ஜனவரி தீன்குலப் பெண்மணி - 2010

மத்தியில் இடஒதுக்கீடு

தமிழக முஸ்லிம்களின் நீண்ட நாள் கோரிக்கையை ஏற்று தமிழக அரசு மிக குறைந்த அளவான 3.5 சதவிகிதம் கல்வி வேலைவாய்ப்புகளில் இடஒதுக்கீடு தந்தது. ஒன் றுமே இல்லாமல் இருப்பதற்கு இது பரவாயில்லை என்ற அடிப்ப டையில் ஏற்றுக் கொண்டு இன்னும் கூடுதலாக தர வேண்டும் என்ற கோரிக்கையை தமிழக முஸ்லிம்கள் வைத்துள்ளனர்.


தொடர்ந்து படிக்க January 10, 2010, 4:16 AM

பிப்ரவரி 2010 தீன்குலப் பெண்மணி

விண்ணை முட்டிய விலை வாசி உயர்வு

கடந்து பத்து வருடங்களில் இல்லாத அளவுக்கு அத்தியாவசியப் பொருட்களில் விலை ராக்கெட் வேகத்தில் உயர்ந்துள்ளது. ஆட்சிக்கு வரும் ஒவ்வொரு கட்சியினரும் நாங்கள் ஆட்சிக்கு வந்தால் விலைவாசி உயர்வை கட்டுப்படுத்துவோம் என்று முழக்கமிடுகின்றனர். ஆனால் ஆட்சிக்கு வந்த அடுத்த நிமிடமே பெட்ரோல், டீசல், பேருந்து கட்டணத்தை உயர்த்தி விடுகின்றனர். இதில் எந்த கட்சியும் விதிவிலக்கல்ல.

தற்போது அசூர வேகமாக அரிசி,பருப்பு,சமையல் எண்ணெய் உட்பட அத்தியாவசிய பொருட்களின் விலை முன்பில்லாத வகையில் கடுமையாக ஏறியுள்ளது. இதை கட்டுப்படுத்த அரசு செய்தது என்ன? நியாய விலைக் கடைகளில் ஒரு ரூபாய்க்கு ஒரு கிலோ அரிசியும் 50 ரூபாய்க்கு அஞ்சறைப் பெட்டி சாமான்களும் வழங்கியுள்ளோம் என்று தமிழ அரசு தெரிவிக்கிறது.

தொடர்ந்து படிக்க February 24, 2010, 7:43 AM

மார்ச் 2010 தீண்குலப் பெண்மணி

ரயில்வே பட்ஜெட் ஓர் பார்வை

உலகில் தரை மார்க்கமாக சிறுவர்கள், முதியவர்கள், பெண்கள், நோயாளிகள் என்று அனைத்து தரப்பினரும் சிரமம் குறைந்த பயணத்திற்கு ஏற்றது ரயில் பயணம்தான் என்றால் அது மிகையாகாது. பஸ் கட்டணத்தைவிட குறைவான கட்டணத்தில் சொகுசாக நடுத்தர வர்க்கத்தி னர் பயணம் செய்ய ஏற்றதாக இந்திய ரயில்வேயின் கட்டணங்கள் இருப்பது மகிழ்ச்சிக்குரியது. சூப்பர் பாஸ்ட் ரயில், தக்கல், இ டிக்கெட் என்று மறை முகமாக கட்டணங்களை ஏற்றியிருந்தாலும் பரவாயில்லை என்றே சொல்லத் தோன்றுகிறது இந்திய ரயில்வேயின் கட்டணங்கள்.

மேலும் ஏழாவது ஆண்டாக இந்த ஆண்டும் ரயில் கட்டணம் ஏற்றாமல் இருப்பது ஏழை, நடுத்தர வர்க்கத்தினரை மகிழ வைத்துள்ளது. ரயில் நிலையத்தி லும் ரயிலின் உள்ளேயும் கொள்ளை லாபம் அடிக்கும் தண்ணீர் பாட்டில்கள், உணவுகளின் விலைகளை குறைந்த கட்டணத்தில் விற்பனை செய்ய ஏற்பாடுகள் செய்த இந்த பட்ஜெட் பாராட்டுக்குரியது.

தொடர்ந்து படிக்க March 31, 2010, 6:17 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top