செப்டம்பர் மாத தீன்குலப் பெண்மணி

 

தூய்மையின் பிறப்பிடம் இஸ்லாம்

இஸ்லாம் மார்க்கம் இறைவனுக்குச் செய்யும் சட்டங்களை மட்டும் சொல்லிக்கொண்டிராமல் மனிதனின் இவ்வுலுக வாழக்கைக்கு அவசி யமான விஷயங்களையும் தெளிவாக கூறியுள்ளது. மனிதனின் உடல் ஆரோக்கியத்திற்கு அவசியமான தூய்மையைப் பற்றி பல இடங்களில் வலியுறுத் தியுள்ளது.

இஸ்லாத்தை ஏற்றவரிடம் இருக்க வேண்டிய இறைநம்பிக்கையின் ஒரு அம்சமாக தூய்மையை இஸ்லாம் சொல்லியிருப்பது இஸ்லாம் தூய்மைக்கு எவ்வளவு முக்கியத்துவம் தந்துள்ளது என்பதற்கு சான்றாகும். ஈமானின் பாதி தூய்மை என்று நபிகளார் கூறியுள்ளது முஸ்லிம்களை தூய்மையின் பிறப்பிட மாக வாழ்வதற்கு வழிகாட்டியுள்ளது. இஸ்லாத்தின் வணக்க வழிபாடுகளை நிறைவேற்றும் போதும் இந்த தூய்மை கண்டிப்பாக கடைபிடிக்கப்படுகிறது. ஒருவர் ஐவேளைத் தொழும் போது முகம், கை, கால், தலை மற்றும் வாய், மூக்கு ஆகியவற்றை தூய்மை செய்கிறார். இவ்வாறு செய்த பின்னரே தொழ வேண்டும் என்று இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது.

இஸ்லாத்தின் ஒழுங்குகளை கடைபிடிக்கும் ஒரு மனிதன் நாள் ஒன்றுக்கு குறைந்த பட்சம் ஐந்து தடவை தன் உடலின் முக்கிய பகுதிகளை தூய்மை செய்துவிடுகின்றான். இதைப் போன்று, சிறுநீர் கழித்தாலோ, மலம் கழித்தாலோ அவன் தண்ணீரால் தூய்மை செய்யவும் கட்டளையிடப்பட்டுள்ளது. சிறுநீர் மூலம் ஏராளமான நோய்கள் தொற்றுகின்றன. எனவே சிறுநீர் கழிப்பதில் ஒருவர் தூய்மையை கடைபிடித்தால் அவரிடம் பெரும்பாலான நோய்களிலி ருந்து விடுதலை பெறலாம்.

 உடலுறவு கொண்ட பின்னரும் அவர்கள் தம் மர்ம உறுப்புகளை தூய்மை செய்ய வேண்டும் என்றும் பின்னர் குளித்து தூய்மையாகிக் கொள்ள வேண் டும் என்றும் இஸ்லாம் வலியுறுத்தியுள்ளது. இந்த தூய்மையின் மூலமாக அந்தரங்க உறுப்புகள் பல நோய்களிலிருந்து விடுதலை பெற முடியும்.

 தற்போது உலகத்தை பயமுறுத்திக் கொண்டிருக்கும் பன்றிக் காய்ச்சலின் ஹெச்1 என்1 வைரஸ் தொற்று அதிகமாக வாய், நாசி வழியாக பரவுவதாக மருத்துவர்கள் கூறுகிறார்கள். ஒருவர் வாய் மற்றும் நாசியை தொடர்ந்து சுத்தமாக வைத்திருந்தால் இந்த பயங்கர நோயிலிருந்து விடுதலை பெறலாம். ஒருவர் ஐவேளைத் தொழுபவராக இருந்து உளூச் செய்யும்போது வாய் மற் றும் நாசியை தூய்மை செய்து வந்தால் இந்த தொற்று நோயிலிருந்து பாதுகாப்பு பெறலாம்.

 இதைப்போன்று தொற்று நோய்கள் வரும்போது இஸ்லாம் கூறிய வழி முறைகளை இவ்வுலகம் பின்பற்றியிருந்தால் மெக்சிகோவில் உருவான இந்த காய்ச்சல் உலகம் முழுவதும் பரவாமல் தடுத்திருந்திருக்கலாம்.

 கொடிய நோய்கள் ஒரு பகுதியில் தாக்கப்பட்டிருந்தால் அவர்களுக்கு நபிகளார் பின்வருமாறு அறிவுரை கூறியுள்ளார்கள் : அது ஒரு பிரதேசத்தில் இருப்பதாக நீங்கள் கேள்விப்பட்டால் அங்கே நீங்கள் செல்லாதீர்கள். நீங்கள் இருக்கின்ற ஒரு பூமியில் அது பரவி விட்டால், அதிருந்து தப்பியோட முனைந்தவர்களாக (அங்கிருந்து) வெயேறா தீர்கள்'' என்று சொன்னார்கள்.'' (புகாரி 3473)

நோய் தாக்கிய ஊருக்கு போகக்கூடாது, நோய் தாக்கியவர் அடுத்த ஊருக்குப் போக்கக்கூடாது என்ற அடிப்படையை பின்பற்றியிருந்தால் உலகம் முழுவதும் இந்த நோய் பரவியிருக்காது.

 இந்த நோய் தாக்கியவர்களை அந்த நாட்டிலேயே பாதுகாப்பான இடத்தில் தங்க வைத்து சிக்கசை அளித்து அந்த நாட்டிலிருந்து வெளிநாட்டிற்கு செல்ப வர்களை முழுமையாக பரிசோதனை செய்து நோய் தாக்கியவர்களை வெளி நாட்டிற்கு அனுப்பாமல் இருந்திருந்தால் இந்த நோய் உலகம் முழுவதும் பரவியிருக்காது. மேலும் நோய் தாக்கிய நாட்டிற்கு பயணம் செய்வதை மற்றவர்கள் தவிர்த்திருந்தாலும் இவ்வளவு நபர்கள் இந்த நோய்க்கு பலியாகி இருக்கமாட்டார்கள்.

 இந்த இஸ்லாத்தின் வழிகாட்டுதல் இந்நேரத்தில் மிகமிக முக்கியமாக அனைவரும் பேண வேண்டிய கட்டாயமாகும்.

 அனுமதிக்கப்பட்ட புகழ்

 - எஃப். அர்ஷத் அ, பனைக்குளம்

 இதற்கு முன், தடைசெய்யபட்ட புகழை பார்த்தோம். இஸ்லாம் எல்லா வகையான புகழையும் தடை செய்துள்ளதா? அல்லது குறிப்பிட்ட வரையறையுடன் புகழ்வதை அனுமதிக்கிறதா என்பதை இப்போது பார்ப்போம். அல்லாஹ்வை மறந்து தன்னை மட்டுமே முன்னிலைபடுத்தாத வகையில் உண்மையை உரைக்க வேண்டிய சந்தர்ப்பத்தில் புகழ்ந்து கொள்ள இஸ்லாம் அனுமதி வழங்கியுள்ளது. இவ்வாறான நிகழ்வுகள் நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையின் பல சந்தர்ப்பங்களிலும் நடந்துள்ளது.

 உண்மை கூற வேண்டிய சந்தர்ப்பத்தில்...

 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைனிலிருந்து திரும்பிக்கொண்டிருந்தோம். அப்போது சில பேர் நபி (ஸல்) அவர்களிடத்தில் அதிகமாக (போர் பொருட்களை) கேட்டுகொண்டேயிருந்தனர். இறுதியாக (நபி) அவர்களை ஸமுரா என்ற முள் மரத்தில் தள்ளி கொண்டு சென்றனர். இதனால் நபி(ஸல்) அவர்களின் மேலாடை அந்த மரத்தில் சிக்கி கொண்டது. அப்போது நபி(ஸல்) அவர்கள் நின்று விட்டு சிக்கி கொண்ட மேலாடையை எடுக்க விடுங்கள். மிகப் பெரிய இந்த முள் மரம் அளவுக்கு எனக்கு அருட்கொடை இருந்தால் அதனை நான் உங்களுக்கு பங்கு வைத்து கொடுத்திருப்பேன். அப்போது என்னை கஞ்சனாகவும் பொய்யனாகவும் கோழையாகவும் பார்க்க மாட்டீர்கள் என்று கூறினார்கள்.

 அறிவிப்பவர் : ஸுபைர் இப்னு முத்யீம் (ரலி)

நூல் : புகாரி 2821

 மக்கள் தம்மை தவறாக நினைக்கும் நேரத்தில் தன்னடக்கத்துடன் படைத்த வனையும் நினைவு கூர்ந்து படைத்தவனின் கட்டளையான கஞ்சனாக, பொய்ய னாக, கோழையாக இருக்ககூடாது என்பதைதான் முற்றிலும் பின்பற்று வேன் என்று கூறியுள்ளார்கள். இதில் தன்னைப் பற்றி புகழ் இருந்தாலும் அவசி யம் ஏற்படும்போது படைத்தவனையும் நினைவு கூர்ந்து சொல்லப்படு வதால் இது போன்ற புகழ் வார்த்தைகள் மார்க்கத்தில் தடை இல்லை என்பதை விளங்கலாம்.

 சபையில் இல்லாதவரை புகழுதல்

 மக்களுக்கு அறிவுரை கூறும்போது நம்முடன் இல்லாத மனிதரின் சிறப்புகளை கூறி புகழ்வது கூடும்.

 ஸஹ்ல் இப்னு ஸஃத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள் :

 ஒரு (பணக்கார) மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்கடம்), இவரைப் பற்றி நீங்கள் என்ன கருதுகின்றீர்கள்?'' என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மணமுடித்து வைக்கவும், இவர் பரிந்துரைத்தால் அதனை ஏற்கவும், இவர் பேசினால் செவிசாய்க்கப்படவும் தகுதியான மனிதர்'' என்று கூறினர். பிறகு நபி (ஸல்) அவர்கள் சிறிது நேரம் மௌனமாயிருந் தார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்கள் அருகில் முஸ்ம்கல் ஓர் ஏழை மனிதர் சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இவரைக் குறித்து நீங்கள் என்ன கூறுகின் றீர்கள்?''என்று கேட்டார்கள். தோழர்கள், இவர் பெண் கேட்டால் இவருக்கு மண முடித்து வைக்காமலும், இவர் பரிந்துரைத்தால் அது ஏற்கப்படாமலும், இவர் பேசினால் செவி தாழ்த்தப்படாமலும் இருக்கத் தகுதியானவர்'' என்று கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவரைப் போன்ற (வசதி படைத்த)வர்கள் இந்தப் பூமி நிரம்ப இருந்தாலும் (அவர்கள் அனைவரையும் விட) இந்த ஏழையே மேலானவர்'' எனக் கூறினார்கள்.

 நூல் : புகாரி 5091

 ஏழையாக இருப்பதால் நம்மை யாரும் மதிப்பதில்லை என்று பரவலாக நாம் கருதுகிறோம். ஒருவர் ஏழையாக இருப்பதால் அவர் அல்லாஹ்விடத்தில் மதிப்பற் றவர் என்றும் வசதி படைத்தவர், மக்களிடம் செல்வாக்கு பெற்றவர் இறைவனி டத்தில் மதிப்புள்ளவர் என்றும் எண்ணிக் கொள்ள தேவையில்லை. நல்லவராக இருக்கும் ஏராளமானோர் ஏழையாக இருப்பவர் என்றும் நபிகளார் விளக்கி அந்த ஏழையை புகழ்ந்துள்ளார்கள்.

 நல்லவர்களின் மதிப்பை உணராதபோது புகழுதல்

 மார்க்கத்திற்காக தியாகம் செய்தவர்களை மக்கள் மதிக்க தவறும்போது அவரின் சிறப்பை அவர் முன்னிலையில் புகழலாம். தியாகம் செய்தவர் செய்த சிறிய தவறை மன்னிப்பதற்காக அவர் முன்னர் செய்த தியாகத்தை புகழ்ந்து சொல்லுதல்.

 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் உட்கார்ந்திருந்தோம். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் தன் மூட்டுகால் தெரியமளவுக்கு தன் கீழாடையின் ஓரப் பகுதியை தூக்கி கொண்டு வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் உங்களு டைய தோழர் ஏதோ பிரச்சினையை கொண்டுவருகிறார் என்று சொன்னார்கள். அப்போது அபூ பக்ர் (ரலி) அவர்கள் ஸலாம் சொல்லிவிட்டு எனக்கும் கத்தா புடைய மகன் உமர் (ரலி) அவர்களுக்கும் ஒரு பிரச்சனை ஏற்பட்டுவிட்டது. இதில் நான் அவரிடத்தில் அவசரபட்டுவிட்டேன். பிறகு வருத்தப்ட்டு உமரி டத்தில் மன்னிப்புக் கேட்டேன். ஆனால் அவர் அதை ஏற்றுக் கொள்ளாமல் அவருடைய வீட்டு வாசலை என் முகத்திற்கு நேராக மூடிவிட்டார். அதனால் நான் உங்களிடத்தில் வந்திருக்கிறேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அபூ பக்ரே அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக என்று மூன்று தடவை கூறினார்கள். இதற்கிடையில் உமர் வருத்தப்பட்டு அபூபக்ர் (ரலி) அவர்களுடைய வீட்டிற்கு சென்று அபூ பக்ர் (ரலி) அவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க அவர்களுடைய வீட்டிலுள்ளவர்கள் இல்லை யென்று சொன்னவுடன் நபி (ஸல்) அவர்களிடத்தில் வருகிறார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம் கோபத்தால் சிவக்கிறது. அபூபக்ர் (ரலி) அவர்கள் மிகுந்த கவலைப்பட்டு நபி (ஸல்) அவர்களுக்கு நேராக முட்டியிட்டு அமர்ந்து நான் மிகுந்த அநீதி இழைத்து விட்டேன் என்று இரண்டு தடவை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ் என்னை உங்களிடத்தில் அனுப்பினான் (என்று நான் சொன்னபோது) என்னை நீங்கள் பொய்யன் என்றீர்கள். ஆனால் அபூ பக்ரோ நான் உண்மையாளன் என்று சொல்லி அவருடைய உயிராலும் பொருளாளும் எனக்கு உதவி செய்தார். என்று கூறிவிட்டு என் தோழரை எனக்காக விட்டு கொடுக்க மாட்டீர்களா? என்று இரண்டு தடவை கூறினார்கள். அதற்கு பிறகு அபூ பக்ர் (ரலி) அவர்களை யாரும் வருத்தமளிக்கும்படி செய்யவில்லை.

 அறிவிப்பவர் : அபூ தர்தா (ரலி)

நூல் : புகாரி 4460, 3661

 அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் ஏற்பட்ட வாக்குவாதத்தில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தவறு செய்ததால் அவர்கள் தம் தவறுக்கு வருத்தம் தெரிவித்து மன்னிப்புக் கேட்டபோது கோபத்தில் வீட்டுக் கதவை தாள்ளிட்டு மன்னிக்க மறுத்துவிட்டார்கள். இந்த வழக்கு நபிகளாரிடம் வந்த போது நபிகளார் ஓரிறைக் கொள்கைக்கு முதன்முதலில் ஆதரவு தெரிவித்து உடலாலும் பொருளாலும் தியாகம் செய்தவர் என்று அபூபக்ர் (ரலி) அவர்களை புகழ்ந்து உமர் (ரலி) அவர்கள் உட்பட அனைத்து தோழர்களுக்கும் அபூபக்ர் (ரலி) அவர்களின் மதிப்பை உணர்த்தியுள்ளார்கள். இதுபோன்ற சந்தர்ப் பத்தில் ஒருவரை புகழ்ந்து சொல்வது குற்றமாகாது.

 விசாரிக்கும் போது ஒருவரை புகழ்தல்

 ஒருவர் நல்லவரா? கெட்டவரா? என்று விசாரிக்கும்போது உண்மையை உரைக்க வேண்டும் என்ற அடிப்படையில் அவரைப் புகழ்ந்து சொல்லுதல் அனுமதிக்கப்பட்டுள்ளது.

 நபி (ஸல்) அவர்களின் மனைவி ஆயிஷா (ரலி) அவர்களையும் ஸஃப்வான் இப்னு முஅத்தல் என்ற ஸஹாபியையும் இனைத்து அவதூறு சொல்லப்பட்டது . அது அவதூறு என்று அல்லாஹ் குர்ஆனில் பின்னர் தெளிவுபடுத்தினான். திருக்குர்ஆன் இறக்கப்படுவதற்கு முன்னர் தன்னுடைய மனைவியை பற்றி மற்றவர்களிடம் விசாரித்துவிட்டு இவ்வாறு சொன்னார்கள்.

 என் மனைவியடத்தில் நல்லதை தவிர வேறு எதனையும் நான் அறிய வில்லை. ஒருவரை (இணைத்து ) கூறுகிறார்கள். அவரிடத்தில் நல்லதைத்தான் அறிந்திருக்கிறேன். என்னுடைய வீட்டிற்குள் அவர் நுழையும்போது அவர் என்னோடு மட்டும் தான் நுழைவார். என்று கூறினார்கள்.

 அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி)

நூல் : புகாரி 2661

 இதைப்போன்று உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பாக விசாரித்தபோது அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன்'' என்று கூறியுள்ளார்கள். நூல் : புகாரி 2661

 இறந்தவர்களைப் பற்றி புகழ்தல்

 மார்க்கத்திற்காக தியாகம் செய்து இவ்வுலகை விட்டும் பிரிந்து சென்றவர் களை பற்றி வரம்புக்கு உட்பட்டு புகழ்வது குற்றமாகது.

எனக்கு திருமணம் முடிந்த மறுநாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் வந்தார்கள். நீ இருப்பதைப் போன்று என் விரிப்பில் அமர்ந்தார்கள். அப்போது சிறுமிகள் பத்ர் போரில் கொல்லப்பட்ட தங்கள் முன்னோர்களின் நற்செயல்களை பற்றி தஃப் அடித்து பாடிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஒரு சிறுமி எங்களி டத்தில் உள்ள நபி நாளை நடப்பதை அறிவார்கள். என்று பாடினாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் நீ இவ்வாறு பாடதே முன்னர் பாடியதை பாடு என்று கூறினார்கள்.

 அறிவிப்பவர் : அர்ருபை பின்த் முஅவ்வித் (ரலி)

நூல் : புகாரி 4001

 நபிகளார் தம்மைப்பற்றி வரம்பு மீறி புகழ்ந்ததைக் கண்டித்தவர்கள், இறந்தவர்களைப் பற்றி நியாமாக புகழ்வதை தடைசெய்யவில்லை. ( வளரும் இன்ஷா அல்லாஹ்)

 பிறர் மானம் காப்போம்

 

 

- யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்

 ஒவ்வொரு முஸ்லிமும் தன்னுடைய மானத்தையும், மரியா தையும் பாதுகாக்க வேண்டும். எந்நிலையிலும் தன்னு டைய மானத்தையும், மரியாதையும் இழந்து விடக்கூடாது. ஒருவர் மானத்தையும், மரியாதையும் இழக்க நேரிட்டால் சண்டையிட லாம். அந்த சண்டையில் அவர் கொல்லப்பட்டால் அவருக்கு ஷஹீ தின் நன்மை கிடைக்கும் என்று இஸ்லாம் கூறுகிறது.

யார் தன்னுடைய பொருளை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படு கிறாரோ அவர் ஷஹீதாவார். யார் தன்னுடைய மார்க்கத்திற்காக கொல்லப்படுகி றாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னை பாதுகாப்பதற்கு போரிட்டு கொல்லப் படுகிறோரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய பொருளை பாதுகாப்ப தற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார். யார் தன்னுடைய குடும்பத்தை பாதுகாப்பதற்காக போரிட்டு கொல்லப்படுகிறாரோ அவரும் ஷஹீதாவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: திர்மிதி (1341)

 மானத்தின் முக்கியத்துவம்

 அபூபக்ரா (நுஃபைஉ பின் அல்ஹாரிஸ்-ரலி) அவர்கள் கூறியதாவது : (துல்ஹஜ் 10ஆம் நாள்) நபி (ஸல்) அவர்கள் ஓர் ஒட்டகத்தின் மீது அமர்ந் திருக்க, ஒரு மனிதர் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது எந்த நாள்?'' என்று கேட்டார்கள். அந்த நாளுக்கு அவர்கள் வேறு பெயர் சூட்டுவார்களோ என்று எண்ணுமளவுக்கு நாங்கள் மௌனமாக இருந்தோம். இது நஹ்ருடைய (துல்ஹஜ் பத்தாம்) நாள் அல்லவா?'' என்று கேட்டார்கள். நாங்கள் ஆம்' என்றோம். அடுத்து இது எந்த மாதம்?'' என்று கேட்டார்கள். அந்த மாதத்துக்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமளவுக்கு மௌனமாக இருந்தோம். அப்போது அவர்கள் இது துல்ஹஜ் மாதமல்லவா?'' என்றார்கள். நாங்கள் ஆம்' என்றோம். நபி (ஸல்) அவர்கள் உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில் உங்களுடைய புனித மிக்க இந்த மாதத்தில், இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ, அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் உங்கள் மானம், மரியதைகளும் உங்களுக்குப் புனித மானவையாகும்'' என்று கூறிவிட்டு, (இதோ!) இங்கே வந்திருப்பவர் வராதவருக்கு இந்தச் செய்தியைக் கூறிவிடவேண்டும்; ஏனெனில் வருகை தந்திருப்பவர் தம்மைவிட நன்கு புரிந்து நினைவில்கொள்ளும் ஒருவருக்கு இந்தச் செய்தியை சேர்த்துவைக்கக் கூடும்'' என்றார்கள்.

 நூல் : புகாரி (67)

 இஸ்லாம் ஒருவரின் மானத்திற்கும், மரியாதைக்கும் எவ்வளவு முக்கியத்து வம் வழங்கியிருக்கிறது என்பதை இந்த செய்தியை படிப்பவர்கள் விளங்கி கொள்ளலாம். அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறமுஸ்லிமை கொள்ள மாட்டார். அல்லாஹ்வை பயந்த எந்த முஸ்லிமும் பிறரின் பொருளை அபகரிக்க மாட்டார். ஆனால் இன்று முஸ்லிம்கள் சர்வ சாதரணமாக பிறமுஸ்லிம்களின் மானம், மரியாதை விஷயங்களில் விளையாடி விடுகிறார்கள்.

 பிற முஸ்லிம்களின் மானம் மரியாதையில் விளையாடுவது கஃபதுல் லாஹ்வை இழிவு படுத்தியத்திற்கு சமமானதாகும். அந்த புனித நாட்களை இழிவு படுத்தியதற்கு சமமானதாகும் என்ற கருத்தையும் அந்த நபிமொழியில் நாம் அறியலாம். இஸ்லாம் மானம், மரியாதைக்கு எவ்வளவு முக்கியம் கொடுத்தி ருக்கிறது என்பதை பின்வரும் நபிமொழியிலும் அறியலாம்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: பொறாமை கொள்ளாதீர்கள். (பிறரை அதிக விலை கொடுத்து வாங்க வைப்பதற்காக விற்பனைப் பொருளின்) விலையை ஏற்றிக் கேட்காதீர்கள். கோபம் கொள்ளாதீர்கள். பிணங்கிக்கொள்ளாதீர்கள். ஒருவர் வியாபாரம் செய்துகொண்டி ருக்கும்போது மற்றவர் தலையிட்டு வியாபாரம் செய்ய வேண்டாம். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! (அன்பு காட்டுவதில்) சகோதரர்களாய் இருங்கள். ஒரு முஸ்லிம் மற்றொரு முஸ்லிமுக்குச் சகோதரர் ஆவார். அவர் தம் சகோதரருக்கு அநீதியிழைக்கவோ, அவருக்குத் துரோகமிழைக்கவோ, அவரைக் கேவலப்படுத்தவோ வேண்டாம். இறையச்சம் (தக்வா) இங்கே இருக்கிறது. (இதைக் கூறியபோது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது நெஞ்சை நோக்கி மூன்று முறை சைகை செய்தார்கள். ஒருவர் தம் சகோதர முஸ்மைக் கேவலப்படுத்துவதே அவருடைய தீமைக் குப் போதிய சான்றாகும். ஒவ்வொரு முஸ்லிமுக்கும் மற்ற உயிர், பொருள், மானம் ஆகியவை தடை செய்யப்பட்டவையாகும். இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 நூல்: முஸ்லிம் (5010)

 ஒரு முஸ்லிமின் உயிரை கொல்வது எவ்வளவு குற்றமோ அதே அளவு குற்றத்தை நபிகளார் மான,மரியாதையை கெடுக்கும் விஷயத்திற்கும் கொடுத்துள் ளார்கள்.

 நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் மிகவும் திருப்புமுனையாக அமைந்தது அகபா உடன்படிக்கை நிகழ்ச்சியாகும். இந்நிகழ்ச்சி புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த நிகழ்ச்சியின்போதுதான் சில ஒப்பந்தங்கள் எடுக்கப்பட்டது. அந்த ஒப்பந்தத்தில் இந்த மானம், மரியாதை தொடர்பான உடன்படிக்கையும் எடுக்கப்பட்டது. பத்ருப்போரில் கலந்துகொண்டவரும், இரவில் நடந்த அகபா உடன்பாட்டில் கலந்து கொண்ட (பன்னிரண்டு) தலைவர்களில் ஒருவருமான உபாதா பின் அஸ்ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 (ஒருநாள்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம்மைச் சுற்றிலும் தம் தோழர்களின் ஒரு குழுவினர் அமர்ந்திருக்க, அல்லாஹ்வுக்கு எதையும் (எவரை யும்) இணையாக்கமாட்டீர்கள் என்றும், திருட மாட்டீர்கள் என்றும், விபச்சாரம் புரியமாட்டீர்கள் என்றும், உங்கள் குழந்தைகளைக் கொல்லமாட்டீர்கள் என்றும், நீங்களாக அவதூறு எதனையும் புனைந்துகொண்டு வரமாட்டீர்கள் என்றும், எந்த நல்ல காரியத்திலும் (எனக்கு) மாறு செய்யமாட்டீர்கள் என்றும் என்னிடம் உறுதிமொழி கொடுங்கள்! உங்களில் எவர் (இந்த உறுதிமொழியின் மீது) நிலைத்திருக்கிறாரோ அவருக்குரிய நற்பலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். இவற்றில் (மேற்கூறப்பட்ட குற்றங்களில் இவ்வுலகில் தழைக்கப்படும் அநியாயங்கள்) ஏதேனுமொன்றை ஒருவர் செய்து, அதற்காக அவர் இந்த உலகத்திலயே தண்டிக் கப்பட்டுவிட்டால் அதுவே அவருக்குரிய பரிகாரமாகிவிடும். இவற்றில் ஏதேனு மொன்றை ஒருவர் செய்து அல்லாஹ் அவரது குற்றத்தை (உலக வாழ்வில்) மறைத்துவிட்டால் அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படுகிறார். அவன் நாடினால் அவரைத் தண்டிப்பான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான்'' என்ற சொன்னார்கள். உடனே நாங்கள் அவற் றுக்காக நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்தோம்.

 நூல்; புகாரி (18)

 மேலும் இஸ்லாம் மானம், மரியாதை விஷயத்திற்கு எவ்வளவு முக்கியத் துவம் கொடுத்துள்ளது என்பதை விளங்க வேண்டுமானால் ஒருவரின் மானத் தோடு விளையாடிவருக்கு கொடுத்திருக்கின்ற தண்டனைகளை பார்த்தாலே தெரிந்து கொள்ளலாம்.

 அவதூறு

 ஒருவரின் மானம் மரியாதை கெடுக்க கூடிய காரியங்களில் அவதூறு முக்கிய இடத்தை வகிக்கிறது. ஒரு ஆண் மீது அவதூறு சொல்லும்போது அவன் அடையும் துன்பத்தைவிட ஒழுக்கமுள்ள பெண்ணின் மீது ஒருவன் அவதூறு சுமத்துவானேயானால் அதனால் அந்தப் பெண்ணின் வாழ்க்கையே பாழகிவிடும் என்பதை உணர்ந்த இஸ்லாம், ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்துவோ ருக்கு 80 கசையடி கொடுக்க வேண்டும் என்று கட்டளையிடுகின்றது. பெண்களு டைய மானம், மரியாதை விஷயத்தில் இஸ்லாம் கூடுதல் கவனம் செலுத்து கின்றது.

 ஒழுக்கமுள்ள பெண்கள் மீது பழி சுமத்தி, பின்னர் நான்கு சாட்சிகளைக் கொண்டு வராதவர்களை எண்பது கசையடி அடியுங்கள்! அவர்களின் சாட்சி யத்தை ஒரு போதும் ஏற்றுக் கொள்ளாதீர்கள்! அவர்களே குற்றம் புரிபவர்கள்.

 அல் குர்ஆன் 24 : 4

 ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்பவர்களுக்கு 80 கசையடி கொடுப்பதோடு மட்டுமல்லாமல் பிற காரியங்களுக்காக அவர் சாட்சி சொல்ல வரும் போதெல்லாம் நீ அவதூறு சொன்னவன் உன்னுடைய சாட்சியத்தை ஏற்றுக்கொள்ள முடியாது என்று மற்றவர்கள் கூறுவது இவ்வாறு அவதூறு கூறிய வருக்கு சரியான தண்டனை இதைத் தவிர வேறு எதுவும் இருக்க முடியாது. இன்று பெருபான்மையான முஸ்லிம்கள் விபச்சாரம் புரிவது கிடையாது. ஆனால் பிற ஒழுக்கமுள்ள பெண்கள் மீது விபச்சார பழியை சொல்லி விடுவார்கள். விபச்சாரம் செய்பவர்களை கண்டால் அவர்களை கண்டிப்பார்கள், காரி உமிழுவார்கள், அவரோடு சேர மாட்டார்கள், எவ்விதமான எதிர்ப்பையும் காட்டு வார்கள். ஒழுக்கமுள்ள பெண்கள் மீது அவதூறு சொல்பவர்களை பார்த்தால் எந்த எதிர்ப்பையும் காட்டமாட்டார்கள். அவனை வரவேற்பார்கள். எல்லா விதமான ஆதரவையும் தெரிவிப்பார்கள். இன்று அவதூறு கேட்பவர்களில் சிலரை பார்க்கிறோம். இதற்கு காட்டுகின்ற ஆர்வம் ஈடாக ஒரு மார்க்க சொற்பொழிவை கேட்க முன் வரமாட்டார்கள். அவதூறை கேட்பவர்கள் அதை பரப்ப கடும் குஷியில் இருப்பார்கள். அவர்களுக்கு அதை வெளியே சொல்லவில்லையென்றால் தலையே வெடித்து விடும். யாருக்கு சொல்ல வேண்டுமோ அவர் வெளிநாட்டில் இருந்தாலும் அதை போன் மூலம் சொல்லிவிடுவார். இத்தகைய நபர் சாதரண மற்ற நேரங்களில் வெளி நாடுகளில் இருக்கும் தனது நண்பர்களும் உறவினர்களும் நோயுற்று இருந்தா லும்கூட ஒரு தடவை விசாரித்திருக்கமாட்டார். ஆனால் அவதூறுக்காக பல தடவை தொலைபேசியை பயன்படுத்துவார்.

 மறுமையில் ஒரு மான நஷ்ட வழக்கு.

 

இஸ்லாம் இவ்வுலகில் இவ்வளவு தண்டனைகளையும் வழங்கினாலும் மறுமையிலும் கடுமைமையான தண்டனைகளையும், எச்சரிகையும் செய்திருக் கின்றது.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒருவர், தன் சகோதரனுக்கு அவனது மானத்திலோ, வேறு (பணம், சொத்து போன்ற) விஷயத்திலோ இழைத்த அநீதி (ஏதும் பரிகாரம் காணப்படாமல்) இருக்குமாயின், அவர் அவனிடமிருந்து அதற்கு இன்றே மன்னிப்புப் பெற்றுக் கொள்ளட்டும். தீனாரோ, திர்ஹமோ (பொற்காசுகளோ வெள்க் காசுகளோ) பயன் தரும் வாய்ப்பில்லாத நிலை (ஏற்படும் மறுமை நாள்) வருவதற்கு முன்னால் (மன்னிப் புப் பெற்றுக் கொள்ளட்டும்.) (ஏனெனில், மறுமை நால்) அவரிடம் நற்செயல் ஏதும் இருக்குமாயின் அவனது அநீதியின் அளவுக்கு அவரிடமிருந்து எடுத்துக் கொள்ளப்பட்டு (அநீதிக்குள்ளானவரின் கணக்கில் வரவு வைக்கப்பட்டு) விடும். அநீதியிழைத்தவரிடம் நற்செயல்கள் எதுவும் இல்லையென்றால் அவரது தோழரின் (அநீதிக்குள்ளானவரின்) தீய செயல்கள் (அவர் கணக்கிருந்து) எடுக்கப்பட்டு அநீதியிழைத்தவரின் மீது சுமத்தப்பட்டு விடும். அறிவிப்பவர் :
அபூஹுரைரா (ர)
, நூல் : புகாரி (2449)

 நரகவாசிகளின் சீலும் சலமும் உள்ள இடம்

 இஸ்லாம் ஒவ்வொரு குற்றவாளிகளுக்கும் ஒரு இடத்தை தயார் செய்து வைத்திருக்கின்றது. தொழாதவருக்கு ஸகர் என்ற நரகத்தை தயார் செய்து வைத்தி ருப்பதைப்போல பிற முஸ்லமின் மானம், மரியாதை விஷயங்களில் விளையாடி வர்களுக்காகவும் ஒரு இடத்தை தயார் செய்து வைத்திருக்கிறது.

யார் ஒரு முஃமினிடம் இல்லாததை கூறுவாரோ அவரை அல்லாஹ் சகதியும், நரகவாசிகளின் சீலும் சலமும் உள்ள இடத்தில் தங்க வைப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல்: அபூதாவூத் (3123)

 திவாலாகிப் போகும் நன்மைகள்

 இவ்வுலகில் பிறருக்கு கடன்பட்டு அதை திருப்பித் தர முடியாதவன், தான் திவாலாகிப்போனவன் என்று கோர்டில் நிரூபித்தால் அவருக்கு பொது மன்னிப்பு வழங்கப்படுகிறது. ஆனால் மறுமையில் நன்மைகள் திவாலாகிப்போனால் பொது மன்னிப்பு என்பது இல்லை. மாறாக கடன் கொடுத்தவரின் தீமையை எடுத்து கடன் பட்டவரின் மேல் சுமத்தி அவன் நரகத்தில் தூக்கி வீசப்படுவான். இந்த கடனில் அவதூறு சொல்லப்பட்டவனும் இறைவனிடம் முறையிட்டு அவனின் நன்மை பெற்று அல்லது இவனின் தீமைகளை அவனுக்கு கொடுத்துச் சென்றுவிடுவான்.

 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது: (ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களிடம்), திவாலா கிப்போனவன் என்றால் யார் என்று உங்களுக்குத் தெரியுமா?'' என்று கேட்டார்கள். மக்கள், யாரிடம் வெள்ளிக் காசோ, (திர்ஹம்) பொருட்களோ, இல்லையோ அவர்தான் எங்களைப் பொறுத்தவரை திவாலானவர்'' என்று பதிலளித்தார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரில் திவாலாகிப் போனவர் ஒருவராவார். அவர் மறுமை நாளில் தொழுகை, நோன்பு, ஸகாத் ஆகியவற்றுடன் வருவார். (அதே நேரத்தில்) அவர் ஒருவரைத் திட்டியிருப்பார். ஒருவர் மீது அவதூறு சொல்லியிருப்பார். ஒருவரது பொருளை (முறைகேடாகப்) புசித்திருப்பார். ஒருவரது இரத்தத்தைச் சிந்தியிருப்பார். ஒருவரை அடித்தி ருப்பார். ஆகவே, அவருடைய நன்மைகளிலிருந்து சில இவருக்குக் கொடுக்கப்ப டும்; இன்னும் சில அவருக்குக் கொடுக்கப்படும். அவருடைய நன்மைகளிருந்து எடுத்துக் கொடுப்பதற்கு முன் நன்மைகள் தீர்ந்துவிட்டால், (அவரால் பாதிக் கப்பட்ட) மக்களின் பாவங்களிலிருந்து சில எடுக்கப்பட்டு, இவர்மீது போடப்ப டும். பிறகு அவர் நரக நெருப்பில் தூக்கியெறியப்படுவார் (அவரே திவாலாகிப் போனவர்)'' என்று கூறினார்கள்.

 நூல்: முஸ்லிம் (5037)

 தண்டனையில் கடுமையானது.

ஒரு முஸ்லிமின் மானத்தில் உரிமை இல்லாமல் வரம்பு மீறுவதுதான் (மனிதனுக்கு செய்யும் பாவங்களில்) தண்டனைகளிலே மிகப்பெரியது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 நூல்: அபூதாவூத் (4233)

 கிழிக்கப்படும் முகங்கள்

 நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள். நான் மிஃராஜிற்கு கொண்டு செல்லப் பட்டபோது ஒரு கூட்டத்தார்களை கடந்து சென்றேன். அவர்களுக்கு செம்பு உலோகத்திலான நகங்கள் இருந்தன. அதன் மூலம் தங்களுடைய முகங்களையும், நெஞ்சையும் பிளந்து கொண்டிருந்தார்கள். இவர்கள் யார் என்று ஜிப்ரயீல் (அலை) அவர்களிடம் வினவினேன். அதற்கவர்கள் இவர்கள் தான் மக்களுடைய இறைச்சியை சாப்பிட்டுக் கொண்டிருந்தார்கள் (புறம் பேசிக் கொண்டிருந்தார் கள்). இன்னும் இவர்கள் தான் மக்களின் மானங்களில் விளையாடிக் கொண்டிருந் தார்கள் என்று கூறினார்.

 நூல்: அபூதாவூத் (4235)

 கிராமவாசிகளில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இன்னின்ன காரியங் களுக்காக எங்கள் மீது குற்றம் உண்டா? என்று கேட்டுக்கொண்டிருந்தனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (நீங்கள் கேட்ட) பாவங்களை அல்லாஹ் மன்னித்து விடுவான். முஸ்லிம் சகோதரனின் மானத்தில் சிறிதளவேனும் பங்கம் விளைவித் திருந்தாலும் அவனை மன்னிக்க மாட்டான் என்று கூறினார்கள்.

 நூல்: இப்னுமாஜா (3427)

 சிலர் விளைவுகளை பற்றி சிந்திக்காமலேயே பேச்சை நீட்டிக் கொண்டே இருப்பார்கள். அதில் புறம். கோள், அவதூறு, நக்கல், நையாண்டி அனைத்தும் கலந்திருக்கும். இதைப்பற்றி நபி (ஸல்) அவர்கள் கடுமையாக எச்சரிக்கை செய்தி ருக்கிறார்கள்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். ஓர் அடியார் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவைவிட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார்.

 நூல்: புகாரி (6477)

 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் : ஓர் அடியார் அல்லாஹ்வின் திருப்திக் குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரணமாக (அதன் பலனைப் பற்றிப் பெரிதாக யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரணமாக அல்லாஹ் அவருடைய அந்தஸ்து களை உயர்த்திவிடுகிறான். ஓர் அடியார் அல்லாஹ்வின் கோபத்துக்குரிய ஒரு வார்த்தையை சர்வ சாதாரண மாக (அதன் பின்விளைவைப் பற்றி யோசிக்காமல்) பேசுகிறார். அதன் காரண மாக அவர் நரகத்தில் போய் விழுகிறார். இதை அபூஹுரைரா (ர) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 நூல் : புகாரி (6478)

 விளைவுகள்

 அவதூறின் காரணமாக ஒருவர் பாதிக்கப்பட்டு அல்லாஹ்விடம் முறையிட் டால் அந்த பிரார்த்தனை அல்லாஹ் ஏற்றுக் கொண்டுவிடுவான். அதனால் நாம் இம்மையிலும் மறுமையில் கடும் தண்டனை ஏற்க நேரிடும்.

 அநீதியிழைக்கப்பட்டவரின் சாபத்திற்கு (உங்களால் அநீதிக்கு ஆளானவர் இறைவனிடம் உங்கள் அநீதியைக் குறித்து முறையிட்டு உங்களுக்குக் கேடாகப் பிரார்த்தனை புரிபவதைப் பற்றி) அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ் வுக்கும் இடையே எந்தத் திரையும் இல்லை'' என்று நபி (ஸல்) அவர்கள் முஆத் (ர) அவர்களை யமன் நாட்டுக்கு (ஆளுநராக) அனுப்பி வைத்தபோது கூறினார்கள்.

 அறிவிப்பவர் : இப்னுஅப்பாஸ் (ரலி), நூல் : புகாரி (2448)

நபிகளார் காலத்திற்கு பிறகு ஒருவர், நபித்தோழர் மீது அவதூறு சொல்லி அதனால் பதிக்கப்பட்ட சம்பவம் புகாரியில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 ஜாபிர் பின் சமுரா (ர) அவர்கள் கூறியதாவது: (கூஃபாவின் ஆளுநர்) சஅத் பின் அபீவக்காஸ் (ர) அவர்களைப் பற்றி கூஃபா வாசிகள் (சிலர்) உமர் (ர) அவர்கடம் முறையிட்டனர். எனவே (அது குறித்து தீர விசாரித்து) உமர் (ர) அவர்கள் சஅத் (ர) அவர்களை (பதவியிருந்து) நீக்கிவிட்டு அம்மார் (ர) அவர்களை அவர்களுக்கு அதிகாரியாக நியமித்தார்கள். சஅத் (ர) அவர்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்பதும் அவர்கன் முறையீடுகல் ஒன்றாக இருந்தது. ஆகவே, உமர் (ர) அவர்கள் சஅத் (ர) அவர்கடம் ஆளனுப்பி அவர்களை வரவழைத்து; அபூ இஸ்ஹாக்! நீங்கள் முறையாகத் தொழுவிப்பதில்லை என்று இவர்கள் கூறுகின்றனரே (அது உண்மையா?)'' என்று கேட்டார்கள். அதற்கு அபூ இஸ்ஹாக் (சஅத் பின் அபீவக் காஸ்-ர) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுது காட்டிய முறைப்படியே நான் அவர்களுக்குத் தொழுவித்து வந்தேன்; அவர்கள் தொழுது காட்டியதைவிட நான் குறைத்து விடவில்லை. நான் இஷாத் தொழுகை தொழுவிக்கும்போது முதல் இரண்டு ரக்அத்கல் நீளமாக ஓதியும் பின் இரண்டு ரக்அத்கல் சுருக்கமாக ஓதியும் தொழுவிக்கிறேன்'' என்று பதிலத்தார்கள். அதற்கு உமர் (ர) அவர்கள், உங்களைப் பற்றி (நமது) எண்ணமும் அதுவே' என்று கூறினார்கள். இதையொட்டி உமர் (ர) அவர்கள் ஒருவரை' அல்லது சிலரை' சஅத் (ர) அவர்களுடன் கூஃபாவுக்கு அனுப்பிவைத்து, சஅத் (ர) அவர்கள் குறித்து கூஃபாவாசிகடம் விசாரனை நடத்தினார்கள். விசாரிக் கச் சென்றவர் கூஃபாவாசிகடம் விசாரனை மேற்கொண்டார். (கூஃபாவிருந்த) ஒரு பள் வாசல் விடுபடாமல் எல்லாவற்றிலும் அவரைப் பற்றி விசாரித்தார். அனைவரும் சஅத் (ர) அவர்களை மெச்சி நல்லவிதமாகவே கூறினர். இறுதியில் (பிரபல கைஸ் குலத்தின் பிரிவான) பனூ அப்ஸ் குலத்தாரிடம் அவர் விசாரித்தபோது அந்தக் குலத்தைச் சேர்ந்த அபூ சஅதா எனும் குறிப்புப் பெயர் கொண்ட உசாமா பின் கத்தாதா என்பவர் எழுந்து, எங்கடம் நீங்கள் வேண்டிக் கொண்டதன் பேரில் நான் (எனது கருத்தைக்) கூறுகிறேன்: சஅத் அவர்கள் (தாம் அனுப்பும்) படைப் பிரிவுடன் தான் செல்லமாட்டார். (பொருட்களை) சமமாகப் பங்கிட மாட்டார். தீர்ப்பு அக்கும்போது நீதியுடன் நடக்கமாட்டார்'' என்று (குறை) கூறினார்.

 


இதைக் கேட்ட சஅத் (ர) அவர்கள், அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ் வின் மீது சத்தியமாக! மூன்று பிரார்த்தனைகள் நான் செய்யப்போகிறேன்'' என்று கூறிவிட்டு, இறைவா! உன்னுடைய இந்த அடியார் (என்னைப் பற்றிக் கூறிய அவருடைய குற்றச்சாட்டில்) பொய் சொல்யிருந்தால் பகட்டுக்காகவும், புகழுக்காகவும் அவர் இவ்வாறு குறைகூறமுன்வந்திருந்தால் அவருடைய வாழ் நாளை நீட்டி (அவரைத் தள்ளாமையில் வாட்டி) விடுவாயாக! அவரது ஏழ்மையையும் நீட்டுவாயாக! அவரைப் பல சோதனைகளுக்கு ஆளாக்குவாயாக!'' என்று பிரார்த்தனை புரிந்தார்கள்.

 இதன் அறிவிப்பாளரான அப்துல் மக் பின் உமைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னர் (சஅத் அவர்கள் மீது பொய்யான குற்றச் சாட்டுக் களைச் சொன்ன அந்த மனிதர் பல சோதனைகளுக்கு உள்ளானார்.) அவரிடம் (நலம்) விசாரிக்கப்பட்டால், நான் சோதனைக்குள்ளான முதுபெரும் வயோதி கனாக இருக்கிறேன்; சஅத் அவர்கன் பிரார்த்தனை என்னைப் பீடித்துவிட்டது'' என்று கூறுவார்.

 அப்துல் மக் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: பின்னா()ல் அவரை நான் பார்த்திருக்கிறேன். முதுமையினால் அவரது புருவங்கள் அவரது கண்கள் மீது விழுந்துவிட்டிருந்தன. அவர் சாலைகல் செல்லும் அடிமைப் பெண்களை கிள் அவர்களைத் துன்புறுத்துவார்.

 நூல்: புகாரி (755)

 மானம், மரியாதையை கெடுக்கும் மற்ற செயல்கள்

 குத்தி காட்டுவது, கேவலப்படுத்துவது

 குண்டான ஒருவரைப் பார்த்து யானை என்று சொல்வது அல்லது பிந்து கோஸ் என்று சொல்வதும் ஒருவருடைய மானம் மரியாதை விஷயத்தில் விளை யாடுவதுதான். கண் ஒரு மாதிரியாக இருப்பவரைப் பார்த்து அரைக் கண்ணன், அல்லது மாலைக்கண்ணன், ஒன்றைக் கண்ணண், முண்டக்கண்னு என்று சொல் வதும், பல் நீண்டு இருப்பவரை தேங்காய் திருவி என்று சொல்வதும், பெரிய கை உள்ள ஒருவரைப் பார்த்து வீட்டில் உள்ள ஒட்டடைக்கம்பு என்று சொல்வதும், கால் ஊனமான ஒருவரைப் பார்த்து நொண்டி என்று சொல்வதும், வழுக்கைத் தலை உள்ள ஒருவரைப் பார்த்து இவர் வந்து நின்றால் மெரிக்குரி லைட் தேவையில்லையே என்று சொல்வதும் மிகவும் கேவலமான செயலாகும். இப்படி கூறுபவர்கள் பின்வரும் வசனத்தை படித்து திருந்தட்டும்.

 நம்பிக்கை கொண்டோரே! ஒரு சமுதாயம் இன்னொரு சமுதாயத்தைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர்கள் சிறந்தோராக இருக்கக் கூடும். எந்தப் பெண்களும் வேறு பெண்களைக் கேலி செய்ய வேண்டாம். இவர்களை விட அவர் கள் சிறந்தோராக இருக்கக் கூடும். உங்களுக்குள் நீங்கள் குறை கூற வேண்டாம். பட்டப் பெயர்களால் குத்திக் காட்ட வேண்டாம். நம்பிக்கை கொண்ட பின் பாவ மான பெயர் (சூட்டுவது), கெட்டது. திருந்திக் கொள்ளாதவர்கள் அநீதி இழைத்தவர்கள்.

 நம்பிக்கை கொண்டோரே! ஊகங்களில் அதிகமானதை விட்டு விலகிக் கொள் ளுங்கள்! சில ஊகங்கள் பாவமாகும். துருவித் துருவி ஆராயாதீர்கள்! உங்களில் ஒருவர் மற்றவரைப் புறம் பேசாதீர்கள்! உங்களில் எவரேனும் இறந்த தமது சகோ தரனின் மாமிசத்தைச் சாப்பிட விரும்புவாரா? அதை வெறுப்பீர்கள். அல்லாஹ்வை அஞ்சுங்கள்! அல்லாஹ் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 49:11,12)

 சமுதாய நலன் கருதி ஒருவரின் குறையை வெளிப்படுத்துவது குற்ற மில்லை. இவரின் குறையை வெளிப்படுத்தவில்லையானால் மக்களின் இவரை நம்பி கெட்டு போய்விடுவார்கள், ஏமாந்துவிடுவார்கள் எனும்போது அவரின் தெளிவுபடுத்துவது கட்டாயமாகும். இதற்கு பின்வரும் நபிமொழி ஆதாரமாகும்.

 ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்கடம் (வீட்டுக்குள் வர) அனுமதி கேட்டார். அவரைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், இவர் அந்தக் கூட்டத்தாரிலேயே மிகவும் தீயவர்'' என்று (என்னிடம்) சொன்னார்கள். அவர் வந்து அமர்ந்தபோது அவரி டம் நபி (ஸல்) அவர்கள் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்துகொண்டார்கள். அந்த மனிதர் (எழுந்து) சென்றதும் நான் நபி (ஸல்) அவர்கடம் அல் லாஹ்வின் தூதரே! அந்த மனிதரைக் கண்டதும் தாங்கள் இவ்வாறு இவ்வாறு சொன்னீர்கள். பிறகு அவரிடம் மலர்ந்த முகத்துடன் இதமாக நடந்து கெண்டீர் களே'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா! நான் கடுமையாக நடந்து கொண்டதை நீ எப்போதாவது கண்டுள்ளாயா? எவரது தீங்கை அஞ்சி மக்கள் (அவருடன் இயல்பாகப் பழகாமல்) விட்டு விடுகிறார்களோ அவரே மறுமை நால் அல்லாஹ்விடம் அந்தஸ்தில் மிகவும் மோச மானவர் ஆவார்'' என்று சொன்னார்கள்.

 அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி), நூல்:புகாரி (6032)

மலர்ந்த முகத்துடன் இதமாக பேசிய ஒருவரைப்பற்றி நபிகளார் அவர்கள், இவர்தான் அவர்களின் கூட்டத்திலேயே மிகவும் தீயவர் என்று அடையாளம் காட்டியுள்ளார்கள். ஏனெனில் அந்த தீயவரிடம் கவனமாக நடந்து கொள்ள வேண்டும் என்பதற்காகத்தான். எனவே இதுபோன்ற சந்தர்ப்பங்களில் குறை களை வெளிப்படுத்துவது தவறாகாது.

 இறைவனின் மன்னிப்பு வேண்டுமா?

 - கே. பாஜிலா ஃபர்வீன், திருத்துறைப்பூண்டி

 நாம் கேட்கும் துஆக்களில் மிகவும் முக்கியமானது இறைவா! என்னை மன்னித்துவிடு!'' என்பதுதான். இதை சிறியவர் முதல் பெரியவர் வரைஏழை முதல் பண்காரன்வரை எந்த பாகுபாடு மின்றி அனைவரும் கேட்டாக வேண்டும். முதல் நபி ஆதம் (அலை) முதல் இறுதித் தூதர் முஹம்மத் (ஸல்) வரை அனைவருமே இவ்வாறு கேட்டவர்கள் தான். ஏனென்றால் நமது உள்ளம் தீமைகளை தூண்டக் கூடியதாக இருக்கிறது. அதனால் இறைவனின் கோபம் நம்மீது விழுந்துவிடக் கூடாது. மேலும் இதன்காரணமாக நரகில் போய்விடக்கூடாது என்ற நல்ல எண்ணம்தான்.

 ஆதமுடைய மகன் ஒவ்வொருவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக் கின்றான். பின்னர் என்னிடம் பாவமன்னிப்பு தேடுகின்றனர். நான் அவனை மன்னிக்கின்றேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.

 அறிவிப்பவர் : அபூதர் (ரலி), நூல் : அஹ்மத் (20451)

 அவசரக்காரனாக படைக்கப்பட்டுள்ள மனிதன், பல நேரங்களில் அவச ரப்பட்டு தவறுகளைச் செய்கிறான். அவனின் தவறுகளை உணர்ந்து படைத்த வனிடம் மன்னிப்புக் கேட்டால் இறைவனை அவனை மன்னித்துவிடுகிறான். முதல் மனிதராக இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட நபி ஆதம் (அலை) அவர் களே இதற்கு உதாரணமாக கூறலாம்.

 மனம் திருந்தி மன்னிப்புக் கேள்!

 ஆதமே! நீயும், உன் மனைவியும் இந்த சொர்க்கத்தில் குடியிருங்கள்! இருவரும் விரும்பியவாறு தாராளமாக இதில் உண்ணுங்கள்! இந்த மரத்தை (மட்டும்) நெருங்காதீர்கள்! (நெருங்கினால்) அநீதி இழைத்தோராவீர்'' என்று நாம் கூறினோம். (அல்குர்ஆன் 2:35)

 அவ்விருவரின் மறைக்கப்பட்ட வெட்கத்தலங்களை வெளிப்படுத்துவ தற்காக ஷைத்தான் அவ்விருவருக்கும் தீய எண்ணத்தை ஏற்படுத்தினான். இருவரும் வானவர்களாக ஆகி விடுவீர்கள் என்பதற்காகவோ, நிரந்தரமாக இங்கேயே தங்கி விடுவீர்கள் என்பதற்காகவோ தவிர உங்கள் இறைவன் இம்மரத்தை உங்களுக்குத் தடை செய்யவில்லை'' என்று கூறினான்.

 (அல்குர்ஆன் 7:20)

 இறைவனின் கட்டளையை மறந்து ஷைத்தானின் தூண்டுதலுக்கு கட்டுப்பட்டு தவறிழைத்த ஆதம், ஹவ்வா (அலை) அவர்கள், தம் தவறுகளை உணர்ந்து இறைவனிடம் மன்னிப்பு கேட்டபோது அல்லாஹ் மன்னித்தான்.

 (பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்றஅன்புடையோன். (அல்குர்ஆன் 2:37)

 எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம்'' என்று அவ்விருவரும் கூறினர்.

 (அல்குர்ஆன் 7:23)

 அடுத்தவரின் குறைகளை மறை!

 அடுத்தவர்கள் தவறிழைத்திருந்தால் அவர்களின் குறைகளை அம்பலப் படுத்தாமல் அவரிடம் நேரடியாக தவறைச் சுட்டிக்காட்டி அவற்றைத் திருத்தி அவரின் குறைகள் வெளியில் சொல்லாமல் பார்த்துக் கொண்டால் மறுமையில் நமது தவறுகளை அல்லாஹ் கண்டுகொள்ளாமல் மன்னித்துவிடுவான்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) கூறினார்கள்:

 ஒரு முஸ்ம் மற்றொரு முஸ்மின் சகோதரன் ஆவான். அவனுக்கு அநீதியிழைக்கவும் மாட்டான்; அவனை (பிறரது அநீதிக்கு ஆளாகும்படி) கைவிட்டு விடவும் மாட்டான். எவர் தன் சகோதரனின் தேவையை நிறைவு செய்வதில் ஈடு பட்டிருக்கின்றாரோ அவரது தேவையை நிறைவு செய்வதில் அல்லாஹ்வும் ஈடுபட்டிருக்கின்றான். எவர் ஒரு முஸ்மின் ஒரு துன்பத்தை நீக்குகின்றாரோ அவரை விட்டு அல்லாஹ்வும் மறுமை நான் துன்பங்கல் ஒரு துன்பத்தை நீக்குகின்றான். எவர் ஒரு முஸ்மின் குறைகளை மறைக்கின்றாரோ அவரது குறைகளை மறுமை நால் அல்லாஹ்வும் (மன்னித்து) மறைக்கின்றான்.

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ர), நூல் : புகாரி (2442)

 வசதி இல்லாதோரின் கடன்களை தள்ளுபடி செய்யுங்கள்

 வசதியில்லாதவர்களின் கடன்களை கெடுபிடி செய்து வசூல் செய்யாமல் அவர்களின் நிலைகளை கவனத்தில் கொண்டு கடன்களை தள்ளுபடி செய்தால் மறுமையில் நம் பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(முன் காலத்தில்) மக்களுக்குக் கடன் கொடுக்கக் கூடிய ஒரு வியாபாரி இருந்தார். கடனைத் திருப்பிச் செலுத்தச் சிரமப்படுபவரை அவர் கண்டால், தமது பணியாளர்களிடம் இவரது கடனைத் தள்ளுபடி செய்யுங்கள்; அல்லாஹ் நமது தவறுகளைத் தள்ளுபடி செய்யக்கூடும் என்று கூறுவார். அல்லாஹ்வும் அவரது தவறுகளைத் தள்ளுபடி செய்தான்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (2078)

 பொது சேவை செய்தல்

 பொதுமக்களுக்க பயன்தரும் நல்லறங்களை செய்பவருக்கு மறுமையில் இறைவனின் மாபெரும் அருள் கிடைப்பதுடன் அவரின் பாவங்கள் மன்னிக் கப்பட்டு சொர்க்கத்திற்கு செல்லும் வாய்ப்பு கிடைக்கும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒரு மனிதர் சாலையில் நடந்து சென்று கொண்டிருந்தார். அப்போது சாலையில் முட்கிளை ஒன்றைக் கண்டு அதை அப்புறப்படுத்தினார். (அவரது இந்த நற்செயலை) அல்லாஹ் பெருமனதுடன் ஏற்று, அவருக்கு (அவர் செய்த பாவங்களிருந்து) மன்னிப்பு வழங்கினான்.
 
அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)
, நூல் : முஸ்லிம் (3877)

 

 
 

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 ஒரு மனிதர் நடைபாதையில் கிடந்த மரக் கிளையொன்றைக் கடந்து சென்றார். அப்போது அவர், அல்லாஹ்வின் மீதாணையாக! முஸ்ம்களுக்குத் தொல்லை தராமருப்பதற்காக இதை நான் அப்புறப்படுத்துவேன்'' என்று கூறி(விட்டு அதை அப்புறப்படுத்தி)னார். இதன் காரணமாக, அவர் சொர்க் கத்தில் அனுமதிக்கப்பட்டார்.

 அறவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (5106)

 ஹஜ், உம்ரா செய்தல்

 இறைகடமைகளில் ஒன்றான ஹஜ், என்ற கடமையை இறைதிருப்தியை மட்டும் எதிர்பார்த்து நிறைவேற்றினால் தம் பாவங்கள் மன்னிக்கப்படும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 தாம்பத்தியஉறவு மற்றும் பாவச் செயல்களில் ஈடுபடாமல் ஒருவர் அல் லாஹ்வுக்காகவே ஹஜ் செய்தால் அவர் அவருடைய தாய் அவரைப் பெற்றெ டுத்த நாளில் இருந்ததைப் போன்று (பாவமறியாப் பாலகராகத்) திரும்புவார்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (1521), முஸ்லிம் (2625)

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஓர் உம்ராச் செய்வது, மறு உம்ராவரை (ஏற்படும் சிறு) பாவங்களுக்குப் பரிகாரமாகும். (பாவச் செயல் கலவாத) ஒப்புக்கொள்ளப்பட்ட ஹஜ்ஜுக்குச் சொர்க்கத்தை தவிர வேறு கூலி இல்லை.

 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (1773),முஸ்லிம் (2624)

 உளூச் செய்தல்

 படைத்தவனை வணங்குவதற்காக நமது அங்கங்களை தூய்மை செய்யும்போதும் நம் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 ஒரு முஸ்மான' அல்லது முஃமினான' (இறைநம்பிக்கை கொண்ட) அடியார் அங்கத் தூய்மை (உளூ) செய்யும்போது முகத்தைக் கழுவினால், கண்களால் பார்த்துச் செய்த பாவங்கள் அனைத்தும் (முகத்தைக் கழுவிய) நீருடன்' அல்லது நீரின் கடைசித் துளியுடன்' முகத்திருந்து வெளியேறுகின் றன. அவர் கைகளைக் கழுவும்போது கைகளால் பற்றிச் செய்திருந்த பாவங்கள் அனைத்தும் (கைகளைக் கழுவிய) தண்ணீருடன்' அல்லது தண்ணீரின் கடை சித் துளியுடன்' வெளியேறுகின்றன. அவர் கால்களைக் கழுவும்போது, கால்க ளால் நடந்து செய்த பாவங்கள் அனைத்தும் (கால்களைக் கழுவிய) நீரோடு' அல்லது நீரின் கடைசித் துளியோடு' வெளியேறுகின்றன. இறுதியில், அவர் பாவங்களிருந்து தூய்மை அடைந்தவராக (அந்த இடத்திருந்து) செல்கிறார்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (412)

 கடமையான தொழுகை

 படைத்தவனின் கட்டளையை ஏற்று ஐவேளை தொழும் போதும் பெரும்பாவங்களில் நாம் ஈடுபடாதவரை பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆ விருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங் களில் சிக்காதவரை.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் :முஸ்லிம் (394)

 ரமலான் மாதம் நோன்பு

 சிறப்புமிகு ரமலானின் இறைவன் கடமையாக்கி நோன்பை நன்மையை எதிர்பார்த்து நோன்பு நோற்றால் நம் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

 அல்லாஹ்வின் தூதர்(ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 எவர் நம்பிக்கை கொண்டவராகவும், நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நோன்பு நோற்பாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக் கப்பட்டுவிடும்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (38), முஸ்லிம் (1393)

 ரமலானில் இரவில் தொழுதல்

 சிறப்புமிகு ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகையை இறைதிருப்தியை எதிர்ப்பார்த்து நிறைவேற்றினால் நம் முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படும்.

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் :

 எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல்கள் : புகாரி (37), முஸ்லிம் (1393) மனிதன் செய்யும்

தவறுகளை மன்னித்தல்

 மனிதனாக பிறந்தவன் தவறிழைக்காமல் இருக்கமாட்டான். ஏதாவது ஒரு காரணத்திற்காக தவறிழைத்துவிட்டான் என்றால் அதை காரணம்காட்டி ஒதுக்கிவிடாமல் அவன் தவறைபுரியவைத்து அவனை மன்னித்தால் நம் தவறுகளை அல்லாஹ் மன்னிப்பான்.

 (ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்கல் ஒரு குழுவினர் தாம்'' என்று தொடங்கும் (24:11-20) பத்து வசனங்களை அல்லாஹ் அருனான். ஆயிஷா (ர) அவர்கள் கூறினார்கள்: என் குற்றமற்ற நிலையைத் தெவுபடுத்தி அல்லாஹ் இதை அருனான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ர) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணை யாக! (என் புதல்வி) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒருபோதும் நான் மிஸ்தஹுக்காக எதையும் செலவிடமாட்டேன்'' என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள். மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூ பக்ர் (ர) அவர்கள் செலவிட்டு வந்தார்கள். அப்போது அல்லாஹ், உங்கல் செல்வம் மற்றும் தயாளகுணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கு (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம்'' எனும் (24:22ஆவது) வசனத்தை அருனான்.

 அபூ பக்ர் (ர) அவர்கள், ஆம்; அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன்'' என்று கூறி விட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்ப வும் தொடரலானார்கள். மேலும், அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒருபோதும் நான் நிறுத்தமாட்டேன்'' என்றும் கூறினார்கள். (புகாரி 6679)

 அபூபக்ர் (ரலி) அவர்களின் மனதை மாற்றி முழு வசனம் இதுதான் : உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம்'' என்று செல்வமும், தயாளகுணம் உடை யோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 24:22)

 அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும்'' என்று விரும்ப மாட்டீர் களா? என்று இறைவனின் கேள்வி, மனிதனை மன்னிக்கும்போது என்னுடைய மன்னிப்பு உங்களுக்க உண்டு என்று கருத்தை அறிந்து அபூபக்ர் (ரலி) அவர் கள், தம் மகள் மீது அவதூறு சொன்ன மிஸ்தஹை மன்னித்து அவருக்க உதவிகளை வழங்கிவந்தார்கள். எனவே மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னித்து இறைவனின் பாவ மன்னிப்பை பெறுவோம்.

 ஃபித்ரா எனும் நோன்பு பெருநாள் தர்மம்

 - பீ. ஜைனுல் ஆபிதீன்

ஃபித்ரா எனும் தர்மம் கட்டாயம் நிறைவேற்ற வேண்டிய தர்மமா கும். முஸ்லிமான ஆண்கள், பெண்கள், அடிமைகள், சிறுவர்கள் மீது இது கடமையாகும்.

முஸ்லிமான அடிமை, சுதந்திரமானவர், ஆண், பெண், பெரியவர் மற்றும் சிறுவர் மீது நோன்புப் பெருநாள் தர்மமாக ஒரு ஸாவு கோதுமை, அல்லது ஒரு ஸாவு பேரீச்சையை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் விதியாக்கினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1503

ஒருவர் தமது பராமரிப்பில் உள்ள அனைவருக்காகவும் இந்தத் தர் மத்தை வழங்குவது அவசியம் ஆகும். ஒரு ஸாவு என்பது சுமார் இரண்ட ரைக் கிலோ கொண்ட ஒரு அளவாகும்.

நமது பராமரிப்பில் ஐந்து நபர்கள் இருந்தால் தலைக்கு இரண்டரைக் கிலோ அரிசி வீதம் பன்னிரண்டரைக் கிலோ அரிசியை வழங்க வேண்டும். இதுவே ஃபித்ரா எனப்படுகிறது.

ஃபித்ராவின் நோக்கம்

 இரண்டு காரணங்களுக்காக ஃபித்ரா எனும் இந்தத் தர்மம் கடமை யாக்கப்பட்டுள்ளது.

 நோன்பாளியிடமிருந்து ஏற்பட்ட வீணான காரியங்களை விட்டும் நோன் பாளியைத் தூய்மைப்படுத்தவும், ஏழைகளுக்கு உணவாக வும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் ஃபித்ரா தர்மத்தை விதியாக்கி னார்கள்.

 அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)

நூல் : அபூதாவூத் 1371, இப்னுமாஜா 1817

 நோன்பு நோற்றவர்களுக்கு நோன்பில் ஏற்பட்ட தவறுகளுக்குப் பரிகாரமாக இது அமைகிறது. ஏழைகளுக்கு உணவளித்த நன்மையும் கிடைக்கிறது. நோன்பு வைக்காத சிறுவர்கள், நோயாளிகள் போன்றோர்க ளின் சார்பில் வழங்கும்போது ஏழைகளுக்கு உணவளித்த நன்மை மட்டும் கிடைக்கும்.

 கொடுக்கும் நேரம்

 மக்கள் (பெருநாள்) தொழுகைக்குச் செல்வதற்கு முன்னால் ஃபித்ரா தர்மத்தை வழங்கிவிட வேண்டும் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கட்டளையிட்டிருந்தார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)

 நூல்: புகாரி 1503, 1509

 இந்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு பெருநாள் தினத்தில் சுப்ஹுக் குப் பின், பெருநாள் தொழுகைக்கு முன் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்று சில சகோதரர்கள் கருதுகிறார்கள்.

 பெருநாள் தொழுகைக்கு முன் பெருநாள் தினத்தில் ஃபித்ரா கொடுக்க வேண்டும் என்றும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ள இயலும்.

 பெருநாள் தொழுகைக்குப் பின்னால் கொடுக்கக் கூடாது. எத்தனை நாள்களுக்கு முன்னாலும் கொடுக்கலாம் எனவும் இந்த ஹதீஸிலிருந்து பொருள் கொள்ளலாம்.

 பெருநாள் தொழுகைக்கு முன் என்பதை இரண்டு விதமாகவும் புரிந்து கொள்ள இடமிருந்தாலும் வேறு பல ஹதீஸ்களை ஆராயும்போது, பெரு நாள் தொழுகைக்குப் பின்னர் கொடுக்கும் அளவுக்கு தாமதிக்கக் கூடாது. பெரு நாளைக்கு சில நாட்களுக்கு முன்னால் கொடுக்கலாம்'' என்ற கருத்தே சரியானது என்பது உறுதியாகிறது.

 ரமலான் ஸகாத்தைப் பராமரிக்கும் பொறுப்பில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் என்னை நியமித்திருந்தார்கள். அப்போது ஷைத்தான் வந்து அதிலிருந்து எடுக்கலானான். உடனே நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் உன்னைக் கொண்டு செல்வேன்'' என்று நான் கூறி னேன். அதற்கு அவன் எனக்குக் குடும்பம் உள்ளது. எனக்குக் கடும் தேவை உள்ளது'' எனக் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நான் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நேற்றிரவு உன் கைதி என்ன ஆனான்?'' என்று கேட்டார்கள். அல் லாஹ்வின் தூதரே! அவன் வறுமையை முறையிட்டதால் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்'' என்று கூறினேன். அதற்கு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அவன் உன்னிடம் பொய் சொல்லியுள்ளான். மீண்டும் உன்னிடம் வருவான்'' என்று கூறினார்கள். நான் அவனுக்காக காத்திருந்தேன். அவன் மீண்டும் வந்து உணவை அள்ள ஆரம்பித்தான். அவனைப் பிடித்து உன்னை நபிகள் நாயகத்திடம் கொண்டு போகப் போகிறேன்'' என்று கூறினேன். எனக்கு வறுமை உள்ளது. குடும்பம் உள்ளது. இனி வர மாட்டேன்'' என்று அவன் கூறினான். அவனை நான் விட்டு விட்டேன். காலையில் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் நான் சென்றபோது, உன் கைதி என்ன ஆனான்?'' என்றார்கள். அவன் கடுமையான தேவையை முறையிட்டான். இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன் எனக் கூறினேன். அவன் உன்னிடம் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் வருவான்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) கூறினார்கள். நான் அவனுக்காகக் காத்திருந்தேன். மூன்றாவது நாளும் வந்தான்.... என்ற ஹதீஸ் புகாரியில் வகாலத் என்ற பாடத்தில் பதிவு செய்யப்பட்டுள்ளது.

 சுருக்கமாக புகாரி 3275, 5010 ஆகிய எண்களில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஹதீஸில் ஃபித்ரா என்று கூறப்படவில்லை. ரமளான் ஜகாத் என்றுதான் கூறப்பட்டுள்ளது. இது ரமளான் மாதத்தில் ஜகாத்தைத் திரட்டு வதையே குறிக்கிறது. ஃபித்ராவை குறிக்கவில்லை'' என்று சிலர் வாதிடு கின்றனர். இந்த வாதம் தவறாகும்.

 ஜகாத் என்பது ஆண்டு தோறும் ரமளானில் மட்டும் திரட்டப்படும் நிதி அல்ல. அன்றாடம் திரட்டப்பட்டுக் கொண்டே இருக்கும். ஆனால் 'ரமளான் ஜகாத்' என்ற சொல் ஃபித்ராவை மட்டும்தான் குறிக்கும்.

 இதை நாம் சுயமாகக் கூறவில்லை. பின்வரும் ஹதீஸிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம்.

 ரமளான் ஸகாத்தை அடிமை, சுதந்திரமானவன், ஆண், பெண் அனைவர் மீதும் ஒரு ஸாவு பேரிச்சம் பழம் அல்லது ஒரு ஸாவு கோதுமை என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் நிர்ணயித்தார்கள் என்ற ஹதீஸ் நஸாயீ 2453, 2455 ஆகிய எண்களில் பதிவு செய்யப் பட்டுள்ளது.

  ஒவ்வொருவருக்கும் ஒரு ஸாவு என்று ரமளான் ஜகாத்தை ஏற்படுத்தினார்கள்'' என்பது ஃபித்ராவைத்தான் குறிக்கும். ஜகாத்தைக் குறிக்காது. ஜகாத் என்பது ஆளுக்கு ஆள் வேறுபடும். அனைவருக் கும் ஒரு ஸாவு என்று ஜகாத் வசூலிக்கப்படாது.

 எனவே அபூஹுரைரா (ரலி) சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஃபித்ராவையே குறிக்கிறது. எனவே நோன்புப் பெருநாள் தர்மம் மக்களிடம் திரட்டப்பட் டது என்பதற்கும் இது ஆதாரமாக அமைந்திருக்கிறது. திரட்டும் பணியை பெருநாளைக்கு மூன்று நாட்களுக்கு முன்ன தாகவே ஆரம்பிக்கலாம் என்பதற்கும் இது ஆதரமாக அமைந்துள்ளது.

 ஃபித்ரா தர்மத்துக்காக திரட்டப்பட்ட பொருட்கள் குறைந்தபட்சம் மூன்று நாட்கள் அபூஹுரைரா (ரலி) அவர்களின் பொறுப்பில் இருந்துள் ளது. மூன்று நாட்களும் ஷைத்தான் (கெட்ட மனிதன்) வந்து அதை அள்ளியிருக்கிறான் என்பதிலிருந்து பெருநாளைக்கு சில நாள்களுக்கு முன்பாகவே ஃபித்ராவைத் திரட்டலாம் என்பது தெரிகிறது.

 நபித் தோழர்கள் நோன்புப் பெரு நாளைக்கு ஒருநாள் அல்லது இரண்டு நாட்களுக்கு முன் ஃபித்ராவைக் கொடுத்து வந்தனர் என்று புகாரி 1551-வது ஹதீஸ் கூறுகிறது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் வாழும்போதே நடந்ததை இது குறிக்கும் என்றால் இது மற்றொரு ஆதாரமாக மையும். நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் காலத்துக்குப் பின்னர் நபித் தோழர்கள் இவ்வாறு கொடுத்து வந்தார்கள் என்பது இதன் கருத்தாக இருந்தால் அபூஹுரைரா (ரலி) அவர்களின் அறிவிப்பை உறுதி செய்வதாக இது அமையும்.

 எனவே, நோன்புப் பெருநாளைக்குச் சில நாட்களுக்கு முன்பே ஃபித் ராவைத் திரட்டலாம் என்பதில் சந்தேகம் இல்லை. பெருநாள் தொழுகை ஆரம்பமாகும்வரை அதன் கடைசி நேரம் உள்ளது.

 ஒரு ஊரில் திரட்டி வேறு ஊரில் கொடுத்தல்

 ஒரு ஊரில் திரட்டப்படும் ஃபித்ரா தர்மத்தை வேறு ஊர்களுக்கு வழங்கக் கூடாது என்று சிலர் கூறுகின்றனர். இதற்கு நேரடியாக எந்த ஆதாரமும் அவர்களிடம் இல்லை.

 ஜகாத்தை அவர்களின் செல்வந்தர்களிடமிருந்து பெற்று அவர்க ளில் உள்ள ஏழைகளுக்கு விநியோகிக்க வேண்டும் என்று கூறி முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் யமன் பகுதிக்கு அனுப்பினார்கள்.

 (புகாரி 1395, 1496, 4347)

 அவர்களில் செல்வந்தர்களிடம் திரட்டி அவர்களில் ஏழைகளுக்கு வழங்க வேண்டும்'' என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் எந்தப் பகுதியில் திரட்டப்பட்டதோ அங்குதான் விநியோகிக்க வேண்டும் என்று இவர்கள் வாதிடுகின்றனர்.

 இது நோன்புப் பெருநாள் தர்மத்தைப் பற்றிய ஹதீஸ் அல்ல. ஜகாத் பற்றிய ஹதீஸாகும் என்பதை முதலில் நாம் கவனிக்க வேண்டும்.

 அவர்களில் ஏழைகள், அவர்களில் செல்வந்தர்கள் என்பது அந்த ஊரைச் சேர்ந்த ஏழைகள், அந்த ஊரைச் சேர்ந்த செல்வந்தர்கள் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்டதா?

 முஸ்லிம்களில் உள்ள செல்வந்தர்கள், முஸ்லிம்களில் உள்ள ஏழைகள் என்ற பொருளில் பயன்படுத்தப் பட்டுள்ளதா? இரண்டுக்கும் இடம் தரக் கூடிய வகையில் இது அமைந்துள்ளது.

இரண்டாவது கருத்தில்தான் இது பயன்படுத்தப்பட்டுள்ளது என்ப தைப் பின்வரும் ஹதீஸ் உறுதி செய்கிறது.

 நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் பனூ சுலைம் கோத்திரத்தின ரிடம் ஜகாத்தைத் திரட்ட ஒருவரை நியமனம் செய்தார்கள். அவர் வந்ததும் அவரிடம் கணக்குக் கேட்டார்கள். இது உங்களுக்கு உரி யது; இது எனக்கு அன்பளிப்பாக கிடைத்தது'' என்று அவர் கூறினார்... (புகாரி 6979)

 பனூ சுலைம் கூட்டத்தார் மதீனாவைச் சேர்ந்தவர்கள் அல்லர். வேறு பகுதி யைச் சேர்ந்தவர்கள். அவர்களிடம் வசூலித்த ஜகாத்தை அந்த நபித்தோழர் நபிகள் நாயகத்திடம் மதீனாவுக்குக் கொண்டு வந்திருக்கிறார். ஒரு இடத்தில் வசூலித்து இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம் என்பதை இந்த ஹதீஸி லிருந்து அறியலாம்.

 எனவே, ஜகாத்தாக இருந்தாலும் ஃபித்ராவாக இருந்தாலும் ஒரு இடத்தில் திரட்டி இன்னொரு இடத்தில் விநியோகிக்கலாம்.

 மேலும் ஏழைகளுக்கு உணவாக பயன்படுவதற்காகவே ஃபித்ரா என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறிய காரணமும் கவனத்தில் கொள்ளப்பட வேண்டும்.

 வசதிபடைத்தவர்கள் அதிகமாக வாழும் பகுதியில் திரட்டி ஏழைகள் அதிகம் வாழும் பகுதியில் விநியோகம் செய்வதில் எந்தத் தவறும் இல்லை. பொருள் வசதி படைத்த நாடுகளில் வசிப்போர் ஏழைகள் வசிக் கும் பகுதிக்கு அனுப்பினால்தான் ஃபித்ராவின் இரண்டு நன்மைகளையும் பெற முடியும்.

 ஐயமும் தெளிவும்

 ? பெருநாளுக்கு ஆறு தக்பீர்கள் கூடுதலாக சொல்ல வேண்டும் என்று கூறுகிறார்களே இது சரியா?

- கதீஜா, தஞ்சை

! பெருநாள் தொழுகையில் கிராத் ஓதுவதற்கு முன்னர் மூன்று தக்பீர்களும் இரண்டாவது ரக்அத்களில் கிராத் ஓதியதற்கு பின்னர் மூன்று தக்பீர்களும் சிலர் கூறுகின்றனர். அதற்கு பின்வரும் செய்தியை ஆதாரமாக கூறுகின்றனர்.

 நான் அபூமூஸா அல் அஷ் அரீ (ரலி), ஹுதைஃபா (ரலி) ஆகியோ ரிடம் நபி (ஸல்) அவர்கள் இரண்டு பெருநாள் தொழுகைகளில் எத் தனை தக்பீர்கள் கூறினார்கள்? என வினவினேன். அதற்கு அபூ மூஸா (ரலி) அவர்கள் ஜனாஸா தொழுகையில் நான்கு தக்பீர்கள் கூறுவதைப் போன்ற நான்கு தக்பீர்கள் கூறினார்கள் என பதிலளித்தார்கள். இதைக் கேட்ட ஹுதைஃபா (ரலி) அவர்கள் அபூமூஸா உண்மைக் கூறினார் என்று சொன்னார்கள்.

 அறிவிப்பவர் : ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி), நூல் : அபூதாவூத் (973)

 அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), அவர்கள் அமர்ந்திருந்தார்கள் அவர்களுக்கு அருகில் ஹுதைஃபா (ரலி) அவர்களும் அபூமூஸா (ரலி) அவர்களும் அமாந்திருந்தார்கள். அப்போது ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அவர்கள் இவர்களிடம் பெருநாள் தொழுகையின் தக்பீர்களைப் பற்றி கேட்டார்கள். ஹுதைஃபா (ரலி) அவர்கள் இதை அபூமூஸா (ரலி) அவர் களிடம் கேளுங்கள் என்றார்கள். அதற்கு அபூமூஸா (ரலி) அவர்கள் இதைப் பற்றி அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேளுங்கள். ஏனெனில் அவர்கள் நம்மைவிட முந்தியவர் மேலும் நம்மில் மிகவும் அறிந் தவர் என்று கூறினார்கள். எனவே ஸயீத் பின் அல்ஆஸ் (ரலி) அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அப்துல் லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் நான்கு தக்பீர்கள் கூறுவார். பின்னர் கிராத் ஓதுவார். பின்னர் ருகூவு செய்வார். பிறகு இரண்டாவது ரக்அத்திற்கு எழுந்து நின்று கிராஅத் ஓதுவார். கிராஅத்திற்கு பின்னர் நான்கு தக்பீர்கள் கூறுவார் என்று பதிலளித்தார்கள்.

 நூல் : அப்துர் ரஸ்ஸாக், பாகம் : 3, பக்கம் : 293

 முதலாவதாக இடம் பெற்றிருக்கும் ஹதீஸின் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ ஆயிஷா என்பவர் யாரென அறியப்படாதவர். இவரின் நம்பகத்தன்மை நிரூபிக்கப்படாததால் இந்த செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. மேலும் இந்த செய்தியின் அறிவிப்பாளரில் இன்னொரு வரான அப்துர்ரஹ்மான் பின் ஸவ்பான் என்பவரை சிலர் நம்பகமானவர் என்றும் சிலர் பலவீனமானவர் என்றும் கூறியுள்ளனர். மேலும் இவர் கடைசி கால கட்டத்தில் மனநிலை பாதிக்கப்பட்டவர் என்றும் விமர்சனம் செய்யப் பட்டுள்ளது. அவரின் மனநிலை நல்ல நிலையில் அறிவித்தவை எவை? மனநிலை தடுமாறியபோது அறிவித்தவை எவை என்பதற்கான ஆதாரங்கள் இல்லை. எனவே இந்த செய்தி மேலும் பலவீனமடைகிறது. மேலும் இந்த செய்தியை பதிவு செய்த மற்றொரு இமாமான பைஹகீ அவர்கள் இச்செய்தியின் இறுதியில் இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் சில நேரங்களில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாகவும் சில நேரங்களில் அப்துல் லாஹ் பின் மஸ்வூத்(ரலி) அவர்களின் கூற்றாகவும் (குழப்பமாக) கூறுகிறார். இந்த சம்பவத்தில் பிரபலியமான கூற்று : இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறியதாக சொல்வதாகும். இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் இதன்படி பத்வா வழங்கியுள்ளார்கள். ஆனால் அவர்கள் நபி (ஸல்) அவர்களுடன்

இக்கருத்தை இணைக்கவில்லை. (ஆதாரம் : பைஹகீ
, பாகம் : 3, பக்கம் : 289)

 இரண்டாவதாக வரும் செய்தியில் நான்கு தக்பீர் கூறுவார் என்று வரும் செய்தியில் நான்கு தக்பீர் நபி (ஸல்) அவர்கள் கூறுவார்கள் என்று கூறப் படவில்லை. அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களிடம் கேட்ட கேள் விக்கு அவர்கள், நான்கு தக்பீர் கூறுவார் என்று பதிலளித்தார்களேத் தவிர நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு கூறுவார்கள் என்று கூறவில்லை. எனவே இதையும் ஆதாரமாகக் கொள்ளமுடியாது.

 மேலும் முதலாவது, இரண்டாவது ஆதாரத்தின்படி நன்கு+நான்கு தக்பீர் கள் கூடுதலாக சொல்வதற்குத்தான் ஆதாரமாக உள்ளதே தவிர மூன்று + மூன்று தக்பீர்கள் கூடுதலாக சொல்வதற்கு ஆதாரமில்லை என்பதையும் விளங்க வேண்டும்.

 ? ஜகாத் கடமையானவர்தான் பித்ரா கொடுக்க வேண்டுமா?

- ரம்லா, கோவை

 ! நபி (ஸல்) அவர்கள் பித்ரா தொடர்பாக எந்த பொருளைக் கொடுக்க வேண்டும்? எவ்வளவு கொடுக்க வேண்டும்? யார் யார் கொடுக்க வேண்டும்? எப்போது கொடுக்க வேண்டும்? என்று தெளிவுபடுத்தியுள்ளார்கள். எவ்வளவு இருந்தால் கொடுக்க வேண்டும் என்று கூறவில்லை.

 பொதுவாக செலவழிக்க வேண்டும் என்று கூறப்பட்டால் அதற்கு வசதியுள்ளவர்கள் செய்ய வேண்டும் என்றே நாம் விளங்கிக் கொள்வோம். அதைப் போன்றுதான் பித்ரா கொடுக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டு அதற்கு அளவு சொல்லாததால் கடன் இல்லாமல் கொடுப்ப தற்கு வசதியுள்ளவர்கள் கண்டிப்பாக கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். மனிதன் செய்ய வேண்டிய முக்கிய கடமைகளில் கடனை நபிகளார் கூறியுள்ளதாலும் மிக உயர்ந்த தகுதியுடைய ஷஹீத் கூட கடன்பட்டால் அல்லாஹ் மன்னிக்கமாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதால் கடன் போக பித்ரா கொடுக்க வசதியுள்ளவர்கள் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம்.

 ? தராவீஹ் தொழுகை எட்டு ரக்அத்கள் தொடர்பாக புகாரியில் இடம் பெறும் 1147வது ஹதீஸ் தராவீஹ் தொடர்புடையது அல்ல! என்று பின்வரும் காரணங்களை கூறுகின்றனர்.

 தராவீஹ் தொழுகை ரமளான் மாதத்தில் மட்டும்தான் தொழப்படுகிறதே தவிர மற்ற மாதங்களில் தொழப்படுவதில்லை எனவே இந்த ஹதீஸ் தராவீஹ் தொழு கைக்கு பொருந்தாது. இந்த ஹதீஸ் ஒரு ஸலாமைக் கொண்டு நான்கு ரக்அத் தொழுததாகக் கூறப்படுகிறது. ஆனால் தராவீஹ் இரண்டு ரக்அத்க ளுக்கு ஒரு ஸலாம் என்ற அடிப்படையில் தொழப்படுகிறது.

 இந்த ஹதீஸ் தஹஜ்ஜத் தொழுகைப் பற்றியதாகும். ஏனெனில் தஹஜ்ஜத் தொழுகைதான் ரமாளானிலும் ரமலான் அல்லாத மாதங்களிலும் தொழப்படு கிறது. இந்த ஹதீஸ் ரமலான் தொடர்புடையது அல்ல! என்பதால் தான் இதை தஹஜ்ஜத் (கியாமுல் லைல்) என்ற தலைப்பில்

ஹதீஸ் நூல் ஆசிரியர்கள் கொண்டுவந்துள்ளனர். இதற்கு உங்கள் பதில் என்ன
?

 - அப்துல் காதிர், சென்னை

 ! நான் நபி (ஸல்) அவர்களின் துணைவியான ஆயிஷா (ரலி) அவர்களிடம், ரமளான் மாதத்தி(ன் இரவுகளி)ல் நபி (ஸல்) அவர்களின் தொழுகை எவ்வாறு இருந்தது?'' என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் ரமளானிலும் ரமலான் அல்லாத மற்ற காலங்களி லும் பதினொரு ரக்அத்களைவிட அதிகமாகத் தொழமாட்டார்கள்.(முதல்) நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பிறகு நான்கு ரக்அத்கள் தொழுவார்கள். அதன் அழகையும் நீளத்தையும் பற்றி நீ கேட்காதே! பின்னர் மூன்று ரக்அத்கள் தொழுவார்கள்'' என்று விடையளித்தார்கள்.

 நான், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் வித்ர் தொழுவதற்கு முன் உறங்குவீர்களா?'' என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் என் கண்தான் உறங்குகிறது; என் உள்ளம் உறங்குவதில்லை'' என்று விடையளித்தார்கள்' எனவும் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர் : அபூசலமா பின் அப்திர்ரஹ்மான், நூல் :புகாரி (1147)

 தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும் தொழுவதால் இந்த ஹதீஸ் தராவீஹ் தொழுகையைப் பற்றி கூறுவதாக சொல்லமுடியாது என்று சிலர் வாதிடுகின்றனர். இந்த வாதத்தை எடுத்து வைப்பவர்கள் முதலில் தராவீஹ் தொழுகை ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழவேண்டும் என்பதை முதலில் நிரூபித்து விட்டு இந்த கருத்தை அவர்கள் எடுத்து வைக்க வேண்டும். தராவீஹ் தொழுகை (இரவுத் தொழுகை) ரமலான் மாதத்தில் மட்டும்தான் தொழ வேண் டும் என்பதற்கு எந்த ஆதாரமும் இல்லாதபோது இந்த வாதம் ஏற்புடையது அல்ல.

 மேலும் நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தொழுதது ஓரே தொழுகை தான். நேர காலங்களை கவனித்து அதற்கு வெவ்வோறு பெயர்கள் ஹதீஸ் களில் கூறப்பட்டுள்ளது.

 இரவில் இந்த தொழுகை நிறைவேற்றப்படுவதால் இதற்கு ஸலாத்துல் லைல், கியாமுல் லைல் (இரவு தொழுகை) என்று கூறப்படுகிறது. உறங்கி எழுந்து இந்த தொழுகை தொழலாம் என்பதால் தஹஜ்ஜத் தொழுகை (இரவில் எழுந்து தொழும் தொழுகை) என்று கூறப்படுகிறது.

 நபி (ஸல்) அவர்கள் இரவில் ஒரே தொழுகையைத்தான் தொழுதார்கள் என்பதற்கு பின்வரும் நபிமொழிகள் தெளிவான சான்றுகளாகும்.

 நபி (ஸல்) அவர்கள் இஷாத் தொழுகையை முடித்ததிலிருந்து பஜ்ர் தொழுகை வரை (மொத்தம்) 11 ரக்அத்கள் தொழுதுள்ளார்கள்.

 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)

நூல்: முஸ்லிம் 1340

 நபி (ஸல்) அவர்கள் இரவின் முழுவதும் தொழுத தொழுகை மொத்தம் (8+3) 11 ரக்அத்துகள் என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள். இந்த நபிமொழியில் கூறப்படுவது தஹஜ்ஜத் தொழுகை என்று கூறினால். நபிகளார் தொழுத தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்விக்கு மாற்றுக் கருத்துள்ளவர்களால் பதில் சொல்ல முடியாது. இரண்டும் ஓரே தொழுகை என்றால்தான் இந்த கேள்விக்கு பதில் சொல்ல முடியும்.

 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருபத்தி மூன்றாவது நோன்பி னுடைய இரவுப் பகுதியில் இரவின் முதல் பகுதியில் மூன்றில் ஒரு பகுதி வரை தொழுதோம். பிறகு இருபத்தைந்தாம் இரவில் அவர்களுடன் பாதி இரவுவரை தொழுதோம். பிறகு இருபத்து ஏழாம் இரவில் அவர்களுடன் நாங்கள் ஸஹர் (உணவை) அடைய முடியாதோ என்று எண்ணும் அளவிற்கு தொழுதோம்.

 அறிவிப்பவர் : நுஃமான் பின் பஷீர் (ரலி)

நூல் : நஸயி (1588)

 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ரமலானில் நோன்பு நோற்றோம். ரமளானில் ஏழு நாட்கள் மீதமிருக்கும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. இருபத்தி மூன்றாம் நாள் இரவில் மூன்றில் ஒரு பகுதி நேரம்வரை எங்களுக்குத் தொழவைத்தார்கள். அதன் பிறகு (சில நாட்கள்) தொழவைக்கவில்லை. ரமலானில் மூன்று நாட்கள் எஞ்சியிருக் கும்போது மீண்டும் எங்களுக்குத் தொழவித்தார்கள். தம் குடும்பத்தின ரையும் மனைவியரையும் அதில் பங்கெடுக்கச் செய்தார்கள். ஸஹர் நேரம் முடிந்து விடுமோ என்று நாங்கள் அஞ்சும் அளவிற்கு நீண்ட நேரம் தொழவைத்தார்கள். அறிவிப்பவர் : அபூதர் (ரலி) நூல் : நஸயீ இப்னு மாஜா (1317)

 அபூதர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் : நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் நோன்பு நோற்றோம். (கடைசி) ஏழு நாட்கள் எஞ்சியிருக்கின்றவரை நபி (ஸல்) அவர்கள் அம்மாதத்தில் எதையும் தொழுவிக்கவில்லை. (அந்நாளில்) இரவில் ஒரு பகுதி செல்லும் வரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். ஆறு (நாட்கள்)இருக்கும் போது எங்களுக்குத் தொழுகை நடத்தவில்லை. (மாதம் முடிய) ஐந்து நாள் இருக்கும்போது இரவின் பாதிவரை எங்களுக்குத் தொழுகை நடத்தினார்கள். அல்லாஹ்வின் தூதரே இந்த இரவு (முழுவதும்) நீங்கள் எங்களுக்கு உபரியாகத் தொழுகை நடத்தக் கூடாதா? என்று நாங்கள் கேட்டோம். அதற்கு நபியவர்கள் ''ஒரு மனிதர் இமாம் (தொழுகை நடத்தி) முடிக்கின்றவரை அவருடன் தொழுதால் அவருக்கு இரவு முழுவதும் நின்று வணங்கிய நன்மை கணக்கிடப்படுகிறது என்று கூறினார்கள். (மாதம் முடிய) நான்கு நாள் இருந்தபோது எங்களுக்கு அவர்கள் தொழ வைக்கவில்லை. (மாதம் முடிய) மூன்று நாள் இருந்தபோது தம்முடைய குடும்பத்தார்களையும் மனைவிமார்களையும் ஒன்றிணைத்து எங்க ளுக்கு ஸஹர்( நேரம்) தவறிவிடுமோ என்று நாங்கள் அஞ்சும் அள விற்கு எங்களுக்கு தொழுகை நடத்தினார்கள். பிறகு மாதத்தின் மீத முள்ள நாட்களில் அவர்கள் தொழுகை நடத்தவில்லை.

நூல் : அபூ தாவூத் (1167)

 நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் மக்களுக்கு ஜமாஅத்தாக தொழு வித்தார்கள். அது எந்த நேரம்வரை என்று மேற்கூறப்பட்ட நபிமொழிகளில் இடம்பெற்றுள்ளது. மூன்றுநாட்கள் மீதமுள்ள நிலையில் நபி (ஸல்) அவர்கள் தொழுவித்தது இறுதி, ஸஹர் நேரம் இறுதிவரை. ஸஹர் நேர இறுதிவரை நபி (ஸல்) அவர்கள் தொழுவித்த இந்த தொழுகை தராவீஹ் என்றால் அவர்கள் தஹஜ்ஜத் எங்கே தொழுதார்கள் என்ற கேள்வி எழும்? தொழுத தஹஜ்ஜத் என்றால் தராவீஹ் தொழுகை எங்கே என்ற கேள்வி எழும்? இரண்டும் வெவ்வேறு பெயர்கள் உள்ள ஒரே தொழுகைதான் என்று கூறினால் மட்டுமே இதற்கு சரியான பதிலை கூற முடியும்.

 நபி (ஸல்) அவர்கள் எல்லா காலங்களில் இதே எண்ணிக்கையில் தொழு திருந்தால் நீங்கள் மட்டும் ஏன் ரமளான் மாத்ததில் மட்டும் தொழுகிறீர்கள் என்ற கேள்வியை எழுப்புகிறார்கள்.

எல்லா காலங்களிலும் இந்த தொழுகையை இந்த எண்ணிக்கையில் தொழலாம் என்றிருந்தாலும் ரமலான் மாத்தில் கிடைக்கும் நன்மையை எண்ணி இதற்கு முக்கியத்துவம் கொடுக்கிறோம். நபிகளாரும் இந்த மாதத்தில் இந்த தொழுகைக்க முக்கியத்துவம் கொடுத்துள்ளார்கள் என்பதற்கு ஆதாரப் பூர்வமான பல சான்றுகள் உள்ளன.

 எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவரா கவும் ரமளான் மாதத்தில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்.

 அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : புகாரி (37), முஸ்லிம் (1391)

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் நின்று வழிபடுவதைக் கட்டாயப்படுத்தாமல் அதை மகளுக்கு ஆர்வமூட்டிவந் தார்கள். எவர் நம்பிக்கையோடும் நன்மையை எதிர்பார்த்தும் ரமளானில் நின்றுவழிபடுகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டு விடும்'' என்று கூறுவார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி), நூல் : முஸ்லிம் (1392)

 மற்ற மாதங்களில் இரவுத் தொழுகையை ரமலான் மாதத்தின் இரவுத் தொழுகை அளவுக்கு ஆர்வுமூட்டாத நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தில் இரவுத் தொழுகை அதிகம் வலியுறுத்தி அதற்கு ஏராளமான நன்மைகள் உள்ளதையும் குறிப்பிட்டதால் நாமும் ரமலான் மாதத்தில் இதற்கு முக்கியத்து வம் கொடுத்து வருகிறோம்.

 எட்டு ரக்அத்கள் என்று வரும் ஹதீஸில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தாக வருகிறது. ஆனால் நீங்கள் ஏன் இரண்டு ரக்அத்களில் ஸலாம் கொடுக்கிறீர்கள் என்ற அடுத்த வாதத்தை வைக்கிறார்கள்.

அந்த நபிமொழியில் நான்கு ரக்அத்களில் ஸலாம் கொடுத்தார்கள் என்று தெளிவாக
கூறப்படவில்லை. முதலில் நான்கு ரக்அத் தொழுவார்கள். என்று கூறப்பட்டுள்ளது. அது எத்தனை ஸலாத்தைக் கொண்டு தொழுவார்கள் என்று தெளிவுபடுத்தப்படவில்லை. மேலும் இரவுத் தொழுகையை இரண்டு இரண்டு ரக்அத்களாக தொழவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட் டுள்ளார்கள்.

 ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! இரவுத் தொழுகை எவ்வாறு (தொழ வேண்டும்)?'' என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டிரண்டு ரக்அத்களாகத் தொழ வேண்டும். ஆனால், சுபஹு (நேரம் வந்துவிட்டது) பற்றி நீர் அஞ்சினால் ஒரு ரக்அத் (வித்ர்) தொழுவீராக'' என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி), நூல் : புகாரி (1137)

 மற்றவர்களுக்கு இரண்டு ரக்அத்தாக தொழவேண்டும் என்று கட்டளை யிட்ட நபிகளார் இரவில் இரண்டிண்டாகத்தான் தொழுதார்கள் என்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழியில் கூறப்பட்டுள்ளது.

 நான் இப்னு உமர் (ர) அவர்கடம், வைகறைத் தொழுகை (சுப்ஹு)க்கு முன்னுள்ள இரண்டு ரக்அத் (சுன்னத் தொழுகை)கல் நீண்ட அத்தியாயங்களை ஓதலாமா?'' என்று கேட்டேன். அதற்கு இப்னு உமர்(ர) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் இரவில் இரண்டிரண்டு ரக் அத்களா கத் தொழுவார்கள். ஒரு ரக்அத் தொழுது (முன்னர் தொழுத வற்றை) ஒற் றையாக ஆக்குவார்கள்.

 அறிவிப்பவர் : அனஸ் பின் சீரீன், நூல் : புகாரி (995)

 முதலில் நான்க ரக்அத்கள் தொழுவார்கள் என்று அறிவிக்கும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றொரு அறிவிப்பில் இப்னுமாஜா (1348) நபிக ளார் ஒவ்வொரு இரண்டு ரக்அத்களில் ஸலாம் சொல்வார்கள் என்று அன்னை ஆயிஷா அவர்கள் கூறியதாக இடம்பெற்றுள்ளது.

 இந்த செய்திகளை எல்லாம் கவனத்தில் கொண்டுதான் அந்த நபிமொழி யில் நான்கு என்று கூறப்பட்டது. ஒரே ஸலாத்தில் என்று முடிவு எடுக்கக் கூடாது. மற்ற நபிமொழிகளையும் கவனத்தில் கொண்டு இரண்டு ரக்அத்களின் ஸலாம் கொடுக்க வேண்டும் என்று கூறுகிறோம். நபிமொழி தொகுப்புகளில் இந்த செய்தி தராவீஹ் என்ற தலைப்பில் நபிமொழி தொகுப்பாளர்கள் கொண்டு வரவில்லை எனவே எட்டு ரக்அத் தொடர்பான நபிமொழி தராவீஹ் குறிக்காது என்று வாதிடுகின்றனர்.

 நபிமொழி நூல் ஆசிரியர் கொடுக்கும் தலைப்பை வைத்து மட்டும் ஒரு காரியத்தை நிரூபிப்பது நகைப்பிக்குரியதாகும். அந்த ஆசிரியர், நபிமொழியில் என்ன கருத்து இருக்கிறது என்று அவர் எண்ணுகிறாரோ அந்த கருத்தைத் தான் அவர் அதற்கு தலைப்பிடுவார். அதுவே சரியானது என்று கூறமுடியாது. சரியாகவும் இருக்கலாம். தவறாகவும் இருக்கலாம். ஏனென்றால் இந்த நபிமொழியை இமாம் புகாரி அவர்கள் 1147 ஆவது செய்திக்கு ரமளானிலும் ரமளான் அல்லாத மாதத்திலும் நபி (ஸல்) அவர்களின் இரவுத் தொழுகை. என்று தலைப்பிட்டுவிட்டு தராவீஹ் தொழுகை என்ற அத்தியாயத்தின் கீழ் 2013 வது ஹதீஸாக இதே செய்தியை கொண்டு வந்துள் ளார்கள் என்பதையும் பார்வையிடவும்.

 லைலத்துல்கத்ர்

 அல்லாஹுத் தஆலா இந்த மனித சமுதாயத்திற்கு ஏராளமான அருட் கொடைகளை செய்திருக்கிறான். அந்த அருட்கொடைகளில் மிகவும் முக்கியமான ஒன்று மனிதனுக்கு நேரான வழியைக் காட்டும் திருக்குர்ஆனை அருளியிருப்பது.

 இந்தத் திருக்குர்ஆன் ரமலான் மாதத்தில் தான் இறங்கியது. எனவே மனிதனுக்கு வழங்கப்பட்ட மிகப்பெரிய அருட்கொடையாகத் திகழும் திருக் குர்ஆன் இறங்கிய லைலதுல் கத்ர் அன்று ஒருவர் செய்யும் நல்லறங்களுக்கு ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை கிடைக்கும். எனவே அந்த சிறப்புமிகு நாளின் விளக்கங்களை நாம் காண்போம்.

 லைலதுல் கத்ரின் சிறப்புகள்

 ஆயிரம் மாதங்கள் செய்த நன்மை ஓரே இரவில்...

 மகத்துவமிக்க இரவில் இதை நாம் அருளினோம். மகத்துவமிக்க இரவு என்றால் என்னவென உமக்கு எப்படித் தெரியும்? மகத்துவமிக்க இரவு ஆயிரம் மாதங்களை விடச் சிறந்தது. வானவர்களும், ரூஹும் அதில் தமது இறைவனின் கட்டளைப்படி ஒவ்வொரு காரியத்துடனும் இறங்குகின்றனர். ஸலாம்! இது வைகறைவரை இருக்கும். (அல்குர்ஆன் 97:1-5)

 முந்தைய பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவர் நம்பிக்கையுடனும் நன்மையை எதிர்பாத்தவராகவும் லைலத் துல் கத்ரு இரவில் நின்று வணங்குகிறாரோ அவரது முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்.

 அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (35)

 லைலத்துல் கத்ரு எந்த நாள்?

 லைலத்துல் கத்ரு இரவில் இவ்வளவு சிறப்பை இறைவன் வைத்திருந் தாலும் அது எந்த இரவு என்பது நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் தெரியாது. நபி (ஸல்) அவர்களுக்கு எடுத்து சொல்லப்பட்ட அந்த இரவை அல்லாஹ் ஏதோ ஒரு காரணத்திற்காக மறக்கடித்துள்ளான். நபி (ஸல்) அவர்கள் லைலதுல் கத்ரு இரவைப் பற்றி அறிவிப்பதற் காக தமது வீட்டிலிருந்து வெளியே வந்தார்கள். அப்போது முஸ்லிம்க ளில் இருவர் சச்சரவு செய்து கொண்டிருந்தார்கள். லைலதுல் கத்ரு இரவு பற்றி நான் உங்களுக்கு அறிவிப்பதற்காக வந்தேன். அப்போது இன்னின்ன மனிதர்கள் தமக்குள் சண்டை செய்து கொண்டிருந்தார்கள். உடனே அது (என் நினைவிலிருந்து) அகற்றப்பட்டு விட்டது. அதுவும் உங்களுக்கு நன்மையாக இருக்கலாம் ரமலான் மாதத்தின் இருபத்து ஏழு, இருபத்தி ஒன்பது, இருபத்தி ஐந்து ஆகிய இரவுகளில் அதனைப் பெறமுயற்சி செய்யுங்கள்'' என்றார்கள்.

 அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்கள்: புகாரி (49), முஅத்தா (615)

 நபி (ஸல்) அவர்களுக்கே தெரியாது என்று இந்த ஹதீஸ் தெளிவாகக் கூறுவதால் அது குறிப்பிட்ட இந்த இரவுதான் என்று இவ்வுலகத்தில் எந்த மனிதனும் கூற முடியாது. எனினும் லைலதுல் கத்ர் ரமலான் மாதத்தின் கடைசிப் பத்தின் ஒற்றைப் படை இரவான 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றாக இருக்கலாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய ஆதாரப்பூர்மான செய்திகள் உள்ளன.

 ரமலானில் கடைசிப் பத்து நாட்களில் உள்ள ஒற்றைப்படை இரவுக ளில் லைலதுல் கத்ரைத் தேடுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்கள்: புகாரி 2017, முஸ்லிம் 1997

நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் எங்களுக்கு லைலதுல் கத்ரு இரவைப் பற்றிச் சொல்லும் போது, அது ரமலான் மாதத்தில் தான் இருக்கிறது. எனவே அதை ரமலானில் கடைசிப் பத்தில் தேடுங்கள். அது ஒற்றைப்படை இர வான இருபத்தி ஒன்று அல்லது இருபத்தி மூன்று அல்லது இருபத்தி ஐந்து அல்லது இருபத்தி ஏழு அல்லது ரமலானின் கடைசி இரவில் (29) இருக்கும்'' என்று சொல்லி விட்டு, யார் அதில் ஈமானோடும் நன்மையை எதிர்பார்த்த வராகவும் நின்று வணங்குகிறாரோ அவருடைய முந்திய பாவங்கள் மன்னிக்கப்படும்'' என்று கூறினார்கள்.

 அறிவிப்பவர்: உபாதா பின் ஸாமித் (ரலி), நூல்: அஹ்மத் (20700)

 ற்கூறிய ஹதீஸ்கள் ஐயத்திற்கு இடமின்றி லைலதுல் கத்ர், ரமலான் மாதத்தில் கடைசிப் பத்து இரவுகளில் 21, 23, 25, 27, 29 ஆகியவற்றில் ஏதாவது ஒன்றில் தான் இருக்கும் என்பதைத் தெளிவாகக் காட்டுகிறது.

 லைலதுல் கத்ர் 27வது இரவா?

 லைலதுல் கத்ர் இரவு ரமலானின் கடைசிப் பத்தில் ஒற்றைப்படை இரவுக ளில் ஒன்றாகத்தான் இருக்கும் என்பதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களை நாம் பார்த்தோம். ஆனால் ஹதீஸ்களைக் காணாத பொதுமக்கள் லைலதுல் கத்ர் இரவு, ரமலான் 27வது இரவுதான் என்று முடிவு செய்து பெரிய விழா வாகக் கொண்டாகிறார்கள். இதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் உள்ளதா? என்பதை நாம் பார்ப்போம்.

 லைலதுல் கத்ரு இரவானது, இருபத்தேழாவது இரவாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர் : முஆவியா (ரலி), நூல்: அபூதாவூத் (1178)

 இதுபோன்ற சில செய்திகளை அடிப்படையாக வைத்து சிலர் லைலத்துல் கத்ர் இரவு 27வது இரவு தான் என்று கூறுகின்றனர்.

 இந்த ஹதீஸ் மட்டும் வந்திருந்தால் நாம் 27வது இரவு தான் என்று முடிவு செய்யலாம். ஆனால் இதற்கு மாற்றமாக நாம் முன்னர் குறிப்பிட்ட ஹதீஸில் லைலத்துல் கத்ர் இரவு என்பது நபி (ஸல்) அவர்களுக்கே மறக்கடிக்கப் பட்டுள்ளது என்று தெளிவாகக் குறிப்பிட்டு விட்டு, கடைசிப் பத்தின் ஒற்றை நாட்களில் அதை தேடிக் கொள்ளுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கட்டளை யிட்டுள்ளார்கள். மேலும் 27 என்று குறிப்பிட்டுள்ளதுபோல் 23 என்றும் வந் துள்ளது. அவற்றைப் பாருங்கள்.

 ரமலான் மாதத்தில் தேடக் கூடிய இரவான லைலத்துல் கத்ரைப் பற்றி நபித் தோழர்கள் நபி (ஸல்)
அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் 23வது இரவு என்று பதிலளித்தார்கள்.

 அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரலி), நூல்: அஹ்மத் (15466)

 இதைப் போன்று 21, 23, 25 என்று மூன்று இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

 ரமலானின் கடைசிப் பத்து நாட்களில் லைலதுல் கத்ரை தேடுங்கள். லைலதுல் கத்ரை இருபத்தி ஒன்றாவது இரவில், இருபத்தி மூன்றாவது இரவில், இருபத்தி ஐந்தாவது இரவில் தேடுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2021

 இதைப் போன்று 23, 29 இரவு என்று இரண்டு இரவுகளை மட்டும் குறிப்பிட்டும் வந்துள்ளது.

 லைலதுல் கத்ரு இரவு கடைசிப் பத்து நாட்களில் உள்ளது. அதை இருபத்தொன்பதாவது இரவிலோ இருபத்து மூன்றாவது இரவிலோ தேடுங் கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி), நூல்: புகாரி 2022

 இப்படிப் பல்வேறு அறிவிப்புகள் வருவதன் சரியான கருத்து என்ன? என்பதற்கு இமாம் ஷாஃபீ அவர்கள் தெளிவான விடையை கூறியுள்ளார்கள்.

இப்படிப் பலவாறாக நபி (ஸல்) அவர்கள் கூறியதற்கு விளக்கம் அளித்த இமாம் ஷாஃபி அவர்கள், நபியவர்கள் கேட்கப்படும் கேள்விக ளுக்கு ஏற்ப பதில் கூறும் வழக்கம் உள்ளவர்கள். இந்த இரவில் நாங்கள் லைலத்துல் கத்ரைத் தேடலாமா?' என்று கேட்கும்போது அந்த இரவில் தேடுங்கள். என்று பதிலளித்திருப்பார்கள்'' என்று கூறுகிறார்கள்.

 திர்மிதீ : 722

 அதாவது ஒரு நபித்தோழர் 21வது இரவில் லைலத்துல் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 21 வது இரவில் தேடுங்கள்' என்று கூறியிருப்பார்கள். இன்னொரு நபித்தோழர் 23வது இரவில் கத்ரை தேடலாமா? என்று கேட்டிருப்பார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஆம், 23வது இரவில் தேடுங்கள்' என்று கூறியிருப்பார்கள். இவ்வாறு ஐந்து ஒற்றைப்படை இரவுகளைப் பற்றியும் கேட்டிருப்பார்கள். அதற்கு ஏற்றவாறு நபி (ஸல்) அவர்கள் பதிலளித்திருப்பார்கள். எனவே ஐந்து ஒற்றைப்படை இரவுகள் பற்றியும் ஹதீஸ்களில் இடம் பெற்று இருக்கிறது. இந்தக் கருத்தே மாறுபட்ட ஹதீஸ்கள் வந்திருப்பதன் சரியான விளக்கமாகத் தெரிகிறது.

 இஃதிகாஃபின் சட்டங்கள்

 இஃதிகாப் என்ற அரபி வார்த்தைக்கு தங்குதல்' என்ற பொருளாகும். இஸ்லாமிய வழக்கில் பள்ளியில் நன்மையை எதிர்பார்த்துத் தங்குவதற்கு இஃதிகாஃப் என்று சொல்லப்படும்.

 நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் கடைசி 10 நாட்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள். நபித்தோழர்களும் இருந்துள்ளனர்.

ரமலானில் இஃதிகாப் எதற்காக?

 ஆயிரம் மாதங்களை விடச் சிறந்த இரவாக இருக்கும் லைத்துல் கத்ரை அடைந்து அதில் அதிகமதிகம் நன்மைகளைச் செய்ய வேண்டும், வேறு எண் ணங்களுக்கு இடம் கொடுத்து வணக்கங்களைக் குறைத்து விடக் கூடாது என்பதற்காகத்தான் ரமளானின் கடைசி பத்து நாட்கள் நபி (ஸல்) அவர்களும் நபித் தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஹதீஸ் சான்றாக அமைந்துள்ளது.

 நபி (ஸல்) அவர்கள் ரமலான் முதல் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார் கள். நாங்களும் அவர்களுடன் இஃதிகாஃப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து நீங்கள் தேடக் கூடியது (லைத்துல் கத்ரு) உங்க ளுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)' என்றார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்து நாட்கள் இஃதிகாஃப் இருந்தார்கள். நாங்களும் அவர்க ளுடன் இஃதிகாப் இருந்தோம். அவர்களிடம் ஜிப்ரீல் (அலை) வந்து, நீங்கள் தேடக் கூடியது உங்களுக்கு இனி வரும் (நாட்களில் உள்ளது)' என்றார்கள். ரமளான் இருபதாம் நாள் காலையில் நபி (ஸல்) அவர்கள் சொற்பொழிவு செய்ய எழுந்தார்கள். யார் நபியுடன் இஃதிகாப் இருந்தார்களோ அவர்கள் திரும்பிச் செல்லட்டும்! லைலத்துல் கத்ரு இரவு பற்றி எனக்குக் காட்டப் பட்டது. நான் மறக்கடிக்கப்பட்டு விட்டேன். நிச்சயமாக அது கடைசிப் பத்து நாட்களில் ஒற்றையான நாளில் உள்ளது. நான் களிமண் மீதும் தண்ணீர் மீதும் ஸஜ்தாச் செய்வது போல் கண்டேன்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

 அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்கள்: புகாரி (813), முஸ்லிம் (2168)

 இஃதிகாபின் ஆரம்பம்

 இஃதிகாஃப் இருக்க நாடுபவர், 20ஆம் நாள் காலை சுப்ஹுத் தொழுது விட்டு இஃதிகாஃப் இருக்கும் இடத்திற்குச் சென்று விட வேண்டும்.

 நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினால் பஜ்ரு தொழுகையை முடித்து விட்டு இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் செல்வார்கள்.

 நூல்: முஸ்லிம் 2007

 ஒற்றை இரவுகளில் லைலதுல் கத்ரைத் தேடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளதை நாம் முன்பே அறிந்துள்ளோம். எனவே பஜ்ரு தொழுதவுடன் இஃதிகாப் இருக்கத் துவங்குவார்கள் என்பது 21ஆம் நாள் பஜ்ராக இருக்க முடியாது.

 அப்படி இருந்தால் அந்த இரவு அவர்களுக்குத் தவறிப் போயிருக்கும். 20 ஆம் நாள் தொழுது விட்டு இஃதிகாஃப் இருப்பார்கள் என்று விளங்குவதே பொருத்தமாக இருக்கும்.

 இஃதிகாபின் முடிவு நேரம்

 இஃதிகாப் இருப்பவர் ரமலான் மாதம் 29ல் முடிந்தால் அன்றைய மஃக்ரி பில் (அதாவது ஷவ்வால் பிறை தென்பட்ட இரவில்) இல்லம் திரும்பலாம். ரமலான் மாதம் 30 பூர்த்தியடைந்தால் அன்றைய மஃரிப் தொழுக்குப் பிறகு தன் இல்லம் திரும்பலாம்.

 அபூஸயீத் (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலான் மாதத்தின் நடுப்பகுதியில் உள்ள பத்து நாட்களில் இஃதிகாப் இருப்பார்கள். இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் தமது இல்லம் திரும்புவார்கள். (சுருக்கம்)

 நூல்: புகாரி 2018

 நபி (ஸல்) அவர்கள் நடுப் பத்தில் இஃதிகாப் இருக்கும்போது இருபதாம் இரவு கழிந்து மாலையாகி இருபத்தொன்றாம் இரவு துவங்கியதும் போவார்கள் என்ற செய்தியிலிருந்து, கடைசிப் பத்தில் இஃதிகாப் இருப்பவர்கள் 29 இரவு கழிந்து அல்லது 30 இரவு கழிந்து மாலையாகி ஷவ்வால் மாதம் துவங்கும் இரவில் வீடு திரும்பலாம் என்பதை அறியலாம்.

பெருநாள் தொழுகை முடித்து விட்டுத்தான் வீடு திரும்ப வேண்டுமென சிலர் கூறினாலும் அதற்கு நபிமொழிகளில் ஆதாரம் இல்லை.

 பள்ளியில் கூடாரம் அமைக்கலாமா?

 ஆயிஷா ரலி கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்தில் இஃதிகாப் இருப்பார்கள் நான் அவர்களுக்காக ஒரு கூடாரத்தை அமைப்பேன். (சுருக்கம்)

 நூல்: புகாரி 2033

 இந்த ஹதீஸின் அடிப்படையில் சிலர் கூடாரம் அமைக்கலாம் என்று கூறுகின்றனர். ஆனால் வேறு சில ஹதீஸ்களை நாம் கவனிக்கும் போது இது நபி (ஸல்) அவர்களுக்கு மட்டும் குறிப்பானது என்பதை விளங்கலாம்.

 நபி (ஸல்) அவர்கள் இஃதிகாப் இருக்க நாடினார்கள். அவர்கள் இஃதிகாப் இருக்கும் இடத்திற்குச் சென்றபோது ஆயிஷா (ரலி)யின் கூடாரம், ஹஃப் ஸாவின் கூடாரம், ஸைனபின் கூடாரம் எனப் பல கூடாரங்களைக் கண் டார்கள். இதன் மூலம் நீங்கள் நன்மையைத் தான் நாடுகிறீர்களா?'' என்று கேட்டு விட்டு இஃதிகாஃப் இருக்காமல் திரும்பி விட்டார்கள். ஷவ்வால் மாதம் பத்து நாட்கள் இஃதிகாப் இருந்தார்கள்.

 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரி (2034)

 நீங்கள் நன்மைத்தான் நாடுகிறீர்களா?'' என்ற கேள்வியும், நபி (ஸல்) அவர்கள் தமது கூடாரத்தையே பிரித்து இஃதிகாபை விட்டதும் இவ்வாறு கூடாரங்கள் அமைப்பதில் அவர்களுக்கு இருந்த அதிருப்தியைக் காட்டு கின்றது.

 மேலும் பின்வரும் ஹதீஸை பார்த்தாலும் மற்றவர்கள் கூடாரம் அமைக்கக் கூடாது என்பதை விளங்கலாம்.

 ... நபி (ஸல்) அவர்கள் காலைத் தொழுகையை முடித்து விட்டுத் திரும்பியபோது நான்கு கூடாரங்களைக் கண்டு இவை என்ன? கேட்டார் கள். அவர்களுக்கு விவரம் கூறப்பட்டது... நூல் :

 புகாரி 2041

 நபி (ஸல்) அவர்களுடன் நபித்தோழர்களும் இஃதிகாப் இருந்துள்ளனர். இதை கவனத்தில் வைத்து மேற்கூறிய ஹதீஸை கவனியுங்கள். காலைத் தொழுகையை தொழுது விட்டு நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் பார்த்த கூடா ரங்களின் எண்ணிக்கை மொத்தம் நான்கு. ஒன்று நபி (ஸல்) அவர்களுக் குரியது, இரண்டாவது அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்குரியது. மூன்றா வது அன்னை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குரியது. நான்காவது அன்னை ஸைனப் (ரலி) அவர்களுக்குரியது.

 இஃதிகாப் இருப்பதற்குக் கூடாரங்கள் அவசியம் என்றிருந்தால் நபித் தோழர்களும் கூடராங்களை அமைத்திருக்க வேண்டும். அவ்வாறு அமைத்தி ருந்தால் நான்கிற்கும் மேற்பட்ட கூடாரங்கள் இருந்திருக்க வேண்டும். ஆனால் இருந்ததோ மொத்தம் நான்கு கூடாரங்கள் மட்டுமே! எனவே நபித் தோழர்கள் கூடாரங்களை அமைக்கவில்லை என்பதையும் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்களுக்கு கட்டளையிடவில்லை என்பதையும் நாம் அறியலாம். எனவே இஃதிகாபிற்கு கூடாரங்கள் தேவையில்லை.

இஃதிகாபில் பேண வேண்டிய ஒழுங்குகள்

 பள்ளிவாசலில் இருக்கும்போது மனைவியுடன் இல்லறத்தில் ஈடுபடக் கூடாது.

 பள்ளிவாசல்களில் இஃதிகாஃப் இருக்கும் போது மனைவியருடன் கூடாதீர்கள்! இது அல்லாஹ்வின் வரம்புகள். எனவே அதை நெருங்கா தீர்கள்! (தன்னை) அஞ்சுவதற்காக அல்லாஹ் தனது வசனங்களை மக்களுக்கு இவ்வாறு தெளிவுபடுத்துகிறான்.

 (அல்குர்ஆன் 2:187)

 தேவையில்லாமல் பள்ளியை விட்டு வெளியே செல்லக்கூடாது

ஆயிஷா ரலி கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் பள்ளியில் இஃதிகாப் இருக்கும்போது தமது தலையை வீட்டிலிருக்கும் என் பக்கம் நீட்டுவார்கள் அதை நான் வாருவேன். இஃதிகாப் இருக்கும் போது தேவைப்பட்டால் தவிர வீட்டி ற்குள் வர மாட்டார்கள். நூல்: புகாரி 2029

 இதிலிருந்து தேவையில்லாமல் வெளியில் செல்லக் கூடாது என்பதையும் அவசியத் தேவைக்காக வெளியே செல்லாம் என்பதை அறியலாம். தேவை ஏற்படும் போது பள்ளிவாசலில் அவசியமான
பேச்சுக்களைப் பேசலாம்.

 ஸபிய்யா (ரலி) கூறியதாவது: நபி (ஸல்) அவர்கள் ரமலானில் கடைசி பத்து நாட்களில் இஃதிகாப் இருக்கும்போது அவர்களிடம் நான் செல்வேன் சற்று நேரம் அவர்களு டன் பேசிவிட்டு எழுவேன். அப்போது நபி (ஸல்) அவர்களும் என்னுடன் எழுந்து பள்ளியின் வாசல் வரை வருவார்கள்.
(ஹதீஸின் சுருக்கம்)

 நூல்: புகாரீ 2035

 இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸாவில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியுடன் உடலுறவு கொள்ளாமல் இருப்பதும், அணைக்காமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். மேலும் நோன்பு இல்லாமல் இஃதிகாஃப் இல்லை. ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது''

 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: அபூதாவூத் (2115)

இந்த ஹதீஸில் இடம் பெறும் சுன்னத்தாகும்'' என்ற வாசகம் யாருக்குரி யது என்பதிலும், இந்த வாசகத்தை அன்னை ஆயிஷா (ரலி) கூறினார்களா? என்பதிலும் கருத்து வேறுபாடுகள் உள்ளன.

 இஃதிகாஃப் இருப்பவர் நோயாளியை விசாரிக்காமலிருப்பதும் ஜனாஸா வில் பங்கெடுக்காமல் இருப்பதும் மனைவியைத் தீண்டாமல் இருப்பதும் அவசியத் தேவையை முன்னிட்டே தவிர வெளியே செல்லாமலிருப்பதும் சுன்னதாகும். ஜுமுஆ நடக்கும் பள்ளியில் தவிர இஃதிகாப் கூடாது'' என்ற வாசகம் இந்தச் செய்தியில் இடம் பெறும் ஸுஹ்ரி என்ற அறிவிப்பாளருக்கு உரியது. இதை ஹதீஸின் வாசகமாக குறிப்பிட்டவர் யூகமாகக் குறிப்பிட்டு உள்ளார் என்று இமாம் தாரகுத்னீ அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்.

 (நூல்: ஸுனன் தாரகுத்னீ, பாகம்: 2, பக்கம்: 201)

 இதே செய்தியை பதிவு செய்த இமாம் பைஹகீ அவர்கள் பின்வருமாறு குறிப்பிட்டுள்ளார்கள்.

 இந்த வாசகத்தை நம்பகத் தன்மையுள்ள பெரும்பாலானவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அடுத்து வருபவர்களின் சொல்லாகவே குறிப்பிட்டுள்ளார்கள். யார் இதை ஹதீஸின் வாசகமாகக் குறிப்பிட்டு உள்ளார்களோ அவர்கள் யூகமாகவே கூறியுள்ளார்கள். நூல் : பைஹகீ 8377

 இமாம் ஸுஹ்ரீ அவர்கள் ஹதீஸ்களை அறிவிக்கும் போது தனது கருத் தையும் ஹதீஸ் வாசகங்களுடன் (இது என் கருத்து என்று) தெளிவு படுத் தாமல் இணைக்கும் வழக்கம் உள்ளவர். எனவே இந்தச் செய்தியை அடிப்ப டையாகக் கொள்ள முடியாது. (அல்லாஹ் மிக அறிந்தவன்)

 இதைப் போன்று நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது நோயாளியை சந்திப்பார்கள், ஜனாஸாவில் கலந்து கொள்வார்கள் என்றும் சில ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. அவையும் பலவீனமானவையே! புகாரியின் (2029) ஹதீஸின் அடிப்படையில் இஃதிகாஃப் இருப்பவர் அவசியமான தேவைகளைத் தவிர மற்ற எவைகளுக்கும் வெளியில் செல்லா மல் இருப்பது சிறந்தது.

 பெண்கள் இஃதிகாப் இருக்கலாமா?

 பெண்கள் பள்ளிவாசலில் இஃதிகாஃப் இருக்கலாம் என்பதற்குப் பின்வரும் செய்தி ஆதாரமாக உள்ளது.

 நபி (ஸல்) அவர்கள் இஃதிகாஃப் இருக்கும்போது அவர்களின் மனை வியரில் ஒருவரும் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

 அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி), நூல்: புகாரீ (309)

 நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபிகளாரின் மனைவியைத் தவிர வேறு எந்த பெண்களும் இஃதிகாஃப் இருந்ததாக நாம் அறிந்தவரை ஹதீஸ்களில் இடம் பெறவில்லை.

 நபிகளாரின் மனைவிகள் இஃதிகாஃப் இருந்ததிலிருந்து கூடுதல் பட்சமாக பின்வரும் சட்டத்தை நாம் எடுக்கலாம்.

 பள்ளிவாசலில் பெண்கள் இஃதிகாஃப் இருக்க வசதிகள் இருக்குமானால் கணவனுடன் அவர்கள் இஃதிகாஃப் இருக்கலாம். ஏனெனில் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபியவர்களுடன்தான் அவர்களது மனைவிமார்கள் இஃதிகாஃப் இருந்துள்ளார்கள்.

 பெண்கள் இஃதிகாஃப் தொடர்பாக அறிஞர்களிடையே உள்ள கருத்துக்க ளில் மேலே நாம் சொன்ன கருத்தே ஹதீஸுக்குப் பொருத்தமாக அமைந் துள்ளது. பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருக்கலாம் என்று சிலர் கூறுகின்றனர். ஆனால் அதற்கு ஹதீஸ்களில் ஆதாரம் கிடையாது.

 பெண்கள் வீட்டில் இஃதிகாஃப் இருப்பது பித்அத் (நூதன பழக்கம்)'' என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியுள்ளார்கள்.

 நூல்: பைஹகீ 8356

 இஃதிகாப் சம்பந்தமான சிறப்புகளை பற்றி பல்வேறு ஹதீஸ்கள் வருகிறது ஆனால் அவை அனைத்தும் பலவீனமாக இருக்கிறது.

 இன்னும் சில அறிஞர்களிடத்தில் ஒரு தவறான கருத்தும் நிலவுகின்றது அதாவது மக்கா மதினா பைத்துல் முகத்தஸ் ஆகிய மூன்று பள்ளிகளயில்தான் இஃதிகாப் இருக்க வேண்டும் என்று இதற்கு சில ஹதீஸ்களையும் ஆதாரமாக காட்டுகின்றனர் ஆனால் அவை அனைத்தும் பலவீனமாகவே இருக்கின்றன.

 மேலும் இந்த ஹதீஸின் கருத்துக்கு மாற்றமாக மற்ற நபித்தோழர்கள், அலீ (ரலி) அவர்களும் ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கருத்துச் சொல்லியிருப்பது இந்த ஹதீஸை மேலும் பலவீனமடையச் செய்கிறது.

 மேலும் இந்த ஹதீஸ், திருக்குர்ஆன் வசனமான நீங்கள் பள்ளிவாசல்களில் இஃதிகாப் இருக்கும் போது மனைவியுடன் சேராதீர்கள்'' (அல் குர்ஆன் 2:187) என்பதற்கு முரணாகவும் இருக்கிறது.

 எனவே எல்லா பள்ளிகளிலும் இஃதிகாப் இருக்கலாம் என்பதே சரியானதா கும் எல்லாம் வல்ல அல்லாஹ் ரமலானில் இஃதிகாப் இருந்து அதன் நன்மையை பெற அருள்புரிவானாக!செப்டம்பர் மாத தீன்குலப் பெண்மணிதூய்மையின் பிறப்பிடம் இஸ்லாம்

Published on: November 4, 2009, 1:28 PM Views: 5729

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top