ஜுலை தீன்குலப் பெண்மணி

தலையங்கம்

ரமலானும் நாம் செய்ய வேண்டி கடமைகளும்

படைத்தவன் தரும் மிகப்பெரிய சலுகை ரமலான் மாதமாகும். இந்த மாதத்தில் செய்யும் நல்லறங்கள் மூலம் எண்ணற்ற நன்மைகளை பெற்று சொர்க்கவாதியாக மாறுவதற்கு தகுந்த காலமாக அல்லாஹ் அமைத்துள்ளான்.

ரமலான் மாதத்தில் நோன்பு நோற்பதும் நின்று வணங்குவதும் மிகப்பெரிய நன்மையை ஈட்டித் தரும்.

யார் ரமலானில் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பார்த்தும் நோன்பு நோற்கிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமலான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

என்ற நபிமொழிகள் ரமலான் மாதத்தின் சிறப்பையும் அம்மாதத்தில் நாம் செய்ய வேண்டி நல்லறங்களையும் நினைவூட்டகின்றன.

இதைப் போன்று இந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு உண்டு. அந்த இரவில் நாம் செய்யும் நல்லறங்கள் ஆயிரம் மாதங்கள் செய்யும் நல்லறங்களுக்கு ஈடானதாகும் என்ற அழகிய செய்தியை திருக்குர்ஆன் நமக்கு உணர்த்தியுள்ளது.

ரமலான் மாதத்தின் கடைசி பத்து இரவுகளில் நபி (ஸல்) இந்த இரவை அடைவதற்கு அதிக முக்கியத்துவம் தந்துள்ளார்கள். தம் மனைவியர்களையும் இரவில் எழுப்பி இறைவணக்கங்களில் ஈடுபட செய்வார்கள். எனவே குறைந்த அமல்களில் நிறைந்த நன்மைகளை பெற இம்மாதத்தை நாம் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.

இம்மாதத்தில் அதிகமதிகம் தொழுதல், தர்மம் செய்தல், திருக்குர்ஆனை ஓதுதல், திக்ர் செய்தல் உட்பட நல்லறங்கள் அனைத்தம் கூடுதலாக செய்து கணக்கில்லா நன்மைகள் பெற வேண்டும்.

நோன்பு வைத்துக் கொண்டு பொய் பேசுதல், புறம் பேசுதல், அவதூறு கூறுதல் போன்ற மார்க்கத்திற்கு புறம்பான காரியத்தைச் செய்தால் நாம் வைத்த நோன்பிற்கு எந்த நன்மையும் கிடைக்காமல் போய்விடும் என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நோன்பு தொடர்பான முக்கிய கேள்விகள்

பி.ஜைனுல் ஆபிதீன்

வேறுநாட்டுக்குச் செல்லும் போது பிறைவித்தியாசம் ஏற்பட்டால் எப்படி நடந்து கொள்ள வேண்டும்?

தலைப்பிறையைக் காண்பதில் ஒரு நாள் வித்தியாசம் ஏற்பட்டு சவுதியில் ரமலானை அடைந்து அதன் பிறகு மாத இடையில் ஊருக்கு வந்தவருக்கு இந்தப் பிரச்சனை ஏற்படுகிறது. பொதுவாக தொழுகை நோன்பு போன்ற அனைத்து காரியங்களையும் நாம் எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக்கணக்கின் அடிப்படையில் தான் அமைக்க வேண்டும். ஒரு ஊரில் இருந்து கொண்டு வேறொரு ஊரின் அல்லது நாட்டின் நேரக்கணக்கைப் பின்பற்ற முடியாது. இந்தியாவில் இருந்து கொண்டு சவதி நேரத்துக்கு தொழ முடியாது என்பது போன்று அங்குள்ள நேரக்கணக்கின் அடிப்படையில் இந்தியாவில் நோன்பு நோற்கவோ துறக்கவோ முடியாது. எனவே எந்த ஊரில் இருக்கிறோமோ அந்த ஊரின் நேரக் கணக்கின் அடிப்படையில் நம்முடைய தொழுகை நோன்பு போன்ற காரியங்களை அமைத்துக் கொள்ள வேண்டும். இதனடிப்படையில் சவுதியிலிருந்து இந்தியா வந்து சேர்ந்த பிறகு இந்தியாவின் நேரக்கணக்கைப் பின்பற்றி அவர் நோன்பு நோற்க வேண்டும். அவ்வாறு நடந்து கொள்ளும் போது முப்பத்து ஒன்றாவது நோன்பு வைக்க வேண்டிய நிலை வந்தால் என்ன செய்வது? மாதத்தைப் பற்றி இஸ்லாம் கூறும் போதனையை அறிந்து கொண்டால் இந்தப் பிரச்சனைக்கு தீர்வைக் காணலாம். ஒரு மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். முப்பத்து ஒரு நாட்கள் கிடையாது என்று இஸ்லாம் சொல்கிறது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மாதம் என்பது இருபத்து ஒன்பது நாட்களாகவும் இருக்கும். முப்பது நாட்களாகவும் இருக்கும். பிறையை நீங்கள் கண்டால் நோன்பு வையுங்கள். அதைப் பார்த்தே நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டம் குறுக்கிட்டால் எண்ணிக்கையை முழுமைப்படுத்துங்கள். அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி) நூல் : நஸாயீ (2109) ஒரு மாதத்திற்கு அதிக பட்சம் முப்பது நாட்கள் தான். முப்பத்து ஒரு நாட்கள் என்பது கிடையாது என்பதை இந்த நபிமொழியிலிருந்து அறிந்து கொள்ளலாம். உங்களில் யார் ரமலான் மாதத்தை அடைவாரோ அவர் நோன்பு நோற்கட்டும் என்ற வசனத்தின் அடிப்படையில் குறிப்பிட்ட நபர் சவுதியிலேயே ரமலான் மாதத்தை அடைந்து விட்டதால் அங்கு முதல் நோன்பு வைத்திருக்கிறார். இது சரியான வழிமுறையாகும். அதன் பிறகு பாதியில் அல்லது இறுதியில் ஊருக்கு திரும்பி வந்த போது ஊரில் உள்ளவர்களுக்கு முப்பதாவது நோன்பாகவும் இவருக்கு முப்பத்து ஒன்றாகவும் இருந்தால் அந்த நோன்பை அவர் நோற்கக் கூடாது. ஏனெனில் மாதம் என்பது அதிக பட்சம் முப்பது நாட்கள் தான் என்ற நபிமொழி இருப்பதால் அத்துடன் அவருக்கு ரமலான் மாதம் முடிந்து விட்டது. எனவே இவர் தனக்கு மாதம் பூர்த்தியான பிறகு நோன்பு நோற்காமல் காத்திருந்து ஊர் மக்கள் பெருநாள் கொண்டாடும் போது இவரும் சேர்ந்து பெருநாள் கொண்டாடுவார்.

நோன்பாளி ஆஸ்துமாவுக்காக ஸ்பிரே பயன்படுத்தலாமா?

சுபுஹ் முதல் மஃரிப் வரை உண்ணாமல், பருகாமல், இல்லறத்தில் ஈடுபடாமல் இருப்பது தான் நோன்பு என்பதாகும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நோன்பு (பாவங்களிலிருந்து காக்கின்ற) கேடயம் ஆகும்; எனவே, நோன்பாளி கெட்ட பேச்சுகளைப் பேசவேண்டாம்! அறிவீனமான செயல்களில் ஈடுபட வேண்டாம்! யாரேனும் அவருடன் சண்டைக்கு வந்தால் அல்லது ஏசினால் "நான் நோன்பாளி!' என்று இருமுறை கூறட்டும்! என் உயிர் எவன் கைவசம் இருக்கிறதோ அ(ந்த இறை)வன் மேல் ஆணையாக! நோன்பாளியின் வாயிலிருந்து வீசும் வாடை, அல்லாஹ்விடம் கஸ்தூரியின் வாடையை விடச் சிறந்ததாகும்! (மேலும்) "எனக்காக நோன்பாளி தமது உணவையும், பானத்தையும், இச்சையையும் விட்டுவிடுகிறார்! நோன்பு எனக்கு (மட்டுமே) உரியது; அதற்கு நானே கூலிலி கொடுப்பேன்! ஒரு நன்மை என்பது அது போன்ற பத்து மடங்குகளாகும்!' (என்று அல்லாஹ் கூறுகிறான்) அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :புகாரி 1894 ஆஸ்துமா நோய் உள்ளவர்கள் பயன்படுத்துகின்ற மருந்து நிரப்பப்பட்ட குப்பிகள் அவர்களின் மூச்சிறைப்பை சமநிலை செய்வதற்குத் தான் பயன்படுத்தப்படுகின்றன. இது அவர்களுக்கு உணவாகவோ, பானமாகவோ அமைவதில்லை. நோன்பு நோற்ற நிலையில் நாம் மூச்சு விட்டு இழுக்கும்போது காற்றில் கலந்துள்ள பல பொருட்களையும் சேர்த்து உள்ளிழுக்கிறோம். மாசுபட்ட காற்றை சுவாசிக்கும் போது அதில் உள்ள நச்சுப்பொருள்களயும் சேர்த்தே நாம் உள்ளிழுக்கிறோம். இதனால் நமது நோன்பில் எந்தப் பாதிப்பும் ஏற்படாது என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இது போன்று தான் ஆஸ்துமா பிரச்சனை உள்ளவர்களுக்கு வாயு வடிவிலான மருந்தை உள்ளே செலுத்துவதற்காக மருந்துக் குப்பிகள் பயன்படுத்தப்படுகிறது. எனவே அவர்கள் அதனைத் தாராளமாகப் பயன்படுத்திக் கொள்ளலாம். இது உண்ணுவதிலோ பருகுவதிலோ சேராது. ஆனால் ஒன்றைக் கவனத்தில் கொள்ள வேண்டும். நோன்பு நோற்பதினால் உயிருக்கு ஆபத்து, அல்லது உடல்நிலை மோசமாகும் நிலை ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விட்டு நோய் தீர்ந்த பின் வசதியான நாட்களில் விடுபட்ட நோன்புகளை நோற்றுக் கொள்ளலாம். தீராத நோய் உடையவர்கள் ஒவ்வொரு நோன்பிற்குப் பகரமாகவும் ஒரு ஏழைக்கு உணவளிக்க வேண்டும்.

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது?

நோன்பாளியாக இருக்கும் போது மாதவிடாய் ஏற்பட்டால் என்ன செய்வது என்று நேரடியாக ஹதீஸ்களைக் காண முடியவில்லை. ஆனாலும் பொதுவாக மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நோன்பு நோற்பது குறித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் காட்டிய வழிமுறையில் இதற்கான விடையும் அடங்கியுள்ளது. நாங்கள் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் இருந்த காலத்தில் மாதவிடாய் ஏற்பட்டுத் தூய்மை அடைவோம். அப்போது விடுபட்ட நோன்பை களாச் செய்யுமாறு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கட்டளையிடுவார்கள். விடுபட்ட தொழுகைகளை களாச் செய்யுமாறு கட்டளையிட மாட்டார்கள். அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) நூல் : முஸ்லிம் 508 இந்த அடிப்படையில் நோன்பு வைத்திருந்த நிலையில் இடையில் மாதவிடாய் ஏற்பட்டு விட்டால் அத்துடன் நோன்பு முறிந்து விடுகிறது. எனவே அவர் உண்ணலாம்: பருகலாம். ஆனால் மாதவிடாய் நின்ற பிறகு வேறு நாட்களில் விடுபட்ட அந்த நோன்பை நோற்றுக் கொள்ள வேண்டும். இது கடமையான (ரமலான் மாத) நோன்புக்குரிய சட்டமாகும். நபிலான நோன்பாக இருந்தால் அதை வேறு நாட்களில் நோற்பது கட்டாயமில்லை.

நோன்பு வைத்துக் கொண்டு இரத்தம் கொடுக்கலாமா? குளுகோஸ் ஊசி போடலாமா?

நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் காலத்திலும் அதற்கடுத்த கால கட்டங்களிலும் இரத்தத்தை உடலிலிருந்து வெளியேற்றும் வழக்கம் அரபியரிடம் இருந்தது. தலையின் உச்சியில் கண்ணுக்குத் தெரியாத வகையில் துவாரமிட்டு கொம்பு போன்ற கருவியின் மூலம் அதை உறிஞ்சி வெளி யேற்றி வந்தனர். கண்ணாடிக் குவளையைப் பயன்படுத்தியும் இவ்வாறு இரத்தத்தை வெளியேற்றி வந்தனர். இது உடலுக்கு ஆரோக்கியமானது எனவும் நம்பி வந்தனர். நபிகள் நாயகம் (ஸல்) அவாகளின் காலத்தின் இந்த நடைமுறையிலிருந்து வேறு பல சட்டங்களை நாம் அறிந்து கொள்ளலாம்.

இரத்தம் கொடுப்பவரும் எடுப்பவரும் நோன்பை முறித்து விட்டனர் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவாகள் கூறினார்கள். நூல்: அஹ்மத்(16489).

இந்த கருத்தில் இன்னும் பல ஹதீஸ்களும் உள்ளன. ஆனாலும் இஸ்லாத்தின் ஆரம்ப காலத்தில் இந்தச் சட்டம் நடைமுறையிலிருந்து பின்னர் மாற்றப்பட்டு விட்டது..

ஆரம்பத்தில் ஜஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் இரத்தம் கொடுத்துக் கொண்டிருந்த போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவரைக் கடந்து சென்றாகள். இரத்தம் கொடுத்தவரும் எடுத்தவரும் நோன்பை விட்டு விட்டனர் என்று அப்போது கூறினர்கள். இதன் பிறகு நோன்பாளி இரத்தம் கொடுக்க அனுமதி வழங்கினார்கள். நூல்: தாரகுத்னீ (பக்கம்-182பாகம்-2)

உயிர் காக்கும் அவசியத்தை முன்னிட்டு இரத்த தானம் செய்வதால் நோன்பு முறியாது என்பதை நோன்பு நோற்றவர் உடலிலிருந்து இரத்தத்தை வெளியேற்றுவதை ஆதாரமாகக் கொண்டு அறிந்து கொள்ளலாம். நோன்பு நோற்றவர் உடலில் இரத்தம் ஏற்றிக் கொள்ளுதல், குளு கோஸ் ஏற்றிக் கொள்ளுதல், ஊசி மூலம் மருந்துகளை உடலில் ஏற்றிக் கொள்ளுதல் போன்றவற்றுக்கு இதை ஆதாரமாக காட்ட முடியாது. ஏனெனில் இரத்தத்தை வெளியேற்றுவதற்கும் உள்ளே செலுத்துவதற்கும் வித்தியாசம் உள்ளது. வெளியேற்றுவற்கான சான்று உள்ளே செலுத்துவதற்குப் பொருந்தாது. மேலும் குளுகோஸ் ஏற்றும் அளவுக்கு ஒருவரது நிலை இருந்தால் அவர் நோன்பை முறித்துவிட சலுகை பெற்றவராக இருக்கிறார். குளுகோஸ் ஏற்றிக் கொண்டு நோன்பை முறித்து, முறித்த நோன்பை மற்றொரு நாளில் வைத்துக் கொள்ளலாம். குளுகோஸ் ஏற்றும் நிலைமை ஏற்படாமல் உடலுக்குத் தெம்பு ஏற்றும் நோக்கத்தில் குளுகோஸ் ஏற்றப்பட்டால் இது உணவுடைய நிலையில் தான் உள்ளது. உணவு உட்கொள்வதற்குப் பதிலாக குளுகோஸ் ஏற்றிக் கொண்டு உணவு உட்கொண்டது போன்ற சக்தியைப் பெற இயலும். எனவே உண்ணக் கூடாது என்ற தடையை மீறியதாகவே ஆகும். இது போலவே இரத்தம் ஏற்றும் நிலையும் சாதாரண நிலையில் நடப்பது அல்ல. உயி காக்கும் அசாதாரணமான நிலையில் தான் இரத்தம் ஏற்ற வேண்டிய நிலை ஏற்படும். இது போன்ற நிலையை அடைந்தவர் நோன்பை விட்டு விட சலுகை பெற்றுள்ளார். உயிருக்கு ஆபத்து ஏற்படும் என்றால் நோன்பை விட்டு விடுவது இவரைப் பொருத்த வரை கடமையாகவும் ஆகிவிடும். ஊசி மூலம் மருந்து செலுத்தும் அளவுக்கு உடல் நிலை சரியில்லாதவரும் நோன்பை விட்டு விட அனுமதி பெற்றவர் தான். நோயாளியாக இருப்பவர் வேறு நாளில் வைத்துக் கொள்ள இறைவன் தௌவான வழி காட்டியிருக்கும் போது இவர்கள் நோன்பை விட்டு விடுவதே சிறப்பாகும். அப்படியே உடலுக்குள் இவற்றைச் செலுத்தினால் வயிற்றுக்குள் சென்று செயல்படுவதை விட விரைவாக இரத்தத்தில் கலப்பதால் உணவு உட்கொண்டதாகத் தான் இதைக் கருத வேண்டும்

சுப்ஹுக்கு முன் நோன்புக்கான நிய்யத் அவசியமா? சுப்ஹுக்கு முன் தீர்மானிக்காவிட்டால் நோன்பாகாது என்ற ஹதீஸ் பலவீனமானது என்று சிலர் கூறுகிறார்கள். இது சரியா?

நீங்கள் குறிப்பிடும் செய்தி நஸாயீ, திர்மிதீ, தாரமீ, அபூதாவுத், அஹ்மது, பைஹகீ, தாரகுத்னீ ஆகிய நூற்களில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 2292 أَخْبَرَنَا عَبْدُ الْمَلِكِ بْنُ شُعَيْبِ بْنِ اللَّيْثِ بْنِ سَعْدٍ قَالَ حَدَّثَنِي أَبِي عَنْ جَدِّي قَالَ حَدَّثَنِي يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمٍ عَنْ عَبْدِ اللَّهِ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُبَيِّتْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ رواه النسائي

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள் : ஃபஜருக்கு முன்பாக இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது. அறிவிப்பவர் : ஹஃப்ஸா (ரலி) நூல் : நஸாயீ (2292) இந்த ஹதீஸ் பல்வீனமானது என்று சில அறிஞர்கள் கூறி இருந்தாலும் இந்த ஹதீஸ் தொடர்பான ஆய்வில் நடுநிலையோடு ஈடுபட்டால் இது ஆதாரப்பூர்வமான செய்தி என்பதை சந்தேகத்திற்கு இடமின்றி அறிந்து கொள்ளலாம். இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் வரிசை இது தான். இந்தச் செய்தியை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடமிருந்து ஹப்ஸா (ரலி) அறிவிக்கின்றார். ஹப்ஸா (ரலி) அவர்களிடமிருந்து இப்னு உமர் அறிவிக்கின்றார். இப்னு உமர் அவர்களிடமிருந்து சாலிம் அறிவிக்கின்றார். சாலிமிடமிருந்து இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ அறிவிக்கின்றார். இப்னு ஷிஹாபிடமிருந்து அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் அறிவிக்கின்றார். அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து யஹ்யா பின் அய்யூப் அறிவிக்கின்றார். இந்தச் செய்தியை அறிவிக்கும் அறிவிப்பாளர்ளின் நம்பகத்தன்மை குறித்து எந்த அறிஞரும் விமர்சனம் செய்யவில்லை. அறிவிப்பாளர் தொடரில் முறிவும் இல்லை. இந்தச் செய்தி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக சிலர் வழியாகவும் நபித்தோழர்களின் கூற்றாக சிலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இமாம் திர்மிதீ, இமாம் நஸாயீ ஆகிய இருவரும் நபித்தோழரின் கூற்றாக வரும் அறிவிப்பே சரியானது என்று கருத்து கூறியுள்ளனர். இப்னு குஸைமா, இப்னு ஹிப்பான், ஹாகிம், பைஹகீ மற்றும் இப்னு ஹஸ்ம் ஆகியோர் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் அறிவிப்பு சரியானது என்ற கருத்தில் உள்ளனர். இதை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் ஃபத்ஹுல் பாரி என்ற தனது நூலில் குறிப்பிட்டுள்ளார்கள். (பாகம் : 4 பக்கம் : 142) நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக வரும் அறிவிப்பு சரியில்லை என்பதற்கு இமாம் திர்மிதீ அவர்கள் கூறும் காரணம் என்னவென்றால் இந்தச் செய்தியை இப்னு ஹிஷாப், ஸுஹ்ரீ வழியாக அறிவிக்கும் நம்பகமானவர்கள் நபித்தோழரின் கூற்றாகவே அறிவித்துள்ளார்கள். இவர்களுக்கு மாற்றமாக யஹ்யா பின் அய்யூப் என்பவர் மட்டும் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார் என்பது தான்.

 662 حَدَّثَنَا إِسْحَقُ بْنُ مَنْصُورٍ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ عَنْ عَبْدِ اللَّهِ بْنِ أَبِي بَكْرٍ عَنْ ابْنِ شِهَابٍ عَنْ سَالِمِ بْنِ عَبْدِ اللَّهِ عَنْ أَبِيهِ عَنْ حَفْصَةَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ لَمْ يُجْمِعْ الصِّيَامَ قَبْلَ الْفَجْرِ فَلَا صِيَامَ لَهُ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ حَفْصَةَ حَدِيثٌ لَا نَعْرِفُهُ مَرْفُوعًا إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ وَقَدْ رُوِيَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ قَوْلُهُ وَهُوَ أَصَحُّ وَهَكَذَا أَيْضًا رُوِيَ هَذَا الْحَدِيثُ عَنْ الزُّهْرِيِّ مَوْقُوفًا وَلَا نَعْلَمُ أَحَدًا رَفَعَهُ إِلَّا يَحْيَى بْنُ أَيُّوبَ وَإِنَّمَا مَعْنَى هَذَا عِنْدَ أَهْلِ الْعِلْمِ لَا صِيَامَ لِمَنْ لَمْ يُجْمِعْ الصِّيَامَ قَبْلَ طُلُوعِ الْفَجْرِ فِي رَمَضَانَ أَوْ فِي قَضَاءِ رَمَضَانَ أَوْ فِي صِيَامِ نَذْرٍ إِذَا لَمْ يَنْوِهِ مِنْ اللَّيْلِ لَمْ يُجْزِهِ وَأَمَّا صِيَامُ التَّطَوُّعِ فَمُبَاحٌ لَهُ أَنْ يَنْوِيَهُ بَعْدَ مَا أَصْبَحَ وَهُوَ قَوْلُ الشَّافِعِيِّ وَأَحْمَدَ وَإِسْحَقَ رواه الترمذي

இமாம் திர்மிதீ அவர்கள் திர்மிதியில் 662 வது ஹதீஸின் கீழ் இந்த விபரத்தைத் தெரிவித்துள்ளார். இமாம் திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தி நபியின் கூற்றாக ஸுஹ்ரீ வழியாக மட்டுமே வருகிறது என்று நினைத்து இதை மறுக்கின்றார். ஸுஹ்ரீ அல்லாத வேறு நபர்களின் வழியாக இவ்வாறு அறிவிக்கப்பட்டிருந்தால் அதை இமாம் திர்மிதி அவர்கள் மறுத்திருக்க மாட்டார்கள். ஹதீஸ் நூற்களை ஆய்வு செய்தால் இந்தச் செய்தி ஸுஹ்ரீ இடம்பெறாத அறிவிப்பாளர் தொடரின் வழியிலும் நபியின் கூற்றாக வந்திருப்பதை அறியலாம். இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்த ஹதீஸைப் பதிவு செய்துள்ளார்கள்.

 حدثنا أبو بكر أحمد بن محمد بن موسى بن أبي حامد , ثنا روح بن الفرج أبو الزنباع المصري بمكة , ثنا عبد الله بن عباد أبو عباد , ثنا المفضل بن فضالة , حدثني يحيى بن أيوب , عن يحيى بن سعيد , عن عمرة , عن عائشة , عن النبي صلى الله عليه وسلم قال : " من لم يبيت الصيام قبل طلوع الفجر فلا صيام له " . تفرد به عبد الله بن عباد , عن المفضل بهذا الإسناد , وكلهم ثقات  - سنن الدارقطني - كتاب الصيام

சூரியன் உதிப்பதற்கு முன்பு இரவிலேயே யார் (கடமையான) நோன்பு நோற்க நாடவில்லையோ அவருக்கு நோன்பு கிடையாது. அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி) அவர்கள் நூல் : சுனனுத் தாரகுத்னீ (1939) இந்தச் செய்தியை நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஆயிஷா (ரலி) அறிவிக்கின்றார். ஆயிஷா (ரலி) அவர்களிடமிருந்து அம்ரா அறிவிக்கின்றார். அம்ராவிடமிருந்து யஹ்யா பின் சயீத் அறிவிக்கின்றார். இவரிடமிருந்து யஹ்யா பின் அய்யூப் அறிவிக்கின்றார். இந்த வரிசையில் இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ இடம்பெறவில்லை. இந்த அறிவிப்பாளர் தொடரில் இடம்பெற்றுள்ள அனைவரும் நம்பகமானவர்கள் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் இந்தச் செய்தியின் கீழ் உறுதியளிக்கின்றார். எனவே இமாம் திர்மிதீ அவர்களின் விமர்சனத்தை வைத்துக்கொண்டு நபியின் கூற்றாக வரும் அறிவிப்புகள் சரியில்லை என்று கூற முடியாது. மாறாக மேற்கண்ட சரியான அறிவிப்பு உள்ளது. இதை எந்த அறிஞரும் குறை கூறவில்லை. அடுத்து இமாம் நஸாயீ அவர்களின் விமர்சனத்துக்கு வருவோம். யஹ்யா பின் அய்யூபை நபித்தோழரின் கூற்றாக அறிவிக்கும் நபர்களுடன் ஒப்பிட்டால் இவர் அவர்களின் அளவுக்கு உறுதியான மனனத்தன்மை உள்ளவர் இல்லை என்று இமாம் நஸாயீ அவர்கள் கருதியுள்ளார்கள். எனவே நபியின் கூற்றாக வரும் யஹ்யாவின் அறிவிப்பை ஏற்க இயலாது என கூறியுள்ளார்கள்.

أخبرنا أحمد بن حرب الموصلي ، قال : حدثنا سفيان ، عن الزهري ، عن حمزة بن عبد الله ، عن حفصة قالت : " لا صيام لمن لم يجمع الصيام قبل الفجر " قال أبو عبد الرحمن : والصواب عندنا موقوف ، ولم يصح رفعه ، والله أعلم ؛ لأن يحيى بن أيوب ليس بذلك القوي ، وحديث ابن جريج عن الزهري غير محفوظ ، والله أعلم ، أرسله مالك - السنن الكبرى للنسائي - كتاب الصيام الحث على السحور

  திர்மிதீ மற்றும் நஸாயீ ஆகிய இருவரும் இந்தச் செய்தி நபியின் கூற்றாக யஹ்யா பின் அய்யூப் வழியாக மட்டுமே வந்துள்ளது என்று கருதியே இந்த இருவரும் இந்த அறிவிப்பை மறுக்கின்றனர். ஆனால் ஹதீஸ் நூற்களை ஆய்வு செய்தால் யஹ்யா பின் அய்யூப் அல்லாத மற்ற நம்பகமானவர்களும் இதை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்திருப்பதை அறியலாம். அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து லைஸ் பின் சஅத் என்பவரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். லைஸ் பின் சஅத் அனைவராலும் ஏற்றுக் கொள்ளப்பட்ட நம்பகமானவர். இதை இமாம் தப்ரானி அவர்கள் தமது நூலில் பதிவு செய்துள்ளார்கள்.

5836 حدثنا أبو يزيد القراطيسي ، ثنا عبد الله بن عبد الحكم ، أنا الليث بن سعد ، ويحيى بن أيوب ، عن عبد الله بن أبي بكر ، عن ابن شهاب ، عن سالم ، عن أبيه ، عن حفصة ، عن النبي صلى الله عليه وسلم : " من لم يجمع الصيام قبل الفجر فلا صيام له " *- المعجم الكبير للطبراني - باب الياء ذكر أزواج رسول الله صلى الله عليه وسلم منهن

 அப்துல்லாஹ் பின் அபீ பக்ரிடமிருந்து இஸ்ஹாக் பின் ஹாஸிம் என்பாரும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவித்துள்ளார். இதை இமாம் சமர்கன்தீ அவர்கள் அல்ஃபவாயித் என்ற தனது நூலில் பதிவுசெய்துள்ளார்கள்.

ثنا خالد بن مخلد القطواني ، ثنا إسحاق بن حازم ، حدثني عبد الله بن أبي بكر بن عمرو بن حزم ، عن سالم ، عن ابن عمر ، عن حفصة قالت : قال رسول الله صلى الله عليه وسلم : " لا صيام لمن لم يجمع الصيام من الليل " * - الفوائد المنتقاة العوالي الحسان للسمرقندي

எனவே இந்த ஹதீஸை யஹ்யா பின் அய்யூப் மட்டும் அறிவிக்கவில்லை. அவருடன் லைஸ் பின் சஅத், இஸ்ஹாக் பின் ஹாஸிம் ஆகிய நம்பகமானவர்களும் அறிவித்துள்ளனர். மேலும் ஸுஹ்ரீ இடம்பெறாமல் ஆயிஷா (ரலி) அவர்களின் வழியாகவும் சரியான வழியில் இவ்வாறு அறிவிக்கப்பட்டுள்ளது. இந்த விபரங்கள் இமாம் திர்மிதீ அவர்களுக்கும், நஸாயீ அவர்களுக்கும் கிடைக்காத காரணத்தால் தான் நபியின் கூற்றாக வரும் அறிவிப்பை அவ்விருவரும் மறுத்துள்ளனர். இதை அவர்கள் அறிந்திருந்தால் யஹ்யா பின் அய்யூபின் அறிவிப்பை கண்டிப்பாக ஏற்றிருப்பார்கள். இமாம் பைஹகீ அவர்கள் நபியின் கூற்றாகவும் நபித்தோழரின் கூற்றாகவும் வரும் அறிவிப்புக்களை முரண்பட்டதாகக் கருதவில்லை. யஹ்யா பின் அய்யூப் தான் நபியின் கூற்றாக அறிவித்து தவறு செய்துள்ளார் என்று யஹ்யாவின் மீது பழிசுமத்துவோரின் வாதத்தை அவர் ஏற்றுக் கொள்ளவில்லை. மாறாக யஹ்யாவின் ஆசிரியரான அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். இவர் நம்பகமானவர் உறுதியுள்ளவர் என்பதால் இதை ஏற்றுக் கொள்ளலாம் என்ற கருத்தில் இமாம் பைஹகீ அவர்கள் எழுதியுள்ளார்கள். இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸை அஸ்ஸுனனுல் குப்ரா என்ற தனது நூலில் பதிவு செய்துவிட்டு அதன் கீழ் இந்த விபரத்தைத் தெரிவிக்கின்றார்கள்.

‏5836 أخبرنا أبو عبد الله الحافظ ، وأبو سعيد بن أبي عمرو قالا : ثنا أبو العباس محمد بن يعقوب ، أنبأ الربيع بن سليمان ، ثنا عبد الله بن وهب ، حدثني ابن لهيعة ، ويحيى بن أيوب ، عن عبد الله بن أبي بكر بن عمرو بن حزم ، عن ابن شهاب ، عن سالم ، عن أبيه ، عن حفصة زوج النبي صلى الله عليه وسلم ، أن النبي صلى الله عليه وسلم قال : " من لم يجمع الصيام مع الفجر فلا صيام له " كذا قال ، ورواه أحمد بن صالح عن ابن وهب ، فقال : " قبل الفجر " ، وهذا حديث قد اختلف على الزهري في إسناده وفي رفعه إلى النبي صلى الله عليه وسلم ، وعبد الله بن أبي بكر أقام إسناده ورفعه ، وهو من الثقات الأثبات أخبرنا أبو عبد الرحمن السلمي ، أنبأ علي بن عمر الحافظ ، قال : رفعه عبد الله بن أبي بكر وهو من الثقات الرفعاء * - السنن الكبرى للبيهقي - كتاب الصيام باب الدخول في الصوم بالنية

அப்துல்லாஹ் பின் அபீ பக்ர் தான் இந்தச் செய்தியை நபியின் கூற்றாக அறிவித்துள்ளார். அவர் உறுதியானவர். வலிமையானவர். நூல் : அஸ்ஸுனனுல் குப்ரா (5836) எனவே நபியின் கூற்றாக வரும் அறிவிப்பு பலவீனமானது என்ற வாதம் தவறானது. இது பல நம்பகமானவர்களின் வழியாக அறிவிக்கப்படும் ஆதாரப்பூர்வமான செய்தியாகும். நபித்தோழர்களின் கூற்றாக வரும் அறிவிப்புகள் இதற்கு முரணானவை அல்ல. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய கருத்தை நபித்தோழர்களும் கூறியுள்ளார்கள் என்று முரண்பாடில்லாமல் புரிந்து கொள்ளலாம்.

பாலூட்டும் தாய் நோன்பு வைக்க வேண்டுமா கேள்வி பாலூட்டும் தாய்மார்கள் கண்டிப்பாக நோன்பு வைக்க வேண்டுமா?

குழந்தைகளுக்குப் பாலூட்டும் தாய்மார்கள் நோன்பை விட்டு விடுவதற்குச் சலுகை பெற்றுள்ளனர். பாலூட்டும் சமயத்தில் பெண்களுக்கு போதிய உணவு அவசியம் என்பதால் இவர்கள் நோன்பு நோற்பதில் மார்க்கம் சலுகையளிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : பயணத்தில் உள்ளவருக்கு நோன்பையும் தொழுகையில் பாதியையும் இறைவன் தளர்த்தியுள்ளான். மேலும் பாலூட்டும் பெண்ணுக்கும் கர்ப்பிணிக்கும் (நோன்பு நோற்காமல் இருக்க சலுகை வழங்கியுள்ளான்.) நூல் : நஸாயீ (2276)

நோன்பு வைத்துக்கொண்டு குழந்தைக்குப் பாலூட்டினால் தாயும் குழந்தையும் பாதிக்கப்படலாம். எனவே பாலூட்டும் தாய் நோயாளியுடைய நிலையில் இருக்கின்றார். இவர் நோன்பை விட்டுவிட அனுமதியுள்ளது. நோயாளியாகவோ, பயணத்திலோ இருப்பவர் வேறு நாட்களில் கணக்கிட்டுக் கொள்ளலாம். அல்குர்ஆன் 2:184 அதே நேரத்தில் நோயாளி நோய் நீங்கிவிட்டால் விடுபட்ட நோன்பை நோற்பது கடமையாகும். எனவே பாலூட்டும் பெண் தனக்கு வாய்ப்பு கிடைக்கும் போது விடுபட்ட நோன்புகளை நோற்க வேண்டும்.

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூ அய்யூப் அல்அன்ஸாரி (ரலி) நூற்கள்: முஸ்லிம், திர்மிதீ, அபூதாவூத், இப்னுமாஜா, அஹ்மத், பைஹகீயின் சுனன் ஸகீர், தப்ரானியின் முஃஜம் ஸகீர், தாரிமி இன்னும் பல நூல்களிலும் மேற்கண்ட ஹதீஸ் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த ஹதீஸின் அடிப்படையில் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் முஸ்லிம்களிடம் நிலை பெற்றுள்ளது. குறிப்பாக தவ்ஹீத் பிரச்சாரம் தமிழகத்தில் தீவிரமடைந்த பின்னர் ஷவ்வால் மாதம் ஆறு நோன்பு நோற்கும் வழக்கம் அதிகரித்துள்ளது. ஆயினும் ஆறு நோன்பு பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று சில அறிஞர்கள் மக்கள் மத்தியில் பிரச்சாரம் செய்வதால் இந்த ஹதீஸ் பற்றியும் நாம் மறு ஆய்வு செய்யும் அவசியம் ஏற்பட்டது. மேற்கண்ட ஹதீஸை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார்கள். அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) வழியாக உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் பின் ஹாரிஸ் என்பவர் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்பார் அறிவிக்கின்றார். ஸஅத் பின் ஸயீத் பின் கைஸ் என்ற இந்த அறிவிப்பாளர் காரணமாகவே மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்று மாற்றுக் கருத்துடையோர் விமர்சனம் செய்கின்றனர். இவர் பலவீனமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், இப்னு மயீன் ஆகியோர் கூறுகிறார்கள். இவர் பலமானவர் அல்ல என்று நஸயீ கூறுகிறார். இவரது நினைவாற்றல் குறித்து அறிஞர்கள் குறை கூறியுள்ளதாக திர்மிதீ கூறுகிறார். இவரை ஆதாரமாக எடுப்பது கூடாது என்று இப்னு ஹிப்பான் கூறுகிறார். இப்னு அதீ, அஜலீ, இப்னு ஸஅத் ஆகியோர் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். பொதுவாக ஒரு அறிவிப்பாளர் பற்றி முரண்பட்ட இரண்டு அபிப்பிராயங்கள் கூறப்பட்டால் குறை பற்றிய விமர்சனமே முன்னுரிமை அளிக்கப்படும். இந்த அடிப்படையில் மேற்கண்ட ஹதீஸ் முஸ்லிமில் இடம் பெற்றிருந்தாலும் இது பலவீனமான அறிவிப்பு என்பதில் ஐயமில்லை. ஆயினும் ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்பது பற்றிய நம்பகமான வேறு அறிவிப்புகளும் உள்ளன. அவற்றையும் கவனத்தில் கொண்டால் ஆறு நோன்பு நோற்பதற்கு அடிப்படை ஆதாரம் உள்ளது என்பதை அறிந்து கொள்ளலாம். மேற்கண்ட ஹதீஸ் அபூதாவூதின் மற்றொரு அறிவிப்பில், வேறொரு அறிவிப்பாளரால் உறுதிப்படுத்தப்பட்டுள்ளது.

 حَدَّثَنَا النُّفَيْلِيُّ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ مُحَمَّدٍ عَنْ صَفْوَانَ بْنِ سُلَيْمٍ وَسَعْدِ بْنِ سَعِيدٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتٍ الْأَنْصَارِيِّ عَنْ أَبِي أَيُّوبَ صَاحِبِ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ بِسِتٍّ مِنْ شَوَّالٍ فَكَأَنَّمَا صَامَ الدَّهْرَ

அபூதாவூத் 2078, நஸயீ, இப்னு ஹிப்பான் ஆகிய நூற்களில் இடம் பெற்று இந்த அறிவிப்பில், நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியதாக அபூஅய்யூப் அல்அன்ஸாரி (ரலி) அறிவிக்கிறார். அபூஅய்யூப் அல்அன்ஸாரி கூறியதாக உமர் பின் ஸாபித் அறிவிக்கிறார். உமர் பின் ஸாபித் கூறியதாக ஸஅத் பின் ஸயீத் என்பாரும், ஸஃப்வான் பின் ஸுலைம் என்பவரும் அறிவிக்கிறார்கள் என்று மேற்கண்ட ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. அதாவது உமர் பின் ஸாபித் என்பாரிடமிருந்து மேற்கண்ட ஹதீஸை ஸஅத் பின் ஸயீத் மட்டும் செவியுறவில்லை. அவருடன் ஸஃப்வான் என்பாரும் செவியுற்று அறிவிக்கிறார். ஸஅத் என்பாரின் நினைவாற்றல் குறைவு என்றாலும், அவருடன் இணைந்து ஸஃப்வான் அறிவிப்பதால் இந்தக் குறை நீங்கி விடுகின்றது. ஸஃப்வான் பின் ஸுலைம் என்பார் நம்பகமானவர் என்று அஹ்மத் பின் ஹம்பல், அலீ பின் மதீனீ, முஹம்மத் பின் ஸஅத், அஜலீ, அபூஹாத்தம் ராஸீ, நஸயீ மற்றும் பலர் கூறியுள்ளனர். உமர் பின் ஸாபிதும், அவரிடமிருந்து அறிவிக்கும் ஸஃப்வான் ஆகிய இருவரும் நம்பகமானவர்கள் என்றாலும் ஸஃப்வானிடமிருந்து நூலாசிரியர் அபூதாவூத் வரையுள்ள மற்ற அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்கள் தாமா? என்ற சந்தேகம் இந்த இடத்தில் தோன்றலாம். ஸஃப்வான் கூறியதாக அறிவிப்பவர் அப்துல் அஸீஸ் பின் முஹம்மத் ஆவார். இவர் நம்பகமானவர்; ஆதாரமாகக் கொள்ளத் தக்கவர் என்று இப்னு மயீன் கூறுகிறார். இவரிடம் குறை இல்லை என்று நஸயீ கூறுகிறார். மாலிக் இமாம், அஜலீ ஆகியோரும் இவரை நம்பகமானவர் என்று கூறியுள்ளனர். இவர் நம்பகமானவர்; சில நேரம் தவறு செய்து விடுவார் என்று இப்னு ஹிப்பான், இப்னு ஸஅத் ஆகியோர் கூறுகிறார்கள். (நம்பகமான பெரும்பாலான அறிவிப்பாளர் பற்றி, சில நேரம் தவறு செய்து விடுவார் என்று கூறப்படுவதுண்டு) அப்துல் அஸீஸிடமிருந்து இதை அறிவிப்பவர் நுபைலீ என்பார். இவரது இயற்பெயர் அப்துல்லாஹ் பின் முஹம்மத் பின் அலீ. இவர் நம்பகமானவர் என்று நஸயீ கூறுகிறார். இவரை விட நினைவாற்றல் மிக்கவரை நான் கண்டதில்லை என்று அபூதாவூத் கூறுகிறார். இவர் நம்பகமான உறுதியான அறிவிப்பாளர் என்று அபூஹாத்தம் ராஸீ கூறுகிறார். தாரகுத்னீ, இப்னு ஹிப்பான், இப்னு கானிவு ஆகியோர் இவரை நம்பகமானவர் எனக் கூறியுள்ளனர். இவரிடமிருந்து அபூதாவூத் இமாம் கேட்டு, தமது நூலில் இதைப் பதிவு செய்துள்ளனர். எனவே முஸ்லிம் நூலில் உள்ள அறிவிப்பில் குறை இருந்தாலும் அபூதாவூதில் இடம் பெற்ற அறிவிப்பு ஆதாரமாகக் கொள்ளத்தக்க தகுதியில் அமைந்துள்ளது. மேலும் ஷவ்வால் ஆறு நோன்பு பற்றி ஆதாரப்பூர்வமான வேறு செய்திகளும் உள்ளன.

 حَدَّثَنَا يَحْيَى بْنُ حَسَّانَ حَدَّثَنَا يَحْيَى بْنُ حَمْزَةَ حَدَّثَنَا يَحْيَى بْنُ الْحَارِثِ الذِّمَارِيُّ عَنْ أَبِي أَسْمَاءَ الرَّحَبِيِّ عَنْ ثَوْبَانَ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ صِيَامُ شَهْرٍ بِعَشَرَةِ أَشْهُرٍ وَسِتَّةِ أَيَّامٍ بَعْدَهُنَّ بِشَهْرَيْنِ فَذَلِكَ تَمَامُ سَنَةٍ يَعْنِي شَهْرَ رَمَضَانَ وَسِتَّةَ أَيَّامٍ بَعْدَهُ

ஒரு மாத நோன்பு பத்து மாத நோன்புக்குச் சமமானது; அதன் பின்னர் ஆறு நோன்பு இரண்டு மாதங்களுக்குச் சமமானது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: ஸஃப்வான் (ரலி) நூல்: தாரிமி 1690 ஸஃப்வான் வழியாக இதை அம்ர் பின் மிர்ஸத் என்பார் அறிவிக்கிறார். இவர் நம்பகமான அறிவிப்பாளர். அம்ர் பின் மிர்ஸத் வழியாக இதை யஹ்யா பின் ஹாரிஸ் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். யஹ்யா பின் ஹாரிஸ் வழியாக யஹ்யா பின் ஹம்ஸா என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். யஹ்யா பின் ஹம்ஸா வழியாக யஹ்யா பின் ஹஸ்ஸான் என்பார் அறிவிக்கிறார். இவரும் நம்பகமான அறிவிப்பாளர். இதே ஹதீஸ் இப்னுமாஜா 1705, அஹ்மத் 21378 ஆகிய நூற்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. பெருநாள் முடிந்து மறு நாளே நோன்பை ஆரம்பித்து இடைவெளி இல்லாமல் தொடர்ந்து இதை நோற்க வேண்டுமா? அல்லது இம்மாதத்தில் ஏதேனும் ஆறு நாட்களில் விட்டு விட்டு நோற்கலாமா? என்ற கேள்விக்கு இந்த அறிவிப்பில் விடை உள்ளது. அதாவது எல்லா நன்மைகளும் ஒன்றுக்குப் பத்து என்ற அளவில் கணக்கிடப்படுகின்றன. ரமளானில் நோற்ற 30 நோன்புகளும் பத்து மாதத்திற்குச் சமமாகி விடுகின்றது. ஆறு நோன்பு அறுபது நோன்புக்குச் சமமாகி விடுகின்றது. இதனால் வருடம் முழுவதும் நோன்பு நோற்ற நன்மை கிடைக்கிறது என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விளக்கியுள்ளார்கள். ஒன்றுக்குப் பத்து என்ற நன்மையை அடைவது தான் இதன் நோக்கம் எனும் போது ஷவ்வாலில் எந்த ஆறு நாட்களில் நோற்றாலும் இந்த நன்மை கிடைத்து விடும். மேலும் பெரு நாளைக்கு மறு நாள் முதல் தொடர்ந்து ஆறு நாட்கள் பிடிக்க வேண்டும் எனும் போது இந்த நாட்களில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் அந்த நன்மையை இழக்க வேண்டிய நிலைமை ஏற்படுகிறது என்பதையும் நாம் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

ஈமானின் கிளைகள்                                                                                           தொடர் : 4

தூதுத்துவம் இறைவனின் அருட்கொடையே!

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

 

ஒருவர் தனது உழைப்பினாலோ முயற்சியினாலோ நன்னடத்தையினாலோ அற்பணிப்புகளாலோ நல்லவராகிவிடலாம். ஆனால் இறைத்தூதர் என்ற தகுதியை இறைவன் ஒருவருக்கு வழங்குவதாக  இருப்பின் இதுபோன்ற நன்முயற்சியையும் நன்னடத்தையையும் அற்பணிப்புகளையும் கண்கானித்து இறைவன் அவரைத் தூதராக்க மாட்டான். இறைத்தூதராக தேர்ந்தெடுக்கப்பட்ட முஹம்மத் நபிகள் நாயகம் அவர்கள் அவர்களது காலத்தில் நன்றாக உழைத்தார்கள் என்பதினால் அவர்கள் தூதராக்கப்படவில்லை. உதாரணத்திற்கு மூஸா நபி காலத்தில் மூஸா நபிதான் நல்லமல் அதிகம் செய்தார்கள். அதனால்தான் அல்லாஹ் மூஸா அவர்களைத் தூதராக நபியாக தேர்ந்தெடுத்தான் என்று சொல்ல முடியாது. இது போன்று நபிகள் நாயகத்திற்கு முன் தூதராக அனுப்பப்பட்ட எவரையும் அல்லாஹ் அவரது உழைப்பை வைத்துத் தேர்ந்தெடுக்கவில்லை.

அல்லாஹ் எப்போது அவர்களைத் தூதராகத் தேர்ந்தெடுக்கிறானோ அப்போதுதான் அவர்களுக்கு மார்க்கமே தெரிய ஆரம்பிக்கும். எனவே அல்லாஹ் யாரைத் தேர்ந்தெடுக்க வேண்டுமென விரும்புகிறானோ அவருக்கு அல்லாஹ் கொடுத்த அருட்கொடை (கிஃப்ட்)தான் தூதுத்துவமாகும்.

وَإِذَا جَاءَتْهُمْ آيَةٌ قَالُوا لَنْ نُؤْمِنَ حَتَّى نُؤْتَى مِثْلَ مَا أُوتِيَ رُسُلُ اللَّهِ اللَّهُ أَعْلَمُ حَيْثُ يَجْعَلُ رِسَالَتَهُ سَيُصِيبُ الَّذِينَ أَجْرَمُوا صَغَارٌ عِنْدَ اللَّهِ وَعَذَابٌ شَدِيدٌ بِمَا كَانُوا يَمْكُرُونَ(124) سورة الأنعام

அவர்களிடம் ஏதேனும் சான்று வருமானால் "அல்லாஹ்வின் தூதர்களுக்கு வழங்கப்பட்டது போல் எங்களுக்கும் வழங்கப்படும் வரை நம்பிக்கை கொள்ளவே மாட்டோம்'' என்று கூறுகின்றனர். "தனது தூதை எங்கே வைப்பது? (யாரிடம் கொடுப்பது)' என்பதை அல்லாஹ் மிக அறிந்தவன். குற்றம் செய்து கொண்டிருந்தோருக்கு அவர்கள் செய்து வந்த சூழ்ச்சியின் காரணமாக அல்லாஹ்விடமிருந்து சிறுமையும், கடும் வேதனையும் கிடைக்கும். (அல்குர்ஆன் 6:124)

மூஸா நபியையோ அல்லது நபிகள் நாயகத்தையோ விட நன்றாக வேலை செய்கிற ஒரு மனிதர் அவர்கள் காலத்தில் இருந்திருந்தால் கூட அல்லாஹ் நாடவில்லையெனில் அவர்கள் தூதராக ஆகமுடியாது. எனவே அல்லாஹ் யாரைத் தேர்ந்தெடுக்கிறான் என்பது அவனுக்குத்தான் தெரியும். ஏன் தேர்ந்தெடுக்கப்படுகிற தூதருக்கே கூட தான் தூதராகப் போகிறேன் என்கிற செய்தி தெரியாது.

நபித்துவத்தின் வயது வரம்பு  

அதனால்தான் அல்லாஹ் குழந்தையைக் கூட நபியாக்கியிருக்கிறான். ஒருவரது அமலை வைத்துத்தான் நபியாக்க வேண்டுமென்றால், குழந்தை என்ன அமல் செய்திருக்கும்? ஒன்றுமே செய்திருக்காது. ஒன்றுமே செய்யாத குழந்தையை அல்லாஹ் நபியாக்கியதிலிருந்து நபி என்கிற தூதுத்துவம் இறைவனால் கொடுக்கப்படுகிற அருட்கொடை என்பதை புரிந்து கொள்ளமுடிகிறது.

குழந்தைப் பருவத்திலேயே அல்லாஹ் நபியாகத் தேர்ந்தெடுத்தவர் ஈஸா அலை அவர்கள்தாம். ஈஸா அவர்களின் தாயார் மர்யம் அலை அவர்கள், கணவர் இல்லாமல் குழந்தை ஈஸாவைப் பெற்றெடுக்கிறார்கள். ஆனால் அந்த சமூகம் அதை ஏற்றுக் கொள்ள மறுக்கிறது. நாமாக இருந்தாலும் கணவன் இல்லாமல் ஒருபெண் குழந்தையைப் பெற்றெடுத்தால் ஏற்றுக் கொள்ளமாட்டோம். அது கேள்விக்குரியதுதான். ஆனால் அப்படி கணவன் இல்லாமல் பிள்ளையை இறைவன்தான் தந்தான் என்றால், அதற்குரிய இறைச் சான்றைக் காட்ட வேண்டும். அப்படியில்லையெனில் ஒவ்வொரு பெண்ணும் தவறான முறையில் குழந்தையைப் பெற்றெடுத்துவிட்டு இது இறைவன் தந்தது என்று தப்பித்துக் கொள்ள முடியும். இப்படி அந்த சமூகம் மர்யம் அலை அவர்களிடத்தில் கேள்வி கேட்ட போது அவர்கள், இந்தக் குழந்தையிடமே அந்தக் கேள்வியைக் கேட்டுக் கொள்ளுங்கள் அது உங்களுக்கு உரிய பதிலைத் தரும் என்று குழந்தையைப் பார்த்து கைகாட்டுகிறார்கள்.

فَأَشَارَتْ إِلَيْهِ قَالُوا كَيْفَ نُكَلِّمُ مَنْ كَانَ فِي الْمَهْدِ صَبِيًّا(29)قَالَ إِنِّي عَبْدُ اللَّهِ آتَانِي الْكِتَابَ وَجَعَلَنِي نَبِيًّا(30)وَجَعَلَنِي مُبَارَكًا أَيْنَ مَا كُنتُ ýوَأَوْصَانِي بِالصَّلَاةِ وَالزَّكَاةِ مَا دُمْتُ حَيًّا(31)وَبَرًّا بِوَالِدَتِي وَلَمْ يَجْعَلْنِي جَبَّارًا شَقِيًّا(32)وَالسَّلَامُ عَلَيَّ يَوْمَ وُلِدْتُ وَيَوْمَ أَمُوتُ وَيَوْمَ أُبْعَثُ حَيًّا(33) سورة مريم

அவர் குழந்தையைச் சுட்டிக் காட்டினார்! "தொட்டிலில் உள்ள குழந்தையிடம் எவ்வாறு பேசுவோம்?'' என்று அவர்கள் கேட்டார்கள்.

உடனே அவர் (அக்குழந்தை), "நான் அல்லாஹ்வின் அடியான். எனக்கு அவன் வேதத்தை அளித்தான். என்னை நபியாக்கினான்.

நான் எங்கே இருந்த போதும் பாக்கியம் பொருந்தியவனாகவும் ஆக்கினான். நான் உயிருடன் இருந்து, என் தாயாருக்கு நன்மை செய்பவனாகவும், இருக்கும் காலமெல்லாம் தொழுமாறும், ஸகாத் கொடுக்குமாறும் எனக்குக் கட்டளையிட்டான். என்னை துர்பாக்கியசாலியாகவும், அடக்குமுறை செய்பவனாகவும் அவன் ஆக்கவில்லை.

நான் பிறந்த நாளிலும், நான் மரணிக்கும் நாளிலும், நான் உயிருடன் எழுப்பப்படும் நாளிலும் என் மீது ஸலாம் இருக்கிறது'' (என்றார்) (அல்குர்ஆன் 19:29,..33)

பிறந்த உடனே எந்தக் குழந்தையும் பேசாது. அதனால்தான் நம்ப முடியாத நிகழ்ச்சியான குழந்தை பேசும் அற்புதத்தை அல்லாஹ் நிகழ்த்த வைக்கிறான். இன்னும் சொல்ல வேண்டுமெனில் ஈஸா அலை அவர்கள் பேசக் காரணம், தனது ஆற்றலைக் காட்டுவதற்காக அல்ல. தனது தாயார் தவறான முறையில் பிள்ளை பெற்றெடுத்தவர்கள் கிடையாது என்பதற்காகத்தான் அல்லாஹ் பேசவைத்தான்.

எனவே அல்லாஹ் நினைத்தால் 50 வயதிலும் ஒருவரைத் தூதராகத் தேர்ந்தெடுப்பான். அல்லாஹ் நினைத்தால் குழந்தைப் பருவத்திலும் தூதரைத் தேர்ந்தெடுப்பான். அவன் எப்போது எந்த வயதில் யாரைத் தூதராக தேர்ந்தெடுப்பது என்பதையெல்லாம் இறைவன்தான் முடிவுசெய்வான்.

ஆனால் சிலர் நபி என்றாலேயே நாற்பது வயதில்தான் தேர்ந்தெடுக்கப்படுவார்கள் என்றெல்லாம் கதை சொல்லிக் கொண்டிருப்பார்கள். நாற்பதற்கு முன்னால் எந்த மனிதனும் பக்குவம் பெறமாட்டான் என்று இவர்களாகவே கற்பனை செய்து கொள்வார்கள். முஹம்மது அவர்கள் நாற்பது வயதில் இறைவனால் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரம் இருக்கிறது. அதற்காக எல்லா நபிமார்களுமே நாற்பது வயதில்தான் தூதராக்கப்பட்டார்கள் என்று வாதிடுவது ஆதாரமற்றது. அர்த்தமற்றது. அப்படியெனில் ஆதம் அலை அவர்கள் எத்தனை வயதில் நபியானார்கள். அவர்களை அனுப்பும் போதே நபியாகத்தான் அனுப்பினான். அவரைப் படைக்கும் போது அவர்களுக்கு எத்தனை வயது. படைக்கும் போதே பெரிய மனிதனாகத்தான் படைத்தான். குழந்தையாக இருந்து வளர்ந்து வரவில்லை. அவரும் அல்லாஹ்வுடைய நபிதான். அப்படியெனில் நாற்பது வருடங்கள் எந்த வழிகாட்டுதலும் இல்லாமல் அப்படியே விட்டுவிட்டான் என்றெல்லாம் சொல்லுவது தவறாகும்.

எனவே முஹம்மது நபியை நாற்பது வயதில் தேர்ந்தெடுத்தான். இன்னும் சிலரை 50 வயதிலும், இன்னும் சிலரை 30 லும் இன்னும் சிலரை 20 லும் கூட தேர்ந்தெடுக்கப் பட்டிருக்கலாம். இறைவன் எந்த வயதில் தூதராக தேர்ந்தெடுக்கப்பட வேண்டுமென நினைக்கிறானோ அந்த வயதில் தூதராக்ககப்படுவார்கள். ஒவ்வொரு நபியும் இந்த வயதில்தான் தூதராகத் தேர்ந்தெடுக்கப்பட்டார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான எந்த பதிவுகளும் இஸ்லாத்தில் இல்லை.

மேலும் குழந்தையாக இருந்த யஹ்யா அலை அவர்களுக்கும் அல்லாஹ் தூதுத்துவத்தைக் கொடுத்து நபியாக்கியதாக அல்லாஹ் இதே மர்யம் அத்தியாயத்தில்தான் சொல்லுகிறான்.

يَايَحْيَى خُذْ الْكِتَابَ بِقُوَّةٍ وَآتَيْنَاهُ الْحُكْمَ صَبِيًّا(12) سورة مريم

யஹ்யாவே! இவ்வேதத்தைப் பலமாகப் பிடித்துக் கொள்வீராக! (என்று கூறினோம்) சிறுவராக இருக்கும் போதே அவருக்கு அதிகாரத்தை அளித்தோம். (அல்குர்ஆன் 19:12)

எனவே நபி என்கிற தகுதியை தனது முயற்சியால் யாரும் அடைய முடியாது. அதே போன்று எந்த வயதிலும் இறைவன் அந்தத் தகுதியை தான் நாடியோருக்குக் கொடுப்பான் என்பதையும் இந்த செய்திகளின் மூலம் நம்பவேண்டும். அதே நேரத்தில் தேர்ந்தெடுக்கப்பட்ட பிறகு தனக்குக் கொடுத்த பொறுப்பில் குறை வைக்கமாட்டார்கள். மிகச் சரியாக செய்துவிடுவார்கள் என்று நம்பவேண்டும்.

ஜின்களிலும் தூதர்கள்

நபிமார்களை நம்புவதில் இன்னொரு கூடுதலான நம்பிக்கையொன்று உள்ளது. மனிதர்கள் என்கிற படைப்புக்கள் இருப்பதைப் போன்று, நெருப்பினால் படைக்கப்பட்ட ஜின்கள் என்று ஒரு படைப்பு உள்ளது. மனிதனைப் போன்று என்றதும் தோற்றத்தில் நம்மைப் போன்று ஜின்கள் இருப்பார்கள் என நம்பிவிடக்கூடாது. சட்டதிட்டங்களுக்குக் கட்டுபடுவதில் அதாவது பகுத்தறிவில் மனிதனைப் போன்று ஜின்களும் இருப்பார்கள். பகுத்தறிவு என்றால், இது நல்லது; இது கெட்டது என்று புரிந்து நடப்போம். நினைத்தால் செய்வோம், நினைத்தால் விட்டுவிடுவோம். இப்படி ஒன்றைப் புரிந்து கொள்ளுகிற சக்தி மனிதனுக்கும் ஜின்னுக்கும் மட்டும்தான் அல்லாஹ் கொடுத்திருக்கிறான்.

அப்படியெனில் ஜின்களுக்கும் சுவர்க்கம் நரகம் என்பது உண்டு, ஜின்களுக்கும் கேள்வி கணக்குகள் மறுமையில் உண்டு, ஜின்களுக்கும் கடமைகள் உண்டு. அந்தக் கடமையை ஜின்களுக்கு ஜின்களிலிருந்தே தூதர்கள் இறைவனால் அனுப்பப்பட்டு எடுத்துச் சொல்லப்படுவதாக குர்ஆன் நமக்குச் சொல்லுகிறது. மனிதர்களுக்கு மனிதர்களிலிருந்து எப்படி தூதர்களாக அனுப்பப்பட்டார்களோ அதுபோன்றுதான் ஜின்களுக்கும் ஜின்களிலேயே தூதர்கள் அனுப்பப்படுவார்கள்.

يَامَعْشَرَ الْجِنِّ وَالْإِنسِ أَلَمْ يَأْتِكُمْ رُسُلٌ مِنْكُمْ يَقُصُّونَ عَلَيْكُمْ آيَاتِي وَيُنذِرُونَكُمْ لِقَاءَ يَوْمِكُمْ هَذَا قَالُوا شَهِدْنَا عَلَى أَنفُسِنَا وَغَرَّتْهُمْ الْحَيَاةُ الدُّنْيَا وَشَهِدُوا عَلَى أَنفُسِهِمْ أَنَّهُمْ كَانُوا كَافِرِينَ(130) سورة الأنعام

ஜின் மற்றும் மனித சமுதாயமே! "உங்களுக்கு என் வசனங்களை எடுத்துக் கூறி இந்த நாளை நீங்கள் சந்திக்கவிருப்பதை உங்களுக்கு எச்சரிக்கை செய்யும் தூதர்கள் உங்களில் இருந்து உங்களிடம் வரவில்லையா?'' (என்று இறைவன் கேட்பான்). "எங்களுக்கு எதிராக நாங்களே சாட்சி கூறுகிறோம்'' என்று அவர்கள் கூறுவார்கள். இவ்வுலக வாழ்வு அவர்களை மயக்கிவிட்டது. (ஏக இறைவனை) மறுத்தோராக இருந்தோம் எனத் தங்களுக்கு எதிராக அவர்கள் சாட்சியமளிப்பார்கள். (அல்குர்ஆன் 6:130)

இந்த வசனத்தில் உங்களிலிருந்தே உங்களிடம் ஒரு தூதர்கள் வரவில்லையா? என்று மனிதனைப் பார்த்தும், ஜின்களைப் பார்த்தும் இறைவன் கேட்பதாக இவ்வசனம் கூறுவதிலிருந்தே, மனிதனுக்கு மனிதனும் ஜின்களுக்கு ஜின்களும் தூதராக அனுப்பப்பட்டார்கள் என்பதை நம்பவேண்டும்.

ஆனால் நபிகள் நாயகத்திற்கு முன்னால்தான் இந்த நிலை. நபிகள் நாயகம் கடைசித் தூதராக இருப்பதினால் என்னவோ, நபிகள் நாயகம் மனித மற்றும் ஜின் ஆகிய இரண்டு இனத்திற்காகவும் தூதராக அனுப்பப்பட்டுள்ளார்கள். நபிகள் நாயகத்திற்கு முன்னால் வரைக்கும் மனிதனுக்கு மனிதன் என்றும் ஜின்களுக்கு ஜின்கள் என்றும் அனுப்பப்பட்டுக் கொண்டிருந்தது நிறுத்தப்பட்டுவிட்டது.

எனவே மனிதன் மற்றும் ஜின்களுக்கும் முழு உலகத்திற்கும் அகிலங்கள் அனைத்திற்கும் இறுதித் தூதர் முஹம்மது நபிகள் நாயகம் என்பதை நம்பவேண்டும்.

قُلْ أُوحِيَ إِلَيَّ أَنَّهُ اسْتَمَعَ نَفَرٌ مِنْ الْجِنِّ فَقَالُوا إِنَّا سَمِعْنَا قُرْآنًا عَجَبًا(1)يَهْدِي إِلَى الرُّشْدِ فَآمَنَّا بِهِ وَلَنْ نُشْرِكَ بِرَبِّنَا أَحَدًا(2) سورة الجن

ஜின்களில் ஒரு கூட்டத்தார் செவியுற்று "நாங்கள் ஆச்சரியமான குர்ஆனைச் செவியுற்றோம்' எனக் கூறியதாக எனக்கு அறிவிக்கப்பட்டது'' என (முஹம்மதே!) கூறுவீராக! அது நேர்வழியைக் காட்டுகிறது. எனவே அதை நம்பினோம். எங்கள் இறைவனுக்கு எவரையும் இணையாக்கமாட்டோம். (அல்குர்ஆன் 72:1,2)

எனவே நபிகள் நாயகத்திற்கு முன்னால் அனுப்பப்பட்ட தூதர்களில் ஜின் இனத்திலுள்ளவர்களுக்கு தனியான ஒரு நபியும், மனித இனத்திலுள்ளவர்களுக்கு மனிதர்களில் ஒரு நபியையும் அனுப்பியிருப்பான் என்றும் நம்பவேண்டும்.

தூதர்களுக்கு மத்தியில் ஏற்றத்தாழ்வு இல்லை

தூதர்களில் ஒருவரையொருவர் நாம் மட்டம் தட்டிவிடக் கூடாது. அப்படி ஒருவரையொருவர் தாழ்த்தி உயர்த்தி பேசுவது பெருங்குற்றமாகும். ஆனால் பொதுவாக முஸ்லிம்களிடத்தில் முஹம்மது நபியின் மீதுள்ள அன்பின் வெளிப்பாட்டால் மற்ற நபிமார்களுடன் ஒப்பிட்டு மட்டம்தட்டுகிற பழக்கம் நடைமுறையில் இருக்கிறது. உலமாக்கள் பயான்களில் மூஸா நபியவர்களின் சம்பவத்தைச் சொல்லிக் காட்டி, மூஸா நபியிடத்தில் முஹம்மது நபி இருந்தால் நடப்பதே வேறு என்றெல்லாம் பேசுகிறார்கள்.

آمَنَ الرَّسُولُ بِمَا أُنزِلَ إِلَيْهِ مِنْ رَبِّهِ وَالْمُؤْمِنُونَ كُلٌّ آمَنَ بِاللَّهِ وَمَلَائِكَتِهِ وَكُتُبِهِ وَرُسُلِهِ لَا نُفَرِّقُ بَيْنَ أَحَدٍ مِنْ رُسُلِهِ وَقَالُوا سَمِعْنَا وَأَطَعْنَا غُفْرَانَكَ رَبَّنَا وَإِلَيْكَ الْمَصِيرُ(285) سورة البقرة

இத்தூதர் (முஹம்மத்) தமது இறைவனிடமிருந்து தமக்கு அருளப்பட்டதை நம்பினார். நம்பிக்கை கொண்டோரும் (இதை நம்பினார்கள்). அல்லாஹ்வையும், வானவர்களையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் அனைவரும் நம்பினார்கள். "அவனது தூதர்களில் எவருக்கிடையேயும் பாரபட்சம் காட்டமாட்டோம்; செவியுற்றோம்; கட்டுப்பட்டோம். எங்கள் இறைவா! உனது மன்னிப்பை (வேண்டுகிறோம்.) உன்னிடமே (எங்கள்) திரும்புதல் உண்டு எனக் கூறுகின்றனர். (அல்குர்ஆன் 2:285)

உண்மை முஃமின்களின் நம்பிக்கை என்னவெனில், எந்தத் தூதர்களுக்கும் மத்தியில் பாரபட்சமோ பேதங்களோ கற்பிக்காமல் நம்புவார்கள். ஸஹாபாக்கள் அப்படித்தான் நம்பினார்கள். அதாவது மூஸா ஈஸா நபிமார்களும் அவர்களுக்கு முன்னுள்ளவர்களும் ஒரு சிறிய குறுகிய நிலப்பரப்பிற்கோ மொழியினருக்கோதான் தூதர்களாக அனுப்பப்பட்டார்கள். ஆனால் முஹம்மது நபியவர்கள் முழு உலகத்திற்கும் தூதர் என்பதில் உண்மையில் வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. இருந்தாலும் முஹம்மது நபியிடத்தில் ஈஸா நபியை அல்லாஹ் தேர்ந்தெடுத்திருந்தால் முஹம்மது எந்தப் பணியை எப்படி செய்தார்களோ அதே போன்று ஈஸா நபியும் அந்தப் பணியை அப்படியே செய்திருப்பார்கள் என்று நம்பவேண்டும். ஈஸா நபி ஒரு குறுகிய வட்டத்திற்கு தூதராக ஆக வேண்டும் என்று அவர்களாகவே தீர்மானிக்கவில்லை. அதேபோன்றுதான் முஹம்மது நபி இறுதியாகவும் அனைத்துலகிற்கும் தூதராக ஆக வேண்டும் என்று அவர்களாகவே தீர்மானித்துக் கொண்டதில்லை என்று சமாமாகப் புரிந்து கொள்ளவேண்டும்.

அதாவது எந்த ரசூலும் அல்லாஹ் அவர்களுக்குக் கொடுத்த பணியை செய்துவிட்டுச் சென்றார்களே தவிர அவரவர்களாகவே எதையும் தீர்மானித்துக் கொள்ளவில்லை. எனவே எந்த நபியுடைய உழைப்பிலும் நாணயத்திலும் மனத்தூய்மையிலும் இறைவனைத் தவிர யாருக்கும் அஞ்சாத தன்மையில் ஒருவரையும் நாம் குறைசொல்லவே கூடாது. உதாரணத்திற்கு நூஹ் நபி 950 வருடங்கள் இருந்தார்கள் எனில் அல்லாஹ் 950 வருடங்கள் வாழவைத்ததினால் இருந்தார்கள். அதே இடத்தில் அல்லாஹ் முஹம்மது நபிகள் நாயகத்தை வாழவைத்திருந்தால் அவர்களும் 950 வருடங்கள் இருக்கத்தான் செய்திருப்பார்கள்.

இதை புரிந்து கொள்வதாக இருப்பின், நம்மிடம் பத்து கடைகள் இருக்கிறதென வைத்துக் கொள்வோம். ஒருவரை ஜவுளிக் கடைக்குப் பொறுப்பாளியாக்குகிறோம். இன்னொருவரை வெற்றிலைக் கடைக்குப் பொறுப்பாளியாக்குகிறோம். இவர்களிருவரின் நாணயத்தையும், அவரவர் பொறுப்புக்குத் தகுந்தமாதிரி பாராட்டலாம். அப்படியே இருவரையும் மாற்றி வெற்றிலைக் கடைக்குரியவரை ஜவுளி கடைக்கும் ஜவுளி கடையிலுள்ளவரை வெற்றிலைக் கடைக்கு மாற்றினாலும் இருவரும் சமமாகத்தான் பொறுப்புக்களைப் பார்ப்பார்கள். எனவே இதில் தனிநபருக்குள்ள எந்தத் திறமையும் கிடையாது என்று நம்பவேண்டும். இதுபோன்று அல்லாஹ் எந்த நபிக்கு எந்தப் பொறுப்பு கொடுத்தானோ அதை அப்படியே நம்பவேண்டும். அதில் எந்த பாரபட்சமும் நாம் காட்டவே கூடாது.

நபிகள் நாயகம் காலத்தில், யூதர் ஒருவர் உலகத்திலேயே சிறந்தவர் மூஸா நபிதான் என்றும், முஸ்லிம் ஒருவர் உலகத்திலேயே சிறந்தவர் முஹம்மது நபிதான் என்றும் வாய்ச் சண்டையிட்டுக் கொண்டனர். சண்டை முற்றிப்போய் முஸ்லிமாக இருந்தவர் யூதரை அடித்துவிடுகிறார். பிரச்சனை நபிகள் நாயகத்திடம் வந்துவிடுகிறது. அப்போது நபியவர்கள் முஸ்லிமானவரைக் கண்டித்துவிட்டு, மூஸாவை விட என்னை சிறப்பிக்காதீர்கள் என்று நபியவர்கள் கூறினார்கள். அதாவது மூஸா நபி அவர்களது பணியை சரியாகச் செய்தார்கள். நான் எனது பணியைச் சரியாகச் செய்து கொண்டு இருக்கிறேன் அவ்வுளதான் என்றார்கள். அதன் பிறகு மூஸா நபியுடைய ஒரு சிறப்பையும் சொல்லிக் காட்டுகிறார்கள்.

ஒரு முஸ்-மும் ஒரு யூதரும் ஒருவரையொருவர் திட்டிக் கொண்டனர். அந்த முஸ்-ம், "உலகத்தார்  அனைவரை விடவும் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு மேன்மையை அüத்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அந்த யூதர், "உலகத்தார் அனைவரை விடவும் மூசாவுக்கு மேன்மையை அüத்தவன் மீது சத்தியமாக!'' என்று கூறினார். அதைக் கேட்டு (கோபம் கொண்டு)  அந்த முஸ்-ம் தன் கையை ஓங்கி யூதரின் முகத்தில் அறைந்துவிட்டார். அந்த யூதர், நபி (ஸல்) அவர்கüடம் சென்று தனக்கும் அந்த முஸ்-முக்கும் இடையே நடந்த(சச்சர)வையெல்லாம் தெரிவித்தார். நபி (ஸல்) அவர்கள் அந்த முஸ்-மை அழைத்து வரச்சொல்- அது பற்றி அவரிடம் கேட்டார்கள். அவர் விபரத்தைக் கூறினார். (நடந்தவை அனைத்தையும் விசாரித்துத் தெரிந்து கொண்ட பின்) நபி (ஸல்) அவர்கள், "மூசாவை விட என்னைச் சிறப்பாக்கி (முத-டம் தந்து உயர்த்தி) விடாதீர்கள். ஏனெனில், மக்கள் அனைவரும் மறுமை நாüல் மூர்ச்சையாகிவிடுவார்கள். நானும் அவர்களுடன் மூர்ச்சையாகிவிடுவேன். நான் தான் முதலாவதாக மயக்கம் தெüந்து  எழுவேன். அப்போது, மூசா (அலை), (அல்லாஹ்வுடைய) அர்ஷின் ஓரத்தைப் பிடித்துக் கொண்டிருப்பார். மக்களோடு சேர்ந்து அவரும் மூர்ச்சையாகி, பிறகு எனக்கு முன்பாகவே மயக்கம் தெüந்து விட்டிருப்பாரா, அல்லது அல்லாஹ் அவருக்கு மட்டும் (மூர்ச்சையடையத் தேவையில்லையென்று) விதி விலக்கு அüத்திருப்பானா என்று எனக்குத் தெரியாது'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-), புகாரி 2411,2412,3408,3414,6517,7472

நான் யூனுஸ் பின் மத்தாவை விடச் சிறந்தவன் என்று (என்னைப் பற்றி) கூறுவது எந்த மனிதருக்கும் தகாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். ("யூனுஸ் பின் மத்தா-மத்தாவின் மகன் யூனுஸ்'என்று) யூனுஸ் (அலை) அவர்களை அவர்களுடைய தந்தையுடன் இணைத்து நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-), புகாரி 3413,3415,3416

எனவே முஸ்லிம்களாகிய நாம் நமது பேச்சுவழக்குகளில் கூட எந்த நபியையும் எந்த நபியோடும் ஒப்பிட்டு பேசுவது கூடாது. சில நேரங்களில் கிறித்தவர்களுடன் விவாதம் செய்கிற நிலை ஏற்படலாம். கிறித்தவர்களுடன் விவாதம் செய்வதினால் ஈஸா நபியின் மதிப்பையும் மரியாதையையும் குறைத்துவிடக்கூடாது. அவர்களின் தகுதியை அப்படியே நம்பவேண்டும். ஈஸா நபியின் பெயரால் சொல்லப்பட்ட கட்டுகதைகளையும் பொய்களையும் விமர்சிக்கலாமே தவிர ஈஸா நபியைக் குறைபேசிவிடக் கூடாது. முஹம்மது நபியின் மீது நமக்கு என்ன மதிப்பு மரியாதை இருக்குமோ அதே அளவுக்கு ஈஸா நபியின் மீதும் மதிப்பு வைக்கவேண்டும்.

அதாவது நாமாக ஒருவரையொருவர் ஒப்பிட்டு பேசத் தடையிருக்கிறது. அதே நேரத்தில் ஒவ்வொரு நபிக்கும் ஒரு சிறப்பு இருக்கத்தான் செய்கிறது. அல்லாஹ்வே ஒவ்வொரு நபிக்கும் ஒரு சிறப்பை கொடுத்திருக்கத்தான் செய்கிறான். அப்படி அல்லாஹ் எதில் சொல்லியிருக்கிறானோ அதில் மட்டும் நாம் சிறப்பித்துக் கூறினால் குற்றமாகாது.

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ ..(253) سورة البقرة

இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம். தூதர்களுக்குப் பின் வந்தோர் தம்மிடம் தெளிவான சான்றுகள் வந்த பின்பும் அல்லாஹ் நாடியிருந்தால் சண்டையிட்டிருக்கமாட்டார்கள். என்றாலும் அவர்கள் முரண்பட்டனர். அவர்களில் நம்பிக்கை கொண்டோரும் உள்ளனர். (ஏக இறைவனை) மறுப்போரும் உள்ளனர். அல்லாஹ் நாடியிருந்தால் அவர்கள் சண்டையிட்டிருக்கமாட்டார்கள். எனினும் அல்லாஹ், தான் விரும்புவதைச் செய்வான். (அல்குர்ஆன் 2:253)

தூதர்களில் சிலரை விட சிலரை சிறப்பித்திருப்பதாக அல்லாஹ் சொல்லிவிட்டு, அதற்கு ஒரு சில சான்றுகளையும் தெளிவுபடுத்துகிறான். அல்லாஹ் மூஸா நபியிடத்தில்தான் பேசியதாக சொல்கிறான். மற்ற நபிமார்களிடத்தில் பேசியதாக இல்லை. அந்தச் சிறப்பை அல்லாஹ் அவருக்குக் கொடுத்திருக்கிறான் என்று சொல்லலாம். இப்படிச் சொல்வதினால் நாம் குற்றம் பிடிக்கப்பட மாட்டோம். அதே போன்று ஈஸா நபி தகப்பனில்லாமல் பிறந்தார் என்கிற சிறப்பைச் சொல்லலாம். அதனால் அவர் எல்லாரையும் விட சிறந்தவர் என்று சொல்லக் கூடாது.

இதனைப் புரிந்து கொள்வதற்கு நமக்கிடையேயுள்ள சிறப்புகளைக் கூட உதாரணமாகச் சொல்லலாம். நம்மில் ஒருவருக்கு அறிவு அதிகமாக இருக்கும். ஒருவருக்கு உடல் வலிமை அதிமாக இருக்கும். ஒருவரிடத்தில் காசு பணங்கள் கூடுதலாக இருக்கும். ஒருவர் நற்குணங்களில் கூடுதலானவராக இருப்பார். எனவே அந்தந்த வகையில் கூடுதலாக இருப்பார் என்று சொல்ல வேண்டுமே தவிர, காசு பணம் கூடுதலாக இருப்பதினால் இவர்தான் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்று சொல்லிவிடக் கூடாது. அறிவு கூடுதலாக இருப்பதினால் இவர்தான் எல்லாவற்றிலும் சிறந்தவர் என்று சொல்லக் கூடாது. வேண்டுமானால் எல்லாரையும் விட கூடுதலாக அவரிடம் அறிவு இருக்கிறது என்று சொல்லலாம். இப்படிச் சொல்வதை பாரபட்சம் காட்டியதாக எடுத்துக் கொள்ளக்கூடாது. அதுபோன்றுதான் அல்லாஹ்வும் தூதர்களில் சிலரை விட சிலரை சிறப்பித்திருப்பதாகச் சொல்லிக் காட்டுகிறான்

தூதர்களில் சிலரின் தகுதிகளை உயர்த்தியிருப்பதாகவும் சொல்கிறான். சிலபேருக்கு அல்லாஹ் கொடுக்கிற பரிசில் உயர்த்திக் கொடுப்பான். சிலரை பணியின் மூலம் உயர்த்துவிடுகிறான். சிலருக்கு மறுமையில் தகுதியை உயர்த்துகிறான். மறுமை நாளில் உலகிலுள்ள அனைவரையும் ஒரே மாதிரி எழுப்பும் போது, முஹம்மது நபிகளாரை மட்டும் புகழுக்குரிய இடத்தில் எழுப்புவதாக அல்லாஹ் கூறுகிறான்.

.. عَسَى أَنْ يَبْعَثَكَ رَبُّكَ مَقَامًا مَحْمُودًا(79) سورة الإسراء

... (முஹம்மதே!) புகழப்பட்ட இடத்தில் உமது இறைவன் உம்மை எழுப்பக்கூடும். (அல்குர்ஆன் 17:79)

இது முஹம்மது நபிக்குரிய சிறப்பாகும். அதேபோன்று இப்ராஹீம் நபிக்குக் கொடுத்த சிறப்பை மற்றவர்களுக்குக் கொடுக்கவில்லை. நமது தொழுகையில் அத்தஹிய்யாத் இருப்பில் அமரும் பொழுது, இப்ராஹீம் நபிக்கு அருள் செய்ததைப் போன்று எங்கள் முஹம்மது நபிக்கும் அருள் புரிவாயாக என்று கேட்டுகிறோம். அப்படியெனில் இப்ராஹீம் நபிக்குத்தான் அருள் கூடுதலாக இருக்கிறது.

மேலும் சொல்வதாக இருப்பின் இப்ராஹீம் நபியவகளின் குடும்பத்தையே அல்லாஹ் நல்லவர்களாகத் தேர்வு செய்துவிட்டான். அவர்கள் செய்த காரியங்களையெல்லாம் அல்லாஹ் நமக்கு வணக்கமாக ஆக்கிவிட்டான். இப்ராஹீம் நபியவர்களை நண்பராகத் தேர்ந்தெடுத்துக் கொண்டாதாகக் குர்ஆனில் பிரகடணப்படுத்துகிறான்.

تِلْكَ الرُّسُلُ فَضَّلْنَا بَعْضَهُمْ عَلَى بَعْضٍ مِنْهُمْ مَنْ كَلَّمَ اللَّهُ وَرَفَعَ بَعْضَهُمْ دَرَجَاتٍ وَآتَيْنَا عِيسَى ابْنَ مَرْيَمَ الْبَيِّنَاتِ وَأَيَّدْنَاهُ بِرُوحِ الْقُدُسِ .. (253) سورة البقرة

இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம். (அல்குர்ஆன் 2:253)

மர்யமுடைய மகன் ஈஸா அலை அவர்களுக்கு ஏராளமான சான்றுகளைக் கொடுத்ததாக அல்லாஹ் கூறுகிறான். அவர் பிறந்ததிலிருந்து இறந்தவரை உயிர்பிக்கும் வரையிலான அனைத்துச் சான்றுகளையும் குறிக்கும்.

وَرَسُولًا إِلَى بَنِي إِسْرَائِيلَ أَنِّي قَدْ جِئْتُكُمْ بِآيَةٍ مِنْ رَبِّكُمْ أَنِّي أَخْلُقُ لَكُمْ مِنْ الطِّينِ كَهَيْئَةِ الطَّيْرِ فَأَنفُخُ فِيهِ فَيَكُونُ طَيْرًا بِإِذْنِ اللَّهِ وَأُبْرِئُ الْأَكْمَهَ وَالْأَبْرَصَ وَأُحْيِ الْمَوْتَى بِإِذْنِ اللَّهِ وَأُنَبِّئُكُمْ بِمَا تَأْكُلُونَ وَمَا تَدَّخِرُونَ فِي بُيُوتِكُمْ إِنَّ فِي ذَلِكَ لَآيَةً لَكُمْ إِنْ كُنْتُمْ مُؤْمِنينَ(49) سورة آل عمران

இஸ்ராயீலின் மக்களுக்குத் தூதராகவும் (அவரை அனுப்பினான்.) "உங்கள் இறைவனிடமிருந்து சான்றை நான் கொண்டு வந்துள்ளேன். உங்களுக்காக களி மண்ணால் பறவையின் வடிவம் அமைத்து, அதில் ஊதுவேன்; அல்லாஹ்வின் விருப்பப்படி அது பறவையாக ஆகும். அல்லாஹ்வின் விருப்பப்படி பிறவிக் குருடையும், குஷ்டத்தையும் நீக்குவேன்; இறந்தோரை உயிர்ப்பிப்பேன்; நீங்கள் உண்பதையும், உங்கள் வீடுகளில் நீங்கள் சேமித்து வைத்திருப்பதையும் உங்களுக்குக் கூறுவேன்; நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் இதில் உங்களுக்குச் சான்று உள்ளது'' (என்றார்) (அல்குர்ஆன் 3:49)

இப்படி பறவையை உயிர்பித்ததும் இறந்த மனிதரை ஈஸா அவர்கள் உயிர்பித்ததும் இறைவனின் அனுமதியுடன்தான் என்பதைப் புரிந்து கொள்ளவேண்டும். இறைவனின் அனுமதியுடன் அந்த அற்புதத்தைச் செய்தாலும் அதை எல்லா நபிமார்களுக்கும் அல்லாஹ் கொடுக்கவில்லை. எந்தளவுக்கு ஈஸா நபிக்கு அற்புதத்தைக் கொடுத்தான் எனில், ஈஸா நபி காலத்து மக்கள், நாங்கள் உழைக்காமல் இருப்போம். ஆனால் வானத்திலிருந்து எங்களுக்கு உணவுள்ள தட்டை உமது இறைவன் எங்களுக்கு இறக்கித் தருவானா? என்று கேட்டார்கள். அதனையும் இறைவனின் அனுமதியுடன் ஈஸா நபி அற்புதமாக வாங்கிக் கொடுத்ததாக குர்ஆன் நமக்குச் சொல்லிக் காட்டுகிறது.

إِذْ قَالَ الْحَوَارِيُّونَ يَاعِيسَى ابْنَ مَرْيَمَ هَلْ يَسْتَطِيعُ رَبُّكَ أَنْ يُنَزِّلَ عَلَيْنَا مَائِدَةً مِنْ السَّمَاءِ قَالَ اتَّقُوا اللَّهَ إِنْ كُنتُمْ مُؤْمِنِينَ(112) سورة المائدة

"மர்யமின் மகன் ஈஸாவே! வானிலிருந்து உணவுத் தட்டை இறக்கிட உமது இறைவனுக்கு இயலுமா?'' என்று சீடர்கள் கூறிய போது, "நீங்கள் நம்பிக்கை கொண்டிருந்தால் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்!'' என்று அவர் கூறினார். (அல்குர்ஆன் 5:112)

ஈஸா நபி இறைவன் உணவுத் தட்டை இறக்குவதற்கு ஆற்றல் மிக்கவன் என்று கூறி உணவுத் தட்டை இறக்கிக் காட்டினார்கள். அதுபோன்று ஆதம் நபி முதல் முஹம்மது நபிகள் நாயகம் வரையும் அனுப்பப்பட்ட தூதர்களில் அற்புதங்கள் அதிகம் கொடுக்கப்பட்டவர் யார்? என்று தேடிப்பார்த்தாலும் ஈஸா நபியாகத்தான் இருப்பார்கள்.

அதேபோன்று அதிக காலம் வாழ்ந்த தூதர் நூஹ் அலை அவர்கள்தான். அல்லாஹ்வினால் அதிகம் பாசமும் நேசமும் வைக்கப்பட்டவர் இப்ராஹீம் அலை அவர்களைத்தான் சொல்ல முடியும். அதிகமான பகுதிகளுக்கு தூதராக ஆக்கப்பட்டவர் முஹம்மது நபிகளாகத்தான் இருப்பார்கள். அதே போன்று அதிகமான காலகட்டத்திற்கு தூதராக ஆக்கப்பட்டவரும் முஹம்மது நபிகள் நாயகம்தான். இப்படி இறைவன் எல்லா தூதர்களுக்குமே ஒவ்வொரு சிறப்பைக் கொடுத்திருக்கிறான்.

அதேபோன்று ஈஸா நபிக்கு சான்றுகளையும் கொடுத்தனிப்பிய பிறகு, ரூஹ‚ல் குதுஸின் மூலம் அவரைப் பலப்படுத்தியதாகவும் சொல்கிறான். ரூஹ‚ல் குதுஸ் என்பது ஜிப்ரயீல் அலை அவர்களைக் குறிக்கும். எல்லா நபிமார்களுக்கும் ஜிப்ரயீல் வஹீயைக் கொண்டு வரும் போது மட்டும்தான் அந்த நபியுடன் தொடர்பில் இருப்பார். ஆனால் ஈஸா நபியோடு மட்டும்தான் ஜிப்ரயீல் எப்போதுமே இருப்பதாக மேற்சொன்ன ஈஸா நபி பற்றிய வசனம் நமக்கு எடுத்தியம்புகிறது.

وَرَبُّكَ أَعْلَمُ بِمَنْ فِي السَّمَاوَاتِ وَالْأَرْضِ وَلَقَدْ فَضَّلْنَا بَعْضَ النَّبِيِّينَ عَلَى بَعْضٍ وَآتَيْنَا دَاوُودَ زَبُورًا(55) سورة الإسراء

வானங்களிலும், பூமியிலும் உள்ளவர்களை உமது இறைவன் நன்கு அறிவான். நபிமார்களில் சிலரை மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். தாவூதுக்கு ஸபூரைக் கொடுத்தோம். (அல்குர்ஆன் 17:55)

அதாவது எல்லா நபிமார்களையும் சமமாக ஆக்கவில்லை. அதில் சில நபியை விட சிலரை சிறப்பித்தான் உள்ளான். ஒவ்வொரு நபிக்கும் ஒரு சிறப்பை அல்லாஹ் கொடுத்திருக்கிறான். ஆனால் அவர்களில் ஒருவருடன் இன்னொருவரை ஒப்பீடு செய்துவிடக் கூடாது. இதனால் இவர்தான் எல்லோரையும் விட சிறந்தவர் என்றோ, அதனால் அவர்தான் எல்லாரையும் விடவும் முக்கியமானவர் என்றோ பேசுவதோ நம்புவதோ கூடாது.

அப்படி மூஸா நபியுடன் தன்னை ஒப்பிட்டுப் பேசுவதை நபியவர்கள் தடை செய்த செய்தியைப் பார்க்கிறோம்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

அல்லாஹ்வை சார்ந்திருத்தல்

ஜே.பர்ஜானா அலாவுதீன் B.I.sc

அவர்கள் தமக்குரிய தவணையை அடையும் போது அவர்களை நல்ல முறையில் தடுத்து வைத்துக் கொள்ளுங்கள்! அல்லது நல்ல முறையில் அவர்களைப் பிரிந்து விடுங்கள்! உங்களில் நேர்மையான இருவரை சாட்சிகளாக ஏற்படுத்திக் கொள்ளுங்கள்! அல்லாஹ்வுக்காக சாட்சியத்தை நிலை நாட்டுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு இவ்வாறே அறிவுரை கூறப்படுகிறது. அல்லாஹ்வை அஞ்சுவோருக்கு அவன் ஒரு போக்கிடத்தை ஏற்படுத்துவான். அவர் எண்ணிப் பார்த்திராத வகையில் அவருக்கு உணவளிப்பான். அல்லாஹ்வையே சார்ந்திருப்போருக்கு அவன் போதுமானவன். அல்லாஹ் தனது காரியத்தை அடைந்து கொள்பவன். ஒவ்வொரு பொருளுக்கும் அல்லாஹ் ஓர் அளவை நிர்ணயம் செய்துள்ளான்.

அல்குர்ஆன் (65:2,3)

            இவ்வுலகில் எத்தனையோ மார்க்கங்கள் இருந்தாலும் அதில் இஸ்லாமிய மார்க்கம் தான் அனைத்து மார்க்கங்களையும் விட தனித்து விளங்குகிறது. அது  ஒவ்வொரு சிறிய மற்றும் பெரிய விஷயங்களில் ஈடுபட்டு அதை அழகாக்குகிறது.  இவற்றை எல்லாம் ஒரு மனிதனால் செய்து முடிக்க முடியாது. இதற்கெல்லாம் அப்பாற்பட்ட ஒரு சக்தியால் தான் செய்ய முடியும். அவன் தான் இறைவன். அப்படிப்பட்ட இறைவன் யார்? அவனை எவ்வாறு நம்ப வேண்டும், அவனை எப்படி சார்ந்திருக்க வேண்டும் என்பதை அறிய வேண்டும்.

அல்லாஹ்வை நம்புதல்

            இஸ்லாம் அல்லாஹ்வுக்கு சொந்தமானது. அதனால் தான் அனைத்து விஷயங்களிலும் அக்கறை காட்டுகிறது. காலை எழுந்தது முதல் இரவு உறங்கச்செல்லும் வரை எப்படியெல்லாம் இருக்க வேண்டும் என்பதை கூறுகிறது. ஏனெனில் நம்மை படைத்தவனுக்கு தானே நம்மீது அக்கறை அதிகம்.

நம்மை படைத்தவன் மீது நம்பிக்கை வைப்பது எப்படிப்பட்ட நம்பிக்கையாக இருக்க வேண்டும் என்றால், நாம் தினமும் நமது கண்களால் காணக்கூடிய வானம், பூமி, சந்திரன், சூரியன், மரம், செடி, கொடி, காற்று, நீர் ஆகியவை எந்த அளவுக்கு உண்மையோ அதைப்போன்று  இதையெல்லாம் படைத்தவன் நிச்சயம் ஒருவன் இருக்கிறான். அவன் தான் அல்லாஹ் என்று நம்ப வேண்டும். இவைகள் தானாக உருவாகவில்லை. இதைப் பற்றி அல்லாஹ் கூறும் பொழுது

அவனே உங்கள் இறைவனாகிய அல்லாஹ். அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. அவன் ஒவ்வொரு பொருளையும் படைத்தவன். எனவே அவனையே வணங்குங்கள்! அவன் அனைத்துப் பொருட்களுக்கும் பொறுப்பாளன்.

அல்குர்ஆன் (6:102)

இந்த ஓரிறைக் கொள்கையைத்தான் அல்லாஹ் முதல் மனிதரான ஆதம் (அலை) முதல் இறுதித்தூதரான முஹம்மத் (ஸல்) வரையுள்ள மனிதர்கள் அனைவருக்கும் மார்க்கமாக்கியுள்ளான். இதை தான் அனைத்து நபிமார்களும் தமது சமுதாய மக்களுக்கு போதிதத்தனர்.

 யஃகூபுக்கு மரணம் நெருங்கிய போது, நீங்கள் சாட்சிகளாக இருந்தீர்களா? "எனக்குப் பின் எதை வணங்குவீர்கள்?'' என்று தமது பிள்ளைகளிடம் அவர் கேட்ட போது "உங்கள் இறைவனும், உங்கள் தந்தையரான இப்ராஹீம், இஸ்மாயீல், இஸ்ஹாக் ஆகியோரின் இறைவனுமாகிய ஒரே இறைவனையே வணங்குவோம். நாங்கள் அவனுக்கே கட்டுப்பட்டவர்கள்'' என்றே (பிள்ளைகள்) கூறினர்.

அல்குர்ஆன் (2:133)

            அல்லாஹ்வை நம்புவதில் மிக முக்கியமானது அவனுக்கு நிகர் யாருமில்லை என்பதாகும். அதாவது அல்லாஹ் என்பவன் ஒருவன் தான் அவனுக்கு பசி, தூக்கம், மனைவி, மக்கள், மறதி, உற்றார், உறவினர், உதவியாளர்கள், மரணம் என்று எதுவுமில்லை. சுருக்கமாக அவனைப் போன்று எதுவுமே இல்லை.

அவன்) வானங்களையும், பூமியையும் படைத்தவன். உங்களுக்கு உங்களிலிருந்தே ஜோடிகளையும், (கால்நடைகளுக்கு) கால் நடைகளில் ஜோடிகளையும் ஏற்படுத்தினான். அதில் (பூமியில்) உங்களைப் பரவச் செய்தான். அவனைப் போல் எதுவும் இல்லை. அவன் செவியுறுபவன்; பார்ப்பவன்.

அல்குர்ஆன் (42:11)

            இப்படித்தான் அல்லாஹ்வை நம்ப வேண்டும்.

அல்லாஹ்வை நினைப்பது

            அல்லாஹ்வை நம்பவேண்டிய விதத்தில் நம்ப வேண்டும். பிறகு அல்லாஹ்வை எப்போதெல்லாம் நினைக்கலாம்? சிலர் தொழம்பொழுது தான் நினைக்க வேண்டும் என்று நினைக்கின்றனர். அது தவறாகும். அப்படி பார்த்தால் ஒரு நாளைக்கு 5 முறைதான் அல்லாஹ்வை நினைக்க வேண்டுமா? அவ்வாறில்லை ஒவ்வொரு செயல்பாட்டிலும் நினைக்க வேண்டும். இதைப்பற்றி அல்லாஹ் கூறும் பொழுது

அல்லாஹ்வைப் பற்றிக் கூறப்பட்டால் அவர்களது உள்ளங்கள் நடுங்கி விடும். தங்களுக்கு ஏற்பட்டதைச் சகித்துக் கொள்வர். தொழுகையை நிலை நாட்டுவர். நாம் அவர்களுக்கு வழங்கியதிலிருந்து (நல் வழியில்) செலவிடுவர்.

அல்குர்ஆன் (22:35)

சாதுவான கால்நடைகளை அவர்களுக்கு வழங்கியதற்காக அல்லாஹ்வின் பெயரை நினைப்பதற்கு ஒவ்வொரு சமுதாயத்திற்கும் வழிபாட்டு முறையை ஏற்படுத்தியுள்ளோம். உங்கள் இறைவன் ஒரே இறைவனே. அவனுக்கே கட்டுப்படுங்கள்! பணிந்தோருக்கு நற்செய்தி கூறுவீராக!

அல்குர்ஆன் (22:34)

            இவ்வாறே துன்பம் வரும் போது மட்டும் அல்லாஹ்வை நினைக்காமல் இன்பம் ஏற்படும்பொழுதும் அவனைப்போற்றிப்புகழ்ந்து  அவனுக்கு நன்று செலுத்த வேண்டும். நாம் ஒவ்வொரு விஷயத்திலும் அல்லாஹ்வின் பெயரைச் சொல்லி துவங்கினால் நாம் வெற்றி பெறலாம். இன்னும் அல்லாஹ்வைப் பற்றிய நினைவு நம்மிடம் இருந்தால் தான் நாம் முடிந்த அளவிற்கு நன்மை செய்வோர்களாக திகழமுடியும்.

அல்லாஹ்வை அஞ்சுதல்

            இது ஒவ்வொரு  முஃமினிடமும் மிக முக்கியன்ôக இருக்க வேண்டிய பண்பாகும். ஏனெனில் இப்பண்பு இருக்கும் பட்சத்தில் தான் ஒவ்வொரு முஸ்லிமும் தன்னை பாதுகாத்து மறுமையில் வெற்றி பெற முடியும். அல்லாஹ் மனிதர்களை தவறு செய்யாமல் இருப்பவனாக படைக்கவில்லை. மாறாக தவறிழைப்பவர்களாகவே படைத்துள்ளான். ஆகவே நாம் நல்ல எண்ணத்தோடும், தவறின் பக்கமே நெருங்க கூடாது என்று கட்டுப்பாடாக இருந்தாலும் நமது எதிரியான ஷைத்தான் நம்மை ஊசலாட வைத்து தவறின் பக்கம் அழைப்பான். அச்சமயத்தில் தான் நாம் நம்மைப் படைத்த இறைவனை அஞ்சி அவனிடம் உதவி தேட வேண்டும்.

நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சுகின்ற விதத்தில் அஞ்சுங்கள்! நீங்கள் முஸ்லிம்களாகவே தவிர மரணிக்காதீர்கள்!

அல்குர்ஆன் (3:102)

            அல்லாஹ்வை அஞ்சும் முறையில் அஞ்ச வேண்டும். அல்லாஹ் நம்மை எந்நேரமும் கண்காணித்துக் கொண்டே இருக்கிறான் என்று அஞ்ச வேண்டும். அவனை மீறி நம்மால் எதுவும் செய்ய முடியாது. மனிதர்களின் கண்களை மறைத்து விடலாம். ஆனால் அல்லாஹ்விடமிருந்து தப்ப முடியாது. நாளை மறுமையில் வைத்து நம்மை தண்டித்து விடிவானோ என்ற அச்சம் ஒவ்வொரு முஸ்லிமிடமும் இருக்க வேண்டும். அல்லாஹ் தன்னை அஞ்சுவோருக்கு தான் சிறந்த போக்கிடத்தை ஏற்படுத்தி கொடுப்பான்.

அல்லாஹ்வை நேசிப்பது

             அல்லாஹ்வை நேசிப்பதும் ஈமானில் மிக முக்கியமானது அச்சமாகும். நாம் நம்மைப்படைத்த இறைவனை விரும்பினால் தான் அவன் கட்டளையிட்ட செயல்களை நம்மால் செய்ய முடியும் உதாரணமாக, மனிதர்களாகிய நமக்கே நம்மில் ஒருவரை பிடித்து விட்டது என்றால் அவருக்கு விருப்பமானதை தேடி போய் செய்கிறோம். ஆக நம்மை படைத்து நமக்காக இப்பிரபஞ்சத்தை படைத்து இன்னும் நமக்கு தேவையான அனைத்தையும் உருவாக்கிய அல்லாஹ்வை நாம் எப்படியெல்லாம் நேசிக்க வேண்டும். அவனுக்கு எப்படியெல்லாம் நன்றி செலுத்த வேண்டும்.

            நான் அல்லாஹ்வை நேசிக்கிறேன் வாயளவில் கூறினால் மட்டும் போதாது. மாறாக அவன் கட்டளையிட்ட விஷயங்களை முறையாக கடைபிடிப்பதும், அவன் தடை செய்த காரியங்களை விட்டும் முழுமையாக தவிர்த்து இருப்பதுமேயாகும். இதைப்பற்றி அல்லாஹ் தனது குர்ஆனில் கூறும்பொழுது

நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்'' என்று கூறுவீராக!

அல்குர்ஆன் (3:31)

            அல்லாஹ் கூறியது போல் அவனையும் அவனது தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களையும் பின்பற்றி அவ்விருவரையும் நம் உயிரினும் மேலாக நேசித்து, மதித்து மறுமையில் வெற்றி பெருவோமாக.

            மேற்கூறிய அனைத்து விஷயங்களையும் கடைபிடிப்பதே அல்லாஹ்வை சார்திருப்பது ஆகும்.

            இவ்வுலகில் ஏற்படும் அனைத்து விதமான துன்பம் துயரங்களைப் பொறுத்து அல்லாஹ்விடம் உதவி தேடி அவனையே சார்ந்திருப்போமாக.

 

எது உண்மையான ஒற்றுமை?

அப்துந் நாஸர், கடையநல்லூர்

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். (அல்குர்ஆன் 3 : 104)

உமக்குக் கட்டளையிடப் பட்டதைத் தயவு தாட்சண்யமின்றி எடுத்துரைப்பீராக! இணை கற்பிப்போரைப் புறக்கணிப்பீராக! (அல்குர்ஆன் 15 : 94)

மேற்கண்ட வசனங்களில் ஒரு சமுதாயம் வெற்றி பெற்ற சமுதாயமாக ஆவதற்குரிய வழிமுறைகளை அல்லாஹ் தெளிவு படுத்துகிறான். மக்களுக்கு நல்ல விஷயங்களை எடுத்துக் கூறவேண்டும். மக்கள் செய்கின்ற பாவமான காரியங்களை விட்டும் நம்முடைய சக்திக்குட்பட்டு அவர்களைத் தடுத்து நல்வழியின் பக்கம் அவர்களை அழைக்க வேண்டும். இத்தகையோர்தான் வெற்றி பெற்றவர்கள் என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றன்.

மேலும் இறைக்கட்டளைகளை மக்களுக்கு எடுத்துரைப்பதில் எவ்வித தயவு தாட்சண்யமும் காட்டக்கூடாது என்றும் அல்லாஹ் கட்டளையிடுகின்றான். அதாவது சமுதாயத்தில் நிலவும் சில பாவமான காரியங்களைப் பற்றி எச்சரிக்கை செய்யும் போது ஒட்டு மொத்த சமுதாயமே எதிர்த்து நின்றாலும் எத்தகைய துன்ப துயரங்கள் ஏற்பட்டாலும் சத்தியத்தை யாருக்கும் அஞ்சாமல் எடுத்துரைக்க வேண்டும் என்பதுதான் சத்தியவாதிகளுக்கு இறைவன் இடும் கட்டளை.

இத்தகைய சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சமுதாயத்தில் எத்தனை எதிர்ப்புகள் தோன்றினாலும் பிளவுகள் ஏற்பட்டாலும் இறைவனின் கட்டளை நிலைநாட்டப்படவேண்டும் என்பதே இறைவனின் விருப்பமாகும்

நம்முடைய இஸ்லாத்தின் அடிப்படையே ஓரிறைக் கொள்கைதான். ஆனால் இந்த ஓரிறைக் கொள்கையை குழிதோண்டிப் புதைக்கக்கூடிய தர்ஹா வழிபாடுகள், தாயத்து தகடுகள், மத்ஹபு பிரிவினைகள், மௌலித் என்ற வரம்பு மீறிய புகழ்மாலைகள், மீலாது விழா, ஸலாத்துன் நாரியா போன்ற பல்வேறு விதமான இணைவைப்புக் காரியங்களில் நம்முடைய இஸ்லாமிய சமுதாயம் வீழ்ந்து கிடந்தது.

வரதட்சணைக் கொடுமை, வட்டி, பெண்களுக்கு சொத்துரிமை மறுப்பு, இத்தா என்ற பெயரில் பெண்களை இருட்டறையில் அடைத்து வைப்பது, பெண்கள் தொழுகைப் பள்ளிக்கு வருவதற்குத் தடை, போன்ற பல்வேறு சமுதாயக் கொடுமைகளும் இஸ்லாமிய மக்களுக்கு மத்தியில் நிறைந்து காணப்பட்டன.

இந்நிலையில்தான் தமிழகத்தில் ஏற்பட்ட தவ்ஹீத் பிரச்சாரம் இலட்சக்கணக்கான மக்களுக்கு அசத்தியங்களிலிருந்து சத்தியத்திற்கு வழிகாட்டியது. ஷாஃபி, ஹனபி என்றும் இராவுத்தர், மரைக்காயர், லெப்பை என்றும் காதிரியா, ஷாதுலிய்யா, ஜிஸ்திய்யா, நக்ஷபந்தியா என்றும் கொள்கையின் பெயரால் பிரிந்து கிடந்த சமுதாயம் தவ்ஹீத் என்ற ஓரிறைக் கொள்கையின் பால் ஒன்று திரண்டு வருகிறார்கள்.

அசத்தியத்திற்கு எதிரான இந்த சத்தியத்தின் வளர்ச்சியை பொறுக்க முடியாத சிலர் இந்த தவ்ஹீத் வாதிகள்தான் சமுதாய ஒற்றுமையைப் பிரித்து விட்டார்கள், அண்ணன் தம்பிகளாய் பழகிய மக்களை எதிரிகளாக்கிவிட்டார்கள் என்று குற்றம் சாட்டுகின்றனர்.

அசத்தியத்தில் மூழ்கிக் கிடப்பவர்களுக்கு சத்தியத்தை எடுத்துரைக்கும் போது சில பிளவுகள் ஏற்படத்தான் செய்யும்.

ஒற்றுமையாக வட்டி வாங்கும் ஊரிலே வட்டி கூடாது என்று பிரச்சாரம் செய்தால் அவர்களுக்கு மத்தியிலே இரு பிரிவுகள் ஏற்படத்தான் செய்யும். எனவே ஒற்றுமையை குலைப்பது கூடாது என்று கூறி அனைவரும் ஒற்றுமையாக வட்டி வாங்குவதுதான் இஸ்லாமிய நெறிமுறையா?

ஒற்றுமையாக வரதட்சணை வாங்கும் ஊரிலே மஹர் கொடுத்து திருமணம் செய்யுங்கள் என்றால் வரதட்சணை வாங்குபவர்கள் எதிர்க்கத்தான் செய்வார்கள். ஒற்றுமை குலையத்தான் செய்யும். எனவே ஒற்றுமை என்ற பெயரிலே வரதட்சணைக் கொடுமையை அங்கீகரிப்பதுதான் இஸ்லாமிய வழிமுறையா?

தவ்ஹீத் பிரச்சாரத்தை சமுதாயப் பிரிவினை என்றுரைப்போர் இதற்கு பதில் கூறக் கடமைப்பட்டுள்ளனர்.

ஒற்றுமையாக ஓரினச் சேர்க்கையிலே ஈடுபட்டு வந்த சமுதாயத்திலே லூத் (அலை) அவர்கள் அதற்கு எதிராகப் பிரச்சாரம் செய்ததினால் ஊர்மக்களுக்கும் லூத் நபிக்கும் பிரச்சினை ஏற்பட்டது. எனவே லூத் நபியவர்கள் பிரிவினை வாதியா?

ஒற்றுமையாக இணைவைப்புக் காரியங்களிலே ஈடுபட்டு வட்ட ஸமூது சமுதாயத்தவர்களுக்கு ஸாலிஹ் நபி சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினரானார்கள். எனவே ஸாலிஹ் நபி பிரிவினைவாதியா?

அல்லாஹ்விற்கு இணை கற்பிப்பதிலும், அளவு நிறுவைகளில் மோசடி செய்வதிலும் ஒற்றுமையாக இருந்த மத்யன் நகரவாசிகளிடம் சுஐப் (அலை) அவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த காரணத்தினால் இரு பிரிவினர்களானார்கள். எனவே சுஐப் நபி பிரிவினைவாதியா?

இணைவைப்புக் காரியங்களில் மூழ்கிக் கிடந்த தன்னுடைய சமுதாயத்தை நோக்கி உங்களை விட்டும் நாங்கள் பிரிந்து விட்டோம் உங்களுக்கும் எங்களுக்கும் என்றென்றும் பகமைதான் என்றுரைத்தார்களே அந்த இபுறாஹிம் (அலை) பிரிவினைவாதியா?

''உங்களை விட்டும் அல்லாஹ்வை யன்றி எதனை வணங்குகிறீர்களோ அதை விட்டும் நாங்கள் விலகியவர்கள். உங்களை மறுக்கிறோம். அல்லாஹ்வை மட்டும் நீங்கள் நம்பிக்கை கொள்ளும் வரை எங்களுக்கும் உங்களுக்கு மிடையே பகைமையும் வெறுப்பும் என்றென்றும் ஏற்பட்டு விட்டது'' என்று கூறிய விஷயத்தில் இப்ராஹீமிடமும் அவருடன் இருந்தோரிடமும் உங்களுக்கு அழகிய முன்மாதிரி இருக்கிறது. ''உங்களுக்காக பாவ மன்னிப்புத் தேடு வேன். அல்லாஹ்விடமிருந்து உங்களுக்கு எதையும் செய்ய நான் அதிகாரம் பெற்றி ருக்கவில்லை'' என்று இப்ராஹீம் தம் தந்தையிடம் கூறியதைத் தவிர. (இதில் அவரிடம் முன்மாதிரி இல்லை) எங்கள் இறைவா! உன்னையே சார்ந்திருக்கிறோம். உன்னிடமே திரும்பினோம். மீளுதல் உன்னிடமே உள்ளது. ''எங்கள் இறைவா! (உன்னை) மறுப்போருக்குச் சோதனையாக எங்களை ஆக்கி விடாதே! எங்களை மன்னிப்பாயாக! எங்கள் இறைவா! நீயே மிகைத்தவன்; ஞானமிக்கவன்'' (என்றும் பிரார்த்தித்தார்.)  அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்புவோருக்கு அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. யார் புறக்கணிக்கிறாரோ அல்லாஹ் தேவையற்றவன்; புகழுக்குரியவன். (அல்குர்ஆன் 60 : 4, 5, 6)

இபுறாஹிம் நபி ஓரிறைக் கொள்கைக்காக தன்னுடைய சமுதாயத்தை பகைத்துக் கொண்டு சென்றதைப் போன்றுதான் நாம் இருக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்ற இறைவன் பிரிவினைவாதியா? திருக்குர்ஆன் பிரிவினையைத் தூண்டுகிறதா?

அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா இணைவைப்பாளர்களுக்கு மத்தியிலே நபியவர்கள் சத்தியத்தை எடுத்துரைத்த போது மக்கா காஃபிர்கள் நபிகள் நாயகத்தை நோக்கு என்ன சொன்னார்கள் தெரியுமா?

இந்த முஹம்மத் நம்முடைய சிந்தனைகளை மழுங்கடித்து விட்டார். நம்முடைய முன்னோர்களைத் திட்டுகிறார், நம்முடைய வழிமுறைகளைக் குறைகூறுகிறார், நம்முடைய ஜமாஅத்துகைளப் பிரித்துவிட்டார், நம்முடைய கடவுள்களைத் ஏசுகிறார் (அஹ்மத் 6739) என்று கூறினார்கள்.

அசத்தியத்தில் ஒற்றுமையாக இருந்த மக்கா காஃபிர்களின் ஜமாஅத்துகளைப் பிரித்த முஹம்மது நபியவர்கள் பிரிவினை வாதியா?

லூத் (அலை), ஸாலிஹ் (அலை), சுஐப் (அலை), இபுறாஹிம் (அலை), முஹம்மது (ஸல்) ஆகியோர் பிரிவினைவாதிகள் என்றால் அவர்களின் வழியில் செல்வதில் எவ்விதக் குற்றமுமில்லை.

போலி ஒற்றுமை பேசுவோர் இவற்றைச் சிந்திக்கக் கடமைப்பட்டுள்ளனர்.

பாவமான காரியங்களை சகித்துக் கொண்டு ஒற்றுமையாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் எங்கும் குறிப்பிடவே இல்லை. அசத்தியத்தை எதிர்ப்பதினால் பிரிவினை ஏற்படும் என்றால் அந்தப் பிரிவினை அவசியம் என்பதைத்தான் இஸ்லாம் வலியுறுத்துகிறது

திருமறைக் குர்ஆன் எந்த ஒரு இடத்திலும் ஒற்றுமையாக இருக்கவேண்டும் என்று கூறவே கிடையாது.

மாறாக இறைவனுடைய கட்டளைகளை  பின்பற்றுவதில் பிரிந்து விடக்கூடாது என்பதையே திருமறைக் குர்ஆன் வலியுறுத்துகிறது.

நூஹுக்கு எதை அவன் வலியுறுத்தினானோ அதையே உங்களுக்கும் மார்க்க மாக்கினான். (முஹம்மதே!) உமக்கு நாம் அறிவித்ததும் இப்ராஹீம், மூஸா மற்றும் ஈஸாவுக்கு நாம் வலியுறுத்தியதும், ''மார்க்கத்தை நிலை நாட்டுங்கள்! அதில் பிரிந்து விடாதீர்கள்!'' என்பதே. நீர் எதை நோக்கி அழைக்கிறீரோ அது இணை கற்பிப்போருக்குப் பெரிதாக உள்ளது. அல்லாஹ், தான் நாடியோரைத் தனக்காகத் தேர்வு செய்கிறான். திருந்துவோருக்குத் தன்னை நோக்கி வழி காட்டுகிறான் (அல்குர்ஆன் 42 ; 13)

மேற்கண்ட வசனத்தில் மார்க்கத்தில் பிரிந்து விடக்கூடாது என்றே அல்லாஹ் கூறுகிறான். மாறாக பாவமான காரியங்களைச் செய்யும் போது ஒற்றுமை என்ற பெயரில் அதைக் கண்டு கொள்ளாமல் இருப்பதை அல்ல.

அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடித்துக் கொள்ளுங்கள்! பிரிந்து விடாதீர்கள்! (அல்குர்ஆன் 3 : 103)

தமிழகத்தில் நீண்ட காலமாக இவ்வசனம்  மேடைகளில் தவறாகப் பயன்படுத்தப்பட்டு வருகின்றது. சில மார்க்க அறிஞர்களும் கூட தவறாகவே இதைப் பயன்படுத்தி வருகின்றனர். ''ஒற்றுமை எனும் கயிற்றைப் பற்றிப் பிடித்துக் கொள்ளுங்கள்'' என்று திருக்குர்ஆன் கூறுவதாக இவ்வசனத்தைக் குறிப்பிட்டு வருகின்றனர்.

நமக்கிடையே எத்தகைய தீமைகள் நிலவினாலும் அதை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை பாதிக்கும் என்றால் ஒற்றுமைக்குத் தான் முக்கியத்துவம் கொடுக்க வேண்டும் என்றும் இதனடிப்படையில் வாதிட்டு வருகின்றனர்.

இவர்களின் வாதத்துக்கு இவ்வசனத்தில் எள்ளளவும் இடமில்லை. ஓர் ஊரில் அனைவரும் சினிமா பார்த்தால், வரதட்சணை வாங்கினால் அவர்களுடன் சேர்ந்து ஒற்றுமையாக அந்தத் தீமையைச் செய்யுமாறு அல்லாஹ் கூறுவானா? என்று கூட இவர்கள் சிந்திக்கவில்லை.

''அல்லாஹ்வின் கயிற்றை அனைவரும் சேர்ந்து பிடியுங்கள்'' என்று தான் இவ்வசனம் கூறுகிறது. அல்லாஹ்வின் கயிறு என்பது குர்ஆனும் அதன் விளக்கவுரையான நபி மொழிகளும்தான். அனைவரும் சேர்ந்து திருக்குர்ஆன், நபி வழியைப் பற்றிப் பிடியுங்கள் எனக் கூறும் வசனமே இது.

குர்ஆன், ஹதீஸில் உள்ளவைகளை எடுத்துச் சொல்வதால் ஒற்றுமை கெடுகின்றது; எனவே அதைச் சொல்லாதீர்கள் என்று இவர்கள் நேர் மாறான விளக்கத்தைத் தருகின்றனர்.

அல்லாஹ்வின் கயிற்றை நாம் பிடிக்கும் போது மற்றவர்கள் அதைப் பிடிக்க முன் வராவிட்டால் பிடியை நாம் விட்டு விடக்கூடாது. அவர்களையும் பிடிக்குமாறு அழைப்பது தான் நம் மீதுள்ள கடமையாகும்.

எனவே பல கொள்கைகளாகப் பிரிந்து கிடந்து, பாவமான காரியங்களில் மூழ்கிக் கிடந்து பெயரளவில் ஏற்படுவது ஒற்றுமை அல்ல. மாறாக யார் எதிர்த்தாலும் அசத்தியங்களை அழித்து சத்தியத்தில் ஒன்றுபடுவதே உண்மையான ஒற்றுமையாகும். அத்தகைய உண்மையான ஒற்றுமைக்கு நாம் பாடுபடுவோமாக.

 

மணப்பெண் நகையும் மார்க்கத்தின் நிலையும்

அபூ அதீபா

ஒருவன் நான் ஒரு பெண்ணை திருமணம் செய்யப் போகிறேன் என்பதை முன்வைத்து பெண்வீட்டாரிடமிருந்து தனக்காகப் பெறுகின்ற ஒவ்வொன்றும் வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை. இவ்வாறு பெறப்படுவது பணமாக இருந்தாலும், பொருளாக இருந்தாலும், விருந்தாக இருந்தாலும், நகையாக இருந்தாலும் அவை வரதட்சணைதான் என்பதில் மாற்றுக் கருத்தில்லை.

அதே நேரத்தில் ஒரு பெண்ணிற்கு திருமணத்தின் போது போடப்படுகின்ற நகை அனைத்தும் வரதட்சணையில் உள்ளடங்கிவிடும் என்று கருதமுடியாது.

பொதுவாக நகைகளால் தன்னை அலங்கரித்துக் கொள்வது பெண்களின் இயற்கைத் தன்மையாகும். அதிலும் குறிப்பாக திருமணத்தின் போது புதுமாப்பிள்ளையை கவரும் வண்ணம் தன்னை அலங்கரித்துக் கொள்வது அவசியமான ஒன்றாகும். ஒரு பெண்ணிற்கு இந்த நோக்கத்தில் அணிவிக்கப்படும் நகைகள் வரதட்சணையாக ஆகாது.

தன்னுடைய மகளிற்கு ஒரு தகப்பன் திருமணத்தின் போது அணிவிக்கும் நகைகள் அவளுக்குரியதுதானே தவிர அவளுடைய கணவனுக்கு அதில் எந்த உரிமையும் கிடையாது.

கணவனோ, கணவன் வீட்டாரோ தன்னுடைய வீட்டிற்கு வரும் மணமகளின் நகைகளை தங்களுடைய சொத்தாகக் கருதுவார்கள் என்றால், தங்களுடைய சுயத்தேவைகளுக்காக பயன்படுத்திக் கொள்வார்கள் என்றால் அது தெளிவான வரதட்சணையே ஆகும்.

மனைவியின் சொத்தில் எக்காரணத்தை முன்னிட்டும் கணவன் கைவைப்பது கூடாது. கணவன் எவ்வளவு ஏழையாக இருந்தாலும் அவன்தான் தன்னுடைய மனைவிக்கும் அவள் மூலம் தனக்கு பிறக்கும் பிள்ளைகளுக்கும் பொறுப்புதாரியே தவிர மனைவியின் சொத்தில் இருந்து அவள் விருப்பம் இல்லாமல் எடுத்துக் கொள்வது மார்க்க அடிப்படையில் ஹராமானதாகும். மனைவி விரும்பினால் தன்னுடைய கணவனுக்கு அன்பளிப்பாகவோ, அல்லது தர்மமாகவோ வழங்கலாம்.

இதனை பின்வரும் ஹதீஸிலிருந்து தெளிவாக விளங்கிக் கொள்ளலாம்.

அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது: நபி(ஸல்) அவர்கள் நோன்புப் பெருநாளிலோ அல்லது ஹஜ்ஜுப் பெருநாளிலோ முஸல்லா எனும் தொழும் திடலுக்குச் சென்று தொழுதுவிட்டு உரை நிகழ்த்தினார்கள். மக்களே! தர்மம் செய்யுங்கள்! என்று மக்களுக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு பெண்கள் பகுதிக்குச் சென்று, பெண்களே! தர்மம் செய்யுங்கள்; ஏனெனில் நரகவாசிகளில் நீங்களே அதிகமாக இருப்பதை நான் பார்த்தேன்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஏன் இந்நிலை? எனப் பெண்கள் கேட்டதும், நீங்கள் அதிகமாகச் சபிக்கிறீர்கள்; கணவனுக்கு மாறு செய்கிறீர்கள்; கூரிய அறிவுடைய ஆண்மகனின் புத்தியை, அறிவிலும் மார்க்கத்தி(ன் கடமையி)லும் குறைவுடையவர்களாக உள்ள நீங்கள் போக்கிவிடுகிறீர்கள் என்று நபி(ஸல்) கூறிவிட்டு, (வீட்டிற்குச்) சென்றார்கள். இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப் (ரலி) வந்து வீட்டினுள் வர அனுமதி கோரினர். அல்லாஹ்வின் தூதரே! ஸைனப் வந்திருக்கிறார் என்று கூறப்பட்டது. எந்த ஸைனப்? என நபி(ஸல்) அவாகள் வினவ, இப்னு மஸ்வூதின் மனைவி ஸைனப்! என்று கூறப்பட்டது. அவருக்கு அனுமதி வழங்குங்கள்! என்று நபி(ஸல்) அவர்கள் கூறியதும் அனுமதி வழங்கப்பட்டது. அவர் (வந்ததும்) அல்லாஹ்வின் தூதரே! தர்மம் செய்யுமாறு இன்று நீங்கள் கட்டளையிட்டீர்கள். என்னிடம் எனக்குச் சொந்தமான ஒரு நகை இருக்கிறது. அதை தர்மம் செய்ய நான் நாடினேன். (என் கணவர்) இப்னு மஸ்வூத், தாமும் தமது குழந்தைகளுமே அதைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் எனக் கூறுகிறார். (என்ன செய்ய?) என்று கேட்டார். இப்னு மஸ்வூத் கூறுவது உண்மைதான்! உன் கணவரும் உன் குழந்தைகளுமே உனது தர்மத்தைப் பெறுவதற்கு அதிக உரிமை படைத்தவர்கள் என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் : புகாரி (1462)

இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மிகவும் ஏழ்மை நிலையி்ல் இருக்கிறார்கள். அவர்களுடைய மனைவி ஜைனப் (ரலி) அவர்களோ தர்மம் செய்கின்ற அளவிற்கு செல்வ வசதியைப் பெற்றிருக்கின்றார்கள். அப்படியிருந்தும் இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் மனைவியின் நகையில் கைவைக்கவில்லை. மனைவியாக விரும்பி தர்மம் செய்யும் பொழுதுதான் பெற்றுக் கொள்கிறார்கள்.

எனவே திருமணத்தின் போது ஒரு பெண்ணிற்கு அணிவிக்கப்படும் நகை அப்பெண்ணின் சொத்தாகத்தான் கருதப்படுமே தவிர அதனை மணமகனிற்குரியதாகவோ, அல்லது மணமகன் வீட்டாருக்குரியதாகவோ கருதினால் அது வரதட்சணை என்பதில் எவ்வித மாற்றுக் கருத்தும் கிடையாது.

அது போன்று திருமணத்தின் போதுதான் ஒரு பெண்ணிற்கு நகை போடவேண்டும் என்பது கிடையாது.  ஒருவருக்கு ஒன்றுக்கு மேற்பட்ட பிள்ளைகள் இருந்தால்  அனைத்து பிள்ளைகளுக்கும் சமமாகத்தான் அன்பளிப்பை வழங்க வேண்டும். நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டு பின்வருமாறு அறிவித்தார்கள்:

என் தந்தை அன்பளிப்பு ஒன்றை எனக்குக் கொடுத்தார். என் தாயார் அம்ரா பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம், "நீங்கள் இதற்கு அல்லாஹ்வின் தூதரை சாட்சியாக ஆக்காதவரை நான் இதை ஒப்புக் கொள்ள மாட்டேன்'' என்று கூறினார்கள். என் தந்தை அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! நான் அம்ரா பின்த் ரவாஹாவின் வாயிலாக எனக்குப் பிறந்த என் மகனுக்கு அன்பளிப்பு ஒன்றைக் கொடுத்தேன். அவள் (என் மனைவி) தங்களை சாட்சியாக ஆக்கும் படி எனக்குக் கட்டளையிட்டாள்'' என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உங்கள் மற்ற பிள்ளைகளுக்கும் இதே போன்று கொடுத்துள்ளீர்களா?'' என்று கேட்டார்கள். அதற்கு என் தந்தை, "இல்லை'' என்று பதிலளித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், "அவ்வாறெனில் அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள்! உங்கள் பிள்ளைகளிடையே நீதம் செலுத்துங்கள்'' என்று கூறினார்கள். இதைக் கேட்ட என் தந்தை உடனே திரும்பி வந்து, அன்பளிப்பை ரத்து செய்தார்.

அறிவிப்பவர்: ஆமிர் பின் ஷர்ஹபீல், நூல்: புகாரி 2587

மற்றொரு அறிவிப்பில், "நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

நீதமாக நடந்து கொள்ளுங்கள்! நீதம் தவறினால் அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! பாவத்திற்கு என்னை சாட்சியாளனாக ஆக்காதீர்கள் என்ற நபி (ஸல்) அவர்களின் வார்த்தைகள், பெற்றோர்கள் தங்கள் பிள்ளைகளுக்கு மத்தியில் வழங்கும் அன்பளிப்புகளில் நூல் பிடித்தாற்போல் நடக்க வேண்டும் என்பதைக் காட்டுகின்றன.

ஆனால் நடைமுறையில் பிள்ளைகளுக்கு மத்தியில் பெற்றோர்கள் அன்பளிப்பு விஷயத்தில் மிக அதிகமாகவே பாரபட்சம் காட்டுகின்றனர். குறிப்பாக, பெண் மக்களுக்கு திருமணத்தின் போது நகை வடிவத்தில் வழங்குகின்ற அன்பளிப்பைப் போன்று ஆண் மக்களுக்கு வழங்குவதில்லை. பெண் மக்களுக்கு மத்தியிலேயே மூத்த மகளுக்கு ஒரு விதம், இளைய மகளுக்கு மற்றொரு விதம் என்று அவர்களுக்கு அளிக்கும் நகை, நிலம், சீர் வரிசைகளில் வேறுபாடுகள் காட்டுவது சர்வ சாதாரணமாக நடக்கின்றது.

பிள்ளைகளுக்கு மத்தியில் தாங்களாக வேறுபாடு காட்டினாலும், மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினாலும் அல்லாஹ்விடத்தில் அந்தப் பெற்றோர்கள் நிச்சயமாகக் குற்றவாளிகள் தான்! தாங்களாகவே வேறுபாடு காட்டினால் பெற்றோர்கள் அப்பாவத்திற்கு முழுப் பொறுப்பாளி ஆகின்றார்கள். மாப்பிள்ளைகளின் நிர்பந்தத்தால் வேறுபாடு காட்டினால் பெற்றோருடன் சேர்த்து மாப்பிள்ளைகளும் அல்லாஹ்விடம் பதில் சொல்ல வேண்டிய நிலைக்கு ஆளாகின்றார்கள்.

இது போன்ற வேறுபாடுகள் இல்லாமல் ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு நகை போடுவது குற்றமாகாது.        

ஒரு தகப்பன் தான் உயிரோடும் வாழும் காலத்தில் அனைத்துப் பிள்ளைகளுக்கும் சமமாக அன்பளிப்பு வழங்கிவிட்டால் பெண்களுக்கு சொத்தில் பங்கு கிடையாது என்ற பிரச்சினையும் ஏற்படாது.

ஆனால் இன்று மணமகளுக்கு அணிவிக்கப்படும் நகைகள், தந்தை மனப்பூர்வமாக அணிவிப்பதில்லை. மணமகன் வீட்டின் நிர்பந்தம், அல்லது தன் மகளை மாமியார் வீட்டில் குறை சொல்லக்கூடாது என்பதற்காகவே அணிவிக்கப்படுகிறது. இதுவும் மறைமுகமாக வாங்கப்படும் வரதட்சணையாகவே கருதவேண்டும்.

ஏழையாக இருப்பவர்கள் தங்கள் சக்தி உட்பட்டு நகை அணிவிப்பதில்லை. அல்லது நகையில்லாமல் திருமணம் செய்ய விரும்புவதும் இல்லை. காரணம் மாமியார் வீட்டு பயம்தான்.

எனவே இது போன்ற நிலைகளில் வழங்கப்படும் நகையும் வரதட்சணையாகவே கருத வேண்டும்.

ஒரு தகப்பன் தன்னுடைய மகளுக்கு முறையாக நகை அணிவித்தால் அது மார்கத்தி்ல் குற்றமாகக் கருதப்படாது. அது போன்று ஒரு கணவன் தன்னுடைய மனைவிக்கு போடப்பட்ட நகை அவளுக்குரியதுதான். அதில் தனக்கு எவ்வித உரிமையும் இல்லை என்பதை விளங்கி நடந்து கொண்டால் அது வரதட்சணையாகவும் கருதப்படாது.

எல்லாவற்றிற்கும் மேலாக உலகமக்களின் கண்காணிப்பை விட படைத்த ரப்புல் ஆலமீன் நம்முடைய உள்ளத்தை பார்த்து தீர்ப்பளிக்கக்கூடியவன் என்பதை அறிந்து நடந்து கொண்டால் எவ்வித பிரச்சினையும் இல்லை.

 

ஒன்று கூடும் இடங்களும் ஒழுங்குகளும்

சல்மான், கோவை

  மனிதர்கள் அனைவரும் தமது தேவைகளுக்காக வீட்டை விட்டு வெளியே சென்றாக வேண்டிய நிலையில் உள்ளனர். அவ்வாறு செல்லக்கூடிய இடங்கள் நாம் வேலை செய்யும் அலுவலகம், கடைவீதிகள், பேருந்து நிறுத்தங்கள், காய்கறிகடைள், ரயில் நிலையங்கள்,திருமண மண்டபங்கள்,இப்படி பல்வேறு இடங்களுக்கு செல்கிறோம். இங்கே நம்மை போல் பலரும் வருவார்கள். இவ்வாறு கூட்டமாக சேருமிடங்களில் எவ்வாறு நடந்து கொள்ளவேண்டும் என்பதை அனைவரும் தெரிந்து வைத்துக்கொள்வது அவசியமாகும்.

புறப்படும் போது

முதலில் வீட்டை விட்டு வெளியே போகும் போதே அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்து  செல்லவேண்டும். ஏனென்றால் நாம் போகும் இடங்களில்   ஏற்படும் அனைத்து பிரச்சனைகளுக்கும் அல்லாஹ்வை பொறுப்பாளனாக்கி செல்வதே சிறந்தாகும்.

நபி(ஸல்)அவா;கள் வீட்டை விட்டு வெளியே செல்லும் போது துஆ செய்து செல்வார்கள்.

பிஸ்மில்லாஹி ரப்பி அவூது பி(க்)க மின் அன் அஸில்ல அவ் அளில்ல அவ் அள்ளம அவ் உள்லம அவ் அஜ்ஹல அவ் யுஜ்ஹல அலய்ய என்று வீட்டைவிட்டு வெளியேறும் போது கூறுவார்கள்.        

நூல்: நஸயீ 5391,5444.

  (பொருள் : அல்லாஹ்வின் பெயரால் (வெளியேறுகிறேன்).என் இறைவா! நான் சருகி விடாமலும் வழிதவறிவிடாமலும் அநீதி இழைக்காமலும், அநீதி இழைக்கப்படாமலும், மூடனாகாமலும்,(பிறரை)மூடனாக்காமலும்,இருக்க உன்னிடம் பாதுகாப்புத் தேடுகிறேன்.)

பெண்கள் வெளியே செல்லும் போது

 பொதுவாக இன்றைய பெண்கள் வெளியே செல்லும் போது முகத்திற்கு பவுடர், உதட்டிற்கு சாயம்,தலை நிறைய மல்லிகை பூக்கள் என தன்னை முழுமையாக அலங்கரித்து கொண்டு செல்கின்றனர். இவ்வாறு செல்வதை தவிர்க்க வேண்டும்.ஏனென்றால் அல்லாஹ் பெண்கள் வெளியே செல்லும் போது தன்னை அழகு படுத்தக்கூடாது என கட்டளையிடுகிறான்.

தமது பார்வைகளைத் தாழ்த்திக் கொள்ளுமாறும் தமது கற்புகளைப் பேணிக் கொள்ளுமாறும்நம்பிக்கை கொண்ட பெண்களுக்குக் கூறுவீராக! அவர்கள் தமது அலங்காரத்தில் வெளியேதெரிபவை தவிர மற்றவற்றை வெளிப்படுத்த வேண்டாம். தமது முக்காடுகளை மார்பின் மேல்

போட்டுக் கொள்ளட்டும்.(அல் குர்ஆன் 24:31

    (முஹம்மதே!)  உமது  மனைவியருக்கும், உமது பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.” அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான். (அல் குர்ஆன் 33:59)

 தண்ணீர் பிடிக்கும் இடம்

    பொது பைப்பில் தண்ணீர் பிடிக்கும் போது வரும் சண்டையை கவனித்தால் காது கொடுத்து கேட்க முடியாது. அந்த அளவுக்கு கீழ்தரமான கெட்ட வார்த்தைகளை சர்வ சாதாரணமாக முஸ்லிம் பெண்கள் பேசுகின்றனர். ஒரு குடம் தண்ணீருக்காக ஓராயிரம் பொய் பேசுகின்றனர். அது மட்டுமல்லாமல் கண்ணிலே சாடை செய்து மற்ற பெண்களை கேலி செய்கின்றனர். இந்த செயலை அல்லாஹ் கண்டிக்கிறான்.

நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கே- செய்ய வேண்டாம்.இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக்கே- செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக்கூடும். உங்களுக்குள் நீங்கள் குறைகூறவேண்டாம். பட்டப்பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கைகொண்ட பின் பாவமான பெயர் (சூட்டுவது) கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள். (அல்குர்ஆன் 49:11)

அநீதி இழைக்கப்பட்டவன் தவிர (வேறெவரும்) தீய சொல்லைப் பகிரங்கமாகக் கூறுவதைஅல்லாஹ் விரும்ப மாட்டான். அல்லாஹ் செவியுறுபவனாகவும், அறிந்தவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:148)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்டவர்  (ஒன்று) நல்லதைப் பேசட்டும். அல்லது வாய் மூடி இருக்கட்டும்.

அறிவிப்பவர் :  அபூஹுரைரா (ர-), நூல் :புகாரி (6018)

தள்ளுவண்டிக்காரனிடம் துள்ளி பேசும் பெண்கள் - பஜார் கடைகளும் பசாங்கு வார்த்தைகளும்

காய்கறி, மீன், துணிகள்,போன்றவற்றை விற்க வரும் ஆண்களிடம் 5 ரூபாய் குறைக்க வேண்டும் என்பதற்காக

வளைந்து குழைந்து பேசுவதை பார்க்கலாம். வெகுநேரம்  சிரித்து பேசும் பெண்களையும் ஆங்காங்கே பார்க்க முடிகிறது. இவையெல்லாமே பெண்களுக்கு ஆபத்தை ஏற்படுத்தும் செயல்களாகும்.

கடைகளுக்கு பொருட்கள் வாங்க செல்லும் பெண்கள் அங்கு வேலைக்கு  பெண்கள் உள்ளனரா என்று பார்ப்பது கிடையாது.ஒரு ஆண் மட்டும் உள்ள கடைக்குள் ஒரு பெண் தனியே செல்கிறாள்.இவ்வாறு தனியே செல்லும் பெண்களிடம் ஒரு சில சபலம் கொண்ட கெட்ட ஆண்கள் இரட்டை அர்தத்தில் பேசியும்,அந்த பெண்ணின் அழகை  வர்ணித்து பேசவும் செய்து தன் வலையில் சிக்க வைத்து அந்த பெண்களின் வாழ்க்கையை சீரழிக்க  பார்க்கின்றான். இது போன்ற இடங்களுக்கு செல்ல நேரிட்டால் அல்லாஹ் திருமறை குர்ஆனில் கூறியதை ஞாபகப்படுத்திக்கொள்ள வேண்டும்.

 நபியின் மனைவியரே! நீங்கள் பெண்களில் எவரையும் போன்றோர் அல்லர். நீங்கள் (இறைவனுக்கு) அஞ்சினால் குழைந்து பேசாதீர்கள்! எவனது உள்ளத்தில் நோய் உள்ளதோ அவன் சபலப்படுவான். அழகான கூற்றையே கூறுங்கள். அல்குர்ஆன் 33:32)

 இது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் மனைவிக்கு சொல்லப்பட்டதாக இருந்தாலும் இந்த எச்சரிக்கை அனைவருக்கும் பொருந்தும்.

வீதியில் குழுமும் போது

   ஆண்கள் ரோட்டில் செல்லும் போது ரோட்டை பட்டா எழுதி வாங்கியது போல் நடு ரோட்டில் நின்று பேசுவார்கள்.போகிற வருகிற மக்களை முறைத்து பார்த்து கொண்டே இருப்பார்கள்.குறிப்பாக பெண்கள் போனால் போதும் வச்ச கண் வாங்காமல் பார்த்து பெண்களை சங்கடபடவைப்பார்கள். இது போன்ற நிலை வராமல் இருப்பதற்கு நபி(ஸல்) அவர்கள் வீதியின் ஒழுங்குகளை கற்றுத்தருகிறார்கள்.

"நீங்கள் சாலைகளில் அமர்வதைத் தவிருங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மக்கள் "எங்களுக்கு அங்கு அமர்வதைத் தவிர வேறுவழியில்லை. அவை தாம் நாங்கள் பேசிக் கொள்கின்ற எங்கள் சபைகள்'' என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்அப்படி நீங்கள் அந்த சபைகளுக்கு வந்து தான் ஆகவேண்டுமென்றால் பாதைக்கு அதன் உரிமையைக் கொடுத்து விடுங்கள்'' என்று கூறினார்கள். மக்கள் "பாதையின் உரிமை என்ன?'' என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "பார்வையைத் தாழ்த்திக் கொள்வதும், (பாதையில் செல்வோருக்கு சொல்லாலோ, செயலாலோ) துன்பம் தராமல் இருப்பதும். ஸலாமுக்கு பதிலுரைப்பதும், நன்மை புரியும்படி கட்டளையிடுவதும், தீமையிலிருந்து தடுப்பதும் அதன் உரிமைகள் ஆகும்'' என்று கூறினார்கள்.

               அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி), நூல்: புகாரி 2465

மற்றொரு அறிவிப்பில் "அழகிய பேச்சைப் பேசுதலும்'' பாதைக்குச் செய்ய வேண்டிய கடமையாகக் கூறப்பட்டுள்ளது.

          அறிவிப்பவர்: அபூ தல்ஹா (ரலி) , நூல் முஸ்லிம் 4365

 இக்கட்டுரையில்  சொல்லப்பட்ட இடங்களுக்கு அனைவரும் அன்றாடம் செல்வோம்.எனவே இது போன்ற இடங்களில் அல்லாஹ்வும் அவனது தூதரும் காட்டி தந்த முறையில் நடந்து மறுவுலகில் வெற்றிபெறுவோம்.

 

ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகள்

அருள் நிறைந்த ரமலான் மாதத்தில் நல்லறங்கள் அதிகம் செய்யவேண்டும் என்ற ஆர்வம் மக்களிடம் அதிகம் இருக்கும். இதை இன்னும் அதிகப்படுத்த பரவலாக பலவீனமான பொய்யான செய்திகளை ஆலிம்கள் மக்களிடம் பயான் செய்துவருகின்றனர். நல்லறங்கள் செய்வதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகளையே கூறவேண்டும். பொய்யான செய்திகளை மக்களிடம் கூறக்கூடாது என்பதற்கும் மக்கள் இது போன்ற செய்திகளில் விழிப்புணர்வுடன் இருக்கவேண்டும் என்பதற்காக ரமலான் தொடர்பான பலவீனமான செய்திகளை தொகுத்து தருகிறோம்.

நோன்பு பிடியுங்கள், ஆரோக்கியம் பெறுங்கள்

-المعجم الأوسط - (8 / 174)

 8312 - حدثنا موسى بن زكريا نا جعفر بن محمد بن فضيل الجزري نا محمد بن سليمان بن أبي داود نا زهير بن محمد عن سهيل بن أبي صالح عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه و سلم  اغْزُوا تَغْنَمُوا، وَصُومُوا تَصِحُّوا، وَسَافِرُوا تَسْتَغْنُوا  لم يرو هذا الحديث عن سهيل بهذا اللفظ إلا زهير بن محمد

போர் செய்யுங்கள் கனீமத் பொருட்களை பெற்றுக் கொள்ளுங்கள், நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தை பெறுங்கள், பயணம் செய்யுங்கள் செல்வத்தை பெறுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : தப்ரானீ - அல்அவ்ஸத், பாகம் :8, பக்கம் : 174

இச் செய்தியில் இடம் பெறும் சுஹைர் பின் முஹம்மத் என்பவர் பலவீனமானவராவார்.

تهذيب التهذيب - (3 / 301)

قال البخاري ماروى عنه أهل الشام فانه مناكير وما روى عنه أهل البصرة فانه صحيح وقال الاثرم عن أحمد في رواية الشاميين عن زهير يروون عنه مناكير

அவரிடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பவது மறுக்கப்பட வேண்டியவையாகும். அவரிடமிருந்து பஸராவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பவது ஆதாரப்பூர்வமானதாகும் என்று இமாம் புகாரி கூறுகிறார்கள். சுஹைர் இடமிருந்து சிரியாவைச் சார்ந்தவர்கள் அறிவிப்பதில் மறுக்கப்படவேண்டியவைகள் உள்ளன என்று இமாம் அஹ்மத் கூறியுள்ளார்கள்.

நூல் ; தஹ்தீபுத் தஹ்தீப், பாகம் :3, பக்கம் : 301

சுஹைர் பின் முஹம்மத் என்பவரிடமிருந்து அறிவிப்பவர் முஹம்மத் பின் சுலைமான் பின் அபிதாவூத் ஆவார். இவர் ஹிரான் பகுதியைச் சார்ந்தவர். ஹிரான் என்பது சிரியாவை பகுதியைச் சார்ந்ததாகும்.

شرح العقيدة الطحاوية للحوالي - (1 / 560)

كَانَ من أهل حران من بلاد الشام

ஹிரான் பகுதியுள்ளவர்கள் சிரியாவைச் சார்ந்தவர்கள்.

(நூல் : ஷரஹுல் அகீதத்துத் தஹாவிய்யா, பாகம் :1, பக்கம் : 560

எனவே இந்த செய்தி சிரியா நாட்டவர் மூலம் அறிவிப்பதால் இது சரியான செய்தி அல்ல.

இதே செய்தி அலீ (ரலி) அவர்கள் வழியாக இப்னு அதி அவர்களின் அல்காமில் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல. இதில் இடம்பெறும் ஹுஸைன் பின் அப்துல்லாஹ் என்பவர் பொய்யராவார்.

الكامل لابن عدي - (2 / 357)

محمد بن روح بن نصر ثنا أبو الطاهر قال ثنا أبو بكر بن أبي أويس عن حسين بن عبد الله عن أبيه عن جده أن عليا قال قال لي رسول الله صلى الله عليه وسلم لم يحل الله قليلا حرم كثيره وبإسناده عن جده عن علي أن رسول الله صلى الله عليه وسلم قال تسحروا ولو بشربة من ماء وأفطروا ولو على شربة من ماء وبإسناده عن علي أن رسول الله صلى الله عليه وسلم قال صوموا تصحوا

நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியமாக இருங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அலீ (ரலி),நூல் : அல்காமில், பாகம் :2, பக்கம் : 357

لسان الميزان - (2 / 289)

 1214 - الحسين بن عبد الله بن ضميرة بن أبي ضميرة سعيد الحميري المدني ... كذبه مالك وقال أبو حاتم متروك الحديث كذاب وقال بن معين ليس بثقة ولا مأمون وقال البخاري منكر الحديث ضعيف وقال أبو زرعة ليس بشيء ... وقال أبو داود ليس بشيء وقال النسائي ليس بثقة ولا يكتب حديثه وقال بن الجارود كذاب ليس بشييء

ஹுஸைன் பின் அப்துல்லாஹ் என்பவரை இமாம் மாலிக் பொய்யர் என்று கூறியுள்ளார்கள். அபூஹாத்திம் அவர்கள், இவர் ஹதீஸ் துறையில் விடப்படவேண்டியவர், பொய்யர் என்று கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் இல்லை, உறுதியானவரும் இல்லை என்று இப்னு மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இவர் மறுக்கப்படவேண்டியவர், பலவீனமானவர் என்று இமாம் புகாரி அவர்கள் கூறினார்கள். இவர் மதிப்பற்றவர் என்று அபூஸுர்ஆ மற்றும் அபூதாவூத் அவர்கள் கூறியுள்ளார்கள். இவர் நம்பகமானவர் இல்லை, இவருடைய ஹதீஸ்கள் எழுதப்படாது என்று இமாம் நஸாயீ அவர்கள் கூறியுள்ளார். இவர் மதிப்பற்றவர் பொய்யர் என்று இப்னுல் ஜாரூத் அவர்கள் கூறியுள்ளார்கள். (நூல் : லிஸானுல் மீஸான், பாகம் :2, பக்கம் :289)

நோன்பு பிடியுங்கள் ஆரோக்கியத்தை பெறுங்கள் என்ற செய்தி இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக இப்னு அதீ அவர்களின் அல்காமில் என்ற நூலில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இதுவும் ஆதாரப்பூர்வமான செய்தி அல்ல.

الكامل في ضعفاء الرجال - (7 / 57)

 ثنا عبد الرحمن بن محمد بن علي القرشي ثنا محمد بن رجاء السندي ثنا محمد بن معاوية النيسابوري ثنا نهشل بن سعيد عن الضحاك عن بن عباس قال رسول الله صلى الله عليه وسلم سافروا تصحوا وصوموا تصحوا

இச் செய்தியில் இடம்பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் பொய்யுரைப்பவர் என்று குற்றம் சாட்டப்பட்டவர்.

تقريب التهذيب - (2 / 253)

بخ ت ق نهشل بن سعيد بن وردان الورداني بصري الأصل سكن خراسان متروك وكذبه إسحاق بن راهويه من السابع

நஹ்ஷல் பின் ஸயீத் என்பவர் விடப்படவேண்டியவர், இவரை பொய்யர் என்று இஸ்ஹாக் பின் ராஹவைகி குறிப்பிட்டுள்ளார்கள். (நூல் :தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :2, பக்கம் : 253)

நோன்பு பிடிப்பதால் உடல் ஆரோக்கியமாக இருக்கும் என்றாலும் நபி (ஸல்)அவர்கள் இக்கருத்தைச் சொன்னார்கள் என்பதற்கு ஆதாரம் இல்லை.

செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதம்

شعب الإيمان - (5 / 223)

 - أَخْبَرَنَا أَبُو عَبْدِ اللهِ الْحَافِظُ، أَخْبَرَنَا أَبُو بَكْرٍ إِسْمَاعِيلُ بْنُ مُحَمَّدٍ الضَّرِيرُ بِالرَّيِّ، حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ الْفَرَجِ الْأَزْرَقُ، حَدَّثَنَا عَبْدُ اللهِ بْنُ بَكْرٍ السَّهْمِيُّ، حَدَّثَنَا إِيَاسُ بْنُ عَبْدِ الْغَفَّارِ، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ ح وَأَخْبَرَنَا أَبُو نَصْرِ بْنُ قَتَادَةَ، حَدَّثَنَا أَبُو عَمْرٍو إِسْمَاعِيلُ بْنُ نُجَيْدٍ، حَدَّثَنَا جَعْفَرُ بْنُ مُحَمَّدِ بْنِ سَوَّارٍ، أَخْبَرَنِي عَلِيُّ بْنُ حُجْرٍ ح -ள224ன- وحدثنا أَبُو سَعْدٍ عَبْدُ الْمَلِكِ بْنُ أَبِي عُثْمَانَ الزَّاهِدُ، أخبرنا أَبُو عَمْرٍو مُحَمَّدُ بْنُ جَعْفَرِ بْنِ مَطَرٍ، أخبرنا جَعْفَرُ بْنُ أَحْمَدَ بْنِ نَصْرٍ الْحَافِظُ، حَدَّثَنَا عَلِيُّ بْنُ حُجْرٍ ح وَأَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا بْنُ أَبِي إِسْحَاقَ الْمُزَكِّي، حَدَّثَنَا وَالِدِي، قَالَ: قَرَئ عَلَى مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ خُزَيْمَةَ، أَنَّ عَلِيَّ بْنَ حُجْرٍ السَّعْدِيَّ حَدَّثَهُمْ، حدثنا يُوسُفُ بْنُ زِيَادٍ، عَنْ هَمَّامِ بْنِ يَحْيَى، عَنْ عَلِيِّ بْنِ زَيْدِ بْنِ جُدْعَانَ، عَنْ سَعِيدِ بْنِ الْمُسَيِّبِ، عَنْ سَلْمَانَ الْفَارِسِيَّ، قَالَ: خَطَبَنَا رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي آخِرِ يَوْمٍ مِنْ شَعْبَانَ فَقَالَ: " يا أَيُّهَا النَّاسُ قَدْ أَظَلَّكُمْ شَهْرٌ عَظِيمٌ، شَهْرٌ مُبَارَكٌ، شَهْرٌ فِيهِ لَيْلَةٌ خَيْرٌ مِنْ أَلْفِ شَهْرٍ، جَعَلَ اللهُ صِيَامَهُ فَرِيضَةً، وَقِيَامَ لَيْلِهِ تَطَوُّعًا، مَنْ تَقَرَّبَ فِيهِ بِخَصْلَةٍ مِنَ الْخَيْرِ كَانَ كَمَنْ أَدَّى فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَمَنْ أَدَّى فَرِيضَةً فِيهِ كَانَ كَمَنْ أَدَّى سَبْعِينَ فَرِيضَةً فِيمَا سِوَاهُ، وَهُوَ شَهْرُ الصَّبْرِ، وَالصَّبْرُ ثَوَابُهُ الْجَنَّةُ، وَشَهْرُ الْمُوَاسَاةِ، وَشَهْرٌ يُزَادُ فِي رِزْقِ الْمُؤْمِنِ، مَنْ فَطَّرَ فِيهِ صَائِمًا كَانَ لَهُ مَغْفِرَةً لِذُنُوبِهِ، وَعِتْقَ رَقَبَتِهِ مِنَ النَّارِ، وَكَانَ لَهُ مِثْلُ أَجْرِهِ مِنْ غَيْرِ أَنْ يُنْقَصَ مِنْ أَجْرِهِ شَيْءٌ " قُلْنَا: يَا رَسُولَ اللهِ، لَيْسَ كُلُّنَا يَجِدُ مَا يُفْطِرُ الصَّائِمَ، فَقَالَ رَسُولُ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: " يُعْطِي اللهُ هَذَا الثَّوَابَ مَنْ فَطَّرَ صَائِمًا عَلَى مَذْقَةِ لَبَنٍ أَوْ تَمْرَةٍ أَوْ شَرْبَةٍ مِنْ مَاءٍ، وَمَنْ أَشْبَعَ صَائِمًا سَقَاهُ اللهُ مِنْ حَوْضِي شَرْبَةً لَا يَظْمَأُ حَتَّى يَدْخُلَ الْجَنَّةَ، وَهُوَ شَهْرٌ أَوَّلُهُ رَحْمَةٌ، وَأَوْسَطُهُ مَغْفِرَةٌ، وَآخِرُهُ عِتْقٌ مِنَ النَّارِ مَنْ خَفَّفَ عَنْ مَمْلُوكِهِ فِيهِ غَفَرَ اللهُ لَهُ وَأَعْتَقَهُ مِنَ النَّارِ " زَادَ هَمَّامٌ فِي رِوَايَتِهِ: " فَاسْتَكْثِرُوا فِيهِ مِنْ أَرْبَعِ خِصَالٍ، خَصْلَتَانِ تُرْضُونَ بِهَا رَبَّكُمْ، وَخَصْلَتانِ لَا غِنَى لَكُمْ عَنْهُمَا، فَأَمَّا الْخَصْلَتانِ اللَّتَانِ تُرْضُونَ بِهَا رَبَّكُمْ: فَشَهَادَةُ أَنْ لَا إِلَهَ إِلَّا اللهُ وَتَسْتَغْفِرُونَهُ، وَأَمَّا اللَّتَانِ لَا غِنَى لَكُمْ عَنْهُمَا فَتَسْأَلُونَ اللهَ الْجَنَّةَ، وَتَعُوذُونَ بِهِ مِنَ النَّارِ " لَفْظُ حَدِيثِ هَمَّامٍ وَهُوَ أَتَمُّ

நபி (ஸல்) அவர்கள் ஷஅபான் மாதத்தின் இறுதியில் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். (அதில்) மனிதர்களே! உங்களுக்கு மகத்துவம் மிக்க, அருள் நிறைந்த மாதம் வழங்கப்பட்டுள்ளது. அந்த மாதத்தில் ஆயிரம் மாதங்களை விட சிறந்த ஓர் இரவு இருக்கிறது. அந்த மாதத்தில் நோன்பு நோற்பதை அல்லாஹ் கடமையாக்கியிருக்கின்றான். இரவில் தொழுவதை உபரியான வணக்கமாக ஆக்கியுள்ளான். நன்மையான காரியம் ஏதாவது ஒன்றைச் செய்தால் அவன் அதுவல்லாத ஒரு கடமையான செயலைச் செய்வதன் போன்றாவான். அம்மாதத்தில் ஒரு கடமையான செயலைச் செய்தால் அதுவல்லாத எழுபது கடமையான செயலைச் செய்தவன் போன்றாவான்.

இது பொறுமைக்குரிய மாதமாகும். பொறுமையின் கூலி சொர்க்கமாகும். மேலும் (இது) பெருந்தன்மையுடன் நடக்கும் மாதமாகும். முஃமின்களின் செல்வங்கள் அதிகரிக்கப்படும் மாதமாகும். யார் அம்மாதத்தில் ஒரு நோன்பாளிக்கு நோன்புதிறக்க செய்வாரோ அவருடைய பாவங்கள் மன்னிக்கப்படும். நரகத்திலிருந்து பாதுகாப்பாக அமையும். மேலும் (நோன்பு நோற்றவரின்) கூலிபோன்று இவருக்கும் வழங்கப்படும். அவரின் கூலியிலிருந்து எதுவும் குறைக்கப்படாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதரே‡ எங்களின் அனைவரும் நோன்பாளியை நோன்பு துறக்கச் செய்யும் அளவு (வசதி படைத்தவர்கள்) இல்லையே! என்று கூறினோம். அப்போது யார் தண்ணீர் கலந்த பாலை அல்லது பேரீச்சம் பழத்தை அல்லது தண்ணீரை கொடுத்தாலும் இந்த நன்மையை அல்லாஹ் வழங்குவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

யார் நோன்பாளிக்கு வயிறு நிரம்ப (உணவு வழங்கி) நோன்பு துறக்கச் செய்கிறாரோ அவருக்கு என்னுடைய ஹவ்லுல் (கவ்ஸரில்) சொர்க்கம் செல்லும் வரைக்கும் அல்லாஹ் நீர் புகட்டுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

இந்த மாதத்தின் முதல் பகுதி அருளுக்குரியதாகும். நடுப்பகுதி மன்னிப்புக்குரியதாகும். இறுதிப்பகுதி நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதாகும். யார் அந்த மாதத்தில் அடிமையிடம் மென்மையாக நடந்து கொள்கிறாரோ அவருடைய பாவங்களை அல்லாஹ் மன்னிக்கின்றான். மேலும் நரகத்திலிருந்து அவரை விடுதலை செய்கிறான்.

நீங்கள் நான்கு விசயங்களை அதிகப்படுத்திக் கொள்ளுங்கள். அதில் இரண்டு விஷயங்கள் உங்களை இறைவனை திருப்திக் கொள்ள செய்வதாகும். இரண்டு விஷயங்கள் உங்களுக்கு அவசியமானதாகும்.

உங்கள் இறைவனை திருப்திக் கொள்ள செய்யும் இரண்டு விஷயங்கள் : 1. வணங்குவதற்கு தகுதியானவான் அல்லாஹ் ஒருவனே என்று உறுதிகூறுவதாகும். 2. அவனிடம் பாவமன்னிப்பு கோருவதாகும்.

உங்களுக்கு அவசியமான இரண்டு விஷயங்கள் : 1. அவனிடம் சொர்க்கத்தை கேட்பதாகும். 2. நரகத்திலிருந்து பாதுகாப்பு தேடுவதாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஸல்மான் பாரிஸி (ரலி), நூல் : ஷுஅபுல் ஈமான்- பைஹகீ, பாகம் : 5, பக்கம் :223

இதே செய்தி ஸஹீஹ் இப்னு ஹுஸைமா பாகம் :3, பக்கம் :191, பைஹகீ அவர்களில் பலாயிலுல் அல்அவ்காத், பாகம் :1, பக்கம் : 147 ஆகிய நூல்களிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது.

அனைத்து நூல்களிலும் அலீ பின் ஜைத் பின் ஜுத்ஆன் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவராவார்.

تقريب التهذيب - (1 / 694)

ق علي بن زيد بن عبد الله بن زهير بن عبد الله بن جدعان التيمي البصري أصل حجازي وهو المعروف بعلي بن زيد بن جدعان ينسب أبوه إلى جد جده ضعيف من الرابعة مات سنة إحدى وثلاثين وقيل قبلها

அலீ பின் ஜைத் பின் ஜுத்ஆன் என்பவர் பலவீனமானவராவார்.

நூல் ; தக்ரீபுத் தஹ்தீப், பாகம் :1, பக்கம் : 694

நோன்பை முறிக்கும் ஐந்து விஷயங்கள்

الموضوعات لابن الجوزي - (2 / 195)

أنبأنا محمد بن ناصر أنبأنا الحسن بن أحمد البناء حدثنا أبو الفتح بن أبى الفوارس حدثنا أبو محمد عبدالله بن محمد بن جعفر حدثنا أحمد بن جعفر الحمال حدثنا سعيد بن عنبسة حدثنا بقية حدثنا محمد بن الحجاج عن جابان عن أنس قال قال رسول الله صلى الله عليه وسلم: " خمس يفطرن الصائم وينقضن الوضوء: الكذب، والنميمة، والغيبة، والنظر لشهوة، واليمين الكاذبة ".

هذا موضوع. ومن سعيد إلى أنس كلهم مطعون فيه.قال يحيى ابن معين: وسعيد كذاب.

ஐந்து விஷயங்கள் நோன்பாளியின் நோன்பையும் உளூவையும் முறித்துவிடும். 1. பொய் 2. கோள் சொல்லுதல் 3. புறம் பேசுதல் 4. இச்சையுடன் பார்த்தல் 5. பொய் சத்தியம் செய்தல் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அனஸ் (ரலி), நூல் : மவ்லூஆத்-இப்னுல் ஜவ்ஸி, பாகம் :2, பக்கம் : 195

இந்த செய்தியில் இடம்பெறும் ஸயீத் பின் அன்பஸா என்பவர் பொய்யர் என்று யஹ்யா பின் மயீன் அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள். இந்த செய்தியில் இடம்பெறும் அனைவரும் குறைகூறப்பட்டவர்கள் என்று இப்னுல் ஜவ்ஸி அவர்கள் குறிப்பிட்டு இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்றும் குறிப்பிடுகிறார்கள்.

ஹூருல் ஈன்கள் கிடைக்கும் மாதம்

شعب الإيمان - (5 / 239)

3361 - أَخْبَرَنَا أَبُو زَكَرِيَّا الْمُزَكِّي، حدثنا وَالِدِي، قَالَ: قَرَأَ عَلَيَّ مُحَمَّدُ بْنُ إِسْحَاقَ بْنِ -ள240ன- خُزَيْمَةَ، أَنَّ أَبَا الْخَطَّابِ زِيَادَ بْنَ يَحْيَى الْحَسَّانِيَّ أَخْبَرَهُمْ، قَالَ أَبُو إِسْحَاقَ: وَقَرَأْتُ عَلَى أَبِي الْعَبَّاسِ الْأَزْهَرِيِّ، فَقُلْتُ: حَدَّثَكُمْ أَبُو الْخَطَّابِ زِيَادُ بْنُ يَحْيَى الْحَسَّانِيُّ، حدثنا سَهْلُ بْنُ حَمَّادٍ أَبُو عَتَّابٍ، حدثنا جَرِيرُ بْنُ أَيُّوبَ الْبَجَلِيُّ، عَنِ الشَّعْبِيِّ، عَنْ نَافِعٍ بْنِ بُرْدَةَ، عَنْ أَبِي مَسْعُودٍ الْغِفَارِيِّ، قَالَ: سَمِعْتُ رَسُولَ اللهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ ذَاتَ يَوْمٍ وَأَهَلَّ رَمَضَانُ فَقَالَ: " لَوْ يَعْلَمُ الْعِبَادُ مَا رَمَضَانَ لَتَمَنَّتْ أُمَّتِي أَنْ تَكُونَ السَّنَةُ كُلُّهَا " فَقَالَ رَجُلٌ مِنْ خُزَاعَةَ: يَا نَبِيَّ اللهِ، حَدِّثْنَا فقَالَ: " إِنَّ الْجَنَّةَ لَتُزَيَّنُ لِرَمَضَانَ مِنْ رَأْسِ الْحَوْلِ إِلَى الْحَوْلِ، فَإِذَا كَانَ أَوَّلُ يَوْمٍ مِنْ رَمَضَانَ هَبَّتْ رِيحٌ مِنْ تَحْتِ الْعَرْشِ، فَصَفِقَتْ وَرَقَ الْجَنَّةِ فَتَنْظُرُ الْحُورُ الْعِينُ إِلَى ذَلِكَ، فَيَقُلْنَ: يَا رَبِّ اجْعَلْ لَنَا مِنْ عِبَادِكَ فِي هَذَا الشَّهْرِ أَزْوَاجًا تَقَرُّ أَعْيُنُنَا بِهِمْ وَتَقَرُّ أَعْيُنُهُمْ بِنَا "، قَالَ: " فَمَا مِنْ عَبْدٍ يَصُومُ يَوْمًا مِنْ رَمَضَانَ إِلَّا زُوِّجَ زَوْجَةً مِنَ الْحُورِ الْعِينِ فِي خَيْمَةٍ مِنْ دُرَّةٍ مِمَّا نَعَتَ اللهُ عَزَّ وَجَلَّ: {حُورٌ مَقْصُورَاتٌ فِي الْخِيَامِ} الرحمن: 72 عَلَى كُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ سَبْعُونَ حُلَّةً لَيْسَ مِنْهَا حُلَّةٌ عَلَى لَوْنِ أُخْرَى، وَيُعْطَى سَبْعِينَ لَوْنًا مِنَ الطِّيبِ لَيْسَ مِنْهُ لَوْنٌ عَلَى رِيحِ الْآخَرِ لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ سَبْعُونَ أَلْفَ وَصِيفَةٍ لِحَاجَتِهَا، وَسَبْعُونَ أَلْفَ وَصِيفَةٍ مَعَ كُلِّ وَصِيفَةٍ صَفحةٌ مِنْ ذَهَبٍ فِيهَا لَوْنُ طَعَامٍ يَجِدُ لَآخِرِ لُقْمَةٍ مِنْهَا لَذَّةً لَمْ يَجِدْهُ لِأَوَّلِهِ، لِكُلِّ امْرَأَةٍ مِنْهُنَّ سَبْعُونَ سَرِيرًا مِنْ يَاقُوتَةٍ حَمْرَاءَ عَلَى كُلِّ سَرِيرٍ سَبْعُونَ فِرَاشًا بَطَائِنُها مِنْ إِسْتَبْرَقٍ فَوْقَ كُلِّ فِرَاشٍ سَبْعُونَ أَرِيكَةٍ، وَيُعْطَى زَوْجُهَا مِثْلُ ذَلِكَ عَلَى سَرِيرٍ مِنْ يَاقُوتٍ أَحْمَرَ مُوَشَّحًا بالدُّرِّ، عَلَيْهِ سِوَارَانِ مِنْ ذَهَبٍ هَذَا بِكُلِّ يَوْمٍ صَامَهُ مِنْ رَمَضَانَ سِوَى مَا عَمِلَ مِنَ الْحَسَنَاتِ " -ள241ன- قَالَ الْإِمَامُ أَحْمَدُ: " وَرَوَاهُ ابْنُ خُزَيْمَةَ فِي كِتَابِهِ وَجْهَيْنِ، عَنْ جَرِيرٍ، وَمِنْ حَدِيثِ سَلْمِ عَنْ قُتَيْبَةَ، عَنْ جَرِيرٍ إِلَّا أَنَّهُ قَالَ: عَنْ نَافِعِ بْنِ بُرْدَةَ الْهَمَدَانِيِّ، عَنْ رَجُلٍ مِنْ غِفَارٍ ثُمَّ قَالَ: وَفِي الْقَلْبِ مِنْ جَرِيرِ بْنِ أَيُّوبَ: قُلْتُ وَجَرِيرُ بْنُ أَيُّوبَ ضَعِيفٌ عِنْدَ أَهْلِ النَّقْلِ، وَرَوَاهُ أَيْضًا عَبْدُ اللهِ بْنُ رَجَاءٍ، عَنْ جَرِيرِ بْنِ أَيُّوبَ إِلَّا أَنَّهُ لَمْ يَقُلِ الْغِفَارِيَّ "

 

 

ஒரு நாள் ரமலான் பிறை தெரிந்த போது "ரமலான் மாதத்தில் உள்ளதை அடியார்கள் அறிந்தால் வருடம் முழுவதும் ரமலானாக இருக்காதா? என்று ஆசைபடுவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது குஸாஆ குலத்தைச் சார்ந்த ஒருவர் அல்லாஹ்வின் தூதரே! (இது தொடர்பாக) விளக்குங்கள் என்றார். அதற்கு, சொர்க்கம் அந்த வருடத்தின் ஆரம்பத்திலிருந்து அடுத்தவருடம் வரை அலங்கரிக்கப்படும். ரமலான் மாதத்தின் முதல்நாள் வரும் போது அர்ஷின் கீழிலிருந்து காற்று அடிக்கும் சொர்க்கத்தின் இலைகள் அசையும். இதை ஹூருல் ஈன்கள் பார்ப்பார்கள். இறைவா! இந்த மாதத்தில் உன் அடியார்களில் எங்களுக்கு துணையாக்குவாயாக! அவர்கள் மூலம் எங்களுக்கு கண்குளிர்ச்சியும் எங்கள் மூலம் அவர்களுக்கு கண் குளிர்ச்சியும் ஏற்படுத்துவாயாக! என்று கூறுவார்கள்.

யார் ரமலான் மாதத்தில் ஒரு நாள் நோன்பு நோற்பாரோ அவருக்கு கூடாரங்களில் தங்க வைக்கப்பட்ட ஹூர் எனும் கன்னியராவர். (அல்குர்ஆன் 55:72) என்று அல்லாஹ் வர்ணித்த முத்தாலான கூடாரத்தில் ஹூர் எனும் கன்னியரை அல்லாஹ் மனைவியாக்குவான். அவர்களில் உள்ள பெண்களில் ஒவ்வொருவருக்கும் எழுபது மேலாடைகள் இருக்கும். ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. எழுபது நிற நறுமணங்கள் அவர்களுக்கு வழங்கப்படும் ஒன்று மற்றொரு நிறத்தில் இருக்காது. (இதைப்போன்று) ஒரு வாசனை மற்றொரு நிறத்தில் அமைந்திருக்காது.

அப்பெண்களில் ஒவ்வொருவருக்கும் அவர்களின் தேவையை நிறைவு செய்ய எழுபதாயிரம் வேலைக்காரப் பெண்கள் இருப்பார்கள். ஒவ்வொரு வேலைக்காரப் பெண்ணிடமும் தங்கத்தாலான தட்டு இருக்கும். அதில் உணவுகள் இருக்கும். அதில் கடைசி கவள உணவின் சுவை ஆரம்பத்தின் சுவையைப் போன்று இருக்காது. ஒவ்வொரு கட்டிலிலும் எழுபது விரிப்புகள் இருக்கும். அதன் உட்பகுதி இஸ்தபரக் என்ற பட்டுவகையைச் சார்ந்திருக்கும்.

அப்பெண்களில் ஒவ்வொருவருக்கு எழுபது சிவப்பு முத்துக்களைப் போன்ற கட்டில்கள் இருக்கும். ஒவ்வொரு விரிப்பின் மீதும் எழுபது இருக்கைகள் இருக்கும்.

அப்பெண்ணின் கணவருக்கும் முத்துக்களால் போர்த்தப்பட்ட சிவப்பு முத்துக்களைப் போன்ற கட்டில்கள் வழங்கப்படும். அவருக்கு இரண்டு தங்கத்தாலான காப்புகள் இருக்கும்.

இது அவர் செய்த ஏனைய நல்லறங்கள் தவிர ரமலான் மாதத்தில் நோன்பு நோற்கப்படும் ஒவ்வொரு நாளும் இருக்கும்.

அறிவிப்பவர் : அபூமஸ்வூத் (ரலி), நூல் : பைஹகீ- ஷுஅபுல் ஈமான், பாகம் :5, பக்கம் :239

இதே செய்தி இப்னு ஹுஸைமா, முஸ்னத் அபீயஃலா ஆகிய நூல்களிலும் இடம்பெற்றுள்ளது.

அனைத்து நூல்களிலும் ஜரீர் பின் அய்யூப் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் பலவீனமானவர் என்று இதை பதிவு செய்தவர்களில் ஒருவரான இமாம் பைஹகீ கூறியுள்ளார்கள்.

شعب الإيمان - البيهقي - (3 / 313)

و جرير بن أيوب ضعيف عند أهل النقل

ஜரீர் பின் அய்யூப் என்பவர் ஹதீஸ் துறை அறிஞர்களிடம் பலவீனமானவராவார்.

நூல் : பைஹகீ- ஷுஅபுல் ஈமான், பாகம் :3, பக்கம் : 313

ரமலான் என்று கூறக்கூடாது?

السنن الكبرى للبيهقي وفي ذيله الجوهر النقي - (4 / 201)

8158- أَخْبَرَنَا أَبُو الْحَسَنِ : عَلِىُّ بْنُ أَحْمَدَ بْنِ عَبْدَانَ أَخْبَرَنَا أَحْمَدُ بْنُ عُبَيْدٍ الصَّفَّارُ حَدَّثَنَا ابْنُ نَاجِيَةَ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِى مَعْشَرٍ ح وَأَخْبَرَنَا أَبُو سَعْدٍ الْمَالِينِىُّ وَأَبُو مَنْصُورٍ : أَحْمَدُ بْنُ عَلِىٍّ الدَّامَغَانِىُّ قَالاَ حَدَّثَنَا أَبُو أَحْمَدَ بْنُ عَدِىٍّ حَدَّثَنَا عَلِىُّ بْنُ سَعِيدٍ حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ أَبِى مَعْشَرٍ حَدَّثَنِى أَبِى عَنْ سَعِيدٍ الْمَقْبُرِىِّ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- :யி لاَ تَقُولُوا رَمَضَانَ. فَإِنَّ رَمَضَانَ اسْمٌ مِنْ أَسْمَاءِ اللَّهِ ، وَلَكِنْ قُولُوا شَهْرُ رَمَضَانَ ஞீ. {ت} وَهَكَذَا رَوَاهُ الْحَارِثُ بْنُ عَبْدِ اللَّهِ الْخَازِنُ عَنْ أَبِى مَعْشَرٍ.{ج} وَأَبُو مَعْشَرٍ هُوَ نَجِيحٌ السِّنْدِىُّ - ضَعَّفَهُ يَحْيَى بْنُ مَعِينٍ وَكَانَ يَحْيَى الْقَطَّانُ لاَ يُحَدِّثُ عَنْهُ ، وَكَانَ عَبْدُ الرَّحْمَنِ بْنُ مَهْدِىٍّ يُحَدِّثُ عَنْهُ فَاللَّهُ أَعْلَمُ.

ரமலான் என்று கூறாதீர்கள் ஏனென்றால் ரமலான் என்பது அல்லாஹ்வின் பெயராகும். எனவே நீங்கள் ஷஹ்ரு ரமலான் (ரமலான் மாதம் என்று கூறுங்கள்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் : பைஹகீ, பாகம் :4, பக்கம்: 201

இதே செய்தி இப்னு அதீ அவர்களின் காமில் என்ற நூலிலும் இடம்பெற்றுள்ளது.

இந்த செய்தியில் இடம்பெற்றுள்ள அபூமஃஷர் என்பவர் பலவீனமானவராவார் என்று இதை பதிவு செய்து இமாம் பைஹகீ அவர்களே அந்த செய்தியின் கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்.

தெரிந்த செய்திகள் தெரியாத உண்மைகள்

விசாரிக்கப்படும் நான்கு விஷயங்கள்

அப்பபாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி

நபி (ஸல்) அவர்களைப் பற்றி ஏதாவது ஒரு செய்தியை யாராவது கூறினால் அதைக் கூறியவர் நம்பகமானவரா? அல்லது பலவீனமானவரா என்று அவசியம் ஆராய வேண்டும். நபி (ஸல்) அவர்கள் கூறாத செய்திகள் அவர்களின் பெயரால் பரப்பப்பட்டு அதை மக்கள் நம்பிவிடக்கூடாது என்பதற்காக இந்த ஆராய்ச்சி அவசியமானதாகும்.

சில பலவீனமான ஹதீஸ்களை மக்கள் சரியான செய்திகள் என்று நம்பிக்கொண்டிருக்கின்றனர். இப்படிப்பட்ட ஹதீஸ்களில் பின்வரும் செய்தியும் ஒன்றாகும்.

2341حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ عَبْدِ الرَّحْمَنِ أَخْبَرَنَا الْأَسْوَدُ بْنُ عَامِرٍ حَدَّثَنَا أَبُو بَكْرِ بْنُ عَيَّاشٍ عَنْ الْأَعْمَشِ عَنْ سَعِيدِ بْنِ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ عَنْ أَبِي بَرْزَةَ الْأَسْلَمِيِّ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ عِلْمِهِ فِيمَ فَعَلَ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَعَنْ جِسْمِهِ فِيمَ أَبْلَاهُ قَالَ هَذَا حَدِيثٌ حَسَنٌ صَحِيحٌ وَسَعِيدُ بْنُ عَبْدِ اللَّهِ بْنِ جُرَيْجٍ هُوَ بَصْرِيٌّ وَهُوَ مَوْلَى أَبِي بَرْزَةَ وَأَبُو بَرْزَةَ اسْمُهُ نَضْلَةُ بْنُ عُبَيْدٍ رواه الترمذي

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

மறுமையில் அடியான் தன்னுடைய வாழ்நாளை எவ்வாறு கழித்தான்? அவனுடைய கல்வியை கொண்டு என்ன செய்தான்? செல்வத்தை எப்படி சம்பாதித்தான்? எவ்வழியில் செலவு செய்தான்? அவனுடைய உடலை எவ்வழியில் பயன்படுத்தினான்? ஆகிய கேள்விகளுக்கு அவன் பதிலளிக்காமல் அவனுடைய பாதங்கள் நகராது.

அறிவிப்பவர் : அபூ பர்ஸா (ரலி)

நூல் : திர்மிதீ (2341)

            இது சரியான செய்தி என்று மக்கள் பரவலாக அறிந்து வைத்துள்ளனர். ஆனால் இந்த செய்திக்குரிய அனைத்து அறிவிப்பாளர் தொடர்களையும் கவனித்தால் அந்த அனைத்து வழிகளும் பலவீனமானவையாக அமைந்துள்ளது. சரியான ஒரு அறிவிப்பாளர் தொடர் கூட இந்த செய்திக்கு இல்லை

            மேற்கண்ட அறிவிப்பில் அபூபக்ர் பின் அய்யாஷ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இவர் சரியான நினைவாற்றலை பெற்றிருக்கவில்லை என்பதால் அறிஞர்கள் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

            உஸ்மான் பின் சயீத் இமாம் அபூ ஹாதிம் முஹம்மது பின் அப்துல்லாஹ் பின் நுமைர் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவர் புத்தகத்திலிருந்து அறிவித்தால் மட்டுமே அது சரியான அறிவிப்பு என்று இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 12 பக்கம் 34)

இவர் மேற்கண்ட ஹதீஸை புத்தகத்திலிருந்து அறிவிக்கவில்லை.  எனவே இது பலவீனமான செய்தியாகும். இதுவல்லாத இன்னும் சில வழிகளில் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது. அனைத்து அறிவிப்புகளும் பலவீனமானவையாக உள்ளது.

அறிவிப்பு 2

2340حَدَّثَنَا حُمَيْدُ بْنُ مَسْعَدَةَ حَدَّثَنَا حُصَيْنُ بْنُ نُمَيْرٍ أَبُو مِحْصَنٍ حَدَّثَنَا حُسَيْنُ بْنُ قَيْسٍ الرَّحَبِيُّ حَدَّثَنَا عَطَاءُ بْنُ أَبِي رَبَاحٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا تَزُولُ قَدَمُ ابْنِ آدَمَ يَوْمَ الْقِيَامَةِ مِنْ عِنْدِ رَبِّهِ حَتَّى يُسْأَلَ عَنْ خَمْسٍ عَنْ عُمُرِهِ فِيمَ أَفْنَاهُ وَعَنْ شَبَابِهِ فِيمَ أَبْلَاهُ وَمَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَ أَنْفَقَهُ وَمَاذَا عَمِلَ فِيمَا عَلِمَ قَالَ أَبُو عِيسَى هَذَا حَدِيثٌ غَرِيبٌ لَا نَعْرِفُهُ مِنْ حَدِيثِ ابْنِ مَسْعُودٍ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِلَّا مِنْ حَدِيثِ الْحُسَيْنِ بْنِ قَيْسٍ وَحُسَيْنُ بْنُ قَيْسٍ يُضَعَّفُ فِي الْحَدِيثِ مِنْ قِبَلِ حِفْظِهِ وَفِي الْبَاب عَنْ أَبِي بَرْزَةَ وَأَبِي سَعِيدٍ رواه الترمذي

            இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு திர்மிதியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ஹ‚சைன் பின் கைஸ் என்பவர் இடம்பெற்றுள்ளார். இந்த ஹதீஸை பதிவு செய்த இமாம் திர்மிதீ அவர்களே இந்த செய்திக்கு கீழ் இதில் இடம்பெறும் ஹ‚சைன் பின் கைஸ் பலவீனமானவர் என்பதை தெளிவுபடுத்தியுள்ளார்.

இவர் விடப்படவேண்டியவர் என இமாம் அஹ்மது கூறியுள்ளார். இவர் எதற்கும் தகுதியானவர் இல்லை என இமாம் யஹ்யா பின் மயீன் கூறியுள்ளார். இவருடைய செய்தியை எழுதவும் கூடாது என்று இமாம் புகாரி கூறியுள்ளார். அலீ பின் மதீனீ அபூ சுர்ஆ அபூ ஹாதிம் ஆகியோர் இவரை பலவீனமானர் என்று குறைகூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 364)

எனவே இதுவும் பலவீனமான செய்தியாகும்.

அறிவிப்பு 3

538أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ يُوسُفَ عَنْ سُفْيَانَ عَنْ لَيْثٍ عَنْ عَدِيِّ بْنِ عَدِيٍّ عَنْ أَبِي عَبْدِ اللَّهِ الصُّنَابِحِيِّ عَنْ مُعَاذِ بْنِ جَبَلٍ قَالَ لَا تَزُولُ قَدَمَا عَبْدٍ يَوْمَ الْقِيَامَةِ حَتَّى يُسْأَلَ عَنْ أَرْبَعٍ عَنْ عُمُرِهِ فِيمَا أَفْنَاهُ وَعَنْ جَسَدِهِ فِيمَا أَبْلَاهُ وَعَنْ مَالِهِ مِنْ أَيْنَ اكْتَسَبَهُ وَفِيمَا وَضَعَهُ وَعَنْ عِلْمِهِ مَاذَا عَمِلَ فِيهِ رواه الدارمي

            முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தாரமியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் லைஸ் என்பார் இடம்பெற்றுள்ளார். இவரும் நினைவாற்றல் கடுமையாக பாதிக்கப்பட்டவர் ஆவார். இவர் அறிவித்த ஹதீஸ்களில் எது சரியானது? எது தவறானது? என்பதை கண்டறிய முடிôயத அளவுக்கு குழப்பம் இருப்பதால் இவரை அறிஞர்கள் விட்டுவிட்டனர் என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார்.

            இமாம் யஹ்யா பின் மயீன் இமாம் அபூ ஹாதிம் இமாம் அபூ சுர்ஆ ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர். இவருடைய செய்தியை எழுதிக்கொள்ளலாம். ஆனால் ஆதாரமாக கொள்ள முடியாது என இப்னு அதீ கூறியுள்ளார். இவர் ஹதீஸில் குழம்பி அறிவிப்பவர் என இமாம் அஹ்மது பின் ஹம்பள் கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 8 பக்கம் 465)

எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

அறிவிப்பு 4

المدخل إلى السنن الكبرى للبيهقي - (1 / 390)

386 - أخبرنا علي بن أحمد بن عبدان ، أبنا سليمان بن أحمد الطبراني ، ثنا المفضل بن محمد الجندي ، ثنا صامت بن معاذ ، ثنا عبد المجيد بن عبد العزيز بن أبي رواد ، ثنا الثوري ، عن صفوان بن سليم ، عن عدي بن عدي ، عن الصنابحي ، عن معاذ بن جبل ، قال : قال رسول الله صلى الله عليه وسلم : யி لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع خصال ، عن عمره فيما أفناه ، وشبابة فيما أبلاه ، وعن ماله من أين اكتسبه وفيما أنفقه ، وعن علمه ماذا عمل فيه ஞீ

            முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு பைஹகி அவர்களின் அல்மத்கல் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் அப்துல் மஜீத் பின் அப்தில் அஸீஸ் என்பார் இடம்பெற்றுள்ளார். இவர் வலுமையானவர் இல்லை என இமாம் அபூஹாதிம் கூறியுள்ளார். இவர் தவறிழைப்பவர் என இமாம் இப்னு ஹஜர் கூறியுள்ளார். இவரை ஆதாரமாகக் கொள்ள முடியாது என இமாம் தாரகுத்னீ கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 381)

எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.

அறிவிப்பு 5

المعجم الأوسط - (5 / 74)

 4710 - حدثنا عبد الرحمن بن معاوية العتبي قال حدثنا زهير بن عباد الرؤاسي قال حدثنا عبد الله بن حكيم ابو بكر الداهري عن محمد بن سعيد الشامي عن إسماعيل بن عبيد الله عن ام الدرداء عن ابي الدرداء قال قال رسول الله صلى الله عليه و سلم لن يزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع عن شبابه فيما ابلاه وعن عمره فيما افناه وعن ماله من اين اكتسبه وفيما أنفقه لا يروى هذا الحديث عن أبي الدرداء إلا بهذا الإسناد

அபுத்தர்தா (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தப்ரானியின் அல்முஃஜமுல் அவ்ஸத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் முஹம்மது பின் சயீத் என்பார் இடம்பெற்றுள்ளார். இவர் ஹதீஸில் இட்டுக்கட்டும் பெரும் பொய்யர் என இமாம் நஸாயீ கூறியுள்ளார். இவருடைய அறிவிப்பு கண்டுகொள்ளாமல் விடப்பட வேண்டும் என இமாம் புகாரி கூறியுள்ளார். இவர் வேண்டுமென்றே இட்டுக்கட்டுபவர் என இமாம் அஹ்மது கூறியுள்ளார். மற்றும் பல அறிஞர்கள் இவரை கடுமையான முறையில் விமர்சனம் செய்துள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 9 பக்கம் 184)

 எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

அறிவிப்பு 6

المعجم الكبير - (11 / 102)

 11177 - حدثنا الهيثم بن خلف الدوري ثنا أحمد بن محمد بن يزيد بن سليم مولى بني هاشم حدثني حسين بن الحسن الأشقر ثنا هشيم بن بشير عن أبي هاشم عن مجاهد عن ابن عباس رضي الله عنهما قال : قال رسول الله صلى الله عليه و سلم : لا تزول قدما عبد يوم القيامة حتى يسأل عن أربع عن عمره فيما أفناه وعن جسده فيما أبلاه وعن ماله فيما أنفقه ومن أين كسبه وعن حبنا أهل البيت

            இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு தப்ரானியில் இடம்பெற்றுள்ளது. இந்த அறிவிப்பில் ஹ‚சைன் பின் ஹசன் என்பார் இடம்பெற்றுள்ளார். இமாம் அபூ சுர்ஆ இவர் செய்திகளை தவறாக அறிவிப்பவர் என்று கூறியுள்ளார். இமாம் புகாரி அவர்கள் இவர் விசயத்தில் ஐயம் உள்ளது என்று கூறியுள்ளார். இவர் வலுமையானவர் இல்லை என இமாம் அபூஹாதிம் கூறியுள்ளார். இமாம் தஹபி அவர்கள் இவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 2 பக்கம் 335)

 எனவே இந்த அறிவிப்பும் பலவீனமானதாகும்.

அறிவிப்பு : 7

الجهاد لابن أبي عاصم - (1 / 326)

 حدثنا محمد بن هارون يعرف بأبي نشيط قال حدثنا عبد القدوس بن الحجاج عن عبد الرحمن بن يزيد بن تميم عن الزهري عن عبد الرحمن بن غنم عن معاذ بن جبل قال قال رسول الله صلى الله عليه و سلم ( والذي نفسي بيده ما تغبرت قدما عبد قط ولا وجهه في شيء أفضل عند الله بعد الصلاة المفروضة من الجهاد في سبيل الله عز و جل )

            முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் கூறியதாக வரும் இந்த அறிவிப்பு இப்னு அபீ ஆஸிம் அவர்கள் தொகுத்த அல்ஜிஹாத் என்ற நூலில் இடம்பெற்றுள்ளது. இதில் அப்துர் ரஹ்மான் பின் யசீத் பின் தமீம் என்பார் இடம்பெற்றுள்ளார். இமாம் யஹ்யா பின் மயீன் இப்னு அதீ இமாம் இப்னு ஹஜர் அபூஹாதிம் அபூ சுர்ஆ இமாம் புகாரி இமாம் நஸாயீ இமாம் அபூதாவுத் ஆகியோர் இவரை பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.

நூல் : தஹ்தீபுத் தஹ்தீப் (பாகம் 6 பக்கம் 295)

எனவே இதுவும் பலவீனமான அறிவிப்பாகும்.  இந்த செய்திக்குரிய அனைத்து வழிகளும் பலவீனமானதாக இருப்பதால் இதை நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று நாம் கூறக்கூடாது.

June 2, 2014, 8:42 PM

ஜுலை தீன்குலப்பெண்மணி

இக்லாஸ் அத்தியாயத்தின் விரிவுரை                        

அல்லாஹ்வின் பண்புகள் ஒன்றிணைந்த அத்தியாயம்

உரை : பி.ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

குல்ஹுவல்லாஹு அஹத். அல்லாஹுஸ் ஸமத் லம் யலீத். வலம் யூலத். வலம் யகுன்லஹு குஃபுவன் அஹத் என்ற சின்னஞ்சிறிய  அத்தியாயம் திருக்குர்ஆன் 112வது அத்தியாயமாகும்.

இந்த அத்தியாயத்திற்கு இக்லாஸ் என்று பெயர். இக்லாஸ் என்பதற்கு மனத்தூய்மை, உளத்தூய்மை என்று பொருள். இந்த அத்தியாயத்தை விரிவாகத் தெரிந்து கொண்டால், ஏகத்துவத்தின் அனைத்து அம்சங்களும் நமக்கு விளங்கிவிடும்.

இணைவைப்பை விட்டும் நமது உள்ளத்தை அப்புறப்படுத்தி தவ்ஹீத்-ஏகத்துவக் கொள்கையை ஆழமாக உள்ளத்தில் பதிய வைப்பதினால் இதற்கு அல்இக்லாஸ் (மனத்தூய்மை) என்ற பெயர் வந்தது.

இக்லாஸின் சிறப்பும் இல்லாத பொய்களும்

இந்த அத்தியாயத்தின் விளக்கத்தினை அறிந்து கொள்வதற்கு முன்னால், இதன் சிறப்புகளைப் பற்றிப் பார்ப்போம். பொதுவாக குர்ஆன் அத்தியாயங்களின் சிறப்புக்கள் சம்பந்தமாக வருகிற செய்திகளில் பெரும்பாலானவை பலவீனமானவைகளாகும். இந்த அத்தியாயத்தை ஓதினால் வறுமை அகன்றுவிடும். அந்த அத்தியாயத்தை ஓதினால் செல்வம் கொழிக்கும் என்றெல்லாம் தவறாக எழுதி வைத்துள்ளனர். ஆனால் அவற்றில் பெரும்பாலானவை பொய்களும் புரட்டுக்களும்தான்.

அவற்றில் ஓரளவுக்குச் சரியான ஹதீஸ்கள் சூரத்துல் ஃபாத்திஹா, அந்நாஸ், அல்ஃபலக் 112 வது அத்தியாயமான இக்லாஸ் அத்தியாயம் ஆகிவற்றின் சிறப்புக்கள் குறித்து ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் உள்ளன.

அல்லாஹ்வின் நேசத்தைப் பெற்றுத் தருகிற அத்தியாயம்

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரை ஒரு படைப்பிரிவுக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். அவர், தமது தொழுகையில் தம் தோழர்களுக்கு (குர்ஆன் வசனங்களை) ஓதி (தொழுவித்து) வந்தார். (ஒவ்வொரு முறையும்) ஓதி முடிக்கும் போது "குல் ஹுவல்லாஹு அஹத்' எனும்  (112 ஆவது) அத்தியாயத்துடன் முடிப்பார். அப்படையினர் திரும்பி வந்தபோது நபி (ஸல்) அவர்களிடம் இதைப் பற்றி தெரிவித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், "எதற்காக இப்படிச் செய்கிறார் என்று அவரிடமே கேளுங்கள்'' என்று கூற, அவர்களும் அவரிடம் கேட்டனர். அதற்கு அவர் " அந்த அத்தியாயம் பேரருளாளன் (ஏகத்துவப்) பண்புகளை எடுத்துரைக்கின்றது. நான் அதை (அதிகமாக) ஓதுவதை விரும்புகின்றேன்'' என்று சொன்னார். (இதைக் கேள்விப்பட்ட) நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் அவரை நேசிக்கிறான் என்று அவருக்குத் தெரிவியுங்கள்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்கள்: புகாரி 7375, முஸ்லிம் 1481

ஒருவர் இந்த அத்தியாயத்தின் பொருளை விளங்கி ஓதுவாரானால் அல்லாஹ் அவரை நிச்சயமாக நேசிப்பான் என்பதை இந்த ஹதீஸ் மூலம் விளங்கிக் கொள்ள முடியும். அல்லாஹ்வுக்கு அவரைப் பிடித்துவிட்டால் அவர் நினைப்பதெல்லாம் கிடைக்கும்.

சுவனம் செல்வது நிச்சயம்

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் சென்றேன். அப்போது அவர்கள், குல்ஹுவல்லாஹு அஹது அல்லாஹுஸ் ஸமது லம் யலித் வலம் யூலத் வலம் யகுன் லஹு குஃபுவன் அஹது (பொருள்: நபியே!  "அல்லாஹ் ஒருவன்'' என (முஹம்மதே!) கூறுவீராக! அல்லாஹ் தேவைகளற்றவன். (யாரையும்) அவன் பெறவில்லை. (யாருக்கும்) பிறக்கவுமில்லை. அவனுக்கு நிகராக யாருமில்லை என்று கூறுவீராக) என்ற 112 ஆவது அத்தியாயத்தை (திரும்பத் திரும்ப) ஒருவர் ஓதுவதைச் செவியுற்றார்கள். அதற்கு நபியவர்கள், (அவருக்குக்) கடமையாகி விட்டது என்று கூறினார்கள். உடனே நான் நபியவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! என்ன கடமையாகி விட்டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், சொர்க்கம் (கடமையாகி விட்டது) என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூல்: நஸாயி 984

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நான் குல்ஹுவல்லாஹு அஹது என்ற அத்தியாயத்தை விரும்புகிறேன் என்று சொன்னார். அப்போது நபியவர்கள், இந்த அத்தியாயத்தை நேசிப்பதே உன்னை சொர்க்கத்தில் நுழைக்கச் செய்ய போதுமானதாகும்.

அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)

நூல்: அஹ்மத் 11982,12054

குர்ஆன் மூன்றில் ஒன்று இக்லாஸ்

(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடம், "மக்களே!) ஒன்று கூடுங்கள்; நான் உங்களுக்குக் குர்ஆன் மூன்றிலொரு பகுதியை ஓதிக்காட்டப் போகிறேன்'' என்று கூறினார்கள். அப்போது மக்கள் ஒன்று கூடினர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களிடையே) புறப்பட்டு வந்து "குல் ஹுவல்லாஹு அஹத்'' (எனத் தொடங்கும் 112 வது) அத்தியாயத்தை ஓதிக் காட்டினார்கள். பிறகு (தமது இல்லத்திற்குள்) சென்று விட்டார்கள். அப்போது எங்களில் சிலர் சிலரிடம், "அவர்களுக்கு வாயிலிருந்து ஏதேனும் செய்தி வந்திருக்கிறது போலும். அதன் காரணமாகவே அவர்கள் உள்ளே சென்று விட்டார்கள் என்று கருதுகிறேன்'' என்றனர். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெளியே வந்து "நான் (சற்றுமுன்) உங்களிடம் குர்ஆன் மூன்றிலொரு பகுதியை ஓதிக்காட்டுவேன் எனக் குறிப்பிட்டேன். அறிக: அந்த (112ஆவது) அத்தியாயம் குர்ஆன் மூன்றிலொரு பகுதிக்கு ஈடானதேயாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1479

நபி (ஸல்) அவர்கள் (மக்களை நோக்கி), "ஓர் இரவில் குர்ஆன் மூன்றில் ஒரு பகுதியை உங்களில் ஒருவரால் ஓத முடியாதா?'' என்று கேட்டார்கள். "(ஒரே இரவில்) எவ்வாறு குர்ஆன் மூன்றிலொரு பகுதியை ஓத இயலும்?'' என்று மக்கள் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் "குல் ஹுவல்லாஹு அஹத் (என்று தொடங்கும் 112 ஆவது அத்தியாயம்) குர்ஆன் மூன்றிலொரு பங்கிற்கு ஈடானதாகும்'' என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர்: அபூதர்தா (ரலி),  நூல்: முஸ்லிம் 1477, புகாரி 5014

ஒரு மனிதர் "குல்ஹுவல்லாஹு அஹத்' எனும் (112ஆவது) அத்தியாயத்தைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டிருந்ததை மற்றொரு மனிதர் செவிமடுத்தார். (இதைக் கேட்ட) அந்த மனிதர் விடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அதைப் பற்றிக் கூறினார். அந்தச் சிறிய அத்தியாயத்தை(த் திரும்பத் திரும்ப அவர் ஓதியதை) இவர் சாதாரணமாக மதிப்பிட்டதைப் போல் தெரிந்தது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன் மீது சத்தியமாக! அந்த அத்தியாயம் குர்ஆன் மூன்றில் ஒரு பங்கிற்கு ஈடானதாகும்''  என்று சொன்னார்கள்.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி 5013,5015,7374

இந்த அத்தியாயத்தின் சிறப்புக்களை மேற்கண்ட ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் வாயிலாக நாம் அறிந்து கொள்ளலாம்.

இக்லாஸின் மூலம் பாதுகாப்புத் தேடுவது

நபி (ஸல்) அவர்கள் தமது படுக்கைக்கு (உறங்கச்) சென்றால் ஒவ்வோர் இரவிலும் தமது உள்ளங்கைகளை இணைத்து, அதில் "குல் ஹுவல்லாஹு அஹத்', "குல் அஊது பிரப்பில் ஃபலக்', "குல் அஊது பிரப்பின்னாஸ்' ஆகிய (112,113,114) அத்தியாயங்களை ஓதி ஊதிக் கொள்வார்கள். பிறகு தம் இரு கைகளால் (அவை எட்டும் அளவிற்கு) தமது உடலில் இயன்ற வரையில் தடவிக் கொள்வார்கள். முதலில் தலையில் ஆரம்பித்து, பிறகு முகம், பிறகு தம் உடலின் முற்பகுதியில் கைகளால் தடவிக் கொள்வார்கள். இவ்வாறு மூன்று முறை செய்வார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி, நூல்: புகாரி 5016,5017

இந்த மூன்று அத்தியாயங்களுக்கும் "அல்முஅவ்விஃதாத்' - பாதுகாப்புத் தேடும் கவசங்கள் என்று பெயர். (பார்க்க புகாரி 5016)

இதுவும் கூட இந்த சூராவின் சிறப்புத்தான்.

ஃபஜ்ருடைய முன்சுன்னத்தில் இக்லாஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களில் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்' (என்று தொடங்கும் 109 ஆவது) அத்தியாயத்தையும், "குல் ஹுவல்லாஹு அஹத்' (என்று தொடங்கும் 112வது) அத்தியாயத்தையும் ஓதுவார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் 1316

மக்ரிபின் பின்சுன்னத்திலும் இக்லாஸ்

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்ரிபுடைய (பின்)சுன்னத் இரண்டு ரக்அத்களிலும், ஃபஜ்ருடைய (சுன்னத்) இரண்டு ரக்அத்களிலும் "குல் யா அய்யுஹல் காஃபிரூன்' (என்று தொடங்கும் 109 வது) அத்தியாயத்தையும், "குல் ஹுவல்லாஹு அஹத்' (என்று தொடங்கும் 112ஆவது) அத்தியாயத்தையும் ஓதுவதை நான் (சுமார்) இருபது முறையேனும் பார்த்திருக்கிறேன்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி),

நூல்: நஸாயீ 982

ஹஜ்ஜிலும் இக்லாஸ்

...நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இறையில்லம் கஅபாவுக்கு வந்(து தவாஃப் செய்)த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கஅபாவில் "ஹஜருல் அஸ்வத்' உள்ள மூலையில் தமது கையை வைத்து முத்தமிட்டார்கள். (தம் தோள்களைக் குலுக்கியவாறு) வேகமாக மூன்று முறையும், (சாதாரணமாக) நடந்தவாறு நான்கு முறையும் சுற்றி வந்தார்கள். பிறகு மகாமு இப்ராஹீமை முன்னோக்கிச் சென்று, "இப்ராஹீம் நின்ற இடத்தை நீங்கள் தொழுமிடமாக ஆக்கிக் கொள்ளுங்கள்'' (2:125) எனும்  வசனத்தை ஓதிக் காட்டினார்கள். அப்போது மகாமு இப்ராஹீம் தமக்கும் கஅபாவிற்கும் இடையே இருக்குமாறு நின்று, இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள். குல் ஹுவல்லாஹு அஹத், குல் யாஅய்யுஹல் காஃபிரூன் ஆகிய இரு அத்தியாயங்களை அவ்விரு ரக்அத்களிலும் ஓதினார்கள்.

அறிவிப்பவர்: ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி),

நூல்: முஸ்லிம் 2334

வித்ருத் தொழுகையிலும் இக்லாஸ்

நபியவர்கள் வித்ரு(ஒற்றைப் படை)த் தொழுகையில் (முதல் ரக்அத்தில்) ஸப்பிஹ்ஹிஸ்ம ரப்பிகல் அஃலா என்ற 87  வது அத்தியாயத்தையும், (இரண்டாவது ரக்அத்தில்) குல்யா அய்யுஹல் காஃபிரூன் என்ற 109 வது அத்தியாயத்தையும், (மூன்றாவது ரக்அத்தில்) குல்ஹுவல்லாஹு அஹத் என்ற 112 வது அத்தியாயத்தையும் ஓதுபவர்களாக இருந்தார்கள். ஸலாம் கொடுத்து முடித்ததும் "ஸுப்ஹானல் மலிக்குல் குத்தூஸ்'' என்று மூன்று முறை சொல்லுவார்கள்.

அறிவிப்பவர்: உபை பின் கஅப் (ரலி)

நூல்: நஸாயீ 1710, 1711, 1712, 1713, 1714, 1715, 1716, 1717, 1718, 1719, 1720, 1721, 1730, 1731, 1732, 1733, 1734 ஆகிய பதினேழு வெவ்வேறான அறிவிப்புக்களைக் கொண்டு மேற்கண்ட செய்தி திரும்பத் திரும்ப வரிசையாக நஸாயில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

வானவர்கள்                                                                                                        தொடர் : 7

நல்லவர்களுக்கு பிரார்த்தனை செய்யும் வானவர்கள்

எம்.முஹம்மத் சலீம் எம்.ஐ.எஸ்.ஸி, மங்களம்

கட்டளைக்கு மாறு செய்யமாட்டார்கள்

அல்லாஹ்வை வணங்குவதாகவும் அவனை அஞ்சுவதாகவும் சொல்லிக் கொள்ளும் நாம், அவன் சொல்லியிருக்கும் கட்டளைகளைக் கண்ணும் கருத்துமாகக் கடைப்பிடிக்கிறோமா? ஹராம் ஹலால் என்று நமக்கு வகுத்தளிக்கப்பட்ட வாழ்க்கைத் திட்டத்திற்குக் கட்டுப்பட்டு வாழ்கிறோமா? இப்படிக் கேட்கப்படும் கேள்விகளுக்கு, "இல்லை'' என்பது தான் பெரும்பாலான மக்களின் வாழ்க்கை நமக்கு சொல்லும் பதிலாக இருக்கிறது.

அல்லாஹ்வின் ஆணைகளுக்கு அதிகமதிகம் மாறுசெய்து வாழ்கிறோம் என்பதுவே உண்மையாக இருக்கிறது. ஆனால், நம்மைப் போல் அல்லாஹ்வின் கட்டளைக்குக் கட்டுப்படும் விஷயத்தில் மலக்குகள் அலட்சியமாக இல்லை. அல்லாஹ்வின் மீது அச்சம் கொண்டு வாழும் மலக்குகளோ அதன் அடையாளமாக அவன் இடும் கட்டளைகளுக்குக் கட்டுப்படும் குணம் கொண்டவர்களாக உள்ளார்கள். அல்லாஹ்வின் உத்தரவை அவர்கள் ஒரு போதும் தட்டிக்கழிக்க மாட்டார்கள். சிந்தித்து புரிந்து கொள்ளும் தன்மை அவர்களுக்கு இருந்தாலும் ஏதேனும் காரியத்தைச் செய்யுமாறு அல்லாஹ் ஏவினால் அவர்கள் அவனை எதிர்த்து தர்க்கம் செய்யாமல், கேள்வி கேட்காமல் மறுவினாடியே கட்டளையை நடைமுறைப்படுத்தும் நல்லடியார்களாக இருக்கிறார்கள். இந்த பேருண்மைக்கு பின்வரும் செய்திகள் பெரும் சான்றுகளாக உள்ளன.

வானங்களில் உள்ளவையும், பூமியில் உள்ள உயிரினங்களும், வானவர்களும் அல்லாஹ்வுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர். வானவர்கள் பெருமையடிக்க மாட்டார்கள். தமக்கு மேலே இருக்கும் தமது இறைவனை அவர்கள் அஞ்சுகின்றனர். கட்டளையிடப்பட்டதைச் செய்கின்றனர்.

(திருக்குர்ஆன் 16:49,50)

''அளவற்ற அருளாளன் சந்ததியை ஏற்படுத்திக் கொண்டான்'' எனக் கூறுகின்றனர். அவன் தூயவன். மாறாக அவர்கள் (வானவர்கள்) மரியாதைக்குரிய அடியார்கள். அவர்கள் அவனை முந்திப் பேச மாட்டார்கள். அவனது கட்டளைப்படியே செயல்படுவார்கள்.

(திருக்குர்ஆன்  12:26,27)

நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள்.

(திருக்குர்ஆன் 66:6)

உமது இறைவனிடம் இருப்போர் (வானவர்கள்) அவனுக்கு அடிமைத்தனம் செய்வதைப் புறக்கணிக்க மாட்டார்கள். அவனைத் துதிக்கின்றனர். அவனுக்கே ஸஜ்தாச் செய்கின்றனர்.

(திருக்குர்ஆன் 7:206)

 களிமண்ணால் மனிதனைப் படைக்கப் போகிறேன்; அவரைச் சீர்படுத்தி எனது உயிரை அவரிடம் நான் ஊதும் போது அவருக்குப் பணிந்து விழுங்கள்!'' என்று உமது இறைவன் வானவர்களிடம் கூறிய போது இப்லீஸைத் தவிர வானவர் அனைவரும் பணிந்தனர்.

(அல்குர்ஆன் 38:71 முதல் 83வரை)

செயல்களில் சோர்வடைய மாட்டார்கள்

மனிதர்களாகிய நாம், நமது சத்திய மார்க்கம் கூறும் ஏராளமான கட்டளைகளைச் சரிவர செய்யாமல் ஒதுங்கி நின்று கொண்டு, அவற்றில் சொற்பமானதை, சிரமமில்லாததை மட்டுமே செய்கின்றோம். இவ்வாறிருந்தும் அவைகளையும் கூட தொடர்ந்துச் செய்யாமல் சோர்ந்துபோய் விடுகிறோம். தற்காலிகமாக சில செயல்களை சில நாட்கள் மட்டுமே செயல்படுத்திவிட்டு அதன் பிறகு தளர்ந்து போனவர்களாக பல நாட்கள் அவற்றைச் செய்யாமல் கைவிட்டு விடுகிறோம்.

உதாரணமாக, ஒரு வாரம் முழுவதும் ஐந்து நேரம் ஜமாஅத் தொழுகையில் கலந்து கொள்ளும் பலரை மறுவாரம் ஜமாஅத் தொழுகையில் பார்க்கவே முடியாத நிலையே நிலவுகிறது. காரணம், மார்க்க விஷயங்களைச் செய்ய முனையும் பெரும்பாலான நேரங்களில் சலிப்பும் சடைவும் நம்மைச் சுற்றி வளைத்துக் கொள்கின்றன. இதுவே நமக்கு மிகப்பெரும் பலவீனமாக இருக்கிறது.

இதுபோன்ற மந்தமான நிலை மலக்குகளுக்கு வரவே வராது. சோம்பல், சோர்வு போன்றவற்றின் வலையில் என்றும் சிக்காதவர்களே வானவர்கள் என்ற இனத்தினர். இவர்கள் தங்களுக்குக் கொடுக்கப்படும் காரியத்தை முடிக்கும் வரை ஓய மாட்டார்கள், என்னால் முடியவில்லை என்று சொல்லி மூலையில் முடங்க மாட்டார்கள். ஏக இறைவன் தங்களுக்கு எத்தகைய காரியத்தை ஏவினாலும், அக்காரியம் எத்தனை தினங்கள் தொடர்ந்தாலும் தொய்வடைந்து விடாமல் தாங்கள் செய்யும் செயல்களை செவ்வனே செய்துமுடிப்பவர்கள்.  இதற்கான சான்றுகளைக் காண்போம்.

வானங்களிலும், பூமியிலும் உள்ளவை அவனுக்கே உரியன. அவனிடத்தில் இருப்போர் அவனது வணக்கத்தை விட்டும் பெருமையடிக்க மாட்டார்கள். அவர்கள் சோர்வடையவும் மாட்டார்கள். இரவிலும், பகலிலும் துதிப்பார்கள். சலிப்படைய மாட்டார்கள். (திருக்குர்ஆன் 21:19,20)

அவர்கள் பெருமையடித்தால் உமது இறைவனிடம் இருப்போர் இரவிலும், பகலிலும் அவனைத் துதிக்கின்றனர். அவர்கள் சோர்வடைய மாட்டார்கள்.

(திருக்குர்ஆன் 41:38)

மனிதர்களுக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்

இறைவா! நற்பாக்கியங்களை தருவாயாக! என்று நாம் நமக்காக மட்டும் துஆ செய்ய மாட்டோம். நல்லது நடக்க வேண்டும் என்று நம்மோடு மட்டும் நமது பிரார்த்தனைகளைச் சுருக்கிக் கொள்ள மாட்டோம். நமது குடும்பத்தாருக்கும். சிறந்த தோழர்களுக்கும், பிடித்தமான நபர்களுக்கும் நல்லதொரு வாழ்க்கையை வழங்குமாறு, இறைவனிடம் இறைஞ்சுகிறோம் இல்லையா? இதுபோலவே, படைத்தவன் இடும் கட்டளைகளை இட்டவாறே நிறைவேற்றும் குணம் கொண்ட மலக்குமார்கள், தங்களைப் போன்று இறைவனுக்குப் பணிந்து வாழும் பிறருக்காக பிரார்த்தனை செய்கிறார்கள்.

மலக்குகள் என்ற வட்டத்தைத் தாண்டி பூமியில் வாழும் மாந்தர்களுக்காக துஆ செய்கிறார்கள். தொழுகையைப் பேணுதல், தர்மங்களைச் செய்தல் போன்ற மார்க்கம் கூறும் நற்காரியங்களைச் செய்யும் மனிதர்களுக்கு மகத்தான அருள் அளிக்கும்படி நித்திய ஜீவனான அல்லாஹ்விடம் வேண்டுகிறார்கள். நம்பிக்கை கொண்ட மக்கள் மற்றும் அவர்களின் குடும்பத்தாருக்கு சந்தோஷமான வாழ்க்கை கிடைப்பதற்காக வேண்டி வல்ல ரஹ்மானிடம் நற்பாக்கியங்களை வேண்டுகின்றனர். இதற்குரிய சான்றுகளைக் காண்போம்.

இருள்களிலிருந்து ஒளிக்கு உங்களைக் கொண்டு செல்வதற்காக, அவனே உங்களுக்கு அருள் புரிகிறான். அவனுடைய வானவர்கள் உங்களுக்காக அருளைத் தேடுகின்றனர். அவன் நம்பிக்கை கொண்டோரிடம் நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான்.

(அல்குர்ஆன் 33:43)

அல்லாஹ்வின் கட்டளையைக் குறித்தா ஆச்சரியப்படுகிறீர்? அல்லாஹ்வின் அருளும், பாக்கியங்களும் (இப்ராஹீமின்) இக்குடும்பத்தாராகிய உங்களுக்கு ஏற்படட்டும். அவன் புகழுக்குரியவன்; மகத்துவமிக்கவன்'' என்று அவர்கள் (வானவர்கள்) கூறினர். (அல்குர்ஆன் 11:73)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு நாளும் அடியார்கள் காலை நேரத்தை அடையும்போது இரு வானவர்கள் (வானத்திலிருந்து) இறங்குகின்றனர். அவர்களில் ஒருவர், "இறைவா! (நல்வழியில்) செலவு செய்பவருக்குப் பிரதிபலனை அளிப்பாயாக!'' என்று கூறுவார். மற்றொருவர், "இறைவா! (கடமையானவற்றில் கூடச்) செலவு செய்ய மறுப்பவருக்கு இழப்பைக் கொடுப்பாயாக!'' என்று கூறுவார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : புகாரி (1442), முஸ்லிம் (1836)

ஒரு முஸ்லிமான அடியார், கண்ணெதிரே இல்லாத தமது சகோதரருக்காக (நல்லதை இறைவனிடம்) பிரார்த்திக்கும் போது, வானவர் "உனக்கும் அதைப் போன்றே (நல்லது) கிடைக்கட்டும்!'' என்று (பிரார்த்திப்பவருக்குக்) கூறாமல் இருப்பதில்லை என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபுத்தர்தா (ரலி),

ஆதாரம் : முஸ்லிம் (5279)

தர்தா அவர்களின் கணவரான ஸஃப்வான் பின் அப்தில்லாஹ் அவர்கள் கூறுகிறார் :

நான் ஷாம் (சிரியா) நாட்டுக்குச் சென்றபோது (என் மனைவியின் தந்தை) அபுத்தர்தா (ரலி) அவர்களது இல்லத்திற்குச் சென்றேன். அங்கு அவரைக் காண முடியவில்லை. (என் மனைவியின் தாய்) உம்முத் தர்தா (ரஹ்) அவர்களைக் கண்டேன். அவர் என்னிடம், "இந்த ஆண்டில் நீங்கள் ஹஜ்ஜுக்குச் செல்ல நாடியுள்ளீர்களா?'' என்று கேட்டார். நான் "ஆம்'' என்றேன். அதற்கு அவர் சொன்னார் : அவ்வாறாயின் எங்கள் நலனுக்காகவும் பிரார்த்தியுங்கள். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் "ஒரு முஸ்லிலிம் கண்ணெதிரே இல்லாத தம் சகோதரருக்காகச் செய்யும் பிரார்த்தனை அங்கீகரிக்கப்படுகிறது. அந்த முஸ்லிமின் தலைக்கருகில் அதற்கென நியமிக்கப்பட்டுள்ள வானவர் ஒருவர் உள்ளார். அந்த முஸ்லிம் தம் சகோதரருக்காக நன்மை வேண்டிப் பிரார்த்திக்கும் போதெல்லாம், அதற்கென நியமிக்கப்பட்டுள்ள அந்த வானவர், "இறைவா! (இவருடைய பிரார்த்தனையை) ஏற்றுக் கொள்வாயாக! அதைப் போன்றே உமக்கும் கிடைக்கட்டும் எனப் பிரார்த்திக்கிறார்'' என்று கூறினார்கள். (இவ்வாறு உம்மு தர்தா (ரலி) அவர்கள் கூறிய) பிறகு நான் (அங்கிருந்து) புறப்பட்டுக் கடைத்தெருவுக்குச் சென்றபோது, அபுத்தர்தா (ரலிலி) அவர்களைச் சந்தித்தேன். நபி (ஸல் அவர்கள் அவ்வாறு கூறியதாக அவர்களும் என்னிடம் அறிவித்தார்கள்.

ஆதாரம் : முஸ்லிம் ( 5821)

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர் தமது வீட்டில் அல்லது கடைத் தெருவில் தொழுவதைவிட கூட்டாக (ஜமாஅ)த்தில் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு (சிறப்பு) கூடுதலாக்கப்படுகிறது. அதற்குக் காரணம், ஒருவர் அங்கசுத்தி (உளூ) செய்து, அந்த அங்க சுத்தியை செம்மையாகச் செய்து, பின்னர் தொழுவதற்காகவே புறப்பட்டு பள்ளிவாசலை நோக்கிச் செல்வாரானால் அவர் ஒவ்வோர் எட்டு எடுத்துவைக்கும் போதும் அதற்காக அவருக்கு அல்லாஹ் ஓர் அந்தஸ்தை உயர்த்துகிறான். அதற்காக அவரது பாவமொன்றை அவன் மன்னிக்கிறான். அவர் தொழுதால் வானவர்கள் அவருக்காக அவர் தாம் தொழுத இடத்தில் இருக்கும் வரை (அருள் வேண்டி) பிராத்தித்துக்கொண்டே இருக்கின்றனர்: "இறைவா! இவர் மீது அருள் புரிவாயாக! இறைவா! இவர் மீது இரக்கங் காட்டுவாயாக'' என்று கூறுவார்கள். உங்கüல் ஒருவர் தொழுகையை எதிர்பார்த்துக் காத்துக்கொண்டிருக்கும் வரை தொழுகையில் இருப்பதாகவே கருதப்படுகிறார்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : புகாரி (445,477,647)

நமக்காக பாவமன்னிப்புத் தேடுகிறார்கள்

நமது வருங்கால வாழ்க்கை நல்ல வகையில் இருப்பதற்காக பிரார்த்திக்கும் மலக்குகள், நாம் செய்த பாவங்களுக்காகவும் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள். பலவீனமாக படைக்கப்பட்ட மனித இனத்தில் பெரும்பாலானவர்கள் நன்மையைச் சம்பாதிப்பதைக் காட்டிலும் பாவம் செய்வதில்தான் அதிகம் அதிகமாக தங்களை அர்ப்பணித்துக் கொண்டிருக்கிறார்கள். தங்களது அருட்கொடைகளை இழந்து கொண்டிருக்கிறார்கள். வீணான காரியங்களில் வீழ்ந்து உழன்று கொண்டிருக்கிறார்கள். இவ்வாறு இரவு பகல் பாராது பாவமான காரியங்களில் இறங்கிக் கொண்டிருக்கிற, தீமையான செயல்களில் இயங்கிக் கொண்டிருக்கிற மனித இனத்துக்காக மலக்குகள் படைத்தவனிடம் பாவமன்னிப்புத் தேடுகிறார்கள். யாரெல்லாம் தங்களது தவறுக்காக மனம் வருத்தப்பட்டு மன்னிப்புத் தேடித் திருந்தினார்களோ அவர்களுக்கு பாவமன்னிப்பை வழங்கும்படி மலக்குகள் வேண்டுகின்றனர். இதற்கான சான்றுகளைக் காண்போம்.

(மனிதர்களின் பாவத்தால்) வானங்கள் அவற்றின் மேற்புறத்திலிருந்து பிளந்து விட முயலும். வானவர்கள் தமது இறைவனைப் போற்றிப் புகழ்ந்து, பூமியில் உள்ளவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவார்கள். கவனத்தில் கொள்க! அல்லாஹ் தான் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.

(அல்குர்ஆன் 42:5)

அர்ஷைச் சுமப்போரும், அதைச் சுற்றியுள்ளோரும் தமது இறைவனைப் போற்றிப் புகழ்கின்றனர். அவனை நம்புகின்றனர். "எங்கள் இறைவா! ஒவ்வொரு பொருளையும் அருளாலும், அறிவாலும் நீ சூழ்ந்திருக்கிறாய். எனவே மன்னிப்புக் கேட்டு, உனது பாதையைப் பின்பற்றியோரை மன்னிப்பாயாக! அவர்களை நரகத்தின் வேதனையை விட்டுக் காப்பாயாக!'' என்று நம்பிக்கை கொண்டோருக்காக பாவமன்னிப்புத் தேடுகின்றனர். "எங்கள் இறைவா! அவர்களையும் அவர்களது பெற்றோர்கள், வாழ்க்கைத் துணைகள், மற்றும் அவர்களது சந்ததிகளில் நல்லோரை நீ வாக்களித்த நிலையான சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்வாயாக! நீ மிகைத்தவன்; ஞானமிக்கவன்.'' "அவர்களைத் தீமைகளிலிருந்து காப்பாயாக! இன்றைய தினம் தீமைகளிலிருந்து நீ யாரைக் காத்து விட்டாயோ நீ அவருக்கு அருள் புரிந்து விட்டாய். இதுவே மகத்தான வெற்றி'' (என்றும் பிரார்த்திக்கிறார்கள்.)

(அல்குர்ஆன் 40:7-10)

ஆமீன் கூறுகிறார்கள்

நமது நாவிலிருந்து வரும் ஒவ்வொரு வார்த்தைகளும் நமக்கும் மற்றவர்களுக்கும் நலம் தருவதாக இருக்க வேண்டும். நாம் எப்போதும் அழகிய வார்த்தைகளை, நல்ல விசயங்களையே பேச வேண்டும். ஏனெனில், நாம் பிரார்த்திக்கும் போதும், ஏதாவது வார்த்தைகளைப் பேசும் போதும் மலக்குகள் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று சொல்கிறார்கள். உதாரணமாக உனக்கு இறைவன் வெற்றியைத் தரட்டும் என்று ஒருவருக்குச் சொல்லும் போதும், நீ நல்லாவே இருக்க மாட்டாய் என்று ஒருவரைப் பார்த்து திட்டும் போதும் மலக்குகள் ஆமீன் என்று சொல்கிறார்கள் என்பதை நாம் மறந்து விடக் கூடாது. இதை நினைவில் கொண்டு நமது நாவினை நாம் நல்ல முறையில் பயன்படுத்த வேண்டும். இதற்கு நேர்மாற்றமாக மலக்குகள் ஆமீன் சொல்லும் தருணத்தில் தீமையான தவறான வார்த்தைகளை பேசிக் கொண்டிருந்தால் நமக்கு விபரீதமான நிலை ஏற்பட்டுவிடும். இதற்குரிய ஆதாரங்களைக் காண்போம்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தொழுவிப்பவர் (இமாம்), ஆமீன் கூறும்போது நீங்களும் ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்) என்று கூறுங்கள். ஏனெனில், எவர் ஆமீன் கூறு(ம் நேரமா)வது வாவனவர்கள் ஆமீன் கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்து விடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : புகாரி (780)

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகையில்) இமாம், "ஃகைரில் மஃக்ளூபி அலைஹிம் வலள் ளால்லீன்'' என்று ஓதியவுடன் நீங்கள், "ஆமீன் (அவ்வாறே ஆகட்டும்)'' என்று சொல்லுங்கள். ஏனெனில் எவர் "ஆமீன்' கூறு(ம் நேரமா)வது வானவர்கள் "ஆமீன்' கூறுகின்ற (நேரத்)துடன் ஒத்தமைந்துவிடுகின்றதோ அவருக்கு அதற்கு முன் செய்த பாவங்கள் மன்னிக்கப்படும்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

ஆதாரம் : புகாரி (782)ன

உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நீங்கள் நோயாளியையோ இறந்தவரையோ சந்திக்கச் சென்றால் நல்லதையே சொல்லுங்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் "ஆமீன்' கூறுகின்றனர்'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். (என் கணவர்) அபூசலமா (ரலி) அவர்கள் இறந்தபோது நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, "அல்லாஹ்வின் தூதரே, அபூசலமா இறந்து விட்டார்'' என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "இறைவா, என்னையும் அவரையும் மன்னிப்பாயாக! அவருக்கு மாற்றாக அவரைவிடச் சிறந்த துணையை எனக்கு வழங்குவாயாக'' என்று கூறுமாறு என்னிடம் சொன்னார்கள். நான் அவ்வாறே பிரார்த்தித்தேன். அவரைவிடச் சிறந்தவரான முஹம்மத் (ஸல்) அவர்களையே அல்லாஹ் எனக்குத் துணையாக வழங்கினான்.

ஆதாரம் : முஸ்லிம் (1677,1678)

 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது :

(என் முதல் கணவர்) அபூசலமாவின் (இறுதி நாளில் அவரது) பார்வை நிலைகுத்தி நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து, அவருடைய கண்களை மூடிவிட்டார்கள். பிறகு, "உயிர் கைப்பற்றப்படும் போது பார்வை அதைப் பின்தொடர்கிறது'' என்று கூறினார்கள். அப்போது அபூசலமாவின் குடும்பத்தார் சப்தமிட்டு (புலம்பி) அழுதனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "உங்களுக்காக நீங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் வேண்டாதீர்கள். ஏனெனில், நீங்கள் சொல்வதற்கு வானவர்கள் "ஆமீன்' கூறுகின்றனர்'' என்று கூறினார்கள். மேலும், "இறைவா! அபூசலமாவை மன்னிப்பாயாக! நல்வழி பெற்றவர்களிடையே அவரது தகுதியை உயர்த்துவாயாக! அவருக்குப் பிறகு எஞ்சியிருப்போருக்கு அவரைவிடச் சிறந்த துணையை வழங்குவாயாக! அகிலத்தின் அதிபதியே! எங்களுக்கும் அவருக்கும் மன்னிப்பு அருள்வாயாக! அவரது மண்ணறையை (கப்று) விசாலமாக்குவாயாக! அதில் அவருக்கு வெளிச்சத்தை ஏற்படுத்துவாயாக!'' என்று பிரார்த்தித்தார்கள்.

ஆதாரம் : முஸ்லிம்  (1678)

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

அல்லாஹ்வை எப்படி நம்புவது?                                                            தொடர் :6

ஓதிப்பார்க்கும் வாசகங்கள்

உரை : பி. ஜைனுல் ஆபிதீன்

எழுத்து வடிவில் : மனாஸ், இலங்கை

உடல் வலியுள்ளவர்கள் நடந்து கொள்ள வேண்டிய முறை

நாஃபிஉ பின் ஜுபைர் பின் முத்இம்  அவர்கள் கூறியதாவது:

உஸ்மான் பின் அபில் ஆஸ் அஸ்ஸகஃபீ (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், தாம் இஸ்லாத்தைத் தழுவியது முதல் தமது உடலில் வலி ஏற்பட்டுள்ளதாக முறையிட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நீர் உமது உடலில் வலியுள்ள இடத்தில் கையை வைத்து, "பிஸ்மில்லாஹ்' என மூன்று தடவை கூறிவிட்டு, ஏழு தடவை

أَعُوْذُ بِاللَّهِ وَقُدْرَتِهِ مِنْ شَرِّ مَا أَجِدُ وَأُحَاذِرُ

"அவூது பில்லாஹி வ குத்ரத்திஹி மின் ஷர்ரி மா அஜிது வ உஹாதிரு' என்று சொல்வீராக'' என்றார்கள்.

(பொருள்: நான் அல்லாஹ்விடம் அவனது ஆற்றலை முன்வைத்து, நான் (தற்போது) உணர்கின்ற தீமையிலிருந்தும் (எதிர்காலத்தில் ஏற்பட்டுவிடக் கூடாது என) நான் அஞ்சுகின்ற தீமையிலிருந்தும் பாதுகாப்புக் கோருகிறேன்.)

ஆதாரம் : முஸ்லிம் (4430)

மருத்தும் செய்வதோடு மாத்திரம் நின்று கொள்ளாமல் சரியான இந்த வழிமுறையைத் தேர்வு செய்து கொண்டு நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த துஆக்களை மனனம் செய்து கொள்ள வேண்டும்.

நாம் ஒருவரை நோய் விசாரிக்கச் செல்லும் போது அவருக்கு மரணத்தை ஏற்படுத்தாத சாதாரணமான நோய் இருக்குமானால் இதை ஓதிக் காட்டினால் கண்டிப்பாக அல்லாஹ் நோய் நிவாரணத்தை ஏற்படுத்துவான். அது அல்லாமல் மரணத்தை ஏற்படுத்தும் நோயாக இருந்தால் அல்லாஹ்வின் விதியை யாராலும் முந்த முடியாது. இது பற்றி அல்லாஹ் அல்குர்ஆனில் இவ்வாறு கூறுகிறான்:

ஒவ்வொரு சமுதாயத்துக்கும் கெடு உண்டு. அவர்களின் கெடு வரும் போது சிறிது நேரம் அவர்கள் முந்தவும் மாட்டார்கள். பிந்தவும் மாட்டார்கள். (அல்குர்ஆன் 7:34)

மரணத்தை ஏற்படுத்தாக நோய்க்கு நபி (ஸல) அவர்கள் ஒரு பிராத்தனையைக் கற்றுத் தந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் மரணம் நெருங்காத ஒரு நோயாளியைச் சந்திக்கச் சென்றால் அவனிடத்தில் உட்கார்ந்து  கொண்டு எழு தடவை (இவ்வாறு) சொல்வாரானால்:

أَسْأَلُ اللَّهَ الْعَظِيْمَ رَبَّ الْعَرْشِ الْعَظِيمِْ أَنْ يَشْفِيَكَ

அஸ்அலுல்லாஹல் அழீம், ரப்பல் அர்ஷில் அழீம், அன் யஷ்பீக்க (வலிமை மிகுந்த அர்ஷ்ஷுக்குச் சொந்தக்காரனிடம் கேட்கிறேன். உனக்கு நிவாரனத்தைத் தரவேண்டும் என்று கேட்கிறேன்) என்று யார் பிராத்திக்கிறார்களோ அவருக்கு அல்லாஹ் அந்த நோயில் இருந்து நிவாரணம் தராமல் இருப்பதில்லை.

ஆதாரம் : அபூதாவூத் 3108

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (நோயுற்றிருந்த) ஒரு கிராமவாசியிடம், அவரை நலம் விசாரிக்கச் சென்றார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒரு நோயாளியிடம் நலம் விசாரிக்கச் சென்றால், "கவலைப்பட வேண்டாம். இறைவன் நாடினால் (இது உங்கள் பாவத்தை நீக்கி) உங்களைத் தூய்மைப்படுத்திவிடும்'' என்று கூறுவார்கள். (தமது அந்த வழக்கப் படியே) நபி (ஸல்) அவர்கள் கிராமவாசியிடம்,

بَأْسَ طَهُوْرٌ إِنْ شَاءَ اللَّهُ

"கவலை வேண்டாம். இறைவன் நாடினால் உங்களைத் தூய்மைப்படுத்தும்'' என்று சொன்னார்கள். (இதைக் கேட்ட) அந்தக் கிராமவாசி, "நான் தூய்மை பெற்று விடுவேனா? முடியாது. இதுவோ வயது முதிர்ந்த பெரியவரைப் பீடிக்கின்ற சூடாகிக் கொதிக்கின்ற காய்ச்சலாகும். அது அவரை மண்ணறைகளைச் சந்திக்க வைக்கும்'' என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால் ஆம். (அப்படித் தான் நடக்கும்.)'' என்று கூறினார்கள்.

ஆதாரம்: புகாரி 3616

நபி (ஸல்) அவர்களுக்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள் செய்த பிரார்த்தனை

அபூசயீத் அல்குத்ரீ (ரலிலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்(கள் உடல் நலிவுற்றிருந்த போது அவர்)களிடம் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் வந்து, "முஹம்மதே! உடல்நலம் பாதிக்கப்பட்டுள்ளதா?'' என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "ஆம்' என்று பதிலளித்தார்கள். அப்போது,

بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ مِنْ كُلِّ شَيْءٍ يُؤْذِيكَ مِنْ شَرِّ كُلِّ نَفْسٍ أَوْ عَيْنِ حَاسِدٍ اللَّهُ يَشْفِيكَ بِاسْمِ اللَّهِ أَرْقِيكَ

"பிஸ்மில்லாஹி அர்கீக்க, மின் குல்லி ஷைஇன் யுஃதீக்க, மின் ஷர்ரி குல்லி நஃப்சின் அவ் அய்னின் ஹாசிதின், அல்லாஹு யஷ்ஃபீக்க, பிஸ்மில்லாஹி அர்கீக்க'' என்று ஓதிப் பார்த்தார்கள்.

(பொருள்: அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஒதிப் பார்க்கிறேன். உமக்குத் தொல்லை தரும் அனைத்து அம்சங்களிலிருந்தும், பொறாமை கொள்ளக்கூடிய அனைவரின் அல்லது கண்களின் தீமையிலிருந்தும் உமக்கு அல்லாஹ் நிவாரணமளிப்பானாக. அல்லாஹ்வின் பெயரால் உமக்கு ஓதிப்பார்க்கிறேன்.)

(ஆதாரம் முஸ்லிம் 4403)

இவை அனைத்தும் நோய்வாய்ப்பட்டவர்களுக்கு ஓதி நிவாரணம் தேடும் வார்த்தைகளாகும். இவற்றுக்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது.

நோயினால் மரண வேளையை அடைந்து விட்டால் எவ்வாறு கூற வேண்டும்

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நோய்வாய்ப்பட்டிருந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் "தோல் பாத்திரம் ஒன்று' அல்லது "பெரிய மரக் குவளையொன்று' இருந்தது. அதில் தண்ணீரும் இருந்தது. அவர்கள் தம் இரு கைகளையும் அந்தத் தண்ணீருக்குள் நுழைத்து முகத்தில் தடவிக்கொண்டே "வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரும் இல்லை. நிச்சயமாக மரணத்தின்போது பல வேதனைகள் உண்டு'' என்று கூறினார்கள்.

பிறகு தமது கையை உயர்த்தியவாறு

فِي الرَّفِيْقِ الْأَعْلى

 "(இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்)'' எனப் பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட, அவர்களின் கரம் சரிந்தது.

ஆதாரம் : புகாரி 6510

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் மரணத்தை நெருங்கிய போது அவர்களை நான் பார்த்தேன். அவர்களுக்குத் தண்ணீர்ப் பாத்திரம் ஒன்று இருந்தது. அவர்கள் அப்பாத்திரத்தில் தமது கையை நுழைத்து தமது முகத்தில் தடவிக் கொண்டே இருந்தார்கள். இறைவா மரணத்தின் கொடிய வேதனையிலிருந்து விடுபட எனக்கு உதவி செய்வாயாக என்று கூறிக் கொண்டே இருந்தார்கள்.

(ஆதாரம் திர்மதி 900)

இறுதி வார்த்தை லாயிலா இல்லல்லாஹ்வாக இருந்தால் சுவனம் நிச்சயம்

இந்த வார்த்தையை வாயினால் சொன்னால் போதாது உள்ளத்தில் நம்பிக்கையுடன் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்பதை உறுதியாகச் சொல்ல வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் யாருடைய கடைசி வார்த்தை லாயிலாக இல்லல்லாஹ் என்று இருக்கிறதோ அவர் சுவனம் செல்வார்.

ஆதாரம்: அபூதாவூத் 3118

நோயாளிகளுக்கு நோயினால் ஏற்படும் கடுமையான சந்தர்ப்பங்களின் போது இதுபோன்ற வார்த்தைகளைக் கூற வேண்டும் அதை விட்டு விட்டு தாயம், தகடு, கட்டுதல் தாயத்துக் கட்டுவது மார்க்கத்தில் அனுமதியாக இருந்தால் நபி (ஸல்) அவர்கள் அவர்கள் தாயத்துக் போட்டிருப்பார்கள். அவர்களின் திருக்கரத்தால் தாயத்தை வாங்கிப் போட்டால் இன்னும் அதிக வலுவுடையதாக இருக்கும். அவர்கள் அவ்வாறு செய்யவில்லை. மற்றவர்கள் இவ்வாறு நடந்து கொண்ட போதும் அவர்கள் அதைத் தடை செய்துள்ளார்கள்.

நோயின் போது செய்ய வேண்டிய பல பிராத்தனைகளை நபிகள் நாயகம் (ஸல்) கற்றுத் தந்துள்ளார்கள்.

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

 

அன்பு குழந்தைகளும் அரவணைக்க வேண்டிய பெற்றோர்களும்

ஜீனத் நிஸா, ஆசிரியை, அர்இர்ஷாத் கல்வியகம், மேலப்பாளைம்

வறுமைக்கு அஞ்சி குழந்தைகளைக் கொல்லாதீர்

இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் மிகச்சிறந்த அருட்கொடை தான் குழந்தைச் செல்வமாகும். இதை அறிந்து கொள்ளாத பலர் அந்தக் குழந்தைகளை வறுமைக்கு அஞ்சி கொல்கின்றனர். கருணையின் உருவமாக இருக்கின்ற தாயின் கருவறையே கல்லரையாகின்றது.

வறுமைக்கு அஞ்சி உங்கள் குழந்தைகளைக் கொல்லாதீர்கள்! அவர்களுக்கும், உங்களுக்கும் நாமே உணவளிக்கிறோம். அவர்களைக் கொல்வது பெரிய குற்றமாகும்.

அல்குர்ஆன் 17:31

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான், "அல்லாஹ்வின் தூதரே! பாவங்களிலேயே மிகப் பெரியது எது?'' என்று கேட்டேன். "உன்னைப் படைத்த இறைவனுக்கே நீ இணைகற்பிப்பது ஆகும்'' என்று பதிலளித்தார்கள். "பிறகு எது?'' என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், "உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன் உணவைப் பங்குபோட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீயே கொலை செய்வது'' என்று சொன்னார்கள். நான், "பிறகு எது?'' என்றேன். "உன் அண்டை வீட்டுக்காரனின் மனைவியுடன் நீ விபசாரம் புரிவது'' என்றார்கள்.  

நூல்: புகாரி:6001

இதை விட வேதனைக்குரிய விஷயம் என்னவென்றால் குழந்தை பிறப்பதற்கு முன்னேயே அதனிடம் பாகுபாடுகாட்டி பெண்குழந்தையைக் கருவருப்பது தான்.

அவர்களில் ஒருவனுக்குப் பெண் குழந்தை பற்றி நற்செய்தி கூறப்பட்டால் அவனது முகம் கருத்து, கவலைப்பட்டவனாக ஆகிவிடுகிறான்.அவனுக்குக் கூறப்பட்ட கெட்ட(தெனக் கருதிய) செய்தியினால் சமுதாயத்திலிருந்து மறைந்து கொள்கிறான். இழிவுடன் இதை வைத்துக்கொள்வதா? அல்லது மண்ணில் இதை (உயிருடன்) புதைப்பதா? (என்று எண்ணுகிறான்) கவனத்தில் கொள்க! அவர்கள் தீர்ப்பளிப்பது மிகவும் கெட்டது.

அல்குர்ஆன் 16 :58 ,59

சொர்க்கத்திற்கு வழி காட்டும் பெண் குழந்தை

நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஏதேனும் (தரும்படி) கேட்டு ஒரு பெண்மணி வந்தார். அவருடன் இரு பெண் குழந்தைகள் இருந்தனர். அப்போது ஒரே ஒரு பேரீச்சம்பழத்தைத் தவிர வேறெதுவும் அவருக்கு என்னிடம் கிடைக்கவில்லை. ஆகவே, நான் அதை அவருக்குக் கொடுத்தேன். உடனே அதனை அவர் இரண்டாகப் பிட்டு குழந்தைகள் இருவருக்கும் பங்கிட்டுக் கொடுத்தார். பிறகு அப்பெண்மணி எழுந்து சென்று விட்டார். பின்னர் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். அவர்களிடம் இது பற்றி நான் சென்னேன். அதற்கு  நபி (ஸல்) அவர்கள், "யார் இந்தப் பெண் குழந்தைகளில் ஒன்றுக்குப் பொறுப்பேற்று நன்மை புரிவாரோ அவருக்கு அந்தக் குழந்தைகள் நரகத்திலிருந்து தடுக்கும் திரையாக இருப்பார்கள்'' என்றார்கள்.

நூல் : புகாரி:5995

குழந்தைகளிடத்தில் அன்பளிப்பு விஷயத்தில் பாரபட்சம் காட்டுவது

ஆண் குழந்தைகளும் பெண் குழந்தைகளும் கலந்திருக்கும் வீடுகளில் ஆண் குழந்தைகள் மீது தாய்க்கும் பெண் குழந்தைகள் மீது தந்தைக்கும் பாசம் ஏற்படுகின்றது. மேலும் பல குழந்தைகள் இருக்கும் போது குறிப்பிட்ட ஒரு குழந்தை மீது பெற்றோர்களுக்குப் பாசம் ஏற்படுகின்றது. இதனால் அந்தக் குழந்தை தவறு செய்யும் போது கண்டிக்காமல் கண்டு கொள்ளாமல் விட்டுவிடுகின்றனர். அந்தக் குழந்தைக்கு தனி கவனிப்பும் காட்டுகின்றனர். விளையாட்டுப் பொருட்கள் வாங்கிகொடுக்கும் போதும் இவ்வாறு தான். இதனால் மற்ற குழந்தைகள் பெரிதும் மனஉளைச்சலுக்கு ஆளாகுகின்றனர். இந்த பாரபட்சம் அநீதியாகும்.

நுஅமான் பின் பஷீர்(ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் (அம்ரா) பின்த் ரவாஹா (ரலி) அவர்கள் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து சில அன்பளிப்புகளை எனக்கு வழங்குமாறு கேட்டார். என் தந்தை ஒரு வருடம் இழுத்தடித்தார். பிறகு (எனக்கு அன்பளிப்பு வழங்க வேண்டும் என்று) அவருக்குத் தோன்றியது. (ஓர் அடிமையை அன்பளிப்பாக வழங்கினார்.) அப்போது என் தாயார் "என் மகனுக்கு அன்பளிப்பாக (இந்த அடிமையை) வழங்கியதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நீங்கள் சாட்சியாக்காத வரை இதை நான் ஒப்புக்கொள்ளமாட்டேன்'' என்று கூறினார். ஆகவே, என் தந்தை சிறுவனாயிருந்த எனது கையைப் பிடித்துக்கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் சென்று, "அல்லாஹ்வின் தூதரே! இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த் ரவாஹா, தன் மகனுக்கு நான் அன்பளிப்பாக வழங்கிய ஒன்றுக்குத் தங்களைச் சாட்சியாக்க வேண்டும் என விரும்புகிறார்'' என்று கூறினார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "பஷீர்! இவரைத் தவிர வேறு குழந்தை உமக்கு உண்டா?'' என்று கேட்டார்கள். என் தந்தை "ஆம்' என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "அவர்கள் அனைவருக்கும் இதைப் போன்ற அன்பளிப்பை வழங்கினீரா?'' என்று கேட்டார்கள். என் தந்தை "இல்லை' என்று சொன்னார்கள். "அப்படியானால் என்னை (இதற்குச்) சாட்சியாக்காதீர். ஏனெனில், நான் அநீதிக்குச் சாட்சியாக இருக்க மாட்டேன்'' என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் :முஸ்லிலிம் (3326)

நாம் குழந்தைகள் அனைவரிடத்திலும் நீதியாக, சரிசமமாகத் தான் நடக்கின்றோம் என்ற எண்ணம் குழந்தைகளின் மனதில் பதிய வேண்டும். இல்லையென்றால் பெற்றோர்களும் பெற்றோர்கள் யார் மீது பாசம் வைத்தார்களோ அந்தக் குழந்தையும் பெரிதும் பாதிப்புக்குள்ளாக வேண்டிய நிலை ஏற்படும்.

மேலும் குழந்தைகளுக்கு மத்தியில் வெள்ளை, கருப்பு உயரம் குட்டை அழகானவள் அழகற்றவள் போன்ற உடல்ரீதியான குறைகளைக் கூறி குழந்தைகளை அழைப்பதினால் குழந்தைகளிடத்தில் அதிகமான தாழ்வு மனப்பான்மை ஏற்படுகின்றது. இதையும் பெற்றோர்கள் தவிர்க்க வேண்டும். என் தங்கமே! செல்லமே. அழகே! முத்தே! மாணிக்கமே! போன்ற அழகான செல்லப் பெயர்களைக் கொண்டு குழந்தைகளை அழைக்க வேண்டும். ஒரு காலத்தில் பெற்றோர்கள் குழந்தைகளிடத்தில் காட்டிய அன்பு பாசத்தை இன்று தேடவேண்டிய நிலை ஏற்பட்டுள்ளது. பெற்றோர்கள் தங்கள் குழந்தைகளைத் தொல்லைகளாகவே பார்க்கின்றனர். இதுவும் தவிர்க்கப்பட வேண்டும்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் மதீனா கடைவீதிகளில் ஒன்றில் ("பனூ கைனுகா' கடைவீதியில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தேன். அவர்கள் ஃபாத்திமா (ரலி) அவர்களின் வீட்டுக்குச் செல்லவே நானும் (அவர்களுடன்) சென்றேன். (வீட்டுக்கு வந்ததும்,) "பொடிப்பையன் எங்கே?'' என்று மும்முறை கேட்டார்கள். பிறகு "அலீயின் மகன் ஹசனைக் கூப்பிடுங்கள்'' என்று சொன்னார்கள். அப்போது அலீ (ரலி) அவர்களுடைய புதல்வர் ஹசன் (ரலி) அவர்கள் கழுத்தில் நறுமண மாலை ஒன்றை அணிந்தபடி  நடந்து வந்தார்கள். அவர்களைக் கண்டதும் நபி (ஸல்) அவர்கள் இப்படித் தமது கையை விரித்தபடி அவரை நோக்கிச் சென்றார்கள். ஹசன் (ரலி) அவர்களும் இவ்வாறு தமது கையை விரித்த படி நபி (ஸல்) அவர்களை அணைத்திட அவர்களை நோக்கி வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹசன் (ரலி) அவர்களை அணைத்துக் கொண்டு, "இறைவா! நான் இவரை நேசிக்கிறேன். நீயும் இவரையும் இவரை நேசிப்பவர்களையும் நேசிப்பாயாக'' என்று பிரார்த்தனை செய்தார்கள்.

நூல் : புகாரி 5884

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் பேரரான) ஹசன் பின் அலீயை முத்தமிட்டார்கள். அப்போது அவர்கள் அருகில் அமர்ந்து கொண்டிருந்த அக்ரஉபின் ஹாபிஸ் அத்தமீமீ (ரலி அவர்கள், "எனக்குப் பத்துக் குழந்தைகள் இருக்கின்றார்கள். அவர்களில் ஒருவரைக் கூட நான் முத்தமிட்டதில்லை'' என்றார். அவரை ஏறெடுத்துப் பார்த்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அன்பு காட்டாதவர் அன்பு காட்டப்படமாட்டார்'' என்று கூறினார்கள்.

நூல்: புகாரி5997

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு கிராமவாசி  நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "நீங்கள் சிறு குழந்தைகளை முத்தமிடுகின்றீர்களா? நாங்களெல்லாம் அவர்களை முத்தமிடுவதில்லை'' என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "அல்லாஹ் உமது இதயத்திலிருந்து அன்பைக் கழற்றி விட்ட பின்னர்  உமக்காக நான் என்ன செய்ய முடியும்?'' என்று கேட்டார்கள்.

நூல்:புகாரி 5998

குழந்தைகளின் உணர்வுகளுக்கு மதிப்பளிக்க வேண்டும்

பொதுவாக குழந்தைகள் தாயை விட்டு பிரிந்திருக்காது. உட்காரும் போதும் நிற்கும் போதும் நடக்கும் போதும் என்று எல்லா நேரங்களிலும் தாயின் காலைச் சுற்றியே அலைந்து கொண்டிருப்பார்கள். சில குழந்தைகள் எப்போதுமே தூக்கிவைத்துக் கொள்ளும் படி அழுது கொண்டேயிருப்பார்கள். இது தான் குழந்தைகளின் எதார்த்த நிலையாகும். இதனைப் புரிந்து கொண்ட இஸ்லாம் தொழும்போது கூட குழந்தைகளிடம் எவ்வாறு நடக்க வேண்டும் என்ற முறையை நமக்கு கற்றுக் கொடுக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் தொழுகையில் நிற்பேன். அப்போது (பின்னால் தொழுது கொண்டிருக்கும் பெண்களின்) குழந்தை அழுவதைக் கேட்பேன். அந்தக் குழந்தையின் தாய்க்கு சிரமமளிக்கக் கூடாது என்பதற்காக நான் எனது தொழுகையை சுருக்கமாக முடித்துவிடுகிறேன்.

நூல் :புகாரி 868

அபூகத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது தோளின் மீது (தமது பேத்தி சிறுமி) உமாமா பின்த் அபில் ஆஸை அமர்த்திய வண்ணம் எங்களிடையே வந்து அப்படியே (எங்களுக்கு இமாமாக  நின்று) தொழுவித்தார்கள். அவர்கள் ருகூஉ செய்யும் போது உமாமாவைக் கீழிறக்கி விட்டார்கள். (சஜ்தாவிலிருந்து நிலைக்கு) உயரும்போது அவரை மீண்டும் (தோளில்) ஏற்றிக் கொண்டார்கள்.

நூல்: புகாரி 5996

தொழும்போதே இவ்வாறு நடக்க வேண்டும் என்றால் மற்ற நேரங்களில் நாம் நம்முடைய குழந்தைகளிடம் எவ்வாறு நடந்துகொள்ள வேண்டும் என்று தாய்மார்கள் உணர வேண்டும்.

குழந்தைகளுக்குச் செல்வத்தை விட்டுச் செல்லுதல்

மேலும் நம்முடைய இறப்பிற்குப் பின்னரும் நம்முடைய குழந்தைகளை நல்ல நிலையில் விட்டுச்செல்ல வேண்டும் என்று கட்டளையிட்டதன் மூலம் குழந்தைகள் விஷயத்தில் நாம் எவ்வளவு கண்ணும் கருத்துமாக இருக்க வேண்டும் என்று இஸ்லாம் அறிவுறுத்துகின்றது என்பது கவனிக்கத்தக்கதாகும்.

சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவில் (நோயுற்று) இருந்த என்னை நபி (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜின்போது) நலம் விசாரித்து வந்தார்கள். நான் துறந்து வந்த பூமியில் (மக்காவில்) மரணிப்பதை நான் விரும்பவில்லை. (மக்காவிலேயே மரணித்துவிட்ட மற்றொருவரான) "அஃப்ராவின் புதல்(வர் சஅத் பின் கவ்லா என்ப)வருக்கு அல்லாஹ் கருணை புரிவானாக!'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! என் செல்வம் முழுவதையும் நான் மரண சாசனம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். அவர்கள், "வேண்டாம்'' என்று கூறினார்கள்.  நான், "அப்படியென்றால் (என் செல்வத்தில்) பாதியை மரண சாசனம் செய்து விடட்டுமா?'' என்று கேட்டேன். அதற்கும், "வேண்டாம்'' என்றே பதிலளித்தார்கள். நான், "மூன்றிலொரு பங்கை(யாவது மரண சாசனம் செய்து விடட்டுமா?)'' என்று கேட்டேன். அவர்கள்,  "மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம் தான். நீங்கள் உங்கள் வாரிசுகளைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது, அவர்களை மக்களிடம் கையேந்தும்படி ஏழைகளாக விட்டுச் செல்வதை விட நல்லதாகும். நீங்கள் செய்த (நல்ல) செலவு எதுவாயினும் தருமமேயாகும்.  நீங்கள் உங்கள் மனைவியின் வாயில் இடுகின்ற ஒரு கவளம் (உணவு) கூட (தருமமேயாகும்.) மேலும், உங்களுக்கு அல்லாஹ் நீண்ட ஆயுளைத் தருவான். உங்கள் வாயிலாக மக்கள் சிலர் பயனடைவார்கள். மற்ற (தீயவர்) சிலர் உங்களால் இழப்புக்குள்ளாவார்கள்'' என்று கூறினார்கள்.  அன்று அவருக்கு ஒரு மகளைத் தவிர வேறு (நேரடி வாரிசுகள்) யாரும் இருக்கவில்லை.

நூல் :புகாரி 2742

உறவினர்களைப் பேணச் சொல்லுதல்

பணம் பந்தியிலே குணம் குப்பையிலே என்று கூறுவது போல பணம் வைத்திருப்பவர்களுடன் மட்டும் ஒட்டு உறவு வைக்கக்கூடிய மனிதர்களைப் பார்க்கின்றோம். பணம் வந்தவுடன் உறவினர்களை மறந்துவிடும் மனிதர்களும் உள்ளனர். உறவினர்களுக்கு மத்தியிலும் தூய்மையான எண்ணப்போக்குடன் பழக நம் குழந்தைகளுக்கு அறிவுரை வழங்க வேண்டும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உறவு (இறையருளின்) ஒரு கிளையாகும். ஆகவே, "அதனுடன் யார் ஒட்டி வாழ்கின்றாரோ அவருடன் நானும் உறவு பாராட்டுவேன். அதை யார் முறித்துக் கொள்கிறாரோ அவரை நானும் முறித்துக் கொள்வேன்'' (என்று உறவைப் படைத்த போது இறைவன் சொன்னான்).               

நூல்:            புகாரி :5989

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தமது வாழ்வாதாரம் (ரிஸ்க்) விசாலமாக்கப்படுவதும் வாழ்நாள் நீட்டிக்கப்படுவதும் யாருக்கு மகிழ்ச்சி அளிக்குமோ அவர் தமது உறவைப் பேணி வாழட்டும்.

நூல்:            புகாரி 5985

இன்ப துன்பங்களில் கலந்து கொள்வது அன்பளிப்பு செய்வது போன்ற அனைத்து விஷயங்களிலும் உறவினர்கள் எவ்வாறு தங்களிடம் நடந்து கொள்கிறார்களோ அவ்வாறே இவர்களும் அவர்களிடத்தில் நடக்கின்றனர்.இதுவும் மார்க்கத்திற்கு முரணானதாகும்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர்; மாறாக உறவு முறிந்தாலும் அந்த உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார்.

அறிவிப்பவர் : அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: புகாரி 5991      

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! எனக்கு உறவினர்கள் சிலர் உள்ளனர். அவர்களுடன் நான் ஒட்டி உறவாடுகிறேன். ஆனால், அவர்கள் எனது உறவை முறிக்கின்றனர். நான் அவர்களுக்கு உபகாரம் செய்கிறேன். ஆனால், அவர்கள் எனக்கு அபகாரம் செய்கிறார்கள். (என்னைப் புண்படுத்தும்போது) அவர்களை நான் சகித்துக்கொள்கிறேன். (ஆனாலும்,) அவர்கள் என்னிடம் அறியாமையோடு நடந்துகொள்கிறார்கள்'' என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், "நீங்கள் சொன்னதைப் போன்று நீங்கள் நடந்திருந்தால், அவர்களது வாயில் நீங்கள் சுடு சாம்பலைப் போட்டவரைப் போன்றுதான். இதே நிலையில் நீங்கள் நீடித்திருக்கும்வரை இறைவனிடமிருந்து ஓர் உதவியாளர் அவர்களுக்கெதிராக உங்களுடன் இருந்து கொண்டேயிருப்பார்'' என்றார்கள்.

நூல்: முஸ்லிம் 5000

ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உறவை முறித்து வாழ்பவன் சொர்க்கத்தில் நுழையமாட்டான்.

நூல் : புகாரி 5984

மேலும் உறவுக்காரர்கள் தங்களிடம் எதையாவது கேட்டுவிடுவார்களோ உதவிதேடிவந்து விடுவார்களோ என்று பயந்து பொருட்களை பதுக்கிவைக்கும் நிலை ஏற்பட்டுள்ளது. உறவினர்களுக்கு உதவுவதின் நன்மையை இவர்கள் உணர்வார்களையானால் இவ்வாறு நடக்க மாட்டார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

தேவை போக எஞ்சியதை தர்மம் செய்வதே சிறந்ததாகும். மேலும் முதலில் உமது வீட்டாரிடமிருந்து தர்மம் செய்ய ஆரம்பிப்பீராக!”

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி 1426

அனஸ் பின் மாலிக் (ரலி) கூறியதாவது: அன்ஸாரிகளில் அபூதல்ஹா (ரலி) அதிக வசதி படைத்தவராக இருந்தார். அவருக்குப் பேரீச்ச மரங்கள் அதிகம் இருந்தன. அவரது செல்வங்களில் பைருஹா என்ற தோட்டமே அவருக்கு மிகவும் விருப்பமானதாக இருந்தது. அது மஸ்ஜிது(ந் நபவீ பள்ளிவாசலு)க்கு எதிரில் இருந்தது. நபி(ஸல்) அவர்கள் அத்தோட்டத்திற்குள் சென்று அங்குள்ள நல்ல தண்ணீரைக் குடிப்பது வழக்கம். "நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தானம் செய்யாத வரை நீங்கள் நன்மையை அடையவே மாட்டீர்கள்'' என்ற (3:92) இறை வசனம் இறங்கியதும், அபூதல்ஹா (ரலி), நபி (ஸல்) அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹு தஆலா, "நீங்கள் நேசிக்கும் பொருட்களிலிருந்து தர்மம் செய்யாதவரை நீங்கள் நன்மையைப் பெறவே மாட்டீர்கள்'' எனக் கூறுகிறான். என் செல்வங்களில் நான் மிகவும் நேசிக்கும் பொருள் பைருஹா என்னும் தோட்டமேயாகும். அது அல்லாஹ்விற்காக தர்மம் ஆகட்டும்! நான் அதன் மூலம் அல்லாஹ்விடம் நன்மையையும் அது (அவனிடம் எனது மறுமை வாழ்வின் நலனுக்கான) சேமிப்பாக இருக்க வேண்டுமென்றும் விரும்புகிறேன். எனவே "அல்லாஹ்வின் தூதரே! அதை அல்லாஹ் உங்களுக்குக் காட்டிய வழியில் பயன்படுத்திக் கொள்ளுங்கள்'' எனக் கூறினார். நபி(ஸல்) அவர்கள் "ஆஹா! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! இது அதிக லாபம் தரக்கூடிய செல்வமாயிற்றே! நீர் கூறியதை நான் நன்றாகவே செவியேற்று விட்டேன். நீர் அதை உமது நெருங்கிய உறவினர்களுக்குப் பங்கிட்டு விடுவதை நான் உசிதமாகக் கருதுகின்றேன்'' எனக் கூறினார்கள். அதற்கு அபூதல்ஹா(ரலி) "அல்லாஹ்வின் தூதரே! நான் அவ்வாறே செய்கிறேன்!'' எனக் கூறிவிட்டு, அத்தோட்டத்தைத் தமது நெருங்கிய உறவினருக்கும் தமது தந்தையுடன் பிறந்தவரின் குழந்தைகளுக்கும் பங்கிட்டு விட்டார்.

நூல் : புகாரி 1461

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

"பனூ உத்ரா' குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், தாம் இறந்த பிறகு தம்முடைய  அடிமை  ஒருவர் விடுதலையாகிக் கொள்ளட்டும் என்று (பின்விடுதலை) அறிவித்திருந்தார். இந்த விஷயம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டியபோது (அவரிடம்), "அந்த அடிமையைத் தவிர வேறு செல்வம் எதுவும் உம்மிடம் இருக்கிறதா?'' என்று கேட்டார்கள். அவர் "இல்லை' என்றார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்த அடிமையைக் காட்டி), "இவரை என்னிடமிருந்து வாங்கிக் கொள்பவர் யார்?'' என்று கேட்டார்கள். நுஐம் பின் அப்தில்லாஹ் அல்அதவீ (ரலி) அவர்கள் அவ்வடிமையை எண்ணூறு வெள்ளிக் காசுகளுக்கு வாங்கிக் கொண்டார்கள். நுஐம் (ரலி) அவர்கள் அந்தக் காசுகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டுவர, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த அடிமையின் உரிமையாளரிடம் அவற்றைக் கொடுத்து, "உமது தர்மத்தை முதலில் உம்மிடமிருந்து தொடங்குவீராக! பிறகு உமது தேவைபோக ஏதேனும் எஞ்சினால், அது உம்முடைய குடும்பத்தாருக்கு உரியதாகும்! உன் வீட்டாருக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது உம் உறவினர்களுக்கு உரியதாகும். உம் உறவினர்களுக்கு வழங்கியதுபோக ஏதேனும் எஞ்சினால், அது இவ்வாறு இவ்வாறு உமக்கு முன் பக்கமும் வலப் பக்கமும் இடப் பக்கமும் (அறவழிகளின் அனைத்து முனைகளிலும் செலவு செய்வீராக!)'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம்:1820

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் அல்லாஹ்வின் பாதையில் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் அடிமை(யின் விடு தலை)க்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு, நீங்கள் ஓர் ஏழைக்குத் தர்மம் செய்த ஒரு பொற்காசு, நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசு - இவற்றில் நீங்கள் உங்கள் குடும்பத்தாருக்காகச் செலவிட்ட ஒரு பொற்காசே அதிக நற்பலனை உடையதாகும்.

நூல் :           முஸ்லிம்:1818

வளரும் இன்ஷா அல்லாஹ்

 

கேள்வி பதில்

ஒரு கையில் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்பதற்கு  ஆதாரம் உண்டா?

அப்துல் காதிர், சென்னை

முஸாஃபஹா என்ற சொல்லுக்கு நேரடியான பொருளை அறிந்து கொண்டாலே ஒரு கையால் முஸாஃபஹா செய்ய வேண்டும் என்பதை நீங்கள் புரிந்து கொள்வீர்கள்.

قَوْله ( بَاب الْمُصَافَحَة ) هِيَ مُفَاعَلَة مِنْ الصَّفْحَة وَالْمُرَاد بِهَا الْإِفْضَاء بِصَفْحَةِ الْيَد إِلَى صَفْحَة الْيَد (فتح الباري)

ஒரு உள்ளங்கையை மறு உள்ளங்கையில் சேர்த்தல் என்பது தான் முஸாஃபஹா என்பதின் கருத்தாகும்.

(பத்ஹுல் பாரீ)

அரபி அகராதி நூல்களில் முதலிடம் பெற்றுள்ள சிறந்த நூலாக்க் கருதப்படும் லினானுல் அரப் என்ற நூலில் முஸாஃபஹா என்பதற்கு என்ன பொருள் கொடுக்கப்பட்டுள்ளது? என்பதைக் கவனியுங்கள்.

ومنه حديث المُصافَحَة عند اللِّقاء وهي مُفاعَلة من إِلصاق صُفْح الكف بالكف وإِقبال الوجه على الوجه- لسان العرب - (2 / 512)

முகத்தை முகத்துடன் முன்னோக்கி ஒரு உள்ளங்கையின் உட்பகுதியை மற்றொரு உள்ளங்கையுடன் இணைப்பது முஸாஃபஹா ஆகும்.

(லிஸானுல் அரப், பாகம் :2, பக்கம் :512)

இருவருமே ஒரு கையால் முஸாஃபஹா செய்யும் போது தான் இந்த நிலை ஏற்படும். இரண்டு கைகளால் செய்யும் போது இடது உள்ளங்கை மற்றவரின் வலது புறங்கையில் தான் படும். இரு பக்கமும் உள்ளங்ககைகள் சந்திக்காது. எனவே முஸாஃபஹா என்ற சொல்லின் நேரடிப் பொருளே ஒரு கையால் தான் செய்ய வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்துகிறது.

இரண்டு கைகளால் முஸாபஹா செய்ய வேண்டும். அல்லது செய்யலாம் என்ற கருத்துடையவர்கள் புகாரியில் இடம் பெற்ற ஹதீஸை எடுத்துக் காட்டுகின்றனர்.

முஸாஃபஹா என்ற பாடத்தில்  புகாரி இமாம் பதிவு செய்திருக்கும் ஹதீசுக்கும் முஸாஃபஹாவுக்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எனக்கு அத்தஹிய்யாத் கற்றுத் தந்தனர். அப்போது எனது ஒரு கை அவர்களின் இரண்டு கைகளுக்கிடையே  இருந்தது என்பது தான் அந்த ஹதீஸ்.

(புகாரி 6265)

ஒருவருக்கு கற்றுக் கொடுக்கும் போது ஆசிரியர் தமது இரு கைகளை மாணவரின் ஒரு கையை பிடித்துக் கொண்டு சொல்லிக் கொடுக்கலாம் என்பதுதான் இதிலிருந்து தெரிகிறது. ஒருவரை சந்திக்கும் போது செய்யும் முஸாஃபஹா பற்றி இது குறிப்பிடவில்லை.

மேலும் அதில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இரு கைகளையும் இப்னு மஸ்வூத் (ரலி) ஒரு கையையும் பயன்படுத்தியுள்ளனர். முஸாஃபஹாவுக்கு இதை ஆதாரமாகக் காட்டுவோர் ஒருவர் இரு கைகளையும் மற்றவர் ஒரு கையையும் பயன்படுத்த வேண்டும் என்று கூறுவதில்லை என்பதையும் கவனத்தில் கொள்ள வேண்டும்.

 

நபிகளாரின் மனைவிகள் பள்ளிவாசலுக்கு சென்றதில்லை என்று கூறுகிறார்களே இது உண்மையா?

ரஹீமா, கோவை

பெண்கள் மார்க்க விசயங்களை அறிந்து கொள்ளக் கூடாது என்பதில் அதிக அக்கரை எடுத்துக் கொள்ளும் சுன்னத் வல்ஜமாஅத்தினர், தர்ஹா போன்ற இணைப்பு காரியங்களில் கலந்து கொள்ள ஊக்கவிப்பது சரியா? இதற்கு மார்கக்கத்தில் ஆதாரம் உண்டா? என்று சிந்திப்பதில்லை.

தற்போது பெண்கள் மார்க்க விசயங்களில் அதிக விழிப்புணர்வுடன் இருப்பதற்குக் காரணம் அவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்வதும், மார்க்க விசயங்களில் அதிக ஈடுபாடு காட்டுவதும் சுன்னத் வல் ஜமாஅத்தினரின் இமாம்களுக்கு பேரிடியாக அமைந்துள்ளது. அவர்களின் ஏமாற்று வேலைகளுக்கு பெண்கள் மார்க்க விசயங்களில் தெரிந்து கேள்வி கேட்பது அவர்களின் தொழில்களுக்கு வேட்டு வைப்பதால் எதையாவது கூறி உளறி வருகின்றனர். அவற்றில் இதுவும் ஒன்று.

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் முஃமின்களான எல்லா பெண்களும் பள்ளிவாசலுக்கு வந்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரப்பூர்வமான செய்திகள் உள்ளன.

"உங்கள் மனைவியர் பள்ளிவாசலுக்குச் செல்ல அனுமதி கேட்டால் அவர்களைத் தடுக்காதீர்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்கள்: புகாரி 5238, முஸ்லிம் 751

"நீண்ட நேரம் தொழுவிக்கும் எண்ணத்துடன் நான் தொழுகையைத் துவக்குகின்றேன். அப்போது குழந்தையின் அழுகுரலை நான் கேட்கிறேன். (எனக்குப் பின்னால் தொழுது கொண்டிருக்கும்) அந்தக் குழந்தையின் தாயாருக்குச் சிரமமளிக்கக் கூடாது என்பதால் தொழுகையைச் சுருக்கமாக முடித்து விடுகிறேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூகதாதா (ரலி)

நூல்: புகாரி 707

உமர் (ரலி) அவர்களின் மனைவியரில் ஒருவர் ஸுப்ஹ் மற்றும் இஷாத் தொழுகைகளில் பள்ளியில் ஜமாஅத்தில் கலந்து கொள்வார். அவரிடம், "(உங்கள் கணவர்) உமர் (ரலி) ரோஷக்காரராகவும், இதை விரும்பாதவராகவும் இருப்பதைத் தெரிந்து கொண்டே நீங்கள் ஏன் (பள்ளிக்குச்) செல்கிறீர்கள்?'' என்று கேட்கப்பட்டது. அதற்கு அப்பெண்மணி, "அவர் என்னைத் தடுக்கக் முடியாது. ஏனெனில் "பெண்கள் பள்ளிக்குச் செல்வதை நீங்கள் தடுக்காதீர்கள்' என்ற நபி (ஸல்) அவர்களின் சொல் (என்னைத் தடுப்பதை விட்டும்) அவரைத் தடுத்து விடும்'' என்று கூறினார்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

நூல்: புகாரீ 900

நபி (ஸல்) அவர்கüன் துணைவியார் உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலத்தில் பெண்கள், "கடமையான தொழுகையில் சலாம் கொடுத்ததும் எழுந்து (சென்று)விடுவார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (அவர்களுடன்) தொழுகையில் கலந்துகொண்ட ஆண்களும் அல்லாஹ் நாடிய அளவுக்கு அங்கேயே அமர்ந்திருப்பார்கள். (பெண்கள் சென்றபின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்ததும் ஆண்களும் எழுவார்கள்

நூல்கள்  :புகாரி (866), நஸாயீ (1316), அபூதாவூத் (876), இப்னுமாஜா(922), அஹ்மத் (25330)

நம்பிக்கையுள்ள (மூஃமினான) பெண்கள் தங்களது கம்பளி ஆடைகளால் போர்த்திக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஃபஜ்ர் தொழுகையில் பங்கெடுப்பவர்களாக இருந்தனர். தொழுகையை முடித்துக் கொண்டு தமது இல்லங்களுக்கு திரும்பிச் செல்வார்கள் .இருட்டின் காரணமாக அவர்களை யாரும் அறிந்து கொள்ள முடியாது.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : புகாரி (578)

முஃமினா பெண்கள் என்ற வாசகத்தில் முதலில் சேர்பவர்கள் நபிகளாரின் மனைவிகள் தான். எனவே நபிகளாரின் மனைவிமார்களும் பள்ளியில் தொழுதுள்ளார்கள் என்றே எடுத்துக் கொள்ள வேண்டும். இல்லையெனில் நபிகளாரின் மனைவிகள் பள்ளிவாசலுக்கு வரவில்லை என்று தனியான ஆதாரங்கள் இருக்க வேண்டும். அவ்வாறு எந்தச் செய்தியும் கிடையாது.

மேலும் நேரடியாக நபிகளாரின் மனைவிகள் பள்ளிவாசலுக்கு வந்து தொழுதுள்ளார்கள் என்பதற்கும் நபிமொழிகளில் ஆதாரங்கள் உள்ளன.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் வந்தபோது இரு தூண்களுக்கிடையில் நீண்ட கயிறு ஒன்று காணப்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "இது என்ன?'' என்று கேட்டார்கள். அதற்கு மக்கள் (நபிகளாரின் மனைவி) "ஸைனப் (ரலிலி) அவர்களுக்கு உரியதாகும்; அவர் தொழும்போது சோர்வடைந்தால் இந்தக் கயிற்றைப் பிடித்துக் கொள்வார்'' என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "இதை அவிழ்த்து விடுங்கள். உங்களில் ஒருவர் உற்சாகமாக இருக்கும்போது தொழட்டும்; சோர்வடைந்தால் உட்கார்ந்து கொள்ளட்டும்'' என்று கூறினார்கள்.

நூல்கள் : முஸ்லிம் (1437), புகாரி (1150), நஸாயீ (1625), இப்னுமாஜா (1361), அஹ்மத் (11548)

நபிகளார் காலத்தில் சூரியகிரகணம் ஏற்பட்டு அதற்காக நபிகளார் பள்ளிவாசலில் தொழுவித்தார்கள். அந்த தொழுகையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கலந்து கொண்டுள்ளார்கள்.

அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் இருந்து கொண்டிருந்தோம். அப்போது சூரியகிரகணம் ஏற்பட்டது. உடனே நபி (ஸல்) அவர்கள் எழுந்து தமது மேலாடையை இழுத்துக் கொண்டே பள்ளிவாசலுக்குள் சென்றார்கள். நாங்களும் சென்றோம். (கிரகணம் விலகி) வெளிச்சம் வரும் வரை எங்களுக்கு இரண்டு ரக்அத்கள் தொழுவித்தார்கள். பிறகு, "சூரியனும் சந்திரனும் அல்லாஹ்வின் சான்றுகளில் இரு சான்றுகளாகும். எவருடைய இறப்புக்காகவும் சூரிய சந்திர கிரகணங்கள் ஏற்படுவதில்லை. எனவே, அவற்றை நீங்கள் கண்டால் உங்களுக்கு ஏற்பட்ட (கிரகணமான)து அகற்றப்படும் வரை நீங்கள் தொழுங்கள்; பிரார்த்தியுங்கள்'' என்று கூறினார்கள்.

நூல் :புகாரி (1040)

அஸ்மா பின்த் அபீபக்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நான் (என் சகோதரி) ஆயிஷா (ரலி) அவர்களிடம் வந்தேன். அப்போது (மக்களுடன்) ஆயிஷா (ரலி) அவர்கள் தொழுது கொண்டிருந்தார்கள். நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், "மக்களுக்கு என்ன நேர்ந்து விட்டது?'' என்று கேட்டேன். (தொழுகையில் நின்ற) ஆயிஷா (ரலி) அவர்கள் வானை நோக்கி(த் தமது தலையால்) சைகை செய்தார்கள். (தொழுகையில் பேசக் கூடாது என்பதை உணர்த்த) "சுப்ஹானல்லாஹ்' (அல்லாஹ் தூயவன்) என்று கூறினார்கள். அப்போது "(இது மக்களைப் பாதிக்கும்) எதேனும் அடையாளமா?'' என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் "ஆம்' என்று தலையால் சைகை செய்தார்கள். உடனே நானும் (தொழுகையில்) நின்றுகொண்டேன். (நீண்ட நேரம் நின்றதால்) நான் கிறக்கமுற்றேன். (கிறக்கம் நீங்க) என் தலை மீது தண்ணீரைத் தெளிக்கலானேன். (தொழுகை முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள் (தமது உரையில்) அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்துவிட்டு, "எனக்கு இதுவரை காட்டப்பட்டிராத அனைத்தையும் (இதோ) இடத்தில் (தொழுகையில் இருந்த போது) கண்டேன். சொர்க்கம், நரகம் உட்பட (அனைத்தையும் கண்டேன்). மேலும் எனக்கு (பின்வருமாறு) இறைவனின் தரப்பிலிருந்து (வஹீ) அறிவிக்கப்பட்டது: நிங்கள் உங்கள் மண்ணறைகளுக்குள் (பெருங்குழப்பவாதியான) மஸீஹுத் தஜ்ஜாலின் சோதனைக்கு "நிகரான' அல்லது "நெருக்கமான' அளவிற்கு சோதிக்கப்படுவீர்கள். . . .  என்றார்கள்

நூல்கள் : புகாரி (86), முஸ்லிம் (1653)

ஒரு பேச்சுக்கு நபிகளார் காலத்தில் நபியின் மனைவிமார்கள் பள்ளிவாசலுக்கு வந்ததற்கு ஆதாரம் இல்லையென்றாலும் இக்காலத்தில் உள்ளவர்கள் நபிகளாரின் மனைவிமார்கள் இல்லை. சாதராண முஃமின்கள்தான். எனவே முஃமின்களாக இருக்கும் எந்த பெண்மணியும் பள்ளிவாசலுக்கு வரலாம் என்றே கூறமுடியும்.

 

ஷபே பராத் அன்று தஸ்பீஹ் தொழுகை தொழுவதும் பள்ளிவாசலிருந்து கூட்டமாக மண்ணறைக்கு சென்று துஆச் செய்வதும் மார்க்கத்தில் உள்ளதா?

நஸ்ரீன், விழுப்புரம்

நபிகளார் சில தினங்களில் சில சிறப்பு வணக்க முறைகளைச் செய்யுமாறு கூறியுள்ளார்கள். குறிப்பாக லைலத்துல் கத்ர் அன்றும் கிரகணம் ஏற்படும் போதும் மழையில்லாத போதும் நபிகளார் சில சிறப்பு வணக்க முறைகளைக் கூறியுள்ளார்கள். ஆனால் ஷஅபான் 15 அன்று சிறப்பு வணக்கங்கள் எதையும் நபிகளார் நமக்கு கற்றுத் தரவில்லை. அதற்கு ஆதாரப்பூர்வமான எந்தச் செய்தியும் இல்லை.

மண்ணறைக்குச் சென்று துஆச் செய்வதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக சிலர் காட்டுகின்றனர். ஆனால் அந்தச் செய்தி ஆதாரமற்றது என்பதை அந்தச் செய்தியைப் பதிவு செய்த ஆசிரியரே அதன் இறுதியில் கூறியுள்ளார்.

அன்னை ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா) அவர்கள் அறிவிக்கிறார்கள்: ஒரு நாள் இரவு இறைத்தூதர் (ஸல்லல்லாஹ‚ அலைஹி வஸல்லம்) அவர்களைப் படுக்கையில் காணவில்லை. அவர்களைத் தேடி) வெளியில் சென்றேன். அப்போது அவர்கள் ஜன்னத்துல் பகீஃ அடக்கஸ்தலத்திலிருந்தார்கள். (என்னைக் கண்டவுடன்) சொன்னார்கள். (ஆயிஷாவே!) இறைவனும் இறைத்தூதரும் உனக்கு அநீதமிழைத்து விடுவார்கள் என பயந்து போனாயா? நான் கூறினேன் : (அவ்வாறெல்லாமில்லை) உங்கள் துணைவியர் ஒருவரிடம் வந்திருப்பீர்கள் என்று தான் கருதினேன். அச்சமயம் இறைத்தூதர் (ஸல்லல்லாஹு‚ அலைஹி வஸல்லம்) அவர்கள் மொழிந்தார்கள்: நிச்சயமாக இறைவன் ஷஃபான் மாதத்தின் 15 ஆம் இரவின் போது முதல் வானத்திற்கு இறங்கி வருகிறான். மேலும் கல்ப் கூட்டத்தாரின் ஆடுகளின் எண்ணிக்கையை விட அதிக அளவில் அடியார்களை மன்னிக்கிறான்.

அறிவிப்பாளர் : ஆயிஷா (ரளியல்லாஹு அன்ஹா)

நூற்கள் : அஹ்மத் எண் : 26060, திர்மிதீ எண் : 739, இப்னுமாஜா எண்: 1389 இப்னு அபீஷய்பா எண் : 29858

இந்தச் செய்தி இமாம் புகாரி அவர்களால் பலவீனமானது என்று ஆதாரத்துடன் இடித்துரைக்கப்பட்ட செய்தியாகும். புகாரி இமாமின் மாணவரான இமாம் திர்மிதீ அவர்கள் இந்தச் செய்தியைப் பற்றி புகாரி இமாமிடம் கேட்டபோது இது ஆதாரமற்றது என்பதைத் தெளிவுபடுத்தியுள்ளார்கள்.

670 حَدَّثَنَا أَحْمَدُ بْنُ مَنِيعٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ هَارُونَ أَخْبَرَنَا الْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ عَنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ عَنْ عُرْوَةَ عَنْ عَائِشَةَ قَالَتْ فَقَدْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَيْلَةً فَخَرَجْتُ فَإِذَا هُوَ بِالْبَقِيعِ فَقَالَ أَكُنْتِ تَخَافِينَ أَنْ يَحِيفَ اللَّهُ عَلَيْكِ وَرَسُولُهُ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ إِنِّي ظَنَنْتُ أَنَّكَ أَتَيْتَ بَعْضَ نِسَائِكَ فَقَالَ إِنَّ اللَّهَ عَزَّ وَجَلَّ يَنْزِلُ لَيْلَةَ النِّصْفِ مِنْ شَعْبَانَ إِلَى السَّمَاءِ الدُّنْيَا فَيَغْفِرُ لِأَكْثَرَ مِنْ عَدَدِ شَعْرِ غَنَمِ كَلْبٍ وَفِي الْبَاب عَنْ أَبِي بَكرٍ الصِّدِّيقِ قَالَ أَبُو عِيسَى حَدِيثُ عَائِشَةَ لَا نَعْرِفُهُ إِلَّا مِنْ هَذَا الْوَجْهِ مِنْ حَدِيثِ الْحَجَّاجِ و سَمِعْت مُحَمَّدًا يُضَعِّفُ هَذَا الْحَدِيثَ و قَالَ يَحْيَى بْنُ أَبِي كَثِيرٍ لَمْ يَسْمَعْ مِنْ عُرْوَةَ وَالْحَجَّاجُ بْنُ أَرْطَاةَ لَمْ يَسْمَعْ مِنْ يَحْيَى بْنِ أَبِي كَثِيرٍ رواه الترمذي

இந்தச் செய்தி பலவீனமானது என்று இமாம் புகாரி அவர்கள் கூறியதை நான் செவியேற்றுள்ளேன். மேலும் (இந்தச் செய்தியில் இடம்பெற்றுள்ள மூன்றாவது அறிவிப்பாளர்) யஹ்யா பின் அபீகஸீர் அவர்கள், (அடுத்த அறிவிப்பாளர்) உர்வா பின் ஸுபைர் என்பவரிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்டதில்லை. இன்னும் (நான்காவது அறிவிப்பாளர்) ஹஜ்ஜாஜ் பின் அர்த்தாத் அவர்களும் யஹ்யா பின் அபீகஸீர் அவர்களிடமிருந்து (நேரடியாக எதையும்) கேட்கவில்லை என்றும் கூறினார்கள்.

நூல் : திர்மிதீ தமிழ்ஹதீஸ் எண் : 670

இமாம் திர்மிதீ அவர்கள் அந்த ஹதீஸின் கீழே தெளிவாக எடுத்துரைத்த இந்தக் கருத்தை இருட்டடிப்பு செய்து மக்களிடம் மறைத்துவிட்டே இந்தச் செய்தியை ஆதாரமாக்க் காட்டுகிறார்கள்.

ஆதாரமற்றது என்று தெளிவான ஆதாரத்துடன் கூறிய ஒன்று ஆதாரமாக நிற்குமா?

மேலும் அஹ்மத், இப்னுமாஜா, இப்னு அபீஷைபா ஆகிய நூல்களிலும் திர்மிதியின் அறிவிப்பாளர் வரிசையே இடம்பெற்றுள்ளது.

ஷபே பராஅத் தொடர்பாக விரிவான விளக்கம் பெற தீன்குலப்பெண்மணி ஆகஸ்டர் 2011 இதழை பார்வையிடுக.

 

சொற்பொழிவு குறிப்புகள்

பித்அத்கள் (நூதன பழக்கங்கள்)

தொகுப்பு : இப்னு மர்யம்

மார்க்கச் சட்டத்தின் உரிமையாளன் அல்லாஹ் ஒருவனே!

أَمْ لَهُمْ شُرَكَاءُ شَرَعُوا لَهُمْ مِنْ الدِّينِ مَا لَمْ يَأْذَنْ بِهِ اللَّهُ وَلَوْلَا كَلِمَةُ الْفَصْلِ لَقُضِيَ بَيْنَهُمْ وَإِنَّ الظَّالِمِينَ لَهُمْ عَذَابٌ أَلِيمٌ(21) سورة الشورى

அல்லாஹ் அனுமதியளிக்காததை மார்க்கமாக ஆக்கும் தெய்வங்கள் அவர்களுக்கு உள்ளனரா? தீர்ப்பு பற்றிய கட்டளை இல்லாதிருந்தால் அவர்களுக்கிடையே முடிவு செய்யப்பட்டிருக்கும். அநீதி இழைத்தோருக்குத் துன்புறுத்தும் வேதனை இருக்கிறது.

(அல்குர்ஆன் 42:21)

وَلَا تَقُولُوا لِمَا تَصِفُ أَلْسِنَتُكُمْ الْكَذِبَ هَذَا حَلَالٌ وَهَذَا حَرَامٌ لِتَفْتَرُوا عَلَى اللَّهِ الْكَذِبَ إِنَّ الَّذِينَ يَفْتَرُونَ عَلَى اللَّهِ الْكَذِبَ لَا يُفْلِحُونَ(116)سورة النحل

"இது அனுமதிக்கப்பட்டது; இது தடுக்கப்பட்டது' என்று உங்கள் நாவுகள் வர்ணிக்கும் பொய்யை அல்லாஹ்வின் மீது இட்டுக் கட்டிக் கூறாதீர்கள்! அல்லாஹ்வின் மீது பொய்யை இட்டுக் கட்டியோர் வெற்றி பெற மாட்டார்கள்.

(அல்குர்ஆன் 16:116)

مَا تَعْبُدُونَ مِنْ دُونِهِ إِلَّا أَسْمَاءً سَمَّيْتُمُوهَا أَنْتُمْ وَآبَاؤُكُمْ مَا أَنزَلَ اللَّهُ بِهَا مِنْ سُلْطَانٍ إِنْ الْحُكْمُ إِلَّا لِلَّهِ أَمَرَ أَلَّا تَعْبُدُوا إِلَّا إِيَّاهُ ذَلِكَ الدِّينُ الْقَيِّمُ وَلَكِنَّ أَكْثَرَ النَّاسِ لَا يَعْلَمُونَ(40) سورة يوسف

"அவனன்றி நீங்கள் வணங்குபவை வெறும் பெயர்களே. நீங்களும், உங்களின் முன்னோர்களும் அவற்றுக்குப் பெயரிட்டீர் கள்! இது குறித்து அல்லாஹ் எந்தச் சான்றையும் அருளவில்லை. அதிகாரம் அல்லாஹ்வைத் தவிர எவருக்கும் இல்லை. "அவனைத் தவிர எதையும் நீங்கள் வணங்கக் கூடாது' என்று அவன் கட்டளையிட்டுள்ளான். இதுவே நேரான மார்க்கம். எனினும் அதிகமான மனிதர்கள் விளங்குவதில்லை.''

(அல்குர்ஆன் 12:40)

பித்அத்கள் இறைவனுக்கே சட்டங்களை சொல்வதைப் போலாகும்

قُلْ أَتُعَلِّمُونَ اللَّهَ بِدِينِكُمْ وَاللَّهُ يَعْلَمُ مَا فِي السَّمَاوَاتِ وَمَا فِي الْأَرْضِ وَاللَّهُ بِكُلِّ شَيْءٍ عَلِيمٌ(16)سورة الحجرات

உங்கள் மார்க்கத்தை அல்லாஹ்வுக்குக் கற்றுக் கொடுக்கிறீர்களா? வானங்களிலும், பூமியிலும் உள்ளதை அல்லாஹ் அறிவான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளையும் அறிந்தவன் என்று கூறுவீராக!

(அல்குர்ஆன் 49:16)

மார்க்கச் சட்டங்கள் நபிகளார் காலத்துடன் முடிவடைந்துவிட்டது.

الْيَوْمَ أَكْمَلْتُ لَكُمْ دِينَكُمْ وَأَتْمَمْتُ عَلَيْكُمْ نِعْمَتِي وَرَضِيتُ لَكُمْ الْإِسْلَامَ دِينًا (3) سورة المائدة

உங்கள் மார்க்கத்தை (அழித்து விடலாம் என்பது) பற்றி இன்று நம்பிக்கை இழந்து விட்டனர். எனவே அவர்களுக்கு அஞ்சாதீர்கள்! எனக்கே அஞ்சுங்கள்! இன்று உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக நிறைவு செய்து விட்டேன். எனது அருளை உங்களுக்கு முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாத்தை உங்களுக்கான வாழ்க்கை நெறியாக பொருந்திக் கொண்டேன். 

(அல்குர்ஆன் 5:3)

தாரிக் பின் ஷிஹாப் (ரலிலி) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் ஒருவர் (கலீஃபா) உமர் பின் அல்கத்தாப் (ரலி) அவர்களிடம் "இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! (அமீருல் மூமினீன்!) நீங்கள் ஓதிக் கொண்டிருக்கும் உங்கள் வேதத்திலுள்ள ஒரு வசனம் யூதர்களாகிய எங்கள் மீது அருளப் பெற்றிருக்குமானால், அந்நாளை நாங்கள் ஒரு பண்டிகை நாளாக்கிக் கொண்டிருப்போம்'' என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "அது எந்த வசனம்?'' எனக் கேட்டார்கள். அதற்கு அந்த யூதர், "இன்றைய தினம் உங்களின் மார்க்கத்தை உங்களுக்கு நிறைவு படுத்திவிட்டேன். உங்கள் மீது எனது அருள்கொடையை முழுமைப்படுத்தி விட்டேன். இஸ்லாமையே உங்களுக்கான மார்க்கமாகத் திருப்தி(யுடன் அங்கீகரித்துக்)கொண்டேன்'' (5:3) (என்பதே அந்த வசனமாகும்)'' என்றார். அதற்கு உமர் (ரலி) அவர்கள் "இந்த வசனம் எந்த நாளில் எந்த இடத்தில் நபி (ஸல்) அவர்களுக்கு அருளப்பெற்றது என்பதை நாங்கள் அறிந்துள்ளோம். ஒரு வெள்ளிக் கிழமை தினத்தில் அரஃபாப் பெருவெளியில் நபி (ஸல்) அவர்கள் நின்றுகொண்டிருக்கும் போதுதான் (இவ்வசனம் அருளப்பெற்றது;  அந்த நாளே பண்டிகை நாள்தான்)'' என்றார்கள்.

நூல் :புகாரி (45)

மார்க்கச் சட்டங்கள் எதையும் நபிகளார் மறைக்கவில்லை

يَاأَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ وَإِنْ لَمْ تَفْعَلْ فَمَا بَلَّغْتَ رِسَالَتَهُ وَاللَّهُ يَعْصِمُكَ مِنْ النَّاسِ إِنَّ اللَّهَ لَا يَهْدِي الْقَوْمَ الْكَافِرِينَ(67) سورة المائدة

தூதரே! உமது இறைவனிடமிருந்து உமக்கு அருளப்பட்டதை எடுத்துச் சொல்வீராக! (இதைச்) செய்யவில்லையானால் அவனது தூதை நீர் எடுத்துச் சொன்னவராகமாட்டீர்! அல்லாஹ் உம்மை மனிதர்களிடமிருந்து காப்பாற்றுவான்.145 (தன்னை) மறுக்கும் கூட்டத்திற்கு அல்லாஹ் வழி காட்ட மாட்டான்.

(அல்குர்ஆன் 5:67)

4612 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ مَنْ حَدَّثَكَ أَنَّ مُحَمَّدًا صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَتَمَ شَيْئًا مِمَّا أَنْزَلَ اللَّهُ عَلَيْهِ فَقَدْ كَذَبَ وَاللَّهُ يَقُولُ يَا أَيُّهَا الرَّسُولُ بَلِّغْ مَا أُنْزِلَ إِلَيْكَ مِنْ رَبِّكَ الْآيَةَ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹம்மத் (ஸல்) அவர்கள், தம் மீது அருளப்பெற்ற(வேதத்)தி-ருந்து எதையும் மறைத்தார்கள் என்று உங்கüடம் யாரும் சொன்னால் அவர் பொய் சொல்-விட்டார். அல்லாஹ்வோ "(எம்) தூதரே! உங்கள் இறை வனிடமிருந்து உங்களுக்கு அருளப்பெற்ற (வேதத்)தை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்!'' என்று கூறுகிறான்.

நூல் : புகாரி (4612)

மார்க்கத்தில் புதியவை நிராகரிக்கப்படும்

3243 قَالَ أَخْبَرَتْنِي عَائِشَةُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ عَمِلَ عَمَلًا لَيْسَ عَلَيْهِ أَمْرُنَا فَهُوَ رَدٌّ رواه مسلم

"அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "நம்முடைய மார்க்கத்தில் இல்லாத ஒரு செயலை யார் புதிதாகச் செய்கிறாரோ அது (இறைவனிடம்) நிராகரிக்கப்பட்டதாகும்' என்று கூறினார்கள் என ஆயிஷா (ரலிலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்''

நூல் : முஸ்லிம் (3541)

2697 عَنْ عَائِشَةَ رَضِيَ اللَّهُ عَنْهَا قَالَتْ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ مَنْ أَحْدَثَ فِي أَمْرِنَا هَذَا مَا لَيْسَ فِيهِ فَهُوَ رَدٌّ رواه البخاري ومسلم

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நம்முடைய இந்த (மார்க்க) விவகாரத்தில் அதில் இல்லாததைப் புதிதாக எவன் உண்டாக்குகின்றானோ  அவனுடைய அந்தப் புதுமை  நிராகரிக்கப் பட்டதாகும்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல்கள் : புகாரி (2697), முஸ்லிம் (3540)

2155 قَالَتْ عَائِشَةُ رَضِيَ اللَّهُ عَنْهَا ...قَالَ مَا بَالُ أُنَاسٍ يَشْتَرِطُونَ شُرُوطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ مَنْ اشْتَرَطَ شَرْطًا لَيْسَ فِي كِتَابِ اللَّهِ فَهُوَ بَاطِلٌ وَإِنْ اشْتَرَطَ مِائَةَ شَرْطٍ شَرْطُ اللَّهِ أَحَقُّ وَأَوْثَقُ  رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனைகளைக் கூறுபவர்களுக்கு என்ன நேர்ந்தது? யார் அல்லாஹ்வின் வேதத்தில் இல்லாத நிபந்தனையை விதிக்கிறார்களோ அவர்களுடைய அந்த நிபந்தனை வீணானது; (செல்லாதது;) அவர்கள் நூறு நிபந்தனைகளை விதித்தாலும் சரியே!  அல்லாஹ்வின் நிபந்தனைதான் நிறைவேற்றத் தக்கதும், உறுதியானதும் (கட்டுப்படுத்தும் வலிமையுடையதும்) ஆகும்! என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

நூல் :புகாரி (2155)

பித்அத்கள் வழிகேடாகும்

1435 عَنْ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ قَالَ كَانَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا خَطَبَ احْمَرَّتْ عَيْنَاهُ وَعَلَا صَوْتُهُ وَاشْتَدَّ غَضَبُهُ حَتَّى كَأَنَّهُ مُنْذِرُ جَيْشٍ يَقُولُ صَبَّحَكُمْ وَمَسَّاكُمْ وَيَقُولُ بُعِثْتُ أَنَا وَالسَّاعَةُ كَهَاتَيْنِ وَيَقْرُنُ بَيْنَ إِصْبَعَيْهِ السَّبَّابَةِ وَالْوُسْطَى وَيَقُولُ أَمَّا بَعْدُ فَإِنَّ خَيْرَ الْحَدِيثِ كِتَابُ اللَّهِ وَخَيْرُ الْهُدَى هُدَى مُحَمَّدٍ وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ رواه مسلم

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்  (ஏதேனும் முக்கிய விஷயம் குறித்து எச்சரிக்கை செய்து) உரை நிகழ்த்தும்போது, அவர்களின் கண்கள் சிவந்துவிடும்; குரல் உயர்ந்துவிடும்; கோபம் மிகுந்து விடும். எந்த அளவிற்கென்றால், எதிரிப் படையினர் தாக்குதல் தொடுக்கப்போவது குறித்து "எதிரிகள் காலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப்போகின்றனர்; மாலையில் உங்கள்மீது தாக்குதல் தொடுக்கப் போகின்றனர்' என்று கூறி அவர்கள் எச்சரிக்கை விடுப்பவரைப் போன்றிருப்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "நானும் மறுமை நாளும் இதோ இவ்விரு விரல்களைப் போன்று (நெருக்கமாக) அனுப்பப் பெற்றுள்ளோம்'' என்று கூறியவாறு தம்முடைய சுட்டு விரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டுவார்கள். மேலும், "அம்மா பஅத் (இறைவாழ்த்துக்குப் பின்!) உரைகளில் சிறந்தது அல்லாஹ்வின் வேதம் (குர்ஆன்) ஆகும். வழிகாட்டலில் சிறந்தது முஹம்மதின் வழிகாட்டலாகும். செயல்களில் தீயவை (மார்க்கத்தின் பெயரால்) புதிதாக உண்டாக்கப்படுபவை ஆகும். (மார்க்கத்தின் பெயரால் புதிதாக உருவாக்கப்படும்) ஒவ்வொரு புதுமையும் வழிகேடு ஆகும்'' என்று கூறுவார்கள்.

நூல் : முஸ்லிம் (1573)

1560... وَشَرُّ الْأُمُورِ مُحْدَثَاتُهَا وَكُلُّ مُحْدَثَةٍ بِدْعَةٌ وَكُلُّ بِدْعَةٍ ضَلَالَةٌ وَكُلُّ ضَلَالَةٍ فِي النَّارِ رواه النسائي

ஒவ்வொரு புதமையான வழக்கங்களும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு சேர்க்கும் என்று கூறியதாக நஸாயீ (1560)ல் கூடுதலாக இடம்பெற்றுள்ளது.

 

 

June 2, 2014, 8:36 PM

தீன்குலப் பெண்மணி டிசம்பர்

தலையங்கம்
 
தொடரும் திரைப்பட காவிச் சிந்தனை

இஸ்லாத்தை அழிப்பதற்கு ஒவ்வொரு காலகட்டத்திலும் பெரும் முயற்சிகள் எடுக்கப்பட்டு அனைத்தும் தோல்வியில் முடிந்தன. நவீன வளர்ச்சியின் உச்சத்தில் இருக்கும் இக்கால கட்டத்திலும் முஸ்-லிம்களை தீவிரவாதிகளாக காட்டி இஸ்லாத்தையும் அதைப் பின்பற்றி நடப்பவர்களையும் தனிமைப்படுத்த திரை உலகினர் குறிப்பாக தமிழகத்தை சார்ந்த திரைக்கூத்தாடிகள் பெரும் முயற்சி செய்து வருகின்றனர். முஸ்லி-ம்களை தீவிரவாதிகளாகவும், சமூகவிரோதிகளாகவும், தேசத்துரோகிகளாகவும் காட்டும் வகையில் பல படங்களை உருவாக்கி முஸ்-லிம்களை அழிக்கும் முயற்சிகள் தொடர்ந்து வருகின்றனர்.

ரோஜா, பம்பாய் போன்ற திரைப்படங்களில் முஸ்-லிம்களை தீவிரவாதிகளாக காட்டுவதும் திருக்குர்ஆனை கையில் வைத்து அப்பாவி மக்களை சுடுவது போன்ற காட்சிகளை எடுப்பதும், தீவிரவாதிகளை காட்டும்போது பள்ளிவாசல்களை காட்டுவதும் வாடிக்கையாக்கி விட்டனர் தமிழக திரைஉலகினர்.

முஸ்லி-ம்கள் என்றால் அப்பாவிகளை கொல்பவர்கள் என்ற கருத்தை சாதாரண மக்கள் மத்தியில் பதிய வைத்து இந்நாட்டின் மைந்தர்களை அந்நியப்படுத்த திட்டுமிட்டு செயல்பட்டு வருகின்றனர்.

தற்போது வெளிவந்துள்ள துப்பாக்கி திரைப்படத்தில் முழுக்க முழுக்க முஸ்லி-ம்களை தீவிரவாதிகளாக சித்திரிக்கும் காட்சிகள் நிறைந்து காணப்படுவதாகவும் மிகவும் மோசமான கருத்தை மக்கள் மனதில் பதிய வைக்கும் வேலையை செய்துள்ளதாகவும் படத்தை பார்த்தவர்கள் கூறுகிறார்கள்.

முஸ்-லிம்களின் எதிர்ப்பை அடுத்து நான்கு இடங்களில் வரும் காட்சிகள் நீக்கப்படும் என்று பட இயக்குநர் தெரிவித்திருந்தாலும் நீக்கிய பிறகுள்ள காட்சிகளும் முஸ்-லிம்களை சமூகவிரோதிகளாகவும் தேசத் துரோகிகளாகவும் காட்டும் வகையிலேயே இருப்பதாக படத்தை பார்த்தவர்கள் தெரிவிக்கின்றனர்.
முழு படத்தை வெட்டும் அளவுக்கு முஸ்-லிம்களுக்கு எதிரான காட்சிகள் அதில் நிறைந்து காணப்படுகின்றன. முஸ்லி-ம்களுக்கு எதிரான இந்த திரைப்படத்திற்கு ஆதரவாகவும் சில பசுத்தோல் போர்த்திய புலி-கள் பேசிவருகின்றனர். கருத்து சுதந்திரத்தை பறிப்பதாகவும். நாட்டில் நடப்பதைத்தான் அப்படத்தில் எடுத்துள்ளதாகவும் இப்படத்திற்கு வக்காலத்து வாங்குகின்றனர். ஆனால் நாட்டு நடப்பு இவர்கள் கூறுவது போல் இல்லை. முஸ்லி-ம்களில் சிலர் குண்டுவைத்தல் போன்ற காரியங்களில் இறங்கினாலும் அதைவிட அதிகமாக சங்கபரிவாரத்தினர் தான் அதிகமான குண்டு வெடிப்பை நிழ்த்தி படுகொலை செய்துள்ளனர்.

காந்தியைக் கொன்றதில் துவங்கி மாலேகான் குண்டு வெடிப்பு வரை இவர்கள் நிகழ்த்திய பயங்கரவாதம் கணக்கில் அடங்காது. இவர்களைப் பற்றி படம் எடுப்பதுதான் நடப்பதை படமாக்குவதாக ஆகும். பாபர் மஸ்ஜித் இடிப்பு, பல்லாயிரம் முஸ்லி-ம்கள் கொன்று குவிப்பு என சங்பரிவாரத்தினரை பற்றி படம் எடுப்பார்களா?

நாட்டில் நடப்பதை மக்களிடம் எடுத்துரைக்கும் சேவையை(?) திரையுலகினர்
செய்கின்றனர் என்றால் அமெரிக்காவிற்கு எதிராக திரைப்படம் எடுப்பார்களா? ஆப்கான், ஈராக் என்று எத்தனையோ இஸ்லாமிய நாடுகளில் குண்டுவைத்து பல்லாயிரக்கணக்கான முஸ்-லிம்களை கொன்று குவித்த அமெரிக்காவின் உண்மை நிலையை எடுத்துரைக்கும் திரைப்படத்தை தமிழ திரைப்படத்தினர் எத்துள்ளனரா?

அமெரிக்காவின் கள்ளப்பிள்ளை இஸ்ரோல் இன்று வரையும் பலாஸ்தீன பகுதி மக்களை குண்டுவீசி கொன்று குவிக்கும் அநியாயத்தை படம் எடுத்தார்களா?
குஜ்ராத்தில் ஆயிரக்கணக்கான முஸ்லி-ம்களை கொன்று குவித்த கலவரத்தைப் பற்றி படம் எடுத்தார்களா? எடுக்கமாட்டார்கள். ஏனென்றால் அதில் உயிர், உடமைகளை இழந்தவர்கள் முஸ்-லிம்கள்.

முஸ்-லிம்களின் உண்மையான பண்பாடுகள், பழக்கவழக்கங்கள், ஈகை குணங்கள் இவற்றை யாரும் படம் எடுப்பதில்லை. மாறாக முஸ்-லிம்கள் என்றால் தீவிரவாதிகள் என்பதை மட்டுமே கருவாக கொண்டே குழந்தைகளை பெற்றெடுக்கிறார்கள்.
இந் நிலை தொடருமானால் . . . முஸ்-லிம்களின் பொறுமைக்கும் எல்லை உண்டு. . . என்பதை திரைப்படத்துறையினர் மனதில் கொள்ளட்டும்.
 

ஈமானின் கிளைகள் தொடர் : 2
மனம் தொடர்பான ஏழு விஷயங்கள்

இந்தத் தலைப்பில் நேரடியாகவே ஈமானுடன் தொடர்புடைய விசயங்கள் மொத்தம் ஏழு ஆகும். இந்த ஏழு விசயங்களாவன:

"ஆமன்த்து பில்லாஹி, வமலாயிகத்திஹி, வகுத்துபிஹி வருஸுலிஹி, வல்யவ்மில் ஆகிரி, வல்கத்ரி கைரிஹி வஷர்ரிஹி மினல்லாஹி தஆலா, வல்பஃதி பஃதல் மவ்த்'' - அல்லாஹ்வையும், அவனது மலக்குகளையும், அவனது வேதங்களையும், அவனது தூதர்களையும் நான் நம்புகிறேன். மேலும் மறுமை நாள் உண்டு என்றும் நம்புகிறேன். நன்மைகளும் தீமைகளும் இறைவனின் நாட்டப்படியே நடக்கின்றன என்றும் மரணத்திற்குப் பின்னால் அல்லாஹ் அனைவரையும் எழுப்புவான் என்பதையும் நம்புகிறேன்

இதை சிறுவர் பாடசாலைகளிலேயே நமக்குக் கற்றுத் தந்துவிடுகிறார்கள்.
இதிலுள்ள ஏழு என்பதை சிலர் ஆறு என்றும் சொல்வார்கள். ஆறு என்று ஹதீஸி-ம் கூறப்பட்டுள்ளது. மறுமையை நம்புவதற்குள்ளேயே மரணத்திற்குப் பின்னால் எழுப்புவதையும் சேர்த்து ஆறு நம்பிக்கையாகக் கணக்கிடுவார்கள். அதில் ஒன்றும் குழப்பமில்லை.

இந்த ஆறு விசயங்களையோ அல்லது ஏழு விசயங்களையோ தவிர மற்றவைகள் அனைத்துமே ஈமானுடன் நேரடியாக சம்பந்தப்பட்டவை அல்ல. அவைகள் அனைத்துமே ஈமானின் மற்ற கிளைகளாகும்.

அவை வெளிப்படையான செயல்பாடுகளாக இருக்கும்.

இந்த ஏழு விசயங்களை நம்புவது மனம் சம்பந்தப்பட்டது.

அல்லாஹ்வை நம்புவதும், மலக்குமார்களை நம்புவதும், வேதங்களை நம்புவதும், தூதர்களை நம்புவதும் மனது சம்பந்தப்பட்டவையாகும். ஆயினும் இந்த நம்பிக்கையின் காரணமாக மனிதனிடம் வெளிப்படும் செயல்களும் ஈமானின் கிளையாக சொல்லப்பட்டுள்ளது. அதாவது எதை நாம் இஸ்லாம் என்று சொல்கிறோமோ அவையும் ஈமானின் கிளைகளாக ஆகிவிடுகிறது. தெருவில் கிடக்கும் முள்ளையும் கல்லையும் அப்புறப்படுத்துவது செயல் சம்பந்தப்பட்டதாகும். இதையும் ஈமானின் கிளை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளனர். இப்படி இஸ்லாம் என்பதுவும் ஈமானின் கிளைதான். ஒருவனிடம் ஈமான் சரியாக இருந்தாலேயே இஸ்லாம் வந்துவிடும்.

ஹஜ், ஜகாத், நோன்பு, தொழுகை என்பது பெரிய கிளைகளாக இருக்கும். ஈமான் என்பது ஆணிவேர் என்றும் அந்த வேருக்கான மரத்தில் உள்ளதுதான் இஸ்லாம். அதில் பெரிய கிளைகளும் சிறிய கிளைகளும் இடம்பெற்றிருக்கும்.

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சொன்ன விளக்கங்களின் அடிப்படையில் பார்க்கிற போது, ஈமான் என்பதுதான் முதலில் முக்கியம் பெறுகிறது. பிறகு இஸ்லாமும் அடுத்த இடத்தில் முக்கியம் பெறத்தான் செய்கிறது.

இந்த ஈமானின் 70 கிளைகளில் முதலாவது முக்கியமான நம்பிக்கைக்குரிய ஏழு அல்லது ஆறு விசயங்களை எடுத்துக் கொள்வோம். ஏனெனில் மிக முக்கியமான ஏழு நம்பிக்கைதான் ஆணிவேராகவும் அடிமரத்து வேராகவும் இருக்கிறது. அது சரியாக இருந்தால் நம்மிடம் என்னவெல்லாம் நடக்கும் என்று நபிகள் நாயகம் சொன்னார்களோ அவற்றையெல்லாம் நமது வாழ்க்கையில் நாம் கொண்டுவந்துவிடுவோம்.

மேலும் இந்தத் தொடரில் அல்லாஹ்வை நம்புவது சம்பந்தமாக ஒன்றும் இடம்பெறாது. ஏனெனில் கடந்த ரமலான் மாதம் முழுவதும் "ஏகத்துவமும் எதிர்வாதமும்'' என்ற தலைப்பில் அல்லாஹ்வைப் பற்றி முழுமையாக விளக்கியிருப்பதினால் இப்போது "ஈமானின் கிளைகள்'' என்ற இந்தத் தலைப்பில் அல்லாஹ்வை நம்புவதை மட்டும் விட்டுவிட்டு அடுத்த நம்பிக்கையிலிருந்து ஆரம்பிப்போம்.

திரும்பவும் அல்லாஹ்வை எப்படி நம்புவது என்று இந்தத் தொடரில் பேசினால் மீண்டும் இந்த ரமலான் ஒருமாதமும் சென்றுவிடும் என்பதினால், அல்லாஹ்வை சரியாக நம்பவேண்டிய விதத்தில் நம்பிக் கொள்ளவேண்டும். அதுதான் சிறந்த கிளை. முதல் கிளை. எல்லாவற்றுக்கும் அடிப்படையான கிளை என்பதை மட்டும் சுருக்கமாக புரிந்து கொள்வோம்.

"ஈமானின் கிளைகள்'' என்ற இந்தத் தலைப்பை ஏன் தேர்வு செய்தோம் எனில், மலக்குமார்களை நம்புகிறோம் என்ற பெயரில் இல்லாத பொல்லாத கட்டுக் கதைகளையும் கற்பனைகளையும் ஆதாரமில்லாதவைகளையும் நம்பியிருக்கிறார்கள் இன்றைய முஸ்-லிம்கள். எனவே அதையெல்லாம் களையெடுப்பதற்கான ஒரு முயற்சியாகத்தான் இந்தத் தலைப்பினைத் தேர்வு செய்தோம்.

மக்கள் தவறாக நம்பியிருக்கிறார்கள் என்று உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், எல்லோருடைய உயிரையும் கைப்பற்றுவது இஸ்ராயீல் என்ற வானவர்தான் என்று பெருவாரியான முஸ்லி-ம்கள் பரவலாக நம்புகின்றனர்.
ஆனால் இஸ்ராயீல் என்ற வானவர் பற்றி குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை. மார்க்கம் அறியாதவர்கள் உண்டாக்கிய கற்பனைதான் இஸ்ராயீல் என்பது. இஸ்ராயீல் என்ற வார்த்தை அரபி வார்த்தை கூட இல்லை. இஸ்ராயீல் என்ற வார்த்தை யஃகூப் நபியின் இன்னொரு பெயராகும். அதுதான் இருக்கிறதே தவிர மற்றபடி இஸ்ராயீல் என்ற வானவர் எவரும் இல்லை. எனவே இதுபோன்று மலக்குமார்களின் பெயர் பட்டியல் என்னென்ன? மலக்குமார்களின் பணிகள் என்னென்ன? மலக்குமார்களுக்கு கடவுள் தன்மை இருக்கிறதா? என்பன போன்ற பல்வேறு அம்சங்களைப் பார்க்க இருக்கிறோம்.
இதில் நாம் தெரிந்து கொள்ள வேண்டிய மிக முக்கியமான அடிப்படை, மலக்குமார்களைப் பற்றி அல்லாஹ்வும் ரசூலும் சொன்னதைப் போன்று நம்பியிருக்கிறோமா? என்பதுதான்.

அதேபோன்று நபிமார்களை அல்லாஹ் சொன்னது போல் நம்பாமல் இருப்பதினால்தான் கண்டவனெல்லாம் ஆள்ஆளுக்கு ரசூல் என்றும் நபி என்றும் கிளம்பிவிட்டார்கள். ரசூல் என்றால் என்ன? எத்தனைபேர் நபிமார்கள்? அவர்களது பணிகள் என்ன? முஹம்மது நபிகள் நாயகம் ஏன் கடைசி தூதராக இருக்கிறார்கள்? அவர்களுக்குப் பின்னால் இன்னொரு தூதர் வரமுடியாதா? வருவதற்கு வாய்ப்பாவது இருக்கிறதா?
வரக்கூடாது என்றால் அதற்குரிய சான்றுகள் ஆதாரங்கள் என்னென்ன? ஆகிய இதுபோன்றவைகளையெல்லாம் நாம் அறிந்து கொள்ள இருக்கிறோம்.

அதுபோன்று, வேதங்களை நம்புவது சம்பந்தமாகவும் நமக்குத் தெளிவான ஞானம் இருக்க வேண்டும். வேதங்கள் என்றாலேயே நான்கு மட்டும் என்பதைப் போன்று மக்தப் பாடசாலைகளில் - சிறுவர் சிறுமியர் பாடசாலைகளில் பாடம் நடத்துவார்கள் ஆ-லிம் பெருமக்கள். இது சரியானது தானா? என்பதை ஆராய்ந்து நம்ப வேண்டும்.

இந்தத் தவறான நம்பிக்கையின் மூலம் ஆதம் நபியி-லிருந்து அனுப்பப் பட்ட எத்தனையோ நபிமார்களுக்கு வேதம் கொடுக்கப்படவில்லை என்கிற கருத்தாக்கம் உள்ளது. இது முற்றிலும் குர்ஆனுக்கும் நபிவழிக்கும் மாற்றமான எதிரான கொள்கையாகும். எனவே வேதங்கள் நான்கு மட்டும்தான் என்பது எப்படி தவறானது? என்பதையும், அது தவறென ஆகிவிடுமானால் வேதங்கள் குறித்து எப்படி நம்பவேண்டும்? என்பதையும் குர்ஆனி-லிருந்தும் நபிகளாரின் வழிகாட்டுத-லில் இருந்தும் அடுக்கடுக்கான சான்றுகளின் மூலம் நம்ப வேண்டும்.

அதன் பிறகு விதியைப் பற்றியும் மறுமை நாளைப் பற்றியும் குர்ஆனிலி-ருந்தும் நபிவழியி-லிருந்தும் தெளிவான ஆதாரங்களுடன் நம்பவேண்டும். அதுபோன்று மரணத்திற்குப் பின்னால் மனிதனின் நிலை குறித்து தெளிவான அறிவு நமக்கு வேண்டும்.

நம்மிடம் மரணத்திற்குப் பின்னால் என்னவெல்லாம் நடக்கும் என்பதைப் பற்றி தெளிவான ஆதாரங்களுடன்கூடிய நம்பிக்கையில்லை என்பதினால்
தான், ஸிராத்துல் முஸ்தகீம் என்ற பாலம் மயிரை விட மெல்-லியது, வாளை விட கூர்மையானது என்று கற்பனைக்குள் வந்ததையெல்லாம் எழுதி
வைத்துள்ளார்கள். அதையும் ஆதாரமில்லாமல் நம்பிக் கொண்டு தங்களை முஸ்லி-ம் என்று சொல்-லிக் கொள்கிறார்கள். முத-லில் ஸிராத்துல் முஸ்தகீம் என்று ஒரு பாலம் இருக்கிறதா? குர்ஆனில் அந்தப் பாலத்தைக் குறித்து ஏதாவது ஒரு வார்த்தையாவது காட்டமுடியுமா? சூரத்துல் ஃபாத்திஹாவில் இஹ்தினஸ் ஸிராத்தல் முஸ்தகீம் என்று வேண்டுமானால் வருகிறது. அதற்குப் பொருள், இறைவா! எங்களுக்கு நேரான பாதையைக் காட்டுவாயாக என்பதாகும். ஸிராத் என்றால் பாதை, முஸ்தகீம் என்றால் நேரானது என்று அர்த்தம். இஸ்லாம்தான் ஸிராத்துல் முஸ்தகீம் என்று சொல்லப்படுகிறதே தவிர, பாலம் கட்டி வைத்திருப்பதாக குர்ஆனில் எங்கேயுமில்லை. நபிகள் நாயகமும் அப்படி சொல்லவில்லை. பலவீனமான சில ஹதீஸ்கள் உள்ளன. அதைப் பின்னர் விளக்குவோம்.

இதுபோன்ற தவறான நம்பிக்கைகள் நம்மிடம் இருப்பதைக் களையெடுப்பதற்காகத்தான் இந்தத் தலைப்பைத் தேர்வு செய்து ஒரு மாதம் முழுவதும் படிக்க இருக்கிறோம்.

அல்லாஹ்வை நம்புதல், மலக்குமார்களை நம்புதல், வேதங்களை நம்புதல், நபிமார்களை நம்புதல், மரணத்திற்குப் பின்னால் உள்ள நிலையை நம்புதல், மறுமையை நம்புதல், விதியை நம்புதல் ஆகியவை மிக முக்கியம்.

அதன் பிறகு உள்ள மற்ற கிளைகளில் விருந்தினரை உபசரிப்பது, கடன்காரர்களுக்கு கடனை தள்ளுபடி செய்வது, மற்ற மக்களுக்கு உதவி செய்வது என்று மனிதர்கள் சந்திக்கிற பல பிரச்சினைகளுக்கான தீர்வுகள் அதில் இருக்கிறது.

முதலி-ல் எதைச் செய்வதாக இருந்தாலும் அஸ்திவாரம் சரியாக இருக்க வேண்டும். ஒரு கட்டடத்தைக் கட்டவேண்டுமெனில், முதலி-ல் பூமியில் பள்ளம் தோண்ட வேண்டும். பிறகு அடிமட்டத்தில் பலமான கற்களையும் ஜல்-லிகளையும் சாந்தையும் சேர்த்து தோண்டிய அளவுக்குப் போட்டு நிரப்பிவிட்டு அடிமட்டத்தைப் பலமாக்கிக் கொண்ட பிறகுதான் அதன் மேல் நமக்குத் தேவைப்படுகிற கட்டடத்தை எழுப்ப வேண்டும்.

அப்படி எழுப்புகிற கட்டடம் மிகவும் பயனுள்ளதாகவும் பலமானதாகவும் எதையும் தாங்குகிற கட்டடமாகவும் இருக்கும்.

அதுபோன்று நம்பிக்கை என்பது கட்டடத்தின் அஸ்திவாரம் போன்றது. எனவே இஸ்லாத்தின் அடிப்படை நம்பிக்கையாக இருப்பவைகளை சரியாக ஆக்கிக் கொண்டு அதன் மேல் மற்றவைகளை அமைத்துக் கொண்டால் அதில் உறுதி கிடைக்கும். அஸ்திவாரம் சரியில்லாமல் மேலோட்டமாக பூசினால் பார்ப்பதற்கு நன்றாக இருக்கும். ஆனால் ஒரு காற்றடித்தாலோ மழை பெய்தாலோ கட்டடம் இடிந்து சின்னா பின்னமாகிவிடும்.

எனவே முத-லில் அஸ்திவாரத்தை உறுதி செய்துகொண்ட பிறகு மற்ற கிளைகளையும் பார்ப்போம்.
வளரும் இன்ஷா அல்லாஹ்


லஹப் அத்தியாயத்தின் விரிவுரை தொடர் 2
விறகு சுமப்பவள் என்பதின் கருத்து என்ன?


ஹம்மா லதல் ஹதபும் கடைந்தெடுத்த பொய் கதைகளும்

அல்லாஹ் இந்த அத்தியாயத்தில் ஹம்மா லதல் ஹதப் - விறகு சுமக்கிற அவனது மனைவியும் நரகில் கருகுவாள் என்று சொல்லுகிற இந்த வசனத்திற்கு ஒரு கதையை அடித்துவிட்டார்கள்.

அபூலஹபின் மனைவி விறகு வெட்டி சம்பாதித்ததாகவும், அப்படி ஒருநாள் விறகுக் கட்டை கயிற்றினால் கட்டிக் கொண்டு வரும்போது, விறகுக் கட்டு சாய்ந்து அதிலுள்ள கயிறு அவளது கழுத்தில் சுற்றி அவள் கழுத்து நெறிந்து முறிந்து செத்துவிட்டாள் என்று கதையளந்து விட்டுள்ளார்கள்.

இந்தக் கதை பொய் என்பதற்கு இந்த அத்தியாயத்தின் மேலுள்ள வசனத் தையே தகுந்த ஆதாரமாகக் கொள்ளலாம். அபூலஹப் பெரிய பணக்காரன் என்பதை அதாவது காசுபணமுள்ளவன், பசையுள்ளவன் என்ற சொல் மூலம் அல்லாஹ் சுட்டிக் காட்டி விட்டான். பணக்காரனுக்கு மனைவியாக இருப்பவள் எதற்காக விறகு சுமக்க வேண்டும்? இது பொய்யானது என்பதை மேலுள்ள வசனமே நமக்குக் காட்டிக் கொடுக்கிறது.

விறகு சுமப்பவள் என்பதற்கு நேரடியாக விறகு சுமப்பது என்று இருந்தாலும், இலக்கியமாக அல்லாஹ் இந்த வசனத்தில் பயன்படுத்துகிறான்.

விறகு சுமப்பவளுக்குப் பொருள், கோள் மூட்டுகிறவள் என்று அர்த்தம். அதாவது கோள் மூட்டுகிறவன், பிறரை உசுப்பிவிடுகிறவன், சிண்டு முடிந்துவிடுகிறவன் போன்றவர்களைக் குறிப்பதற்கு அரபியில் இலக்கியமாகப் பயன்படுத்துவார்கள். விறகு சுமப்பது என்றால், இலேசாக தீ பற்றி எரிகிற இடத்தில் விறகைக் கொண்டுபோய் போட்டால் இன்னும் தீ நன்றாக எரியும். ஏற்கனவே எறிந்து கொண்டிருக்கிற தீயில் விறகையோ பெட்ரோலையோ மண்ணெண்ணையோ கொண்டு ஊற்றினால் அது மென்மேலும் சுடர் விட்டு எரியும். இப்படி எரிகிற தீயில் எண்ணையை ஊற்றுவதைப் போல் என்றெல்லாம் நாம்கூட பழமொழி சொல்லுகிறோமே அதைப் போன்றுதான் கோள் மூட்டுவதை அரபியில் ஹம்மா லதல் ஹதப் என்று சொல்லுவார்கள்.

அதாவது முஹம்மத் நபியவர்களின் பிரச்சாரத்தைத் தடுப்பதற்காக முஹம்மது நபிக்கு எதிராக ஆட்களைச் சூடேற்றிவிடுவதற்காக ஆட்களை உசுப்பிவிடுவதற்காக வீடுவீடாகச் சென்று, இந்த முஹம்மத் எனது மகன்தான். இவனது போக்கு சரியில்லை எனவே இவனது பேச்சைக் கேட்காதீர்கள், அவனுக்குப் பின்னால் போகாதீர்கள் என்று மக்களை முஹம்மது நபிக்கு எதிராகத் தூண்டிவிடுவதைத்தான் அல்லாஹ் "ஹம்மா லதல் ஹதப்" என்று இலக்கியமாகச் சொல்லுகிறான்.

இன்னும் சொல்லப் போனால் நமது பேச்சுக்கும் அல்லாஹ்வின் பேச்சுக்கும் நிறைய வித்தியாசம் இருக்கிறது. அல்லாஹ் எதை அனுமதித்து இருக்கிறானோ
அதை அவனே விமர்சித்து தவறாக சித்தரித்துப் பேசமாட்டான். எனவே
பழித்து ஒரு வாசகத்தைப் பயன்படுத்துவதாக இருந்தால் அது பழிப்புக்குரிய செயலாக இருக்கவேண்டும் என்பதையும் பலர் சிந்திக்கத் தவறிவிடுகின்றனர்.

மனிதன் கூட இப்படிப் பேசாத போது இறைவனது வார்த்தையை தப்பும் தவறுமாகப் புரிந்துவிடக்கூடாது. இது இறைவனது பேச்சிக்குரிய தன்மையாகும்.
விறகு சுமப்பது பாவமான காரியமா? விறகு சுமந்து ஒருவன் சம்பாதித்தால் அவனைக் கேவலப்படுத்துவது சரியா? அவனது உழைப்பை உதாசீனப்
படுத்துவது நியாயமா? முத-லில் இப்படியெல்லாம் கேவலப்படுத்தி இஸ்லாம் சொல்லுமா? மனிதன் வேண்டுமானால் அறியாமையின் காரணமாகவும் பெருமைக்காவும் பகட்டுக்காகவும் பந்தாவிற்காகவும் இப்படி சொல்லலாம். ஆனால் அல்லாஹ்வோ ரசூலோ அப்படி எந்த உழைப்பையும் உதாசீனப்
படுத்த மாட்டார்கள்.

ஏனெனில் விறகு சுமப்பது என்று தவறாக விளங்கினால் விறகு சுமப்பது தவறான செயலைப் போன்று பதிவாகிவிடும். எனவே குர்ஆனுக்கு விரிவுரை எழுதியவர்கள் மார்க்கத்தில் சொல்லப்படுகிற பல்வேறு செய்திகளை மறந்துவிட்டு அல்லது மறுத்துவிட்டு விரிவிரை எழுதக்கூடாது. கட்டுக் கதைகளையும் கப்ஸாக்களையும் குர்ஆனுக்கு விரிவுரை என்ற பெயரில் ஆதாரமில்லாமலும் சொந்த யூகத்திலும் அடித்துவிடக்கூடாது.

உதாரணத்திற்கு, ஒருவரைத் திட்டுவதைப் போன்று குறைசொல்லுகிறேன் என்று சொல்லிவிட்டு, "இவர் நன்றாக பிரியாணி சாப்பிடுவார்'', "இவர் தினமும் புதுப்புது சட்டை அணிவார்'' என்று சொன்னால், அது திட்டுவதில் அடங்காது.

பிரியாணியை நன்றாக சாப்பிடுவது நல்லதுதானே! அதுபோன்று தினமும் புதுப் புது சட்டை அணிவது கெட்ட செயல் இல்லையே! பிறகு எதற்கு இதை ஒரு குறையாகச் சொல்ல வேண்டும்? என்று குறை சொன்னவரைத்தான் ஒருமாதிரியானவர் என்று நினைத்துக் கொள்கிறோம்.

புதுப்புது சட்டை அணிவதில் என்ன தவறு இருக்கிறது என்று குறை சொன்னவரிடம் கேட்கத்தான் செய்வோம். "இவர் சூதாடுகிறார்'', "இவர் ஏமாற்றுபவர்'' என்றெல்லாம் சொன்னால் அதில் திட்டுவது
அடங்கியிருக்கிறது.

நபியவர்கள் மக்களிடம் யாசகம் கேட்பதை விட விறகுக் கட்டை முதுகில் சுமந்து, விற்று வாழ்க்கை நடத்தவது சிறந்தது என்று சிலாகித்துச் சொல்-லியுள்ளார்கள். விறகு சுமந்தாவது உழைக்க வேண்டும் என்று நபியவர்கள் பாராட்டியுள்ளார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் ஒருவர் ஒரு கயிற்றை எடுத்துக்கொண்டு தமது முதுகில் விறகுக் கட்டைச் சுமந்து விற்று வாழ்வது மக்களிடம் யாசகம் கேட்பதை விடச் சிறந்ததாகும். இதன் மூலம் அல்லாஹ் அவருக்கு இழிவு ஏற்படாமல் தடுத்துவிடுவான். மக்கள் அவருக்குக் கொடுக்கவும் செய்யலாம்; அல்லது மறுக்கவும் செய்யலாம்.
அறிவிப்பவர்: ஸுபைர் பின் அல்அவ்வாம் (ர-லி), நூல் : புகாரி 1471,2373

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது உயிர் யார் கையில் உள்ளதோ அவன் மீது ஆணையாக! உங்களில் ஒருவர் தமது கயிற்றை எடுத்துக்கொண்டு(போய்) விறகு வெட்டி அதைத் தமது முதுகில் சுமந்து சம்பாதிப்பது, ஒருவனிடம் வந்து யாசிப்பதைவிடச் சிறந்ததாகும். அவன் யாசிப்பவருக்கு கொடுக்கவும் செய்யலாம்; மறுக்கவும் செய்யலாம்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர-லி), நூல்: புகாரி 1470.1471,2373,2374

இந்த வசனம் உட்பட இந்த அத்தியாயத்தின் துவக்கத்திலிரு-ந்தே குறைகளைத் தான் பட்டியல் போடுகிறான். ஆரம்பமே தப்பத் - நாசமாகட்டும் என்று கடுமையாகச் சொல்-லிக் கொண்டே வரும்போது விறகு சுமப்பவள் என்று சொல்வது திட்டுவதாக அமையுமா? விறகு யார்தான் சுமக்காமல் இருக்கிறார்? விறகு சுமப்பது கேவலமானதா? அது பாவமாகக் கருதப்பட வேண்டுமா? அது அவமானத்திற்குரிய செயலா? இஸ்லாத்தில் இப்படியெல்லாம் உண்டா?
இஸ்லாமியர்களல்லாத சில மதத்தவர்கள் தொழில் அடிப்படையில் சாதியையும் வர்ணத்தையும் பிரிக்கின்றனர், ஆனால் இஸ்லாத்தைப் பொறுத்த வரை பிச்சை எடுக்காமல் சுயமரியாதையுடன் எந்தத் தொழில் செய்து பிழைத்தாலும் அதைப் பாராட்டத்தான் செய்கிறது. எனவே அபூலஹபின் மனைவியாக இருக்கிறவள், விறகு சுமக்கிற அளவுக்கு அவளுக்கு வறுமை ஏற்படவில்லை என்பதையும் பார்க்கிறோம்.

அவளுக்கும் அவளது கணவன் அபூலஹபிற்கும் அவர்களுடைய பொருளாதாரம் அவர்களுக்கு உதவவில்லை என்று சொல்லுகிற அளவிற்கு அல்லாஹ் தாறுமாறான பொருளாதாரத்தைக் கொடுத்திருக்கத்தான் செய்திருந்தான். அதன் காரணமாக இவன் தனது மனைவி விறகு பொறுக்கித்தான் குடும்பம் நடத்த வேண்டும் என்கிற தேவையும் இவனுக்கு இருக்கவில்லை என்பதையும் பார்க்கிறோம்..

சரி ஒரு வாதத்திற்குப் பேசுவதாக இருந்தால் கூட, விறகு சுமந்தால் நரகத்திற்குப் போக வேண்டுமா? இப்படியெல்லாம் சிந்தித்துப் பார்த்துத்தான் வசனத்திற்குரிய சரியான பொருளைப் புரிந்து கொள்ளவேண்டும். ஏனெனில் இந்த வசனத்தைப் பேசுவது நீங்களோ நானோ கிடையாது.

எந்த மனிதனின் வார்த்தையும் கிடையாது. மனிதர்களைப் படைத்துப் பரிபக்குவப்படுத்துகிற இறைவனின் வார்த்தையாகும். அந்த வார்த்தைகளைப் படைத்தவன் பேசுகிற மாதிரித்தான் சரியான பொருளை விளங்கிட வேண்டும். அப்படியெனில் விறகு சுமப்பதினால் நரகத்திற்குச் செல்வாள் என்பதற்கு வேறு பொருள் இருக்கிறது என்பதை நம்மால் புரிந்து கொள்ள முடிகிறது.

விறகு சுமப்பது என்றால் இவ்விடத்தில், நபிகள் நாயத்திற்கு எதிராக மூட்டிவிடுகிற தீயை இன்னும் கொளுந்துவிட்டு எரியச் செய்வதற்காக விறகைப் பொறுக்கிக் கொண்டுவந்து கொடுத்ததால் அது நபிக்கு எதிராகச் செயல்பட்டதினால் நரகத்தில் கரிவாள் என்று அல்லாஹ் சொல்லுகிறான்.

அப்படியெனில், எதிர்ப்பு என்ற நெருப்பை மூட்டுவதற்கு விறகை சுமக்கிறாள்
என்று அர்த்தம். எனவே இவ்விடத்தில் விறகு என்றால், நபிகள் நாயத்தின் மீது கட்டவிழ்த்துவிட்ட பொய்கள், வதந்திகள், தவறான பிரச்சாரங்கள் என்று பொருள் வைக்க வேண்டும்.

இந்த வசனத்திற்குரிய விளக்கமாக இன்னொரு விசித்திரமான விளக்கத்தையும் சில விரிவுரை நூல்களில் சொல்-லி இருக்கிறார்கள். அதாவது அபூலஹபின் மனைவி விறகு சுமந்து பிழைக்கும் நிலையில் இருக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் நபிகள் நாயகம் (ஸல் )

அவர்களின் வறுமையைக் கே-லி செய்வதற்காக் அவள் விறகு சுமந்து நடித்துக் காட்டினாள் என்பதே அந்த விளக்கம்.

இப்னு கதீர் போன்ற தப்ஸீர்களில் கூட இதை எழுயிதிருக்கிறார்கள். இதுவும் கூட பொய்தான். நபியவர்கள் மக்காவில் தம்மை இறைத் தூதர் என்று தமது நாற்பதாவது வயதில் அறிமுகம் செய்யும்போது தன்னிறைவான பெரிய பணக்காரராகத்தான் இருந்தார்கள்.

இன்னும் சொல்லப்போனால் ஊரிலேயே பெரிய பணக்காரராகத்தான் இருந்துள்ளார்கள். எனவே இந்தக் கதை முற்றிலும் பொய்யானது என்பதை இதில் இருந்து புரிந்து கொள்ளலாம்.

இந்தக் கதைபோன்று, இன்னொரு கதையும் உண்டு. அதில், அபூலஹபின் மனைவி எவ்வளவு பணக்காரியாக இருந்தாலும் கஞ்சம் பிடித்தவளாக இருந்தாள். அதனால்தான் அல்லாஹ் இப்படி பழித்துச் சொல்லுகிறான்
என்றும் எழுதி வைத்துள்ளார்கள். இந்த வாதமும் தவறானதுதான். ஒருவன் பெரிய இலட்சாதிபதியாகவும் கோடீஸ்வரனாகவும் இருக்கிறான்.

தன்னிறைவாகத்தான் இருக்கிறான். இருந்தாலும் நியாயமான முறையில் மேலும் உழைக்கிறான் என்று வைத்துக் கொள்வோம். அதனை எப்படித் தவறானது என்று சொல்ல முடியும்? எனவே அவள் பணக்காரியாக இருந்தாலும் விறகு விற்பது என்ற ஹலாலான இஸ்லாம் அனுமதித்த தொழிலைத்தானே செய்திருக்கிறாள். இது விமர்சித்துச் சொல்லுகிற அளவுக்கான விசயமாக இல்லையே என்று யோசித்திருந்தாலும் இதுபோன்ற கதைகளைச் சொல்லி-யிருக்க மாட்டார்கள். எனவே இந்தக் கதைகளையெல்லாம் நம்பக்கூடாது.

எனவே விறகு சுமப்பவள் என்பதற்குரிய சரியான பொருள், நபியவர்களுக்கு எதிராக மக்களைத் தூண்டிவிட்டவள் உசுப்பேற்றிவிட்டவள் என்று பொருள். நபியவர்களுக்கு எதிர்ப்பைத் தூண்டிவிடுவதற்குத் துணையாக நின்றவள் என்று அர்த்தம் செய்தால்தான், அப்படித் தூண்டிவிடுவது நரகத்திற்குரிய காரியமாக இருக்கும் என்பது நியாயமாகும்.

ஆக விறகு சுமப்பவள் என்பதற்கு இரண்டு அர்த்தம் இருக்கிறது. ஒன்று நேரடியாகவே விறகு சுமப்பது என்றும் மற்றொன்று நபியவர்களுக்கு எதிராக எதிர்ப்பைத் தூண்டிவிடுவது அல்லது தூண்டுவதற்குத் துணை நிற்பது என்றும் அர்த்தம் செய்யலாம். நேரடியாகவே விறகு சுமப்பது என்று அர்த்தம் வைப்பதற்கு இவ்விடத்தில் சிறிதளவிற்குக் கூட முகாந்திரம் இல்லை. ஆரம்பத்திலி-ருந்து திட்டுகிற சபிக்கிற தோரணையில் பேசிவிட்டதினால், விறகு சுமப்பதைத் திட்டுவதாக சபிப்பதாகக் கருதமுடியாது.

விறகு சுமப்பதை அப்படியே நேரடிப் பொருளிலும் சொல்லலாம். அதனால் தவறொன்றுமில்லை. ஆனால் அது அவ்விடத்தில் பொருந்திப் போகவேண்டும். உதாரணத்திற்கு ஒருவர் வருகிறார். இன்னொருவர் அவரது தொழில் என்னவென்று கேட்கிறார். அதற்கவர், இவர் விறகு சுமப்பவர் என்று சொன்னால் அது நேரடிப் பொருளில் பயன்படுத்துவதற்கான இடமாக அமையும் என்பதில் மாற்றுக் கருத்துச் சொல்லவே முடியாது.

அதேபோன்று ஒருவர் காரி-லிருந்து இறங்குகிறார். ஐந்து விரல்களிலும் மோதிரம் அணிந்திருக்கிறார். கழுத்தில் பெரிய அணிகலன்ண்கள் எல்லாம் அணிந்திருக்கிறார் என்று வைத்துக் கொள்வோம். அவரைப் பற்றி ஒருவர் நம்மிடம் கேட்கும் போது, அவன்தான் விறகு வெட்டுகிறவன்
என்றோ அல்லது அவன்தான் விறகு சுமப்பவன் என்றோ பதில் சொல்லுகிறோம் என்றால் அதில் வேறேதோ பொடி இருக்கிறது என்று அர்த்தம்.

இந்த இடத்தில் நேரடியான பொருள் இல்லை. வேறேதோ இவரைப் பற்றிச்
சொல்லுகிறார் என்று பொருள். அதுபோன்றுதான் இந்த வசனத்
திலும் விறகு சுமப்பவள் என்றால் நேரடி அர்த்தத்தில் கிடையாது.
அந்த அர்த்தம் அபூலஹபின் மனைவிக்குப் பொருந்தவே பொருந்தாது.

இலக்கியமான பொருளில்தான் அல்லாஹ் பயன்படுத்துகிறான். எனவே இவள் விறகு வெட்டுகிறவள் என்பதை வேறுவிதமான பொருளில் விளங்கிக் கொள்ள வேண்டும்.

அதனால்தான் அல்லாஹ் அடுத்த வசனத்தில், فِي جِيدِهَا حَبْلٌ مِنْ مَسَدٍ - ஃபீ ஜீதிஹா ஹப்லுன் மின் மஸத் - அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்று கூறுகிறான்.

இந்த வசனத்திலும் இலக்கியமான பொருள்தான் உள்ளது. அவளுடைய கழுத்தில் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்றால், அழிவு ஏற்படும் என்று விளங்கிக் கொள்ள வேண்டும். கழுத்தில் முறுக்கேறிய கயிறு என்றால் இலக்கியமான வார்த்தையாகும். நம்முடைய நடைமுறைப் பேச்சில் கூட இருக்கத்தான் செய்கிறது. உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், சில மாணவர்கள் ஆசிரியருக்குத் தெரியாமல் படத்திற்குச் சென்றுவிடுவார்கள். அவர் செய்த இந்தத் திருட்டுக் காரியம் தெரியவந்துவிடுமானால்,
அவருடன் படிக்கிற மற்ற மாணவர்கள், "இன்றைக்கு உனக்கு கழுத்தில் சுருக்குத்தான் மாப்பிள்ளை'' என்றெல்லாம் பேசிக் கொள்வார்கள். இவ்விடத்தில் சுருக்கு என்றால் தண்டனை என்று அர்த்தம். இப்படி பயன்படுத்துவது எல்லா மொழிகளிலுமே இருக்கத்தான் செய்கிறது.

அதே போன்றுதான் இந்த வசனத்தினுடைய பொருளையும் விளங்கிக் கொள்ள வேண்டும். இவளது கழுத்திலும் முறுக்கேறிய கயிறு இருக்கிறது என்றால், இவளுக்குத் தண்டனை இருக்கிறது. இவளது புருஷன் எப்படி நரகத்திற்குச் செல்வானோ அதுபோன்று இவளும் நரகத்திற்குத்தான் செல்வாள் என்று அல்லாஹ் கூறுகிறான்.

இதைத்தான் இந்த அத்தியாயம் சொல்லுகிறதே தவிர, இந்த உலகத்தில் நடக்கிற விசயத்தைச் சொல்லவே கிடையாது. அப்படியொரு பாரதூரமாக உலகத்தில் யாருக்குமே நடக்காத விசயம் இவர்களுக்கு நடக்கவும் இல்லை. எல்லோரும் செத்துப் போனதைப் போன்றுதான் இவர்களும் செத்துப் போனார்கள். அவ்வளவுதான்.

இந்தப் அபூலஹபினுடைய மனைவியான இவளும் நபியவர்களுக்குச் உறவினராகத்தான் இருந்தாள். முஆவியா (ரலி-) அவர்களின் தகப்பனார்
அபூசுஃப்யான் ஆவார்.

அபூசுஃப்யானுடைய மகளை நபியவர்கள் மணமுடித்து இருந்தார்கள்.

அபூசுஃப்யானுடைய தந்தை பெயர் ஹர்ப் என்பதாகும். ஹர்புடைய மகள்தான் அபூலஹபுடைய மனைவி. அப்படியெனில் அபூசுஃப்யானுக்கு தங்கை முறை வருவதினால் நபியவர்களுக்கு அபூசுஃப்யான் மச்சான் என்கிற முறையும் வரும். நபியவர்களுக்கு மச்சானுடைய தங்கை முறை வருகிறது.

எனவே அபூலஹபும் அவனது மனைவியும் நபியவர்களின் இரத்த பந்தத்தில் உள்ளவர்களாக இருந்தும் கொள்கைக்கு எதிராக செயல்பட்டார்கள் என்பதையும் புரிந்து கொள்ளவேண்டும். இதுதான் இந்த அத்தியாயத்திலுள்ள சம்பவம்.
சூரத்துல் லஹபும் முன்னறிவிப்பும்!?

இந்த அத்தியாயத்திலுள்ள முன்னறிவிப்பு என்னவென்றால், அபூலஹபும் அவனது மனைவியும் நரகத்திற்குச் செல்வார்கள் என்பதின் மூலம் அவர்கள் இருவரும் இஸ்லாத்திற்கு வரமாட்டார்கள் என்பதுதான்.

அதே போன்று தப்பிக்கவே இயலாது என்று சொல்வதின் மூலம் இவர்களிருவருக்கும் நிரந்தர நரகம் கிடைக்கும் என்பதுவும் தெளிவாகிறது. பொதுவாக நரகத்திற்குச் செல்லுவான் என்று சொன்னால் அதில் நிரந்தர நரகமில்லாமல், தற்கா-லிகமாகக் கூட இருக்கலாம், போதுமான தண்டனை கொடுக்கப்பட்ட பிறகு சுவர்க்கத்திற்குச் செல்லுவான் என்ற கருத்து இருக்கிறது. ஆனால் அபூலஹபையும் அவனது மனைவியையும் பற்றிப் பேசுகிற இந்த வசனத்தில் مَا أَغْنَى عَنْهُ - மா அஃனா அன்ஹு என்றுள்ளது. அதற்குப் பொருள் அவர்களால் தங்களைக் காப்பாற்றிக் கொள்ளவே இயலாது என்றாகிவிடும். அவர்களிருவருக்கும் நிரந்தர நரகம்தான் என்றாகிவிடும்.

இந்த இருவருக்கும் நிரந்தர நரகம்தான் கிடைக்கும் என்ற செய்தியை நபிகள் நாயகத்தின் மூலமாகத்தான் அல்லாஹ் சொல்லுகிறான்.

அதாவது நபிகள் நாயகம்தான் இந்த வசனத்தை தனது பெரிய தந்தை அபூலஹபிற்கும் தனது பெரிய தாயார் அபூலஹபின் மனைவிக்கும் எதிராகச் சொல்லுகிறார்கள்.

இந்த இடத்தில்தான் நாம் அல்லாஹ்வினுடைய முன்னறிவிப்பை நன்றாகப்
புரிய வேண்டும். அபூலஹப் என்பவன் நபிகள் நாயகத்திற்கும் இஸ்லாத்திற்கும் மிகப்பெரிய எதிரியாக இருந்தான். இஸ்லாத்தை எப்படியாவது பொய்ப்படுத்த வேண்டும் என்று கங்கணம் கட்டிக் கொண்டு திரிந்தான். அதற்காக எந்த விலையும் கொடுப்பதற்குத் தயாரான ஒரு நபர்தான்.

இந்த நிலையில் முஹம்மது நபியைப் பொய்ப்படுத்துவதற்கு வேறு வெளியி-லிருந்து ஆதாரங்களைத் தேடுவதை விட, அவர் கையை வைத்தே அவரது கண்ணைக் குத்திவிடலாம். முனாஃபிக்குகள் வெறுமனே பெயருக்காவது இஸ்லாத்தை ஏற்பதைப் போன்று நடித்தார்கள். உலக மக்கள் பார்வையில் அவர்கள் முஸ்லி-ம்கள் பட்டிய-லில் அடங்கினார்கள்.

அது போல் இவனும் செய்திருக்கலாம். நபியவர்களுக்கும் அவர்களுடன் இருந்தவர்களுக்கும் தெரிகிற மாதிரி அஷ்ஹது அன் லாயிலாஹ இல்லல்லாஹ் என்றுகூறி இஸ்லாத்தை ஏற்பதாகக் கூறுவதன் மூலம் குர்ஆனை பொய்ப்படுத்தியிருக்கலாம். ஏன் அப்படியொரு நிகழ்வே நடக்கவில்லை.

எதிர்ப்பதற்கு எத்தனையோ சூழ்ச்சி செய்தவர்கள், எதாவது ஒரு வழியில் முஹம்மது பொய்யர் என்பதையும், அவர் வஹீ என்று பேசுகிற இந்தக் குர்ஆன் பொய்யானது என்றும், அவர் அல்லாஹ் என்று சொல்லுகிற கடவுளின்
வார்த்தையைப் பொய்ப்பித்து அல்லாஹ்வையும் பொய்ப்பிக்கலாம் என்று சுற்றித் திரிந்த அந்த சமூகத்திற்கு இப்படியொரு விசயம் மனதில்கூட உதிக்கவில்லை என்றால் இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட முன்னறிவிப்புத்தான் என்பதில் எள் முனையளவுக்கும் சந்தேகமே இல்லை.

அதாவது, முஹம்மதாகிய நீர், குர்ஆன் என்பது அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தி என்று சொல்கிறீர். அல்லாஹ்விடமிருந்து வந்த செய்தி பொய்யாக இருக்காது. ஆனால் அபூலஹபும் அவனது மனைவியும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டதின் மூலம், உமக்கு இந்தக் குர்ஆன் அல்லாஹ்விடமிருந்து வந்தது என்று சொன்னது பொய். நீரும் பொய்யர். குர்ஆன் என்று நீர் சொல்லுவதும் கற்பனைதான் என்று அவர்கள் வாதிட்டிருக்க முடியும். இஸ்லாத்தையும் அதனை உருவாக்கியவனாகிய அல்லாஹ்வையும் பொய்ப்படுத்தியிருக்க முடியும். ஆனால் அது நடக்கவே இல்லை. முஸ்-லிம் என்று சொல்-லிக் கொண்டு எத்தனையோ முனாஃபிக்குகள் இருந்தார்கள். மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்யும்போது கூட, எத்தனையோ பேர் நடிக்கத்தான் செய்தார்கள். நபிகள் நாயகத்தினால் கண்டுபிடிக்க முடியவில்லை.

எனவே நபியையும், குர்ஆனையும் பொய்பிப்பதற்கு எப்படியாவது எதிர்க்க வேண்டும் என்று வழிதேடிக் கொண்டிருந்த சமூகம் இந்த வசனத்திற்கு எதிராக செயல்பட்டு நபியையும் குர்ஆனையும் அல்லாஹ்வையும் பொய்ப்படுத்த வேண்டுமென அபூலஹபும் அவனது மனைவியும் அந்த சமூகமும் நினைக்கவே இல்லை என்கிற செய்தியை ஆழமாகச் சிந்தித்தால் இது அல்லாஹ்வின் ஆற்றல் என்பதையும், அல்லாஹ் நினைத்தால் உள்ளங்களைப் புரட்டுவதின் மூலமே மனிதர்களை அவனால் ஆட்சி செலுத்த முடியும் என்பதையும் நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும்.

இந்த அத்தியாயத்தைப் படித்த ஒரு கிறித்துவப் பாதிரியார், இந்த அத்தியாயத்தில் சொல்லப்பட்ட அபூலஹபைப் பற்றியும் அவனது மனைவியயைப் பற்றியும் குறிப்புக்களை எடுத்துக் கொண்டு சிந்திக்கிறார்.

நபிகளாரை எந்தெந்த அடிப்படையிலெல்லாம் எதிர்க்க வேண்டுமோ
அந்தந்த அடிப்படையிலெல்லாம் எதிர்த்த அபூலஹபும் அந்த சமூகமும் இப்படியொரு பாதையைத் தேர்ந்தெடுத்து இஸ்லாத்தைப் பொய்ப்படுத்தாமல் போனது ஏன்? என யோசிக்க ஆரம்பித்துவிட்டார். இதுபோன்ற விசயத்தை எந்தச் சமானிய மனிதனாலும் முன்னறிவிப்புச் செய்யவே முடியாது என்பதை உணர்கிறார். முஹம்மது அவர்கள் அல்லாஹ்வின் தூதராக இருந்தால்தான் இப்படிச் சொல்ல முடியும். இந்த வார்த்தை அல்லாஹ்வின் வார்த்தைதான் என்பதையும் உணர்கிறார்.

ஒருவரைக் குறிப்பிட்டு இவர் இஸ்லாத்திற்கு வரவே மாட்டார் என்று நபிகள் நாயகம் சொல்லுகிறார்கள். அதுவும் அல்லாஹ் சொல்வதாகச் சொல்கிறார்கள். அதுபோன்று அப்படியே நடக்கிறதெனில், முஹம்மது அவர்கள் நம்மைப் போன்ற சாமானிய மனிதராக மட்டும் இல்லை. அல்லாஹ்வின் தூதராகவும்
இருக்கிறார்கள் என்று ஒப்புக் கொண்டு இஸ்லாத்தை ஏற்று ஹஜ்ஜுக்கும் சென்று வந்துவிட்டார் அந்தப் பாதிரியார்.

அந்தப் பாதிரியார், தான் எப்படி இஸ்லாத்திற்கு வந்தார் என்பதைப் பற்றிச் சொல்லும் போது, இந்த வசனம்தான் சிந்திக்கத் தூண்டி என்னை ஆட்கொண்டுவிட்டது. அதனால்தான் நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டேன் என்றும் விவரிக்கிறார்.

ஆனால் நம்மைப் பொறுத்தவரை, தப்பத் யதா சூராவில் வரலாற்றுச் செய்தி மட்டும்தான் இருப்பதாக நாம் நினைக்கிறோம். இதில் என்ன அப்படி இருந்துவிடப் போகிறது என்றும் நினைக்கிறோம். மேலும் சொல்வதாக இருப்பின், அபூலஹப் நாசமாகிவிட்டான், அவனது மனைவியும் நாசமாகிவிடுவாள் என்றும்தான் இருக்கிறது. இந்த வசனத்தில் எந்த அறிவுரையும் இல்லை. தொழுங்கள் என்றோ நோன்பு வைய்யுங்கள் என்றோ பொய் சொல்லாதே என்றோ கோள் சொல்லாதே என்றோ இல்லை. மேலும் மறுமையைப் பற்றி ஒன்றுமில்லை. வெறுமனே ஒரு தனிமனிதனைப் பற்றிய செய்தி மட்டும்தான் என்று நாம் நினைக்கலாம்.

ஆனால் அப்படியெல்லாம் நினைப்பது தவறானதாகும். ஏனெனில் அல்லாஹ்வுடைய கலாமில் ஒருவார்த்தைகூட வீணானதாக இருக்காது. இருக்கவும் கூடாது. அவன் அர்த்தத்துடன் அங்காங்கே ஆப்பு வைத்து இருக்கிறான். அவ்வளவுக்கு இந்த அத்தியாயத்தில் விசயம் இருக்கிறது. ஒருவன் சரியாகச் சிந்தித்தால் அந்த சிந்தனை அவனை இஸ்லாத்திற்குள் கொண்டுவந்துவிடும்.

நான்கு மத்ஹபு என்று சொல்லுபவர்கள் இந்த அத்தியாயத்திற்கு விளக்கம் என்ற பெயரில் உலகத்தில் உள்ளதைப் பற்றிப் பேசுகின்றனர். புரியாத விளக்கத்தைச் சொல்-லி இந்த அத்தியாயத்தின் அடிப்படையையே தவறாக்கிவிட்டனர். ஆனால் இந்த அத்தியாயத்தைப் படித்துவிட்டு இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு இந்தப் பாதிரியாரைப் போன்று சிந்தித்தால், இந்த அத்தியாயம் இறைவனால் நபியவர்களின் சமுதாயத்தினருக்குக் கொடுக்கப்பட்ட முன்னறிவிப்பு என்பதைப் புரியலாம்.

மேலும் அல்லாஹ்வின் தூதர் முஹம்மது நபிகள் நாயகம் உண்மையிலேயே அல்லாஹ்வின் தூதர்தாம் என்பதையும் அவர்களுக்கு அல்லாஹ்வின் புறத்திலி-ருந்து அருளப்பட்ட வசனங்கள் இறைவனின் வார்த்தைகள்தாம் என்பதையும் இவ்வத்தியாயம் மெய்ப்படுத்துகிறது.

மேலும் அந்தப் பாதிரியார் இப்படிப்பட்ட வார்த்தையையும் வாசக அமைப்பையும் சொல்வதாக இருந்தால் அதுவும் அல்லாஹ்வின் புறத் திலி-ருந்து வந்த வேதம் என்று சொல்லுவதாக இருந்தால், நிச்சயமாக அவர் அல்லாஹ்வினால் தேர்ந்தெடுக்கப்பட்ட தூதராகத்தான் இருப்பார் என்று நம்பி நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்வதற்கு இந்த அத்தியாயம் ஒன்றே எனக்குப் போதுமானதாக இருக்கிறது என்றும் கூறுகிறார்.

சூரத்துல் லஹப் அத்தியாயத்தை தொழுகையில் ஓதலாமா?

சிலர் இந்த அத்தியாயத்தைத் தொழுகையில் ஓதக்கூடாது என்று ஃபிக்ஹு நூற்களில் எழுதி வைத்துள்ளனர். மேலும் நபிகள் நாயகம் தொழுகையில் ஓதக்கூடாது என்று சொல்-லியுள்ளார்கள் என்றும் தங்களது பயான்களில் மத்ஹபினர் நபிகள் நாயகம் சொல்-லித்தராத பொய்யானதை
நபிகள் நாயகத்தின் மீது இட்டுக் கட்டிச் சொல்-லிக் கொண்டிருக்
கிறார்கள்.
அபூலஹப் என்பவர் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையாவார். எனவே நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையை இந்த அத்தியாயம் திட்டுவதைப் போன்று இருக்கிறது என்பதினால் இந்த அத்தியாயத்தை தொழுகையில் ஓதக்கூடாது என்கின்றனர்.

இப்படியெல்லாம் நபிகள் நாயகத்தின் மீது பாசம் வைக்கக் கூடாது. நபிகள் காட்டித் தராத முறையில் நபிகளாரை நேசிப்பது இஸ்லாத்தினுடைய அடிப்படையையே தகர்த்துவிடும். நபிகளாரையும் அவர்களின் போதனைகளையும் தவறாக விளங்கி இப்படி கூறுகெட்ட தனமாக நபிகளாரை நேசிக்கிறோம் என்ற பெயரில் எவ்வளவு முட்டாள்தனமான மிகவும் பாரதூரமான விசயத்தை இஸ்லாத்தின் பெயரால் இட்டுக் கட்டியுள்ளார்கள். இது முற்றிலும் இஸ்லாத்தில் இல்லாத ஒரு கருத்தாகும்.

ஏனெனில், இஸ்லாமிய மார்க்கத்தில் சொந்த பந்தங்கள், இரத்த உறவு முறைகள் போன்றவற்றிற்கெல்லாம் எந்த முக்கியத்துவமும் கிடையாது.

இஸ்லாத்தினுடைய கொள்கைதான் இஸ்லாத்தில் உயரிய சொந்தமே தவிர மற்றபடி ஒன்றுமில்லை. எனவே அபூலஹப் என்பவன் நபியவர்களின் சொந்தம் என்பதினால் இந்த வசனத்தைப் பற்றி தவறாகச் சொல்வது இஸ்லாத்தையே அர்த்தமற்றதாக்கிவிடும்.

இன்னும் சொல்லப் போனால், அபூலஹப் நபியவர்களைப் பார்த்து, காலமெல்லாம் நாசமாகப் போ என்று சொல்லி-யுள்ளான் என்று
அவனை வெறுப்பதற்குப் பதிலாக, அவன் மீது கோபப்படுவதற்குப் பதிலாக நபியவர்களின் உறவுதானே என்று இரத்த பாசத்தைப் பற்றிப் பேசுகிறார்கள். இஸ்லாத்தில் இதுபோன்ற ஒரு சித்தாந்தம் உண்டா? கொள்கை அடிப்படையில்தான் உறவுக்கு மிக முக்கியமே தவிர மற்ற எல்லா உறவுகளையும் இஸ்லாம் தடுக்கிறது.

நூஹ் நபியைப் பற்றி அல்லாஹ் கூறும் போது, நூஹ் நபியினுடைய சமூகம் வெள்ளப் பிரளயத்தில் மூழ்கடிக்கப்படும் போது நூஹ் நபியவர்கள் தனது இறைமறுப்பான மகனையும் காப்பாற்று! அவனும் எனது குடும்பத்தைச் சார்ந்தவன் தானே என்று சொல்லும் போது, அல்லாஹ் அவரைக் கண்டிக்கிறான்.
நூஹ், தம் இறைவனை அழைத்தார். "என் மகன் என் குடும்பத்தைச் சேர்ந்தவன். உனது வாக்குறுதியும் உண்மையே. நீயே தீர்ப்பு வழங்குவோரில் மேலானவன்'' என்றார்.

"நூஹே! அவன் உன் குடும்பத்தைச் சேர்ந்தவன் அல்லன். இது நல்ல செயல் அல்ல. உமக்கு அறிவு இல்லதாது பற்றி என்னிடம் கேட்காதீர்! அறியாதவராக நீர் இருக்கக் கூடாது என உமக்கு அறிவுரை கூறுகிறேன்'' என்று அவன் கூறினான்.
(அல்குர்ஆன் 11:45,46)

நூஹ் நபியுடைய மகன் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லை. ஆனாலும்
அவர் தனது மகனைக் காப்பாற்றச் சொல்லி- அல்லாஹ்விடம் கேட்கும் போது, அவன் உனது மகனில்லை என்று நூஹ் நபிக்கு அல்லாஹ் சொல்லி-க் காட்டுகிறான், அதைப் பற்றி நீர் பேசவே கூடாது என்று சொல்-லிக் காட்டுகிறான். உனக்குப் பிறந்ததினால் பிள்ளையா? இல்லவே இல்லை. உன் கொள்கையை ஏற்றுக் கொண்டால்தான் குடும்பம்.

இஸ்லாத்தின் இந்த அடிப்படையை சிந்தித்தால் இந்த சூராவை ஓதக்கூடாது என்றெல்லாம் யாரும் கூற மாட்டார்கள்.

அபூலஹபுடைய மகளின் பெயர் துர்ரா என்பதாகும். அபூலஹபும் அவனது மனைவியும்தான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளவில்லையே தவிர அவர்களின் மகளார் துர்ரா அவர்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு மதினாவிற்கு ஹிஜ்ரத் செய்து வந்தார்கள். ஆனால் மதினாவிலுள்ள சிலர் உங்களது தந்தை அபூலஹபைத்தான் அல்லாஹ் இவ்வளவுக்குத் சபித்துக் கூறுகிறான் என்று விமர்சித்துப் பேசினார்கள். உடனே துர்ரா என்கிற அந்த ஸஹாபிப் பெண் நபியவர்களிடத்தில் வந்து, மக்கள் தன்னைப் பற்றி விமர்சித்துப் பேசிய செய்தியை முறையிடுகிறார்கள். நபியவர்கள் லுஹர் தொழுகைக்குப் பிறகு மிம்பரில் ஏறி மக்களைப் பார்த்து, எனது உறவினர்கள் விசயத்தில், என் இரத்த சொந்தம் என்னை நோவினை செய்யாதீர்கள் என்று எச்சரித்ததாக சில அறிவிப்புகள் உள்ளன.

المعجم الكبير للطبراني (17 / 496 )
20125 حَدَّثَنَا إِبْرَاهِيمُ بن دُحَيْمٍ الدِّمَشْقِيُّ، حَدَّثَنِي أَبِي، ثنا عَبْدُ الرَّحْمَنِ بن بَشِيرٍ، عَنْ مُحَمَّدِ بن إِسْحَاقَ، قَالَ: حَدَّثَنِي نَافِعٌ، مَوْلَى ابْنِ عُمَرَ، وَزَيْدُ بن أَسْلَمَ، عَنِ ابْنِ عُمَرَ، وَعَنْ سَعِيدِ بن أَبِي سَعِيدٍ الْمَقْبُرِيُّ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ مُحَمَّدِ بن الْمُنْكَدِرِ، عَنْ أَبِي هُرَيْرَةَ، وَعَنْ عَمَّارِ بن يَاسِرٍ، قَالُوا: قَدِمَتْ دُرَّةُ بنتُ أَبِي لَهَبٍ الْمَدِينَةَ مُهَاجِرَةً، فَنَزَلَتْ دَارَ رَافِعِ بن الْمُعَلَّى الزُّرَقِيِّ، فَقَالَ لَهَا نِسْوَةٌ جَالِسِينَ إِلَيْهَا مِنْ بني زُرَيْقٍ: أَنْتِ بنتُ أَبِي لَهَبٍ الَّذِي يَقُولُ اللَّهُ عَزَّ وَجَلَّ "تَبَّتْ يَدَا أَبِي لَهَبٍ وَتَبَّ مَا أَغْنَى عَنْهُ مَالُهُ وَمَا كَسَبَ" ளالمسد آية 12ன مَا يُغْنِي عَنْكِ مُهاجَرُكِ؟، فَأَتَتْ دُرَّةُ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ: فَشَكَتْ إِلَيْهِ مَا قُلْنَ لَهَا فَسَكَّنَها، وَقَالَ:اجْلِسِي ثُمَّ صَلَّى بِالنَّاسِ الظُّهْرَ، وَجَلَسَ عَلَى الْمِنْبَرِ سَاعَةً، ثُمَّ قَالَ:أَيُّهَا النَّاسُ مَا لِي أُوذِي فِي أَهْلِي، فَوَاللَّهِ إِنَّ شَفَاعَتِي لَتَنَالُ حَيَّ حَا، وَحُكْمَ وصَدَاءَ، وسَلْهَبَ يَوْمَ الْقِيَامَ .

அபூலஹபினுடைய மகள் துர்ரா அவர்கள் (இஸ்லாத்தை ஏற்று மதினா
விற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்து ராஃபி இப்னுல் முஅல்லஷ் ஷுரக்கீ என்பவரது வீட்டில் தங்கினார்கள். பனூ ஷுரைக் குடும்பத்துப் பெண்கள், ''தப்பத் யதா அபீலஹபின் வதப்ப'' என்ற இந்த அத்தியாயம் அருளப்பட்டவரான அபூலஹபினுடைய மகள்தானே நீங்கள்! (அதனால்) உங்களது ஹிஜ்ரத் உங்களது எந்தப் பயனையும் தரப்போவதில்லை என்றும் விமர்சித்தார்கள். உடனே (அபூலஹபின் மகள்) துர்ரா அவர்கள் நபிகள் நாயகத்திடம் வந்து, தான் சந்தித்த விமர்சனத்தை முறையிட்டார்கள். அப்போது நபியவர்கள், நீங்கள் இங்கேயே இருங்கள் என்று சொல்லி-விட்டு மக்களுக்கு லுஹர் தொழுகை நடத்தினார்கள். பிறகு மிம்பரின் மீது சிறிது நேரம் அமர்ந்து, மக்களே என் குடும்பத்தினர்
விசயத்தில் என்னை நோவினை செய்வதற்கு உங்களுக்கு என்ன நேர்ந்தது? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! சில கோத்திரங்களின் பெயர்களைச் சொல்-லி அவர்களுக்கு மறுமையில் எனது (உறவு முறை நெருக்கத்தினால்) பரிந்துரை கிடைக்கும் என்றார்கள்.
தப்ரானியின் முஃஜமுல் கபீர், பாகம் 17, பக்கம் 496

1013 عبد الرحمن بن بشير الشيباني الدمقشى روى عن محمد بن اسحاق روى عنه سليمان بن عبد الرحمن الدمشقي وعبد الرحمن بن ابراهيم دحيم. نا عبد الرحمن قال سمعت ابي يقول ذلك وسألته عنه فقال: منكر الحديث يروى عن ابن اسحاق غير حديث منكر. قال أبو محمد وروى عن عمار بن اسحاق عن محمد بن المنكدر وروى عنه زهير بن عباد الرؤاسى.- الجرح والتعديل (5 / 215)

இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடர்வரிசையில் அப்துற் ரஹ்மான் பின் பஷீர் அஷ்ஷைபானிய்யி அத்திமிஷ்கிய்யி என்பவர் இடம் பெறுகிறார். இவரது ஹதீஸ் நிராகரிக்கப்பட வேண்டியதாகும் (முன்கருல் ஹதீஸ்) என்று அபூஹாத்தம் ராஸீ அவர்கள் கூறுகிறார்கள். மேலும் இப்னு இஸ்ஹாக் அறிவிப்பதாக ஏராளமான முன்கரான ஹதீஸ்களை அறிவிப்பராகவும் இவர் இருக்கிறார் என்றும் குறைகூறுகிறார். மேற்சொன்ன இந்தச் செய்தியிலும் ثنا عَبْدُ الرَّحْمَنِ بن بَشِيرٍ، عَنْ مُحَمَّدِ بن إِسْحَاقَ... ... முஹம்மது இப்னு இஸ்ஹாக் வழியாகத்தான் அறிவிக்கிறார்.
அல்ஜரஹ் வத்தஃதீல், பாகம் 5, பக்கம் 215

எனவே இன்னொருவரின் பெயரைப் பயன்படுத்தி இவர் இஷ்டத்திற்கு அடித்து விடுகிறவரின் செய்தியை நபியவர்களைப் பயன்படுத்தி சொல்லி-யிருப்பதினால் இந்தச் செய்தியை நாம் ஏற்றுக் கொள்ளக்கூடாது.

எனவே நபியவர்களின் இரத்த உறவு என்பதை மட்டும் வைத்துக் கொண்டு 'தப்பத் யதா' என்ற அத்தியாயத்தை ஓதக்கூடாது என்பது குர்ஆனைப் பற்றித் தெரியாதவர்களின் வாதமாகும். ஃபிர்அவ்னை எப்படி நாம் வெறுக்கிறோமோ அதுபோன்று அபூலஹபையும் வெறுக்க வேண்டும். நபியவர்களின் உறவாக இருப்பதினால் இந்த அத்தியாயத்தை ஓதக் கூடாது என்கிற இந்த வாதத்தின்படி பார்த்தால், முஹம்மது நபிக்கே முன்மாதிரி நபியாக இருக்கிற இப்ராஹீம் நபியின் தந்தையான ஆஸர் அவர்களைப் பற்றிய வசனங்களையும் தொழுகையில் ஓதாமல் இருக்க வேண்டியதுதானே? அப்போது இப்ராஹீம் நபியுடைய மனது புன்படுமே என்று நினைக்க வேண்டியது தானே?
இப்ராஹீம் நபியின் தந்தையை அல்லாஹ்வின் எதிரி என்று அல்லாஹ் சொன்னவுடனேயே இப்ராஹீம் நபியவர்கள் உடனே அல்லாஹ்விடம் மன்னிப்புக் கேட்டார்கள் என்பதையும் அந்த வசனங்களிலேயே சொல்-லிக் காட்டுகிறான்.
இணை கற்பிப்போர் நரகவாசிகள் என்பது தெரிந்த பின்னர், அவர்கள் நெருங்கிய உறவினரேயானாலும் அவர்களுக்காக பாவமன்னிப்புத் தேடுவது நம்பிக்கை கொண்டோருக்கும், இந்த நபிக்கும் (முஹம்மதுக்கும்) தகாது. இப்ராஹீம் தம் தந்தைக்காக பாவமன்னிப்புத் தேடியது, தந்தைக்கு அவர் அளித்த வாக்குறுதியின் காரணமாகவே. அவர் அல்லாஹ்வின் எதிரி என்பது அவருக்குத் தெரிந்த பின் அதிலிருந்து விலகிக் கொண்டார். இப்ராஹீம் பணிவுள்ளவர்; சகிப்புத் தன்மை உள்ளவர். (அல்குர்ஆன் 9:113,114)

எனவே அல்லாஹ்வை ஏற்றுக் கொள்ளாத அனைவரும் அல்லாஹ்வுக்கு எதிரிதான். எப்போது அல்லாஹ்வுக்கு ஒருவன் எதிரியாக இருப்பானோ அவன் அல்லாஹ்வை ஏற்றுக் கொண்டவர்களுக்கும் எதிரியாகத்தான் இருப்பான். அவர் யாராக இருந்தாலும் சரியே! நபிகள் நாயகத்துக்குச் சொந்தம் என்பது, அல்லாஹ்வுக்கு எதிரியாக இருப்பதை விட சிறியதாகத் தெரிகிறதா? அப்படியொரு அடிப்படையில் நபியவர்கள் நடந்துகொள்ளவே இல்லை.

அதுபோன்ற ஒரு கொள்கைக்கு இஸ்லாத்தில் எந்த ஒரு ஆதாரத்தையும் குர்ஆனிலோ சஹீஹான ஹதீஸிலோ பார்க்கவே முடியாது.

20121 حَدَّثَنَا مُحَمَّدُ بن عَبْدِ اللَّهِ الْحَضْرَمِيُّ، ثنا مُحَمَّدُ بن عَبْدِ اللَّهِ بن نُمَيْرٍ، ثنا عَبْدُ اللَّهِ بن إِدْرِيسَ، قَالَ: سَمِعْتُ عَمْرُو بن عُثْمَانَ يُحَدِّثُ عَنِ ابْنِ أَبِي حُسَيْنٍ، قَالَ: كَانَتْ دُرَّةُ بنتُ أَبِي لَهَبٍ عِنْدَ الْحَارِثِ بن عَبْدِ اللَّهِ بن نَوْفَلٍ، فَوَلَدَتْ لَهُ عُقْبَةَ، وَالْوَلِيدَ، وَأَبَا مُسْلِمٍ، ثُمَّ أَتَتِ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْمَدِينَةِ، فَأَكْثَرَ النَّاسُ فِي أَبَوَيْهَا فَجَاءَتْ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ، فَقَالَتْ: يَا رَسُولَ اللَّهِ، مَا وَلَدَ الْكُفَّارُ غَيْرِي؟ فَقَالَ لَهَا النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:وَمَا ذَاكَ؟ قَالَتْ: قَدْ آذَانِي أَهْلُ الْمَدِينَةِ فِي أَبَوَيَّ، فَقَالَ لَهَا رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ:إِذَا صَلَّيْتِ الظُّهْرَ فَصَلِّي حَيْثُ أَرَى، فَصَلَّى النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ الظُّهْرَ ثُمَّ الْتَفَتَ إِلَيْهَا، فَأَقْبَلَ عَلَى النَّاسِ بِوَجْهِهِ، فَقَالَ:أَيُّهَا النَّاسُ، أَلَكُمْ نَسَبٌ وَلَيْسَ لِي نَسَبٌ؟فَوَثَبَ عُمَرُ، فَقَالَ: غَضِبَ اللَّهُ عَلَى مَنْ أَغْضَبَكَ، فَقَالَ:هَذِهِ بنتُ عَمِّي فَلا يَقُلْ لَهَا أَحَدٌ إِلا خَيْرًا. المعجم الكبير للطبراني (17 / 494)

துர்ரா என்றொரு பெண்மனி இருந்ததாகவும் மக்கள் அவர்களை விமர்சித்ததை நபியவர்களிடம் முறையிட்டதாகவும் அதற்காக நபியவர்கள் மக்களை எச்சரித்தார்கள் என்றெல்லாம் மேலுள்ள செய்தியைப் போன்றே இதே தப்ராயின் முஃஜமுல் கபீரில், பாகம் 17, பக்கம் 494 ல் பதிவு செய்யப்பட்டுள்ளது.

الاسم : عبد الله بن عبد الرحمن بن أبى حسين بن الحارث بن عامر بن نوفل القرشى النوفلى المكى ( ابن عم عمر بن سعيد بن أبى حسين )
الطبقة : 5 : من صغار التابعين
روى له : خ م د ت س ق ( البخاري - مسلم - أبو داود - الترمذي - النسائي - ابن ماجه)
رتبته عند ابن حجر : ثقة عالم بالمناسك و رتبته عند الذهبي : لم يذكرها

நபியவர்கள் காலத்தில் நடந்ததாக ஒரு செய்தியையோ சம்பவத்தையோ அறிவிப்பவர் கண்டிப்பாக ஸஹாபியாகத்தான் இருக்க வேண்டும். அந்த ஸஹாபிதான் நபியவர்களிடமிருந்து அறிவிக்கிற முதல் அறிவிப்பாளராக இருக்கவும் வேண்டும். ஆனால் இந்தச் செய்தியை அறிவிக்கிற முதல் அறிவிப்பாளராக இருப்பவர் ஸஹாபிக்கு அடுத்துள்ள படித்தரத்தில் இருக்கிற தாபியீன் ஆவார். இன்னும் சொல்வதாக இருந்தால் தாபியீன்களிலேயே இவர் சிறிய தாபியீதான். சிறிய தாபியீ என்றால், வயது முதிர்ந்த நிலையிலுள்ள ஸஹாபாக்களில் சிலரை, 10 அல்லது 15 வயது நிரம்பிய தாபியீ பார்ப்பது என்று பொருள்.

இந்த தாபியீன்களில் சிறிய தாபியியாக இருப்பவர் நபிகள் நாயகம் காலத்தில் நடந்த செய்தியை எப்படி அறிவிக்க முடியும்? ஸஹாபி சொன்னதாகத்தான் அறிவிக்க முடியுமே தவிர நபியவர்கள் சொன்னதாக ஒருபோதும் அறிவிக்கவே முடியாது. இன்னும் சொல்வதாக இருப்பின் ஸஹாபியிடமிருந்து கூட அறிவிக்க வாய்ப்புக்கள் மிகக் குறைவுதான். இரண்டு ஸஹாபிகளிடமிருந்துதான் தாபியீன்களில் சிறிய தாபியி அறிவிக்க முடியும். அறிவிப்பதற்கு வாய்ப்புக்கள் அதிகம். எனவே இப்படிப்பட்ட நிலையில் அறிவிக்கப்படுகிற செய்தியும் ஏற்புடைய செய்தியாக இல்லை என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே தொழுகையில் இந்த அத்தியாயத்தை ஓதக்கூடாது என்பது கடைந்தெடுத்த பொய்க் கதையாகும். இந்த சூரா குர்ஆனின் 114

அத்தியாயங்களின் இடையில்தான் இருக்கிறது. இந்த சூராவைத் தாண்டியும் சில அத்தியாயங்கள் குர்ஆனில் இடம் பெறுகிறது. குர்ஆனை வரிசையாக ஓதிக்கொண்டே வரும்போது இந்த அத்தியாயத்தை மட்டும் விட்டுவிட்டு அடுத்த அத்தியாயத்திற்குத் தாண்டிவிட வேண்டும் என்பதற்கு ஏதாவது ஒரு ஆதாரப்பூர்வமான செய்தியையாவது காட்டமுடியுமா? தலைகீழாக நின்றாலும் காட்டவே முடியாது என்பதுதான் உண்மை. தொழுகையில் ஓதக்கூடாது என்றால் ஏன் குர்ஆனில் இப்படியொரு அத்தியாயம் இடம் பெற வேண்டும்? அல்லாஹ்வினுடைய பதிவிலி-ருந்து எடுத்திருக்கலாமே!

இந்த அத்தியாயம் நபியவர்களுடைய மனதினைப் புண்படுத்துவதாக இருந்திருந்தால் அல்லாஹ் இந்த அத்தியாயத்தை வாபஸ் பெற்றிருப்பான். அதற்கான ஆதாரங்களும் நிச்சயமாக குர்ஆனிலோ அல்லது ஹதீஸின் மூலமாகவோ பதிவு செய்யப்பட்டிருக்கும். ஆனால் அப்படி எந்தப் பதிவுகளும் இல்லை.

மேலும் அல்லாஹ் இந்த அத்தியாயத்தைத் தனது குர்ஆனில் பாதுகாத்துள்ளான். ஸஹாபாக்களும் பதிவுகளைச் சரிசெய்யும் போது இந்த அத்தியாயத்தையும் சேர்த்துத்தான் பதிவு செய்துள்ளார்கள். எனவே தாராளமாக இந்த அத்தியாயத்தைத் தொழுகையிலும் தொழுகைக்கு வெளியிலும் ஓதலாம். தொழுகையில் இந்த அத்தியாயத்தை ஓதக்கூடாது என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை என்பதினால் எவர்களது கற்பனைக் கூற்றையும் நாம் ஏற்றுக் கொள்ளத் தேவையில்லை.

சூரத்துல் லஹபும் மற்றொரு கற்பனைக் கதையும்

இந்த அத்தியாயம் தொடர்பாக இன்னொரு கட்டுக்கதையும் புனைந்து
சொல்லப்படுகிறது. அபூலஹபின் இரண்டு கரங்களும் அவனும் நாசமாகட்டும்! என்ற இந்த வசனத்தினை விளக்குகிறோம் என்ற பெயரில், முஹம்மது நபி பிறந்த செய்தியைக் கேட்ட அபூலஹப் தனது அடிமையை விடுதலை செய்யும் போது தனது சுட்டு விரலால் சுட்டிக் காட்டித்தான் விடுதலை செய்தான். எனவே அவனது கையின் விரல்களில் சுட்டு விரலை மட்டும் நரகம் தீண்டாது என உலமாப் பெருமக்கள் தங்களது உரைகளில் சொல்லுவார்கள்.

இதுமாதிரியான ஒரு கருத்து புகாரியிலேயே இருக்கத்தான் செய்கிறது. புகாரியில் இருந்தவுடனேயே ஏற்றுக் கொள்ள வேண்டும் என்கிற அவசியம் ஒன்றும் நமக்கில்லை. புகாரியில் பதிவு செய்யப்பட்ட அந்தச் செய்தியை நபிகள் நாயகம் சொன்னதற்கான ஆதாரம் உள்ளதா? இல்லையா? என்று ஆய்வு செய்ய வேண்டும். யார் சொன்னதாக பதிவு செய்யப்பட்டிருக்கிறது என்பதையும் ஆய்வு செய்ய வேண்டும். அறிவிப்பாளர் தொடர் வரிசையிலுள்ளவர்கள் அனைவரும் சரியானவர்களா என்று ஆய்வு செய்ய வேண்டும். அந்தக் கருத்து குர்ஆனுடன் நேரடியாக மோதுகிறதா? என்றெல்லாம் ஆய்வு செய்து பார்த்துவிட்டுத்தான் புகாரியில் இருக்கிறது என்று சொல்ல வேண்டுமே தவிர புகாரியில் இருந்தாலே அது ஹதீஸ் என்று நம்பிவிடக் கூடாது.
அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

ஸுவைபா, அபூலஹபின் அடிமைப் பெண்ணாவார். அபூலஹப் அவரை விடுதலை செய்திருந்தார். அவர் நபி (ஸல்) அவர்களுக்குப் பாலூட்டினார். அபூலஹப் இறந்த போது அவருடைய குடும்பத்தாரில் ஒருவர் அவரைக் (கனவில்) கண்டார். அபூலஹப் மோசமான நிலையில் அவருக்குக் காட்டப்பட்டார்.

அபூலஹபிடம், "(மரணத்திற்குப் பிறகு) நீ எதிர் கொண்டது என்ன?'' என்று அவர் கேட்டார். உங்களை விட்டுப் பிரிந்த பின் ஒரு சுகத்தையும் நான் சந்திக்கவில்லை. ஆயினும், நான் ஸுவைபாவை விடுதலை செய்ததற்குப் பிரதியாக இந்த விரல்கüனூடே எனக்கு நீர் புகட்டப்படுகிறது'' என்று கூறினார். (புகாரி 5101)

இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் உள்ள ஒருவர்தான் இதை அறிவிக்கிறார். அதுவும் அபூலஹபின் குடும்பத்தாரில் யாரோ ஒருவர் கனவு கண்டதாகவும் அவரது கணவில் அபூலஹப் பேசிக் கொண்டதாகவும்தான் இருக்கிறதே தவிர இதற்கும் நபிகள் நாயகத்திற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை.
அபூலஹபின் குடும்பத்தாரில் உள்ளவர் கனவு கண்டால் என்ன? கனவு காணாவிட்டால் நமக்கென்ன?

நபியவர்கள் கனவு கண்டால் அது வஹீ என்பதற்குச் சான்று இருக்கிறது. அபூலஹபின் குடும்பத்தாரில் ஒருவர் கனவு கண்டதினால் அவரையும் நபியாக்க முடியுமா? இப்படியெல்லாமல் சிந்தித்துப் பார்க்காமல் புகாரியில் இருக்கிறது என்று மட்டும் பார்க்கக் கூடாது.

இந்தச் செய்தி குர்ஆனுடன் நேரடியாக மோதுகிறது. அல்லாஹ் இந்த அத்தியாயத்தின் ஆரம்பத்திலேயே அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும் என்று சொல்லுகிறான். கை நாசமாகட்டும் என்று சொல்லும் போது அந்தக் கையில்தான் விரல்களும் இருக்கின்றன. மேலும் ஒரு கை நாசமாகட்டும் என்றுகூட அல்லாஹ் சொல்லாமல் இரண்டு கைகளும் நாசமாகட்டும் என்றும் சொல்லுகிறான். இன்று விளக்கம் கொடுப்பவர்களுக்கு சாட்டையடி கொடுப்பதற்குச் சொன்னதைப் போன்றே நமக்குத் தோன்றுகிறது.

அதுவும் எடுத்த எடுப்பிலேயே அவன் நாசமாகட்டும் என்று சொல்லாமல் அவனது இரு கைகள் நாசமாகட்டும் பிறகு அவனும் நாசமாகட்டும் என்று அல்லாஹ் நேரடியாகச் சொன்ன பிறகும், முஹம்மது நபி பிறந்த சந்தோசத்திற்காக அபூலஹப் தனது அடிமைப் பெண் சுவைபாவை விடுதலை செய்ததினால் அபூலஹபின் சுட்டுவிரலில் பால் சுரக்கிறது என்ற கருத்து குர்ஆனுடன் நேரடியாகத்தான் மோதுகிறது.

அவனது இரு கைகளும் நாசமாகட்டும் என்பதின் மூலம் அவனது
இரண்டு கைகளைத்தாம் முதலி-ல் நரகம் தீண்டும் என்று அல்லாஹ் கொடுத்த தீர்ப்பை விட, கனவில் அபூலஹப் சொன்னது இவர்களுக்குப் பெரிதாகத் தெரிகிறது. நபிகள் நாயகத்தைத் தவிர வேறு யார் வேண்டுமானாலும்
நான்தான் அபூலஹப் என்று சொல்லி-க் கொண்டு நமது கனவில்கூட வரத்தான் செய்யலாம். அபூலஹப் நமது கனவில் வந்து நான் சுவர்க்கத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் அபூலஹப் சுவர்க்கத்திற்குச் செல்வான் என்று அர்த்தமாகிவிடுமா?

அதேபோன்று நாளைக்கு ஃபிர்அவ்னோ, அபூஜஹ்லோ நமது கனவில் வந்து நான்தான் ஃபிர்அவ்ன், அபூஜஹ்ல், நான் சுவர்க்கத்தில் இருக்கிறேன் என்று சொன்னால் உடனே ஃபிர்அவ்னுக்கும் அபூஜஹ் லுக்கும் சுவர்க்கம் என்று சொல்வீர்களா? ஃபிர்அவ்னும் அபூஜஹ்லும் நரகத்திற்குச் செல்வார்கள் என்று அல்லாஹ்வும் ரசூலும் சொன்ன பிறகு ஷைத்தான் கனவில் எதையாவது சொல்வதை நம்பி முடிவெடுப்பீர்களா? அல்லாஹ்வை நம்புவதை விட ஷைத்தானை நம்புவீர்களா?

மேலும் அபூலஹபை கனவில் அவனது குடுப்பத்தாரில் ஒருவர் பார்த்தார் என்றுதான் புகாரியில் பதிவாகியிருக்கிறது. அதிலும்கூட கனவு கண்டவர் யார்? என்று எந்தத் தகவலும் இல்லை. அபூலஹப் குடும்பத்தில் கனவு கண்ட அந்த நபர் யார்? அவர் முஃமினா? முஃமினில்லையா?

மேலும் பொதுவாக கனவைத் தவிர வேறு எந்த விசயத்திற்கும் சொன்ன நபர் தேவைப்படாது. நான் பயான் செய்கிறேன். நீங்கள் அதைப் பார்த்துவிட்டு யாருக்காவது அந்தச் செய்தியைச் சொல்லலாம். மேடையில் நின்று கொண்டு நான் காதுமடலைச் சொரிந்து கொண்டு இருக்கிறேன் என்று வைத்துக் கொள்ளுங்கள். அதை நீங்கள் பார்த்துவிட்டு இவர் காதுமடலைச் சொரிந்து கொண்டு இருந்தார் என்று என்னைப் பற்றி சொல்லலாம்.

இதுபோன்ற செய்திகளை மற்ற நபர்கள் சொல்லமுடியும். ஆனால் கனவைப் பொறுத்த வரை எவர் கனவு கண்டாரோ அவர் சொல்லுகிறதுதான் செய்தி. கனவைக் கண்டவர் பிறரிடம் சொன்னால்தான் பிறருக்கு அந்தச் செய்தி தெரியும். உதாரணத்திற்குச் சொல்வதாக இருப்பின், நான் இன்று இரவு ஒரு கனவு காண்கிறேன். அந்தக் கனவிலுள்ள செய்தி என்ன என்று உங்களிடத்தில் கேட்டால், உங்களுக்குத் தெரியுமா? யூகிக்க முடியுமா? பரிசோதனைக்கு நிற்குமா? நிச்சயமாகத் தெரியாது.

நான் கனவு கண்டால் அல்லாஹ்வுக்கு முத-லில் தெரியும். அதற்குப் பிறகு எனக்குத்தான் தெரியும். நான் பிறருக்குச் சொன்னால்தான் அந்தச் செய்தி இன்னொருவருக்குத் தெரிய வாய்ப்பு இருக்கிறது. நான் அதைச் சொல்லாத வரை எனது மனைவிக்கோ எனது பிள்ளைகளுக்கு எனது தாய் தந்தையருக்கோ எனது நண்பருக்கோ யாருக்குமே தெரியாது. இதுதான் கனவிற்குள்ள தாத்பரீயம்.
அப்படியெனில் அபூலஹபைக் கணவில் எவனோ கண்டார் என்று பதிவாகியுள்ளது என்றால் "அந்த எவனோ யார்?'', அவர் பார்த்ததை யாரிடம் சொன்னர்?. கனவில் ஒருவர் பார்த்தார் என்றால் அவரே பார்த்துக் கொண்டு அவரே வைத்துக் கொண்டார் என்றால், அது உனக்கு எப்படித் தெரிந்திருக்கும்? செய்தி புகாரியில்தான் இருக்கிறது. புகாரியில் என்ன இருக்கிறது? என்று பார்க்க வேண்டாமா?

அபூலஹபின் சொந்தக்காரர் யாரோ கனவில் கண்டதாகத்தான் இருக்கிறது. யார் கனவு கண்டது என்றும், அவர் கண்ட கனவை யாரிடம் சொன்னார் என்று இல்லாவிட்டாலும் புகாரியில் இருக்கிற ஒரே காரணத்தினால் அதை ஹதீஸ் என்றோ அல்லது சரியான வரலாற்றுச் சம்பவம் என்றோ ஏற்றுக் கொள்ளமுடியுமா? முடியவே முடியாது.

புகாரியில் இருக்கிற செய்தியை ஏற்றுக் கொள்ள வேண்டுமானால், நபியவர்கள் இந்தச் செய்தியைச் சொன்னார்கள் என்று யாராவது ஒரு ஸஹாபியின் மூலம் அறிவிக்கப்பட்டு அதன் அறிவிப்பாளர் சங்கிலித் தொடர் இமாம் புகாரி வரை விடுபடாமலும் குறைசொல்லப்படாத நபர்களால் அறிவிக்கப்பட்டும் அந்தச் செய்தியின் கருத்து குர்ஆனுக்கு நேரடியாக முரண்படாமலும் இருந்தால்தான் ஏற்றுக் கொள்ளமுடியும்.

புகாரியில் இருப்பதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்றுக் கொள்ளக் கூடாது என்பதற்கு புகாரியிலிருந்து இன்னொரு உதாரணம் சொல்வதாக இருப்பின், நாங்கள் ஜாஹிலிய்யா காலத்தில் குரங்கும் குரங்கும் விபச்சாரம் செய்தால், கல்லெறிந்து கொள்வோம் என்று பதிவாகியிருக்கிறது. இதை ஏற்றுக் கொள்ளமுடியுமா? குரங்கு எப்படி விபச்சாரம் செய்யும்? குரங்குக்கு ஏது விபச்சாரம்? யாருக்கு நிக்காஹ் கடமையோ அவனுக்குத்தான் விபச்சாரம் என்பதையே கற்பனை செய்யமுடியும். குரங்கு மற்ற எந்தக் குரங்கிடம் சென்றாலும் விபச்சாரமாகுமா? அது தாயிடமும் போகும். பிள்ளையிடமும் போகும். அதுதான் அதற்குரிய விதி. மனிதனைப் போன்று அதற்கு எந்த ஒரு சட்டமும் கிடையாது. குரங்குக்கு திருமணம் முடித்தீர்களா? அப்படித் திருமணம் முடித்திருந்தால் யார் வலி-யாக இருந்து அந்தக் குரங்கு திருமணத்தை நடத்தினார்? இந்தக் குரங்கு கணவர் குரங்கு, அந்தக் குரங்கு மனைவி குரங்கு என்றெல்லாம் எந்த அடிப்படையில் புரிந்து கொண்டீர்கள்? அப்படி ஏதாவது அடையாளம் எதுவும் இருக்கிறதா? எனவே புகாரியில்தான் இருக்கிறது. இருப்பினும் அதன் கருத்தையும் அறிவிப்பாளர் தொடரையும் ஆராய்ந்து விட்டுத்தான் அதை அறிவிக்க வேண்டும்.

புகாரியில் இருந்தாலேயே அதை ஹதீஸ் என்று ஏற்றாகவேண்டும் என்கிற எந்த விதிமுறையும் ஹதீஸ் கலையில் கிடையாது. அப்படியிருந்தால் கூட அந்த விதிமுறையை நாம் எடுக்கத் தேவையில்லை என்பதைப் புரிந்து கொள்ள வேண்டும்.

எனவே மேற்கண்ட அபூலஹப் சம்பந்தப்பட்ட கனவு ஹதீஸின் நிலையும் இந்த குரங்கு செய்தியை விட தவறான கருத்தைக் கொண்ட செய்தியாகும். மேலும் கனவில் ஒரு காஃபிர் வந்து சொன்னால் ஏற்றுக் கொள்வீர்களா? என்றால், அதை ஒருக்காலும் நாம் ஏற்றுக் கொள்ளவே கூடாது. ஒரு காஃபிரே கனவு கண்டாலும் அந்தக் கனவை அவர் நபிகள் நாயகத்திடம் கேட்டு அந்தக் கனவிற்கு நபிகள் நாயகம் ஏதேனும் விளக்கம் கொடுத்தால் அந்த விளக்கத்தைக் கூட ஒரு முஸ்-லிமாக இருக்கிற ஸஹாபி அறிவித்தால்தான் அதனை ஹதீஸ் என்று ஏற்றுக் கொள்ளமுடியும். “ எனவே அபூலஹபை கனவில் கண்ட இந்தச் செய்தியை நபியவர்களிடம் கூறி, நபியவர்களும் அபூலஹபின் விர-லில் மட்டும் பால் வடியத்தான் செய்கிறது என்று ஏற்றுக் கொண்டிருந்தாலோ அல்லது ஒன்றும் சொல்லாமல் மௌனத்தின் மூலமாக ஆதரித்து இருந்தாலோதான் அது ஹதீஸ் என்கிற நிலையை அடையும். எனவே நபிகள் நாயகத்தின் அங்கீகாரம் இல்லாத அபூலஹபின் கையின் விர-லில் பால் சுரக்கிறது என்கிற இந்தச் செய்தி புகாரியி-ருந்தாலும் சரி!, வேறெந்த நபர் சொன்னாலும்

சரி! அதனை நாம் ஒருக்காலும் ஏற்றுக் கொள்ளவே கூடாது.

எனவே காஃபிர் என்ன வேண்டுமானாலும் சொல்லுவார்கள், அதையெல்லாம் ஒரு வாதமாகப் பேசவே வேண்டாம். மண்ணறையிலி-ருந்து எழுப்பப்படும் போது நாங்கள் தூங்கிக் கொண்டிருந்தோம் என்று சொல்வார்கள் என்று திருக்குர்ஆனில் வருகிறது. அதனால் அவர்கள் தூங்கிக் கொண்டிருந்தார்கள் என்று அர்த்தமாகுமா? என்றால் ஆகாது. காஃபிர் தண்டனை பெற்றுக் கொண்டுதான் மண்ணறையில் இருப்பார்கள் என்பதற்கு ஏராளமான சான்றுகளைப் பார்க்கிறோம். அல்லாஹ்வோ ரசூலோ சொன்னார்களா என்றுதான் பார்க்கவேண்டுமே தவிர காஃபிர் சொன்னதையெல்லாம் பார்க்கவே கூடாது.

ஸூர் ஊதப்படும். உடனே அவர்கள் சமாதிகளிலிருந்து தமது இறைவனை நோக்கி விரைவார்கள். எங்கள் உறக்கத் தலத்தி-லிருந்து எங்களை உயிர்ப்பித்தவன் யார்?'' என்று கேட்பார்கள். அளவற்ற அருளாளன் வாக்களித்ததும், தூதர்கள் உண்மையெனக் கூறியதும் இதுவே (எனக் கூறப்படும்.) (அல்குர்ஆன் 36:51,52)

இந்த வசனத்தின்படி பார்த்தால், காஃபிர்கள் சொன்ன பிரகாரம் மண்ணறைகளில் தூங்கிக் கொண்டா இருந்தார்கள்? இல்லவே இல்லை. அவர்கள் எதையாவது உளறுவார்கள் என்றுதான் விளங்கிக் கொள்ள வேண்டும்.

எனவே கனவில்தான் இந்தக் கதைகளெல்லாம் வந்திருக்கிறதே தவிர உண்மை இல்லை. இதுவெல்லாம் பொய். எனவே அபூலஹபின் கைக்குத்தான் முத-லில் நரகம் என்பது குர்ஆனின் செய்தி. அதில் எந்தச் சந்தேகமும் நமக்கு இருக்கவே கூடாது. அபூலஹபின் கைக்குப் பிறகு தான் அவனுக்கு நரகம் என்பதுதான் நூறுக்கு இருநூறு சதம் சரியான செய்தியாகும். எனவே அல்லாஹ் நாசமாக்கிவிட்ட கையில் எதுவுமே வராது. கைதான் எரியும். காஃபிர்களுக்குச் சீல்,சலத்தைத் தவிர வேறு உணவு கிடையாது என்று அல்லாஹ் திருமறைக் குர்ஆனில் சொல்லி-விட்டதினால் அந்த உணவுதான் அவனுக்குக் கிடைக்கும். ஸக்கூமைத்தான் அவன் சாப்பிட வேண்டும். இதிலெல்லாம் விதி விலக்கு கொடுக்கவே முடியாது.

இந்த விசயத்தில் நபிகள் நாயகத்தின் பெரிய தந்தையான அபூதாலி-புக்குத்தான் சிறிய அளவுக்கு விதிவிலக்கு இருக்கிறது. அபூதா-லிபுக்கு நரகில் சிறிய அளவுக்கு தண்டனை குறைக்கப்படக் காரணம், அவர் நபியவர்களின் பெரிய தந்தை என்பதற்காக இல்லை. அவர் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் இஸ்லாம் வளர்வதற்குக் காரணமாக இருந்தார் என்பதினாலாகும். அவர் உயிருடன் இருக்கிற வரைக்கும் மக்காவிலுள்ள ஒரு நபர்கூட நபியவர்கள் மீது கைவைக்க முடியவில்லை. அவரது செல்வாக்கையும் அந்தஸ்தையும் பயன்படுத்தி நபியவர்களுக்கு உணவு கொடுத்தார், தொழிலைக் கற்றுக் கொடுத்தார், நபியவர்களை ஆளாக்கினார், நபியவர்களுக்கு கல்யாணம் முடித்துவைத்தார், அதைக்காட்டிலும் முஹம்மதாகிய நமது தம்பி மகன் தன்னை இறைத்தூதர் என்று அறிவித்த போது, நான் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளாவிட்டாலும் முஹம்மதின் மீது கைவைத்தால் கையை எடுத்துவிடுவேன் என்று மக்காவிலுள்ளவர்களுக்கு எச்சரிக்கை செய்தார்.

அதுபோன்று அபூதாலி-பிடம் சென்று முஹம்மதை விரட்டிவிடுங்கள் என்றெல்லாம் இடைஞ்சல் கொடுக்கும் போது முடியாது என்று முஹம்மது நபிக்கு பக்கபலமாக இருந்தார்கள். இப்படி எல்லா வகையிலும் இஸ்லாத்திற்கு உறுதுணையாக இருந்ததினால், நரகில் வேதனை செய்யப்படக்கூடிய காஃபிர்களில் குறைந்த தண்டனை பெறக் கூடியவர் எனது பெரிய தந்தை அபூதா-லிப்தான் என்று நபிவர்கள் கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடம் அவர்களுடைய பெரிய தந்தை அபூதா-லிப் அவர்களைப் பற்றிக் கூறப்பட்ட போது அவர்கள், "அவருக்கு என் பரிந்துரை மறுமை நாளில் பயனளிக்கக் கூடும்; (அதனால்) நரக நெருப்பு அவரது (முழு உடலையும் தீண்டாமல்) கணுக்கால்கள் வரை மட்டுமே தீண்டும்படி ஆக்கப்படலாம்.

(ஆனால்) அதனால் அவருடைய மூளை (தகித்துக்) கொதிக்கும்'' என்று சொல்ல நான் கேட்டேன்.

மற்றோர் அறிவிப்பில் "அவரது மூளையின் மூலப்பகுதி (தகித்துக்) கொதித்துக் கொண்டிருக்கும் ''என்று காணப்படுகிறது.

அறிவிப்பவர்: அபூசயீத் அல்குத்ரீ (ர-லி), நூல்: புகாரி 3885,6564

ஆனாலும் அவரால் ஒருக்காலும் சுவர்க்கமே வரமுடியாது. நிரந்தர நரகில்தான் இருப்பார். அந்த கடைசி வேதனை என்ன வென்றால், நரகத்தில் அவரது இரு பாதங்களுக்கும் நெருப்பினாலான செருப்பு அணிவிக்கப்படும். அந்த நெருப்புச் செருப்பின் சூடு அவரது கால்களை மட்டும் பொசுக்காது, அவரது மூளையைக் கொதிக்கச் செய்யும் அளவுக்கு இருக்கும். இதுதான் நரகத்தின் கடைசி தண்டனை என்றார்கள். எனவே இதிலிருந்து எல்லா காஃபிரையும் ஒரே மாதிரி அல்லாஹ் தண்டிக்க மாட்டான் என்பதைப் புரிந்து கொள்ளமுடிகிறது.

ஒருவன் தான் இஸ்லாத்திற்கு வராவிட்டாலும் நூறுபேர் இஸ்லாத்திற்கு வருவதற்கு உதவி செய்கிறான் என்றால் அந்த காஃபிருக்கும் மற்ற காஃபிருக்கும் நிறையவே வித்தியாசம் இருக்கத்தான் செய்கிறது. எல்லாருக்கும் ஒரே மாதிரி தண்டனை கொடுப்பது சரியில்லைதான். அவரவர் தவறுக்குத் தகுந்தமாதிரி தண்டிப்பதுதான் நியாயமானதாகக் கூட இருக்கமுடியும். நிரந்தர நரகம் என்பதில் வேண்டுமானால் அனைவரும் ஒரே நிலையில் இருந்தாலும் அந்த நரகத்திலும் அவரவர் செய்த தவறுக்குத் தக்கவாறுதான் அல்லாஹ் தண்டனை கொடுப்பான்.

சொர்க்கத்தில் எப்படி படித்தரம் இருக்கிறதோ அதுபோன்று நரகத்திலும் படித்தரம் இருக்கத்தான் செய்கிறது. ஒரு கொலை செய்தவனுக்கும் பத்து கொலை செய்தவனுக்கும் ஒரே மாதிரி தண்டனை கொடுக்க முடியாதுதான். பலவிதமான தண்டனைகள் கொடுப்பதுதான் சரியாக இருக்கமுடியும். அதுமாதிரியான வித்தியாசம் வேண்டுமானால் இருக்குமே தவிர, நிரந்தர நரகிலி-ருந்து காஃபிர்கள் யாரும் தப்பிக்கவே முடியாது. ஆனால் இவனுக்கு (அபூலஹப்) அதுமாதிரியெல்லாம் கிடையவே கிடையாது.

அபூலஹபைப் பொறுத்தவரை நபிகள் நாயகத்தின் ஆரம்ப காலத்திலும் எதிர்த்து, காலமெல்லாம் எதிர்த்து, அவனது மனைவியும் எதிர்க்கத் தூண்டி, நபியவர்களை எதிர்ப்பதையே முழுநேர வேலையாகச் செய்து கொண்டிருந்து அதே நிலையில் மரணித்தவனாகவும் இருப்பதினால் அவனுக்கு எந்தவிதமான சலுகையும் கொடுப்பதற்கு எந்த நியாயமும் இல்லை என்பதுதான் உண்மையாகும். மேலும் அதற்குரிய எந்த முகாந்திரமும் கூட கிடையாது என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். இதுதான் சூரத்துல் லஹப் என்ற அத்தியாயத்தின் விளக்கமாகும். இதனை புரிந்து நடக்கின்ற நன்மக்களாக அல்லாஹ் நம்மனைவரையும் ஆக்கியருள்புரிவானாக!
 
சொற்பொழிவு குறிப்புகள்

அறியாமைக்கால பழக்கங்கள்

வீட்டுக்குள் வரும்போது சகுனம் பார்த்தல்

قَالَ سَمِعْتُ الْبَرَاءَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ نَزَلَتْ هَذِهِ الْآيَةُ فِينَا كَانَتْ الْأَنْصَارُ إِذَا حَجُّوا فَجَاءُوا لَمْ يَدْخُلُوا مِنْ قِبَلِ أَبْوَابِ بُيُوتِهِمْ وَلَكِنْ مِنْ ظُهُورِهَا فَجَاءَ رَجُلٌ مِنْ الْأَنْصَارِ فَدَخَلَ مِنْ قِبَلِ بَابِهِ فَكَأَنَّهُ عُيِّرَ بِذَلِكَ فَنَزَلَتْ وَلَيْسَ الْبِرُّ بِأَنْ تَأْتُوا الْبُيُوتَ مِنْ ظُهُورِهَا وَلَكِنَّ الْبِرَّ مَنْ اتَّقَى وَأْتُوا الْبُيُوتَ مِنْ أَبْوَابِهَا رواه البخاري

அன்ஸாரிகள் ஹஜ் செய்துவிட்டு வரும்போது தங்கள் வீடுகளின் (முன்) வாசல்கள் வழியாக உள்ளே செல்ல மாட்டார்கள். மாறாக, புழக்கடைகள் வழியாகச் செல்வார்கள். அப்போது அன்ஸாரிகளைச் சேர்ந்த ஒருவர் (முன்) வாசல் வழியாக வீட்டிற்குச் சென்றார். இது (மற்றவர்களால்) குறை கூறப்பட்டது. அப்போது "உங்கள் வீடுகளுக்குள் புழக்கடைகள் (பின் வாசல்கள்) வழியாகச் செல்வது நன்மையான காரியமன்று; மாறாக (அல்லாஹ்வை) அஞ்சி நடப்பதே நன்மையான காரியமாகும். ஆகவே வீடுகளுக்கு அதன் வாசல்கள் வழியாகச் செல்லுங்கள்!'' எனும் (2:189ஆவது) இறைவசனம்

அன்ஸாரிகளாகிய எங்கள் விஷயத்தில் அருளப்பெற்றது.
அறிவிப்பவர் : பரா (ரலி-), நூல் : புகாரி (1803)

ஒப்பாரி வைத்து அழுவது

أَنَّ أَبَا سَلَّامٍ حَدَّثَهُ أَنَّ أَبَا مَالِكٍ الْأَشْعَرِيَّ حَدَّثَهُ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَرْبَعٌ فِي أُمَّتِي مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ لَا يَتْرُكُونَهُنَّ الْفَخْرُ فِي الْأَحْسَابِ وَالطَّعْنُ فِي الْأَنْسَابِ وَالْاسْتِسْقَاءُ بِالنُّجُومِ وَالنِّيَاحَةُ وَقَالَ النَّائِحَةُ إِذَا لَمْ تَتُبْ قَبْلَ مَوْتِهَا تُقَامُ يَوْمَ الْقِيَامَةِ وَعَلَيْهَا سِرْبَالٌ مِنْ قَطِرَانٍ وَدِرْعٌ مِنْ جَرَبٍ رواه مسلم

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் சமுதாயத்தாரிடையே நிலவுகின்ற
நான்கு நடைமுறைகள் அறியாமைக் கால வழக்கங்களாகும். (பெரும்பாலான) மக்கள் அவற்றைக் கைவிடமாட்டார்கள்.

(அவையாவன:) குலப்பெருமை பாராட்டுவது, (அடுத்தவரின்) பாரம்பரியத்தைக் குறைகூறுவது, கிரகங்களால் மழை பொழியும் என எதிர்பார்ப்பது மற்றும் ஒப்பாரிவைத்து அழுவது.

ஒப்பாரிவைக்கும் வழக்கமுடைய பெண், தான் இறப்பதற்கு முன் பாவமன்னிப்புக் கோரி (அதிலிருந்து) மீளாவிட்டால், மறுமை நாளில் தாரால் (கீல்) ஆன நீளங்கியும் சொறிசிரங்குச் சட்டையும் அணிந்தவளாக அவள் நிறுத்தப்படுவாள்.
அறிவிப்பவர் ; அபூமாலிலி-க் கஅப் பின் ஆஸிம் அல்அஷ்அரீ (ரலி-), நூல் : முஸ்லி-ம் 1700)

ஜோதிடனிடம் செல்வது

عَنْ مُعَاوِيَةَ بْنِ الْحَكَمِ السُّلَمِيِّ قَالَ قُلْتُ يَا رَسُولَ اللَّهِ أُمُورًا كُنَّا نَصْنَعُهَا فِي الْجَاهِلِيَّةِ كُنَّا نَأْتِي الْكُهَّانَ قَالَ فَلَا تَأْتُوا الْكُهَّانَ قَالَ قُلْتُ كُنَّا نَتَطَيَّرُ قَالَ ذَاكَ شَيْءٌ يَجِدُهُ أَحَدُكُمْ فِي نَفْسِهِ فَلَا يَصُدَّنَّكُمْ رواه مسلم

முஆவியா பின் அல்ஹகம் அஸ்ஸுலமீ (ர-லி) அவர்கள் கூறியதாவது: நான் (நபி (ஸல்) அவர்களிடம்), "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் பல (பாவ) காரியங்களைச் செய்துவந்தோம்; சோதிடர்களிடம் சென்று (குறி கேட்டுக்)கொண்டிருந்தோம்'' என்று கூறினேன். அதற்கு அவர்கள், "சோதிடர்களிடம் நீங்கள் செல்லாதீர்கள்'' என்றார்கள். மேலும், "நாங்கள் பறவையை வைத்துக் குறி பார்த்துக்கொண்டிருந்தோம்'' என்று நான் கூறினேன். அதற்கு நபியவர்கள், "இது உங்களில் சிலர் தம் உள்ளங்களில் காணும் (ஐதிகம் சார்ந்த) விஷயமாகும். இது உங்களை (செயலாற்றுவதி-லிருந்து) தடுத்துவிட வேண்டாம்'' என்று கூறினார்கள்.

பறவை சகுணம்

عَنْ أَبِي هُرَيْرَةَ رَضِيَ اللَّهُ عَنْهُ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ لَا عَدْوَى وَلَا طِيَرَةَ وَلَا هَامَةَ وَلَا صَفَرَ رواه البخاري
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: தொற்று நோய் கிடையாது. பறவை
சகுனம் ஏதும் கிடையாது. ஆந்தை சகுனம் ஏதும் கிடையாது. "ஸஃபர்' மாதம் பீடை என்பதும் கிடையாது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி), நூல் : புகாரி (5757)

பீடை மாதம்

عَنْ عَائِشَةَ قَالَتْ تَزَوَّجَنِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فِي شَوَّالٍ وَبَنَى بِي فِي شَوَّالٍ فَأَيُّ نِسَاءِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَانَ أَحْظَى عِنْدَهُ مِنِّي قَالَ وَكَانَتْ عَائِشَةُ تَسْتَحِبُّ أَنْ تُدْخِلَ نِسَاءَهَا فِي شَوَّالٍ و حَدَّثَنَاه ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سُفْيَانُ بِهَذَا الْإِسْنَادِ وَلَمْ يَذْكُرْ فِعْلَ عَائِشَةَ رواه مسلم

ஆயிஷா (ர-லி) அவர்கள் கூறியதாவது: அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்துகொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில்.

அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்?
நூல் : முஸ்-லிம் (2782)

நல்ல நேரம் கெட்ட நேரம்

عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اللَّهُ تَعَالَى يُؤْذِينِي ابْنُ آدَمَ يَسُبُّ الدَّهْرَ وَأَنَا الدَّهْرُ بِيَدِي الْأَمْرُ أُقَلِّبُ اللَّيْلَ وَالنَّهَارَ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: "ஆதமின் மகன் (மனிதன்) என்னைப் புண்படுத்துகின்றான். அவன் காலத்தை ஏசுகின்றான். நானே காலம் (படைத்தவன்) ஆவேன். என் கரத்திலேயே அதிகார மனைத்தும் உள்ளது. நானே இரவையும் பகலையும் மாற்றி மாற்றிக் கொண்டு வருகின்றேன்'' என்று அல்லாஹ் கூறுகின்றான்.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி-), நூல் : புகாரி (7491)

அறியாமைக் கால பழக்கங்கள் அனைத்தும் ஒழிக்கப்பட வேண்டும்

عن جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ عن النبي صلى الله عليه وسلم قال... أَلَا كُلُّ شَيْءٍ مِنْ أَمْرِ الْجَاهِلِيَّةِ تَحْتَ قَدَمَيَّ مَوْضُوعٌ وَدِمَاءُ الْجَاهِلِيَّةِ رواه مسلم
அறியாமைக் காலத்தின் அனைத்து விவகாரங்களும் என் பாதங்களுக்குக் கீழே புதைக்கப்பட்டவை ஆகும். அறியாமைக் காலத்தில் நிகழ்ந்துவிட்ட உயிர்க் கொலைகளுக்கான பழிவாங்குதல்கள் அனைத்தும் (என் பாதங்களுக்குக் கீழே) புதைக்கப்பட்டவை ஆகும்.
அறிவிப்பவர் : ஜாபிர் (ர-லி), நூல் : முஸ்-லிம் 2334)

அறியாமைக் காலத்து பழக்கத்தை விரும்புவன்

عَنْ ابْنِ عَبَّاسٍ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ أَبْغَضُ النَّاسِ إِلَى اللَّهِ ثَلَاثَةٌ مُلْحِدٌ فِي الْحَرَمِ وَمُبْتَغٍ فِي الْإِسْلَامِ سُنَّةَ الْجَاهِلِيَّةِ وَمُطَّلِبُ دَمِ امْرِئٍ بِغَيْرِ حَقٍّ لِيُهَرِيقَ دَمَهُ رواه البخاري

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மனிதர்கüலேயே அல்லாஹ்வின் (கடுமையான) கோபத்திற்கு ஆளானோர் மூவர் ஆவர். 1. (மக்கா) புனித எல்லைக்குள் பெரும் பாவம் புரிகின்றவன். 2. இஸ்லாத்தில் இருந்துகொண்டு அறியாமைக் காலக் கலாசாரத்தை விரும்புகின்றவன். 3. ஒரு மனிதனின் இரத்தத்தைச் சிந்தச்செய்வதற்காக நியாயமின்றி அவனைக் கொலை செய்யத் தூண்டுகின்றவன்.
அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ர-லி) நூல் : புகாரி (6882)

அறியாமைக் கால பழக்கத்தை விட்டவருக்கு மன்னிப்பு

عَنْ ابْنِ مَسْعُودٍ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ قَالَ رَجُلٌ يَا رَسُولَ اللَّهِ أَنُؤَاخَذُ بِمَا عَمِلْنَا فِي الْجَاهِلِيَّةِ قَالَ مَنْ أَحْسَنَ فِي الْإِسْلَامِ لَمْ يُؤَاخَذْ بِمَا عَمِلَ فِي الْجَاهِلِيَّةِ وَمَنْ أَسَاءَ فِي الْإِسْلَامِ أُخِذَ بِالْأَوَّلِ وَالْآخِرِ رواه البخاري

இப்னு மஸ்ஊத் (ர-லி) அவர்கள் கூறியதாவது: ஒரு மனிதர்,
"அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் அறியாமைக் காலத்தில் செய்த(த)வற்றிற்காக (மறுமையில்) தண்டிக்கப்படுவோமா?'' என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், "எவர் இஸ்லாத்தில் இணைந்து நன்மை புரிகிறாரோ அவர் அறியாமைக் காலத்தில் செய்த தவறுகளுக்காகத் தண்டிக்கப்பட மாட்டார். எவர் இஸ்லாத்தில் இணைந்த பிறகு (மீண்டும் இறைமறுப்பு எனும்) தீமையைப் புரிகிறாரோ அவர் (அறியாமைக் காலத்தில் செய்த) முந்திய தவறுகளுக்காகவும், (இஸ்லாத்தை ஏற்றபின் செய்த இந்தப்) பிந்திய தவறுகளுக்காகவும் தண்டிக்கப்படுவார்'' என்று கூறினார்கள்.
அறிவிப்பவர் : இப்னு மஸ்வூத் (ர-லி), நூல் : புகாரி (6921)

தொலைக்காட்சியில் தொலைந்துவிட்ட சமுதாயம் தொடர் 4

வெட்கம் அனைத்தும் நன்மையே

சினிமாவைப் பார்க்க ஆரம்பித்த காரணத்தினால் இந்தச் சமுதாயம் எத்தனையோ நற்குணங்களை இழந்து விட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்தச் சமுதாயத்திற்கு கற்றுக் கொடுத்த வெட்கம் என்னும் அற்புதமான நற்குணத்தையும் இந்தச் சமுதாயம் இழந்து விட்டது.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மக்கள் இறைத் தூதர்கüன் சொற்களிலிருந்து அடைந்து கொண்ட (அறிவுரைகளில்) ஒன்று தான், "நீ வெட்கப்படவில்லையென்றால் விரும்பியதையெல்லாம் செய்து கொள்'' என்பதும்.
அறிவிப்பவர் : அபூ மஸ்ஊத் உக்பா பின் அம்ர் (ர-லி), நூல் : புகாரி 3483

எந்த ஒரு சிந்தனையாக இருந்தாலும் அதில் நன்மையும் தீமையும் இரண்டறக் கலந்தே தான் இருக்கும். சில வேளை கோபம் நன்மையைத் தரும், சில வேளை தீமையைத் தரும், சில நேரங்களில் பொறுமையாக இருப்பது நன்மையை ஏற்படுத்தும், சில நேரங்களில் பொறுமையாக இருப்பது தீமையை ஏற்படுத்தி விடும்.

ஆனால் வெட்கத்தைப் பற்றி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறும் போது அது முழுவதும் நன்மையாகும் என்று கூறினார்கள். வெட்கப்படுகிற உணர்வு ஒவ்வொரு மனிதனிடமும் இருக்க வேண்டும் அப்போதுதான் அவன் தவறு செய்வதில் இருந்து தன்னைக் காத்துக் கொள்ள முடியும்.

வெட்கப்படுதன் மூலம் மனிதன் நன்மையே அடைந்து கொள்கிறான்.

வெட்க உணர்வு யாரிடம் இருக்கின்றதோ அவன்தான் தீமையில் இருந்து தன்னைத் தற்காத்து பாவம் செய்வதில் இருந்தும் விடுபட முடியும். ஏனெனில் தவறு செய்யும் போது தன்னை மனிதர்கள் பார்த்துக் கொண்டிருக்கிறார்கள். என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள் என்று வெட்க உணர்வினால் அந்தப் பாவத்தில் இருந்து விடுபட்டு விடுவான். இவ்வாறுதான் விபச்சாரம், கொலை, கொள்ளை, சூது போன்ற அனைத்துப் பாவங்களில் இருந்தும் அவன் தவிர்ந்தும் நடந்து கொள்வான். வெட்க உணர்வின்மைதான் உலகத்தில் உள்ள அனைத்துத் தீமைகளுக்கும் அடிப்படைக் காரணமாகும்.

வெட்க உணர்வு இல்லையென்றால் தவறு செய்கிறவன் யாரைப் பற்றியும் கணக்கில் எடுத்துக் கொள்ள மாட்டான் அவன் தவறு அவனுடைய கண்களை மறைத்தே இருக்கும். இதனால்தான் நபி (ஸல்) அவர்கள் நமக்கு வெட்கப்படுமாறு போதனை செய்கிறார்கள். கடந்த காலத்தில் நமது முன்னோர்கள் நமக்கு இந்த வெட்க உணர்வை நம்மிடம் தந்து விட்டுச் சென்றார்கள். ஆனால் இந்தத் தொலைக் காட்சிப் பெட்டிகள் எப்போது நமது வீடுகளில் பாடல், கூத்து கும்மாளங்களுடன் புடை சூழ நுழைந்ததோ அன்றோடு நமது முன்னோர்கள் கொண்டு வந்து தந்த அந்த சிறந்த பண்பு நம்மிடமிருந்து எடுபட்டு காணாமல் போய் விட்டது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு அன்ஸாரி நபித் தோழரைக் கடந்து செல்லும் போது அவர் தன்னுடைய சகோதரனுக்கு வெட்கப்படுவதைப் பற்றிக் கண்டித்துக் கூறிக் கொண்டிருந்தார். அதைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறை நம்பிக்கையாளனாக இருந்தால் அவனிடம் வெட்கம் இருக்க வேண்டும் என்பதையே அந்த நபித் தோழருக்குக் கூறினார்கள்.
அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரைக் கடந்து சென்றார்கள். அவர் வெட்கப்படுவது குறித்து(க்கண்டித்து) தம் சகோதரருக்கு அறிவுரை கூறிக்கொண்டிருந்தார். (இதைக் கண்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் "அவரை(க் கண்டிக்காதீர்கள்;) (விட்டுவிடுங்கள். ஏனெனில் வெட்கமும் இறைநம்பிக்கையின் ஓர் அம்சமே'' என்று கூறினார்கள்.
ஆதாரம் புகாரி : 24

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை முன்மாதிரி என்று வாய்கிழியப் பேசும் நாம் அவர்களின் வெட்க உணர்வையாவது நமது வாழ்வில் எடுத்து நடந்துள்ளோமா என்று சிந்தித்துப் பார்க்க வேண்டும் நபிகளாரின் வெட்க உணர்வை அல்லாஹ்வே சிலாகித்துக் கூறுமளவிற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வெட்க உணர்வு மிகைத்துக் காணப்பட்டது என்பதை திருமறைக் குர்ஆன் நமக்கு போதிக்கின்றது.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வெட்க உணர்வு

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்முடைய வீட்டிற்கு விருந்து உண்பதற்கு அவர்களின் அருமைத் தோழர்களை அழைத்திருந்தார்கள். அன்னாரின் அன்புத் தோழர்களும் நபி (ஸல்) அவர்களின் அழைப்பை ஏற்று உணவை சாப்பிட்டு விட்டு அப்படியே கதை பேசுவதிலே மூழ்கி விட்டார்கள். நபி (ஸல்) அவர்களும் எப்போது நபித்தோழர்கள் வீட்டை விட்டு எழுந்து செல்வார்கள் என்று எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். ஆனால் நபித்தோழர்கள் எழுந்து செல்வதாக இல்லை.

நபி (ஸல்) அவர்களும் நீங்கள் எழுந்து உங்கள் வீடுகளுக்குச் செல்லுங்கள் என்று சொல்ல முடியாமல் உள் மனதில் பெரும் சஞ்சலத்தோடும் கவலையோடும் இருந்தார்கள். ஆனால் அல்லாஹ், நபியின் வெட்க உணர்வையும் அவருடைய பரிதாபகரமான நிகழ்வையும் பார்த்து விட்டு பின்வரும் திருமறைக் குர்ஆனின் வசனத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஆறுதல் ஊட்டும் விதமாக இறக்கி வைத்தான்.

நம்பிக்கை கொண்டோரே! நபியின் வீடுகளில் அனுமதிக்கப்பட்டால் தவிர உண்பதற்கு நுழையாதீர்கள்! அவரது பாத்திரத்தைப் பார்த்துக் கொண்டிருக்காதீர்கள்! மாறாக அழைக்கப்பட்டால் செல்லுங்கள்! உணவு உட்கொண்டதும் சென்று விடுங்கள்! பேச்சில் லயித்து விடாதீர்கள்! இது நபிக்குத் தொந்தரவாக இருக்கும். உங்களிடம் (கூற) அவர் வெட்கப்படுவார். உண்மை(யைக் கூறும்) விஷயத்தில் அல்லாஹ் வெட்கப்பட மாட்டான்.
அல்குர்ஆன் 33:53

நபி (ஸல்) அவர்கள் தனக்கு ஏற்பட்ட வேதனையைக் கூட வெட்க உணர்வின் காரணமாக சொல்ல மறுக்கிறார்கள். ஆனால் அவரை நமது முன்மாதிரி என்று சொல்-லிக் கொள்ளும் சமுதாயம் தங்களுடைய வெட்க உணர்வை மூட்டை கட்டி அடகு வைத்து விட்டு வீட்டு முற்றத்தில் ஆபாசமான அருவருப்பான ஆடல் பாடல் காட்சிகளை குடும்பத்தோடு சேர்ந்து பார்க்கும் கொடுமைகள் அரங்கேறிக் கொண்டிருப்பதைப் இன்றைய இஸ்லாமியர்களின் வீடுகளில் பார்க்க முடிகிறது.

அனைத்து இஸ்லாமியர்களுக்கும் தெள்ளத் தெளிவாகத் தெரியும்.
அருவருப்பான காட்சிகளை இந்த மார்க்கம் தடை செய்துள்ளது. இப்படி ஆபாசமான காட்சிகளைப் பார்ப்பது தவறு என்று தெரியும் ஒரு தவறைச் செய்யும் போது யாருக்கும் தெரியாமல் மறைத்து செய்தால் அது பற்றி யாருக்கும் தெரியாது. தவறைப் பகிரங்கமாக அனைவர்கள் முன்னிலையிலும் சேர்ந்து செய்வது கொடுமையிலும் மிகப் பெரிய கொடுமையாகும்.

நன்மையை ஏவித் தீமையைத் தடுக்கும் சமுதாயம் என்று அல்லாஹ் அல்குர்ஆனில் இந்தச் சமுதாயத்தின் சிறந்த ஒரு பண்பை சிலாகித்துச் சொல்லும் போது தீமையைச் செய்து நன்மையைத் தடுக்கும் ஒரு சமுதாயமாக இஸ்லாமிய சமுதாயம் இன்று இருப்பதைப் பார்க்கும் போதும் மிகவும் ஒரு கவலைக்குக்கும் கேவலத்திற்கும் உள்ள வருந்தத்தக்க செயலாகும்.
அல்லாஹ் இந்த சமுதாயத்தின் சிறப்பைப் பற்றி இவ்வாறு கூறுகிறான்:

நன்மையை ஏவி, தீமையைத் தடுத்து நல் வழியை நோக்கி அழைக்கும் சமுதாயம் உங்களிடம் இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்குர்ஆன் 3:104

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பாசறையில் வளர்ந்த
அருமை நபித் தோழர்கள் தங்களுக்கு தெரிந்த ஒரு செய்தியை பற்றி
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டும் கூட பெரிய நபித் தோழர்கள் இருந்த காரணத்தினால் வெட்கப்பட்டு அதை சொல்வதற்கு அப்துல்லாஹ் பின் உமர் (ர-லி) அவர்கள் மறைத்துள்ளார்கள் என்றால்
அவர்களின் வெட்க உணர்வும் இன்றைய முஸ்லி-ம்களின் வெட்க உணர்விற்கும் மத்தியில் நாம் எடை போட்டுப் பார்த்தால் மலைக்கும் மடுவுக்கும் உள்ள வித்தியாசம் இருப்பதை நாம் விளங்கலாம்.

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி-) அவர்கள் கூறியதாவது: "மரங்களில் (இப்படியும்) ஒருவகை மரம் உண்டு; அதன் இலை உதிர்வதில்லை. அது முஸ்லி-முக்கு உவமையாகும். அது எந்த மரம் என்று சொல்லுங்கள்?'' என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது நாட்டு மரங்களை நோக்கி மக்களின் கவனம் போயிற்று. அது பேரீச்ச மரம்தான் என்று நான் நினைத்தேன். ஆனால், (மூத்தவர்கள் அமைதியாய் இருக்கும் அந்த அவையில் நான் எப்படிச் சொல்வதென) வெட்கப்பட்(டுக்கொண்டு மௌனமாக) இருந்துவிட்டேன். பின்னர் மக்கள் "அது என்ன மரம் என்று தாங்களே சொல்லுங்கள், அல்லாஹ்வின் தூதரே?'' என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் "பேரீச்ச மரம்'' என்று பதிலளித்தார்கள்.
ஆதாரம் புகாரி 61

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உம்மு சுலைம் (ர-லி)
அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்க-லிலிதம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?' என்ற கேள்வியைக் கேட்டு விட்டு அவர்கள் நடந்து கொண்ட முறையை பின்வரும் நபி மொழி நமக்கு படம் பிடித்துக் காட்டுகிறது.

உம்மு சலமா (ர-லி) அவர்கள் கூறியதாவது: (அபூதல்ஹா (ர-லி)
அவர்களின் துணைவியார்) உம்மு சுலைம் (ர-லி) அவர்கள் நபி (ஸல்)
அவர்களிடம் வந்து, "அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைச் சொல்ல
அல்லாஹ் வெட்கப்படுவதில்லை. ஒரு பெண்ணுக்கு தூக்கத்தில் ஸ்கலி-தம் ஏற்பட்டால் அவள் மீது குளியல் கடமையாகுமா?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் "(ஆம்! உறங்கி விழித்ததும் தன் மீது) அவள் (மதன) நீரைப் பார்த்தால் (குளியல் அவள் மீது கடமை தான்)'' என்று பதிலளித்தார்கள். உடனே நான் (வெட்கத்தினால்) எனது முகத்தை மூடிக் கொண்டு, "பெண்களுக்கும் ஸ்கலிதம் ஏற்படுமா'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "உன் வலக்கரம் மண்ணைக் கவ்வட்டும் (நன்றாகக் கேட்டாய், போ)! பிறகு எவ்வாறு குழந்தை தாயின் சாயலில் பிறக்கிறது?'' என்று கேட்டார்கள்.
ஆதாரம் புகாரி 130

நமது முன்னோர்கள் எந்த அளவிற்கு வெட்க உணர்வுடன் நடந்து கொண்டார்கள் என்பதை மேற்கண்ட செய்திகளின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம். அப்படிப்பட்ட வெட்க உணர்வை இந்த சமுதாயம் தொலைத்து விட்டது. அது மாத்திரமின்றி பல்லாண்டு காலமாக இந்தச் சமுதாயம் பெற்று வந்த அறிவு ஆராய்ச்சியை தொலைக் காட்சிப் பெட்டிக்கு ஈடுவைத்திருக்கிறது. கடந்த காலத்தில் இந்தச் சமுதாயம் இவ்வுலகத்திற்கு அறிவொளியைக் கொடுத்தது. உலகத்தை அறிவு வெள்ளத்தில் மூழ்கடித்த பெருமை இந்தச் சமுதாயத்தையே சாரும் கடந்த காலத்தில் இஸ்லாமிய அறிஞர்கள் இந்த உலகத்திற்காக
அவர்கள் கண்டு பிடித்துக் கொடுத்த கண்டு பிடிப்புக்கள் ஏராளம். முஸ்லி-ம் சமுதாயத்து அறிஞர்கள் திருமறைக் குர்ஆனைப் படித்து நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளைப் படித்து இந்த உலகத்திற்கு அவர்கள் கொண்டு வந்து கொடுத்த அறிவியல் கண்டு பிடிப்புக்கள் ஏராளம். இந்த அறிவியல் கண்டு பிடிப்புக்களை நமது முன்னோர்கள் நமக்கு கண்டு பிடித்துத் தந்திருக்கிறார்கள்.
ஹெவ்லெட் பேக்கென் என்ற கம்யூட்டர் நிறுவனத்தின் தலைவியான கார்டலன் எஸ்பியோனா என்ற அமெரிக்கப் பெண்மணி அமெரிக்காவில் ஒரு பல்கலைக் கழகத்தின் ஆண்டிறுதி விழா நிகழ்ச்சியில் ஒரு வரலாற்றுக் குறிப்பை அங்கிருந்தவர்களுக்கு ஞாபகமூட்டினார்.

இன்று அமெரிக்கர்கள் அறிவிய-லின் உச்சானிக் கொம்பில் அமர்ந்திருப்பதற்குக் காரணம் ஒரு சமுதாயத்தவர்கள் அவர்களின் அறிவியல் கண்டு பிடிப்புக்களை வைத்துத்தான் இன்று அமெரிக்கர்கள் அந்தப் பாதையில் சென்று கொண்டிருக்கிறார்கள். அந்தச் சமுதாயம் கி,பி ஏழாம் நூற்றாண்டில்
இருந்து பனிரெண்டாரம் நூற்றாண்டு வரை வாழ்ந்த ஒரு சமுதாயம்  அமைத்துக் கொடுத்த புள்ளிகளின் மீது இன்றைக்கு நாம் கோலமிட்டிருக்கிறோம்  என்று கூறினாள். அவள் அந்த சமுதாயம் முஸ்-லிம்கள் என்று சொல்லவில்லை.

அன்றைக்கு அவர்கள் இந்த அறிவியலுக்கு அடித்தளமிடவில்லையென்று சொன்னால், விஞ்ஞான பூகோள சிந்தனையை அவர்கள் திறந்து தரவில்லையென்றால், இந்த அறிவியல் வளர்ச்சிளை நாம் நினைத்துக் கூடப் பார்க்க முடியாது. ஒரு கற்பனையாக மாறிப் போய் இருக்கும் என்று கூறினாள்.
இந்த நிகழ்வு முடியும் போது இந்த வரலாற்றுக்குச் சொந்தக்காரர்கள் யார் தெரியுமா? என்று கேட்டு விட்டு அவர்கள்தான் முஸ்லி-ம்கள் என்று கூறினார்.

அப்பாஸிய உஸ்மானிய கிலாபத்தின் போது பல்கலைக்கழகத்தில் இருந்து வெளிவந்தவர்கள் தான் டாக்டர்களுக்கெல்லாம் டாக்டர்கள் அவர்கள் கண்டு பிடித்துக் கொடுத்த கண்டு பிடிப்புகள் இன்று உலகத்திற்கு அறிவியலி-ன் அடிப்படை ஆதாரமாகத் திகழ்கிறது.

என்று சொல்லி- முஸ்லி-ம் சமுதாயத்திற்கு நமது முன்னோர்கள் கண்டு பிடித்துக்கொடுத்த அறிவியல் கண்டு பிடிப்புக்களைப் பற்றி ஒரு கிறித்தவப் பெண்மணி அமெரிக்காவில் இருந்து உரையாற்றிக் கொண்டிருக்கின்றாள் என்று சொன்னால் இன்றைக்கு நமது சமுதாயத்தில் இருந்து நாம் கண்டு பிடித்துக் கொடுத்த அறிவியல் கண்டு பிடிப்புக்கள் அதை இன்றைக்கு சுமந்திருப்போர் எத்தனை பேர்கள் அறிவியலாளர்கள்? எத்தனை பேர் ஆராய்ச்சியாளர்கள்? குறைந்தது அல்லாஹ்வின் வேதத்தையாவது கற்றறிந்தவர்கள் எத்தனை பேர் என்பதை நமது உள்ளத்தை ஒரு முறை கேட்டுப் பார்த்தால் நமது நிலையை நம்மால் புரிந்து கொள்ள முடியும். ஒரு நாளைக்கு அல்லாஹ்வின் வேதத்தில் ஒரு வசனத்தையாவது ஓதுகின்றவர்கள் எத்தனை பேர்? ஒரு வாரத்திற்கு ஒரு முறை ஓதுகின்றவர்கள் எத்தனை பேர்? கடந்த காலத்து நமது அறிவியல் ஆராச்சியாளர்கள் எப்படி இந்த அறிவியல் கண்டு பிடிப்புக்களைக் கண்டு பிடித்தார்கள் என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்த்திருப்போமா? அல்குர்ஆன் கொடுத்த ஊக்கத்தினால் கண்டு பிடித்தார்கள் அல்லாஹ் நம்மை இந்தக் குர்ஆனை ஆராய்ச்சி செய்யுமாறு கட்டளையிடுகின்றார்கள்

அவர்கள் இந்தக் குர்ஆனைச் சிந்திக்க மாட்டார்களா? இது அல்லாஹ் அல்லாதவரிடமிருந்து வந்திருந்தால் இதில் ஏராளமான முரண்பாடுகளைக் கண்டிருப்பார்கள்.
அல்குர்ஆன் 4:82

அவர்கள் இக்குர்ஆனைச் சிந்திக்க வேண்டாமா? அல்லது அவர் களின் உள்ளங்கள் மீது அதற்கான பூட்டுக்கள் உள்ளனவா?
அல்குர்ஆன் 47:24

இப்படி அல்குர்ஆன் இந்த சமுதாயத்திற்கு அல்குர்ஆனை ஆராய்ந்து அறிவியல் கண்டு பிடிப்புக்களை கண்டு பிடிக்குமாறு நம்மைத் தூண்டுகிறது.
வளரும் இன்ஷா அல்லாஹ்
 
விரல் அசைத்தல் விரிவான ஆய்வு தொடர் 2

நடுக்கத்தால் விரல் அசைந்ததா?

இமாம் பைஹகீ அவர்களுடைய கூற்றின் நிலை என்ன?

இமாம் பைஹகீ அவர்கள் நாம் ஆதாரமாகக் காட்டும் நபிமொழிக்கு சற்றும் பொருந்தாத வேறு ஒரு அர்த்தத்தைக் கொடுக்கின்றார்.

ஹதீஸில் கூறப்படும் அசைத்தல் என்பதன் கருத்து இஷாரா செய்வது தான். தொடர்ந்து அசைத்துக் கொண்டிருப்பது அல்ல என இமாம் பைஹகீ அவர்கள் இந்த ஹதீஸிற்கு கீழ் குறிப்பிட்டுள்ளார்கள்.

மேலும் இமாம் பைஹகீ அவர்கள் ஆஸிம் பின் குலைப் இடம்பெற்றுள்ள விரலசைப்பது தொடர்பான ஹதீஸ் வலுக் குறைந்தது எனவும் முஹம்மது பின் அஜ்லான் இடம்பெற்றுள்ள விரலசைக்கக் கூடாது என்ற கருத்தில் உள்ள ஹதீஸ் அதை விடவும் வ-லிமையானது என்றும் கூறியுள்ளார்.

விரலசைப்பது பித்அத் என்று கூறுபவர்கள் தங்கள் கூற்றுக்கு இமாம் பைஹகீ அவர்களின் கூற்றை மிகப்பெரிய சான்றாகக் காட்டிக் கொண்டிருக்கிறார்கள்.
இமாம்களின் கருத்துக்களைப் பொறுத்தவரை அதை அப்படியே கண் மூடிக்கொண்டு ஏற்க இயலாது. அதில் ஏற்கத் தகுந்த விசயங்களும் ஏற்க முடியாத விசயங்களும் இருக்கும். ஆதாரங்களின் அடிப்படையில்
அமைந்த சரியான விளக்கத்தை மட்டுமே நாம் ஏற்றுக் கொள்வோம்.
நாம் மட்டுமல்ல பெரும்பாலான ஆய்வாளர்கள் இந்த நிலைப்பாட்டையே கொண்டிருக்கின்றார்கள். இமாம் பைஹகீ அவர்களின் கூற்று தவறானது என்பதை தக்க சான்றுகளுடன் நாம் முன்பு விளக்கி இருக்கின்றோம்.

நபி (ஸல்) அவர்கள் இருப்பில் தொடர்ந்து விரலசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற கருத்து அந்த ஹதீஸில் தெளிவாக உள்ளது. ஆதாரங்களின் அடிப்படையில் பார்த்தால் முஹம்மது பின் அஜ்லானுடைய அறிவிப்பு பலவீனமானது என்பதும் ஆஸிம் பின் குலைபுடைய அறிவிப்பு பலமானது
என்பதும் தெளிவாகின்றது.

உண்மை தெளிவான பிறகு இதற்கு மாற்றமாக இமாம் பைஹகீ கூறினால்
அதை எப்படி ஏற்க முடியும்?

இமாம்களின் சுய விளக்கங்களை ஆதாரமாகக் காட்டும் இவர்கள் தங்களுக்கு எதிராக இமாம்கள் எதையாவது கூறியிருந்தால் அப்போது அதைக் கண்டுகொள்வதே இல்லை. இதுதான் இவர்கள் இமாம்களை மதிக்கும் லட்சணம்?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸ் சரியானது என்று இமாம் நவவீ கூறியுள்ளார். ஏன் இவர்கள் ஆதாரமாகக் காட்டும் இமாம் பைஹகீ
அவர்கள் கூட இந்த ஹதீஸ் பலவீனமானது என்று கூறவில்லை. சரியானது
என்றே கூறுகிறார்.

ஆனால் இவர்களோ இந்த இமாம்களுக்கு மாற்றமாக இந்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதம் வைக்கின்றனர்.

வாயில் பின் ஹுஜர் (ர-லி) அவர்கள் அறிவிக்கும் இந்த ஹதீஸை அடிப்படையாகக் கொண்டு இமாம் மா-லிக் அவர்களும் ஷாபி மத்ஹபைச் சார்ந்த சில அறிஞர்களும் இருப்பில் தொடர்ந்து விரலை அசைப்பது விரும்பத் தகுந்த செயல் என்று கூறியுள்ளார்கள். அபூ ஹாமித் பன்தனீஜீ, அபுத் தைய்யுப் மற்றும் பலர் இவ்வாறு கூறுவதாக இமாம் நவவீ அவர்கள் ஷரகுல் முஹத்தப் எனும் நூ-லில் குறிப்பிட்டுள்ளார்.

جامع الأصول (5 / 404)
وقد استدل آخرون بحديث وائل على استحباب تكرير الأصبع، كمالك وغيره، وقال به بعض الشافعية، كما في " شرح المهذب " للنووي 3 / 454.

வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி) அவர்களின் செய்தியை ஆதாரமாகக் கொண்டு தொடர்ந்து விரலசைப்பதை விரும்பத்தகுந்தது என்று இமாம் மாலி-க்கும் மற்றவர்களும் கூறியுள்ளனர். மேலும் இந்த நபிமொழியை ஆதாரமாகக் கொண்டு ஷாஃபி மத்ஹபைச் சார்ந்த சிலரும் கூறியுள்ளனர்.

(நூல் :ஜமாவுல் உசூல், பாகம் :5, பக்கம் :404)

المجموع شرح المهذب (3 / 454) (وَالثَّالِث) يُسْتَحَبُّ تَحْرِيكُهَا حَكَاهُ الشَّيْخُ أَبُو حَامِدٍ وَالْبَنْدَنِيجِيّ وَالْقَاضِي أَبُو الطَّيِّبِ وَآخَرُونَ وَقَدْ يُحْتَجُّ لِهَذَا بِحَدِيثِ وَائِلِ بْنِ حُجُرٍ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ وَصَفَ صَلَاةَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ

வாயில் பின் ஹ‚ஜ்ர் (ர-லி) அவர்களின் ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு விரலசைப்பதைச் சிறந்த செயலாக ஷைக் அபூஹாமித் பன்தனீஜீ, காழி அபூ தய்யுப் மேலும் பலரும் எடுத்துள்ளனர்.
(நூல் : அல்மஜ்மூவு, பாகம் :3, பக்கம் : 454)

இமாம்களின் கருத்துக்களை மேற்கோள் காட்டுவதாக இருந்தால் விரலசைத்தல் பிரச்சினையில் இவர்களுக்கு எதிராக நிறைய இமாம்களின் கருத்துக்களை நம்மால் காட்ட முடியும்.

குழப்பமான விளக்கம்

விரலசைப்பது தொடர்பாக வரும் நபிமொழியை வெறுப்பவர்கள் இதை ஓரங்கட்டுவதற்கு பல வகைகளில் முயற்சி செய்கிறார்கள்.

இந்த நபிமொழியில் நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று தெளிவான வாசகம் இடம் பெற்றுள்ளது. இருப்பில் விரலசைப்பதற்கு இவ்வளவு தெளிவாக வாசகம் ஹதீஸில் இடம்பெற்றுள்ளது.
ஆனால் இவர்கள் இந்தச் செய்திக்கு சற்றும் பொருந்தாத விசித்திரமான விளக்கத்தைக் கொடுக்கிறார்கள். தங்கள் கருத்துக்குத் ஏற்ப இந்தச் செய்தியை அநியாயமாக வளைக்கின்றார்கள்.

அசைத்தார்கள் என்றால் விரலை உயர்த்தினார்கள் என்று பொருள் கொள்ள வேண்டும். ஏனென்றால் விரலை உயர்த்தும் போது விரல் அசையும் நிலை ஏற்படும். குறிப்பாக ஹனஃபீ மத்ஹபின் கருத்துப்படி விரலை உயர்த்தி கீழே விட்டு விட வேண்டும். இப்போது விரலாட்டுதல் தெளிவாக நடக்கின்றது. இந்த அசைவைப் பற்றித் தான் இந்த ஹதீஸ் கூறுகின்றது என்று வாதிடுகின்றனர்.
இவர்கள் கூறுவது போன்று ஹதீஸில் அசைத்தார்கள் என்ற வாசகம் இடம்பெறவில்லை.

மாறாக அசைப்பார்கள் என்ற வாசகமே இடம்பெற்றுள்ளது.

யுஹர்ரிகுஹா என்ற அரபுச் சொல்லுக்கு அரபு மொழிப்படி அசைத்தார்கள் என்று பொருள் செய்வது தவறாகும். இந்தச் சொல்லுக்கு அசைப்பார்கள் என்ற அர்த்தமே உள்ளது. அசைப்பார்கள் என்பது வருங்கால வினையாகும்.

அசைத்ததை பார்த்தேன் என்று சொன்னால் ஒரு தடவை அசைத்தார்கள் என்று
பொருள் கொள்ளலாம்.

அசைப்பதை பார்த்தேன் என்று சொன்னால் இனி மேல் அசைப்பதைப் பார்த்தேன் என்ற கருத்து வரும். இனி அசைப்பதை பார்த்தேன் என்று சொன்னால் அது பொருளற்றதாகும். நாளை நடப்பதை இன்று யாரும் பார்க்க முடியாது.

எனவே அசைப்பதை பார்த்தேன் என்று சொல்லும் போது தொடர்ந்து அசைத்துக் கொண்டிருந்ததை பார்த்தேன் என்று தான் பொருள் கொள்ள வேண்டும். இது அரபு மொழியில் மட்டுமின்றி எல்லா மொழிகளிலும் உள்ள மொழி நடையாகும்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இருப்பு முழுவதிலும் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் எனும்போது இதற்கு விரலை நீட்டினார்கள் என்றும் நீட்டிவிட்டு மடக்கினார்கள் என்றும் பொருள் செய்வது மடமையாகும்.

விரலசைப்பது பற்றிய நபிமொழியைப் படித்தால் அதில் இடம்பெற்றுள்ள வாசகங்கள் இவர்களின் இந்த கற்பனை விளக்கத்தை தகர்த்து எறியக்கூடிய வகையில் இருக்கின்றது.

ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي

வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி) அவர்கள் கூறுகிறார்கள் :
பின்னர் நபி (ஸல்) அவர்கள் தமது ஆட்காட்டி விரலை உயர்த்தி
னார்கள். அழைப்பது போல் (அல்லது பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில்) அதை அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நஸாயீ (870)

விரலை நீட்டும் போது உள்ள அசைவைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை. விரலை நீட்டிய பிறகு அதை அசைத்துக் கொண்டிருக்க வேண்டும் என்றே இந்த ஹதீஸ் கூறுகின்றது.

ஆட்காட்டி விரலை உயர்த்தினார்கள். அதை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற வாசகம் இதைத் தெளிவாக கூறுகின்றது.

முத-லில் விரலை உயர்த்த வேண்டும். பிறகு அதை அசைக்க வேண்டும் என்று வெவ்வேறான இரண்டு செயல்கள் ஒன்றன்பின் ஒன்றாகக் கூறப் பட்டிருக்கும் போது உயர்த்துவதும் அசைப்பதும் ஒன்று தான் எனக் கூறுவது வடிகட்டிய பொய்யாகும்.

உதாரணமாக ஒருவர் கொடியை உயர்த்தி பிறகு அசைத்துக் கொண்டிருந்தார் என்று கூறினால் கொடி அசைக்கப்படவில்லை என்று யாராவது விளங்கினால்
அவர் அறிவில்லாதவராகத் தான் இருக்க முடியும்.

அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்பதற்கு உயர்த்தினார்கள் என்று பொருள் செய்பவர்கள் இந்த நிலையில் தான் இருக்கின்றார்கள்.

கீழிருக்கும் விரலை மேல் நோக்கி உயர்த்தினால் விரல் ஆடாமல் இருக்காது அந்த அசைவைப் பற்றித் தான் இந்த ஹதீஸ் பேசுகின்றது எனவும் சிலர் கூறுகின்றனர்.

இதுவும் இவர்களின் அறியாமையைக் காட்டுகின்றது.

விரலை நீட்டி வைத்திருக்கும் போது விர-லில் ஏற்படும் நடுக்கத்தைப் பற்றி இந்த ஹதீஸ் கூறுவதாக சிலர் வாதிடுகின்றனர்.

இந்த அசைவு விர-லில் மட்டும் வராது. தொழுது கொண்டிருப்பவரின் தலையிலும் கா-லிலும் ஒட்டுமொத்த உடம்பிலும் இருக்கத்தான் செய்யும். இவற்றைப் பற்றி அறிவுள்ள யாரும் பேசமாட்டார்கள்.

இந்த ஹதீஸை ஆரம்பித்தி-லிருந்து கவனித்தால் தொழுபவர் கடைப்பிடிக்க வேண்டிய காரியங்கள் ஒவ்வொன்றாகக் கூறப்படுகின்றது. அந்த வரிசையில் தான் விரலசைப்பதும் சொல்லப்படுகின்றது.

நடுக்கம் என்பது நமது விருப்பம் இல்லாமல் உடலி-ல் ஏற்படக்கூடியது. ஆனால் இந்தச் செய்தியில் கூறப்படும் விரலசைத்தல் என்பது தொழுபவர் விரும்பிச் செய்ய வேண்டிய காரியமாகக் கூறப்பட்டுள்ளது.

நபி (ஸல்) அவர்களின் விரல் நடுங்கியது என்று கூறப்படாமல் நபியவர்கள் அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று கூறப்படுவதால் இது நபியவர்கள் விரும்பி செய்த தொழுகையின் காரியங்களில் ஒன்று என்பதை அறிவுள்ளவர்கள் விளங்கிக் கொள்வார்கள்.

விரலை அசைக்க வேண்டுமா? அல்லது கைகளையா?

விரலசைப்பது தொடர்பான ஹதீஸில் உள்ள சில வார்த்தைகளை வைத்து சிலர் குதர்க்கம் செய்து கொண்டிருக்கின்றார்கள்.

18115حَدَّثَنَا عَبْدُ الصَّمَدِ حَدَّثَنَا زَائِدَةُ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ الْحَضْرَمِيَّ أخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي قَالَ فَنَظَرْتُ إِلَيْهِ قَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا أُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ ثُمَّ قَالَ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى فَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ بَيْنَ أَصَابِعِهِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ النَّاسَ عَلَيْهِمْ الثِّيَابُ تُحَرَّكُ أَيْدِيهِمْ مِنْ تَحْتِ الثِّيَابِ مِنْ الْبَرْدِ رواه أحمد

நபி (ஸல்) அவர்கள் தமது விரலை உயர்த்தினார்கள். பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன். இதன் பிறகு குளிர் காலத்தில் நான் (மறுபடியும்) வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்தனர். குளிரின் காரணத்தால் அவர்கள் போர்த்தியிருந்த ஆடைகளுக்குள் அவர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்ததை கண்டேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி), நூல் : அஹ்மது (18115))

நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்று இந்த அறிவிப்பில் உள்ளது. எனவே விரலசைப்பதற்கு இந்த நபிமொழியை ஆதாரமாகக் காட்டுபவர்கள் விரலை அசைக்காமல் இந்தச் செய்தியில் உள்ளவாறு கைகளை அசைக்க வேண்டும் என்று குதர்க்கம் செய்கின்றார்கள்.

இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் கூறப்பட்டு அதை நாம் விரலசைப்பதற்கு ஆதாரமாகக் காட்டினால் இவர்களின் கேள்வி நியாயமானது என்று ஏற்றுக் கொள்ளலாம்.
ஆனால் இந்த ஹதீஸில் நபித்தோழர்களின் கைகள் அசைந்து கொண்டிருந்தது என்ற தகவல் மட்டும் இடம்பெறவில்லை. இதற்கு முன்பு நபி (ஸல்) அவர்கள் ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்ற தகவலும் சேர்த்துக் கூறப்பட்டுள்ளது. பின்னர் ஒரு காலத்தில் நான் மதீனா வந்த போதும் இது போல் நபித்தோழர்கள் நடந்தனர் என்று வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி) அவர்கள் கூறுகிறார்கள். அறிவிப்பவர் எந்தக் கருத்தில் இதைச் சொன்னார் என்று தெளிவாக தெரியும் போது அவர் சொல்லாத கருத்தை அவரது வாசகத்துக்கு கொடுப்பது அநியாயமாகும்.

எனவே இங்கே நபித்தோழர்களின் விரல்கள் அசைந்து கொண்டிருந்தது என்ற அர்த்தத்தில் தான் கைகள் அசைந்தது எனக் கூறப்பட்டுள்ளது. இதை ஹதீஸின் முன்பகுதி வாசகங்கள் தெளிவுபடுத்துகின்றது.

இவ்வாறு பேசக்கூடிய வழக்கம் அனைத்து மொழிகளிலும் உள்ளது. உதாரணமாக ஏதாவது ஒரு விர-லில் ஒருவருக்கு காயம் ஏற்பட்டிருப்பதை நாம் பார்த்தால் விர-லில் என்ன காயம்? என்று கேட்போம். இதையே சற்று வித்தியாசமாக கையில் என்ன காயம்? என்றும் கேட்போம்.

விரல் கையின் ஒரு பகுதியாக இருப்பதால் அதையே கை என்று கூறும் வழக்கம் மக்கள் பேச்சில் சர்வசாதாரணமாக இருக்கக்கூடியது தான். இந்த அடிப்படையில் தான் நபித்தோழர்களின் கைககள் அசைந்து கொண்டிருந்தது என இந்த ஹதீஸில் கூறப்பட்டுள்ளது.

குளிரின் காரணத்தால் கைகள் அசைந்ததா?

நபித்தோழர்கள் யாரும் விரும்பி விரலசைக்கவில்லை. குளிரின் காரணத்தால் தான் அவர்களுடைய கைகள் அசைந்தது. எனவே எல்லா நேரங்களிலும் விரலசைப்பதற்கு இந்தச் செய்தி ஆதாரமாக முடியாது என்று சிலர் வாதிடுகின்றனர்.

குளிரின் காரணத்தால் தான் நபித்தோழர்களின் கைகள் அசைந்தது என்ற வாதம் தவறான வாதம். நபிமொழியை திரித்துக் கூறும் செயலாகும்.

தொழுது கொண்டிருந்த நபித்தோழர்கள் குளிரின் காரணத்தால் ஆடையை போர்த்தி இருந்தார்கள் என்று தான் ஹதீஸில் கூறப்பட்டுள்ளது. கைகள் அசைந்ததற்கு குளிர்தான் காரணம் என்பது இவர்களின் சுய கற்பனையாகும்.
குளிர் வந்தால் கைகள் மட்டும் அசையாது. ஒட்டுமொத்த உடம்பும் அசையும். ஆனால் இந்த ஹதீஸில் கைகள் மட்டும் அசைந்தது என குறிப்பிட்டு சொல்லப்பட்டுள்ளது. எனவே இதற்கு குளிர் காரணமாக இருக்க முடியாது என்பதை அறியலாம்.

மேலும் தாரமியில் இடம் பெற்றுள்ள அறிவிப்பில் நபித்தோழர்கள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என தெளிவாகவே கூறப்பட்டுள்ளது.

1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي

இதற்குப் பிறகு குளிர் காலத்தில் நான் மறுபடியும் வந்தேன்.

அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்தைப் பார்த்தேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி) நூல் : தாரமீ (1323)

எனவே நபித்தோழர்கள் குளிரின் காரணத்தினால் ஆடையைக் கூடுதலாக தங்கள் மீது போர்த்தியிருந்தனர். அந்த ஆடைகளுக்குள் தங்களின் சுய முயற்சியால் தான் விரலை அசைத்துள்ளார்கள்.

இருப்பில் விரலை அசைக்கும் விதம்
விரலை எவ்வாறு அசைக்க வேண்டும்?

எதிர்க் கருத்தில் உள்ளவர்கள் நம்மால் பதில் கூறவே முடியாது என்று நினைத்துக் கொண்டு உப்பு சப்பில்லாத கேள்விகளை நம்மிடத்தில் கேட்கின்றனர். இந்தக் கேள்விகளுக்கு கியாமத் நாள் வரை பதில் சொல்ல முடியாது என்று வீண் சவடாலும் விடுகின்றனர்.

1. விரலசைத்தல் எந்தத் திசையை நோக்கி இருக்க வேண்டும்.
2. விரலை நீட்டி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா? அல்லது குறுக்கி வைத்துக்கொண்டு அசைக்க வேண்டுமா?
3. விரலை மேலும் கீழுமாக அசைக்க வேண்டுமா?
4. முன்னாலும் பின்னாலுமாக ஆட்ட வேண்டுமா?
5. தொடர்ந்தா அல்லது விட்டுவிட்டா?
6. வேகமாகவா அல்லது மெதுவாகவா?
7. வலது பக்கமா? அல்லது இடது பக்கமா?

வளரும் இன்ஷா அல்லாஹ்
 

December 8, 2012, 6:49 PM

தீன்குலப்பெண்மணி ஜனவரி 2012

தீன்குலப்பெண்மணி ஜனவரி 2012

தலையங்கம்

பிப்ரவரி 14 என்றவுடன் காதலர் தினமே மக்களுக்கு நினைவுக்கு வரும். ஆனால் வரும் பிப்ரவரி 14 அன்று இஸ்லாத்தை காதலிக்கும் முஸ்லிம்கள், ஆட்சியாளர்களை கண்டிக்கும் தினமாக அமையும்.

தேர்தல் வரும் போது முஸ்லிம்களை பார்ப்பவர்கள், வெற்றி பெற்றவுடன் முஸ்லிம்களையும் அவர்களுக்கு கொடுத்த வாக்குறுதிகளையும் மறந்துவிடுகிறார்கள்.

தொடர்ந்து படிக்க January 7, 2012, 10:40 PM

பிப்ரவரி தீன்குலப் பெண்மணி

  தலையங்கம் மீண்டும் சல்மான் ருஷ்டி? 1947 ஆண்டு மும்பையில் பிறந்த எழுத்தாளர் அஹ்மத் சல்மான் ருஷ்டி, நாவல் எழுதுபவர். இவர் பல இலக்கிய நாவல்களை எழுதி பல பரிசுகளை பெற்றுள்ளார். இவர் 1988 ஆம் ஆண்டு பட்ங் நஹற்ஹய்ண்ஸ்ரீ யங்ழ்ள்ங்ள் (தீ சாத்தானிக் வர்சஸ்) சாத்தானின் கவிதைகள் என்ற நூலை எழுதினார். இந்த நூலில் இஸ்லாத்தைப் பற்றியும் திருக்குர்ஆனைப் பற்றியும் நபிகளாரை பற்றியும் அவதூறான பல பெய்யான தகவல்களை கூறினார். இதனால் இஸ்லாத்தை கண்மூடி எதிர்ப்பவர்களுக்கு இந்த நூல் பெரும் பரிசாக அமைந்தது.

தொடர்ந்து படிக்க February 20, 2012, 2:51 PM

மார்ச் தீன்குலப் பெண்மணி 2012

தலையங்கம் ஜெயா ஆரசை தாக்கும் மின்சாரம் இந்தியாவில் அதிக நேரம் மின்வெட்டு செய்யப்படும் மாநிலம் என்ற பெருமையை தமிழகம் பெற்றுள்ளது. இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டால் தமிழகம் இருளில் மூழ்கியுள்ளது. இதுவரை தமிழகம் கண்டிராத மின்வெட்டு வர காரணம் என்ன? இதற்கு பல காரணங்கள் உள்ளன. தமிழகத்தில் இதற்கு முன்னர் மின் தேவை எவ்வளவு இருந்தது என்பதை கவனித்துப் பாருங்கள்:

தொடர்ந்து படிக்க March 21, 2012, 1:28 PM

ஏப்ரல் தீன்குலப் பெண்மணி

கோடைவிடுமுறையை பயனுள்ளதாக மாற்றுவோம்

 

கோடை காலத்தில் கல்வி நிலையங்களுக்கு விடுமுறை அளித்து மாணவ,மாணவிகளுக்கு ஓய்வு அளிக்கிறது கல்வித் துறை. இந்த ஓய்வு காலத்தை மாணவ, மாணவிகள் பெரும்பாலும் வீணான காரியங்களிலே செலவிட்டு பாழாக்குகின்றனர்.

மனிதர்களில் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கüன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர்.

தொடர்ந்து படிக்க April 10, 2012, 6:53 PM

தீன்குலப் பெண்மணி மே 2012

தீன்குலப் பெண்மணி மே 2012

தலையங்கம்

நிலநடுக்கம் ஓர் ஏச்சரிக்கையா?

விஞ்ஞானம் அசுர வளர்ச்சி அடைந்துவரும் நேரத்தில் விஞ்ஞானிகளால் தடுக்கமுடியாத பெரும் சேதங்களும் உலகத்தில் நடக்கத்தான் செய்கின்றன.

விஞ்ஞான வளர்ச்சியில் உச்சத்தில் இருக்கும் ஜப்பான், அமெரிக்கா போன்ற நாடுகளிலும் கூட மிகப்பெரிய சேதங்கள் ஏற்படுகின்றன. சுனாமி போன்ற பேராபத்துகள் வளர்ச்சியடைந்த பெருநாடுகளைக்கூட விட்டுவைக்கவில்லை.

தொடர்ந்து படிக்க May 2, 2012, 9:58 PM

தீன்குலப்பெண்மணி ஜூன்2012

 தீன்குலப்பெண்மணி ஜூன்2012 அதிமுக அரசின் ஓராண்டு சாதனை?

ஓராண்டுக்கு முன் நடந்த பொதுத் தேர்தல் அதிமுக கூட எதிர்பார்க்காத அளவுக்கு மாபெரும் வெற்றியை அதிமுக பெற்றது. ஜெயலலிதாவிடம் மாறுதல் ஏற்பட்டுவிட்டது என்று மக்கள் நம்பியது தவறு என்பதை அவர் தனது ஒவ்வொரு நடவடிக்கை மூலமும் காட்டி வருகிறார். மக்களின் மகத்தான ஆதரவைப் பெற்றுவிட்டோம்; நம்மை யாரும் ஒன்றும் செய்துவிட முடியாது என்ற எண்ணத்தில் கூட்டணிக் கட்சிகளைக்கூட மதிக்காமல் தான் நினைத்தைச் செய்து வருகிறார் ஜெயலலிதா.

தொடர்ந்து படிக்க May 25, 2012, 11:30 PM

செப்டம்பர் தீன்குலப் பெண்மணி 2012

தலையங்கம் ரமலான் மாதம் வந்த போது பள்ளிவாசல்கள் களைகட்ட ஆரம்பித்தது. வெள்ளையடிப்பது, புதிய பாத்திரங்கள் வாங்குவது, மின்விளக்குகள் மாற்றுவது, புதிய பாய்கள் போடுவது என்று பள்ளிவாசல்கள் புது பொ-வுடன் மாறியதுடன் மக்கள் வெள்ளம் போல் வருகை தந்து இடைப்பட்ட நாட்களில் குறைந்து, கடைசி ஒற்றைப்படை நாட்களில் மீண்டும் எழுச்சிபெற்று ஷவ்வால் மாதத்தில் பழையநிலைக்கு பள்ளிவாசல்கள் வந்துவிட்டன. தர்மம் செய்வது, பயான் கேட்பது, திருக்குர்ஆனை ஓதுவது, இறைவனை நினைவுகூர்வது, இரவுத் தொழுகையில் ஈடுபடுவது என்று நல்லறங்கள் பக்கமே தமது முழு கவனத்தையும் செலுத்தியவர்கள். பெருநாள் தொழுகையோடு இவையனைத்தையும் நிறுத்திவிட்டு பழையநிலைக்கு சென்றுவிட்டார்கள்.

தொடர்ந்து படிக்க August 30, 2012, 10:09 AM

தீன்குலப்பெண்மனி அக்டோபர் 2012

 

தலையங்கம்

எதிர்ப்பில் வளரும் இஸ்லாம்

                                               

 

  நபிகளார் இஸ்லாத்தை எடுத்துரைத்த காலம் முதல் இன்று வரை இஸ்லாத்திற்கு எதிரான சதி நடந்து கொண்டுதான் வருகிறது. அதே நேரத்தில் இஸ்லாத்தின் வளர்ச்சியை எந்த சக்தியாலும் தடுக்க முடியவில்லை. இஸ்லாத்தை சொன்னவர் மற்றும் அதை ஏற்றவர்களை

தொடர்ந்து படிக்க October 4, 2012, 3:01 PM

நவம்பர் தீன்குலபெண்மணி 2012

தலையங்கம்
ஊழலை ஒழிக்க என்ன வழி?
ஊழல். . . ஊழல். . .ஊழல்
எங்குபார்த்தாலும், எந்த தொலைக்காட்சி செய்தியை திறந்தாலும் இந்த வார்த்தைதான் தற்போது பரபரப்பாக பேசப்படுகின்றது.
நாட்டையே உலுக்கி வரும் மிகப்பெரும் தொல்லையாக இந்த ஊழல் தற்போது உருவெடுத்துள்ளது.
பா.ஜ.க ஊழல் செய்து விட்டதாக காங்கிரஸும், காங்கிரஸ் ஊழல் செய்துவிட்டதாக பா.ஜ.க.வும் மாறி மாறி குற்றச் சாட்டைச் சொல்-லி வந்தது.
ஒவ்வொரு மாநிலத்திலும் அங்குள்ள மாநிலக்கட்சிகள் அவர்களை எதிர்த்து அரசியல் செய்யும் கட்சிகள் மீது ஊழல் குற்றச்சாட்டுகளை சொல்-லி வருகின்றன.
இந்த ஊழல் குற்றச்சாட்டுகளிலி-ருந்து எந்த ஒரு கட்சியும் விதிவிலக்கல்ல..
இந்நிலையில் யாரெல்லாம் ஊழலுக்கு எதிராக குரல் கொடுக்கின்றார்களோ அவர்களும் ஊழல் செய்து மாட்டிக் கொள்ளும் நிலையை நாம் கண்கூடாகப் பார்க்கின்றோம்.
அன்னா ஹாசாரே என்பவர் ஊழலுக்கு எதிராக போராடுவதாக படம் காட்டினார். அவரும் தன்னால் இயன்ற அளவு ஊழல் செய்துள்ளார் என்பது நிரூபணமானது.
பாபா ராம்தேவ் என்பவரும் இது போல படம் காட்டினார்.
மருந்துகள் விற்கின்றேன் என்று சொல்-லி அவர் செய்த ஊழல்களும் திருகுதாளங்களும் வெளிவந்தன.
கெஜ்ரிவால் என்பவர் தற்போது ஊழலுக்கு எதிராக போராடுவதாக படம் காட்டி வருகின்றார். அவரது குழுவில் உள்ளவர்கள் மீதும் ஊழல் குற்றச்சாட்டுகள் சுமத்தப்பட்டுள்ளன.
இவற்றையெல்லாம் மிஞ்சும் விதமாக மராட்டிய மாநிலத்தில் ஒரு ஊழல் நடந்துள்ளது. மராட்டிய மாநிலத்தை காங்கிரஸ் மற்றும் தேசியவாத காங்கிரஸ் கட்சிகள் இணைந்து ஆட்சி செய்து வருகின்றன. அணைகட்ட வேண்டும் என்பதற்காக மராட்டிய அரசு விவசாயிகளிடமிருந்து கையகப்படுத்திய 100 ஏக்கர் நிலத்தை ஆளும் காங்கிரஸ் கட்சியின் ஆசியுடன் பா.ஜ.க தலைவர் நிதின் கட்காரிக்கு தாரை வார்த்துள்ளனர்.
அதாவது காங்கிரஸும், பா.ஜ.கவும் இணைந்து ஊழல் செய்துள்ளன.
மேற்கண்ட செய்திகளிலி-ருந்து ஒரு உண்மை நமக்குத் தெரியவருகின்றது.
ஒவ்வொருவரும் தங்களால் இயன்ற அளவு தங்களால் இயன்ற வரை எவ்வளவு முடியுமோ அந்த அளவிற்கு தங்களது சக்திக்குட்பட்டு ஊழல் செய்து வருகின்றனர். தங்களுக்கு கிடைத்த வாய்ப்பை ஒவ்வொருவரும் கனகச்சிதமாக பயன்படுத்திக் கொள்கின்றனர். ஊழல் செய்ய வாய்ப்பு கிடைக்காதவர்களும், பிற கொள்ளையர்கள் செய்த ஊழலி-ல் தங்களுக்கு பங்கு கிடைக்காதவர்களும் அதை எதிர்ப்பது போல நாடகமாடுகின்றனர்.
இந்த கேடுகெட்ட அரசியல்வாதிகளால் பொதுமக்கள் பணம் சுரண்டப்படுகின்றது. இதற்கு எதிராக எத்தனை லோக்பால்களை கொண்டு வந்தாலும் இந்த ஊழல்களை தடுத்து நிறுத்த முடியாது.
நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான். அவன் நம் அனைவரையும் பார்த்துக் கொண்டிருக்கின்றான். நாம் மரணித்த பிறகு நம்மை திரும்பவும் உயிர்கொடுத்து எழுப்பி அவன் நம்மை கேள்வி கேட்பான் என்ற அச்ச உணர்வு எவரிடத்தில் உள்ளதோ அவர்களால் தான்
அத்தகைய ஆட்சியாளர்களால் தான் ஊழல் செய்யாமல் ஆட்சி செய்ய முடியும்.
பொதுச் சொத்தி-லிருந்து ஒரு சிறு பொருளை எடுத்தாலும்
அல்லாஹ்விடம் நாம் பதில் சொல்லி-யாக வேண்டும் என்ற அச்சவுணர்வு இருந்தால் மட்டும்தான் ஊழலை ஒழிக்க முடியும். 
 
 
லஹப் அத்தியாயத்தின் விரிவுரை                  
நபிகளாரின் பகிரங்க அழைப்பு
உரை : பி.ஜைனுல் ஆபிதீன்
எழுத்து வடிவில் : முஹம்மத் தாஹா, கடையநல்லூர்

லஹப் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் இடம்பெற்றிருப்பதால் லஹப் என்று பெயர் பெற்றது. அதேபோன்று மஸத் என்ற வார்த்தை இந்த அத்தியாயத்தின் கடைசி வார்த்தையாக இடம் பெறுவதால் மஸத் என்றும் இந்த அத்தியாயம் குறிப்பிடப்படுகிறது.
சில அத்தியாயங்களுக்குத்தான் நபியவர்கள் பெயர் வைத்தார்கள். குர்ஆனிலுள்ள அனைத்து அத்தியாயங்களுக்கும் நபியவர்கள் பெயர் வைக்கவில்லை. நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பெயர் சூட்டாமல்
அடுத்த தலைமுறையினரால் பெயர் சூட்டப்பட்ட அத்தியாயங்களில் இந்த அத்தியாயமும் ஒன்றாகும். அந்தந்த அத்தியாயத்தில் இடம்பெறுகிற சொற்களில் ஏதாவது ஒரு சொல்லைத் தேர்ந்தெடுத்து அதை அத்தியாயத்தின் பெயராக ஆக்கினார்கள். இந்த அத்தியாயத்தில் லஹப் எனும் சொல் இடம்பெற்றதால் லஹப் என்றும் மஸத் என்ற சொல் இடம்பெற்றதால் சிலர் மஸத் என்றும் இந்த அத்தியாயத்துக்கு பெயரிட்டுள்ளனர்.
இக்லாஸ் (112) ஃபலக் (113), நாஸ் (114) போன்ற அத்தியாயங்களை நபிகள் நாயகம் சிறப்பித்துக் கூறியது போல் இந்த அத்தியாயத்தைச் சிறப்பித்து எதுவும் கூறவில்லை.
ஆனாலும் இந்த அத்தியாயம் இஸ்லாம் உண்மையான மார்க்கம் என்பதற்கும் திருக்குர்ஆன் இறைவேதம் என்பதற்கும் முக்கிய ஆதாரமாகத் திகழ்கிறது.
அதை விளக்குவதற்கு முன்னர் இந்த அத்தியாயம் அருளப்படக் காரணம் என்ன? பின்னணி என்ன? என்பதைப் பார்ப்போம்.
அருளப்பட்ட காரணம்
நபியவர்கள் எந்த அத்தியாயத்தைக் குறித்தும் மக்கீ மதனீ என்று குறிப்பிட்டுச் சொல்லவில்லை. தக்க காரணத்துடனும் எந்தக் காரணமில்லாமலும் பிற்காலத்தவர்கள் தான் மக்கீ மதனி என்று அத்தியாயங்களின் துவக்கத்தில் எழுதிக் கொண்டனர். ஆனால் இந்த லஹப் அத்தியாயம் நபியவர்களின் மக்கா வாழ்க்கையின் போதுதான் அருளப்பட்டது என்பதற்கு ஆதாரம் உள்ளது.
நபியவர்கள் ஹிரா குகையில் இருக்கிற போது அல்லாஹ்வினால் நபி என்று தேர்ந்தெடுக்கப்பட்டுவிட்டார்கள். ஹிரா குகையில் இருக்கும் போது 96 வது அத்தியாயமான அலக் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப ஐந்து வசனங்கள் இறங்கின. இதன் மூலம் முஹம்மத் அவர்கள்
அல்லாஹ்வின் தூதராக நியமிக்கப்பட்டார்கள்.
படைத்த உன் இறைவனின் பெயரால் ஓதுவீராக! என்று துவங்கும் இவ்வசனங்
களில் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யுமாறு அல்லாஹ் கட்டளையிடவில்லை. மாறாக நீங்கள் ஓதுங்கள் என்று தான் கட்டளையிட்டான்.
எனவே நீங்கள் ஓதுங்கள், நீங்கள் படியுங்கள், நீங்கள் தெரிந்து கொள்ளுங்கள் என்கிற கருத்தில்தான் முத-ல் வசனமே இறைவன்
புறத்திலி-ருந்து அருளப்பட்டது. நபியவர்களுக்கு இது புதிய
அனுபவமாக இருந்ததால் பயந்தார்கள். இப்படி பயந்து கொண்டு வீட்டிற்கு வந்ததும் அவர்களுக்கு ஹதீஜா (ரலி-) ஆறுதல் சொன்ன விசயங்களையெல்லாம் ஆதாரப்பூர்வமான நபிகள் நாயகத்தின் வரலாறுகளில் நாம் படித்திருப்போôம்.
அதன் பிறகு போர்வை போர்த்திக் கொண்டிருப்பவரே! என்ற 73,74 வது அத்தியாயங்கள் அருளப்பட்டன. அந்த அத்தியாயங்கள் நபியவர்கள் தம்மளவில் கடைபிடிக்க வேண்டிய சில செய்திகளைச் சொல்வதற்காகவும் அவர்களின் அச்சத்தைப் போக்கவுமே அருளப்பட்ட வசனங்களாகும். இந்த காலகட்டத்தில் மக்களுக்கு பிரச்சாரம் செய்யுமாறு எந்தக் கட்டளையும் பிறப்பிக்கப்படவில்லை.
அதன் பிறகுதான் மக்களுக்குப் பிரச்சாரம் செய்வதற்காக அல்லாஹ் விடமிருந்து பின்வரும் வசனம் அருளப்பட்டது. 
 (முஹம்மதே!) உமது நெருங்கிய உறவினர்களுக்கு எச்சரிக்கை செய்வீராக! (அல்குர்ஆன் 26:214)
இதுதான் மக்களுக்குப் பிரச்சாரம் செய்யவேண்டும் என்று வந்த முதல் கட்டளையாகும். இந்தக் கருத்தில் ஆதாரப்பூர்வமான செய்திகள் பதிவு செய்யப்பட்டுள்ளன.
"(நபியே!) உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள்'' எனும் (26:214 ஆவது) இறைவசனம் அருளப் பெற்றபோது நபி (ஸல்) அவர்கள் "ஸஃபா' மலைக் குன்றின் மீது ஏறிக்கொண்டு, "பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே!'' என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்-லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார் கள். அங்கு வரமுடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ளிட்ட குறைஷியர் (அனைவரும்) வந்(து சேர்ந்)தனர். நபி (ஸல்) அவர்கள், "சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்க, மக்கள் "ஆம். (நம்புவோம்); உங்களிடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை'' என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், "அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன்'' என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், "நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்?'' என்று கூறினான். அப்போதுதான்
"அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்......'' என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-லி), நூல் : புகாரி 4770
இந்த ஸஃபா என்ற குன்று ஊருக்குள் மக்கள் வசிக்கும் பகுதியில் இருந்தது. அதனால்தான் அதில் ஏறி மக்களை நபியவர்கள் அழைக் கிறார்கள்.
நபியவர்கள் எல்லோரும் வாருங்கள் என்று கூப்பிட்டவுடன், நபியவர்களின் குரலைக் கேட்ட அந்தக் கோத்திரக்காரர்கள் அனைவரும் வந்துவிட்டார்கள். எந்தளவுக்கு நபியவர்களின் அழைப்புக்கு
அந்த மக்கள் செவிசாய்த்தார்களெனில், தன்னால் வரமுடியா விட்டாலும் தன் சார்பாக ஒரு தூதுவரை அனுப்பி முஹம்மது அவர்கள் என்ன சொல்லுகிறார்கள் என்று பார்ப்பதற்காக அனுப்பி வைத்து செய்தியைத் தெரிந்து கொண்டார்கள்.
நாற்பது வருடங்களாக பொய் சொல்லாமலும் நாணயமாகவும் ஆபாசமில்லாமலும் அற்பமாக நடக்காமலும் இருந்தவர் அழைப்பதால் அவர்களின் அழைப்பை ஏற்று குடும்பத்தார் அனைவரும் குழுமினார்கள்.
 இந்த அத்தியாயத்தில் கூறப்படும் அபூலஹபும், குறைஷிக் கூட்டத்தாரும் வந்தார்கள். அனைவரும் வந்ததும், அந்த மக்களைப் பார்த்து
அல்லாஹ்வின் தூதர் முஹம்மத் ஸல் அவர்கள், இந்த மலைக்குன்றின் பின்புறமிருந்து உங்களைத் தாக்குவதற்கு ஒரு குதிரைப் படை வந்து கொண்டிருக்கிறது என்று சொன்னால் என்னை உண்மைப்படுத்துவீர்களா? என்று கேட்பதின் மூலம் தனது நாணயத்தை முத-லில் நிரூபிக்கிறார்கள்.
நபியவர்கள் கேட்ட கேள்விக்கு ஆம் என்று அவர்களின் குடும்பத்தார் பதிலளித்தார்கள். நபியவர்கள் சொன்னதையெல்லாம் சோதித்துப் பார்க்காமலேயே நம்பினார்கள். அதற்குக் காரணம், நபியவர்கள் பொய் சொல்லாமல் நாற்பது வருட காலம் அந்த மக்களுக்கு மத்தியில் வாழ்ந்து காட்டியதுதான். அதையும் அந்த மக்கள் தங்கள் வாய்களாலேயே ஒப்புக் கொள்ளவும் செய்கிறார்கள். நீங்கள் பொய் சொல்லி ஒருக்காலும் நாங்கள் அனுபவத்தில் பார்த்ததே இல்லை. அதாவது நீங்கள் உண்மையை மட்டுமே பேசுகிறவர்களாகத்தான் நாங்கள் உம்மை அனுபவத்தில் கண்டிருக்கிறோம் என்பது அந்த மக்களின் பதிலாக இருந்தது.
இது நபிகளாரின் தனிச் சிறப்புமிக்க பண்புகளிலுள்ளதாகும். உலகத்தில் எந்தப் பிரச்சாரகனுக்கும் எந்த சாமியாருக்கும் எந்த ரிஷிக்கும் எந்த மகானுக்கும் தன்னுடைய கடந்த கால வாழ்க்கையைச் சொல்லி பிரச்சாரம் செய்ய முடியுமா? என்றால், முடியவே முடியாது.
உதாரணத்திற்கு நான் என்னுடைய கடந்த கால வாழ்க்கையைப் பார் என்று சொன்னால், யாரிடம் வந்து சொல்லுகிறாய்? உன் வண்டவாளங்கள் எங்களுக்குத் தெரியாதா? என்று நறுக்கென்று கேட்டுவிடுவார்கள். எனவே எனக்கோ உங்களுக்கோ உலகத்திலுள்ள எவருக்குமோ என் கடந்தகால வாழ்க்கையைப் பார் என்று சொல்லவே முடியாது. எந்த மனிதனுக்கும் கடந்த காலம் சுத்தமாக இருக்கவே இருக்காது. யாராக இருந்தாலும் தவறு செய்துதான் இருப்பார்கள். கொஞ்சம் என்றும் கூடுதல் என்றும் சொல்-லிக் கொள்ளலாமே தவிர தவறே செய்யாத ஒருவனையும் காட்டவே முடியாது. எனவே நான் கடந்த காலத்தில் தவறே செய்யவில்லை என்று ஒருவன் நாக்கின் மீது பல் போட்டுப் பேசமுடியவே முடியாது. அப்படிப் பேசினால் அவன் பொய் சொல்லுகிறான் என்றே பொருள். அதனால்தான் "நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது'' என்று பழமொழி சொல்லுவார்கள்.
நதியில் குளித்துவிட்டு போகவேண்டியதுதான். அதனுடைய மூலத்தைப் பார்த்துவிட்டுத்தான் குளிக்கவேண்டும் என நினைத்தால் ஒருக்காலும் ஒருவனாலும் குளிக்கவே முடியாது. அதில் பன்றிகூட செத்துக் கிடக்கும். கொஞ்ச தூரம் கடந்து சென்று பார்ப்போமாயின் யாராவது மலம் கழித்திருப்பார்கள். அல்லது சிறுநீர் கழித்து இருப்பார்கள். இன்னும் கொஞ்ச தூரம் கடந்து சென்று பார்ப்போமாயின் குப்பைக் கூளங்கள் கிடக்கும். இன்னும் கொஞ்ச தூரம் கடந்து சென்று பார்ப்போமாயின் எருமை மாட்டைக் கழுவுவார்கள். அதையெல்லாம் பார்த்தால் நதியில் குளிக்கவே முடியாது. ஆற்றுக்கு மூலம் பார்த்தால் தண்ணீரில் இறங் கவே முடியாது. இது சரியான கருத்துதான்.
அதுபோல் ரிஷிக்கும் மூலம் பார்க்கக் கூடாது என்கிறார்கள். ரிஷி என்றால் மகான். ஒருவரை மகான் என்று நம்பினால் இப்போது என்ன சொல்லுகிறார்? எப்படி நடக்கிறார் என்றுதான் பார்க்க வேண்டுமே தவிர, நேற்று எப்படியிருந்தார்? என்று பார்க்கவே கூடாது. எந்த மகானுக்கும் உருப்படியான பழைய பதிவுகள் இருக்கவே இருக்காது என்பதை ஒரு கொள்கையாகவே வைத்திருக்கிறார்கள். நம் காலத்தவர்களும் முந்திய காலத்தவர்களும்தான் நதி மூலமும் ரிஷி மூலமும் பார்க்கக் கூடாது என்கிறார்கள். ஆனால் முஹம்மது நபிகள் நாயகம் அவர்கள் மட்டும்தான் தம்மைப் பொருத்தவரை ரிஷி மூலமும் பார்க்கலாம் என்று சொல்லுகிறார்கள்.
என்னுடைய நாற்பது வருட காலங்களையும் ஆய்வு செய்து பார் என்று மக்களிடம் கூறி பிரச்சாரம் செய்கிறார்கள். இது நபிகளாரின் பெரும் சிறப்பாகும். அதையும் அல்லாஹ் தனது திருக்குர்ஆனில் சொல்-லிக் காட்டுகிறான்.
"அல்லாஹ் நாடியிருந்தால் இதை நான் உங்களுக்குக் கூறியிருக்க மாட்டேன். அவனும் இதை உங்களுக்கு அறிவித்திருக்க மாட்டான். உங்களிடம் இதற்கு முன் பல வருடங்கள் வாழ்ந்துள்ளேன். விளங்க மாட்டீர்களா?'' என்று (முஹம்மதே!) கூறுவீராக! 
(அல்குர்ஆன் 10:16)
நான் உங்களுடன் இவ்வளவு காலங்கள் வாழ்ந்திருக்கிறேன். அதைக் கூட நீங்கள் சிந்தித்துப் பார்க்க மாட்டீர்களா? ஏதேனும் குறைகளை என்னிடம் கண்டிருக்கிறீர்களா? என்று நபியவர்கள் தமது நாணயத்தை எடுத்துச் சொல்-லி, மக்களிடம் பிரச்சாரத்தைத் துவங்குகிறார்கள்.
பொதுவாக உள்ளூரில் யாருடைய போதனையும் எடுபடாது.
அவருடைய கடந்த கால நண்பர்கள் இருப்பார்கள். அவனது பலத்தையும் பலவீனத்தையும் அறிந்தவர்கள் இருப்பார்கள். சொந்த பந்தங்கள் இருப்பார்கள். இவன் சிறு பிராயத்தில் இருந்து மக்களால் கவனிக்கப்பட்டுக் கொண்டேயிருப்பதினால், இவனெல்லாம் சொல்லி- நாம் கேட்பதா? என்று சொல்லி-விடுவார்கள்.
அதே நேரத்தில் வெளியூர்க்காரன் எடுத்துச் சொல்லும் போது, அவனது
கடந்த காலத்தையெல்லாம் தெரிந்து இருக்க மாட்டார்கள். அவனது நிகழ்காலத்தை மட்டும்தான் பார்ப்பார்கள். ஆம்! இவர் பெரிய தாடி வைத்திருக்கிறார். பெரிய ஜுப்பா போட்டிருக்கிறார். நன்றாகப் பேசுகிறார். என்று மரியாதை கொடுத்து கேட்பார்கள்.
குறிப்பிட்ட நாட்களில் மட்டும்தான் நபியவர்கள் சிரியா போன்ற நாடுகளுக்கு வாணிபத்திற்குச் சென்றிருப்பார்கள். மற்றபடி நபியவர்கள் எப்போதுமே, உள்ளூரில்தான் வசித்துள்ளார்கள். ஒருவன் நல்லவனாக
ஒரு நாள் நடிக்கலாம். இரண்டு நாட்கள் நடிக்கலாம். ஆனால் 25 வருடத்திற்கு நடிக்க முடியுமா? என்றால், முடியாது. நபியவர்களின் சிறு வயதுப் பருவத்தைக்கழித்து விட்டு பார்த்தால் அவர்கள் தம்மை நபி என்று வாதிடும் முன் அம்மக்களுடன் 25 ஆண்டுகள் வாழ்ந்துள்ளனர். 25 வருடங்களாக ஒருவரால் அனைவரிடமும் அனைத்து நேரங்களிலும் நல்லவராக நடிக்கவே முடியாது. எனவே நபியவர்கள் இயற்கையாகவே அவர்களின் சுபாவத்திலேயே நல்லவர்களாகத்தான் இருந்திருக்கிறார்கள். அல்லாஹ் அவர்களைத் தூதராக ஆக்குவதற்காகவே
அப்படி வார்த்தெடுக்கிறான். அதனால்தான் மக்களிடம் பிரச்சாரம் செய்யும் போது இதற்கு முன் உங்களுடன் உண்டு, உடுத்தி, உறங்கி குடும்பமாக வாழ்ந்திருக்கிறேனே நான் பொய் சொல்-லியோ நேர்மை தவறியோ நடக்கக் கண்டீர்களா என்று அவர்களால் கேட்க முடிந்தது.
அதனால்தான் அந்த மக்களிடம் மலைக்குப் பின்னால் ஒரு படை தாக்க வருகிறதென்று சொன்னால் நம்புவீர்களா? என்று கேட்டதும் ஆம் என்று ஒத்துக் கொண்டு, உண்மையைத் தவிர தங்களிடம் எதையும்அனுபவித்ததே கிடையாது என்று சொல்லுகிறார்கள்.
அப்படியாயின், இதுவரைக்கும் உண்மையை மட்டுமே மூலதனமாகக் கொண்டிருக்கிற நான் சொல்லுகிறேன், உங்களுக்கு முன்னுள்ள கடும் வேதனையை எச்சரிக்கிறேன் என்கிறார்கள்.
அப்போது அந்த சபையில் இருந்த எல்லோரும் கேட்டுக் கொண்டுதான் இருக்கிறார்கள். அபூலஹப் என்பவன் எழுந்திரித்து, தப்பன் லக ஸாயிரல் யவ்ம், அலிஹாதா ஜமஃ(த்)தனா - நீ காலமெல்லாம் நாசமாகப் போ! இதற்காகத்தான் எங்களையெல்லாம் இங்கே ஒன்றுகூட்டினாயா? என்று நபியவர்களைப் பார்த்துச் சபிக்கிறான். அப்போதுதான் இந்த அத்தியாயம் இறங்கியது என்று இப்னு அப்பாஸ் அறிவிக்க புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.
மற்றொரு அறிவிப்பில்
ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் "ஸஃபா' மலைக்குன்றின் மீது ஏறி, "யா ஸபாஹா!'' ("உதவி! உதவி! அதிகாலை ஆபத்து!'') என்று கூறினார்கள்.
உடனே அவர்களை நோக்கி குறைஷியர் ஒன்றுதிரண்டு வந்து, "உங்களுக்கு என்ன (நேர்ந்துவிட்டது)?'' என்று கேட்டனர். நபி (ஸல்) அவர்கள், "எதிரிகள், காலையிலோ அல்லது மாலையிலோ உங்களைத் தாக்க வருகிறார்கள் என்று நான் அறிவித்தால் என்னை நீங்கள் நம்புவீர்களா?'' என்று கேட்டார்கள். "ஆம் (நம்புவோம்)' என்று அவர்கள் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், "நான் ஒரு கடினமான (நரக) வேதனை வருமுன் உங்களை எச்சரிக்கை செய்பவனாவேன்'' என்று சொன்னார்கள். உடனே அபூலஹப், "உனக்கு நாசம் உண்டாகட்டும். இதைச் சொல்லத்தான் எங்களை (இங்கே) ஒன்றுகூட்டினாயா?'' என்று கேட்டான். உடனே அல்லாஹ், "அபூலஹபின் இரண்டு கைகளும் நாசமாகட்டும்...'' எனும் (111:1ஆவது) வசனத்தை அருüனான்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர-லி), நூல்: புகாரி 4801
இன்னும் சில வார்த்தை வித்தியாசங்களுடன் புகாரியின் 4801, 4971, 4972 ஆகிய எண்களைக் கொண்ட செய்திகளாகவும் பதிவு செய்யப்பட்டுள்ளது.
இந்த ஆதாரப் பூர்வமான செய்தியிலி-ருந்து இந்த வசனம் மக்காவில் அருளப்பட்டது என்பது விளங்குகிறது. இந்த அத்தியாயம் மக்கீ என்று சொல்வதற்குரிய ஆதாரத்தைப் பெற்றிருக்கிறது. மக்காவில் அருளப்பட்டது என்று பொதுவாகச் சொல்வதை விட மக்காவின் நபித்துவ ஆரம்பத்திலேயே அருளப்பட்டது என்றும் குறிப்பிட்டே சொல்லலாம்.
வளரும் இன்ஷா அல்லாஹ
 
தொலைக் காட்சியில் தொலைந்து விட்ட சமுதாயம்    தொடர்: 2
வெட்கம்
பக்கீர் முஹம்மத் அல்தாபீ
நாளை மறுமையில் ஒவ்வொரு முஸ்லி-முக்கும் கொடுக்கப்படுகின்ற மிகப் பெரிய அருள், படைத்த இறைவனான அல்லாஹ்வைக் கண் முன்னால் காண்பதாகும்.
 அபூஹுரைரா (ர-லி) அவர்கள் கூறியதாவது: மக்கள், "அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் மறுமை நாளில் எங்கள் இறைவனைக் காண்போமா?'' என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகமூட்டமில்லாத நண்பகல் நேரத்தில் சூரியனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள். மக்கள், "இல்லை' என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மேகமூட்டமில்லாத பௌர்ணமி இரவில் சந்திரனைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படுவீர்களா?'' என்று கேட்டார்கள். மக்கள் "இல்லை' என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: என் உயிர் எவன் கையிலுள்ளதோ அவன்மீது சத்தியமாக! இவ்விரண்டில் ஒன்றைக் காண்பதற்கு நீங்கள் சிரமப்படாததைப் போன்றே, உங்கள் இறைவனைக் காண்பதற்கும் நீங்கள் சிரமப்படமாட்டீர்கள். என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
ஆதாரம் : முஸ்-லிம் 5678
பதினான்காம் நாள் நிலவை பௌர்ணமி தினத்தில் எந்த விதமான இடையூறுகளும் இன்றி நாம் பார்க்கின்றோமோ அவ்வாறு படைத்த இறைவனாகிய அல்லாஹ்வை மறுமையில் பார்க்க முடியும்.
அல்லாஹ் கூறுகிறான்: (முஹம்மதே!) வானவர்கள் அணி வகுக்க உமது இறைவன் வரும் போது
அல்குர்ஆன்:22:89
வானவர்கள் அணி வகுக்க புடை சூழ வரும் கண் கொள்ளாக் காட்சியைக் கண்டு மகிழ்ச்சி அடையக் காத்திருக்கும் சமுதாயம் நாளை மறுமையில் குருடர்களாக எழுப்பப்படும் அவல நிலைமைக்கு ஆளானால் அதை என்னவென்று சொல்வது என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
இந்த வசனத்தில் அடுத்து அல்லாஹ் இவ்வுலகில் எதையெல்லாம் பார்க்கக் கூடாது என்று தடை செய்திருந்தானோ அவைகளைப் பார்த்து அல்லாஹ்வின் வசனங்களை மறந்தவர்களைப் பற்றி இவ்வாறு
கூறுகிறான்.
எனது போதனையைப் புறக்கணிப்பவனுக்கு நெருக்கடியான வாழ்க்கை உண்டு. அவனை கியாமத் நாளில் குருடனாக எழுப்புவோம்.
அல்குர்ஆன்: 124-20
நாளை மறுமையில் மனிதன் அல்லாஹ்விடம் இறைவா! நான் உலகில் வாழும் போது பார்வையுடையவான இருந்தேன். என் கண்களுக்கு எவைகள் எல்லாம் காட்சி தந்தனவோ அவைகள் அனைத்தையும் பார்த்து ரசித்துக் இன்பத்தில் மூழ்கிக் கொண்டிருந்தேன். எந்த அளவுக் கென்றால்
தொலைக் காட்சியில் ஒளிபரப்புச் செய்யப்படும் திரைப்படங்களையும், சீரியல்களையும் நான் ஒரு போதும் விட்டு வைக்கவில்லை. எவ்வளவு பெரிய தொலைவில் இருந்தாலும் என்னுடைய கூர்மையான கண்களால் அவைகளையெல்லாம் முடியுமான வரை பார்த்து ரசிக்கக் கூடியவனாக
இன்பம் அனுபவிக்கக் கூடியவனாக இருந்தேன். என்று அவன் முறையிடும் போது அல்லாஹ் அவனுக்கு இவ்வாறு பதிலளிக்கிறான்.
அப்படித் தான். நம்முடைய வசனங்கள் உன்னிடம் வந்தன. அதை நீ மறந்தவாறே இன்று மறக்கப்படுகிறாய்'' என்று (இறைவன்) கூறுவான்.
உன்னிடத்தில் என்னுடைய வசனங்கள் அத்தாட்சிகள், என்னுடைய இறைத்தூதருடைய போதனைகள் அனைத்தும் உன்னிடத்தில் ஒன்றன் பின் ஒன்றாக தொடர்ச்சியாக வந்து கொண்டிருந்தன. நீயோ அவை களையெல்லாம் மறந்து துச்சமாக மதித்து உன்னுடைய கால்களுக்குக் கீழ் போட்டு மிதித்து என்னை மறந்து வாழ்ந்திருப்பாய் அதனால் தான் நானும் உன்னை மறந்து விடுகிறேன். அல்லாஹ்வின் புறத்தில் இருந்து இவனுக்கு பதிலளிக்கப்படும்
அன்புக்குரிய இஸ்லாமிய கொள்கைவாதிகளே இது எவ்வளவு பெரிய இழப்பு என்பதை நாம் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்க வேண்டும். தொலைக் காட்சியில் கிடைக்கும் அற்பமான இன்பத்திற்காக அல்லாஹ்வைக் காணும் பாக்கியத்தை இழக்கலாமா? என்பதை நாம் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அல்லாஹ் இந்த உலக வாழ்க்கையைப் பற்றி தெளிவாக நமக்கு இவ்வாறு கூறுகிறான்.
உங்களுக்கு முன் சென்றோரைப் போல் (நீங்களும் இருக்கிறீர்கள்.) அவர்கள் உங்களை விட வ-லிமைமிக்கோராகவும், அதிக மக்கட் செல்வமும் பொருட் செல்வமும் உடையோராகவும் இருந்தனர். தங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை அனுபவித்தனர். உங்களுக்கு முன் சென்றோர் தமது பாக்கியத்தை அனுபவித்தது போல் உங்களுக்குக் கிடைத்த பாக்கியத்தை நீங்கள் அனுபவித்தீர்கள். (வீண் விவாதங்களில்) மூழ்கியோரைப் போல் நீங்களும் மூழ்கி விட்டீர்கள். இவர்களது செயல்கள் இவ்வுலகிலும், மறுமையிலும் அழிந்து விட்டன. இவர்கள் தாம் நஷ்டமடைந்தவர்கள்.
அல்குர்ஆன்:69:9
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த உலக வாழ்க்கை இறை நம்பிக்கையாளர்களின் சிறைக்கூடம் என்று நமக்கு போதனை செய்துள்ளதை எப்படி நம்மால் மறக்க முடியும்?
அல்லாஹ்வைப் பார்க்க வேண்டும் என்று யாரெல்லாம் ஆசைப்படுகின்றார்
களோ அவர்கள் இந்த நிமிடம் முதல் உங்கள் உள்ளத்தை மாற்றிப் போடுங்கள். நேற்று வரையும் பார்க்கக் கூடாத காட்சிகளைப் பார்த்து ரசிகக்கக் கூடாத காட்சிகளையெல்லாம் ரசித்திருக்கலாம். தீமையான ஆபாசக் களஞ்சியங்களை எல்லாம் காண்பதிலே காலத்தையும் நேரத்தையும் தொலைத்திருக்கலாம். இந்த நொடியில் இருந்தாவது நாம் திருந்துவதற்கு முயற்சி செய்ய வேண்டும்.
நாம் மறுமை வாழ்வை நம்பிக்கை கொண்டு வாழ்க்கையின் அர்த் தத்தைப் புரிந்து வாழ்ந்து கொண்டிருக்கிற சமுதாயம். அல்லாஹ்வுக்காக இவைகளையெல்லாம் தூக்கி எறிந்து விடுவதில் இருந்து இன்னும் பின்வாங்கலாமா?
நபி (ஸல்) அவர்களின் தோழர்களின் கடந்த கால வரலாற்றைப் புரட்டிப் பார்த்தால் ஒரு கணம் மலைத்து இப்படியும் ஒரு சமுதாயம் வாழ்ந்து வழிகாட்டிச் சென்றுள்ளதா என்று எண்ணத் தோன்றுகிறது. நபித் தோழர்கள் பல தீமையான காரியங்களுக்கும் போதைப் பொருளுக்கும் அடிமையாகி அவைகளில் மூழ்கிக் கிடந்தார்கள் என்பதை வரலாறு நமக்குப் பாடம் புகட்டுகிறது.
நம்பிக்கை கொண்டோரே! மது சூதாட்டம், ப-லிபீடங்கள், (குறி கேட்பதற்கான) அம்புகள், ஆகியவை அருவருப்பானதும், ஷைத்தானின் நடவடிக்கையுமாகும். எனவே இதிலிருந்து விலகிக் கொள்ளுங்கள்! வெற்றி பெறுவீர்கள்! 
அல்குர்ஆன்:5;90
இவை அனைத்தும் உங்களுக்கு தீமையை ஏற்படுத்தும் என்றுஅல்லாஹ் கூறிய பிறகு அந்தச் சமுதாயம் அதற்கு எப்படியான ஒரு பிரதிபலி-ப்பைக் கொடுத்தது என்பதை வரலாற்று ஏடுகளில் நாம் எத்தனை முறை இந்த செய்திகளைப் புரட்டிப் பார்த்திருப்போம்.
அனஸ் (ர-லி) அவர்கள் கூறியதாவது: நான் அபூ தல்ஹா (ர-லி)
அவர்கள் வீட்டில் மக்களுக்கு மது பரிமாறுபவனாக இருந்தேன்.
அந்த நாட்களில் பேரீச்சம் பழ மதுவை (பேரீச்ச மரக்கள்ளை)யோ அவர்கள் குடித்து வந்தனர். (மதுவைத் தடை செய்யும் இறைவசனம்
அருளப்பட்டவுடன்), அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பொது அறிவிப்புச் செய்பவரை அழைத்து, "(மக்களே!) மது தடை செய்யப்பட்டு விட்டது'' என்று அறிவிக்கும்படி கட்டளையிட்டார்கள். அபூ தல்ஹா (ர-லி) அவர்கள் என்னிடம், "வெளியே சென்று இதை ஊற்றிவிடு'' என்று கூறி னார்கள். நான் வெளியே சென்று அதை (சாலையில்) ஊற்றி விட்டேன். மதீனா நகரின் தெருக்களில் அது ஓடியது. மக்களில் சிலர், "மது தங்கள் வயிறுகளில் இருக்கும் நிலையில் பல பேர் கொல்லப்பட்டிருக்கிறார்களே! (அவர்கüன் நிலை என்ன?)'' என்று கேட்டார்கள். அப்போது தான், "இறைநம்பிக்கை கொண்டு நற்செயல்கள் புரிகின்றவர்கள் (முன்னர்) எதையும் உண்டவை பற்றி அவர்கள் மீது குற்றமில்லை'' (5:93) என்னும் திருக்குர்ஆன் வசனம் அருளப்பட்டது.
ஆதாரம் : புகாரி 2464
மதுபானத்தைக் குடிப்பது வாழ்க்கையில் பெருமைமிக்கதாக அந்தச் சமுதாயத்தினர் கருதி வந்தனர். மதுபானத்தை பெரும் பீப்பாய்களில் சேமித்து அவைகளை அருந்தி வந்தார்கள் அப்படியான நிலையில்
அல்லாஹ்வின் வசனம் அவர்களின் உள்ளக் கதவை பலமாகத் தட்டிய போது அந்த மதுப் பீப்பாய்கள் மதீனாவின் தெருக்களில் ஆறாய் பெருக்கெடுத்து ஓடின என்று அனஸ் பின் மாலி-க் (ரலி-) அவர்கள் கூறுகிறார்கள். 
அல்லாஹ்வின் கட்டளை இறங்கிய அடுத்த நொடிப் பொழுதில் இந்த படுபாதகமான செயலை அல்லாஹ் விரும்பவில்லை என்பதை அறிந்து அல்லாஹ்வின் சட்டத்திற்குக் கட்டுப்பட்டு சரணாகதி அடைந்தார்கள் நபிகளாரின் அருமைத் தோழர்கள். அந்த முன்மாதிரி மிக்க சமுதாயத்தைப் பார்த்து மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்-லிப் பெருமிதம் கொள்ளும் நாம் அந்த நபித்தோழர்களின் பெயர்களைக் கேட்கும் போதல்லாம்
அல்லாஹ் அவர்களைப் பொருந்திக் கொள்வானாக! என்று நம்மை அறியாத நிலைகளில் நமது நாவுகள் உச்சரிக்கும் வழக்கத்தை உடையவர்களாக இருக்கின்ற நாம் அவர்களைப் போல் வாழ வேண்டாமா?
 நாம் இந்த சமுதாயத்தை விபச்சாரத்தின்பால் தள்ளி விடக் கூடிய இந்தக் கொடிய பாவத்தை இந்த உலகில் கிடைக்கும் அற்ப சுகத்திற்காக நம்முடைய மறுமை இலட்சியத்தைக் கை விடலாமா?
நாம் நினைக்கலாம். நாங்கள் சினிமாக்களையும் சீரியல்கள்களையும் அவற்றில் காட்டப்படும் காட்சிகளையும் பார்க்கத்தானே செய்கிறோம்.
அவைகளைப் பார்த்து விட்டு விபச்சாரமா செய்கிறோம் என்று கேள்வியைக் கேட்டுக் கொள்கிறோம். இப்படி நம்முடைய உள்ளத்தில் இந்தக் கேள்வி கூட எழக் கூடாது என்பதற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இதுவும் ஒரு வகை விபச்சாரம்தான் எச்சரிக்கை செய்துள்ளார்கள். இதனைப் பின்வரும் நபி மொழியின் மூலம் நாம் விளங்கிக் கொள்ளலாம்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: விபசாரத்தில் மனிதனுக்குள்ள பங்கு (விதியில்) எழுதப்பட்டுள்ளது. அதை அவன் அடையக் கூடியவனா கவே உள்ளான். கண்கள் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். காதுகள் செய்யும் விபசாரம் (ஆபாசப் பேச்சுகளைச்) செவியுறுவதாகும். நாவு செய்யும் விபசாரம் (ஆபாசப்) பேச்சாகும். கை செய்யும் விபசாரம் (அந்நியப் பெண்ணைப்) பற்றுவதாகும். கால் செய்யும் விபசாரம் (தவறான உறவைத் தேடி) அடியெடுத்து வைப்பதாகும். மனம் இச்சை கொள்கிறது; ஏங்குகிறது. மர்ம உறுப்பு அதை உண்மையாக்குகிறது;
அல்லது பொய்யாக்குகிறது.
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ர-லி) நூல் : முஸ்லி-ம் 5165
விபச்சாரத்திற்கான மூன்றாவது காரணம் வெட்கமின்மை
வெட்க உணர்வு என்பது மனிதர்களிடமும் கட்டாயம் காணப்பட வேண்டிய ஒரு அம்சமாகும். வெட்க உணர்வு யாரிடம் காணப்படுகிறதோ அவரால் தான் தீமையில் இருந்தும் பாவமான செயல்களில் இருந்தும் தன்னைத் தற்காத்துக் கொள்ள முடியும். விபச்சாரம், திருட்டு, கொள்ளை, கொலை போன்ற செயல்களில் ஈடுபடுகின்றவர்கள், நாலுபேர் நான் செய்யும் இந்தத் தவறான செயல்களைப் பார்த்து விட்டால் என்னைப் பற்றி என்ன நினைப்பார்கள். என்று நினைத்து தன்னுடைய தன்னுடைய தவறை பகிரங்கமாகவும் இரகசியமாகவும் செய்வதற்குப் பயப்படுவான்.
இந்த ஒரு உன்னதமான பண்பு உலக மக்களிடம் இல்லாததுதான் உலகத்தில் நடக்கும் அனைத்துத் தீமைகளும் நிகழ்வதற்கு முக்கியமான அடிப்படைக் காரணமாகும்.
வெட்கம் இல்லையென்றால் எந்தத் தீமையான காரியமாக இருந்தாலும் அதனைச் செய்வதற்கு மனிதன் சற்றும் தயக்கம் காட்டமாட்டான். வெட்கம் என்பது ஒரு சிறந்த உன்னதமிக்க பண்பாகும் என இஸ்லாம் நமக்குக் கற்றுத் தருகிறது.
கடந்த காலத்தில் நமது முன்னோர்களிடம் காணப்பட்ட சிறந்த பண்பாகும். அதை நமது தந்தைமார்களும் தாய்மார்களும் சகோதர சகோதரிகளும் பேணிப் பாதுகாத்து நம் வரைக்கும் கொண்டு வந்து விட்டுச் சென்றார்கள்.
ஆனால் நம்மிடம் காணப்பட்ட அந்த வெட்க உணர்வு என்றைக்கு நம்முடைய வீட்டுக்குள் இந்தத் தொலைக்காட்சிப் பெட்டி குடி புகுந்ததோ அன்றைக்கே அந்த உணர்வை நாம் மூட்டை கட்டி முடிச்சுப் போட்டு விட்டோம். நாம் எதையெல்லாம் நம்முடைய வாழ்க்கையில் வெட்கக்கேடான காரியங்கள் என்றும் ஆபாசமான காரியங்கள் என்றும் கருதி ஒதுக்கி தீமைகள் என்று மூட்டை கட்டி வைத்தோமோ அவைகள் எல்லாவற்றையும் கொஞ்சம் கூட அருவருப்பில்லாமல் வெட்க உணர்வில்லாமல் வீட்டு முற்றத்தில் அமர்ந்து கொண்டு தாய், தந்தை, மகன், மகள், மருமகன், மருமகள், மற்றும் குடும்பத்தினர்கள் அத்தனை பேர்களும் ஒன்றாகக் கூடி ஆரவாரத்தோடு சேர்ந்து பார்க்கும் ஒரு அவல நிலையை இன்று கண்கூடாகக் பார்க்கும் ஒரு நிலை ஏற்பட்டுள்ளது.
அன்னியப் பெண்ணோடு ஒரு அன்னிய ஆண் கட்டித் தழுவுவதையும் முத்தமிடுவதையும் படுக்கையறைக் காட்சியையும் ஆபாசமான உணர்ச்சிகளையும் அப்பட்டமாக வீட்டில் இருக்கும் தாய் தந்தை வயது வந்த பிள்ளைகள் அனைவர்களும் ஒன்று சேர்ந்து பார்க்கின்ற ஒரு
அவல நிலையை என்னவென்று சொல்வது?
நபி (ஸல்) அவர்களை முன்மாதிரி என்று மூச்சுக்கு முன்னூறு தடவை சொல்கின்ற சமுதாயத்தவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த அளவிற்கு வெட்கப்பட்டிருக்கின்றார்கள் என்பதை அறிந்திருந்தும் கொஞ்சம் கூட உணர்ச்சியற்றவர்களாக நாம் எவ்வாறு நடந்து கொள்கிறோம்.
அந்த அளவிற்கு இந்த தொலைக்காட்சி நம்மையெல்லாம் வெட்க உணர்வற்றவர்களாக மாற்றியுள்ளது என்பதை நினைத்துப் பார்க்க வேண்டும்.
தொடரும் இன்ஷா அல்லாஹ்
 
விரல் அசைத்தல் விரிவான ஆய்வு
விரல் அசைத்தல் செய்தி பலவீனமானதா?
அப்பாஸ் அலீ எம்.ஐ,எஸ்.ஸி.
 
தொழுகையில் விரல் அசைத்தல் நபிவழி என்பதை ஆதாரத்துடன் சொல்- வருகிறோம். ஆனால் இதை ஏற்காத மத்ஹப்வாதிகளும் ஹதீஸ்கலை பற்றிய ஞானமில்லாமல் தமக்குத் தாமே டாக்டர் பட்டம் கொடுத்துக் கொள்பவர்களும் சில பிரசுரங்களை வெளியிட்டு இது குறித்த ஹதீஸை பலவீனமானது என்பதை நிறுவ முயன்றுள்ளனர். இது தொடர்பாக விரிவாக நாம் காண்போம்.
தொழுகையில் அத்தஹிய்யாத் அமர்வில் விரலை அசைப்பது பெரிய சர்ச்சைக்குரிய சட்டமாக இன்றைக்கு சிலரால் சமுதாயத்தில் ஆக்கப்பட்டு விட்டது.
இருப்பில் விரலை அசைப்பது நபிவழி என்றும் இந்த நபிவழியை தொழுகையில் அவசியம் கடைப்பிடிக்க வேண்டும் என்றும் நாம் கூறி வருகிறோம். இதில் மாற்றுக்கருத்து கொண்டவர்கள் விரலை அசைப்பது நபிவழி இல்லை என்றும் தொழுகையில் விரலசைப்பது பித்அத் என்றும் கூறிவருகின்றனர்.
மனோ இச்சைகளை ஒதுக்கி வைத்துவிட்டு அல்லாஹ்விற்குப் பயந்து நபிமொழிகளைப் படிப்பவர்கள் இதில் குழப்பம் அடைய மாட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையில் விரலசைத்தார்கள் என்பதை சந்தேகத்திற்கிடமின்றி அறிந்து கொள்வார்கள். இந்த நபிவழியை கேலி-யும் கிண்டலும் செய்ய மாட்டார்கள்.
மனோஇச்சையை மார்க்கமாகக் கொண்டவர்கள் இந்தச் செய்தியில் எழுப்பும் தேவையற்ற சந்தேகங்களுக்கும் விமர்சனங்களுக்கும் தெளிவான பதிலை நாம் அறிந்து வைத்திருக்க வேண்டும்.
இந்த ஆய்வுக் கட்டுரையை இரண்டு பகுதிகளாகப் பிரித்துள்ளோம். முதல் பகுதியில் விரலசைப்பது நபிவழி என்பதற்கான ஆதாரங்களையும் இந்த நபிவழிக்கு எதிராக வைக்கப்படும் தவறான வாதங்களுக்கு முறையான பதிலையும் தெளிவுபடுத்துவோம்.
இரண்டாம் பகுதியில் விரலசைப்பது கூடாது என்பவர்கள் தங்கள் கூற்றுக்கு ஆதாரமாகக் காட்டும் செய்திகளின் உண்மை நிலையையும் அதற்கான சரியான விளக்கத்தையும் கூறுவோம்.
இருப்பில் விரலசைப்பதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாக
அமைந்துள்ளது.
879 أَخْبَرَنَا سُوَيْدُ بْنُ نَصْرٍ قَالَ أَنْبَأَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ زَائِدَةَ قَالَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ قَالَ حَدَّثَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظَرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ وَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ ثُمَّ وَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى كَفِّهِ الْيُسْرَى وَالرُّسْغِ وَالسَّاعِدِ فَلَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا قَالَ وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ لَمَّا رَفَعَ رَأْسَهُ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ وَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ حَدَّ مِرْفَقِهِ الْأَيْمَنِ عَلَى فَخِذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ اثْنَتَيْنِ مِنْ أَصَابِعِهِ وَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ إِصْبَعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا رواه النسائي
வாஇல் பின் ஹுஜ்ர் (ர-லி) அவர்கள் கூறுகிறார்கள் : அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்லி-க் கொண்டேன். பின்னர், அவர்களை நான் பார்த்தேன். அப்போது அவர்கள், எழுந்து நின்று "தக்பீர்' கூறினார்கள். (அப்போது) தம் காதுகளுக்கு நேராகக் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் தம் வலக் கையை இடது முன் கை, மணிக்கட்டு, முழங்கை (ஆகிய மூன்றின்) மீதும் வைத்தார்கள். அவர்கள் "ருகூஉ' செய்ய விரும்பியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகக்) கைகளை உயர்த்தினார்கள். (பின்னர்) தம் கைகளை மூட்டுக்கால்களின் மீது வைத்தார்கள். பின்னர் தமது தலையை ("ருகூஉ'வி-லிருந்து) நிமிர்த்தியபோது, முன்பு போன்றே (தம் காதுகளுக்கு நேராகத்) தம் கைகளை உயர்த்தினார்கள். பின்னர் "சஜ்தா' செய்தார்கள். அப்போது தம் உள்ளங்கைகளைக் காதுகளுக்கு நேராக (தரையில்) வைத்தார்கள். பின்னர் (சஜ்தாவிலி-ருந்து எழுந்து)
அமர்ந்தார்கள். அப்போது இடக் காலை விரித்து வைத்தார்கள். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது வலது கையின் இரண்டு விரல்களை மடக்கினார்கள். (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்தார்கள். பின்னர் ஆட்காட்டி விரலை உயர்த்தி பிரார்த்தனையில் ஈடுபட்ட நிலையில் அதை
அசைத்துக்கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
நூல் : நஸாயீ 870
விரல் அசைத்தல் தொடர்பான இந்தச் செய்தி செய்தி தாரமீ (1323), அஹ்மத் (18115), ஸஹீஹ் இப்னு ஹுஸைமா (814), ஸஹீஹ் இப்னு ஹிப்பான் (பாகம் 5, பக்கம் 170), தப்ரானீ கபீர் பாகம் 22, பக்கம் 35), பைஹகீ (பாகம் 1, பக்கம் 310), ஸுனனுல் குப்ரா (பாகம் 1, பக்கம் 376), அல்முன்தகா இப்னுல் ஜாரூத் (பாகம் 1, பக்கம் 62) ஆகிய நூற்களிலும் இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுகின்றது. இதை வாயில் பின் ஹுஜ்ர் என்ற நபித்தோழர் அறிவிக்கின்றார்.
இந்த நபித்தோழர் ஹள்ர மவ்த் என்ற ஊரைச் சேர்ந்தவர். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எவ்வாறு தொழுவார்கள் என்பதைக் கவனித்து அறிவதற்காகவே அவர் மதீனா வந்தார். நபி (ஸல்) அவர்கள் தொழும் முறையை அறிந்து கொள்ள வேண்டும் என்ற நோக்கத்தில் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் ஒவ்வொரு செயலையும் நன்கு கவனித்துள்ளார்.
இதை மேற்கண்ட ஹதீஸில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவ்வாறு தொழுவார்கள் என்று அவர்களின் தொழுகையைப் பார்க்கப் போகிறேன் என்று (எனக்குள்) நான் சொல்-லிக் கொண்டேன். பின்னர்,
அவர்களை நான் பார்த்தேன் என்று இந்த நபித்தோழர் குறிப்பிடு கின்றார்.
எனவே நபி (ஸல்) அவர்கள் இருப்பில் விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்ற இந்த நபித்தோழரின் கூற்று தெளிவானதும் உறுதியானதுமாகும்.
இதே ஹதீஸ் தாரமியிலும் இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தியில் இருப்பில் விரலசைப்பதை இன்னும் உறுதிப்படுத்தும் வகையில் கூடுதல் வாசகம் இடம்பெற்றுள்ளது.
1323 حَدَّثَنَا مُعَاوِيَةُ بْنُ عَمْرٍو حَدَّثَنَا زَائِدَةُ بْنُ قُدَامَةَ حَدَّثَنَا عَاصِمُ بْنُ كُلَيْبٍ أَخْبَرَنِي أَبِي أَنَّ وَائِلَ بْنَ حُجْرٍ أَخْبَرَهُ قَالَ قُلْتُ لَأَنْظُرَنَّ إِلَى صَلَاةِ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ كَيْفَ يُصَلِّي فَنَظرْتُ إِلَيْهِ فَقَامَ فَكَبَّرَ فَرَفَعَ يَدَيْهِ حَتَّى حَاذَتَا بِأُذُنَيْهِ وَوَضَعَ يَدَهُ الْيُمْنَى عَلَى ظَهْرِ كَفِّهِ الْيُسْرَى قَالَ ثُمَّ لَمَّا أَرَادَ أَنْ يَرْكَعَ رَفَعَ يَدَيْهِ مِثْلَهَا وَوَضَعَ يَدَيْهِ عَلَى رُكْبَتَيْهِ ثُمَّ رَفَعَ رَأْسَهُ فَرَفَعَ يَدَيْهِ مِثْلَهَا ثُمَّ سَجَدَ فَجَعَلَ كَفَّيْهِ بِحِذَاءِ أُذُنَيْهِ ثُمَّ قَعَدَ فَافْتَرَشَ رِجْلَهُ الْيُسْرَى وَوَضَعَ كَفَّهُ الْيُسْرَى عَلَى فَخِذِهِ وَرُكْبَتِهِ الْيُسْرَى وَجَعَلَ مِرْفَقَهُ الْأَيْمَنَ عَلَى فَخْذِهِ الْيُمْنَى ثُمَّ قَبَضَ ثِنْتَيْنِ فَحَلَّقَ حَلْقَةً ثُمَّ رَفَعَ أُصْبُعَهُ فَرَأَيْتُهُ يُحَرِّكُهَا يَدْعُو بِهَا قَالَ ثُمَّ جِئْتُ بَعْدَ ذَلِكَ فِي زَمَانٍ فِيهِ بَرْدٌ فَرَأَيْتُ عَلَى النَّاسِ جُلَّ الثِّيَابِ يُحَرِّكُونَ أَيْدِيَهُمْ مِنْ تَحْتِ الثِّيَابِ رواه الدارمي
இதற்குப் பிறகு குளிர்காலத்தில் நான் மறுபடியும் வந்தேன். அப்போது மக்கள் ஆடைகளைப் போர்த்தி இருந்த நிலையில் அந்த ஆடைகளுக்குள் தங்கள் கைகளை அசைத்துக் கொண்டிருந்ததைப் பார்த்தேன்.
அறிவிப்பவர் : வாயில் பின் ஹுஜ்ர் (ர-லி) நூல் : தாரமீ (1323)
நபி (ஸல்) அவர்கள் மட்டுமின்றி நபித்தோழர்களும் தொழுகையில் விரலசைத்துள்ளார்கள் என்பதை இதிலி-ருந்து அறிய முடிகின்றது.
தவறான வாதங்கள்
1 ஆஸிம் பின் குலைப் பலவீனமானவரா?
விரலசைத்தல் சம்பந்தப்பட்ட ஹதீஸின் அறிவிப்பாளர் வரிசையில் ஆஸிம் பின் குலைப் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி இப்னுல் மதீனீ அவர்கள் இவர் தனித்து அறிவித்தால் ஆதாரமாக ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று விமர்சனம் செய்துள்ளார்கள். இதை அடிப்படையாக வைத்து சிலர் விரலசைத்தல் பற்றிய ஹதீஸ் பலவீனமானது என்று கூறுகின்றனர்.
ஆஸிம் பின் குலைப் பல அறிஞர்களால் நம்பகமானவர் என்று நற்சான்று அளிக்கப்பட்டவர். இவர் நம்பகமானவர் என்று இமாம்
அஹ்மது, இமாம் நஸாயீ, இமாம் அபூ ஹாதிம், இமாம் அஹ்மது பின் ஸாலி-ஹ், இமாம் இப்னு சஅத், இமாம் யஹ்யா பின் மயீன், இப்னு ஷிஹாப், இப்னு ஷாஹீன், இமாம் இஜ்லீ மற்றும் பலர் கூறியுள்ளனர்.
இமாம் அலீ பின் மதீனீ அவர்கள் மட்டுமே இவரைப் பற்றி குறை கூறியுள்ளார்.
ஒரு அறிவிப்பாளரைப் பற்றிக் குறை சொல்லப்பட்டால் அந்தக் குறை என்ன என்று தெளிவாகக் கூற வேண்டும். அவ்வாறு கூறினால்
மட்டுமே அதைப் பரிசீலனை செய்து சரியாக இருந்தால் ஏற்றுக் கொள்ளப்படும்.
குறிப்பாக ஒருவரைப் பற்றி பலர் நல்லவர், சிறந்தவர், நம்பகமானவர் என்று கூறியிருக்கும் போது குறை சொல்பவர் அவரின் குறையைத் தெளிவுபடுத்த வேண்டும். இல்லையெனில் அவரின் விமர்சனம் எந்த மதிப்பும் இல்லாததாகக் கருதப்பட்டு நிராகரிக்கப்படும். இதுவும் ஹதீஸ் கலையில் கூறப்பட்டுள்ள விதியாகும்.
இதைக் கவனத்தில் கொண்டு பார்க்கும் போது ஆஸிம் பின் குலைப் என்பவரை இப்னுல் மதீனீ அவர்களைத் தவிர அனைவரும் பாராட்டியுள்ளனர்; நம்பகமானவர் என்று கூறியுள்ளனர்.
இந்நிலையில் இவரைப் பற்றி விமர்சனம் செய்யும் இப்னுல் மதீனீ
அவர்கள் அவர் தனித்து அறிவித்தால் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று காரணம் ஏதும் இல்லாமல் கூறியுள்ளார். ஆஸிம் பலவீனமானவர்
என்பதற்கு ஏற்கத்தகுந்த எந்தக் காரணத்தையும் இப்னுல் மதீனீ அவர்கள் தெளிவுபடுத்தவில்லை.
மேலும் இப்னுல் மதீனீ அவர்கள் அறிவிப்பாளரை விமர்சனம் செய்வதில் கடினப்போக்குள்ளவர். நம்பகமானவர்களைப் பலவீனமானவர்கள் என்று தவறுதலாகக் கூறக்கூடியவர். இதை இமாம் இப்னு அபீ ஹாதிம் அவர்கள் அல்ஜரஹ் வத்தஃதீல் என்ற தமது நூலி-ல் குறிப்பிட்டுள்ளார்கள்.
الجرح والتعديل لابن أبي حاتم (7 / 73) سئل أبو زرعة عن فضيل بن سليمان فقال لين الحديث روى عنه علي بن المديني وكان من المتشددين
அலீ பின் மதீனீ அவர்கள் அறிவிப்பாளர்களை விமர்சனம் செய்வதில் கடினப்போக்குள்ளவராக இருந்தார் என அபூ சுர்ஆ தெரிவித்தார்.
நூல் : அல்ஜரஹ் வத்தஃதீல் பாகம் : 7 பக்கம் : 73
ஆஸிம் பின் குலைபைப் பற்றி மற்ற அறிஞர்கள் அனைவரும் நல்லவிதமாகக் கூறியிருக்கும் போது இமாம் இப்னுல் மதீனீ அவர்கள் மட்டும் காரணம் கூறாமல் விமர்சனம் செய்துள்ளதால் இமாம் இப்னுல் மதீனீ அவர்கள் அறிவிப்பாளர் ஆஸிம் விஷயத்தில் தவறான முடிவை எடுத்துள்ளார் என்பது இதன் மூலம் தெளிவாகின்றது.
ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் என்பதால் இவரிடமிருந்து நான்கு ஹதீஸ்களை இமாம் முஸ்லி-ம் அவர்கள் தமது நூலி-ல் பதிவு செய்துள்ளார்கள். எனவே ஆஸிம் பின் குலைப் இமாம் முஸ்-லிம்
அவர்களிடத்திலும் நம்பகமானவர் ஆவார்.
ஆஸிம் பின் குலைப் இடம்பெற்ற ஒரு செய்தியை இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சரியான செய்தி என்று கூறியுள்ளார்கள். இமாம் இப்னு ஹஜர் அவர்களைப் பொறுத்தவரை ஒரு அறிவிப்பாளர் விசயத்தில் அறிஞர்களின் ஒட்டுமொத்த கருத்தையும் கவனத்தில் கொண்டு இறுதியாக சரியான முடிவை எடுக்கக்கூடியவர்.
ஆஸிம் பின் குலைப் பற்றி அலீ பின் மதீனீ அவர்கள் செய்த விமர்சனத்தை இந்த இமாம் கண்டுகொள்ளாமல் ஆஸிம் பின் குலைப் நம்பகமானவர் என்ற முடிவையே எடுத்துள்ளார். எனவே இப்னுல் மதீனீ அவர்களின் விமர்சனத்தை ஏற்றுக்கொள்ள முடியாது.
இருப்பில் விரலசைப்பது தொடர்பான செய்தி ஆதாரப்பூர்வமானது என்பதை சான்றுகளுடன் நிரூபித்து விட்டோம். மேலதிக தகவலுக்காக பின்வரும் தகவல்களைக் கூறுகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் இருப்பில் ஆட்காட்டி விரலை அசைத்துக் கொண்டிருந்தார்கள் என்று வரும் ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று இமாம் நவவீ அவர்கள் நற்சான்று அளித்துள்ளார்கள்.
خلاصة الأحكام (1 / 428)1391 وَعَن وَائِل: " أَنه وصف صَلَاة رَسُول الله صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّم َ وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد قَالَ: ثمَّ رفع أُصْبُعه، فرأيته يحركها يَدْعُو بهَا " رَوَاهُ الْبَيْهَقِيّ بِإِسْنَاد صَحِيح.
நூல் : குலாசதுல் அஹ்காம் பாகம் : 1 பக்கம் : 428)
இமாம் இப்னுல் முலக்கீன் அவர்கள் இந்த ஹதீஸ் சரியானது என்று நற்சான்று அளித்துள்ளார்.
البدر المنير (4 / 11) عَن وَائِل بن حجر رَضِيَ اللَّهُ عَنْه أَنه وصف صَلَاة رَسُول الله صَلَّى الله عَلَيْهِ وَسلم وَذكر وضع الْيَدَيْنِ فِي التَّشَهُّد، قَالَ: ثمَّ رفع أُصْبُعه فرأيته يحركها يَدْعُو بهَا . هَذَا الحَدِيث صَحِيح رَوَاهُ الْبَيْهَقِيّ فِي سنَنه بِهَذَا اللَّفْظ بِإِسْنَاد صَحِيح
நூல் : அல்பத்ருல் முனீர் பாகம் : 4 பக்கம் : 11
திரித்துக் கூறப்பட்ட ஹதீஸ் கலை விதி
ஒரு அறிவிப்பாளர் குறித்து பல அறிஞர்கள் நம்பகமானவர் என்றும் ஒரே ஒரு அறிஞர் பலவீனமானவர் என்று கூறினால் அந்த ஒரு அறிஞரின் கூற்றைத் தான் எடுக்க வேண்டும் என நாம் கூறுவதாகச் சிலர் பொய் கூறி வருகின்றனர்.
இந்த விதியை நாம் ஏற்றுக் கொண்டதாகவும் எனவே இதனடிப்படையில் விரலசைப்பதற்கு ஆதாரமாக நாம் கூறும் ஹதீஸ் பலவீனமானது என்றும் நிறுவ முயற்சிக்கின்றனர்.
ஆனால் இவர்கள் நாம் கூறாத விதியை இவர்களாகக் கற்பனை செய்துகொண்டு நமக்கு பதில் தருவது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தி மக்களை ஏமாற்ற நினைக்கின்றனர்.
இவர்கள் கூறுவது போன்ற விதியை என்றைக்கும் நாம் சொன்னதில்லை. அதனடிப்படையில் எந்த ஹதீஸையும் பலவீனம் என்று கூறியதில்லை.
ஒரு அறிவிப்பாளர் குறித்து பல அறிஞர்கள் நல்ல விதமாகவும் ஒரு அறிஞர் குறையும் கூறினால் அப்போது குறை கூறிய அறிஞர் குறைக் கான காரணத்தை தெளிவாகக் கூறியுள்ளாரா? என்று பார்ப்போம்.
தக்க சான்றுடன் தெளிவாக குறை கூறப்பட்டிருந்தால் அதைக் கூறியவர் ஒருவராக இருந்தாலும் அவருடைய கூற்றை அடிப்படையாகக் கொண்டு அந்த அறிவிப்பாளர் பலவீனமானவர் என்று முடிவெடுப்போம்.
அந்த ஒரு அறிஞர் குறைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தாமல் மூடலாக விமர்சனம் செய்திருந்தால் அப்போது அவருடைய கூற்றை எடுக்காமல் மற்ற அறிஞர்களின் கூற்றையே எடுப்போம். இது தான் நமது நிலைப்பாடு.
ஹதீஸ்கலை அறிஞர்கள் குறை கூறப்பட்டுவிட்டதா? என்று மட்டும் பார்க்க மாட்டார்கள். கூறப்பட்ட குறை காரணத்துடன் தெளிவாக உள்ளதா? என்பதையும் சேர்த்துத் தான் அறிஞர்கள் பார்ப்பார்கள். விமர்சனம் தெளிவில்லாமல் பொத்தாம் பொதுவாகக் கூறப்பட்டிருந்தால் அது நிராகரிக்கப்படும்.
விரலசைப்பதற்கு ஆதாரமாக உள்ள ஆஸிம் பின் குலைபுடைய ஹதீஸில் இந்த நிலைப்பாட்டிற்கு மாற்றமாக நாம் முடிவெடுக்கவில்லை. மாறாக இந்த விதியின் அடிப்படையில் ஆஸிம் விஷயத்தில் இப்னுல் மதீனீ அவர்கள் கூறிய குறை தெளிவின்றி இருப்பதால் அதை ஏற்றுக் கொள்ளாமல்
அந்த ஹதீஸ் சரியான ஹதீஸ் என்று முடிவெடுத்துள்ளோம்.
அறிவிப்பாளர் அபூ பல்ஜ் அவர்களுடைய அறிவிப்பின் நிலை
பலருக்கு மாற்றமாக ஒரு அறிஞர் குறை கூறினாலும் அதை ஏற்க வேண்டும் என நாம் கூறியதாக இவர்களாக ஒரு விதியைக் கற்பனை செய்து கொண்டனர். இந்த விதியின் அடிப்படையில் பின்வரும் செய்தியை பலவீனம் என்று நாம் கூறுவதாகவும் வாதிடுகின்றனர்.
4535حَدَّثَنَا عَمْرُو بْنُ عَوْنٍ أَخْبَرَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بَلْجٍ عَنْ زَيْدٍ أَبِي الْحَكَمِ الْعَنَزِيِّ عَنْ الْبَرَاءِ بْنِ عَازِبٍ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ إِذَا الْتَقَى الْمُسْلِمَانِ فَتَصَافَحَا وَحَمِدَا اللَّهَ عَزَّ وَجَلَّ وَاسْتَغْفَرَاهُ غُفِرَ لَهُمَ رواه أبو داود
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : இரு முஸ்-லிம்கள் சந்திக்கும் போது கைகொடுத்து மாண்பும் வ-லிமையும் மிக்க அல்லாஹ்வை புகழந்து அவனிடம் அவ்விருவரும் பாவமன்னிப்புத் தேடினால் அவர்களுக்கு மன்னிப்பு வழங்கப்படுகின்றது.
அறிவிப்பவர் : பராஉ பின் ஆஸிப் (ரலி-) நூல் : அபூதாவுத் (4535))
இந்தச் செய்தியில் அபூ பல்ஜ் என்ற அறிவிப்பாளர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றி பல அறிஞர்கள் நல்லவிதமாகக் கூறினாலும் சில அறிஞர்கள் குறை கூறியுள்ளதால் குறை கூறிய அறிஞர்களின் கூற்றின் அடிப்படையில் இது பலவீனமானது என்று நாம் கூறியதாக வாதிடுகின்றனர்.
அபூ பல்ஜுடைய விசயத்தில் அவர் பலவீனமானவர் என்று நாம் முடிவெடுத்ததைப் போன்று ஆஸிம் பின் குலைபுடைய விசயத்திலும் அவ்வாறு முடிவெடுக்க வேண்டும் என்று வாதிடுகின்றனர். எனவே இந்தச் செய்தியின் உண்மை நிலையை நாம் தெளிவுபடுத்த வேண்டியுள்ளது.
அறிவிப்பாளர் அபூ பல்ஜ் குறித்து சில அறிஞர்கள் நல்லவிதமாகக் கூறினாலும் சிலர் இவரைப் பற்றி குறை கூறியுள்ளனர். இமாம் புகாரி அவர்களும், இமாம் யஹ்யா பின் மயீன் அவர்களும் குறைக்கான காரணத்தைத் தெளிவுபடுத்தாமல் பலவீனமானவர் என்று கூறியுள்ளனர்.
ஆனால் இவரை குறை கூறிய மற்ற அறிஞர்கள் குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தியுள்ளனர்.
இவரைப் பற்றி குறை கூறிய அறிஞர்கள் ஆஸிம் விசயத்தில் இப்னுல் மதீனீ குறைக்கான காரணத்தை தெளிவுபடுத்தாமல் விமர்சனம் செய்தது போன்று விமர்சனம் செய்யவில்லை.
மாறாக இவரிடத்தில் உள்ள குறையை தெளிவாகக் குறிப்பிட்டுள்ளனர்.
இவர் நம்பகமானவராக இருந்தாலும் தவறிழைக்கக் கூடியவர் என இமாம் இப்னு ஹிப்பான் கூறியுள்ளார். இமாம் இப்னு ஹஜர் அவர்கள் சில வேளைகளில் தவறிழைப்பார் என்று கூறியுள்ளார். இமாம் அஹ்மது அவர்கள் இவர் தவறான செய்திகளை அறிவிக்கக்கூடியவர் என்று குறிப்பிட்டுள்ளார்.
மேலும் முஸாபஹா பற்றிய இந்தச் செய்தியில் பராஉ பின் ஆஸிப் (ர-லி) அவர்களிடமிருந்து ஸைத் பின் அபீ ஷஃசாயி என்பவர் அறிவிக்கின்றார்.
இவர் நம்பகமானவர் என்று முடிவு செய்வதற்கு ஏற்கத் தகுந்த எந்த அறிஞரும் நற்சான்று அளிக்கவில்லை. இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமானதாகும்.
மேலும் இந்தச் செய்தியை அபூ பல்ஜிடமிருந்து ஹுஸைம் என்பவர் அறிவிக்கின்றார். இவர் தத்லீஸ் எனும் இருட்டடிப்பு வேலையைச் செய்யக்கூடியவர் என இமாம்கள் தெளிவுபடுத்தியுள்ளனர்.
அதாவது தனக்கு அறிவித்த அறிவிப்பாளரைப் போக்கிவிட்டு தான் கேட்காத அறிவிப்பாளரிடமிருந்து கேட்டதைப் போன்ற தோரணையில் அறிவிப்பார். இவரைப் போன்றவர்கள் நான் கேட்டேன்; எனக்கு அறிவித்தார் என்பன போன்ற சொற்களைக் கூறினால் தான் இவர்களுடைய அறிவிப்பு ஏற்கப்படும்.
ஆனால் மேற்கண்ட ஹதீஸில் ஹுஸைம் அபூ பல்ஜிடம் நேரடியாகக் கேட்டதைத் தெளிவுபடுத்தும் வகையில் எந்த வாசகத்தையும் கூறவில்லை என்பதால் இதன் காரணத்தாலும் இந்தச் செய்தி பலவீனமாகின்றது.
எனவே தெளிவான சான்றுகளின் அடிப்படையில் பலவீனமாக உள்ள இந்த ஹதீஸை விரலசைப்பது தொடர்பான ஹதீசுடன் ஒப்பிடுவது முழங்காலுக்கும் மொட்டைத்தலைக்கும் முடிச்சு போடும் செயலாகும்.
பலவீனமான அறிவிப்பாளர் இப்போது பலமுள்ளவராக மாறிவிட்டாரா?
தொழுகையைத் துவக்கும் போதும், ருகூவுக்குச் செல்லும் போதும், ருகூவி-லிருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம் ரக்அத் துக்கு எழும் போதும் கைகளை உயர்த்த வேண்டும் என்ற கருத்தில் ஏராளமான ஹதீஸ்கள் உள்ளன. ஆனால் ஒரேயொரு ஹதீஸில் மட்டும் பின்வருமாறு உள்ளது.
حدثنا هناد حدثنا وكيع عن سفيان عن عاصم بن كليب عن عبد الرحمن بن الأسود عن علقمة قال قال عبد الله بن مسعود ألا أصلي بكم صلاة رسول الله صلى الله عليه وسلم فصلى فلم يرفع يديه إلا في أول مرة قال وفي الباب عن البراء بن عازب قال أبو عيسى حديث ابن مسعود حديث حسن وبه يقول غير واحد من أهل العلم من أصحاب النبي صلى الله عليه وسلم والتابعين وهو قول سفيان الثوري وأهل الكوفة
இப்னு மஸ்ஊத் (ர-லி) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) தொழுதது போல் தொழுது காட்டட்டுமா? என்று கூறி விட்டுத் தொழுது காட்டினார்கள். ஒரு தடவை தவிர அவர்கள் கைகளை உயர்த்தவில்லை.
நூல் : திர்மிதி 238
ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என்ற ஹதீஸை ஆஸிம் பின் குலைப் தான் அறிவிக்கிறார்.
அதன் காரணமாக இந்த ஹதீஸை பலவீனம் என்று கூறும் நீங்கள் விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸை மட்டும் ஏற்பது ஏன்? என்று மத்ஹப் உலமாக்கள் விமர்சனம் செய்கிறார்கள். ஒரு அறிவிப்பாளரை ஒரு நேரத்தில் பலவீனமானவர் என்று கூறிவிட்டு மற்றொரு நேரத்தில் பலமுள்ளவர் என்று மாற்றிக் கூறுவது முரண்பாடாக இல்லையா? என்றும் கேட்கின்றனர்.
ஒரு தடவை தான் கையை உயர்த்த வேண்டும் என்ற ஹதீஸை நாம் ஏற்றுக் கொள்ளவில்லை என்பது உண்மையே! நம்மைப் போல் இன்னும் ஏராளமான அறிஞர்களும் இந்த ஹதீஸை ஏற்றுக் கொள்வதில்லை.
ஆனால் அதற்கு இவர்கள் கூறுகின்ற ஆஸிம் பின் குலைப் அறிவிக்கிறார் என்ற காரணத்திற்காக அந்த ஹதீஸை நாம் நிராகரிக்கவில்லை.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தொழுகையின் துவக்கத்திலும், ருகூவின் போதும், ருகூவிலி-ருந்து எழும் போதும், இரண்டு ரக்அத் முடிந்து மூன்றாம்
ரக்அத்துக்கு எழும் போதும் கைகளை உயர்த்தியுள்ளனர் என்பதை ஏராளமான நபித்தோழர்கள் அறிவித்துள்ளனர்.
இவ்வாறு ஏராளமான வழிகளில் அறிவிக்கப்படுவதற்கு முரணாக ஒரு தடவை மட்டுமே கைகளை உயர்த்தினார்கள் என, ஒரே ஒருவர் வழியாக அறிவிக்கப்படும் ஹதீஸ் அமைந்துள்ளது. அதிகமானவர்கள் அறிவிப்பதை மறுக்கும் வகையில் ஒரே ஒருவரின் அறிவிப்பு இருந்தால் அந்தக் காரணத்திற்காக ஒரே ஒருவரின் அந்த ஹதீஸை ஏற்காமல் அதிகமானவர்களின் அறிவிப்பை ஏற்றுக் கொள்ள வேண்டும் என்ற விதியின் அடிப்படையில் தான் இப்னு மஸ்ஊத் (ரலி-) ஹதீஸை ஏற்கக் கூடாது என்று நாம் கூறுகிறோம்.
அந்த ஹதீஸை ஏற்கக் கூடாது என்பதற்கு ஆஸிம் பின் குலைப் பலவீனமானவர் என்று நாம் கூறவில்லை. ஆசிம் பின் குலைபுக்குப் பதிலாக யாராலும் குறை கூறப்படாத ஒருவர் அறிவித்தாலும் இந்த முடிவைத் தான் நாம் எடுப்போம். எனவே இந்த வாதமும் தவறான அடிப்படையின் மேல் எழுப்பப்பட்ட வாதமாகும்.
விரலசைப்பது பற்றி வரும் ஹதீஸ் ஷாத் வகையைச் சேர்ந்த பலவீனமான செய்தியா?
விரலசைப்பது தொடர்பான ஹதீஸை ஆஸிம் வழியாக அறிவிக்கும் அறிவிப்பாளர் ஸாயிதா ஆவார். இவரது நம்பகத் தன்மையில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை.
ஆயினும் இவரைத் தொடர்புபடுத்தி வேறு ஒரு விமர்சனத்தை சில மவ்லவிகள் செய்து வருகின்றனர்.
அவர்கள் செய்யும் விமர்சனம் என்ன என்பதை அறிந்து கொள்வதற்கு முன் ஹதீஸ் துறை சம்பந்தமான ஒரு விதியைப் புரிந்து கொண்டால் விளங்குவதற்கு எளிதாக இருக்கும்.
ஒரு செய்தியை சலீம் என்பவரிடமிருந்து ஐந்து பேர் அறிவிக்கி
றார்கள் என்று வைத்துக் கொள்வோம். இந்த ஐந்து பேரில் நால்வர் ஒரு விதமாக அறிவிக்கிறார்கள். ஒருவர் மட்டும் அந்தச் செய்தியை அதற்கு முரணாக அறிவிக்கிறார் என்றும் வைத்துக் கொள்வோம்.
இந்த நிலையில் நால்வர் அறிவிப்பதைத் தான் ஏற்றுக் கொள்ள வேண்டும். அவர்களுக்கு நேர்முரணாக அறிவிப்பவர் நம்பகமானவராக இருந்தாலும் இவர் அறிவிப்பதைத் தள்ளுபடி செய்ய வேண்டும். இவர் அறிவிப்பது ஷாத் - அரிதானது - எனக் கூறப்படும்.
ஏனெனில் ஒருவரிடம் தவறு ஏற்படுவதை விட நால்வரிடம் தவறு ஏற்படுவது அரிதாகும். எனவே தங்கள் ஆசிரியர் கூறியதாக நால்வர் கூறியதை ஏற்றுக் கொண்டு, தனது ஆசிரியர் கூறியதாக ஒருவர் கூறுவதை மறுத்து விட வேண்டும்.
விரல் அசைத்தல் பற்றிய ஹதீஸில் இந்த அம்சம் உள்ளது என்பதே இவர்களின் விமர்சனம்.
அதாவது நபிகள் நாயகம் தொழுத முறையை
வாயில் பின் ஹுஜ்ர் அறிவிக்கிறார்.
வாயில் பின் ஹுஜ்ர் கூறியதாக குலைப் அறிவிக்கிறார்.
குலைப் கூறியதாக அவரது மகன் ஆஸிம் அறிவிக்கிறார்.
ஆஸிம் கூறியதாக
1. சுப்யான்
2. காலி-த் பின் அப்துல்லாஹ்
3. இப்னு இத்ரீஸ்
4. ஸாயிதா
ஆகிய நால்வர் அறிவிக்கின்றனர்.
இவர்களில் ஸாயிதா மட்டுமே விரல் அசைத்தலைப் பற்றிக் கூறுகிறார்.
மற்ற மூவரின் அறிவிப்பில் விரல் அசைத்ததாகக் கூறவில்லை.
கா-லித் பின் அப்துல்லாஹ், சுஃப்யான் ஆகியோர் இதைப் பற்றிக் கூறும் போது இஷாரா (சைகை) செய்தார்கள் என்றே கூறுகிறார்கள். இப்னு இத்ரீஸ் அறிவிக்கும் போது விரலை உயர்த்தினார்கள் என்று கூறுகிறார்.
ஆனால் ஸாயிதா மட்டும் விரலை அசைத்ததாகக் கூறுகிறார்.
ஆஸிமுடைய நான்கு மாணவர்களில் மூவர் அறிவிப்பதற்கு மாற்றமாக ஸாயிதா அறிவிப்பதால் இது ஷாத் என்ற தரத்திற்கு இறங்கி விடும். எனவே இது பலவீனமானதாகும் என்பது இவர்களின் விமர்சனம்.
ஹதீஸ் கலையை மிகவும் நுணுக்கமாக ஆராய வேண்டும். மேலோட்டமாக ஆராய்ந்தால் விபரீதமான முடிவுக்குத் தள்ளி விடும் என்பதற்கு இவர்களின் இந்த விமர்சனம் சான்றாகும்.
முரண்பாடும் கூடுதல் விளக்கமும்
ஒரு ஆசிரியரின் மாணவர்களில் பலர் அறிவிப்பதற்கு நேர்முரணாக ஒரு சிலர் அறிவிப்பது தான் ஷாத் ஆகும். ஒரு ஆசிரியரின் பல மாணவர்கள் அறிவித்ததை விட ஒரே ஒருவர் கூடுதலாக அறிவித்தால் அவர் நம்பகமானவராகவும் இருந்தால் அது ஷாத் என்ற தரத்திற்கு இறங்காது.
முரணாக அறிவிப்பது வேறு! கூடுதலாக அறிவிப்பது வேறு! இந்த நுணுக்கமான வேறுபாட்டைக் கவனிக்காமல் நுனிப்புல் மேய்வதால் இவ்வாறு வாதிடுகின்றனர்.
15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள். 15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிடவில்லை என்று ஒருவர் மட்டும் கூறுகிறார்.
இவ்விரு செய்திகளும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவையாகும். இரண்டில் ஏதேனும் ஒன்று தான் உண்மையாக இருக்க முடியும். ஒன்று உண்மையானால் மற்றொன்று தானாகவே பொய்யாகி விடும். இது தான் முரண்பாடு! இவ்வாறு வரும் போது அதிகமானவர்கள் கூறுவதை ஏற்க வேண்டும்.
15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் கோழிக்கறி சாப்பிட்டார் என்று ஐந்து பேர் கூறுகிறார்கள். ஒருவர் மட்டும் 15-3-2007 அன்று காலை 10 மணிக்கு சலீம் சிக்கன் 65 சாப்பிட்டார் என்று கூறுகிறார். இவ்விரு செய்திகளும் முரண்பட்டவை அல்ல. ஒன்றை ஒன்று மறுக்கும் வகையில் இது அமையவில்லை.
கோழிக்கறி என்று பொதுவாகச் சிலர் கூறுகின்றனர். ஒருவர் மட்டும் உன்னிப்பாகக் கவனித்து அந்தக் கோழிக்கறி எந்த வகை என்பதையும் சேர்த்துக் கூறுகிறார். ஒன்றை ஏற்றால் இன்னொன்றை மறுக்கும் நிலை இங்கே ஏற்படாது. சிக்கன் 65 சாப்பிட்டதை ஏற்கும் போது கோழிக்கறி சாப்பிட்டதையும் சேர்த்தே ஏற்றுக் கொள்கிறோம்.
மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா இறக்கவில்லை என்பதும் முரண்!
மூஸா இறந்து விட்டார் என்பதும், மூஸா கட-லில் மூழ்கி இறந்தார் என்பதும் முரண் அல்ல!
இந்த அடிப்படையில் மேற்கண்ட அறிவிப்பைக் கவனித்தால் ஸாயிதா கூறுவதும், மற்றவர்கள் கூறுவதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டவை
அல்ல!
அப்துல்லாஹ் பின் இத்ரீஸ் கூறும் போது விரலை உயர்த்தினார்கள் என்று மட்டும் கூறுகிறார். ஸாயிதா கூறும் போது விரலை உயர்த்தி
அசைத்தார்கள் என்று கூறுகிறார். அந்த இரண்டுக்கும் இடையே எந்த முரண்பாடும் இல்லை.
இது போல் சுஃப்யான், காலித் ஆகியோர் அறிவிக்கும் போது இஷாரா செய்தார்கள் என்று அறிவிக்கின்றனர். ஸாயிதா கூறும் போது
அசைத்தார்கள் என்கிறார். இவ்விரண்டும் முரண் அல்ல!
இஷாரா என்பதின் பொருள்
இஷாரா என்பது விரிந்த அர்த்தம் கொண்டது. வார்த்தைகளைப் பயன்படுத்தாமல் ஒரு கருத்தைச் சொல்வதே இஷாரா எனப்படும்.
அசைவுகளைக் கொண்ட இஷாராவும் உள்ளது. அசைவுகள் இல்லாத இஷாராவும் உள்ளது.
ஒருவரை எச்சரிக்கும் போது ஆட்காட்டி விரலை மேலும் கீழும்
அசைத்துக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இது அசைவுடன் கூடிய இஷாரா ஆகும்.
சிறுநீர் கழிக்கப் போவதைக் குறிப்பிட ஆட்காட்டி விரலை அசைக்காமல் நிறுத்திக் காட்டுவோம். இதுவும் இஷாரா தான். இதுஅசைவு இல்லாத இஷாரா ஆகும்.
எனவே இஷாரா என்பதில் அசைத்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. அசைக்காமல் சைகை செய்தார்கள் என்ற கருத்தும் உள்ளது. இவ்வாறு விரிந்த அர்த்தம் உள்ள சொல்லை இவ்விருவரும் பயன்படுத்துகிறார்கள். இவர்களது வார்த்தையிலிருந்து அந்த இஷாரா அசைவுடன் கூடியதா? அசைவு இல்லாததா? என்பது தெளிவாகவில்லை. ஸாயிதா இதைத் தெளிவுபடுத்துகிறார்; முரண்படவில்லை.
மனிதன் வந்தான் என்று இவ்விருவரும் கூறுகிறார்கள்; உயரமான மனிதன் வந்தான் என்று ஸாயிதா கூறுகிறார் என்று வைத்துக் கொண்டால் இரண்டும் முரண் என்று யாருமே கூற மாட்டோம்.
மனிதன் என்பதில் உயரமானவரும் இருக்கலாம்; உயரம் குறைந்தவரும் இருக்கலாம். அதை மற்ற இருவர் தெளிவுபடுத்தவில்லை. உயரமான மனிதர் என்று ஒருவர் தெளிவாகக் கூறி விட்டார் என்று புரிந்து கொள்வதைப் போல் இதையும் புரிந்து கொண்டால் இந்த ஹதீஸை ஷாத் என்று கூற மாட்டார்கள்.
இஷாரா என்பது அசைத்தல் என்பதற்கு முரணானது அல்ல என்பதைப் புரிந்து கொள்ளப் பின்வரும் ஹதீஸை சான்றாகக் கொள்ளலாம்.
 باب إشارة الخاطب بالسبابة على المنبر عند الدعاء في الخطبة وتحريكه إياها عند الإشارة بها أنا أبو طاهر نا أبو بكر نا بشر بن معاذ العقدي نا بشر بن المفضل نا عبد الرحمن بن إسحاق عن عبد الرحمن بن معاوية عن بن أبي ذباب عن سهل بن سعد قال ما رأيت رسول الله صلى الله عليه وسلم شاهرا يديه قط يدعو على منبره ولا على غيره ولكن رأيته يقول هكذا وأشار بأصبعه السبابة يحركها قال أبو بكر عبد الرحمن بن معاوية هذا أبو الحويرث مدني - صحيح ابن خزيمة ج: 2 ص: 351
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மிம்பரிலோ மற்ற இடங்களிலோ கைகளை உயர்த்தி துஆ செய்ததை நான் கண்டதில்லை. மாறாக தமது ஆட்காட்டி விரலால் இஷாரா செய்து அசைப்பார்கள் என்று ஸஹ்ல் பின் சஅது (ர-லி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
நூல் : இப்னு குஸைமா, பாகம் : 2, பக்கம் :351
இந்த ஹதீஸ் அத்தஹிய்யாத்தில் விரலசைப்பது பற்றிக் கூறும் ஹதீஸ் அல்ல. இஷாரா என்ற சொல்-லின் பொருளை விளக்குவதற்காகவே இதைக் குறிப்பிடுகிறோம்
ஆட்காட்டி விரலை இஷாரா செய்து அசைப்பார்கள் என்று இதில் கூறப்படுகிறது. முரண்பட்ட இரு சொற்களை இணைத்துப் பேச முடியாது. இஷாரா என்பதும் அசைத்தல் என்பதும் நேர் முரண் என்றால் இஷாரா செய்து அசைப்பார்கள் என்று கூற முடியாது.
எனவே ஆட்காட்டி விரலை அசைத்தார்கள் என்பதும் இஷாரா செய்தார்கள் என்பதும் ஒன்றுக்கொன்று முரண்பட்டதல்ல என்பது இதிலிருந்து உறுதியாகின்றது.
செத்து சாகவில்லை என்று கூற முடியாது. சாப்பிட்டு சாப்பிடவில்லை என்று கூற முடியாது. சூடான குளிர் நீர் என்று சொல்ல முடியாது. ஆனால்அசைத்து இஷாரா செய்தார்கள் என்று கூற முடியும்.
ஒன்றுக்கொன்று முரணா இல்லையா என்பதை அறிந்து கொள்ள இரண்டையும் இணைத்துப் பேச முடியுமா என்று பார்க்க வேண்டும். இணைத்து பேச முடிந்தால் அது ஒன்றுகொன்று முரண் அல்ல. இரண்டையும் இணைத்துப் பேச முடியாவிட்டால் அது ஒன்றுக்கொன்று முரண் என்று பொருள்.
பலர் அறிவிப்பதற்கு முரணாக ஒருவர் அறிவித்தால் அது ஷாத் என்று விளங்கி வைத்திருப்பவர்களுக்கு முரண் என்றால் என்ன என்பது விளங்கவில்லை. இது தான் குழப்பத்துக்குக் காரணம்.
எனவே இந்த நுணுக்கத்தை இவர்கள் அறியாததால் இந்த வாதத்தை முன் வைக்கின்றனர். ஒருவர் அறிவிப்பதை விட மேலதிகமாக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை? ஒருவர் அறிவிப்பதற்கு எதிராக பலர் அறிவிக்கும் போது என்ன நிலை?
مقدمة فتح البارى (ج 2 / ص 257)
وأما المخالفة وينشأ عنها الشذوذ والنكارة فإذا روى الضابط والصدوق شيئا فرواه من هو أحفظ منه أو أكثر عددا بخلاف ما روى بحيث يتعذر الجمع على قواعد المحدثين فهذا شاذ وقد تشتد المخالفة أو يضعف الحفظ فيحكم على ما يخالف فيه بكونه منكرا
பலர் அறிவிப்பதற்கு முரணாக ஒருவர் அறிவிக்கும் போது ஷாத் என்ற நிலை ஏற்படும். நம்பகமானவர் அல்லது உண்மையாளர் ஒன்றை அறிவிக்க, அவரை விட உறுதியானவரோ, அல்லது அவரை விட அதிக எண்ணிக்கை உடையவர்களோ இரண்டையும் இணைக்க முடியாத
அளவுக்கு முரண்பட்டு அறிவித்தால் அது தான் ஷாத் ஆகும்.
ஃபத்ஹுல் பாரி முன்னுரையில் இப்னு ஹஜர் இவ்வாறு குறிப்பிடுகின்றார்.
எனவே அத்தஹிய்யாத்தில் விரலை அசைக்க வேண்டும் என்ற ஹதீஸ் எந்த வகையிலும் பலவீனமாக்க முடியாத, வலுவான ஹதீஸ் என்பதே இதன் மூலம் உறுதியாகின்றது.
இவர்களின் வாதப்படி ஷாத் என்று கூறுவதாக இருந்தால் தொழுகையில் விரலை அசைக்கக்கூடாது என்பதற்கு இவர்கள் ஆதாரமாகக் காட்டும் பின்வரும் ஹதீஸை தான் ஷாத் என்று கூற வேண்டும்.
வளரும் இன்ஷா அல்லாஹ்
வானவர்கள்                             தொடர் : 11
இறைத்தூதர்களுக்கு உதவுதல்
எம்.முஹம்மத் சலீம் எம்.ஐ.எஸ்.ஸி, மங்களம்

மக்காவைப் பாதுகாத்தல் :
அல்லாஹ்வை வணங்குவதற்காக அகிலத்தில் எழுப்பப்பட்ட ஆலயங்களில் முதல் ஆலயம் மக்காவில் இருக்கும் கஃபத்துல்லாஹ் ஆகும். அது ஆதம் (அலை) அவர்களால் கட்டப்பட்டது. பிறகு, இப்ராஹீம் (அலை) மற்றும் இஸ்மாயீல் (அலை) அவர்களால் புதுப்பிக்கப்பட்டது. பிறகு மீண்டும் நபி (ஸல்) காலத்தில் புதுப்பிக்கப்பட்டது. ஆதிஆலயமான மக்காவை மறுநாள் வரை காப்பதற்காக என்று மலக்குகளை அல்லாஹ் நியமித்துள்ளான். அந்த மலக்குகள் கியாமத் நாள் வரை அனைத்து
விதமான சேதங்கள் பாதிப்புகளி-லிருந்தும் மக்காவை பாதுகாத்துக் கொண்டேயிருப்பார்கள். இதற்கான ஆதாரம் இதோ..
தஜ்ஜாலைப் பற்றிய அச்சம் மதீனாவுக்குள் நுழையாது! அன்றைய தினம் மதீனாவுக்கு ஏழு வாசல்கள் இருக்கும்! ஒவ்வொரு வாச-லிலும் இரு வானவர்கள் இருப்பார்கள் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்)
அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அபூபக்ரா (ர-லி), ஆதாரம் : புகாரி (1872)
மக்கா, மதீனா தவிர தஜ்ஜால் கால்வைக்காத எந்த ஊரும் இராது! மதீனாவின்
எந்தவொரு வாசலானாலும் அங்கே வானவர்கள் அணிவகுத்து
அதைக் காவல் புரிந்துகொண்டு இருப்பார்கள். பின்னர் மதீனா, தனது குடிமக்களுடன் மூன்று முறை நிலநடுக்கத்திற்குள்ளாகும்; அப்போது ஒவ்வொரு காஃபிரையும் முனாஃபிக்கையும் (இறைமறுப்பாளனையும் நயவஞ்சகனையும்) அல்லாஹ் (மதீனாவிலிலி-ருந்து) வெளியேற்றிவிடுவான்! என நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர் : அனஸ் (ர-லி),
நூல் : புகாரி (1881)
நல்லடியார்களுக்கு உதவுதல் :
நல்ல முறையில் அடிபணிந்து வாழும் நல்லடியார்களுக்கு உதவுவதற்கும் மலக்குகளுள் சிலரை ஏக இறைவன் வைத்துள்ளான். சத்தியத்தின் பாதையில் நாம் பயணிக்கும்போது சிரமங்களும் இக்கட்டான சூழ்நிலைகளும் வரும் நேரங்களில் அல்லாஹ்வின் உத்தரவின்படி அவர்கள் நமக்கு உதவிசெய்வார்கள்.
இதன்படி, நல்லடியார்களிலேயே முதல் தரத்தில் இருப்பவர்களான நபிமார்களுக்கு மலக்குகள் பல சந்தர்ப்பங்களில் உதவிபுரிந்துள்ளார்கள். இதன் மூலம் நபிமார்கள் ஏகத்துவ பிரச்சாரத்தை எத்திவைக்கும் சமயத்திலே துன்பங்கள் திரண்டு வரும் வேளையிலே அவர்களுக்கு பக்கபலமாக மலக்குகள் முன்நின்று பாதுகாப்பை அளித்துள்ளார்கள். இவ்வாறு, வானவர்கள் அல்லாஹ்வின் பாதையில் பயணம் செய்யும் சத்தியவாதிகளான நன்மக்களுடன் இருந்து அவர்கள் அசத்தியத்தை அசத்தியவாதிகளை எதிர்ப்பதற்கான நல்ல ஒத்துழைப்பை வழங்கிக் கொண்டிருப்பார்கள். இந்த வகையில் இறை நம்பிக்கையாளர்களுக்கு உதவும் வகையில் பல போர்களில் மலக்குகள் பங்குபெற்று இறைமறுப்பாளர்கள் இணைவைப்பாளர்களுக்கு எதிராக கடுமையாக போரிட்டுள்ளார்கள். இதற்கு ஆதாரமாக இருக்கும் குர்ஆன் மற்றும் ஹதீஸ்களை இனிப் பார்ப்போம்.
நபி ஈஸா (அலை) அவர்களுக்கு உதவுதல்
இத்தூதர்களில் சிலரை, மற்றும் சிலரை விட சிறப்பித்திருக்கிறோம். அவர்களில் சிலரிடம் அல்லாஹ் பேசியுள்ளான். அவர்களில் சிலருக்கு, பல தகுதிகளை அவன் உயர்த்தியிருக்கிறான். மர்யமுடைய மகன் ஈஸாவுக்குத் தெளிவான சான்றுகளை வழங்கினோம். ரூஹுல் குதுஸ் மூலம் அவரை வலுப்படுத்தினோம்.
(அல்குர்ஆன் 2 : 253)
நபி (ஸல்) அவர்களுக்கு உதவுதல் :
காஃபிர்களிடமிருந்து காப்பாற்றுதல் :
அன்னை ஆயிஷா (ர-லி) அவர்கள் கூறியதாவது : (ஒருமுறை) நான் நபி (ஸல்) அவர்கüடம், "(தாங்கள் காயமடைந்த) உஹுதுப் போரின் காலகட்டத்தை விடக் கொடுமையான காலகட்டம் எதையேனும் தாங்கள் சந்தித்ததுண்டா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "நான் உன் சமுதாயத்தாரால் நிறையத் துன்பங்க