் என்றும், அப்போது நபியவர்கள் நீ அழாதே! நீதான் எனது குடும்பத்தில் என்னை முதலில் சந்திப்பாய்! என்று சொன்னதும் சிரித்தேன் என்றும் பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல்: தாரமி 79

எனவே இப்னு அப்பாஸ் இந்த அத்தியாயம் குறித்து சொல்வது அவரது அறிவைக் கொண்டே அனுமானித்து புரிந்து கொண்டார் என்பதை விட, நபியவர்களே இந்த அத்தியாயம் தனது மரணத்தைப் பற்றித்தான் பேசுகிறது என்று சொல்வதைத்தான் இப்னு அப்பாஸ் அறிவிக்கிறார்கள் என்று புரிந்து கொள்ள வேண்டும்.

குர்ஆனின் கடைசி அத்தியாயம்

இந்த அத்தியாயத்தின் இன்னொரு சிறப்பு என்னவெனில், திருமறைக் குர்ஆனில் கடைசியாக முழு அத்தியாயமாக இந்த அத்தியாயம் தான் நபியவர்களுக்கு அருளப்பட்டது. இந்த அத்தியாயத்திற்குப் பிறகு சூரத்துல் பகராவில் சில வசனங்களும் சூரத்துல் தவ்பாவில் ஒரு சில வசனங்களும் அருளப்பட்டுக் கொண்டுதான் இருந்தன. இருப்பினும் முழு அத்தியாயமாக வந்தது இந்த சூரா தான் கடைசியாக இருக்கிறது.

حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَهَارُونُ بْنُ عَبْدِ اللَّهِ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا و قَالَ الْآخَرَانِ حَدَّثَنَا جَعْفَرُ بْنُ عَوْنٍ أَخْبَرَنَا أَبُو عُمَيْسٍ عَنْ عَبْدِ الْمَجِيدِ بْنِ سُهَيْلٍ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ عُتْبَةَ قَالَ قَالَ لِي ابْنُ عَبَّاسٍ تَعْلَمُ وَقَالَ هَارُونُ تَدْرِي آخِرَ سُورَةٍ نَزَلَتْ مِنْ الْقُرْآنِ نَزَلَتْ جَمِيعًا قُلْتُ نَعَمْ إِذَا جَاءَ نَصْرُ اللَّهِ وَالْفَتْحُ قَالَ صَدَقْتَ - صحيح مسلم

உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா அவர்கள் கூறியதாவது:

என்னிடம் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், "குர்ஆனில் இறுதியாக அருளப்பெற்ற முழு அத்தியாயம் எதுவென உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்; "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து விட்டால்...' என்று தொடங்கும் (110ஆவது) அத்தியாயமே அது'' என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், "உண்மைதான்''என்றார்கள்.

நூல்: முஸ்லி -ம் 5758  

வளரும் இன்ஷா அல்லாஹ்

கேள்வி பதில்

குபா பள்ளிவாசலி -ல் தொழுதால்  உம்ரா செய்த நன்மை கிடைக் கும் என்று நபிமொழி உள்ளதா? அது ஆதாரப்பூர்வமானதா?

அப்துல்லாஹ், மதீனா

298 حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْعَلَاءِ أَبُو كُرَيْبٍ وَسُفْيَانُ بْنُ وَكِيعٍ قَالَا حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ قَالَ حَدَّثَنَا أَبُو الْأَبْرَدِ مَوْلَى بَنِي خَطْمَةَ أَنَّهُ سَمِعَ أُسَيْدَ بْنَ ظُهَيْرٍ الْأَنْصَارِيَّ وَكَانَ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يُحَدِّثُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الصَّلَاةُ فِي مَسْجِدِ قُبَاءٍ كَعُمْرَةٍ قَالَ وَفِي الْبَاب عَنْ سَهْلِ بْنِ حُنَيْفٍ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ أُسَيْدٍ حَدِيثٌ حَسَنٌ غَرِيبٌ وَلَا نَعْرِفُ لِأُسَيْدِ بْنِ ظُهَيْرٍ شَيْئًا يَصِحُّ غَيْرَ هَذَا الْحَدِيثِ وَلَا نَعْرِفُهُ إِلَّا مِنْ حَدِيثِ أَبِي أُسَامَةَ عَنْ عَبْدِ الْحَمِيدِ بْنِ جَعْفَرٍ وَأَبُو الْأَبْرَدِ اسْمُهُ زِيَادٌ مَدِينِيٌّ رواه الترمذي

குபா பள்ளிவாசலில் தொழுவது உம்ரா செய்வதைப் போன்றதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உஸைத் பின் லுஹைர் (ரலி),

நூல் : திர்மிதீ (298)

இதே கருத்தில் இப்னுமாஜா (1401), பைஹகீ (பாகம் :5, பக்கம் : 248), ஹாகிம் (பாகம் :1, பக்கம் : 662), தப்ரானீ கபீர், பாகம்:1, பக்கம் : 210),ஸுனன் ஸு க்ரா- பைஹகீ (பாகம் :4, பக்கம் :423), முஸ்னத் அபீயஃலா, பாகம் :13, பக்கம் : 90), முஸன்னஃப் அபீ ஷைபா, பாகம் :2, பக்கம் :373) அபுல் ஈமான்- பைஹகீ, பாகம் :6, பக்கம் : 67) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

இந்தக் கருத்து இடம்பெறும் அனைத்து செய்திகளிலும் அபுல் அப்ரத் என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவர் யாரென அறியப்படாதவர் என்று இந்தச் செய்தியை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் ஹாகிம் அவர்கள் அந்தச் செய்தியின் இறுதியிலேயே குறிப்பிட்டுள்ளார்கள். இதைப் போன்று இமாம் தஹபீ அவர்கள் தீவானுல் லுஅஃபா (பாகம் :1, பக்கம் : 149) என்ற நூ-லி லும் இவர் யாரென அறியப்படாதவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

அபுல் அப்ரத் என்பவரை இப்னுஹிப்பான் அவர்கள் மட்டும் நம்பகமானவர் பட்டியி-லி ல் இடம்பெறச் செய்துள்ளார்கள். யாரென அறியப்படாதவர்களையும் நம்பகமானவர் பட்டியலி -ல் இடம்பெறச் செய்வது இப்னுஹிப்பான் அவர்களின் பழக்கமாகும். எனவே இமாம் இப்னுஹிப்பான் அவர்கள் ஒருவரை நம்பகமானவர் என்று கூறினால் அதை மட்டும் வைத்து அவரை நம்பகமானவர் என்று ஹதீஸ்கலை அறிஞர்கள் கூறுவதில்லை. எனவே இப்னுஹிப்பான் அவர்களின் இந்தக் கருத்து கணக்கில் கொள்ளத்தக்கதல்ல.

இந்தச் செய்தியை சிலர் ஆதாரப்பூர்வமானது என்று குறிப்பிட்டுள்ளார்கள். அதற்குக் காரணம் அபுல் அப்ரத் என்ற பெயரில் வேறு ஒரு நபர் இருந்துள்ளார்.

இன்னொருவரின் பெயர் அபுல் அப்ரத் அல்ஹாரிஸி இவருடைய உண்மையான பெயர் ஸியாத் என்பதாகும். இமாம் திர்மிதி அவர்களும் அபுல் அப்ரத் என்ற பெயரில் இருக்கும் இன்னொரு நபரை விளங்காமல் இச்செய்தியில் இடம்பெறும் யாரென தெரியாத அபுல் அப்ரத் என்பவரை யாரென அறியப்பட்ட அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்று எண்ணிக் கொண்டார்கள்

(துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் : 2, பக்கம் :236)

அபுல் அப்ரத் அல்ஹாரிஸி என்பவரின் பெயர் ஸியாத் ஆகும் என்ற கருத்தை இமாம் தாரகுத்னீ, அபூஅஹ்மத் ஹாகிம், அபூபிஷ்ர் அத்தூலாபீ ஆகியோர் உட்பட பலர் கூறியுள்ளனர். மேலும் (குபா பள்ளியின் சிறப்பு தொடர்பான செய்தியில் இடம்பெற்றிருக்கும்) அபூஅப்ரத் என்பவர் யாரென அறியப்படாதவர் என்ற கருத்தே அறியப்பட்ட செய்தியாகும். இவரை பெயர் அறியப்படாதவர் பட்டிய-லி லேயே ஹாகிம், இப்னு அபிஹாத்தம், இப்னுஹிப்பான் ஆகியோர் குறிப்பிட்டுள்ளனர். இமாம் ஹாகிம் அவர்கள் இவரின் பெயர் மூஸா பின் சுலைம் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

(துஹ்பத்துல் அஹ்வதீ, பாகம் : 2, பக்கம் :236)

எனவே இந்தச் செய்தி யாரென அறியப்படாதவர் மூலம் அறிவிக்கப்பட்டுள்ளதால் இச்செய்தி பலவீனம் அடைகிறது.

இதே கருத்தில் ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் வழியாகவும் ஒரு செய்தி இடம்பெற்றுள்ளது.

15414 حَدَّثَنَا إِسْحَاقُ بْنُ عِيسَى حَدَّثَنِي مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ بِقُبَاءٍ قَالَ حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ يَقُولُ قَالَ أَبِي قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ خَرَجَ حَتَّى يَأْتِيَ هَذَا الْمَسْجِدَ يَعْنِي مَسْجِدَ قُبَاءٍ فَيُصَلِّيَ فِيهِ كَانَ كَعَدْلِ عُمْرَةٍ حَدَّثَنَا قُتَيْبَةُ بْنُ سَعِيدٍ قَالَ حَدَّثَنَا مُجَمِّعُ بْنُ يَعْقُوبَ الْأَنْصَارِيُّ عَنْ مُحَمَّدِ بْنِ سُلَيْمَانَ الْكَرْمَانِيِّ قَالَ سَمِعْتُ أَبَا أُمَامَةَ بْنَ سَهْلِ بْنِ حُنَيْفٍ فَذَكَرَ مِثْلَهُ قَالَ حَدَّثَنَا عَلِيُّ بْنُ بَحْرٍ قَالَ حَدَّثَنَا حَاتِمٌ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ سُلَيْمَانَ الْكَرْمَانِيُّ فَذَكَرَ مَعْنَاهُ رواه احمد

யார் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்காக சென்று அங்கு தொழுவாரோ அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர் : ஸஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி),

நூல் :அஹ்மத் (15414)

இதே கருத்தில் ஹாகிம் (பாகம்:3, பக்கம் : 13), இப்னு ஹிப்பான் (பாகம் :4, பக்கம் : 507), அபுல் ஈமான் (பாகம் : 6, பக்கம் : 69) ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

சில அறிவிப்புகளில் ஒருவர் மஸ்ஜித் குபா என்ற பள்ளிக்குச் சென்று நான்கு ரக்அத் தொழுதால் அது உம்ராவிற்கு நிகரானதாக அமைந்துவிடும் என்று இடம்பெற்றுள்ளது.

இச்செய்தியில் முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் யாரென அறியப்படாதவராவார்.

முஹம்மத் பின் சுலைமான் பின் கர்மானி என்பவரல்லாமல் மூஸா பின் உபைத் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் இவருக்குப் பின்னால் இடம்பெற்ற யூசுஃப் பின் தஹ்மான் என்பவரும் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவரே.

(நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம் :1, பக்கம் :199, மீஸானுல் இஃதிதால், பாகம்:4, பக்கம் : 467 )

குபா பள்ளியின் சிறப்பைப் பற்றி கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் வழியாகவும் இடம்பெற்றுள்ளது.

المعجم الكبير (19/ 146)  319 - حدثنا إبراهيم بن دحيم الدمشقي حدثني أبي ثنا يحيى بن يزيد بن عبد الملك النوفلي عن أبيه عن سعد بن إسحاق بن كعب بن عجرة عن أبيه عن جده : أن رسول الله صلى الله عليه و سلم قال : ( من توضأ فأسبغ الوضوء ثم عمد إلى مسجد قباء لا يريد غيره ولم يحمله على الغدو إلا الصلاة في مسجد قباء فصلى فيه أربع ركعات يقرأ في كل ركعة بأم القرآن كان له مثل أجر المعتمر إلى بيت الله )

யார் உளூச் செய்து பின்னர் குபா பள்ளிவாசலுக்காகவே சென்று அது தவிர வேறு எந்த எண்ணமும் இல்லாமல் ஒவ்வொரு ரக்அத்திலும் உம்முல் குர்ஆன் (சூரத்துல் பாத்திஹா) ஓதி நான்கு ரக்அத் தொழுதால் இறையில்லம் (கஅபத்துல்லாஹ்வில்) உம்ரா செய்த நன்மையை பெற்றவரைப் போன்றவராவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : கஅப் பின் உஜ்ரா (ரலி)

நூல் : தப்ரானி- கபீர் (பாகம் : 19, பக்கம் : 146)

இச்செய்தியில் யஹ்யா பின் யஸீத் பின் அப்துல் மாலி க் அந்நவ்ஃபலி  என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.

(நூல் : அல்ஜர்ரஹ் வத்தஃதீல், பாகம் :9, பக்கம் : 279)

குபா பள்ளிவாசலி ல் தொழுதால் உம்ரா செய்த நன்மை கிடைக்கும் என்ற கருத்தில் வரும் செய்தி அனைத்தும் பலவீனமானதாக இடம்பெற்றுள்ளது. அதே நேரத்தில் எந்தப் பள்ளிக்குச் சென்றாலும் இரண்டு ரக்அத் தொழ வேண்டும் என்ற நபிவழியின் அடிப்படையில் தொழுது கொள்ளலாம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் பள்ளிவாசலுக்குள் நுழைந்தால் உட்காருவதற்கு முன்பு இரண்டு ரக்அத்கள் தொழட்டும்.

அறிவிப்பவர் : அபூகத்தாதா அஸ்ஸலமீ (ரலி),

நூல் : புகாரி (444)

மேலும் நபி (ஸல்) அவர்கள் சனிக்கிழமை அன்று குபா பள்ளிவாசலுக்குச் சென்றுவருவார்கள் என்ற ஆதாரப்பூர்வமான செய்தி இடம்பெற்றுள்ளது.

அப்துல்லாஹ் பின் தீனார் அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ஒவ்வொரு சனிக்கிழமையும் குபா பள்ளிக்கு நடந்தும் வாகனத்திலும் வருவார்கள் என இப்னு உமர் (ர-லி ) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி (1193)

ஆதமின் மக்களின் பாவத்தினால் ஹஜ்ருல் அஸ்வத் கருத்துவிட்டது என்ற செய்தி ஆதாரப்பூர்வமானதா?

நவ்சாத், கோவை

803 حَدَّثَنَا قُتَيْبَةُ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَزَلَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنْ الْجَنَّةِ وَهُوَ أَشَدُّ بَيَاضًا مِنْ اللَّبَنِ فَسَوَّدَتْهُ خَطَايَا بَنِي آدَمَ قَالَ وَفِي الْبَاب عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَمْرٍو وَأَبِي هُرَيْرَةَ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ ابْنِ عَبَّاسٍ حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ رواه الترمذي

ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்திலி -ருந்து இறங்கியது. (அப்போது) அது பாலைவிட வெண்மையானதாக இருந்தது. ஆதமுடைய மக்களின் பாவங்கள் அதைக் கருமையாக்கிவிட்டது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : திர்மிதீ (803)

இதே கருத்து அஹ்மதிலும் இடம்பெற்றுள்ளது. (ஹதீஸ் எண் : 3356,3659) இடம் பெற்றுள்ளது.

இச்செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் நம்பகமானவர் என்றாலும் கடைசி காலத்தில் மூளைகுழம்பியவர். இவர் மூளைகுழம்பிய பின்னர் அவரிடம் கேட்டவர்களில் ஒருவர் ஜரீர் ஆவார். (பத்ஹுல் பாரீ) இந்தச் செய்தியில் அதா பின் அஸ்ஸாயிப் என்பவரிடம் ஜரீரே கேட்டுள்ளதால் இந்தச் செய்தி பலவீனமானதாகும். என்றாலும் ஹஜ்ருல் அஸ்வத் கல் சொர்க்கத்துக் கல் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்தி உள்ளது.

2886 أَخْبَرَنِي إِبْرَاهِيمُ بْنُ يَعْقُوبَ قَالَ حَدَّثَنَا مُوسَى بْنُ دَاوُدَ عَنْ حَمَّادِ بْنِ سَلَمَةَ عَنْ عَطَاءِ بْنِ السَّائِبِ عَنْ سَعِيدِ بْنِ جُبَيْرٍ عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الْحَجَرُ الْأَسْوَدُ مِنْ الْجَنَّةِ رواه النسائي

ஹஜ்ருல் அஸ்வத் சொர்க்கத்துக் கல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : நஸாயீ (2886)

இச்செய்தியில் இடம்பெறும் ஹம்மாத் பின் ஸலமா என்பவர் அதா பின் அஸ்ஸாயிப் என்பவர் மூளை குழம்புவதற்கு முன்னர் கேட்டவரா வார். எனவே இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதாகும். 

சொற்பொழிவு குறிப்புகள்            தொகுப்பு : இப்னு மர்யம்

ஒழுக்கங்கள்

அலங்காரங்களை வெளியே காட்ட வேண்டாம்

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا لِبُعُولَتِهِنَّ...  (سورة النور : 31)

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்.

அல்குர்ஆன் 24:31)

மெல்-லி ய ஆடைகளை அணிய வேண்டாம்

3971 حَدَّثَنِي زُهَيْرُ بْنُ حَرْبٍ حَدَّثَنَا جَرِيرٌ عَنْ سُهَيْلٍ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ صِنْفَانِ مِنْ أَهْلِ النَّارِ لَمْ أَرَهُمَا قَوْمٌ مَعَهُمْ سِيَاطٌ كَأَذْنَابِ الْبَقَرِ يَضْرِبُونَ بِهَا النَّاسَ وَنِسَاءٌ كَاسِيَاتٌ عَارِيَاتٌ مُمِيلَاتٌ مَائِلَاتٌ رُءُوسُهُنَّ كَأَسْنِمَةِ الْبُخْتِ الْمَائِلَةِ لَا يَدْخُلْنَ الْجَنَّةَ وَلَا يَجِدْنَ رِيحَهَا وَإِنَّ رِيحَهَا لَيُوجَدُ مِنْ مَسِيرَةِ كَذَا وَكَذَا رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: இரு பிரிவினர் நரகவாசிகளில் அடங்குவர். அந்த இரு பிரிவினரையும் நான் பார்த்ததில்லை. (முதலாவது பிரிவினர் யாரெனில்,) மக்களில் சிலர், பசு மாட்டின் வாலைப் போன்ற (நீண்ட) சாட்டைகளைத் தம்மிடம் வைத்துக்கொண்டு, மக்களை அடி(த்து இம்சி)ப்பார்கள்.

(இரண்டாவது பிரிவினர் யாரெனில்,) மெல்-லி ய உடையணிந்து, தம் தோள்களைச் சாய்த்து (கர்வத்துடன்) நடந்து, (அந்நிய ஆடவர்களின் கவனத்தை) தன்பால் ஈர்க்கக்கூடிய பெண்கள் ஆவர். அவர்களது தலை (முடி), கழுத்து நீண்ட ஒட்டகங்களின் (இரு பக்கம்) சாயக்கூடிய திமில்களைப் போன்றிருக்கும். அவர்கள் சொர்க்கத்தில் நுழைய மாட்டார்கள்; (ஏன்) சொர்க்கத்தின் வாடையைக்கூட நுகர மாட்டார்கள். சொர்க்கத்தின் நறுமணமோ இவ்வளவு இவ்வளவு பயணத் தொலைவிலிருந்தே வீசிக்கொண்டிருக்கும்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் (4316)

அடுத்தவர்களை ஈர்க்கும் வண்ணம் நறுமணம் பூசி வெளியே செல்ல வேண்டாம்

5036 عَنِ الْأَشْعَرِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ اسْتَعْطَرَتْ فَمَرَّتْ عَلَى قَوْمٍ لِيَجِدُوا مِنْ رِيحِهَا فَهِيَ زَانِيَةٌ *رواه النسائي والترمذي وابوداؤد واحمد

எந்தப் பெண்ணாவது நறுமணத்தைப் பூசிக் கொண்டு அவர்கள் முகரவேண்டுமென்பதற்காக ஒரு கூட்டத்தாரிடம் சென்றால் அவள் விபச்சாரியாவாள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ரலி),

நூல்கள் : நஸாயீ (5036), திர்மதீ (2710), அபூதாவூத் (3642), அஹ்மத் (18879).

759 عَنْ زَيْنَبَ امْرَأَةِ عَبْدِ اللَّهِ قَالَتْ قَالَ لَنَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ إِذَا شَهِدَتْ إِحْدَاكُنَّ الْمَسْجِدَ فَلَا تَمَسَّ طِيبًا *رواه مسلم

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களுடைய துணைவியார் ஸைனப் பின்த் முஆவியா (ரலி) அவர்கள் கூறியதாவது;

"நீங்கள் (ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்வதற்காகப்) பள்ளிவாசலுக்குச் செல்லும் போது நறுமணம் பூசாதீர்கள்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (759)

760 عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَيُّمَا امْرَأَةٍ أَصَابَتْ بَخُورًا فَلَا تَشْهَدْ مَعَنَا الْعِشَاءَ الْآخِرَةَ * رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நறுமணப் புகையைப் பயன்படுத்திய எந்தப் பெண்ணும் கடைசித் தொழுகையான இஷாத் தொழுகையில் நம்முடன் கலந்துகொள்ள வேண்டாம்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : முஸ்லிம் (760)

அந்நியர்களை வீட்டில் அனுமதிக்க வேண்டாம்

5195 عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي اللَّهم عَنْهم أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا يَحِلُّ لِلْمَرْأَةِ أَنْ تَصُومَ وَزَوْجُهَا شَاهِدٌ إِلَّا بِإِذْنِهِ وَلَا تَأْذَنَ فِي بَيْتِهِ إِلَّا بِإِذْنِهِ وَمَا أَنْفَقَتْ مِنْ نَفَقَةٍ عَنْ غَيْرِ أَمْرِهِ فَإِنَّهُ يُؤَدَّى إِلَيْهِ شَطْرُهُ وَرَوَاهُ أَبُو الزِّنَادِ أَيْضًا عَنْ مُوسَى عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ فِي الصَّوْمِ *رواه البخاري ومسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு பெண் தன் கணவர் உள்ளூரில் இருக்க, அவரது அனுமதியில்லாமல் (கூடுதல்) நோன்பு நோற்பது அனுமதிக்கப்பட்டதன்று. அவரது அனுமதியில்லாமல் (யாரையும்) அவரது இல்லத்திற்குள் அவள் அனுமதிக்கலாகாது. கணவர் கட்டளையிடாமலேயே ஒரு பெண் (அறவழியில் கணவரது பொருளைச்) செலவிட்டால் (அதன் பலனில்) பாதி அவருக்கும் கிடைக்கும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (5195)

5232 عَنْ عُقْبَةَ بْنِ عَامِرٍ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِيَّاكُمْ وَالدُّخُولَ عَلَى النِّسَاءِ فَقَالَ رَجُلٌ مِنَ الْأَنْصَارِ يَا رَسُولَ اللَّهِ أَفَرَأَيْتَ الْحَمْوَ قَالَ الْحَمْوُ الْمَوْتُ *رواه البخاري ومسلم

உக்பா பின் ஆமிர் (ர-லி ) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "(அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறி னார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரானவர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : உக்பா பின் ஆமிர் (ரலி),  

நூல் : புகாரி (5232)

அந்நிய ஆணுடன் தனித்து இருக்க வேண்டாம்

15140 حَدَّثَنَا أَبُو النَّضْرِ وَحُسَيْنٌ قَالَا حَدَّثَنَا شَرِيكٌ عَنْ عَاصِمِ بْنِ عُبَيْدِ اللَّهِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ عَامِرٍ يَعْنِي ابْنَ رَبِيعَةَ عَنْ أَبِيهِ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ مَاتَ وَلَيْسَتْ عَلَيْهِ طَاعَةٌ مَاتَ مِيتَةً جَاهِلِيَّةً فَإِنْ خَلَعَهَا مِنْ بَعْدِ عَقْدِهَا فِي عُنُقِهِ لَقِيَ اللَّهَ تَبَارَكَ وَتَعَالَى وَلَيْسَتْ لَهُ حُجَّةٌ أَلَا لَا يَخْلُوَنَّ رَجُلٌ بِامْرَأَةٍ لَا تَحِلُّ لَهُ فَإِنَّ ثَالِثَهُمَا الشَّيْطَانُ إِلَّا مَحْرَمٍ فَإِنَّ الشَّيْطَانَ مَعَ الْوَاحِدِ وَهُوَ مِنْ الِاثْنَيْنِ أَبْعَدُ مَنْ سَاءَتْهُ سَيِّئَتُهُ وَسَرَّتْهُ حَسَنَتُهُ فَهُوَ مُؤْمِنٌ قَالَ حُسَيْنٌ بَعْدَ عَقْدِهِ إِيَّاهَا فِي عُنُقِهِ رواه احمد

ஒரு ஆணும் பெண்ணும் தனித்து இருக்க வேண்டாம். ஏனெனில் மூன்றாவதாக ஷைத்தான் இருப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆமிர் பின் ரபீஆ (ரலி),

நூல் : அஹ்மத் (15140)

தீயவர்களை வீட்டில் இருக்க அனுமதிக்க வேண்டாம்

5235 حَدَّثَنَا عُثْمَانُ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدَةُ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ زَيْنَبَ بِنْتِ أُمِّ سَلَمَةَ عَنْ أُمِّ سَلَمَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ عِنْدَهَا وَفِي الْبَيْتِ مُخَنَّثٌ فَقَالَ الْمُخَنَّثُ لِأَخِي أُمِّ سَلَمَةَ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي أُمَيَّةَ إِنْ فَتَحَ اللَّهُ لَكُمْ الطَّائِفَ غَدًا أَدُلُّكَ عَلَى بِنْتِ غَيْلَانَ فَإِنَّهَا تُقْبِلُ بِأَرْبَعٍ وَتُدْبِرُ بِثَمَانٍ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا يَدْخُلَنَّ هَذَا عَلَيْكُنَّ  رواه البخاري

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு நாள் என் கணவர்) நபி (ஸல்) அவர்கள் என் அருகில் இருந்து கொண்டிருந்தார்கள். அங்கு எங்கள் வீட்டில் (பெண்களைப் போல் நடந்துகொள்ளும்) அரவாணி ஒருவனும் இருந்து கொண்டிருந்தான். அந்த "அரவாணி என் சகோதரர் அப்துல்லாஹ் பின் அபீ உமைய்யாவிடம், "நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால், ஃகைலானுடைய மகளை உனக்கு நான் அடையாளம் காட்டுகிறேன். (அவளை நீ மணந்துகொள்.) ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்புகளு)டனும் பின்பக்கம் எட்டு(சதை மடிப்புகளு)டனும் வருவாள்'' என்று (அவளது மேனி அழகை வர்ணித்துக்) கூறினான். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், "இவன் உங்களிடம் ஒரு போதும் வரக்கூடாது'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரீ 5235

ஆண்களிடம் குழைந்து பேசவேண்டாம்

يَانِسَاءَ النَّبِيِّ لَسْتُنَّ كَأَحَدٍ مِنْ النِّسَاءِ إِنْ اتَّقَيْتُنَّ فَلَا تَخْضَعْنَ بِالْقَوْلِ فَيَطْمَعَ الَّذِي فِي قَلْبِهِ مَرَضٌ وَقُلْنَ قَوْلًا مَعْرُوفًا(32) سورة الاحزاب

நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள்.

(அல்குர்ஆன் 33:32)

அந்நியப் பெண்களை தொட்டுப் பேசவேண்டாம்

7214 عَنْ عَائِشَةَ رَضِي اللَّهم عَنْهَا قَالَتْ كَانَ النَّبِيُّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يُبَايِعُ النِّسَاءَ بِالْكَلَامِ بِهَذِهِ الْآيَةِ ( لَا يُشْرِكْنَ بِاللَّهِ شَيْئًا ) قَالَتْ وَمَا مَسَّتْ يَدُ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَدَ امْرَأَةٍ إِلَّا امْرَأَةً يَمْلِكُهَا *رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் பெண்களிடம் "நபியே! இறைநம்பிக்கைக் கொண்ட பெண்கள் உங்கüடம் அல்லாஹ்வுக்கு எதையும் இணைவைக்கமாட்டார்கள்; திருடமாட்டார்கள்; விபசாரம் செய்ய மாட்டார்கள்; தங்கள் குழந்தைகளைக் கொலை செய்யமாட்டார்கள்; தாங்களாக அவதூறு இட்டுக்கட்டி பரப்பமாட்டார்கள்; நற்செய-லி ல் உங்களுக்கு மாறு செய்யமாட்டார்கள் என்று உறுதிமொழி அளித்தால் அவர்களிடம் உறுதிமொழி வாங்குங்கள்'' எனும் (60:12ஆவது) இறைவசனத்தை ஓதி வாய்மொழியாக விசுவாசப் பிரமாணம் வாங்குவார்கள். (கையால் தொட்டு வாங்க மாட்டார்கள்.)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கை, அவர்களுக்குச் சொந்தமான பெண்களை (துணைவியரை)த் தவிர வேறெந்த பெண்ணின் கையையும் தொட்டதில்லை.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி (7214)

கெடுப்பதற்கு ஷைத்தான் எல்லா நிலையிலும் தயாராக இருக்கின்றான்

3281 عَنْ صَفِيَّةَ بِنْتِ حُيَيٍّ قَالَتْ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مُعْتَكِفًا فَأَتَيْتُهُ أَزُورُهُ لَيْلًا فَحَدَّثْتُهُ ثُمَّ قُمْتُ فَانْقَلَبْتُ فَقَامَ مَعِي لِيَقْلِبَنِي وَكَانَ مَسْكَنُهَا فِي دَارِ أُسَامَةَ بْنِ زَيْدٍ فَمَرَّ رَجُلَانِ مِنْ الْأَنْصَارِ فَلَمَّا رَأَيَا النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَسْرَعَا فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَلَى رِسْلِكُمَا إِنَّهَا صَفِيَّةُ بِنْتُ حُيَيٍّ فَقَالَا سُبْحَانَ اللَّهِ يَا رَسُولَ اللَّهِ قَالَ إِنَّ الشَّيْطَانَ يَجْرِي مِنْ الْإِنْسَانِ مَجْرَى الدَّمِ وَإِنِّي خَشِيتُ أَنْ يَقْذِفَ فِي قُلُوبِكُمَا سُوءًا أَوْ قَالَ شَيْئًا رواه البخاري

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ர-லி ) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலி -ல் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசி விட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி -) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள். இதைக் கேட்ட அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்கüல் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான் ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : ஸஃபிய்யா (ரலி),

நூல் : புகாரி (3281)

وَاذْكُرْ فِي الْكِتَابِ مَرْيَمَ إِذْ انتَبَذَتْ مِنْ أَهْلِهَا مَكَانًا شَرْقِيًّا(16)فَاتَّخَذَتْ مِنْ دُونِهِمْ حِجَابًا فَأَرْسَلْنَا إِلَيْهَا رُوحَنَا فَتَمَثَّلَ لَهَا بَشَرًا سَوِيًّا(17)قَالَتْ إِنِّي أَعُوذُ بِالرَّحْمَانِ مِنْكَ إِنْ كُنتَ تَقِيًّا(18) سورة مريم

இவ்வேதத்தில் மர்யமைப் பற்றியும் நினைவூட்டுவீராக! தமது குடும்பத்தினரை விட்டு கிழக்குத் திசையில் உள்ள இடத்தில் அவர் தனித்திருந்தார். அவர்களை விட்டும் ஒரு திரையை அவர் போட்டுக் கொண்டார். அவரிடம் நமது ரூஹை அனுப்பினோம். அவர் முழுமையான மனிதராக அவருக்குத் தோற்றமளித்தார். "நீர் இறையச்சமுடையவராக இருந்தால் உம்மை விட்டும் அளவற்ற அருளாளனிடம் நான் பாதுகாப்புத் தேடுகிறேன்'' என்று (மர்யம்) கூறினார்.

(அல்குர்ஆன் 19:16-18)

6243 حَدَّثَنَا الْحُمَيْدِيُّ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ لَمْ أَرَ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِنْ قَوْلِ أَبِي هُرَيْرَةَ ح حَدَّثَنِي مَحْمُودٌ أَخْبَرَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ ابْنِ طَاوُسٍ عَنْ أَبِيهِ عَنْ ابْنِ عَبَّاسٍ قَالَ مَا رَأَيْتُ شَيْئًا أَشْبَهَ بِاللَّمَمِ مِمَّا قَالَ أَبُو هُرَيْرَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِنَّ اللَّهَ كَتَبَ عَلَى ابْنِ آدَمَ حَظَّهُ مِنْ الزِّنَا أَدْرَكَ ذَلِكَ لَا مَحَالَةَ فَزِنَا الْعَيْنِ النَّظَرُ وَزِنَا اللِّسَانِ الْمَنْطِقُ وَالنَّفْسُ تَمَنَّى وَتَشْتَهِي وَالْفَرْجُ يُصَدِّقُ ذَلِكَ كُلَّهُ وَيُكَذِّبُهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். (மர்ம உறுப்பின் விபச்சாரம் மட்டுமல்ல; கண்ணும் நாவும் கூட விபச்சாரம் செய்கின்றன.) கண் செய்யும் விபச்சாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபச்சாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (6243)

وَقَرْنَ فِي بُيُوتِكُنَّ وَلَا تَبَرَّجْنَ تَبَرُّجَ الْجَاهِلِيَّةِ الْأُولَى وَأَقِمْنَ الصَّلَاةَ وَآتِينَ الزَّكَاةَ وَأَطِعْنَ اللَّهَ وَرَسُولَهُ إِنَّمَا يُرِيدُ اللَّهُ لِيُذْهِبَ عَنْكُمْ الرِّجْسَ أَهْلَ الْبَيْتِ وَيُطَهِّرَكُمْ تَطْهِيرًا(33) سورة  الأحزاب

உங்கள் வீடுகளிலேயே தங்குங்கள்! முந்தைய அறியாமைக் காலத்தில் வெளிப்படுத்தித் திரிந்தது போல் திரியாதீர்கள்! தொழுகையை நிலை நாட்டுங்கள்! ஸகாத்தைக் கொடுங்கள்! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இவ்வீட்டினராகிய உங்களை விட்டு அசுத்தத்தை நீக்கவும், உங்களை முழுமையாகப் பரிசுத்தப்படுத்தவுமே அல்லாஹ் நாடுகிறான்.

(அல்குர்ஆன் 33:33)

 

விரல் அசைத்தல் விரிவான ஆய்வு             தொடர் : 4

விரலை நீட்டிக்கொண்டு இருக்கலாமா?

இருப்பில் விரலசைக்கக்கூடாது என்று கூறுபவர்களுக்கிடையே விரலை எவ்வாறு வைக்க வேண்டும் என்பதில் கருத்து வேறுபாடு உள்ளது.

சிலர் இருப்பின் ஆரம்பித்திலி -ருந்து விரலை நீட்டி வைக்க வேண்டும் என்கின்றனர்.

சிலர் அஷ்ஹது அன்லாயிலாஹ என்று சொல்லும் போது விரலை நீட்டி சலாம் கொடுக்கும் வரை இவ்வாறே விரலை வைத்திருக்க வேண்டும் என்கின்றனர்.

சிலர் லாயிலாஹ என்று சொல்லும் போது விலை உயர்த்தி இல்லல்லாஹ் என்று சொல்லும் போது விரலை விட்டுவிட வேண்டும் என்கின்றனர்.

ஹதீஸ்களைச் சரியான முறைப்படி விளங்காத காரணத்தால் இவர்களிடத்தில் இத்தகைய குழப்பம் இருக்கின்றது. இந்த லட்சணத்தில் விரலசைப்பதில் குழப்பம் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி வருகின்றார்கள்.

இந்தக் குழப்பமான சட்டங்களுக்கு இவர்கள் ஹதீஸிலிருந்து நேரடியாக ஆதாரங்களைக் காண்பிக்க முடியாது.

விரலை அசைக்கக் கூடாது என்பதற்கு இவர்கள் பின்வரும் ஹதீஸ்களை ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இந்த ஹதீஸ்கள் பலதாக இருந்தாலும் இவை அனைத்தும் ஒரே கருத்தைத் தரக்கூடியவை.

விரலசைக்கக் கூடாது என்பதற்குப் பல ஆதாரங்கள் இருப்பது போன்ற பொய்யான தோற்றத்தை ஏற்படுத்தி அப்பாவி மக்களை ஏமாற்றி வருகி றார்கள்.

 911و حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ رَافِعٍ وَعَبْدُ بْنُ حُمَيْدٍ قَالَ عَبْدٌ أَخْبَرَنَا وَقَالَ ابْنُ رَافِعٍ حَدَّثَنَا عَبْدُ الرَّزَّاقِ أَخْبَرَنَا مَعْمَرٌ عَنْ عُبَيْدِ اللَّهِ بْنِ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ إِذَا جَلَسَ فِي الصَّلَاةِ وَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ وَرَفَعَ إِصْبَعَهُ الْيُمْنَى الَّتِي تَلِي الْإِبْهَامَ فَدَعَا بِهَا وَيَدَهُ الْيُسْرَى عَلَى رُكْبَتِهِ الْيُسْرَى بَاسِطَهَا عَلَيْهَا رواه مسلم

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் (அத்தஹிய்யாத்) அமர்வில் உட்கார்ந்தால், தம் கைகளை முழங்கால்கள் மீது வைப்பார்கள். பெரு விரலை ஒட்டியுள்ள வலக் கை (சுட்டு) விரலை உயர்த்திப் பிரார்த்திப்பார்கள். இடக் கையை இடது கால் மூட்டின் மீது விரித்து வைத்திருப்பார்கள்.

நூல் : முஸ்லிம் (1016)

இந்தச் செய்தியில் நபி (ஸல்) அவர்கள் இருப்பில் சுட்டு விரலை உயர்த்துவார்கள் என்று இருப்பதால் விரலை நீட்டி வைத்திருக்க வேண்டும். அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இந்தச் செய்தியில் நமக்கு எதிரான எந்தக் கருத்தும் சொல்லப்படவில்லை. இந்த ஹதீஸில் விரலை நீட்ட வேண்டும் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. அசைக்கக் கூடாது என்று சொல்லப்படவில்லை.

நாம் விரலை அசைக்கும் போது விரலை நீட்டிய நிலையில் தான் அசைத்துக் கொண்டிருக்கின்றோம்.

விரலை நீட்டுவதும் அசைப்பதும் ஒன்றுக்கொன்று முரணான காரியங்கள் இல்லை. இரண்டு செயல்களையும் ஒரே நேரத்தில் செய்ய முடியும்.

இதை வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பு தெளிவுபடுத்துகின்றது.

879أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي

வாஇல் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.

நூல் : நஸாயீ 870

இவர்கள் காட்டிய செய்தியில் விரலை நீட்டிய தகவல் மட்டுமே சொல்லப்பட்டுள்ளது. மேற்கண்ட வாயில் பின் ஹுஜ்ர் (ரலி) அவர்களின் அறிவிப்பில் நீட்டுதலும் அசைத்தலும் சேர்த்து சொல்லப்பட்டுள்ளது.

விரலசைத்தல் தொடர்பான ஹதீஸில் இவர்கள் காட்டிய ஹதீஸில் உள்ளதை விட கூடுதல் விளக்கம் இடம்பெற்றுள்ளது என்பதே உண்மை.

தலைவர் தேசியக் கொடியை உயர்த்திக் காட்டினார் என்று ஒருவர் கூறுகிறார். இன்னொருவர் கொடியை உயர்த்தி அசைத்துக் காட்டினார் என்று கூறுகிறார். இரண்டும் முரண்பாடான தகவல் என்று யாரும் புரிய மாட்டோம். மாறாக ஒருவர் சொன்னதை மற்றவர் விளக்கிக் கூறியுள்ளார் என்று புரிந்து கொள்வோம்.

இவர்கள் காட்டியுள்ள மேற்கண்ட ஹதீஸ் இது போன்றே அமைந்துள்ளது.  எனவே விளக்கம் குறைவாக உள்ள ஹதீஸை வைத்து விளக்கமாக உள்ள ஹதீஸை மறுப்பது தவறான போக்காகும். இந்த அடிப்படையில் சிந்தித்தால் ஏராளமான நபிமொழிகளை மறுக்க வேண்டிய நிலை ஏற்படும். அல்லாஹ் பாதுகாப்பானாக.

நபி (ஸல்) அவர்கள் விரலை (ரஃபஅ) உயர்த்தினார்கள் என்ற கருத்தில் இப்னுமாஜாவிலும் (902) அபூதாவுதிலும் (840) ஹதீஸ்கள் இடம்பெற்றுள்ளன. இந்த ஹதீஸ்களையும் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் கூறுகிறார்கள்.

திர்மிதியில் 3511 வது இலக்கத்தில் இடம்பெற்றுள்ள ஹதீஸில் பசதஸ் ஸப்பாபத என்ற வாசகம் இடம் பெற்றுள்ளது. சுட்டு விரலை நீட்டினார்கள் என்பது இதன் பொருள்.

உயர்த்தினார்கள் என்பதிலும் நீட்டினார்கள் என்பதிலும் வார்த்தை வேறுபாடு மட்டுமே உள்ளது. இரண்டின் பொருளும் ஒன்று தான்.

எனவே ஹதீஸ்கள் மொத்தம் நான்காக இருந்தாலும் அனைத்திலும் ஒரே விசயம் தான் கூறப்பட்டுள்ளது. எனவே மேல் சொன்ன அனைத்து விளக்கங்களும் இந்தச் செய்திகளுக்கும் பொருந்தக்கூடியது.

ஹதீஸ் 2

1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي

வாஇல் பின் ஹுஜுர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது "ரக்அத்'தில் (இருப்பில்) அமர்ந்த போது, தமது இடக்காலைப் படுக்கவைத்து, வலக்காலை நட்டு வைத்தார்கள். தமது வலக் கையை வலப்பக்கத் தொடையின் மீது வைத்து, (ஆட்காட்டி) விரலைப் பிரார்த்தனைக்காக நீட்டினார்கள். தமது இடக்கையை இடப்பக்கத் தொடையின் மீது வைத்தார்கள்.

நூல் : நஸாயீ (1147)

இந்தச் செய்தியில் நீட்டினார்கள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் நஸப என்ற அரபுச் சொல் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.

நஸப என்ற அரபுச் சொல்லுக்கு பல அர்த்தங்கள் உள்ளன. இங்கே உயர்த்தினார்கள் நீட்டினார்கள் என்ற அர்த்தத்தில் இச்சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்தச் சொல்லுக்கு ரஃபஅ (உயர்த்தினார்கள்) என்ற பொருள் இருப்பதாக அரபு அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.

நாம் எந்தப் பொருளை உயர்த்தினாலும் அதற்கு நஸப என்ற சொல்லைப் பயன்படுத்தலாம்.

நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாகக் காட்டும் வாயில் பின் ஹுஜ்ர் (ரலி -) அவர்களின் அறிவிப்பில் விரலை உயர்த்தி அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகம் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ  870 வது அறிவிப்பாக இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ரஃபஅ என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதே வாயில் பின் ஹுஜ்ர் (ரலி -) அவர்கள் இடம்பெற்றுள்ள இன்னொரு அறிவிப்பில் உயர்த்தினார்கள் என்பதைக் குறிக்க நஸப என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பு நஸாயீ 1147 வது செய்தியாக இடம்பெற்றுள்ளது.

1147 أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ يَزِيدَ الْمُقْرِئُ قَالَ حَدَّثَنَا سُفْيَانُ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ عَنْ أَبِيهِ عَنْ وَائِلِ بْنِ حُجْرٍ قَالَ أَتَيْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَرَأَيْتُهُ يَرْفَعُ يَدَيْهِ إِذَا افْتَتَحَ الصَّلَاةَ حَتَّى يُحَاذِيَ مَنْكِبَيْهِ وَإِذَا أَرَادَ أَنْ يَرْكَعَ وَإِذَا جَلَسَ فِي الرَّكْعَتَيْنِ أَضْجَعَ الْيُسْرَى وَنَصَبَ الْيُمْنَى وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى فَخِذِهِ الْيُمْنَى وَنَصَبَ أُصْبُعَهُ لِلدُّعَاءِ وَوَضَعَ يَدَهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ الْيُسْرَى قَالَ ثُمَّ أَتَيْتُهُمْ مِنْ قَابِلٍ فَرَأَيْتُهُمْ يَرْفَعُونَ أَيْدِيَهُمْ فِي الْبَرَانِسِ رواه النسائي

நஸப என்ற சொல்லும் ரஃபஅ என்ற சொல்லும் உச்சரிப்பதில் வேறுபட்டாலும் இரண்டின் பொருளும் ஒன்றுதான்.  விரலை உயர்த்தி னார்கள் என்ற கருத்தையே இரண்டு வார்த்தைகளும் தருகின்றன.

எனவே ரஃபஅ என்ற சொல் இடம்பெற்ற ஹதீஸிற்கு நாம் அளித்த பதில் அனைத்தும் நஸப என்ற சொல் இடம்பெற்றுள்ள இந்த ஹதீஸிற்கும் பொருந்தக்கூடியது.

முன்பு நாம் அளித்த விளக்கங்களை மீண்டும் ஒரு முறை படித்தால் இந்தச் செய்தியில் விரலை அசைக்கக் கூடாது என்ற கருத்து நேரடியாகவோ மறைமுகமாகவோ கூறப்படவில்லை என்பதை அறியலாம்.

நஸப என்ற சொல்லுக்கு மரம் செடி கொடிகளை நடுதல் என்ற பொருளும் உள்ளது. நடப்பட்ட மரம் செடி கொடிகள் அசையக்கூடியவையாகும். இவை அசைவதால் இவை நடப்படவில்லை என்று யாரும் சொல்ல மாட்டோம்.

இந்த அடிப்படையில் விரலை நஸப் செய்தார்கள் என்பதையும் விளங்கினால் இதில் விரலைப்பதற்கு எதிரான கருத்து ஒன்றும் இல்லை என்பதை அறிந்து கொள்வார்கள்.

அரபு மொழியில் நஸப என்ற சொல்லுக்கு கீழே தாழ்த்தி மேலே உயர்த்துதல் என்ற பொருளும் உள்ளது.

جمهرة اللغة (1 / 350) نصب وَالنّصب من قَوْلهم: نصب الْقَوْم السّير نصبا إِذا رَفَعُوهُ. وكل شَيْء رفعته فقد نصبته.

கூட்டத்தினர் நடந்துசெல்லும் போது அடியெடுத்து வைப்பதற்கு நஸப என்று சொல்லப்படும். நீ எந்த பொருளை உயர்த்தினாலும் அதை நஸப் செய்துவிடுகின்றாய்.

நூல் : ஜம்ஹரதுல் லுஹா பாகம் : 1 பக்கம் : 350

لسان العرب (1 / 758) . والنَّصِبُ: المريضُ الوَجِعُ؛ وَقَدْ نَصَبه الْمَرَضُ وأَنْصَبه. والنَّصْبُ: وَضْعُ الشيءِ ورَفْعُه

ஒரு பொருளைத் தாழ்த்தி அதை உயர்த்துவதற்கு நஸப் என்று சொல்லப்படும்.

நூல் : லி சானுல் அரப் பாகம் : 1 பக்கம் : 758

நடந்து செல்லும் போது காலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்துவோம். இவ்வாறு உயர்த்துவதும் தாழ்த்துவதும் இருந்தால் அதற்கு நஸப என்ற வார்த்தை பயன்படுத்தப்படும் என மேற்கண்ட அரபு அகராதி நூற்களில் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

இந்த அர்த்தத்தை இவர்கள் ஆதாரமாகக் காட்டிய செய்தியில் பொருத்தினால் நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை மேலே உயர்த்தி கீழே தாழ்த்தினார்கள் என்ற பொருள் தான் வரும்.

எனவே விரலை அசைப்பதற்கு தெளிவான ஆதாரமாக இருக்கும் இந்த ஹதீஸை இதற்கு எதிரான ஆதாரம் என்று இவர்கள் தவறாக விளங்கிக் கொண்டார்கள்.

ஹதீஸ் 3

நபி (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்று ஒரு செய்தி அபூதாவூத், நஸயீ ஆகிய நூல்களில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸை அடிப்படையாக வைத்து சிலர் விரலை அசைக்கக் கூடாது என்று வாதிடுகின்றனர்.

1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي

அப்துல்லாஹ் பின் ஜபைர் (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் துஆச் செய்யும் போது தமது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.

நூல் : நஸாயீ (1253

இந்த ஹதீஸ் விரலசைப்பது நபிவழி என்று கூறும் ஹதீஸை விட வலி -மையானது என்பதால் இதனடிப்படையில் விரலசைப்பது கூடாது என்று வாதிடுகின்றனர்.

ஆனால் இவர்கள் சொல்வது போல் இந்த ஹதீஸ் சரியானதல்ல.

அபூதாவூத், நஸயீ ஆகிய நூற்களில் இந்தச் செய்தி இடம்பெற்றுள்ளது.

இதன் அறிவிப்பாளர் தொடரில் பின்வரும் நபர்கள் இடம்பெற்றுள்ளனர்.

1. அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி)

2. ஆமிர் பின் அப்தில்லாஹ்

3. முஹம்மது பின் அஜ்லான்

4. ஸியாத்

5. இப்னு ஜுரைஜ்

6. ஹஜ்ஜாஜ்

7. அய்யூப் பின் முஹம்மது

இதில் மே-லி ருந்து மூன்றாவதாக முஹம்மது பின் அஜ்லான் என்ற நபர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இமாம் ஹாகிம் உட்பட பலர் இவர் நினைவாற்றல் சரியில்லாதவர் என்று விமர்சனம் செய்துள்ளனர். இதனால் தான் இமாம் முஸ்லி -ம் அவர்கள் இவர் இடம் பெறும் ஹதீஸ்களை தனி ஆதாரமாகப் பதிவு செய்யவில்லை.

எனவே பலவீனமான இந்தச் செய்தியை வைத்துக்கொண்டு விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள பலமான ஹதீஸைத் தட்ட முடியாது.

ஒரு பேச்சுக்கு இந்த ஹதீஸ் சரியானது என்ற வாதத்தை ஏற்றுக் கொண்டாலும் இந்தச் செய்தியை வைத்து விரலசைப்பது தொடர்பாக வரும் செய்தியை மறுக்க முடியாது.

ஏனென்றால் ஒரு செயல் நடந்தது என்று ஒருவரும் நடக்கவில்லை என்று இன்னொருவரும் கூறினால் ஹதீஸ் கலை விதியின் அடிப்படையில் செயல் நடந்தது என்று கூறுபவரின் கருத்தைத் தான் ஏற்றுக்கொள்ள வேண்டும்.

செயல் நடக்கவில்லை என்று அறிவிப்பவர் அந்தச் செயலைப் பார்க்காமல் விட்டிருப்பார். இவரல்லாத மற்றவர்கள் அதைப் பார்த்திருப்பார்கள் என்பதால் இவ்வாறு  கூறப்பட்டுள்ளது.

ஒருவர் கொலை செய்ததை இரண்டு பேர் பார்த்து சாட்சி சொல்கிறார்கள். குறுக்கு விசாரணைக்குப் பின்னர் இவர்கள் நல்ல சாட்சிகள் என்று உறுதியாகி விடுகிறது. இப்போது ஊரே திரண்டு வந்து இவர் கொலை செய்யவில்லை என்று சொன்னால் அதை உலகின் எந்த நீதிமன்றமும் ஏற்காது. அவர் கொலை செய்வதை இவர்கள் பார்க்கவில்லை என்பதால் பார்த்தவர்களின் கூற்று பொய்யாகி விடாது.

இந்த விதியின் அடிப்படையில் பார்த்தாலும் நபி (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைக்கவில்லை என்ற செய்தியை ஏற்க முடியாது. மாறாக விரலை அசைத்தார்கள் என்ற ஹதீஸை ஏற்பது தான் சரியானது.      

ஷாத் வகையைச் சார்ந்த பலவீமான செய்தி

மேலும் இந்தச் செய்தியை இவர்கள் ஆதாரமாகக் காட்ட தகுதி அற்றவர்களாவர். ஏனெனில் பலர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஒருவர் அறிவிப்பது ஷாத் என்பதற்கு இவர்கள் கொடுத்த விளக்கத்தின்படி இதையும் இவர்கள் ஷாத் என்று தான் கூற வேண்டும்.

1253أَخْبَرَنَا أَيُّوبُ بْنُ مُحَمَّدٍ الْوَزَّانُ قَالَ حَدَّثَنَا حَجَّاجٌ قَالَ ابْنُ جُرَيْجٍ أَخْبَرَنِي زِيَادٌ عَنْ مُحَمَّدِ بْنِ عَجْلَانَ عَنْ عَامِرِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ الزُّبَيْرِ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ يُشِيرُ بِأُصْبُعِهِ إِذَا دَعَا وَلَا يُحَرِّكُهَا رواه النسائي

அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ர-லி ) அவர்கள் கூறுகிறார்கள் : நபி (ஸல்) அவர்கள் துஆ செய்யும் போது தமது விரலால் சமிக்கை செய்வார்கள். அதை அசைக்க மாட்டார்கள்.

நூல் : நஸாயீ (1253)

மேற்கண்ட அறிவிப்பில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து ஸியாத் என்ற நபர் அறிவித்துள்ளார். முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் பலர் இந்த ஹதீஸை முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து அறிவித்துள்ளனர்.

அவர்கள் வருமாறு :

            1. லைஸ் பின் சஅத்,    2. அபூ காலி தில் அஹ்மர்,

            3. இப்னு உஐனா 4. யஹ்யா பின் சயீத்

ஆகிய நால்வர் ஆவர்.

இந்த நால்வரும் தங்களுடைய அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள் விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் குறிப்பிடவில்லை. நபி (ஸல்) அவர்கள் இஷாரா செய்வார்கள் என்ற தகவலை மட்டுமே அறிவிக்கின்றனர்.

முஹம்மது பின் அஜ்லானுடைய மாணவர்களில் ஸியாத் மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகத்தைக் கூறியுள்ளார்.

மேலும் இந்த ஹதீஸை ஆமிர் பின் அப்தில்லாஹ்விடமிருந்து முஹம்மது பின் அஜ்லான் மட்டும் அறிவிக்கவில்லை. உஸ்மான் பின் ஹகீம், மக்ரமா பின் புகைர், முஹம்மது பின் அஜ்லான் ஆகிய மூவர் இந்த ஹதீஸை ஆமிரிடமிருந்து அறிவிக்கின்றனர்.

இந்த மூவரில் முஹம்மது பின் அஜ்லானிடமிருந்து மட்டுமே விரலை அசைக்க மாட்டார்கள் என்ற வாசகம் அறிவிக்கப்பட்டுள்ளது. இவர் அல்லாத மற்ற இருவரும் இந்த வாசகத்தை குறிப்பிடாமல் நபி (ஸல்) அவர்கள் இஷாரா (சமிக்கை) செய்வார்கள் என்று மட்டுமே அறிவித்துள்ளனர்.

எனவே இவர்களின் வாதப்படி ஷாத் என்று கூறுவதாக இருந்தால் இவர்கள் ஆதாரமாகக் காட்டும் மேற்கண்ட ஹதீஸைத் தான் ஷாத் என்று கூற வேண்டும். 

தொலைக் காட்சியில் தொலைந்து விட்ட சமுதாயம் தொடர்: 06 

இரட்டை வேடம் போடும் நடிகர்கள்

பக்கீர் முஹம்மத் அல்தாஃபீ

புத்தகத்தை எடுத்துப் படி என்று பிள்ளைகளுக்குக் கட்டளையிடும் பெற்றோர்கள் அவர்களின் செயலுக்கு உறுதுணையாக இருக்க வேண்டும் அதை விட்டு அவர்கள் அறையில் இருந்து தொலைக் காட்சிப் பெட்டிதான் கதி எனும் போக்கில் அவர்களின் நடத்தை இருந்தால் பிள்ளைகளின் உள்ளத்தில் பெற்றோர்கள் சொன்ன வார்த்தைகள் பிரதிபலிப்பாக அமையுமா? அல்லது அவர்களின்  செயல்கள் பாதிப்பை ஏற்படுத்துமா என்பதைச் சற்று சிந்தித்துப் பார்த்தால் அவர்கள் எதைச் செயல்பாடாக பிள்ளைகளின் முன்னிலையில் செய்து காட்டினோமோ அதைத்தான் அவர்களின்  குழந்தைகள் செய்யும் என்பதைப் புரிந்து கொள்ளலாம் நமது குழந்தைகளை நாமே சீரழிவின் பக்கம் கொண்டு சென்று அவர்களின் உணர்வுகளை  மழுங்கடித்துக் கொண்டிருக்கிறோம்.

அறிவுப் பூர்வமாக சிந்திக்க வேண்டிய சமுதாயத்தவர்களான நாம் தொலைக் காட்சித் தொடர்களைப் பார்த்துப் பார்த்து கூர்மையான அறிவை நாம் இழக்கிறோம். தொலைக் காட்சியில் காட்டப்படுகின்ற காட்சிகள் போலி -த்தனமானவை என்பது நன்றாகவே தெரிந்தும் அவைகளை ரசித்து ருசித்துப் பார்க்கிறோம். கை கொட்டிச் சிரிக்கிறோம், அவர்களை கஷ்டப் படுவோர்களைப் போன்று காட்டப்படும் போது ஏதோ அவர்கள் மிகவும் துன்பத்திற்கும் கஷ்டத்திற்கும் ஆளாக்கப்பட்டுக் கொண்டிருக்கின்றார்கள் என நினைத்து வேதனையால் துடித்து கண்ணீரைச் சொரிகின்றோம்.

இந்தக் கூத்தாடிகள் பணத்திற்காக பிணத்தையும் தின்னும் கும்பல் என்பதும் இரட்டை வேடம் போடுவது இவர்களின் இயல்பு என்பதும் தெளிவாகத் பார்க்கக் கூடியவர்களுக்கு தெரியும். ஆனாலும் கூட அவைகள் உண்மைகள் என்று நம்பி அவர்கள் செய்யும் மூடத்தனமான காரியங்களுக்குப் பின்னால் செல்கிறோம்.

நமக்கு அருகாமையில் இருக்கும் குழந்தைகளும் அதனைப் பார்த்து அவர்களும் அது போன்ற இன்பத்தில் மூழ்கிக் கொண்டிருப்பார்கள். குழந்தைகள் நமது கரத்தில் கொடுக்கப்பட்டுள்ள அமானிதம்.

அதனைப் பற்றி நாளை மறுமையில் அல்லாஹ்விடம் கேட்கப்படுவோம்.

அந்த அமானிதத்தை நாம் எப்படி பயன்படுத்தினோம் என்பது குறித்து தீர விசாரிக்கப்பட இருக்கிறோம். நமக்கு வழங்கப்பட்டுள்ள ஒவ்வொரு உறுப்புக்களும் நாளை மறுமையில் அல்லாஹ்விடம் விசாரிக்கப்பட இருக்கின்றது. இதில் இருந்து எந்த ஒரு மனிதனும் தப்பிக்க முடியாது. நமது வாய்களுக்குப் பூட்டுப் போடப்பட்டு உடல் உறுப்புக்கள் நாம் செய்த ஒவ்வொரு தீய செயல்களுக்கும் அல்லாஹ்விடம் சாட்சி சொல்லக் கூடியவையாக இருக்கும் என்பதை நாம் நினைவில் நிறுத்தி நமது தவறான காரியங்களுக்கு அல்லாஹ்வால் வழங்கப்பட்டுள்ள இந்தத் தீய காரியங்களைப் பார்ப்பதை விட்டு இதற்கு முயற்சி செய்வதை விட்டு தவிர்ந்து அல்லாஹ்வின் அருளைப் பெற முயற்சிக்க வேண்டும்

திருமறைக் குர்ஆனில் அல்லாஹ் கூறுகிறான்:

அதில் அவர்கள் போடப்படும் போது அது கொதித்துக் கொண்டிருக்கும் நிலையில் அதனிடமிருந்து கழுதையின் கத்துதலைச் செவியுறுவார்கள். கோபத்தால் அது வெடித்து விட முற்படும். ஒவ்வொரு கூட்டத்தினரும் அதில் போடப்படும் போதெல்லாம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று அதன் காவலர்கள் அவர்களைக் கேட்பார்கள். அதற்கவர்கள் "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. பெரிய வழி கேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்'' எனக் கூறுவார்கள். நாங்கள் செவிமடுத்திருந்தாலோ விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள். தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரகவாசிகளுக்குக் கேடு தான்.

அல்குர்ஆன்: 67:7.11

கூட்டம் கூட்டமாக நரகத்தில் தள்ளுவான். ஏனெனில் இது போன்ற கேடு கெட்ட கலாச்சாரத்தை ஒட்டு மொத்தமாக கூட்டம் கூட்டமாக அண்ணன் தம்பியாக தாய் தந்தையாக இருந்து ரசித்து ருசித்துப் பார்த்து சீரழிகின்றோமே அதற்கு நாளை மறுமையில் மொத்த மொத்தமாக நரகில் கொண்டு போய் தள்ளப்படுகின்ற போது நரகின் காவலர்கள் அவர்களிடம் "எச்சரிக்கை செய்பவர் உங்களிடம் வரவில்லையா?'' என்று  அவர்களிடம் கேட்பார்களாம்.

இப்படி கூட்டம் கூட்டமாக அணி அணியாக இந்த நரகிற்கு வருகின்றீர்கள் என்று நரகின் காவலர்கள் கேட்கும் போது நரகில் இருப்போர் இப்படி தங்களுடைய பதிலைக் கூறுவார்களாம். "ஆம்! எச்சரிப்பவர் எங்களிடம் வந்தார். ஆயினும் பொய்யெனக் கருதினோம். அல்லாஹ் எந்த ஒன்றையும் அருளியதில்லை. பெரிய வழிகேட்டிலேயே இருக்கிறீர்கள் என்று கூறினோம்'' எனக் கூறுவார்கள். நாங்கள் செவிமடுத்திருந்தாலோ விளங்கியிருந்தாலோ நரகவாசிகளில் ஆகியிருக்க மாட்டோம் எனவும் கூறுவார்கள். தமது குற்றங்களை ஒப்புக் கொள்வார்கள். நரகவாசிகளுக்குக் கேடு தான்.

நரகத்தில் கொண்டு தள்ளப்பட்ட மக்கள் இப்படி தங்களின் குற்றங்களை ஒப்புக் கொண்டு வாக்கு மூலம் கொடுப்பார்கள் என்று அல்லாஹ் இந்த இறைமறை வசனத்தில் நமக்கு தெள்ளத் தெளிவாக தீமையைச் செய்தோருக்கு கொடுக்கும் தண்டனையைப் பற்றியும் அதில் நாங்கள் பொடுபோக்கானவர்களாக இருந்தோம் என்று நரகவாதிகள் சொல்வதையும் நமக்கு கூறித் தருகின்றான்.

இதில் இருந்து படிப்பினை பெறக் கூடிய மக்களாக நம்மை அல்லாஹ் மாற்றி அருள்வானாக 

இயேசுவின் போதனைகள்     செய்யித் இப்ராஹீம், மதுரை

கடவுள் யார்?

கிறித்தவர்களது மதப்பிரச்சாரம் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும்,அவர்கள் தங்களது பிரச்சாரத்தின் வாயிலாக அப்பாவிகளை ஆசைவார்த்தைக் காட்டி மதமாற்றம் செய்யும் நிகழ்வுகளும் நாளுக்குநாள் அதிகரித்து வருவதையும் நாம் காண்கின்றோம்.

தங்களது மதத்தைப் பிரச்சாரம் செய்யும் கிறித்தவ போதகர்கள் மற்றும் பாதிரிமார்கள் கிறித்தவ மதப்பிரச்சாரத்தை வீடுவீடாகச் சென்று தாங்கள் செய்வதோடு மட்டுமல்லாமல் தங்களது வீட்டுப் பெண்களையும் அதற்குத் தயார்படுத்தி களமிறக்கி விட்டுள்ளனர்.

கன்னியாஸ்திரிகளாக உள்ளவர்களும், இதர கிறித்தவப் பெண்களும் நமது பகுதியில் உள்ள முஸ்லி ம் பெண்களிடத்தில் வீடுவீடாக வந்து பிரச்சாரம் செய்யும் நிகழ்வுகளும் அதிகரித்து வருகின்றன. நம்மோடு அவர்கள் நடத்திய விவாதத்தில் கிறித்தவத் தரப்பு விவாதக்குழுவில் கிறித்தவப் பெண்களை பங்கேற்க வைக்கக்கூடிய அளவிற்கு அவர்களது பெண்கள் பயிற்று வைக்கப்பட்டுள்ளார்கள்.

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் செய்த பிரச்சாரங்கள் மற்றும் விவாதங்களின் வாயிலாக இதுபோன்று ஆங்காங்கே முஸ்-லி ம்கள் பகுதியில் வரக்கூடிய கிறித்தவப் பிரச்சாரகர்களை நமது சகோதரர்கள் பைபிளிலி ருந்து பல கேள்விகளைக் கேட்டு துளைத்தெடுத்ததன் விளைவாக அவர்கள் ஓட்டமெடுக்கும் நிகழ்வுகளும், அடுத்தமுறை இஸ்லாமியர்கள் இருக்கக்கூடிய பகுதிக்குச் சென்றால் நம்மிடத்தில் கேள்விகேட்பார்களே என்று அஞ்சி நமது பகுதிகளை முற்றிலுமாக தவிர்த்துவிட்டு ஓடக்கூடிய அளவிற்கு நிலைமை மாறியுள்ளது. அல்ஹம்துலி -ல்லாஹ்.

இருந்தபோதிலும், அத்தகைய பிரச்சாரகர்கள் அடங்கிய கிறித்தவ பெண்கள் குழு நமது சகோதரிகளை ஆண்கள் இல்லாத நேரங்களில் நமது வீடுகளுக்கு வந்து சந்திக்கும்போது நமது சகோதரிகளே அவர்களை நேர்கொண்டு விவாதம் செய்து அவர்களுக்கு பதிலடி கொடுக்கக்கூடிய அளவிற்கு நமது சகோதரிகளைத் தயார்படுத்த வேண்டியது நம்முடைய கடமையாகும். அப்படி நமது சகோதரிகளைத் தயார்படுத்த வேண்டும் என்ற நோக்கத்தில் இந்த ஆக்கம் எழுதப்படுகின்றது.

கிறித்தவர்களின் பிரதான பிரச்சாரமே இயேசுவை நாம் கடவுளாக ஏற்றுக் கொள்ள வேண்டும் என்பது குறித்ததாகத்தான் இருக்கும்.

ஆனால் இயேசுவே தன்னை கடவுள் என்று சொல்லக்கூடாது என்றும், தனக்கு எந்த சக்தியும் இல்லை என்றும், தன்னால் சுயமாக எதுவும் செய்ய இயலாது என்றும் கூறியுள்ள பல செய்திகள் பைபிளில் உள்ளன. அத்தகைய செய்திகளில் சிலவற்றை இங்கு தொகுத்து வழங்கியிருக்கின்றோம்.

இதில் உள்ள செய்திகளை முஸ்-லி ம் சகோதரிகள் கிரகித்து குறித்து வைத்துக் கொண்டால் பைபிளில் கீழ்க்கண்ட வசனங்கள் உள்ளனவே! இதற்கு மாற்றமாக நீங்கள் பிரச்சாரம் செய்யலாமா? இயேசுவை கடவுள் என்று சொல்லலாமா? எனக்கேட்டால் எந்த ஒரு கிறித்தவ பிரச்சாரகராலும் இதற்கு பதிலளிக்க இயலாது. கிறித்தவப் பெண் பிரச்சாரகர்களை எதிர்கொள்ளவும், அவர்கள் இனிமேல் முஸ்-லி ம்கள் பகுதிகளின் பக்கம் தலைவைத்துப் படுக்காமல் இருக்கக்கூடிய அளவிற்கு அவர்களை விரட்டியடிக்கும் வகையிலும் நமது சகோதரிகளுக்கு இந்த ஆக்கம் மிகவும் பயனுள்ளதாக இருக்கும்.  

இயேசுவால் எதையும் செய்யும் வல்லமை உண்டா?

இயேசுவைக் கடவுள் என்றும் அவரால் அனைத்தும் செய்ய இயலும் என்றும் கிறித்தவர்கள் பிரச்சாரம் செய்து வருகின்றார்கள். ஆனால் அது பொய் என்று பைபிள் சொல்லிக்காட்டுகின்றது.

இயேசுவால் சுயமாக எதையும் செய்ய இயலாது; இயேசு என்பவர் கர்த்தர் அனுப்பிய தூதர்தான்:

நான் சுயமாய்ப் பேசவில்லை, நான் பேசவேண்டியது இன்னதென்றும் உபதேசிக்கவேண்டியது இன்னதென்றும் என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார்.

யோவான் 12:49

மேற்கண்ட வசனத்தில், என்னை அனுப்பின பிதாவே எனக்குக் கட்டளையிட்டார் என்று இயேசு சொல்வதிலி ருந்து அவர் கடவுளுடைய தூதர் என்று ஒப்புக்கொள்கின்றார்.  நான் சுயமாய்ப் பேசவில்லை என்று சொல்வதன் மூலம் தனக்கு எந்த அதிகாரமும் இல்லை என்பதை திட்டவட்டமாக தெளிவுபடுத்துகின்றார்.

 இயேசுவால் சுயமாக யாரையும் ஆசிர்வதிக்க இயலாது :

அப்பொழுது, செபதேயுவின் குமாரருடைய தாய் அவரிடத்தில் வந்து அவரைப் பணிந்துகொண்டு: உம்மிடத்தில் ஒரு விண்ணப்பம் பண்ணவேண்டும் என்றாள். அவர் அவளை நோக்கி: உனக்கு என்ன வேண்டும் என்று கேட்டார். அதற்கு அவள்: உம்முடைய ராஜ்யத்திலே என் குமாரராகிய இவ்விரண்டுபேரில் ஒருவன் உமது வலது பாரிசத்திலும், ஒருவன் உமது இடதுபாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி அருள் செய்யவேண்டும் என்றாள். இயேசு பிரதியுத்தரமாக: நீங்கள் கேட்டுக்கொள்ளுகிறது இன்னது என்று உங்களுக்குத் தெரியவில்லை. நான் குடிக்கும் பாத்திரத்தில் நீங்கள் குடிக்கவும், நான் பெறும் ஸ்நானத்தை நீங்கள் பெறவும் கூடுமா என்றார். அதற்கு அவர்கள் கூடும் என்றார்கள். அவர் அவர்களை நோக்கி: என் பாத்திரத்தில் நீங்கள் குடிப்பீர்கள், நான் பெறும் ஸ்நானத்தையும் நீங்கள் பெறுவீர்கள்; ஆனாலும், என் வலது பாரிசத்திலும் இடது பாரிசத்திலும் உட்கார்ந்திருக்கும்படி என் பிதாவினால் எவர்களுக்கு ஆயத்தம் பண்ணப்பட்டிருக்கிறதோ அவர்களுக்கேயல்லாமல், மற்றொருவருக்கும் அதை அருளுவது என் காரியமல்ல என்றார்.

மத்தேயு 20 : 20 முதல் 23 வரை

மேற்கண்ட வசனத்தில் தனது வலது பாரிசத்திலும், இடது பாரிசத்திலும் ஒருவரது குழந்தையை அமர வைக்கக்கூடிய ஆற்றல் கூட தனக்கு இல்லை என்றும், தன்னை அனுப்பிய பிதாவிற்கே அந்த ஆற்றல் உள்ளது என்று இயேசு சொல்வதி-லி ருந்து இயேசுவால் எதையும் செய்ய இயலாது. அவர் கடவுள் இல்லை. அவரை அனுப்பிய பிதா ஒருவர்தான் கடவுள் என்பது தெளிவாகின்றதா இல்லையா?

தேவன் ஒருவரைத் தவிர நல்லவன் ஒருவனும் இல்லை :

அப்பொழுது ஒருவன் வந்து, (இயேசுவை) நோக்கி: நல்ல போதகரே, நித்திய ஜீவனை அடையும்படி நான் எந்த நன்மையைச் செய்ய வேண்டும் என்று கேட்டான்; அதற்கு அவர்: நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்? தேவன் ஒருவரைத்தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே; நீ ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனைகளைக் கைக்கொள் என்றார்

மத்தேயு 19 : 16, 17

மேற்கூறப்பட்ட வசனத்தில்நீ என்னை நல்லவன் என்று சொல்வானேன்?

தேவன் ஒருவரைத் தவிர நல்லவன் ஒருவனும் இல்லையே என்று திட்டவட்டமாக இரண்டாவது கருத்துக்கு இடமின்றி, தெள்ளத்தெளிவாக அறிவிப்பு செய்து தான் கடவுள் இல்லை என்பதை இயேசு தெளிவுபடுத்துகின்றார்.

அதுமட்டுமல்லாமல் மேற்கூறப்பட்ட பைபிள் வசனத்தில்,

நித்திய ஜீவனில் பிரவேசிக்க விரும்பினால் கற்பனையை கைக்கொள்ள வேண்டும் என்று கூறிய இயேசு, அந்த கற்பனைகளில் பிரதானமான கற்பனை எது என்பதையும் தெளிவுபடுத்தியுள்ளார். இதோ அவர் கூறிக்காட்டியுள்ள பிரதானமான கற்பனை. இந்தக் கற்பனையை கைக் கொண்டால்தான் நித்திய ஜீவனில் பிரவேசிக்க முடியும் என்பதுதான் இயேசு அவர்களின் தீர்ப்பு. நித்திய ஜீவன் என்பது சொர்க்கமாகும். அதைத்தான் நித்திய ஜீவன் என்று கிறித்தவர்கள் குறிப்பிடுகின்றார்கள். அப்படியானால் கிறித்தவ அன்பர்கள் நித்திய ஜீவனில் பிரவேசிக்க வேண்டுமென்றால் இந்த பிரதான கற்பனையை கைக் கொள்ள வேண்டும். இல்லாவிட்டால் அவர்களுக்கு நரகம் உறுதி என்பதை இயேசு தெளிவுபடுத்தியுள்ளார். இதோ அந்த பிரதான கற்பனை:

பிரதானமான கற்பனையை கைக்கொள்வோம் :

வேதபாரகரில் ஒருவன் அவர்கள் தர்க்கம்பண்ணுகிறதைக்கேட்டுஅவர்களுக்கு நன்றாய் உத்தரவு சொன்னாரென்று அறிந்துஅவரிடத்தில் வந்து: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்று கேட்டான். இயேசு அவனுக்குப் பிரதியுத்தரமாக: கற்பனைகளிலெல்லாம் பிரதான கற்பனை எதுவென்றால்: இஸ்ரவேலே கேள், நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். உன் தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவாயாக என்பதே பிரதான கற்பனை.

 மாற்கு அதிகாரம் 12 : 28 முதல் 30 வரை

நம்முடைய தேவனாகிய கர்த்தர் ஒருவரே கர்த்தர். அந்த தேவனாகிய கர்த்தரிடத்தில் உன் முழு இருதயத்தோடும், உன் முழு ஆத்துமாவோடும், உன் முழு மனதோடும், உன் முழுப் பலத்தோடும் அன்புகூருவதுதான் பிரதான கற்பனை எனும் போது இயேசுவையும் சேர்த்து கர்த்தர் என்று சொன்னால் அது எப்படி பிரதான கற்பனையை கைக் கொண்டதாக ஆகும்? பிறகெப்படி நாம் சொர்க்கம் செல்ல முடியும் என்பதை கிறித்தவ அன்பர்கள் சிந்திக்க கடமைப்பட்டுள்ளனர்.

இயேசுவை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியம் செல்ல முடியாது:

ரலோகத்திலிருக்கிற என் பிதாவின் சித்தத்தின்படி செய்கிறவனே பரலோகராஜ்யத்தில் பிரவேசிப்பானேயல்லாமல், என்னை நோக்கிக் கர்த்தாவே! கர்த்தாவே! என்று சொல்லுகிறவன் அதில் பிரவேசிப்பதில்லை. அந்நாளில் அநேகர் என்னை நோக்கி: கர்த்தாவே! கர்த்தாவே! உமது நாமத்தினாலே தீர்க்கதரிசனம் உரைத்தோம் அல்லவா? உமது நாமத்தினாலே பிசாசுகளைத் துரத்தினோம் அல்லவா? உமது நாமத்தினாலே அநேக அற்புதங்களைச் செய்தோம் அல்லவா? என்பார்கள். அப்பொழுது, நான் ஒருக்காலும் உங்களை அறியவில்லை. அக்கிரமச் செய்கைக்காரரே, என்னைவிட்டு அகன்று போங்கள் என்று அவர்களுக்குச் சொல்லுவேன். ஆகையால், நான் சொல்-லி ய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்கிறவன் எவனோ, அவனைக் கன்மலையின்மேல் தன் வீட்டைக் கட்டின புத்தியுள்ள மனுஷனுக்கு ஒப்பிடுவேன். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்துஅந்த வீட்டின்மேல் மோதியும் அது விழவில்லை; ஏனென்றால் அது கன்மலையின்மேல் அஸ்திபாரம் போடப்பட்டிருந்தது. நான் சொல்லிய இந்த வார்த்தைகளைக் கேட்டு, இவைகளின்படி செய்யாதிருக்கிறவன் எவனோ, அவன் தன் வீட்டை மணல் மேல் கட்டின புத்தியில்லாத மனுஷனுக்கு ஒப்பிடப்படுவான். பெருமழை சொரிந்து, பெருவெள்ளம் வந்து, காற்று அடித்துஅந்த வீட்டின்மேல் மோதினபோது அது விழுந்தது; விழுந்து முழுவதும் அழிந்தது என்றார்.  இயேசு இந்த வார்த்தைகளைச் சொல்லி  முடித்தபோது, அவர் வேதபாரகரைப்போல் போதியாமல், அதிகாரமுடையவராய் அவர்களுக்குப் போதித்தபடியால் ஜனங்கள் அவருடைய போதகத்தைக்குறித்து ஆச்சரியப்பட்டார்கள்.

மத்தேயு அதிகாரம் 7 : 21 முதல் 29 வரை

கர்த்தர் என்பவர் நம்மைப் படைத்தவர். நாம் அனைவரும் அவரது அடிமை. இயேசு உட்பட அனைவருமே அவரது அடிமைகள்தான். அதனால்தான் இயேசு தன்னை கர்த்தாவே என்று அழைப்பவர் பரலோக ராஜ்ஜியத்திற்குச் செல்ல முடியாது என்று தெளிவாக அறிவிப்பு செய்கின்றார்.

ஆனால் கிறித்தவர்கள் இயேசு செய்த அறிவிப்புக்கு மாற்றமாக,

அவரது போதனைக்கு மாற்றமாக இயேசுவைத்தான் கர்த்தர் என்று

அழைக்கின்றனர்.

தன்னை கர்த்தர் என்று அழைத்தால் பரலோக ராஜ்ஜியத்தில் நுழைய முடியாது என்ற இயேசுவின் போதனையை கிறித்தவர்கள் கடைப்பிடிக்க வேண்டும்.

எனவே கிறித்தவ சகோதர சகோதரிகளே! இயேசுவை கர்த்தர் என்று அழைத்து பரலோக ராஜ்ஜியத்திற்கு செல்லும் பாக்கியத்தை இழந்துவிடாமல், அவரை வணங்காமல், அவரை அனுப்பியவராகிய கர்த்தர் ஒருவரை மட்டுமே வணங்கி நித்திய ஜீவனை அடைய கர்த்தர் நம்மை ஆசிர்வதிப்பாராக என்று நமது வீட்டுக்கு வரக்கூடிய கிறித்தவ பிரச்சாரகர்களிடத்தில் நமது சகோதரிகள் இந்த ஆக்கத்தை கையில் வைத்துக் கொண்டோ அல்லது இதில் உள்ள பைபிள் வசனங்களை குறித்து வைத்துக் கொண்டோ கேள்வியெழுப்பினால் அடுத்த தடவை உங்களது வீட்டுப்பக்கம்கூட அந்த அல்லேலுயா கூட்டத்தினர் எட்டிப்பார்க்க மாட்டார்கள். அப்படி மீறி வரக்கூடியவர்களை நம்முடைய கேள்விகளுக்கு பதிலளிக்காமல் நீங்கள் இங்கு பிரச்சாரம் செய்யக்கூடாது என்று சொல்லி ப்பாருங்கள். அத்துடன் அந்தக்கூட்டத்தினர் ஓட்டமெடுத்துவிடுவார்கள்.

தீன்குலப்பெண்மணிகள் இந்த முயற்சியில் இறங்கலாம் தானே!

குறிப்பு : இது குறித்த கூடுதல் தகவல்கள் அறிய விரும்பும் சகோதரிகள் மவ்லவி பீஜே அவர்கள் எழுதிய

1. இதுதான் பைபிள்

2. இயேசு இறைமகனா?

3. இயேசு சிலுவையில் அறையப்படவில்லை

4. பைபிளில் நபிகள் நாயகம்

ஆகிய நூல்களைப் படித்தால் இன்னும் கூடுதல் விஷயங்களை அறிந்து கொள்ளலாம். 

மழை 

மங்களம் மைந்தன்

இந்த பிரபஞ்சம் சுயமாக உருவாகவில்லை; இதைப் படைத்து இயக்கும் ஒருவன் இருக்கிறான் என்பதற்கு எண்ணற்ற சான்றுகள் எதிர்ப்படும் திசையெங்கும் இருக்கின்றன. இந்தப் பிரபஞ்சத்திற்கு உரிமையாளனாக இருக்கும் இறைவனின் தனித்தன்மையை, பேராற்றலைப் பறைச் சாற்றும் விதத்திலே பல வகையான படைப்புகள் வானங்களிலும் பூமியிலும் பரவிக்கிடக்கின்றன. இவ்வாறு, இறைவனை அறிய உதவும் அத்தாட்சிகளுள் முக்கியமான ஒன்றாக மழை இருக்கிறது என்பது மறுக்க முடியாத உண்மை. இஸ்லாமிய மார்க்கம் மழை தொடர்பாக ஏராளமான பயனுள்ள செய்திகளை, முக்கியமான தகவல்களை மக்களுக்கு தெரிவிக்கிறது. குர்ஆனிலும் ஹதீஸ்களிலும் மழையுடன் இணைத்து மனித குலத்தின் நல்வாழ்விற்கு தேவையான பல்வேறான போதனைகள் அறிவுரைகள் சொல்லப்பட்டுள்ளன.

இரவு பகல் விடாது தொடரும் மழை காலமாக இருந்தாலும், மழையே வராதா? என்று எதிர்பார்ப்போடு கன்னத்தில் கைவைத்துக் காத்திருக்கும் காலமாக இருந்தாலும் இந்த மழைத் தொடர்பான செய்திகளை நம்பிக்கையாளர்கள் தவறாமல் தெரிந்து வைத்துக் கொள்ள வேண்டும். ஆகையால், மிகைத்தவனின் மகத்தான அருளாக இருக்கும் மழையைப் பற்றிய கருத்துக்களை இந்த கட்டுரையில் காண்போம்.

மழையில் மறைந்திருக்கும் சான்றுகள்

மழை நீரை சுமக்கும் மேகம் எப்படி உருவாகிறது? மேகத்தின் மடைகள் திறந்து எவ்வாறு மழை பொழிகிறது? எங்கெல்லாம் மழை பொழிகிறது? மழை நீரின் தன்மை எப்படி இருக்கிறது? மழைநீர் பூமிக்கு வந்த பிறகு என்னவாக ஆகிறது? என்னென்ன விளைவுகள் மழையினால் ஏற்படுகின்றன? என்று பகுத்தறிவைக் கொண்டு ஆராய்பவர்களுக்கு அடுக்கடுக்கான ஆதாரங்கள் சான்றுகள் மழையின் மூலம் முன்வைக்கபட்டுள்ளன. இவ்வாறு, சிந்திச்சிதறும் மழைத்துளியைப் பற்றி சிறிதுநேரமாவது சிந்திக்க முன்வரும்போது மாசற்ற குறைகளற்ற இறைவன் ஒருவன் இருக்கிறான் என்பதையும் அவனது மகத்துவத்தையும் நாம் விளங்கிக் கொள்ளலாம். ஆதலால்தான், மழையைப் பற்றிப் பேசும் போதெல்லாம் இதிலே அறிவுடையோருக்கு சான்றுகள் இருக்கின்றன என்று இறைவன் பிரகடனப்படுத்துகிறான். அவனது கூற்று எந்தளவிற்கு மெய்யானது என்பதை மழையைப் பற்றி யோசிக்கும்போதும் படிக்கும் போதும்  நிச்சயமாக நாம் தெரிந்து கொள்ளலாம். இதோ இக்கருத்தை பிரதிபலி க்கும் சில இறைவசனங்களை இப்போது பார்ப்போம்.

வானங்கள் மற்றும் பூமியைப் படைத்திருப்பதிலும், இரவு பகல் மாறி மாறி வருவதிலும், மக்களுக்குப் பயனளிப்பவற்றுடன் கட-லி ல் செல்லும் கப்பலி லும், அல்லாஹ் வானத்திலி -ருந்து இறக்கி வைக்கும் மழையிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் அதைச் செழிக்கச் செய்வதிலும், ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

(திருக்குர்ஆன் 2 : 164)

அவனே வானத்திலி -ருந்து உங்களுக்காகத் தண்ணீரை இறக்கினான். அதில் குடிநீரும் உண்டு. நீங்கள் மேய்ப்பதற்கான தாவரங்கள் அதனால் கிடைக்கின்றன. அதன் மூலம் பயிர்களையும், ஒலி வ மரம், பேரீச்சை, திராட்சை மற்றும் அனைத்துக் கனிகளையும் உங்களுக்காக அவன் முளைக்கச் செய்கிறான். சிந்திக்கும் சமுதாயத்திற்கு இதில் சான்று இருக்கிறது.

(அல்குர்ஆன் 16 : 10)

அல்லாஹ்வே வானிலி ருந்து தண்ணீரை இறக்கினான். பூமி இறந்த பின் அதன் மூலம் இதற்கு உயிரூட்டினான். செவியுறும் சமுதாயத்துக்கு இதில் சான்று இருக்கிறது.

(திருக்குர்ஆன் 16 : 65)

அவனே பூமியை உங்களுக்குத் தொட்டிலாக அமைத்தான். உங்களுக்காக அதில் பாதைகளை எளிதாக்கினான். வானத்தி-லி ருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் பல தரப்பட்ட தாவரங்களை ஜோடிகளாக வெளிப்படுத்தினோம். உண்ணுங்கள்! உங்கள் கால்நடைகளை மேயவிடுங்கள்! அறிவுடையோருக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(திருக்குர்ஆன் 20 : 53, 54)

இரவு பகல் மாறி மாறி வருவதிலும், வானி-லி ருந்து அல்லாஹ் (மழைச்) செல்வத்தை இறக்கியதிலும், பூமி வறண்ட பின் அதன் மூலம் உயிரூட்டுவதிலும், காற்றுகளைத் திருப்பி விடுவதிலும் விளங்கும் சமுதாயத்துக்குப் பல சான்றுகள் உள்ளன.

(திருக்குர்ஆன் 45 : 5)

மின்னலை அச்சமூட்டுவதாகவும், நம்பிக்கையூட்டுவதாகவும் உங்களுக்கு அவன் காட்டுவதும், வானத்திலி ருந்து தண்ணீரை இறக்கி, பூமி செத்த பிறகு அதன் மூலம் அதற்கு உயிரூட்டுவதும் அவனது சான்றுகளில் உள்ளவை. விளங்கக் கூடிய சமுதாயத்துக்கு இதில் பல சான்றுகள் உள்ளன.

(திருக்குர்ஆன் 30 : 24)

இறைவனே மழையை தருகிறான்

விண்ணைத் தொடும் விஞ்ஞான வளர்ச்சியில் மனிதர்கள் இருந்தாலும் அவர்களால் மழையை உருவாக்கிக் கொண்டு வர இயலாது. சற்றும் தாமதிக்காமல் இன்று மனிதன் செயற்கை மழையை பொழிவிக்கிறானே என்று நீங்கள் கேள்வியை கேட்கலாம். ஒன்று திரண்டு இருக்கும் கனத்த மேகங்களின் மீது சில்வர் அயோடைடு என்ற பொடியை தூவி மழையை பொழிய வைக்கிறான் மனிதன். இது மட்டுமே சாத்தியம். இவ்வாறு செய்வது எப்படி இறைவன் செய்யும் காரியத்தை செய்யததாக ஆகும்? எந்தவொன்றும் இல்லாத இடத்தில் மேகத்தை உருவாக்கி இறைவன் மழையை கொடுப்பது போல் மனிதனால் கொடுக்க இயலுமா? என்றால் முடியாது என்பதுதான் உண்மை. மேகத்தை உருவாக்கி அதிலி ருந்து மழையைக் கொண்டு வரும் ஆற்றல் என்பது மனிதனுக்கு கிடையாது. இந்தத் தன்மை இறைவனுக்கு மட்டுமே இருக்கிறது. சுட்டெரிக்கும் வெயில் வீசும் நேரத்தில் திடீரென்று மழைமேகங்கள் திரண்டு மழைபொழிவதை நாம் பார்க்கத்தானே செய்கிறாம். இன்னும் சொல்வதெனில் இறைவன் நினைத்தால் மேகமே இல்லாமலும் மழையை கொடுக்க இயலும் என்பதை நாம் மனதில் வைத்துக் கொள்ள வேண்டும். ஆதலால்தான், திருமறையின் மூலமான இறைவன் நம்மிடம் பேசும் போது, நானே மழையை இறக்குகிறேன் என்றும்; அது எனது அதிகாரம் என்றும் பல வசனங்களில் கூறுகிறான்.

வானிலிருந்து அல்லாஹ் தண்ணீரை இறக்குவதையும், (அதனால்) பூமி பசுமையாக ஆவதையும் நீர் அறியவில்லையா? அல்லாஹ் நுட்பமானவன்; நன்கறிந்தவன்.

(திருக்குர்ஆன் 22:63)

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலிருந்து தண்ணீரையும் இறக்கினான்.

(அல்குர்ஆன் 2 : 21)

அவனே வானிலி ருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் ஒவ்வொரு பொருளின் விளைச்சலையும் வெளிப்படுத்துகிறோம்.

(அல்குர்ஆன் 6 : 99)

வானத்திலி ருந்து அளவோடு தண்ணீரை இறக்கினோம். அதைப் பூமியில் தங்க வைத்தோம். அதைப் போக்கி விடுவதற்கும் நாம் ஆற்றலுடையவர்கள்.

(திருக்குர்ஆன் 23 : 18 )

மழையைத் தருவதற்கு தனிதெய்வமா?

மாரி இல்லாமல் காரியம் இல்லை என்று தமிழில் ஒரு பழமொழியைச் சொல்வார்கள். மாரி என்றால் மழை என்று பொருள். மழை பொழியாமல் இருந்தால் எந்தவொரு காரியமும் நடக்காது என்பதை அனைவரும் தெரிந்து வைத்துள்ளோம். நம்மைப் படைத்து நாம் வாழ்வதற்கு தேவையானதைக் கொடுத்து நம்மைப் பரிபா-லி க்கும் இறைவனே, இந்த வையகத்தின் இயக்கத்திற்கு உயிர்நாடியாக இருக்கும் மழையைக் கொடுக்கிறான் என்பதை முதலி ல் நாம் புரிந்து கொள்ள வேண்டும். ஆனால், இதை விளங்காமல் தொட்டதற்கெல்லாம் தெய்வங்களை ஏற்படுத்தும் காண்பதெற்கெல்லாம் கடவுள்களை உருவாக்கும் மக்கள், இந்த மழைக்கென்றும் ஒரு கடவுளை மழையின் பெயரிலேயே மாரி என்று உருவாக்கி வைத்துள்ளார்கள் என்பது வேதனையாக இருக்கிறது. மழையைத் தரும் இறைவனை அறியாமல் அவனை மறந்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் இறைமறுப்பிலும் இணைவைப்பிலும் இருந்து கொண்டிருக்கிறார்கள். வான்மழை தரும் படைத்தவனைப் புகழாமல் தங்களது கைகளால் படைக்கப்பட்ட போலி -யான தெய்வங்களை பாராட்டி துதித்துக் கொண்டிருக்கிறார்கள். இவர்களின் இந்த பாரதூரமான மோசமான காரியத்தை இறைவன் கடுமையாக கண்டிக்கிறான்.

அவனே பூமியை உங்களுக்கு விரிப்பாகவும், வானத்தை முகடாகவும் அமைத்தான். வானிலி ருந்து தண்ணீரையும் இறக்கினான். அதன் மூலம் கனிகளை உங்களுக்கு உணவாக (பூமியிலி ருந்து) வெளிப்படுத்தினான். எனவே அறிந்து கொண்டே அல்லாஹ்வுக்கு  நிகராக எவரையும் கற்பனை செய்யாதீர்கள்!

(அல்குர்ஆன் 2 : 21,22)

 (நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) வானங்களையும் பூமியையும் படைத்து வானத்தி-லி ருந்து தண்ணீரை உங்களுக்காக இறக்கி வைத்தவனா? அதன் மூலம் செழிப்பான தோட்டங்களை முளைக்கச் செய்கிறோம். அதில் ஒரு மரத்தைக் கூட உங்களால் முளைக்கச் செய்ய இயலாது. அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? இல்லை. அவர்கள் (இறைவனுக்கு மற்றவர்களை) சமமாக்கும் கூட்டமாகவே உள்ளனர்.

(திருக்குர்ஆன் 27 : 60)

(நீங்கள் இணை கற்பித்தவை சிறந்தவையா? அல்லது) படைப்பினங்களை முதலில் படைத்து பின்னர் மறுபடியும் படைப்பவனா? வானத்திலி ருந்தும், பூமியிலி ருந்தும் உங்களுக்கு உணவளிப்பவனா? அல்லாஹ்வுடன் வேறு கடவுளா? "நீங்கள் உண்மையாளர்களாக இருந்தால் உங்கள் சான்றைக் கொண்டு வாருங்கள்!'' என்று கேட்பீராக!

(திருக்குர்ஆன் 27 : 64)

தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலி ருந்து தூய்மையான தண்ணீரை இறக்கினோம்.

இறந்த ஊரை அதன் மூலம் நாம் உயிர்ப்பிப்பதற்காகவும், நாம் படைத்த கால் நடைகளுக்கும், ஏராளமான மனிதர்களுக்கும் அதை நாம் புகட்டுவதற்காகவும் (மழையை இறக்கினோம்). அவர்கள் நல்லுணர்வு பெறுவதற்காக அவர்களிடையே இதைத் தெளிவுபடுத்துகிறோம். மனிதர்களில் அதிகமானோர் (நம்மை) மறுப்போராகவே உள்ளனர்.

(திருக்குர்ஆன் 25 : 48 50)

"வானத்திலி ருந்து தண்ணீரை இறக்கி பூமி செத்த பின் அதன் மூலம் அதற்கு உயிரூட்டுபவன் யார்?'' என்று அவர்களிடம் நீர் கேட்டால் "அல்லாஹ்'' என்றே கூறுவார்கள். "அல்லாஹ்வுக்கே புகழனைத்தும்'' என்று கூறுவீராக! மாறாக அவர்களில் அதிகமானோர் விளங்கிக் கொள்வதில்லை.

(திருக்குர்ஆன் 29 : 63)

மழை உருவாகும் விதம்

பூமியிலுள்ள கடல், ஆறு, குளம் போன்ற நீர்நிலைகளில் இருக்கும் நீரானது சூரிய வெப்பத்தின் மூலமாக ஆவியாகி மேலே செல்கின்றது. இவ்வாறு மேலே செல்லும் நீராவிகள் ஒன்று சேர்ந்து மேகமாக மாறுகிறது. காற்றின் மூலமாக சிறிய மேகங்கள் ஒன்றோடொன்று சேர்ந்து பளுவான கருமேகக் கூட்டங்கள் உருவாகின்றன. இவ்வாறான நீர்த்திவலைகள் கொண்ட கனமான மேகங்களின் பக்கம் குளிர்ந்த காற்று வீசும் போது மேகத்தின் கட்டுடையும் நிலை ஏற்படுகிறது. மேலும் வலுவான புவிஈர்ப்பு விசையின் காரணமாக கனத்த மேகத்ததில் இருக்கும் நீர்த்துளிகள் பூமியை நோக்கி வெளிப்படுகின்றன. இதையே நாம் மழை என்கிறோம். இவ்வாறு மழை பொழியும் விதத்தை விஞ்ஞானத்தின் உதவியால் மனிதன் தெரிந்து கொண்டான். ஆனால், அறிவியல் வளர்ச்சியின் அடையாளமே இல்லாத அதாவது நுண்ணோக்கிகளோ சேட்டிலைட்டுகளோ இல்லாத காலத்திலேயே திருக்குர்ஆன் மழை பொழியும் விதத்தை மனிதர்களிடம் தெளிவாகப் பேசுகிறது. இதன் மூலம் இறைவனே திருக்குர்ஆனை கொடுத்துள்ளான் என்பதையும், அது உண்மையான இறைவேதம் என்பதையும்  நாம் விளங்கலாம். இப்போது மழை உருவாகும் விதத்தைப் பற்றிப் பேசும் வசனங்களைத் தெரிந்து கொள்வோம்.

அல்லாஹ் மேகங்களை இழுத்து அவற்றை ஒன்றாக்குவதையும், பின்னர் அதை அடுக்கடுக்காக அமைப்பதையும் நீர் அறியவில்லையா?

அதன் மத்தியில் மழை வெளிப்படுவதைக் காண்கிறீர்!

(திருக்குர்ஆன் 24 : 43)

அச்சத்தையும், எதிர்பார்ப்பையும் ஏற்படுத்தக்கூடியதாக அவனே மின்னலை உங்களுக்குக் காட்டுகிறான். பளுவான மேகங்களையும் அவன் உருவாக்குகிறான்.

(அல்குர்ஆன் 13 : 12)

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர்.

(திருக்குர்ஆன் 30 : 48)

தனது அருளுக்கு முன் நற்செய்தி கூறுவதற்காக அவனே காற்றை அனுப்புகிறான். வானத்திலி -ருந்து தூய்மையான தண்ணீரை இறக்கினோம்.

(25 : 48, 49, 50)

ஒவ்வொரு உயிரினத்தையும் அதில் பரவவிட்டிருப்பதிலும், காற்றுகளை மாறி மாறி வீசச் செய்திருப்பதிலும், வானத்திற்கும் பூமிக்கும் இடையே வசப்படுத்தப்பட்டுள்ள மேகத்திலும் விளங்கும் சமுதாயத்திற்குப் பல சான்றுகள் உள்ளன.

(அல்குர்ஆன் 2 : 164)

சூல் கொண்ட காற்றுகûளை அனுப்புகிறோம். அப்போது வானிலிருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

(அல்குர்ஆன் 15 : 21, 22)

படைத்தவனால் மட்டுமே தம்மால் படைக்கப்பட்டுள்ள பொருளின் தன்மையை முழுமையாக சரியாக சொல்ல முடியும். உதாரணமாக இறைவன் கொடுத்த அறிவை கொண்டு ஒரு மனிதன், பொருளொன்றைக் கண்டுபிடிக்கிறான் என்றால் அவனால் மட்டுமே மற்றவர்களைக் காட்டிலும் அந்தப் பொருளின் இயக்கத்தைப் பற்றி முழுமையாக சரியாக சொல்ல முடியும். அதைப் பற்றிய அறிவை அவன் வெளிப்படுத்தாமல் இருந்தால் யாருக்கும் தெரியாது. மாறாக, அந்தப் பொருளைப் பார்த்து, பரிசோதித்து அது சம்பந்தமாக அவனை விட அரைகுறையாகவே மற்றவர்கள் தெரிந்து கொள்வார்கள். இந்த விதத்திலே பார்த்தால், படைத்தவனால்மட்டுமே படைப்பினத்தின் மொத்த ரகசியத்தையும் துல்லியமாக சொல்லமுடியும். எனவேதான், மழையை உருவாக்குவது மகத்துவம் மிகுந்த இறைவன் என்பதாலும் அந்த இறைவனின் வார்த்தைகளே குர்ஆன் என்பதாலும் குர்ஆனின் வசனங்கள் மழை பொழியும் விதத்தை சரியாக எடுத்துரைக்கின்றன.

மனிதர்களால் தடுக்க முடியாத மழை

மனிதர்கள் மழைமேகத்தை உருவாக்க இயலாது என்பது ஒரு பக்கம் இருக்கட்டும். நுண்ணறிவு கொண்ட இறைவனின் தொழில்நுட்ப திறமையால் உருவாகும் மழையை வானத்திலேயே மனிதர்களால்  சேமித்து வைக்க இயலுமா? அல்லது அங்கேயே தடுத்து வைக்கமுடியுமா? அல்லது அகன்ற வான்வெளியில் மிதக்கும் கனத்த மேகங்களிலி ருந்து தண்ணீரை பூமியின் மேலே கொட்டவிடாமல் கடத்திச் செல்ல இவர்களால் இயலுமா? இவ்வாறு தடுக்கும் ஆற்றல் கூட மனிதனுக்கு இல்லை எனும் போது மழையை உருவாக்குவதாக தம்பட்டம் அடித்துக் கொள்வது எந்தளவிற்கு தவறு என்பதை நாம் புரிந்து வேண்டும். இவ்வாறு செய்வதற்கு சக்தியின்றி இருக்கும் மனிதகுலத்தை நோக்கி இறைவன் பேசும் வார்த்தைகளை கவனியுங்கள்.

எந்தப் பொருளாயினும் அதன் கருவூலங்கள் நம்மிடமே உள்ளன. நிர்ணயிக்கப்பட்ட அளவிலேயே அதை இறக்குகிறோம். சூல் கொண்ட காற்றுகûளை அனுப்புகிறோம். அப்போது வானி-லி ருந்து தண்ணீரை இறக்கி உங்களுக்கு அதைப் புகட்டுகிறோம். அதை (வானில்) நீங்கள் சேமித்து வைப்போராக இல்லை.

(அல்குர்ஆன் 15 : 21, 22)

வளரும் இன்ஷா அல்லாஹ்

தகவல் களஞ்சியம் 

யார் இவர்

                                                  தொகுப்பு : மனாஸ், இலங்கை

1 நீங்கள் இறக்கும் வரை இஸ்லாத்திலேயே நிலைத்து நிற்பீர்கள் என்று இவரிடம் நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 2 இவர் சுவர்க்கவாசி என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

3 இவருடைய முகத்தில் சிரம் பணிந்(து சஜ்தா செய்)ததற்கான

அடையாளம் காணப்படும்.

 4 வானவர்களிலேயே ஜிப்ரீல் யூதர்களுக்குப் பகைவராயிற்றே என்ற செய்தியை நபிகளாரிடம் கூறியவர்.

 5 திருமறைக் குர்ஆனின் (46:10) எனும் வசனம் இவர் விசயசத்தில் இறக்கப்பட்டது.

 6 இவர் யூதர்களின் மத அறிஞராகவும் இருந்தவர்.

7 நபி (ஸல்) அவர்கள் மதீனா வந்த தகவல் கேள்விப்பட்டு நபிகளாரைச் சந்தித்தவர்.

8 தவ்ராத்தில் விபச்சாரம் செய்தவர்களைக் கல்லெறிந்து கொல்ல வேண்டும் என்ற செய்தியை யூதர்கள் மறைத்த செய்தியை  போது வெளிப்படுத்தியவர்.

9 இவர் நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வருகை தரும் போது தமது குடும்பத்தாருக்குச் சொந்தமான பேரீச்சந் தோட்டத்தில் கனிகளைப் பறித்துக் கொண்டிருந்தார்.

10 இவர் யூதர்களில் பனூ கைனுகா' கூட்டத்தைச் சேர்ந்தவர்கள்.

11  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நபியாக ஏற்றுக் கொள்வதற் காக தன்னுடை யூத மதத்தில் சொல்லப்பட்ட இறுதி நபிக்குரிய சில கேள்விகளைக் கேட்டவர். 

விடை: அப்துல்லாஹ் பின் ஸலாம் (ரலி)

1 ஆதாரம் புகாரி 3813 

3 ஆதாரம் புகாரி    

5 ஆதாரம் புகாரி 3812

7.ஆதாரம் புகாரி 3329 

9.ஆதாரம் புகாரி 3911

11 ஆதாரம் புகாரி 3911

2 ஆதாரம் புகாரி 3812

4 ஆதாரம் புகாரி 3329

6 ஆதாரம் புகாரி 3911

8 ஆதாரம் புகாரி 3635

10 ஆதாரம் புகாரி4028

Published on: February 6, 2013, 1:45 PM Views: 1748


www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top