68-மணவிலக்கு 2

பாடம் : 25

-ஆன்- (மனைவி மீது கணவன் தகுந்த சாட்சிகளின்றி சுமத்திய விபசாரக் குற்றச்சாட்டையடுத்து தம்பதியர் செய்யும்) சாப அழைப்புப் பிரமாணமும் அது பற்றிய இறைவசனமும்.68

அல்லாஹ் கூறுகின்றான்:

யார் தம்முடைய மனைவியர் மீது (விபசாரக்) குற்றம்சாட்டி (அதை நிரூபிக்கத்) தம்மையன்றி வேறு சாட்சிகள் அவர்களிடம் இல்லையோ அத்தகையோரில் ஒருவர், நிச்சயமாகத் தாம் (தமது குற்றச்சாட்டில்) உண்மையாளர்தாம் என அல்லாஹ்வின் மீது நான்கு முறை சத்தியம் செய்து சாட்சியம் அளிக்கவேண்டும். மேலும், ஐந்தாவது தடவை (தமது குற்றச்சாட்டில்) தாம் ஒரு பொய்யனாக இருந்தால் அல்லாஹ்வின் சாபம் தம் மீது உண்டாகட்டும்' என்று கூறவேண்டும். கணவன் பொய்யன் ஆவான் என மனைவி நான்கு முறை அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்து சாட்சியம் கூறுவது, (விபசாரக் குற்றத்திற்கான) தண்டனையை அவளைவிட்டு அகற்றிவிடும். ஐந்தாவது தடவை, அவன் உண்மையாளனாக இருந்தால், அல்லாஹ்வின் கோபம் தன் மீது உண்டாவதாக' என அவள் கூறவேண்டும். (24:6-9)

எனவே ஊமை, அறிந்துகொள்ளப்படு கின்ற வகையில் எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் தன் மனைவி மீது (விபசாரக்) குற்றம் சாட்டினால், அவன் (வாயால்) பேசியவனைப் போன்றே கருதப்படுவான். ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் (தொழுகை போன்ற) கடமை களில் சைகையை அனுமதித்துள்ளார்கள். மேலும், இதுவே ஹிஜாஸ்வாசிகள் மற்றும் (இதர) அறிஞர்கள் சிலரது கூற்றுமாகும்.

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

(ஆனால், தம் குழந்தையிடம் கேட்கும் படி மர்யம்) அதை நோக்கி சைகை செய்தார். நாங்கள் தொட்டிலில் இருக்கும் குழந்தையிடம் எப்படிப் பேசுவோம்? என்று அவர்கள் கூறினார்கள். (19:29)

ளஹ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(3:41ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) இல்லா ரம்ஸன்' எனும் சொற்றொடருக்கு சைகையால் தவிர' என்று பொருள்.

(அவதூறு வழக்கில் ஊமைக்குத்) தண்டனை கிடையாது; (-ஆன்' எனும்) சாப அழைப்புப் பிரமாணமும் (ஊமைக்குக்) கிடையாது என்று கூறும் சிலர், (அவ்வாறு கூறிக் கொண்டே) எழுத்தால், அல்லது (கை) சாடையால், அல்லது (தலை) சைகையால் அளிக்கப்படும் மணவிலக்கு (மட்டும்) செல்லும் என்று கூறுகின்றனர். ஆனால், (மனைவி மீது விபசாரக்) குற்றம் சாட்டுவதற்கும், (அவளை) மணவிலக்குச் செய்வதற்கும் (இரண்டும் பாதிப்பை ஏற்படுத்தும் நடவடிக்கைகளே என்பதில்) எந்த வித்தியாசமும் இல்லை. (விபசாரக்) குற்றச்சாட்டு சுமத்துவதானால் அது பேச்சினால்தான் முடியும் என்று அவர்கள் வாதிட்டால், மணவிலக்கும் அவ்வாறே பேச்சினால்தான் முடியும் என்று சொல்ல வேண்டியிருக்கும். வித்தியாசம் இல்லை என்று வாதிட்டால், (விபசாரக்) குற்றச்சாட்டு மட்டுமன்றி மணவிலக்கும், அதைப் போன்றே (அடிமையை) விடுதலை செய்வதும் எல்லாமே செல்லாதுபோகும்.

இதைப் போன்றே செவிடனும் சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்') செய்யலாம்.

ஷஅபீ மற்றும் கத்தாதா (ரஹ்) ஆகியோர் கூறுகின்றனர்:

ஊமை (தன் மனைவியை நோக்கி)த் தன் விரல்களால் சைகை செய்து தலாக் சொன்னால் (எத்தனை விரல்களைக் காட்டினானோ அதற்கேற்ப) அவனிடமிருந்து அவள் மண விலக்குப் பெற்றவளாகிவிடுவாள்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஊமை தனது கரத்தால் மணவிலக்கு எழுதினால் கட்டாயம் அது அவனைக் கட்டுப்படுத்தும்.

ஹம்மாத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது: ஊமையும், செவிடனும் தலையால் (சைகை) செய்து சொன்னால் செல்லும்.

5300 அனஸ் பின் மா-க் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்ததை உங்களுக்குத் தெரிவிக்கட்டுமா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்டார்கள். மக்கள், ஆம்! (தெரிவியுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினர்.

(அன்சாரிகளின் கிளைக் குடும்பங்களில் சிறந்தது,) பனூ நஜ்ஜார் குடும்பமாகும். பிறகு அவர்களைத் தொடர்ந்து பனூ அப்தில் அஷ்ஹல் குடும்பமாகும். பின்னர் அவர் களைத் தொடர்ந்து பனூ ஹாரிஸ் பின் கஸ்ரஜ் குடும்பமாகும். பின்னர் அவர்களைத் தொடர்ந்து பனூ சாஇதா குடும்பமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய பின் தமது விரல்களை மடக்கிப் பின்பு அவற்றை விரித்து விட்டுத் தமது கையால் (எதையோ) எறிபவர் போல் (சைகை) செய்தார்கள். பிறகு அன்சாரி கிளைக் குடும்பங்கள் ஒவ்வொன்றிலும் நன்மை உண்டு என்று சொன்னார்கள்.69

5301 சஹ்ல் பின் சஅத் அஸ்ஸாஇதீ

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நானும் மறுமையும் இதிலிருந்து இதைப் போல்' அல்லது இந்த இரண்டையும் போல்' (நெருக்கமாக) அனுப்பட்டுள்ளோம் என்று கூறியபடி தமது சுட்டுவிரலையும் நடு விரலையும் இணைத்துக் காட்டினார்கள்.70

 

5302 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மாதம் என்பது இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கும் என்று (இரு கை களையும் மும்முறை விரித்துக் காட்டி)- முப்பது நாள் எனச்- சொல்லிவிட்டு, பிறகு மேலும் இப்படியும், இப்படியும், இப்படியும் இருக்கலாம் (என்று இரு கைகளையும் மும்முறை விரித்துக் காட்டி மூன்றாம் முறை பெரு விரலை மடக்கியபடி) -இருபத்தொன்பது நாட்களாகவும் இருக்கலாம்- என்று சொன்னார்கள். அதாவது (மாதம் என்பது,) சில வேளை முப்பது நாட்களாக இருக்கும்; மற்ற சில வேளை இருபத்தொன்பது நாட்களாக இருக்கும் என்று சொன்னார்கள்.71

5303 அபூமஸ்ஊத் உக்பா பின் அம்ர்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தால் யமன் நாட்டுத் திசையைக் காட்டி சைகை செய்து இறைநம்பிக்கை அங்குள்ள (யமனைச் சார்ந்த)தாகும் என்று இரு முறை கூறிவிட்டு, அறிந்துகொள்ளுங்கள்! கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான்  ஷைத்தானின் இரு கொம்பு களும் உதயமாகும். (குழப்பங்கள் தலை தூக்கும். அதாவது,) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும் என்று சொன்னார்கள்.72

5304 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நானும் அநாதையின் காப்பாளரும் சொர்க்கத்தில் இப்படி இருப்போம் என்று கூறியபடி தம் சுட்டுவிரலையும் நடு விரலையும் இணைத்து அந்த இரண்டுக்கு மிடையே சற்று இடைவெளி விட்டு சைகை செய்தார்கள்.

பாடம் : 26

இந்தக் குழந்தை தன்னுடையது அல்ல என ஒருவர் குறிப்பால் உணர்த்துவது.73

5305 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கிராமவாசியான) ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! (வெள்ளை நிறமுடைய) எனக்குக் கறுப்பு நிறத்தில் ஒரு மகன் பிறந்துள்ளான்! (அவன் எப்படி எனக்குப் பிறந்தவனாக இருக்க முடியும்?) என்று (சாடையாகக்) கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உன்னிடம் ஒட்டகம் ஏதேனும் உள்ளதா? என்று கேட்டார்கள். அதற்கவர், ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், அதன் நிறம் என்ன? என்று கேட்டார்கள். அவர், சிவப்பு' என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், உன் ஒட்டகங்களுக்கிடையே சாம்பல் நிற ஒட்டகம் உள்ளதா? என்று கேட்டார்கள். அவர், ஆம்' என்றார். நபி (ஸல்) அவர்கள், (தனது தாயிடம் இல்லாத) அந்த நிறம் அதற்கு மட்டும் எவ்வாறு வந்தது? என்று கேட்டார்கள். அவர், அதன் (தந்தையான) ஆண் ஒட்டகத்தின் பரம்பரையிலிருந்து வந்திருக்கலாம் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், உன்னுடைய இந்த மகனும் உன் பரம்பரையிலுள்ள (மூதாதையரின்) நிறத்தினைக் கொண்டிருக்கக் கூடும் என்று சொன்னார்கள்.

பாடம் : 27

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்பவரை சத்தியம் செய்வித்தல்.

5306 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினார். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்பதியராகிய) அவ் விருவரையும் சத்தியம் செய்யவைத்தார்கள். பிறகு, அவர்கள் இருவரையும் பிரித்து வைத்தார்கள்.74

பாடம் : 28

சாப அழைப்புப் பிரமாணத்தை ஆண்தான் ஆரம்பிக்கவேண்டும்.75

5307 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தம் மனைவி மீது (விபசாரக்) குற்றம் சாட்டினார்கள். எனவே, ஹிலால் அவர்கள் வந்து (தாம் சொன்னது உண்மையே என நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம ளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவரில் ஓருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்கள் இருவரில் பாவமன்னிப்புக் கோரி (தவறு தன்னுடையது தான்  என்று ஒப்புக் கொண்டு, இறைவன் பக்கம்) திரும்புகின்றவர் யார்? என்று கேட்டுக் கொண்டிருந்தார்கள். பிறகு, ஹிலால் (ரலி) அவர்களின் மனைவி எழுந்து நின்று (நான்கு முறை சத்தியம் செய்து) சாட்சியம் அளித்தார்.76

பாடம் : 29

சாப அழைப்புப் பிரமாணமும், சாப அழைப்புப் பிரமாணத்திற்குப் பிறகு மணவிலக்கு அளிப்பதும்.

5308 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உவைமிர் அல்அஜ்லானீ (ரலி) அவர்கள் ஆஸிம் பின் அதீ அல்அன்சாரி (ரலி) அவர்களிடம் வந்து, ஆஸிமே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆணொருவன் (தகாத உறவு கொண்டபடி) இருப்பதைக் கண்டால், அவனை இந்த மனிதன் கொன்று விடலாமா? அவ்வாறு கொன்றுவிட்டால், (பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்றுவிடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? சொல்லுங்கள். ஆஸிமே! எனக்காக இது குறித்து ளநபி (ஸல்) அவர்களிடம்ன கேட்டுச் சொல்லுங்கள் என்றார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் இது குறித்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (இத்தகைய) கேள்வி களை விரும்பவில்லை. அவற்றை அசிங்கமாகக் கருதினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து கேட்ட (கண்டன) வார்த்தைகள் ஆஸிம் (ரலி) அவர்களுக்குக் கடினமாயிற்று.

ஆஸிம் (ரலி) அவர்கள் தம் வீட்டாரிடம் திரும்பி வந்த போது அவர்களிடம் உவைமிர் (ரலி) அவர்கள் வந்து ஆஸிமே! உங்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன சொன்னார்கள்? என்று கேட்டார்கள். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள் உவைமிர் (ரலி) அவர்களிடம், நீ எனக்கு நன்மை செய்யவில்லை. (சிக்கலில் என்னைச் சிக்க வைத்துவிட்டாய்;) நான் கேட்ட கேள்வி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிடிக்கவில்லை என்று சொன்னார்கள். அதற்கு உவைமிர் (ரலி) அவர்கள், அல்லாஹ் வின் மீதாணையாக! இது குறித்து நானே (நேரடியாக) அவர்களிடம் கேட்காமல் ஓய மாட்டேன் என்று கூறிவிட்டு, மக்களுக்கு மத்தியில் இருந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிச் சென்றார். பிறகு, அல்லாஹ்வின் தூதரே! ஒரு மனிதன் தன் மனைவியுடன் அந்நிய ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவன் அந்த ஆடவனைக் கொன்று விடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால் பழிக்குப் பழியாக) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்ய வேண்டும்? சொல்லுங்கள்! என்று கேட்டார்.

அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உமது விஷயத்திலும், உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் (வசனத்தை) அருளிவிட்டான். ஆகவே, நீர் சென்று உம்முடைய மனைவியை அழைத்து வாரும்! என்றார்கள். (பிறகு அவர்கள் இருவரும் வந்தனர்.) நான் மக்களுடன் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருக்கும் போது அவர்கள் இருவரும் பரஸ்பரம் சாப அழைப்புப் பிரமாணம்

(-ஆன்) செய்தனர். அவர்கள் -ஆன் செய்து முடித்த போது உவைமிர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் இவளை (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே இனியும்) வைத்திருந்தால் இவள் மீது நான் பொய்(யான குற்றச்சாட்டு) சொன்னவனாக ஆகிவிடுவேன் என்று கூறிவிட்டு, அல்லாஹ் வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு ஆணையிடுவதற்கு முன்பே அவளை மூன்று தலாக் சொல்லிவிட்டார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு இதுவே சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யும் தம்பதியருக்கு முன்மாதிரி ஆகிவிட்டது.77

பாடம் : 30

பள்ளிவாசலில் (வைத்து) சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்தல்.

5309 பனூ சாஇதா குலத்தைச் சேர்ந்த சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளில்(உவைமிர் என்றழைக்கப் பட்ட) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! சொல்லுங்கள்: ஒரு மனிதன் தன் மனைவியு டன் வேறொரு (அந்நிய) ஆடவன் (தகாத உறவு கொண்ட நிலையில்) இருக்கக் கண்டால், அவனை இவன் கொன்றுவிடலாமா? (அவ்வாறு கொன்றுவிட்டால், பழிவாங்கும் சட்டப்படி) அவனை நீங்கள் கொன்று விடுவீர்களா? அல்லது அவன் வேறு என்ன செய்யவேண்டும்? என்றார். அப்போது அல்லாஹ், சாப அழைப்புப் பிரமாணம் செய்துகொள்ளும் தம்பதியர் தொடர்பாகக் குர்ஆனில் குறிப்பிட்டுள்ள விதியை அருளினான். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உமது விஷயத்திலும் உம்முடைய மனைவி விஷயத்திலும் அல்லாஹ் தீர்ப்பளித்து விட்டான் என்று சொன்னார்கள். எனவே, அவர்கள் இருவரும் பள்ளிவாசலில் வைத்து சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்து கொண்டார்கள். அப்போது அங்கு நானும் இருந்தேன். இருவரும் சாப அழைப்புப் பிரமாணம் செய்து முடித்த போது உவைமிர் (ரலி) அவர்கள் அவளை நான் (மணவிலக்குச் செய்யாமல் மனைவியாகவே) வைத்திருந்தால், அவள் மீது நான் பொய்(க் குற்றச்சாட்டு) சொன்னவனாகிவிடுவேன், அல்லாஹ்வின் தூதரே! என்று சொல்லிவிட்டு, -ஆன்- பிரமாணம் முடிந்ததும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிடுவதற்கு முன்பாகவே அவளை அவர் மூன்று தலாக் சொல்லிவிட்டார். நபி (ஸல்) அவர்கள் முன்னிலையி லேயே அவளைவிட்டுப் பிரிந்து கொண்டார். இதுவே -ஆன்-பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்துவைக்கும் வழியாயிற்று.

-தம்பதியர் பரஸ்பரம் செய்துகொள்ளும் சாப அழைபபுப் பிரமாணம் குறித்தும் அதன் வழிமுறைகள் குறித்தும் சஹ்ல் (ரலி) அவர் களிடமிருந்து இதை அறிவித்துள்ள இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: இந்த இருவருக்கும் பின்னால் சாப அழைப்புப் பிரமாணம் செய்யும் இருவரைப் பிரித்து வைக்க இதுவே முன்மாதிரி ஆனது.

அந்த -ஆன் நடந்த போது அப்பெண் கர்ப்பமுற்றிருந்தார். அவருக்குப் பிறந்த குழந்தை அதன் தாயோடு இணைத்துத்தான் (இன்னவளின் மகன் என்று) அழைக்கப் படலானது. பின்னர் மகனிடமிருந்து அந்தப் பெண்ணும், அப்பெண்ணிடமிருந்து மகனும் அல்லாஹ் அவர்களுக்கு நிர்ணயித்த முறையில் வாரிசாவார்கள் என்ற நடை முறையும் வந்தது.

தொடர்ந்து சஹ்ல் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(-ஆன் நடந்து முடிந்ததும்) நபி (ஸல்) அவர்கள், இவள் அரணையைப் போன்ற குட்டையான சிவப்பு நிறக் குழந்தையைப் பெற்றெடுத்தால் இவள் உண்மை சொல்லிவிட்டாள். கணவர் இவள்மீது பொய் சொல்லிவிட்டார் (என்று பொருள்); கறுப்பு நிறத்தில் விசாலமான கண்கள் கொண்ட பெரிய பிட்டங்களை உடைய குழந்தையைப் பெற்றெடுத்தால் அவள் மீது அவளுடைய கணவர் சொன்ன குற்றச்சாட்டு உண்மை தான் என்று கருதுகிறேன் என்றார்கள். பிறகு விரும்பத்தகாத அந்தத் தோற்றத்திலேயே அப்பெண் குழந்தையைப் பெற்றெடுத்தார். (கணவரின் குற்றச்சாட்டு நியாயமானதாகப் பட்டது.)78

பாடம் : 31

நான் சாட்சியில்லாமல் (ஒருவருக்கு) கல்லெறி தண்டனை அளிப்பவனாயிருந் தால் (இதோ இந்தப் பெண்ணுக்கு அளித்தி ருப்பேன்) என்று நபி (ஸல்) அவர்கள் கூறியது.

5310 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சாப அழைப்புப் பிரமாணம் (நடை முறையில் வருவதற்கு முன் ஒரு முறை மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக நபி (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகப்) பேசிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம்

(ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவரிடம் சென்று தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தகாத உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அதற்கு ஆஸிம் (ரலி) அவர்கள், நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே இப்படி (என் குலத்தாரிடையே நடந்து) நானே சோதிக்கப்பட்டுள்ளேன் என்று சொன்னார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவருடைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைவானவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ, மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப் பிடிப்பு உள்ளவராகவும் இருந்தார்.-

(இந்த குற்றச்சாட்டைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் கண்டதாக அவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தை பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை நபி (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்ய வைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்ப வனாயிருந்தால் இவளுக்கு அளித்திருப்பேன் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னது (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் குறித்தா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இல்லை; (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்து கொண்டே தகாத உறவு கொண்டு வந்தாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவுமில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட்டார்கள்.) என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 32

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணின் மஹ்ர் (மணக் கொடை குறித்த சட்டம்).79

5311 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் ஒருவர் தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன)? என்று கேட்டேன். அதற்கவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதியரான) இருவரை (இதைப் போன்ற நிலையில்) நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள். பிறகு உங்களிருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்றார்கள். உடனே அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மீண்டும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்று கேட் டார்கள். அப்போதும் அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகு (மூன்றாம் முறையாக அதைப் போன்றே) உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரித் திரும்புகிறவர் உண்டா? என்று கேட்டார்கள். அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தார்கள். ஆகவே, அவர்கள் இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த ஹதீஸில் ளசயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் குறிப்பிட்டன ஒரு விஷயத்தைத் தாங்கள் கூறவில்லை என்றே கருதுகிறேன் என்று என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் சொன்னார்கள். பிறகு அவர்கள் பின்வருமாறு கூறினார்கள்: (சாப அழைப்புப் பிரமாணம் செய்த) அந்த மனிதர், (மஹ்ராக நான் அளித்த) எனது பொருள் (என்ன ஆவது)?' என்று கேட்டார். அதற்கு அவரிடம், (உம்முடைய மனைவி மீது நீர் சுமத்திய குற்றச்சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர்! (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லி யிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது' என்று கூறப்பட்டது.

பாடம் : 33

சாப அழைப்புப் பிரமாணம் செய்யும் தம்பதியரிடம் உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் யார்? என்று தலைவர் கேட்பது.

5312 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடம் சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்துகொள்ளும் தம்பதியரைப் பற்றிக் கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்து கொண்ட தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர். (இனி) அவள் மீது (கணவராகிய) உமக்கு எந்த அதிகாரமும் இல்லை என்று சொன்னார்கள். உடனே அவர், அல்லாஹ்வின் தூதரே! (நான் இவளுக்கு மஹ்ராக அளித்த) எனது பொருள் (என்ன ஆவது? அதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளலாமா?) என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், உமக்கு (அந்தப்) பொருள் கிடைக்காது. நீர் அவள் விஷயத்தில் (சொன்ன குற்றச்சாட்டில்) உண்மையாளராய் இருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக்கொள்வ தற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். அவள் மீது நீர் பொய் சொல்லியிருந்தால் (அவளை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப்பொருள் உம்மைவிட்டு வெகு தூரத்தில் உள்ளது என்று சொன்னார்கள்.

தொடர்ந்து சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், தம் மனைவியுடன் சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்த மனிதர் தொடர்பாகக் கேட்டேன். அப்போது அவர்கள், (தம்பதியர் இருவரையும் பிரித்து வைக்க வேண்டும் என்பதைக் காட்ட) தம் இரு விரல்களால் சைகை செய்தார்கள். (அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் (ரஹ்) அவர்கள் அப்போது தம் சுட்டு விரலையும் நடுவிரலையும் பிரித்துக் காட்டினார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் பனூ அஜ்லான் குலத்தைச் சேர்ந்த தம்பதியரை (-ஆனுக்குப் பின்) பிரித்து வைத்தார்கள். பிறகு உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்பதை அல்லாஹ் நன்கு அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோருபவர் உண்டா? என மூன்று முறை கேட்டார்கள் என்று பதிலளித்தார்கள்.

சுஃப்யான் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(இப்போது) உங்களுக்கு நான் தெரிவித்ததைப் போன்றே அம்ர் பின் தீனார், அய்யூப் (ரஹ்) ஆகியோரிடமிருந்து இந்த ஹதீஸை நான் மனனமிட்டுள்ளேன்.

பாடம் : 34

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்து கொண்ட தம்பதியரைப் பிரித்துவைத்தல்.

5313 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பெண்ணையும் அவள் மீது விபசாரக் குற்றம் சாட்டிய கணவரையும் சத்தியப் பிரமாணம் (-ஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.

 

5314 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் உள்ள ஒரு தம்பதியரை சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யவைத்து அவர்கள் இருவரையும் பிரித்துவைத்தார்கள்.

பாடம் : 35

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணிடமே (அவளுடைய) குழந்தை சேர்க்கப்படும்.

5315 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதரையும் அவருடைய மனைவியையும் சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யவைத்தார்கள். அப்போது அந்த மனிதர் அவளுடைய குழந்தையைத் தம்முடையதல்ல என்று சொன்னார். ஆகவே, அவ்விருவருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்; மேலும், குழந்தையை மனைவியிடம் சேர்த்தார்கள்.

பாடம் : 36

(சாப அழைப்புப் பிரமாணத்தின்போது) இறைவா! (உண்மையை) வெளிப்படுத்து வாயாக' என்று தலைவர் கூறுவது.

5316 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்துகொள்வது (நடைமுறையில் வருவதற்கு முன், மனைவி மீது கணவன் விபசாரக் குற்றம் சாட்டுவது) தொடர்பாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அருகில் பேசப்பட்டது. அப்போது ஆஸிம் பின் அதீ (ரலி) அவர்கள் அது தொடர்பாக ஏதோ (ஆக்ரோஷமாகச்) சொல்லிவிட்டுத் திரும்பிச் சென்றார்கள். (சிறிது நேரத்தில்) ஆஸிம் (ரலி) அவர்களின் குலத்தைச் சேர்ந்த ஒருவர் அவர்களிடம் சென்று, தம் மனைவியுடன் (அந்நிய) ஆடவன் ஒருவன் (தவறான உறவு கொண்டு) இருந்ததைத் தாம் கண்டதாகச் சொன்னார். அப்போது நான் (ஆக்ரோஷமாகப்) பேசியதாலேயே (என் குலத்தாரில் நடந்த) இந்த நிகழ்ச்சியால் நானே சோதிக்கப்பட்டுள்ளேன் என்று ஆஸிம் (ரலி) அவர்கள் கூறினார்கள். ஆகவே, ஆஸிம் (ரலி) அவர்கள் அவரை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவருடைய மனைவியின் நடத்தை குறித்துத் தெரிவித்தார்கள்.

-(உவைமிர் என்ற) அந்த மனிதர் நல்ல மஞ்சள் நிறம் உடையவராகவும், சதைப் பிடிப்புக் குறைந்தவராகவும், நீண்ட முடிகளைக் கொண்டவராகவும் இருந்தார். தம் மனைவியுடன் இருக்கக் கண்டதாக அவர் வாதிட்ட அந்த அந்நிய மனிதரோ மாநிறம் உடையவராகவும் உடல் பருத்து அதிக சதைப் பிடிப்பு உள்ளவராகவும், சுருட்டை முடி உள்ளவராகவும் இருந்தார்.-

இந்தக் குற்றச்சாட்டைக் கேட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! (இந்தப் பிரச்சினையில் ஒரு) தெளிவைத் தருவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். பிறகு, தம் மனைவியுடன் தாம் கண்ட தாகக் கணவர் குறிப்பிட்ட அந்த (அந்நிய) ஆடவரின் சாயலில் அவள் குழந்தையைப் பெற்றெடுத்தாள். (அதற்கு முன்பே) இந்தத் தம்பதியரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சாப அழைப்புப் பிரமாணம்

(-ஆன்) செய்யவைத்தார்கள்.

(இந்த ஹதீஸ் கூறப்பட்ட) அவையில் இருந்த ஒருவர் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம், சாட்சி இல்லாமலேயே ஒருவருக்கு நான் கல்லெறி தண்டனை அளிப்ப வனாயிருந்தால், இவளுக்கு அளித்திருப்பேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறியது, (உவைமிருடைய மனைவியான) இந்தப் பெண் தொடர்பாகவா? என்று கேட்டார். அதற்கு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், இல்லை. (அவள் வேறொரு பெண்ணாவாள்.) அந்தப் பெண் இஸ்லாத்தில் இருந்து கொண்டே தகாத உறவு கொண்டாள் எனப் பரவலாகப் பேசப்பட்டவள் ஆவாள். (ஆனால், அவள் குற்றத்தை ஒப்புக்கொள்ளவு மில்லை; தகுந்த சாட்சியும் இல்லை. அவள் குறித்தே நபியவர்கள் இவ்வாறு குறிப்பிட் டார்கள்) என்று பதிலளித்தார்கள்.80

பாடம் : 37

மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண் இத்தா'க் காலத்திற்குப் பின் வேறொரு கணவனை மணமுடித்து, அவர் அவளைத் தாம்பத்திய உறவுகொள்ளாத நிலையில் (அவரும் அவளைத் தலாக் சொல்லிவிட்டால், முதல் கணவன் அவளை மணந்து கொள்ளலாமா?)

5317 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல்குறழீ (ரலி) அவர்கள் ஒரு பெண்ணை மணமுடித்தார்கள். பிறகு அப்பெண்ணை அவர்கள் மணவிலக்குச் செய்துவிட்டார்கள். ஆகவே, அந்தப் பெண் வேறொருவரை மணந்து கொண்டார். பிறகு அவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தம் கணவர் தம்மிடம் (உறவுகொள்ள) வருவ தில்லை என்றும், அவருக்கு (இன உறுப்பு என்று) இருப்பதெல்லாம் இந்த (முகத் திரையின்) குஞ்சம் போன்றது தான்  என்றும் கூறினார். (பிறகு தாம் தம் முதல் கணவருடன் வாழ விரும்புவதாகவும் சொன்னார்.) (அப்போது அங்கிருந்த அவருடைய இரண்டாவது கணவர் இந்தக் குற்றச்சாட்டை மறுத்தார். தமக்கு முதல் மனைவி மூலம் பிறந்த குழந்தைகளையும் அவர் காட்டினார்.) உடனே நபி (ஸல்) அவர்கள், இல்லை; நீ (உன்னுடைய இரண்டாம் கணவரான) இவரிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும் வரையிலும், அவர் உன்னிடம் (தாம்பத்திய) சுகத்தை அனுபவிக்கும் வரையிலும் (முதல் கணவரை நீ மணந்துகொள்ள முடியாது) என்று சொன்னார்கள்.

இன்னோர் அறிவிப்பாளர்தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.81

பாடம் : 38

மேலும், உங்கள் பெண்களில் எவரும் மாதவிடாயின் நம்பிக்கையிழந்து (அவர் களுடைய இத்தாவைக் கணக்கிடுவது பற்றி) நீங்கள் சந்தேகப்பட்டாலும், இன்னும் யாருக்கு (இதுவரை) மாதவிடாயே ஏற்பட வில்லையோ அவர்களுக்கும் இத்தா' (தவணை) மூன்று மாதங்களாகும் (எனும் 65:4ஆவது வசனத் தொடர்).

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

அதாவது மாதவிடாய் ஏற்படுகிறதா அல்லது இல்லையா என உங்களுக்குத் (தெளிவாகத்) தெரியாத பெண்களுக்கும், (முதுமையின் காரணத்தினால்) மாதவிடாய் நின்றுவிட்ட பெண்களுக்கும், (பருவம் அடையாததால் இதுவரை) மாதவிடாயே ஏற்பட்டிராத பெண்களுக்கும் இத்தா' (தவணை) மூன்று மாதங்களாகும்.82

பாடம் : 39

கர்ப்பமுடைய பெண்களுக்கு அவர்களு டைய (இத்தா'வின்) தவணை அவர்கள் பிரசவிக்கும் வரையாகும் (எனும் 65:4ஆவது வசனத் தொடர்).

5318 நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சுபைஆ' என்றழைக்கப்பட்ட ஒரு பெண் கர்ப்பிணியாக இருந்த நிலையில் அவருடைய கணவர் (சஅத் பின் கவ்லா) இறந்துவிட்டார். (நாற்பது நாட்களுக்குப் பிறகு அவருக்குக் குழந்தை பிறந்தது.) இந்நிலையில் அவரை அபுஸ் ஸனாபில் பின் பஅக்கக் (ரலி)' என்பார் பெண் கேட்டார். அவரை மணக்க அப்பெண் மறுத்துவிட்டார். பிறகு (வேறொருவரை மணக்கவிருக்கும் செய்தி கேட்டு) அவரைப் பார்த்து அபுஸ் ஸனாபில் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! இரண்டு தவணைகளில் பிந்தியது எதுவோ அது வரையில் நீ இத்தா' இருக்காமல் அவரை நீ மணந்துகொள்ள முடியாது என்று சொன்னார்கள். (பிரசவத்திற்குப் பின்) சுமார் பத்து நாட்கள் அப்பெண் இருந்துவிட்டு பிறகு நபி ஸல்) அவர்களிடம் வந்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், (பிரசவத்துடன் உன் இத்தா முடிந்துவிட்டது.) நீ மணமுடித்துக்கொள் என்று சொன்னார்கள்.83

5319 அப்துல்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் அப்தில்லாஹ் பின் அல்அர்கம் (ரஹ்) அவர்களை, அஸ்லம் குலத்தைச் சேர்ந்த சுபைஆ (ரலி) அவர்களிடம் சென்று, அவருக்கு நபி (ஸல்) அவர்கள் (இத்தா' தொடர்பாக) என்ன தீர்ப்பளித்தார்கள்? என்று கேட்கும்படி கடிதம் எழுதினேன். (அவ்வாறே அவரும் கேட்டார்.)

அப்போது சுபைஆ (ரலி) அவர்கள் நீ பிரசவித்தவுடன் மணமுடித்துக்கொள் என நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தீர்ப்பு வழங்கினார்கள் என்று பதிலளித்தார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) யஸீத் பின் அபீஹபீப் (ரஹ்) அவர்களுக்கு இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தமது கடிதத்தில் இந்த ஹதீஸைக் குறிப்பிட்டி ருந்தார்கள்.

5320 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 தம் கணவர் இறந்த சில நாட்களுக்குப் பின் சுபைஆ அல்அஸ்லமிய்யா (ரலி) அவர்கள் பிரசவித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் சென்று (மறு)மணம் புரிந்து கொள்ள அனுமதி கோரினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவருக்கு அனுமதி அளித்ததையடுத்து அவர் (ஒருவரை) மணந்து கொண்டார்.

 

பாடம் : 40

மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்கள் மூன்று மாதவிடாய்கள் வரை தங்கள் விஷயத்தில் காத்திருக்க வேண்டும் எனும் (2:228ஆவது) வசனத் தொடர்.

இப்ராஹீம் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

இத்தா'வில் உள்ள ஒரு பெண்ணை ஒருவர் திருமணம் செய்து, அவரிடம் வந்த பின் அவளுக்கு மூன்று மாதவிடாய்க் காலம் முடிந்தால், முதல் கணவனிடமிருந்து அவள் முற்றாகப் பிரிந்தவள் ஆவாள். (ஆனால்,) இந்த மாதவிடாய்க் காலத்தை இரண்டாம் கணவனுக்கான இத்தா'வாக அவள் கணக்கிட முடியாது.

அவ்வாறு கணக்கிடலாம் என ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள். ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களின் கருத்தே சுஃப்யான் (ரஹ்) அவர்களுக்கு மிக உவப்பானதாகும்.84

மஅமர் பின் முஸன்னா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(2:228ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள குரூஉ' எனும் சொல்லின் வினைச் சொல்லான) அக்ரஅத்' எனும் சொல்லுக்கு ஒரு பெண்ணின் மாதவிடாய்க் காலம் நெருங்கிவிட்டது' என்ற பொருளும், ஒரு பெண் மாதவிடாயிலிருந்து தூய்மையடையும் காலம் நெருங்கிவிட்டது' என்ற (எதிரிடையான) பொருளும் உண்டு. ஒரு பெண், தன் வயிற்றில் சிசுவை ஒன்று சேர்ப்பதைக் குறிக்கவும் கரஅத்' எனும் சொல் ஆளப்படுவதுண்டு.

பாடம் : 41

ஃபாத்திமா பின்த் கைஸ் (ரலி) அவர்களின் நிகழ்ச்சி.85

வ-வும் மாண்பும் உடைய அல்லாஹ் கூறுகின்றான்:

உங்கள் இறைவனாகிய அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (மணவிலக்கு அளிக்கப்பட்டு இத்தா'வில் இருக்கும் பெண்கள்) பகிரங்கமான மானக்கேடான (காரியத்)தைச் செய்தாலன்றி அவர்களை அவர்களின் வீடுகளிலிருந்து வெளியேற்றாதீர்கள்; அவர்களும் வெளியேறலாகாது. இவை அல்லாஹ் (விதிக்கும்) வரம்புகள். எவர் அல்லாஹ்வின் வரம்புகளை மீறுகிறாரோ, அவர் திடமாகத் தமக்குத் தாமே அநியாயம் செய்துகொள்கிறார். (ஏனெனில், சேர்ந்து வாழ்வதற்காக) இதன் பின்னரும் அல்லாஹ் ஏதேனும் ஒரு வழியை உண்டாக்கலாம் என்பதை நீர் அறியமாட்டீர். (65:1ஆவது வசனத் தொடர்.)

உங்கள் சக்திக்கேற்ப நீங்கள் குடியி ருக்கும் இடத்திலேயே (இத்தா'விலிருக்கும்) பெண்களைக் குடியிருக்கச் செய்யுங்கள்; அவர்களுக்கு நெருக்கடி உண்டாக்குவதற்காக அவர்களுக்குத் தொல்லை கொடுக்காதீர்கள். அவர்கள் கர்ப்பமுடையவர்களாக இருந்தால், அவர்கள் பிரசவிக்கும் வரை அவர்களுக்காகச் செலவு செய்யுங்கள்... (65:6, 7).

5321,5322 காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்களும் சுலைமான் பின் யசார் (ரஹ்) அவர்களும் கூறியதாவது:

யஹ்யா பின் சயீத் பின் ஆஸ் (ரஹ்) அவர்கள் (தம் துணைவியாரான) அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகம் அவர்களின் புதல்வியை (ஒட்டுமொத்த)த் தலாக் சொல்லிவிட்டார். ஆகவே, அவரை (அவருடைய தந்தை) அப்துர் ரஹ்மான் (தலாக் சொல்லப்பட்ட இடத்திலிருந்து மற்றோர் இடத்திற்குக்) குடி மாற்றினார். (இச்செய்தி அறிந்த) ஆயிஷா (ரலி) அவர்கள் மதீனாவின் (அப்போதைய) ஆட்சித் தலைவராக இருந்த (அப்துர் ரஹ்மானின் சகோதரர்) மர்வான் பின் அல் ஹகம் அவர்களிடம் ஆளனுப்பி, மர்வானே! அல்லாஹ்வை அஞ்சிக்கொள்ளுங்கள். (உங்கள் சகோதரர் புதல்வியான) அவளை (மணவிலக்கு அளிக்கப்பட்ட) அவளுடைய வீட்டிற்கே திருப்பி அனுப்புங்கள்! என்று சொன்னார்கள். மர்வான், (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் என்னை மிகைத்து விட்டார். (என்னால் அவரைத் தடுக்க முடிய வில்லை) என்று பதிலளித்தார். -இவ்வாறு சுலைமான் பின் யசார் அவர்களின் அறிவிப்பில் காணப்படுகிறது.-

காசிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மேலும், மர்வான் ஃபாத்திமா பின்த் கைஸ் தொடர்பான தகவல் தங்களை வந்தடையவில்லையா? (அவர் இடம் மாறித்தானே இத்தா' இருந்தார்!) என்று ளஆயிஷா (ரலி) அவர்களிடம்ன கேட்டார். ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸின் செய்தியை நீங்கள் (ஆதாரமாகக்) குறிப்பிடாமல் இருப்பதால் உங்களுக்கு எந்தப் பாதிப்பும் நேர்ந்துவிடாது. (அவர் இடம் மாறியதற்குத் தக்க காரணம் இருந்தது.) என்று கூறினார்கள். அதற்கு மர்வான் பின் ஹகம் அவர்கள், (ஃபாத்திமா இடம் மாறிய தற்குக் காரணமாக அமைந்த) இடர்ப்பாடு ஏதேனும் தங்களுக்கு (ஏற்புடையதாக) இருக்குமென்றால், இந்தத் தம்பதியரிடையே உள்ள (அதே விதமான) இடர்ப்பாடு (என் சகோதரர் மகள் இடம் மாறுவதில்) தங்களுக்குப் போதும்தானே! என்று கூறினார்.

5323,5324 ஆயிஷா ரலி) அவர்கள் கூறியதாவது:

ஃபாத்திமா பின்த் கைஸிற்கு என்ன நேர்ந்தது? (மூன்று தலாக் சொல்லப்பட்ட பெண்ணுக்கு இத்தா'வின்போது) உறைவிடமோ ஜீவனாம்சமோ (கணவன் அளிக்கவேண்டியது) இல்லை என்று கூறுகிறாரே! அவர் அல்லாஹ்வை அஞ்சக் கூடாதா?

 

5325,5326 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சிறிய தாயார்) ஆயிஷா (ரலி) அவர்களிடம், அப்துர் ரஹ்மான் பின் அல்ஹகமுடைய புதல்வியான இன்னவளைப் பார்த்தீர்களா? அவரை அவருடைய கணவர் ஒட்டுமொத்தத் தலாக் சொல்லிவிட்டார். (தம் கணவர் வீட்டில் இத்தா' இருக்காமல்) அவர் வெளியேறி (மற்றோர் இடத்திற்குச் சென்று)விட்டாரே! என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள் அவர் செய்தது தவறு என்றார்கள். நான் ஃபாத்திமா பின்த் கைஸ், (தான் மற்றோர் இடத்தில் இத்தா' இருந்தது பற்றிக்) கூறிவருவதை நீங்கள் கேள்விப்பட்டதில்லையா? என்று கேட்டேன். அதற்கு ஆயிஷா ரலி) அவர்கள், இந்தச் செய்தியைக் கூறி வருவதில் ஃபாத்திமாவுக்கு எந்த நன்மையுமில்லை என்பதைப் புரிந்துகொள்! என்று கூறினார்கள்.

அப்துர் ரஹ்மான் பின் அபிஸ் ஸினாத் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் (ஃபாத்திமா பின்த் கைஸைக்) கடுமையாகச் சாடினார்கள். மேலும், (இந்த) ஃபாத்திமா தன்னந் தனி யானதோர் இடத்தில் இருந்தார். இதனால் அவர் (பாதுகாப்பு) குறித்து அஞ்சப்பட்டது. இதையடுத்தே அவருக்கு (மற்றோர் இடத்தில் இத்தா' இருக்க) நபி (ஸல்) அவர்கள் சலுகை அளித்தார்கள் என்றும் ஆயிஷா கூறினார்கள்.

பாடம் : 42

மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் தன்னுடைய கணவன் வீட்டில் (இத்தா' மேற் கொண்டால்) அத்துமீறி யாரும் புகுந்துவிடலாம் என்றோ, அல்லது அவள் தன் (கணவனின்) குடும்பத்தாரிடம் அசிங்கமாகப் பேசிவிடுவாள் என்றோ அஞ்சப்படுமானால் (அவள் இடம் மாறிக் கொள்ளலாம்).

5327,5328 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், ஃபாத்திமா பின்த் கைஸ் அவ்வாறு (மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண் கணவனின் இல்லத் திலிருந்து வெளியேறி மற்றோர் இடத்தில் இத்தா' மேற்கொள்ளலாம் என்று) கூறி வந்ததை நிராகரித்தார்கள்.86

பாடம் : 43

(மணவிலக்கு அளிக்கப்பட்ட) அந்தப் பெண்கள் அல்லாஹ்வையும் இறுதி நாளையும் (உண்மையிலேயே) நம்பினால், தம் கருவறைகளில் அல்லாஹ் படைத்துள்ள எதையும் அவர்கள் மறைக்கலாகாது எனும் (2:228ஆவது) வசனத் தொடர்.

அதாவது (தம் கருவறைகளில் ஏற்பட் டுள்ள) மாதவிடாயோ கர்ப்பமோ எதையும் மறைக்கலாகாது.

5329 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது ஹஜ்ஜை முடித்துக் கொண்டு மக்காவிலிருந்து) புறப்பட விரும்பிய போது ஸஃபிய்யா (ரலி) அவர்கள் (மாதவிடாய் ஏற்பட்டதால்) தமது கூடாரத்தின் வாசலில் கவலை அடைந்தவராய் நின்று கொண்டிருந்தார்கள். அப்போது அவரிடம் நபி (ஸல்) அவர்கள் (செல்லமாக) அல்லாஹ் உன்னை அறுக்கட்டும்! உனக்குத் தொண்டை வ- வரட்டும்! எம்மை (புறப்படவிடாமல்) தடுத்து விட்டாயே! நஹ்ருடைய (துல் ஹஜ்-10ஆவது) நாளில் நீ (கஅபாவைச்) சுற்றிவந்தாயா? என்று கேட்டார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஆம்' என்று கூற, நபி (ஸல்) அவர்கள் அப்படியானால், நீ புறப்படு என்று கூறினார்கள்.87

பாடம் : 44

(மணவிலக்கு அளித்த) அவர்களின் கணவர்களே அவர்களை (இத்தா' முடிவதற்குள்) திருப்பி அழைத்துக்கொள்ள அதிக உரிமையுள்ளவர்கள் ஆவர் (எனும் 2:228ஆவது வசனத் தொடர்).

ஒன்று, அல்லது இரண்டு தலாக்' சொன்ன ஒருவர் தம் மனைவியைத் திருப்பி அழைக்கும் முறை யாது?

(மணவிலக்கு அளிக்கப்பட்ட) அந்தப் பெண்களை (இத்தா முடிந்தபின் அவர்களின் கணவர்களே மீண்டும் மணந்துகொள்வதை) நீங்கள் தடுக்கவேண்டாம் எனும் (2:232ஆவது) வசனத் தொடர்.

5330 ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஅகில் பின் யசார் (ரலி) அவர்கள் தம் சகோதரியை (ஒருவருக்கு) மணமுடித்துக் கொடுத்தார்கள். பிறகு அவரை அவருடைய கணவர் ஒரு தலாக் சொல்லிவிட்டார்.88

5331 ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மஅகில் பின் யசார் (ரலி) அவர்களின் சகோதரி, ஒருவரின் துணைவியாராக இருந்தார். அவருக்கு அவருடைய கணவர் மணவிலக்கு அளித்துவிட்டார். பின்னர் அவரது இத்தா'க் காலம் முடியும் வரை (திருப்பி அழைக்காமல்) அப்படியே விட்டு விட்டார். பிறகு (பழைய கணவரே மீண்டும்) அவரைப் பெண்கேட்டு வந்தார். இதனால் ஆத்திரமடைந்த மஅகில் (ரலி) அவர்கள் பிடிவாதமாக மறுத்துவிட்டார்கள். மேலும், (என் சகோதரி இத்தா'வில் இருந்த போது) அவளைத் திருப்பி அழைத்துக்கொள்ள அவருக்கு சக்தியிருந்தும் அப்படியே விட்டு விட்டு, (இத்தா' முடிந்த) பிறகு (இப்போது வந்து) பெண்கேட்கிறாரே! என்று கூறி, இருவருக்கும் இடையே மஅகில் தடையாக இருந்தார். அப்போது தான்  அல்லாஹ் நீங்கள் (உங்கள்) மனைவியரை மணவிலக்குச் செய்து, அவர்கள் தங்களின் (இத்தா') தவணையின் இறுதியை அடைந்துவிட்டால், தங்களின் (பழைய) கணவர்களை முறையோடும் மனம் ஒப்பியும் அவர்கள் மணந்து கொள்வதை நீங்கள் தடுக்கவேண்டாம் எனும் (2:232ஆவது) வசனத்தை முழுமையாக அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மஅகில் (ரலி) அவர்களை அழைத்து (அந்த வசனத்தை) அவருக்கு முன் ஓதிக் காட்டினார்கள். ஆகவே, அவர் தமது பிடிவாதத்தைக் கைவிட்டு அல்லாஹ்வின் கட்டளைக்குக் கீழ்ப்படிந்தார்.89

5332 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் தம் மனைவியை அவர் மாதவிடாயிலிருந்த சமயத்தில் ஒரு தலாக் சொல்லிவிட்டார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்களுக்கு(ப் பின்வருமாறு) கட்டளையிட்டார்கள்:

அவர் தம் மனைவியைத் திருப்பி அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு மனைவி மாதவிடாயிலிருந்து தூய்மையாகும் வரை தம்மிடமே வைத்துக்கொள்ள வேண்டும். பிறகு தம்மிடம் இருக்கும் அவளுக்கு இரண்டாம் முறை மாதவிடாய் ஏற்பட்டு, அதன் பிறகு அந்த மாதவிடாயிலிருந்து அவள் தூய்மையடையும் வரை காத்திருந்து விட்டு, அவர் அவளைத் தலாக் சொல்ல விரும்பினால் அவளுடன் உடலுறவுகொள் வதற்கு முன்னால் அவள் (மாதவிடாய் காலத்தில் இல்லாமல்) தூய்மையானவளாய் இருக்கும் போது தலாக் சொல்லிக்கொள் ளட்டும்! இதுவே, பெண்களை மணவிலக்குச் செய்ய அல்லாஹ் உத்தரவிட்டுள்ள காலமாகும்.

இப்னு உமர் (ரலி) அவர்களிடம் இது குறித்து வினவப்பட்டால் உன் மனையியை நீ மூன்று முறை தலாக் சொல்லிவிட்டால் வேறொரு கணவரை அவள் மணந்து (உடலுறவு) கொள்ளும் வரை அவள் உனக்கு விலக்கப்பட்டவளாக ஆகிவிடுவாள் என்று பதிலளிப்பார்கள்.

மற்றோர் அறிவிப்பில் கூடுதலாகக் காணப்படுவதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள் நீ ஒரு முறை, அல்லது இரு முறை தலாக் சொல்லியிருந்தால் (அவளைத் திருப்பி அழைத்துக் கொள்ளலாம்). இவ்வாறு (திருப்பி அழைத்துக் கொள்ளுமாறு)தான் நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கட்டளையிட்டார்கள் என்று கூறுவார்கள்.90

பாடம் : 45

மாதவிடாயிலிருக்கும்(போது மணவிலக்கு அளிக்கப்பட்ட) பெண்ணைத் திரும்ப அழைத்துக்கொள்வது.

5333 யூனுஸ் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (மாதவிடாயிலிருக்கும் மனைவியை மண விலக்குச் செய்வது குறித்துக்) கேட்டேன். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்:

நான் மாதவிடாயிலிருந்த என் மனைவிக்கு மணவிலக்கு அளித்தேன். ஆகவே, (என் தந்தை) உமர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் (இது குறித்து) வினவினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் அவர் தம் மனைவியைத் திரும்ப அழைத்துக்கொள்ள வேண்டும். பிறகு அவள் இத்தா'வை எதிர்கொள்வதற்கேற்ற (வகையில் மாத விடாயிலிருந்து தூய்மையடைந்த) நேரத்தில் (விரும்பினால்) அவர் தலாக் சொல்லட்டும் என அவருக்கு உத்தரவிடுங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் கூறுகின்றார்:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் அது ஒரு தலாக்காகக் கருதப்படுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அவன் (தன் கடமையை நிறைவேற்ற) இயலாமலும் (அதை) அறிந்துகொள்ளாமலும் இருந்துவிட்டால் (மணவிலக்கு நிகழாமல் போய்விடுமா) என்ன? என்று கேட்டார்கள்.91

பாடம் : 46

கணவன் இறந்துபோன பெண் நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைப் பிடிப்பாள்.92

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

கணவன் இறந்துபோன (பருவமடையாத) சிறுமி நறுமணம் பூசலாமென்று நான் கருதவில்லை. ஏனெனில், அவளுக்கும் (பருவமடைந்த பெண்ணைப் போலவே) இத்தா' இருக்கும் கடமையுள்ளது.

ஹுமைத் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(பின்வரும்) இந்த மூன்று ஹதீஸ்களையும் ளநபி (ஸல்) அவர்களின் வளர்ப்பு மகளானன ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள்:

5334 ஸைனப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் துணைவியாரான (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்களிடம், அவருடைய தந்தை அபூசுஃப்யான் பின் ஹர்ப் (ரலி) அவர்கள் (ஷாம் நாட்டில்) இறந்து விட்ட சமயம் சென்றேன்.

அப்போது (மூன்றாவது நாள்) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் மஞ்சள் நிறமுடைய ஒருவகை நறுமணப் பொருளைக் கொண்டு வருமாறு கூறி அதனை (அங்கிருந்த) ஒரு சிறுமியின் மீது தடவினார்கள். பிறகு தம் இரு கன்னங்களிலும் தடவிக் கொண்டார்கள். பின்னர், அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்டிருக்கும் எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக் காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!' என்று கூறக்கேட்டுள்ளேன். (ஆதலால் தான் இப்போது நறுமணம் பூசினேன்.) என்றார்கள்.93

5335 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அன்னை) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் (ரலி) அவர்களின் சகோதரர் இறந்த சமயம் அவர்களிடம் நான் சென்றேன். அப்போது அவர்கள் நறுமணப் பொருள் ஒன்றைக் கொண்டுவரச் சொல்லி பூசிக் கொண்டார்கள்.

பிறகு, இதோ! (பாருங்கள்.) அல்லாஹ்வின் மீதாணையாக எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சொற்பொழிவு) மேடையில் இருந்தபடி அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக் காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிக்க அனுமதியில்லை. ஆனால், தன் கணவருக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!' என்று கூறக் கேட்டுள்ளேன் என்றார்கள்.94

5336 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஒரு பெண்மணி வந்து, அல்லாஹ்வின் தூதரே! என் மகளுடைய கணவர் இறந்து விட்டார். (இத்தா'விலிருக்கும்) என் மகளின் கண்ணில் வ- ஏற்பட்டுவிட்டது. அவள் தன் கண்ணில் அஞ்சனம் (சுர்மா) இட்டுக் கொள்ளலாமா? என்று கேட்டார். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வேண்டாம்' என இரண்டு அல்லது மூன்று முறை கூறினார்கள். ஒவ்வொரு முறையும் வேண்டாம்' என்றே கூறினார்கள். பிறகு, (கணவனை இழந்த ஒரு பெண்ணின்) இத்தா'க் காலம் நான்கு மாதங்களும் பத்து நாட்களும்தாம். (ஆனால்,) அறியாமைக் காலத்தில் (கணவன் இறந்தபின்) மனைவி (ஒரு வருடம் இத்தா' இருப்பாள்.) ஆண்டின் முடிவில் (இத்தா' முடிந்ததன் அடையாளமாக) ஒட்டகச் சாணத்தை எறிவாள். (அந்த நிலை இப்போது இல்லை) என்றார்கள்.

5337 ஹுமைத் பின் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்களிடம், ஆண்டின் முடிவில் ஒட்டகச் சாணத்தை எறிவாள் என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் (பின்வருமாறு) கூறினார்கள்: (அறியாமைக் காலத்தில்) ஒரு பெண்ணின் கணவன் இறந்துவிட்டால் அவள் ஓரு சிறிய குடிசைக்குள் நுழைந்து கொண்டு தன் ஆடைகளிலேயே மிகவும் மோசமானதை அணிந்துகொள்வாள். ஒரு வருடம் செல்லும் வரை எந்த நறுமணத்தையும் தொட  மாட்டாள். (ஓராண்டு கழிந்த) பிறகு கழுதை, ஆடு போன்ற கால்நடை ஒன்று, அல்லது பறவை ஒன்று அவளிடம் கொண்டுவரப்படும். அதன் மீது (அழுக்கடைந்த தன் உடலைக்) கடுமையாகத் தேய்த்துக்கொள்வாள். அவ்வாறு அவள் தேய்க்கும் எந்த உயிரினமும் (அவளது உடல் அசுத்தத்தால்) சாகாமல் இருப்பது அரிதேயாகும். பிறகு அவள் (அந்தக் குடிசையிலிருந்து) வெளியே வருவாள். அப்போது அவளிடம் ஒட்டகச் சாணம் கொடுக்கப்படும். உடனே அவள் அதை (தனக்கு முன்பக்கத்தில்) தூக்கி எறிந்துவிடுவாள். (இதுவே இத்தா' முடிந்ததற்கு அடையாள மாகும்.) பிறகு அவள் தான் விரும்பிய நறுமணத்தையோ மற்றவைகளையோ பழையபடி உபயோகித்துக்கொள்வாள்.

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) தஃப்தள்ளு பிஹி' (அதன் மீது தேய்த்துக் கொள்வாள்) எனும் சொற்றொடரின் கருத்தென்ன?' என்று மா-க் (ரஹ்) அவர் களிடம் வினவப்பட்ட போது, அவர்கள், அந்தப் பெண் அந்த உயிரினத்தின் மீது தன் உடலைத் தேய்த்துக்கொள்வாள்' என்று (பொருள்) சொன்னார்கள்.

பாடம் : 47

(கணவனை இழந்து) துக்கம் கடைப் பிடிக்கும் பெண் (கண்ணில்) அஞ்சனம் தீட்டிக்கொள்வது (கூடாது).

5338 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு பெண்ணின் கணவர் இறந்து விட்டார். (இத்தா'வில் இருந்த அவளது கண்ணில் வ- ஏற்பட்டதால்) அவளின் கண்கள் குறித்து அவ(ளுடைய உறவின)ர்கள் அஞ்சினர். ஆகவே, அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று அப்பெண் அஞ்சனம் (சுர்மா) இட்டுக்கொள்ள அனுமதி கேட்டனர். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவள் அஞ்சனம் இட வேண்டாம். (அறியாமைக் காலத்தில் கணவன் இறந்தபின்) மனைவி அவளுடைய ஆடைகளி லேயே மோசமானதில்' அல்லது மோசமான வீட்டில்' தங்கியிருப்பாள். (கணவர் இறந்து) ஒரு வருடம் கழிந்துவிட்டால் (அவ்வழியாகக்) கடந்துசெல்லும் ஏதேனும் ஒரு நாய் மீது ஒட்டகச் சாணத்தை அவள் வீசியெறிவாள். (அந்த அவலம் இப்போது இல்லை.) ஆகவே, அவள் நான்கு மாதம் பத்து நாட்கள் கழியும் வரை அஞ்சனம் இட வேண்டாம் என்று சொன்னார்கள்.

5339 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும், இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப்பிடிப்பதற்கு அனுமதியில்லை; ஆனால், தன் கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!

இதை (அன்னை) உம்மு ஹபீபா பின்த் அபீசுஃப்யான் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

5340 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கணவருக்காகத் தவிர (வேறு யாருடைய இறப்புக்காகவும்) மூன்று நாட்களுக்கு அதிகமாகத் துக்கம் கடைப்பிடிக்கக் கூடாதென எங்களுக்குத் தடைவிதிக்கப்பட்டது.

இதை முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 48

(கணவனை இழந்து) துக்கம் கடைப்பிடிக்கும் பெண் (மாதவிடாயிலிருந்து) தூய்மை அடையும் போது கோஷ்டக் கட்டையால் (குஸ்த்) நறுமணப் புகையிடுதல் (செல்லும்).95

5341 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறந்துபோன எவருக்காகவும் மூன்று நாட்களுக்கு மேல் நாங்கள் துக்கம் கடைப் பிடிக்கலாகாது எனத் தடை விதிக்கப்பட்டி ருந்தோம்; ஆனால், கணவனுக்காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர!

(அதாவது இத்தா'வில் இருக்கும் போது) நாங்கள் அஞ்சனம் தீட்டிக்கொள்ளக் கூடாது; நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது; சாயமிடப்பட்ட ஆடையை அணியக் கூடாது (என்று எங்களுக்குத் தடை விதிக்கப்பட்டது); ஆனால், நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப்' எனும்) ஆடை தவிர! எங்களில் ஒருவர் மாதவிடாயி லிருந்து குளித்துத் தூய்மையடையும் போது ழஃபார்' எனும் இடத்தில் கிடைக்கும் கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ள எங்களுக்கு அனுமதிக் கப்பட்டது. மேலும், நாங்கள் ஜனாஸாவைப் பின்தொடர்ந்து செல்லக் கூடாதென்றும் தடை விதிக்கப்பட்டிருந்தோம்.96

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) குஸ்த்' (கோஷ்டம்) எனும் சொல் ளீகூறுõடுúஸீõகி ளீகூளுõடுúமுõ (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறைகளிலும் ஆளப் படுகிறது. காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல் ளீகூளுóளீழுõணூúசுõகி ளீகூறுóளீழுõணூúசுõ (ஃகாஃபூர், காஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போன்று. மேலும், (இதிலுள்ள) நுப்ஃதத்' எனும் சொல்லுக்குத் துண்டு' என்று பொருள்.

பாடம் : 49

துக்கம் கடைப்பிடிக்கும் பெண், நெய்வதற்கு முன் நூலில் சாயமிடப்பட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப்' எனும்) ஆடையை அணியலாம்.97

5342 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதும் மறுமை நாளின் மீதும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப் பிடிப்பதற்கு அனுமதியில்லை; கணவனுக்காகத் தவிர! ஏனெனில், (கணவன் இறந்துபோன) அவள் (நான்கு மாதம் பத்து நாட்கள் துக்கம் கடைப்பிடிப்பாள். அப்போது) அஞ்சனம் தீட்டிக்கொள்ள மாட்டாள். சாயமிடப்பட்ட ஆடையை அணிய மாட்டாள்; நெய்வதற்கு முன் நூலில் சாயமிட்டுத் தயாரிக்கப்பட்ட (அஸ்ப்' எனும்) ஆடையைத் தவிர!

இதை உம்முஅத்திய்யா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 

5343 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கணவன் இறந்து இத்தாவிலிருக்கும் பெண்) நறுமணம் பூசிக்கொள்ளக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள். ஆனால், (மாதவிடாயிலிருந்து) அவள் தூய்மையடையும் சமயத்தில் தவிர! அப்போது குஸ்த்' மற்றும் ழஃபார்' ஆகிய கோஷ்டக் கட்டைத் துண்டால் நறுமணப் புகையிட்டுக்கொள்ளலாம்.

அபூஅப்தில்லாஹ் (புகாரீ ஆகிய நான்) கூறுகிறேன்:

(இந்த ஹதீஸின் மூலத்திலுள்ள) குஸ்த்' (கோஷ்டம்) எனும் சொல் ளீகூறுõடுúஸீõகி ளீகூளுõடுúமுõ (ஃகுஸ்த், குஸ்த்) என இரு முறைகளிலும் ஆளப் படுகிறது. காஃபூர்' (கற்பூரம்) எனும் சொல் ளீகூளுóளீழுõணூúசுõகி ளீகூறுóளீழுõணூúசுõ (ஃகாஃபூர், காஃபூர்) என இரு முறைகளிலும் ஆளப்படுவதைப் போல.98

பாடம் : 50

உங்களில் எவரேனும் மனைவியரைவிட்டு இறந்துபோயிருந்தால், அம்மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள். தங்கள் தவணையின் இறுதியை அவர்கள் எட்டி விட்டால், தங்கள் விஷயத்தில் முறையோடு அவர்கள் செய்துகொள்கின்ற (அலங்காரம் முதலான)வற்றில் (தலையிடாமல் இருப்ப தால்) உங்கள் மீது எந்தக் குற்றமுமில்லை. நீங்கள் செய்கின்றவற்றை அல்லாஹ் நன்கறிந்தவன் ஆவான் (எனும் 2:234ஆவது இறைவசனம்).

5344 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உங்களில் எவரேனும் மனைவியரை விட்டு இறந்துபோயிருந்தால், அந்த மனைவியர் நான்கு மாதம் பத்து நாட்கள் தங்கள் விஷயத்தில் காத்திருப்பார்கள் எனும் (2:234 ஆவது) வசனத்தின் கருத்தாவது:

(கணவன் இறந்துபோன) அந்தப் பெண் (நான்கு மாதம் பத்து நாட்கள் காத்திருத்தல் எனும்) இந்த இத்தா'வைத் தம் கணவனுடைய குடும்பத்தாரிடம் மேற்கொள்வது கட்டாய மாக இருந்தது. இந்நிலையில் உங்களில் மனைவியரை விட்டு இற(க்கும் தறுவாயில் இரு)ப்பவர்கள் தங்கள் மனைவியரை (வீட்டி லிருந்து) வெளியேற்றிவிடாமல் ஓராண்டு வரை பாரமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரணசாசனம் செய்வார்களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற) வற்றைச் செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது எனும் (2:240ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். (இதன் மூலம்) ஒரு முழு ஆண்டில் (நான்கு மாதம் பத்து நாட்கள் போக மீதியுள்ள) ஏழு மாதம் இருபது நாட்களை(க் கணவனின்) மரண சாசன(த்தை நிறைவேற்றுவதற்கான சந்தர்ப்ப) மாக அல்லாஹ் ஆக்கினான். அவள் விரும்பினால் (அந்த ஏழு மாதம் இருபது நாட்களில்) தம் கணவனின் சாசனப்படி (கணவன் வீட்டிலேயே) தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் (நான்கு மாதம் பத்து நாட்களுக்குப் பின்) வெளியேறிக்கொள்ள லாம். இதைத்தான் வெளியேற்றிவிடாமல் ஓராண்டுக் காலம் வரை பராமரிக்குமாறு (உறவினர்களிடம்) மரண சாசனம் செய்வார் களாக. ஆயினும், அவர்களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்ற (மறுமணம் போன்ற)வற்றை செய்து கொண்டார்களாயின் (உறவினர்களாகிய) உங்கள் மீது எந்தக் குற்றமும் கிடையாது எனும் இந்த (2:240 ஆவது) வசனம் குறிக்கிறது. ஆக, (நான்கு மாதம் பத்து நாட்கள் எனும்) இத்தா'க் கால வரம்பு கணவனை இழந்த கைம்பெண்ணின் மீது கட்டாயமானதே ஆகும்.

(ஆகவே, 2:234ஆவது வசனம், 2:240ஆவது வசனத்தை மாற்றிடவில்லை என்ற) இந்தக் கருத்தையே முஜாஹித் (ரஹ்) அவர்களிடமி ருந்து இப்னு அபீநஜாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

இந்த வசனம் (2:240), அவள் தன்னுடைய கணவன் வீட்டில்தான் இருக்கவேண்டும் என்பதை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா' இருப்பாள். இதையே இந்த (2:240ஆவது) வசனத் தொடர் குறிக்கிறது என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக அதாஉ பின் அபீரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

(இதைத் தெளிவுபடுத்தும் விதத்தில்) அதாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அவள் விரும்பினால் தன் கணவனின் வீட்டில் இத்தா' இருப்பாள். தனக்கு வழங்கப்பட்ட சாசனப்படி தங்கியிருப்பாள். அவள் விரும்பினால் வெளியேறி (வேறு எங்கேனும் தங்கி)க்கொள்வாள். ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்: ஆயினும், அவர் களாகவே வெளியேறித் தங்களுக்கு நன்மை பயக்கின்றவற்றைச் செய்து கொண்டால் உங்கள் மீது எந்தக் குற்றமும் இல்லை.

தொடர்ந்து அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: பிறகு சொத்துரிமைச் சட்டம் (குறித்த 4:12ஆவது வசனம்) வந்து, தங்கும் வசதி (செய்துதர கணவன் சாசனம் செய்ய வேண்டுமென்ற முறை)யை மாற்றிவிட்டது. எனவே, அவள் தான் விரும்பிய இடத்தில் இத்தா' இருக்கலாம். அவளுக்குத் தங்கும் வசதி செய்து கொடுக்க வேண்டியது (கணவனின் உறவினர்களுக்குக் கடமையாக) இல்லை.99

5345 ஸைனப் பின்த் அபீசலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

தம் தந்தை (அபூசுஃப்யான்-ரலி) அவர் களின் இறப்புச் செய்தி வந்த போது (அன்னை) உம்மு ஹபீபா (ரலி) அவர்கள் நறுமணத்தைக் கொண்டுவரச் சொல்லி அதனைத் தம் இரு கைகளிலும் தடவிக் கொண்டார்கள். மேலும், (பின்வருமாறு) கூறினார்கள்: எனக்கு இந்த நறுமணம் தேவையே இல்லை. ஆயினும், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வையும் மறுமை நாளையும் நம்பிக்கை கொண்ட எந்தப் பெண்ணும் இறந்துபோன ஒருவருக்காக மூன்று நாட்களுக்கு மேல் துக்கம் கடைப் பிடிக்க அனுமதியில்லை. ஆனால், கணவருக் காக நான்கு மாதம் பத்து நாட்கள் தவிர என்று சொல்லக் கேட்டுள்ளேன்.100

 

பாடம் : 51

விலைமாதின் வருமானமும், செல்லாத திருமணமும்.101

ஒருவர் தமக்கு மணமுடிக்கத் தடை செய்யப்பட்டுள்ள பெண்ணைத் தம்மை அறியாமல் மணந்து கொண்டால் அவர்கள் இருவரும் பிரித்துவைக்கப்படுவர். மண ஒப்பந்தத்தின் போது முடிவு செய்யப்பட்ட மணக்கொடை (மஹ்ர்) அவளுக்குக் கிடைக்கும்; வேறெதுவும் கிடைக்காது

என்று ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள். பிறகு (அக்கருத்திலிருந்து மாறி) அவளுக்கு (நிகரான பெண்களுக்குத் தரப் படும்) நிகர மணக்கொடை (மஹ்ருல் மிஸ்ல்) உண்டென்று சொன்னார்கள்.

5346 அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாய் விற்ற காசு, சோதிடனின் தட்சணை, விபசாரியின் வருமானம் ஆகியவற்றுக்கு நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தார்கள்.102

 

 

5347 அபூஜுஹைஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

பச்சை குத்திவிடுபவளையும், பச்சை குத்திக்கொள்பவளையும், வட்டி உண்பவனையும், வட்டி உண்ணக் கொடுப்பவனையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள். நாய் விற்ற காசு, விபசாரியின் வருமானம் ஆகியவற்றைத் தடை செய்தார்கள். மேலும், (உயிரினங்களின்) உருவப் படங்கள் வரைபவரையும் நபி (ஸல்) அவர்கள் சபித்தார்கள்.103

5348 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடிமைப் பெண்கள் (விபசாரம் போன்ற தகாத வழிகளில்) பொருளீட்டுவதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள்.

 

 

பாடம் : 52

தாம்பத்திய உறவு கொள்ளப்பட்ட பெண்ணுக்குரிய மணக்கொடை, தாம்பத்திய உறவு தீர்மானிக்கப்படும் முறை, தாம்பத்திய உறவுக்கு முன் மணவிலக்கு அளித்தல் (ஆகியன குறித்த சட்டம்).104

5349 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் ஒரு மனிதர் தம் மனைவியின் மீது விபசாரக் குற்றம் சாட்டினால் (சட்டம் என்ன?) என்று கேட்டேன்.

அதற்கு அவர்கள் கூறினார்கள்:

அஜ்லான் குலத்தைச் சேர்ந்த (தம்பதி யரான) இருவரை நபி (ஸல்) அவர்கள் பிரித்து வைத்துவிட்டு, உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்று கேட்க, (தம்பதியர்களான) அவர்கள் இருவருமே மறுத்தனர். பிறகும் நபி (ஸல்) அவர்கள் உங்கள் இருவரில் ஒருவர் பொய் சொல்கிறார் என்பதை அல்லாஹ் அறிவான். ஆகவே, உங்களில் பாவமன்னிப்புக் கோரி (இறைவன் பக்கம்) திரும்புகிறவர் உண்டா? என்று கேட்க, அப்போதும் அவர்கள் இருவரும் மறுத்தனர். ஆகவே, (தம்பதியரான) அவர்கள் இருவரையும் நபி (ஸல்) அவர்கள் பிரித்துவைத்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

என்னிடம் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் இந்த ஹதீஸில் ஒரு விஷயத்தைத் தாங்கள் சொல்லவில்லை என்றே நான் கருதுகிறேன் என்று கூறிவிட்டு, பிறகு அவர்களே (பின்வருமாறு) கூறினார்கள்: (தம் மனைவி மீது விபசாரக் குற்றம் சாட்டிய) அந்த மனிதர் (மஹ்ராக நான் அளித்த) என் பொருள் (என்ன ஆவது?) என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (உமது குற்றச் சாட்டில்) நீர் உண்மையாளராய் இருந்தால், அவளுடன் நீர் ஏற்கெனவே தாம்பத்திய உறவு கொண்டுள்ளீர். (அதற்கு இந்த மஹ்ர் நிகராகிவிடும்.) நீர் பொய் சொல்லியிருந்தால் (மனைவியை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தால்) அந்தச் செல்வம் (மஹ்ர்) உம்மைவிட்டு வெகு தொலைவில் இருக்கிறது என்று கூறினார்கள்.105

பாடம் : 53

மணக்கொடை (மஹ்ர்) நிர்ணயிக்கப்படாத பெண்ணுக்கு உதவித் தொகை (முத்ஆ) வழங்குதல்.

ஏனெனில் உயர்வான அல்லாஹ் கூறுகின்றான்:

பெண்களை நீங்கள் தீண்டுவதற்கு முன், அல்லது அவர்களுடைய மணக்கொடையை நிர்ணயிப்பதற்கு முன் தலாக் சொன்னால் உங்கள் மீது குற்றமில்லை. (இந்நிலையில்) வசதியுள்ளவர் தன் தகுதிக்கேற்றவாறும், ஏழை தன் தகுதிக்கேற்றவாறும் அவர்களுக்குப் பயனுள்ள ஏதேனும் பொருட்களை (உதவித் தொகையை) நல்ல முறையில் வழங்கிட வேண்டும். (இது) நல்லோர் மீது கடமை யாகும். (2:236, 237)

மேலும், மணவிலக்கு அளிக்கப்பட்ட பெண்களுக்கு (கணவனிடமிருந்து) முறையான பராமரிப்புப் பெற உரிமையுண்டு. (இது) தீமையிலிருந்து தம்மைக் காப்பாற்றிக் கொள்வோர் மீது கடமையாகும். இவ்வாறே அல்லாஹ் தன் வசனங்களை, நீங்கள் சிந்தித்து உணரும் பொருட்டு விளக்கிக் காட்டு கின்றான். (2:241, 242)

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்யப்பட்ட பெண்ணை, அவளுடைய கணவர் தலாக் சொன்ன போது உதவித் தொகை (முத்ஆ) வழங்கிடுமாறு நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை.106

5350 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

சாப அழைப்புப் பிரமாணம் (-ஆன்) செய்த அந்தத் தம்பதியரிடம் நபி (ஸல்) அவர்கள், உங்கள் இருவரின் விசாரணையும் அல்லாஹ்விடம் உள்ளது. உங்கள் இருவரில் ஒருவர் பொய்யர் என்று கூறிவிட்டு, (கணவரான உவைமிரைப் பார்த்து), இனி அவள் மீது உமக்கு எந்த அதிகாரமும் கிடையாது என்று சொன்னார்கள்.

அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! (அவளுக்கு நான் மணக்கொடையாக அளித்திருந்த) எனது பொருள் (என்னாவது)? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உமக்கு (அந்த)ப் பொருள் கிடைக்காது. நீர் அவள் மீது உண்மை(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந்தால், அவளது கற்பை நீர் பயன்படுத்திக் கொள்வதற்காகப் பெற்ற அனுமதிக்கு அந்தப் பொருள் பகரமாகிவிடும். நீர் அவள் மீது பொய்(யான குற்றச்சாட்டைச்) சொல்லியிருந் தால், (அவளை அனுபவித்துக் கொண்டு அவதூறும் கற்பித்த காரணத்தினால்) அப் பொருள் உம்மைவிட்டு வெகு தொலைவில் உள்ளது என்று சொன்னார்கள்.107

 

05.11.2009. 09:31




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
35 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி