ஜனவரி 2008 தீன்குலப் பெண்மணி
இப்ராஹீம் நபி வாழ்வு தரும் படிப்பினை
திருக்குர்ஆனில் கூறப்பட்ட நபிமார்களில் இப்ராஹீம் (அலை) அவர்கள் மிகவும் சிறப்பித்துக் கூறப்பட்டவர்கள். இவர்களது குடும்பத்தினரின் வாழ்வின் பின்னணியில் நாம் பின்பற்றும் முக்கிய கடமைகளும் உள்ளன. ஹஜ் கடமையில் ஸஃபா, மர்வாவுக்கு மத்தியில் ஓடுதல், குர்பானி கொடுத்தல் போன்ற காரியங்களில், இவர்களது குடும்பம் பின்னணியில் இருப்பதை நாம் மறந்து விட முடியாது.
நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் மாபெரும் தியாகத்தை நினைவு கூரும் வண்ணமே இவ்வாறு அல்லாஹ் அமைத்துள்ளான். மேலும் பகுத்தறிவுக் கொள்கையை இவ்வுலகிற்குப் பறை சாற்றியவர்களில் நபி இப்ராஹீம் (அலை) அவர்களுக்கு முதலிடம் தரலாம்.
எந்த விதமான சக்தியும் இல்லாத கல், மண்ணை விட சூரியன், சந்திரன், நட்சத்திரங்கள் எவ்வளவே மேல் என்று அறிவுப்பூர்வமாக விளக்கி, கடவுள் என்றால் எப்படி இருக்க வேண்டும் என்பதைத் தெளிவுபடுத்தினார்கள்.
இரவு அவரை மூடிக் கொண்ட போது ஒரு நட்சத்திரத்தைக் கண்டு இதுவே என் இறைவன் எனக் கூறினார். அது மறைந்த போது மறைபவற்றை நான் விரும்ப மாட்டேன் என்றார். சந்திரன் உதிப்பதை அவர் கண்ட போது இதுவே என் இறைவன் என்றார். அது மறைந்த போது என் இறைவன் எனக்கு நேர் வழி காட்டா விட்டால் வழி கெட்ட கூட்டத்தில் ஒருவனாக ஆகி விடுவேன் என்றார். சூரியன் உதிப்பதை அவர் கண்ட போது இதுவே என் இறைவன்! இதுவே மிகப் பெரியது என்றார். அது மறைந்த போது என் சமுதாயமே! நீங்கள் இணை கற்பிப்பவற்றை விட்டு நான் விலகிக் கொண்டவன் எனக் கூறினார். வானங்களையும், பூமியையும் படைத்தவனை நோக்கி உண்மை வழியில் நின்றவனாக என் முகத்தைத் திருப்பி விட்டேன். நான் இணை கற்பித்தவனல்லன்; (என்றும் கூறினார்).
அல்குர்ஆன் 6:76-79
ஒவ்வொரு வருடமும் குர்பானி கொடுத்து ஹஜ் பெருநாளைக் கொண்டும் முஸ்லிம்கள், நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் இந்த வழிகாட்டுதலை சிந்தித்துப் பார்த்தால் தர்ஹா வழிபாடுகள் தவிடுபொடியாகிக் காணாமல் போயிருக்கும்.
இறந்து, மண்ணோடு மண்ணாக மக்கிப் போய் விட்ட ஒரு மனிதரின் கல்லறையில் சமாதி கட்டி, அவரிடம் கையேந்துவது நபி இப்ராஹீம் (அலை) அவர்கள் காட்டிய பகுத்தறிவுக் கொள்கைக்கு விரோதமானதில்லையா? இறந்த போன அந்த நல்லடியார்கள் உங்களுக்கு வழிகாட்டுவார்களா? அல்லது உங்களுக்கு உதவி தான் செய்வார்களா? அல்லது உங்களுக்கு தீங்கு செய்யத் தான் முடியுமா? நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கேள்வியைப் பாருங்கள்: நீங்கள் அழைக்கும் போது இவை செவியுறுகின்றனவா? அல்லது உங்களுக்கு நன்மையோ தீமையோ செய்கின்றனவா? என்று அவர் கேட்டார். எங்கள் முன்னோர்கள் இவ்வாறு செய்வதைக் கண்டோம் என்று அவர்கள் கூறினர்.
அல்குர்ஆன் 26:72, 73
தர்ஹாவில் அடக்கம் செய்யப்பட்டவர்கள் என்றாவது நமது கோரிக்கைகளை செவியுற்றுள்ளார்களா? அல்லது நேரடியாக வந்து ஏதாவது நன்மையைப் புரிந்துள்ளார்களா? அல்லது யாருக்காவது கெடுதியைத் தான் ஏற்படுத்தியுள்ளார்களா? இல்லை. எனவே நிச்சயம் இவர்களுக்கு எந்த சக்தியும் கிடையாது என்பதை உணர வேண்டாமா? நபி இப்ராஹீம் (அலை) அவர்களின் கேள்வியை நினைத்துப் பார்த்தார்களா?
இப்ராஹீம் நபியை உண்மையாக மதிப்பவர்களாக இருந்தால் மூட நம்பிக்கை மற்றும் இணை வைப்புக் கொள்கையை முதலில் கைவிட்டு விட்டு, பகுத்தறிவைப் பயன்படுத்தி அறிவொளியை ஏற்றட்டும்.
விதண்டாவாதமும் உண்மை விளக்கமும்
இறைவனாக மாறும் அவ்லியாக்கள்?
பி. ஜைனுல் ஆபிதீன்
அவர்கள் வாதம்: மவ்லிதை வயிற்றுப் பிழைப்புக்காக ஓதுகிறார்கள் என்று கூறுபவர்கள் தான் சுப்ஹான மவ்லிது, முகைதீன் மவ்லித், சாகுல்ஹமீத் மவ்லித் என்று புத்தகங்கள் அச்சிட்டு வயிற்றுப் பிழைப்பை நடத்தி வருகிறார்கள்.
நமது பதில்: சில ஆலிம்கள் வயிற்றுப் பிழைப்புக்காக மவ்லித் ஓதி வருகிறார்கள் என்ற நமது குற்றச்சாட்டுக்குப் பதிலளிக்காமல், மவ்லிதை வைத்துப் புத்தகம் அச்சிட்டு வருமானம் ஈட்டி வருவதாக நம்மீது குற்றம் சாட்டுகிறார்கள். இந்தக் குற்றச்சாட்டு உண்மையா என்பதைக் காண்போம். மவ்லிதில் உள்ள மார்க்கத்திற்கு முரணான செய்திகளை அடையாளம் காட்டுவதற்காக, புத்தக வடிவில் நாம் அச்சிட்டு விற்பனை செய்து வருவதும் அதற்குச் சிறிய அளவில் இலாபம் வைத்து வருவதும் உண்மை தான்.
அதே நேரத்தில் நமது இணைய தளத்தில் இந்தப் புத்தகங்கள் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து கொள்ள ஏற்பாடு செய்துள்ளோம். விரும்புகிறவர்கள் அதை எந்தச் செலவும் இல்லாமல் இலவசமாகப் பதிவிறக்கம் செய்து பயனடையலாம். நமது நோக்கம் இலாபம் மட்டும் என்றிருந்தால் இலவசமாக இந்நூல்களைப் பதிவிறக்கம் செய்ய அனுமதித்திருக்க மாட்டோம். மக்களிடம் உண்மையைச் சேர்க்க வேண்டும் என்பது தான் நமது நோக்கம் என்பது இதிலிருந்து தெளிவாக விளங்கும்.
புத்தகமாக அச்சிடுவதற்கு முதலீடு செய்கிறோம். அதைப் புத்தகமாக மாற்றுவதற்குப் பேப்பர் வாங்க வேண்டும்; அச்சிட வேண்டும்; பைண்டிங் செய்ய வேண்டும்; அச்சிடப்பட்டதைப் பாதுகாக்க இடம் வேண்டும்; இதனை விற்பனை செய்ய கடை வேண்டும்; அதற்கு வேலையாள் வேண்டும் என்று எத்தனையோ செலவுகள் இருக்கின்றன. இவற்றிற்குப் பணத்தை முதலீடு செய்ய வேண்டும்.
ஆனால் மவ்லித் ஓதும் நீங்கள் எவ்வளவு முதலீடு செய்கிறீர்கள்? மவ்லித் ஓதும் சபைகளுக்குச் சென்று வாய்களை அசைத்து விட்டு வரும் நீங்கள் அதற்கு எவ்வளவு செலவு செய்தீர்கள்? அன்றைய காலத்தில் மன்னர்களைப் புகழ்ந்து பணத்தைப் பெற்று வரும் புலவர்களைப் போன்று தானே செய்கிறீர்கள்? இதற்கு என்ன முதலீடு தேவைப்படுகிறது?
எந்த முதலீடும் இல்லாமல் இவ்வளவு பெரிய தொகை கிடைக்கிறது. ஆனால் முதலீடு செய்து ஐந்து வருடத்திற்கு ஐந்தாயிரம் கிடைக்கும் தொழிலும், இதுவும் ஒன்றா? இரண்டையும் ஒப்பிட முடியுமா?
நமது கேள்வி: சாகுல் ஹமீத் அவர்கள் தொடர்ந்து 12 வருடங்கள் நோன்பு நோற்றார்கள், அவர்கள் தூங்கவும் இல்லை என்ற மவ்லித் வரிகளை எடுத்துக் கூறி ஒருவர் 12 வருடங்கள் தொடர்ந்து நோன்பு பிடிக்க முடியுமா? அதுவும் இடையில் எந்த உணவும், தண்ணீரும் அருந்தாமல் இருக்க முடியுமா? இதற்கு மார்க்கத்தில் அனுமதி இருக்கிறதா? 12 வருடங்கள் தொடர்ந்து தூங்காமல் தான் ஒரு மனிதரால் இருக்க முடியுமா? என்று கேட்டோம்.
அவர்களின் பதில்: நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பு பிடித்ததாக புகாரி உட்பட பல நூல்களில் பதிவு செய்யபட்டுள்ளது. தொடர் நோன்பு என்றால் ஒரு சொட்டு தண்ணீர் கூட குடிக்காமல் நோன்பு நோற்பது. இதை நபி (ஸல்) அவர்கள் செய்துள்ளார்களே? ஏன் இது போன்று அவ்லியாக்களால் செய்ய முடியாது?
நமது பதில்: நபி (ஸல்) அவர்கள் தொடர்ந்து நோன்பு வைத்துள்ளார்கள். அதற்கு விசால் நோன்பு என்று பெயர். விசால் என்றால் இருபத்தி நான்கு மணி நேரமும் நோன்பு நோற்பது. நாம் எப்படி மஃக்ரிப் ஆனவுடன் நோன்பு துறப்போமோ அது போன்று இல்லாமல் தொடர்ந்து பல நாட்கள் நோன்பாக இருப்பது. இவ்வாறு நபி (ஸல்) அவர்கள் தொடர்ச்சியாக மூன்று நாட்கள், பத்து நாட்கள் என்று நோன்பு வைப்பார்கள். இதை எடுத்துக் காட்டி நபி (ஸல்) அவர்களே இவ்வாறு நோன்பு நோற்றிருக்கும் போது ஏன் பன்னிரண்டு வருடங்கள் ஷாகுல் ஹமீத் அவர்கள் நோன்பு நோற்க முடியாது? என்று கேட்கிறார்கள். அவர்கள் அந்த ஹதீஸை முதலில் முழுமையாகப் படிக்கட்டும். அந்த ஹதீஸ் இதோ: நபி (ஸல்) அவர்கள் தொடர் நோன்பைத் தடுத்தார்கள். அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் தொடர் நோன்பு நோற்கிறீர்களே? என்று முஸ்லிம்களில் ஒருவர் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்கள். தொடர் நோன்பிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்த போது ஒரு நாள் அவர்களைத் தொடர் நோன்பு நோற்கச் செய்தார்கள். அடுத்த நாளும் நோற்கச் செய்தார்கள்; பிறகு (அடுத்த மாதத்தின்) பிறையை மக்கள் கண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இம்மாதம் இன்னும் தாமதமாக முடிந்திருந்தால் (தொடர் நோன்பை) இன்னும் உங்களுக்கு நான் அதிகப்படுத்தியிருப்பேன் என்று தொடர் நோன்பிலிருந்து மக்கள் விலகிக் கொள்ள மறுத்ததைக் கண்டிப்பதைப் போன்று கூறினார்கள். (புகாரி 1965)
தொடர் நோன்பு வைத்த நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தொடர் நோன்பு நோற்கக் கூடாது என்று தடுத்தார்களே? இதை ஏன் படிக்க மறந்தார்கள்? மேலும் உங்களில் என்னைப் போன்றவர் யார் இருக்கிறார்? என் இறைவன் எனக்கு உண்ணவும் பருகவும் தரும் நிலையில் நான் இரவைக் கழிக்கிறேன் என்றார்களே? இதை ஏன் கவனிக்க மறந்தார்கள்? இந்தத் தொடர் நோன்பை என்னைத் தவிர யாரும் வைக்கக் கூடாது என்றும் இவற்றை வைப்பதற்கு என்னைத் தவிர வேறு எவருக்கும் முடியாது என்றும் நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். மேலும் ஷாகுல் ஹமீத் அவர்களைப் போன்று பன்னிரண்டு வருடங்கள் நபி (ஸல்) அவர்கள் நோன்பு வைக்கவும் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட மாட்டார்களா? என்று எண்ணும் வண்ணம் சில நேரங்கள் தொடர்ந்து நோன்பு நோற்பார்கள். நோன்பு வைக்க மாட்டார்களா? என்று எண்ணும் வண்ணம் தொடர்ந்து நோன்பை வைக்காதாவர்களாகவும் இருந்துள்ளார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த மாதம் நோன்பு நோற்க மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு சில மாதங்களில் அவர்கள் (தொடர்ந்து) நோன்பு நோற்காமல் இருப்பார்கள். இந்த மாதம் அவர்கள் நோன்பை விட மாட்டார்கள் என்று நாங்கள் கருதுமளவுக்கு அவர்கள் (சில மாதங்களில்) நோன்பு நோற்பார்கள். அவர்களை இரவில் தொழும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே அவர்களைக் காண்பாய். அவர்களை (இரவில்) உறங்கும் நிலையில் நீ காண விரும்பினால் அவ்வாறே காண்பாய் என்று அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள். (நூல்: புகாரி 1141)
மேலும் தொடர்ந்து நோன்பு வைத்தவரைப் பார்த்து நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள். இந்த நோன்பு விசால் நோன்பு இல்லை. நாம் வைப்பதைப் போன்ற நோன்பு தான். ஆனால் இதையும் தொடர்ந்து செய்வதைத் தடுத்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அப்துல்லாஹ், நீர் பகலெல்லாம் நோன்பு நோற்று, இரவெல்லாம் நின்று வணங்குவதாக எனக்குக் கூறப்படுகிறதே! என்று கேட்டார்கள். நான் ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றேன். நபி (ஸல்) அவர்கள் இனி அவ்வாறு செய்யாதீர்! (சில நாட்கள்) நோன்பு வையும்; (சில நாட்கள்) விட்டுவிடும்! (சிறிது நேரம்) தொழும்; (சிறிது நேரம்) உறங்கும்! ஏனெனில், உம் உடலுக்குச் செய்ய வேண்டிய கடமைகள் உமக்கிருக்கின்றன; உம் கண்களுக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் மனைவிக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கிருக்கின்றன; உம் விருந்தினருக்குச் செய்ய வேண்டிய கடமைகளும் உமக்கு இருக்கின்றன! ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் நீர் நோன்பு நோற்பது உமக்குப் போதுமானதாகும்! ஏனெனில், (நீர் செய்யும்) ஒவ்வொரு நற்செயலுக்கும் பகரமாக உமக்கு அது போன்ற பத்து மடங்கு (நன்மை)கள் உண்டு! (இந்தக் கணக்குப்படி) இது காலமெல்லாம் நோன்பு நோற்றதாக அமையும்! என்று கூறினார்கள். நான் சிரமத்தை வந்து ஏற்றுக் கொண்டேன்; அதனால், என் மீது சிரமம் சுமத்தப்பட்டு விட்டது! அல்லாஹ்வின் தூதரே! நான் வலுவுள்ளவனாக இருக்கிறேன்! என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் தாவூத் நபி (அலை) அவர்கள் நோன்பு நோற்றவாறு நீர் நோன்பு நோற்பீராக! அதை விட அதிகமாக்க வேண்டாம்! என்றார்கள். தாவூத் நபியின் நோன்பு எது? என்று நான் கேட்டேன். வருடத்தில் பாதி நாட்கள்! என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி 1975
தொடர்ந்து நோன்பு நோற்று வந்த அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களிடம் அதிகப்பட்சமாக ஒரு நாள் விட்டு, ஒரு நாள் நோன்பு நோற்க வேண்டும். இதை விடக் கூடுதலாக நோன்பு நோற்பது சிறந்தது அல்ல என்று நபி (ஸல்) அவர்கள் கண்டித்துள்ளார்கள்.
ஷாகுல் ஹமீத் அவர்கள் அதிகம் நோன்பு நோற்க ஆசைப்பட்டிருந்தால் நபிகளாரின் அறிவுரைப்படி ஒரு நாள் விட்டு, ஒரு நாள் நோன்பு நோற்றிருக்க வேண்டும். ஆனால் அவ்வாறு செய்யாமல் பன்னிரண்டு வருடங்கள் தொடர் நோன்பு வைத்தது (ஒருவேளை உண்மையாக இருந்தாலும்) நபிகளாரின் கட்டளையை அப்பட்டமாக மீறிய செயல் இல்லையா?
12 வருடங்களில், வருடத்திற்கு இரண்டு பெருநாட்கள் வரும். அந்த நாட்களில் நோன்பு வைக்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். மேலும் ஷஅபான் மாதத்தின் கடைசியில் ரமலான் நோன்பா? இல்லையா? என்ற சந்தேகம் வரும் நாள் உள்ளது. அந்த நாட்களில் நோன்பு நோற்க நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். இப்படித் தடை செய்யபட்ட பல நாட்களிலும் தொடர்ந்து நோன்பு வைத்ததாக மவ்லிதில் இடம் பெற்றுள்ளது. இது சரியா?
அடுத்து பன்னிரண்டு வருடங்கள் தொடர்ந்து தூங்காமல் இருக்க முடியுமா? அப்படி யாரையாவது அல்லாஹ் படைத்திருக்கின்றானா? நபிகளார் தூங்கவில்லையா? என்ற கேள்விகளுக்கு அவர்கள் தரும் பதில் இதோ:
அவர்களின் வாதம்: இறை நேசர்களைப் பற்றி நபிகளார் அவர்கள் இறைவன் கூறுவதாக இவ்வாறு சொல்கிறார்கள்: அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன் என்று அல்லாஹ் கூறுகின்றான். இவ்வளவு சிறப்பு இருக்கும் அவ்வலியாக்களால் ஏன் பன்னிரண்டு வருடங்கள் தூங்காமல் இருக்க முடியாது?
நமது பதில்: நல்லடியார்களைப் பற்றி இவ்வாறு நபிகளார் கூறியிருப்பது உண்மை தான். இறைநேசர்கள் இறைவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பிடிக்கின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக ஆகிறார்கள் என்றால் என்ன பொருள்? அவர்கள் இறைவனாகவே ஆகி விடுகிறார்களா? அப்படியானால் ஏன் ஷாகுல் ஹமீத் இறந்தார். அவர் இறந்தார் என்றால் அல்லாஹ் இறந்து விட்டான் என்று அர்த்தமா? ஷாகுல் ஹமீத் அவர்களை அடக்கம் செய்தீர்களே? அவரை அடக்கம் செய்தீர்களா? அல்லது அல்லாஹ்வை அடக்கம் செய்தீர்களா? நாகூரில் இருக்கும் கப்ர், பக்தாதில் இருக்கும் கப்ர் எல்லாம் அல்லாஹ்வின் கப்ரா?
சாப்பிட மாட்டான் என்பது இறைவனிடம் உள்ள தன்மை, எனவே இறை நேசரும் சாப்பிட மாட்டார் என்றால் இறக்க மாட்டான் என்று தன்மையும், முதுமை அடைய மாட்டான் என்ற தன்மையும் ஏன் அவரிடம் இருக்கவில்லை?
அப்படியானால் இந்த ஹதீஸின் பொருள் என்ன? நீங்களும் சொல்ல வேண்டாம்! நாமும் சொல்ல வேண்டாம் அந்த ஹதீஸின் வாசகமே அதைத் தெளிவுபடுத்துகிறது.
எவன் என் நேசரைப் பகைத்துக் கொண்டானோ அவனுடன் நான் போர்ப் பிரகடனம் செய்கிறேன். எனக்கு விருப்பமான செயல்கல் நான் கடமையாக்கிய ஒன்றை விட வேறு எதன் மூலமும் என் அடியான் என்னுடன் நெருக்கத்தை ஏற்படுத்திக் கொள்வதில்லை. என் அடியான் கூடுதலான (நஃபிலான) வணக்கங்களால் என் பக்கம் நெருங்கி வந்து கொண்டேயிருப்பான். இறுதியில் அவனை நான் நேசிப்பேன். அவ்வாறு நான் அவனை நேசித்து விடும் போது அவன் கேட்கின்ற செவியாக, அவன் பார்க்கின்ற கண்ணாக, அவன் பற்றுகின்ற கையாக, அவன் நடக்கின்ற காலாக நான் ஆகி விடுவேன். அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்று அல்லாஹ் கூறுவதாக நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 6502)
அவன் என்னிடம் கேட்டால் நான் நிச்சயம் தருவேன். என்னிடம் அவன் பாதுகாப்புக் கோரினால் நிச்சயம் நான் அவனுக்குப் பாதுகாப்பு அப்பேன் என்ற இறுதி வாசகமே இதற்குப் பொருளாகும்.
கையாகி விடுவேன், காலாகி விடுவேன் என்றால் இறை நேசர்களின் கையாக அல்லாஹ் மாறி விடுவான் என்று பொருளல்ல.
அவ்லியாக்களிலேயே பெரிய அவ்லியா, நபி (ஸல்) அவர்கள் தாம். இறைநேசர்களின் கையாக, காலாக அல்லாஹ் மாறுவான் என்றால் நபி (ஸல்) அவர்களுக்குத் தான் முதலில் மாறியிருக்க வேண்டும். அப்படியானால் உஹுதுப் போரில் நபிகளாரின் பல் உடைக்கப்பட்டதே அது அல்லாஹ்வின் பல்லா? அவர்களுக்கு இரத்தக் காயம் ஏற்படுத்தினார்களே அதுவும் அல்லாஹ்வுக்கு ஏற்படுத்தப்பட்ட இரத்தக் காயமா?
இதன் உண்மையான பொருள் என்ன? பேச்சு வழக்கில் நாம் கூட சொல்வோம். இவர் எனது வலது கை என்போம். அப்படியானால் நம்முடைய வலது கையை வெட்டி விட்டு அவரைப் பொருத்திக் கொள்வோம் என்று பொருளா? இல்லை! நமது நெருக்கத்தைக் காட்டுவதற்குப் பயன்படும் சொற்களாகும்.
அவரின் வலது கையை வெட்டினாலும் அல்லது அவரைத் துண்டு துண்டாக வெட்டினாலும் எனக்கு ஒன்றும் செய்யாது. நான் வேறு, அவர் வேறு தான்.
இதைப் போன்று கணவன் மனைவியைச் சொல்லும் போது இரண்டறக் கலந்து விட்டார்கள் என்று சொல்வார்கள். இரண்டு நபர்களும் ஒரு நபராக மாறி விட்டார்கள் என்று பொருளா? அல்லது இவர் சாப்பிட்டால் மனைவிக்கு வயிறு நிரம்பி விடுமா? அல்லது இருவரும் நெருக்கமாக அன்பாக இருக்கிறார்கள் என்று பொருளா?
மற்ற மனிதர்களின் நெருக்கத்தை விட அவ்லியாக்களுக்கு இறைவனிடம் நெருக்கம் அதிகம். இது தான் அதற்குப் பொருள்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
வல்லமையும் மாண்பும் மிக்க அல்லாஹ் மறுமை நாளில் (ஒரு மனிதரிடம்), ஆதமின் மகனே! நான் நோயுற்றிருந்த போது என்னை உடல் நலம் விசாரிக்க நீ வரவில்லையே (ஏன்)? என்று கேட்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உன்னை நான் எவ்வாறு உடல் நலம் விசாரிப்பேன்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? என் அடியானான இன்ன மனிதன் நோய்வாய்ப்பட்டிருந்த போது அவனிடம் சென்று நீ நலம் விசாரிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனை உடல் நலம் விசாரிக்க நீ சென்றிருந்தால் அவனிடம் என்னைக் கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் அல்லாஹ், ஆதமின் மகனே! நான் உன்னிடம் உணவு கேட்டேன். ஆனால், நீ எனக்கு உணவளிக்கவில்லை என்பான். அதற்கு மனிதன், என் இறைவா! நீ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு உணவளிக்க இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், உனக்குத் தெரியுமா? உன்னிடம் என் அடியானான இன்ன மனிதன் உண்பதற்கு உணவு கேட்டான். ஆனால், அவனுக்கு நீ உணவளிக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்கு நீ உணவளித்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
மேலும் ஆதமின் மகனே! நான் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டேன். ஆனால், எனக்கு நீ தண்ணீர் தரவில்லை என்று அல்லாஹ் கூறுவான். அதற்கு மனிதன், என் இறைவா! நீயோ அகிலத்தாரின் அதிபதியாயிருக்க, உனக்கு நான் எவ்வாறு தண்ணீர் தர இயலும்? என்று கேட்பான். அதற்கு அல்லாஹ், என் அடியானான இன்ன மனிதன் உன்னிடம் குடிப்பதற்குத் தண்ணீர் கேட்டான். ஆனால், அவனுக்கு நீ தண்ணீர் கொடுக்கவில்லை. தெரிந்து கொள்! அவனுக்குக் குடிப்பதற்கு நீ தண்ணீர் கொடுத்திருந்தால் அ(தற்குரிய)தை என்னிடம் நீ கண்டிருப்பாய் என்று கூறுவான்.
நூல்: முஸ்லிம் 5021
இந்த ஹதீஸில் பசியுடன் வருபவனுக்கு உணவளித்திருந்தால் அவனிடம் என்னை காண்பாய் என்று அல்லாஹ் கூறுகின்றானே! உங்கள் கருத்துப்படி பார்த்தால் பிச்சைக்காரன் அல்லாஹ்வாக மாறி விடுவான். அவனுக்கு ஏன் நீங்கள் தர்ஹா கட்டவில்லை.
இந்த ஹதீஸுக்கு இது தான் பொருளா? ஏழைக்கு உதவுதல் எனக்குப் பிடிக்கும் என்பதைத் தான் இவ்வாறு அல்லாஹ் கூறுகின்றான். ஏழைக்கு உணவளிப்பது அல்லாஹ்விற்கு உணவளிப்பதாக ஆகாது. என்றாலும் என் கட்டளையை மதித்து ஏழைக்கு நீ உணவளித்ததால் நீ எனக்கு உதவியதைப் போன்று நான் எடுத்துக் கொண்டு உனக்குக் கூலி வழங்குவேன் என்று அல்லாஹ் கூறுவதாக அர்த்தம்.
இஸ்லாமிய ஒழுங்குகள் சிரிப்பின் ஓழுங்குகள்
சிரிப்பூட்டும் சில நிகழ்வுகள்
அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி
நபியவர்களைச் சிரிக்க வைத்த பல நிகழ்வுகள் அவர்களின் வாழ்க்கையில் நடந்திருக்கின்றன. வாய் விட்டுச் சிரிக்க வேண்டிய இடங்களில் நபி (ஸல்) அவர்கள் வாய் விட்டுச் சிரித்திருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களில் இதை உணர்ந்து கொள்ளலாம். ஒரு முறை நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் கிராமவாசி ஒருவர் அமர்ந்திருக்க, பின்வரும் நிகழ்ச்சியை எடுத்துரைத்துக் கொண்டிருந்தார்கள். சொர்க்கவாசிகளில் ஒரு மனிதர் தன் இறைவனிடம் விவசாயம் செய்ய அனுமதி கேட்பார். அதற்கு இறைவன், நீ விரும்பிய (இன்பகரமான) நிலையில் (இப்போது) வாழ்ந்து கொண்டிருக்கவில்லையா? என்று கேட்பான். அதற்கு அவர், ஆம்! (நான் விரும்பியபடியே இன்பகரமான நிலையில் தான் வாழ்ந்து கொண்டிருக்கிறேன்) ஆனால் நான் நிலத்தை உழுது பயிரிட விரும்புகிறேன் என்று கூறுவார். (இறைவனும் அவருக்கு அனுமதியளிப்பான்) அந்த மனிதர் விதை தூவி விடுவார். கண் இமைக்கும் நேரத்திற்குள் அந்தப் பயிர் வளர்ந்து முதிர்ந்து அறுவடைக்குத் தயாராகி விடும். மலைகளைப் போல் விளைந்து குவிந்து போய்விடும். அப்போது இறைவன், எடுத்துக் கொள், ஆதமின் மகனே! உன்னை எதுவுமே திருப்திப்படுத்தாது என்று கூறுவான்.
(நபியவர்களிடமிருந்து இதைச் செவியுற்ற) அந்தக் கிராமவாசி, அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த மனிதர் குரைஷியாகவோ (மக்காவாசியாகவோ) அன்சாரியாகவோ (மதீனாவாசியாகவோ) தான் இருக்க முடியும். அவர்கள் தாம் விவசாயிகள். நாங்களோ விவசாயிகள் அல்லர் என்று கூறினார். இதனைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் சிரித்து விட்டார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 2348
(நரகத்திலிருந்து வெளியேறி) இறுதியாகச் சொர்க்கத்தில் நுழையும் ஒரு மனிதர் சில சமயம் நடந்து வருவார். சில சமயம் தவழ்ந்தபடி வருவார். சில சமயம் நரக நெருப்பு அவரது முகத்தைத் தாக்கி கரித்து விடும். இந்நிலையில் அவர் நரகத்தைத் தாண்டியதும் அதைத் திரும்பிப் பார்த்து உன்னிடமிருந்து என்னைக் காப்பாற்றிய (என் இறைவன்) சுபிட்ச மிக்கவன். முன்னோர் பின்னோர் யாருக்கும் வழங்காத (பாக்கியத்)தை அல்லாஹ் எனக்கு வழங்கினான் என்று கூறுவார். அப்போது அவருக்கு ஒரு மரம் காட்டப்படும். உடனே அவர், என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக. அதன் நிழலை நான் பெற்றுக் கொள்வேன். அதன் (கீழே பாயும்) நீரைப் பருகிக் கொள்வேன் என்று கூறுவார். அதற்கு அல்லாஹ், மனிதா! அதை உனக்கு நான் வழங்கினால் வேறொன்றை நீ என்னிடம் கேட்கக்கூடுமல்லவா? என்று கூறுவான். அதற்கு அவர், இல்லை, இறைவா! வேறெதையும் உன்னிடம் நான் கேட்க மாட்டேன் என்று கூறி வாக்குறுதி அளிப்பார். அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் காணும் அவருடைய இறைவன் அவருக்கு வாய்ப்பளித்து அவரை அந்த மரத்தின் அருகே கொண்டு செல்வான். அங்கு அவர் அந்த மரத்தின் நிழலைப் பெறுவார். அதன் நீரையும் பருகிக் கொள்வார். பிறகு அவருக்கு மற்றொரு மரம் காட்டப்படும். அது முதலில் காட்டப்பட்ட மரத்தை விட மிகவும் அழகாய் இருக்கும். (அதைக் கண்ட உடன்) அவர், என் இறைவா! இதற்கருகே என்னைக் கொண்டு செல்வாயாக! நான் அதன் நீரைப் பருகி, அதன் நிழலை அடைந்து கொள்வேன். இதைத் தவிர வேறெதையும் நான் உன்னிடம் கேட்க மாட்டேன் என்று கூறுவார். மனிதா! வேறெதையும் கேட்க மாட்டேன் என்று என்னிடம் நீ (முன்பு) வாக்குறுதி அளிக்கவில்லையா? அதன் அருகில் உன்னை நான் கொண்டு சென்றால் வேறொன்றை நீ கேட்கக் கூடுமல்லவா? என்பான். உடனே அவர், வேறெதையும் கேட்க மாட்டேன் என்று வாக்குறுதி அளிப்பார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு வாய்ப்பளித்து அவரை அதன் அருகே கொண்டு செல்வான். அவர் அதன் நிழலை அனுபவித்துக் கொண்டு அதன் (கீழே ஓடும்) நீரையும் அருந்துவார். பிறகு சொர்க்க வாசல் அருகே உள்ள மரம் அவருக்குக் காட்டப்படும். அது முதலிரண்டு மரங்களை விடவும் ரம்யமானதாக இருக்கும். உடனே அவர், என் இறைவா! அந்த மரத்தின் அருகே என்னைக் கொண்டு செல்வாயாக. நான் அதன் நிழலைப் பெறுவேன். அதன் நீரைப் பருகிக் கொள்வேன் என்று கூறுவார். இதைத் தவிர வேறெதையும் உன்னிடம் கேட்க மாட்டேன் என்று கூறுவார். அதற்கு இறைவன், மனிதா! வேறெதையும் கேட்க மாட்டேன் என்று (முன்பு) என்னிடம் வாக்குறுதி அளிக்கவில்லையா? என்று கேட்பான். ஆம்! என் இறைவா இந்தத் தடவை (மட்டும்). இனி இதன்றி வேறெதையும் கேட்க மாட்டேன் என்று கூறுவார். இறைவனும் அவரிடம் பொறுமை இல்லை என்பதைக் கண்டு அவருக்கு வாய்ப்பளித்து அதன் அருகே அவரைக் கொண்டு செல்வான். அவர் அந்த மரத்தை நெருங்கும் போது சொர்க்கவாசிகளின் குரல் அவருக்குக் கேட்கும். உடனே அவர், என் இறைவா! சொர்க்கத்திற்குள் என்னை அனுப்புவாயாக! என்று கேட்பார். அதற்கு இறைவன், மனிதா! ஏன் என்னிடம் கேட்பதை நீ நிறுத்திக் கொண்டாய்? (சொர்க்கம் என்ற இந்த) உலகத்தையும் அது போன்று இன்னொன்றையும் நான் உனக்கு வழங்கினால் உனக்கு மகிழ்ச்சி ஏற்படும் தானே? என்று கேட்பான். அதற்கு அவர், என் இறைவா! அகிலத்தின் அதிபதியே! நீ என்னை பரிகாசம் செய்கிறாயா? என்று கேட்பார். (இதை அறிவித்த போது) அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சிரித்தார்கள். பிறகு, நான் ஏன் சிரித்தேன் என்று என்னிடம் நீங்கள் கேட்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அப்போது மக்கள், ஏன் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:
இவ்வாறு தான் (இதை அறிவிக்கையில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிரித்தார்கள். அதற்கு நபித்தோழர்கள், ஏன் சிரிக்கிறீர்கள்? அல்லாஹ்வின் தூதரே என்று கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அகிலத்தின் அதிபதியாகிய நீயே என்னைப் பரிகாசம் செய்கிறாயா? என்று அந்த மனிதர் கூறும் போது அதைக் கேட்டு இறைவன் சிரிப்பான். (அதனால் தான் நான் சிரித்தேன்). மேலும், நான் உன்னைப் பரிகாசம் செய்யவில்லை. மாறாக நாடியதைச் செய்கின்ற ஆற்றல் உள்ளவன் நான் என இறைவன் கூறுவான் என்றும் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் 310
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன் என்றார். நபி (ஸல்) அவர்கள், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் நாங்கள் அமர்ந்திருந்த போது அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் அழிந்து விட்டேன்! என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான் நோன்பு வைத்துக் கொண்டு என் மனைவியுடன் கூடி விட்டேன்! என்று அவர் சொன்னார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், விடுதலை செய்வதற்கு ஓர் அடிமை உம்மிடம் இருக்கிறாரா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். தொடர்ந்து இரு மாதம் நோன்பு நோற்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று கேட்டார்கள். அவர் இல்லை என்றார். அறுபது ஏழைகளுக்கு உணவளிக்க உமக்குச் சக்தி இருக்கிறதா? என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கும் அவர் இல்லை என்றார். நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் சற்று நேரம் மௌனமாக இருந்தார்கள். நாங்கள் இவ்வாறு இருக்கும் போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் பேரீச்சம் பழம் நிறைந்த அரக் எனும் அளவை கொண்டு வரப்பட்டது. அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கேள்வி கேட்டவர் எங்கே? என்றார்கள். நான்தான்! என்று அவர் கூறினார். இதைப் பெற்று தர்மம் செய்வீராக! என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அப்போது அம்மனிதர் அல்லாஹ்வின் தூதரே! என்னை விட ஏழையாக இருப்போருக்கா (நான் தர்மம் செய்ய வேண்டும்?) மதீனாவின் (கருங்கற்கள் நிறைந்த) இரண்டு மலைகளுக்கும் இடைப்பட்ட பகுதியில் என் குடும்பத்தினரை விடப் பரம ஏழைகள் யாருமில்லை! என்று கூறினார். அப்போது, நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் தமது கடைவாய்ப் பற்கள் தெரியும் அளவுக்குச் சிரித்தார்கள். பிறகு இதை உமது குடும்பத்தாருக்கே உண்ணக் கொடுத்து விடுவீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி 1936, 1937, 2600, 5368, 6087, 6164, 6709, 6710, 6711 நகைச்சுவையுடன் நபிகள் நாயகம்
பிறர் நகைச்சுவையுடன் பேசும் போது அதை நபி (ஸல்) அவர்கள் ஆமோதித்து இருக்கிறார்கள். பல நேரங்களில் பிறரிடத்தில் அவர்கள் நகைச்சுவையுடன் பேசியும் இருக்கிறார்கள். பின்வரும் சம்பவங்களிலிருந்து இதை அறிந்து கொள்ளலாம். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (வாகனத்தில்) என்னை ஏற்றி விடுங்கள் என்று கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஒட்டகக் குட்டியின் மீது உம்மை நாம் ஏற்றி விடுவோம் என்று கூறினார்கள். அம்மனிதர், ஒட்டகக் குட்டியை வைத்து நான் என்ன செய்வேன்? (அதில் பயணிக்க முடியாதே) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (எல்லா) ஒட்டகங்களும் தாய் ஒட்டகத்திற்கு குட்டிகளாகத் தானே இருக்கின்றன? என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி) நூல்: அபூதாவூத் 4346
நபி (ஸல்) அவர்கள் உம்மு சுலைம் (ரலி) அவர்களைச் சந்திப்பவர்களாக இருந்தார்கள். உம்மு சுலைம் (ரலி) அவர்களுக்கு அபூதல்ஹா (ரலி) அவர்களின் மூலமாக ஒரு மகன் இருந்தார். அவர் அபூ உமைர் என்று அழைக்கப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரிடத்தில் தமாஷ் செய்வார்கள். நபி (ஸல்) அவர்கள் அபூ உமைரிடம் வந்த போது அபூ உமைர் கவலையுடன் இருப்பதைப் பார்த்து, அபூ உமைரை கவலையுடன் பார்க்கிறேனே! என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அவர் விளையாடிக் கொண்டிருந்த அவரது குருவி இறந்து விட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், அபூ உமைரே! உனது சின்னக்குருவி என்ன ஆயிற்று? என்று கேட்டார்கள். அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அஹ்மத் 12389 அளவுக்கு மிஞ்சினால் அமுதமும் நஞ்சு
சிரிப்பதை அனுமதிக்கும் நம் மார்க்கம் அதை அளவுடன் வைத்துக் கொள்ள வேண்டும் என்று கூறுகிறது. சிரிக்கக் கூடாத இடங்களில் சிரிப்பதைத் தடை செய்கிறது. சிரிக்கத் தகுதியற்ற இடங்களில் சிரிப்பது தேவையற்றது. சிரிப்பு வராவிட்டாலும் ஏதோ ஒரு நோக்கத்திற்காக வேண்டுமேன்றே சிரிப்பதைப் போல் சிலர் காட்டிக் கொள்கிறார்கள். கவலைப்பட வேண்டிய சூழ்நிலையில் நிலைமை புரியாமல் சிரிப்பவர்களும் உண்டு. பொருத்தமற்ற இந்தச் சிரிப்புகள் பிறரை மகிழ்விப்பதற்குப் பதிலாக கவலையிலும் துக்கத்திலும் ஆழ்த்தி விடும். பிறர் துன்பப்படும் போது அதைப் பார்த்துக் கேலி செய்து சிரித்தால் அதன் மூலம் பலர் பரவசம் அடைந்தாலும் சிலர் புண்படுகிறார்கள். இத்தகைய சிரிப்புகள் அனுமதிக்கப்பட்டவை அல்ல.
நாம் சொல்லும் நகைச்சுவையினால் எப்போது எல்லோரும் மகிழ்கிறார்களோ அப்போதே நாம் சரியான அடிப்படையில் பிறரை சிரிக்க வைத்திருக்கிறோம் என்பதை நாம் மறந்துவிடக் கூடாது. உள்ளத்திற்கு நிம்மதியை ஏற்படுத்துவதற்குப் பதிலாக மனதில் இறுக்கத்தையும் மூளைக்குத் திரையையும் ஏற்படுத்தி விடக் கூடாது.
விபத்துக்கள், அழிவுகள் தொடர்பான செய்திகள் கிடைத்தால் மரணத்திற்குப் பயப்பட வேண்டுமே தவிர சிரித்து கும்மாளம் அடித்துக் கொண்டிருக்கக் கூடாது. மண்ணறைகளைக் கடந்து செல்லும் போது மரண பயத்துடன் செல்ல வேண்டும். இடி, மின்னல் போன்ற இயற்கை சீற்றங்கள் தலைதூக்கும் போது இறைவனின் பயம் வர வேண்டும். ஏனென்றால் மழையின் அறிகுறியாகத் தோன்றும் இடி, பல உயிர்களைக் கொன்று விடுகிறது. தேவைக்கு அதிகமாக மழை பெய்து விட்டாலும் அதிகமான உயிர்ச் சேதம் ஏற்படுகிறது. கட்டிடங்கள் வலுவிழந்து வசிப்பவர்களுக்கு மண்ணறைகளாக மாறி விடுகின்றன. ஆகையால் தான் நபி (ஸல்) அவர்கள் கடும் காற்றையோ, மேகம் திரள்வதையோ கண்டால் படபடப்புடனும் பரபரப்புடனும் காணப்பட்டார்கள். மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால் நபி (ஸல்) அவர்களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். நான், அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்கலாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால் தாங்கள் மேகத்தைக் காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காணுகின்றேனே! என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷாவே! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி 4829
பொய் சொல்லி சிரிக்க வைக்கக் கூடாது
பிறரைச் சிரிக்க வைப்பதற்காக நடக்காத நிகழ்வுகளையெல்லாம் நடந்ததாகச் சொல்வது மார்க்கத்தில் தடை செய்யப்பட்ட ஒன்று! நான்கு பேர் கூடிவிட்டாலே வாய்க்கு வந்ததையெல்லாம் கூறி சிரித்துக் கொண்டிருக்கும் வழக்கம் ஆண்களிடத்திலும் பெண்களிடத்திலும் அதிகமாகப் பரவியிருக்கிறது.
சின்னத் திரைகளில் ஒளிபரப்பப்படும் நகைச்சுவை நிகழ்ச்சிகளில் பெரும்பாலான நகைச்சுவைக் கருத்துக்கள் கற்பனையாக உருவாக்கப்பட்டவை. நகைச்சுவையிலும் உண்மையைத் தான் சொல்ல வேண்டும் என்று மார்க்கம் பணிக்கிறது. சிரிக்க வைப்பதற்காகப் பொய் சொல்வதை தடைசெய்துள்ளது. மக்கள், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் எங்களிடத்தில் தமாஷ் செய்கிறீர்களே? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் உண்மையைத் தவிர வேறெதையும் சொல்லவில்லையே! என்று கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 1913
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எவன் ஒரு கூட்டத்தினரைச் சிரிக்க வைப்பதற்காகப் பொய்யான செய்தியைக் கூறுகிறானோ அவனுக்குக் கேடு தான். அவனுக்கு கேடு தான். அறிவிப்பவர்: முஆவியா பின் ஹைதா (ரலி)
நூல்: திர்மிதி 2237
பிறரைப் பாதிப்புக்குள்ளாக்கி சிரிக்க வைக்கக் கூடாது
மற்றவர்களைப் பயமுறுத்தியோ, ஏமாற்றியோ, கேலி செய்தோ நமது நகைச்சுவைகள் இருக்கக்கூடாது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களில் எவரும் வேண்டுமென்றோ அல்லது விளையாட்டாகவோ தனது நண்பரின் பொருளை எடுத்துக் கொள்ள வேண்டாம். தனது நண்பரின் கைத்தடியைக் கண்டாலும் அதை நண்பரிடத்தில் ஒப்படைத்து விடட்டும். அறிவிப்பவர்: யசீத் பின் சயீத் (ரலி)
நூல்: அஹ்மத் 17261
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் ஒரு பயணத்தில் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களில் ஒருவர் உறங்கி விட்டார். வேறு சிலர் (அவரது) அம்புகளுக்கு அருகில் சென்று அதை எடுத்து வைத்துக் கொண்டார்கள். அம்மனிதர் உறங்கி எழுந்தவுடன் (அம்பு காணாமல் போனதைக் கண்டு) திடுக்குற்றார். (இதைப் பார்த்த) கூட்டம் சிரித்து விட்டது. நபி (ஸல்) அவர்கள், ஏன் நீங்கள் சிரிக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர்கள், இவரது அம்புகளை நாங்கள் எடுத்து (மறைத்து) வைத்துக் கொண்டோம். அவர் விழித்தவுடன் திடுக்குற்றார் என்று கூறினார்கள். ஒரு முஸ்லிமை திடுக்குறச் செய்வது எந்த ஒரு முஸ்லிமுக்கும் ஆகுமானதல்ல என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ லைலா நூல்: அஹ்மத் 21986
? தொழுகையில் அல்ஹம்து அத்தியாயம் ஓதியதற்குப் பிறகு ஆமீன் கூற வேண்டும் என்ற நபிமொழியை போட்டு விட்டு, ஆமீனை மனதுக்குள்ளும் சொல்லாம் என்று எந்த ஆதாரமும் இல்லாமல் உங்கள் சொந்தக் கூற்றை கூறியுள்ளீர்கள்! விளக்கவும்.
இமாம் கைரில் மக்லூபி அலைஹிம் வலழ்ழாள்ளீன் எனக் கூறும் போது நீங்கள் ஆமீன் கூறுங்கள்! ஏனெனில் எவர் கூறும் ஆமீன், மலக்குகள் கூறும் ஆமீனுடன் ஒத்து அமைந்து விடுகிறதோ அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரீ 782
இந்த ஹதீஸில் கூறப்படும் கூலூ (நீங்கள் சொல்லுங்கள்) என்ற அரபி வாசகம், மெதுவாகச் சொல்வதையும் சப்தமிட்டுச் சொல்வதையும் எடுத்துக் கொள்ளும். எனவே நாம் விரும்பினால் சப்தமிட்டும் ஆமீன் கூறலாம். விரும்பினால் சப்தமிடாமலும் கூறலாம் என்று எழுதியிருந்தோம்.
நபிகளார் அவர்களின் தாய் மொழி அரபியாக இருந்ததால் அவர்கள் சொன்ன செய்திகள் அனைத்தும் அரபி மொழியில் இடம்பெற்றுள்ளன. இந்நிலையில் நபிகளார் சொன்ன ஒரு செய்தியை மொழிபெயர்க்கும் போது அந்த மொழியில் அதற்கு என்ன பொருள் கொடுக்க வேண்டுமோ அதே பொருளைத் தான் நாம் கொடுக்க வேண்டும். அதன் அடிப்படையில் தான் நாம் அவ்வாறு கூறியுள்ளோம். இது எல்லா மொழியில் கடைப்பிடிக்கும் ஒரு முறை தான். தமிழில் உள்ள ஒரு வார்த்தையை வைத்துக் கொண்டு வாதிடக் கூடாது. அதன் மூலச் சொல் எந்த மொழியில் இருக்கிறது என்பதைக் கவனித்து, அந்த மொழியில் அதன் பொருள் என்பதைப் பார்த்தே முடிவு செய்ய வேண்டும்.
? பஜ்ர், மக்ரிப், இஷா ஆகிய தொழுகையில் முதல் இரண்டு ரக்அத்களில் இமாம் சப்தமிட்டு ஓதுகிறார். ஆனால் லுஹர், அஸர் தொழுகையில் அவ்வாறு ஓதுவதில்லையே ஏன்?
! வணக்க வழிபாடுகளில் சில காரியங்களுக்குக் காரணங்கள் கூறப்பட்டுள்ளது. பல காரியங்களுக்குக் கூறப்படவில்லை. எதில் காரணம் கூறப்படவில்லையோ அதற்குக் காரணம் தேடிச் செல்ல வேண்டியதில்லை! அதை அப்படியே ஏற்றுக் கொள்வதே சரியானதாகும்! அந்த வகையைச் சார்ந்ததே இந்த கேள்வியும்.
நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் எதிரிகளின் தொல்லை அதிகமாக இருந்ததால் அவர்களுக்குத் தெரியாமல் இருப்பதற்காகப் பகல் நேரத்தில் சப்தமில்லாமலும் இரவு நேரத்தில் சப்தமிட்டும் ஓதி வந்தார்கள் என்று சிலர் இதற்குக் காரணம் கூறுகிறார்கள். ஆனால், அவர்கள் கூறும் இக்காரணம் ஏற்றுக் கொள்ளத்தக்கதாக இல்லை!
இஷா, பஜ்ர் நேரங்களில் தான் சப்தம் இல்லாமல் அமைதியாக இருக்கும். சிறிய அளவில் சப்தம் வந்தால் கூட அனைவருக்கும் தெரிந்து விடும்! மேலும் மஃரிப் நேரம் அனைவரும் விழித்திருக்கும் நேரம் தான். எனவே அவர்கள் என்ன காரணத்திற்காக என்று குறிப்பிட்டார்களோ அதுவே இதற்குப் பொருந்தாததாக உள்ளது.
உங்கள் கேள்விக்கு அபூஹுரைரா (ரலி) அவர்கள் அழகாக தெளிவாகப் பதிலளித்துள்ளார்கள்.
எல்லாத் தொழுகைகலும் (குர்ஆன் வசனங்கள்) ஓதப்பட வேண்டும். நபி (ஸல்) அவர்கள் எங்களுக்குக் கேட்கும் விதமாக ஓதியவற்றை உங்களுக்குக் கேட்கும் விதமாக (சப்தமாக) நாம் ஓதுகிறோம். நபி (ஸல்) அவர்கள் எங்கள் காதில் விழாதபடி மெதுவாக ஓதியதை நாமும் (சப்தமின்றி) மெதுவாக ஓதுகிறோம். (தொழுகையில்) குர்ஆனின் அன்னை(யான அல்ஃபாத்திஹா) அத்தியாயத்தை விட அதிகமாக வேறெதையும் நீ ஓதாவிட்டாலும் (உன் தொழுகை) நிறைவேறி விடும் ஆயினும், அதை விட அதிகமாக நீ ஓதுவதே சிறந்ததாகும்.
நூல்: புகாரி 772
? தன் கணவன் சொல்படி தான் நான் நடப்பேன், மாமனார், மாமியார் சொல்படி நடக்க வேண்டும் என்று குர்ஆன், ஹதீஸில் இல்லை என்று மருமகள் கூறுகிறாள். இதனால் மனைவி பேச்சைக் கேட்டு மகனும் நடக்கின்றான். இவ்வாறு செய்வது கூடுமா? (புகாரியின் 6675, 6920) ஹதீஸின் கருத்துக்கு இது எதிரானது இல்லையா?
நல்ல கருத்துக்களை யார் சொன்னாலும் ஏற்று நடக்க வேண்டியது ஒவ்வொரு முஃமினிடமும் இருக்க வேண்டிய நல்ல பண்பாகும்.
யார் தீய சக்திகளை வணங்குவதைத் தவிர்த்துக் கொண்டு, அல்லாஹ்வை நோக்கித் திரும்புகிறாரோ அவர்களுக்கு நற்செய்தி உள்ளது. எனது அடியார்களுக்கு நற்செய்தி கூறுவீராக! அவர்கள் சொல்லைச் செவிமடுத்து அதில் அழகானதைப் பின்பற்றுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் நேர் வழி காட்டினான். அவர்களே அறிவுடையவர்கள். அல்குர்ஆன் 37:17,18
மாமியார் ஆகட்டும்; அல்லது மருமகள் ஆகட்டும்; நல்ல கருத்தை யார் சொன்னாலும் ஏற்று நடக்கும் பண்பாடு நம்மிடம் வர வேண்டும். தான் உடைத்தால் மண்குடம், மருமகள் உடைத்தாள் பொன் குடம் என்று மாமியார் நடக்கக் கூடாது. இதைப் போன்று வயதில் மூத்த மாமனார், மாமியாரை அவமதிக்கும் விதமாகவும், அவர்களின் நல்ல கருத்துக்களைக் கூட அவமதிக்கும் விதமாகவும் மருமகள் நடக்கக் கூடாது. குறிப்பாக தாய், தந்தையிடமிருந்து மகனைப் பிரிக்கும் மாபாதகமான காரியத்தைச் செய்யக் கூடாது. மேலும் பெற்றோரின் பேச்சைக் கேட்க விடாமல் அவர்களுக்கு எதிராக நடக்கும்படி கணவனை மாற்றக் கூடாது. அவ்வாறு செய்தால் மிகப் பெரிய தீமை செய்யத் தூண்டியவராக கருதப்படுவார்.
இறைவனுக்கு இணை கற்பிப்பது, தாய் தந்தையரைப் புண்படுத்துவது, கொலை செய்வது, பொய்ச் சத்தியம் செய்வது ஆகியன பெரும் பாவங்களாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 6675
பெற்றோரைப் புண்படுத்தும் காரியத்தைத் தம் கணவர் செய்து பெரும் பாவியாக மாற மனைவியே காரணமாக இருக்கக் கூடாது. கணவனே பெற்றோர்களிடம் கடினமாக நடந்தாலும் நபிமொழியை எடுத்துக் கூறி அவரைத் திருத்த முன்வர வேண்டுமே தவிர எரியும் நெருப்பில் எண்ணெயை ஊற்றும் வேலையைச் செய்யக் கூடாது.
? ஜகாத்தாகக் கொடுக்க வேண்டிய பணத்தை பள்ளிவாசல் பராமரிப்பு, இஸ்லாமிய மாநாடு, சொற்பொழிவு நிகழ்ச்சிகளுக்கு வழங்கலாமா?
அல்லாஹ் கடமையக்கிய ஜகாத்தை, குறிப்பிட்ட நபர்களுக்கு மட்டும் தான் செலவழிக்க வேண்டும் என்று திருமறை குறிப்பிடுகின்றது.
யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும், அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதையிலும், நாடோடிகளுக்கும் தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் வின் கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.
அல்குர்ஆன் 9:60
(ஜகாத் எனும்) தர்மங்கள் பரம ஏழைகள், ஏழைகள், ஜகாத் வசூல் செய்பவர்கள், இஸ்லாத்தின் பால் அவர்களின் (புதிதாக இஸ்லாத்தை தழுவ உள்ள) உள்ளங்கள் ஈர்க்கப்படுவதற்கு, அடிமைகளை விடுதலை செய்வதற்கு, கடன்பட்டிருப்போருக்கு, அல்லாஹ்வின் பாதையில் (போர் புரிவோருக்கும்), வழிப்போக்கர்களுக்குமே உரியவையாகும். (இது) அல்லாஹ் விதித்த கடமையாகும். அல்லாஹ் நன்கு அறிபவனாகவும் ஞானமிக்கவனாகவும் இருக்கின்றான்.
அல்குர்ஆன் 9:60
1. யாசிப்பவர்கள், 2. ஏழைகள், 3. ஜகாத்தை வசூல் செய்பவர்கள், 4. உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டிய இஸ்லாத்தை நேசிக்கும் மாற்று மதத்தவர்கள் 5. அடிமைகள் (விடுதலை செய்ய), 6. கடன்பட்டிருப்பவர்கள், 7. அல்லாஹ்வின் பாதையில் போர் செய்பவர்கள், 8. வழிப்போக்கர்கள் இந்த எட்டு சாரார்களுக்கு மட்டுமே ஜகாத் பணம் செலவிடப்பட வேண்டும். இந்த எட்டு வகையில் சாராத எவர்களுக்கும் ஜகாத் பணம் செலவிடக்கூடாது.
பள்ளிவாசல், மதரஸா, மாநாட்டுச் செலவுகள் இவற்றிற்கெல்லாம் ஜகாத் பணத்தைக் கண்டிப்பாகச் செலவழிக்கக் கூடாது. அப்படிச் செய்தால் இறைக் கட்டளையை மறுத்தவராகக் கருதப்படுவார். இதுபோன்ற நற்காரியங்களுக்கு சாதாரணமாக (ஜகாத் அல்லாமல்) இதர தர்மங்களை வழங்கலாம்! அதற்குரிய நன்மை கிட்டும்!
? கடிதங்கள் எழுதும் போது ஸலாம் கூறி எழுதலாமா?
! கடிதங்களில் ஸலாம் கூறி எழுதி அனுப்பலாம்! நபி (ஸல்) அவர்கள் ரோமாபுரி மன்னர் ஹெர்குலிஸுக்கு எழுதிய கடிதத்தில் ஸலாம் கூறி எழுதியுள்ளார்கள். (பார்க்க: புகாரி ஹதீஸ் எண்: 7)
? ஆண்கள் தங்கம் அணியக் கூடாது என்று திருக்குர்ஆனில் நேரடியாகத் தடை உள்ளதா?
திருக்குர்ஆனில் நேரடியாகக் கூறப்படவில்லை. எனினும் நபிமொழித் தொகுப்புகளில் இடம் பெற்றுள்ளது. ஒன்றை அனுமதிக்கவும், தடுக்கவும் அல்லாஹ்வுக்கே அதிகாரம் உண்டு. அல்லாஹ் அனுமதித்ததைத் தடை செய்யவோ, அல்லாஹ் தடை செய்ததை அனுமதிக்கவோ யாருக்கும் அதிகாரம் இல்லை. என்றாலும் நபி (ஸல்) அவர்கள் எந்தப் பொருளைத் தடை செய்தாலும் அதுவும் அல்லாஹ் செய்த தடையைப் போன்றதே!
ஏனெனில் அவர்கள் சுயமாக எதையும் தடை செய்வதில்லை. இறைவனின் கட்டளைப்படியே செய்வார்கள். மேலும் திருமறைக் குர்ஆனில் இல்லாத பல பொருட்களை நபி (ஸல்) அவர்கள் தடை செய்வார்கள் என்று திருக்குர்ஆனிலேயே கூறப்பட்டுள்ளது.
எழுதப் படிக்கத் தெரியாத இத்தூதரை, இந்த நபியை (முஹம்மதை) அவர்கள் பின்பற்றுகின்றனர். தங்களிடம் உள்ள தவ்ராத்திலும், இஞ்சீலிலும் இவரைப் பற்றி எழுதப்பட்டிருப்பதை அவர்கள் காண்கின்றனர். இவர், நன்மையை அவர்களுக்கு ஏவுகிறார். தீமையை விட்டும் அவர்களைத் தடுக்கிறார். தூய்மையானவற்றை அவர்களுக்கு அனுமதிக்கிறார். தூய்மையற்றவைகளை அவர்களுக்கு அவர் தடை செய்கிறார். அவர்களுடைய சுமையையும், அவர்கள் மீது (பிணைக்கப்பட்டு) இருந்த விலங்குகளையும் அவர் அப்புறப் படுத்துகிறார். இவரை நம்பி, இவரைக் கண்ணியப்படுத்தி, இவருக்கு உதவியும் செய்து, இவருடன் அருளப்பட்ட ஒளியையும் பின்பற்றுவோரே வெற்றி பெற்றோர்.
அல்குர்ஆன் 7:157
இத்தூதருக்கு (முஹம்மதுக்கு) கட்டுப்பட்டவர் அல்லாஹ்வுக்குக் கட்டுப்பட்டார்
அல்குர்ஆன் 4:80
? ஹஜ் செல்பவர் கண்டிப்பாக மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்ல வேண்டுமா? அங்கு 100 ரக்அத்கள் தொழ வேண்டுமா?
ஹஜ் செல்பவர் மதீனாவிற்கு - மஸ்ஜிதுந்நபவிக்குச் செல்ல வேண்டுமென நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அது கட்டாயம் என்றும் கூறவில்லை. ஒருவர் ஹஜ் செய்யச் சென்று எல்லா கடமைகளையும் நிறைவேற்றிய பின்னர் மதீனா செல்லாமல் ஊர் திரும்பினாலும் அவருடைய ஹஜ்ஜை அல்லாஹ் ஏற்றுக் கொள்வான். ஹஜ் கடமைகளில் மதீனா செல்வதும், நபிகளாரின் கப்ரை ஸியாரத் செய்வதும் இல்லை.
எனினும் ஒருவர் நன்மையை நாடி மஸ்ஜிதுன் நபவிக்குச் சென்று தொழுது வந்தால் அவர் மீது எந்தக் குற்றமுமில்லை. அவருக்கு மற்ற பள்ளியில் தொழும் தொழுகையை விடக் கூடுதல் நன்மை கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
மஸ்ஜிதுல் ஹராம், மஸ்ஜிதுந் நபவீ, மஸ்ஜிதுல் அக்ஸா ஆகிய மூன்று பள்ளிவாசல்களைத் தவிர வேறெந்தப் பள்ளிவாசலுக்கும் (அதிக நன்மையை எதிர்பார்த்து) பயணம் மேற்கொள்ளப்படாது.
நூல்: புகாரி 1189
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
எனது இந்த (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளியில் தொழுவது ஏனைய பள்ளிவாசல்களில் தொழும் ஆயிரம் தொழுகைகளை விடச் சிறந்ததாகும். ஆனால் (மக்காவிலுள்ள) மஸ்ஜிதுல் ஹராம் பள்ளிவாசலைத் தவிர.
நூல்: புகாரி 1190
மஸ்ஜிதுந்நபவியில் தொழுவது மற்ற பள்ளிகளில் தொழுவதை விட சிறந்தது என்பதால் எத்தனை ரக்அத்கள் வேண்டுமானாலும் தொழலாம். இத்தனை ரக்அத்கள் தொழ வேண்டும் என்ற எந்த நிபந்தனையும் இல்லை.
? தொழுகையில் விரலசைப்பதால் நம் கவனமும், மற்றவரின் கவனமும் சிதறாதா? தொழுகையில் இறையச்சத்துடன் தொழ வேண்டும் என்ற கட்டளை இதனால் கெடாதா?
அப்துல்லாஹ், நாகர்கோவில்
ஒரு அடிப்படை விஷயத்தைக் கவனத்தில் கொள்ளாமல் இக்கேள்வியைக் கேட்டுள்ளீர்கள். தொழுகை என்ற வணக்கத்தை எவ்வாறு நிறைவேற்ற வேண்டுமென்பதை நபி (ஸல்) அவர்கள் தான் நமக்கு கற்றுத் தந்துள்ளார்கள். மேலும், என்னை எவ்வாறு தொழக் கண்டீர்களோ அவ்வாறே தொழுங்கள் (புகாரி 631) என்று கூறியுள்ளார்கள். இவ்வாறு கூறிய நபி (ஸல்) அவர்கள் தொழும் போது விரலசைத்து தொழுதுள்ளார்கள். ...நபி (ஸல்) அவர்கள் தமது இடது முன் கையை இடது தொடை மீதும் மூட்டுக்கால் மீதும் வைத்தார்கள். தமது வலது முழங்கையை வலது தொடை மீது வைத்தார்கள். பின்பு தமது விரல்களில் இரண்டை மடக்கிக் கொண்டு (நடுவிரலையும் கட்டை விரலையும் இணைத்து) வளையம் போல் அமைத்து, ஆட்காட்டி விரலை உயர்த்தி அதன் மூலம் (யாரையோ) அழைப்பது போல் அவர்கள் அசைத்துக் கொண்டிருந்ததை நான் பார்த்தேன்.
அறிவிப்பவர்: வாயில் பின் ஹுஜ்ர் (ரலி)
நூல்: நஸயீ 879
இச்செய்தி தாரமீ 1323, அஹ்மத் 18115, இப்னு ஹுஸைமா பாகம் 1; பக்கம் 354, இப்னு ஹிப்பான் பாகம் 5; பக்கம் 170, தப்ரானீ கபீர் பாகம் 22; பக்கம் 35, பைஹகீ பாகம் 1; பக்கம் 310, ஸுனனுல் குப்ரா இமாம் நஸயீ பாகம் 1; பக்கம் 376, அல்முன்தகா இப்னுல் ஜாரூத் பாகம் 1; பக்கம் 62 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
எனவே தான் நாம் விரலசைத்து தொழ வேண்டுமென்று கூறுகிறோம்.
தொழுகையில் பேணுதல் இருக்க வேண்டுமென்று சுட்டிக் காட்டிய நபி (ஸல்) அவர்கள் தான் விரலசைத்துத் தொழுதுள்ளார்கள். தக்பீர் கட்டி நிற்பவர் திடீரென்று குனிந்து ருகூவுச் செய்வதால் கவனம் திரும்புகிறது என்று சொல்ல முடியுமா? அது போன்று தான், விரலசைப்பதால் கவனம் திரும்புகிறது என்று சொல்வதும் அமைந்துள்ளது. நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அது பற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டு விட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே என்று சொல்க்கொண்டனர். அவர்கல் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழுகவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி 5063
உங்களை விட அல்லாஹ்விற்கு அதிகம் அஞ்சுபவன் நானே! என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் விரலசைத்துத் தொழுதுள்ளதால் விரலசைத்துத் தொழுவது பேணுதலான ஒன்றே!
இறைவனுக்குச் செய்யும் வணக்கங்கள் மனிதனின் விருப்பு, வெறுப்பு அடிப்படையில் அமைந்தவை அல்ல! படைத்தவனின் விருப்பத்தின் அடிப்படையில் அமைந்தவையே! படைத்த இறைவன் தனது தூதர் மூலம் எப்படி தொழச் சொன்னானோ அதன்படி வணங்குவதே அல்லாஹ்வின் அன்பையும், கூலியையும் பெற்றுத் தரும் என்பதைக் கவனத்தில் கொள்க!
? அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்களின் உடல்கள் அழியாமல் இருக்கும் என்று சொல்கிறார்களே இது உண்மையா? இதற்கு ஆதாரம் உண்டா?
உங்கள் நாட்களில் சிறந்தது வெள்ளிக்கிழமையாகும். அந்நாளில் தான் ஆதம்(அலை) படைக்கப்பட்டார்கள். அந்நாளில் தான் அவர்கள் இறந்தார்கள். அந்நாளில் தான் ஸூர் ஊதப்படும். அந்நாளில் தான் மயக்கமுறுதலும் நடைபெறும். எனவே அந்நாளில் அதிகம் என் மீது ஸலவாத் சொல்லுங்கள். உங்களுடைய ஸலவாத் எனக்கு எடுத்துக் காட்டப்படுகிறது என்று நபி(ஸல்) அவர்கள் கூறிய போது, அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் (மண்ணோடு மண்ணாக) மக்கிப் போன பிறகு உங்களிடம் எப்படி எங்கள் ஸலவாத் எடுத்துக் காட்டப்படும்? என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி(ஸல்) அவர்கள், நபிமார்களின் உடலை பூமி திண்பதை விட்டும் அல்லாஹ் தடை செய்து விட்டான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஸ் பின் அவ்ஸ் (ரலி)
நூற்கள்: நஸயீ 1387, அபூதாவூத் 883, இப்னுமாஜா 1626, அஹ்மத் 15575
இறைத் தூதர்களின் உடல்களைத் தான் மண் சாப்பிடாது என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். ஆனால் இறைவழியில் கொல்லப்பட்டவர்களின் உடல்களை மண் சாப்பிடாது என்பதற்கு நபிகளாரிகள் நேரடிக் கூற்றில் எந்தச் சான்றும் இல்லை. ஆனால் சிலர் பின்வரும் வரலாற்றுச் சம்பவத்தை சான்றாகக் காட்டுகிறார்கள்.
உஹுதுப் போர் நடக்கவிருந்த போது என் தந்தை அன்றிரவு என்னை அழைத்து, நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் (நாளைய போரில்) முதலில் நான் தான் கொல்லப்படுவேன் எனக் கருதுகின்றேன். மேலும் எனக்குப் பின் நான் விட்டுச் செல்பவர்களில் நபி (ஸல்) அவர்களைத் தவிர மற்றவர்களில் உன்னைத் தவிர வேறு யாரையும் நான் மதிப்பிற்குரியவராகக் கருதவில்லை. என் மீது கடன் உள்ளது. அதை நீ அடைப்பதுடன் உனது சகோதரிகளிடம் நல்ல முறையில் நடந்து கொள்! என்றார். மறுநாள் (போரில்) அவர் தாம் முதலில் கொல்லப்பட்டார். அவருடன் இன்னொருவரும் அடக்கம் செய்யப்பட்டார். இன்னொருவருடன் அவரைக் கப்ரில் விட்டு வைப்பதை எனது மனம் விரும்பவில்லை. எனவே (அடக்கப்பட்ட) ஆறு மாதங்களுக்குப் பின்பு அவரது உடலை நான் கப்ரிலிருந்து வெளியிலெடுத்தேன். அப்போது அன்று தான் சற்று முன்னர் அடக்கம் செய்யப்பட்டவர் போல - அவரது காதைத் தவிர - உடம்பு அப்படியே இருந்தது.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: புகாரி (1351)
அம்ர் பின் ஜமூஹ்(ரலி), அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) ஆகியோரின் கப்ரை நீரோட்டம் அரித்து விட்டது என்ற செய்தி கிடைத்தது. அவ்விருவருடைய கப்ர் நீரோடைக்குப் பக்கத்தில் அமைந்திருந்தது. அவ்விருவரும் ஒரே கப்ரில் அடக்கம் செய்யப்பட்டிருந்தனர். அவ்விருவரும் உஹத் போரில் உயிர் தியாகிகளாவார்கள். எனவே அவ்விருவரையும் வேறு இடத்தில் அடக்கம் செய்வதற்குத் தோண்டிய போது நேற்று இறந்தவர்களைப் போன்று எந்த மாற்றமும் (சேதமும்) இல்லாதவர்களாகப் பெற்றோம். அவ்விருவரில் ஒருவர் காயம்பட்ட நிலையில் காயத்தின் மீது கை வைத்த நிலையில் அடக்கம் செய்யப்பட்டிருந்தார். (இப்போதும்) அதே போன்றே இருந்தார். காயத்தில் வைக்கப்பட்ட கையை அகற்றிய போது திரும்பவும் அதே இடத்திற்கு அந்தக் கை சென்றது. உஹுத் போருக்கும் இன்று தோண்டப்பட்ட நாளுக்கும் இடைப்பட்ட கால அளவு நாற்பத்தி ஆறு வருடங்களாகும்.
அறிவிப்பவர்: அப்துர் ரஹ்மான் பின் அபீ ஸஃஸா
நூல்: முஅத்தா (893)
இந்த இரண்டு செய்திகளும் போர்க்களத்தில் கொல்லப்பட்டவர்களின் உடல் பல வருடங்கள் கழிந்த பின்பும் அப்படியே இருந்ததைக் கூறுகிறது.
(புகாரியின் அறிவிப்பும், முஅத்தாவின் அறிவிப்பும் சற்று முரண்பட்டது போன்று இடம் பெற்றுள்ளது. ஆறு மாதங்களுக்குப் பின் தனி இடத்தில் அப்துல்லாஹ் (ரலி) அவர்களை அடக்கம் செய்ததாக அவர்களது மகன் ஜாபிர் (ரலி) அறிவிக்கிறார்கள். இது புகாரியில் இடம் பெற்றுள்ளது. ஆனால் முஅத்தாவில் நாற்பத்தி ஆறு வருடங்களுக்குப் பிறகு அப்துல்லாஹ் (ரலி), அம்ர் பின் ஜமூஹ் (ரலி) ஆகியோரின் உடல் ஒரே கப்ரில் இருந்ததாகக் கூறப்படுகிறது. ஜாபிர் அவர்களால் தனியாக அடக்கம் செய்யப்பட்ட அவரது தந்தையின் உடல் எப்படி ஒரே கப்ரில் வந்தது? என்ற கேள்வி எழலாம். இதற்கு ஹதீஸ் கலை மேதை ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அளிக்கும் விளக்கம் ஏற்புடையதாக இருக்கிறது. ஜாபிர் (ரலி) அவர்கள் தம் தந்தையின் உடலைத் தோண்டி எடுத்து, பக்கத்தில் அடக்கம் செய்திருக்க வேண்டும். நீரோட்டத்தால் கப்ர் அரிக்கப்பட்டு இரு கப்ருகளும் ஒன்றாகி இருவரின் உடலும் ஒரே கப்ரில் இருப்பதைப் போன்று அமைந்திருக்கும்.)
சில வகை மண்கள் மனித உடல்களைத் திண்பதற்கு சற்றுக் கூடுதல் காலம் எடுத்துக் கொண்டிருக்கலாம். அதனால் அவர்களின் உடல்கள் அவ்வாறு இருந்திருக்கும். அவர்களின் உடல்கள் இன்று வரையில் அவ்வாறு இருக்கும் என்று நாம் கூற முடியாது. அதற்கு எந்தச் சான்றும் இல்லை. இறைத் தூதர்களின் உடல்களை மட்டும் தான் மண் சாப்பிடாது என்று நபியவர்கள் கூறியிருப்பதால் இவ்வாறே நாம் கருத வேண்டும்.
அதே நேரத்தில் அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டவர்கள் சொர்க்கத்தில் பறவைகள் வடிவில் சுற்றித் திரிவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், (நபியே!) அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என நீர் எண்ண வேண்டாம். மாறாக, (அவர்கள்) உயிருடன் உள்ளனர்; தம் இறைவனிடம் (நெருக்கமாக) உள்ளனர்; உணவளிக்கப் பெறுகின்றனர் (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டு விட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:
அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறை அரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்து விட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள், நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள் தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக் கொண்டிருக்கிறோமே! என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக்
நூல்: முஸ்லிம் 3834
ஆயத்துல் குர்ஸீ சிறப்புகள்
யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்
திருக்குர்ஆனின் அத்தியாயங்கள், அதில் இடம் பெறும் வசனங்கள் தொடர்பாகக் கூறப்படும் சிறப்புகள் பற்றி, அவை ஆதாரப்பூர்வமானதா? பலவீனமானதா என்பதை நாம் பார்த்து வருகிறோம். இத்தொடரில் திருக்குர்ஆனின் இரண்டாவது அத்தியாயத்தில் 255ஆவது வசனமாக இடம் பெறும் ஆயத்துல் குர்ஸி தொடர்பாக வந்துள்ள பலவீனமான செய்திகளை ஆய்வு செய்துள்ளோம்.
வசனங்களின் தலையானது?
ஒவ்வொரு பொருளுக்கு ஒரு தலைமை உள்ளது. திருக்குர்ஆனின் தலைமையான அத்தியாயம் பகரா ஆகும். மேலும் இந்த அத்தியாயத்தில் திருக்குர்ஆனின் வசனங்களின் தலைமை வசனம் உள்ளது. அதுதான் ஆயத்துல் குர்ஸியாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: திர்மிதி 2803
இந்தச் செய்தி ஹாகிம் (பாகம்: 2, பக்கம் 285, 286), முஸன்னப் இப்னு அபதுர் ரஸ்ஸாக் (பாகம்: 3, பக்கம் 376) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் ஹகீம் பின் ஜுபைர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் அந்த ஹதீஸின் கீழே ஹகீம் பின் ஜுபைர் என்பவரை ஷுஅபா அவர்கள் விமர்சித்து அவர் பலவீனமானவர் என்று கூறியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இமாம் அஹ்மத் அவர்கள் இவர் பலவீனமானவர், குளறுபடி செய்பவர் என்றும், இப்னு மயீன் அவர்கள் இவர் மதிப்பற்றவர் என்றும், ஷுஅபாவிடம் இவருடைய ஹதீஸ்களைப் பற்றி கேட்ட போது நான் நரகத்தைப் பயப்படுகிறேன் என்றும், இப்னு அபீ ஹாத்திம் அவர்கள் இவர் ஹதீஸ் துறையில் பலவீனமானவர், நிராகரிக்கப்பட்டவர் என்றும், இமாம் நஸயீ அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும், இமாம் தாரகுத்னீ அவர்கள் இவர் கைவிடப்பட்டவர் என்றும், இமாம் அபூதாவூத் அவர்கள் இவர் பலவீனமானவர் என்றும் விமர்சனம் செய்திருக்கிறார்கள்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம்: 2, பக்கம்: 383)
எனவே இந்தச் செய்தியை நாம் ஆதாரத்திற்கு எடுத்துக் கொள்ள முடியாது.
பாதுகாப்பு தரும் வசனம்?
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஹாமீம் அல் முஃமீன் என்ற அத்தியாயத்தை இலைஹில் மஸீர் வரை காலையில் யார் ஓதுவாரோ, மேலும் ஆயத்துல் குர்ஸியையும் காலை நேரத்தில் ஓதுவாரோ அவருக்கு மாலை நேரம் இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார். யார் மாலை நேரத்தில் இவ்விரண்டையும் ஓதுவாரோ அவர் காலை வரை இவ்விரு ஆயத்துகளின் காரணத்தால் பாதுகாக்கப்படுவார்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: திர்மிதி 2804
இந்த ஹதீஸ் தாரமி (3252), ஷுஅபுல் ஈமான் (பாகம்: 2, பக்கம்: 483) ஷரஹ் சுன்னா (பாகம்: 2, பக்கம்: 349) ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது.
இந்த செய்தியைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் (இச் செய்தியில் இடம் பெறும்) அப்துர்ரஹ்மான் பின் அபீ பக்ர் அல்முலைக்கி என்பவரை அவரின் நினைவாற்றல் குறைவின் காரணத்தால் ஹதீஸ் கலை அறிஞர்களில் சிலர் விமர்சித்துள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
இரண்டாவது இதே ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி இவர் தகுதியற்றவர் என்றும், இமாம் இப்னு மயீன் அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும், இமாம் அஹ்மத் அவர்கள் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்றும், இமாம் நஸயீ அவர்கள் கைவிடப்பட்டவர் என்று விமர்சித்துள்ளனர்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 4, பக்கம்: 263
வீடுகளைப் பாதுகாக்கும் வசனம்?
யார் பகரா அத்தியாயத்தின் ஆரம்பத்தில் உள்ள நான்கு வசனங்களையும் ஆயத்துல் குர்ஸியையும் அதற்கு அடுத்து வரும் இரண்டு வசனங்களையும் பகராவின் இறுதியில் உள்ள மூன்று வசனங்களையும் ஓதுவாரோ அவரையும் அவரது குடும்பத்தினரையும் ஷைத்தானோ அல்லது அவன் வெறுக்கும் எந்தப் பொருளும் அவனை நெருங்காது. மேலும் இவற்றை பைத்தியக்காரன் மீது ஓதினால் அவன் அதிலிருந்து விடுதலையாகாமல் இருக்க மாட்டான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அறிவிக்கிறார்கள்.
நூல்: தாரமி 3249, 3248
ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்களின் சொந்தக் கருத்தாக இடம் பெற்றுள்ள இந்த ஹதீஸை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
11.02.2010. 16:21
பிப்ரவரி 2008 தீன்குலப் பெண்மணி
சமத்துவப் பொங்கல்
தை மாதத்தின் முதல் நாள் பொங்கல் தினமாக தமிழகத்தில் கொண்டாடப்படுகிறது. இந்த நாளை சமத்துவப் பொங்கல் தினமாகக் கொண்டாட வேண்டும் என்று முதல்வர் அறிவுறுத்தியதன் பேரில் பல கட்சியினர் இதை சமத்துவப் பொங்கலாகக் கொண்டாடுகின்றனர். இதில் அனைத்து மதத்தினரும் கலந்து கொண்டு விழாவை சிறப்பிக்கின்றனர்.
பொங்கல் என்பது தமிழர் திருவிழா! எனவே தமிழர்கள் அனைவரும் இந்த விழாவில் கலந்து கொள்ள வேண்டும் என்று சொல்லப்பட்டாலும் இது ஒட்டு மொத்த தமிழர்களின் விழாவாகக் கொண்டாடப்படுவதில்லை. இந்து மதத்தின் அடிப்படையில் சாமி கும்பிட்டுத் தான் இந்த விழா காலம் காலமாகக் கொண்டாடப்படுகிறது.
இந்த விழாவில் ஓரிறைக் கொள்கையைக் கடைப்பிடிக்கும் எவரும் கலந்து கொள்ள முடியாது. ஏனெனில் இந்த விழாவில், இறைவனால் மன்னிக்க முடியாத மாபெரும் பாவமான இணை வைப்பு நடைபெறுகிறது. இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்து சிதைக்கப்படுகிறது. எனவே இதில் உண்மையான முஸ்லிம் எவனும் கலந்து கொள்ள மாட்டான்.
அதே நேரத்தில் இந்த சமத்துவப் பெங்கலில் கலந்து கொள்ளாததால் தமிழ் மக்களுடன் பகைமை உணர்வு ஏற்படுவதில்லை. இந்த சமத்துவப் பொங்கல் இல்லாத காலகட்டத்திலும் முஸ்லிம்கள், கிறித்தவர்கள், இந்துக்கள் ஒற்றுமையுடன் தான் இருந்து வந்துள்ளனர்.
சங்பரிவார் கும்பல் தான் மத நல்லிணக்கத்தைக் கெடுக்கும் பல விழாக்களைக் கொண்டு வந்து மத மோதல்களை ஏற்படுத்தி, குறிப்பாக முஸ்லிம்களைக் கொன்று குவிக்கும் காரியத்தில் ஈடுபட்டு வருகின்றனர். இவர்களை ஒடுக்கிவிட்டால் தமிழகத்தில் மத நல்லிணக்கம் உறுதியாக ஏற்படும்.
மேலும் அனைவரும் ஒற்றுமையுடன் வாழ்வதற்கு அவரவர் விரும்பும் மதத்தில், அவர் விரும்பியபடி நடக்க யாரும் இடையூறு செய்யாமல் இருந்தாலே மதக் கலவரங்கள் நடைபெறாமல் தடுத்து விடலாம். அடுத்தவர்களின் தெய்வங்களை ஏசுவது, அருவருக்கத்தக்க வார்த்தைகளில் விமர்சிப்பது போன்ற காரியங்களைத் தடுத்தால் மத நல்லிணக்கம் ஏற்படும்.
அதை விடுத்து அடுத்தவர்களின் மத விவகாரங்களில் தலையிடும் வகையில் விழாக்களில் கலந்து கொள்வதை கட்டாயப்படுத்துவதோ ஆர்வமூட்டுவதோ நன்மையைத் தராது.
இஸ்லாம் கடுமையாக எதிர்க்கும் இணை வைப்புக் கொள்கையை நடைமுறைப்படுத்தும் இடத்தில் அதை அங்கீகரிப்பதைப் போன்று சில மவ்லவிகள் கலந்து கொண்டது, இவர்கள் இஸ்லாத்தை எவ்வளவு அறிந்து வைத்திருக்கிறார்கள், ஓரிறைக் கொள்கையில் எவ்வளவு பற்றுள்ளவர்களாக இருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
இதை விடவும் கொடுமையாக பிள்ளையார் ஊர்வலம் வரும் போது சில முஸ்லிம் பெயர் தாங்கிகள் அந்தப் பிள்ளையாரை வரவேற்பதும், அதற்கு மாலையிடுவதும் அதைச் சுமந்து வருபவர்களைக் கவுரப்படுத்துவதும் ஓரிறைக் கொள்கையைக் குழிதோண்டிப் புதைக்கும் செயலாகும்.
இதைப் போன்று ஓரிறைக் கொள்கையை இல்லாமலாக்கும் காரியத்தைச் செய்யும் தலைவர்கள், மவ்லவிகள் ஆகியோரை இந்தச் சமுதாயம் இனம் கண்டு புறக்கணிக்க வேண்டும். ஓரிறைக் கொள்கையில் எந்நிலையிலும் யாரிடமும் சமரசம் இல்லை என்பதைச் சொல்லிலும் செயலிலும் இவ்வுலகிற்கு எடுத்துக் காட்ட வேண்டும்.
நபிகளாரின் நற்குணங்கள்
பணிவு
அபூஹாரிஸ்
மனிதனிடம் பணமோ, பதவியோ, கல்வியோ கூடுதலாக வரும் போது அவர்களிடம் கர்வமும் ஆணவமும் சேர்ந்தே வந்துவிடுகிறது. இதனால் அவர்களிடம் மக்கள் நெருங்குவதற்கும் பேசுவதற்கும் பயப்படும் நிலை ஏற்படுகிறது. ஆனால் நபி (ஸல்) அவர்களுக்கு இவ்வுலகத்தின் இறுதி நாள் வரை இறைத் தூதராக இருக்கும் தகுதியை இறைவன் வழங்கியுள்ளான். மேலும் மனிதனால் செய்ய முடியாத பல அற்புதங்களையும் இறைவனின் உதவியால் செய்து காட்டியுள்ளார்கள். சிறந்த கல்வியாற்றலையும் பெற்றிருந்தார்கள். ஆனால் அவர்களிடம் துளியும் கர்வமோ ஆணவமோ இருந்ததில்லை. மேலும் அதை வெளிப்படுத்தும் வண்ணம் தங்கள் செயலையும் அமைத்துக் கொள்ளவில்லை.
அன்றைய அரபு நாட்டில் மிருகத்தை விடக் கேவலமாக நடத்தப்பட்டவர்கள் அடிமைகள். அவர்களை ஒரு மனிதானாகக் கூட மதிப்பதும் இல்லை. அவர்களிடம் அன்பு காட்டுவதும் இல்லை. சாதாரணமான மனிதர்களே மதிக்காத அடிமைகள் கூட நபிகளாரிடம் கைகோர்த்துச் செல்ல முடியும் என்ற அளவிற்கு பணிவு நிறைந்தவர்களாக நபிகளார் திகழ்ந்தார்கள்.
மதீனாவாசிகன் (சாதாரண) அடிமைப் பெண்கல் ஒருத்தி கூட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கன் கையைப் பற்றிய வண்ணம் (தன் வாழ்க்கைத் தேவை நிமித்தமாக) தான் நாடிய இடத்திற்கு அவர்களை அழைத்துச் செல்ல முடியும். அந்த அளவிற்கு மிக எமையானவர்களாகவும் சமூக சேவை புரிபவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் திகழ்ந்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (6072)
தன்னிடம் பேசுபவர்களிடம் பெரிய தலைவர்களைப் போன்று, மன்னர்களைப் போன்று கர்வத்தோடு பேசியதில்லை. சாதாரண மனிதரைப் போன்றே அவர்களிடம் பேசியுள்ளார்கள். மேலும் தன்னை மன்னரைப் போன்று நினைத்து பயப்பட வேண்டாமெனவும் கூறியுள்ளார்கள்.
ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து பேசினார். அப்போது அவரது தோள் புஜங்கள் நடுங்கின. இதைக் கண்ட நபி (ஸல்) அவர்கள், சாதரணமாக இரு! நான் மன்னன் அல்லன். உப்புக் கண்டத்தை சாப்பிடும் பெண்ணின் பிள்ளை தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூமஸ்வூத் (ரலி)
நூல்: இப்னுமாஜா (3303)
பெரிய மனிதர்களாகத் திகழ்பவர்கள் அவர்களுக்குப் பெரிய அளவில் விருந்து கொடுத்தால் மட்டுமே கலந்து கொள்வார்கள். பெரிய அளவில் விழாக்களும் ஆடம்பர விளம்பரங்களும் இருந்தால் மட்டுமே கலந்து கொள்ளும் தலைவர்களுக்கு மத்தியில், பெரிதாக இருந்தாலும் சிறிதாக இருந்தாலும் அன்பாகக் கொடுக்கும் அனைத்தையும் ஏற்றுக் கொள்பவர்களாக நபிகளார் திகழ்ந்துள்ளார்கள்.
ஓர் ஆட்டின் விலாவை அல்லது காலை அன்பப்பாகப் பெற்றுக் கொள்ளும்படி நான் அழைக்கப்பட்டாலும் நான் ஏற்றுக் கொள்வேன். எனக்கு ஓர் ஆட்டின் விலா அல்லது கால் அன்பப்பாகத் தரப்பட்டாலும் சரி! நான் அதைப் பெற்றுக் கொள்வேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்: புகாரி (2568)
வயதில் சிறியவர்களாக இருந்தாலும் அவர்களிடம் அன்புடன் பழகுபவர்களாகவும் அச்சிறுவர்களுக்கு இவர்களே முந்திக் கொண்டு ஸலாம் கூறுபவர்களாகவும் இருந்துள்ளார்கள். தம்மை விடச் சிறியவர்களுக்கு ஸலாம் கூறுவது தமக்கு மரியாதைக் குறைவு என்று எண்ணுபவர்கள் நபிகளாரின் நடைமுறையை சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
அனஸ் பின் மாக் (ர) அவர்கள் சிறுவர்களைக் கடந்து சென்ற போது அவர்களுக்கு சலாம் சொன்னார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு தான் செய்து வந்தார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸாபித் அல்புனானீ
நூல்: புகாரி (6247)
மேலும் சிறுவர்களுடன் சேர்ந்து விளையாடி அவர்களை மகிழ்விப்பவர்களாகவும் நபி (ஸல்) அவர்கள் இருந்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்கள் மக்கலேயே மிகவும் நற்குணமுடையவராக விளங்கினார்கள். எனக்கு அபூஉமைர் என்றழைக்கப்பட்ட ஒரு தம்பி இருந்தான். அப்போது அவன் பால்குடி மறக்க வைக்கப்பட்ட பருவத்தில் இருந்தான் என்றே எண்ணுகிறன். நபி (ஸல்) அவர்கள் (எம் வீட்டிற்கு வந்தால்), அபூஉமைரே! பாடும் உன் சின்னக் குருவி என்ன செய்கிறது? என்று கேட்பார்கள். அவன் அப்பறவையுடன் விளையாடிக் கொண்டிருப்பான். சில வேளை நபி (ஸல்) அவர்கள் எங்கள் வீட்டில் இருக்கும் போது தொழுகைக்குத் தயாராகி விடுவார்கள். தாம் அமர்ந்திருக்கும் விரிப்பைச் சுத்தம் செய்யுமாறு உத்தரவிடுவார்கள். அவ்வாறே அது கூட்டி, சுத்தம் செய்யப்பட்டுத் தண்ணீர் தெக்கப்படும். பிறகு அதன் மீது நிற்பார்கள். நாங்களும் அவர்களுக்குப் பின்னால் நிற்போம். அப்போது அவர்கள் எங்களுக்குத் தொழுவிப்பார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (6203)
தம்மிடம் வேலை செய்பவர்களிடமும் பணிவுடன் நடந்துள்ளார்கள். அவர்களிடம் தாம் மிகப் பெரிய தலைவர் என்று ஆணவத்துடன் நடந்து கொண்டதில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமக்குப் பணியாள் எவரும் இல்லாத நிலையில் மதீனாவுக்கு வந்தார்கள். ஆகவே, அபூதல்ஹா (ரலி) அவர்கள் என் கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரிடம் அழைத்துச் சென்று, அல்லாஹ்வின் தூதரே! அனஸ் புத்திசாயான சிறுவன். அவன் தங்களுக்கு ஊழியம் செய்யட்டும் என்று கூறினார்கள். ஆகவே, நான் நபி (ஸல்) அவர்களுக்குப் பிரயாணத்திலும் ஊரிருக்கும் போதும் பணிவிடைகள் செய்து வந்தேன். நான் செய்த எந்தச் செய்கைக்காகவும், இதை ஏன் இப்படிச் செய்தாய்? என்றோ, நான் செய்யாத எந்த விஷயத்திற்காகவும், ஏன் இதை நீ இப்படிச் செய்யவில்லை? என்றோ என்னிடம் நபி (ஸல்) அவர்கள் கேட்டதேயில்லை.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2768)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்களிலேயே மிக அழகிய நற்குணம் கொண்டவராகத் திகழ்ந்தார்கள். அவர்கள் ஒரு நாள் அலுவல் ஒன்றுக்காக என்னை அனுப்பினார்கள். அப்போது நான் அல்லாஹ்வின் மீதாணையாக! நான் போக மாட்டேன் என்று சொன்னேன். ஆனால், என் மனத்தில் நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட அந்த அலுவலுக்குச் செல்ல வேண்டும் என்றே இருந்தது.
நான் புறப்பட்டுச் சென்ற போது, கடைத் தெருவில் விளையாடிக் கொண்டிருந்த சிறுவர்கள் சிலரைக் கடந்து சென்றேன். (அவர்களுடன் சேர்ந்து நானும் விளையாடலானேன்.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்குப் பின்பக்கம் (வந்து) எனது பிடரியைப் பிடித்தார்கள். அவர்களை நான் பார்த்த போது அவர்கள் சிரித்துக் கொண்டிருந்தார்கள். அருமை அனஸே! நான் உத்தரவிட்ட இடத்திற்கு நீ சென்றாயா? என்று கேட்டார்கள். நான், ஆம்! செல்கிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (4626)
தன்னிடம் கோபப்பட்டவர்களிடம் கூட கோபத்துடன் திட்டாமல், பணிவுடன் எந்தப் பதிலும் சொல்லாமல் தன் மவுனத்தாலே அவர்களைச் சிந்திக்கச் செய்தார்கள்.
ஓர் அடக்கத்தலம் அருகில் அழுது கொண்டிருந்த ஒரு பெண்ணை நபி (ஸல்) அவர்கள் கடந்து சென்றபோது, அல்லாஹ்வை அஞ்சிக் கொள்! பொறுமையாக இரு! என்றார்கள். அதற்கு அப்பெண், என்னை விட்டு அகன்று செல்வீராக! எனக்கேற்பட்ட இத்துன்பம் உமக்கேற்படவில்லை என்று - நபி (ஸல்) அவர்கள் யாரென அறியாமல் - கூறினாள். அவர்கள் நபிகளார் எனக் கூறப்பட்டதும் அப்பெண் நபி (ஸல்) அவர்கள் இருக்குமிடத்திற்கு வந்தாள். - அங்கே நபியவர்களுக்குக் காவலாளிகள் எவரும் இருக்கவில்லை - நான் உங்களை (யாரென) அறியவில்லை என நபி (ஸல்) அவர்களிடம் கூறினாள். பொறுமை என்பது, துன்பம் ஏற்பட்டவுடன் (கைக் கொள்வது தான்) என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (1283)
பெரிய தலைவர்களாக இருப்பவர்கள் தங்கள் ஆடைகள், மற்றும் நடை பாவனைகளிலேயே தான் பெரிய தலைவர் என்று காட்டி விடுவார்கள். தான் வரும் போது முன்னால் பத்து பேர், பின்னால் பத்து பேர், குடை பிடிப்பதற்கு சில பேர் என்று ஒரு கலக்கலாகத் தான் வருவார்கள். இவற்றைக் கவனிக்கும் போதே வருபவர்களில் யார் தலைவர் என்று நாம் அடையாளம் கண்டு விடலாம். சிலருக்கு அவரது ஆளுர கட்அவுட்டைப் பார்த்து அவரை அடையாளம் தெரிந்து விடலாம். இவை எல்லாம் பெரிய தலைவர்களுக்கு மட்டும் இல்லை. குட்டித் தலைவர்களுக்குக் கூட இன்று கடைப்பிடிக்கப்படுகிறது. ஆனால் உலகம் அழியும் வரை இறுதித் தூதராக உள்ள நபிகளாரைப் பார்க்கும் வரும் அந்நியர் எவரும் அவர்களின் ஆடை, நடை, உடை, உறைவிடம் ஆகியவற்றைப் பார்த்துக் கண்டுபிடிக்க முடியாத அளவுக்கு மற்றவர்களைப் போன்று எளிமையாகவே காட்சியளித்துள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலில் அமர்ந்திருந்த போது ஒட்டகத்தில் ஒரு மனிதர் வந்து பள்ளியில் ஒட்டகத்தைப் படுக்க வைத்து அதை மடக்கிக் கட்டினார். பிறகு மக்களிடம் உங்களில் முஹம்மது யார்? என்று கேட்டார். - அப்போது நபி (ஸல்) அவர்கள் மக்களிடையே சாய்ந்து அமர்ந்திருந்தார்கள் - இதோ சாய்ந்து அமர்ந்திருக்கும் இந்த வெள்ளை நிற மனிதர் தாம் என்று நாங்கள் சொன்னோம். உடனே அம்மனிதர் நபி (ஸல்) அவர்களை அப்துல் முத்தலிபின் புதல்வரே! என்றழைத்தார். அதற்கு நபியவர்கள் என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அப்போது அம்மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் நான் உங்களிடம் சில கேள்விகள் கேட்கப் போகிறேன். சில கடினமான கேள்விகளையும் நான் கேட்கப் போகிறேன். அதற்கு நீங்கள் என் மீது கோபப்பட்டுவிடக் கூடாது என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உம் மனதில் பட்டதைக் கேளும்! என்றார்கள். உடனே அம்மனிதர் உம்முடைய, உம் முன்னோருடைய இரட்சகன் மீது ஆணையாகக் கேட்கிறேன்; அல்லாஹ்தான் உம்மை மனித இனம் முழுவதற்கும் தூதராக அனுப்பினானா? என்றார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள். அடுத்து அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் இரவிலும் பகலிலுமாக (தினமும்) ஐவேளைத் தொழுகைளைத் தொழுது வர வேண்டுமென்று உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கும் நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள். அவர் அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்; அல்லாஹ்தான் ஒவ்வொரு ஆண்டிலும் (குறிப்பிட்ட) இந்த மாதத்தில் நோன்பு நோற்க வேண்டும் என்று உமக்குக் கட்டளையிட்டிருக்கிறானா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள். அவர், அல்லாஹ்வின் பொருட்டால் உம்மிடம் நான் கேட்கிறேன்: அல்லாஹ்தான் எங்கள் செல்வந்தர்களிடமிருந்து இந்த (ஸகாத் எனும்) தர்மத்தைப் பெற்று எங்கள் வறியோரிடையே விநியோகிக்குமாறு உமக்குக் கட்டளையிட்டிருக்கின்றானா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், ஆம், அல்லாஹ் சாட்சியாக! என்றார்கள்.
அம்மனிதர் நீங்கள் (இறைவனிடமிருந்து) கொண்டு வந்தவற்றை நான் நம்பி ஏற்கிறேன் என்று கூறிவிட்டு நான், எனது கூட்டத்தார்களில் இங்கு வராமல் இருப்பவர்களின் தூதுவனாவேன்; நான் தான் பனூ சஅத் பின் பக்ர் குலத்தாரின் சகோதரன் ளிமாம் பின் ஸஅலபா என்றும் கூறினார்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (63)
நபி (ஸல்) அவர்களிடம் எனது நோன்பு பற்றித் தெரிவிக்கப்பட்டது. உடனே அவர்கள் என்னிடம் வந்தார்கள். அவர்களுக்காக ஈச்ச நார் அடைக்கப்பட்ட தோல் தலையணையை எடுத்துப் போட்டேன். அவர்கள் தரையில் அமர்ந்தார்கள். எனக்கும் அவர்களுக்கும் இடையே அந்தத் தலையணை கிடந்தது. ஒவ்வொரு மாதமும் மூன்று நாட்கள் (நோன்பு நோற்பது) உமக்குப் போதாதா? என்று கேட்டார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (இதைவிட அதிகமாக நோற்க அனுமதியுங்கள்!) என்றேன். அவர்கள் ஐந்து நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன். ஒன்பது நாட்கள்! என்றார்கள். அல்லாஹ்வின் தூதரே...! என்றேன். பதினொரு நாட்கள்! என்றார்கள். பிறகு, தாவூத் நபி (அலை) அவர்களின் நோன்புக்கு மேல் (சிறப்புடையதாக) எந்த நோன்பும் இல்லை. அது வருடத்தின் பாதி நாட்களாகும்! எனவே, ஒரு நாள் விட்டு ஒரு நாள் நோன்பு நோற்பீராக! என்றார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி)
நூல்: புகாரி (1980)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் ஈச்சம் பாயில் (அமர்ந்து) இருந்தார்கள். அவர்களுக்கும் அந்தப் பாய்க்குமிடையே (விரிப்பு) எதுவும் இருக்கவில்லை. அவர்களுடைய தலைக்குக் கீழே ஈச்ச நார்கள் நிரப்பப்பட்ட தோல் தலையணை ஒன்றிருந்தது. அவர்கன் கால்களுக்கருகில் கருவேலை இலைகள் குவிக்கப்பட்டிருந்தன. அவர்கன் தலைமாட்டில் பதனிடப்படாத தோல் தொங்கிக் கொண்டிருந்தது. அப்போது அவர்கன் விலாப்புறத்தில் ஈச்சம்பாயின் சுவடு (பதிந்து) இருப்பதைக் கண்டு அழுது விட்டேன்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், ஏன் அழுகிறீர்கள்? என்றார்கள். அதற்கு நான், அல்லாஹ்வின் தூதரே! (பைஸாந்திய மற்றும் பாரசீக மன்னர்களான) சீசரும் குஸ்ரூவும் வளமுடன் இருந்து வருகின்றனர். தாங்களோ அல்லாஹ்வின் தூதராயிற்றே! என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்களுக்கு இம்மையும் நமக்கு மறுமையும் இருப்பதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (4913)
வீட்டு வேலைகளைச் செய்வதைக் கூட கவுரவக் குறைச்சல் என்று சிலர் எண்ணுவதுண்டு. வீட்டில் கால் மேல் கால் போட்டு, வேலை செய்யாமல் இருப்பதே மரியாதை என்றும், மனைவி செய்யும் வேலைகளில் உதவி செய்வது மரியாதைக் குறைவு என்றும் நினைப்பவர்கள் உள்ளனர். இவர்கள் அகில உலகின் இறுதித் தூதர் நபி (ஸல்) அவர்களின் பணிவையும் அடக்கமான செயல்களையும் பார்க்கட்டும்.
நபி (ஸல்) அவர்கள் வீட்டில் என்ன (வேலை) செய்து வந்தார்கள்? என்று நான் ஆயிஷா (ர) அவர்கடம் கேட்டேன். அதற்கு ஆயிஷா (ர) அவர்கள், தம் வீட்டாருக்காக (வீட்டு) வேலைகளைச் செய்து வந்தார்கள். தொழுகை நேரம் வந்ததும் (வேலைகளை விட்டு விட்டு) தொழுகைக்குப் புறப்பட்டு விடுவார்கள் என்று பதிலத்தார்கள்.
அறிவிப்பவர்: அஸ்வத் பின் யஸீத் அந்நகஈ
நூல்: புகாரி (676)
வளரும் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாமிய ஒழுங்குகள்
அல்லாஹ்வை நேசிப்போம்
ஈமானைப் பாதுகாப்போம்
அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி
இந்த உலகத்தில் வாழும் போது, ஒவ்வொரு முஃமினுடைய உள்ளமும் மூன்று விதமாக அல்லாஹ்வைப் பற்றி நினைக்கிறது. அவனது உள்ளம் அல்லாஹ்வைப் பற்றிய அச்சத்தை உணருவது ஒரு நிலை. அல்லாஹ் தனக்கு சொர்க்கத்தைத் தர வேண்டும் என்று இறைவனின் கருணையை எதிர்பார்ப்பது இன்னொரு நிலை. அல்லாஹ்வை நேசிப்பது மற்றொரு நிலை. இந்த மூன்று நிலைகளில், நாம் இறந்து, சொர்க்கத்தை அடைந்து விட்டால் அல்லாஹ்வை அஞ்சுவது மற்றும் அவனது சொர்க்கத்தை எதிர்பார்ப்பது ஆகிய இரு நிலைகள் நமது உள்ளத்தை விட்டு அகன்று விடும். ஏனென்றால் சொர்க்கவாசியான பிறகு இறைவனுக்குப் பயப்படும் சூழ்நிலை இருக்காது. சொர்க்கத்தை அடைந்த பின்னர், சொர்க்கத்தை அடைய வேண்டும் என்ற ஆசையும் பூர்த்தியாகி விடுகின்றது.
ஆனால் இந்த உலகத்தில் வாழும் போதும் சரி! மறு உலகத்தில் சொர்க்கத்திற்குச் சென்ற பிறகும் சரி! எப்போதும் நம் உள்ளத்தை விட்டு நீங்காமல் என்றும் நிலைத்திருக்கக் கூடியது அல்லாஹ்வின் நேசம் மட்டும் தான். இதைப் பற்றி இந்தக் கட்டுரையில் விரிவாகப் பார்க்கவிருக்கிறோம்.
தன்னை முஸ்லிம் என்று சொல்லிக் கொள்பவர்களில் ஏராளமானோர் அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை உணராதவர்களாகத் தான் இருக்கிறார்கள். எனவே தான், தன் தாய், தந்தை, நண்பர்கள், இன்ன பிற உறவினர்களை விரும்புவது போல் கூட அல்லாஹ்வை அவர்கள் நேசிப்பதில்லை. தொழுகைக்கு வருபவர்களில் உண்மையில் அல்லாஹ்வின் மீது உள்ள நேசத்தால் தொழக்கூடியவர்கள் எத்தனை பேர்? அல்லாஹ்வை விரும்பியதால் மனப்பூர்வமாக இஸ்லாத்தை ஏற்றுள்ளவர்கள் எத்தனை பேர்? இந்த நேசத்தை நம் மனம் சுவைக்காத காரணத்தினால் தான் மக்களுக்கு இஸ்லாமிய மார்க்கம் சுமையாகத் தெரிகிறது. இறைவனை வழிபடுவது மலையாகத் தெரிகிறது. அவனுடைய நேசத்திற்கு ஒரு பெரும் பகுதியை நம் உள்ளத்தில் ஒதுக்கியிருந்தால் தொழுவதே நமக்கு இன்பமாக மாறியிருக்கும். நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வை நேசித்தக் காரணத்தினால் தொழுவது அவர்களுக்கு இன்பத்தைத் தரக் கூடியதாக இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: எனது கண் குளிர்ச்சி தொழுகையில் வைக்கப்பட்டுள்ளது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: நஸயீ (3879)
அல்லாஹ்வின் நேசம் ஒருவரை நல்ல காரியங்களைச் செய்யத் தூண்டும் என்று பின்வரும் வசனம் கூறுகின்றது.
அவனை நேசித்ததற்காக ஏழைக்கும், அனாதைக்கும், சிறைப்பட்டவருக்கும் உணவளிப்பார்கள்.
அல்குர்ஆன் (76:8)
அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய பாசத்தை உள்ளத்தில் வைக்காமல் விட்டுவிட்டவர்கள் இணை வைக்கக் கூடியவர்களாகத் தான் இருக்கிறார்கள். அல்லாஹ்வை நேசிப்பவன் மட்டும் தான் முஸ்லிமாக இருக்க முடியும். நபி (ஸல்) அவர்களை நேசிக்கிறோம் என்று சொல்லிக் கொண்டு மவ்லூத் என்றப் பெயரில் நபி (ஸல்) அவர்களை வரம்பு மீறிப் புகழும் இணை வைப்பாளர்கள், வார்த்தைக்கு வார்த்தை யா ரஸூலுல்லாஹ் (அல்லாஹ்வின் தூதரே) என்றும், யா முஹ்யித்தீன் (முஹ்யித்தீனே) என்றும் அழைப்பார்களே தவிர அல்லாஹ்வை மறந்து விடுகிறார்கள்.
நயவஞ்சகன் தான் அல்லாஹ்வை நேசிக்க மாட்டான் என்று நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நபித்தோழர்கள் விளங்கியிருந்தார்கள். ஒருவரை ஏசும் போது அல்லாஹ்வை விரும்பாத நயவஞ்சகன் இவன் என்று நபித் தோழர்கள் கூறியிருக்கிறார்கள். நூல்: புகாரி (425)
ஈமானின் சுவையை உணர்ந்தவர்
நாக்கிற்கு சுவைக்கக் கூடிய பண்பை அல்லாஹ் வழங்கியிருப்பதால் அது சுவைத்துப் பார்த்து உடலுக்குத் தேவையான பொருட்களை வாய்க்குள் செல்ல அனுமதிக்கிறது. மோசமான சுவையுடையதாக இருந்தால் வெளியே துப்பிவிடுகிறது. இப்பண்பு அதற்கு இருப்பதால் தான் கல்லையும் கற்கண்டையும் பிரித்தரிந்து கற்கண்டை உள்ளேயும் கல்லை வெளியேயும் அனுப்புகிறது. நாக்கு ருசியை உணர்வது போல நல்ல, கெட்ட விஷயங்களை சுவைக்கும் பண்பு உள்ளத்திற்கும் உண்டு. இக்குணம் மனிதனின் உள்ளத்திற்கு வந்து விட்டால் அவன் உள்ளம் நல்ல கருத்துக்களை உள்ளே வைத்துக் கொண்டு கெட்டக் கருத்துக்களை வெளியே அனுப்பி விடுகிறது. ஆனால் நம் உள்ளம் இந்த பாக்கியத்தை அடைய வேண்டுமென்றால் மூன்று விஷயங்கள் நம்மிடத்தில் வர வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: (மூன்று தன்மைகள் அமையப் பெறாத) எவரும் இறை நம்பிக்கையின் சுவையை உணர மாட்டார். (அவை)
1. ஒருவரை நேசிப்பதானால் அல்லாஹ்விற்காகவே நேசிப்பது.
2. இறை மறுப்பிலிருந்து அல்லாஹ் காப்பாற்றிய பிறகு மீண்டும் அதற்குத் திரும்புவதை விட நெருப்பில் வீசப்படுவதையே விரும்புவது.
3. மற்ற எதையும் விட அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் அவருக்கு நேசத்திற்குரியோராவது. அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி (6041)
எல்லாருடைய நேசத்தையும் விட அல்லாஹ்வையே நாம் அதிகம் நேசிக்க வேண்டும் என்ற விஷயம் மூன்றாவதாகக் கூறப்பட்டாலும் நன்கு கவனித்துப் பார்க்கும் போது முதலிரண்டு விஷயங்களும் அல்லாஹ்வை நேசிப்பதால் ஏற்படக் கூடிய விளைவுகள் தான் என்பதைச் சந்தேகமற அறியலாம்.
ஈமானுக்குத் தேவையான எத்தனையோ விஷயங்களை நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடத்தில் வேண்டியுள்ளார்கள். அல்லாஹ்வை நேசிப்பது ஈமானுக்கு மிக முக்கியமான அம்சம் என்பதால் இத்தன்மை தன்னிடத்தில் இருக்க வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்விடம் பிரார்த்தனை செய்துள்ளார்கள்.
(இறைவா) உன்னை நேசிப்பதையும், உன்னை யார் நேசிப்பார்களோ அவர்களை நேசிப்பதையும், உனது நேசத்தின் பால் எந்தக் காரியம் நெருக்கி வைக்குமோ அந்த நற்காரியத்தை (நான்) விரும்புவதையும் உன்னிடத்தில் வேண்டுகிறேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: முஆத் பின் ஜபல் (ரலி)
நூல்: திர்மிதி (3159)
சிலர் அல்லாஹ்வின் மீது வைக்க வேண்டிய பாசத்தை அடியார்கள் மேல் வைத்து விட்ட காரணத்தினால் தான் இணை வைப்பில் சிக்கிக் கொண்டிருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்களை நேசிக்கக் கூடாது என்று சொல்ல வரவில்லை. நபி (ஸல்) அவர்களை நேசிக்காதவன் இறை நம்பிக்கையாளனாக இருக்க முடியாது என்பதில் நமக்கு மாற்றுக் கருத்தும் இல்லை.
ஆனால் அல்லாஹ்வை நேசிப்பதற்கு என்று ஒவ்வொரு முஃமினுடைய உள்ளத்திலும் ஒரு தனி இடம் இருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களை நேசிப்பதற்கு என்று ஒரு தனி இடத்தை உள்ளத்தில் ஒதுக்க வேண்டும். அல்லாஹ்விற்குக் கொடுக்க வேண்டிய அந்தஸ்தை நபி (ஸல்) அவர்கள் உட்பட யாருக்கும் கொடுத்து விடக் கூடாது. அல்லாஹ்வை நாம் கடுமையாக நேசிக்க வேண்டும் என்றும் அவனை நேசிப்பது போல் யாரை நேசித்தாலும் அது இணைவைப்பு என்றும் அல்லாஹ் திருக்குர்ஆனில் சொல்கிறான். அல்லாஹ்வையன்றி பல கடவுள்களைக் கற்பனை செய்து, அல்லாஹ்வை விரும்புவது போல் அவர்களை விரும்புவோரும் மனிதர்களில் உள்ளனர். நம்பிக்கை கொண்டோர் (அவர்களை விட) அல்லாஹ்வை அதிகமாக நேசிப்பவர்கள். அநீதி இழைத்தோர் வேதனையைக் காணும் போது அனைத்து வல்லமையும் அல்லாஹ்வுக்கே என்பதையும், அல்லாஹ் கடுமையாகத் தண்டிப்பவன் என்பதையும் கண்டு கொள்வார்கள்.
அல்குர்ஆன் (2:165)
ஒருவன் அல்லாஹ்வை நேசிக்காமல் நபி (ஸல்) அவர்களை மட்டும் நேசிப்பான் என்றால் அவன் முஸ்லிமாக இருக்க முடியாது. அவன் நபி (ஸல்) அவர்களை நேசித்தவனாகவும் ஆக முடியாது. ஏனென்றால் அல்லாஹ்வை நேசிப்பவன் கண்டிப்பாக நபி (ஸல்) அவர்களை நேசிப்பான். நபி (ஸல்) அவர்களை நேசிப்பவன் கண்டிப்பாக அல்லாஹ்வை நேசிப்பான். நபி (ஸல்) அவர்களைக் கூட நாம் எதற்காக நேசிக்கிறோம் என்பதை விளங்கிக் கொண்டால் அல்லாஹ்வை நேசிப்பது எந்த அளவுக்கு முக்கியமானது என்பதை எளிதில் புரிந்து கொள்ளலாம். நபி (ஸல்) அவர்கள் இறைவனால் நியமிக்கப்பட்ட தூதர். வாழ்க்கை வழிகாட்டி என்பதற்காக அவர்களை நேசிக்கிறோம். இந்தத் தூதுப் பணியை இறைவன் அவர்களுக்கு வழங்கியிருக்காவிட்டால் நபி (ஸல்) அவர்கள் யாரென்றே நமக்குத் தெரியாமல் போயிருக்கும். ஆனால் இன்றைக்கு கோடான கோடி மக்களுடைய மனதில் பெரும் இடத்தை அவர்கள் பிடித்திருப்பது அவர்கள் இறைவனின் தூதர் என்பதால் தான். எவ்வாறு நேசிப்பது?
ஒவ்வொரு நாட்டிலிருந்து வரும் தூதுவர்களை மற்ற நாடுகள் மதித்து நடக்கின்றன. ஏனென்றால் அவ்வாறு நடந்தால் தான் அத்தூதரை அனுப்பிய மன்னரைக் கண்ணியப்படுத்தியதாக அமையும். தூதரைக் கேவலப்படுத்தினால் அரசனையும் கேவலப்படுத்தியதாக அமையும்.
ஒரு மன்னரின் சார்பாக அனுப்பப்பட்ட தூதரை நேசிப்பவர்கள் அந்த மன்னரை அதை விடவும் அதிகமாக நேசிப்பார்கள். எனவே அல்லாஹ்வால் அனுப்பப்பட்ட தூதரை நேசிக்கக்கூடிய நாம் அல்லாஹ்வை அதை விடவும் கடுமையாக நேசிக்க வேண்டும். நபி (ஸல்) அவர்களின் வழிப்படி நடப்பது எந்த அளவிற்கு முக்கியத்துவம் வாய்ந்ததோ அதை விடவும் அல்லாஹ்வை நேசிப்பது முக்கியமானது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்களை பின்பற்றுவதின் அவசியத்தை உணர்த்தும் போது அல்லாஹ்வை நேசிப்பதை நிபந்தனையாக வைத்து அல்லாஹ் கூறுகிறான். நீங்கள் அல்லாஹ்வை விரும்பினால் என்னைப் பின்பற்றுங்கள்! அல்லாஹ் உங்களை விரும்புவான். உங்கள் பாவங்களை மன்னிப்பான். அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன் என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (3:31)
நம் நேசத்திற்குரியவர்களுக்கு எதிராக யார் நடந்தாலும் அவரை நாம் விரும்ப மாட்டோம். நம்மால் நேசிக்கப்படுபவர்கள் யாரை வெறுக்கிறார்களோ அவர்களை நாமும் வெறுப்போம். இந்த அடிப்படையில் அல்லாஹ்விற்கு மாற்றமான காரியங்களை நமது தாயோ, தந்தையோ, சகோதர, சகோதரிகளோ, மனைவியோ, பிள்ளைகளோ யார் செய்தாலும் அவர்கள் அல்லாஹ்விற்குப் பிடிக்காத காரியத்தைச் செய்வதால் அவர்களை நாம் வெறுக்க வேண்டும் என்று குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் தாய், தந்தை, மற்ற உடன்பிறப்புகளை நேசிப்பதை விட அல்லாஹ்வை நேசிப்பதன் அவசியத்தை இதிலிருந்து உணர முடிகிறது. அல்லாஹ்வின் மீது நாம் இத்தகைய நேசத்தைக் காட்டுகிறோமா என்று நாம் ஒவ்வொருவரும் சிந்தித்துப் பார்க்க வேண்டும்.
ஒருவர் இதற்கு மாற்றமாக அல்லாஹ்வின் கட்டளைகளைப் பின்தள்ளி விட்டு, தனது உறவுகளின் மேல் உள்ள பாசத்தால் உறவினர்களுடன் ஒத்துப் போவாரேயானால் அவர் உண்மையான நம்பிக்கையாளராக இருக்க முடியாது. அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பக் கூடிய சமுதாயத்தினர், அல்லாஹ்வையும், அவனது தூதரையும் பகைப்போர் தமது பெற்றோராக இருந்தாலும், பிள்ளைகளாக இருந்தாலும், சகோதரர்களாக இருந்தாலும், தமது குடும்பத்தினராக இருந்தாலும் அவர்களை நேசிப்பதை நீர் காண மாட்டீர். அவர்களின் உள்ளங்களில் அல்லாஹ் நம்பிக்கையைப் பதித்து விட்டான். தனது ரூஹு மூலம் அவர்களைப் பலப்படுத்தியுள்ளான். அவர்களை சொர்க்கச் சோலைகளில் நுழையச் செய்கிறான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். அவர்களை அல்லாஹ் பொருந்திக் கொண்டான். அவர்களும் அல்லாஹ்வைப் பொருந்திக் கொண்டனர். அவர்களே அல்லாஹ்வின் கூட்டத்தினர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் கூட்டத்தினரே வெற்றி பெறுபவர்கள்.
அல்குர்ஆன் (58:22)
செல்வங்களையும் சொத்துக்களையும் மனிதன் கடுமையாக நேசிக்கிறான். அல்லாஹ் வேண்டுமா? அல்லது செல்வம் வேண்டுமா? என்ற கேள்வி எழும் போது செல்வங்களை ஒருவன் தேர்வு செய்தால் அவன் அல்லாஹ்வின் கோபத்திற்கு ஆளாகின்றான். அப்படியானால் அல்லாஹ்வை நேசிப்பதற்கு நிகராக எதையும் நேசிக்கக்கூடாது என்ற அளவிற்கு இறைவனை நேசிப்பது மார்க்கத்தில் வலியுறுத்திச் சொல்லப்பட்டிருக்கிறது. உங்கள் பெற்றோரும், உங்கள் பிள்ளைகளும், உங்கள் உடன்பிறந்தாரும், உங்கள் வாழ்க்கைத் துணைவியரும், உங்களின் குடும்பத்தாரும், நீங்கள் திரட்டிய செல்வங்களும், நஷ்டத்திற்கு நீங்கள் அஞ்சுகிற வியாபாரமும், நீங்கள் விரும்புகிற வசிப்பிடங்களும் அல்லாஹ்வை விட, அவனது தூதரை விட, அவன் பாதையில் போரிடுவதை விட உங்களுக்கு அதிக விருப்பமானவையாக ஆகி விட்டால் அல்லாஹ் தனது கட்டளையைப் பிறப்பிக்கும் வரை காத்திருங்கள்! குற்றம் புரியும் கூட்டத்துக்கு அல்லாஹ் வழிகாட்ட மாட்டான் என்று கூறுவீராக!
அல்குர்ஆன் (9:24)
அல்லாஹ்வை நேசிப்பதே வெற்றிக்கு உதவும்
அல்லாஹ்வை நேசிப்பதை சாதாரண ஒரு விஷயமாக நாம் எடுத்துக் கொள்ளக் கூடாது. தொழுகை, நோன்பு, தர்மம் இவற்றையெல்லாம் விட மறுவுலக வெற்றிக்கு மிக அவசியமானதாக அது இருந்து கொண்டிருக்கிறது. ஏனென்றால் இது இருந்தால் தான் முஸ்லிம் என்ற வட்டத்திற்குள் மனிதன் வருகிறான். இத்தன்மை எப்போது அவனை விட்டு நீங்கி விடுகிறதோ அப்போது இஸ்லாத்தை விட்டும் அவன் வெளியேறி விடுகிறான். ஒரு மனிதர் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! மறுமை நாள் எப்போது வரும்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அதற்காக நீ என்ன முயற்சி செய்துள்ளாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அதற்காக நான் அதிகமான தொழுகையையோ, நோன்பையோ, தான தர்மங்களையோ முன் ஏற்பாடாகச் செய்து வைக்கவில்லை. ஆயினும் நான் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், நீ யாரை நேசிக்கிறாயோ அவருடன் (மறுமையில்) இருப்பாய் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: புகாரி (6171)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: மூன்று விஷயங்கள் யாரிடத்தில் இருக்கின்றதோ அவர் நரகத்தை விட்டும் தடுக்கப்படுவார். நரகம் அவரை விட்டும் தடுக்கப்படும். (அவை) 1. அல்லாஹ்வை நம்புதல், 2. அல்லாஹ்வை நேசிதல், 3. இணை வைப்பிற்குத் திரும்பிச் செல்வதை விட நெருப்பில் போடப்பட்டு கருக்கப்படுவது அவருக்கு விருப்பமானதாக இருத்தல்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி)
நூல்: அஹ்மத் (11679)
மறுமையில் மட்டுமல்லாது இவ்வுலகில் அல்லாஹ்வின் கோபப் பார்வையிலிருந்து தப்பிக்க வேண்டுமென்றால் அல்லாஹ்வை நேசிக்க வேண்டும். அவனை நேசிக்காமல் அவனை மறந்து வாழ்ந்தால் நம்மை அழித்து விட்டு அவனை நேசிக்கும் நல்ல கூட்டத்தாரை அல்லாஹ் படைப்பான். நம்பிக்கை கொண்டோரே! உங்களில் யாரேனும் தமது மார்க்கத்தை விட்டு மாறி விட்டால் அல்லாஹ் வேறொரு சமுதாயத்தைக் கொண்டு வருவான். அவன் அவர்களை விரும்புவான். அவர்கள் அவனை விரும்புவார்கள். அவர்கள் நம்பிக்கை கொண்டோரிடம் பணிவாகவும், (ஏக இறைவனை) மறுப்போரிடம் தலை நிமிர்ந்தும் இருப்பார்கள். அவர்கள் அல்லாஹ்வின் பாதையில் அறப்போர் புரிவார்கள். பழிப்போரின் பழிச் சொல்லுக்கு அவர்கள் அஞ்ச மாட்டார்கள். இது அல்லாஹ்வின் அருள். தான் நாடியோருக்கு அதை அவன் அளிப்பான். அல்லாஹ் தாராளமானவன்; அறிந்தவன்.
அல்குர்ஆன் (5:54)
பல காரணங்களால் நாம் ஒருவரை நேசிக்க ஆரம்பிக்கிறோம். எந்த விதமான தகுதியும் இல்லாமல் தன்னை நேசிக்க வேண்டும் என்று அல்லாஹ் நம்மிடம் எதிர்பார்க்கவில்லை. மற்ற அனைவரையும் விட எல்லா விதமான தகுதியையும் பெற்றுக் கொண்டு தான் நம்மிடத்தில் உரிமை கொண்டாடுகிறான்.
அள்ளித்தருவதில் அல்லாஹ் குறைந்தவனா?
மனிதன் பிறர் செய்யும் உபகாரத்திற்கு அடிமையாவான் என்று அரபியில் ஒரு பழமொழி சொல்வார்கள். நமக்கு நன்மை செய்பவர்களை நாம் நேசிப்பதும் அவர்களுக்காக உயிரையும் கொடுப்பது மனித இயல்பு. ஒரு டீயை வாங்கிக் கொடுத்ததற்காக அவர் சொல்வதையெல்லாம் கேட்டுக் கொண்டு அவருக்குப் பின்னால் அலைந்து கொண்டிருப்பவர்களும் உண்டு. அன்னை தெரஸா நோயாளிகளுக்கும் ஏழைகளுக்கும் உதவியதால், அவரது சேவையால் பலனடையாதவர்களும் அவர்களை நேசிக்கிறார்கள்; புகழ்கிறார்கள். ஆனால் அல்லாஹ்வின் பெரும் பெரும் உதவியை ஒவ்வொரு நேரத்திலும் நாம் அனுபவித்துக் கொண்டு அவனை நேசிக்காமல் இருப்பது நன்றி கெட்டத்தனமில்லையா? இறைவன் நமக்குக் கொடுத்துள்ள ஆரோக்கியம், உடல் உறுப்புகள், அவற்றின் இயக்கம், தன்மை இவையனைத்தையும் விட பெரிய உதவி வேறு என்ன இருக்க முடியும்?. மனிதனுக்கு இறைவன் தந்திருக்கக் கூடிய பாக்கியங்களைப் பற்றி குர்ஆன் பின்வருமாறு கூறுகிறது.
அல்லாஹ்வின் அருட்கொடையை நீங்கள் எண்ணினால் உங்களால் எண்ண முடியாது. அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
அல்குர்ஆன் (16:18)
உங்களிடம் உள்ள ஒவ்வொரு அருட்கொடையும் அல்லாஹ்வுடையது. பின்னர் உங்களுக்கு ஒரு தீங்கு ஏற்பட்டால் அவனிடமே முறையிடுகின்றீர்கள்.
அல்குர்ஆன் (16:53)
அல்லாஹ் தான், வானங்களையும், பூமியையும் படைத்தான். வானிலிருந்து தண்ணீரை இறக்கினான். அதன் மூலம் உங்களுக்கு உணவாகக் கனிகளை வெளிப்படுத்தினான். அவனது கட்டளைப்படி கடலில் செல்வதற்காக கப்பலையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான். ஆறுகளையும் உங்களுக்குப் பயன்படச் செய்தான்.
அல்குர்ஆன் (14:32)
வளரும் இன்ஷா அல்லாஹ்
நபிகளாரின் உதாரணங்கள்
பாவத்தைக் கழுவும் தொழுகை
கே. அர்ஷத் எம்.ஐ.எஸ்.ஸி. பனைக்குளம்
உங்கல் ஒருவரது வாசல் ஆறு ஒன்று இருக்கிறது. அதில் அவர் தினமும் ஐந்து தடவை நீராடுகிறார். அது அவரது (உடலிலுள்ள) அழுக்குகல் எதையும் தங்கவிடுமா? என்ன நினைக்கிறீர்கள் சொல்லுங்கள்? என்று கேட்டார்கள். அவரது அழுக்குகல் எதையும் தங்க விடாது என்று மக்கள் பதிலத்தார்கள். இதுதான் ஐவேளைத் தொழுகையின் நிலையாகும்; இதன் மூலம் அல்லாஹ் பாவங்களை நீக்குகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்கள்: புகாரி 528, முஸ்லிம் (1185)
உடலை அழுக்கிலிருந்து தூய்மைப்படுத்தும் ஆற்றுக்கு தொழுகையை நபி (ஸல்) அவர்கள் உதாரணம் காட்டியுள்ளார்கள். பாவப் பரிகாரத்திற்கு உடலை வருத்த வேண்டும்; நீண்ட தூரம் பயணம் செய்து பாவக் கடனைத் தீர்க்க வேண்டும் என்றெல்லாம் கூறாமல் வீட்டு வாசலில் ஓடுகின்ற, நமக்கு எளிதில் கிடைக்கின்ற ஆற்று நீர் உடலை தூய்மைப்படுத்துவதைப் போல எந்த விலையும் கொடுக்காமல் மிகப் பெரும் சிரமமும் இல்லாமல் நாம் தொழும் தொழுகை நாம் செய்யக் கூடிய பாவங்களைப் போக்கும் மருந்தாக உள்ளது என்று கூறியுள்ளார்கள்.
தொழுகை வெட்கக்கேடான காரியங்களை விட்டும், தீமையை விட்டும் தடுக்கும்.
(அல்குர்ஆன் 29:45) இஸ்லாம் குற்றங்களைத் தடுத்து அதற்குத் தண்டனை வழங்குவதோடு நின்று விடாமல் அதை விட்டும் தவிர்ந்து கொள்வதற்கான வழிமுறைகளை, தொழுகையின் மூலமாக சொல்லித் தருகிறது. தொழுபவர்கள் நாம் தொழுகிறோம் என்ற காரணத்திற்காகவாவது மானக்கேடான விஷயங்களை விட்டும் தவிர்ந்திருப்பார்கள். இன்று பெரும்பாலும் தொழக் கூடியவர்களிடம் பெரும் குற்றங்கள் நிகழ்வதைக் காண முடிவதில்லை. பாவங்களிலிருந்து விடுபட அல்லாஹ் நம்மை தொழுகையில் கண்காணிக்கிறான் என்பதை மனதில் நிறுத்திக் கொள்ள வேண்டும். தொழுகையில் அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணம், பாவங்கள் குற்றங்கள் செய்யும் போதும் இறைவன் நம்மைக் கண்காணிக்கிறான் என்ற எண்ணத்தை ஏற்படுத்தி அவற்றைத் தடுக்கும் கருவியாக ஆகி விடுகின்றது. இது போல் ஐவேளைத் தொழுகையிலும் இந்த எண்ணத்தை வளர்த்துக் கொண்டால் பாவங்களுக்கு வழியில்லாமல் போய் விடும். இஹ்ஸான் என்றால் என்ன ? என்று நபியவர்களிடத்தில் ஜிப்ரீல் (அலை) அவர்கள் கேட்கும் போது, (தொழுகையில்) அல்லாஹ்வை நீ பார்க்காவிட்டாலும் அவன் உன்னை பார்க்கிறான் என்று (எண்ணி) நீ அவனை பார்ப்பது போன்று வணங்குவதாகும் என்றுபதிலளித்தார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி 50
நாம் என்ன செய்தாலும் இறைவன் நம்மைப் பார்த்துக் கொண்டிருக்கிறான் என்ற எண்ணம் ஒரு மனிதனிடத்தில் வந்து விட்டால் பாவங்கள் செய்ய அஞ்சுவான். மேலும் மறுமை நாளில் வெற்றி பெற்று சொர்க்கத்திற்குச் செல்பவனைப் பற்றி அல்லாஹ் கூறும் போது.... தூய்மையாக வாழ்பவன் வெற்றி பெற்றான். (அவன்) தனது இறைவனின் பெயரை நினைத்துத் தொழுதான்.
அல்குர்ஆன் 87:14, 15 பாவங்களைக் கழுவி தூய்மைப்படுத்தும் வழிமுறையாக தொழுகையை இந்த வசனத்தில் இறைவன் விளக்கியிருப்பது தொழுகையின் முக்கியத்துவத்தையும் பாவத்தை இல்லாமல் ஆக்கும் அழகிய வழிமுறையையும் எடுத்துக் காட்டுகிறது. யார் எனது (இந்த) உளூவைப் போன்று உளூச் செய்து, வேறு எந்த எண்ணங்களுக்கும் இடம் தராமல் இரண்டு ரகஅத்கள் தொழுகின்றாரோ அவருக்கு அவரது முன் பாவங்கள் மன்னிக்கப்படும் என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியதாக உஸ்மான் (ரலி) அவர்கள் கூறினார்கள். நூல்: புகாரி 160
சாதாரணமாக இரண்டு ரக்அத்கள் தொழுதால் பாவமன்னிப்பு வழங்கப்படுகிறதென்றால் ஐவேளைத் தொழுகையையும் நிறைவேற்றினால் ஆற்றில் ஐந்து தடவை குளித்து உடலைத் தூய்மை செய்தவதைப் போல் பாவங்கள் அழியும் என்பது தெளிவாகிறது. தொழுகையினால் பாவங்கள் மன்னிக்கப்படுகின்றன என்பதை நபி (ஸல்) அவர்களின் வாழ்க்கையில் நடந்த சம்பவத்தையும் உதாரணமாகக் கூறலாம்.
நான் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தேன். அப்போது ஒரு மனிதர் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, என் மீது தண்டனையை நிறைவேற்றுங்கள் என்றார். அவர் செய்த குற்றம் குறித்து அவரிடம் நபி (ஸல்) அவர்கள் ஏதும் விசாரிக்கவில்லை. பிறகு, தொழுகை நேரம் வந்த போது அவர் நபி (ஸல்) அவர்களுடன் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த போது அவர்களை நோக்கி அந்த மனிதர் எழுந்து வந்து, அல்லாஹ்வின் தூதரே! நான் தண்டனைக்குரிய குற்றமொன்றைச் செய்து விட்டேன். ஆகவே, அல்லாஹ்வின் வேதத்தி(லுள்ள தண்டனையி)னை எனக்கு நிறைவேற்றுங்கள் என்றார். நபி (ஸல்) அவர்கள், எம்முடன் சேர்ந்து நீர் தொழுதீர் அல்லவா? என்று கேட்டார்கள். அவர், ஆம்! என்றார். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறாயின் அல்லாஹ் உமது பாவத்தை அல்லது உமக்குரிய தண்டனையை மன்னித்து விட்டான் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6823)
தொழுகை பாவங்களை அழிக்கும் என்பதற்கு நிதர்சன சான்றாக இந்த ஹதீஸ் உள்ளது. நபி (ஸல்) அவர்களுக்கும், அவர்களுடைய தோழர்களுக்கும், மற்ற எவருக்கும் தெரியாமல் பாவத்தைச் செய்து விட்டு, அந்த நபித்தோழர் தன் கௌவரத்தைத் தூக்கியெறிந்து விட்டுத் தன் பாவத்தை வாய்விட்டுச் சொல்கிறார் என்றால் தொழுகை பாவத்திற்குப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் பாவத்திலிருந்து விடுபடுவதற்கு ஒரு மனிதனை எவ்வாறு பக்குவப்படுத்துகிறது என்பதை அறியலாம்.
பாவங்கள் என்றால் பெரும் பாவங்கள் உட்பட அனைத்துப் பாவங்களும் தொழுகையின் மூலமாக மன்னிக்கப்படும் என்று விளங்கிக் கொள்ளக் கூடாது. ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:
ஐவேளைத் தொழுகைகள், ஒரு ஜுமுஆவிலிருந்து மறு ஜுமுஆ ஆகியன அவற்றுக்கிடையே ஏற்படும் பாவங்களுக்குப் பரிகாரங்களாகும். பெரும் பாவங்கள் செய்யாத வரை!
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல் முஸ்லிம் (394)
இவ்வாறு தொழுதால் மட்டும் தான் பாவங்கள் மன்னிக்கப்படுமா? தொழுகைக்குரிய அனைத்து முன்னேற்பாடுகளைச் செய்யும் போதும் பாவங்கள் மன்னிக்கப்படும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தவறுகளை அல்லாஹ் மன்னித்து, தகுதிகளை உயர்த்தும் செயல்கள் சிலவற்றை உங்களுக்கு நான் சொல்லட்டுமா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், சிரமமான சூழ்நிலைகளிலும் உளூவை முழுமையாகச் செய்வதும், பள்ளிவாசல்களை நோக்கி அதிகமான காலடிகளை எடுத்து வைத்துச் செல்வதும், ஒரு தொழுகைக்குப் பின் அடுத்தத் தொழுகையை எதிர்பார்த்துக் காத்திருப்பதும் ஆகும். இவை தாம் கட்டுப்பாடுகளாகும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (421)
இவ்வாறு தொழுகைக்காகச் செய்யக்கூடிய அனைத்து முயற்சிகளும் நன்மையாக அமைகிறது. தொழுகை பாவப் பரிகாரமாக இருப்பதோடு மட்டுமல்லாமல் சொர்க்கம் செல்வதற்குத் துணைச் சாதனமாகவும் உள்ளது.
நபி (ஸல்) அவர்களிடம் ஒரு மனிதர் வந்து, என்னைச் சொர்க்கத்தில் சேர்க்கும் ஒரு செயலை எனக்குக் கூறுங்கள் எனக் கேட்டார். அப்போது, நீர் அல்லாஹ்வை வணங்க வேண்டும்; அவனுக்கு எதனையும் இணையாக்கக் கூடாது; தொழுகையை நிலைநாட்ட வேண்டும்; ஸகாத் வழங்க வேண்டும்; உறவினர்களிடம் இணக்கமாக நடக்க வேண்டும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஅய்யூப் (ரலி), நூல்: புகாரி (1396)
அல்லாஹ்வுக்கு நிகராக யாரையும் எதையும் ஆக்கக் கூடாது என்ற கட்டளைக்கு அடுத்தபடியாக, சொர்க்கம் செல்வதற்குத் தொழுகை என்ற வணக்கத்தைத் தான் நபியவர்கள் முன்னிறுத்துகிறார்கள். இது தொழுகையின் முக்கியத்துவத்தை எடுத்துரைக்கிறது. இவ்வாறு தொழுகையாளிகளுக்கு இவ்வுலகிலும் மறு உலகிலும் அதிகமான கூலிகள் இருக்கும் நிலையில், தொழக்கூடிய சிலர் பாவங்களிலிருந்து விடுபடாத சூழ்நிலையைக் காண்கிறோம். தொழுது கொண்டே மோசடி செய்கிறார்கள்; வட்டி வாங்குகிறார்கள். இதற்குக் காரணம், அவர்கள் தொழுகையை ஒரு சடங்காக நிறைவேற்றுவது தான்.
நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்று, அல்லாஹ் நம்மைப் பார்க்கிறான் என்ற எண்ணத்தில் தொழுகையை அமைத்துக் கொள்ளவில்லை. இவ்வாறு தொழுபவர்களுக்கு அல்லாஹ் ஒரு எச்சரிக்கையை விடுக்கிறான்.
தமது தொழுகையில் கவனமற்று தொழுவோருக்குக் கேடு தான். அல்குர்ஆன் (107:4, 5)
இவர்களின் நிலைமை தான் இப்படி என்றால் குர்ஆன், ஹதீஸை விளங்கிய தவ்ஹீதைப் பேசக் கூடிய மக்களிடத்திலும் இந்தக் குறைபாடுகளைக் காண்கிறோம். குர்ஆன், ஹதீஸை மட்டும் பேசக்கூடிய பள்ளிவாயில்களில் கூட, சுப்ஹு தொழுகையில் ஒரு சில நபர்கள் மட்டும் வருவதே இதற்குச் சான்று! ஆனால் ஜும்ஆ தினங்களில் கால் வைக்கக் கூட இடமிருக்காது.
இது போன்று நடப்பவர்கள் நபி (ஸல்) அவர்களின் எச்சரிக்கையைக் கவனியுங்கள்.
நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஃபஜ்ர், இஷா ஆகிய தொழுகைகளை விட நயவஞ்சகர்களுக்கு மிகவும் சுமையான தொழுகை வேறேதுவும் இல்லை. அவ்விரு தொழுகைகலுமுள்ள சிறப்பை அவர்கள் அறிவார்களானால் தவழ்ந்தாவது அத்தொழுகைகளுக்கு அவர்கள் வந்து சேர்ந்து விடுவார்கள். தொழுகை அறிவிப்பாளரிடம் இகாமத் சொல்லுமாறு கட்டளையிட்டுப் பின்னர் ஒருவரிடம் மக்களுக்குத் தலைமை தாங்(கித் தொழுவிக்)குமாறு பணித்து விட்டு, பிறகு தீப்பந்தத்தை எடுத்துக் கொண்டு, இன்னும், தொழுகைக்குப் புறப்பட்டு வராமருப்பவரை எரித்து விட முடிவு செய்தேன்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி (657)
நபி (ஸல்) அவர்கள் சுப்ஹு தொழுகையில் சோம்பல் காட்டுபவர்களை நயவஞ்சகர்களுக்கு ஒப்பிட்டுள்ளார்கள்.
இவ்வளவு முக்கியத்துவம் வாய்ந்த தொழுகையே மறுமை வெற்றிக்கும் அடிப்படையாக உள்ளது.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: ஒரு அடியானிடத்தில் மறுமை நாளில் முதன் முதலாக அவனுடைய அமல்கள் சம்பந்தமாக விசாரிக்கப்படுவது தொழுகையைப் பற்றித் தான். அது சரியானால் அவன் வெற்றியடைந்து விடுவான். அது தவறினால் அவன் நஷ்டமடைந்து விடுவான்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி), நூல்: திர்மிதீ 378
தொழுகை தான் ஒருவனுடைய மறுமை வெற்றியைத் தீர்மானிப்பதாக இந்த ஹதீஸ் கூறுகிறது. எனவே நாம் தொழுகையைப் பேணி, பாவங்கள் மன்னிக்கப்பட்ட மக்களாக சொர்க்கம் செல்வோமாக!
பெண் சிசுக்கொலை
தடுக்க என்ன வழி?
பேர்ணாம்பட்டு
இப்னு சாபிரா
நவீன உலகத்தில், கருவறையில் வளரும் சிசு ஆணா? பெண்ணா? என அறிந்து பெண்ணாயிருப்பின் அதைக் கருவிலேயே சமாதி கட்டும் கொடூரம் நடந்து வருவதை நாமெல்லாம் செய்தித் தாள்கள் வாயிலாக அறிந்து வருகிறோம்.
சட்டம் இதை வன்மையாகக் கண்டித்தாலும் இக்கொடுஞ்செயலைச் செய்யும் கொடூர மனப்பான்மையுடையவர்கள் இருக்கத் தான் செய்கின்றனர். இக்கொடூரத்தைத் தடுக்க தொட்டில் குழந்தைத் திட்டம் என்ற திட்டத்தை தமிழக அரசு 1992ஆம் ஆண்டு தொடங்கியது.
பெண் குழந்தையைப் பெற்றெடுத்தவர்கள் அக்குழந்தையை வளர்க்க விரும்பவில்லையெனில் அரசுத் தொட்டிலில் போட்டு விட்டுச் செல்லலாம். இக்குழந்தைகளை அரசு பராமரிப்பது மட்டுமின்றி, தனியார் தொண்டு நிறுவனங்கள் மூலம் விரும்புவோருக்கு தத்துக் கொடுக்கிறது.
இத்திட்டங்கள் எல்லாம் இருந்தும் தமிழகத்திலேயே மிகவும் பின்தங்கிய மாவட்டமான தருமபுரி மாவட்டத்தில் 2001ஆம் ஆண்டு மட்டும் 178 பெண் சிசுக் கொலைகள் நடந்துள்ளதாகப் புள்ளி விவரங்கள் கூறுகின்றன.
பெண் குழந்தைகளை சாக்கடைகளிலும் குப்பை தொட்டிகளிலும் வீசும் அவலமும் அவ்வப்போது அரங்கேறிக் கொண்டு தான் இருக்கிறது.
இது மட்டுமில்லாமல் இந்த இளம் பெண் குழந்தைகளுக்கு வாயில் நெல்லைக் கொடுத்துக் கொல்லும் கொடூரமும் நடந்து கொண்டு தான் இருக்கிறது.
இவற்றையெல்லாம் சட்டங்களால் மட்டும் தடுக்க இயலுமா? வேறு வழிகள் உள்ளனவா? என ஆராய்ந்தால் இஸ்லாமிய மார்க்கம் மிகச் சிறப்பான வழிகளை சொல்லிக் காட்டுகிறது.
குழந்தைகள் இறைவனின் வரம்
முதலாவதாக, குழந்தைகள் என்பது ஆணாயினும் பெண்ணாயினும் அது இறைவன் கொடுத்த வரம் என்ற எண்ணம் வர வேண்டும். இந்த எண்ணத்தை இஸ்லாம் வலுவாக ஊட்டுகின்றது.
வானங்கள் மற்றும் பூமியின் ஆட்சி அல்லாஹ்வுக்கே உரியது. அவன் நாடியதைப் படைக்கிறான். தான் நாடியோருக்குப் பெண்(குழந்தை)களை வழங்குகிறான். தான் நாடியோருக்கு ஆண்(குழந்தை)களை வழங்குகிறான்.
அல்லது ஆண்களையும், பெண்களையும் சேர்த்து அவர்களுக்கு வழங்குகிறான். தான் நாடியோரை மலடாக ஆக்குகிறான். அவன் அறிந்தவன்; ஆற்றலுடையவன்.
(அல்குஆன் 42:49, 50)
இறை வரத்தைப் பற்றிக் கேள்வி உண்டு
குழந்தை இறைவனுடைய வரம் என்று மட்டும் போதிக்காமல் இந்த அருட்கொடை மட்டுமின்றி எந்த அருட்கொடையானாலும் அவற்றைப் பற்றி மறுமையில் கேள்வி கேட்கப்படும் எனவும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்கிறது.
பின்னர் அந்நாளில் அருட்கொடை பற்றி விசாரிக்கப்படுவீர்கள்.
(அல்குஆன் 102:8)
உங்களில் ஒவ்வொருவரும் பொறுப்பாளர்கள். தம் பொறுப்பின் கீழ் உள்ளவர்கள் பற்றி ஒவ்வொருவரும் விசாரிக்கப்படுவீர்கள். தலைவர் பொறுப்பாளியாவார். அவர் தம் குடிமக்கள் பற்றி விசாரிக்கப்படுவார்.
ஓர் ஆண் மகன் தன் குடும்பத்துக்குப் பொறுப்பாளியாவான். தன் பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி அவனும் கேட்கப்படுவான்.
ஒரு பெண் கணவனின் வீட்டுக்குப் பொறுப்பாளியாவாள். அவள் தன்னுடைய பொறுப்பிலுள்ளவர்கள் பற்றி விசாரிக்கப்படுவாள்.
ஓர் ஊழியன் தன் முதலாளியின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான். அவன் தன்னுடைய பொறுப்பு பற்றி விசாரிக்கப் படுவான்.
ஓர் ஆண் மகன் தன் தந்தையின் செல்வத்துக்குப் பொறுப்பாளியாவான் என் நபி(ஸல்) அவர்கள் கூறினர்கள்.
அறிவிப்பவா: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (2409)
உயிருடன் கொல்லப்படும் சிசுக்களைப் பற்றி
மறுமையில் விசாரணை உண்டு
பொதுவாகவே இஸ்லாமிய மார்க்கம் ஓர் உயிரை நியாயமின்றிக் கொல்வதைப் பெரும் பாவமாகக் கருதுகிறது.
ஒருவர், இறைத்தூதர் அவர்களே! அல்லாஹ்விடம் எந்தப் பாவம் மிகவும் பெரியது? என்று கேட்டார். நபி(ஸல்) அவர்கள், அல்லாஹ் உன்னைப் படைத்திருக்க அவனுக்கு நீ இணை கற்பிப்பதாகும் என்று கூறினார்கள். அந்த மனிதர், பிறகு எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அடுத்து உன் குழந்தை உன்னுடன் (அமர்ந்து உன்னுடைய உணவைப் பங்கு போட்டு) உண்ணும் என அஞ்சி அதை நீ கொலை செய்வதாகும் என்றார்கள். அந்த மனிதர், பிறகு எது? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உன் அண்டை வீட்டானின் மனைவியுடன் நீ விபச்சாரம் புரிவதாகும் என்று கூறினார்கள்.
அப்போது நபியவர்களின் இந்தக் கூற்றை மெய்ப்பிக்கும் வகையில் வலிவும் மாண்பும் உடைய அல்லாஹ் அவர்கள் அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களைப் பிரார்த்திக்க மாட்டார்கள். அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் தக்க காரணமின்றி கொல்ல மாட்டார்கள். விபச்சாரம் செய்ய மாட்டார்கள். இதைச் செய்பவன் வேதனையைச் சந்திப்பான் எனும் (திருக்குர்ஆன் 25:68வது) வசனத்தை அருளினான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் இப்னு மஸ்ஊத் (ரலி)
நூல்: புகாரி (4761)
இஸ்லாமிய மார்க்கத்தை நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மக்களுக்குப் போதித்த காலத்தில், பெண் குழந்தைகள் உயிருடன் புதைக்கப்பட்டனர். இவ்வாறு புதைக்கப்படும் இளம் பிஞ்சுகளைப் பற்றி மறுமையில் விசாரிக்கப்படும் என்ற எச்சரிக்கையை இஸ்லாமிய மார்க்கம் மக்களிடம் கூறியது.
என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள் விசாரிக்கப்படும் போது,
(அல்குஆன் 81:8, 9)
பெண் குழந்தைகளைப் பராமரித்தால் வெகுமதி உண்டு
இவ்வாறு வெறும் தண்டனைகளைப் பற்றி மட்டும் எச்சரிக்காமல் பெண் குழந்தைகள் பிறந்தால் அதை நல்லபடி பராமரிக்கும் பெற்றோருக்கு மறுமையில் சொர்க்கம் என்ற உயாந்த பாக்கியம் கிடைக்கும் எனவும் இஸ்லாமிய மார்க்கம் போதிக்கிறது.
ஒரு பெண்மணி தனது இரு பெண் குழந்தைகளுடன் யாசித்த வண்ணம் வந்தார். என்னிடம் அப்போது ஒரு பேரீச்சம் பழத்தைத் தவிர வேறு எதுவும் இல்லை. எனவே அதை அவளிடம் கொடுத்தேன். அவள் அதை இரண்டாகப் பங்கிட்டு இரண்டு குழந்தைகளுக்கும் கொடுத்து விட்டாள். அவள் அதிலிருந்து சாப்பிடவில்லை. பிறகு அவள் எழுந்து சென்று விட்டாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். நான் அவர்களிடம் இச்செய்தியைக் கூறியதும், இவ்வாறு பல பெண் குழந்தைகளால் யார் சோதிக்கப்படுகிறாரோ அவருக்கு அக்குழந்தைகள் நரகத்திலிருந்து அவரைக் காக்கும் திரையாக ஆவார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (1418, 5985)
மனித சட்டங்கள் எவ்வளவு தான் கடுமையாக இருந்தாலும் அதை மீறுவதற்கும் அதிலுள்ள ஓட்டைகளைக் கொண்டு தப்பிப்பதற்கும் தான் மனிதன் முயலுகிறான் என்பது யதார்த்த உண்மை. எனவே இறைவனைப் பற்றிய பயமும், மறுமை அச்சமும் இருந்தால் தான் பெண் சிசுக் கொலை என்ற கொடூரம் மட்டுமில்லாமல் அனைத்துக் கொடுமைகளையும் ஒழிக்க இயலும்.
வரதட்சணை என்ற பேய், சமுதாயத்தில் மிகவும் அதிகமாகப் புரையோடி இருப்பதாலும் பெண் சிசுக் கொலைகள் நிகழ்வதாகச் செய்திகள் கூறுகின்றன. இவ்வாறு பெண் சிசுக் கொலைக்கு வழிகோலும் வரதட்சணை என்ற கொடுமையைச் செய்யும் ஆண்களும் மேலே கூறப்பட்ட 81:8, 9 வசனங்களின் படி வல்ல இறைவனால் கேள்வி கேட்கப்படுவார்கள்.
ஒரு புறம் பெண்ணுரிமை என்ற மாய ஜால கோஷங்களைப் பயன்படுத்திக் கொண்டு இது போன்ற கொடுமைகளைத் தடுக்க முடியாமல் அல்லது பார்த்தும் மவுனம் சாதித்துக் கொண்டிருப்போரின் ஆசை வார்த்தைகளுக்கு மயங்காமல் இஸ்லாம் சொல்கின்ற நியதிகளின் படி வாழ்ந்தால் தான் நிம்மதி என்பதை இஸ்லாமிய பெண்கள் உணர வேண்டும்.
மத்ஹபையாவது பின்பற்றுவார்களா?
பள்ளியில் இரண்டாவது ஜமாஅத்
அப்துந்நாஸிர் எம்.ஐ.எஸ்.ஸி
முதல்வர், இஸ்லாமியக் கல்லூரி, கடையநல்லூர்
பள்ளிவாசல்கள் கட்டப்படுவதன் நோக்கமே மக்கள் அங்கு ஒன்று கூடி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்ற வேண்டும் என்பது தான். ஆனால் இன்றைக்கு சுன்னத் ஜமாஅத்தினர் என்று சொல்லிக் கொள்ளக் கூடியவர்கள் தங்களுடைய நிர்வாகத்தின் கீழுள்ள பள்ளிவாசல்களில், தாமதமாக வருபவர்களை ஜமாஅத்தாகத் தொழுவதற்குத் தடை விதிக்கின்றனர். பல பள்ளிவாசல்களில் இரண்டாவது ஜமாஅத் நிறைவேற்றுவது கூடாது என போர்டுகளையும் தொங்க விட்டுள்ளனர். ஜமாஅத்தாகத் தொழுகை நடத்திய பல தவ்ஹீத்வாதிகள் பல ஊர்களில் கடுமையாகத் தாக்கப்பட்டுள்ளனர். சுன்னத் ஜமாஅத் என்றால் நபிவழியைப் பின்பற்றும் ஜமாஅத் என்று பொருளாகும். ஆனால் உண்மையில் இவர்களுக்கும் இந்தப் பெயருக்கும் எவ்வித சம்பந்தமும் கிடையாது. ஏனெனில் நபி வழியில் ஒரு தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் தொழுகை நடத்துவது கூடாது என்பதற்கு எந்த ஒரு ஆதாரமும் கிடையாது என்பது மட்டுமல்ல, இரண்டாவது ஜமாஅத் நடத்துவதை நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்தியும் உள்ளார்கள்.
தொழுகைகளை இமாம் ஜமாஅத்தோடு முதல் நேரத்தில் நிறைவேற்றுவது தான் மிகவும் சிறந்ததாகும். ஆனால் அதே நேரத்தில் பணிச் சுமைகளின் காரணமாகவோ, தூக்க மிகுதியாலோ, பயணத்தின் காரணமாகவோ அல்லது வேறு ஏதாவது ஒரு காரணத்தினாலோ முதல் ஜமாஅத்திற்குத் தாமதமாகி விட்டவர்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடுப்பதற்கு எந்த ஒரு சான்றும் கிடையாது. மேலும் ஜமாஅத்தாகத் தான் தொழுவது தான் தனியாகத் தொழுவதை விட மிகச் சிறந்ததாகும். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது உங்களில் ஒருவர் தனியாகத் தொழுவதை விட இருபத்தைந்து மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி )
நூல்: முஸ்லிம் (1147)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: கூட்டாக (ஜமாஅத்துடன்) தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு அதிகச் சிறப்புடையதாகும்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் (1151)
மேற்கண்ட ஹதீஸ்கள் பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதன் சிறப்புகளை நமக்குப் படம் பிடித்துக் காட்டுகின்றன. மேலும் ஜமாஅத்தாகத் தான் தொழ வேண்டும் எனபதை வலியுறுத்துகின்றன. பள்ளியில் முதலில் தொழுகின்ற ஜமாஅத்தை மட்டும் தான் இவை குறிக்கும் என்பதற்கு எந்த ஆதாரமும் கிடையாது.
கொஞ்சம் அறிவுப்பூர்வமாகச் சிந்தித்துப் பார்த்தால் ஒருவன் பள்ளிக்கு வருவதே அங்கு வருபவர்களுடன் சேர்ந்து ஜமாஅத்தாகத் தொழ வேண்டும் என்பதற்காகத் தான். தனியாகத் தொழுவதென்றால் வீடுகளிலோ, கடைகளிலோ தொழுது கொள்ளலாம். ஏனென்றால் பூமி முழுவதும் தொழுமிடமாகும். பள்ளிவாசல் கட்டப்படுவதன் நோக்கமே அங்கு தொழப்படும் தொழுகைகள் ஜமாஅத்தாக நிறைவேற்றப்பட வேண்டும் என்பதற்காகத் தான்.
இதன் காரணமாகத் தான் ஜமாஅத்தாகத் தொழுவது தனியாகத் தொழுவதை விட இருபத்தேழு மடங்கு சிறந்ததாகும் என்று கூறிய நபி (ஸல்) அவர்கள் பின்வருமாறும் கூறியுள்ளார்கள்.
ஒருவர் தம்முடைய வீட்டில் அல்லது கடை வீதியில் தொழுவதை விட ஜமாஅத்துடன் தொழுவது இருபத்தி ஐந்து மடங்கு சிறந்ததாக இருக்கிறது.
அறிவிப்பவர்: அபூ ஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (647)
பள்ளிவாசலில் தொழுவது என்றாலே ஜமாஅத்தாகத் தொழுவது தான் என்பதாலேயே நபியவர்கள் வீட்டில், கடையில் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று கூறியுள்ளார்கள்.
எனவே நபியவர்கள் என்ன நோக்கத்திற்காகப் பள்ளிவாசலில் தொழுவதை வலியுறுத்திக் கூறியுள்ளார்களோ அந்நோக்கத்தைப் பாழ்படுத்தும் வண்ணம் இன்றைய சுன்னத் ஜமாஅத்தினர், பள்ளியில் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவதைத் தடை செய்து, தங்கள் முதுகுகளில் பாவச் சுமைகளைச் சுமந்து கொள்கிறார்கள்.
மேலும் நபியவர்கள், முதல் ஜமாஅத் தொழுகை முடிந்த பிறகு தாமதமாக வந்த ஒருவரை பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழ வைத்து நமக்கு வழிகாட்டியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்கள் தொழுகையை நிறைவேற்றிய நிலையில் ஒரு மனிதர் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், (இவருடன் சேர்ந்து தொழுவதன் மூலம்) நன்மையைப் பெறுபவர் யார்? என்று கேட்டனர். ஒரு மனிதர் முன்வந்தார். அவருடன் வந்த மனிதர் சேர்ந்து தொழுதார்.
அறிவிப்பவர்: அபூ ஸயீத் (ரலி)
நூற்கள்: திர்மிதி (204), அபூதாவூத் (487)
எனவே ஒரு பள்ளியில் எத்தனை தடவை ஜமாஅத்தாகத் தொழுதாலும் அதில் தவறில்லை என்பதை நாம் நபி வழி ஆதாரங்களின் அடிப்படையில் தெளிவாக விளங்கிக் கொண்டோம். இறை நம்பிக்கையாளர்களுக்கு இதுவே போதுமான சான்றாகும். இங்கு மற்றொன்றையும் நாம் சுட்டிக்காட்டியாக வேண்டும். பள்ளியில் நடைபெறுகின்ற அதிகமான மக்கள் பங்குபெறுகின்ற முதல் ஜமாஅத்தில் கலந்து கொள்வது தான் மிகவும் சிறப்பிற்குரியதும் நபியவர்களால் பல ஹதீஸ்களில் வலியுறுத்தப்பட்டதுமாகும் என்பதை நாம் மறந்து விடக்கூடாது.
எனினும், பள்ளிக்குத் தாமதமாக வருபவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது சிறந்ததாகும்; நபியவர்கள் காட்டிய நடைமுறையாகும். நபியவர்களின் தோழர்களான அருமை ஸஹாபாக்களும் இதனை நடைமுறைப்படுத்திக் காட்டியுள்ளனர். (நபிவழியின் அடிப்படையில் உள்ளதற்குத் துணைச் சான்றாக நாம் ஸஹாபாக்களின் நடைமுறையை ஆதாரமாகக் காட்டுகின்றோமே தவிர ஸஹாபாக்களின் நடைமுறை இறைச் செய்திக்கு நிகரானது என்ற கருத்தில் அல்ல.)
அனஸ் (ரலி) ஒரு பள்ளிவாசலுக்கு வந்த போது அங்கே தொழுகை முடிந்து விட்டது. உடனே பாங்கும் இகாமத்தும் சொல்லி ஜமாஅத்தாகத் தொழுகையை நிறைவேற்றினார்கள்.
நூல்: புகாரி, பாகம்: 1, பக்கம்: 505
இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் ஒரு பள்ளியில் நுழைந்தார்கள். அப்போது அந்தப் பள்ளியில் உள்ளவர்கள் தொழுது முடித்திருந்தார்கள். எனவே அல்கமா, அஸ்வத், மஸ்ரூக் ஆகியோருடன் ஜமாஅத் தொழுகை நடத்தினார்கள்.
அறிவிப்பவர்: ஸலமா இப்னு குகைல்
நூல்: அல்அவ்ஸத் லிஇப்னி முன்திர், பாகம்: 6, பக்கம்: 318
நபித்தோழர்கள் மற்றும் அதற்கடுத்த தலைமுறையினரில் அநேக அறிஞர்களின் கூற்றும் இதுவே. ஜமாஅத் தொழுகை நடந்து முடிந்து பள்ளியில் ஜமாஅத்தாகத் தொழுவதில் தவறில்லை என்று கூறுகின்றனர். இமாம் அஹ்மத், இஸ்ஹாக் ஆகியோரும் இவ்வாறே கூறுகின்றனர்.
(நூல்: திர்மிதி) மேலும் இரண்டாவது ஜமாஅத்தைத் தடை செய்பவர்கள் எந்த மத்ஹபைப் பின்பற்ற வேண்டும் எனக் கூறுகிறார்களோ அந்த மத்ஹபுகளில் கூட இரண்டாவது ஜமாஅத் நடத்தலாம் என்பதற்கு ஆதாரங்கள் உள்ளன. உண்மையில், நாங்கள் மத்ஹபைப் பின்பற்றுகிறோம் என்று இவர்கள் கூறுவது வெறும் வாய் வார்த்தைகளேயன்றி வேறில்லை. இதோ அவர்களுடைய மத்ஹபுகளில் கூறப்பட்டுள்ள ஆதாரங்களைக் காண்போம்.
இமாம் ஷாஃபி அவர்களின் கருத்து இமாம் ஷாஃபி (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதில் எந்தத் தவறும இல்லை. ஏனென்றால் பள்ளியில் உள்ள அனைத்து மக்களுமே சமமானவர்கள் தான். (பள்ளிவாசல் என்பதே) ஜமாஅத்தாக தொழுகையை நிறைவேற்றுவதற்காகத் தான். இதுதான் வீதிகளின் ஓரங்களிலுள்ள பள்ளிவாசல்களுக்குரிய சட்டமுமாகும். அங்கு மீண்டும் மீண்டும் ஜமாஅத்தாகத் தொழுவதில் எந்தத் தவறும் இல்லை.
ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத்
பாகம்: 1, பக்கம்: 39
ஹனஃபி மத்ஹப் அறிஞர்களின் கருத்து
இமாம் அபூ யூசுப் அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுவதாவது: இமாமிற்கென்று வரையறுக்கப்பட்ட இடமல்லாத ஒரு மூலையில் ஜமாஅத் தவறிய மூன்று பேர்களோ அல்லது நான்கு பேர்களோ நின்று பாங்கு சொல்லித் தொழுதால் எந்தத் தவறுமில்லை. இது அழகானதாகும். ஏனெனில் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கப்படுகிறது: ஒரு கிராமவாசி பள்ளியில் நுழைந்து தொழுவதற்கு நின்ற போது நபி (ஸல்) அவர்கள், உங்களில் ஒருவர் இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? (அவ்வாறு தர்மம் செய்பவர்) எழுந்து இவரோடு தொழட்டும் என்று கூறினார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் எழுந்து அவரோடு தொழுதார்கள். ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் அல்மப்சூத், பாகம்: 1, பக்கம்: 399
மௌலானா முல்லா அலீ காரி அவர்கள் குறிப்பிட்டுள்ளார்கள்: இவருடைய கருத்தாகிறது, ஒரே பள்ளியில் மீண்டும் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவது குற்றமாகாது என்பதன் மீது அமைக்கப்பட்டதாகும். ஆதாரம்: ஹனஃபி மத்ஹப் நூல் ரத்துல் முஹ்தார்
பாகம்: 3, பக்கம்: 166
ஹன்பலி மத்ஹப் அறிஞர்களின் கருத்து
ஒரு பகுதியில் இமாம் தொழுகை நடத்தி முடித்த பிறகு வேறொரு ஜமாஅத்தினர் அங்கு வந்தால் அவர்கள் ஜமாஅத்தாகத் தொழுவது விரும்பத் தக்கதாகும். இதுதான் இப்னு மஸ்வூத்(ரலி), அதாவு, ஹஸன், மற்றும் இப்ராஹிம் நகயீ, இஸ்ஹாக் ஆகியோருடைய கருத்துமாகும். ஆதாரம்: ஹன்பலி மத்ஹப் நூல் அஷ்ஷரஹுல் கபீர் லிஇப்னி குதாமா
பாகம்: 2, பக்கம்: 7
மேலும் ஹன்பலி மத்ஹப் அறிஞர்கள் இதற்குச் சான்றாக நபியவர்களின் ஹதீஸ்களை முன்வைக்கிறார்கள். இதோ அஷ்ஷரஹுல் கபீர் என்ற நூலாசிரியர் கூறுவதைப் பாருங்கள்.
ஜமாஅத் தொழுகை நடந்த பள்ளியில் மீண்டும் ஜமாஅத் தொழுகை நடத்துவதற்கு நம்முடைய ஆதாரமாகிறது தனியாகத் தொழுவதை விட ஜமாஅத்தாகத் தொழுவது இருபத்தைந்து மடங்கு சிறந்ததாகும் என்று வரக் கூடிய நபியவர்களின் பொதுவான கட்டளையாகும். மேலும் அபூ ஸயீதுல் குத்ரி (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்: நபியவர்கள் தொழுகை நடத்தி முடித்த பிறகு ஒரு மனிதர் வந்தார். உங்களில் யாராவது ஒருவர் இவரோடு தொழுது இவருக்கு தர்மம் செய்ய மாட்டாரா? என்று நபியவர்கள் கேட்டார்கள். ஒரு மனிதர் எழுந்து அவருடன் சேர்ந்து தொழுதார் என்ற ஹதீஸும் நமக்குரிய ஆதாரமாகும். இதே ஹதீஸிற்குரிய அறிவிப்பாளர் வரிசையில் அபூ உமாமா (ரலி) அவர்கள் வாயிலாகப் பின்வரும் அதிகப்படியான கருத்துக்களும் இடம் பெற்றுள்ளன. அவர்கள் இருவரும் தொழுது முடித்த போது நபியவர்கள் இந்த இருவரும் ஜமாஅத் ஆகும் என்று கூறினார்கள். ஆதாரம்: அஷ்ஷரஹுல் கபீர், பாகம்: 2 பக்கம்: 7
நபிவழியிலும் நபித்தோழர்கள் நடைமுறைகளிலும் மத்ஹபுகளிலும் அனுமதிக்கப்பட்ட ஒன்றை மறுப்பவர்கள், தடுப்பவர்கள் ஒரு கணம் சிந்தித்துப் பார்க்கட்டும்.
காலத்தே பயிர் செய்!
ரிஸாஃப், மாவநல்ல, இலங்கை
மனிதன் இவ்வுலகத்தில் இறைவனை அறிந்து கொள்ளவும் இறைச் சட்டங்களைச் செயல்படுத்தவும் அவனது அறிவுரைகளின் படி நடக்கவும் போதிய காலங்களை அல்லாஹ் வழங்கியுள்ளான். ஆனால் மனிதன் நேரமில்லை, நேரமில்லை என்று கூறிக் கொண்டு இறைக் கட்டளைகளையும் நற்காரியங்களையும் அலட்சியப்படுத்தி வருகின்றான்.
நேரமில்லை என்று சொல்பவர்கள், உண்மையாக இவ்வாறு சொல்கிறார்களா? அல்லது தட்டிக் கழிப்பதற்காக இவ்வாறு சொல்கிறார்களா? என்பதை அவர்களின் செயல்பாடுகள் தெளிவுபடுத்துகின்றன. நேரமில்லை என்று சொல்பவர்கள் மணிக்கணக்கில் நாடகங்களைப் பார்க்கிறார்கள்; பல மணி நேரம் கிரிக்கெட் பார்க்கிறார்கள்; விடிந்தது கூடத் தெரியாமல் உறங்குகிறார்கள்; நண்பர்களுடன் அரட்டை அடிக்கிறார்கள்; சின்னத்திரை, பெரிய திரைகளில் பல மணி நேரம் சினிமா பார்க்கிறார்கள். இப்படி ஏராளமான நேரங்களை வீணடிப்பவர்களுக்கு இறை நினைவுக்கும் அவனது கட்டளைகளை நிறைவேற்றவும் நேரமில்லை என்று கூறுவது உண்மையாக இருக்குமா?
விலை மதிப்பற்ற செல்வமான இந்தக் காலத்தை வீணடிப்பது பெருங்குற்றமாகும். இதற்காகக் கடுமையான தண்டனையை மறுமை நாளில் பெற நேரிடும். தண்டனையிலிருந்து தப்பிக்கவும் முடியாது.
எங்கள் இறைவா! எங்களை வெளியே அனுப்பு! நாங்கள் செய்து வந்தது போலன்றி நல்லறங்களைச் செய்கிறோம் என்று அங்கே அவர்கள் கதறுவார்கள். படிப்பினை பெறும் அளவு உங்களுக்கு நாம் வாழ் நாளை அளித்திருக்கவில்லையா? உங்களிடம் எச்சரிக்கை செய்பவர் வரவில்லையா? எனவே அனுபவியுங்கள்! அநீதி இழைத்தோருக்கு எந்த உதவியாளரும் இல்லை (என்று கூறப்படும்) (அல்குர்ஆன் 35:37)
மேற்கூறிய வசனம் நமக்கு உணர்த்தும் கருத்து என்ன?
நல்வாழ்க்கை அமைத்துக் கொள்ள இவ்வுலகில் போதுமான நேரத்தை அல்லாஹ் வழங்கியுள்ளான்.
காலத்தை வீணடிக்காமல் இருக்கவும் நல்லறங்களில் ஈடுபடவும் செய்ய வேண்டுமென இறைத்தூதர்கள் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
காலத்தை தேவையற்றவற்றில் செலவழிக்கக் கூடாது.
காலத்தை வீணடிப்பது பெருங்குற்றம். அதற்குரிய தண்டனை நரகமே!
மறுமை வந்து விட்டால் அப்போது தண்டனையிலிருந்து யாரும் காப்பற்ற உதவி செய்ய முடியாது.
எனவே நமக்கு கிடைத்த நேரங்களை நற்காரியங்களில் பயன்படுத்த வேண்டும். வீணான காரியங்களில் நேரங்களை கழிக்கக் கூடாது. இறைவன் கொடுத்த அருட்கொடைகளில் ஒன்று தான் ஓய்வு நேரமாகும். இவற்றைப் பெரும்பாலும் பலர் வீணடிக்கவே செய்கின்றனர்.
மனிதர்கல் அதிகமானோர் இரண்டு அருட்செல்வங்கன் விஷயத்தில் (ஏமாற்றப்பட்டு) இழப்புக்குள்ளாகி விடுகின்றனர். 1. ஆரோக்கியம், 2. ஓய்வு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ர), நூல்: புகாரி (6412)
நல்ல ஆரோக்கியமாக இருக்கும் போதும், ஓய்வுகள் கிடைக்கும் போதும் நற்காரியங்களில் அதிகம் ஈடுபட வேண்டும். குறிப்பாக இஸ்லாத்தின் மூல ஆதாரங்களில் முதன்மையான திருக்குர்ஆனை, பார்த்து ஓதும் நிலையையாவது ஏற்படுத்திக் கொள்ள வேண்டும்.
பெரும்பான்மை மக்களுக்கு திருக்குர்ஆனை பார்த்துக் கூட ஓதத் தெரியவில்லை என்பது அதிர்ச்சியான உண்மையாகும். இஸ்லாத்தை ஏற்றுப் பல வருடங்களாக, ஏன் பரம்பரை பரம்பரையாக இஸ்லாத்தில் இருப்பவர்களுக்கும் திருக்குர்ஆனை பார்த்துக் கூட ஓதத் தெரியவில்லையானால் அவர்கள் இஸ்லாத்தின் மீதும் திருக்குர்ஆன் மீதும் எவ்வளவு பற்று வைத்திருக்கிறார்கள் என்பதைக் காட்டுகிறது.
குர்ஆனைத் தாமும் கற்று, பிறருக்கும் அதனைக் கற்பித்தவரே உங்கல் சிறந்தவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: உஸ்மான் (ரலி)
நூற்கள்: புகாரி (5027), திர்மிதி (2832, 2834), அபூதாவூத் (1240), அஹ்மத் (469)
மற்ற மொழிகளைக் கற்பதில் காட்டும் அக்கறையில் ஒரு விழுக்காடு முயற்சி செய்தால் கூட திருக்குர்ஆனைக் கற்றிருக்கலாம். ஆனால் அந்த அக்கறை மறுமை வெற்றிக்கு வித்திடும் திருக்குர்ஆனில் யாரும் காட்டுவதில்லை.
இந்த நிலையை இஸ்லாமியர்கள் மாற்றவேண்டும். ஒவ்வொரு வீட்டிலும் திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவர்கள் இருக்கவேண்டும். தெரிந்தவர்கள் தெரியாதவர்களுக்குக் கற்றுக் கொடுக்க வேண்டும். வீட்டில் உள்ள அனைவரும் அழகிய முறையில் திருக்குர்ஆனை ஓதத் தெரிந்தவர்களாகவும் அதை தினமும் பொருளறிந்து ஓதுபவர்களாகவும் மாற வேண்டும். மறுமை நாளில் கைசேதப்படுவதற்கு முன், கிடைத்த நேரத்தை நற்காரியங்களில் பயன்படுத்துவோம்; மறுமை நாளில் வெற்றி பெறுவோம்.
நபித்தோழர்கள் வாழ்வினிலே
மறப்போம்! மன்னிப்போம்!
நான் நபி (ஸல்) அவர்கடம் அமர்ந்திருந்தேன். அப்போது அபூபக்ர் (ர) அவர்கள் தமது முழங்கால் வெயே தெரியுமளவிற்கு ஆடையின் ஒரு பக்கத்தை (தூக்கிப்) பிடித்த படி (எங்களை நோக்கி) வந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், உங்கள் தோழர் வழக்காட வந்து விட்டார் என்று சொன் னார்கள். அபூபக்ர் (ர) அவர்கள் (நபி -ஸல்- அவர்களுக்கு) சலாம் கூறிவிட்டு, அல்லாஹ் வின் தூதரே! எனக்கும் கத்தாபின் மகனா(ர் உம)ருக்கும் இடையே சிறிது வாக்குவாதம் ஏற்பட்டது. நான் (கோபமாக) அவரை நோக்கி விரைந்தேன். பிறகு (என் செய்கைக்காக) நான் வருந்தி அவரிடம் என்னை மன்னிக்கும்படி கேட்டேன். அவர் என்னை மன்னிக்க மறுத்து விட்டார். ஆகவே உங்கடம் வந்தேன் என்று சொன்னார்கள்.
உடனே, நபி (ஸல்) அவர்கள், அபூபக்ரே! அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று மும்முறை கூறினார்கள். பிறகு உமர் (ர) அவர்கள் (அபூபக்ர் -ர- அவர்களை மன்னிக்க மறுத்து விட்டதற்காக) மனம் வருந்தி அபூபக்ர் (ர) அவர்கன் வீட்டிற்குச் சென்று, அங்கே அபூபக்ர் (ர) அவர்கள் இருக்கிறார்களா? என்று கேட்க, வீட்டார் இல்லை என்று பதிலத்தார்கள்.
ஆகவே, அவர்கள் நபி (ஸல்) அவர்கடம் சென்றார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடைய முகம், (கோபத்தால்) நிறம் மாறலாயிற்று. எனவே, அபூபக்ர் (ர) அவர்கள் பயந்து போய் தம் முழங்கால்கன் மீது மண்டியிட்டு அமர்ந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தான் (வாக்கு வாதத்தை தொடங்கியதால் உமரை விட) அதிகம் அநீதியிழைத்தவனாகி விட்டேன் என்று இருமுறை கூறினார்கள்.
அப்போது நபி (ஸல்) அவர்கள், (மக்களே!) அல்லாஹ் என்னை உங்கடம் அனுப்பினான். பொய் சொல்கிறீர் என்று நீங்கள் கூறினீர்கள். அபூபக்ர் அவர்களோ, நீங்கள் உண்மையே சொன்னீர்கள் என்று கூறினார்; மேலும் (இறை மார்க்கத்தை நிலை நிறுத்தும் பணியில்) தன்னையும் தன் செல்வத்தையும் அர்ப்பணித்து என்னிடம் பரிவுடன் நடந்து கொண்டார். அத்தகைய என் தோழரை எனக்காக நீங்கள் (மன்னித்து) விட்டு விடுவீர்களா? என்று இருமுறை சொன்னார்கள். அதன் பிறகு அபூபக்ர் (ர) அவர்கள் மன வேதனைக்கு உள்ளாக்கப்படவில்லை. அறிவிப்பவர்: அபுத்தர்தா (ரலி)
நூல்: புகாரி 3661
இருவருக்கு மத்தியில் சண்டை ஏற்படும் போது அது ஆரம்பத்தில் சிறியதாக இருந்தாலும் நாளடைவில் பெரும் பூகம்பமாக ஏற்பட்டு இருவருக்குமிடையில் நிரந்தரப் பிரிவு ஏற்பட்டு விடுகிறது. இதற்குக் காரணம் நம்மிடம் விட்டுக் கொடுக்கும் எண்ணம் இருப்பதில்லை; தவறை மன்னிக்கும் மனப் பக்குவமும் வருவதில்லை.
அபூபக்ர் (ரலி) அவர்களுக்கும் உமர் (ரலி) அவர்களுக்கும் இடையில் சண்டை வந்தது. இதில் அபூபக்ர் (ரலி) அவர்கள் தான் தவறிழைத்துள்ளார்கள். எனவே தவறுக்காக உமர் (ரலி) அவர்களிடம் மன்னிப்புக் கேட்டார்கள். ஆனால் கோபத்தின் உச்சத்தில் இருந்த உமர் (ரலி) அவர்கள் மன்னிக்க மறுத்து விட்டார்கள். இதனால் மன வேதனை அடைந்த அபூபக்ர் (ரலி) அவர்கள், நபிகளாரிடம் சென்று விவரத்தைத் தெரிவிக்கிறார்கள். இந்நிலையில் கோபம் தணிந்த உமர் (ரலி) அவர்கள், அபூபக்ர் மன்னிப்புக் கேட்டும் மன்னிக்கத் தவறியது மாபெரும் தவறு என்பதை உணர்ந்து அபூபக்ர் (ரலி) அவர்களைச் சந்திக்க வீட்டிற்குச் சென்ற போது அவர்களைக் காணாததால் நபிகளாரின் அவைக்குச் சென்றார்கள். உமர் (ரலி) அவர்களைக் கண்ட நபிகளாருக்கு கோபம் ஏற்பட்டது. இஸ்லாத்திற்காக பெரும் தியாகத்தைச் செய்த அபூபக்ரையே மன்னிக்க மறுப்பதா? என்று கோபப்பட்டார்கள். அவர்களின் முகத்தில் கோபத்தின் அறிகுறியைக் கண்ட அபூபக்ர் (ரலி) அவர்கள், உமர் மீது எந்தத் தவறும் இல்லை. அவர் மீது கோபப்படாதீர்கள் என்று நபிகளாரை சமாதானப்படுத்தினார்கள்.
மன்னிக்க மறுத்த உமர் (ரலி) அவர்கள் மீது நன்றாக கோபப்படட்டும், நன்றாகத் திட்டட்டும் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் இருந்திருக்கலாம். ஆனால் நற்பண்புகளை அதிகம் கொண்டிருந்த அபூபக்ர் (ரலி) அவ்வாறு நடந்து கொள்ளவில்லை. நான் தான் தவறு செய்தேன் என்று கூறி, உமர் (ரலி) அவர்கள் மீது நபிகளாருக்கு இருந்த கோபத்தைத் தணித்தார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது அளவு கடந்த அன்பை உமர் (ரலி) கொண்டிருந்தார்கள். நபிகளாருக்குப் பிறகு யாரை தலைவராகத் தேர்ந்தெடுப்பது என்ற நிலை வரும் போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முதலில் உமரை முன் மொழிந்தார்கள். ஆனால் நபிகளாருக்குப் பிறகு மிகச் சிறந்தவர் அபூபக்ர் (ரலி) அவர்களே என்று கூறி முதன் முதலில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் உமர் (ரலி) அவர்கள் தான்.
அபூபக்ர் (ரலி) அவர்கள், நீங்கள் உமர் பின் கத்தாப், அல்லது அபூ உபைதா பின் அல்ஜர்ராஹ்விற்கு (தலைமைக்கான) விசுவாசப் பிரமாணம் செய்யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ர) அவர்கள், இல்லை; நாங்கள் உங்கடமே விசுவாசப் பிரமாணம் செய்கிறோம். நீங்கள் எங்கள் தலைவர்; எங்கல் சிறந்தவர்; எங்கடையே அல்லாஹ்வின் தூதருக்கு மிகவும் பிரியமாயிருந்தவர்கள் என்று சொல்விட்டு, அவர்களுடைய கரத்தைப் பிடித்து அவர்கடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள். மக்களும் அபூபக்ர் (ர) அவர்கடம் விசுவாசப் பிரமாணம் செய்தார்கள்.
நூல்: புகாரி 3668
மனிதர்கள் செய்யும் தவறுகளை மன்னிக்கும் மனப் பக்குவத்தை உருவாக்கிக் கொள்ள வேண்டும். தன் பெருந்தன்மையால் தவறு செய்பவர்களைத் திருத்த வேண்டும். இருவருக்கும் மத்தியில் மனக் கசப்புகளை உருவாக்காமல் அதை நீக்கும் செயல்களில் ஈடுபட வேண்டும். ஆனால் இன்று ஒருவர் ஸலாம் கூறினால், அவர் தமக்குப் பிடிக்காதவராக இருந்தால் அந்த ஸலாத்திற்குக் கூட பதில் சொல்லாமல் முகத்தை திருப்பிக் கொண்டு சென்று விடுபவர்கள் அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) ஆகிய இருவரும் நடந்து கொண்ட முறையை எண்ணிப் பார்க்கட்டும். மேலும் பின்வரும் நபிமொழியையும் சிந்திக்கட்டும்.
நீங்கள் இறை நம்பிக்கை (ஈமான்) கொள்ளாத வரை சொர்க்கத்தில் நுழைய முடியாது. நீங்கள் ஒருவரை ஒருவர் நேசிக்காதவரை (முழுமையான) இறை நம்பிக்கையாளர்களாக ஆக முடியாது. ஒன்றை உங்களுக்கு நான் அறிவிக்கட்டுமா? அதை நீங்கள் செயல்படுத்தினால் ஒருவரை ஒருவர் நேசம் கொள்ளலாம். உங்களிடையே ஸலாத்தைப் பரப்புங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (93)
விதண்டாவாதமும் உண்மை விளக்கமும்
அறிவற்ற அப்ஜத் கணக்கு
பி. ஜைனுல் ஆபிதீன்
ஷாகுல் ஹமீத் அவர்கள் தமது மகனுக்கு அவ்வூர் தலைவரின் மகளைப் பெண் கேட்டதாகவும், அதற்கு அந்தத் தலைவர், பெரும் செல்வந்தனான நான் ஏழையான உனது மகனுக்கு எனது பெண்ணைக் கொடுக்க மாட்டேன் என்று மறுத்ததாகவும் ஷாகுல் ஹமீத் மவ்லிதில் கூறப்படுகிறது.
அப்போது ஷாகுல் ஹமீத் அவர்கள் ஒரு வாதத்தை எடுத்து வைத்தாராம். ஏழை என்பதை அரபி மொழியில் ஃபக்கீர் என்பர். அது போல் தலைவனை அமீர் என்பர். ஃபக்கீர் என்பதற்கு அப்ஜத் கணக்குப்படி 390 எண்ணும் அமீர் என்பதற்கு அப்ஜத் கணக்குப்படி 251 எண்ணும் வருகிறது. ஃபக்கீர் என்பதன் தொகை அதிகமாக உள்ளதால் ஃபக்கீர் தான் சிறந்தவர் என்று அவர் வாதிட்டதாக ஷாகுல் ஹமீத் மவ்லிதில் கூறப்பட்டுள்ளது. இது தவறு என்பதை அடுக்கடுக்கான ஆதாரத்துடன் களியக்காவிளை விவாதத்தில் எடுத்து வைத்தோம். இது குறித்து அவர்கள் எழுப்பும் விதண்டாவாதமும் அதற்கான நமது விளக்கமும் இதோ: நமது கேள்வி: அரபி எழுத்துக்களுக்கு எண்களை வழங்கும் அப்ஜத் கணக்கு அடிப்படையில் அமீர் என்ற சொல்லுக்குக் கூட்டுத் தொகை குறைவாகவும் பக்கீர் என்ற சொல்லின் கூட்டுத் தொகை கூடுதலாகவும் வருவதால் பக்கீர் தான் உயர்ந்தவர் என்று வாதிடும் மவ்லிதின் கூற்றுக்கு திருக்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரம் காட்ட முடியுமா?
அவர்களின் பதில்: பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கல்வி இவற்றுக்கு எல்லாம் திருக்குர்ஆன், ஹதீஸில் ஆதாரம் இருக்கிறதா? ஆதாரம் இல்லாவிட்டாலும் அதை நாம் கற்பதில்லையா? அது போன்று தான் இந்த அப்ஜத் என்ற எண் கணிதமும்! நமது பதில்: அலிஃபுக்கு ஒன்று, பாவுக்கு இரண்டு என்று நம்பர் கொடுப்பதற்கு என்ன ஆதாரம்? மேலும் கூடுதல் எண்கள் வந்தால் அதற்குச் சிறப்பு என்று சொல்வதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டோம். அதற்கு அவர்கள், பயோ டெக்னாலஜி, கம்ப்யூட்டர் கல்வியை நாம் கற்பதில்லையா? இதற்கு குர்ஆனில் ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்கிறார்கள்.
கம்ப்யூட்டர் கல்வி என்பது ஒரு படிப்பு! அது தொடர்பாக தர்க்க ரீதியாக என்ன கேள்வி கேட்டாலும் அதற்குப் பதில்கள் உண்டு. இதைப் போன்று அப்ஜத் கணக்குக்கு இருக்கிறதா? மேலும் கம்ப்யூட்டர் கல்வியைப் படித்தவன் அல்லாஹ்விடத்தில் உயர்ந்தவன்; அதைப் படிக்காதவன் தாழ்ந்தவன் என்று கூறினால் தான் திருக்குர்ஆன், ஹதீஸிலிருந்து ஆதாரத்தைக் காட்ட வேண்டும். இவ்வாறு யாரும் சொல்வதில்லை. மனிதனுக்குக் கேடு தராத எந்தக் கல்வியையும் நாம் கற்கலாம். இதைப் போன்று எண்களைப் பற்றிய கணிதத்தையும் கற்றுக் கொள்ளலாம்.
ஆனால் அப்ஜத் கணக்கின்படி கூடுதல் கூட்டுத் தொகை வருவதால் ஒருவர் அல்லாஹ்விடத்தில் சிறந்தவர், குறைவாக வருவதால் அவர் இறைவனிடத்தில் மட்டமானவர் என்று மார்க்கத்தோடு தொடர்புபடுத்திப் பேசும் போது நாம் ஆதாரம் கேட்கத் தான் செய்வோம். நீங்கள் தரத் தான் வேண்டும். மார்க்கம் தொடர்பில்லாமல் கிறுக்குத்தனமாக பேசினால் அதை நாம் கண்டு கொள்ளாமல் இருக்கலாம். ஆனால் மார்க்கத்தோடு தொடர்பு படுத்திப் பேசும் போது கேள்வி கேட்பது கடமையாகிறது.
பயோ டெக்னாலஜி படித்தால் மறுமையில் நன்மை இருக்கிறது என்று சொல்லியிருந்தால் அதற்கு என்ன ஆதாரம் என்று கேட்டிருப்போம். ஆனால் அப்படிச் சொல்வதில்லை. எனவே அதைப் பற்றி நாம் கேட்பதில்லை. இறையச்சத்தின் அடிப்படையில் தான் ஒருவர் உயர்ந்தவராக முடியும். ஆனால் அதற்கு மாற்றமாக அப்ஜத் கணக்கைக் காட்டுகிறீர்கள் என்று நாம் கேட்டால் பயோ டெக்னாலஜி என்று தொடர்பில்லாததை உளறுகிறார்கள்.
கம்ப்யூட்டர் தொழில் நுட்பத்தைப் படிப்பது ஒரு கல்வி. ஆனால் அலிஃபுக்கு ஒன்று, பாவுக்கு இரண்டு என்று சொல்வது என்ன கல்வியா? ஏன் அலிஃபுக்கு ஆறு என்றும், பாவுக்குப் பத்து என்றும் சொன்னால் என்ன? எவனோ ஒருவன் உளறியதை வைத்துக் கொண்டு மார்க்கத்தோடு விளையாடுவது கூடுமா?
எண்ணுவதற்கு எண்களும், எழுதுவதற்கு எழுத்துக்களும் இருக்கின்றன. ஏன் எண்களுக்கு எழுத்துக்களையும், எழுத்துக்களுக்கு எண்களையும் வழங்குகிறீர்கள் என்று கேட்டால் அதற்குப் பதில் இல்லை.
பயோ டெக்னாலஜி ஆதாரம் காட்டுபவர்கள், அதை ரபீவுல் அவ்வல் மாதம் 12ஆம் நாள் மவ்லித் ஓதுவதைப் போல் ஓதட்டும். அதை ஓதினால் நன்மை என்று கூறட்டும். ஆனால் இவ்வாறு அவர்கள் செய்வதில்லை. ஆனால் மவ்லிதை ஓதினால் நன்மை உண்டு என்றல்லவா கூறுகிறீர்கள்? இதுவும் பயோ டெக்னாலஜியும் ஒன்றா?
அவர்கள் வாதம்: அப்ஜத் கணக்குக்கு இன்னொரு ஆதாரம் செப்டம்பர் 11ம் நாள் அமெரிக்காவின் வர்த்தக மையம் தாக்கப்பட்டது. இதுபற்றி நாம் என்ன சொன்னோம். ஒன்பதாவது அத்தியாயம் தவ்பாவில் 110 வசனத்தில் இது தொடர்பாகக் கூறப்பட்டுள்ளது என்று நாம் பெருமையாகக் கூறவில்லையா? இது அப்ஜத் கணக்கு வகையில் உள்ளதா இல்லையா?
நமது பதில்: இதை யார் பெருமையாக சொன்னது? அறிவற்ற சிலர் கூறிய உளறல் தான் அது. 110ஆவது வசனம் இதைத் தான் கூறுகிறதா?
நபி (ஸல்) அவர்கள் தபூக் போருக்குச் சென்று வந்த போது மதீனாவில் நயவஞ்சகர்கள் ஒரு பள்ளிவாசலைக் கட்டினார்கள். இந்தப் பள்ளியின் மூலம் குஃப்ரை வளர்ப்பதற்கும், இறை நம்பிக்கையாளர்களிடம் பிரிவினையை ஏற்படுத்தவும், இஸ்லாத்திற்கு எதிரியாக இருப்பவர்கள் அனைவருக்கும் புகலிடமாக இருக்கவும் கட்டி விட்டு, நபிகளாரின் அங்கீகாரத்தைப் பெற நபிகளாரைத் தொழுவிக்குமாறு அழைத்தனர். ஆனால் அவர்களின் சதித் திட்டத்தை நபிகளாருக்கு எடுத்துரைத்து, நபிகளாரை அங்கு தொழுவிக்க வேண்டாம் என்று அல்லாஹ் தடுத்து விட்டான். இதைத் தான் திருக்குர்ஆன் கூறுகிறது.
தீங்கிழைப்பதற்காகவும், (ஏக இறைவனை) மறுப்பதற்காகவும், நம்பிக்கை கொண்டோரிடையே பிரிவை ஏற்படுத்தி டவும், இதற்கு முன் அல்லாஹ்வுக்கும் அவனது தூதருக்கும் எதிராகப் போரிட்டோருக்குப் புகலிடமாகவும் ஒரு பள்ளிவாசலை ஏற்படுத்திக் கொண்டோர் நாங்கள் நல்லதைத் தவிர வேறெதனையும் நாடவில்லை என்று சத்தியம் செய்கின்றனர். அவர்கள் பொய்யர்களே என்று அல்லாஹ் சாட்சி கூறுகிறான். (அல்குர்ஆன் 9: 107)
இந்தப் பின்னணியைத் தான் இந்த வசனம் பேசுகிறதே தவிர உலக வர்த்தக மையத்தைப் பற்றியா பேசுகிறது?
ஒன்பதாவது அத்தியாயம் என்றால் ஒன்பதாவது மாதம், 110வது வசனம் என்றால் 110வது மாடி என்று இவர்களாக விளக்கம் கொடுத்து உளறியது உண்மையாகுமா? அப்ஜத் கணக்கைப் போன்று கிறுக்குத்தனமாக சொல்லி விட்டு, நாம் அனைவரும் கூறினோம் என்று கூறுகிறார்கள். அந்தச் சம்பவம் நடந்த போதே தவ்பா அத்தியாயத்தில் உள்ளதற்கும் உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதற்கும் எந்தச் சம்பந்தமும் இல்லை என்று உணர்வு வார இதழில் தெளிவாக எழுதியிருந்தோம். இதைக் கூட அறியாமல் நாம் அனைவரும் அவ்வாறு கூறினோம் என்று கூறுகிறார்கள்.
உலக வர்த்தக மையம் தாக்கப்பட்டதை நீங்கள் அங்கீகரிக்கிறீர்களா? அப்பாவி மக்கள் கொல்லப்படுவதை நீங்கள் ஆதரிக்கிறீர்களா? இவ்வாறு அப்பாவி மக்களைக் கொல்வது தான் மார்க்கத் தீர்ப்பு என்று கூறுகிறீர்களா?
அவர்கள் வாதம்: இவர்கள் நடத்தும் டி.வி.யில் சினிமா போடுகிறார்கள், சினிமா பாடல்கள் போடுகிறார்கள், ஆனால் மவ்லிதில் வெறும் சினிமா மெட்டில் தான் பாடுகிறார்கள். இது தவறு என்றால் சினிமா மற்றும் சினிமா பாடல்கள் போடுவது மட்டும் கூடுமா?
நமது பதில்: நமது ஜமாஅத் எப்போது டி.வி. வைத்திருந்தது? பாக்கர் என்ற தனி நபர் சில நண்பர்களோடு சேர்ந்து சில மாதங்கள் வைத்திருந்தார். அவர் கையில் வந்த போது சினிமா மற்றும் சினிமா பாடல்கள் அனைத்தும் உடனடியாக நிறுத்தப்பட்டன. மக்களுக்கு விழிப்புணர்வு தரும் நிகழ்ச்சி மட்டும் ஒளிபரப்பப்பட்டன. களியக்காவிளையில் நடந்த விவாதத்தின் போதே அது அவரது கைவிட்டுப் போய் விட்டது.
மவ்லித் ஓதுவது கூடுமா? கூடாதா? என்ற விவாதத்திற்கும் இதற்கும் ஏதாவது சம்பந்தம் இருக்கிறதா? மவ்லித் ஓதுவது கூடும் என்பதற்குரிய ஆதாரத்தைக் காட்டாமல் அவர்கள் டி.வி.யில் சினிமா போடுகிறார்கள் என்றால் இவர்களின் ஆதாரங்கள் எப்படி இருக்கிறது என்பதைத் தெரிந்து கொள்ளுங்கள்.
அவர்கள் வாதம்: நபிகளாரைப் புகழ்ந்து மவ்லித் ஓதக்கூடாது என்று கூறியவர்கள், அவர்களின் ஜும்ஆ மேடையில் நடிகர், டி. ராஜேந்தரை ஏற்றி, புகழ்ந்து பேசியது எவ்வாறு சரியாகும்?
நமது பதில்: நாம் எப்போது அவரை ஜும்ஆ மேடையில் ஏற்றினோம்? அதற்குரிய சான்றுகளைத் தர வேண்டும் என்றோம். அவர்கள் தரவில்லை. அவரைப் புகழ்ந்து பேசினோம் என்று கூறியதற்கு ஆதாரத்தைத் தர வேண்டும் என்று கேட்டோம். அதற்கு, பொய்களை எழுதும் பத்திரிக்கைகளைக் காட்டுகிறார்கள்.
அன்று ஜும்ஆ நடத்தியது நான் தான். அவரையா நாம் ஜும்ஆவில் ஏற்றினோம்? ஜும்ஆ முடிந்தவுடன் சில வார்த்தைகளைக் கூற வேண்டும் என்று சொன்னார். நாம் அனுமதித்தோம். அதில் அவர் பேசிய சில தவறுகளையும் சுட்டிக் காட்டினோம். இது தான் நடந்தது. சரி! இதற்கும் விவாதத்திற்கும் என்ன தொடர்பு?
தவ்ஹீத் ஜமாஅத்தின் கொள்கைகள், பிரச்சாரம் இவற்றால் ஈர்க்கப்பட்டு பல தலைவர்கள், நடிகர்கள் நமது ஜமாஅத்தைத் தொடர்பு கொள்கிறார்கள். அவர்களை அனுமதிப்பது தவறா? அவர்களின் ஐயங்களைப் போக்குவதும் தவறா?
சரி! ராஜேந்தர் எங்கள் பள்ளிக்கு வந்ததால் மவ்லித் ஓதுவது சரியாகுமா? அல்லது நாங்கள் டி.வி. நடத்தியதால், அதில் சினிமா போட்டதால் (நாம் சினிமா போடவில்லை) மவ்வலித் ஓதுவது சரியாகுமா?
விவாதத்தின் போது மவ்லித் ஓதுவதற்குச் சரியான சான்றுகளைச் சமர்ப்பிப்பதை விட்டு விட்டு அவைக்கு உதவாத கதைகளைத் தான் அவர்களால் கூற முடிந்தது.
? கார் போன்ற வாகனங்களை பெண்கள் ஓட்டலாமா?
மின்அஞ்சல் மூலம் ஹஸன், அமெரிக்கா பெண்கள் கார் போன்ற வாகனங்கள் ஓட்டுவதை இஸ்லாம் தடை செய்யவில்லை. இஸ்லாம் கூறும் உடை விதிகளைப் பின்பற்றி தாராளமாக வாகனங்களை ஓட்டலாம். நபிகளார் காலத்தில் இருந்த வாகனமான ஒட்டகத்தில் பெண்கள் பயணித்திருக்கிறார்கள். நபிகளார் அதைத் தடை செய்யவில்லை.
ஒட்டகங்கல் பயணம் செய்த (அரபுப்) பெண்கலேயே சிறந்தவர்கள், நல்ல குறைஷிக் குலப் பெண்களாவர். அவர்கள் குழந்தைகள் மீது அதிகப் பாசம் கொண்டவர்கள்; தம் கணவனின் செல்வத்தை அதிகமாகப் பேணிக் காப்பவர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர)
நூல்: புகாரி (5082), முஸ்லிம் (4946)
?புகாரியில் 799வது ஹதீஸில் ரிஃபாஆ பின் ராஃபிஉ அஸ்ஸுரக்கீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் துஆவை தொழுகையில் ஓதலாமா?
நாங்கள் ஒரு நாள் நபி (ஸல்) அவர்களுக்குப் பின்னால் (அவர்களைப் பின்பற்றித்)தொழுது கொண்டிருந்தோம். அவர்கள் ருகூவிருந்து தலையை உயர்த்திய போது ஸமி அல்லாஹு மன் ஹமிதஹ் (அல்லாஹ் தன்னைப் புகழ்வோரின் புகழுரையை ஏற்றுக் கொள்கிறான்) எனக் கூறினார்கள். அவர்களுக்குப் பின்னாருந்த ஒரு மனிதர் ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ (எங்கள் இறைவா! புகழ் அனைத்தும் உனக்கே உரியது. தூய்மையும் சுபிட்சமும் மிக்க உனது திருப்புகழை நிறைவாகப் போற்றுகிறேன்) என்று கூறினார். தொழுது முடித்ததும் நபி (ஸல்) அவர்கள், (இவ்வாறு) கூறியவர் யார்? என்று கேட்டார்கள். அந்த மனிதர், நான் தான் என்றார். முப்பதுக்கும் மேற்பட்ட வானவர்கள் இதை நம்மில் முதல் பதிவு செய்வது யார் என போட்டியிட்டுக் கொள்வதை நான் கண்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: புகாரி 799)
ரப்பனா வல(க்)கல் ஹம்து. ஹம்தன் கஸீரன் தய்யிபன் முபாரக்கன் ஃபீஹீ என்ற துஆவை தொழுகையில் ஓதியவரைக் கண்டிக்காமல், அந்த வாசகத்தின் சிறப்பையும் குறிப்பிட்டு நபி (ஸல்) அவர்கள் அங்கீகாரம் அளித்துள்ளதால் இந்த துஆவை தாராளமாக ஓதலாம்.
? மாற்று மதத்தவர்கள் பொங்கல், தீபவாளி போன்ற பண்டிகைகளில் அவர்களின் சிலைகளுக்குப் படைக்காதவற்றைத் தந்தால் அவற்றைச் சாப்பிடுவது கூடுமா?
மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களை முழுமையாக இஸ்லாம் தடை செய்யவில்லை. நபி (ஸல்) அவர்கள் மாற்று மதத்தவர்கள் தரும் பொருட்களைச் சாப்பிட்டுள்ளார்கள். அவர்களிடம் கேட்டும் வாங்கி உள்ளார்கள். தண்ணீர், உணவு, ஆடை என்று பல பொருட்களை மாற்று மதத்தவர்களிடமிருந்து பெற்றுள்ளார்கள் என்பதற்குப் பின்வரும் ஆதாரப்பூர்வமான செய்திகள் சான்றளிக்கின்றன.
யூதப் பெண் ஒருத்தி நபி (ஸல்) அவர்கடம் விஷம் தோய்க்கப்பட்ட ஓர் ஆட்டை அன்பப்பாகக் கொண்டு வந்தாள். நபி (ஸல்) அவர்கள் அதிருந்து (சிறிது) உண்டார்கள். அவளைக் கொன்று விடுவோமா? என்று (நபியவர்கடம்) கேட்கப்பட்டது. அவர்கள், வேண்டாம் என்று கூறி விட்டார்கள். நபி (ஸல்) அவர்கன் தொண்டைச் சதையில் அந்த விஷத்தின் பாதிப்பை நான் தொடர்ந்து பார்த்து வந்தேன்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (2617)
தூமத்துல் ஜந்தல் பகுதியின் மன்னர் உகைதிர் என்பவர், நபி (ஸல்) அவர்களுக்குப் பட்டுத் துணி ஒன்றை அன்பளிப்பாக வழங்கினார். அதை நபி (ஸல்) அவர்கள் எனக்கு அன்பளிப்பாக வழங்கி, இதை முக்காடுகளாக வெட்டி, ஃபாத்திமாக்களிடையே பங்கிட்டு விடுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி)
நூல்: முஸ்லிம் (4209)
உகைதிர் என்ற மன்னர் கிறிஸ்தவ மதத்தைச் சார்ந்தவர் ஆவார்.
நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்தில் (கைபரிருந்து திரும்பி வந்து கொண்டு) இருந்தோம். இரவின் ஆரம்பத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்தோம். அதிகாலை நேரத்தின் முகப்பை (இரவின் கடைசிப் பகுதியை) நாங்கள் அடைந்த பொழுது ஓய்வெடுப்பதற்காக (ஓரிடத்தில்) தங்கினோம். சூரியன் உச்சிக்கு வரும் வரை நாங்கள் எங்களையும் மீறிக் கண்ணயர்ந்து விட்டோம். உறக்கத்திருந்து கண் விழித்தவர்கல் அபூபக்ரே முதலாமவராக இருந்தார். அல்லாஹ்வின் தூதர் தாமாகக் கண் விழிக்காத வரை அவர்களை உறக்கத்திருந்து எவரும் எழுப்புவதில்லை. அடுத்து உமர் (ர) அவர்களும் கண் விழித்தார்கள்.
அபூபக்ர் (ர) அவர்கள் நபி (ஸல்) அவர்கன் தலைமாட்டில் அமர்ந்து கொண்டு குரலை உயர்த்தி அல்லாஹு அக்பர்-அல்லாஹ் மிகப் பெரியவன் என்று கூறலானார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள் கண் விழித்து (சிறிது தொலைவு சென்றதன்) பின் (தம் வாகனத்திருந்து) இறங்கி எங்களுக்கு அதிகாலைத் தொழுகையைத் தொழுவித்தார்கள்.
அப்போது ஒரு மனிதர் எங்களுடன் தொழாமல் கூட்டத்தாரை விட்டுத் தனியே விலகியிருந்தார். நபி (ஸல்) அவர்கள் (தொழுகையை முடித்து) திரும்பியவுடன், இன்னாரே! எங்களுடன் நீர் ஏன் தொழவில்லை? என்று கேட்டார்கள். அவர், எனக்குப் பெருந்தொடக்கு ஏற்பட்டு விட்டது என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் மண்ணில் தயம்மும் செய்யும்படி அவருக்குக் கட்டளையிட்டார்கள். பிறகு அவர் தொழுதார். நபி (ஸல்) அவர்கள் என்னை ஒரு வாகனத்தில் தமக்கு முன்னால் அமர்த்தினார்கள்.
எங்களுக்குக் கடுமையான தாகம் ஏற்பட்டது. நாங்கள் பயணம் சென்று கொண்டிருக்கும் போது (ஒட்டகத்தின் மீது) தோலினாலான தண்ணீர்ப் பைகள் இரண்டிற்கிடையே தன் இரு கால்களையும் தொங்க விட்டிருந்த பெண்ணொருத்தியை நாங்கள் கண்டோம். அவடம் நாங்கள், தண்ணீர் எங்கே (உள்ளது)? என்று கேட்டோம். அதற்கு அவள், தண்ணீர் (இங்கு) இல்லை என்று சொன்னாள். நாங்கள், உன் வீட்டாருக்கும் தண்ணீருக்கும் இடையே உள்ள தூரம் எவ்வளவு? என்று கேட்டோம். அவள், ஒரு பகலும் ஓர் இரவும் (பயணம் செய்யும் தூரம்) என்று சொன்னாள். நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் வா! என்று சொன்னோம். அவள், அல்லாஹ்வின் தூதர் என்றால் யார்? என்று கேட்டாள். அவளை (தண்ணீர் தரச்) சம்மதிக்க வைக்க எங்களால் முடியவில்லை.
இறுதியில் அவளை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்கடம் நாங்கள் சென்றோம். அவள் நபி (ஸல்) அவர்கடமும் எங்கடம் பேசியதைப் போலவே பேசினாள். தான் அனாதைக் குழந்தைகன் தாய் என்று நபி (ஸல்) அவர்கடம் சொன்னதைத் தவிர! உடனே, நபி (ஸல்) அவர்கள் அவளுடைய தண்ணீர்ப் பைகள் இரண்டையும் கொண்டு வரச் சொல்க் கட்டளையிட்டு, அவற்றின் வாய்கள் இரண்டிலும் (தம் கரத்தால்) தடவினார்கள். தாகமுடனிருந்த நாங்கள் நாற்பது பேரும் தாகம் தீரும் வரை (அவற்றிருந்து) தண்ணீர் பருகினோம். எங்களுடன் இருந்த ஒவ்வொரு தோல்ப் பையையும் ஒவ்வொரு தோல் பாத்திரத்தையும் நாங்கள் நிரப்பிக் கொண்டோம்.
(எங்கள்) ஒட்டகம் ஒன்றுக்கு மட்டும் (அதனால் தாக்குப் பிடிக்க முடியும் என்பதால்) தண்ணீர் குடிப்பாட்டவில்லை. அந்தத் தோல்ப் பை நிரம்பி வழிந்த காரணத்தால் வாய் பிளந்து போகவிருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள், உங்கடம் இருக்கும் (உணவுப்) பொருள்களைக் கொண்டு வாருங்கள் என்று (தம் தோழர்களுக்கு) உத்தரவிட்டார்கள். (தோழர்களும் கொண்டு வந்து தர), நபி (ஸல்) அவர்கள் அப்பெண்ணுக்காக ரொட்டித் துண்டுகளையும் பேரீச்சம் பழங்களையும் ஒன்று திரட்டி(அவளுக்கு வழங்கி)னார்கள்.
இறுதியில், அவள் தன் வீட்டாரிடம் சென்று, நான் மக்கலேயே மிக வசீகரமான ஒருவரை, அல்லது அவர்கள் (முஸ்ம்கள்) நம்புவதைப் போல் ஓர் இறைத்தூதரைச் சந்தித்தேன் என்று சொன்னாள். அல்லாஹ் (அவளது) அந்தக் குலத்தாருக்கு அப்பெண்ணின் வாயிலாக நேர்வழியத்தான். ஆகவே, அவளும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டாள்; அவர்களும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ர)
நூல்: புகாரி (3571)
இவ்வாறு பல மாற்று மதத்தவர்களின் பொருள்களை நபி (ஸல்) அவர்கள் பயன்படுத்தியுள்ளார்கள். எனினும் இஸ்லாம் தடை செய்த பொருட்களை அவர்கள் தந்தால் அவற்றை நாம் பயன்படுத்தக்கூடாது. சிலைகளுக்குப் படைத்த பொருட்களை பண்டிகைக் காலங்களிலோ அல்லது மற்ற காலங்களிலோ தந்தாலும் அவற்றைப் பயன்படுத்தக் கூடாது.
தாமாகச் செத்தவை, இரத்தம், பன்றியின் இறைச்சி, அல்லாஹ் அல்லாதோருக்காக அறுக்கப்பட்டவை ஆகியவற்றையே அவன் உங்களுக்குத் தடை செய்திருக்கிறான். யார் வரம்பு மீறாதவராகவும், வலியச் செல்லாதவராகவும் நிர்பந்திக்கப்படுகிறாரோ அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன்.
(அல்குர்ஆன் 16:115)
அறுக்கப்பட்டவை என்று மொழிபெயர்க்கப்பட்ட இடத்தில் அரபு மூலத்தில் உஹில்ல என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. சப்தமிடப்பட்டவை என்பது இதன் பொருள். சிலைகளுக்கு முன்னால் மந்திரங்கள் சொல்லி பூஜிக்கப்பட்டவை மற்றும் மந்திரங்கள் சொல்லி அறுக்கப்பட்டவைகளையும் இந்தச் சொல் எடுத்துக் கொள்ளும்.
எனவே பூஜை செய்து தரும் பொருட்கள், அல்லாஹ் அல்லாத பெயர் கூறி அறுக்கப்பட்டவை, மது போன்ற தடை செய்யப்பட்ட பொருட்கள் இவற்றை அவர்கள் தரும் போது வாங்கக் கூடாது. மற்றவற்றைப் பெற்றுக் கொள்வதில் தவறேதும் இல்லை.
? ஜகாத் பொருளை தூய்மைப்படுத்துமா? அல்லது ஆளைத் தூய்மைப்படுத்துமா? பொருளைத் தூய்மைப்படுத்தினால் அந்தப் பொருளுக்கு மறுமுறை ஜகாத் அவசியம் இல்லை தானே?
மின்அஞ்சல் மூலமாக முஸம்மில், பேட்மாநகர், தூத்துக்குடி ஜகாத் பொருளையும் தூய்மைப்படுத்தும் என்றே நாம் கூறி வருகிறோம். ஒரு பொருளுக்கு ஜகாத் கொடுத்து விட்டால் அது தூய்மையடைந்து விடுகிறது. எனவே மீண்டும் அதே பொருளுக்கு ஜகாத் கொடுக்க வேண்டிய அவசியம் இல்லை. இது தொடர்பாக நாம் கூறிய கருத்தையும் இதை மறுப்பவர்களின் கருத்தையும் மீண்டும் தருகிறோம்.
தங்கத்தையும் வெள்ளியையும் அல்லாஹ்வின் பாதையில் யார் செலவிடாமல் இருக்கின்றார்களோ அவர்களுக்குக் கடுமையான வேதனை பற்றி எச்சரிப்பீராக (9:34) என்ற வசனம் அருளப்பட்டவுடன் அது முஸ்லிம்களுக்கு பெரிய பாரமாகத் தெரிந்தது. உடனே உமர் (ரலி) அவர்கள், உங்கள் சிரமத்தை நான் நீக்குகின்றேன் என்று கூறி விட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதரே! இந்த வசனம் உங்கள் தோழர்களுக்குப் பெரிய பாரமாகத் தெரிகின்றது என்று கேட்டார். அப்போது நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் எஞ்சியதைத் தூய்மைப் படுத்துவதற்காகவே தவிர வேறு எதற்கும் அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்று விளக்கமளித்தார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: அபூதாவூத் 1417
எஞ்சிய பொருட்களைத் தூய்மைப்படுத்துவதற்காகவே தவிர அல்லாஹ் ஜகாத்தைக் கடமையாக்கவில்லை என்ற நபிகள் நாயகத்தின் இந்தக் கூற்று நமது முடிவை வலுப்படுத்தும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது.
பொருள்களைச் சுத்தமாக்கவே ஜகாத் என்ற கருத்தில் எந்த நபிமொழியும் அறவே கிடையாது என்று மாற்றுக் கருத்துடையவர்கள் மறுப்புப் புத்தகம் வெளியிட்டார்கள்.
ஆனால் இவர்கள் கூறியதற்கு மாற்றமாக மேற்கண்ட ஹதீஸ் அமைந்துள்ளது.
பொருட்களைச் சுத்தப்படுத்தும் ஒரே நோக்கத்திற்காகத் தான் ஜகாத் கடமை என்றால் ஜகாத் கொடுக்கப்பட்ட பொருளுக்கு மீண்டும் கொடுக்கத் தேவையில்லை என்பது மிகத் தெளிவு. இந்த ஹதீஸ் மிகத் தெளிவாக நமது முடிவை உறுதிப்படுத்துவதைக் கண்ட பின்னர், இந்த ஹதீஸ் தொடர்பு அறுந்தது என்று கூறி மாற்றுக் கருத்துடையவர்கள் இதை நிராகரிக்க முயல்கின்றனர்.
இதன் அறிவிப்பாளர் தொடர் பின்வருமாறு அமைந்துள்ளது.
1. நூலாசிரியர் அபூதாவூத் 2. உஸ்மான் பின் அபீஷைபா 3. யஹ்யா 4. யஃலா 5. கைலான் 6. ஜஃபர் பின் இயாஸ் 7. முஜாஹித் 8. இப்னு அப்பாஸ் (ரலி) 9. உமர் (ரலி) 10. நபிகள் நாயகம் (ஸல்)
இந்த வரிசையில் ஒவ்வொரு அறிவிப்பாளரும் தமக்கு அடுத்த அறிவிப்பாளரிடமிருந்து இதை அறிவிக்கின்றார்கள். இந்தப் பட்டியலில் கைலான் (5) என்பவர் ஜஃபர் பின் இயாஸ் (6) என்பாரிடமிருந்து அறிவிப்பதாகக் கூறப்பட்டுள்ளது. இவ்விருவருக்கும் இடையில் சந்திப்பு ஏதும் இல்லை. எனவே இது தொடர்பு அறுந்த (முன்கதி) ஹதீஸாகும் என்று மறுப்பு கூறுகின்றனர்.
இருவரிடையே சந்திப்பு இல்லை என்று கூறுவோர் அதற்கான காரணத்தைக் கூற வேண்டும். அவ்வாறு கூறாமல் அல்பானி கூறி விட்டார் என்பதைத் தான் ஆதாரமாகக் காட்டுகின்றார்கள்.
நாஸிருத்தீன் அல்பானியை விடப் பல மடங்கு ஹதீஸ்களை ஆய்வு செய்த இப்னு ஹஜர், தஹபீ, இப்னு மயீன், யஹ்யா பின் ஸயீத் உள்ளிட்ட பல அறிஞர்கள் காரணமின்றி செய்யும் விமர்சனங்களை நிராகரிக்கும் இவர்கள் நமது காலத்தில் வாழ்ந்து மறைந்த நாசிருத்தீன் அல்பானியின் ஆய்வில் மட்டும் தவறே ஏற்படாது என்ற தவறான நம்பிக்கையில் இந்த ஹதீஸைத் தொடர்பு அறுந்தது என்று கூறுகின்றார்கள்.
நாஸிருத்தீன் அல்பானி அவர்கள் சரி என்று சொல்லி விட்டால் அதைக் கண்ணை மூடிக் கொண்டு ஏற்க வேண்டும் என்ற நம்பிக்கை பலரிடம் காணப்படுகின்றது. ஆனால் அல்பானி அவர்கள் ஆதாரப்பூர்வமான ஹதீஸைப் பலவீனமானது என்றும், பலவீனமான ஹதீஸை ஆதாரப்பூர்வமானது என்றும், ஹதீஸில் இல்லாததை இருக்கின்றது என்றும் கூறியதற்கு ஆதாரம் உள்ளது. அல்பானி அவர்கள் சிறந்த அறிஞர் என்றாலும் மனிதர் என்ற அடிப்படையில் அவரிடமும் தவறுகள் ஏற்படவே செய்யும். இது போன்ற குறைபாடுகளுக்கு அப்பாற்பட்ட எந்த ஹதீஸ் கலை அறிஞரும் கிடையாது என்பதைக் கவனத்தில் கொள்ள வேண்டும்.
இந்த அறிவிப்பு, தொடர்பு அறுந்தது என்பதற்கு அல்பானி எடுத்து வைக்கும் சான்று இது தான்.
ஜஃபர் பின் இயாஸ், உஸ்மான் பின் கத்தான், கைலான் என்ற அறிவிப்பாளர் வரிசையில் இதே ஹதீஸ் ஹாகிமில் பதிவு செய்யப்பட்டுள்ளது. இந்த அறிவிப்பில் கைலானுக்கும் ஜஃபருக்கும் இடையே உஸ்மான் இடம் பெற்றுள்ளார். இவர் அபூதாவூத் அறிவிப்பில் விடுபட்டுள்ளார். எனவே இது தொடர்பு அறுந்த ஹதீஸாகும் என்று அல்பானி கூறுகின்றார்.
ஆனால் ஹாகிமில் இடம் பெறும் இடையில் உள்ள அறிவிப்பாளர் உஸ்மான் பின் கத்தான் பலவீனமானவர் என்பதால் இது ஏற்கத்தக்க ஹதீஸ் அல்ல. பலவீனமான இந்த அறிவிப்பில் இடையில் ஒருவர் நுழைக்கப்பட்டதால் அபூதாவூதின் ஆதாரப்பூர்வமான அறிவிப்பில் அவர் விடுபட்டுள்ளார் என்று முடிவு செய்வது அர்த்தமற்ற ஆய்வாகும்.
உண்மையில் கைலான் என்பார் ஜஃபர் பின் இயாஸைச் சந்திக்க இயலுமா என்றால் நிச்சயம் முடியும். ஏனெனில் கைலானின் மரணம் ஹிஜிரி 132ஆம் ஆண்டாகும். ஜஃபர் பின் இயாஸின் மரணம் 126வது ஆண்டாகும். (தக்ரீபுத் தஹ்தீப் 1/443- 1/139)
இருவரின் மரணத்திற்கிடையே ஆறு வருட இடைவெளி தான் உள்ளது. ஒருவரையொருவர் சந்திப்பதற்கு ஏற்ற காலத்தை விட இது பன்மடங்கு அதிகமாகும்.
மேலும் ஜஃபர் பின் இயாஸ் பஸராவையும், கைலான் கூஃபாவையும் சேர்ந்தவர்கள். அருகருகே உள்ள இவ்வூர்களைச் சேர்ந்தவர்கள் சந்திப்பதில் எந்த வியப்பும் இல்லை.
ஸஹீஹ் முஸ்லிமில் இடம் பெறும் ஹதீஸ்கள் ஆதாரப்பூர்வமானவை என்பதை அறிந்து வைத்திருக்கிறோம். இரண்டு அறிவிப்பாளர்கள் நம்பகமானவர்களாக இருந்து, இருவரும் ஒரே காலத்தில் வாழ்ந்திருப்பதற்கும், இருவரும் சந்தித்திருப்பதற்கும் சாத்தியமிருக்குமானால் ஒருவரிடமிருந்து மற்றவர் கேட்டார் என்பதற்கு அதுவே போதுமானதாகும் என்று முஸ்லிம் இமாம் தமது முன்னுரையில் குறிப்பிடுகின்றார்கள். இந்த அளவு கோலின் படியே தமது ஹதீஸ்களை முஸ்லிமில் பதிவு செய்துள்ளார்கள். ஹதீஸ் கலை அறிஞர்களும் இதை ஏற்றுள்ளார்கள். எனவே கைலான், ஜஃபரிமிருந்து செவிமடுத்தார் என்பதை மறுக்க முடியாது.
இருவரும் சந்திக்கவில்லை என்று கூறுவதற்கு எந்த முகாந்திரமும் ஆதாரமும் இல்லை. யாருமே ஒப்புக் கொள்ளாத தவறான அளவு கோலின் படி அல்பானி செய்த தவறான முடிவு இது.
பலவீனமான ஹதீஸை வைத்து பலமான ஹதீஸை நிராகரிக்கும் விந்தையையும் இவர்கள் நியாயப்படுத்துகின்றார்கள்.
மேற்கண்ட ஹதீஸ் பலவீனமானது என்ற வாதம் தவறாகி விட்டதால் பொருட்களைத் தூய்மைப்படுத்தவே ஸகாத் என்பது உறுதியாகின்றது.
? உளூச் செய்துவிட்டு கைலியை முழங்காலுக்கு மேல் உயர்த்தினால் உளூ முறியுமா?
மலஜலம் கழித்தல், காற்றுப் பிரிதல், ஒட்டக இறைச்சியைச் சாப்பிடுதல், மதீ வெளியாகுதல் (ஆண்களுக்கு உணர்ச்சி ஏற்படும் போது கசியும் திரவம் மதீ எனப்படும்), ஆழ்ந்த தூக்கம், ஆணுறுப்பை இச்சையுடன் தொடுதல், இந்திரியம் வெளிப்டுதல், உடலுறவு கொள்ளுதல் ஆகியவையே உளூவை நீக்கும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் இடம் பெற்றுள்ளது. கைலியை முழங்காலுக்கு மேல் தூக்கினால் உளூ முறியும் என்று எந்த ஹதீஸிலும் இடம் பெறவில்லை.
? வியாபாரத் தலங்களில் வியாபார அபிவிருத்திக்காக திருக்குர்ஆன் வசனங்கள் எழுதப்பட்ட பிரேம்களை கடைகளில் மாட்டி வைக்கலாம?
திருக்குர்ஆன் வசனங்களை இவ்வாறு கடைகளிலும் வீடுகளிலும் பரக்கத்திற்குத் தொங்க விடுவது பரவலாகக் காணப்படுகிறது. திருக்குர்ஆன் இவ்வாறு வியாபார விருத்திக்காகவும், பணம் சம்பாதிக்கவும் இறக்கப்படவில்லை. மாறாக முறையான வியாபாரம் செய்யவும், மோசடி, பித்தலாட்டம் போன்ற காரியங்களைத் தடுத்து நேர்வழியைக் காட்டவும் தான் இறக்கப்பட்டது. சுருக்கமாகச் சொன்னால் மனித சமுதாயத்திற்கு நேர்வழி காட்டவே இறக்கப்பட்டுள்ளது.
இந்தக் குர்ஆன் ரமளான் மாதத்தில் தான் அருளப்பட்டது. (அது) மனிதர்களுக்கு நேர் வழி காட்டும். நேர் வழியைத் தெளிவாகக் கூறும். (பொய்யை விட்டு உண்மையை) பிரித்துக் காட்டும். (அல்குர்ஆன் 2:185)
வியாபாரத் தலங்களில் பலர் வருவார்கள். அவர்களும் திருக்குர்ஆனின் கட்டளைகளைப் படித்துத் திருந்தட்டும், சிந்திக்கட்டும் என்பதற்காகக் கடைகள் மற்றும் வீடுகளில் மாட்டினால் தவறில்லை.
? ஜனாஸாவை எவ்வாறு குளிப்பாட்டுவது? குளிப்பாட்டும் போது என்ன ஓதுவது? யார் குளிப்பாட்டுவது? என்ற விவரங்களைத் தெளிவுபடுத்தவும்.
ஆண்களை ஆண்களும் பெண்களை பெண்களும் குளிப்பாட்ட வேண்டும். ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றோ நேரடியாக எந்தக் கட்டளையும் ஹதீஸ்களில் இல்லை. என்றாலும் குளிப்பாட்டுபவர் அந்தரங்க உறுப்புகளைப் பார்க்கும் நிலை ஏற்படும் என்பதால் ஆண்களை ஆண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும், பெண்களை பெண்கள் தான் குளிப்பாட்ட வேண்டும் என்றும் முடிவு செய்யலாம்.
நபிகளாரின் மகளை பெண்களே குளிப்பாட்டியுள்ளார்கள்.
(புகாரி 1260)
கணவனை மனைவியும், மனைவியைக் கணவனும் குளிப்பாட்ட விரும்பினால் அவர்களிடையே எந்த அந்தரங்கமும் இல்லை என்பதால் அதைத் தடுக்க முடியாது. சில ஊர்களில் முஅத்தின் (மோதினார்) தான் குளிப்பாட்ட வேண்டும் என்று எழுதப்படாத விதிகள் உள்ளன. இதற்கு எந்த ஆதாரமும் இல்லை. குளிப்பாட்டும் முறை தெரிந்த யாரும் குளிப்பாட்டலாம்.
அடுத்து, குளிப்பாட்டும் முறையைக் காண்போம்.
முதலில் மய்யித்தின் ஆடைகளை விரும்பினால் களைந்து விட்டுக் குளிப்பாட்டலாம்.
நபி (ஸல்) அவர்கள் இறந்த பின் அவர்களைக் குளிப்பாட்ட முடிவு செய்தனர். மற்றவர்களின் ஆடைகளைக் களைந்துவிட்டு குளிப்பாட்டுவது போல் நபி (ஸல்) அவர்களைக் குளிப்பாட்டுவதா? அல்லது அவர்கள் அணிந்திருந்த ஆடையுடனே குளிப்பாட்டுவதா? என்பது தெரியவில்லை என்று பேசிக் கொண்டிருந்தனர். அவர்கள் இதில் கருத்து வேறுபாடு கொண்ட போது அல்லாஹ் அவர்களுக்குத் தூக்கத்தை ஏற்படுத்தினான். நபி (ஸல்) அவர்கள் அணிந்துள்ள ஆடையுடனே குளிப்பாட்டுங்கள் என்று வீட்டின் மூலையிலிருந்து ஒருவர் கூறினார். அவர் யாரென்று நமக்கு தெரியவில்லை. அதன்படி அவர்கள் அணிந்திருந்த ஆடையின் மேல் தண்ணீர் ஊற்றி அதன் மேல் தேய்த்துக் கழுவினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: அபூதாவூத் (2733)
மற்றவர்களின் ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டுவது போன்று என்ற வாசகம் அணிந்திருந்த ஆடைகளைக் களைந்து விட்டு நபி (ஸல்) அவர்கள் காலத்தில் குளிப்பாட்டியுள்ளனர் என்பதை அறிவிக்கின்றது. இது தவறு என்றிருந்தால் நபி (ஸல்) அவர்கள் அன்றே மாற்றியிருப்பார்கள். எனவே இதை அடிப்படையாகக் கொண்டு ஆடைகளைக் களைந்து குளிப்பாட்டலாம்.
அடுத்து, குளிப்பாட்டும் போது மய்யித்திடம் அங்கக் குறைபாடுகள் ஏதேனும் தென்பட்டால் அதை மற்றவர்களிடம் கூறக் கூடாது.
யார் இறந்து விட்ட ஒரு முஸ்லிமைக் குளிப்பாட்டி, அவரது குறையை மறைத்து விடுகின்றாரோ, அல்லாஹ் அவருக்கு நாற்பது முறை பாவ மன்னிப்பை வழங்கி விடுகின்றான். யார் குழி தோண்டி அடக்கம் செய்கின்றாரோ அவருக்கு ஒரு முஸ்லிமைக் குடியமர்த்தியவருக்குரிய கூலியைப் போன்று (அவரது) கூலியை நிரந்தரமாக்கி விடுகின்றான். யார் (இறந்து விட்ட) முஸ்லிமுக்குக் கபன் ஆடை அணிவிக்கின்றாரோ, இறுதி நாளில் அல்லாஹ் அவருக்கு சுவர்க்கத்தின் ஸுன்துஸ், இஸ்தப்ரக் ஆகிய பட்டாடைகளை அணிவிக்கின்றான்.
அறிவிப்பாளர் அபூராபிஃ (ரலி)
நூல் ஹாகிம் (பாகம்: 1, பக்கம்: 505), பைஹகீ (பாகம்: 3, பக்கம்: 395)
குளிப்பாட்டும் போது முதலில் வலப் புறத்திலிருந்து ஆரம்பிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் தமது மகளைக் குளிப்பாட்டுவது குறித்துப் பெண்களிடம் கூறுகையில், அவருடைய வலப் பக்கத்திலிருந்தும், உளூச் செய்ய வேண்டிய உறுப்புக்களிலிருந்தும் (கழுவ) ஆரம்பியுங்கள் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்: புகாரி (167)
ஒற்றை எண்ணிக்கையில் தண்ணீரை ஊற்ற வேண்டும். கற்பூரத்தை தண்ணீரில் பயன்படுத்த வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் மகள்களில் ஒருவர் இறந்து விட்டதும் நபி (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து, சடலத்தை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து அல்லது நீங்கள் தேவையெனக் கருதினால் அதற்கும் அதிகமாக ஒற்றைப் படையாக நீராட்டுங்கள். கடைசியில் சிறிது கற்பூரத்தைச் சேர்த்துக் கொள்ளுங்கள். நீராட்டி முடிந்ததும் எனக்குத் தெரிவியுங்கள்எனக் கூறினார்கள். நீராட்டி முடிந்து தெரிவித்ததும் தமது கீழாடையை (சடலத்தில் சுற்றுவதற்கு)த் தந்தார்கள். மேலும் நாங்கள் சடலத்தின் முடியை மூன்று சடைகளாகப் பின்னி அதை மய்யித்தின் முதுகுப் புறமாகப் போட்டு வைத்தோம்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்: புகாரி (1263)
பெண்கள் சடைபோட்டிருந்தால் அதைப் பிரித்துக் குளிப்பாட்ட வேண்டும்.
நபி (ஸல்) அவர்களின் மகளின் சடலத்திற்குத் தலை(முடி)யில் பெண்கள் மூன்று சடைகளைப் பின்னியிருந்தார்கள். பிறகு அவற்றைப் பிரித்துக் கழுவி விட்டுப் பிறகு மீண்டும் மூன்று சடைகள் பின்னினார்கள்.
அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி)
நூல்: புகாரி (1260)
இதே மய்யித்தைக் குளிப்பாட்டும் முறையாகும். குளிப்பாட்டும் போது தனியான துஆக்களோ, திக்ருகளோ கிடையாது. ஜனாஸா சட்டங்களை முழுமையாக அறிந்து கொள்ள சகோதரர் பி.ஜே. அவர்கள் எழுதிய ஜனாஸாவின் சட்டங்கள் என்ற நூலை வாங்கிப் படியுங்கள்.
? நபி யூசுஃப் (அலை) அவர்கள் சிறையில் இருந்த போது அவர்களுடன் இருந்த இரண்டு சிறைக் கைதிகளில் கண்ட கனவின் விளக்கத்தைக் கூறி விட்டு, அவ்விருவரில் விடுதலையாவார் என்று கூறியவரிடம் என்னைப் பற்றி உமது ரப்பிடம் கூறு என்று கூறியதாக 12:42ஆவது வசனம் கூறுகிறது. மனிதனை ரப்பு என்று கூறலாமா? அதுவும் இறைத் தூதர் மனிதனை ரப் என்று கூறுவது கூடுமா?
மின்அஞ்சல் மூலமாக மஸ்வூத், துபை ரப்பு என்ற சொல் பெரும்பாலும் அல்லாஹ்வை மட்டுமே குறிக்க திருக்குர்ஆனில் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனினும் அரபியர்களிடம் ரப்பு என்ற சொல் தலைவன், எஜமானன், முதலாளி ஆகிய பொருள்களில் பரவலாகப் பயன்படுத்தப்படுகிறது. நபி (ஸல்) அவர்கள் கூட இதே கருத்தில் பயன்படுத்தியுள்ளார்கள்.
ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் அது மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். காலில் செருப்பணியாத, உடலில் உடையணியாத, செவிடர்களையும் குருடர்களையும் (போன்று வாழ்கின்ற கல்வி கலாசாரமற்ற மக்களை) நீங்கள் பூமியின் அரசர்களாகக் கண்டால் அதுவும் மறுமை நாளின் அடையாளங்களில் ஒன்றாகும். மேலும், ஆட்டுக் குட்டிகளை மேய்க்கும் இடையர்கள் போட்டி போட்டுக் கொண்டு உயரமான கட்டடங்களைக் கட்டுவதை நீங்கள் கண்டால் அதுவும் மறுமையின் அடையாளங்களில் அடங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (7)
இந்த ஹதீஸில் ஒரு (அடிமைப்) பெண் தன் எஜமானையே பெற்றெடுப்பதை நீங்கள் கண்டால் என்று மொழி பெயர்த்த இடத்தில் உள்ள எஜமானன் என்ற சொல்லுக்கு அரபியில் நபி (ஸல்) அவர்கள் ரப்பு என்ற சொல்லின் பெண்பாலான ரப்பத் என்ற வார்த்தையையே பயன்படுத்தியுள்ளார்கள்.
எனவே தலைவன், முதலாளி என்ற பொருளில் ரப்பு என்ற வார்த்தையை மனிதர்களுக்குப் பயன்படுத்துவதில் தவறில்லை. இந்தக் கருத்தின் அடிப்படையில் தான் நபி யூசுஃப் (அலை) அவர்கள் ரப்பு என்ற சொல்லைப் பயன்படுத்தியுள்ளார்கள். உமது எஜமானனிடம் சொல், உன் முதலாளியிடம் சொல் என்ற கருத்திலே அந்த சொல் கையாளப்பட்டுள்ளது. படைத்துப் பரிபாலணம் செய்யும் இறைவன் என்ற கருத்தில் பயன்படுத்தப்படவில்லை.
11.02.2010. 16:38
மார்ச் 2008 தீன்குலப் பெண்மணி
பாகிஸ்தான் தேர்தல் முடிவுகள்
பிப்ரவரி 21ல் நடந்து முடிந்த பாகிஸ்தான் நாடாளுமன்றத் தேர்தலில் நவாஸ் ஷரீஃப் தலைமையிலான கட்சி, பேநசீர் கட்சி, முஷாரஃப் ஆதரவு ஆளும் கட்சி ஆகியவை தேர்தலில் போட்டியிட்டன. பெரிய மூன்று கட்சிகள் போட்டியிட்டும் மொத்த வாக்குப்பதிவு 35 சதவிகிதம் தான். மொத்தத்தில் இந்த அரசியல்வாதிகள் யாரையும் மக்கள் விரும்பவில்லை என்பதை 65 சதவிகித மக்கள் ஓட்டுப் போடாமல் புறக்கணித்துள்ளனர்.
குண்டு வெடிப்பு, கலவரம் என்று அன்றாடம் பார்க்கும் நிலைக்கு பாகிஸ்தான் வந்து விட்டது மக்களிடையே பெரும் வெறுப்பை வெளிப்படுத்தியுள்ளது. மேலும் ஓட்டுப் போடலாம் என்ற எண்ணம் இருந்தாலும் தம் உயிருக்கு உத்தரவாதம் இருக்குமா என்று எண்ணி ஓட்டளிக்காமல் பலர் இருந்துள்ளனர்.
உயர்ந்த இஸ்லாமிய மார்க்கத்தை ஏற்றுள்ளவர்கள், இஸ்லாத்தின் தூய ஆட்சியை ஏற்படுத்தி உலகத்திற்கு அழகிய முன்மாதிரியைக் காட்ட வேண்டியவர்கள், எப்படி ஆட்சி செய்யக் கூடாது என்பதற்கு முன்னுதாரணமாக ஆகிவிட்டார்கள்.
மேலை நாட்டு மோகத்தின் காரணத்தால் இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை, கோட்பாடுகளை விட்டு விட்டு அதன் ஒழுங்குகளைப் பேணாமல், அமெரிக்காவிற்கு அடிமை சாசனம் எழுதி கொடுத்து விட்டதால் இன்று அன்றாடம் பாகிஸ்தான் மக்கள் அவதிக்கு உள்ளாகி வருகின்றனர்.
ராணுவப் புரட்சியின் மூலம் ஆட்சிக்கு வந்த முஷாரஃப் பாகிஸ்தான் வரலாற்றில் மிக மோசமான தலைவராக நடந்து கொண்டுள்ளார். அமெரிக்காவின் அடிவருடியாகவும் அவர்களின் கட்டளைகளை நிறைவேற்றுபவராகவும் இருந்ததால் இன்று பாகிஸ்தான், வரலாற்றில் மோசமான நிலையை எட்டியுள்ளது.
நாடாளுமன்றத் தேர்தலில் வாக்களித்த 35 சதவிகித மக்கள் கூட முஷாரஃபை ஓரம் கட்டி, படுதோல்வியை தழுவச் செய்துள்ளனர். இது முஷாரஃபின் அடாவடித்தனம், அடக்குமுறை, சீரற்ற நிர்வாகம் இவற்றிற்குக் கிடைத்த மரண அடியாகும். தன்மானம் உள்ளவராயிருந்தால் உடனே அவர் தம் பதவியை ராஜினாமா செய்திருக்க வேண்டும்.
தற்போது ஆட்சி அமைக்க வாய்ப்புள்ள பேநசீர் கட்சி, நவாஸ் ஷரீஃப் கட்சிகள் இந்த மோசமான ஆட்சியைச் சரி செய்யும் விதமாகவும் இஸ்லாமிய சட்டங்களை நடைமுறைப்படுத்தும் வண்ணமாகவும் மேலைநாட்டுக் கலச்சாரச் சீரழிவுகளை நீக்கும் வண்ணமாகவும் நடந்து கொண்டால் பாகிஸ்தான் அமைதியும் வளர்ச்சியும் பெறும்.
ஆயத்துல் குர்ஸியின்
சிறப்புகள்
யூசுஃப் பைஜீ, கடையநல்லூர்
சென்ற இதழில் ஆயத்துல் குர்ஸியின் சிறப்புகள் தொடர்பாக வந்துள்ள சில செய்திகளைப் பற்றியும் அதன் தரத்தைப் பற்றியும் பார்த்தோம். இது தொடர்பாக வந்துள்ள மேலும் சில செய்திகளைக் காண்போம்.
வீட்டின் ஒவ்வொரு மூலையிலும் ஓத வேண்டிய வசனம்
அப்துர் ரஹ்மான் பின் அவ்ப் (ரலி) அவர்கள், வீட்டினுள் நுழைந்தால் வீட்டின் மூலைகளில் ஆயத்துல் குர்ஸியை ஓதுவார்கள்.
நூல்: முஸன்னப் இப்னு அபீ ஷைபா, பாகம்: 6, பக்கம்: 127
முஸ்னத் அபீ யஃலா, பாகம்: 13, பக்கம்: 165
மார்க்கத்தில் பின்பற்றுவதற்குத் தகுதியானவர்கள் நபி (ஸல்) அவர்கள் மட்டுமே! எனவே நபித்தோழரின் செயல் நமக்கு முன்மாதிரி இல்லை. மேலும் இதன் இரண்டாவது அறிவிப்பாளர் அப்துல்லாஹ் பின் உபைத் என்பவர் அப்துர்ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார். ஆனால் அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் அவர் எதையும் செவியுறவில்லை. (நூல்: மஜ்மவுஸ்ஸவாயித் பாகம்:10, பக்கம்: 128) எனவே இந்தச் செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
அல்லாஹ் தேர்ந்தெடுத்த வசனம்
அல்லாஹ் தன்னுடைய வார்த்தைகளில் குர்ஆனைத் தேர்ந்தெடுத்தான். குர்ஆனில் சூரத்துல் பகராவைத் தேர்ந்தெடுத்தான். சூரத்துல் பகராவில் ஆயத்துல் குர்ஸியைத் தேர்ந்தெடுத்தான். ஊர்களில் ஹரமை (மக்காவை) தேர்ந்தெடுத்தான். ஹரமில் மஸ்ஜிதைத் தேர்ந்தெடுத்தான். அதில் கஅபத்துல்லாஹ் (இருக்கும்) வீட்டை தேர்ந்தெடுத்தான் என்று அப்துல்லாஹ் பின் மர்வான் கூறினார்.
நூல்: முஸன்னப் இப்னு அப்துர் ரஸ்ஸாக் (பாகம்: 3, பக்கம்: 367)
இந்த ஹதீஸை அப்துல்லாஹ் பின் மர்வான் என்பவர் அறிவித்துள்ளார். இவர் தாபியீ ஆவார். (நபித்தோழர்கள் காலத்தில் வாழ்ந்தவர்) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும் என்பதால் அப்துல்லாஹ் பின் மர்வான் அவர்களின் கருத்தை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
குடும்பத்தை பாதுகாக்கும் வசனம்
பகரா அத்தியாயத்தின் ஆரம்ப நான்கு வசனங்களையும் ஆயத்துல் குர்ஸியையும் ஆயத்துல் குர்ஸியின் பின்வரும் இரண்டு ஆயத்துகளையும் பகரா அத்தியாயத்தின் கடைசி மூன்று வசனங்களையும் யாரேனும் ஓதினால் அவரையும் அவர் குடும்பத்தையும் அந்நாளில் ஷைத்தான் நெருங்க மாட்டான். மேலும் அவன் வெறுக்கும் எந்த ஒன்றும் நெருங்காது. இவற்றைப் பைத்தியம் பிடித்தவருக்கு ஓதினால் அவர் நிவாரணம் அடையாமல் இருக்க மாட்டார் என்று இப்னு மஸ்வூத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: தாரிமீ (3249)
ஷுஅபுல் ஈமான்-பைஹகீ, (பாகம்: 5, பக்கம்: 417, பாகம்: 2, பக்கம்: 464) ஒரு அத்தியாயத்திற்குக் குறிப்பிட்ட சிறப்புகள் உள்ளது என்று கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். எனவே நபித்தோழர்களின் கூற்றை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. தீங்கிலிருந்து பாதுகாப்பு தரும் வசனம்
ஆயத்துல் குர்ஸியையும், நாற்பதாவது அத்தியாயமான முஃமின் என்ற அத்தியாயத்தின் ஆரம்ப வசனத்தையும் யார் ஓதுவாரோ அவர் அன்றைய தீங்கிலிருந்து பாதுகாக்கப்படுவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்கள்: அமலுல் யவ்மி வ லைலா (பாகம்: 3, பக்கம்: 316)
கிதாபுத்துஆ - தப்ரானி, பாகம்: 1, பக்கம்: 122
இச்செய்தியில் இடம் பெறும் நான்காவது அறிவிப்பாளர் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்பவர் பலவீனமானவர். இவரை யஹ்யா பின் மயீன், நஸயீ, அபூஹாத்திம் ஆகியோர் பலவீனமானவர் என்று குறிப்பிட்டுள்ளார்கள். எனவே இந்தச் செய்தியையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது. (நூல்: தஹ்தீபுல் கமால், பாகம்: 16, பக்கம்: 553)
இதே செய்தி திர்மிதியிலும் 2804வது செய்தியாக இடம் பெற்றுள்ளது. அதிலும் அப்துர்ரஹ்மான் பின் அபீபக்ர் என்ற பலவீனமான அறிவிப்பாளரே இடம் பெற்றுள்ளார்.
சோதனை நேரத்தில் ஓதும் வசனம்
யார் சோதனையான நேரத்தில் ஆயத்துல் குர்ஸியையும், சூரத்துல் பகராவின் கடைசி வசனங்களையும் ஓதுவாரோ அவருக்கு அல்லாஹ் உதவி செய்வான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். நூல்: அமலுல் யவ்மி வ லைலா, பாகம்: 2, பக்கம்: 154
இச்செய்தியில் இடம் பெறும் ஐந்தாவது அறிவிப்பாளர் ஆமிர் பின் முத்ரிக் என்பவர் பலவீனமானவராவார். (நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 288)
மேலும் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் மஃமர் பின் ஸஹ்ல் என்பவருடைய குறிப்பு கிடைக்கவில்லை. எனவே இந்தச் செய்தி மேலும் பலவீனமடைகிறது.
இறைவன் பொறுப்பேற்றுக் கொள்ளும் வசனம்
யார் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவருடைய உயிரை அல்லாஹ் கைப்பற்ற பொறுப்பேற்றுக் கொள்கிறான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
(நூல்: தாரீக் பக்தாத், பாகம்: 6, பக்கம்: 173)
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் கஸீர் பின் மர்வான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் விமர்சனம் செய்துள்ளனர்.
இப்னு மயீன் அவர்கள், இவர் உறுதியற்றவர் என்று கூறியுள்ளார். இப்னு அதீ அவர்கள், இவர் பொய்யான செய்திகளை அறிவிப்பவர் என்று கூறி அந்தச் செய்திகளைப் பட்டியலிட்டுள்ளார். முஹம்மத் அவர்கள், இவர் ஹதீஸ் துறையில் நிராகரிக்கப்பட்டவர் என்று கூறியுள்ளார். அப்துல் கரீம் என்பவர், யஹ்யா பின் மயீன் அவர்களிடம் இவரைப் பற்றிக் கேட்டார். அதற்கவர், நீ அவரின் பக்கம் சென்றால் கல்லால் எறியும். ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் அறிவித்ததாகப் பல பொய்யான செய்திகளை அறிவித்திருக்கிறார் என்று சொன்னார்.
நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 5, பக்கம்: 352
மேலும் இந்தச் செய்தியில் இப்னு லஹீஆ என்பவர் இடம் பெற்றுள்ளார். இவருடைய கிதாபு எரிந்ததற்குப் பிறகு மூளை குழம்பிவிட்டது. இவரிடமிருந்து இப்னு முபாரக், இப்னு வஹப் அறிவித்த ஹதீஸ்கள் மற்றவர்களிடம் அறிவித்த செய்திகளை விட சிறந்ததாகும். நூல்: தக்ரீபுத் தஹ்தீப், பாகம்: 1, பக்கம்: 319
இந்தச் செய்தியை இவரிடமிருந்து இப்னுல் முபாரக், இப்னு வஹப் போன்றோர் அறிவிக்காத காரணத்தினால் மேலும் பலவீனமடைகிறது.
ஷஹீதின் தரத்தை பெற்றுத் தரும் வசனம்
யார் ஒவ்வொரு கடமையான தொழுகைக்குப் பின்னும் ஆயத்துல் குர்ஸியை ஓதுவாரோ அவர் நபிமார்களோடு இணைந்து போர் செய்து மரணமடைந்தவரின் அந்தஸ்தை அடைந்தவர் போன்றவராவார் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
நூல்: அமலுல் யவ்மி வ லைலா, பாகம்: 1, பக்கம்: 235
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல் ஹுமைதிப்னி இப்ராஹீம், இஸ்மாயீல் பின் அய்யாஷ், தாவூத் பின் இப்ராஹீம், என்பவர்கள் இடம் பெறுகிறார்கள். இவர்களை ஹதீஸ் கலை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
அப்துல் ஹுமைத் என்பவரிடம் ஹதீஸ்கள் எழுதப்பட்ட புத்தகம் இருந்தது. அது காணாமல் போன பிறகு அவரின் நினைவாற்றல் கெட்டு விட்டது. (நூல்: தக்ரீபுத் தஹ்தீப்)
இந்தச் செய்தி நினைவாற்றல் கெட்டதற்குப் பிறகு கூறியதா? அல்லது முன்னால் கூறியதா? என்ற குறிப்புகள் இடம் பெறவில்லை. அடுத்ததாக இந்தச் செய்தியில் இடம் பெறும் தாவூத் பின் இப்ராஹீம் அத்துஹலீ என்பவரின் நம்பத்தன்மை பற்றி எந்தக் குறிப்பும் அறிவிப்பாளர் விமர்சன நூல்களில் இடம் பெறவில்லை. எனவே இவர் யாரென அறியப்படாதவர் பட்டியலில் இடம் பெற்று, பலவீனமடைகிறார்.
அடுத்ததாக இதில் இடம் பெறும் மற்றொரு அறிவிப்பாளர் இஸ்மாயீல் பின் அய்யாஷ் என்பவர் சிரியா நாட்டவர் வழியாக அறிவிக்கும் செய்திகள் மட்டும் நம்பகமானவை என்பது ஹதீஸ் கலை அறிஞர்களின் முடிவு. இந்தச் செய்தியை அவர் தாவூத் பின் இப்ராஹீம் என்பவரிடமிருந்து அறிவித்துள்ளார். இவர் சிரியாவைச் சார்ந்தவரா? அல்லது வேறு ஊரைச் சார்ந்தவரா? என்ற குறிப்பு இல்லாததால் இந்தச் செய்தி மேலும் பலவீனம் அடைகிறது. பாதுகாப்பைத் தரும் வசனம்
நபி (ஸல்) அவர்கள் ரமளானுடைய (ஃபித்ரா) ஸகாத்தைப் பாதுகாக்கும் பொறுப்பை என்னிடம் கொடுத்தார்கள். அப்போது ஒருவன் இரவில் வந்து உணவுப் பொருட்களை அள்ளலானான். அவனை நான் பிடித்து, உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறுகிறேன். அதற்கவன், நான் ஒரு ஏழை! எனக்குக் குடும்பம் இருக்கிறது; கடும் தேவையும் இருக்கிறது! என்று கூறினான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள், அபூஹுரைராவே! நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! தான் கடுமையான வறுமையில் இருப்பதாகவும் தனக்குக் குடும்பம் இருப்பதாகவும் அவன் முறையிட்டான்; ஆகவே, இரக்கப்பட்டு அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நிச்சயமாக அவன் பொய் சொல்லியிருக்கிறான்! மீண்டும் அவன் வருவான்! என்றார்கள்.
மீண்டும் வருவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதால் அவன் மீண்டும் வருவான் என்று நம்பி அவனுக்காக (அவனைப் பிடிப்பதற்காகக்) காத்திருந்தேன். அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கிய போது அவனைப் பிடித்தேன். உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன்! என்று கூறினேன். அதற்கவன், என்னை விட்டுவிடு! நான் ஒரு ஏழை! எனக்கு குடும்பமிருக்கிறது; இனி நான் வரமாட்டேன்! என்றான். அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்.
விடிந்ததும், நபி (ஸல்) அவர்கள் அபூஹுரைராவே! உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அவன் (தனக்குக்) கடும் தேவையும் குடும்பமும் இருப்பதாக முறையிட்டான்; ஆகவே, அவன் மேல் இரக்கப்பட்டு அவனை விட்டு விட்டேன்! என்றேன். நிச்சயமாக அவன் உம்மிடம் பொய் சொல்லியிருக்கிறான்; திரும்பவும் உம்மிடம் வருவான்! என்றார்கள்.
மூன்றாம் தடவை அவனுக்காகக் காத்திருந்தபோது, அவன் வந்து உணவுப் பொருட்களை அள்ளத் தொடங்கினான். அவனைப் பிடித்து, உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லப் போகிறேன். (ஒவ்வொரு முறையும்) இனிமேல் வரமாட்டேன்! என்று சொல்லிவிட்டு, மூன்றாம் முறையாக நீ மீண்டும் வந்திருக்கிறாய்! என்று கூறினேன். அதற்கவன், என்னை விட்டு விடும்! அல்லாஹ் உமக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருகிறேன்! என்றான். அதற்கு நான், அந்த வார்த்தைகள் என்ன? என்று கேட்டேன். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பத்திலிருந்து கடைசி வரை ஓதும்! அவ்வாறு செய்தால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்றான். அவனை நான் விட்டுவிட்டேன். விடிந்ததும் நபி (ஸல்) அவர்கள் நேற்றிரவு உம்மால் பிடிக்கப்பட்டவன் என்ன செய்தான்? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே அல்லாஹ் எனக்குப் பயனளிக்கக் கூடிய சில வார்த்தைகளைக் கற்றுத் தருவதாக அவன் கூறினான்; அதனால் அவனை விட்டுவிட்டேன்! என்றேன். அந்த வார்த்தைகள் என்ன? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நீர் படுக்கைக்குச் செல்லும் போது ஆயத்துல் குர்சியை ஆரம்பம் முதல் கடைசி வரை ஓதும்! அவ்வாறு ஓதினால், விடியும் வரை அல்லாஹ்வின் தரப்பிலிருந்து உம்மைப் பாதுகாக்கின்ற (வானவர்) ஒருவர் இருந்து கொண்டேயிருப்பார்; ஷைத்தானும் உம்மை நெருங்க மாட்டான்! என்று என்னிடம் அவன் கூறினான் எனத் தெரிவித்தேன். - நபித் தோழர்கள் நன்மையான(தைக் கற்றுக் கொண்டு செயல்படுத்துவ)தில் அதிக ஆர்வமுடையவர்களாக இருந்தனர் - அப்போது நபி (ஸல்) அவர்கள், அவன் பெரும் பொய்யனாக இருந்தாலும் உம்மிடம் உண்மையைத் தான் அவன் சொல்லியிருக்கிறான். மூன்று இரவுகளாக நீர் யாரிடம் பேசி வருகிறீர் என்று உமக்குத் தெரியுமா? என்று கேட்டார்கள். தெரியாது! என்றேன். அவன் தான் ஷைத்தான்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (நூல்: புகாரி 2311) இதே செய்தி புகாரியில் 3275, 5010 ஆகிய எண்களிலும், ஒரு சில வார்த்தை மாற்றங்களுடன் சுனனுல் குப்ரா பாகம்: 6, பக்கம்: 237, இப்னு குஸைமா, பாகம்: 4, பக்கம்: 91, அமலுல் யவ்மி வ லைலா, பாகம்: 1, பக்கம்: 531 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இது ஆதாரப்பூர்வமான செய்தியாகும்.
இந்தச் செய்தியில் அபூஹுரைரா (ரலி) அவர்கள் ஷைத்தானைப் பார்த்ததாகவும் அவனைப் பிடித்ததாகவும் இடம் பெற்றுள்ளது.
நீங்கள் அவர்களைக் காணாத வகையில் அவனும், அவனது கூட்டத்தாரும் உங்களைப் பார்த்துக் கொண்டிருக்கின்றனர். நம்பிக்கை கொள்ளாதோருக்கு ஷைத்தான்களை உற்ற நண்பர்களாக நாம் ஆக்கி விட்டோம். (அல்குர்ஆன் 7:27)
இந்த வசனத்தில் ஷைத்தான்களை நாம் பார்க்க முடியாது என்று இடம் பெற்றுள்ளது. எனவே இந்த வசனத்திற்கு முரணில்லாத வகையில், அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தது மனித ஷைத்தான் என்று கூறலாம். ஏனெனில் மனிதர்களில் தீயவர்களை திருக்குர்ஆனிலும் நபிமொழிகளிலும் ஷைத்தான்கள் என்று கூறப்பட்டுள்ளது.
திருக்குர்ஆனில் இரண்டாவது அத்தியாயம் 14ஆவது வசனத்தில் நயவஞ்சகர்களை ஷைத்தான்கள் என்று அல்லாஹ் குறிப்பிட்டுள்ளான். இதே போல் தீய கவிதைகளை பாடிக் கொண்டிருந்த கவிஞனை அந்த ஷைத்தானைப் பிடியுங்கள் என்று நபிகளார் கூறியுள்ளார்கள். (முஸ்லிம் 4548)
எனவே அபூஹுரைரா (ரலி) அவர்களிடம் வந்தது தீய மனிதன் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.
உபை பின் கஅப் (ரலி) அவர்களும் ஷைத்தானும் இதே போல உபை பின் கஅபு (ரலி) அவர்களும் ஷைத்தானை பிடித்ததாகவும், அவருக்கும் ஆயத்துல் குர்ஸியைக் கற்று கொடுத்ததாகவும் இடம் பெற்றுள்ளது.
உபை பின் கஃபு (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்:
எனது தந்தைக்குப் பேரீத்தம் பழம் காயப் போடப்படும் ஒரு இடம் இருந்தது. அதில் அவர்களின் பேரீத்தம் பழங்கள் போடப்பட்டு இருந்தன. இதை அவர் (தந்தை) பாதுகாத்து வந்தார். (ஒரு தடவை பேரீச்சம் பழங்கள்) குறைவதைக் கண்டார். ஒருநாள் இரவில் அதைக் கண்காணித்தார். அப்போது இளம் வயதுள்ள வாலிபனைப் போன்று ஒரு மிருகத்தைக் கண்டார். (அவர் சொல்கிறார்) நான் அதற்கு ஸலாம் சொன்னேன். அது என் ஸலாமுக்கு பதில் சொன்னது. நீ மனித இனத்தைச் சார்ந்தவனா அல்லது ஜின் இனத்தைச் சார்ந்தவனா? என்று கேட்டேன். அது, ஜின் இனம் என்று கூறியது. உனது கையை கொடு என்று கேட்டேன். அந்தக் கை நாயினுடைய கையை போன்றும் நாயினுடைய முடியைப் போன்றும் இருந்தது. இதுதான் ஜின்னின் படைப்பு, என்னை விட ஜின் பலம் வாய்ந்தவர் இல்லை என்று அறிந்து கொண்டேன். நீ எதற்காக இதைச் செய்தாய் என்று கேட்டேன். நீ ஸதகாவுடைய பொருளை விரும்புவதாக எனக்குத் தகவல் கிடைத்தது. அதனால் நான் அதிலிருந்து எடுத்துச் செல்லலாம் என்று செய்தேன் என்று கூறியது. உங்களிடம் இருந்து எங்களை எப்படிப் பாதுகாத்து கொள்வது? என்று அதனிடம் கேட்டேன். ஆயத்துல் குர்ஸியின் மூலம் பாதுகாத்துக் கொள்ளலாம் என்று அது கூறியது. அதனால் அதை விட்டு விட்டேன்.
மறுநாள் எனது தந்தை நபி (ஸல்) அவர்களிடம் சென்று நடந்ததை அவர்களிடம் கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் கெட்டவன் உண்மையை உரைத்தான் என்றார்கள்.
நூல்: இப்னு ஹிப்பான் (பாகம்: 3, பக்கம்: 63) இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் ஸல்ம் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இப்னு ஹிப்பானைத் தவிர வேறு எவரும் நம்பகமானவர் என்று கூறவில்லை. இப்னு ஹிப்பான் அவர்கள் யாரென அறியப்படாதவரையும் நம்பகமானோர் பட்டியலில் இடம் பெறச் செய்து விடுவார் என்பதால் இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
புரைதா (ரலி) அவர்களும் ஷைத்தானும்
இதே சம்பவம் புரைதா (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
எனக்கு உணவுப் பொருள்கள் இருந்தன. அதில் குறைவு ஏற்படுவதை பார்த்து ஒரு நாள் இரவில் (பாதுகாக்க எண்ணி நின்றேன்). அப்போது ஒரு பேய் உணவு இருக்கும் இடத்திற்கு வந்தது. அதை நான் பிடித்து உன்னை ரசூல் (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லும் வரை விடவே மாட்டேன் என்று கூறினேன். அப்போது அவள், நான் அதிகமாக வறுமையில் இருக்கும் பெண். என்னை விட்டு விடு, இனிமேல் வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கூறினாள். அதனால் நான் விட்டு விட்டேன். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைக் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவள் பொய் கூறி விட்டாள் என்றார்கள். மீண்டும் உணவு குறைந்தது. அப்போது அவள் அந்த உணவிடத்தில் இருந்தாள். அவளை நான் பிடித்தேன். அப்போதும் அவள் முந்திய தடவை கூறியது போன்று கூறினாள். இதை நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போதும் நபி (ஸல்) அவர்கள் அவள் பொய் கூறுபவள், பொய் சொல்லி விட்டாள் என்றார்கள். மீண்டும் என்னுடைய உணவில் குறைவு ஏற்பட்டது. அவளுக்காக மறைந்திருந்தது அவளை பிடித்தேன். இனி உன்னை விட்டு விடவே மாட்டேன். நான் உன்னை நபி (ஸல்) இடத்தில் கொண்டு செல்ல இருக்கிறேன் என்றேன். அவள், என்னை விட்டு விடு! நான் உனக்கு ஒன்றை கற்றுத் தருகிறேன். அதை நீ கூறினால் எங்களில் எவரும் உன்னை நெருங்க மாட்டார்கள். நீ படுக்கைக்குச் சென்றால் உன் மீதும் உன்னுடைய பொருளின் மீதும் ஆயத்துல் குர்ஸியை ஓதிக் கொள் என்றாள். அதனால் நான் அவளை விட்டு விட்டேன். இதை நான் நபி (ஸல்) அவர்களிடத்தில் அறிவித்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவள் பொய் கூறுபவளாக இருந்தாலும் உண்மை சொல்லி விட்டாள் என்றார்கள். அறிவிப்பவர்: புரைதா (ரலி)
நூல்: தலாயிலுன் நுபுவ்வா -பைஹகி, பாகம்: 8, பக்கம்: 176
இச்செய்தியில் இடம் பெறும் அஹ்மத் பின் உபைத் என்பவர் பற்றியும், அலீ பின் அஹ்மத் பின் அப்தான் என்பவர் பற்றியும் எந்தக் குறிப்பும் இல்லை. எனவே இவர்களின் நம்பகத்தன்மை உறுதிப்படுத்தப்படாததால் இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது என்று எடுத்துக் கொள்ள முடியாது.
உஸைத் (ரலி)அவர்களும் ஷைத்தானும்
இதே போன்ற சம்பவம் நபித்தோழர் உஸைத் அஸ்ஸாயிதி (ரலி) அவர்களுக்கு ஏற்பட்டதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.
உஸைத் அஸ்ஸாயிதி (ரலி) அவர்களுக்கு மதீனாவில் புலாஆ என்று சொல்லக் கூடிய ஒரு கிணறு இருந்தது. அதில் நபி (ஸல்) அவர்கள் உமிழ்ந்து நல்ல செய்தியையும் கூறியிருந்தார்கள். உஸைத் (ரலி) அவர்கள் தன்னுடைய தோட்டத்திலுள்ள ஒரு மரத்தை வெட்டி தன்னுடைய அறையில் வைத்திருந்தார்கள். பேய் அவருடைய தண்ணீர் பாத்திரத்தையும் அவருடைய பேரீத்தம் பழங்களையும் திருடி நாசப்படுத்தியது. இதை நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். உஸைதே! நீ அவளிடத்தில் சென்று பிஸ்மில்லாஹி ஹபஸனீய் ரசூலுல்லாஹ் (அல்லாஹ்வின் பெயரைக் கொண்டு ஆரம்பம் செய்கிறேன் ரசூலுல்லாஹ் என்னைத் தடுத்து விட்டார்கள்) என்று சொல். இவ்வாறு அதன் மீது நீ சொல்லி விட்டால் அவளை தடுத்து விடும் என்றார்கள். (இவ்வாறு கூறியதால் அந்த பேயால் ஒன்றும் செய்ய முடியவில்லை) அந்தப் பேய், என்னை நபி (ஸல்) அவர்களிடத்தில் கொண்டு செல்வதை விட்டு விடு. நான் உனக்கு ஒரு உடன் படிக்கை தருகிறேன். உன்னுடைய வீட்டின் பக்கம் நெருங்க மாட்டேன். உன்னுடைய பழத்தினை திருட மாட்டேன், நான் உனக்கு அல்லாஹ்வுடைய வேதத்திலிருந்து ஒரு ஆயத்தைக் கற்றுத் தருகிறேன். நீ அதை உன்னுடைய வீட்டில் ஓதிக் கொள்! உன்னுடைய வீட்டின் அருகே பேய் நெருங்காது! உன்னுடைய பாத்திரத்தில் அதை ஓதிக் கொள்! நாங்கள் பாத்திரத்தை திறக்க முடியாது. பின்பு அந்த ஒப்பந்தத்தை அவர் திருப்தி கொள்ளும் பொருட்டு கொடுத்தது. அது அவருக்குக் கற்றுக் கொடுத்தது ஆயத்துல் குர்ஸியாகும். பின்பு அது காற்று பிரிந்த நிலையில் ஓடிவிட்டது.
நூல்: முஃஜமுல் கபீர், பாகம்: 19, பக்கம்: 263
இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அப்துல்லாஹ் பின் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவர் நம்பகத்தன்மை அறியப்படாதவராவார்.
நூல்: தக்ரீபுத் தஹ்தீப் (பாகம்: 1, பக்கம்: 313)
இரண்டாவதாக, இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் தொடரில் மாலிக் பின் ஹம்ஸா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை இமாம் புகாரி அவர்கள் பலவீனமானவர் பட்டியலில் இணைத்துள்ளார்கள்.
நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 6, பக்கம்: 5
அபூஅய்யூப் (ரலி) அவர்களும் ஷைத்தானும்
இதே போன்ற சம்பவம் அபூஅய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களுக்கும் நடந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது.
அபூ அய்யூப் அல் அன்ஸாரி (ரலி) அவர்களுக்குச் சிறிய அறை ஒன்று இருந்தது. அதில் பேரீச்சம் பழங்கள் இருந்தன. அங்கே ஒரு பேய் வந்து அதை எடுத்துச் சென்றது. அதைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் முறையிட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பெயரால் கேட்கிறேன் அல்லாஹ்வுக்கும் அவன் தூதருக்கும் கட்டுப்படு! என்று அதைக் கண்டால் கூறு என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மறுநாள் அபூ அய்யூப் பேயை பிடித்தார். இனிமேல் திரும்பி வர மாட்டேன் என்று அது சத்தியம் செய்ததும் அதை அவிழ்த்து விட்டார். நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது உனது கைதி என்னவானான் என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டனர். திரும்பி வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்தான் (அதனால் விட்டு விட்டேன்) என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவன் பொய் சொல்லியிருக்கிறான். மீண்டும் பொய் சொல்வான் என்று கூறினார்கள். பிறகு மற்றொரு தடவை அவனை பிடித்தார். உன்னை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு செல்லாமல் விடவே மாட்டேன் என்று அவனிடம் கூறினார். அதற்கு அவன், நான் சில செய்திகளை உனக்குக் கூறுகிறேன் ஆயத்துல் குர்ஸியை உனது வீட்டில் ஓது! ஷைத்தானோ மற்றவர்களோ உன்னை நெருங்க முடியாது என்று கூறினான். அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது உனது கைதி என்னவானான்? என்று கேட்டார்கள். அவர் நடந்ததைக் கூறினார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவன் பொய்யனாக இருந்தாலும் அவன் கூறியது உண்மையே என்று கூறினார்கள்.
நூல்: திர்மிதி (2805)
இதே செய்தி அஹ்மத் (22488), ஹாகிம், பாகம்: 3 பக்கம்: 519, இப்னு அபீ ஷைபா , பாகம்: 6, பக்கம்: 94, முஃஜமுல் கபீர், பாகம்: 4, பக்கம்: 162. 163, தஹாவி-முஸ்கிலுல் ஆஸார், பாகம்: 2, பக்கம்: 282 ஆகிய நூல்களிலும் இடம் பெற்றுள்ளது. இந்த செய்தியில் இப்னு அபீலைலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர்.
அறிஞர் யஹ்யா பின் ஸயீத் அவர்கள், இவர் பலவீனமானவர் என்று கூறியதாக இமாம் அஹ்மத் அவர்கள் கூறுகிறார்கள். இமாம் அஹ்மத் அவர்கள், இவர் மனன சக்தி குன்றியவர், ஹதீஸை குழப்பக் கூடியவர் என்றும், இமாம் ஷுஃபா அவர்கள், இவரை விட மனன சக்தியில் மோசமான ஒருவரை நான் கண்டதில்லை என்றும், இமாம் யஹ்யா பின் மயீன் அவர்கள், இவர் பலவீனமானவர் என்றும், இதே போல் அபூ ஸுர்ஆ அவர்களும், இமாம் அபூஹாத்திம் அவர்களும், இவர் மனன சக்தி குன்றியவர், இவருடைய செய்தியை எழுதிக் கொள்ளலாம் ஆனால் ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இமாம் நஸயீ அவர்கள், இவர் பலவீமானவர் என்றும், இமாம் இப்னு ஹிப்பான் அவர்கள் இவர் வெளிப்படையாகத் தவறிழைப்பவர், மனன சகதியில் கோளாறு உள்ளவர் எனவே இவருடைய செய்தியில் நிராகரிக்கப்பட வேண்டியவை அதிகமாகி விட்டது என்றும், தாரகுத்னி, இப்னு ஜரீர், தப்ரீ, ஆகியோரும், இவரை ஆதாரமாக எடுத்துக் கொள்ளக்கூடாது என்றும், இப்னுல் முதைனி அவர்கள் இவர் மனன சக்தி கோளாறு உள்ளவர், வெளிப்படையாக தவறிழைப்பவர் என்றும், இதே போன்று இமாம் ஸாஜி அவர்களும் குறிப்பிடுகிறார்கள்.
நூல்: தஹ்தீப் தஹ்தீப் (பாகம்: 9, பக்கம்: 268)
எனவே இவர் அறிவிக்கும் இந்தச் செய்தியை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
இதே செய்தி ஹாகிமில் (பாகம்: 3, பக்கம்: 519) இடம் பெற்றுள்ளது. இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் இப்ராஹிம் பின் பக்ர் என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய குறிப்புகள் நாம் பார்த்த வரை கிடைக்கவில்லை.
இதே செய்தி முஃஜமுல் கபீரில் (பாகம்: 2, பக்கம்: 162) இடம் பெற்றுள்ளது. அந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் அல்ஹுஸைன் தஸ்தூரி என்பவரும் இப்னு அபீ லைலா என்பவரும் இடம் பெற்றுள்ளனர்.
முதலாவதாக ஹுஸைன் தஸ்தூரி என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய எந்தக் குறிப்பும் கிடைக்கவில்லை. எனவே இவருடைய இந்தச் செய்தியையும் நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
இப்னு அபீலைலா என்பவர் இடம் பெற்றுள்ளார். இவரைப் பற்றிய அறிஞர்களின் விமர்சனத்தை முன்னர் கூறியிருக்கிறோம்.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களும் ஷைத்தானும்
இதே சம்பவம் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களுக்கும் நடந்ததாக அறிவிக்கப்பட்டுள்ளது.
முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் ஒரு சப்தத்தைக் கேட்டார்கள். அதைப் பிடித்து, நீ யார் என்று கேட்டார்கள். நான் தான் ஷைத்தான் என்று கூறினான். நான் நபியவர்களிடத்தில் அழைத்துச் செல்கிறேன் அவர்களிடத்தில் பதில் கூறு என்றார்கள். அதற்கவன் நான் இனிமேல் வரவே மாட்டேன், என்னை விட்டு விடு என்றான். அவனை விட்டு விட்டார். மறுநாள் நபி (ஸல்) அவர்களிடத்தில் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள் சென்றார்கள். உன்னுடைய கைதி என்னவானான் என்று கேட்டார்கள். நான் விட்டு விட்டேன் என்றேன். மறுநாள் இரவிலும் அதே சப்தத்தை கேட்டார்கள். அதைப் பிடித்து நபி (ஸல்) இடத்தில் அழைத்துச் செல்ல நாடினார்கள். இனிமேல் திரும்பும் வரவே மாட்டேன் என்று சத்தியம் செய்து கூறினான். அவனை விட்டு விட்டார்கள். மூன்றாவது இரவிலும் அதே சப்தத்தைக் கேட்டு அதைப் பிடித்து நபி (ஸல்) அவர்களிடத்தில் அழைத்துச் செல்ல நாடினார்கள். நான் இனிமேல் திரும்பவும் வர மாட்டேன் என்னை விட்டு விடு என்று சத்தியம் செய்து கூறினான். முஆத் (ரலி) அவர்கள் விட மறுத்து விட்டார்கள். நீ என்னை விட்டு விடு! நான் உனக்கு ஒரு ஆயத்தைக் கற்றுத் தருகிறேன். நீ அதை ஓதினால் நாங்கள் அந்த இடத்தை நெருங்க மாட்டோம் என்று கூறி ஆயத்துல் குர்ஸியை கற்றுக் கொடுத்தான். இதனால் அவர் அவனை விட்டு விட்டார். மறு நாள் நபியிடத்தில் மூஆத் (ரலி) அவர்கள் சென்ற போது உன்னுடைய கைதி என்னவானான் என்றார்கள். அதற்கவர் அவன் தனக்கு அறிவித்ததைச் சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவன் பொய்யனாக இருந்தாலும் உண்மை கூறிவிட்டான் என்றார்கள்.
நூல்: முஸ்னத் ஸாமிஈன் பாகம்: 2, பக்கம்: 416
முஃஜமுல் கபீர், பாகம்: 20, பக்கம்: 101, இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் முஹம்மத் பின் இப்ராஹீம் என்பவரும் உகைல் பின் முத்ரிக் என்பவரும் யாரென அறியாபடாதவர்கள். எனவே இந்தச் செய்தியை ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது
இதே செய்தி சில வார்த்தை மாற்றங்களுடன் முஃஜமுல் கபீரில் (பாகம்: 20, பக்கம்: 51) இடம் பெற்றுள்ளது.
ஆனால் இந்தச் செய்தியின் அறிவிப்பாளர் தொடரில் யஹ்யா பின் பின் உஸ்மான் என்பவர் இடம் பெற்றுள்ளார். இப்னு ஹாத்திம் அவர்கள், இவரை அறிஞர்கள் குறை கூறியுள்ளனர் என்று கூறியுள்ளார்கள்.
நூல்: முஃனி பீ லுஃபா (பாகம்: 2, பக்கம்: 740)
வளரும் இன்ஷா அல்லாஹ்
தவ்ஹீத் ஆண்களே!
திருமணத்தில் மட்டும்
நபிவழியை மறந்தது ஏன்?
மூன்றாம் ஆண்டு மாணவிகள், அந்நூர் இஸ்லாமியக் கல்லூரி, மேலக்காவேரி
அல்லாஹ்வின் சட்டங்களையும் அவனது தூதர் காட்டித் தந்த வழிமுறைகளையும் முழுமையாக ஏற்று, பின்பற்றி நடப்பவரே உண்மையான தவ்ஹீத்வாதி. ஆனால் இன்று தவ்ஹீத்வாதி என்று சொல்பவர்கள் எல்லா விஷயங்களிலும் நபிவழியைப் பின்பற்றினாலும் திருணம் என்று வந்து விட்டால், நபிவழி எந்த ஊருக்கு விடுமுறையில் போய் விடுகிறது என்று நமக்குத் தெரிவதில்லை.
பெண் பார்த்தல்
தன்னை தவ்ஹீத்வாதி என்று கூறிக் கொள்ளும் அரைகுறைகள், அல்லாஹ்வும் அவன் தூதரும் சொன்னபடி பெண் பார்க்கிறார்களா?
மார்க்கம் தெரிந்த பெண்ணையோ அல்லது மார்க்கம் படித்து அதன்படி செயல்படும் பெண்ணையோ திருமணம் முடிக்காமல் சிவந்த பெண்ணா? பணம் நிறைந்த பெண்ணா? என்று மட்டும் பார்த்து நிச்சயம் செய்கிறார்கள்.
அழகுள்ள பெண்ணைத் திருமணம் செய்ய ஆசைப்படலாம். ஆனால் அழகு மட்டுமே வேண்டும் என்று நிற்கலாமா? இப்படி சிவப்பு நிற பெண்களே வேண்டும் என்றிருந்தால் கறுப்பு நிறப் பெண்களை எந்த கிரகத்து ஆண்கள் மண முடிப்பார்கள்?
அழகு மட்டுமே வேண்டும் என்றால் மார்க்கம் வேண்டாமா? தீனைப் பற்றி தெரிந்திருக்க வேண்டாமா? ஒழுக்கம் இருக்க வேண்டாமா? இதையெல்லாம் மார்க்கம் வலியுறுத்தவில்லையா? அல்லது நபிமொழி நூல்களில் இந்த விவரங்கள் இடம் பெறவில்லையா?
அழகுக்காக இணை வைக்கும் பெண்ணை தேர்வுசெய்தல்
பெண்ணைத் தேர்வு செய்யும் போது கவனிக்க வேண்டியது, முதலில் அந்தப் பெண் ஓரிறைக் கொள்கையில் பிடிப்புள்ளவளாக இணை வைப்புச் செயலிருந்து விலகியவளாக இருக்க வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக் கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)
இணை வைக்கும் பெண்கள் எவ்வளவு அழகுள்ளவளாக இருந்தாலும் அறிவுள்ளவளாக இருந்தாலும் அந்தப் பெண்ணை கண்டிப்பாகத் திருமணம் முடிக்கக் கூடாது என்று திருக்குர்ஆன் தெளிவான கட்டளையிடுகிறது. ஆனால் பெற்றோர்கள் சொல்கிறார்கள் என்பதற்காக இணை வைக்கும் பெண்களை திருமணம் புரிந்ததாகக் கூறும் இந்த அரைகுறை தவ்ஹீத்வாதிகள், பெற்றோர்கள் சொல்லும் எல்லா விஷயத்திலும் பின்பற்றி நடக்கிறார்களா? தர்ஹாவிற்குப் போக வேண்டும் என்று சொன்னாலும் சென்று விடுவார்களா? அதற்கும் பெற்றோர்களைக் காரணம் காட்டுவார்களா?
ஆடத் தெரியாமல் ஆடிவிட்டு, தெருக் கோணல் என்று சொல்வார்களே அதைப் போன்று கொள்கையில் உறுதியில்லாமல் பெற்றோர்கள் மீது பழியை போடுகிறார்கள்.
ஒரு பேச்சுக்கு இவ்வாறு பெற்றோர்கள் கட்டளையிட்டாலும் நாம் அதை ஏற்று நடக்க வேண்டும் என்றா திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது?
தனது பெற்றோருக்கு நல்லுதவி செய்யுமாறு மனிதனுக்கு வலியுறுத்தியுள்ளோம். உனக்கு அறிவு இல்லாத ஒன்றை எனக்கு இணை கற்பிக்குமாறு அவ்விருவரும் உன்னை வற்புறுத்தினால் அவர்களுக்குக் கட்டுப்படாதே! உங்களின் மீளுதல் என்னிடமே உள்ளது. நீங்கள் செய்து கொண்டிருந்தது பற்றி உங்களுக்கு அறிவிப்பேன். (அல்குர்ஆன் 29:8)
மேலும் நபி (ஸல்) அவர்கள் என்ன கூறியுள்ளார்கள்?
அல்லாஹ்வுக்கு மாறு செய்வதில் கீழ்ப்படிதல் கிடையாது; கீழ்ப்படிதல் என்பதெல்லாம் நன்மையில் தான் (புகாரி 7257)
இதுபோன்ற நபிமொழிகள் அரைகுறை தவ்ஹீத்வாதிகளின் காதுகளில் விழுவதில்லையே! ஏன்?
மார்க்கமுள்ள பெண்ணைத் தேர்வு செய்!
ஓரிறைக் கொள்கையில் உறுதியாக இருக்கும் பெண்ணாகவும் நபிமொழியை அறிந்தவளாகவும் தொழுகையைப் பேணுபவளாகவும் திருக்குர்ஆனுக்கும் நபிமொழிக்கும் முன்னுரிமை வழங்குபவளாகவும் உள்ள பெண்ணைத் தேர்வு செய்ய வேண்டும். இதற்கு முதலிடம் கொடுத்து தவ்ஹீத்வாதிகள் பெண்ணைத் தேர்வு செய்துள்ளார்களா?
நான்கு நோக்கங்களுக்காக ஒரு பெண் மணமுடிக்கப்படுகிறாள். 1. அவளது செல்வத்திற்காக. 2. அவளது குடும்பப் பாரம்பரியத்திற்காக. 3. அவளது அழகிற்காக. 4. அவளது மார்க்கத்திற்காக. ஆகவே, மார்க்கம் உடையவளை (மணந்து) வெற்றி அடைந்து கொள்! (இல்லையேல்) உன்னிரு கரங்களும் மண்ணாகட்டும்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி (5090)
நபிகளார் எதற்கு முதலிடம் கொடுக்கச் சொன்னார்களோ அதற்கு முதலிடம் கொடுக்காமல் மற்ற மூன்று விஷயங்களுக்கு அரைகுறை தவ்ஹீத்வாதிகள் முதலிடம் கொடுக்கிறார்கள்.
உண்மையில் இந்த நபிமொழியைப் பின்பற்றியிருந்தால் தவ்ஹீத் கொள்கையில் பிடிப்புள்ள எத்தனையோ ஏழைப் பெண்களுக்குத் திருமணம் நடந்திருக்கும். ஆனால் அழகுக்கும் பணத்திற்கும் முதலிடம் கொடுப்பதால் கொள்கைப் பிடிப்புள்ள ஏழைப் பெண்கள் இன்று திருமணமாகாமல் தவிக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.
இணை வைக்கும் பெண்களைத் திருத்தி விடலாமா?
அழகுக்காகவும் பணத்திற்காகவும் இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்யும் அரைகுறை தவ்ஹீத்வாதிகளிடம், ஏன் இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்கிறீர்கள்? என்று கேட்டால் அதற்கு இன்னொரு காரணத்தைக் கூறுகிறார்கள். அந்த பெண்களை திருமணத்திற்குப் பிறகு திருத்தி விடலாமாம்.
திருத்திவிடலாம் என்றிருந்தால் இணை வைக்கும் பெண்களைத் திருமணம் செய்யாதே என்று ஏன் அல்லாஹ் கூற வேண்டும்? திருத்த முடியும் என்றால், இணைவைக்கும் பெண்களைத் திருமணம் செய்பவர்கள் அவர்களைத் திருத்தட்டும் என்று கூறியிருக்கலாமே? அல்லாஹ்விற்குத் தெரியாதது இந்த அரைகுறை தவ்ஹீத்வாதிகளுக்குத் தெரிந்துவிட்டதா?
திருத்தி விடுவோம் என்று கூறுகிறார்களே! திருந்தி விடுவார்கள் என்பதற்கு என்ன உத்தரவாதம் இருக்கிறது இவர்களிடத்தில்?
நூஹ் நபி, லூத் நபி ஆகியோர் தங்கள் மனைவியிடத்தில் செய்யாத அறிவுரையா? அவர்கள் என்ன திருந்தி விட்டார்களா? இவர்களைப் போன்று உங்கள் மனைவி இருந்து விட்டால் என்ன செய்வீர்கள்? தங்களையும் சேர்த்துத் திருத்தும் வண்ணம் உள்ள கொள்கை பிடிப்புள்ள பெண்ணையல்லவா தவ்ஹீத்வாதிகள் தேர்வு செய்திருக்க வேண்டும்?
(இஸ்லாத்தை ஏற்காதவராக இருந்த போது) அபூதல்ஹா (ரலி) அவர்கள், உம்மு ஸுலைம் (ரலி) அவர்களை (மிகவும் விரும்பி) பெண் கேட்டார்கள். அதற்கு உம்மு ஸுலைம் (ரலி) அவர்கள், அபூதல்ஹா அவர்களே! உங்களைப் போன்றவர்கள் (பெண் கேட்டால்) மறுக்கப்படாது. (அவ்வளவு சிறந்வர்கள் நீங்கள்) ஆனால் நீங்கள் ஓரிறைக் கொள்கையை மறுப்பவராக இருக்கிறீர்கள். நானோ முஸ்லிமான பெண்ணாக இருக்கிறேன். உங்களைத் திருமணம் செய்வது எனக்கு ஆகுமானதல்ல. நீங்கள் இஸ்லாத்தை ஏற்றால் அதுவே எனது மஹராகும். இதைத் தவிர வேறெதையும் நான் கேட்க மாட்டேன் என்று கூறினார்கள். அவர்கள் இஸ்லாத்தை தழுவினார்கள். அதுவே அவர்களுடைய மஹராக ஆனது. (நூல்: நஸயீ 3289)
ஓரிறைக் கொள்கையின் பக்கம் அழைப்பு கொடுத்து ஒரு சிறந்த நபித்தோழரை இஸ்லாத்திற்குக் கொண்டு வந்த உம்மு ஸுலைம் போன்ற பெண்ணைத் தேர்வு செய்ய ஏன் தவ்ஹீத்வாதிகளுக்கு மனம் வருவதில்லை?
மறைமுக வரதட்சணை
வரதட்சணை வேண்டாம் என்று சொல்லிக் கொள்ளும் அரைகுறை தவ்ஹீத்வாதிகள், நகையும் சொத்தும் நிறைந்த பெண்ணாகத் தேடுவது மறைமுக வரதட்சணையில்லையா? ஒன்றும் வேண்டாம் என்று வெளிப்படையாக சொல்லிக் கொள்ளும் இவர்கள் மனதுக்குள், நிறைய நகை போட்டு வரவேண்டும் என்று எதிர்பார்க்கிறார்கள். அப்படிப்பட்ட குடும்பமாகத் தேர்வு செய்கிறார்கள்.
உண்மையில் வரதட்சணை வாங்க மாட்டோம் என்பதில் உறுதியாக இருந்தால் பெண் பார்க்கும் படலம் துவங்கும் போது, மார்க்கப்பற்றுள்ள பெண்ணாக இருந்தால், அந்த பெண் குடிசையா? கோபுரமா? என்று நாங்கள் பார்க்க மாட்டோம். அந்தப் பெண் கறுப்பாக இருந்தாலும் சரி! சிவப்பாக இருந்தாலும் சரி! எங்களுக்கு முதலிடம் மார்க்கம் தான் என்று உளத்தூய்மையுடன் சொல்லட்டும். ஏழ்மையான பெண்ணைத் தேர்வு செய்து திருமணம் முடித்துக் காட்டட்டும். நிறத்தால், பணத்தால் புறக்கணிக்கப்படும் பெண்களை மார்க்கத்தை மட்டும் பார்த்து அவர்களின் வாழ்வில் ஒளியேற்றிட தவ்ஹீத்வாதிகள் முன்வருவார்களா?
என்னைச் சார்ந்தவனில்லை
இப்னு தாஹிரா
நபிகளார் அவர்களின் அறிவுரைகளில், அவர்களது வார்த்தைப் பயன்பாட்டை வைத்து அதன் கடுமையையும் நன்மையையும் மதீப்பிடு செய்து விடலாம். சாதாரணமாகக் கண்டித்த வார்த்தைகள், கடுமையாகக் கண்டித்த வார்த்தைகள் என்று நபிமொழித் தொகுப்புகளில் நபிகளாரின் வார்த்தைப் பயன்பாட்டில் நாம் பார்க்கலாம். அந்த வகையில் சில குறிப்பிட்ட செயல்களை நபி (ஸல்) அவர்கள், இந்தச் செயலைச் செய்தவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று குறிப்பிட்டுள்ளார்கள்.
கடும் கோபம் ஏற்படும் போது எப்படி ஒரு தந்தை தன் பிள்ளையைப் பார்த்து, என் பிள்ளையே கிடையாது என்று கூறுவாரோ அதைப் போன்று சில காரியங்களைச் செய்பவர்களைப் பார்த்து, என்னைச் சார்ந்தவன் இல்லை என்று கடுமையான வாசகத்தை நபிகளார் பயன்படுத்தியுள்ளார்கள். எனவே இவ்வாறு பயன்படுத்தியுள்ள காரியத்திலிருந்து நாம் முற்றிலும் தவிர்ந்திருக்க வேண்டும்.
திருமணத்தைப் புறக்கணிப்பவன்
இறைவனுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக இருப்பதற்காகவும், அவனது அருளைப் பெறுவதற்காகவும் சிலர் குடும்பத்தை விட்டு விட்டு, காடுகளில் தவமிருந்து பல அரிய சக்திகளைப் பெற்றதாகப் பல கதைகளை நாம் கேட்டிருப்போம். ஆனால் இவ்வாறு துறவறம் இருப்பது இஸ்லாத்தில் அனுமதி இல்லை.
மாறாக, திருமணம் முடித்து குடும்பத்தினருடன் வாழ்வதே இறையருளைப் பெற்றுத் தரும் என்றும் இதைப் புறக்கணிப்பவன் இஸ்லாமிய மார்க்கத்தின் வழிமுறையைப் புறக்கணித்தவனாகக் கருதப்படுவான் என்றும் கடுமையாக நபிகளார் எச்சரித்துள்ளார்கள். முழுக்க முழுக்க இறைவன் என்றிருக்காமல் குடும்பத்தையும் கவனிக்க வேண்டும் என்று கட்டளையிட்டுள்ளார்கள்.
நபி (ஸல்) அவர்களுடைய துணைவியரின் வீடுகளுக்கு மூன்று பேர் கொண்ட குழுவினர் வந்து நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகள் குறித்து வினாத் தொடுத்தனர். அதுபற்றி அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்ட போது, அவர்கள் நபி (ஸல்) அவர்கன் வணக்க வழிபாடுகளைக் குறைத்து மதிப்பிட்டது போல் தெரிந்தது. பிறகு (அவர்களே அதற்குச் சமாதானமும் கூறிக்கொண்டு), முன்பின் தவறுகள் மன்னிக்கப்பட்டுவிட்ட நபி (ஸல்) அவர்கள் எங்கே? நாம் எங்கே? என்று சொல்க் கொண்டனர்.
அவர்கல் ஒருவர், (இனிமேல்) நான் என்ன செய்யப் போகிறேன் என்றால், எப்போதும் இரவில் தொழுது கொண்டே இருக்கப் போகிறேன் என்றார். இன்னொருவர், நான் ஒருநாள் கூட விடாமல் காலமெல்லாம் நோன்பு நோற்கப் போகிறேன் என்று கூறினார். மூன்றாம் நபர் நான் பெண்களை விட்டும் ஒதுங்கியிருக்கப் போகிறேன். ஒருபோதும் மணமுடித்துக் கொள்ள மாட்டேன் என்று கூறினார்.
அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்தத் தோழர்கடம்) வந்து, இப்படி இப்படியெல்லாம் பேசிக் கொண்டது நீங்கள் தாமே! அறிந்து கொள்ளுங்கள்: அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களை விட அதிகமாக நான் அல்லாஹ்வை அஞ்சுபவன் ஆவேன். அல்லாஹ்வைப் பயந்து நடப்பவன் ஆவேன். ஆயினும், நான் நோன்பு நோற்கவும் செய்கிறேன், விட்டுவிடவும் செய்கிறேன்; தொழவும் செய்கிறேன், உறங்கவும் செய்கிறேன்; மேலும், நான் பெண்களை மணமுடித்தும் உள்ளேன். ஆகவே, என் வழிமுறையை யார் கைவிடுகின்றாரோ அவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (5063)
மோசடி செய்பவன்
பணத்தை சம்பாதிக்க வேண்டும் என்பதற்காக அடுத்தவர்களை ஏமாற்றி, மோசடி செய்து பணம் பார்ப்பவர்கள் இன்று அதிகரித்துள்ளார்கள். குறிப்பாக அடிப்படைத் தேவையான உணவுகளில் கலப்படம் செய்து, தரமற்ற பொருட்களைக் கொடுத்து மக்களை ஏமாற்றும் இவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று நபிகளார் எச்சரிக்கை செய்துள்ளார்கள். உணவு என்றில்லாமல் எதில் மோசடி செய்வதும் கண்டிப்பாகக் கூடாது. கடுமையான குற்றமாகும்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் உணவு(தானிய)க் குவியலைக் கடந்து சென்றார்கள். (விற்பனைக்காக வைக்கப்பட்டிருந்த) அந்தக் குவியலுக்குள் தமது கையை அவர்கள் நுழைத்தார்கள். அப்போது (தானியக் குவியலில் இருந்த) ஈரம் அவர்களின் விரல்களில் பட்டது. உடனே அவர்கள் உணவு (தானியத்தின்) உரிமையாளரே! என்ன இது (ஈரம்)? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இதில் மழைச் சாரல் பட்டுவிட்டது, அல்லாஹ்வின் தூதரே! என்றார். அப்போது அவர்கள், ஈரமானதை மக்கள் பார்க்கும் விதமாக உணவு (தானியத்து)க்கு மேலே வைத்திருக்கக் கூடாதா? என்று கேட்டு விட்டு, மோசடி செய்தவர் என்னைச் சார்ந்தவர் அல்லர் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (164)
சமூகத்தைக் கொன்றழிப்பவன்
தம்மிடையே ஏற்பட்டுள்ள சண்டையின் காரணத்தால் இஸ்லாமிய சமூகத்திற்கு எதிராகப் போர் செய்து, அவர்களில் நல்லவர்கள் கெட்டவர்கள் என்று பார்க்காமல் கொன்றழிப்பவன் நம்மைச் சார்ந்தவன் இல்லை. இன்று இஸ்லாத்தின் பெயரால் குண்டு வைத்து அப்பாவி மக்களைக் கொன்று குவிப்பவர்கள் நபிகளாரின் எச்சரிக்கையைக் கவனத்தில் கொண்டு, நல்லவர்களையும் அப்பாவிக் குழந்தைகளையும் கொலை செய்யும் போக்கை முற்றிலும் கைவிடவேண்டும்.
யார் என் சமுதாயத்தாருக்கெதிராகப் புறப்பட்டு, அவர்களில் இறைநம்பிக்கையாளர்களைப் பொருட்படுத்தாமல் அவர்களில் நல்லவர்களையும் கெட்டவர்களையும் கொன்று, ஒப்பந்தம் செய்துள்ளவர்களின் ஒப்பந்தத்தை நிறைவேற்றத் தவறுகிறாரோ அவர் என்னைச் சேர்ந்தவருமில்லை. நான் அவரைச் சேர்ந்தவனுமில்லை.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (3766)
இதே கருத்தில் புகாரியில் மற்றொரு செய்தி இடம் பெற்றுள்ளது.
நமக்கெதிராக எவன் ஆயுதம் ஏந்துகிறானோ அவன் நம்மைச் சார்ந்தவனல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (6874)
துன்பத்தின் போது கன்னத்தில் அறைபவன்
மனிதனின் வாழ்க்கையில் துன்பம் என்பது கண்டிப்பாக வந்து சென்று கொண்டே இருக்கும். அப்போது பொறுமை மேற்கொள்வது இறை நம்பிக்கையாளனின் கடமையாகும். ஆனால் பலர் துன்ப நேரங்களில் கன்னங்களில் அறைந்து கொள்வதும் சட்டையைக் கிழித்துக் கொள்வதும் ரத்தக் காயங்களை ஏற்படுத்திக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் வாடிக்கையாகக் கொண்டுள்ளனர்.
இவ்வாறு நடந்து கொள்பவர்கள் இஸ்லாமியர்களாகக் கணிக்கப்பட மாட்டார்கள். துன்பங்கள் நேரும் போது படைத்தவன் நம்மை சோதிக்கிறான் என்றெண்ணி நாம் பொறுமையாக இருக்க வேண்டும். அவ்வாறு இருந்து, இறைவா! இந்தச் சோதனைக்குப் பகரமாக கூலியைக் கொடு. இதை விட சிறந்ததை வழங்கு என்று கூற வேண்டுமே தவிர, கன்னங்களில் அடித்துக் கொள்வதும் சட்டைகளை கிழித்துக் கொள்வதும் ஒப்பாரி வைத்து அழுவதும் கண்டிப்பாகக் கூடாது.
(துக்கத்தினால்) கன்னங்களில் அறைந்து கொள்பவனும் சட்டைப் பைகளைக் கிழித்துக் கொள்பவனும் அறியாமைக் கால (பழக்கங்களுக்காக) அழைப்பு விடுப்பவனும் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி), நூல்: புகாரி (1297)
(என் தந்தை) அபூமூஸா (ரலி) அவர்கள் கடுமையான வேதனையில் மயக்கமடைந்து விட்டார்கள். அவர்களது தலை அவர்களுடைய குடும்பப் பெண் ஒருவரின் மடி மீது இருந்தது. அப்போது அவர்களுடைய குடும்பத்துப் பெண்மணி ஒருவர் ஓலமிட்டு அழுதார். அபூமூஸா (ரலி) அவர்களால் அப் பெண்ணுக்கு பதிலேதும் சொல்ல முடியவில்லை.
பிறகு மயக்கம் தெளிந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரை விட்டுத் தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்களோ அவரை விட்டு நானும் என் பொறுப்பை விலக்கிக் கொள்கிறேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (துன்பத்தின் போது) ஓலமிட்டு அழும் பெண், தலையை மழித்துக் கொள்ளும் பெண், ஆடையைக் கிழித்துக்கொள்ளும் பெண் ஆகியோரிடமிருந்து தமது பொறுப்பை விலக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூபுர்தா பின் அபீமூஸா, நூல்: முஸ்லிம் (167)
அநீதிக்கு உதவி செய்பவர்கள் அதிகாரம் உள்ள பதவிக்கு வருபவர்கள், தங்கள் அதிகாரத்தை தவறாகப் பயன்படுத்தி சுகம் காண்கிறார்கள். மக்களின் தேவைகளையும் அவர்களின் விருப்பங்களையும் கண்டு கொள்வதில்லை. இப்படிப்பட்ட தலைவர்களின் குறைகளை சுட்டிக் காட்டி அநீதிகளை தட்டிக் கேட்பதற்குப் பதிலாக, அவர்கள் செய்யும் அநீதிகளையும் அக்கிரமங்களையும் பொய்களையும் சரி காண்பவர்களும் இன்று இருக்கத் தான் செய்கிறார்கள்.
இவ்வாறு செய்வதன் மூலம் தலைவர்களிடம் சில பலன்களை பெற்றுக் கொள்கிறார்கள். இப்படிப்பட்டவர்களை நபிகளார் பின்வரும் செய்தியின் மூலம் எச்சரிக்கை செய்துள்ளார்கள்.
எனக்கு பின்னால் சில தலைவர்கள் வருவார்கள். அவர்களிடம் சென்று அவர்களின் பொய்களை உண்மைப்படுத்துவார்கள். அவர்களின் அநீத செயல்களுக்கு உதவி புரிவார்கள். அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள் இல்லை. நான் அவனைச் சார்ந்தவனும் இல்லை. அவர்கள் (மறுமைநாளில்) ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வர மாட்டார்கள்.
யார் அவர்களிடம் (அநீதி இழைக்கும் தலைவர்களிடம்) செல்லாமல் அவர்களின் அநீதிக்கு உதவி செய்யாமல் அவர்களின் பொய்களை உண்மைப்படுத்தாமல் இருப்பார்களோ அவர்கள் என்னைச் சார்ந்தவர்கள், நான் அவர்களைச் சார்ந்தவன். அவர்கள் ஹவ்லுல் கவ்ஸர் தடாகத்திற்கு என்னிடம் வருவார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: கஅப் பின் உஜ்ரா (ரலி)
நூல்கள்: திர்மிதீ (2185), நஸயீ (4136), அஹ்மத் (17423)
அபகரிப்பவன்
பொருள்களின் மீதுள்ள ஆசையின் காரணத்தால் அடுத்தவர்களின் பொருள்களை அநியாயமாக அபகரித்துக் கொள்ளையடிப்பவர்கள் நம்மைச் சார்ந்தவர்கள் இல்லை என்று கடுமையான எச்சரிக்கையை நபிகளார் செய்ததுடன், அவன் அவ்வாறு செய்யும் போது முஃமினாக இருப்பதில்லை என்றும் கூறியுள்ளார்கள்.
(மற்றவர்களின் பொருள்களை) அபகரிப்பவன் என்னைச் சார்ந்தவன் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: இம்ரான் பின் ஹுஸைன் (ரலி)
நூல்கள்: திர்மிதீ (1042), நஸயீ (3283), இப்னுமாஜா (3927), அஹ்மத் (19136) ஒருவன் மக்கள் பார்த்துக் கொண்டிருக்க, (பிறரது பொருளை அபகரித்துக்) கொள்ளையடிக்கும் போது மூமினாக இருந்து கொண்டு கொள்ளையடிப்பதில்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ர), நூல்: புகாரி (2475)
மீசையை வெட்டாதவர்
இஸ்லாம் தூய்மையை வலியுறுத்துகிறது. தூய்மையாக இருப்பது ஈமானின் உள்ளடக்கம் என்றும் தெளிவுபடுத்துகிறது. அந்த அடிப்படையில் மீசையை வெட்டிக் கொள்ளுமாறும், இது இயற்கையான சுன்னத் என்றும் போதிக்கிறது. மேலும் மீசையை அதிகமாக வளர்ப்பதன் காரணத்தால், சாப்பிடும் போதும் குடிக்கும் போதும் மீசையில் பட்டு அதன் மீது படிந்துள்ள தூசிகளும் சேர்ந்து உடலுக்குள் போக வேண்டிய நிலை ஏற்படுகிறது. எனவே இவற்றைத் தவிர்க்கும் விதமாக மீசையை ஒழுங்குற வெட்டிக் கொள்ள வேண்டும்.
யார் மீசையை எடுக்கவில்லையோ அவர் நம்மைச் சார்ந்தவர் இல்லை என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸைத் பின் அர்கம் (ரலி), நூல்: திர்மிதீ (2685), நஸயீ (13)
மீசையைக் கத்தரிப்பது இயற்கை மரபில் அடங்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: புகாரி (5888)
குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துபவன்
கணவன் மனைவிக்கு இடையே பிரச்சனைகள் ஏற்படும் போது குடும்பத்திலுள்ளவர்கள் அவர்களின் பிணக்குகளைத் தீர்த்து, அவர்களை சேர்ந்து வாழ ஏற்பாடு செய்ய வேண்டும். ஆனால் சிலர் குடும்பத்தில் பிரச்சனை ஏற்படுத்துவதற்காகவே இல்லாததையும் இருப்பதையும் இணைத்து மனைவியிடம் போட்டுக் கொடுத்து, கணவன் மனைவிக்கு மத்தியில் உள்ள உறவில் விரிசலை ஏற்படுத்துகிறார்கள். இவ்வாறு செய்வது மிகப் பெரிய குற்றமாகும்.
கணவனுக்கு எதிரான கருத்துக்களை மனைவியிடம் கூறி பிரச்சனையை ஏற்படுத்துபவன் நம்மைச் சார்ந்தவன் அல்லன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: அபூதாவூத் (1860), அஹ்மத் (8792)
? பள்ளிவாசலில் ஃபஜ்ர், அஸர் தொழுகை முடிந்த உடன் துஆ ஓதாமல் தஸ்பீஹ் செய்து விட்டு துஆ ஓதுகிறார்கள். பின்னர் கலிமாவும் ஸலவாத்தும் ஓதுகிறார்கள். ஆனால் மற்ற தொழுகையில் தஸ்பீஹ் ஓதுவதில்லை. இது சரியான முறையா?
ஐவேளைத் தொழுகைக்குப் பின்னால் பல திக்ருகளைக் கூறுவதற்கு நபி (ஸல்) அவர்கள் வழிகாட்டியுள்ளார்கள். அவற்றில் அனைத்தையுமோ அல்லது சிலதையோ நாம் கூறிக் கொள்ளலாம். ஆதாரப்பூர்வமான தொகுப்புகளில் வந்துள்ளவற்றில் சிலதைத் தருகிறோம்.
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்து விட்டார்கள் என்பதை (அல்லாஹு அக்பர் என்ற) தக்பீர் மூலம் நான் அறிந்து கொள்வேன்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: புகாரீ 842, முஸ்லிம் 1022
நபி (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்த பின்னர்,
(அஸ்தஃபிருல்லாஹ் என்று கூறி) மூன்று முறை பாவமன்னிப்புத் தேடுவார்கள். மேலும் அல்லாஹும்ம அன்(த்)தஸ் ஸலாம், வமின்(க்)கஸ் ஸலாம், தபாரக்(த்)த தல் ஜலாலி வல்இக்ராம்
(பொருள்: இறைவா! நீ சாந்தியளிப்பவன். உன்னிடமிருந்தே சாந்தி ஏற்படுகிறது. மகத்துவமும், கண்ணியமும் உடையவனே! நீ பாக்கியமிக்கவன்) என்று கூறுவார்கள்.
அறிவிப்பவர்: ஸவ்பான் (ரலி)
நூல்: முஸ்லிம் 1037
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். அல்லாஹும்ம லாமானிஅ லிமா அஃ(த்)தய்(த்)த வலா முஃ(த்)திய லிமா மனஃ(த்)த வலா யன்ஃபவு தல் ஜத்தி மின்(க்)கல் ஜத்து
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு நிகர் எவருமில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் எல்லாப் பொருட்களின் மீதும் ஆற்றலுள்ளவன். இறைவா! நீ கொடுப்பதை எவரும் தடுக்க முடியாது. நீ தடுப்பதை எவரும் கொடுக்க முடியாது. எந்தச் செல்வந்தரின் செல்வமும் அவருக்கு உன்னிடம் பயன் அளிக்காது) என கடமையான தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் கூறக் கூடியவர்களாக இருந்தார்கள்.
அறிவிப்பவர்: முகீரா பின் ஷுஅபா (ரலி)
நூல்கள்: புகாரீ 844, முஸ்லிம் 1039
அல்லாஹும்ம இன்னீ அவூதுபி(க்)க மினல் புக்லி, வஅவூதுபி(க்)க மினல் ஜுப்னி, வஅவூதுபி(க்)க அன் உரத்த இலா அர்தலில் உமுரி, வஅவூது பி(க்)க மின் பித்ன(த்)தித் துன்யா, வஅதாபில் கப்ர்.
(பொருள்: இறைவா! உன்னிடம் கஞ்சத்தனத்திலிருந்து பாதுகாப்புத் கோருகிறேன். கோழைத்தனத்திலிருந்து பாதுகாப்புக் கோருகிறேன். தள்ளாத வயதுக்கு நான் தள்ளப்படுவதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். இம்மையின் சோதனையிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன். மேலும் மண்ணறையின் வேதனையிலிருந்தும் உன்னிடம் பாதுகாப்புக் கோருகிறேன்) என இறைவனிடம் தொழுகைக்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புத் தேடினார்கள்.
அறிவிப்பவர்: சஅத் (ரலி), நூல்: புகாரீ 6390, 2822
அல்லாஹும்ம அஇன்னீ அலா திக்ரி(க்)க வஷுக்ரி(க்)க வஹுஸ்னி இபாத(த்)திக்
(பொருள்: இறைவா! உன்னை நினைப்பதற்கும், உனக்கு நன்றி செலுத்துவதற்கும், உன்னை அழகான முறையில் வணங்குவதற்கும் எனக்கு உதவுவாயாக!) என ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் கூறுவதை விட்டு விடாதே என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: முஆத் (ரலி)
நூல்கள்: அபூதாவூத் 1301, அஹ்மத் 21109
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர். லாஹவ்ல வலா குவ்வ(த்)த இல்லா பில்லாஹ். வலா நஅபுது இல்லா இய்யாஹு லஹுன் னிஃம(த்)து வலஹுல் ஃபழ்லு வலஹுஸ் ஸனாவுல் ஹஸனு லாயிலாஹ இல்லல்லாஹு முக்லிஸீன லஹுத்தீன வலவ்கரிஹல் காஃபிரூன்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன். நல்லவற்றைச் செய்வதற்கோ, தீயவற்றிலிருந்து விலகுவதற்கோ அல்லாஹ்வின் துணையின்றி இயலாது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவனைத் தவிர வேறெவரையும் நாங்கள் வணங்க மாட்டோம். அருள் அவனுடையது. உபகாரம் அவனுடையது. அழகிய புகழ்களும் அவனுடையது. வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. நிகராகரிப்போர் வெறுத்தாலும் கலப்பற்ற தூய்மையான வணக்கங்கள் அவனுக்கு மட்டுமே உரியன) என ஒவ்வொரு தொழுகைக்குப் பிறகும் ஸலாம் கூறும் போது நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி)
நூல்: முஸ்லிம் 1041 யார் ஒவ்வொரு தொழுகைக்குப் பின்பும் சுப்ஹானல்லாஹ் என்று 33 தடவைகளும், அல்ஹம்துலில்லாஹ் என்று 33 தடவைகளும், அல்லாஹு அக்பர் என்று 33 தடவைகளும் ஆக மொத்தம் 99 தடவைகள் கூறி விட்டு, நூறாவதாக
லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லாஷரீ(க்)க லஹு லஹுல் முல்(க்)கு வலஹுல் ஹம்து வஹுவ அலா குல்லி ஷையின் கதீர்
(பொருள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர எவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையில்லை. ஆட்சியதிகாரம் அவனுக்குரியதே! புகழும் அவனுக்குரியதே! அவன் அனைத்துப் பொருட்கள் மீதும் ஆற்றலுடையவன்) எனக் கூறுகிறாரோ அவரது பாவங்கள் கடல் நுரையளவு இருந்தாலும் மன்னிக்கப்படும் என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் 1048
மேற்கூறப்பட்ட அனைத்தும் ஐவேளைத் தொழுகைக்கு பிறகு கூறியதாகவே இடம்பெற்றுள்ளது.
ஆனால் ஃபஜ்ர், அஸர் தொழுகைக்கு என்று தனியான திக்ருகளை நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தரவில்லை.
ஃபஜ்ர், மற்றும் அஸர் தொழுகைக்குப் பிறகு குறிப்பிட்ட திக்ருகள் செய்வதற்குப் பின்வரும் திருக்குர்ஆன் மற்றும் ஹதீஸைக் கவனத்தில் கொண்டு செய்திருக்கலாம்.
உமது இறைவனை அதிகம் நினைப்பீராக! காலையிலும் மாலையிலும் துதிப்பீராக! என்று (இறைவன்) கூறினான். (அல்குர்ஆன் 3:41)
இரவு நேரத்தில் சில வானவர்களும் பகல் நேரத்தில் சில வானவர்களும் தொடர்ந்து ஒருவர் பின் ஒருவராக வருகின்றார்கள். ஃபஜ்ருடைய தொழுகையிலும் அஸருடைய தொழுகையிலும் ஒன்று சேருகின்றார்கள். பிறகு, அல்லாஹ் -அவனோ மிகவும் அறிந்தவன்- அவர்கடம், (பூமியிலுள்ள) என் அடியார் களை எந்த நிலையில் விட்டு வந்தீர்கள்? என்று கேட்பான். அதற்கு அவ்வானவர்கள், அவர்களை உன்னைத் தொழுகின்ற நிலையில் விட்டு வந்தோம். அவர்கள் (உன்னைத்) தொழுது கொண்டிருந்த நிலையிலேயே அவர்கடம் நாங்கள் சென்றோம் என்று பதிலப்பார்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (3223)
திருக்குர்ஆன் காலையிலும் மாலையிலும் திக்ர் செய்யுமாறு கட்டளையிடுவதாலும், பகல் நேர, இரவு நேர வானவர்கள் சந்தித்துக் கொள்ளும் நேரமாகவும் இறைவன் விசாரிக்கும் நேரமாகவும் ஃபஜ்ர், அஸர் தொழுகைகள் இருப்பதால் இந்த நேரங்களில் திக்ர் செய்தால் இறைவனிடம் நற்பெயர் எடுக்க முடியும் என்ற எண்ணத்தில் செய்திருக்கலாம்.
ஆனால் இறைவனின் தூதர் நபி (ஸல்) அவர்கள் இவ்வாறு செய்யவில்லை. எல்லாத் தொழுகைக்குப் பிறகும் திக்ர் செய்துள்ளார்கள். அவர்களே பின்பற்றத் தகுதியானவர்கள்.
அடுத்து, ஐவேளைத் தொழுகைக்குப் பிறகு, சப்தமிட்டு திக்ர் செய்வதற்கும் கூட்டாக துஆச் செய்வதற்கும் நபிமொழிகளில் ஆதாரம் இல்லாததுடன், சப்தமிடாமல் திக்ர் மற்றும் துஆச் செய்யவேண்டுமென்றே திருக்குர்ஆன் கட்டளையிடுகிறது.
உமது இறைவனைக் காலையிலும், மாலையிலும் மனதிற்குள் பணிவாகவும், அச்சத்துடனும், சொல்லில் உரத்த சப்தமில்லாமலும் நினைப்பீராக! கவனமற்றவராக ஆகி விடாதீர்! (அல்குர்ஆன் 7:205)
உங்கள் இறைவனைப் பணிவுடனும், இரகசியமாகவும் பிரார்த்தனை செய்யுங்கள்! வரம்பு மீறியோரை அவன் நேசிக்க மாட்டான். (அல்குர்ஆன் 7:55)
? பெண் பார்க்கும் போது மார்க்கத்தின் அடிப்படையில் குர்ஆன் ஓதத் தெரியுமா? தொழத் தெரியுமா? என்று கேள்விகள் கேட்டு அதன் அடிப்படையில் என்னைத் திருமணம் செய்தார்கள். ஆனால் இது போன்று ஆண்களை, தவ்ஹீத் கொள்கை உள்ளவரா? தொழுகை உள்ளவரா? என்று கேட்டுத் திருமணம் செய்ய முடியுமா?
இஸ்லாத்தில் ஆண், பெண் இருவரும் தவ்ஹீத் கொள்கை உள்ளவராக, திருக்குர்ஆன் ஓதத் தெரிந்தவராக, தொழும் பழக்கம் உள்ளவராக இருக்க வேண்டும். பெண்ணிடம் எப்படி இந்தக் கேள்விகள் கேட்கப்பட்டதோ அதே அடிப்படையில் பெண் வீட்டு சார்பாக மணமகனையும் விசாரித்தே தேர்வு செய்ய வேண்டும்.
இணை கற்பிக்கும் பெண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களைத் திருமணம் செய்யாதீர்கள்! இணை கற்பிப்பவள் எவ்வளவு தான் உங்களைக் கவர்ந்தாலும் அவளை விட நம்பிக்கை கொண்ட அடிமைப் பெண் சிறந்தவள். இணை கற்பிக்கும் ஆண்கள் நம்பிக்கை கொள்ளும் வரை அவர்களுக்கு (உங்கள் பெண்களை) மண முடித்துக் கொடுக்காதீர்கள்! இணை கற்பிப்பவன் உங்களை எவ்வளவு தான் கவர்ந்தாலும் அவனை விட நம்பிக்கை கொண்ட அடிமை சிறந்தவன். அவர்கள் நரகத்திற்கு அழைக்கின்றனர். அல்லாஹ் தனது விருப்பப்படி சொர்க்கம் மற்றும் மன்னிப்பிற்கு அழைக்கிறான். படிப்பினை பெறுவதற்காக (இறைவன்) தனது வசனங்களை மனிதர்களுக்குத் தெளிவுபடுத்துகிறான். (அல்குர்ஆன் 2:221)
இந்த வசனம் தவ்ஹீத் கொள்கை உள்ளவர்களையே தேர்வு செய்ய வேண்டும் என்பதைக் காட்டுகிறது. இதுபோன்று நபி (ஸல்) அவர்களிடம் வந்து கேட்கும் போது, நல்ல மனிதரைத் தேர்வு செய்ய அவர்கள் பரிந்துரை செய்துள்ளார்கள்.
... நான் இத்தாவை முழுமையாக்கியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (வந்து), முஆவியா பின் அபீசுஃப்யான் (ரலி) அவர்களும் அபூஜஹ்ம் பின் ஹுதைஃபா (ரலி) அவர்களும் என்னைப் பெண் கேட்கின்றனர் என்று சொன்னேன்.
அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூஜஹ்ம் தமது கைத்தடியைத் தோளிலிருந்து கீழே வைக்க மாட்டார். (கோபக்காரர்; மனைவியரைக் கடுமையாக அடித்து விடுபவர்). முஆவியோ, அவர் ஓர் ஏழை; அவரிடம் எந்தச் செல்வமும் இல்லை. நீ உஸாமா பின் ஸைதை மணந்து கொள் என்று கூறினார்கள்.
நான் உஸாமாவை விரும்பவில்லை. பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீ உஸாமாவை மணந்து கொள் என்று (மீண்டும்) கூறினார்கள். ஆகவே, நான் அவரை மணந்து கொண்டேன். அவரிடம் (எனக்கு) அல்லாஹ் நன்மையை வைத்திருந்தான்; நான் பெருமிதம் அடைந்தேன்.
அறிவிப்பவர்: ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2953)
? திருக்குர்ஆன் பகரா அத்தியாயத்தின் 54வது வசனத்தில் மூஸா (அலை) அவர்கள் இஸ்ரவேலர்களின் கூட்டத்தைப் பார்த்து, உங்களை நீங்களே கொலை செய்து கொள்ளுங்கள் என்று இடம் பெறும் வசனத்தின் விளக்கமாக பி.ஜே. அவர்களின் மொழிபெயர்ப்பில் கடுமையான கோபம் வரும் போது செத்துத் தொலையுங்கள் என்று கூறுவது மனிதரின் இயல்பு! அது போன்று தான் இதைப் புரிந்து கொள்ள வேண்டும் என்று எழுதப்பட்டுள்ளது. ஆனால் தஃப்ஸீர் இப்னு கஸீரில் பக்கம் 165, 167ல் வேறுவிதமாக இப்னு அப்பாஸ் (ரலி), இப்னு ஜரீர், சுயூத்தி, இப்னு இஸ்ஹாக் ஆகியோர் வேறு விதமான விளக்கத்தைத் தந்துள்ளார்களே! இவற்றில் எது சரி?
திருக்குர்ஆனின் பெரும்பான்மையான வசனங்களுக்கு அதன் நேரடிப் பொருளிலேயே நாம் தெளிவைப் பெற்றுக் கொள்ளலாம். சில வசனங்களுக்கு வேறு சில வசனங்கள் அதற்கு விளக்கமாக அமைந்திருக்கும்.
சொர்க்கத்தில் இருந்த ஆதம் (அலை) அவர்கள் குறிப்பிட்ட மரத்தை நெருங்கக் கூடாது என்று அல்லாஹ் கட்டளையிட்டிருந்தான். ஆனால் ஷைத்தானின் சதிவலையில் சிக்கிய ஆதம் (அலை) அவர்கள் இறைக் கட்டளைக்கு மாற்றம் செய்தார்கள். பின்னர் அவர்கள் சில வார்த்தைகளைக் கொண்டு பாவமன்னிப்பு கேட்டு இறை மன்னிப்பைப் பெற்றார்கள் என்று அல்லாஹ் கூறுகிறான்.
(பாவ மன்னிப்புக்குரிய) சில வார்த்தைகளை இறைவனிடமிருந்து ஆதம் பெற்றுக் கொண்டார். எனவே அவரை இறைவன் மன்னித்தான்; அவன் மன்னிப்பை ஏற்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 2:37)
ஆதம் (அலை) அவர்கள், இறைவனிடமிருந்து கற்றுக் கொண்ட வார்த்தைகள் எவை? என்று இந்த வசனத்தில் கூறப்படவில்லை. அந்த வார்த்தைகளை ஏழாவது அத்தியாயத்தின் 23வது வசனம் தெளிவுபடுத்துகிறது.
எங்கள் இறைவா! எங்களுக்கே தீங்கு இழைத்து விட்டோம். நீ எங்களை மன்னித்து, அருள் புரியவில்லையானால் நஷ்டமடைந்தோராவோம் என்று அவ்விருவரும் கூறினர். (அல்குர்ஆன் 7:23)
இதைப் போன்று சில வசனங்களின் விளக்கங்கள் வேறு சில வசனங்களில் இடம் பெற்றிருக்கும்.
சில வசனங்களின் விளக்கத்தை நபி (ஸல்) அவர்களின் பொன்மொழிகளிலிருந்து நாம் தெரிந்து கொள்ள முடியும்.
நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் பாதையில் கொல்லப்பட்டோரை இறந்தோர் என எண்ணாதீர்கள்! மாறாக அவர்கள் தம் இறைவனிடம் உயிருடன் உள்ளனர்; உணவளிக்கப்படுகின்றனர் (3:169) எனும் இந்த இறைவசனத்தைப் பற்றிக் கேட்டோம். அதற்கு அவர்கள் கூறினார்கள்: தெரிந்து கொள்க. இந்த வசனம் குறித்து முன்பே நாங்கள் (நபியவர்களிடம்) கேட்டுவிட்டோம்.
அப்போது நபி (ஸல்) அவர்கள் கூறி னார்கள்: அவர்களின் உயிர்கள் பச்சை நிறப் பறவைகளின் வயிறுகளில் (செலுத்தப்பட்டு) இருக்கும். அவற்றுக்கென இறைஅரியணையின் (அர்ஷின்) கீழ் மாட்டப்பட்டுள்ள கண்ணாடிக் கூண்டுகள் இருக்கும். அவை சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துவிட்டுப் பின்பு அந்தக் கூண்டுக்குள் வந்து அடையும்.
அப்போது அவர்களின் இறைவன் அவர்களிடம் ஒரு முறை தோன்றி, நீங்கள் எதையேனும் ஆசைப்படுகிறீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள், நாங்கள் ஆசைப்படுவதற்கு என்ன உள்ளது? நாங்கள்தாம் சொர்க்கத்தில் விரும்பியவாறு உண்டு களித்துக்கொண்டிருக்கிறோமே! என்று கூறுவர்.
இவ்வாறே மூன்று முறை (கேள்வியும் பதிலும்) நடைபெறுகிறது. எதையேனும் கேட்காமல் நாம் விடப்பட மாட்டோம் என்பதை அவர்கள் காணும் போது, இறைவா! எங்கள் உயிர்களை எங்கள் உடல்களுக்குள் திரும்பவும் செலுத்துவாயாக! நாங்கள் உனது பாதையில் மீண்டும் ஒரு முறை கொல்லப்பட வேண்டும் என்று கூறுவர். அவர்களுக்கு (இதைத் தவிர) வேறெந்தத் தேவையும் இல்லையென்பதை இறைவன் காணும் போது, அவர்கள் (அதே நிலையில்) விடப்படுவார்கள்.
அறிவிப்பவர்: மஸ்ரூக், நூல்: முஸ்லிம் (3834)
இதைப் போன்று நபிகளாரின் விளக்கங்கள் மூலம் தெளிவுபெறும் வசனங்களும் உள்ளன. வேறு சில வசனங்கள் அன்றைய அரபு மக்கள் பயன்படுத்திய முறையை வைத்துக் கொண்டும் விளங்கலாம். ஏனெனில் இது அரபி மொழியில் மக்கள் விளங்குவதற்காக இறக்கப்பட்டுள்ளதால் அந்த மக்கள் ஒரு வார்த்தையை எந்தப் பொருளில் பயன்படுத்தியுள்ளார்கள் என்பதைக் கவனத்தில் கொண்டு நாம் விளங்கலாம்.
இந்த அடிப்படையை வைத்து விளங்கும் வசனங்களில் உள்ளது தான் மூஸா (அலை) அவர்கள் பயன்படுத்திய உங்களையே கொன்று விடுங்கள் என்ற வாசகமும்.
பல விரிவுரையாளர்கள் இதற்கு நேரடியான பொருளையே கொடுத்துள்ளனர். பொதுவாக எந்த வசனத்திற்கும் நேரடியான பொருளைத் தான் கொடுக்க வேண்டும் என்றாலும் மற்ற வசனங்களுக்கு மாற்றமாக வரும் போது இதற்கு வேறு விதமான பொருளை அரபியர்கள் பயன்படுத்தி உள்ளார்களா? என்பதை நாம் பார்க்க வேண்டும்.
உங்களையே கொன்று விடாதீர்கள்! அல்லாஹ் உங்கள் மீது நிகரற்ற அன்புடையோனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 4:29)
இந்த வசனம் நேரடியான பொருள் செய்யத் தடுக்கிறது. மேலும் தற்கொலை செய்தால் நிரந்தரமான நரகம் என்று நபிகளார் விளக்கியுள்ளார்கள். இவ்வாறு அல்லாஹ் தடை செய்த முறையை இறைத்தூதர் கூற மாட்டார். எனவே இதற்கு வேறுவிதமான பொருள் இருக்கிறதா என்று நாம் பார்க்கும் போது இதற்கு வேறுவிதமான பொருளையும் அரபியர்கள் பயன்படுத்தியுள்ளனர் என்பதை அறியமுடிகிறது.
தப்ஸீர் அல்பஹ்ருல் முஹீத் என்ற திருக்குர்ஆன் விளக்கவுரை நூலில் இந்த வசனத்திற்கு விளக்கம் எழுதும் போது இதற்கு மூன்று விதமான பொருளைத் தருகின்றனர். 1. அவர்கள் அனைவரையும் கொல்ல வேண்டும். 2. அவர்கள் அனைவரும் தாமாகக் கொல்லப்படுவதற்கு முன்வர வேண்டும். 3. அவர்களையே அவர்கள் இழிவுபடுத்திக் கொள்ள வேண்டும்.
இதில் மூன்றாவது பொருளில் நபிகளார் காலத்தில் மிகப் பிரபலமான கவிஞர் ஹஸ்ஸான் அவர்களின் கவிதையில் இந்தப் பொருளில் பயன்படுத்தப்பட்டுள்ளது என்பதற்குச் சான்றையும் அந்த நூலாசிரியர் தருகிறார். இந்த மூன்று கருத்துக்களில் இறுதியாகக் கொடுத்த கருத்தே மற்ற திருக்குர்ஆன் வசனங்களுக்கும் நபிமொழிக்கும் மாற்றம் இல்லாமல் இருக்கிறது. அதன் அடிப்படையிலேயே, உங்களை நீங்களே கொல்லுங்கள் என்பதற்குத் தமிழ் நடையில், செத்துத் தொலையுங்கள் என்ற கருத்து தரப்பட்டுள்ளது.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் உட்பட பலர் இதற்கு மாற்றமாக வேறு விதமான கருத்துக்கள் கூறியிருப்பதால் நமது கருத்தைப் புறக்கணிக்க முடியாது. காரணம், ஏராளமான வசனங்களுக்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் கருத்துக்கு மாற்றமாகப் பல ஹதீஸ் கலை வல்லுநர்கள், திருக்குர்ஆன் விரிவுரையாளர்கள் கூறியுள்ளார்கள். உதாரணமாக 2:44 வசனத்திற்கு கதாதா அவர்கள் ஒரு விளக்கத்தையும், இப்னு அப்பாஸ் (ரலி) ஒரு விளக்கத்தையும், அப்துர்ரஹ்மான் பின் அஸ்லம் அவர்கள் ஒரு விளக்கத்தையும் கூறியுள்ளதை தப்ஸீர் இப்னு கஸீரில் (தமிழில்) 148,149வது பக்கத்தில் பார்க்கலாம். இப்படி ஏராளமான சான்றுகளை நாம் எடுத்துக் காட்டலாம். எனவே சரியான கருத்து எது? என்பதைப் பார்த்தே எதையும் முடிவு செய்ய வேண்டும்.
நபிகளாரின் நற்குணங்கள்
மென்மையும் பொறுமையும்
அபூஹாரிஸ்
ஒரு கூட்டத்திற்குத் தலைவராக இருப்பவருக்கு மிக மிக அவசியம் பொறுமையாகும். தன் கீழ் இருக்கும் தொண்டர்களை நல்வழிப்படுத்தும் தலைவர், தொண்டர்களிடம் இருக்கும் பல செயல்களைப் பொறுத்துக் கொண்டு அவர்களுக்கு நல்வழிகாட்ட வேண்டும்.
தொண்டர்கள் கோபப்படும் போது அல்லது கோபத்தை ஏற்படுத்தும் விதமாக நடக்கும் போது அவர்களிடம் மென்மையாக நடந்து கொள்வது கட்டாயமாகும். இவ்வாறு நடந்து கொண்டால் தான் தொண்டர்களை அரவணைத்துச் செல்ல முடியும்.
மிகவும் மோசமான செயல்பாடுகளைக் கொண்ட அரபு மக்களிடம் இறைவனின் உதவியால் மென்மையாக நடந்து கொண்டதால் அவர்களை நபிகளார் அரவணைத்துச் செல்ல முடிந்தது என்று அல்லாஹ் குறிப்பிடுகின்றான்.
(முஹம்மதே!) அல்லாஹ்வின் அருள் காரணமாகவே அவர்களிடம் நளினமாக நீர் நடந்து கொள்கிறீர். முரட்டுத்தனம் உடையவராகவும் கடின உள்ளம் உடையவராகவும் நீர் இருந்திருந்தால் அவர்கள் உம்மை விட்டு ஓடியிருப்பார்கள். அவர்களை மன்னிப்பீராக! அவர்களுக்காகப் பாவமன்னிப்புத் தேடுவீராக! காரியங்களில் அவர்களுடன் ஆலோசனை செய்வீராக! உறுதியான முடிவு செய்து விட்டால் அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! தன்னையே சார்ந்திருப்போரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 3:159)
தவ்ராத்தில் நபிகளார்
நபிகளாரைப் பற்றிய இதே கருத்து தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளது.
நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் அல்ஆஸ் (ரலி) அவர்களைச் சந்தித்து, தவ்ராத்தில் நபி (ஸல்) அவர்களைப் பற்றிக் கூறப்பட்டிருக்கும் வர்ணனையை எனக்குச் சொல்லுங்கள்! என்றேன். அவர்கள், இதோ சொல்கிறேன்! அல்லாஹ்வின் மீதாணையாக! குர்ஆனில் கூறப்படும் அவர்களுடைய சில பண்புகள் தவ்ராத்திலும் கூறப்பட்டுள்ளன. நபியே! நிச்சயமாக உம்மை சாட்சியம் அளிப்பவராகவும், நற்செய்தி கூறுபவராகவும், எச்சரிப்பவராகவும், எழுதப் படிக்கத் தெரியா பாமரர்களின் பாதுகாவலராகவும் நாம் அனுப்பியிருக்கிறோம்! நீர் எனது அடிமையும் எனது தூதருமாவீர்! தம் எல்லாக் காரியங்களிலும் இறைவனையே நம்பியிருப்பவரென்று உமக்கு நான் பெயரிட்டுள்ளேன்! (இவ்வாறெல்லாம் கூறிவிட்டு, நபி (ஸல்) அவர்களின் அடையாளங்களைக் கூறும் விதத்தில்) அவர் கடின சித்தம் கொண்டவராகவோ, முரட்டுத்தனமுடையவராகவோ, கடைவீதிகளில் கத்திப் பேசி சச்சரவு செய்பவராகவோ இருக்கமாட்டார்! தீமைக்கு பதிலாகத் தீமையைச் செய்யமாட்டார்; மாறாக, மன்னித்து, கண்டுகொள்ளாமல் விட்டுவிடுவார்! வளைந்த மார்க்கத்தை அவர் மூலம் நிமிர்த்தாதவரை அல்லாஹ் அவ(ரது உயி)ரைக் கைப்பற்ற மாட்டான்! மக்கள் லாயிலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவனில்லை) என்று கூறுவார்கள்; அதன் மூலம் குருட்டுக் கண்களும், செவிட்டுக் காதுகளும், மூடப்பட்ட உள்ளங்களும் திறக்கப்படும் என்று அதில் அவர்களைக் குறித்து வர்ணிக்கப்பட்டுள்ளது! என பதிலளித்தார்கள் என அதா பின் யஸார் அவர்கள் கூறினார்கள்.
நூல்: புகாரி 2125
வாளால் மிரட்டப்பட்ட நபிகளார்
நபிகளாரை ஒருவர் வாளால் மிரட்டி, பின்னர் வாள் தம்மிடம் வந்த போதும் அந்த நபரை நபிகளார் எதுவும் சொல்லாமலும் கண்டிக்காமலும் இருந்தார்கள்.
நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (தாத்துர் ரிகாஉ எனும்) போருக்காக நஜ்த் நோக்கிப் புறப்பட்டுச் சென்றோம். (போரை முடித்துக்கொண்டு திரும்பும் வழியில்) கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கில் இருந்தபோது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சேர்ந்தார்கள். (மதிய ஓய்வு கொள்ளும் நண்பகல் நேரத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே இறங்கி ஓய்வெடுத்தார்கள். அப்போது அவர்கள் தமது வாளை அந்த மரத்தின் கிளையொன்றில் தொங்க விட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று, நிழல் பெற்று (ஓய்வெடுத்து)க் கொண்டிருந்தனர்.
பின்னர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (எங்களை அழைத்துக்) கூறினார்கள்: நான் உறங்கிக் கொண்டிருந்த போது, ஒரு மனிதர் என்னிடம் வந்து (எனது) வாளை (தமது கையில்) எடுத்துக் கொண்டார். உடனே நான் விழித்துக்கொண்டேன். அப்போது அவர் என் தலைமாட்டில் நின்றிருந்தார். (உறையிலிருந்து) உருவப்பட்ட வாள் அவரது கையில் இருப்பதை உடனே உணர்ந்தேன். அப்போது அவர், என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்? என்று என்னிடம் கேட்டார்.
நான், அல்லாஹ் என்று பதிலளித்தேன். பிறகு மீண்டும் அவர், என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்? என்று கேட்டார். நான் அல்லாஹ் என்றேன். உடனே அவர் வாளை உறையிலிட்டுவிட்டார். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார்.
பிறகு அவர் விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தலையிடவில்லை. (கண்டிக்கவில்லை)
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி)
நூல்: முஸ்லிம் (4585)
நபிகளாரைச் சபித்த யூதர்கள்
நபிகளார் காலத்தில் இருந்த யூதர்கள் நபிகளாரைப் பல வகையில் துன்புறுத்தி வந்தார்கள். அதில் ஸலாம் கூறும் போது கூட வார்த்தையை மாற்றி உங்களுக்கு மரணம் உண்டாகட்டும் என்று கூறினார்கள். அதற்கு அதிகப்பட்சமாக, உமக்கும் அப்படியே ஆகட்டும் என்று கூறினார்களே தவிர வேறு கடுமையான வாசகங்களைப் பயன்படுத்தவில்லை. பயன்படுத்தியவர்களைக் கூட இவ்வாறு கூற வேண்டாம் என்று அறிவுரை கூறினார்கள்.
யூதர்கல் ஒரு குழுவினர் நபி (ஸல்) அவர்கடம் வந்து, அஸ்ஸாமு அலைக்கும் (உங்களுக்கு மரணம் உண்டாகட்டும்) என்று (ஸலாம் என்ற வார்த்தை சற்று மாற்றி ) கூறினர். அவர்கள் கூறியதைப் புரிந்து கொண்ட நான் அவர்களுக்கு வ அலைக்கும் அஸ்ஸாமு வல்லஅனா (அவ்வாறே உங்கள் மீது மரணமும் சாபமும் உண்டாகட்டும்) என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், ஆயிஷா! நிதானம்! எல்லா விஷயங்கலும் நனத்தைக் கையாளுவதையே அல்லாஹ் விரும்புகிறான் என்று சொன்னார்கள். அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் சொன்னதை நீங்கள் கேட்கவில்லையா? என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் தான் வஅலைக்கும் (அவ்வாறே உங்களுக்கு உண்டாகட்டும்) என்று சொல் விட்டேனே! (அதை நீ கவனிக்கவில்லையா?) என்று கேட்டார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (6024)
பள்ளிவாசலில் சிறுநீர் கழித்த கிராமவாசி
நபிகளார் காலத்தில் வாழ்ந்தவர்கள் பெரும்பாலும் நாகரீகம் இல்லாதவர்களாக இருந்தார்கள். ஒரு தடவை ஒரு மனிதர் பள்ளிவாசலிலேயே வந்து சிறுநீர் கழித்தார். அவரை மக்கள் அடிக்கப் போன போது நபிகளார் நபித்தோழர்களிடம், அவரை ஒன்றும் செய்யாதீர்கள் என்று கூறி அவர் முழுமையாக சிறுநீர் கழித்த பின் அறிவுரை கூறி அனுப்பி வைத்தார்கள்.
ஒரு கிராமவாசி பள்வாசலினுள் சிறுநீர் கழித்தார். அவரை நோக்கி நபித் தோழர்கள் (வேகத்துடன்) எழுந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடை மறிக்காதீர்கள் என்று கூறிவிட்டுப் பிறகு ஒரு வாயில் தண்ணீர் கொண்டு வரச் சொன்னார்கள். பிறகு (தண்ணீர் கொண்டு வரப்பட்டு) அது சிறுநீர் மீது ஊற்றப்பட்டது.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (6025)
ஒரு முறை நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் பள்ளிவாசலில் இருந்தோம். அப்போது கிராமவாசியொருவர் வந்து பள்ளி வாசலுக்குள் நின்று சிறுநீர் கழித்தார். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் நிறுத்து! நிறுத்து! என்று கூறினர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அவர் சிறுநீர் கழிப்பதை) இடைமறிக்காதீர்கள். அவரை விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள். எனவே, நபித்தோழர்கள் அவரை விட்டுவிட்டனர். அவர் சிறுநீர் கழித்து முடித்தார். பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்து இந்தப் பள்ளிவாசல்கள் சிறுநீர் கழித்தல், அசுத்தம் செய்தல் ஆகிய வற்றுக்குரிய இடமல்ல. இவை இறைவனை நினைவு கூர்ந்து போற்றுவதற்கும் தொழுவதற்கும் குர்ஆனை ஓதுவதற்கும் உரியதாகும் என்றோ, அல்லது இந்தக் கருத்திலமைந்த வேறு வார்த்தைகளையோ அவரிடம் கூறினார்கள். பிறகு மக்களில் ஒருவரிடம் ஒரு வாளித் தண்ணீர் கொண்டுவரச் சொல்லி அதை அந்தச் சிறுநீர் மீது ஊற்றச் செய்தார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: முஸ்லிம் (480)
நபிகளாரிடம் கடுமை காட்டியவர்
நபிகளார் காலத்தில் கிராமத்தில் வாழ்ந்தவர்கள் நாகரீகம் என்றால் என்னவென்று அறியாதவர்கள். தர்மம் கேட்கும் போது கூடக் கடுமையாக நடந்து கொள்வார்கள். ஆனால் அவர்களின் இந்நிலைக் கண்டு நபிகளார் சிரித்தார்களே தவிர கண்டிக்கவில்லை.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடித்த விளிம்புகளைக் கொண்ட நஜ்ரான் நாட்டு சால்வையொன்றை போர்த்தி யிருக்க நான் அவர்களுடன் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது அவர்களை கிராமவாசியொருவர் கண்டு அவர்களுடைய சால்வையால் அவர்களைக் கடுமையாக இழுத்தார். எந்த அளவிற்கென்றால், அவர் கடுமையாக இழுத்த காரணத்தால் சால்வை விம்பின் அடையாளம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோன் ஒரு பக்கத்தில் பதிந்திருப்பதைக் கண்டேன். பிறகு அந்தக் கிராமவாசி, முஹம்மதே! உங்கடமிருக்கும் இறைவனின் செல்வத்திருந்து எனக்கும் கொடுக்கும்படி கட்டளையிடுங்கள் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவர் பக்கம் திரும்பிச் சிரித்தார்கள். அவருக்குக் கொடுக்கும்படி உத்தரவிட்டார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி)
நூல்: புகாரி (5809)
நபிகளார் சில கட்டளைகளைப் பிறப்பித்து, நபித்தோழர்களை அனுப்பிய போது சிலர் தவறாகப் புரிந்து கொண்டு நடந்தார்கள். அதை நபிகளார் கண்டிக்காமல் விட்டுவிட்டார்கள்.
நபிகளாரின் கட்டளையில் தவறு செய்தவர்கள்
அகழ்ப் போரிருந்து திரும்பிய போது நபி (ஸல்) அவர்கள் எங்கடம், பனூகுறைழா குலத்தார் வசிக்குமிடத்தை நீங்கள் அடையாத வரை (உங்கல்) எவரும் அஸ்ர் தொழுகையைத் தொழ வேண்டாம் என்று கூறினார்கள்.
வழியிலேயே அஸ்ர் நேரத்தை மக்கள் அடைந்தனர். அப்போது சிலர், பனூகுறைழா குலத்தாரை அடையாத வரை நாம் அஸ்ர் தொழுகையை தொழ வேண்டாம் என்று கூறினர். மற்ற சிலர், (தொழுகை நேரம் தவறிப்போனாலும் தொழவேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் நம்மிடம் (அவ்வாறு) கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில்தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்). எனவே, நாம் தொழுவோம் என்று கூறினர். நபி (ஸல்) அவர்கடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்கல் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்: புகாரி (946)
நபிகளாரை முள்ளில் தள்ளியவர்கள்
ஒருவர் தர்மம் கேட்கும் போது நபிகளாரை முள் மரத்தில் தள்ளி விட்டு, அவர்களின் சால்வை முள்ளில் சிக்கிக் கொண்டது. இப்படி முரட்டுத்தனமாக நடந்தவர்களிடம் கூட நபிகளார் கடுமையாக நடந்து கொள்ளவில்லை. மேலும் சிலர் நேர்மையாகப் பங்கிடவில்லை என்று கடுமையான வாசகத்தை கூறிய போது கோபப்பட்ட நபிகளார், நபி மூஸா (அலை) அவர்களின் சமூகத்தை நினைத்துப் பார்த்து, பொறுமையாக இருந்து கொண்டார்கள்.
நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரிருந்து திரும்பி வந்த போது நான் அவர்களுடன் சென்று கொண்டிருந்தேன். மக்களும் உடன் இருந்தனர். அப்போது (கிராம) மக்கள் நபியவர்களைச் சூழ்ந்து கொண்டு (தர்மம்) கேட்கலானார்கள்; சமுரா என்னும் (கருவேல) முள் மரம் வரை நபி (ஸல்) அவர்களை நெருக்கித் தள் விட்டார்கள். நபியவர்கன் சால்வை முள் மரத்தில் சிக்கிக் கொண்டது. ஆகவே நபி (ஸல்) அவர்கள் சற்று நின்று, என் சால்வையை என்னிடம் கொடுங்கள். என்னிடம் இந்த முள்மரங்கன் எண்ணிக்கையில் ஒட்டகங்கள் இருந் திருந்தாலும் கூட அவற்றை உங்கடையே பங்கிட்டு விட்டிருப்பேன். பிறகு என்னை நீங்கள் கருமியாகவும் காண மாட்டீர்கள்; பொய்யனாகவும் காண மாட்டீர்கள்; கோழையாகவும் காண மாட்டீர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜுபைர் பின் முத்இம் (ரலி)
நூல்: புகாரி (2821)
நபி (ஸல்) அவர்கள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை) வழக்கமாகப் பங்கிடுவதைப் போன்று பங்கிட்டுக் கொண்டிருந்தார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும் என்று (அதிருப்தியுடன்) கூறினார்.
நான், நிச்சயம் (இதைப் பற்றி) நபி (ஸல்) அவர்கடம் சொல்வேன் என்று கூறிவிட்டு நபி (ஸல்) அவர்கடம் சென்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் தோழர்கடையே இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களிடம் அதை இரகசியமாகச் சொன்னேன். அது நபி (ஸல்) அவர்களுக்கு மனவருத்தத்தை அத்தது. அவர்களுடைய முகமே மாறி விட்டது. (அந்த அளவிற்கு) அவர்கள் கோபமடைந்தார்கள். இதையடுத்து நான் அவர்கடம் (அது பற்றித்) தெரிவிக்காமல் இருந்திருக்கலாமே என்று நினைத்தேன். பிறகு நபி (ஸல்) அவர்கள் (இறைத்தூதர்) மூசா இதைவிட அதிகமாக மன வேதனைக்கு ஆளாக்கப்பட்டார். இருப்பினும் (பொறுமையுடன்) அவர் சகித்துக் கொண்டார் என்று சொன் னார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி (6100)
இலகுவையே தேர்வு செய்யும் நபிகளார்
பொதுவாக நபிகளார் அவர்கள் எது இலகுவானதாக இருக்கிறதோ அதைத் தேர்வு செய்வார்கள். கடுமையானதை அவர்கள் தேர்வு செய்ய மாட்டார்கள். மென்மையான நடக்க முடிந்த அனைத்திலும் மென்மையாகவும் பொறுமையாகவும் இருப்பார்கள்.
இரண்டு விஷயங்கல் விரும்பியதைத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும்படி அல்லாஹ்வின் தூதரிடம் கூறப்பட்டால் அவர்கள் அவ்விரண்டில் இலேசானதையே - அது பாவமான விஷயமாக இல்லாதிருக்கும் பட்சத்தில் - எப்போதும் தேர்ந்தெடுப்பார்கள். அது பாவமான விஷயமாக இருந்தால் மக்கலேயே அதிகமாக அதிருந்து வெகு தொலைவில் (விலகி) நிற்பார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமக்காக என்று எவரையும் பழிவாங்கியதில்லை; அல்லாஹ்வின் புனித(ச் சட்ட)ம் எதுவும் சீர்குலைக்கப்பட்டு, அதற்குப் பதிலாக அல்லாஹ்வின் சார்பாகப் பழிவாங்க வேண்டுமென்று அவர்கள் விரும்பினாலே தவிர.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: புகாரி (3560)
வளரும் இன்ஷா அல்லாஹ்
இஸ்லாமிய ஒழுங்குகள்
அழகை நேசிக்கும் அல்லாஹ்
அப்பாஸ் அலீ எம்.ஐ.எஸ்.ஸி
உடல் தோற்றம் அழகாக இருப்பதால் ஒருவரின் மீது நேசம் வருகிறது. நடிகர், நடிகைகளிடத்தில் ஏதோ ஒரு கவர்ச்சி இருப்பதால் அவர்களுக்குப் பின்னால் விளங்காத கூட்டம் சென்று கொண்டிருக்கிறது. இவர்களின் தோலும் தோற்றமும் வேண்டுமானால் வெண்மையாக இருக்கலாம். ஆனால் இவர்களின் எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அசிங்கமான; ஆபத்தானவை!
அல்லாஹ்வைப் பொறுத்த வரையில் அவனது தோற்றமும் அழகானது. அவனது எண்ணங்கள் எதிர்பார்ப்புகள் அனைத்தும் அழகானவை. அவன் விரும்புகின்ற விஷயங்களும் அழகானவை. அழகிற்காக ஒருவரை நேசிப்பதாக இருந்தால் முதலில் அல்லாஹ்வைத் தான் நாம் நேசிக்க வேண்டும். நிச்சயமாக அல்லாஹ் அழகானவன். அவன் அழகையே விரும்புகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)
நூல்: முஸ்லிம் (147)
சொர்க்கத்தில், சொர்க்கவாசிகளுக்குக் கிடைக்கும் இன்பங்கள் எல்லாவற்றையும் விட அல்லாஹ்வைப் பாப்பது தான் அவர்களுக்கு மிகவும் இன்பமாக இருக்கும். அல்லாஹ்வைப் பார்ப்பதே இனிமையாக இருக்கும் என்றால் அவன் எப்படிப்பட்ட அழகைக் கொண்டவனாக இருப்பான் என்பதைக் கவனிக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: சொர்க்கவாசிகள் சொர்க்கத்தில் நுழைந்து விடும் போது (அவர்களிடம்) அல்லாஹ், உங்களுக்கு நான் இன்னும் கூடுதலாக ஏதேனும் வழங்க வேண்டுமென நீங்கள் விரும்புகின்றீர்களா? என்று கேட்பான். அதற்கு அவர்கள், இறைவா! நீ எங்கள் முகங்களை வெண்மையாக்கவில்லையா? எங்களை நரகத்திலிருந்து காப்பாற்றி சொர்க்கத்திற்குள் பிரவேசிக்கச் செய்யவில்லையா? (இதைவிடக் கூடுதலாக எங்களுக்கு வேறென்ன வேண்டும்?) என்று கேட்பார்கள். அப்போது அல்லாஹ் (தன்னைச் சுற்றிலும் இருக்கும்) திரையை விலக்குவான். அப்போது தம் இறைவனைக் காண்பதை விட மிகவும் விருப்பமானது வேறெதுவும் இருக்காது.
அறிவிப்பாளர்: ஸுஹைப் (ரலி), நூல்: முஸ்லிம் (297)
அல்லாஹ் அன்பு செலுத்துவதில் குறைந்தவனா?
நம்மீது ஒருவர் அன்பு காட்டினால் அவர் மீது நமக்கு அன்பு ஏற்படத் தொடங்கி விடுகிறது. பெற்றெடுத்த தாய், குழந்தையின் மீது அதிக பாசத்தைப் பொழிவதால் குழந்தைக்குத் தாயின் மீது அதிக பாசம் ஏற்படுகிறது. இந்தக் கோணத்தில் சிந்தித்துப் பார்த்தாலும் அல்லாஹ்வை அதிகம் அதிகமாக நேசிக்க நாம் கடமைப்பட்டுள்ளோம். ஏனென்றால் அல்லாஹ் நம்மீது வைத்திருக்கும் அன்பைப் போல் எவரும் நம்மீது அன்பு காட்ட இயலாது. இன்றைக்குத் தாயின் பாசம் தான் உயர்ந்த நேசமாக உலகத்தில் சிறப்பித்துக் கூறப்படுகிறது. ஆனால் அல்லாஹ் அடியார்கள் மீது காட்டும் அன்பையும், ஒரு தாய் தன் குழந்தையின் மீது காட்டும் அன்பையும் ஒப்பிட்டுப் பார்த்தால் அல்லாஹ் அடியார்கள் மீது பொழியும் பாசத்தில் கடுகளவுக்குக் கூட தாய்ப்பாசம் நிகராகாது. சகல சக்திகளையும் பெற்று எல்லா வகையிலும் சிறந்து விளங்கும் இறைவன் அற்பமான மனிதர்களை மிகவும் நேசிக்கிறான் என்றால் அவனை நாம் நேசிக்காமல் இருக்கலாமா? பின்வரும் ஹதீஸ்கள் அல்லாஹ்வின் அன்பை விவரிக்கக் கூடியதாக இருக்கிறது. (ஹவாஸின் குலத்தைச் சேர்ந்த) கைதிகள் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அவர்களிடையே இருந்த ஒரு பெண்ணின் மார்பில் பால் சுரந்தது. அவள் பாலூட்டுவதற்காக(த் தன் குழந்தையைத் தேடினாள். குழந்தை கிடைக்கவில்லை.) கைதிகளில் (தன்) குழந்தையை அவள் கண்ட போது அதை வாரி எடுத்து தன் வயிற்றோடு அணைத்துப் பாலூட்டலானாள். அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், இந்தப் பெண், தன் குழந்தையை தீயில் எறிவாளா? சொல்லுங்கள் என்றார்கள். நாங்கள், இல்லை. எந்நிலையிலும் அவளால் எறிய முடியாது என்று சொன்னோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்தக் குழந்தையின் மீது இவளுக்குள்ள அன்பை விட அல்லாஹ் தன் அடியார்கள் மீது மிகவும் அன்பு வைத்துள்ளான் என்று சொன்னார்கள். அறிவிப்பவர்: உமர் பின் கத்தாப் (ரலி)
நூல்: புகாரி (5999)
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: அன்பின் நூறு பாகங்களும் அல்லாஹ்விற்கே உரியவையாகும். அவற்றில் ஒன்றை ஜின், மனிதன், மிருகங்கள், ஊர்வன ஆகியவற்றுக்கிடையே இறக்கினான். இந்த ஒரு பங்கினால் தான் அவை ஒன்றன் மீது மற்றொன்று பாசம் கொள்கின்றன. பரிவு காட்டுகின்றன. அதன் மூலம் தான் விலங்கு கூட, தன் குட்டிமீது பாசம் காட்டுகிறது. (அவற்றில்) தொண்ணூற்று ஒன்பது பாகம் அன்பை அல்லாஹ் ஒதுக்கி வைத்துள்ளான். அவற்றின் மூலம் மறுமை நாளில் தன் அடியார்களுக்கு அன்பு காட்டுவான். அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: முஸ்லிம் (5312) நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: உங்களுக்கு முன் (ஒரு காலத்தில்) ஒரு மனிதர் இருந்தார். அல்லாஹ் அவருக்குச் செல்வத்தை வழங்கியிருந்தான். அவருக்கு மரணம் நெருங்கி விட்ட போது தன் மகன்களிடம், உங்களுக்கு எப்படிப்பட்ட தந்தையாக நான் இருந்தேன்? என்று கேட்டார். அவர்கள், சிறந்த தந்தையாக இருந்தீர்கள் என்று கூறினார்கள். அதற்கு அவர், நான் நற்செயல் எதுவும் செய்யவில்லை. ஆகவே நான் இறந்துவிட்டால் என்னை எரித்து விடுங்கள். பிறகு என்னை பொடிபொடியாக்கி சூறாவளிக் காற்று வீசும் நாளில் (காற்றில்) என்னைத் தூவி விடுங்கள் என்று சொன்னார். அவர்களும் அவ்வாறே செய்தனர். அவரை அல்லாஹ் ஒன்று திரட்டி (முழு உருவை மீண்டும் அளித்து) இப்படிச் செய்ய உத்தரவிடும்படி உன்னைத் தூண்டியது எது? என்று கேட்டான். அவர் உன் (மீது எனக்குள்ள) அச்சம் தான் என்று கூறினார். உடனே அவரைத் தன் கருணையால் அல்லாஹ் அரவணைத்துக் கொண்டான். அறிவிப்பவர்: அபூசயீத் (ரலி)
நூல்: புகாரி (3478)
அல்லாஹ்வின் கருணையை விவரிக்கும் செய்திகள் ஏராளமாக இருக்கின்றன. உதாரணத்திற்காகச் சிலவற்றை மாத்திரம் கூறியுள்ளோம். அதிகமான வணக்க வழிபாடுகள் துன்பம் வரும் போது அல்லாஹ்வின் பக்கம் திரும்புவது, நன்மை ஏற்படும் போது அவனைப் புகழ்வது, நபி (ஸல்) அவர்கள் கற்றுத் தந்த பிரார்த்தனைகள் போன்ற நற்காரியங்களைத் தொடர்ந்து செய்து வந்தால் அல்லாஹ்வின் நேசம் நம் மனதில் குடியேறத் தொடங்கிவிடும்.
எனவே நேசிப்பதற்குத் தேவையான அனைத்துத் தகுதிகளையும் பெற்ற இறைவனை நேசித்து இறை நம்பிக்கையை பாதுகாத்துக் கொள்ளும் சிறப்பை நம் அனைவருக்கும் அல்லாஹ் வழங்குவானாக!
நபிகள் நாயகம் வரலாறு தொடர்: 20
இஸ்லாத்தின்
முதல் குழந்தை
எம்.ஐ. சுலைமான்
கேள்வி: ஹிஜ்ரத் சென்ற பின்னர் முதன் முதலில் பிறந்த முஸ்லிம் யார்?
ஸுபைர் (ரலி) அவர்களுக்கும் அஸ்மா (ரலி) அவர்களுக்கும் பிறந்த அப்துல்லாஹ் ஆவார்.
நான் (என் மகன்) அப்துல்லாஹ் பின் ஸுபைரை (மக்காவில்) கர்ப்பமுற்றிருந்தேன். கர்ப்ப காலம் பூர்த்தியானதும் நான் (ஹிஜ்ரத்) புறப்பட்டேன். மதீனா வந்தேன். (வழியில்) குபாவில் தங்கி, குபாவிலேயே அவனைப் பெற்றெடுத்தேன். நபி (ஸல்) அவர்கடம் அவனைக் கொண்டு சென்று அவர்களுடைய மடியில் அவனை வைத்தேன். அவர்கள் பேரீச்சம் பழம் ஒன்றைக் கொண்டு வரும்படிக் கூறி அதை மென்று அவனது வாயில் உமிழ்ந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கன் உமிழ் நீர் தான் அவனது வாயில் நுழைந்த முதல் பொருளாக இருந்தது. பிறகு நபி (ஸல்) அவர்கள் ஒரு பேரீச்சம் பழத்தை அவனது வாயினுள் வைத்துத் தேய்த்து விட்டார்கள்.
பிறகு அவனுக்காக துஆ செய்து, இறைவனிடம் அருள் வளம் வேண்டி இறைஞ்சினார்கள். அவன் தான் இஸ்லாத்தில் (முஹாஜிர்களுக்கு) பிறந்த முதல் குழந்தையாக இருந்தான் என்று அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்.
(ஆதாரம்: புகாரி 3909)
கேள்வி: அப்துல்லாஹ் பின் ஸுபைர் பிறந்ததால் மக்கள் ஏன் மகிழ்ச்சியடைந்தனர்?
(என் புதல்வர்) அப்துல்லாஹ் தான் இஸ்லாத்தில் பிறந்த முதல் குழந்தையாவார். ஆகவே, முஸ்ம்கள் அவர் பிறந்ததற்காக மிகவும் மகிழ்ச்சியடைந்தார்கள். ஏனெனில், அவர்கடம், யூதர்கள் உங்களுக்கு சூனியம் வைத்து விட்டார்கள். ஆகவே, உங்களுக்கு (இனி) குழந்தை பிறக்காது எனக் கூறப்பட்டு வந்தது என்று அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 5469)
கேள்வி: நபி (ஸல்) அவர்கள், அன்னை ஆயிஷா (ரலி) அவர்களிடம் எப்போது உறவு கொண்டார்கள்?
நான் ஆறு வயதுடையவளாக இருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னை மணந்து கொண்டார்கள். பிறகு நாங்கள் மதீனா வந்து ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குலத்தாரிடம் தங்கினோம். எனக்குக் காய்ச்சல் கண்டு விடவே என் முடிகள் உதிர்ந்து விழுந்தன. பிறகு (என்) முடி வளர்ந்து அதிகமாகி விட்டது.
நான் என் தோழிகள் சிலருடன் ஊஞ்சலாடிக் கொண்டிருந்த போது என் தாயார் உம்மு ரூமான் (ர) அவர்கள் என்னிடம் வந்து என்னைச் சத்தம் போட்டு அழைத்தார்கள். நான் அவர்கடம் சென்றேன். அவர்கள் என்னிடம் எதை நாடி வந்திருக்கிறார்கள் என்று எனக்குத் தெரியாது. அவர்கள் என் கையைப் பிடித்து (அழைத்துச் சென்று) வீட்டின் கதவருகே என்னை நிறுத்தி விட்டார்கள்.
நான் (வேகமாக வந்ததால்) எனக்கு மூச்சிறைக்கத் தொடங்கிடவே, அவர்கள் சிறிது தண்ணீரை எடுத்து என் முகத்தையும் தலையையும் துடைத்துப் பிறகு என்னை வீட்டினுள் கொண்டு சென்றார்கள். அங்கு வீட்டில் சில அன்சாரிப் பெண்கள் இருந்தார்கள். அவர்கள், நன்மையுடனும் அருள்வளத்துடனும் வருக! (அல்லாஹ்வின்) நற்பேறு உண்டாகட்டும் என்று (வாழ்த்துக்) கூறினர். உடனே என் தாய் என்னை அப்பெண்கடம் ஒப்படைக்க, அவர்கள் என்னை அலங்கரித்து விட்டார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முற்பகல் வேளையில் திடீரென வந்தார்கள். அவர்கடம் அப் பெண்கள் என்னை ஒப்படைத்தனர். நான் அன்று ஒன்பது வயதுடையவளாக இருந்தேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 3894)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை ஷவ்வால் மாதத்தில் மணந்து கொண்டார்கள்; ஷவ்வால் மாதத்திலேயே என்னுடன் தாம்பத்திய உறவைத் தொடங்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் துணைவியரில் அவர்களுடன் என்னைவிட அதிக நெருக்கத்திற்குரியவர் யார்? என்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் கேட்டார்கள். (ஆதாரம்: முஸ்லிம் 2782)
கேள்வி: மதீனாவில் தொழுகைக்கு பாங்கு சொல்லும் முறை எவ்வாறு வந்தது?
முஸ்ம்கள் (மக்காவிருந்து) மதீனாவிற்கு வந்த போது ஓரிடத்தில் ஒன்று கூடி, தொழுகைக்காக ஒரு நேரத்தை முடிவு செய்வதே வழக்கமாக இருந்தது. அப்போது தொழுகைக்காக பாங்கு சொல்லப்(படும் முறை அறிமுகப்படுத்தப்)படவில்லை. எனவே, இது குறித்து ஒரு நாள் அவர்கள் (கலந்து) பேசினர். அப்போது அவர்கல் சிலர், கிறிஸ்தவர்கன் (ஆலயங்கல் அடிக்கப்படும்) மணியைப் போன்று ஒரு மணியை நிறுவுங்கள் என்று கூறினர். வேறு சிலர், யூதர்கடமுள்ள கொம்பைப் போன்று ஒரு கொம்பை ஏற்படுத்(தி அதில் ஊதி மக்களைத் தொழுகைக்காக அழைத்)திடுங்கள் என்றனர். அப்போது உமர் (ர) அவர்கள், தொழுகைக்காக அழைக்கின்ற ஒரு மனிதரை நீங்கள் அனுப்பக் கூடாதா? என்று கேட்டார்கள்.அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பிலால்! நீங்கள் எழுந்து தொழுகைக்காக அழையுங்கள்! என்று கூறினார்கள். (ஆதாரம்: புகாரி 604)
கேள்வி: இப்போது உள்ள பாங்கின் வாசகங்களை யார் நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்?
தொழுகைக்கு மக்களை மணி அடித்து ஒன்று கூட்ட மணி ஒன்றை தயாரிக்கும் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்ட போது, நான் உறங்கிக் கொண்டிருக்கும் வேளையில் என்னிடம் (கனவில்) ஒருவர் தோன்றினார். அவர் தனது கையில் மணி ஒன்றை சுமந்து கொண்டிருந்தார். அப்துல்லாஹ்வே! இந்த மணியை (என்னிடம்) விற்கின்றீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர், இதை வாங்கி என்ன ப்போகின்றாய்! என்று கேட்டார். நான் அவரிடம், இதன் மூலம் (மக்களை) தொழுகைக்கு அழைக்கப் போகின்றேன் என்று சொன்னேன். அதற்கு அவர், இதை விடச் சிறந்ததை காட்டித் தரவா? என்றார். நான் ஆம் என்று சொன்னேன். உடனே அவர், அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகப் பெரியவன்) அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு ( அல்லாஹ்வை தவிர வணக்கத்திற்கு தகுதியானவன் வேறு யாருமில்லை என்று சாட்சி சொல்கிறேன்.) அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு அஷ்ஹது அன்ன முஹம்மதுர் - ரசூலுல்லாஹு ( முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் ஆவார்கள் என்று சாட்சி சொல்கிறேன்) அஷ்ஹது அன்ன முஹம்மதுர் - ரசூலுல்லாஹு - ஹய்ய அலஸ்ஸலா (தொழுக்கு வாருங்கள்) - ஹய்ய அலல் ஃபலாஹ் (வெற்றிக்கு விரைந்து வாருங்கள்) - அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் என்று சொல்வாயாக! என்று சொன்னார்.
பிறகு கொஞ்ச தூரம் தள்ளிச் சென்று, நீ தொழுகைக்கு இகாமத் சொல்லும் போது, அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் - அஷ்ஹது அன்லாயிலாஹ இல்லல்லாஹு - அஷ்ஹது அன்ன முஹம்மதுர் ரசூலுல்லாஹ் - ஹய்ய அலஸ்ஸலா - ஹய்ய அலல் ஃபலாஹ் - கத்காமதிஸ்ஸலா, கத்காமதிஸ்ஸலா (தொழுகை துவங்கிவிட்டது) அல்லாஹு அக்பர் - அல்லாஹு அக்பர் என்று சொல்வீராக! என்று சொன்னார்.
காலையில் எழுந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து நான் கனவில் கண்டதைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள், அல்லாஹ் நாடினால் நிச்சயமாக இது உண்மையான கனவேயாகும். பிலாலுடன் எழுந்து நின்று, நீ கண்டதை அப்படியே பிலாலிடம் சொல்லி விடு! அவர் அதன்படி அதான் எழுப்புவார். அவர் உன்னை விட உரத்த குரலுள்ளவர் என்று சொன்னார்கள். நான் பிலாலுடன் எழுந்து நின்று அதைச் சொல்லிக் கொடுத்தேன். அவர் அதன்படி அதான் சொன்னார். உமர் பின் கத்தாப் தனது வீட்டிலிருந்து செவியுற்றதும் தனது ஆடையை இழுத்துக் கொண்டு வெளியே வந்தார். நபியவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதரே! சத்தியத்தைக் கொண்டு உங்களை அனுப்பியவன் மீது சத்தியமாக! அவர் கண்டது போன்று நானும் கனவில் கண்டேன் என்று சொன்னார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கே அனைத்துப் புகழும் என்று சொன்னார்கள் என அபூஅப்துல்லாஹ் பின் ஜைத் (ரலி) அறிவிக்கின்றார். (ஆதாரம்: அபூதாவூத் 420)
நபித்தோழர்கள் வாழ்வினிலே...
ஒழுக்கம் கற்பிப்போம்
அபூஸமீஹா
நான் அபூஹுரைரா (ர) அவர்கடம் ஏழு இரவுகள் விருந்தாயாகத் தங்கியிருந்தேன். அவர்களும் அவர்களுடைய துணைவியாரும் அவர்களுடைய பணியாளும் இரவை மூன்று பங்குகளாகப் பிரித்துக் கொண்டு முறை வைத்து எழுந்து தொழுது வந்தார்கள். முதலில் ஒருவர் தொழுவார்; பிறகு அவர் மற்றொருவரை எழுப்பி விடுவார். (அவர் தொழுது முடித்தவுடன்) இன்னொருவரை தொழுகைக்கு எழுப்புவார்.
அறிவிப்பவர்: அபூஉஸ்மான், நூல்: புகாரி (5441)
நபி (ஸல்) அவர்களுடன் தோழமை கொண்டவர்களில் அபூஹுரைரா(ரலி) அவர்கள் முக்கியத்துவம் பெற்றவர்கள். நபி (ஸல்) அவர்கள் தொடர்பான பெரும்பாலான செய்திகளை அறிவித்தவர்கள் இவர்கள் தாம்.
திண்ணைத் தோழராக இருந்து பசியும் பட்டினியுமாக நபிகளார் காலத்தில் காலத்தைத் தள்ளி, நபிகளாருடன் அதிகமாகத் தொடர்புடன் இருந்ததால் அதிகமான செய்திகளை அவர்களால் அறிவிக்க முடிந்தது.
மேலும் ஏழ்மையான நிலையில் நபிகளார் காலத்தில் இருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபிகளார் காலத்திற்குப் பிறகு செல்வந்தராகவும் மற்றவர்களுக்கு விருந்தளிக்கவும் நல்ல ஆடைகளை அணிந்து வலம் வருபவராகவும் இருந்தார்கள்.
முஹம்மத் பின் சீரீன் அவர்கள் கூறியதாவது: நாங்கள் அபூஹுரைரா (ர) அவர்கடம் இருந்தோம். அப்போது அவர்கள் சிவப்புக் கமண் சாயம் இடப்பட்ட, கத்தான் வகையிலான இரண்டு ஆடைகளை அணிந்திருந்தார்கள். அவர்கள் அப்போது மூக்குச் சிந்திவிட்டு அடடா! அபூஹுரைரா! கத்தான் வகையைச் சார்ந்த துணியிலேயே மூக்குச் சிந்துகிறாயே! (ஒரு காலத்தில்) நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது சொற்பொழிவு மேடைக்கும் ஆயிஷா (ர) அவர்களது அறைக்குமி டையே (பசியால்) மயக்கமடைந்து விழுந்து கிடப்பேன். அங்கு வருபவர் எவரேனும் வந்து நான் பைத்தியக்காரன் என்று நினைத்து என் கழுத்தின் மீது கால் வைப்பார். ஆனால், எனக்குப் பசி தான் (மேட்டு) இருக்கும்; பைத்தியம் எதுவும் இருக்காது (அந்த அளவிற்கு வறுமையில் இருந்தேன்.) என்று சொன்னார்கள். (புகாரி 7324)
சாப்பாட்டிற்கே வழியில்லாமல் பசி மயக்கத்தால் தரையில் உருண்டு கிடந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்குப் பிற்காலத்தில் நல்ல நிலைஏற்பட்டு, திருமணம் கூடச் செய்து கொண்டார்கள். பஸராவின் ஆளுநராக இருந்த உத்பா பின் கஸ்வான் (ரலி) அவர்களின் சகோதரி புஸ்ரா அவர்களைத் திருமணம் செய்து கொண்டார்கள். (பத்ஹுல்பாரி)
ஏழ்மை நிலையில் இருந்து நல்ல நிலைக்கு வந்த அபூஹுரைரா (ரலி) அவர்களுக்கு மனைவி மற்றும் பணிவிடை செய்ய வேலையாளும் கிடைத்தது. வசதியான நிலையை அடைந்தவுடன் படைத்தவனை மறந்து விடாமல் படைத்தவனுக்கு நன்றி செலுத்தும் நல்லடியாராக அபூஹுரைரா (ரலி) இருந்தார்கள்.
மேற்கூறப்பட்ட (5441) செய்தியில், கடமையான தொழுகையல்லாத இரவுத் தொழுகையை தாமும் தொழுததுடன் தம் மனைவியையும் வேலைக்காரரையும் தொழச் செய்துள்ளார்கள். இந்த நல்ல பண்பு எல்லோரிடம் இருக்க வேண்டும்.
கஷ்டப்பட்ட நிலையில் காலம் தவறாமல் பள்ளிக்கு வந்து சென்றவர், அல்லாஹ் செல்வத்தைக் கொடுத்தவுடன் கார், பங்களா என்று வாங்கிய பின்னர் ஏ.சி.யில் சூரியன் உதித்தது கூடத் தெரியாமல் உறங்குபவர்கள் ஏராளம்.
துன்பத்தை நீக்கி வசதி வாய்ப்புகளைத் தந்த அல்லாஹ்வுக்கு அதிகமதிகம் நன்றி செலுத்த வேண்டியவர் இருந்ததையும் விட்டுவிடும் துர்பாக்கிய நிலையில் இருக்கிறார். ஆனால் கடுமையான கஷ்டங்களில் மூழ்கியிருந்த அபூஹுரைரா (ரலி) அவர்கள் நல்ல நிலை வந்த பின்னர் படைத்தவனை அதிகமதிகம் நினைவு கூரத் தொடங்கினார்கள்.
நம்பிக்கை கொண்டோரே! உங்களையும் உங்கள் குடும்பத்தினரையும் நரகை விட்டுக் காத்துக் கொள்ளுங்கள்! அதன் எரிபொருள் மனிதரும் கற்களுமாகும். அதன் மேல் கடுமையும், கொடூரமும் கொண்ட வானவர்கள் உள்ளனர். தமக்கு அல்லாஹ் ஏவியதில் மாறு செய்ய மாட்டார்கள். கட்டளையிடப் பட்டதைச் செய்வார்கள். (அல்குர்ஆன் 66:6)
என்ற வசனத்தின் அடிப்படையில் தம் குடும்பத்தாரையும் இறைவனுக்குக் கட்டுப்பட்டு நல்லறங்கள் செய்பவர்களாக மாற்றியுள்ளார்கள். மேலும் வேலைக்காரரைக் கூட இறை வணக்கத்தில் ஈடுபடச் செய்துள்ளார்கள்.
ஒரு மனிதர் தன் அடிமைப் பெண்ணுக்கு ஒழுக்கம் கற்பித்து அவளுக்கு ஒழுக்கம் கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, அவளுக்குக் கல்வி கற்பித்து, அவளுக்குக் கல்வி கற்பிக்கும் பணியைச் செம்மையான முறையில் செய்து, பிறகு அவளுக்கு விடுதலை அத்து அவளை (தானே) மணமும் முடித்துக் கொண்டார் எனில் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.
ஒருவர் ஈசாவின் மீது நம்பிக்கை கொண்டு, பிறகு என் மீதும் நம்பிக்கை கொண்டால் அவருக்கு இரு நற்பலன்கள் கிடைக்கும்.
ஓர் அடிமை தன் இறைவனுக்கு அஞ்சி, தன் எஜமானர்களுக்குக் கீழ்ப்படிந்தும் நடப்பானாயின் அவனுக்கும் இரு நற்பலன்கள் கிடைக்கும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். (புகாரி 3446)
அடிமையாக இருப்பவருக்குக் கல்வியும் நல்லொழுக்கமும் கற்பிக்கும் போது இரண்டு மடங்கு கூலி கிடைக்கும் என்ற நபிமொழியை அடிப்படையாகக் கொண்டு, தன் வேலையாளுக்கும் வணக்க வழிபாடு முறையைக் கற்றுக் கொடுத்து, அவர்களையும் உபரியான வணக்கம் செய்பவராக மாற்றியுள்ளார்கள்.
ஆனால் இன்று முதலாளியாக இருப்பவர்கள், தொழிலாளி தொழுகைக்குச் செல்ல அனுமதி கேட்டால் கூட மறுப்பவர்களாக இருப்பதைப் பார்க்கிறோம். தொழிலாளி நம்மிடம் வந்து சேர்ந்த பின்னர் அவரைக் கடமையான மற்றும் உபரியான தொழுகையைப் பேணுபவராகவும் நல்லொழுக்கம் மிக்கவராகவும் மாற்றுவது முதலாளிகள் செய்யும் நற்காரியம் என்பதை மறக்கக் கூடாது.
மறப்போம்!
மன்னிப்போம்!!
எம்.ஐ. சுலைமான்
மனிதன் இவ்வுலகத்தில் படைக்கப்பட்ட போதே அவன் தவறு செய்பவனாகவே படைக்கப்பட்டுள்ளான்.
ஆதமின் மக்கள் அனைவரும் பகலிலும் இரவிலும் தவறிழைக்கின்றனர் என்பது நபிமொழி.
(நூல்: அஹ்மத் 20451) மனிதன் தவறு செய்பவனாகப் படைக்கப்பட்டுள்ளதால், மனிதர்களிடம் ஏற்படும் தவறுகளை மன்னிக்கும் பண்பு அனைவரிடமும் இருக்க வேண்டும். மேலும் சண்டையிட்டுக் கொள்ளும் சகோதரர்களுக்கு இடையே நல்லிணக்கத்தையும் ஏற்படுத்த வேண்டும்.
அல்லாஹ் கூறுகிறான்:
நம்பிக்கை கொண்டோர் (அனைவரும்) சகோதரர்கள்தாம். எனவே உங்கள் சகோதரர்களுக்கிடையே இணக்கத்தை ஏற்படுத்துங்கள்! அல்லாஹ்வை அஞ்சுங்கள். அருள் செய்யப்படுவீர்கள்.
(அல்குர்ஆன் 49:11)
இந்த வசனம், சண்டையிட்டுக் கொள்பவர்களை சமாதானம் செய்து வைக்க வேண்டும் என்று கூறுவதோடு, நாம் சண்டையிட்டுக் கொள்ளக் கூடாது என்பதையும் எடுத்துக் கூறுகிறது.
ஒவ்வொரு வியாழன் மற்றும் திங்கள் கிழமைகளில் (நாம் செய்த) அமல்கள் (அல்லாஹ்விடம்) எடுத்துக் காட்டப்படும். அப்போது அல்லாஹ்விற்கு இணை வைக்காத ஒவ்வொரு மனிதனின் தவறுகளையும் அந்நாளில் அல்லாஹ் மன்னிப்பான். தன் சகோதரனுக்கிடையில் சண்டையிட்டுள்ள ஒருவனைத் தவிர! அவர்கள் இருவரும் சமாதானம் செய்து கொள்ளும் வரை அவனை விட்டு விடுங்கள் என்று கூறப்படும்.
(நபிமொழி, நூல்: முஸ்லிம் 4653)
நம் சகோதர, சகோதரர்களிடம் சண்டையிட்டுக் கொள்வதால் நம்முடைய அமல்கள் கூட ஏற்றுக் கொள்ளப்படாது என்றால், சமாதானமும் விட்டுக் கொடுக்கும் பண்பும் எவ்வளவு முக்கியம் என்பதை அறியலாம்.
மனிதர்கள் பல பண்புகளை உடையவர்கள். எனவே பல வகையில் நமக்குத் தொந்தரவுகளைத் தரலாம். அவற்றையெல்லாம் நாம் மன்னித்தால் நமக்குக் கிடைக்கும் நன்மைகள் ஏராளம். எனவே தான் அல்லாஹ் இவ்வாறு கூறுகிறான்.
பெருந்தன்மையை மேற்கொள்வீராக! நன்மையை ஏவுவீராக! அறிவீனர்களை அலட்சியம் செய்வீராக!
(அல்குர்ஆன் 7:199)
தர்மம் செய்து விட்டு அதைத் தொடர்ந்து, தொல்லை கொடுப்பதை விட அழகிய சொற்களைக் கூறுவதும், மன்னிப்பதும் சிறந்தது. அல்லாஹ் தேவையற்றவன்; சகிப்புத் தன்மை மிக்கவன்.
(அல்குர்ஆன் 2:263)
தர்மம், நன்மையான காரியம், மக்களிடையே நல்லிணக்கம் ஏற்படுத்துதல் ஆகியவற்றை ஏவியதைத் தவிர அவர்களின் பெரும்பாலான பேச்சுக்களில் எந்த நன்மையும் இல்லை. அல்லாஹ்வின் திருப்தியை நாடி இவற்றைச் செய்பவருக்கு மகத்தான கூலியை வழங்குவோம்.
(அல்குர்ஆன் 4:114)
இதைப் போன்று கணவன் மனைவியிடம் பிரச்சனை வந்தால் உடனே பிரிந்து விட வேண்டும் என்று அல்லாஹ் கூறவில்லை. இருவரும் பேசி ஒரு உடன்பாட்டிற்கு வர வேண்டும். இதுதான் சிறந்தது என்று படைத்தவன் குறிப்பிடுகிறான்.
தன் கணவனிடம் பிணக்கையோ, புறக்கணிப்பையோ ஒரு பெண் அஞ்சினால் அவ்விருவரும் தமக்கிடையே நல்ல முறையில் சமாதானம் செய்து கொள்வது (அல்லது பிரிந்து விடுவது) இருவர் மீதும் குற்றமில்லை. சமாதானமே சிறந்தது. (அல்குர்ஆன் 4:128)
இதைப் போன்று போர்க்களங்களில் கூட எதிரிகள் சமாதானத்திற்கு வந்தால் அதையே ஏற்க வேண்டும் என்றும் இஸ்லாம் கூறுகிறது.
(முஹம்மதே!) அவர்கள் சமாதானத்தை நோக்கிச் சாய்ந்தால் நீரும் அதை நோக்கிச் சாய்வீராக! அல்லாஹ்வையே சார்ந்திருப்பீராக! அவனே செவியுறுபவன்; அறிந்தவன். (அல்குர்ஆன் 8:61)
அவர்கள் உங்களை விட்டு விலகி உங்களுடன் போர் செய்யாது, உங்களிடம் சமாதானத்துக்கு வந்தால் அவர்களுக்கு எதிராக அல்லாஹ் எந்த வழியையும் உங்களுக்கு ஏற்படுத்தவில்லை. (அல்குர்ஆன் 4:90)
போர்க்களங்களில் கூட சமாதானத்தை விரும்பும் மார்க்கத்தில் உள்ள நாம், நம் குடும்பத்தில் ஏற்படும் சின்னச் சின்ன பிரச்சனைகளை பெரிதுபடுத்தி, குடும்பத்தில் குழப்பத்தை ஏற்படுத்துவது, சிக்கலை உருவாக்குவது நியாயமா? என்பதை சிந்தித்துப் பார்க்க வேண்டும். விட்டுக் கொடுக்கும் மனப்பான்மையை நாம் உருவாக்கிக் கொள்ள வேண்டும்.
நம்மை வெறுப்பவர்களைக் கூட நண்பர்களாக மாற்ற முயற்சிக் வேண்டும். அவர்களுடன் சேர்ந்து வாழ முயல வேண்டும். நபிகளார் கூறுகிறார்கள்:
பதிலுக்கு பதில் உறவாடுகின்றவர் (உண்மையில்) உறவைப் பேணுகின்றவர் அல்லர். மாறாக, உறவு முறிந்தாலும் உறவுடன் இணைகின்றவரே உறவைப் பேணுபவர் ஆவார். (நூல்: புகாரி 5991)
நம்மிடம் சண்டையிட்டவர்கள் பேசிய வார்த்தைகள், நடந்த முறைகள் எல்லாம் நம் உள்ளத்தில் ஆறாத வடுவை ஏற்படுத்தியிருக்கலாம். அதனால் நாம் அவர்களிடம் பகைமை காட்டலாம். அதை நியாயப்படுத்தலாம். ஆனால் நமது உள்ளத்தை எவ்வளவு பாதித்திருந்தாலும் அவர்களை மன்னிக்க வேண்டும் என்றே அல்லாஹ் கூறுகிறான்.
அபூபக்ர் (ரலி) அவர்களின் அன்பு மகளும், நபிகளாரின் அன்பு மனைவியுமான அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அபாண்டமான குற்றச்சாட்டுகளை எதிரிகள் வைத்தனர். அவர்களின் வலையில் சில நபித்தோழர்களும் விழுந்தனர். இந்தக் குற்றச்சாட்டுகள் நபிகளாரையும் அபூபக்ர் (ரலி) அவர்களையும் அன்னை ஆயிஷா (ரலி) அவர்களையும் கடுமையாகப் பாதித்தது. (விரிவாக அறிய பார்க்க: புகாரி 4141)
இந்நிலையில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் தூய்மையானவர்கள் என்று அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கி, பிரச்சனைக்கு முற்றுப் புள்ளி வைத்தான். அப்போது இந்த அவதூறு பரப்பியவரும் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் உதவி பெற்று வந்தவருமான மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு இனிமேல் உதவி செய்ய மாட்டேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் சத்தியம் செய்தார்கள். இதைக் கண்டித்துப் பின்வருமாறு அல்லாஹ் குர்ஆன் வசனத்தை இறக்கினான்.
உறவினர்களுக்கும், ஏழைகளுக்கும், அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தோருக்கும் உதவ மாட்டோம் என்று செல்வமும், வசதியும் உடையோர் சத்தியம் செய்ய வேண்டாம். மன்னித்து அலட்சியம் செய்யட்டும். அல்லாஹ் உங்களை மன்னிக்க வேண்டும் என்று விரும்ப மாட்டீர்களா? அல்லாஹ் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 24:22)
மனதில் ஆழமான பாதிப்பை ஏற்படுத்திய ஒருவருக்கு உதவி செய்ய மாட்டேன் என்று கூறிய போது, தவறு செய்தவர்களை மன்னிக்க வேண்டும் என்றும், அவ்வாறு செய்யும் போது தான் என் மன்னிப்பு உங்களுக்கு உண்டு என்றும் அல்லாஹ் கூறுகிறான்.
இதைக் கேட்ட அபூபக்ர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது ஆணையாக! என்னை அல்லாஹ் மன்னிக்க வேண்டும் என்றே நான் விரும்புகிறேன் என்று கூறி விட்டு மிஸ்தஹ் என்ற நபித்தோழருக்குப் பழையபடி உதவிகளை செய்யத் தொடங்கினார்கள்.
குடும்பங்களில் ஏற்படும் பிரச்சனைகளைக் காரணம் காட்டி அவர்களிடமிருந்து பிரிபவர்கள் இந்தச் சம்பவத்தை சற்று சிந்தித்துப் பார்க்க வேண்டும். தவறு செய்வர்களை மன்னிப்பது அல்லாஹ்வின் மன்னிப்பைப் பெற்றுத் தரும். அல்லாஹ்வின் மன்னிப்பை விட மகத்தான பாக்கியம் எது இருக்க முடியும்?
குடுபம்பங்களில் பிரச்சனைகள் ஏற்படும் போது, அல்லாஹ்வின் மன்னிப்பையும் அவன் காட்டிய வழிமுறைகளையும் நாம் கவனத்தில் கொண்டு செயல்பட்டால் நிச்சயம் நாம் பிரிந்து வாழ விரும்ப மாட்டோம். இன்ஷா அல்லாஹ்!
12.02.2010. 19:02
ஏப்ரல் 2008 தீன்குலப் பெண்மணி
ஏகத்துவ எழுச்சி தஞ்சையை நோக்கி...
ஆயிரம் வருடங்களுக்கு முன்பே தமிழகத்தில் இஸ்லாம் நுழைந்திருந்தாலும் அதன் எழுச்சி வீரியமாக இருக்கவில்லை.
1980ஆம் வருட காலத்தில் தமிழகத்தில் ஏகத்துவக் கொள்கையின் எழுச்சி ஏற்பட ஆரம்பித்தது. ஏகத்துக் கொள்கையின் தாக்கம் கொஞ்சம் கொஞ்சமாக மக்களிடம் ஏற்பட்டது. இஸ்லாத்தின் அடிப்படைகள் திருக்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் ஆகிய இரண்டு மட்டும் தான் என்று கூறிய போது கடுமையான எதிர்ப்புகள் ஏற்பட்டன.
தாக்கப்பட்டவர்கள், ஊர் நீக்கம் செய்யப்பட்டவர்கள், அபராதம் விதிக்கப்பட்டவர்கள், அடக்கம் செய்ய மறுக்கப்பட்டவர்கள் என்று மக்களின் எதிர்ப்பு நீடித்துக் கொண்டே போன அதே நேரத்தில் இக்கொள்கையில் இணைந்தவர்களின் எண்ணிக்கையும் கூடிக் கொண்டே போனது.
பணத்தாலும் அடியாட்களாலும் அதிகாரத்தாலும் மிரட்டப்பட்ட இந்தக் கொள்கை, இவற்றுக்கு ஒருபோதும் அடி பணியாது என்பதை அவ்வப்போது உணர்த்திக் காட்டிய இக்கொள்கையுடையோர், உண்மையான கொள்கையில் இருப்பதற்காக அடி உதைகள், ஏச்சுப் பேச்சுகள் எதையும் தாங்கிக் கொள்ளத் தயார் என்பதை நிரூபித்தார்கள்.
உண்மையான கொள்கை உள்ளத்தில் சென்று விட்டால் அவர்களை எவரும் எதுவும் செய்துவிட முடியாது என்பதற்கு, இக்கொள்கையை ஏற்று நடந்தவர்கள் நிதர்சனமான சான்றுகளாகத் திகழ்ந்தார்கள்.
நாளடைவில் இக்கொள்கைவாதிகளின் மன உறுதியைக் கண்ட பலர் தங்கள் எதிர்ப்பை குறைக்கத் துவங்கினர். திருக்குர்ஆன், நபிமொழிகளின் அடிப்படையில் நடக்க வேண்டும் என்று வலியுறுத்தி வரும் நம்மை பொதுப் பிரச்சனைகளில் தீர்வு காண்பதற்காக மாற்றுக் கருத்துடையவர்களே அழைக்கும் அளவிற்கு எதிர்ப்புகள் குறைந்துள்ளன.
இக்கொள்கையின் எழுச்சி மதீனா வாழ்க்கையை நோக்கிச் சென்று கொண்டிருக்கிறது. மக்கா வாழ்க்கை முற்றுப் பெறும் நிலையில் உள்ளது.
இன்ஷா அல்லாஹ் மக்கா வெற்றியைப் போன்று இக்கொள்கை வெற்றி பெறும் நாள் வெகு தொலைவில் இல்லை.
இஸ்லாத்தின் அடிப்படை திருக்குர்ஆன், ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் மட்டுமே என்ற கொள்கையை தமிழக மக்களிடம் எடுத்துரைக்க அதன் வீரியத்தைக் காட்ட, அதைப் பின்பற்றி நடப்பவர்களின் மன உறுதியைப் பறைசாற்றிட இப்போது அரிய சந்தர்ப்பம் கிடைத்துள்ளது. மே மாதம் 10, 11 தேதிகளில் தஞ்சையில் நடக்கும் ஏகத்துவ எழுச்சி மாநாட்டில் கலந்து கொண்டு இக்கொள்கையில் உள்ள மன உறுதியையும், வலிமையையும் காட்டுவதற்கு அரிய சந்தர்ப்பம்.
இந்த மாநாட்டில் நீங்கள் குடும்பத்தினருடன் கலந்து கொள்வதுடன் ஓரிறைக் கொள்கையை ஏற்க முன்வரும், ஆர்வப்படும் மக்களையும் அழைத்து வந்து தமிழகத்திற்கு மட்டுமல்ல! இவ்வுலகிற்கே இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கையை உணர்த்துங்கள்.
மேலும் இதில் கலந்து கொள்ளும் மக்களைப் பார்த்து, இன்ஷா அல்லாஹ் ஓரிறைக் கொள்கையை ஏற்று நடக்க ஏராளமானோர் வருவதற்கும் வாய்ப்புகள் உண்டு.
வல்ல அல்லாஹ் நாம் செய்யும் நல்லறங்களை ஏற்று, இம்மை மறுமை வெற்றி அளிப்பானாக!
புயலுக்குப் பின் அமைதி
ஏ. பெனாசிர் பேகம், ஆனைமலை
நபிகளார் காட்டிய ஏகத்துவக் கொள்கையை ஏற்று, அதன் வழிப்படி நடக்க நாம் முயற்சிக்கும் போது பல எதிர்ப்புகளைச் சந்திக்க வேண்டிய சூழ்நிலை ஏற்படுகிறது.
ஊரில் எதிர்ப்பு, ஊர் நீக்கம் ஆகியவற்றுடன், பெற்றோர் மற்றும் உறவினர்களின் ஏச்சுப் பேச்சுக்கள் என்று எண்ணற்ற துன்பங்கள் இந்த உண்மையான கொள்கையை ஏற்றதால் ஏற்படுகின்றன. இந்தக் கொள்கையின் சிறப்பினை விளங்கி ஏற்று நடக்க முன்வரும் போது இது போன்ற துன்பங்களால் கொள்கையை விடுபவர்களையும் நாம் பார்க்க முடிகின்றது. இது போன்ற சூழ்நிலையில் நாம் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதற்கு நபி (ஸல்) அவர்களிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. நபிகளார் அவர்கள் ஓரிறைக் கொள்கையை எடுத்துரைத்த போது மிகப் பெரிய துன்பங்களைச் சந்தித்துள்ளார்கள். அவற்றை நாம் ஒப்பிட்டுப் பார்க்கும் போது, நாம் சந்திக்கும் இவை மிகவும் அற்பமானதே!
முதலில் திருக்குர்ஆன் இது தொடர்பாகக் கூறும் அறிவுரைகளைப் பார்ப்போம்.
நம்பிக்கை கொண்டோம் என்று கூறியதன் காரணமாக சோதிக்கப்படாமல் விடப்படுவார்கள் என மனிதர்கள் நினைத்து விட்டார்களா? அவர்களுக்கு முன் சென்றோரையும் சோதித்தோம். உண்மை பேசுவோரை அல்லாஹ் அறிவான். பொய்யர்களையும் அறிவான். (அல்குர்ஆன் 29:1,2)
உங்களுக்கு முன் சென்றோருக்கு ஏற்பட்டது போல் உங்களுக்கும் ஏற்படாமல் சொர்க்கத்தில் நுழையலாம் என்று எண்ணிக் கொண்டிருக்கிறீர்களா? அவர்களுக்கு வறுமையும், துன்பமும் ஏற்பட்டன. அல்லாஹ்வின் உதவி எப்போது? என்று (இறைத்) தூதரும் அவருடன் உள்ள நம்பிக்கை கொண்டோரும் கூறுமளவுக்கு அலைக்கழிக்கப்பட்டனர். கவனத்தில் கொள்க! அல்லாஹ்வின் உதவி அருகிலேயே உள்ளது. (அல்குர்ஆன் 2:214)
சொர்க்கத்திற்குச் செல்பவர்கள் இவ்வாறு சோதிக்கப்படும் நேரத்தில் நாம் பொறுமையை மேற்கொண்டு சொர்க்கத்தை உறுதி செய்து கொள்ள வேண்டும். நபி (ஸல்) அவர்களும் மற்ற இறைத் தூதர்களும் எவ்வாறு சோதிக்கப்பட்டார்கள் என்பதைப் பாருங்கள்.
(முஹம்மதே!) உமக்கு முன் பல தூதர்கள் கேலி செய்யப்பட்டனர். எதைக் கேலி செய்தார்களோ அதுவே கேலி செய்தோரைச் சூழ்ந்தது. (அல்குர்ஆன் 6:10)
(முஹம்மதே!) அவர்கள் கூறுவது உம்மைக் கவலையில் ஆழ்த்துவதை அறிவோம். அவர்கள் உம்மைப் பொய்யரெனக் கூறவில்லை. மாறாக அநீதி இழைத்தோர் அல்லாஹ்வின் வசனங்களையே மறுக்கின்றனர். (முஹம்மதே!) உமக்கு முன் சென்ற தூதர்கள் பொய்யரெனக் கருதப்பட்டுள்ளனர். அவர்கள் பொய்யரெனக் கருதப்பட்டதையும், தொல்லைப் படுத்தப்பட்டதையும் சகித்துக் கொண்டனர். முடிவில் அவர்களுக்கு நமது உதவி வந்தது. அல்லாஹ்வின் வார்த்தைகளை மாற்றுபவன் யாருமில்லை. தூதர்கள் பற்றிய செய்தி உமக்கு (ஏற்கனவே) வந்துள்ளது. (அல்குர்ஆன் 6:33, 34)
ஏகத்துவக் கொள்கையில் உறுதியாக இருந்து, அதன் பக்கம் மக்களை அழைப்பவர்களுக்குக் கிடைக்கும் பரிசுகளைப் பற்றி இந்த வசனங்கள் பேசுகின்றன. மேலும் ஒரிறைக் கொள்கையை ஏற்று நடப்பவர்களுக்குக் கிடைக்கும் துன்பங்களுக்கு மருந்திடும் வசனங்களாகும்.
நபிகளார் இஸ்லாத்தை ஏற்ற ஆரம்ப காலத்தில் அன்றைய இணைவைப்பாளார்கள் கொடுத்த துன்பங்களை நினைத்துப் பாருங்கள்.
உங்களுடைய நெருங்கிய உறவினர்களை நீங்கள் எச்சரியுங்கள் எனும் (26:214ஆவது) இறைவசனம் அருளப் பெற்ற போது நபி (ஸல்) அவர்கள் ஸஃபா மலைக் குன்றின் மீது ஏறிக் கொண்டு, பனூ ஃபிஹ்ர் குலத்தாரே! பனூ அதீ குலத்தாரே! என்று குறைஷிக் குலங்களை (பெயர் சொல்லி) அழைக்கலானார்கள். அவர்கள் அனைவரும் ஒன்று கூடினார்கள். அங்கு வர முடியாத நிலையில் இருந்த சிலர், அது என்ன என்று பார்த்து வர (தம் சார்பாக) ஒரு தூதரை அனுப்பினார்கள். இவ்வாறு அபூலஹப் உள்ட்ட குறைஷியர் (அனைவரும்) வந்தனர். நபி (ஸல்) அவர்கள், சொல்லுங்கள்: இந்தப் பள்ளத்தாக்கில் குதிரைப் படை ஒன்று உங்கள் மீது தாக்குதல் தொடுக்கப்போகிறது என்று நான் உங்களுக்குத் தெரிவித்தால், நான் உண்மை சொல்வதாக என்னை நீங்கள் நம்புவீர்களா? என்று கேட்க, மக்கள் ஆம். (நம்புவோம்); உங்கடம் நாங்கள் உண்மையைத் தவிர வேறெதையும் அனுபவித்ததில்லை என்று பதிலத்தனர்.
நபி (ஸல்) அவர்கள், அப்படியென்றால், நான் கடும் வேதனையொன்று எதிர் நோக்கியுள்ளது என்று உங்களை எச்சரிக்கின்றேன் என்று (தமது மார்க்கக் கொள்கையைச்) சொன்னார்கள். (இதைக் கேட்ட) அபூலஹப், நாளெல்லாம் நீ நாசமாக! இதற்காகவா எங்களை ஒன்று கூட்டினாய்? என்று கூறினான். அப்போது தான் அபூலஹபின் கரங்கள் நாசமாகட்டும்! அவனும் நாசமாகட்டும்...... என்று தொடங்கும் (111ஆவது) அத்தியாயம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்: புகாரி (4770)
இவ்வளவு ஏச்சுப் பேச்சுக்களையும் கேட்ட நபிகளார் அவர்கள் கொண்ட கொள்கையை விட்டு விடாமல் அக்கொள்கையைத் தொடர்ந்து கூறி வந்தார்கள்.
(ஒரு முறை) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறையில்லம் கஅபா அருகில் நின்று தொழுது கொண்டிருந்தார்கள். அப்போது (அபூஜஹ்ல், உக்பா பின் அபீமுஐத் உள்ட்ட) குறைஷிக் குழாம் ஒன்று தங்கள் அவையில் கூடியிருந்தனர். அப்போது அவர்கல் ஒருவன், இந்தப் பகட்டுக்காரரை நீங்கள் பார்க்கவில்லையா? என்று கூறிவிட்டு, இறைச்சிக்காக அறுக்கப்பட்ட இன்ன குடும்பத்தாரின் ஒட்டகத்தை நோக்கிச் சென்று, அதன் சாணத்தையும், அதன் இரத்தத்தையும், அதன் கருவைச் சுற்றியுள்ள சவ்வையும் கொண்டு வந்து, முஹம்மத் சிர வணக்கம் செய்யும் நேரம் பார்த்து அவரது முதுகின் மீது அதை வைத்து விட வேண்டும். (யார் இதற்குத் தயார்?) என்று கேட்டான். அங்கிருந்தவர்கலேயே படு பாதகனாயிருந்த ஒருவன் (அதற்கு) முன்வந்தான்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சிர வணக்கம் செய்த போது அவர்களுடைய முதுகின் மீது அதைப் போட்டனர். நபி (ஸல்) அவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தவாறே இருந்தார்கள்.
(இதைப் பார்த்துக்கொண்டிருந்த குறைஷியர்) ஒருவர் மீது ஒருவர் விழுந்து சிரித்தனர். உடனே ஒருவர் (நபியவர்கன் புதல்வி) ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கிச் சென்றார். அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் சிறுமியாக இருந்தார்கள். (செய்தியறிந்த) ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஓடோடி வந்தார்கள்.
அவர்கள் வந்து அசுத்தங்களை அவர்களை விட்டும் எடுத்தெறியும் வரை நபியவர்கள் அப்படியே சிர வணக்கம் செய்தபடியே இருந்தார்கள். அந்தக் குறைஷிகளைப் பார்த்து ஃபாத்திமா (ரலி) அவர்கள் ஏசினார்கள்.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுகையை முடித்ததும் (பின்வருமாறு) பிரார்த்தித்தார்கள்:
இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! இறைவா! குறைஷியரை நீ கவனித்துக் கொள்வாயாக! என்று (பொதுவாகக்) கூறிவிட்டு, அல்லாஹ்வே! அம்ர் பின் ஹிஷாம் (அபூஜஹ்ல்), உத்பா பின் ரபிஆ, ஷைபா பின் ரபீஆ, வலீத் பின் உத்பா, உமய்யா பின் கலஃப், உக்பா பின் அபீமுஐத், உமாரா பின் அல்வலீத் ஆகியோரை நீ கவனித்துக்கொள்வாயாக! என்று (ஏழு பேரின்) பெயர் குறிப்பிட்டுப் பிராத்தித்தார்கள்.
தொடர்ந்து அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:
அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் பத்ருப் போர் நால் உருமாறி, இறந்து கிடந்ததையும், பின்னர் கலீபு பத்ர் எனும் பாழுங்கிணற்றை நோக்கி அவர்கள் இழுத்துச் செல்லப்பட்டதையும் நான் பார்த்தேன். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இந்த பாழுங்கிணற்றிலுள்ளோரை (இனியும்) சாபம் தொடரும் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு மஸ்வூத் (ரலி)
நூல்: புகாரி (520)
இணை வைப்பவர்களின் தொல்லைகள் தொடர நபி (ஸல்) அவர்கள் மதீனாவை நோக்கி புறப்பட்டார்கள். அவர்கள் மதீனா தப்பிச் சென்று விட்டார்கள் என்று அறிந்த இணை வைப்பாளர்கள் நபியவர்களைக் கொலை செய்பவர்களுக்கு அல்லது சிறை பிடித்து வருபவர்களுக்கு நூறு ஒட்டகங்கள் பரிசு ஒன்று அறிவித்தனர். (புகாரி 3905)
இறைவனின் பேரருளால் இணை வைப்பாளர்களின் சூழ்ச்சிகளை முறியடித்து மதீனா நகரத்திற்கு நபிகளார் வந்து சேர்ந்தார்கள். மிகப் பெரிய துன்பங்களில் ஆட்பட்டிருந்த நபிகளாருக்கு மதீனா வாழ்க்கை ஓர் அழகிய வாழ்க்கையாக மாறியது. மதீனாவில் இருந்த அன்ஸாரிகளின் பேராதரவு நபிகளாருக்குக் கிடைத்தது.
குறுகிய நாட்களிலேயே மாபெரும் வளர்ச்சியை இஸ்லாம் பெற்று, எந்த ஊரிலிருந்து விரட்டப்பட்டார்களோ அதே ஊருக்கு சுமார் பத்தாயிரம் நபர்களுடன் புறப்பட்டுச் சென்றார்கள். (புகாரி 4276)
பயந்து, ஒளிந்து, மதீனா வந்த நபிகளார் அவர்கள், கம்பீரத்துடன் மக்காவில் நுழைந்தார்கள். இணை வைப்பாளார்கள் பயந்து நடுங்கும் நிலை ஏற்பட்டது. மக்கள் இஸ்லாத்தின் உண்மை நிலையை உணர்ந்து கூட்டம் கூட்டமாக இஸ்லாத்தில் நுழைந்தார்கள்.
அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வரும் போது, (முஹம்மதே!) அல்லாஹ்வின் மார்க்கத்தில் மக்கள் கூட்டம் கூட்டமாக நுழைவதை நீர் காணும் போது, உமது இறைவனைப் புகழ்ந்து போற்றுவீராக! அவனிடம் மன்னிப்புத் தேடுவீராக! அவன் மன்னிப்பை ஏற்பவனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 110:1-3)
ஓரிறைக் கொள்கையை ஏற்றுப் புதிதாக வந்த சகோதரர்கள், தங்கள் ஊர்களில், குடும்பத்தில் ஏற்படும் எதிர்ப்புகளைக் கண்டு கலக்கம் அடையாமல் கொள்கையில் உறுதியாக, பொறுமையாக இருந்தால் உங்களுக்கும் மதீனா வாழ்க்கை விரைவில் கிடைக்கும்.
அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நம்பி, அல்லாஹ்வை அதிகம் நினைக்கும் உங்களுக்கு அல்லாஹ்வின் தூதரிடம் அழகிய முன்மாதிரி இருக்கிறது. (அல்குர்ஆன் 33:21)
குணம் மாறிய
தீன்குலப் பெண்கள்
எம். ஸல்மான் கான், திருப்பூர்
நல்ல எண்ணம், கெட்ட எண்ணம் என்ற நேர் எதிரான குணங்கள் உள்ளவனாக மனிதன் படைக்கப்பட்டுள்ளான். நல்ல செயல்கள் செய்யக் கூடியவர்களை நற்பண்பாளர் என்று போற்றப்படுவதுண்டு. தீய செயல்களை செய்யக் கூடியவர்களை மோசமானவன் என்று தூற்றப்படுவதுண்டு.
மனிதன் என்ற நிலையிலிருந்து ஒருவர் செய்யும் அனைத்துக் காரியங்களையும் நூறு சதவிகிதம் சரியாகச் செய்ய முடியாது. அதே போல் ஒருவர் எடுக்கும் அனைத்து முடிவுகளும் சரியான முடிவுகளாகவே அமையும் என்றும் சொல்ல முடியாது. ஏனென்றால் ஆதமின் சந்ததிகள் தவறிழைக்கக் கூடியவர்களாகவே படைக்கப்பட்டுள்ளார்கள்.
குடும்பத்தில் சண்டை சச்சரவுகள் வருவது இயல்பே! இந்தச் சண்டைகள் உச்சக்கட்டத்தை அடையும் போது, அல்லாஹ்வின் மீது சத்தியமாக! உன்னிடத்தில் நான் இனிமேல் பேசவே மாட்டேன் என்று கூறி விடுவதுண்டு. இதே போல், நான் இறந்தால் என்னைப் பார்க்க வரக் கூடாது என்பது போன்ற கடுமையான சொற்களைக் கூறி விடுகின்றனர்.
நன்மைக்காகப் பிரார்த்திப்பது போலவே தீமைக்காகவும் மனிதன் பிரார்த்தனை செய்கிறான். மனிதன் அவசரக்காரனாக இருக்கிறான். (அல்குர்ஆன் 17:11)
இவ்வாறு அவசரப்பட்டு சொன்ன, ஈட்டி போன்ற வார்த்தைகளால் எதிரில் உள்ளவர்களின் உள்ளங்கள் காயமாகி விடும் என்று சிந்திப்பதில்லை.
அவர்கள் செழிப்பிலும், வறுமையிலும் (நல் வழியில்) செலவிடுவார்கள். கோபத்தை மென்று விழுங்குவார்கள். மக்களை மன்னிப்பார்கள். நன்மை செய்வோரை அல்லாஹ் நேசிக்கிறான்.
(அல்குர்ஆன் 3:134)
ஒருவருக்கொருவர் கோபம் கொள்ளாதீர்கள். பொறாமை கொள்ளாதீர்கள். பிணங்கிக் கொள்ளாதீர்கள். (மாறாக,) அல்லாஹ்வின் அடியார்களே! சகோதரர்களாய் இருங்கள். எந்தவொரு முஸ்லிமும் தம் சகோதரருடன் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் பின் மாலிக் (ரலி), நூல்: புகாரி (6065)
மக்களைத் தனது பலத்தால் அதிகமாக அடித்து வீழ்த்துபவன் வீரன் அல்லன்; உண்மையில் வீரன் என்பவன், கோபத்தின் போது தன்னைக் கட்டுப்படுத்திக் கொள்பவனே ஆவான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல: புகாரி (6114) அல்லாஹ் நேசிக்கக்கூடிய இரு குணங்கள் உங்களிடம் உள்ளன. 1. அறிவாற்றல் 2. நிதானம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (250)
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என்னிடம்), ஆயிஷா! அல்லாஹ் மென்மையானவன். மென்மையான போக்கையே அவன் விரும்புகிறான். வன்மைக்கும் பிறவற்றுக்கும் வழங்காததையெல்லாம் அவன் மென்மைக்கு வழங்குகிறான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (5055)
மென்மை எதில் இருந்தாலும், அதை அது அழகாக்கி விடும். மென்மை அகற்றப்பட்ட எந்த ஒன்றும் அலங்கோலமாகி விடும்.
அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி)
நூல்: முஸ்லிம் (5056)
இது போன்ற நபிமொழிகளின் கருத்துக்களைக் கண்டு கொள்ளாமல் செயல்படுவதால் பல இன்னல்களைச் சந்திக்க நேருகிறது.
மார்க்கம் தடை செய்த வார்த்தைகளை உணர்ச்சி வசப்பட்டுக் கூறியிருந்தாலோ அல்லது அவசரப்பட்டுக் கூறியிருந்தாலோ அல்லது வேண்டுமென்றே கூறியிருந்தாலோ, அது தவறு என்று தெரிந்தவுடன் செய்ததை எண்ணி வருத்தப்பட வேண்டும். மாறாக, நான் பிடித்த முயலுக்கு மூன்று கால் என்று கூறுவது போல் செய்த தவறை நியாயம் கற்பிக்க முயலக் கூடாது. இவ்வாறு பிடிவாதம் செய்வது தீய குணமாகும்.
பிடிவாதமாக (ஏக இறைவனை) மறுத்து, நல்லதைத் தடுத்து, வரம்பு மீறி, சந்தேகம் கொண்டு, அல்லாஹ்வுடன் வேறு கடவுள்களை ஏற்படுத்திக் கொண்டிருந்த, ஒவ்வொருவரையும் நீங்களிருவரும் நரகில் போடுங்கள்! இவனை நீங்கள் இருவரும் கடுமையான வேதனையில் போடுங்கள்! (என்று அவ்விரு வானவர்களுக்கும் கூறப்படும்).
(அல்குர்ஆன் 50:24-26)
யாரிடம் கடுமையாக நடந்து கொண்டோமோ அவரிடம் தவறுக்கு வருத்தம் தெரிவித்துக் கொள்ள வேண்டும். அவரோடு உறவை புதுப்பித்துக் கொள்ள வேண்டும். அல்லாஹ்விடம் பாவமன்னிப்புத் தேட வேண்டும்.
அவர்கள் வெட்கக்கேடானதைச் செய்தாலோ, தமக்குத் தாமே தீங்கு இழைத்துக் கொண்டாலோ அல்லாஹ்வை நினைத்து தமது பாவங்களுக்கு மன்னிப்புத் தேடுவார்கள். அல்லாஹ்வைத் தவிர பாவங்களை மன்னிப்பவன் யார்? தாங்கள் செய்ததில் தெரிந்து கொண்டே அவர்கள் நிலைத்திருக்க மாட்டார்கள். (அல்குர்ஆன் 3:135)
இவ்வாறு நடந்து கொள்ளும் போது நம்மை விட்டுத் தீய குணங்கள் ஓடிப் போய் விடும். இந்த இடத்தில் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு, நபித்தோழர்களின் வாழ்வில் நடந்த ஒரு சம்பவத்தைக் கூறினால் பொருத்தமாக இருக்கும்.
குணத்ததை மாற்றிக் கொண்ட குணவதி
ஆயிஷா (ரலி) அவர்கள் (தமது வீடு ஒன்றை) விற்றது தொடர்பாக அல்லது நன்கொடையாக வழங்கியது தொடர்பாக (அவர்களுடைய சகோதரி அஸ்மாவின் புதல்வர்) அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் (அதிருப்தியடைந்து) அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷா (தமது முடிவைக்) கைவிட வேண்டும். அல்லது நான் அவரைத் தடுத்து நிறுத்துவேன் என்று கூறியதாக ஆயிஷா (ரலி) அவர்கடம் தெரிவிக்கப்பட்டது.
அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், அவரா இப்படிச் சொன்னார்? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் என்றனர். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள், இனி நான் இப்னு ஸுபைரிடம் ஒருபோதும் பேச மாட்டேன் என அல்லாஹ்வின் மீது ஆணையிட்டுச் சத்தியம் செய்கிறேன் என்று கூறிவிட்டார்கள். நீண்ட நாட்கள் பேச்சு வார்த்தை நின்று போன போது ஆயிஷா (ரலி) அவர்கடம் (தமக்காகப்) பரிந்து பேசுமாறு (முஹாஜிர்களை) இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கேட்டுக் கொண்டார்கள். (அவ்வாறே அவர்கள் பரிந்து பேசிய போது) ஆயிஷா (ரலி) அவர்கள், முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் விஷயத்தில் ஒருபோதும் நான் (எவருடைய) பரிந்துரையையும் ஏற்றுக்கொள்ளவும் மாட்டேன். என் சத்தியத்தை நான் முறித்துக் கொள்ளவும் மாட்டேன் என்று கூறி விட்டார்கள்.
ஆயிஷா (ரலி) அவர்கள் இப்னு ஸுபைர் அவர்கடம் பேச்சை நிறுத்தி நீண்ட நாட்களாகி விட்ட போது பனூ ஸுஹ்ரா குலத்தைச் சேர்ந்த மிஸ்வர் பின் மக்ரமா (ரலி), அப்துர் ரஹ்மான் பின் அஸ்வத் பின் அப்தி யகூஸ் (ரலி) ஆகிய இருவரிடமும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வை முன் வைத்து உங்கள் இருவரிடமும் நான் வேண்டுகிறேன். என்னை (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்கடம் அழைத்துச் செல்லக் கூடாதா? என் உறவை முறித்துக் கொள்வதாக அவர்கள் செய்துள்ள சத்தியம் அவர்களுக்கு அனுமதிக்கப்பட்டதல்லவே! என்று கூறினார்கள். ஆகவே, மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர் களும் தம் மேலங்கிகளை அணிந்து கொண்டு, இப்னு ஸுபைர் (ரலி) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்கடம் சென்றார்கள்.
(அங்கு சென்ற) உடனே அஸ்ஸலாமு அலைக்கி வ ரஹ்மத்துல்லாஹி வ பரகாதுஹு என்று சலாம் சொல்லிவிட்டு, நாங்கள் உள்ளே வரலாமா? என்று அனுமதி கேட்டனர். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், உள்ளே வாருங்கள் என்று அனுமதி வழங்கினார்கள். அப்போது அவர்கள் (மூவரும்) நாங்கள் அனைவரும் உள்ளே வரலாமா? என்று கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள், ஆம்; அனைவரும் உள்ளே வாருங்கள் என்று அவர்கள் இருவருடனும் இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இருப்பதை அறிந்து கொள்ளாமலேயே கூறினார்கள்.
அவர்கள் மூவரும் உள்ளே நுழைந்ததும், இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் (தம் சிறிய தாயாரான ஆயிஷா இருந்த) திரைக்குள் நுழைந்து அவர்களைத் தழுவிக் கொண்டு அவர்கடம் முறையிட்டு அழத் தொடங்கினார்கள். மிஸ்வர் (ரலி) அவர்களும் அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்களும் (வெயே இருந்தபடி) இப்னு ஸுபைர் (ரலி) அவர்கடம் பேசியே தீர வேண்டும் என்றும் அவருக்காகத் தாங்கள் செய்யும் பரிந்துரையை ஏற்றுக்கொள்ள வேண்டுமென்றும் ஆயிஷா (ரலி) அவர்கடம் வேண்டிக் கொண்டிருந்தனர். மேலும், அவர்கள் இருவரும், ஒரு முஸ்லிம் தம் சகோதரரிடம் மூன்று நாட்களுக்கு மேல் பேசாமல் இருப்பது அனுமதிக்கப்பட்டதன்று என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்துள்ளதை தாங்கள் அறிந்தே உள்ளீர்கள் என்று கூறினார்கள். ஆயிஷா (ரலி) அவர்கடம் (உறவைப் பேணுவதன் சிறப்பு குறித்து) நினைவூட்டியும், (உறவை முறிப்பதன் பாவம் குறித்து) கசப்பூட்டியும் அவர்கள் அதிகமாகப் பேசிய போது (தாம் செய்த சத்தியத்தைப் பற்றி) அவர்கள் இருவருக்கும் நினைவூட்டியவாறு ஆயிஷா (ரலி) அவர்கள் அழலானார்கள்.
மேலும், (நான் அவரிடம் பேசமாட்டேன் என) சத்தியம் செய்து விட்டேன். சத்தியம் மிகவும் கடுமையானதாகும் என்று (அவர்கள் இருவரிடமும் திரும்பத் திரும்பக்) கூறிக் கொண்டிருந்தார்கள். அப்போது ஆயிஷாவிடம் அவர்கள் இருவரும் (தங்கள் கருத்தை) வலியுறுத்திக் கொண்டேயிருந்தனர். இறுதியில் ஆயிஷா (ரலி) அவர்கள் (தம் சகோதரியின் புதல்வர்) இப்னு ஸுபைரிடம் பேசிவிட்டார்கள். தமது சத்தியத்தை முறித்துவிட்டதற்குப் பரிகாரமாக நாற்பது அடிமைகளை விடுதலை செய்தார்கள். அதற்குப் பிறகும் கூடத் தமது சத்தியத்தை நினைவு கூர்ந்து தமது முகத்திரை நனையுமளவிற்கு அவர்கள் அழுவார்கள்.
அறிவிப்பவர்: அவ்ஃப் பின் மாலிக்
நூல்: புகாரி (6073, 6074, 6075)
மேற்கண்ட செய்தியில் அன்னை ஆயிஷா (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிட்டுப் பேச மாட்டேன் என்று முடிவு எடுக்கிறார்கள். பிறகு நபித்தோழர்கள், இவ்வாறு இருப்பது மார்க்கத்தில் அனுமதியில்லை என்றும் உறவுகளை பேண வேண்டும் என்றும் கூறுகின்றனர். உடனே தமது முடிவை மாற்றிக் கொள்கிறார்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சி அழுகின்றார்கள். எனவே அல்லாஹ்வும் அவன் தூதரும் கட்டளையிட்டதற்கு மாற்றமாக முடிவு எடுத்தோம் என்றால் அது தவறு என்று தெரிந்தவுடன் திருத்திக் கொள்வதே நல்லவர்களின் பண்பாடாகும். அவ்வாறு நடந்து அல்லாஹ்வின் நேசத்தைப் பெறுவோம்.
சபை ஒழுக்கங்கள்
மூன்றாம் ஆண்டு மாணவிகள், அந்நூர் இஸ்லாமியக் கல்லூரி
இஸ்லாமிய மார்க்கம் மற்ற மதங்களை விடப் பல வகைகளில் சிறந்து விளங்குகிறது. இஸ்லாம் சிறந்து விளங்குவதற்குக் காரணம், அதன் கொள்கைகளும் அதில் உள்ள நல்ல அறிவுரைகளும் தான்.
மனிதன் பிறந்தது முதல் அவன் இறக்கும் வரை அவன் சந்திக்கும் அனைத்து விஷயங்களுக்கும் அழகிய முறையில் வழிகாட்டுகிறது. அந்த வகையில் மனிதன் சிறுநீர் கழிப்பதன் ஒழுங்குகளைக் கூட இந்த மார்க்கம் சொல்லித் தருகிறது.
ஸல்மான் அல் ஃபார்சீ (ரலி) அவர்களிடம், மல ஜலம் கழிக்கும் முறை உட்பட அனைத்தையுமே உங்கள் இறைத்தூதர் உங்களுக்குக் கற்றுத் தந்திருக்கிறார் (போலும்) என்று (பரிகாசத்துடன்) கேட்கப்பட்டது.
அதற்கு ஸல்மான் (ரலி) அவர்கள், ஆம் (உண்மை தான்); மல ஜலம் கழிக்கும் போது கிப்லாவை முன்னோக்க வேண்டாமென்றும் (மல ஜலம் கழித்த பின்) வலக் கரத்தால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், மூன்றை விடக் குறைவான கற்களால் துப்புரவு செய்ய வேண்டாமென்றும், கெட்டிச் சாணத்தாலோ எலும்பாலோ துப்புரவு செய்ய வேண்டாமென்றும் எங்களை (எங்கள் நபி) தடுத்தார்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஸல்மான் (ரலி), நூல்: முஸ்லிம் (437)
இவ்வாறு வீட்டிற்குச் செல்பவர்கள், சபைக்குச் செல்பவர்கள் எவ்வாறு நடந்து கொள்ள வேண்டும் என்பதையும் இஸ்லாம் வழிகாட்டியுள்ளது. அதன் விவரங்களைப் பார்ப்போம்.
சபை மற்றும் வீட்டிற்குச் செல்லும் முன் அனுமதி பெற்று ஸலாம் கூறுதல்
நம்பிக்கை கொண்டோரே! உங்கள் வீடுகள் அல்லாத வேறு வீடுகளில் அவர்களின் அனுமதி பெறாமலும் அவ்வீட்டாருக்கு ஸலாம் கூறாமலும் நுழையாதீர்கள்! இதுவே உங்களுக்குச் சிறந்தது. இதனால் பண்படுவீர்கள். (அல்குர்ஆன் 24:27)
நபி (ஸல்) அவர்கள் (சபையோருக்கு, அல்லது அயலார் வீட்டுக்குள் நுழைய அனுமதி கேட்டு) சலாம் கூறினால் மூன்று முறை சலாம் கூறுவார்கள். ஏதாவது ஒரு வார்த்தை பேசினால் (மக்கள் நன்கு விளங்கிக் கொள்வதற்காக) அதனை மூன்று முறை திரும்பச் சொல்வார்கள். அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (6244)
பதில் இல்லையெனில் திரும்பிவிட வேண்டும்
அங்கே எவரையும் நீங்கள் காணாவிட்டால் உங்களுக்கு அனுமதி அளிக்கப்படும் வரை அங்கே நுழையாதீர்கள்! திரும்பி விடுங்கள்! என்று உங்களுக்குக் கூறப்பட்டால் திரும்பி விடுங்கள்! அதுவே உங்களுக்குப் பரிசுத்தமானது. நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் அறிந்தவன். (அல்குர்ஆன் 24:28)
நான் அன்சாரிகன் அவையொன்றில் அமர்ந்திருந்தேன். அப்போது பதற்றமடைந்தவரைப் போன்று அபூமூசா (ரலி) அவர்கள் வந்து, நான் உமர் (ரலி) அவர்கடம் (அவர் களுடைய வீட்டினுள் நுழைய) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால், எனக்கு அனுமதியக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பிவிட்டேன் என்று கூறினார்கள். பின்பு உமர் (ரலி) அவர்கள் (உங்களை நான் வரச்சொல்லி இருந்தேனே) ஏன் நீங்கள் வரவில்லை என்று (என்னிடம்) கேட்டார்கள். அதற்கு நான், (தங்கடம்) மூன்று முறை அனுமதி கேட்டேன். ஆனால் எனக்கு அனுமதியக்கப்படவில்லை. ஆகவே, நான் திரும்பி வந்துவிட்டேன். (ஏனெனில்,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கல் ஒருவர் மூன்று முறை அனுமதி கேட்டும் அவருக்கு அனுமதி வழங்கப்படாவிட்டால் அவர் திரும்பி விடட்டும் என்று கூறியுள்ளார்கள் என்றேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு நீங்கள் சாட்சியைக் கொண்டு வரவேண்டும் என்று சொன்னார்கள். இதை நபி (ஸல்) அவர்கடமிருந்து செவியேற்றவர் யாரேனும் உங்கல் உள்ளாரா? என்று கேட்டார்கள்.
அதற்கு (அங்கிருந்த) உபை பின் கஅப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! மக்கல் மிகச் சிறியவரே உங்களுடன் (இப்போது சாட்சியம் சொல்ல) வருவார் என்று சொன்னார்கள். அங்கு நான் தான் மக்கல் சிறியவனாக இருந்தேன். எனவே, நான் அபூமூசா (ரலி) அவர்களுடன் சென்று நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு சொன்னார்கள் என்று உமர் (ரலி) அவர்கடம் தெரிவித்தேன்.
அறிவிப்பவர்: அபூஸயீத் அல்குத்ரீ (ரலி), நூல்: புகாரி (6245)
சபையில் மற்றவர்களுக்கு இடமளிக்க வேண்டும்
சபையில் இருக்கும் போது வெளியிலிருந்து ஒருவர் வந்தால், அவர் அமர்வதற்கு இடம் கொடுத்து அவர் இருப்பதற்கு வழிவகுக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்டோரே! சபைகளில் (பிறருக்கு) இடமளியுங்கள்! என்று உங்களிடம் கூறப்பட்டால் இடமளியுங்கள்! அல்லாஹ் உங்களுக்கு இடமளிப்பான். எழுந்து விடுங்கள்! எனக் கூறப்பட்டால் எழுந்து விடுங்கள்! உங்களில் நம்பிக்கை கொண்டோருக்கும் கல்வி வழங்கப் பட்டோருக்கும் அல்லாஹ் பல தகுதிகளை உயர்த்துவான். நீங்கள் செய்வதை அல்லாஹ் நன்கறிந்தவன். (அல்குர்ஆன் 58:11)
ஒரு மனிதர், அவர் அமர்ந்திருக்கும் இடத்திலிருந்து எழுப்பிவிடப்பட்டு, அந்த இடத்தில் மற்றொருவர் அமர்வதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள். இதற்கு மாறாக, நகர்ந்து உட்கார்ந்து மற்றவர்களுக்கும் இடம் கொடுங்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி)
நூல்கள்: புகாரி (6270), முஸ்லிம் (4390, 4391)
முதலில் இருந்தவருக்கே முதலிடம்
அமர்ந்திருந்த ஒருவர் ஏதோ ஒரு வேலையின் காரணமாக வெளியில் சென்று வந்தால் அந்த இடம் அவருக்கே வழங்கப்பட வேண்டும்.
உங்களில் ஒருவர் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்து சென்று விட்டுத் திரும்பி வந்தால், அவரே அந்த இடத்திற்கு உரியவர் ஆவார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (4394)
வலது புறத்தாரே முன்னுரிமை பெற்றவர்
ஒரு சபையில் அமர்ந்திருப்பவர்களுக்கு எதாவது வழங்க வேண்டுமானால் முதலில் அவையின் வலது புறத்திலிருந்தே துவங்க வேண்டும். வலது புறம் உள்ளவருக்கே முதலிடம் கொடுக்க வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் இருந்த சமயத்தில் பழகிய (நாட்டு) ஆடு ஒன்றின் பாலை அவர்களுக்காகக் கறந்து, என் வீட்டில் இருந்த கிணற்றின் தண்ணீரை அதில் கலந்து, அந்தப் பால் பாத்திரத்தை நபி (ஸல்) அவர்களுக்கு நான் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் அதிலிருந்து (பாலை) அருந்தி விட்டு, தம் வாயிலிருந்து அந்தப் பாத்திரத்தை எடுத்தார்கள். (அப்போது) அவர்கன் வலப் பக்கத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களும் இடப் பக்கத்தில் ஒரு கிராமவாசியும் இருந்தனர். ஆகவே, உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எங்கே மீதிப் பாலை அந்த கிராமவாசிக்குக் கொடுத்து விடுவார்களோ என்று அஞ்சி, உங்கடம் இருப்பதை அபூபக்ருக்கு கொடுத்து விடுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அதைத் தமது வலப் பக்கம் இருந்த கிராமவாசிக்கே கொடுத்து விட்டு, (முதலில்) வலப்பக்கம் இருப்பவரிடமே கொடுக்க வேண்டும். வலப் பக்கமிருப்பவரே (இடப் பக்கமிருப்பவரை விட) அதிக உரிமையுடையவர் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அனஸ் (ரலி), நூல்: புகாரி (2352)
மூவர் இருக்கும் போது இருவர் இரகசியம் பேசக்கூடாது
ஒரு சபையில் மூன்று நபர்கள் இருக்கும் போது இரண்டு நபர்கள் மட்டும் மூன்றாம் நபருக்குத் தெரியாதவாறு இரகசியமாகப் பேசிக் கொள்ளக் கூடாது. மக்கள் கூட்டமாக இருக்கும் போது இவ்வாறு பேசிக் கொள்வதில் தவறில்லை.
நீங்கள் மூன்று பேர் இருக்கும்போது மூன்றாமவரை விட்டுவிட்டு, இரண்டு பேர் மட்டும் இரகசியம் பேச வேண்டாம்; நீங்கள் (மூவரும்) மக்களுடன் கலக்கும் வரை. (அவ்வாறு மூன்றாமவரை விட்டுவிட்டு இருவர் மட்டும் பேசுவது) அ(ந்த மூன்றாம)வரை வருத்தமடையச் செய்யும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி)
நூல்கள்: புகாரி (6290), முஸ்லிம் (4400)
நபி (ஸல்) அவர்கள் ஒருநாள் (ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களைப்) பங்கிட்டார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர், இது அல்லாஹ்வின் திருப்தி நாடப்படாத பங்கீடாகும் என்று (அதிருப்தியுடன்) கூறினார். நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கடம் (இது குறித்துத் தெரிவிக்க) நிச்சயம் நான் செல்வேன் என்று கூறிவிட்டு (அவ்வாறே) அவர்கடம் சென்றேன். அப்போது அவர்கள் மக்கள் மன்றத்தில் இருந்தார்கள். அவர்கடம் நான் (இது பற்றி) இரகசியமாகச் சொன்னேன். (அதைக் கேட்ட போது) தம்முடைய முகம் சிவக்கும் அளவுக்கு அவர்கள் கோபமடைந்தார்கள். பிறகு, (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ்வின் கருணை உண்டாகட்டும். இதை விட அதிகமாக அவர் புண்படுத்தப்பட்டார். இருப்பினும், பொறுமை கொண்டார் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி), நூல்: புகாரி (6291)
பெண் தனியாக இருக்கும் போது அந்நிய ஆண்கள் செல்லக்கூடாது
பெண்கள் தனியாக இருக்கும் போது அந்நிய ஆண்கள் எவரும் செல்லக் கூடாது.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அந்நியப்) பெண்கள் இருக்குமிடத்திற்குச் செல்ல வேண்டாம் என உங்களை நான் எச்சரிக்கிறேன் என்று கூறினார்கள். அப்போது அன்சாரிகல் ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் (அவள் இருக்கும் இடத்திற்குச் செல்வது) குறித்து தாங்கள் என்ன கூறுகின்றீர்கள்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், கணவருடைய (சகோதரன் போன்ற) உறவினர்கள் மரணத்திற்கு நிகரான வர்கள் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: உக்பா பின் ஆமிர் (ரலி)
நூல்கள்: புகாரி (5232), முஸ்லிம் (4383)
தீய சபையைப் புறக்கணிக்க வேண்டும்
மார்க்கத்திற்கு முரணான காரியங்கள் நடக்கும் அவைகளுக்கும், திருக்குர்ஆனின் மற்றும் நபிமொழியின் கட்டளைகளை அவமதிக்கும் வண்ணம் நடக்கும் அவைகளுக்கும், வீணான காரியங்கள் நடக்கும் அவைகளுக்கும் செல்லக் கூடாது.
அல்லாஹ்வின் வசனங்கள் மறுக்கப்பட்டு, கேலி செய்யப்படுவதை நீங்கள் செவியுற்றால் அவர்கள் வேறு பேச்சுக்களில் ஈடுபடும் வரை அவர் களுடன் அமராதீர்கள்! (அவர்களுடன் அமர்ந்தால்) அப்போது நீங்களும் அவர்களைப் போன்றவர்களே என்று இவ் வேதத்தில் உங்களுக்கு அவன் அருளியுள்ளான். நயவஞ்சகர்களையும், (தன்னை) மறுப்போர் அனைவரையும் அல்லாஹ் நரகில் ஒன்று சேர்ப்பான். (அல்குர்ஆன் 4:140)
நமது வசனங்களில் (குறை காண்பதற்காக) மூழ்கிக் கிடப்பவர்களை நீர் காணும் போது அவர்கள் வேறு செய்தியில் மூழ்கும் வரை அவர்களைப் புறக்கணிப்பீராக! ஷைத்தான் உம்மை மறக்கச் செய்தால் நினைவு வந்த பின் அநீதி இழைத்த கூட்டத்துடன் நீர் அமராதீர்! (அல்குர்ஆன் 6:68)
அவர்கள் பொய் சாட்சி கூற மாட்டார்கள். வீணானவற்றைக் கடக்கும் போது கண்ணியமாகக் கடந்து விடுவார்கள். (அல்குர்ஆன் 25:72)
நல்ல சபைகளுக்குச் செல்ல வேண்டும்
திருக்குர்ஆன், நபிமொழிகளைக் கேட்டு அதன்படி நடக்க வேண்டும் என்ற தூய எண்ணத்துடன், நல்ல விஷயங்கள் நடக்கும் இடங்களுக்குச் செல்ல வேண்டும்.
அல்லாஹ்விடம் சில வானவர்கள் உள்ளனர். அவர்கள் அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றுவோரைத் தேடிய வண்ணம் தெருக்கல் சுற்றி வருகின்றனர். அல்லாஹ்வை நினைவு கூர்ந்து போற்றிக்கொண்டிருக்கும் ஒரு குழுவினரை அவர்கள் கண்டால் உங்கள் தேவையைப் பூர்த்தி செய்ய வாருங்கள் என்று அவர்கள் (தம்மில்) ஒருவரை ஒருவர் அழைக்கின்றனர். பின்னர் அந்த வானவர்கள் அல்லாஹ்வைப் போற்றுகின்றவர்களைத் தம் இறக்கைகளால் முதல் வானம் வரை சூழ்ந்து கொள்கின்றனர். அப்போது அவ்வானவர்கடம் அவர்களுடைய இறைவன் என் அடியார்கள் என்ன கூறுகின்றனர்? என்று கேட்கின்றான். அவ்வானவர்களைவிட அவனே தம் அடியார்களை நன்கறிந்தவனாவான். அவர்கள் உன்னைத் தூய்மையானவன் என்று கூறி துதிக்கின்றனர். உன்னைப் பெருமைப்படுத்திக்கொண்டும், உன்னைப் புகழ்ந்து கொண்டும், உன்னைப் போற்றிக் கொண்டும் இருக்கின்றனர் என்று வானவர்கள் கூறுகின்றனர்.
அதற்கு இறைவன், அவர்கள் என்னைப் பார்த்திருக்கிறார்களா? என்று கேட்பான். அதற்கு வானவர்கள், இல்லை; உன் மீதாணையாக! அவர்கள் உன்னைப் பார்த்ததில்லை என்று பதிலப்பார்கள். அதற்கு இறைவன், என்னைப் பார்த்திருந்தால் எப்படியிருப்பார்கள்? என்று கேட்பான். வானவர்கள், உன்னை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக உன்னை வழிபடுவார்கள்; இன்னும் கூடுதலாக உன்னைப் போற்றிப் புகழ்ந்து துதிப்பார்கள் என்று பதிலளிப்பார்கள்.
பின்னர் இறைவன், என்னிடம் அவர்கள் என்ன வேண்டுகின்றார்கள்? என்று (தனக்குத் தெரியாதது போலக்) கேட்பான். வானவர்கள், அவர்கள் உன்னிடம் சொர்க்கத்தைக் கேட்கின்றனர் என்பார்கள். அதற்கு இறைவன், அவர்கள் அதைப் பார்த்ததுண்டா? என்று கேட்பான். அதற்கு வானர்கள், இல்லை; உன் மீதாணையாக! அதிபதியே! அவர்கள் அதனைப் பார்த்ததில்லை என்பர். அதற்கு இறைவன், அவ்வாறாயின் அதனை அவர்கள் பார்த்திருந்தால் அவர்கள் நிலை எப்படியிருக்கும்? என்று கேட்பான். வானவர்கள், சொர்க்கத்தை அவர்கள் பார்த்திருந்தால் இன்னும் அதிகமாக அதன் மீது ஆசை கொண்டு, அதிக வேட்கையுடன் தீவிரமாக அதைத் தேடுவார்கள் என்று பதிலப்பார்கள்.
இறைவன், அவர்கள் எதிலிருந்து (என்னிடம்) பாதுகாப்புக் கோருகின்றனர்? என்று வினவுவான். வானவர்கள், நரகத்திலிருந்து (பாதுகாப்புக் கோருகின்றனர்) என்று பதிலளிப்பர். இறைவன், அதனை அவர்கள் பார்த்ததிருக்கிறார்களா? என்று கேட்பான். வானவர்கள், இல்லை; உன் மீதாணையாக! அதனை அவர்கள் பார்த்ததில்லை என்பர். அதற்கு இறைவன், அவ்வாறாயின் அவர்கள் அதைப் பார்த்திருந்தால் அவர்கள் நிலை என்னவாக இருந்திருக்கும்? என்று கேட்பான். வானவர்கள், நரகத்தை அவர்கள் பார்த்திருந்தால் நிச்சயம் அதிலிருந்து கடுமையாக வெருண்டோடுபவர்களாகவும் அதனை மிகவும் அஞ்சுபவர்களாகவும் இருப்பார்கள் என்பர். அப்போது இறைவன், ஆகவே (வானவர்களே!) அவர்களை நான் மன்னித்து விட்டேன் என்பதற்கு உங்களை நான் சாட்சிகளாக ஆக்குகிறேன் என்று கூறுவான்.
அந்த வானவர்கடையே உள்ள ஒரு வானவர், (அந்தக் குழுவினரிடையே அமர்ந்திருந்த) இன்ன மனிதன், உன்னைப் போற்றுகின்ற அவர்கல் உள்ளவன் அல்லன். அவன் ஏதோ தேவை நிமித்தமாகவே அங்கு வந்தான் என்பார். அதற்கு இறைவன், அவர்கள் ஒன்றாக அமர்ந்துள்ள நண்பர்கள். அவர்களுடன் வந்து அமர்ந்த ஒருவன் அவர்களால் (பாக்கியம் பெறுவானே தவிர) பாக்கியமற்றவனாக ஆகமாட்டான் என்று கூறுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (6408), முஸ்லிம் (5218)
யார் கல்வியைத் தேடி ஒரு பாதையில் நடக்கிறாரோ அவருக்கு அதன் மூலம் சொர்க்கத்திற்குச் செல்லும் பாதையை அல்லாஹ் எளிதாக்குகிறான். மக்கள் இறையில்லங்களில் ஒன்றில் ஒன்றுகூடி, அல்லாஹ்வின் வேதத்தை ஓதிக் கொண்டும் அதை ஒருவருக்கொருவர் படித்துக் கொடுத்துக் கொண்டும் இருந்தால், அவர்கள் மீது அமைதி இறங்குகிறது. அவர்களை இறையருள் போர்த்திக் கொள்கிறது. அவர்களை வானவர்கள் சூழ்ந்துகொள்கின்றனர். மேலும் இறைவன், அவர்களைக் குறித்துத் தம்மிடம் இருப்போரிடம் (பெருமையுடன்) நினைவு கூருகிறான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (5231)
சபை கலையும் போது ஓத வேண்டியவை
சபையில் இருக்கும் போது நம்மை அறியாமல் கூட நாம் தவறான காரியங்களில் ஈடுபட்டிருப்போம். எனவே அந்தக் காரியங்களுக்குப் பரிகாரமாக அமைய நபிகளார் காட்டித் தந்த துஆவை ஓதிய பின் கலைய வேண்டும்.
நபி (ஸல்) அவர்கள் சபையிலிருந்து எழுந்திருக்க நாடினால், ஸுப்ஹானக்கல்லாஹும்ம வ பிஹம்தி(க்)க அஷ்ஹது அன் லாஇலாஹ இல்லா அன்(த்)த அஸ்தக்ஃபிரு(க்)க வஅதூபு இலைக். (அல்லாஹ்வே...! நீ மிகத் தூய்மையானவன். உன்னைப் புகழ்கிறேன். உன்னைத் தவிர வேறு கடவுள் இல்லை என நான் உறுதியாக நம்புகிறேன். உன்னிடத்தில் மன்னிப்பைக் கோருகிறேன். உன்னிடத்தில் பிழை பொறுக்கத் தேடுகிறேன்) என்று கூறுவார்கள். இது தொடர்பாகக் கேட்ட போது, இது சபையில் நடந்தவற்றுக்கு (தவறுகளுக்கு) பரிகாரமாக அமையும் என்று கூறினார்கள். (நூல்: அபூதாவூத் (4217))
சபை தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் காட்டித் தந்த ஒழுக்கங்களைப் பேணி, இம்மையிலும் மறுமையிலும் வெற்றியடைவோம்.
தஸ்பீஹ் தொழுகை
(தஸ்பீஹ் தொழுகை தொடர்பாகப் பல கேள்விகள் வாசகர்களிடமிருந்து வந்துள்ளதாலும், பல இடங்களில் இத்தொழுகை ஒரு கடமையாக நிறைவேற்றப் படுவதாலும் ஏகத்துவம் மாத இதழில் வெளிவந்த இந்தக் கட்டுரையை மீண்டும் சில கூடுதல் விவரங்களுடன் சுருக்கமாக இங்கே தந்துள்ளோம். - ஆசிரியர்)
இஸ்லாமிய வணக்க வழிபாடுகளைக் கூடுதலாக நிறைவேற்ற வேண்டும் என எண்ணி, சிலர் மார்க்கம் சொல்லித் தராத பல வணக்கங்களைச் செய்து வருகின்றனர். உதாரணமாக பராஅத் நோன்பு, மிஃராஜ் நோன்பு போன்றவற்றைச் செய்கிறார்கள். இவற்றுக்கு எவ்வித ஆதாரமும் மார்க்கத்தில் கிடையாது.
இதைப் போன்று பலவீனமான, இட்டுக்கட்டப்பட்ட சில செய்திகளை அடிப்படையாகக் கொண்டும் சில வணக்கங்களைச் செய்கின்றனர். அவற்றில் ஒன்று தான் தஸ்பீஹ் தொழுகை. இந்தத் தஸ்பீஹ் தொழுகையைப் பற்றி பல செய்திகள் வந்தாலும் அவை அனைத்தும் பலவீனமானதாகவே இடம் பெற்றுள்ளன. இது குறித்து ஆதாரப்பூர்வமான எந்த ஹதீஸும் இடம் பெறவில்லை. அவற்றின் முழு விவரத்தையும் நாம் பார்ப்போம்.
இத்தொழுகையைத் தினமும் தொழ வேண்டும். முடியாதவர்கள் வாரத்தில் ஒருநாள் தொழவேண்டும். அதற்கும் முடியாதவர்கள் மாதத்தில் ஒருநாள் தொழ வேண்டும். அதற்கும் முடியாதவர்கள் வருடத்தில் ஒருநாள் தொழ வேண்டும். அதற்கும் முடியாதவர்கள் வாழ்நாளில் ஒரு நாளாவது தொழ வேண்டும் என்று வலியுறுத்திக் கூறுகின்றனர்.
இவ்வாறு தொழுபவரின் பாவங்கள் உலக நாட்கள் அளவிற்கு இருந்தாலும் வானத்தின் நட்சத்திரங்கள் அளவிற்கு இருந்தாலும் மழைத் துளியளவிற்கு இருந்தாலும் மன்னிக்கப்படும் என்று கடமையான ஐவேளைத் தொழுகைக்குக் கூடச் சொல்லாத சிறப்புகளைச் சொல்லியுள்ளனர்.
இந்தத் தொழுகையில் முதல் ரக்அத்தில் ஸனா ஓதியவுடன் 15 தடவை ஸுப்ஹானல்லாஹி வல்ஹம்து லில்லாஹி வலா இலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் என்று கூறவேண்டும். பின்னர் கிராஅத் ஓதிய பிறகு ருகூவுக்கு முன்னர், நிலையில் 10 தடை மேற்சொன்ன தஸ்பீஹை ஓத வேண்டும். பின்னர் ருகூவில் எப்போதும் ஓதும் தஸ்பீஹுக்குப் பின் மேற்சொன்ன தஸ்பீஹை 10 தடவை ஓதவேண்டும். பின்னர் ருகூவிலிருந்து எழுந்து 10 தடவையும், ஸஜ்தாவில் 10 தடவையும் இரண்டு இருப்பிற்கு இடையில் 10 தடவையும், இரண்டாவது ஸஜ்தாவில் 10 தடவையும் ஆக மொத்தம் ஒரு ரக்அத்தில் 75 தடவை மேற்கண்ட தஸ்பீஹை ஓத வேண்டும். இவ்வாறு ஒவ்வொரு ரக்அத்திலும் ஓதும் போது மொத்தம் நான்கு ரக்அத்தில் 300 தடவை ஏற்படும். இதைத் தான் தஸ்பீஹ் தொழுகை என்று கூறுகின்றனர். (ஆனால் இந்த முறைக்கு மாற்றமாகவும் சில செய்திகள் இடம் பெற்றுள்ளன)
இவ்வாறு சிலர் கூறுவதற்கு எந்த ஆதாரப்பூர்வமான செய்தியும் ஹதீஸ் நூல்களில் இடம் பெறவில்லை. இது தொடர்பாக சில செய்திகள் இடம் பெற்றிருந்தாலும் அவையனைத்தும் பலவீனமானவையாகும். அல்லது நபிகளார் பெயரைப் பயன்படுத்தி இட்டுக்கட்டிச் சொன்ன பொய்யான செய்திகளாகும். அவற்றின் விவரங்களை காண்போம்.
ஆதாரம்: 1
நபி (ஸல்) அவர்கள் அப்பாஸ் (ரலி) அவர்களை நோக்கி, என் பெரிய தந்தையே! உங்களுடன் உள்ள உறவுக் கடனை நிறைவேற்றட்டுமா? உங்களுக்குப் பிரதிபலன் எதிர்பார்க்காமல் வழங்கட்டுமா? உங்களுக்கு நான் பயனுள்ளதைக் கூறட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி), ஆம்! அல்லாஹ்வின் தூதரே! என்றார்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள், என் பெரிய தந்தையே! நீங்கள் நான்கு ரக்அத்கள் தொழுங்கள்! ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் இன்னொரு அத்தியாயத்தையும் ஓதுங்கள்!
ஓதி முடித்ததும் அல்லாஹு அக்பர், அல்ஹம்துலில்லாஹ், ஸுப்ஹானல்லாஹ் வலாயிலாஹ இல்லல்லாஹ் என்று ருகூவிற்கு முன் 15 தடவை கூறுவீராக! பின்னர் ருகூவு செய்து அதில் 10 தடவை அதனைக் கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் ஸஜ்தாச் செய்து அதிலும் பத்து தடவை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி, அதிலும் 10 தடவை கூறுவீராக. பின்னர் ஸஜ்தா செய்து அதிலும் 10 தடவை அதனை கூறுவீராக! பின்னர் தலையை உயர்த்தி எழுவதற்கு முன்னால் பத்து தடவை கூறுவீராக!
ஒவ்வொரு ரக்அத்திலும் இவ்வாறு எழுபத்து ஐந்து தடவைகள், நான்கு ரக்அத்துகளிலும் மொத்தம் முன்னூறு தடவைகள் செய்தால் அடர்ந்த மணல் எண்ணிக்கையளவு உமது பாவங்கள் இருந்தாலும் அல்லாஹ் உம்மை மன்னித்து விடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அதற்கு அப்பாஸ் (ரலி) அல்லாஹ்வின் தூதரே! தினமும் இதைச் செய்ய யாருக்கும் இயலுமா? என்று கேட்டார்கள்.
அதற்கு நபி (ஸல்) அவர்கள் தினமும் உமக்குச் செய்ய இயலாவிட்டால் வாரம் ஒரு முறை செய்வீராக! வாரத்தில் ஒரு முறை செய்ய இயலாவிட்டால் ஒரு மாதத்தில் ஒரு தடவை செய்வீராக! இவ்வாறு சொல்லிக் கொண்டே வந்து ஒரு வருடத்தில் ஒரு தடவை செய்யுமாறு கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூராஃபிவு (ரலி), நூல்கள்: திர்மிதீ (444), இப்னுமாஜா (1376) அபூராஃபிவு (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி திர்மிதீ, இப்னுமாஜா, ஆகிய நூல்களுடன் இமாம் பைஹகீ அவர்களின் அஸ்ஸுனனுஸ் ஸுக்ரா, இமாம் தப்ரானீ அவர்களின் அல்முஃஜமுல் கபீர் ஆகிய நான்கு நூல்களில் இடம்பெற்றுள்ளது.
இந்த அனைத்து நூல்களிலும் மூஸா பின் உபைதா என்ற அறிவிப்பாளர் இடம்பெற்றுள்ளார். இவரை ஹதீஸ் கலை வல்லுநர்கள் கடுமையாகக் குறை கூறியுள்ளார்கள். இதில் இமாம் புகாரி, அவரது ஆசிரியர் இப்னு மயீன், மற்றும் இமாம் அஹ்மத் பின் ஹன்பல் ஆகியோர் குறிப்பிடத்தக்கவர்கள்.
குறிப்பாக இந்த ஹதீஸைப் பதிவு செய்த இமாம் திர்மிதி அவர்கள் இவரை ஹதீஸ் கலை வல்லுநர்கள் பலவீனமாக்கியுள்ளார்கள் என்று குறிப்பிட்டுள்ளார்கள். (நூல்: திர்மிதி 1087, 3262)
இவரைப் பற்றி இமாம் புகாரியிடம் இமாம் திர்மிதீ அவர்கள் கேட்ட போது, முஜாலித், மூஸா பின் உபைதா ஆகியோரின் ஹதீஸ்களை நான் எழுதிக் கொள்ள மாட்டேன் என இமாம் புகாரீ குறிப்பிட்டார்கள். (நூல்: இலலுத் திர்மிதீ அல்கபீர், பாகம்: 1, பக்கம்: 309)
எனது கருத்துப்படி மூஸா பின் உபைதா என்பவரின் அறிவிப்புகளைப் பதிவு செய்வது அனுமதி இல்லை என்று இமாம் அஹ்மத் பின் ஹன்பல் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: அல்காமில் லி இப்னு அதீ, பாகம்: 6, பக்கம்: 334) இவருடைய ஹதீஸ்களை ஆதாரமாகக் கொள்ளக் கூடாது என்று இப்னுமயீன் அவர்கள் குறிப்பிட்டார்கள். (நூல்: தஹ்தீபுத்தஹ்தீப், பாகம்: 10, பக்கம்: 320)
இதைப் போன்று இன்னும் பல அறிஞர்களும் இந்த அறிவிப்பாளரை குறை கூறியுள்ளதால் இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொண்டு செயல்பட முடியாது.
ஆதாரம்: 2
நபி (ஸல்) அவர்கள் என்னிடம் கூறினார்கள்: நீ என்னிடம் நாளை வா! நான் உனக்கு பிரதிபலன் எதிர்பார்க்காத அன்பளிப்பை வழங்குகிறேன், உனக்கு நன்மையைத் தருகிறேன். உனக்கு ஒரு கொடையை அளிக்கின்றேன் என்றார்கள். எனக்கு ஏதோ அன்பளிப்பைத் தருவார்கள் என்று எண்ணினேன். (அப்போது) பகல் சாயும்போது நீ எழு! நான்கு ரக்அத்கள் தொழு! (என்று கூறி முன்னர் அபூ ராஃபிவு (ரலி) அறிவித்ததைப் போன்று கூறினார்கள்.) பின்னர் உனது தலையை இரண்டாவது ஸஜ்தாவிலிருந்து உயர்த்தி சரியாக அமர்ந்து கொள்! ஸுப்ஹானல்லாஹ் 10 தடவை, அல்லஹம்து லில்லாஹ் 10 தடவை, அல்லாஹு அக்பர் 10 தடவை லாயிலாஹ இல்லல்லாஹ் 10 தடவை கூறாமல் எழாதே! பின்னர் இதைப் போன்று நான்கு ரக்அத்திலும் செய்! இவ்வுலகத்தில் உள்ளவர்களிலேயே மிகப்பெரிய அளவு பாவத்தை நீ செய்திருந்தாலும் இவ்வாறு செய்ததால் உனது பாவங்கள் மன்னிக்கப்படும் என்றார்கள். அப்போது நான், அந்நேரத்தில் தொழ முடியவில்லையானால்? என்று கேட்டதற்கு, பகலில், இரவில் ஏதாவது ஒரு நேரத்தில் தொழுது கொள்! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), நூல்: அபூதாவூத் (1105)
அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தி பைஹகீ என்ற நூலிலும் பதிவு செய்யப்பட்டுள்ளது. (ஹதீஸ் எண்: 4698) இந்த ஹதீஸிலும் அபூதாவூதின் அறிவிப்பாளர் தொடரே இடம் பெற்றுள்ளது.
சில அறிவிப்புகளில் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாகவும் சில அறிவிப்புகளில் நபிகளாரின் கூற்றாகவும் இடம் பெற்றுள்ளது.
ஒரு அறிவிப்பில் நபி (ஸல்) அவர்கள், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபுல் ஜவ்ஸாயி, அம்ர் பின் மாலிக்...... என்ற தொடரில் அமைந்துள்ளது.
இந்த அறிவிப்பாளர் தொடரில் நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. மற்றொரு அறிவிப்பாளர் தொடரில், அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி), அபுல் ஜவ்ஸாயி, அல்முஸ்தமிர் பின் ரய்யான்.... என்று இடம் பெற்றுள்ளது.
இந்த அறிவிப்பாளர் தொடரில் நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அல்லாமல் அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்களின் சொந்தக் கூற்றாக இடம் பெற்றுள்ளது.
நபி (ஸல்) அவர்களின் கூற்றாக அறிவிக்கப்பட்டுள்ள அறிவிப்பாளர் தொடரில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் அம்ர் பின் மாலிக் என்பவர் பலவீனமானவராவார்.
இவரைப் பற்றி வந்துள்ள விமர்சனங்களைப் பார்ப்போம்.
அம்ர் பின் மாலிக் அந்நுக்ரீ பஸரீ என்பவர் நம்பமானவர்களிடமிருந்து மறுக்கப்பட வேண்டிய செய்திகளை அறிவிப்பவர். மேலும் ஹதீஸ்களைத் திருடுபவர். அம்ர் பின் மாலிக் அந்நுக்ரீ என்பவரை அபூயஃலா அவர்கள் பலவீனமானவர் என்று கூற நான் கேட்டுள்ளேன் என்று இப்னு அதீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள். (நூல்: அல் காமில் ஃபீ லுஅஃபாயிர் ரிஜால், பாகம்: 5, பக்கம்: 150)
இதே கருத்தை இப்னுல் ஜவ்ஸீ அவர்கள் அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன் என்ற நூலில் (பாகம்: 2, பக்கம்: 231) எடுத்தெழுதியுள்ளார்கள்.
எனவே இந்தச் செய்தியை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இரண்டாவதாக இடம் பெறும் செய்தி நபித்தோழரின் சொந்தக் கூற்றாக இடம் பெற்றுள்ளது.
ஒரு குறிப்பிட்ட வணக்க முறையைக் கூற வேண்டுமானால் அல்லாஹ்வோ அல்லது அவனது தூதரோ மட்டுமே கூற முடியும். மற்றவர்கள் கூறும் முறைகள் ஏற்றுக் கொள்ளத்தக்கதல்ல. எனவே இவ்விஷயத்தில் நபித்தோழரின் கூற்றை ஆதாரமாகக் கொள்ள முடியாது.
ஆதாரம்: 3
உமக்கு அன்பளிப்பு வழங்கவா? உபகாரம் செய்யவா? தானம் செய்யவா? உன்னைத் தேர்வு செய்யவா? வழங்கட்டுமா? வழங்கட்டுமா? என்றார்கள். அப்போது நான் பஹ்ரைன் நாட்டின் செல்வத்தை வழங்குவார்கள் என்று எண்ணினேன்.
நீ நான்கு ரக்அத்கள் தொழு! ஒவ்வொரு ரக்அத்திலும் பாத்திஹா அத்தியாயத்தையும் மற்றொரு அத்தியாயத்தையும் ஓது! பின்னர் அல்ஹம்து லில்லாஹ் வஸுப்ஹானல்லாஹ் வல்லாஹு அக்பர் வலாயிலாஹ இல்லல்லாஹு இதை 15 தடவை கணக்கிட்டு (ஓதிக்) கொள். பின்னர் நீர் ருகூவு செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பிறகு தலையை உயர்த்தி நின்ற நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் தலை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் ஸஜ்தா செய்து ஸஜ்தா செய்த நிலையில் அதை 10 தடவை கூறு! பின்னர் தலையை உயர்த்தி அமர்ந்த நிலையில் அதை 10 தடவை கூறு! இவை மொத்தம் 75 தடவையாகும். இதைப் போன்று மீதமுள்ள மூன்று ரக்அத்திலும் செய். இவற்றின் மொத்தம் 300 ஆகும். இந்த தஸ்பீஹை (1.அல்ஹம்து லில்லாஹ் 2. ஸுப்ஹானல்லாஹ் 3.அல்லாஹு அக்பர் 4. லாயிலாஹ இல்லல்லாஹு என்று நான்காக) பிரித்து எண்ணினால் அதனுடைய மொத்தம் 1200 ஆகும். பாத்திஹா அத்தியாயத்திற்குப் பிறகு இருபது ஆயத்துகள் அல்லது அதை விட அதிகமாக ஓது! இத்தொழுகையை பகல் அல்லது இரவில் அல்லது வாரத்தில் ஒரு நாள், அல்லது மாதத்தில் ஒரு நாள், வருடத்தில் ஒரு நாள், அல்லது வாழ்நாளில் ஒரு நாள் தொழு! (அவ்வாறு தொழுதால்) உனது பாவங்கள், வானத்தின் நட்சத்திரம் அளவிற்கு அல்லது மழைத் துளிகள் அளவிற்கு அல்லது அதிகமான மணல் அளவிற்கு அல்லது காலத்தின் நாட்கள் அளவிற்கு இருந்தாலும் அல்லாஹ் உனது பாவங்களை மன்னிப்பான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி)
நூல்: முஸன்னஃப் அப்துர்ரஸ்ஸாக் (5004)
இச்செய்தியில் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை அடுத்து தாபியீன்களின் இடத்தில் இடம் பெறும் இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவர் நாம் அறிந்தவரை தாபியீன்கள் பட்டியலில் இடம் பெறவில்லை. இவர் தாபியீன்களுக்கு அடுத்த தலைமுறையில் இடம் பெற்றுள்ளார். மேலும் அவர் பலவீனமானவரும் கூட.
இஸ்மாயீல் பின் ராஃபிவு என்பவர் தாபியீன் என்று முடிவு செய்தாலும் கூட, அவர் ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களிடம் எதையும் கேட்டிருக்க முடியாது. காரணம், ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள் ஹிஜ்ரீ 8ம் ஆண்டு நடந்த மூத்தா போரில் கொல்லப்பட்டு விட்டார்கள். (பார்க்க: புகாரீ, ஹதீஸ் எண்: 4260, 4261 மற்றும் பத்ஹுல் பாரீ) இந்தச் செய்தியை ஜஅஃபர் பின் அபீதாலிப் அவர்களிடம் செவியுற்றவராக இருந்தால் அவர் நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வாழ்ந்த நபித்தோழராகத் தான் இருக்க முடியும். எனவே அவர் ஜஅஃபர் (ரலி) அவர்களிடம் கேட்டிருக்க வாய்ப்பில்லை.
இன்னும் தெளிவாகச் சொல்வதானால் ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களுக்குப் பின் வாழ்ந்திருந்தால் மட்டுமே தாபியீன்களால் அவர்களிடம் கேட்டிருக்க முடியும். நபி (ஸல்) அவர்கள் காலத்திலேயே அவர்கள் கொல்லப்பட்டு விட்டதால் அவர்கள் கூறிய செய்தியை ஒரு நபித்தோழர் கேட்டு அவர் நபி (ஸல்) அவர்கள் காலத்திற்குப் பிறகு வாழ்ந்திருந்தால் தான் தாபியீன்கள் கேட்க முடியும். எனவே இச்செய்தி தொடர்பு அறுந்த செய்தி என்பது தெளிவாகிறது. எனவே இதையும் தஸ்பீஹ் தொழுகைக்கு ஆதாரமாகக் கொள்ளமுடியாது.
ஆதாரம்: 4
நபி (ஸல்) அவர்கள், ஜஅஃபர் பின் அபீதாலிப் (ரலி) அவர்களை எத்தியோப்பியாவிற்கு அனுப்பி வைத்தார்கள். அவர்கள் திரும்பி வந்த போது நபி (ஸல்) அவர்கள், அவரைக் கட்டியணைத்தார்கள், இரு கண்களுக்கு இடையில் முத்தமிட்டார்கள். பின்னர், உமக்கு அன்பளிப்பு வழங்கவா? நற்செய்தி கூறவா? உபகாரம் செய்யவா? காணிக்கை தரவா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! ஆம் என்றேன். நான்கு ரக்அத்கள் தொழு! அதில் ஒவ்வொரு ரக்அத்திலும் அல்ஹம்து அத்தியாயத்தையும் ஒரு (துணை) அத்தியாயத்தையும் ஓது! பின்னர் ஓதி முடித்ததும் நீ நின்ற நிலையில் ருகூவுக்கு முன்னர் ஸுப்ஹானல்லாஹ் வல்ஹம்து லில்லாஹ். வலாயிலாஹ இல்லல்லாஹு வல்லாஹு அக்பர் வலா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று 15 தடவை கூறு! பின்னர் ருகூவு செய்! பின்னர் அதை 10 தடவை கூறு! பின்னர் ருகூவில் இருந்து எழுந்து அதை 10 தடவை கூறு! இரண்டாம் ரக்அத்தைத் துவங்குவதற்கு முன்னர் இந்த ரக்அத் முழுவதற்கும் இவ்வாறே செய்து கொள்! நான்கு ரக்அத்துகளை நீ முடிக்கின்ற வரை நான் வர்ணித்ததைப் போன்று (மீதமுள்ள) மூன்று ரக்அத்திலும் (இவ்வாறே செய்!) என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி), நூல்: ஹாகிம் 1196
இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் இந்தச் செய்தியும் ஆதாரப்பூர்வமானது அல்ல.
இச்செய்தியைப் பற்றி ஹாகிம் அவர்கள் ஆதாரப்பூர்வமானது என்று கூறியிருப்பதும், இந்தக் கூற்றின் அடிப்படையில் இமாம் தஹபீ அவர்கள் தமது தல்கீஸ் என்ற நூலில் இந்த ஹதீஸ் ஆதாரப்பூர்வமானது என்று கூறியிருப்பதும் தவறானதாகும்.
இச்செய்தியில் இடம் பெறும் ஏழாவது அறிவிப்பாளர் அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவர் கடுமையாக விமர்சிக்கப்பட்டவர். இமாம் தஹபீ அவர்களே மீஸானுல் இஃதிதால் என்ற நூலில் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்கள்.
அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரை இமாம் தாரகுத்னீ, மற்றும் அவரல்லாதவர்களும் பொய்யர் என்று கூறியுள்ளார்கள். சுவர்க்கத்தின் திறவுகோல் ஏழைகளாவர். யாசிப்போர் அல்லாஹ்வின் நெருங்கிய நண்பர்களாவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக உள்ள அறிவிப்பு அவர் அறிவித்த பொய்யான செய்திகளில் ஒன்றாகும். (நூல்: மீஸானுல் இஃதிதால், பாகம்: 1, பக்கம்: 232)
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், அஹ்மத் பின் தாவூத் பின் அப்துல் கஃப்ஃபார் என்பவரைப் பற்றி இவ்வாறு கூறுகிறார்கள்.
அஹ்மத் பின் தாவூத் என்பவர் முற்றிலும் பலவீனமானவராவார். இவரைப் பொய்யர் என்று (ஹதீஸ் கலை வல்லுனர்கள்) குற்றம் சுமத்தியுள்ளனர். (நூல்: தல்கீஸுல் ஹபீர் பாகம் 4, பக்கம் 96)
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் அஹ்மத் பின் தாவூத் என்பவரைப் பற்றி தனது லிஸானுல் மீஸான் என்ற நூலில் இவ்வாறு கூறுகிறார்கள்.
ஜஅஃபர் பின் அபீ தாலிப் (ரலி) அவர்களுக்கு தஸ்பீஹ் தொழுகையை கற்றுக் கொடுத்ததாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியை (இமாம் ஹாகிம் அவர்கள்) ஆதாரப்பூர்வமானது, அதன் மீது எந்தப் (பலவீனம் என்ற) புழுதியும் படியவில்லை என்று கூறியுள்ளார். ஆனால் இது இருள் நிறைந்ததாகும். ஒளியுடையது அல்ல. (இதில் இடம் பெறும்) அஹ்மத் பின் தாவூத் என்பவரை இமாம் தாரகுத்னீ விமர்சனம் செய்துள்ளார் என்று அந்நூலின் ஓர உரையில் எங்கள் ஆசிரியர்கள் அதை விமர்சனம் செய்துள்ளனர். (நூல்: லிஸானுல் மீஸான், பாகம்: 1, பக்கம்: 368)
எனவே தஸ்பீஹ் தொடர்பாக இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கும் செய்தியும் பலவீனமானதாகும்.
ஆதாரம்: 5
நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் கூறினார்கள். அலீயே! உனக்கு அன்பளிப்பு வழங்கட்டுமா? என்றார்கள்.....(என்று முழு ஹதீஸையும் குறிப்பிட்டார்கள்) அப்போது நான் திஹாமா மலையளவு தங்கத்தை எனக்குத் தருவார்கள் என்று எண்ணினேன். அப்போது நீ தொழுகையில் நிற்கும் போது ஸுப்ஹானல்லாஹ், அல்ஹம்து லில்லாஹ், லாயிலாஹ இல்லல்லாஹு என்று 15 தடவை கூறு! என்று கூறினார்கள்........ (பின்னர் தஸ்பீஹ் தொடர்பான முழுமையான செய்தியைக் குறிப்பிட்டார்கள்)
அறிவிப்பவர்: குஃப்ராவின் அடிமை உமர்
நூல்: தாரகுத்னீ
இமாம் தாரகுத்னீ, கிதாபு ஸலாத்துத் தஸ்பீஹ் என்ற நூலில் பதிவு செய்த அலீ (ரலி) அவர்களின் இச்செய்தியைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் இவ்வாறு கூறுகிறார்கள்.
மேற்கூறப்பட்ட ஹதீஸில் பலவீனமானதாகவும் தொடர்பு அறுந்தும் உள்ளது.
(நூல்: மவ்ஸுஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1 பக்கம்: 643)
ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் ஏன் பலவீனமானது என்று கூறியுள்ளார்கள் என்பதன் விபரத்தைக் காண்போம்.
இச்செய்தியில் இடம் பெறும் குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் பலவீனமானவராவார்.
குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் பலவீனமானவராவார் என்று இமாம் நஸயீ அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்லுஅஃபாவு வல் மத்ரூகீன், பாகம்: 1, பக்கம்: 81)
குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் செய்திகளை மாற்றி அறிவிப்பவர்களில் ஒருவர். நம்பகமானவரிடமிருந்து உறுதியானவர்களின் ஹதீஸுக்கு ஒப்பில்லாததை அறிவிப்பார். இவரை ஆதாரமாகக் கொள்வது கூடாது. படிப்பினைக்காகவே தவிர அவரைப் பற்றி நூற்களில் எழுதக் கூடாது என்று இப்னு ஹிப்பான் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: அல்மஜ்ரூஹீன், பாகம்: 2, பக்கம்: 81) குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் நபித்தோழர்களில் எவரிடமாவது கேட்டுள்ளாரா? என்று இப்னு மயீன் அவர்களிடம் கேட்டனர். அதற்கவர்கள், நபித்தோழர்களில் எவரிடமும் அவர் கேட்டதில்லை என்று பதிலளித்தார்கள்.
(நூல்: தாரீக் இப்னு மயீன், பாகம்: 3, பக்கம்: 220)
நபித்தோழர்களிடத்தில் கூட எந்தச் செய்தியையும் கேட்டிராத குஃப்ராவின் அடிமை உமர் பின் அப்துல்லாஹ் என்பவர் தஸ்பீஹ் தொழுகையை அலீ (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் கற்றுக் கொடுத்ததாக அறிவிக்கிறார். நபி (ஸல்) அவர்கள் காலத்தில் பிறக்காத இவர், நபி (ஸல்) அவர்கள் காலத்தில் நடந்த செய்தியை அறிவிப்பதால் தான் இச்செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தி என்று ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.
எனவே அலீ (ரலி) அவர்கள் அறிவிக்கும் தஸ்பீஹ் தொழுகை தொடர்பான செய்தி பலவீனமானதாகும்.
ஆதாரம்: 6
நான்கு ரக்அத்கள் தொழு. அதை நீ செய்தால்....... (என்று தொடங்கும் தஸ்பீஹ் தொழுகையைப் பற்றிய ஹதீஸை) ஃபழ்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் வழியாக அபூ ராஃபிவு அறிவிக்கும் செய்தியை அபூ நுஅய்ம் அவர்கள் அல்குர்பான் என்ற நூலில் குறிப்பிடுகிறார்கள்.
(நூல்: மவ்ஸூஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 642)
இச்செய்தியை அறிவிக்கும் அபூராஃபிவு என்பவரைப் பற்றி ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள், இவர் யார்? இவரின் தந்தை யார்? என்பதைப் பற்றி நான் அறியவில்லை. இதில் இடம் பெறும் அபூராஃபிவு என்பவர் நபித்தோழர் அபூராஃபிவு (ரலி) அல்ல. என் கருத்தின்படி பலவீனமான அறிவிப்பாளரில் ஒருவரான இஸ்மாயில் பின் ராஃபிவு என்பவரே இவர் என்று கூறுகிறார்கள்.
(நூல்: மவ்ஸூஆ அல்ஹாபிழ் இப்னு ஹஜர், பாகம்: 1, பக்கம்: 642)
நாமும் தேடிய வரை இச்செய்தில் இடம் பெறும் அபூராஃபிவு என்பவர் யார் எனத் தெரியவில்லை. ஹாபிழ் இப்னு ஹஜர் அவர்கள் சொன்ன அடிப்படையில் தான் இருக்க வாய்ப்புள்ளது. எனவே இச்செய்தியையும் ஆதாரமாகக் கொள்ள முடியாது.
இன்ஷா அல்லாஹ் அடுத்த இதழில்...
எது முன்னேற்றம்?
மகளிர் தின சிந்தனைகள்
இப்னு சாபிரா
மார்ச் 8, உலக மகளிர் தினம் உலகமெங்கிலும் கோலாகலமாகக் கொண்டாடப்பட்டது. பெண்கள் மீது அக்கறையைக் காட்டும் வண்ணம் தலைவர்கள் வெளியிட்ட அறிக்கைகள்! பெண்கள் மேம்பாட்டிற்கான கோஷங்கள் காதுகளைப் பிளக்க வைத்தன.
மகளிர் தினத்தன்று பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்திற்கு எடுத்து வைக்கப்பட்ட ஆதாரங்கள்:
அடுப்பு ஊதும் பெண்ணிற்குப் படிப்பெதற்கு என்ற காலம் மலையேறிப் போய், பெண்கள் கல்வித் துறையில் ஆண்களை மிஞ்சிவிட்டனர்.
வீட்டிற்கு வெளியே வந்தாலே அதிசயமாகப் பார்க்கப்பட்ட பெண், விண்வெளிப் பயணம் வரை செல்லுமளவிற்கு முன்னேற்றம்.
உலகத்தில் அதிக ஊதியம் பெறக் கூடியவராக உயர்ந்த பதவியில் இந்திரா நூயி என்ற பெண்மணி தான் இருக்கிறார்.
இந்திய வரலாற்றில் முதல் முறையாக ஒரு பெண்மணி குடியரசுத் தலைவர் பதவியை வகித்துக் கொண்டு பாராளுமன்றத்திலே முதல் முறையாக உரையை நிகழ்த்தினார்.
உலகத்தின் தற்போதைய வல்லரசாகக் கருதப்படும் அமெரிக்காவிலும் கூட ஜனாதிபதி பதவிக்கு ஒரு பெண் போட்டியிடும் அளவிற்கு முன்னேற்றம்.
இந்தியா உள்பட பல நாடுகளில் அரசியல் ரீதியாகப் பெண்கள் உயர்ந்த பதவியில் இருக்கும் யதார்த்த நிலை.
நகர்மன்றங்களிலும் ஊராட்சிகளிலும் பெண்களுக்கு என ஒதுக்கப்பட்டுள்ள தனி வார்டுகள்.
இவ்வாறு பல படித்தரங்களை பெண் சமுதாயம் அடைந்து விட்டதாக உரைகளின் வாயிலாகவும் செய்தித் தாள்கள் வாயிலாகவும் தொலைக்காட்சிகளின் சிறப்புச் செய்திகளின் வாயிலாகவும் அறிய முடிந்தது.
இந்த ஆண்டு மகளிர் தினத்தில் மிகவும் வலியுறுத்தி வைக்கப்பட்ட கோரிக்கைகள் சில:-
பாராளுமன்றத்திலும் சட்டமன்றங்களிலும் பெண்களுக்கு 33 சதவிகிதம் இட ஒதுக்கீடு வேண்டும்.
ஆண்களுக்கு நிகராகப் பெண்கள் வெளியே சென்று வேலை செய்வதால் வீட்டு வேலைகளில் பெண்களுடன் சேர்ந்து ஆண்களும் பங்கெடுக்க வேண்டும்.
இவையெல்லாம் ஒரு புறமிருக்க, பெண்களைப் போகப் பொருட்களாகக் காட்டும் சினிமாக்களைப் பற்றியும் சின்னத்திரைகளைப் பற்றியும் ஒரு சிறு கருத்தைக் கூட யாரும் கூறவில்லை. இதுவும் பெண்கள் அடைந்து விட்ட முன்னேற்றத்தின் அறிகுறியா? அல்லது இவ்வாறு காட்சிப் பொருட்களாக ஆக்கப்படுவதை நவீன சமுதாயம் ஆதரிக்கிறதா?
எவ்வளவு தான் கல்வியில் முன்னேறி விட்டாலும் அமெரிக்கா உள்ளிட்ட பொருளாதாரத்தில் செழிப்பான நிலையிலுள்ள நாடுகளில் பணியாற்றினாலும், ஒரு பெண்ணைத் திருமணம் செய்து கொண்டு வரதட்சணை கேட்டுக் கொடுமைகளை நிகழ்த்தும் வக்கிர புத்தியுள்ளவர்களின் (மாமியார் என்ற பெண் உள்பட) கொடூரங்களிலிருந்து பெண்ணினத்தைக் காப்பாற்ற என்ன வழி?
சமுதாயத்தில் சம அந்தஸ்து எனக் கருதப்படக் கூடிய வேலை வாய்ப்புகளில் பெண்களின் பங்கு கணிசமாக இருந்தாலும் வேலை செய்யும் இடத்திலும் அதற்கு வெளியேயும் பெண்களுக்கு இழைக்கப்படும் தொல்லைகளிலிருந்து பெண்ணினம் விடுபட என்ன தீர்வு?
இந்தக் கேள்விகளுக்கெல்லாம் விடையைத் தேடாமல் வெறும் கோஷங்களுடன் முன்னேற்றம் என மார்தட்டிக் கொள்வதில் எவ்விதப் பயனுமில்லை.
நாம் வாழக்கூடிய காலச் சூழ்நிலையில் நம்முடைய சமுதாயப் பெண்களுக்கும் நிறையவே பொறுப்பு இருக்கிறது. உணர்வுகளுக்கு ஆட்படுத்த வைக்கும் சீரியல்கள் மற்றும் சினிமா போன்ற மாயைகளிலிருந்து நம் சமுதாயப் பெண்மணிகள் வெளியே வந்து, சமுதாயத்தின் கல்வி நிலையை மேம்படுத்த எல்லா வித முயற்சிகளையும் மேற்கொள்ள வேண்டும். மத்திய அரசு அமைத்த சச்சார் கமிட்டி, முஸ்லிம்களின் பொருளாதார மற்றும் கல்வி நிலையை தெளிவாகப் படம் பிடித்துக் காட்டியது. இத்துயர நிலையிலிருந்து சமுதாயம் விடுபட பெண்களின் பங்கு மிகவும் அவசியமானது.
நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் உருவாக்கிய சமுதாயத்தில் பெண்ணினத்திற்கு உத்தமத் தோழர்கள் கொடுத்த கண்ணியத்தைப் பாருங்கள்.
என்னிடத்தில் நபி (ஸல்) அவர்கள், திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே! என்று கேட்டார்கள். நான் ஆம் என்று கூறினேன். கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா? என்று கேட்டார்கள். நான், (கன்னிப் பெண்ணை) அல்ல; கன்னி கழிந்த பெண்ணைத் தான் என்று கூறினேன். உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந்தனர். எனவே பக்குவமில்லாத அவர்களைப் போன்று இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரி விட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்து வரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ செய்தது சரி தான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: ஜாபிர் (ரலி), நூல்: புகாரி (4052)
(என் சகோதரிகளான) சிறு பெண் குழந்தைகளை விட்டு விட்டுச் சென்று விட்டார்கள். அவர்களுக்குக் கல்வி கற்றுக் கொடுப்பதற்காகவும் ஒழுக்கம் கற்பிப்பதற்காகவும் வாழ்ந்த அனுபவமுள்ள ஒரு பெண்ணையே நான் மணமுடித்துக் கொண்டேன். (புகாரி 2406)
இவ்வாறு ஒவ்வொரு தாய்மார்களும் தங்களுடைய குழந்தைகளைப் பராமரித்து, கல்வி எனும் செல்வத்தைப் புகட்டினார்கள் என்றால் நம் சமுதாயம் முன்னோக்கிச் செல்லும் நாள் வெகு தொலைவில் இல்லை.
நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாயே! நீங்கள் ஒவ்வொருவரும் அவரவர் பொறுப்பு குறித்து (மறுமையில்) விசாரிக்கப்படுவீர்கள்: (ஆட்சித்) தலைவரும் பொறுப்பாளரே. ஆண்மக(னான குடும்பத் தலைவ)னும் தன் மனைவி மக்கன் பொறுப்பாளன் ஆவான். பெண் (மனைவி), தன் கணவனின் வீட்டுக்கும் அவனுடைய குழந்தைகளுக்கும் பொறுப்பாயாவாள். ஆக, நீங்கள் ஒவ்வொருவரும் பொறுப்பாளரே. நீங்கள் ஒவ்வொருவரும் தத்தமது பொறுப்பு குறித்து விசாரிக்கப்படுவீர்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி (5200)
இதைப் போலவே சமுதாயத்தில் புரையோடி இருக்கும் வரதட்சணை உள்பட எல்லா தீமைகளை ஒழித்து கட்டுவதிலும் ஆண்களுக்கு ஈடாகப் பெண்களுக்கும் பங்கு உள்ளது என்பதை சகோதரிகள் மனதில் பதிய வைக்க வேண்டும்.
நம்பிக்கை கொண்ட ஆண்களும், பெண்களும் ஒருவர் மற்றவருக்கு உற்ற நண்பர்கள். அவர்கள் நன்மையை ஏவுவார்கள். தீமையைத் தடுப்பார்கள். தொழுகையை நிலை நாட்டுவார்கள். ஸகாத்தையும் கொடுப்பார்கள். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவார்கள். அவர்களுக்கே அல்லாஹ் அருள்புரிவான். அல்லாஹ் மிகைத்தவன்; ஞானமிக்கவன். (அல்குர்ஆன் 9:71)
மேலும் நம்முடைய ஈருலக வாழ்வும் வளம் பெற இஸ்லாமிய மார்க்கம் நமக்குத் தெளிவான போதனைகளையும் அறிவுரைகளையும் வழங்கியுள்ளது. பெண்ணினத்தைக் கொடுமைப்படுத்திய மனங்கள் பண்பட்டு, அவர்களுக்கு உரிய மரியாதையைக் கொடுப்பதற்குக் காரணமாக அமைந்த அந்த அறிவுரைகளை நம்முடைய வாழ்வில் மிளிரச் செய்ய ஒவ்வொரு பெண்மணியும் சபதம் எடுக்க வேண்டும்.
பெண்கள் நபி (ஸல்) அவர்களிடம், எங்களுக்கும் ஒரு நாள் (உபதேசத்திற்காக) ஒதுக்குங்களேன் எனக் கேட்டுக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள், பெண்களுக்கு ஒருநாள் உபதேசம் செய்தார்கள். அதில் ஒரு பெண்ணுக்கு மூன்று குழந்தைகள் இறந்து விட்டால் அவர்கள் அப்பெண்ணை நரகத்திலிருந்து காக்கும் திரையாக ஆகி விடுவார்கள் எனக் கூறியதும் ஒரு பெண் இரு குழந்தைகள் இறந்தால்...? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இரு குழந்தைகள் இறந்தாலும் தான் என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஸயீத் (ரலி), நூல்: புகாரி (1249)
அல்லாஹ்வுடைய மாபெரும் கிருபையால் தமிழகத்திலே தவ்ஹீத் எழுச்சிக்குப் பின்னர் பெண் ஆலிமாக்களின் எண்ணிக்கை கணிசமாக இருப்பதால் அவர்களைக் கொண்டு சமுதாயத்தில் சத்திய மார்க்கத்தை நிலை நாட்ட பெண்கள் முயற்சிக்க வேண்டும். வாரத்தில் ஒரு நாளாவது பெண்களுக்கான மார்க்க நிகழ்ச்சிகளை ஏற்படுத்தி பெண்கள் மத்தியில் விழிப்புணர்வு ஏற்பட முயற்சி செய்ய வேண்டும்.
வல்ல ரஹ்மான் நம் அனைவரையும் குர்ஆன் மற்றும் நபிமொழிகளின் அடிப்படையில் வாழச் செய்து, நம்முடைய ஈருலகங்களையும் செழிக்கச் செய்வானாக!
மீஸான்
இப்னு தாஹிரா
இவ்வுலகத்தில் நன்மை செய்தவர்களும் தீமை செய்தவர்களும் மறுமை நாளில் அவரவர்களின் நன்மை, தீமைகளை தெளிவாகக் காண்பார்கள். இவ்வுலகில் மிக மிகச் சிறியதாக நினைத்தவை கூட அவர்களின் பதிவுப் பட்டியலில் இடம் பெற்றிருக்கும்.
அணு அளவு நன்மை செய்தவர் அதைக் காண்பார். அணு அளவு தீமை செய்தவர் அதைக் காண்பார். (அல்குர்ஆன் 99:7,8)
பதிவேடு வைக்கப்படும். அதில் உள்ளவற்றின் காரணமாக குற்றவாளிகள் அச்சமடைந்திருக்கக் காண்பீர்! இந்த ஏட்டுக்கு என்ன வந்தது? சிறியதையோ பெரியதையோ ஒன்று விடாமல் பதிவு செய்துள்ளதே! எனக் கூறுவார்கள். தாங்கள் செய்தவற்றைக் கண் முன்னே காண்பார்கள். உமது இறைவன் எவருக்கும் அநீதி இழைக்க மாட்டான். (அல்குர்ஆன் 18:49)
பதிவேட்டைப் பார்த்து அதிர்ந்து போகும் மனிதன், இந்தப் புத்தகம் தனக்குக் கொடுக்கப்படாமல் இருக்க வேண்டுமே என்று கதறுவான். புத்தகம் தனது இடது கையில் கொடுக்கப்பட்டவன் எனது புத்தகம் கொடுக்கப்படாமல் இருக்கக் கூடாதா? எனது விசாரணை என்னவாகும் என்பது தெரியவில்லையே! (இறப்புடன்) கதை முடிந்திருக்கக் கூடாதா? எனது செல்வம் என்னைக் காப்பாற்றவில்லையே! எனது அதிகாரம் என்னை விட்டும் அழிந்து விட்டதே! எனக் கூறுவான். (அல்குர்ஆன் 69:25-29)
இவ்வாறு மறுமை நாளில் மனிதன் செய்த செயல்களை அளவிட்டு, அதற்கு ஏற்றவாறு கூலியும் தண்டனையும் வழங்கப்படும்.
கியாமத் நாளுக்காக நீதியான தராசுகளை நிறுவுவோம். எவருக்கும் சிறிதளவும் அநீதி இழைக்கப்படாது. ஒரு கடுகு விதை அளவே இருந்த போதும் அதையும் கொண்டு வருவோம். கணக்கெடுக்க நாமே போதும். (அல்குர்ஆன் 21:47)
மீஸான் (தராசு) மூலம் அளவிடப்படும் என்பதற்கு, இவ்வுலகில் நாம் பார்க்கும் தராசுகளை வைத்து அளவிடப்படும் என்று கருதத் தேவையில்லை. இப்போது உள்ள நவீன காலத்தில் மிக எளிதாக அளவிடும் மின்னணு இயந்திரங்கள் மிகத் துள்ளிமாகக் கணக்கிடுகின்றன. ஆனால் இவை நாம் செய்யும் அமல்களைக் கணக்கிடாது. வல்ல அல்லாஹ் மறுமை நாளில் நிறுவும் தராசு நமது நல்லமல்களையும் தீய அமல்களையும் மிக விரைவாகக் கணக்கிட்டுச் சொல்லி விடும் திறமை வாய்ந்தவையாக இருக்கும். இன்றைய தினம் ஒவ்வொருவரும் செய்ததற்குக் கூலி கொடுக்கப்படும். இன்று எந்த அநியாயமும் இல்லை. அல்லாஹ் விரைந்து கணக்கெடுப்பவன். (அல்குர்ஆன் 40:17)
இவ்வாறு கணக்கிடப்படும் தராசில், நாம் சாதாரணமானது என்று எண்ணும் விஷயங்கள் மிகவும் கனமுள்ளதாக இருந்து, அதனால் தீமையின் தட்டு கனத்து நாம் நரகத்திற்குச் செல்லும் அவல நிலையும் ஏற்பட்டு விடும். எனவே இவ்வுலகில் நாம் பேசும் பேச்சிலும் செயல்களிலும் கவனமாக இருக்க வேண்டும்.
ஓர் அடியார் பின் விளைவைப் பற்றி யோசிக்காமல் ஒன்றைப் பேசிவிடுகிறார். அதன் காரணமாக அவர் (இரு) கிழக்குத் திசைகளுக்கிடையே உள்ள தொலைவை விட அதிகமான தூரத்தில் நரகத்தில் விழுகிறார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (6477)
விலங்குகளுக்குத் துன்பம் தருவது கூட பாவத் தட்டில் கனமாகி நரகத்திற்குக் கொண்டு சேர்த்து விடும். பெண்ணொருத்தி ஒரு பூனை(க்குத் துன்பம் தந்த) விஷயத்தில் வேதனைப்படுத்தப்பட்டாள். அந்தப் பூனையை, அது பசியால் துடித்துச் சாகும் வரைஅவள்அடைத்து வைத்திருந்தாள். அதன் காரணத்தால் அவள் நரகத்தில் புகுந்தாள். அப்போது - அல்லாஹ்வே மிக அறிந்தவன் - நீ அதைக் கட்டிவைத்து அதற்குத் தீனி போடவுமில்லை; தண்ணீர் தரவுமில்லை; அது பூமியிலுள்ள புழு பூச்சிகளைத் தின்று (பிழைத்துக்) கொள்ளட்டும் என்று அதை அவிழ்த்து விடவுமில்லை என்று அல்லாஹ் கூறினான்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உமர் (ரலி), நூல்: புகாரி (2365)
அதே நேரத்தில் உயிரினத்திடம் நல்ல முறையில் நடந்து கொண்டால் அதுகூட நன்மைத் தட்டைக் கனக்கச் செய்து, சொர்க்கத்திற்குச் செல்லக் காரணமாக அமைந்து விடும்.
ஒரு நாய் தாகத்தால் (தவித்து) ஈர மண்ணை (நக்கி) உண்டு கொண்டிருப்பதை ஒரு மனிதர் பார்த்தார். உடனே அவர் காலுறையை எடுத்து அதில் தண்ணீர் மொண்டு அந்நாய் தாகம் தீரும் வரை கொடுத்தார். எனவே அல்லாஹ், அவருடைய நற்செயலைப் பாராட்டி அங்கீகரித்து அவரைச் சுவர்க்கத்தில் நுழைத்தான்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: புகாரி (173) நாம் அற்பமாக நினைக்கும் பல காரியங்கள் உண்மையில் பெரும் நன்மையை ஈட்டித் தரும் செயலாக இருக்கும். எனவே எந்த நற்காரியத்தையும் அற்பமாக நினைத்து, செய்யாமல் விட்டுவிடக் கூடாது.
என்னிடம் நபி (ஸல்) அவர்கள், நல்லறங்களில் எதையும் அற்பமாகக் கருதாதீர்; உம்முடைய சகோதரரை மலர்ந்த முகத்துடன் நீர் சந்திப்பதானாலும் சரியே என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூதர் (ரலி), நூல்: முஸ்லிம் (5122)
முஸ்லிம் பெண்களே! ஓர் அண்டை வீட்டுக்காரி, மற்றோர் அண்டை வீட்டுக் காரிக்கு ஓர் ஆட்டின் குளம்பை (அன்பப்பாகக்) கொடுத்தாலும் அதை இழிவாகக் கருத வேண்டாம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (2566), முஸ்லிம் (1868)
இரண்டு வாக்கியங்கள் அளவற்ற அருளாளனின் பிரியத்திற்குரியவை; நாவுக்கு எதானவை; (நன்மை தீமை நிறுக்கப்படும்) தராசில் கனமானவை ஆகும். (அவை:) 1. சுப்ஹானல்லாஹி வபிஹம்திஹி (அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்து துதி செய்கிறேன்). 2. சுப்ஹானல்லாஹில் அழீம் (கண்ணிய மிக்க அல்லாஹ்வைத் துதிக்கின்றேன்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்கள்: புகாரி (7563), முஸ்லிம் (5224)
மிகச் சிறிய திக்ருகள் கூட மறுமை நாளில் நன்மைத் தட்டில் கனமானதாக இருக்கும் என்பதால் எதையும் சாதாரணமாக எண்ணி இருந்து விடாமல் சிறியது முதல் பெரியது வரை நல்லறங்களைத் தொடர்ந்து செய்து வருவோம்.
இருள் மிகுந்த இரவின் பகுதிகளைப் போன்ற குழப்பங்கள் தோன்றுவதற்கு முன் விரைந்து (நற்) செயல்கள் புரிந்துகொள்ளுங்கள். (அப்போது) காலையில் இறைநம்பிக்கையாளனாக இருக்கும் ஒரு மனிதன் மாலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். மாலையில் இறை நம்பிக்கையாளனாக இருக்கும் ஒருவன் காலையில் இறைமறுப்பாளனாக மாறிவிடுவான். இவ்வுலகின் அற்ப சுகங்களுக்காகத் தனது மார்க்கத்தையே அவன் விற்றுவிடுவான் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (186).
? அலீ (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இந்த விரலில் அல்லது இந்த விரலில் மோதிரம் அணிய வேண்டாம் என்று என்னைத் தடை செய்தார்கள் என்று கூறி, நடு விரலையும் அதற்கடுத்த (ஆட் காட்டி) விரலையும் சுட்டிக் காட்டினார்கள். (நூல்: முஸ்லிம் 4256) என்று இடம் பெற்றுள்ளது. பெண்கள் இந்த இரண்டு விரல்களிலும் மோதிரம் அணிந்து கொள்ளலாமா?
நடு விரலிலும் அதற்கு அடுத்த விரலிலும் மோதிரம் அணியக் கூடாது என்று நபிகளார் சொன்ன இந்தச் செய்தியில் ஆண்கள், பெண்கள் இருவரும் அடக்கம் தான். எந்த ஒரு கட்டளையும் தடையும் பொதுவாகச் சொல்லப்பட்டால் அது ஆண்கள் பெண்கள் இருவரையும் கட்டுபடுத்தவே செய்யும். குறிப்பிட்ட ஒரு பாலருக்கு மட்டுமே இந்தச் சட்டம் என்று கூற வேண்டுமானால் அதற்குச் தனியான சான்றுகள் இருக்க வேண்டும்.
மோதிரம் அணியத் தடை செய்யப்பட்ட செய்தியில், ஆண்களுக்கு மட்டுமே இது கட்டுப்படுத்தும் என்பதற்கான சான்றுகள் இல்லை. அலீ (ரலி) அவர்களுக்குத் தான் தடை செய்தார்கள். எனவே இது ஆண்களைத் தான் கட்டுப்படுத்தும் என்றும் கூற முடியாது. ஏனெனில் ஆண்களைப் பார்த்துத் தடை செய்யப்பட்ட காரியங்கள் பெண்களுக்கும் பொருந்தும் என்பதற்குப் பல சான்றுகள் உள்ளன.
அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ருகூஉ அல்லது சஜ்தாவில் குர்ஆன் (வசனங்களை) ஓத வேண்டாமென்று எனக்குத் தடை விதித்தார்கள்.
அறிவிப்பவர்: அலீ (ரலி), நூல்: முஸ்லிம் (826)
நபிகளார் அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்குத் தான் ருகூவுவிலும் ஸஜ்தாவிலும் குர்ஆன் வசனங்களைத் தடை செய்தார்கள். எனவே பெண்களுக்குத் தடை செய்யவில்லை, பெண்கள் ஓதிக் கொள்ளலாம் என்று யாரும் சட்டம் எடுப்பதில்லை. இதைப் போன்றே இந்தச் சட்டத்தையும் விளங்கிக் கொள்ள வேண்டும்.
நபிகளார் காலத்தில் பெண்கள் இந்த இரண்டு விரல்களிலும் மோதிரம் போட்டவர்களாக இருந்து, நபிகளார் அதை அங்கீகரித்திருந்தால், நடு விரலிலும் அதற்கு அடுத்த விரலிலும் மோதிரம் போடக் கூடாது என்ற தடை ஆண்களுக்கு மட்டும் உரியது என்று கூறலாம். அப்படிப்பட்ட சான்றுகளை நாம் காண முடியவில்லை. எனவே இந்தச் சட்டம் ஆண்கள், பெண்கள் இருவருக்கும் உள்ளதே!
இமாம் நவவீ அவர்களும் அவர்களைப் போன்றோரும், இந்தச் சட்டம் ஆண்களுக்கு மட்டும் உரியது. பெண்கள் அனைத்து விரல்களிலும் மோதிரம் போட்டுக் கொள்ளலாம் என்று கூறுகிறார்கள். ஆனால் அதற்குச் சான்றுகளை அவர்கள் சமர்ப்பிக்கவில்லை. எனவே இந்தக் கருத்தை நாம் ஏற்றுக் கொள்ள முடியாது.
? ஒருவர் ஹஜ், உம்ரா செய்துள்ளார். ஐவேளைத் தொழுகைகையும் நிறைவேற்றுகிறார். ஆனால் (டி.வி.யில்) சினிமா, நாடகம், நாட்டியம், ஆடல், பாடல், காமெடி என்று ஒன்று விடாமல் விழித்திருந்து பார்க்கிறார். இவ்வாறு செய்வது கூடுமா?
சினிமா, நாடகங்கள் போன்றவைகளில் ஆபாசமான அருவருக்கத்தக்க ஏராளமான காரியங்கள் நிறைந்திருக்கின்றன. அவைகளை முற்றிலும் புறக்கணிக்க வேண்டும். வாருங்கள்! உங்கள் இறைவன் உங்களுக்குத் தடை செய்ததைக் கூறுகிறேன் என்று (முஹம்மதே!) கூறுவீராக! அது, வெட்கக்கேடான காரியங்களில் வெளிப்படையானதையும், இரகசியமானதையும் நெருங்காதீர்கள்! (அல்குர்ஆன் 6:151)
வெட்கக்கேடானவைகளில் வெளிப்படையானவற்றையும், இரகசியமானதையும், பாவத்தையும், நியாயமின்றி வரம்பு மீறுவதையும், எது பற்றி அல்லாஹ் எந்த ஆதாரத்தையும் இறக்கவில்லையோ அதை அல்லாஹ்வுக்கு இணையாகக் கருது வதையும், நீங்கள் அறியாததை அல்லாஹ் வின் மீது இட்டுக் கட்டிக் கூறுவதையுமே என் இறைவன் தடை செய்துள்ளான் எனக் கூறுவீராக! (அல்குர்ஆன் 7:33)
விபச்சாரத்தில் மனிதனுக்குள்ள பங்கை இறைவன் எழுதியுள்ளான். அதை மனிதன் அடைந்தே தீருவான். கண் செய்யும் விபசாரம் (தவறான) பார்வையாகும். நாவு செய்யும் விபசாரம் (பாலுணர்வைத் தூண்டும்) பேச்சாகும். மனம் ஏங்குகிறது; இச்சை கொள்கிறது. மர்ம உறுப்பு இவை அனைத்தையும் உண்மையாக்குகிறது. அல்லது பொய்யாக்குகிறது என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்: புகாரி (6243)
வெட்கக்கேடான செயல்களைத் தான் முழுக்க முழுக்க சினிமாவும் நாடகங்களும் காட்டுகின்றன. அவற்றை முற்றிலும் வெறுத்து ஒதுக்கினால் தான் இறை நினைவுகளில் நாம் இருக்க முடியும். இதில் கொஞ்ச நேரத்தைத் தான் செலவழிக்கிறோம் என்று இறங்கினால் நாம் அதில் மூழ்கி இறுதியில் இறை நினைவை முற்றிலும் இழக்க நேரிடும்.
ஹஜ், உம்ரா போன்ற நற்காரியங்களைச் செய்து பாவக் கறையை நீக்கியவர்கள் மீண்டும் பாவச் சுமையை சுமக்கும் நிலைக்கு வந்துவிடக் கூடாது என்பதில் கவனமாக இருக்க வேண்டும்.
? ஜின்கள் மனிதர்களுக்குத் தொந்தரவு செய்ய முடியுமா? ஜின்கள் தன்னை மூச்சுத் திணற அமுக்கியதாகவும் சிலர் கூறுகின்றனர். இவ்வாறு நடக்குமா?
ஜின் என்ற பெயரில் ஒரு படைப்பினம் உள்ளதாகத் திருக்குர்ஆன் பல இடங்களில் கூறுகின்றது. இந்த இனத்தவர் நெருப்பால் படைக்கப்பட்டவர்கள் என்பதால் மனிதர்களின் கண்களுக்குத் தென்பட மாட்டார்கள். இந்த விஷயத்தில் இந்தப் படைப்பு வானவர்களைப் போன்றது எனலாம். ஆயினும் இந்தப் படைப்பினர் மனிதர்களைப் போலவே பகுத்தறிவு வழங்கப்பட்டவர்கள். மனிதர்களைப் போலவே சொர்க்கம், நரகத்தை அடைவார்கள்.
வானங்களுக்குச் சென்று வரும் ஆற்றல் படைத்தவர்களாக திருக்குர்ஆன் ஜின்களைப் பற்றிக் கூறினாலும் மனிதர்களுக்கு கஷ்டத்தைக் கொடுக்கும், அடிக்கும், உதைக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
மனிதர்களின் எண்ணங்களில் தவறான எண்ணத்தை ஏற்படுத்தும். அதன் மூலம் இறைக் கடமைகளை நிறைவேற்றா வண்ணம் இடையூறுகளை ஏற்படுத்தும்.
மறைந்து கொண்டு தீய எண்ணங்களைப் போடுபவனின் தீங்கை விட்டு, மனிதர்களின் அரசனும், மனிதர்களின் கடவுளுமான மனிதர்களின் இறைவனிடம் பாதுகாப்புத் தேடுகிறேன் என்று கூறுவீராக! அவன் மனிதர்களின் உள்ளங்களில் தீய எண்ணங்களைப் போடுகிறான். ஜின்களிலும், மனிதர்களிலும் இத்தகையோர் உள்ளனர்.
(அல்குர்ஆன் 114:1-6)
பலம் பொருந்திய ஜின் ஒன்று நேற்றிரவு என் தொழுகையை (இடையில்) துண்டிப்பதற்காகத் திடீரென்று வந்து நின்றது. அல்லாஹ் எனக்கு அதை வசப்படுத்தித் தந்தான். நான் அதைப் பிடித்துக் கொண்டேன். நீங்கள் ஒவ்வொருவரும் அதைப் பார்ப்பதற்காக அதைப் பள்வாசலின் தூண்கல் ஒன்றில் கட்டி வைக்க விரும்பினேன். அப்போது, என் சகோதரர் சுலைமான் (அலை) அவர்கள் செய்த, என் இறைவா! எனக்குப் பின் வேறெவருக்கும் கிடைக்காத ஓர் அதிகாரத்தை எனக்கு வழங்குவாயாக! (38:35) என்னும் பிரார்த்தனையை நினைவு கூர்ந்தேன். உடனே, அதைச் சபித்து எறியப்பட்டதாகத் திருப்பியனுப்பி விட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)
நூல்கள்: புகாரி (3423), முஸ்லிம் (4862)
மனிதனுக்கு நீங்கள் குறிப்பிட்டது போல் தீங்கு செய்யும் என்பதற்கு திருகுர்ஆன், நபிமொழிகளில் ஆதாரங்கள் இல்லை.
? பக்கத்து வீட்டில் வசிக்கும் ஒருவர் குடும்பக் கட்டுப்பாடு செய்துள்ளார். ஆனால் தற்சமயம் மார்க்கத்தில் இது அனுமதி இல்லை என்று தெரிந்த பிறகு மிகவும் வருத்தப்படுவதாக கூறுகிறார். இவர் தவ்பா செய்தால் அவரின் தவறு மன்னிக்கப்படுமா? அல்லது பாவமான காரியத்தை செய்தவராகக் கருதப்படுவரா?
மனிதன் தெரியாமல் செய்யும் பாவங்களை, அவை பாவம் என்று தெரிந்த பின்னர் அதை உணர்ந்து பாவமன்னிப்புக் கேட்டு, தம் செயல்களை சீர்திருத்திக் கொண்டால் அவரது பாவங்களை அல்லாஹ் மன்னிப்பான்.
அறியாமல் தீய காரியம் செய்து விட்டு தாமதமின்றி மன்னிப்புக் கேட்போருக்கே அல்லாஹ்விடம் பாவ மன்னிப்பு உண்டு. அவர்களையே அல்லாஹ் மன்னிப்பான். அல்லாஹ் அறிந்தவனாகவும், ஞானமிக்கவனாகவும் இருக்கிறான். (அல்குர்ஆன் 4:17)
உங்களில் எவரேனும் அறியாமையின் காரணமாக தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கேட்டு திருந்திக் கொண்டால் அவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 6:54)
அறியாமையின் காரணமாகத் தீமையைச் செய்து விட்டு, அதன் பின்னர் மன்னிப்புக் கோரி, திருந்திக் கொண்டோருக்கு உமது இறைவன் இருக்கிறான்.அதன் பின்னர் உமது இறைவன் மன்னிப்பவன்; நிகரற்ற அன்புடையோன். (அல்குர்ஆன் 16:119)
? எனக்குத் திருமணம் ஆகி இரண்டு வருடங்களில் எனக்கும் என் கணவருக்கும் இடையே ஏற்பட்ட சிறு பிரச்சனையில் பிரிந்தோம். பெரியவர்களின் பிரச்சனையால் என் கணவர் திடீரென்று முத்தலாக் கொடுத்துவிட்டதாகச் சொல்லி விட்டார். என் கணவர் தலாக் விட்டு ஏழு மாதங்கள் ஆகின்றது. என் வீட்டில் வேறு மாப்பிள்ளை பார்க்கிறார்கள். ஆனால் முத்தலாக் விட்டுவிட்டால் ஒரு தலாக்காவே கருதப்படும் என்றும் அவரே உம் கணவர் என்றும் வேறு ஒருவரை திருமணம் செய்ய முடியாது என்று கூறுகின்றனர். இது சரியா? சர்மிளா, மதுரை
நபி (ஸல்) அவர்கள் மற்றும் அபூபக்ர் (ரலி) அவர்கள் ஆட்சிக் காலத்திலும், உமர் (ரலி) அவர்களது ஆட்சியின் (முதல்) இரண்டு ஆண்டுகளிலும் முத்தலாக் ஒரு தலாக்காகவே (நடைமுறையில்) இருந்தது. அறிவிப்பவர்: இப்னுஅப்பாஸ் (ரலி), நூல்: முஸ்லிம் (2932)
அல்லாஹ்வின் தூதர் காலத்தில் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருத்தப்பட்டுள்ளதால். நபிவழியின்படி முத்தலாக் ஒரு தலாக்காவே எடுத்துக் கொள்ளப்படும். என்றாலும் உங்கள் கணவர் தலாக் கூறி ஏழு மாதங்கள் ஆகி விட்டதால் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமை நீங்கி விடுகிறது. இதைத் தெரிந்து கொள்ள சுருக்கமாக தலாக்கின் சட்டத்தைத் தெரிந்து கொள்ளுங்கள்.
ஒருவர் தன் மனைவியை தலாக் கூறினால் அவர்களின் திருமண உறவு அடியோடு முறிந்து விடுவதில்லை. மாறாக முதல் தடவை விவாகரத்துச் செய்த பின் மனைவிக்கு மூன்று மாதவிடாய் ஏற்படுவதற்குள் மனைவியுடன் சேர்ந்து கொள்ளலாம். மனைவி கர்ப்பிணியாக இருந்தால் அவள் பிரசவிப்பதற்குள் சேர்ந்து கொள்ளலாம்.
இந்தக் காலக் கெடுவுக்குள் மனைவியுடன் கணவன் சேரவில்லையானால் அவர்களுக்கிடையே திருமண உறவு நீங்கி விடும். ஆயினும் இருவரும் மீண்டும் சேர்ந்து வாழ விரும்பினால் மீண்டும் அவர்கள் புதிதாகத் திருமணம் செய்து கொள்ளலாம். இதற்கு எந்தத் தடையும் இல்லை.
மூன்று மாதவிடாய் காலத்திற்குள் உங்கள் கணவர் உங்களிடம் சேர்ந்து கொள்ளாததால் அவர் திரும்ப அழைத்துக் கொள்ளும் உரிமையை இழந்து விடுகிறார். நீங்கள் இருவரும் விரும்பினால் புதிதாக அவரையே திருமணம் செய்து கொள்ளலாம். இல்லையெனில் புதிதாக இன்னொருவரைத் திருமணம் செய்து கொள்ளலாம்.
? எனக்கு தலாக் சொல்லப்பட்டு ஐந்து மாதங்கள் ஆகிய நிலையில் வீட்டில் தொடர்ந்து பிரச்சனைகள் ஏற்பட்டது. இதையறிந்து எனது உறவினர் ஒருவர் அஜ்ரத்திடம் சென்று பார்த்து வந்தால் பிரச்சனைகள் அனைத்தும் தீர்ந்துவிடும் என்று கூறினார். அந்த அஜ்ரத்திடம் சென்று பார்த்த போது 65 அத்தியாயத்தின் 2ஆவது வசனத்தை சுப்ஹுத் தொழுகைக்கு பிறகு 111 தடவை தண்ணீரில் ஓதி ஊதி வீட்டின் நான்கு மூலையிலும் தெளிக்க வேண்டும் என்றும் திருக்குர்ஆனின் 28ஆவது அத்தியாயத்தில் 6ஆவது வசனம் மற்றும் தலாக் அத்தியாயம் தினமும் காலை சுப்ஹுத் தொழுகைக்குப் பிறகு 111 தடவை ஓதித் தண்ணீரில் ஊதி வீட்டில் நான்கு மூலையிலும் தெளிக்கவும். இவ்வாறு செய்தால் வீட்டில் பிரச்சனைகள் தீரும். நல்ல கணவர் கிடைப்பார் என்று கூறினார். இது சரியா?
திருக்குர்ஆனின் வசனங்களை மற்ற எவரை விடவும் மிகவும் நன்கு அறிந்து புரிந்து நடந்தவர்களில் முதலிடம் அல்லாஹ்வின் தூதர் அவர்களுக்குத் தான்! ஆனால் நபிகளார் அவர்கள் இதுபோன்ற பிரச்சனைகளுக்கு இந்த அத்தியாயத்தை ஓதி வீட்டின் மூலைகளில் தெளிக்கச் சொல்லவில்லை. கஷ்டங்கள் ஏற்படும் போது படைத்தவனிடம் முறையிடச் சொல்லியுள்ளார்கள். பொறுமையை மேற்கொள்ளச் சொல்லியுள்ளார்கள். தவறுகளை களையச் சொல்லியுள்ளார்கள். நோய்களுக்கு மருத்துவம் செய்யச் சொல்லியுள்ளார்கள்.
அவர்கள் காட்டிய வசனமும் இறையச்சதுடன் நடந்து கொள்ளுமாறு தான் வழிகாட்டுகிறதே தவிர திருக்குர்ஆனை ஓதி தண்ணீர் தெளிக்கச் சொல்லவில்லை. தலாக் அத்தியாயத்தில் தலாக்கின் வழிகாட்டுதல் இருக்கிறதே தவிர இதை ஓதி வந்தால் நல்ல மாப்பிள்ளை கிடைப்பார் என்பது கூறப்படவில்லை. திருக்குர்ஆன் மீது மக்கள் வைத்துள்ள நம்பிக்கையைப் பயன்படுத்தி மார்க்கம் அங்கீகரிக்காத செயல்களை உருவாக்கி, பணம் பார்க்கும் இவர்களைப் போன்றவர்களிடம் கூடுதல் கவனமாக இருக்க வேண்டும்.
அறியாமை வாதம்
அஹ்தே நாமா
அபூ ரபீஹா
நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வந்த காலத்தில் அரபுலகம் இணை வைத்தல் மற்றும் மூட நம்பிக்கைளில் மூழ்கிக் கிடந்தது. நபிகளார் அந்த மக்களிடம் தூய்மையான இஸ்லாமிய மார்க்கத்தை எடுத்துரைத்து அவர்களிடம் இருந்த இணை வைத்தல் கொள்கைகளையும் மூட நம்பிக்கைகளையும் துடைத்தெறிந்தார்கள். ஆனால் காலம் செல்லச் செல்ல அறியாமைக் காலம் திரும்ப வருவதைப் போல், இணைவைப்புக் கொள்கைகளும் மூடநம்பிக்கைகளும் தலைதூக்க ஆரம்பித்தன.
நபிகளார் காலில் போட்டுப் புதைத்த கொள்கைகளைத் தோண்டி எடுத்து உயிப்பிக்கும் வேலைகளையும், அறியாத மக்களை ஏமாற்றும் வேலைகளையும் சிலர் செய்யத் துவங்கியுள்ளனர். ஒவ்வொரு கால கட்டத்திலும் இவ்வாறு செய்பவர்கள் தோன்றுவார்கள். அவர்களின் வாதங்களுக்குச் சரியான பதிலடி கொடுக்கும் போது காணாமல் போய்விடுவார்கள்.
இவ்வாறு தோன்றுபவர்கள் தங்கள் இணை வைப்புக் கொள்கைக்கும் மூட நம்பிக்கைகளுக்கும் பித்அத்களுக்கும் இட்டுக்கட்டப்பட்ட, பலவீனமான செய்திகளை ஆதாரமாகக் காட்டுவதுடன் திருக்குர்ஆன் வசனங்கள் மற்றும் ஆதாரப்பூர்வமான செய்திகளின் உண்மையான கருத்துக்களை புரட்டிப் பொருள் கொண்டு, பொதுமக்களை இணை வைப்புக் கொள்கையில் தள்ளவும் மூட நம்பிக்கையில் மூழ்கவும் வழிவகை செய்கின்றனர். இவர்கள் போன்றவர்களைப் பற்றி அலீ (ரலி) அவர்கள் ஒரு அழகான கருத்தைத் தெரிவித்துள்ளார்கள். அவற்றை இங்கு குறிப்பிடுவது சிறப்பாக இருக்கும்.
அதிகாரம் அல்லாஹ்வுக்கே தவிர (வேறு எவருக்கும்) இல்லை. (அல்குர்ஆன் 6:41, 12:40, 67) என்ற வசனத்தை வைத்துக் கொண்டு சிலர் குர்ஆனில் இல்லாத எந்த ஒன்றையும் ஏற்றுக் கொள்ளக் கூடாது என்று வாதிட்டனர். இவர்களின் கருத்தை வழிமொழிபவர்கள் தான் இன்றைய அஹ்லுல் குர்ஆன் அமைப்பைச் சார்ந்தவர்கள். அவர்கள் எடுத்து வைக்கும் ஆதாரம் குர்ஆன் வசனமாக இருந்தாலும் கூட அதிலிருந்து புரிய வேண்டிய உண்மையான கருத்துக்களை விட்டு விட்டு, வேறு விதமாகப் புரிந்து பேசியதால் (இது) சத்திய வார்த்தை தான். ஆனால், தவறான நோக்கம் கொள்ளப்படுகிறது என்று அலீ (ரலி) அவர்கள் கூறினார்கள். ஹரூராவாசி(களான காரிஜிய்யாக்)கள் தோன்றிய போது நான் அலீ (ரலி) அவர்களுடன் (அவர்களது அணியில்) இருந்தேன். ஹரூரிய்யாக்கள் ஆட்சி அல்லாஹ்வைத் தவிர வேறெவருக்குமில்லை (லா ஹுக்ம இல்லா லில்லாஹ்) எனும் கோஷத்தை எழுப்பினர். அலீ (ரலி) அவர்கள், (இது) சத்திய வார்த்தை தான். ஆனால், தவறான நோக்கம் கொள்ளப்படுகிறது என்றார்கள்.
அறிவிப்பவர்: அபூஉபைத்துல்லாஹ் பின் அபூராஃபிவு, நூல்: முஸ்லிம் (1935)
இதைப் போன்று அசத்தியக் கருத்துக்களுக்கு, திருக்குர்ஆன் மற்றும் நபிமொழிகளைத் தவறான பொருள் கொண்டு ஆதாரமாகக் காட்டுகிறார்கள். இவ்வாறு அவர்கள் காட்டும் ஆதாரத்தின் உண்மை நிலை என்ன என்பதைக் காண்போம்.
இறந்து போனவர்களை என்ன செய்து அடக்கம் செய்ய வேண்டும் என்று ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ளது. ஆனால் நபிவழிகளில் இல்லாத பல புதுமையான செயல்களைச் சில முஸ்லிம் பெயர்தாங்கிகள் செய்து வருகின்றனர். அவற்றில் ஒன்று தான் அஹ்தே நாமா என்று சொல்லப்படுவதும் ஆகும்.
இறந்து விட்டவர் நெற்றியில், நெஞ்சில், கஃபன் துணியில், தலைப்பாகையில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்றும் லாயிலாஹ இல்லாஹு வல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து லாயிலாஹ இல்லாஹு லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலீயுல் அளீம் என்று எழுதுவதாகும். (இதுவல்லாத வேறு வாசகங்களும் சொல்லப்படுகிறது.) இவ்வாறு எழுதினால் அவருக்கு கப்ரின் வேதனை இருக்காது; முன்கர், நகீரை அவர் பார்க்கக் கூட மாட்டார். அல்லாஹ் அவரது பாவங்களை மன்னிப்பான் என்று நம்புகின்றனர்.
இந்த மூட நம்பிக்கைக்கு வலுவூட்டும் வண்ணம் ஹனஃபி மத்ஹப் நூலான துர்ருல் முக்தாரில் பின்வருமாறு எழுதப்பட்டுள்ளது.
மய்யித்தின் நெற்றியிலும் நெஞ்சிலும் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதுமாறு சிலர் வஸியத் செய்தார்கள். அவ்வாறு செய்யப்பட்டது. பின்னர் அவர் கனவில் தோன்றிய போது (இது தொடர்பாக) கேட்கப்பட்டது. கப்ரில் வைத்த போது வேதனை செய்யும் வானவர்கள் வந்தார்கள். அவர்கள் மய்யித்தின் நெற்றியில் பிஸ்மில்லாஹிர்ரஹ்மானிர்ரஹீம் என்று எழுதப்பட்டதைக் கண்ட போது வேதனையிலிருந்து இவர் பாதுகாப்புப் பெற்று விட்டார் என்று கூறினார்கள் என்றார். (நூல்: துர்ருல் முக்தார் பாகம்: 2, பாகம்: 267)
மய்யின் நெற்றியில் அல்லது தலைப்பாகையில் அல்லது கஃபன் துணியில் அஹ்தே நாமா எழுதப்பட்டால் அல்லாஹ் மய்யித்தின் (பாவங்களை) மன்னிப்பான் என்றும் கப்ரின் வேதனையிலிருந்து பாதுகாப்பு பெறுவார் என்றும் ஆதரவு வைக்கப்படுகிறது... இப்னு ஹஜர் மக்கி அஷ்ஷாஃபீ அவர்களின் ஃபத்வாவில், கஃபனில் எழுதப்படும் அஹ்தே நாமா என்பதைப் பற்றி வினவிப்பட்ட போது லாயிலாஹ இல்லாஹு வல்லாஹு அக்பர் லாயிலாஹ இல்லல்லாஹு வஹ்தஹு லா ஷரீக்க லஹு லஹுல் முல்கு வலஹுல் ஹம்து லாயிலாஹ இல்லாஹு லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹில் அலீயுல் அளீம் (என்பது அதன் வாசகமாகும்) என்று கூறியதாக இடம் பெற்றுள்ளது. (நூல்: ஹாஷியத்து ரத்துல் முக்தார், பாகம்: 2, பக்கம்: 267)
இந்தச் செய்தியைப் படிக்கும் போது, இது எவ்வளவு மோசமான செய்தி என்பதை எவரும் அறிந்து கொள்வார். இறந்தவர் நெற்றியில் சில வாசகங்களை எழுதினால் கப்ரின் வேதனை இல்லாமல் போகும், வேதனையின் மலக்குமார்கள் நெருங்க மாட்டார்கள், அல்லாஹ் பாவங்களை மன்னிப்பான் என்றால் யாரும் எந்த அமல்களையும் செய்யாமல் கடைசியில் இந்த அஹ்தே நாமாவை எழுதி, சொர்க்கத்திற்குப் போய்விடலாம். திருக்குர்ஆன், நபிமொழிகளில் கூறப்பட்ட எல்லாக் கடமைகளும் இந்தக் கருத்தால் கேலிக் கூத்தாக மாறி விடும்.
மேலும் நபிகளார் இவ்வாறு செய்ததாக எதாவது சான்றுகள் இருக்கிறதா? என்று இவர்களிடம் கேட்டால் இவர்களால் நேரடியாக எந்தச் சான்றையும் காட்ட முடிவதில்லை. ஆனால் சில ஆதாரப்பூர்வமான ஹதீஸ்களின் கருத்துக்களைப் புரட்டி ஆதாரம் காட்டுகிறார்கள். அவை சரி தானா? என்பதை பார்ப்போம்.
நெற்றில் அஹ்தே நாமா எழுதுவதற்குச் சான்று உள்ளதா? என்ற கேள்விக்குப் பதிலளிக்காமல் எங்கோ சென்று எதையோ கூறுவதைப் பாருங்கள்.
நம்பிக்கை கொண்டோரே! அல்லாஹ்வை அஞ்சிக் கொள்ளுங்கள்! அவனை நோக்கி ஒரு வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள்! அவன் பாதையில் அறப்போர் செய்யுங்கள்! வெற்றி பெறுவீர்கள். (5;35)
இந்த வசனத்தில் வஸீலாவைத் தேடிக் கொள்ளுங்கள் என்று கூறப்படுகிறது. எனவே இறக்கும் போது இந்த அஹ்தே நாமா என்ற வஸீலாவுடன் போகிறோம் என்று கூறுகிறார்கள்.
இந்த வசனத்தில் இடம் பெறும் வஸீலா என்பது அஹ்தே நாமாவைத் தான் குறிக்கும் என்பதற்கு எந்தச் சான்றையும் காட்டாமல் மன இச்சையின் அடிப்படையில் இதுவும் வஸீலா தான் என்று கூறுகின்றார்கள். திருக்குர்ஆனை ஆய்வு செய்து பார்த்தால் வஸீலா என்பது நல்லறங்களைத் தான் குறிக்கிறது என்பதை விளங்கலாம்.
நம்பிக்கை கொண்டோரே! பொறுமை மற்றும் தொழுகையின் மூலம் உதவி தேடுங்கள்! அல்லாஹ் பொறுமையாளர்களுடன் இருக்கிறான். (அல்குர்ஆன் 2:153)
நபி (ஸல்) அவர்கள் இறைவனை நெருங்க நல்லறங்கள் அதிகம் புரிந்தார்களே தவிர மாகன்களையோ அல்லது அஹ்தே நாமவையோ எழுதி வைக்கவில்லை. எனவே இங்கு சொல்லப்படும் வசனம் அஹ்தே நாமாவைக் குறிக்கும் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.
ஒருவர் இந்த துஆவை (அஹ்தே நாமாவை) எழுதி மய்யித்தின் நெஞ்சிலும் கஃபன் துணியிலும் வைத்தால் கப்ரின் வேதனை அவரைத் தீண்டாது. அவர் முன்கர், நகீர் என்ற வானவர்களைக் காண மாட்டார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக திர்மிதியில் இடம் பெற்றுள்ளது. (ஃபத்தாவா பிக்ஹிய்யா அல்குப்ராலி, பாகம் :3, பக்கம் : 92)
இப்னு ஹஜர் மக்கி என்பவர் தமது பத்வாவில் இவ்வாறு ஒரு ஹதீஸ் இருப்பதாகக் கூறியுள்ளார். (இவர் ஹாபிழ் இப்னு ஹஜர் அஸ்கலானீ அல்ல) ஆனால் திர்மிதியில் இவ்வாறு ஒரு ஹதீஸ் இடம்பெறவே இல்லை.
இப்னு ஹஜர் மக்கீ என்பவரின் கருத்தைப் பிரதிபலிக்கும் சிலர் இந்த ஹதீஸ் அல்ஹகீம் அத்திர்மிதீ அவர்கள் எழுதிய நவாதிருர் ரஸுல் என்ற நூலில் இடம் பெற்றுள்ளது என்று குறிப்பிட்டுள்ளார்கள். ஆனால் அந்த நூலிலும் நாம் பார்த்த போது இவ்வாறு ஒரு செய்தி இடம் பெறவில்லை.
இந்த ஹதீஸின் கருத்தைப் பார்த்தாலே இது நபிமொழி அல்ல என்று தெளிவாகச் சொல்லி விடலாம். இந்தச் செய்தியைப் பற்றி அறிஞர் அல்பானி அவர்கள் கூறும் வார்த்தைகள் சிந்திக்க வேண்டியவையாகும்.
இந்த ஹதீஸை திர்மிதியோ மற்றவர்களோ அறிவிக்கவில்லை. ஏனெனில் வாழ்நாளில் ஒரே ஒரு தடவை கூட ஹதீஸின் வாசனையை முகர்ந்திடாத ஒருவனைத் தவிர வேறு எவரும் கூற முடியாத, வெளிப்படையான அசத்தியமாகவும் இட்டுக்கட்டப்பட்டதாகவும் இருக்கும் இதுபோன்ற ஹதீஸ்களை அறிவிப்பதை அவர்களின் அறிவு ஏற்றுக் கொள்ளாது.
கப்ரின் வேதனைகளை விட்டும் தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள் ஐவேளைத் தொழுகையில் கேட்டு வந்த பிரார்த்தனையையும், மற்றவர்களைக் கேட்கச் சொன்ன கட்டளையையும் வீணானதாக இந்த அஹ்தே நாமா ஆக்கிவிடும். எந்தக் கஷ்டமும் இல்லாமல் இந்த வார்த்தைகளைக் கொண்டு அழகாக தப்பித்து விடலாம்.
இந்தச் செய்தி இஸ்லாத்தின் அடிப்படைக் கருத்துக்களையே தவிடு பொடியாக்கும் வகையில் அமைந்துள்ளதால் இது போன்ற செய்திகளை நபிகளார் சொல்லி இருக்கவே மாட்டார்கள். எனவே இது இட்டுக்கட்டப்பட்ட செய்தி என்பதில் எந்த ஐயமும் இல்லை.
மேலும் இந்த அஹ்தே நாமா என்ற சொல் கூட அரபி மொழிச் சொல் அல்ல! பாரிஸி மொழிச் சொல்லாகும். நபிகளார் சொல்லியிருந்தால் அவை அரபி மொழியில் இருந்திருக்கும். இதிலிருந்தும் இந்தப் பழக்கம் நபிகளார் காலத்தில் இருந்ததில்லை என்பதையும் விளங்கலாம்.
அறியாமை: 2
நல்லடியார்களின் துணிகளை மய்யித்தின் மீது போர்த்தி அடக்கம் செய்தால் மய்யித்தின் பாவங்கள் மன்னிக்கப்படும். கப்ரின் வேதனை குறைக்கப்படும் என்று கூறி, சில சான்றுகளை எடுத்து வைக்கிறார்கள். அவை இதோ: நபி (ஸல்) அவர்கள் தமது புதல்வி இறந்து விட்ட போது எங்களிடம் வந்து, அவரை இலந்தை இலை கலந்த நீரால் மூன்று அல்லது ஐந்து, தேவையெனக் கருதினால் அதற்கதிகமான தடவைகள் நீராட்டுங்கள்; இறுதியில் கற்பூரத்தைச் சிறிது சேர்த்துக்கொள்ளுங்கள்; நீராட்டி முடித்ததும் எனக்கு அறிவியுங்கள் எனக் கூறினார்கள். நாங்கள் நீராட்டி முடிந்ததும் அவர்களுக்கு அறிவித்தோம். அவர்கள் வந்து தமது கீழாடையைத் தந்து, இதை அவரது உடலில் சுற்றுங்கள் எனக் கூறினார்கள். அறிவிப்பவர்: உம்மு அத்திய்யா (ரலி), நூல்: புகாரி 1253
(நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இறந்துவிட்டான். அப்போது அவனது (முஸ்லிமான) மகன், நபி (ஸல்) அவர்களிடம் வந்து அல்லாஹ்வின் தூதரே! உங்கள் சட்டையைத் தாருங்கள்; அவரை அதில் பிரேத உடை (கஃபன்) அணிவிக்க வேண்டும்; மேலும் நீங்கள் அவருக்கு ஜனாஸாத் தொழுது, அவருக்காகப் பாவமன்னிப்பும் கேட்க வேண்டும் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவருக்குக் கொடுத்து விட்டு, (ஆயத்தமானதும்) எனக்குத் தெரிவியுங்கள்; நான் ஜனாஸாத் தொழுவிப்பேன் என்றார்கள். பிறகு அறிவிக்கப்பட்டதும் நபி (ஸல்) அவர்கள் அவனுக்கு ஜனாஸாத் தொழ நாடியபோது, உமர் (ரலி), நபி (ஸல்) அவர்களை இழுத்து, நயவஞ்சகர்களுக்கு ஜனாஸாத் தொழக் கூடாது என அல்லாஹ் உங்களைத் தடுக்கவில்லையா? எனக் கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுவது, தொழாமலிருப்பது என) இரண்டில் எதையும் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் உரிமை எனக்கு உள்ளது எனக் கூறிவிட்டு, நீர் நயவஞ்சகர்களுக்குப் பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லது தேடாமலிருந்தாலும் சமமே! நீர் அவர்களுக்காக எழுபது முறை பாவமன்னிப்புத் தேடினாலும் அல்லாஹ் அவர்களை மன்னிக்கப் போவதே இல்லை என்ற (9:80ஆவது) இறைவசனத்தை ஓதிக் காட்டி விட்டு ஜனாஸா தொழுதார்கள். உடனே அவர்களில் யாரேனும் இறந்தால் அவர்களுக்காக ஒருபோதும் (ஜனாஸா) தொழ வேண்டாம் எனும் (9:84ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது.
அறிவிப்பவர்: இப்னு உமர் (ரலி) நூல்: புகாரி 1269
சஹ்ல் (ரலி) அவர்கள் ஒரு பெண்மணி நபி (ஸல்) அவர்களிடம் புர்தா- குஞ்சங் கட்டப்பட்ட சால்வை- ஒன்றைக் கொண்டு வந்தார் என்று கூறிவிட்டு - புர்தா என்றால் என்ன என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்டபோது (அங்கிருந்தோர்) ஆம்! புர்தா என்பது சால்வை தானே! என்றனர். சஹ்ல் (ரலி) அவர்கள், ஆம் எனக் கூறிவிட்டு, மேலும், அப்பெண்மணி நான் எனது கையாலேயே இதை நெய்திருக்கிறேன். இதனை உங்களுக்கு அணிவிக்கவே நான் கொண்டு வந்தேன் என்றதும் அது தேவையாயிருந்ததால் நபி (ஸல்) அவர்கள் அதைப் பெற்றுக் கொண்டார்கள். பிறகு அவர்கள் அதைக் கீழாடையாக அணிந்து கொண்டு எங்களிடம் வந்த போது ஒருவர் இது எவ்வளவு அழகாக இருக்கின்றது! எனக்கு இதை நீங்கள் அணியக் கொடுத்து விடுங்கள் என்று கேட்டார். உடனே அங்கிருந்தோர் நீர் செய்வது முறையன்று; நபி (ஸல்) அவர்களுக்கு அது தேவைப்பட்டதால் அதை அணிந்திருக்கிறார்கள். நபி (ஸல்) அவர்கள் கேட்பவர்களுக்குக் கொடுக்காமலிருக்க மாட்டார்கள் என்று தெரிந்து கொண்டே நீர் அதை அவர்களிடம் கேட்டு விட்டீரே எனக் கூறினார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை (சாதாரணமாக) அணிந்து கொள்வதற்காகக் கேட்கவில்லை; அது எனக்கு பிரேதஉடை (கஃபன்) ஆகிவிட வேண்டும் என்றே கேட்டேன் என்றார். பின்பு அது அவருக்குக் கஃபனாகவே ஆகிவிட்டது என்று சஹ்ல் (ரலி) அவர்கள் கூறினார்கள். அறிவிப்பவர்: அபூஹாஸிம், நூல்: புகாரி 1277
நல்லடியார்களில் ஆடையை மய்யித்திற்கு அணிவித்தால் வேதனை குறைக்கப்படும், பாவங்கள் மன்னிக்கப்படும் என்பதற்கு ஆதாரமாக மேற்கண்ட செய்திகளைக் காட்டுகின்றனர். இவர்கள் ஆதாரமாகக் காட்டிய எந்தச் செய்தியிலும் நபிகளாரின் ஆடையை அணிவித்தால் கப்ர் வேதனை நீக்கப்படும் என்றோ அல்லது குறைக்கப்படும் என்றோ அல்லது மய்யித்தின் பாவங்கள் மன்னிக்கப்படும் என்றோ கூறப்படவில்லை என்பதைக் கவனத்தில் கொள்ளவேண்டும்.
இவ்வாறு தமது ஆடையை மற்றவர்களுக்கு வழங்கினால் அவர்களின் பாவங்கள் மன்னிக்கப்படும், கப்ர் வேதனை குறைக்கப்படும் என்றிருந்தால் நபிகளார் அவர்களே முன் வந்து தம் ஆடையை அனைத்து நபித்தோழர்களுக்கும் வழங்கியிருந்திருப்பார்கள். அவர்களிடம் ஆடையில்லாவிட்டால் நபித்தோழர்களின் ஆடையை ஒரு நாளைக்கு வாங்கி அதை அணிந்து விட்டாவது கொடுத்திருப்பார்கள். கப்ரில் நன்மைகள் நிகழ்வதற்கு அவர்களின் பிரார்த்தனை தான் உதவும் என்று சொன்னார்களே தவிர தமது ஆடை கப்ர் வேதனையைக் குறைக்கும் என்று கூறவில்லை.
(மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலைக் கூட்டிப் பெருக்குபவராக இருந்த கறுத்த பெண் அல்லது இளைஞர் ஒருவரைக் காணாமல் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விசாரித்தார்கள். அவர் இறந்துவிட்டார் என மக்கள் தெரிவித்தனர். நீங்கள் எனக்குத் தெரிவித்திருக்கக்கூடாதா? என அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (இறந்த) விஷயத்தை மக்கள் அற்பமாகக் கருதி விட்டனர் போலும். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவரது மண்ணறையை எனக்குக் காட்டுங்கள் என்று கூறினார்கள். மக்கள் அதைக் காட்டியதும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அங்கு (சென்று) அவருக்காக தொழுகை நடத்தினார்கள். பிறகு இந்த அடக்கத்தலங்கள், அவற்றில் வசிப்போருக்கு இருள் மண்டிக் காணப்படுகின்றன. எனது தொழுகையின் மூலம் அவற்றில் அவர்களுக்கு அல்லாஹ், வெளிச்சத்தை ஏற்படுத்துவான் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி), நூல்: முஸ்லிம் (1742)
கப்ரில் ஒளி ஏற்பட நபிகளாரின் பிரார்த்தனை தான் உதவியுள்ளதே தவிர நபிகளாரின் ஆடைகள் உதவவில்லை என்பதை இதன் மூலம் அறிந்து கொள்ளலாம்.
நபித்தோழர்கள் நபிகளாரின் ஆடைகளை வாங்கி, அடக்கம் செய்யும் போது சேர்த்து அடக்கம் செய்யவில்லை. நபிகளார் காலத்திற்குப் பிறகு அபூபக்ர் (ரலி), உமர் (ரலி) போன்றோர் வாழ்ந்த போது அவர்களோ மற்ற நபித்தோழர்களோ இவ்வாறு செய்ததில்லை.
இதை ஆதாரமாக எடுத்துக் கொள்ளலாம் என்று ஒரு பேச்சுக்கு வைத்துக் கொண்டாலும் நல்லடியார்கள் என்று யார் தீர்மானிப்பது? வெளிப்படையை வைத்து ஒருவரை நல்லடியார் என்று நாம் கூறமுடியாது. ஏனெனில் இறையச்சத்தின் மூலமே ஒருவரை நல்லவரா? கெட்டவரா? என்று முடிவு செய்ய முடியும். நபிகளார் காலத்தில் வாழ்ந்த நபித்தோழர்கள் தாங்கள் பார்த்த நண்பரை நல்லடியார் என்று முடிவு செய்ய அவர் நரகவாதி என்று நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள். நபி (ஸல்) அவர்களும் இணை வைப்போரும் (கைபர் போர்க்களத்தில்) சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். நபியவர்கள் தம் படையின் பக்கம் சென்று விட மற்றவர்களும் தம் படையின் பக்கம் சென்றுவிட்டனர். அப்போது நபி (ஸல்) அவர்கன் தோழர்களுக்கிடையே ஒருவர் இருந்தார். அவர் (எதிரிகல்) போரில் கலந்து கொள்ளாமல் ஒதுங்கி நிற்பவர், படையிலிருந்து விலகிப் போய் தனியே சென்றவர் (அதாவது எதிர்த்து நிற்பவர், பணிந்து செல்பவர் என்று) எவரையும் நபித் தோழர்களுக்கு விட்டு வைக்காமல் அனைவரையும் தம் வாளால் வெட்டியபடி துரத்திச் சென்று (மூர்க்கமாகப் போரிட்டுக்) கொண்டிருந்தார். (அவரது துணிச்சலான போரைக் கண்ட) நபித் தோழர்கள், இந்த மனிதர் போரிட்டதைப் போல் இன்று நம்மில் வேறெவரும் தேவை தீரப் போரிடவில்லை என்று (வியந்து) கூறினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், அவரோ நரகவாசியாவார் என்று கூறினார்கள். அப்போது கூட்டத்திலிருந்து ஒரு மனிதர், நான் அவருடன் இருக்கிறேன் (அவர் என்ன செய்கிறார் என்று பார்ப்பதற்கு) என்று சொல்லிவிட்டு அந்த மனிதருடன் புறப்பட்டார். அவர் நின்ற போதெல்லாம் இவரும் நின்றார். அவர் விரைந்தால் இவரும் விரைந்தார். (ஒரு கட்டத்தில்) அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். அதனால் சீக்கிரமாக மரணித்து விட விரும்பி, தன் வான் (கைப்பிடியுள்ள) முனையை பூமியில் ஊன்றி, அதன் கூரான முனையைத் தன் இரு மார்புகளுக்கு இடையே வைத்து, அந்த வான் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (இதை உடனிருந்து கண்காணித்துவிட்டு) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் சென்று, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்பதற்கு நான் சாட்சியம் அக்கிறேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், என்ன விஷயம்? என்று கேட்டார்கள். அவர், சற்று முன்பு தாங்கள் ஒருவரைப் பற்றி அவர் நரகவாசி என்று கூறினீர்கள் அல்லவா? அதைக் கண்டு மக்கள் வியப்படைந்தனர். நான் (மக்கடம்), உங்களுக்காக (அவரது நிலைகளை அறிந்து வர) நான் அவருடன் போய் வருகிறேன் என்று கூறிவிட்டு, அவரைத் தேடிப் புறப்பட்டேன். அவர் கடுமையாக காயப்படுத்தப்பட்டார். உடனே, அவர் சீக்கிரமாக மரணமடைய விரும்பி, வான் பிடிமுனையை பூமியில் நட்டு, அதன் கூர்முனையைத் தன் இரு மார்புகளுக்கிடையே வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கன் வெப் பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கத்திற்குரிய (நற்) செயலைச் செய்து வருவார். ஆனால், அவர் (உண்மையில்) நரகவாசியாக இருப்பார். மக்கன் வெப்பார்வைக்கு ஒரு மனிதர் நரகத்திற்குரிய செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசியாக இருப்பார் என்று சொன்னார்கள்.
அறிவிப்பவர்: ஸஹ்ல் பின் ஸஅத் (ரலி)
நூல்கள்: புகாரி (2898), முஸ்லிம் (5156)
இதைப் போன்று மனிதர்களில், நல்லவர்கள் என்று தீர்மானிக்கப்படுவோர் தீயவர்களாகவும், தீயவர்கள் என்று தீர்மானிக்கப்படுவோர் நல்லவர்களாகவும் இருப்பார்கள் என்ற நபிகளாரின் கருத்து, நாம் யாரையும் நல்லடியார்கள் என்று முடிவு செய்ய முடியாது என்பதைக் காட்டுகிறது.
நல்லடியார்கள் என்று மக்கள் நினைக்கும் பலர் நரகவாதியாக இருப்பார்கள் என்று நபிகளார் கூறியுள்ளதால் யாரையும் நாமாக நல்லடியார் என்று முடிவு செய்ய முடியாது. எனவே அடுத்தவரின் ஆடைகளை வாங்கி மய்யித்துடன் வைத்து அடக்கமும் செய்ய முடியாது.
அலீ (ரலி) அவர்களின் தாயார் ஃபாத்திமா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையைக் கழற்றி அவர்களுக்கு அணிவித்தார்கள். இதற்கு நபிகளார், அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆடை கிடைக்க வேண்டும் என்பதே காரணமாகும் என்றார்கள். மேலும் கப்ரில் மய்யித்துடன் படுத்தார்கள். இதன் மூலம் கப்ரின் கஷ்டத்திலிருந்து லேசாக்கப்படுவார் என்று கூறினார்கள். (ஆதாரம்: தப்ரானீ)
இந்த ஹதீஸில் நபிகளார் அவர்கள் நேரடியாகவே கப்ர் வேதனை குறைக்கப்படும் என்று கூறுவதால் நல்லடியார்களின் துணிகளை, அவர்கள் தரும் பொருட்களை கப்ரில் வைக்கலாம் என்று வாதிடுகின்றனர்.
முதலில் இந்தச் செய்தியில் கூறப்படும் முழு விபரத்தையும் படித்து விட்டு இதில் இடம் பெறும் கருத்துக்களைப் பற்றி ஆய்வு செய்வோம்.
அலீ (ரலி) அவர்களின் தாயார் ஃபாத்திமா அவர்கள் இறந்த போது நபி (ஸல்) அவர்கள் தமது சட்டையை அவர்களுக்கு அணிவித்தார்கள். மேலும் அவர்களுடைய கப்ரில் படுத்தார்கள். அவர்கள் மீது மண் போடப்பட்டு சமப்படுத்தப்பட்ட போது நபித்தோழர்களில் சிலர், அல்லாஹ்வின் தூதரே! நீங்கள் யாருக்கும் செய்யாத ஒன்றை நாங்கள் பார்த்தோமே? என்று கேட்டனர். அவர்களுக்கு சொர்க்கத்தின் ஆடை அணிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக என் சட்டையை அணிவித்தேன். அவர்களுடன் கப்ரில் படுத்தது ஏனெனில் அவர் கப்ரின் (கடுமையான) அணைப்பிலிருந்து லேசாக்கப்படுவதற்காக என்று நபிகளார் கூறி விட்டு அபூதாலிப் அவர்களுக்குப் பிறகு அல்லாஹ்வின் படைப்பில் அழகானவர்களாக இவர் இருந்தார் என்று கூறினார்கள்.
அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி)
நூல்கள்: தப்ரானீ-அல்அவ்ஸத், பாகம்: 7. பக்கம்: 87
மஃரிஃபத்துஸ் ஸஹாபாலி-அபூநுஐம், பாகம்: 1, பக்கம்: 311
இந்தச் செய்தியில் இடம் பெறும் மூன்றாவது அறிவிப்பாளர் ஸஅதான் பின் அல்வலீத் என்பவர் யாரென அறியப்படாதவர். (மஜ்மவுஸ் ஸவாயித், பாகம்: 9, பக்கம்: 210)
யாரென அறியப்படாதவர் அறிவிக்கும் செய்தி மிகவும் பலவீனமானதாகும். இவ்வகை செய்திகளை ஹதீஸ் கலை வல்லுநர்கள் ஆதாரமாக எடுத்துக் கொள்வதில்லை. எனவே இதை ஆதாரமாகக் கொண்டு வாதிடுவது சரியல்ல.
ஒரு வாதத்திற்கு இதைச் சரியான ஹதீஸ் என்று வைத்துக் கொண்டாலும், இந்தச் செய்தியில் இடம் பெற்றிருக்கும் பல விஷயங்கள் தங்களுக்குப் பாதகமாக இருப்பதால் அதை விட்டு விட்டு ஆதாரம் காட்டுகிறார்கள்.
நபித்தோழர்களில் யாருக்கும் இது போன்று நபிகளார் நடந்ததில்லை என்பதை அவர்கள் விட்டு விட்டார்கள். இந்தச் செய்தி சரியானதாக இருந்தாலும் மற்ற எவருக்கும் இவ்வாறு செய்யாததால் இது அலீ (ரலி) அவர்களின் தாயாருக்கு மட்டும் உரியது என்று கூற வேண்டிய நிலை ஏற்படும். எனவே இதை அவர்கள் கண்டு கொள்ளவில்லை.
கப்ரைக் கட்டியணைத்து, கஷ்டத்தைப் போக்குவதற்காக நபிகளார் செய்தது, கப்ரில் இறங்கி சிறிது நேரம் அந்த மய்யித்துடன் படுத்து எழுந்து வந்தது ஆகியவற்றையும் இவர்கள் கண்டு கொள்ளவில்லை. இந்த ஹதீஸை ஆதாரம் காட்டும் போது, நல்லடியார்கள் என்று சொல்லிக் கொள்பவர்கள் கப்ர் குழிக்குள் இறங்கி அதனுடன் படுத்து எழுந்து வரவேண்டும். ஆனால் இவ்வாறு யாரும் செய்வதில்லை. செய்யுமாறு சொல்வதும் இல்லை. எனவே இவர்கள் காட்டும் செய்தியை அவர்களே முழுமையாகப் பின்பற்றுவதில்லை.
நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரில் கலந்து கொண்டேன். அப்போது அவர்களுக்கு ஒரு பாத்திரத்தில் தண்ணீர் எடுத்து ஊற்றினேன். நபி (ஸல்) அவர்கள், நான் உனக்கு ஆடை அணிவிக்கட்டுமா? என்று கேட்டார்கள். நான், சரி அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினேன். அப்போது அவர்கள் மேனியோடு ஒட் டிப் போடப்பட்ட சட்டையில் ஒன்றை எனக்கு அணிவித்தார்கள். மேலும் தம் முடியிலும் நகங்களிலும் சில எடுத்தார்கள். அதை நான் எடுத்துக் கொண்டேன். அவற்றை நான் இந்த இடத்தில் வைத்துள்ளேன். நான் மரணிக்கும் போது என் கஃபன் அல்லாமல் அந்தச் சட்டையை மேனியோடு அணிவித்து விடுங்கள். அந்த முடியையும் நகங்களையும் என் வாயிலும் மூக்கின் உட்பதியிலும் வைத்து விடுங்கள். எதாவது (நன்மை) நடந்தால் நடக்கட்டும்! இல்லை எனில் அல்லாஹ் மிகவும் மன்னிப்பவனாகவும் இரக்கமுள்ளவனாகவும் இருக்கின்றான் என்று முஆவியா (ரலி) அவர்கள் கூறினார்கள். (ஆதாரம்: ஹில்யத்துல் அவ்லியா, பாகம்: 9, பக்கம்: 155)
இந்தச் செய்தியின் அடிப்படையிலும் கப்ரில் வைக்கப்படும் போது நல்லடியார்களின் பொருட்களைச் சேர்த்து வைத்தால் வேதனை குறைக்கப்படும் என்று வாதிடுகின்றனர்.
இந்தச் செய்தி ஆதாரப்பூர்வமானது அல்ல! இச்செய்தியை இமாம் ஷாஃபீ அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது. அதில் இமாம் ஷாஃபீ அவர்களுக்கு இச்செய்தியை யார் சொன்னார்கள் என்று கூறப்படவில்லை. இவ்வாறு சொல்கிறார்கள் என்றே இமாம் ஷாஃபீ கூறியதாக இடம் பெற்றுள்ளது. மேலும் முஆவியா (ரலி) அவர்கள் இறந்தது ஹிஜ்ரி 60 ஆகும். இமாம் ஷாஃபீ அவர்கள் பிறந்தது ஹிஜ்ரி 150 ஆகும். முஆவியா (ரலி) அவர்களின் இறப்பிற்கும் இமாம் ஷாஃபீ அவர்களின் பிறப்பிற்கும் சுமார் 90 வருடங்கள் இடைவெளி ஏற்படுகிறது. எனவே இச்செய்தி தொடர்பு அறுந்த பலவீனமான செய்தியாகும். இதையும் ஆதாரமாக எடுத்துக் கொள்ள முடியாது.
எனது இந்தச் சட்டையைக் கொண்டு சென்று, என் தந்தையின் முகத்தில் போடுங்கள்! அவர் பார்வையுடையவராக ஆவார். உங்கள் குடும்பத்தினர் அனைவரையும் என்னிடம் அழைத்து வாருங்கள்! (எனவும் கூறினார்) (அல்குர்ஆன் 12:93)
இந்த வசனத்தின்படி, நல்லடியார்களின் உடைகளுக்கும் அவர்கள் பயன்படுத்திய பொருட்களுக்கும் சக்தியுண்டு. அதை நாம் பயன்படுத்தி நன்மை பெறலாம் என்று கூறுகிறார்கள்.
கண் தெரியாமல் இருந்த யஃகூப் நபி அவர்களுக்கு, நபி யூசுஃப் (அலை) அவர்கள் தம் சட்டையைக் கொடுத்து, அதை யஃகூப் நபியின் முகத்தில் போடச் சொன்னார்கள். அதைப் போட்டவுடன் அவர்களின் கண் பார்வை திரும்பக் கிடைத்ததாகத் திருக்குர்ஆன் வசனம் கூறுகிறது. இதை வைத்துக் கொண்டு நல்லடியார்கள் அனைவரின் பொருட்கள் மூலம் நன்மைகள் கிடைக்கும் என்று வாதிடுகின்றனர்.
ஒரு விஷயத்தை இவர்கள் இதில் மறந்துள்ளார்கள். யஃகூப் (அலை) அவர்களும் நபி தான். அவர்களும் நல்லடியார் தான். ஆனால் அவர்களால் தம் ஆடையை முகத்தில் போட்டு, கண் பார்வையை வரவழைக்க முடியவில்லை என்பதைச் சிந்திக்க வேண்டும். நபி யூசுஃப் (அலை) அவர்கள் சட்டையைக் கொடுத்து முகத்தில் போடச் சொன்னார்கள் என்றால் அது வஹீயின் மூலம் அல்லாஹ் சொன்ன கட்டளையாகத் தான் இருக்க வேண்டும். நல்லடியார்களின் பொருட்களால் எதுவும் செய்யலாம் என்றிருந்தால் பல வருடங்கள் தம் பெற்றோரைப் பிரிந்து நபி யூசுஃப் (அலை) அவர்கள் இருந்திருக்க வேண்டிய அவசியமில்லை. சிறைச்சாலையில் கஷ்டப்பட வேண்டிய அவசியமும் இல்லை. சில நேரங்களில் இறைத்தூதர்களுக்கு வழங்கப்படும் அற்புதங்களை வைத்துக் கொண்டு எல்லா நல்லடியார்களும் அவ்வாறு செய்வார்கள் என்று முடிவெடுக்க முடியாது.
12.02.2010. 19:23
மே 2008 தீன்குலப் பெண்மணி
கோடை காலம்
குளிர் காலம், வசந்த காலம், கோடை காலம் என்று ஒவ்வொரு ஆண்டும் சுழற்சி முறையில் நாம் சந்தித்து வருகிறோம். ஏப்ரல், மே மாதங்களில் கடும் வெப்பத்தைச் சந்திப்பதால் இந்தக் காலங்களில் பள்ளி, கல்லூரிகளுக்கு விடுமுறை விடப்படுகிறது.
இந்தக் கோடை காலங்களில் மகிழ்ச்சியாக இருக்க பறவைகளைப் போல் மனிதர்களும் குளிர்ச்சியான பகுதிகளுக்கு இடம் பெயர்ந்து சென்று வருகின்றனர். இவ்வாறு கோடை காலமாக இருந்தாலும் குளிர் காலமாக இருந்தாலும் உலகத்தைச் சுற்றி, அங்குள்ள இறையருட் கொடைகளையும் அவனது அற்புத ஆற்றலையும் புரிந்து கொள்வற்காகப் பயணிப்பது வரவேற்கத்தக்கது தான்.
அவர்கள் பூமியில் பயணம் செய்யவில்லையா? (அவ்வாறு செய்தால்) விளங்குகிற உள்ளங்களும், கேட்கும் செவிகளும் அவர்களுக்கு இருந்திருக்கும். பார்வைகள் குருடாகவில்லை. மாறாக உள்ளங்களில் உள்ள சிந்தனைகளே குருடாகி விட்டன. (அல்குர்ஆன் 22:46)
பூமியில் பயணம் செய்யுங்கள்! அல்லாஹ் எவ்வாறு முதலில் படைத்தான் என்பதைக் கவனியுங்கள்! என்று கூறுவீராக! பின்னர் அல்லாஹ் மற்றொரு தடவை உற்பத்தி செய்வான். அல்லாஹ் ஒவ்வொரு பொருளின் மீதும் ஆற்றலுடையவன். (அல்குர்ஆன் 29:20)
இறைவனின் அற்புதப் படைப்புகளைக் கண்டு, அவனது ஆற்றலை அறிந்து கொள்ள இந்தக் கோடை காலப் பயணங்கள் உதவும் வகையில் இருக்க வேண்டும். ஆனால் பலரது பயணங்கள் கேளிக்கை, கூத்துக்களாகவே அமைந்துள்ளன. சுற்றுலா தலங்களுக்குச் செல்பவர்கள், படைத்தவனை நினைத்து அவனுக்கு நன்றி செலுத்தாமல் கடமையான தொழுகையைக் கூட அங்கு அலட்சியம் செய்கிறார்கள். யாரும் கேட்டால், ஜாலியாக இருக்கலாம் என்று வந்தால் இங்கு தொழுகை, திக்ரு என்று கூறுகிறார்களே என்று அலுத்துக் கொள்பவர்களையும் காண்கிறோம்.
படைத்தவனை மறக்கடிக்கும் எந்த இடத்திற்கும் நாம் செல்லக் கூடாது. செல்லும் பயணம் பயனுள்ளதாக, படைத்தவனை நினைவூட்டுவதாக இந்தக் கோடை காலச் சுற்றுலாவை அமைத்துக் கொள்ள வேண்டும்.
அடுத்து, கோடை கால விடுமுறையில் மார்க்கக் கல்வியை படித்துக் கொள்வதற்காக, அதை கூடுதலாகத் தெரிந்து கொள்வதற்காகப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும். கோடை கால விடுமுறைகளில் சினிமா, இன்டர்நெட், கேம்ஸ் என்று நேரத்தை வீணடிக்காமல் மார்க்கக் கல்வியைத் தெரிந்து கொள்வதற்குப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
உலகப் பொதுமறையான திருக்குர்ஆனை பார்த்துக் கூட படிக்கத் தெரியாதவர்கள் எத்தனையோ நபர்கள் உள்ளனர். இஸ்லாத்தின் முக்கியக் கடமையான தொழுகையை எவ்வாறு தொழுவது என்று தெரியாதவர்களும் இன்று நிறைந்துள்ளனர்.
இஸ்லாத்தின் அடிப்படையாகத் திகழும் ஓரிறைக் கொள்கை, அதற்கு நேர்மாற்றமான ஷிர்க் (இணை வைப்புக் கொள்கை) போன்றவற்றின் விளக்கங்கள் தெரியாமல் இருப்பவர்கள் இந்தக் கோடை கால விடுமுறையைப் பயன்படுத்திக் கொள்ள வேண்டும்.
மாணவ, மாணவிகள் என்று அனைத்துத் தரப்பு மக்களுக்கும் பயனளிக்கும் வண்ணம் கோடைகாலப் பயிற்சி வகுப்புகளை நமது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், வழக்கம் போல் இந்த ஆண்டும் இலவசமாக நடத்துகிறது. இதில் பதிவு கட்டணம் ரூபாய் பத்தும், புத்தகங்களுக்காக ரூபாய் நூறும் நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது. இது தவிர வேறு கட்டணங்கள் எதுவும் இல்லை.
இதற்கு முன்னர் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் நடத்திய கோடை கால நல்லொழுக்கப் பயிற்சி வகுப்புகளில், இஸ்லாத்தின் அடிப்படைக் கொள்கை, தொழுகைப் பயிற்சி, இஸ்லாமிய ஒழுக்கங்கள், அன்றாடம் ஓதும் துஆக்கள், திருக்குர்ஆன் ஓதும் பயிற்சி மற்றும் இஸ்லாமிய சட்டங்கள் என்று பல பயனுள்ள விஷயங்களை கற்றுத் தந்துள்ளது.
இந்த ஆண்டு கோடைகாலப் பயிற்சி வகுப்புகளிலும் இதைச் செய்ய இருக்கிறது. தங்கள் பிள்ளைகளை இதில் இணைத்து ஈருலகப் பயனடைய அன்புடன் அழைக்கிறோம்.
இம்மையும் மறுமையும்
ஏ. இன்ஆமுல் ஹஸன், ஆவணம்
இந்தப் பரந்த உலகில் பல்வேறுபட்ட மக்கள் வசிக்கின்றனர். இந்த மக்கள் அனைவரும் நிறத்தாலும் குணத்தாலும் மொழியாலும் பல விதமாக அமைந்துள்ளனர். இதில் பெரும்பான்மையான மக்கள், நம்மைப் படைத்த ஒருவன் இருக்கின்றான் என்பதை நம்பி வாழ்கின்றனர்.
மதங்கள் அதன் நம்பிக்கைகளும்
கடவுளை நம்பும் மனிதர்கள் பல மதங்களை பின்பற்றி வாழ்கின்றனர். ஒரு கடவுள் கொள்கை உள்ளவர்கள் , முக்கடவுள் கொள்கை உள்ளவர்கள், பல கடவுகள் கொள்கை உள்ளவர்கள் என்று பலவிதமான பல மதங்களை பின்பற்றி நடக்கின்றனர்.
இவ்வாறு பல விதமான கடவுள் கொள்கை உள்ளவர்கள், கடவுளுக்காகப் பல விதமான காரியங்களைச் செய்கின்றனர். இது போன்ற காரியங்களைச் செய்வதன் மூலம் நாம் இறை திருப்தியை அடையலாம் என்று நம்புகின்றனர்.
இவ்வாறு இறைவனது திருப்தியை அடைவதற்கு உலக விஷயங்களை முற்றிலுமாகத் தவிர்ந்து விட்டு, முழுக்க முழுக்க இறைவனுக்குரிய கடமைகளையே நிறைவேற்ற வேண்டும்; அவனுக்கு முற்றிலும் அடிபணிந்து உலகக் காரியங்களில் சற்றும் ஈடுபடாமல் நடக்க வேண்டும் என்று சிலர் எண்ணுகின்றனர். இதனால் தான் முனிவர்கள் என்று கூறப்படுபவர்கள் மக்கள் வாழும் பகுதியை விட்டு விட்டு, காடுகளில் போய் தவமிருந்து வரம் பெற்றதாகக் கூறுவார்கள்.
இவ்வாறு தான் பெரும்பான்மையான மதங்களும் கூறுகின்றன. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் இதிலும் மற்றும் பல விஷயங்களிலும் தன் தனித்துவத்தைக் காட்டியுள்ளது.
தொடர்ந்து படிக்க 25.02.2010. 20:34
ஜுன் 2008 தீன்குலப் பெண்மணி
கல்வியைத் தேடி..
மற்ற மதங்களை விட இஸ்லாம் பல வகைகளில் சிறப்புற்று விளங்குகிறது. மதங்கள் பெரும்பாலும் ஆன்மீகத்தை மட்டுமே போதிக்கின்றன. உலக விவகாரங்களில் அவை தலையிடுவதில்லை. ஆனால் இஸ்லாம் மட்டும் தான் ஆன்மீகத்தையும் உலகத்தையும் இணைத்து மனிதனுக்கு அனைத்துப் பிரச்சனைகளுக்கும் தெளிவான வழியைக் காட்டுகிறது.
தொடர்ந்து படிக்க 26.02.2010. 21:19
