டிசம்பர் மாத தீன்குலப்பெண்மணி

அயோக்கியர்களின் கடைசிப் புகலிடம் அரசியல்

அரசியலில் புதிதாக ஒருவர் வருவதும் போவதும் வாடிக்கையான ஒன்று. ஒவ்வொரு புதிய அரசியல்வாதிகளும் மக்களுக்கு நல்லது செய்யவே வந்துள்ளோம். முந்தைய ஆட்சியில் நடந்த ஊழல்களை ஒழித்து வறுமையை நீக்கி சுபிட்சமான வாழ்வை மக்களுக்கு வழங்குவோம் என்று கூறுவார்கள். இப்படி நாடகமாடி மக்களின் ஆதரவைப் பெற்றபின் அவர்களும் ஊழல் சேற்றில் சிக்கிக் கொள்வதை நாம் பார்த்து வருகிறோம்.

கிசான் பாபுராவ் ஹசாரே என்ற இயற்பெயர் கொண்ட அன்னா ஹசாரே இந்தியாவின் வளர்ச்சிக்கு முட்டுக்கட்டையாக இருப்பது ஊழல்தான்; அதை ஓழித்தால்தான் இந்தியா ஒளிரும் என்று கூறி ஊழல் எதிர்ப்பு இயக்கத்தை உருவாக்கினார். ஆரம்பத்தில் மக்களிடம் பெரும் வரவேற்பு இருப்பதாக படம் காட்டினார். அவரது அறக்கட்டளையும் ஊழல் குற்றச்சாட்டுக்கு ஆளானதும் இருந்த இடம் தெரியாமல் போய்விட்டார்.

இவருடன் இணைந்து செயல்பட்ட முக்கிய நபரான அரவிந்த் கெஜ்ரிவால் ஆம் ஆத்மி என்ற கட்சியை உருவாக்கினார். தற்போது நடைபெற உள்ள டெல்லி சட்டசபைத் தேர்தலில் அக்கட்சி போட்டியிடுகிறது. இவரும் ஊழல் லஞ்சம் போன்றவற்றை ஒழித்து இந்தியாவை வளமிக்க நாடாக வல்லரசாக மாற்றப் போவதாக பேசிவருகிறார்.

தேர்தலில் போட்டியிட்டு ஒரு சட்டமன்ற உறுப்பினர் கூட இல்லாத நிலையில் இவருடைய கட்சிக்கு வெளிநாட்டிலிருந்து பெரும் பணம் முறைகேடாக வருவதாக குற்றம் சுமத்தப்பட்டு மத்திய அரசு இதை விசாரிக்க உத்தரவிட்டுள்ளது. தற்போது மேலும் ஒரு அதிர்ச்சித் தகவல் வெளியாகி உள்ளது.

ஊடகங்கள் நடத்திய ரகசியக் கண்காணிப்பில் அக்கட்சியைச் சேர்ந்தவர்கள் நிதி கொடுப்போர் பற்றி விபரம் எதுவும் இல்லாமல் நன்கொடை பெற்றதாகத் தெரியவந்துள்ளது.

ஆம்ஆத்மி கட்சியினர் காரியம் சாதிக்க விரும்பும் பண முதலைகளிடமிருந்து  பணம் வாங்குவதை ஒரு இணையதளம் படம் பிடித்து ஒளிபரப்பியுள்ளது.

இதனால் கட்சியின் தலைவர் அரவிந்த் கெஜ்ரிவால் கடும் நெருக்கடியில் சிக்கியுள்ளார். ஆம் ஆத்மி கட்சியின் முக்கிய தலைவர்களான ஷாஸியா லிமி மற்றும் குமார் விஷ்வாஸ் ஆகியோரும் பணம் வாங்கிய விவகாரம் வெளிவந்துள்ளது. இதனை அடுத்து ஷாஸிலா லிமி தேர்தலில் போட்டியிடுவதில் இருந்து விலகிக் கொள்வதாக அறிவித்துள்ளார்.

இப்படி தோண்டத் தோண்ட முறைகேடுகள் தொடர்ந்து வந்து கொண்டிருக்கிறது.

நமது நாட்டில் ஆட்சியாளர்கள் மாறினாலும் அசியல்வாதிகளின் கொள்ளைகள் மாறுவதில்லை. திருர்டகள் வேறு பெயரில் மாறிமாறி வரும் நிலைதான் இந்தியாவில் தொடர்கிறது.

 

கிமார் என்றால் என்ன?

அல்லாஹ்வை நம்பிக்கை கொண்ட பெண்கள் அணிய வேண்டிய ஆடை தொடர்பாக திருமறைக் குர்ஆனில் கூறப்பட்டுள்ள இரண்டாவது மிக முக்கியமான வசனம் கிமார் பற்றிய வசனம் ஆகும்.

وَقُلْ لِلْمُؤْمِنَاتِ يَغْضُضْنَ مِنْ أَبْصَارِهِنَّ وَيَحْفَظْنَ فُرُوجَهُنَّ وَلَا يُبْدِينَ زِينَتَهُنَّ إِلَّا مَا ظَهَرَ مِنْهَا وَلْيَضْرِبْنَ بِخُمُرِهِنَّ عَلَى جُيُوبِهِنَّ  (النور) 24: 31

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும்

(அல்குர்ஆன் 24 : 31)

இவ்வசனமும் பெண்கள் முகத்தை மறைப்பது கூடாது என்பதற்கு தெளிவான சான்றாகும். இதுபற்றி விபரமாகப் பார்ப்போம்.

பெண்கள் பார்வையைத் தாழ்த்துமாறு இந்த வசனத்தில் அல்லாஹ் கூறுகின்றான். பெண்களின் பார்வை அன்னிய ஆண்களின் மீது படும் என்பதினால்தான் அல்லாஹ் இவ்வாறு கட்டளையிடுகின்றான்.

ஆண்களின் முகம் திறந்திருக்கின்ற காரணத்தினால்தான் அல்லாஹ் பெண்களுக்கு இவ்வாறு கட்டளையிடுகின்றான் என்பதை நாம் இவ்வசனத்திலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அதுபோன்றுதான் இதற்கு முந்தைய வசனத்தில் தங்களின் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ள வேண்டுமென்று ஈமான் கொண்ட ஆண்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டுள்ளான்.

(முஹம்மதே!) தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும், தமது கற்பைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட ஆண்களுக்குக் கூறுவீராக! இது அவர்களுக்குப் பரிசுத்தமானது. அவர்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன்.

அல்குர்ஆன் (24 : 30)

தவறான எண்ணத்திலும் அந்நியப் பெண்களை ஆண்கள் பார்ப்பார்கள் என்ற காரணத்தினால்தான் பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறு அல்லாஹ் கட்டளையிடுகின்றான். பெண்களின் முகம் மறைக்கப்படாத ஒரு பகுதியாக இருக்கின்ற காரணத்தினால்தான் அல்லாஹ் ஆண்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்கின்றான் என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

”ஹிமார்” என்பது பெண்களின் முகத்தையும் மறைக்கின்ற ஒரு ஆடையாக இருக்குமென்றால் அல்லாஹ் ஆண்களுக்கு இவ்வாறு உபதேசம் செய்ய வேண்டிய அவசியமில்லை.

இதிலிருந்தே ”ஹிமார்” என்பது பெண்களின் முகத்தை மறைக்காது என்பது தெளிவாகிறது.

மேலும் முக்காடுகள் என நாம் மொழிபெயர்த்துள்ள இடத்தில் குர்ஆனில் “ கும்ரு”  என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. “கிமார்”  என்பது இதன் ஒருமைச் சொல்லாகும். கிமார் என்றால் முகம் உட்பட தலையை மறைக்கும் ஆடை எனக் கூறி இந்த வசனத்தையும் தங்களின் சான்றாக எடுத்துக் காட்டுகின்றனர்.

இவ்வசனத்தில் முக்காடுகளைப் போட்டுக் கொள்ளுமாறு பொதுவாகக் கூறப்படாமல் மார்பின் மீது போட்டுக் கொள்ள வேண்டும் என்றே கூறப்பட்டுள்ளது. முகத்தின் மீது போட வேண்டும் என்று கூறப்பட்டு இருந்தால்தான் முகத்தை மறைக்க வேண்டும் என்பதற்கு இவ்வசனத்தை சான்றாகக் காட்டலாம். ஆனால் அவ்வாறு கூறப்படவில்லை என்பதால் முகத்தை மறைப்பதற்குச் சான்றாக இவ்வசனத்தைக் காட்ட முடியாது.

”கிமார்” என்பதின் அகராதிப் பொருள்

கிமார் என்ற சொல்லின் நேரடிப் பொருள் மறைக்கக் கூடியது என்பதாகும்.

”கிமார்” என்ற வார்த்தைக்கு அரபி மொழி அகராதிகளில் அது தலையை மறைக்கும் துணி என்ற பொருளே குறிப்பிடப்பட்டுள்ளது.

وتَخَمَّرَتْ بالخِمار واخْتَمَرَتْ لَبِسَتْه وخَمَّرَتْ به رأْسَها غَطَّتْه وفي حديث أُم سلمة أَنه كان يمسح على الخُفِّ والخِمار أَرادت بالخمار العمامة لأَن الرجل يغطي بها رأْسه كما أَن المرأَة تغطيه بخمارها   (لسان العرب 4/ 254)

”தஹம்மரத் பில் ஹிமார்” ”இஹ்தமரத்” என்பதின் பொருள் ”கிமார் அணிந்தாள்” என்பதாகும். ”ஹம்மரத் பிஹி ரஃசஹா” என்பதின் பொருள் ”ஹிமாரைக் கொண்டு தலையை மூடினாள்” என்பதாகும்.

”நபியவர்கள் காலுறையின் மீதும் கிமாரின் மீதும் மஸஹ் செய்தார்கள்” என்று உம்முஸலமா (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஹதீஸிலே வந்துள்ளது. இதில் ”ஹிமார்” என்ற வார்த்தையின் மூலம் ”தலைப்பாகையை” அவர்கள் நாடுகிறார்கள்.  ஏனெனில் ஒரு பெண் தன்னுடைய ஹிமாரின் மூலம்  தலையை மறைப்பதைப் போன்று ஒரு ஆண் தலைப்பாகையின் மூலம் தலையை மறைக்கின்றான்.

நூல் : லிஸானுல் அரப், பாகம் 4, பக்கம் 254

மேற்கண்ட லிஸானுல் அரப் என்ற அரபி அகராதி நூலில் ”கிமார்” என்ற வார்த்தையின் பொருள் ”தலையை மறைக்கும் துணி”தான் என்பது தெளிவாக கூறப்பட்டுள்ளது.

இது போன்று இன்னும் பல அரபி அகராதி நூற்களிலும் இதே பொருள் தெளிவாகக் கூறப்பட்டுள்ளது.

 (الْخمار) كل مَا ستر وَمِنْه خمار الْمَرْأَة وَهُوَ ثوب تغطي بِهِ رَأسهَا وَمِنْه الْعِمَامَة لِأَن الرجل يُغطي بهَا رَأسه ويديرها تَحت الحنك وَفِي الحَدِيث (أَنه كَانَ يمسح على الْخُف والخمار) الْعِمَامَة (ج) أخمرة وخمر وخمرين  (المعجم الوسيط 1/ 255)

மறைக்கின்ற ஒவ்வொன்றிற்கும் ஹிமார் எனப்படும். ”ஹிமாருல் மர்அத்தி” பெண்ணுடைய ஹிமார் என்பது ”ஒரு பெண் தன்னுடைய தலையை மூடிக்கொள்ளும் துணியாகும். ”தலைப்பாகை” என்பதும் இதிலிருந்து வந்ததுதான். ஏனெனில் ஆண் இதன் மூலம் தனது தலையை மூடி அதனை தொண்டைக்குழிக்குக் கீழே சுற்றிக்கட்டுகிறான். 

நூல் : அல்முஃஜமுல் வஸீத்  பாகம் 1 பக்கம் 255

والخمار: ما تغطي به المرأة رأسها  (تهذيب اللغة 2/ 487)

ومنه الخِمار وهو ما تغطّي به المرأة رأسَها  (المغرب 1/ 270)

الْخِمَارُ ثَوْبٌ تُغَطِّي بِهِ الْمَرْأَةُ رَأْسَهَا وَالْجَمْعُ خُمُرٌ  (المصباح المنير 3/ 133)

ومنه خِمَارُ المَرْأَةِ تُغَطِّي به رَأْسَها   (تاج العروس ص: 2785)

خمر النساء   واحدتها خمار بكسر الخاء وهو ما تغطي به المرأة رأسها  (المطلع ص: 22)

பெண்கள் அணியும் ஹிமார் என்பது ”ஒரு பெண் எதன் மூலம் தன்னுடைய தலையை மூடிக்கொள்வாளோ அதுவாகும்”

நூற்கள் : தஹ்தீபுத் லுகத், பாகம் 2, பக்கம் 487, அல் முஃரிப் , பாகம் 1, பக்கம் 270

அல்மிஸ்பாஹூல் முனீர் பாகம் 3, பக்கம் 133, தாஜில் அரூஸ் பக்கம் 2785 , அல்முத்லிவு பக்கம் 22

والخِمَار: النَّصيفُ،  (المحكم والمحيط الأعظم 2/ 334)

والخِمارُ بالكسر : النَّصِيفُ  (القاموس المحيط ص: 495)

ஹிமார் என்ற வார்த்தையின் பொருள் ”நஸீஃப்” என்பதாகும். இதன் பொருள் ”தலைமுக்காடு” என்பதாகும்.

நூற்கள் : அல்முஹ்கம் வல்முஹீதுல் அஃளம் பாகம் 2, பக்கம் 334,  அல்காமூசுல் முஹீத் பக்கம் 495

نصف النبي صلى الله عليه وآله وسلم قال في الحُور العين : ولَنَصيف إحْداهُنَّ على رأْسها خيرٌ من الدُّنْيَا وما فيها : هو الخمِار (الفائق 3/ 433)

ஹூருல் ஈன் தொடர்பாக (புகாரி 2796 வது) ஹதீஸிலே  ” அவளது ”நஸீஃப்” அதாவது தலையிலுள்ள முக்காடோ உலகத்தையும் அதிலுள்ளவற்றையும் விடச் சிறந்ததாகும். என்று இடம் பெற்றுள்ளது. இந்த நஸீஃப் என்பதின் பொருள் கிமார் ஆகும்.

அல்ஃபாயிக் பாகம் 3, பக்கம் 433

والخِمار: المِقْنَعَة ونحوها. (جمهرة اللغة 1/ 311)

”தலையை மறைக்கும் துணி” மற்றும் அது போன்றவற்றிற்கு ”ஹிமார்” என்று கூறப்படும்.

நூல் : ஜம்ஹரதுல் லுகத் பாகம் : 1 , பக்கம்  : 311

அரபி மொழி அகராதி அடிப்படையிலும் “கிமார்” என்ற வார்த்தைக்கு “தலையை மறைக்கும் துணி” என்ற பொருள் நிரூபணமாகிவிட்டது.

எனவே 24 : 31 வசனத்தில் இடம்பெற்றுள்ள ”ஹூமுர்” என்ற சொல் முகத்தை மறைப்பதைக் குறிக்காது என்பதை நாம் இதன் மூலமும் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

ஹதீஸ்களில் ”கிமார்” என்ற வார்த்தையின் பொருள்:

ஹதீஸ்களில் கிமார் என்பது தலைத்துணி என்ற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْمُثَنَّى حَدَّثَنَا حَجَّاجُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا حَمَّادٌ عَنْ قَتَادَةَ عَنْ مُحَمَّدِ بْنِ سِيرِينَ عَنْ صَفِيَّةَ بِنْتِ الْحَارِثِ عَنْ عَائِشَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ أَنَّهُ قَالَ لَا يَقْبَلُ اللَّهُ صَلَاةَ حَائِضٍ إِلَّا بِخِمَارٍ قَالَ أَبُو دَاوُد رَوَاهُ سَعِيدٌ يَعْنِي ابْنَ أَبِي عَرُوبَةَ عَنْ قَتَادَةَ عَنْ الْحَسَنِ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ رواه ابوداود والترمذي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : மாதவிடாய் (ஏற்படும் பருவமடைந்த) பெண்ணின் தொழுகையை முக்காடுடன் (அவள் தொழுதாலே) தவிர அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான்.

அறிவிப்பவர் :  ஆயிஷா (ரலி) 

நூல் :அபூதாவூத் 546,திர்மிதீ (344)

பெண்கள் தொழும்போது முக்காடுடன் தொழ வேண்டும் என்று இந்த ஹதீஸ் கூறுகின்றது. முக்காடு என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் கிமார் என்ற வார்த்தை தான் இடம் பெற்றுள்ளது. கிமார் என்றால் முகத்தை மூடும் ஆடை எனத் தவறான பொருளை இங்கே பொறுத்தினால் பெண்கள் தொழுகையின்போது முகத்தை மூடுவது கட்டாயம் என்ற தவறான முடிவு ஏற்படும்.

பெண்கள் முகத்தை மூட வேண்டும் என்ற கருத்துடையவர்கள் தொழுகையின்போது பெண்கள் முகத்தை மூட வேண்டும் கூறுவதில்லை.

மேற்கண்ட ஹதீஸில் உள்ள கிமார் என்பதற்கு முகத்தை மறைக்கும் ஆடை என்று பொருள் கொடுப்பதில்லை. தலையை மறைக்கும் ஆடை என்றே பொருள் கொடுக்கின்றனர்.

உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறினார்கள் : எனது சகோதரி காலணி அணியாமலும் கிமார் (தலைத்துணி) அணியாமலும் ஹஜ் செய்வதாக நேர்ச்சை செய்துள்ளார் என்று நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் (கூறி இது பற்றி) வினவினேன். அதற்கு அவர்கள் உங்களுடைய சகோதரிக்கு நீங்கள் உத்தரவிடுங்கள். அவர் தலைத்துணி அணிந்து கொள்ளட்டும். வாகனத்தில் ஏறி வரட்டும். அவர் மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று கூறினார்கள்.

நூல் : அபூதாவுத் (2865)

ஹஜ் செய்யும் பெண்கள் முகத்தை மூடக்கூடாது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள். (பார்க்க புகாரி 1838) 

இந்த ஹதீஸில் கிமார் அணிய வேண்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்களின் சகோதரிக்கு உத்தரவிட்டுள்ளார்கள்.

கிமார் என்பது முகத்தை மறைக்கும் ஆடையாக இருந்தால் முகத்தை மறைக்கக் கூடாது என்று தடுக்கப்பட்ட ஹஜ்ஜில் கிமாரை அணியுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டிருக்க மாட்டார்கள்.

கிமார் என்பது தலையை மட்டும் மறைக்கும் துணி என்பதாலே இதை ஹஜ்ஜின்போது அணியுமாறு நபியவர்கள் உத்தரவிட்டுள்ளார்கள்.

உம்மு சுலைம் (ரலி) அவர்கள் தமது ”கிமார்” முக்காட்டுத் துணியை தலையில் சுற்றிக்கொண்டு வேகமாகப் புறப்பட்டுச் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைச் சந்தித்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?'' என்று கேட்டார்கள்.                                                 நூல் : முஸ்லிம் (5073)

”கிமார்” அணிந்து வரும் உம்சுலைம் (ரலி) அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் "உம்மு சுலைமே! உமக்கு என்ன ஆயிற்று?' என்று கேட்கிறார்கள் என்றால் உம்மு சுலைம் (ரலி) அவர்களின் முகம் மறைக்கப்படவில்லை என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ள முடிகிறது.

இமாம் இப்னு ஹஜர் அவர்கள் கிமார் என்பதற்கு தமது நூலான ஃபத்ஹுல் பாரியில் ஒரு இடத்தில் தலையை மறைக்கும் ஆடை எனவும் மற்றொரு இடத்தில் முகத்தை மறைக்கும் ஆடை எனவும் விளக்கம் கூறுகிறார்.

ஆனால் நாம் மேலே பார்த்த ஏராளமான ஆதாரங்களின் அடிப்படையில் 24 : 31 வசனத்தில் இடம் பெறும் பெறும் ”ஹூமுர்” என்ற வார்த்தைக்கும், நாம் மேலே சுட்டிக்காட்டிய ஹதீஸ்களில் இடம் ”கிமார்” என்ற வார்த்தைக்கும் முகத்தை மூடும் ஆடை என்று பொருள் கொள்வது தவறானது. தலையை மறைக்கும் துணி என்பதே இதன் சரியான பொருள் என்பதைத் தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

அலங்காரம் என்றால் என்ன

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும் நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில்  வெளியே தெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல் போட்டுக் கொள்ளட்டும். தமது கணவர்கள், தமது தந்தையர், தமது கணவர்களுடைய தந்தையர், தமது புதல்வர்கள், தமது கணவர்களின் புதல்வர்கள், தமது சகோதரர்கள், தமது சகோதரர்களின் புதல்வர்கள், தமது சகோதரிகளின் புதல்வர்கள், பெண்கள், தங்களுக்குச் சொந்தமான அடிமைகள், ஆண்களில் (தள்ளாத வயதின் காரணமாக பெண்கள் மீது) நாட்டமில்லாத பணியாளர்கள், பெண்களின் மறைவிடங்களை அறிந்து கொள்ளாத குழந்தைகள் தவிர மற்றவர்களிடம் தமது அலங்காரத்தை அவர்கள் வெளிப்படுத்த வேண்டாம். அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம். நம்பிக்கை கொண்டோரே! அனைவரும் அல்லாஹ்வை நோக்கித் திரும்புங்கள்! இதனால் வெற்றியடைவீர்கள்.

அல்குர்ஆன் 24 : 31

இந்த வசனத்தில்  "பெண்கள் அலங்காரத்தில் வெளிப்படையாகத் தெரிபவற்றைத் தவிர வேறு எதையும் வெளிப்படுத்தக் கூடாது'' எனக் கூறப்படுகிறது.

இங்கே "ஜீனத்' என்ற மூலச்சொல் பயன்படுத்தப்படுகிறது. ஜீனத் என்றால் அலங்காரம் என்பது பொருள்.

அலங்காரம் என்பது இயற்கையாக ஒருவருக்கு அமைந்துள்ள அழகைக் குறிக்கும் சொல் அல்ல. மாறாக புறச் சாதனங்களால் ஏற்படுத்தப்படுகின்ற அழகே அலங்காரம் எனப்படும்.

உதட்டுச் சாயம் பூசுவது, நகைகளால் ஜோடனை செய்வது, மேக்கப் பொருட்களைப் பயன்படுத்துவது, ஆடைகளால் அழகை அதிகரிப்பது ஆகியவை ஜீனத் என்ற சொல்லில் அடங்கும்.

எனவே இவ்வசனத்தில் கூறப்படுபவர்களைத் தவிர மற்றவர்களுக்கு முன் இதுபோன்ற உபரியான சாதனங்களால் அலங்காரம் செய்த நிலையில் பெண்கள் காட்சி தரக் கூடாது.

இவ்வசனத்தில் இடம் பெற்றுள்ள "ஜீனத்' என்பதைச் சிலர் அழகு என விளங்கிக் கொண்டனர். அழகு வேறு, அலங்காரம் வேறு என்பதை அவர்கள் உணர்வதில்லை.

திருமறைகுர்ஆனில் புறச்சாதனங்களால் ஏற்படுத்தப்படும் அழகே ”ஜீனத்” என்று குறிப்பிடப்பட்டுள்ளது.

"தனது அடியார்களுக்காக அல்லாஹ் வழங்கிய அலங்காரத்தையும், தூய்மையான உணவுகளையும் தடை செய்பவன் யார்?''

அல்குர்ஆன் 7 : 32

அல்லாஹ் மனிதன் தன்னை அலங்காரமாகக் காட்டிக் கொள்வதற்காக படைத்துள்ள பொருட்களையே ”ஜீனத்” என்ற வார்த்தையால் மேற்கண்ட வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

குதிரைகள், கோவேறுக் கழுதைகள், கழுதைகள் ஆகியவற்றை நீங்கள் ஏறிச் செல்லவும், அலங்காரமாகவும் (அவன் படைத்தான்.) நீங்கள் அறியாதவற்றை (இனி) படைப்பான்                 அல்குர்ஆன் 16 : 8

ஒரு மனிதன் குதிரை, கோவேறுக் கழுதை போன்றவற்றில் ஏறிச் செல்வது அவனுக்கு அலங்காரமாக அமைகிறது என்று அல்லாஹ் குறிப்பிடுகிறான். இங்கு ”ஜீனத்” என்ற சொல்லே பயன்படுத்தப்பட்டுள்ளது. இன்றைய காலத்தில் கார்களில், விலை உயர்ந்த இரு சக்கர வாகனங்களில் வருவதை மனிதர்கள் தங்களுக்குரிய ஒரு அலங்காரமாக, மதிப்பாகக் கருதுவதை நாம் பார்க்கிறோம்.

அவர்கள் மறைத்திருக்கும் அலங்காரம் அறியப்பட வேண்டுமென்பதற்காக தமது கால்களால் அடித்து நடக்க வேண்டாம்.

அல்குர்ஆன் 24 : 31

கால்களில் ஒலி எழுப்பக்கூடிய கொலுசு போன்றவற்றை அணிந்து கொண்டு மற்றவர்கள் அதனை அறிய வேண்டும் என்பதற்காக தட்டித் தட்டித் நடப்பதைத்தான் அல்லாஹ் மேற்கண்ட வசனத்தில் சுட்டிக் காட்டுகின்றான்.

ஆதமுடைய மக்களே! ஒவ்வொரு தொழுமிடத்திலும் உங்கள் அலங்காரத்தைச் செய்து கொள்ளுங்கள்!    அல்குர்ஆன் 7 : 31

சிறந்த ஆடையை அணிந்து கொண்டு பள்ளிவாசலுக்கு வர வேண்டும் என்பதைத்தான் இந்த வசனத்தில் ”ஜீனத்” என்ற வார்த்தையைப் பயன்படுத்தி அல்லாஹ் கூறுகிறான்.

தனது அலங்காரத்துடன் அவன் தனது சமுதாயத்திடம் சென்றான். "காரூனுக்குக் கொடுக்கப்பட்டது போன்று நமக்கும் கொடுக்கப்பட்டிருக்கக் கூடாதா? அவன் பெரும் பாக்கியமுடையவனாக இருக்கிறான்'' என்று இவ்வுலக வாழ்க்கையை விரும்புவோர் கூறினர்.

அல்குர்ஆன் 28 : 79

காரூனுக்கு வழங்கப்பட்ட இயற்கையான அழகைப்பற்றி மேற்கண்ட வசனம் பேசவில்லை. மாறாக அவன் அணிகலன்கள், வாகனங்கள் , படை பட்டாளங்கள் மூலம் தனக்கு ஏற்படுத்திக்கொண்ட அலங்காரத்தையும், மதிப்பு, மரியாதையுமே மேற்கண்ட வசனதில் ”ஜீனத்” என்ற வார்த்தையின் மூலம் குறிப்பிடப்பட்டுள்ளது.

ஒரு பெண் இத்தாவுடைய காலத்தில் தன்னை அலங்கரித்துக் கொள்ளக்கூடாது என்றால் அவள் நகை நட்டுகள் போன்ற புறசாதனங்களால் தன்னை அலங்கரித்துக் கொள்ளக் கூடாது என்பதே அதன் பொருளாகும். அவளுக்கு இறைவன் வழங்கிய இயற்கையான அழகை ”ஜீனத்” என்ற சொல் குறிக்காது.

ஜுமுஆத் தொழுகைக்காக நம்மை அலங்கரித்துக் கொள்ளுதல் என்பதும், பெருநாள் தொழுகைக்காக நம்மை அலங்கரித்துக் கொள்ளுதல் என்பதும் ஆடை, அணிகலன்கள் போன்ற புற சாதனங்களால் நம்மை அலங்கரித்துக் கொள்வதையே குறிக்கும்.

முகம், கை, கெண்டைக்கால் போன்றவை ”ஜீனத்” என்பதில் அடங்காது. எனவே இவற்றை மறைக்க வேண்டும் என்பதை மேற்கண்ட வசனம் குறிக்காது.

மாறாக நபி (ஸல்) அவர்களுடைய காலத்தில் ஹிஜாப் அணியும்போது பெண்கள் தங்களுடைய முகங்களை மறைக்கவில்லை என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.

நபியவர்கள் காலத்தில் இஸ்லாமியப் பெண்கள் முகத்தை மறைக்காத வண்ணமே “ஹிஜாப்“ அணிந்துள்ளார்கள் என்பதற்கு நாம் இதுவரை எடுத்து வைத்த ஆதாரங்கள் மட்டுமில்லாமல் இன்னும் ஏராளமான சான்றுகள் ஹதீஸ்களில் நிறைந்துள்ளன.

அது பற்றிய விவரங்களை நாம் தொடர்ச்சியாகக் காண்போம்

 

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

பள்ளிவாசல்களில் அமர்ந்து உலக விஷயங்களைப் பேசக்கூடாது என்பதை வலியுறுத்தும் விதமாக பள்ளியில் பேசினால் நாற்பது ஆண்டு கால நன்மைகள் அல்லது தொழுகைகள் அழிந்து விடும் என நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாக ஒரு செய்தியை பல பள்ளிவாசல்களில் எழுதி வைத்திருக்கின்றார்கள்.

அதிகமான மக்களும் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதாகவே இன்றளவும் நம்பியுள்ளனர். உண்மையில் இவ்வாறு ஹதீஸ் உள்ளதா? இதன் தரம் என்ன? என்பதை அறிந்து கொள்வோம்.

الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهائم الحشيش

கால்நடைகள் புற்பூண்டுகளைத் திண்பதைப் போன்று பள்ளிவாசல்களில் பேசுவது நன்மைகளைத் தின்றுவிடும்.

الحديث في المسجد يأكل الحسنات كما تأكل النار الحطب.

நெருப்பு விறகை எரித்துவிடுவதைப் போன்று பள்ளியில் பேசுவது நன்மைகளை (எரித்து) உண்டு விடும்.

கஸ்ஸாலி, இந்தச் செய்தியை நபிகள் நாயகம் கூறியதுபோல தனது இஹ்யாவு உலூமீத்தீன் என்ற நூலில் கூறியுள்ளார்.

(பாகம் 1 பக்கம் 152)

இதன் மூலமாக மக்களுக்கு மத்தியில் இது ஒரு நபிமொழியாகப் பரவியுள்ளது என்பதை உணர முடிகிறது.

ஆனால் இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படையும் அறவே கிடையாது. இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத அடிப்படை ஆதாரமற்ற செய்தியாகும். பல அறிஞர்கள் இது அடிப்படையில்லாத செய்தி என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

تخريج أحاديث الإحياء - (1 / 107(

 حديث " الحديث في المسجد يأكل الحسنات كما تأكل البهيمة الحشيش "

لم أقف له على أصل

ஹாபிழ் இராக்கி எனும் அறிஞர் இஹ்யாவை ஆய்வு செய்து இந்தச் செய்தியைக் குறிப்பிடும் போது இந்தச் செய்திக்கு எந்த அடிப்படையையும் நான் அறியவில்லை என்று குறிப்பிடுகிறார். (தக்ரீஜூ அஹாதீஸூல் இஹ்யா பாகம்1 பக்கம் 107)

தாஜூத்தீன் அஸ்ஸூப்கி எனும் அறிஞர் இது அறிவிப்பாளர் தொடர் இல்லாத ஆதாரமற்ற செய்தி என்று குறிப்பிட்டுள்ளார்.

தப்காதுஷ் ஷாபிஇய்யா பாகம் 6 பக்கம் 294

அல்பானீ அவர்களும் ஸில்ஸிலதுல் அஹாதீஸூல் லயீஃபா எனும் நூலில் (பாகம் 1 பக்கம் 136) இதை நபிகள் நாயகம் கூறினார்கள் என்பதற்கு எந்த அடிப்படைச் சான்றும் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்.

முல்லா அலீ காரி அவர்கள் நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அடையாளம் காட்டும் தமது அல் மஸ்னூஆ எனும் நூலில் பக்கம் 92ல் இந்தச் செய்திக்கும் நபிகள் நாயகத்துக்கும் சம்பந்தமில்லை என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்.

இவ்வாறு பல அறிஞர்கள் இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை மக்களுக்கு அவ்வப்போது தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

எனவே இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்பதை அறியலாம்.

மேலும் இதற்கு மாற்றமாக நபிகள் நாயகம் அவர்கள் பள்ளிவாசல்களில் இதர பேச்சுக்களைப் பேச அனுமதித்திருக்கிறார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் இருக்கின்றன.

நான் ஜாபிர் பின் சமுரா (ரலி) அவர்களிடம், "நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் அவையில் அமர்ந்திருக்கிறீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள் "ஆம், அதிகமாக (அமர்ந்திருக்கிறேன்). அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சூரியன் உதயமாகாதவரை (சுப்ஹுத் தொழுத இடத்திலிருந்து) எழமாட்டார்கள். சூரியன் உதயமான பின் (அங்கிருந்து) எழுவார்கள். அப்போது மக்கள் அறியாமைக் காலம் குறித்துப் பேசிச் சிரித்துக் கொண்டிருப்பார்கள். (இதைக் கேட்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புன்னகைத்துக் கொண்டிருப்பார்கள்.

அறிவிப்பவர் ஸிமாக் பின் ஹர்ப்  நூல்: முஸ்லிம் 1188

எனவே பள்ளிவாசல்களில் பயனுள்ள தீமையற்ற பேச்சுக்களைப் பேசுவதில் தவறில்லை என்று இதன் மூலம் அறிந்து கொள்ளலாம். எனினும் வரம்பு மீறிய மற்றும் வெட்டிப் பேச்சுக்களைப் பேசுவதற்கு இது ஆதாரமாகாது.

அஸ்ருக்குப் பின் உறங்கலாமா?

مَنْ نَامَ بَعْدَ الْعَصْرِ فَاخْتُلِسَ عَقْلُهُ فَلَا يَلُومَنَّ إِلَّا نَفْسَهُ

எவர் அஸருக்குப் பின் உறங்கி அவரது அறிவு கெட்டுவிட்டதோ அவர் தன்னையே பழித்துக் கொள்ளட்டும் என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் ஆயிஷா (ரலி)

நூல்கள்: முஸ்னது அபீயஃலா 4918 மஜ்மவுஸ் ஜவாயித் பாகம் 2 பக்கம் 229

அஸ்ருக்குப் பின் ஒருவர் உறங்கினால் அவரது அறிவு பாழாகி விடும் என இந்தச் செய்தி தெரிவிக்கின்றது.

இது சுன்னத் ஜமாஅத் மத்ரஸா மாணவர்களுக்கு மத்தியில் பிரபலமானதாகும்.  ஆசிரியர்கள் இதைச் சொல்லித்தான் அஸருக்குப் பின் உறங்கும் மாணவர்களைப் பயமுறுத்துவார்கள். இந்தச் செய்தியை நபிகளார் சொல்லியுள்ளார்களா?

இது நபிகளாரின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இதை மவ்லூஆத் (இட்டுக்கட்டப்பட்டவைகள்) என்ற தனது நூலில்  (பாகம் 3 பக்கம்69ல்) இமாம் இப்னுல் ஜவ்சீ அவர்கள் பதிவு செய்து விட்டு இது சரியான செய்தி அல்ல. இதில் இடம் பெறும் காலித் என்பவர் பொய்யர் ஆவார் என குறிப்பிடுகிறார்கள்.

இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதை இமாம் தஹபீ அவர்களும் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

இப்னுல் ஜவ்சீ அவர்கள் குறிப்பிட்டதைப் போன்று ஆயிஷா அவர்களின் அறிவிப்பில் காலித் பின் காசிம் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பெரும் பொய்யர் ஆவார்.

இவர் அறிவிப்பாளர் விடுபட்ட ஹதீஸ்களை அறிவிப்பாளர் விடுபடாத ஹதீஸ்கள் போலவும், நபித்தோழர் விடுபட்ட ஹதீஸ்களை நபித்தோழர் அறிவிப்பது போலவும் நபித்தோழர்களின் சொந்தக்கூற்றை நபியின் கூற்று போலவும் அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் குறிப்பிடுகிறார்.                அல்மஜ்ரூஹீன் பாகம் 1 பக்கம் 283

முஸ்னது அபீயஃலாவில் பதிவாகியுள்ள மற்றொரு அறிவிப்பில் மேற்கண்ட பொய்யரான அறிவிப்பாளர் இல்லை என்றாலும் அம்ர் பின் ஹூசைன் என்பார் இடம் பெறுகிறார்.

இவர் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்று இமாம் அபூஹாதம் அவர்களும், ஹதீஸ் துறையில் மிக மோசமானவர் என்று இமாம் அபூஸூர்ஆ அவர்களும்,  முற்றிலும் பலவீனமானவர் என இமாம் அஸ்தீ அவர்களும் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்று இமாம் இப்னு அதீயும் தாரகுத்னியும் விமர்சித்துள்ளனர்.

 (பார்க்க அல்லுஆஃபா வல் மத்ருகீன் பாகம் 2 பக்கம் 224)

ஆயிஷா ரலி அவர்களின் இரண்டு அறிவிப்புகளும் ஏற்றுக் கொள்ளத்தகாதவை என்பது இதன் மூலம் உறுதியாகிறது.

அனஸ் (ரலி) அவர்களின் அறிவிப்பு

இதே செய்தியை நபிகள் நாயகம் கூறியதாக அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கும் ஒரு  அறிவிப்பு இப்னு அதீ என்பவருக்குரிய அல்காமில் (பாகம் 4 பக்கம் 146) எனும் நூலிலும் பிற நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. 

எனினும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இப்னு லஹீஆ  இடம் பெறுகிறார். இவர் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள்

(பார்க்க மீஸானுல் இஃதிதால் பாகம் 2 பக்கம் 475)

தஹாவீ அவர்கள் தமது முஷ்கிலுல் ஆஸார் எனும் நூலில் நபிகள் நாயகம் கூறியதாக சுஹ்ரியின் கூற்றாகப் பதிவு செய்து விட்டு இது தொடர்பு அறுந்த செய்தி என்று குறிப்பிடுகிறார். ஏனெனில் இப்னு ஷிஹாப் எனும் சுஹ்ரீ நபித்தோழரல்ல.

எனவே இது தொடர்பாக எந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமான செய்தியாக இல்லை. சில இட்டுக்கட்டப்பட்டவையாகவும் மறு சில மிகவும் பலவீனமான செய்தியாகவும் உள்ளன என்பதை அறிந்து கொள்ளலாம்.

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறதா?

أخبار أصبهان - (2 / 289( عن علي ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « تزوجوا ولا تطلقوا ، فإن الطلاق يهتز له العرش

திருமணம் செய்யுங்கள் ஆனால் விவாகரத்து செய்யாதீர்கள். விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் அலி ரலி,

நூல்கள் : அக்பாரு உஸ்பஹான் 540, தாரீகு பக்தாத் 6654

இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானதல்ல. இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் ஜூவைபிர் என்பவர் மிகவும் பலவீனமானவர். இவரை ஹதீஸ் துறை இமாம்களான யஹ்யா பின் ஸயீத், அஹ்மத், இப்னு மயீன், நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் முறையே பலவீனமானவர் இவரது ஹதீஸில் கவனம் செலுத்தப்படாது ஹதிஸ் துறையில் மதிப்பில்லாதவர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்று விமர்சித்துள்ளார்கள்

நூல் :  அல்லுஆபாஉ வல் மத்ருகீன் பாகம் 1 பக்கம்  177

மேலும் இதன் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளரான அம்ர் பின் ஜூமைஃ என்பவர் பெரும் பொய்யர் ஆவார்.

யஹ்யா பின் மயீன் இவரை மிகவும் கெட்ட பொய்யர் என்றும் நஸாயி மற்றும் தாரகுத்னீ ஆகியோர் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட்டவர் என்றும் இப்னு ஹிப்பான் நம்பகமானவர்களின் பெயரால் இட்டுக்கட்டப்பட்ட செய்தியையும் பிரபல்யமானவர்களின் பெயரால் மறுக்கப்பட வேண்டிய செய்திகளையும் அறிவிப்பவர் என்றும் விமர்சித்துள்ளார்கள்.

நூல் அல்லுஆஃபாஉ வல் மத்ருகீன் பாகம் 2 பக்கம் 224

ஆகவேதான் இதை இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்ற பட்டியலில் அறிஞர் ஸகானீ அவர்கள் சேர்த்துள்ளார்கள்.

மேலும் கணவன் மனைவி இருவரும் இணைந்து வாழ முடியாது என்ற சூழ்நிலையில் விவாகரத்து செய்வதை இறைவன் ஆகுமாக்கி உள்ளான். இறைவன் எதை ஆகுமாக்கி உள்ளானோ அதைச் செய்வதால் அர்ஷ் நடுங்குகிறது என்பது ஏற்றுக் கொள்ள இயலாத ஒன்றாகும்.

விவாகரத்து செய்வதால் அல்லாஹ்வின் அர்ஷ் நடுங்குகிறது என்ற இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல என்பது தெளிவாகிறது.

மனோ இச்சையை எதிர்த்து போர் புரிவதே சிறந்த ஜிஹாத்?

الزهد الكبير للبيهقي - (1 / 388( عن جابر رضي الله عنه قال : قدم على رسول الله صلى الله عليه وسلم قوم غزاة ، فقال صلى الله عليه وسلم « قدمتم خير مقدم من الجهاد الأصغر إلى الجهاد الأكبر . قالوا : وما الجهاد الأكبر ؟ قال : مجاهدة العبد هواه யு . هذا إسناد ضعيف

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (போரிலிருந்து திரும்பிய) போர் வீரர்கள் குழு வந்தனர். அப்போது நபியவர்கள் நீங்கள் சிறிய ஜிஹாதிலிருந்து பெரிய ஜிஹாதின் பக்கம் வருகை அளித்துள்ளீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள் பெரிய ஜிஹாத் என்றால் எது என்று கேட்க ஒரு அடியான் தனது மனோ இச்சையை எதிர்த்து போர்புரிவதே (பெரிய ஜிஹாத்) ஆகும் என்று பதிலளித்தார்கள்.

நூல்  : பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் பாகம் 1 பக்கம் 388

சுன்னத் வல் ஜமாஅத் இமாம்கள் மக்களுக்கு மத்தியில் பரவலாக சொல்லக் கூடிய செய்திகளில் இதுவும் ஒன்று. உள்ளத்துடன் போர் புரிவது தான் மிகச் சிறந்த  பெரிய ஜிஹாத் என்று இந்தச் செய்தியைக் கூறுவார்கள். தப்லீக் ஜமாஅத்தவர்கள் குறிப்பாக சூஃபியாக்கள் இதை குத்தகைக்கு எடுத்துக் கொண்டு மக்களுக்கு மத்தியில் சொல்கின்றனர்.

இது ஆதாரப்பூர்வமான செய்தியா?

இது பைஹகீ அவர்களின் ஸூஹ்துல் கபீர் மற்றும் தாரீகு பக்தாத் எனும் நூலிலும் 7345 ஆவது செய்தியாக பதிவு செய்யப்பட்டுள்ளது. எனினும் இது ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல. இதைப் பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்களே இதன் இறுதியில் இது பலவீனமான அறிவிப்பாளர் தொடரைக் கொண்ட செய்தி என்று விமர்சித்துள்ளார்.

இதன் அறிவிப்பாளர் வரிசையில் இடம் பெற்றிருக்கும் லைசு பின் அபீ சுலைம் ஹதீஸ் கலை அறிஞர்களால் பலவீனமானவர் என்று விமர்சிக்கப்பட்டுள்ளார்கள்.

இவரது ஹதீஸ்கள் பலவீனமானவையாகும். இவர்  உறுதியானவர் அல்ல என்று அபூஇஸ்ஹாக் அல்ஜவ்ஸஜானீ அவர்கள் விமர்சித்துள்ளார்கள்.

(நூல் அஹ்வாலுர் ரிஜால் 1 91)

இமாம் அபூஹாதம் மற்றும் அபூஸூர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.

 இமாம் இப்னு ஹஜர் அவர்கள் இது மக்களிடத்தில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் சொல்லாக பிரபலம் அடைந்துள்ளது. ஆனால் இது நபிகளாரின் சொல் அல்ல. மாறாக இப்றாஹீம் பின் அய்லா என்ற தாபியீயின்  சொல்லாகும் என்று தனது தஸ்தீதுல் கவ்ஸ் எனும் நூலில் குறிப்பிட்டுள்ளதாக இஸ்மாயீல் பின் முஹம்மத் எனும் அறிஞர் குறிப்பிடுகிறார்.

நூல்  கஷ்புல் கஃபாஃ பாகம் 1 பக்கம் 424

மேலும் இப்னு தைமிய்யா அவர்களும் இது அடிப்படை ஆதாரமற்ற செய்தி என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

ஒரு தாபியியின் சொல்லை நபிகளாரின் சொல்லாக மக்களுக்கு மத்தியில் பரப்பியுள்ளனர். இது ஆதாரமற்ற செய்தி என்பது தெளிவாகி விட்டது.

ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்?

ஜூம்ஆவை நபிகள் நாயகம் காட்டித்தராத பல அனாச்சாரங்களுடன் நிறைவேற்றி வரும் சுன்னத் ஜமாஅத்தைச் சார்ந்தவர்கள் ஜூம்ஆ உரையின் போது பின்வருமாறு கூறுவார்கள்.

عن أبي هريرة رضي الله عنه قال قال رسول الله صلى الله عليه وسلم الجمعة حج الفقراء وعيد المساكين

அன் அபீ ஹூரைரத ரலியல்லாஹூ அன்ஹூ அன்னஹூ கால கால ரசூலுல்லாஹி அலைஹி வஸல்லம் அல்ஜூம்அது ஹஜ்ஜூல் ஃபுகராஃ வ ஈதுல் மஸாகீன்.

இதன் பொருள் அபூஹூரைரா ரலி அவர்கள் அறிவிக்கின்றார்கள் நபிகள் நாயகம் கூறினார்கள். ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும். மிஸ்கீன்களின் பெருநாளாகும். 

இது புகாரி(?)யில் இருப்பதாகவும் அரபியில் பிதற்றுவார்கள். புகாரி முஸ்லிம் போன்ற ஹதீஸ் நூற்கள் தமிழில் வராத காலத்தில் இப்படி ஒரு செய்தி புகாரியில் இருப்பதாகவே மக்களும் நம்பி வந்தனர். ஆனால் உண்மையில் இது நபிகள் நாயகத்தின் பெயரால்  இட்டுக்கட்டப்பட்ட செய்தியாகும். இவர்கள் கூறுவதைப் போன்ற ஒரு செய்தி புகாரியிலோ ஏனைய ஹதீஸ் நூற்களிலோ அறவே கிடையாது.

ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று ஒரு ஹதீஸ் உள்ளது. அது மிகவும் பலவீனமான செய்தியாகும்.

مسند الشهاب القضاعي - (1 / 128) عن الضحاك ، عن ابن عباس ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : « الجمعة حج الفقراء யு

ஜூம்ஆ ஏழைகளின் ஹஜ்ஜாகும் என்று நபிகள் நாயகம் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),

நூல் : முஸ்னது ஷிஹாப் பாகம் 1 பக்கம் 128

இந்தச் செய்தி, அக்பாரு உஸ்பஹான் போன்ற இன்னும் சில நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதன் அனைத்து அறிவிப்புகளிலும் ஈஸா பின் இப்றாஹீம் அல் ஹாஷிமி என்பவர் இடம் பெறுகிறார். இவர் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட வேண்டியவர் என்று இமாம் புகாரி, நஸாயீ ஆகியோரும் ஹதீஸ் துறையில் மதிப்பில்லாதவர் என்று இப்னு மயீன் அவர்களும் ஹதீஸ் துறையில் புறக்கணிக்கப்பட வேண்டியவர் என இமாம் ராஸி அவர்களும் விமர்சனம் செய்துள்ளனர். 

அல்லுஆஃபாஉ வல் மத்ரூகீன் பாகம் 2 பக்கம் 238

மேலும் இதே செய்தி இதில் இடம் பெறும் ளஹ்ஹாக் பின் முஸாஹிம் என்பவருடயை கூற்றாக அக்பாரு மக்கா எனும் நூலில் (பாகம் 1 பக்கம் 378ல்) இடம் பெற்றுள்ளது.

أخبار مكة للفاكهي - (1 / 378( عَنِ الضَّحَّاكِ بْنِ مُزَاحِمٍ قَالَ: " الْجُمُعَةُ حَجُّ الْمَسَاكِينِ

இந்த துண்டு செய்தி கூட ளஹ்ஹாக் அவர்களின் கூற்றாக உள்ளதே தவிர நபிகள் நாயகம் கூறினார்கள் என்று என்று கூறப்படவில்லை.

உண்மை நிலை இவ்வாறிருக்க மக்கள் அனைவரும் திரளாக ஒன்று கூடியிருக்கும் ஜூம்ஆவுடைய தினத்தில் புகாரியில் உள்ளதாக புழுகிறார்கள் எனில் இது எத்தகைய கடைந்தெடுத்த அயோக்கியத்தனம் என்பதை சிந்தியுங்கள்.

நபித்தோழர்களுடன் நபிகள் நாயகம்

நட்பு ஓர் அறிமுகம்

நட்பு இல்லாத மனிதன் இவ்வுலகில் இல்லை என்றே கூறுமளவிற்கு நட்பு வாழ்கையில் முக்கிய பங்கெடுத்துக் கொள்கின்றது. எல்லோருக்கும் எல்லாப் பருவங்களிலும் நண்பர்கள் கிடைக்கின்றார்கள், சிலர் ஆரம்ப கால அரை காற்சட்டை வாழ்க்கையோடு விடைபெறுகிறார்கள். சிலர் கல்லூரிக்கால வாழ்க்கையுடன் நின்று போய் விடுகிறார்கள். வேறு சிலர் அலுவலக வட்டத்துக்குள்ளேயே ஓடி ஓய்ந்து விடுகிறார்கள்.

வெகு சில நண்பர்களே இந்த எல்லைகளை எல்லாம் தாண்டி எமது இதயத்தின் மேடையில் கூடாரமடித்துக் குடியிருக்கிறார்கள். நமது வாழ்க்கைப் பாதையில் நண்பர்களின் பங்களிப்பு மிக மிக முக்கியமானது. இளம் வயதில் நண்பர்களுடன் அதிக நேரம் செலவிடுவதால் நண்பர்களின் குணாதிசயங்கள் நம்மையும் தொற்றிக் கொண்டு விடுகிறன.

வாசனைமிக்க மலர்களின் நார் கூட நறுமணம் வீசுகின்றது. அதுபோல சாக்கடையில் விழுந்த நறுமண மலரும் சாக்கடையின் வாசத்தையே  பெற்று விடுகின்றது. ஒருவருடைய குணாதிசயங்களை அறிய அவருடன் நெருங்கிப் பழகும் நண்பர்களை வைத்து சுலபமாக கணித்துக் கொள்ள முடியும் என்பதும், ஒருவருடைய பொருளாதார நிலையைக் கணிப்பிட அவர் சந்தையில் வாங்கும் பொருட்களை வைத்து கணித்துக் கொள்ள முடியும் என்பதும் பழைய பழமொழிகளாகும்.

விளக்கமாக கூறுவதாயின் ஒருவரின் அகத்தின் அழகை முகம் காட்டுவதுபோல் அவரின் குணத்தின் அழகை நண்பர்களின் நடத்தையில் கண்டு கொள்ள முடியும் எனக் கூறலாம்.

ஒரு மனிதனுடைய வெற்றிக்கும், தோல்விக்கும் பெரும்பாலான நேரங்களில் நண்பர்களே காரணமாக இருக்கிறார்கள். அதனால்தான் நமக்கு அமையும் நண்பர்கள் நல்லவர்களாக இருக்க வேண்டியது அவசியமாகிறது.

நல்ல நண்பர்கள் எப்படி நம்மை உயரப் பறக்கவிடுவார்களோ, அதே போல தீய நண்பர்கள் நம்மை உயரத்திலிருந்து இழுத்து பள்ளத்தில் போட்டு விடுவார்கள். ஒரு நல்ல நண்பனிடம் இருந்து நல்ல பல விஷயங்களைக் கற்றுக் கொள்ளலாம் அதேபோல் தீய நண்பர்களிடம் இருந்து தீய பழக்க வழக்கங்களையும் தீய குணங்களையுமே கற்றுக் கொள்ளலாம்.

உண்மையான நண்பன் உங்களுடைய ஆரோக்கியத்தில் கவனம் செலுத்துவான். உங்களுடைய முன்னேற்றத்தில் கவனம் செலுத்துவான். உங்களைத் தீய வழியில் இழுக்க மாட்டான் என்பதை மனதில் அழுத்தமாய் பதியவைத்துக் கொள்ளுங்கள்.

ஒருவேளை நீங்கள் புகை, மது போன்ற பழக்கங்களில் இருந்தால் உங்களை அதில் இருந்து வெளியே கொண்டு வருவதுதான் உண்மையான நண்பனின் பண்பு. அதை உற்சாகப்படுத்துவது அல்ல.

நல்ல நண்பன் நீங்கள் தவறு செய்யும் போது உங்கள் தவறுகளைக் கடிந்து கொள்வான். உங்கள் மனம் கோணாமல் எப்போதும் நல்ல விஷயங்களையே சொல்லிக் கொண்டிருப்பவன் உண்மையான நண்பன் அல்ல, நல்ல நண்பன் நாளைய வாழ்வில் நீங்கள் நன்றாக, இருக்க வேண்டும் எனும் ஆர்வம் கொள்பவன், அப்படிப்பட்டவர்கள் உங்கள் குறைகளை உங்களிடம் சுட்டிக் காட்டத் தயங்க மாட்டார்கள், அதற்காக நட்பே போனால் கூட கவலைப்பட மாட்டார்கள்.

உங்களுடைய இலட்சியங்களை உங்கள் நண்பன் ஆதரிக்கிறானா? அல்லது அவனுடைய செயல்பாடுகள் உங்களுடைய இலட்சியத்துக்குத் தடைக்கல்லாய் இருக்கின்றதா என்பதைப் பாருங்கள். உங்களுடைய இலட்சியங்களைக் கிண்டலடிப்பவனோ, அதை நோக்கிய உங்கள் பயணத்தின்போது உங்களுக்கு ஊக்கமளிக்காமல் இருப்பவனோ உங்களுடைய நண்பன் அல்ல.

இஸ்லாமிய மார்க்கம் அப்படிப்பட்ட நட்பைத்தான் நமக்கு கற்றுத்தருகிறது. நாம் உயிரினும் மேலாக மதிக்கக்கூடிய நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களோடு எப்படி நடந்து கொண்டார்கள். என்னென்ன விஷயங்களை அவர்களுக்குக் கற்றுக் கொடுத்தார்கள். எதைச் செய்ய வேண்டும். எதைச் செய்யக் கூடாது என்று கட்டளையிட்டார்கள் என்பதை பார்த்தால் நட்பின் இலக்கணத்தை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களோடு பழகும்போது தாமும் அவரைப் போன்ற மனிதர்தான் என்ற நினைப்பில்தான் அவர்களோடு பழகுவார்கள். தம்முடைய தோழர்கள்  மீது அன்பு செலுத்தினார்கள். அவர்களை வெறுக்க மாட்டார்கள், விரட்ட மாட்டார்கள். மென்மையான போக்கையே மேற்கொண்டார்கள். கடுகடுப்பானவராகவும், கத்தக்ககூடியவராகவும், அறுவறுக்கத்தக்கவராகவும் இருக்கவில்லை. தோழர்கள் தவறு செய்யும் போது உடனே சுட்டிக்காட்டித் திருத்துவார்கள். பாராட்டிற்குரிய விஷயங்களைச் செய்யும் உடனே பாராட்டவும் செய்வார்கள்.

இதன் காரணமாகத்தான் அல்லாஹ்வே சந்தேகமற்ற வேதமான குர்ஆனில் நபிகளாரின் குணங்களைப் பற்றி பேசும்போது.

(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவ மன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்துவிட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.                                                               அல்குர்ஆன் 3:159

இன்னொரு இடத்தில் படைத்தவன் கூறுகிறான் : உங்களிடம் உங்களைச் சேர்ந்த தூதர் (முஹம்மத்) வந்து விட்டார். நீங்கள் சிரமப்படுவது அவருக்குப் பாரமாக இருக்கும். உங்கள் மீது அதிக அக்கறை உள்ளவர். நம்பிக்கை கொண்டோரிடம் பேரன்பும், இரக்கமும் உடையவர்                                                              அல்குர்ஆன் 9:128

ஒழுக்கத்தைக் கற்றுக் கொடுத்தல்

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு கல்வியையும், ஒழுக்கத்தையும் போதித்தார்கள். கல்வியைக் கற்றுக் கொள்ளவும் வேண்டும், கற்ற கல்வி பிறருக்கு கற்றுக் கொடுக்கவும் வேண்டும் என்று ஆர்வமூட்டினார்கள். அன்போடும், பாசத்தோடும் கல்வியைக் கற்றுக் கொடுத்தார்கள்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் மார்க்க விஷயங்களை கேள்விக்கணைகளாக வீசும்போது எந்தவித வெறுப்பும் காட்டாமல் அன்புடன் அதற்கு பதிலளித்தார்கள்.

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே நாங்கள் கடல்பயணம் மேற்கொள்கிறோம். நாங்கள் அருந்துவதற்காக தண்ணீரும் எடுத்துச் செல்கிறோம். குடிக்கிற தண்ணீரில் உளூச் செய்தால் நாங்கள் குடிப்பதற்கு தண்ணீர் இல்லாமல் போகிவிடும். எனவே கடல் தண்ணீரில் உளூச் செய்து கொள்ளலாமா என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கடல் தண்ணீர் தூய்மையானதாகும். மேலும் அதில் தனாக இறந்தவையும் ஆகுமானதாகும் என பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் ; அபூஹரைரா (ரலி)  நூல் : திர்மிதீ 64

ஆலோசனை செய்தல்

நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் திருமறையில் ஆணை பிறப்பிக்கின்றான். எல்லா விஷயங்களிலும் நீங்கள் தோழர்களோடு ஆலோசனை செய்து கொள்ளுங்கள். நான் அகிலத்தின் தலைவனாக இருக்கிறேன். எனக்கு எல்லாமே தெரியும் என்றில்லாமல் இறைவனின் ஆணைக்கேற்ப தன்னுடைய தோழர்களிடம் ஆலோசனை செய்தார்கள்.

அல்லாஹ் கூறுகிறான் : காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக!

அல்குர்ஆன் 3:159

நபி (ஸல்) அவர்கள் போர் சமயத்தில் தம்முடைய தோழர்களிடம் எப்படி போர் செய்வது? எங்கே தங்குவது? போன்ற பல்வேறு விஷயங்களில் நபித்தோழர்களிடம் ஆலோசனை செய்துள்ளார்கள்.

பாராட்டுதல்

தம்முடைய தோழர்களிடம் பல நல்ல குணங்களை நபிகளார் கேள்விப்படும் போது அல்லது நேரடியாகக் காணும்போது உடனே அவர்களை அந்தக் குணத்தைச் சுட்டிக் காட்டி புகழ்வார்கள்.

ஒரு முறை கைஸ் கூட்டத்தார் நபி (ஸல்) அவர்களைப் பார்க்க வந்தார்கள். அவர்களிடம் பல்வேறு விஷயங்கள் தொடர்பாக பேசிவிட்டு இறுதியாக அவர்களைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். உங்களிடம் இரண்டு குணங்கள் இருக்கின்றன. அவ்விரண்டு குணங்களை அல்லாஹ் நேசிக்கின்றான். 1. அறிவாற்றல் 2. நிதானம்

நூல் : முஸ்லிம் 25

தவறைச் சுட்டிக் காட்டுதல்

நபித்தோழர்களும் மனிதர்கள்தான், நபித்தோழர்கள் தவறு செய்யும் பட்சத்தில் உடனே நபி (ஸல்) அவர்கள் அந்தத் தோழரை கண்டித்தும் விடுவார்கள். காரணம் அப்போதுதான் அவர்கள் அந்தத் தவறை விட்டும் தவிர்ந்து கொள்வார்கள்.

மஅரூர் பின் சுவைத் அவர்கள் கூறியதாவது: நான் அபூதர் அல்கிஃபாரீ (ரலி) (அவர்களை மதீனாவுக்கருகில் உள்ள "ரபதா' எனுமிடத்தில் சந்தித்தேன். அப்போது) அவர்கள் மீது ஒரு மேலங்கியும், அவர்களுடைய அடிமையின் மீது (அதே மாதிரியான) ஒரு மேலங்கியும் இருக்கக் கண்டேன். நான் (அவர்களிடம்), "(அடிமை அணிந்திருக்கும்) இதை நீங்கள் வாங்கி (கீழங்கியாக) அணிந்து கொண்டால் (உங்களுக்கு) ஒரு ஜோடி ஆடையாக இருக்குமே! இவருக்கு வேறோர் ஆடையைக் கொடுத்துவிடலாமே'' என்று சொன்னேன். அப்போது அபூதர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

எனக்கும் ஒரு மனிதருக்கும் இடையே வாய்த் தகராறு ஏற்பட்டது. அம்மனிதரின் தாய் அரபியரல்லாதவர் ஆவார். ஆகவே, நான் அவருடைய தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசிவிட்டேன். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் என்னைப் பற்றி முறையிட்டார்.

அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம், "நீர் இன்னாரை ஏசினீரா?'' என்று கேட்டார்கள். நான், "ஆம்'' என்று சொன்னேன். "அவருடைய தாயைக் குறிப்பிட்டு (இழிவாக)ப் பேசினீரா?'' என்று கேட்டார்கள். நான் (அதற்கும்) "ஆம்'' என்று பதிலளித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், "நீர் அறியாமைக் காலத்துச் கலாச்சாரம் உள்ள மனிதராகவே இருக்கின்றீர்'' என்று சொன்னார்கள்.

நான், "வயோதிகத்தை அடைந்துவிட்ட இந்தக் காலகட்டத்திலுமா? (அறியாமைக்கால குணம் கொண்டவனாய் உள்ளேன்?)'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "ஆம்'' என்று கூறிவிட்டு, "(பணியாளர்களான) அவர்கள் உங்கள் சகோதரர்கள் ஆவர். அவர்களை அல்லாஹ் உங்கள் ஆதிக்கத்தின் கீழ் வைத்துள்ளான். ஆகவே, யாருடைய ஆதிக்கத்தின் கீழ் அவருடைய சகோதரரை அல்லாஹ் வைத்துள்ளானோ அவர் தம் சகோதரருக்குத் தாம் உண்பதிலிருந்து உணவளிக்கட்டும். தாம் அணிவதிலிருந்து அவருக்கு அணியத் தரட்டும். அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்து அவரைச் சிரமப்படுத்த வேண்டாம். அவ்வாறு அவரது சக்திக்கு மீறிய பணியை அவருக்குக் கொடுத்தால் அவருக்குத் தாமும் ஒத்துழைக்கட்டும்'' என்று கூறினார்கள்.

நூல்கள் : புகாரீ 6050, முஸ்லிம்

அபூதர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் கண்டித்ததும் தம்முடைய நடவடிக்கையே மாற்றி அமைக்கின்றார்கள். தான் அணிந்திருக்கும் அதே ஆடையை தன்னுடைய அடிமைக்கும் அணிவிக்கின்றார்கள். தான் சாப்பிடும்போது தன்னுடைய அடிமையோடு சேர்ந்து சாப்பிடுகின்றார். அடிமையின் சக்திக்கு அப்பாற்பட்டு எந்த வேலையையும் அபூதர் (ரலி) அவர்கள் கொடுக்கவில்லை.

அல்லாஹ்வைப் பற்றி எச்சரிக்கை செய்தல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு அல்லாஹ்வின் அச்சத்தை ஏற்படுத்துகிறார்கள். எந்தக் காரியத்தைச் செய்தால் இறைவனின் கோபமும், தண்டனையும் கிடைக்குமோ அதைப் பற்றியும் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.

நான் என் அடிமையைச் சாட்டையால் அடித்துக் கொண்டிருந்தேன். அப்போது எனக்கு பின்னால் யாரோ நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத் என்று கூறியதைக் கேட்டேன். அ;போது நான் கோபத்தில் இருந்ததால் அந்தக் குரலை (நன்கு) விளங்கிக் கொள்ளவில்லை. அவர் என்னை நெருங்கி வந்த  போது (பார்த்தால்) அங்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருந்தார்கள். அப்போது அவர்கள் நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத், நினைவிருக்கட்டும் அபூ மஸ்வூத் என்று  சொல்லிக் கொண்டிருந்தார்கள்.

உடனே நான் என் கையிலிருந்த சாட்டையைக் கீழே போட்டேன். அப்போது அவர்கள் நினைவிருக்கட்டும் அபூமஸ்வூத் உமக்கு இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தை விடப் பன்மடங்கு அதிகாரம் உம் மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்று சொன்னார்கள். நான் இநதன் பின்னர் ஒரு போதும் நான் எந்த அடிமையையும் அடிக்க மாட்டேன் என உறுதிமொழிந்தேன்.

நூல் : முஸ்லிம் 3413

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் : நபி (ஸல்) அவர்கள் இந்த அடிமையின் மீதிருக்கும் அதிகாரத்தை விட பன்மடங்கு அதிகாரம் உம்மீது அல்லாஹ்வுக்கு இருக்கிறது என்று சொன்னதும் அச்சத்தால் எனது கையிலிருந்த சாட்டை கீழே விழுந்துவிட்டது என அபூமஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

முஸ்லிமின் மற்றொரு அறிவிப்பில் : அல்லாஹ்வின் உவப்புக்காக (இவரை நான் விடுதலை செய்துவிட்டேன்) இவர் சுதந்திரமானவர் என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் அபூதர்ரே அறிந்து கொள் நீ இவ்வாறு செய்திருக்காவிட்டால் நரகம் உம்மை எரித்திருக்கும் அல்லது நரகம் உம்மைத் தீண்டியிருக்கும் என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் 3414

தாராளமாகக் கொடுத்தல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களுக்கு பொருளாதாரத்தை வாரிக் கொடுக்கக்கூடியவர்களாக இருந்தார்கள். தம்மிடம் இருப்பதில் கஞ்சத்தனம் காட்டமாட்டார்கள்.

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹுனைன்' போரிலிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; "சமுரா' என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள்ளி விட்டார்கள். நபியவர்களின் சால்வை முள்மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, "என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள் மரங்களின் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந்திருந்தாலும் கூட அவற்றை உங்களிடையே பங்கிட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காண  மாட்டீர்கள்'' என்று கூறினார்கள்.   

நூல் : புகாரீ 2821

நேரடியாகச் சந்தித்தல்

தோழர்கள் நோய்வாய்ப்படும் போதும், சாதாரணமாகச் சந்திக்க வேண்டிய தேவையிருந்தாலும், இறந்தவருக்காக ஜனாஸாவில் கலந்து கொள்வதிலும் நபி (ஸல்) அவர்கள் ஆர்வம் காட்டுவார்கள்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒருமுறை) நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அன்சாரிகளில் ஒருவர் வந்து. சலாம் கூறிவிட்டுப் பிறகு திரும்பிச் செல்லப் போனார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அன்சாரிகளின் சகோதரரே! என் சகோதரர் சஅத் பின் உபாதா எப்படி இருக்கிறார்?'' என்று விசாரித்தார்கள். அதற்கு "நலமுடன் இருக்கிறார்'' என்று அவர் பதிலளித்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களில் யார் அவரை உடல் நலம் விசாரிப்ப(தற்கு நம்முடன் வருப)வர்?'' என்று கேட்டு எழுந்தார்கள். அவர்களுடன் நாங்களும் எழுந்தோம்.

அப்போது நாங்கள் பத்துக்கும் மேற்பட்டோர் இருந்தோம். நாங்கள் காலணிகளோ காலுறைகளோ தொப்பிகளோ நீளங்கிகளோ அணிந்திருக்கவில்லை. கரடு முரடான அந்தப் பாதையில் நடந்தே அவரிடம் சென்றோம். அப்போது சஅத் (ரலி) அவர்களைச் சுற்றிலுமிருந்த அவருடைய கூட்டத்தார் அவரைவிட்டு விலகிக் கொண்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடனிருந்த தோழர்களும் (சஅத் (ரலி) அவர்களை) நெருங்கினார்கள்.

                 நூல் : முஸ்லிம் 1684

சிரித்துப் பேசுதல்,

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களைப் பார்க்கும்போது புன்முறுவலோடுதான் பார்ப்பார்கள். நபி (ஸல்) அவர்களின் முகத்தில் ஒருவித மலர்ச்சி தெரியும். நபித்தோழர்களுடன் பேசும் போது சிரித்துக் கொண்டேதான் பேசுவார்கள். சில நேரங்களில் விளையாட்டாகவும் பேசியிருக்கிறார்கள். ஆனால் அதிலும் கூட உண்மையைத்தான் பேசுவார்கள்.

ஜரீர் பின் அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நான் இஸ்லாத்தை ஏற்றதிலிருந்து (நான் சந்திக்க அனுமதி கேட்ட எந்தச் சமயத்திலும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைத் தடுத்ததில்லை. சிரித்த முகத்துடனே தவிர அவர்கள் என்னைக் கண்டதில்லை.

நூல் : முஸ்லிம் 4880

புரிந்து செயல்படுதல்

நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தோழர்களைப் புரிந்து செயல்பாடுகளை அமைத்துக் கொள்வார்கள்.

ஸஅப் பின் ஜஸ்ஸாமா (ரலி) கூறியதாவது : நபி (ஸல்)  அவர்கள் "அப்வா' அல்லது "வத்தான்' எனும் இடத்தில் இருந்தபோது, நான் அவர்களுக்கு ஒரு காட்டுக் கழுதையை அன்பளிப்பாக வழங்கினேன்;  அவர்கள் அதை ஏற்க மறுத்தார்கள்.  என் முகத்தில் ஏற்பட்ட கவலையைக் கண்டதும், "நாம் இஹ்ராம் கட்டியருப்பதால்தான் இதை ஏற்க மறுத்தோம்!'' என்று கூறினார்கள். 

நூல் : புகாரீ 1825

ஸஃபிய்யா பின்த்து ஹுயை (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பள்ளிவாசலில் தங்கி) இஃதிகாஃப் இருந்தார்கள். ஓர் இரவில் அவர்களைச் சந்திப்பதற்காக அவர்களிடம் நான் சென்றேன். நான் அவர்களிடம் (சிறிது நேரம்) பேசிவிட்டு திரும்பிச் செல்ல எழுந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னைத் திருப்பியனுப்புவதற்காக என்னுடன் வந்தார்கள். - உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களின் வீடே அவர்களின் இருப்பிடமாக இருந்தது- (என அறிவிப்பாளர் கூறுகிறார்.) அப்போது அன்சாரிகளில் இருவர் அந்த வழியாகச் சென்றார்கள். அவர்கள் நபி (ஸல்) அவர்களைக் கண்டவுடன் விரைந்து நடக்கலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், "நிதானமாகச் செல்லுங்கள். இவர் (என் மனைவி) ஸஃபிய்யா பின்த்து ஹுயை தான்'' என்று சொன்னார்கள்.

இதைக் கேட்ட  அவ்விருவரும், "அல்லாஹ் தூயவன். அல்லாஹ்வின் தூதரே! (தங்களையா நாங்கள் சந்தேகிப்போம்?)'' என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், "ஷைத்தான் மனிதனின் இரத்த நாளங்களில் (கூட) ஓடுகிறான். உங்கள் உள்ளங்களில் அவன் தீய எண்ணம் எதையேனும் போட்டு விடுவான்  ...அல்லது உங்கள் உள்ளங்களில் (சந்தேகம்) எதையாவது அவன் போட்டு விடுவான்... என்று நான் அஞ்சினேன்'' என்று சொன்னார்கள்

நூல் : புகாரீ 3281

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது: நாங்கள் (பனுல் முஸ்தலிக் பயணத்தின்போது) நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் என்னை ஓர் அலுவல் விஷயமாக அனுப்பினார்கள். நான் (அந்த அலுவலை முடித்துத்) திரும்பி வந்தபோது அவர்கள் தமது வாகன(ஒட்டக)த்தில் இறையில்லம் கஅபா அல்லாத வேறொரு திசையை நோக்கி அமர்ந்தவாறு (கூடுதலான தொழுகையைத்) தொழுது கொண்டிருந்தார்கள். நான் அவர்களுக்கு சலாம் சொன்னேன். ஆனால் அவர்கள் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. அவர்கள் தொழுது முடித்ததும் "நான் தொழுது கொண்டிருந்ததால்தான் உங்களுக்கு பதில் சலாம் கூறவில்லை'' என்றார்கள்.

நூல் : முஸ்லிம் 940

அக்கரை காட்டுதல்

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) "ஒரு பகல்' அல்லது "ஓர் இரவு' (தமது இல்லத்திலிருந்து) வெளியே புறப்பட்டு வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் வெளியே இருந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இந்த நேரத்தில் நீங்கள் இருவரும் உங்கள் வீடுகளிலிருந்து புறப்பட்டு வர என்ன காரணம்?'' என்று கேட்டார்கள். அதற்கு, "பசிதான் (காரணம்), அல்லாஹ்வின் தூதரே!'' என்று அவ்விருவரும் பதிலளித்தனர்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! நானும் (புறப்பட்டு வந்தது அதனால்)தான். உங்கள் இருவரையும் வெளியே வரச் செய்ததே என்னையும் வெளியே வரச் செய்தது'' என்று கூறி விட்டு, "எழுங்கள்'' என்று கூறினார்கள். அவ்வாறே அவர்கள் இருவரும் எழுந்தனர். பிறகு (மூவரும்) அன்சாரிகளில் ஒருவரிடம் (அவரது வீட்டுக்குச்) சென்றனர்.

நூல் : முஸ்லிம் 4143

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: "இறைநம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்!'' எனும் இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்ற பின் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தமது இல்லத்திலேயே அமர்ந்து விட்டார்கள். "நான் நரகவாசிகளில் ஒருவன்' என்று கூறிக்கொண்டு, நபி (ஸல்) அவர்களிடம் வராமல் (வீட்டிலேயே) அடைந்து கிடந்தார்கள். எனவே, நபி (ஸல்) அவர்கள் (ஸாபித் குறித்து) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம், "அபூ அம்ர்! ஸாபித்துக்கு என்ன ஆயிற்று? அவருக்கு உடல் நலமில்லையா?'' என்று கேட்டார்கள். அதற்கு சஅத் (ரலி) அவர்கள், "அவர் என் பக்கத்து வீட்டுக்காரர்தாம். அவருக்கு எந்த நோயுமிருப்பதாக எனக்குத் தெரியவில்லை'' என்று கூறினார்கள். பிறகு சஅத் (ரலி) அவர்கள் ஸாபித் (ரலி) அவர்களிடம் சென்று அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டதைப் பற்றிச் சொன்னார்கள்.

அப்போது ஸாபித் (ரலி) அவர்கள், "இந்த (49:2ஆவது) வசனம் அருளப்பெற்றுள்ளது. உங்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன் குரலை உயர்த்திப் பேசுபவன் நான் என்பதை நீங்கள் அறிந்தே உள்ளீர்கள். ஆகவே நான், நரகவாசிகளில் ஒருவன்தான்'' என்று கூறினார்கள். இதை சஅத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் (சென்று) சொன்னார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இல்லை. அவர் சொர்க்கவாசிகளில் ஒருவர் ஆவார்'' என்று கூறினார்கள்.                                     நூல் : முஸ்லிம் 187

ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்காவாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள பிரமுகர்கள் சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "ஹாத்திபே! என்ன இது?'' என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து) விடாதீர்கள்.  நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாக இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்கஜடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால்  மக்காவாசிகளுக்கு  உபகாரம்  எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் என் உறவினர்களைக் காப்பாற்ற வேண்டுமென்று நான் விரும்பினேன். (அதனால்  அவர்கள் கேட்டுக் கொண்ட படி  இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாத்தைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை'' என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இவர் உங்களிடம் உண்மை பேசினார்'' என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், "அல்லாஹ்வின் தூதரே!  இந்த நயவஞ்சகனின்  கழுத்தை வெட்டி விட என்னை அனுமதியுங்கள்'' என்று கூறினார்கள்.  நபி (ஸல்)  அவர்கள், "இவர் பத்ருப்  போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும்,  உமக்கென்ன  தெரியும்? ஒரு வேளை அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களைப் பார்த்து, "நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன்' என்று கூறி விட்டிருக்கலாம்'' என்று சொன்னார்கள்.

நூல் : முஸ்லிம்

உண்மையான நண்பன் உங்களுடைய திறமைகளை முழுமையாய்ப் பயன்படுத்த ஊக்குவிப்பான். உதாரணமாக ஓர் துறையில் சிறந்து விளங்குவது உங்கள் இலட்சியமெனில், அதற்கு என்னென்ன செய்ய வேண்டும் எனும் விஷயங்களில் உங்களுக்கு உதவி செய்வான். உங்களைப் படிப்படியாக அந்தப் பாதையில் நடத்துவான். வெறுமனே உங்களுடைய வெற்றிகளில் வந்து கை குலுக்கிவிட்டுப் போகும் மனிதனாக அவன் இருப்பதில்லை.

மற்ற நண்பர்களைப் பற்றி உங்களிடம் தரக்குறைவாக விமர்சிக்கும் நண்பர்களிடம் கொஞ்சம் கவனமாய் இருக்க வேண்டும். உங்களைப் பற்றி அவர்கள் வேறு நண்பர்களிடமும் அதே போலப் பேசித் திரியும் வாய்ப்பு உண்டு. நீங்கள் நட்புறவு கொள்ளும் நண்பனுடன் இருக்கும்போது அடுத்தவர்களைப் பற்றி ஏகப்பட்ட கிசுகிசுக்களை அவிழ்க்கிறார்கள் என யோசியுங்கள். அந்த நண்பன் நல்ல நண்பன் அல்ல என்பதைப் புரிந்து கொள்ளுங்கள்,

சில நண்பர்கள் அவர்கள் சொல்வதற்கெல்லாம் தஞ்சாவூர் பொம்மை போலத் தலையாட்டும் நண்பர்களே வேண்டுமென்பார்கள். அவர்கள் உண்மையான நண்பர்கள் அல்ல. அவர்களுடைய நட்பில் வீசுவதும் சுயநல வாசமே. “தப்பான ஒரு செயலைச் செய்ய உங்களை ஊக்கப்படுத்துபவன் உங்கள் நண்பனல்ல. அப்படிப்பட்டவர்களை நீங்கள் முளையிலேயே கிள்ளி எறியலாம்.

போதை, திருட்டு, பாலியல், சமூக, விரோதச் செயல் போன்ற பல தவறுகளுக்கு இளைஞர்களை இட்டுச்செல்வதில் பெரும்பாலான பங்கு நண்பர்களையே சாரும், அத்தகைய ஒழுக்கத்தை மீறிய செயல்களுக்குள் உங்களை இழுப்பவர்கள் உங்கள் எதிரிகளே, நண்பர்கள் அல்ல. நீங்கள் எப்படி இருக்கிறீர்களோ அதே நிலையில் எந்த எதிர்பார்ப்பும் இல்லாமல் பழகுபவனே உண்மை நண்பன். எனக்குப் பிடித்த மாதிரி மாறினால் தான் உன்னோடு நட்பாய் இருப்பேன் என நிபந்தனைகள் விதிப்பவர்களின் நட்பை விலக்கி கொள்ளுங்கள்.

உங்கள் நண்பர்களுடன் பேசும்போது உங்களுடைய மனம் நேர் சிந்தனைகளில் நிறைகிறதா? எதிர் சிந்தனைகளில் நிரம்புகிறதா? என்று பாருங்கள். எதிர் சிந்தனைகளே வளர்கிறதெனில் அந்த நட்பு தப்பானது என்பதைக் கண்டு கொள்ளுங்கள்.

சில நண்பர்களோடு பழகும்போது உங்களுடைய நல்ல குணாதிசயங்கள் எல்லாம் வளர்ந்து கொண்டே இருக்கும். அத்தகைய நண்பர்களை எப்போதுமே அருகில் வைத்திருங்கள்.

உங்களுடைய நெருங்கிய நண்பர்களில் நான்குபேரை நினையுங்கள், அவர்கள் நல்லவர்களா, மோசமானவர்களா என இப்போது அளவிடுங்கள், தீய நண்பர்களெனில் ஒதுக்குங்கள்.

கடைசியாக ஒன்று. நல்ல நட்பை நீங்கள் எதிர்பார்ப்பது போலவே அடுத்தவர்களும் எதிர்பார்ப்பார்கள். எனவே நீங்களும் பிறருக்கு எப்போதும் ஒரு நல்ல நண்பனாகவே இருங்கள்! நமது பெற்றோரையும், உடன் பிறந்தோரையும் நம்மால் தீர்மானிக்க முடியாது. ஆனால் நமது நண்பன் யாராக இருக்க வேண்டும் என்பதை நம்மால் தீர்மானிக்க முடியும். நட்பு என்பது ஒருவரின் வாழ்வையே திசைமாற்றிவிடும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அகிலத்தின் தலைவராக இருந்தாலும், இறைவனின் தூதராக இருந்தாலும் நபித்தோழர்களுடன் எவ்வாறு நட்பு பாராட்ட வேண்டும் என்பதற்கு உதாரணமாகத் திகழ்ந்தார்கள். அதனால்தான் அல்லாஹ் திருமறையில் இத்தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்பதாக சிலாகித்துச் சொல்லிக் காட்டுகிறான்.

எனவே நாமும் நபிகள் நாயகத்தைப் போன்று நல்ல நண்பானாக நல்ல நட்பு கொள்ளக்கூடியவர்களாக இருக்க வேண்டும்.

 

சூரத்துல் மாவூன் விரிவுரை

தீன் என்பதின் பொருள் என்ன?

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

பெயரும் இடமும்

இந்த அத்தியாயத்தின் இறுதி வசனத்தில் இறுதி வார்த்தையாக மாவூன் என்ற வார்த்தை இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு மாவூன் என்ற பெயரைச் சூட்டியிருக்கிறார்கள்.

இந்த அத்தியாயம் மக்காவில் அருளப்பட்டதற்கோ மதினாவில் அருளப்பட்டதற்கோ எந்தவித ஆதாரமும் கிடையாது. ஆனால் தற்போதுள்ள அரபி மற்றும் தமிழ் மொழி பெயர்ப்புக்களில் மக்காவில் அருளப்பட்டதாக அச்சிட்டிருப்பார்கள். இன்னும் சிலர் மக்கி,மதனீ என்ற இரண்டு கருத்தையும் சொல்லியிருக்கிறார்கள். இதற்கும் எந்த ஆதாரமும் கிடையாது.

அதே நேரத்தில் இந்த அத்தியாயம் மக்கா,மதீனா ஆகிய இரண்டு ஊர்களில் எங்கே அருளப்பட்டிருந்தாலும் இதன் போதனைகளின் கருத்தோ அர்த்தமோ மாறாது. இதில் சொல்லப்படுகிற போதனைகள் பொதுவானவைகளாகத் தான் இருக்கின்றன. இது மறுமைநாள் வரை பின்பற்றத் தகுந்தவைகளாகவும் இருக்கின்றன.

இஸ்லாத்திற்குத் தவறான வடிவம் கொடுப்பவர்களுக்கு மறுப்பு சொல்லக் கூடிய அத்தியாயம்தான் இது. பொதுவாக மதங்களின் அடையாளமாக சடங்குகளின் தொகுப்பைத்தான் காட்டுவார்கள்.

பெயரளவுக்கு முஸ்லிம்களாக வாழ்கிறவர்களிடம் இஸ்லாம் என்றால் என்ன என்று கேட்டுப் பார்த்தால், தொப்பி போடுவதையும் தாடி வைப்பதையும் சில வணக்க வழிபாடுகளைச் செய்வதையும் சொல்வார்கள். இவ்வளவுதான் இஸ்லாமாக இருப்பதாகவும் முஸ்லிம்களும் கூட தவறாக விளங்கி வைத்திருக்கிறார்கள்.

இதைப் புரிந்து கொள்வதாக இருப்பின், இந்து மதத்தைச் சார்ந்த ஒருவர், கோவிலுக்குப் போவதையும், பொட்டு வைத்துக் கொள்வதையும் நாமம் பட்டை என்று ஏதாவது ஒன்றை நெற்றியில் இடுவதுதான் இந்து மதபோதனையாக எண்ணிக் கொண்டிருக்கிறார்.

அதுபோன்று கிறித்துவ மதத்தைச் சார்ந்த ஒருவர், சிலுவையைத் தொங்கவிட வேண்டும், சில குறிப்பிட்ட நாட்களில் சர்ச்சுக்குச் சென்று கடவுளை வணங்க வேண்டும் என்று நினைத்து வாழ்கிறார். அது போன்றுதான் சில முஸ்லிம்களும் அவர்களுக்கு நிகராக சில சடங்குகளைச் செய்வதை இஸ்லாம் என தவறாக நினைத்து வாழ்க்கையை நாசமாக்குவதைப் பார்க்கிறோம்.

இத்தகையவர்களைப் பற்றித்தான் அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே கேள்வியாகவே  கேட்கிறான்.

أَرَأَيْتَ الَّذِي يُكَذِّبُ بِالدِّينِ - இந்த மார்க்கத்தை நிராகரிப்பவனைப் பற்றி (நபியே) உமக்குத் தெரியுமா?

இந்த அத்தியாயத்தின் முதல் வசனமே இஸ்லாத்தை நிராகரிப்பவன் என்றால் யார்? என்ற அளவுகோலைச் சொல்லித் தருவதாக அமைந்திருக்கிறது. இந்த மார்க்கத்தை மறுப்பவன் யார்? என்று நபியைப் பார்த்துக் கேட்டுவிட்டு, நபிக்கு பதில் சொல்லிக் கொடுக்கும் விதமாக சில அடையாளங்களை அல்லாஹ் சொல்லித் தருகிறான். அதைச் செய்பவன் மார்க்கத்தை மறுப்பவனாவான். அப்படியெனில் பின்னால் இறைவன் சொல்லித் தருபவைகளைக் கடைப்பிடிப்பவன் தான் முஸ்லிம், மார்க்கத்தில் இருப்பவன் என்ற பதிலையும் அல்லாஹ் சொல்லித் தருகிறான்.

இந்த முதல் வசனத்திலுள்ள தீன் என்ற வார்த்தைக்குப் பலரும் பலவிதமான கருத்துக்களைக் கூறுகின்றனர். ஏறத்தாழ எல்லா கருத்துக்களுமே சரியாகத்தான் இருக்கின்றன. தீன் என்ற வார்த்தை பல அர்த்தங்களைக் கொண்ட ஒரு சொல்.

إِنَّ الدِّينَ عِنْدَ اللَّهِ الْإِسْلَامُ .. (19) آل عمران 3

அல்லாஹ்விடம் மார்க்கம் என்பது இஸ்லாமே. (அல்குர்ஆன் 3:19)

இவ்விடத்தில் தீன் என்றால் மார்க்கம், இஸ்லாமிய மார்க்கம் என்று பொருள்.

وَمَنْ يَبْتَغِ غَيْرَ الْإِسْلَامِ دِينًا فَلَنْ يُقْبَلَ مِنْهُ وَهُوَ فِي الْآخِرَةِ مِنْ الْخَاسِرِينَ(85) آل عمران 3

இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் நஷ்டமடைந்தவராக இருப்பார். (அல்குர்ஆன் 3:85)

...الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا ... (3) المائدة 5

இன்றைய தினம் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்துவிட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். (அல்குர்ஆன் 5:3)

இந்த அடிப்படையில் இவ்வசனத்திற்குப் பொருள் வைத்தால், "இந்த மார்க்கத்தை (இஸ்லாத்தை) நிராகரிப்பவனைப் பற்றி (நபியே) உமக்குத் தெரியுமா?'' என்று வரும்.

இதே தீன் என்கிற வார்த்தைக்கு நியாயத் தீர்ப்பு வழங்குதல், கேள்வி கேட்குதல், விசாரணை நடத்துதல் என்கிற அர்த்தங்களும் இருக்கின்றன. அந்த அர்த்தத்திற்கு உதாரணம் சூரத்துல் ஃபாத்திஹாவில் வருகிற மாலிக்கி யவ்மித்தீனையே எடுத்துக் கொள்ளலாம்.

مَالِكِ يَوْمِ الدِّينِ(4) الفاتحة 1

தீர்ப்பு நாளின் அதிபதி. (அல்குர்ஆன் 1:4)

يَسْأَلُونَ أَيَّانَ يَوْمُ الدِّينِ(12) يَوْمَ هُمْ عَلَى النَّارِ يُفْتَنُونَ(13)ذُوقُوا فِتْنَتَكُمْ هَذَا الَّذِي كُنتُمْ بِهِ تَسْتَعْجِلُونَ(14) الذاريات 51

"தீர்ப்பு நாள் எப்போது?'' எனக் கேட்கின்றனர்.  அவர்கள் நரகத்தில் தண்டிக்கப்படும் நாள்தான் அது. உங்கள் வேதனையைச் சுவையுங்கள்! எதை அவசரமாகத் தேடினீர்களோ அது இதுவே. (என்று கூறப்படும்.)

وَكُنَّا نُكَذِّبُ بِيَوْمِ الدِّينِ(46) المدثر 74

தீர்ப்பு நாளை பொய்யெனக் கருதி வந்தோம்.

(அல்குர்ஆன் 74:46)

இவ்வசனங்களில் தீர்ப்பு நாள் தீன் எனப்படுகிறது,

ஆக இந்த வசனத்திற்கு இந்த மார்க்கத்தை மறுப்பவனை உனக்குத் தெரியுமா என்றும் அர்த்தம் செய்யலாம்.

அதுபோன்று மறுமை நாளை மறுப்பவனை உனக்குத் தெரியுமா என்றும் அர்த்தம் செய்யலாம்.

இரண்டு அர்த்தமும் சரிதான். இந்த உலகம் என்றாவது ஒரு நாள் நிச்சயம் அழிந்துவிடும். அதன் பிறகு இறைவன் நம்மை எழுப்பி கேள்வி கணக்குகளை நடத்தி நியாயத் தீர்ப்பு வழங்கி சுவர்க்கம் நரகம் என தீர்மானிப்பான். இதனை நம்புவதுதான் மறுமை என்கிறோம். இதுதான் இஸ்லாத்தின் அடிப்படையாகவும் இருக்கிறது.

இஸ்லாத்தை மறுத்தவன் மறுமையை மறுத்தவனாக ஆகிவிடுவான். மறுமையை மறுத்தவன் இஸ்லாத்தை மறுத்தவனாக ஆகிவிடுவான். எனவே இரண்டு அர்த்தங்களும் ஒன்றுடன் ஒன்று கலந்தவையாக இருக்கிறது.

எனவே இரண்டு அர்த்தங்களையும் வைத்துக் கொண்டாலும் சரியாக இந்த வசனம் பொருந்திப் போகிறது.

தீன் என்ற வார்த்தைக்கு வணக்க வழிபாடுகள்,சட்டதிட்டங்கள் என்கிற அர்த்தங்களும் இருக்கின்றன. அதனடிப்படையில் இறைவனை வணங்கி வழிபடுவதை நிராகரிப்பவன் யார் தெரியுமா? என்கிற அர்த்தத்தையும் செய்யலாம்.

ஆக தீன் என்பதற்கு பிரதானமாக மூன்று அர்த்தங்கள் இருக்கின்றன.

இந்த மூன்று அர்த்தங்களும் ஒன்றுதான்.

இந்த மார்க்கத்தை மறுப்பவன் யார் தெரியுமா என்று கேள்வி கேட்டுவிட்டு, தொப்பி எவன் போடவில்லையோ அவன்தான் என்றோ, எவன் தாடி வைக்கவில்லையோ அவன்தான் என்றோ, எவன் பள்ளிவாசல் பக்கம் வரவில்லையோ அவன்தான் என்றோ, எவன் அரபி மொழியில் பெயர் வைக்கவில்லையோ அவன்தான் என்றோ இவைகளில் எந்தப் பதிலையும் அல்லாஹ் சொல்லவில்லை.

அனாதைகளை விரட்டுபவன்; ஏழைகளுக்கு உணவளிக்காதவன் தான் மார்க்கத்தை மறுப்பவன் என்று அல்லாஹ் விளக்குகிறான்.

இந்த இரண்டு செயல்களைச் செய்தவன் தொழுதாலும் நோன்பு நோற்றாலும் ஜகாத் கொடுத்தாலும் ஹஜ் செய்தாலும் திக்ரு செய்தாலும் தஸ்பீஹ் செய்தாலும் இதுபோன்று இறைவனுக்காக தன் மொத்த வாழ்க்கையை அர்ப்பணித்தாலும் அவன் மார்க்கத்தை மறுக்கத்தான் செய்கிறான் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இந்த இரண்டும் இருந்தால் இவன் நியாயத் தீர்ப்பு நாளை மறுக்கிறான் அல்லது மறுமை வாழ்வை மறுக்கிறான் என்றாகிவிடும்.

فَذَلِكَ الَّذِي يَدُعُّ الْيَتِيمَ - அவனே அனாதையை விரட்டுகிறான்.

فَذَلِكَ الَّذِي - அவன் எத்தகையவன் எனில்,

 يَدُعُّ الْيَتِيمَ- அனாதைகளை விரட்டுவான்.

எனவே அனாதைகளை யாரெல்லாம் விரட்டியடிப்பார்களோ அவர்களெல்லாம் இந்த மார்க்கத்தையும் மறுமையையும் வணக்க வழிபாடுகளையும் மறுப்பவர்கள் என்று அர்த்தமாகிறது.

وَلَا يَحُضُّ عَلَى طَعَامِ الْمِسْكِينِ - ஏழைக்கு உணவளிக்க அவன் தூண்டுவதில்லை.

மனிதர்களுக்கு நல்லது செய்வதை அறவே மறந்துவிட்டு, கடவுளை நினைக்கிறோம் கடவுளுக்கு மரியாதை செலுக்கிறோம் என்ற பெயரில் மனிதனுக்கு அநியாயம் செய்யக்கூடிய காட்சிகளைப் பார்த்துக் கொண்டிருக்கிறோம். ஆனால் இஸ்லாம் ஒன்று மட்டும்தான் இந்த மார்க்கத்தை ஏற்பதுவும் மறுப்பதுவும் அவன் மனிதர்களிடத்தில் எப்படி நடந்து கொள்கிறான் என்பதைப் பொறுத்துத்தான் அமையும் என்கிறது. இறைவனுக்கு எப்படி நடந்து கொள்கிறான் என்பது இரண்டாவது அம்சம்தான்.

தொழுகை,நோன்பு என்று இறைவனிடம் ஒழுங்காக நடந்து கொள்வதும் கூட மனிதர்களிடத்தில் ஒழுங்காக நடப்பதற்கான பயிற்சிகள்தாம். இந்த விசயத்தை வெறுமனே சொன்னால் இதன் முக்கியத்துவம் உணராது என்பதினால்தான் அல்லாஹ் முதலில் மார்க்கத்தை மறுப்பவன் யார் தெரியுமா? என்று கேள்வியாகக் கேட்டு அதில் ஏதோ சொல்லப் போகிறான் என்கிற எண்ண ஈடுபாட்டை நமக்கு ஏற்படுத்தியிருக்கிறான்.

பொதுவாக எந்தக் கேள்வி கேட்டாலும் அவரவர் மனதிற்குத் தோன்றுகிற பல்வேறு பதில்களை பல்வேறு கோணத்தில் சொல்வோம். அப்படி நினைக்கிறவைகள் இல்லை என்பதற்காகத்தான் இறைவன் இந்த முறையை இவ்வசனங்களில் கையாள்கிறான்.

திருக்குர்ஆனைப் புரட்டிப் பார்த்தால், அனாதைகளைப் பேணுவதையும் ஏழைகளுக்கு உதவுவதையும் பற்றித்தான் அதிகமான இடங்களில் இறைவன் பேசுகிறான்.

அனாதைகள் விசயத்தில் கடுமையான எச்சரிக்கைகளையும் இஸ்லாம் நமக்கு வலியுறுத்துகிறது.

ஏனெனில் அவன் தகப்பனோ தாயாரோ இல்லாமல் நாதியற்று நிற்கதியாக நிற்கிறான்.

தந்தையில்லாமல் நாதியற்று நிற்பவனை யார் கவனிப்பது? தந்தையில்லாமல் தடுமாறி நிற்கும் நேரத்தில் அல்லாஹ்விற்குப் பயந்து நான் உன்னைக் கவனிக்கிறேன் என்று முன்வர வேண்டும் என்பதற்காகத்தான் இஸ்லாம் அனாதைகள் விசயத்தில் கூடுதல் கவனம் செலுத்தச் சொல்கிறது. அதுதான் இஸ்லாத்தில் இருப்பதற்கு அடையாளம் என்று அல்லாஹ் கூறுகிறான்.

எந்தளவுக்குச் சொல்கிறான் என்பதைப் பாருங்கள்.

அல்குர்ஆன் 4:8 வது வசனத்தில், நாம் நமது தகப்பனாருடைய சொத்தைப் பாகம் பிரிக்கிறோம். இதற்கு இஸ்லாமே யாருக்கு எவ்வளவு என்று பங்கிடுகிறது. இப்படி இறைவன் நிர்ணயித்த பங்கைப் பங்கிடும் நேரத்தில், ஒரு அனாதை வந்து நின்றால் அவனுக்கும் இறைவன் சொத்தில் மிகச் சிறு பகுதியையாவது கொடுக்கச் சொல்கிறான். நாம் நமது தந்தையின் சொத்தைப் பங்கிடும்போது அதைப் பார்க்கிற அனாதையின் உள்ளம், இதுபோன்று நமக்கும் ஒரு தந்தை இருந்து, நமக்கும் தந்தையின் சொத்து இருந்திருந்தால் நமக்கும் இதுபோன்று கிடைத்திருக்குமே என்று வெதும்பும். உள்ளம் புழு நெழிவதைப் போன்று நெகிழும். எனவே சொத்தைப் பிரிக்கும்போது அனாதை வந்துவிட்டால் அவர்களுக்கு ஏதாவது தொகையைக் கொடுங்கள். நாம் அதன் பிறகு பங்கு வைத்துக் கொள்ளலாம் என்கிறான்.

பங்கிடும்போது உறவினர்களோ, அனாதைகளோ, ஏழைகளோ வந்துவிட்டால் அதில் அவர்களுக்கும் வழங்குங்கள்! அவர்களுக்கு நல்ல சொல்லையே கூறுங்கள்!

(அல்குர்ஆன் 4:8)

வாரிசல்லாதவர்களாக இவர்கள் இருந்தாலும் அவர்களுக்கும் ஏதேனும் சிறு தொகையாவது அந்தச் சொத்திலிருந்து கொடுங்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

மேலும் அத்தியாம் 76ல் வசனம் 8லிருந்து 22வரை வாசித்தால், மறுமையில் கிடைக்கும் சுவர்க்கம், பாக்கியம், இன்பங்கள், தண்டனையிலிருந்து தப்பித்தல் என்று எல்லாமே இந்த மேற்சொன்ன இரண்டு காரியங்களைச் செய்வதில்தான் அடங்கியிருக்கிறது.

நம்முடைய தொழுகை நோன்பில் அடங்கியிருப்பதைவிட, முஸ்லிமான ஒருவன் அனாதைக்கு என்ன செய்தான்? ஏழைகளுக்கு என்ன செய்தான்? என்ற கேள்விக்கான விடைதான், சுவர்க்கத்தில் கிடைக்கும் பாக்கியங்களை இவ்வசனங்களில் கூறப்படுகிறது.

إِنَّمَا نُطْعِمُكُمْ لِوَجْهِ اللَّهِ لَا نُرِيدُ مِنْكُمْ جَزَاءً وَلَا شُكُورًا(9)إِنَّا نَخَافُ مِنْ رَبِّنَا يَوْمًا عَبُوسًا قَمْطَرِيرًا(10)فَوَقَاهُمْ اللَّهُ شَرَّ ذَلِكَ الْيَوْمِ وَلَقَّاهُمْ نَضْرَةً وَسُرُورًا(11)وَجَزَاهُمْ بِمَا صَبَرُوا جَنَّةً وَحَرِيرًا(12)مُتَّكِئِينَ فِيهَا عَلَى الْأَرَائِكِ لَا يَرَوْنَ فِيهَا شَمْسًا وَلَا زَمْهَرِيرًا(13)وَدَانِيَةً عَلَيْهِمْ ظِلَالُهَا وَذُلِّلَتْ قُطُوفُهَا تَذْلِيلًا(14)وَيُطَافُ عَلَيْهِمْ بِآنِيَةٍ مِنْ فِضَّةٍ وَأَكْوَابٍ كَانَتْ قَوَارِيرَ(15)قَوَارِيرَ مِنْ فِضَّةٍ قَدَّرُوهَا تَقْدِيرًا(16)وَيُسْقَوْنَ فِيهَا كَأْسًا كَانَ مِزَاجُهَا زَنجَبِيلًا(17)عَيْنًا فِيهَا تُسَمَّى سَلْسَبِيلًا(18)وَيَطُوفُ عَلَيْهِمْ وِلْدَانٌ مُخَلَّدُونَ إِذَا رَأَيْتَهُمْ حَسِبْتَهُمْ لُؤْلُؤًا مَنثُورًا(19)وَإِذَا رَأَيْتَ ثَمَّ رَأَيْتَ نَعِيمًا وَمُلْكًا كَبِيرًا(20)عَالِيَهُمْ ثِيَابُ سُندُسٍ خُضْرٌ وَإِسْتَبْرَقٌ وَحُلُّوا أَسَاوِرَ مِنْ فِضَّةٍ وَسَقَاهُمْ رَبُّهُمْ شَرَابًا طَهُورًا(21)إِنَّ هَذَا كَانَ لَكُمْ جَزَاءً وَكَانَ سَعْيُكُمْ مَشْكُورًا(22) الإنسان 76

8. அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.

9. அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை

10. எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும்  நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.)

11. எனவே அந்த நாளின் தீங்கிலிருந்து அவர்களை அல்லாஹ் காப்பாற்றினான். அவர்களுக்கு முகமலர்ச்சியையும், மகிழ்ச்சியையும் வழங்கினான்.

12. அவர்கள் பொறுத்துக் கொண்டதால் சொர்க்கத்தையும், பட்டையும் பரிசாக அவர்களுக்கு வழங்கினான்.

13. அதில் அவர்கள் உயர்ந்த ஆசனங்கள் மீது சாய்ந்திருப்பார்கள். அங்கே சூரியனையும், கடும் குளிர்ச்சியையும் காணமாட்டார்கள்.

14. அதன் நிழல்கள் அவர்களுக்கு நெருக்கமாக இருக்கும். அதன் கனிகள் மிகத் தாழ்வாகத் தொங்கும்.

15. வெள்ளிப் பாத்திரங்களும், பளிங்கு போன்ற கிண்ணங்களும் அவர்களைச் சுற்றிக் கொண்டு வரப்படும்.

16. அது வெள்ளி போன்ற பளிங்குகளால் ஆன கிண்ணங்கள்! அவற்றைத் திட்டமிட்டு அமைத்துக் கொள்வார்கள்.

17. அங்கே குவளையிலிருந்து புகட்டப் படுவார்கள். அதில் இஞ்சி கலந்திருக்கும்.

18. அங்குள்ள ஸல்ஸபீல் எனப்படும் நீரூற்றிலிருந்து புகட்டப்படுவார்கள்.

19. இளமை மாறாச் சிறுவர்கள் அவர்களைச் சுற்றி வருவார்கள். அவர்களை நீர் பார்த்தால் உதிர்க்கப்பட்ட முத்துக்களாகக் கருதுவீர்!

20. நீர் காணும்போது அங்கே சொகுசான இன்பத்தையும், பெரிய ஆட்சியையும் காண்பீர்!

21. அவர்கள் மீது பச்சை நிற ஸுந்துஸ் எனும் பட்டும், இஸ்தப்ரக் எனும் பட்டும் இருக்கும். வெள்ளிக் காப்புகள் அணிவிக்கப் படுவார்கள். அவர்களின் இறைவன் தூய பானத்தை அவர்களுக்குப் பருகத் தருவான்.

22. இதுவே உங்களுக்குரிய கூலி. உங்கள் உழைப்புக்கு நன்றி செலுத்தப்படும்.

(அல்குர்ஆன் 76:8 முதல் 22 வரை)

இறைவனை நேசித்தவர்களுக்கு அடையாளம், நல்லடியார்களுக்கு அடையாளம் என்பது அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் சிறைப்பட்டவர்களுக்கும் செலவு செய்வதுதான்.

இறைவனை நாம் நேசிக்கிறோம் என்பதினால் உண்டியலில் இறைவனுக்காக காணிக்கை செலுத்தத் தேவையில்லை. இறைவனை நாம் நேசிக்கிறோம் என்பதற்கு அடையாளம் உண்டியலில் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும்தான் பொருளாதாரத்தைப் போடவேண்டும். அதாவது நேசம் இறைவனுக்கு! உண்டியல் அனாதைக்கு! நேசிக்கிறதெல்லாம் இறைவனாக இருந்தாலும் அந்த நேசத்திற்கான பரிகாரத்தில் பயன்பெறுபவர்கள் ஏழைகளும் அனாதைகளுமாகத்தான் இருப்பார்கள். இதுதான் இறைவனை நேசிப்பதற்குரிய அர்த்தம் என்றும் இவ்வசனம் தீர்மானிக்கிறது.

அதனால்தான் அல்லாஹ் இவ்வசனத்தில் "அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்' என்று கூறுகிறான். மேலும் இத்தகையவர்களுக்கு உணவளிக்கும்போதே, "அல்லாஹ்வின் முகத்துக்காகவே உங்களுக்கு உணவளிக்கிறோம். உங்களிடமிருந்து பிரதிபலனையோ, நன்றியையோ நாங்கள் எதிர்பார்க்கவில்லை' என்றும் சொல்லிக் கொண்டுதான் உணவளிக்கிறார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இத்தகையவர்களுக்கு நாம் உணவளிக்கிறோம் எனில் அவர்களிடம் அதற்குப் பகரமாக எந்த நன்றியையும் எதிர்பார்க்கவில்லை என்று கூறிக் கொண்டுதான் கொடுக்க வேண்டும்.

அதாவது ஒருவருக்கு ஒரு உதவியைச் செய்யும் போதே அவரிடம் அல்லாஹ் சொல்வதைப் போன்று சொல்லித்தான் கொடுக்க வேண்டும். சொன்னமாதிரி நடந்தும் காட்ட வேண்டும்.

ஆனால் இன்று நடைமுறையில் இந்தப் பழக்கம் நம்மில் அதிகமானோருக்கு இல்லை.

யாருக்காவது ஒரு உதவியைச் செய்தாலோ அல்லது உணவளித்தாலோ உதவி செய்யப்பட்ட அந்த மனிதர் நம்மைப் பார்க்கும் போதெல்லாம் நமக்காக எழுந்து நிற்க வேண்டும் என்றோ நமக்கு பிறர் முன்னிலையில் மரியாதை செலுத்த வேண்டும் என்றோ நம்மைக் கண்டதும் கீழாடையை கீழ்நோக்கி இழுத்துவிட வேண்டும் என்றோ கைகளைக் கட்டிக் கொண்டு நிற்க வேண்டும் என்றோ எதிர்பார்க்கிறோம்.

பொதுவான மனிதர்கள் உதவிக்குப் பகரமாக நன்றிக் கடனை எதிர்பார்க்கிறார்கள். ஆனால் இறைநேசர்கள், நல்லடியார்கள், அல்லாஹ்விற்குப் பயந்தவர்கள், முஃமின்கள் முஸ்லிம்கள் பிறருக்குச் செய்த உதவியை அப்படியே மறந்துவிட வேண்டும்.

அப்படியெனில் மனிதனுக்குக் கொடுத்த உணவு மனிதனுக்காகக் கொடுத்தவை இல்லை. அல்லாஹ்வை நாம் நேசித்ததற்காகவும் மறுமையில் அவனிடம் பரிசு பெறுவதற்காகத்தான் கொடுக்கிறோம் என்று எண்ண வேண்டும். நம்மிடமிருந்து உதவி பெறுகிறவரிடம் அப்படித்தான் சொல்லிக் கொடுக்க வேண்டும். அதுபோன்றே நமது நடைமுறையையும் அமைத்துக் கொள்ள வேண்டும்.

இத்துடன் இறைவன் முடித்துக் கொள்ளாமல் எங்கள் இறைவனிடமிருந்து கடுமையும், நெருக்கடியும்  நிறைந்த நாளை நாங்கள் அஞ்சுகிறோம்'' (எனக் கூறுவார்கள்.) என்பதற்காகத்தான் இந்த உதவியைச் செய்வதாகச் சொல்வார்கள்.

நாங்கள் உங்கள் மீது கொண்டிருக்கிற இரக்கத்திற்காகத் தரவில்லை. மாறாக மறுமையில் பாரதூரமான மிகக் கொடூரமான ஒரு நாள் இருக்கிறது. அந்த நாளின் கடுமையிலிருந்து எங்களது இரட்சகனின் கேள்வி விசாரணைக்குப் பதில் சொல்வதற்கு நாங்கள் பயப்படுகிறோம். அதற்காகத்தான் உங்களுக்கு உணவளிக்கிறோம் என்பார்கள்.

இப்படி உதவியவர்களை அன்றைய நாளின் தீங்கிலிருந்து அல்லாஹ் காப்பாற்றுவான். எப்போது பார்த்தாலும் தஸ்பீஹ் மணியை வைத்து உருட்டிக் கொண்டே இருந்தால் போதுமா? பத்து பைசா கூட பிறருக்கு தர்மம் செய்வதற்கு முன்வர மாட்டார்கள். பக்கத்து வீட்டில் இருக்கிற ஏழைக்கு உணவு கொடுக்க மாட்டார்கள். பெருநாளன்று ஆயிரம் ரூபாய்க்கு தனக்கு சட்டை எடுத்து உடுத்துவார். பக்கத்து வீட்டிலிருக்க ஏழைக்கு நூறு ரூபாய்க்கு சட்டை எடுத்துக் கொடுக்க மாட்டார்கள்.

ஆனால் பள்ளிவாசலில் தொழுது கொண்டேயிருப்பார்கள். ஒரு நோன்பு கூட விடமாட்டார்கள்.

இந்த நோன்பும் இந்தத் தொழுகையும் அல்லாஹ்வுக்குத் தேவையில்லை. இது என்ன நோன்பு? மனிதனுக்கு மனிதன் உதவக் கூடாது என்று சொல்லித் தருகின்ற நோன்பு எப்படி நோன்பாக இருக்கமுடியும்? மனிதனுக்கு மனிதன் உதவுவதை வலியுறுத்தாத கற்றுத் தராத தொழுகை எப்படி சரியான தொழுகையாக இருக்க முடியும் என்பதை அல்லாஹ் பார்க்கிறான்.

அதனால்தான் அனாதைகளுக்கும் ஏழைகளுக்கும் கைதிகளுக்கும் எவன் உணவு கொடுக்கிறானோ அவர்களுக்கு உதவி செய்கிறானோ அவனைத்தான் மறுமை நாளின் தீங்கிலிருந்து பாதுகாக்கிறான். அந்த நாளில் அவர்கள் முகமலர்ச்சியாகவும் சிரிப்பாகவும் இருப்பார்கள்.

ஒரு மனிதன் தன்னுடைய காசை இழப்பது என்பது மனச் சங்கடமான காரியம்தான். இருப்பினும் மார்க்கக் கடமையென எண்ணி அதை இழந்ததற்காக பொறுமையாக இருந்ததினால் அவர்களுக்கு சொர்க்கத்தைப் பரிசாக வழங்குகிறான். மேலும் அங்கே இவர்கள் உடுத்துவதற்குப் பட்டாடைகள் கொடுக்கப்படும். அவர்களுக்கென தனி பிரத்யோகமான திண்டுகள் இருக்கும். தலையணைகளில் சாய்ந்து கொண்டிருப்பார்கள். சூரியனையும் பார்க்க மாட்டார்கள். அதற்காக கடும் குளிரும் இருக்காது. ஏர்கன்டிஷனர் போன்று இருக்கும். இரண்டுக்கும் நடுநிலையான அந்த சீதோசனையை ரசிக்கும் வகையில் அல்லாஹ் கூலி வழங்குவான்.

ஏர்கன்டிஷனர் அந்தக் காலத்தில் கிடையாது என்பதினால் அந்த வார்த்தையை அல்லாஹ் இப்படி வர்ணிக்கிறான். மனிதர்களே ஏசி என்று இன்றைக்குக் கண்டுபிடித்து நமக்குத் தந்துள்ளான் என்கிற போது, மனிதர்களைப் படைத்த இறைவனுக்கு இது முடியாதா?

ஊட்டி, கொடைக்கானல், மூனாறு போன்ற சுற்றுலாத் தலங்களை எடுத்துக் கொண்டால் மொத்த மாவட்டத்தையும் ஊரையும் ஏசியாக ஆக்கி வைத்துள்ளான்.                                                                                         

மேலும் அங்கே நிழல்களில் இருப்பார்கள். அங்குள்ள மரங்களின் கனிகள் அவர்கள் சாய்ந்திருக்கும் நிலையிலேயே அதைப் பறிக்கும் உயரத்தில் வசதியாக தாழ்ந்திருக்கும். மேலும் அங்கே என்னென்ன பானங்கள் இருக்கும். அவர்களுக்குரிய பணியாளர்களின் நிலை எப்படி இருக்கும் என்பதையெல்லாம் இவ்வசனங்களில் இறைவன் பேசுகிறான்.

கடைசியாக இதை முடிக்கும்போது ஒரு வார்த்தையைச் சொல்கிறான். அந்தக் காட்சியை நீர் பார்த்தால் அதை மனிதனால் வர்ணிக்கவே முடியாது. புரியாது என்கிறான். அந்தக் காட்சியைப் பார்த்தால் அதை ஒரு தனி இராஜ்ஜியமாகக் காண்பாய். அவரவர் நினைத்ததெல்லாம் நடத்தினால் அது ஒரு தனி இராஜாங்கமாகத்தான் இருக்கும்.

நான் எதையெல்லாம் நினைக்கிறோனோ அதுவெல்லாம் எனக்கு நடந்தால் நான் ஒரு ராஜாதான்.

"போ என்றால் போவார்கள்', "வா என்றால் வருவார்கள்', "இரு என்றால் இருப்பார்கள்', "எடுத்துவிட்டு வா என்றால் எடுத்துவந்து கொடுப்பார்கள்', இது ஒரு இராஜங்கம்தான். இவர் ஒரு இராஜாதான். அதுபோன்றதொரு இன்பத்தை அங்கே அனுபவிக்க முடியும்.

எனவே மறுமையில் நமக்கென ஒரு இராஜங்கம் கிடைக்க வேண்டுமானால் இவ்வுலகில் வாழ்கிறபோது முஸாஃபிர்கள் என்ற ஏழைகளையும் அனாதைகளையும் கவனிக்க வேண்டும். இன்னும் பல பாக்கியங்கள் கிடைப்பதாகவும் இறைவன் வர்ணிக்கிறான்.

இந்த அத்துணை பாக்கியங்களும் இன்பங்களும் நமக்குக் கிடைப்பதற்குக் காரணம் ஏழைகளுக்கும் அனாதைகளுக்கும் சிறைப் பட்டவர்களுக்கும் உணவளிப்பதினால்தான்.

எனவே வெறுமனே சடங்கு சம்பிரதாயங்களை மட்டும் கொண்ட மார்க்கம் இஸ்லாம் கிடையாது என்பது இதன் மூலம் நமக்கு விளங்குகிற தத்துவமாகும்.

இன்னும் சிலர் "கடவுளை மற, மனிதனை நினை' என்றெல்லாம் தத்துவம் பேசுகிறார்கள். ஆனால் இஸ்லாம் என்ற ஒரே ஒரு மார்க்கம் மட்டும், கடவுளை நினைப்பதற்காக மனிதனை நினைக்கச் சொல்கிறது.

கடவுளை மற மனிதனை நினை என்கிற தத்துவம் கண்டுபிடிக்கப்படுவதற்குக் காரணம், கடவுளின் பெயரால் மனிதன் ஏமாற்றப்படுகிறான் என்பதினால்தான். மனிதன் சுரண்டப்படுகிறான். கடவுளின் பெயரால் மனிதனின் மானம் மரியாதை சொத்து சுகங்களெல்லாம் மதகுருமார்களால் பறிக்கப்படுகிறது. மனிதனை மறந்து விட்டார்கள். மனிதன் சிரமப்படுகிறபோது கடவுளுக்காக உண்டியலில் கோடி கோடியாகக் கொட்டுகிறார்கள். மனிதர்களுக்கு உதவி செய்யாமல் இருக்கிறார்கள். இவைகளையல்லாம் ஒழிக்க வேண்டுமானால் கடவுளை மறக்கடிச் செய்தால்தான் சாத்தியமாகும் என்பதினால்தான் அறிவு ஜீவிகள் என்ற பெயரில் பலர் மனிதனை நினை கடவுளை மற என்ற தத்துவத்தை சொல்ல ஆரம்பித்தனர்.

ஆனால் அதை விடவும் ஒருபடி மேலே போய், ஆன்மீகத்தில் இருந்துகொண்டே நீ மனிதனை நினைத்தால்தான் கடவுளாகிய என்னை நினைப்பதாக அர்த்தம் என்று அல்லாஹ் சொல்கிறான். எனவே மனிதனை நினைப்பதையே ஆன்மீகமாக வழிகாட்டியிருப்பதை இஸ்லாமிய மார்க்கத்தில் மட்டுமே காணமுடிகிறது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

கேள்வி பதில்

கணவன் மனைவிக்கு இடையில் பெரிய அளவில் பிரச்சினைகள் வந்து தலாக் சொல்வதற்கு முன் அறிவுறை சொல்லுதல், படுக்கையறையை விட்டு பிரிதல், லேசாக அடித்தல், கடைசியில் ஜமாஅத்திடம் சென்று அறிவுறையைக் கேட்டு சேர்தல் கடைசியில் முடியாமல் கணவன் தலாக் சொல்லிவிட்டார், இப்போது கணவனுக்கு மனைவியுடன் சேர்ந்து வாழ அறவே விருப்பமில்லை. இப்போது மனைவி கணவனுடைய வீட்டில் இத்தா இருக்கலாமா? அல்லது தன் தாய்வீட்டில் அல்லது வேறு இடத்தில் இத்தா இருக்க வேண்டுமா?

உம்மு ஜுவைரியா   மள்வானை

மனைவியைப் பிடிக்காதபோது விவாகரத்து செய்தவுடன் மூன்று மாத காலம் மனைவி மறுமணம் செய்யாமல் காத்திருக்கும் காலம் இத்தா எனப்படும்.

இப்படி தலாக் சொன்னபின் மனைவி, கணவனின் வீட்டில் தான் இருப்பாள். அவளை கணவன் வெளியேற்றக் கூடாது. மனைவியும் வெளியேறக் கூடாது.

நபியே! பெண்களை நீங்கள் விவாகரத்துச் செய்தால் அவர்கள் இத்தாவைக் கடைப்பிடிப்பதற்கேற்ப விவாகரத்துச் செய்யுங்கள்! இத்தாவைக் கணக்கிட்டுக் கொள்ளுங்கள்! உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சுங்கள்! பகிரங்கமான வெட்கக்கேடான காரியத்தை அப்பெண்கள் செய்தாலே தவிர அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்! அவர்களும் வெளியேற வேண்டாம். இவை அல்லாஹ்வின் வரம்புகள். அல்லாஹ்வின் வரம்புகளை மீறுபவர் தமக்கே தீங்கு இழைத்துக் கொண்டார். இதன் பிறகு அல்லாஹ் ஒரு கட்டளை பிறப்பிக்கக் கூடும் என்பதை நீர் அறிய மாட்டீர்.

(அல்குர்ஆன் 65:1)

திருமண பந்தம் இன்னும் முழுமையாக நீங்காததால் மனைவிக்கு கணவன் வீட்டில் இருக்க முழு உரிமை உண்டு. இதனால்தான் உங்கள் வீடுகளில் இருந்து அவர்களை வெளியேற்றாதீர்கள் என்று சொல்லாமல் உங்கள் மனைவியரை அவர்களின் வீடுகளில் இருந்து வெளியேற்றாதீர்கள் என்று அல்லாஹ் சொல்கிறான். திருமண பந்தம் முழுமையாக நீங்காததால் அவளுக்கும் அந்த வீட்டில் உரிமை உண்டு என்பதற்காகவே அவர்களின் வீடுகள் என்று அல்லாஹ் சொல்கிறான்.

விவாகரத்து செய்த பின்னும் ஏன் கணவன் வீட்டில் இத்தா காலம் வரை மனைவி தங்க வேண்டும் என்பதற்கான காரணத்தையும் அல்லாஹ் இவ்வசனத்தில் சொல்கிறான். இதன் பின்னர் ஏதேனும் ஒரு (நல்ல) காரியத்தை அல்லாஹ் உண்டாக்குவான் என்பதுதான் அந்தக் காரணம்.

விவாகரத்துச் செய்த உடன் மனைவி தனது தாய்வீட்டுக்குப் போய்விட்டால் அந்தப் பிரிவு நிரந்தரமாகி விடக்கூடிய வாய்ப்பு அதிகம் உள்ளது. கணவன் வீட்டிலேயே அவள் இருந்தால் இருவருக்கும் இடையே உறவு ஏற்பட்டு முதல் விவாகரத்து முடிவுக்கு வந்து விடுவதற்கு அதிக வாய்ப்பு உள்ளது.

அல்லாஹ் இருவருக்கும் இடையே இணைப்பு ஏற்படுவதற்கு வாய்ப்பளிக்கும் முகமாகவே வீட்டை விட்டு வெளியேற்றாதீர்கள் என்றும், பெண்கள் வெளியேறாதீர்கள் என்றும் கட்டளை பிறப்பிக்கிறான்.

மனைவி விபச்சாரம் செய்து விட்டாள் என்ற காரணத்துக்காக விவாகரத்து நடந்தால் அப்போது மட்டும் விவாகரத்து நடந்தவுடன் அவர்களை வெளியேற்றலாம் என்பதும் இதில் சொல்லப்பட்டுள்ளது.

இத்தாவின் காலம் முடிந்தவுடன் மனைவியுடன் சேர்ந்து கொண்டால் பிரச்சனை இல்லை. சேராவிட்டால் அழகிய முறையில் பிரிந்துவிட வேண்டும் என்று அடுத்த வசனத்தில் அல்லாஹ் கூறுகிறான். அவர்கள் நிரந்தரமாகப் பிரிந்து விடுவதால் இதற்கு மேல் அவர்கள் கணவன் வீட்டில் இருக்க முடியாது.

நபி (ஸல்) அவர்களுக்கு சஃபர் மாதத்தில் புதன் கிழமையில் நோய் ஏற்பட்டதால் அன்றைய நான் பீடை நாள் என்று கூறுகிறார்கள். நபிகளாருக்கு சஃபர் மாதத்தில்தான் நோய் ஏற்பட்டதா?

பாரிஸா, மதுரை

நபி (ஸல்) அவர்களுக்கு பல தடவை நோய் ஏற்பட்டுள்ளது. மிகக் கடுமையாக பாதிக்கப்பட்டுள்ளார்கள்.

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடும் காய்ச்சலால் சிரமப்பட்டுக் கொண்டிருந்தபோது நான் அவர்களிடம் சென்று அவர்களை என் கையால் தொட்டு, "அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் கடும் காய்ச்சலால் சிரமப்படுகிறீர்களே!'' என்று கேட்டேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்,  "ஆம்;  உங்களால் இருவர் காய்ச்சலால் அடையும் துன்பத்தைப் போன்று நான் (ஒருவனே) அடைகிறேன்'' என்று சொன்னார்கள்.

நான், "(இந்தத் துன்பத்தின் மூலம்) தங்களுக்கு இரு (மடங்கு) நன்மைகள் கிடைக்கும் என்பதா இதற்குக் காரணம்?'' என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "ஆம்' என்று கூறிவிட்டுப் பிறகு, "ஒரு முஸ்லிமுக்கு ஏற்படும் நோயாயினும், அது அல்லாத வேறு துன்பமாயினும் (அதற்கு ஈடாக), மரம் தன் இலைகளை உதிர்த்து விடுவதைப் போன்று அவருடைய பாவங்களை அல்லாஹ் உதிர்க்காமல் விடுவதில்லை'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (5660)

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது: (நபி ஸல் அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்த சமயம்) அன்சாரிகள் தமது சபைகளில் ஒன்றில் (அமர்ந்தபடி) அழுது கொண்டிருந்தபோது அபூபக்ர் (ரலி) அவர்களும், அப்பாஸ் (ரலி) அவர்களும் அந்த வழியாகச் சென்றார்கள். அப்போது, அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் -ரலி- அவர்கள்), "நீங்கள் ஏன் அழுகிறீர்கள்?'' என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், "நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கூடி) அமர்ந்திருந்த அவையை நினைத்துப் பார்த்தோம். (அதனால் அழுகிறோம்.)'' என்று பதிலளித்தார்கள்.

அப்பாஸ் (ரலி) அவர்கள் (அல்லது அபூபக்ர் (ரலி) அவர்கள்), நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இந்த விஷயத்தைத் தெரிவித்தார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் தம் சால்வையின் ஓரத்தைத் தம் தலையில் கட்டியிருந்த நிலையில் வெளியே வந்து, (உரை நிக்ழ்த்துவதற்காக) மிம்பரில் (மேடையில்) ஏறினார்கள் - அந்த நாளுக்குப் பிறகு அவர்கள் மிம்பரில் ஏறவில்லை. அல்லாஹ்வைப் புகழ்ந்து அவனைப் போற்றிய பிறகு, "அன்சாரிகள் விஷயத்தில் (நல்லவிதமாக நடந்து கொள்ளும்படி) உங்களுக்கு நான் அறிவுரை கூறுகிறேன். ஏனெனில், அவர்கள் என் இரைப்பை; என் கருவூலம் ஆவர். தம் மீதிருந்த பொறுப்பை, அவர்கள் நிறைவேற்றி விட்டார்கள். இனி அவர்களுக்குரிய உரிமை தான் எஞ்சியுள்ளது. ஆகவே, அவர்களில் நன்மை புரிவோரிடமிருந்து (அந்த நன்மையை) ஏற்றுக் கொண்டு, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்து விடுங்கள்'' என்று சொன்னார்கள்.

நூல் : புகாரி (3799)

நபிகளார் பல நேரங்களில் நோய் ஏற்பட்டிருந்தாலும் இறுதி காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாகவே பரவலாகப் பேசப்படுகிறது.  அதில் அவர்கள் இறக்கும் காலகட்டத்தில் ஏற்பட்ட நோய் தொடர்பாக நபிமொழிகளில் அதிகம் கூறப்பட்டுள்ளது.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் தாம் மரணிப்பதற்கு முன்னால் நோயுற்றிருந்தபோது, “"யூதர்களையும் கிறித்தவர்களையும் அல்லாஹ் தனது கருணையிலிருந்து அப்புறப்டுத்துவானாக! அவர்கள் தங்களின் நபிமார்களின் அடக்கத்தலங்களை வணக்கத்தலங்களாக ஆக்கிவிட்டனர்'' என்று கூறினார்கள். இந்த அச்சம் மட்டும் இல்லையாயின் நபி (ஸல்) அவர்களின் அடக்கவிடத்தைத் திறந்த வெளியில் நபித் தோழர்கள் வைத்திருந்திருப்பார்கள். எனினும் அதுவும் வணக்கத்தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என நான் அஞ்சுகிறேன்.

நூல் : புகாரி (1330)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் நோய் அதிகரித்தபோது, எனது வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அதற்கு அவர்களும் அனுமதி வழங்கிவிட்டனர். அப்போது தமது கால்கள் தரையில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட்டார்கள்.

நூல் : புகாரி (198)

இதுபோன்ற நபிமொழிகள் இருந்தாலும் எந்த நாளில் எந்த மாதத்தில் ஏற்பட்டது என்பதற்கு ஆதாரப்பூர்வமான அறிவிப்பாளர் வரிசையில் எந்தச் செய்தியும் இடம்பெறவில்லை.

دلائل النبوة ـ للبيهقى موافقا للمطبوع - (7 / 234(

 أخبرنا أبو عبد الله الحافظ قال أخبرنا أحمد بن كامل قال حدثنا الحسن بن علي البزاز قال حدثنا محمد بن عبد الأعلى قال حدثنا المعتمر بن سليمان عن أبيه أن رسول الله مرض لإثنتين وعشرين ليلة من صفر وبدأه وجعه عند وليدة له يقال لها ريحانة كانت من سبي اليهود وكان أول يوم مرض فيه يوم السبت وكانت وفاته اليوم العاشر يوم الاثنين لليلتين خلتا من شهر ربيع الأول لتمام عشر سنين من مقدمه المدينة

நபி (ஸல்) அவர்கள் சஃபர் மாதம் இருபதாம் நாள் திங்கள் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : சுலைமான் பின் தர்கான் அத்தைமீ,

நூல் : தலாயிந் நுபவா - பைஹகீ, பாகம் : 7, பக்கம் : 234

இச்செய்தியை அறிவிக்கும் சுலைமான் பின் தர்கான் அத்தைமீ என்பவர் நபித்தோழர் அல்ல. நபிகளாருக்கு நடந்த நிகழ்வுகளை அவர்களைப் பார்த்த நபித்தோழர்கள் மட்டுமே அறிவிக்க முடியும். எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும்.

الطبقات الكبرى كاملا 230 - (2 / 272(

2241- أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ عُمَرَ ، حَدَّثَنِي أَبُو مَعْشَرٍ ، عَنْ مُحَمَّدِ بْنِ قَيْسٍ : أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَكَى يَوْمَ الأَرْبِعَاءِ لِإِحْدَى عَشْرَةَ لَيْلَةً بَقِيَتْ مِنْ صَفَرٍ سَنَةَ إِحْدَى عَشْرَةَ ، فَاشْتَكَى ثَلاَثَ عَشْرَةَ لَيْلَةً , وَتُوُفِّيَ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الِاثْنَيْنِ لِلَيْلَتَيْنِ مَضَتَا مِنْ شَهْرِ رَبِيعٍ الأَوَّلِ سَنَةَ إِحْدَى عَشْرَةَ.

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ரி பத்தாம் வருடம் சஃபர் மாதம் 11 ஆம் நாள் புதன் கிழமை நோயுற்றார்கள்.

அறிவிப்பவர் : முஹம்மத் பின் கைஸ்,

நூல் : தபகாத்துல் குப்ரா, பாகம் : 2, பக்கம் : 272

இந்தச் செய்தியை அறிவிக்கும் முஹம்மத் பின் கைஸ் என்பவர் நபித்தோழர் அல்ல. எனவே இந்தச் செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்பதில் ஐயமில்லை. மேலும் இரண்டாவது அறிவிப்பாளர் அபூமிஃஷர் என்பவர் பலவீனமானவராவார். இதைப் போன்று முஹம்மத் பின் உமர் என்ற அல்வாகிதி என்பவர் பொய் சொல்பவர் என்று கடுமையாக விமர்ச்சிக்கப்பட்டவர்.

எனவே இந்தச் செய்தி மிகவும் பலவீனமானது. நபிகளார் இறுதிக்காலத்தில் கடுமையான நோயில் பாதிக்கப்பட்ட்டது உண்மை. ஆனால் அது சஃபர் மாதம் என்பதற்கும் புதன் கிழமை என்பதற்கும் ஆதாரம் இல்லை. மேலும் குறிப்பிட்ட நாளில் நோய்யுற்றதால் அந்த நாள் பீடை என்று சொல்வதற்கும் எந்த ஆதாரமும் இல்லை.

December 2, 2013, 9:11 AM

நவம்பர் தீன்குலப் பெண்மணி

முஹர்ரம் மாதமும் மூடநம்பிக்கையும்

ஹிஜ்ரி ஆண்டில் முதல் மாதமான முஹர்ரம் மாதத்தை நபிமொழிகள் சிறப்பித்துக்­ கூறுகின்றன. ஆனால் முஸ்லிம்களில் பலர் இம்மாதத்தைப் பீடை மாதமாக எண்ணுகின்றனர்,

நபிகளாரின் பேரர் ஹுஸைன் (ரலி) அவர்கள் இம்மாதத்தில் கொல்லப்பட்டார்கள் என்பதால் இம்மாதத்தில் எந்த நல்ல காரியங்களும் செய்யக்கூடாது என்று எண்ணுகின்றனர்,

திருமணம் செய்யக்கூடாது, உடலுறவு கொள்ளக்கூடாது, அசைவ உணவு உட்கொள்ளக் கூடாது என்று நம்பி அல்லாஹ் அனுமதித்த பல செயல்களைத் தடைசெய்து கொள்கின்றனார்.

இன்னும் சிலர் தங்கள் சோகத்தை ­ வெளிப்படுத்தும் வகையில் ஆயுதங்களால் தங்களைக் காயப்படுத்திக் கொள்கின்றனர்.

துன்பம் வரும்போது பொறுமையை மேற்கொள்வதும் இறைவன் ஏற்படுத்திய விதியை ஏற்றுக் கொள்வதும் இறை நம்பிக்கையாளனின் கடமையாகும்.

துயரத்தின்போது அதிகபட்சமாக மூன்று நாட்கள் துக்கமாக இருக்க நபிகளார் அனுமதித்துள்ளார்கள். அதற்கு மேல் துக்கமாக இருக்க எவருக்கும் அனுமதியில்லை என்று நபிகளார் எச்சரித்தும் உள்ளார்கள்.

இந்த எச்சரிக்கையை மீறி ஆயிரத்து நானூறு வருடங்களுக்கு முன் கொல்லப்பட்ட நபித்தோழருக்காக ஒவ்வொரு வருடமும் துக்கநாள் கொண்டாவது இஸ்லாமிய மரபுக்கு முற்றிலும் முரணானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் எத்தனையோ நபித்தோழார்கள், தோழியர்கள் இறந்துள்ளனார், கொல்லப்பட்டுள்ளனார். இவார்களுக்காக நபிகளார் ஒவ்வொரு வருடமும் துக்கநாள் கொண்டாடியது இல்லை. ஏன் அல்லாஹ்வின் தூதர் இறந்ததற்காகக் கூட நாம் துக்கநாள் கொண்டாடாத போது ஹுஸைன் (ரலி) அவார்கள் கொல்லப்பட்டதற்காக வருடா வருடம் துக்கநாள் கொண்டாடுவது என்ன  நியாயம் என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.

மூஸா (அலை) அவார்களைக் கொடுங்கோலன்  பிர்அவ்னிடமிருந்து முஹர்ரம் மாதத்தில் அல்லாஹ் காப்பாற்றினான். இதற்காக முஹர்ரம் ஒன்பது, பத்தாம் நாட்களில் நபிகளார் நோன்பு நோற்கக் கட்டளையிட்டனர். அந்த நோன்புகளைக் கடைப்பிடித்து உண்மையான நபிவழியைப் பின்பற்றுவோம்.

 

தெரிந்த செய்திகள். தெரியாத உண்மைகள்   

இரண்டை விட்டுச் செல்கிறேன்

நபி (ஸல்) அவர்களைப் பற்றிய விசயங்களை நாம் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் வாயிலாக அறிந்துகொள்கிறோம். ஆனால் சில ஹதீஸ்கள் நபி (ஸல்) அவர்களின் பெயரால் மக்களிடம் பரவியுள்ளன. அவற்றை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் நம்புவதற்கு ஏற்ற வகையில் அவற்றின் அறிவிப்பாளர் தொடர் சரியானதாக இல்லை. ஆனால் மக்கள் அவற்றைச் சரியான செய்தி என நம்பிக்கொண்டு இருக்கின்றனர். 

தமிழகத்தில் தவ்ஹீத் பிரச்சாரத்தை தொடங்கிய ஆரம்பக் கட்டத்தில் நமது ஆலிம்கள் சொன்ன ஹதீஸ்களிலும் சில பலவீனமான ஹதீஸ்கள் சொல்லப்பட்டன.

ஆனால் கம்ப்யூட்டர் யுகத்தில் நமக்கு கிடைத்துள்ள நவீன வசதிகள் காரணமாக அந்த ஹதீஸ்களை ஆராய்வது இன்று எளிதாகியுள்ளது. கடந்த காலங்களில் நாம் சொன்ன ஹதீஸ்களில் பலவீனமான செய்திகள் சிலவும் உள்ளன என்பது தெரியவருவதால் அதை மக்களுக்கு தெளிவுபடுத்தும் கடமை நமக்கு உள்ளது.

தவ்ஹீத் ஜமாஅத்தைப் பொருத்தவரை தனது கருத்து தவறு என்று தெரிய வரும்போதும் மற்றவர்கள் சுட்டிக்காட்டும்போதும் அதை பகிரங்கமாக அறிவிப்பதை கொள்கையாகக் கொண்ட காரணத்தால் நம்மால் மக்கள் மத்தியில் எடுத்து வைக்கப்பட்ட பலவீனமான ஹதீஸ்கள் குறித்து இத்தொடரில் நாம் தெளிவுபடுத்துகிறோம்.

  இரண்டை விட்டுச் செல்கின்றேன். அவ்விரண்டையும் நீங்கள் பற்றிப்பிடிக்கும் காலமெல்லாம் வழிதவறவே மாட்டீர்கள் என்ற கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்திகளும் உள்ளன. பலவீனமான செய்தி எது என்பதை அறிந்து அதைத்­ தவிர்த்துவிட்டு சரியான செய்திகளையே நாம் மக்களுக்குச் சொல்ல வேண்டு­ம்.

அதுபோல் அமைந்த பலவீனமான செய்திகளில் சிலவற்றை இப்போது பார்ப்போம் 

அறிவிப்பு : 1

மாலிக் அவர்கள் தொகுத்த ஹதீஸ் நூலான முவத்தா என்ற நூலில் பின்வரும் செய்தி பதிவு செய்யப்பட்டுள்ளது.

1395و حَدَّثَنِي عَنْ مَالِك أَنَّهُ بَلَغَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ تَرَكْتُ فِيكُمْ أَمْرَيْنِ لَنْ تَضِلُّوا مَا تَمَسَّكْتُمْ بِهِمَا كِتَابَ اللَّهِ وَسُنَّةَ نَبِيِّهِ رواه مالك في الموطأ

நான் உங்களிடம் இரண்டை விட்டுச் சொல்கிறேன். அதை பற்றிப் பிடித்திருக்கும் காலமெல்லாம் நீங்கள் வழிதவற மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம் (திருக்குர்ஆன்).2. அவனுடைய நபியின் வழிமுறைகள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : முஅத்தா (1395)

இந்தச் செய்தியை அறிவிக்கும் மாலிக் அவர்கள் நபிகளார் கூறியதாக நேரடியாக அறிவிக்கிறார்கள். இவர் நபித்தோழர் அல்லர் . மாறாக தபஉத் தாபியீன்களில் உள்ளவராவார். அதாவது நபிகளாருக்குப் பின் இரண்டு தலைமுறைக்குப் பிறகு வந்தவர்.மாலிக் அவர்களுக்கும் நபிகளாருக்கும் இடையில் குறைந்த பட்சம் இரண்டு அறிவிப்பாளர்கள் இருக்க வேண்டும். அந்த இருவர் யார் என்ற விபரம் இல்லை என்பதால் இந்தச் செய்தி முஃளல் என்ற வகையைச் சார்ந்த தொடர்பு அறுந்த செய்தியாகும். இதன் காரணத்தால் இந்தத் தொடர் பலவீனமானதாக உள்ளது.

அறிவிப்பு : 2

இதே செய்தி இப்னு அப்தில் பர் அவர்களின் ஜாமிவு பயானில் இல்மி ஃபழ்லிஹி என்ற நூலில் முழுமையான அறிவிப்பாளர் வரிசையுடன் அறிவிக்கப்பட்டுள்ளது. அவ்ஃப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவிப்பதாக இந்தத் தொடர் கூறுகின்றது.

جامع بيان العلم وفضله - مؤسسة الريان - (2 / 55(724- حدثنا سعيد بن عثمان، قال: حدثنا أحمد بن دحيم، قال: حدثنا محمد بن إبراهيم الدؤلي، قال: حدثنا علي بن زيد الفرائضي، قال: حدثنا الحنيني، عن كثير بن عبد الله بن عمرو بن عوف، عن أبيه، عن جده، قال: قال رسول الله, صلى الله عليه وسلم: "تركت فيكم أمرين لن تضلوا ما تمسكتم بهما: كتاب الله وسنة نبيه, صلى الله عليه وسلم".

அறிவிப்பவர் : அவ்ப் பின் மாலிக் (ரலி) நூல் : ஜாமிஉ பயானில் இல்மி வபள்லிஹி (பாகம் 2 : பக்கம் : 55)

இதில் இடம்பெறும் இரண்டாவது மூன்றாவது மற்றும் நான்காவது அறிவிப்பாளர்கள் பலவீனமானவர்களாவர். இரண்டாவது அறிவிப்பாளர் அம்ர் பின் அவ்ஃப் என்பவரை இப்னு ஹிப்பான் அவர்களைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் பட்டியலில் சேர்க்கவில்லை. இப்னு ஹிப்பான் எந்தக் குறையும் சொல்லப்படாத யாரெனத் தெரியாதவரை நம்பக்கமானவர் பட்டியலில் இணைக்கும் பழக்கம் உள்ளவர் என்பதால் இதை கவனத்தில் கொள்ளத் தேவையில்லை. மூன்றாவது அறிவிப்பாளர் கஸீர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் துறை சார்ந்த அறிஞர்கள் கூறியுள்ளனர். சிலர் இவரை பொய்யர் என்றும் கூறியுள்ளார்கள்.

تهذيب التهذيب - (8 / 377( - ز د ت ق (البخاري في جزء القراءة وأبي داود والترمذي وابن ماجة) كثير بن عبدالله بن عمرو بن عوف بن زيد بن ملحة اليشكري المزني المدني... قال أبو طالب عن أحمد منكر الحديث ليس بشئ ...وقال الدارمي عن ابن معين أيضا ليس بشئ. وقال الآجري سئل أبو داود عنه فقال كان أحد الكذابين سمعت محمد بن الوزير المصري يقول سمعت الشافعي وذكر كثير ابن عبدالله بن عمرو بن عوف فقال ذاك أحد الكذابين أو أحد أركان الكذب. وقال ابن أبي حاتم سألت أبا زرعة عنه فقال واهي الحديث ليس بقوي ...وقال النسائي والدارقطني متروك الحديث... وقال ابن حبان روى عن أبيه عن جده نسخة موضوعة لا يحل ذكرها في الكتب ولا الرواية إلا على جهة التعجب.

கஸீர் பின் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அவ்ஃப் என்பார் ஹதீஸ் துறையில் மறுக்கப்பட்டவர், மதிப்பற்றவர் என்று அஹ்மத் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன் அவர்களும் கூறியுள்ளார்கள். இவர் பொய்யர்களில் ஒருவர் என்று ஷாஃபி, அபூதாவூத் ஆகியோர் கூறியுள்ளனர். அபூஸுர்ஆ இவர் பலவீனமானவர் நம்பகமானவர் அல்லர் என்று கூறியுள்ளார். ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர் (பொய்யர்) என்று நஸாயீ, தாரகுத்னீ ஆகியோர் கூறியுள்ளனர். இவர் தன் தந்தை, பாட்டனார் வழியாக வைத்திருந்த ஒரு ஏட்டின் மூலம் இட்டுக்கட்டப்பட்ட செய்திகளை அறிவித்தவர். இவருடைய செய்திகளை (உண்மையல்லாத) ஆச்சரியமான செய்திகளை தவிர (ஹதீஸ்) நூல்களில் குறிப்பிடுவது ஆகுமானதல்ல என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் : 8 பக்கம் : 377)

நான்காவது அறிவிப்பாளராக இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அல்ஹுனைனீ என்பவர் இடம்பெற்றுள்ளார். இவரும் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب - (1 / 194(413 - د ق (أبي داود وابن ماجة) اسحاق بن ابراهيم الحنيني (1) أبو يعقوب المدني نزيل طرسوس ... تهذيب التهذيب - (1 / 195)وقال البخاري في حديثه نظر وقال النسائي ليس بثقة وقال أبو الفتح الازدي اخطأ في الحديث وقال ابن عدي ضعيف ومع ضعفه يكتب حديثه

இஸ்ஹாக் பின் இப்ராஹீம் அல்ஹுனைனீ என்வபரின் செய்தியில் ஆட்சேபனை உள்ளது என்று புகாரி கூறியுள்ளார். இவர் நம்பகமானவர் அல்லர் என்று நஸாயீ கூறியுள்ளார். இவர் ஹதீஸில் தவறிழைத்துள்ளார் என்று அஸ்தீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர். இவரது பலவீனத்துடன் இவருடைய செய்திகளை எழுதிக் கொள்ளலாம் என்று இப்னு அதீ கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் : 1 பக்கம் : 194)

அறிவிப்பு : 3

இதே செய்தி அபூஹுரைரா (ரலி) அவர்களின் வழியாக அல்முஸ்தத்ரக் ஹாகிம் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

المستدرك على الصحيحين للحاكم مع تعليقات الذهبي في التلخيص - (1 / 172( 319  أخبرنا أبو بكر بن إسحاق الفقيه أنبأ محمد بن عيسى بن السكن الواسطي ثنا داود بن عمرو الضبي ثنا صالح بن موسى الطلحي عن عبد العزيز بن رفيع عن أبي صالح عن أبي هريرة رضي الله عنه قال : قال رسول الله صلى الله عليه و سلم : إني قد تركت فيكم شيئين لن تضلوا بعدهما : كتاب الله و سنتي و لن يتفرقا حتى يردا علي الحوض

நான் இரண்டை உங்களிடம் விட்டுச் சொல்கிறேன். இந்த இரண்டிற்கு பிறகு நீங்கள் வழிதவறவே மாட்டீர்கள். 1. அல்லாஹ்வின் வேதம். 2. என்னுடைய வழிமுறை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : ஹாகிம், பாகம் :1, பக்கம்: 172

இதில் இடம்பெறும் நான்காவது அறிவிப்பாளர் ஸாலிஹ் பின் மூஸா என்பவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب - (4 / 354(700 ت ق (الترمذي وابن ماجة) صالح بن موسى بن اسحاق بن طلحة بن عبيدالله الطلحي الكوفي... قال ابن معين ليس بشئ ... وقال الجوزجاني ضعيف الحديث على حسنه ... وقال ابن أبي حاتم عن أبيه ضعيف الحديث منكر الحديث جدا كثير المناكير عن الثقات وقال البخاري منكر الحديث عن سهيل بن أبي صالح وقال النسائي لا يكتب حديثه ضعيف وقال في موضع آخر متروك الحديث وقال ابن عدي عامة ما يرويه لا يتابعه عليه أحد وهو عندي ممن لا يتعمد الكذب ولكن يشبه عليه ويخطئ وأكثر ما يرويه في جده من الفضائل ما لا يتابعه عليه أحد وقال الترمذي تكلم فيه بعض أهل العلم...وقال العقيلي لا يتابع على شئ من حديثه وقال ابن حبان كان يروي عن الثقات ما لا يشبه حديث الاثبات

ஸாலிஹ் பின் மூஸா என்பவர் மதிப்பற்றவர் என்று இப்னு மயீன் கூறியுள்ளார். இவர் பலவீனமானவர் என்று ஜவ்ஸஜானீ கூறியுள்ளார். இவர் பலவீனமானவர், ஹதீஸ் துறையில் முற்றிலும் மறுக்கப்படவேண்டியவர், நம்பகமானவர்களிடமிருந்து அதிகம் மறுக்கப்படவேண்டிய செய்திகளை அறிவிப்பவர் என்று அபூஹாத்திம் கூறியுள்ளார். இவருடைய பெரும்பாலான செய்திகளுக்கு ஒத்த செய்திகள் இருப்பதில்லை. என்றாலும் இவர் பொய் சொல்பவர்களில் உள்ளவர் இல்லை என்பது என் கருத்தாகும். எனினும் இவர் பொய் சொல்பவர் என்பதுபோல் கூறப்படுகின்றது. இவர் தவறிழைப்பார். இவர் தன் பாட்டனார் வழியாக யாரும் அறிவிக்காத சிறப்புக்குரிய செய்திகளை அறிவிப்பார். இவரை சில அறிஞர்கள் விமர்சித்துள்ளார்கள் என்று திர்மிதீ கூறியுள்ளார். இவருடைய எந்தச் செய்திகளுக்கும் ஒப்பான செய்திகள் கிடையாது என்று உகைலீ கூறியுள்ளார். நம்பகமான செய்திகளுக்கு ஒப்பாகாத செய்திகளை நம்பகமானவர்களிடமிருந்து அறிவிப்பவர் என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :4, பக்கம் : 354

அறிவிப்பு : 4

இதே செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் வழியாக ஹாகிமில் பதிவாகியுள்ளது.                      

المستدرك على الصحيحين للحاكم  - كتاب العلم

حدثنا أبو بكر أحمد بن إسحاق الفقيه ، أنبأ العباس بن الفضل الأسفاطي ، ثنا إسماعيل بن أبي أويس ، وأخبرني إسماعيل بن محمد بن الفضل الشعراني ، ثنا جدي ، ثنا ابن أبي أويس ، حدثني أبي ، عن ثور بن زيد الديلي ، عن عكرمة ، عن ابن عباس ، أن رسول الله صلى الله عليه وسلم خطب الناس في حجة الوداع ، فقال : " قد يئس الشيطان بأن يعبد بأرضكم ولكنه رضي أن يطاع فيما سوى ذلك مما تحاقرون من أعمالكم ، فاحذروا يا أيها الناس إني قد تركت فيكم ما إن اعتصمتم به فلن تضلوا أبدا كتاب الله وسنة نبيه صلى الله عليه وسلم

மக்களே உங்களிடம் நான் ஒன்றை விட்டுச் செல்கிறேன். அதை நீங்கள் பற்றிப்பிடித்துக் கொண்டால் ஒருக்காலும் வழிதவறவே மாட்டீர்கள். (அது) அல்லாஹ்வின் வேதமும் அவனுடைய நபியின் வழியுமாகும்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி) நூல் : ஹாகிம் (287)

ஹாகிம், இந்தச் செய்தியைப் பதிவு செய்துவிட்டு இது சரியானது என்று கூறுகிறார். ஹதீஸ்களை ஆதாரப்பூர்வமானது என்று முடிவு செய்வதில் ஹாகிம் அலட்சியப் போக்குடையவர் என்பதால் இவருடைய கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது. இஸ்மாயீல் பின் அபீ உவைஸ் என்பவர் இந்தச் செய்தியை தனது தந்தை அபூ உவைஸ் என்பவரிடமிருந்து அறிவிக்கின்றார். அபூ உவைஸ் பலவீனமானவர் என்று பல அறிஞர்கள் கூறியுள்ளனர்.

تهذيب الكمال في أسماء الرجال (15/ 168(

وَقَال أَبُو بَكْر بْن أَبي خيثمة  ، عَن يحيى بْن مَعِين: صالح، ولكن حديثه لَيْسَ بذاك الجائز. وَقَال معاوية بْن صالح ، عَن يَحْيَى بْنِ مَعِين: لَيْسَ بقوي. وَقَال فِي موضع آخر  : أَبُو أويس ضعيف مثل فليح. قَال علي بن المديني  : كَانَ عند أصحابنا ضعيفا  . وَقَال عَمْرو بْن علي  : فيه ضعيف، وهو عندهم من أهل الصدق. وَقَال يعقوب بْن شَيْبَة  : صدوق، صالح الحديث، وإلى الضعف ما هو. وقَال البُخارِيُّ  : ما روى من أصل كتابه فهو أصح. وَقَال النَّسَائي  : مدني، لَيْسَ بالقوي  . وَقَال أَبُو أَحْمَد بْن عَدِيّ  : يكتب حديثه. وَقَال أبو زُرْعَة  : صالح، صدوق، كأنه لين . وَقَال أبو حاتم  : يكتب حديثه، ولا يحتج بِهِ، ولَيْسَ بالقوي.

யஹ்யா பின் மயீன் அவர்கள் இவர் வலிமையானவர் அல்லர்; பலவீனமானவர் என்று கூறியுள்ளார். நம்முடைய தோழர்களிடத்தில் இவர் பலவீனமானவர் என்று அலீ பின் அல்மதீனீ கூறியுள்ளார். அம்ர் பின் அலீ யஃகூப் பின் அபீ ஷைபா, அபூ சுர்ஆ, இப்னு அதீ, நஸாயீ ஆகியோர் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் தனது புத்தகத்திலிருந்து அறிவிப்பவை மட்டுமே மிகச் சரியானது என்று புகாரி கூறியுள்ளார். அபூஹாதிம், இவரை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது. இவர் பலமானவர் அல்லர் என்று கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுல் கமால் (பாகம் : 15 பக்கம் : 168)

அறிவிப்பு : 5

மேலும் இந்தச் செய்தி வேறு ஒரு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தச் செய்தியை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடமிருந்து யஸீத் ருக்காஷி என்பவர் அறிவிக்கின்றார். யஸீதிடமிருந்து ஹிஷாம் பின் சுலைமான் என்பவர் அறிவிக்கின்றார். இந்த இருவரும் பலவீனமானவர்கள் ஆவார்கள். யஸீத் ருக்காஷி பலவீனமானவர் என ஏராளமான அறிஞர்கள் கூறியுள்ளனர்.

تاريخ أصبهان = أخبار أصبهان (1 / 138(حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ، ثنا أَحْمَدُ بْنُ الْخَطَّابِ، ثنا طَالُوتُ بْنُ عَبَّادٍ، ثنا هِشَامُ بْنُ سُلَيْمَانَ، عَنْ يَزِيدَ الرَّقَاشِيِّ، عَنْ أَنَسِ بْنِ مَالِكٍ، أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ: قَدْ تَرَكْتُ فِيكُمْ بَعْدِي مَا إِنْ أَخَذْتُمْ لَمْ تَضِلُّوا، كِتَابَ اللَّهِ، وَسُنَّةَ نَبِيِّكُمْ صَلَّى اللهُ عَلَيْهِ وَسَلَّمَتهذيب التهذيب (11 / 309(

 قال بن سعد كان ضعيفا قدريا وقال عمرو بن علي كان يحيى بن سعيد لا يحدث عنه وكان عبد الرحمن يحدث عنه وقال كان رجلا صالحا وقد روى عنه الناس وليس بالقوي في الحديث وقال البخاري: تكلم فيه شعبة وقال إسحاق بن راهويه عن النضر بن شميل قال شعبة لأن أقطع الطريق أحب إلى من أن أروى عن يزيد وقال زكريا بن يحيى الحلواني سمعت سلمة بن شبيب يقول سمعته وقال يزيد بن هارون سمعت شعبة يقول لأن ازني أحب إلى من أن أحدث عن يزيد الرقاشي قال يزيد ما كان أهون عليه الزنا قال سلمة بن شبيب فذكرت ذلك لأحمد بن حنبل فقال كان بلغنا أنه قال ذلك في أبان فقال أبو داود السختياني وكان في مجلس سلمة قاله فيهما جميعا وقال عبد الله بن إدريس سمعت شعبة يقول لأن ازني أحب إلي من أن أروي عن يزيد وأبان وقال أبو داود عن أحمد لا يكتب حديث يزيد قلت: فلم ترك حديثه لهوى كان فيه قال لا ولكن كان منكر الحديث وكان شعبة يحمل عليه وكان قاصا وقال عبد الله بن أحمد عن أبيه هو فوق أبان وكان يضعف وقال إسحاق بن منصور عن بن معين هو خير من أبان وقال بن أبي خيثمة عن بن معين رجل صالح وليس حديثه بشيء وقال معاوية بن صالح والدوري عن بن معين ضعيف وكذا قال الدارقطني: والبرقاني وقال الآجري عن أبي داود رجل صالح سمعت يحيى يقول رجل صدق وقال يعقوب بن سفيان فيه ضعف وقال أبو حاتم: كان واعظا بكاء كثير الرواية عن أنس بما فيه نظر وفي حديثه ضعف وقال النسائي: والحاكم أبو أحمد متروك الحديث وقال النسائي: أيضا ليس بثقة وقال بن عدي له أحاديث صالحة عن أنس وغيره وأرجو أنه لا بأس به لرواية

யஸீத் ருகாஷி பலவீனமானவர் என்று இப்னு சஅத் கூறியுள்ளார். யஹ்யா பின் சயீத் இவரிடமிருந்து ஹதீஸை அறிவிக்க மாட்டார். ஷுஅபா இவரை விமர்சனம் செய்துள்ளார். இவரிடமிருந்து அறிவிப்பது விபச்சாரம் செய்வதை விட எனக்கு வெறுப்பானது என்று கூறியுள்ளார். ஹதீஸ்களில் தவறிழைப்பவர் என அஹ்மது பின் ஹம்பல் கூறியுள்ளார். யஹ்யா பின் மயீன், யஃகூப் பின் அபீ ஷைபா, அபூ ஹாதிம், தாரகுத்னீ, புர்கானி ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். ஹாகிம், நஸாயீ ஆகிய இருவரும் இவர் ஹதீஸ் துறையில் விடப்பட்டவர் என்று கூறியுள்ளனர். இவரிடமிருந்து அறிவிப்பது ஆகுமானதில்லை என்று இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் : 11 பக்கம் : 309)

இப்னு ஹஜர், தஹபீ ஆகியோரும் இவரை பலவீனமானவர் என்றே குறிப்பிட்டுள்ளார்கள்.

இந்த செய்தியை யஸீத் பின் ருக்காஷியிடமிருந்து அறிவிக்கும் அறிவிப்பாளர் ஹிஷாம் பின் சுலைமான் என்பவரையும் அறிஞர்கள் பலவீனமானவர் எனக் கூறியுள்ளனர்.

الجرح والتعديل لابن أبي حاتم (9 / 62(هو هكذا عندي، وهشام أحب إلى من محمد بن سحاق.

242 هشام بن سلمان المجاشعى روى عن يزيد الرقاشى وبركة المجاشعى روى عنه أبو الربيع الزهراني والقاسم بن سلام بن مسكين وعبد الواحد بن غياث وهشام بن عبيد الله الرازي والليث بن خالد البلخى سمعت أبي يقول ذلك. نا عبد الرحمن أنا أبو بكر بن أبي خيثمة فيما كتب إلى قال حدثنا موسى بن اسماعيل نا هشام بن - سلمان المجاشعى وكان ضعيفا.

الضعفاء والمتروكون لابن الجوزي (3 / 175(3598 هِشَام بن سُلَيْمَان أَبُو يحيى الْمُجَاشِعِي يروي عَن يزِيد الرقاشِي قَالَ مُوسَى بن إِسْمَاعِيل ضَعِيف وَقَالَ ابْن حبَان ينْفَرد عَن الثِّقَات بِالْمَنَاكِيرِ لَا يجوز الِاحْتِجَاج بِهِ

இவர் பலவீனமானவர் என மூசா பின் இஸ்மாயீல் கூறியுள்ளார். இவர் நம்பகமானவர்களிடமிருந்து தவறான செய்தியை தனித்து அறிவிப்பவர் எனவும் இவரை ஆதாரமாகக் கொள்ளக்கூடாது எனவும் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார்.

நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் (பாகம் : 9 பக்கம் : 62) ளுஅபாஉ வல் மத்ரூகீன் (பாகம் : 3 பக்கம் : 175)

மேலே நாம் குறிப்பிட்டுள்ள இந்தத் தொடர்கள் வழியாக மட்டுமே இந்தச் செய்தி அறிவிக்கப்பட்டுள்ளது. இந்தத் தொடர்கள் அனைத்தும் பலவீனமாக இருப்பதால் இந்தச் செய்தி பலவீனமான செய்தியாகும்.

எனவே நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று இந்தச் செய்தியை நாம் கூறக்கூடாது. இதே கருத்தைத் தரக்கூடிய குர்ஆன் வசனங்களும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களும் உள்ளன. அவற்றை எடுத்துச் சொல்லலாம். உதாரணமாக ஒரு செய்தியை இங்கே சுட்டிக்காட்டுகிறோம்.

ஆதாரப்பூர்வமான செய்தி

மேலே நாம் சுட்டிக்காட்டிய செய்தி பலவீனமானதாக இருந்தாலும் அதன் கருத்து உண்மையானது என்பதில் நமக்கு எள் முனையளவு கூட மாற்றுக் கருத்தில்லை.

குர்ஆன் ஹதீஸ் மட்டுமே மார்க்கமாகும் என வலியுறுத்தும் சில திருக்குர்ஆன் நபிமொழிகளை இங்கே தருகிறோம்.

திருக்குர்ஆன் வசனங்கள்

وَأَنَّ هَذَا صِرَاطِي مُسْتَقِيمًا فَاتَّبِعُوهُ وَلَا تَتَّبِعُوا السُّبُلَ فَتَفَرَّقَ بِكُمْ عَنْ سَبِيلِهِ ذَلِكُمْ وَصَّاكُمْ بِهِ لَعَلَّكُمْ تَتَّقُونَ

இதுவே எனது நேரான வழி. எனவே இதனையே பின்பற்றுங்கள்! பல வழிகளைப் பின்பற்றாதீர்கள்! அவை, அவனது (ஒரு) வழியை விட்டும் உங்களைப் பிரித்துவிடும். நீங்கள் (இறைவனை) அஞ்சுவதற்காக இதையே அவன் உங்களுக்கு வலியுறுத்துகிறான்.

(அல்குர்ஆன் 6:153)

وَأَطِيعُوا اللَّهَ وَالرَّسُولَ لَعَلَّكُمْ تُرْحَمُونَ

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் (முஹம்மதுக்கும்) கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.                            (அல்குர்ஆன் 3:132)

يَسْأَلُونَكَ عَنْ الْأَنْفَالِ قُلْ الْأَنْفَالُ لِلَّهِ وَالرَّسُولِ فَاتَّقُوا اللَّهَ وَأَصْلِحُوا ذَاتَ بَيْنِكُمْ وَأَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ

நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்!                                     (அல்குர்ஆன் 8:1)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَرَسُولَهُ وَلَا تَوَلَّوْا عَنْهُ وَأَنْتُمْ تَسْمَعُونَ

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுங்கள்! நீங்கள் செவிமடுத்துக் கொண்டே அவரைப் புறக்கணிக்காதீர்கள்!                                                               (அல்குர்ஆன் 8:20)

يَاأَيُّهَا الَّذِينَ آمَنُوا أَطِيعُوا اللَّهَ وَأَطِيعُوا الرَّسُولَ وَأُوْلِي الْأَمْرِ مِنْكُمْ فَإِنْ تَنَازَعْتُمْ فِي شَيْءٍ فَرُدُّوهُ إِلَى اللَّهِ وَالرَّسُولِ إِنْ كُنتُمْ تُؤْمِنُونَ بِاللَّهِ وَالْيَوْمِ الْآخِرِ ذَلِكَ خَيْرٌ وَأَحْسَنُ تَأْوِيلًا

நம்பிக்கை கொண்டோரே! நீங்கள் அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி இருந்தால் அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள்! இத்தூதருக்கும், (முஹம்மதுக்கும்) உங்களில் அதிகாரம் உடையோருக்கும் கட்டுப்படுங்கள்! ஏதேனும் ஒரு விஷயத்தில் நீங்கள் முரண்பட்டால் அதை அல்லாஹ்விடமும், இத்தூதரிடமும் கொண்டு செல்லுங்கள்! இதுவே சிறந்ததும், மிக அழகிய விளக்கமுமாகும்.

(அல்குர்ஆன் 4:59)

يُصْلِحْ لَكُمْ أَعْمَالَكُمْ وَيَغْفِرْ لَكُمْ ذُنُوبَكُمْ وَمَنْ يُطِعْ اللَّهَ وَرَسُولَهُ فَقَدْ فَازَ فَوْزًا عَظِيمًا

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுபவர் மகத்தான வெற்றி பெற்று விட்டார்.                                       (அல்குர்ஆன் 33:71)

இது போன்ற கருத்தில் இன்னும் எராளமான திருக்குர்ஆன் வசனங்கள் உள்ளன.

 

நபிமொழிகள்

ٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ كُلُّ أُمَّتِي يَدْخُلُونَ الْجَنَّةَ إِلَّا مَنْ أَبَى قَالُوا يَا رَسُولَ اللَّهِ وَمَنْ يَأْبَى قَالَ مَنْ أَطَاعَنِي دَخَلَ الْجَنَّةَ وَمَنْ عَصَانِي فَقَدْ أَبَى

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் சமுதாயத்தார் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள்; ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று கூறினார்கள். மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சொர்க்கம் புகுவார்; எனக்கு மாறுசெய்தவர் (சத்தியத்தை) ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (7280)

عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ ثُمَّ يَقُولُ أَنَا أَوْلَى بِكُلِّ مُؤْمِنٍ مِنْ نَفْسِهِ مَنْ تَرَكَ مَالًا فَلِأَهْلِهِ وَمَنْ تَرَكَ دَيْنًا أَوْ ضَيَاعًا فَإِلَيَّ وَعَلَيَّ و حَدَّثَنَا عَبْدُ بْنُ حُمَيْدٍ حَدَّثَنَا خَالِدُ بْنُ مَخْلَدٍ حَدَّثَنِي سُلَيْمَانُ بْنُ بِلَالٍ حَدَّثَنِي جَعْفَرُ بْنُ مُحَمَّدٍ عَنْ أَبِيهِ قَالَ سَمِعْتُ جَابِرَ بْنَ عَبْدِ اللَّهِ يَقُولُ كَانَتْ خُطْبَةُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَوْمَ الْجُمُعَةِ يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ ثُمَّ يَقُولُ عَلَى إِثْرِ ذَلِكَ وَقَدْ عَلَا صَوْتُهُ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِهِ و حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا وَكِيعٌ عَنْ سُفْيَانَ عَنْ جَعْفَرٍ عَنْ أَبِيهِ عَنْ جَابِرٍ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَخْطُبُ النَّاسَ يَحْمَدُ اللَّهَ وَيُثْنِي عَلَيْهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ يَقُولُ مَنْ يَهْدِهِ اللَّهُ فَلَا مُضِلَّ لَهُ وَمَنْ يُضْلِلْ فَلَا هَادِيَ لَهُ وَخَيْرُ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ ثُمَّ سَاقَ الْحَدِيثَ بِمِثْلِ حَدِيثِ الثَّقَفِيِّ

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்' என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். "அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று கூறுவார்கள்.

நூல் : முஸ்லிம் (1573)

أَنَسَ بْنَ مَالِكٍ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ جَاءَ ثَلَاثَةُ رَهْطٍ إِلَى بُيُوتِ أَزْوَاجِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَسْأَلُونَ عَنْ عِبَادَةِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَلَمَّا أُخْبِرُوا كَأَنَّهُمْ تَقَالُّوهَا فَقَالُوا وَأَيْنَ نَحْنُ مِنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَدْ غُفِرَ لَهُ مَا تَقَدَّمَ مِنْ ذَنْبِهِ وَمَا تَأَخَّرَ قَالَ أَحَدُهُمْ أَمَّا أَنَا فَإِنِّي أُصَلِّي اللَّيْلَ أَبَدًا وَقَالَ آخَرُ أَنَا أَصُومُ الدَّهْرَ وَلَا أُفْطِرُ وَقَالَ آخَرُ أَنَا أَعْتَزِلُ النِّسَاءَ فَلَا أَتَزَوَّجُ أَبَدًا فَجَاءَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَيْهِمْ فَقَالَ أَنْتُمْ الَّذِينَ قُلْتُمْ كَذَا وَكَذَا أَمَا وَاللَّهِ إِنِّي لَأَخْشَاكُمْ لِلَّهِ وَأَتْقَاكُمْ لَهُ لَكِنِّي أَصُومُ وَأُفْطِرُ وَأُصَلِّي وَأَرْقُدُ وَأَتَزَوَّجُ النِّسَاءَ فَمَنْ رَغِبَ عَنْ سُنَّتِي فَلَيْسَ مِنِّي

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்களின் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), "முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்லிக்கொண்டனர். அவர்களில் ஒருவர், "(இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுதுகொண்டே இருக்கப்போகிறேன்'' என்றார். இன்னொருவர், "நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன்'' என்று கூறினார். மூன்றாம் நபர் "நான் பெண்களைவிட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கஜடம்) வந்து, "இப்படி இப்படியெல்லாம் பேசிக்கொண்டது நீங்கள்தாமே! அறிந்துகொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களைவிட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர்'' என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி),நூல் : புகாரி (5063)

قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا دَخَلَ عَلَيَّ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَذَكَرْتُ لَهُ فَقَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ اشْتَرِي وَأَعْتِقِي فَإِنَّمَا الْوَلَاءُ لِمَنْ أَعْتَقَ ثُمَّ قَامَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مِنْ الْعَشِيِّ فَأَثْنَى عَلَى اللَّهِ بِمَا هُوَ أَهْلُهُ ثُمَّ قَالَ مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ مَنْ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ

 அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே!  அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்!” எனக் கூறினார்கள்.

அறிவிப்பவர் :ஆயிஷா (ரலி),  நூல்: புகாரி (2155)

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்' என்று கூறினார்கள்.

அறிவிப்பவார் : ஆயிஷா (ரலி), நூல் : முஸ்லிம் (3541)

இது போன்ற கருத்துள்ள நபிமொழிகள் ஏராளம் நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளன.

பெண்கள் முகத்திரை அணியலாமா?

முதல் சான்று : 

ஜில்பாப்என்பதின் நோக்கம் அறியப்படுதலே

يَا أَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا  )الأحزاب: 59(

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள்  அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33 : 59)

மேற்கண்ட வசனத்தில்முக்காடுகள்என்று நாம் மொழிபெயர்த்துள்ள அரபி மூலத்தில்ஜலாபீப்என்ற சொல் இடம் பெற்றுள்ளது. இதுஜில்பாப்என்ற சொல்லின் பன்மைச் சொல்லாகும்.

அதாவது அல்லாஹூத் தஆலா நபியுடைய மனைவியர், நபியுடைய பெண்மக்கள், மற்றும் அனைத்து இறைநம்பிக்கை கொண்ட இஸ்லாமியப் பெண்களுக்கும் தங்கள் மீதுஜில்பாப்என்ற துணியைத் தொங்கவிட்டுக் கொள்ளுமாறு கட்டளையிடுகின்றான். மேற்கண்ட வசனத்தில் இறைநம்பிக்கை கொண்ட அனைத்துப் பெண்களும் ஜில்பாபைத் தொங்கவிட்டுக் கொள்ள வேண்டும் என அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அவ்வாறு அவர்கள் ஜில்பாபை தொங்கவிட்டுக் கொள்ளும்போது அவர்கள் அறியப்படுவார்கள் என்றும் அல்லாஹ் அதே வசனத்தில் குறிப்பிட்டுள்ளான்.

يَاأَيُّهَا النَّبِيُّ قُلْ لِأَزْوَاجِكَ وَبَنَاتِكَ وَنِسَاءِ الْمُؤْمِنِينَ يُدْنِينَ عَلَيْهِنَّ مِنْ جَلَابِيبِهِنَّ ذَلِكَ أَدْنَى أَنْ يُعْرَفْنَ فَلَا يُؤْذَيْنَ وَكَانَ اللَّهُ غَفُورًا رَحِيمًا

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும்ஜில்பாப்புகளை (முக்காடுகளை)த் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள்  அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.''

அல்குர்ஆன் 33 : 59

ஜில்பாபுகளைத் தொங்க விடுவதின் நோக்கமே பெண்கள் அறியப்பட வேண்டும் என்பதற்காகத்தான்.

அறியப்படுதல்என்பதின் பொருள் நாம் ஏற்கனவே அறிந்த ஒரு பெண் ஜில்பாப் அணிந்து வரும்போது நாம் அறிந்த பெண்தான் வருகிறார் என்பதையும், நமது பார்வையில் படும் புதிய பெண்ணாக இருந்தால் இரண்டாவது தடவை பார்க்கும்போது நாம் முதலில் இவரைத்தான் பார்த்தோம் என்ற வகையிலும் அறியப்படுதல் ஆகும்.

ஜில்பாப்என்பது முகத்தினையும் மறைக்கும் வகையில் உள்ள ஆடையாக இருந்தால் அல்லாஹ் இவ்வசனத்தில்அறியப்படவேண்டும்என்று கட்டளையிடுவது பொருளற்றதாகிவிடும்.

சிலர் இவ்வசனத்திற்கு மொழிபெயர்ப்பு செய்யும் போதுஒழுக்கமான பெண்கள் என்று அறியப்படுவதற்காகவும்என்றும்கண்ணியமான பெண்கள் என்று அறியப்படுவதற்காகவும்என்றும் அடைப்புக் குறிகள் இட்டு மொழி பெயர்த்துள்ளது கூடுதல் விளக்கத்துக்காக செய்ததாகும். முகம் அறியப்படுவதன் மூலமே ஒழுக்கமானவர்களும் அறியப்பட முடியும்.

ஒரு பெண் ஒழுக்கமான பெண் என்பதையும், கண்ணியமான பெண் என்பதையும் அவள் முகம் அறியப்படுவதின் மூலம்தான் கண்டறிய முடியும். முகம் அறியாமல் யாரையும் ஒழுக்கமானவர் என்றோ கண்ணியமானவர் என்றோ நாம் அறிய முடியாது.

ஏனெனில் இன்றைக்குப் பல ஒழுக்கம் கெட்ட பெண்கள் கூட ,விபச்சாரம் செய்து கையும், களவுமாக மாட்டிக் கொள்ளும் போது  பெண்கள் தாம் யார் என்பது அறியப்பட்டுவிடக் கூடாது என்பதற்காக முகத்தை மறைத்து நீதிமன்றங்களுக்கு வரக்கூடிய காட்சிகளை நாம் பார்க்கின்றோம்.

ஒரு பெண் முகத்திரை அணிந்து கொண்டு அந்நிய ஆண்களுடன் ஊர் சுற்றினாலும் அவர்கள் யார் என்பதைக் கண்டறிய முடியாது. ஒரு ஆண் பெண்களைப் போல் ஆடையணிந்து முகத்தினை மறைத்துக் கொண்டு முகத்தை மறைத்துள்ள பெண்கள் கூட்டத்திற்குள் நுழைந்தால் அவரை ஆண் என்று கண்டறிவது முடியாது.

மேலும் பிரபல கொள்ளைக்காரர்கள் கூட கொள்ளையடிக்கும் போது முகத்திரை அணிந்து கொண்டுதான் கொள்ளையடிக்கின்றனர்.  அவர்கள் முகத்திரை அணிவதன் நோக்கம் அவர்கள் யார் என்பது அறியப்பட்டுவிடக் கூடாது என்பதுதான். எனவே முகத்தினை மறைக்கும் போது ஒருவர் ஒழுக்கமானவரா, கண்ணியமானவரா என்பதை ஒரு போதும் அறியவே முடியாது.

 அல்லாஹூத் தஆலா மேற்கண்ட வசனத்தில்ஜில்பாபுகள்அணிவதின் நோக்கமே அவர்கள் அறியப்பட வேண்டும் என்பதாகக் குறிப்பிட்டுள்ளான்.

எனவேஜில்பாப்என்பது முகத்தையும் மறைக்கும் ஆடை என்று குறிப்பிடுவது திருமறைக்குர்ஆனின் கருத்துக்கு எதிரானதாகும்.

இரண்டாவது சான்று :

 ஜில்பாப்என்பதின் அகராதிப் பொருள்ஜில்பாப்என்ற வார்த்தைக்கு அரபி மொழி அகராதிகளில் பல்வேறு அர்த்தங்கள் கூறப்பட்டுள்ளன. ஆனால் எந்த ஒரு இடத்திலும் அது முகத்தினை மறைக்கும் ஆடை என்று குறிப்பிடப்படவில்லை.

லிஸானுல் அரப் என்ற அரபி மொழி அகராதி நூலில் இந்தஜில்பாப்என்ற வார்த்தைக்கு கூறப்பட்டுள்ள அர்த்தங்களைக் காண்போம்.

والجِلْبابُ القَمِيصُ ஜில்பாப் என்பது சட்டையாகும்

والجِلْبابُ ثوب أَوسَعُ من الخِمار دون الرِّداءِ تُغَطِّي به المرأَةُ رأْسَها وصَدْرَها

ஜில்பாப் என்பதுகிமார்என்பதை விட விசாலமானதும், மேல்துண்டை விட சிறியதும் ஆகும். அதனைக் கொண்டு ஒரு பெண் தனது தலையையும், நெஞ்சையும் மறைத்துக் கொள்வாள்.

وقيل هو ثوب واسِع دون المِلْحَفةِ تَلْبَسه المرأَةُ

அது போர்வையை விடச் சிறிதான விசாலமான ஆடையாகும். அதனைப் பெண்கள் அணிவார்கள் என்றும்  இதற்கு பொருள் கூறப்படுகிறது. وقيل هو المِلْحفةُ

போர்வைஎன்றும் இதற்கு பொருள் கூறப்படுகிறது.

وقيل هو ما تُغَطِّي به المرأَةُ الثيابَ من فَوقُ كالمِلْحَفةِ

இது போர்வையைப் போன்று ஒரு பெண் ஆடைகளுக்கு மேல் போர்த்திக் கொள்ளும் ஆடையாகும் என்றும் இதற்கு பொருள் கூறப்படுகிறது.

وقيل هو الخِمارُ وفي حديث أُم عطيةَ لِتُلْبِسْها صاحِبَتُها من جِلْبابِها أَي إِزارها

இதன் பொருள்கிமார்என்றும் கூறப்படுகிறது. உம்மு அதிய்யா (ரலி) அவர்களின் ஹதீஸிலே ” (ஒரு பெண்ணிடம் ஜில்பாப் இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனது ஜில்பாபுகளில் ஒன்றை அவளுக்கு அணியக் கொடுக்கட்டும்!” என்று வந்துள்ளது. இங்குஜில்பாப்என்பதின் பொருள்கீழாடைஎன்பதாகும்.

قال ابن السكيت قالت العامرية الجِلْبابُ الخِمارُ

ஜில்பாப்என்பதின் பொருள்கிமார்ஆகும் என்று ஆமிரிய்யா கூறியதாக இப்னுஸ் ஸிக்கீத் கூறுகிறார்.

وقيل جِلْبابُ المرأَةِ مُلاءَتُها التي تَشْتَمِلُ بها

ஒரு பெண்ணின் ஜில்பாப் என்பது தலை முக்காடு ஆகும். அவள் அதன் மூலம் சுற்றிக் கொள்வாள் என்றும் இதற்கு பொருள் கூறப்படுகிறது.

 ابن الأَعرابي الجِلْبابُ الإِزارُ

ஜில்பாப் என்பது கீழாடை ஆகும் என இப்னுல் அஃராபி கூறுகிறார்.

وقيل هو كالمِقْنَعةِ تُغَطِّي به المرأَةُ رأْسَها وظهرها وصَدْرَها

இது ஒரு தலையை மறைக்கும் துணி  போன்றதாகும். அதனைக் கொண்டு ஒரு பெண் தன்னுடைய தலையையும், முதுகுப் பகுதியையும், நெஞ்சுப் பகுதியையும் மறைத்துக் கொள்வாள் என்றும் இதற்கு பொருள் கூறப்படுகிறது.

மேலே நாம் குறிப்பிட்டுள்ள அனைத்தும் லிஸானுல் அரப் என்ற அரபி அகராதி நூலில் ஒன்றாவது பாகம் 272 வது பக்கத்தில் இடம் பெற்றுள்ளது.

அரபி மொழி அகராதி அடிப்படையிலும் ஜில்பாப் என்ற வார்த்தைக்கு முகத்தை மறைக்கும் துணி என்ற பொருள் கிடையாது என்பது தெளிவாகிவிட்டது.

சான்று 3.

நபியவர்களின் காலத்தில் நபித்தோழியரின் ஜில்பாப்

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டேன். அப்போது அவர்கள் உரை நிகழ்த்துவதற்கு முன்பே தொழுகை நடத்தினார்கள் பாங்கோ இகாமத்தோ இல்லை. பிறகு பிலால் (ரலி) அவர்கள் மீது சாய்ந்து கொண்டு இறையச்சத்தைக் கடைப்பிடிக்குமாறும் இறைவனுக்கும் இறைத்தூதருக்கும் கட்டுப்படுமாறும் வலியுறுத்தி மக்களுக்கு அறிவுரையும் நினைவூட்டலும் வழங்கினார்கள். பிறகு அங்கிருந்து புறப்பட்டு பெண்கள் பகுதிக்கு சென்று அவர்களுக்கும் நினைவூட்டி அறிவுரை பகர்ந்தார்கள். மேலும் பெண்களை நோக்கி தர்மம் செய்யுங்கள் நீங்கள் அதிகம் பேர் நரகத்தின் விறகு ஆவிர்கள் என்று கூறினார்கள். அப்போது பெண்கள் நடுவிலிருந்து கன்னங்கள் கருத்த ஒரு பெண்மனி எழுந்து ஏன் அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் அதிகமாக குறை கூறுகின்றீர்கள். நன்றி மறந்து கணவனை நிராகரிக்கின்றீர்கள் என்று கூறினார்கள். அப்போது அப்பெண்கள் தம் காதணிகள் மோதிரங்கள் உள்ளிட்ட அணிகலன்கனை பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போட்டார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி) நூல்: முஸ்லிம் (1607)

கன்னங்கள் கருத்த பெண்மனி என்று ஜாபிர் (ரலி) அவர்கள் குறிப்பிடுவதாக இருந்தால் அப்பெண்ணின் முகம் திறந்திருந்தாலே இது சாத்தியம். நபியவர்கள் காலத்தில் நபித்தோழியர் ஜில்பாப் அணிந்துதான் பெருநாள் தொழுகையில் கலந்து கொள்வார்கள். ஒரு பெண்ணிற்கு ஜில்பாப் இல்லாவிட்டால் கூட இரண்டு ஜில்பாப்கள் உடைய பெண் தன்னுடைய மற்றொரு ஜில்பாபை இல்லாத பெண்ணிற்கு கொடுத்து பெருநாள் தொழுகையில் கலந்து கொள்ள வேண்டும் என்று நபியவர்கள் உத்தரவிட்டார்கள்.

இரு பெருநாட்களில் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்களையும் திரைக்குள்ளிருக்கும் (பருவமடைந்த) பெண்களையும் (தொழுகைத் திடலுக்கு) அனுப்பிவைக்குமாறு நாங்கள் (இறைத்தூதரால்) பணிக்கப்பட்டோம். பெண்கள் அனைவரும் முஸ்லிம்களின் கூட்டுத் தொழுகையில் பங்குகொள்ள வேண்டும்; முஸ்லிம்களின் பிரச்சாரத்திலும் கலந்து கொள்ள வேண்டும். மாதவிடாயுள்ள பெண்கள் மற்ற பெண்கள் தொழும் இடத்திலிருந்து விலகியிருக்க வேண்டும் (என்று நபி (ஸல்) அவர்கள் கூற, இதைக் கேட்டுக் கொண்டிருந்த) ஒரு பெண், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் சிலரிடம் அணிந்து கொள்ளஜில்பாப்” (மேலங்கி) இல்லையே (அவள் என்ன செய்வாள்?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஒரு பெண்ணிடம்ஜில்பாப்” (மேலங்கி) இல்லாவிட்டால்) அவளுடைய தோழி தனதுஜில்பாப்” (மேலங்கி)களில் ஒன்றை அவளுக்கு (இரவலாக) அணியக்கொடுக்கட்டும்! என்றார்கள்.

அறிவிப்பவர்  : உம்மு அதிய்யா (ரலி) நூல் : புகாரி (351)

 மேற்கண்ட செய்தியிலிருந்து ஜில்பாப் அணியாமல் பெருநாள் தொழுகைக்கு வருவது கூடாது என்பது தெளிவாக விளங்குகிறது. நபித்தோழியர்ஜில்பாப்அணிந்த பிறகும் அவர்களின் கன்னங்கள் தெரிந்துள்ளன. இதிலிருந்து ஜில்பாப் என்பது முகத்தை மறைக்காது என்பதை நாம் தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

பெருநாள் தொழுகை சம்பவம் எப்பொழுது நடந்தது?

நபியவர்கள் காலத்தில் நபித்தோழியர் ஜில்பாப் அணிந்து பெருநாள் தொழுகையில் கலந்து கொண்டுள்ளனர். கன்னங்கள் கருத்த பெண்மணி தொடர்பான சம்பவம்ஜில்பாப்என்பது முகத்தினை மறைக்காது என்பதற்கு தெளிவான சான்றாக விளங்குகிறது.

முகத்தினை மறைக்க வேண்டும் என்ற கருத்தில் உள்ளவர்கள்கன்னங்கள் கருத்த பெண்மணி நபியவர்களிடம் பெருநாள் தொழுகையில் கேள்வி கேட்டது தொடர்பான சம்பவம்ஜில்பாப்தொடர்பான சட்டம் அருளப்படுவதற்கு முன் நடந்ததா? அல்லது பின்னர் நடந்ததா? என்பதற்கு தெளிவான ஆதாரம் இல்லை. எனவே இது பெண்கள் முகத்தினை வெளிப்படுத்தலாம் என்பதற்கு ஆதாரமாகாது என வாதிடுகின்றனர். அவர்களுடைய இந்த வாதம் மிகவும் தவறானதாகும்.  கன்னங்கள் கருத்த பெண்மணி நபியவர்களிடம் கேள்வி கேட்ட சம்பவம்ஜில்பாப்தொடர்பான சட்டம் அருளப்பட்ட பின்னர் நடந்துதான் என்பதற்கு சான்றுகள் உள்ளன. இப்னு அப்பாஸ் அவர்களின் அறிவிப்பில் 60:12வது வசனத்தை அப்போது நபியவர்கள் ஓதிக்காட்டியதாக கூடுதல் விபரம் கூறப்படுகிறது.

பார்க்க : புகாரி 979

60:12 வசனம் ஹூதைபிய்யா சம்பவத்திற்குப் பிறகு அருளப்பட்டதாகும். இதனை  புகாரி 4182 வது ஹதீஸில் காணலாம்.

ஹூதைபிய்யா உடன்படிக்கை ஹிஜிரி 6ல் நடைபெற்ற சம்பவமாகும். பெண்களுக்கு ஜில்பாப் அணிவது தொடர்பான கட்டளை இதற்கு முன்பாகவே அருளப்பட்டுவிட்டது. இந்தச் சம்பவத்தை அபூ ஹூரைரா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள். அபூ ஹூரைரா (ரலி) அவர்கள் மதீனாவிற்கு வந்ததே ஹிஜிரி 7ல்தான். ”ஜில்பாப்தொடர்பான வசனம் ஹிஜிரி 7க்கு சில வருடங்களுக்கு முன்பாக அருளப்பட்ட வசனம் என்பதில் யாருக்கும் கருத்து வேறுபாடு கிடையாது. மேலே நாம் குறிப்பிட்ட ஆதாரங்களின் அடிப்படையில் பெருநாள் தொழுகையில் கன்னங்கள் கருத்த பெண்மணி நபியவர்களிடம் கேள்வி கேட்டது தொடர்பான சம்பவம்ஜில்பாப்சட்டம் அருளப்பட்டதற்கு பின்னர் நடந்ததுதான் என்பதை உறுதியாக அறிவிக்கின்றது. எனவே பெருநாள் தொழுகையில் பெண்கள் ஜில்பாப் அணிந்து கலந்து கொண்ட பிறகும் அவர்களின் முகம் மறைக்கப்படவில்லை. ஜில்பாப் என்பது முகத்தை மறைக்காது என்பது இதிலிருந்து  உறுதியாகிவிட்டது. ஸஃபஆவுல் ஹத்தைன் என்பதின் பொருள் என்ன?ஜாபிர் (ரலி) அவர்களின் செய்தியில்ஸஃப்ஆவுல் ஹத்தைன்என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது. இதன் பொருள்கன்னங்களின் கருப்புஎன்பதாகும்.ஆனால் தற்காலத்தில் சிலர் இந்த வார்த்தைக்கு  சமூக அந்தஸ்தில் அடித்தட்டைச் சார்ந்த பெண்என்பதுதான் பொருள் என்று கூறுகின்றனர்.

இதற்கு இப்படி நேரடியான அர்த்தம் இல்லை. கடினமாக உழைப்பதால் கறுப்பாக இருந்தார் என்று இலக்கியமாக சொல்லலாம். அப்படிச் சொன்னாலும் அடித்தட்டுப் பெண் என்பதை அறிந்து கொள்வதற்கு முகம் தெரிய வேண்டும். பின்னர் அதன் நிறம் தெரிய வேண்டும். அதன் பிறகு அதில் இருந்து அடித்தட்டு பெண் என்று தெரிய வேண்டும்.

எனவே அடித்தட்டுப் பெண் என்று பொருள் கொண்டாலும் முகம் மறைக்கப்படவில்லை என்ற கருத்து அதில் அடங்கியுள்ளதை இவர்கள் கவனிக்கவில்லை.

அபத்தமான வாதங்கள்

முகத்தைக் கண்டிப்பாக மறைத்துத்தான்  ஆகவேண்டும் என்ற கருத்தில் உள்ள அறிஞர்கள்கன்னங்கள் கருத்த பெண்மணிதொடர்பான ஹதீஸிற்கு மறுப்பளிக்கும் போது அந்தப் பெண் வயோதிகப் பெண்ணாக இருக்கலாம். அதன் காரணமாகத்தான் முகத்தை மறைக்கவில்லை என்றும் வாதிக்கின்றனர்.

இது மிகவும் அபத்தமான வாதமாகும். அந்தப் பெண் வயோதிகப் பெண் என்பதற்கு ஹதீஸ்களில் எந்த ஒரு ஆதாரமும் கிடையாது. யூகங்கள் ஒரு போதும் மார்க்க ஆதாரமாகக் கருதப்படாது.”ஜில்பாப்என்பது முகத்தை மறைக்காது என்பதற்கு தெளிவான ஆதாரங்களை நாம் குறிப்பிட்டுள்ளோம். இளம் பெண்ணாக இருந்தாலும், வயோதிகப் பெண்ணாக இருந்தாலும் முகத்தை மறைப்பதற்கு ஆதாரமில்லை என்பது தெளிவாகிவிட்டது. எனவே வயோதிகப் பெண்ணாக இருந்த்தினால்தான் அவள் முகத்தை மறைக்கவில்லை என்பது ஆதாரத்திற்கு ஏற்றுக் கொள்ள முடியாத ஒரு வாதமாகும்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

ரசூல் என்றால் யார்?

கிதாபும் ஹிக்மத்தும்

(வேதமும் ஞானமும் நபிகளாரைப் பின்பற்ற வேண்டும் என்று குர்ஆனிலேயே சொல்லப்பட்டும் உள்ளது. 

..وَاذْكُرُوا نِعْمَةَ اللَّهِ عَلَيْكُمْ وَمَا أَنزَلَ عَلَيْكُمْ مِنْ الْكِتَابِ وَالْحِكْمَةِ يَعِظُكُمْ بِهِ وَاتَّقُوا اللَّهَ وَاعْلَمُوا أَنَّ اللَّهَ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(231) البقرة 2

உங்களுக்கு அல்லாஹ் செய்துள்ள அருட்கொடையையும், வேதம் மற்றும்  ஞானத்தை வழங்கியதையும் எண்ணிப் பாருங்கள்! இது குறித்து அவன் உங்களுக்கு அறிவுரை கூறுகிறான். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! "அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன்' என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 2:231)

இந்த வசனத்தில் الْكِتَابِ - வேதத்தையும் الْحِكْمَةِ - ஞானத்தையும் இறக்கியிருப்பதாக ஏன் சொல்ல வேண்டும்? வேதத்தை இறக்கியிருக்கிறோம் என்றால் குர்ஆனைத்தான் அல்லாஹ் வேதம் என்கிறான். ஆனால் அத்துடன் நிறுத்திக் கொள்ளாமல் ஹிக்மத்தையும் இறக்கியிருக்கிறேன் என்று சொல்வதில் இருந்து ஹிக்மத் என்பது நபியவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய விளக்கமளிக்கும் தகுதியும் அதிகாரமும்தான் என அறிந்து கொள்ளலாம்.

ஹதீஸ்களை மறுக்கும் வழிகேடர்கள் கிதாப் என்றால் வேதம்தான். ஹிக்மத் என்றாலும் வேதம்தான் என்ற உளறலான பதிலையே தருகிறார்கள்.

ஒருவர் சோறும் கறியும் சாப்பிட்டேன் என்கிறார். சோறு இருக்கிறது. கறி எங்கே? என்று அவனிடம் கேட்டால், அந்தச் சோற்றையே காட்டி கறி என்றால் இது மடத்தனமாக இல்லையா?  ரொட்டியும் குழம்பும் சாப்பிட்டேன் என்று சொன்னால் இரண்டையும் எடுத்துக் காட்ட வேண்டும். ரொட்டியை மட்டும் வைத்துக் கொண்டு ரொட்டி எது? என்பதற்கும் ரொட்டியைக் காட்டிவிட்டு, குழம்பு எது? எங்கே? என்பதற்கும் ரொட்டியையே காட்டினால் இத்தகையவர்களை என்னவென்று சொல்வது?

எனவே அல்லாஹ் எல்லா நபிமார்களுக்கும் வேத்தைக் கொடுத்தான். அந்த வேதத்திற்குரிய விளக்கத்தைத்தான் ஹிக்மத் என்று சொல்கிறான். அது குர்ஆனில் இருக்காது.

அல்லாஹ் வேதத்தைக் கொடுத்துவிட்டு, அதிலுள்ளதை விளக்குவதற்காக ஒரு நபியைத் தேர்ந்தெடுத்து அனுப்பி அவரைச் செயல்படுத்த வைத்து அவரது செயல் மூலமாக விளக்கச் சொல்லுவான். அல்லது அவரது சொல் மூலமாக விளக்குவார். இந்தமாதிரி ஒரு பணியையும் சேர்த்து நபிமார்களுக்கு அல்லாஹ் கொடுத்திருப்பதற்குப் பெயர்தான் ஹிக்மத்.

மேலும் இதே கருத்தை 4:113 வது வசனத்திலும் சொல்கிறான்.

 وَأَنزَلَ اللَّهُ عَلَيْكَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَعَلَّمَكَ مَا لَمْ تَكُنْ تَعْلَمُ وَكَانَ فَضْلُ اللَّهِ عَلَيْكَ عَظِيمًا(113) النساء 4

வேதத்தையும், ஞானத்தையும் அல்லாஹ் அருளினான். நீர் அறியாமல் இருந்ததை உமக்குக் கற்றுத் தந்தான். உம் மீது அல்லாஹ்வின் அருள் மகத்தானதாக உள்ளது.

(அல்குர்ஆன் 4:113)

وَاذْكُرْنَ مَا يُتْلَى فِي بُيُوتِكُنَّ مِنْ آيَاتِ اللَّهِ وَالْحِكْمَةِ إِنَّ اللَّهَ كَانَ لَطِيفًا خَبِيرًا(34) 33

உங்கள் வீடுகளில் கூறப்படும் அல்லாஹ்வின் வசனங்களையும், ஞானத்தையும் நினையுங்கள்! அல்லாஹ் நுணுக்கமானவனாகவும்,  நன்கறிந்தவனாகவும், இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:34)

இந்த வசனத்தில் முஹம்மது நபியுனுடைய மனைவிமார்களை அழைத்து, குர்ஆனையும் ஹிக்மத்தையும் நினைக்கச் சொல்கிறான்.

وَإِذْ أَخَذَ اللَّهُ مِيثَاقَ النَّبِيِّينَ لَمَا آتَيْتُكُمْ مِنْ كِتَابٍ وَحِكْمَةٍ ثُمَّ جَاءَكُمْ رَسُولٌ مُصَدِّقٌ لِمَا مَعَكُمْ لَتُؤْمِنُنَّ بِهِ وَلَتَنْصُرُنَّهُ قَالَ أَأَقْرَرْتُمْ وَأَخَذْتُمْ عَلَى ذَلِكُمْ إِصْرِي قَالُوا أَقْرَرْنَا قَالَ فَاشْهَدُوا وَأَنَا مَعَكُمْ مِنْ الشَّاهِدِينَ(81) آل عمران 3

"உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் நான் தந்த பின் உங்களிடம் இருப்பதை உண்மைப்படுத்தும் "தூதர்' உங்களிடம் வந்தால் அவரை நம்புவீர்களா? அவருக்கு உதவுவீர்களா?'' என்று நபிமார்களிடம் அல்லாஹ் உறுதி மொழி எடுத்து "இதை ஒப்புக் கொண்டீர்களா? எனது பலமான உடன்படிக்கையை ஏற்றுக் கொண்டீர்களா?'' என்று கேட்ட போது, "ஒப்புக் கொண்டோம்'' என்று அவர்கள் கூறினர். "நீங்களே இதற்குச் சாட்சியாக இருங்கள்! உங்களுடன் நானும் சாட்சியாக இருக்கிறேன்'' என்று அவன் கூறினான்.

(அல்குர்ஆன் 3:81)

இந்த வசனத்திலும் நபிமார்களையெல்லாம் அழைத்து வைத்துக் கொண்டு அல்லாஹ் ஒரு உறுதிமொழி எடுக்கிறான். அந்த உறுதிமொழியின் போது, வேதத்தையும ஞானத்தையும் அதாவது கிதாபையும் ஹிக்மத்தையும் தந்தால்.. என்று சொல்லுகிறான்.

எனவே கிதாப் என்பது குர்ஆன், ஹிக்மத் என்பதுதான் ஹதீஸ் என்கிறோம்.

 أَمْ يَحْسُدُونَ النَّاسَ عَلَى مَا آتَاهُمْ اللَّهُ مِنْ فَضْلِهِ فَقَدْ آتَيْنَا آلَ إِبْرَاهِيمَ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَآتَيْنَاهُمْ مُلْكًا عَظِيمًا(54) النساء 4

அல்லாஹ் தனது அருளை இம்மக்களுக்கு வழங்கியதற்காக அவர்கள் பொறாமை கொள்கிறார்களா? இப்ராஹீமின் குடும்பத்தாருக்கு வேதத்தையும், ஞானத்தையும் கொடுத்தோம். அவர்களுக்கு மகத்தான ஆட்சியையும் வழங்கினோம்.

(அல்குர்ஆன் 4:54)

இந்த வசனத்தில் இப்ராஹீம் குடும்பத்தார் என்றால், இஸ்மாயீல், இஸ்ஹாக், யாகூப், யூசுஃப் போன்றவர்களாவர். இவர்களும் நபிமார்களாக இருந்ததினால் அவர்களுக்கும் வேதத்தையும் ஞானத்தையும் (கிதாப்,ஹிக்மத்) கொடுத்ததாகச் சொல்கிறான்.

 مَا كَانَ لِبَشَرٍ أَنْ يُؤْتِيَهُ اللَّهُ الْكِتَابَ وَالْحُكْمَ وَالنُّبُوَّةَ ثُمَّ يَقُولَ لِلنَّاسِ كُونُوا عِبَادًا لِي مِنْ دُونِ اللَّهِ وَلَكِنْ كُونُوا رَبَّانِيِّينَ بِمَا كُنْتُمْ تُعَلِّمُونَ الْكِتَابَ وَبِمَا كُنتُمْ تَدْرُسُونَ(79) آل عمران 3

எந்த மனிதருக்காவது அல்லாஹ் வேதத்தையும், அதிகாரத்தையும், நபி எனும் தகுதியையும் வழங்கினால் (அதன்) பின் "அல்லாஹ்வையன்றி எனக்கு அடிமைகளாக ஆகிவிடுங்கள்!'' என்று கூறுகின்ற அதிகாரம் அவருக்கு இல்லை. மாறாக, "வேதத்தை நீங்கள் கற்றுக் கொடுப்போராக இருப்பதாலும், அதை வாசித்துக் கொண்டிருப்பதாலும் இறைவனுக்குரியோராக ஆகிவிடுங்கள்!'' (என்றே கூறினர்)

(அல்குர்ஆன் 3:79)

 ஒரு மனிதருக்கு கிதாபையும் ஹுக்மையும் கொடுத்தால் அவர் தன்னை வணங்குங்கள் என்று மக்களிடம் சொல்லக் கூடாது. அல்லாஹ்வை வணங்குங்கள் என்றுதான் சொல்ல வேண்டும் என்று சொல்வதிலும் கிதாபுடன் ஹுக்மையும் கொடுத்ததாக இவ்வசனம் நமக்குச் சுட்டிக் காட்டுகிறது. ஆக பெருமானார் (ஸல் அவர்களாகட்டும், அதற்கு முந்தைய நபிமார்களாகட்டும் வெறுமனே இறைவனிடமிருந்து புத்தகத்தை வாங்கித் தருவதற்காக மட்டும் வரவில்லை. அதை விளக்குவதற்குரிய ஞானத்தையும் சேர்த்துத் தருவதற்காகத்தான் தூதர்களாகத் தேர்ந்தெடுக்கப்பட்டிருக்கிறார்கள் என்று விளங்க வேண்டும்.

இதுபோக இன்னும் பல இடங்களில் தெளிவாக இறைவன் சொல்வதைப் பாருங்கள். ரசூலின் விளக்கம்

 وَمَا أَرْسَلْنَا مِنْ قَبْلِكَ إِلَّا رِجَالًا نُوحِي إِلَيْهِمْ فَاسْأَلُوا أَهْلَ الذِّكْرِ إِنْ كُنْتُمْ لَا تَعْلَمُونَ(43)بِالْبَيِّنَاتِ وَالزُّبُرِ وَأَنزَلْنَا إِلَيْكَ الذِّكْرَ لِتُبَيِّنَ لِلنَّاسِ مَا نُزِّلَ إِلَيْهِمْ وَلَعَلَّهُمْ يَتَفَكَّرُونَ(44)

(முஹம்மதே!) உமக்கு முன் ஆண்களையே தூதர்களாக அனுப்பினோம். அவர்களுக்குத் தெளிவான சான்றுகளுடனும், ஏடுகளுடனும் நமது தூதுச் செய்தியை அறிவித்தோம். நீங்கள் அறியாதிருந்தால் அறிவுடையோரிடம் கேளுங்கள்! மக்களுக்கு அருளப்பட்டதை நீர் அவர்களுக்கு விளக்க வேண்டும் என்பதற்காகவும், அவர்கள் சிந்திக்க வேண்டும் என்பதற்காகவும் இந்தப் போதனையை உமக்கு அருளினோம்.

(அல்குர்ஆன் 16:43,44)

இந்த வசனத்தில் நபிகள் நாயகத்தை எதற்காக தூதராக அனுப்பினான் என்பதை அல்லாஹ் தெள்ளத் தெளிவாகக் கூறுகிறான். இறைவனால் இறக்கியருளப்பட்டதை அவர்களாக விளங்கிக் கொள்வார்கள் என்று சொல்லாமல், நபிகளார் விளக்குவதாகச் சொல்கிறான்.

அல்லாஹ் சொன்ன பிரகாரம் நபிகள் நாயகம் விளக்கியிருப்பார்கள். அப்படியெனில் நபிகளார் விளக்கிய விளக்கம் எங்கே? திரும்பவும் அதுதான் குர்ஆன் என்பார்கள். இது தவறான வாதம்.

குர்ஆனை விளக்கத்தான் நபி என்று இந்த வசனம் சொல்லும் போது, நபிகளாரின் விளக்கமும் குர்ஆன்தான் என்று சொல்வது கடைந்தெடுத்த புரட்டுவாதமாகும்.

எனவே குர்ஆன் மட்டும் போதும் என்பது குர்ஆனுக்கே எதிரானதாகும்.

وَمَا أَنزَلْنَا عَلَيْكَ الْكِتَابَ إِلَّا لِتُبَيِّنَ لَهُمْ الَّذِي اخْتَلَفُوا فِيهِ وَهُدًى وَرَحْمَةً لِقَوْمٍ يُؤْمِنُونَ(64) النحل 16

அவர்கள் முரண்பட்டதை அவர்களுக்கு (முஹம்மதே!) நீர் விளக்குவதற்காகவே உமக்கு இவ்வேதத்தை நாம் அருளியுள்ளோம். (இது) நம்பிக்கை கொள்ளும் சமுதாயத்திற்கு நேர்வழியாகவும், அருளாகவும் உள்ளது.

(அல்குர்ஆன் 16:64)

 இந்த வேதத்தை உமக்குத் தந்த காரணம், வெறுமனே வாசித்துக் காட்டுவதற்காகத் தரவில்லை. அவர்களுக்குத் தெளிவு படுத்துவதற்காகத்தான். இதற்கு என்ன அர்த்தம் என்றால், இந்த வேதத்தைக் கொண்டுபோய் மக்களிடம் கொடுத்துவிடுவதற்காக மட்டும் தரவில்லை.

அல்லாஹ்வாகிய நான் குர்ஆனை இறக்கி, அதன் விளக்கத்தை உமது உள்ளத்தில் பதியச் செய்துள்ளேன். அந்த விளக்கத்தை விளக்கிக் கூறுவதுதான் உனக்கு நான் இட்ட கட்டளை என்று கட்டளையிடுகிறான்.

விளக்கிச் சொல்ல வேண்டும் என்றால் அந்த விளக்கத்தைப் பின்பற்ற வேண்டுமா? இல்லையா? குர்ஆனுடைய விளக்கமாக எதை அல்லாஹ் நபியின் உள்ளத்தில் போடுகிறானோ அதுவும் வஹீதான் என்று நம்பவேண்டும். அதாவது குர்ஆனுடைய விளக்கமும் அல்லாஹ்வின் வஹீதான். எனவே குர்ஆனின் விளக்கத்தை மறுத்தால் நிச்சயமாக குர்ஆனையே மறுத்ததாகத்தான் ஆகும். எனவே ரசூல் தேவையில்லை என்பவன் மேற்கூறிய அனைத்து வசனங்களையும் மறுத்தவனாகி  விடுகிறான்.

 لَقَدْ كَانَ لَكُمْ فِي رَسُولِ اللَّهِ أُسْوَةٌ حَسَنَةٌ لِمَنْ كَانَ يَرْجُو اللَّهَ وَالْيَوْمَ الْآخِرَ وَذَكَرَ اللَّهَ كَثِيرًا(21) الأحزاب 33

அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது.

(அல்குர்ஆன் 33:21)

அழகிய முன்மாதிரி என்றால் என்ன பொருள்? ஒரு தபால்காரர் (போஸ்ட் மேன்) ஒரு கடிதத்தை நம்மிடம் தருகிறார் என்று வைத்துக் கொள்வோம். செய்தியை மட்டும் தந்துவிட்டு போனால் அவரை முன்மாதிரி என்று சொல்வோமா? யாரும் சொல்லமாட்டோம்.

இந்த கேடுகெட்டவர்கள் தங்களது வாதத்தின் மூலம் நபிகள் நாயகத்தை ஒரு போஸ்ட்மேன் மாதிரி சித்தரிக்கிறார்கள். தபால்காரருக்கு தபாலில் எழுதப்பட்ட செய்தி என்னவென்றும் தெரியாது. அதிலுள்ள விளக்கமும் என்னவென்று தெரியாது. கடிதத்தை வாங்கித் தருகிற வேலை மட்டும்தான் அவரது பணியாகும். இதுபோன்ற நிலைக்கு நபிகளாரைக் கொண்டு செல்லப் பார்க்கிறார்கள்.

தந்தையிடமிருந்து வந்த கடிதத்தை தபால்காரனிடம் பெற்ற பிள்ளை, கடிதத்தைப் பிரித்து பார்த்தால், அதில் மதுக் குடிக்காதே, பாக்கு சாப்பிடாதே, சரியாகத் தூங்கு என்றெல்லாம் இருக்கிறது என்று வைத்துக் கொள்வோம். இந்தக் கடிதத்தைப் பார்த்த பிள்ளை இந்தத் தபால்காரரிடத்தில் எனக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது என்று சொல்ல முடியுமா?

தூதர் என்பவர் போஸ்ட்மேனைப் போன்று வெறுமனே செய்தியை மட்டும் கொண்டு வந்து தருகிறவர் கிடையாது. அவர் நீ பின்பற்ற வேண்டிய மாடல் என்று அல்லாஹ் சொல்கிறான். أُسْوَةٌ - உஸ்வத் என்றால் மாடல் என்று பொருள். அதாவது முஹம்மது எப்படி தொழுகிறாரோ அப்படியே ஒவ்வொரு முஸ்லிமும் தொழ வேண்டும். அவர்கள் எப்படி பேசுகிறார்களோ அதுபோன்றுதான் பேசவேண்டும். அவர்கள் எப்படி சாப்பிடுகிறார்களோ அதுபோன்றுதான் சாப்பிட வேண்டும். அவர்கள் என்னவெல்லாம் செய்கிறார்களோ அதுபோன்றுதான் செய்ய வேண்டும். அதற்குப் பெயர்தான் முன்மாதிரி; மாடல் என்று சொல்லப்படும்.

நபிகளாரைப் பார்த்துப் பார்த்துப் பின்பற்ற வேண்டும் என்பதற்காகத்தான் முன்மாதிரி என்று அல்லாஹ் கூறுகிறான்.

 إِنَّا أَنزَلْنَا إِلَيْكَ الْكِتَابَ بِالْحَقِّ لِتَحْكُمَ بَيْنَ النَّاسِ بِمَا أَرَاكَ اللَّهُ وَلَا تَكُنْ لِلْخَائِنِينَ خَصِيمًا(105) النساء 4

(முஹம்மதே!) அல்லாஹ் உமக்குக் காட்டித் தரும் அடிப்படையில் மக்கள் மத்தியில் நீர் தீர்ப்பு வழங்குவதற்காக உண்மையை உள்ளடக்கிய இவ்வேதத்தை உமக்கு நாம் அருளினோம். மோசடி செய்வோருக்கு வாதிடுபவராக நீர் ஆகிவிடாதீர்!

(அல்குர்ஆன் 4:105)

அல்லாஹ் எதை விளக்கமாகக் காட்டுகிறானோ அதனடிப்படையில் தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்பதற்குத்தான் வேதம் அருளப்பட்டதாகச் சொல்கிறான்.

அப்படியெனில் குர்ஆனை அல்லாஹ் கொடுத்த பிறகு இன்னொரு விளக்கத்தையும் நபிகளாருக்குக் காட்டுவான் என்று அர்த்தம் வருகிறது. அதாவது குர்ஆனின் சில வசனங்கள் மேலோட்டமாகப் பார்த்தால் புரியாது. ஆனால் நபியாகிய உமது இதயத்திற்கு மட்டும் புரிகிற விளக்கத்தை உமது உள்ளத்திற்குக் காட்டுவோம். அதனடிப்படையில் விளக்கி தீர்ப்புச் சொல்ல வேண்டும் என்று அல்லாஹ் முஹம்மது நபியிடம் சொல்கிறான்.

 يَاأَهْلَ الْكِتَابِ قَدْ جَاءَكُمْ رَسُولُنَا يُبَيِّنُ لَكُمْ كَثِيرًا مِمَّا كُنْتُمْ تُخْفُونَ مِنْ الْكِتَابِ وَيَعْفُو عَنْ كَثِيرٍ قَدْ جَاءَكُمْ مِنْ اللَّهِ نُورٌ وَكِتَابٌ مُبِينٌ(15) المائدة 5

வேதமுடையோரே! நம்முடைய தூதர் (முஹம்மத்) உங்களிடம் வந்துவிட்டார். வேதத்தில் நீங்கள் மறைத்தவற்றில் அதிகமானவற்றை அவர் உங்களுக்குத் தெளிவுபடுத்துவார். பலவற்றை அலட்சியம் செய்துவிடுவார். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு ஒளியும், தெளிவான வேதமும் வந்துவிட்டன.

(அல்குர்ஆன் 5:15)

இந்த வசனத்தில் இறைவனிடமிருந்து தெளிவான வேதமும், ஒளியும் வந்துள்ளது என்று கூறுகிறான். ஒளி என்றால் பிரகாசம். ஒளி என்றால் முஹம்மது நபிக்கு அல்லாஹ் விளக்கைக் கொடுத்து அனுப்பினான் என்று புரிந்துவிடக் கூடாது. அப்படியெனில் அந்த விளக்கு எங்கே இருக்கிறது? இது தவறான பாதைக்கு நம்மைக் கொண்டுசென்று விடும். பிரகாசம் ஒளி என்றால் தெளிவு என்று அர்த்தம். விளக்கம் என்று பொருள்.

விளக்கம்தான் எதையும் பிரகாசப்படுத்தும். சில விசயம் மூடலாக இருக்கும். அதற்கு தகுந்த விளக்கம் கொடுத்தால் பிரகாசமாகிவிடும். உதாரணத்திற்குச் சொல்வதாக இருந்தால், ஒருவர் நமக்கு விளங்குகிற மாதிரி பேசவில்லை எனில், அவரைப் பார்த்து நாம், நீங்கள் எதையோ மூடிமறைத்துப் பேசுகிறீர்கள். அல்லது மூடலாகப் பேசுகிறீர்கள் என்று சொல்வோம். நன்றாக எல்லோருக்கும் புரிகிற அடிப்படையில் பேசினால், எவ்வளவு பிரகாசமாகத் தெளிவாகப் பேசுகிறார் என்று பாராட்டுவோம்.

எனவே இந்த வசனத்தில் ஒளி என்று சொல்லப்படுவது நபிகளாரின் விளக்கத்தைத்தான் குறிக்கிறது.

திலாவத்தும் தஃலீமுமும் (ஓதுவதும் கற்றுக் கொடுப்பதுவும்) இப்ராஹீம் (அலை) அவர்கள் கஃபா என்கிற ஆலயத்தைக் கட்டிவிட்டு, அந்த கஃபா இருக்கும் இடத்திலுள்ள வம்சா வழியினரிடத்தில் அதாவது தனது வழித்தோன்றலில் ஒரு தூதர் வரவேண்டும் என அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்கிறார்கள். அது இஸ்மாயீல் நபியைக் குறிக்காது. ஏனெனில் இப்ராஹீம் (அலை) அவர்கள் துஆ செய்யும்போது இஸ்மாயீல் அலை அவர்களும் அவர்களுடன்தான் இருக்கிறார்கள். எனவே அதற்குப் பின்னால் வருகிற ஒரு தூதரைப் பற்றித்தான் இப்ராஹீம் நபியவர்கள் பிரார்த்திக்கிறார்கள் என்று பொருள்.

 رَبَّنَا وَابْعَثْ فِيهِمْ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِكَ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُزَكِّيهِمْ إِنَّكَ أَنْتَ الْعَزِيزُ الْحَكِيمُ(129) البقرة 2

எங்கள் இறைவா! அவர்களிலிருந்து அவர்களுக்காக ஒரு தூதரை அனுப்புவாயாக! அவர், உனது வசனங்களை அவர்களுக்குக் கூறுவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன் (என்றனர்.)

(அல்குர்ஆன் 2:129)

அப்படி வருகிற தூதர் அவர்களுக்கு உனது வசனங்களை ஓதிக்காட்டுவார். ஓதிக் காட்டுவதுடன் மட்டுமின்றி அந்த வேதத்தைக் கற்றுக் கொடுப்பார். மேலும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்றுள்ளது.

தூதர் என்றால் இறைவனின் வேதத்தைக் கொடுத்துவிட்டுப் போவது மட்டும்தான் அவரது வேலை என்று விளங்கிக் கொள்வதாக இருந்தால் அந்தத் தூதர் எதைக் கற்றுத் தரப் போகிறார்.

வசனத்தை ஓத வேண்டும். பிறகு அவர் வேதத்தைக் கற்றுக் கொடுப்பார். மேலும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்று கூறுகிறான்.

இந்த துஆவை அல்லாஹ் ஏற்று அதன்படியே நபிகள் நாயகம் ஸல் அவர்களை அல்லாஹ் அனுப்பினான் என்பதைப் பின்வரும் வசனத்தில் இருந்து அறியலாம்.

 كَمَا أَرْسَلْنَا فِيكُمْ رَسُولًا مِنْكُمْ يَتْلُو عَلَيْكُمْ آيَاتِنَا وَيُزَكِّيكُمْ وَيُعَلِّمُكُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَيُعَلِّمُكُمْ مَا لَمْ تَكُونُوا تَعْلَمُونَ(151) البقرة 2

 உங்களுக்கு உங்களிலிருந்து தூதரை அனுப்பியது போல். (கிப்லாவை மாற்றுவதன் மூலமும் அருள்புரிந்தான்). அவர் உங்களுக்கு நமது வசனங்களைக் கூறுவார். உங்களைத் தூய்மைப்படுத்துவார். உங்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுத் தருவார். நீங்கள் அறியாமல் இருந்தவற்றையும் உங்களுக்கு அவர் கற்றுத் தருவார்.

(அல்குர்ஆன் 2:151)

இவ்வசனத்தில் குர்ஆனைக் கொடுத்ததோடு  தூய்மைப் படுத்துவார் என்றும். அதன் பிறகு வேதத்தைக் கற்றுக் கொடுப்பர் என்றும் அதன் பிறகு ஞானத்தைக் கற்றுக் கொடுப்பார் என்றும் அதன் பிறகு மனிதன் அறியாத விசயங்களையெல்லாம் கற்றுக் கொடுப்பார் என்றும் அல்லாஹ் கூறுகிறான்.

இதில் முதல் வேலை ஓதிக்காட்டுவது,

இரண்டாவது வேலை பக்குவப்படுத்துவது,

மூன்றாவது வேதத்தைக் கற்றுத் தருதல்,

நான்காவது ஞானத்தைக் கற்றுக் கொடுத்தல்,

ஐந்தாவது தெரியாததைக் கற்றுக் கொடுப்பது.

குர்ஆனை வாங்கித் தருவதோடு தூதரின் வேலை முடிந்து விட்டது என்றால், அல்லாஹ் அதை மட்டும் கூறியிருப்பான். ஆனால் மேற்சொன்ன வசனத்தில் குர்ஆனைக் கொடுப்பதுடன் இன்னும் நான்கு வேலைகளையும் தூதர் சேர்த்துச் செய்வார் என்று இறைவன் கூறுகிறான்.

لَقَدْ مَنَّ اللَّهُ عَلَى الْمُؤْمِنِينَ إِذْ بَعَثَ فِيهِمْ رَسُولًا مِنْ أَنْفُسِهِمْ يَتْلُوا عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(164) آل عمران 3

நம்பிக்கை கொண்டோருக்கு அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பியதன் மூலம் அவர்களுக்கு அல்லாஹ் பேருபகாரம் செய்தான். அவர்களுக்கு அவனது வசனங்களை அவர் கூறுவார். அவர்களைத் தூய்மைப்படுத்துவார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார். இதற்கு முன் அவர்கள் பகிரங்கமான வழிகேட்டில் இருந்தனர்.

(அல்குர்ஆன் 3:164)

 இதிலிருந்து விளங்குவதாக இருந்தால், ஓதிக் காட்டிய குர்ஆன் நம் கையில் இருக்கிறது. கற்றுக் கொடுத்தது எங்கே இருக்கிறது? எதைக் கற்றுக் கொடுத்தார்? இந்த வசனத்திலும் இறைவனின் வசனங்களை அவர்களுக்கு ஓதிக் காட்டுவார் என்றும் மேலும் வேதத்தையும் ஞானத்தையும் கற்றுக் கொடுப்பார் என்றும் சொல்கிறான். எனவே தூதருக்கு வெறுமனே குர்ஆனைக் கொடுக்கிற வேலை மட்டும்தான் என்பது வழிகெட்ட கொள்கையாகும்.

 هُوَ الَّذِي بَعَثَ فِي الْأُمِّيِّينَ رَسُولًا مِنْهُمْ يَتْلُو عَلَيْهِمْ آيَاتِهِ وَيُزَكِّيهِمْ وَيُعَلِّمُهُمْ الْكِتَابَ وَالْحِكْمَةَ وَإِنْ كَانُوا مِنْ قَبْلُ لَفِي ضَلَالٍ مُبِينٍ(2) الجمعة 62

அவனே எழுதப்படிக்காத சமுதாயத்தில் அவர்களிலிருந்தே ஒரு தூதரை அனுப்பினான். அவர்களுக்கு அவர் அவனது வசனங்களைக் கூறுகிறார். அவர்களைப் பரிசுத்தப்படுத்துகிறார். அவர்களுக்கு வேதத்தையும், ஞானத்தையும் கற்றுக் கொடுக்கிறார். அவர்கள் இதற்கு முன் தெளிவான வழிகேட்டில் இருந்தனர்.

(அல்குர்ஆன் 62:2)

 இந்த வசனத்திலும் வசனங்களை ஓதிக் காட்டுவார் என்றும் வேதத்தைக் கற்றுக் கொடுப்பார் என்பதற்கு வேதத்திற்கு விளக்கம் தருவதும் நபிகள் நாயகத்தின் பணிதான் என்பதை விளங்க வேண்டும்.

எனவே நபிமார்களை நம்புவதில் கவனமாக இருப்பது என்றால், நபிமார்களை அல்லாஹ் அனுப்பியது வேதத்தை இறைவனிடமிருந்து பெற்று மக்களுக்குக் கொடுக்கிற பணியை மட்டும் செய்வதற்காக கிடையாது. அதை முதலில் அவர் வாழ்ந்து காட்ட வேண்டும். அவரைப் பார்த்து நாம் வாழவேண்டும் என்பதற்காகவும், அந்த வேதத்தில் உள்ளவற்றிற்கு தூதராகிய அவரே விளக்கம் தருவதற்காகவும்தான்.

இன்னும் சொல்வதென்றால், வெறுமனே புத்தகத்தை இறைவனிடமிருந்து வாங்கிக் கொடுப்பதுதான் தூதர்களின் வேலையென்றால், அதற்கு ரசூல்மார்கள் வரவேண்டிய எந்தத் தேவையுமில்லை. ஏனெனில் ரசூல் என்பவரை மக்கள் நம்புவதற்கு சிரமப்பட்டார்கள்.

நம்மைப் போன்று சாப்பிடுகிறார்; நம்மைப் போன்று நடக்கிறார் என்றெல்லாம் அந்த மக்கள் அங்கலாய்த்துக் கொண்டதாக திருக்குர்ஆனே குறிப்பிடுகிறது. எனவே வேதத்தை மட்டும் கொடுப்பதாக இருந்தால் அதை தூதரிடம் கொடுக்காமல் வானத்திலிருந்து இறக்கி வைத்திருந்தால் அந்த மக்கள் அப்படியே நம்பியிருப்பார்கள்.

புத்தகத்தை மட்டும் மக்களுக்கு இறைவன் கொடுப்பதாக இருந்தால் வானத்திலிருந்து நேரடியாக அப்படியே அனுப்பி வைத்துவிடலாம். அந்த மக்களும் உடனேயே அந்த அற்புதத்தைப் பார்த்து இறைவனின் வேதத்தை சந்தேகமில்லாமல் நம்பியிருப்பார்கள்.

ஆனால் அப்படியெல்லாம் செய்யாமல் ஒருவரை அனுப்பி அவரின் மூலம் சொல்லச் சொல்லி அடி, உதைகளெல்லாம் வாங்க வைத்து அதன் பிறகு வேதத்தைக் கொடுக்க வேண்டும் என்பது சிரமமான பாதையாகும். இப்படியொரு வழிமுறையை இறைவன் ஏற்படுத்த எந்தத் தேவையுமில்லை. 

மக்கள் கூடுகிற சந்தை போன்ற பொது இடத்தில் வானத்திலிருந்து இறைவன் புத்தகத்தை அப்படியே தூக்கிப் போட்டிருந்தால் எந்தச் சலனமும் இல்லாமல் இறைவனின் வேதம் என்று அந்த மக்கள் நம்பியிருப்பார்கள். இந்தக் காலத்திலாவது விமானத்திலிருந்து விழுந்ததாகச் சொல்வதற்கு வாய்ப்பிருக்கிறது. அந்தக் காலத்தில் அந்த வாய்ப்பும் கூட கிடையாது. எனவே இறைவன் தூதர்களைத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம் வெறுமனே வேதத்தை மக்களுக்குக் கொடுத்துவிட்டு போவதற்காக கிடையாது. அதிலுள்ளதை விளக்குவதற்காகவும்தான் தூதர் என்பதைப் புரிய வேண்டும்.

மேலும் சொல்வதாக இருப்பின், வேதத்தைக் கொடுப்பதற்கு மனிதர்களில் தூதர்களைத் தேர்ந்தெடுப்பதை விட, மலக்குமார்களை வானிலிருந்து இறக்கி அந்த வேலையைச் செய்திருக்கலாம். அதையும் இறைவன் செய்யவில்லை.

 وَلَوْ نَزَّلْنَا عَلَيْكَ كِتَابًا فِي قِرْطَاسٍ فَلَمَسُوهُ بِأَيْدِيهِمْ لَقَالَ الَّذِينَ كَفَرُوا إِنْ هَذَا إِلَّا سِحْرٌ مُبِينٌ(7)وَقَالُوا لَوْلَا أُنزِلَ عَلَيْهِ مَلَكٌ وَلَوْ أَنزَلْنَا مَلَكًا لَقُضِيَ الْأَمْرُ ثُمَّ لَا يُنظَرُونَ(8)وَلَوْ جَعَلْنَاهُ مَلَكًا لَجَعَلْنَاهُ رَجُلًا وَلَلَبَسْنَا عَلَيْهِمْ مَا يَلْبِسُونَ(9) الأنعام 6

(முஹம்மதே!) காகிதத்தில் எழுதப்பட்ட வேதத்தை உமக்கு நாம் அருளியிருந்து அதைத் தம் கைகளால் தொட்டுப் பார்த்தாலும். "இது வெளிப்படையான சூனியத்தைத் தவிர வேறு இல்லை'' என்று (ஏக இறைவனை) மறுப்போர் கூறியிருப்பார்கள்.இவருடன் வானவர் இறக்கப் பட்டிருக்க வேண்டாமா? என அவர்கள் கூறுகின்றனர். வானவரை நாம் அனுப்பியிருந்தால் காரியம் முடிக்கப்பட்டுவிடும். பின்னர் அவர்கள் அவகாசம் அளிக்கப்பட மாட்டார்கள்.வானவரை அனுப்புவதாக வைத்துக் கொண்டாலும் அவரை மனிதராகவே ஆக்கியிருப்போம். எதில் குழம்பிப்போனார்களோ அதே குழப்பத்தை (அப்போது மீண்டும்) ஏற்படுத்தியிருப்போம்.

(அல்குர்ஆன் 6:7,8,9)

எனவே இந்த வசனத்தின் மூலம் வேதத்தை வானிலிருந்து அப்படியே போடமாட்டான் என்பதுவும், மலக்குமார்களின் மூலம் அனுப்ப மாட்டான் என்பதுவும் தெளிவாகிவிட்டது. அப்படியே வானவரை அனுப்பினால் கூட மனிதராகத்தான் அனுப்பியிருப்போம் என்பதிலிருந்து மனிதரைத் தூதராகத் தேர்ந்தெடுப்பதற்குக் காரணம், அந்த வசனத்திற்கு விளக்கம் சொல்லி அதனடிப்படையில் அவர்களை நேரான வழிக்குச் செலுத்துவதற்குத்தான் என்பதைப் புரியவேண்டும்.

அந்தந்த மொழியிலேயே தூதர்கள்

இன்னும் சொல்வதாக இருப்பின் ஒரு தூதரை அனுப்புவதாக இருந்தால் அவருக்கு அந்த மொழி தெரிய வேண்டும் என்று திருக்குர்ஆன் கூறுகிறது.

தூதர்களை தபால்காரருக்கு ஒப்பாக இவர்கள் சொல்வது தவறானது என்பதை விளங்குவதாக இருந்தால், கடிதம் ஹிந்தி மொழியில் வருகிறதென வைத்துக் கொள்வோம். தபால்காரர் அந்தக் கடிதம் எந்த மொழியில் எழுதப்பட்டிருக்கிறது என்பதையெல்லாம் பார்க்கத் தேவையேயில்லை. யாருடைய முகவரியில் இருக்கிறதோ அவரிடம் கொண்டு போய் சேர்த்தால் மட்டுமே போதுமானது.

ஆனால் அல்லாஹ் நேர்மாற்றமாகச் சொல்கிறான். வேதத்தை மக்களுக்குக் கொண்டு வந்து கொடுப்பதாக இருந்தால் அவருக்கு அந்த பாஷை தெரிந்திருக்க வேண்டும் என்கிறான். அப்படியெனில் தபால்காரரைப் போன்று செயல்படுவதாக தூதர்கள் இருக்கிறார்களெனில் ஏன் அந்த வேதத்தின் மொழி தெரிந்திருக்க வேண்டும்?, சிந்தித்துப் பாருங்கள்!. எனவே யாரை அல்லாஹ் நபியாகத் தேர்ந்தெடுக்கிறானோ அவரிடம்தான் இந்தப் புத்தகத்திற்குரிய விளக்கத்தைக் கேட்க வேண்டும் என்பதற்காதத்தான்.

 وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا بِلِسَانِ قَوْمِهِ لِيُبَيِّنَ لَهُمْ فَيُضِلُّ اللَّهُ مَنْ يَشَاءُ وَيَهْدِي مَنْ يَشَاءُ وَهُوَ الْعَزِيزُ الْحَكِيمُ(4) إبراهيم 14

எந்த ஒரு தூதரையும் அவர் தமது சமுதாயத்திற்கு விளக்கிக் கூறுவதற்காக அச்சமுதாயத்தின் மொழியிலேயே அனுப்பினோம். தான் நாடியோரை அல்லாஹ் வழிகேட்டில் விட்டுவிடுகிறான். தான் நாடியோருக்கு நேர்வழி காட்டுகிறான். அவன் மிகைத்தவன்; ஞானமிக்கவன்.

(அல்குர்ஆன் 14:4)

ரசூலுக்குக் கட்டுப்படுதல்

அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்றும் ரசூலுக்கும் கட்டுப்படுங்கள் என்றும் திருக்குர்ஆனில் 30க்கும் அதிகமான வசனங்கள் உள்ளன. அல்லாஹ்வுக்கு மட்டும் கட்டுப்படுங்கள் என்று ஏன் அல்லாஹ் சொல்லவில்லை. அல்லாஹ்வுக்குக் கட்டுப்படுங்கள் என்று சொல்லும் போதெல்லாம் ரசூலையும் சேர்த்துத்தான் சொல்லுகிறான் என்பதை சிந்தித்தாலும் தூதர்மார்கள் இல்லாமல் பரிபூரணமாக இஸ்லாமிய மார்க்கத்தை விளங்க முடியாது. செயல்பட முடியாது என்பதற்காகத்தான்.

وَمَا أَرْسَلْنَا مِنْ رَسُولٍ إِلَّا لِيُطَاعَ بِإِذْنِ اللَّهِ وَلَوْ أَنَّهُمْ إِذْ ظَلَمُوا أَنفُسَهُمْ جَاءُوكَ فَاسْتَغْفَرُوا اللَّهَ وَاسْتَغْفَرَ لَهُمْ الرَّسُولُ لَوَجَدُوا اللَّهَ تَوَّابًا رَحِيمًا(64) النساء 4

அல்லாஹ்வின் விருப்பப்படி மக்கள் கட்டுப்பட வேண்டுமென்பதற்காகவே தவிர எந்தத் தூதரையும் அனுப்புவதில்லை. (முஹம்மதே) அவர்கள் தமக்குத் தாமே தீங்கு இழைத்து விட்டு உம்மிடம் வந்து, அல்லாஹ்விடம் பாவமன்னிப்பும் தேடி, அவர்களுக்காக தூத(ராகிய நீ)ரும் பாவமன்னிப்புக் கோரினால் மன்னிப்பை ஏற்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் அல்லாஹ்வைக் காண்பார்கள்.                                         (அல்குர்ஆன் 4:64)

 அப்படியெனில் ரசூல் சொன்னால் அப்படியே கட்டுப்பட்டு நடக்க வேண்டும் என்று அடுக்கடுக்காக சொல்லிக் கொண்டேயிருக்கிறான். ரசூலுக்குக் கட்டுப்படுதல் என்கிற தலைப்பில் மட்டும் நூற்றுக் கணக்கான பக்கங்களுக்கு புத்தகம் போடுகிற அளவுக்கு குர்ஆனில் வசனங்கள் உள்ளன. எனவே ரசூலை நம்புவது என்றால், ரசூல் பதவி என்பது அல்லாஹ்வால் தேர்ந்தெடுக்கப்படுகிற அருள் என்றும், அவர்கள் அனைவரும் மனிதர்கள்தான் என்றும், அவர்களைத் தேர்ந்தெடுப்பதற்கு எந்த வயது வரம்பும் கிடையாது. எந்த நிலையிலும் அல்லாஹ் தேர்ந்தெடுப்பான் என்று நம்பவேண்டும்.

ஒரு சமூகத்திற்கு பல தூதர்கள் அனுப்பப்படுவார்கள் என்றும், ரசூல்மார்களுக்கு அவர்கள் எந்த மொழியைத் தெரிந்திருக்கிறார்களோ அந்த பாஷையில்தான் வேதம் அருளப்படும் என்றும் நம்பவேண்டும்.

இதில் மிக முக்கியமாக, ரசூல்மார்கள் வெறுமனே போஸ்ட் மேனைப் (தபால்காரர்) போன்று வேதத்தை மட்டும் வாங்கித் தருபவர் என்று நம்பாமல், வேதத்தை வாங்கித் தருவதுடன் அதனை விளக்கித் தருகிற ஆசானாக வந்திருக்கிறார், வழிகாட்டுகிற மாடலாக வந்திருக்கிறார் என்றும் நம்ப வேண்டும்.

இப்படி நம்புவதற்குப் பெயர்தான் ஹதீஸ் என்பது. அதே நேரத்தில் ஹதீஸ் என்ற பெயரில் சில இட்டுக் கட்டப்பட்டதாகவும் பொய்யானதாகவும் இருக்கத்தான் செய்கிறது. இருப்பினும் அவைகளைத் தரம் பிரித்து எவை மெய்யானவை? எவைகள் பொய்யானது? என்று நிரூபிக்கிற அற்புதமான வழிமுறைகளும் தெளிவாகத்தான் இருக்கிறது.

இதை விளங்கிக் கொள்வதற்குச் சொல்வதாக இருப்பின், நபிமார்களின் எண்ணிக்கை 1,24,000 (ஒரு இலட்சத்து இருபத்து நான்காயிரம்) என்று முஸ்னத் அஹ்மதில் ஒரு செய்தி இருக்கிறது.

ஆனால் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அலீ இப்னு ஜைத் இப்னு ஜத்ஆன் என்பவர் இடம் பெறுகிறார். இவர் பொய்யர் என்று சான்றுகள் இருக்கிறது.

எனவே இதற்காக ஹதீஸே வேண்டாம். குர்ஆன் மட்டும்தான் போதும் என்பது முற்றிலும் இஸ்லாமிய அடிப்படைகளைத் தகர்க்கிற வழிகேடான சிந்தாந்தமாகும். இத்தகையவர்களிடம் குர்ஆனிலிருந்தே குர்ஆன் மட்டும் போதாது என்பதற்கு ஆயிரக் கணக்கான கேள்விகளைக் கேட்க முடியும். அதற்கு அவர்களால் கியாமத் நாள் வரைக்கும் தலைகீழாக நின்றாலும் பதில் சொல்லவே சொல்ல முடியாது.

மேலும் இத்தகையவர்களிடம் குர்ஆன் மட்டும் போதாது என்று நாங்கள் பேசுவதற்கு விவாதம் செய்வதற்கு தயாராக இருக்கிறோம். நீங்கள் தயாரா? என்று கேட்டுப் பாருங்கள் நிச்சயமாக வரவே மாட்டார்கள். ஓடி ஒளிவார்கள். இன்ஷா அல்லாஹ்.

 

சொற்பொழிவுக் குறிப்புகள்

முஹர்ரம் மாதம்

அடுத்ததாக, ஈமானின் ஐந்தாவது கிளையான மறுமைநாளை நம்புவதைப் பற்றி விரிவாகப் பார்ப்போம்.

إِنَّ عِدَّةَ الشُّهُورِ عِنْدَ اللَّهِ اثْنَا عَشَرَ شَهْرًا فِي كِتَابِ اللَّهِ يَوْمَ خَلَقَ السَّمَاوَاتِ وَالْأَرْضَ مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ فَلَا تَظْلِمُوا فِيهِنَّ أَنْفُسَكُمْ وَقَاتِلُوا الْمُشْرِكِينَ كَافَّةً كَمَا يُقَاتِلُونَكُمْ كَافَّةً وَاعْلَمُوا أَنَّ اللَّهَ مَعَ الْمُتَّقِينَ(36) سورة التوبة

வானங்களையும், பூமியையும் படைத்த நாள் முதல் அல்லாஹ்வின் பதிவேட்டில் உள்ளபடி மாதங்களின் எண்ணிக்கை அல்லாஹ்விடம் பன்னிரண்டாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. இதுவே நேரான வழி. (புனிதமான) அம்மாதங்களில் உங்களுக்கு நீங்கள் தீங்கு இழைத்து விடாதீர்கள்! இணை கற்பிப்போர் ஒன்று திரண்டு உங்களுடன் போரிடுவது போல் நீங்களும் ஒன்று திரண்டு அவர்களுடன் போரிடுங்கள்! அல்லாஹ் (தன்னை) அஞ்சுவோருடன் இருக்கிறான் என்பதை அறிந்து கொள்ளுங்கள்!

(அல்குர்ஆன் 9:36)

3197 عَنْ أَبِي بَكْرَةَ رَضِي اللَّه عَنْه عَنِ النَّبِيِّ صَلَّى اللَّه عَلَيْهِ وَسَلَّمَ قَالَ الزَّمَانُ قَدِ اسْتَدَارَ كَهَيْئَتِهِ يَوْمَ خَلَقَ اللَّهُ السَّمَوَاتِ وَالْأَرْضَ السَّنَةُ اثْنَا عَشَرَ شَهْرًا مِنْهَا أَرْبَعَةٌ حُرُمٌ ثَلَاثَةٌ مُتَوَالِيَاتٌ ذُو الْقَعْدَةِ وَذُو الْحِجَّةِ وَالْمُحَرَّمُ وَرَجَبُ مُضَرَ الَّذِي بَيْنَ جُمَادَى وَشَعْبَانَ *رواه البخاري ومسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பி விட்டது. வருடம் என்பது பன்னிரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக் கூடியவை. அவை - துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதஸ் ஸானிக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள ரஜப் மாதமாகும்.

அறிவிப்பவர் : அபூபக்ரா (ரலி), நூல்: புகாரி (3197)

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِي الله عنه قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صلى الله  عَلَيْهِ وَسَلَّمَ أَفْضَلُ الصِّيَامِ