38-கடன்சாட்டல் (ஹவாலா)

அளவிலா அருளாளன் நிகரிலா அன்புடையோன் அல்லாஹ்வின் திருப்பெயரால்...

அத்தியாயம் : 38

38-கடன்சாட்டல் (ஹவாலா)

(ஒருவரின் கடனை மற்றொருவருக்கு மாற்றுதல் ஹவாலா எனப்படும்)

பாடம் : 1

ஹவாலாவை ஏற்றுக் கொண்டவர் பிறகு மாறலாமா?

கடன் யார் பெயருக்கு மாற்றப்பட்டதோ அவர் அவ்விதம் மாற்றப்பட்ட நாளில் செல்வந்தராக இருந்திருந்தால் (பின்னர் அவர் திவாலாகிவிட்டாலும்) அந்த (ஹவாலா) ஒப்பந்தம் செல்லும்! என்று ஹஸன் அல்பஸ்ரீ (ரஹ்), கத்தாதா (ரஹ்) ஆகிய இருவரும் கூறுகின்றனர்.

இரண்டு பங்காளிகளுக்கிடையிலோ வாரிசுகளுக்கிடையிலோ சச்சரவு வந்து, ஒருவர் இருப்பையும் மற்றொருவர் வர வேண்டிய கடனையும் எடுத்துக் கொண்டபின், இவரது இருப்புக்கோ அவரது கடனுக்கோ இழப்பு ஏற்பட்டால் அதற்கு அவரவரே பொறுப்பு! என்று இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியுள்ளார்கள்.

2287 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தன் மீது மாற்றப்பட்டால் அவர் (அதற்கு) ஒப்புக் கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 2

ஒருவருக்கு வரவேண்டிய கடன் ஒரு பணக்காரர் மீது மாற்றப்பட்டால் அதை அவர் மறுக்கக் கூடாது.

2288 அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

செல்வந்தன் (வாங்கிய கடனைத் திருப்பிச் செலுத்தாமல் தவணை கேட்டு) இழுத்தடிப்பது அநியாயமாகும்! உங்களில் ஒருவரது கடன் ஒரு செல்வந்தர் மீது மாற்றப்பட்டால் அவர் ஒப்புக் கொள்ளட்டும்!

இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.

பாடம் : 3

இறந்தவர் கொடுக்க வேண்டிய கடனுக்கு மற்றொருவர் பொறுப்பேற்றால் அது செல்லும்.

2289 சலமா பின் அக்வஃ (ரலி) அவர்கள் கூறியதாவது:

நாங்கள் நபி (ஸல்) அவர்களிடம் அமர்ந்திருந்த போது ஒரு ஜனாஸா (பிரேதம்) கொண்டுவரப்பட்டது. நபித் தோழர்கள், நீங்கள் இவருக்குத் தொழுகை நடத்துங்கள்! என்று நபி (ஸல்) அவர்களிடம் கூறினார்கள். நபி (ஸல்) அவர்கள், இவர் கடனாளியா? என்று கேட்ட போது நபித்தோழர்கள், இல்லை என்றனர். ஏதேனும் (சொத்தை) இவர் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று நபி (ஸல்) கேட்ட போது, இல்லை என்றனர். நபி (ஸல்) அவருக்குத் தொழுகை நடத்தினார்கள். பிறகு மற்றொரு ஜனாஸா கொண்டு வரப்பட்ட போது அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள் என்று நபித்தோழர்கள் கேட்டனர். அதற்கு நபி (ஸல்) அவர்கள் இவர் கடனாளியா? என்று கேட்ட போது ஆம் எனக் கூறப்பட்டது. இவர் ஏதேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது மூன்று தங்கக் காசுகளை விட்டுச் சென்றிருக்கிறார் என்றனர். அவருக்கும் தொழுகை நடத்தினார்கள். பிறகு மூன்றாவது ஜனாஸா கொண்டு வரப்பட்டது. நீங்கள் தொழுகை நடத்துங்கள் என்று நபித்தோழர்கள் கூறினர். இவர் எதையேனும் விட்டுச் சென்றிருக்கிறாரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது இல்லை என்றனர். இவர் கடனாளியா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்ட போது, மூன்று தங்கக் காசுகள் கடன் வைத்திருக்கிறார் என்று நபித்தோழர்கள் கூறினர். நபி (ஸல்) அவர்கள் உங்கள் தோழருக்கு நீங்களே தொழுகை நடத்துங்கள் என்றனர். அப்போது அபூகத்தாதா (ரலி) அவர்கள் இவரது கடனுக்கு நான் பொறுப்பு; அல்லாஹ்வின் தூதரே! இவருக்குத் தொழுகை நடத்துங்கள்! என்று கூறியதும் நபி (ஸல்) அவர்கள் அவருக்குத் தொழுகை நடத்தினார்கள்.

01.11.2009. 22:02




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
84 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி