ஏப்ரல் தீன்குலப் பெண்மணி

தலையங்கம்

இனவெறியும், மொழிவெறியும் ஒழியட்டும்

அமைதியைக் கெடுக்கும் செயல்களில் முதலிடம் வகிப்பது இனவெறியும் மொழிவெறியும்தான். இனவெறி மொழிவெறி கோஷங்கள் ரத்தம் குடிக்காமல் முடிவுக்கு வருவதில்லை.

தன் இனத்தின் மீது அன்பும் அக்கறையும் இருப்பது தவறல்ல.

அந்த அக்கறை அடுத்த இனத்தவரின் இரத்தத்தைக் குடிக்கும் வெறியாக மாறினால் மனித இனம் தழைக்காது. மனிதநேயம் வளராது.

இந்தியாவில் இதுபோன்ற வெறியாட்டங்கள் தொடர்ந்து நடந்து வருகின்றன. தற்போது தமிழகத்தில் இலங்கையி-லிருந்து சுற்றுலா வந்த பித்த பிட்சுகள் தாக்கப்பட்டுள்ளனர்.

தஞ்சாவூர் பெரிய கோவிலைச் சுற்றிப் பார்க்க வந்த இலங்கை புத்த பிட்சுகள் ஓட ஓட விரட்டி தாக்கப்பட்டனர். இதைப் போன்று டில்லி-யிலி-ருந்து சென்னைக்கு ரயிலில் பயணம் செய்த புத்த பிட்சுகள் தாக்கப்பட்டுள்ளனர். இது போன்ற தாக்குதல்கள் மனித நேயமிக்கவர்களைக் கவலைக்குள்ளாக்கியுள்ளது.

ராஜ்பக்க்ஷேவைக் கண்டிக்க வேண்டும், தண்டிக்க வேண்டும் என்ற கோஷம் அவர் சார்ந்த மதத்தினரையும் தாக்கக் தூண்டியுள்ளது. தவறு செய்பவனைத் தண்டிக்கலாம், கண்டிக்கலாம். ஆனால் இதில் எவ்விதத்திலும் தொடர்பில்லாத மக்களைத் தண்டிப்பது எவ்வகையில் நியாயம் என்பதைச் சிந்திக்க வேண்டும்.

முல்லைப் பெரியாறு பிரச்சினை வந்த போது கேரளாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். அவர்களின் கடைகள் உடைக்கப்பட்டன. தமிழக ஐயப்ப பக்தர்கள் தாக்கப்பட்டனர். இதைக் கடுமையாக எதிர்த்த தமிழகக் கட்சியினர் இன்று அதே பாணியைக் கையில் எடுத்து அராஜகம் செய்வது எந்த வகையில் நியாயம்?

காவிரி பிரச்சினை வரும் போது கர்நாடகாவில் தமிழ் மக்கள் தாக்கப்பட்டனர். இவற்றை நியாயம் என்று இப்போது தாக்குதல் நடத்தியவர்கள் கூறுவார்களா?

இலங்கையைச் சார்ந்த புத்த பிட்சுகளை இங்கு தாக்கியதால் இலங்கையில் இருக்கும் தமிழர்களை அவர்கள் தாக்கத் தொடங்கினால் நிலைமை என்னவாகும் என்பதைச் சிந்தித்தார்களா? போராட்டங்களும் ஆர்ப்பாட்டங்களும் வெறியாக மாறினால் உலகில் எங்கும் அமைதி நிலவாது.

தமிழ் மக்களுக்கு குரல் கொடுக்கிறோம் என்ற பெயரில் அப்பாவி மக்களைத் தாக்குவது வன்மையாகக் கண்டிக்கத்தக்கதாகும். மத்திய மாநில அரசுகள் இது போன்ற காரியங்களில் ஈடுபடுபவர்களை இனம் கண்டு கடுமையான தண்டனைகளை அவர்களுக்கு வழங்க வேண்டும்.

மொழி என்பது தன் கருத்தை மற்றவர்களுக்கு எடுத்துரைக்க இறைவன் வழங்கிய ஓர் அருட்கொடையாகும். இதைப்போன்று இனம் என்பதும் அடுத்தவர்களை இனம் காண்பதற்கு உரிய வழியாகும். மொழியும் இனமும் அன்பைப் பாரிமாறிக் கொள்ள உதவும் சாதனமாகப் பயன்படுத்தப்பட வேண்டுமே தவிர அவற்றை மக்களைக் கொல்வதற்குரிய துப்பாக்கியாகப் பயன்படுத்தக்கூடாது.

மனிதர்களே! உங்களை ஓர் ஆண் ஒரு பெண்ணிலி-ருந்தே நாம் படைத்தோம். நீங்கள் ஒருவரையொருவர் அறிந்து கொள்வதற்காக உங்களைக் கிளைகளாகவும், கோத்திரங்களாகவும் ஆக்கினோம். உங்களில் (இறைவனை) அதிகம் அஞ்சுவோரே அல்லாஹ்விடம் அதிகம் சிறந்தவர். அல்லாஹ் அறிந்தவன்; நன்கறிபவன்.

(அல்குர்ஆன் 49:13)

மனிதர்களே! அறிந்து கொள்ளுங்கள்: உங்கள் இறைவன் ஒருவனே! உங்கள் தந்தையும் ஒருவரே! அறிந்து கொள்ளுங்கள்! அரபிமொழி பேசாதவரை விட அரபி மொழி பேசுபவருக்கு சிறப்பு இல்லை. இதைப்போன்று அரபிமொழி பேசுபவரை விட அரபிமொழி பேசாதவருக்கு சிறப்பு இல்லை. கருப்பனை விட சிவந்தவனுக்கும் சிவந்தவனை விட கருப்பனுக்கும் சிறப்பு இல்லை. இறையச்சத்தின் அடிப்படையிலேயே தவிர என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்

(நூல் : அஹ்மத் 22391)

திருக்குர்ஆன் விரிவுரை - சூரத்துந் நஸ்ர் தொடர் : 3

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

நபிகளாரின் வெற்றியும் தன்னடக்கமும்

இறைநம்பிக்கை என்ற அடிப்படையில் இல்லாமல் வரலாற்று ரீதியில், மக்கா வெற்றியை ஆராய்ந்தால் அந்த வெற்றிக்குச் சொந்தக்காரராக முஹம்மது நபிகள் தான் இருப்பார்கள். நேற்று முயன்று இன்று கிடைத்த வெற்றி அல்ல. ஏறத்தாழ 21 ஆண்டுகளாக கொள்கைப் பிரச்சாரம் செய்து, அதில் பலரது உயிர்களை இழந்து, பல்வேறு வகையான சோதனைகளுக்கும் துன்பங்களுக்கும் ஆளாக்கப்பட்ட பிறகுதான் இந்த வெற்றி கிடைத்தது. 21 ஆண்டுகளாக பாடுபட்டு எண்ணற்ற தோழர்களை உருவாக்கியதினால்தான் அந்த வெற்றி கிடைத்தது. இந்தக் கருத்தை நபிகள் நாயகத்தின் வாழ்க்கையை ஆராய்ச்சி செய்கிற எவரும் ஒத்துக் கொள்வர்.

உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின் தி ஹன்டர்டு (நூறு மனிதர்கள்) என்ற புத்தகத்தை எழுதிய மைக்கேல் ஹார்ட் என்கிற கிறித்துவ வரலாற்றுப் பேராசிரியர், முஹம்மது நபிக்கு முதல் இடத்தைக் கொடுத்துவிட்டு அதைக் கொடுப்பதற்குக் காரணமாக அவரது வெற்றிக்கு அவர் மட்டுமே காரணம் என்று சொல்லுகிறார்.

முஹம்மது அவர்களே பிரச்சாரம் செய்தார்கள். அவர்களே பிரச்சினையை எதிர்கொண்டார்கள். அவர்கள்தான் களத்திலும் நின்றார்கள். திட்டமிடுவதும் அவர்கள்தான். ஜனாதிபதியும் அவர்கள் தான். தளபதியும் அவர்கள் தான். சுப்ரீம் கோர்ட் நீதிபதியும் அவர்கள் தான். முஹம்மது நபியவர்கள் அடைந்த அனைத்து வெற்றிகளுக்கும் அவர்கள் தான் காரணம் என்று மைக்கேல் ஹார்ட் சொல்லுகிறார்.

மேலும் மற்ற தலைவர்களின் வெற்றியை ஆராய்ந்தால், ஒவ்வொரு துறைக்கும் ஒரு ஆலோசகர், நிர்வாகத்தினர், மேலும் பலரது கூட்டு முயற்சிகள் என்று இருக்கின்றன. முஹம்மது நபியின் வெற்றியில் அவருக்கு மட்டும்தான் பங்கு இருக்கிறது. முஹம்மது நபி ஜனாதி பதியாகவும் இருப்பார். யுத்தம் போர் என்று வந்தால் அவரே முதலில் வாள்பிடித்து நிற்கிற முதல் போர் வீரனாகவும் இருப்பார். இதுபோன்ற ஆற்றல் மிக்க மனிதராக நபிகள் நாயகத்தைத் தவிர வேறு எவரையும் நாம் பார்க்கவில்லை. அதனால்தான் அவருக்கு எனது நூலில் முதல் இடம் கொடுத்துள்ளேன் என்றும் மைக்கேல் விவரிக்கிறார்.

அது போல் மக்கா வெற்றி கொள்ளப்பட்டதற்கும் நபிகள் நாயகம் தான் முழுக் காரணம் என்றுதான் மனிதனின் அறிவு தீர்ப்பளிக்கும்.

ஆனால் இந்த வெற்றிக்கு காரணம் முஹம்மது நபியல்ல. அவர்களை தூதராக அனுப்பிய அல்லாஹ் தான் என்று இந்த அத்தியாயம் சொல்கிறது.

மக்கா வெற்றியைப் பற்றி சாதாரண மனிதர் என்ற நிலையில் இருந்து பார்த்தால், நபிகள் நாயகத்திற்கு கர்வம் வரவேண்டும். ஏனெனில்

அவர்கள் வெற்றிபெற்ற ஊர் அவரை விரட்டியடித்த ஊராகும். தொழும் போது நபிகள் நாயகத்தின் கழுத்தில் ஒட்டகக் கழிவுகளைத் தூக்கி வைத்த ஊராகும். கல்லையும் மண்ணையும் முள்ளையும் எறிந்து தொல்லை கொடுத்த ஊராகும். முஹம்மதை நபி என்று ஏற்றுக் கொண்டவர்களையெல்லாம் அடித்துக் கொன்ற ஊராகும். சித்ரவதையும் மற்றும் பல்வேறு கொடுமைகளையும் செய்த ஊராகும். பொருட்களையும் உடைமைகளையும் பறித்துக் கொண்டு தன்னைக் கொல்லுவதற்கும் முயற்சி செய்த ஊராகும். தப்பித்து அகதியாக ஓடியவர் அந்த ஊரை வெற்றி கொண்டால் என்ன செய்ய வேண்டும்? இன்று உலக வரலாற்றில் என்ன செய்து கொண்டிருக்கிறார்கள்? சிந்தித்துப் பாருங்கள்.

பல்வேறு வரலாறுகளில் நாம் பார்க்கலாம். ஒரு நாட்டை ஜெயித்துவிட்டால், ஜெயித்தவர்கள் முத-லில் அங்குள்ள சொத்துக்களையெல்லாம் சூறையாடுவார்கள். வயல்களையெல்லாம் நெருப்பு வைத்துக் கொளுத்துவார்கள். குடிநீர் குளங்களையெல்லாம் யானைகளை விட்டு கலக்குவார்கள். இதுபோன்ற நிகழ்வுகளை நமது தமிழ் மொழியில் பதிவு செய்யப்பட்டிருக்கிற சங்க இலக்கியங்களில் பார்க்கலாம்.

வெற்றி பெற்ற மன்னர்கள் தாங்கள் வெற்றி பெற்ற நாட்டில் போருக்குச் சம்பந்தமில்லாத பெண்களையெல்லாம் சிறைபிடிப்பார்கள். மேலும் அங்குள்ளவர்களையெல்லாம் சித்ரவதை செய்து பயமுறுத்துவார்கள். மக்களை வழிநடத்திய தலைவர்களைப் பழிவாங்குவார்கள். இப்படி தனக்குத் தோன்றியதையெல்லாம் செய்வார்கள்.

ஆனால் நபிகள் நாயகம் மக்கா வெற்றியின் போது எப்படி நடந்து கொண்டார்கள்? மக்கா வெற்றியின் போது, நபியவர்கள் அந்த வெற்றி பெற்ற பூமியில் நின்று கொண்டு சொன்ன வார்த்தைகள் அவர்களது பணிவைக் காட்டுகிறது. அவர்களது உயர்வான கொள்கையைப் பறைசாற்றுகிறது. அவர்கள் இறைவனால் தேர்ந்தெடுக்கப்பட்ட தீர்க்கதரிசிதான் என்பதை மீண்டும் மீண்டும் மெய்ப்பிக்கிறது.

قَالَ لَا إِلَهَ إِلَّا اللَّهُ وَحْدَهُ صَدَقَ وَعْدَهُ وَنَصَرَ عَبْدَهُ وَهَزَمَ الْأَحْزَابَ وَحْدَهُ

வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாரும் இல்லை.

அவன் தனித்தவன். அவன் தனது வாக்குறுதியை உண்மையாக்கி விட்டான். தனது அடிமைக்கு உதவினான். தனது படையைக் கண்ணியப்படுத்தினான்.

எல்லாக் கூட்டத்தினரையும் அவனே தோற்கடித்தான் என்று மக்கா வெற்றியின் போது கூறினார்கள்.

(நூல் : அபூதாவூத் 3941)

அவனது அடிமையாக இருக்கிற இந்த முஹம்மதுக்கு அவன் உதவிசெய்திருக்கிறான். நான் ஒன்றும் செய்யவில்லை என்று நபியவர்கள் சொல்லுகிறார்கள்.

எல்லாக் கூட்டத்தினரையும் தன்னந்தனியாக அவனே தோற்கடித்தான் என்று சொல்-லிக் கொண்டே மக்காவிற்குள் நுழைந்தார்கள்.

வரலாற்று ஆசிரியர்கள் எல்லோரும், முஹம்மது நபிகள் நாயகத்திற்குத்தான் எல்லா வெற்றியிலும் பங்கு இருப்பதாகச் சொல்லுகிறார்கள். ஆனால் முஹம்மது நபியவர்கள், இந்தப் படையை இறைவன்தான் வெற்றி கொண்டான் என்று கூறுகிறார்கள்.

இன்னல்கள், போர்கள், பிரச்சினைகள் என்று தொடர்ந்து 21 ஆண்டுகள் முஹம்மது நபிகளுக்கும் அவர்களின் ஆதரவாளருக்கும் தொல்லைகள் தந்த அனைவருக்கும் மக்கா வெற்றியின் போது பொதுமன்னிப்பு வழங்கினார்கள். யுத்தம் என்று வந்தால்தான் வாளைத் தூக்குவோம். இல்லையெனில் வாள் ஏந்தமாட்டோம் என்ற குறிக்கோளுடன், வாளை உறைக்குள்ளேயே வைத்துக் கொண்டு, யாரெல்லாம் அபூசுப்யான் வீட்டிற்குச் செல்கிறார்களோ அவர்களெல்லாம் அபயம் பெற்றுவிட்டார்கள். அதுபோன்று சில தலைவர்களின் பெயரைச் சொல்-லி அவர்களது வீடுகளில் நுழைந்து கொண்டால் நீங்கள் அபயம் பெற்று விட்டீர்கள் என்று பகிரங்க அறிவிப்பு செய்தார்கள்.

இப்படி ஹிந்தா உட்பட எல்லாரையும் மன்னித்தார்கள். ஹம்சாவைக் கொலை செய்த வஹ்ஷியையும் மன்னித்தார்கள். முஸ்-லிம்களில் பலரது குடும்பங்களையும் கொன்றுகுவித்த அனைவருக்கும் பொதுமன்னிப்பு வழங்கினார்கள். யாருக்கும் எந்தத் தண்டனையும் கிடையாது என்று அறிவித்தார்கள்.

இந்த வெற்றி எனது வெற்றி என்ற எண்ணம் அவர்களுக்கு இருக்கவில்லை.

فَسَبِّحْ بِحَمْدِ رَبِّكَ وَاسْتَغْفِرْهُ إِنَّهُ كَانَ تَوَّابًا - உமது இறைவனைப் புகழ்ந்து துதிப்பீராக! மேலும் அவனிடம் பாவமன்னிப்புத் தேடுவீராக! அவனே பாவமன்னிப்பு வழங்குபவனாக இருக்கிறான், என்ற முன்னறிவிப்பு நிறைவேறியதாகத் தான் அவர்கள் எடுத்துக் கொண்டார்கள்.

வெற்றி வரும் என்பதை முன்கூட்டியே இறைவன் தெரிவித்து விட்டான். அப்படி வெற்றிவரும்போது உன்னுடையது என்று நீ நினைத்துக் கொள்ளாதே! இறைவனுடையது என அந்த வெற்றியை எண்ணிப்பார்த்து இறைவனுக்கு நன்றி செலுத்து என்று நபியவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான்.

நல்லவர்களாக இருக்கிற பலபேர் இந்த இடத்தில்தான், அதாவது பதவி பட்டம் என்கிற இடத்தில் தான் தமது சுயரூபத்தைக் காட்டிவிடுகி றார்கள். நன்றாக சமூகத்திற்கு உழைப்பார்கள்; மனத்தூய்மையுடன் பணியாற்றுவார்கள்: தமது பொருளாதாரத்தையும் உடல் உழைப்பையும் மறுமை வெற்றிக்காகப் பயன்படுத்துவார்கள். இப்படிப்பட்ட ஒருவரை எம்.எல்.ஏவாகவோ எம்.பியாகவோ ஆக்கிவிட்டால் அந்த ஒன்றே அவர் நரகத்திற்குப் போவதற்குரிய காரணமாக அமைந்து விடுவதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

இப்படி எத்தனையோ நபர்களை எங்களது இந்தப் பொதுவாழ்வில் நாங்கள் பார்த்திருக்கிறோம். நல்லவராகவும் மார்க்கப்பற்றுள்ளவராகவும் வாழ்ந்தவர்களில் எத்தனையோ நபர்கள், எம்.எல்.ஏவாகவும் எம்பியாகவும் ஒரு வார்டுக்கு கவுன்சிலராகவும் பதவியில் அமர்ந்ததினால் தமது மார்க்கத்தை விட்டு விலகியவர்களாகி விட்டார்கள்.

அவ்வளவு வேண்டாம். ஒரு இயக்கத்தில் மாவட்டத்திற்கோ மாநிலத்திற்கோ தலைவன் என்று பதவி வந்துவிட்டால் தலைகீழாக நடக்க ஆரம்பிப்பதை நாம் கண்ணால் கண்டுவருகிறோம். இந்தப் பதவிதான் அவர்களது தூய்மை, நேர்மை என்று எல்லாவற்றையும் நாசமாக்கிவிடுகிறது என்றால் அது மிகையல்ல.

இங்குதான் நாம் நபிகள் நாயகத்தின் தன்னடக்கத்தையும் தூய்மையையும் பணிவையும் பறைசாற்றக் கடமைப்பட்டிருக்கிறோம். ஏனெனில் உலகமகா சக்கரவர்த்தியாகவும் எதிர்க்கட்சியே இல்லாத தனியாட்சி நடத்திய மன்னராகவும் இருந்த முஹம்மது நபிகளுக்கு எந்தப் பெருமையும் வரவில்லை. எந்த அகந்தையும் வரவில்லை. எந்தப் பதவியில் எல்லாரும் வீழ்ந்துவிடுவார்களோ அதில் நபியவர்கள் விழவில்லை.

இந்த இடத்தில்தான் நபியவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து துதித்தார்கள். இறைவனின் கட்டளையை செயல்படுத்திக் காட்டினார்கள். இந்த வெற்றியில் எனக்கு எந்தப் பங்கும் இல்லை. இதற்கெல்லாம் முழுக் காரணம் என் இறைவன் அல்லாஹ் மட்டுமே என்று அல்லாஹ்விடம் சரணடைந்தார்கள்.

எனவே என்னதான் வெளிப்படையில் எல்லா வெற்றிக்கும் அல்லாஹ்தான் காரணம் என்று சொன்னாலும் தனது மனதிற்குள் நாம் வெற்றி பெற்றுவிட்டோம் நம்மால்தான் வெற்றிபெற முடியும் என்ற சலனம் வந்து விடக் கூடாது என்பதற்காக அல்லாஹ் இறுதி வசனத்தில் அல்லாஹ்விடம் மன்னிப்புத் தேடிக்கொள் என்று கூறுகிறான்.

وَاسْتَغْفِرْه - அவனிடத்தில் மன்னிப்பும் கோருவீராக!

إِنَّهُ كَانَ تَوَّابًا - அவன் மன்னிக்கக் கூடியவனாக இருக்கிறான்.

பாவமன்னிப்புத் தேடுகிற அளவுக்கு நபிகள் நாயகம் என்ன பாவம் செய்தார்கள்? எதற்கு மன்னிப்புக் கேட்க வேண்டும்?

தவறு செய்தால் மன்னிப்புக் கேட்கலாம். திருடினால் மன்னிப்புக் கேட்க லாம். பொய் சொன்னால் மன்னிப்புக் கேட்கலாம். கோள் சொன்னால் மன்னிப்புக் கேட்கலாம், புறம் பேசினால் மன்னிப்புக் கேட்கலாம், இதுபோன்று தவறுகளைச் செய்தால் மன்னிப்புக் கேட்கலாம். அதில் நியாயம் இருக்கிறது.

மக்கா வெற்றி என்பதுவும் அதன் பிறகு மக்கள் கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வது என்பதுவும் பாவமான காரியமா? இல்லை. அப்படியெனில் ஏன் அல்லாஹ் இப்படி நபிகளாரைப் பார்த்து மன்னிப்புக் கேட்கச் சொல்ல வேண்டும்.

கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதைப் பார்க்கும் போது மன்னிப்புக் கேள் என்றால், கூட்டம் கூட்டமாக மக்கள் வருவதினால் நாம் ஏன் மன்னிப்புக் கேட்க வேண்டும்? கூட்டம் கூட்டமாக மக்கள் வரும்போது நாம் ஆடுவோம். நமக்குள் இலேசாக ஒரு சலனம் வரும். அது இறைநம்பிக்கைக்கு மாற்றமானதாக இருக்கும். அப்படி வந்துவிடக்கூடாது என்பதற்காகவும் அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டுக் கொள்ள வேண்டும் என்பதை அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் மூலம் நமக்குக் கற்றுத் தருகிறான்.

நம்முடைய உழைப்பு, சிரமம், திறமை என்று என்ன முயற்சித்திருந்தாலும் என்னால்தான் வெற்றி என்று ஒருபோதும் சொல்-லிவிடக்கூடாது என்பதே இதிலுள்ள முக்கியக் கொள்கை விளக்கமாகும். நாம்தான் நன்றாக உழைத்திருப்போம், பாடுபட்டிருப்போம், ஊரே சேர்ந்து நாம்தான் உழைத்தோம் என்று சொன்னாலும் சம்பந்தப்பட்ட நாம் என்னால்தான் என்று ஒருக்காலும் சொல்லவே கூடாது. நம்மைப் பிறர் பாராட்டினாலும் என்னால் எதுவும் இல்லை, இவையெல்லாம் என்னைப் படைத்த அல்லாஹ்வினால்தான் என்று சொல்ல வேண்டும்.

என்னால்தான் என்று சொன்னால் எனக்கு முன்னால் என்னுடைய அப்பன்மார்கள் பலபேர் தோற்றிருக்கிறார்கள். என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும். நம்மை விட திறமைசா-லிகள் இந்த உலகத்தில் வாழ்ந்திருக்கத்தான் செய்கிறார்கள். அவர்களால் ஜெயிக்க முடியவில்லை. ஆனால் நான் ஜெயித்துவிட்டேன். ஊரில் பெரிய கோடீஸ்வரனாக ஆகிவிட்டேன்.

அதேபோன்று படிக்கிற காலத்தில் நம்மை விட மதிப்பெண் குறைந் தவர்களெல்லாம் நம்மை விட இலட்சம் மடங்கு மேலே இருப்பதையும் நாம் நடைமுறையில் பார்க்கிறோம். அதே போன்று நம்மை விட மேலே உள்ளவர்களெல்லாம் கீழே போய் கிடக்கிறார்கள். இதையும் நடைமுறையில் பார்க்கிறோம்.

எனவே எல்லா செல்வங்களும் எல்லா அந்தஸ்துகளும் பதவிகளும் நம்மைப் புரட்டிவிடும். அப்படிப் புரட்டிவிடுகிற நேரத்தில் இந்த அத்தியாயத்தை நாம் நினைத்துப் பார்த்து இறைவனைப் புகழ்ந்து பாவமன்னிப்புத் தேடினால் ஆன்மீக நிலையில் நாம் பக்குமடைந்தவர்களாகிவிடுவோம்.

நபிகள் நாயகத்திற்குச் சொன்ன அத்தியாயமாக இருந்தாலும் இந்த அத்தியாயத்தில் உலகம் அழியும் வரை இந்தச் சமுதாயம் படிப்பினை பெறவேண்டியிருக்கிறது. அதனால்தான் நபியவர்கள் இந்த அத்தியாயம் இறங்கி தாம் மரணிக்கிற வரையிலும் ருகூவில் ஓதுகிற துஆவில், இந்த அத்தியாயத்தில் அல்லாஹ் சொல்-லிக் கொடுப்பதை ஓத ஆரம்பித்துவிட்டார்கள்.

உமது இறைவனை தஸ்பீஹ் செய்வாயாக என்பதை செயல்படுத்தும் வகையில் சுப்ஹானகல்லாஹும்ம எனவும், புகழ்வீராக என்பதை செயல்படுத்தும் வகையில் வபிஹ்மதிக எனவும், உமது இறைவனிடம் மன்னிப்பு கேட்பீராக என்ற கட்டளையை செயல்படுத்தும் வகையில் அல்லாஹும்மக் பிர்லீ எனவும் - அதாவது சுப்ஹானகல்லாஹும்ம வபிஹம்திக அல்லாஹும்மக் பிர்லீ - எனக் கூறுவார்கள்.

நபி (ஸல்) அவர்கள் தமது (தொழுகையின்) ருகூஉவிலும் சஜ்தாவிலும் "சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்ஃபிர்லீ'' (இறைவா! எம் அதிபதியே! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று கூறிவந்தார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி 794, முஸ்லிம் 834

"(நபியே! உங்களுக்கு) அல்லாஹ்வின் உதவியும், (அவன் அüக்கும்) வெற்றியும் கிடைத்து...'' எனும் (110ஆவது) அத்தியாயம் தமக்கு அருளப்பட்ட பின் "சுப்ஹானக்க ரப்பனா வபிஹம்திக்க, அல்லாஹும்ம ஃக்பிர்லீ' (எங்கள் இறைவா! நீ தூயவன்; உன்னைப் போற்றுகின்றோம்; இறைவா! எனக்கு மன்னிப்பளிப்பாயாக!) என்று தொழுகையில் கூறாமல் எந்தவொரு தொழுகையையும் நபி (ஸல்) அவர்கள் தொழுததில்லை.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி-),

நூல்: புகாரி 4967

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்னால் "சுப்ஹானக வபி ஹம்திக அஸ்தஃக்ஃபிருக வ அதூபு இலைக்க' (இறைவா! உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிக்கிறேன். உன்னிடத்தில் பாவமன்னிப்புக்கோரி உன்னிடமே மீளுகிறேன்) என்று அதிகமாகக் கூறிவந்தார்கள். (ஒரு நாள்) நான், "அல்லாஹ்வின் தூதரே! இந்த வார்த்தைகள் என்ன? இவற்றைத் தாங்கள் புதிதாகக் கூறத் துவங்கியுள்ளீர்களே (என்ன காரணம்)?'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும்போது...'' (என்று தொடங்கும் 110ஆவது) அத்தியாயத்தில் என் சமுதாயத்தார் விஷயத்தில் எனக்கோர் அடையாளம் கூறப்பட்டுள்ளது. அதை நான் காண்பதால் இவற்றைக் கூறிவருகிறேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-லி),

நூல்: முஸ்லி-ம் 835

ஆரம்ப காலகட்டத்தில் நபியவர்கள் ருகூவில் சுப்ஹான ரப்பியல் அழீம் என்று ஓதுவார்கள். இந்த அத்தியாயம் அருளப்பட்ட பிறகு இந்த துஆவைத்தான் ஓதுவார்கள்.

فَسَبِّحْ - எனவே நீ தூய்மைப்படுத்து என்று அல்லாஹ் சொல்லுகிறான். தூய்மைப்படுத்து என்றால் என்ன அர்த்தம் என்பதை சரியாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

ஒருவன் வியர்வை நாற்றத்துடன் அலங்கோலமாக காட்சியளித்தால் அவனைப் பார்த்து என்னடா! நாற்றம் பிடித்தவனாக இருக்கிறாய், தூய்மை இல்லாமல் இருக்கிறாய் என்று சொல்லுவோம். அதே போன்று அழுக்குச் சட்டையை அணிந்து வருகிறவனைப் பார்த்து தூய்மையற்றவன் என்போம். இதுபோன்று உடலி-லுள்ள அழுக்கு துர்வாடை ஆடையிலுள்ள அழுக்கு துர்வாடை புழுதி கறை போன்றவற்றிலி-ருந்து நீங்கியிருப்பதைத்தான் சுத்தம் தூய்மை என்று சொல்லுவோம். அல்லாஹ்வை தூய்மைப்படுத்துங்கள் என்பதன் பொருள் இது அல்ல. ஏனெனில் அல்லாஹ்விற்கு வியர்வை வராது. துர்வாடை வராது.

அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துதல் அதாவது சுப்ஹானல்லாஹ் என்று சொன்னால், அல்லாஹ்விற்கு இணைகற்பித்த-லில் இருந்தும் பலவீனங்களிலி-ருந்தும் அல்லாஹ்வைத் தூய்மைப்படுத்துதல் என்று அர்த்தமாகும்.

سبحان الله என்பதின் பொருள் அல்லாஹ் தூய்மையானவன் என்பதாகும். அதன் கருத்து, மனைவி மக்களை விட்டும் அவன் தூயவன், தாய் பிள்ளைகள் இருப்பதை விட்டும் அவன் தூயவன், அண்ணன் தம்பிகள் மாமன் மச்சான் என்கிற உறவு முறைகள் இருப்பதை விட்டும் அவன் தூயவன், நோயிலி-ருந்து தூயவன், கவலை இருப்பதை விட்டும் தூயவன், அசதி, மறதி, தூக்கம், துக்கம் போன்றவைகள் இருப்பதை விட்டும் தூயவன் என்பதாகும். இவைகளெல்லாம் மனிதனுக்குத்தான் இருக்கும், மனிதனைப் படைத்த இறைவனுக்கு இருக்காது. இருக்கக் கூடாது. ஆக எதுவெல்லாம் கடவுள் தன்மைக்குப் பங்கம் விளைவிக்குமோ அதிலி-ருந்தெல்லாம் தூயவன் என்று அர்த்தம். அதாவது எதுவெல்லாம் கடவுள் தன்மைக்கு வலுசேர்க்குமோ அதுவெல்லாம் அவனிடம் இருக்கும். எதுவெல்லாம் கடவுள் தன்மைக்கு இழுக்கு ஏற்படுத்துமோ அவற்றில் ஒன்றுகூட அவனிடம் இருக்காது என்பதாகும்.

அதுபோன்ற கடவுளுக்கு இழுக்கையும் குறைவையும் ஏற்படுத்துகிறவைகளி-லிருந்தெல்லாம் அவன் தூயவன் என்பதைத்தான் இந்த அத்தியாயத்தில் நீ என்னைத் தூய்மையானவன் என்று பிரகடனம் செய் என்கிறான். எப்படிப் பிரகடனப்படுத்த முடியுமென்றால், சுப்ஹானல்லாஹ் என்று சொல்வதின் மூலம்தான்.

அப்படியெனில் முதலில் سبحان الله சுப்ஹானல்லாஹ் என்று சொல்-லி பிரகடனப்படுத்துவதற்கு அர்த்தம், வெற்றி வந்துவிட்டது, மக்களெல்லாம் கூட்டம் கூட்டமாக வந்து சேர்ந்துவிட்டார்கள். அப் போது நமக்கு மமதையும் பெருமையும் கர்வமும் ஏற்படாமலி-ருப்பதற்கு இது உதவும். அல்லாஹ்வே நாங்களெல்லாம் குறைகள் உடையவர்கள். நீ மட்டும்தான் குறைகளி-லிருந்து அப்பாற்பட்டவன். எனவே எந்தக் குறையுமில்லாதவன்தான் ஜெயிக்க முடியும். நாங்களெல்லாம் இன்றைக்கு ஜெயித்திருந்தாலும் எங்களிடம் நூறு பலகீனங்கள் இருக்கத்தான் செய்யும்.

எனவே ஒரு மனிதன் ஆணவம் கர்வம் போன்றவைகள் வராமல் தன்னைப் பக்குவப்படுத்திக் கொள்வதற்கு, அல்லாஹ்தான் குறைபாடுகளிலிருந்து தூயவன் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும்.

நான் முதலமைச்சராக ஜனாபதியாக ராணுவத் தளபதியாக எம்எல்ஏ வாக எம்பியாக ஆகிவிட்டேன் என்று காலரைத் தூக்கிவிட்டுக் கொண்டால், அவன் குறையில்லாதவன் என்று நினைத்துப் பார். நான் குறையுள்ளவன். இந்த ஒன்றில் வேண்டுமானால் நான் ஜெயித்திருக்கலாம். நான் வெற்றிபெறாத ஜெயிக்காத இன்னும் எத்தனையோ விசயங்கள் இருக்கின்றன. மேலும் நான் தோற்றுப் போன கதைகள் நிறைய இருக்கின்றன என்று நினைத்துப் பார்க்க வேண்டும். இப்படி எத்தனையோ குறைகள் ஒவ்வொரு மனிதனிடத்திலும் நிறையவே இருக்கத்தான் செய்கின்றன. எனவே இதுபோன்ற நிலைகளில் சுப்ஹானல்லாஹ் என்று சொல்லும் போது நம்முடைய ஆன்மீக நிலை உயர்கிறது.

சுப்ஹானல்லாஹ்விலுள்ள தத்துவம் என்னவென்றால், இதில் நான் ஒரு நிலையை அடைந்திருக்கிறேன். இன்னும் 99ல் குறையுடையவனாக இருக்கிறேன் என்று நாம் நினைத்தால், நம்மிடம் ஆணவப் போக்கு ஏற்படாது. அல்லாஹ்தான் 100 சதம் நிறைவுடையவனாக இருக்கிறான் என்று அர்த்தம் வரும். உதாரணத்திற்கு நான் கோடீஸ்வரனாக இருக்கிறேன். இப்போது பணம் என்கிற ஒன்றுதான் எனக்குக் கிடைத்திருக்கிறது. ஆனால் மற்றவைகள் எதுவும் என்னிடம் இல்லாம-லிருக்கிறது. பணம் இருக்கிறது, அதிகாரம் இல்லை. அந்தஸ்து இல்லை. இப்படி வேறெதாவது இல்லாமல் இருக்கும். ஆக இல்லாமல் இருப்பதுதான் என்னிடம் அதிகம் இருக்கிறது என்று நினைக்கும் நேரத்தில்தான் நான் ஒழுங்காக நடந்துகொள்வேன். ஒவ்வொரு மனிதனும் தானாகவே தன் நிலையை ஒழுங்காக்கிக் கொள்ளுவான். தனது ஆன்மீக நிலையை ஸ்திரமாக்கிக் கொள்ளுவான்.

அடுத்தது, 99 எனக்குக் கிடைக்காமல் இந்த ஒன்று எனக்குக் கிடைத்துவிட்டது என்றாலும் இந்த ஒன்றும் என்னால் கிடைக்கவில்லை என்று நம்பவேண்டும். அதற்குச் சொந்தக்காரன் அல்லாஹ்தான்.

அதாவது நமக்கு பதவிகளோ பட்டங்களோ அந்தஸ்தோ வெற்றியோ கிடைக்கும் போது நம்மிடம் இல்லாதவைகள்தான் அதிமாக இருக்கிறது என்று நினைக்க வேண்டும். அதுதான் سبحان الله என்பது.

الحمد لله அல்லாஹ்வுக்கே புகழ் அனைத்தும் என்று சொல்லும் போது எனக்கு இதுவரைக்கும் கிடைத்தவகளுக்கு நான் சொந்தக்காரனாக இல்லை என்று அர்த்தமாகும். என்னிடம் இருக்கும் குறைகளும் தோல்விகளும் என்னைச் சார்ந்தது. என்னிடம் இருக்கிறவைகளுக்கும் சொந்தக்காரன் அல்லாஹ்தான் என்பதற்குத்தான் بحمد ربك புகழ் அனைத்தும் அவனைத்தான் சேரும் என்பதாகும்.

இப்படியெல்லாம் சொன்னாலும் நம்மிடம் உள்ளுக்குள் ஒரு ஷைத்தான் இருந்து சலனத்தை ஏற்படுத்துக் கொண்டேயிருப்பான். அதற்குத்தான் أستغفر الله - அஸ்தஃபிருல்லாஹ் - யா அல்லாஹ்! என்னை மன்னித்துவிடு! என்று கேட்கவேண்டும். என்னைத் தாண்டியும் என்னிடம் ஷைத்தான் விளையாடுவதிலிருந்தும் என்னை மன்னித்துவிடு என்று கேட்பதாகும். எனவே இந்த மூன்றையும் சேர்த்துத்தான் سُبْحَانَكَ اللَّهُمَّ رَبَّنَا وَبِحَمْدِكَ اللَّهُمَّ اغْفِرْ لِي - சுப்ஹானகல்லாஹ‚ம்ம ரப்பனா வபிஹம்திக அல்லாஹ‚ம்ம ஃபிர்லி என்று நபியவர்கள் ஒவ்வொரு ருகூவிலும் ஓதுகிறார்கள்.

ஆக இந்த அத்தியாயத்தில் முன்னறிவிப்பும் இருக்கிறது. வரலாற்றுத் துணுக்குகளும் இருக்கின்றன. எல்லாவற்றுக்கும் இறைவன்தான் சொந்தக்காரன் என்கிற கொள்கை விளக்கமும் இருக்கிறது.

நம்மை நாமே பக்குவப்படுத்திக் கொள்ளுகிற ஆன்மீக அறிவுரையும் இருக்கிறது. அதாவது வாழ்க்கையில் ஏற்படுகிற வெற்றிகளின் போதும், எந்த நிலைக்கு உயர்ந்தாலும் நம்மிடம் ஆணவப் போக்கும் பெருமையும் ஏற்படாம-லிருப்பதையும் ஷைத்தான் அதன் மூலம் நம்மை தவறான பாதைக்குத் தள்ளிவிடாமலி-ருக்கவும் இந்த அத்தியாயத்திலி-ருப்பதை பிரார்த்தனையாக ஓதி நம்மை ஷைத்தானின் வலையிலி-ருந்து பாதுகாத்துக் கொள்ளவேண்டும்.

எனவே இந்த அத்தியாயத்தின் மூலம் நாம் படிப்பினை பெற்று நமது வாழ்க்கையில் கடைபிடிக்கிறவர்களாக அல்லாஹ் நம் அனைவரையும் ஆக்கி அருள்புரிவானாக!

மழை தொடர் : 2

ஒரு தண்ணீர் பல சுவைகள்

மங்களம் மைந்தன்

மழை பொழிவது பற்றிய ஞானம்

மனிதன் கூரிய மதியைப் பெற்றவனாக இருந்தாலும், அதன் மூலம் ஆற்றல் மிகு சாதனங்களை அறிவியல் கருவிகளைக் கண்டுபிடித்திருந்தாலும், அவனுக்கு மறைவான விஷயங்கள் அனைத்தும் தெரியாது. முக்காலத்தையும் தெரிந்தவனாக இருக்கும் இறைவனுக்கு மட்டுமே மறைவான விஷயங்கள் முழுமையாகத் தெரியும். அப்படி அவனுக்கு மட்டுமே தெரிந்த மறைவான விஷயங்களுள் மழை பொழிவது சம்பந்தமான ஞானமும் ஒன்றாகும். எப்போது, எங்கு, எந்தளவு மழை பொழியும்? என்ற பரிபூரணமான அறிவு, பிழையற்ற தகவல்கள் இறைவனின் மறைவான ஞானத்தில் இருப்பதாகும். இந்த பேருண்மையை பின்வரும் இறைசெய்திகள் விளக்குகின்றன.

அந்த நேரம் பற்றிய அறிவு அல்லாஹ்விடமே உள்ளது. அவன் மழையை இறக்குகிறான். கருவறைகளில் உள்ளதை அவன் அறிகிறான்.

தான், நாளை சம்பாதிக்கவுள்ளதை எவரும் அறியமாட்டார். தாம், எங்கே மரணிப்போம் என்பதையும் எந்த உயிரினமும் அறியாது. அல்லாஹ் நன்கறிந்தவன்; நுட்பமானவன்.

(திருக்குர்ஆன் 31 : 34)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மறைவானவற்றின் திறவு கோல்(கள்) ஐந்தாகும். அவற்றை இறைவனைத் தவிர வேறெவரும் அறியமாட்டார்கள். நாளை என்ன நடக்கும் என்பதை யாரும் அறியமாட்டார்கள். (பெண்கüன்) கருவறைகüல் என்ன உருவாகும் (பெண்ணா? ஆணா? என்று) யாரும் அறியமாட்டார்கள். எந்த உயிரும் தாம் நாளை எதைச் சம்பாதிக்கும் என்பதை அறியாது. எந்த உயிரும் தாம் எந்த இடத்தில் இறக்கும் என்பதை அறியாது. மழை எப்போது வரும் என்பதை யாரும் அறியமாட்டார்கள்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

ஆதாரம் : புகாரி (1039)

மழை வருவது தொடர்பான தகவல்களை வானிலை அறிஞர்களும் அற்புதமாக விளக்கமாக அறிவிக்கிறார்களே என்று அறிவுப்பூர்வமாக கேள்வியைத் தொடுக்கலாம். இந்தக் கேள்வி அர்த்தமற்ற கேள்வி என்பதற்கு அந்த வல்லுநர்களின் அறிவிப்பில் அடிக்கடி வெளிப்படும் அறியாமையே அடையாளமாக இருக்கிறது. அவர்களின் வாயிலாக தெரிவிக்கப்படும் மழை பற்றிய செய்திகள் பல நேரங்களில் பொய்த்துப் போவதை கண்கூடாகப் பார்க்கிறோம். மழை வரும் என்பார்கள். ஆனால், அதற்கு நேர்மாற்றமாக வெயில் சுட்டெரித்து அனல் வீசும். இந்த பகுதியிலே இடத்திலே மழை நிச்சயம் வரும் என்பார்கள். ஆனால், அந்த இடத்தைத் தவிர மற்ற அனைத்து இடங்களிலும் மழை பொழியும். இன்று முதல் தொடர்மழை இருக்கும் என்று செய்தி வாசிப்பார்கள். சிறுதூரலோடு மழைமேகம் கலைந்து சென்றுவிடும். இந்த நடைமுறை நிகழ்வுகள் மனிதர்கள் அனுமானத்தின் அடிப்படையிலேயே மழை பொழிவதைப் பற்றி சொல்கிறார்கள் என்பதற்கு சான்று பகர்வதாக இருக்கின்றன. இப்படியான அரை குறையான ஞானம் கொண்டவனல்ல இறைவன். அவன் மழை பொழிவதைப் பற்றித் துல்லி-யமாக தெரிந்தவன் என்பதை நாம் புரிந்து கொள்ள வேண்டும்.

மறுமையை உறுதிப்படுத்தும் மழைத்துளிகள்

இந்த உலகமும் இதில் கிடைத்திருக்கும் வாழ்க்கையும் நிரந்தரமானதல்ல. இந்த உலகம் ஒருநாள் ஒட்டுமொத்தாக தரைமட்டமாக்கப்படும். உயிருள்ள, உயிரற்ற எல்லா விதமான படைப்பினங்களும் அழிக்கப் படும். இந்த உலகில் இருந்த மனிதர்கள் அனைவரும் மீண்டும் உயிர்கொடுக்கப்பட்டு ஒட்டுமொத்தமாக ஒன்றுதிரட்டப்படுவார்கள். தங்களது செயல்களைப் பற்றி விசாரிக்கப்பட்டு கூலி- கொடுக்கப்படுவார்கள் என்று இஸ்லாம் சொல்கிறது. இது எப்படி சாத்தியம் எலும்புகளும் சதைகளும் மக்கிப்போன நிலையில் இருக்கும் இறந்தவர்கள் மீண்டும் உயிரோடு எழுந்து வருவது எப்படி சாத்தியம்? என்று குதர்க்கம் பேசுப வர்களுக்கு இறைவனின் மறுப்பாக இந்த மழை இருக்கிறது. மேலும், இது மறுமை விஷயத்தில் அரைகுறை நம்பிக்கையிலே சந்தேகத்திலே இருப்பவர்களுக்கு அழகிய பாடமாக இருக்கிறது.

மழையினால் ஏற்படும் மாற்றத்தை யோசித்தால் மறுமை என்றொரு வாழ்க்கை இருக்கிறது என்ற உறுதியான நம்பிக்கையை நாம் பெறலாம். பயிர்கள் முளைக்காத பொட்டல் நிலங்கள் மழை நீரின் மூலம் பசுமையாக மாறிவிடுவதைப் பார்க்கிறோம். காய்ந்துபோன விதைகள் துளிர்விட்டு கிளைகளை பரப்புவதைப் பார்க்கிறோம். இந்த இறந்த போன பூமியை மழையின் மூலம் புதுப்பித்து உயிர்ப்பிக்கும் இறைவனுக்கு மண்ணோடு மக்கிப்போன நம்மை எழுப்புவது கடினமானதல்ல.

இந்த முக்கியமான போதனை மழையில் இருப்பதை பின்வரும் சான்றுகளின் மூலம் தெரிந்து கொள்ளலாம்.

பூமியை வறண்டதாக நீர் காண்பதும் அவனது சான்றுகளில் உள்ளவை. அதன் மீது தண்ணீரை நாம் இறக்கும்போது அது செழித்து வளர்கிறது. இதை உயிர்ப்பிப்பவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன்.

(திருக்குர்ஆன் 41 : 39)

தனது அருளுக்கு முன்னால் நற்செய்தியாக அவனே காற்றை அனுப்புகிறான். அது கனமான மேகத்தைச் சுமக்கும் போது இறந்து போன ஊருக்கு அதை ஓட்டிச் செல்கிறோம். அதிலி-ருந்து தண்ணீரை இறக்கி, அதன் மூலம் எல்லாப் பலன்களையும் வெளிப்படுத்துகிறோம். இவ்வாறே இறந்தோரையும் வெளிப்படுத்துவோம். (இதன் மூலம்) நீங்கள் படிப்பினை பெறக்கூடும்.

(திருக்குர்ஆன் 7 : 57, 58)

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைத்துவிடுகிறது. இறந்த ஊருக்கு அதைப் பொழிவிக்கிறோம். அதன் மூலம் இறந்த பூமியை உயிர்ப்பிக்கிறோம். மீண்டும் எழுப்புவதும் இவ்வாறே.

(திருக்குர்ஆன் 35 : 9)

அவனே வானத்திலி-ருந்து அளவுடன் தண்ணீரை இறக்கினான். இறந்த ஊரை அதன் மூலம் உயிர்ப்பிக்கிறோம். இவ்வாறே நீங்களும் வெளிப்படுத்தப்படுவீர்கள்.

(திருக்குர்ஆன் 43 : 11)

வானத்திலி-ருந்து பாக்கியம் மிக்க தண்ணீரை இறக்கினோம். அதன் மூலம் செத்த ஊரை உயிர்ப்பித்தோம். இவ்வாறே (இறந்தோரை) வெளிப்படுத்துதலும் (நிகழும்).

(திருக்குர்ஆன் 50 : 9)

அல்லாஹ்வே காற்றை அனுப்புகிறான். அது மேகத்தைக் கலைக்கின்றது. அவன் விரும்பியவாறு அதை வானில் பரவச் செய்கிறான். அதைப் பல துண்டுகளாக ஆக்குகிறான். அதற்கிடையில் மழை வெளியேறுவதைக் காண்கிறீர். தனது அடியார்களில் தான் நாடியோருக்கு அதை சுவைக்கச் செய்யும் போது அவர்கள் மகிழ்ச்சியடைகின்றனர். இதற்கு முன் (அதாவது) அவர்களுக்கு அது அருளப்படுவதற்கு முன் நம்பிக்கையிழந்திருந்தனர்.

பூமி இறந்த பின் அதை எவ்வாறு அல்லாஹ் உயிர்ப்பிக்கிறான் என்று அவனது அருளின் அறிகுறிகளைப் பார்ப்பீராக! அவன் இறந்தோரை உயிர்ப்பிப்பவன். அவன் அனைத்துப் பொருட்களின் மீதும் ஆற்றலுடையவன்.

(திருக்குர்ஆன் 30 : 48)

மனிதர்களே! மீண்டும் உயிர்ப்பிக்கப்படுவதில் நீங்கள் சந்தேகத்தில் இருந்தால் உங்களுக்குத் தெளிவுபடுத்துகிறோம். உங்களை மண்ணால், பின்னர் விந்தால், பின்னர் கருவுற்ற சினை முட்டையால், பின்னர் முழுமைப்படுத்தப்பட்டதும் முழுமைப்படுத்தப்படாததுமான தசைக்கட்டியால் படைத்தோம். நாம் நாடியதைக் கருவறைகளில் குறிப்பிட்ட காலம் வரை நிலை பெறச் செய்கிறோம். பின்னர் உங்களைக் குழந்தையாக வெளிப்படுத்துகிறோம். பின்னர் உங்கள் பருவத்தை அடைகின்றீர்கள். உங்களில் கைப்பற்றப்படுவோரும் உள்ளனர். அறிந்த பின் எதையும் அறியாமல் போவதற்காக தள்ளாத வயது வரை கொண்டு செல்லப் படுவோரும் உங்களில் உள்ளனர். பூமியை வறண்டதாகக் காண்கிறீர். அதன் மீது நாம் தண்ணீரை இறக்கும் போது, அது செழித்து வளர்ந்து அழகான ஒவ்வொரு வகையையும் முளைக்கச் செய்கிறது.

(திருக்குர்ஆன் 22: 5)

அபூஸாலிஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அந்த இரு எக்காளத்திற்கு (ஸூர்) மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பதாகும்'' என்று கூறியதாக அபூஹுரைரா (ர-லி) அவர்கள் தெரிவித்தார்கள். அப்போது மக்கள், "அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா?'' என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ரலி-) அவர்கள், "(இதற்குப் பதில் சொல்வதி-லிருந்து) நான் விலகிக்கொள்கிறேன்'' என்று கூறினார்கள். மக்கள், "மாதங்களில் நாற்பதா?'' என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ர-லிலி) அவர்கள், "(மீண்டும் நான் விலகிக்கொள்கிறேன்'' என்று சொன்னார்கள். மக்கள், "வருடங்களில் நாற்பதா?'' என்று கேட்டார்கள். அபூஹுரைரா (ர-லி)

அவர்கள் (மீண்டும்), "நான் விலகிக் கொள்கிறேன் (எனக்கு இது குறித்துத் தெரியாது)'' என்று கூறிவிட்டு, "பிறகு அல்லாஹ், வானத்திலிருந்து ஒரு நீரை இறக்குவான். உடனே இ(றந்துபோன)வர்கள் பச்சைப் புற்பூண்டுகள் முளைப்பதைப் போன்று எழுவார்கள். மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப்போய் விடும்; ஒரே ஒரு எலும்பைத் தவிர! அது (அவனது முதுகுத்தண்டின் வேர்ப் பகுதியிலி-ருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியாகும். அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும்'' என்று சொன்னார்கள்.

ஆதாரம் : முஸ்-லிம் (5660)

மழையை மையமாக வைத்து பிரச்சாரம்

ஏக இறைவனை மட்டுமே வணங்க வேண்டும்; அவன் சொன்னபடி வாழ வேண்டும்; அவனுக்கு எந்தவிதத்திலும் இணையாளர்களை ஏற்படுத்தக்கூடாது என்று மக்களுக்கு எடுத்துரைத்தார்கள், இறைத் தூதர்கள். இறைவன் கொடுத்த தூதுத்துவக் கருத்துக்களை போதித்தார்கள். இறைவனின் மகத்தான ஆற்றலை, வல்லமையை எடுத்துச் சொல்லி அழைப்புப்பணி செய்தார்கள். இந்த வகையில் இறைவனின் மகதக்தான அருளாக இருக்கும் மழையைப் பற்றி போதித்தும் இறைத்தூதர்கள் பிரச்சாரத்தை முன்வைத்துள்ளார்கள். ஏக இறைவனாக இருக்கும்

அல்லாஹ்விற்கு அடிபணிந்து வாழ்ந்தால் அவன் உங்களது பாவங்களைப் போக்குவான்; சொர்க்கத்தைத் தருவான் என்று சொல்வது போன்று அவன் உங்களுக்கு மழையைத் தருவான் என்று உறுதியளித்து உண்மையின் பக்கம் அழைத்தார்கள். இவ்வாறு, நூஹ் (அலை) மற்றும் ஹூது (அலை) இருவரும் செய்த பிரச்சாரத்தை இறைவன் திருமறையில் குறிப்பிடுகிறான்.

நீங்கள் இறைவனுக்கு சரியான முறையில் நன்றி செலுத்தினால் சிறப்பான வாழ்விற்கு மிக முக்கிய காரணியாக இருக்கும் மழையைக் கொடுத்து அவன் உங்களுக்கு உதவிபுரிவான் என்று போதித்தார்கள். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

"உமது சமுதாயத்திற்கு துன்புறுத்தும் வேதனை வருவதற்கு முன் அவர்களை எச்சரிப்பீராக'' என்று நூஹை அவரது சமுதாயத்திடம் நாம் அனுப்பினோம். "என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! அவனுக்கு அஞ்சுங்கள்! எனக்குக் கட்டுப்படுங்கள்! என்று நான் உங்களுக்கு தெளிவாக எச்சரிப்பவன்'' என்று அவர் கூறினார். அவன் உங்கள் பாவங்களை மன்னிப்பான். குறிப்பிட்ட தவணை வரை உங்களுக்கு அவகாசம் தருவான். அல்லாஹ்வின் தவணை வரும் போது அது பிற்படுத்தப்படாது. நீங்கள் அறிந்து கொள்ள வேண்டாமா? "என் இறைவா! என் சமுதாயத்தை இரவிலும், பக-லிலும் நான் அழைத்தேன்'' என்று அவர் கூறினார். எனது அழைப்பு வெறுப்பைத் தவிர வேறு எதையும் அவர்களுக்கு அதிகமாக்கவில்லை. நீ அவர்களை மன்னிப்பதற்காக நான் அவர்களை அழைத்தபோதெல்லாம் தமது விரல்களைத் தமது காதுகளில் வைத்துக் கொள்கின்றனர். தமது ஆடைகளால் மூடிக் கொள்கின்றனர். பிடிவாதம் பிடிக்கின்றனர். அதிகம் அகந்தை கொள்கின்றனர். பின்னர் அவர்களை நான் உரத்த குரலி-ல் அழைத்தேன். பின்னர் அவர்களைப் பகிரங்கமாக வும் அழைத்தேன். மிகவும் இரகசியமாகவும் அழைத்தேன். உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான்'' என்று கூறினேன். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான். செல்வங்கள் மூலமும், மக்கள் மூலமும் உங்களுக்கு உதவுவான். உங்களுக்காக சோலைகளை ஏற்படுத்துவான். உங்களுக்காக நதிகளையும் ஏற்படுத்துவான். உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வுக்கு எந்த மரியாதையையும் வழங்காதிருக்கிறீர்கள்! உங்களை அவன் பல வகைகளாகப் படைத்தான். ஏழு வானங்களை அல்லாஹ் எவ்வாறு அடுக்கடுக்காகப் படைத்துள்ளான் என்பதை நீங்கள் காணவில்லையா? அவற்றில் சந்திரனை ஒளியாக அமைத்தான். சூரியனை விளக்காக அமைத்தான். அல்லாஹ் உங்களைப் பூமியிலிருந்தே வளர்த்துப் பெரிதாக்கினான். பின்னர் அதிலேயே உங்களை மீட்டுவான். (அதிலிருந்தே) உங்களை வெளியேற்றுவான். பூமியில் உள்ள பல வழிகளில் நீங்கள் செல்வதற்காக அல்லாஹ்வே உங்களுக்காக அதை விரிப்பாக அமைத்தான்.

(திருக்குர்ஆன் 71 : 1 முதல் 20 வரை)

ஆது சமுதாயத்திடம், அவர்களது சகோதரர் ஹூதை (அனுப்பினோம்)."என் சமுதாயமே! அல்லாஹ்வை வணங்குங்கள்! உங்களுக்கு அவனன்றி வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. நீங்கள் கற்பனை செய்வோராகவே இருக்கிறீர்கள்'' என்று அவர் கூறினார். "என் சமுதாயமே! இதற்காக உங்களிடம் நான் எந்தக் கூலி-யும் கேட்கவில்லை. என்னைப் படைத்தவனிடமே எனக்குரிய கூலி- உள்ளது. விளங்கமாட்டீர்களா?'' "என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு, தொடர்ந்து வானத்தைப் பொழியச் செய்வான். வலிமைக்கு மேல் வலிமையை உங்களுக்கு அதிகமாக்குவான். குற்றவாளிகளாகி புறக்கணிக்காதீர்கள்!'' (எனவும் கூறினார்)

(திருக்குர்ஆன் 11 : 50 முதல் 52 வரை)

மழை மூலம் கிடைக்கும் உதவி

உங்கள் இறைவனிடம் மன்னிப்புத் தேடுங்கள்! அவன் மன்னிப்பவனாக இருக்கிறான். உங்களுக்கு அவன் தொடர்ந்து மழையை அனுப்புவான்'' என்று நூஹ் (அலை) அவர்களும், "என் சமுதாயமே! உங்கள் இறைவனிடம் பாவமன்னிப்புத் தேடுங்கள்! அவனை நோக்கித் திரும்புங்கள்! அவன் உங்களுக்கு தொடர்ந்து வானத்தைப் பொழியச் செய்வான் என்று ஹƒத் (அலை) அவர்களும் மக்களுக்கு செய்த பிரச்சாரத்தின் மூலம் மழையைக் கொடுத்து இறைவன் தனது நல்லடியார்களுக்கு உதவிபுரிவான் என்பதை தெரிந்து கொள்ளலாம். இப்படி இறைவனின் உதவி மழையின் மூலமாகவும் நமக்கு கிடைக்கும் என்பதற்கு நபிகளார் காலத்தில் நடந்த சம்பவமும் மிகப்பெரும் சான்றாக இருக்கிறது. ஏகத்துவத்தை ஏற்றுக் கொண்ட நல்லடியார்களை ஒழிப்பதற்கு இஸ்லாமிய எதிரிகள் படைகளைத் திரட்டிக்கொண்டு வந்தபோது இருசாரார்களுக்கும் இடையே பத்ரு என்ற இடத்தில் யுத்தம் தொடங்கியது. அப்போது, அசத்தியவாதிகளை எதிர்த்து நிற்பதற்குரிய வலி-மையை சத்தியவாதிகளுக்கு மனதளவிலும் உடலளவிலும் கொடுப்பதற்கு வல்ல இறைவன் மழையை தந்தருளினான்.

இவ்வாறு நம்பிக்கைக் கொண்டு நல்லறங்கள் செய்யும் மக்களுக்கு மழையின் மூலம் உதவிபுரிவான்; அவர்களின் வாழ்வில் வளம் கொடுப்பான் என்பதற்கு பத்ரு போரைப் பற்றிய பின்வரும் வசனமும், அதையடுத்து இருக்கும் மற்றொரு நபிமொழியும் சான்றாக இருக்கின்றன.

உங்கள் இறைவனிடம் நீங்கள் உதவி தேடி முறையிட்டுக் கொண்டிருந்ததையும் நினைத்துப் பாருங்கள். அப்போது அவன் "ஓராயிரம் வானவர்களைத் தொடர்ச்சியாக அனுப்பி, திண்ணமாக உங்களுக்கு நான் உதவிசெய்வேன்'' எனப் பதிலüத்தான். அல்லாஹ் இதனை, உங்களுக்கு ஒரு நற்செய்தியாகவும் இதன் மூலம் உங்கள் இதயங்கள் நிம்மதி அடைவதற்காகவுமே ஆக்கினான்! தவிர, வெற்றி (என்றைக்கும்) அல்லாஹ்விடமிருந்து தான் ஏற்படுகின்றது. நிச்சயமாக அல்லாஹ் யாவற்றையும் மிகைத்தவன்; நுண்ணறிவாளன்.

(நபியே! இதையும்) நினைத்துப் பாருங்கள்: அல்லாஹ் உங்களைச் சிற்று றக்கம் கொள்ளச் செய்து தன் சார்பி-ரு-ந்து உங்களுக்கு (மன) அமைதியை ஏற்படுத்தினான். மேலும், உங்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவும், ஷைத்தான் ஏற்படுத்திய அசுத்தங்களை உங்களை விட்டு அகற்றுவதற்காகவும், உங்கள் இதயங்களை வலுப்படுத்துவதற்காகவும், அதன் மூலம் உங்கள் பாதங்களை நிலைப்படுத்துவதற்காகவும் வானத்தி-ருந்து உங்கள் மீது மழையையும் பொழியச் செய்தான். (நபியே! இதனையும்) நினைவுகூருங்கள்: உங்கள் இறைவன் வானவர்கüடம் அறிவித்துக் கொண்டிருந்தான்: நிச்சயமாக நான் உங்களோடு இருக்கின்றேன். எனவே நம்பிக்கையாளர்களை நீங்கள் உறுதியாக இருக்கச் செய்யுங்கள். இதோ! மறுத்துவிட்டவர்கüன் உள்ளங்கüல் நான் பீதியை ஏற்படுத்தி விடுகின்றேன். எனவே, (நம்பிக்கையாளர்களே!) நீங்கள் அவர்களுடைய பிடரிகüல் தாக்குங்கள். அவர்கüன் ஒவ்வொரு விரல் மூட்டுகüலும் அடியுங்கள். (என்று கூறுங்கள்.) இதற்குக் காரணம், (இறைமறுப்பாளர்களான) அவர்கள் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் எதிர்த்துக் கொண்டிருந்தது தான். மேலும், அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் யார் எதிர்க்கின்றார்களோ (அவர்களை) நிச்சயமாக அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவனாய் இருக்கின்றான்.

(திருக்குர்ஆன் 8 : 9 முதல் 13 வரை)

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள் ஒரு மனிதர் ஒரு காட்டு நிலத்தில் இருந்த போது, ஒரு மேகத்தினிடையே "இன்ன மனிதரின் தோட்டத்திற்கு நீர் பொழி' என்று ஒரு சப்தம் வருவதைக் கேட்டார். உடனே அந்த மேகம் நகர்ந்து, கருங்கற்கள் நிறைந்த ஒரு பகுதியில் மழையைப் பொழிந்தது. அங்கிருந்த நீரோடைகளில் ஒன்றில் அந்த நீர் முழுவதும் ஓடியது. உடனே அந்த மனிதர் அந்த நீர்வழியைத் தொடர்ந்தார். அப்போது ஒரு மனிதர் தமது தோட்டத்தில் நின்றுகொண்டு மண் வெட்டியால் தண்ணீரை திருப்பிவிட்டுக்கொண்டிருந்தார்.

அவரிடம், "அல்லாஹ்வின் அடியாரே! உம்முடைய பெயர் என்ன?'' என்று கேட்டார். அவர் "இன்னது' என மேகத்தினிடையே கேட்ட அதே பெயரைச் சொன்னார். அப்போது அவர், "அல்லாஹ்வின் அடியாரே! ஏன் என் பெயரைக் கேட்கிறீர்?'' என்றார். அதற்கு அந்த மனிதர், "நான் மேகத்தினிடையே உமது பெயரைக் குறிப்பிட்டு, "இன்ன மனிதரின் தோட்டத்தில் நீரைப் பொழி' என ஒரு சப்தத்தைக் கேட்டேன். அந்த மேகத்தின் நீர்தான் இது. அந்தத் தோட்டத்தி(ன் மூலம் கிடைக்கும் வருவாயி)ல் நீர் என்ன செய்கிறீர்?'' என்று கேட்டார். அதற்கு அந்தத் தோட்டக்காரர், "நீங்கள் சொல்வது உண்மையானால், அதன் விளைச்சலில் கிடைக்கும் வருவாயில் மூன்றில் ஒரு பகுதியைத் தர்மம் செய்கிறேன். மற்றொரு மூன்றில் ஒரு பகுதியை நானும் என் மனைவி மக்களும் உண்கிறோம். இன்னொரு மூன்றில் ஒரு பகுதியை மறுபடியும் விவசாயம் செய்கிறேன்'' என்று கூறினார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி)

ஆதாரம் : புகாரி (5707)

மழை வடிவில் வரும் வேதனை

இறைவன், தன்னை நம்பிக்கை கொண்டு நல்ல முறையில் கட்டுப்பட்டு வாழும் நன்மக்களுக்கு மகத்தான அருள்களை முன்வந்து கொடுப் பவன். அந்த வகையிலே, தனக்கு சரியான முறையில் நன்றி செலுத்தும் மக்களுக்கு மழையைக் கொடுத்து பெரும் பாக்கியத்தைச் செய்கிறான்.

இதுபோன்று, தன்னை ஏற்றுக் கொள்ளாமல் மாறு செய்து வாழும் மக்களுக்கு மேலதிகமான வாழ்வாதாரங்களை வளங்களை விரும்பிய விதத்தில் கொடுக்காமல் தண்டிக்கிறான். இதற்கும் மேலாக, அசத்தியத்தில் இருந்து கொண்டு ஆணவத்தில் அலைந்த அழிச்சாட்டியம் செய்த மக்களுக்கு மழையைக் கொடுத்து அந்த மழையின் மூலமாகவே அவர்களை அழித்தும் இருக்கிறான். இதையறிந்து, இறைநம்பிக்கையாளர்கள் இறைநெறிக்கு மாறு செய்யாமல் முழுமையாக அவனுக்கு அடிபணிந்து வாழவேண்டும். இல்லையெனில், இறைவன் நாடினால் மழையின் மூலமாகவும் நம்மை தண்டிப்பான்; அதற்குரிய ஆற்றல் அவனுக்கு இருக்கிறது என்பதை நினைவில் கொள்ள வேண்டும். இதற்கு சான்றாக குர்ஆனில் இருக்கும் வசனங்களைப் பார்ப்போம்.

நமது கட்டளை வந்து, தண்ணீர் பொங்கிய போது "ஒவ்வொன்றிலும் ஒரு ஜோடியையும், உமது குடும்பத்தாரில் நமது விதி முந்தி விட்டவர்களைத் தவிர மற்றவர்களையும், நம்பிக்கை கொண்டோரையும் ஏற்றிக் கொள்வீராக!'' என்று கூறினோம். அவருடன் மிகச் சிலரே நம்பிக்கை கொண்டனர்.

"இதில் ஏறிக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வின் பெயராலேயே இது ஓடுவதும், நிற்பதும் உள்ளது. என் இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறினார். மலைகளைப் போன்ற அலை மீது அது அவர்களைக் கொண்டு சென்றது. விலகி இருந்த தன் மகனை நோக்கி "அருமை மகனே! எங்களுடன் ஏறிக் கொள்! (ஏக இறைவனை) மறுப்போருடன் ஆகி விடாதே!'' என்று நூஹ் கூறினார். "ஒரு மலையில் ஏறிக் கொள்வேன்; அது என்னைத் தண்ணீரிலிருந்து காப்பாற்றும்'' என்று அவன் கூறினான். "அல்லாஹ் அருள் புரிந்தோரைத் தவிர அல்லாஹ்வின் கட்டளையிலி-ருந்து காப்பாற்றுபவன் எவனும் இன்று இல்லை'' என்று அவர் கூறினார். அவ்விருவருக் கிடையே அலை குறுக்கிட்டது. அவன் மூழ்கடிக்கப்பட்டோரில் ஆகி விட்டான். "பூமியே! உனது தண்ணீரை நீ உறிஞ்சிக் கொள்! வானமே நீ நிறுத்து!'' என்று (இறைவனால்) கூறப்பட்டது. தண்ணீர் வற்றியது. காரியம் முடிக்கப்பட்டது. அந்தக் கப்பல் ஜூதி மலை மீது அமர்ந்தது. அநீதி இழைத்த கூட்டத்தினர் (இறையருளை விட்டும்) தூரமானோர் எனவும் கூறப்பட்டது.

(திருக்குர்ஆன் 11 : 40 முதல் 44 வரை)

அவர்களுக்கு முன் நூஹுடைய சமுதாயம் பொய்யெனக் கருதியது. அவர்கள் நமது அடியாரைப் பொய்யரென்றனர். பைத்தியக்காரர் என்றனர். அவர் விரட்டப்பட்டார். "நான் தோற்கடிக்கப்பட்டு விட்டேன்; எனவே நீ உதவி செய்வாயாக!'' என்று அவர் தமது இறைவனிடம் பிரார்த்தித்தார். அப்போது வானத்தின் வாசல்களைக் கொட்டும் நீரால் திறந்து விட்டோம். பூமியில் ஊற்றுகளைப் பீறிட்டு ஓடச் செய்தோம். ஏற்கனவே திட்டமிட்டபடி தண்ணீர் இணைந்தது. பலகைகள் மற்றும் ஆணிகள் உடைய (கப்பல்) ஒன்றில் அவரை ஏற்றினோம். அது நமது கண்காணிப்பில் ஓடியது. இது (தன் சமுதாயத்தால்) மறுக்கப் பட்டவருக்கு (நூஹுக்கு) உரிய கூ-லி. அதை சான்றாக விட்டு வைத்தோம். படிப்பினை பெறுவோர் உண்டா?. எனது வேதனையும், எனது எச்சரிக்கைகளும் எவ்வாறு இருந்தன?

(திருக்குர்ஆன் 54 : 9 முதல் 16 வரை)

"அல்லாஹ்வைத் தவிர (யாரையும்) நீங்கள் வணங்கக் கூடாது; மகத்தான நாளின் வேதனையை உங்கள் விஷயத்தில் நான் அஞ்சுகிறேன்'' என்று ஆது சமுதாயத்திற்கு அவர்களின் சகோதரர் மணற் குன்றுகளில் நின்று எச்சரித்ததை நினைவூட்டுவீராக! எச்சரிப்போர் அவருக்கு முன்பும் பின்பும் சென்றுள்ளனர். "எங்கள் கடவுள்களை விட்டும் எங்களைத் திருப்புவதற்காக நீர் எங்களிடம் வந்துள்ளீரா? நீர் உண்மையாளராக இருந்தால் நீர் எங்களுக்கு எச்சரிப்பதை எங்களிடம் கொண்டு வருவீராக!'' என்று கேட்டனர். "(இது பற்றிய) ஞானம் அல்லாஹ்விடமே உள்ளது. நான் எதைக் கொடுத்து அனுப்பப்பட்டுள்ளேனோ அதை உங்களுக்கு எடுத்துச் சொல்கிறேன். எனினும் அறியாத கூட்டமாகவே உங்களை நான் கருதுகிறேன்'' என்று அவர் கூறினார். தமது பள்ளத் தாக்குகளை நோக்கி வரும் மேகமாகவே அதை அவர்கள் கருதினார்கள். "இது நமக்கு மழை பொழியும் மேகமே'' எனவும் கூறினர். "இல்லை! இது எதற்கு அவசரப்பட்டீர்களோ அதுவே. துன்புறுத்தும் வேதனை நிரம்பிய காற்றாகும்'' (என்று கூறப்பட்டது.)

(திருக்குர்ஆன் 46 : 21 24)

மேற்கண்ட வசனங்களின் மூலம், நூஹ் (அலை) மற்றும் ஹூத் (அலை) ஆகிய இரு இறைத்துதர்களின் சமுதாயத்திலே ஓரிறைக் கொள்கையை ஏற்றுக் கொள்ளாமல் தர்க்கம் செய்தவர்கள், இறைமறுப்பிலே பெருமிதம் கொண்டவர்கள் மழையின் மூலமும் மழைமேகம் மூலமாகவும் அழிக்கப்பட்டார்கள் என்பதை நாம் தெரிந்து கொள்ளலாம். இவ்வாறு மழையின் மூலமாக தண்டனை கொடுக்கப்பட்ட வரலாற்றிலே, இறைவனைப் பற்றிய பார்வை நமக்கு எப்படி இருக்க வேண்டும்? என்பதற்கான பாடம் இருக்கிறது. எப்போதும் இறைவனுக்கு இருக்கும் அதிகாரத்தை ஆற்றலை நாம் நினைவில் கொள்ள வேண்டும் என்ற படிப்பினை இருக்கிறது. நம்மை மழை மூலம் தண்டிப்பதற்கும் வலி-மை பெற்றவனாக இறைவன் இருக்கிறான் என்பதை மறப்பவர்களாகவோ மறுப்பவர்களாகவோ இறையச்சம் கொண்டவர்கள் இருந்துவிடக்கூடாது. காரணம், இறைத்தூதர் (ஸல்) அவர்களே மழை மேகத்தைப் பார்த்து, இது இறைவனின் கடுமையான தண்டனையாக இருக்குமோ? என்று பயந்துள்ளார்கள்; இறைவனின் மீதான பயத்தை இறையச்சத்தைப் பிரதிப-லித்துள்ளார்கள். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

ஆயிஷா (ர-லி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் மழை மேகத்தை வானத்தில் கண்டால் முன்னால் நடப்பார்கள்; பிறகு திரும்பி நடப்பார்கள்; (தமது அறைக்கு) உள்ளே போவார்கள்; வெüயே வருவார்கள். (நிம்மதியற்று ஒரு விதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) அவர்களுடைய முகம் மாறி விடும். வானம், மழை பொழிந்து விட்டால் அந்த (தவிப்பான) நிலை அவர்களை விட்டு நீங்கி விடும். ஆகவே, (ஒரு முறை) நான் அவர்களுக்கு அந்தத் தவிப்பான நிலை ஏற்படுவதை கவனத்திற்குக் கொண்டு வந்தேன். அதற்கு நபி(ஸல்) அவர்கள்,"(திருக்குர்ஆனில் கூறப்பட்டுள்ளபடி) ஆது சமுதாயத்தார், அந்த வேதனை (கொணரும் மேகம்) தாங்கள் வசித்த பள்ளத்தாக்குகளை நோக்கி வந்து கொண்டிருப்பதைக் கண்ட போது (தவறாகப் புரிந்து கொண்டு), "இது நமக்கு மழை பொழிவிக்கும் மேகமாகும்'' (46:24) என்று கூறினார்களே அத்தகைய (வேதனையைக் கொணரக் கூடிய) மேகமாகவும் இது இருக்கலாம். எனக்குத் தெரியாது'' என்று பதிலளித்தார்கள்.

ஆதாரம் : புகாரி (3206) (4829)

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ர-லி) அவர்கள் கூறியதாவது:

(சூறாவளிக்) காற்று, மழைமேகம் ஆகியவை மிகுந்துள்ள நாட்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒரு விதமான கலக்கம்) தென்படும்; முன்னும் பின்னும் நடப்பார்கள். (நிம்மதியற்று ஒருவிதத் தவிப்புடன் காணப்படுவார்கள்.) மழை பொழிந்துவிட்டால் அந்த (தவிப்பு) நிலை அவர்களைவிட்டு நீங்கி விடும்; மகிழ்ச்சி வந்துவிடும். நான் அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டதற்கு, "அது என் சமுதாயத்தார்மீது சாட்டப்பட்ட (இறைவனின்) வேதனையாக இருக்குமோ என்று நான் அஞ்சினேன்'' என்று விடையளித்தார்கள். அவர்கள் மழையைக் காணும்போது "(இது இறைவனின்) அருள்'' என்று கூறுவார்கள்.

(ஆதாரம் : முஸ்லிம் 1639) (1640) (1641)

இஸ்லாம் கூறும் சகிப்புத் தன்மை தொடர் : 2

பொறுமையின் சிகரம் நபிகளார்

ராஜ்முஹம்மத், சுவாமிமலை

கோபத்தின் போது பொறுமையைக் கடைபிடித்தல்

ஷைத்தான் மனிதனை ஆக்கிரமிப்பதற்கு அவனுடைய முதல் வேலை மனிதனுக்கு கோபத்தைச் சீண்டி விடுவதுதான். தேவையில்லாத விஷயத்திற்கு ஒருவர் கோபப்பட்டால் அவரிடம் ஷைத்தான் குடி கொண்டிருக்கிறான் என்பதை தெளிவாகத் தெரிந்து கொள்ளலாம். எதிரில் யார் நிற்கிறார் என்று கூடத் தெரியாத அளவுக்கு கடும் சொற்களால் காயப்படுத்துவார். சிலவேளை அதையும் கடந்து சட்டைக் கையை மடக்கி முழங்கைக்கு மேல் உயர்த்திக் கொண்டு பாய்வதற்கும் தயாராகி விடுவார். அதே போல் கோபத்தினால் பல விபரீதமான காரியங்கள் நடப்பதை நாம் காண்கிறோம்.

மேலும் ஒருவன் தன்னை வீரன் என்று காட்டுவதற்காகவும் கோபத்தைக் காட்டுவான், இவருக்கு சமுதாயம் வீரன் என்று பட்டம் சூட்டி விடும். ஆனால் இஸ்லாத்தின் பார்வையில் இவன் வீரனல்ல. வீரன் என்பவன் யாரென்றால் தனக்கு கோபம் வரும் போது பொறுமையைக் கடைப்பிடிக்கக் கூடியவன் தான் வீரன் என்று இஸ்லாம் கூறுகிறது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அடித்து வீழ்த்துபவன் வீரனல்லன்'' என்று கூறினார்கள். மக்கள், "அப்படியானால், வீரன் என்பவன் யார், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "கோபத்தின்போது தன்னைக் கட்டுப்படுத்திக்கொள்பவனே (வீரன் ஆவான்)'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி),

நூல் : முஸ்-லிம் 5086

கோபம் மனிதனுக்குத் தேவைதான். தேவை இல்லை என்று கூறிட முடியாது ஆனால் அதை தேவைக்கேற்ப பிரயோகிக்க வேண்டும்.

பழி தீர்ப்பதை விட பொறுமையே சிறந்தது

ஒருவரை பலிழிக்குப் பழிலி வாங்குவதை விட பொறுமையை கடைப்பிடிப்பதே சிறந்து என்று அல்லாஹ் கூறியுள்ளான்.

நீங்கள் தண்டிப்பதாக இருந்தால் நீங்கள் துன்புறுத்தப்பட்ட அளவுக்குத் தண்டியுங்கள்! நீங்கள் பொறுமையைக் கடைப்பிடித்தால் பொறுமையாளர்களுக்கு அதுவே சிறந்தது. பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நீர் பொறுமையாக இருப்பது அல்லாஹ்விடமே உள்ளது. அவர்களுக்காகக் கவலைப்படாதீர்! அவர்கள் சூழ்ச்சி செய்வதால் சஞ்சலத்துக்கும் ஆளாகாதீர்!

அல்குர்ஆன் 16:126-127

லுக்மான் தனது மகனுக்கு பொறுமையை போதித்தார்

நபி (ஸல்) அவர்களின் காலத்திற்கு முன்னால் வாழ்ந்த நல்லடியாரான லுக்மான் அவர்களின் வாழ்க்கையைப் பற்றி அல்லாஹ் கூறும் போது அவர் தன் மகனிடம் இறைவனுக்கு இணைகற்பிக்காமல் அவனை மட்டுமே வணங்க வேண்டும், பெற்றோருக்கு உதவ வேண்டும், பிறரிடத்தில் அழகிய முறையில் நடக்க வேண்டும், நல்லவர்களின் வாழ்க்கையைப் பின்பற்ற வேண்டும், தர்மம் வழங்க வேண்டும், நன்மையை ஏவி, தீமையைத் தடு, சோதனை வரும் போது பொறுமையாக இருக்க வேண்டும், பிறரிடத்தில் கண்ணியமாக நடக்க வேண்டும், கர்வமாக நடக்கக் கூடாது என்று மிக அழகான முறையில் அறிவுரை வழங்கியுள்ளார். சகித்துக் கொள்ளுதல் என்ற செயலை மிக சிறப்புக்குரிய காரியமாக அவர்கள் தன் மகனிடம் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

என் அருமை மகனே! தொழுகையை நிலை நாட்டு! நன்மையை ஏவு! தீமையைத் தடு! உனக்கு ஏற்படுவதைச் சகித்துக் கொள்! அது உறுதி மிக்க காரியமாகும்.

அல்குர்ஆன் 31:17

யூசுப் (அலை) அவர்களின் பொறுமை

"எங்கள் தந்தையே! நாங்கள் போட்டி போட்டு ஓடினோம். எங்கள் பொருளுக்கருகில் யூஸுஃபை விட்டுச் சென்றோம். அப்போது அவரை ஓநாய் தின்று விட்டது. நாங்கள் உண்மை கூறுவோராக இருந்த போதும் நீங்கள் எங்களை நம்புபவராக இல்லை'' என்றனர். அவரது சட்டையைப் பொய்யான இரத்தத்துடன் கொண்டு வந்தனர். "உங்கள் உள்ளங்கள் உங்களுக்கு ஒரு காரியத்தை அழகாகச் சித்தரித்து விட்டன. அழகிய பொறுமையை மேற்கொள்கிறேன். நீங்கள் கூறும் விஷயத்தில் அல்லாஹ்வே உதவி தேடப்படுபவன்'' என்று அவர் கூறினார்.

அல்குர்ஆன் 12:17-18

அய்யூப் (அலை) அவர்களின் பொறுமை

இவர் இறைத்தூதர்களில் ஒருவராவார். யூத, கிறித்தவர்கள் இவரை யோபு என்பர். இவ்வுலகில் பல்வேறு நோய்களாலும், வறுமையாலும் கடுமையாக இவர் சோதிக்கப்பட்டார். குடும்பத்தினரையும் இழந்தார். பின்னர் இறையருளால் நோய்கள் விலகின. அவரது குடும்பத்தினரும் திரும்பக் கிடைத்தனர். பொறுமைக்கு எடுத்துக்காட்டாக இவர் அமைந்துள்ளார்.

(அவரது உட-லில் புழுக்கள் உற்பத்தியாகின என்றெல்லாம் கட்டுக்கதைகள் உள்ளன. அவற்றுக்கு எவ்வித ஆதாரமும் இல்லை.)

"எனக்குத் துன்பம் நேர்ந்து விட்டது. நீ கருணையாளர்களுக்கெல்லாம் கருணையாளன்'' என அய்யூப் தமது இறைவனை அழைத்த போது, அவரது பிரார்த்தனையை ஏற்றுக் கொண்டோம். அவருக்கு ஏற்பட்ட துன்பத்தை நீக்கினோம். அவரது குடும்பத்தாரையும் அவர்களுடன் அவர்களைப் போன்றோரையும் நம் அருளாக அவருக்கு வழங்கினோம். வணங்குவோருக்கு இது அறிவுரை.

அல்குர்ஆன் 21:83-84

நபி (ஸல்) அவர்களின் பொறுமை

பொறுமையைக் கடைப்பிடிப்பீராக! நன்மை செய்தோரின் கூலியை அல்லாஹ் வீணாக்க மாட்டான்.

அல்குர்ஆன் 11:115

தன் மகனாரின் மரணத்தை சந்தித்த நபியவர்கள் வரம்பு மீறியதில்லை. மடத்தனமான வார்த்தைகளை பேசியதில்லை. மாறாக பொறுமையாக இருந்துள்ளார்கள்.

மகன் இறந்த போது

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (அவர்களுடைய குழந்தை) இப்ராஹீம் வளர்ந்து வந்த ஆபூஸைஃப் என்ற கொல்லரின் வீட்டிற்குச் சென்றோம். அவர் இப்ராஹீமின் பால்குடித் தாயாருடைய கணவர் ஆவார். நபி (ஸல்) அவர்கள் இப்ராஹீமைத் தூக்கி முகர்ந்து முத்தமிட்டார்கள். மற்றொரு முறை நாங்கள் வீட்டினுள் நுழைந்தோம். அப்போது இப்ராஹீமின் உயிர் பிரிந்துகொண்டிருந்தது. நபி (ஸல்) அவர்களின் கண்கள் நீரைப் பொழியலாயின. இதைக் கண்ட அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ர-லிலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே! தாங்களா (அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "அவ்ஃபின் புதல்வரே!'' என்று கூறிவிட்டு தொடர்ந்து அழுதார்கள். பிறகு "கண்கள் நீரைச் சொரிகின்றன. உள்ளம் வாடிக்கொண்டிருக்கிறது. எனினும் இறைவன் விரும்பாத எந்த வார்த்தையும் நாங்கள் கூறமாட்டோம். இப்ராஹீமே! நிச்சயமாக நாங்கள் உனது பிரிவால் அதிகக் கவலைப்படுகிறோம்'' என்றார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : புகாரி 1303

கொலை செய்வதாக மிரட்டியவரிடம்

நபிகளாரை வாளால் மிரட்டி பின்னர் வாள் தன்னிடம் வந்த போதும் அந்த நபரை நபிகளார் எதுவும் சொல்லாமலும் கண்டிக்காமலும் பொறுமையை கடைபிடித்தார்கள்.

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ("தாத்துர் ரிகாஉ' எனும்) போருக்காக "நஜ்த்' நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்துசேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்கவிட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க் கொண்டிருந்தனர்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக்கொண்டிருந்தபோது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக்கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிலிருந்து) உருவப்பட்டவாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?'' என்று என்னிடம் கேட்டார்.

நான், "அல்லாஹ்' என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், "என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்?'' என்று கேட்டார். நான் "அல்லாஹ்' என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார். பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை (கண்டிக்கவில்லை).

அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி),

நூல்: முஸ்-லிம் 4585

கடுமையாக நடந்து தர்மம் கேட்டவரிடம்தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள்மரத்தில் தள்ளிவிட்டு அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாக பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறியபோது கோபப்பட்ட நபிகளார் நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப்பார்த்து பொறுமையாக இருந்து கொண்டார்கள்.

நபி (ஸல்) அவர்கள், "ஹுனைன்' போரிலி-ருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; "சமுரா' என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ü விட்டார்கள். நபியவர்கüன் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, "என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்கüன் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்கüடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காணமாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜுபைர் பின் முத்இம் (ரலி-),

நூல் : புகாரி 2821

நபிகளாரின் நீதத்தை சந்தேகித்த போது

நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக்கொண்டிருந்தார்கள்.

அப்போது அன்சாரிகüல் ஒருவர், "அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும்'' என்று (அதிருப்தியுடன்) கூறினார்.

நான், "நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்கüடம் சொல்வேன்'' என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கüடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கüடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அüத்தது. அவர்களுடைய முகமே (நிறம்) மாறிவிட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்கüடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் "(இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக்கொண்டார்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ரலி-),

நூல் : புகாரி 6100

வரம்புமீறிய பெண்ணிடம் பொறுமை போதித்த நபிகளார் அனஸ் பின் மாலி-க் (ர-லி) அவர்கள் தம் வீட்டாரில் ஒரு பெண்மணியிடம், "இன்ன பெண்ணை உனக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். அப்பெண்மணி, "ஆம் (தெரியும்)'' என்று கூறினார். அனஸ் (ர-லி) அவர்கள் கூறினார்கள்: அவள் ஒரு மண்ணறை அருகே அழுதுகொண்டிருக்கும் போது நபி (ஸல்) அவர்கள் அவளைக் கடந்து சென்றார்கள். அப்போது, "அல்லாஹ்வுக்கு அஞ்சிக்கொள்! பொறுமையாக இரு'' என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அப்பெண், "என்னைவிட்டு விலகிச் செல்வீராக. எனக்கேற்பட்ட துன்பம் உமக்கேற்படவில்லை (அதனால்தான் இப்படிப் பேசுகிறீர்)'' என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள் (பேசாமல்) அவளைக் கடந்து சென்றுவிட்டார்கள். அப்போது ஒரு மனிதர் அவ்வழியே சென்றார். அவர், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னிடம் என்ன சொன்னார்கள்?'' என்று கேட்டார். அப்பெண், "எனக்கு அவர் யாரென்று தெரியாது'' எனக் கூறினாள். அம்மனிதர், "அவர்கள் தாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்)'' என்று சொல்ல அவள், நபி (ஸல்) அவர்கüன் வீட்டு வாசலுக்குச் சென்றாள். அங்கு அவள் வாயிற்காவலர் யாரையும் காணவில்லை. ஆகவே அவள், "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் யாரென்று நான் அறியவில்லை'' என்று சொன்னாள். நபி (ஸல்) அவர்கள், "பொறுமை என்பது துன்பம் ஏற்பட்ட முதல் கட்டத்தில் கைக்கொள்வதேயாகும்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி 7154

மகளுக்கு பொறுமை போதித்த நபிகளார்

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்தோம். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய புதல்வியரில் ஒருவர் (ஸைனப்-ர-லி) "தமது குழந்தை' அல்லது "தம் மகன்' இறக்கும் தறுவாயில் இருப்பதால் உடனே வரும்படி நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி அனுப்பினார். செய்தி கொண்டு வந்தவரிடம், "என் மகளிடம் சென்று, எடுத்ததும் கொடுத்ததும் அல்லாஹ்வுக்குரியதே! ஒவ்வொன்றுக்கும் அவனிடம் ஒரு குறிப்பிட்ட தவணை உண்டு. எனவே, பொறுமையாக இருந்து நன்மையை எதிர்பார்க்கச் சொல்!'' என்று கூறியனுப்பினார்கள்.

அவர் (சென்றுவிட்டு) திரும்பிவந்து "தங்கள் மகள் அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுத் தாங்கள் கண்டிப்பாக வர வேண்டும் எனக் கூறுகிறார்" என்றார். உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்தார்கள். அவர்களுடன் சஅத் பின் உபாதா, முஆத் பின் ஜபல் (ரலி-) ஆகியோரும் சென்றனர். அவர்களுடன் நானும் சென்றேன்.

(வீட்டுக்குச் சென்ற) நபி (ஸல்) அவர்களிடம், (சுவாசிக்க முடியாமல்) மூச்சுத் திணறிக் கொண்டிருக்கும் குழந்தை கொடுக்கப்பட்டது; இற்றுப்போன பழைய தோல் பையில் இருப்பதைப் போன்று (குழந்தையின் மார்பு ஏறி இறங்கிற்று). அப்போது நபி (ஸல்) அவர்களின் கண்கள் கண்ணீரைச் சொரிந்தன. சஅத் பின் உபாதா (ர-லிலி) அவர்கள் "அல்லாஹ்வின் தூதரே, என்ன இது (ஏன் அழுகிறீர்கள்)?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "இது, அல்லாஹ் தன் அடியார்களின் உள்ளங்களில் ஏற்படுத்திய இரக்க உணர்வாகும். நிச்சயமாக அல்லாஹ் தன் அடியார்களில் இரக்கமுடையவருக்கே இரக்கம் காட்டுகிறான்'' என்றார்கள்.

அறிவிப்பவர் : உசாமா பின் ஸைத் (ர-லி),

நூல் : முஸ்-லிம் 1682, புகாரி7448

நபி (ஸல்) அவர்களின் துணைவியரில் ஒருவர்கூட விடுபடாமல் அனைவரும் நபி (ஸல்) அவர்(களின் இறப்பு நெருங்கியபோது அவர்)களுக்கு அருகில் இருந்தோம். அப்போது (நபியவர்களின் புதல்வி) ஃபாத்திமா (ரலிலி-) அவர்கள் நடந்துவந்தார்கள். அவரது நடை சிறிதும் பிசகாமல் அப்படியே நபி (ஸல்) அவர்களின் நடையைப் போன்றே இருந்தது. ஃபாத்திமாவைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள், "என் மகளே! வருக!'' என்று வரவேற்றார்கள். பிறகு அவரை "தமது வலப் பக்கத்தில்' அல்லது "இடப் பக்கத்தில்' அமர்த்திக்கொண்டார்கள். பிறகு அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அதைக் கேட்டபோது ஃபாத்திமா பலமாக அழுதார். அவருடைய பதற்றத்தைக் கண்ட நபி (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக அவரிடம் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். அப்போது அவர் சிரித்தார்.

அப்போது அவரிடம் நான், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் துணைவியரை விட்டு விட்டு உங்களிடம் மட்டும் ஏதோ இரகசியமாகச் சொன்னார்கள். பிறகு நீங்கள் அழுதீர்களே?'' என்று கேட்டேன்.

பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்தபோது ஃபாத்திமாவிடம், "அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களிடம் என்ன சென்னார்கள்?'' என்று கேட்டேன். அதற்கு ஃபாத்திமா,

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியமாகச் சொன்னதை நான் வெளிப்படுத்த விரும்பவில்லை'' என்று கூறிவிட்டார்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தபோது ஃபாத்திமா (ர-லி) அவர்களிடம் நான், "உங்கள் மீது எனக்குள்ள உரிமையை முன்வைத்து நம்பிக்கையுடன் கேட்கிறேன். அந்த இரகசியம் என்னவென்று நீங்கள் சொல்லி-யே ஆகவேண்டும்'' என்றேன். ஃபாத்திமா, "சரி! இப்போது (அதைத் தெரிவிக்கிறேன்)'' என்று கூறிவிட்டுப் பின்வருமாறு தெரிவித்தார்:

முதலாவது முறை என்னிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரகசியம் சொன்னபோது (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு (வானவர்) ஜிப்ரீல் ஒவ்வோர் ஆண்டும் ஓரிரு முறை குர்ஆனை ஓதிக்காட்(டி நினைவூட்)டுவார். ஆனால், அவர் இந்த முறை இரண்டு தடவை ஓதிக் காட்டினார். (இதிலிருந்து) என் இறப்பு நெருங்கிவிட்டதாகவே நான் கருதுகிறேன். ஆகவே, நீ அல்லாஹ்வை அஞ்சிக்கொள். பொறுமையுடன் இரு. நான் உனக்கு முன்னால் நல்லபடியாக (இவ்வுலகைவிட்டு) சென்றுவிடுவேன்.

ஆகவேதான், உங்கள் முன்னிலையில் நான் அவ்வாறு அழுதேன். எனது பதற்றத்தைக் கண்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டாவது முறையாக, "ஃபாத்திமா! "இறைநம்பிக்கையுள்ள பெண்களுக்கு' அல்லது "இந்தச் சமுதாயத்தின் பெண்களுக்கு' தலைவியாக இருக்க நீ விரும்பவில்லையா?'' என்று இரகசியமாகக் கேட்டார்கள். ஆகவேதான், உங்கள் முன்னிலையில் அவ்வாறு சிரித்தேன்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ர-லி),

நூல்: முஸ்-லிம் 4844

மகன் இகழ்ந்த போது பொறுமை மேற்கொண்ட நபித்தோழி ஹாரிஸா பின் சுராகா (ரலி-) அவர்களின் தாயாரான உம்மு ருபைய்யிஉ பின்த்து பராஉ (ர-லி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! ஹாரிஸாவைப் பற்றி தாங்கள் எனக்குச் செய்தியறிவிக்க மாட்டீர்களா? அவர் பத்ருப் போரன்று கொல்லப்பட்டிருந்தார்; அவர் மீது எங்கிருந்தோ வந்த அம்பு ஒன்று பாய்ந்து விட்டிருந்தது. அவர் சொர்க்கத்தில் இருந்தால் நான் பொறுமையைக் கைக்கொள்வேன்; அவர் வேறெந்த (துன்ப) நிலையிலாவது இருந்தால் அவருக்காக நான் கடுமையாக அழுவேன்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் "ஹாரிஸாவின் தாயே! சொர்க்கத்தில் பல (படித்தரங்கள் கொண்ட) தோட்டங்கள் உள்ளன. உன் மகன் (அவற்றில்) மிக உயர்ந்த ஃபிர்தவ்ஸ் என்னும் சொர்க்கத் (தோட்டத்)தை (தன் உயிர்த்தியாகத்திற்கான பிரதிபலனாகப்) பெற்றுக் கொண்டார்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ர-லி),

நூல் : புகாரி 2809

பொறுமை கடைபிடித்து சொர்க்கவாதியான பெண்மணி

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ர-லி) அவர்கள் என்னிடம், "சொர்க்கவாசிகளில் ஒரு பெண்மணியை உங்களுக்குக் காட்டட்டுமா?'' என்று கேட்டார்கள். நான் "சரி! (காட்டுங்கள்)'' என்று சொன்னேன். அவர்கள், "(இதோ) இந்தக் கறுப்பு நிறப் பெண்மணிதான் அவர். இவர் (ஒரு தடவை) நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நான் வலிப்பு நோயால் பாதிக்கப்படுகிறேன். அப்போது (என் உடலிலிருந்து ஆடை விலகி) உடல் திறந்துகொள்கிறது. ஆகவே, எனக்காக அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்றார். நபி (ஸல்) அவர்கள், "நீ நினைத்தால் பொறுமையாக இருக்கலாம். (இதற்கு பதிலாக) உனக்குச் சொர்க்கம் கிடைக்கும். நீ விரும்பினால் உனக்குக் குணமளிக்கும்படி அல்லாஹ்விடம் நான் வேண்டுகிறேன்'' என்று சொன்னார்கள். இப்பெண்மணி "நான் பொறுமையாகவே இருந்துவிடுகிறேன். ஆயினும், (வ-லிப்பு வரும்போது ஆடை விலகி) என் உடல் திறந்துகொள்கிறது. அப்படித் திறக்காமலி-ருக்க அல்லாஹ்விடம் பிரார்த்தியுங்கள்' என்று சொன்னார். அவ்வாறே நபி (ஸல்) அவர்கள் இப்பெண்ணுக்காகப் பிரார்த்தனை செய்தார்கள்'' என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 5032

வளரும் இன்ஷா அல்லாஹ்

சொற்பொழிவு குறிப்புகள்

 

தலைவர்கள்

பொறுப்பு ஓர் அமானிதம்

7148 عَنِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ إِنَّكُمْ سَتَحْرِصُونَ عَلَى الْإِمَارَةِ وَسَتَكُونُ نَدَامَةً يَوْمَ الْقِيَامَةِ فَنِعْمَ الْمُرْضِعَةُ وَبِئْسَتِ الْفَاطِمَةُ وَقَالَ مُحَمَّدُ بْنُ بَشَّارٍ حَدَّثَنَا عَبْدُاللَّهِ بْنُ حُمْرَانَ حَدَّثَنَا عَبْدُالْحَمِيدِ بْنُ جَعْفَرٍ عَنْ سَعِيدٍ الْمَقْبُرِيِّ عَنْ عُمَرَ بْنِ الْحَكَمِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَوْلَهُ *رواه البخاري

 

ஆசைப்படுவோருக்கு பொறுப்பு வழங்கக்கூடாது

3402 عَنْ أَبِي مُوسَى قَالَ دَخَلْتُ عَلَى النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ أَنَا وَرَجُلَانِ مِنْ بَنِي عَمِّي فَقَالَ أَحَدُ الرَّجُلَيْنِ يَا رَسُولَ اللَّهِ أَمِّرْنَا عَلَى بَعْضِ مَا وَلَّاكَ اللَّهُ عَزَّ وَجَلَّ وَقَالَ الْآخَرُ مِثْلَ ذَلِكَ فَقَالَ إِنَّا وَاللَّهِ لَا نُوَلِّي عَلَى هَذَا الْعَمَلِ أَحَدًا سَأَلَهُ وَلَا أَحَدًا حَرَصَ عَلَيْهِ *رواه مسلم

நானும் என் தந்தையின் சகோதரர் புதல்வர்களில் இருவரும் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். அப்போது அவ்விருவரில் ஒருவர், "அல்லாஹ்வின் தூதரே! வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் தங்களுக்கு அளித்துள்ள பொறுப்புகளில் சிலவற்றுக்கு எங்களை அதிகாரிகளாக நியமியுங்கள்'' என்று சொன்னார். மற்றொருவரும் அவ்வாறே கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "இந்த ஆட்சியதிகாரத்தைக் கேட்கின்ற ஒருவருக்கோ ஆசைப்படுகின்ற ஒருவருக்கோ நாம் அதை வழங்கமாட்டோம்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூமூஸா (ர-லி),

நூல் :முஸ்-லிம் (3727)

விரும்பாமல் பொறுப்பு வழங்கப்பட்டால்?

7146 حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ عَنْ الْحَسَنِ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ سَمُرَةَ قَالَ قَالَ لِي النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَا عَبْدَ الرَّحْمَنِ بْنَ سَمُرَةَ لَا تَسْأَلْ الْإِمَارَةَ فَإِنَّكَ إِنْ أُعْطِيتَهَا عَنْ مَسْأَلَةٍ وُكِلْتَ إِلَيْهَا وَإِنْ أُعْطِيتَهَا عَنْ غَيْرِ مَسْأَلَةٍ أُعِنْتَ عَلَيْهَا وَإِذَا حَلَفْتَ عَلَى يَمِينٍ فَرَأَيْتَ غَيْرَهَا خَيْرًا مِنْهَا فَكَفِّرْ عَنْ يَمِينِكَ وَأْتِ الَّذِي هُوَ خَيْرٌ رواه البخراي

நபி (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அப்துர் ரஹ்மானே! ஆட்சிப் பொறுப்பை (நீங்களாக)க் கேட்காதீர்கள். ஏனெனில், நீங்கள் கேட்டு அது உங்களுக்கு அüக்கப்பட்டால் அதோடு நீங்கள் (தனியாக) விடப்படுவீர்கள். கேட்காமல் உங்களுக்கு அது அüக்கப்பட்டால் அது தொடர்பாக உங்களுக்கு (அல்லாஹ்வின்) உதவி கிடைக்கும். நீங்கள் ஒரு சத்தியம் செய்து, அது அல்லாத வேறொன்றை அதைவிடச் சிறந்ததாக நீங்கள் கருதினால் உங்களது சத்தியத்(தை முறித்துவிட்டு முறித்த)தற்கான பரிகாரத்தைச் செய்துவிடுங்கள். சிறந்தது எதுவோ அதைச் செயல்படுத்துங்கள்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அப்துர்ரஹ்மான் பின் சமுரா (ர-லி),

நூல் : புகாரி (7146)

அநீதிதம் இழைக்கப்பட்டவரின் பிரார்த்தனைக்கு அஞ்ச வேண்டும்

2448 حَدَّثَنَا يَحْيَى بْنُ مُوسَى حَدَّثَنَا وَكِيعٌ حَدَّثَنَا زَكَرِيَّاءُ بْنُ إِسْحَاقَ الْمَكِّيُّ عَنْ يَحْيَى بْنِ عَبْدِ اللَّهِ بْنِ صَيْفِيٍّ عَنْ أَبِي مَعْبَدٍ مَوْلَى ابْنِ عَبَّاسٍ عَنْ ابْنِ عَبَّاسٍ رَضِيَ اللَّهُ عَنْهُمَا أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بَعَثَ مُعَاذًا إِلَى الْيَمَنِ فَقَالَ اتَّقِ دَعْوَةَ الْمَظْلُومِ فَإِنَّهَا لَيْسَ بَيْنَهَا وَبَيْنَ اللَّهِ حِجَابٌ رواه البخاري

அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ர-) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்த போது கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : புகாரி (2448)

மோசடி செய்யக்கூடாது

203 قَالَ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ حَدِيثًا سَمِعْتُهُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ لَوْ عَلِمْتُ أَنَّ لِي حَيَاةً مَا حَدَّثْتُكَ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ عَبْدٍ يَسْتَرْعِيهِ اللَّهُ رَعِيَّةً يَمُوتُ يَوْمَ يَمُوتُ وَهُوَ غَاشٌّ لِرَعِيَّتِهِ إِلَّا حَرَّمَ اللَّهُ عَلَيْهِ الْجَنَّةَ * رواه مسلم وكذا رواه البخاري

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து செவியுற்ற செய்தி ஒன்றை உமக்கு அறிவிக்கிறேன். நான் இன்னும் (சில நாள்) உயிர்வாழ்வேன் என்று அறிந்திருந்தால் (அதை) உமக்கு அறிவிக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: குடிமக்களில் சிலரை நிர்வகிக்கும் பொறுப்பை அல்லாஹ் ஓர் அடியாருக்கு வழங்கியிருக்க, அவர் அந்த மக்களை ஏமாற்றி மோசடி செய்த நிலையிலேயே இறந்து போனால், அவருக்கு அல்லாஹ் சொர்க்கத்தைத் தடை செய்யாமல் இருப்பதில்லை.

அறிவிப்பவர் : மஃகல் பின் யஸார் (ர-லி),

நூல் :முஸ்-லிம் (227)

மக்களுக்கு உழைக்காதவர் சொர்க்கம் செல்ல முடியாது

205 عَنْ أَبِي الْمَلِيحِ أَنَّ عُبَيْدَ اللَّهِ بْنَ زِيَادٍ عَادَ مَعْقِلَ بْنَ يَسَارٍ فِي مَرَضِهِ فَقَالَ لَهُ مَعْقِلٌ إِنِّي مُحَدِّثُكَ بِحَدِيثٍ لَوْلَا أَنِّي فِي الْمَوْتِ لَمْ أُحَدِّثْكَ بِهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَا مِنْ أَمِيرٍ يَلِي أَمْرَ الْمُسْلِمِينَ ثُمَّ لَا يَجْهَدُ لَهُمْ وَيَنْصَحُ إِلَّا لَمْ يَدْخُلْ مَعَهُمُ الْجَنَّةَ * رواه مسلم

"உமக்கு நான் ஒரு ஹதீஸை அறிவிக்கப்போகிறேன். நான் இறக்கும் தறுவாயில் இல்லாவிட்டால் அதை நான் உமக்கு அறிவித்திருக்கமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூற நான் கேட்டுள்ளேன்: ஓர் ஆட்சியாளர் முஸ்-லிலிம்களை நிர்வகிக்கும் பொறுப்பை ஏற்றுக்கொண்ட பின்னர் அவர்களுக்காக உழைக்காமலும் (அவர்கள்மீது) அக்கறை காட்டாமலும் இருந்தால், அவர்களுடன் அவர் சொர்க்கத்திற்குச் செல்லவேமாட்டார்.

அறிவிப்பவர் : மஃகல் பின் யஸார் (ர-லி),

நூல் : முஸ்-லிம் (229)

மக்களுக்கு உழைக்காதவருக்கு இறைவனின் கருணை கிடையாது

2559 أَنَّ أَبَا مَرْيَمَ الْأَزْدِيَّ أَخْبَرَهُ قَالَ دَخَلْتُ عَلَى مُعَاوِيَةَ فَقَالَ مَا أَنْعَمَنَا بِكَ أَبَا فُلَانٍ وَهِيَ كَلِمَةٌ تَقُولُهَا الْعَرَبُ فَقُلْتُ حَدِيثًا سَمِعْتُهُ أُخْبِرُكَ بِهِ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ مَنْ وَلَّاهُ اللَّهُ عَزَّ وَجَلَّ شَيْئًا مِنْ أَمْرِ الْمُسْلِمِينَ فَاحْتَجَبَ دُونَ حَاجَتِهِمْ وَخَلَّتِهِمْ وَفَقْرِهِمُ احْتَجَبَ اللَّهُ عَنْهُ دُونَ حَاجَتِهِ وَخَلَّتِهِ وَفَقْرِهِ قَالَ فَجَعَلَ رَجُلًا عَلَى حَوَائِجِ النَّاسِ * رواه ابوداؤد

முஸ்லி-ம்களின் விவகாரங்களில் ஏதாவது ஒன்றை ஒருவருக்கு பொறுப்புக் கொடுத்து, அவர், மக்களின் தேவைகளை, அவசியத் தேவைகளையும் வறுமைகளையும் (கண்டுகொள்ளாமல்) தடுத்துக் கொண்டால் இவனின் தேவைகளையும் அவசியத் தேவைகளையும் வறுமையையும் அல்லாஹ் கண்டுகொள்ளாமல் தடுத்துவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : முஆவியா (ர-லி), நூல் : அபூதாவூத் (2559)

3407 عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ شِمَاسَةَ قَالَ أَتَيْتُ عَائِشَةَ أَسْأَلُهَا عَنْ شَيْءٍ فَقَالَتْ مِمَّنْ أَنْتَ فَقُلْتُ رَجُلٌ مِنْ أَهْلِ مِصْرَ فَقَالَتْ كَيْفَ كَانَ صَاحِبُكُمْ لَكُمْ فِي غَزَاتِكُمْ هَذِهِ فَقَالَ مَا نَقَمْنَا مِنْهُ شَيْئًا إِنْ كَانَ لَيَمُوتُ لِلرَّجُلِ مِنَّا الْبَعِيرُ فَيُعْطِيهِ الْبَعِيرَ وَالْعَبْدُ فَيُعْطِيهِ الْعَبْدَ وَيَحْتَاجُ إِلَى النَّفَقَةِ فَيُعْطِيهِ النَّفَقَةَ فَقَالَتْ أَمَا إِنَّهُ لَا يَمْنَعُنِي الَّذِي فَعَلَ فِي مُحَمَّدِ بْنِ أَبِي بَكْرٍ أَخِي أَنْ أُخْبِرَكَ مَا سَمِعْتُ مِنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ فِي بَيْتِي هَذَا اللَّهُمَّ مَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَشَقَّ عَلَيْهِمْ فَاشْقُقْ عَلَيْهِ وَمَنْ وَلِيَ مِنْ أَمْرِ أُمَّتِي شَيْئًا فَرَفَقَ بِهِمْ فَارْفُقْ بِهِ * رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னுடைய இந்த இல்லத்தில் வைத்து, "இறைவா! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களைச் சிரமத்திற்குள்ளாக்கினால்,

அவரை நீயும் சிரமத்திற்குள்ளாக்குவாயாக! என் சமுதாயத்தாரின் விவகாரங்களில் ஒன்றுக்குப் பொறுப்பேற்றுக்கொண்ட ஒருவர், அவர்களிடம் மென்மையாக நடந்து கொண்டால், நீயும் அவரிடம் மென்மையாக நடந்துகொள்வாயாக!'' என்று கூறியதை நான் கேட்டுள்ளேன்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ர-லி),

நூல் : முஸ்லி-ம் 3732

கெட்ட தலைவன் கடுமை காட்டுவான்

حَدَّثَنَا شَيْبَانُ بْنُ فَرُّوخَ حَدَّثَنَا جَرِيرُ بْنُ حَازِمٍ حَدَّثَنَا الْحَسَنُ أَنَّ عَائِذَ بْنَ عَمْرٍو وَكَانَ مِنْ أَصْحَابِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ دَخَلَ عَلَى عُبَيْدِ اللَّهِ بْنِ زِيَادٍ فَقَالَ أَيْ بُنَيَّ إِنِّي سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ إِنَّ شَرَّ الرِّعَاءِ الْحُطَمَةُ فَإِيَّاكَ أَنْ تَكُونَ مِنْهُمْ فَقَالَ لَهُ اجْلِسْ فَإِنَّمَا أَنْتَ مِنْ نُخَالَةِ أَصْحَابِ مُحَمَّدٍ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ فَقَالَ وَهَلْ كَانَتْ لَهُمْ نُخَالَةٌ إِنَّمَا كَانَتِ النُّخَالَةُ بَعْدَهُمْ وَفِي غَيْرِهِمْ *رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களில் ஒருவரான ஆயித் பின் அம்ர் (ர-லிலி) அவர்கள் (அன்றைய பஸ்ராவின் ஆட்சியராயிருந்த) உபைதுல்லாஹ் பின் ஸியாதிடம் சென்று, "அன்புக் குழந்தாய்! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நிர்வாகிகளில் மிகவும் மோசமானவர், இரக்கமற்ற கல் நெஞ்சக்காரர்தாம்' என்று கூறியதை நான் கேட்டேன். அவர்களில் ஒருவராக நீ ஆகிவிட வேண்டாம் என உன்னை நான் எச்சரிக்கிறேன்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஹசன் பின் அபில்ஹசன் யசார்,

நூல் : முஸ்-லிம் (3736)

பலவீனமானவர் பொறுப்புக்கு வரக்கூடாது

3405 عَنْ أَبِي ذَرٍّ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ يَا أَبَا ذَرٍّ إِنِّي أَرَاكَ ضَعِيفًا وَإِنِّي أُحِبُّ لَكَ مَا أُحِبُّ لِنَفْسِي لَا تَأَمَّرَنَّ عَلَى اثْنَيْنِ وَلَا تَوَلَّيَنَّ مَالَ يَتِيمٍ *رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), "அபூதர்! உம்மை நான் பலவீன மானவராகவே காண்கிறேன். எனக்கு நான் விரும்புவதையே உமக்கும் விரும்புகிறேன். இருவருக்குக்கூட நீர் தலைமை ஏற்காதீர். அநாதையின் சொத்துக்கு நீர் பொறுப்பேற்காதீர்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அபூதர் (ர-லி),

நூல் : முஸ்-லிம் (3730)

அன்பளிப்பும் லஞ்சமும்

2597 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ حَدَّثَنَا سُفْيَانُ عَنْ الزُّهْرِيِّ عَنْ عُرْوَةَ بْنِ الزُّبَيْرِ عَنْ أَبِي حُمَيْدٍ السَّاعِدِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ اسْتَعْمَلَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رَجُلًا مِنْ الْأَزْدِ يُقَالُ لَهُ ابْنُ الْأُتْبِيَّةِ عَلَى الصَّدَقَةِ فَلَمَّا قَدِمَ قَالَ هَذَا لَكُمْ وَهَذَا أُهْدِيَ لِي قَالَ فَهَلَّا جَلَسَ فِي بَيْتِ أَبِيهِ أَوْ بَيْتِ أُمِّهِ فَيَنْظُرَ يُهْدَى لَهُ أَمْ لَا وَالَّذِي نَفْسِي بِيَدِهِ لَا يَأْخُذُ أَحَدٌ مِنْهُ شَيْئًا إِلَّا جَاءَ بِهِ يَوْمَ الْقِيَامَةِ يَحْمِلُهُ عَلَى رَقَبَتِهِ إِنْ كَانَ بَعِيرًا لَهُ رُغَاءٌ أَوْ بَقَرَةً لَهَا خُوَارٌ أَوْ شَاةً تَيْعَرُ ثُمَّ رَفَعَ بِيَدِهِ حَتَّى رَأَيْنَا عُفْرَةَ إِبْطَيْهِ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ اللَّهُمَّ هَلْ بَلَّغْتُ ثَلَاثًا رواه البخاري

அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ர-லி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் "அஸ்த்' என்னும் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதரை (ஸகாத்) வசூ-ப்பவராக நியமித்தார்கள். அவர் "இப்னுல் லுத்பிய்யா' என்றுஅழைக்கப்பட்டு வந்தார். அவர் ஸக்காத் வசூ-த்துக் கொண்டு வந்தபோது, "இது உங்களுக்குரியது; இது எனக்கு அன்பüப்பாக வழங்கப்பட்டது'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "இவர் தன் தகப்பனின் வீட்டில் அல்லது தாயின் வீட்டில் உட்கார்ந்து கொண்டு, தமக்கு அன்பüப்புக் கிடைக்கிறதா இல்லையா என்று பார்க்கட்டுமே! என் உயிரைத் தனது கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! உங்கüல் யாரேனும்அந்த "ஸகாத்' பொருüல் இருந்து (முறை கேடாக) எதைப் பெற்றாலும் அதை அவர் மறுமை நாüல் தன் பிடரியில் சுமந்து கொண்டு வருவார். அது ஒட்டகமாக இருந்தால் கனைத்துக் கொண்டிருக்கும்; பசுவாகவோ ஆடாகவோ இருந்தால் கத்திக் கொண்டிருக்கும்'' என்று கூறினார்கள். பிறகு, அவர்களுடைய அக்குள்கüன் வெண்மையை நாங்கள் பார்க்கும் அளவுக்குத் தம் கைகளை உயர்த்தி, "இறைவா! (உன் செய்தியை மக்களுக்கு) நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா? நான் எடுத்துரைத்து விட்டேன் அல்லவா?'' என்று மும்முறை கூறினார்கள்.

அறவிப்பவர் : அபூஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி-),

நூல் : புகாரி (2597)

சிறந்த தலைவர் யார்?

3447 عَنْ عَوْفِ بْنِ مَالِكٍ عَنْ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خِيَارُ أَئِمَّتِكُمِ الَّذِينَ تُحِبُّونَهُمْ وَيُحِبُّونَكُمْ وَيُصَلُّونَ عَلَيْكُمْ وَتُصَلُّونَ عَلَيْهِمْ وَشِرَارُ أَئِمَّتِكُمِ الَّذِينَ تُبْغِضُونَهُمْ وَيُبْغِضُونَكُمْ وَتَلْعَنُونَهُمْ وَيَلْعَنُونَكُمْ قِيلَ يَا رَسُولَ اللَّهِ أَفَلَا نُنَابِذُهُمْ بِالسَّيْفِ فَقَالَ لَا مَا أَقَامُوا فِيكُمُ الصَّلَاةَ وَإِذَا رَأَيْتُمْ مِنْ وُلَاتِكُمْ شَيْئًا تَكْرَهُونَهُ فَاكْرَهُوا عَمَلَهُ وَلَا تَنْزِعُوا يَدًا مِنْ طَاعَةٍ *رواه مسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உங்கள் தலைவர்களில் நல்லவர்கள் யாரெனில், அவர்களை நீங்கள் நேசிப்பீர்கள். உங்களை அவர்கள் நேசிப்பார்கள். உங்களுக்காக அவர்கள் பிரார்த்திப்பார்கள். அவர்களுக்காக நீங்கள் பிரார்த்திப்பீர்கள். உங்கள் தலைவர்களில் தீயவர்கள் யாரெனில், நீங்கள் அவர்களை வெறுப்பீர்கள்: உங்களை அவர்கள் வெறுப்பார்கள். நீங்கள் அவர்களைச் சபிப்பீர்கள். அவர்கள் உங்களைச் சபிப்பார்கள்'' என்று கூறினார்கள். அப்போது, "அல்லாஹ்வின் தூதரே! அவர்களுக்கெதிராக நாங்கள் வாள் ஏந்தலாமா?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "வேண்டாம்; உங்களிடையே அவர்கள் தொழுகையை நிலைநாட்டும்வரை (வேண்டாம்). உங்கள் ஆட்சியாளர்களிடம் நீங்கள் வெறுக்கும் (மார்க்கத்திற்கு முரணாண செயல்கள்) எதையேனும் கண்டால், அந்த ஆட்சியாளரின் செயல்பாட்டை வெறுப்பீர்களாக! கட்டுப்படுத-லில் இருந்து உங்கள் கையை விலக்கிவிடாதீர்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : அவ்ஃப் பின் மாலிக் (ர-லி),

நூல் : முஸ்-லிம் (3778)

ஈமானின் கிளைகள் தொடர் : 2

வேதங்கள் எத்தனை?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

வேதங்களை நம்புவது - வேதங்களும் தூதர்களும்

ஈமானின் கிளைகள் என்கிற தலைப்பில் அல்லாஹ்வையும் மலக்குமார்களையும் நம்புவதைப் பற்றி பார்த்தோம். மூன்றாவது நாம் நம்பிக்கை கொள்ள வேண்டிய விசயம் வேதங்களை நம்புவதாகும்.

அல்லாஹ் மனித சமூகத்தைப் படைத்து அவர்களுக்கு நேர்வழி காட்டுகிற பொறுப்பை தன்னிடமே வைத்துக் கொண்டான். தூதர்களாகிய உங்களுக்கு என்னிடமிருந்து செய்திகள் வந்துகொண்டே இருக்கும்.

அதைத்தான் மக்களுக்கு நீங்கள் போதிக்க வேண்டும் என்று ஒரு வழியைத் தேர்வு செய்தான். முதல் மனிதரும் தூதருமான ஆதம் நபியை பூமிக்கு அனுப்பும் போதே அப்படித்தான் அனுப்பினான்.

قُلْنَا اهْبِطُوا مِنْهَا جَمِيعًا فَإِمَّا يَأْتِيَنَّكُمْ مِنِّي هُدًى فَمَنْ تَبِعَ هُدَايَ فَلَا خَوْفٌ عَلَيْهِمْ وَلَا هُمْ يَحْزَنُونَ(38) سورة البقرة

"இங்கிருந்து அனைவரும் இறங்கிவிடுங்கள்! என்னிடமிருந்து உங்களுக்கு நேர்வழி வரும் போது எனது நேர்வழியைப் பின்பற்றுவோருக்கு எந்த அச்சமும் இல்லை. அவர்கள் கவலைப்படவும் மாட்டார்கள்'' என்று கூறினோம்.

(அல்குர்ஆன் 2:38) 20:123

அல்லாஹ்விடமிருந்து வருகிற செய்திக்குப் பெயர்தான் வேதம். வேதம் என்று சொன்னதும் புத்தமாக எழுதிக் கொண்டுவந்து தருவது என யாரும் எண்ணிவிடக் கூடாது. அல்லாஹ்விடமிருந்து வருகிற வழிகாட்டுதலுக்கு வேதம் என்று பெயர். அது புத்தமாகவும் தரப்படலாம். வாய் மொழியாகவும் சொல்லப்படலாம். எனவே எந்த வழியிலாவது அல்லாஹ்விடமிருந்து வருகிற செய்திக்குத்தான் இஸ்லாம் வேதம் என்று சொல்லுகிறது.

அதே நேரத்தில் வேதம் மட்டும்தான் அல்லாஹ்விடமிருந்து வரும் என்று கருதக் கூடாது. வேதம் இல்லாமல் நபிமார்களுக்கு மற்ற செய்திகளும் வஹியின் மூலம் கொடுக்கப்படும். இவ்வாறு இறைவன் புறத்தி-லிருந்து வழங்கப்படும் இரண்டு வகைச் செய்திகளில் ஒன்றுதான் வேதம்.

மூஸா (அலை) அவர்களுக்கு அல்லாஹ், பலகையில் எழுதிக் கொடுத்தாகச் சொல்லுகிறான்.

قَالَ يَامُوسَى إِنِّي اصْطَفَيْتُكَ عَلَى النَّاسِ بِرِسَالَاتِي وَبِكَلَامِي فَخُذْ مَا آتَيْتُكَ وَكُنْ مِنْ الشَّاكِرِينَ(144) وَكَتَبْنَا لَهُ فِي الْأَلْوَاحِ مِنْ كُلِّ شَيْءٍ مَوْعِظَةً وَتَفْصِيلًا لِكُلِّ شَيْءٍ فَخُذْهَا بِقُوَّةٍ وَأْمُرْ قَوْمَكَ يَأْخُذُوا بِأَحْسَنِهَا سَأُرِيكُمْ دَارَ الْفَاسِقِينَ(145)سورة الأعراف

"மூஸாவே! எனது தூதுச் செய்திகள் மூலமும், நான் பேசியதன் மூலமும் மக்களை விட உம்மைத் தேர்ந்தெடுத்துவிட்டேன். எனவே நான் உமக்குக் கொடுத்ததைப் பிடித்துக் கொள்வீராக! நன்றி செலுத்துபவராக ஆவீராக!'' என்று (இறைவன்) கூறினான். பலகைகளில் அவருக்காக ஒவ்வொரு விஷயத்தையும் எழுதினோம். அறிவுரையாகவும், அனைத்து விஷயங்களுக்கும் விளக்கமாகவும் அது இருந்தது. "இதைப் பலமாகப் பிடிப்பீராக! இதை மிக அழகிய முறையில் பிடிக்குமாறு உமது சமுதாயத்திற்கும் கட்டளையிடுவீராக! குற்றம் புரிவோரின் இல்லத்தை உங்களுக்குக் காட்டுவேன்'' (என்று இறைவன் கூறினான்.)

(அல்குர்ஆன் 7:144,145)

எழுத்து வடிவிலும் அல்லாஹ் வேதத்தைக் கொடுத்திருக்கிறான் என்பதற்கு இவ்வசனம் ஆதாரமாகும்.

முஹம்மது நபியவர்களுக்கு எழுத்து வடிவில் கொடுக்காமல், வானவர் ஜிப்ரயீல் மூலமாக ஓதிக் கொடுத்தான். முஹம்மது (ஸல்) அவர்கள் அதை மனனம் செய்து கொள்வார்கள். பிறகு எழுதத் தெரிந்தவர்களை வைத்து எழுதிக் கொள்வார்கள். எனவே இதுபோன்றும் இறைவன் வேதத்தைக் கொடுப்பான்.

ஆகவே வேதம் என்றால், மனிதர்களை நல்வழிப்படுத்துவதற்காக ஒரு தூதரை ஏற்பாடு செய்து, அந்தத் தூதர் வழியாகக் கொடுக்கிற செய்திதான் வேதம். இந்த மாதிரி அல்லாஹ் வேதத்தைக் கொடுத்தான் என்று நம்பவதுதான் வேதத்தை நம்புவதின் அர்த்தம்.

நாம் குர்ஆனை அல்லாஹ்வின் வேதம் என்று நம்புகிறோம். அதை மட்டும் நம்பினால் நாம் வேதத்தை நம்புவதாகச் சொல்லுகிற நம்பிக்கை பரிபூரணமாகாது. அல்லாஹ்வுடைய வேதம் ஒன்றே ஒன்றுதான். அது குர்ஆன் மட்டும்தான் என்று நம்பினால் அதுவே குர்ஆனுக்கு எதிரானதாக அமைந்துவிடும்.

அல்லாஹ் தனது திருமறையில் வேதங்களை நம்புவது என்றால் எப்படி? என்பதை விளக்குகிறான்.

وَالَّذِينَ يُؤْمِنُونَ بِمَا أُنْزِلَ إِلَيْكَ وَمَا أُنْزِلَ مِنْ قَبْلِكَ وَبِالْآخِرَةِ هُمْ يُوقِنُونَ(4)أُوْلَئِكَ عَلَى هُدًى مِنْ رَبِّهِمْ وَأُوْلَئِكَ هُمْ الْمُفْلِحُونَ(5) سورة البقرة

(முஹம்மதே!) உமக்கு அருளப்பட்ட (இவ்வேதத்)தையும், உமக்கு முன் அருளப்பட்டதையும் அவர்கள் நம்புவார்கள். மறுமையையும் உறுதியாக நம்புவார்கள். அவர்களே, தமது இறைவனிடமிருந்து (பெற்ற) நேர்வழியில் இருப்பவர்கள். அவர்களே வெற்றியாளர்கள். (அல்குர்ஆன் 2:4,5)

இறையச்சமுடையவர்கள் வேதத்தை எப்படி நம்புவார்கள் என்று பேசுகிற இந்த வசனத்தில், முஹம்மது நபிக்கு அருளப்பட்ட வேதத் தையும் முஹம்மது நபிக்கு முன்னால் வந்த அனைத்து நபிமார்களுக்கும் அருளப்பட்ட வேதங்களையும் நம்புவார்கள் என்று சொல்லுகிறான்.

முஹம்மது நபிக்கு அல்லாஹ் வேதம் கொடுத்ததைப் போன்று அவர்களுக்கு முன்னால் வந்த நபிமார்களுக்கும் வேதம் கொடுத்திருக்கிறான்,

அந்த வேதங்களின் மூலமாகத்தான் அவர்கள் மக்களுக்கு வழிகாட்டி னார்கள். வேதம் கொடுப்பது என்பது புதிதானது கிடையாது, மனித சமூகம் படைக்கப்பட்டதிலிருந்து தொன்றுதொட்டு வந்து கொண்டிருக்கிற நடைமுறை என்றும் நம்பவேண்டும். இதுதான் வேதத்தை நம்புவதாகும்.

வேதம் நான்கு மட்டும்தானா?

வேதம் என்றால் நான்குதான் என்று நம்மிடம் தவறான நம்பிக்கை இருக்கிறது. பெரிய பெரிய ஆ-லிம்கள், மதரஸா மேதைகள் அனைவருமே அல்லாஹ் அனுப்பிய வேதம் நான்கு என்று போதிக்கிறார்கள். இது வேதங்களின் எண்ணிக்கை சம்பந்தமாக குர்ஆன் சொல்லுவதற்கு நேர் முரணான வாதமாகும்.

குர்ஆன் வேதங்களின் எண்ணிக்கை பற்றி என்ன சொல்லுகிறது என்பதைத் தெரிந்து கொண்டால், வேதம் நான்கு என்று சொல்லுவது எவ்வளவு பெரிய தவறு என்பதை புரிந்து கொள்ளலாம்.

قُولُوا آمَنَّا بِاللَّهِ وَمَا أُنزِلَ إِلَيْنَا وَمَا أُنزِلَ إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَمَا أُوتِيَ مُوسَى وَعِيسَى وَمَا أُوتِيَ النَّبِيُّونَ مِنْ رَبِّهِمْ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْهُمْ وَنَحْنُ لَهُ مُسْلِمُونَ(136) سورة البقرة

"அல்லாஹ்வையும், எங்களுக்கு அருளப்பட்டதையும், தம் இறைவனால்

இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக், யஃகூப் மற்றும் (அவரது) வழித்தோன்றல்களுக்கு அருளப்பட்டதையும், மூஸாவுக்கும், ஈஸாவுக்கும் வழங்கப்பட்டதையும், ஏனைய நபிமார்களுக்கு தமது இறைவனிடமிருந்து வழங்கப்பட்டதையும் நம்பினோம்; அவர்களுக்கிடையே பாகுபாடு காட்ட மாட்டோம்; அவனுக்கே நாங்கள் கட்டுப்பட்டவர்கள்'' என்று கூறுங்கள்!

(அல்குர்ஆன் 2:136)

இப்ராஹீம் அவர்களுக்கு அருளப்பட்டதையும் நம்புங்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. இவர்கள் குறிப்பிடும் நான்கு வேதங்கள் பட்டியலில் இப்ராஹீம் நபிக்கு அருளப்பட்ட வேதம் இடம் பெறவில்லை. மூஸா நபிக்கு தவ்ராத், தாவூத் நபிக்கு ஸபூர், ஈஸாவுக்கு இன்ஜீல், முஹம்மது (ஸல்) அவர்களுக்கு குர்ஆன் ஆகியவற்றையே நான்கு வேதங்கள் என்று குறிப்பிடுகின்றனர். ஆனால் இந்த நான்கில் இப்ராஹீம் நபியின் வேதத்திற்குரிய பெயர் இல்லை.

இப்ராஹீம் நபிக்கு மட்டுமில்லாமல் அவர்களது மகன்களாகிய இஸ்மாயீல், இஸ்ஹாக், இஸ்ஹாக்குடைய மகன் யஃகூப் அவர்களுக்கும் அவர்களது வழித்தோன்றல்களாகிய யூசுஃப், தாவூத், சுலைமான் போன்ற நபிமார்களுக்கும் அருளப்பட்டதையும் நம்பவேண்டும் எனவும் இவ்வசனம் சொல்கிறது.. ஆனால் நான்கு வேதங்கள் பட்டியலில் இவர்களுக்கு அருளப்பட்ட வேதங்கள் இடம் பெறவில்லை.

மேலும் முஹம்மது நபிக்கு முன்னால் அனுப்பப்பட்ட அனைத்து நபிமார்களையும் ஒருவருக்கொருவர் பாரபட்சம் காட்டமாட்டோம் என்று சொல்லுங்கள் என்றும் அல்லாஹ் குர்ஆனில் பேசுகிறான். ஆனால் பெயரளவுக்கு இஸ்லாத்தைப் பின்பற்றுகிற மத்ஹபினர்கள் நான்கு நபிமார்களுக்கு மட்டும்தான் வேதம் கொடுக்கப்பட்டுள்ளது என்று கூறுவதின் மூலம் மற்ற நபிமார்களையெல்லாம் பிரித்துப் பார்த்து நபிமார்களுக்கு மத்தியில் பாரபட்சம் காட்டுகின்றனர்.

அதாவது இந்த நான்கு மட்டும்தான் வேதம் என்று சொல்லக்கூடாது. இந்த நான்கும் வேதம்தான். இந்த நான்கைப் போன்று எல்லா நபிமார்களுக்கும் வேதம் இருந்தது என்றும் நம்பவேண்டும். இந்த நான்கையும் மறுத்துவிடக் கூடாது. இந்த நான்கும் உண்டு, இந்த நான்கு அல்லாதவைகளும் உண்டு. இந்த நான்கிற்குப் பெயர் நமக்கு சொல்லப்பட்டுள்ளது. மற்றவைகளுக்குப் பெயர் சொல்லப்படவில்லை. அவ்வளவுதான் வித்தியாசம்.

فَإِنْ كَذَّبُوكَ فَقَدْ كُذِّبَ رُسُلٌ مِنْ قَبْلِكَ جَاءُوا بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَالْكِتَابِ الْمُنِيرِ(184) سورة آل عمران

(முஹம்மதே!) உம்மை அவர்கள் பொய்யரெனக் கருதினால் உமக்கு முன் பல தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் தெளிவான சான்றுகளையும், ஏடுகளையும், ஒளி வீசும் வேதத்தையும் கொண்டுவந்தனர்.

(அல்குர்ஆன் 3:184)

இந்த வசனத்தில் நபிகள் நாயகத்திற்கு முன்னுள்ள தூதர்களும் ஒளி வீசும் வேதங்களைக் கொண்டு வந்ததாக அல்லாஹ் கூறுகிறான்.

لَقَدْ أَرْسَلْنَا رُسُلَنَا بِالْبَيِّنَاتِ وَأَنْزَلْنَا مَعَهُمْ الْكِتَابَ وَالْمِيزَانَ لِيَقُومَ النَّاسُ بِالْقِسْطِ وَأَنْزَلْنَا الْحَدِيدَ فِيهِ بَأْسٌ شَدِيدٌ وَمَنَافِعُ لِلنَّاسِ وَلِيَعْلَمَ اللَّهُ مَنْ يَنْصُرُهُ وَرُسُلَهُ بِالْغَيْبِ إِنَّ اللَّهَ قَوِيٌّ عَزِيزٌ(25) سورة الحديد

நமது தூதர்களைத் தெளிவான சான்றுகளுடன் அனுப்பினோம்.

அவர்களுடன் வேதத்தையும், மக்கள் நீதியை நிலை நாட்ட தராசையும் அருளினோம். இரும்பையும் அருளினோம். அதில் கடுமையான ஆற்றலும் மக்களுக்குப் பயன்களும் உள்ளன. தனக்கும் தன் தூதர்களுக்கும் மறைவாக உதவி செய்வோரை அல்லாஹ் அடையாளம் காட்டுவான். அல்லாஹ் வ-லிமை உள்ளவன்; மிகைத்தவன்.

(அல்குர்ஆன் 57:25)

இந்த வசனத்தில் தூதர்களை வேதங்களுடன் அனுப்பியதாக உள்ளது. அப்படியெனில் எல்லாத் தூதர்களுக்கும் வேதம் இருந்தது என்றுதான் அர்த்தம். தூதர்களை அனுப்பினோம். அவர்களில் நான்கு பேருக்கு மட்டும்தான் வேதங்களைக் கொடுத்தோம் என்று இருந்தால் மட்டும்தான் வேதங்களே நான்கு என்று சொல்ல முடியும். ஆனால் திருக்குர்ஆனில் அப்படி எந்த வசனமும் இல்லை.

وَلَقَدْ أَرْسَلْنَا نُوحًا وَإِبْرَاهِيمَ وَجَعَلْنَا فِي ذُرِّيَّتِهِمَا النُّبُوَّةَ وَالْكِتَابَ فَمِنْهُمْ مُهْتَدٍ وَكَثِيرٌ مِنْهُمْ فَاسِقُونَ(26) سورة الحديد

நூஹையும், இப்ராஹீமையும் தூதர்களாக அனுப்பினோம்.

அவர்களது வழித் தோன்றல்களில் நபி எனும் தகுதியையும், வேதத்தையும்

அமைத்தோம். அவர்களில் நேர்வழி பெற்றவரும் உண்டு. அவர்களில் அதிகமானோர் குற்றம் புரிபவர்கள்.

(அல்குர்ஆன் 57:26)

நூஹ் மற்றும் இப்ராஹீம் நபியின் வழித்தோன்றல்களில் யாரையெல்லாம் அல்லாஹ் நபியாக்கினானோ அவர்களுக்கெல்லாம் வேதத்தையும் கொடுத்தான் என்று இந்த வசனம் கூறுகிறது.

அதே போன்று பிரத்யேகமாக யஹ்யா அலை அவர்களுக்கு வேதம் கொடுக்கப்பட்டதாக நேரடியாகவே அல்லாஹ் சொல்லுகிறான்.

يَايَحْيَى خُذْ الْكِتَابَ بِقُوَّةٍ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا(12) سورة مريم

யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்). சிறுவராக இருக்கும் போதே அவருக்கு அதிகாரத்தை அளித்தோம். (அல்குர்ஆன் 19:12)

இந்த வசனத்தின் மூலம் பார்த்தால் வேதங்கள் நான்கு என்று சொல்லுவது மிகத் தவறான ஒரு கொள்கை. யஹ்யாவுக்கு வேதத்தை கொடுத்தோம் என்று அல்லாஹ் சொல்லுவதிலிருந்து வேதங்கள் நான்கு மட்டும் தான் என்பது குர்ஆனுக்கு நேர்எதிரான வழிகேடான கொள்கை என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

وَإِنْ يُكَذِّبُوكَ فَقَدْ كَذَّبَ الَّذِينَ مِنْ قَبْلِهِمْ جَاءَتْهُمْ رُسُلُهُمْ بِالْبَيِّنَاتِ وَبِالزُّبُرِ وَبِالْكِتَابِ الْمُنِيرِ(25) سورة فاطر

அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கருதினால் அவர்களுக்கு முன் சென்றோரும் பொய்யரெனக் கருதியுள்ளனர். அவர்களிடம் அவர்களின் தூதர்கள் தெளிவான சான்றுகளையும் ஏடுகளையும் ஒளிவீசும் வேதத் தையும் கொண்டு வந்தனர்.

(அல்குர்ஆன் 35:25)

إِنَّ هَذَا لَفِي الصُّحُفِ الْأُولَى(18)صُحُفِ إِبْرَاهِيمَ وَمُوسَى(19) سورة الأعلى

இது முந்தைய வேதங்களிலும், இப்ராஹீம், மூஸாவுடைய வேதங்களிலும் உள்ளது. (அல்குர்ஆன் 87:18,19)

இந்த வசனத்தில் மூஸா நபியையும் இப்ராஹீம் நபியையும் சேர்த்து, இருவருக்கும் வேதம் கொடுக்கப்பட்டதாக அல்லாஹ் சொல்லுகிறான்.

 

ஆனால் மூஸா நபியை மட்டும் இன்றைய முஸ்-லிம்கள் வேதம் கொடுக்கப்பட்டதாக நம்பி, இப்ராஹீம் நபிக்கு வேதம் இல்லை என்று நம்புவது ஆச்சரியமாக இருக்கிறது. இந்த வசனத்தில் சொல்லப்பட்ட ஸுஹுபு என்பதற்கும் வேதம் என்றுதான் அர்த்தம். கிதாப் என்பதற்கும் வேதம் என்றுதான் பொருள். இரண்டு வார்த்தைகளுக்கும் ஒரே பொருள்தான்.

அதேபோன்று அல்லாஹ் அனைத்து நபிமார்களையும் ஓரிடத்தில் மானசீகமான முறையில் ஒன்று திரட்டுகிறான். அப்படி ஒன்று திரட்டி அவர்களனைவரிடமும் ஒரு உடன்படிக்கை எடுக்கிறான். அந்த உடன்படிக்கையிலும் அனைத்து நபிமார்களுக்கும் வேதம் கொடுக்கப் பட்டதாக வசனம் சொல்லுகிறது.

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنْ الشَّاهِدِينَ(81) سورة آل عمران

"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் "தூதர்' உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம்

அல்லாஹ் உறுதிமொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்ட போது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 3:81)

كَانَ النَّاسُ أُمَّةً وَاحِدَةً فَبَعَثَ اللَّهُ النَّبِيِّينَ مُبَشِّرِينَ وَمُنذِرِينَ وَأَنزَلَ مَعَهُمْ الْكِتَابَ بِالْحَقِّ لِيَحْكُمَ بَيْنَ النَّاسِ فِيمَا اخْتَلَفُوا فِيهِ وَمَا اخْتَلَفَ فِيهِ إِلَّا الَّذِينَ أُوتُوهُ مِنْ بَعْدِ مَا جَاءَتْهُمْ الْبَيِّنَاتُ بَغْيًا بَيْنَهُمْ فَهَدَى اللَّهُ الَّذِينَ آمَنُوا لِمَا اخْتَلَفُوا فِيهِ مِنْ الْحَقِّ بِإِذْنِهِ وَاللَّهُ يَهْدِي مَنْ يَشَاءُ إِلَى صِرَاطٍ مُسْتَقِيمٍ(213) سورة البقرة

மனிதர்கள் ஒரே ஒரு சமுதாயமாகவே இருந்தனர். எச்சரிக்கை செய்யவும், நற்செய்தி கூறவும் நபிமார்களை அல்லாஹ் அனுப்பினான். மக்கள் முரண்பட்டவற்றில் அவர்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக

அவர்களுடன் உண்மையை உள்ளடக்கிய வேதத்தை அருளினான். தெளிவான சான்றுகள் அவர்களிடம் வந்த பின்பும் வேதம் கொடுக்கப் பட்டோர்தாம், அதற்கு முரண்பட்டனர். தமக்கிடையே உள்ள பொறா

மையே (இதற்குக்) காரணம். அவர்கள் முரண்பட்டதில் எது உண்மை என நம்பிக்கை கொண்டோருக்கு அல்லாஹ் தனது விருப்பப்படி வழிகாட்டினான். அல்லாஹ் நாடியோரை நேரான வழியில் செலுத்துவான்.

(அல்குர்ஆன் 2:213)

இந்த வசனத்திலும் மக்களிடையே தீர்ப்பு வழங்குவதற்காக நபிமார்களுக்கு வேதத்தை அருளியதாகச் சொல்லுகிறான். மக்களுடைய பிரச்சினையைத் தீர்க்க சட்டப்புத்தகம் வேண்டும். நபிமார்கள் தங்களது சுய விருப்பத்தின் அடிப்படையில் தீர்ப்பளிக்க மாட்டார்கள் என்பதுவும் இந்த வசனத்திலி-ருந்து நமக்குப் புரிகிறது.

முஸ்லி-ம்களாகிய நம்மிடம் வேதங்கள் என்றாலே நான்கு மட்டும்தான் என்கிற தவறான நம்பிக்கை வேரூன்றியிருப்பதினால் இவ்வளவு வசனங்களைக் கொண்டு நிரூபிக்க வேண்டியதாக இருக்கிறது. எனவே இந்த வசனங்களின் அடிப்படையில், மூஸா நபி, ஈஸா நபி, தாவூத் நபி, முஹம்மத் நபி ஆகிய நான்கு நபிமார்களுக்கு மட்டும்தான் வேதம் கொடுக்கப்பட்டது என்று நினைக்காமல், ஆதம் நபி, நூஹ் நபி, இத்ரீஸ் நபி, இப்ராஹீம் நபி, இஸ்மாயீல் நபி என்று பெயர் சொல்லப்பட்ட பெயர் சொல்லப்படாத அனைத்துத் தூதர்களுக்கும் அல்லாஹ் வேதத் தைக் கொடுத்தான் என்று நம்ப வேண்டும்.

எனவே வேதங்கள் நான்குதான் என்பது தவறானது. அப்படி யாராவது நம்பினால் குர்ஆனிலி-ருந்து மேற்சொல்லப்பட்ட அனைத்து வசனங்களையும் மறுத்ததாக ஆகிவிடும். குர்ஆனை மறுத்தவர் நிச்சயமாக முஸ்-லிமாக இருக்கவே முடியாது.

பெயர் சொல்லப்பட்ட வேதங்கள் நான்கு

வேதங்களே நான்கு என்று சொல்லாமல், வேதங்கள் எத்தனை என்பது இறைவனுக்கு மட்டும்தான் தெரியும் என்று சொல்லவேண்டும்.

அப்படித்தான் நம்ப வேண்டும். ஆனால் பெயர் குறிப்பிடப்பட்ட வேதங்கள் நான்கு என்று சொல்-லிக் கொள்ளலாம். இந்த நான்கு வேதங்களின் பெயர்களைக் குர்ஆனும் ஹதீஸும் நமக்குச் சொல்-லித் தருவதினால்

பெயர் சொல்லுகிறோமே தவிர நாமாக பெயர் வைக்கவில்லை என்பதையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.

தாவூத் நபிக்கு கொடுக்கப்பட்ட வேதத்தின் பெயர் ஸபூர் என்பதற்குரிய ஆதாரம்.

إِنَّا أَوْحَيْنَا إِلَيْكَ كَمَا أَوْحَيْنَا إِلَى نُوحٍ وَالنَّبِيِّينَ مِنْ بَعْدِهِ وَأَوْحَيْنَا إِلَى إِبْرَاهِيمَ وَإِسْمَاعِيلَ وَإِسْحَاقَ وَيَعْقُوبَ وَالْأَسْبَاطِ وَعِيسَى وَأَيُّوبَ وَيُونُسَ وَهَارُونَ وَسُلَيْمَانَ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا(163) سورة النساء

தவ்ராத் மூஸா நபிக்குக் கொடுக்கப்பட்ட வேதம் என்பதற்குரிய ஆதாரம்.

மறுமை நாüல் இறைநம்பிக்கையாளர்கள் ஒன்றுகூடி, "(நமக்கு ஏற்பட்டுள்ள துன்பங்கü-ருந்து நம்மைக் காக்கும்படி யார் மூலமாவது) நம் இறைவனிடம் நாம் மன்றாடினால் (எவ்வளவு நன்றாயிருக்கும்!)'' என்று (தங்கüடையே) பேசிக்கொள்வார்கள். பிறகு, அவர்கள் ஆதம் (அலை) அவர்கüடம் வந்து, "நீங்கள் மனிதர்கüன் தந்தையாவீர்கள். அல்லாஹ், தன் கையால் உங்களைப் படைத்தான். தன்னுடைய வானவர்களை உங்களுக்குச் சிரம்பணியச் செய்தான். மேலும், உங்களுக்கு எல்லாப் பொருள்களின் பெயர்களையும் கற்றுத் தந்தான். எனவே, இந்த(ச் சோதனையான) கட்டத்திலி-ருந்து எங்களை விடுவிப்பதற்காக உங்களுடைய இறைவனிடத்தில் எங்களுக்காகப் பரிந்துரை செய்யுங்கள்'' என்று சொல்வார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை'' என்று கூறிவிட்டு, தாம் புரிந்த பாவத்தை நினைத்துப் பார்த்து வெட்கப்படுவார்கள். "நீங்கள் (நபி) நூஹ் அவர்கüடம் செல்லுங்கள். ஏனென்றால், அவர் (எனக்குப் பின்) பூமியிலுள்ளவர்களுக்கு அல்லாஹ் அனுப்பிவைத்த (முக்கிய) தூதர்கüல் முதலாமவர் ஆவார்'' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் நூஹ் (அலை) அவர்கüடம் செல்வார்கள். அப்போது அவரும், "(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை'' என்று கூறிவிட்டு, தாம் அறியாத ஒன்றைக் குறித்துத் தம் இறைவனிடத்தில் கேட்டதை நினைத்து வெட்கப்படுவார்கள். பிறகு, நீங்கள் கருணையாளனின் உற்ற நண்பரிடம் இப்ராஹீம் (அலை) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, இறைநம்பிக்கையாளர்கள் (இப்ராஹீம் -அலை) அவர்கüடம் செல்வார்கள். அப்போது அவர்களும், "(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. அல்லாஹ் உரையாடிய, தவ்ராத்(வேதத்)தையும் அüத்த அடியாரான (நபி) மூசாவிடம் நீங்கள் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் மூசா (அலை) அவர்கüடம் செல்வார்கள். அப்போது அவர்கள், "(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை'' என்று கூறிவிட்டு, (தம் வாழ்நாüல் ஒருமுறை) எந்த உயிருக்கும் ஈடாக இல்லாமல் ஒரு (மனித) உயிரைக் கொன்றதை நினைவு கூர்ந்து தம் இறைவனுக்கு முன் வெட்கப்படுவார்கள். பிறகு, "நீங்கள் அல்லாஹ்வின் அடியாரும், அவனுடைய தூதரும், அவனுடைய வார்த்தையும், அவனுடைய ஆவியுமான (நபி) ஈசாவிடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். (அவ்வாறே அவர்கள் செல்ல,) அப்போது அவர்களும், "(நீங்கள் நினைக்கும்) அந்த நிலையில் நான் இல்லை. நீங்கள் முன் பின் பாவங்கள் மன்னிக்கப்பட்ட அடியாரான முஹம்மத் (ஸல்) அவர்கüடம் செல்லுங்கள்'' என்று சொல்வார்கள். உடனே, அவர்கள் என்னிடம் வருவார்கள். அப்போது நான், "என்னுடைய இறைவனிடத்தில் அனுமதி கேட்பதற்காகச் செல்வேன். அப்போது (எனக்கு) அனுமதி வழங்கப்படும். என் இறைவனை நான் காணும்போது சஜ்தாவில் விழுவேன். தான் விரும்பியவரையில் (அப்படியே) என்னை அவன் விட்டு விடுவான். பிறகு, (இறைவனின் தரப்பி-ருந்து) "உங்கள் தலையை உயர்த்துங்கள்! கேளுங்கள்; உங்களுக்குத் தரப்படும். சொல்லுங்கள்; செவியேற்கப்படும். பரிந்துரை செய்யுங்கள்; உங்கள் பரிந்துரை ஏற்கப்படும்'' என்று சொல்லப்படும். அப்போது நான் எனது தலையை உயர்த்தி, இறைவன் எனக்குக் கற்றுத் தரும் புகழ் மொழிகளைக் கூறி அவனைப் புகழ்வேன். பிறகு நான் பரிந்துரை செய்வேன். அப்போது இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு அவர்களை நான் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மீண்டும் நான் இறைவனிடம் செல்வேன். என் இறைவனைக் காணும்போது நான் முன்பு போலவே செய்வேன். பிறகு நான் பரிந்துரைப்பேன். அப்போதும் இறைவன், (நான் யார் யாருக்குப் பரிந்துரை செய்யலாம் என்பதை வரையறுத்து) எனக்கு வரம்பு விதிப்பான். பிறகு, நான் அவர்களைச் சொர்க்கத்திற்கு அனுப்பி வைப்பேன். பிறகு மூன்றாம் முறையாக (இறைவனிடம்) நான் செல்வேன். பிறகு நான்காம் முறையும் செல்வேன். (இறுதியாக) நான், "குர்ஆன் தடுத்துவிட்ட, நிரந்தர நரகம் கட்டாயமாகிவிட்டவர்(களான இறைமறுப்பாளர்கள், நயவஞ்சகர்)களைத் தவிர வேறு யாரும் நரகத்தில் மிஞ்சவில்லை'' என்று சொல்வேன்.

அறிவிப்பாளர்: அனஸ் (ர-லி),

நூல்: புகாரி 4476

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஆதம் (அலை) அவர்களும் மூசா (அலை) அவர்களும் சந்தித்துக் கொண்டனர். அப்போது மூசா (அலை) அவர்கள் ஆதம் (அலை) அவர்கüடம், "நீங்கள்தாம் மக்களைத் துர்பாக்கியவான்களாக்கி, அவர்களைச் சொர்க்கத்திலி-ருந்து வெüயேற்றியவரா?'' என்று கேட்டார்கள். ஆதம் (அலை) அவர்கள் மூசா (அலை) அவர்களிடம், "அல்லாஹ் தன் தூதர் பதவிக்காகவும் தனக்காகவும் தேர்ந்தெடுத்துக் கொண்டு, தவ்ராத்தையும் அருளினானே அவரா நீங்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு மூசா (அலை) அவர்கள், "ஆம்' என்று பதிலளித்தார்கள். அதற்கு ஆதம் (அலை) அவர்கள், "என்னைப் படைப்பதற்கு முன்பாகவே (நீங்கள் குறிப்பிட்டபடி நான் செய்வேன் என) என் மீது விதிக்கப்பட்டிருந்ததாக, தவ்ராத்தில் நீங்கள் கண்டீர்களா?'' என்று கேட்டார்கள். மூசா (அலை) அவர்கள் "ஆம்' (கண்டேன்) என்றார்கள். இப்படி(ப் பேசி) மூசா (அலை) அவர்களை ஆதம் (அலை) அவர்கள் (வாதத்தில்) வென்றார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-லி),

நூல்: புகாரி 4736

இன்ஜீல் ஈஸா நபிக்கு அருளப்பட்ட வேதம் என்பதற்கான சான்று

وَقَفَّيْنَا عَلَى آثَارِهِمْ بِعِيسَى ابْنِ مَرْيَمَ مُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنْ التَّوْرَاةِ وَآتَيْنَاهُ الْإِنجِيلَ فِيهِ هُدًى وَنُورٌ وَمُصَدِّقًا لِمَا بَيْنَ يَدَيْهِ مِنْ التَّوْرَاةِ وَهُدًى وَمَوْعِظَةً لِلْمُتَّقِينَ(46) سورة المائدة

தமக்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துபவராக அவர்களின் அடிச்சுவட்டில் மர்யமின் மகன் ஈஸாவைத் தொடரச் செய்தோம்.

அவருக்கு இஞ்சீலையும் வழங்கினோம். அதில் நேர் வழியும் ஒளியும் இருந்தது. அதற்கு முன் சென்ற தவ்ராத்தை உண்மைப்படுத்துவதாகவும் அது அமைந்திருந்தது. (இறைவனை) அஞ்சுவோருக்கு நேர் வழியாகவும், அறிவுரையாகவும் இருந்தது.

(அல்குர்ஆன் 5:46)

குர்ஆன் இறுதித் தூதர் முஹம்மது நபிகள் நாயகத்திற்கு அருளப்பட்ட வேதம் என்பதற்கான ஆதாரம்

قُلْ أَيُّ شَيْءٍ أَكْبَرُ شَهَادَةً قُلْ اللَّهُ شَهِيدٌ بَيْنِي وَبَيْنَكُمْ وَأُوحِيَ إِلَيَّ هَذَا الْقُرْآنُ لِأُنذِرَكُمْ بِهِ وَمَنْ بَلَغَ أَئِنَّكُمْ لَتَشْهَدُونَ أَنَّ مَعَ اللَّهِ آلِهَةً أُخْرَى قُلْ لَا أَشْهَدُ قُلْ إِنَّمَا هُوَ إِلَهٌ وَاحِدٌ وَإِنَّنِي بَرِيءٌ مِمَّا تُشْرِكُونَ(19) سورة الأنعام

"மிகப் பெரும் சாட்சியம் எது?'' என்று (முஹம்மதே!) கேட்பீராக! "எனக்கும், உங்களுக்குமிடையே அல்லாஹ்வே சாட்சியாளன். இந்தக் குர்ஆன் மூலம் உங்களையும், இதை அடைவோரையும் நான் எச்சரிக்கை செய்வதற்காக இது எனக்கு அறிவிக்கப்பட்டுள்ளது'' எனக் கூறுவீராக! "அல்லாஹ்வுடன் வேறு கடவுள்கள் இருப்பதாக சாட்சி கூறுகிறீர்களா? நான் (அவ்வாறு) சாட்சி கூறமாட்டேன்'' என்று நீர் கூறுவீராக! "வணக்கத்திற்குரியவன் அவன் ஒருவனே. நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டும் நான் விலகிக் கொண்டவன்'' எனக் கூறுவீராக!

(அல்குர்ஆன் 6:19)

எனவே இந்த நான்கு நபிமார்களுக்குக் கொடுக்கப்பட்ட வேதங்களுக்கு மட்டும்தான் பெயர் குறிப்பிடப்பட்டுள்ளது. மற்ற நபிமார்களுக்கும் வேதம் கொடுக்கப்பட்டது. ஆனால் அந்த வேதங்களின் பெயர்கள் குறிப்பிடப்படவில்லை என்பதை இந்தச் சான்றுகளிலிருந்து அறியலாம். எனவே பெயர் சொல்லப்பட்டிருப்பதை பெயருடனும் பெயரில்லாதவைகளை பெயரில்லாமலும் வேதங்களை எந்தளவுக்கு நம்பவேண்டுமோ அந்தளவுக்கு நம்பிக் கொள்ளவேண்டியதுதான்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

Published on: March 27, 2013, 6:24 PM Views: 1554

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top