52-சாட்சியங்கள்

அத்தியாயம் : 52

52-சாட்சியங்கள்

பாடம் : 1

வாதி தான் ஆதாரத்தை சமர்ப்பிக்க வேண்டும்.

அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! ஒரு குறிப்பிட்ட காலத் தவணைக்கு நீங்கள் உங்களுக்குள் கடன் கொடுத்து வாங்கிக் கொள்வீர்களாயின் அதை எழுதி வைத்துக் கொள்ளுங்கள். உங்களிடையே எழுத்தர் ஒருவர் அதை நீதியுடன் எழுதட்டும். எழுதத் தெரிந்தவர், அல்லாஹ் அவருக்குக் கற்றுத் தந்ததைப் போன்று (பிறருக்காக அவரும்) எழுதித் தரட்டும். அவர் எழுதித் தர மறுக்க வேண்டாம். எவர் மீது (கடன் சுமையைத் தீர்க்கும்) பொறுப்புள்ளதோ அவர் (எழுதுவதற்காக) வாசகம் சொல்லித் தரட்டும். (அந்த நேரத்தில்) தன் அதிபதிக்கு அவர் அஞ்சட்டும். மேலும், கடன் விஷயமாகத் தீர்மானிக்கப்பட்டதிலிருந்து எதையும் அவர் மறைக்க வேண்டாம். (உள்ளதை உள்ளபடி சொல்லட்டும்.) கடனைத் திருப்பிச் செலுத்தும் பொறுப்புடையவர் பேதையாகவோ (மூளை வளர்ச்சி குன்றியவராகவோ) பலவீனராகவோ, வாசகம் சொல்ல இயலாதவராகவோ இருந்தால் அவரது காப்பாளர் நீதியுடன் (வாசகம்) சொல்லட்டும். மேலும், உங்களில் இரு ஆண்களை சாட்சி களாக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள்; அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி அவளுக்கு நினைவூட்டுவதற்காக. இவர்கள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக் கூடிய சாட்சிகளாய் இருக்க வேண்டும். சாட்சிகள் (சாட்சிய மளிப்பதற்காக) அழைக்கப்படும் போது (வர) மறுக்கக் கூடாது. (கடன் தொகை) சிறிதாயினும் பெரிதாயினும் அதை எழுதி வைத்துக் கொள்வதில் கவனக் குறைவாக இருந்து விடாதீர்கள். இதுவே, அல்லாஹ் விடத்தில் நீதிமிக்க வழிமுறையாகும். மேலும், சாட்சியத்தை நிலைநாட்டக் கூடியதும் நீங்கள் சந்தேகம் கொள்ளாமலிருக்கப் பொருத்தமானதும் ஆகும். ஆனால், அது உங்களுக்கிடையே நீங்கள் (வழக்கமாக) செய்து கொள்கின்ற உடனடி கொடுக்கல் வாங்கலாக இருக்குமாயின், அதை எழுதி வைத்துக் கொள்ளாமல் இருப்பதில் உங்கள் மீது குற்றமேதும் இல்லை. எனினும், வியாபார ஒப்பந்தங்கள் செய்து கொண்டால் அவற்றிற்கு சாட்சியம் வைத்துக் கொள்ளுங்கள். எழுத்தரும் சாட்சிகளும் துன்புறுத்தப்படக் கூடாது. அவ்வாறு நீங்கள் துன்புறுத்தினால் அது நீங்கள் செய்யும் பாவமாகும். அல்லாஹ்வுக்கு அஞ்சுங்கள். அவன் உங்களுக்குச் சரியான வழிமுறைகளைக் கற்றுத் தருகின்றான். மேலும், அல்லாஹ் அனைத்து விஷயங் களையும் நன்கறிந்தவன் ஆவான். (2:282)

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

இறை நம்பிக்கை கொண்டவர்களே! நீங்கள் நீதியைக் கடைப்பிடிப்பவர்களாக வும் அல்லாஹ்வுக்காக சாட்சி சொல்பவர் களாகவும் திகழுங்கள். (நீங்கள் செலுத்து கின்ற நீதியும் சொல்லும் சாட்சியமும்) உங்களுக்கோ உங்கள் பெற்றோர் மற்றும் நெருங்கிய உறவினர்களுக்கோ எதிராக இருப்பினும் சரியே. (நீங்கள் யாருக்காக சாட்சி சொல்கிறீர்களோ) அவர் வசதியுடையவராகவோ ஏழையாகவோ இருப்பினும் சரியே. அல்லாஹ் அவர்களை (உங்களை விட) அதிகமாகப் பாதுகாப்பவனாக இருக்கிறான். எனவே, நீதி செலுத்தத் தவறி இச்சையைப் பின்பற்றி விடாதீர்கள். நீங்கள் நீதிக்குப் புறம்பாக சாட்சி சொன்னாலோ (நீதியைக் காப்பாற்ற மனமின்றி) சாட்சியமளிக்காமல் விலகிக் கொண் டாலோ நீங்கள் செய்பவற்றை அல்லாஹ் நன்கறிந்துள்ளான். (4:135)

பாடம் : 2

ஒருவரை நல்லவர் என்று அறிவிப் பதற்காக (அவரைப் பற்றி) நான் நல்ல தையே அறிந்துள்ளேன் என்று ஒருவர் சொன்னால்...

...அது (சாட்சியாக) ஏற்கப்படும் என்று கூறியவர்கள், ஆயிஷா (ரலி) அவர்களின் மீதான அவதூறு குறித்த ஹதீஸை ஆதாரமாகக் கொண்டு வருகிறார்கள். அதில், நபி (ஸல்) அவர்கள் உஸாமா (ரலி) அவர்களிடம், ஆயிஷா மீது கூறப்படும் இந்தக் குற்றச் சாட்டின் காரணத்தால், அவரை (விவாகரத்து செய்து) பிரிந்து விடலாமா என்று ஆலோசனை கேட்ட போது, அவர்கள் தங்கள் மனைவி. அவர்களைப் பற்றி நாங்கள் நல்லதைத் தவிர வேறெதையும் அறிய மாட்டோம் என்று உஸாமா

(ரலி) அவர்கள் கூறினார்கள்.

2637 இப்னு ஷிஹாப் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உர்வா பின் ஸுபைர் (ரஹ்), இப்னுல் முஸய்யப் (ரஹ்), அல்கமா பின் வக்காஸ் (ரஹ்) மற்றும் உபைதுல்லாஹ் பின் அப்தில்லாஹ் (ரஹ்) ஆகியோர் எனக்கு (மக்கள் சிலர்) ஆயிஷா (ரலி) அவர்களை (அவதூறு பேசியது) பற்றிய ஹதீஸை அறிவித்தார்கள். ஒருவர் அறிவித்த ஹதீஸ் மற்றவர் அறிவித்த ஹதீஸை உறுதிப்படுத்துவதாக இருந்தது. அபாண்டப் பழி சுமத்தியவர்கள் தாங்கள் பேசிய அவதூறு களையெல்லாம் சொன்ன போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை (ஆயிஷாவை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கலப்பதற்காக அலீ (ரலி) அவர்களையும், உஸாமா (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்கா-கமாக நின்று போய், வரத்) தாமதமாகிக் கொண்டிருந்தது. உஸாமா (ரலி) அவர்கள், அவர்கள் (ஆயிஷா), தங்கள் மனைவி. (அவர்களைப் பற்றி) நல்லதைத் தவிர வேறெதையும் நாங்கள் அறிய மாட்டோம் என்று கூறினார்கள். மேலும், (ஆயிஷா (ரலி) அவர்களால் விடுதலை செய்யப்பட்ட) பரீரா (ரலி) அவர்கள், அவர்கள் (ஆயிஷா), தம் வீட்டாரின் குழைத்தமாவை (அப்படியே) விட்டு விட்டு உறங்கி விடுகின்ற இள வயதுச் சிறுமி என்பதையும் (அப்படி அவர்கள் தூங்கும் போது) வீட்டு ஆடு வந்து அதைத் தின்றுவிடும் என்பதையும் தவிர அவர்கள் மீது குறைசொல்லத் தக்க விஷயம் எதையும் நான் பார்க்கவில்லை என்று கூறினார்கள். (அதன் பின்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டாரின் விஷயத்தில் எனக்கு (மன) வேதனை தந்து விட்ட ஒரு மனிதனை என் சார்பாக தண்டிக்கக் கூடியவர் யார்? அல்லாஹ்வின் மீதாணையாக! என் மனைவியிடமிருந்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறியவில்லை. மேலும், எந்த மனிதரைக் குறித்து நன்மையைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேனோ அவரைப் போய் (ஆயிஷாவுடன் இணைத்து) அவர்கள் (அவதூறு) கூறியுள்ளனர் என்று சொன்னார்கள்.

பாடம் : 3

மறைந்திருந்து கேட்டவரின் சாட்சியம்.

இதை அம்ரு பின் ஹுரைஸ் (ரலி) அவர்கள் அனுமதித்துள்ளார்கள்.

மேலும், அவர்கள், தீயவனான பொய்யனிடம் இப்படித் தான் செய்ய வேண்டும் என்று கூறினார்கள். ஷஅபீ (ரஹ்), இப்னு ஸீரீன் (ரஹ்), அதாஉ பின் அபீ ரபாஹ் (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகியோர், (கண்ணால் பார்க்காமல் காதால்) கேட்டதை (மட்டும்) வைத்து சாட்சி சொல்லலாம். (அதுவும் ஏற்கப் படக் கூடியதே. சாட்சி சொல்பவர் வாக்குமூலம் தந்தவரை அவர் வாக்கு மூலம் தரும் போது கண்ணால் பார்த்திருக்க வேண்டிய அவசியமில்லை) என்று கூறினர்.

ஒருவரைப் பார்க்காமலேயே அவரது வாக்குமூலத்தை மட்டும் கேட்டு விட்டு, நீதிபதியிடம் அதைப் பற்றி சாட்சியமளிக்க வருபவர், என்னை (சாட்சியாக அழைத்து வந்தவர்கள்) எதையும் பார்க்கச் செய்யவில்லை. நான் இன்னின்ன விதமாகச் செவியுற்றேன் என்று கூற வேண்டும். (அப்படிக் கூறினால் அது செல்லும்) என்று ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் கூறினார்கள்.

2638 அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களும் உபை பின் கஅப் (ரலி) அவர்களும் இப்னு ஸய்யாத் இருந்த பேரீச்சந் தோட்டத்தை நாடிச் சென்றார்கள். (தோட்டத்தில்) அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நுழைந்த வுடன் இப்னு ஸய்யாத் தம்மைப் பார்ப்பதற்கு முன்பு, அவனிடமிருந்து (அவனுடைய சொற்களைக்) கேட்க உபாயம் செய்தவர்களாய், பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு நடக்கலானார்கள். இப்னு ஸய்யாத் தன் படுக்கையில் ஒரு பூம்பட்டுப் போர்வைக்குள் (குறிகாரர்கள் முணு முணுப்பதைப் போல்) எதையோ முணு முணுத்தபடி படுத்துக் கொண்டிருந்தான். நபி (ஸல்) அவர்கள் பேரீச்ச மரங்களுக்கிடையே தம்மை மறைத்துக் கொண்டு வருவதை இப்னு ஸய்யாதின் தாய் பார்த்து விட்டாள். அவள் தன் மகனை நோக்கி, ஸாஃபியே! இதோ முஹம்மத் (வந்து கொண்டிருக்கிறார்) என்று கூறிவிட்டாள். உடனே, இப்னு ஸய்யாத் விழிப்படைந்து முணுமுணுப் பதை நிறுத்தி விட்டான்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவள் (இப்னு ஸய்யாதின் தாய்) அவனை (உஷார்படுத்தாமல்) விட்டுவிட்டிருந்தால் (தன் உண்மை நிலையை அவனே) அம்பலப்படுத்தி விட்டிருப்பான் என்று கூறினார்கள்.1

2639 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ரிஃபாஆ அல் குரழீ (ரலி) அவர்களின் மனைவி நபி (ஸல்) அவர்களிடம் வந்து, நான் ரிஃபாஆ விடம் (அவருடைய மண பந்தத்தில்) இருந்தேன். பிறகு, அவர் என்னை மணவிலக்கு செய்து மணவிலக்கை முடிவானதாக்கி விட்டார். ஆகவே, நான் அப்துர் ரஹ்மான் பின் ஸபீர் (ரலி) அவர்களை மணந்து கொண்டேன். அவரிடம் இருப்பதெல்லாம் (உறுதியின்றித் தொங்கும்) முந்தானைத் தலைப்பைப் போன்றது தான் (அவர் ஆண்மை குறைந்தவர்) என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், நீ ரிஃபாஆவிடம் திரும்பிச் செல்ல விரும்புகிறாயா? (தற்போதைய உன் கணவரான) அவரது இனிமையை நீ சுவைக்காத வரையிலும் உனது இனிமையை அவர் சுவைக்காத வரையிலும் உன் முன்னாள் கணவரை நீ மணந்து கொள்வதென்பது முடியாது என்று கூறினார்கள். அப்போது அபூபக்ர்

(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்து கொண்டிருந்தார்கள். கா-த் பின் சயீத் பின் ஆஸ் (ரலி) அவர்கள், தமக்கு உள்ளே நுழைய அனுமதி யளிக்கப்படும் என்று எதிர்பார்த்த வண்ணம் வாச-ல் நின்று கொண் டிருந்தார்கள். அவர்கள், அபூபக்ரே! இந்தப் பெண் நபி (ஸல்) அவர்களிடம் எதை பகிரங்கமாகச் சொல்லிக் கொண்டிருக்கிறாள் என்பதைக் கேட்க மாட்டீர்களா? என்று (வாச-ல் நின்றபடியே) சொன்னார்கள்.2

பாடம் : 4

ஒருவரோ பலரோ ஒரு விஷயத்திற்கு சாட்சியம் அளித்திருக்க, மற்ற சிலர் வந்து, இதை நாங்கள் அறிய மாட்டோம் என்று கூறினால் (முத-ல்) சொன்னவர்களின் சாட்சியத்தை வைத்தே தீர்ப்பளிக்கப்படும்.

இது (எப்படியென்றால்) பிலால்

(ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் (மக்கா வெற்றியின் போது) கஅபாவினுள் தொழுதார்கள் என்று செய்தியறிவிக்க, ஃபள்லு பின் அப்பாஸ் (ரலி) அவர்கள், நபி (ஸல்) அவர்கள் கஅபாவினுள் தொழவில்லை என்று கூறிய போது, பிலால் (ரலி) அவர்களின் சாட்சி யத்தையே மக்கள் ஏற்றுக் கொண்டதைப் போன்றதாகும் என்று ஹுமைதீ (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இவ்வாறே, இன்னாருக்கு இன்னாரி டமிருந்து ஆயிரம் திர்ஹங்கள் (கடன் தொகை) வரவேண்டியள்ளது என்று இருவர் சாட்சியமளித்து, வேறு இருவர், இரண்டாயிரம் திர்ஹம்கள் வர வேண்டியுள்ளது என்று சாட்சியம் அளித்தால் (இரு தொகைகளில்) அதிகமான தொகை எதுவோ அதைச் செலுத்தும்படியே தீர்ப்பு வழங்கப்படும்.

2640 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் அபூ இஹாப் பின் அஸீஸ் அவர்களின் மகளை மணந்து கொண் டேன். ஒரு பெண் என்னிடம் வந்து, உனக்கும் நீ மணந்து கொண்ட பெண் ணுக்கும் நான் பாலூட்டியிருக்கின்றேன் என்று கூறினாள். நான், நீ எனக்குப் பாலூட்டியதை நான் அறிய மாட்டேன்; (நான் மணம் புரிந்து கொண்ட போது) நீ எனக்கு (இதை) அறிவிக்கவில்லையே என்று கூறிவிட்டு, அபூஇஹாபின் குடும்பத்தாரிடம் (இது உண்மை தானா என்று) கேட்டனுப்பினேன். அவர்கள், எங்கள் பெண்ணுக்கு அவள் பாலூட்டி யதாக நாங்கள் அறியவில்லை என்று கூறினர். உடனே (மக்காவில் இருந்த) நான், மதீனாவிலிருந்த நபி (ஸல்) அவர்களிடம் (மார்க்கத் தீர்ப்புப் பெறு வதற்காக) பயணித்துச் சென்று அவர்களிடம் (இது குறித்துக்) கேட்டேன். நபி (ஸல்) அவர்கள், (நீயும் உன் மனைவியும் ஒரே செவி-த் தாயிடம் பால்குடித்ததாகச்) சொல்லப்பட்டுவிட்ட பின்னால், (நீங்கள் இருவரும் இணைந்து வாழ்வது) எப்படி (செல்லும்)? என்று கூறினார்கள். ஆகவே, நான் அவளைப் பிரிந்து விட்டேன். அவள் வேறொரு கணவனை மணந்து கொண்டாள்.

பாடம் : 5

நேர்மையான சாட்சிகள்

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், உங்களில் நேர்மையுள்ள இருவரை சாட்சிகளாக்கிக் கொள் ளுங்கள். (65:2)

இந்த சாட்சிகள் நீங்கள் ஏற்றுக் கொள்ளக்கூடியவர்களாய் இருக்க வேண்டும். (2:282)

2641 உமர் பின் கத்தாப் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர் களுடைய காலத்தில் மக்கள் வஹீயின் (வேத வெளிப்பாடு அல்லது இறை யறிவிப்பின்) வாயிலாக (ரகசியமாகச் செய்த குற்றங்கள் அம்பலமாகி) தண்டிக்கப்பட்டு வந்தார்கள். இப்போது (நபி (ஸல்) அவர்களின் மரணத்திற்குப் பின்) வஹீ வருவது நின்று போய் விட்டது. இப்போது நாம் உங்களைப் பிடி(த்து தண்டி)ப்பதெல்லாம் உங்கள் செயல்களில் எமக்கு வெளிப்படையாகத் தெரிபவற்றைக் கொண்டு தான். ஆகவே, எவர் எம்மிடம் நன்மையை வெளிப்படுத்துகின்றாரோ அவரை நம்பிக்கைக் குரியவராக்கி கௌரவித்துக் கொள் வோம். அவரது இரகசியம் எதையும் கணக்கிலெடுக்க மாட்டோம். அவரது அந்தரங்கம் குறித்து இறைவனே கணக்குக் கேட்பான். எவர் நம்மிடம் தீமையை வெளிப்படுத்துகின்றாரோ அவரைக் குறித்து நாம் திருப்தியுடனிருக்க மாட்டோம்; அவரை நம்பவுமாட்டோம். தமது அந்தரங்கம் அழகானது என்று அவர் வாதிட்டாலும் சரியே.

பாடம் : 6

ஒருவர் நேர்மையானவர் என்று சாட்சி சொல்ல எத்தனை பேர் வேண்டும்?

2642 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இருந்த இடத்தின் வழியாக ஜனாஸா (பிரேதம்) ஒன்று கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசினார்கள். இதைக் கேட்ட நபி (ஸல்) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு, மற்றொரு ஜனாஸா கொண்டு செல்லப்பட்டது. மக்கள் அது குறித்து (இகழ்ந்து) கெட்டவிதமாகப் பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள், உறுதி யாகி விட்டது என்று கூறினார்கள். நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! அதற்கும் உறுதியாகி விட்டது என்று கூறினீர்கள்; இதற்கும் உறுதி யாகி விட்டது என்று கூறினீர்களே. (இரண்டிற்குமே இவ்வாறு கூறக் காரணமென்ன?) என்று கேட்கப்பட்டது. அதற்கு அவர்கள், இது சமுதாயத்தின் சாட்சியமாகும். இறை நம்பிக்கையுடைய வர்கள் பூமியில் அல்லாஹ்வின் சாட்சிகள் ஆவர் என்று கூறினார்கள்.

2643 அபுல் அஸ்வத் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மதீனா நகரை (கொள்ளை) நோய் பீடித்திருக்கும் நிலையில் நான் அங்கு சென்றேன். மக்கள் பரவலாகவும் விரை வாகவும் இறந்து கொண்டிருந்தார்கள். நான் உமர் (ரலி) அவர்களிடம் சென்று அமர்ந்தேன். அப்போது ஒரு ஜனாஸா சென்றது. அதைக் குறித்து நல்லவிதமாகப் (புகழ்ந்து) பேசப்பட்டது. உடனே, உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்தும் நல்ல விதமாகப் பேசப்பட்டது. அதற்கும் உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். பிறகு, •மூன்றாவது ஜனாஸா அவர்களைக் கடந்து சென்றது. அதைக் குறித்து (இகழ்ந்து) கெட்ட விதமாகப் பேசப்பட்டது. உமர் (ரலி) அவர்கள், உறுதியாகி விட்டது என்று கூறினார்கள். நான், விசுவாசிகளின் தலைவரே! என்ன உறுதியாகி விட்டது? என்று கேட்டேன். அவர்கள் (பின் வருமாறு) பதிலளித்தார்கள்: நபி (ஸல்) அவர்கள் சொன்னதைப் போன்றே நானும் சொன்னேன். நபி (ஸல்) அவர்கள், எந்த முஸ்-முக்கு நான்கு பேர், அவர் நல்லவர் என்று சாட்சி சொல்கின் றார்களோ அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான் என்று கூறினார்கள். நாங்கள், மூன்று பேர் சாட்சி சொன்னாலுமா? என்று கேட்டோம். நபி (ஸல்) அவர்கள், ஆம்; மூன்று பேர் சாட்சி சொன்னாலும் சரி (அவரை அல்லாஹ் சொர்க்கத்தில் புகுத்துவான்) என்று கூறினார்கள். நாங்கள், இரண்டு பேர் சாட்சி சொன்னாலுமா? என்று கேட்டோம். அவர்கள், ஆம்; இரண்டு பேர் சாட்சி சொன்னாலும் சரியே என்று கூறினார்கள். பிறகு, நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் ஒருவரைப் பற்றி (ஒருவர் சாட்சி சொன்னாலுமா? என்று) கேட்கவில்லை.

பாடம் : 7

இரத்த உறவு, பால்குடி உறவு, வெகு நாட்களுக்கு முன் நடந்த மரணம் ஆகிய வற்றை நிரூபிக்க சாட்சியம் அளித்தல்.

நபி (ஸல்) அவர்கள், எனக்கும் அபூ சலமாவுக்கும் ஸுவைபா (ரலி) அவர்கள் பாலூட்டினார்கள் என்று கூறியதும் (செவி-த் தாயிடம்) பால் குடித்ததை சாட்சிகள் வாயிலாக உறுதிப்படுத்திக் கொள்வதும்.

2644 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் வீட்டில் நுழைவதற்கு அஃப்லஹ் (ரலி) அவர்கள் அனுமதி கேட்டார்கள். நான் அவர்களுக்கு அனுமதி தரவில்லை. அவர்கள், நான் உன் தந்தையின் சகோதரராயிருக்க, நீ என்னிடமே திரையிட்டு(மறைத்து)க் கொள்கிறாயா? என்று கேட்டார்கள். நான், அதெப்படி (நீங்கள் என் தந்தையின் சகோதரராக முடியும்)? என்று கேட்டேன். அதற்கவர், என் சகோதரரின் மனைவி என் சகோதரரின் (வாயிலாக அவரிடம் ஊறிய) பாலை உனக்குப் புகட்டியுள்ளார் என்று கூறினார். நான் அல்லாஹ்வின் தூதரிடம் அதைப் பற்றிக் கேட்டேன். அவர்கள், அஃப்லஹ் உண்மையே சொன்னார். (நீ திரையின்றி இருக்கும் நிலையில் உன் முன்னால் வர) அவருக்கு அனுமதி கொடு என்று கூறினார்கள்.

2645 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள், ஹம்ஸா (ரலி) அவர்களுடைய மகளின் விஷயத்தில், அவள் எனக்கு ஹலாலாக (மணந்து கொள்ள அனுமதிக்கப்பட்டவளாக) ஆக மாட்டாள். (ஏனெனில்) இரத்த பந்தத்தின் காரணத்தால் எவையெல்லாம் ஹராம் (தடை செய்யப்பட்டதாக) ஆகுமோ அவையெல்லாம் (செவி-த் தாயிடம்) பால்குடிப்பதாலும் ஹராம் ஆகும். அவள் என் பால்குடிச் சகோதரரின் மகள் ஆவாள் என்று கூறினார்கள்.3

2646 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு நாள்) நபி (ஸல்) அவர்கள் என்னிடம் இருந்தார்கள். நான் ஹஃப்ஸா (ரலி) அவர்களின் வீட்டில் (யாரோ) ஒரு மனிதர் உள்ளே செல்ல அனுமதி கேட்கும் குரலைச் செவியுற்றேன். நான் நபி (ஸல்) அவர்களிடம், அல்லாஹ்வின் தூதரே! அவர் (ஹஃப்ஸாவின் வீட்டுக்குள் செல்ல அனுமதி கேட்பவர்) ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்று நான் நினைக்கிறேன் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்களும், அவர் ஹஃப்ஸாவின் பால்குடித் தந்தையின் சகோதரர் என்றே நானும் நினைக்கிறேன் என்று கூறினார்கள். நான், இன்னார்-என் பால்குடித் தந்தையின் சகோதரர் -உயிருடன் இருந்தால் நான் திரையின்றி இருக்கும் போது என்னிடம் அவர் வரலாமா? என்று கேட்டேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், ஆம். (வரலாம்.) இரத்த உறவின் காரணத்தால் ஹராமாகின்ற அனைத்துமே பால்குடி உறவின் காரணத்தாலும் ஹராமாகி விடும் என்று கூறினார்கள்.

2647 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஒரு மனிதர் அமர்ந் திருக்க, நபி (ஸல்) அவர்கள் என் வீட்டிற்கு வந்தார்கள். ஆயிஷாவே! இவர் யார்? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான், என் பால் குடிச் சகோதரர் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், ஆயிஷாவே! உங்கள் சகோதரர்கள் யார் என்று ஆராய்ந்து பார்த்து முடிவு செய் யுங்கள். ஏனெனில், பால்குடி உறவு என்பதே பசியால் (குழந்தை பால் அருந் தியிருந்தால்)தான் என்று கூறினார்கள்.4

பாடம் : 8

(விபசாரம் புரிந்ததாக ஒருவர் மீது) அவதூறு கூறியவன், திருடன் மற்றும் விபசாரியின் சாட்சியம்.

அல்லாஹ் கூறுகிறான்:

கற்புள்ள பெண்கள் மீது அவதூறு சொல்லி விட்டுப் பின்னர் நான்கு

சாட்சிகளைக் கொண்டு வராதவர்களுக்கு எண்பது சாட்டையடிகளைக் கொடுங்கள். இனி அவர்கள் கூறும் சாட்சியத்தை என்றைக்கும் ஏற்றுக் கொள்ளாதீர்கள். மேலும், அவர்களே தீயவர்கள். இந்தக் குற்றத்திற்குப் பிறகு பாவ மன்னிப்புக் கோரி தங்களைச் சீர்திருத்திக் கொண்ட வர்களைத் தவிர. ஏனெனில், அல்லாஹ் அதிகம் மன்னிப்பவனாகவும் கருணை புரிபவனாகவும் இருக்கின்றான். (24:4,5)

முகீரா பின் ஷுஅபா (ரலி) அவர்கள் விபசாரம் புரிந்ததாக, அவர் மீது அவதூறு கூறியதற்காக அபூபக்ரா (ரலி), ஷிப்ல் பின் மஅபத் (ரலி), நாஃபிஉ பின் ஹாரிஸ் (ரலி) ஆகியோருக்கு உமர்

(ரலி) அவர்கள் கசையடி கொடுத்தார்கள். பிறகு, அவர்களிடம் அல்லாஹ் விடம் பாவமன்னிப்புக் கோரும்படி கேட்டார்கள். மேலும், எவர் பாவ மன்னிப்புக் கோரி திருந்திவிடுகின்றாரோ அவரது சாட்சியத்தை நான் ஏற்றுக் கொள்வேன் என்று கூறினார்கள்.5

அப்துல்லாஹ் பின் உத்பா (ரஹ்), உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்), சயீத் பின் ஜுபைர் (ரஹ்), தாவூஸ் பின் கைஸான் அல் யமானீ (ரஹ்), முஜாஹித் (ரஹ்), ஷஅபீ (ரஹ்), இக்ரிமா (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்), முஹாரிப் பின் திஸார் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்), முஆவியா பின் குர்ரா (ரஹ்) ஆகியோர், ஒருவர் விபசாரம் செய்ததாக அவதூறு கற்பித்து, அதற்காகக் கசையடி தண்டனை பெற்றவர் பாவமன்னிப்புக் கோரி திருந்திவிட்டால் அவரது சாட்சியத்தை ஏற்றுக் கொள்வது செல்லும் என்று கூறியுள்ளனர்.

அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள், மதீனா நகரில் எங்கள் நடைமுறை எப்படி இருந்ததென்றால், அவதூறு கற்பித்தவர் தன் சொல்லைத் திரும்பப் பெற்று, பாவ மன்னிப்புக் கோரி விட்டால் அவரது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறினார்கள்.

ஷஅபீ (ரஹ்), கதாதா (ரஹ்) ஆகிய இருவரும், அவதூறு கற்பித்தவன், தான் பொய் சொல்லி விட்டதாகக் கூறி விட்டால் கசையடி கொடுக்கப்படுவான்; அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும் என்று கூறுகின்றனர்.

ஓர் அடிமை (அவதூறு கற்பித்த குற்றத்திற்காக) கசையடி கொடுக்கப்பட்டு, பின்னர் விடுதலை செய்யப்பட்டு விட்டால் அவனது சாட்சியம் ஏற்றுக் கொள்ளப்படும். அவனிடம் தீர்ப்புக் கேட்கப்பட்டு அவன் தீர்ப்பு வழங்கினால் அவனுடைய தீர்ப்புகள் செல்லும் என்று சுஃப்யான் அஸ் ஸவ்ரீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

சிலர் அவதூறு கூறியவனின் சாட்சியம் அவன் பாவமன்னிப்புக் கோரி

விட்டாலும் கூட ஒப்புக் கொள்ளப்பட மாட்டாது என்று கூறிவிட்டு, பிறகு, திருமணம் இரண்டு சாட்சிகள் இல்லா மல் செல்லுபடியாகாது. (அவதூறு பேசி) கசையடி கொடுக்கப்பட்டவர்கள் இருவரின் சாட்சியைக் கொண்டு ஒருவன் மணமுடித்துக் கொண்டால் அந்தத் திருமணம் செல்லுபடியாகும். இரண்டு அடிமைகளின் சாட்சியத்தைக் கொண்டு மணமுடித்துக் கொண்டால் அந்தத்

திருமணம் செல்லாது என்று கூறினார்கள்.

கசையடி கொடுக்கப்பட்டவன், அடிமை மற்றும் அடிமைப் பெண் ஆகியோர் ரமளான் மாதப் பிறையைப் பார்த்ததாக சாட்சியம் அறிவித்தால்

அது செல்லும் என்றும் அவர்கள் கூறியுள்ளனர்.

அவதூறு கற்பித்தவன் பாவ மன்னிப்புக் கோரிவிட்டதை எப்படி அறிந்து கொள்வது?6 நபி (ஸல்) அவர்களோ விபசாரியை ஓராண்டுக் காலத்திற்கு நாடு கடத்தினார்கள். நபி (ஸல்) அவர்கள், கஅப் பின் மாலிக்

(ரலி) மற்றும் அவர்களுடைய இரு தோழர்களுடன் பேசக் கூடாது என்று (மக்களைத்) தடை செய்தார்கள்; ஐம்பது நாட்கள் கழியும் வரை இவ்வாறு தடை செய்துவைத்திருந்தார்கள்.7

2648 உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

மக்காவை வெற்றி கொண்ட போரின் போது (மக்ஸூமி குலத்தவரான ஃபாத்திமா பின்த்து அஸ்வத் என்னும் பெயருடைய) பெண்ணொருவர் திருட்டுக் குற்றம் புரிந்து விட்டார். அவர் அல்லாஹ்வின் தூதரிடம் கொண்டு வரப்பட்டார். நபி (ஸல்) அவர்கள் அவரது கையைத் துண்டிக்கும்படி உத்தர விட்டார்கள். அதன்படி அவரது கை துண்டிக்கப்பட்டது.

(அவரைப் பற்றி) அவள் அழகிய முறையில் தவ்பா செய்திருந்தாள்; திருமணமும் செய்து கொண்டாள். அதன் பிறகு அவள் (எங்களிடம்) வந்து கொண்டிருந்தாள். நான் அவளது தேவையை (அறிந்து) நபி (ஸல்) அவர்களிடம் சொல்வேன் என்று ஆயிஷா (ரலி) அவர்கள் கூறினார்கள்.8

2649 ஸைத் பின் கா-த் (ரலி) அவர்கள் கூறியதாவது:

திருமணமாகாத நிலையில் விபசாரம் செய்தவன் விஷயத்தில், அவனுக்கு நூறு கசையடிகள் கொடுக்கவேண்டும் என்றும் ஓராண்டுக் காலத்திற்கு அவனை நாடு கடத்த வேண்டும் என்றும் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.9

பாடம் : 9

அநியாயத்திற்கு (ஆதரவாக) சாட்சி சொல்லக் கூடாது.

2650 நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

என் தாயார் என் தந்தையிடம் அவரது செல்வத்திலிருந்து எனக்கு சிறிது அன்பளிப்பு வழங்கும்படி கேட்டார்கள். பிறகு, அவருக்கு (இதுவரை கொடுக் காமலிருந்து விட்டோமே என்ற வருத்தம் மனத்தில்) தோன்றி எனக்கு அதை அன்பளிப்புச் செய்தார். என் தாயார், நீர் நபி (ஸல்) அவர்களை சாட்சியாக்காத வரை நான் திருப்தி கொள்ள மாட்டேன் என்று கூறினார்கள். ஆகவே, என் தந்தை நான் சிறுவனாயிருந்ததால் என் கையைப் பிடித்துக் கொண்டு நபி (ஸல்) அவர்களிடம் என்னை அழைத்துச் சென்று, இவனுடைய தாயாரான (அம்ரா) பின்த்து ரவாஹா இவனுக்கு சிறிது அன்பளிப்புத் தரும்படி என்னிடம் கேட்டாள் என்று கூறினார். நபி (ஸல்) அவர்கள், இவனைத் தவிர வேறு குழந்தை ஏதும் உங்களுக்கு உண்டா? என்று கேட்டார்கள். என் தந்தை, ஆம் (உண்டு) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், என்னை அக்கிரமத்துக்கு சாட்சியாக்காதீர்கள் என்று கூறினார்கள் எனக் கருதுகிறேன்.

இன்னோர் அறிவிப்பில், நான் அக்கிரமத்துக்கு சாட்சியாக இருக்க மாட்டேன் என்று நபி (ஸல்) அவர்கள் கூறியதாக வந்துள்ளது.10

2651 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

உங்களில் (மக்களில்) சிறந்தவர்கள் என் தலைமுறையைச் சேர்ந்தவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்; பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள்.

-இந்த ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளர் இம்ரான் பின் ஹுஸைன் (ரலி) அவர்கள், இரண்டு தலைமுறைக் குப் பிறகு மூன்றாவதாக ஒரு தலை முறையை நபி (ஸல்) அவர்கள் சொன்னார்களா என்று எனக்குத் தெரியாது என்று கூறுகிறார்கள்-

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நிச்சயமாக, உங்களுக்குப் பின் ஒரு சமுதாயத்தார் (வர) இருக்கின்றார்கள். அவர்கள் நம்பிக்கை மோசடி செய்வார்கள். அவர்களிடம் எதையும் நம்பி ஒப்படைக்கப்படாது. அவர்கள் சாட்சி யாக இருக்கத் தாமாகவே முன் வருவார்கள். ஆனால், சாட்சியம் அளிக்கும்படி அவர்களை யாரும் கேட்க மாட்டார்கள். அவர்கள் நேர்ச்சை செய்வார்கள்; ஆனால் அதை நிறைவேற்ற மாட்டார்கள். அவர்களிடையே பருமனாயிருக்கும் (தொந்தி விழும்) நிலை தோன்றும்.

இதை இம்ரான் பின் ஹுஸைன்

(ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2652 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மக்களில் சிறந்தவர்கள் என் தலைமுறையினர். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு அவர்களை அடுத்து வருபவர்கள். பிறகு சில சமுதாயங்கள் வரும். அவர்களுடைய சாட்சியம் அவர்களின் சத்தியத்தையும், அவர்களுடைய சத்தியம் அவர்களின் சாட்சியத்தையும் முந்திக் கொள்ளும்.11

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்கள், (சிறுவர்களான) எங்களை அவர்கள் (நபித்தோழர்கள்), அஷ்ஹது பில்லாஹ்- அல்லாஹ்வைக் கொண்டு சாட்சியம் அளிக்கிறேன் என்றோ, அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தப்படி என்றோ கூறினால் கடிந்து (கண்டித்து) வந்தார்கள் என்று கூறினார்.12

பாடம் : 10

பொய்சாட்சியம் அளிப்பது தடை செய்யப்பட்டதாகும்.

ஏனெனில், அல்லாஹ் கூறுகின்றான்:

மேலும், (ரஹ்மானின் உண்மையான அடியார்கள் யாரெனில்) அவர்கள் பொய் சாட்சியம் அளிக்க மாட்டார்கள். (25:72)

சாட்சியத்தை மறைப்பதும் தடை செய்யப்பட்டுள்ளது.

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், சாட்சியத்தை நீங்கள் மறைத்து விடாதீர்கள். சாட்சியத்தை மறைப்பவரின் இதயம் நிச்சயமாக பாவத்திற்குள்ளாகி விடுகின்றது. மேலும், அல்லாஹ் நீங்கள் செய்கின்ற அனைத்தையும் நன்கறிபவனாயிருக்கிறான். (2:283)

2653 அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் பெரும் பாவங்கள் பற்றிக் கேட்கப்பட்டது. நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ்வுக்கு இணை வைப்பது, பெற்றோருக்குத் துன்பம் கொடுப்பது, கொலைசெய்வது, பொய் சாட்சி சொல்வது ஆகியன (பெரும் பாவங்களாகும்) என்று கூறினார்கள்.

2654 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

(ஒரு முறை) பெரும் பாவங்களி லேயே மிகப் பெரும் பாவங்களை நான் உங்களுக்கு அறிவிக்கட்டுமா? என்று நபி (ஸல்) அவர்கள் (மூன்று முறை) கேட்டார்கள். மக்கள், ஆம், அல்லாஹ்வின் தூதரே! (அறிவியுங்கள்) என்று சொன்னார்கள். உடனே, நபி (ஸல்) அவர்கள், அல்லாஹ் வுக்கு இணைவைப்பதும், பெற்றோருக்குத் துன்பம் தருவதும் (தான் அவை) என்று கூறிவிட்டு, சாய்ந்து கொண்டிருந்தவர்கள் எழுந்து அமர்ந்து, அறிந்து கொள் ளுங்கள்: பொய் சாட்சியமும் (மிகப் பெரும் பாவம்) தான் என்று கூறினார்கள். நிறுத்திக் கொள்ளக் கூடாதா என்று நாங்கள் சொல்கின்ற அளவுக்கு அதை (இறுதியாகச் சொன்னதை) திரும்பத் திரும்பக் கூறிக் கொண்டேயிருந்தார்கள்.

பாடம் : 11

கண் பார்வையற்றவரின் சாட்சியம், அவரது நடவடிக்கை, அவரது திருமணம், பிறருக்கு அவர் திருமணம் செய்து வைத்தல், விற்றல் - வாங்கல், பாங்கு சொல்வது முதலானவற்றில் அவரை ஏற்றல் ஆகியன பற்றியும், குரல்களைக் கொண்டு மட்டுமே அறியப்பட்டதை சாட்சியாக ஏற்பது பற்றியும்.

காசிம் (ரஹ்), ஹஸன் பஸரீ (ரஹ்), இப்னு சீரின் (ரஹ்), ஸுஹ்ரீ (ரஹ்), அதாஉ (ரஹ்) ஆகியோர், குருடரின் சாட்சியம் செல்லும் என்று கூறுகிறார்கள். குருடர் புத்திக் கூர்மையுடையவராக இருந்தால் அவரது சாட்சியம் செல்லும் என்று ஷஅபீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

எத்தனையோ விஷயங்களில் (குருடருக்கு) சலுகை அளிக்கப்படும் என்று ஹகம் (ரஹ்) அவர்கள் கூறுகின்றார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களைப் பற்றி என்ன கருதுகிறீர்கள்? அவர்கள் (கண் பார்வையற்ற முதியவராக இருக்கும் போது) ஒரு சாட்சியம் அளித்தால் அதை நீங்கள் ஏற்க மறுப்பீர்களா? என்று ஸுஹ்ரீ (ரஹ்) அவர்கள் கேட்டார்கள்.

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் ஓர் ஆளை அனுப்பி (செய்தியறிந்து) சூரியன் மறைந்து விட்டிருந்தால் நோன்பை நிறைவு செய்து கொள்வார்கள்; அதிகாலை நேரம் பற்றிக் கேட்பார்கள்; அது உதயமாகி விட்டது என்று கூறப்பட்டால் இரண்டு ரக்அத்துகள் தொழுது கொள்வார்கள்.

நான் ஆயிஷா (ரலி) அவர்களிடம் (மைமூனா (ரலி) அவர்களின் வீட்டுக்குள் செல்ல) அனுமதி கேட்டேன். அவர்கள் என் குரலைப் புரிந்து கொண்டு, சுலைமானே! உள்ளே செல். ஏனெனில், நீ கடன் ஏதும் பாக்கி வைக்காத (முகாத்த பான) அடிமையாவாய் என்று கூறினார்கள் என சுலைமான் பின் யஸார் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

முகத்திரை அணிந்த பெண்ணின் சாட்சியம் செல்லும் என்று சமுரா பின் ஜுன்துப் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2655 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் பள்ளிவாச-ல் குர்ஆன் ஓதுவதைக் கேட்டு, அல்லாஹ் அவருக்குக் கருணை புரியட்டும். நான் இன்னின்ன அத்தி யாயத்திலிருந்து (சற்று) மறந்து விட்டிருந்த இன்னின்ன வசனத்தை எனக்கு அவர் நினைவூட்டி விட்டார் என்று கூறினார்கள்.

ஆயிஷா (ரலி) அவர்களின் மற்றோர் அறிவிப்பில் பின்வரும் வரிகள் அதிகப் படியாக இடம் பெற்றுள்ளன:

நபி (ஸல்) அவர்கள் என் வீட்டில் தஹஜ்ஜுத் தொழுகை தொழுதார்கள். அப்பாத் பின் பிஷ்ர் (ரலி) அவர்கள் பள்ளிவாச-ல் தொழுது கொண்டிருக்க, அவரது (குர்ஆன் ஓதுகின்ற) குரலைச் செவிமடுத்து (என்னிடம்), ஆயிஷாவே, இது அப்பாதின் குரலா? என்று கேட்டார்கள். ஆம் (இது அப்பாதின் குரல் தான்) என்று நான் பதிலளித்ததும் நபி (ஸல்) அவர்கள், இறைவா! அப்பாதிற்குக் கருணை செய் என்று பிரார்த்தித்தார்கள்.

2656 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

பிலால் (ரலி) அவர்கள் இரவில் பாங்கு சொல்வார்கள். ஆகவே, அப்துல்லாஹ் பின் உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் (ஃபஜ்ருக்கு) பாங்கு சொல்லும் வரை (ஸஹருக்காக) உண்ணுங்கள்; பருகுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், இப்னு உம்மி மக்தூம் (ரலி) அவர்கள் கண்பார்வை யற்றவராக இருந்தார்கள். மக்கள் காலை நேரம் வந்து விட்டது என்று அவரிடம் கூறும் வரை அவர் பாங்கு சொல்ல மாட்டார்.

2657 மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களிடம் சில அங்கிகள் வந்தன. என் தந்தை மக்ரமா (ரலி) அவர்கள் என்னிடம், நாம் நபி (ஸல்) அவர்களிடம் செல்வோம். அவர்கள் நமக்கு அவற்றிலிருந்து எதை யேனும் தருவார்கள் என்று கூறினார்கள். என் தந்தை (நபி (ஸல்) அவர்களின் வீட்டு) வாசலருகே நின்று பேசினார்கள். நபி (ஸல்) அவர்கள் அவரது குரலைப் புரிந்து கொண்டு, தம்முடன் ஓர் அங்கியை எடுத்துக் கொண்டு, அதன் நிறைகளைக் காட்டியபடி வெளியே வந்தார்கள். அப்போது அவர்கள், உனக்காக இதை நான் எடுத்து வைத்தேன்; உனக்காக இதை நான் எடுத்து வைத்தேன் என்று கூறிக் கொண்டிருந்தார்கள்.

பாடம் : 12

பெண்களின் சாட்சியம் (செல்லும்)

அல்லாஹ் கூறுகிறான்:

(சாட்சி சொல்வதற்கு) இரண்டு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக்கிக் கொள்ளுங்கள். (2 : 282)

2658 அபூ சயீத் அல் குத்ரீ (ரலி) அவர்கள் கூறியதாவது:

பெண்களின் சாட்சியம் ஆண்களின் சாட்சியத்தில் பாதியளவு அல்லவா? என்று நபி (ஸல்) அவர்கள் (பெண்களை நோக்கிக்) கேட்டார்கள். அவர்கள், ஆம் (பாதியளவு தான்) என்று பதிலளித்தார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அது தான் அவளது அறிவின் குறை பாடாகும் என்று கூறினார்கள்.13

 

 

பாடம் : 13

ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமைகளின் சாட்சியம்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அடிமையின் சாட்சியம், அவன் நேர்மையானவனாக இருந்தால் செல்லு படியாகும்.

 நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்களும், ஸுராரா பின் அவ்ஃபா (ரஹ்) அவர்களும், அடிமையின் சாட்சியம் செல்லும் என்று கூறினார்கள். அடிமையின் சாட்சியம் (எல்லா விஷயங்களிலும்) செல்லுபடி யாகும்; அடிமை, தன் எஜமானுக்கு சாதகமாக அளிக்கும் சாட்சியத்தைத் தவிர என்று இப்னு சீரீன் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

அற்பமான, சாதாரண விஷயங் களில் மட்டும் அடிமையின் சாட்சியம் செல்லுபடியாகும் என்று ஹஸன் (ரஹ்) அவர்களும், இப்ராஹீம் நகயீ (ரஹ்) அவர்களும் கூறுகிறார்கள்.

(தமது கருத்தை நியாயப்படுத்தும் விதத்தில்) நீதிபதி ஷுரைஹ் (ரஹ்) அவர்கள், நீங்கள் ஒவ்வொருவரும் ஆண் அடிமைகள் மற்றும் பெண் அடிமை களின் மக்களே என்று கூறினார்கள்.

2659 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் உம்மு யஹ்யா பின்த்து அபீ இஹாபை மணந்து கொண்டேன். ஒரு கருப்பு நிற அடிமைப் பெண் வந்து, நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும் உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக்கின்றேன். என்று கூறினாள். இந்தச் செய்தியை நான் நபி (ஸல்) அவர்களிடம் கூறினேன். அவர்கள் (முகம் திருப்பிக் கொண்டு) என்னை அலட்சியம் செய்தார்கள். நான் (என் இருப்பிடத்திலிருந்து விலகி (அவர்களுடைய முகம் இருக்கும் பக்கம்) சென்று அவர்களிடம் அதை (திரும்பக்) கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், அவள் உங்கள் இருவருக்கும் பாலூட்டியிருப்பதாக வாதிட்டுக் கொண்டிருக்கும் நிலையில் எப்படி (நீங்கள் இருவரும் கணவன் மனைவியாக வாழ முடியும்)? என்று கேட்டார்கள்; என்னை அவளு டன் சேர்ந்து வாழக் கூடாதென்று விலக்கினார்கள்.

பாடம் : 14

செவி-த் தாயின் சாட்சியம்.

2660 உக்பா பின் ஹாரிஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நான் ஒரு பெண்ணை மண முடித்தேன். வேறொரு பெண் வந்து, நான் உங்கள் இருவருக்கும் (உனக்கும், உன் மனைவிக்கும்) பாலூட்டியிருக் கின்றேன் என்று கூறினார். நான் நபி (ஸல்) அவர்களிடம் சென்றேன்: (அவர்களிடம் இது பற்றிக் கேட்டதற்கு), (நீயும் உன் மனைவியும் ஒரே செவி-த் தாயிடம் பால் குடித்ததாகக்) கூறப்பட்டு விட்ட பிறகு, எப்படி (நீங்கள் இருவரும் சேர்ந்து வாழ முடியும்)? அவளை உன்னிடமிருந்து பிரித்து விடு என்றோ அது போன்றதையோ கூறினார்கள்.

பாடம் : 15

பெண்களில் ஒருவர் மற்றவரை நேர்மையானவர் என்று உறுதி செய்வது.

2661 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் ஒரு பயணம் புறப்பட விரும்பினால் தம் மனைவிமார்களிடையே (எவரைப் பயணத்தில் தம்முடன் அழைத்துச் செல்வது எனத் தீர்மானித்திட) சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது (பெயருள்ள) சீட்டு வருகின்றதோ அவரைத் தம்முடன் அழைத்துக் கொண்டு பயணம் புறப்படுவார்கள். இவ்வாறே, அவர்கள் செய்த ஒரு புனிதப் போரின் போது14 (பயணத்தில் உடன் அழைத்துச் செல்ல) எங்களுக்கிடையே சீட்டுக் குலுக்கிப் போட்டார்கள். எனது (பெயருள்ள) சீட்டு வந்தது. ஆகவே, நான் அவர்களுடன் (பயணம்) புறப்பட்டுச் சென்றேன். இது (பெண்கள் பர்தா முறையைக் கடைப்பிடிக்க வேண்டும் என்னும்) ஹிஜாபின் சட்டம் அருளப்பட்ட பிறகு நடந்ததாகும். நான் ஓர் ஒட்டகச் சிவிகையில் வைத்துச் சுமந்து செல்லப்படுவேன். நான் அதில் இருக்கும் நிலையிலேயே கீழே இறக்கி வைக்கப்படுவேன். நபி (ஸல்) அவர்கள் அந்தப் போர் முடிந்து புறப்பட்ட போது நாங்கள் மதீனாவை நெருங்கிய வேளையில் இரவு நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கும்படி அறிவிப்புச் செய்தார்கள்.

நான் (சிவிகையிலிருந்து) எழுந்து (மலஜலம் கழிப்பதற்காக மறைவிடம் தேடி) படையைக் கடந்து சென்றேன். என் (மலஜலத்) தேவையை நான் முடித்துக் கொண்ட போது முகாமிட்டிருந்த இடத்தை நோக்கிச் சென்றேன். அப்போது என் நெஞ்சை நான் தொட்டுப் பார்த்த போது, (என் கழுத்திலிருந்த) யமன் நாட்டு முத்துமாலையொன்று அறுந்து (விழுந்து) விட்டிருந்தது. ஆகவே, நான் திரும்பிச் சென்று என் மாலையைத் தேடலானேன்; அதைத் தேடிக் கொண்டிருந்தது (நான் சீக்கிரம் திரும்பிச் சென்று படையினருடன் சேரவிடாமல்) என்னைத் தாமதப்படுத்தி விட்டது. ஆகவே, என்னை எடுத்துச் சென்று ஒட்டகத்தில் வைப்பவர்கள், என் சிவிகைக்குள் நான் இருப்பதாக எண்ணிக் கொண்டு அதைச் சுமந்து சென்று, நான் வழக்கமாக சவாரி செய்கின்ற என் ஒட்டகத்தின் மீது வைத்துக் கட்டி விட்டனர். அந்தக் கால கட்டத்தில் பெண்கள் பருமனாக இன்றி மெ-ந் தவர்களாக இருந்தனர். அவர்களுக்குச் சதை போட்டிருக்கவில்லை. சிறிதளவு உணவே அவர்கள் உண்பார்கள். ஆகவே, சிவிகையைத் தூக்கிய போது அதன் (இலேசான) கனத்தை மக்கள் வித்தியாசமாகக் கருதவில்லை. மேலும், நான் வயது குறைந்த சிறுமியாக இருந்தேன். அவர்கள் ஒட்டகத்தை (முன்னே) அனுப்பி விட்டு நடக்க லானார்கள். படையினர் சென்ற பிறகு நான் (தொலைந்து போன) என் மாலையைப் பெற்றுக் கொண்டேன். பிறகு, நான் அவர்கள் தங்கியிருந்த இடத்திற்கு வந்தேன். அப்போது, அங்கு ஒருவரும் இல்லை. நான் ஏற்கனவே தங்கியிருந்த இடத்தைத் தேடிச் சென்று அங்கு அமர்ந்து கொண்டேன். படையினர், நான் காணாமல் போயிருப்பதைக் கண்டு என்னிடம் திரும்பி வருவார்கள் என்று நான் கருதினேன். நான் அப்படியே உட்கார்ந்தபடி இருந்த பொழுது என் கண்கள் (உறக்கம்) மிகைத்து நான் தூங்கி விட்டேன். ஸஃப்வான் பின் முஅத்தல் அஸ் ஸுலமீ என்பவர் படையின் பின் அணியில் இருந்தார். அவர், நான் தங்கியிருந்த இடத்தில் காலை வரை தங்கி விட்டிருந்தார். அவர் (காலையில் விழித்தெழுந்தவுடன்) தூங்கிக் கொண்டிருந்த ஓர் உருவத்தை (என்னை)ப் பார்த்து விட்டு என்னிடம் வந்தார். பர்தாவுடைய சட்டம் அருளப்படுவதற்கு முன்னால் அவர் என்னைப் பார்த்திருந்தார். (ஆகவே, என்னை அடையாளம் புரிந்து கொண்டு) அவர், இன்னா-ல் லாஹி வ இன்னா இலைஹி ராஜிஊன்- நாம் அல்லாஹ்விற்கே உரியவர்கள்; மேலும், நாம் அவனிடமே திரும்பிச் செல்லவிருக்கிறோம் என்று கூறும் சப்தத்தைக் கேட்டு நான் கண் விழித்தேன். பிறகு, அவர் தம் ஒட்டகத்தை மண்டியிடச் செய்து, அதன் முன்னங்காலை (தன் காலால்) மிதித்துக் கொள்ள நான்

அதன் மீது ஏறிக் கொண்டேன். அவர் என்னுடன் ஒட்டகத்தை ஓட்டிக் கொண்டு நடக்கலானார். இறுதியில் நாங்கள் படையினரை வந்தடைந்தோம். அதற்குள் அவர்கள் (மதிய ஓய்வுக்காக) நடுப்பகல் நேரத்தில் (ஓரிடத்தில்) தங்கி விட்டிருந்தார்கள். (இப்போது எங்களைக் கண்டு அவதூறு பேசி) அழிந்தவர்கள் அழிந்தார்கள். என் மீது அவதூறு (பிரசாரம்) செய்ய (தலைமைப்) பொறுப் பேற்றிருந்தவன் அப்துல்லாஹ் பின் உபை பின் ஸலூல் (எனும் நயவஞ்சகர்களின் தலைவன்) ஆவான். நாங்கள் மதீனாவை வந்தடைந்தோம். அங்கு ஒரு மாத காலம் நான் நோயுற்றுவிட்டேன். மக்களோ அவதூறு கற்பித்தவர்களின் சொல்லைப் பரப்பிக் கொண்டிருந்தார்கள். நான் நோயுற்றுவிடும் போது நபி (ஸல்) அவர்கள் வழக்கமாக என்னிடம் காட்டு கின்ற பரிவை (இந்த முறை) நான் நோயுற்றிருக்கும் போது அவர்களிடம் காணமுடியாமல் போனது எனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தியது. அவர்கள் வருவார்கள்; சலாம் சொல்வார்கள்; பிறகு, நீ எப்படி இருக்கிறாய்? என்று கேட்பார்கள்; (பிறகு போய்விடுவார்கள்.) அவ்வளவுதான். (என்னைக் குறித்து வெளியே பேசப்பட்டு வந்த அவதூறில்) ஒரு சிறிதும் எனக்குத் தெரியாது. இறுதியில், நான் (நோயிலிருந்து குணமடைந்து விட, நானும் உம்மு மிஸ்தஹ் (ரலி) அவர்களும் நாங்கள் கழிப்பிடமாகப் பயன்படுத்தி வந்த மனாஸிஉ என்னுமிடத்தை நோக்கிச் சென்றோம். நாங்கள் இரவு நேரங்களில் மட்டும் இவ்வாறு செல்வோம். எங்கள் வீடுகளுக்கு அருகிலேயே கழிப்பிடங் களை அமைத்துக் கொள்வதற்கு முன்னால் நாங்கள் இவ்வாறு அங்கு சென்று கொண்டிருந்தோம். (இயற்கைத் தேவைக்காக) நகருக்கு வெளியே செல்லும் எங்களது இந்த வழக்கம் முற்கால அரபுகளின் வழக்கத்தை ஒத்ததாயிருந்தது. நானும் அபூருஹ்மின் மகளாகிய உம்மு மிஸ்தஹும் நடந்து முன்னால் சென்று கொண்டிருந்தோம். உம்மு மிஸ்தஹை அவர் அணிந்திருந்த கம்பளி அங்கி இடறியது. அப்போது அவர், மிஸ்தஹ் நாசமாகட்டும் என்று கூறினார். நான், மிக மோசமான சொல்லைச் சொல்லிவிட்டாய். பத்ருப் போரில் கலந்து கொண்ட ஒரு மனிதரையா நீ ஏசுகிறாய் என்று கூறினேன். அதற்கு அவர், அம்மா! அவர்கள் என்ன சொன்னார்கள் என்று நீங்கள் கேள்விப் படவில்லையா? என்று கூறிவிட்டு, அவதூறு கற்பித்தவர்கள் சொன்ன (அபாண்டத்)தை எனக்குத் தெரிவித்தார். அதைக் கேட்டு என் நோய் இன்னும் அதிகரித்து விட்டது. நான் என் வீட்டிற் குத் திரும்பி வந்த போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னிடம் வந்து, நீ எப்படி இருக்கிறாய்? என்று கேட் டார்கள். நான் என் தாய்தந்தையரிடம் செல்ல எனக்கு அனுமதி கொடுங்கள் என்று கேட்டேன். அப்போது நான் அவ்விருவரிடமிருந்தும் (உண்மையிலேயே அப்படியொரு வதந்தி உலவுகின்றதா என்று விசாரித்து என் மீதான அவதூறுச்) செய்தியை உறுதிப்படுத்திக் கொள்ள விரும்பினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எனக்கு அனுமதியளிக்கவே நான் என் தாய்தந்தையரிடம் சென்றேன். என் தாயாரிடம், மக்கள் (என்னைப் பற்றி) என்ன பேசிக் கொள்கிறார்கள்? என்று கேட்டேன். என் தாயார், என் அன்பு மகளே! உன் மீது இந்த விஷயத்தைப் பெரிதுபடுத்திக் கொள்ளாதே. அல்லாஹ்வின் மீதாணையாக! சக்களத்திகள் பலரும் இருக்க, (தன்) கணவரிடம் பிரியத் துக்குரியவளாக இருக்கும் அழகு மிக்க பெண்ணொருத்தியைக் குறித்து அவளது சக்களத்திகள் அதிகமாக (வதந்திகள்) பேசத் தான் செய்வார்கள். அவ்வாறு பேசாமலிருப்பது (பெரும்பாலும்) குறைவேயாகும் என்று கூறினார்கள். நான், சுப்ஹானல்லாஹ்...! (இறைவன் தூய்மையானவன்!) இப்படியா மக்கள் பேசிக் கொள்கிறார்கள்? என்று கேட்டேன். அன்றிரவை இடைவிடாமல் அழுது கொண்டும் தூக்கம் சிறிது மின்றியும் காலை வரை கழித்தேன். காலை நேரம் வந்தது. அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் தம் மனைவியை(என்னை)ப் பிரிந்து விடுவது குறித்து ஆலோசனை கேட்பதற்காக அலீ பின் அபீ தா-ப் (ரலி) அவர்களையும், உஸாமா பின் ஸைத் (ரலி) அவர்களையும் அழைத்தார்கள். அப்போது வஹீ (தற்கா-கமாக) நின்று போயிருந்தது. உஸாமா (ரலி) அவர் களோ தம் உள்ளத்தில் நபி (ஸல்) அவர்களின் மனைவிமார்கள் மீதிருந்த பாசத்தை அடிப்படையாகக் கொண்டு ஆலோசனை கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே! தங்கள் துணைவியரிடம் நல்ல(குணத்)தைத் தவிர வேறெதையும் நான் அறிய மாட்டேன் என்று அவர்கள் கூறினார்கள். அலீ பின் அபீ தா-ப்

(ரலி) அவர்களோ (நபி (ஸல்) அவர்களின் மனக் கவலையைக் குறைத்து ஆறுதல் கூறும் நோக்குடன்), அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ் உங்களுக்கு எந்த நெருக்கடியையும் ஏற்படுத்தவில்லை. அவர் (ஆயிஷா) அன்றிப் பெண்கள் நிறையப் பேர் இருக்கின்றனர். பணிப் பெண்ணைக் கேளுங்கள். அவள் உங்களிடம் உண்மையைச் சொல்வாள் என்று கூறினார்கள். ஆகவே, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (பணிப் பெண்ணான) பரீராவை அழைத்து, பரீராவே! நீ ஆயிஷாவிடம் உனக்கு சந்தேகத்தை ஏற்படுத்தும் (செயல்) எதையாவது பார்த்திருக்கின்றாயா? என்று கேட்டார்கள். அதற்கு பரீரா

(ரலி), தங்களை சத்திய(மார்க்க)த்துடன் அனுப்பியவன் மீது ஆணையாக! அவர் (குழைத்து வைத்த) மாவை அப்படியே போட்டு விட்டு உறங்கிப் போய்விடுவார்; வீட்டிலுள்ள ஆடு வந்து அதைத் தின்றுவிடும்; அத்தகைய (விபரமறியாத) இளவயதுச் சிறுமி என்பதைத் தவிர அவரைக் குறை சொல்லக்கூடிய விஷயம் எதையும் அவரிடம் நான் பார்க்கவில்லை என்று பதில் கூறினார். உடனே, அன்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் (மிம்பரில் ஏறி) நின்று, அப்துல்லாஹ் பின் உபை பின் சலூலை தண்டிப்பதற்கு (தமக்கு) உதவும்படி(தம் தோழர்களிடம்) கோரினார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், என் வீட்டார் விஷயத்தில் (வதந்தி கிளப்பி) எனக்கு மன வேதனையளித்த ஒரு மனிதனை தண்டித்திட எனக்கு உதவிபுரிபவர் யார்? அவர்கள் (அவதூறு கற்பித்த நயவஞ்சகர்கள்) ஒரு மனிதரை (என் மனைவியுடன் இணைத்து அவதூறு) கூறியுள்ளனர். ஆனால், அவரைப் பற்றி நான் நல்லதையே அறிவேன். அவர் என் வீட்டாரிடம் என்னுடனேயல்லாமல் (நான் வீட்டிலிருக்கும் போதே தவிர) வந்ததில்லை என்று கூறினார்கள். உடனே, சஅத் பின் முஆத் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் தூதரே! அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை தண்டிக்க நான் தங்களுக்கு உதவுகின்றேன். அவன் (எங்கள்) அவ்ஸ் குலத்தைச் சேர்ந்த வனாயிருந்தால் நாங்கள் அவனது கழுத்தைத் துண்டித்து விடுகிறோம். எங்கள் சகோதரர்களான கஸ்ரஜ் குலத்தைச் சேர்ந்தவனாக இருந்தால் (என்ன செய்யவேண்டுமென்று) தாங்கள் எங்களுக்கு உத்தரவிடுங்கள். தங்கள் உத்தரவை நாங்கள் நிறைவேற்று கின்றோம் என்று கூறினார்கள். உடனே, கஸ்ரஜ் குலத் தலைவராயிருந்த சஅத் பின் உபாதா (ரலி) அவர்கள் எழுந்து நின்று, அல்லாஹ்வின் மீதாணையாக! நீர் பொய்யுரைத்தீர்; அவனை நீர் கொல்ல மாட்டீர். அது உம்மால் முடியாது என்று கூறினார். அதற்கு முன் அவர் நல்ல மனிதராகத் தான் இருந்தார்; ஆயினும், குல மாச்சரியம் அவரை அவ்வாறு பேசத் தூண்டி விட்டது. உடனே, உசைத் பின் ஹுளைர் (ரலி) அவர்கள் எழுந்து நின்று, உபாதா (ரலி) அவர்களை நோக்கி, நீர் தாம் பெய்யுரைத்தீர். அல்லாஹ்வின் மீதாணையாக! அவனை நாங்கள் கொன்றே தீருவோம். நீர் ஒரு நயவஞ்சகர். (அதனால் தான்) நயவஞ்சகர்களின் சார்பாக வாதிடுகின்றீர் என்று கூறினார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் மிம்பரின் மீது நின்று கொண்டிருக்க, அவ்ஸ், கஸ்ரஜ் ஆகிய இரு குலத்தாரும் ஒருவர் மீதொருவர் பாய்ந்து சண்டையிட முற்பட்டனர். நபி (ஸல்) அவர்கள் மிம்பரிலிருந்து இறங்கி அவர்கள் மௌனமாகும் வரை அவர்களை அமைதிப்படுத்தினார்கள். பிறகு அவர்களும் மௌனமாகி விட்டார்கள். அன்று நான் இடைவிடாமல் அழுது கொண்டிருந்தேன்; சிறிதும் உறங்க வில்லை. காலையானதும் என் தாய் தந்தையர் என் அருகேயிருந்தனர். நானோ இரண்டு இரவுகள் ஒரு பகல் (முழுக்க) என் ஈரல் பிளந்து விடுமோ என்றெண் ணும் அளவிற்கு அழுதிருந்தேன். நான் அழுதவண்ணமிருக்கும் போது என் தாய்தந்தையர் என்னிடம் அமர்ந்திருக்க, அன்சாரிப் பெண்ணொருத்தி வந்து உள்ளே வர அனுமதி கேட்டாள். நான் அவளுக்கு அனுமதியளித்தவுடன் என்னோடு சேர்ந்து அவளும் அழுதபடி அமர்ந்து கொண்டாள். நாங்கள் இவ்வாறு இருந்து கொண்டிருக்கும் போது அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் வந்து அமர்ந்தார்கள். என்னைப் பற்றி அவதூறு சொல்லப்பட்ட நாளிலிருந்து அவர்கள் என்னருகே அமர்ந்த தில்லை. மேலும், ஒரு மாத காலம் வரை என் விஷயத்தில் (அல்லாஹ்விடமிருந்து தீர்ப்பு) எதுவும் அவர்களுக்கு வஹீயாக அருளப்படவில்லை. பிறகு நபி (ஸல்) அவர்கள், லாஇலாஹ இல்லல்லாஹ் (வணக்கத்திற்குரியவன் அல்லாஹ்வைத் தவிர வேறெவருமில்லை) என்று கூறிவிட்டு, ஆயிஷாவே! உன்னைக் குறித்து இன்னின்னவாறு எனக்குச் செய்தி கிடைத்துள்ளது. நீ நிரபராதியாக இருந்தால் அல்லாஹ் விரைவில் உன்னைக் குற்றமற்றவள் என்று அறிவித்து விடுவான். நீ குற்றமேதும் செய்திருந்தால் அல்லாஹ்விடம் பாவ மன்னிப்புக் கோரி, அவன் பக்கம் திரும்பி விடு. ஏனெனில், அடியான் தன் பாவத்தை ஒப்புக் கொண்டு (மனம் திருந்தி) பாவ மன்னிப்புக் கோரினால் அவனது கோரிக்கையை ஏற்று அல்லாஹ் அவனை மன்னிக் கின்றான் என்று சொன்னார்கள். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், தமது பேச்சை முடித்த போது என் கண்ணீர் (முழுவதுமாக) நின்று போய் விட்டிருந்தது. அதில் ஒரு துளியும் எஞ்சியிருக்கவில்லை. நான் என் தந்தையிடம், அல்லாஹ்வின் தூதருக்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தந்தை, அல்லாஹ்வின் தூதரிடம் என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரிய வில்லை என்று கூறினார்கள். நான் என் தாயாரிடம், அல்லாஹ்வின் தூதர் சொன்னதற்கு என் சார்பாக பதில் கூறுங்கள் என்று சொன்னேன். அதற்கு என் தாயார், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுக்கு என்ன (பதில்) சொல்வது என்றே எனக்குத் தெரியவில்லை என்று கூறினார்கள். நானோ இளவயதுடைய சிறுமியாக இருந்தேன். குர்ஆனிலிருந்து அதிமாக (ஓதத்) தெரியாதவளாகவும் இருந்தேன். ஆகவே, அல்லாஹ்வின் மீதாணையாக! நீங்கள், மக்கள் என்னைப் பற்றிப் பேசிக் கொண்டவற்றைக் கேட்டி ருக்கிறீர்கள் என்பதையும் அது உங்கள் மனத்தில் பதிந்து போய், அதை உண்மையென்று நீங்கள் நம்பிவிட்டீர்கள் என்பதையும் நான் அறிவேன். நான் குற்றமற்றவள் என்று நான் தங்களிடம் சொன்னால். .....நான் குற்றமற்றவள் என்பதை அல்லாஹ் அறிவான்..... நீங்கள் அதை நம்பப்போவதில்லை; நான் குற்றமேதும் புரிந்திருப்பதாக ஒப்புக் கொண்டால் (நான் சொல்வதை அப்படியே உண்மையென்று ஏற்று) என்னை நம்பிவிடுவீர்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! எனக்கும் உங்களுக்கும் (நபி) யூசுஃப் (அலை) அவர்களின் தந்தையை(யஃகூப் (அலை) அவர்களை) யே நான் உவமையாகக் கருதுகிறேன். (அதாவது): (இதை) சகித்துக் கொள்வதே நல்லது; நீங்கள் புனைந்து சொல்லும் விஷயத்தில் அல்லாஹ்விடம் தான் நான் பாதுகாப்புக் கோர வேண்டும்.(குர்ஆன் 12:18)15 பிறகு, அல்லாஹ் நான் குற்றமற்றவள் என அறிவிப்பான் என்ற நம்பிக்கையுடன் நான் என் படுக்கையில் (வேறு பக்கமாகத்) திரும்பிப்படுத்துக் கொண்டேன். ஆயினும், திருக்குர்ஆனில் என் விஷயத்தைப் பற்றிப் பேசுகின்ற அளவிற்கு நான் ஒன்றும் முக்கியத்துவ முடையவளல்ல; மிகச் சாதாரணமான வள்தான் என்று என்னைக் குறித்து நான் கருதிக் கொண்டிருக்க, அல்லாஹ்வின் மீதாணையாக! இறைவன் என் விஷயத்தில் வஹீயையே - வேதவெளிப் பாட்டையே (திருக்குர்ஆனில்) அருளு வான் என்று நான் நினைத்தும் பார்க்கவில்லை. மாறாக, அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் என்னை அல்லாஹ் குற்றமற்றவள் என்று உணர்த்தும் கனவு எதையாவது தூக்கத்தில் காண்பார்கள் என்றுதான் நான் எதிர்பார்த்தேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நபி (ஸல்) அவர்கள் தாம் அமர்ந்திருந்த இடத்திலிருந்து எழுந்திருக்கவுமில்லை; வீட்டிலிருந்த எவரும் வெளியே செல்லவுமில்லை; அதற்குள் அல்லாஹ், நபி (ஸல்) அவர்கள் மீது (திருக்குர்ஆன் வசனங்களை) அருள ஆரம்பித்து விட்டான். உடனே, (வேத வெளிப்பாடு வருகின்ற நேரங்களில்) ஏற்படும் கடும் சிரமமான நிலை அவர்களுக்கு ஏற்பட்டது; அது கடும் குளிர் காலமாயிருந்தும் அவர்களின் மேனியிலிருந்து முத்துக்களைப் போல் வியர்வைத் துளிகள் வழியத் தொடங்கின. அந்த நிலை அல்லாஹ்வின் தூதரை விட்டு நீங்கியவுடன் அவர்கள் சிரித்துக் கொண்டே முதல் வார்த்தையாக, ஆயிஷாவே! அல்லாஹ்வைப் புகழ்ந்து நன்றி செலுத்து. உன்னை அல்லாஹ் குற்றமற்றவள் என அறிவித்து விட்டான் என்று கூறினார்கள். என் தாயார், அல்லாஹ்வின் தூதரிடம் எழுந்து செல் என்று கூறினார்கள். நான், மாட்டேன்; அல்லாஹ்வின் மீதாணையாக! அவர் களிடம் நான் செல்ல மாட்டேன். அல்லாஹ்வை மட்டுமே புகழ்ந்து, அவனுக்கே நன்றி செலுத்துவேன் என்றேன். அப்போது அல்லாஹ், (ஆயிஷாவின் மீது) அவதூறு பரப்பியவர்கள் உங்களில் ஒரு குழுவினர் தான் என்று தொடங்கும் (24:11) வசனங்களை அருளியிருந்தான். என் குற்றமற்ற நிலையைத் தெளிவுபடுத்தி அல்லாஹ் இதை அருளிய போது (என் தந்தை) அபூபக்ர் (ரலி) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! (என் மகள்) ஆயிஷாவைப் பற்றி (அவதூறு) கூறிய பின்பு ஒரு போதும் மிஸ்தஹுக்காக நான் செலவிட மாட்டேன் என்று கூறினார்கள்... மிஸ்தஹ் பின் உஸாஸா தம் உறவினர் என்பதால் அவருக்காக அபூபக்ர் (ரலி) அவர்கள் செலவிட்டு வந்தார்கள்...... உடனே அல்லாஹ், உங்களிடையேயுள்ள (பொருள்) அருளப் பெற்றோரும் (பிறருக்கு உதவி செய்யும்) இயல்புடையோரும், (தங்கள்) உறவினர் களுக்கோ, ஏழைகளுக்கோ, அல்லாஹ் வுடைய பாதையில் ஹிஜ்ரத் செய்த வர்களுக்கோ (எதுவும்) கொடுக்க மாட்டேன் என்று சத்தியம் செய்ய வேண்டாம். (அவர்களால் தங்களுக்கு ஏதும் வருத்தம் ஏற்பட்டிருந்தால்) அதனை மன்னித்துப் (பிழைகளைப்) பொருட்படுத்தாமல் விட்டு விடட்டும். அல்லாஹ் உங்களுக்கு மன்னிப்பளிப்பதை நீங்கள் விரும்பமாட்டீர்களா? அல்லாஹ் மிகவும் மன்னிப்போனும் கிருபையுடை யோனுமாய் இருக்கின்றான் என்னும் (24:22) இறைவசனத்தை அருளினான். அதன் பிறகு அபூபக்ர் (ரலி) அவர்கள், ஆம், அல்லாஹ்வின் மீதாணையாக! அல்லாஹ் எனக்கு மன்னிப்பளிக்க வேண்டும் என்று நான் விரும்புகிறேன் என்று கூறிவிட்டு, மிஸ்தஹ் (ரலி) அவர்களுக்கு ஏற்கனவே தாம் செய்து வந்த (பொருள்) உதவியைத் தொடர லானார்கள்.

(திருக்குர்ஆனில் என்னைப் பற்றிய வசனங்கள் அருளப்படுவதற்கு முன்னால்) அல்லாஹ்வின் தூதர் என் விஷயத்தில் (தமது இன்னொரு மனைவியான) ஸைனப் பின்த்து ஜஹ்ஷ் (ரலி) அவர் களிடம் விசாரித்தார்கள். ஸைனபே! நீ (ஆயிஷாவைப் பற்றி) என்ன அறிந்திருக் கிறாய்? (அவர் விஷயத்தில்) என்ன பார்த்திருக்கிறாய்? என்று கேட்டார்கள். அதற்கு அவர், அல்லாஹ்வின் தூதரே! என் காதுகளையும் என் கண்களையும் (அவற்றின் மீது பழி சுமத்தாமல்) நான் பாதுகாத்துக் கொள்வேன்.16 அல்லாஹ்வின் மீதாணையாக! ஆயிஷாவைக் குறித்து நான் நல்லதையே அறிவேன் என்று பதிலளித்தார்கள். ஸைனப் (ரலி) அவர்கள் தாம் எனக்கு (அழகிலும் நபி (ஸல்) அவர்களின் அன்பிலும்) போட்டியாக இருந்தார்கள். ஆயினும், அல்லாஹ் அவர்களை இறை யச்சமுடைய, பேணுதலான பண்பை யளித்துப் பாதுகாத்திருந்தான்.17

இந்த அறிவிப்பு இன்னும் பலர் வழியாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது.

பாடம் : 16

ஒரு மனிதர் மற்றொரு மனிதரை

நல்லவர் என்று கூறினால் (அவரது சாட்சியத்தை ஏற்க) அதுவே போதுமானதாகும்.

அபூஜமீலா (ரலி) அவர்கள் கூறினார்கள்:

நான் கேட்பாரற்ற குழந்தை ஒன்றைக் கண்டெடுத்தேன். என்னை உமர் (ரலி) அவர்கள் பார்த்த போது, (அது கண்டெடுக்கப்பட்ட குழந்தை என்பதை நம்பாமல், நான் என் குழந்தையைத் தான் அதன் தகப்பன் என்கிற பொறுப்பை ஏற்க மறுத்துப் பொதுநிதியிலிருந்து பணம் பெறுவதற்காக இப்படிக் கூறுகிறேன் என்று கருதி), இது உனக்கு ஆபத்தாகவே முடியும் என்று குற்றம் சாட்டுவதைப் போல் கூறினார்கள்.

எங்கள் (வட்டார அரசு) அதிகாரி ஒருவர், அவர் நல்ல மனிதர் என்று கூறியதும், அப்படித் தான் (என்று ஒப்புக் கொள்கிறேன்), போ! அக்குழந்தையின் பராமரிப்புச் செலவு எம் (அரசின்) மீது சாரும் என்று உமர் (ரலி) அவர்கள் கூறினார்கள்.

2662 அபூபக்ரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் இன்னொரு மனிதரைப் பற்றி நபி (ஸல்) அவர்களிடம் புகழ்ந்து பேசினார். நபி (ஸல்) அவர்கள், அழிந்து போவீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர். உம் தோழரின் கழுத்தை நீர் துண்டித்து விட்டீர் என்று (பலமுறை) கூறினார்கள். பிறகு, உங்களில் எவர் தன் சகோதரரைப் புகழ்ந்து தான் ஆகவேண்டும் என்றிருக்கிறாரோ அவர், இன்னாரை நான் இப்படிப்பட்டவர் என்று எண்ணுகிறேன். அல்லாஹ்வே அவரைக் குறித்து விசாரணை (செய்து முடிவு) செய்பவன் ஆவான். அல்லாஹ் (உண்மை நிலையை அறிந்தவனாக) இருக்க, அவனை முந்திக் கொண்டு நான் யாரையும் தூய்மையானவர் என்று கூற மாட்டேன். அவரை இன்னின்ன விதமாக நான் எண்ணுகிறேன் என்று கூறட்டும். அந்தப் பண்பை அவர் அந்த மனிதரிடமி ருந்து அறிந்திருந்தால் மட்டுமே இப்படிக் கூறட்டும் என்று சொன்னார்கள்.

பாடம் : 17

மிகையாகப் புகழ்வது வெறுக்கத் தக்கதாகும்; மேலும், (ஒருவர் தாம்) அறிந்தவற்றை மட்டுமே (மற்றவரைப் பற்றிக்) கூறட்டும்.

2663 அபூமூசா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு மனிதர் மற்றொரு மனிதரைப் புகழ்ந்து கொண் டிருப்பதையும் அவரை மிகைப்படுத்தி (ஒரேயடியாக உயர்த்திப்) புகழ்ந்து கொண்டிருப்பதையும் செவியுற்றார்கள். உடனே, நீங்கள் அந்த மனிதரின் முதுகை நாசமாக்கிவிட்டீர்கள்-அல்லது-துண் டித்து விட்டீர்கள் என்று கூறினார்கள்.

பாடம் : 18

குழந்தைகள் பருவமடைவதும் அவர் களுடைய சாட்சியமும்

அல்லாஹ் கூறுகிறான்:

உங்கள் சிறுவர்கள் பருவம் அடைந்து விட்டால் அவர்களுடைய பெரியவர்கள் எவ்வாறு அனுமதி கேட்கிறார்களோ அவ்வாறு அவர்களும் அனுமதி பெற்று வரட்டும். (24:59)

நான் பன்னிரண்டு வயதுடைய வனாக இருந்த போது பருவமடைந்தேன் என்று சட்ட நிபுணர் முகீரா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்.

பெண்கள் பருவ வயதை அடைவது, மாதவிலக்கு (வரத்) தொடங்கும் போதாகும்.18

ஏனெனில், அல்லாஹ் கூறுகிறான்:

உங்கள் பெண்களில் எவர் இனி மாதவிலக்கு வரப் போவதில்லை என்று நம்பிக்கையிழந்து விட்டிருக்கின்றார்களோ அவர்களைக் குறித்து சந்தேகம் ஏற் பட்டால், (தெரிந்து கொள்ளுங்கள்:) அவர்களுடைய இத்தா காலம் மூன்று மாதங்களாகும். மேலும், எந்தப் பெண்களுக்கு இதுவரையிலும் மாத விலக்கு வரவில்லையோ (அவர்களுக்குரிய சட்டமும் இது தான் .) மேலும், கர்ப்பிணிகளுக்கான இத்தா காலம் அவர்கள் குழந்தையைப் பெற்றெடுப் பதுடன் முடிவடைகின்றது. (65:4)

ஹஸன் பின் சா-ஹ் (ரஹ்) கூறினார்கள்:

எங்கள் அண்டை வீட்டுக்காரப் பெண்ணொருத்தி 21 வயதிலெல்லாம் பாட்டியாகி விட்டதை நான் கண்டேன்.19

2664 இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறியதாவது:

 நான் பதினான்கு வயதுடையவனாக இருக்கும் போது, உஹுதுப் போர் நடந்த காலகட்டத்தில் நபி (ஸல்) அவர்கள் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள்; ஆனால், (போரில் கலந்து கொள்ள) எனக்கு அனுமதியளிக்க வில்லை. அகழ்ப் போரின் போதும் என்னைத் தமக்கு முன்பாக வரவழைத்தார்கள். அப்போது நான் பதினைந்து வயதுடையவனாயிருந்தேன். அப்போது, போரில் கலந்து கொள்ள எனக்கு அனுமதியளித்தார்கள்.

அறிவிப்பாளர் நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

உமர் பின் அப்தில் அஸீஸ் (ரஹ்) அவர்கள் கலீஃபாவாக இருந்த போது அவர்களிடம் நான் சென்றேன். (இப்னு உமர் (ரலி) அவர்களுடைய) இந்த ஹதீஸை அவர்களுக்கு அறிவித்தேன். அவர்கள், (அப்படியென்றால்) இது தான் சிறியவருக்கும் பெரியவருக்குமிடையில் (வேறுபடுத்திக் காட்டும்) எல்லைக் கோடாகும் என்று கூறிவிட்டு, பதினைந்து வயதை அடைந்தவர்களுக்கு (ராணுவப் பணிக்கான ஊதியத் தொகையை) நிர்ணயிக்கும்படி தம் ஆளுநர்களுக்கு எழுதினார்கள்

2665 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

ஜும்ஆ நாளன்று குளிப்பது பருவ வயதை அடைந்து விட்ட ஒவ்வொருவர் மீதும் கடமையாகும்.

இதை அபூசயீத் அல்குத்ரீ (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 19

நீதிபதி (பிரதிவாதியிடம்) சத்தியப் பிரமாணம் செய்யும்படி கேட்பதற்கு முன்பாக வாதியிடம்,உனக்கு ஆதாரம் இருக்கிறதா? என்று கேட்பது.

2666 & 2667 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறுகிறார்கள்:

ஒரு முஸ்-மின் செல்வத்தைப் பறித்துக் கொள்வதற்காக, ஒரு பிர மாணத்தின் போது பொய் சொல்லி சத்தியம் செய்கின்றவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை மறுமையில் சந்திப்பார்.

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவர் கூறுகின்றார்:

அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் (வந்து), அல்லாஹ்வின் மீதாணையாக! என் விவகாரத்தில் தான் இப்படி (நபி (ஸல்) அவர்கள் சொன்னது) நடந்தது. எனக்கும் ஒரு யூதருக்குமிடையே ஒரு நிலம் (பற்றிய தகராறு) இருந்து வந்தது. அந்த யூதர் என் உரிமையை மறுத்தார். நான் நபி (ஸல்) அவர்களிடம் வழக்கைக் கொண்டு சென்றேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், உனக்கு ஆதாரம் ஏதும் உண்டா? என்று என்னைக் கேட்டார்கள். நான், இல்லை என்று பதிலளித்தேன். ஆகவே, அந்த யூதரிடம் நபி (ஸல்) அவர்கள், (நிலம் உன்னு டையது என்று) சத்தியம் செய் என்று கூறினார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! அப்படியென்றால், அவன் (தயங்காமல் பொய்) சத்தியம் செய்து என் செல்வத்தை எடுத்துச் சென்று விடுவானே என்று கூறினேன். அப்போது தான், எவர் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங் களையும் சொற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான். அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது என்னும் திருக்குர்ஆனின் (3:77) வசனத்தை அல்லாஹ் அருளினான்.

பாடம் : 20

பொருளாதார மற்றும் குற்றவியல் (சிவில்-கிரிமினல்) விவகாரங்களில் (தான் நிரபராதி என்று) சத்தியம் செய்வது பிரதிவாதியின் மீதே கடமையாகும்.

நபி (ஸல்) அவர்கள், (வாதியான) உனது இரு சாட்சிகள்; அல்லது (பிரதி வாதியான) அவரது சத்தியம் (ஆகியன இவ்வழக்கில் தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன) என்று சொன்னார்கள்.

மேலும், இப்னு ஷுப்ருமா (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:

 ஒரேயொருவரின் சாட்சியம் மற்றும் வாதியின் சத்தியம் குறித்து, அபுஸ் ஸினாத் (ரஹ்) அவர்கள் என்னிடம் கருத்துக் கேட்ட போது நான் இந்த இறை வசனத்தை எடுத்துரைத்தேன்.

அல்லாஹ் கூறுகிறான்:

மேலும், உங்களில் இரு ஆண்களை சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். இரு ஆண்கள் இல்லையென்றால் ஓர் ஆணையும் இரு பெண்களையும் சாட்சிகளாக ஆக்கிக் கொள்ளுங்கள். அவ்விருவரில் ஒருத்தி மறந்து விட்டால் மற்றொருத்தி அவளுக்கு அதை நினைவூட்டுவதற்காக. (2:282)

ஒரு சாட்சியுடன் வாதியின் சத்தியமும் இருந்தால் போதும் என்றிருக் குமாயின் ஒருத்தி மற்றொருத்திக்கு நினைவூட்டத் (துணையாக மற்றொரு சாட்சி) தேவையில்லையே. மற்றொருத்தி நினைவூட்டுவதால் என்ன பயன்? என்று (புகாரீயாகிய) நான் கேட்கிறேன்.

2668 இப்னு அபீ முலைக்கா (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

பிரதிவாதி தான் சத்தியம் செய்ய வேண்டும் என்று நபி (ஸல்) அவர்கள் தீர்ப்பளித்ததாக இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் எனக்கு (கடிதம்) எழுதினார்கள்.

2669 & 2670 அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

 ஒரு செல்வத்தை அநியாயமாக அடைவதற்காக, ஒரு பிரமாணத்தின் போது பொய் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்டிருக்கும் நிலையில் அவனை (மறுமையில் அவர் சந்திப்பார்) (என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.) பிறகு, அதை உறுதிப்படுத்தும் விதத்தில் அல்லாஹ், எவர் அல்லாஹ்விடம் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும் தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்றுவிடுகின்றார்களோ, அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களைப் பார்க்கவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக் கின்றது என்னும் (3:77) வசனத்தை அருளினான் என்று அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் கூறினார்கள். பிறகு அஷ்அஸ் பின் கைஸ் (ரலி) அவர்கள் எங்களிடம் வந்து, அபூ அப்திர் ரஹ்மான் (அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி)) உங்களிடம் என்ன சொல்கிறார்? என்று கேட்க, நாங்கள் அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் சொன் னதைத் தெரிவித்தோம். அதற்கு அவர்கள் சொன்னார்கள்: அவர் உண்மையே சொன்னார். என் விவகாரத்தில் தான் அந்த வசனம் இறங்கியது. எனக்கும் ஒரு மனிதருக்குமிடையே ஒரு விஷயத்தில் தகராறு இருந்து வந்தது. நாங்கள் அல்லாஹ்வின் தூதரிடம் வழக்கைக் கொண்டு சென்றோம். அவர்கள், உனது இரு சாட்சிகள். அல்லது அவருடைய சத்தியம் (தீர்ப்பளிக்கத் தேவைப்படுகின்றன) என்று கூறினார்கள். நான், அப்படியென்றால், அவர் (அந்த யூதர், தயங்காமல்) பொய் சத்தியம் செய்வாரே. (பொய் சத்தியம் செய்வதைப் பற்றி) கவலைப்பட மாட்டாரே என்று கேட்டேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள், எவர் ஒரு பிரமாணத்தின் போது அதன் மூலம் ஒரு சொத்தை அடைந்து கொள்வதற்காகப் பொய் சத்தியம் செய்கின்றாரோ அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்ட நிலையில் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார் என்று கூறினார்கள்.

அல்லாஹ், நபி (ஸல்) அவர்களின் இந்தச் சொற்களை உறுதிப்படுத்தி (திருக்குர்ஆனில் ஒரு வசனத்தை) அருளினான் என்று கூறிவிட்டு அந்த (3:77) இறைவசனத்தை ஓதிக் காட்டினார்கள்.

பாடம் : 21

ஒன்றை வாதிடக் கூடியவர், அல்லது குற்றம் சுமத்துகின்றவர் தன் கூற்றுக்கு ஆதாரத்தைத் தேடிச் செல்லலாம்.

2671 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஹிலால் பின் உமய்யா (ரலி) அவர்கள் தமது மனைவியை ஷரீக் பின் சஹ்மாவுடன் இணைத்து விபசாரக் குற்றம் சாட்டினார். நபி (ஸல்) அவர்கள், ஆதாரம் கொண்டுவா! இல்லை யென்றால் (அவதூறு செய்ததற்கு தண்டனையாக) உன் முதுகில் கசையடி தரப்படும் என்று கூறினார்கள். அதற்கு அவர்கள், அல்லாஹ்வின் தூதரே! எங்களில் ஒருவர், தன் மனைவியின் மேல் ஒரு மனிதரைப் பார்த்தாலும் ஆதாரம் தேடிச் செல்ல வேண்டுமா? என்று கேட்க, நபி (ஸல்) அவர்கள், ஆதாரம் கொண்டு வா! இல்லையென்றால் உன் முதுகில் கசையடி தரப்படும் என்று மீண்டும் கூறினார்கள்.

அறிவிப்பாளர் கூறுகிறார்:

இந்த ஹதீஸை அறிவித்து விட்டு இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் -ஆன் தொடர்பான ஹதீஸைக் கூறினார்கள்.20

பாடம் : 22

அஸ்ருத் தொழுகைக்குப் பிறகு சத்தியம் செய்வது.

2672 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

மூன்று பேரிடம் (மறுமை நாளில்) அல்லாஹ் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். அவர்களுக்குத் துன்பம் தரும் வேதனை உள்ளது. ஒருவர், (மக்களின் போக்குவரத்துப்) பாதையில் உள்ள (தன் உபயோகத்திற்குப் போக, தேவைக்கு மேலுள்ள) மீதமான தண்ணீரை வழிப் போக்கர்களுக்குத் (தராமல்) தடுத்துக் கொள்ளும் மனிதர் ஆவார். மற்றொருவர், உலக லாபங் களுக்காக மட்டும் ஓர் ஆட்சியாளரிடம் விசுவாசப் பிரமாணம் செய்தவர் ஆவார். அவர் தனக்கு, தான் விரும்புவதைக் கொடுத்தால் (பிரமாணத்தின் அடிப் படையில்) அவரிடம் விசுவாசமாக நடந்து கொள்வார். இல்லையெனில் விசுவாசமாக நடந்து கொள்ள மாட்டார். இன்னொருவர் ஒரு மனிதரிடம் அஸர் தொழுகைக்குப் பிறகு ஒரு பொருளுக்கு விலை கூறி, அந்தப் பொருளுக்கு இன்ன விலையைக் கொடுத்ததாக அல்லாஹ்வின் மீது (பொய்) சத்தியம் செய்ய, (அதை நம்பி) அந்த மனிதர் (அவர் சொன்ன விலைக்கு) அதை எடுத்துக் கொள்ளும்படி செய்தவர் ஆவார்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 23

பிரதிவாதியின் மீது சத்தியம் செய்வது கட்டாயமாகி விடும் இடத்தில் அவன் சத்தியம் செய்வான். ஓரிடத்திலிருந்து மற்றோரிடத்திற்கு அவனைக் கொண்டு செல்ல வேண்டிய அவசியமில்லை.

(ஒரு வழக்கில்) பிரதிவாதியாக இருந்த ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள் மிம்பரின் மீதிருந்தவாறு சத்தியம் செய்ய வேண்டும் என்று (மதீனாவின் ஆளுநர்) மர்வான் பின் ஹகம் தீர்ப்பளித்தார். ஸைத் பின் சாபித் (ரலி) அவர்கள், நான் என்னிடத்தில் இருந்தபடியே சத்தியம் செய்வேன் என்று கூறி, மிம்பரின் மீதிருந்து சத்தியம் செய்ய மறுத்து விட்டார்கள். மர்வான் அவரைக் கண்டு வியப்படைந்தார். (ஆனால்) நபி (ஸல்) அவர்கள், உனது இரு சாட்சிகளும் அவரது சத்தியமும் என்று தான் கூறினார்கள். எந்த இடத்தையும் குறிப்பிட்டு (இன்ன இடத்தில் செய்யும் சத்தியம் என்று) கூறவில்லை.

2673 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 (பிரமாண வாக்குமூலத்தின் போது) ஒரு செல்வத்தை அபகரித்துக் கொள்ளும் நோக்கத்துடன் சத்தியம் செய்பவர், அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்ட நிலையில் (மறுமையில்) அவனை அவர் சந்திப்பார்.

இதை அப்துல்லாஹ் பின் மஸ்ஊத் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 24

பிரமாண வாக்குமூலம் தர வேண்டிய ஒரு சமுதாயத்தார் அதற்காக ஒருவரையொருவர் முந்திக் கொண்டால்.... (குலுக்கல் முறை கையாளப்படும்.)

2674 அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ஒரு கூட்டத் தாரை சத்தியப் பிரமாணம் அளிக்கும் படி அழைத்தார்கள். அவர்கள் (ஒருவரையொருவர்) முந்திக் கொண்டு வந்தார்கள். அவர்களில் யார் சத்தியம் செய்வதென்று அவர்களிடையே (முடிவு செய்வதற்காகச்) சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் உத்தரவிட்டார்கள்.

பாடம் : 25

அல்லாஹ் கூறுகிறான்:

எவர் அல்லாஹ்வுடன் செய்து கொண்ட ஒப்பந்தத்தையும், தம் சத்தியங்களையும் அற்ப விலைக்கு விற்று விடுகின்றார்களோ அவர்களுக்கு மறுமையில் எவ்வித நற்பேறுமில்லை. இறுதித் தீர்ப்பு நாளன்று அல்லாஹ் அவர்களிடம் பேசவும் மாட்டான்; அவர்களை ஏறெடுத்துப் பார்க்கவும் மாட்டான்; அவர்களைத் தூய்மைப்படுத்தவும் மாட்டான். மாறாக, அவர்களுக்குத் துன்புறுத்தும் தண்டனை தான் இருக்கின்றது. (3:77)

2675 அபூ அவ்ஃபா (ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒருவர் (கடைத்தெருவில்) தமது சரக்கை (மக்கள் முன்) வைத்து, அல்லாஹ்வின் பெயரால் சத்தியமிட்டு, அதற்கு அவர் தராத விலையைத் தந்திருப்பதாக (பொய்) கூறினார். அப்போது மேற்கண்ட (3:77) இறை வசனம் அருளப்பட்டது.

2676 & 2677 அபூவாயில் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதரின் செல்வத்தை அபகரித்துக் கொள்வதற்காக, ஒரு பிரமாண(வாக்குமூலத்)தின் போது பொய்யாக சத்தியம் செய்பவர் அல்லாஹ் அவர் மீது கோபம் கொண்ட நிலையில் (மறுமையில்) அவனைச் சந்திப்பார் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அல்லாஹ் இந்த வாக்கை உறுதிப்படுத்தி, திருக்குர்ஆனின் மேற்கண்ட (3:77) வசனத்தை இறக்கினான். அப்போது அஷ்அஸ் (ரலி) அவர்கள் என்னைச் சந்தித்து, அப்துல்லாஹ் இன்று உங்களிடம் என்ன பேசினார்? என்று கேட்க, நான். இன்னின்ன விஷயங்களைப் பேசினார் என்று கூறினேன். அதற்கு அவர்கள், அந்த வசனம் என் விவகாரத்தில் தான் இறங்கியது என்று கூறினார்கள்.

பாடம் : 26

சத்தியம் செய்வது எப்படி?

அல்லாஹ் கூறுகின்றான்:

அவர்கள் அல்லாஹ்வின் மீது சத்தியமிடுகின்றார்கள். (9:62,74)

பிறகு அவர்கள், அல்லாஹ்வின் மீது ஆணையாக! நன்மை செய்வதையும் இரு பிரிவினரிடையே உடன்பாடு ஏற்படுத்து வதையும் தவிர நாங்கள் வேறெதையும் நாடவில்லை என்று சத்தியம் செய்து கொண்டு (நபியே!) உங்களிடம் வருவார்கள். (4:62)

சத்தியம் செய்யும் போது, பில்லாஹி, தல்லாஹி, வல்லாஹி இவற்றில் ஏதாவதொன்றைச் சொல்ல வேண்டும். (இவையனைத்துமே அல்லாஹ்வின் மீது சத்தியமாக என்ற பொருளைத் தான் கொண்டுள்ளன.)

நபி (ஸல்) அவர்கள், அஸர் தொழுகைக்குப் பிறகு பொய் கூறியவனாக அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்த ஒரு மனிதன் என்று (ஒரு ஹதீஸில்) கூறினார்கள்.

அல்லாஹ் அல்லாதவர்கள் மீது சத்தியம் செய்யக் கூடாது.

2678 தல்ஹா பின் உபைதில்லாஹ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

ஒரு மனிதர் அல்லாஹ்வின் தூதரிடம் வந்து, இஸ்லாத்தைப் பற்றிக் கேட்கலானார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், பக-லும் இரவிலும் ஐந்து தொழுகைகள் (தான் இஸ்லாத்தில் கட்டாயக் கடமையான வணக்கம்) என்று பதில் கூறினார்கள். அவர், இதைத் தவிர (வணக்கம்) ஏதும் என் மீது (கடமை யாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, இல்லை; நீ தானாக விரும்பிச் செய்யும் (உபரியான) வணக்கத்தைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், ரமளான் மாதம் நோன்பு நோற்க வேண்டும் என்றும் அவருக்குக் கூறினார்கள். அவர், இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்க, இல்லை; நீ தானாக விரும்பி நோற்கும் (உபரியான) நோன்பைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். மேலும், அல்லாஹ்வின் தூதர் ஸகாத்தையும் அவருக்கு (எடுத்துக்) கூறினார்கள். அவர் இதைத் தவிர வேறேதும் என் மீது (கடமையாக்கப்பட்டு) உள்ளதா? என்று கேட்டார். இல்லை; நீ தானாக விரும்பிச் செலுத்தும் (உபரியான) ஸகாத்தைத் தவிர என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். அந்த மனிதர், அல்லாஹ்வின் மீதாணையாக! இதற்கு மேல் நான் அதிகமாகச் செய்யவும் மாட்டேன்; இதைக் குறைத்துச் செய்யவும் மாட்டேன் என்று கூறியபடி திரும்பிச் சென்றார். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அவர் உண்மையாகவே (இதைக்) கூறியிருந்தால், அவர் வெற்றியடைந்து விட்டார் என்று சொன்னார்கள்.

2679 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் சத்தியம் செய்கின்றாரோ அவர் அல்லாஹ்வின் மீது சத்தியம் செய்யட்டும்; அல்லது வாய்மூடி (மௌனமாக) இருக்கட்டும்.

இதை அப்துல்லாஹ் பின் உமர்

(ரலி) அவர்கள் அறிவிக்கின்றார்கள்.

பாடம் : 27

பிரதிவாதி சத்தியம் செய்த பிறகு வாதி ஆதாரம் கொண்டு வந்தால் (ஏற்கப்படுமா?)

நபி (ஸல்) அவர்கள், உங்களில் சிலர் மற்ற சிலரை விட தன் ஆதாரங்களைச் சமர்ப்பிப்பதில் வாக்கு சாதுர்யம் அதிகமுள்ளவராக இருக்கலாம் என்று கூறினார்கள்.

நீதியான ஆதாரம், பொய்யான சத்தியத்தைக் காட்டிலும் (ஏற்றுக் கொள்ள) முன்னுரிமை பெற்றதாகும் என்று தாவூஸ் (ரஹ்), இப்ராஹீம் (ரஹ்), ஷுரைஹ் (ரஹ்) ஆகியோர் கூறு கின்றார்கள்.21

2680 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நீங்கள் என்னிடம் வழக்குகளைக் கொண்டு வருகிறீர்கள். உங்களில் ஒருவர் மற்றொருவரை விட வாக்கு சாதுர்யம் மிக்கவராக இருக்கக் கூடும். ஆகவே, எவரது (சாதுர்யமான) சொல்லை வைத்து அவரது சகோதரனின் உரிமையில் சிறிதை (அவருக்குரியது) என்று தீர்ப்பளித்து விடுகின்றேனோ அவருக்கு நான் நரக நெருப்பின் ஒரு துண்டைத் தான் துண்டித்துக் கொடுக்கிறேன். ஆகவே, அவர் அதை எடுத்துக் கொள்ள வேண்டாம்.

பாடம் : 28

வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிடுவது.

ஹஸன் பஸரீ (ரஹ்) அவர்கள் வாக்குறுதியை நிறைவேற்றும்படி கட்டளையிட்டிருக்கிறார்கள்.

( அல்லாஹ் கூறுகின்றான்:)

(நபியே!) இஸ்மாயீலைப் பற்றியும் இவ்வேதத்தில் (உள்ளதைக்) குறிப்பிடு வீராக! திண்ணமாக, அவர் வாக்குறுதியை முழுமையாக நிறைவேற்றுபவராக இருந்தார். (19:54)

(கூஃபா நகர நீதிபதியான) இப்னு அஷ்வஃ (ரஹ்) அவர்கள், வாக்குறுதியை நிறைவேற்றுவது அவசியம் என்று தீர்ப்பளித்துள்ளார். இந்தத் தீர்ப்பை அவர், சமுரா பின் ஜுன்தப் (ரலி) அவர்களிடமிருந்து (கேட்டுக்) கூறினார்.

மிஸ்வர் பின் மக்ரமா (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தம் மருமகனை (மகள் ஸைனபின் கணவரான அபுல் ஆஸ் பின் ரபீஉ (ரலி) என்பாரை) நினைவு கூர்ந்து, அவர் எனக்கு வாக்குறுதி யளித்து, அதை எனக்கு நிறைவேற்றித் தந்தார் என்று கூறினார்கள்.

அபூ அப்தில்லாஹ் (புகாரீ) கூறுகிறேன்:

நான் இஸ்ஹாக் பின் இப்ராஹீம் ராஹவைஹீ (ரஹ்) அவர்கள், இப்னுல் அஷ்வஃ (ரஹ்) அவர்களுடைய இந்த ஹதீஸை ஆதாரம் காட்டுவதைப் பார்த்திருக்கிறேன்.

2681 இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

அபூ சுஃப்யான் (ரலி) அவர்கள் என்னிடம் கூறினார்கள்:

(ரோம மன்னர்) ஹிராக்ளியஸ் என்னைப் பார்த்து, உம்மிடம், அவர் (முஹம்மது-ஸல்) எதையெல்லாம் கட்டளையிடுகின்றார்? என்று நான் கேட்டேன். நீர், அவர் தொழுகை தொழும்படியும், வாய்மையையும் நல்லொழுக்கத்தையும் கைக் கொள்ளும் படியும், ஒப்பந்தத்தையும், வாக்குறுதி யையும் நிறைவேற்றும்படியும், நம்பி ஒப்படைக்கப்பட்ட அடைக்கலப் பொருளைச் சரிவரப் பாதுகாத்துத் திரும்பத் தரும்படியும்22 கட்டளையிடுகிறார் என்று சொன்னீர். இது தான் ஓர் இறைத்தூதரின் பண்பாகும் என்று கூறினார்.

2682 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நயவஞ்சகனின் அடையாளம் மூன்றாகும்: அவன் பேசும் போது பொய் பேசுவான். அவனிடம் ஒரு பொருள் (அல்லது பணி) நம்பி ஒப்படைக்கப் பட்டால் (அதில்) மோசடி செய்வான். அவன் வாக்களித்தால் மாறு செய்வான்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2683 ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் இறந்த போது அபூபக்ர் (ரலி) அவர்களிடம் அலா பின் ஹள்ரமீ (ரலி) அவர்களிடமிருந்து (சிறிது) செல்வம் வந்தது. அபூபக்ர் (ரலி) அவர்கள், யாருக்காவது நபியவர்கள் கடன் பாக்கி தர வேண்டியதிருந்தால் அல்லது நபியவர்களின் தரப்பிலிருந்து யாருக்காவது வாக்குறுதி ஏதும் தரப்பட்டிருந்தால் அவர் நம்மிடம் வரட்டும் (அவரது உரிமையை நாம் நிறைவேற்றுவோம்) என்று கூறினார்கள். (இந்த அறிவிப்பைக் கேட்டு) நான், எனக்கு இவ்வளவும், இவ்வளவும், இவ்வளவும் தருவதாக நபி (ஸல்) அவர்கள் என்னிடம் வாக்களித்திருந்தார்கள் என்று கூறினேன். - இப்படிக் கூறும் போது,. தம் இரு கைகளையும் ஜாபிர் (ரலி) அவர்கள் மூன்றுமுறை விரித்துக் காட்டினார்கள் என்று அறிவிப்பாளர் முஹம்மத் பின் அலீ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள் - அபூபக்ர்

(ரலி) அவர்கள் என் கையில் (முத-ல் பொற்காசுகள்) ஐநூறையும், பிறகு ஐநூறையும் பிறகு ஐநூறையும் எண்ணி வைத்தார்கள்.23

2684 சயீத் பின் ஜுபைர் (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

என்னிடம் ஹீராவாசியான யூதர் ஒருவர், மூசா (அலை) அவர்கள் இரண்டு தவணைகளில் எதை நிறைவேற்றினார்கள்? என்று கேட்டார். நான், எனக்குத் தெரியாது. நான் அரபுகளில் பேரறிஞரிடம் சென்று அவரிடம் கேட்கும் வரை (காத்திரு) என்று கூறினேன். அவ்வாறே, நான் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களிடம் சென்று கேட்டேன். அவர்கள், அவ்விரண்டில் அதிகமானதை, அவ்விரண்டில் மிக நல்லதை நிறைவேற்றினார்கள். அல்லாஹ்வின் தூதர் (எவராயிருப்பினும் அவர்) சொன்னால் செய்(து முடித்து விடு)வார் என்று கூறினார்கள்.

பாடம் : 29

இணை வைப்போர் சாட்சியம் முதலான காரியங்களுக்கு அழைக்கப்பட மாட்டார்கள்.

பிற சமுதாயங்களிடையே ஒரு சமுதாயத்தைச் சேர்ந்தவர் மற்றொரு சமுதாயத்தைச் சேர்ந்தவருக்கு எதிராக சாட்சியம் கூறினால் அது செல்லுபடி யாகாது; ஏனெனில், அல்லாஹு தஆலா, நாம் அவர்களுக்கிடையே மறுமை நாள் வரை விரோதத்தையும், பொறாமை யையும் விதைத்து விட்டோம் (5:14) என்று கூறுகிறான் என ஷஅபீ (ரஹ்) அவர்கள் சொல்கிறார்கள்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

வேதக்காரர்களை24 உண்மைப்படுத்தவும் வேண்டாம்; பொய்ப்பிக்கவும் வேண்டாம். நாங்கள் அல்லாஹ்வையும், அவனால் அருளப் பெற்ற வேதங்களையும் நம்புகிறோம் என்று மட்டும் கூறுங்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2685 அப்துல்லாஹ் பின் அப்பாஸ்

(ரலி) அவர்கள் கூறியதாவது:

முஸ்லிம்களே! இறைவனின் தூதர் (ஸல்) அவர்கள் மீது இறக்கியருளப்பட்ட உங்கள் வேதம் (குர்ஆன்) இறைவனின் செய்திகளில் மிகவும் புதியதாக இருக்க, அதை நீங்கள் (மனிதக் கருத்துகள்) கலக்கப்படாத நிலையில் ஓதிக் கொண்டிருக்க, நீங்கள் வேதக்காரர் களிடம் எப்படி (வேதங்களின் விபரங் களைக்) கேட்கிறீர்கள்? வேதக்காரர்கள் அல்லாஹ் எழுதியதை மாற்றி விட்டார்கள். தங்கள் கைகளால் இறைவேதத்தை மாற்றிவிட்டு - (திருக்குர்ஆன் விவரிப்பது போல்) அதன் மூலம் சொற்ப விலையை வாங்கிக் கொள்வதற்காக, இது அல்லாஹ்விடமிருந்து வந்தது- என்று கூறினார்கள். (அல்லாஹ்விடமிருந்து) உங்களுக்கு வந்துள்ள அறிவு ஞானம் (இறைவேதமான திருக் குர்ஆன்) உங்களை அவர்களிடம் கேட்பதிலிருந்து தடுக்க வில்லையா? அல்லாஹ்வின் மீதாணையாக! வேதக்காரர்களில் ஒருவரையும் உங்கள் மீது அருளப்பட்டதை (திருக்குர்ஆனைப்) பற்றிக் கேட்பவராக நான் கண்டதேயில்லையே.

இதை உபைதுல்லாஹ் பின் உத்பா (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 30

சிக்கலான விஷயங்களில் குலுக்கல் முறையைக் கையாள்வது.

 அல்லாஹ் கூறுகிறான்:

(நபியே!) இவையனைத்தும் மறை வான செய்திகள். இவற்றை உங்களுக்கு வஹீ (எனும் வேத வெளிப்பாட்டின்) மூலம் நாம் அறிவிக்கின்றோம். (இறையில்லத்தின் சேவகர்களான அவர்கள்) தங்களில் யார் மர்யமுக்குப் பொறுப் பாளராவது என்று முடிவு செய்திடத் தங்கள் எழுதுகோல்களை எறிந்து கொண்டிருந்த போதும், தங்களுக்குள் சச்சரவிட்டுக் கொண்டிருந்த போதும் (நீங்கள் அவர்களிடையே இருக்க வில்லை.) (3:44)

இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறினார்கள்:

அவர்கள் தங்கள் எழுதுகோல் களைக் குலுக்கிப் போட்டார்கள்; அவர்களது எழுதுகோல்கள் நீரோட்டத் துடன் சென்று விட்டன. ஸகரிய்யா (அலை) அவர்களின் எழுதுகோல் மட்டும் நீரோட்டத்தை மிகைத்து (அதில் அடித்துச் செல்லப்படாமல் நின்று) விட்டது. ஆகவே, ஸகரிய்யா (அலை) அவர்கள் மர்யம் (அலை) அவர்களைப் பராமரிக்கும் பொறுப்பை ஏற்றார்கள்.25

மேலும், அல்லாஹ் கூறுகிறான்:

சீட்டுக் குலுக்க-ல் (யூனுஸ்) பங்கு பெற்றார்; அதில் தோற்றுப் போய் விட்டார். (37:141)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:

நபி (ஸல்) அவர்கள் ஒரு சமுதாயத்தை சத்தியப் பிரமாணம் செய்யும்படி அழைத்தார்கள். அவர்கள் விரைந்து ஒருவரோடொருவர் போட்டியிட்டுக் கொண்டு வந்தார்கள்; ஆகவே, அவர்களில் எவர் (முத-ல்) சத்தியம் செய்வது என்று (முடிவு செய்ய) அவர் களிடையே சீட்டுக் குலுக்கிப் போடும்படி நபி (ஸல்) அவர்கள் கட்டளையிட்டார்கள்.26

2686 நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

அல்லாஹ்வின் சட்டங்களில் விட்டுக் கொடுப்பவருக்கும், அதை மீறுபவருக்கும் உதாரணம் ஒரு கூட்டத்தாரின் நிலை யாகும். அவர்கள் ஒரு கப்பலில் இடம் பிடிப்பதற்காக சீட்டுக் குலுக்கிப் போட் டார்கள். அவர்களில் சிலருக்குக் கப்ப

-ன் கீழ்த் தளத்திலும் சிலருக்குக் கப்ப

-ன் மேல் தளத்திலும் இடம் கிடைத்தது. கப்பலின் கீழ்த் தளத்தில் இருந்தவர்கள் தண்ணீரை எடுத்துக் கொண்டு மேல் தளத்தில் இருந்தவர்களைக் கடந்து சென்று கொண்டிருந்தார்கள். அதனால் மேல் தளத்திலிருந்தவர்கள் துன்பமடைந்தார்கள். ஆகவே, கீழ்த் தளத்தில் இருந்த ஒருவன் ஒரு கோடரியை எடுத்து,

கப்பலின் கீழ்த் தளத்தைத் துளையிடத் தொடங்கினான். மேல் தளத்திலிருந்தவர்கள் அவனிடம் வந்து, உனக்கு என்ன நேர்ந்தது? என்று கேட்டார்கள். அவன், நீங்கள் என்னால் துன்பத்திற்குள்ளா னீர்கள். எனக்குத் தண்ணீர் அவசியம் தேவைப்படுகின்றது. (அதனால், கப்பலின் கீழ்த் தளத்தில் துளையிட்டு அதில் வரும் தண்ணீரைப் பயன்படுத்திக் கொள்வேன்) என்று கூறினான். (துளையிட விடாமல்) அவனது இரு கைகளையும் அவர்கள் பிடித்துக் கொண்டால் அவர்கள் அவனையும் காப்பாற்றுவார்கள்; தங்களையும் காப்பாற்றிக் கொள்வார்கள். அவனை அவர்கள் (கப்பலில் துளையிட) விட்டு விட்டால் அவனையும் அழித்து விடுவார்கள்; தங்களையும் அழித்துக் கொள்வார்கள்.

இதை நுஃமான் பின் பஷீர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2687 காரிஜா பின் ஸைத் அல் அன்சாரீ (ரஹ்) அவர்கள் கூறியதாவது:

உம்முல் அலா (ரலி) அவர்கள் எங்கள் (அன்சாரிப்) பெண்களில் ஒரு வராக இருந்தார்கள்;27 நபி (ஸல்) அவர்களிடம் பைஅத் (விசுவாசப் பிரமாணம்) செய்திருந்தார்கள்.

அவர்கள் எனக்குத் தெரிவித்ததாவது: முஹாஜிர்களை யாருடைய வீட்டில் தங்க வைப்பது என்று அன்சாரிகள் சீட்டுக் குலுக்கிப் போட்ட போது (எங்கள் வீடு) உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர் களுடைய பங்காக வந்தது. ஆகவே, அவர்கள் எங்களிடம் தங்கினார்கள். அவருக்கு நோய் ஏற்பட்ட போது நாங்கள் அவரை கவனித்துக் கொண்டோம். இறுதியில், அவர் மரணித்து விட்ட போது அவரை அவரது துணிகளில் வைத்து (கஃபனிட்டு) விட்டோம். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் எங்களிடம் வந்தார்கள். (நான் உஸ்மான் பின் மழ்வூனை நோக்கி), அபூ சாயிபே! அல்லாஹ் உங்களை கண்ணியப்படுத்தி யுள்ளான் என்பதற்கு நான் சாட்சி சொல்கிறேன் என்று கூறினேன். நபி (ஸல்) அவர்கள், அவரை அல்லாஹ் கண்ணியப்படுத்தியுள்ளான் என்பது உனக்கு எப்படித் தெரியும்? என்று கேட்டார்கள். நான், அல்லாஹ்வின் தூதரே! எனக்குத் தெரியாது. என் தந்தையும், என் தாயும் தங்களுக்கு அர்ப்பணமாகட்டும் என்று கூறினேன். அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், அல்லாஹ்வின் மீதாணையாக! உஸ்மா னுக்கோ மரணம் வந்து விட்டது. நான் அவருக்கு நன்மையையே விரும்புகிறேன். அல்லாஹ்வின் மீதாணையாக! நான் அல்லாஹ்வின் தூதராக இருந்தும் அவரிடம் எப்படி நடந்து கொள்ளப்படும்; (மறுமையில் அவரது நிலை என்னவாகும்?) என்று எனக்குத் தெரியாது என்று கூறினார்கள். அல்லாஹ்வின் மீதாணையாக! அதன் பிறகு நான் யாரையும் பாராட்டிக் கூறுவதேயில்லை. நபியவர்கள் இப்படிச் சொன்னது எனக்குக் கவலையளித்தது. பிறகு, நான் உறங்கினேன். அப்போது கனவில் உஸ்மான் பின் மழ்ஊன் (ரலி) அவர்களுக்கு (சொர்க்கத்தில்) ஓடிக் கொண்டிருக்கும் ஒரு நீருற்று (கொடுக்கப்பட்டு) இருப்பதாகக் கண்டேன். அல்லாஹ்வின் தூதரிடம் வந்து அந்தக் கனவைத் தெரிவித்தேன். அதற்கு அவர்கள் அது அவருடைய (நற்)செயல் என்று கூறினார்கள்.

2688 ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது:

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பிரயாணம் செய்ய விரும்பினால் தமது மனைவிமார்களிடையே சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். அவர்களில் எவரது பெயர் வருகின்றதோ அவர் நபி (ஸல்) அவர்களுடன் புறப்படுவார். நபி (ஸல்) அவர்கள் (தம்) மனைவிமார்களில் ஒவ்வொருவருக்கும் தமது இரவையும் பகலையும் பங்கிட்டு விட்டிருந்தார்கள். (ஆனால், நபியவர்களின் துணைவியரில் ஒருவரான) சவ்தா பின்த்து ஸம்ஆ (ரலி) அவர்கள் மட்டும் தமது பகலையும், இரவையும் எனக்குப் பரிசளித்து விட்டார். அல்லாஹ்வின் தூதருடைய திருப்தியை (பெற) விரும்பியே அவர்கள் இப்படிச் செய்தார்கள்.

இதை உர்வா பின் ஸுபைர் (ரஹ்) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

2689 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

(தொழுகை அழைப்பான) பாங்கு சொல்வதிலும் (கூட்டுத் தொழுகையில்) முதல் வரிசையிலும் இருக்கும் நன்மையை மக்கள் அறிவார்களாயின் (அதை அடைந்து கொள்ள) சீட்டுக் குலுக்கிப் போடுவதைத் தவிர வேறு வழியில்லாமல் போகு மானால் நிச்சயம் சீட்டுக் குலுக்கிப் போடுவார்கள். தொழுகைக்கு அதன் ஆரம்ப வேளையில் விரைந்து செல்வதில் உள்ள நன்மையை மக்கள் அறிவார் களாயின் அதற்கு முந்திக் கொள்வார்கள். இஷா தொழுகையிலும். ஃபஜ்ருத் தொழுகையிலும் உள்ள நன்மையை அவர்கள் அறிவார்களாயின் அதற்குத் (தரையில்) தவழ்ந்தாவது அவர்கள் வந்து விடுவார்கள்.

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

November 2, 2009, 8:03 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top