64-(நபிகளார் காலத்துப்)போர்கள்6

பாடம் : 76

தவ்ஸ் குலத்தாரின் செய்தியும் துஃபைல் பின் அம்ர் பின் தவ்ஸீ அவர்களின் செய்தியும்33

4392 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

துஃபைல் பின் அம்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தவ்ஸ் குலத்தார் அழிந்து விட்டனர்; (இறைவனுக்கும் இறைத் தூதருக்கும்) மாறு செய்து விட்டனர்; (இஸ் லாத்தை) ஏற்க மறுத்து விட்டனர். ஆகவே, தாங்கள் அவர்களுக்கெதிராகப் பிரார்த்தி யுங்கள் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவா! தவ்ஸ் குலத்தாரை நேர்வழியில் செலுத்துவாயாக!. அவர்களை (எம்மிடம்) கொண்டு வருவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.34

4393 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களிடம் (இஸ் லாத்தை ஏற்பதற்காக) வந்த போது, வழியில், எவ்வளவு நீண்ட, களைப்பூட்டுகின்ற இரவு! ஆயினும், அது இறைமறுப்பு கோலோச்சும் நாட்டிலிருந்து என்னை விடுதலை செய்து விட்டது என்று பாடினேன். என் அடிமை ஒருவன் வழியில் தப்பியோடிவிட்டான். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்த போது அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்தேன். நான் அவர்களிடம் இருந்த போது (எனது) அந்த அடிமை வந்தான். நபி (ஸல்) அவர்கள் என்னிடம், அபூஹுரைராவே! இதோ உன் அடிமை! என்று கூறினார்கள். நான், அவன் அல்லாஹ்வின் திருப்திக்காக (விடுதலை) என்று சொல்லி அவனை விடுதலை செய்து விட்டேன்.35

பாடம் : 77

தய்யி குலத்தாரின் தூதுக் குழு நிகழ்ச்சியும் அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்களின் செய்தியும்36

4394 அதீ பின் ஹாத்திம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களிடம் (அவர்களது ஆட்சிக் காலத்தில்) ஒரு குழுவாக நாங்கள் வந்தோம். அவர்கள் ஒவ்வொரு மனிதராகப் பெயர் சொல்லி அழைக்கலானார்கள்; (என்னை முத-ல் அழைக்கவில்லை.) ஆகவே நான், என்னைத் தெரியவில்லையா? நம்பிக்கையாளர்களின் தலைவரே? என்று கேட்டேன். அவர்கள், ஆம், தெரியும். மக்கள் மறுத்த போது நீங்கள் இஸ்லாத்தை ஏற்றீர்கள்; அவர்கள் (இஸ்லாத்தை ஏற்காமல்) பின் வாங்கிச் சென்றபோது நீங்கள் (அதை ஏற்க) முன் வந்தீர்கள். அவர்கள் (ஸகாத்தை வழங்காமல்) மோசடி செய்த போது நீங்கள் நிறைவேற்றினீர்கள். (உண்மையை) அவர்கள் நிராகரித்த போது நீங்கள் ஏற்றீர்கள் என்று சொன்னார்கள்.

நான், அப்படியென்றால் (என்னை முத-ல் அழைக்காதது குறித்து) நான் பொருட்படுத்தப்போவதில்லை என்றேன்.

பாடம் : 78

ஹஜ்ஜத்துல் வதா37

4395 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹஜ்ஜத்துல் வதாவுக்காகப் புறப்பட்டோம். (முத-ல்) உம்ரா செய் வதற்காக இஹ்ராம் கட்டினோம். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவரிடம் தியாகப் பிராணியுள்ளதோ அவர்கள் உம்ராவுடன் ஹஜ்ஜும் செய்து கொள்ளட்டும். அவ்விரண்டையும் நிறை வேற்றிய பிறகே அவர்கள் இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டும் என்று சொன்னார்கள். எனக்கு மாதவிடாய் ஏற்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்களுடன் மக்காவுக்குச் சென்றேன். (மாதவிடாயின் காரணத்தால்) நான் இறையில்லத்தைச் சுற்றிவரவில்லை. ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே ஓடவு மில்லை. ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் முறையிட்டேன். அப்போது அவர்கள், உன் தலை (முடியை) அவிழ்த்து வாரிக் கொள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிக் கொள். உம்ராவை விட்டு விடு என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன். நாங்கள் ஹஜ்ஜை நிறைவேற்றி முடித்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் அஸ்ஸித்தீக் ரலியல்லாஹு அன்ஹு அவர்களுடன் தன்யீமுக்கு அனுப்பினார்கள். அங்கிருந்து நான் உம்ரா செய்தேன். இது (இந்த உம்ரா) உனது (விடுபட்ட) உம்ராவுக்கு பதிலாகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

உம்ராவுக்காக இஹ்ராம் கட்டியவர்கள் இறையில்லத்தைச் சுற்றிவந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடவும் செய்தனர். பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டுப் பின்னர் மினாவிலிருந்து திரும்பிய பின் மற்றொரு முறையும் சுற்றிவந்தனர். ஹஜ்ஜையும் உம்ராவையும் சேர்த்து (ஹஜ்ஜுல் கிரான்) செய்தவர்கள் ஒரேயொரு முறைதான் சுற்றிவந்தனர்.38

4396 இப்னு ஜுரைஜ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், உம்ரா செய்பவர் இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்து விட்டால் இஹ்ராமிலிருந்து விடுபட்டு விடுவார் என்று சொன்னதாக அதாஉ (ரஹ்) அவர்கள் எனக்கு அறிவித்தார்கள். நான், எந்த ஆதாரத்தை வைத்து இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் இப்படிக் கூறுகிறார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், தியாகப் பிராணிகளை அறுத்துத் தியாகம் செய்வதற் கான இடம் தொன்மையான ஆலயத்தின் அருகில் உள்ளது எனும் (22:33ஆவது) இறைவசனத்தை ஆதாரமாகக் கொண்டும்,

நபி (ஸல்) அவர்கள், ஹஜ்ஜத்துல் வதாவின் போது இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடும் படி தம் தோழர்களுக்கு உத்தரவிட்டதை ஆதாரமாகக் கொண்டும்தான் இப்படிக் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள். நான், இஹ்ராமிலிருந்து விடுபடுவது அரஃபாவில் (போய்த்) தங்கிய பின்புதானே? என்று கேட்டேன். அதற்கு அதாஉ (ரஹ்) அவர்கள், அரஃபாவில் தங்குவதற்கு முன்பும் அங் கிருந்து வந்த பின்பும் (இரண்டு நேரங் களிலுமே) இஹ்ராமிலிருந்து விடுபடுவது அனுமதிக்கப்பட்டதே என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கருதி வந்தார்கள் என்று பதிலளித்தார்கள்.

4397 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம், அவர்கள் பத்ஹாவில் இருந்த போது நான் சென்றேன். அவர்கள், ஹஜ் செய்ய நாடிவிட்டீர்களா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அவர்கள், எதற்காக இஹ்ராம் கட்டினீர்கள்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இஹ்ராம் கட்டியதைப் போன்றே (அதே ஹஜ்ஜுல் கிரானுக்காகவே) நானும் இஹ்ராம் கட்டினேன் என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவைச் சுற்றி வந்து, ஸஃபா மர்வாவுக்கிடையே ஓடுங்கள்; பிறகு இஹ்ராமிலிருந்து விடுபட்டுவிடுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, நான் இறையில்லம் கஅபாவைச் சுற்றிவந்து, ஸஃபா, மர்வாவுக்கிடையே ஓடிய பிறகு கைஸ் குலத்துப் பெண்ணொருத்தியிடம் சென்றேன். அவள் என் தலையில் பேன் பார்த்தாள்.39

4398 நபி (ஸல்) அவர்களின் துணைவியா ரான ஹஃப்ஸா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவை நிறைவேற்றிய ஆண்டில், (தவாஃபும் சஃயும் செய்து தலைமுடி குறைத்து விட்டு) உம்ராவிலிருந்து விடுபட்டுவிடும்படி தம் துணைவியருக்கு உத்தரவிட்டார்கள். அப்போது நான், நீங்கள் ஏன் (இஹ்ராமிலிருந்து) விடுபடவில்லை? என்று கேட்டேன். அவர்கள், நான் என் தலைக்குக் களிம்பு தடவிப் படியச் செய்து விட்டேன். என் தியாகப் பிராணிக்குக் கழுத்தில் (அடையாள) மாலை தொங்கவிட்டுவிட்டேன். ஆகவே, நான் தியாகப் பிராணியை அறுக்கும் வரை இஹ்ராமிலிருந்து விடுபடப்போவதில்லை என்று சொன்னார்கள்.40

4399 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் ஹஜ்ஜத்துல்வதாவின் போது கஸ்அம் குலத்துப் பெண்ணொருத்தி மார்க்கத் தீர்ப்பு கேட்டாள். அப்போது, ஃபள்ல் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் (வாகனத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பின்னால் அமர்ந்து கொண்டிருந்தார். அவள், அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ், தன் அடியார்கள் மீது கடமையாக்கிய (ஹஜ்ஜின்) விதி, வாகனத்தில் சரியாக அமர முடியாத அளவிற்குத் தள்ளாத முதியவரான நிலையில் என் தந்தையிடம் வந்து சேர்ந்தது. ஆகவே, நான் அவர் சார்பாக ஹஜ் செய்தால் அது நிறைவேறுமா? என்று கேட்டாள். நபி (ஸல்) அவர்கள், ஆம் (நிறைவேறும்) என்று பதிலளித்தார்கள்.41

4400 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது கஸ்வா எனும் (தமது) ஒட்டகத்தின் மீது (பயணம் செய்தபடி) உஸாமா (ரலி) அவர்களைத் தமக்குப் பின்னால் அமர்த்திக் கொண்டு முன்னோக்கிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால், உஸ்மான் பின் தல்ஹா (ரலி) ஆகியோர் இருந்தனர். இறுதியில், அவர்கள் தம் ஒட்டகத்தை இறையில்லம் (கஅபாவின்) அருகே மண்டியிட்டு அமரச் செய்தார்கள். பிறகு உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களிடம் (கஅபாவின்) சாவியை எம்மிடம் கொண்டு வாருங்கள் என்று சொல்ல, அவரும் சாவியைக் கொண்டு வந்து, நபி (ஸல்) அவர்களுக்காகக் கதவைத் திறந்தார். நபி (ஸல்) அவர்களும் உஸாமா, பிலால், உஸ்மான் (பின் தல்ஹா) ஆகியோரும் உள்ளே நுழைந்தனர். பிறகு அவர்கள் (கஅபாவின்) கதவை மூடிக் கொண்டு நீண்ட பகல் முழுவதும் தங்கிப் பிறகு வெளியேறினர். மக்கள் (கஅபாவின்) உள்ளே நுழையப் போட்டியிட்டனர். நான் அவர்களை முந்திக் கொண்டு(உள்ளே நுழைந்து)விட்டேன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் கதவுக்குப் பின்னால் நின்று கொண்டிருக்கக் கண்டேன். அவர்களிடம் நான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்? என்று கேட்டேன். அவர்கள், அந்த இரு தூண்களுக்கிடையே தொழுதார்கள் என்று சொன்னார்கள். அப்போது இறையில்லம் கஅபாவுக்கு இரண்டு வரிசைகளில் ஆறு தூண்கள் இருந்தன. இறையில்லம் கஅபாவின் வாசல் தம் முதுகுக்குப் பின்னாலிருக்க முதல் வரிசையிலிருந்த இரு தூண்களுக்கிடையே நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள். அவர்கள் தொழுத இடம், நீங்கள் கஅபாவினுள் நுழையும் போது உங்களுக்கும் உங்கள் எதிரிலிருக்கும் சுவருக்குமிடையே அமையும். நான் பிலால் (ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எத்தனை (ரக்அத்கள்) தொழுதார்கள்? என்று கேட்க மறந்து விட்டேன். நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தில் சிவப்புச் சலவைக் கல் ஒன்று (பதிக்கப்பட்டு) இருந்தது.42

4401 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் (மற்றொரு) துணைவியாரான ஸஃபிய்யா பின்த் ஹுயை (ரலி) அவர்களுக்கு ஹஜ்ஜத்துல் வதாவின் போது மாதவிடாய் ஏற்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அவர் நம்மை (மக்காவிலிருந்து செல்லவிடாமல்) தடுத்து விட்டாரா? என்று என்னிடம் கேட்டார்கள். அதற்கு நான், அவர் தவாஃபுஸ் ஸியாரத் செய்து விட்டார் என்று கூற, நபி (ஸல்) அவர்கள், அப்படியானால் பரவாயில்லை. அவர் புறப்படலாம் என்று சொன்னார்கள்.43

4402 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்கள் எங்களிடையே இருக்க, ஹஜ்ஜத்துல் வதாவைப் பற்றிப் பேசிக் கொண்டிருந்தோம். ளநபி (ஸல்) அவர்கள் இறக்கும் வரைன ஹஜ்ஜத்துல் வதா (விடை பெறும் ஹஜ்) என்பதன் கருத்தென்ன என்று எங்களுக்குத் தெரியாது. இந்நிலையில், நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றி, (பிற்காலத்தில் தோன்றும் மகா பொய்யனான) அல்மஸீஹுத் தஜ்ஜாலைப் பற்றிக் கூறத் தொடங்கி, நீண்ட நேரம் அவனைப் பற்றியே சொன்னார்கள். அப்போது, அல்லாஹ் அனுப்பிய எந்த இறைத்தூதரும் (அவனைப் பற்றித்) தம் சமுதாயத்தாரை எச்சரிக்காமல் இருந்ததில்லை. (இறைத்தூதர்) நூஹ் (அலை) அவர்கள் (தம் சமுதாயத் தாருக்கு) அவனைப் பற்றி எச்சரித்தார்கள். அவர்களுக்குப் பின்னால் வருகை தந்த இறைத்தூதர்களும் (அவனைப் பற்றித் தத்தம் சமுதாயத்தாருக்கு) எச்சரித்தனர். மேலும், (என் சமுதாயத்தினரான) உங்களிடையே தான் (இறுதிக் காலத்தில்) அவன் தோன்று வான். அவனது (அடையாளத்) தன்மைகளில் ஏதேனும் சில உங்களுக்குப் புலப்படாமல் போனாலும், நிச்சயமாக உங்களுடைய இறைவன் உங்களுக்குத் தெரியாதவனல்லன் என்பது உங்களுக்கு நன்றாகவே தெரியும்- இதை மும்முறை கூறினார்கள்- உங்கள் இறைவன் ஒற்றைக் கண்ணன் அல்லன். அவனோ (தஜ்ஜாலோ) வலது கண் குருடான வன். அவனது கண்(ஒரே குலையில்) துருத்திக் கொண்டிருக்கும் திராட்சை போன்றிருக்கும்.44

4403 அறிந்து கொள்ளுங்கள். உங்களது இந்த நகரத்தில், உங்களது இந்த மாதத்தில் உங்களது இந்த நாள் எப்படிப் புனிதமானதாக விளங்குகின்றதோ அவ்வாறே அல்லாஹ் உங்களுக்கு உங்கள் இரத்தங்களையும் உங்கள் செல்வங்களையும் புனிதமானவையாக ஆக்கி யுள்ளான் என்று நபி (ஸல்) அவர்கள் சொல்லிவிட்டு, நான் (இறைச்செய்தியை உங்களிடம்) சேர்த்து விட்டேனா? என்று கேட்டார்கள். மக்கள், ஆம் (சேர்த்து விட்டீர்கள்) என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள், இறைவா! நீ சாட்சியாக இரு என்று மும்முறை கூறிய பின், உங்களுக்கு என்ன நேரப்போகிறதோ! அல்லது அந்தோ பரிதாபமே! கவனமாக இருங்கள். எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப் பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் நீங்கள் மாறிவிடாதீர்கள் என்று சொன்னார்கள்.

4404 ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பத்தொன்பது புனிதப் போர்களில் கலந்து கொண்டார்கள். மேலும், அவர்கள் (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்த பின்பு ஒரேயொரு ஹஜ்தான் செய்தார்கள். அந்த ஹஜ்ஜத்துல் வதாவுக்குப் பிறகு அவர்கள் வேறெந்த ஹஜ்ஜும் செய்யவில்லை.

அறிவிப்பாளர் அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத்திற்கு முன்பு) மக்காவில் இருந்தவாறு மற்றொரு ஹஜ் செய்துள்ளார்கள்.45

4405 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவின் போது என்னிடம், மக்களை மௌனமாக இருக்கச் சொல்லுங்கள்! என்று சொல்லிவிட்டு, எனக்குப் பின்னால் உங்களில் ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்வதன் மூலம் இறைமறுப்பாளர்க(ளைப் போன்றவர்க)ளாய் மாறிவிடாதீர்கள் என்று கூறினார்கள்.

4406 அபூ பக்ரா நுஃபைஉ பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 வானங்களும் பூமியும் படைக்கப்பட்ட நாளில் இருந்த (பழைய) நிலைக்குக் காலம் திரும்பிவிட்டது. வருடம் என்பது பன்னி ரண்டு மாதங்களாகும். அவற்றில் நான்கு மாதங்கள் புனிதமானவை. (அவற்றில்) மூன்று மாதங்கள் தொடர்ந்து வரக்கூடியவை. அவை துல்கஅதா, துல்ஹஜ் மற்றும் முஹர்ரம் ஆகியனவாகும். (மற்றொன்று) ஜுமாதல் ஆகிராவுக்கும் ஷஅபான் மாதத்திற்கும் இடையிலுள்ள முளர் குலத்தாரின் ரஜப் மாதமாகும் என்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.46

(ஹஜ்ஜத்துல் வதாவின் போது, துல்ஹஜ் 10ஆம் நாளான) நஹ்ருடைய நாளில் நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு உரை நிகழ்த்தினார்கள். அப்போது, இது எந்த மாதம் என்பதை நீங்கள் அறிவீர்களா? எனக் கேட்டார்கள். நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் என்றோம். அவர்கள் அந்த மாதத்திற்கு வேறு பெயர் சூட்டுவார்களோ என்று நாங்கள் எண்ணுமள விற்கு மௌனமாக இருந்து விட்டு, இது துல்ஹஜ் இல்லையா? என்று கேட்டார்கள். நாங்கள், ஆம் என்றோம். (பிறகு,) இது எந்த நகரம்? எனக் கேட்டார்கள். அதற்கு நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் என்றோம். அப்போதும், அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார் களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்து விட்டு, இது (புனித மிக்க) நகரமல்லவா? எனக் கேட்க, நாங்கள், ஆம் என்றோம். மேலும், இது எந்த நாள்? என்று கேட்டார்கள். நாங்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிவர் என்றோம். அவர்கள் அதற்கு வேறு பெயர் சூட்டுவார் களோ என்று நாங்கள் எண்ணுமளவிற்கு மௌனமாக இருந்து விட்டு, இது நஹ்ரு டைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் அல்லவா? எனக் கேட்க, நாங்கள், ஆம் என்றோம். (பிறகு,) உங்களது புனிதமிக்க இந்த நகரத்தில், உங்களின் புனிதமிக்க இந்த மாதத்தில் இன்றைய தினம் எந்த அளவு புனிதமானதோ அந்த அளவிற்கு உங்கள் உயிர்களும் உங்கள் உடைமைகளும் - உங்கள் மானமும் - உங்க ளுக்குப் புனிதமானவையாகும். நீங்கள் (மறுமையில்) உங்களுடைய இறைவனைச் சந்திப்பீர்கள். அப்போது அவன் உங்களிடம் உங்கள் செயல்கள் குறித்து விசாரணை செய்வான். அறிந்து கொள்ளுங்கள்: எனக்குப் பிறகு ஒருவர் மற்றவரின் கழுத்தை வெட்டி மாய்த்துக் கொள்ளும் வழி கெட்டவர்களாய் நீங்கள் மாறிவிடாதீர்கள்.

இதோ! இங்கு வந்தவர்கள் வராதவர்களுக்கு (நான் சொன்ன கட்டளைகளை) அறிவித்து விடுங்கள். ஏனெனில், இந்தச் செய்தி எவரிடம் தெரிவிக்கப்படுகிறதோ அவர், தாம் யாரிடமிருந்து இதைக் கேட்டாரோ அவரைவிட (அதாவது தமக்கு இதைச் சொன்னவரை விட) நன்கு (புரிந்து) பாதுகாப்பவராயிருக்கலாம்.47

-இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் இதை அறிவிக்கும் போது, முஹம்மத் (ஸல்) அவர்கள் உண்மை சொன்னார்கள் என்று கூறுவார்கள்.-

பிறகு, நபி (ஸல்) அவர்கள், நான் உங்களிடம் (இறைச் செய்திகள் அனைத்தையும்) சேர்த்து விட்டேனா? என்று இரண்டு முறை கேட்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான முஹம்மத் பின் சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உங்கள் மானமும் என்பதையும் சேர்த்தே அபூ பக்ரா (ரலி) அவர்கள் கூறிய தாக நான் எண்ணுகிறேன்.

4407 தாரிக் பின் ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

யூதர்களில் சிலர், (ஒரு குறிப்பிட்ட இறை வசனம் பற்றி), இந்த வசனம் (யூதர்களான) எங்களிடையே அருளப்பட்டிருந்தால் நாங்கள் (இது அருளப்பெற்ற) அந்த நாளை ( கொண்டாடப்பட வேண்டிய) பெரு நாளாக ஆக்கிக் கொண்டிருப்போம் என்று கூறினர். உமர் (ரலி) அவர்கள், எந்த வசனம் அது? என்று கேட்க அவர்கள், இன்று நான் உங்கள் மார்க்கத்தை உங்களுக்காக முழுமைப்படுத்திவிட்டேன்; உங்கள் மீது என் அருட் கொடையை நிறைவாகப் பொழிந்து விட்டேன்; உங்களுக்கு (உரிய) வாழ்க்கை நெறியாக இஸ்லாத்தை அங்கீகரித்துக் கொண்டேன் எனும் (5:3) இறைவசனம்தான் அது என்று பதிலளித்தார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், இது எந்த இடத்தில் அருளப் பெற்றது என்பது எனக்குத் தெரியும். இது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹஜ்ஜத்துல் வதாவின் சமயத்தில்) அரஃபா வில் நின்று கொண்டிருந்த போது அருளப் பெற்றது என்று சொன்னார்கள்.48

4408 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (விடைபெறும் ஹஜ்ஜின் போது) புறப்பட்டோம். எங்களில் உம்ரா வுக்காக இஹ்ராம் கட்டியவர்களும் இருந்தனர்; ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டிய வர்களும் இருந்தனர்; ஹஜ், உம்ரா இரண்டிற்காகவும் இஹ்ராம் கட்டியவர்களும் இருந்த னர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தார்கள். ஹஜ்ஜுக்காக இஹ்ராம் கட்டியிருந்தவர் களும், ஹஜ் மற்றும் உம்ரா இரண்டிற்காகவும் சேர்த்து இஹ்ராம் கட்டியிருந்தவர்களும் நஹ்ருடைய (துல்ஹஜ் 10ஆம்) நாள் வரை இஹ்ராமிலிருந்து விடுபடவில்லை.

இது வேறிரண்டு அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் (சிறிய மாற்றத்துடன்) அறிவிக்கப்பட்டுள்ளது. அவற்றில் ஒன்றில், ஹஜ்ஜத்துல் வதா ஆண்டில் என்று கூடுதலாக இடம்பெற்றுள்ளது.49

4409 சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவின் சமயம் (நான் மக்காவிலிருந்த போது எனக்கேற்பட்ட) ஒரு நோய்க்காக என்னை நலம் விசாரிக்க வருகை தந்தார்கள். அந்த நோயின் காரணத்தால் நான் மரணத்தை எதிர் நோக்கியிருந்தேன். நான், அல்லாஹ்வின் தூதரே! செல்வந்தனாகிய எனக்கு என் ஒரே மகளைத் தவிர வேறு வாரிசு எவரும் இல்லாத நிலையில், நீங்கள் காணும் இந்த நோய் என்னைப் பீடித் துள்ளது. ஆகவே, நான் என் செல்வத்தில் இரண்டிலொரு பங்கை தர்மம் செய்து

விடட்டுமா? என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், வேண்டாம் என்று சொன்னார்கள். நான் அப்படியானால் என் சொத்தில் பாதியை தர்மம் செய்யட்டுமா? என்று கேட்க அதற்கும், வேண்டாம் என்று சொன்னார்கள். நான், மூன்றிலொரு பங்கை தர்மம் செய்யட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், மூன்றிலொரு பங்கா? மூன்றிலொரு பங்கே அதிகம்தான். நீங்கள் உங்களுடைய வாரிசு களை மக்களிடம் கையேந்தும் நிலையில் ஏழைகளாக விட்டுச் செல்வதைவிட அவர்களைத் தன்னிறைவுடையவர்களாக விட்டுச் செல்வது சிறந்ததாகும். நீங்கள் அல்லாஹ்வின் திருப்தியை விரும்பிச் செய்கின்ற செலவு எதுவாயினும் அதற்குப் பகரமாக உங்களுக்குப் பிரதிபலன் தரப்படும். எந்த அளவிற்கென்றால், நீங்கள் உங்கள் மனைவியின் வாய்க்குள் இடுகின்ற ஒரு கவளம் உணவுக்கும் கூட (உங்களுக்குப் பிரதி பலன் அளிக்கப்படும்.) என்று கூறினார்கள்.

நான், அல்லாஹ்வின் தூதரே! (என் தோழர்களெல்லாம் மதீனாவுக்குச் சென்று விடுவார்கள்.) நான் மட்டும் இங்கு (மக்காவில்) பின்தங்கியவனாக ஆகிவிடுவேனா? எனக் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இங்கு இருந்தபோதிலும் நல்லறங்கள் செய்து கொண்டே இருந்தால் உங்கள் அந்தஸ்தும் மேன்மையும் அதிகரித்துக் கொண்டேயிருக்கும் எனக் கூறிவிட்டு உங்களை வைத்துச் சில கூட்டத்தினர் நன்மை யடைவதற்காவும் மற்ற சிலர் துன்பமடை வதற்காகவும் நீங்கள் இங்கேயே தங்கவைக்கப் படலாம் என்று கூறினார்கள். மேலும், இறைவா! என் தோழர்களின் ஹிஜ்ரத்தை முழுமையாக்குவாயாக! தங்கள் கால் சுவடுகளின் வழியே (முந்தைய இணை வைக்கும் மார்க்கத்திற்கே) இவர்களைத் திரும்பிச் செல்லும்படி செய்து விடாதே எனப் பிரார்த்தித்தார்கள். (நோயாளியாயிருந்த மற்றொருவரான) சஅத் பின் கவ்லா (ரலி) அவர்கள் மக்காவிலேயே இறந்து விட்டதற்காக, பாவம், சஅத் பின் கவ்லா! (அவர் நினைத்தது நடக்கவில்லை) என்று நபி (ஸல்) அவர்கள் அனுதாபம் தெரிவித்தார்கள்.50

4410 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜத்துல் வதாவின் போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்த பின்) தம் தலையை மழித்துக் கொண்டார்கள்.51

4411 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களில் சிலரும் ஹஜ்ஜத்துல் வதாவின் போது (ஹஜ் வழிபாடுகளை நிறைவு செய்த பின்) தம் தலையை மழித்துக் கொண்டார்கள். (தோழர்கள்) சிலர் தம் தலைமுடியைக் குறைத்துக் கொண்டார்கள்.52

4412 அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜத்துல் வதாவின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மினாவில் மக்களுக்குத் தொழுவித்தபடி நின்று கொண் டிருந்த போது, கழுதையொன்றில் பயணித்த படி நான் அவர்களை நோக்கிச் சென்றேன். (எனது) அந்தக் கழுதை (தொழுகையாளி களின்) ஓரணியில் ஒரு பகுதிக்கு முன்னால் நடந்து சென்றது. பிறகு நான் அதிலிருந்து இறங்கி மக்களுடன் வரிசையில் நின்று கொண்டேன்.53

4413 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களுடன் நான் இருந்து கொண்டிருந்த போது, நபி (ஸல்) அவர்கள் மேற் கொண்ட ஹஜ் பயணத்தின் வேகத்தைப் பற்றிக் கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், (அவர்களின் பயணவேகம்) நடு நிலையானதாய் இருந்தது. (மக்கள் நெரிசல் இல்லாத) விசாலமான இடம் வந்ததும் அவர்கள் விரைந்து செல்வார்கள் என்று சொன்னார்கள்.54

4414 அபூ அய்யூப் அல்அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஹஜ்ஜத்துல் வதாவின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (முஸ்த-ஃபாவில்) மஃக்ரிபையும் இஷாவையும் ஒரு சேரத் தொழுதேன்.55

பாடம் : 79

தபூக் போர்-அது தான் உஸ்ராப் போர்56

4415 அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் நண்பர்கள் என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, தமக்காக (பயண) வாகனம் கேட்கும்படி அனுப்பினார்கள். அப்போது அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் உஸ்ரா(ப் போரின்) படையுடன் செல்லவிருந்தனர்- உஸ்ராப் போரே தபூக் போராகும்- அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! என் நண்பர்கள் தமக்காக வாகனம் கேட்கும்படிஎன்னைத் தங்களிடம் அனுப்பி வைத்துள்ளனர் என்று சொன்னேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களுக்கு எந்த வாகனத்தையும் என்னால் தரவியலாது என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கோபத்திலிருந்த சமயத்தில் நான் அவர்களிடம் சென்றுவிட்டேன். நான் அதை அறிந்திருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள் (வாகனம் தர) மறுத்ததனாலும் என் மீது அவர்கள் வருத்தம் கொண்டிருப்பார்கள் என்ற அச்சத்தினாலும் நான் கவலை கொண்டவனாகத் திரும்பினேன். நபி (ஸல்) அவர்கள் கூறியதை என் நண்பர்களிடம் வந்து தெரிவித்தேன். சிறிது நேரம்தான் கழிந்திருக் கும். அதற்குள், அப்துல்லாஹ் பின் கைஸே! என்று பிலால் (ரலி) அவர்கள் அழைப்பதைக் கேட்டேன். உடனே நான் பதிலளித்தேன். அப்போது அவர்கள், உங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அழைக்கிறார்கள். அவர்களது அழைப்பை ஏற்றுச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றபோது அவர்கள், ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரு ஒட்டகங்களையும், ஒரே ஈற்றில் பிறந்த இந்த இரு ஒட்டகங் களையும்.... என்று ஆறு ஒட்டகங்களைக் காட்டி, பிடித்துக் கொள் என்று சொன்னார்கள்.

அவற்றை அப்போது தான் சஅத் பின் உபாதா (ரலி) அவர்களிடமிருந்து விலைக்கு வாங்கியிருந்தார்கள். உங்கள் நண்பர்களிடம் இவற்றை (ஓட்டி)க் கொண்டு சென்று அவர் களிடம், அல்லாஹ் அல்லது அல்லாஹ்வின் தூதர் அவர்கள் இந்த ஒட்டகங்களை உங்கள் பயணத்திற்காக அளித்துள்ளார்கள். எனவே, இவற்றிலேறிப் பயணம் செய்யும்

படி சொல்லச் சொன்னார்கள் எனத் தெரிவியுங்கள் என்று கூறினார்கள். அவர் களிடம் நான் அவற்றை(ஓட்டி)க் கொண்டு சென்று, நபி (ஸல்) அவர்கள் இவற்றின் மீது உங்களைப் பயணம் செல்லும்படி கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்களில் சிலர் என்னுடன் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நான் எந்த வாகனமும் தர மாட்டேன் என்று) கூறியதைக் கேட்டவர் களிடம் விசாரிக்கும் வரையில் உங்களை நான் விடமாட்டேன். ஏனெனில், நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொல்லாத ஒன்றை உங்களிடம் சொல்லிவிட்டதாக நீங்கள் நினைத்து விடக் கூடாதல்லவா? எனக் கூறினேன். அதற்கு என் நண்பர்கள், (அதற்கெல்லாம் அவசியமில்லை.) உங்களை உண்மையாளர் என்றே நாங்கள் கருதுகி றோம். (இருந்தாலும், நீங்கள் விரும்புகிறீர்கள் என்ற காரணத்தால்) நீங்கள் விரும்பியபடி நாங்கள் செய்கிறோம் என்று சொன்னார்கள். நான் அவர்களில் சிலரை அழைத்துக் கொண்டு நான் அவர்களுக்குத் தரமாட்டேன் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

(முத-ல்) மறுத்ததையும், பிறகு அவர்களே தந்ததையும் அறிந்த சிலரிடம் அழைத்துச் சென்றேன். அப்போது அந்தச் சிலர், நான் மக்களிடம் சொன்னதைப் போன்றே கூறினார்கள்.

4416 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போருக்குப் புறப்பட்டார்கள். (மனைவி மக்களைக் கவனித்துக் கொள்வதற்காக

மதீனாவில்) அலீ (ரலி) அவர்களை (தாம் திரும்பி வரும் வரை தமக்கு)ப் பிரதிநிதியாக நியமித்தார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், குழந்தைகளையும் பெண்களையும் கவனித்துக் கொள்வதற்காகவா என்னை விட்டுச் செல்கிறீர்கள்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், மூசாவிடம் ஹாரூன் இருந்த அந்தஸ்தில் என்னிடம் நீங்கள் இருப்பதை விரும்பவில்லையா? ஆயினும், (ஒரு வேறுபாடு என்னவெனில்), எனக்குப் பிறகு எந்த இறைத்தூதரும் இல்லை என்று சொன்னார்கள்.

4417 யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் சிரம(ப் போரான தபூக்) யுத்தத்தில் கலந்து கொண்டேன். என் செயல்களிலேயே அந்தப் புனிதப் போர்தான் என்னிடம் மிக உறுதி வாய்ந்ததாகும். என்னிடம் கூலித் தொழிலாளி ஒருவர் இருந்தார். அவர் ஒரு மனிதரிடம் சண்டையிட்டார். அந்த இருவரில் ஒருவர் மற்றவரின் கையைக் கடித்து விட்டார். கடிபட்டவர், கடித்தவரின் வாயிலிருந்து தனது கையை இழுத்துக் கொள்ள முனைந்த போது கடித்தவரின் முன்பற்களில் ஒன்று கழன்று (விழுந்து)விட்டது. இருவரும் (தங்கள் வழக்கை) நபி (ஸல்) அவர்களிடம் கொண்டு சென்றபோது, அவர்கள் பல்லை இழந்த வருக்கு நஷ்டயீடு தரத் தேவையில்லை (பழி வாங்கிக் கொள்ளவும் அனுமதியில்லை) என்று தீர்ப்பளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அதாஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அறிவிப்பாளர் ஸஃப்வான் பின் யஅலா (ரஹ்) அவர்கள், அவ்விருவரில் யார், யாரைக் கடித்தார் என்று எனக்குத் தெரிவித்தார்கள். ஆனால், நான் அதை மறந்து விட்டேன். மேலும், ஒட்டகத்தின் வாயில் மெல்லக் கொடுப்பது போல் உனது வாயில் நீ மெல்லுவதற்காக அவர் தனது கையை விட்டு வைத்திருப்பாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டதாகவும் ஸஃப்வான் அவர்கள் கூறினார்கள் என்று நினைக்கிறேன்.57

பாடம் : 80

கஅப் பின் மாலிக் (ரலி) அவர்களின் நிகழ்ச்சியும், (தபூக் போரில் தக்க காரணமின்றி கலந்து கொள்ளாமலிருந்து விட்டதற்காக) யாருடைய விஷயத்தில் தீர்ப்பளிக்காமல் தள்ளிவைக்கப்பட்டிருந்ததோ அந்த மூவரையும் அல்லாஹ் மன்னித்தான் எனும் (9:118ஆவது) இறைவசனமும்.58

4418 கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தபூக் போரைத் தவிர, நபி (ஸல்) அவர்கள் புரிந்த எந்தப் போரிலும் நான் கலந்து கொள்ளாமல் இருந்ததில்லை. இது தவிரவும் நான் பத்ருப் போரிலும் கலந்து கொள்ளவில்லை. பத்ரில் கலந்து கொள்ளாத எவரும் (அல்லாஹ்வினால்) கண்டிக்கப் படவுமில்லை. (ஏனெனில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை (வழி மறிக்க) நாடியே (பத்ருக்குப்) போனார்கள். (போன இடத்தில்) போர் செய்யும் திட்டம் இல்லாமலேயே அவர் களையும் எதிரிகளையும் அல்லாஹ் (பத்ருக் களத்தில்) சந்திக்கும்படி செய்து விட்டான்.59

இஸ்லாத்தில் நாங்கள் நிலைத்திருப் போம் என (அன்சாரிகளான) நாங்கள் உறுதிமொழி அளித்த அகபா இரவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நானும் இருந்தேன். இதற்கு பதிலாக பத்ருப் போரில் கலந்து கொள்ளும் வாய்ப்பு எனக்குக் கிடைத்திருக்கவேண்டும் என நான் விரும்பிய தில்லை; அல்அகபா பிரமாணத்தைவிட பத்ர் மக்களிடையே பெயர் பெற்றதாக இருந்தாலும் சரியே!60

(தபூக் போரில் கலந்து கொள்ளாததைய டுத்து நடந்த நிகழ்ச்சிகள் குறித்த) எனது செய்திகள் சில பின்வருமாறு:

அந்த (தபூக்) போரில் நான் கலந்து கொள்ளாத போது இருந்த உடல் பலமும் பொருள் வசதியும் (என் வாழ்நாளில்) வேறெப்போதும் எனக்கு இருந்ததில்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்கள் ஒரு போதும் என்னிடம் இருந்ததில்லை. ஆனால், அந்தப் போரின் போது ஒரே நேரத்தில் இரண்டு ஒட்டகங்களை நான் வைத்திருந்தேன். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு புனிதப் போருக்குச் செல்ல நாடினால் (பெரும்பாலும்) வேறெதற்கோ செல்வது போன்று (இரு பொருள்படும்படி பேசிப் பாசாங்கு செய்து) அதை மறைக்காமல் இருந்ததில்லை.61 ஆனால், தபூக் போர் (நேரம்) வந்த போது அதற்காகக் கடும் வெயி-ல் நபி (ஸல்) அவர்கள் படையெடுத்துச் செல்ல விருந்தார்கள். தொலைதூரப் பயணம் மேற்கொள்ள வேண்டியிருக்கும் என்றும், பெரும் (பாலைவன) வனாந்திரப் பிரதேசத்தைக் கடந்து செல்லவேண்டியிருக்கும் என்றும், அதிக (எண்ணிக்கையிலான) எதிரிகளைச் சந்திக்க வேண்டியிருக்கும் என்றும் எதிர் பார்த்தார்கள். எனவே, முஸ்லிம்களுக்கு அவர்கள் எதிர்கொள்ளவேண்டியது பற்றி வெளிப்படையாகவே தெரிவித்து விட்டார்கள். அப்போது தான் அவர்கள் தங்களின் போருக்கான ஆயத்த ஏற்பாடுகளைச் செய்து கொள்ள முடியும். தாம் விரும்பிய திசையை (தபூக்கை) அவர்களுக்குத் தெரிவித்தும்

விட்டார்கள்.62 எழுதப்படும் எந்தப் பதிவேடும் இத்தனைப் பேருக்கு இடமளிக்காது எனும் அளவிற்கு முஸ்லிம்கள் பெரும் எண்ணிக்கையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களு டன் இருந்தார்கள்.

(போரில் கலந்து கொள்ளாமல்) தலை மறைவாகிவிடலாமென நினைக்கும் எந்த மனிதரும், அல்லாஹ்விடமிருந்து இறை அறிவிப்பு (வஹீ) வராத வரையில் (தான் போருக்கு வராத) விஷயம் நபி (ஸல்) அவர்களுக்குத் தெரிய வராது என்று எண்ணவே செய்வார். (அந்த அளவிற்குப் படையினரின் எண்ணிக்கை மிகுந்திருந்தது. பேரீச்சம்) பழங்கள் பழுத்து மர நிழல்கள் அடர்ந்து நின்ற (அறுவடைக் காலமான அந்த வெப்பம் மிகுந்த வெயில்) காலத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போருக்குச் செல்ல ஆயத்தமானார்கள்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும்,

அவர்களுடன் முஸ்லிம்களும் பயண ஏற்பாடு களைச் செய்து கொண்டிருந்தனர். நானும் அவர்களுடன் சேர்ந்து கொண்டு பயண ஏற்பாடுகளைச் செய்யக் காலை நேரத்தில் செல்லலாவேன். எனது பயணத்திற்கான எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்து விடுவேன். (நினைக்கும் போது) அந்த ஏற்பாடுகளைச் செய்து முடிக்க எனக்குத் தான் சக்தியிருக்கிறதே! (பிறகு, நான் ஏன் அவசரப் படவேண்டும்?) என்று என் மனத்திற்குள் கூறிக் கொண்டேன். என் நிலை இப்படியே நீடித்துக் கொண்டிருந்தது. மக்கள் பெரும்பாடு பட்டனர். (ஒரு வழியாகப் பயண ஏற்பாடு முடிந்தது.) பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம்முடன் முஸ்லிம்களை அழைத்துக் கொண்டு (ஒரு) காலை நேரத்தில் புறப்பட்டுவிட்டார்கள். அப்போதும் நான் எனது பயணத்திற்கு வேண்டிய எந்த ஏற்பாட்டையும் செய்து முடித்திருக்க வில்லை. நபி (ஸல்) அவர்கள் சென்ற பின் ஒரு நாள் அல்லது இரண்டு நாட்களில் பயண ஏற்பாடுகளைச் செய்து கொண்டு அவர் களுடன் போய்ச் சேர்ந்து கொள்வேன் என்று நான் (என் மனத்திற்குள்) சொல்லிக் கொண்டேன். அவர்கள் அனைவரும் சென்ற பிறகு (அன்றைய இரவும் கழிந்து) மறுநாள் காலை பயண ஏற்பாடுகளைச் செய்ய நினைத்தேன். ஆனால், அன்றைய தினமும் எந்த ஏற்பாட்டையும் செய்து முடிக்காமல் திரும்பி வந்தேன். அதற்கு அடுத்த நாள் காலையிலும் நினைத்தேன். அன்றும் எந்த ஏற்பாடும் செய்து முடிக்கவில்லை. (இன்று நாளை என்று) எனது நிலை இழுபட்டுக் கொண்டே சென்றது. முஸ்லிம்கள் விரைவாகப் புறப்பட்டுச் சென்றுவிட்டனர். (எனக்கு) அந்தப் போர் கை நழுவிவிட்டது. நான் உடனடியாகப் புறப்பட்டுச் சென்று படையினருடன் சேர்ந்து கொள்ளலாம் என்று நினைத்தேன். அப்படி நான் செய்திருந்தால் நன்றாக இருந்திருக்கும். (ஆனால், என்ன செய்வது?) அது என் விதியில் எழுதப் பட்டிருக்கவில்லை.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் போருக்குச் சென்றதன் பின்னால், மதீனாவில் நான் மக்களிடையே சுற்றி வரும் போது எனக்குப் பெரும் வருத்தமே ஏற்பட்டது. நயவஞ்சகர் எனச் சந்தேகிக்கப்பட்ட மனிதர் களையும் இறைவனால் சலுகை வழங்கப்பட்ட (முதியோர், பெண்கள் போன்ற) பலவீனர் களையும் தவிர வேறெவரையும் நான் (மதீனா விற்குள்) பார்க்கவில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தபூக் சென்றடையும் வரையில் என்னை நினைவு கூரவேயில்லை. தபூக்கில் மக்களிடையே அமர்ந்து கொண் டிருக்கும் போது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் என்ன ஆனார்? என்று கேட்டார்கள். பனூ ச-மா குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர், அல்லாஹ்வின் தூதரே! அவரின் இரு சால்வைகளும் (ஆடை அணி கலன்களும்) அவற்றைத் தம் தோள்களில் போட்டு அவர் (அழகு) பார்த்துக் கொண்டி ருப்பதும்தான் அவரை வரவிடாமல் தடுத்து விட்டன என்று கூறினார். உடனே, முஆத் பின் ஜபல் (ரலி) அவர்கள், (அந்த மனிதரை நோக்கி), தீய வார்த்தை சொன்னாய். அல்லாஹ்வின் மேல் ஆணையாக! அவரைக் குறித்து நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிந்திருக்கவில்லை; அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பதிலேதும் கூறாமல்) மௌனமாகவே இருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் (தபூக்கிலிருந்து) திரும்பி வந்து கொண்டிருக்கிறார்கள் என்ற செய்தி எனக்கு எட்டிய போது கவலை என் மனத்தில் (குடி) புகுந்தது. (அல்லாஹ்வின் தூதரிடம் சாக்குப் போக்குச் சொல்வதற்காகப்) பொய்யான காரணங்களை நான் யோசிக்கத் தொடங்கினேன். நாளை நபியவர்களின் கோபத்திலிருந்து நான் எப்படித் தப்புவேன்? என்று எனக்கு நானே கேட்டுக் கொண்டேன். மேலும், அதற்காக நான் என் குடும்பத்தாரில் கருத்துள்ள ஒவ்வொருவரிடமும் (ஆலோசனை) உதவி தேடினேன். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மதீனாவை) நெருங்கி வந்து விட்டார்கள் என்று (செய்தி) சொல்லப்பட்ட போது (நான் புனைந்து வைத்திருந்த) பொய்மை என் மனத்தை விட்டு விலகி விட்டது. பொய்யான காரணம் எதையும் சொல்லி நபி (ஸல்) அவர்களிடமிருந்து ஒரு போதும் தப்பித்துக் கொள்ள முடியாது. (அல்லாஹ் எல்லாவற்றையும் அறிந்தவன். அவன் தன் தூதருக்கு உண்மை நிலவரத்தைத் தெரிவித்து விடுவான்) என்று உணர்ந்து, நபி (ஸல்) அவர்களிடம் உண்மையைச் சொல்லிவிட முடிவு செய்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் காலை நேரத்தில் (மதீனா விற்கு) வருகை புரிந்தார்கள்.

(பொதுவாக) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணத்திலிருந்து திரும்பி வந்தால் முத-ல் பள்ளிவாசலுக்குச் சென்று அங்கு இரண்டு ரக்அத்கள் தொழுத பின் மக்களைச் சந்திப்பதற்காக (அங்கு) அமர்ந்து கொள்வது அவர்களின் வழக்கம். (வழக்கம் போல்) அதை அவர்கள் செய்த போது, (தபூக் போரில் கலந்து கொள்ளச் செல்லாமல்) பின்தங்கிவிட்டவர்கள் அவர்களிடம் வந்து, அவர்களுக்கு முன்னால் சத்தியமிட்டு (தாம் போருக்கு வராமல் போனதற்கு) சாக்குப் போக்குக் கூறத் தொடங்கினர். அவர்கள் எண்பதுக்கும் மேற்பட்ட நபர்களாக இருந் தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர்களின் வெளிப்படையான காரணங் களை ஏற்றுக் கொண்டு அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தார்கள். அவர் களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். அவர்களின் அந்தரங்கத்தை அல்லாஹ்விடம் ஒப்படைத்து விட்டார்கள்.

அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்களுக்கு நான் சலாம் சொன்ன போது கோபத்திலிருப்ப வர் எவ்வாறு புன்னகைப்பாரோ அது போலப் புன்னகைத்தார்கள். பிறகு, வாருங்கள் என்று கூறினார்கள். உடனே, நான் அவர்களிடம் (சில எட்டுகள் வைத்து) நடந்து சென்று அவர்களின் முன்னிலையில் அமர்ந்து கொண்டேன். அப்போது அவர்கள் என்னிடம், (போரில்) நீங்கள் ஏன் கலந்து கொள்ள வில்லை. நீங்கள் (போருக்காக) வாகனம் வாங்கி வைத்துக் கொண்டிருக்கவில்லையா? என்று கேட்டார்கள். நான், ஆம். (வாங்கி வைத்திருந்தேன்.) அல்லாஹ்வின் மீதாணையாக! தாங்கள் அல்லாத (வேறு எவரேனும் ஓர்) உலகாயதவாதிக்கு அருகில் நான் அமர்ந்து கொண்டிருந்தால் ஏதாவது (பொய்யான) சாக்குப் போக்குச் சொல்லி (அவரது) கோபத்திலிருந்து தப்பித்துக் கொள்ள உடனடியாக வழி கண்டிருப்பேன். (எவராலும் வெல்ல முடியாத) வாதத்திறன் எனக்கு வழங்கப்பட்டுள்ளது. ஆயினும், அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களிடம் ஏதாவது பொய்யைச் சொல்லி இன்று உங்களை நான் என்னைக் குறித்துத் திருப்தி யடையச் செய்து விட்டாலும், அல்லாஹ் வெகுவிரைவில் (உண்மை நிலவரத்தைத் தங்களுக்குத் தெரியப்படுத்தி) என் மீது தங்களைக் கடுங்கோபம்கொள்ளச் செய்து விடுவான் என்பதை நான் நன்கு அறிந்துள் ளேன். (அதே சமயம்) தங்களிடம் நான் உண்மையைச் சொல்லிவிட்டால் (தற்சமயம்) அது தொடர்பாக என் மீது தாங்கள் வருத்தப்படுவீர்கள். ஆயினும், அது விஷயத்தில் அல்லாஹ்வின் மன்னிப்பை நான் எதிர் பார்க்கிறேன். இல்லை; அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் போரில் கலந்து கொள்ளாததற்கு) என்னிடம் எந்தக் காரண மும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! தங்களை விட்டும் நான் பின்தங்கிவிட்ட

அந்த நேரத்தில் எனக்கு இருந்த உடல் பலமும் வசதி வாய்ப்பும் அதற்கு முன் ஒரு போதும் எனக்கு இருந்ததில்லை என்று கூறினேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உண்மை சொல்லிவிட்டார் (என்று கூறிவிட்டு என்னை நோக்கி) சரி! எழுந்து செல்லுங்கள். உங்கள் விஷயத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிப்பான் என்று கூறினார்கள். உடனே நான் எழுந்து சென்றேன்.

பனூ ச-மா குலத்தைச் சேர்ந்த சிலர் என்னைப் பின்தொடர்ந்து ஓடி வந்து, அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு முன்னால் எந்தப் பாவத்தையும் நீங்கள் செய்ததாக நாங்கள் அறிந்ததில்லை. (போரில்) கலந்து கொள்ளாத(மற்ற)வர்கள் சொன்ன அதே (பொய்க்) காரணத்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொல்வதற்குக் கூட உங்களால் இயலாமற் போய்விட்டதே! நீங்கள் செய்த பாவத்திற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கேட்கும் பாவ மன்னிப்பே உங்களுக்குப் போதுமானதாய் இருந்திருக்குமே! என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! பனூ ச-மா குலத்தினர் என்னைக் கடுமையாக ஏசிக் கொண்டேயிருந்தனர். எந்த அளவிற்கென்றால், நான் (அல்லாஹ்வின் தூதரிடம்) திரும்பிச் சென்று (இதற்கு முன்) நான் சொன்னது பொய் என்று (கூறி, போரில் கலந்து கொள்ளாததற்கு ஏதாவது பொய்க் காரணத்தைச்) சொல்லிவிடலாமா என்று நான் நினைத்தேன். பிறகு நான் பனூ ச-மா குலத்தாரை நோக்கி, (தீர்ப்பு தள்ளி வைக்கப்பட்ட) இந்த நிலையை என்னுடன் வேறு யாரேனும் சந்தித்திருக்கின்றார்களா? என்று கேட்டேன். அதற்கவர்கள், ஆம். இரண்டு பேர் நீங்கள் சொன்னதைப் போலவே (உண்மையான காரணத்தை நபியவர்களிடம்) சொன்னார்கள். உங்களுக்குச் சொல்லப்பட்டது தான் அப்போது அவர்கள் இருவருக்கும் (பதிலாகச்) சொல்லப்பட்டது என்று கூறினார்கள். உடனே நான், அவர்கள் இருவரும் யார்? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், முராரா பின் ரபீஉ அல் அம்ரீ அவர்களும், ஹிலால் பின் உமய்யா அல் வாக்கிஃபீ அவர்களும் என்று பத்ருப் போரில் கலந்து கொண்ட இரண்டு நல்ல மனிதர்களின் பெயர்களை என்னிடம் கூறினர். அவர்கள் இருவராலும் (எனக்கு) ஆறுதல் கிடைத்தது. அவர்கள் இருவரின் பெயர்களையும் பனூ ச-மா குலத்தார் என்னிடம் சொன்னவுடன் நான் (என் இல்லத்திற்குச்) சென்றுவிட்டேன்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் போரில் கலந்து கொள்ளாதவர்களில் எங்கள் மூவரிடம் மட்டும் (யாரும்) பேசக் கூடாதென முஸ்லிம்களுக்குத் தடை விதித்து விட்டார்கள். எனவே, மக்கள் எங்களைத் தவிர்த்தனர். மேலும், அவர்கள் (முற்றிலும்) எங்கள் விஷயத்தில் மாறிப் போய்விட்டனர். (வெறுத்துப் போனதால்) என் விஷயத்தில் இப்புவியே மாறிவிட்டது போலவும் அது எனக்கு அன்னியமானது போலவும் நான் கருதினேன். இதே நிலையில் நாங்கள் ஐம்பது நாட்கள் இருந்தோம். எனது இரு சகாக்களும் (முராராவும், ஹிலாலும்) செய-ழந்து போய்த் தம் இல்லங்களிலேயே அமர்ந்து கொண்டு அழுது கொண்டிருந்தனர். ஆனால் நான், மக்களிடையே (உடல்) பலம் மிக்கவனாகவும் (மன) வ-மை படைத்தவனாகவும் இருந்தேன். எனவே, நான் (வீட்டைவிட்டு) வெளியேறி முஸ்லிம்களுடன் (ஐங்காலத்) தொழுகையில் கலந்து கொண்டும், கடை வீதிகளில் சுற்றிக் கொண்டுமிருந்தேன். என்னிடம் எவரும் பேச மாட்டார்கள். நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் செல்வேன். தொழுகையை முடித்துக் கொண்டு அவர்கள் அமர்ந்திருக்கும் போது சலாம் கூறுவேன். எனக்கு பதில் சலாம் சொல்வதற்காக அவர்கள், தம் உதடுகளை அசைக்கிறார்களா இல்லையா என்று எனக்கு நானே கேட்டுக் கொள்வேன். பிறகு, அவர்களுக்கு அருகிலேயே (கூடுதலான) தொழுகை களை நிறைவேற்றுவேன். அப்போது ளஎன்னை நபி (ஸல்) அவர்கள் பார்க்கிறார்களா என்றுன ஓரக் கண்ணால் இரகசியமாகப் பார்ப்பேன். நான் என் தொழுகையில் ஈடுபட்டவுடன் அவர்கள் என்னைக் கவனிப்பதும், அவர்கள் பக்கம் நான் திரும்பியதும் அவர்கள் என்னிட மிருந்து முகத்தைத் திருப்பிக் கொள்வதுமாக இருந்தார்கள்.

மக்களின் புறக்கணிப்பு நீடித்துக் கொண்டே சென்றபோது, நான் நடந்து போய் அபூ கத்தாதா (ரலி) அவர்களின் தோட்டத்தின் மதிற் சுவர் மீதேறினேன். -அவர் என் தந்தையின் சகோதரர் புதல்வரும், மக்களில் எனக்கு மிகவும் பிரியமானவரும் ஆவார்- அவருக்கு நான் சலாம் சொன்னேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் எனக்கு பதில் சலாம் சொல்லவில்லை. உடனே நான், அபூ கத்தாதா! அல்லாஹ்வை முன்வைத்து உன்னிடம் கேட்கிறேன். அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நான் நேசிக்கிறேன் என்று நீ அறிவாயா? என்று கேட்டேன். அதற்கு அவர் (பதிலேதும் கூறாமல்) மௌனமாயிருந்தார். பிறகு மீண்டும் அவரிடம் அல்லாஹ்வை முன்வைத்து

(முன்பு போலவே) கேட்டேன். அப்போதும் அவர் மௌனமாகவேயிருந்தார். (மூன்றாம் முறையாக) மீண்டும் அவரிடம் நான் அல்லாஹ்வை முன்வைத்துக் கேட்டேன். அப்போது அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் என்று (மட்டும்) பதிலளித்தார். அப்போது என் இரு

கண்களும் (கண்ணீரைப்) பொழிந்தன. பிறகு நான் திரும்பி வந்து அந்தச் சுவரில் ஏறி (வெளியேறி)னேன்.

(நிலைமை இவ்வாறு நீடித்துக் கொண்டி ருக்க) ஒரு நாள் மதீனாவின் கடைத்தெருவில் நடந்து சென்று கொண்டிருந்தேன். அப்போது மதீனாவிற்கு உணவு தானிய விற்பனைக்காக வந்திருந்த ஷாம் நாட்டு விவசாயிகளில் ஒருவர், கஅப் பின் மாலிக்கை எனக்கு அறிவித்துத் தருவது யார்? என்று (என்னைக் குறித்து) விசாரித்துக் கொண்டிருந்தார். மக்கள் (என்னை நோக்கி) அவரிடம் சைகை செய்யலாயினர். உடனே அவர் என்னிடம் வந்து, ஃகஸ்ஸான் நாட்டின் அரசனிட மிருந்து (எனக்கு எழுதப்பட்டிருந்த) கடித மொன்றைத் தந்தார். அதில் பின்வருமாறு எழுதப்பட்டிருந்தது:

நிற்க! உங்கள் தோழர் (முஹம்மது) உங்களைப் புறக்கணித்து(ஒதுக்கி)விட்டார் என்று எனக்குச் செய்தி எட்டியது. உங்களை இழிவு செய்து (உங்கள் உரிமைகள்) வீணடிக்கப்படும் நாட்டில் நீங்கள் நீடிக்க வேண்டுமென்ற அவசியத்தை உங்களுக்கு அல்லாஹ் ஏற்படுத்தவில்லை. எனவே, எங்களிடம் வந்து விடுங்கள். நாங்கள் உங்களிடம் நேசம் காட்டுகிறோம்.

 இதை நான் படித்த போது, இது இன்னொரு சோதனையாயிற்றே! என்று

(என் மனத்திற்குள்) கூறிக் கொண்டு அதை எடுத்துச் சென்று (ரொட்டி சுடும்) அடுப்பி

-ட்டு எரித்து விட்டேன்.

ஐம்பது நாட்களில் நாற்பது நாட்கள் கழிந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய ஒரு தூதர் என்னிடம் வந்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நீங்கள் உங்கள் மனைவியைவிட்டும் விலகி விட வேண்டுமென்று உத்தரவிடுகிறார்கள் என்று கூறினார். அதற்கு நான், அவளை நான் விவாகரத்துச் செய்து விடவா? அல்லது நான் என்ன செய்யவேண்டும்? என்று கேட்டேன். அவர், இல்லை. (விவாகரத்து செய்ய வேண்டாம்.) அவரைவிட்டு நீங்கள் விலகிவிட வேண்டும். அவரை நெருங்கக் கூடாது (இதுவே இறைத்தூதர் உத்தரவு) என்று கூறினார். இதைப் போன்றே என் இரு சகாக்களுக்கும் ளநபி (ஸல்) அவர்கள் உத்தரவுன அனுப்பியிருந்தார்கள். ஆகவே, நான் என் மனைவியிடம், உன் குடும்பத்தாரிடம் சென்று, இது விஷயத்தில் அல்லாஹ் தீர்ப்பளிக்கும் வரையில் அவர்களிடத்திலேயே இருந்து வா! என்று சொன்னேன். (என் சகா) ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்களின் மனைவி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (என் கணவர்) ஹிலால் பின் உமய்யா செயல்பட முடியாத வயோதிகர். அவரிடம் ஊழியர் யாருமில்லை. நானே (தொடர்ந்து) அவருக்கு ஊழியம் செய்வதைத் தாங்கள் வெறுப்பீர்களா? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை. ஆயினும், அவர் உன்னை (உடலுறவுகொள்ள) நெருங்க வேண்டாம் என்று சொன்னார்கள். ஹிலால் அவர்களின் மனைவி, அல்லாஹ்வின் மீதாணையாக! என் கணவரிடம் எந்த இயக்கமும் இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அவருடைய விஷயத்தில் இந்த நிகழ்ச்சி நடைபெற்ற

திலிருந்து இந்த நாள் வரையில் அழுது கொண்டேயிருக்கிறார் என்றும் (அல்லாஹ்வின் தூதரிடம்) கூறினார்.

கஅப் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

என் வீட்டாரில் ஒருவர், தம் கணவருக்குப் பணிவிடை புரிய ஹிலால் பின் உமய்யா அவர்களின் மனைவியை அனுமதித்தது போல், உங்கள் மனைவியை (உங்களுக்குப் பணிவிடை புரிய) அனுமதிக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்டால் (நன்றாயிருக்குமே) என்று கூறினார். அதற்கு நான், அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவி விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் நான் அனுமதி கேட்க மாட்டேன். என் மனைவி விஷயத்தில் நான் அனுமதி கோரும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்ன (பதில்) சொல்வார்கள் என்று எனக்குத் தெரியவில்லை. நானோ இளைஞனாக (வேறு) இருக்கிறேன். (ஹிலால், வயோதிகர். அதனால் அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சலுகை காட்டியிருக்கலாம்) என்று கூறி (மறுத்து) விட்டேன். அதற்குப் பின் பத்து நாட்கள் (இவ்வாறே) இருந்தேன். எங்களிடம் பேசக் கூடாதென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்த நாளிலிருந்து ஐம்பது நாட்கள் எங்களுக்குப் பூர்த்தியாயின. நான் ஐம்பதாம் நாளின் ஃபஜ்ருத் தொழுகையை எங்கள் வீடுகளில் ஒன்றின் மாடியில் நிறைவேற்றிவிட்டு அல்லாஹ் (எங்கள் மூவரையும் குறித்து 9:118ஆவது வசனத்தில்) குறிப்பிட்ட நிலையில் அமர்ந்திருந்தேன். (அதாவது:) பூமி இத்தனை விரிவாய் இருந்தும் என்னைப் பொருத்த வரையில் அது குறுகி, நான் உயிர் வாழ்வதே மிகக் கஷ்டமாயிருந்தது.அப்போது, சல்உ மலை மீதேறி பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவர் உரத்த குரலில், கஅப் பின் மாலிக்கே! நற்செய்தி பெற்றுக் கொள்க! என்று கூறினார். உடனே நான் சஜ்தாவில் விழுந்தேன். சந்தோஷம் வந்து விட்டது என்று நான் அறிந்து கொண்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஃபஜ்ர் தொழுது கொண்டிருந்த போது (வஹீ அறிவிக்கப்பட்டு) எங்களை அல்லாஹ் மன்னித்து விட்டான் என்று அறிவித்து விட்டார்கள் என நான் விளங்கிக் கொண்டேன். எங்களுக்கு நல்வாழ்த்துச் சொல்ல மக்கள் வரலாயினர். என் இரு சகாக்களை நோக்கி நற்செய்தி சொல்பவர்கள் சென்றனர். என்னை நோக்கி ஒருவர் குதிரையில் விரைந்து வந்தார்.

அஸ்லம் குலத்தைச் சேர்ந்த ஒருவர் ஓடிச் சென்று மலை மீது ஏறிக் கொண்டார். (மேலும், உரத்த குரலில் எனக்கு நற்செய்தி சொன்னார்.) மேலும், (மலை மீதிருந்து வந்த) அந்தக் குரல் அக்குதிரையை விட வேகமாக வந்து சேர்ந்தது. எவரது குரலை (மலை மீதிருந்து) கேட்டேனோ அவர் என்னிடம் நற்செய்தி சொல்ல (நேரடியாக) வந்த போது நான் என் இரு ஆடைகளையும் கழற்றி அவர் சொன்ன நற்செய்திக்குப் பகரமாக (பரிசாக) அவருக்கு அணிவித்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! (ஆடைகளில்) அந்த இரண்டைத் தவிர வேறெதுவும் அப்போது எனக்குச் சொந்தமானதாக இருக்கவில்லை. (வேறு) இரண்டு ஆடைகளை (அபூகத்தாதா அவர்களிடமிருந்து) இரவல் வாங்கி நான் அணிந்து கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கி நடந்தேன். அப்போது (வழியில்) மக்கள் கூட்டங் கூட்டமாக வந்து என்னைச் சந்தித்து, எனக்குப் பாவமன்னிப்புக் கிடைத்ததால், அல்லாஹ் உங்கள் பாவத்தை மன்னித்து விட்டதற்காக உங்களுக்கு வாழ்த்துச் சொல் கிறோம் என்று கூறலாயினர். நான் (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். அங்கு தம்மைச் சுற்றிலும் மக்களிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அப்போது என்னை நோக்கி தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர்கள் எழுந்தோடி வந்து எனக்குக் கைலாகு கொடுத்து என்னை வாழ்த்தவும் செய்தார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! முஹாஜிர் களில் அவர்களைத் தவிர வேறெவரும் என்னை நோக்கி (வருவதற்காக) எழவில்லை. தல்ஹா (ரலி) அவர்களின் இந்த அன்பை நான் ஒரு போதும் மறக்க மாட்டேன்.

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு சலாம் சொன்ன போது, சந்தோஷத்தினால் அவர்கள் தம் முகம் மின்னிக் கொண் டிருக்க அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உன்னை உன் தாய் பெற்றெடுத்தது முதல் உன்னைக் கடந்து சென்ற நாட்களில் மிகச் சிறந்த நாளான இன்று உனக்கு (பாவ மன்னிப்புக் கிடைத்த) நற்செய்தி கூறுகிறேன் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! (இந்த நற்செய்தியைத்) தாங்களே தங்கள் தரப்பிலிருந்து தெரிவிக்கிறீர்களா? அல்லது அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்த வேத அறிவிப்பின் அடிப்படையில்) தெரிவிக் கிறீர்களா? என்று கேட்டேன். அவர்கள், இல்லை. (என் தரப்பிலிருந்து நான் இதைத் தெரிவிக்கவில்லை.) அல்லாஹ்வின் தரப்பிலிருந்து (வந்துள்ள வேத அறிவிப்பின் அடிப் படையில்)தான் தெரிவிக்கிறேன் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஏதாவது) சந்தோஷம் ஏற்படும் போது அவர்களது முகம் சந்திரனின் ஒரு துண்டு போல் ஆகி பிரகாசிக்கும். அவர்களது முகத்தின் பிரகாசத்தை வைத்து அவர்களது சந்தோஷத்தை நாங்கள் அறிந்து கொள் வோம்.63 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் நான் அமர்ந்து கொண்ட போது, அல்லாஹ்வின் தூதரே! எனது பாவம் மன்னிக்கப்பட்டதற்காக என் செல்வமனைத்தையும் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் (அவர்கள் விரும்பும் வழியில் செலவிட்டுக் கொள்வதற்காக) தர்ம மாக அளித்து விடுகிறேன் என்று சொன்னேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் செல்வத்தில் சிறிதளவை உங்களுக்காக வைத்துக் கொள்ளுங்கள். அதுவே உங்களுக்கு நல்லது என்று கூறினார்கள். கைபர் போரில் எனக்குக் கிடைத்த பங்கை நான் (எனக்காக) வைத்துக் கொள்கிறேன்.64 அல்லாஹ்வின் தூதரே! உண்மை பேசிய காரணத்தினால்தான் அல்லாஹ் என்னைக் காப்பாற்றினான். (உண்மைக்குக் கிடைத்த பரிசாக) என் பாவம் மன்னிக்கப்பட்டதைய டுத்து நான் உயிரோடு வாழும் வரையில் உண்மையைத் தவிர வேறெதையும் பேச மாட்டேன் என்று கூறினேன்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் இந்த வார்த்தையை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கூறிய நாளிலிருந்து உண்மை பேசியதற்காக எனக்கு அல்லாஹ் அருள் புரிந்தது போன்று வேறெந்த முஸ்-முக்கும் அல்லாஹ் அருள் புரிந்ததாக நான் அறியவில்லை. இந்த உறுதி மொழியை நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்ன நாளிலிருந்து எனது இந்த நாள் வரை நான் பொய்யை நினைத்துப் பார்த்தது கூட இல்லை. நான் (உயிரோடு) எஞ்சியி ருக்கும் கால(மனை)த்திலும் அல்லாஹ் என்னைப் (பொய் சொல்லவிடாமல்) பாது காப்பான் என்று நான் உறுதியாக நம்புகிறேன்.

மேலும், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ், திண்ணமாக, அல்லாஹ் (தன்) தூதர் மீது அருள் புரிந்தான். (அவ்வாறே) துன்ப வேளையில் அவரைப் பின்பற்றிய முஹாஜிர்கள் மீதும் அன்சாரிகள் மீதும் (அருள் புரிந்தான்). அவர்களில் ஒரு பிரிவினருடைய இதயங்கள் தடுமாறிக் கொண்டிருந்த பின்னரும் அவர்களை மன்னித்(து அவர்கள் மீது அருள் புரிந்)தான். நிச்சயமாக அவன் அவர்கள் மீது அன்பும் கருணையும் உடையோனாக இருக்கிறான். (அல்லாஹ்வின் உத்தரவை எதிர்பார்த்துத் தீர்ப்புக் கூறாமல்) விவகாரம் தள்ளி வைக்கப்பட்டிருக்கும் மூவரையும் (அல்லாஹ் மன்னித்து விட்டான்.) பூமி இவ்வளவு விசாலமானதாக இருந்தும் (அது) அவர்களுக்கு மிக்க நெருக்கடியாகத் தோன்றி அவர்கள் உயிர் வாழ்வதும் மிகக் கஷ்டமாகி விட்டது. அல்லாஹ்வையன்றி அவனை விட்டுத் தப்புமிடம் அவர்களுக்கு இல்லவே இல்லை என்பதையும்அவர்கள் உறுதிபட அறிந்து கொண்டனர். ஆதலால் அவர்கள் பாவத்திலிருந்து விலகிக் கொள்ளும் பொருட்டு அவர்(களுடைய குற்றங்)களை மன்னித்(து அவர்களுக்கு அருள் புரிந்)தான். நிச்சயமாக, அல்லாஹ் மிக்க மன்னிப்போனும் கிருபையுடையோனுமாக இருக்கின்றான். விசுவாசிகளே! நீங்கள் அல்லாஹ்வுக்கு அஞ்சி (சொல்லிலும் செய-லும்) உண்மையாளர் களுடன் இருங்கள் எனும் (9:117-119) வசனங் களை அருளினான்.

ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு இஸ்லாத்திற்கு வழி காட்டிய பின், தன் தூதர் (ஸல்) அவர்களிடம் என்னை உண்மை பேசச் செய்து உபகாரம் புரிந்தது போன்று வேறெந்த உபகாரத்தையும் நான் மிகப் பெரியதாக ஒரு போதும் கருத வில்லை. நான் அவர்களிடம் பொய் பேசியிருந்தால், (போருக்குச் செல்லாமல்) பொய் சொன்னவர்(களான நயவஞ்சகர்)கள் அழிந்துபோனது போல நானும் அழிந்து விட்டிருப்பேன். ஏனெனில், இறைவன் வேத அறிவிப்பு (வஹீ) அருளிய போது யாருக்கும் சொல்லாத கடுமையான சொற்களைப் பொய் சொன்னவர்கள் குறித்து அருளினான். நீங்கள் அவர்களிடம் திரும்பி வரும் போது, அவர்களை நீங்கள் கண்டுகொள்ளாமல் இருந்து விடவேண்டும் என்பதற்காக உங்கள் முன்னிலையில் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்வார்கள். எனவே, நீங்கள் அவர்களைக் கண்டுகொள்ளாமல் இருந்து விடுங்கள்! ஏனென்றால், அவர்கள் அசுத்தமானவர்கள்; உண்மையில் அவர்கள் சேருமிடம் நரகமாகும். அவர்கள் சம்பாதித்துக் கொண்டிருந்த தீவினைகளுக்கு இதுவே கூலியாகும். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டுவிட வேண்டும் என்பதற்காக உங்களிடம் அவர்கள் சத்தியம் செய்வார்கள். நீங்கள் அவர்கள் மீது திருப்தி கொண்டாலும் திண்ணமாக அல்லாஹ் பாவி களான இத்தகைய மக்கள் மீது ஒரு போதும் திருப்திகொள்ள மாட்டான் என்று (கடிந்த வண்ணம்) அல்லாஹ் கூறினான். (9:95, 96)

குறிப்பாக, எங்கள் மூவரின் விவகாரம் மட்டும் தள்ளிவைக்கப்பட்டிருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் (பொய்) சத்தியம் செய்தவர்களை ஏற்றுக் கொண்டு அவர்களிடமும் உறுதிப் பிரமாணம் பெற்று அவர்களுக்காகப் பாவமன்னிப்பும் தேடினார்கள். (எங்களது) அந்த விவகாரத்தில் அல்லாஹ்வே தீர்ப்பளிக்கும் வரையில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கள் விவகாரத்தைத் தள்ளிப்போட்டுவந்தார்கள். இதனால்தான் (9ஆவது அத்தியாயத்தின் 118ஆவது வசனத்தில்) அல்லாஹ் எங்களைக் குறித்து போருக்குச் செல்லாமல் பின்தங்கி விட்ட மூவர் என்று (போரைக் குறிப்பிட்டுக்) கூறவில்லை. (மாறாக, பின்தங்கிவிட்ட மூவர் என்று பொதுவாகவே குறிப்பிட்டுள்ளான்.) நபி (ஸல்) அவர்கள் தம்மிடம் பொய்யான சாக்குப் போக்குக் கூறியவர்களின் காரணங் களை உடனுக்குடன் ஏற்றுக் கொண்டது போலல்லாமல் எங்கள் விவகாரத்தை (உடனே தீர்க்காது) அல்லாஹ் தள்ளிப்போட்டு வந்தான் என்பதே அதன் கருத்தாகும்.

தபூக் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் செல்லாமல், தாம் பின்தங்கிவிட்ட கால கட்டத்தைக் குறித்து தம் தந்தை கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் அறிவித்த போது இதை அவர்கள் கூற நான் கேட்டேன் என்று கஅப் (ரலி) அவர்கள் முதிய வயதடைந்து கண்பார்வை இழந்து விட்டசமயம் அவர்களைக் கைப்பிடித்து அழைத்துச் செல்பவராயிருந்த -அவர்களு டைய புதல்வர்- அப்துல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் மேற்கண்ட ஹதீஸை அறிவிக் கிறார்கள்.

பாடம் : 81

நபி (ஸல்) அவர்கள் (ஸமூத் கூட்டத்தாரின் வசிப்பிடமாயிருந்த) ஹிஜ்ர் பிரதேசத்தில் தங்கியது.65

4419 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹிஜ்ர் பிரதேசத் தைக் கடந்து சென்றபோது, தமக்குத் தாமே அநீதியிழைத்துக் கொண்டவர்களின் வசிப் பிடங்களில் நுழையும் போது (இறைத் தண்டனையாக) அவர்களைத் தீண்டிய வேதனை, நம்மையும் தீண்டிவிடுமோ எனும் அச்சத்துடன் அழுது கொண்டு நுழைவதைத் தவிர வேறு விதமாக நுழையாதீர்கள் என்று சொன்னார்கள். பிறகு, தம் தலையை (தமது மேலங்கியால்) மறைத்துக் கொண்டு அந்தப் பள்ளத்தாக்கைக் கடக்கும் வரை வேக வேகமாகப் பயணித்தார்கள்.66

4420 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிஜ்ர் வாசிகளைக் குறித்து, இவர்களைத் தீண்டியது போன்ற அதே வேதனை நம்மையும் தீண்டிவிடுமோ என்று அஞ்சி அழுதபடியே அல்லாமல் வேறுமுறையில், வேதனை செய்யப்பட்ட இந்த மக்களின் (வசிப்பிடங்கள்) வழியாகச் செல்லாதீர்கள் என்று நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களை நோக்கிக்) கூறினார்கள்.67

பாடம் : 82

4421 முஃகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் (இயற்கைத்) தேவைக்காகச் சென்றார்கள். அவர்களின் தேவை முடிந்ததும் நான் அவர்களுக்குத் தண்ணீர் ஊற்றுவதற்காக எழுந்தேன். நபி (ஸல்) அவர்கள் தமது முகத்தைக் கழுவினார்கள். தம் முழங்கைகள் இரண்டையும் அவர்கள் கழுவப்போன போது அவர்களது (மேலங்கியின்) சட்டைக் கைகள் இரண்டும் (இறுக்க மாக) நெருக்கலாயின. அவர்கள் மேலங்கியின் கீழேயிருந்து கைகளை வெளியே எடுத்துக் கழுவினார்கள். பிறகு தம் காலுறைகளின் மீது (கையால் தடவி) மஸ்ஹு செய்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா பின் முஃகீரா (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இது தபூக் போரின் போது நடைபெற்ற நிகழ்ச்சி என்றே (என் தந்தை) முஃகீரா (ரலி) அவர்கள் குறிப்பிட்டார்கள் என அறிகிறேன்.

4422 அபூ ஹுமைத் அஸ்ஸாஇதீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் தபூக் போரிலிருந்து (திரும்பியவாறு மதீனாவை) முன்னோக்கிச் சென்றோம். நாங்கள் மதீனாவை நெருங்கிய போது அவர்கள், இது தாபா (தூய்மையானது) ஆகும். இதோ இந்த உஹுத் மலை நம்மை நேசிக்கின்றது; நாமும் அதை நேசிக்கின்றோம் என்று சொன்னார்கள்.68

4423 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து திரும்பி (வருகையில்) மதீனாவை நெருங்கிய போது, மதீனாவில் மக்கள் சிலர் இருக்கின்றனர். (அவர்களால் உங்களுடன் புனிதப் போரில் கலந்து கொள்ள முடியாவிட்டாலும்) நீங்கள் செல்லும் பாதை, அல்லது நீங்கள் கடந்து செல்லும் பள்ளத் தாக்கு எதுவாயினும் அவர்களும் (தம் உள்ளத்தாலும் எண்ணங்களாலும்) உங் களுடன் இருக்கின்றார்கள் என்று சொன்னார்கள். மக்கள், அல்லாஹ்வின் தூதரே! அவர்கள் மதீனாவில்தானே இருக்கிறார்கள்? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், அவர்கள் மதீனாவில்தான் இருக்கின்றார்கள்; அத்தியா வசியக் காரணங்கள்தாம் அவர்களை (இந்தப் புனிதப் போரில் கலந்து கொள்ளவிடாமல்) தடுத்து விட்டன. (ஆயினும், அவர்களது உள்ளம் நம்முடன்தான் உள்ளது) என்று பதிலளித்தார்கள்.69

பாடம் : 83

நபி (ஸல்) அவர்கள் கிஸ்ரா மற்றும் கைஸருக்கு எழுதிய நிருபம்.70

4424 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பாரசீக மன்னர் குஸ்ரூ எனும்) கிஸ்ராவுக்குத் தாம் எழுதிய கடிதத்தை அப்துல்லாஹ் பின் ஹுதைஃபா அஸ்ஸஹ்மீ (ரலி) அவர் களிடம் கொடுத்து, (அதைக் கிஸ்ராவிடம் கொடுத்து விடச் சொல்லி) பஹ்ரைனின் ஆளுநரிடம் ஒப்படைக்க வேண்டுமென உத்தரவிட்டு அனுப்பினார்கள்.71 பஹ்ரைன் ஆளுநர் அக்கடிதத்தை கிஸ்ராவிடம் ஒப்படைத்தார். கிஸ்ரா அதைப் படித்ததும் அதை(த் துண்டு துண்டாக)க் கிழித்துப் போட்டுவிட்டார்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கிஸ்ரா ஆட்சியாளர்கள் முற்றாகச் சிதறடிக்கப்பட வேண்டுமென அவர்களுக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள் என்று சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் சொன்னதாக நினைக்கிறேன்.72

4425 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஜமல் போர் சமயத்தில், அதில் ஈடுபட்ட வர்களுடன் நானும் சேர்ந்து கொண்டு ளஆயிஷா (ரலி) அவர்களுக்கு ஆதரவாகப்ன போரிட முனைந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமிருந்து நான் செவியுற்றிருந்த ஒரு சொல் எனக்குப் பயனளித்தது.

பாரசீகர்கள் கிஸ்ராவின் மகளைத் தங்களுக்கு அரசியாக்கிவிட்டார்கள் எனும் செய்தி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, அவர்கள் தம் ஆட்சி யதிகாரத்தை ஒரு பெண்ணிடம் ஒப்படைத்த சமுதாயம் ஒரு போதும் உருப்படாது என்று சொன்னார்கள்.73

ளஇது தான் எனக்குப் பயனளித்த நபி (ஸல்) அவர்களின் சொல்ன.

4426 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நான் (தபூக் போரிலிருந்து திரும்பி வந்த) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை எதிர் கொண்டு வரவேற்பதற்காக வதா மலைக் குன்றுக்கு சிறுவர்களுடன் சென்றதை நினைவு கூர்கின்றேன்.

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ளஃகில்மான் (சிறுவர்கள்) என்பதற்கு பதிலாகன ஸிப்யான் (சிறுவர்கள்) என்று சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் மற்றொரு முறை (இதை அறிவிக்கும் போது) கூறினார்கள்.

4427 சாயிப் பின் யஸீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தபூக் போரிலிருந்து வந்த போது, அவர்களை வழியிலேயே சந்தித்து வரவேற்க சிறுவர்களுடன் சேர்ந்து நான் வதா மலைக் குன்றுக்குச் சென்றதை (இப்போது) நினைவு கூர்கின்றேன்.74

பாடம் : 84

நபி (ஸல்) அவர்களின் நோயும் அவர்களின் இறப்பும்.75

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே!) நிச்சயமாக நீங்களும் இறந்து விடக் கூடியவரே. இவர்களும் இறந்து விடக் கூடியவர்கள்தாம். பிறகு திண்ணமாக, மறுமை நாளில் நீங்கள் (அனைவரும்) உங்கள் இறைவன் முன்னிலையில் (தத்தம் வாதங்களை எடுத்து வைத்துத்) தர்க்கித்துக் கொள்வீர்கள். (39:30,31)

4428 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின் போது, ஆயிஷாவே! கைபரில் (யூதப் பெண் ணொருத்தியால் விஷம் கலந்து தரப்பட்ட) அந்த உணவை நான் உண்டதால் ஏற்பட்ட வேதனையை நான் தொடர்ந்து அனுபவித்து வருகிறேன்.76 அந்த விஷத்தின் காரணத்தால் என் இருதய இரத்தக் குழாய் அறுந்து போவதை நான் உணரும் நேரமாகும் இது என்று சொன்னார்கள்.

4429 உம்முல் ஃபள்ல் பின்த்தில் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (தம் வாழ்நாளில் கடைசியாகத் தொழுத) மஃக்ரிப் தொழுகையில், வல் முர்ஸலாத்தி உர்ஃபன் எனும் (குர்ஆனின் 77ஆவது) அத்தியாயத்தை ஓதுவதைச் செவியுற்றேன். அதன் பிறகு அவர்களின் உயிரை அல்லாஹ் கைப்பற்றும் வரை அவர்கள் எங்களுக்குத் தொழுவிக்க வில்லை.77

4430 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள், என்னைத் தமக்கு அருகிலேயே (எப்போதும்) அமர்த்திக் கொள்வது வழக்கம். ஆகவே, (ஒரு நாள்) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், உமர் (ரலி) அவர்களிடம், எங்களுக்கு இப்னு அப்பாஸைப் போன்ற (வயது ஒத்த)பிள்ளைகள் இருக்கின்றனர் என்று சொன்னார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அவரது (கல்வித்) தகுதி உங்களுக்கே தெரியும் என்று (என்னைக் குறித்துச்) சொன்னார்கள். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களின் மத்தியில் வைத்து) என்னி டம், (நபியே!) அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து மக்கள் கூட்டம் கூட்டமாக அல்லாஹ்வின் மார்க்கத்தில் நுழைவதை நீங்கள் பார்க்கும் போது எனும் (110:1, 2ஆவது) இறைவசனத்தைப் பற்றி (விளக்கம்) கேட் டார்கள். அதற்கு நான், (இவ்வசனத்தின் வாயிலாக) அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு, அவர்களின் ஆயுள் முடிந்து (இறப்பு நெருங்கி)விட்டதை அறிவித்தான் என்று பதிலளித்தேன். அதற்கு உமர் (ரலி) அவர்கள், நீங்கள் இந்த வசனத்திலிருந்து அறிந்து கொண்டதையே நானும் அறிந்து கொண்டேன் என்று சொன்னார்கள்.78

4431 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், (அன்று) வியாழக்கிழமை! எந்த வியாழக்கிழமை (தெரியுமா?) என்று கேட்டுவிட்டுச் சொன்னார்கள்:

(வியாழக்கிழமையன்று) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது (நோயின்) வேதனை கடுமையாயிற்று. அப்போது அவர்கள்,

என்னிடம் (எலும்பைக்) கொண்டு வாருங்கள். உங்களுக்கு ஒரு மடலை நான் எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள் என்று கூறினார்கள். அப்போது மக்கள் (கருத்து வேறுபாடு கொண்டு) சச்சரவிட்டுக் கொண்டனர். ஆனால், ஓர் இறைத்தூதரின் முன்னால் சச்சரவு செய்வது முறையல்ல (என்று நபியவர்கள் குறிப்பிட்டார்கள்). மக்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன நேர்ந்தது? அவர்கள் பலவீனத்தில் பேசுகிறார்களா? அவர்களிடமே விளக்கம் கேளுங்கள் என்று கூறினர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள், என்னை விட்டுவிடுங்கள். நீங்கள் எதற்கு என்னை அழைக்கிறீர்களோ அந்த (மரணசாசனம் எழுதும்) பணியை விட நான் இப்போதுள்ள (இறைநினைவில் லயித்திருக்கும் இந்த) நிலையே சிறந்தது என்று சொல்லிவிட்டார்கள். (எதையும் எழுதித் தரவில்லை.) மேலும், அவர்கள் தம் தோழர்களுக்கு (தம் மரணத் தருவாயில்) மூன்று விஷயங்களைக் கட்டளையிட் டார்கள். அரபு தீபகற்பத்திலிருந்து இணை வைப்பவர்களை வெளியேற்றுங்கள். (அயல் நாடுகள் மற்றும் குலங்களின்) தூதுக் குழுவினருக்கு நான் கொடுத்து வந்ததைப் போல் நீங்களும் பரிசுப் பொருள்களை வழங்குங்கள் என்று சொன்னார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) சுலைமான் பின் அபில் முஸ்லிம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(எனக்கு இந்த ஹதீஸை அறிவித்த) சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் ளநபி (ஸல்) அவர்களின்ன மூன்றாவது கட்டளையைச் சொல்லாமல் மௌனமாயிருந்து விட்டார்கள் அல்லது (அதை அவர்கள் அறிவித்திருக் கலாம்; ஆனால்,) நான் அதை மறந்து விட்டேன்.79

4432 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது வீட்டில் மக்கள் பலரும் இருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது நபி (ஸல்) அவர்கள், வாருங்கள். நான் உங்களுக்கு ஒரு மடலை எழுதித் தருகிறேன். அதன் பிறகு நீங்கள் ஒரு போதும் வழிதவறமாட்டீர்கள் என்று சொன்னார்கள். அப்போது மக்களில் சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (நோயின்) வேதனை மிகைத்து விட்டது. (அவர்களை எழுதித் தரச் சொல்லித் தொந்தரவு செய்யாதீர்கள்.) உங்களிடம் தான் குர்ஆன் இருக்கின்றதே. நமக்கு அல்லாஹ்வின் வேதமே போதும் என்று சொன்னார்கள். உடனே அங்கு வீட்டிலிருந்தோர், கருத்து வேறுபாடு கொண்டு சச்சரவிட்டுக் கொண் டார்கள். அவர்களில் சிலர், (நபியவர்கள் கேட்ட எழுது பொருளை அவர்களிடம்) கொண்டுபோய்க் கொடுங்கள். உங்களுக்கு ஒரு மடலை அவர்கள் எழுதுவார்கள். அதன் பிறகு நீங்கள் வழிதவறிச் செல்லமாட்டீர்கள் என்று சொன்னார்கள். மற்ற சிலர் வேறு விதமாகச் சொன்னார்கள். அவர்களின் கூச்சலும் சச்சரவும் அதிகரித்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எழுந்திருங்கள் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு கூச்ச-ட்டுக் கொண்டதனால் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களால் அந்த மடலை எழுத முடியாமல் போனது தான் சோதனையிலும் பெரும் சோதனையாகும் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறி வந்தார்கள்.80

4433 & 4434 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இருக்கையில் அவர்களின் உயிர் கைப்பற்றப்பட்டதோ அந்த நோயின் போது (தம் புதல்வி), ஃபாத்திமா (ரலி) அவர்களை அழைத்து (அவர்களது காதில்) இரகசியமாக ஏதோ சொல்ல, ஃபாத்திமா அழுதார்கள். பிறகு (மீண்டும்) அவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைத்து இரகசியமாக ஏதோ சொல்ல, அவர்கள் சிரித்தார்கள். நாங்கள் அதைப் பற்றி ளஃபாத்திமா (ரலி) அவர் களிடம்ன விசாரித்தோம். அதற்கு அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (முதல் முறை அழைத்த போது), தமக்கு ஏற்பட்டிருந்த அந்த (நோயின்) வ-யிலேயே இறந்து விடப்போவதாக இரகசியமாக என்னிடம் சொன்னார்கள். ஆகவே, நான் அழுதேன். பிறகு (இரண்டாம் முறையில்), அவர்களுடைய குடும்பத்தாரி லேயே நான்தான் முதலாவதாக அவர்களைப் பின்தொடர்ந்து (உலகைப் பிரிந்து) செல்ல விருப்பவள் என்று இரகசியமாக என்னிடம் தெரிவித்தார்கள். ஆகவே, நான் சிரித்தேன் என்று சொன்னார்கள்.81

4435 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உலக வாழ்வு, மறுமை வாழ்வு ஆகிய இரண்டில், தாம் விரும்பியதைத் தேர்ந்தெடுத் துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாமல் எந்த இறைத்தூதரும் இறப்பதில்லை என்று நான் ளநபி (ஸல்) அவர்களிடமிருந்தேன செவியுற்றிருந்தேன். நபி (ஸல்) அவர்கள், எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களின் தொண்டை கட்டிக் கொண்டுவிட (கம்மிய, கரகரப்பான குர

-ல்), அல்லாஹ் அருள்புரிந்துள்ள இறைத் தூதர்கள், உண்மையாளர்கள், இறைவழியில் உயிர்த்தியாகம் புரிந்தவர்கள் மற்றும் நல்லடியார்களுடன் எனும் (4:69) இறை வாக்கைச் சொல்லத் தொடங்கினார்கள். ஆகவே, இவ்வுலகம் மறுமை ஆகிய இரண்டி லொன்றைத் தேர்வு செய்யும் வாய்ப்பு அவர்களுக்கும் வழங்கப்பட்டது என்று நான் எண்ணிக் கொண்டேன்.82

4436 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, (இறைவா!) உயர்ந்த தோழர்க(ளான இறைத் தூதர்கள், உண்மையாளர்கள், உயிர்த்தியாகிகள் மற்றும் நல்லடியார்க)ளுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று சொல்லத் தொடங்கினார்கள்.

4437 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர்களாக இருந்த போது, சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம்) உயிர் வாழ்வதற்கு வாய்ப்பளிக்கப்படாத வரையில் அல்லது (உலக வாழ்வு, மறுமை ஆகிய இரண்டில் ஒன்றைத்) தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வாய்ப்பு வழங்கப்படாத வரையில் எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்பட வில்லை என்று சொல்லிவந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டு அவர்களது தலை என் மடியின் மீதிருக்க, அவர்களுக்கு இறப்பு நெருங்கிவிட்ட போது அவர்கள் மூர்ச்சையடைந்து விட்டார்கள். மூர்ச்சை தெளிந்த போது அவர்களது பார்வை வீட்டின் முகட்டை நோக்கி நிலைகுத்தி நின்றது. பிறகு அவர்கள், இறைவா (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்ந்தருள்) என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான், இனி ளநபி (ஸல்) அவர்கள்ன நம்முடன் இருக்க மாட்டார்கள் என்று சொன்னேன். ஏனெனில், அவர்கள் ஆரோக்கியத்துடன் இருந்த போது சொன்ன (இரண்டில் ஒன்றைத் தேர்ந்தெடுத்துக் கொள்வதற்கு வாய்ப்பு அளிக்கப்படும்) செய்தி இது தான் என்று (அவர்களின் மரண வேளையான இப்போது) நான் அறிந்து கொண்டேன்.

4438 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். அப்போது நான் நபி (ஸல்) அவர்களை என் நெஞ்சின் மீது சாய்த்து அணைத்துக் கொண்டிருந்தேன். அப்துர் ரஹ்மானுடன், அவர் பல்துலக்கும் ஈரமான(பேரீச்சங்)குச்சி இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பார்வையை அவர் பக்கம் செலுத்த, நான் அந்தப் பல் துலக்கும் குச்சியை எடுத்து அதை (வாயில் வைத்து என் பற்களால் அதன் முனையை) மென்றேன். அதை உதறிப் பக்குவப்படுத்திய பின் நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். அவர்கள் அதனால் பல் துலக்கினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விட அழகாகப் பல் துலக்கியதை அதற்கு முன் நான் பார்த்ததில்லை. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பல் துலக்கி முடித்தவு டன் தம் கையை அல்லது தம் விரலை உயர்த்திப் பிறகு, (இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று மும்முறை பிரார்த்தித்தார்கள். பிறகு (தம் ஆயுளை) முடித்துக் கொண்டார்கள்.

அறிவிப்பாளர் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்கு மிடையே நபி (ஸல்) அவர்களின் தலை (சாய்ந்தபடி) இருந்த போது அவர்கள் இறந்தார்கள் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறிவந்தார்கள்.

4439 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்டுவிட்டால் பாதுகாப்புக் கோரும் வசனங்களை(க் கொண்ட குர்ஆனின் கடைசி மூன்று அத்தியாயங்களை) ஓதித் தம் மீது ஊதி, தமது கையை (தம் உடல் மீது) தடவிக் கொள்வார்கள்.83 நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்துபோனார்களோ அந்த நோயின் போது, அவர்கள் (ஓதி) ஊதிக் கொள்ளும் பாதுகாப்பு வசனங்களை நான் அவர்கள் மீது (ஓதி) ஊதலானேன். அதை நபி (ஸல்) அவர்களின் (கையில் ஊதி அந்தக்) கையாலேயே அவர்களின் (உடல்) மீது தடவலானேன்.

4440 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறப்பதற்கு முன்பு அவர்கள் என் பக்கம் தம் முதுகைச் சாய்த்தபடி (என் அரவணைப்பில்) இருக்க, அவர்கள் பக்கம் நான் காது தாழ்த்திக் கேட்டுக் கொண்டிருந்த போது, அவர்கள், இறைவா! என்னை மன்னித்து எனக்குக் கருணை புரிவாயாக! (சொர்க்கத்தில்) என்னை (உயர்ந்த) தோழர்களுடன் சேர்த்தருள்வாயாக! என்று பிரார்த்திப்பதை நான் செவியுற்றேன்.

4441 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், எந்த நோயிலிருந்து எழுந்திராமல் போய்விட்டார்களோ அந்த நோயின் போது, அல்லாஹ் யூதர்களைத் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வழிபாட்டுத் தலங்களாக ஆக்கிக் கொண்டார்கள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களின் இந்த அறிவிப்பு (மட்டும்)

இல்லாவிட்டால் அவர்களின்அடக்கத் தலம் (அனைவருக்கும் தெரியும்படி) வெளிப்படை யாக அமைக்கப்பட்டிருக்கும்.ஆயினும், தமது அடக்கத் தலம் எங்கே வணக்கத் தலமாக ஆக்கப்பட்டுவிடுமோ என்று அவர்கள் அஞ்சினார்கள்.84

4442 நபி (ஸல்) அவர்களுடைய துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடுமையாக நோய்வாய்ப்பட்டு, அவர்களின் வேதனை அதிகரித்த போது, என் வீட்டில் தங்கி சிகிச்சையும் பராமரிப்பும் பெற்றிட, தம் (மற்ற) துணைவியரிடம் அனுமதி கேட்டார்கள். அவர்களும் நபி (ஸல்) அவர்களுக்கு அனுமதி அளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் கால்கள் பூமியில் இழுபட, அப்பாஸ் (ரலி) அவர்களுக்கும் வேறு ஒரு மனிதருக்கும் இடையில் தொங்கியபடி (என் வீட்டிற்குப்) புறப்பட் டார்கள்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதை அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர் களிடம் நான் தெரிவித்த போது அவர்கள், ஆயிஷா (ரலி) அவர்கள் பெயர் குறிப்பிடாத அந்த வேறொரு மனிதர் யார் என்று தெரியுமா? என்று கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். அவர்தாம் அலீ பின் அபீதா-ப் என்று அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் சொன்னார்கள்.

மேலும், ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (நோய்க்காலப் பராமரிப்புக்காக) என் இல்லத்திற்கு வந்து, அவர்களின் நோய் கடுமையாகி விட்ட போது அவர்கள், வாய்ப்பகுதி அவிழ்க்கப்படாத ஏழு தோல் பைகளிலிருந்து (நீரை) என் மீது ஊற்றுங்கள். (அதன் குளிர்ச்சியினால்) மக்களுக்கு நான் உபதேசம் செய்யக்கூடும் என்று கூறினார்கள். எனவே, நாங்கள் அவர்களை ஹஃப்ஸா (ரலி) அவர்களுக்குச் சொந்தமான துணி அலசும் பாத்திரத்தின் மீது அமரவைத்தோம். பிறகு அவர்கள் மீது தோல் பைகளிலிருந்து (நீரை) ஊற்றத் தொடங்கினோம். அவர்கள், (சொன்னபடி) செய்து விட்டீர்கள் (போதும்) என்று கையால் சைகை செய்யலானார்கள். பிறகு மக்களை நோக்கிப் புறப்பட்டுச் சென்று அவர்களுக்குத் தொழுவித்தார்கள்; பிறகு உபதேசமும் செய்தார்கள்.85

4443 & 4444 ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது தம் முகத்தின் மீது ஒரு கம்பளித் துணியைத் தூக்கிப் போட்டுக் கொள்ளலானார்கள். மூச்சுத் திணறுவது போல் உணர்ந்தால் தம் முகத்தைவிட்டு அதை விலக்கிக் கொண்டார்கள்.அவர்கள் இந்நிலையில் இருக்கும் போது, அல்லாஹ் யூதர்களையும் கிறிஸ்தவர்களையும் தன் கருணையிலிருந்து அப்புறப்படுத்தட்டும். அவர்கள் தம் நபிமார்களின் அடக்கத் தலங்களை வணக்கத் தலங்களாக ஆக்கிக் கொண்டனர் என்று அவர்கள் செய்ததைக் குறித்து (அதேபோல் நீங்களும் செய்து விடாதீர்கள் என்று) எச்சரித்தார்கள்.86

4445 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்களுக்குத் தலைமை தாங்கித்) தொழு விக்கும்படி (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஏன் கட்டளையிட்டீர்கள் என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் நான் வாதிட்டேன்.87 நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு அவர்களின் அந்தஸ்தில் செயல்படும் ஒரு மனிதரை மக்கள் விரும்புவார்கள் என்று என் மனத்திற்கு ஒரு போதும் படவில்லை. மேலும், அவர்களின் அந்தஸ்தில் செயல்பட முன்வரும் எவரையும் மக்கள் ஒரு துர்க்குறியாகவே கருதுவார்கள் என்றுதான் நான் எண்ணிவந்தேன். ஆகவே, அபூபக்ர் (ரலி) அவர்களைவிட்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அதை விலக்கி விட வேண்டும் என்று நான் விரும்பினேன்.

4446 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் முகவாய்க்கும் என் நெஞ்சுக்குமி டையே சாய்ந்திருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.88 ஆகவே, நபி (ஸல்) அவர்களுக்குப் பிறகு எவரது மரணத்தின் வேதனையைக் கண்டும் ஒரு போதும் நான் வருந்துவதில்லை.

4447 முஹம்மத் பின் முஸ்லிம் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் கஅப் பின் மாலிக் அல் அன்சாரி (ரலி) அவர்கள் -(இவருடைய தந்தை) கஅப் பின் மாலிக் (ரலி) அவர்கள் (தபூக் போரில் கலந்து கொள்ளத் தவறியதற்காக) பாவமன்னிப்பு வழங்கப்பட்டவர்களில் ஒருவ ராயிருந்தார்- அன்னார் எனக்கு அறிவித்தார்கள்:

அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது அவர்களிடமிருந்து அலீ பின் அபீ தா-ப் (ரலி) அவர்கள் (அவர்களை நலம் விசாரித்து விட்டு) வெளியேறினார்கள். உடனே மக்கள், அபுல் ஹசனே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எப்படியுள்ளார்கள்? என்று (கவலையுடன்) விசாரிக்க, அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் அருளால் நலமடைந்து விட்டார்கள் என்று சொன்னார்கள். உடனே அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்கள், அலீ (ரலி) அவர் களின் கையைப் பிடித்துக் கொண்டு அவர் களிடம், அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள் மூன்று நாட்களுக்குப் பிறகு, (பிறரது) அதிகாரத்திற்குப் பணிந்தவராக ஆகிவிடப் போகிறீர்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் விரைவில் தமது இந்த நோயின் காரணத்தால் இறந்து விடப் போகிறார்கள் என்றே நான் கருதுகிறேன். மரணத்தின்

போது அப்துல் முத்த-புடைய மக்களின் முகங்களை(ப் பார்த்து மரணக் களையை) அடையாளம் கண்டுகொள்பவன் நான். எனவே, எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அழைத்துச் செல்லுங்கள். இந்த ஆட்சியதிகாரம் (அவர்கள் இறந்த பிறகு) யாரிடமிருக்கும்? என்று கேட்டுக் கொள்வோம். நம்மிடம்தான் இருக்கும் என்றால் அதை நாம் அறிந்து கொள்வோம். அது பிறரிடத்தில் இருக்கும் என்றால் அதையும் நாம் அறிந்து கொள்வோம். (தமக்குப் பின் யார் பிரதிநிதி என்பதை அறிவித்து) அவர்கள் நமக்கு இறுதி உபதேசம் செய்வார்கள் என்று சொன்னார்கள். அதற்கு அலீ (ரலி) அவர்கள், நாம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் அ(வர்களின் பிரதிநிதியாக ஆட்சி செய்யும் அதிகாரத்)தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் நமக்கு அதைத் தர மறுத்து விட்டால் அவர்களுக்குப் பிறகு மக்கள் நமக்கு (ஒரு போதும்) அதைத் தர மாட்டார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கேட்க மாட்டேன் என்று பதிலளித்தார்கள்.

4448 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்கள் திங்கட்கிழமையன்று ஃபஜ்ருத் தொழுகையில் இருக்க, அபூபக்ர் (ரலி) அவர்கள் முஸ்லிம்களுக்குத் தொழுவித் துக் கொண்டிருந்த போது ஆயிஷா (ரலி) அவர்களது அறையின் திரையை விலக்கிக் கொண்டு திடீரென (வெளியே) வந்தவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்தாம். மக்கள் தொழுகை அணிகளில் நின்று கொண்டிருக்க, அவர்களைக் கூர்ந்து பார்த்து விட்டுப் பிறகு புன்னகைத்தார்கள். அபூபக்ர்

(ரலி) அவர்கள் (தமக்குப் பின்னுள்ள முதல்) வரிசையில் சேர்ந்து கொள்ளத் தம் குதி கால்களால் பின்வாங்கிச் சென்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தொழுவிக்க வர விரும்புகிறார்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் நினைத்து விட்டார்கள். முஸ்லிம்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைக் கண்ட மகிழ்ச்சியால் தமது தொழுகையில் (கவனம் சிதறி) குழப்பத்திற்குள்ளாக இருந்தார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்கள் தொழுகையை நிறைவு செய்யுங்கள் என்று தம் கரத்தால் சைகை செய்தார்கள். பிறகு, அறைக்குள் நுழைந்து கொண்டு திரையைத் தொங்கவிட்டார்கள்.89

4449 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறையில் தங்க வேண்டிய) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே இறப்பெய்தினார்கள். அவர்களது இறப்பின் போது அவர்களது எச்சிலையும் எனது எச்சிலையும் அல்லாஹ் ஒன்று சேர்த்தான். இவை அல்லாஹ் என் மீது பொழிந்த அருட் கொடைகளில் சிலவாகும். (இருவரின் எச்சிலும் ஒன்று சேர்ந்தது எப்படியென்றால்,) என் சகோதரர் அப்துர் ரஹ்மான் தனது கரத்தில் பல் துலக்கும் குச்சியுடன் என்னிடம் வந்தார். அப்போது நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை என் நெஞ்சில் சாய்த்துக் கொண்டிருந்தேன். நபி (ஸல்) அவர்கள் அப்துர் ரஹ்மானையே பார்த்துக் கொண்டிருந்ததைக் கண்டேன். அவர்கள் பல் துலக்க விரும்புகிறார்கள் என்று நான் புரிந்து கொண்டேன். ஆகவே, உங்களுக்கு அதை வாங்கிக் கொடுக்கட்டுமா? என்று நான் கேட்க, அவர்கள், தம் தலையால், ஆம் என்று சைகை செய்தார்கள். நான் அதை வாங்கி அவர்களிடம் கொடுக்க, அ(தனால் பல் துலக்குவ)து அவர்களுக்குக் கடினமாக இருந்தது. நான், பல் துலக்கும் குச்சியை உங்களுக்கு மென்மையாக்கித் தரட்டுமா? என்று கேட்டேன். அவர்கள், தம் தலையால், ஆம் என்று சைகை செய்தார்கள். நான் அதை (மென்று) மென்மையாக்கினேன். அப்போது அவர்கள் முன்னே தண்ணீர் நிரம்பிய தோல் பாத்திரம் ஒன்று அல்லது பெரிய மரக் குவளையொன்று இருந்தது. (அறிவிப்பாளர்) உமர் பின் சயீத் (ரஹ்) அவர்கள் (தோல் பாத்திரமா? மரக் குவளையா என்பதில்) சந்தேகம் தெரிவிக்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள், தம் இரு கைகளையும் தண்ணீருக்குள் நுழைத்து அவ்விரண்டாலும் தம் முகத்தைத் தடவிக் கொண்டு, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவ ருமில்லை; மரணத்திற்குத் துன்பங்கள் உண்டு என்று கூறலானார்கள். பிறகு தமது கரத்தைத் தூக்கி, (இறைவா! சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்திக்கலானார்கள். இறுதியில், அவர்களின் உயிர் கைப்பற்றப்பட,அவர்களின் கரம் சரிந்தது.90

4450 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்தார்களோ அந்த நோயின் போது, நாளை நான் எங்கே இருப்பேன்? நாளை நான் எங்கே இருப்பேன்? என்று எனது (முறை வரும்) நாளை மனத்தில் எண்ணியவாறு கேட்டுக் கொண்டிருந்தார்கள். ஆகவே, அவர்களுடைய (மற்ற) துணைவியர், தாம் விரும்பிய இடத்தில் நபி (ஸல்) அவர்கள் தங்கலாம் என்று அவர்களுக்கு அனுமதியளித்தார்கள். ஆகவே, அவர்கள் (விரும்பியபடி) தாம் இறக்கும் வரை என் வீட்டிலேயே இருந்தார்கள். அவர்கள் எந்த நாளில் முறைப்படி என் வீட்டில் தங்கி வந்தார்களோ அந்த நாளில் என் வீட்டில் வைத்து அவர்கள் இறந்தார்கள். என் நெஞ் சுக்கும் நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் இடையே அவர்களது தலையிருந்த போது, அவர்களின் எச்சில் என் எச்சிலுடன் கலந்திருந்த நிலையில் அல்லாஹ் அவர்களைக் கைப்பற்றிக் கொண்டான்.

(என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள், தாம் பல் துலக்கும் குச்சியைத் தம்முடன் கொண்டுவந்தார்கள். அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூர்ந்து பார்த்தார்கள். அவரிடம் நான், என்னிடம் இந்தப் பல் துலக்கும் குச்சியைக் கொடுங்கள். அப்துர் ரஹ்மானே! என்று கேட்க, அவர் என்னிடம் அதைக் கொடுத்தார். நான் அதைப் பற்களால் கடித்து மென்று (பல் துலக்க ஏதுவாக மென்மைப்படுத்தி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கொடுத்தேன். (இவ்வகையிலேயே அவர்களுடைய எச்சில் எனது எச்சிலுடன் கலந்தது.) அவர்கள் என் நெஞ்சின் மீது சாய்ந்தபடி அதனால் பல் துலக்கினார்கள்.

4451 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் எனது (முறை வரும்) நாளில் எனது நுரையீரலு(ள்ள பகுதி)க்கும் என் நெஞ்சுக்குமிடையே (சாய்ந்திருந்த நிலையில்) இறந்தார்கள். (அவர்களின் துணைவியரான) எங்களில் ஒருவர் நபி (ஸல்) அவர்கள் நோயுற்றுவிடும் போது பிரார்த்தனையின் மூலம் (அல்லாஹ் விடம்) பாதுகாப்புக் கோருவது வழக்கம். (அவ்வாறே இம்முறையும்) நான் அவர் களுக்காகப் பிரார்த்தித்து (அல்லாஹ்விடம்) பாதுகாப்புக் கோரிக் கொண்டே சென்றேன். அப்போது அவர்கள் தம் தலையை வானத்தை நோக்கி உயர்த்தி, (இறைவா!) சொர்க்கத்தில் உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று பிரார்த்தித்தார்கள். (என் சகோதரர்) அப்துர் ரஹ்மான் பின் அபீபக்ர் (ரலி) அவர்கள் தமது கரத்தில் பச்சைப் பேரீச்ச மட்டை ஒன்றை எடுத்துக் கொண்டு (அப்பக்கமாகச்) சென்றார். நபி (ஸல்) அவர்கள் அவரைக் கூர்ந்து பார்க்கலானார்கள். அப்போது நான், அது அவர்களுக்குத் தேவைப்படுகின்றது என்று எண்ணி, அதை வாங்கி அதன் நுனியை மென்று, அதை உதறி நபி (ஸல்) அவர்களிடம் கொடுத்தேன். நபி (ஸல்) அவர்கள் இதுவரை பல் துலக்கியதி லேயே மிக அழகான முறையில் அதனால் பல் துலக்கினார்கள். பிறகு அதை என்னிடம் கொடுத்து விட்டார்கள். பிறகு அவர்களது கரம் விழுந்து விட்டது அல்லது அ(க் குச்சியான)து அவர்களின் கரத்திலிருந்து விழுந்து விட்டது. இவ்விதம் நபி (ஸல்) அவர்களின் எச்சிலையும் எனது எச்சிலையும் (அவர்களுடைய) உலக வாழ்வின் இறுதி நாளில், மறுமை வாழ்வின் முதல் நாளில் அல்லாஹ் ஒன்று சேர்த்தான்.

4452 & 4453 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூபக்ர் (ரலி) அவர்கள் ஸுன்ஹ் எனுமிடத்திலுள்ள தமது உறைவிடத்திலிருந்து ஒரு குதிரை மீது பயணம் செய்து முன்னோக்கி வந்து (மதீனாவை அடைந்து குதிரையை விட்டு) இறங்கிப் பள்ளிவாசலுக் குள் நுழைந்தார்கள். மக்களிடம் பேசவில்லை. இறுதியில் என்னிடம் வந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைத் தேடினார்கள். அவர்கள் (இறந்து) யமன் நாட்டுத் துணி ஒன்றினால் போர்த்தப்பட்டிருக்க, அவர்களின் முகத்தைவிட்டு (அத்துணியை) நீக்கி, அவர்களின் முகத்தின் மீது தம் தலையைக் கவிழ்த்து அவர்களை முத்தமிட்டு அழுதார்கள். பிறகு, என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும். உங்களுக்கு அல்லாஹ் இரு இறப்புகளை ஒன்று சேர்க்கவில்லை. உங்கள் மீது விதிக்கப்பட்டிருந்த இறப்பைத் தாங்கள் அனுபவித்து விட்டீர்கள் என்று சொன்னார்கள்.91

4454 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ளநபி (ஸல்) அவர்களின் உடலைப் பார்த்து விட்டுன அபூபக்ர் (ரலி) அவர்கள் வெளியே வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் மக்களிடம் (நபியவர்கள் இறக்கவில்லை என்று கோபமாகப்) பேசிக் கொண்டிருந்ததைக் கண்டதும், உமரே! அமருங்கள் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். உமர் (ரலி) அவர்கள் உட்கார மறுத்தார்கள். அப்போது மக்கள் உமர் (ரலி) அவர்களை விட்டுவிட்டு அபூபக்ர் (ரலி) அவர்களை நோக்கி வந்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள் இறைவனைப் போற்றிப் புகழ்ந்து விட்டு,

நிற்க, உங்களில் யார் முஹம்மத் (ஸல்) அவர்களை (இறைவன் என நம்பி) வணங்கிக் கொண்டிருந்தார்களோ அவர்கள், முஹம்மது (ஸல்) நிச்சயம் இறந்து விட்டார்கள் என்பதை அறிந்து கொள்ளட்டும். உங்களில் யார் அல்லாஹ்வை வணங்கிக் கொண்டிருந்தார் களோ அவர்கள் அல்லாஹ் என்றென்றும் உயிரோடிருப்பவன்; மரணிக்கவே மாட்டான் என்பதை அறிந்து கொள்ளட்டும்.

அல்லாஹ் கூறுகிறான்: முஹம்மது ஒரு (இறைத்) தூதரேயன்றி வேறல்லர்; அவருக்கு முன்னரும் (என்) தூதர்கள் பலர் (வந்து) சென்றிருக்கிறார்கள்; எனவே, அவர் இறந்து விட்டால், அல்லது கொல்லப்பட்டால் நீங்கள் உங்கள் கால் சுவடுகளின் வழியே (பழைய மதத்திற்கே) திரும்பிவிடுவீர்களா? அப்படி யாரேனும் தம் கால் சுவட்டில் திரும்பிவிடுவாரானால் அவர் அல்லாஹ்வுக்கு எவ்விதத் தீங்கும் செய்து விட முடியாது; அன்றியும், அல்லாஹ் நன்றியுடையோருக்கு விரைவில் பிரதிபலன் வழங்குவான் (அல்குர்ஆன் 3:144) என்றார்கள்.

அல்லாஹ்வின் மீது ஆணையாக! அபூபக்ர் (ரலி) அவர்கள் இவ்வசனத்தை அங்கு ஓதிக்காட்டும் வரை, அல்லாஹ் அருளிய இவ்வசனத்தை இதற்கு முன்னர் அறியாதவர்கள் போலவும், அபூபக்ர் (ரலி) மூலமாகத் தான் இதை அவர்கள் அறிந்தது போலவும் இதனை ஓதக்கேட்ட மக்கள் யாவரும் இதனைத் திரும்பத் திரும்ப ஓதிக் கொண்டேயிருந்தார்கள்.

உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அபூபக்ர் அவர்கள் இந்த வசனத்தை ஓத நான்

கேட்ட போது தான் அது என் நினைவுக்கே வந்தது. எனவே, அதிர்ச்சியடைந்தேன். அப்போது என் கால்களால் என் (உடல்) சுமையையே தாங்க முடியவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்கள் ஓதிக்காட்டிய இவ்வசனத்தைக் கேட்டு நபி (ஸல்) அவர்கள் இறந்து விட் டார்கள் என்பதை உணர்ந்து நான் தரையில் விழுந்து விட்டேன்.92

4455, 4456 & 4457 ஆயிஷா (ரலி) அவர்களும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறந்த பின்னால் அவர்களை அபூபக்ர் (ரலி) அவர்கள் முத்தமிட்டார்கள்.

4458 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட் டிருந்த போது (மயக்கமடைந்தார்கள். அப்போது) அவர்களின் வாய் ஓரத்தில் நாங்கள் மருந்தூற்றினோம். அப்போது அவர்கள் எங்களை நோக்கி, எனது வாயில் மருந்தூற்றாதீர்கள் என்பது போல் சைகை செய்யலானார்கள். நோயாளி மருந்தை வெறுப்பது போலத் தான் (நபி அவர்களும் வெறுக்கிறார்கள். ஊற்ற வேண்டாம் எனத் தடை செய்யவில்லை) என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம். அவர்களின் மயக்கம் (முழுமையாகத்) தெளிந்த போது, என் வாயில் மருந்தை ஊற்ற வேண்டாமென நான் தடுக்கவில்லையா? (அப்படியிருந்தும் ஏன் நான் மயக்கத்திலிருந்த போது மருந்தூற்றி னீர்கள்?) என்று கேட்டார்கள். அதற்கு நாங்கள், (ஆம்.! தடுத்தீர்கள்.) நோயாளி மருந்தை வெறுப்பது போலத் தான் (நீங்களும் இதை வெறுத்து, வேண்டாம் என்கிறீர்கள் என நாங்கள் நினைத்தோம்) என்று கூறினோம். அவர்கள், நான் பார்த்துக் கொண்டிருக்க, ஒருவர் பாக்கியில்லாமல் இந்த வீட்டிலுள்ள அனைவர் வாயிலும் மருந் தூற்றப்படவேண்டும் என்று கூறிவிட்டு, ஆனால், அப்பாஸ் அவர்களைத் தவிர! ஏனெனில், (மருந்தூற்றும் போது) உங்களுடன் அவர் கலந்து கொள்ளவில்லை என்று கூறினார்கள்.

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4459 அஸ்வத் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களிடம் (தமக்குப் பின் ஆட்சியாளராக இருக்கும்படி) இறுதி விருப்பம் (வஸிய்யத்) தெரிவித்து விட்டார்களாமே என்று ஆயிஷா (ரலி) அவர்களிடம் கூறப்பட்டது. அதற்கவர்கள், இதைச் சொன்னவர் யார்? என்று கேட்டுவிட்டு, ளநபி (ஸல்) அவர்களின் இறுதி வேளையில்ன நான் அவர்களை என் நெஞ்சோடு அணைத்துக் கொண்டிருந்தேன். அப்போது அவர்கள் (எச்சில் துப்புவதற்காகப்) பாத்திரம் கொண்டு வரும்படி கூறிவிட்டு அப்படியே ஒரு பக்கம் சரிந்து இறந்து போய் விட்டார்கள். (அவர்கள் இறந்துபோனதைக் கூட) நான் உணரவில்லை. (நடந்தது இவ்வாறிருக்க,) அலீ அவர்களுக்கு (ஆட்சிப் பொறுப்பை) எப்படி அவர்கள் சாசனம் செய்திருப்பார்கள்? என்று கேட்டார்கள்.93

4460 தல்ஹா பின் முஸர்ரிஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா

(ரலி) அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் வஸிய்யத்-மரண சாசனம் செய்தார்களா? என்று கேட்டேன். அவர்கள், இல்லை என்று பதிலளித்தார்கள். நான், அப்படியென் றால் மக்கள் மீது மரண சாசனம் செய்வது எப்படிக் கடமையாக்கப்பட்டது? அல்லது மரண சாசனம் செய்யவேண்டுமென்று மக்களுக்கு எப்படிக் கட்டளையிடப்பட் டது? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அல்லாஹ்வுடைய வேதத்தின்படி செயல் படுமாறு நபி (ஸல்) அவர்கள் உபதேசம் செய்தார்கள் என்று பதிலளித்தார்கள்.94

4461 அம்ர் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்த போது திர்ஹமையோ, தீனாரையோ (வெள்ளி நாணயத்தையோ, பொற்காசையோ), அடிமையையோ, அடிமைப் பெண்ணையோ, (வேறு எந்தச் செல்வத்தையுமோ) விட்டுச் செல்லவில்லை; பைளா எனும் தமது கோவேறு கழுதையையும், தம்முடைய ஆயுதங்களையும், வழிப்போக்கர்களுக்குத் தர்மமாக ஆக்கி விட்டிருந்த ஒரு நிலத்தையும் தவிர.95

4462 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் நோய் கடுமை யான போது, அவர்களுக்கு மயக்கமேற்படத் தொடங்கியது. அப்போது ஃபாத்திமா (ரலி) அவர்கள், அந்தோ! என் தந்தைக்கு ஏற்பட்ட மரண வேதனையே! என்று கூறினார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களை நோக்கி நபி (ஸல்) அவர்கள், இன்றைய தினத்திற்குப் பின் உன் தந்தைக்கு எந்த வேதனையும் இல்லை என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் இறப்பெய்தியவுடன், ஃபாத்திமா (ரலி) அவர்கள், அழைத்த அதிபதியின் அழைப்பை ஏற்றுக் கொண்ட என் தந்தையே! ஃபிர்தௌஸ் எனும் சொர்க்கத்தை தம் உறைவிடமாக்கிக் கொண்ட என் தந்தையே! இந்த இறப்புச் செய்தியை நாங்கள் (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்களுக்கு அறிவிக்கின்றோம், என் தந்தையே! என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள்அடக்கம் செய்யப்பட்ட போது ஃபாத்திமா (ரலி) அவர்கள் (என்னை நோக்கி), அனஸே! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது மண்ணைப் போட உங்கள் மனம் எப்படி இடம் தந்தது? என்று கேட்டார்கள்.

பாடம் : 85

நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை.

4463 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஆரோக்கியமானவர் களாய் இருந்த போது, சொர்க்கத்தில் தம் இருப்பிடத்தைப் பார்த்து, பிறகு (இன்னும் சில காலம் உயிர் வாழ்வதற்கு) வாய்ப்பளிக்கப் படாதவரை எந்த இறைத்தூத(ரின் உயி)ரும் கைப்பற்றப்படவில்லை என்று கூறுவார்கள். பிறகு அவர்களுக்கு நோய் கண்டு, அவர்கள் தம் தலையை எனது மடி மீது வைத்திருந்த நிலையில் மயக்கமுற்றார்கள். பிறகு அவர் களின் மயக்கம் தெளிந்த போது வீட்டின் கூரையை நோக்கி அவர்களின் பார்வை நிலை குத்தி நின்றது. பிறகு இறைவா! (சொர்க்கத்தில்) உயர்ந்த தோழர்களுடன் (என்னைச் சேர்த்தருள்) என்று சொன்னார்கள். அப் போது நான், அவர்கள் (இப்போது) நம்முடன் இருப்பதை விரும்பவில்லை; (மறுமைப் பெருவாழ்வைத் தேர்ந்தெடுத்துக் கொண்டு விட்டார்கள்) என்று (மனத்திற்குள்) கூறிக் கொண்டேன். ஆரோக்கியமானவர்களாய் இருந்த போது (இறைத்தூதர்கள் அனை வரும் இறக்கும் முன் இரண்டிலொன்றைத் தேர்வு செய்து கொள்ள வாய்ப்பளிக்கப்படுவார்கள் என்று) அவர்கள் கூறியசொல் இது தான் என நான் புரிந்து கொண்டேன். நபி (ஸல்) அவர்கள் பேசிய கடைசி வார்த்தை, இறைவா! உயர்ந்த தோழர்களுடன் (என்னையும் சேர்த்தருள்) என்பது தான் .

இதை ளஉர்வா (ரஹ்) போன்றன பல அறிஞர்களின் அவையில் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.

பாடம் : 86

நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களின் இறப்பு(க் காலம்).

4464 & 4465 ஆயிஷா (ரலி) அவர்களும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம்மீது குர்ஆன் அருளப்பட்டுக் கொண்டிருந்த நிலையில் (தம் பிறந்தகமான) மக்காவில் பத்தாண்டுகள் தங்கி இருந்தார்கள்;96 (ஹிஜ்ரத்துக்குப் பின்) மதீனாவில் பத்தாண்டுகள் இருந்தார்கள்.

 

4466 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அறுபத்து மூன்று வயதுடையவர்களாய் இருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.

இதையே சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் எனக்குத் தெரிவித்தார்கள் என்று இப்னு ஷிஹாப் அஸ்ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியுள்ளார்கள்.97

பாடம் : 87

4467 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 முப்பது ஸாவு வாற்கோதுமைக்குப் பகரமாகத் தமது இரும்புக் கவசம் யூதர் ஒருவரிடம் அடைமானம் வைக்கப்பட்டிருந்த நிலையில் நபி (ஸல்) அவர்கள் இறந்தார்கள்.98

பாடம் : 88

நபி (ஸல்) அவர்கள் எந்த நோயில் இறந்து போனார்களோ அந்த நோயின் போது, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை (ஒரு படைப் பிரிவுக்குத் தளபதியாக்கி) அனுப்பியது.99

4468 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக்கி ஒரு படையை அனுப்பினார்கள். மக்களில் சிலர், உஸாமா அவர்களின் தலைமையைக் குறை கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், உஸாமாவின் (நியமன) விஷயத்தில் நீங்கள் (குறை)ஏதோ பேசியதாக எனக்குத் தெரிய வந்தது. நிச்சயமாக அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார் என்று கூறினார்கள்.

4469 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒரு புனிதப் போருக்காகப்) படையொன்றை அனுப்பி, அதற்கு உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள். (அவரை விட மூத்தவர்கள் பலர் இருக்க, அவர் தலைமை தாங்குவது சரியல்லவென்று) மக்கள் (சிலர்) அவரது தலைமையைக் குறை கூறினார்கள். ஆகவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து, இவரது தலைமையைக் குறித்து நீங்கள் இப்போது குறை கூறுகிறீர்கள் என்றால், (இது ஒன்றும் புதிதன்று;) இதற்கு முன்பு (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் தலைமையையும்தான் நீங்கள் குறை கூறிக் கொண்டிருந் தீர்கள். அல்லாஹ்வின் மீது ஆணையாக! அவர் ஆட்சியதிகாரத்திற்குத் தகுதியான வராகத்தாம் இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமான வராகவும் இருந்தார். மேலும், அவருக்குப் பின் (அவருடைய புதல்வரான) இவர் மக்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார் என்று சொன்னார்கள்.100

பாடம் : 89

4470 அபுல்கைர் மர்ஸத் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஸுனாபிஹீ (ரஹ்) அவர்களிடம், நீங்கள் எப்போது (மதீனாவுக்கு) ஹிஜ்ரத் செய்து வந்தீர்கள்? என்று கேட்டேன். அதற்கு ஸுனாபிஹீ (ரஹ்) அவர்கள் நாங்கள் யமன் நாட்டிலிருந்து (நபியின் நகரமான மதீனாவை நோக்கி) ஹிஜ்ரத் செய்து வந்தோம். நாங்கள் ஜுஹ்ஃபாவுக்கு வந்து சேர்ந்த போது, (தம் வாகனத்தில் பயணித்தபடி) பயணி ஒருவர் எங்களை நோக்கி வந்தார். நான் அவரிடம், (முக்கியச்) செய்தி ஏதும் உண்டா? என்று கேட்டேன். அந்தப் பயணி, ஐந்து நாட்களுக்கு முன்பு நாங்கள் நபி (ஸல்) அவர்களை அடக்கம் செய்து விட்டோம் என்று பதிலளித்தார்.

நான் லைலத்துல் கத்ர் (குர்ஆன் அருளப்பட்ட ரமளான் மாதத்தின் கண்ணியமிக்க இரவு) பற்றி நீங்கள் (மதீனாவில்) ஏதேனும் செவியுற்றீர்களா? என்று ஸுனாபிஹி அவர்களிடம் கேட்க, அவர், ஆம். நபி (ஸல்) அவர்களின் (பள்ளிவாச-ன்) தொழுகை அழைப்பாளரான பிலால் (ரலி) அவர்கள், அது (ரமளான் மாதத்தின்) கடைசிப் பத்து நாட்களில் ஏழாவது இரவில் கிடைக்கும் என்று எனக்குத் தெரிவித்தார்கள் என பதிலளித்தார்கள்.101

பாடம் : 90

நபி (ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் கலந்து கொண்டார்கள்?

4471 அபூ இஸ்ஹாக் அம்ர் அஸ்ஸபீஈ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் எத்தனை புனிதப் போர்களில் நீங்கள் கலந்து கொண்டீர்கள்? என்று நான் ஸைத் பின் அர்கம் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள், பதினேழு (புனிதப் போர்களில் நபி அவர்களுடன் நான் கலந்து கொண்டேன்) என்று பதிலளித்தார்கள். நான், நபி (ஸல்) அவர்கள் எத்தனை புனிதப் போர்களில் கலந்து கொண்டார்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், பத்தொன்பது போர்களில் (கலந்து கொண்டார்கள்) என்று பதிலளித்தார்கள்.102

4472 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் பதினைந்து புனிதப் போர்களில் கலந்து கொண்டேன்.

4473 புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல் அவர்களுடன் பதினாறு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன்.

02.11.2009. 03:13

64-(நபிகளார் காலத்துப்)போர்கள்5

பாடம் : 61

அபூ மூசா (ரலி) அவர்களும் முஆத் (ரலி) அவர்களும் ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பு யமன் நாட்டுக்கு அனுப்பப்படுதல்.376

4341 & 4342 அபூ புர்தா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (என் தந்தை) அபூமூசா (ரலி) அவர்களையும் முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள்; அவர்களில் ஒவ்வொருவரையும் (யமனின்) ஒரு மாகாணத்திற்கு அனுப்பினார்கள். நபி (ஸல்) அவர்கள், யமன் இரு மாகாணங்களாகும் என்று சொன்னார்கள்.377 பிறகு, (மார்க்க விஷயத்தில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும் போது கூட) வெறுப்பேற்றி விடாதீர்கள் என்று (அறிவுரை) கூறினார்கள். அவர்கள் இருவரும் தத்தம் பணி(இடங்களு)க்குச் சென்றனர். அவர்கள் தத்தம் (எல்லைக்கு உட்பட்ட) பகுதியில் சென்று கொண்டிருக் கும் போது, தம் சகாவின் (பகுதிக்கு) அருகில் வந்து விட்டால் (அவருடன்) தம் சந்திப்பைப் புதுப்பித்துக் கொண்டு சகாவுக்கு சலாம் கூறுவார். ஒருமுறை முஆத் (ரலி), தமது பகுதிக்குள் சென்று கொண்டிருந்த போது தம் சகாவான அபூமூசா (ரலி) அவர்களின் (பகுதிக்கு) அருகே வந்து விட, தம் கோவேறுக் கழுதையின் மீது பயணித்தபடி அவர்களிடம் சென்று சேர்ந்தார். அப்போது அபூமூசா (ரலி) அவர்கள், தம்மிடம் மக்கள் ஒன்று கூடியிருக்க (தம் அவையில்) அமர்ந்திருந்தார்கள். அப்போது அவர்களிடம், தம் இருகைகளும் தம் கழுத்துடன் சேர்த்துக் கட்டப்பட்டிருந்த ஒரு மனிதர் நின்று கொண்டிருந்தார். முஆத் (ரலி) அவர்கள், அபூமூசா (ரலி) அவர்களிடம், அப்துல்லாஹ் பின் கைஸ் அவர்களே! என்ன இது? என்று கேட்டார்கள். அதற்கு அபூமூசா (ரலி) அவர்கள், இவன் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டு விட்ட பின் அதை நிராகரித்து விட்டவன் என்று பதிலளித்தார்கள்.378

முஆத் (ரலி) அவர்கள், இவன் கொல்லப்படும் வரை நான் (என் வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன் என்றார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், இவன் கொண்டு வரப்பட்டிருப்பதே அதற்காகத் தான். ஆகவே, நீங்கள் இறங்குங்கள் என்று சொன்னார்கள். அதற்கு முஆத், இவன் கொல்லப்படும் வரை நான் (வாகனத்திலிருந்து) இறங்க மாட்டேன் என்று (மீண்டும்) சொன்னார்கள். உடனே அபூமூசா (ரலி) அவர்கள் அவனைக் கொல்லும் படி உத்தரவிட, அவ்வாறே அவன் கொல்லப்பட்டான். பிறகு முஆத் (தமது வாகனத்திலிருந்து) இறங்கி, அப்துல்லாஹ்வே! நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அபூமூசா (ரலி) அவர்கள், (இரவு, பகல் நேரங்களில்) அடிக்கடி ஒதிவருகிறேன் என்று பதிலளித்தார்கள். பிறகு அவர்கள், முஆதே! நீங்கள் எப்படி அதை ஓதுகிறீர்கள்? என்று கேட்க, முஆத் (ரலி) அவர்கள், இரவின் முற்பகுதியில் நான் உறங்கி விடுகிறேன். உறக்கத்தில் என் பங்கை முடித்து எழுகிறேன். பிறகு, அல்லாஹ் எனக்கு விதித்துள்ள அளவு ஓதுகிறேன். ஆகவே, நான் எழு(ந்து வணக்கம் புரி)வதற்கு இறைவனிடம் பிரதிபலனை எதிர்பார்ப்பதைப் போன்றே என் உறக்கத்திற்கும் எதிர்பார்க்கிறேன் என்று பதிலளித்தார்கள்.

4343 அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னை யமன் நாட்டுக்கு அனுப்பி வைத்தார்கள். அப்போது அங்கு தயாரிக்கப்படும் பானங்கள் குறித்து (அவற்றின் சட்டம் என்ன என்று) நான் அவர்களிடம் விசாரித்தேன். அதற்கு அவர்கள் அவை யாவை? என்று கேட்டார்கள். நான் அல் பித்உ, அல் மிஸ்ர் என்றேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும் என்று பதிலளித்தார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சயீத் பின் அபீபுர்தா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் இதை எனக்கு அறிவித்த (என் தந்தை) அபூபுர்தா (ரஹ்) அவர்களிடம்,

 பித்உ என்றால் என்ன? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், பித்உ என்பது தேனில் தயாரிக்கப்படும் பானம், மிஸ்ர் என்பது வாற்கோதுமையில் தயாரிக்கப்படும் பானம் என்று பதிலளித்தார்கள்.

மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் வந்துள்ளது.

4344 & 4345 அபூமூசா அல் அஷ்அரீ

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னையும் முஆத் (ரலி) அவர்களையும் யமன் நாட்டுக்கு அனுப்பினார்கள். அப்போது, (மார்க்க விஷயங்களில் மக்களிடம்) எளிதாக நடந்து கொள்ளுங்கள். (மக்களைச்) சிரமப்படுத்தாதீர்கள். நற்செய்தி (களை அதிகம்) கூறுங்கள். (எச்சரிக்கை செய்யும் போது கூட) வெறுப்பூட்டி விடாதீர்கள். (தீர்ப்பளிக்கும் போது) ஒத்த கருத்துடன் நடந்து கொள்ளுங்கள். (வேறுபட்டு விடாதீர்கள்) என்று (அறிவுரை) கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் (தாயகமான யமன்) நாட்டில் வாற்கோதுமையில் தயாரித்த ஒருவகை பானமான மிஸ்ரும், தேனில் தயாரித்த ஒருவகை பானமான பித்உவும் உள்ளனவே (அவற்றுக்கான சட்டம் என்ன?) என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், போதை தரக்கூடிய ஒவ்வொன்றும் ஹராம் (விலக்கப்பட்டது) ஆகும் என்று பதிலளித்தார்கள். பின்பு, நாங்கள் இருவரும் (எங்கள் பணிக்குச்) சென்றுவிட்டோம். (பின்னர் ஒரு முறை சந்தித்த போது) முஆத், என்னிடம், நீங்கள் குர்ஆனை எப்படி ஓதுகிறீர்கள்? என்று கேட்டார். நான், நின்ற நிலையிலும் அமர்ந்த நிலையிலும் வாகனத்தின் மீதிருந்தபடியும் அடிக்கடி ஓதுகிறேன் என்று பதிலளித்தேன். முஆத், நானோ உறங்குவேன்; எழுந்திருப்பேன். நான் எழு(ந்து வணக்கம் புரி)வதற்கு (இறைவனிடம்) பிரதிபலன் எதிர்பார்ப்பது போன்றே என் உறக்கத்திற்காகவும் எதிர்பார்க்கிறேன் என்று சொன்னார். பிறகு முடியாலான கூடாரமொன்றை அமைத்துக் கொண்டார். பிறகு நாங்கள் இருவரும் ஒருவரையொருவர் (அடிக்கடி) சந்திக்கலானோம். முஆத் என்னைச் சந்தித்த போது என்னிடம் ஒரு மனிதர் கட்டிவைக்கப் பட்டிருந்தார். (அதைக் கண்ட) முஆத் (ரலி), என்ன இது? என்று கேட்டார். நான், இவன் இஸ்லாத்தை ஏற்று, பிறகு மதம் மாறிவிட்ட ஒரு யூதன் என்று பதிலளித்தேன். முஆத், இவனது கழுத்தை நான் துண்டிப்பேன் என்றார்.

இதே ஹதீஸ் வேறோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4346 அபூமூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் சமுதாயத்தாரின் (யமன்) நாட்டிற்கு அனுப்பி வைத்தார்கள். பின்னர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அப்தஹ் பள்ளத்தாக்கில் தங்கியிருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். அவர்கள்,

அப்துல்லாஹ் பின் கைஸே! நீங்கள் ஹஜ் செய்ய நாடினீர்களா? என்று கேட்டார்கள். நான், ஆம், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், நீங்கள் (இஹ்ராமின் போது) என்ன சொன்னீர்கள்? என்று கேட்டார்கள். நான், தாங்கள் இஹ்ராம் அணிந்ததைப் போலவே நானும் இஹ்ராம் அணிகிறேன் என்று சொன்னேன் என்று பதிலளித்தேன். அவர்கள், உங்களுடன் தியாகப் பிராணியை நீங்கள் கொண்டு வந்தீர்களா? என்று கேட்டார்கள். நான், கொண்டு வரவில்லை என்று பதிலளித்தேன். அதற்கு அவர்கள், இறையில்லமான கஅபாவை வலம் வாருங்கள்; ஸஃபாவுக்கும் மர்வாவுக்குமிடையே தொங்கோட்டம் ஓடுங்கள்; பிறகு, இஹ்ராமிலிருந்து விடுபட்டு (ஹலாலாகி) விடுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நான் செய்தேன். இறுதியில் கைஸ் குலத்துப் பெண்களில் ஒருத்தி எனக்குத் தலைவாரினாள். இவ்வாறே, உமர் (ரலி) அவர்கள் கலீஃபாவாக ஆக்கப்படும் வரை நாங்கள் செயல்பட்டு வந்தோம்.379

4347 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஆத் பின் ஜபல் (ரலி) அவர்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் யமன் நாட்டுக்கு அனுப்பிய போது சொன்னார்கள்:

நீங்கள் வேதக்காரர்களில் ஒரு சமூகத் தாரிடம் செல்லப் போகிறீர்கள். அவர்களிடம் நீங்கள் செல்லும் போது, வணக்கத்திற்குரிய இறைவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவரு மில்லை என்றும் முஹம்மது (ஸல்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் என்றும் சாட்சியம் பகரும்படி அவர்களை அழையுங்கள். இதில் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்தால், அல்லாஹ் அவர்கள் மீது ஒவ்வொரு நாளும் ஐந்து தொழுகைகளைக் கடமையாக்கி யுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவி யுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களில் செல்வந் தர்களாயிருப்பவர்களிடமிருந்து வசூ-க்கப்பட்டு அவர்களில் ஏழைகளாயிருப்பவர்க ளிடையே பங்கிடப்பட வேண்டிய ஸகாத்தை அல்லாஹ் அவர்கள் மீது கடமையாக்கி யுள்ளான் என்று அவர்களுக்குத் தெரிவி யுங்கள். இதிலும் அவர்கள் உங்களுக்குக் கீழ்ப்படிந்து நடந்தால், அவர்களின் செல்வங் களில் உயர்ந்தவற்றை எடுத்துக் கொள்ள வேண்டாமென உங்களை நான் எச்சரிக் கின்றேன். அநீதிக்குள்ளானவரின் பிரார்த் தனைக்கு அஞ்சுங்கள். ஏனெனில், அதற்கும் அல்லாஹ்வுக்குமிடையே திரையேது மில்லை.380

4348 அம்ர் பின் மைமூன் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

முஆத் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள் யமன் நாட்டிற்கு வந்த போது மக்களுக்கு சுப்ஹுத் தொழுகை தொழுவித்தார்கள். அப்போது, அல்லாஹ், (தன் தூதர்) இப்ராஹீம் அவர்களை உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டான் என்னும் (4:125லிம்) வசனத்தை ஓதினார்கள். அப்போது கூட்டத்திலிருந்த ஒரு மனிதர், இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்து விட்டது என்று சொன்னார்.381

மற்றோர் அறிவிப்பில் உள்ளதாவது:

நபி (ஸல்) அவர்கள் முஆத் (ரலி) அவர் களை யமன் நாட்டிற்கு அனுப்பினார்கள். (அங்கு சென்ற பின்) முஆத் (ரலி) அவர்கள் சுப்ஹுத் தொழுகையில் (இமாமாக நின்று திருக்குர்ஆனின் 4-வது அத்தியாயமான) சூரத்துந் நிஸாவை ஓதினார்கள். அல்லாஹ் இப்ராஹீம் அவர்களை உற்ற நண்பராக ஆக்கிக் கொண்டான் என்னும் (4:125லிம்) வசனத்தை முஆத் (ரலி) ஓதிய போது அவர்களுக்குப் பின்னாலிருந்த ஒரு மனிதர், இப்ராஹீம் (அலை) அவர்களுடைய அன்னையின் கண் (மகிழ்ச்சியால்) குளிர்ந்து விட்டது என்று சொன்னார்.

பாடம் : 62

அலீ பின் அபீ தா-ப், கா-த் பின் வலீத் -ரலியல்லாஹு அன்ஹுமா- ஆகிய இருவரும் ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முன்பாக யமன் நாட்டிற்கு அனுப்பப்படுதல்.382

4349 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

கா-த் பின் வலீத் (ரலி) அவர்களுடன் யமன் நாட்டிற்கு எங்களை அனுப்பினார்கள். அதன் பிறகு, நபி (ஸல்) அவர்கள் கா-த் பின் வலீதின் இடத்தில் அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீயே! கா-தின் சகாக்களில் உங்களைத் தொடர்ந்து (யமன் நாட்டுக்கு) வரவிரும்புபவர் தொடர்ந்து வரட்டும்! (மதீனாவை முன்னோக்சிச் செல்ல) விரும்பு பவர் முன்னோக்கிச் செல்லட்டும்! என்று அவர்களுக்கு உத்தரவிடுங்கள் என்று சொன்னார்கள். நான் அலீ (ரலி) அவர்களைத் தொடர்ந்து வந்தவர்களில் ஒருவனாயிருந்தேன். போர்ச் செல்வமாக, பெரும் எண்ணிக்கையில் ஊக்கியாக்களை நான் பெற்றேன்.

4350 புரைதா பின் ஹுஸைப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கா-த் பின் வலீத் (ரலி) அவர்களிடம் குமுஸ் நிதியைப் பெற்றுவர அலீ (ரலி) அவர்களை அனுப்பினார்கள். அலீ (ரலி) அவர்கள் (போர்ச் செல்வத்தில் தமக்கென அடிமைப் பெண்ணை எடுத்துக் கொண்ட பின்) குளித்து விட்டு வந்தார்கள். அவர்கள் மீது நான் கோப மடைந்து, கா-திடம், இவரை நீங்கள் பார்க்க மாட்டீர்களா? என்று கேட்டேன். நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, நான் அவர்களிடம் அதைச் சொன்னேன். அதற்கு அவர்கள், புரைதாவே! நீ அலீ மீது கோபமடைந்து இருக்கிறாயா? என்று கேட்க நான், ஆம்! என்று பதில ளித்தேன். அதற்கு அவர்கள், அவர் மீது நீ கோபம் கொள்ளாதே! ஏனெனில், அவருக்கு குமுஸ் நிதியில் அதை விட அதிக உரிமை யுள்ளது என்று சொன்னார்கள்.

4351 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அலீ (ரலி) அவர்கள் கருவேல இலையால் பதனிடப்பட்ட தோல்பை ஒன்றில், மண் அகற்றப்பட்டிராத சிறிய தங்கக் கட்டி ஒன்றை யமனிலிருந்து நபி (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தார்கள். அதை நபி (ஸல்) அவர்கள் நால்வரிடையே பங்கிட்டு விட் டார்கள்: உயைனா பின் பத்ர் (ரலி), அக்ரஉ பின் ஹாபிஸ் (ரலி), ஸைத் அல் கைல் (ரலி). நான்காமவர் அல்கமா (ரலி); அல்லது ஆமிர் பின் துஃபைல் (ரலி). அப்போது நபித் தோழர்களில் ஒருவர், இதைப் பெறுவதற்கு இவர்களை விடத் தகுதி வாய்ந்தவர்கள் நாம் தாம் என்று கூறினார். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. அப்போது அவர்கள், நான் வானத்திலுள்ளவனின் நம்பிக்கைக்குரியவனாயிருக்க, என் மீது நீங்கள் நம்பிக்கை வைக்க மாட்டீர்களா? காலையிலும் மாலையிலும் எனக்கு வானத்தின் செய்திகள் வந்தவண்ணமுள்ளன என்று சொன்னார்கள். அப்போது கண்கள் பஞ்சடைந்த, கன்னங்கள் தடித்திருந்த, நெற்றி உயர்ந்திருந்த, அடர்த்தி யான தாடி கொண்ட, தலைமுடி மழிக்கப் பட்டிருந்த, கீழாடையை வரிந்து கட்டியிருந்த மனிதர் ஒருவர் எழுந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள் என்று கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், உனக்குக் கேடுதான். பூமியிலிருப்பவர்களில் அல்லாஹ்வை அஞ்சுவதற்கு நானல்லவா மிகவும் அருகதை வாய்ந்தவன்? என்று கேட்டார்கள். பிறகு அந்த மனிதர் திரும்பிச் சென்றார். அப்போது கா-த் பின் வலீத் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நான் அவருடைய தலையைக் கொய்து விடட்டுமா? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (அவரைக் கொல்ல) வேண்டாம். அவர் தொழக்கூடியவராக இருக்கலாம் என்று சொன்னார்கள். அதற்கு கா-த் (ரலி) அவர்கள், எத்தனையோ தொழுகையாளிகள் தம் இதயத்தில் இல்லாததை நாவில் மொழிகின்றார்கள் என்றார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் இதயங் களைத் துளையிட்டுப் பார்க்கவோ அவர் களின் வயிறுகளைக் கிழித்துப் பார்க்கவோ எனக்கு உத்தரவிடப்படவில்லை என்று கூறி விட்டு, திரும்பிச் சென்று கொண்டிருந்த அந்த மனிதரைப் பார்த்தார்கள். மேலும் கூறினார்கள்: இந்த மனிதரின் பரம்பரை

யிலிருந்து ஒரு சமுதாயத்தினர் தோன்றுவர். அவர்கள் அல்லாஹ்வின் வேதத்தை நிறைய ஓதுவார்கள். ஆனால், அது அவர்களுடைய தொண்டைக் குழிகளைத் தாண்டிச் செல்லாது. அவர்கள், வேட்டையாடப்பட்ட பிராணியின் உட-லிருந்து (அதன் மீது எய்யப்பட்ட) அம்பு வெளியேறி விடுவதைப் போல் மார்க்கத்திலிருந்து வெளியேறி விடுவார்கள். நான் அவர்க(ள் வாழும் நாட்க)ளை அடைந்தால் ஆது கூட்டத்தார் அழிக்கப்பட்டதைப் போல அவர்களை நிச்சயம் அழித்து விடுவேன்.383

4352 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அலீ (ரலி) அவர்களுக்கு, (அவர்கள் யமன் நாட்டிலிருந்து ஹஜ் செய்ய தியாகப் பிராணியுடன் வந்த போது) தம்முடைய இஹ்ராமிலேயே நீடித்திருக்கும்படி உத்தரவிட்டார்கள். அலீ (ரலி) அவர்கள் யமன் நாட் டின் நிர்வாகியாக இருக்கும் நிலையிலேயே வருகை தந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம், அலீயே! எதற்காக நீங்கள் இஹ்ராம் அணிந்தீர்கள்? என்று கேட்டார்கள். அலீ அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் இஹ்ராமிலேயே நீடித்து (ஹஜ்ஜையும் உம்ராவையும் முடித்த பின்) குர்பானி கொடுங்கள் என்று சொன்னார்கள். அலீ (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்காக ஒரு தியாகப் பிராணியை குர்பானி கொடுத்தார்கள்.384

4353 & 4354 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்காகவும் உம்ராவுக்காகவும் (சேர்த்து ஒரே) இஹ்ராம் அணிந்தார்கள். நபி (ஸல்) அவர்கள் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்த போது நாங்களும் அவர்களுடன் ஹஜ்ஜுக்கு நிய்யத் செய்தோம். நாங்கள் மக்காவுக்கு வந்த போது நபி (ஸல்) அவர்கள், எவருடன் தியாகப் பிராணி இல்லையோ அவர் தமது ஹஜ்ஜை உம்ராவாக ஆக்கி (நிய்யத் செய்து ஹஜ்ஜைப் பிறகு செய்து) கொள்ளட்டும் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களுடன் தியாகப் பிராணி இருந்தது. அப்போது எங்களிடம் அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் ஹஜ்செய்ய நாடியவண்ணம் யமனி லிருந்து வர நபி (ஸல்) அவர்கள், எதற்காக இஹ்ராம் அணிந்தீர்கள்? ஏனெனில், உங்கள் மனைவி(யும் என் மகளுமான பாத்திமா -ரலி) நம்முடன் தான் இருக்கிறார் என்று கேட்டார்கள். அலீ (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் எதற்காக இஹ்ராம் அணிந்தார்களோ அதற்காகவே நானும் இஹ்ராம் அணிந்துள்ளேன் என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், உங்கள் இஹ்ராமிலேயே நீடித்திருங்கள். ஏனெனில், நம்முடன் தியாகப் பிராணி உள்ளது என்று சொன்னார்கள்.

பாடம் : 63

துல் கலஸா போர்.385

4355 ஜரீர் பின் அப்தில்லாஹ் அல்பஜலீ

(ரலி) அவர்கள் கூறியதாவது:

அறியாமைக் காலத்தில் துல் கலஸா என்றழைக்கப்பட்டு வந்த (இணைவைப்போரின்) ஆலயம் ஒன்று இருந்தது. அது யமன் நாட்டு கஅபா என்றும் ஷாம் நாட்டு (திசையை நோக்கி வாசல் அமைந்த) கஅபா என்றும் அழைக்கப்பட்டு வந்தது. ஆகவே, என்னிடம் நபி (ஸல்) அவர்கள், என்னை துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து நீங்கள் விடுவிக்க மாட் டீர்களா? என்று கேட்டார்கள். உடனே நான் நூற்றைம்பது (குதிரை) சவாரி செய்யும் வீரர்களுடன் புறப்பட்டு விரைந்து சென்றேன். அதை நாங்கள் உடைத்துப் போட்டு விட்டு, அங்கு நாங்கள் கண்டவர்களைக் கொன்று விட்டோம். பிறகு நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று அவர்களுக்கு (விபரம்) தெரிவித்தேன். அவர்கள் எங்களுக்காகவும் (இந்த நடவடிக்கையில் பங்கு பெற்ற) அஹ்மஸ் குலத்தாருக்காகவும் (நலம் நாடிப்) பிரார்த்தனை புரிந்தார்கள்.386

4356 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் என்னிடம், துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா? என்று கேட்டார்கள். அது கஸ்அம் குலத்தாரின் ஓர் ஆலயமாக இருந்தது. அது யமன் நாட்டு கஅபா என்று அழைக்கப்பட்டு வந்தது. அப்போது நான் அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் சென்றேன். அஹ்மஸ் குலத்தார் சிறந்த குதிரை வீரர்களாக இருந்தனர். என்னால் குதிரையில் சரியாக உட்கார முடியவில்லை. ஆகவே நபி (ஸல்) அவர்கள், தம் விரல்கள் பதிந்துள்ள அடையாளத்தை என் நெஞ்சில் நான் காணும் அளவிற்கு அதில் அடித்து, இறைவா! இவரை உறுதிப்படுத்து! இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்கு என்று பிரார்த்தித்தார்கள். உடனே நான் அங்கு சென்று அதை உடைத்து எரித்து விட்டேன். பிறகு, அல்லாஹ்வின் தூதரிடம் (தூதுவர் ஒருவரை) அனுப்பினேன். அவர், தங்களை சத்திய(மார்க்கத்)துடன் அனுப்பியவன் மீது சத்தியமாக! அந்த ஆலயத்தை சிரங்கு பிடித்த ஒட்டகம் போன்ற நிலையில் விட்டுவிட்டுத் தான் நான் உங்களிடம் வந்துள்ளேன் என்று சொன்னார். நபி (ஸல்) அவர்கள், (இறைவா!) அஹ்மஸ் குலத்தாரின் குதிரைகளிலும் அதன் மக்களிலும் வளர்ச்சியை அருள்வாயாக! என்று ஐந்து முறை பிரார்த்தித்தார்கள்.387

4357 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

துல் கலஸாவி(ன் கவலையி)லிருந்து என்னை நீங்கள் விடுவிக்க மாட்டீர்களா? என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் கேட்டார்கள். நான், சரி (விடுவிக்கிறேன்) என்று சொன்னேன். அவ்வாறே, அஹ்மஸ் குலத்தைச் சேர்ந்த நூற்றைம்பது குதிரை வீரர்களுடன் (துல் கலஸாவை நோக்கிப்) புறப்பட்டேன். அஹ்மஸ் குலத்தார் சிறந்த குதிரை வீரர் களாக இருந்தார்கள். என்னால் குதிரையின் மீது சரியாக அமர முடியவில்லை. அதை நான் நபி (ஸல்) அவர்களிடம் சொன்னேன். அவர்கள் தமது கையை என் நெஞ்சின் மீது அடித்தார்கள். எந்த அளவிற்கென்றால், அவர்களது கையின் அடையாளத்தை என் நெஞ்சில் நான் பார்த்தேன். அப்போது அவர்கள், இறைவா! இவரை உறுதிப்படுத்து. இவரை நேர்வழி காட்டுபவராகவும் நேர்வழியில் செலுத்தப்பட்டவராகவும் ஆக்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அதன் பிறகு நான் (ஒரு போதும்) எந்த குதிரையிலிருந்தும் விழுந்ததில்லை. துல் கலஸா என்பது யமன் நாட்டிலிருந்த கஸ்அம் மற்றும் பஜீலா குலத்தாரின் ஆலயமாகும். அதில், வணங்கப்பட்டு வந்த பலிபீடங்கள் இருந்தன. அது அல் கஅபா என்று அழைக்கப்பட்டு வந்தது. நான் அங்கு சென்று அதைத் தீயிட்டுக் கொளுத்தி உடைத்து விட்டேன். நான் யமன் நாட்டுக்குச் சென்றபோது அங்கு அம்புகளை வைத்துக் குறிகேட்கின்ற மனிதர் ஒருவர் இருந்தார். அப்போது அவரிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இங்கே (அருகில்தான்) இருக்கிறார்கள். அவர்களிடம் நீ சிக்கிக் கொண்டால் உன் கழுத்தைத் துண்டித்து விடுவார்கள் என்று கூறப்பட்டது. அந்த மனிதர் அந்த அம்புகளை எறிந்து கொண்டிருந்த போது நான் அவரருகே சென்று நின்றேன். நான் நிச்சயம் இந்த ஆலயத்தை உடைக்கப் போகிறேன்.

 வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று நீ சாட்சியம் சொல். அல்லது நான் உன் கழுத்தை வெட்டி விடுவேன் என்று சொன்னேன். பிறகு நான் அதை உடைத்து விட்டேன். அந்த மனிதரும் வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை என்று சாட்சியம் கூறினார். பிறகு அஹ்மஸ் குலத்தவரில் அபூ அர்தாத் என்னும் குறிப்புப் பெயர் கொண்ட ஒரு மனிதரை, நபி (ஸல்) அவர்களிடம் இந்த நற்செய்தியைத் தெரிவிக்க அனுப்பி வைத்தேன். அவர் நபி (ஸல்) அவர்களிடம் சென்ற போது, அல்லாஹ்வின் தூதரே! உங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அதை சிரங்கு பிடித்த ஒட்டகத்தைப் போன்று தான் (ஆக்கி) விட்டு வந்துள்ளேன் என்று சொன்னார். உடனே, நபி (ஸல்) அவர்கள் (இந்த நடவடிக்கையில் ஈடுபட்ட) அஹ்மஸ் குலத்தாருக்கும் அவர்களின் குதிரைகளுக்கும் வளர்ச்சியை அளிக்கும்படி ஐந்து முறை (அல்லாஹ்விடம்) பிரார்த்தித்தார்கள்.

பாடம் : 64

தாத்துஸ் ஸலாஸில் போர். 388

இதுவே லக்ம் மற்றும் ஜுதாம் போர் ஆகும். இதை இஸ்மாயீல் பின் அபீகா-த் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(தாத்துஸ் ஸலாஸில் என்பது) பனூ பலீ, பனூ உத்ரா, பனுல் கைன் ஆகிய குலங்களின் ஊராகும் என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4358 அம்ர் பின் ஆஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தாத்துஸ் ஸலாஸில் (போருக்குச் சென்ற) படைக்கு என்னை(த் தளபதியாக்கி) அனுப்பினார்கள். (நான் திரும்பி வந்தவுடன்) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, மனிதர்களில் தங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்று கேட்டேன். அவர்கள், ஆயிஷா என்று பதிலளித்தார்கள். நான், ஆண்களில் உங்களுக்கு மிகவும் பிரியமானவர் யார்? என்று கேட்டேன். அவர்கள், ஆயிஷாவின் தந்தை (அபூபக்ர்) என்று பதிலளித்தார்கள். நான், பிறகு யார்? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், உமர் என்று பதிலளித்தார்கள். இன்னும் பலரையும் கணித்து (அவர்களெல்லாம் தமக்கு மிகவும் பிரியமானவர்கள் என்று) கூறினார்கள். தமக்கு பிரியமானவர்களின் பட்டிய-ல் என்னைக் கடைசிய ஆளாக ஆக்கி விடுவார்களோ என்று அஞ்சியபடி நான் மௌனமாயிருந்து விட்டேன்.389

பாடம் : 65

ஜரீர் (ரலி) அவர்கள் யமன் நாட்டிற்குச் சென்றது390

4359 ஜரீர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் யமன் நாட்டில் இருந்தேன். அப்போது யமன் வாசிகளில் தூ கலாஉ மற்றும் தூ அம்ர் ஆகிய இருவரை நான் சந்தித்தேன்.391 அவர்களிடம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பற்றிப் பேசலா னேன். அப்போது தூ அம்ர் என்னிடம், நீங்கள் சொல்லும் உங்கள் தோழரின் செய்தி உண்மையெனில் அவர் இறந்து போய் மூன்று நாட்கள் கடந்து விட்டன என்பதை உங்களுக்குத் தெரிவிக்கிறேன் என்றார். அவர்கள் இருவரும் என்னுடன் வந்தார்கள். நாங்கள் இன்னும் பயணத்திலேயே இருந்து கொண்டி ருக்கும் போது மதீனாவின் திசையிலிருந்து ஒரு பயணக் கூட்டம் வந்து கொண்டிருப்பது தென்பட்டது. நாங்கள் அவர்களிடம் விசாரித்தோம். அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறந்து விட்டார்கள். அபூபக்ர் கலீஃபாவாக (ஆட்சியாளராக) ஆக்கப்பட்டு விட்டார்கள். மக்கள் அனைவரும் நல்லவர்களாக உள்ளனர் என்று பதிலளித் தனர். உடனே தூ கலாஉ மற்றும் தூ அம்ர் இருவரும், நாங்கள் இருவரும் வந்திருந்தோம். (எனினும், இப்போது திரும்பிச் செல்கிறோம்.) இறைவன் நாடினால் (அவரிடம்) திரும்பி வருவோம் என்று உங்கள் தோழரிடம் (அபூ பக்ரிடம்) சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண்டார்கள். பிறகு யமன் நாட்டிற்குத் திரும்பிச் சென்றுவிட்டார்கள். நான் அபூபக்ர் அவர்களிடம் யமன் வாசிகளின் செய்தியைத் தெரிவித்தேன். அபூபக்ர் அவர்கள், அவர்களை (என்னிடம்) நீங்கள் கொண்டு வந்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். பிறகு (என்னைச் சந்திக்கும்) ஒரு சந்தர்ப்பம் வந்த போது தூ அம்ர், ஜரீரே! நீங்கள் எனக்கு உபகாரம் செய்திருக்கிறீர்கள். ஆகவே, நான் உங்களுக்கு ஒரு செய்தியைத் தெரிவிக்கிறேன். அரபு மக்களாகிய நீங்கள், தலைவர் ஒருவர் இறந்து விட்டால், (உங்களுக்குள் ஒருவரை யொருவர் கலந்தாலோசித்து) வேறொருவரைத் தலைவராகத் தேர்ந்தெடுத்துக் கொள்ளும் வரை நன்மையில் இருப்பீர்கள். (ஆட்சித் தலைமை) வாள் பலத்தால் உருவாவதாயிருந் தால், ஆட்சித் தலைவர்களாக வருபவர்கள் மன்னர்களாக இருப்பார்கள். அவர்கள் மன்னர்கள் கோபப்படுவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகக்) கோபப்பட்டு, மன்னர்கள் திருப்தியடைவதைப் போன்றே (சொந்த நலன்களுக்காகத்) திருப்தியடை வார்கள்.

பாடம் : 66

சீஃபுல் பஹ்ர் (கடற்கரையோரப்) போர்.392

நபித்தோழர்களின் ஒரு படை குறைஷி களின் வணிகக்குழு ஒன்றை (இடைமறிக்கத் தருணம் எதிர்பார்த்துக்) காத்துக் கொண்டி ருந்தது. அப்போது அபூ உபைதா பின் ஜர்ராஹ் ரலியல்லாஹு அன்ஹு அவர்கள், அப்படையினருக்கு தளபதியாக இருந்தார்கள்.

4360 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கடற்கரையை நோக்கி ஒரு படையை அனுப்பினார்கள். அப்படையினருக்கு அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களைத் தளபதி யாக்கினார்கள். அவர்கள் (மொத்தம்) முன்னூறு பேராக இருந்தனர். (அதில் நானும் கலந்து கொள்ள) நாங்கள் புறப்பட்டோம். சிறிது தொலைவு சென்றபின், வழியில் எங்கள் பயண உணவு தீர்ந்து போய்விட்டது. ஆகவே, அபூ உபைதா (ரலி) அவர்கள் படையினரின் பயண உணவுகளை ஒன்று திரட்டும்படிக் கட்டளையிட, அவை ஒன்று சேகரிக்கப்பட்டன. அவை இரு பைகள் நிறையப் பேரீச்சம் பழங்களாய் இருந்தன. அபூ உபைதா அவர்கள் அது தீரும் வரை (அதிலிருந்து) எங்களுக்கு ஒவ்வொரு நாளும் சிறிது சிறிதாக உண்ணக் கொடுத்தார்கள். ஆகவே, எங்களுக்கு ஒவ்வொரு பேரீச்சம்பழம் தான் (ஒவ்வொரு தினமும்) கிடைத்து வந்தது.

அறிவிப்பாளர்களில் ஒருவரான வஹ்ப் பின் கைஸான் (ரஹ்) அவர்கள் கூறுகின் றார்கள்:

நான் (ஜாபிர் -ரலி- அவர்களிடம்), (ஒரு நாள் முழுவதற்கும்) ஒரு பேரீச்சம் பழம் உங்களுக்குப் போதாதே என்று கேட்டேன். அதற்கு அவர்கள், அதுவும் தீர்ந்து போன போது தான் அதன் அருமையை நாங்கள் உணர்ந்தோம். இறுதியில், நாங்கள் கடலை வந்தடைந்த போது சிறிய மலை போன்ற (திமிங்கில வகை) மீன் ஒன்றைக் கண்டோம். படை வீரர்கள் பதினெட்டு நாட்கள் அதிலிருந்து உண்டார்கள். பிறகு அபூஉபைதா (ரலி) அவர்கள் அதன் விலா எலும்புகளில் இரண்டை (பூமியில்) நட்டுவைக்கும்படி உத்தரவிட, அவ்வாறே அவை நட்டுவைக்கப்பட்டன. பிறகு தம் வாகனத்தைச் செலுத்தும் படி அவர்கள் உத்தரவிட, அவ்வாறே செலுத்தப்பட்டது. அவ்விரு விலா எலும்பு களின் கீழே அவ்வாகனம் சென்றது; எனினும், அவ்விரண்டையும் தொடாமலேயே அது (அவற்றுக்கிடையே புகுந்து வெளியே) சென்று விட்டது.393

4361 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களில் குதிரைப்படை வீரர்களான முந்நூறு பேரை (ஒரு புனிதப் போருக்கு) அனுப்பினார்கள். அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்கள் எங்கள் தலைவராக இருந்தார்கள். நாங்கள் குறைஷிகளின் வணிகக் குழுவை எதிர்பார்த்துக் காத்திருந்தோம். ஆகவே, நாங்கள் கடற்கரையோரமாக அரை மாதம் தங்கினோம். எங்களைக் கடுமையான பசி பீடிக்க, கருவேல மரத்தின் இலையை நாங்கள் புசித்தோம். ஆகவே அந்தப்படைப் பிரிவு கருவேல இலைப்படைப் பிரிவு என்று பெயர் சூட்டப்பட்டது. கடல் எங்களுக்காக அல் அம்பர் எனப்படும் (ஒரு வகை மீன் இனப்) பிராணியை (கரையில்) போட்டது. நாங்கள் அதி-ந்து அரை மாதம் உண்டோம். அதன் கொழுப்பிலிருந்து எண்ணெய் எடுத்துக் கொண்டோம். அதனால் எங்கள் பழைய (வ-மையான) உடல்கள் எங்களுக்கு திரும்பக் கிடைத்து விட்டன. அபூ உபைதா (ரலி) அவர்கள் அந்த (பெரிய) மீனின் விலா எலும்புகளில் ஒன்றை எடுத்து அதை (பூமியில்) நட்டு விட்டுத் தம்முடனிருந்த மிக உயரமான மனிதரிடம் சென்றார்கள். (அவரை அந்த விலா எலும்பின் கீழே நடந்து செல்லும்படி கேட்டுக் கொண்டார்கள்).

மற்றோர் அறிவிப்பில் ஒரு மனிதரையும் ஓர் ஒட்டகத்தையும் அழைத்துக் கொண்டு, அந்த எலும்பு(க் கூட்டுக்)க்குக் கீழே நடந்து சென்றார்கள் என்று இடம்பெற்றுள்ளது.

ஜாபிர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அந்தப் படையினரில் ஒருவர் மூன்று ஒட்டகங்களை அறுத்தார். பிறகு மூன்று ஒட்டகங்களையும் மீண்டும் மூன்று ஒட்டகங் களையும் அறுத்தார். பிறகு அபூ உபைதா (ரலி) அவர்கள் (இனி அறுக்க வேண்டாம் என்று) அவரைத் தடுத்து விட்டார்கள்.

அபூ ஸா-ஹ் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்:

கைஸ் பின் சஅத் (ரலி) அவர்கள், (போரிலிருந்து திரும்பிய பின் தம் தந்தை சஅத் பின் உபாதா-ரலி-அவர்களிடம்) நான் அந்தப் படையில் இருந்தேன். அப்போது மக்கள் கடும் பசிக்கு ஆளானார்கள் என்று சொன்னார்கள். அவருடைய தந்தை, நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும் என்று சொன்னார். கைஸ் (ரலி) அவர்கள், நான் அறுக்கத் தான் செய்தேன் என்று சொல்லிவிட்டு, அவர்கள் மீண்டும் பசிக்கு ஆளானார்கள் என்று சொல்ல, அவருடைய தந்தை, நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும் என்று சொன்னார். அவர், நான் அறுக்கத் தான் செய்தேன் என்று சொல்லி விட்டு, மீண்டும் அவர்கள் பசிக்கு ஆளானார்கள் என்றார். மீண்டும் அவருடைய தந்தை, நீ அவர்களுக்காக ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும் என்று சொன்னார். உடனே அவர், நான் அறுக்கத் தான் செய்தேன் என்றுசொல்லிவிட்டு மீண்டும், அவர்கள் பசிக்கு ஆளானார்கள் என்று சொல்ல, அவருடைய தந்தை, நீ ஒட்டகத்தை அறுத்திருக்க வேண்டும் என்றார். அவர், (மூன்று முறைக்குப் பிறகு) நான் அறுக்க வேண்டாமெனத் தடுக்கப்பட்டு விட்டேன் என்று சொன்னார்.

4362 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கருவேல இலைப் படைப் பிரிவில் சென்றோம். அபூஉபைதா (ரலி) அவர்கள் எங்களுக்குத் தளபதியாக நியமிக்கப் பட்டார்கள். எங்களுக்குக் கடுமையான பசி ஏற்பட்டது. அப்போது இறந்த (பெரிய) மீன் ஒன்றைக் கடல், (கரையில் கொணர்ந்து) எறிந்தது. (அதற்கு முன்) அதைப் போல் (ஒரு மீனை) நாங்கள் பார்த்ததேயில்லை. அது அம்பர் என்று அழைக்கப்படுகிறது. அதிலிருந்து அரை மாதம் நாங்கள் உண்டோம். அபூஉபைதா அவர்கள் அதன் (விலா) எலும்புகளில் ஒன்றை எடுத்து பூமியில் நட்டுவைக்க (அதன் கீழே) ஒருவர் வாகனத்தில் சென்றார்.

அறிவிப்பாளர் அபுஸ் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஜாபிர் (ரலி) அவர்கள் இவ்விதம் கூற நான் கேட்டேன்:

அபூ உபைதா (ரலி) அவர்கள், உண்ணுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் மதீனாவுக்கு (திரும்பி) வந்த போது, நபி (ஸல்) அவர்களிடம் அதைச் சொன்னோம். அதற்கு நபி அவர்கள், அல்லாஹ் (கட-லிருந்து) வெளிப்படுத்திய அந்த உணவை உண்ணுங்கள். (அதனால் தவறில்லை.) உங்களுடன் (அதில் சிறிது) இருந்தால் நமக்கும் உண்ணக் கொடுங்கள் என்று சொன்னார்கள். உடனே, அவர்களில் சிலர், நபி (ஸல்) அவர்களிடம் (அந்த மீனில்) ஒரு துண்டைக் கொண்டு வந்தனர். அதை நபி (ஸல்) அவர்கள் உண்டார்கள்.

பாடம் : 67

அபூபக்ர் (ரலி) அவர்கள் மக்களுடன் ஒன்பதாம் ஆண்டில் ஹஜ் செய்தது394

4363 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹஜ்ஜத்துல் வதாவுக்கு முந்திய ஹஜ்ஜின் போது அபூபக்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் (ஹஜ் பயணக் குழுவுக்குத்) தலைவராக ஆக்கியிருந்தார்கள். அப்போது (துல்ஹஜ் மாதம் 10லிம் நாளான) நஹ்ருடைய நாளில் (மினாவில் வைத்து), இந்த ஆண்டுக்குப் பிறகு இணைவைப்பவர் எவரும் ஹஜ் செய்யக் கூடாது. இறையில்லம் கஅபாவை நிர்வாணமாக எவரும் வலம் வரவும் கூடாது என்று பொது அறிவிப்புச் செய்யும் குழுவினரில் ஒருவனாக என்னை அபூபக்ர் (ரலி) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.395

4364 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

முழுமையான வடிவில் அருளப்பட்ட கடைசி அத்தியாயம், பராஅத் (என்னும் 9-வது அத் தவ்பா) அத்தியாயம் ஆகும். கடைசியாக அருளப்பட்ட அத்தியாயப் பகுதி அந்நிஸாவின் இறுதிப் பகுதியாகும். அந்த வசனம் வருமாறு:

(நபியே!) மக்கள் உங்களிடம் கலாலா பற்றி தீர்ப்பு வழங்குமாறு கேட்கிறார்கள். நீங்கள் கூறுங்கள்: அல்லாஹ் உங்களுக்கு கலாலா பற்றி இவ்வாறு தீர்ப்பளிக்கின்றான்.... (4: 176.)396

பாடம் : 68

பனூ தமீம் குலத்தாரின் தூதுக் குழு.1

4365 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ தமீம் குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள், பனூ தமீம் குலத்தாரே! என்று அவர்களிடம் சொன்னார்கள். அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கு நற்செய்தி சொன்னீர்கள். (அது இருக்கட்டும்!தர்மம்) கொடுங்கள் என்று சொன்னார்கள். (இவர்கள் நம் நற்செய்தியை ஏற்க மறுத்து உலகப் பொரு ளையே விரும்புகிறார்களே என்று) நபி (ஸல்) அவர்களது முகத்தில் கவலை காணப்பட்டது. அப்போது யமன் நாட்டிலிருந்து (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள், (யமன்வாசிகளே!) நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்கவில்லை என்று சொன்னார்கள். அதற்கு யமனியர், நாங்கள் (அதை) ஏற்றுக் கொண்டோம், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள்.2

பாடம் : 69 (உயைனா படைப் பிரிவு)3

இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

 உயைனா பின் ஹிஸ்ன் பின் ஹுதைஃபா பின் பத்ர் (ரலி) அவர்களை நபி (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தைச் சேர்ந்த பனுல் அம்பர் கூட்டத்தாரிடம் அனுப்பினார்கள். ஆகவே அவர்கள், அக்கூட்டத்தார் மீது தாக்குதல் தொடுத்து அவர்களில் சிலரை வீழ்த்தினார்கள். அவர்களில் சிலரைக் கைது செய்தார்கள்.

4366 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ தமீம் குலத்தாரிடம் மூன்று அம்சங்கள் குடி கொண்டிருப்பதாகக் கூறியதைக் கேட்ட திலிருந்து நான் அவர்களை எப்போதும் நேசிக்கலானேன்.

அவையாவன:

1. பனூ தமீம் குலத்தார்தாம் என் சமுதாயத்தாரிலேயே தஜ்ஜா-டம் மிகக் கடுமையாக நடந்து கொள்பவர்கள் என்று (ஒரு முறை) நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள்.

2. அக்குலத்தாரைச் சேர்ந்த பெண் போர்க் கைதி ஒருவர் ஆயிஷா (ரலி) அவர்களிடம் இருந்தார். ஆகவே, ளஆயிஷா (ரலி) அவர் களிடம்ன நபி (ஸல்) அவர்கள், அவளை விடுதலை செய்து விடு. ஏனெனில், அவள் (இறைத்தூதர்) இஸ்மாயீல் (அலை) அவர் களுடைய சந்ததிகளில் உள்ளவள் என்று சொன்னார்கள்.

3. (ஒரு முறை) பனூ தமீம் குலத்தாரின் தானப் பொருள்கள் வந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், இவை ஒரு (முக்கிய) சமுதாயத்தின் அல்லது என் சமுதாயத்தின் தானப் பொருட்கள் என்று சொன்னார்கள்.4

4367 அப்துல்லாஹ் பின் ஸுபைர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ தமீம் குலத்தாரில் ஒரு பயணக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (தமக்கு ஒரு தலைவரை நியமிக்கும்படி கோரினர்.) அபூபக்ர் (ரலி) அவர்கள், (அல்லாஹ்வின் தூதரே!) கஅகாஉ பின் மஅபத் பின் ஸுராரா அவர்களை இவர்களுக்குத் தலைவராக்குங்கள் என்று சொன்னார்கள். உமர் (ரலி) அவர்கள், இல்லை; அக்ரஉ பின் ஹாபிஸ் அவர்களைத் தலைவராக்குங்கள் என்று சொன்னார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள் ளஉமர் (ரலி) அவர் களிடம்ன, நீங்கள் எனக்கு மாறுசெய்யவே விரும்புகிறீர்கள் என்று சொல்ல, உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு மாறுசெய்வது என் நோக்கமல்ல என்று பதிலளித்தார்கள். இருவரும் இப்படி மாறி மாறிப் பேசிச் சச்சரவிட்டுக் கொண்டார்கள். இறுதியில், இருவரின் குரல்களும் உயர்ந்தன. இது தொடர்பாகவே, இறை நம்பிக்கை கொண்ட வர்களே! அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் முன்பாக (பேசுவதற்கு) நீங்கள் முந்தாதீர்கள். அல்லாஹ்வுக்கு பயந்து நடந்து கொள்ளுங்கள். திண்ணமாக, அல்லாஹ் (யாவற்றையும்) செவியுறுவோனும் நன்கறிந் தோனும் ஆவான் எனும் (49:1ஆவது) வசனம் இறங்கிற்று.

பாடம் : 70

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு5

4368 அபூ ஜம்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர் களிடம், என்னிடம் நபீத் (பழச்சாறு மது) வைக்கப்படுகின்ற மண்பாண்டம் ஒன்று இருந்தது. மண்பாண்டத்தில் இனிப்பாக இருக்கும் நிலையில் நான் அதை அருந்துவேன். நான் அதை அதிகமாக அருந்தி, மக்களுடன் நீண்ட நேரம் அமர்ந்திருந்தால் (போதையில் தாறுமாறாக நடந்து) கேவலப்பட்டுப் போய் விடுவேன் என நான் அஞ்சினேன் என்று சொன்னேன். அப்போது இப்னு அப்பாஸ்

(ரலி) அவர்கள் (இவ்வாறு) கூறினார்கள்:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழு வினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களி டம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், (அப்துல் கைஸ்) சமுதாயத்தாரே! உங்கள் வரவு நல்வரவாகட்டும். இழிவுக்குள்ளாகா மலும், மனவருத்தத்திற்குள்ளாகாமலும் வருக! என்று சொன்னார்கள். அம்மக்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களுக்கும் உங்க ளுக்குமிடையே முளர் குலத்து இணை வைப்பாளர்கள் (நாம் சந்திக்க முடியாதபடி) தடையாக உள்ளனர். இதனால், (போர்புரியக் கூடாதென தடைவிதிக்கப்பட்டுள்ள) புனித மாதங்களில் தவிர (வேறு மாதங்களில்) நாங்கள் உங்களிடம் வர முடியவில்லை. ஆகவே, எந்தக் கட்டளைகளை நாங்கள் செயல்படுத்தினால் நாங்கள் சொர்க்கம் புகவும் எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களை அவற்றின் பக்கம் நாங்கள் அழைக்கவும் ஏதுவாக இருக்குமோ அத்தகைய கட்டளை களில் (முக்கியமான) சிலவற்றை எங்களுக்குச் சொல்லுங்கள் என்று கேட்டுக் கொண் டார்கள். நபி (ஸல்) அவர்கள், உங்களுக்கு நான் நான்கு விஷயங்களைக் கட்டளையிடு கின்றேன்:

1. அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது.

அல்லாஹ்வின் மீதான நம்பிக்கை என்பது என்ன என்று உங்களுக்குத் தெரியுமா? வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத்தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறுவது தான் (அது).

2. தொழுகையை நிலை நிறுத்துவது.

3. ஸகாத் வழங்குவது.

4. ரமளான் மாதம் நோன்பு நோற்பது.

மேலும், போர்ச் செல்வங்களில் ஐந்தி லொரு பங்கை (அரசுக்குச்) செலுத்தும் படியும் (உங்களுக்குக்)கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட்களைப் பயன்படுத்த வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக் கின்றேன். மது ஊற்றி வைக்கப்படும் பாத்திரங் களான சுரைக்காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத்தைக் குடைந்து தயாரிக்கப்படும்) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும்தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றில் ஊறவைக்கப்படும் பானங்கள்தாம் அவை என்றார்கள்.6

4369 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல் கைஸ் குலத்தாரின் தூதுக் குழுவினர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் ரபீஆ கோத்திரத்தின் இன்ன (அப்துல் கைஸ்) குடும்பத்தைச் சேர்ந்தவர்கள். (உங்களைச் சந்திக்க விடாமல்) உங்களுக்கும் எங்களுக்கு மிடையே முளர் குலத்து இறைமறுப்பாளர்கள் தடையாக உள்ளனர். அதனால், (போர் புரியக் கூடாதெனத் தடை விதிக்கப்பட்ட) புனித மாதத்தில்தான் நாங்கள் உங்களிடம் வர முடியும். ஆகவே, எங்களுக்குச் சில விஷயங் களைக் கட்டளையிடுங்கள். அவற்றை நாங்கள் கடைப்பிடிப்போம்; எங்களுக்குப் பின்னாலிருப்பவர்களையும் கடைப்பிடித்து நடக்கும் படி அழைப்போம் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நான் நான்கு விஷயங்களை (செயல்படுத்தும்படி) உங்களுக் குக் கட்டளையிடுகின்றேன். நான்கு பொருட் களை உங்களுக்குத் தடைசெய்கின்றேன்.

(கட்டளையிடும் நான்கு விஷயங்களாவன:) அல்லாஹ்வின் மீது நம்பிக்கை கொள்வது; (அதாவது) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் வைத் தவிர வேறெவருமில்லை என்று உறுதி கூறுவது - இவ்வாறு சொல்லி ஒன்று என (தமது விரலால்) எண்ணினார்கள் - தொழுகையை நிலை நிறுத்துவது, ஸகாத் வழங்குவது, மேலும், நீங்கள் அடைந்த போர்ச் செல்வங்களில் ஐந்திலொரு பங்கை அல்லாஹ்வுக்காகச் செலுத்துவது (ஆகியவை தாம் அவை.)

(மது ஊற்றி வைக்கப் பயன்படும்) சுரைக் காய்க் குடுவை, (பேரீச்ச மரத்தின் அடிப்பாகத் தைக் குடைந்து தயாரித்த) மரப் பீப்பாய், மண் சாடி மற்றும்தார் பூசப்பட்ட பாத்திரம் ஆகியவற்றை உபயோகிக்க வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கிறேன்.7

4370 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாருடைய அடிமையான குரைப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அப்பாஸ், அப்துர் ரஹ்மான் பின் அஸ்ஹர், மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) ஆகியோர் என்னிடம், ஆயிஷா (ரலி) அவர்க ளிடம் சென்று எங்கள் அனைவரின் சலாமையும் அவருக்குக் கூறுங்கள். அஸ்ருக்குப்பின் இரண்டு ரக்அத்கள் தொழுவது பற்றி அவரிடம் கேளுங்கள். நபி (ஸல்) அவர்கள் அதைத் தடை செய்ததாக எங்களுக்குச் செய்தி கிடைத்திருக்க அத்தொழுகையை (அன்னையே!) தாங்கள் தொழுவதாகக் கேள்விப்படுகிறோமே என்று கேளுங்கள் என்று (அம்மூவரும்) கூறினர். மேலும், இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள், தாமும் உமர்

(ரலி) அவர்களும் இவ்வாறு (அஸ்ருக்குப் பின்) தொழுபவர்களை அடிப்பவர்களாக இருந்தோம் என்று கூறினார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்று என்னை அம்மூவரும் அனுப்பிய விஷயத்தைக் கூறினேன். அதற்கு ஆயிஷா (ரலி) அவர்கள், நீங்கள் உம்மு சலமாவிடம் சென்று கேளுங்கள் என்று சொன்னார்கள். நான் திரும்பி வந்து அவர்கள் மூவரிடமும் ஆயிஷா (ரலி) அவர்கள் சொன்னதைத் தெரிவித்தேன். ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்ட அதே கேள்வியை உம்மு சலமா (ரலி) அவர்களிடம் சென்று கேட்குமாறு அவர்கள் மூவரும் மீண்டும் என்னை அனுப்பினார்கள்.

(அவ்வாறே அவர்களிடம் வந்து நான் விஷயத்தைக் கேட்ட போது) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் இவ்விரு ரக்அத் களைத் தொழ வேண்டாமெனத் தடை செய்ததை நான் கேட்டிருக்கிறேன். பிறகு (ஒருமுறை) அஸ்ருத் தொழுது விட்டு அவர்கள் எனது அறைக்கு வந்து, அந்த இரு ரக்அத்களைத் தொழுதார்கள். அப்போது என்னுடன் அன்சாரிகளில் பனூ ஹராம் குலத்தைச் சேர்ந்த பெண்கள் சிலர் இருந்தனர். நான் நபி (ஸல்) அவர்களிடம் ஒரு பணிப்பெண்ணை அனுப்பி, நீ அவர்களுக்கு அருகில் சென்று, அல்லாஹ்வின் தூதரே! இந்த இரண்டு ரக்அத்களைத் தொழ வேண்டாமென நீங்கள் தடை செய்ததை நான் கேட்கவில்லையா? ஆனால், தாங்களே இப்போது அதைத் தொழப் பார்க்கின்றேனே என நான் கேட்டதாக அவர்களிடம் நீ சொல். அவர்கள் தம் கையால் சைகை செய்தால் நீ பின்வாங்கிவிடு எனக் கூறினேன். அப்பெண் ணும் சொன்னபடி செய்தாள். நபி (ஸல்) அவர்கள் தம் கையால் சைகை செய்த போது அப்பெண் திரும்பி வந்து விட்டாள். தொழுகையை முடித்த நபி (ஸல்) அவர்கள், அபூ உமய்யாவின் மகளே! (உம்மு சலமாவே!) அஸ்ருக்குப் பின்னால் (தொழுத) இரண்டு ரக்அத்கள் பற்றிக் கேட்டாய். அப்துல் கைஸ் கிளையினரில் சிலர் தம் குலத்தார் இஸ்லாத்தை ஏற்றுள்ள செய்தியைத் தெரிவிக்க என்னிடம் வந்திருந்ததால், லுஹ்ருக்குப் பின்னாலுள்ள இரண்டு ரக்அத் களை என்னால் தொழ முடியவில்லை; அத்தொழுகையே (இப்போது நான் தொழுத) இந்த இரண்டு ரக்அத்களாகும் என்றார்கள்.8

4371 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது பள்ளிவாச-ல் (வெள்ளிக்கிழமை) தொழு விக்கப்பட்ட ஜுமுஆத் தொழுகைக்குப் பிறகு (இஸ்லாத்தில்) முதன் முதலாக தொழுவிக்கப்பட்ட ஜுமுஆத் தொழுகை, ஜுவாஸா எனுமிடத்தில் - அதாவது பஹ்ரைனில் இருந்த ஒரு கிராமத்தில்-அப்துல் கைஸ் குலத்தாரின் பள்ளிவாச-ல் நடைபெற்ற தொழுகையே ஆகும்.9

பாடம் : 71

பனூ ஹனீஃபா குலத்தாரின் தூதுக் குழு மற்றும் ஸுமாமா பின் உஸால் அவர்களின் செய்தி.10

4372 அபூ ஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப் படையொன்றை அனுப்பினார்கள். அந்தப் படையினர் பனூ ஹனீஃபா குலத்தைச் சேர்ந்த ஸுமாமா பின் உஸால் என்றழைக்கப்படும் மனிதர் ஒருவரைக் (கைது செய்து) கொண்டு வந்தார்கள். பள்ளி

வாச-ன் தூண்களில் ஒன்றில் அவரைக் கட்டிப் போட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரிடம் வந்து, (உன் விஷயத்தில் நான் சொல்லப்போகும் முடிவைப் பற்றி) நீ என்ன கருதுகிறாய், ஸுமாமாவே? என்று கேட் டார்கள். அவர், நான் நல்லதே கருதுகிறேன் முஹம்மதே! நீங்கள் என்னைக் கொன்றால் இரத்தப்பழி வாங்க வேண்டிய ஒருவனையே கொள்கிறீர்கள். (என்னை மன்னித்து எனக்கு) நீங்கள் உபகாரம் செய்தால், நன்றி செய்யக் கூடிய ஒருவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள். நீங்கள் செல்வத்தை விரும்பினால் அதில் நீங்கள் விரும்புவதைக் கேளுங்கள் என்று பதிலளித்தார். எனவே, அவர் (மன்னிக்கப்பட்டு) விடப்பட்டார். மறு நாள் வந்த போது அவரிடம், ஸுமாமாவே! என்ன கருதுகிறாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அதற்கு அவர், தங்களிடம் நான் (ஏற்கெனவே) கூறியது தான் : நீங்கள் உபகாரம் செய்தால் நன்றியுள்ளவனுக்கே உபகாரம் செய்கிறீர்கள் என்றார். அவரை நபியவர்கள் (அன்றும்) விட்டுவிட்டார்கள். மறுநாளுக்கு அடுத்த நாள் வந்த போது, நீ என்ன கருதுகிறாய்? ஸுமாமாவே! என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர், நான் ஏற்கெனவே தங்களிடம் சொன்னதைத் தான் கருதுகிறேன் என்று பதிலளித்தார். நபி (ஸல்) அவர்கள், ஸுமாமாவை அவிழ்த்து விடுங்கள் என்று சொன்னார்கள்.

உடனே ஸுமாமா, பள்ளிவாசலுக்கு அருகிலிருந்த பேரீச்சந் தோட்டத்திற்குச் சென்று குளித்து விட்டு, பள்ளிவாசலுக்கு வந்து, வணக்கத்திற்குரியவன் அல்லாஹ் ஒருவனைத் தவிர வேறெவருமில்லை என்று நான் உறுதி கூறுகிறேன். மேலும், முஹம்மது, அல்லாஹ்வின் தூதர் என்றும் நான் உறுதி கூறுகிறேன் என்று மொழிந்து விட்டு, முஹம்மதே! அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் முகத்தைவிட என்னிடம் வெறுப்புக்குரிய முகம் பூமியில் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், (இன்று) உங்களு டைய முகம் எல்லா முகங்களிலும் எனக்கு மிகவும் பிரியமானதாக ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! (இன்றுவரை) உங்கள் மார்க்கத்தைவிட என் வெறுப்புக் குரிய மார்க்கம் வேறெதுவும் இருக்கவில்லை. ஆனால், இன்று மார்க்கங்களிலேயே எனக்கு மிகவும் பிரியமானதாக உங்கள் மார்க்கம் ஆகிவிட்டது. அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் ஊரைவிட எனக்கு வெறுப்பான ஊர் வேறெதுவும் இருந்திருக்கவில்லை. ஆனால், இப்போது உங்கள் ஊரே எனக்கு மிகவும் பிரியமான ஊராகிவிட்டது. உங்கள் குதிரைப் படையினர் என்னைப் பிடித்துக் கொண்டு விட்டனர் என்று சொல்லிவிட்டு, மேலும் நான் இப்போது (மக்காவிற்குச் சென்று) உம்ரா செய்ய விரும்புகிறேன். நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருக்கு நற்செய்தி கூறி உம்ரா செய்ய அவருக்கு அனுமதியளித்தார்கள். அவர் மக்காவிற்குச் சென்றபோது (அங்கே) ஒருவர் அவரிடம், நீ மதம் மாறிவிட்டாயா? என்று கேட்டார். அதற்கு ஸுமாமா (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! (நான் மதம் மாறவில்லை.) மாறாக, அல்லாஹ்வின்தூதர் முஹம்மத் (ஸல்) அவர்களுடன் இணைந்து இறைவனுக்குக் கீழ்ப்படியும் முஸ்-மாக மாறிவிட்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் அனுமதி தரும்வரை (எனது நாடான) யமாமாவிலிருந்து ஒரு கோதுமை தானியம் கூட (மக்காவாசிகளான) உங்களுக்கு வராது என்று சொன்னார்கள்.11

4373 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது காலத்தில் (தன்னை இறைத் தூதர் என்று வாதிட்ட) முஸை-மா எனும் மகா பொய்யன் (யமாமாவிலிருந்து மதீனா) வந்தான். அவன், முஹம்மத், தமக்குப் பிறகு (தூதுத்துவம் மற்றும் ஆட்சித் தலைமையின்) பொறுப்பை எனக்கு அளித்தால்தான்

நான் அவரைப் பின்பற்றுவேன் என்று கூறலானான். அவன் தன் சமுதாயத்து மக்கள் பல பேருடன் மதீனா வந்திருந்தான். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (தம் பேச்சாளர்) ஸாபித் பின் கைஸ் (ரலி) அவர்கள் தம்முடன் இருக்க அவனை நோக்கி வந்தார்கள். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கையில் பேரீச்ச மட்டைத் துண்டு ஒன்று இருந்தது. முஸை-மா தன் தோழர்களுடனிருக்க நபி (ஸல்) அவர்கள் அவனருகே (சென்று) நின்று கொண்டு, இந்தத் துண்டை நீ கேட்டால் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன். அல்லாஹ் உனக்கு விதித்திருப்பதை மீறிச் செல்ல உன்னால் முடியாது. நீ (எனக்குக் கீழ்ப்படிய மறுத்து) முதுகைக் காட்டினால் அல்லாஹ் உன்னை அழித்து விடுவான். மேலும், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை நான் காண்கிறேன். இதோ, இவர்தாம் ஸாபித். இவர் என் சார்பாக உனக்கு பதிலளிப்பார் என்று சொல்லிவிட்டு அவனிடமிருந்து திரும்பிவிட்டார்கள்.

4374 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (என் கனவில்) எனக்குக் காட்டப்பட்ட அதே ஆளாகத் தான் உன்னை நான் காண்கிறேன் என்று (முஸை-மாவிடம்) சொன்னதைப் பற்றி நான் கேட்ட போது அபூஹுரைரா

(ரலி) அவர்கள் கூறினார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தூங்கிக் கொண்டிருந்த போது (கனவில்) என் இரு கை களிலும் இரு தங்கக் காப்புகளைக் கண்டேன். அவற்றின் (விளக்கம் எனக்குத் தெரியாமல் இருந்த) நிலை என்னைக் கவலையில் ஆழ்த்தியது. ஆகவே, கனவில் அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்வாறே நான் ஊதினேன். உடனே, அவ்விரண்டும் பறந்து விட்டன. எனவே, நான் அவ்விரண்டுக் கும் எனக்குப் பின் வெளிப்படவிருக்கின்ற மகா பொய்யர்கள் இருவர் என்று விளக்கம் கண்டேன். அவ்விருவரில் ஒருவன் அன்ஸீ; மற்றொருவன் முஸை-மா என்று சொன்னார்கள்.12

4375 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் தூங்கிக் கொண்டிருக்கும் போது (கனவில்) பூமியின் கருவூலங்கள் எனக்கு வழங்கப்பட்டன. அப்போது என் கையில் தங்கக் காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. அவை எனக்குப் பெரும் சுமையாகத் தென்பட்டன. அப்போது அவ்விரண்டையும் ஊதும்படி எனக்குக் கட்டளையிடப்பட்டது. அவ்விரண்டையும் நான் ஊதினேன். அவ்விரண்டும் (பறந்து) சென்றுவிட்டன. அவ்விரண்டும், எந்த இரு மகா பொய்யர் களுக்கிடையே நான் இருக்கின்றேனோ அவர்களைக் குறிக்கும் என்று நான் விளக்கம் கண்டேன். அவ்விரு பொய்யர்கள் (அன்ஸீ என்ற) ஸன்ஆ வாசியும் (முஸை-மா என்ற) யமாமா வாசியும் ஆவர்.13

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

4376 அபூரஜாஉ அல்உதாரித் (ரஹ்)14 அவர்கள் கூறியதாவது:

நாங்கள் (அறியாமைக் காலத்தில்) கல்லை வணங்கிக் கொண்டிருந்தோம். (நாங்கள் வணங்கிக் கொண்டிருந்த) ஒரு கல்லைவிடச் சிறந்த மற்றொரு கல்லை நாங்கள் கண்டால் அதை எடுத்துக் கொண்டு பழையதை எறிந்து விடுவோம். கல் ஏதும் எங்களுக்குக் கிடைக்க வில்லையென்றால் நாங்கள் மண் கட்டியைச் சேகரி(த்துக் குவி)ப்போம். பிறகு, ஆட்டைக் கொண்டு வருவோம்; அதன் பாலை (குவிந்து கிடக்கும்) அந்த மண்கட்டியின் மீது கறப்போம்; பிறகு அதைச் சுற்றி வருவோம். ரஜப் மாதம் வந்து விட்டால் (போர் நிறுத்தம் செய்வதைக் குறிக்கும் வகையில்) ஆயுத முனையை அகற்றக்கூடியது என அந்த மாதத்தை அழைப்போம். ரஜப் மாதத்தில் எந்த ஈட்டி முனையையும், அம்பு முனையையும் கழற்றி எறியாமல் விடமாட்டோம்.

4377 அபூ ரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் (இறைத் தூதராக) நியமிக்கப்பெற்ற நாளில் நான், என் வீட்டாருக்காக ஒட்டகத்தை மேய்க்கும் இளைஞனாக இருந்தேன். நபி (ஸல்) அவர்கள் இறைத்தூதராக வருகை தந்திருப்பதை நாங்கள் கேள்விப்பட்டவுடன் நரக நெருப்பை நோக்கி, (அதாவது) மகா பொய்யன் முஸை-மாவை நோக்கி நாங்கள் ஓடினோம்.15

பாடம் : 72

அல்அஸ்வத் அல்அன்ஸீயின் நிகழ்ச்சி16

4378 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மகா பொய்யன் முஸை-மா மதீனாவிற்கு வந்திருக்கின்றான் என்ற செய்தி எங்களுக்கு எட்டியது. அவன் ஹாரிஸின் மகள்(கய்யிஸா என்பாள்) வீட்டில் தங்கினான். அந்த ஹாரிஸ் பின் குரைஸின் மகள் அவனுக்கு மனைவியாக இருந்தாள். அவள், அப்துல்லாஹ் பின் ஆமிருடைய (மக்களின்) தாய் ஆவாள். ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் (ரலி) அவர்களைத் தம்முடன் அழைத்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸை-மாவிடம் சென்றார்கள். இந்த ஸாபித் பின் கைஸ் பின் ஷம்மாஸ் அவர்கள் தாம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய (அதிகாரபூர்வ) பேச்சாளர் என்று அழைக்கப்பட்டு வந்தவர் ஆவார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது கையில் (பேரீச்ச மட்டைக்) குச்சியொன்று இருந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸை-மாவின் அருகே நின்று அவனிடம் (சிறிது) பேசினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களிடம் முஸை-மா, நீங்கள் விரும்பினால் உங்களுக்கும் (உங்கள் நபித்துவ) பதவிக்கும் இடையே குறுக்கிடாமல் நாம் விலகிக் கொள்கிறோம். (ஆனால்,) உங்களுக் குப் பின் நீங்கள் அந்தப் பதவியை எமக்கு அளித்திட வேண்டும் என்று சொன்னான். நபி (ஸல்) அவர்கள், நீ என்னிடம் இந்தக் குச்சியைக் கேட்டாலும் கூட நான் இதை உனக்குக் கொடுக்க மாட்டேன். எனக்கு (கனவில்) காட்டப்பட்ட அதே ஆள்தான் நீ என்று உன்னை நான் கருதுகிறேன். இதோ, இந்த ஸாபித் பின் கைஸ் உனக்கு என் சார்பாக பதிலளிப்பார் என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் திரும்பிச் சென்று விட்டார்கள்.

4379 உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எடுத்துரைத்த அவர்களது கனவைப் பற்றி நான் அப்துல்லாஹ் பின் அப்பாஸ் (ரலி) அவர்களிடம் கேட்டேன். அதற்கு அவர்கள் சொன்னார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் உறங்கிக் கொண்டிருக்கும் போது என் இரு கைகளிலும் தங்கத்தாலான காப்புகள் இரண்டு வைக்கப்பட்டன. நான் அவற்றை அருவருப்பாகக் கருதி வெறுத்தேன். உடனே (அவற்றை ஊதிவிட) எனக்கு அனுமதிக்கப்பட்டது. நான் அவ்விரண்டையும் ஊத, அவை பறந்துபோய்விட்டன. அவ்விரண்டும் இனி வரவிருக்கும் இரு பெரும் பொய்யர்களைக் குறிப்பதாக நான் விளக்கம் கண்டேன் என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அவ்விருவரில் ஒருவன் யமன் நாட்டில் ஃபைரோஸ் என்பவரால் கொல்லப்பட்ட (அஸ்வத்) அல் அன்ஸீ ஆவான்; மற்றொருவன் மகா பொய்யன் முஸை-மா ஆவான்.

பாடம் : 73

நஜ்ரான் வாசிகளின் சம்பவம்17

4380 ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஆகிப், சையித் எனும் நஜ்ரான் நாட்டுக் காரர்கள் இருவர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம், முபாஹலா-சாபப் பிரார்த்தனை செய்வதற்காக வந்தனர்.18 அவ்விருவரில் ஒருவர் தம் தோழரிடம், நீ அவ்வாறு செய்யாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் உண்மையிலேயே இறைத்தூதராக இருந்து, நாம் சாபப் பிரார்த்தனை செய்து விட்டோமானால் நாமும் உருப்பட மாட்டோம்; நமக்குப் பின் வரவிருக்கும் நம் சந்ததிகளும் உருப்பட மாட்டார்கள் என்று சொன்னார். (பிறகு) இருவரும் சேர்ந்து ளநபி (ஸல்) அவர்களிடம்ன, நீங்கள் எங்களிடம் கேட்கின்றவற்றை நாங்கள் உங்களுக்குக் கொடுக்கின்றோம். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுடன் அனுப்புங்கள். நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரைத் தவிர வேறெவரையும் எங்களுடன் அனுப்ப வேண்டாம் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், நம்பகத் தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரை நிச்சயம் நான் உங்களுடன் அனுப்புவேன் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய தோழர்கள் (ஒவ்வொருவரும்) நபியவர்களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டி ருந்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள், அபூ உபைதா பின் ஜர்ராஹ் அவர்களே! எழுந்திருங்கள் என்று சொன்னார்கள். அவர் எழுந்து நின்றபோது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் இந்தச் சமுதாயத்தின் நம்பிக்கைக்குரியவர் என்று சொன்னார்கள்.19

4381 ஹுதைஃபா பின் யமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நஜ்ரான் வாசிகள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நம்பிக்கைக்குரிய ஒரு மனிதரை எங்களுக்காக அனுப்புங்கள் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், நம்பகத் தன்மையில் முறையோடு நடந்து கொள்ளும் நம்பிக்கையாளர் ஒருவரைத் தான் நான் உங்களிடம் அனுப்புவேன் என்று சொன்னார்கள். மக்கள் (ஒவ்வொருவரும்) நபியவர் களின் அழைப்பை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். ஆனால், நபி (ஸல்) அவர்கள் அபூ உபைதா பின் ஜர்ராஹ் (ரலி) அவர்களை அனுப்பினார்கள்.

4382 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஒவ்வொரு சமுதாயத்திற்கும் (அவர் களின்) நம்பிக்கைக்குப் பாத்திரமானவர் ஒருவர் உண்டு. இந்தச் சமுதாயத்தினரின் நம்பிக்கைக்குரியவர் அபூ உபைதா பின் ஜர்ராஹ் அவர்களாவார்.

இதை அனஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கி றார்கள்.20

பாடம் : 74

உமான் மற்றும் பஹ்ரைனின் செய்தி 21

4383 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒருமுறை) பஹ்ரைனின் நிதி வந்தால்

உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன் என்று என்னிடம் சொல்லியிருந்தார்கள். ஆனால், பஹ்ரைன் நிதி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இறக்கும் வரை வரவில்லை. அபூபக்ர் (ரலி) அவர்களிடம் (அவர்களின் ஆட்சிக் காலத்தில்) அந்த நிதி வந்த போது அவர்கள் பொது அறிவிப்புகள் செய்பவர் ஒருவரிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எவருக்காவது கடன் தரவேண்டியிருந்தாலோ அல்லது அவர்கள் எவருக்காவது ஏதேனும் வாக்களித்திருந்(து அதை நிறைவேற்றும் முன்பாக அவர்கள் இறந்து விட்டிருந்)தாலோ அவர் என்னிடம் வரட்டும் என்று அறிவிப்புச் செய்யும்படி உத்தரவிட்டார்கள். ஆகவே, நான் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து, நபி (ஸல்) அவர்கள், பஹ்ரைன் நிதி வந்தால் உனக்கு நான் இப்படி இப்படி மூன்று முறை (அள்ளிக்) கொடுப்பேன் என்று சொன்னார்கள் எனத் தெரிவித்தேன். அப்போது எனக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (சிறிது) கொடுத்தார்கள். அதற்குப் பின் அவர்களை நான் சந்தித்து மீண்டும் கேட்டேன். அப்போது அவர்கள் (எதுவும்) எனக்குத் தரவில்லை. பிறகு மீண்டும் அவர்களிடம் நான் சென்றேன். அப்போதும் அவர்கள் ஏதும் தரவில்லை. மீண்டும் நான் அவர்களிடம் மூன்றாவது முறையாகச் சென்றேன். அப்போதும் எனக்குத் தரவில்லை. ஆகவே, நான் அவர்களிடம், (முத-ல்) நான் உங்களிடம் வந்தேன். அப்போது நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு (இரண்டாம் முறையாக) வந்தேன். அப்போதும் நீங்கள் எனக்குத் தரவில்லை. பிறகு (மூன்றாம் முறை நான்) உங்களிடம் வந்தேன். அப்போதும் நீங்கள் எனக்குத் தரவில்லை. ஒன்று நீங்கள் எனக்குக் கொடுக்க வேண்டும். இல்லையென் றால், என்னிடம் நீங்கள் கருமித்தனம் காட்டுவதாகவே நான் கருதுவேன் என்று சொன்னேன். அப்போது அவர்கள் நான் கருமித்தனம் காட்டுவதாகவா நீ சொன்னாய். கருமித்தனத்தைவிடக் கொடிய நோய் ஏது? என்று மூன்று முறை கேட்டார்கள். ஒவ்வொரு முறை உனக்குத் தர மறுத்த போதும் உனக்குக் கொடுக்க வேண்டுமென்றே கருதினேன் என்றும் கூறினார்கள்.

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்களது அறிவிப்பில், நான் அபூபக்ர் (ரலி) அவர்களி டம் வந்தேன். அப்போது அவர்கள் என்னிடம், இதை எண்ணிக் கொள் என்று சொன்னார்கள். நான் அதை எண்ணிப் பார்த்தேன். அது ஐநூறு (தீனார்/திர்ஹம்) இருந்தது. அப்போது அவர்கள், இதே போன்று இன்னும் இரண்டு மடங்கை நீ எடுத்துக் கொள் என்று சொன்னார்கள் என ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.22

பாடம் : 75

அஷ்அரீ குலத்தார் மற்றும் யமன் வாசிகளின் வருகை 23

அவர்கள் (அஷ்அரீ குலத்தார்) என்னைச் சேர்ந்தவர்கள்; நான் அவர்களைச் சேர்ந்தவன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக அபூமூசா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.24

4384 அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும் என் சகோதரரும் யமன் நாட்டிலிருந்து வந்து (மதீனாவில்) சிறிது காலம் தங்கியிருந்தோம். அப்போது இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்களும் அவர்களுடைய தாயாரும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (அவர்களுடைய வீட்டினுள்) அதிகமாகச் சென்று வருவதையும் அவர்களுடனேயே எப்போதும் இருப்பதையும் கண்டு, அவர்கள் (இருவரும்) நபி (ஸல்) அவர்களின் குடும் பத்தைச் சேர்ந்தவர்கள் என்றே நாங்கள் கருதினோம்.25

4385 ஸஹ்தம் பின் முள்ரிப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அபூமூசா அல்அஷ்அரீ (ரலி) அவர்கள் ளஉஸ்மான் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்தில் கூஃபா நகரின் ஆட்சியாளராகன வருகை தந்த போது இந்த ஜர்ம் குடும்பத் தாரை26 (சந்தித்து அவர்களை)க் கண்ணியப்படுத்தினார்கள். (ஒருமுறை) நாங்கள் அவர் களிடம் அமர்ந்திருந்தோம். அப்போது அவர்கள் கோழியைப் பகல் உணவாக உண்டு கொண்டிருந்தார்கள். அப்போது கூட்டத்தில் ஒரு மனிதர் அமர்ந்திருந்தார். அபூமூசா

(ரலி) அவர்கள் அவரை உணவு உண்ண அழைத்தார்கள். அம்மனிதர், இது, (அசுத்தம்) எதையோ தின்று கொண்டிருப்பதை நான் பார்த்தேன். ஆகவே, நான் இதை அருவருக் கிறேன் என்றார். உடனே அபூமூசா (ரலி) அவர்கள், இங்கே வா! நபி (ஸல்) அவர்கள் இதை உண்பதை நான் பார்த்திருக்கிறேன் என்று சொன்னார்கள். அம்மனிதர், நான் இதை உண்ணமாட்டேன் என்று சத்தியம் செய்துள்ளேன் என்று சொன்னார். உடனே அபூமூசா (ரலி) அவர்கள், இங்கே வா! உன் சத்தியத்தைப் பற்றி நான் உனக்குத் தெரிவிக் கிறேன். நாங்கள், அஷ்அரீ குலத்தாரில் சிலர் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம். நாங்கள் (பயணம் செய்ய) வாகனம் அளித்து உதவும் படி அவர்களிடம் கேட்டோம். அவர்கள் எங்களுக்கு வாகனம் அளிக்க மறுத்து விட்டார்கள். ஆகவே, மீண்டும் அவர்களிடம் (பயணம் செய்ய) வாகனம் கேட்டோம். அவர்கள், நீங்கள் பயணம் செய்வதற்காக உங்களுக்கு வாகனம் தரமாட்டேன் என்று சத்தியம் செய்து விட்டார்கள். பிறகு சிறிது நேரம்தான் தங்கியிருந்திருப்பார்கள். அதற்குள் போரில் கிடைத்த ஒட்டகங்கள் கொண்டு வரப்பட்டன. எங்களுக்கு (பத்துக்குட்பட்ட ஒட்டகங்கள் கொண்ட மந்தைகளில்) ஐந்து மந்தைகள் வழங்கும்படி கட்டளையிட்டார்கள். நாங்கள் அதை எங்கள் கைவசம் பெற்றுக் கொண்ட போது, நபி (ஸல்) அவர்களுக்கு அவர்களின் சத்தியத்தை நாம் மறக்கடித்து விட்டோம். எனவே, நாம் ஒரு போதும் முன்னேற முடியாது என்று சொல்லிக் கொண்டோம். உடனே நான் அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பயணம் செய்ய வாகனம் தரமாட்டேன் என்று தாங்கள் சத்தியம் செய்து விட்டு இப்போது நாங்கள் பயணம் செய்ய எங்களுக்கு வாகனம் தந்து விட்டீர்களே என்று கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், ஆம்! ஆயினும், நான் ஒரு விஷயத்திற்காகச் சத்தியம் செய்து அதன் பின் அதுவல்லாத வேறொன்றை, அதைவிடச் சிறந்ததாகக் கண்டால் அந்தச் சிறந்ததையே செய்வேன் (சத்தியத்தை முறித்ததற்காகப் பரிகாரம் செய்து விடுவேன்) என்று சொன்னார்கள்.27

4386 இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பனூ தமீம் குலத்தார் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தார்கள். நபி (ஸல்) அவர்கள், நற்செய்தி பெற்றுக் கொள்ளுங்கள், பனூதமீம் குலத்தாரே! என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், நீங்கள் எங்களுக்கு நற்செய்தி சொல்லிவிட்டீர்கள் தானே! (இனி ஏதேனும்) எங்களுக்கு வழங்கிடுங்கள் என்று கேட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. அப்போது யமன்வாசிகளில் (அஷ்அரீ குலத்தார்) சிலர் வந்தனர். அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள், நீங்கள் நற்செய்தியை ஏற்றுக் கொள்ளுங்கள். ஏனெனில், பனூ தமீம் குலத்தார் அதை ஏற்க மறுத்து விட்டார்கள் என்று கூறினார்கள். அந்த யமனியர், ஏற்றுக் கொண்டுவிட்டோம், அல்லாஹ்வின் தூதரே! என்று பதிலளித்தனர்.28

4387 அபூமஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், இறை நம்பிக்கை இங்கேயுள்ளது என்று தம் கையால் யமன் நாட்டின் பக்கம் சைகை காட்டிக் கூறினார்கள். மேலும், கல் மனமும் (இரக்கமற்ற) கடின சுபாவமும் ஒட்டகங்களின் வால்களைப் பிடித்தபடி, அவற்றை அதட்டிக் கொண்டே (நாடோடிகளாகச்) சென்று கொண்டிருக்கும் (பாலைவன) ஒட்டக மேய்ப்பர்களிடையே காணப்படும். அங்கிருந்து தான் ஷைத்தானின் இரு கொம்புகளும் உதயமாகும். (அதாவது) ரபீஆ மற்றும் முளர் குலத்தாரிடையே அவை தோன்றும் என்று சொன்னார்கள்.29

4388 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யமன் வாசிகள் உங்களிடம் வந்திருக் கிறார்கள். அவர்கள் இளகிய நெஞ்சமுடைய வர்கள்; மென்மையான இதயமுடையவர்கள். இறை நம்பிக்கை, யமன் நாட்டைச் சேர்ந்த தாகும். விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்த தாகும். தற்பெருமையும் அகம்பாவமும் ஒட்டக மேய்ப்பர்(களிடமும் பண்ணை முதலாளி) களிட(மு)ம் காணப்படுகின்றன. கம்பீரமும் (அதே நேரத்தில்) அமைதியும் ஆடுகளின் உரிமையாளர்களிடம் காணப்படுகின்றன.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.30

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

4389 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

இறை நம்பிக்கை யமன் நாட்டைச் சேர்ந்ததாகும். குழப்பம் இங்கே (கிழக்கில்) உள்ளது. இங்குதான் ஷைத்தானின் கொம்பு உதயமாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.31

4390 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

யமன் வாசிகள் உங்களிடம் வந்துள்ளனர். அவர்கள் இளகியமனம் படைத்தவர்கள். மென்மையான நெஞ்சம் உடையவர்கள். மார்க்க ஞானம் யமன் நாட்டைச் சேர்ந்த தாகும்; விவேகமும் யமன் நாட்டைச் சேர்ந்ததாகும்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4391 அல்கமா பின் கைஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இப்னு மஸ்ஊத் (ரலி) அவர் களுடன் அமர்ந்திருந்தோம். அப்போது கப்பாப் (ரலி) அவர்கள் வந்து, அபூ அப்திர் ரஹ்மானே! நீங்கள் (குர்ஆன்) ஓதுவதைப் போல் இந்த இளைஞர்களால் ஓதமுடியுமா? என்று கேட்டார்கள். அதற்கு இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் உங்களுக்கு (குர்ஆன்) ஓதிக் காட்டும்படி இவர்களில் சிலருக்குக் கட்டளையிடுகிறேன் என்று சொன்னார்கள். அதற்கு கப்பாப்

(ரலி) அவர்கள், சரி! (ஓதிக் காட்டச் சொல் லுங்கள்) என்று சொன்னார்கள். இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள் (என்னிடம்), அல்கமா! நீங்கள் ஓதுங்கள் என்று கூற, ஸியாத் பின் ஹுதைர் (ரஹ்) அவர்களுடைய சகோதரர் ஸைத் பின் ஹுதைர்(ரஹ்) அவர்கள், அல்கமா, எங்களில் மிகச் சிறந்த ஓதுநராக இல்லாதிருக்க, அவரையா ஓதச் சொல்கிறீர்கள்? என்று கேட்டார். உடனே இப்னு மஸ்ஊத் (ரலி) அவர்கள், நீங்கள் விரும்பினால் நபி (ஸல்) அவர்கள் உங்கள் குலத்தார் (பனூ அசத்) பற்றியும், அல்கமா வுடைய குலத்தார் (நகஉ) பற்றியும் கூறியதை உங்களுக்கு நான் அறிவிப்பேன் என்று சொன்னார்கள். அப்போது நான் (குர்ஆனின் 19ஆவது) அத்தியாயம் மர்யமிலிருந்து

ஐம்பது வசனங்களை ஓதினேன். அப்போது அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் ளகப்பாப் (ரலி) அவர்களை நோக்கின, (இவரது ஓதல்) எப்படியிருப்பதாகக் கருதுகிறீர்கள்? என்று கேட்டதற்கு அவர்கள், நன்றாக ஓதினார் என்று பதிலளித்தார்கள். அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள், நான் எதை ஓதினாலும் அதை இவரும் ஓதி விடுவார் என்று சொன்னார்கள். பிறகு, கப்பாப் (ரலி) அவர்களின் பக்கம் திரும்பினார்கள். அப்போது அவர்கள் தங்க மோதிரம் ஒன்றை அணிந்திருந்தார்கள். ஆகவே, இந்த மோதிரம் கழற்றி எறியப்படும் வேளை (இன்னும்) வரவில்லையா? என்று கேட்டார்கள். கப்பாப் (ரலி) அவர்கள், இன்றைக்குப் பிறகு இதை நான் அணிந் திருப்பதை ஒரு போதும் நீங்கள் பார்க்க மாட்டீர்கள் என்று சொல்லிவிட்டு அதைக் கழற்றி எறிந்து விட்டார்கள்.32

02.11.2009. 03:11

64-(நபிகளார் காலத்துப்)போர்கள்4

பாடம் : 45

ஷாம் நாட்டில் நடைபெற்ற மூத்தா போர்.304

4260 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூத்தா போரின் போது நான் ஜஅஃபர்

(ரலி) அவர்கள் கொல்லப்பட்டு (விழுந்து) கிடக்க, அவர்களருகே நின்று (அவர்கள் அடைந்திருந்த) ஈட்டிக் காயங்களும் வாட் களின் காயங்களுமாக ஐம்பது காயங்களை எண்ணினேன். அவற்றில் ஒன்று கூட அவர் களுடைய முதுகில் (ஏற்பட்ட காயமாக) இருக்கவில்லை. (அனைத்தும் விழுப்புண் களாகவே இருந்தன.)

4261 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மூத்தா போரின் போது ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களைப் படைத் தளபதியாக நியமித்தார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஸைத் கொல்லப்பட்டு விட்டால் ஜஅஃபர் (தலைமையேற்கட்டும்!) ஜஅஃபர் கொல்லப்பட்டு விட்டால் அப்துல்லாஹ் பின் ரவாஹா (தலைமையேற் கட்டும்) என்று சொன்னார்கள். நான் அந்தப் புனிதப் போரில் அவர்களுடன் (பங்கேற்று) இருந்தேன். நாங்கள் ஜஅஃபர் பின் அபீ தா-ப் (ரலி) அவர்களைத் தேடிச் சென்ற போது கொலையுண்டவர்களில் அவரைக் கண்டோம். அவர்களுடைய உட-ல் இருந்த காயங்கள், ஈட்டிக் காயங்களும் அம்புக் காயங் களுமாக மொத்தம் தொண்ணூற்றுக்கும் அதிகமானவையாய் இருக்கக் கண்டோம்.305

4262 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஸைத் (பின் ஹாரிஸா -ரலி) அவர்களும் ஜஅஃபர் (பின் அபீதா-ப் -ரலி) அவர்களும் (அப்துல்லாஹ்) இப்னு ரவாஹா (ரலி) அவர்களும் (மூத்தா போர்க்களத்தில்) கொல்லப்பட்டு விட்ட செய்தியை, அது (மதீனாவிற்கு) வந்து சேர்வதற்கு முன்பே (இறைவனால் அறிவிக்கப் பெற்று மக்களுக்கு) நபி (ஸல்) அவர்கள் அறிவித்தார்கள். அப்போது சொன்னார்கள்:

(முத-ல் இஸ்லாமியச் சேனையின்) கொடியை ஸைத் பிடித்தார். அவர் கொல்லப்பட்டு விட்டார். அடுத்து ஜஅஃபர் பிடித்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார். அடுத்து இப்னு ரவாஹா பிடித்தார். அவரும் கொல்லப்பட்டு விட்டார்.

அறிவிப்பாளர் கூறுகிறார்: அப்போது நபி (ஸல்) அவர்களுடைய கண்கள் இரண்டும் கண்ணீரைச் சொரிந்து கொண்டிருந்தன. இறுதியில், அக் கொடியை அல்லாஹ்வின் வாட்களில் ஒரு வாள் (கா-த் பின் வலீத்) எடுத்தது. அல்லாஹ் (அவரது கரத்தில்)

முஸ்லிம்களுக்கு வெற்றியை அளித்து விட்டான் என்று சொன்னார்கள்.306

4263 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மூத்தா போரில்) இப்னு ஹாரிஸா, ஜஅஃபர் பின் அபீ தா-ப் , அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) ஆகியோர் கொல்லப்பட்ட செய்தி வந்த போது நபி (ஸல்) அவர்கள் கவலை கொண்ட முகத்தோடு அமர்ந் திருந்தார்கள். நான் கதவின் இடைவெளி வழியாக நபி (ஸல்) அவர்களைக் கவனித்துக் கொண்டிருந்தேன். அப்போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, அல்லாஹ்வின் தூதரே! என்றழைத்து, ஜஅஃபர் (ரலி) வீட்டுப் பெண்கள் (ஒப்பாரி வைத்து) அழுவதாகக் கூறினார். நபி (ஸல்) அவர்கள் அப்பெண்கள் (அவ்வாறு அழுவதைத்) தடுக்கும்படி கட்டளையிட்டார்கள். அவர் சென்று மீண்டும் வந்து, அவர்களை நான் தடுத்தேன். ஆனால், அவர்கள் (எனது சொல்லிற்குக்) கட்டுப்பட வில்லை என்றார். உடனே, நபி (ஸல்) அவர்கள், (நீ சென்று அவர்களைத் தடுத்து நிறுத்து என) மீண்டும் கட்டளையிட்டார்கள். மீண்டும் அவர் சென்று திரும்பி வந்து, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீது சத்தியமாக! எங்களை (அப்பெண்கள்) மிஞ்சி விட்டனர் என்றார்.

-அப்பெண்களின் வாயில் மண்ணை அள்ளிப் போடுங்கள் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள் என நான் நினைக்கிறேன்-

 பின்னர் நான் அம்மனிதரை நோக்கி, அல்லாஹ் உம் மூக்கை மண்கவ்வச் செய்வானாக! நபி (ஸல்) அவர்கள் உமக்குக் கட்டளையிட்டதையும் உம்மால் செய்ய முடியவில்லை; அவர்களைத் தொந்தரவு செய்வதையும் நீர் நிறுத்தவில்லை எனக் கூறினேன்.307

4264 ஆமிர் ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு உமர் (ரலி) அவர்கள், ஜஅஃபர் (ரலி) அவர்களின் மகனா(ர் அப்துல்லாஹ் பின் ஜஅஃப)ருக்கு முகமன் கூறினால், இரு சிறகுகள் உடையவரின் மகனே! உங்கள் மீது சாந்தி உண்டாகட்டும் என்று கூறுவார்கள்.308

4265 கா-த் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூத்தா போரின் போது (தீவிரமாகப் போர் புரிந்ததால்), என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து விட்டன; என் கரத்தில் யமன் நாட்டின் அகலமான வாள் ஒன்று மட்டுமே (உடையாமல்) எஞ்சியது.

4266 கா-த் பின் வலீத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மூத்தா போரின் போது (தீவிரமாகப் போர் புரிந்ததால்) என் கையில் இருந்த ஒன்பது வாட்கள் உடைந்து போயின. என்னுடைய அகலமான யமன் நாட்டு வாள் ஒன்று தான் என் கையில் உடையாமல் எஞ்சியிருந்தது.

4267 நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் (மூத்தா போருக்கு முன்பு ஒரு முறை நோயின் காரணத்தால்) மூர்ச்சையுற்று விட்டார்கள். உடனே (அன்னார் இறந்து விட்டார் என எண்ணிய என் தாயாரும்) அன்னாருடைய சகோதரி(யுமான) அம்ரா (ரலி) அவர்கள் அந்தோ! மலையாக இருந்தவரே! அப்படி இருந்தவரே! இப்படி இருந்தவரே! என்று (பலவாறாகப் புலம்பி) அழத்தொடங்கினார்கள். அவரைப் பற்றி ஒவ்வொன்றாக எடுத்துச் சொல்லலானார்கள்.

அப்துல்லாஹ் பின் ரவாஹா (ரலி) அவர்கள் மூர்ச்சை தெளிந்(து கண் விழித்)த போது, தம் சகோதரியை நோக்கி, நீ சொன்ன ஒவ்வொன்றுக்கும் என்னிடம், இவ்வாறுதான் நீ இருக்கிறாயா? என்று (வானவர் ஒருவரால்) கேட்கப்பட்டது என்று (அழுது புலம்பியதைக் கண்டிக்கும் தொனியில்) கூறினார்கள்.

4268 நுஅமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ரவாஹா(ரலி) அவர்களுக்கு (நோயின் காரணத்தால்) மூர்ச்சை ஏற்பட்ட போது இப்படி நடந்தது. ஆகவே, அவர்கள் (மூத்தா போரில்) இறந்து விட்ட (செய்தி எட்டிய) போது, அவருடைய சகோதரி (அவர் முன்பே கண்டித்திருந்த காரணத்தால்) அவருக்காக அழவில்லை.

பாடம் : 46

ஜுஹைனா குலத்தைச் சேர்ந்த ஹுரக்காத் கூட்டத்தாரிடம் நபி (ஸல்) அவர்கள் உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அனுப்பியது.309

4269 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

எங்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுரக்கா கூட்டத்தாரிடம் அனுப்பி வைத்தார்கள். நாங்கள் அந்தக் கூட்டத்தாரிடம் காலையில் சென்றடைந்தோம். (அவர்களுடன் நடந்த சண்டையில்) அவர்களைத் தோற்கடித்தோம். நானும் அன்சாரிகளில் ஒருவரும் அந்தக் கூட்டத்தைச் சேர்ந்த ஒருவரைக் கண்டோம். அவரைச் சுற்றி வளைத்துக் கொண்ட போது அவர்,

லா இலாஹ இல்லல்லாஹ் - அல்லாஹ் ஒருவனைத் தவிர வணக்கத்திற்குரியவர் வேறெவருமில்லை என்று சொல்ல, அந்த அன்சாரி (அவரைக் கொல்லாமல்) விலகிக் கொண்டார். நான் என் ஈட்டியால் அவரைக் குத்திக் கொன்று விட்டேன். நாங்கள் (திரும்பி) வந்த போது நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டவே அவர்கள், உஸாமாவே! அவர், லா இலாஹ இல்லல்லாஹ் என்று (ஏகத்துவ வாக்கியத்தை) மொழிந்த பின்னருமா அவரை நீ கொன்றாய்? என்று கேட்டார்கள். நான், (நாங்கள் அவரைக் கொன்றுவிடாமல்) தன்னைப் பாதுகாத்துக் கொள்ளவே அவர் அவ்வாறு சொன்னார் என்று சொன்னேன். (ஆனால், என் சமாதானத்தை ஏற்காமல்) நபி (ஸல்) அவர்கள் அந்தக் கேள்வியையே திரும்பத் திரும்பக் கேட்டுக் கொண்டிருந்தார்கள். எந்த அளவிற்கென்றால், நான், (அந்தப் பாவத்தைச் செய்த) அந்த நாளுக்கு முன்பாக இஸ்லாத்தை ஏற்காமல் (அதற்குப் பிறகு ஏற்று) இருந்திருந்தால் நன்றாயிருந் திருக்குமே; (பாவம் மன்னிக்கப் பட்டிருக்குமே!) என்று கூட நினைத்தேன்.

4270 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன்.310 அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைப் பிரிவுகளில் கலந்து கொண்டு ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை எங்களுக்கு உஸாமா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப் பட்டிருந்தார்கள்.311

4271 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன். அவர்கள் அனுப்பிக் கொண்டிருந்த படைக் பிரிவுகளில் கலந்து கொண்டு ஒன்பது புனிதப் போர்களுக்குச் சென்றுள்ளேன். (அவற்றில்) ஒரு முறை எங்களுக்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள். ஒரு முறை உஸாமா (ரலி) அவர்கள் தளபதியாக நியமிக்கப்பட்டிருந்தார்கள்.

4272 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் நபி (ஸல்) அவர்களுடன் ஒன்பது புனிதப் போர்களில் கலந்து கொண்டேன்.312 நான் (உஸாமா) இப்னு (ஸைத் பின்) ஹாரிஸா (ரலி) அவர்களுடன் புனிதப் போர் புரிந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள் உஸாமா

(ரலி) அவர்களை எங்களுக்குத் தளபதியாக நியமித்திருந்தார்கள்.

4273 யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்)அவர்களுடன் ஏழு புனிதப் போர்களில் கலந்து கொண்டேன் என்று சொல்லிவிட்டு கைபர் போர், ஹுதைபிய்யா (வில் நடக்கவிருந்து தவிர்க்கப்பட்ட) போர், ஹுனைன் போர், தூ கரத்போர் ஆகியவற்றைக் குறிப்பிட்டார்கள். அவற்றில் மீதியை நான் மறந்து விட்டேன்.

பாடம் : 47

மக்கா வெற்றியின் போது நடந்த புனிதப் போரும் ஹாத்திப் பின் அபீ பல்தஆ

(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் போர் தொடுக்கவிருக்கும் செய்தியை மக்காவாசிகளுக்கு (ஒரு பெண் மூலம் இரகசியமாக) அனுப்பி வைத்ததும்.313

4274 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னையும் ஸுபைர் பின் அவ்வாம் அவர்களையும் மிக்தாத் பின் அஸ்வத் அவர்களையும், நீங்கள் ரவ்ளத்து காக்

எனும் இடம் வரை செல்லுங்கள். ஏனெனில், அங்கு ஒட்டகச் சிவிகையில் ஒரு பெண் இருக்கிறாள். அவளிடம் ஒரு கடிதம் இருக்கும். அதை அவளிடமிருந்து எடுத்துக் கொள்ளுங்கள்என்று கூறி அனுப்பினார்கள். (அவ்வாறே) நாங்கள் சென்றோம். எங்களைச் சுமந்து கொண்டு எங்கள் குதிரைகள் விரைந் தோடின. இறுதியில், நாங்கள் ரவ்ளாஎனும் அந்த இடத்தை அடைந்தோம். அங்கு ஒரு (சிவிகைப்) பெண்ணைக் கண்டோம். நாங்கள் (அவளிடம்), கடிதத்தை வெளியே எடு என்று கூறினோம். அவள், என்னிடம் கடிதம் எதுவுமில்லை என்று சொன்னாள். நாங்கள், ஒன்று நீயாகக் கடிதத்தை எடுத்து (கொடுத்து) விடு; இல்லையேல் (உன்) ஆடையை நாங்கள் கழற்றி (சோதனையிட்டு) விடுவோம் என்று சொன்னோம். உடனே, அவள் (இடுப்பு வரை நீண்டிருந்த) தனது சடையின் பின்னல்களுக்கிடையேயிருந்து

கடிதத்தை வெளியே எடுத்தாள். நாங்கள் அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கொண்டு சென்றோம். அதில், ஹாத்திப் பின் அபீ பல்தஆ அவர்கள் மக்கா வாசிகளான இணைவைப்போரிடையே யுள்ள (பிரமுகர்கள்) சிலருக்கு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (ரகசியத்) திட்டங்கள் சிலவற்றை (முன்கூட்டியே) தெரிவித்திருந்ததைக் கண்டோம். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஹாத்திபே! என்ன இது?என்று கேட்டார்கள். ஹாத்திப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என் விஷயத்தில் அவசரப்பட்டு (நடவடிக்கை எடுத்து)விடாதீர்கள். நான் குறைஷிகளில் ஒருவனாக இருக்கவில்லை. அவர்களைச் சார்ந்து வாழ்ந்தவனாகவே இருந்து வந்தேன். தங்களுடன் இருக்கும் முஹாஜிர்களுக்கு அவர்களுடைய வீட்டா ரையும் சொத்துகளையும் பாதுகாப்பதற்கு மக்கா நகரில் உறவினர்கள் பலர் இருக்கின் றார்கள். எனக்கு அவர்களிடையே அத்தகைய உறவினர்கள் (எவரும்) இல்லாததால், (இணைவைப்பவர்களான) மக்காவாசிகளுக்கு நான் உபகாரம் எதையாவது செய்து அதற்குப் பிரதியுபகாரமாக அவர்கள் அங்குள்ள என் (பலவீனமான) உறவினர்களைக் காப்பாற் றட்டும் என்று விரும்பினேன். (அதனால், இணைவைப்பவர்கள் கேட்டுக் கொண்டதால் இந்தத் தகவலைத் தெரிவித்தேன்.) நான் என் மார்க்க(மான இஸ்லா)த்தை விட்டு வேறு மதத்தைத் தழுவுவதற்காகவோ, இஸ்லாத்தைத் தழுவிய பின் இறைமறுப்பை விரும்பியோ இவ்விதம் செய்யவில்லை என்று கூறினார்கள். (இதைக் கேட்ட) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் உங்களிடம் உண்மை பேசினார் என்று கூறினார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! என்னை விடுங்கள். இந்த நயவஞ்சகனின் கழுத்தை வெட்டிவிடுகிறேன்! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இவர் பத்ருப் போரில் கலந்து கொண்டிருக்கிறார். மேலும், உங்களுக் கென்ன தெரியும்? ஒரு வேளை, அல்லாஹ் பத்ருப் போரில் கலந்து கொண்டவர்களிடம் நீங்கள் விரும்பியதைச் செய்து கொள்ளுங்கள். உங்களை நான் மன்னித்து விட்டேன் என்று கூறி விட்டிருக்கலாம் என்று சொன்னார்கள்.314

அப்போது அல்லாஹ் பின்வரும் (60-வது) அத்தியாயத்தை அருளினான்: இறை நம்பிக்கை கொண்டவர்களே! எனக்கும் உங்களுக்கும் பகைவர்களாக இருப்போரை நண்பர்களாக எடுத்துக் கொண்டு, நட்பின் காரணத்தினால் (உங்களின் இரகசியங்களை) அவர்களுடன் (பரிமாறிக் கொண்டு) உறவாட வேண்டாம்! அவர்கள், உங்களிடம் வந்துள்ள சத்திய(வேத)த்தை மறுத்து விட்டவர்கள்......(60:1)

பாடம் : 48

ரமளான் மாதத்தில் நடந்த மக்கா வெற்றிப்போர்.315

4275 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் மக்கா வெற்றிப் போருக்காக (மக்கா நோக்கி)ப் புறப்பட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில், அப்போது நபி(ஸல்) அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். கதீத் எனும் இடத்தை-உஸ்ஃபானுக்கும் குதைதுக்கும் இடையே உள்ள நீர்ப்பகுதியை- அடைந்ததும் நோன்பை விட்டுவிட்டார்கள். அந்த மாதம் கழியும் வரையிலும் கூட அவர்கள் நோன்பு நோற்க வில்லை என்று வந்துள்ளது.316

4276 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் தம்முடன் முஸ்லிம்கள் பத்தாயிரம் பேரை அழைத்துக் கொண்டு (மக்கா வெற்றிப் போருக்காக) மதீனாவிலிருந்து மக்காவை நோக்கிப் புறப்பட்டார்கள்.

இது நபி (ஸல்) அவர்கள் மதீனாவிற்கு (ஹிஜ்ரத் செய்து) வருகை தந்ததிலிருந்து எட்டரை ஆண்டின் தொடக்கத்தில் நடை பெற்றது-

நபி (ஸல்) அவர்களும் அவர்களுடன் இருந்த முஸ்லிம்களும் நோன்பு நோற்றபடி பயணம் செய்தார்கள். இறுதியில் கதீத் என்னுமிடத்திற்குச் சென்று சேர்ந்தார்கள்.

-இந்த இடம் உஸ்ஃபானுக்கும் குதைத் எனுமிடத்திற்குமிடையே உள்ள நீர்ப் பகுதியாகும்- (அங்கு) நபி (ஸல்) அவர்கள் நோன்பை விட்டுவிட மக்களும் நோன்பை விட்டுவிட்டார்கள்.

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் கட்டளைகளில் பிந்தியது, அதற்கடுத்துப் பிந்தியது தான் எடுத்துக் கொள்ளப்பட வேண்டும் என்று கூறுகிறார்கள்.317

4277 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளான் மாதத்தில் (மக்கா வெற்றிக்குப் பின்) ஹுனைன் நோக்கி (புனிதப் போருக்காகப்) புறப்ப(டத் திட்ட மி)ட்டார்கள். அப்போது மக்கள் (நோன்பு நோற்கும் விஷயத்தில்) பல தரப்பட்டவர் களாயிருந்தனர். சிலர் நோன்பு நோற்றிருந்தார்கள்; சிலர் நோன்பு நோற்றிருக்கவில்லை. நபி (ஸல்) அவர்கள், தமது வாகனத்தில் நன்கு அமர்ந்து கொண்ட போது ஒரு பால் பாத்திரத்தை.... அல்லது தண்ணீர்ப் பாத்திரத்தை.... கொண்டு வரும்படிக் கூறி, அதைத் தம் உள்ளங்கையில் ....அல்லது தமது வாகனத்தில்.... வைத்தார்கள். பிறகு மக்களைப் பார்த்தார்கள். உடனே நோன்பை விட்டு விட்டவர்கள் நோன்பு நோற்றிருந்தவர் களிடம், நீங்களும் நோன்பை விடுங்கள் என்று சொன்னார்கள்.

4278 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (ரமளான் மாதம்) புறப்பட்டார்கள்.........

இது மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

4279 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மதீனாவிலிருந்து மக்காவிற்குப்) பயணம் மேற் கொண்டார்கள். அப்போது அவர்கள் நோன்பு வைத்திருந்தார்கள். உஸ்ஃபான் எனும் இடத்தை அடைந்ததும் தண்ணீர் உள்ள பாத்திரம் கொண்டுவரச் செய்து(ரமளானின்) பகற் பொழுதில் மக்கள் காணவேண்டு மென்பதற்காக அதை அருந்தி நோன்பை முறித்துக் கொண்டார்கள். மக்காவை அடையும் வரை நோன்பு நோற்கவில்லை.

இக்ரிமா (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்:

நபி (ஸல்) அவர்கள் (பயணத்தில்) நோன்பு நோற்றும் இருக்கிறார்கள்; நோன்பை விட்டும் இருக்கிறார்கள். ஆகவே, (பிரயாணத்தில் நோன்பு நோற்க) விரும்புபவர் நோன்பு நோற்கலாம்; நோன்பை விட்டுவிட விரும்புபவர் விட்டு விடவும் செய்யலாம் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறுவார்கள்.318

பாடம் : 49

மக்கா வெற்றி நாளில் (இஸ்லாமியச் சேனையின்) கொடியை நபி (ஸல்) அவர்கள் எங்கே நட்டு வைத்தார்கள்?

4280 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி கொள்ளப்பட்ட ஆண்டில் (அதனை வெற்றி கொள்வதற்காக மதீனாவிலிருந்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பயணம் மேற் கொண்ட போது, அவர்கள் வருகிற செய்தி (மக்கா) குறைஷிகளுக்கு எட்டியது. உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பற்றிய செய்தியை (உளவு) அறிவதற்காக அபூசுஃப்யான் பின் ஹர்ப், ஹகீம் பின் ஹிஸாம், புதைல் பின் வர்கா ஆகியோர் (மக்காவிலிருந்து) புறப்பட் டனர்.319 அவர்கள் பயணம் மேற் கொண்டு மர்ருழ் ழஹ்ரான் என்னும் இடத்திற்கு வந்து சேர்ந்த போது (அங்கே பல இடங்களில் மூட்டப்பட்டிருந்த) நெருப்புகளைக் கண்டனர். அவை, அரஃபா(வில் ஹாஜிகள் மூட்டும்) நெருப்புகள் போன்றிருந்தன. அப்போது அபூசுஃப்யான், இது என்ன நெருப்பு? இது அரஃபா நெருப்பைப் போன்றே இருக்கிறதே என்று கேட்டார். அதற்கு புதைல் பின் வர்கா, இது (குபாவில் குடியிருக்கும் குஸாஆ எனப்படும்) பனூஅம்ர் குலத்தாரின் நெருப்புகள் என்று கூறினார். உடனே அபூ சுஃப்யான் (பனூ)அம்ர் குலத்தவரின் எண்ணிக்கை இதை விட மிகக் குறைவாகும். (எனவே, அவர்களின் நெருப்புகளாக இருக்க வாய்ப்பில்லை) என்று கூறினார். அப்போது அவர்கள் மூவரையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காவலர்களில் சிலர் பார்த்து விட்டனர். உடனே, அவர்களை அடைந்து, அவர்களைப் பிடித்து (கைது செய்து) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் கொண்டு வந்தனர். பின்பு அபூ சுஃப்யான் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டார். அதற்குப் பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவை நோக்கி முன்னேறிச்) சென்ற போது அப்பாஸ் (ரலி) அவர்களிடம், குதிரைப் படை செல்லும் போது நெரிசல் ஏற்படக் கூடிய (குறுகலான) இடத்தில் அபூசுஃப்யானை நிறுத்தி வையுங்கள். அவர் முஸ்லிம்களைப் பார்க்கட்டும் (அவர்களது படை பலத்தைப் புரிந்து கொள்ளட்டும்) என்று கூறினார்கள். (அவ்வாறே) அப்பாஸ் (ரலி) அவர்கள் அவரை (அந்த இடத்தில்) நிறுத்தி வைத்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் அனைத்துக் குலத்தாரின் படைகளும் ஒவ்வொன்றாக அபூசுஃப்யானைக் கடந்து செல்லத் தொடங்கின. அவரை ஒரு படை கடந்து சென்றவுடன் அப்பாஸே! இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்டார். அதற்கு அப்பாஸ் (ரலி) அவர்கள், இவர்கள் ஃகிஃபாரீ குலத்தினர் என்று பதிலளித்தார்கள். (உடனே,) எனக்கும் ஃகிஃபார் குலத்தாருக்கும் என்ன சம்பந்தம்? (எங்களுக்கிடையில் பூசலோ மோதலோ இல்லையே!) என்று அபூசுஃப்யான் கூறினார். பிறகு ஜுஹைனா குலத்தார் அவரைக் கடந்து சென்றனர். அப்போது அபூசுஃப்யான் முன் போலவே கேட்டார். பிறகு (அவரைக் கடந்து) சஅத் பின் ஹுதைம் குலத்தினர் சென்றனர். அப்போதும் அதே போல அபூசுஃப்யான் கேட்டார். (பிறகு) சுலைம் குலத்தினர் சென்றனர். முன்பு போலவே அபூசுஃப்யான் கேட்டார். (அப்பாஸ் -ரலி- அவர்களும் முன்பு போலவே பதிலளித்தார்கள்.) கடைசியில் ஒரு (பெரிய) படை முன்னோக்கி வந்தது. அதைப் போன்ற (பெரும்) படையை அபூசுஃப்யான் பார்த்திருக்கவில்லை. இவர்கள் யார்? என்று அபூசுஃப்யான் கேட்க, இவர்கள் தாம் அன்சாரிகள். சஅத் பின் உபாதா இவர்களின் தலைவர். அவருடன் தான் (அன்சாரிகளின்) கொடியிருக்கிறது என்று அப்பாஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

அப்போது சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள், அபூசுஃப்யானே! இன்று, (தப்பிக்க முடியாத மாபெரும்) யுத்த நாளாகும். இன்று கஅபாவி(ன் புனித எல்லையி)னுள்ளே கூட யுத்தம் அனுமதிக்கப்படும் என்று (உணர்ச்சி வசப்பட்டுக்) கூறினார்கள். அதற்கு அபூ சுஃப்யான் அப்பாஸே! அழிவு நாளில் இது மிக நல்ல நாள் (குறைஷிகளுக்கு ஆபத்தே; என்றாலும், நீங்கள் கருணை காட்டுவீர்கள் என்ற நம்பிக்கை உண்டு) என்று கூறினார்.

பிறகு, ஒரு படை வந்தது. அது (இதுவரை வந்த) படைகளிலேயே மிகவும் சிறியதாக இருந்தது. அவர்களிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அவர்களுடைய தோழர்களும் இருந்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்குரிய கொடி, ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களிடம் இருந்தது. அபூ சுஃப்யானைக் கடந்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சென்ற போது அவர், (அல்லாஹ்வின் தூதர் -ஸல்- அவர்களிடம்) சஅத் பின் உபாதா என்ன சொன்னார் என்பது உங்களுக்குத் தெரியாதா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவர் என்ன சொன்னார்? என்று கேட்டார்கள். இப்படி... இப்படி... எல்லாம் கூறினார் என்று அபூசுஃப்யான் (விவரித்துச்) சொன்னார். அப்போது நபி (ஸல்) அவர்கள், உண்மைக்குப் புறம்பானதை சஅத் கூறிவிட்டார் என்று சொல்லிவிட்டு, மாறாக, இந்த நாள் இறையில்லம் கஅபாவை அல்லாஹ் கண்ணியப்படுத்தும் நாள். கஅபாவிற்குத் திரை போர்த்தப்படும் (முக்கிய மான) நாள் என்று கூறினார்கள். 320

அறிவிப்பாளர் உர்வா (பின் ஸுபைர்-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தக் கொடியினை (மக்காவின் பொது அடக்கத்தலத்திற்கு அருகிலுள்ள) ஹஜூன் என்னும் இடத்தில் நட்டு வைக்கும்படி உத்தரவிட்டார்கள்.

(மக்கா வெற்றிக்குப் பின்) அப்பாஸ்

(ரலி) அவர்கள் ஸுபைர் பின் அவ்வாம்

(ரலி) அவர்களிடம், அபூ அப்தில்லாஹ்வே! இங்கு தான் அந்தக் கொடியினை நட்டு வைக்கும்படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்கு உத்தரவிட்டார்கள் என்றார்கள். மேலும், நபி (ஸல்) அவர்கள் அன்றைய தினம் கா-த் பின் வலீத் (ரலி) அவர்களை மக்காவின் மேற்பகுதியான கதா என்னும் கணவாய் வழியாக (மக்காவிற்குள்) நுழையுமாறு உத்தரவிட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் குதா வழியாக நுழைந்தார்கள்.321 அன்றைய தினம் கா-த் பின் வலீத்

(ரலி) அவர்களின் குதிரைப் படையினரில் இருவரான ஹுபைஷ் பின் அல் அஷ்அர் (ரலி) அவர்களும் குர்ஸ் பின் ஜாபிர் அல்ஃபிஹ்ரீ (ரலி) அவர்களும் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டனர்.322

4281 முஆவியா பின் குர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தமது ஒட்டகத்தின் மீதமர்ந்தபடி அல்ஃபதஹ் என்னும் (48-வது) அத்தியாயத்தை தர்ஜீஉ என்னும்323 ஓசை நயத்துடன் ஓதிக் கொண்டிருந்தததை நான் கண்டேன் என்று அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூற நான் கேட்டேன். மக்கள் என்னைச் சுற்றிலும் திரண்டு விடுவார்கள் என்றில்லாவிட்டால் அப்துல்லாஹ் பின் முகஃப்பல் அவர்கள் தர்ஜீஉ செய்து ஓதிக்காட்டியதைப் போல் நானும் ஓதிக்காட்டியிருப்பேன்.

4282 உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 மக்கா வெற்றியின் போது, அல்லாஹ்வின் தூதரே! நாம் நாளை (மக்காவில்) எங்கு தங்குவோம்? என்று நான் கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (அபூதா-பின் மகன்) அகீல் நமக்கு வீடு எதையேனும் விட்டுச் சென்றுள்ளாரா? என்று கேட் டார்கள்.324

 

 

4283 பிறகு நபி (ஸல்) அவர்கள், இறை நம்பிக்கையாளர், இறைமறுப்பாளருக்கு வாரிசாக மாட்டார்; அவ்வாறே இறை மறுப்பாளரும் இறை நம்பிக்கையாளருக்கு வாரிசாக மாட்டார் என்று சொன்னார்கள்.

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம், அபூ

தா-புக்கு யார் வாரிசானார்கள்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அவருக்கு அகீலும் தா-பும் வாரிசானார்கள் என்று பதிலளித்தார்கள்.325

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடமிருந்து மஅமர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளதில் நபி (ஸல்) அவர்களின் ஹஜ்ஜின் போது நாளை நாம் எங்கு தங்குவோம்? என்று கேட்டதாக இடம் பெற்றுள்ளது.

அறிவிப்பாளர் யூனுஸ் பின் யஸீத் (ரஹ்) அவர்கள், ஹஜ்ஜின் போது என்றோ, மக்கா வெற்றியின் போது என்றோ (எதையும்) குறிப்பிடவில்லை.

4284 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ் (மக்கா மீது நமக்கு) வெற்றியளித்தால், இன்ஷா அல்லாஹ்- அல்லாஹ் நாடினால் நாம் தங்கப்போகும் இடம் (பனூ கினானா குலத்தாரின் முஹஸ்ஸப் என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (குறைஷிகள்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாக சூளுரைத்தார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4285 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றி முடிந்து) ஹுனைன் (போருக்குச்) செல்ல திட்டமிட்ட போது, அல்லாஹ் நாடினால் நாளை நாம் தங்கப் போகும் இடம் பனூ கினானா குலத்தாரின் (முஹஸ்ஸப் என்னும்) பள்ளத்தாக்கு ஆகும். அந்த இடத்தில் தான் (மக்கா குறைஷிகள்) இறைமறுப்பின் மீதே (நிலைத்து) இருக்கப் போவதாக சபதம் செய்தார்கள் என்று கூறினார்கள்.

4286 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி தினத்தில் தலையில் இரும்புத் தொப்பியுடன் (மக்காவினுள்) நுழைந்தார்கள். அதை அவர்கள் கழற்றிய போது ஒரு மனிதர் வந்து, இப்னு கத்தல் என்பவன் கஅபாவின் திரைகளைப் பிடித்துத் தொங்கிக் கொண்டிருக் கின்றான் எனக் கூறினார். உடனே நபி (ஸல்) அவர்கள், அவனைக் கொன்று விடுங்கள் என்று உத்தரவிட்டார்கள்.326

மாலிக் பின் அனஸ் (ரஹ்) அவர்கள், நாம் அறிந்தவரை நபி (ஸல்) அவர்கள் அன்று இஹ்ராம் அணிந்தவர்களாய் இருக்க வில்லை. இறைவனே மிக அறிந்தவன் என்று சொன்னார்கள்.

4287 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 கஅபாவைச் சுற்றிலும் முந்நூற்று அறுபது சிலைகள் இருக்க, நபி (ஸல்) அவர்கள் மக்கா நகருக்குள் நுழைந்தார்கள். அப்போது அவர்கள், சத்தியம் வந்து விட்டது; அசத்தியம் அழிந்து விட்டது. சத்தியம் வந்து விட்டது; (இனி) அசத்தியம் மீண்டும் ஒருமுறை பிறக்காது என்று கூறிக் கொண்டே, தம் கையிலிருந்த குச்சியால் அவற்றை (குத்தி) அடிக்கத் தொடங்கினார்கள்.327

4288 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா வெற்றி நாளில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்காவுக்கு) வந்த போது, கஅபாவில் சிலைகள் இருந்ததால் உள்ளே நுழைய மறுத்து அவற்றை அப்புறப்படுத்துமாறு கட்டளையிட்டார்கள். உடனே அவை அப்புறப்படுத்தப்பட்டன. அச் சிலைகளில் (குறி பார்ப்பதற்குரிய) அம்புகளைக் கையில் தாங்கியவாறு இருந்த (இறைத்தூதர் களான) இப்ராஹீம் (அலை), இஸ்மாயீல் (அலை) ஆகியோரின் உருவங்களும் அகற்றப்பட்டன. அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் இ(தைச் செய்த)வர்களை தன் கருணையைவிட்டு அப்பாற்படுத்துவானாக! அல்லாஹ்வின் மீது ஆணையாக! இவ்விரு வரும் அம்புகளின் மூலம் குறிபார்ப்பவர்க ளாக ஒரு போதும் இருந்ததில்லை என்பதை இ(தைச் செய்த)வர்கள் அறிந்தே வைத்திருக் கிறார்கள் என்று கூறினார்கள். பிறகு, கஅபா வில் நுழைந்தார்கள். அதன் மூலைகளில் (நின்று) தக்பீர் கூறினார்கள்; ஆனால், அதனுள் தொழாமல் வெளியேறி விட்டார்கள்.

இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இந்த ஹதீஸ் அறிவிக்கப்பட்டுள்ளது.328

பாடம் : 50

(மக்கா வெற்றியின் போது) நபி (ஸல்) அவர்கள் மக்காவின் மேற்பகுதியிலிருந்து ஊருக்குள் நுழைந்தது.

4289 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி நாளில் தம் வாகனத்தின் மீது உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை அமர வைத்துக் கொண்டு மக்காவின் மேற் பகுதியிலிருந்து முன்னேறிச் சென்றார்கள். அப்போது அவர்களுடன் பிலால் (ரலி) அவர்களும் கஅபாவின் பொறுப்பாளர்களில் ஒருவரான உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களும் இருந்தனர். நபி (ஸல்) அவர்களது வாகனம் இறுதியில் பள்ளிவாச-ல் சென்று மண்டியிட்டு அமர்ந்தது. நபி (ஸல்) அவர்கள், இறையில்லம் கஅபாவின் சாவியைக் கொண்டு வரும்படி உஸ்மான் பின் தல்ஹா (ரலி) அவர்களுக்கு உத்தரவிட்டார்கள். (சாவி கொண்டுவரப்பட்டதும்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கஅபாவைத் திறந்து கொண்டு) உஸாமா (ரலி), பிலால் (ரலி), உஸ்மான் (ரலி) ஆகியோருடன் உள்ளே நுழைந்தார்கள். அங்கே நீண்ட ஒரு பகல் நேரத்திற்குத் தங்கியிருந்தார்கள்; பிறகு வெளியே வந்தார்கள். மக்கள் கஅபாவினுள் நுழைய ஒருவரோடொருவர் போட்டியிட்டனர். நான் தான் (அதனுள்) முத-ல் நுழைந்தவன். அப்போது பிலால் (ரலி) அவர்கள் (கஅபாவின்) வாசலுக்குப் பின்னே நின்று கொண்டிருக்கக் கண்டேன். உடனே அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்கே தொழுதார்கள்? என்று கேட்டேன். பிலால் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் தொழுத இடத்தைச் சைகையால் சுட்டிக் காட்டினார்கள். நான் அவர்களிடம், எத்தனை ரக்அத்துகள் நபி (ஸல்) அவர்கள் தொழுதார்கள்? என்று கேட்க மறந்து விட்டேன்.329

4290 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியிலிருந்த கதா எனும் கணவாயின் வழியாக (மக்கா வினுள்) நுழைந்தார்கள்.

இதே அறிவிப்பு மற்றொரு வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.330

4291 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் மக்காவின் மேற்பகுதியான கதா எனும் கணவாய் வழியாக உள்ளே நுழைந்தார்கள்.

பாடம் : 51

நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது தங்கிய இடம்

4292 இப்னு அபீலைலா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ளுஹா தொழுகை தொழுததாக உம்முஹானீ (ரலி) அவர்களைத் தவிர வேறெவரும் எமக்கு அறிவிக்கவில்லை. ஏனெனில், நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரம் வெற்றி கொள்ளப்பட்ட நாளில் தமது வீட்டில் குளித்ததாகவும் பிறகு எட்டு ரக்அத்துகள் தொழுததாகவும் உம்முஹானீ (ரலி) அவர்கள் கூறினார்கள். மேலும் அவர்கள், நபி (ஸல்) அவர்கள் அதை விட விரைவாகத் தொழுத வேறெந்தத் தொழுகை யையும் நான் கண்டதில்லை. ஆயினும், அவர்கள் (அந்தத் தொழுகையிலும்) ருகூவையும் சுஜூதையும் பரிபூரணமாகச் செய்தார்கள் என்று சொன்னார்கள்.331

பாடம் : 52

4293 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் ருகூவிலும் சுஜூதிலும், சுப்ஹானக்கல்லாஹும்ம ரப்பனா வ பிஹம்திக்க அல்லாஹும் மஃக்ஃபிர் லீ - இறைவா! எம் அதிபதியே! உன்னைப் புகழ்ந்தபடி உன் தூய்மையை நான் எடுத் துரைக்கிறேன். இறைவா! எனக்கு மன்னிப் பளிப்பாயாக! என்று பிரார்த்திப்பார்கள்.332

4294 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொண்ட புண்ணியவான்களுடன் எனக்கும் (தம் அவையில்) இடமளித்து வந்தார்கள். ஆகவே, அவர்களில் சிலர், எங்களுக்கும் இவரைப் போன்ற (வயது ஒத்த) பிள்ளைகள் இருக்க, (அவர்களையெல்லாம் விட்டு விட்டு) இந்த இளைஞரை மட்டும் எதற்காக எங்களுடன் அமரச் செய்கிறீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு உமர் (ரலி) அவர்கள், அவர் நீங்கள் அறிந்துவைத்துள்ள (கல்வித் தகுதி படைத்த)வர்களில் ஒருவர் என்று பதிலளித்தார்கள். பிறகு, ஒரு நாள் அவர்களையெல்லாம் அழைத்தார்கள்; அவர்களுடன் என்னையும் அழைத்தார்கள். அவர்களுக்கு என் (தகுதியி)னைப் பற்றி உணர்த்திக் காட்டுவதற்காகவே என்னை அவர்கள் அழைத்ததாகக் கருதுகிறேன். (அவர்களெல்லாம் வந்தவுடன் அவர்களிடம்) உமர் (ரலி) அவர்கள், இதா ஜாஅ நஸ்ருல்லாஹி..... (நபியே!) இறைவனின் உதவியும் வெற்றியும் வந்து, மக்கள் கூட்டம் கூட்டமாக இறைமார்க்கத்தில் இணை வதை நீங்கள் பார்க்கும் போது உங்கள் இறைவனைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரை யுங்கள்; மேலும், அவனிடம் பாவ மன்னிப்புக் கோருங்கள்) என்னும் (திருக்குர்ஆனின் 110-வது அந் நஸ்ர்) அத்தியாயத்தை இறுதி வரை ஓதிக்காட்டி, இதற்கு நீங்கள் என்ன (விளக்கம்) கூறுகிறீர்கள்? என்று கேட்டார்கள். அவர்களில் சிலர், நமக்கு உதவியும் வெற்றியும் அளிக்கப்படும் போது அல்லாஹ்வைப் புகழும்படியும் அவனிடம் பாவமன்னிப்புக் கோரும்படியும் நாம் கட்டளையிடப்பட்டுள்ளோம் என்று (விளக்கம்) கூறினர். சிலர், எங்களுக்குத் தெரியாது என்றனர். அல்லது அவர்களில் சிலர் எந்தக் கருத்தும் கூறவில்லை. பிறகு உமர் (ரலி) அவர்கள் என்னிடம், இப்னு அப்பாஸே! நீங்களும் இப்படித் தான் கூறுகிறீர்களா? என்று கேட் டார்கள். நான், இல்லை என்றேன். அவர்கள், அப்படியென்றால் நீங்கள் என்ன கூறு கிறீர்கள்? என்று கேட்டார்கள். நான், அது, அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு அவர்களின் ஆயுட்காலம் முடிந்து (இறப்பு நெருங்கி) விட்டதை அறிவிப்பதாகும். ஆகவே, அல்லாஹ்வின் உதவியும் வெற்றியும் வந்து என்பதில் உள்ள வெற்றி என்பது மக்கா வெற்றியைக் குறிக்கும். மக்கா வெற்றி தான், (நபியே!) உங்கள் ஆயுட்காலம் முடியவிருப்பதற்கான அடையாளம். ஆகவே, நீங்கள் உங்கள் அதிபதியைப் புகழ்ந்து அவனது தூய்மையை எடுத்துரைத்து, அவனிடம் பாவமன்னிப்புக் கோருங்கள். அவன் (நீங்கள் மன்னிப்புக் கோருவதை ஏற்று) உங்களுக்கு மன்னிப்பளிப்பவன் ஆவான் என்பதே இதன் கருத்தாகும் என்று சொன்னேன். உமர்

(ரலி) அவர்கள், நீங்கள் இந்த அத்தியாயத்திலிருந்து என்ன (கருத்தை) அறிகின்றீர்களோ அதையே நானும் அறிகின்றேன் என்று சொன்னார்கள்.333

4295 சயீத் பின் அபீ சயீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(யஸீதின் ஆட்சியில் மதீனாவின் ஆளுந ராயிருந்த) அம்ர் பின் சயீத், (அப்துல்லாஹ் பின் ஸுபைர் -ரலி- அவர்களுக்கு எதிராக), மக்காவை நோக்கிப் படைகளை அனுப்பிய போது அவரிடம் அபூ ஷுரைஹ் அல் அத்வீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

தலைவரே! எனக்கு அனுமதி தாருங்கள். மக்கா வெற்றிக்கு மறு நாள், நபி (ஸல்) அவர்கள் கூறிய ஒரு செய்தியை உங்களுக்கு நான் கூறுகிறேன். என் காதுகள் அதைச் செவியுற்றன; என் உள்ளம் அதை நினைவில் வைத்திருக்கிறது; அவர்கள் அதைக் கூறும் போது என் கண்கள் அவர்களைப் பார்த்திருக்கின்றன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அல்லாஹ்வைப் புகழ்ந்து போற்றிவிட்டு, அல்லாஹ்வே மக்காவிற்குப் புனிதத்தை வழங்கியவன். அதற்குப் புனிதத்தை வழங்கிய வர்கள் மனிதர்கள் அல்லர். அல்லாஹ்வையும் இறுதி நாளையும் நம்பக் கூடிய எவருக்கும் இங்கே இரத்தத்தைச் சிந்துவதோ இங்குள்ள மரத்தை வெட்டுவதோ அனுமதிக்கப்பட வில்லை. அல்லாஹ்வின் தூதர் இங்கு போர் செய்ததனால் இதைப் பொது அனுமதி என்று யாரேனும் கருதினால், அல்லாஹ் தன் தூதருக்குத் தான் அனுமதி வழங்கினான்; உங்களுக்கு அனுமதி வழங்கவில்லை என்று கூறிவிடுங்கள். எனக்குக் கூட பக-ல் சிறிது நேரம் மட்டுமே (இங்கு போர் புரிய) அனுமதி அளிக்கப்பட்டது. இன்று அதன் புனிதத் தன்மை நேற்றைய அதன் புனிதத் தன்மையைப் போல் மீண்டு வந்து விட்டது. (இதை இங்கு) வந்திருப்போர் வராதவருக்குச் சொல்லி விடுங்கள் என்று கூறினார்கள்.

அபூஷுரைஹ் (ரலி) அவர்களிடம், இதற்கு அம்ர் உங்களுக்கு என்ன பதில் கூறினார்? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், அபூ ஷுரைஹே! உம்மை விட இதைப் பற்றி நான் நன்கு அறிந்தவன். நிச்சயமாக, ஹரம் (புனித பூமி) குற்றவாளிக்கும், கொலை செய்து விட்டு, அல்லது கொள்ளை அடித்து விட்டு ஒடி

வந்தவனுக்கும் பாதுகாப்பு அளிக்காது என அம்ர் கூறினார்கள் என்று பதிலளித்தார்கள்.334

4296 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றி ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்த போது, அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் மது வியாபாரத்தைத் தடை செய்து விட்டார்கள் என்று அவர்கள் சொல்ல நான் கேட்டி ருக்கிறேன்.

பாடம் : 53

மக்கா வெற்றியின் போது நபி (ஸல்) அவர்கள் மக்காவில் தங்கியிருந்தது.

4297 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள், நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையைச் சுருக்கி (கஸ்ரு செய்து) தொழுதவர்களாக (மக்கா நகரில்) பத்து நாட்கள் தங்கினோம்.335

4298 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் மக்கா நகரில் இரண்டு ரக்அத்துகள் (கஸ்ராகத்) தொழுத படி பத்தொன்பது நாட்கள் தங்கியிருந்தார்கள்.336

4299 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஒரு பயணத்தின் போது நபி (ஸல்) அவர்களுடன் தொழுகையைச் சுருக்கித் தொழுதவர்களாக பத்தொன்பது நாட்கள் தங்கினோம்.

 (பொதுவாக) நாங்கள் (பிரயாணம் மேற் கொண்டு தங்கினால்) பத்தொன்பது நாட்கள் வரை சுருக்கித் தொழு(தபடி தங்கு) வோம். அதற்கு மேலும் நாங்கள் தங்கும் போது (சுருக்கித் தொழாமல் வழக்கப்படி) முழுமையாகத் தொழுவோம்.

பாடம் : 54

4300 இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் ஸஅலபா பின் ஸுஐர் (ரலி) அவர்கள்-அன்னாரின் முகத்தை நபி (ஸல்) அவர்கள் மக்கா வெற்றி ஆண்டில் (அன்போடு) தடவிக் கொடுத்திருந்தார்கள் - எனக்குத் தெரிவித்தார்கள்.....337

4301 ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களுடன் இருந்த போது, அபூ ஜமீலா சுனைன் (ரலி) அவர்கள், தாம் நபி (ஸல்) அவர்களின் தோழமையைப் பெற்றிருந்த தாகவும் அவர்களுடன் மக்கா வெற்றி ஆண்டில் (மக்கா நோக்கி இஸ்லாமியச் சேனையில் ஒருவராகப்) புறப்பட்டதாகவும் சொன்னார்கள்.

4302 அம்ர் பின் ச-மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மக்கள் கடந்து செல்லும் பாதையிலிருந்த ஒரு நீர் நிலையின் அருகே இருந்தோம். வாகனத்தில் பயணிப்பவர்கள் எங்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். நாங்கள் அவர்களிடம், மக்களுக் கென்ன? மக்களுக்கென்ன? இந்த மனிதருக்கு (முஹம்மதுக்கு) என்ன? என்று கேட்டுக் கொண்டிருந்தோம். அதற்கு அவர்கள், அந்த மனிதர் தன்னை அல்லாஹ் (இறைத் தூதராக) அனுப்பியிருப்பதாக.... அல்லது அல்லாஹ் அவரை இன்ன (குர்ஆன்) போதனைகளைக் கொடுத்து அனுப்பியிருப்பதாகக்.... கூறுகிறார் என்று (குர்ஆனின் சில வசனங்களை ஓதிக் காட்டிக்) கூறுவார்கள். உடனே நான் அந்த (இறை)வாக்கை மனப்பாடம் செய்து கொள்வேன். அது என் நெஞ்சில் பதிக்கப்பட்டது போல ஆகிவிட்டது. அரபுகள், தாங்கள் இஸ்லாத்தை ஏற்றுக் கொள்ள மக்கா வெற்றியை (தக்க தருணமாகக் கருதி) எதிர்பார்த்துக் கொண்டிருந்தார்கள். ஆகவே அவர்கள், அவரை அவருடைய குலத்தா(ரான குறைஷிய)ருடன் விட்டு விடுங்கள். ஏனெனில், அவர்களை அவர் வென்றுவிட்டால் அவர் உண்மையான இறைத்தூதர் தாம் (என்று நிரூபணமாகிவிடும்) என்று சொன்னார்கள். மக்கா வெற்றியாளர்கள் சம்பவம் நிகழ்ந்த வுடன் ஒவ்வொரு குலத்தாரும் விரைந்து வந்து இஸ்லாத்தை ஏற்றுக் கொண்டனர். என் தந்தை என் குலத்தாருடன் விரைந்து இஸ்லாத்தை ஏற்றார். நபி (ஸல்) அவர்களிட மிருந்து என் தந்தை திரும்பி வந்த போது, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் உண்மையிலேயே நபி (ஸல்) அவர்களிடமிருந்து உங்களிடம் வந்துள்ளேன். நபி (ஸல்) அவர்கள், இன்ன தொழுகையை இன்ன வேளையில் தொழுங்கள். இன்ன வேளையில் இப்படித் தொழுங்கள். தொழுகை (வேளை) வந்து விட்டால் உங்களில் ஒருவர் பாங்கு சொல்லட்டும்; உங்களில் எவர் குர்ஆனை அதிகம் அறிந்து வைத்துள்ளாரோ அவர் உங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவிக் கட்டும் என்று சொன்னார்கள் எனக் கூறினார்கள். ஆகவே, மக்கள் (குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார் எனத்) துருவிப் பார்த்த போது நான் பயணிகளிடம் கேட்டு அறிந்து கொண்ட காரணத்தால் என்னை விட அதிகமாகக் குர்ஆனை அறிந்தவர்கள் எவரும் (எங்களிடையே) இருக்கவில்லை. ஆகவே, (தொழுவிப்பதற்காக) என்னை அவர்கள் முன்னால் நிறுத்தினார்கள். நான் அப்போது ஆறு அல்லது ஏழு வயதுடைய(சிறு)வனாக இருந்தேன். நான் ஒரு சால்வையைப் போர்த்தியிருந்தேன். நான் சஜ்தா செய்யும் போது அது என் முதுகை (விட்டு நழுவிப் பின் புறத்தைக்) காட்டிவந்தது. ஆகவே, அந்தப் பகுதிப் பெண்மணியொருவர், உங்கள் ஓதுவாரின் பின்புறத்தை எங்களிடமிருந்து மறைக்க மாட்டீர்களா? என்று கேட்டார். ஆகவே, அவர்கள் (துணியொன்றை) வாங்கி வந்து எனக்குச் சட்டையொன்றை வெட்டித் தந்தார்கள். நான் அந்தச் சட்டையின் காரணத்தால் அடைந்த மகிழ்ச்சியைப் போல வேறெதனாலும் மகிழ்ச்சியடைந்ததில்லை.

4303 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

உத்பா பின் அபீ வக்காஸ் தம் சகோதரர் சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன் என் மகன் தான் என்று கூறி (மக்கா செல்லும் போது) அவனைப் பிடித்து(வைத்து)க் கொள்ளும்படி உறுதி மொழி வாங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்கா வெற்றியின் சமயம் மக்காவுக்கு (தம் தோழர்களுடன்) வருகை தந்த போது, சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதரை நோக்கிச் சென்றார்கள். அவர்களுடன் ஸம்ஆவின் மகன் அப்து (ரலி) அவர்களும் சென்றார்கள். சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம், ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைச் சுட்டிக் காட்டி), இவன் என் சகோதரரின் மகன்; இவனைத் தன் மகன் என்று (சொல்லி, இவனைப் பிடித்துக் கொள்ளும்படி என்னிடம்) என் சகோதரர் உறுதிமொழி வாங்கியுள்ளார் என்று சொன்னார். அப்து பின் ஸம்ஆ, அல்லாஹ்வின் தூதரே! இவன் என் சகோதரன். இவன் (என் தந்தை) ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகன்; அவள் என் தந்தையின் அதிகாரத்தில் இருந்த போது தான் இவன் பிறந்தான் என்று சொன்னார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஸம்ஆவின் அடிமைப் பெண்ணுடைய மகனைக் கூர்ந்து பார்த்தார்கள். அவன் (மக்காவாசிகளிலேயே) உத்பா பின் அபீ வக்காஸுக்கு (தோற்றத்தில்) மிகவும் ஒத்திருந்தான். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவன் உனக்குத் தான்; இவன் உன் சகோதரன் தான், அப்து பின் ஸம்ஆவே! என்று சொன்னார்கள். அவன் ஸம்ஆவின் அதிகாரத்தில் (அவனுடைய தாய்) இருந்த போது பிறந்த காரணத்தால் அப்படிச் சொன்னார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்பா பின் அபீ வக்காஸின் சாய-ல் அந்த இளைஞன் இருந்ததைப் பார்த்த காரணத்தால், (தம் துணைவியார் சவ்தா -ரலி- அவர்களை நோக்கி, ஸம்ஆவின் மகள்) சவ்தாவே! இவனிடமிருந்து நீ திரையிட்டுக் கொள் என்று சொன்னார்கள்.

இப்னு ஷிஹாப் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள்

(ஒரு பெண்) யாருடைய அதிகாரத்தில் இருக்கும் போது குழந்தை பிறக்கின்றதோ அவருக்கே அக்குழந்தை உரியது. விபசாரம் செய்தவருக்கு இழப்பு தான் உரியது என்று சொன்னார்கள் என ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.338

மேலும் அபூஹுரைரா (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களின் இந்தத் தீர்ப்பை (மக்களுக்கு) உரக்க அறிவித்து வந்தார்கள்.

4304 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் மக்கா வெற்றிப்போரின் போது (மக்ஸூமி குலத்துப்) பெண்ணொருத்தி திருடி விட்டாள். ஆகவே, அவளுடைய குலத்தார் (தண்டனைக்கு) அஞ்சி அவளுக்காகப் பரிந் துரைக்கும்படி கோரி, உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களிடம் வந்தார்கள். உஸாமா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம்) அவளுக்காகப் (பரிந்து) பேசிய போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களது முகம் (கோபத்தால்) நிறம் மாறியது. அவர்கள், அல்லாஹ்வின் தண்டனைகளில் ஒன்றைக் குறித்தா (அதைத் தளர்த்தி விடும் படி) என்னிடம் நீ (பரிந்து) பேசுகிறாய்? என்று கேட்டார்கள். உடனே உஸாமா (ரலி) அவர்கள், எனக்காக (அல்லாஹ்விடம்) பாவமன்னிப்புக் கோரி பிரார்த்தியுங்கள், அல்லாஹ்வின் தூதரே! என்று சொன்னார்கள். மாலை நேரம் வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உரையாற்றிட எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனது தகுதிக்கேற்ற படி போற்றிப் புகழ்ந்து விட்டுப் பிறகு, நிற்க, உங்களுக்கு முன்னிருந்த மக்களை அழித்த தெல்லாம் அவர்கள், தம்மிடையேயுள்ள உயர்ந்த(குலத்த)வன் திருடிவிடும் போது அவனை (தண்டிக்காமல்) விட்டுவந்ததும், பலவீனமான(பிரிவைச் சேர்ந்த)வன் திருடி விடும் போது அவனுக்கு தண்டனை கொடுத்து வந்ததும்தான். முஹம்மதின் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீதாணையாக! முஹம்மதின் மகள் பாத்திமாவே திருடி விட்டிருந்தாலும் அவளது கையையும் நான் வெட்டியிருப்பேன் என்று சொன்னார்கள். பிறகு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்தப் பெண்ணின் கையை வெட்டும்படி உத்தரவிட, அவ்வாறே அவளது கை வெட்டப்பட்டது. அதன் பிறகு அவள் அழகிய முறையில் பாவமன்னிப்புக் கோரி (திருந்தி) விட்டாள்;- மேலும் மணம் புரிந்தும் கொண்டாள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அதன் பிறகு அவள் என்னிடம் வந்து கொண்டிருந்தாள். நான் அவளது தேவையை(ப் பூர்த்தி செய்யும்படி) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் முறையிடுவேன்.339

4305 & 4306 முஜாஷிஉ பின் மஸ்ஊத் பின் ஸஅலபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றிக்குப் பிறகு, நான் என் சகோதரர் (முஜா-த் பின் மஸ்ஊத்) உடன் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, அல்லாஹ்வின் தூதரே! ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதிமொழியை என் சகோதரரிடம் தாங்கள் பெறவேண்டுமென்பதற்காக அவரை அழைத்துக் கொண்டு நான் தங்களிடம் வந் துள்ளேன் என்று சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், (மக்கா வெற்றிக்கு முன்பு) ஹிஜ்ரத் செய்தவர்கள் அதிலுள்ள நன்மையை (முன்பே) கொண்டு சென்று விட்டார்கள் என்று பதில் சொன்னார்கள். நான், (அப்படி யென்றால்) எதற்காக அவரிடம் தாங்கள் உறுதிமொழி பெறுவீர்கள் என்று கேட்டேன். அதற்கு அவர்கள், இஸ்லாத்தின் படி நடக்கவும் இறை நம்பிக்கையில் நிலைத்திருக்கவும், (தேவைப்படும் போது) அறப்போர் புரியவும் நான் அவரிடம் உறுதி மொழி பெறுவேன் என்று பதிலளித்தார்கள்.340

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ உஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

இதற்குப் பின் நான் (முஜாஷிஉ அவர்களின் சகோதரர்) மஅபத் (என்னும் முஜா-த்) அவர்களைச் சந்தித்தேன். அவரே சகோதரர்கள் இருவரில் பெரியவராக இருந்தார். (இந்தச் செய்தி பற்றி) அவரிடம் விசாரித்தேன். அவர், முஜாஷிஉ உண்மையே சொன்னார் என்று கூறினார்.

4307 & 4308 முஜாஷிஉ பின் மஸ்ஊத்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிஜ்ரத் செய்வதற்கான உறுதி மொழி யைப் பெறுவதற்காக (என் சகோதரர்) அபூ மஅபத் (முஜா-த்) அவர்களை அழைத்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன். நபி (ஸல்) அவர்கள், ஹிஜ்ரத், அதற்குரியவர்களுக்குக் கடமையாகி (நிறைவேறி) முடிந்து விட்டது. இனி , இஸ்லாத்தின்படி நடந்திடவும் அறப்போர் புரிந்திடவும்தான் இவரிடம் நான் உறுதிமொழி பெறுவேன் என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர் அபூ உஸ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

(இதை எனக்கு அறிவித்த முஜாஷிஉ

-ரலி-அவர்களின் சகோதரர்) அபூ மஅபத் (முஜா-த்-ரலி) அவர்களைப் பின்னர் நான் சந்தித்து, அவரிடம் (இந்தச் செய்தி பற்றி) விசாரித்தேன். அவர், முஜாஷிஉ உண்மையே சொன்னார் என்று கூறினார்.

அபூ உஸ்மான் (ரஹ்) அவர்கள் முஜாஷிஉ (ரலி) அவர்களிடமிருந்து அறிவிக் கின்ற மற்றோர் அறிவிப்பில், நான் என் சகோதரர் முஜா-துடன் நபி (ஸல்) அவர் களிடம் வந்தேன் என்று இடம் பெற்றுள்ளது.

4309 முஜாஹித் பின் ஜப்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம், நான் ஹிஜ்ரத் செய்து, ஷாம் நாட்டிற்குச் செல்ல விரும்புகிறேன் என்று சொன்னேன். அதற்கு அவர்கள், (மக்கா வெற்றிக்குப் பிறகு) ஹிஜ்ரத் என்பது இல்லை. ஆயினும், ஜிஹாத் - அறப்போர் உண்டு. எனவே, நீ சென்று (அறப்போரில் கலந்து கொள்ளும்) உன் (விருபத்தி)னை முன் வை! (அதற்கான வாய்ப்பு) எதுவும் உனக்குக் கிடைத்தால் அவ்வாறே சென்று அறப்போர் புரி. இல்லையேல் திரும்பிவிடு என்று சொன்னார்கள்.341

4310 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறினார்கள்:

நான் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் (நான் ஹிஜ்ரத் செய்து, ஷாம் நாட்டிற்குச் செல்ல விரும்புவதாகக்) கூறினேன். அதற்கு அவர்கள், இன்று.... அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குப் பிறகு.... ஹிஜ்ரத் என்பதே கிடையாது என்று முன்பு (அறி வித்ததைப்) போலவே சொன்னார்கள்.

4311 முஜாஹித் பின் ஜப்ர் அல் மக்கீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், (மக்கா) வெற்றிக்குப் பிறகு ஹிஜ்ரத் என்பதே கிடையாது என்று சொல்லிவந்தார்கள்.

4312 அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது :

நான் உபைத் பின் உமைர் அல் லைஸீ (ரஹ்) அவர்களுடன் ஆயிஷா (ரலி) அவர்களைச் சந்தித்தேன். அவர்களிடம் ஹிஜ்ரத்தைப் பற்றி அவர் கேட்டார். அதற்கு அவர்கள், இன்று (மக்கா வெற்றி கொள்ளப்பட்டுவிட்ட பிறகு) ஹிஜ்ரத் கிடையாது. (ஒரு காலத்தில்,) இறை நம்பிக்கையாளர்கள் (தம் மார்க்கத்தைப் பின்பற்ற முடியாதவாறு) தாம் சோதிக்கப்பட்டு விடுவோமோ என்று அஞ்சி, தமது மார்க்கத்துடன் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (திருப்தியுறச் செய்வதை) குறிக்கோளாகக் கொண்டு (தம் தாய் நாட்டைத் துறந்து) ஓடி வந்தார்கள். ஆனால், இன்றோ அல்லாஹ் இஸ்லாத்தை ஓங்கச் செய்து விட்டான். இன்று இறை நம்பிக்கையாளர், தான் விரும்பிய இடத்தில் தன் இறைவனை வணங்கலாம். ஆயினும், (ஹிஜ்ரத் தான் இனி இல்லையே தவிர) ஜிஹாத் (எனும் அறப்போர்) புரிவதும் (அதற்காகவும் பிற நற்செயல்களுக்காகவும்) நாட்டம் கொள்வதும் (இன்றும்) உண்டு என்று பதிலளித்தார்கள்.342

4313 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மக்கா வெற்றியின் போது (மக்களிடையே) எழுந்து நின்று, அல்லாஹ் வானங்களையும் பூமியையும் படைத்த போதே மக்காவைப் புனிதப்படுத்தி விட்டான். ஆகவே, அது அல்லாஹ் புனிதப்படுத்திய காரணத்தால் இறுதி நாள் வரை புனிதமானதாகும். எனக்கு முன்பும் எவருக்கும் இங்கு போர் புரிவது அனுமதிக்கப் படவில்லை. எனக்குப் பிறகும் எவருக்கும் அது அனுமதிக்கப்படாது. எனக்குக் கூட (மக்கா வெற்றிகொள்ளப்படும் இத் தருணத்தில்) சிறிது நேரம் மட்டுமே இங்கு போர் புரிய அனுமதிக்கப்பட்டது. இங்குள்ள வேட்டைப் பிராணிகளை விரட்டக்கூடாது. இங்குள்ள மரங்களை வெட்டக்கூடாது. இங்குள்ள புற்பூண்டுகளைக் கிள்ளக்கூடாது. பிறர் தவறவிட்ட பொருளை அதை அறிவிப்பவர் தவிர வேறவரும் எடுக்கக் கூடாது என்று சொன்னார்கள். உடனே, அப்பாஸ் பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இத்கிர் எனும் புல்லைத் தவிரவா? ஏனெனில், அது உலோகத் தொழிலாளர்களுக்கும் வீடுகளுக்கும் தேவைப்படுகின்றதே என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள் (சிறிது நேரம்) மௌனமாயிருந்து விட்டுப் பிறகு, இத்கிரைத் தவிரத் தான். ஏனெனில், அதை வெட்டிப் பயன்படுத்துவது அனுமதிக்கப்பட்டதாகும் என்று பதிலளித்தார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.343

பாடம் : 55

அல்லாஹ் கூறுகிறான்:

 (போர்க்)களங்கள் பலவற்றில் (உங்கள் எண்ணிக்கை குறைவாயிருந்தும்) திண்ணமாக அல்லாஹ் உங்களுக்கு உதவி செய்திருக் கின்றான். எனினும், ஹுனைன் போரன்று உங்களை அகமகிழச் செய்து கொண்டிருந்த, உங்களுடைய அதிகமான (மக்கள்) தொகை உங்களுக்கு எந்தப் பலனையும் அளிக்க வில்லை. பூமி இவ்வளவு விசாலமாயிருந்தும், (அப்போது அது) உங்களுக்கு நெருக்கடி மிக்கதாகத் தோன்றியது. அன்றி, நீங்கள் புறமுதுகிட்டு ஓடவும் முற்பட்டீர்கள்.... (9:25-27)344

4314 இஸ்மாயீல் பின் அபீ கா-த் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களின் கையில் வெட்டுக் காயம் ஒன்றைக் கண்டேன். அவர்கள், ஹுனைன் போரில் நபி (ஸல்) அவர்களுடன் நான் இருந்த போது இந்தக் காயம் எனக்கு ஏற்பட்டது என்றார்கள். நான், ஹுனைன் போரில் நீங்கள் கலந்து கொண்டீர்களா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (ஆம், அதிலும்) அதற்கு முன்பு நடந்த போர்களிலும் கலந்து கொண்டேன் என்றார்கள்.

4315 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஒரு மனிதர் வந்து, அபூ உமாராவே! ஹுனைன் போரின் போது நீங்கள் (தோற்றுப்) பின்வாங்கி விட்டீர்களா? என்று கேட்டார். நான், நபி (ஸல்) அவர்கள் தோற்றுப் பின் வாங்கிச் செல்லவில்லை என்பதற்கு நான் சாட்சியமளிக்கின்றேன். ஆயினும், சமுதாயத்தில் அவசரக்காரர்கள் சிலர் (பதுங்கியிருந்த எதிரிகளைக் கவனிக்காது அவர்களின் போர்ச்செல்வங்களைச் சேகரிப் பதில்) அவசரப்பட்டுவிட்டார்கள். அப்போது (அம்பெய்வதில் வல்லவர்களான) ஹவாஸின் குலத்தார் அவர்கள் மீது (சரமாரியாக) அம்பெய்தார்கள். அப்போது அபூசுஃயான் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களது பைளா என்னும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் தலையைப் பிடித்துக் கொண்டிருக்க, நான் இறைத் தூதர்தாம்; இது பொய்யல்ல. நான் அப்துல் முத்த-பின் (மகனுடைய) மகன் ஆவேன் என்று நபி (ஸல்) அவர்கள் (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.345

4316 அபூ இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களிடம், நீங்கள் ஹுனைன் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் தோற்றுப் பின்வாங்கிச் சென் றீர்களா? என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், (எங்களில் சிலர் பின் வாங்கிச் சென்றது உண்மையே. ஆயினும்,) நபி (ஸல்) அவர்களோ பின்வாங்கிச் செல்லவில்லை. (எதிரிகளான) ஹவாஸின் குலத்தார் அம்பெய் வதில் தேர்ச்சி பெற்றவர்களாயிருந்தனர். நபி (ஸல்) அவர்கள், நான் இறைத்தூதர்தாம்; இது பொய்யல்ல. நான் அப்துல் முத்த-பின் (மகனுடைய) மகன் ஆவேன் என்று (பாடிய படிக்) கூறிக் கொண்டிருந்தார்கள்.

4317 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைஸ் குலத்தைச் சேர்ந்த ஒரு மனிதர் என்னிடம், நீங்கள் ஹுனைன் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை (தனியே) விட்டு (புறமுதுகிட்டு) ஓடிவிட்டீர் களா? என்று கேட்டார். நான், (எங்களில் சிலர் அப்படி ஓடியது உண்மைதான்;) ஆயினும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பின்வாங்கி ஓடவில்லை. ஹவாஸின் குலத்தார் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவர் களாயிருந்தனர். நாங்கள் அவர்கள் மீது (முத-ல்) தாக்குதல் நடத்திய போது அவர்கள் தோற்று (சிதறியோடி) விட்டனர். ஆகவே, நாங்கள் போர்ச் செல்வங்களைச் சேகரிக்க விரைந்தோம். அப்போது நாங்கள் அம்புகளை எதிர்கொள்ள வேண்டியதாயிற்று. நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பைளா என்னும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்து கொண்டிருக்கக் கண்டேன். அபூ சுஃப்யான் பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் அதன் கடிவாளத்தைப் பிடித்துக் கொண்டிருந்தார். நபி (ஸல்) அவர்கள், நான் இறைத்தூதர்தாம்; இது பொய்யல்ல... என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தார்கள்.346

அறிவிப்பாளர்களான இஸ்ராயீல் பின் யூனுஸ் (ரஹ்) மற்றும் ஸுஹைர் பின் முஆவியா (ரஹ்) ஆகியோர் மற்றோர் அறிவிப்பில், நபி (ஸல்) அவர்கள் தம் கோவேறுக் கழுதையிலிருந்து இறங்கினார்கள் என்று அறிவிக்கின்றனர்.347

4318 & 4319 மர்வான் பின் ஹகம் மற்றும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) கூறியதாவது:

ஹவாஸின் குலத்தின் தூதுக் குழுவினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் (ஜிஇர்ரானா என்னும் இடத்திற்கு)

முஸ்லிம்களாக வந்த போது நபி (ஸல்)

அவர்கள் எழுந்திருத்தார்கள். (வந்தவர்கள்) நபியவர்களிடம் (முஸ்லிம்கள் ஹுனைன் போரில் கைப்பற்றிய) தம் செல்வங்களையும் போர்க் கைதிகளையும் திருப்பித் தந்து விடும்படி கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்னுடன் நீங்கள் பார்த்துக் கொண்டிருக்கும் இவர்களும் (இந்தப் போர் வீரர்களும்) இருக்கின்றனர். (இவர்களுக்கும் நான் போர்ச் செல்வத்தில் பங்குதர வேண்டியுள்ளது.) பேச்சில் எனக்கு மிகவும் பிரியமானது உண்மையான பேச்சே யாகும். போர்க் கைதிகள் அல்லது (உங்கள்) செல்வங்கள் இரண்டில் நீங்கள் விரும்பியதைத் திரும்பப் பெற்றுக் கொள்ளுங்கள். நான் உங்களை எதிர்பார்த்து(க் கைதிகளைப் பங்கிடாமல்) இருந்தேன் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃபிலிருந்து திரும்பிய போது பத்துக்கும் மேற்பட்ட நாட்கள் ஹவாஸின் குலத்தாரை எதிர்பார்த்துக் காத்திருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டி லொன்றைத் தான் திருப்பித் தருவார்கள் என்று அவர்களுக்குத் தெளிவாகிவிட்ட போது, எங்கள் கைதிகளையே நாங்கள் திரும்பப் பெற்றுக் கொள்கிறோம் என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முஸ்லிம்களிடையே எழுந்து நின்று, அல்லாஹ்வை அவனுக்குரிய முறையில் புகழ்ந்து விட்டு, அல்லாஹ்வைப் போற்றிப் புகழ்ந்தபின் கூறுகிறேன்: உங்க ளுடைய இந்தச் சகோதரர்கள் நம்மிடம் மனம் திருந்தியவர்களாக வந்துள்ளனர். இவர்களில் (நம்மிடம்) போர்க் கைதிகளாக இருப்பவர்களை இவர்களிடமே திருப்பிக் கொடுத்து விடுவதை நான் உசிதமானதாகக் கருதுகிறேன். உங்களில் எவர் மனப்பூர்வமாக இதற்குச் சம்மதிக்கின்றாரோ அவர் திருப்பித் தந்து விடட்டும்; அல்லாஹ், (இனி வரும் நாட்களில்) முதலாவதாக நமக்குத் தரவிருக்கும் (வெற்றி கொள்ளப்படும் நாட்டின்) செல்வங் களிலிருந்து அவருக்கு நாம் தருகின்ற வரை அவற்றைத் தம்மிடமே வைத்திருக்க எவர் விரும்புகின்றாரோ அவர் அவ்வாறே வைத்திருக்கட்டும் என்று கூறினார்கள். மக்கள், நாங்கள் மனப்பூர்வமாக (போர்க் கைதிகளைத்) திருப்பிக் கொடுக்கச் சம்மதிக்கின்றோம், அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், உங்களில் இதற்கு யார் சம்மதிக்கிறார், யார் சம்மதிக்க வில்லை என்று எமக்குத் தெரியாது. ஆகவே, நீங்கள் திரும்பிச் சென்று விடுங்கள். உங்களிடையேயுள்ள தலைவர்கள் உங்கள் முடிவை எனக்குத் தெரிவிக்கட்டும் என்று கூறினார்கள். மக்கள் திரும்பிச் செல்ல, அவர்களிடம் அவர்களின் தலைவர்கள் பேசினார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தலைவர்கள் திரும்பி வந்து, மக்கள் மனப்பூர்வமாகச் சம்மதித்து விட்டதாகத் தெரிவித்தார்கள்.

(அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் -ரஹ்- கூறுகிறார்கள்:)

இது தான் ஹவாஸின் குலத்தாரின் போர்க் கைதிகள் குறித்து நமக்கு எட்டிய செய்தியாகும்.348

4320 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் ஹுனைன் போரிலிருந்து திரும்பி வந்த போது உமர் (ரலி) அவர்கள், தாம் அறியாமைக் காலத்தில் நேர்ச்சை செய்திருந்த ஓர் இஃதிகாஃப் தொடர்பாக நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் அதை நிறைவேற்றும்படிக் கட்டளையிட்டார்கள்.

இதே ஹதீஸ் வேறு பலஅறிவிப்பாளர் தொடர்கள் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.349

4321 அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் ஹுனைன் (போர் நடந்த) ஆண்டில் (போருக்காக) நாங்கள் புறப்பட்டோம். (எதிரிகளைப் போர்க் களத்தில்) நாங்கள் சந்தித்த போது (ஆரம்பத்தில்) முஸ்லிம்கள் (சிலர்) இடையே உறுதியற்ற நிலை ஏற்பட்டது. நான் இணைவைப்பவன் ஒருவனைப் பார்த்தேன். அவன் ஒரு முஸ்-மின் மீது ஏறி உட்கார்ந்து கொண்டு அவரைக் கொல்ல முயன்றான். நான் அவன் பின்பக்கமாகச் சென்று வாளால் அவனது (கழுத்துக்குக் கீழே) தோள் நரம்பில் வெட்டி அவனது கவசத்தைத் துண்டித்து விட்டேன். உடனே, அவன் (அந்த முஸ்-மை விட்டு விட்டு) என்னை இறுக அணைத்துக் கொண்டான். அதனால் நான் மரணக் காற்றை சுவாசிக்க லானேன். பிறகு மரணம் அவனைத் தழுவ அவன் என்னை விட்டு விட்டான். உடனே நான் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களைச் சென்றடைந்து, மக்களுக்கு என்ன நேர்ந்தது? (இப்படிக் களத்திலிருந்து பின்வாங்கி ஓடுகிறார்களே) என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு என்று பதிலளித்தார்கள். பிறகு, மக்கள் (அப்பாஸ் -ரலி- அவர்கள் அழைத்த தால் போர்க் களத்திற்குத்) திரும்பி வந்தார்கள். (தீரத்துடன் போராடி வென்றார்கள்.) பிறகு, நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து கொண்டு, போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உட-லிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள். அப்போது நான் எழுந்து நின்று, எனக்கு எவர் சாட்சி சொல்வார்? என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து கொண்டேன். மீண்டும் நபி (ஸல்) அவர்கள், போரில் (எதிரி) ஒருவரைக் கொன்றதற்கான ஆதாரம் எவரிடம் இருக்கின்றதோ அவருக்கே அந்த எதிரியின் உட-லிருந்து எடுத்த பொருட்கள் உரியவை என்று கூறினார்கள். உடனே, நான் எழுந்து நின்று, எனக்கு எவர் சாட்சி சொல்வார்? என்று கேட்டேன். பிறகு உட்கார்ந்து விட்டேன். பிறகு, (மூன்றாவது தடவையாக) அதே போன்று நபி (ஸல்) அவர்கள் சொன்னார்கள். உடனே, நான் எழுந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபூ கத்தாதாவே! உங்களுக்கென்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். (நடந்த நிகழ்ச்சியை) நான் அவர்களிடம் எடுத் துரைத்தேன். ஒரு மனிதர், இவர் உண்மையே சொன்னார், அல்லாஹ்வின் தூதரே! இவரால் கொல்லப்பட்டவரின் உட-லிருந்து எடுக்கப்பட்ட பொருட்கள் என்னிடம் உள்ளன. எனக்காக அவரை (ஏதாவது கொடுத்துத்) திருப்திப்படுத்தி விடுங்கள் என்று சொன்னார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், இல்லை. அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கம் அல்லாஹ்வின் சார்பாகவும் அவனுடைய தூதரின் சார் பாகவும் போரிட்டு, (தன்னால்) கொல்லப்பட்டவரின் உட-லிருந்து எடுத்த பொருளை உனக்குக் கொடுத்து விடுவதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு போதும் விரும்ப மாட்டார்கள் என்று கூறினார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள், (அபூபக்ர்) உண்மை சொன்னார் என்று கூறி விட்டு என்னிடம் கொடுக்குமாறு உத்தரவிட்டார்கள். அவ்வாறே அதை எனக்கே கொடுத்து விட்டார்கள். நான் அந்தப் பொருளை விற்றுவிட்டு பனூ ச-மா குலத்தார் வாழும் பகுதியில் ஒரு பேரீச்சந் தோட்டத்தை வாங்கினேன். அது தான் இஸ்லாத்தைத் தழுவிய பின் நான் தேடிய முதல் சொத்தாகும்.350

4322 அபூ கத்தாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின் போது முஸ்லிம் களில் ஒருவர் இணைவைப்பவர்களில் ஒருவரோடு போரிட்டுக் கொண்டிருந்ததை நான் கண்டேன். இணைவைப்பவர்களில் இன்னொருவர் அந்த முஸ்-மைக் கொல்வதற்காக அவருக்குப் பின்னாலிருந்து ஒளிந்து ஒளிந்து வந்து கொண்டிருப்பதையும் கண்டேன். ஒளிந்தபடி அவரைத் தாக்க வந்தவரை நோக்கி (அவரைத் தடுப்பதற்காக) நான் விரைந்தோட, அவர் என்னைத் தாக்கு வதற்காகத் தன் கையை ஓங்கினார். நான் அவரது கையில் தாக்கி அதைத் துண்டித்து விட்டேன். பிறகு அவர் என்னைப் பிடித்துக் கொண்டு, நான் (என் உயிர் பிரிந்து விடுமோ என்று) அஞ்சும் அளவிற்குக் கடுமையாக என்னைக் கட்டியணைத்தார். பிறகு என்னை விட்டு விட்டுப் பிடி தளர்ந்தார். பிறகு நான் அவரை(க் கீழே) தள்ளிக் கொன்று விட்டேன். (ஆனால்,) முஸ்லிம்கள் தோற்று விட்டனர். நானும் அவர்களுடன் தோற்றுப்போனேன். நான் அப்போது (தோற்ற) மக்களிடையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் இருப்பதைக் கண்டேன். நான் அவர்களிடம், மக்களுக்கு என்னாயிற்று? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், (எல்லாம்) அல்லாஹ்வின் ஏற்பாடு என்று சொன்னார்கள். பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்து (தீரத்துடன் போரிட்டு வென்றார்கள். இறுதியில், தங்கள் போர்ச் செல்வத்தைக் குறித்துக்) கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எவர் தன்னால் கொல்லப்பட்ட (எதிரி) ஒருவரை, அவர் தான் கொன்றார் என்பதற்கு ஒரு சான்றைக் கொண்டு வருகின்றாரோ அவருக்கே கொல்லப்பட்டவரின் உட-லிருந்து எடுக்கப்படும் பொருட்கள் உரியன என்று சொன்னார்கள். ஆகவே, என்னால் கொல்லப்பட்ட வரை நான் தான் கொன்றேன் என்பதற்கு சான்று தேடுவதற்காக நான் எழுந்தேன். ஆனால், எனக்காக சாட்சி சொல்பவர் எவரையும் நான் காணவில்லை. ஆகவே, உட்கார்ந்து கொண்டேன். பிறகு ஏதோ தோன்ற, நான் ஒருவரைக் கொன்றதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சொன்னேன். உடனே நபி (ஸல்) அவர்களுடன் அமர்ந்திருந்தவர்களில் ஒருவர், (இவரால் கொல்லப்பட்டதாக) இவர் சொல்கின்ற அந்த மனிதரின் ஆயுதம் என்னிடம் இருக்கின்றது. நானே இதை எடுத்துக் கொள்ள அவரிட மிருந்து (எனக்கு) இசைவு பெற்றுத் தாருங்கள் என்று சொன்னார். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்கள், அப்படி முடியாது. (கொல்லப்பட்டவரின்) அந்த உடைமைகளை, அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவும் போரிடுகின்ற, அல்லாஹ்வின் சிங்கங்களில் ஒரு சிங்கத்தை விட்டுவிட்டு குறைஷிகளின் (பலவீனமான) ஒரு குஞ்சுப் பறவைக்கு அதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கொடுக்க மாட்டார்கள் என்று சொன்னார்கள். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எழுந்து எனக்கு அந்தப் பொருளைக் கொடுத்தார்கள். நான் அதை விற்று பேரீச்சந் தோட்டம் ஒன்றை விலைக்கு வாங்கினேன். அது தான் நான் இஸ்லாத்திற்கு வந்த பின் தேடிக் கொண்ட முதல் சொத்தாக இருந்தது.

பாடம் : 56

அவ்தாஸ் போர்351

4323 அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஹுனைன் போரை முடித்துக் கொண்டு திரும்பிய போது, அபூ ஆமிர் அவர்களை (தளபதியாக்கி) அவ்தாஸ் பள்ளத்தாக்கிற்கு ஒரு படையை அனுப்பி வைத்தார்கள். அப்போது அபூ ஆமிர் அவர்கள் (கவிஞன்) துரைத் பின் ஸிம்மா வைச் சந்தித்தார்கள். (அவர்கள் இருவருக்கு மிடையில் சண்டை நடந்தது. அதில்) துரைத் கொல்லப்பட்டான். அவனுடைய தோழர்களை அல்லாஹ் தோற்கடித்தான். அபூ ஆமிர் அவர்களுடன் என்னையும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அந்தப் போருக்கு) அனுப்பியிருந்தார்கள். அப்போரின் போது அபூ ஆமிர் அவர்களின் முழங்கா-ல் அம்பு பாய்ந்தது. ஜுஷம் குலத்தைச் சேர்ந்த ஒருவனே அந்த அம்பை எய்து, அதை அவர் களது முழங்கா-ல் நிறுத்தினான். உடனே நான் அவர்களுக்கு அருகில் சென்று, என் தந்தையின் சகோதரரே! உங்கள் மீது அம்பெய்தவன் யார்? என்று கேட்டேன். என் மீது அம்பெய்து என்னைக் கொன்றவன் இதோ! என்று (அவனை நோக்கி) என்னிடம் சைகை காட்டினார்கள். நான் அவனை நோக்கிச் சென்று, அவனை அடைந்தேன். என்னைக் கண்டதும் அவன் புறமுதுகிட்டு ஓடலானான். அவனைப் பின்தொடர்ந்து நானும் ஓடிக் கொண்டே, (என்னைக் கண்டு ஓடுகிறாயே) உனக்கு வெட்கமில்லையா? நீ நிற்க மாட்டாயா? என்று கேட்டேன். உடனே அவன் (ஓடுவதை) நிறுத்திக் கொண்டான். பிறகு நாங்கள் இருவரும் வாளினால் மோதிக் கொண்டோம். அப்போது அவனை நான் கொன்று விட்டேன். பிறகு நான் அபூ ஆமிர் அவர்களிடம் (சென்று), உங்களைக் கொல்ல முயன்ற ஆளை அல்லாஹ் (என் மூலம்) கொன்று விட்டான் என்று கூறினேன். பிறகு, (எனது முழங்கா-ல் பாய்ந்திருக்கும்) இந்த அம்பைப் பிடுங்கியெடு என்று அவர்கள் கூற, உடனே நான் அதைப் பிடுங்கினேன். அதிலிருந்து நீர் கொட்டியது. என் சகோதர ரின் மகனே! நபி ஸல்லல்லாஹு அலைஹி வஸல்லம் அவர்களுக்கு (என்) சலாம் கூறி, எனக்காக (அல்லாஹ்விடம்) பாவ மன்னிப்புக் கேட்கும்படி கோரு என்று அபூ ஆமிர்

(ரலி) அவர்கள் சொன்னார்கள். பிறகு என்னைத் தம் பிரதிநிதியாக மக்களுக்கு நியமித்து விட்டு, சிறிது நேரத்திற்குப் பின் அபூ ஆமிர் (ரலி) அவர்கள் (வீர) மரண மடைந்தார்கள். பிறகு (அங்கிருந்து) நான் திரும்பி, நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அப்போது அவர்கள் தமது வீட்டில் (பேரீச்சம் நாரினால் வேயப்பட்ட) கயிற்றுக் கட்டி-ல் படுத்திருந்தார்கள். அதன் மீது விரிப்பு ஒன்று இருந்தது.352 (எனினும்) கட்டி-ன் கயிறு நபி (ஸல்) அவர்களின் முதுகிலும், இரு விலாப்புறங்களிலும் அடையாளம் பதித்திருந்தது. பிறகு அவர் களிடம் எங்கள் செய்தியையும் அபூ ஆமிர் அவர்களின் செய்தியையும் கூறி, தமக்காகப் பாவமன்னிப்புக் கேட்கும்படி ஆமிர் அவர்கள் வேண்டியிருக்கிறார்கள் என்பது பற்றியும் கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் தண்ணீர் கொண்டு வரும்படிக் கூறி, அதில் உளூ செய்தார்கள். பிறகு தம் இரு கரங்களையும் உயர்த்தி, இறைவா! அபூ ஆமிர் உபைதுக்கு நீ மன்னிப்பு அளிப்பாயாக! மறுமை நாளில் உன் படைப்பினமான மனிதர்களில் பலரையும் விட (அந்தஸ்தில்) உயர்ந்தவராக அவரை ஆக்குவாயாக! என்று பிரார்த்தித்தார்கள். அப்போது அவர்களின் அக்குள்கள் இரண்டின் வெண்மையையும் நான் பார்த்தேன். உடனே நான், எனக்காகவும் பாவ மன்னிப்புக் கோருங்கள் (நபியே!) என்று கூறினேன். அதற்கவர்கள், இறைவா! அப்துல்லாஹ் பின் கைஸின் பாவத்தை மன்னித்து, மறுமை நாளில் கண்ணியம் நிறைந்த இருப்பிடத்திற்கு அவரை அனுப்பு வாயாக என்று பிரார்த்தித்தார்கள்.

அபூ புர்தா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(நபி -ஸல்- அவர்கள் புரிந்த இரு பிரார்த் தனைகளில்) ஒன்று அபூ ஆமிர் (ரலி) அவர்களுக்கும் மற்றொன்று அபூமூசா (ரலி) அவர்களுக்கும் உரியதாகும்.

பாடம் : 57

ஹிஜ்ரி எட்டாமாண்டு ஷவ்வால் மாதம் நடந்த தாயிஃப் போர்.353

இதை மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4324 (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் (ஆணுமல்லாத பெண்ணு மல்லாத) அ- ஒருவர் அமர்ந்திருந்த போது நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். அந்த அ-, (என் சகோதரர்) அப்துல்லாஹ் பின் அபீ உமய்யாவிடம், அப்துல்லாஹ்வே! நாளை தாயிஃப் நகர் மீது உங்களுக்கு அல்லாஹ் வெற்றியளித்தால் நீ ஃகய்லானின் மகளை மணமுடித்துக் கொள். ஏனென்றால், அவள் முன்பக்கம் நாலு(சதை மடிப்பு களு)டனும், பின்பக்கம் எட்டு(சதை மடிப்பு களு)டனும் வருவாள் என்று சொல்வதை நான் செவியுற்றேன்.354 (இதைக் கேட்ட) நபி (ஸல்) அவர்கள், இந்த அ-கள் (பெண்களாகிய) உங்களிடம் ஒரு போதும் வர (அனுமதிக்க)க் கூடாது என்று சொன்னார்கள். இப்னு உயைனா (ரஹ்), இப்னு ஜுரைஜ் (ரஹ்) ஆகியோரின் அறிவிப்பில் அந்த அ-யின் பெயர் ஹீத் என்று குறிப்பிடப்பட்டுள்ளது.355

.... மற்றோர் அறிவிப்பில், அப்போது நபி (ஸல்) அவர்கள் தாயிஃபை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தார்கள் என்று அதிகப்படியாக இடம் பெற்றுள்ளது.

4325 அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) அவர்கள் கூறியதாவது:356

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தாயிஃப் நகரத்தை முற்றுகையிட்ட போது அவர்களால் அம்மக்களை ஒன்றும் செய்ய முடியவில்லை. எனவே, இறைவன் நாடினால் நாம் (நாளை மதீனாவுக்குத்) திரும்பிச் செல்வோம் என்று அவர்கள் சொன்னார்கள். அவர்கள் இப்படிச் சொன்னது நபித் தோழர்களுக்கு வருத்தமளித்தது. அவர்கள், இதை வெற்றி கொள்ளாமல் நாம் திரும்பிச் செல்வதா? என்று பேசிக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்கள் (மீண்டும்) ஒரு முறை, நாம் திரும்பிச் செல்வோம் என்று சொன்னார்கள். பிறகு (தோழர்களின் தயக்கத்தைக் கண்டு) முற்பக-லேயே போர் புரியுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே அவர்கள் முற்பக-ல் போர் புரிய, (அதனால்) (பலத்த) காயங்களுக்கு ஆளானார்கள்.357

அப்போது நபி (ஸல்) அவர்கள், இறைவன் நாடினால் நாளை நாம் (மதீனா வுக்குத்) திரும்பிச் செல்வோம் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள் இப்படிச் சொன்னது நபித்தோழர்களுக்கு (இப்போது) மகிழ்ச்சியை அளித்தது. (அவர்களின் மகிழ்ச்சியைக் கண்டு) நபி (ஸல்) அவர்கள் சிரித்தார்கள்.358

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் இதை அறிவித்த போது ஒரு முறை, நபி (ஸல்) அவர்கள் (சிரித்தார்கள் என்பதற்கு பதிலாக) புன்னகைத்தார்கள் என்று அறிவித்தார்கள்.

4326 & 4327 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவன் தெரிந்து கொண்டே தன்னைத் தன் தந்தையல்லாத (வேறு) ஒருவருடன் இணைத்து, (நான் அவரது மகன் தான் என்று) வாதாடு கிறானோ அவனுக்கு சொர்க்கம் (புகுவது) தடை செய்யப்பட்டதாகும்.

அல்லாஹ்வின் பாதையில் ஓர் அம்பை முதன் முதலாக எய்தவரான சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களிடமிருந்தும் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய தாயிஃப் நகர மக்களின் அடிமைகள்) சிலரோடு தாயிஃப் கோட்டையின் மதில் சுவரைத் தாண்டிக் குதித்து நபி (ஸல்) அவர்களிடம் வந்த அபூபக்ரா (ரலி)359 அவர்களிட மிருந்தும் இதை நான் செவியுற்றேன் என்று அபூஉஸ்மான் அப்துர் ரஹ்மான் அந்நஹ்தீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

இது, மற்றோர் அறிவிப்பாளர் தொடரிலும் வந்துள்ளது.

அறிவிப்பாளர் ஆஸிம் பின் சுலைமான் (ரஹ்) அவர்கள், (தமக்கு இதை அறிவித்த அபுல் ஆ-யா, அல்லது அபூ உஸ்மான் -ரஹ்- அவர்களிடம்) உங்களிடம் (இந்த நபிமொழிக்கு) இருவர் சாட்சியம் பகர்ந் துள்ளனர்; அவர்கள் இருவரும் உங்களுக்குப் போதும் என்று சொன்னார்கள். அதற்கு அவர்கள், ஆம்; அவ்விருவரில் ஒருவர் அல்லாஹ்வின் பாதையில் (முதன் முதலாக) ஓர் அம்பை எறிந்தவராவார். மற்றொருவரோ, நபி (ஸல்) அவர்களிடம் தாயிஃபிலிருந்து வந்த இருபத்து மூன்று பேரில் மூன்றாமவர் ஆவார் என்று பதிலளித்தார்கள்.

4328 அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்காவுக்கும் மதீனாவிற்குமிடையே ஜிஃரானா என்னுமிடத்தில் பிலால் (ரலி) அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் தங்கியிருந்த போது நான் அவர்களிடம் இருந்தேன்.360 அப்போது கிராமவாசி ஒருவர் (நபி -ஸல்- அவர்களிடம்) வந்து, நீங்கள் எனக்கு வாக்களித்ததைக் கொடுக்க மாட்டீர்களா? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், நற்செய்தியைப் பெற்றுக் கொள் என்று சொன்னார்கள்.361 அதற்கு அவர், இந்த நற்செய்தியைத் தான் எனக்கு நீங்கள் நிறையச் சொல்லிவிட்டீர்களே! என்று சொன்னார். உடனே நபி (ஸல்) அவர்கள் கோபமடைந் தவரைப் போன்று என்னையும் பிலால் (ரலி) அவர்களையும் நோக்கி வந்தார்கள். இவர் (எனது) நற்செய்தியை ஏற்க மறுத்து விட்டார். நீங்கள் இருவரும் அதை ஏற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். நாங்கள் இருவரும், நாங்கள் ஏற்றுக் கொண்டோம் என்று கூறினோம். பிறகு தண்ணீருள்ள ஒரு பாத்திரத்தைக் கொண்டு வரச் சொல்லி, அதில் தம் இருகைகளையும் தம் முகத்தையும் கழுவி, அதில் உமிழ்ந்தார்கள்.362 பிறகு (எங்களிடம்), இதிலிருந்து சிறிது அருந்தி விட்டு, உங்கள் முகங்களிலும் உங்கள் மார்புகளிலும் ஊற்றிக் கொள்ளுங்கள்; நற் செய்தியைப் பெற்றுக் கொள்ளுங்கள் என்று சொன்னார்கள். ஆகவே, நாங்கள் இருவரும் அந்தப் பாத்திரத்தை எடுத்து அவ்வாறே செய்தோம். அப்போது (நபிகளாரின் துணைவியார்) உம்மு சலமா (ரலி) அவர்கள் திரைக்குப் பின்னாலிருந்து எங்கள் இருவரையும் அழைத்து, (இறை நம்பிக்கையாளர் களான) உங்களின் அன்னை(யான என)க்காக வும் அதிலிருந்து சிறிது (தண்ணீரை) மீதி வையுங்கள் என்று சொன்னார்கள். அவ்வாறே நாங்கள் இருவரும் அவர்களுக்காக அதில் சிறிதுமீதி வைத்தோம்.

4329 ஸஃப்வான் பின் யஅலா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) யஅலா பின் உமய்யா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது வஹீ (வேதவெளிப்பாடு) அருளப்படும் போது அவர்களைப் பார்க்கும் வாய்ப்புக் கிட்டாதா என்று நான் ஆசைப்பட்டு வந்தேன் என்று கூறுவது வழக்கம். ஒரு முறை, நபி (ஸல்) அவர்கள் (தாயிஃபிலிருந்து திரும்பும் சமயம்) ஜிஃரானாவில் இருக்கும் போது அவர்களுக்குத் துணியால் (கூடாரம் அமைத்து) நிழல் கொடுக்கப்பட்டிருந்தது. அந்தத் துணிக் (கூடாரத்திற்)குள் நபி (ஸல்) அவர்களுடன் அவர்களின் தோழர்கள் சிலரும் இருந்தனர். அப்போது வாசனைத் திரவியத்தில் தோய்ந்த, மேலங்கியொன்றை அணிந்திருந்த கிராமவாசியொருவர் வந்தார். அவர், அல்லாஹ்வின் தூதரே! வாசனைத் திரவியத்தை பூசிக் கொண்டபின் மேலங்கி யொன்றை அணிந்து கொண்டு உம்ராவுக்காக வந்த ஒரு மனிதரைக் குறித்து நீங்கள் என்ன கருதுகிறீர்கள்? என்று கேட்டார். உடனே உமர் (ரலி) அவர்கள் யஅலா (ரலி) அவர்களை (அருகில்) வாருங்கள் என்று கைகளால் சைகை செய்து அழைத்தார்கள். யஅலா (ரலி) அவர்கள் தம் தலையை (கூடாரத்திற்கு) உள்ளே நுழைத்தார்கள். அப்போது (வேத வெளிப்பாடு அருளப்பட்டுக் கொண்டிருக்க) நபி (ஸல்) அவர்களின் முகம் சிவந்து, அவர்கள் அப்படியே சிறிது நேரம் குறட்டைவிட்டபடி இருந்தார்கள். பிறகு (சிறிது சிறிதாக) அந்த நிலை அவர்களை விட்டு நீங்கியது. பிறகு அவர்கள், சற்று நேரத்திற்கு முன்பு என்னிடம் உம்ராவைப் பற்றிக் கேட்டவர் எங்கே? என்று கேட்டார்கள். உடனே அந்த மனிதர், தேடி அழைத்து வரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள், உம் மீதுள்ள வாசனைத் திரவியத்தை மூன்று முறை கழுவுக! (தைக்கப்பட்டு அணிந்துள்ள) மேலங்கியைக் கழற்றிவிடுக! பிறகு, உமது ஹஜ்ஜில் செய்வது போலவே உமது உம்ராவிலும் செய்து கொள்க! என்று பதிலளித்தார்கள்.363

4330 அப்துல்லாஹ் பின் ஸைத் பின் ஆஸிம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹுனைன் நாளில் போர்ச் செல்வங்களை வழங்கிய போது உள்ளங்கள் இணக்க மாக்கப்பட வேண்டிய(மக்கா வெற்றியின் போது புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய)வர் களிடையே (அவற்றைப்)பங்கிட்டார்கள். (மதீனாவாசிகளான) அன்சாரிகளுக்கு எதுவும் கொடுக்கவில்லை. மற்றவர்களுக்குக் கிடைத்தது போல் தமக்கும் கிடைக்காமற் போனதால் அவர்கள் கவலையடைந்தவர்களைப் போல் காணப்பட்டார்கள். ஆகவே, அவர்களிடையே (ஆறுதலாக) நபி (ஸல்) அவர்கள் உரையாற்றினார்கள். (அவ்வுரையில்), அன்சாரிகளே! உங்களை வழிதவறியவர்களாக நான் காணவில்லையா? அல்லாஹ் என் மூலமாக உங்களுக்கு நேர் வழியை அளித்தான். நீங்கள் பிரிந்து (சிதறிக்) கிடந்தீர்கள். அப்போது அல்லாஹ் என் மூலமாக உங்களைப் பரஸ்பரம் நேசமுடையவர்களாக்கினான். நீங்கள் ஏழைகளாக இருந்தீர்கள். அல்லாஹ், என் மூலமாக உங்களைத் தன்னிறைவுடைய வர்களாய் ஆக்கினான் (அல்லவா?) என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள் (தம் வருகையால் அன்சாரிகள் அடைந்த நன்மைகளை) ஒவ்வொன்றாகச் சொல்லும் போதெல்லாம், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே அதிக உபகாரம் புரிந்தவர்கள் என்று அன்சாரிகள் கூறினர். நபி (ஸல்) அவர்கள், அவ்வாறிருக்க, அல்லாஹ்வின் தூதருக்கு நீங்கள் பதிலளிக்காமலிருப்பது எதனால்? என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள் ஒன்றைச் சொல்லும் போதெல்லாம் அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே மிகப் பெரும் உபகாரிகள் என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்கள், நீங்கள் விரும்பினால் இன்னின்னவாறெல்லாம் (நீங்கள் எனக்குச் செய்த உபகாரங்களை நினைவுபடுத்தும் வகையில்) சொல்ல முடியும். ஆனால், (இந்த) மக்கள் (நான் கொடுக்கும்) ஆடுகளையும் ஒட்டகங்களையும் (ஓட்டிக்) கொண்டு போக, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத் தூதரையே (என்னையே) உங்களுடன் கொண்டு செல்வதை விரும்ப மாட்டீர்களா? ஹிஜ்ரத் (நிகழ்ச்சி) மட்டும் நடந்திருக்காவிட்டால் நான் அன்சாரிகளில் ஒருவனாய் இருந்திருப்பேன். மக்களெல்லாம் ஒரு கணவாயிலும் ஒரு பள்ளத்தாக்கிலும் சென்றாலும் நான் அன்சாரிகள் செல்லும் கணவாயிலும் பள்ளத்தாக்கிலும் தான் செல்வேன். அன்சாரிகள் (மேனியுடன் ஒட்டிய) உள்ளாடைகள் (போன்றவர்கள்) ஆவர். மற்றவர்கள் மேலாடை போன்றவர்கள்.364 நீங்கள் எனக்குப் பின்னால் விரைவிலேயே (ஆட்சியதிகாரத்தில்) உங்களை விடப் பிறருக்கு முன்னுரிமை தரப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, (எனக்குச் சிறப்புப் பரிசாக மறுமையில் கிடைக்கவிருக்கும்) ஹவ்ள் (அல் கவ்ஸர் என்னும்) தடாகம் அருகே என்னைச் சந்திக்கும் வரை (நிலை குலையாமல்) பொறுமையுடன் இருங்கள் என்று சொன்னார்கள்.365

4331 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ், தன் தூதர் (ஸல்) அவர்களுக்கு ஹவாஸின் குலத்தாரின் செல்வத்தை (வெற்றிப் பரிசாக) அளித்த போது நபி (ஸல்) அவர்கள் (புதிதாக இஸ்லாத்தைத் தழுவிய) மக்களுக்கு நூறு ஒட்டகங்களைக் கொடுக்க லானார்கள். உடனே, (அன்சாரிகளில்) சிலர், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! (எதிரிகளான) குறைஷிகளின் இரத்தம் நம் வாட்களில் சொட்டிக் கொண்டிருக்க, (நமக்குக் கொடுக் காமல்) இவர்களுக்குக் கொடுக்கிறார்களே; ஆனால், (தியாகங்கள் பல புரிந்த) நம்மை விட்டுவிடுகின்றார்களே! என்று (கவலை யுடன்) சொன்னார்கள். அவர்களின் இந்தப் பேச்சு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குத் தெரிவிக்கப்பட்டது. உடனே, நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளுக்கு ஆளனுப்பி அவர்களைப் பதனிடப்பட்ட தோலால் ஆன ஒரு கூடாரத்தில் ஒன்று திரட்டினார்கள். அவர்களுடன் மற்றவர்களை நபி (ஸல்) அவர்கள் அழைக்கவில்லை. அவர்கள் ஒன்று கூடியதும் நபி (ஸல்) அவர்கள் எழுந்து நின்று, உங்களைக் குறித்து எனக்கு எட்டியுள்ள செய்தி என்ன? (உண்மை தானா?) என்று கேட்க அன்சாரிகளிலிருந்த விவரமான வர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்கள் தலைவர்கள் எதுவும் சொல்லவில்லை. எங்களில் இளவயதுடைய மக்கள் சிலர் தான், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை அல்லாஹ் மன்னிப்பானாக! நம்முடைய வாட்களில் குறைஷிகளின் இரத்தம் சொட்டிக் கொண்டிருக்க, நம்மை விட்டுவிட்டு அவர்களுக்குக் கொடுக்கிறார்களே! என்று பேசிக் கொண்டனர் என்று கூறினார்கள். அப்போது, நபி (ஸல்) அவர்கள், இறை மறுப்பை விட்டு இப்போது தான் புதிதாக இஸ்லாத்தில் இணைந்த சிலருக்கு நான் கொடுக்கிறேன். (அதன் வாயிலாக) அவர் களுடன் நான் இணக்கம் ஏற்படுத்திக் கொள்கிறேன். மக்கள் (பிற உலக) செல் வங்களை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் உங்கள் இல்லங்களுக்கு இறைத்தூதரையே கொண்டு செல்வதை விரும்ப வில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்கள் பெற்றுத் திரும்பும் செல்வங்களை விட நீங்கள் பெற்றுத் திரும்புவதே சிறந்ததாகும் என்று சொன்னார்கள். அன்சாரிகள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் (எங்களுடன் உங்களைக் கொண்டு செல்வதையே) விரும்புகிறோம் என்று சொன்னார்கள். அப்போது அவர் களிடம் நபி (ஸல்) அவர்கள், விரைவில் (உங்களை விடப் பிறருக்கு ஆட்சியதிகாரத்தில்) அதிகமாக முன்னுரிமை வழங்கப்படுவதைக் காண்பீர்கள். ஆகவே, அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் (மறுமையில்) சந்திக்கும் வரை பொறுமையாயிருங்கள். ஏனெனில், அன்று நான் (எனக்கு வழங்கப் படவுள்ள சிறப்புப்பரிசான அல் கவ்ஸர் எனும்) தடாகத்தின் அருகே இருப்பேன் என்று சொன்னார்கள். ஆனால், மக்கள் பொறுமையாக இருக்கவில்லை.366

4332 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மக்கா வெற்றியின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் குறைஷிகளுக்கிடையே போர்ச் செல்வங்களைப் பங்கிட்டார்கள். ஆகவே, அன்சாரிகள் (தமக்குப் பங்கு தர வில்லையே என்று) கோபித்துக் கொண் டார்கள். (இதையறிந்த) நபி (ஸல்) அவர்கள், மக்கள் உலகச் செல்வத்தை எடுத்துக் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே உங்களுடன் கொண்டு செல்வதை விரும்ப வில்லையா? என்று கேட்டார்கள். அதற்கு அன்சாரிகள், ஆம், (அதைத் தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், மக்கள் ஒரு கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ சென்றால், நான் அன்சாரி களின் கணவாயிலோ, பள்ளத்தாக்கிலோ தான் செல்வேன் என்று சொன்னார்கள்.

4333 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின் போது ஹவாஸின் குலத்தார் (நபி-ஸல்- அவர்களைப்) போர்க் களத்தில் சந்தித்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன், (புனிதப் போர் வீரர்கள்) பத்தாயிரம் பேர் இருந்தனர். (மக்கா வெற்றியின் போது) மன்னிப்பளிக்கப்பட்டவர்களும் இருந்தனர்.367 அப்போது (ஹவாஸின் குலத் தாரின் அதிரடித் தாக்குதலைச் சமாளிக்க முடியாமல்) அவர்கள் பின்வாங்கிச் சென்றனர். நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளே! (என்னாயிற்று உங்களுக்கு?) என்று கேட்க, அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்கள் அழைப்புக்கு பதிலளித்து உங்களுக்கு அடிபணிந்தோம். இதோ, உங்களுக்கு உதவக் காத்திருக்கிறோம். உங்கள் முன்னால் இருக்கின்றோம் என்று பதிலளித்தனர். நபி (ஸல்) அவர்கள் (தம் வாகனத்தை விட்டு) இறங்கி, நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய துதருமாவேன் என்று சொன்னார்கள். (பிறகு, அந்தப் போரில்) இணை வைப்பவர்கள் தோற்றுவிட்டனர். பின்னர், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களுக்கும் முஹாஜிர்களுக்கும் (போர்ச் செல்வத்தில் பங்கு) கொடுத்தார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. அன்சாரிகள் (தமக்குக் கொடுக்காததைக் குறித்து அதிருப்தியுடன்) பேசினர். உடனே நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளை அழைத்து (தாமிருந்த) கூடாரத்தினுள் இருக்கச் செய்து, இந்த மக்கள் ஆடுகளையும் ஒட்டகங் களையும் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதரையே கொண்டு செல்வதை விரும்ப வில்லையா? என்று கேட்டார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், மக்கள் ஒரு கணவாயில் நடந்து செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் சென்றால், நான் அன்சாரிகளின் கணவாயையே தேர்ந்தெடுப்பேன் என்று சொன்னார்கள்.

4334 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை ஒன்று கூட்டி, (இந்தக்) குறைஷிகள், அறியாமைக் கொள்கையை இப்போது தான் கைவிட்டுப் புதிதாக இஸ்லாத்திற்கு வந்தவர்கள்; (இஸ்லாத்தை ஏற்றதனால் நேரும்) சோதனைகளுக்குப் புதியவர்கள். ஆகவே, அவர்களுக்கு நிவாரணம் வழங்கவும், (இஸ்லாத்துடன்) அவர்களுக்கு இணக்கத்தை ஏற்படுத்தவும் நான் விரும்பினேன். மக்கள் உலகச் செல்வத்தைப் பெற்றுக் கொண்டு திரும்பிச் செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூத ருடனேயே உங்கள் வீடுகளுக்குத் திரும்பிச் செல்வதை நீங்கள் விரும்ப வில்லையா? என்று கேட்டார்கள். அன்சாரிகள், ஆம் (அதைத் தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள். நபி (ஸல்) அவர்கள், மக்கள் ஒரு கணவாயில் செல்ல, அன்சாரிகள் வேறொரு கணவாயில் செல்வார்களாயின், நான் அன்சாரிகளின் கணவாயில் தான் ....அல்லது அன்சாரிகளின் பள்ளத்தாக்கில் தான்.... செல்வேன் என்று சொன்னார்கள்.

4335 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹுனைன் போரில் கிடைத்த செல்வங்களை (மக்களிடையே) பங்கிட்ட போது அன்சாரிகளில் ஒரு மனிதர் இந்தப் பங்கீட்டில் நபியவர்கள் இறைத் திருப்தியை நாடவில்லை என்று (மனத் தாங்கலுடன்) பேசினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று இதைத் தெரிவித்தேன். உடனே அவர்களுடைய முகம் (கோபத்தால் நிறம்) மாறிவிட்டது. பிறகு அவர்கள், (இறைத்தூதர்) மூசாவின் மீது அல்லாஹ் கருணை புரிவானாக! அவர்கள் இதை விட அதிகமாக மனவேதனைக்கு ஆளாக்கப்பட் டார்கள்; ஆயினும், சகித்துக் கொண்டார்கள் என்று சொன்னார்கள்.368

4336 அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின் போது, நபி (ஸல்) அவர்கள் மக்கள் சிலருக்கு முன்னுரிமை (அளித்து அதிகமாக) வழங்கினார்கள். (புதிய முஸ்லிம்களில் ஒருவரான) அக்ரஉ (பின் ஹாபிஸ் -ரலி) அவர்களுக்கு நூறு ஒட்டகங் களைக் கொடுத்தார்கள். உயைனா (பின் ஹஸன் ஃபஸாரீ -ரலி) அவர்களுக்கும் அதே போன்று கொடுத்தார்கள். இன்னும் சிலருக்கும் கொடுத்தார்கள். அப்போது ஒரு மனிதர், இந்தப் பங்கீட்டில் அல்லாஹ்வின் திருப்தி நாடப்படவில்லை என்று சொன்னார்.369 உடனே நான், இதை நிச்சயம் நான் நபி (ஸல்) அவர்களிடம் தெரிவிப்பேன் என்று சொன்னேன். (அவ்வாறே நபி -ஸல்- அவர்களிடம் சென்று நான் சொல்ல) அவர்கள், (இறைத்தூதர்) மூசாவுக்கு அல்லாஹ் கருணை புரியட்டும். இதை விட அதிகமாக அவர்கள் மனவேதனைக்கு ஆளாக்கப்பட்டார்கள். ஆயினும், சகித்துக் கொண்டார்கள் என்று சொன்னார்கள்.370

4337 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுனைன் போரின் போது ஹவாஸின் குலத்தாரும் கத்ஃபான் குலத்தாரும் மற்றவர் களும் தம் கால்நடைகளுடனும் குழந்தை குட்டிகளுடனும் (போர்க் களத்தில்) நபி (ஸல்) அவர்களை எதிர் கொண்டனர். அப்போது நபி (ஸல்) அவர்களுடன் பத்தாயிரம் பேர்களும் (மக்கா வெற்றியில்) மன்னிப் பளிக்கப்பட்டு (புதிய முஸ்லிம்களாக) இருந்தவர்களில் பலரும் இருந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுப் பின்வாங்கிச் சென்று விட்டனர். இறுதியில், நபி (ஸல்) அவர்கள் மட்டும் தனியே எஞ்சி நின்றார்கள். அப்போது, அவர்கள் இரண்டு (முறை) அழைப்பு விடுத்தார்கள். இரண்டையும் கலந்து விடாமல் (இடைவெளி இருக்கு மாறு) பார்த்துக் கொண்டார்கள். தம் வலப் பக்கம் திரும்பி, அன்சாரிகளே! என்று அழைக்க அவர்கள், இதோ, வந்து விட்டோம், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம்; (கவலைப்படாமல்) மகிழ்ச்சியுடனிருங்கள் என்று சொன்னார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் தம் இடப்பக்கம் திரும்பி, அன்சாரிகளே! என்று அழைத்தார்கள். அவர்கள் (மீண்டும்), இதோ, தங்கள் அழைப்புக்குக் கீழ்ப்படிந்து வந்தோம், அல்லாஹ்வின் தூதரே! (கவலையின்றி) மகிழ்ச்சியுடனிருங்கள். நாங்கள் உங்களுடன் தான் இருக்கின்றோம் என்று சொன்னார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது பைளா என்னும் வெள்ளைக் கோவேறுக் கழுதையின் மீது அமர்ந்திருந்தார்கள். பிறகு அதிலிருந்து இறங்கி, நான் அல்லாஹ்வின் அடியாரும் அவனுடைய தூதருமாவேன் என்று சொன்னார்கள். பிறகு, இணைவைப்பவர்கள் (அந்தப் போரில்) தோற்றுப்போனதால், ஏராளமான போர்ச் செல்வங்களை நபி (ஸல்) அவர்கள் பெற்றார்கள்; அவற்றை முஹாஜிர் களிடையேயும் (மக்கா வெற்றியில்) மன்னிப்பளிக்கப்பட்டவர்களிடேயேயும் பங்கிட்டார்கள்; அன்சாரிகளுக்கு எதையும் கொடுக்கவில்லை. ஆகவே அன்சாரிகள் (சிலர்), ஏதேனும் (போர் போன்ற) கடுமையான பிரச்சினை என்றால் (உயிரை அர்ப்பணித்து உதவிட) நாங்கள் அழைக்கப்படுகின்றோம். ஆனால், (பிரச்னை தீர்ந்ததும்) மற்றவர்களுக்குப் போர்ச் செல்வங்கள் கொடுக்கப்படுகின்றன என்று (மனக் குறையுடன்) பேசிக் கொண்டார்கள். இவர்கள் இப்படிப் பேசிக் கொள்ளும் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு எட்டியது. உடனே அன்சாரிகளை ஒரு கூடாரத்தில் ஒன்று கூட்டி, அன்சாரிகளே! உங்களைக் குறித்து எனக்கு எட்டிய இந்தச் செய்தி என்ன? (உண்மை தானா?) என்று கேட்டார்கள். அவர்கள் (உண்மைதான் என்பது போல்) மௌனமாயிருந்தார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அன்சாரிகளே! மக்கள் உலகச் செல்வத்தைத் தங்களுடன் கொண்டு செல்ல, நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை சொந்தமாக்கிக் கொண்டு உங்கள் இல்லங்களுக்குச் செல்வதை நீங்கள் விரும்பவில்லையா? என்று கேட்டார்கள். அன்சாரிகள், ஆம் (நாங்கள் அதைத் தான் விரும்புகிறோம்) என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்களெல்லாம் ஒரு பள்ளத் தாக்கில் செல்ல, அன்சாரிகள் மட்டும் வேறொரு பள்ளத்தாக்கில் செல்வார் களாயின் நான் அன்சாரிகள் செல்லும் பள்ளத்தாக்கையே தேர்ந்தெடுப்பேன் என்று சொன்னார்கள்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான ஹிஷாம் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் (இதைத் தமக்கு அறிவித்த தம் பாட்டனாரான அனஸ் -ரலி- அவர்களிடம்,) அபூ ஹம்ஸாவே! நீங்கள் இந்நிகழ்ச்சியைப் பார்த்தீர்களா? என்று கேட்க, அனஸ் (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களைவிட்டு எங்கே போவேன்? என்று பதிலளித்தார்கள்.

பாடம் : 58

நஜ்த் நோக்கி அனுப்பப்பட்ட படைப் பிரிவு.371

4338 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கிப் படைப்பிரிவு ஒன்றை அனுப்பினார்கள். நான் அதில் இடம் பெற்றிருந்தேன். (அந்தப் போரில் கிடைத்த போர்ச் செல்வங் களில்) எங்கள் ஒவ்வொருவரின் பங்கும் பன்னி ரண்டு ஒட்டகங்களாக இருந்தன. எங்கள் ஒவ்வொருவருக்கும் எங்களுக்குரிய பங்குக்கும் மேல் அதிகமாக ஒவ்வோர் ஒட்டகம் கொடுக்கப்பட்டது. ஆக, நாங்கள் (ஒவ்வொரு வரும்) பதின்மூன்று ஒட்டகங்களைப் பெற்றுத் திரும்பினோம்.372

பாடம் : 59

நபி (ஸல்) அவர்கள் கா-த் பின் வலீத்

(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பியது373

4339 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கா-த் பின் வலீத்

(ரலி) அவர்களை பனூ ஜதீமா குலத்தாரிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அவர் இஸ்லாத்தை ஏற்கும்படி அழைப்புக்

கொடுத்தார். அவர்களுக்கு அஸ்லம்னா - நாங்கள் இஸ்லாத்தை ஏற்றோம் என்று திருத்தமாகச் சொல்ல வரவில்லை. ஆகவே, அவர்கள் (தங்களுடைய வழக்குப்படி)

 ஸபஃனா, ஸபஃனா - நாங்கள் மதம் மாறி விட்டோம், மதம் மாறிவிட்டோம் என்று சொல்லலானார்கள். உடனே கா-த் (ரலி) அவர்கள், அவர்களில் சிலரைக் கொல்லவும் சிலரைச் சிறை பிடிக்கவும் தொடங்கினார். அவர் (தம்முடன் வந்திருந்த) எங்களில் ஒவ்வொருவரிடமும் அவரவருடைய கைதியை ஒப்படைத்தார். ஒரு நாள் கா-த், எங்களில் ஒவ்வொருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல வேண்டுமென உத்தரவிட்டார். நான், அல்லாஹ்வின் மீதாணையாக! என்னிடமுள்ள கைதியை நான் கொல்ல மாட்டேன்; மேலும், என் சகாக்களில் ஒருவரும் தம்மிடமிருக்கும் கைதியைக் கொல்ல மாட்டார் என்று சொன்னேன். இறுதியில், நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, விஷயத்தைச் சொன்னோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் தம் கரங்களை உயர்த்தி, இறைவா! கா-த் செய்த தவறுகளுக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று உன்னிடம் தெரிவித்துக் கொள்கிறேன் என்று இருமுறை சொன்னார்கள்.

பாடம் : 60

அப்துல்லாஹ் பின் ஹுதாஃபா அஸ் ஸஹ்மீ (ரலி) மற்றும் அல்கமா பின் முஜஸ்ஸிஸ் அல் முத்-ஜீ (ரலி) ஆகியோரின் படைப்பிரிவு.

இது அன்சாரிகளின் படைப்பிரிவு என்று அழைக்கப்படுகிறது.374

4340 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு படைப்பிரிவை அனுப்பி அதற்கு அன்சாரிகளில் ஒருவரைத் தளபதியாக்கி அவருக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி படைவீரர்களுக்கு உத்தர விட்டார்கள். (அவர்கள் ஏதோ தவறிழைத்து விட) அவர்கள் மீது அவர் கோபமுற்று, நபி (ஸல்) அவர்கள் எனக்குக் கீழ்ப்படிந்து நடக்கும்படி உங்களுக்குக் கட்டளையிட வில்லையா? என்று கேட்டார். அவர்கள், ஆம் (கட்டளையிட்டார்கள்) என்று பதிலளித் தனர். அவர், அப்படியென்றால் எனக்காக விறகு சேகரியுங்கள் என்று சொல்ல, அவர் களும் அவ்வாறே சேகரித்தனர். அவர், நெருப்பு மூட்டுங்கள் என்று சொல்ல, அவர்களும் அவ்வாறே நெருப்பு மூட்டினார்கள். அவர், இதில் (இந்த நெருப்பில்) நீங்கள் நுழையுங்கள் என்று கூற, அவர்கள் அதில் நுழையப் போனார்கள். அதற்குள் (அதில் நுழைய விடாமல்) அவர்களில் ஒருவர் மற்றவரைத் தடுக்கலானார். மேலும் அவர்கள், (நரக) நெருப்பிலிருந்து வெருண்டோடித் தான் நாம் நபி (ஸல்) அவர்களிடம் சென்றோம் என்று கூறலாயினர். நெருப்பு அணைந்து போகும் வரை இவ்வாறே கூறிக் கொண்டிருந்தனர். பிறகு, படைத்தளபதியின் கோபம் தணிந்து அவர் அமைதியடைந்தார். பிறகு நபி (ஸல்) அவர்களுக்குச் செய்தி எட்டிய போது, அதில் அவர்கள் நுழைந்திருந்தால் மறுமை நாள் வரையிலும் கூட அதிலிருந்து அவர்கள் வெளியேறியிருக்க மாட்டார்கள்.375 கீழ்ப் படிதல் என்பது நற்செயல்களில் தான் என்று சொன்னார்கள்.

02.11.2009. 03:10

64-(நபிகளார் காலத்துப்)போர்கள்3

பாடம் : 31

நபி (ஸல்) அவர்கள் அகழ் யுத்த(க்கள)த்திலிருந்து (தம் வீடு) திரும்பியதும், அங்கிருந்து பனூ குறைழா குலத்தாரை நோக்கிப் புறப்பட்டுச் சென்று, அவர்களை முற்றுகையிட்டதும்.189

4117 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், அகழ்ப் போரிலிருந்து திரும்பி வந்து ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுக் குளித்தார்கள். (அப்போது வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! (வானவர்களாகிய) நாங்கள் அதைக் கீழே வைக்கவில்லை. எனவே, அவர்களை நோக்கிப் புறப்படுங்கள் என்று கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், எங்கே (போவது)? என்று கேட்டார்கள். அதற்கு ஜிப்ரீல் (அலை) அவர்கள், இதோ, இங்கே! என்று பனூ குறைழா (என்னும் யூதக்) குலத்தினரை (அவர்கள் வசிக்குமிடம்) நோக்கி சைகை காட்டினார்கள். ஆகவே, நபி (ஸல்) அவர்களும் அவர்களை நோக்கிப் புறப்பட்டார்கள்.190

4118 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்த) பனூ ஃகன்ம் கிளையாரின் குறுகலான வீதியில் நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா குலத்தாரை நோக்கிச் சென்ற போது (வானவர்) ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது படை பரிவாரங் களுடன் கம்பீரமாக பவனிவந்ததால் கிளம்பிய புழுதியை (இப்போது கூட) நான் பார்ப்பதைப் போன்றுள்ளது.191

4119 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போர் (முடிந்து வந்த) தினம், நபி (ஸல்) அவர்கள், பனூ குறைழா குலத்தினர் வசிக்குமிடத்தை நீங்கள் அடையும் வரை (உங்களில்) எவரும் அஸ்ருத் தொழுகையைத் தொழ வேண்டாம் என்று கூறினார்கள்.192 வழியிலேயே அஸ்ரு (த் தொழுகை) நேரத்தை அவர்கள் அடைந்தனர். அப்போது சிலர், பனூ குறைழாக் குலத்தினரை அடையும் வரை நாம் அஸ்ருத் தொழ வேண்டாம் என்று கூறினர். வேறு சிலர், (தொழுகை நேரம் தவறிப் போனாலும் தொழ வேண்டாம் என்ற) அந்த அர்த்தத்தில் நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை; (வேகமாக அங்கு போய்ச் சேருங்கள் என்ற கருத்தில் தான் இந்த வார்த்தையைக் கூறினார்கள்) எனவே, நாம் தொழுவோம் என்று கூறினர். நபி (ஸல்) அவர்களிடம் இரு சாரார் குறித்தும் தெரிவிக்கப்பட்ட போது அவர்களில் எவரையும் அவர்கள் குறை கூறவில்லை.193

4120 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் பனூ குறைழா மற்றும் பனூ நளீர் குலத்தாரை வெற்றி கொள்ளும் வரை, நபி (ஸல்) அவர்களுக்கு, (அன்சாரிகள்) சிலர் பேரீச்ச மரங்களை(ப் பயன்படுத்திக் கொள்ளும்படி அன்பளிப்பாக)க் கொடுத்திருந்தனர். (பனூ குறைழா, பனூ நளீர் குலத்தினரை நபி -ஸல்- அவர்கள் வெற்றி கொண்ட பின்னர் அன்சாரிகளிடமே அந்த மரங்களைத் திருப்பிக் கொடுத்து விட்டார்கள்.194 அந்தச் சமயத்தில்) என் குடும்பத்தார் என்னை நபி (ஸல்) அவர்களிடம் சென்று நபி (ஸல்) அவர்களுக்கு தாங்கள் கொடுத்திருந்த மரங்கள் அனைத்தையும், அல்லது அவற்றில் சிலவற்றை (திரும்பத் தரும்படி) கேட்குமாறு எனக்கு உத்தரவிட்டனர். நபி (ஸல்) அவர்கள் அந்த மரங்களை (பராமரிக்கும் பொறுப்பை தம் வளர்ப்புத்தாய்) உம்மு அய்மன் (ரலி) அவர்களிடம் கொடுத்திருந்தார்கள். (நான் அந்த மரங்களை நபி (ஸல்) அவர்களிடம் திரும்பத் தரும்படி கேட்டுக் கொண்டிருந்த போது அங்கு) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் வந்தார்கள். எனது கழுத்தின் மீது துணியைப் போட்டு, முடியாது! எவனைத் தவிர வேறு இறைவன் இல்லையோ அவன் மீது சத்தியமாக! நபி (ஸல்) அவர்கள் உங்களுக்கு (அவற்றைத்) தர மாட்டார்கள். (ஏனெனில்,) அவற்றை அவர்கள் எனக்கு (உரிமையாக்கித்) தந்து விட்டார்கள் என்றோ... அல்லது இது போல வேறொரு வார்த்தையையோ கூறினார்கள்.... நபி (ஸல்) அவர்கள் (உம்மு அய்மன் அவர்களைப் பார்த்து அவற்றைக் கொடுத்து விடுங்கள். அதற்குப் பகரமாக) உங்களுக்கு இந்த அளவு தருகிறேன் என்று கூறினார்கள். (அப்போது) உம்மு அய்மன் (ரலி) அவர்கள் (என்னைப் பார்த்து), அல்லாஹ்வின் மீதாணையாக! அந்த அளவு நபி (ஸல்) அவர்கள் எனக்குத் தரும் வரை (அவற்றை உங்களிடம் திருப்பித் தர) முடியாது என்று கூறினார்கள்.

(அறிவிப்பாளர்களில் ஒருவரான சுலைமான் பின் தர்கான் -ரஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:)

அனஸ் (ரலி) அவர்கள் அது போன்று பத்து மடங்கு (தருவதாக நபி -ஸல்- அவர்கள் கூறியதாகவோ) அல்லது அது போன்ற வேறொரு வார்த்தையைக் கூறியதாகவோ நான் எண்ணுகிறேன்.

4121 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

சஅத் பின் முஆத் (ரலி) அவர்களின் தீர்ப்பை ஏற்பதாக ஒப்புக் கொண்டு (யூதர்களான) பனூ குறைழா குலத்தார் (கைபரிலிருந்த தங்கள் கோட்டையிலிருந்து) இறங்கி வந்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் சஅத் பின் முஆத் அவர்களுக்கு ஆளனுப்பிட, அன்னார் கழுதையின் மீது (சவாரி செய்தபடி) வந்தார்கள். (நபிகளார் தாற்கா-கமாக அமைத்திருந்த) தொழு மிடத்திற்கு அருகே அன்னார் வந்து சேர்ந் ததும், நபி (ஸல்) அவர்கள், உங்கள் தலைவரை....அல்லது உங்களில் சிறந்த வரை...நோக்கி எழுந்திரு(த்துச் சென்று அவரை வாகனத்திலிருந்து இறக்கி விடு)ங்கள் என்று அன்சாரிகளிடம் சொன்னார்கள். பிறகு, (சஅதே!) இவர்கள் உங்கள் தீர்ப்பின் மீது (இசைவு தெரிவித்து) இறங்கி வந்திருக் கிறார்கள். (நீங்கள் என்ன தீர்ப்பு அளிக்கப் போகிறீர்கள்?) என்று கேட்டார்கள். சஅத் (ரலி) அவர்கள், இவர்களில் போரிடும் வ-மை கொண்டவர்களை நீங்கள் கொன்று விட வேண்டும்; இவர்களுடைய பெண்களையும் குழந்தைகளையும் நீங்கள் கைது செய்திட வேண்டும் என்று நான் தீர்ப்பளிக்கிறேன் என்றார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் ...அல்லது அரசனின் (அல்லாஹ்வின்) தீர்ப்புப்படியே நீங்கள் தீர்ப்பளித்தீர்கள் என்று சொன்னார்கள்.195

4122 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் தாக்கப்பட்டார்கள். அன்னாரது கை நரம்பில் குறைஷிகளில் ஒருவனான ஹிப்பான் பின் அரிஃகா என்ற ழைக்கப்பட்டவன் அம்பெய்து (அவர்களைக் காயப்படுத்தி) விட்டான். அப்போது நபி (ஸல்) அவர்கள் அவரை அருகிலிருந்து நலம் விசாரிப்பதற்கு வசதியாக (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாச-லேயே (அவருக்குக்) கூடார மொன்றை அமைத்தார்கள். அகழ்ப் போரை முடித்துக் கொண்டு வந்த அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டுக் குளித்தார்கள். அப்போது ஜிப்ரீல் (அலை) அவர்கள் தமது தலையிலிருந்த புழுதியைத் தட்டிய வண்ணம் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, நீங்கள் ஆயுதங்களைக் கீழே வைத்து விட்டீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் ஆயுதத்தைக் கீழே வைக்கவில்லை. அவர்களை நோக்கி (படை நடத்தி)ச் செல்லுங்கள் என்று சொன்னார்கள். அதற்கு எங்கே? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போது பனூ குறைழா குலத்தினர் (வசிப்பிடம்) நோக்கி ஜிப்ரீல் (அலை) அவர்கள் சைகை செய்தார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பனூ குறைழா நோக்கிச் சென்றார்கள். (பல நாள் முற்றுகைக்குப் பின்னர்) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தீர்ப்புக்கு இறங்கி வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தீர்ப்பை சஅத் பின் முஆத் (ரலி) அவர்களிடம் ஒப்படைத்தார்கள். சஅத் (ரலி) அவர்கள், பனூ குறைழாக்களில் போர்புரியும் வ-மை கொண்டவர்கள் கொல்லப்பட வேண்டும்; குழந்தைகளும் பெண்களும் கைது செய்யப்பட வேண்டும்; அவர்களின் சொத்துகள் பங்கிடப்பட வேண்டும் என்று தீர்ப்பளிக்கிறேன் என்று கூறினார்கள்.

(காயப்படுத்தப்பட்டு இரத்தம் வழிந் தோடிக் கொண்டிருந்த சமயம்) சஅத் (ரலி) அவர்கள், இறைவா! உன்னுடைய தூதரை நம்பாமல் அவர்களை (ஊரை விட்டு) வெளியேற்றிய சமுதாயத்தாரை எதிர்த்து உன் பாதையில் போர்புரிவதே மற்ற எதையும் விட எனக்கு மிகவும் விருப்பமானது என்பதை நீ அறிவாய். இறைவா! எங்களுக்கும் (குறைஷி களான) அவர்களுக்கும் இடையிலான போரை நீ (இத்துடன்) முடிவுக்குக் கொண்டு வந்து விட்டாய் என்று நான் எண்ணுகிறேன். குறைஷிகளுடனான போர் ஏதேனும் மீதியிருந்தால் அதற்காக என்னை உயிருடன் இருக்கச் செய். நான் உன் வழியில் போர் புரிவேன். போரை (இத்துடன்) நீ முடிவுக்குக் கொண்டு வந்திருந்தால் (காயும் நிலையில் இருக்கும் எனது காயத்தை) மீண்டும் (இரத்தம்) கொப்பளிக்கச் செய்து அதிலேயே எனக்கு மரணத்தை அளித்து விடு என்று பிரார்த்தித்தார்கள். அன்னாரது நெஞ்சுப் பகுதியிலிருந்து (இரத்தம்) பீறிட்டது. (அவர்களது கூடாரத்திற்கு அருகில்) கூடாரம் அமைத்திருந்த பனூ ஃகிபார் குலத்தாருக்கு சஅத் அவர்களுடைய கூடாரத்திலிருந்து தங்களை நோக்கி வழிந்தோடி வரும் இரத்தம் தான் அச்சத்தை ஏற்படுத்தியது. அப்போது மக்கள், கூடார வாசிகளே! உங்கள் தரப்பிலிருந்து எங்களை நோக்கி(ப் பாய்ந்து) வருகிறதே, இது என்ன? என்று கேட்டுக் கொண்டு, அங்கே பார்த்த போது காயத்திலிருந்து இரத்தம் வழிய சஅத் (ரலி) அவர்கள் இருந்தார்கள். அந்தக் காயத்தினாலேயே சஅத் (ரலி) அவர்கள் இறந்தார்கள். அல்லாஹ் அன்னாரைக் குறித்து திருப்தி கொள்வானாக!196

4123 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், (பனூ குறைழா நாளில் கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களிடம், இணைவைப்பவர் களைத் தாக்கி வசைக்கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறுதுணையாக) இருப்பார் என்று கூறினார்கள்.197

4124 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பனூ குறைழா போரின் போது ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை நோக்கி, இணை வைப்பவர்களைத் தாக்கி வசைக் கவி பாடுங்கள். ஜிப்ரீல் உங்களுடன் (உறு துணையாக) இருப்பார் என்று கூறினார்கள்.

பாடம் : 32

தாத்துர் ரிக்காஉ போர்.198

இது தான் முஹாரிபு கஸ்ஃபா போராகும். இவர்கள் ஃகத்ஃபான் குலத்தின் ஒரு பிரிவினரான பனூ ஸஅலபா கூட்டத்தார் ஆவர்.199

இப்போரில் நபி (ஸல்) அவர்கள் நக்ல் என்ற இடத்தில் (முகாமிட்டுத்) தங்கினார்கள்.200 இந்தப் போர் கைபருக்குப் பின்னால் நடந்தது. ஏனெனில், (தாத்துர் ரிகாஉ போரில் கலந்து கொண்டவர்களில் ஒருவரான) அபூ மூசா (ரலி) அவர்கள் கைபர் போருக்குப் பின்னால் தான் (அபிசீனியாவிலிருந்து மதீனாவிற்கு) வந்தார்கள்.

4125 ஜாபிர் பின் அப்தில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(நபி -ஸல்- அவர்கள் செய்த) ஏழாவது போரான தாத்துர் ரிகாஉ போரின் போது தம் தோழர்களுடன் நபி (ஸல்) அவர்கள் அச்ச நேரத்தொழுகையை தொழுதார்கள்.201

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை தூ கரத் என்ற இடத்தில் தொழுதார்கள்.202

4126 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாரிப் மற்றும் ஸஅலபாப் போரின் போது203 நபி (ஸல்) அவர்கள் தம் தோழர் களுடன் (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுதார்கள்.

4127 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நஜ்த் பகுதி ஃகத்ஃபான் குலத்தார் வசித்து வந்த) நக்ல் என்னுமிடத்திற்கு தாத்துர் ரிகாஉ போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்றார்கள். அப்போது ஃகத்ஃபான் குலத்தாரின் ஒரு கூட்டத்தைச் சந்தித்தார்கள். மக்களில் சிலர் சிலரைக் கண்டு அஞ்சினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம் தோழர்களுடன்) அச்ச நேரத் தொழுகை இரண்டு ரக்அத்கள் தொழுதார்கள்.

சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நபி (ஸல்) அவர்களுடன் நான் அல் கரத் போரில் கலந்து கொண்டேன்.

4128 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஒரு போருக்காகச் சென்றோம். எங்களில் ஆறு பேருக்கு ஓர் ஒட்டகம் தான் இருந்தது. அதில் நாங்கள் முறைவைத்து சவாரி செய்தோம். (வாகனம் கிடைக்காமல் நடந்தே செல்ல வேண்டிய நிலை ஏற்பட்டதால்) எங்களுடைய பாதங்கள் தேய்ந்து விட்டன. என்னுடைய இரண்டு பாதங்களும் தேய்ந்து என் கால் நகங்கள் விழுந்து விட்டன. அப்போது நாங்கள் எங்களுடைய கால்களில் கிழிந்த துணிகளைச் சுற்றிக் கொள்பவர்களாக இருந்தோம். இவ்வாறு கிழிந்த துணிகளை நாங்கள் கால்களில் கட்டியிருந்ததனால் தான் அந்தப் போருக்கு தாத்துர் ரிகாஉ - ஒட்டுத் துணிப் போர் என்று பெயர் சூட்டப்பட்டது.

அறிவிப்பாளர் அபூ புர்தா பின் அபீமூசா (ரஹ்) கூறுகிறார்கள்:

 இந்த ஹதீஸை அறிவித்த பின் அபூமூசா (ரலி) அவர்கள், தாம் இதை அறிவித்ததைத் தாமே விரும்பாமல், நான் இதை (வெளியே) சொல்ல விரும்பாமல் தான் இருந்தேன் என்றார்கள். தமது நற்செயல் ஒன்றைத் தாமே வெளியே சொல்லிவிட்டதை அன்னார் விரும்பவில்லை போலும்.

4129 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் தாத்துர் ரிகாஉ போரில் கலந்து கொண்ட (நபித்தோழர்களில்) ஒருவர் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (அப்போரின் போது) அச்ச நேரத்தொழுகையைத் தொழுதார்கள். (எங்களில்) ஓர் அணியினர் நபி (ஸல்) அவர் களுடன் (தொழுகையில்) அணிவகுத்தனர். இன்னோர் அணியினர் எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், தம்முடன் இருப்பவர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவித்து விட்டு அப்படியே நின்று கொண்டார்கள். (நபி -ஸல்- அவர்களுடன் தொழுகையை நிறைவேற்றிய) அந்த அணியினர் தங்களுக்கு (மீதியிருந்த இன்னொரு ரக்அத்தைத் தனியாகப்) பூர்த்தி செய்து கொண்டு திரும்பிச் சென்று எதிரிகளுக்கு எதிரே அணிவகுத்து நின்று கொண்டார்கள். பிறகு, (அதுவரை எதிரிகளுக்கு எதிரே நின்று கொண்டிருந்த) இன்னோர் அணியினர் வந்தனர். நபி (ஸல்) அவர்கள் தம்முடைய தொழுகையில் மீதியிருந்த ஒரு ரக்அத்தை இவர்களுக்குத் தொழுவித்து விட்டு (அப்படியே) அமர்ந்து கொண்டிருந்தார்கள். (இரண்டாவது அணியினர்) தங்களுக்கு (மீதியிருந்த ஒரு ரக்அத்தைப்) பூர்த்தி செய்து கொண்டனர். பிறகு அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சலாம் கொடுத்தார்கள்.

இதை ஸா-ஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4130 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நஜ்த் பகுதியின்) நக்ல் என்னுமிடத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு - ஜாபிர் (ரலி) அவர்கள் அச்ச நேரத் தொழுகையைப் பற்றி (முழுமையாக) அறிவித்தார்கள்.

இமாம் மாலிக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அது (ஸா-ஹ் பின் கவ்வாத் -ரஹ்- அவர்களின் அறிவிப்பில் வந்துள்ள அச்ச நேரத்தொழுகை முறை) தான் அச்ச நேரத் தொழுகை பற்றி நான் கேள்விப்பட்ட திலேயே மிகச் சிறந்ததாகும்.204

காஸிம் பின் முஹம்மத் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் அச்ச நேரத் தொழுகையை பனூ அன்மார் போரின் போது தொழுதார்கள்.205

4131 சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அச்ச நேரத் தொழுகையில்) கிப்லாவை முன்னோக்கி இமாமும் அவருடன் அவர் களில் ஓர் அணியினரும் நிற்பர். இன்னோர் அணியினர் எதிரிகளை நோக்கித் தங்கள் முகங்கள் இருக்கும் வண்ணம் (தொழாமல்) நிற்பர். அப்போது இமாம் தம்முடன் இருப்ப வர்களுக்கு ஒரு ரக்அத் தொழுவிப்பார். பிறகு, அவர்கள் எழுந்து தங்களுக்கு (மீதமிருக்கும்) ஒரு ரக்அத்தை அந்த இடத்திலேயே இரண்டு சஜ்தாக்கள் செய்து பூர்த்தி செய்து கொள்வர். பிறகு, இவர்கள் மற்றோர் அணியினரின் இடத்திற்குச் சென்றுவிடுவர். அந்த (இரண் டாவது) அணியினர் (இமாமிடம்) வரு வார்கள். அவர்களுடன் சேர்ந்து இன்னொரு ரக்அத்தை இமாம் தொழுவார். இப்போது இமாமுக்கு இரண்டு ரக்அத்துக்களாகி விட்டது. பிறகு இவர்கள் (மீதமிருக்கும் ஒரு ரக்அத்தைத் தனியாக எழுந்து) ருகூஉ செய்து இரண்டு சஜ்தாக்கள் செய்து தொழுவார்கள்.

இதை ஸா-ஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

...... இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் ஸா-ஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்களின் (அச்ச நேரத் தொழுகை பற்றிய நபிமொழி) அறிவிப்பு வந்துள்ளது.

...... சஹ்ல் பின் அபீ ஹஸ்மா (ரலி) அவர்களிடமிருந்து ஸா-ஹ் பின் கவ்வாத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் (அச்ச நேரத் தொழுகை பற்றிய) அறிவிப்பு இன்னோர் அறிவிப்பாளர் தொடரிலும் வருகிறது.

4132 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 (தாத்துர் ரிகாஉ) போருக்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி நாங்கள் புறப்பட்டுச் சென்றோம். அப்போது நாங்கள் எதிரிகளை எதிர் கொண்டு அவர்களுக்காக அணி வகுத்தோம்.206

4133 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரண்டு அணிகளில் ஓரணியினருக்கு (அச்ச நேரத் தொழுகையைத்) தொழுவித்தார்கள். (அப்போது) மற்றோர் அணியினர் எதிரிகளுக்கு முன்னால் (நின்று கொண்டு) இருந்தனர். பிறகு முதல் அணியினர் திரும்பிச் சென்று தம் தோழர்கள் (இரண்டாம் அணியினர்) நின்று கொண்டிருந்த இடத்தில் (எதிரிகளுக்கு முன்னால்) நின்று கொண்டனர். பிறகு இரண்டாம் அணியினர் (தொழுகைக்கு) வந்தனர். அவர்களுடன் நபி (ஸல்) அவர்கள் சேர்ந்து ஒரு ரக்அத் தொழுது விட்டு, அவர்கள் (தொழுகையில்) இருக்க நபியவர்கள் ஸலாம் கொடுத்தார்கள். பிறகு இந்த அணியினர் எழுந்து (மீதமிருந்த) தங்களுடைய ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர். முதல் அணியினரும் எழுந்து (மீதமிருந்த) தங்களுடைய ஒரு ரக்அத்தை நிறைவேற்றினர்.

4134 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி ஒரு போருக்குச் சென்றேன்.

4135 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நஜ்தை நோக்கி (தாதுர் ரிகாஉ) போருக்காக சென்றேன். (போரை முடித்துக் கொண்டு) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திரும்பிய போது நானும் அவர் களுடன் திரும்பிக் கொண்டிருந்தேன். கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத்தாக்கை அடைந்த போது மதிய (ஓய்வுகொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. எனவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அங்கு) தங்கினார்கள். மக்கள் (ஓய்வெடுப் பதற்காக) மர நிழல் தேடி (பல திசைகளிலும்) பிரிந்து போய்விட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு முள் மரத்திற்குக் கீழே தங்கி ஓய்வெடுத்தார்கள்; அப்போது தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள். நாங்கள் ஒரு தூக்கம் தூங்கியிருப்போம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் அவர்களிடம் சென்றோம். அங்கே நபி (ஸல்) அவர்களுக்கு அருகில் ஒரு கிராமவாசி அமர்ந்து கொண்டிருந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தூங்கிக் கொண்டிருந்த போது இவர் எனது வாளை (எனக்கெதிராக) உருவிக் கொண்டார். அந்த வாள் உருவப்பட்டு இவரது கையிலிருந்த நிலையில் நான் கண்விழித்தேன். அப்போது இவர் என்னிடம், என்னிடமிருந்து உன்னைக் காப்பவர் யார்? என்று கேட்டார். நான், அல்லாஹ் என்று பதிலளித்தேன். இதோ அவர் இங்கே அமர்ந்திருக்கிறார் என்று கூறினார்கள்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்கவில்லை. (மன்னித்து விட்டுவிட்டார்கள்.)207

4136 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தாத்துர் ரிகாஉ போரில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். பிறகு (போரை முடித்துக் கொண்டு) நாங்கள் நிழல் நிறைந்த ஒரு மரத்தினருகே வந்தோம். அந்த மரத்தை நபி (ஸல்) அவர்களு(டைய மதிய ஓய்வு)க்காக விட்டுவிட்டோம். அப்போது இணைவைப்பவர்களில் ஒருவர் வந்தார். நபி (ஸல்) அவர்களின் வாள் அந்த மரத்தில் தொங்கவிடப்பட்டிருந்தது. உடனே அதை அவர் உருவிக் கொண்டு நபி (ஸல்) அவர்களை நோக்கி, எனக்கு நீர் அஞ்சுகிறீரா? என்று கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள் (கொஞ்சமும் அஞ்சாமல்) இல்லை என்று பதிலளித்தார்கள். அவர், இப்போது என்னிட மிருந்து உன்னைக் காப்பாற்றுவது யார்? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் என்று பதிலளித்தார்கள். அப்போது நபித்தோழர்கள் அவரைக் கண்டித்தார்கள்.

பிறகு தொழுகைக்காக இகாமத் சொல்லப்பட்டது. அப்போது (தம் தோழர் களில்) ஓர் அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் (அச்ச நேரத் தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு இந்த அணியினர் பின்னால் விலகிக் கொள்ளவே (எதிரிகளைக் கண்காணித்துக் கொண்டிருந்த அணியினர் வந்தனர்.) அந்த அணியினருக்கு நபி (ஸல்) அவர்கள் இரண்டு ரக்அத்துகள் தொழுவித்தார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு நான்கு ரக்அத்துகளும், மக்களுக்கு இரண்டு ரக்அத்துகளும் ஆயின.

அந்த மனிதரின் பெயர் கவ்ரஸ் பின் ஹாரிஸ் என்றும், இப்போரில் முஹாரிப் கஸஃபா கூட்டத்தாரை நபி (ஸல்) அவர்கள் எதிர் கொண்டார்கள் என்றும் அபூ அவானா (ரஹ்) அவர்களிடமிருந்து முஸத்தத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4137 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நஜ்த் பகுதியிலுள்ள) நக்ல் என்னுமிடத்தில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்தோம். அப்போது அவர்கள் அச்ச நேரத் தொழுகையைத் தொழுவித்தார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களுடன் நஜ்துப் போரின் போது அச்சநேரத் தொழுகையைத் தொழுதேன் என்று கூறுகிறார்கள்.

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கைபர் போரின் போது தான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தார்கள்.208

பாடம் : 33

குஸாஆ குலத்தில் ஒரு பிரிவினரான பனூ முஸ்த-க் (குலத்தாருடன் நடந்த) போர். இது தான் முரைசீஉ போர்.209

இந்தப் போர் (ஹிஜ்ரி) ஆறாம் ஆண்டு நடந்தது என்று இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

(ஹிஜ்ரி) நான்காம் ஆண்டு நடந்ததாக மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள். (ஆயிஷா -ரலி- அவர்கள் மீது கூறப்பட்ட) அவதூறுச் சம்பவம் (இந்த) முரைசீஉ போரின் போது தான் நடந்தது என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

4138 இப்னு முஹைரீஸ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பள்ளிவாசலுக்குள் நுழைந்தேன். (அங்கு) நான் அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களைப் பார்த்தேன். அவர்களிடம் (சென்று) அமர்ந்து கொண்டு அஸ்ல் பற்றிக் கேட்டேன்.210 அபூசயீத் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

 நாங்கள் அல்லாஹ்வின் தூதருடன் பனூ முஸ்த-க் (குலத்திற்கெதிரான) போருக்குச் சென்றோம். அப்போது, அரபுகளிலிருந்து போர்க் கைதிகள் சிலர் எங்களுக்குக் கிடைத் தனர். நாங்கள் (அந்தக் கைதிகளிடையேயிருந்த) பெண்களை (உடலுறவு கொள்ள) விரும்பி னோம். ஏனெனில், (எங்கள் மனைவியரைப் பிரிந்து) தனிமையில் இருந்தது எங்களை வாட்டியது. மேலும் (அந்தப் பெண்களுடன் உடலுறவு கொள்ளும் போது) அஸ்ல் செய்ய நினைத்தோம். (ஆனால்,) நம்மிடையே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இருக்க, அவர்களிடம் கேட்பதற்கு முன் நாம் அஸ்ல் செய்வதா? என்று (எங்களுக்குள்) பேசிக் கொண்டு அது தொடர்பாக அல்லாஹ்வின் தூதரிடம் கேட்டோம். அதற்கு, நீங்கள் அதைச் செய்யாமலிருந்தால் தவறேது மில்லையே! மறுமை நாள் வரை (இறை விதிப்படி) உருவாக வேண்டிய எந்த உயிரும் கட்டாயம் உருவாகியே தீரும் என்று நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள்.211

4139 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(தாத்துர் ரிகாஉ எனும்) நஜ்துப் போருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடன் நாங்கள் சென்றோம். (போரை முடித்துக் கொண்டு திரும்பிய போது) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கருவேல முள் மரங்கள் நிறைந்த ஒரு பள்ளத் தாக்கினை அடைந்த போது மதிய (ஓய்வு கொள்ளும் நண்பகல்) நேரம் வந்தது. அவர்கள் ஒரு மரத்திற்குக் கீழே நிழல் பெற்று ஓய்வெடுத்தார்கள். தமது வாளை அந்த மரத்தில் தொங்க விட்டார்கள். (ஆங்காங்கே இருந்த) மரங்களின் கீழே மக்கள் பிரிந்து சென்று நிழல் பெற்று (ஓய்வெடுத்துக்) கொண்டிருந்தனர். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களை அழைத்தார்கள். உடனே நாங்கள் (அவர்களிடம்) வந்தோம். அப்போது ஒரு கிராமவாசி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் அமர்ந்து கொண்டிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், நான் தூங்கிக் கொண்டிருந்த போது என்னிடம் இவர் வந்து எனது வாளை உருவியெடுத்துக் கொண்டார். உடனே நான் விழித்துக் கொண்டேன். எனது வாளை உருவிய நிலையில் எனது தலைமாட்டில் இவர் நின்று கொண்டிருந்தார். என்னிடமிருந்து உங்களைக் காப்பது யார்? என்று கேட்டார். நான், அல்லாஹ் என்று பதிலளித்தேன். உடனே அவர் வாளை உறையி-ட்டார். பிறகு அவர் அமர்ந்து கொண்டார். அது இவர் தான் என்று கூறினார்கள்.

பிறகு அவரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தண்டிக்காமல் (மன்னித்து) விட்டார்கள்.212

பாடம் : 34

அன்மார் போர்213

4140 ஜாபிர் பின் அப்தில்லாஹ் அல் அன்சாரி (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் அன்மார் போரின் போது தமது வாகனத்தின் மீதமர்ந்தவாறு கிழக்குத் திசையை நோக்கி உபரித் தொழு கையைத் தொழுவதை நான் பார்த்தேன்.214

பாடம் : 35

அவதூறு சம்பவம்215

(அரபி மொழியில்) இஃப்க் அல்லது அஃபக் என்றால் அவதூறு என்று பொருள். இதற்கு (திசை)திருப்புதல் என்பது சொற் பொருளாகும். இதே பொருளில்தான் 51:9-வது வசனத்தில் இச்சொல் ஆளப்பட்டுள்ளது.

4141 இப்னு ஷிஹாப் (அஸ்ஸுஹ்ரீ-ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் உர்வா பின் ஸுபைர், சயீத் பின் முஸய்யப், அல்கமா பின் வக்காஸ், உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் பின் உத்பா பின் மஸ்ஊத் (ரஹ்... அலைஹிம்) ஆகியோர் நபி (ஸல்) அவர்களின் துணைவி யாரான ஆயிஷா (ரலி) அவர்கள் குறித்து அவதூறு கூறியவர்கள் சொன்னதைப் பற்றி அறிவித்தனர். அவர்கள் (நால்வரில்) ஒவ் வொருவரும் இச்சம்பவம் பற்றி ஆளுக் கொரு பகுதியினை அறிவித்தனர். அவர்களில் சிலர், சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு நினைவில் நிறுத்தியவர்களாகவும், அதை எடுத்துரைப்பதில் சிறந்தவர்களாகவும் இருந்தனர். ஆயிஷா (ரலி) அவர்களின் (இச்சம்பவம்) தொடர்பாக ஒவ்வொருவரும் அறிவித்த செய்தியை நான் மனனமிட்டுக் கொண்டேன். இவர்களில் சிலர் சிலரை விட இந்தச் சம்பவத்தை நன்கு மனனமிட்டவர்களாக இருந்தாலும் ஒருவரின் அறிவிப்பு மற்றவரின் அறிவிப்பை உறுதிப்படுத்தும் வகையில் அமைந்திருந்தது. அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் மேற் கொண்ட (பனூ முஸ்த-க் என்ற) ஒரு புனிதப் போரின் போது (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். அதில் எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. எனவே, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் கடைப்பிடிக்க வேண்டிய பர்தா என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் எனது ஒட்டகச் சிவிகையில் வைத்து சுமந்து செல்லப்பட்டும் அதில் இருக்கும் நிலையி லேயே கீழே இறக்கி வைக்கப்பட்டும் வந்தேன்.

நபி (ஸல்) அவர்கள் எங்களுடன் அந்தப் போர் முடிந்து திரும்பிக் கொண்டிருந்த நிலையில் நாங்கள் மதீனாவை நெருங்கிய போது, இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும் படி அறிவிப்புச் செய்தார்கள். அப்போது நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (இயற்கைக் கடனை நிறைவேற்றுவதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (இயற்கைத்) தேவையை நான் முடித்துக் கொண்டபின் முகாமை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சைத் தொட்டுப் பார்த்தேன். (என் கழுத்திலிருந்த யமன் நாட்டு) ழஃபாரி நகர முத்து மாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று எனது மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டி ருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேர விடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைக்கும் குழுவினர் என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு, அதைச் சுமந்து சென்று, நான் சவாரி செய்து வந்த என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டிவிட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி

மெ-ந்தவர்களாக இருந்தனர். அவர்களுக்கு சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவையே அவர்கள் உண்பார்கள். ஆகவே சிவிகையைத் தூக்கிய போதும், அதைச் சுமந்த போதும் அது கனமில்லாமல் இருந்ததை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த இளம் பெண் ணாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்கலானார்கள். படையினர் சென்ற பிறகு (தொலைந்து போன) எனது மாலை கிடைத்து விட்டது. நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். (அங்கிருந்த அனைவரும் சென்று விட்டிருந்தனர்.) அங்கு அவர்களில் அழைப்ப வரோ பதில் கொடுப்பவரோ எவரும் இருக்கவில்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிப் போ(ய் அங்கு அமரலா) னேன். நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு படையினர் என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் எனது இடத்தில் அமர்ந்திருக்க, என் கண்ணில் உறக்கம் மிகைத்து விட, நான் தூங்கி விட்டேன். படை சென்றதற்குப் பின்னால் (படையினர் தவறவிட்டுச் சென்ற பொருள்களை எடுத்துச் செல்வதற்காக) ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ்ஸுலமீ அத் தக்வானீ என்பவர் அங்கு இருந்தார். நான் தங்கியிருந்த இடத்திற்கு அருகில் அவர் காலையில் வந்தார். அவர் (அங்கே) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்தார். பர்தா வுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னர் அவர் என்னைப் பார்த்திருந்தார். ஆகவே, என்னைப் பார்த்ததும் அவர் அடையாளம் புரிந்து கொண்டார். அவர், என்னை அறிந்து கொண்டு, இன்னா -ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் - நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்ல விருக்கிறோம் என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். உடனே எனது முகத்திரையால் என் முகத்தை மறைத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நாங்கள் ஒரு வார்த்தை கூடப் பேசவில்லை. அவர் இன்னா-ல்லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன் என்று கூறியதைத் தவிர வேறெதையும் நான் அவரிடமிருந்து கேட்கவுமில்லை. பிறகு, அவர் விரைவாக தமது ஒட்டகத்தை மண்டியிடச் செய்து (நான் ஏறிக் கொள்ள வசதியாக) அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான் எழுந்து சென்று அதில் ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அப்போது அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்கள் இருவரையும் கண்டு அவதூறு பேசி என் விஷயத்தில்) அழிந்த வர்கள் அழிந்து போனார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்வதில் பெரும்பங்கு எடுத்துக் கொண்டிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் (எனும் நயவஞ்சகர் களின் தலைவன்) ஆவான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்: அந்தப் பழிச்சொல் பரப்பப்பட்டும், அப்துல்லாஹ் பின் உபை பின் சலூ-டம் பேசப்பட்டும் வந்தது. அப்போது அவன் அதை ஏற்று, காது தாழ்த்திக் கேட்டு, அதை (மேன்மேலும்) கிளறிவிட்டுக் கொண்டி ருந்தான்- என்று எனக்குச் செய்தி கிடைத்தது.

அறிவிப்பாளர் உர்வா (ரஹ்) அவர்கள் மேலும் கூறுகிறார்கள்: அவதூறு கூறியவர் (களான முஸ்லிம்)களில் ஹஸ்ஸான் பின் ஸாபித், மிஸ்தஹ் பின் உஸாஸா, ஹம்னா பின்த் ஜஹ்ஷ் ஆகியோரைத் தவிர மற்ற சிலரின் பெயர்கள் எனக்குத் தெரியாது. ஆயினும் அல்லாஹ் (தனது வேதத்தில், எவர் அவதூறு கற்பித்தார்களோ நிச்சயமாக அவர்களும் உங்களில் ஒரு குழுவினரே என்று 4:11லிம் வசனத்தில்) கூறியது போல அவர்கள் ஒரு குழுவினர் ஆவர். அ(ந்தச் சம்பவத்)தில் பெரும் பங்கெடுத்துக் கொண்டவன் அப்துல்லாஹ் பின் உபை பின் சலூல் ஆவான். தமக்கு முன்னால் ஹஸ்ஸான் அவர்கள் ஏசப்படுவதை ஆயிஷா (ரலி) அவர்கள் விரும்பாதவர்களாக இருந்தார்கள். மேலும், அந்த ஹஸ்ஸான் அவர்கள் தாம் இந்தக் கவிதையைச் சொன்னவர் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுவார்கள்: (பகைவர்களே!) என் தந்தையும், என் தந்தையின் தந்தையும், எனது மானமும் உங்களிடமிருந்து முஹம்மத் (ஸல்) அவர்களின் மானத்தைக் காக்கும் கேடயமாகும்

(தொடர்ந்து) ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்:

பிறகு நாங்கள் மதீனா வந்தடைந்தோம். அங்கு வந்து சேர்ந்து ஒரு மாத காலம் நான் நோயுற்று விட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். இந்த அவதூறு பற்றி எனக்கு எதுவுமே தெரியாது. நான் நோயுறும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வழக்கமாகக் காட்டுகின்ற பரிவை (இந்த முறை நான் நோய்வாய்ப்பட்டிருந்த போது) அவர்களிடம் காண முடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம்சொல்வார்கள்; பிறகு, எப்படி இருக்கிறாய்? என்று கேட்பார்கள்; பிறகு போய் விடுவார்கள். அவ்வளவு தான். இது தான் எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த) அந்த தீய சொல்லில் ஒரு சிறிதும், நான் நோயிலிருந்து குணமடைந்து வெளியே செல்லும் வரை எனக்குத் தெரியாது. அப்போது நான் மிஸ்தஹின் தாயாருடன் நாங்கள் கழிப் பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ (எனப்படும் புறநகர்ப் பகுதியை) நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங்களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு (புறநகர்ப் பகுதிகளுக்கு) சென்று கொண்டிருந்தோம். எங்களுடைய இந்த வழக்கம் முந்தைய அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. எங்கள் வீடுகளுக்கு அரு கிலேயே கழிப்பிடங்கள் அமைப்பதை நாங்கள் தொந்தரவாகக் கருதி வந்தோம். நானும் உம்மு மிஸ்தஹும் சென்றோம். - அவர் அபூருஹ்ம் பின் முத்த-ப் பின் அப்து மனாஃப் அவர்களின் மகளாவார். அபூ பக்ர் (ரலி) அவர்களின் தாயின் சகோதரியான (சல்மா) பின்த் ஸக்ர் பின் ஆமிர் தான் உம்மு மிஸ்தஹின் தாயாராவார் . உம்மு மிஸ்தஹின் மகனே, மிஸ்தஹ் பின் உஸாஸா பின் அப்பாத் பின் முத்த-ப் ஆவார். (இத்தகைய) உம்மு மிஸ்தஹும் நானும் எங்கள் (இயற்கைத்) தேவைகளை முடித்துக் கொண்டு என் வீடு நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். அப்போது உம்மு மிஸ்தஹ் தன் ஆடையில் இடறிக் கொண்டார். உடனே அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று (தன் மகனை சபித்த வராகக்) கூறினார். நான், மிக மோசமான சொல்லைச் செல்-விட்டீர். பத்ருப்போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா ஏசுகிறீர் என்று கூறினேன். அதற்கு அவர், அம்மா! அவர் என்ன சொன்னார் என்று நீங்கள் கேள்விப்படவில்லையா? என்று கேட்டார். என்ன சொன்னார்? என்று நான் வினவ, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண் டத்)தை அவர் எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்து விட்டது. நான் என் இல்லத்திற்குத் திரும்பி வந்த போது (என் கணவர்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து சலாம் கூறி விட்டு எப்படி இருக்கிறாய்? என்று கேட்டார்கள். அப்போது நான், என் தாய் தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி தருவீர்களா? என்று கேட்டேன். (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து, என் மீதான அவதூறுச்) செய்தியை என் பெற்றோரிடமிருந்து (அறிந்து) உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளித்தார்கள். (நான் என் தாய் வீட்டிற்குச் சென்றேன்) என் தாயாரிடம், அம்மா! மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்று கேட்டேன். என் தாயார், அன்பு மகளே! உன் மீது (இந்த விஷயத்தைப்) பெரிதுபடுத்திக் கொள்ளாதே! அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத்துக் குரியவளாக இருக்கும் அழகொளிரும் பெண்ணொருத்தியைக் குறித்து அவளுடைய சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாம லிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும் என்று கூறினார்கள். நான், சுப்ஹானல்லாஹ்! (அல்லாஹ் தூயவன்.) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள் என்று (வியப்புடன்) கேட்டேன். அன்றிரவு காலை வரை அழுதேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; உறக்கமும் என்னைத் தழுவவில்லை. காலை நேரம் வந்த போதும் அழுதேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தம் மனைவியை (என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீதா-ப் அவர்களையும், உஸாமா பின் ஸைத் அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (வேதவெளிப்பாடு-தாற்கா-கமாக) நின்று போயிருந்தது. உஸாமா அவர்களோ, நான் நிரபராதி எனத் தாம் அறிந்துள்ளதையும், நபி (ஸல்) அவர்களின் குடும்பத்தார் மீது உள்ளத்தில் தாம் கொண் டிருந்த(பாசத்)தையும் வைத்து ஆலோசனை கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதரே!) தங்களுடைய துணைவியரிடம் நல்ல (குணத்) தைத் தவிர வேறெதையும் நான் அறிய வில்லை என்று உஸாமா கூறினார்கள். அலீ அவர்களோ (நபி -ஸல்- அவர்களின் மனவேதனையைக் குறைக்கும் விதமாக), அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்க ளுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்த வில்லை. ஆயிஷா அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப்பெண்ணை (பரீராவை)க் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப்பெண்ணான) பரீராவை அழைத்து, பரீராவே! நீ (ஆயிஷாவிடம்) உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கு பரீரா, தங்களை சத்திய (மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீதாணையாக! அவர் குழைத்த மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய் விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்று விடும்; அத்தகைய (கவனக்குறைவான) இளவயதுப் பெண் என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக் கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார்.

அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரில் (மேடையில்) ஏறி நின்று அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி (தம் தோழர்களிடம்) கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முஸ்லிம்களே! என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மனவேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவி புரிபவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் வீட்டா ரிடம் நல்லதையே நான் அறிவேன். அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். என்னோடு தான் அவர் என் வீட்டாரிடம் வந்திருக் கிறார்(தனியாக வந்ததில்லை) என்று கூறினார்கள். உடனே பனூ அப்தில் அஷ்ஹல் கூட்டத்தைச் சேர்ந்த சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதரே! அவனை தண்டிக்கத் தங்களுக்கு நான் உதவுகிறேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக அவன் இருந்தால் (என்ன செய்ய வேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்றுகிறோம் என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் கலத்தைச் சேர்ந்த ஒருவர் எழுந்தார். அவர் கஸ்ரஜ் குலத்தின் தலைவரான சஅத் பின் உபாதா ஆவார். ஹஸ்ஸான் பின் ஸாபித் அவர்களின் தாயார், இவரது குடும்பத்தில் ஒருவரும், இவருடைய தந்தையின் சகோதரரின் மகளும் ஆவார். இவர் அதற்கு முன் நல்ல மனிதராகத் தான் இருந்தார். ஆயினும், குலமாச்சரியம் அவரை உசுப்பிவிடவே சஅத் பின் முஆத் அவர்களைப் பார்த்து அல்லாஹ்வின் மீதாணையாக! தவறாகச் சொல்லிவிட்டீர்; அவனை நீர் கொல்லமாட்டீர். அது உம்மால் முடியாது. அவன் உமது குலத்தைச் சேர்ந்தவனாயிருந்தால் அவன் கொல்லப்படுவதை நீர் விரும்பமாட்டீர் என்று கூறினார். உடனே உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, - இவர், சஅத் பின் முஆத் அவர்களின் தந்தையின் சகோதரர் மகன் ஆவார். - சஅத் பின் உபாதா அவர்களிடம், நீர் தாம் தவறாகப் பேசினீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால் தான்) நயவஞ்சகர் களின் சார்பாக வாதிடுகின்றீர் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மேடை மீது நின்று கொண்டிருக்க அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிடத் தயாராகி விட்டனர். நபி (ஸல்) அவர்கள் (மேடையிலிருந்து இறங்கி) அவர்கள் மௌன மாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு தாமும் மௌனமாகி விட்டார்கள். அன்றைய நாள் முழுவதும் நான் அழுது கொண்டிருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; என்னை உறக்கமும் தழுவவில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க), என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண்ணும் அளவிற்கு அழுதிருந்தேன். என் கண்ணீரும் நிற்கவில்லை; என்னை உறக்கமும் தழுவ வில்லை. என் தாய் தந்தையர் என் அருகேயிருக்க நான் அழுது கொண்டிருந்த போது அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து என்னிடம் உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னுடன் சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்து சலாம் கூறிவிட்டு அமர்ந்து கொண்டார்கள். (என்னைப் பற்றி) அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்த தில்லை. ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப் படாமலேயே அவர்கள் இருந்து வந்தார்கள். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஏகத்துவ உறுதி மொழி கூறி இறைவனைப் புகழ்ந்து விட்டு, நிற்க, ஆயிஷா! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி வந்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னை குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி அவன் பக்கம் திரும்பிவிடு. ஏனெனில், அடியான் தனது பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவமன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக்கிறான் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தமது பேச்சை முடித்த போது எனது கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் (எஞ்சியிருப்பதாக) நான் உணரவில்லை. நான் என் தந்தையார் (அபூபக்ர் அவர்கள்) இடம், அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நான் என் தாயார் (உம்மு ரூமான்) இடம், அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு (என் சார்பாக) பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன பதில் சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். அதற்கு நான், நானோ வயது குறைந்த இளம்பெண் ஆவேன். குர்ஆனிலிருந்து நிறையத் தெரியாதவளும் ஆவேன். இந்நிலையில், அல்லாஹ்வின் மீதாணையாக! (மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்ட) இந்தச் செய்தியை நீங்கள் கேட்டிருக்கிறீர்கள். அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பி விட்டீர்கள் என்பதை நான் அறிவேன். ஆகவே, நான் குற்றமற்றவள் என்று உங்களிடம் சொன்னால் நீங்கள் அதை நம்பப் போவதில்லை; நான் (குற்றம்) ஏதேனும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் -நான் குற்றமற்றவன் என்பது அல்லாஹ்வுக்குத் தெரியும்- (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பி விடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தை (நபி -யஅகூப்- அலை) அவர்களையே உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதைச்) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும். (திருக்குர்ஆன் 12:18) என்று கூறினேன். நான் அப்போது குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்; (அந்த) அல்லாஹ் நான் குற்றமற்றவள் என நிச்சயம் அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறுபக்கமாகத்) திரும்பிப்படுத்துக் கொண்டேன். அல்லாஹ்வின் மீதாணையாக! என் விஷயத்தில் (மக்களால்) ஓதப்படுகின்ற வஹீ - வேத வெளிப்பாட்டை - (திருக்குர்ஆனில்) அல்லாஹ் அருளுவான் என்று நான் நினைத்தும் பார்த் திருக்கவில்லை. அல்லாஹ் என் தொடர்பாக ஏதேனும் பேசுகின்ற அளவிற்கு நான் உயர்ந்தவள் அல்ல என்பதே என் மனத்தில் என்னைப் பற்றிய முடிவாக இருந்தது. மாறாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் ஏதேனுமொரு கனவைத் தமது உறக்கத்தில் காண்பார்கள் என்று தான் எதிர் பார்த்துக் கொண்டிருந்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டார் எவரும் வெளியே செல்லவுமில்லை. அதற்குள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்கள்) அருளப்படத் தொடங்கிவிட்டன. உடனே (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடுமையான சிரம நிலை நபிகளாருக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து சின்னஞ்சிறு முத்துகளைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அவர்கள் மீது அருளப்பட்ட (இறைச்) சொற்களின் பாரத்தினால் தான் (அவர்களுக்கு வியர்வை வழியும் அளவிற்குச் சிரம நிலை) ஏற்பட்டது. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு விலகியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே பேசிய முதல் வார்த்தையாக, ஆயிஷா! அல்லாஹ் உன்னை குற்றமற்றவள் என அறிவித்து விட்டான் என்று கூறினார்கள். உடனே என் தாயார், அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல் என்று (என்னிடம்) கூறினார்கள். அதற்கு நான், மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர்களிடம் நான் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்(ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன் என்றேன். (அப்போது) அல்லாஹ், (ஆயிஷாவின் மீது) அவதூறு கற்பித்தவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தாம் என்று தொடங்கும் (24 : 11 - 20) பத்து வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளினான். (என் தந்தை) அபூபக்ர் அஸ்ஸித்தீக் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷா குறித்து (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் மிஸ்தஹுக்காக நான் சிறிதும் செலவிட மாட்டேன் என்று (சத்தியமிட்டுக்) கூறினார்கள் - மிஸ்தஹ் பின் உஸாஸா, தம் உறவினர் என்பதாலும் அவர் ஏழை என் பதாலும் அவருக்காக அபூபக்ர் அவர்கள் செலவிட்டு வந்தார்கள் - அப்போது அல்லாஹ், உங்களில் செல்வம் மற்றும் தயாள குணம் படைத்தோர் (தங்கள்) உறவினர்களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ்வின் பாதையில் ஹிஜ்ரத் செய்தவர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அவர்கள் அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தா மல் விட்டுவிடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்ப மாட்டீர் களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடையோனுமாய் இருக்கின்றான் என்னும் (24:22) வசனத்தை அருளினான். அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப் பளிக்க வேண்டுமென்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் அவர்களுக்கு ஏற்கெனவே தாம் செலவிட்டு வந்ததைத் திரும்பவும் தொடரலானார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவருக்கு(ச் செய்யும் இந்த உதவியை) ஒரு போதும் நான் நிறுத்த மாட்டேன் என்றும் கூறினார்கள். (திருக் குர்ஆனில் எனது கற்பொழுக்கம் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என் விஷயத்தில் (தம் இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த் ஜஹ்ஷ் அவர்களிடம் விசாரித்தார்கள். ஸைனபே! நீ (ஆயிஷாவைக் குறித்து) என்ன அறிந்திருக்கிறாய்?.... அல்லது (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்?... என்று (ஸைனபிடம்) கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! என் காது களையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்து வைத்திருக் கிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று பதிலளித்தார்கள். ஸைனப் அவர்கள் தாம், நபியவர்களின் துணைவியரில் எனக்கு (அழகிலும் நபி -ஸல்- அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை (இறையச்ச முடைய) பேணுதலான பண்பையளித்துப் பாதுகாத்திருந்தான்.216 ஆனால், ஸைனபுக்காக அவருடைய சகோதரி ஹம்னா (என்னுடன்) போரிடலானார். (என் விஷயத்தில் அவதூறு பேசி) அழிந்து போனவர்களுடன் அவரும் அழிந்துபோனார்.

அறிவிப்பாளர் இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இது தான் அந்த (நால்வர்) குழுவிடமிருந்து எனக்கு கிடைத்த அறிவிப்பாகும்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! எவரைக் குறித்து (அந்தப் பழிச்சொல்) கூறப்பட்டதோ அந்த மனிதர் (-ஸஃப்வான், தம்முடைய அன்னையான என்னுடன் தம்மை இணைத்து அவதூறு பேசுவதைக் கேட்டு), சுப்ஹானல் லாஹ் (அல்லாஹ் தூயவன்); எனது உயிர் எவன் கையில் உள்ளதோ அவன் மீது சத்தியமாக! நான் ஒரு போதும் எந்த (அந்நியப்) பெண்ணின் மறைவிடத்தையும் திறந்ததில்லை என்று கூறினார். அதன் பிறகு அவர் அல்லாஹ்வின் பாதையில் (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்.

இதை உர்வா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4142 இப்னு ஷிஹாப்(முஹம்மத் பின் முஸ்லிம்) அஸ் ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 அலீ (ரலி) அவர்கள், ஆயிஷா

(ரலி) அவர்கள் மீது அவதூறு கூறியவர்களில் ஒருவர் என்று உங்களுக்கு செய்தி கிடைத் ததா? என என்னிடம் வலீத் பின் அப்தில் ம-க் கேட்டார். நான், இல்லை; (அலீ -ரலி- அவர்கள் அவ்வாறு கூறவில்லை.) மாறாக, தம் விஷயத்தில் அலீ (ரலி) அவர்கள் மௌனம் சாதித்தார்கள் என ஆயிஷா

(ரலி) அவர்கள் தங்களிடம் தெரிவித்தார்கள் என்று உங்கள் குலத்தைச் சேர்ந்த அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்களும், அபூ பக்ர் பின் அப்திர் ரஹ்மான் பின் ஹாரிஸ் (ரஹ்) அவர்களும் என்னிடம் கூறினர் என்று பதிலளித்தேன்.

ஸுஹ்ரீ (ரஹ்) அவர்களிடம் (மற்ற அறிவிப்பாளர்கள் இன்னும் இது பற்றி அதிக விளக்கம் கேட்ட போது) அவர்கள் பதிலளிக்கவில்லை. மேலும், சந்தேகத்திற்கு இடமளிக்காத முஸல்-மன் - அலீ -ரலி- அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள் என்ற வார்த்தையையே வலீத் அவர்களுக்கு ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் பதிலாகக் கூறினார்கள். (வேறெதையும் அதிக பட்சமாகக் கூறவில்லை.)

4143 மஸ்ரூக் பின் அஜ்தஃ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்களின் தாயார் உம்மு ரூமான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

நானும் ஆயிஷாவும் உட்கார்ந்திருந் தோம். அப்போது அன்சாரிப் பெண் ஒருத்தி எங்களிடம், இன்னாரை அல்லாஹ் நிந்திக் கட்டும். இன்னாரை அல்லாஹ் நிந்திக்கட்டும் என்று கூறியபடி வந்தாள். நான், ஏன் (இப்படிச் சொல்கிறாய்?) என்று கேட்டேன். அதற்கு அவள், (அவதூறுச்) செய்தியைப் பேசியவர்களில் என் மகனும் ஒருவன் என்று பதிலளித்தாள். ஆயிஷா (ரலி) அவர்கள், என்ன அது? என்று கேட்டார்கள். அவள் இன்னின்னவாறு பேசப்படுகின்றது என்றாள். ஆயிஷா (ரலி) அவர்கள், இதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செவியுற்றார் களா? என்று கேட்டார்கள். அவள், ஆம் (செவியுற்றார்கள்) என்று பதில் சொன்னாள். பிறகு, (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள் செவியுற்றார்களா? என்று ஆயிஷா கேட் டார்கள். இதற்கும் அவள், ஆம் என்றாள். உடனே, ஆயிஷா (ரலி) அவர்கள் மூர்ச்சை யடைந்து விழுந்து விட்டார்கள். பிறகு குளிர் காய்ச்சலுடன் தான் மூர்ச்சை தெளிந்து கண் விழித்தார்கள். நான் ஆயிஷாவின் மீது ஆடையொன்றைப் போர்த்தி மூடிவிட்டேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் வந்து, இவளுக்கென்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! இவளைக் குளிர் காய்ச்சல் பீடித்துள்ளது என்று பதிலளித்தேன். நபி (ஸல்) அவர்கள் ஒருவேளை இவளைப்பற்றிப் பேசப்பட்டு வரும் செய்தியின் காரணத்தால் (காய்ச்சல் ஏற்பட்டு) இருக்கலாம் என்று சொன்னார்கள். நான், ஆம் என்றேன். உடனே ஆயிஷா (படுக்கையிலிருந்து எழுந்து) உட்கார்ந்து கொண்டு, அல்லாஹ்வின் மீதாணையாக! நான் சத்தியம் செய்தாலும் நீங்கள் என்னை நம்ப மாட்டீர்கள்.217 நான் என்ன தான் (சமாதானம்) சொன்னாலும் நீங்கள் ஒப்புக் கொள்ளமாட்டீர்கள். எனக்கும் உங்களுக்கும் உவமை, (நபி) யஅகூப் (அலை) அவர்களுடை யவும் அவர்களின் பிள்ளைகளுடையவும் நிலையாகும். (யஅகூப் -அலை- அவர்கள் சொன்னது போன்றே) அல்லாஹ் தான் நீங்கள் (புனைந்து) கூறுபவற்றிற்கெதிராக உதவி கோரத் தகுதியானவன் ஆவான் என்று சொன்னார்கள். உடனே நபி (ஸல்) அவர்கள் ஒன்றும் சொல்லாமல் திரும்பிச் சென்று விட்டார்கள். பிறகு, ஆயிஷா நிரபராதி என (அறிவிக்கும் வசனத்தை) அல்லாஹ் அருளினான். அப்போது ஆயிஷா (ரலி) அவர்கள் (நபி -ஸல்- அவர்களிடம் (இதற்காக) அல்லாஹ்வையே நான் புகழ்கிறேன்; வேறெ வரையும் புகழமாட்டேன்; உங்களையும் புகழமாட்டேன் என்று சொன்னார்கள்.218

4144 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஆயிஷா (ரலி) அவர்கள், இப்பழியை (ஒருவரிடமிருந்து ஒருவராக) உங்கள் நாவுகளால் எடுத்துச் சொல்லிக் கொண்டு..... என்னும் (24 : 15) இறைவசனத்தை இஃத் த-க் கூனஹு... என ஓதிவந்தார்கள். (இதன் மூலச் சொல்லான) வல்க் (எடுத்துச் சொல்லுதல்) என்பதற்கு பொய்(யை எடுத்துச்) சொல்லுதல் என்று பொருள் என (விளக்கம்) கூறி வந்தார்கள்.

மேலும், அறிவிப்பாளர் இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள், இந்த வசனத்தைப் பற்றி ஆயிஷா அவர்களுக்கே நன்கு தெரியும். ஏனென்றால், இந்த வசனம் அவர்கள் குறித்துத் தான் இறங்கியது என்று கூறினார்கள்.

4145 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்களை ஏசிக் கொண்டே (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள், ஹஸ்ஸானை ஏசாதே. ஏனென்றால், அவர்கள் அல்லாஹ்வின்

தூதர் (ஸல்) அவர்களின் தரப்பிலிருந்து (எதிரிகளின் வசைக் கவிதைகளுக்கு) பதிலடி தருபவராய் இருந்தார்கள். (ஒரு நாள்) ஹஸ்ஸான் அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் வந்து இணைவைப்பவர்(களான குறைஷி) களுக்கெதிராக வசைக் கவி பாட அனுமதி கேட்டார். அதற்கு நபி (ஸல்) அவர்கள், பிறகு என்னுடைய வமிசாவளியை என்ன செய்வீர்கள்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், (அவர்களைப் பற்றி நான் வசைக் கவி கூறும் போது) குழைத்த மாவிலிருந்து முடி உருவப்படுவது போல உங்களை உருவி எடுத்து விடுவேன் என்று கூறினார்.219

உர்வா (ரஹ்) அவர்களின் இன்னோர் அறிவிப்பில், நான் ஹஸ்ஸான் (ரலி) அவர்களை ஏசினேன். ஏனெனில், ஆயிஷா (ரலி) அவர்கள் மீது அவதூறு கூறுவதில் பெரும்பங்கு வகித்தவர்களில் அவரும் ஒருவராக இருந்தார் என்று அன்னார் கூறியதாகக் காணப்படுகிறது.

4146 மஸ்ரூக் பின் அஜ்தஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) நாங்கள் (அன்னை) ஆயிஷா (ரலி) அவர்களிடம் சென்றோம். அப்போது அவர்களுக்கு அருகில் (கவிஞர்) ஹஸ்ஸான் பின் ஸாபித் (ரலி) அவர்கள் அமர்ந்து கவிபாடிக் கொண்டும் தம் பாடல்களால் (ஆயிஷாவை) பாராட்டிக் கொண்டுமிருந்தார்கள். (தமது பாடல்களில்) ஹஸ்ஸான், ஆயிஷா (ரலி) அவர்களைப் பற்றி, (அவர்கள்) கற்பொழுக்கம் மிக்கவர்கள்; கண்ணியம் நிறைந்தவர்கள்; எந்த சந்தேகத்தின் பேரிலும் குற்றம்சாட்டப்பட இயலாதவர்கள். (புறமும் அவதூறும் பேசுவதன் மூலம்) அப்பாவிப் பெண்களின் மாமிசங்களைப் புசித்து விடாமல் பட்டினியோடு காலையில் எழுபவர்கள் என்று பாடினார்கள்.220

அப்போது ஹஸ்ஸான் அவர்களைப் பார்த்து ஆயிஷா (ரலி) அவர்கள், ஆனாலும், நீங்கள் அப்படியல்ல (என்னைப் பற்றி அவதூறு பேசுபவர்களுடன் சேர்ந்து கொண்டு நீங்களும் புறம் பேசினீர்கள்) என்று கூறினார்கள்.

(தொடர்ந்து) அறிவிப்பாளர் மஸ்ரூக் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் :

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம், ஹஸ்ஸான் அவர்களைத் தங்களிடம் வர ஏன் அனுமதிக்கிறீர்கள்? அல்லாஹ் (தனது வேதத்தில்), அவர்களில் (அவதூறு பரப்பு வதில்) பெரும் பங்கு வகித்தவருக்கு கடினமான வேதனையுண்டு என்று (24:11ல்) கூறுகிறானே என்று கேட்டேன். அதற்கு அவர்கள், குருடாவதை விடக் கொடிய வேதனை ஏது? என்று கூறிவிட்டு, அவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சார்பில் பதிலளிப்பவராக... அல்லது அல்லாஹ்வின் தூதர் சார்பில் (எதிரிகளுக்கு பதிலடியாக) வசைக் கவி பாடுபவராக... இருந்தார் என்று கூறினார்கள்.

பாடம் : 36

ஹுதைபிய்யாப் போரும், (நபியே!) இறை நம்பிக்கையாளர்கள் அந்த மரத்தடியில் உங்களிடம் உறுதிப் பிரமாணம் செய்த போது மெய்யாகவே அல்லாஹ் அவர்கள் குறித்து திருப்தி கொண்டான் என்னும் (48:18-வது) இறைவசனமும்.221

4147 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா ஆண்டில் நாங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றோம். ஓரிரவு எங்களுக்கு மழைபெய்தது. (அன்று காலை) நபி (ஸல்) அவர்கள் எங்களுக்கு ஸுப்ஹு தொழுவித்தார்கள். பிறகு எங்களை நோக்கி நேராகத் திரும்பி, உங்கள் இறைவன் என்ன கூறினான் என்பதை நீங்கள் அறிவீர்களா? என்று கேட்டார்கள். அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கு அறிந்தவர்கள் என்று நாங்கள் கூறினோம்.

அப்போது, என்னை விசுவாசிக்கக் கூடியவர்களும் என்னை நிராகரிக்கக் கூடியவர்களுமாக என் அடியார்கள் (இரண்டு பிரிவினராக) உள்ளனர். அல்லாஹ்வின் கருணையினாலும், அல்லாஹ் அளித்த வாழ்வாதாரத்தாலும், அவனது அருட் கொடையினாலும் நமக்கு மழை பொழிந்தது என்று கூறுபவர்கள் என்னை நம்பி நட்சத்திரத்திரத்தை மறுத்தவர்களாவர். இந்த நட்சத்திரத்தினால் தான் எங்களுக்கு மழை பொழிந்தது எனக் கூறுபவர்கள் என்னை நிராகரித்து நட்சத்திரத்தை விசுவாசித்தவர் களாவர் என்று அல்லாஹ் சொன்னான் என நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.222

4148 கத்தாதா (ரஹ்) கூறியதாவது:

அனஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தமது வாழ்நாளில்) நான்கு உம்ராக்கள் செய்தார்கள். அவற்றில் தமது ஹஜ்ஜின் போது செய்த உம்ராவைத் தவிர (மற்ற) அனைத்தையும் துல் கஅதா மாதத்திலேயே செய்தார்கள் என்று என்னிடம் சொல்லிவிட்டு, அந்த நான்கையும் கூறினார்கள்:

1. ஹுதைபிய்யா நிகழ்வின் போது செய்த உம்ரா. இதை (ஹிஜ்ரி 6லிம் ஆண்டு) துல் கஅதா மாதத்தில் செய்தார்கள்.223

2. அதற்கு அடுத்த (ஹிஜ்ரி 7லிம்) ஆண்டு துல்கஅதாவில் செய்த உம்ரா.

3. ஹுனைன் போர்ச் செல்வங்களைப் பங்கிட்டுக் கொடுத்த ஜிஃரானா என்னு மிடத்திலிருந்து சென்று (ஹிஜ்ரி 8லிம் ஆண்டு) துல்கஅதாவில் செய்த உம்ரா.

4. தமது ஹஜ்ஜுடன் (ஹிஜ்ரி 10லிம் ஆண்டு) செய்த உம்ரா.224

4149 அபூ கதாதா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா ஆண்டில் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் சென்றோம். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இஹ்ராம் உடையணிந்திருந்தார்கள். நான் (மட்டும்) அணியவில்லை...225

4150 பராஉ (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நிச்சயமாக நாம் உங்களுக்கு ஒரு மகத்தான வெற்றியளித்துள்ளோம் என்னும் 48:1லிம் வசனத்திலுள்ள) வெற்றி என்பது மக்கா வெற்றி(யைத் தான் குறிக்கின்றது) என்று நீங்கள் கருதுகிறீர்கள். மக்கா வெற்றியும் வெற்றியாகத்தானிருந்தது. (ஆனால்) நாங்கள் ஹுதைபிய்யா சமாதான ஒப்பந்த நாளில் (நடை பெற்ற) ரிள்வான் உறுதிப் பிரமாணத்தையே பெரும் வெற்றியாகக் கருதுகிறோம். (அன்று) நாங்கள் (அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன்) ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். ஹுதைபிய்யா என்பது ஒரு கிணறாகும். அந்தக் கிணற்றிலிருந்து ஒரு துளி நீரைக் கூட விட்டு விடாமல் நாங்கள் (தண்ணீரைச்) சேந்தி விட்டோம். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது அங்கு அவர்கள் வருகை தந்து அந்தக் கிணற்றின் ஓரத்தில் அமர்ந்து கொண்டார்கள். பிறகு ஒரு பாத்திரம் தண்ணீர் கொண்டு வரும்படி கூறினார்கள். (அந்தத் தண்ணீரினால்) உளூச் செய்தார்கள். பின்னர் வாய் கொப்பளித்து விட்டுப் பிரார்த்தித்தார்கள். பிறகு (உளூச் செய்து வாய் கொப்பளித்த) அந்தத் தண்ணீரைக் கிணற்றுக்குள் ஊற்றினார்கள். பின்பு சிறிது நேரம் அந்தக் கிணற்றை நாங்கள் அப்படியே விட்டுவிட்டோம். பின்னர் அந்தக் கிணறு நாங்களும் எங்கள் வாகனப் பிராணிகளும் (குடிக்க) விரும்பிய (அளவு) தண்ணீரைத் திருப்பித் தந்தது.226

4151பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா தினத்தன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஆயிரத்து நானூறு பேர்.... அல்லது அதை விட(க் கொஞ்சம்) அதிகம் பேர்.... இருந்தனர். அவர்கள் ஒரு கிணற்றருகில் தங்கினர். அப்போது அந்தக் கிணற்றிலிருந்து (எல்லா நீரையும்) இறைத்து விட்டனர். (தண்ணீர் தீர்ந்து விட்ட போது) நபி (ஸல்) அவர்களிடம் வந்தனர். (அது பற்றிக் கூறினர்.) அப்போது, நபி (ஸல்) அவர்கள் அந்தக் கிணற்றுக்கு வந்து அதன் ஓரத்தில் அமர்ந்தார்கள். பின்பு, அந்தக் கிணற்று நீரிலிருந்து ஒரு வாளித் தண்ணீர் கொண்டு வாருங்கள் என்று கூறினார்கள். தண்ணீர் கொண்டு வரப்பட்ட போது அதில் உமிழ்ந்தார்கள். பிறகு பிரார்த்தனை புரிந்தார்கள். பிறகு (அதைக் கிணற்றுக்குள் கொட்டிவிட்டு), அதைக் கொஞ்ச நேரம் அப்படியே விட்டு விடுங்கள் என்று கூறினார்கள். பின்பு (நபித்தோழர்கள்) தாங்களும் தங்கள் வாகனப் பிராணிகளும் தாகம் தணித்துக் கொண்டுப் புறப்பட்டுச் சென்றார்கள்.

4152 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா உடன்படிக்கையின் போது மக்களுக்குத் தாகம் ஏற்பட்டது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு முன்னால் தோலால் ஆன ( நீர்க்) குவளை ஒன்று இருந்தது. அதிலிருந்து நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். அதன் பிறகு மக்கள் நபி (ஸல்) அவர்களை நோக்கி வந்தனர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உங்களுக்கு என்ன (நேர்ந்தது)? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் குவளையிலிருக்கும் தண்ணீரைத் தவிர நாங்கள் உளூச் செய்வதற்கோ குடிப்பதற்கோ எங்களிடம் வேறு தண்ணீரில்லை என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் தமது கரத்தை அந்தக் குவளைக்குள் வைத்தார்கள். அவர்களுடைய விரல்களுக்கிடையிலிருந்து ஊற்றுக் கண் போல தண்ணீர் பொங்கி வரத் தொடங்கியது.

அப்போது நாங்கள் அந்தத் தண்ணீரை அருந்தவும் செய்தோம். மேலும், உளூவும் செய்தோம்.

(அறிவிப்பாளர் சாலிம் பின் அபில் ஜஅத் -ரஹ்- அவர்கள் கூறுகிறார்கள்:) நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம், அன்று நீங்கள் எத்தனை பேர் இருந்தீர்கள்? என்று கேட்டேன். நாங்கள் ஒரு லட்சம் பேராக இருந்திருந்தாலும் அந்தத் தண்ணீர் எங்க ளுக்குப் போதுமானதாக இருந்திருக்கும். நாங்கள் ஆயிரத்து ஐநூறு பேர் தாம் இருந்தோம். என்று பதிலளித்தார்கள்.227

4153 கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம், அவர்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தார்கள் என்று ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறி வந்தார்கள் என்று எனக்குச் செய்தி கிடைத்துள்ளதே என்று கேட்டேன். அதற்கு அவர்கள் என்னிடம், ஹுதைபிய்யா தினத்தன்று நபி (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்கள் ஆயிரத்து ஐநூறு பேர் இருந்தனர் என்று ஜாபிர் அவர்களே எனக்கு அறிவித்தார்கள் என்று சொன்னார்கள்.

இந்த ஹதீஸ் இன்னும் பல அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4154 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா தினத்தன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம், பூமியிலிருப்பவர்களில் நீங்களே சிறந்த வர்கள் என்று கூறினார்கள். (அப்போது) நாங்கள் ஆயிரத்து நானூறு பேர் இருந்தோம். இப்போது (மட்டும்) எனக்குக் கண்பார்வை தெரியுமானால் அந்த (ரிள்வான் உறுதிப் பிரமாணம் நடைபெற்ற) மரத்தின் இடத்தைக் காண்பித்திருப்பேன் என்று கூறினார்கள்.

ஜாபிர் (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பிலும் (அவர்கள்) ஆயிரத்து நானூறு பேர் (இருந்ததாகக் காணப்படுகிறது)

4155 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா

(ரலி) அவர்கள் கூறியதாவது:

மரத்தினடியில் உறுதிப் பிரமாணம் செய்தவர்கள் (சுமார்) ஆயிரத்து முன்னூறு பேர் ஆவர்.228 (இதில்) அஸ்லம் குலத்தினர் முஹாஜிர்களில் எட்டில் ஒரு பகுதியினராக இருந்தனர்.229

இந்த ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் வந்துள்ளது.

4156 மரத்தினடியில் உறுதிப் பிரமாணம் (பைஅத்துர் ரிள்வான்) செய்தவர்களில் ஒருவரான மிர்தாஸ் பின் மாலிக் அல்அஸ்லமீ (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நல்லவர்களில் முதன்மையானவர்கள் முதலாவதாகவும், அவர்களுக்கடுத்தவர்கள் அடுத்ததாகவும் (உயிர்) கைப்பற்றப்படுவர். (இவ்வாறு நல்லவர்கள் மறைந்த பின் இப் புவியில்) மட்டமான பேரீச்சம் பழத்தையும் வாற்கோதுமையையும் போன்ற தரம் தாழ்ந்த மக்களே எஞ்சியிருப்பர். அவர்களை அல்லாஹ் சற்றும் பொருட்படுத்த மாட்டான்.230

4157 & 4158 மர்வான் பின் ஹகம் அவர்களும் மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்களும் கூறியதாவது:

ஹுதைபிய்யா ஆண்டில் நபி (ஸல்) அவர்கள் (சுமார்) ஆயிரத்துக்கும் மேற்பட்ட தம் தோழர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றார்கள். துல்ஹுலைஃபா வுக்கு வந்ததும் தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைக் தொங்கவிட்டு அடையாளமும் இட்டுவிட்டு, பின்னர் உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள்.231

அறிவிப்பாளர்களில் ஒருவரான அலீ பின் அப்தில்லாஹ் அல் மதீனீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை நான் சுஃப்யான் (ரஹ்) அவர்களிடமிருந்து எத்தனை முறை செவி யேற்றேன் எனக் கணக்கிட்டுக் கூற முடியாது. மேலும் அன்னார், தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்றவற்றைத் தொங்க விட்டது, அடையாளம் இட்டது ஆகியன நடந்த இடம் குறித்து ஸுஹ்ரி (ரஹ்) அவர்களிடமிருந்து நான் அறியவில்லை என்றும் கூறினார்கள்.

4159 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(நான் ஹுதைபியா ஆண்டில் உம்ரா வுக்காக இஹ்ராம் அணிந்திருந்த போது) என் முகத்தில் பேன்கள் விழுந்து கொண் டிருக்க, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைக் கண்டார்கள். அப்போது உன் (தலையிலுள்ள) பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்றேன். அப்போது ஹுதைபிய்யா விலிருந்த நபி (ஸல்) அவர்கள் என் தலையை மழிக்குமாறு எனக்குக் கட்டளையிட்டார்கள். மக்காவிற்குள் நுழைய வேண்டுமென்ற எதிர்பார்ப்பில் மக்கள் இருந்ததால் அவர்கள் ஹுதைபியாவிலேயே இஹ்ராமிலிருந்து விடுபட வேண்டுமென்று நபி (ஸல்) அவர்கள் கூறவில்லை. அப்போது அல்லாஹ் (குற்றப்) பரிகாரம் சம்பந்தப்பட்ட (2:196-வது) வசனத்தை அருளினான். உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு ஃபரக் தானியத்தை ஆறுபேருக்கு வழங்க வேண்டும்; அல்லது ஓர் ஆட்டை குர்பானி செய்ய வேண்டும்; அல்லது மூன்று நாட்கள் நோன்பு நோற்க வேண்டும் என்று எனக்குக் கட்டளையிட்டார்கள்.232

4160 & 4161 (உமர்-ரலி-அவர்களால் விடுதலை செய்யப்பட்ட முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களுடன் கடைத்தெருவிற்குச் சென்றேன். அப்போது ஓர் இளம் பெண் உமர் (ரலி) அவர்களிடம் வந்து, இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! சின்னஞ்சிறு சிறுவர்களை விட்டு விட்டு என் கணவர் இறந்து போய் விட்டார். அல்லாஹ்வின் மீதாணையாக! ஆட்டுக் கால் குளம்பைச் சமைப்பதற்குக் கூட அவர்களால் முடியாது. மேலும், எந்த வித விவசாய நிலமோ, (பால் கறப்பதற்குக்) கால் நடையோ அவர்களிடம் இல்லை. (பசியும்) பஞ்சமும் அவர்களை அழித்து விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். நான் குஃபாஃப் பின் ஈமா அல் ஃகிஃபாரி என்பவரின் மகளாவேன். என் தந்தை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டார்கள் என்று கூறினார். அங்கிருந்து நகராமல் அப்பெண்ணுடனே நின்றிருந்த உமர் (ரலி) அவர்கள், நெருங்கிய உறவே வருக! என்று வாழ்த்துக் கூறினார்கள். பிறகு தம் வீட்டில் கட்டி வைக்கப்பட்டிருந்த சக்தி வாய்ந்த ஒட்டகம் ஒன்றை நோக்கித் திரும்பிச் சென்றார்கள். பின்பு உணவு தானியங்களை இரு மூட்டைகளில் நிரப்பி, அந்த இரண்டையும் அந்த ஒட்டகத்தின் மீது ஏற்றி வைத்தார்கள். அந்த இரு மூட்டைகளுக்குமிடையே (செலவுக்குத் தேவையான) காசுகளையும், ஆடைகளையும் ஏற்றினார்கள். பிறகு அதன் மூக்கணாங் கயிற்றைப் பிடித்துக் கொண்டு, (தற்போது) இதை ஓட்டிச் செல். இது தீர்ந்து போவதற்குள் அல்லாஹ் உங்களுக்கு நன்மையைத் தருவான் என்று (அப்பெண்மணியிடம்) கூறினார்கள். அப்போது ஒருவர், இறை நம்பிக்கையாளர்களின் தலைவரே! இந்தப் பெண்ணுக்கு அதிகமாகவே வழங்கி விட்டீர்கள் என்று கூறினார். (அதற்கு) உமர் (ரலி) அவர்கள், உன்னை உனது தாய் இழக்கட்டும். அல்லாஹ்வின் மீதாணையாக! இந்தப் பெண்ணின் தந்தையும் சகோதரரும், சிறிது காலம் ஒரு கோட்டையை முற்றுகையிட்டு அதனை அவர்களிருவரும் வெற்றி கொண்டதை நான் பார்த்தேன். பிறகு அதில் (கிடைத்த போர்ச் செல்வத்தில்) நமக்குரிய பங்குகளைக் கோரலானோம் என்று கூறினார்கள்.

4162 முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பைஅத்துர் ரிள்வான் என்னும் உறுதிப் பிரமாணம் நடை பெற்ற) அந்த மரத்தை நான் பார்த்திருந்தேன். பின்பு (ஒரு முறை) அங்கு நான் வந்தேன். அப்போது என்னால் அதனை அறிய முடியவில்லை.

மஹ்மூத் பின் ஃகைலான் (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் பிறகு அது எனக்கு மறந்துபோயிற்று என முஸய்யப் (பின் ஹஸன்-ரலி) அவர்கள் கூறியதாகக் காணப்படுகின்றது.

4163 தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஹஜ்ஜுக்குச் சென்று கொண்டிருந்த போது, தொழுது கொண்டிருந்த ஒரு கூட்டத்தினரைக் கடந்து சென்றேன். இது என்ன தொழுமிடம்? என்று நான் கேட்டேன். (அதற்கு) அவர்கள், இது தான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பைஅத்துர் ரிள்வான் எனும் உறுதிப் பிரமாணம் வாங்கிய மரம் இருந்த இடம் என்று கூறினர். பின்பு நான் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர் களிடம் வந்து இது பற்றித் தெரிவித்தேன். அப்போது அவர்கள், அந்த மரத்தினடியில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தவர்களில் ஒருவரான என் தந்தை (முஸய்யப் - ரலி) அவர்கள், (உறுதிப் பிரமாணம் நடந்து முடிந்த) மறு ஆண்டு நாங்கள் அங்கு சென்ற போது அந்த மரத்தை நாங்கள் மறந்து விட்டோம். எங்களால் அதனை அடையாளம் கண்டு கொள்ள முடியவில்லை என்று கூறினார்கள் எனத் தெரிவித்து விட்டு, பிறகு சயீத் (ரஹ்) அவர்கள், முஹம்மத் (ஸல்) அவர்களின் தோழர்களே அதனை அறிய வில்லை. நீங்கள் அறிந்து விட்டீர்களா? அப்படியானால், நீங்களே அதிகம் தெரிந்த வர்கள் என்று (பரிகாசமாகக்) கூறினார்கள்.

4164 அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப்பிரமாணம் செய்தவர் களில் ஒருவரான முஸய்யப் பின் ஹஸன் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் மறு ஆண்டு அந்த இடத்திற்குத் திரும்பவும் சென்றோம். அப்போது அந்த இடம் (அடையாளம் காண முடியாதவாறு) எங்களுக்குக் குழம்பி விட்டது.

4165 தாரிக் பின் அப்திர் ரஹ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்களிடம் அந்த மரத்தைப் பற்றிக் குறிப்பிடப்பட்டது. அப்போது சயீத் அவர்கள் சிரித்து விட்டு, அ(ந்தப் பிரமாணத்)தில் கலந்து கொண்ட வரான என் தந்தை (அடுத்த ஆண்டே அந்த மரத்தை எங்களால் கண்டு பிடிக்க முடிய வில்லை என்று) தெரிவித்ததாகக் கூறினார்.

4166 அம்ர் பின் முர்ரா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் சொல்ல நான்கேட்டேன்:

எவரேனும் ஒரு கூட்டத்தினர் தம் ஸகாத் பொருள்களைக் கொண்டு வந்தால் நபி (ஸல்) அவர்கள், இறைவா! இவர்கள் மீது கருணை புரிவாயாக! என்று பிரார்த்திப்பது வழக்கம். என் தந்தை (அபூ அவ்ஃபா-ரலி) தமது ஸகாத்தைக் கொண்டு வந்தார். அப்போது இறைவா! அபூ அவ்ஃபாவின் குடும்பத்தினருக்குக் கருணை புரிவாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.233

4167 அப்பாத் பின் தமீம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹர்ரா போரின் போது அப்துல்லாஹ் பின் ஹன்ழலா (ரலி) அவர்களிடம் மக்கள் உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருந்த போது (அப்துல்லாஹ்) இப்னு ஸைத் (ரலி) அவர்கள் மக்களிடம், எதற்காக இப்னு ஹன்ழலா உறுதி மொழி வாங்குகிறார்? என்று கேட்டார்கள். மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருக்கும் படி (உறுதிமொழி வாங்கு கிறார்) என்று அவர்களிடம் கூறப்பட்டது. (அப்போது) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (ஹுதைபிய்யாவில் அளித்த உறுதி மொழிக்குப்) பின்னர் வேறெவ ரிடமும் இதற்காக நான் உறுதி மொழியளிக்க மாட்டேன் என்று கூறினார்கள்.234

இப்னு ஸைத் (ரலி) அவர்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹுதைபிய்யாவில் கலந்து கொண்டவராவார்.

4168 இயாஸ் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை (சலமா பின் அக்வஃ-ரலி) அவர்கள் அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவராவார். அவர்கள் என்னிடம் நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (வெள்ளிக்கிழமை) ஜுமுஆ தொழுது விட்டு (வீட்டிற்கு)த் திரும்புவோம். அப்போது நாங்கள் நிழலுக்காக ஒதுங்கும் அளவிற்குக் கூட, சுவர்களுக்கு நிழல் படிந் திருக்காது என்று கூறினார்கள்.

4169 யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதவாது:

நான், சலமா பின் அக்வஃ (ரலி) அவர்களிடம், ஹுதைபிய்யா தினத்தன்று (நபித் தோழர்களான) நீங்கள் எந்த விஷயத்திற்காக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழியளித்தீர்கள்? என்று கேட்டேன். (அதற்கு) அவர்கள், மரணத்தைச் சந்திக்கத் தயாராயிருப்பதாக நாங்கள் உறுதிமொழியளித்தோம் என்று பதிலளித்தார்கள்.235

4170 முஸய்யப் பின் ராஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்களைச் சந்தித்து, தங்களுக்கு நல்வாழ்வு கிடைக்கட்டும். தாங்கள் நபி (ஸல்) அவர் களின் நட்பைப் பெற்றதோடு, அவர்களிடம் அந்த மரத்தினடியில் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப்பிரமாணமும் செய்து கொடுத்தீர்கள் என்று கூறினேன். அப்போது அவர்கள், என் சகோதரர் மகனே! (நபி -ஸல்-) அவர்களுக்குப் பிறகு நாங்கள் உருவாக்கிவிட்டதை (எல்லாம்) நீ அறிய மாட்டாய் என்று (பணிவுடன்) கூறினார்கள்.236

4171 அந்த மரத்தினடியில் நான் நபி (ஸல்) அவர்களிடம் (பைஅத்துர் ரிள்வான்) உறுதிப் பிரமாணம் செய்து கொடுத்தேன் என்று ஸாபித் பின் ளஹ்ஹாக் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்.

இதை அபூகிலாபா அப்துல்லாஹ் பின் ஸைத் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4172 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நிச்சயமாக, நாம் உங்களுக்கு ஒரு வெளிப்படையான வெற்றியினை அளித் துள்ளோம் என்னும் (48:1) வசனம் ஹுதைபிய்யா (சமாதான ஒப்பந்தத்தைக் குறிக்கக் கூடியது) ஆகும் என்று நான் கூறினேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள், (நபியவர்களே,) தங்களுக்கு இனிய வாழ்த்துகள். (தங்கள் பாவங்கள் அனைத்தையும் இறைவன் மன்னித்து விட்டதாக அந்த வசனத்தின் தொடர்ச்சியில் கூறுகின்றானே, அந்த வெற்றியினால்) எங்களுக்கு என்ன (பயன்)? என்று கேட்டனர். அப்போது,இறைவிசுவாசிகளான ஆண் களையும் பெண்களையும் சொர்க்கங்களில் பிரவேசிக்கச் செய்வதற்காகவே (இவ்வாறு நாம் வெற்றியளித்தோம்); அந்த சொர்க்கங்களுக்குக் கீழே நதிகள் ஓடிக் கொண்டிருக்கும் என்னும் (48:5) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

(இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான) ஷுஅபா பின் ஹஜ்ஜாஜ் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பிறகு நான் கூஃபாவுக்கு வந்து, இந்த ஹதீஸையெல்லாம் கத்தாதா (ரஹ்) அவர் களிடமிருந்து கேட்டதாக (அங்குள்ளவர்க ளிடம்) அறிவித்தேன். பிறகு நான் கூஃபாவிலிருந்து திரும்பி (கத்தாதா -ரஹ்- அவர்களிடம்) வந்து அவர்களிடம் இது பற்றிக் கூறினேன். அப்போது அவர்கள், நாம் உங்களுக்கு வெற்றி யளித்தோம் என்னும் வசனம் ஹுதைபிய்யா வைக் குறிக்கிறது என்பதை எனக்கு அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள். தங்களுக்கு இனிய வாழ்த்துகள் என்று (தொடங்கும் ஹதீஸை) இக்ரிமா (ரலி) அவர்களே எனக்கு அறிவித்தார்கள் (முழு ஹதீஸையும் ஒரே நபரிடமிருந்து நான் கேட்டு அறிவிக்க வில்லை) என்று கூறினார்கள்.

4173 மஜ்ஸஆ பின் ஸாஹிர் அல் அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என் தந்தை ஸாஹிர் பின் அல் அஸ்வத் (ரலி) அவர்கள் அந்த மரத்தில் (நடந்த பைஅத்துர் ரிள்வான் உறுதிமொழி ஏற்பில்) கலந்து கொண்டவர்களாவார். அன்னார் கூறினார்கள்:

கழுதை இறைச்சி (வெந்து கொண்டிருந்த) சட்டிக்குக் கீழே நான் (நெருப்பு)மூட்டிக் கொண்டிருந்தேன். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய அறிவிப்பாளர், கழுதை இறைச்சியை (உண்ண வேண்டா மென) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உங்களுக்குத் தடை விதிக்கிறார்கள் என்று அறிவித்தார்.

4174 மஜ்ஸஆ பின் ஸாஹிர் பின் அல் அஸ்லமீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

எனது (பனூ அஸ்லம்) குலத்தைச் சேர்ந்த வரும், அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவருமான உஹ்பான் பின் அவ்ஸ் (ரலி) அவர்களுக்கு முழங்கா-ல் வ- ஏற்பட்டிருந்தது. அவர்கள் (தொழுகையில் தரையில் முழங்கால் மூட்டு அழுந்தாமலிருப்பதற்காக) சஜ்தா செய்யும் போது தமது முழங்காலுக்குக் கீழே தலையணை ஒன்றை வைத்துக் கொள்வார்கள்.

4175 புஷைர் பின் யசார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அந்த மரத்தின(டியில் பைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவரான சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் (கைபருக்கு அருகிலுள்ள ஸஹ்பா என்னுமிடத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடமும் அவர்களின் தோழர்களிடமும் மாவு கொண்டு வரப்பட்டது. அப்போது அதை அவர்கள் சாப்பிட்டார்கள்... என்று கூறினார்கள்.237

4176 அபூஜம்ரா நஸ்ர் பின் இம்ரான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், நபித் தோழர்களில் ஒருவரும், அந்த மரத்தின(டியில் ஃபைஅத்துர் ரிள்வான் செய்தவ)ர்களில் ஒருவருமான ஆயித் பின் அம்ர் (ரலி) அவர்களிடம், வித்ரு(த் தொழுகை) உடைக்கப்படுமா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ஆரம்பத்திலேயே நீ வித்ரு தொழுதிருந்தால் இறுதியில் நீ வித்ருத் தொழ வேண்டாம் என்று பதிலளித்தார்கள்.238

4177 (உமர் -ரலி- அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அவர்களின் முன்னாள் அடிமை) அஸ்லம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஓர் இரவில் பயணம் செய்து கொண்டிருந்தார்கள்.239 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களும் நபியவர்களுடன் சென்று கொண்டிருந்தார்கள். அப்போது உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் ஏதோ ஒன்றைக் குறித்து நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பதிலளிக்கவில்லை. மீண்டும் உமர் அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபிகளார் பதிலளிக்கவில்லை. பிறகு (மீண்டும்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பதிலளிக்க வில்லை. உமரே! உன்னை உன் தாய் இழக்கட்டும். மூன்று முறை (கேள்வி கேட்டு) அல்லாஹ்வின் தூதரை வற்புறுத்தினாய். அந்த ஒவ்வொரு முறையும் அவர்கள் உனக்கு பதிலளிக்கவில்லையே (என்று தம்மை தாமே) உமர் அவர்கள் (கடிந்து) கூறினார்கள். மேலும் உமர் (ரலி) அவர்கள், அதற்குப் பிறகு நான் எனது ஒட்டகத்தைச் செலுத்தி முஸ்லிம்களுக்கு முன்னால் வந்து சேர்ந்தேன். (அல்லாஹ்வின் தூதரிடம் இப்படி நான் நடந்து கொண்டதற்காக) என் விஷயத்தில் ஏதாவது குர்ஆன் (வசனம்) இறங்கிவிடுமோ என்று அஞ்சினேன். சற்று நேரத்திற்குள் என்னை ஒருவர் அழைப்பதைக் கேட்டேன். (நான் நினைத்தது போன்றே) என் விஷயத்தில் குர்ஆன் (வசனம்) இறங்கிவிட்டிருக்கும் என்று அஞ்சினேன் என்று சொல்லிக் கொண்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து அவர்களுக்கு சலாம் சொன்னேன். அப்போது அவர்கள், இந்த இரவு எனக்கு ஒரு (திருக்குர்ஆன்) அத்தியாயம் அருளப்பட்டுள்ளது. சூரியன் எதன் மீது உதயமாகிறதோ அ(ந்த உலகத்)தை விட எனக்கு அந்த அத்தியாயம் மிகவும் விருப்பமானதாகும் என்று கூறினார்கள். பிறகு, உங்களுக்கு நாம் வெளிப்படையான தொரு வெற்றியினை அளித்துள்ளோம் என்று (தொடங்கும் - 48:1 லிம் வசனத்தை) ஓதினார்கள்.

4178 & 4179 மிஸ்வர் பின் மக்ரமா

(ரலி), மர்வான் பின் ஹகம் ஆகிய இரு வரும்-ஒருவர் மற்றவரை விடக் கூடுதலாகக்- கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் ஆயிரத்திற்கும் மேற்பட்ட தோழர் களுடன் மதீனாவிலிருந்து புறப்பட்டு துல்ஹுலைஃபாவுக்கு வந்ததும் தியாகப் பிராணியின் கழுத்தில் மாலை போன்ற வற்றைத் தொங்கவிட்டு அதற்கு அடையாள மும் இட்டார்கள். பின்னர் அங்கிருந்து உம்ராவுக்காக இஹ்ராம் அணிந்தார்கள். மேலும் நபி (ஸல்) அவர்கள் குஸாஆ குலத்தாரில் (புஸ்ர் பின் சுஃப்யான் என்ற) ஒருவரை உளவாளியாக அனுப்பி வைத்தார்கள். ஃகதீருல் அஷ்தாத் எனும் இடத்தில் நபியவர்கள் சென்று கொண்டிருந்த போது, அவர்களின் உளவாளி வந்து, குறைஷிகள் உங்களைத் தாக்குவதற்காகப் பெரும் கூட்டத்தைக் கூட்டியுள்ளனர்; பல்வேறு குலத்தினரை (ஓரிடத்தில்) ஒன்று திரட்டி வைத்துள்ளனர். அவர்கள் உங்களுடன் போரிட்டு உங்களை இறையில்லம் (கஅபாவிற்குச்) செல்ல(வோ, மக்காவிற்குள் நுழையவோ) விடாமல் தடுப்பார்கள் என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்களே! இறையில்லத்திற்குச் செல்ல விடாமல் நம்மைத் தடுக்க நினைக்கும் இவர்களின் குடும்பத்தாரிடமும் சந்ததி களிடமும் நான் (போர் தொடுக்கச்) செல்ல வேண்டுமென நீங்கள் கருதுகிறீர்களா? நம்மிடம் அவர்கள் (போர்புரிய) வந்தால், (அதற்கு நாம் பொறுப்பல்ல. நாம் அனுப்பி வைத்த) உளவாளியை(யும்) அந்த இணை வைப்பாளர்களுக்குத் தெரியாமல் அல்லாஹ் ஆக்கிவிட்டான்.240 அவ்வாறு அவர்கள் வரா விட்டால் அவர்களை நாம் இழப்புக் குள்ளாக்கி விட்டுச் செல்வோம். என்று கூறினார்கள். (அப்போது) அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இந்த இறையில்லத்தை நாடித் தானே நீங்கள் புறப்பட்டு வந்தீர்கள். யாரையும் கொல்லவோ எவரிடத்திலும் போரிடவோ நீங்கள் வரவில்லையே. எனவே, இறையில்லத்தை நோக்கிச் செல்லுங்கள். இறையில்லத்திற்குச் செல்லவிடாமல் நம்மை எவன் தடுக்கின் றானோ அவனிடம் நாம் போரிடுவோம் என்று (ஆலோசனை) கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் பெயரால் பயணத்தைத் தொடருங்கள் என்று கூறினார்கள்.241

4180 & 4181 மிஸ்வர் பின் மக்ரமா

(ரலி) மர்வான் பின் ஹகம் ஆகிய இருவரும் ஹுதைபிய்யா (ஆண்டில் நடந்த) உம்ரா (நிகழ்ச்சி) குறித்துக் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா தினத்தன்று (குறைஷிகளின் தலைவரான) சுஹைல் பின் அம்ரிடம் ஒரு (குறிப்பிட்ட) காலவரம்பிட்டு சமாதான ஒப்பந்தம் (செய்து கொள்வதாக பத்திரம்) எழுதிய போது, சுஹைல் பின் அம்ர் (பின்வரும்) சில நிபந்தனைகளையும் விதித்தார்:

எங்களிடமிருந்து ஒருவர் உங்களிடம் வந்தால், அவர் உங்கள் மார்க்கத்தில் இருந்தாலும் சரி, அவரை எங்களிடம் திருப்பி அனுப்பியே ஆகவேண்டும்; அவரை விட்டு நீங்கள் ஒதுங்கிவிடவேண்டும். இந்த நிபந் தனைகள் மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதரிடம் ஒப்பந்தம் செய்ய சுஹைல் மறுத்தார். (ஆனால், தங்களுக்குப் பாதகமான) இதனை இறை நம்பிக்கையாளர்கள் வெறுத்தார்கள். மேலும், (இதற்கு சம்மதிக்கச்) சிரமப்பட்டார்கள். அது பற்றி (வியந்து) பேசவும் செய்தார்கள். சுஹைல் இந்த நிபந்தனைகள் மீதே தவிர (வேறெதன் மீதும்) அல்லாஹ்வின் தூதரிடம் ஒப்பந்தம் செய்ய மறுத்து விட்ட போது (அந்த நிபந்தனைகளை ஏற்று) அவருக்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஒப்பந்தப் பத்திரத்தை) எழுதினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வந்து சேர்ந்த) சுஹை-ன் மகன் அபூஜந்தலை அன்றைய தினமே அவருடைய தந்தை சுஹைல் பின் அம்ரிடம் திரும்ப ஒப்படைத்தார்கள். மேலும், அந்த (ஒப்பந்த)க் காலத்தில் தம்மிடம் வந்த எந்த ஆண் மகனையும் -அவர் முஸ்-மாக இருந்தாலும்- அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் திருப்பி அனுப்பிவிட்டார்கள். (அப்போது) இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் ஹிஜ்ரத் செய்தவர்களாக வந்தனர். இவ்வாறு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நோக்கிப் புறப்பட்டு (ஹிஜ்ரத் செய்து) வந்தவர்களில் உக்பா பின் அபீ முஐத்தின் மகள் உம்மு குல்ஸூமும் இருந்தார். அவர் இளம் பெண்ணாக இருந்தார். அவரைத் தங்களிடம் திருப்பியனுப்பிவிட வேண்டு மெனக் கோரியபடி அவர்களின் குடும்பத்தினர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது, இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் விஷயத்தில் தனது (60:10லிம்) வசனத்தை அல்லாஹ் அருளினான்.242

இதை உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4182 நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபியே! இறை நம்பிக்கை கொண்ட பெண்கள் உங்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்வதற்காக வந்தால்... என்னும் இந்த (60:12லிம்) வசனத்தின் காரணத்தினால் (தம்மிடம்) ஹிஜ்ரத் செய்து வந்த இறை நம்பிக்கை கொண்ட பெண்களை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பரிசோதித்து வந்தார்கள்.

மேலும், அறிவிப்பாளர்களில் ஒருவரான இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் தம் தந்தையின் சகோதரரிடமிருந்து பின்வருமாறு அறிவிக்கின்றார்கள்:

இணைவைப்பவர்களின் மனைவி மார்களில் எவர் ஹிஜ்ரத் செய்து வந்து

(முஸ்லிம்களை மணமுடித்துக் கொண்டு) விட்டார்களோ அவர்களுக்காக அவர் களுடைய (இணைவைப்பாளர்களான) கணவன்மார்கள் (மஹ்ராகச்) செலவிட்டதை அவர்களுக்குத் திருப்பிக் கொடுத்து விட வேண்டும் என அல்லாஹ் தன் தூதருக்குக் கட்டளையிட்டான். இதைக் கூறிவிட்டு, தொடர்ந்து அபூபஸீர் (ரலி) அவர்கள் தொடர்பான அறிவிப்பையும் முழுமையாகக் கூறினார்கள்.243

4183 (இப்னு உமர் -ரலி- அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், குழப்ப(ம் நிறைந்த கால)த்தில் உம்ராவிற்காக (மக்காவிற்குப்) புறப்பட்டுச் சென்றார்கள்.244 அப்போது அவர்கள், நான் கஅபாவிற்குச் செல்ல முடியாதவாறு தடுக்கப்பட்டால், நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் (சென்று தடுக்கப்பட்ட ஹுதைபிய்யா சம்பவத்தின் போது) செய்தது போல் செய்வோம் என்று கூறிவிட்டு, உம்ராவிற்காக (இஹ்ராம் அணிந்து) தல்பியா சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யா ஆண்டில் உம்ராவிற்காக இஹ்ராம் அணிந்ததே இதற்குக் காரணமாகும்.245

4184 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் (குழப்பம் நிறைந்த காலத்தில் உம்ராவிற்காக) இஹ்ராம் அணிந்தார்கள். மேலும், (இறையில்லத்திற்குச் செல்ல முடியாமல்) நான் தடுக்கப்பட்டால், இறையில்லம் செல்ல விடாமல் (ஹுதைபிய்யா ஆண்டு) நபி (ஸல்) அவர்களை குறைஷிகள் தடுத்த போது நபி (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன்246 என்று கூறிவிட்டு, அல்லாஹ்வின் தூதரிடத்தில் உங்களுக்கு அழகிய முன் மாதிரி உள்ளது என்னும் (33:21லிம்) வசனத்தை ஓதினார்கள்.

4185 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(அப்துல்லாஹ் பின் ஸுபைர் -ரலி- அவர்களை ஹஜ்ஜாஜின் ராணுவம் முற்றுகையிட்டிருந்த குழப்பமான கால கட்டத்தில், உம்ராவிற்காக மக்காவிற்குச் செல்லத் திட்டமிட்டிருந்த) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்களிடம் அவர்களின் புதல்வர்களில் ஒருவர்-உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ், சாலிம் பின் அப்தில்லாஹ் ஆகிய இருவரும் என ஓர் அறிவிப்பில் காணப்படுகிறது- இந்த வருடம் தாங்கள் (உம்ராவிற்குச் செல்லாமல் இங்கேயே) தங்கிவிடலாமே. ஏனென்றால், நீங்கள் கஅபாவிற்குச் சென்று சேர மாட்டீர்கள் என்று நான் அஞ்சுகிறேன் என்று கூறினார். அதற்கு அவர்கள், நாங்கள் (ஹுதைபிய்யா ஆண்டு) நபி (ஸல்) அவர் களுடன் (உம்ரா செய்வதற்காக மக்கா) புறப்பட்டுச் சென்றோம்; அப்போது, குறைஷி குல இறைமறுப்பாளர்கள் எங்களை கஅபாவுக்குச் செல்லவிடாமல் தடுத்தனர். எனவே, நபி (ஸல்) அவர்கள் தமது தியாகப் பிராணிகளை அறுத்து விட்டுத் (தமது) தலையை மழித்துக் கொண்டார்கள். நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் தலைமுடியை குறைத்துக் கொண்டனர். (அனைவரும் இஹ்ராமிலிருந்து விடுபட்டனர்.) என்று கூறினார்கள். தொடர்ந்து அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள், நான் உம்ரா செய்ய முடிவு செய்து விட்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன். கஅபாவிற்குச் செல்ல எனக்கு வழி விடப்பட்டால் தவாஃப் செய்வேன். அங்கு செல்ல முடியாதவாறு நான் தடுக்கப்பட்டால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்தது போல நானும் செய்வேன் என்று கூறினார்கள். பின்னர் சிறிது நேரம் நடந்து விட்டு, (இஹ்ராமிலிருந்து விடுபடுகின்ற விஷயத்தில் ஹஜ், உம்ரா ஆகிய) அந்த இரண்டையும் நான் ஒன்று போலவே கருதுகிறேன். நான் என் உம்ராவுடன் ஹஜ்ஜையும் (என் மீது) கடமையாக்கிக் கொண்டேன் என்பதற்கு உங்களை சாட்சியாக்குகிறேன் என்று கூறினார்கள். (பிறகு மக்காவிற்குப் போன போது) ஒரேயொரு தவாஃபும் ஒரேயொரு சஃயும் செய்து (ஹஜ் உம்ரா ஆகிய) இரண்டிலிருந்தும் விடுபட்டார்கள்.247

4186 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உமர் (ரலி) அவர்களுக்கு முன்பே (அவர்களுடைய புதல்வரான) அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் முஸ்-மாகி விட்டார்கள் என்று மக்கள் பேசிக் கொள்கி றார்கள். (நடந்தது) அவ்வாறல்ல. மாறாக, ஹுதைபிய்யா தினத்தில் உமர் (ரலி) அவர்கள் அன்சாரிகளில் ஒருவரிடமிருந்த தமது குதிரையை அதன் மீது (அமர்ந்து) போர் புரிவதற்காக அதனை வாங்கி வருமாறு (தம் புதல்வர்) அப்துல்லாஹ்வை அனுப்பினார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தினருகில் (தமது தோழர்களிடம்) உறுதி மொழி வாங்கிக் கொண்டிருந்தார்கள். உமர் (ரலி) அவர்களுக்கு இது தெரியவில்லை. அப்போது அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதி மொழி கொடுத்தார்கள். பிறகு போய் அந்த குதிரையை வாங்கி, அதனை உமர்

(ரலி) அவர்களிடம் கொண்டு வந்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள் போருக்காக (தமது உருக்குச் சட்டையை) அணிந்து கொண்டிருந்தார்கள். அப்போது அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அந்த மரத்தினடியில் உறுதிமொழி வாங்கிக் கொண்டிருக்கிறார்கள் என்று அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் தெரிவித்தார்கள். உடனே உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வர்) அப்துல்லாஹ் (ரலி) அவர்களுடன் சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி கொடுத்தார்கள். இதைத் தான் மக்கள், உமர் அவர்களுக்கு முன்பாகவே (அவர் களுடைய புதல்வர்) இப்னு உமர் முஸ்-மாகி விட்டார் என்று பேசிக் கொள்கிறார்கள்.

4187 நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா நாளில் நபி (ஸல்) அவர்களுடனிருந்த மக்கள், பல்வேறு மரங்களின் நிழ-ல் பிரிந்து சென்று (ஓய்வெடுத்துக் கொண்டு) இருந்தனர். அப்போது சிலர் நபி (ஸல்) அவர்களைச் சூழ்ந்து கொண்டிருந் தனர். அப்போது உமர் (ரலி) அவர்கள் (தம் புதல்வரை நோக்கி), அப்துல்லாஹ்வே! மக்கள் அல்லாஹ்வின் தூதரைச் சூழ்ந்து கொண்டிருக்கிறார்கள். என்ன விஷயம் என்று பார் என்று கூறினார்கள். (அப்துல்லாஹ் - ரலி- அவர்கள் போய்ப் பார்த்த போது அல்லாஹ்வின் தூதரிடம்) மக்கள் உறுதிமொழி கொடுத்துக் கொண்டிருப்பதைக் கண்டார்கள். உடனே, அப்துல்லாஹ் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி அளித்து விட்டு பின்னர் உமர் (ரலி) அவர்களிடம் திரும்பி வந்தார்கள். (அவர்களிடம் விபரத்தைக் கூறவே) உடனே உமர் (ரலி) அவர்களும் புறப்பட்டுச் சென்று உறுதி மொழியளித்தார்கள்.

4188 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா

(ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்த போது நாங்களும் அவர்களுடனிருந்தோம். (மக்காவில் நுழைந்ததும் புனித கஅபாவை) வலம் வந்தார்கள். நாங்களும் அவர்களுடன் வலம் வந்தோம். அவர்கள் தொழுதார்கள். நாங்களும் அவர்களுடன் தொழுதோம். அவர்கள் ஸஃபாவுக்கும் மர்வாவுக்கும் இடையே தொங்கோட்டம் ஓடினார்கள். (நாங்களும் ஓடினோம்.) அப்போது (இணைவைக்கும்) மக்காவாசிகளில் எவரும் அவர்களை எந்த விதத்திலும் தாக்கி விடக் கூடாது என்பதற்காக அவர்களை மறைத்துக் கொண்டு (அவர்களுக்கு பாதுகாப்பு அரணாக) இருந்தோம்.248

4189 அபூவாயில் ஷகீக் பின் சலமா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஸிஃப்பீன் சண்டையிலிருந்து சஹ்ல் பின் ஹுனைஃப் (ரலி) அவர்கள் திரும்பி வந்த போது நாங்கள் அவர்களிடம் (அன்னார் சண்டையில் ஈடுபாடு காட்டாதது பற்றி) செய்தி அறியச் சென்றோம். அப்போது அவர்கள், (நான் இந்தப் போரில் ஈடுபாடு கொள்ளாதது குறித்து என்னைக் குற்றம் சாட்டாதீர்கள். உங்கள்) எண்ணத்தையே குற்றம் சாட்டுங்கள். அபூஜந்தல் (அபயம் தேடி வந்த ஹுதைபிய்யா உடன்படிக்கையின்) நாளில், நபி (ஸல்) அவர்களுடைய கட்டளையை ஏற்க மறுப்பதற்கு என்னால் முடிந்திருந்தால் ஏற்க மறுத்திருப்பேன் - அல்லாஹ்வும் அவனுடைய தூதருமே நன்கறிந்தவர்கள் - (அத்தகைய மன நிலையில் அன்று நான் இருந்தேன். அன்று) எங்கள் தோள்களில் நாங்கள் எங்கள் வாட்களை (முடக்கி) வைத்துக் கொண்டது எங்களுக்குச் சிரமம் தரக்கூடிய விஷயமான போருக்கு அஞ்சியல்ல. நாங்கள் அறிந்த எளிய விஷயமான சமாதானத்தை அடைந்திட (முடக்கப்பட்ட) அந்த வாட்களே வழி வகுத்தன. ஆனால், இதுவெல்லாம் ஸிஃப்பீன் போருக்கு முன்னால் தான். (ஆனால், முஸ்லிம் களுக்கிடையிலேயே போர் மூண்டு விட்ட இந்தச் சூழ்நிலையில்) நாங்கள் குழப்பத்தின் ஒரு மூலையை அடைக்கப் போனால் இன்னொரு மூலை பீறிட்டு வெடிக்கிறது. இதை எப்படிச் சமாளிப்பது என்று எங்களுக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள்.249

4190 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹுதைபிய்யா சமயத்தில் (உம்ரா வுக்காக நான் இஹ்ராம் அணிந்திருந்த போது) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வந்தார்கள். (அப்போது என் தலையிலிருந்து) பேன்கள் என் முகத்தின் மீது உதிர்ந்து கொண்டிருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள், உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று கூறினேன். அதற்கு, உனது தலையை மழித்துக் கொள். பின்பு மூன்று நாட்கள் நோன்பு நோற்றுக் கொள். அல்லது ஆறு ஏழைகளுக்கு உணவளி. அல்லது (உன்னால் முடிந்த) ஏதாவது ஒரு தியாகப் பிராணியை அறுத்துக் குர்பானி செய்திடு. (இதுவே இஹ்ராம் அணிந்த நிலையில் தலையை மழித்ததற்காகன பரிகாரமாகும்) என்று கூறினார்கள்.250

(இதன் அறிவிப்பாளர் வரிசையில் வரும்) அய்யூப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

(இந்த மூன்றில்) எதனை முத-ல் நபி (ஸல்) அவர்கள் குறிப்பிட்டார்கள் என்று எனக்குத் தெரியவில்லை.

4191 கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது. (அதிலிருந்த) பேன்கள் என் முகத்தின் மீது (உதிர்ந்து) விழத் தொடங்கின. அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைக் கடந்துசென்றார்கள். அப்போது அவர்கள், உனது தலையிலுள்ள பேன்கள் உனக்குத் துன்பம் தருகின்றனவா? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று கூறினேன். (அப்போது தான், இஹ்ராம் அணிந்தவர் இஹ்ராம் அணிந்திருக்கும் போது செய்யக் கூடாத காரியங்களைச் செய்து விட்டால் அதற்கான பரிகாரம் என்ன என்பது தொடர்பாக), உங்களில் யாரேனும் நோயாளியாக இருந்தால், அல்லது அவரது தலையில் துன்பம் தரும் (பேன், பொடுகு, காயம் அல்லது நோய்) ஏதும் இருந்தால் (அதன் காரணத்தால் இஹ்ராம் அணிந்த நிலையிலேயே அவர் தம் தலையை மழித்துக் கொள்ள நேரிட்டால் அதற்குப்) பரிகாரமாக நோன்பு நோற்க வேண்டும்; அல்லது தர்மம் செய்ய வேண்டும்; அல்லது குர்பானி கொடுக்க வேண்டும் என்னும் இந்த (2:196லிம்) வசனம் அருளப்பட்டது.251

பாடம் : 37

உக்ல் மற்றும் உரைனா குலத்தாரின் நிகழ்ச்சி252

4192 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதவாது:

உக்ல் மற்றும் உரைனா குலத்தாரில் சிலர் மதீனாவிற்கு வந்து நபி (ஸல்) அவர்களிடம், தாங்கள் இஸ்லாத்தை ஏற்பதாகப் பேசினர். அப்போது அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் பால்தரும் கால்நடைகள் வைத்திருப்பவர்கள். நாங்கள் விளைநிலங்கள் வைத்திருப்பவர்கள் அல்லர். (நாங்கள் பால்தரும் கால்நடைகளைக் காடுகளில் மேய்த்து அதன் பாலை அருந்து பவர்களாய் இருந்தோம்) என்று கூறினர். அவர்களுக்கு மதீனா(வின் தட்ப வெப்பம்) ஒத்துக் கொள்ளவில்லை. எனவே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (பத்துக்குட் பட்ட) ஒட்டகங்களையும் ஒரு மேய்ப்பரையும் அவர்களு(டைய உபயோகத்து)க்காக வழங்கும் படி உத்தரவிட்டார்கள். மேலும் ஒட்டகங்கள் (மேயும்) இடத்திற்குச் சென்று அந்த ஒட்டகங்களின் பாலையும் மூத்திரத்தையும் பருகிக் கொள்ளுங்கள் (இன்ஷா அல்லாஹ் நிவாரணம் கிடைக்கும்) என்று உத்தர விட்டார்கள். அவ்வாறே அவர்கள் சென்றனர். (அவற்றின் பாலை அருந்தி நிவாரணமும் பெற்றுக் கொண்டனர்.) அவர்கள் (கருங் கற்கள் நிறைந்த) ஹர்ரா பகுதியில் இருந்த போது இஸ்லாத்திலிருந்து விலகி இறை மறுப்பாளர்களாக (மதம்) மாறிவிட்டனர். மேலும், நபி (ஸல்) அவர்களின் கால்நடை மேய்ப்பாளர் (யஸார்-ரலி) அவர்களைக் கொலை செய்து விட்டு ஒட்டகங்களை (தங்களுடன்) ஓட்டிச் சென்று விட்டனர். இந்த விஷயம் நபி (ஸல்) அவர்களுக்கு எட்டிய போது, (அவர்களைப் பிடித்து வர) அவர்களைத் தொடர்ந்து ஆளனுப்பினார்கள். (அவர்கள் பிடிபட்டு மதீனாவுக்குக் கொண்டு வரப்பட்ட போது) அவர்களுக்கு தண்டனை கொடுக்குமாறு நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள். (மக்கள்) அவர்களுடைய கண்களில் பழுக்கக் காய்ச்சிய ஆணிகளால் சூடு போட்டார்கள். அவர்களுடைய கை கால்கள் வெட்டப்பட்டு, (மதீனாவின் புறநகரான) ஹர்ரா பகுதியில் அவர்கள் விடப்பட்டனர். அவர்கள் அந்த நிலையிலேயே மாண்டு போயினர்.253

அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அதற்குப் பிறகு நபி (ஸல்) அவர்கள் (மக்களை) தர்மம் செய்யுமாறு தூண்டிக் கொண்டும் சித்திரவதை செய்யவேண்டா மென தடுத்துக் கொண்டும் இருந்தார்கள்.

கத்தாதா (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் (நபி -ஸல்- அவர்களிடம் வந்தவர்கள்) உரைனா குலத்தினர் (மட்டுமே) என்று காணப்படுகிறது.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூகிலாபா (ரஹ்) அவர்களின் (வழியாக வரும்) அறிவிப்பில், உக்ல் குலத்தாரில் சிலர் (வந்தனர்) என்று இடம் பெற்றுள்ளது.

4193 (அபூகிலாபா -ரஹ்- அவர்களால் விடுதலை செய்யப்பட்ட அன்னாரின் முன்னாள் அடிமை) அபூ ரஜாஉ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் என் எஜமானர் அபூகிலாபா அவர் களுடன் ஷாம் நாட்டிலிருந்தேன். (கலீஃபா) உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் ஒரு தினம் மக்களிடம், இந்த கஸாமா விஷயத்தில் நீங்கள் என்ன கூறுகிறீர்கள்? என்று ஆலோசனை கேட்டார்கள்.254 அது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் உங்களுக்கு முன் (வந்த) கலீஃபாக்களும் தீர்ப்பளித்த உண்மை (விதி) தான்என்று மக்கள் பதிலளித்தனர். அபூகிலாபா (ரஹ்) அவர்கள், அப்போது உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்களின் அரியணைக்குப் பின்னால் இருந்தார்கள். அப்போது அன்பஸா பின் சயீத் (ரஹ்) அவர்கள், உரைனா குலத்தார் பற்றிய அனஸ் (ரலி) அவர்களின் ஹதீஸ் எங்கே (போயிற்று)? என்று கேட்டார்கள்.255 அப்போது அபூகிலாபா (ரஹ்) அவர்கள், (உரைனா குலத்தார் பற்றி) எனக்கும் அனஸ் (ரலி) அவர்கள் அறிவித்தார்கள் என்று கூறினார்கள்.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், உரைனா குலத்தாரில் சிலர் என்று காணப்படுகிறது.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து அபூகிலாபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கின்ற அறிவிப்பில், உக்ல் குலத்தாரில் சிலர் (என்று கூறிவிட்டு) முழு நிகழ்ச்சியையும் கூறியுள் ளார்கள்.

பாடம் : 38

தாத்துல் கரத் போர்

அது, கைபருக்கு மூன்று நாட்களுக்கு முன்னால், நபி (ஸல்) அவர்களின் பால்தரும் ஒட்டகங்களை எதிரிகள் கடத்திச்சென்ற போது நடந்த போராகும்.256

4194 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

முதல் தொழுகை(யான ஃபஜ்ரு)க்கு அழைப்புக் கொடுக்கப்படுவதற்கு முன்பாகவே நான் (மதீனாவிலிருந்து சிரியா வழியிலுள்ள ஃகாபாவை நோக்கிப்) புறப்பட்டேன். தூகரத் என்னுமிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (பால் தரும்) ஒட்டகங்கள் மேய்ந்து கொண்டிருந்தன. அப்போது அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களுக்குரிய ஒர் அடிமை (வந்து) என்னைச் சந்தித்து, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் பால் தரும் ஒட்டகங்கள் பிடித்துச் செல்லப்பட்டு விட்டன என்று கூறினான். நான், அவற்றை யார் பிடித்துச் சென்றது? என்று கேட்டேன். அதற்கவன், கத்ஃபான் குலத்தார் என்று பதில் சொன்னான். உடனே நான் உரக்கச் சப்தமிட்டு, யா ஸபாஹா! (அதிகாலை ஆபத்து! உதவி! உதவி!) என்று மதீனாவின் இரு மலைகளுக்கிடையிலிருந்த அனைவருக்கும் கேட்கும்படி மும்முறை கத்தினேன். பிறகு முகத்தைத் திருப்பாமல் நேராக விரைந்து சென்று அவர்களை அடைந்தேன். அவர்கள் (கொள்ளையடித்துச் சென்ற ஒட்டகங்களைக்) கையில் பிடித்துக் கொண்டு நீர் புகட்டிக் கொண்டிருந்தனர். நான் அக்வஃ உடைய மகன். இன்று பால் திருடர்கள் (தண்டனை பெறப் போகும்) நாள் என்று (பாடியபடி) கூறிக் கொண்டே அவர்கள் மீது அம்பெய்யத் தொடங்கினேன். நான் அம்பெய்வதில் தேர்ச்சி பெற்றவனாக இருந்தேன். மேலும், நான் ரஜ்ஸ் எனும் யாப்பு வகைப் பாடலை பாடிக் கொண்டே அவர்களிடமிருந்து (சில) ஒட்டகங்களை விடுவித்தேன். (அவர்களை நான் விரட்டிச் சென்ற போது) அவர்கள் விட்டுவிட்டுப் போன முப்பது சால்வைகளை நான் எடுத்துக் கொண்டேன். (அப்போது) நபி (ஸல்) அவர்களும் மக்களும் (அங்கு) வந்(து சேர்ந்த)னர். நான், அல்லாஹ்வின் தூதரே! அந்தக் கூட்டத்தினர் தாகமுடன் இருந்த போதும் அவர்கள் தண்ணீர் குடிக்க விடாமல் நான் தடுத்து விட்டேன். எனவே, (அவர்கள் ஓட்டிச் சென்ற மற்ற ஒட்டகங்களையும் விடுவிக்க) அவர்களை நோக்கி ஒரு படையை இப்போதே அனுப்புங்கள் என்று கூறினேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், அக்வஃ உடைய மகனே! (அவர்களை) நீ தோற்கடித்து விட்டாய். ஆகவே, மென்மையாக நடந்து கொள் என்று கூறினார்கள். பிறகு நாங்கள் (மதீனாவிற்குத்) திரும்பி வந்தோம். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மதீனாவிற்குள் நுழையும் வரையில் என்னைத் தமக்குப் பின்னே தம் ஒட்டகத்தின் மீது அமர்த்திக் கொண்டார்கள்.257

பாடம் : 39

கைபர் போர்258

4195 சுவைத் பின் நுஅமான் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் நடந்த வருடம், நபி (ஸல்) அவர்களுடன் நானும் புறப்பட்டேன். கைபருக்கு அருகிலுள்ள ஸஹ்பா என்ற இடத்தை அடைந்ததும் நபி (ஸல்) அவர்கள் அஸ்ருத் தொழுகையைத் தொழுதார்கள். பின்னர், பயண உணவைக் கொண்டு வரும்படிக் கூறினார்கள். அப்போது, மாவைத் தவிர வேறு எதுவும் கொண்டு வரப்பட வில்லை. அதைக் குழைக்கும் படி கட்டளையிட்டார்கள். அது குழைக்கப்பட்டதும் அதை நபி (ஸல்) அவர்களும் நாங்களும் சாப்பிட்டோம். பின்னர் மஃக்ரிப் தொழுகைக்காகச் சென்றார்கள். அப்போது வாயை (மட்டும்) கொப்பளித்தார்கள். நாங்களும் வாய் கொப்பளித்தோம். பின்னர் (புதிதாக) உளூ செய்யாமலேயே தொழுதார்கள்.259

4196 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் கைபரை நோக்கி(ப் போருக்காகப்) புறப் பட்டோம். இரவு நேரத்தில் நாங்கள் சென்று கொண்டிருந்த போது ஒருவர், (என் தந்தையின் சகோதரர்) ஆமிர் பின் அக்வஃ (ரலி) அவர்களிடம், ஆமிரே! உங்கள் கவிதைகளில் சிலதை(ப் பாடி) எங்களுக்கு கேட்கச் செய்யமாட்டீர்களா? என்று கூறினார். ஆமிர் (ரலி) அவர்கள் கவிஞராக இருந்தார்கள். அவர்கள் தமது வாகனத்திலிருந்து இறங்கி மக்களுக்காக (பின்வரும் யாப்பு வகைக் கவிதையைப்) பாடி அவர்களுடைய ஒட்டகங்களைப் பாய்ந்தோடச் செய்தார்கள். இறைவா! நீ இல்லையென்றால் நாங்கள் நேர்வழி பெற்றிருக்க மாட்டோம்; தர்மமும் செய்திருக்க மாட்டோம்; தொழுதிருக்கவும் மாட்டோம். உனக்காக (எங்களை) அர்ப்பணம் செய்கிறோம். (உன் கட்டளைகளில்) எதனை நாங்கள் கைவிட்டு விட்டோமோ அதற்காக எங்களை மன்னிப்பாயாக! நாங்கள் (போர்க் களத்தில் எதிரியைச்) சந்திக்கும் போது எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! எங்கள் மீது அமைதியைப் பொழிவாயாக! (அற வழியில் செல்ல) நாங்கள் அழைக்கப்பட்டால் நாங்கள் (தயாராக) வந்து விடுவோம்.260 எங்களிடம் மக்கள் அபயக்குரல் எழுப்பினால் (உதவிக்கு வருவோம்) என்று பாடிக் கொண்டிருந்தார்கள். (வழக்கம் போலப் பாடலைக் கேட்டு ஒட்டகங்கள் விரைந்தோடத் தொடங்கின.) அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்)அவர்கள், யார் இந்த ஒட்டக வோட்டி? என்று கேட்டார்கள். ஆமிர் பின் அக்வஃ என்று மக்கள் பதிலளித்தார்கள். அப்போது, அல்லாஹ் அவருக்கு அருள் புரிவானாக! என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மக்களில் ஒருவர், இறைத்தூதரே! (அவருக்கு வீர மரணமும் அதையடுத்து சொர்க்கமும்) உறுதியாகி விட்டது. அவர் (நீண்ட காலம் உயிர் வாழ்வதன்) மூலம் எங்களுக்குப் பயன் கிடைக்க (பிரார்த்தனை) செய்யக்கூடாதா? என்று கேட்டார். பிறகு நாங்கள் கைபருக்கு வந்து, கைபர் வாசிகளை முற்றுகையிட்டோம். அப்போது எங்களுக்குக் கடுமையான பசியேற்பட்டது. பிறகு உயர்ந்தோனான அல்லாஹ் அவர்களுக்கு எதிராக (எங்களுக்கு) வெற்றியளித்தான். வெற்றியளிக்கப்பட்ட அன்று மாலை, மக்கள் நிறைய நெருப்புகளை (ஆங்காங்கே) மூட்டினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், இது என்ன நெருப்பு? எதற்காக இதை மூட்டியிருக்கிறீர்கள்? என்று கேட்டார்கள். இறைச்சி சமைப்பதற்காக என்று மக்கள் கூறினர். எந்த இறைச்சி? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நாட்டுக் கழுதைகளின் இறைச்சி என்று மக்கள் கூறினர். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவற்றைக் கொட்டிவிட்டு, அந்தப் பாத்திரங்களை உடைத்து விடுங்கள் என்று கூறினார்கள். அப்போது ஒருவர், அல்லாஹ்வின் தூதரே! இறைச்சிகளைக் கொட்டி விட்டு அதன் பாத்திரங்களை கழுவிக் கொள்ளலாமா? என்று கேட்டார். அப்படியே ஆகட்டும் என்று கூறினார்கள். (அன்றைய தினம் போருக்காக) மக்கள் அணிவகுத்து நின்ற போது ஆமிர் (ரலி) அவர்களின் வாள் குட்டையாக இருந்தது. (அதனால்) அவர்கள் குனிந்து, ஒரு யூதனின் காலை வெட்டப் போன போது அன்னாரது வாளின் மேற்பகுதி, அன்னாரின் முழங் காலையே திருப்பித் தாக்கிவிட்டது. அதனால் அவர்கள் இறந்து விட்டார்கள். (கைபர் வெற்றிக்குப் பின் மதீனாவை நோக்கி) மக்கள் திரும்பிய போது- சலமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்- எனது கையைப் பிடித்துக் கொண்டு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னைப் பார்த்து, உங்களுக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பண மாகட்டும். (என் தந்தையின் சகோதரர்) ஆமிரின் நற்செயல்கள் (அமல்கள்) அழிந்து விட்டன; (அவர் தமது வாளினால் தம்மைத் தாமே குத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார்) என்று மக்கள் எண்ணு கிறார்கள். என்று தெரிவித்தேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், இதைக் கூறியவர் தவறிழைத்து விட்டார். ஆமிருக்கு நிச்சயமாக (நற்செயல் புரிந்த நன்மை, அறப்போர்புரிந்த நன்மை ஆகிய) இரண்டு நன்மைகள் உண்டு என்று கூறியவாறு, தம் இரு விரல்களையும் நபி (ஸல்) அவர்கள் இணைத்துக் காட்டினார்கள். (தொடர்ந்து) அவர் துன்பங்களைத் தாங்கினார்; (இறைவழியில்) அறப்போரும் புரிந்தார். (துன்பங்களைத் தாங்கியதுடன் அறவழியில் போரும் புரிந்து) பூமியில் உலவிய இவரைப் போன்ற அரபுகள் மிகவும் குறைவானவர்களே என்று கூறினார்கள்.261

ஹாத்திம் (ரஹ்) அவர்களிடமிருந்து குதைபா (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் அறிவிப்பில், (இவரைப் போன்றவர்) பூமியில் பிறப்பது அரிது என்று இடம் பெற்றுள்ளது.

4197 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் இரவு நேரத்தில் கைபருக்கு வந்தார்கள் - அவர்கள் ஒரு சமுதாயத்தாரிடம் மீது இரவு நேரத்தில் (படையெடுத்துச்) செல்வார் களாயின் காலை நேரம் வரும் வரையில் அவர்களை நெருங்க மாட்டார்கள். அவ்வாறே காலையானதும் யூதர்கள் தம் மண்வெட்டி யையும் (பேரீச்ச ஓலைகளாலான) கூடை களையும் எடுத்துக் கொண்டு (வயல் வெளிகளை நோக்கி) வெளியேறி வந்தனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை யூதர்கள் பார்த்த போது, முஹம்மதும், அல்லாஹ்வின் மீதாணையாக! முஹம்மதும், (அவரது ஐந்து அணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்) என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், கைபர் பாழாகி விட்டது! நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட(வர்களான அந்தச் சமுதாயத்த) வர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும் என்று கூறினார்கள்.262

4198 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அதிகாலை நேரத்தில் நாங்கள் (போரிடு வதற்காக) கைபருக்குச் சென்றோம். அந்த ஊர்வாசிகள் மண்வெட்டிகளை எடுத்துக் கொண்டு வெளியே வந்தனர். அவர்கள் நபி (ஸல்) அவர்களைப் பார்த்த போது, முஹம்மதும் -சத்தியமாக முஹம்மதும் -(அவரது ஐந்தணிகள் கொண்ட) படையும் (வருகின்றனர்) என்று கூறினர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகிவிட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்கு வோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாகும் என்று கூறினார்கள். அப்போது எங்களுக்குக் கழுதை இறைச்சி கிடைத்தது. எனவே நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், கழுதை இறைச்சி உண்ண வேண்டாமென அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் உங்களைத் தடுக் கின்றனர். ஏனெனில், அது அசுத்தமாகும் என்று அறிவித்தார்.

 

 

4199 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரின் போது) ஒருவர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, (அல்லாஹ்வின் தூதரே!) கழுதைகள் சாப்பிடப்பட்டு விட்டன என்று கூறினார். அதற்கு (பதிலளிக்காமல்) நபி (ஸல்) அவர்கள் மௌனமாக இருந்தார்கள். பிறகு இரண்டாம் முறையும் அவர் வந்து, கழுதைகள் சாப்பிடப்பட்டு விட்டன என்று கூறினார். அப்போதும் அவர்கள் மௌனமாகவே இருந்தார்கள். பிறகு மூன்றாம் முறையாக அவர் வந்து, கழுதைகள் தீர்ந்து போய் விட்டன என்று கூறினார். அப்போது நபி (ஸல்) அவர்கள், பொது அறிவிப்புச் செய்பவர் ஒருவருக்கு உத்தரவிட அவர், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாமென உங்களுக்குத் தடை விதிக்கின்றனர் என்று மக்களிடையே அறிவிப்புச் செய்தார். உடனே, இறைச்சி கொதித்துக் கொண்டிருந்த அந்தப் பாத்திரங்கள் கவிழ்க்கப்பட்டன.

4200 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபருக்கு அருகே (ஓரிடத்தில்) நபி (ஸல்) அவர்கள் இருட்டிலேயே சுப்ஹுத் தொழுது விட்டு பிறகு, அல்லாஹ் மிகப் பெரியவன். கைபர் பாழாகி விட்டது. நாம் ஒரு சமுதாயத்தின் களத்தில் (அவர்களுடன் போரிட) இறங்குவோமாயின் எச்சரிக்கப்பட்ட அவர்களுக்கு அது மிகக் கெட்ட காலையாக அமையும் என்று கூறினார்கள்.

கைபர்வாசிகள் (முஸ்லிம் படைகளைக் கண்டதும்) வீதிகளில் ஓடினர். அப்போது நபி (ஸல்) அவர்கள் (தம்முடன்) போரிட்ட வர்களைத் தாக்கினார்கள். அவர்களின் குடும்பத்தின(ரான பெண்கள், சிறுவர்கள் ஆகியோ)ரைத் கைது செய்தார்கள். கைதியாகப் பிடிக்கப்பட்டவர்களில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களும் ஒருவர். அவர்கள்

(முத-ல்) திஹ்யா அல் கல்பீ (ரலி) அவர் களிடம் (அன்னாரின் போர்ச் செல்வத்தின் பங்காகப்) போய்ச் சேர்ந்தார்கள். பிறகு ஸஃபிய்யா அவர்கள் நபி (ஸல்) அவர்களுக்கு சொந்தமானார்கள். அவரது விடுதலையையே மஹ்ராக ஆக்கி(அவரை நபி -ஸல்- அவர்கள் மணமுடித்து)க் கொண்டார்கள்.

அப்துல் அஸீஸ் பின் சுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்த ஹதீஸை ஸாபித் (ரஹ்) அவர்கள் அறிவிக்கும் போது அவர்களிடம், அபூ முஹம்மதே! நபி (ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள் என்று அனஸ் (ரலி) அவர்களிடம் நீங்கள் தான் கேட்டீர்களா? என்று நான் கேட்டேன். அதற்கு ஸாபித் அவர்கள் தமது கருத்தை உறுதிப்படுத்தும் விதமாக (ஆம் என்று கூறுவது போல) தமது தலையை அசைத்தார்கள்.

4201 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரில்) ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை நபி (ஸல்) அவர்கள் கைது செய்து, பின்னர் அவர்களை விடுதலை செய்து, தாமே அவர்களை மணமுடித்தும் கொண்டார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான ஸாபித் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

இந்தச் செய்தியைக் கூறுகையில் அனஸ் (ரலி) அவர்களிடம் நபி (ஸல்) அவர்கள் என்ன மஹ்ர் கொடுத்தார்கள்? என்று நான் கேட்டேன். (ஸஃபிய்யா-ரலி) அவர்களது விடுதலையையே அவர்களின் மஹ்ராக ஆக்கினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

4202 அபூ மூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் மீது போர் தொடுத்த போது .... அல்லது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (கைபரை) நோக்கிச் சென்று (வெற்றி பெற்றுத்) திரும்பிய போது.... , மக்கள் ஒரு பள்ளத்தாக்கில் (உள்ள மேடான பகுதியில்) ஏறுகையில், அல்லாஹு அக்பர், அல்லாஹு அக்பர் - அல்லாஹ் மிகப் பெரியோன், அல்லாஹ் மிகப் பெரியோன், லாஇலாஹ இல்லல்லாஹ் - வணக்கத்திற் குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறு யாருமில்லை என்று குரல்களை உயர்த்திக் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (மக்களே!) உங்களைக் கட்டுப்படுத்திக் கொள்ளுங்கள். (அவசரப்படாதீர்கள். மென்மையாக, மெல்லக் கூறுங்கள்.) ஏனெனில், நீங்கள் காது கேட்காதவனையோ இங்கில் லாதவனையோ அழைப்பதில்லை. நன்கு செவியேற்பவனும் அருகில் இருப்பவனையுமே நீங்கள் அழைக்கிறீர்கள். அவன் உங்களுட னேயே இருக்கின்றான் என்று கூறினார்கள். அப்போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் வாகனப் பிராணிக்குப் பின்னால் இருந்து கொண்டு, லாஹவ்ல வலா ஃகுவ்வத்த இல்லா பில்லாஹ் - அல்லாஹ்வின் உதவியில்லாமல் (பாவங்களிலிருந்து) விலகிச் செல்லவோ (நல்லறங்கள் புரிய) ஆற்றல் பெறவோ (மனிதனால்) முடியாது என்று கூறுவதைக் கேட்டார்கள். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அப்துல்லா பின் கைஸே! என்று அழைத்தார்கள். கூறுங்கள் அல்லாஹ்வின் தூதரே! என்று நான் பதிலளித்தேன். அதற்கு அவர்கள், உனக்கு ஒரு வார்த்தையை நான் அறிவித்துத் தரட்டுமா? அது சொர்க்கத்தின் கருவூலங் களில் ஒரு கருவூலமாகும் என்று கூறினார்கள். நான், சரி (கட்டாயம் கூறுங்கள்) அல்லாஹ்வின் தூதரே! என் தந்தையும் என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறினேன். (அந்த வார்த்தை,) லா ஹவ்ல வலா குவ்வத்த இல்லா பில்லாஹ் என்று சொன்னார்கள்.263

4203 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் (யூத) இணைவைப்பாளர்களும் (கைபர் போரில்) சந்தித்துப் போரிட்டனர். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (அன்றைய தினத்தின் போரை முடித்துக் கொண்டு) தமது படையினரிடமும், மாற்று அணியினர் அவர்கள் தம் படையினரிடமும் திரும்பிய போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தோழர்களிடையே (குஸ்மான் என்றழைக்கப்பட்ட) ஒரு மனிதர் இருந்தார். அவர்,•(யூதர்களின் அணியிலிருந்து) பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டுவிடாமல் அவர்களைப் பின் தொடர்ந்து சென்று தமது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டிருந்தார். அப்போது, இன்றைய தினம் இன்னவர் (உத்வேகத்துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்தது போல வேறெவரும் நம்மில் தேவை தீரப்போரிடவில்லை என்று (மக்களால்) பேசப்பட்டது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். அப்போது மக்களில் (அக்ஸம் பின் அபில் ஜவ்ன் என்ற) ஒருவர், நான் (பின்தொடர்ந்து) அவருடன் செல்லப் போகிறேன் என்று கூறினார். (அவ்வாறே) அந்த மனிதருடன் இவரும் புறப்பட்டார்.

அவர் நிற்கும் போதெல்லாம் அவருடன் இவரும் நின்றார். அவர் விரைந்து சென்றால் அவருடன் இவரும் விரைந்து சென்றார். அந்த (குஸ்மான் என்ற) மனிதர் (அப்போரில் ஒரு கட்டத்தில்) கடுமையாக காயப்படுத்தப் பட்டார். அதனால் அவர் அவசரமாக இறந்து போக விரும்பி தனது வாளை (அதன் கீழ் பகுதியை) பூமியில் வைத்து, அதன் கூரான மேல் பகுதியைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, பிறகு அந்த வாளின் மீது தன் உடலை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (பின் தொடர்ந்து சென்ற) அந்த மனிதர் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என்று நான் உறுதி கூறுகிறேன் என்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என்ன அது? என்று கேட்டார்கள். அதற்கு அவர், இவர் நரக வாசிகளில் ஒருவர் என்று ஒரு மனிதரைப் பற்றித் தாங்கள் சற்று முன்பு கூறினீர்க ளல்லவா? அதை மக்கள் பெரிதாகக் கருதினர். எனவே நான், அவர் விஷயத்தில் உங்களுக்கு நான் பொறுப்பு என்று (மக்களிடம்) கூறிவிட்டு அவரைத் தேடி நான் புறப்பட்டேன். (அவரைக் கண்டுபிடித்து பின்தொடர்ந்து சென்றேன்.) பிறகு அவர் மிகக் கடுமையாக (எதிரிகளால்) காயப்படுத்தப்பட்டார். எனவே, அவர் அவசரமாக இறந்து போக விரும்பி, தனது வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து அதன் மேல்முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்துத் தன்னை அந்த வாளின் மீது அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்) செயலைச் செய்துவருவார். ஆனால், (உண்மையில்) அவர் நரகவாசிகளில் ஒருவராக இருப்பார். இன்னொரு மனிதர் மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார். என்று கூறினார்கள்.264

4204 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபர் போரில் கலந்து கொண்டோம். அப்போது தம்முடன் இருந்தவர்களில், தன்னை முஸ்லிம் என்று கூறிக் கொண்ட ஒரு மனிதரைப் பார்த்து அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். போரிடும் நேரம் வந்த போது, அந்த மனிதர் மிகக் கடுமையாகப் போரிட்டார். அவருக்கு நிறையக் காயங்கள் ஏற்பட்டு விட்டன. மக்களில் சிலர், (நபி -ஸல்- அவர்களின் அந்தச் சொல்லை) சந்தேகப்படலாயினர். அப்போது அந்த மனிதர் காயத்தின் வேதனையை உணர்ந்தார். எனவே, தமது அம்புக் கூட்டுக்குள் கையை நுழைத்து, அதிலிருந்து அம்புகளை எடுத்து, அவற்றால் தம்மை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (அதைக் கண்ட) முஸ்லிம்களில் சிலர் விரைந்து வந்து, அல்லாஹ்வின் தூதரே! தாங்கள் சொன்னது உண்மை தான் என அல்லாஹ் உறுதிப்படுத்தி விட்டான். இன்ன மனிதர் தன்னை அறுத்துக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார் என்று கூறினர். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இன்னாரே! நீங்கள் எழுந்து சென்று (மக்களிடையே), இறை நம்பிக்கையாளரைத் தவிர (வேறெவரும்) சொர்க்கத்தில் நுழைய முடியாது. அல்லாஹ், இந்த மார்க்கத்திற்குப் பாவியான மனிதனின் வாயிலாகவும் வலுவூட்டுகின்றான் என்று பொது அறிவிப்புச் செய்யுங்கள் என்று கூறினார்கள்.265

4205 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் ஹுனைன் போரில் கலந்து கொண்டோம்....

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

கைபர் போரில் நபி (ஸல்) அவர்களுடன் கலந்து கொண்ட ஒருவர் எனக்குக் கூறினார்....

இதை உபைதுல்லாஹ் பின் கஅப் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

இந்த ஹதீஸ் பல அறிவிப்பாளர் தொடர் வழியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4206 யஸீத் பின் அபீ உபைத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சலமா (பின் அக்வஃ - ரலி) அவர்களின் கா-ல் ஒரு வெட்டுக் காயத்தின் அடையாளத்தை நான் கண்டேன். அவரிடம், அபூ முஸ்-மே! இது என்ன காயம்? என்று கேட்டேன். இது கைபர் போர் தினத்தில் ஏற்பட்ட காயம். அப்போது மக்கள், சலமா தாக்கப்பட்டு விட்டார் என்று கூறினர். உடனே, நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். அவர்கள் அந்தக் காயத்தின் மீது மூன்று முறை இலேசாகத் துப்பினார்கள். (அதன் பின்) இந்த நேரம் வரை (அதில்) எனக்கு நோவு ஏற்பட்டதில்லை என்று சலமா (ரலி) அவர்கள் கூறினார்கள்.

4207 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு போரில் (கைபரில்) நபி (ஸல்) அவர்களும், யூத இணைவைப்பவர்களும் சந்தித்துப் போரிட்டுக் கொண்டனர். (போர் நடை பெற்ற போது ஒரு நாள் போரை நிறுத்தி விட்டு) முஸ்லிம்கள், யூதர்கள் ஆகியோரில் ஒவ்வொரு கூட்டத்தினரும் தத்தமது படையினர் (தங்கியிருந்த இடத்தை) நோக்கித் திரும்பினர். முஸ்லிம்களிடையே ஒருவர் இருந்தார். அவர் (போரின் போது யூதர்களான) இணைவைப்பவர்களின் அணியிலிருந்து பிரிந்து சென்ற (போரிடாத) எவரையும், (படையிலிருந்து விலகி) தனியாகப் போரிட்ட எவரையும் விட்டு விடாமல் பின்தொடர்ந்து சென்று, தனது வாளால் (வீராவேசமாக) வெட்டி வீழ்த்திக் கொண்டி ருந்தார். அப்போது, அல்லாஹ்வின் தூதரே! (இன்றைய தினம்) இன்னவர் (உத்வேகத் துடன் போரிட்டு) தேவையை நிவர்த்தித்தது போல வேறெவரும் தேவை தீரப்போரிட வில்லை என்று (மக்களால்) பேசப்பட்டது. உடனே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் நரகவாசிகளில் ஒருவர் என்று கூறினார்கள். (வீரதீரத்துடன் கடுமையாகப் போரிட்ட) இவரே நரக வாசிகளில் ஒருவராயிருந்தால் எங்களில் யார் தான் சொர்க்கவாசி! என்று மக்கள் கூறினர். அந்த மக்களில் ஒருவர், நான் அவரைப் பின்தொடர்ந்து செல்லப் போகிறேன். அவர் விரைந்தாலும் மெதுவாகச் சென்றாலும் அவருடன் இருப்பேன் என்று கூறினார். (பிறகு அவரைத் தேடிக் கண்டு பிடித்துத் தொடர்ந்து சென்றார். வீரதீரமாகப் போரிட்ட.) அந்த மனிதர் (போரில்) காயப்படுத்தப்பட்டார். (வ- தாங்க முடியாமல்) அவசரமாக இறந்து போக விரும்பி, தனது வாளின் (கீழ்) முனையை பூமியில் (நட்டு) வைத்து, அதன் மேல் முனையைத் தன் மார்புகளுக்கிடையில் வைத்து, அதன் மீது தன்னை அழுத்திக் கொண்டு தற்கொலை செய்து கொண்டார். (அவரைப் பின் தொடர்ந்து சென்று இந்த காட்சிகளைக் கண்டு வந்த) அந்த மனிதர் நபி (ஸல்) அவர்களிடம் வந்து, தாங்கள் அல்லாஹ்வின் தூதர் என நான் உறுதி கூறுகிறேன் என்று கூறினார். என்ன அது? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அவர் (கண்டு வந்ததை) நபி (ஸல்) அவர்களிடம் தெரிவித்தார். அப்போது நபி (ஸல்) அவர்கள், மக்களின் வெளிப்பார்வைக்கு ஒரு மனிதர் சொர்க்கவாசிகளின் (நற்)செயலைச் செய்து வருவார் ஆனால் உண்மையில் அவர் நரக வாசிகளில் ஒருவராக இருப்பார். (இன்னொரு மனிதர்) மக்களின் வெளிப்பார்வைக்கு நரகவாசிகளின் (தீய) செயலைச் செய்து வருவார். ஆனால், (உண்மையில்) அவர் சொர்க்கவாசிகளில் ஒருவராக இருப்பார் என்று கூறினார்கள்.266

4208 அபூ இம்ரான் (அப்துல் ம-க் பின் ஹபீப் அல் ஜவ்னீ-ரஹ்) அவர்கள் கூறிய தாவது:

அனஸ் (ரலி) அவர்கள் (ஒருமுறை) ஜுமுஆ நாளன்று (பஸராவிலிருந்த ஒரு

பள்ளிவாச-ல்) மக்களை நோட்ட மிட்டார்கள். அப்போது (அவர்களின் தலையில்) தைலசான் என்னும் ஒரு வகை சால்வையைக் கண்டார்கள்.267 உடனே இப்போது இவர்கள் கைபர் யூதர்களைப் போல உள்ளனர் என்று கூறினார்கள்.

4209 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின் போது நபி (ஸல்) அவர்களுடன் (போருக்குச்) செல்லாமல் அலீ (பின் அபீ தா-ப் -ரலி) அவர்கள் பின்தங்கி விட்டார்கள். அவர்களுக்குக் கண்வ- ஏற்பட்டிருந்தது. அப்போது அவர்கள், நான் நபி (ஸல்) அவர்களுடன் செல்லாமல், பின்தங்கி விட்டேனே என்று (வருத்தத்துடன்) கூறினார்கள். பிறகு, நபி (ஸல்) அவர்களுடன் போய்ச் சேர்ந்து கொண்டார்கள். (கைபர்) வெற்றி கொள்ளப்பட்ட நாளின் (முந்தைய) இரவில் நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வும் அவனுடைய தூதரும் நேசிக்கின்ற ஒரு மனிதரிடம் நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன் .....அல்லது, (அத்தகைய) ஒரு மனிதர் நாளை இந்தக் கொடியைப் பிடித்திருப்பார்.... (என்று சொல்லிவிட்டு,) அவருக்கு அல்லாஹ் வெற்றியளிப்பான் என்று கூறினார்கள். அதை (யாரிடம் கொடுக்கப் போகிறார்கள் என்று) நாங்கள் எதிர்பார்த்துக் கொண்டிருந்தோம். அப்போது, இதோ, அலீ! என்று கூறப்பட்டது. (அல்லாஹ்வின் தூதர்-ஸல்) அவர்கள் (அலீ-ரலி) அவர்களிடம் (அக் கொடியைக்) கொடுக்க,(நபியவர்கள் சொன்னவாறே) அவர்களுக்கு வெற்றியளிக்கப்பட்டது.268

4210 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் நாளில் அல்லாஹ்வையும் அவனுடைய தூதரையும் நேசிக்கின்ற, மேலும், அல்லாஹ் வினுடையவும் அவனுடைய தூதருடையவும் நேசத்தைப் பெற்ற ஒரு மனிதரிடம், நாளை (இஸ்லாமிய சேனையின்) இந்தக் கொடியைத் தரப் போகிறேன் அல்லாஹ் அவருக்கு வெற்றியளிப்பான் என்று கூறினார்கள். அந்தக் கொடி தங்களில் எவரிடம் தரப்படும் என்ற யோசனையில் மக்கள் அந்த இரவெல்லாம் மூழ்கியிருந்தனர். மறுநாள் காலையில் அவர்களில் ஒவ்வொருவரும் அது தம்மிடமே தரப்படவேண்டுமென்று ஆசைப்பட்டவர்களாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்தனர். அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ பின் அபீ தா-ப் எங்கே? என்று கேட்டார்கள். அல்லாஹ்வின் தூதரே! அவருக்குக் கண்வ- ஏற்பட்டுள்ளது என்று கூறப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், (அவரை அழைத்து வரும்படி) அவரிடம் ஆளனுப் புங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள் அழைத்து வரப்பட்ட போது அவர்களின் கண்களில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது உமிழ்நீரை உமிழ்ந்து அவருக்காக பிரார்த்தித்தார்கள். உடனே அன்னாரது கண், அதற்கு முன்பு வ- எதுவுமே இல்லாதிருந்ததைப் போல் குணமாகி விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்கள், அலீ (ரலி) அவர்களிடம் அந்தக் கொடியைக் கொடுத்தார்கள். உடனே அலீ

(ரலி) அவர்கள், நம்மைப் போன்று

அவர்களும் (ஒரே இறைவனுக்குக் கீழ்ப்படிந்த வர்களாய்) ஆகும் வரை நான் அவர்களுடன் போரிடட்டுமா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நிதானமாகச் சென்று, அவர்களுடைய களத்தில் இறங் குங்கள். பிறகு, அவர்களை இஸ்லாத்திற்கு அழைத்து (அதை ஏற்கும் பட்சத்தில்) அவர்கள் மீது கடமையாகின்ற, அல்லாஹ் விற்குச் செய்யவேண்டிய கடமைகளை அவர்களுக்கு எடுத்துச் சொல்லுங்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! உங்கள் மூலம் ஒரேயொருவருக்கு அல்லாஹ் நேர்வழி யளிப்பது (அரபுகளின் உயரிய செல்வமான) சிவப்பு ஒட்டகங்களை (சொந்தமாக்கிக் கொள்வதை விட, அல்லது அவற்றை தர்மம் செய்வதை) விட உங்களுக்குச் சிறந்ததாகும் என்று சொன்னார்கள்.269

4211 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபருக்கு(ப் படையெடுத்து) வந்தோம். அல்லாஹ், நபி (ஸல்) அவர்களுக்கு (கமூஸ் என்னும்) கோட்டையின் வெற்றியைத் தந்த போது, (போர்க் கைதியான) ஸஃபிய்யா பின்த் ஹுயை பின் அக்தப் அவர்களின் அழகு பற்றிக் கூறப்பட்டது. புது மணப் பெண்ணாக இருந்த ஸஃபிய்யாவின் கணவர் (போரில்) கொல்லப்பட்டு விட்டார். அவரை நபி (ஸல்) அவர்கள் (போர்ச் செல்வத்தில் குமுஸ் பங்கிலிருந்து) பெற்று (மணந்து) கொண்டார்கள். அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு புறப்பட்டார்கள். (கைபருக்கு அருகிலுள்ள) சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தை நாங்கள் அடைந்த போது மாதவிடாயிலிருந்து அவர் தூய்மையடைந்தார். பிறகு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அவருடன் வீடு கூடினார்கள். அதன் பிறகு (பேரீச்சம் பழம், நெய், பாலாடைக் கட்டி ஆகியவற்றைக் கலந்து) ஹைஸ் எனப்படும் ஓர் உணவைத் தயாரித்துச் சிறிய தோல் விரிப்பில் வைத்தார்கள்.

பிறகு நபி (ஸல்) அவர்கள் என்னிடம், உன் அக்கம் பக்கத்திலிருப்பவர்களுக்கு அறிவிப்புக் கொடு என்று கூறினார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்களை மணந்ததற்காக நபி (ஸல்) அவர்கள் வழங்கிய வலீமா - மண(மகன்) விருந்தாய் அது அமைந்தது. பிறகு நாங்கள் மதீனா நோக்கிப் புறப்பட்டோம். அப்போது நபி (ஸல்) அவர்கள் ஒட்டகத்தின் மேல், ஒரு போர்வை(போன்ற அங்கி)யால் ஸஃபிய்யா (ரலி) அவர்களுக்காகத்திரை யமைத்தார்கள். பிறகு, தமது ஒட்டகத்தின் அருகில் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்து, தமது முழங்காலை வைக்க, அவர்களது முழங்கால் மீது தமது காலை வைத்து (அன்னை) ஸஃபிய்யா (ரலி) அவர்கள் ஒட்டகத்தில் ஏறியதை நான் பார்த்தேன்.270

4212 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களுடன் கைபர் வழியில் (சத்துஸ் ஸஹ்பா என்னும் இடத்தில்) மூன்று நாட்கள் தங்கி வீடு கூடினார்கள். ஸஃபிய்யா (ரலி) அவர்கள் பர்தா முறை விதியாக்கப்பட்டவர்களில் (-நபியவர்களின் துணைவி யரில்-) ஒருவராக இருந்தார்கள்.271

4213 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் கைபருக்கும் மதீனா வுக்கும் இடையில் (உள்ள சத்துஸ் ஸஹ்பா என்னுமிடத்தில் ஸஃபிய்யா பின்த் ஹுயை அவர்களை மண முடித்து) மூன்று நாட்கள் தங்கினார்கள். அங்கு ஸஃபிய்யா அவர் களுடன் வீடுகூடினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்களின் வலீமா - மண விருந்துக்கு முஸ்லிம்களை நான் அழைத்தேன். அந்த விருந்தில் ரொட்டியோ, இறைச்சியோ இருக்கவில்லை.

நபி (ஸல்) அவர்கள், பிலால் (ரலி) அவர்களிடம் தோல்விரிப்பைக் கொண்டு வருமாறு உத்தரவிட, அவ்வாறே அது கொண்டுவந்து விரிக்கப்பட்டது. பிறகு, அதில் பேரீச்சம் பழம், பாலாடைக் கட்டி, நெய் போன்றவற்றை இட்டார்கள். (ஹைஸ் எனும் எளிமையான உணவு தயாரானது. அதை அங்கிருந்த முஸ்லிம்கள் உண்டனர்.) அப்போது முஸ்லிம்கள் ஸஃபிய்யா அவர்கள் இறை நம்பிக்கையாளர்களின் அன்னை (-நபியவர்களின் துணைவி-)யரில் ஒருவரா? அல்லது நபி (ஸல்) அவர்களின் அடிமைப் பெண்ணா? என்று பேசிக் கொண்டனர். ஸஃபிய்யா அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் ஹிஜாப் - திரையிட்(டுக் கொள்ளும் படி கட்டளையிட்)டால், அவர் இறை நம்பிக்கையாளர்களின் அன்னையரில் (-நபியவர்களின் துணைவியரில்-) ஒருவர். அப்படி அவர்களுக்குத் திரை(யிட்டுக் கொள்ளும்படி கட்டளை)யிடா விட்டால், அவர் அடிமைப் பெண்களில் ஒருவர் என்று (மக்களில் சிலர்) கூறினர். நபி (ஸல்) அவர்கள் தமது வாகனத்தில் புறப்பட்ட போது தமக்குப் பின்னால் ஸஃபிய்யா அவர்களுக்காக இருக்கையமைத்து இடம் கொடுத்து (அவர்கள் அமர்ந்த பிறகு) திரையை இழுத்து (மூடி) விட்டார்கள்.272

4214 அப்துல்லாஹ் பின் முகஃப்பல் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபரை முற்றுகையிட்டுக் கொண்டிருந்தோம். அப்போது ஒரு மனிதர், கொழுப்பு அடங்கிய தோல் பை ஒன்றை எறிந்தார். நான் அதை எடுக்க பாய்ந்து சென்றேன். அப்போது நான் திரும்பிப் பார்த்தேன். அங்கே நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள். (என் ஆசையை நபியவர்கள் தெரிந்து விட்டதால்) நான் வெட்கமடைந்தேன்.273

4215 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின் போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வெள்ளைப் பூண்டையும் நாட்டுக் கழுதைகளின் இறைச்சி களையும் உண்ண வேண்டாமெனத் தடை விதித்தார்கள்.274

நாஃபிஉ (ரஹ்) அவர்களின் அறிவிப்பில் மட்டுமே வெள்ளைப் பூண்டு உண்ண வேண்டாம் என்பது இடம் பெற்றுள்ளது.

நாட்டுக் கழுதைகளின் இறைச்சி (தொடர்பாக) சாலிம் (ரஹ்) அவர்களின் வாயிலாகவே அறிவிக்கப்பட்டுள்ளது.

4216 அலீ பின் அபீ தா-ப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், முத்அத்துன்னிஸா- (கால வரம்பிட்டுச் செய்யப்படும் திருமணம்) செய்ய வேண்டாம் எனவும், நாட்டுக் கழுதைகளை உண்ண வேண்டாம் எனவும் தடை விதித்தார்கள்.275

4217 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை (உண்ண வேண்டாமெனத்) தடை செய்தார்கள்.

4218 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியை உண்ண வேண்டாமென நபி (ஸல்) அவர்கள் தடைவிதித்தார்கள்.

4219 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது (நாட்டுக்) கழுதை களின் இறைச்சியை உண்ண வேண்டாம் எனத் தடைவிதித்தார்கள். குதிரைகளை (அவற்றின் இறைச்சியை உண்ணலாமென) அவர்கள் அனுமதித்தார்கள்.

4220 இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் போர் அன்று எங்களுக்குப் பசியேற்பட்டது. அப்போது (சமையல் செய்யப்பட்டுக் கொண்டிருந்த) பாத்திரங்கள் கொதித்துக் கொண்டிருந்தன. அவற்றில் சில பாத்திரங்களில்(இருந்த இறைச்சி) வெந்தும் விட்டது. அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர் வந்து, கழுதைகளின் இறைச்சியில் சிறிதும் உண்ணாதீர்கள். அதனைக் கொட்டி விடுங்கள் என்று கூறினார்.

இதன் அறிவிப்பாளர் கூறுகிறார்:

அப்போது நாங்கள், அதை (உண்ண வேண்டாமென) நபி (ஸல்) அவர்கள் தடை விதித்ததற்குக் காரணம், அதில் (நபி (ஸல்) அவர்களுக்குச் சேர வேண்டிய) குமுஸ் நிதி எடுக்கப்பட்டிருக்கவில்லை; (அதனால், தாற்கா-கமாகத் தடைவிதித்துள்ளார்கள்) என்று பேசிக் கொண்டோம். எங்களில் சிலர், அறவே (நிரந்தரமாக உண்ண வேண்டா மென்றே) தடைவிதித்தார்கள். ஏனெனில், அவை மலத்தைத் தின்கின்றன என்று கூறினர்.276

4221 & 4222 (கைபர் போரில்) மக்கள் நபி (ஸல்) அவர்களுடன் இருந்து கொண்டிருந்த போது அவர்களுக்கு(நாட்டு)க் கழுதைகள் கிடைத்தன. உடனே அவற்றை மக்கள் சமைத்தனர். அப்போது நபி (ஸல்) அவர்களின் அறிவிப்பாளர், பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள் என்று பொது அறிவிப்புச் செய்தார்.

இதை பராஉ (ரலி) அவர்களும் அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக்கிறார்கள்.

4223 & 4224 கைபர் போரின் போது மக்கள் (அடுப்புகளில்) பாத்திரங்களை வைத்து (நாட்டுக்கழுதை இறைச்சியை சமைத்து) விட்டிருக்க நபி (ஸல்) அவர்கள், பாத்திரங்களைக் கவிழ்த்து விடுங்கள் என்று கூறினார்கள்.

இதை பராஉ (ரலி) அவர்களும் இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்களும் அறிவிக் கிறார்கள்.

4225 நாங்கள் நபி (ஸல்) அவர்களுடன் (கைபர்) போருக்குச் சென்றோம்... (என்று தொடங்கும்) முந்தைய ஹதீஸின் கருத்தில் அமைந்த பராஉ (ரலி) அவர்களின் இன்னோர் அறிவிப்பும் இடம் பெற்றுள்ளது.

4226 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளின் இறைச் சியை-அது பச்சையாயிருந்தாலும் சமைக்கப் பட்டிருந்தாலும்-எறிந்து விடுமாறு எங்களுக்குக் கட்டளையிட்டார்கள். அதற்குப் பின்பு அதனை உண்ணும்படி (அனுமதியளித்து) எங்களுக்கு அவர்கள் உத்தரவிடவேயில்லை.

4227 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாட்டுக் கழுதைகளின் இறைச்சியைப் புசிக்க வேண்டாமென அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தடைவிதித்ததற்குக் காரணம், அது மக்களைச் சுமந்து செல்லும் வாகனமாக இருப்பதனால் (அது உண்ணப்படும் பட்சத்தில்) அவர்களுக்கு வாகனம் இல்லாமற் போய் விடுவதை நபி (ஸல்) அவர்கள் வெறுத்தார்கள் என்பதாலா? அல்லது கைபர் போரின் போது நாட்டுக் கழுதைகளை (புசிக்க வேண்டாமென) அவர்கள் (நிரந்தரமாகத்) தடைசெய்து விட்டார்களா என்று எனக்குத் தெரியாது.

4228 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கைபர் போரின் போது(போர்ச் செல்வத்திலிருந்து) குதிரைக்கு இரு பங்குகளையும் காலாட் படை வீரருக்கு ஒரு பங்கையும் கொடுத்தார்கள்.

இந்த அறிவிப்பிற்கு நாஃபிஉ (ரஹ்) அவர்கள், (போரில் கலந்து கொண்ட) ஒரு மனிதருடன் ஒரு குதிரையிருந்தால் (குதிரைக்காக இரு பங்குகளும், உரிமையாளருக்

காக ஒரு பங்கும் சேர்த்து) அவருக்கு மூன்று பங்குகள் கிடைக்கும். அவருடன் குதிரை இல்லாவிட்டால் அவருக்கு ஒரு பங்கு கிடைக்கும் என்று விளக்கம் அளித்தார்கள்.277

4229 ஜுபைர் பின் முத்இம் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நானும், உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களும் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (அல்லாஹ்வின் தூதரே!) கைபர் (போரில் கிடைத்த போர்ச் செல்வத்தின்) குமுஸ் (ஐந்தில் ஒரு பாகம்) நிதியிலிருந்து பனூ முத்த-ப் கிளையினருக்குக் கொடுத்தீர்கள்; எங்களுக்குக் கொடுக்காமல் விட்டு விட்டீர்கள். நாங்களும் அவர்களும் உங்களுடன் ஒரே மாதிரியான உறவுமுறை உடையவர்கள் தாமே? என்று கேட்டோம். அப்போது (அல்லாஹ்வின் தூதர் -ஸல்) அவர்கள், பனூ முத்த-பும் பனூ ஹாஷிமும் ஒருவர் தாம் என்று கூறினார்கள்.

 (மற்றோர் அறிவிப்பில்,) பனூ அப்தி ஷம்ஸ் கிளையாருக்கும் பனூ நவ்ஃபல் கிளையாருக்கும் நபி (ஸல்) அவர்கள் (குமுஸில்) சிறிதும் பங்கு தரவில்லை என்று ஜுபைர் (ரலி) அவர்கள் தெரிவித்துள் ளார்கள்.278

4230 அபூ மூசா அல் அஷ்அரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (மக்காவைத் துறந்து மதீனாவை நோக்கி ஹிஜ்ரத்) புறப்பட்டு விட்ட செய்தி, நாங்கள் யமன் நாட்டில் இருந்த போது எங்களுக்குத் தெரியவந்தது. உடனே நானும் என் இரு சகோதரர்களும் நபி (ஸல்) அவர்களை நோக்கி ஹிஜ்ரத் செய்யப் புறப்பட்டோம். அந்த என் இரு சகோதரர் களில் ஒருவர் அபூ புர்தா ஆவார்; மற்றொருவர் அபூருஹ்ம் ஆவார். நான் தான் அவர்களில் வயதில் சிறியவன் ஆவேன்.

-அறிவிப்பாளர்களில் ஒருவரான அபூ புர்தா ஆமிர் பின் அபீமூசா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

எனது (அஷ்அரீ) குலத்தாரில் ஐம்பதிற்கும் மேற்பட்டவர்களுடன் சேர்ந்து நாங்கள் சென்றோம் என்றோ.... ஐம்பத்திரண்டு பேர்களுடன் ...அல்லது ஐம்பத்து மூன்று பேர்களுடன்... சேர்ந்து சென்றோம்.... என்றோ (என் தந்தை அபூமூசா -ரலி- அவர்கள்) சொன்னார்கள்-

நாங்கள் ஒரு கப்பலில் ஏறி (மதீனா நோக்கிப்) பயணித்தோம். எங்கள் கப்பல் (திசைமாறி) அபிசீனியாவில் (மன்னர்) நஜாஷீயிடம் எங்களை ( கொண்டுசென்று) இறக்கிவிட்டது. (அபிசீனியாவில்) ஜஅஃபர் பின் அபீதா-ப் (ரலி) அவர்களைத் தற் செயலாகச் சந்தித்தோம். (ஏற்கெனவே அவர் மக்காவிலிருந்து ஹிஜ்ரத் செய்து வந்து, அவர் தம் சகாக்களுடன் அபிசீனியாவில் தங்கியிருந்தார்.) பிறகு (அவர் கேட்டுக் கொண்டதற் கிணங்க) அவருடன் நாங்களும் தங்கினோம். இறுதியில், நாங்கள் அனைவரும் சேர்ந்து (மதீனா) வந்து சேர்ந்தோம். நபி (ஸல்) அவர்கள் கைபரை வெற்றி கொண்ட போது அவர்களைச் சென்றடைந்தோம்.279

அப்போது சிலர், கப்பலில் வந்தவர் களான எங்களை நோக்கி, உங்களுக்கு முன்பே நாங்கள் ஹிஜ்ரத் செய்து விட்டோம் என்று கூறலாயினர். எங்களுடன் (மதீனாவிற்கு) வந்தவர்களில் ஒருவரான (ஜஅஃபர் -ரலி- அவர்களின் துணைவியார்) அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களின் துணைவியார் ஹஃப்ஸா (ரலி) அவர்களைச் சந்திப்பதற்காகச் சென்றார்கள். நஜாஷீ மன்னரை நோக்கி (அபீசீனியாவிற்கு) ஹிஜ்ரத் செய்தவர்களில் அஸ்மாவும் ஒருவராவார். பிறகு உமர் (ரலி) அவர்கள் (தமது மகள்) ஹஃப்ஸா (ரலி) அவர்களின் இல்லத்திற்குச் சென்றார்கள். அப்போது ஹஃப்ஸா அவர்களுக்கு அருகில் அஸ்மா அவர்கள் இருந்தார்கள். உமர் (ரலி) அவர்கள் அஸ்மா அவர்களைக் கண்ட போது, இவர் யார்? என்று (தமது மகள் ஹஃப்ஸா அவர்களிடம்) கேட்டார்கள். (இவர்) அஸ்மா பின்த் உமைஸ் என்று ஹஃப்ஸா (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள். உமர்

(ரலி) அவர்கள், இவர், அபிசீனியரா? இவர் கடல் மார்க்கமாக (மதீனா) வந்தவரா? என்று கேட்டார்கள். அதற்கு, ஆம் என்று அஸ்மா அவர்கள் பதிலளித்தார்கள். அப்போது உமர் (ரலி) அவர்கள், உங்களுக்கு முன்பே நாங்கள் (மதீனாவிற்கு) ஹிஜ்ரத் செய்து வந்து விட்டோம். ஆகவே, உங்களை விட நாங்களே அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு மிகவும் உரியவர்கள் என்று கூறினார்கள். இது கேட்டு அஸ்மா (ரலி) அவர்கள் கோபப்பட்டு, அல்லாஹ்வின் மீதாணையாக! அப்படியில்லை. நீங்கள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தீர்கள். உங்களில் பசித்தவருக்கு அவர்கள் உணவளித்தார்கள். உங்களில் அறியாதவர்களுக்கு அவர்கள் அறிவூட்டினார்கள். (உடல் மற்றும் அறிவு ரீதியாக நபியவர்களிடமிருந்து நீங்கள் உதவி பெற்று வந்தீர்கள்.) நாங்களோ வெகு தொலை விலிருக்கும், பகைவர்கள் உள்ள அபிசீனிய நாட்டில்.... அல்லது பூமியில்.... இருந்தோம். அல்லாஹ்வுக்காகவும் அவனுடைய தூதருக்காகவுமே இதைச் செய்தோம். அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் சொன்னதை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் தெரிவிக்கும் வரையில் நான் எதையும் உண்ணவோ குடிக்கவோ மாட்டேன். நாங்கள் துன்புறுத்தப்பட்டோம்; அச்சுறுத்தப்பட்டோம். நான் இதை நபி (ஸல்) அவர்களிடம் கூறி, அவர்களிடம் (நியாயம்) கேட்கப் போகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் பொய் சொல்ல மாட்டேன்; திரித்துப் பேசவு மாட்டேன். நீங்கள் சொன்னதை விட கூட்டிச் சொல்லவும் மாட்டேன் என்று கூறினார்கள்.

4231 நபி (ஸல்) அவர்கள் வந்த போது, அஸ்மா பின்த் உமைஸ் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உமர் அவர்கள் இன்னின்னவாறு சொன்னார்கள் என்று கூறினார்கள். அவருக்கு நீ என்ன பதிலளித்தாய்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, அவருக்கு இன்னின்னவாறு பதிலளித்தேன் என்று அஸ்மா அவர்கள் கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், உங்களை விட அவர் எனக்கு உரியவர் அல்லர். அவருக்கும் அவருடைய சகாக்களுக்கும் ஒரேயொரு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) தான் உண்டு. (அபிசீனியாவிலிருந்து) கப்பலில் வந்தவர்களே! உங்களுக்கு (அபிசீனியாவிற்கு ஒன்றும், மதீனாவிற்கு ஒன்றுமாக) இரண்டு ஹிஜ்ரத் (செய்த சிறப்பு) உண்டு என்று கூறினார்கள்.

அஸ்மா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அபூ மூசாவும் அவர்களுடைய கப்பல் சகாக்களும் கூட்டங்கூட்டமாக என்னிடம் வந்து, இந்த ஹதீஸ் குறித்துக் கேட்டனர். அவர்களைப் பற்றி நபி (ஸல்) அவர்கள் கூறிய இந்தப் பொன்மொழியை விட இந்த உலகத்தில் வேறெதுவும் அவர்களின் மகிழ்ச்சிக்குரிய தாகவோ, அவர்களின் மனதில் பெருமைக் குரியதாகவோ இருக்கவில்லை.

4232 (தொடர்ந்து) அஸ்மா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

என்னிடம் அபூமூசா (ரலி) அவர்கள் இந்த ஹதீஸைத் திரும்பத் திரும்ப கேட்டுக் கொண்டேயிருந்தார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

என் அஷ்அரீ (குல) நண்பர்கள் இரவில் (தம் தங்குமிடங்களில்) நுழையும் போது அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையை நான் அறிவேன். பகல் நேரத்தில் அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் பார்த்திருக்கா விட்டாலும், இரவில் அவர்கள் குர்ஆன் ஓதும் ஓசையைக் கேட்டு அவர்கள் தங்கியிருக்கும் இடங்களை நான் அடையாளம் கண்டு கொள்கிறேன். மேலும், அவர்களில் விவேகம் மிக்க ஒருவர் இருக்கிறார். அவர் குதிரைப் படையினரைச் சந்தித்தால்.... அல்லது எதிரிகளைச் சந்தித்தால்.... அவர்களைப் பார்த்து, என் தோழர்கள், தங்களுக்காகக் காத்திருக்கும்படி உங்களுக்கு உத்தரவிடு கின்றனர் என்று (துணிவோடு) கூறுவார் என்று கூறினார்கள்.280

இதை அபூமூசா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4233 அபூ மூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அபிசீனியாவிலிருந்து அஷ்அரீ குலத்தைச் சேர்ந்த) நாங்கள் கைபர் வெற்றிக்குப் பின் (ஜஅஃபர் -ரலி- அவர்களுடன்) நபி (ஸல்) அவர்களிடம் வந்தோம். அப்போது அவர்கள் (போர்ச் செல்வத்திலிருந்து) எங்களுக்கும் பங்கு தந்தார்கள். எங்களைத் தவிர (கைபர்) வெற்றியின் போது (படையில்) இருக்காத வேறெவருக்கும் நபி (ஸல்) அவர்கள் பங்கு தரவில்லை.

4234 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் கைபரை வெற்றி கொண்டோம். அப்போது நாங்கள் தங்கத்தையோ வெள்ளி யையோ போர்ச் செல்வமாகப் பெறவில்லை. மாடு, ஒட்டகம், (வீட்டுப்)பொருட்கள், தோட்டங்கள் ஆகியவற்றையே போர்ச் செல்வமாகப் பெற்றோம். பிறகு நாங்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் (மதீனாவிற்கு அருகிலுள்ள) வாதில் குரா என்னுமிடத்தை நோக்கித் திரும்பிக் கொண்டிருந்தோம். நபியவர்களுடன் மித்அம் எனப்படும் ஓர் அடிமையும் இருந்தார். அவரை பனூளிபாப் குலத்தாரில் (ரிஃபாஆ பின் ஸைத் என்ற) ஒருவர் நபி (ஸல்) அவர்களுக்கு அன்பளிப்பாக வழங்கியிருந்தார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் சிவிகையை அந்த அடிமை இறக்கிக் கொண்டிருந்த போது எங்கிருந்தோ வந்த ஓர் அம்பு அவர் மீது பாய்ந்தது. அவருக்கு இறைவழியில் உயிர்த் தியாகம் செய்யும் பேறு கிடைத்து விட்டது. வாழ்த்துகள்! என்று மக்கள் கூறினர். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இல்லை. எனது உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! போர்ச் செல்வங்கள் பங்கிடப்படும் முன் அவர் எடுத்துக் கொண்ட போர்வையே அவருக்கு நரக நெருப்பாகி எரிந்து கொண்டிருக்கிறது என்று கூறினார்கள்.

நபி (ஸல்) அவர்களிடமிருந்து இதைக் கேட்ட போது ஒரு மனிதர், ஒரு செருப்பு வாரை.... அல்லது இரண்டு செருப்பு வார்களைக்..... கொண்டு வந்து, இது (போர்ச் செல்வம் பங்கிடப்படும் முன்) நான் எடுத்துக் கொண்ட பொருள் என்று கூறினார். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (இது சாதாரண செருப்பு வார் அல்ல. இதனைத் திருப்பித்தராமல் இருந் திருந்தால் இதுவே) நரகத்தின் செருப்பு வார் ....அல்லது இரு வார்கள்.... ஆகும் என்று கூறினார்கள்.

4235 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் உயிரைத் தன் கையில் வைத்திருப் பவன் மீது சத்தியமாக! பின்னால் வரும் மக்களை ஏதுமில்லாத வறியவர்களாக விட்டுச் சென்றுவிடுவோனோ என்ற அச்சம் எனக்கில்லையாயின், எனது ஆட்சிக் காலத்தில் எந்த ஊர் வெற்றி கொள்ளப் பட்டாலும் அதனை, கைபர் நிலங்களை நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்தது போல (தனி மனிதருக்கான வருவாய் மானியமாக) பங்கிட்டுக் கொடுத்திருப்பேன். எனினும், அவற்றை (எதிர்கால) மக்களுக்குக் கருவூலமாக (அறக் கொடையாக்கி)விட்டுச் செல்கிறேன். அதில் அவரவர் தத்தமது பங்கினைப் பெற்றுக் கொள்வர்.

4236 உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பின்னால் வரும் முஸ்லிம்கள் (உடைய ஏழ்மை பற்றிய அச்சம் எனக்கு) இல்லை யாயின் எந்த ஊர் (எனது ஆட்சிக் காலத்தில்) வெற்றி கொள்ளப்படுகின்றதோ அதனை, கைபர் நிலங்களை நபி (ஸல்) அவர்கள் பங்கிட்டுக் கொடுத்தது போல நானும் பங்கிட்டுக் கொடுத்து விடுவேன்.

இதை அஸ்லம் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.281

4237 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் வெற்றிக்குப் பிறகு) நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்று, (போரில் கிடைத்த செல்வத்தில் எனக்கும் ஒரு பங்கு கொடுங்கள் என்று) கேட்டேன். அப்போது சயீத் பின் ஆஸ் உடைய மகன்களில் (அபான் என்றழைக்கப்பட்ட) ஒருவர் இவருக்குப் பங்கு கொடுக்காதீர்கள். அல்லாஹ்வின் தூதரே! என்று கூறினார். உடனே நான், இவர் இப்னு கவ்கல் (என்ற நுஃமான் பின் மாலிக்) அவர்களை (உஹுதுப் போரில்) கொன்றவர் என்று கூறினேன். உடனே அவர் (என்னைப் பற்றி), என்ன ஆச்சரியம்! (தனது தவ்ஸ் குலத்தார் வசிக்கின்ற) ளஃன் என்னும் மலை உச்சியிலிருந்து வந்திருக்கும் இந்தக் குழிமுயல் (ஒரு முஸ்-மைக் கொன்று விட்டதற்காக என்னைக் குறை சொல்கின்றதே!) என்று கூறினார்.282

4238 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அபான் (பின் சயீத்) அவர்களை ஒரு போர்ப் படையில் (தளபதியாக) மதீனாவிலிருந்து நஜ்தை நோக்கி அனுப்பி வைத்தார்கள். பிறகு, கைபர் வெற்றிக்குப் பின் அங்கிருந்த நபி (ஸல்) அவர்களிடம் அபானும் அவரது தோழர்களும் வந்தனர். அவர்களுடைய குதிரைகளின் சேணங்களெல்லாம் பேரீச்ச மர நார்களைப் போல் இருந்தன. (வெற்றிச் செல்வங்கள் ஏதுமின்றி வெற்றுடலாய் காணப்பட்டன). அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! (கைபரில் கிடைத்த போர்ச் செல்வத்திலிருந்து) இவர்களுக்குப் பங்கிட்டுத் தராதீர்கள் என்று கூறினேன். அதற்கு அபான் அவர்கள், ளஃன் மலை உச்சியிலிருந்து இறங்கி வந்த குழிமுயலே! நீயா இப்படி(ச் சொல்கிறாய்)? என்று கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அபானே! அமருங்கள் என்று கூறினார்கள். ஆனால், அவர்களுக்கு (போர்ச் செல்வத்தில்) பங்கு தரவில்லை.

4239 சயீத் பின் அம்ர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(கைபர் வெற்றிக்குப் பின்) அபான் பின் சயீத் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் வந்து சலாம் கூறினார்கள். அப்போது அபூஹுரைரா (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! இவர் இப்னு கவ்கல் (என்ற நுஃமான் பின் மாலிக்) அவர்களைக் கொன்றவர் என்று கூறினார்கள். உடனே அபான் அவர்கள் அபூஹுரைரா அவர்களை நோக்கி, என்ன ஆச்சரியம்! ளஃன் மலை உச்சியிலிருந்து துள்ளியோடி வந்திருக்கும் இந்தக் குழிமுயல் (நான் முஸ்-மாகாமல் இருந்த போது உஹுதுப் போரில் இப்னு கவ்கல் எனும் முஸ்-மான) ஒரு மனிதரைக் கொன்று விட்டதற்காக என்னைக் குறை சொல்கின்றதே! அல்லாஹ் என் கைகளால் (வீர மரணத்தை அவருக்கு வழங்கி) அவரை கண்ணியப்படுத்தியுள்ளான். (அப்போது என்னை அவர் கொன்றிருந்தால் நான் இழிவுக்குரியவனாகி இழப்புக்குள்ளாகிப் போயிருப்பேன். ஆனால்,) அவருடைய கைகளால் என்னைக் கேவலப்படுத்தாமல் அல்லாஹ் தடுத்து விட்டான் என்று கூறினார்கள்.283

4240 & 4241 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் (நபியவர்களின் மறைவுக்குப் பிறகு, கலீஃபா) அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பி, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு அல்லாஹ் ஒதுக்கித் தந்திருந்த மதீனா மற்றும் ஃபதக் சொத்திலிருந்தும், கைபரின் ஐந்தில் ஒரு பகுதி நிதியில் மீதியிருந்ததிலிருந்தும் தமக்குச் சேர வேண்டிய வாரிசுமையைத் கேட்டார்கள்.284 அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (நபிமார்களான) எங்கள் சொத்துக்களுக்கு வாரிசாக யாரும் வர முடியாது. நாங்கள் விட்டுச் செல்பவை யெல்லாம் தர்மம் செய்யப்பட வேண்டியவை ஆகும். இந்தச் செல்வத்திலிருந்தே முஹம்மதின் குடும்பத்தினர் சாப்பிடுவார்கள் என்று சொல்லியிருக்கிறார்கள். (எனவே,) அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தர்மச் சொத்தில் நான் எந்தச் சிறு மாற்றத்தையும் செய்யமாட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் எந்த நிலையில் அந்தச் சொத்துகள் இருந்து வந்தனவோ, அதே நிலையில் அவை நீடிக்கும். அதில் (அந்தச் சொத்துக்களைப் பங்கிடும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்கள் செயல்பட்டபடியே நானும் செயல்படுவேன் என்று (ஃபாத்திமா அவர்களுக்கு) பதில் கூறி(யனுப்பி)னார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம் அவற்றில் எதையும் ஒப்படைக்க அபூபக்ர் (ரலி) அவர்கள் மறுத்து விட்டார்கள். இதனால் அபூபக்ர் (ரலி) மீது மனவருத்தம் கொண்டு இறக்கும் வரையில் அவர்களுடன் ஃபாத்திமா (ரலி) அவர்கள் பேசவில்லை. நபி (ஸல்) அவர்கள் இறந்த பின், ஆறுமாத காலம் ஃபாத்திமா (ரலி) அவர்கள் உயிர் வாழ்ந்தார்கள். ஃபாத்திமா (ரலி) இறந்த போது, அவர்களின் கணவர் அலீ (ரலி) அவர்கள், (இறப்படைவதற்கு முன் ஃபாத்திமா அவர்கள் கேட்டுக் கொண்டிருந்ததற்கிணங்க) இரவி லேயே அவர்களை அடக்கம் செய்தார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களுக்குக் கூட இது குறித்துத் தெரிவிக்கவில்லை. அலீ (ரலி) அவர்களே ஃபாத்திமா (ரலி) அவர்களுக்கு (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்கள் வாழ்ந்த வரையில் அலீ (ரலி) அவர்கள் மீது மக்களி டையே (மரியாதையுடன் .கூடிய) தனிக்கவனம் இருந்து வந்தது. ஃபாத்திமா (ரலி) அவர்கள் இறந்து விட்ட பின் மக்களின் முகங்களில் (மரியாதையில்) மாற்றத்தை அலீ (ரலி) அவர்கள் கண்டார்கள்.285 எனவே, (ஆட்சித் தலைவர்) அபூபக்ரிடம் சமரசம் பேசவும் பைஅத்- விசுவாசப் பிரமாணம் செய்து கொள்ளவும் விரும்பினார்கள். அந்த (ஆறு) மாதங்களில் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு அலீ (ரலி) அவர்கள் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்திருக்கவில்லை. ஆகவே, தாங்கள் (மட்டும்) எங்களிடம் வாருங்கள். தங்களுடன் வேறெவரும் வரவேண்டாம் என்று கூறி அலீ (ரலி) அவர்கள் அபூபக்ர் (ரலி) அவர்களுக்கு ஆளனுப்பினார்கள். (அபூபக்ர்-ரலி- அவர்களுடன்) உமர் (ரலி) அவர்கள் வருவதை அலீ (ரலி) அவர்கள் விரும்பாததே (அலீ-ரலி- அவர்கள் இவ்வாறு கூறக்) காரணமாகும். அப்போது உமர் (ரலி) அவர்கள் (அபூபக்ர் -ரலி- அவர்களிடம்), அல்லாஹ்வின் மீது சத்தியமாக! நீங்கள் மட்டும் அவர்களிடம் தனியாகச் செல்லா தீர்கள் (உங்களுக்குரிய கண்ணியத்தை அவர்கள் கொடுக்காமல் இருந்து விடலாம்) என்று கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள், என் விஷயத்தில் அவர்கள்அப்படி நடந்து கொள்வார்கள் என்றா நீங்கள் எதிர்பார்க்கிறீர்கள்? அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்களிடம் நான் செல்லத் தான் செய்வேன் என்று கூறிவிட்டு, அவர்களிடம் சென்றார்கள். அப்போது அலீ (ரலி) அவர்கள், ஏகத்துவ உறுதிமொழியைக் கூறி இறைவனைத் துதித்தார்கள்- பிறகு, (அபூபக்ர் -ரலி- அவர்களை நோக்கி) தங்கள் சிறப்பையும் தங்க ளுக்கு அல்லாஹ் வழங்கியிருக்கும் (ஆட்சித் தலைமைப்) பொறுப்பையும் நாங்கள் ஒப்புக் கொள்கிறோம். அல்லாஹ் உங்களுக்கு வழங்கியிருக்கும் இந்த (ஆட்சித் தலைமை எனும்) நன்மையைக் குறித்து நாங்கள் பொறாமைப்படவில்லை ஆயினும், இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் (எங்களிடம் ஆலோசனை கலக்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டு விட்டீர்கள். ஆனால், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் எங்களுக் குள்ள உறவு முறையின் காரணத்தால் (ஆட்சித் தலைவரைத் தேர்ந்தெடுக்கும் விஷயத்தில்) எங்களுக்குப் பங்கு உண்டு என நாங்கள் கருதிவந்தோம் என்று கூறினார்கள். (இது கேட்டு) அபூபக்ர் (ரலி) அவர்களின் கண்கள் (கண்ணீரைச்) சொரிந்தன. அபூபக்ர் (ரலி) அவர்கள் பேசத் துவங்கிய போது, என் உயிரைத் தன் கையில் வைத்திருப்பவன் மீது சத்தியமாக! என்னுடைய உறவினர்களுடன் உறவைப் பேணி நான் வாழ்வதை விட, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் உறவினர்களே எனக்கு மிகவும் உவப்பான வர்கள். இந்தச் செல்வங்கள் தொடர்பாக எனக்கும் உங்களுக்குமிடையில் ஏற்பட்ட (கருத்து வேறுபாட்டின்) விவகாரத்தில் நான் நன்மை எதையும் குறைத்து விடவில்லை. இது விஷயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் செய்யக் கண்ட எதையும் நான் செய்யாமல் விட்டு விடவுமில்லை என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலீ (ரலி) அவர்கள், தங்களுக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுப்பதற்கான நேரம் (இன்று) மாலையாகும் என்று கூறினார்கள். பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள் லுஹ்ருத் தொழுகையை முடித்ததும் மிம்பர் (மேடை) மீதேறி ஏகத்துவ உறுதிமொழி கூறி, இறைவனைப் புகழ்ந்த பிறகு அலீ (ரலி) அவர்கள் குறித்தும், அவர்கள் தமக்கு விசுவாசப் பிரமாணம் செய்து கொடுக்கத் தாமதமானது குறித்தும், அதற்கு அலீ (ரலி) அவர்கள் தம்மிடம் கூறிய காரணம் குறித்தும் எடுத்துரைத்தார்கள். பிறகு அலீ (ரலி) அவர்கள் (இறைவனிடம்) பாவமன்னிப்புக் கோரிவிட்டு, ஏகத்துவ உறுதிமொழி கூறிய பின் அபூபக்ர் (ரலி) அவர்களின் தகுதியைக் கண்ணியப்படுத்திப் பேசினார்கள். தொடர்ந்து அவர்கள், தாம் செய்த இக்காரியத்திற்குக் காரணம், அபூபக்ர் (ரலி) அவர்கள் மீது கொண்ட பொறாமையோ அல்லது அவர்களுக்கு அல்லாஹ் வழங்கிய சிறப்பை நிராகரித்ததோ அல்ல; மாறாக, (ஆட்சித் தலைமையைத் தேர்ந்தெடுக்கும்) இந்த விஷயத்தில் எங்களுக்கும் பங்கு உண்டு என (நபி-ஸல்-அவர்களின் குடும்பத்தினராகிய) நாங்கள் கருதியதேயாகும். ஆனால், அபூபக்ர் (ரலி) அவர்கள் (எங்களிடம் கேட்காமல்) தன்னிச்சையாகச் செயல்பட்டுவிட்டார்கள். அதனால் எங்களுக்கு மனவருத்தம் ஏற்பட்டது என்று கூறினார்கள். இதைக் கேட்டு

முஸ்லிம்கள் மகிழ்ச்சியடைந்து (அலீ அவர்களைப் பார்த்து) நீங்கள் சரியாகவே சொன்னீர்கள் என்று கூறினர். தமது போக்கை அலீ (ரலி) அவர்கள் திரும்பவும் இயல்பான நிலைக்குக் கொண்டு வந்து விட்ட போது முஸ்லிம்கள் அலீ(ரலி) அவர்களுக்கு மிகவும் நெருக்கமானவர்களாக ஆகிவிட்டனர்.286

4242 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது, இனி நம் வயிறு பேரீச்சங்கனிகளால் நிரம்பும் என்று நாங்கள் சொல்லிக் கொண்டோம்.

4243 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபரை வெற்றி கொள்ளும் வரையில் நாங்கள் வயிறு நிரம்பச் சாப்பிட்டதில்லை.

பாடம் : 40

கைபர் வாசிகளுக்கு நபி (ஸல்) அவர்கள் அதிகாரி ஒருவரை நியமனம் செய்தது.287

4244 & 4245 அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறியதாவது:

(கைபர் வெற்றிக்குப் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (சவாத் பின் ஃகஸிய்யா என்றழைக்கப்படும்) ஒருவரை கைபரின் அதிகாரி யாக நியமனம் செய்தார்கள். அங்கிருந்து அவர் உயர் ரகப் பேரீச்சங்கனிகளை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கொண்டு வந்தார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கைபரின் பேரீச்சங்கனிகள் எல்லாமே இப்படி(உயர் ரகமானதாக)த் தான் உள்ளனவா? என்று கேட்டார்கள். அதற்கவர், அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை; அல்லாஹ்வின் தூதரே! மட்டமான பேரீச்சங்கனிகளில் இரண்டு ஸாவுக்கு இந்த உயர் ரகப் பேரீச்சங்கனிகளில் ஒரு ஸாவையும், மட்டமான பேரீச்சங்கனிகளில் மூன்று ஸாவுக்கு இந்தப் பேரீச்சங்கனிகளில் இரண்டு ஸாவையும் நாங்கள் வாங்குவோம் எனக் கூறினார். அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இவ்வாறு செய்யாதீர். மட்டமான பேரீச்சங்கனியை திர்ஹங்களுக்கு விற்று, அந்தத் திர்ஹங்களைக் கொண்டு உயர் ரகப் பேரீச்சங்கனியை வாங்குவீராக! எனக் கூறினார்கள்.288

4246 & 4247 அபூ சயீத் (ரலி) அவர்களும் அபூஹுரைரா (ரலி) அவர்களும் கூறியதாவது:

அன்சாரிகளில் பனூ அதீ குடும்பத்தின் சகோதரர் (சவாத் பின் ஃகஸிய்யா என்றழைக்கப்படும்) ஒருவரை கைபருக்கு அதிகாரியாக்கி நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள்.....

இதே ஹதீஸ் இன்னோர் அறிவிப்பாளர் தொடர் வழியாகவும் இடம் பெற்றுள்ளது.

பாடம் : 41

வயல்களில் பயிர் செய்ய கைபர் வாசிகளை நபி (ஸல்) அவர்கள் அனுமதித்தது.

4248 அப்துல்லாஹ் (பின் உமர் -ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் பகுதியில் உள்ள நிலங்களை யூதர்களுக்கு, அவர்கள் அவற்றில் உழைத்து விவசாயம் செய்து கொள்ளலாம். அதிலிருந்து கிடைக்கும் விளைச்ச-ல் பாதி அவர்களுக் குரியது. (மீதிப் பாதியை மதீனாவின் இஸ்லாமிய அரசுக்குக் கொடுத்து விட வேண்டும்) என்னும் நிபந்தனையின் பேரில் நபி (ஸல்) அவர்கள் கொடுத்தார்கள்.289

பாடம் : 42

கைபரில் நபி (ஸல்) அவர்களுக்கு விஷம் தோய்த்துக் கொடுக்கப்பட்ட ஆடு.290

இது குறித்து ஆயிஷா (ரலி) அவர்களின் வாயிலாக உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளர்கள்.291

4249 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

கைபர் வெற்றி கொள்ளப்பட்ட போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு விஷம் கலந்த ஆடு ஒன்று அன்பளிப்பாக தரப்பட்டது.292

பாடம்: 43

ஸைத் பின் ஹாரிஸாப் போர்293

4250 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நபி (ஸல்) அவர்கள், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களை ஒரு படைக் குழுவினருக்குத் தளபதியாக்கி அனுப்பினார்கள். மக்களில் சிலர் ஸைத் அவர்களின் தலைமையைக் குறை கூறினார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள், (இப்போது) இவரது தலைமையை நீங்கள் குறை கூறுகிறீர்கள் என்றால்...(இது ஒன்றும் புதிதல்ல). இவருக்கு முன் (மூத்தா போரின் போது) இவருடைய தந்தையின் (ஸைத் அவர்களின்) தலைமையையும் நீங்கள் குறைகூறிக் கொண்டிருந்தீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் தலைமைப் பொறுப்புக்குத் தகுதியுடைய வராகவே இருந்தார். மேலும், அவர் மக்களிலேயே எனக்கு மிகவும் விருப்பமான வராக இருந்தார். (அவருடைய மகனான) இவர் தான் அவருக்குப் பின் எனக்கு மிகவும் பிரியமானவர் ஆவார் என்று சொன்னார்கள்.294

பாடம் : 44295

உம்ரத்துல் களா

இது குறித்து நபி (ஸல்) அவர்களிட மிருந்து அனஸ் (ரலி) அவர்கள் அறிவிப்புச் செய்துள்ளார்கள்.296

4251 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் துல்கஅதா மாதத்தில் உம்ரா செய்யச் சென்றபோது மக்காவாசிகள் அவர்களை மக்காவிற்குள் நுழைய விட மறுத்தார்கள். இறுதியில், நபி (ஸல்) அவர்கள், மக்காவில் (வரும் ஆண்டில்), தாம் (தம் தோழர்களுடன்) மூன்று நாட்கள் தங்க (அனுமதிக்க) வேண்டும் என்னும் நிபந்தனையின் பேரில் மக்காவாசிகளுடன் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். ஒப்பந்தத்தை அவர்கள் எழுதிய போது, இது அல்லாஹ்வின் தூதரான முஹம்மத் அவர்கள் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் ஷரத்துகள் என்று எழுதினார்கள். உடனே மக்காவாசிகள், நாங்கள் இதை ஒப்புக் கொள்ள மாட்டோம். நீங்கள் அல்லாஹ்வின் தூதர் தாம் என்று நாங்கள் நம்புவோமாயின் உங்களை (மக்காவில் நுழைய விடாமல்) தடுத்திருக்க மாட்டோம். ஆயினும், நீங்கள் அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மது தான் என்று கூறினார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் அல்லாஹ்வின் தூதராவேன்; அப்துல்லாஹ்வின் மகன் முஹம்மதும் ஆவேன் என்று பதிலளித்து விட்டு, அலீ (ரலி) அவர்களை நோக்கி, அல்லாஹ்வின் தூதர் என்பதை அழித்து விடுங்கள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்கள், முடியாது. அல்லாஹ்வின் மீதாணையாக! நான் தங்கள் (அந்தஸ்தைக் குறிக்கும்) பெயரை ஒரு போதும் அழிக்க மாட்டேன் என்று கூறி விட்டார்கள். உடனே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பத்திரத்தை எடுத்தார்கள்-அவர்களுக்கு எழுதத் தெரிந்திருக்க வில்லை-பிறகு, இது அப்துல்லாஹ்வின் குமாரர், முஹம்மத் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தம் ஆகும். அதன் விபரமாவது: முஸ்லிம்களில் எவரும்) உறையி-ட்ட வாளைத் தவிர வேறு ஆயுதங்களை மக்கா விற்குள் கொண்டு வரக் கூடாது. மக்கா வாசிகளில் எவரும் முஹம்மதைப் பின் தொடர்ந்து வர விரும்பினாலும் கூட, அவரை முஹம்மது தம்முடன் அழைத்துச் செல்லக் கூடாது. மேலும், தம் தோழர்களில் எவரும் மக்காவில் தங்கிவிட விரும்பினால் அவரை முஹம்மது தடுக்கக் கூடாது என்று எழுதி(விடுமாறு கூறி)னார்கள். (அடுத்த ஆண்டு) நபி (ஸல்) அவர்கள் மக்காவினுள் நுழைந்த போது (அவர்களுக்குக் கொடுக்கப்பட்ட) தவணை(யான மூன்று நாட்கள்) முடிந்தவுடன் மக்காவாசிகள் அலீ (ரலி) அவர்களிடம் வந்து, உங்கள் தோழரிடம் எங்களை (எங்கள் நகரை) விட்டு வெளியேறும் படிக் கூறுங்கள். ஏனெனில், தவணைக் காலம் முடிந்து விட்டது என்று சொன்னார்கள். நபி (ஸல்) அவர்களும் (மக்காவை விட்டு) வெளியேறினார்கள். அப்போது (உஹுதுப் போரில் கொல்லப்பட்டிருந்த) ஹம்ஸா (ரலி) அவர்களின் (அனாதை) மகள், என் சிறிய தந்தையே! என் சிறிய தந்தையே! என்று (கூவிக் கொண்டே) நபி (ஸல்)அவர்களைப் பின்தொடர்ந்து வந்தாள். அலீ (ரலி) அவர்கள் அச்சிறுமியை (பரிவோடு) எடுத்து அவளது கையைப் பிடித்துக் கொண்டார்கள். ஃபாத்திமா (ரலி) அவர்களிடம், இவளை எடுத்துக் கொள். (இவள்) உன் தந்தையின் சகோதரருடைய மகள். இவளைத் தூக்கி வைத்துக் கொள் என்று கூறினார்கள். அச்சிறுமியின் விஷயத்தில் அலீ (ரலி) அவர்களும், ஸைத் பின் ஹாரிஸா (ரலி) அவர்களும், ஜஅஃபர் (ரலி) அவர்களும் (ஒவ்வொருவரும், அவளை நான்தான் வளர்ப்பேன் என்று) ஒருவரோடொருவர் போட்டியிட்(டு சச்சரவிட்டுக் கொண்)டனர். அலீ (ரலி) அவர்கள், நானே இவளுக்கு மிகவும் உரிமையுடையவன். ஏனெனில், இவள் என் சிறிய தந்தையின் மகள் என்று கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்கள், இவள் என் சிறிய தந்தையின் மகள். மேலும், இவளுடைய சிற்றன்னை (அஸ்மா பின்த் உமைஸ்) என் மனைவியாவார் என்று கூறினார்கள். ஸைத் (ரலி) அவர்கள், (இவள், நபியவர்கள் ஏற்படுத்திய சகோதரத்துவத்தின் மூலம் வந்த) என் சகோதரரின் மகள் என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள் அச் சிறுமியின் சிற்றன்னைக்கு சாதகமாக (சிற்றன்னையின் கணவரான ஜஅஃபர் - ரலி அவர்கள், அவளை வளர்க்கட்டும் என்று) தீர்ப்பளித்தார்கள். மேலும், சிற்றன்னை அன்னையின் அந்தஸ்தில் இருக்கிறாள் என்று கூறினார்கள். அலீ (ரலி) அவர்களை நோக்கி, நீங்கள் என்னைச் சேர்ந்தவர்; நான் உங்களைச் சேர்ந்தவன் என்று (ஆறுதலாகக்) கூறினார்கள். ஜஅஃபர் (ரலி) அவர்களை நோக்கி, நீங்கள் தோற்றத்திலும் குணத்திலும் என்னை ஒத்திருக்கின்றீர்கள் என்று சொன்னார்கள். மேலும், ஸைத் (ரலி) அவர்களை நோக்கி, நீங்கள் எம் சகோதரர்; எம்(மால் விடுதலை செய்யப்பட்ட, எமது பொறுப்பிலுள்ள) அடிமை (ஊழியர்) என்று கூறினார்கள்.297 அலீ (ரலி) அவர்கள், தாங்கள் ஹம்ஸாவின் மகளை மணமுடித்துக் கொள்ளக் கூடாதா? என்று நபி (ஸல்) அவர்களிடம் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவள் பால்குடி உறவு முறையில் என் சகோதரரின் மகள் ஆவாள். (ஆகவே, நான் அவளை மணமுடிக்க முடியாது) என்று சொன்னார்கள்.298

4252 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உம்ரா செய்ய நாடியவர்களாக (மக்காவை நோக்கிப்) புறப்பட்டார்கள். குறைஷி இறை மறுப்பாளர்கள் அவர்களை இறையில்லம் கஅபாவிற்குச் செல்ல விடாமல் தடுத்து விட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் ஹுதைபிய்யாவில் தமது தியாகப் பிராணியை அறுத்து (பலியிட்டு) விட்டுத் தமது தலையை மழித்துக் கொண்டார்கள். மேலும், அவர் களுடன், வரும் ஆண்டில், தாம்(தம் தோழர் களுடன்) உம்ரா செய்ய (அனுமதிக்கப்பட) வேண்டும்; வாள்களைத் தவிர வேறு ஆயுதங்களை நாங்கள் எடுத்து வர மாட்டோம்; குறைஷிகள் விரும்புகின்ற வரை மட்டுமே மக்காவில் தங்கியிருப்போம் என்னும் நிபந்தனையின் பேரில் சமாதான ஒப்பந்தம் செய்து கொண்டார்கள். அவர்களிடம் செய்து கொண்ட சமாதான ஒப்பந்தத்தின் படியே அடுத்த ஆண்டுஉம்ரா செய்ய நாடி, மக்கா நகரினுள் நுழைந்தார்கள். அங்கு மூன்று நாட்கள் தங்கி (முடித்து) விட்ட போது, குறைஷிகள் நபி (ஸல்) அவர்களை (மக்காவை விட்டு) வெளியேறும் படி உத்தரவிட, நபி (ஸல்) அவர்களும் வெளியேறி விட்டார்கள்.299

4253 முஜாஹித் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நானும் உர்வா பின் ஸுபைரும் மஸ்ஜிது(ன் நபவீ)க்குச் சென்றோம். அங்கே ஆயிஷா (ரலி) அவர்களின் அறைக்கருகே அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் அமர்ந்திருந்தார்கள். அவர்களிடம், நபி (ஸல்) அவர்கள் எத்தனை உம்ராக்கள் செய்துள் ளார்கள்? என உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கேட்டார்கள். அதற்கவர்கள், நான்கு; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள் என்றார்கள்.

4253 பிறகு, (அறையில்) ஆயிஷா (ரலி) அவர்கள் பல்துலக்கும் சப்தத்தைக் கேட்டோம் அப்போது உர்வா (ரஹ்), இறை நம்பிக்கையாளர்களின் அன்னையே! அபூ அப்திர் ரஹ்மான் (இப்னு உமர் -ரலி) அவர்கள் கூறுவதைச் செவியுற்றீர்களா? நபி (ஸல்) அவர்கள், நான்கு உம்ராக்கள் செய்தார்கள்; அவற்றில் ஒன்றை ரஜப் மாதத்தில் செய்தார்கள் என்று இப்னு உமர் சொல்கி றார்கள் எனக் கூறினார். ஆயிஷா (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் உம்ரா செய்யும் போதெல்லாம் அவர்களுடன் இப்னு உமரும் இருந்திருக்கிறார். (மறந்து விட்டார் போலும்.) நபி (ஸல்) அவர்கள் ரஜப் மாதத்தில் உம்ரா செய்ததே இல்லை என்று கூறினார்கள்.300

4255 இப்னு அபீ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஹுதைபிய்யா சமாதான உடன்படிக்கையின் படி ஹிஜ்ரீ 7லிம் ஆண்டு) உம்ரா செய்த போது, நபி (ஸல்) அவர்களைத் (தாக்கித்) துன்புறுத்தி விடாமலிருப்பதற்காக அவர்களை இணைவைப்போரிடமிருந்தும் அவர்களின் இளைஞர்களிடமிருந்தும் நாங்கள் (பாது காப்பு வளையம் அமைத்து) மறைத்துக் கொண்டோம்.301

4256 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தோழர்களுடன்

(உம்ரத்துல் களாவிற்காக மக்காவுக்கு) வந்த போது, யஸ்ரிபின் ஜுரத்தால் (மதீனாவில் தோன்றிய காய்ச்சலால்) பலவீனப்பட்ட நிலையில் ஒரு குழு நம்மிடம் வந்துள்ளது என்று இணைவைப்போர் பேசிக் கொண் டனர். அப்போது (பலவீனப்படவில்லை எனக் காட்டுவதற்காக) நபி (ஸல்) அவர்கள் (கஅபாவை வலம் வருகையில்) மூன்று சுற்றுகள் தோள்களைக் குலுக்கிய வாறு ஓட வேண்டும் என்றும் ஹஜருல் அஸ்வதுக்கும் ருக்னுல் யமானிக்கும் இடையே நடந்து செல்ல வேண்டும் என்றும் கட்டளையிட் டார்கள். (வலம் வரும் போது) மொத்தச் சுற்றுக்களிலும் தோள்களைக் குலுக்கியவாறு ஓட வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் கட்டளையிடாததற்குக் காரணம் அவர்கள் மீது கொண்ட இரக்கமேயாகும். 302

 நபி (ஸல்) அவர்கள் பாதுகாப்புப் பெற்ற ஆண்டில்(உம்ரத்துல் களாவிற்காக) மக்காவிற்கு வந்த போது (தம் தோழர்களை நோக்கி,) (கஅபாவை வலம் வருகையில்) தோள்களைக் குலுக்கியவாறு ஓடுங்கள்; ஏனேனில், உங்கள் பலத்தை இணை வைப்போருக்கு நான் காட்ட வேண்டும் என்று கூறினார்கள். அப்போது இணை வைப்பவர்கள், ஃகுஅய்கிஆன் என்னும் மலையின் திசையில்(இருந்து எட்டிப் பார்த்துக் கொண்டு) இருந்தார்கள் என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாக இப்னு சலமா(ரஹ்) அவர்களின் அறிவிப்பில், அதிகப்படியாக அறிவிக்கப்பட்டுள்ளது.

4257 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறையில்ல(ம் கஅபாவை வலம் வந்த நேர)த்திலும் ஸஃபா- மர்வா இடையேயும் தொங்கோட்டம் ஓடிய தெல்லாம், இணை வைப்போருக்குத் தம்

வ-மையைக் காட்டுவதற்காகத் தான்.

4258 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 (ஹுதைபிய்யா உடன்படிக்கையின்படி ஹிஜ்ரி 7-ல் உம்ரா செய்வதற்காக) நபி (ஸல்) அவர்கள் இஹ்ராம் அணிந்திருந்த நிலையில் மைமூனா (ரலி) அவர்களை மணமுடித்துக் கொண்டார்கள். இஹ்ராமிருந்து விடுபட்ட நிலையில் அவர்களுடன் வீடு கூடினார்கள். பிறகு மைமூனா (ரலி) அவர்கள் (மக்காவிலிருந்து சிறிது தொலைவிலுள்ள) சரிஃப் என்னுமிடத்தில் இறந்தார்கள்.303

4259 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரி 7-ல் செய்த) உம்ரத்துல் களாவின் போது(முந்தைய ஆண்டு விடுபட்ட உம்ராவை நிறை வேற்றிய போது) மைமூனா (ரலி) அவர்களை மணந்து கொண்டார்கள்.

02.11.2009. 03:08

64-(நபிகளார் காலத்துப்)போர்கள்2

பாடம் : 15

கஅப் பின் அஷ்ரஃப் (என்ற யூதன்) கொல்லப்படுதல்.98

4037 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபைக் கொல்வதற்கு (தயாராயிருப்பவர்) யார்? ஏனெனில், அவன் அல்லாஹ்வுக்கும், அல்லாஹ்வின் தூதருக்கும் தொல்லை கொடுத்து விட்டான் என்று சொன்னார்கள். உடனே முஹம்மது பின் மஸ்லமா (ரலி) அவர்கள்99 எழுந்து, நான் அவனைக் கொல்ல வேண்டுமென்று தாங்கள் விரும்புகிறீர்களா? அல்லாஹ்வின் தூதரே! என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே, முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், நான் (அவனைக் குதூகலப்படுத்தி நம்ப வைப்பதற்காக உங்களைக் குறைகூறி) ஏதேனும் சொல்ல எனக்கு அனுமதி தாருங்கள் என்று கேட்டார்கள். நபி (ஸல்) அவர்கள், (சரி) சொல் என்றார்கள். உடனே முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கஅப் பின் அஷ்ரஃபிடம் சென்று, இந்த மனிதர் (முஹம்மத்-ஸல்), எங்களிடம் (மக்களுக்குத் தருவதாக) தர்மம் கேட்டார். எங்களுக்குக் கடும் சிரமம் தந்து விட்டார் என்று (நபி - ஸல் -அவர்களைக் குறை கூறி ச-த்துக் கொள்ளும் விதத்தில்) கூறிவிட்டு, உன்னிடத்தில் கடன் கேட்பதற்காக நான் வந்துள்ளேன் என்றும் கூறினார்கள். கஅப் பின் அஷ்ரஃப், அல்லாஹ்வின் மீதாணையாக! இன்னும் அதிகமாக நீங்கள் அவரிடம் ச-ப்படைவீர்கள் என்று கூறினான். (அதற்கு) முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள், நாங்கள் (தெரிந்தோ தெரியாமலோ) அவரைப் பின்பற்றி விட்டோம். அவரது விவகாரம் எதில் முடிகிறது என்று பார்க்காமல் அவரை விட்டு (விலகி) விட நாங்கள் விரும்பவில்லை. (அதனால் தான் அவருடன் இன்னும் இருந்து கொண்டிருக்கிறோம்) என்று (ச-ப்பாகப் பேசுவது போல்) கூறிவிட்டு, நீ எங்களுக்கு ஒரு வஸக்கு ...அல்லது இரண்டு வஸக்கு...(பேரீச்சம் பழம்) கடன் தர வேண்டுமென்று நாங்கள் விரும்பு கின்றோம் என்று சொன்னார்கள்.

அப்போது கஅப் பின் அஷ்ரஃப், சரி! (நான் கடன் தரத் தயார்.) என்னிடம் (எதையேனும்) அடைமானம் வையுங்கள் என்று கூறினான். அதற்கு அவர்கள், நீ எதை விரும்புகிறாய் (கேள்)? என்று கூறினர். கஅப் பின் அஷ்ரஃப், உங்கள் பெண்களை என்னிடம் அடைமானம் வையுங்கள் என்று சொன்னான். அவர்கள், எங்கள் பெண்களை எப்படி அடைமானமாக உன்னிடம் தர முடியும். நீயோ அரபுகளிலேயே மிகவும் அழகானவன். (அடைமானம் வைத்துத் தான் பெண்களை அடைய வேண்டிய அவசியம் உனக்கு இல்லை) என்று சொன்னார்கள். (அப்படியானால்) உங்கள் ஆண் மக்களை என்னிடம் அடைமானம் வையுங்கள் என்று கூறினான். அதற்கு அவர்கள், எங்கள் ஆண் மக்களை உன்னிடம் எப்படி அடைமானம் வைப்பது? அவர்களில் ஒருவன் (கலந்துறவாடும் போது) ஏசப்பட்டால் அப்போது, இவன் ஒரு வஸக்கு அல்லது இரண்டு வஸக்குகளுக்கு பதிலாக அடைமானம் வைக்கப்பட்டவன் என்றல்லவா ஏசப்படுவான்? இது எங்களுக்கு அவமானமாயிற்றே! எனவே, உன்னிடம் (எங்கள்) ஆயுதங்களை அடைமானம் வைக்கிறோம் என்று கூறினார்கள். (அவன் சம்மதிக்கவே) முஹம்மத் பின் மஸ்லமா

(ரலி) அவர்கள், அவனிடம் (பிறகு) வருவதாக வாக்களித்து விட்டுச் சென்றார்கள். (பிறகு) அவர்கள் தம்முடன் அபூநாயிலா (ரலி) அவர்கள் இருக்க இரவு நேரத்தில் கஅபிடம் வந்தார்கள். -அபூ நாயிலா (ரலி) அவர்கள், கஅப் பின் அஷ்ரஃபிற்கு பால்குடிச் சகோதரர் ஆவார்- அவர்களைத் தனது கோட்டைக்கு (வரச் சொல்லி) கஅப் பின் அஷ்ரஃப் அழைத்தான். பிறகு அவர்களை நோக்கி அவனும் இறங்கி வந்தான். அப்போது கஅபின் மனைவி அவனிடம், இந்த நேரத்தில் எங்கே போகிறீர்கள்? என்று கேட்டாள். அதற்கவன், அவர் (வேறு யாருமல்ல.) முஹம்மத் பின் மஸ்லமாவும் எனது (பால்குடிச்) சகோதரர் அபூ நாயிலாவும் தான் என்று பதிலளித்தான்.

அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் (தம் சகாக்களிடம்), கஅப் பின் அஷ்ரஃப் வந்தால் நான் அவனது (தலை) முடியை பற்றியிழுத்து அதை நுகருவேன். அவனது தலையை எனது பிடியில் கொண்டு வந்து விட்டேன் என்று நீங்கள் கண்டால் (அதை சைகையாக எடுத்துக் கொண்டு) அவனைப் பிடித்து (வாளால்) வெட்டி விடுங்கள் என்று (உபாயம்) கூறினார்கள்.

பிறகு கஅப் பின் அஷ்ரஃப் (தனது ஆடை அணிகலன்களை) அணிந்து கொண்டு நறு மணம் கமழ இறங்கி வந்தான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள், இன்று போல் நான் எந்த உயர்ந்த நறு மணத்தையும் (நுகர்ந்து) பார்த்ததில்லை என்று சொன்னார்கள்.

மேலும், முஹம்மது பின் மஸ்லமா

(ரலி) அவர்கள், (கஅபை நோக்கி) உன் தலையை நுகர்ந்து பார்க்க என்னை அனுமதிக் கிறாயா? என்று கேட்டார்கள். அவன், சரி (நுகர்ந்து பார்) என்று கூறினான். அப்போது முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனது தலையை நுகர்ந்தார்கள். பிறகு தம் சகாக்களையும் நுகரச் சொன்னார்கள். (மீண்டுமொருமுறை நுகர) என்னை அனுமதிக் கிறாயா? என்று கேட்டார்கள். அவன், சரி (அனுமதிக்கிறேன்) என்று கூறினான். முஹம்மத் பின் மஸ்லமா அவர்கள் அவனைத் தம் வசம் கொண்டு வந்த போது, பிடியுங்கள் என்று கூறினார்கள். உடனே (அவர்களுடைய சகாக்கள்) அவனைக் கொன்று விட்டனர். பிறகு அவர்கள் (அனைவரும்) நபி (ஸல்) அவர்களிடம் வந்து நடந்ததைத் தெரிவித்தனர்.100

(இந்த ஹதீஸில் இடையிடையே காணப்படும் வாசக மாற்றங்கள் தொடர்பாக அறிவிப்பாளர்கள் தெரிவித்துள்ள தகவல்கள் கீழே இடம்பெறுகின்றன.....)

அறிவிப்பாளர் சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் பல தடவை இந்த ஹதீஸை எமக்கு அறிவித்தார்கள். ஆயினும், அப்போது அவர்கள் ஒரு வஸக்கு, இரண்டு வஸக்கு (அளவை) சம்பந்த மாகக் கூறவில்லை. அன்னாரிடம் நான், இந்த அறிவிப்பில் ஒரு வஸக்கு, இரு வஸக்கு சம்பந்தமாக (ஏதேனும்) இடம் பெற்றுள்ளதா? என்று கேட்டேன். அதற்கவர்கள், அதில் ஒரு வஸக்கு, இரு வஸக்கு பற்றி இடம் பெற்றுள்ளது என எண்ணுகிறேன் என்று பதிலளித்தார்கள்.-

-(அறிவிப்பாளர் சுஃப்யான்-ரஹ்- கூறுகிறார்கள்:)

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள் அல்லாத இன்னொருவரின் அறிவிப்பில், குருதி சொட்டுவது போன்ற ஒரு சப்தத்தை நான் கேட்கிறேன் என்று கஅபின் மனைவி (ஏதோ ஆபத்து நேரவிருப்பதை உணர்த்தும் விதத்தில்) கூற அவன், அவர் என் சகோதரர் முஹம்மது பின் மஸ்லமாவும், என் பால்குடிச் சகோதரர் அபூ நாயிலாவும் தான். ஒரு கண்ணியவான் இரவு நேரத்தில் (ஈட்டி) எறிய அழைக்கப்பட்டாலும் அவன் அந்த அழைப்பை ஏற்றுக் கொள்ளவே செய்வான் என பதிலளித்ததாகவும் இடம் பெற்றுள்ளது.

-முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் தம்முடன் இருந்த இரு மனிதர் களுடன் (கஅப் பின் அஷ்ரபின் வீட்டுக்கு) உள்ளே நுழைந்தார்கள்-

அறிவிப்பாளர்களில் ஒருவரான சுஃப்யான் பின் உயைனா (ரஹ்) அவர்களிடம், அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், அந்த இரு மனிதர்களின் பெயர்களையும் குறிப்பிட் டாரா? என்று கேட்கப்பட்டது. அதற்கு சுஃப்யான் (ரஹ்) அவர்கள், அவர்களில் சிலரின் பெயரை மட்டும் அம்ர் குறிப்பிட்டார். இரண்டு மனிதர்கள் தம்முடனிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) வந்தார்கள் என்றே அம்ர் அறிவித்தார் என்று பதிலளித்தார்கள்.

அம்ர் அல்லாத மற்ற அறிவிப்பாளர்கள், (முஹம்மத் பின் மஸ்லமாவுடன் வந்தவர்கள்) அபூ அப்ஸ் பின் ஜப்ர் (ரலி), ஹாரிஸ் பின் அவ்ஸ் (ரலி), அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) ஆகியோர் தாம் என்று கூறினர்.

அம்ர் பின் தீனார் (ரஹ்) அவர்கள், தம்முடன் இருவரிருக்க முஹம்மத் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் வந்தார்கள் என்று அறிவித்தார்கள்.

-அறிவிப்பாளர் அம்ர் (ரஹ்) அவர்கள் ஒரு முறை, (முஹம்மத் பின் மஸ்லமா

-ரலி- அவர்கள் தம் சகாக்களை நோக்கி) பிறகு அவனது தலையை உங்களையும் நான் நுகரச் செய்வேன் என்று கூறினார்கள் என்று அறிவித்தார்கள்.

-அம்ர் (ரஹ்) அவர்கள் அல்லாத மற்றவர்களின் அறிவிப்பில், என்னிடம் அரபுப் பெண்களிலேயே நறுமணம் மிக்கவளும், அரபுகளிலேயே முழுமையான வளும் இருக்கிறாள் என்று கஅப் பின் அஷ்ரஃப் கூறினான் எனக் காணப்படுகிறது.

பாடம் : 16

அபூ ராஃபிஉ அப்துல்லாஹ் பின் அபில் ஹுகைக் (என்ற யூதத் தலைவன்) கொல்லப்படுதல்.101

இவனுக்கு (இன்னொரு பெயர்) சல்லாம் பின் அபில் ஹுகைக் என்றும், இவன் கைபரில் வசித்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது. ஹிஜாஸ் பிரதேசத்தில் தமது கோட்டை யொன்றில் வசித்து வந்தான் என்றும் சொல்லப்படுகிறது.

கஅப் பின் அஷ்ரஃப் கொல்லப்பட்ட பிறகே இவன் கொல்லப்பட்டான் என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.102

4038 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அன்சாரிகளில்) ஒரு குழுவினரை (யூதனான) அபூராஃபிஉ என்பவனிடம் அனுப்பினார்கள். அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் (கோட்டைக்குள்ளிருந்த) அவனது வீட் டிற்குள் இரவு நேரத்தில் நுழைந்து அவன் தூங்கிக் கொண்டிருக்கும் போது அவனைக் கொன்றுவிட்டார்கள்.103

4039 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அன்சாரிகளில் சிலரை அபூராஃபிஉவிடம் அனுப்பினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்தார்கள். அபூராஃபிஉ அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் புண்படுத்தி வந்ததுடன், அவர்களுக்கெதிராக(ப் பகைவர்களுக்கு) உதவியும் செய்து வந்தான்.104 அவன் ஹிஜாஸ் பிரதேசத்திலிருந்த தனது கோட்டையில் இருந்தான். ஆகவே அன்சாரிகள் அந்தக் கோட்டையை நெருங்கினார்கள். அப்போது சூரியன் மறைந்து விட்டிருந்தது. மக்கள் தங்கள் மேய்ச்சல் கால்நடைகளுடன் திரும்பிக் கொண்டிருந்தனர். அப்போது அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள் தம் சகாக்களிடம், நீங்கள் இங்கேயே அமர்ந்திருங்கள். நான் காவலனிடம் சென்று ஏதாவது தந்திரம் செய்து (கோட்டைக்கு) உள்ளே நுழைய முடியுமா என்று பார்த்து வருகிறேன் என்று கூறினார். உடனே அவர் சென்று கோட்டை வாசலை நெருங்கினார். பிறகு, தமது ஆடையினால் தம்மை மூடிக் கொண்டு இயற்கைக்கடனை நிறைவேற்றுவது போல் (கோட்டைக்கு வெளியே ஓரிடத்தில்) அமர்ந்து கொண்டார். (கோட்டை வாசிகளான) மக்கள் (அனைவரும்) உள்ளே நுழைந்து விட்டனர். அப்போது காவலன், அல்லாஹ்வின் அடியானே! (கோட்டைக்கு) உள்ளே நுழைய விரும்பினால் நுழைந்து கொள். நான் வாசலை மூடப் போகிறேன் என்று கூறினான். உடனே நான் உள்ளே நுழைந்து (ஓரிடத்தில்) பதுங்கிக் கொண்டேன். மக்கள் (அனைவரும்) நுழைந்ததும் அவன் வாசலை மூடி விட்டான். பிறகு சாவிகளை ஒது கொழுவி(கொக்கி)யில் தொங்கவிட்டான். நான் சாவிகளை நோக்கிச் சென்று அவற்றை எடுத்துக் கொண்டேன். பிறகு வாசலைத் திறந்தேன். அபூராஃபிஉ விடம் இராக்கதை சொல்லப்பட்டுக் கொண்டிருந்தது. அப்போது அவன் தனது மாடியறையில் இருந்தான். அவனுடைய இராக்கதை நண்பர்கள் அவனைப் பிரிந்து (விடைபெற்றுச்) சென்ற போது அவனை நோக்கி நான் (ஏணியில்) ஏறினேன். (கோட்டையின்) ஒவ்வொரு வாசலையும் திறக்கும் போதும் உள்ளிருந்து நான் தாழிட்டுக் கொண்டே சென்றேன். மக்கள் என்னை இனம் கண்டு கொண்டாலும் அபூராஃபிஉவை நான் கொன்று விடும் வரையில் அவர்கள் என்னை வந்தடையப் போவதில்லை என்று நான் (என் மனத்திற்குள்) கூறிக் கொண்டேன். பிறகு அவனிடம் போய்ச் சேர்ந்தேன். அவன் இருட்டான ஓர் அறையில் தன் குடும்பத்தாருக்கிடையே இருந்தான். அந்த வீட்டில் அவன் எங்கே இருக்கிறான் என்று எனக்குத் தெரியவில்லை. அப்போது நான், அபூராஃபிஉவே! என்று அழைத்தேன். அவன், யார் அது? என்று கேட்டான். குரல் வந்த திசையை நோக்கிக் குறிவைத்து வாளால் பதற்றத்துடன் ஒரு வெட்டு வெட்டினேன்.

(இருப்பினும், என் நோக்கம்) எதையும் நான் நிறைவேற்றி(விட்)ட(தாகத் கருத)வில்லை. அப்போது அவன் கூச்ச-ட்டான். உடனே நான் அந்த வீட்டிலிருந்து வெளியேறி விட்டேன். சிறிது நேரம் தாமதித்து மீண்டும் அவனிடம் வந்து, அபூராஃபிஉவே! இது என்ன சத்தம் என்று (அவனுக்கு உதவ வந்தவன் போல்) கேட்டேன். அதற்கு அவன், உனது தாய்க்குக் கேடு நேரட்டும்! எவனோ ஒருவன் வீட்டில் (நுழைந்து) சற்றுமுன் என்னை வாளால் வெட்டினான் என்று கூறினான். உடனே நான் ஆழப்பதியும்படி இன்னொரு வெட்டு வெட்டினேன். (அப்போதும்) அவனை நான் கொல்ல (முடிய) வில்லை. பிறகு வாள் முனையை அவன் வயிற்றில் வைத்து அழுத்தினேன். அது முதுகு வழியே வெளியேறியது. அப்போது நான் அவனைக் கொன்று விட்டேன் என்று அறிந்து கொண்டேன். பிறகு ஒவ்வொரு கதவாக எல்லாக் கதவுகளையும் திறந்து கொண்டே சென்று அவனது ஏணிப்படியை அடைந்தேன். (ஏணியில் இறங்கலானேன்.) தரைக்கு வந்து விட்டேன் என்று நினைத்துக் கொண்டு எனது காலை வைத்தேன். (ஆனால்,) நிலவு காயும் (அந்த) இரவில் நான் விழுந்து விட்டேன். அப்போது எனது கால் உடைந்து விட்டது. உடனே நான் தலைப்பாகை(த் துணி)யால் அதற்குக் கட்டுப்போட்டேன். பிறகு நடந்து வந்து (கோட்டை) வாச-ல் அமர்ந்து கொண்டேன். நான் அவனைக் கொன்று விட்டேன் என்று (உறுதியாக) அறியும் வரையில் நான் இந்த இரவில் (இங்கிருந்து) நகர மாட்டேன் என்று (எனக்கு நானே) சொல்லிக் கொண்டேன். பிறகு, அதிகாலையில் சேவல் கூவிய போது மரணச் செய்தி அறிவிப்பவன் கோட்டைச் சுவர் மீது நின்று, ஹிஜாஸ் வாசிகளின் (பிரபல) வியாபாரி அபூராஃபிஉ இறந்து விட்டார் என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் என் சகாக்களிடம் வந்து, விரைவாகச் செல்லுங்கள். அபூராஃபிஉவை அல்லாஹ் கொன்று விட்டான் என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களை அடைந்து நடந்ததை அவர்களுக்குத் தெரிவித்தேன். அப்போது அவர்கள், உனது காலை நீட்டு என்று கூறினார்கள். நான் என் காலை நீட்டினேன். அதில் (தம் கரத்தால்) தடவி விட்டார்கள். (எனது கால் குணமடைந்து) ஒரு போதும் நோய் காணாதது போல் அது மாறிவிட்டது.

4040 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அபூராஃபிஉவிடம் அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்களையும், அப்துல்லாஹ் பின் உத்பா (ரலி) அவர்களையும் அவர்களுடன் இன்னும் சிலரையும் அனுப்பி வைத்தார்கள். அவர்கள் சென்று கோட்டையை நெருங்கிய போது அவர்களை நோக்கி (தலைவர்) அப்துல்லாஹ் பின் அத்தீக் (ரலி) அவர்கள், நான் சென்று பார்த்து வரும் வரையில் நீங்கள் (இங்கேயே) இருங்கள் என்று கூறினார்கள். அப்போது (கோட்டை வாசிகளுக்குத் தெரியாமல்) கோட்டைக்குள் நுழைவதற்காக நான் உபாயம்செய்தேன். அப்போது அவர்களுடைய கழுதையொன்று காணாமற் போய்விட்டது. அதைத் தேடிய வண்ணம் தீப்பந்தத்துடன் அவர்கள் (கோட்டையிலிருந்து) வெளியேறினர். நான் அடையாளம் கண்டு கொள்ளப்பட்டுவிடுவேனோ என்று அஞ்சினேன். நான் இயற்கைக் கடனை நிறைவேற்றுவது போல (எனது ஆடையால்) என் தலையையும் காலையும் மூடிக் கொண்டேன். பிறகு காவலன், யார் (கோட்டைக்குள்) நுழைய விரும்புகிறார்களோ அவர்கள் நான் கதவை மூடுவதற்கு முன் நுழைந்து கொள்ளட்டும் என்று கூறினான். உடனே நான் நுழைந்து கோட்டைவாசலுக்கு அருகிலிருந்த கழுதைத் தொழுவம் ஒன்றில் பதுங்கிக் கொண்டேன். அப்போது (யூத) மக்கள் அபூராஃபிஉவிடம் இரவுச் சாப்பாட்டை உண்டனர். பிறகு இரவின் ஒரு பகுதி முடியும் வரையில் (கதை) பேசிக் கொண்டிருந்தனர். பிறகு மக்கள் தத்தமது வீடுகளுக்குத் திரும்பினர். பின்னர் ஆரவாரங்கள் அடங்கி, எந்த அரவமும் கேட்காமலிருந்த போது நான் (பதுங்கியிருந்த இடத்திலிருந்து) வெளியேறி னேன். (கோட்டையின்) காவலன் மாடத்தில் கோட்டையின் சாவியை வைத்ததை நான் (பதுங்கிக் கொண்டிருந்த போது) பார்த்திருந்தேன். அதை நான் எடுத்துக் கோட்டைக் கதவைத் திறந்தேன். நான் (என் மனத்திற்குள்) மக்கள் என்னை இனம் கண்டு கொண்டால் நிதானமாக(த் தப்பி)ச் சென்றுவிடவேண்டும் என்று சொல்லிக் கொண்டேன். பிறகு, அந்த மக்கள் தங்கியிருந்த அறைகளின் கதவுகளை வெளியிலிருந்து பூட்டினேன். பிறகு அபூ ராஃபிஉ (தங்கியிருந்த மாடியறை) நோக்கி ஏணி வழியாக ஏறினேன். அப்போது அவனது அறை இருள் சூழ்ந்திருந்தது. அதன் விளக்கு அணைக்கப்பட்டிருந்தது. அந்த மனிதன் எங்கே (இருக்கிறான்) என்று என்னால் அறிய முடியவில்லை. உடனே நான், அபூ ராஃபிஉவே! என்று அழைத்தேன். அவன், யார் அது? என்று கேட்டான். உடனே நான் சப்தம் வந்த திசையைக் குறி வைத்து அவனை வெட்டினேன். அவன் கூச்ச-ட்டான். அது (நான் நினைத்த) பலனைத் தரவில்லை. பிறகு அவனுக்கு நான் உதவி செய்வது போல அபூ ராஃபிஉவே! உனக்கு என்ன நேர்ந்தது? என்று என் குரலை மாற்றிக் கொண்டு கேட்டேன். உடனே அவன், உனக்கு நான் ஆச்சரியமாகத் தெரிகிறேனா? உன் தாய்க்குக் கேடுண்டா கட்டும். என்னிடம் ஒருவன் வந்து வாளால் என்னை வெட்டினான் என்று கூறினான். மீண்டும் (குரல் வந்த திசையைக்) குறிவைத்து அவனை நான் வெட்டினேன். (நான் நினைத்த படி) அப்போதும் எந்தப் பலனும் கிடைக்க வில்லை. மீண்டும் அவன் கூச்ச-ட்டான். அவனுடைய வீட்டார் எழுந்திருத்து விட்டனர். பிறகு அவனுக்கு உதவி செய்பவனைப் போன்று (பாசாங்கு செய்தபடி) குரலை மாற்றிக் கொண்டு (அவனுக்கு அருகில்) வந்தேன். அப்போது அவன் மல்லாந்து படுத்திருந்தான். உடனே (எனது) வாளை அவனது வயிற்றில் வைத்து சுழற்றினேன். அப்போது (அவனது) எலும்பின் (மீது என் வாள் குத்து கின்ற) சப்தத்தை நான் கேட்டேன். பிறகு பதறிக் கொண்டே (அவனது அறையிலிருந்து) வெளியேறி ஏணிப்படிக்கு வந்தேன். இறங்க விரும்பினேன். (ஆனால்,) அதிலிருந்து நான் விழுந்து விட்டேன். எனது கால் முறிந்து விட்டது. எனவே, நான் அதை (எனது தலைப்பாகைத் துணியால்) கட்டினேன். பிறகு (கோட்டைக்கு வெளியிலிருந்த) என் சகாக் களிடம் நொண்டிக் கொண்டே வந்து அவர்களை நோக்கி, நீங்கள் (விரைவாகச்) சென்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களிடம் (காரியம் முடிந்து விட்ட) நற் செய்தியைச் சொல்லுங்கள். (மரணச் செய்தி அறிவிப்பவனிடமிருந்து அபூராஃபிஉவின் மரணச்) செய்தியை நான் கேட்கும் வரையில் நான் (இங்கிருந்து) நகரமாட்டேன் என்று கூறினேன். பிறகு, அதிகாலை நேரத்தில் மரணச் செய்தி அறிவிப்பவன் (கோட்டைச் சுவர் மீது) ஏறி, அபூ ராஃபிஉ இறந்து விட்டார் என்று அறிவிப்புச் செய்தான். உடனே நான் எழுந்து நடக்கலானேன். (அளவு கடந்த மகிழ்ச்சியினால்) எனக்கு வ- கூடத் தெரியவில்லை. என் சகாக்கள் நபி (ஸல்) அவர்களிடம் சென்று சேர்வதற்கு முன் நான் சகாக்களைச் சென்றடைந்து விட்டேன். ஆதலால், நானே நபி (ஸல்) அவர்களிடம் (அந்த) நற்செய்தியைச் சொன்னேன்.105

பாடம் : 17

உஹுதுப் போர்106

அல்லாஹ் கூறுகின்றான்:

(நபியே! உஹுதுப்) போருக்காக நம்பிக்கையாளர்களை (உரிய) இடங்களில் நிறுத்தும் பொருட்டு நீங்கள் உங்கள் இல்லத்திலிருந்து அதிகாலையில் புறப்பட்டதை (நினைவு கூர்வீராக!) அல்லாஹ் மிக்க செவியுறுவோனும் நன்கு அறிவோனு மாவான். (3:121)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :

நீங்கள் மனம் தளர்ந்து விடாதீர்கள்; கவலையும் கொள்ளாதீர்கள். நீங்கள் (உண்மையிலேயே) இறை நம்பிக்கையுடைய வராயின், நீங்களே மேலோங்குவீர்கள். (இப்பொழுது உஹுதுப்போரில்) உங்களுக்கு காயம் ஏற்பட்டுள்ளதென்றால், (இதற்கு முன்னர்-பத்ருப்போரில் உங்கள்) எதிரணியின ருக்கும் இதே போன்ற காயம் ஏற்படத் தான் செய்தது. இவையெல்லாம் கால(த்தின் மாற்ற)ங்கள் ஆகும். இவற்றை மக்களிடையே நாம் மாறி மாறி வரச் செய்கின்றோம். (உங்களுக்கு இப்படியொரு சந்தர்ப்பம் வரக் காரணம்) உங்களில் உண்மையான நம்பிக்கை யுடையவர்கள் யார் என்பதனை அல்லாஹ் கண்டறிந்து உங்களில் இருந்து உயிர்த் தியாகிகளை அவன் உண்டாக்குவதற்காகத் தான். அக்கிரமக்காரர்களை அல்லாஹ் நேசிப்பதில்லை. (இவ்வாறெல்லாம் சோதனை செய்வதன் மூலம்) நம்பிக்கையாளர்களை பிரித்துத் தேர்ந்தெடுக்கவும் மறுப்போரை நசுக்கவும் (அல்லாஹ் நாடியிருந்தான்.) உங்களில் யார் (அவனுடைய பாதையில் முனைப்போடு) போராடுபவர்கள் என்பதை அல்லாஹ் அறியாமலும், உங்களில் நிலை குலையாமல் நிற்பவர் யார் என்பதை அவன் அறியாமலும் நீங்கள் (எளிதில்) செர்க்கம் புகுந்து விடலாம் என்று எண்ணிக் கொண்டீர் களா? நீங்கள் (அல்லாஹ்வின் வழியில்) இறப்பைச் சந்திப்பதற்கு முன்னர்,அதனை அடைய ஆர்வம் கொண்டிருந்தீர்கள். (இப்பொழுது) அதனை நீங்கள் கண்கூடாகப் பார்த்துக் கொண்டீர்கள். (3:139-143)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான் :

அல்லாஹ் உங்களுக்கு (உதவி செய்வதாகக் கூறிய) தனது வாக்குறுதியை நிறைவேற்றி விட்டான். (துவக்கத்தில்) அவனது அனுமதியின்படி அவர்களை நீங்கள் தாம் (போரில்) வெட்டி வீழ்த்தினீர்கள்! ஆனால் இறுதியில் நீங்கள் ஊக்கமிழந்து உங்களுடைய பணிகள் குறித்து ஒருவருக் கொருவர் பிணங்கிக் கொண்டீர்கள்; மேலும் நீங்கள் மோகம் கொண்டிருந்தவற்றை (போர்ப் பொருட்களை) அல்லாஹ் உங்கள் கண்ணெதிரே காட்டிய உடனேயே (உங்கள் தலைவரின் கட்டளைக்கு) நீங்கள் மாறு செய்தீர்கள் - ஏனெனில் உங்களில் சிலர் இம்மையை விரும்புவோராய் இருந்தனர்; வேறு சிலர் மறுமையை விரும்புவேராய் இருந்தனர். பிறகு அல்லாஹ் உங்களைச் சோதிக்கும் பொருட்டு (இறை மறுப்பாளர் களை எதிர்த்து நிற்கமுடியாத வண்ணம்) அவர்களை விட்டு உங்களை திசை திருப்பி விட்டான். (இதன் பிறகும்) அவன் உங்களை மன்னித் தருளினான். ஏனெனில், அல்லாஹ் இறை நம்பிக்கையுடையோர் மீது பெரிதும் கருணை பொழிபவனாக இருக்கின்றான். (3:152)

மேலும், அல்லாஹ் கூறுகின்றான்:

அல்லாஹ்வின் வழியில் கொல்லப்பட்டவர்களை, இறந்தோர் என்று ஒரு போதும் நீங்கள் எண்ணவேண்டாம்...(3:169)

4041 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், இதோ, ஜிப்ரீல் போர்த் தள வாடங்களுடன் தமது குதிரையின் தலையை (அதன் கடிவாளத்தை)ப் பிடித்துக் கொண்டி ருக்கிறார் என்று கூறினார்கள்.107

4042 உக்பா பின் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போர் நடந்து) எட்டு ஆண்டுகளுக்குப் பின் உஹுதில் கொல்லப்பட்டவர் களுக்காக (ஜனாஸாத் தொழுகை) தொழுவித்தார்கள். (அது) உயிரோடுள்ளவர்களிடமும் இறந்தவர்களிடமும் (மறுமைப் பயணத்திற்கு) விடைபெறுவது போலிருந்தது. பிறகு அவர்கள் மேடை மீது ஏறி, நிச்சயமாக நான் உங்களுக்காகக் காத்திருப்பேன். உங்களுக்கு நான் சாட்சியும் ஆவேன்.(என்னைச் சந்திக்க) உங்களுக்கு வாக்களிக்கப்பட்டுள்ள இடம் (கவ்ஸர் எனும்) தடாகம் ஆகும். நான் இங்கிருந்தே (மறுமையில் எனக்குப் பரிசளிக்கப் படவுள்ள) அந்தத் தடாகத்தைக் காண்கிறேன். நிச்சயமாக! (எனது மரணத்துக்குப் பின்னால்) நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர் களோ என்று நான் அஞ்சவில்லை; ஆனால், உலகத்திற்காக நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டு) மோதிக் கொள்வீர்களோ என்றே அஞ்சுகிறேன் என்று சொன்னார்கள்.108

நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களைப் பார்த்த இறுதிப் பார்வையாக அது அமைந்தது.

4043 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

இணைவைப்போரை அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நாங்கள் சந்தித்தோம். நபி (ஸல்) அவர்கள் (ஐம்பது) அம்பெய்யும் வீரர்களை (உஹுத் மலைக் கணவாயில்) அமர்த்தினார்கள். அவர்களுக்கு அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்களைத் தலைவராக நியமித்து, (எதிரிகளான) அவர்களை நாங்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகராதீர்கள். எங்களை அவர்கள் வெற்றி கொள்வதைப் பார்த்தாலும் நீங்கள் (இந்த இடத்திலிருந்து) நகர வேண்டாம்; நீங்கள் எங்களுக்கு உதவி செய்ய (எண்ணி கீழே வர) வேண்டாம் என்று கூறினார்கள். நாங்கள் அவர்களை (களத்தில்) சந்தித்த போது அவர்கள் (தோல்வியுற்று) வெருண்டோடி விட்டனர். பெண்களெல்லாம், (தம் கால்களில் அணிந்திருந்த) கால் தண்டைகள் வெளியில் தெரிய மலையில் ஓடிக் கொண்டிருப்பதை நான் பார்த்தேன். அப்போது (அம்பெய்யும் குழுவினரான) அவர்கள், (நமக்கே வெற்றி!) போர்ச்செல்வம்! போர்ச் செல்வம்! (சேகரிப்போம், வாருங்கள்) என்று கூறலாயினர். அப்போது அப்துல்லாஹ் பின் ஜுபைர் (ரலி) அவர்கள் (தம் சகாக்களை நோக்கி), என்னிடம் நபி (ஸல்) அவர்கள், இந்த இடத்தை விட்டும் (எந்தச் சூழ்நிலையிலும்) நகராதீர்கள் என அறுதியிட்டுக் கூறியுள்ளார்கள். (எனவே, போர்ச்செல்வங் களை எடுப்பதற்காக இங்கிருந்து நகர வேண்டாம்) என்று சொன்னார்கள். ஆனால் சகாக்கள் ஏற்க மறுத்து விவிட்டனர். அவர்கள் மறுத்து விடவே (எங்கு செல்கிறோம் என்று தெரியாதவாறு) திசைமாறிப் போயினர். (இறுதியில் முஸ்லிம்களில்) எழுபது பேர் கொல்லப்பட்டனர்.109 (அப்போது எதிரணித் தலைவர்) அபூசுஃப்யான் முன்வந்து (உங்கள்) கூட்டத்தில் முஹம்மது இருக்கின்றாரா? என்று (பலமுறை) கேட்டார். அப்போது நபி (ஸல்) அவர்கள், அவருக்கு பதிலளிக்க வேண்டாம் என்று (தம் தோழர்களிடம்) கூறினார்கள். மீண்டும், (உங்கள்) கூட்டத்தில் அபூ குஹாஃபாவின் மகன் (அபூபக்ர்) இருக்கிறாரா? என்று கேட்டார். அப்போதும் நபி (ஸல்) அவர்கள், அவருக்கு நீங்கள் பதில் தர வேண்டாம் என்று கூறிவிட்டார்கள். பிறகு, கூட்டத்தில் கத்தாபின் மகன் (உமர்) இருக்கிறாரா? என்று கேட்டு விட்டு (பிறகு தம் தோழர்களின் பக்கம் திரும்பி) இவர் களெல்லாம் கொல்லப்பட்டு விட்டனர்; இவர்கள் உயிருடன் இருந்தால் (என் அறை கூவலுக்குப்) பதிலளித்திருப்பார்கள் என்று சொன்னார். (இதைக் கேட்டு) உமர் (ரலி) அவர்கள் தம்மைக் கட்டுப்படுத்திக் கொள்ள முடியாமல், தவறாகச் சொன்னாய், அல்லாஹ்வின் பகைவனே! உனக்கு கவலை தரும் செய்தியைத் தான் உனக்காக அல்லாஹ் வைத்துள்ளான் என்று பதிலடி கொடுத்தார்கள். அதற்கு அபூ சுஃப்யான், (கடவுள்) ஹுபலே! உன் கட்சி மேலோங்கி விட்டது. என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், அவருக்கு பதிலளியுங்கள் என்று கூறினார்கள். (அல்லாஹ்வின் தூதரே) நாங்கள் என்ன (பதில்) சொல்வது? என்று மக்கள் கேட்டனர். அல்லாஹ்வே மிக உயர்ந்தவன்; மிக மகத்துவ மிக்கவன் என்று கூறுங்கள் என நபி (ஸல்) அவர்கள் பதிலளித்தார்கள். (அவ்வாறே பதில் தரப்பட்டது.) அபூ சுஃப்யான், எங்களுக்குத் தான் உஸ்ஸா (எனும் தெய்வம்) இருக்கின்றது; உங்களிடம் உஸ்ஸா இல்லையே என்று கூறினார். அப்போது, நபி (ஸல்) அவர்கள், அவருக்கு பதிலளியுங்கள் என்று கூறினார்கள். மக்கள், நாங்கள் என்ன (பதில்) சொல்வது? என்று வினவ நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் எங்களின் உதவியாளன்; உங்களுக்கு (அப்படியொரு) உதவியாளன் இல்லையே! என்று சொல்லுங்கள் என்று பதிலளித்தார்கள். (அவ்வாறே முஸ்லிம்கள் பதிலளித்தனர்.) இந்த(உஹுதுடைய)நாள், பத்ருப்போர் (நடந்த) நாளுக்கு பதிலாகும். யுத்தம் என்பதே (கிணற்று) வாளிகள் தாம். (மாறி மாறித் தான் இறைக்க முடியும். உங்கள் தோழர்களில்) அங்கங்கள் சிதைக்கப்பட்டவர்களைக் காண்பீர்கள். அப்படிச் செய்யும்படி நான் கட்டளையிடவுமில்லை. அது எனக்கு மனத் துன்பத்தையளிக்கவும் செய்யாது என்று அபூசுஃப்யான் கூறினார்.110

4044 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மது விலக்கு அமலுக்கு வரும் முன் நடந்த) உஹுதுப் போர் அன்று காலையில் சிலர் மது அருந்தினார்கள். பிறகு (அந்தப் போரில்) உயிர்த் தியாகிகளாகக் கொல்லப் பட்டார்கள்.111

4045 இப்ராஹீம் பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

(என் தந்தை) அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்களிடம் (அவர்கள் நோன்பை நிறைவு செய்யும் நேரத்தில்) உணவு கொண்டு வரப்பட்டது. (அன்று பகல்) அவர்கள் நோன்பு நோற்றிருந்தார்கள். அப்போது அவர்கள், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) கொல்லப்பட்டார்கள்- அவர் என்னை விடச் சிறந்தவர்- அவர் ஒரு சால்வையால் கஃபனிடப் பட்டார். (அந்த சால்வையால்) அவரது தலை மூடப்பட்டால், அவருடைய இரு கால்கள் வெளியே தெரிந்தன. அவருடைய இரு கால்கள் (அதனால்) மூடப்பட்டால், தலை வெளியில் தெரிந்தது என்று கூறினார்கள்.

அறிவிப்பாளர் இப்ராஹீம் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

மேலும், அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரலி) அவர்கள், (பின்வருமாறு) கூறியதாக நான் எண்ணுகிறேன்:

 ஹம்ஸாபின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்கள் (உஹுதுப் போரில்) கொல்லப் பட்டார்கள். அவர் என்னை விடச் சிறந்தவர். (அவரும் அதுபோலவே பற்றாக்குறை மிக்க சிறிய சால்வையாலேயே கஃபனிடப்பட்டார்) பிறகு (அந்த ஏழ்மை நிலை நம்மை விட்டும் நீங்கி, இதோ, நீங்கள் காண்கிறீர்களே) இந்த அளவுக்கு நமக்கு இந்த உலகின் வசதி வாய்ப்புகள் வழங்கப்பட்டன... அல்லது இந்த உலக(ச் செல்வ)த்திலிருந்து (இதோ, நீங்கள் காண்கின்றீர்களே) இந்த அளவுக்கு நமக்கு தரப்பட்டது... நாங்கள் புரிந்த நல்லறங்களுக்குப் பிரதிபலன் மிக விரைவாக (இவ்வுலகிலேயே) நமக்குக் கொடுக்கப்பட்டு விட்டதோ என்று நாம் அஞ்சகிறோம் என்று கூறினார்கள். பிறகு (தமக்காகக் கொண்டு வரப்பட்ட) உணவை (உண்ணாமல் அப்படியே) விட்டு விட்டு அழலானார்கள்.112

4046 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது ஒருவர் நபி (ஸல்) அவர்களிடம், நான் கொல்லப்பட்டால் எங்கே (இருப்பேன்)? என்று கேட்டார். நபி (ஸல்) அவர்கள், சொர்க்கத்தில் என்று பதிலளித்தார்கள். (அந்த மனிதர்) தமது கையிலிருந்த பேரீச்சங் கனிகளை உடனே தூக்கி எறிந்து விட்டு (களத்தில் குதித்து), தான் கொல்லப்படும் வரையில் போரிட்டார்.113

4047 கப்பாப் பின் அரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக் கான பிரதிபலனை அளிப்பது அல்லாஹ்வின் பொறுப்பாகிவிட்டது. எங்களில் சிலர் தங்கள் பிரதிபலனை (இவ்வுலகத்தில்) அனுபவிக் காமலேயே சென்று விட்டனர். அவர்களில் ஒருவர் தாம், முஸ்அப் பின் உமைர் (ரலி). அவர் உஹுதுப் போர் நாளன்று கொல்லப் பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத் துணி ஒன்றை மட்டுமே விட்டுச் சென்றார். அதைக் கொண்டு அவரது தலையை நாங்கள் மறைத்தால் அவருடைய இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள் அவரது தலையை அத்துணியால் மறைத்து விட்டு, அவரது கால் மீது இத்கிர் புல்லையிடுங்கள் ...அல்லது அவரது கால் மீது சிறிது இத்கிர் புல்லைப் போடுங்கள் என்று கூறினார்கள்.

(உஹுதுப் போரில் கலந்து கொண்ட) எங்களில் வேறு சிலர் இருக்கிறார்கள். அவர்களின் ( தியாகத்திற்கான) பிரதிபலன் (இந்த உலகிலும்) கனிந்து விட்டது. அதை அவர்கள் பறித்து (அனுபவித்து)க் கொண்டார்கள்.114

4048 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தந்தையின் சகோதரர் (அனஸ் பின் நள்ர்-ரலி) அவர்கள் பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் எங்கோ சென்று விட்டார். அன்னார் (திரும்பி வந்தவுடன்), (இணை வைப்பவர்களுடன்) நபி (ஸல்) அவர்கள் நடத்திய முதல் போரில் நான் கலந்து கொள்ள முடியவில்லை. நபி (ஸல்) அவர்களுடன் என்னையும் அல்லாஹ் பங்கு பெற வைத்திருந் தால் நான் கடும் முயற்சியெடுத்து (வீரமாகப்) போரிடுவதை அல்லாஹ் நிச்சயம் பார்த்திருப்பான் என்று சொன்னார். அவர் உஹுதுப் போரைச் சந்தித்தார். (அதில் கலந்து கொண்டார். அந்தப் போரில்) மக்கள் தோல்வியுற்றனர். அப்போது அவர், இறைவா! இந்த முஸ்லிம்கள் செய்த (பின்வாங்கிச் சென்ற) செயலுக்காக உன்னிடம் நான் மன்னிப்புக் கோருகிறேன். இணைவைப்ப வர்கள் செய்த (நபியவர்களுக்கெதிரான) இந்தப் போருக்கும் எனக்கும் தொடர்பில்லை என்று அறிவிக்கிறேன் என்று கூறிவிட்டு, பிறகு (போர்க்களத்தில்) தமது வாளுடன் முன்னேறிச் சென்றார். அப்போது (எதிரில் வந்த) சஅத் பின் முஆத் (ரலி) அவர்களைச் சந்தித்து, சஅதே! எங்கே (செல்கிறீர்கள்)? உஹுத் மலைக்கு அருகிலிருந்து நான் சொர்க்கத்தின் சுகந்தத்தைக் காண்கிறேன் என்று கூறிவிட்டுச் சென்றார். பிறகு, (உடல் முழுதும் சிதைந்து போனதால்) அடையாளம் அறியப்படாத நிலைமையில் கொல்லப் பட்டார். அவரை அவருடைய சகோதரி மச்சத்தை வைத்தோ... அல்லது அவருடைய கை விரல் நுனிகளை வைத்தோ... அடையாளம் கண்டு கொண்டார். அவரது உட-ல் (வாளால்) வெட்டப்பட்டும், (ஈட்டியால்) குத்தப்பட்டும், அம்பால் துளைக்கப்பட்டும் எண்பதுக்கும் மேற்பட்ட காயங்கள் இருந்தன.115

4049 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உஸ்மான் பின் அஃப்பான் (ரலி) அவர்களின் உத்தரவுப்படி) நாங்கள் திருக் குர்ஆனைப் (பல ஏடுகளில்) பிரதியெடுத்துக் கொண்டிருந்த போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஓத, நான் கேட்டிருந்த அல் அஹ்ஸாப் (என்னும் 33-வது) அத்தியாயத்தின் ஒரு வசனம் எனக்குக் கிடைக்கவில்லை. எனவே, அதை நாங்கள் தேடிப் பார்த்த போது அது குஸைமா பின் ஸாபித் (ரலி) அவர்களிடம் இருக்கக் கண்டோம். (அந்த வசனம் இது தான் :)

இறை நம்பிக்கையாளரில் இத்தகையவர் களும் இருக்கின்றனர்: அல்லாஹ்விடம் தாங்கள் கொடுத்த வாக்குறுதியை அவர்கள் மெய்ப்படுத்திக் காட்டி விட்டிருக்கிறார்கள்; அவர்களில் சிலர் தமது இலட்சியத்தை நிறைவேற்றி விட்டார்கள்; இன்னும் சிலர் (அதை நிறைவேற்ற தருணம்) எதிர்பார்த்துக் கொண்டிருக்கின்றனர். (33:23)

உடனே அந்த வசனத்தைத் திருக் குர்ஆனில் அதற்குரிய அத்தியாயத்தில் (எழுதிச்) சேர்த்து விட்டோம்.116

4050 ஸைத் பின் ஸாபித் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போருக்காக நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டுச் சென்ற போது, நபி (ஸல்) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றவர் களில் சிலர் (நயவஞ்சகர்கள்) திரும்பி வந்து விட்டனர்.117 (இவர்கள் மீது எப்படி நடவடிக்கை எடுப்பது என்னும் விஷயத்தில்) நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் இரு பிரிவினராகப் பிரிந்து விட்டார்கள். ஒரு பிரிவினர், (திரும்பி ஓடியவர்களைக்) கொன்று விடுவோம் என்று கூறினர். மற்றொரு பிரிவினர், அவர்களை நாம் கொலை செய்யக்கூடாது என்று கூறினர். (அவர்கள் கருத்து வேறுபாடு கொண்டு பிரிந்தனர்.) அப்போது பின்வரும் வசனம் இறங்கியது:

உங்களுக்கு என்ன நேர்ந்து விட்டது? நயவஞ்சகர்கள் விஷயத்தில் இரு (வகையான கருத்துக் கொண்ட) பிரிவினர்களாய் ஆகி விட்டீர்கள்! ஆயினும் அல்லாஹ் அவர்கள் சம்பாதித்துக் கொண்ட தீவினைகளின் காரணமாக அவர்களைத் தலைகீழாகப் புரட்டி விட்டிருக்கின்றான். (4:88)

மேலும், நபி (ஸல்) அவர்கள், மதீனா தூய்மையானது; நெருப்பு, வெள்ளியின் அழுக்கை நீக்குவதைப் போல் அது பாவங்களைப் போக்கிவிடுகின்றது என்று சொன்னார்கள்.118

பாடம் : 18

உங்களில் இரு குழுவினருக்கு அல்லாஹ் பாதுகாவலனாக இருக்க, அவர்கள் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்(நபியே! நினைவு கூருக!) இறை நம்பிக்கையாளர்கள் அல்லாஹ்வையே சார்ந்திருக்கட்டும்! (என்ற 3:122-வது இறைவசனம்)119

4051 ஜாபிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உஹுதுப் போரில்) உங்களில் இரு பிரிவினர் தைரியம் இழக்க முனைந்த நேரத்தையும்... என்னும் இந்த (3: 122ம்) இறைவசனம், பனூ ச-மா மற்றும் பனூ ஹாரிஸா கூட்டத்தாராகிய எங்களைக் குறித்தே இறங்கியது. மேலும், இந்த வசனம் இறங்காமலிருந்திருக்கக் கூடாதா என்று நான் ஆசைப்படமாட்டேன். (ஏனெனில்) அல்லாஹ், அவ்விரு பிரிவாருக்கும் அல்லாஹ்வே பாதுகாவலனாக இருந்தான் என்று (எங்களை மேன்மைப்படுத்திக்) கூறுகிறான்.120

4052 ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், திருமணம் முடித்துக் கொண்டாயா? ஜாபிரே! என்று கேட்டார்கள். நான், ஆம் என்று கூறினேன். கன்னி கழிந்த பெண்ணையா? கன்னிப் பெண்ணையா? என்று கேட்டார்கள். நான், (கன்னிப் பெண்ணை) அல்ல; கன்னி கழிந்த பெண்ணைத் தான் (மணந்து கொண்டேன்) என்று கூறினேன். உன்னோடு கொஞ்சிக் குலவும் கன்னிப் பெண்ணை மணமுடித்திருக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! என் தந்தை (அப்துல்லாஹ்-ரலி அவர்கள்) ஒன்பது பெண் மக்களை விட்டு விட்டு உஹுதுப் போரின் போது (உயிர்த் தியாகியாகக்) கொல்லப்பட்டார்கள். அவர்கள் (ஒன்பது பேரும்) என் சகோதரிகளாக இருந் தனர். எனவே, பக்குவமில்லாத அவர்களைப் போன்ற இன்னொருத்தியை அவர்களுடன் சேர்த்து விடுவதை நான் வெறுத்தேன். மாறாக, அவர்களுக்குத் தலை வாரிவிட்டு, அவர்களை (கருத்தாகப்) பராமரித்துவரும் ஒரு பெண்ணை (திருமணம் செய்ய நினைத்தே இவ்வாறு தேர்ந்தெடுத்தேன்) என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், நீ செய்தது சரிதான் என்று கூறினார்கள்.

4053 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

தன் மீது கடன் இருக்கும் நிலையில் ஆறு பெண் மக்களை (அநாதைகளாக) விட்டுவிட்டு என் தந்தை உஹுதுப் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார். பேரீச்சம் பழங்களைக் கொய்யும் (அறுவடைக்) காலம் வந்த போது, நான் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் சென்று, என் தந்தை உஹுதுப் போரில் உயிர்த் தியாகியாகக் கொல்லப்பட்டார் என்பது தங்களுக்குத் தெரியும். அவர் நிறையக் கடனையும் விட்டுச் சென்றுள்ளார். கடன்காரர்கள் தங்களைச் சந்திக்க வேண்டுமென நான் விரும்புகிறேன் என்று கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நீ சென்று எல்லாப் பேரீச்சங் கனிகளையும் களத்தில் ஒரு மூலையில் (தனித் தனியாகக்) குவித்து வை! என்று கூறினார்கள். நான் அவ்வாறே செய்தேன். பிறகு நபி (ஸல்) அவர்களை நான் அழைத்தேன். நபி (ஸல்) அவர்களைக் கடன்காரர்கள் கண்ட போது என்னால் ஆத்திரமூட்டப்பட்டவர்களைப் போல அந்த நேரத்தில் தெரிந்தார்கள். கடன் காரர்கள் (கடுமையாக) நடந்து கொள்வதை நபி (ஸல்) அவர்கள் கண்ட போது, அதில் பெரிய குவியலை மூன்று முறை சுற்றி வந்து அதன் அருகே அமர்ந்தார்கள். பிறகு, உன் (கடன்காரத்) தோழர்களைக் கூப்பிடு என்று கூறினார்கள். (பிறகு) நபி (ஸல்) அவர்கள் (பேரீச்சங் கனிகளை) அவர்களுக்கு அளந்து கொடுத்துக் கொண்டேயிருந்தார்கள். என் தந்தையின் (கடன்) பொறுப்பை அல்லாஹ் நிறைவேற்றி விட்டான். நானோ, அல்லாஹ் என் தந்தையின் (கடன்) பொறுப்பை நிறைவேற்றினால் போதும். என் சகோதரி களிடம் ஒரு பேரீச்சம் பழத்துடன் திரும்பிச் செல்லாவிட்டாலும் கூடப் பரவாயில்லை என்று திருப்திப்பட்டுக் கொண்டிருந்தேன். அந்தப் பேரீச்சம் பழக் குவியல்கள் முழுவதையும் (தீர்ந்து போகாமல்) அல்லாஹ் பாதுகாத்தான். எந்த அளவுக்கென்றால் நபி (ஸல்) அவர்கள் அமர்ந்திருந்த அந்தக் குவிய-ல் ஒரு பேரீச்சங் கனி கூட குறை யாமலிருந்ததை நான் பார்த்தேன்.121

4054 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களை நான் பார்த்தேன். அவர்களுடன் இரண்டு மனிதர்கள் இருந்தார்கள். அவ்விருவரும் நபியவர்களுக்காகக் கடுமையாகப் போரிட்டுக் கொண்டிருந்தார்கள். அவர்கள் வெள்ளை நிற உடையணிந்திருந்தார்கள். அதற்கு முன்போ அதற்குப் பின்போ அவ்விருவரையும் நான் பார்த்ததில்லை.122

4055 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள் தமது அம்புக் கூட்டிலிருந்து எனக்காக (அம்புகளை) உருவிக் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். அப்போது(என்னிடம்), அம் பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறினார்கள்.

4056 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எனக்காகத் தம் தாயையும் தந்தையையும் ஒன்று சேர்த்து, (என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று) கூறி (போர்புரிய உற்சாகமூட்டி)னார்கள்.123

4057 சஅத் பின் அபீ வக்காஸ் (ரலி) கூறியதாவது:

உஹுதுப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையுமே ஒன்று சேர்த்து எனக்காக (அர்ப்பணிப்பதாக)க் கூறினார்கள்.

அறிவிப்பாளர் சயீத் பின் முஸய்யப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

தாம் போர் புரிந்து கொண்டிருந்த போது, என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று தம்மிடம் நபி (ஸல்) அவர்கள் கூறியதைப் பற்றியே இவ்வாறு சஅத் (ரலி) அவர்கள் குறிப்பிடுகிறார்கள்.

4058 அலீ (பின் அபீதா-ப் -ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து சஅத் பின்

அபீவக்காஸ் (ரலி) அவர்களைத் தவிர வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை.

4059 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் பெற்றோர் இருவரையும் ஒன்று சேர்த்து சஅத் பின்

மாலிக் (ரலி) அவர்களைத் தவிர124 வேறு யாருக்கும் (அர்ப்பணிப்பதாகக்) கூறியதை நான் கேட்டதில்லை. ஏனெனில், நான் உஹுது (போர் நடந்த) நாளில், சஅதே! அம்பெய்யுங்கள். என் தந்தையும் என் தாயும் உங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று நபி (ஸல்) அவர்கள் (சஅத் அவர்களிடம்) கூறுவதைக் கேட்டேன்.

4060 & 4061 அபூ உஸ்மான் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (உஹுதில்) போரிட்டு வந்த அந்த நாட்களில் ஒன்றில், தல்ஹா பின் உபைதில்லாஹ் (ரலி) அவர் களையும், சஅத் பின் அபீவக்காஸ் (ரலி) அவர்களையும் தவிர்த்து (முஹாஜிர்களில் வேறு யாரும்) அவர்களுடன் எஞ்சியிருக்க வில்லை.

இது குறித்து தல்ஹா (ரலி) அவர்களும், சஅத் (ரலி) அவர்களும் (நேரடியாக) அறிவித்த ஹதீஸையும் அபூ உஸ்மான் (ரஹ்) அவர்கள் அறிவித்துள்ளார்கள்.125

4062 சாயிப் பின் யஸீத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அப்துர் ரஹ்மான் பின் அவ்ஃப், தல்ஹா பின் உபைதில்லாஹ், மிக்தாத் பின் அஸ்வத், சஅத் பின் அபீ வக்காஸ் (ரலியல்லாஹு அன்ஹும்) ஆகியோருடன் நான் தோழமை கொண்டிருந்தேன். அவர்களில் ஒருவரும் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (நபிமொழி எதையும்) அறிவிப்பதை நான் கேட்டதில்லை. ஆயினும், தல்ஹா (ரலி) அவர்கள் (மட்டும்) உஹுதுப் போர் நாள் பற்றி அறிவிப்பதை நான் கேட்டுள்ளேன்.126

4063 கைஸ் பின் அபீ ஹாஸிம் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் தல்ஹா பின் உபைதில்லாஹ்

(ரலி) அவர்களின் செய-ழந்து போன கையைப் பார்த்தேன். உஹுத் நாளில் அந்தக் கையால் நபி (ஸல்) அவர்களை அன்னார் காத்த(போது எதிரிகளால் வெட்டப் பட்டார்கள்.127

4064 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்களை (தனியே) விட்டுவிட்டு மக்கள் தோற்று (ஓடி) விட்டனர். அபூ தல்ஹா

(ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களைத் தம் தோல் கேடயத்தால் மறைத்துக் கொண்டு பாதுகாத்தபடி நின்றார்கள்.

மேலும், அபூதல்ஹா (ரலி) அவர்கள்

வில்-ன் நாணை நன்கு இழுத்து வேகமாக அம்பெய்யக் கூடியவர்களாக இருந்தார்கள். அன்று அவர்கள், இரண்டு அல்லது மூன்று விற்களை உடைத்து விட்டார்கள். எவரேனும் ஒரு மனிதர் அம்புக் கூட்டுடன் செல்வதைக் கண்டால் நபி (ஸல்) அவர்கள், அதை அபூதல்ஹாவிடம் போடு என்று சொல்வார்கள். அந்த நேரத்தில் நபி (ஸல்) அவர்கள் மேலேயிருந்து மக்களை (தலையை உயர்த்தி) எட்டிப் பார்க்க, அபூதல்ஹா அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! உங்களுக்கு என் தந்தையும் என் தாயும் அர்ப்பணமாகட்டும். எட்டிப் பார்க் காதீர்கள். எதிரிகளின் அம்புகளில் ஏதேனும் ஒன்று தங்களைத் தாக்கி விடலாம். (தாங்கள் எட்டிப் பார்க்காமலிருந்தால்) என் மார்பு தங்கள் மார்புக்கு முன்னால் (கேடயம் போன்று உங்களுக்குப் பாதுகாப்பாக) இருக்கும் என்று சொன்னார்கள்.

அபூபக்ர் (ரலி) அவர்களின் மகள் ஆயிஷா (ரலி) அவர்களும் (என் தாயார்) உம்மு சுலைம் (ரலி) அவர்களும் (காயமுற்ற வர்களுக்கு) மும்முரமாக (பணிவிடைகள் செய்து கொண்டு) இருப்பதை நான் கண்டேன். அவர்கள் (தண்ணீர் நிரம்பிய) தோல் பைகளைத் தங்கள் முதுகுகளில் சுமந்து கொண்டு எடுத்துச் சென்று (காயமுற்று வீழ்ந்து கிடக்கும்) மக்களின் வாய்களில் ஊற்றிவிட்டு, பிறகு திரும்பிச் சென்று, அவற்றை (மீண்டும்) நிரப்பிக் கொண்டு வந்து, அவர்களுடைய வாய்களில் மீண்டும் ஊற்றிக் கொண்டிருக்கும் நிலையில் அவர்களுடைய கால் கொலுசுகளை நான் கண்டேன். அபூ தல்ஹா (ரலி) அவர்களின் கரத்திலிருந்து இரு முறையோ மும்முறையோ வாள் (கீழே தவறி) விழுந்தது.128

4065 ஆயிஷா(ரலி) அவர்கள்கூறியதாவது:

 உஹுதுப் போரின் (தொடக்கத்தின்) போது இணைவைப்பாளர்கள் தோற்கடிக்கப்பட்டனர். அப்போது இப்லீஸ்,-அல்லாஹ் அவனைத் தன் கருணையிருந்து அப்புறப்படுத்துவானாக!- அல்லாஹ்வின் அடியார் களே! உங்களுக்குப் பின்னால் இருப்பவர் களைக் கவனியுங்கள் என்று கத்தினான். உடனே, முஸ்லிம்களில் முன் அணியினர் (எதிரிகள் என்றெண்ணி, பின் அணியினரை நோக்கித்) திரும்பிச் செல்ல, பின் அணியினருடன் (மோதலேற்பட்டுப்) போரிட்டுக் கொண்டனர். அப்போது ஹுதைஃபா (ரலி), தம் தந்தை யமான் அவர்கள் அங்கே (முஸ்லிம் களின் தாக்குதலுக்கு ஆளாக) இருப்பதைக் கண்டார்கள். ஆகவே, அல்லாஹ்வின் அடியார்களே! என் தந்தை! என் தந்தை! என்று (உரக்கக்) கூவினார்கள். (ஆனால்) அல்லாஹ்வின் மீதாணையாக! அவரைக் கொன்ற பின்பு தான் அவர்கள் (அவரை விட்டும்) நகர்ந்தார்கள். அப்போது ஹுதைஃபா (ரலி) அவர்கள் (தம் தந்தையைக் கொன்றவர்களை நோக்கி), அல்லாஹ் உங்களை மன்னிப்பானாக! என்று சொன்னார்கள்.

அறிவிப்பாளர்களில் ஒருவரான உர்வா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! ஹுதைஃபா (ரலி) அவர்கள் (இவ்வாறு மன்னித்ததால் அவர்கள்) அல்லாஹ்வைச் சந்திக்கும் வரை அவர்களிடம் நல்ல பலன் இருந்து கொண்டேயிருந்தது.129

பாடம் : 19

இரு படைகள் மோதிக் கொண்ட நாளில் உங்களில் யார் புறங்காட்டி ஓடினார்களோ, அவர்கள் செய்த சில தவறுகள் காரணமாகத் தான் ஷைத்தான் அவர்களை அடிசறுக்கச் செய்தான். (எனினும்) அல்லாஹ் அவர்களை நிச்சயமாக மன்னித்து விட்டான். திண்ணமாக, அல்லாஹ் மன்னிப்பு வழங்குபவனும் சகிப்புத் தன்மையுடையவனுமாய் இருக்கின்றான் என்னும் (3:155)இறை வசனம்.

4066 உஸ்மான் பின் மவ்ஹப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

இறையில்லம் கஅபாவில் ஹஜ் செய்ய (எகிப்து வாசியான) ஒரு மனிதர் வந்தார். அப்போது ஒரு கூட்டத்தார் (அங்கே) அமர்ந் திருப்பதைக் கண்டு, இந்தக் கூட்டத்தார் யார்? என்று கேட்டார். மக்கள், இவர்கள் குறைஷிகள் என்று கூறினர். அவர், (இவர்களில்) முதிர்ந்த அறிஞர் யார்? என்று கேட்டார். மக்கள், அப்துல்லாஹ் பின் உமர் அவர்கள் என்று பதிலளித்தனர். பிறகு அவர் இப்னு உமர் (ரலி) அவர்களிடம் சென்று, (இப்னு உமர் அவர்களே!) நான் தங்களிடம் ஒரு விஷயம் பற்றிக் கேட்பேன். நீங்கள் எனக்கு அதைப் பற்றி (பதில்) சொல்வீர்களா? இந்த இறையில்லத்தின் புனிதத்தை முன்வைத்து தங்களிடம் கேட்கிறேன்: உஸ்மான் பின் அஃப்பான் உஹுது நாளில் (போர்க்களத்திலிருந்து) வெருண்டோடியதைத் தாங்கள் அறிவீர்களா? என்று கேட்டார். அதற்கு இப்னு உமர் (ரலி) அவர்கள், ஆம் (அறிவேன்) என்று பதிலளித்தார்கள். அவர், உஸ்மான் (ரலி) அவர்கள், பத்ருப் போரில் கலந்து கொள்ளாமல் இருந்து விட்டார் என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், ஆம் (தெரியும்) என்று பதிலளித்தார்கள். அந்த மனிதர், அவர் (ஹுதைபிய்யாவில் நடந்த) பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாணத்திலும் கலந்து கொள்ளவில்லை என்பது உங்களுக்குத் தெரியுமா? என்று கேட்க, இப்னு உமர் (ரலி) அவர்கள், ஆம் (தெரியும்) என்று பதிலளித்தார்கள். (இவற்றைக் கேட்டு விட்டு) அந்த மனிதர், (உஸ்மான் (ரலி) அவர்கள், தாம் நினைத்திருந்தது போலவே இவ்வளவு குறைகளையும் கொண்டவர்கள் தாம் என்று தொனிக்கும்படி) அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன் என்று சொன்னார்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்: வா! (இவற்றிலெல்லாம் உஸ்மான் (ரலி) அவர்கள் ஏன் பங்கு பெறவில்லையென்று)நீ கேட்டது பற்றி உனக்கு நான் விளக்குகிறேன்.

உஸ்மான் (ரலி) அவர்கள் உஹுதுப் போரின் போது வெருண்டோடிய சம்பவமோ, அது சம்பந்தமாக அல்லாஹ் அவரை மன்னித்து விட்டான் என்று நானே சாட்சியம் கூறுகின்றேன்.

பத்ருப் போரில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய மகள் (ருகய்யா -ரலி-அவர்கள்) உஸ்மானுடைய மனைவியாக இருந்தார்கள். அப்போது அவர்கள் நோய்வாய்ப்பட்டிருந்தார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உஸ்மான் (ரலி) அவர்களிடம், பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதருக்குரிய (மறுமைப்) பலனும் (போர்ச் செல்வத்தில்) அவரது பங்கும் உங்களுக்குக் கிடைக்கும் (நீங்கள் உங்கள் மனைவியைப் போய்க் கவனியுங்கள்) என்று சொன்னார்கள். (எனவே தான் அவர்கள் அதில் கலந்து கொள்ள முடியவில்லை.)

பைஅத்துர் ரிள்வான் சத்தியப் பிரமாண நிகழ்ச்சியில் அவர்கள் கலந்து கொள்ளாததற்குக் காரணம், உஸ்மான் (ரலி) அவர்களை விட கண்ணியம் வாய்ந்த ஒருவர் (மக்கா பள்ளத்தாக்கில் இல்லை. அப்படி) இருந் திருந்தால் உஸ்மான் அவர்களுக்கு பதிலாக அவரை நபி (ஸல்) அவர்கள் (குறைஷிகளிடம் பேச மக்காவிற்குத் தம் தூதுவராக) அனுப்பியிருப்பார்கள். (அப்படி ஒருவரும் இல்லை;) எனவே தான், உஸ்மான் (ரலி) அவர்களை அனுப்பினார்கள். மேலும், இந்த சத்தியப் பிரமாண நிகழ்ச்சி உஸ்மான் (ரலி) அவர்கள் மக்காவிற்குப் போன பின்புதான் நடைபெற்றது. அப்போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் வலக்கையைச் சுட்டிக் காட்டி, இது உஸ்மானுடைய கை என்று சொல்லி அதைத் தம் இடக் கையின் மீது தட்டினார்கள். பிறகு, (இப்போது நான் செய்த) இந்த சத்தியப் பிரமாணம் உஸ்மானுக்காகச் செய்யப்படுவதாகும் என்று சொன்னார்கள். (இவ்வாறு இப்னு உமர்-ரலி-அவர்கள் கூறிவிட்டு, உஸ்மான்-ரலி- அவர்களைப் பற்றித் தாழ்வாக எண்ணி வைத்திருந்த) அந்த மனிதரிடம், நான் சொன்ன இந்த பதில்களை எடுத்துக் கொண்டு இப்போது நீ போகலாம் என்று சொன்னார்கள்.130

பாடம் : 20

இறைத்தூதர் உங்கள் பின்னாலிருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க, நீங்கள் யாரையும் திரும்பிப் பார்க்காதவாறு வெகுதூரம் சென்று கொண்டிருந்ததை (நினைத்துப் பாருங்கள்.) இதன் விளைவாக, அல்லாஹ் உங்களுக்குத் துக்கத்திற்கு மேல் துக்கத்தைக் கொடுத்தான்; ஏனெனில், உங்களை விட்டு நழுவிப் போனவை பற்றியும், உங்களுக்குத் துன்பம் ஏற்பட்டது பற்றியும், (இனிமேல்) நீங்கள் வருந்தக் கூடாது என்பதற்காகத் தான். அல்லாஹ் நீங்கள் செய்கின்றவற்றை ஆழ்ந்து கவனிப்பவன் ஆவான் (என்ற 3:153-வது இறைவசனம்)

4067 பராஉ பின் ஆஸிப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், (அம்பெய்யும்) காலாட்படையினருக்கு அப்துல் லாஹ் பின் ஜுபைர்

(ரலி) அவர்களை (தலைவராக) ஆக்கினார்கள். மேலும், அப்படையினர் தோற்றுப் போய் ஓடி விட்டார்கள். இறைத் தூதர் உங்கள் பின்னால் இருந்து உங்களை அழைத்துக் கொண்டிருக்க..... என்னும் (3 : 153லிம்) வசனம் இதையே குறிக்கிறது.131

பாடம் : 21

பின்னர் இந்தத் துக்கத்திற்குப் பிறகு (மன) அமைதி தருகின்ற சிற்றுறக்கத்தை அவன் உங்கள் மீது இறக்கினான். அது உங்களில் ஒரு பிரிவினரை ஆட் கொண்டது. மற்றொரு பிரிவினரோ, அவர்களுடைய மனங்கள் அவர்களைப் பற்றியே கவலையை உண்டாக்கின. உண்மைக்குப் புறம்பாக அல்லாஹ்வைப் பற்றி அறிவீனர்கள் எண்ணுவதைப் போல எண்ணிக் கொண்டிருந் தனர். இந்தக் காரியத்தில் எங்களுக்கு ஏதேனும் உரிமையுண்டா? என்று கூறுகின்றனர். அனைத்துரிமையும் அல்லாஹ்வுக்கே உண்டு என (நபியே) கூறுக! உம்மிடம் வெளிப்படுத்த முடியாத (பல) விஷயங்களைத் தமது உள்ளங்களில் மறைத்து வைத்துள்ளனர். இந்தக் காரியத்தில் எங்களுக்கு உரிமை இருந்திருக்குமாயின், நாங்கள் இங்கே கொல்லப்பட்டிருக்க மாட்டோம். என்றும் அவர்கள் கூறுகின்றனர். (நபியே!) நீர் கூறுக: நீங்கள் உங்கள் இல்லங்களில் தங்கியிருந் திருப்பினும், யார் மீது இறப்பு எழுதப்பட்டு விட்டதோ அவர்கள், தாம் இறக்க வேண்டிய இடங்களை நோக்கி வந்தேயிருப்பார்கள். மேலும், அல்லாஹ் உங்கள் நெஞ்சங்களில் உள்ள (விசுவாசத்)தைச் சோதிக்கவும், உங்கள் இதயங்களில் உள்ள (சந்தேகத்)தை (அகற்றி) தூய்மைப்படுத்தவுமே (இவ்வாறு செய்தான்). இன்னும் அல்லாஹ் உங்கள் உள்ளங்களில் உள்ளதை நன்கறிந்தவன். (என்ற 3:154வது இறை வசனம்)

4068 அபூ தல்ஹா ( ஸைத்-ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது சிற்றுறக்கம் ஆட் கொண்டவர்களில் நானும் ஒருவனாக இருந்தேன். எந்த அளவுக்கென்றால் எனது வாள் எனது கையிலிருந்து பலமுறை (நழுவி) விழுந்து விட்டது. அது விழ, நான் அதை எடுப்பேன். (மீண்டும்) அது விழ, அப்போதும் நான் அதை எடுப்பேன்.132

பாடம் : 22

அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற 3:128-வது இறை வசனம்)

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரன்று நபி (ஸல்) அவர்கள் காயப்படுத்தப்பட்டார்கள். அப்போது தம் நபியையே காயப்படுத்திவிட்ட ஒரு சமூகம் எப்படி வெல்லும்? என்று (மனமுடைந்த வர்களாக) நபிகளார் கூறினார்கள். அப்போது தான் (நபியே!) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை... என்ற (3:128-வது) வசனம் இறங்கிற்று.133

4069 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(உஹுத் போரில் காயம் ஏற்பட்டதற்குப் பிறகு)ஃபஜ்ருத் தொழுகையின் கடைசி ரக்அத்தில் ருகூவிலிருந்து தலையை உயர்த்தி, சமிஅல்லாஹு -மன் ஹமிதஹு - ரப்பனா வல(க்)கல் ஹம்து என்று கூறியதற்குப் பின்னால், நபி (ஸல்) அவர்கள், இறைவா! இன்னான், இன்னான், இன்னானை உன் அருளிலிருந்து அப்புறப்படுத்துவாயாக! என்று கூறினார்கள். அப்போது அல்லாஹ், அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை என்னும் (3:128-வது) வசனத்தை இறக்கியருளினான்.

4070 சாலிம் பின் அப்தில்லாஹ் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (உஹுதுப் போரில் காயப்படுத்தப்பட்ட போது எதிரிகளான) ஸஃப்வான் பின் உமய்யா, சுஹைல் பின் அம்ர், ஹாரிஸ் பின் ஹிஷாம் ஆகியோருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ் அவர்களை மன்னிக்கும் வரை, அல்லது அவர்கள் அக்கிரமக்காரர்களாக இருப்பதால் அவர்களை அவன் வேதனை செய்யும் வரை (அவர்களுக்குத் தண்டனை வழங்குமாறு கூற, நபியே) உங்களுக்கு எந்த உரிமையும் இல்லை (என்ற 3:128-வது வசனம்) அருளப்பட்டது.134

பாடம் : 23

உம்மு சலீத் (ரலி) அவர்கள் பற்றிய குறிப்பு135

4071 ஸஅலபா பின் அபீமாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

மதீனாவாசிகளான பெண்களில் சிலரி டையே உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் பட்டாடைகளை (அல்லது கம்பளி ஆடைகளை) பங்கிட்டார்கள். அதில் தரமானதோர் ஆடை எஞ்சிவிட்டது. உமர் (ரலி) அவர்களுக்கு அருகில் இருந்த சிலர், இறை நம்பிக்கையாளர் களின் தலைவரே! இதனைத் தங்களிடமிருக்கும் (தங்களின் துணைவியாரான) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் (மகளின்) மகளுக்குக் கொடுத்து விடுங்கள் என்று கூறினர்.-அலீ (ரலி) அவர்களின் மகளான உம்மு குல்ஸூம்

(ரலி) அவர்களைக் கருத்தில் கொண்டே (இப்படிக்) கூறினர்- அப்போது உமர் (ரலி) அவர்கள், உம்மு குல்ஸூமை விட உம்மு சலீத் அவர்களே இதற்கு மிகவும் தகுதி வாய்ந்தவர்கள். மேலும், உம்மு சலீத் அவர்கள், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் விசுவாசப் பிரமாணம் செய்து கொடுத்த அன்சாரிப் பெண்களில் ஒருவராவார். என்று கூறினார்கள். (மேலும்) அவர் எங்களுக்காக உஹுதுப் போர் நடந்த நாளில் தோ-னால் ஆன தண்ணீர்ப் பைகளைச் சுமந்து கொண்டு வந்து கொண்டிருந்தார் என்றும் உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.136

பாடம் : 24

ஹம்ஸா பின் அப்தில் முத்த-ப் (ரலி) அவர்கள் கொல்லப்பட்ட நிகழ்ச்சி137

 

4072 ஜஅஃபர் பின் அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் (ஒரு பயணத்தில்) உபைதுல்லாஹ் பின் அதீ பின் கியார் (ரலி) அவர்களுடன் புறப்பட்டுச் சென்றேன். நாங்கள் ஹிம்ஸு (நகரு)க்கு138 வந்து சேர்ந்த போது என்னிடத்தில், உபைதுல்லாஹ் பின் அதீ அவர்கள், (உஹுதுப் போரின் போது ஹம்ஸா -ரலி- அவர்களைக் கொன்றவரான) வஹ்ஷீ அவர்களைச் சந்திக்க உங்களுக்கு விருப்பமுண்டா? (நாம் அவர்களைச் சந்தித்து) ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றது பற்றிக் கேட்போமே! என்று கூறினார்கள். நான், சரி என்றேன். வஹ்ஷீ அவர்கள் ஹிம்ஸில் வசித்துக் கொண்டிருந்தார். (நாங்கள் அங்கு போய் அங்குள்ளவர்களிடம்) அவரைப் பற்றி விசாரித்தோம். அவர் தமது அந்த கோட்டைக்குள் இருக்கிறார். அவர் தண்ணீரால் நிரப்பப்பட்ட பெரிய தோல் பை போன்று (பருமனாக) இருப்பார் என்று எங்களிடம் கூறப்பட்டது.

பிறகு நாங்கள் (அவரிடம்) வந்தோம். சிறிது நேரம் அவரருகில் நின்றோம். பிறகு, அவருக்கு நாங்கள் சலாம் சொன்ன போது, அவர் (எங்களுக்கு) பதில் சலாம் சொன்னார்.

உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள் தமது தலைப்பாகைத் துணியினால், தம் இரு கண்களையும் கால்களையும் தவிர வேறெ தையும் வஹ்ஷீ அவர்கள் பார்க்க முடியாத அளவிற்கு சுற்றிக் கட்டியிருந்தார். அப்போது, உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், வஹ்ஷீ அவர்களே! என்னை உங்களுக்கு அடையாளம் தெரிகிறதா? என்று கேட்டார்கள்.

அப்போது வஹ்ஷீ, உபைதுல்லாஹ்

அவர்களைப் பார்த்தார். பிறகு, அல்லாஹ்வின் மீதாணையாக! இல்லை. (உங்களை எனக்கு அடையாளம் தெரியவில்லை.) ஆயினும், எனக்கு இது தெரியும்: அதீ பின் கியார் ஒரு பெண்ணைத் திருமணம் முடித்தார்.139 அவருக்கு, உம்மு கித்தால் பின்த் அபில் ஈஸ் என்று சொல்லப்படும். அதீ அவர்களுக்கு (மனைவி) உம்மு கித்தால் மக்காவில் வைத்து ஒரு ஆண் குழந்தையைப் பிரசவித்தார். அப்போது, அந்தக் குழந்தைக்கு பாலூட்டும் செவி-த் தாயை நானே தேடினேன். (பாலூட்டுபவளைக் கண்டு பிடித்த பிறகு) நான் அந்தக் குழந்தையைச் சுமந்து கொண்டு, அதன் தாயுடன் சென்று அந்தக் குழந்தையைப் பாலூட்டுபவளிடம் ஒப்படைத்தேன். (அந்தக் குழந்தையின் பாதங்களை அப்போது நான் பார்த்தேன்.) உன் இரு பாதங்களைப் பார்த்தால் அது போலவே இருக்கிறது என்று கூறினார். அப்போது உபைதுல்லாஹ் (ரலி) அவர்கள், மூடியிருந்த தமது முகத்தைத் திறந்தார்கள். பிறகு, ஹம்ஸா (ரலி) அவர்களை நீங்கள் கொன்றது பற்றி எங்களுக்கு அறிவிக்கக் கூடாதா? என்று கேட்டார்கள். வஹ்ஷீ, சரி (சொல்கிறேன்) என்று கூறினார். (பிறகு, கொலைச் சம்பவத்தைப் பற்றிப் பின்வருமாறு கூறினார்:) ஹம்ஸா (ரலி) அவர்கள் பத்ருப் போரில் (என் எஜமான் ஜுபைருடைய தந்தையின் சகோதரரான) துஐமா பின் அதீ பின் கியார் என்பாரைக் கொலை செய்தி ருந்தார். எனவே, என் எஜமான் ஜுபைர் பின் முத்இம் என்னிடம், என் சிறிய தந்தை(யின் கொலை)க்குப் பதிலாக ஹம்ஸாவை நீ கொன்றால் நீ(அடிமைத் தளையிலிருந்து) விடுதலையாவாய் என்று கூறினார்.

ஆகவே, அய்னைன் (உஹுது) ஆண்டில் -அய்னைன் என்பது உஹுது மலைக் கருகிலுள்ள ஒரு மலையாகும். இந்த இரு மலைகளுக்குமிடையில் ஒரு பள்ளத்தாக்கு உண்டு - (குறைஷி) மக்கள் (போருக்காகப்) புறப்பட்டுச் சென்ற போது அம்மக்களுடன் போர்(க் களம்) நோக்கி நானும் சென்றேன். மக்கள் போருக்காக அணிவகுத்து நின்ற போது சிபாஉ பின் அப்தில் உஸ்ஸா என்பவன் (அணியை விட்டு) முன்னால் வந்து, (என்னோடு) தனியே மோதுபவர் உண்டா? என்று கேட்டான். அவனை நோக்கி ஹம்ஸா பின் அப்தில் முத்த-ப் (ரலி) கிளம்பி வந்து, பெண்களுக்கு விருத்தசேதனம் செய்யும் உம்மு அன்மாரின் மகனே! சிபாஉவே! நீ அல்லாஹ்வுடனும் அவனுடைய தூதருடனும் (பகைத்துக் கொண்டு) மோத வந்திருக்கிறாயா? என்று கேட்டார்கள்.

பிறகு ஹம்ஸா (ரலி) அவர்கள் அவன் மீது (பாய்ந்து) கடுமையாகத் தாக்கினார்கள். அவன் கழிந்து போய் விட்ட நேற்றைய தினம் போல் (மடிந்தவனாக) ஆகி விட்டான். நான் ஹம்ஸா (அவர்களைக் கொல்லத் தருணம் எதிர்பார்த்து) அவர்களுக்காக ஒரு பாறைக்கு அடியில் ஒளிந்து கொண்டேன். ஹம்ஸா அவர்கள் என்னை (க்கவனிக்காமல்) நெருங்கி வந்த போது, எனது ஈட்டியை அவரது மர்மஸ்தானத்தை நோக்கி எறிந்தேன். அது (பாய்ந்து) அவரது புட்டத்திற்கிடையிலிருந்து வெளியேறியது. அது தான் ஹம்ஸா அவர்களின் வாழ்நாள் முடிவிற்குக் காரணமாக அமைந்தது. பிறகு குறைஷிகள் (உஹுதிலிருந்து மக்காவை நோக்கி) திரும்பிச் சென்ற போது நானும் அவர்களுடன் திரும்பினேன். மக்காவிற்குப் போய் அங்கு (வெற்றி கிடைத்து) இஸ்லாம் பரவும் வரையில் தங்கினேன். (மக்கா வெற்றி கொள்ளப்பட்ட பின்) அங்கிருந்து வெளியேறி தாயிஃபிற்கு (ஓடிச்) சென்று விட்டேன். தாயிஃப் வாசிகள் (இஸ்லாத்தை அறிந்து கொள்ளவும், அதை ஏற்று நடக்கவும் கருதி) தங்கள் தூதுக் குழுவினரை அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் அனுப்பி வைத்தனர்.140 அப்போது, என்னிடத்தில், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (தம்மிடம் வரும்) தூதுவர்களுக்குத் தொல்லை தர மாட்டார்கள்; (எனவே, தூதுக் குழுவின ருடன் சேர்ந்து நீங்களும் செல்லுங்கள்) என்று கூறப்பட்டது. எனவே, தூதுக் குழுவினருடன் நானும் புறப்பட்டு, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் வந்து சேர்ந்தேன். என்னை அவர்கள் கண்ட போது, நீ வஹ்ஷி தானே? என்று கேட்டார்கள். நான், ஆம் என்று கூறினேன். நீ தானே ஹம்ஸாவைக் கொன்றாய்? என்று கேட்டார்கள். நான், உங்களுக்கு எட்டியபடி விஷயம் நடந்தது உண்மைதான் என்று கூறினேன். அப்போது அவர்கள், (உன்னைக் காணும் போது என் பெரிய தந்தை ஹம்ஸாவின் நினைவு வரும், எனவே,) என்னை விட்டும் உன் முகத்தை மறைத்துக் கொள்ள முடியுமா? என்று கேட்டார்கள். உடனே, நான் (அங்கிருந்து) புறப்பட்டுவிட்டேன்.

நபி (ஸல்) அவர்கள் இறந்து விட்ட போது, (தன்னை ஒரு நபி என்று வாதிட்ட வண்ணம்) பொய்யன் முஸை-மா கிளம்பினான். (அவன் நபித்தோழர்களிடம் போர் புரிவதற்காகப் பெரும்படை ஒன்றைத் திரட்டலானான். அவனை முறியடிப்பதற்காக அபூபக்ர் ஸித்தீக் (ரலி) அவர்களும் படை திரட்டி அதற்கு கா-த் பின் வலீத் (ரலி) அவர்களைத் தளபதியாக நியமித்தார்கள்) நான் (என் மனத்திற்குள்), நிச்சயம் நான் முஸை-மாவை நோக்கிப் புறப்பட்டுச் செல்வேன். அவனை நான் கொல்ல(வாய்ப்புக் கிடைக்க)லாம். அதன் மூலம், (முன்பு) நான் ஹம்ஸா (ரலி) அவர்களைக் கொன்றதற்கு(ப் பிரயாசித்தம் தேடி) ஈடுசெய்யலாம் என்று கூறிக் கொண்டேன். (அபூபக்ர்-ரலி அவர்கள் அனுப்பிய போர்ப்படையிலிருந்த) மக்களுடன் நானும் புறப்பட்டுச் சென்றேன். அப்போது தான் அவனுடைய விஷயத்தில் நடந்தது நடந்து முடிந்தது.141

அப்(போரின்) போது ஒரு மனிதன் ஒரு சுவரின் இடைவெளியில் நின்று கொண்டிருந் தான். அவன் தலைவிரி கோலத்துடன் (போரின் புழுதி படிந்து) சாம்பல் நிற ஒட்டகம் போன்றி ருந்தான். அவன் மீது (ஹம்ஸா அவர்களைக் கொலை செய்த அதே) எனது ஈட்டியை எறிந்தேன். நான் அந்த ஈட்டியை அவனது இரு மார்புகளுக்கு மத்தியில் பாய்ச்சினேன். அது அவனது பின் தோள்களுக்கிடையிலிருந்து வெளியேறியது. அவனை நோக்கி அன்சாரிகளில் ஒருவர் ஓடி வந்தார். தமது வாளால் அவனது உச்சந்தலை மீது ஓங்கி வெட்டி விட்டார். (அவன்தான் முஸை-மா.)

அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

(முஸை-மா கொல்லப்பட்ட போது) ஒரு சிறுமி வீட்டின் முகட்டிலிருந்து கொண்டு, அந்தோ! நம்பிக்கையாளர்களின் தலைவரை ஒரு கறுப்பு அடிமை (வஹ்ஷீ) கொலை செய்து விட்டான் என்று (உரக்கச் சப்தமிட்டுச்) சொன்னாள்.

பாடம் : 25

உஹுத் நாளில் நபி (ஸல்) அவர்களுக்கு ஏற்பட்ட காயங்கள்.142

4073 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், (உஹுதுப் போரில் உடைக்கப்பட்ட) தமது (முன் வாய்ப்பற்களில், கீழ்வரிசையில் வலப்புறம் இருந்த) பல்லைச் சுட்டிக்காட்டி143 நபியை (இப்படிச்) செய்து விட்ட சமுதாயத்தின் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது என்று கூறினார்கள். (மேலும்,) அல்லாஹ்வின் பாதையில் (அறப்போரில்) அல்லாஹ்வின் தூதர் தம் கரத்தால் எவனைக் கொன்று விடுவார்களோ அவன் மீது(ம்) அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது என்று கூறினார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4074 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் பாதையில் நபி (ஸல்) அவர்கள் எவனைக் கொன்று விட்டார்களோ அவன் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது. (மேலும்,) நபி (ஸல்) அவர்களின் முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவர்கள் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது144

4075 அபூ ஹாஸிம் சலமா பின் தீனார் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு (உஹுதுப் போரின் போது) ஏற்பட்ட காயங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. அப்போது அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காயத்தைக் கழுவி விட்டவரையும், (கழுவு வதற்காகத்) தண்ணீரை ஊற்றிவிட்டுக் கொண்டிருந்தவரையும், மருந்துக்குப் பயன் படுத்தப்பட்ட பொருளையும் நான் அறிவேன் என்று கூறிவிட்டு (பின்வருமாறு விளக்கிச்) சொன்னார்கள்: அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் மகள் ஃபாத்திமா (ரலி) அவர்கள் அந்தக் காயத்தைக் கழுவிவிட்டுக் கொண்டி ருந்தார்கள். அலீ பின் அபீதா-ப் (ரலி) அவர்கள் (தமது) கேடயத்தில் (தண்ணீர் நிரப்பி வந்து அந்தக் காயத்தைக் கழுவுவதற்காக) நீர் ஊற்றிக் கொண்டிருந்தார்கள். தண்ணீர் மேன்மேலும் இரத்தத்தை அதிக மாக்குவதையே கண்ட போது, ஃபாத்திமா (ரலி) அவர்கள் பாயின் ஒரு பகுதியை எடுத்து வந்து (சாம்பலாகும் வரை) அதைக் கரித்து, அதனைக் காயத்தின் மீது அழுத்தி வைத்தார்கள். இரத்தம் (வருவது) நின்றுவிட்டது. அன்றைய (உஹுதுப் போர்) தினத்தில் நபி (ஸல்) அவர்களின் கீழ்ப்பல் உடைக்கப்பட்டது. மேலும் அவர்களது முகம் காயப்படுத்தப்பட்டது. மேலும் (அவர்களது) தலைக் கவசம் அவர்களுடைய தலையின் மீதே வைத்து நொறுக்கப்பட்டது.

4076 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நபி எவனைக் கொன்று விட்டார் களோ அவன் மீது அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகி விட்டது. மேலும், அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடைய முகத்தில் இரத்தக் காயம் ஏற்படுத்தியவன் மீதும் அல்லாஹ்வின் கோபம் மிகக் கடுமையாகிவிட்டது.

இதை இக்ரிமா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.145

பாடம் : 26

அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை ஏற்றவர்கள்... (என்னும் 3:172லிம் இறைவசனம்.)

4077 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 தமக்கு(ப் போரில்) படுகாயங்கள் ஏற்பட்ட பின்னரும் கூட அல்லாஹ் மற்றும் அவனுடைய தூதரின் அழைப்பை அவர்கள் ஏற்றார்கள். நன்மை புரிந்து, தீமையிலிருந்து தம்மைக் காத்துக் கொண்ட இத்தகையோருக்கு மகத்தான பிரதிபலன் உண்டு என்னும் (3:172-வது) வசனத்தை (என் சிற்றன்னை) ஆயிஷா (ரலி) அவர்கள் ஓதிவிட்டு என்னிடம், என் சகோதரி மகனே! உன் தந்தை ஸுபைர்

(ரலி) அவர்களும் (என் தந்தையும் உன் பாட்டனாருமான) அபூபக்ர் (ரலி) அவர் களும் (அந்த அழைப்பை ஏற்ற) அவர்களில் உள்ளவர்கள் தாம். உஹுத் நாளில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்குக் காயங்கள் ஏற்பட்ட போது இணை வைப்ப வர்கள் திரும்பிச் சென்று விட்டனர். அவர்கள் மீண்டும் திரும்பி வந்து விடுவார்களோ

என்று நபி (ஸல்) அவர்கள் அஞ்சினார்கள். (அப்போது) அவர்களுக்குப் பின்னால் (அவர்களை அச்சுறுத்துவதற்காக அவர்களைத் துரத்திச்) செல்பவர்கள் யார்? என்று கேட்டார்கள். (உஹுதில் கலந்து கொண்ட) நபித் தோழர்களில் எழுபது பேர் (அவர்களைத் துரத்தியடிக்க) முன்வந்தனர் என்று கூறினார்கள்.

அவர்களில் அபூபக்ர் (ரலி) அவர்களும், ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்களும் இருந்தனர்.146

பாடம் : 27

உஹுத் நாளில் கொல்லப்பட்ட

முஸ்லிம்கள்.147

ஹம்ஸா பின் அப்தில் முத்த-ப், யமான், அனஸ் பின் நள்ர், முஸ்அப் பின் உமைர்

(ரலி) ஆகியோர் அவர்களில் அடங்குவர்.148

4078 கதாதா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

அன்சாரிகளை விட, அதிக உயிர்த் தியாகிகள் கொண்ட, மறுமை நாளில் ஒளி மிகுந்த வேறெந்தக் குலத்தாரையும் அரபுக் குலங்களுக்கிடையே நாம் அறியவில்லை.

அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரில் அன்சாரிகளில் எழுபது பேர் கொல்லப்பட்டனர். பிஃரு மஊனா போரின் போது எழுபது பேரும், யமாமா போரின் போது எழுபது பேரும் கொல்லப்பட்டனர்.

அறிவிப்பாளர் கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் காலத்தில் பிஃரு மஊனாப் போர் நடந்தது.149 பொய்யன் முஸை-மாவின் மீதான யமாமாப் போர் அபூபக்ர் (ரலி) அவர்களின் (ஆட்சிக்) காலத்தில் நடந்தது.150

4079 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரில் (உயிர்த் தியாகிகளாகக்) கொல்லப்பட்டவர்களை இரண்டிரண்டு பேராக ஒரே துணியில் சேர்த்து வைத்து(க் கஃபனிட்டு) இவர்களில் குர்ஆனை அதிகம் அறிந்தவர் யார்? என நபி (ஸல்) அவர்கள் கேட்பார்கள். ஒருவர் சுட்டிக்காட்டப்பட்டதும் அவரது உடலை உட்குழியில் முத-ல் வைப்பார்கள். மேலும், மறுமை நாளில் இவர்களுக்கு நானே சாட்சியாவேன் என்று கூறிவிட்டு, அவர்களுடைய இரத்தத்துடனேயே அவர்களை அடக்கம் செய்யும்படி உத்தர விட்டார்கள். அவர்களுக்காக நபி (ஸல்) அவர்கள் (ஜனாஸாத் தொழுகை) தொழவு மில்லை; அவர்கள் நீராட்டப்படவு மில்லை.151

4080 ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

 என் தந்தை (அப்துல்லாஹ் உஹுதுப் போரில்) கொல்லப்பட்ட போது நான் அழ ஆரம்பித்தேன். மேலும், அவரது முகத்திலிருந்த துணியை விலக்க முனைந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்களின் தோழர்கள் என்னைத் தடுக்கத் தொடங்கினர். நபி (ஸல்) அவர்கள் (என்னைத்) தடுக்கவில்லை. மேலும் நபி (ஸல்) அவர்கள், அவருக்காக நீ அழவேண்டாம்....அல்லது அவருக்காக நீ ஏன் அழுகின்றாய்?.... ஜனாஸா (அந்த இடத்திலிருந்து) தூக்கப்படும் வரை, வானவர்கள் தங்கள் இறக்கைகளை விரித்து அவருக்கு நிழல் கொடுத்துக் கொண்டிருப்பார்கள் என்று கூறினார்கள்.152

4081 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் ஒரு கனவு கண்டேன். (அதில்) நான் ஒரு வாளை அசைத்தேன். அதன் முனை முறிந்து விட்டது. உஹுதுப் போரின் போது இறை நம்பிக்கையாளர்களுக்கு ஏற்பட்ட இழப்பை அது குறித்தது. பிறகு மீண்டுமொரு முறை அதை நான் அசைத்தேன். அது முன்பிருந்ததை விட மிக அழகாக மாறிவிட்டது. அது அல்லாஹ் (அதே உஹுதுப்போரில்) கொணர்ந்த உறுதிப்பாட்டையும், (சிதறி ஓடிய) இறை நம்பிக்கையாளர்கள் (மீண்டும்) ஒன்று திரண்டதையும் குறித்தது. அந்தக் கனவில் நான் சில காளை மாடுகளை (அவை அறுக்கப்படுவது போல்) கண்டேன். (உஹுதுப் போரில் கொல்லப்பட்டவர்களுக்கு) அல்லாஹ் வழங்கிய அந்தஸ்து (அவர்கள் இவ்வுலகில் இருந்த நிலையை விட அவர்களுக்குச்) சிறந்தது ஆகும். எனவே, (அந்த மாடுகள்) உஹுத் நாளில் கொல்லப்பட்ட இறை நம்பிக்கையாளர்களைக் குறிப்பவையாகும்.

இதை அபூமூசா அஷ்அரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.153

4082 கப்பாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் அல்லாஹ்வின் திருப்தியை நாடியவர்களாக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் ஹிஜ்ரத் செய்தோம். எங்களுக் குரிய பிரதிபலன் அல்லாஹ்வின் பொறுப்பாகி விட்டது. எங்களில் சிலர் தமக்குரிய பிரதிபலனில் எதையுமே (இவ்வுலகத்தில்) அனுபவிக்காமல் சென்று விட்டனர். அவர் களில் ஒருவர் தாம், முஸ்அப் பின் உமைர் (ரலி) அவர்கள். அவர் உஹுத் நாளில் கொல்லப்பட்டார். அவர் கோடுபோட்ட வண்ணத்துணி ஒன்றை மட்டுமே விட்டுச் சென்றார். அவரது தலையை நாங்கள் அதனால் மறைத்தால் அவரது இரு கால்கள் வெளியில் தெரிந்தன; கால்களை மறைத்தால் தலை வெளியில் தெரிந்தது. அப்போது எங்களிடம் நபி (ஸல்) அவர்கள், அவரது தலையைத் துணியால் மறைத்து விட்டு அவர் மீது இத்கிர் புல்லையிடுங்கள்.... அல்லது அவரது கால் மீது இத்கிர் புல்லைப் போடுங்கள்.... என்று கூறினார்கள்.

(உஹுதுப் போரில் கலந்து கொண்ட) எங்களில் வேறு சிலரும் உள்ளனர். அவர்களின் (பிரதிபலன் இந்த உலகிலும்) கனிந்து விட்டது. அதை அவர்கள் (இவ்வுலகிலும்) பறித்து (அனுபவித்து)க் கொண்டார்கள்.154

பாடம் : 28

உஹுத் மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதனை நேசிக்கிறோம்.

இதை நபி (ஸல்) அவர்களிடமிருந்து அபூ ஹுமைத் (ரலி) அவர்களும், அபூ ஹுமைத் (ரலி) அவர்களிடமிருந்து அப்பாஸ் பின் சஹ்ல் (ரலி) அவர்களும் அறிவிக்கி றார்கள்.155

4083 அனஸ் (பின் மாலிக்-ரலி) அவர்கள் கூறியதாவது:

இந்த (உஹுத்) மலை நம்மை நேசிக்கிறது. நாமும் அதனை நேசிக்கிறோம் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.156

4084 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(கைபர் போரிலிருந்து நாங்கள் திரும்பி வந்து கொண்டிருந்த போது) உஹுத் (மலை) நபி (ஸல்) அவர்களுக்குத் தென்பட்டது. அப்போது அவர்கள், இந்த மலை நம்மை நேசிக்கிறது; நாமும் அதனை நேசிக்கிறோம். இறைவா! இப்ராஹீம் (அலை) அவர்கள் மக்காவைப் புனிதமானதாக அறிவித்தார்கள். நான் இரு (கருங்கற்கள் நிறைந்த) மலைகளுக் கிடையிலுள்ள பகுதியை (மதீனாவை)ப் புனிதமானதாக அறிவிக்கிறேன் என்று கூறினார்கள்.157

4085 உக்பா பிர் ஆமிர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு நாள் நபி (ஸல்) அவர்கள் புறப்பட்டு வந்து, இறந்தவர்களுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்ததைப் போன்று உஹுதுப் போர் உயிர்த்தியாகிகளுக்காக (ஜனாஸா தொழுகை) தொழுவித்தார்கள். பிறகு மேடைக்கு (மிம்பருக்கு) வந்து, நிச்சயமாக, நான் உங்களுக்காகக் காத்தி ருப்பேன். உங்களுக்கு நான் சாட்சி ஆவேன். மேலும், நான் இப்போது (கவ்ஸர் எனும்) எனது தடாகத்தைக் காண்கிறேன். எனக்கு பூமியினுடைய கருவூலங்களின் திறவு கோல்கள்.... அல்லது பூமியின் திறவு கோல்கள்.... கொடுக்கப்பட்டுள்ளன. அல்லாஹ்வின் மீதாணையாக என(து இறப்பு)க்குப் பின்னால் நீங்கள் இணை வைப்பவர்களாக ஆகிவிடுவீர்களோ என்று நான் பயப்பட வில்லை; ஆனால், (உலகத்திற்காக) நீங்கள் ஒருவரோடொருவர் (போட்டியிட்டுக் கொண்டு) மோதிக் கொள்வீர்களோ என்று தான் பயப்படுகின்றேன் என்று கூறினார்கள்.158

பாடம் : 29

ரஜீஉ, ரிஃல், தக்வான், பிஃரு மஊனா ஆகிய போர்களும் அளல், காரா குலத்தார் குறித்த செய்தியும் ஆஸிம் பின் ஸாபித்

(ரலி), குபைப் (ரலி) மற்றும் அவர்களின் தோழர்கள் குறித்த செய்தியும்.159

ரஜீஉ போர், உஹுதுப் போருக்குப் பின்னால் நடைபெற்றது என ஆஸிம் பின் உமர் (ரஹ்) அவர்கள் கூறியதாக இப்னு இஸ்ஹாக் (ரஹ்) அவர்கள் அறிவித்தார்கள்.

4086 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் (பத்துப்பேர் கொண்ட) உளவுப் படையொன்றை (ஓரிடத்திற்கு) அனுப்பினார்கள். உமர் பின் கத்தாப் (ரலி) அவர்களின் புதல்வர் ஆஸிமின்(தாய் வழிப்)பாட்டனார் ஆஸிம் பின் ஸாபித்

(ரலி) அவர்களை அப்படையினருக்குத் தலைவராக்கினார்கள். அவர்கள் (மதீனாவிலிருந்து புறப்பட்டு வந்து) மக்காவுக்கும் உஸ்ஃபானுக்கும் இடையிலுள்ள (ஹத்தா என்ற) இடத்தில் இருந்த போது ஹுதைல் குலத்தைச் சேர்ந்த பனூ -ஹ்யான் என்றழைக்கப்பட்ட கிளையினருக்கு அவர் களைப் பற்றித் தெரிவிக்கப்பட்டது. அவர்கள், அப்பெய்யும் வீரர்கள் சுமார் நூறு பேருடன் (கிளம்பி, உளவுப்படையினரைப் பிடிப் பதற்காக) அவர்களின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்தனர். உளவுப்படையினர் இறங்கித் தங்கியிருந்த இடத்திற்கு வந்து சேர்ந்தனர். படையினர் மதீனாவிலிருந்து உணவாகக் கொண்டுவந்திருந்த பேரீச்சம் பழங்களின் கொட்டைகளை அங்கே கண்டனர். அப்போது இது யஸ்ரிப் (மதீனா நகரின்) பேரீச்சம் பழம் என்று சொல்லிக் கொண்டனர். எனவே, உளவுப்படையினரின் பாதச்சுவடுகளைப் பின் தொடர்ந்து வந்து, இறுதியில் அவர்களை அடைந்தேவிட்டனர். ஆஸிம் (ரலி) அவர்களும், அவர்களுடைய நண்பர்களும் இதை அறிந்த போது (மலைப் பாங்கான) உயரமான ஓரிடத்தில் தஞ்சம் புகுந்தனர். அப்போது (துரத்தி வந்த) அந்தக் கிளையினர் அவர்களைச் சுற்றி வளைத்துக் கொண்டு அவர்களைப் பார்த்து, நீங்கள் எங்களிடம் இறங்கிவந்து விட்டால், உங்களில் யாரையும் நாங்கள் கொலை செய்ய மாட்டோம் என்று உங்களுக்கு உறுதிமொழியும் வாக் குறுதியும் தருகிறோம் என்று கூறினர். அப்போது ஆஸிம் பின் சாபித் (ரலி) அவர்கள், நான் ஓர் இறை மறுப்பாளனின் (வாக்குறுதியை நம்பி அவனது) பாதுகாப்பில் இறங்கிச் செல்ல மாட்டேன். இறைவா! எங்களைப் பற்றிய செய்தியை உன் தூதருக்குத் தெரிவித்து விடு என்று கூறினார்கள். அப்போது அக் கிளையினர் உளவுப்படையினருடன் சண்டையிட்டு ஆஸிம் (ரலி) அவர்கள் உட்பட ஏழுபேரை அம்பெய்து கொன்றுவிட்டனர். இறுதியில் குபைப், ஸைத் (ரலி), மற்றொருவர் மட்டுமே160 எஞ்சியிருந்தனர். இம்மூவருக்கும் உறுதி மொழியும் வாக்குறுதியும் (எதிரிகள்) அளித்தனர். அவர்களது உறுதிமொழி மற்றும் வாக்குறுதியின் பேரில் இறங்கி வந்தனர். அவர்கள் (மூவரும்) தங்கள் கையில் கிடைத்தவுடன் (எதிரிகள்) தங்களது அம்பின் நாணை அவிழ்த்து அதன் மூலம் அவர்களைப் பிணைத்தனர். (இதைக் கண்ட) அந்த மூன்றாம் மனிதர், இது முதலாவது நம்பிக்கைத் துரோகம். என்று கூறி, அவர்களுடன் வர மறுத்து விட்டார், எனவே, அவரை (அடித்து)த் துன்புறுத்தி தம்முடன் வரும்படி நிர்பந்தித் தனர். ஆனால், அவர் உடன்படவில்லை. எனவே, அவரை அவர்கள் கொலைசெய்து விட்டனர். பிறகு, குபைப் (ரலி) அவர் களையும், ஸைத் பின் தஸினா (ரலி) அவர்களையும் கொண்டு சென்று மக்காவில் விலைக்கு விற்று விட்டனர். ஹாரிஸ் பின் ஆமிர் பின் நவ்ஃபல் என்பவருடைய மக்கள், குபைப் (ரலி) அவர்களை (பழிதீர்ப்பதற்காக) விலைக்கு வாங்கிக் கொண்டனர். (ஏனெனில்,) குபைப் (ரலி) அவர்கள் ஹாரிஸ் பின் ஆமிரை பத்ருப் போரின் போது கொன்றிருந்தார். ஹாரிஸின் மக்களிடத்தில் குபைப் (ரலி) அவர்கள் (புனித மாதங்கள் முடிந்து) அவரைக் கொல்ல அவர்கள் ஒன்று திரளும் (நாள் வரும்) வரையில் கைதியாக இருந்து வந்தார். (கொல்லப்படும் நாள் நெருங்கிய போது தன்னுடைய மறைவான உறுப்புகளிலிருந்த முடிகளை) மழிப்பதற்காக ஹாரிஸின் மகள் ஒருத்தியிடம் சவரக்கத்தி ஒன்றை குபைப் (ரலி) அவர்கள் இரவலாகக் கேட்டார். அவளும் அவருக்கு இரவலாகத் தந்தாள். (அதற்குப் பின் நடந்ததை அப் பெண்மணியே விளக்கிக்) கூறுகிறார்கள்: நான் என்னுடைய சிறிய மகனைக் கவனிக்காமல் இருந்து விடவே, அவன் (விளையாடிக் கொண்டே) தவழ்ந்து குபைப் அவர்களிடம் வந்து சேர்ந்தான். அவனை குபைப் அவர்கள் தமது மடியில் வைத்துக் கொண்டார்கள். (இந்நிலையில்) அவரை நான் பார்த்த போது பலமாக அதிர்ந்தேன். இதை அவர் புரிந்து கொண்டார். அவரது கையில் கத்தி இருந்தது. அப்போது அவர், இவனை நான் கொன்று விடுவேன் என்று அஞ்சுகிறாயா? அல்லாஹ்வின் நாட்டப்படி நான் அப்படிச் செய்பவன் அல்லன் என்று கூறினார். குபைபை விடச் சிறந்த ஒரு கைதியை நான் (என் வாழ்நாளில்) கண்டதில்லை. ஒரு நாள் அவர் தம் கையிலிருந்த திராட்சைப் பழக் குலையிலிருந்து (பழங்களைப் பறித்து) சாப்பிட்டுக் கொண்டி ருக்கக் கண்டேன். அந்நாளில் மக்காவில் எந்தப் பழவகையும் இருக்கவில்லை. மேலும், அப்போது அவர் இரும்புச் சங்கி-யால் பிணைக்கப்பட்டிருந்தார். (பிற்காலத்தில் அந்த நிகழ்ச்சியை நினைவு கூர்ந்து)அது குபைபுக்கு அல்லாஹ் வழங்கிய உணவு என்று அந்தப் பெண் கூறிவந்தார்- (அவரைக் கொல்வதற்காக - மக்காவின்) புனித எல்லைக்குவெளியே அவரை அவர்கள் கொண்டு வந்த போது, இரண்டு ரக்அத்துகள் நான் தொழுது கொள்ள என்னை விடுங்கள் என்று குபைப் கேட்டார். (அவர்களும் அனுமதிக்க, குபைப் இரண்டு ரக்அத்துகள் தொழுதார்.) பிறகு, அவர்களின் பக்கம் திரும்பி, நான் மரணத்தைக் கண்டு அஞ்சுகிறேன் என்று நீங்கள் எண்ணி விடுவீர்கள் என்ற அச்சம் எனக்கில்லாமல் இருந்திருந்தால் நான் (தொழுகையை) அதிகமாக்கியிருப்பேன் என்று கூறினார். அவர்தான் (இறைவழியில்) கொல்லப்படு வதற்கு முன் இரண்டு ரக்அத்கள் தொழுவதை முன்மாதிரியாக்கியவர் ஆவார். பிறகு இறைவா! இவர்களை நீ எண்ணி வைத்துக் ( கொண்டு, தனித்தனியாக இவர்களைக் கவனித்துக்) கொள்வாயாக! என்று பிரார்த்தித்தார். அதன் பிறகு, நான் முஸ்-மாகக் கொல்லப்படும் போது எதைப் பற்றியும் நான் பொருட்படுத்தமாட்டேன். எந்த இடத்தில் நான் இறந்தாலும் இறைவனுக்காகவே நான் கொல்லப்படுகிறேன் (என்பதில் எனக்கு மகிழ்ச்சியே). நான் கொலையுறுவது அல்லாஹ்வின் திருப்தியைப் பெறுவதற்காகத் தான் எனும் போது, அவன் நாடினால் எனது துண்டிக்கப்பட்ட உறுப்புகளின் இணைப்பு களின் மீது தன் அருள்வளத்தைப் பொழிவான் என்று (கவிபாடிக்) கூறினார்கள்.

பிறகு, உக்பா பின் ஹாரிஸ் என்பவன் குபைப் (ரலி) அவர்களிடம் வந்து, அவர்களைக் கொன்றுவிட்டான். மேலும், (ஆஸிம் பின் சாபித் (ரலி) அவர்கள் கொல்லப்பட்டு விட்ட செய்தி குறைஷிகளுக்குக் கிடைத்த போது) அவர்கள் அவரை அடையாளம் கண்டு கொள்வதற்காக அவரது உட-ல் ஒர் உறுப்பை எடுத்து வரும்படி ஆளனுப்பினார்கள். (ஏனெனில்,) ஆஸிம் (ரலி) அவர்கள் பத்ருப் போரின் போது அவர்களின் தலைவர்களில் ஒருவரை கொலை செய்திருந்தார். (அவரது உட-ன் ஒரு முக்கிய உறுப்பை வெட்ட அவர்கள் போன போது) ஆஸிம் (ரலி) அவர்களுக்கு மேல் (அவர்களைப் பாதுகாக்கும் நோக்கில்) அல்லாஹ் மேகத்தைப் போன்று ஆண் தேனீக்களை அனுப்பினான். குறைஷி களின் தூதர்களிடமிருந்து ஆஸிம் (ரலி) அவர்களை (சூழ்ந்து கொண்டு) அவை பாதுகாத்தன. ஆகவே, அவரிடமிருந்து எதையும் எடுக்க அவர்களால் இயலவில்லை.161

4087 ஜாபிர் (பின் அப்தில்லாஹ் -ரலி) அவர்கள் கூறியதாவது:

 அபூ சிர்வஆ (உக்பா பின் ஹாரிஸ்) என்பவனே குபைப் (ரலி) அவர்களைக் கொன்றான்.

4088 அனஸ் ( பின் மாலிக் -ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் எழுபது பேர்களை ஒரு தேவைக்காக அனுப்பி வைத்தார்கள். அவர்கள் குர்ராஃ (திருக்குர்ஆனை நன்கறிந்த வர்கள்) என்று அழைக்கப்பட்டனர்- அப்போது பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த ரிஃல் மற்றும் தக்வான் ஆகிய இரு கூட்டத்தார், பிஃரு மஊனா என்றழைக்கப்படும் ஒரு கிணற்றுக்கு அருகில் அவர்களை இடைமறித்தனர். அப்போது அந்த நபித்தோழர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (உங்களிடம் போரிடு வதற்காக) உங்களை நாடி நாங்கள் வரவில்லை. நபி (ஸல்) அவர்களின் ஒரு தேவைக்காகவே நாங்கள் சென்று கொண்டிருக்கிறோம் என்று கூறினர். ஆயினும், அவர்கள் அந்த நபித் தோழர்களைக் கொன்று விட்டனர். ஆகவே, நபி (ஸல்) அவர்கள் அவர்களுக்கெதிராக ஒரு மாத காலம் அதிகாலைத் தொழுகையில் பிரார்த்தித்தார்கள். இதுவே (தொழுகையில்) குனூத்(என்னும் துஆ ஓதுவ)தின் துவக்க மாகும். நாங்கள் அதற்கு முன் குனூத் ஓதுபவர்களாக இருக்கவில்லை.162

அறிவிப்பாளர் அப்துல் அஸீஸ் பின் ஸுஹைப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு மனிதர் அனஸ் (ரலி) அவர்களிடம், குனூத் குறித்து, அது ருகூவிற்குப் பின்பா? அல்லது கிராஅத் ஓதி முடித்த பின்பா? (எப்போது அதை ஓத வேண்டும்?) என்று கேட்டார். அதற்கு அல்ல; கிராஅத் ஓதி முடித்த பின்புதான் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.

4089 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஒரு மாதம் (ஃபஜ்ர் தொழுகையில்) ருகூஉவிற்குப் பின்னால் அரபுக் குலத்தினர் பலருக்கெதிராக பிரார்த்தித்து குனூத் (என்னும் சிறப்பு துஆ) ஓதினார்கள்.

 

4090 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ

-ஹ்யான் குலத்தினர்163 (வந்து தங்களுடைய) பகைவர்களுக்கு எதிராக (படை தந்து) உதவும் படி அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் கோரினர். அப்போது அவர்களுக்கு அன்சாரி களில் எழுபது பேர்களை அனுப்பித் தந்து நபி(ஸல்) அவர்கள் உதவினார்கள். அந்தக் காலத்தில் அவர்களை (அந்த எழுபது பேர்களை) நாங்கள் குர்ராஃ- திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள் என்று பெயரிட்டு அழைத்து வந்தோம். அவர்கள் பக-ல் (பிழைப்பிற்காக) விறகு சேகரிப்பவர்களாகவும் இரவில் தொழக்கூடியவர்களாகவும் இருந்து வந்தனர். இவர்கள் (பயணம் செய்து) பிஃரு மஊனா எனுமிடத்தை அடைந்த போது (பனூ சுலைம் குலத்தைச் சேர்ந்த) அவர்கள், இவர்களை வஞ்சித்துக் கொன்றுவிட்டனர். இந்தச் செய்தி நபி (ஸல்) அவர்களை எட்டிய போது ஒரு மாத காலம் சுப்ஹுத் தொழுகையில் அரபுக் குலங்களான ரிஃல், தக்வான், உஸய்யா மற்றும் பனூ -ஹ்யான் குலத்தினருக்கெதிராக பிராத்தித்து குனூத் (எனும் சிறப்பு துஆ) ஓதினார்கள். இவர்கள் குறித்து (அருளப் பட்டிருந்த) குர்ஆன் (வசனமொன்றை) ஓதி வந்தோம். பின்னாளில் அது (இறைவனால்) நீக்கப்பட்டுவிட்டது. நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்து விட்டான்; எங்களை அவன் திருப்தியுறச் செய்தான் என்று எங்களைப் பற்றி எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள் என்பதே அந்த வசனமாகும்.164

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து கத்தாதா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் வரையில் சுப்ஹுத் தொழுகையில் அரபுக் குலங்களைச் சேர்ந்த ரிஃல், தக்வான், உஸய்யா, மற்றும் பனூ

-ஹ்யான் கூட்டத்தினருக்கு எதிராக குனூத் பிரார்த்தனை புரிந்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்களிடமிருந்து இதே கருத்தில் அறிவிக்கப்படும் இன்னோர் அறிவிப்பில், அன்சாரிகளான அந்த எழுபது பேரும் பிஃரு மஊனாவில் கொல்லப் பட்டார்கள் என்று காணப்படுகிறது.

4091 அனஸ் (பின் மாலிக்-ரலி) அவர்கள் கூறியதாவது:

(என் தாயார்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர், என் தாய் மாமா (ஹராம் பின் மில்ஹான்-ரலி) அவர்களை (குர்ஆனை நன்கறிந்தவர்களான எழுபது) பயணிகளில் ஒருவராக நபி (ஸல்) அவர்கள் அனுப்பி வைத்தார்கள். இணைவைப்பவர்களின் தலைவன் ஆமிர் பின் துஃபைல், பின்வரும் மூன்று விஷயங்களில் ஒன்றைத் தேர்ந் தெடுக்கும்படி (நபி - ஸல் - அவர்களிடம்) கூறினான்:

கிராமப்புற மக்கள் உங்களுக்குச்

சொந்தம்; (அவர்களுக்கு ஆட்சியாளராக நீங்கள் இருங்கள்;) நகர்ப் புற மக்கள் எனக்குச் சொந்தம். (நான் அவர்களுக்கு ஆட்சியாளராக இருப்பேன்.)

அல்லது நான் உங்களுக்கு கலீஃபாவாக -பிரதிநிதியாக இருப்பேன்.

அல்லது ஆயிரக்கணக்கான கத்ஃபான் குலத்தினருடன் (வந்து) உங்களிடம் போர் தொடுப்பேன் என்று கூறினான்.

பிறகு இன்னாரின் தாய் வீட்டில் ஆமிர் கொள்ளை நோயினால் பீடிக்கப்பட்டான்.165 அப்போது அவன், இன்னாரின் குடும் பத்தைச் சேர்ந்த ஒரு பெண்ணின் வீட்டில் வா-ப ஒட்டகத்திற்கு ஏற்படும் கொள்ளை நோய் போன்று (எனக்கும்) ஏற்பட்டு விட்டது. எனவே, என்னுடைய குதிரையை என்னிடம் கொண்டு வாருங்கள் என்று கூறினான். பிறகு அவன் தன்னுடைய குதிரையின் முதுகின் மீதே இறந்து போனான்.

(என் தாய்) உம்மு சுலைம் அவர்களின் சகோதரர் ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்களும், கால் ஊனமுற்றவர் ஒருவரும், இன்னாரின் குடும்பத்தைச் சேர்ந்தவர்களில் ஒருவரும்166 (நபி-ஸல்-அவர்களின் ஆணையின் பேரில் பனூ ஆமிர் குலத்தாரை நோக்கி) நடந்தார்கள். அப்போது ஹராம் அவர்கள், (தம்மிரு சகாக்களை நோக்கி) நீங்கள் இருவரும் (எனக்கு) அருகிலேயே இருங்கள். நான் பனூ ஆமிர் குலத்தாரிடம் செல்கிறேன். அவர்கள் எனக்குப் பாதுகாப்பளித்தால் நீங்கள் (அப்படியே) இருங்கள். என்னை அவர்கள் கொன்று விட்டால் நீங்கள் உங்கள் சகாக்களிடம் சென்று (தெரிவித்து) விடுங்கள் என்று கூறினார்கள். (பிறகு, பனூ ஆமிர் குலத்தாரிடம் சென்று, அவர்களை நோக்கி,) எனக்குப் பாதுகாப்புத் தருவீர்களா? அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களின் தூதுச் செய்தியைத் தெரிவிக்கிறேன் என்று கேட்டுவிட்டு அவர்களிடம் (அந்தச் செய்தியைப்) பேசலானார்கள். அப்போது அக் குலத்தார் ஒருவனுக்கு சைகை செய்ய, அவன் ஹராம் (ரலி) அவர்களுக்குப் பின்னால் வந்து அவர்களை (ஈட்டியால்) குத்தி விட்டான். -அறிவிப்பளர் ஹம்மாம் பின் யஹ்யா (ரஹ்) கூறுகிறார்கள்: ஈட்டியால் குத்தி (மறுபக்கம் வரை) செலுத்தினான் என்று கூறியதாக எண்ணுகிறேன்.- உடனே ஹராம் அவர்கள், அல்லாஹு அக்பர் -அல்லாஹ் மிகப் பெரியவன். கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்று விட்டேன் என்று கூறினார்கள். பிறகு அன்னாரின் உயிர் பிரிந்தது. கால் ஊனமுற்ற வரைத் தவிர மற்ற அனைவரும் கொல்லப்பட்டனர். அந்த நேரத்தில் அந்த ஊனமுற்றவர் மலை உச்சியில் இருந்தார். பிறகு, (இச் சம்பவத்தில் உயிர்நீத்தவர்கள் தொடர்பாக) அல்லாஹ் எங்கள் மீது (ஒரு வசனத்தை) அருளினான். பிறகு அந்த வசனம் (அல்லாஹ்வின் ஆணையின்படி) நீக்கப்பட்டு விட்டது. நாங்கள் எங்கள் இறைவனிடம் சென்று சேர்ந்து விட்டோம். அவன் எங்களைக் குறித்து திருப்தியடைந்தான். (அருள் வளங்களை அள்ளித் தந்து) எங்களை அவன் திருப்தியடையச் செய்தான் (என்பதே அந்த வசனம்). ஆகவே, நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் விரோதமாக நடந்து கொண்ட ரிஃல், தக்வான், பனூ -ஹ்யான், மற்றும் உஸய்யா குலத்தாருக்கெதிராக முப்பது நாள் காலை(த் தொழுகை)யில் பிரார்த்தனை புரிந்தார்கள்.167

4092 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிஃரு மஊனா சம்பவத்தின் போது, எனது தாய்மாமாவான ஹராம் பின் மில்ஹான் (ரலி) அவர்கள் (ஈட்டியால்) குத்தப்பட்ட சமயத்தில், தமது காயத்திலிருந்து - இதோ இப்படி - ரத்தத்தை அள்ளி தமது முகத்தின் மீதும் தலையின் மீதும் தெளித்துக் கொண்டு, கஅபாவின் அதிபதி மீதாணையாக! நான் வெற்றி பெற்று விட்டேன் என்று சொன்னார்கள்.

4093 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(மக்கா இறைமறுப்பாளர்கள் கொடுத்த) தொல்லை கடுமையான போது (மதீனாவுக்கு ஹிஜ்ரத்) புறப்பட அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்களிடம் அனுமதி கேட் டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (சற்று) பொறுங்கள் என்று கூறினார்கள். உடனே அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! (அல்லாஹ்வின் தரப்பிலிருந்து நீங்கள் ஹிஜ்ரத் செல்ல) தங்களுக்கு அனுமதி வழங்கப்படுவதை எதிர்பார்க்கின்றீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், (ஆம்) நான் அதனை நம் பிக்கையுடன் எதிர்பார்க்கிறேன் என்று கூறிவந்தார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர் களை எதிர்பார்த்துக் காத்துக் கொண்டிருந்தார்கள். பின்பு ஒரு நாள் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், லுஹர் நேரத்தில் அபூபக்ர் (ரலி) அவர்களிடம் வந்து அவர் களை அழைத்தார்கள். மேலும் (அபூபக்ர் அவர்களே! நான் ரகசியம் பேசவேண்டும்) உங்களுடன் இருப்பவர்களை வெளியே செல்லும்படிக் கூறுங்கள் என்றும் கூறினார்கள். அதற்கு அபூபக்ர் (ரலி) அவர்கள் (என்னுடனிருக்கும்) இந்த இருவரும் என்னிரு பெண்மக்கள் (ஆயிஷாவும், அஸ்மாவும்) தாம் என்று பதிலளித்தார்கள். அப்போது நபி (ஸல்) அவர்கள் (ஹிஜ்ரத் செய்து, மக்காவிலிருந்து) புறப்பட எனக்கு அனுமதி வழங்கப்பட்டு விட்டது உங்களுக்குத் தெரிந்ததா? என்று கேட்டார்கள். அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! நானும் உடன்வருவதை விரும்புகிறீர்களா? என்று கேட்டார்கள். அதற்கு, (ஆம்) உடன் வருவதை விரும்புகிறேன் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! என்னிடத்தில் இரண்டு ஒட்டகங்கள் இருக்கின்றன. அவற்றை முன்கூட்டியே (ஹிஜ்ரத்) புறப்பட்டுச் செல்வதற்கென ஆயத்தமாக்கி வைத்துள்ளேன் என்று அபூபக்ர் (ரலி) அவர்கள் கூறினார்கள். பின்பு, அவற்றில் ஒன்றை நபி (ஸல்) அவர்களுக்குக் கொடுத்தார்கள். அந்த ஒட்டகத்திற்கு ஜத்ஆ என்று பெயர். பிறகு இருவரும் பயணம் புறப்பட்டுச் சென்று, ஸவ்ர் (மலைக்) குகைக்கு வந்து அதில் அவர்கள் இருவரும் ஒளிந்து கொண்டனர். ஆமிர் பின் ஃபுஹைரா, என் தாய்வழிச் சகோதரர் துஃபைல் பின் அப்தில்லாஹ் பின் சக்பரா அவர்களுக்கு அடிமையாக இருந்தார். மேலும் (என் தந்தை) அபூபக்ர் அவர்களிடம் பால் தரும் ஒட்டகம் ஒன்றிருந்தது. ஆமிர் பின் ஃபுஹைரா அந்த ஒட்டகத்தை மக்கா வாசிகளுடன் மதிய வேளையிலும் காலை வேளையிலும் ஓட்டிச் செல்லக் கூடியவராக இருந்தார். காலை நேரத்தில் மக்கா வாசிகளுடன் இருக்கும் அவர், இரவின் கடைசி நேரத்தில் நபி (ஸல்) அவர்களிடமும் அபூபக்ர் (ரலி) அவர்க ளிடமும் (அவர்களுக்கு ஒட்டகப் பால் தருவதற்காகச்) சென்று விடுவார். பிறகு அந்த ஒட்டகத்தை (மேய்ப் பதற்கு) ஓட்டிச் செல்வார். ஆனால், இடையர்களில் யாருக்கும் இது தெரியாது. நபி (ஸல்) அவர்கள் (குகையிலிருந்து அபூ பக்ருடன்) புறப்பட்ட போது அவ்விருவருடன் ஆமிர் பின் ஃபுஹைராவும் புறப்பட்டார். மதீனா போய்ச் சேரும் வரையில் அவர்கள் இருவரும் (முறைமாற்றி) ஆமிரைத் தமக்குப் பின் அமர்த்திக் கொண்டனர். (பின்பு) பிஃரு மஊனா நாளில் ஆமிர் பின் ஃபுஹைரா கொல்லப்பட்டார்.168

உர்வா (பின் ஸுபைர் -ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

பிஃரு மஊனாவில் இருந்த(குர்ஆனை நன்கறிந்த)வர்கள் கொல்லப்பட்டு அம்ர் பின் உமய்யா அள்ளம்ரீ (ரலி) அவர்கள் கைது செய்யப்பட்ட போது அன்னாரைப் பார்த்து ஆமிர் பின் துஃபைல், கொல்லப்பட்டுக் கிடந்த (உயிர்த் தியாகிகளில்) ஒருவரைச் சுட்டிக் காட்டி, இவர் யார்? என்று கேட்டான். அதற்கு அம்ர் பின் உமய்யா (ரலி) அவர்கள், இவர் ஆமிர் பின் ஃபுஹைரா என்று கூறினார். அதற்கு ஆமிர் பின் துஃபைல் இவர் கொல்லப்பட்ட பின்பு இவர் வானத்திற்கு உயர்த்தப்படுவதை நான் கண்டேன். எந்த அளவுக்கென்றால் வானத்தை நான் நோக்கிய போது, வானத்திற்கும் பூமிக்கும் இடையில் அவர் இருந்தார். பிறகு அவர் (பூமியில்) வைக்கப்பட்டார் என்று கூறினான்.

(கொல்லப்பட்ட) அவர்களின் செய்தி நபி (ஸல்) அவர்களுக்கு (ஜிப்ரீல் -அலை- மூலம்) எட்டியது. அவர்கள் கொல்லப்பட்ட செய்தியினைத் தம் தோழர்களுக்கு (பின்வரு மாறு) நபி (ஸல்) அவர்கள் தெரிவித்தார்கள்: உங்கள் தோழர்கள் கொல்லப்பட்டு விட்டனர். அவர்கள் தங்கள் இறைவனிடம், இறைவா! நாங்கள் உன்னைக் குறித்து திருப்தி கொண்டோம். நீ எங்களைக் குறித்து திருப்தி கொண்டாய்; எங்களைப் பற்றிய இந்தச் செய்தியை எங்கள் சகோதரர்களுக்கு தெரிவித்து விடுவாயாக! என்று கூறினர். எனவே இறைவன் அவர்களைப் பற்றிய செய்தியை நமக்கு அறிவித்தான்.

அறிவிப்பாளர் உர்வா பின் ஸுபைர் (ரஹ்) கூறுகிறார்கள்:

(பிஃரு மஊனா நிகழ்ச்சி நடந்த) அந்நாளில் அவர்களில் உர்வா பின் அஸ்மா பின் ஸல்த் (ரலி) அவர்களும் கொல்லப் பட்டார்கள். எனவேதான், (ஸுபைர் -ரலி- அவர்களின் மகனாகிய) எனக்கு அவரது பெயர் சூட்டப்பட்டது. (அன்று) முன்திர் பின் அம்ர் (ரலி) அவர்களும் கொல்லப் பட்டார்கள். எனவேதான், (என் சகோதரர் முன்திர் பின் ஸுபைருக்கு) முன்திர் எனப் பெயரிடப்பட்டது.

4094 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மாத காலம் (தொழுகையில்) ருகூவிற்குப் பின்னால் குனூத் (என்னும் சிறப்பு துஆ) ஓதினார்கள். (அதில்) ரிஅல், தக்வான் குலத்தாருக் கெதிராகப் பிரார்த்தித்தார்கள். மேலும், உஸய்யா குலத்தார் அல்லாஹ்வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்து விட்டனர் என்றும் கூறுவார்கள்.

4095 அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிஃரு மஊனாவில் தம் தோழர்களைக் கொலை செய்தவர்களுக்கெதிராக நபி (ஸல்) அவர்கள் முப்பது நாள் காலை(த்தொழுகை)யில் பிரார்த்தித்தார்கள். அப்போது, அல்லாஹ் வுக்கும் அவனுடைய தூதருக்கும் மாறு செய்த உஸய்யா, ரிஅல், தக்வான், (பனூ)

-ஹ்யான் குலத்தாருக்கெதிராகப் பிரார்த்தித்தார்கள்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

ஆகவே, இறைவன் தன்னுடைய தூதர் (ஸல்) அவர்களுக்கு பிஃரு மஊனாவில் கொல்லப்பட்டவர்கள் விஷயத்தில் குர்ஆன் வசனம் ஒன்றை அருளினான். அதை நாங்கள் ஓதிவந்தோம். பின்னர் (இறைவனால் அந்த வசனம்) நீக்கப்பட்டுவிட்டது.

(அந்த வசனம் இது தான்:) நாங்கள் எங்கள் இறைவனைச் சந்தித்து விட்டோம். அவன் எங்களைக் குறித்துத் திருப்தி யடைந்தான். நாங்களும் அவனைக் குறித்துத் திருப்தியடைந்தோம் என்று எங்கள் சமுதாயத்தாரிடம் தெரிவித்து விடுங்கள்.169

4096 ஆஸிம் அல் அஹ்வல் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான், அனஸ் பின் மாலிக் (ரலி) அவர்களிடம் தொழுகையில் குனூத் (என்னும் சிறப்பு துஆ நபிகளார் காலத்தில் இருந்ததா என்பது) குறித்துக் கேட்டேன். அதற்கு அவர்கள், ஆம் என்று பதிலளித்தார்கள். உடனே நான், ருகூவிற்கு முன்பா? அல்லது பின்பா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள், ருகூஉவிற்கு முன்புதான் என்று பதிலளித்தார்கள். உடனே நான், தாங்கள் ருகூஉவிற்குப் பின்னால் தான் என்று சொன்னதாக இன்னார் எனக்குத் தெரிவித் தாரே என்று கேட்டேன். அதற்கு அவர் தவறாகக் கூறியிருக்கிறார். நபி (ஸல்) அவர்கள் ருகூவிற்குப் பிறகு(ம் கூட) ஒரு மாத காலம் தான் குனூத் ஓதினார்கள். (அது எப்போது நடந்ததென்றால்,) நபி (ஸல்) அவர்கள் குர்ரா- திருக்குர்ஆனை நன்கறிந்தவர்கள் என்று கூறப்பட்டு வந்த சிலரை -அவர்கள் எழுபது பேர் ஆவர்- இணைவைப்பவர்கள் சிலரிடம் அனுப்பிவைத்தார்கள். இவர்களது தரப்பிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கும் இவர்களுக்கும் இடையே (பரஸ்பரப் பாதுகாப்பு) ஒப்பந்தம் ஏற்பட்டிருந்தது. (இவ்வாறு) அல்லாஹ்வின் தூதருடன் ஒப்பந்தம் செய்து கொண்டிருந்த இவர்களது கையோங்கி (அந்த 70 பேர்களையும் கொன்று) விட்டனர். எனவே தான், அவர் களுக்கெதிராக ஒரு மாத காலம் ருகூவிற்குப் பின்புஅல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், குனூத் ஓதினார்கள் என்று அனஸ் (ரலி) அவர்கள் பதிலளித்தார்கள்.170

பாடம் : 30

அகழ்ப் போர்-இதுவே அஹ்ஸாப் போராகும்.171

இது (ஹிஜ்ரி) நான்காம் ஆண்டு ஷவ்வால் மாதம் நடைபெற்றதென மூசா பின் உக்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

4097 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

உஹுதுப் போரின் போது (படை வீரர்களைப் பார்வையிட்டு ஒழுங்குப்படுத்திக் கொண்டிருந்த) நபி (ஸல்) அவர்களிடம் நானாக முன்சென்று (என்னைப் படையில் சேர்த்துக் கொள்ளும்படி) கேட்டேன். அப்போது எனக்குப் பதினான்கு வயது. எனவே, என்னை நபி (ஸல்) அவர்கள் அனுமதிக்கவில்லை. பிறகு (அடுத்த ஆண்டு) அகழ்ப் போரின் போது நானாக முன்சென்று கேட்டேன். அப்போது எனக்கு வயது பதினைந்து. எனவே, என்னை அனுமதித்தார்கள்.172

4098 சஹ்ல் பின் சஅத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போர் சமயத்தில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் நாங்கள் இருந்தோம். நபித்தோழர்கள் அகழ் தோண்டிக் கொண்டிருந்தனர். நாங்கள் எங்கள் தோள் மீது மண் சுமந்து கொண்டிருந்தோம். அப்போது, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், இறைவா! மறுமை வாழ்வைத்தவிர வேறு (நிரந்தர) வாழ்வு கிடையாது. ஆகவே, (அதற்காக உழைக்கும்) முஹாஜிர்களுக்கும் அன்சாரிகளுக்கும் மன்னிப்பருள்வாயாக! என்று (பாடியபடி) கூறினார்கள்.173

4099 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் அகழ்(வெட்டும் பணியைப் பார்வையிடுவதற்காக அந்த இடத்தை) நோக்கிப் புறப்பட்டார்கள். அப்போது குளிரான காலை நேரத்தில் முஹாஜிர்களும் அன்சாரி களும் (அகழ்) தோண்டிக் கொண்டிருந்தனர். அவர்களுக்காக அந்தப் பணியைச் செய்வதற்கு அவர்களிடம் அடிமை(ஊழியர்)கள் எவரும் இருக்கவில்லை. அவர்கள் படும் பாட்டையும், பசியையும் கண்ட போது இறைவா! நிச்சயமாக (நிலையான) வாழ்க்கை என்பது மறுமை வாழ்க்கையே. எனவே, அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் மன்னிப்பு வழங்குவாயாக! என்று நபி (ஸல்) அவர்கள் (பாடியவண்ணம்) கூறினார்கள். நபி (ஸல்) அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் அவர்கள், நாங்கள் வாழும் காலமெல்லாம் அறப் போரில் ஈடுபடுவோம் என முஹம்மத் (ஸல்) அவர்களிடம் உறுதிமொழி வழங்கி யுள்ளோம் என்று கூறினர்.174

4100 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

முஹாஜிர்களும், அன்சாரிகளும் மதீனாவைச் சுற்றிலும் அகழ்தோண்ட ஆரம்பித்தனர். அப்போது தம் முதுகுகளின் மீது மண் எடுத்துச்சென்ற வண்ணம் நாங்கள் வாழும் காலமெல்லாம் இஸ்லாத்தில் நீடித்திருப்போம் என முஹம்மத் (ஸல்) அவர்க ளிடம் உறுதிமொழி வழங்கியுள்ளோம் என்று (பாடியபடி) கூறிக் கொண்டிருந்தனர். அவர்களுக்கு பதிலளிக்கும் விதத்தில் நபி (ஸல்) அவர்கள், இறைவா! மறுமையின் நன்மையைத் தவிர வேறு நன்மை எதுவு மில்லை. எனவே, (மறுமையின் நன்மையைப் பெற்றுக் கொள்வதற்காக உழைக்கும்) அன்சாரிகளுக்கும் முஹாஜிர்களுக்கும் நீ அருள்வளம் புரிவாயாக! என்று (பாட-லேயே) கூறினார்கள்.175

அனஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்: (அகழ் தோண்டிக் கொண்டிருக்கும்) அவர்களுக்கு எனது ஒரு கையளவு வாற்கோதுமை கொண்டு வரப்பட்டு, கெட்டுப் போன கொழுப்புடன் சேர்த்துச் சமைக்கப்பட்டு அந்த மக்களுக்கு முன் வைக்கப்படும். அப்போது அவர்கள் எல்லாரும் பசியுடன் இருப்பார்கள். அந்தக் கெட்டுப்போன கொழுப்பு நாற்ற மடித்தபடி தொண்டையிலேயே சிக்கிக் கொள்ளும்.

4101 அய்மன் அல்ஹபஷீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

நான் ஜாபிர் (ரலி) அவர்களிடம் சென்றேன். அப்போது அவர்கள் (பின் வருமாறு) கூறினார்கள்: நாங்கள் அகழ்ப் போரின் போது அகழ் தோண்டிக் கொண் டிருந்தோம். அப்போது கெட்டியான பாறாங்கல்லொன்று வெளிப்பட்டது. (அதை எவ்வளவோ முயன்றும் எங்களால் உடைக்க முடியவில்லை. உடனே இதுபற்றித் தெரிவிக்க) நபி (ஸல்) அவர்களிடம் சென்று, இதோ ஒரு பாறாங்கல் அகழில் காணப்படுகிறது என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள், நான் இறங்கிப் பார்க்கிறேன் என்று கூறிவிட்டு எழுந்தார்கள். அப்போது அவர்களது வயிற்றில் ஒரு கல் கட்டப்பட்டி ருந்தது. (ஏனெனில்,) நாங்கள் மூன்று நாட்கள் எதையும் உண்ணாமலிருந்தோம். பிறகு நபி (ஸல்) அவர்கள் குந்தா- (ல்ண்ஸ்ரீந்ஹஷ்ங்) எடுத்து பாறை மீது அடித்தார்கள். அது குறுமணலாக மாறியது. அப்போது நான், அல்லாஹ்வின் தூதரே! வீடு வரை செல்ல அனுமதியுங்கள் என்று கேட்டேன். (அவர்கள் எனக்கு அனுமதி வழங்கினார்கள். பிறகு, நான் வீட்டுக்குச் சென்று) என் மனைவி (சுஹைலா பின்த் மஸ்ஊத்) இடம், நபி (ஸல்) அவர்கள் பசியோடிருப்பதை நான் பார்த்தேன். அதைப் பார்த்துக் கொண்டு என்னால் பொறுத்திருக்க முடியவில்லை. உன்னிடம் ஏதேனும் (உணவு) இருக்கிறதா? என்று கேட்டேன். அதற்கு அவள், என்னிடம் சிறிதளவு கோதுமையும் பெட்டையாட்டுக் குட்டி ஒன்றும் உள்ளது என்று கூறினாள். உடனே நான் அந்த ஆட்டுக் குட்டியை அறுத்தேன். என் மனைவி கோதுமையை அரைத்தாள். பிறகு நாங்கள் இறைச்சியை சட்டியி-ட்டோம். குழைத்த மாவு இளகி (பக்குவ நிலைக்கு) வந்தது. மூன்று கற்களாலான அடுப்புக்கு மேல் சட்டியிருந்தது. அது முழுமையாக வெந்து விடும் நிலையிலிருந்தது. இந்த நிலையில் நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்தேன். என்னிடம் கொஞ்சம் உணவு இருக்கிறது. அல்லாஹ்வின் தூதரே! நீங்களும் (உங்களுடன்) இன்னும் ஒருவர்...அல்லது இருவர் வாருங்கள் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், (உன்னிடம்) எவ்வளவு உணவு இருக்கிறது? என்று கேட்டார்கள். அவர்களுக்கு அதை(அதன் அளவை)க் கூறினேன். இதுவே அதிகம்; சிறந்ததும் கூட என்று கூறினார்கள். பிறகு நபி அவர்கள், நான் வரும் வரையில் (அடுப்பி லிருந்து) சட்டியை இறக்க வேண்டாம்; சட்டியிலிருந்து ரொட்டியையும் இறக்க வேண்டாம் என்று நீ உன் மனைவியிடம் சொல் என்று கூறினார்கள். பிறகு (அங்கிருந்த தம் தோழர்களிடம்) நபி (ஸல்) அவர்கள் (எல்லாரும்) எழுந்திருங்கள் என்று கூறினார்கள். உடனே முஹாஜிர்களும் அன்சாரிகளும் எழுந்தனர். நான் என் மனைவியிடம் சென்ற போது, அடப் பாவமே! நபி (ஸல்) அவர்கள் தம்மோடு இருக்கும் முஹாஜிர்களுடனும் அன்சாரி களுடனும் வருகிறார்கள் என்று கூறினேன். உடனே என் மனைவி (உணவின் அளவு குறித்து) உங்களிடம் கேட்டார்களா? என்று வினவினார். அதற்கு நான், ஆம் என்று பதிலளித்தேன். (நபி ஸல்- அவர்கள் தம் தோழர்களுடன் வந்து சேர்ந்து,) (வீட்டிற்குள்) முண்டியடிக்காமல் நுழையுங்கள் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள் ரொட்டியைப் பிய்த்து அதன் மீது இறைச்சியை வைத்தார்கள். அதிலிருந்து எடுத்தவுடன் சட்டியையும் அடுப்பையும் மூடி வைத்தார்கள். தம் தோழர்களுக்கு அருகில் அதை வைத்தார்கள். பிறகு (சட்டியிலிருந்து இறைச்சியை) எடுத்து (தம் தோழர்களுக்கு)க் கொடுத்துக் கொண்டிருந்தார்கள். ரொட்டி யைப் பிய்த்தபடியும் (பாத்திரத்திலிருந்து இறைச்சியை எடுத்து (ரொட்டியின் மீது வைத்து)க் கொடுத்தபடியும் இருந்தார்கள். அவர்கள் வயிறு நிரம்ப உண்டனர். இறுதியில் சிறிது எஞ்சியது. பிறகு நபி (ஸல்) அவர்கள் (ஜாபிர் அவர்களின் மனைவியை நோக்கி), இதை நீயும் சாப்பிடு; அன்பளிப்பும் செய். ஏனெனில், மக்கள் பசியோடுள்ளனர் என்று கூறினார்கள்.

4102 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(போருக்காக) அகழ் தோண்டப்பட்டுக் கொண்டிருந்த போது நபி (ஸல்) அவர்களின் வயிறு (பசியினால்) மிகவும் ஒட்டியிருப்பதைக் கண்டேன். உடனே நான் திரும்பி என் மனைவியிடம் வந்து, நபி (ஸல்) அவர்களின் வயிறு மிகவும் ஒட்டிப் போயிருப்பதைக் கண்டேன். உன்னிடம் ஏதேனும் (உண்ண) இருக்கிறதா? என்று கேட்டேன். உடனே என்னிடம் என் மனைவி ஒரு பையைக் கொண்டு வந்தாள். அதில் ஒரு ஸாவு அளவு வாற் கோதுமையிருந்தது. வீட்டில் வளரும் ஆட்டுக் குட்டி ஒன்றும் எங்களிடம் இருந்தது. அதை நான் அறுத்தேன். என் மனைவி அந்தக் கோதுமையை அரைத்தாள். நான் (அறுத்து) முடிக்கும் போது அவளும் (அரைத்து) முடித்து விட்டாள். மேலும் அதனைத் துண்டுகளாக்கி அதற்கான சட்டியி-ட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் திரும்பி வந்தேன். (நான் புறப்படும் போது என் மனைவி,) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கும் அவர்களுடன் இருப்பவர்களுக்கும் முன்னால் என்னை நீங்கள் கேவலப்படுத்திவிட வேண்டாம். (உணவு கொஞ்சம் தானிருக்கிறது என்று கூறிவிடுங்கள்) என்று சொன்னாள். நான் நபி (ஸல்) அவர்களிடம் வந்து இரகசியமாக, அல்லாஹ்வின் தூதரே! நாங்கள் எங்களுக்குச் சொந்தமான ஆட்டுக் குட்டியொன்றை அறுத்து, எங்களிடம் இருந்த ஒரு ஸாவு அளவு வாற்கோதுமையை அரைத்தும் வைத்துள்ளோம். எனவே, தாங்களும் தங்களுடன் ஒரு சிலரும் (என் இல்லத்திற்கு) வாருங்கள் என்று அழைத்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் உரத்த

குரலில், அகழ்வாசிகளே! ஜாபிர் உங்களுக்காக உணவு தயாரித்துள்ளார். எனவே, விரைந்து வாருங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (ஜாபிர் -ரலி- அவர்களிடம்), நான் வரும் வரை நீங்கள் சட்டியை (அடுப்பிலிருந்து) இறக்க வேண்டாம். உங்கள் குழைத்த மாவில் ரொட்டி சுடவும் வேண்டாம் என்று கூறினார்கள். நான் திரும்பி வந்தேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மக்களை அழைத்துக் கொண்டு) அவர்களுக்கு முன்னால் வந்து கொண்டிருந்தார்கள். நான் மனைவியிடம் வந்து சேர்ந்தேன். (நபி -ஸல்- அவர்கள் தோழர்கள் பலருடன் வருவதைப் பார்த்து என் மனைவி கோபமுற்று) என்னைக் கடிந்து கொண்டாள். உடனே நான், நீ நபி (ஸல்) அவர்களிடம் சொல்லச் சொன்ன விஷயத்தை நான் (அவர்களிடம்) சொல்லிவிட்டேன் என்று கூறினேன். பிறகு நபி (ஸல்) அவர்களிடம் என் மனைவி குழைத்த மாவைக் கொடுத்தாள். நபி (ஸல்) அவர்கள் அதில் (தமது திரு வாயினால்) உமிழ்ந்தார்கள். மேலும், மாவில் பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு, எங்கள் இறைச்சிச் சட்டியை நோக்கி வந்தார்கள். பிறகு அதில் உமிழ்ந்து பரக்கத் - பெருக்கம் ஏற்படப் பிரார்த்தித்தார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், (என் மனைவியை நோக்கி), ரொட்டி சுடுபவள் ஒருத்தியை (உதவிக்கு) அழை. அவள் என்னோடு ரொட்டி சுடட்டும். உங்களுடைய பாத்திரத்திலிருந்து நீ அள்ளிக் கொடுத்துக் கொண்டிரு. பாத்திரத்தை இறக்கி வைத்து விடாதே என்று கூறினார்கள் அங்கு (வந்தவர்கள்) ஆயிரம் பேர் இருந்தனர்.

ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

அல்லாஹ்வின் மீது சத்தியமாக! அவர்கள் அனைவரும் சாப்பிட்டுவிட்டு, அந்த உணவை விட்டுத் திரும்பிச் சென்றனர். அப்போது எங்கள் சட்டி நிறைந்து சப்த மெழுப்பியவாறு கொதித்துக் கொண்டிருந்தது. அது (கொஞ்சமும் குறையாமல்) முன்பிருந்தது போலவே இருந்தது. மேலும், எங்கள் குழைத்த மாவும் (கொஞ்சமும் குறைந்து விடாமல்) முன்பு போலவே ரொட்டியாகச் சுடப்பட்டுக் கொண்டிருந்தது.176

4103 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(பகைவர்கள்) உங்களு(டைய கணவாய்)க்கு மேற்புறமிருந்தும், உங்களு(டைய கணவாய்)க்கு கீழ்புறமிருந்தும் உங்களிடம் (படையெடுத்து) வந்ததை நினைவுகூருங்கள். அப்போது (உங்கள்) கண்கள் நிலைகுத்தி நின்றன. இதயங்கள் தொண்டைகளை அடைத்துக் கொண்டன... என்ற (33:10-வது) இறைவசனம் குறிப்பிடும் சம்பவம் அகழ்ப்போர் தினத்தில் நடந்தது.

4104 பராஉ (பின் ஆஸிப்-ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது (அகழ் வெட்டிக் கொண்டிருந்த சமயத்தில்) நபி (ஸல்) அவர்கள் மண்ணைச் சுமந்து கொண்டிருந்தார்கள். மண் அவர்களுடைய வயிற்றி(ன் முடியி)னை மறைத்(துப் படிந்)திருந்தது ....அல்லது அவர்களின் வயிற்றில் புழுதி படிந்திருந்தது.... அப்போது அவர்கள் இவ்வாறு (பாடிய வண்ணம்) கூறிக் கொண்டிருந்தார்கள்:

அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழி அடைந்திருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழுதிருக் கவும் மாட்டோம். நாங்கள் பகைவர்களைச் சந்திக்கும் போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது அக்கிரமம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தர மாட்டோம்.

நாங்கள் இடம் தரமாட்டோம்; நாங்கள் இடம் தரமாட்டோம் என்பதை உரத்த

குரலில் கூறினார்கள்.177

4105 நபி (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரின் வெற்றிக்குப் பிறகு) கூறினார்கள்:

நான் (ஸபா என்னும்) கீழைக் காற்றின் வாயிலாக வெற்றி அளிக்கப்பட்டுள்ளேன்; ஆது சமுகத்தார் (தபூர் என்னும்) மேலைக் காற்றினால் அழிக்கப்பட்டனர்.

இதை இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.178

4106 பராஉ (பின் ஆஸிப் -ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களும் அகழ் தோண்டினார்கள். அப்போது அவர்கள் மண்ணைச் சுமந்து எடுத்துச் சென்று கொண்டிருந்ததை நான் பார்த்தேன். அவர்களது வயிற்றின் தோலை என்னை விட்டும் மண் மறைத்து விட்டிருந்தது. நபி (ஸல்) அவர்கள் நிறைய உரோமம் உடையவர்களாக இருந்தார்கள். அப்போது அவர்கள் மண் சுமந்து கொண்டே இப்னு ரவாஹா அவர்களின் யாப்பு வகை(ப்பாடல்) வரிகளைப் பாடிக் கொண்டி ருந்ததை நான் கேட்டேன் (அந்தப் பாடல் இது தான் :)

இறைவா! நீ இல்லாவிட்டால் நாங்கள் நேர்வழியடைந்திருக்க மாட்டோம்; தர்மம் செய்திருக்கவும் மாட்டோம்; தொழு திருக்கவும் மாட்டோம். நாங்கள் பகைவர் களைச் சந்திக்கும் போது எங்கள் மீது அமைதியை இறக்கியருள்வாயாக! எங்கள் பாதங்களை உறுதிப்படுத்துவாயாக! இவர்கள் (குறைஷிகள்) எங்கள் மீது அக்கிரமம் புரிந்து விட்டார்கள். இவர்கள் எங்களைச் சோதனையில் ஆழ்த்த விரும்பினால் அதற்கு நாங்கள் இடம் தரமாட்டோம்.179

நபி (ஸல்) அவர்கள், (நாங்கள் இடம் தர மாட்டோம் என்ற) கடைசி வார்த்தையை நீட்டியபடி முழக்கமிட்டார்கள் என்று அறிவிப்பாளர் கூறுகிறார்.

4107 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் பங்கேற்ற முதல் (போர்த்) தினம் அகழ்ப்போர் தினமாகும்.180

4108 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் (என் சகோதரி) ஹஃப்ஸா (ரலி) அவர்களிடம் சென்றேன். அவர்களது

கூந்த-ல் இருந்து தண்ணீர் சொட்டிக் கொண்டிருந்தது. நான் அவர்களிடம், மக்களின் (அரசியல்) விவகாரங்களில் நீங்கள் பார்ப்பது நடந்து கொண்டிருக்கிறது. எனக்கோ இந்த (ஆட்சியதிகார) விஷயத்தில் எந்தப் பங்கும் வழங்கப்படவில்லை. (இந்நிலையில், அவர்கள் கூட்டியுள்ள இந்த ஆலோசனைக் கூட்டத்திற்கு நான் செல்லத் தான் வேண்டுமா?) என்று கேட்டேன்.181 அப்போது ஹஃப்ஸா (ரலி) அவர்கள், (நடந்து கொண்டிருக்கும் ஆலோசனைக் கூட்டத்திற்குப்) போய்ச் சேர். ஏனெனில் , அவர்கள் உன்னை எதிர்பார்த்துக் கொண்டி ருப்பார்கள். நீ செல்லாமல் இருப்பதால் மக்களிடையே (மேலும்) பிளவு ஏற்பட்டு விடுமோ என்று நான் அஞ்சுகிறேன். என்று கூறினார்கள். நான் செல்லும் வரை என்னை அவர்கள் விடாமல் வற்புறுத்திக் கொண்டே இருந்தார்கள். (நானும் சென்றேன். அங்கே ஒருமித்த கருத்து உருவாகாமல்) மக்கள் பிளவுபட்டிருந்த போது முஆவியா (ரலி) அவர்கள் உரைநிகழ்த்தினார்கள்.182 அவர்கள் தமது உரையில் (இப்னு உமர் -ரலி- அவர் களையும் அன்னாருடைய தந்தை உமர் -ரலி- அவர்களையும் கருத்தில் கொண்டு,) எவர் இந்த (ஆட்சிப் பொறுப்பு) விஷயத்தில் கருத்துச் சொல்ல விரும்புகிறாரோ அவர் தன் தலையைக் காட்டட்டும். ஏனெனில், அவரை விடவும் அவருடைய தந்தையை விடவும் நாமே ஆட்சிப் பொறுப்பிற்கு மிகவும் அருகதையானோர் என்று கூறினார்கள்.

ஹபீப் பின் மஸ்லமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நான் (இப்னு உமர் -ரலி) அவர்களிடம் நீங்கள் (அப்போது) முஆவியா (ரலி) அவர்களுக்கு எந்தப் பதிலும் அளிக்க வில்லையா? என்று கேட்டேன். அதற்கு அவர்கள் அப்போது நான் எனது துண்டை அவிழ்த்து (உதறிப் போட்டு)க் கொண்டு (உஹுத் மற்றும் கன்தக் போர்களில் முஆவியாவே,) உங்களுடனும் உங்கள் தந்தை (அபூசுஃப்யான்) உடனும் இஸ்லாத்திற்காகப் போரிட்ட(அலீ -ரலி- போன்ற)வரே இந்த (ஆட்சியதிகார) விஷயத்திற்கு உங்களை விடத் தகுதி வாய்ந்தவர் என்று சொல்ல நினைத்தேன். ஆயினும், மக்களிடையே பிளவை ஏற்படுத்தி, இரத்தம் சிந்தச் செய்து விடும் ஒரு வார்த்தையை நான் கூறி விடு வேனோ; நான் கூறிய வார்த்தைக்கு நான் நினைக்காத கருத்து கற்பிக்கப்பட்டு விடுமோ என்றெல்லாம் அஞ்சினேன். மேலும், சொர்க் கத்தில் (பொறுமையாளர்களுக்காக) அல்லாஹ் தயாரித்து வைத்துள்ளவற்றை எண்ணிப் பார்த்தேன் (அதனால் அவர்களுக்கு பதில் கூறவில்லை) என்று கூறினார்கள்.

அப்போது நான், (நல்ல வேளை, நீங்கள் கோப உணர்ச்சிக்கு ஆளாகாமல்) பாதுகாக்கப் பட்டீர்கள் என்று கூறினேன்.

4109 சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போர் (முடிந்து குறைஷிகள் தோல்வியுற்றுத் திரும்பிச் சென்ற) தினத்தன்று நபி (ஸல்) அவர்கள், (இனி போர்தொடுப்ப தானால்,) நாமே அவர்களின் மீது போர் தொடுக்கவேண்டும்; அவர்கள் நம் மீது (இனி) போர்தொடுக்க (சக்தி பெற) மாட்டார்கள் என்று கூறினார்கள்.

4110 சுலைமான் பின் ஸுரத் (ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரில் தோல்வியுற்று எதிர்) அணியினர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து திரும்பிய போது இப்போது (போர் புரிவதானால்) நாம் தாம் அவர்களுடன் போர் புரியவேண்டும்; (இனி) அவர்கள் நம்முடன் போர் புரியமுடியாது; நாம் தாம் அவர்களை நோக்கிச் செல்லவேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதை நான் கேட்டேன்.183

4111 அலீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது நபி (ஸல்) அவர்கள், எதிரிகளுடைய வீடுகளையும், புதைகுழிகளையும் அல்லாஹ் நெருப்பினால் நிரப்புவானாக! ஏனெனில், அவர்கள் சூரியன் மறையும் வரை நடுத் தொழுகை(யான அஸர் தொழுகை)யிலிருந்து நமது கவனத்தைத் திருப்பிவிட்டார்கள் என்று கூறினார்கள்.184

4112 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது உமர் (ரலி) அவர்கள் குறைஷிக்குல இறைமறுப்பாளர் களை ஏசிக் கொண்டே வந்து, அல்லாஹ்வின் தூதரே! சூரியன் மறையத் தொடங்கும் வரை நான் அஸர் தொழ இயலவில்லை என்றார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நானும் இதுவரை அஸர் தொழவில்லை என்று கூறினார்கள். பின்னர் புத்ஹான் என்னும் பள்ளத்தாக்கிற்கு நபி (ஸல்) அவர்களுடன் நாங்கள் சென்றோம். அங்கே தொழுகைக்காக நபி (ஸல்) அவர்கள் உளூச் செய்தார்கள். நாங்களும் தொழுகைக்காக உளூச் செய்தோம். சூரியன் மறைந்த பிறகு அஸரையும் அதன் பின்னர் மஃக்ரிபையும் (எங்களுடன்) நபியவர்கள் தொழுதார்கள்.185

4113 ஜாபிர் (பின் அப்தில்லாஹ்-ரலி) அவர்கள் கூறியதாவது:

அகழ்ப் போரின் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், எதிரிகளின் செய்தியை (வேவு பார்த்துக்) கொண்டு வருபவர் யார்? என்று கேட்டார்கள். ஸுபைர் பின் அவ்வாம் (ரலி) அவர்கள், நான் என்று (முன்வந்து) கூறினார்கள். மீண்டும், எதிரிகளின் செய்தியை அறிந்து எம்மிடம் கொண்டு வருபவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், நான் என்று கூறினார்கள். பிறகு, எதிரிகளின் செய்தியை எம்மிடம் கொண்டு வருபவர் யார்? என்று (மீண்டும்) நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். அப்போதும் ஸுபைர் (ரலி) அவர்கள், நான் என்று கூறினார்கள். பிறகு நபி (ஸல்) அவர்கள், ஒவ்வோர் இறைத்தூதருக்கும் (பிரத்தி யேகமான) உதவியாளர் உண்டு; எனது (பிரத்தியேக) உதவியாளர் ஸுபைர் ஆவார் என்று கூறினார்கள்.186

4114 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (அகழ்ப் போரில் எதிரிகள் தோல்வியுற்றுத் திரும்பியது தொடர்பாகக் குறிப்பிடும் போது) வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். தன் படையினரை அவனே கண்ணியப்படுத்தினான். தன் அடிமை(யாகிய என)க்கு அவனே உதவி புரிந்தான். (மக்கா மற்றும் அதைச் சுற்றியுள்ள பகுதிகளிலிருந்து திரண்டு வந்த எதிர்) அணியினரை அவனே தனியாக வென்றான். எனவே, அவனுக்குப் பின்னால் வேறு எதுவும் (நிலைக்கப் போவது) இல்லை என்று கூறினார்கள்.

4115 அப்துல்லாஹ் பின் அபீ அவ்ஃபா

(ரலி) அவர்கள் கூறியதாவது:

(அகழ்ப் போரின் போது ஒன்று திரண்டு தாக்க வந்த எதிர்) அணியினருக்குக்கெதிராக அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரார்த்தனை புரிந்தார்கள். அப்போது, இறைவா! திருக்குர்ஆனை அருள்பவனே! விரைவாகக் கணக்கு வாங்குபவனே! (சத்திய மார்க்கத்தை வேரறுக்க ஒன்று திரண்டு படை யெடுத்து வந்துள்ள இந்த) அணியினரைத் தோற்கடிப்பாயாக! இறைவா! இவர்களைத் தோல்வியுறச் செய்து நடுக்கத்திற்குள்ளாக்கு வாயாக! என்று பிரார்த்தித்தார்கள்.187

4116 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் புனிதப் போரிலிருந்து, அல்லது ஹஜ்ஜிலிருந்து, அல்லது உம்ராவிலிருந்து திரும்பும் போது முத-ல் மூன்று முறை, அல்லாஹு அக்பர் (அல்லாஹ் மிகவும் பெரியவன்) என்று கூறிவிட்டுப் பிறகு பின்வருமாறு கூறுவார்கள்: வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை. அவன் தனித்தவன். அவனுக்கு இணையானவர் எவருமில்லை. அவனுக்கே ஆட்சியதிகாரம் உரியது. அவனுக்கே புகழனைத்தும் உரியது. அவன் எல்லாவற்றின் மீதும் பேராற்றல் உடையோன். நாங்கள் பாவங்களிலிருந்து மீண்டு, பாவ மன்னிப்புக் கோரியவர்களாகவும், வணக்கம் புரிந்தவர்களாகவும், எங்கள் இறைவனுக்குச் சிரம் பணிந்தவர்களாகவும் அவனைப் புகழ்ந்தவர்களாகவும் திரும்புகின்றோம். அல்லாஹ் தன் வாக்குறுதியை மெய்யாக்கி விட்டான். தன் அடியாருக்கு உதவி செய்து விட்டான். தன்னந்தனியாக (எதிர்) அணியினரைத் தோற்கடித்து விட்டான்.188

02.11.2009. 03:06




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
96 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி