65-திருக்குர்ஆன் விளக்கவுர15

பாடம் : 1

(நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதி இழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள். திண்ணமாக அல்லாஹ் எல்லாப் பாவங் களையும் மன்னித்து விடுகின்றான். அவன் பெரிதும் மன்னிப்பவனும், கருணை காட்டுப வனும் ஆவான் எனும் (39:53ஆவது) இறை வசனம்.

4810 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்பவர்களில் சிலர், நிறையக் கொலைகளைப் புரிந்தனர்; விபசாரம் அதிக மாகச் செய்திருந்தனர். (ஒரு நாள்) அவர்கள் முஹம்மத் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் கூறிவருகின்ற(போதனை முத-ய)வையும் நீங்கள் அழைப்புவிடுக்கின்ற (இஸ்லாமிய) மார்க்கமும் உறுதியாக நல்லவையே! நாங்கள் புரிந்து விட்ட பாவங்களுக்குப் பரிகாரம் ஏதேனும் உண்டா என நீங்கள் எங்களுக்குத் தெரிவித்தால் (நன்றாயிருக்குமே) என்று கூறினர். அப்போது, (ரஹ்மானின் உண்மை யான அடியார்களான) அவர்கள் அல்லாஹ் வுடன் வேறெந்தத் தெய்வத்தையும் அழைப்பதில்லை. மேலும், (கொலை செய்யக் கூடாது) என்று அல்லாஹ் தடை செய்துள்ள எந்த உயிரையும் முறையின்றி அவர்கள் கொலை புரிவதில்லை; மேலும் விபசாரம் செய்வதில்லை... எனும் (25:68 ஆவது) வசனம் அருளப்பெற்றது. மேலும், (நபியே!) கூறுங்கள்: வரம்புமீறி தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்ட என் அடியார்களே! அல்லாஹ்வின் கருணையில் அவநம்பிக்கை கொண்டுவிடாதீர்கள்... எனும் (39:53ஆவது) வசனமும் அருளப்பெற்றது.

பாடம் : 2

அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை எனும் (39:67ஆவது) வசனத் தொடர்.

4811 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

யூத மத அறிஞர்களில் ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, முஹம்மதே! அல்லாஹ், வானங்களை ஒரு விரல் மீதும், பூமிகளை ஒரு விரல் மீதும், மரங்களை ஒரு விரல் மீதும், தண்ணீர் மற்றும் ஈரமான மண்ணை ஒரு விரல் மீதும், இதரப் படைப்பினங்களை ஒரு விரல் மீதும் வைத்துக் கொண்டு, நானே (ஏகாதிபத்தியம் உள்ள) அரசன் என்று சொல்வான் என நாங்கள் (எங்களது வேத நூலான தவ்ராத்தில்) கண்டோம் என்று சொன்னார். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள் அந்த அறிஞரின் கருத்தை உண்மையென ஆமோதிக்கும் விதத்தில், தமது கடைவாய்ப் பற்கள் தெரியச் சிரித்தார்கள். பிறகு, அவர்கள் அல்லாஹ்வை எவ்வாறு மதிக்க வேண்டுமோ, அவ்வாறு மதிக்கவில்லை. மறுமை நாளில் பூமி முழுவதும் அவன் கைப் பிடியில் இருக்கும். வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டிருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூயவன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத்தை ஓதினார்கள்.

 

பாடம் : 3

மறுமை நாளில் பூமி முழுவதும் அல்லாஹ்வின் கைப்பிடியில் இருக்கும். மேலும், வானங்கள் அவனது வலக்கரத்தில் சுருட்டப்பட்டு இருக்கும். அவர்கள் இணை வைப்பவற்றிலிருந்து அவன் தூய்மையான வன்; உயர்ந்தவன் எனும் (39:67ஆவது) வசனத் தொடர்.

4812 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(மறுமை நாளில்) அல்லாஹ் பூமியை தனது கைப்பிடிக்குள் அடக்கிக் கொள்வான்; வானங்களை தனது வலக்கரத்தில் சுருட்டிக் கொள்வான்; பிறகு, நானே அரசன்! எங்கே பூமியின் அரசர்கள்? என்று கேட்பான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 பாடம் : 4

மேலும், (அந்நாளில்) எக்காளம் (ஸூர்) ஊதப்படும். அப்போது வானங்களிலும் பூமியிலும் உள்ள அனைவரும் மூர்ச்சையாகி விடுவார்கள்; அல்லாஹ் நாடியவர்களைத் தவிர! பின்னர் மற்றொருமுறை எக்காளம் ஊதப்படும். உடனே அனைவரும் எழுந்து பார்க்க ஆரம்பித்து விடுவார்கள் எனும் (39:68ஆவது) இறைவசனம்.2

4813 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரண்டாவது எக்காளம் ஊதப்பட்ட பின், (மூர்ச்சை தெளிந்து,) தலையை உயர்த்துபவர் களில் நான்தான் முதல் ஆளாக இருப்பேன். அப்போது நான் மூசா (அலை) அவர்களுக்கு அருகே இருப்பேன். அன்னார் இறைவனது அரியாசனத்தைப் பிடித்தபடி (நின்று கொண்டு) இருப்பார்கள். (முதல் எக்காளம் ஊதப்பட்டபோதே மூர்ச்சையாகாமல்) இதே நிலையில் அன்னார் இருந்தார்களா; அல்லது இரண்டாவது எக்காளம் ஊதப்பட்டதற்குப் பின்புதானா (அந்நிலைக்கு வந்தார்கள்)? என்று எனக்குத் தெரியாது.

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.3

4814 அபூசா-ஹ் ஃதக்வான் அஸ்ஸம்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், அந்த இரு எக்காளத்திற்கும் மத்தியில் (இடைப்பட்ட காலம்) நாற்பது என்று கூறியதாக அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் சொன்னார்கள். அவர்களுடைய நண்பர்கள், அபூஹுரைரா அவர்களே! நாட்களில் நாற்பதா? என்று கேட்டனர். (இதற்கு பதில் சொல்வதை விட்டும்) நான் விலகிக் கொள்கிறேன் என்று அபூஹுரைரா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். நண்பர்கள், வருடங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன் என்று பதில் சொன்னார்கள். நண்பர்கள், மாதங்கள் நாற்பதா? என்று கேட்டனர். அப்போதும் அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் விலகிக் கொள்கிறேன். (ஏனெனில், எனக்கே இது குறித்துத் தெரியாது) என்று கூறிவிட்டு, மனிதனின் எல்லா உறுப்புகளும் (மண்ணுக்குள்) மக்கிப் போய்விடும். ஆனால் அவனது (முதுகந்தண்டின் வேர்ப்பகுதியிலிருக்கும்) உள்வால் எலும்பின் (அணுவளவு) நுனியைத் தவிர! அதை வைத்தே படைப்பினங்கள் (மீண்டும் மறுமை நாளில்) படைக்கப்படும் என்று சொன்னார்கள்.

4815 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்களிடம், இணைவைப்பவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு இழைத்த மிகக் கடுமையான துன்பம் எதுவென்று எனக்கு அறிவியுங்கள்! என்று கேட்டேன். அதற்கு அன்னார் (பின்வருமாறு) கூறினார்கள்: (ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் கஅபாவின் வளாகத்தில் (ஹிஜ்ர் பகுதியில்) தொழுது கொண்டிருந்த போது, உக்பா பின் அபீமுஐத் என்பவன் முன்னோக்கி வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது தோளைப் பிடித்து, தன் துணியை அவர்களது கழுத்தில் போட்டு முறுக்கி (மூச்சுத் திணறும்படி) கடுமையாக நெறித்தான். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் முன்னால் வந்து, அவனது தோளைப் பிடித்து இழுத்து விட்டு, (நபியவர்களைத் துன்புறுத்தவிடாமல் தடுத்து,) என் இறைவன் அல்லாஹ்தான் என்று சொல்கிறார் என்பதற்காகவா ஒரு மனிதரை நீங்கள் கொல்கிறீர்கள்? அவரோ உங்களுடைய இறைவனின் சார்பிலிருந்து உங்களிடம் தெளிவான சான்றுகளைக் கொண்டு வந்திருக்கிறார்(40:28) என்று கேட்டார்கள்.4

பாடம் : 1

(உலகில் நீங்கள் குற்றங்களைச் செய்த போது) உங்களின் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்க வில்லை. மாறாக, நீங்கள் செய்கின்ற செயல் களில் பெரும்பாலானவற்றை அல்லாஹ்கூட அறிய மாட்டான் என்றே நீங்கள் எண்ணியி ருந்தீர்கள் (எனும் 41:22ஆவது இறைவசனம்).

4816 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) குறைஷியரில் இருவரும் அவர்களுடைய துணைவியரின் உறவினரான ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த ஒருவரும் அல்லது ஸகீஃப் குலத்தைச் சேர்ந்த இரண்டு பேரும், குறைஷிக் குலத்தைச் சேர்ந்த அவர்களுடைய மனைவிமார்களின் உறவுக்காரர் ஒருவரும் (ஆக மூவருமாக) ஒரு வீட்டில் (அமர்ந்து கொண்டு) இருந்தனர். அப்போது அவர்களில் ஒருவர் மற்றவரிடம் நமது பேச்சை அல்லாஹ் கேட்டுக் கொண்டிருக்கின்றான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். அவர் களில் ஒருவர், (நமது பேச்சுகளில்) சிலவற்றை மட்டும் அவன் கேட்கிறான் என்று பதிலளித்தார். மற்றொருவர் நமது பேச்சுகளில் சிலவற்றை அவன் கேட்டுக் கொண்டிருப்ப தானால் அனைத்தையும் அவன் கேட்கத்தானே செய்வான் என்று கூறினார். அப்போது தான் , (உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக் கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை எனும் இந்த வசனம் (41:22) அருளப்பெற்றது.

பாடம் : 2

உங்கள் இறைவனைப் பற்றி நீங்கள் கொண்டிருந்த உங்களது இந்த எண்ணமே உங்களை அழிவில் ஆழ்த்திவிட்டது. ஆகவே, நீங்கள் இழப்புக்குரியவர்களாய் ஆகி விட்டீர்கள் (என்று அவர்களின் தோல்கள் கூறும் எனும் 41:23ஆவது இறைவசனம்).

4817அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் (கஅபாவிற்கு) அருகில் குறைஷியரில் இருவரும் ஸகீஃபியரில் ஒருவரும் அல்லது ஸகீஃபியரில் இருவரும் குறைஷியரில் ஒருவரும் (ஆக மூவர் ஓரிடத்தில்) ஒன்றுகூடினர். அவர்களின் வயிறுகளில் கொழுப்பு நிறைய இருந்தது. இதயங்களில் சிந்தனை குறைவாக இருந்தது. அவர்களில் ஒருவர், நாம் பேசுவதை அல்லாஹ் கேட்கிறான் என்று நீங்கள் கருதுகின்றீர்களா? என்று கேட்டார். மற்றொருவர், நாம் சப்தமாகப் பேசினால் அவன் கேட்கின்றான். நாம் இரகசியமாகப் பேசினால் அவன் கேட்பதில்லை என்று பதிலளித்தார். (அவர்களில்) இன்னும் ஒருவர், நாம் சப்தமிட்டுப் பேசும் போது அவன் கேட்பானெனில் நாம் இரகசியமாகப் பேசும் போதும் அவன் கேட்கத் தான் செய்வான் என்று கூறினார். அப்போது அல்லாஹ், (உலகில் நீங்கள் குற்றங்கள் புரிந்த போது) உங்கள் காதுகளும் கண்களும் தோல்களும் உங்களுக்கெதிராகச் சாட்சியம் அளிக்கும் என்பதை அஞ்சிக்கூட (குற்றங்களிலிருந்து) தவிர்ந்து கொள்பவர்களாக நீங்கள் இருக்கவில்லை எனும் வசனங்களை (41:22-24) அருளினான்.

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

 46ன அல்அஹ்காஃப் அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(46:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஃபீளூன எனும் சொல்லுக்கு நீங்கள் கூறுவதை என்று பொருள்.

சிலர் கூறுகின்றனர்: (46:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஸாரத் எனும் சொல்லுக்கும் (இன்ன பிற ஓதல்களில் வந்துள்ள) உஸ்ரத், அஸரத் ஆகிய சொற்களுக்கும் எஞ்சியுள்ள ஏதேனும் ஞானம் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(46:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) பித்அம் மினர் ருசு- எனும் சொற்றொடருக்கு நான் ஒன்றும் முதன் முதலாய் வந்த இறைத்தூதர் அல்லன் என்று பொருள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அல்லாதோர் கூறுகின்றனர்:

(46:10ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அ ரஅய்த்தும் (நீங்கள் கவனித்தீர்களா?) என்பதிலுள்ள (வினாப் பொருளைத் தரும்) அ எனும் இடைச் சொல், (அல்லாஹ் அல்லாத கற்பனைக் கடவுள்களை வணங்குவது நியாயம்தான் என்று வாதிட்டு வந்த மக்கா நகர இறை மறுப்பாளர்களுக்கு) எச்சரிக்கையாகவே கூறப்பட்டுள்ளது: (மறுப்பாளர்களே!) உங்களது வாதம் உண்மை என வைத்துக் கொண்டாலும் அந்தக் கடவுள்கள் வணக்கத்திற்குத் தகுதியானவர்கள் அல்லர். (படைத்தவனே வணங்குவதற்குத் தகுதியானவன் ஆவான். படைக்கப்பட்ட பொருள்கள் அல்ல.)என்பது இவ்வசனத்தின் கருத்தாகும்.

அரஅய்த்தும் (நீங்கள் கவனித்தீர்களா) என்பதற்கு நீங்கள் கண்ணால் கண்டீர்களா? என்பது பொருளன்று. நீங்கள் வணங்கிவரும் அல்லாஹ் அல்லாதவை ஏதேனும் ஒன்றைப் படைத்தன என்பதை நீங்கள் அறிவீர்களா? (நிலைமை இவ்வாறிருக்க, அந்த இயக்கமற்ற கற்பனைக் கடவுள்களை வணங்கிவரும் நீங்கள் அநியாயக்காரர்கள் அல்லவா? உங்களது இந்தப் பகுத்தறிவற்ற நிலையை நீங்களே யோசித்துப் பார்த்ததுண்டா?) என்றே பொருள்.

பாடம் : 1

ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகின்றீர்களா? எனக்கு முன்னர் எத்தனையோ தலைமுறையினர் வாழ்ந்து சென்றுள்ளார்களே! (அவர்களில் எவரும் மண்ணறையிலிருந்து எழுந்து வரவில்லையே!) என்று கூறுகிறான். பெற்றோர் இருவரும் (மகனுக்காக) அல்லாஹ்வின் உதவியை வேண்டியவர்களாக, உனக்குக் கேடுதான்! நம்பிக்கை கொள்! அல்லாஹ்வின் வாக்கு உண்மையானது என்று கூறகின்றார்கள். ஆனால், அவனோ இவையெல்லாம் முன்னோர்களின் கட்டுக்கதைகளேயன்றி வேறில்லை என்று கூறுகின்றான் (எனும் 46:17ஆவது இறைவசனம்).

4827 யூசுஃப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மர்வான் பின் அல்ஹகமை ஹிஜாஸ் மாகாணத்தின் ஆளுனராக முஆவியா (ரலி) அவர்கள் நியமித்திருந்தார்கள். மர்வான் (ஒரு நாள் மக்களை ஒன்றுகூட்டி,) உரை நிகழ்த்தினார். அப்போது, முஆவியா (ரலி) அவர்களுடைய புதல்வர் யஸீத் குறித்துப் பேசியவாறு முஆவியாவுக்குப் பின்னர் யஸீதுக்கு வாக்களிப்புப் பிரமாணம் (பைஅத்) செய்ய வேண்டுமெனக் கூறினார். அப்போது அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் மர்வானுக்கு (மறுப்புத் தெரிவித்து) ஏதோ கூறினார். உடனே மர்வான் அவரைப் பிடியுங்கள்! என்று (தம் சிப்பாய்களுக்கு) உத்தரவிட்டார். உடனே அப்துர் ரஹ்மான் (ரலி) அவர்கள் தம் சகோதரி ஆயிஷா (ரலி) அவர்களின் இல்லத்திற்குள் நுழைந்து கொண்டார்கள். ஆகவே, அவரைப் பிடிக்க அவர்களுக்குத் துணிச்சல் ஏற்படவில்லை. அப்போது மர்வான் ஒருவன் தன் பெற்றோரிடம் சீ! உங்களுக்கு என்ன நேர்ந்தது? (நான் இறந்த பின்னர் (மண்ணறையிலிருந்து உயிரோடு) வெளிக் கொணரப்படுவேன் என்று என்னை அச்சுறுத்துகிறீர்களா?... எனும் (46:17ஆவது) வசனத்தை இவர் (போன்றவர்களின்) விஷயத்தில்தான் அல்லாஹ் அருளினான் என்று கூறினார். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் திரைக்கப்பால் இருந்து கொண்டு, ளஅபூபக்ர் (ரலி) அவர்களின் குடும்பத்தினராகியன எங்கள் விஷயத்தில், என் கற்பொழுக்கத்தை அறிவிக்கும் வசனத்தைத் தவிர, வேறு எந்த வசனத்தையும் குர்ஆனில் அல்லாஹ் அருள வில்லை என்று கூறினார்கள்.

பாடம் : 2

ஆனால், அவர்கள் (தங்களுக்கு அனுப்பப்பட்ட வேதனை) தாங்கள் வசித்து வந்த பள்ளத்தாக்குகளை நோக்கி மேகமாக வருவதைக் கண்டதும், இது நமக்கு மழையைப் பொழிவிக்கக் கூடிய மேகமாகும் என்று கூறினார்கள். அப்படியல்ல! மாறாக, நீங்கள் எதற்காக அவசரப்பட்டுக் கொண்டி ருந்தீர்களோ அது தான் இது! இது (புயல்) காற்று; இதில் துன்புறுத்தக் கூடிய வேதனை உண்டு (எனக் கூறப்பட்டது) எனும் (46:24 ஆவது) இறைவசனம்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (இவ்வசனத்தின் மூலத்தி லுள்ள) ஆரிள் எனும் சொல்லுக்கு மேகம் என்று பொருள்.

4828 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை உள்நாக்குத் தெரியும் அளவிற்குச் சிரிப்பவர்களாகக் கண்டதில்லை. அவர்கள் புன்னகைப்பவர்களாகவே இருந்தார்கள்.2

 4829 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மேகத்தையோ அல்லது (சூறாவளிக்) காற்றையோ கண்டால், நபி (ஸல்) அவர் களின் முகத்தில் (ஒருவிதமான கலக்கத்தின்) ரேகை தென்படும். (ஒரு நாள்) நான், அல்லாஹ்வின் தூதரே! மக்கள் மேகத்தைக் காணும் போது அது மழை மேகமாக இருக்க லாம் என்றெண்ணி மகிழ்ச்சியடைகின்றனர். ஆனால், தாங்கள் மேகத்தைக் காணும் போது ஒருவிதமான கலக்கம் தங்கள் முகத்தில் தென்படக் காண்கிறேனே (ஏன்)? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆயிஷா! அதில் (அல்லாஹ்வின்) வேதனை இருக்கலாம் என்பதால் என்னால் கலக்கமடையாமல் இருக்க இயலவில்லை. (ஆத் எனும்) ஒரு சமூகத்தார் (சூறாவளிக்) காற்றினால் வேதனை செய்யப்பட்டனர். (அந்தச்) சமூகத்தார் (மேகமாக வந்த) அந்த வேதனையைப் பார்த்து விட்டு, இது நமக்கு மழையைப் பொழிவிக்கும் மேகம் என்றே கூறினர் என பதிலளித்தார்கள்.

பாடம் : 1

மேலும், நீங்கள் உங்கள் (இரத்த பந்த) உறவு களைத் துண்டித்து விட முனைகிறீர்களா? (எனும் 47:22ஆவது வசனத் தொடர்.)

4830 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் படைப்புகளைப் படைத்து முடித்த போது, உறவானது எழுந்து அன்பாளன் அல்லாஹ்வின் அரியாசனத்தின் கால்களில் ஒன்றைப் பற்றி(க் கொண்டு மன்றாடி)யது. அப்போது அல்லாஹ், என்ன? என்று கேட்டான். அதற்கு உறவு, உறவுகளைத் துண்டிப்பதிலிருந்து உன்னிடம் பாதுகாப்புக் கோரி நிற்கிறேன் என்று கூறியது. உன்னை (உறவை)ப் பேணி நல்ல முறையில் நடந்து கொள்பவருடன் நானும் நல்லமுறையில் நடந்து கொள்வேன் என்பதும், உன்னைத் துண்டித்து விடுகின்றவரை நானும் துண்டித்து விடுவேன் என்பதும் உனக்குத் திருப்தியளிக்க வில்லையா? என்று கேட்டான். அதற்கு உறவு, ஆம் (திருப்தியே) என் இறைவா! என்று கூறியது. அல்லாஹ் இது (அவ்வாறுதான்) நடக்கும் என்று கூறினான்.

அறிவிப்பாளர் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் (நயவஞ்ச கர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் (47:22ஆவது) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று கூறினார்கள்.

4831 சயீத் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மேற்கண்ட இந்த ஹதீஸை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவித்து விட்டுப் பிறகு, நீங்கள் விரும்பினால், (நயவஞ்சகர்களே!) நீங்கள் (போருக்கு வராமல்) பின்வாங்கிக் கொண்டு பூமியில் குழப்பம் விளைவிக்கவும், உங்கள் உறவுகளைத் துண்டிக்கவும் முனைகிறீர்களா? எனும் (47:22ஆவது) இறை வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என்று சொன்னார்கள்.

4832 மேற்சொன்ன இதே ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் அறிவிக் கப்பட்டுள்ளது.

(47:15ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஆசின் எனும் சொல்லுக்கு மாறுகின்ற என்று பொருள்.

பாடம் : 1

நபியே! நாம் உங்களுக்கு பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் (எனும் 48:1ஆவது இறைவசனம்).

4833 அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபி அவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர் களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்க வில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. பிறகு (மூன்றாம் முறையாக) உமர் கேட்டார்கள். அப்போதும் நபிகளார் பதிலளிக்கவில்லை. பின்னர் உமர் (ரலி) அவர்கள் (தம்மைத் தாமே கடிந்து கொண்டவர்களாக), உம்மை உமரின் தாய் இழக்கட்டும்! மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே என்று கூறினார்கள்.

மேலும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி மக்களுக்கு முன்னால் வந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) அருளப்பட்டு விடுமோ என்று நான் அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் சப்தமிட்டு அழைப்பதைக் கேட்டேன். நான் நினைத்த படி என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள் இந்த இரவு எனக்கு ஒரு (குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும் என்று கூறிவிட்டு, உங்களுக்கு நாம் பகிரங்கமான வெற்றியை அளித்துள்ளோம் என்று (தொடங்கும் 48:1ஆவது இறைவசனத்தை) ஓதினார்கள்.2

4834 கத்தாதா பின் திஆமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) நாம் உங்களுக்கு பகிரங்க மான வெற்றியை அளித்துள்ளோம் எனும் (48:1ஆவது) இறைவசனம் ஹுதைபிய்யா உடன்படிக்கையையே குறிக்கிறது என்று அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.3

4835 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் (தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி) அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியா யத்தைத் தர்ஜீஉ செய்து (ஓசை நயத்துடன்) ஓதிக் கொண்டிருந்தார்கள்.

நபி (ஸல்)அவர்கள் ஓதியதைப் போன்று உங்களிடம் நான் ஓதிக்காட்ட நினைத்தால் (அவ்வாறு) நான் செய்திருப்பேன்.4

பாடம் : 2

(நபியே!) உங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னிப்பதற்காகவும் அவன் தனது அருட்கொடையை உங்கள் மீது நிறைவு செய்து, உங்களுக்கு நேர் வழியைக் காட்டுவதற்காகவும்தான் (அந்த வெற்றியை அவன் வழங்கினான்) எனும் (48:2ஆவது) இறைவசனம்.

4836 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று (அல்லாஹ்வைத்) தொழுதார்கள். அப்போது அவர்களிடம் தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே! (பிறகு ஏன் நீங்கள் இந்த அளவு சிரமம் எடுத்துக் கொள்ள வேண்டும்?) என்று கேட்கப்பட்டது. (அதற்கு அவர்கள்,) நான் நன்றியுள்ள அடியானாக இருக்க வேண்டாமா? என்று கேட்டார்கள்.5

4837 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் தம் பாதங்கள் வீங்கும் அளவிற்கு நின்று வணங்குவார்கள். ஆகவே நான், ஏன் இப்படிச் செய்கிறீர்கள், அல்லாஹ்வின் தூதரே! தங்களின் முந்தைய பிந்தைய தவறுகளை அல்லாஹ் மன்னித்து விட்டானே? என்று கேட்டேன். அவர்கள், நான் நன்றியுள்ள அடியானாக இருக்க விரும்பவேண்டாமா? என்று கேட்டார்கள். (தம் வாழ்நாளின் கடைசிக் காலத்தில்) நபி (ஸல்) அவர்களின் உடல் சதை போட்ட போது அமர்ந்து தொழுதார்கள். ருகூஉ செய்ய நினைக்கும் போது, எழுந்து (சிறிது நேரம்) ஓதுவார்கள். பிறகு, ருகூஉ செய்வார்கள்.6

 பாடம் : 3

(நபியே!) திண்ணமாக நாம் உங்களை சான்று வழங்குபவராகவும், நற்செய்தி அறிவிப்ப வராகவும், எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் (எனும் 48:8ஆவது இறைவசனம்).

4838 அப்துல்லாஹ் பின் அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபியே!) திண்ணமாக நாம் உங்களை (விசுவாசிகளின் விசுவாசம் குறித்து) சான்று பகர்பவராகவும், (அவர்களுக்கு) நற்செய்தி அறிவிப்பவராகவும், (பாவிகளுக்கு அச்சமூட்டி) எச்சரிக்கை செய்பவராகவும் அனுப்பியிருக்கிறோம் எனும் இந்த (48:8ஆவது) குர்ஆன் வசனத்தையே தவ்ராத் வேதத்தில் (இறைவன்) பின்வருமாறு கூறினான்:

நபியே! நிச்சயமாக நாம் உங்களை சான்று பகர்பவராகவும், நற்செய்தி அறிவிப்ப வராகவும், எச்சரிக்கை செய்பவராகவும், எழுத வாசிக்கத் தெரியாத பாமரர்களின் பாது காவலராகவும் நாம் அனுப்பியிருக்கின்றோம். நீங்கள் என் அடியாரும் என் தூதருமாவீர். தம் காரியங்கள் அனைத்திலும் அல்லாஹ்வையே சார்ந்திருப்பவர் (முத்தவக்கில்) என்று உங்களுக்கு நான் பெயரிட்டுள்ளேன் (என அவரிடம் கூறுவோம்).

(என் தூதரான) அவர் கடின சித்தமுடைய வராகவோ, முரட்டுத்தனம் கொண்டவரா கவோ, கடைவீதியில் கூச்ச-ட்டுச் சச்சரவு செய்பராகவோ இருக்க மாட்டார். ஒரு தீமைக்கு இன்னொரு தீமையினால் தீர்வு காண மாட்டார். மாறாக, மன்னித்து விட்டு விடுவார். வளைந்த சமுதாயத்தை அவர் மூலம் நிமிர்த்தும் வரை அல்லாஹ் அவரது உயிரைக் கைப்பற்ற மாட்டான். மக்கள் அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை என்று கூறுவார்கள். (ஓரிறைக் கோட்பாடான) அதன் மூலம் அவர் குருட்டுக் கண்களையும், செவிட்டுக் காதுகளையும், திரையிடப்பட்ட உள்ளங்களையும் திறப்பார்.7

பாடம் : 4

அவன்தான் இறை நம்பிக்கையாளர்களின் இதயங்களில் அமைதியை அருளினான் (எனும் 48:4ஆவது வசனத் தொடர்).

4839 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபித் தோழர்களில் ஒருவர் (குர்ஆன்) ஓதிக் கொண்டிருந்தார். அவரது குதிரை அவர் வீட்டில் கட்டப்பட்டிருந்தது.

அப்போது அது மிரளத் தொடங்கியது. அவர் வெளியே வந்து பார்த்த போது, ஒன்றையும் அவர் காணவில்லை. (அப்போதும்) அது மிரண்டு கொண்டிருந்தது. விடிந்தவுடன் அவர் நபி (ஸல்) அவர்களிடம் அந்த விஷயத்தைத் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள் குர்ஆன் ஓதிய காரணத்தால் இறங்கிய அமைதிதான் அது என்று கூறினர்கள்.8

 பாடம் : 5

(நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் உங்களிடம் அந்த மரத்திற்குக் கீழே சத்தியப் பிரமாணம் செய்து கொண்டிருந்த போது அல்லாஹ் அவர்களைக் குறித்து திருப்தி அடைந்து கொண்டான் எனும் (48:18ஆவது) வசனத் தொடர்.

4840 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா நாளன்று நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம்.9

4841 அந்த மரத்தினடியில் நடைபெற்ற (பைஅத்துர் ரிள்வான் எனும்) சத்தியப் பிரமாணத்தில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான அப்துல்லாஹ்பின் முகஃப்பல் அல் முஸ்னீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் (பொடிக்கற்களை இரு விரல்களால் எறிந்து விளையாடும்) கத்ஃப் எனும் கல்சுண்டு விளையாட்டிற்குத் தடைவிதித்தார்கள்.10

4842 உக்பா பின் ஸுஹ்பான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

குளியலறையில் சிறுநீர் கழிப்பது தொடர்பாக அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். ளநபி (ஸல்) அவர்கள் அதற்குத் தடைவிதித்ததாக அன்னார் தெரிவித்தார்கள்.ன11

4843 அபூ கிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்(தடியில் சத்தியப் பிரமாணம் செய்)தவர்களில் ஒருவரான ஸாபித் பின் அள்ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் (கூறினார்கள்:)12

 4844 ஹுபைப் பின் அபீஸாபித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அபூ வாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்களிடம் (காரிஜிய்யா எனும் கிளர்ச்சியாளர்கள் குறித்து) கேட்பதற்காகச் சென்றேன். அப்போது அவர்கள் பின் வருமாறு கூறினார்கள்:

நாங்கள் ஸிஃப்பீன் எனுமிடத்தில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது (அப்துல்லாஹ் பின் அல்கவ்வா என்றழைக் கப்படும்) ஒரு மனிதர், அல்லாஹ்வின் வேதத்தின்பால் (தீர்ப்புக்காக) அழைக்கப்படு கின்றவர்களை நீங்கள் காணவில்லையா? என்று கேட்டார். அதற்கு அலீ (ரலி) அவர்கள், ஆம். (அல்லாஹ்வின் வேதம் கூறுகின்ற தீர்ப்புப்படி செயல்பட அழைப்புவிடுக்கப் பெற்றால் அதை நான் ஏற்றுக் கொள்வேன்) என்று கூறினார்கள். அப்போது சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

(இப்போரில் கலந்து கொள்ளாததற்காக யார் மீதும் குற்றம் சாட்டாதீர்கள். மாறாக,) உங்களையே குற்றம் சாட்டிக் கொள்ளுங்கள். நபி (ஸல்) அவர்களுக்கும் இணைவைப்பாளர்களுக்கும் இடையே சமாதான உடன்படிக்கை நடை பெற்ற ஹுதைபியா நாளில் எங்களை நான் பார்த்திருக்கிறேன். அன்று, நாங்கள் போர் புரிவது உசிதமென்று கருதியிருந்தால் போர் புரிந்திருப்போம். (ஆனால், போர் புரியாமல் இணைவைப்பவர்கள் விதித்த பாதகமான நிபந்தனைகளைக் கூட ஏற்றுக் கொண்டோம்). அப்போது உமர் (ரலி) அவர்கள் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? (சத்தியத்திற்காகப் போராடி) போரில் கொலையுண்டுவிடும் போது நம் வீரர்கள் சொர்கக்கத்திலும் எதிரிகளுடைய வீரர்கள் நரகத்திலும் இருப்பார்கள் இல்லையா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஆம் என்று பதிலளித்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அப்படியிருக்க, நாம் நமது மார்க்கத்தின் விஷயத்தில் எதற்காகத் தாழ்ந்து போக வேண்டும்? அல்லாஹ் நமக்கும் அவர்களுக்குமிடையில் தீர்ப்பளிக்காமல் இருக்கும் நிலையில் நாம் ஏன் திரும்பிச் செல்ல வேண்டும்? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நான் அல்லாஹ்வுடைய தூதராவேன். என்னை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். (முஸ்லிம்களை இழிவுக்குள்ளாக்க நினைக்கும் இணை வைப்பாளர்கள் மீது) உமர் (ரலி) அவர்கள் கோபம் கொண்ட நிலையில் திரும்பிச் சென்றார்கள். தாங்கிக் கொள்ள முடியாமல் அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அபூபக்ர் அவர்களே! நாம் சத்தியத்திலும் எதிரிகள் அசத்தியத்திலும் இல்லையா? என்று ளநபி (ஸல்) அவர்களிடம் கேட்டது போன்றேன கேட்டார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் கத்தாபின் புதல்வரே! நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதராவார்கள். அவர்களை அல்லாஹ் ஒரு போதும் வீணாக்க மாட்டான் என்று கூறினார்கள். அப்போது அல்ஃபத்ஹ் எனும் (48ஆவது) அத்தியாயம் இறங்கிற்று.13

பாடம் : 1

இறை நம்பிக்கை கொண்டவர்களே! உங்கள் குரல்களை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள். மேலும், ஒருவர் மற்றவரிடம் உரத்த குரலில் பேசுவதைப் போல் நபியிடம் உரத்த குரலில் பேசாதீர்கள். நீங்கள் செய்த செயல்களெல்லாம், நீங்களே உணராத வகையில் வீணாகிவிடக் கூடும் எனும் (49:2ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்திலுள்ள) நீங்கள் அறியாத நிலையில் என்பது (மூலத்திலுள்ள) லா தஷ்உரூன் எனும் சொல்லின் பொருளாகும். இதனடிப்படையில்தான் அஷ்ஷாஇர் (கவிஞர்) எனும் சொல்லுக்கு அறிஞர் என்றும் பொருள் சொல்லப்படுகிறது.

4845 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒருமுறை) நல்லவர்களான அபூபக்ர் (ரலி) அவர்களும் உமர் (ரலி) அவர்களும் அழிவில் சிக்கிக் கொள்ள இருந்தார்கள். பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் (தங்களுக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரியவர்களாக) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் அவர்கள் இருவரும் குரலை உயர்த்திப் பேசினார்கள். அந்த இருவரில் ஒருவர் (உமர்), பனூ முஜாஷிஉ குலத்தவரான அக்ரஃ பின் ஹாபிஸ் அவர்களை நோக்கி (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். மற்றொருவர் (அபூபக்ர்), இன்னொருவரை (கஅகாஉ பின் மஅபத்) நோக்கி, (அவரைத் தலைவராக நியமிக்கும்படி) சைகை செய்தார். -அந்த இன்னொருவருடைய பெயர் எனக்குத் தெரியாது என்று அறிவிப்பாளர் களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.- அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களிடம், எனக்கு மாறுசெய்யவே நீங்கள் விரும்புகிறீர்கள் என்று கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், தங்களுக்கு மாறுசெய்வது என் விருப்பமன்று என்று சொன்னார்கள். இந்த விவகாரத்தில் அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்தன. அப்போது, இறை நம்பிக்கை கொண்டவர் களே! உங்கள் குரலை நபியின் குரலுக்கு மேல் உயர்த்தாதீர்கள்! எனும் (49:2ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.2

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

இந்த வசனம் அருளப்பெற்ற பின் உமர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் இந்த அளவுக்கு மெதுவாகப் பேசுவார்கள்; (அவர் என்ன கூறினார் என்பதை) நபி (ஸல்) அவர்கள் அவரிடம் (திரும்ப) விசாரித்தே தெரிந்து கொள்வார்கள்.

இப்னு ஸுபைர் (ரலி) அவர்கள் இந்த ஹதீஸில் தம் பாட்டனார் அபூபக்ர் (ரலி) அவர்களின் பெயரைக் குறிப்பிடவில்லை.

4846 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(49:2ஆவது வசனம் அருளப்பெற்ற நாளிலிருந்து) நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களைக் காணவில்லை என்று தேடினார்கள். அப்போது ஒரு மனிதர் அவரைக் குறித்த செய்தியை தங்களுக்காக நான் அறிந்து வருகிறேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். அவரிடம் அந்த மனிதர் சென்றார். அப்போது அவர் தமது தலையைக் கவிழ்த்தபடி (கவலையோடு) தமது வீட்டில் அமர்ந்து கொண்டிருக்கக் கண்டார். அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், உங்களுக்கு என்ன ஆயிற்று? என்று கேட்டார். அதற்கு ஸாபித் (ரலி) அவர்கள், (எனது நிலை) மோசம்தான். நான் நபி (ஸல்) அவர்களின் குரலுக்கு மேல் எனது குரலை உயர்த்தி(ப் பேசி) வந்தேன். நான் நரக வாசிகளில் ஒருவன்தான் என்று கூறினார். (செய்தியறிந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, ஸாபித் பின் கைஸ் இப்படி இப்படிச் சொன்னார் என்று தெரிவித்தார்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான மூசா பின் அனஸ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்த மனிதர் ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்களிடம், (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து,) மகத்தான நற்செய்தியை வாங்கிக் கொண்டு மீண்டும் ஒருமுறை சென்றார். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஸாபித் பின் கைஸ் அவர்களிடம் சென்று நிச்சயம் நீர் நரகவாசிகளில் ஒருவரல்லர். சொர்க்கவாசிகளில் ஒருவரே என்று சொல்! என்று கூறினார்கள்.3

பாடம் : 2

(நபியே! உங்கள்) அறைகளுக்கு வெளியே இருந்து உங்களை இரைந்து கூப்பிடுவோரில் பெரும்பாலோர் விவரமில்லாதவர்களே! (எனும் 49:4ஆவது இறைவசனம்.)

4847அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த ஒரு பயணக் குழுவினர் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும் படி கோரினர்.) அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், (அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் அவர்களை (பனூ தமீம்) குலத்தாருக்குத் தலைவராக நியமனம் செய்யுங்கள் என்று (யோசனை) கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள், அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக நியமனம் செய்யுங்கள்! என்று (யோசனை) கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் உமர் (ரலி) அவர்களை நோக்கி, எனக்கு மாறு செய்வதை அல்லது எனக்கு எதிராக மாறு செய்வதையே நீங்கள் விரும்பினீர்கள் என்று கூறினார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு எதிராகப் பேசுவது எனது நோக்கமன்று என்று கூறினார்கள். (இது விஷயமாக) அவ்விருவரும் பேசித் தர்க்கித்துக் கொண்ட போது அவர்கள் இருவரின் குரல்களும் உயர்ந்து விட்டன. இது தொடர்பாகவே இறை நம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதருக்கு முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். திண்ணமாக, அல்லாஹ் அனைத்தையும் செவியுறுவோனாகவும் அறிபவனாகவும் இருக்கின்றான் எனும் (49:1ஆவது) இறை வசனம் முழுவதும் இறங்கிற்று.4

பாடம் : 3

(நபியே!) நீங்கள் அவர்களை நோக்கி வெளியே வரும்வரையில் அவர்கள் பொறுமையுடன் இருந்திருந்தால் அது அவர்களுக்கே நலமாய் இருந்திருக்கும் எனும் (49:5ஆவது) வசனத் தொடர்.5

 பாடம் : 1

இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று அது (நரகம்) கேட்கும் எனும் (50:30ஆவது) வசனத் தொடர்.

4848 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(நரகவாசிகள்) நரகத்தில் போடப்படு வார்கள். நரகம், (வயிறு நிரம்பாத காரணத் தால்) இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். இறுதியில் அல்லாஹ் தனது பாதத்தை (அதில்) வைப்பான். அப்போது அது, போதும்! போதும்! என்று கூறும்.2

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.

4849 முஹம்மத் பின் சீரின் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நரகத்திடம் உனக்கு வயிறு நிரம்பி விட்டதா? என்று கேட்கப்படும். அது, இன்னும் அதிகம் இருக்கிறதா? என்று கேட்கும். அப்போது அருள்வளமிக்கவனும், உயர்ந்தோனுமான அல்லாஹ் தனது பாதத்தை அதன்மீது வைப்பான். உடனே அது போதும்! போதும்! என்று கூறும்.

 இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடமிருந்து அறிவிக்கிறார்கள். (ஆனால், இதன்) அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ சுஃப்யான் அல்ஹிம்யரீ (ரஹ்) அவர்கள் பெரும்பாலும் அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறினார்கள் என்றே (மவ்கூஃபாக) அறிவிப்பார்கள்.

4850 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கமும் நரகமும் வாக்குவாதம் செய்து கொண்டன. அப்போது நரகம், பெருமையடிப்பவர்களுக்காகவும் அக்கிரமக் காரர்களுக்காகவும் நான் சொந்தமாக்கப்பட்டுள்ளேன் என்று சொன்னது. சொர்க்கம், எனக்கு என்ன நேர்ந்ததோ! மக்களில் பலவீனர்களும் அவர்களில் கீழ்நிலையி னருமே (அதிகமாக) என்னுள் நுழைவார்கள் என்று கூறியது.

அல்லாஹ் சொர்க்கத்திடம், நீ எனது அருள். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு அருள் புரிகின்றேன் என்று கூறினான். நரகத்திடம் நீ வேதனை(க்காகத்) தான். உன் மூலமே என் அடியர்களில் நான் நாடிய சிலருக்கு வேதனை கொடுக்கிறேன் என்று கூறினான். அந்த இரண்டில் ஒவ்வொன்றுக்கும் வயிறு நிரம்பத் தரப்படும். ஆனால், நரகமோ இறைவன் தனது காலை அதன் மீது வைக்கும்வரை வயிறு நிரம்பாது. இறைவன் காலை வைக்கும் போது நரகம் போதும்! போதும்! என்று கூறும். அப்போது தான் அதற்கு வயிறு நிரம்பும். மேலும், (நரகத்திற்கெனப் புதிதாக யாரையும் அல்லாஹ் படைப்பதில்லை; மாறாக,) அதில் ஒரு பகுதியை மற்றொரு பகுதியுடன் இணைக்கப்படும். அல்லாஹ் தன்னுடைய படைப்புகளில் யாருக்கும் அநியாயம் செய்ய மாட்டான். ஆனால், வல்லவனும் மாண்புடையோனுமான அல்லாஹ், சொர்க் கத்திற்கென்றே (புதிதாகச்) சிலரைப் படை(த்து அதை நிறை)ப்பான்.

பாடம் : 2

(நபியே!) சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் (எனும் 50:39ஆவது வசனத் தொடர்).

4851 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதவாது:

ஓர் இரவில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள் பதினான்காம் இரவின் முழுநிலவைக் கூர்ந்து நோக்கியபடி, இந்த நிலவை நீங்கள் நெருக்கடியின்றிக் காண்பது போல் உங்கள் இறைவனையும் காண்பீர்கள். எனவே, சூரியன் உதிக்கும் முன்னரும் சூரியன் மறையும் முன்னரும் தொழும் விஷயத்தில் (தூக்கம் போன்றவற்றால்) நீங்கள் மிகைக்கப் படாதிருக்க இயலுமானால் அதைச் செய்யுங்கள் என்று கூறிவிட்டு சூரியன் உதயமாகும் முன்னரும், மறையும் முன்னரும் உங்கள் இறைவனைப் புகழ்ந்து துதியுங்கள் எனும் (50:39ஆவது) வசனத்தை ஓதினார்கள்.3

 4852 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எல்லாத் தொழுகைகளுக்குப் பின்பும் (தன்னைத்) துதிக்கும்படி நபி (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் கட்டளையிட்டான். இதுவே சுஜூத் செய்து வணங்கி முடித்த பின்பும்... எனும் (50:40ஆவது) இறை வசனத்தின் கருத்தாகும்.

 54ன இக்தரபத்திஸ் ஸாஅத் (அல்கமர்) அத்தியாயம்1

(அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...)

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(54:2ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தமிர் எனும் சொல்லுக்கு நிலைத்து நில்லாமல் சென்றுவிடுகின்ற என்று பொருள்.

(54:4ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தஜர் எனும் சொல்லுக்கு உச்சகட்ட எச்சரிக்கை என்று பொருள். (54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஸ்துஜிர் என்பதற்கு, இவருக்குப் பைத்தியம் பிடித்து ஆட்டுகிறது என்று பொருள்.

(54:13ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) துஸுர்  எனும் சொல், மரக்கலத்தின் (ஆணி, கயிறு போன்ற) உதிரிப் பாகங்களைக் குறிக்கும்.

(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) -மன் கான குஃபிர் எனும் சொற்றொடருக்கு அவமரியாதை செய்யப்பட்ட அந்த மனிதரின் நிமித்தம் நாம் அளித்த பிரதிபலனாகும் இது என்று பொருள்.

(54:28ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹ்தளர் எனும் சொல், ஒவ்வொருவரும் தமது முறை வரும் நாளில் (தண்ணீருக்காக) வர வேண்டும் என்பதைக் குறிக்கும்.

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

(54:8ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஹ்திஈன (ஓடிக் கொண்டிருப்பவர்கள்) என்பது, தலையைத் தாழ்த்திய வண்ணம் வேகமாக ஓடுவதைக் குறிக்கும்.

சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் அல்லாதோர் கூறுகின்றார்கள்:

(54:29ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) ஃபதஆத்தா எனும் சொல்லுக்குத் தமது கரத்தால் அறுத்து விட்டார் என்று பொருள்.

(54:31ஆவது வசனத்தின் மூலத்திலள்ள) அல் முஹ்தழிர் எனும் சொல்லுக்குக் கரிந்து போன மரத்துண்டைப் போல என்று பொருள்.

(54:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) வஸ்துஜிர எனும் சொல்லுக்குக் கண்டித்து விரட்டப்பட்டார் என்று பொருள்.

(54:14ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) குஃபிர் (நிராகரிக்கப்பட்டவர்) என்பதன் கருத்தாவது: நூஹ் (அலை) அவர்களுக்கும் அன்னாருடைய தோழர்களுக்கும் இழைக்கப்பட்ட அவ மரியாதைக்குப் பிரதிபலனாகவே அவர்களைக் காப்பாற்றி, மற்றவர்களை வெள்ளத்தில் மூழ்கடித்தோம்.

(54:38ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) முஸ்தகிர் எனும் சொல்லுக்கு நிலையான வேதனை என்று பொருள்.

(54:25ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள) அஷிர் எனும் சொல்லுக்கு அகந்தையும் ஆணவமும் உள்ளவன் என்று பொருள்.

பாடம் : 1

4853 உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நோயுற்றுள்ளேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஹஜ்ஜின் போது) நான் முறையிட்டேன். அதற்கு அவர்கள், நீ மக்களுக்கப்பாலிருந்து வாகனத்தில் அமர்ந்து (கஅபாவைச்) சுற்றி வருவாயாக! என்று சொன்னார்கள். அவ்வாறே நான் சுற்றி வந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதியவாறு கஅபாவின் ஒரு பக்கத்தில் தொழுது கொண்டிருந்தார்கள்.2

 4854 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மஃக்ரிப் தொழுகையில் அத்தூர் எனும் (52ஆவது) அத்தியாயத்தை ஓதக் கேட்டேன். (படைப்பாளன்) யாருமின்றி தாமாகவே இவர்கள் பிறந்து விட்டார்களா? அல்லது இவர்கள் தங்களுக்குத் தாங்களே படைப்பாளர்களாய் இருக்கின்றார்களா? அல்லது வானங்களையும் பூமியையும் இவர்கள் படைத்துள்ளார்களா? இல்லை; (உண்மை என்னவெனில்,) இவர்கள் உறுதி யான நம்பிக்கை கொள்வதில்லை. உங்கள் இறைவனின் கருவூலங்கள் இவர்களிடம் உள்ளனவா? அல்லது (அவற்றின் மீது) இவர்கள்தாம் ஆதிக்கம் செலுத்துபவர் களா? எனும் இந்த (52:35-37ஆகிய) வசனங் களை நபி அவர்கள் ஓதிய போது, என் இதயம் பறந்து விடுமளவுக்குப் போய்விட்டது.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

மஃக்ரிப் தொழுகையில் நபி (ஸல்) அவர்கள் அத்தூர் அத்தியாயத்தை ஓதினார்கள் என்று முஹம்மத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் தம் தந்தை (ஜுபைர் பின் முத் இம்)யிடமிருந்து அறிவித்தார்கள் என்பதை மட்டுமே ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். என் நண்பர்கள் எனக்கு அறிவித்த (மீதமுள்ள) கூடுதல் தகவலை நான் ஸுஹ்ரீ அவர்களிடமிருந்து செவியேற்கவில்லை.

பாடம் : 1

4855 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் அன்னையே! முஹம்மது (ஸல்) அவர்கள் தம் இறைவனை (மிஅராஜ்-விண்ணுலகப் பயணத்தின் போது நேரில்) பார்த்தார்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், நீங்கள் சொன்னதைக் கேட்டு என் ரோமம் சி-ர்த்து விட்டது. மூன்று விஷயங்கள் (பற்றிய உண்மைகள்) உங்களுக்கு எப்படித் தெரியாமல் போயின? அவற்றை உங்களிடம் யார் தெரிவிக்கின்றாரோ அவர் பொய்யுரைத்து விட்டார். முஹம்மத் (ஸல்) அவர்கள் தம் இறைவனை (நேரில்) பார்த்தார்கள் என்று உங்களிடம் யார் கூறுகிறாரோ அவர் பொய் சொல்லிவிட்டார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) கண் பார்வைகள் அவனை எட்ட முடியாது; அவனோ அனைத்தையும் பார்க்கின்றான். அவன் நுட்பமானவனும் நன்கறிந்தவனும் ஆவான் எனும் (6:103ஆவது) வசனத்தையும், எந்த மனிதருடனும் அல்லாஹ் நேருக்கு நேர் பேசுவதில்லை. ஆயினும் வஹியின் (வேத அறிவிப்பின்) மூலமோ, திரைக்கு அப்பாலிருந்தோ, ஒரு தூதரை அனுப்பி வைத்துத் தன் அனுமதியின் பேரில் தான் நாடுகின்றவற்றை அறிவிக்கச் செய்தோ அல்லாமல் நேரடியாகப் பேசுவதில்லை எனும் (42:51ஆவது) வசனத்தையும் ஓதினார்கள். மேலும், எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் நாளை நடப்பவற்றையும் அறிவார்கள் என்று சொல்கிறாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) எந்த மனிதனும் நாளை என்ன சம்பாதிக்கப் போகிறான் என்பதை அறிவதில்லை எனும் (31:34ஆவது) வசனத்தை ஓதினார்கள். மேலும், எவர் உங்களிடம் முஹம்மது (ஸல்) அவர்கள் (மக்களுக்கு எடுத்துரைத்து விடுமாறு பணிக்கப்பட்ட ஒன்றை) மறைத்து விட்டார்கள் என்று சொன்னாரோ, அவரும் பொய்யே சொன்னார் என்று கூறிவிட்டு, பிறகு (தமது கருத்திற்குச் சான்றாக,) தூதரே! உங்கள் இறைவனிடமி ருந்து உங்கள் மீது இறக்கி வைக்கப்பட்ட வற்றை (மக்களுக்கு) எடுத்துரைத்து விடுங்கள்... எனும் (5:67ஆவது) வசனத்தை ஓதினார்கள். மாறாக, முஹம்மது (ஸல்) அவர்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களையே அவரது (நிஜத்) தோற்றத்தில் இரண்டு முறை கண்டார்கள் என்று சொன்னார்கள்.4

பாடம் : 2

(வளைந்த) வில்-ன் இருமுனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது (எனும் 53:9ஆவது இறைவசனம்).

வில்-ல் நாண் இருக்கும் இடத்தை இது குறிக்கும்.

4856 ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(வளைந்த) வில்-ன் இரு முனை களுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையிலான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல் லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:9, 10) வசனங்களைக் குறித்து இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களுக்குப் பின்வருமாறு தெரிவித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள், (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறுநூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத் தோற்றத்தில்) அவரைப் பார்த்தார்கள்.5

பாடம் : 3

பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததையெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:10ஆவது) இறைவசனம்.

4857 அபூஇஸ்ஹாக் அஷ்ஷைபானீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஸிர்ரு பின் ஹுபைஷ் (ரஹ்) அவர்களிடம், (வளைந்த) வில்-ன் இரு முனைகளுக்கிடையிலான நெருக்கத்தைப் போல், அல்லது அதைவிடச் சமீபமாக (வானவர் ஜிப்ரீலுக்கும் நபிக்கும் இடையி லான நெருக்கம்) இருந்தது. பிறகு, அல்லாஹ் அவருக்கு (ஜிப்ரீலுக்கு) அறிவித்ததை யெல்லாம் அவர் அவனுடைய அடியாருக்கு அறிவித்தார் எனும் (53:9,10) வசனங்கள் குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஜிப்ரீல் (அலை) அவர்களை அறு நூறு இறக்கைகள் இருக்க (அவரது நிஜத்தோற்றத்தில்) முஹம்மது (ஸல்) அவர்கள் கண்டார்கள் என்பதே இவ்வசனத்தின் கருத்தாகும் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் எங்களிடம் தெரிவித்தார்கள் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 4

உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் (எனும் 53:18ஆவது இறைவசனம்).

4858 அல்கமா பின் கைஸ் அந்நகஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 உறுதியாக அவர் தம் இறைவனின் சான்றுகளில் மிகப் பெரியதைக் கண்டார் எனும் (53:18ஆவது) வசனத்தின் கருத்தாவது: அடிவானத்தை அடைத்துக் கொண்டு விட்டிருந்த பச்சை விரிப்பு ஒன்றை நபி (ஸல்) அவர்கள் கண்டார்கள் என அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள்.6

பாடம் : 5

(நீங்கள் வழிபட்டுவரும் சிலைகளாகிய) லாத் மற்றும் உஸ்ஸா ஆகியன பற்றி (எப்போதாவது) நீங்கள் சிந்தித்ததுண்டா? (எனும் 53:19ஆவது இறைவசனம்).

4859 அபுல் ஜவ்ஸா அவ்ஸ் பின் அப்தில்லாஹ் அர்ரப்ஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

லாத், உஸ்ஸா... எனும் (53:19ஆவது) வசனத்திலுள்ள லாத் என்பது, ஹாஜிகளுக்காக மாவு பிசைந்து தந்து கொண்டிருந்த ஓரு மனிதராவார் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.7

4860 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யார் சத்தியம் செய்யும் போது லாத்தின் மீது சத்தியமாக! உஸ்ஸாவின் மீது சத்தியமாக! என்று கூறிவிட்டாரோ, அவர் (அதற்குப் பரிகாரமாக) லாஇலாஹ இல்லல்லாஹ் (அல்லாஹ்வைத் தவிர வேறு இறைவன் இல்லை) என்று சொல்லட்டும்! எவர் தம் நண்பரிடம், வா சூது விளையாடுவோம் என்று கூறுவாரோ அவர் (எதையேனும்) தர்மம் செய்யட்டும்.8

இதை அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

 பாடம் : 6

மேலும், மூன்றாவதான மனாத் (எனும் விக்ரகத்தைப்) பற்றியும் (நீங்கள் சிந்தித்ததுண்டா? எனும் 53:20ஆவது இறைவசனம்.)

4861 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (ஹஜ்ஜில் ஸஃபா மர்வாவுக்கிடையே சுற்றி வராவிட்டாலும் குற்றமில்லைதானே? அப்படித்தானே 2:158ஆவது இறைவசனம் தெரிவிக்கிறது. தங்கள் கருத்து என்ன? என்று) கேட்டேன். அதற்கு அவர்கள், முஷல்லல் எனும் குன்றில் இருந்த மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டியவர்கள் (ஹஜ்ஜில்) ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையில், சுற்றி வராமலிருந்தார்கள். அப்போது தான் நிச்சயமாக ஸஃபா, மர்வா (எனும் இரு குன்றுகள்) அல்லாஹ்வின் அடையாளச் சின்னங்களில் உள்ளவையாகும்... எனும் (2:158 ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் முஸ்லிம்களும் சுற்றி வந்தனர் என்று சொன்னார்கள்.

(இதன்அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள், மனாத் என்பது, (மக்காவிலிருந்து மதீனா செல்லும் சாலையில்) குதைத் எனும் இடத்தில் முஷல்லல் எனும் குன்றிலிருந்த சிலையாகும் என்று கூறினர்கள். ஆயிஷா (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், இந்த (2:158ஆவது) இறைவசனம் அன்சாரிகள் குறித்து அருளப்பட்டது; அன்சாரிகளும், ஃகஸ்ஸான் குலத்தாரும் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ளும் முன் மனாத் சிலைக்காக, இஹ்ராம் கட்டி வந்தனர் என்று தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், மக்காவிற்கும் மதீனாவிற்கும் இடையேயிருந்த மனாத் எனும் சிலைக்காக இஹ்ராம் கட்டி வந்தவர்களில் சில அன்சாரிகளும் இருந்தனர். அவர்கள் அல்லாஹ்வின் தூதரே! மனாத்திற்கு மரியாதை செய்யும் முகமாக நாங்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே சுற்றி வராமலிருந்தோம்... என்று கூறினர் எனத் தொடங்கி, முந்தைய ஹதீஸில் உள்ளது போன்றே காணப்படுகிறது.9

பாடம் : 7

ஆகவே, அல்லாஹ்விற்கு நீங்கள் சிரவணக்கம் (சஜ்தா) செய்திடுங்கள்; அவனையே வழிபடுங்கள் (எனும் 53:62ஆவது இறைவசனம்).

4862 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (53ஆவது அத்தியாயமான) அந்நஜ்ம் அத்தியாயத்தை ஓதி (ஓதலுக்கான) சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுடன் இருந்த முஸ்லிம் களும், இணைவைப்பாளர்களும், ஏனைய மக்களும், ஜின்களும் சஜ்தாச் செய்தனர்.

இந்த ஹதீஸ் மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.10

 இப்னு உலைய்யா (ரஹ்) அவர்கள் தம் அறிவிப்பில் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களை(அவர்கள் அறிவித்ததாக)க் குறிப்பிடவில்லை.11

4863 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஓதலுக்குரிய) சஜ்தா அருளப்பெற்ற முதல் அத்தியாயம் அந்நஜ்ம் ஆகும். அதை ஓதிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் சிரவணக்கம் (சஜ்தா) செய்தார்கள். அவர்களுக்குப் பின்னால் இருந்த அனைவரும் (அவர்களுடன் சேர்ந்து) சஜ்தா செய்தார்கள். ஒரேயொரு மனிதனைத் தவிர!

அம்மனிதன் ஒரு பிடி மண்ணை எடுத்து (தன் நெற்றிக்குக் கொண்டு சென்று) அதன் மீது சஜ்தாச் செய்ததை நான் கண்டேன். பின்னர் அவன் (பத்ருப் போரின் போது) இறைமறுப்பாளனாகக் கொல்லப்பட்டதை நான் கண்டேன். அவன்தான் உமய்யா பின் கலஃப் ஆவான்.12

பாடம் : 1

சந்திரன் பிளந்து விட்டது. ஆனால் (இந்த மக்களின் நிலைமை என்னவெனில்), எந்தச் சான்றினைப் பார்த்தாலும் புறக்கணிக் கிறார்கள் (எனும் 54:1,2 ஆகிய வசனங்களின் தொடர்).

4864 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது. (பிளவுண்ட சந்திரனின்) ஒரு துண்டு மலைக்கு மேலேயும் மற்றொரு துண்டு மலைக்குக் கீழேயும் சென்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் சாட்சியாக இருங்கள். என்று சொன்னார்கள்.2

4865 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி ஸல்) அவர்களுடன் (மினாவில்) இருந்து கொண்டிருந்த போது சந்திரன் பிளவுபட்டு இரண்டு துண்டுகளாக மாறிற்று. அப்போது நபி (ஸல்) அவர்கள் எங்களிடம், நீங்கள் சாட்சியாக இருங்கள். நீங்கள் சாட்சியாக இருங்கள் என்று (இரு முறை) கூறினார்கள்.

4866 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் காலத்தில் சந்திரன் (இரண்டாகப்) பிளவுபட்டது.3

 4867அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவாசிகள் ளநபி (ஸல்) அவர்களிடம்ன ஓர் அற்புதச் சான்றைக் காட்டும்படி கேட்டார்கள். எனவே சந்திரன் (இரண்டாகப்) பிளவுண்ட நிகழ்ச்சியை (தம் உண்மைக்குச் சான்றாக) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் காட்டினார்கள்.4

4868 அனஸ் (பின் மாலிக் (ரலி)) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களது காலத்தில்ன சந்திரன் இரண்டு துண்டுகளாகப் பிளந்தது.

பாடம் : 2

எவர் (அவர்களால்) அவமரியாதை செய்யப்பட்டுவந்தாரோ அவருக்குப் பிரதிபலனாக நம் கண்முன்னே அது (-மரக்கலம்-) மிதந்து சென்று கொண்டிருந்தது. அதனை நாம் (எதிர் காலத்திற்கு) ஒரு சான்றாக விட்டுவைத்தோம். (இதன் மூலம்) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:14, 15 ஆகிய இறை வசனங்கள்.)

நூஹ் (அலை) அவர்களது மரக்கலத்தை அல்லாஹ் அப்படியே விட்டுவைத்தான். அதனை இந்தச் சமுதாயத்தின் முன்னோர்கள் கண்டனர் என்று கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.5

4869 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஃபஹல் மின்(ம்) முத்தகிர் எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (முஸ்தகிர் என்றோ, முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.)6

பாடம் : 3

(மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:17, 22, 32, 40 ஆகிய வசனங்கள்.)

இந்த வசனத்தின் மூலத்திலுள்ள யஸ்ஸர்னா எனும் சொல்லுக்கு இந்தக் குர்ஆனை ஓதுவதை நாம் எளிதாக்கியுள் ளோம் என்று பொருள் என முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

4870அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(குர்ஆனின் 54ஆவது அத்தியாயத்தில் இடம்பெற்றுள்ள ஃபஹல் மின்(ம்) முத்தகிர் எனும் தொடரைப் பிரபலமான முறைப்படி) ஃஹல் மின்(ம்) முத்தகிர் (நல்லுணர்வு பெறுவோர் எவரும் உண்டா?) என்றே நபி (ஸல்) அவர்கள் ஓதிவந்தார்கள். (முஸ்தகிர் என்றோ, முஸ்ஸகிர் என்றோ ஓதவில்லை.

பாடம் : 4

வேரோடு வீழ்ந்த பேரீச்சமரங்களின் அடிப்பாகங்களைப் போல் (அக்காற்று) மனிதர்களைப் பிடுங்கி எறிந்து விட்டது. (பார்த்தீர்களா?) நான் அனுப்பிய வேதனையும் எச்சரிக்கையும் எப்படி இருந்தன? (எனும் 54:20,21 ஆகிய வசனங்கள்).

4871 அபூ இஸ்ஹாக் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்களிடம் (54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ஃபஹல் மின் (ம்) முத்தகிர் என்று ஓத வேண்டுமா? அல்லது முஃதக்கிர் என்று ஓத வேண்டுமா? என்று கேட்டார். அதற்கவர்கள், ஃபஹல் மின் முத்தகிர் என்றே அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ஓதக் கேட்டேன். மேலும், நபி (ஸல்) அவர்கள், ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என தால் (எனும் எழுத்து) கொண்டே ஓதியதை நான் கேட்டேன் என அப்துல்லாஹ் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 5

உடனே அவர்கள், மிதிபட்ட காய்ந்த வைக்கோல் போல் ஆகிவிட்டார்கள். (மக்கள்) நல்லுணர்வு பெறுவதற்காகவே இந்தக் குர்ஆனை நாம் எளிதாக்கியுள்ளோம். எனவே, நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:31,32 ஆகிய வசனங்கள்).

4872அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(54ஆவது அத்தியாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) நபி (ஸல்) அவர்கள் ஃபஹல் மின்(ம்) முத்தகிர் என்றே ஓதினார்கள்.

 பாடம் : 6

அதிகாலையில் ஒரு நிலையான வேதனை அவர்களை வந்தடைந்தது. அப்போது, நான் அனுப்பிய வேதனையையும் எச்சரிக்கை யையும் சுவையுங்கள் (என்று நாம் கூறினோம் எனும் 54:38,39 ஆகிய வசனங்கள்).

4873 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (54ஆவது அத்தி யாயத்தின் மூலத்திலுள்ள இத்தொடரை) ஃபஹல் மின்(ம்) முத்தக்கிர் என்றே ஓதினார்கள்.

 பாடம்...

உங்களைப் போன்ற பலரை நாம் அழித்து விட்டிருக்கின்றோம். எனவே, (இதிலிருந்து) நல்லுணர்வு பெறுவோர் உண்டா? (எனும் 54:51ஆவது இறைவசனம்).

4874 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் முன்னிலையில் ஃபஹல் மின்(ம்) முஸ்ஸகிர் என்று நான் ஓதிக்காட்டினேன். அப்போது அவர்கள், ஃபஹல் மின்(ம்) முத்தகிர் (என்றே ஓதுக!) என்றார்கள்.7

 பாடம் : 7

அதிவிரைவில் இக்குழுவினர் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர் எனும் (54:45 ஆவது) இறைவசனம்.

4875 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பத்ருப் போரின் போது கூடாரமொன்றில் இருந்தபடி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இறைவா! எங்களுக்கு வெற்றி அளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், வாக்குறுதியையும் (நிறை வேற்றித்தரும்படி) உன்னிடம் நான் கோருகி றேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழி படுவோர் (இப்புவியில்) இன்றைக்குப் பிறகு இல்லாமல் போய்விடுவர் என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையுடன் எழுந்து, இந்த (இறை நிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர் எனும் (54:45ஆவது) வசனத்தை ஓதியபடி அங்கிருந்து வெளியேறினார்கள்.8

பாடம் : 8

தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும்; மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக்கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) அமர்ரு (மிகவும் கசப்பானது) எனும் சொல், மாராரத் (கசப்பு) எனும் வேர்ச் சொல்லிலிருந்து பிறந்ததாகும்.

4876 யூசுப் பின் மாஹக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையான ஆயிஷா (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்தேன். அவர்கள், நான் விளையாடும் சிறுமியாக இருந்த போது, மக்காவில் முஹம்மது (ஸல்) அவர்களுக்கு, தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:46 ஆவது) இறைவசனம் அருளப்பெற்றது என்று கூறினார்கள்.

4877 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்ருப் போரின் போது தமது கூடாரமொன்றில் இருந்தபடி, (இறைவா! எங்களுக்கு வெற்றியளிப்பதாக நீ கொடுத்துள்ள) உன் உறுதி மொழியையும், உன் வாக்குறுதியையும் (நிறைவேற்றித் தரும்படி) உன்னிடம் நான் கோருகிறேன். இறைவா! (இந்த விசுவாசிகளை அழிக்க) நீ நினைத்தால், உன்னை (மட்டுமே) வழிபடு வோர் இனி ஒரு போதும் (உலகில்) இருக்கப் போவதில்லை என்று பிரார்த்தித்துக் கொண்டிருந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது கையைப் பிடித்துக் கொண்டு, போதும்! அல்லாஹ்வின் தூதரே! தங்கள் இறைவனிடம் தாங்கள் நிறையவே மன்றாடிவிட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் கவச உடையில் இருந்தார்கள். பிறகு, இந்த (இறைநிராகரிப்பாளர்) குழுவினர் அதிவிரைவில் தோற்கடிக்கப்பட்டுப் புறங்காட்டி ஓடுவர். தவிரவும், மறுமைதான் அவர்களுக்கு வாக்களிக்கப்பட்ட காலமாகும். மறுமை (அவர்களுக்கு) அதிர்ச்சியளிக்கக் கூடியதும் மிகவும் கசப்பானதுமாகும் எனும் (54:45,46) வசனங் களை ஓதியபடி அங்கிருந்து நபியவர்கள் வெளியேறினார்கள்.9

பாடம் : 1

அவ்விரு சோலைகள் நீங்கலாக வேறிரு சோலைகளும் (அங்கு) இருக்கும் எனும் (55:62ஆவது) இறைவசனம்.

4878 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இரு சொர்க்கங்கள் உண்டு. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட்களும் வெள்ளியினால் ஆனவை; (வேறு) இரு சொர்க்கங்களும் உண்டு. அவற்றின் பாத்தி ரங்களும் இதரப் பொருள்களும் பொன்னால் ஆனவையாகும்.2 அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள் தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.3

இதை அப்துல்லாஹ் பின் கைஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

 பாடம் : 2

கூடாரங்களி(ன் வடிவிலுள்ள மாளிகை களி)ல் தங்கவைக்கப்பெற்ற ஹூர் எனும் பேரழகிகளும் (அங்கு) இருப்பார்கள் (எனும் 55:72ஆவது இறைவசனம்).

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

(இந்த வசனத்திலுள்ள) ஹூர் எனும் சொல்லுக்குக் கன்னங்கரு விழியாள் என்று பொருள்.

முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) மக்ஸூராத் எனும் சொல்லுக்குத் தடுத்து வைக்கப்பட்டவர்கள் என்று பொருள். அதாவது அவர்கள் தங்களது பார்வையையும், தங்களையும் தங்களுடைய துணைவர்கள் அல்லாத மற்றவர்களைவிட்டும் தடுத்துப் பாதுகாத்துக் கொள்ளக்கூடிய பெண்கள்; தங்கள் துணைவர்கள் அல்லாத வேறு யாரையும் விரும்பாத பெண்கள் என்று பொருள்.

4879அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நடுவில் துளையுள்ள முத்தாலான ஒரு கூடாரம் சொர்க்கத்தில் உள்ளது. அதன் அகலம் அறுபது மைல்களாகும். அதன் ஒவ்வொரு மூலையிலும் (இறை நம்பிக்கையாளருக்கு) துணைவியர் இருப்பார்கள். ஒருமூலையி லுள்ள துணைவியை மற்ற மூலையிலுள்ள துணைவி பார்க்க முடியாது. இறை நம்பிக்கையாளர்கள் அவர்களைச் சுற்றிவருவர்.4

 4880 மேலும், இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங்களும் இதரப் பொருட் களும் வெள்ளியால் ஆனவை. (வேறு) இரு சொர்க்கங்கள் உள்ளன. அவற்றின் பாத்திரங் களும் இதரப் பொருட்களும் தங்கத்தினால் ஆனவை. அத்ன் எனும் சொர்க்கத்தில் இருப்பவர்கள், தங்கள் இறைவனைக் காண்பதற்கு, அவன் மீதுள்ள பெருமை எனும் மேலாடை தவிர வேறெந்தத் தடையும் இராது.

இதை அப்துல்லாஹ் பின் கைஸ் ளஅபூ மூசா அல்அஷ்அரீ (ரலி)ன அவர்கள் அறிவிக்கிறார்கள்.5

பாடம் : 1

(படர்ந்து விரிந்த) நீண்ட நிழ-லும் அவர்கள் இருப்பார்கள் எனும் (56:30ஆவது) இறை வசனம்.

4881 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

சொர்க்கத்தில் ஒரு மரம் இருக்கின்றது. அதன் நிழ-ல் (மிக வேகமாகப்) பயணிப் பவர் (அதில்) நூறாண்டுகள் (பயணித்தபடி) சென்று கொண்டேயிருப்பார். ஆனால், அவரால் அதைக் கடக்க முடியாது. (அந்த அளவிற்கு அது பெரிய மரமாகும்.) நீங்கள் விரும்பினால் (படர்ந்து விரிந்த) நீண்ட நிழ-லும் அவர்கள் இருப்பார்கள் எனும் (56:30ஆவது) வசனத்தை ஓதிக் கொள்ளுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

பாடம் : 1

4882 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் அத்தவ்பா எனும் (9ஆவது) அத்தியாயம் தொடர்பாகக் கேட்டேன். அவர்கள், அது (நயவஞ்சகர்களை) அம்பலப்படுத்தக்கூடிய அத்தியாயமாகும். அவர்களில் இத்தகையோர் உள்ளனர்; அவர்களில் இத்தகையோர் உள்ளனர் என (நயவஞ்சகர்களிலுள்ள எல்லாப் பிரிவினரையும் இனங்காட்டி) இவ்வத்தியாயம் இறங்கிக் கொண்டேயிருந்தது. எந்த அளவுக்கென்றால், தங்களில் ஒருவரைக் கூட விட்டுவைக்காமல் (அனைவரையும்) இது குறிப்பிட்டுவிட்டது என (நயவஞ்சகர்கள்) எண்ணினார்கள் என்று கூறினார்கள்.

நான் அவர்களிடம், அல்அன்ஃபால் எனும் (8ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பத்ருப் போர் குறித்து அது அருளப்பெற்றது என்று பதிலளித்தார்கள். நான் அல்ஹஷ்ர் எனும் (59ஆவது) அத்தியாயம் குறித்துக் கேட்டேன். அவர்கள், பனூநளீர் குலத்தார் குறித்து அருளப் பெற்றது என்று பதிலளித்தார்கள்.2

4883 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் (59ஆவது அத்தியாயத்தின் பெயரை) அல்ஹஷ்ர் அத்தியாயம் எனக் குறிப்பிட்டேன். அவர்கள் அந்நளீர் அத்தியாயம் என்று கூறுங்கள் என்றார்கள்.3

பாடம் : 2

நீங்கள் சில பேரீச்சமரங்களை வெட்டியது... எனும் (59:5ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லீனத் எனும் சொல் அஜ்வா (எனும் அடர்த்தியான பேரீச்ச மரம்) மற்றும் பர்ணீ (எனும் சிவப்பு-மஞ்சள் நிற பேரீச்ச மரம்) அல்லாத (ம-வான) பேரீச்ச மரத்தைக் குறிக்கும்.

4884 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புவைரா எனுமிடத்திலிருந்த பனூ நளீர் குலத்தாருடைய சில பேரீச்ச மரங்களை (அவர்களின் தேசத் துரோகக் கொடுஞ் செயல்களுக்காக) எரித்தார்கள். இன்னும் (சிலவற்றை) வெட்டினார்கள். அப்போது அல்லாஹ், நீங்கள் சில பேரீச்ச மரங்களை வெட்டியதோ, அல்லது அவற்றின் அடி மரங்களின் மீது அவற்றை நிற்கும்படி விட்டுவிட்டதோ எல்லாமே அல்லாஹ்வின் அனுமதியுடன்தான் நடந்தன. அல்லாஹ் தீயவர்களை இழிவிலும் கேவலத்திலும் ஆழ்த்திவிடுவதற்காகவே (இந்த அனுமதியை அளித்தான்) எனும் (59:5ஆவது) வசனத்தை அருளினான்.4

பாடம் : 3

அல்லாஹ் எந்தச் செல்வத்தை அவர்களிடமி ருந்து (விடுவித்து,) தன் தூதரின் பக்கம் திருப்பிக் கொடுத்தானோ (என்று தொடங்கும் 59:6ஆவது இறைவசனம்).

4885 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூநளீர் குலத்தாரின் செல்வங்கள் அல்லாஹ் தன் தூதருக்கு அளித்தவையாகும். அதைப் பெறுவதற்காக முஸ்லிம்கள் (தங்களின்) குதிரைகளையோ, ஒட்டகங் களையோ செலுத்திப் போர் செய்திருக்க வில்லை. ஆகவே, அவை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மட்டுமே உரியனவாக இருந்தன. அவற்றிலிருந்து நபியவர்கள் தமது ஆண்டுச் செலவுக்காகத் தம் வீட்டாருக்குக் கொடுத்து வந்தார்கள். பிறகு, மீதமானவற்றை அல்லாஹ்வின் பாதையில் (போரிடுவதற்கான) ஆயத்தப் பொருள்கள் வாங்க, ஆயுதங்களுக்காகவும் குதிரைகளுக்காகவும் செலவிட்டு வந்தார்கள்.5

 பாடம் : 4

இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத் தாரோ அதைப் பெற்றுக் கொள்ளுங்கள் (எனும் 59:7ஆவது வசனத் தொடர்).

4886 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், பச்சை குத்திவிடும் பெண்கள், பச்சை குத்திக் கொள்ளும் பெண்கள், முகத்தில் முளைத்திருக்கும் முடிகளை அகற்றக் கேட்டுக் கொள்ளும் பெண்கள், அழகிற்காக அரத்தால் தேய்த்து, தம் முன் பற்களைப் பிரித்துக் கொள்ளும் பெண்கள், (ஆக) அல்லாஹ் தந்த உருவத்தை மாற்றிக் கொள்ள முயலும் பெண்கள் மீது அல்லாஹ்வின் சாபம் உண்டாகட்டும்? என்று கூறினார்கள்.6 இந்தச் செய்தி பனூ அசத் குலத்தைச் சேர்ந்த, உம்மு யஅகூப் எனப்படும் ஓரு பெண்மணிக்கு எட்டியது. அந்தப் பெண் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடம் வந்து, இப்படிப்பட்ட பெண்களை நீங்கள் சபித்ததாக எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்றார். அதற்கு அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யாரைச் சபித்தார்களோ அவர் களையும், அல்லாஹ்வின் வேதத்தில் சபிக்கப்பட்டு உள்ளவர்களையும் நான் ஏன் சபிக்கக் கூடாது? என்று கேட்டார்கள். அதற்கு அந்தப் பெண், (குர்ஆன் பிரதியில்) இரு அட்டைகளுக்கிடையிலுள்ள அனைத்தையும் நான் ஓதியுள்ளேன். நீங்கள் குறிப்பட்டதை நான் அதில் காணவில்லையே! என்று கேட்டார். அதற்கு அவர்கள், நீ குர்ஆனை(ச் சரியாக) ஓதியிருந்தால் அதில் நான் கூறியதைக் கண்டிருப்பாய். இறைத்தூதர் எதை உங்களுக்குக் கொடுத்தாரோ, அதைப் பெற்றுக் கொள்ளுங்கள். அவர் எதனை விட்டும் உங்களைத் தடுக்கின்றாரோ அதை விட்டும் நீங்கள் விலகி இருங்கள் எனும் (59:7ஆவது) வசனத்தை நீ ஓத வில்லையா? என்று கேட்டார்கள். அந்தப் பெண், ஆம் (ஓதினேன்) என்று பதிலளித்தார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மேலே குறிப்பட்ட) இவற்றைச் செய்ய வேண்டாமெனத் தடுத்துள்ளார்கள் என்று சொன்னார்கள். அந்தப் பெண்மணி, உங்கள் துணைவியார் இதைச் செய்வதாக நான் கருதுகிறேன் என்று கூறினார். அப்துல்லாஹ் (ரலி) அவர்கள், சரி, நீ சென்று, (என் மனைவியைப்) பார்! என்று கூறினார்கள். ஆகவே அந்தப் பெண் சென்று பார்த்தார். தம் எண்ணப்படி எதையும் அவர் காணவில்லை. அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், என் மனைவி (மட்டும்) அப்படிச் செய்பவளாக இருந்தால், அவளுடன் நான் சேர்ந்து வாழமாட்டேன் என்று கூறினார்கள்.

4887அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒட்டுமுடி (முடியாலான சவுரி) வைத்துக் கொள்ளும் பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சபித்துள்ளார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) அப்துர் ரஹ்மான் பின் ஆபிஸ் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்: அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்களிடமிருந்து உம்மு யஅகூப் எனும் பெண்மணி அறிவித்த இந்த ஹதீஸை நானும் கேள்விப்பட்டுள்ளேன்.

 பாடம் : 5

மேலும், (அந்தச் செல்வம்) இந்த முஹாஜிர் களின் வருகைக்கு முன்பே நம்பிக்கை கொண்டு, ஹிஜ்ரத் பூமியில் (மதீனாவில்) வாழ்ந்து கொண்டிருந்தவர்களுக்கும் (உரியதாகும் என்று தொடங்கும் 59:9ஆவது இறைவசனம்).

4888 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அபூ லுஃலுஆ ஃபைரோஸ் என்பவனால் கத்தியால் குத்தப்பட்ட பிறகு) உமர் (ரலி) அவர்கள், (இஸ்லாத்தில்) முன்னவர் களான முஹாஜிர்களின் உரிமைகளை அறிந்து (அவர்களின் கண்ணியத்தைக் காத்துக்) கொள்ள வேண்டும் என்று (எனக்குப் பின்னர் வரவிருக்கும்) கலீஃபாவுக்கு நான் இறுதி உபதேசம் செய்கிறேன். மேலும், நபி(ஸல்) அவர்கள் (மற்றும் நபித்தோழர்கள்) ஹிஜ்ரத் செய்து வருவதற்கு முன்பே ஹிஜ்ரத் நாட்டை (மதீனாவை) தம் இருப்பிடமாகக் கொண்டு இறை நம்பிக்கையை (உறுதியாகப்) பற்றிக் கொண்ட அன்சாரிகளில் நன்மை புரிபவரிட மிருந்து (அவரது நன்மையை) ஏற்று, அவர்களில் தவறிழைப்பவரை மன்னித்திட வேண்டும் என்று நான் அந்த கலீஃபாவுக்கு உபதேசம் செய்கிறேன் என்றார்கள்.7

பாடம் : 6

மேலும், தமக்கே தேவையிருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்குவார்கள் எனும் (59:9ஆவது) வசனத் தொடர்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) கஸாஸா (தேவை) எனும் சொல்லுக்கு வறுமை என்று பொருள்.

முஃப்-ஹூன் (வெற்றியாளர்கள்) எனும் சொல்லுக்கு, நிரந்தர வெற்றியாளர்கள் என்று பொருள். (இதன் வேர்ச் சொல்லான) ஃபலாஹ் என்பதற்கு, நிரந்தர வாழ்க்கை என்று பொருள். (தொழுகை அழைப்பில் இடம்பெற்றுள்ள) ஹய்ய அலல் ஃபலாஹ் என்பதற்கு நிரந்தரத்தை நோக்கி விரைந்து வாருங்கள் என்று பொருள்.

ஹஸன் அல்பஸரீ (ரஹ்) அவர்கள், (இதே வசனத்தின் தொடக்கத்தில் இடம் பெற்றுள்ள) ஹாஜத் (தேவை) எனும் சொல்லுக்குப் பொறாமை என்று பொருள் எனக் கூறினார்கள்.

4889 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து எனக்கு (தாங்க முடியாத பசித்) துன்பம் ஏற்பட்டுள்ளது, அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள் தம் துணைவியரிடம் ஆளனுப்பி (அவர்களிடம் உணவு ஏதேனும் இருக்கிறதா என்று கேட்டு வரச்சொன்)னார்கள். அவர்களிடம் ஏதும் இருக்கவில்லை. அப்போது,அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கி), இன்றிரவு இவருக்கு விருந்தளிக்கும் ஆள் உண்டா? அவருக்கு அல்லாஹ் அருள் புரிவான் என்று கேட்டார்கள். அப்போது அன்சாரிகளில் ஒருவர், நான் (இவருக்கு விருந்தளிக்கிறேன்), அல்லாஹ்வின் தூதரே! என்று சொல்லி (அவரை அழைத்துக் கொண்டு) தம் வீட்டாரிடம் சென்று தம் துணைவியாரை நோக்கி, (இவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் விருந்தாளி. (இவருக்குத் தராமல்) எதனையும் நீ (உன்னிடமே) சேமித்து வைத்துக் கொள்ளாதே! என்று சொன்னார்.

அதற்கு அவர் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! நம் குழந்தைகளின் உணவைத் தவிர என்னிடம் வேறெதுவுமில்லை என்று பதிலளித்தார். அவர், (நம்) குழந்தைகள் உணவு உண்ண விரும்பினால் அவர்களை (எப்படியாவது சமாதானப்படுத்தி) தூங்கச் செய்து விடு! பிறகு நீ வந்து, (வீட்டிலிருக்கும் உணவைத் தயாராக எடுத்து வைத்து விட்டு, விளக்கை ஏற்றிவிடுவது போல் பாவனை செய்து) விளக்கை அணைத்து விடு! (இருப்பதை விருந்தாளிக்குக் கொடுத்து விட்டு) இன்றிரவு நாம் வயிற்றைச் சுருக்கிக் கொள்வோம் என்று சொன்னார். அவ்வாறே அவர் (மனைவி) செய்தார். பிறகு, (விருந்தளித்த) அம்மனிதர் காலையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்றபோது, நபி (ஸல்) அவர்கள், இன்னார் இன்னாரை (உங்கள் இருவரை)க் கண்டு மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ் வியப்படைந்தான் அல்லது (மகிழ்ச்சியால்) சிரித்துக் கொண் டான் என்று சொன்னார்கள். அப்போது மாண்பும் மகத்துவமும் வாய்ந்த அல்லாஹ், தமக்கே தேவை இருந்தும் கூட தம்மைவிடப் பிறருக்கே அவர்கள் முன்னுரிமை வழங்கு கிறார்கள்... எனும் (59:9ஆவது) வசனத்தை அருளினான்.8

பாடம் : 1

(இறை நம்பிக்கை கொண்டவர்களே!) எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாய் இருப்பவர்களை நண்பர்களாக்கிக் கொள் ளாதீர்கள் (எனும் 60:1ஆவது வசனத் தொடர்).

4890 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (குதிரை வீரர்களான) என்னையும், ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும், மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும் நீங்கள் ரவ்ளத்து காக் எனுமிடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் பெண்ணொருத்தி இருக்கிறாள். (மக்காவிலுள்ள விரோதிகளுக்கு ஹாத்திப் பின் அபீ பல்த்தஆ நமது இரகசியத் திட்டங்களை எழுதித் தெரி வித்துள்ள) கடிதம் ஒன்று அவளிடம் இருக்கும். அதை அவளிடமிருந்து கைப்பற்றி வாருங்கள்! என்று கூறியனுப்பினார்கள்.

உடனே நாங்கள் (புறப்பட்டுச்) சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந்தன. நாங்கள் அந்த ரவ்ளத்து காக் எனும் இடத்திற்குச் சென்றோம். அங்கு ஒட்டகச் சிவிகையில் இருந்த அந்தப் பெண்ணைக் கண்டோம். (அவளிடம்) நாங்கள், கடிதத்தை வெளியே எடு! என்று சொன்னோம். அதற்கு அவள், என்னிடம் கடிதம் ஏதுமில்லை என்று பதிலளித்தாள். நாங்கள், ஒன்று, நீயாகக் கடிதத்தை எடுத்து(க் கொடுத்து)விடு! இல்லையேல், (உன்னைச் சோதனையிடுவதற்காக உனது) ஆடையை நீ களைய வேண்டியிருக்கும் என்று சொன்னோம். உடனே அவள் (இடுப்புவரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை நபி (ஸல்) அவர்களிடம் கொண்டுசென்றோம்.

அதில் ஹாத்திப் பின் அபீ பல்தஆ (ரலி) அவர்கள் மக்காவாசிகளான இணை வைப்போரிடையேயுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களின் (இரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருக்கக் கண்டோம்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! என்ன இது? என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள் (தம் குற்றத்தை ஒப்புக் கொண்டு), அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷியரில் ஒருவனாக இருக்காமல் அவர்களிடையே (வசித்துவந்த) ஒருவனாகவே இருந்தேன்.

தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டாரையும், சொத்து களையும் பாதுகாப்பதற்கு மக்காவில் உறவினர் பலர் இருக்கின்றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர் (எவரும்) இல்லாததால், மக்காவாசிகளுக்கு உபகாரம் எதையாவது செய்து, அதன் காரணத்தால் அவர்கள் (பிரதியுபகாரமாக) என் உறவினரைக் காப்பாற்றவேண்டும் என்று நான் விரும்பினேன். (அதனால், அவர்கள் கேட்டுக் கொண்டதற்கிணங்க இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் சத்திய மார்க்கத்தை நிராகரித்தோ, (இஸ்லாமைத் துறந்து) வேறு மதத்தைத் தழுவுவதற்கோ இவ்விதம் செய்யவில்லை என்று (காரணம்) கூறினார்கள். (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இவர் உங்களிடம் உண்மையே சொன்னார் என்று சொன்னார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் துதரே! என்னை விடுங்கள்; (சதி வேலைகள் செய்த) இவரது கழுத்தைக் கொய்து விடுகிறேன் என்று சொன்னார்கள்.

அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டார். மேலும், உமக்கென்ன தெரியும்? ஒருவேளை மாண்பும் மகத்துவமும் வாய்ந்தவனான அல்லாஹ், பத்ருப் போரில் பங்கேற்றவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள்; உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறிவிட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.

ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் விஷயத்தில்தான் இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாயிருப்பவர்களை நீங்கள் நண்பர்களாக்கிக் கொள்ளாதீர்கள் என்று தொடங்கும் (60:1ஆவது) வசனம் இறங்கிற்று என (அறிவிப்பாளர்களில் ஒருவரான) அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

ளஇதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:ன இந்த இறைவசனம் ளஅலீ (ரலி) அவர்களின்ன அறிவிப்பிலேயே உள்ளதா? அல்லது அம்ர் பின் தீனார் அவர்களின் (அறிவிப்பின் போது வந்த) சொல்லா என்று எனக்குத் தெரியாது.2

..... அலீ பின் அல்மதீனீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், ஹாத்திப் பின் அபீபல்த்தஆ (ரலி) அவர்கள் தொடர்பாகத் தான் இவ்வசனம் (60:1) இறங்கிற்றா? என்று கேட்கப்பட்டது. சுஃப்யான் (ரஹ்) அவர்கள், இப்படித் தான் மக்களின் அறிவிப்புகளில் காணப்படுகிறது. இந்த அறிவிப்பை நான் அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களிடமிருந்து செவியேற்றேன். அதில் ஒரு வார்த்தையைக் கூட நான் விட்டுவிடவில்லை. நான் அல்லாத வேறு யாரும் அம்ர் அவர்களிடமிருந்து இதனை நன்கு நினைவில் நிறுத்திக் கொண்டதாக நான் கருதவில்லை என்று கூறினார்கள்.

பாடம் : 2

இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் (நாடு துறந்து) ஹிஜ்ரத் செய்து உங்களிடம் வந்தால் (என்று தொடங்கும் 60:10ஆவது இறை வசனம்).

4891 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (60:10-12ஆவது) வசனங்களின் ஆணைக்கேற்ப அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவிலிருந்து) நாடு துறந்து தம்மிடம் வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை சோதனை செய்து வந்தார்கள்.

இந்த (இறைவசனத்திலுள்ள) நிபந்த னையை இறை நம்பிக்கை கொண்ட பெண்களில் எவர் ஏற்றுக் கொண்டாரோ அவரிடம் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண்டேன் என்று பேச்சால் மட்டுமே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுவார்கள்.

அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்களது கரம், விசுவாசப் பிரமாணம் வாங்கும் போது எந்தப் பெண்ணின் கரத்தையும் தொட்டதில்லை. பெண்களிடம், நான் உன் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொண் டேன் என்று அவர்கள் வாய்மொழியாகவே தவிர வேறெந்த முறையிலும் விசுவாசப் பிராமணம் வாங்கியதில்லை.3

 இது இன்னும் பல அறிவிப்பாளர் தொடர்வழியாகவும் வந்துள்ளது.

பாடம் : 3

நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிராமணம் செய்வதற்காக வந்தார்களாயின் (என்று தொடங்கும் 60:12ஆவது இறைவசனம்).

4892 உம்மு அத்திய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (மகளிர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிராமணம் செய்தோம். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணை வைக்க மாட்டார்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தை எங்களுக்கு ஓதிக்காட்டினார்கள். மேலும், (இறந்தவர்களுக்காக) ஒப்பாரிவைத்து அழவேண்டாமென எங்களைத் தடுத்தார்கள். அப்போது (நபிகளாரிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக, அவர்களை நோக்கி சமிக்கை செய்யும் வகையில் கையை நீட்டிய) ஒரு பெண்மணி தமது கையை பின்வாங்கிக் கொண்டார். மேலும், அவர் இன்னவள் (என்னுடன் சேர்ந்து என் உறவினர் ஒருவருக்காக ஒப்பாரிவைத்து) எனக்கு உதவி புரிந்தாள். பதிலுக்கு (அவளுடன் சேர்ந்து நான் ஒப்பாரி வைத்து) அவளுக்கு உதவ விரும்புகிறேன் என்று கூறினார். அவளுக்கு எந்த பதிலையும் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அவள் சென்று (ஒப்பாரிவைத்து)விட்டுத் திரும்பி நபி (ஸல்) அவர்களிடம் வந்தாள். அப்போது, அவளிடமிருந்து நபி (ஸல்) அவர்கள் விசுவாசப் பிரமாணத்தை ஏற்றார்கள்.

4893 இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எந்த ஒரு நற்செய-லும், (நபியே!) உங்களுக்கு அவர்கள் மாறு செய்ய மாட்டார்கள் எனும் (60:12ஆவது) இறை வசனத்தி(ன், விளக்கவுரையி)ல், இதுவும் பெண்கள் மீது அல்லாஹ் விதித்த நிபந்தனை களில் ஒன்றாகும் என இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்.4

4894 உபாதா பின் ஸாமித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் அருகில் இருந்து கொண்டிருந்தோம். அப்போது அவர்கள், அல்லாஹ்விற்கு எதையும்

இணை கற்பிக்க மாட்டீர்கள்; விபசாரம் புரியமாட்டீர்கள்; திருடமாட்டீர்கள் என்று எனக்கு உறுதிமொழி அளிப்பீர்களா? என்று கேட்டுவிட்டுப் பெண்கள் பற்றிய (60:12ஆவது) இறைவசனத்தை ஓதினார்கள்.

சுஃப்யான் பின் உயையனா (ரஹ்) அவர்களின் அதிகமான அறிவிப்பில் அந்த வசனத்தை ஓதிக்காட்டினார்கள் என்றே காணப்படுகிறது. (பெண்கள் பற்றிய வசனம் என்று காணப்படவில்லை.) தொடர்ந்து நபி (ஸல்) அவர்கள், உங்களில் எவர் (இந்த உறுதி மொழியை) நிறைவேற்றுகிறாரோ அவருக்கு ரிய பிரதிபலனைத் தருவது அல்லாஹ்வின் பொறுப்பாகும். மேற்கூறப்பட்ட (விபசாரம் முதலான)வற்றில் எதையாவது ஒருவர் செய்து அதற்காக (இவ்வுலகில் இஸ்லாமியச் சட்டப்படி) அவர் தண்டிக்கப்பட்டுவிட்டால், அதுவே அவருக்குப் பரிகாரமாகிவிடும். மேற்கூறப்பட்டவற்றில் எதையவாது ஒருவர் செய்து, பின்னர் அல்லாஹ் அதனை (யாருக்கும் தெரியாமல்) மறைத்து விட்டால், அவர் அல்லாஹ்வின் பொறுப்பில் விடப்படு கின்றார். அவன் நாடினால் அவரை வேதனை செய்வான்; அவன் நாடினால் அவரை மன்னிப்பான் என்று சொன்னார்கள்.5

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாவும் வந்துள்ளது.

4895 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடனும் அபூபக்ர், உமர், உஸ்மான் (ரலி) ஆகியோருடனும் நோன்புப் பெரு நாள் தொழுகையில் பங்கெடுத்துள்ளேன். அப்போது அவர்கள் அனைவரும் உரை (குத்பா) நிகழ்த்துவதற்கு முன் தொழுபவர்களாக இருந்தனர். அதன்பிறகே உரை நிகழ்த்து வார்கள். (உரை முடிந்த பின்) நபி (ஸல்) அவர்கள் (மிம்பர்- மேடையிலிருந்து) இறங்கி, மக்களைத் தமது கையால் அமரச்செய்ததை இன்றும் நான் (என் கண்ணெதிரே) காண்பது போல் உள்ளது. பிறகு ஆண்(களின் வரிசை)களைப் பிளந்து கொண்டு பிலால் (ரலி) அவர்களுடன் பெண்கள் பகுதிக்குச் சென்றார்கள்.

அப்போது நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உம்மிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்து, அவர்கள் அல்லாஹ்வுடன் எதனையும் இணைவைக்க மாட்டார்கள் என்றும், திருட மாட்டார்கள் என்றும், விபசாரம் செய்ய மாட்டார்கள் என்றும், தம்முடைய குழந்தைகளைக் கொல்ல மாட்டார்கள் என்றும், தங்கள் கை கால்களுக்கிடையே எந்த அவதூறையும் இட்டுக்கட்ட மாட்டார்கள் என்றும், எந்த ஒரு நற்செய-லும் உமக்கு மாறு செய்ய மாட்டார்கள் என்றும் வாக்குறுதி அளித்தால், அப்போது அவர்களிட மிருந்து விசுவாசப் பிரமாணத்தை ஏற்றுக் கொள்ளும். மேலும், அவர்களுக்காக அல்லாஹ்விடம் பாவமன்னிப்புக் கோரும். திண்ணமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்ப வனும், கருணைபுரிபவனுமாய் இருக்கின் றான் எனும் (60:12ஆவது) இறைவசனம் முழுவதையும் ஓதிமுடித்து விட்டு, இந்த உறுதிமொழியில் நீங்கள் நிலையாக இருப்பீர்களா? என்று கேட்டார்கள்.

ஒரேயொரு பெண்மணி மட்டும், ஆம் (நீடிப்போம்), அல்லாஹ்வின் தூதரே! என்றார். அவரைத்தவிர வேறெவரும் நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கவில்லை. -அந்தப் பெண் யாரென்று (இதன் அறிவிப் பாளர்களில் ஒருவரான) ஹஸன் பின்

முஸ்லிம் (ரஹ்) அவர்களுக்குத் தெரிய வில்லை- அப்பெண்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், நீங்கள் தர்மம் செய்யுங்கள்! என்று சொன்னார்கள். பிலால் (ரலி) அவர்கள் தமது ஆடையை விரித்தார்கள். அப்போது மோதிரங்களையும் மெட்டிகளையும் அப்பெண்கள் பிலால் (ரலி) அவர்களின் ஆடையில் போடலானார்கள்.6

பாடம் : 1

எனக்குப் பிறகு அஹ்மத் எனும் பெயருடைய தூதர் ஒருவர் வருவார் (என ஈசா கூறினார்) எனும் (61:6ஆவது) வசனத் தொடர்.

4896 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எனக்குப் பல பெயர்கள் உண்டு; நான் முஹம்மது (புகழப்பட்டவர்) ஆவேன். இன்னும் நான் அஹ்மத் (இறைவனை அதிகம் புகழ்பவர்) ஆவேன். நான் மாஹீ (அழிப்பவர்) ஆவேன்; அல்லாஹ் என் மூலம் இறைமறுப்பை அழிப்பான். நான் ஹாஷிர் (ஒருங்கிணைப்ப வர்) ஆவேன்; என் தலைமையின் கீழ் மக்கள் ஒருங்கிணைக்கப்படுவார்கள்; நான் ஆகிப் (இறைத்தூதர்களில் இறுதியானவர்) ஆவேன்.

இதை ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.2

பாடம் : 1

இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பியுள்ளான்) எனும் (62:3ஆவது) வசனத் தொடர்.

(62:9ஆவது வசனத்தின் மூலத்திலுள்ள ஃபஸ்அவ் இலா ஃதிக்ரில்லாஹ் -அல்லாஹ்வை நினைவுகூர விரையுங்கள் என்பதை) உமர் (ரலி) அவர்கள், ஃபம்ளூ இலா ஃதிக்ரில்லாஹ் (அல்லாஹ்வை நினைவுகூரச் செல்லுங்கள்) என்று ஓதினார்கள்.

4897அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (ஒரு சமயம்) நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்களுக்கு அல்ஜுமுஆ எனும் (62ஆவது) அத்தியாயத்தில் இன்னும் இவர்களுடன் வந்து சேராமலிருக்கும் ஏனைய மக்களுக்காகவும் (இந்தத் தூதரை அவன் அனுப்பி யுள்ளான்) எனும் (3ஆவது வசனம் அருளப் பெற்றது. அப்போது, அந்த (ஏனைய) மக்கள் யார்?, அல்லாஹ்வின் தூதரே! என்று நான் கேட்டேன். நான் மூன்று முறை கேட்டும் அவர்கள் (எனக்கு) பதிலளிக்கவில்லை. எங்களிடையே சல்மான் அல் ஃபாரிசீ (ரலி) அவர்கள் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் சல்மான் மீது தமது கரத்தை வைத்தார்கள். பிறகு, கிருத்திகா (ஸுரய்யா) நட்சத்திரக் குழுமத்தின் அருகில் இறை நம்பிக்கை இருந்தாலும் சில மனிதர்கள் அல்லது இவர்களில் ஒருவர் அதனை அடைந்தே தீருவார் என்று கூறினார்கள்.2

4898 அபுல் ஃகைஸ் சாலிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூஹுரைரா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், இவர்களில் சில மனிதர்கள் இதனை அடைந்தே தீருவர் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக இடம் பெற்றுள்ளது.

பாடம் : 2

அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு

வேடிக்கையையோ பார்த்து விட்டால், அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடுகின் றனர் (எனும் 62:11ஆவது வசனத் தொடர்).

4899 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் வெள்ளிக்கிழமை (ஜுமுஆத் தொழுகையில்) இருந்த போது, (வியாபாரத்திற்காக உணவுப் பொருட்களை ஏற்றிக் கொண்டு) ஒட்டகக் குழு ஒன்று வந்தது. (அதைக் கண்ட மாத்திரத்தில், நபிகளாரின் முன்னிலையிலிருந்த மக்கள்) கலைந்து சென்றுவிட்டனர். பன்னிரண்டு நபர்களே எஞ்சியிருந்தனர். அப்போது தான் அவர்கள் வியாபாரத்தையோ விளையாட்டு வேடிக்கையையோ கண்டுவிட்டால் அவற்றின் பக்கம் விரைந்து சென்றுவிடு கின்றனர் எனும் (62:11ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான்.3

 பாடம் : 1

(நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின் றனர். திண்ணமாக, நீங்கள் தன்னுடைய தூதர்தாம் என்பதை அல்லாஹ் நன்கறிவான். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் நிச்சயம் பொய்யர்கள் என்பதற்கு அல்லாஹ் சாட்சியம் அளிக்கின்றான் எனும் (63:1ஆவது) இறை வசனம்.

4900 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு புனிதப் போரில் நான் இருந்து கொண்டிருந்தேன்.2 அப்போது, (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை என்பவன் அல்லாஹ்வின் தூதருடன் இருப்ப வர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள்; அதனால், அவர்கள் அல்லாஹ்வின் தூதரிடமிருந்து விலகிச் சென்றுவிடுவார்கள் என்று கூறி விட்டுத் தொடர்ந்து, நாம் இங்கிருந்து (மதீனாவுக்குத்) திரும்பினால், (எங்கள் இனத்தவர்களான) கண்ணியவான்கள் இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை மதீனாவிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறினான். அவன் கூறியதை (நான்) என் சிறிய தந்தை(யாக மதிக்கும் ஒருவர்) இடம் அல்லது உமர் (ரலி) அவர்களிடம் கூறினேன். அவர் அதை நபி (ஸல்) அவர்களிடம் கூறிவிட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னை அழைத்தார்கள். (நான் சென்று அவன் சொன்னதை) நபி (ஸல்) அவர்களிடம் எடுத்துரைத்தேன். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ்விற்கும் அவனுடைய நண்பர்களுக்கும் ஆளனுப்பினார்கள். (அவர்கள் தம்மிடம் வந்த போது அது குறித்து நபியவர்கள் வினவினார்கள்.) நாங்கள் அதைச் சொல்லவேயில்லை என்று அவர்கள் சாதித்தார்கள்.

அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நான் சென்னதை நம்ப மறுத்து விட்டார்கள்; அப்துல்லாஹ் பின் உபை (சத்தியமிட்டுச்) சொன்னதை உண்மையென்று நம்பினார்கள். அப்போது, எனக்குக் கவலை ஏற்பட்டது. அது போன்ற கவலை என் வாழ் நாளில் ஓரு போதும் எனக்கு ஏற்பட்டதில்லை. பிறகு நான் என் வீட்டில் அமர்ந்து கொண் டிருந்தேன். அப்போது என் சிறிய தந்தை என்னிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன் மீது கோபம் கொள்ளும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைத்துக்கூடப் பார்க்கவில்லை என்று கூறினார்கள். அப்போது, இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது என்று தொடங்கும் இந்த (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். உடனே நபி (ஸல்) அவர்கள் எனக்கு ஆளனுப்பினார்கள். (நான் சென்றபோது தம்மீது அருளப்பட்டிருந்த வசனத்தை எனக்கு) ஓதிக்காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் (நீ சொன்னதை உண்மை என்று தெளிவுபடுத்திவிட்டான்) என்று கூறினார்கள்.

பாடம் : 2

இவர்கள் தாங்கள் செய்யும் சத்தியங்களை (தங்களைத் தற்காத்துக் கொள்ளும்) கேடயமாக்கிக் கொண்டிருக்கின்றார்கள் (எனும் 63:2ஆவது வசனத் தொடர்).

4901 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், அல்லாஹ்வின் தூதருடன் இருப்பவர்களுக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரை விட்டும்) விலகிச் சென்றுவிடுவார்கள் என்று சொல்வதையும், மேலும், நாம் மதீனாவுக்குத் திரும்பினால் (எங்கள் இனத்தவர்களாகிய) கண்ணிய வான்கள், இழிந்தோ(ரான முஹாஜி)ர்களை நகரிலிருந்து நிச்சயம் வெளியேற்றுவார்கள் என்று கூறுவதையும் நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரிடம் கூறினேன். அதை என் சிறிய தந்தையார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட் டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று சத்தியம் செய்தனர். எனவே அவர்களை நம்பிவிட்ட அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (நம்ப) மறுத்து விட்டார்கள். (என் வாழ்நாளில் அதற்கு முன்) இது போன்ற ஒரு கவலை ஏற்பட்டதேயில்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட் கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்திருந்தேன். அப்போது அல்லாஹ், (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களி டம் வருகின்றபோது என்று தொடங்கி ஆயினும், நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள் என்று முடியும் (63:1-8) வசனங்களை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர்களிடம் சென்றபோது) அவற்றை எனக்கு ஓதிக்காட்டி, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் என்று கூறினார்கள்.

பாடம் : 3

இவை (அனைத்துக்கும் காரணம்,) இவர்கள் (முத-ல்) நம்பிக்கை கொண்டு பின்னர் மறுத்து விட்டது தான் . இதனால் இவர்களின் உள்ளங்களில் முத்திரையிடப்பட்டுவிட்டது. இனி இவர்கள் எதனையும் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனும் (63:3ஆவது) இறைவசனம்.

4902 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:.

(நயவஞ்கர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவழிக்காதீர்கள் என்றும், நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், ...என்றும் கூறிய போது, அதனை நான் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது என்னை அன்சாரிகள் கண்டித்தார்கள். அப்துல்லாஹ் பின் உபை, தான் அப்படிச் சொல்லவில்லை என்று சத்தியம் செய்தான். ஆகவே, நான் என் வீட்டிற்குத் திரும்பி வந்து தூங்கிவிட்டேன். அப்போது என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைத்தார்கள் (எனத் தகவல் வந்தது). உடனே, நான் அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள், (ஸைதே!) அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்திவிட்டான் என்று கூறினார்கள். மேலும், இவர்கள்தாம் இறைத்தூதருடன் இருப்பவர்களுக்குச் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள் என்று கூறினார்கள்... எனும் (63:7ஆவது) வசனமும் அருளப்பெற்றது.

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் நபி (ஸல்) அவர்களி டமிருந்து அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 4

(நபியே!) நீங்கள் இவர்களைப் பார்த்தால் இவர்களின் உடல் அமைப்பு உங்களை வியப்பில் ஆழ்த்தும். இவர்கள் பேச ஆரம்பித்தால் நீங்கள் இவர்களின் பேச்சைக் கேட்டுக் கொண்டே இருந்து விடுவீர்கள். ஆனால், உண்மையில் இவர்கள் (சுவரில்) சாய்த்து வைக்கப்பட்டிருக்கும் மரக் கட்டைகளைப் போன்றவர்கள். இவர்கள் ஒவ்வோர் உரத்த சப்தத்தையும் தங்களுக்கு எதிரானதாய்க் கருதுகின்றனர். இவர்கள் தாம் (கடும்) பகைவர்கள்; இவர்களைக் குறித்து எச்சரிக்கையோடு இருங்கள். அல்லாஹ் இவர்களை நாசமாக்கட்டும்! இவர்கள் எங்கே திசை மாறிச் சென்று கொண்டிருக்கின்றனர்? (எனும் 63:4ஆவது இறைவசனம்.)

4903 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு பயணத்திற்காகப் புறப்பட்டோம். அந்தப் பயணத்தில் (உணவுப் பற்றாக்குறையால்) மக்களுக்குச் சிரமம் ஏற்பட்டது. அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை தம் நண்பர்களிடம், அல்லாஹ்வின் தூதருடன் இருக்கும் இவர்களுக்கு நீங்கள் செலவு செய்வதை நிறுத்திவிடுங்கள். அவர்கள் நபியிடமிருந்து விலகிச் சென்று விடுவார்கள் என்றும், நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள், இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றி விடுவர் என்றும் சொன்னான். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அவன் சொன்னதை) அவர்களிடம் தெரிவித்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபைக்கு ஆளனுப்பினார்கள். (அவன் வந்தவுடன்,) அவனிடம் (அது குறித்துக்) கேட்டார்கள். தான் அப்படிச் செய்யவேயில்லை என்று அவன் சத்தியம் செய்து சாதித்தான். அன்சாரிகள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஸைத் பொய் சொல்லிவிட்டார் என்று (என்னைப் பற்றிக்) கூறினார்கள். அவர்கள் அப்படிச் சென்னதால் என் உள்ளத்தில் கடுமை(யான கவலை) ஏற்பட்டது.

அப்போது என் வாய்மையைக் குறிக்கும் வகையில் (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்றபோது... என்று தொடங்கும் (63:1ஆவது) வசனத்தை அல்லாஹ் அருளினான். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த நயவஞ்சகர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோர அவர்களை அழைத்தார்கள். (அவர்கள் அதற்கு இணங்காமல்) தங்கள் தலையைத் திருப்பிக் கொண்டார்கள்.

(மேற்கண்ட வசனத்தின் மூலத்திலுள்ள) குஷுபும் முசன்னதா (சாய்த்துவைக்கப் பட்டிருக்கும் மரக்கட்டை) என்பது, அவர்கள் மிகவும் அழகானவர்களாக (வாட்ட சாட்ட மானவர்களாக) இருந்ததைக் குறிக்கிறது.

பாடம் : 5

வாருங்கள்; அல்லாஹ்வின் தூதர் உங்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரி இறைஞ்சுவார் என்று அவர்களிடம் கூறப் பட்டால், (அவர்கள்) தங்களது தலையைத் திருப்பிக் கொள்கிறார்கள். மேலும், அவர்கள் பெரும் ஆணவத்தால் அலட்சியப்படுத்து வதை (நபியே!) நீங்கள் காண்பீர்கள் எனும் (63:5ஆவது) இறைவசனம்.

(இந்த வசனத்தின் மூலத்திலுள்ள) லவ்வவ் (தலையைத் திருப்பிக் கொண்டார்கள்) எனும் சொல், தங்கள் தலையை அசைத்த வண்ணம் அவர்கள் நபியைப் பரிகாசம் செய்ததைக் குறிக்கின்றது. (இதே சொல்லை இன்னோர் ஓத-ல்) லவய்த்து எனும் வினைச்சொல்லிருந்து அழுத்தமில்லாமல் (லவவ் என்று) ஓதப்படுகிறது.

4904 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் என் சிறிய தந்தையாருடன் இருந்து கொண்டிருந்தேன். அப்போது (நயவஞ்சகர் களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் என்பான், அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்கு (-முஹாஜிர்களுக்கு-) நீங்கள் செலவு செய்வதை நிறுத்தி விடுங்கள். அவர்கள் (அவரிடமிருந்து) விலகிச் சென்றுவிடுவர். நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந்தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து நிச்சயம் வெளியேற்றிவிடுவர் என்று கூறுவதை நான் கேட்டேன். அதை நான் என் சிறிய தந்தையாரி டம் கூறினேன். என் சிறிய தந்தையார் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்லிவிட்டார்கள். (ஆனால்,) அப்துல்லாஹ் வையும் அவனுடைய ஆட்களையும் உண்மையாளர்கள் என நபியவர்கள் நம்பினார்கள். பின்னர், என்னை அழைத்(து விசாரித்)தார்கள். நான் அவர்களிடம் (நடந்ததை) எடுத்துரைத் தேன். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்துல்லாஹ் பின் உபை மற்றும் அவனுடைய நண்பர்களுக்கு ஆளனுப்பினார்கள். அவர்கள் வந்து, நாங்கள் அப்படிச் சொல்லவேயில்லை என்று சத்தியம் செய்தனர். ளஅவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நம்பினார்கள்.ன என்னை நம்ப மறுத்து விட்டார்கள். என் வாழ்நாளில், அதற்கு முன் இது போன்ற ஓரு கவலை ஏற்பட்டதே இல்லை எனும் அளவிற்கு என்னைக் கவலை ஆட் கொண்டது. ஆகவே, நான் எனது வீட்டில் (கவலையோடு) அமர்ந்தேன். என் சிறிய தந்தையார் (என்னிடம்), நபி (ஸல்) அவர்கள் உன்னை நம்ப மறுத்து, உன்மீது கோபமடையும் அளவிற்குச் செல்வார்கள் என நான் நினைக்கவில்லை என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், (நபியே!) இந்த நயவஞ்சகர்கள் உங்களிடம் வருகின்ற போது, திண்ணமாக, நீங்கள் அல்லாஹ்வின் தூதராவீர்கள் என நாங்கள் சாட்சியம் அளிக்கின்றோம் என்று கூறுகின்றனர் எனும் (63:1ஆவது) வசனத்தை அருளினான். உடனே, எனக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆளனுப்பினார்கள். (நான் அவர் களிடம் சென்றபோது) அந்த வசனத்தை எனக்கு ஓதிக் காட்டினார்கள். பிறகு, ஸைதே! அல்லாஹ் உன்னை உண்மைப்படுத்தி விட்டான் என்று கூறினார்கள்.3

பாடம் : 6

(நபியே!) நீங்கள் இவர்களுக்காகப் பாவமன்னிப்புக் கோரினாலும் கோரா விட்டாலும் இவர்களைப் பொறுத்துச் சமம் தான். அல்லாஹ் இவர்களை ஒரு போதும் மன்னிக்க மாட்டான். பாவிகளான மக்களை அல்லாஹ் ஒரு போதும் நேர்வழியில் செலுத்த மாட்டான் எனும் (63:6ஆவது) இறைவசனம்.

4905 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் அல்லது ஒரு படையில் இருந்து கொண்டிருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார்.4 அப்போது (அடி வாங்கிய) அன்சாரி அன்சாரிகளே! (உதவுங்கள்.) என்று கூறினார். அந்த முஹாஜிர் முஹாஜிர்களே! உதவுங்கள்! என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியேற்று, இது என்ன அறியாமைக் காலக் கூப்பாடு? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், அல்லாஹ்வின் தூதரே! முஹாஜிர்களில் ஒருவர் அன்சாரி களில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார் என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இத்தகைய கூப்பாடுகளைக் கைவிடுங்கள். (குலமோதல்களைத் தூண்டு கின்ற) இவை நாற்றம் பிடித்தவை என்று கூறினார்கள்.

அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இதைக் கேட்டுவிட்டு இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக! நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தாரான) கண்ணியவான்கள் இழிந் தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று (அன்சாரிகளுக்குப் பரிந்து கொண்டு) கூறினான். நபி (ஸல்) அவர்களுக்கு இந்தக் தகவல் எட்டியது. மேலும், (தகவலறிந்த) உமர் (ரலி) அவர்கள் எழுந்து, என்னை விடுங்கள் அல்லாஹ்வின் தூதரே! இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசிவிடக் கூடாது என்று சொன்னார்கள். மக்காவாசி க(ளான முஹாஜிர்க)ள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். பின்னர் (முஹாஜிர்கள்) அன்சாரிகளைவிட அதிகமாகி விட்டனர்.

மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்து கொண்டி ருந்தோம் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகிறது.

பாடம் : 7

அல்லாஹ்வின் தூதருடன் இருப்போருக்குச் செலவழிப்பதை நிறுத்திவிடுங்கள். (அவரிடமிருந்து) அவர்கள் விலகிச் சென்று விடுவார்கள் என்று சொல்கின்றவர்கள் இவர்கள்தாம். உண்மையில், வானங்கள் மற்றும் பூமியின் கருவூலங்கள் அல்லாஹ் வுக்கே உரியனவாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் புரிந்து கொள்ள மாட்டார்கள் எனும் (63:7ஆவது) இறைவசனம்.

(இதன் மூலத்தில் இடம்பெற்றுள்ள) யன்ஃபள்ளூ எனும் சொல்லுக்குப் பிரிந்து விடுவார்கள் என்று பொருள்.

4906 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்ஹர்ராப் போரில் கொல்லப் பட்டோருக்காக நான் (பெரிதும்) துக்கப் பட்டேன்.5 நான் கடுமையாகத் துக்கப்படுவது பற்றிய செய்தி, ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களுக்கு எட்டிய போது எனக்கு அவர்கள் (பின்வருமாறு குறிப்பிட்டுக் கடிதம்) எழுதினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறைவா! அன்சாரிகளுக்கும் அன்சாரிகளின் மக்களுக்கும் நீ மன்னிப்பு அளிப்பாயாக என்று பிரார்த்தித்ததை நான் செவியேற்றேன்.

அன்சாரிகளுடைய பிள்ளைகளின் பிள்ளைகளையும் நபி (ஸல்) அவர்கள் (துஆவில்) குறிப்பிட்டார்களா? இல்லையா என்பதை உறுதிசெய்யமுடியவில்லை என அறிவிப்பாளர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் ஃபள்ல் (ரஹ்) அவர்கள் தெரிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸை அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்த போது அன்னாருடன் இருந்தவர்களில் சிலர், (ஸைத் பின் அர்கம் பற்றிக்) கேட்டனர். அதற்கு அனஸ் (ரலி) அவர்கள் (நயவஞ்சகர்களின் முறைகேடான பேச்சுக் குறித்து இவர் தெரிவித்த தகவலை நபிகளார் ஏற்க மறுத்து விட்ட பின்னர், இவரை உண்மைப்படுத்தி அல்லாஹ் வசனத்தை அருளிய போது) இவர் தம் காதால் கேட்டது உண்மையே என அல்லாஹ்வே அறிவித்து விட்டான் என்று இவர் தொடர்பாகத் தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் என பதிலளித்தார்கள்.

பாடம் : 8

மேலும் அவர்கள் நாங்கள் மதீனாவுக்குத் திரும்பிச் சென்றால், கண்ணியவான்கள் அங்கிருந்து இழிந்தோரை வெளியேற்றி விடுவர் என்றும் கூறுகிறார்கள். ஆயினும், கண்ணியம் என்பது, அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் நம்பிக்கையாள ருக்குமே உரியதாகும். ஆனால், இந்த நயவஞ்சகர்கள் அறிய மாட்டார்கள் (எனும் 63:8ஆவது இறைவசனம்).

4907 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு போரில் இருந்து கொண்டி ருந்தோம். முஹாஜிர்களில் ஒரு மனிதர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். அப்போது (அடி வாங்கிய) அன்சாரி, அன்சாரிகளே! (உதவுங்கள்) என்று கூறினார். முஹாஜிர், முஹாஜிர்களே! (உதவுங்கள்) என்று கூறினார்.

இந்தப் பேச்சை அல்லாஹ் தன்னுடைய தூதருக்கு எட்டச் செய்து விட்டான். நபி (ஸல்) அவர்கள், இது என்ன? என்று கேட்டார்கள். அதற்கு மக்கள், முஹாஜிர் களில் ஒருவர் அன்சாரிகளில் ஒருவரைப் பிட்டத்தில் அடித்து விட்டார். உடனே, அன்சாரி அன்சாரிகளே, (உதவுங்கள்) என்று கூற, முஹாஜிரும், முஹாஜிர்களே, (உதவுங்கள்) என்று கூறினார் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் இத்தகைய வாதங்களைக் கைவிடுங்கள். (குலமோதல் களைத் தூண்டுகின்ற) இவை நாற்றம் பிடித்தவை என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு வந்த போது அங்கு அன்சாரிகளே (முஹாஜிர்களை விட) அதிகமாக இருந்தார்கள். அதன் பின்னர் முஹாஜிர்கள் (அன்சாரிகளைவிட) அதிகரித்து விட்டனர். அப்போது (நயவஞ்சகர்களின் தலைவன்) அப்துல்லாஹ் பின் உபை இப்படியா அவர்கள் செய்து விட்டார்கள்? அல்லாஹ்வின் மீதாணையாக, நாங்கள் மதீனாவிற்குத் திரும்பிச் சென்றால், (எங்கள் இனத்தோரான) கண்ணியவான்கள் இழிந் தோ(ராகிய முஹாஜி)ர்களை அங்கிருந்து வெளியேற்றிவிடுவர் என்று கூறினான். அப்போது (செய்தி அறிந்த) உமர் பின் கத்தாப் (ரலி ) அவர்கள், என்னை விடுங்கள்; இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகின்றேன், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அவரை விட்டு விடுங்கள். முஹம்மது தம் தோழர்களையே கொலை செய்கிறார் என்று மக்கள் பேசி விடக்கூடாது என்று சொன்னார்கள்.6

02.11.2009. 04:21




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
59 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி