விதி ஓர் விளக்கம்

விதி ஓர் விளக்கம் ஆக்கம் பீ.ஜைனுல் ஆபிதீன் முன்னுரை

உலகில் உள்ள அனைத்து மதங்களை விட இஸ்லாம் அதன் தெளிவான கடவுள் கொள்கையாலும், அறிவுக்குப் பொருத்தமான சட்டங்களாலும், மனித வாழ்வின் அனைத்து துறைகளிலும் தலையிட்டு தக்க தீர்வைத் தருவதாலும் தனித்து விளங்குகிறது.

தொடர்ந்து படிக்க August 10, 2012, 2:45 AM

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம்

பில்லி சூனியம் ஒரு பித்தலாட்டம் அறிமுகம்

இஸ்லாத்தின் பார்வையில் சூனியம் என்ற தலைப்பில் 2014 ஆம் ஆண்டு ரமளான் மாதத்தில் பத்து நாட்கள் நான் தொடர் உரை நிகழ்த்தினேன். இந்த உரையை நூல் வடிவில் வெளியிட வேண்டும் என்று பல சகோதரர்கள் கேட்டுக் கொண்டதால் நூல் வடிவில் அதைத் தொகுத்துத் தந்துள்ளேன்.

தொடர்ந்து படிக்க March 1, 2015, 7:58 PM

நபித்தோழர்களும் நமது நிலையும் - புத்தகம் ஆங்கில மொழிபெயர்ப்பு

நபித்தோழர்களும் நமது நிலையும் - புத்தகம் ஆங்கில மொழிபெயர்ப்பு - PDF

Click Here To Download

 

மேற்கண்ட ஆங்கில மொழிபெயர்ப்பில் பிழை திருத்தங்கள் இருப்பின் [email protected] என்ற மின்னஞ்சலில் தெரியப்படுத்தவும்.

 

 

March 14, 2016, 12:52 PM

முஸ்லிம் தீவிரவாதி(?) - வளைக்கப்பட்ட வரலாறும் வஞ்சிக்கப்பட்ட முஸ்லிம்களும்

முன்னுரை

ஊரான் ஊரான் தோட்டத்திலே,

ஒருத்தன் போட்டானாம் வெள்ளரிக்கா,

காசுக்கு ரெண்டு விக்கச் சொல்லி,

காயிதம் போட்டானாம் வெள்ளைக்காரன்!

ஆண்டாண்டு காலமாக அடித்துக் கொண்டும், பிடித்துக் கொண்டும் நம்; ஆட்சிக் கட்டிலை அலங்கரித்தவர்கள் நமது முன்னோர்கள்.

 “ஆங்கிலேயன் வந்தான் ஆசனத்தைக் கொடுத்து விட்டு அகன்று போ என்றான்”, “விளைந்திட்ட காய்களுக்கும், விற்கின்ற கனிகளுக்கும் வரி கொடு என்றான்”, “இங்குள்ள வளங்களையெல்லாம் வாரிச் சுருட்டி, இங்கிலாந்து நாட்டிற்கு எடுத்துச் சென்றான்”.

எனக்கும், என் தேசத்திற்கும், என் உழைப்பிற்கும், எவ்வகையிலும் சம்பந்தமில்லாத ஒருவன் என் வீட்டிற்குள் புகுந்து, என் உழைப்பைச் சுரண்டி, என்னையே அடிமைப்படுத்தி, என் மீது ஆதிக்கம் செய்கிறானே என்று ஆர்ப்பரித்து எழுந்த போது இந்தியர்கள் அனைவரையும் கசக்கிப் பிழியவும், எதிர்ப்பின் வீரியத்தை நீர்த்துப் போகச் செய்யவும் வெள்ளையர் கண்டெடுத்த ஆயுதமே பிரித்தாளும் சூழ்ச்சி.

இந்துக்களையும், முஸ்லிம்களையும் இணையவிடாமல் தடுத்து விட்டால் நம்முடைய இருப்புக்கு கேடுகள் நேராது என்ற எண்ணம் கொண்ட ஆங்கிலேயர்கள், முஸ்லிம் மன்னர்களின் வரலாற்றை வக்கிரமாக எழுதி வாசிக்கக் கொடுத்தார்கள். அதை வாங்கிப் படித்தவர்கள் நெஞ்சில் முஸ்லிம்களுக்கெதிரான நஞ்சை விதைத்தார்கள்.

விளைவு, இந்துக்களும் முஸ்லிம் களும் முட்டிக் கொண்டனர். வெள்ளையன் தனது கொள்கையை வெற்றிகரமாக செய்து முடித்தான்.

அன்று அவன் செய்த வேலையை சிலர் இன்றும் தொடர்கிறார்கள். காலத்திற்கேற்ப காட்சியை மாற்றி, ஏலத்திற்கேற்ப விலையையும் கூட்டி இந்தியச் சந்தையில் அதை விற்பனை செய்து வருகிறார்கள்.

 “விற்கப்படும் கடைச் சரக்கே, இந்த தொடரின்  தலைப்பு

கடைச் சரக்கென்றால் கலப்படம் இல்லாமலா? சர்க்கரைக்குள் ரவையும், தேயிலைக்குள் சாயமும் நம்மால் சகித்துக் கொள்ளப்பட்டிருக்கிறது.

அதற்காக பாலுக்குள் கள்ளிச் சாறும், கரும்புச் சாறுக்குள் அரளி  விதை நீரும் கலக்கப்பட்டால்..?

இக்கேள்வியின் பரிதவிப்பே இந்த தொடரின் பிரதிபலிப்பு

இந்து முஸ்லிம் எனும் இணை பிரியா இன்பச் சங்கமத்தை இரண்டாக்கத் துடிக்கும் ஆங்கிலேயர் காலத்து வாதங்களும், பொய்யான பல வரலாறுகளும் நம்மைச் சுற்றிலும் வலம் வருகின்றன. அதன் பொய் முகம் கிழித்து உள்ளிருக்கும் உள்ளார்ந்த அன்பை உணரச் செய்வதுதான் இந்த தொடரின் நோக்கம்.

முஸ்லிம்களைத் தீவிரவாதிகளாகக் கருதுவதற்கு மூன்று விஷயங்கள் முக்கியமானவை. அந்த மூன்று பிரிவுகளையும் இந்தத் தொடர் உள்ளடக்கியிருக்கிறது.

 1. தேச விடுதலையில் முஸ்லிம்களின் தியாகம் மறைக்கப்பட்டிருப்பது

 2.முஸ்லிம் மன்னர்களின் வரலாறு உண்மைக்குப் புறம்பாக    திரிக்கப்பட்டிருப்பது

 3.இஸ்லாமிய மார்க்கமும், முஸ்லிம் களின் வாழ்வும் மிகைப்படுத்தி மக்களிடம் கொண்டு செல்லப்படுவது.

இம்மூன்று விஷயங்களும் விரிவாக விளக்கப்பட வேண்டியவை. காலத்தின்  அவசியத்தையும்,தொடரின் விரிவையும் கவனத்தில் கொண்டு மிகவும் சுருக்கமாகவே இந்தத் தொடர் எழுதப்பட்டுள்ளது.

முஸ்லிம்கள் பற்றிய பார்வையை உண்மையான திசை நோக்கித் திருப்பிவிடும் வேலையை மட்டுமே இதன் மூலம் செய்ய முயன்றுள்ளேன்.

இதனை வாசிப்பவர்கள் யாரேனும் இந்தத் துறை சார்ந்த அறிவும், அதனை தொகுப்பதற்குரிய ஆற்றலும் பெற்றிருந்தால் உடனடியாகத் தம் ஆய்வைத் துவக்கி, மக்களின் அறிவுக் கண்களை திறந்திட முயற்சிகளை மேற்கொள்ள வேண்டும் என்று வலியுறுத்திக் கேட்டுக் கொள்கிறேன்.

மாயக் கண்ணாடி

வரலாறு என்பது காலத்தின் கண்ணாடி என்பர். ஒருவகையில் அது ஒரு மாயக் கண்ணாடி. நேற்றைய என் முகத்தை இன்றைக்கு அது காட்டும்.

உலகில் எந்தக் கண்ணாடியும் இருப்பதை மாற்றி இல்லாததைக் காட்டுவதில்லை. முன்னால் இருப்பது அழகாய் இருந்தால் அழகைக் காட்டும், அழுக்காய் இருந்தால் அதைத்தான் காட்டும். காலக் கண்ணாடி இதிலும் கொஞ்சம் வித்தியாசமானது.

ஏனெனில் இது முழுக்க முழுக்க மனிதனின் கட்டுப்பாட்டில் இயங்கும் மாயக் கண்ணாடி. எனவே அதில் தெரிய வேண்டிய காட்சிகளை அவன் தன் தேவைக்கேற்ப மாற்றிக் கொள்கிறான். அசிங்கமாக இருந்த தன் தோற்றத்தை அழகு வர்ணமாகவும், ஆஜானுபாகுவாக இருந்தவரை அரை அங்குலப் புழுவாகவும் ஆக்கிவிடுகிறான்.

உண்மையில் இந்த மாற்றத்தைச் செய்யும் மனிதர்களைப் பார்த்து பெரும் ஆற்றல் படைத்தவர்கள் என அங்கீகரிக்க முடியாது. மாய வித்தைகளைச் செய்து விட்டு தன்னை மந்திரவாதி என்பவனை விட இவர்கள் மட்டமானவர்கள்.

ஏனெனில் இவர்களின் நேர் மையற்ற நடவடிக்கைகளால் நேர்ந் திருக்கும் கொடுமைகள் அப்படி. அவற்றை வார்த்தைக் கூட்டிற்குள் வசப்படுத்துவது கூட கடினம்.

இந்தியத் துணைக் கண்டத்தில் இவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

இந்திய சுதந்திர வரலாற்றில் இவர்களின் நேர்மையற்ற எழுத்துக் களால் வஞ்சிக்கப்பட்டவர்கள் முஸ் லிம்கள்.

வரலாறு என்பது வெறுமனே வாசித்து அறிகிற கடந்த கால நிகழ்வுகளின் தொகுப்பு மட்டுமல்ல. எனக்குள்ள உரிமையைத் தக்க வைக்க - எனக்கும், நான் வாழும் என் நிலத்திற்குமான உறவை உறுதிப்படுத்த என்னிடமுள்ள ஒரே ஆயுதம் வரலாறு.

நான் முட்டிவிட்டு குனிவதற்குப் பதிலாக முட்டுப்பட்ட என் முன்னோர்கள் குனிந்துவிடு என்று எனக்குக் கற்றுத் தரும் அனுபவப் பாடம் வரலாறு.

வாழ்க்கையில் வரும் துயரங்களைக் கண்டு நான் துவண்டு போகையில் துணிந்து நின்று போராடு என்று தன் வாழ்வின் வழியாக எம் முன்னோர்கள் எனக்குச் சொல்லும் வாழ்த்துரைகள் வரலாறு.

இப்படி எண்ணற்ற பல நன்மைகளை வாரி வழங்கும் வரலாற்றை கூடுதல் குறைவின்றி காய்தல் உவத்தலின்றி உள்ளது உள்ளபடி உணர்ந்து கொள்ள வேண்டும்.

நேர்மையான முறையில் இந்திய விடுதலை வரலாற்றை வாசித்து அறியும் வாய்ப்பு இந்தியர்களாகிய நம்மில் பெரும்பாலானவர்களுக்கு வாய்க்கவில்லை என்பதுதான் கசப்பான உண்மை

இந்திய மண்ணில் அந்நியர்களுக்கு எதிராக சுழன்றடித்த சூறாவளி சாதி, மதம், இனம், மொழி என அனைத்துவகை பேதங்களுக்கும் அப்பாற்பட்டது. இதனை எதிர்காலத் தலைமுறைக்கு எழுத்து வடிவில் கொடுக்க முயன்ற ஆசிரியர்களில் சிலரைத் தவிர அனைவருமே இந்த ஆபத்தில் மாட்டிக் கொண்டனர்.

வரலாற்றை   எழுதும்போது  கண்களை அகலத் திறந்து வைத்து, அறிந்து கொண்ட அனைத்தையும் அப்படியே அடுத்த தலைமுறைக்கு அச்சில் வார்க்க வேண்டும். ஆனால் அதை எழுதிய ஆசிரியப் பெருமக்களோ சாதி, இனம், மதம், மொழி என அவரவர்கள் சார்ந்திருக்கும் அமைப்பிற்கு பெருமை      சேர்ப்பதற்காகவும்நிகழ்கால    எதிரிகளை வஞ்சம் தீர்ப்பதற்காகவும் வரலாற்றைத் தம் தேவைக்கேற்ப வளைத்துக் கொண்டார்கள்.

உரமிட்டு வளர்த்தவனையும் விஷமிட்டு அழித்தவனையும் ஒரே நேர்கோட்டில் நிறுத்தியது இவர்கள் எழுதிய வரலாறு,..

பாசாங்குகாட்டியவனை பட்டத்து நாயகனாக்கி பாடுபட்டு உழைத்தவனை படுகுழியில் தள்ளியது இவர்கள் எழுதிய வரலாறு,

பஞ்சமா பாதகத்தை அஞ்சாமல் செய்தவனை மனிதநேயச் சிற்பியாக்கி பரிவையும், பாசத்தையும் தன் பழக்கமாகக் கொண்டவனை பயங்கரவாதி என பட்டம் பெறச் செய்தது இவர்கள் எழுதிய வரலாறு.

இப்படி இரும்பைத் துரும்பாக்கி, பேனைப் பெருச்சாளியாக்கும் பெருமைமிகு வரலாற்றாசிரியர்கள் உலக நாடுகளில் எப்படியோ! நம் இந்தியத் துணைக் கண்டத்தில் இவர்களின் எண்ணிக்கை ஏராளம்.

பதம் காட்ட ஒரு பருக்கை

இந்திய வரலாற்றை வரைந்த வர்களில் பலர் (அனைவரும் அல்ல.) இஸ்லாமியர்களைப் பற்றி எழுதும் போது இரண்டு வேலைகளைச் செய்துள்ளனர்.

 1. இருப்பதை மறைப்பது

 2. இல்லாததைச் சேர்ப்பது

வரலாற்றைக் கையிலெடுத்தவர்கள் வளமாக இருக்கிறார்கள். ஏனெனில் செத்துப் போனவர்கள் அவர்களுக் கெதிராக சாட்சி சொல்ல வரப்போவதில்லை என்று கூறினார் ஓர் அறிஞர்.

உண்மைதான். இந்துத்துவ பாசிச சக்திகள் முஸ்லிம்களுக்கு எதிராக கையில் வைத்திருக்கும் கூர்மையான ஆயுதம் வரலாறு.

இவர்கள் வரலாற்றாசிரியர்களை விலை கொடுத்து வாங்குவார்கள் அல்லது வரலாற்றை எழுதும் ஆசிரியர்களாக மாறி இவர்களே அறிஞன் என்ற போர்வையில் நினைப்பதை எல்லாம் எழுதித் தள்ளுவார்கள். இந்திய வரலாற்றுப் பக்கங்களில் இந்தக் கொடுமைதான் நிகழ்ந்தது, நிகழ்ந்து கொண்டிருக்கிறது.

எழுத்தில் ஓர் யுத்தம்

 1920களின் பிற்பகுதி. கல்கத்தா யுனிவர்சிட்டியின் சமஸ்கிருதத் துறைத் தலைவராக இருந்தார் டாக்டர் ஹரிபிரசாத் சாஸ்திரி. இவர் எழுதிய இந்திய சரித்திரம் அன்றைய உயர்நிலைப் பள்ளிகளின் பாடநூல். ராஜஸ்தான், ஒரிசா (தற்போதைய ஒடிசா), மத்தியப் பிரதேசம், உத்திர பிரதேசம், பீஹார் ஆகிய மாநிலப் பள்ளிகளில் தினம் தினம் மாணவர்கள் படிக்கும் பாட நூல்.

அந்த நூலில் திப்பு சுல்தானின் ஆட்சி காலத்தில் மூவாயிரம் பிராமணர்கள் தீயில் குதித்து தம் உயிரை மாய்த்துக் கொண்டதாக ஒரு செய்தி வருகிறது. மைசூர் மாவீரன் திப்புவின் கொடுமைகள்தான் அத்தனை பேரும் தம்மை அழித்துக் கொண்டதற்கான அடிப்படைக் காரணம் என்று எழுதிச் செல்கிறார் நூலாசிரியர்.

திப்பு சுல்தான் இஸ்லாத்தை ஏற்குமாறு அவர்களைக் கட்டாயப்படுத்தினான். ஏற்க மறுத்தவர்களை தொல்லைப் படுத்தினான். ஒன்று அவர்கள் மதம் மாற வேண்டும் அல்லது திப்புவின் கொடுமைகளைத் தாங்கித் தீர்க்க வேண்டும். இரண்டில் எதையுமே ஏற்க விரும்பாத அந்த பிராமணர்கள் அக்னியில் குதித்து அழியாப் பெருவாழ்வைத் தேடிக் கொண்டனர் என்று முடிகிறது ஹரி பிரசாத்தின் காவியக் கதை.

இந்தக் கதையைப் படித்த டீ என். பாண்டே பதறிப் போனார். இவர் ஹரிபிரசாத்தின் சமகாலத்து வரலாற்றாசிரியர். பல வருடங்கள் பாராளுமன்ற உறுப்பினராக இருந்து சிறப்பாகப் பணியாற்றியவர். ஒரிசா மாநிலத்தின் ஆளுனர் பதவியை அலங்கரித்தவர். இவர் அந்த நூலைப் படித்ததும் உடனடியாக அதற்குரிய ஆதாரங்களைக் கேட்டு ஹரிபிரசாத் சாஸ்திரிக்கு கடிதம் எழுதினார், பதிலைக் காணோம். மீண்டும் எழுதினார். மீண்டும் எழுதினார். தொடர்ந்து பலமுறை கடிதம் எழுதினார்.

ஒரு கட்டத்தில் தொடர்ச்சியாக வந்து கொண்டிருக்கும் தொல்லை யிலிருந்து தப்பிப்பதற்காக சாஸ்திரி யிடமிருந்து பாண்டேவிற்கு பதில் வந்தது. மைசூர் கெஜட்டில் இந்தச் செய்தி பதிவாகி உள்ளது என்ற ஒற்றை வரிச் செய்தி.

பதில் சொல்லிவிட்டோம் என பதுங்க நினைத்தார் சாஸ்திரி. பதிலைப் படித்த  பாண்டே தனது பயணத்தைத் தொடர்ந்தார். மைசூர் பல்கலைக் கழகத் துணை வேந்தர் பிஜேந்திர நாத் சீலுக்கு இப்படி ஒரு செய்தி மைசூர் கெஜட்டில் உள்ளதா? என்று கேட்டு கடிதம் எழுதினார்.

அவர் அந்தக் கடிதத்தை மைசூர் கெஜட்டின் அப்போதைய அதிகாரி பேராசிரியர் ஹண்டைய்யாவிடம் அனுப்பி வைத்தார்.

மைசூர் கெஜட் புறட்டப்பட்டது. அனைத்துச் செய்திகளும் அலசப் பட்டன. அப்படி ஒரு செய்தி இல்லவே இல்லை என அங்கிருந்து பதில் வந்தது. கேட்ட கேள்வியை விட கூடுதலாக ஒரு பதிலும் சேர்ந்து வந்தது. கெஜட்டில் இப்படி ஒரு செய்தியும் இல்லை, இப்படி ஒன்று நிகழ்வதற்கு வாய்ப்பும் இல்லை.

ஏனெனில் திப்புசுல்தான் ஒரு மன்னனாக மட்டுமில்லை. நல்ல மனிதனாகவும் வாழ்ந்தவன் என அவன் பேணிய சமய நல்லுறவும் பிற மதத்தவர்களிடம் அவன் காட்டிய கனிவும் ஆதாரத்தோடு அதிலே தெளிவுபடுத்தப்பட்டிருந்தது.

அவனது மந்திரிகள் முதற்கொண்டு படைத்தலைவர்வரை அவன் தனக்கு பக்கத்தில் வைத்துக் கொண்ட பிராமணர்கள், திப்புவால் கௌரவிக்கப்பட்ட இந்து வைதீக பெருந்தலைவர்கள்,பல்வேறு மடங்களின் சத்குரு மற்றும் ஜகத்குரு சந்நியாசிகள், சங்கராச்சாரியர்கள் திப்புவின் அரசில் மானியம் பெற்று பராமரிக்கப்பட்ட இந்துமதக் கோவில்கள், அந்தக் கோவில்களுக்கு இலவசமாக வழங்கப்பட்ட நஞ்சை, புஞ்சை நிலங்கள் என பெரும் பட்டியலையே அதில் குறிப்பிட்டு இந்த மன்னன்மீதா இப்படி ஓர் அவச்சொல்? எனக் கேள்வி எழுப்பியிருந்தது அந்த அறிக்கை.

கெஜட்டர் ஹண்டைய்யாவிட மிருந்து பதில் வந்ததும் உடனடியாக அதை பாண்டேவிற்கு அனுப்பி வைத்தார் துணை வேந்தர். அத்துடன் அவர் வேலை முடிந்தது. பதிலைப் பெற்றுக் கொண்ட பாண்டேயின் பயணமோதொய்வின்றித்  தொடர்ந்தது.

கையில் கிடைத்த ஆதாரங்களோடு மாணவர்களின் பாடநூற்களைத் தேர்வு செய்யும் கல்கத்தா யுனிவர்சிட்டியின் துணை வேந்தர் அஸ்டோஸ் முகர்ஜியை தொடர்பு கொண்டார் பாண்டே. மட்டமான கற்பனைகளோடு மாணவப் பருவத்திலே மதவெறியை ஊட்டி வளர்க்கும் நோக்கத்தோடு எழுதப்பட்டுள்ள இப்புத்தகத்தை உடனடியாகப் பாடத்திட்டத்திலிருந்து நீக்க வேண்டும். இந்நூலை தடை செய்து வெளியிடப்பட்ட அனைத்தையும் பறிமுதல் செய்ய வேண்டும் என்று கோரிக்கை வைத்தார்.

அவரது கோரிக்கையைப் பரிசீலித்த பல்கலைக் கழக நிர்வாகம் உடனடியாக அந்நூலை பாடத்திட்டத்திலிருந்து நீக்கியது.(தியாகத்தின் நிறம் பச்சை பேராசிரியர். மு.அப்துஸ் ஸமது 9-11 நேஷனல் பப்ளிஷர்ஸ் நவம்பர் 2012)

இஸ்லாமும் இந்தியக் கலாச்சாரமும் என்ற தமது நூலில் பி.என்.பாண்டே அவர்கள் குறிப்பிடும் இந்த நிகழ்ச்சியை பேராசிரியர் அப்துஸ் ஸமது அவர்கள் தியாகத்தின் நிறம் பச்சை என்ற தமது நூலில் மேற்கோள் காட்டியுள்ளார். இப்படி ஒரு கற்பனையைப் பாடநூலில் சேர்த்திருக்கிறார்களே!

கதை முழுவதும் அப்பட்டமாய் வீசும் வகுப்புவாத நெடி படிப்போரின் உள்ளத்தை பாழ்ப்படுத்தி விடாதா? கதை சிறியதுதான், அது கற்றுத் தரும் பாடம் கொடியதாக அல்லவா இருக்கிறது.வார்த்தைகளுக்குள் விஷம் வைத்து முஸ்லிம்களின் வாழ்வையே சீரழிக்கும் இப்படி ஒரு கதை மாணவர்களுக்குத் தேவையா? பண்பாடு மிக்க சமூகத்திற்குத் தேவையா? இந்திய தேசத்தின் நலன்களுக்குத் தேவையா? இந்து முஸ்லிம் ஒற்றுமைக்குத் தேவையா?

அப்பப்பா...! நினைத்துப் பார்க்கவே நெஞ்சம் பதறுகிறது. எத்தனை நெஞ்சழுத்தத்தோடு செய்திருக்கிறார்கள் என்று நீங்கள் கேட்பீர்கள்? அவர்களைப் பொருத்தவரை முஸ்லிம்கள் மீது வஞ்சம் பாய்ச்ச இது ஒரு வழிமுறை அவ்வளவு தான்.

இந்தச் செய்தி சரித்திரச் சங்கமத்தில் யாரோ ஒருவரால் எப்போதோ நடந்த ஒரு பிழை என்று யாரும் எண்ணி விடாதீர்கள். இது கடலுக்குள் மூழ்கி, மூச்சடைக்கத் தேடி, முயன்று பெற்ற ஒற்றை முத்தல்ல. பானை சோற்றுக்கு பதம் காட்ட முன் வைத்த ஒரேயொரு பருக்கை.

முந்தி நிற்கும் தொந்தி

சாந்திமாய்ராய்அவர்கள் விடுதலைப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கு என்றொரு நூல் எழுதியுள்ளார். அந்த நூலூக்கு அணிந்துரை வழங்கியுள்ள பி.சி.ஜோசி, சில இந்து வரலாற்று ஆய்வாளர்கள் ஏகாதிபத்தியத்திற்கெதிரான முஸ்லிம்களின் தியாகங்களைத் தொடர்ந்து இருட்டடிப்பு செய்து  வருகின்றனர். அவர்களால் மறைக்கப்பட்டதை வெளிக் கொணர்வதே இந்நூலின் நோக்கம் என்று குறிப்பிட்டுள்ளார். (விடுதலைப் போராட்டத்தில் இந்திய முஸ்லிம்களின் பங்கு. சந்திமாய் ராய் இந்திய விடுதலைப் போரும், தமிழக முஸ்லிம்களும் (.வி..மு) முனைவர் நா. முகம்மது செரீபு தமிழ்மணி நிலையம் 2006)

சுதந்திரத்திற்குச்சொந்தம் கொண்டாட நினைத்தால் இந்தியாவில் எந்தச் சமூகமும் முஸ்லிம்களின் அருகில் கூட நிற்க முடியாது என்பது தான் உண்மை.

மற்றவர்களை மட்டம் தட்டுவதாக யாரும் எண்ணிக் கொள்ளக்கூடாது. விடுதலை வேள்வியில் பங்கெடுத்த நமது முன்னோர்களின் தியாகம் அது சிறியதோ பெரியதோ எதுவும் குறைத்து மதிப்பிடக் கூடியதல்ல.

சுதந்திரத்திற்காகஎடுத்து வைக்கப்பட்ட சிறு துரும்பும்கூட பாராட்டுதலுக்கும் போற்றுதலுக்கும் உரியது என்பதில் யாருக்கும் மாற்றுக் கருத்து இல்லை அதே நேரத்தில் முஸ்லிம்கள் நிகழ்த்திய துணுக்குகளை விடுங்கள் பேரற்புதங்கள்கூட பேசப்படுவதில்லை என்றால் அதற்கு என்னதான் பொருள்?  500-1000 பக்கங்களில் எழுதப்படும் பெரும், பெரும் வரலாற்று நூல்களில் கூட முஸ்லிம்களின் பெயர்கள் மூன்று நான்கு இடங்களைத் தாண்டி முக்கியத்துவம் பெறாமல் போகிறதே! அது ஏன்? என்று தான் கேட்க விரும்புகிறோம்.

மிகச் சிறந்த எழுத்தாளரும், இந்திய வரலாற்றின் முக்கிய நிகழ்வுகளை உலகறியச் செய்தவரும், பாராளுமன்ற உறுப்பினராகவும் இருந்து பணியாற்றிய வருமாகிய குஷ்வந்த் சிங் கூறுகிறார்...

இந்தியவிடுதலைக்காக சிறை சென்றவர்களிலும் உயிர் நீத்தவர்களிலும் இஸ்லாமியர்களே அதிகம். அவர்களின் மக்கள் தொகை விகிதாச்சாரத்தை விட விடுதலைக்காக உயிர் கொடுத்தவர்களின் எண்ணிக்கை அதிகம் என்கிறார். (இல்லஸ்டிரேட் வீக்லி 29.12.1975 குஷ்வந்த் சிங்)

ஒரு செய்தியைத் தொடர்ச்சியாகச் சொல்லிக் கொண்டே வரும்போது வழியில் கண்டிப்பாக குறிப்பிட்டே ஆக வேண்டிய முக்கியமான கட்டத்தில் ஒரு முஸ்லிம் தியாகியின் பெயர் வந்தால் கூட, அங்கே ஒரு லாங்க் ஜம்ப் செய்து தாவிச் செல்வதை வழக்கமாகவே வைத்திருக்கிறார்கள் பல வரலாற்று ஆசிரியர்கள்

உதாரணத்திற்கு ஒன்று

மொகலாய வம்சத்தின்   கடைசி மன்னர் பகதூர்ஷா ஜஃபர்  ஆங்கிலேயர்களால் கைது செய்யப்பட்டு ரங்கூனுக்கு (பர்மா, மியான்மர்) நாடு கடத்தப்பட்டார்.

அடக்கம் செய்யப்படுவதற்கு இந்திய மண்ணில் இரண்டு கெஜ நிலம் கூட இல்லாமல் போனதே என்ற கண்ணீரோடு அங்கேயே காலமானார்.

 16-12-1987-ல், பர்மாவுக்குச் சென்ற இந்தியப் பிரதமர் ராஜீவ் காந்தி, பகதூர்ஷாவின் சமாதியில் எழுதப்பட்டிருந்த இரண்டு கெஜம் கவிதையைப் படித்தவர் கண்கலங்கி விட்டார்.

அங்கிருந்து வெளியேறும்போது பார்வையாளர் பதிவேட்டில் தன் எண்ணங்களைப் பதிவு செய்தார்.

ஜஃபர்! இரண்டு கெஜ நிலம் இந்துஸ்தானத்தில் கிடைக்கவில்லை என்பது உண்மை தான். ஆனால் இன்று நாங்கள் அனுபவிக்கும் சுதந்திரம் உனது தியாகத்தால் உதித்தது. பாரத நாட்டின் பெயரிலும் புகழிலும் உன் பெயர் கலந்து விட்டது.

இந்திய சுதந்திரப் போராளிகளின் தானைத் தலைவனாக விளங்கிய தளபதியே உனக்கு என் வீர அஞ்சலியைச் செலுத்துகிறேன்.

சுதந்திரப் போரில் நாம் வென்றோம். இன்னொரு முறை அடிமைத் தளையில் அகப்படமட்டோம்.

வேற்றுமைகள் பல இருப்பினும் அவற்றிற்கு  இடையில் ஒற்றுமையையும் ஒருமைப்பாட்டையும் கட்டிக்காப்போம்.அஹிம்ஸை, சகிப்புத் தன்மை அனைத்தையும் கைக்கொள்வோம். ஐயாயிரம் ஆண்டு கால சமயங்களின் சங்கம வரலாற்றை சிதைவுறாமல் பாதுகாப்போம் என்று எழுதிவிட்டு வந்தார்.

 1985 முதல் ஒவ்வொரு ஆண்டும் ராஜீவ் காந்தியின் பேச்சுக்களும், எழுத்துக்களும், இந்திய அரசின் தகவல் ஒலிப்பரப்பு அமைச்சகத்தின் சார்பில் தொகுப்பாக வெளியாகிக் கொண்டிருந்தது.

 1987-ன் கடைசியில் பிரதமரின் பேச்சு மற்றும் எழுத்தின் மூன்றாம் தொகுதி வெளியானது. ஐநூறு பக்கத்திற்கு ஒரு பக்கம் குறைவாக அச்சிடப்பட்ட அந்நூல் பிரதமரின் பர்மா பயணத்தோடு நிறைவடைகிறது. அதிலும் மிகச் சரியாக பகதூர் ஷாவின் சமாதிப் பயணத்திற்கு முந்தைய நாளான 15-12-87 உடன் முடிவடைகிறது. அதில் சமாதிப் பயணமும் இல்லை, இரண்டு கெஜ கவிதையும் இல்லை, ராஜீவ்காந்தியின் குறிப்பும் இல்லை.(செ.திவான் இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு (.சு.பெ..) பக்.431-433 சுஹைனா பதிப்பகம் மே 2007 மணிச்சுடர் நாளிதழ் சென்னை 18.12.1987)

இந்தச் செய்தி வெளியிடப்படாத மர்மத்தை எப்படிப் புரிந்து கொள்வது? இந்திய அரசின் சார்பில் வெளியிடப்படுகிறது.பொறுப்பு நிறைந்த ஒரு அமைச்சகமே அதைக் கண்காணிக்கிறது. அதுவும் நாட்டின் பிரதம அமைச்சர் சம்பந்தப்பட்டது. சொல்லப்போனால்அரசின் முக்கிய ஆவணத்தைப் போன்றது. பர்மாவுடனானஇந்தியாவின் நெருக்கத்தையும்நேசத்தையும் வெளிப்படுத்தக் கூடிய ஒன்று.

அதைவிட ராஜீவ்காந்தியின் எழுத்தாற்றலையும் தேசப்பற்றையும் பறைசாற்றும் ஒரு அழகிய கவிதைத் தொகுப்பு.

இவ்வளவுமுக்கியத்துவம் வாய்ந்த ஒன்று அரசுத் தொகுப்பில் அச்சேறாமல் போனது எப்படி? ஆவணம் தவறினாலும் சரி. செத்துப் போன பகதூர் ஷா மீண்டும் அரியணை ஏறிவிடக் கூடாது. ராஜீவின் புகழ் குறைந்தாலும் முஸ்லிம்களின் தியாகம் உயர்ந்து விடக்கூடாது என்பதைத் தவிர இதன் பின்ணணியில் வேறென்ன இருந்திருக்க முடியும்?

வரலாற்றுப் பேராசான் செ. திவான் கூறுகிறார். ஒருவேளை நாள் குறைவாலோ அச்சுப் பணியின் சிக்கலாலோ இந்தப் பதிப்பில் விடுபட்டிருக்கலாம். கண்டிப்பாக அடுத்த ஆண்டின் அடுத்த தொகுப்பில் இடம்பெறக்கூடும் என்று எண்ணி அதன் வருகைக்காகக் காத்திருந்தேன்.

ஓராண்டு காலம் கழித்து எண்பத்தி எட்டாம் ஆண்டின் தொகுப்பும் வெளிவந்தது உடனடியாக வாங்கிப் படித்தேன் அதிலும் இந்தச் செய்தி இடம் பெறவில்லை என்கிறார்.

இதுபோன்ற பிரபலமான பல முக்கிய நிகழ்வுகளில் முந்தி நிற்கும் தொந்தியைப் போல தவிர்க்கவே முடியாத முஸ்லிம் தலைவர்கள் கூட  விடுபட்டுப் போவது கவனக்குறைவாக நடந்து விடக் கூடியதா? இப்படி ஒரு கவனக் குறைவு முஸ்லிம்கள் விஷயத்தில் மட்டும்தான் ஏற்படுமா?  மற்றவர்கள் விஷயத்தில் ஏற்பட்டால் உடனடியாக அவை சரி செய்யப்படுகின்றன. எத்தனை முறை சுட்டிக் காட்டினாலும் முஸ்லிம்கள் குறித்த செய்தி மட்டும் சீர்திருத்தப்படுவது இல்லையே, ஏன்?

இப்படி ஏராளமான கேள்விகள் இமயமாய் எழுந்து நிற்கின்றன.

இது போன்ற கேள்விகளுக்குப் பதிலாகவும், இதைப் பற்றிய ஆய்வுகளுக்குத் தூண்டுதலாகவும் இந்த மண்ணின் மைந்தர்களது மகத்தான வீரத்தையும், மறுக்க முடியாத தியாகத்தையும்மறைக்கப்பட்ட வரலாற்றின்மறுபக்கத்தையும் இனிவரும் வாரங்களில் பார்ப்போம்...

முதல் இந்திய சுதந்திரப் போர்

இந்தியாவின் முதல் சுதந்திரப் போர் எது? முடிவு எட்டப்படாத முக்கியக் கேள்வி. பன்னெடுங்காலமாகவே பல்வேறு வகையான தாக்குதலுக்கு உள்ளான பூமி நமது பாரதம். இதில் எப்போது நடந்ததை முதல் போர் என்பது? யாரோடு நடந்ததைச் சொல்வது?

யார் செய்த போரை அந்த இடத்தில் வைப்பது? புதுக்கோட்டை மன்னர் செய்ததையா? புதுடெல்லி மஹாராஜா செய்ததையா? ஒரே வகையான எதிரிகளோடுகூட பத்து மன்னர்கள் போரிட்டிருக்கிறார்கள். அதுவும் பத்து வகையாக, பத்து இடத்திலே, பத்து பேருக்கிடையில் எந்தத் தொடர்பும் இல்லாமல் தனித்தனியாக.

அதைவிடப் பெருங்குழப்பம், இந்தியப் போர் என்றால் முதலில் இந்தியா என்றொரு நாடு இருந்திருக்க வேண்டும், வரையறுக்கப்பட்ட எல்லை வேண்டும், அதற்கென்று ஒரு தலைமை வேண்டும், இராணுவம், நாணயம், கொடி, சட்டம் என சகலமும் வேண்டும் என்ன இருந்தது நம்மிடத்தில்? இந்தியா என்ற பெயர் உட்பட எதுவுமே இருக்கவில்லை.

கட்டக் கடைசியாக நம்மில் பலரும் சேர்ந்து போரிட்ட  ஆங்கிலேயர்களுடனான சண்டையின் போது கூட இந்த அனைத்தும் நமக்கு வாய்த்திருக்கவில்லை. அவர்கள் நம்மிடத்தில் நாட்டை ஒப்படைத்து மூன்றாண்டுகளுக்குப் பிறகுதான் நமக்கென்று தனித்த அரசியல் அமைப்புச் சட்டத்தை உருவாக்கி 1950-ல் தான் இந்தியக் குடியரசு என்று அறிவித்தோம்.

எனவே எவ்வளவுதான் முயன்று முயன்று மூச்சிறைத்தாலும் முதல் இந்தியச் சுதந்திரப் போர் எது? என்ற கேள்விக்கு நாம் முடிவு காணப் போவதில்லை.

பிறகு ஏன் அதில் நின்று மல்லுக்கட்ட வேண்டும்? அறிந்தும் அறியாமலும் புரிந்தும் புரியாமலும் அனைவரும் எந்தப் போரை ஏற்றுக் கொண்டிருக்கிறார்களோ, அந்தப் போரையே நாமும் முதல் இந்திய சுதந்திரப் போர் என்று ஏற்றுக் கொள்வோம். அதிலிருந்தே நாமும் நமது பயணத்தைத் துவக்குவோம்.

 1857 முதல் இந்திய சுதந்திரப் போர். அரசின் இராணுவமே அரசுக்கு எதிராக ஆயுதம் தாங்கி அரங்கேற்றிய அதிசயப் போர். ஆங்கிலேயர்களை அலற வைத்த வங்கத்துப் போர். சுதேசிச் சிப்பாய்களெல்லாம் சீறிப் படையெடுத்த சிறப்பான போர்.

கொஞ்ச காலமாகவே அதிகாரிகள் மீதான வெறுப்பு இந்திய சிப்பாய்களிடம் நீறுபூத்த நெருப்பாகக் கனன்று கொண்டிருந்தது.

நம்முடைய குடும்பம், மனைவி, மக்கள் என எதைப் பற்றியும் கவலைப்படாமல் இந்த ஆங்கிலேயர்கள் நம்மை வாட்டி வதைக்கிறார்கள் என சிப்பாய்கள் குமுறிக் கொண்டிருந்த நேரத்தில் இங்கிலாந்தில் என்ஃபீல்டு (ENFIELD) என்ற இடத்தில், புதிய வகைத் துப்பாக்கிகள் கண்டுபிடிக்கப்பட்டன.

 1856-ல் இந்தியாவிற்கு இறக்குமதி செய்யப்பட்ட அந்தத் துப்பாக்கியில் தோட்டாவைப் பொருத்துவதற்கு முன் குண்டின் முனையைப் பல்லால் கடித்து இழுக்க வேண்டும். இழுபடும் இடத்தில் அந்த தோட்டாக்களைச் சுற்றி மிருகக் கொழுப்பு தடவப் பட்டிருக்கும். வேகமாக வழுக்கிக் கொண்டு தோட்டாக்கள் வெளியேற வேண்டும் என்பதற்காக செய்யப்பட்ட ஏற்பாடு இது. (இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு பக் 154 - 155)

அந்தக் கொழுப்புதான் புரட்சிப் போரின் துவக்கப் புள்ளி. சிலர் அதைப் பன்றிக் கொழுப்பு என்றனர். வேறு சிலர் மாட்டுக் கொழுப்பு என்றனர். பன்றிக் கொழுப்பா? அப்படியானால் முடியவே முடியாது என்றனர் முஸ்லிம்கள். மாட்டுக் கொழுப்பை மனதால் கூட தொடமாட்டோம் என்றனர் இந்துக்கள்.

இந்துக்களும் முஸ்லிம்களுமாக நிறைந்திருந்த பட்டாளத்தில் அதிகாரி களுக்கும் வீரர்களுக்கும் இடையில் வாக்குவாதம் வளர்ந்தது. பிரச்சனை முற்றியது. துப்பாக்கியைத் தொட மறுத்ததற்காக 85 வீரர்களுக்கு பத்தாண்டு கடுங்காவல் தண்டனை கொடுத்துத் தீர்ப்பளித்தது இராணுவ நீதிமன்றம். தீர்ப்பளிக்கப்பட்ட நாள் 1857ஆம் ஆண்டு மே மாதம் ஒன்பதாம் தேதி.(இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு பக் 154 - 155)

இந்தக் கைதுதான் புரட்சிப் பெருந்தீயைப் பற்ற வைத்த முதற்பொறி. அதுவரை ஆங்கிலேயர்களுக்கு அடங்கியிருந்தவர்கள் ஆர்ப்பரித்து எழுந்தார்கள். சாது மிரண்டாலே சரித்திரம் படைப்பான் என்றால் வீரன் வெகுண்டால் வீதிகள் தாங்குமா? மறுநாள் காலையில் செய்தியைக் கேள்விப்பட்ட சிப்பாய்கள் சிங்கமெனச் சீறினர், பொறுக்க முடியாமல் பொங்கினர், வெடித்தது புரட்சி! மிரண்டது மீரத்!!. மிளிர்ந்தது இந்தியா!!.

சிறைச்சாலை தாக்கப்பட்டது. 49 முஸ்லிம்கள் 36 இந்துக்கள் என முன் தினம் கைது செய்யப்பட்டிருந்த 85 வீரர்களும் விடுவிக்கப்பட்டனர்.(இந்திய சுதந்திரப் பெரும்போரில் இஸ்லாமியர்களின் பங்கு பக் 162 -163 Colonel, A.R.D Mackenzie, Mutiny Memories Allahabad, 1892 Vol 1)

ஆங்கிலேயர்களின் ஆலயம் முதல் மாளிகை வரை அனைத்திற்கும் தீ வைக்கப்பட்டது. தந்திக் கம்பிகள் அறுத்து எறியப்பட்டன. அதிகாரிகள் அனைவரும் ஓடி ஒளிந்தனர். எதிர்த்து நிற்கத் துணிவில்லாமல் பயந்து நடுங்கினர்;. கொட்டித் தீர்த்த பெரு மழையாய் எதிரிகளை வெட்டிச் சாய்த்தனர் மீரத் நகரின் இராணுவச் சிப்பாய்கள். (புரட்சி ஏற்பட்ட தோல்வியால் அதுவரை கிழக்கிந்தியக் கம்பெனியின் கைகளில் இருந்த அதிகாரம் பறிக்கப்பட்டு இங்கிலாந்து மகாராணியின் நேரடி கட்டுப்பாட்டுக்கு மாற்றப்பட்டது. அதன் பிறகுதான் கவர்னர் ஜெனரல் என்பவர் வைசிராய் - ராஜப்பிரதிநிதி ஆனார். இங்கிலாந்து அரசி விக்டோரியா, கெய்சரே ஹிந்த் இந்தியாவின் சக்கரவர்த்தி ஆனார்.)

மீரத்தின் கதையை முடித்துவிட்டு அங்கிருந்து வெளியேறிய வீரர்கள், அதே வேகத்தோடு அடுத்த நாள் காலை டில்லி வந்து சேர்ந்தனர். தலை நகர் முழுவதும் வேட்டைக்காடானது. ஆங்கிலேயர் மீதான கோபம்; கனலாகப் பற்றி எரிகிறது என்ற செய்தி அருகிலுள்ள அனைத்து பகுதிகளுக்கும் காட்டுத் தீயாகப் பரவியது. அதன் விளைவு புரட்சிப் போர், சிப்பாய்களைக் கடந்து பொதுமக்களுக்கும் பரவியது.      

மே பத்தில் துவங்கிய போர் செப்டம்பர் 21 வரை நான்கு மாதமும் பத்து நாட்களும் புரட்சியாளர்களின் கை ஓங்கியிருந்தது. அதற்குத் தலைமை தாங்கியவர்களின் கைகளில் அதிகாரம் வந்து சேர்ந்தது. சிறப்பான ஆட்சிக்குத் தேவையான திட்டங்கள் வகுக்கப்பட்டன. பொறுப்புகள் பகிர்ந்தளிக்கப்பட்டன. சுதந்திரக் காற்றை சுவாசிக்கிறோம் என மக்களனைவரும் நிம்மதியடைந்தனர்...

அடங்கி ஒடுங்கிய ஆங்கிலேயக் கம்பெனி, அடுத்த ஆட்டத்திற்கு ஆயத்தமானது. நினைத்துப் பார்க்க முடியாத அளவில் படை பலத்தைப் பெருக்கிக் கொண்டு அசுர பலத்தோடு உள்ளே  நுழைந்தது. கடுமையாகப் போரிட்டு, நான்கு மாதங்களுக்கு முன் இழந்த அனைத்து பகுதிகளையும் ஒவ்வொன்றாக கைப்பற்றி, மீண்டும் வெற்றி வாகை சூடியது.

முதல் இந்தியச் சுதந்திரப் போர் குறித்த முக்கியச் செய்திகள் இவை. இந்தச் செய்திகள் அனைத்தும் நாம் அறிந்தவை. அல்லது அறியக் கிடைப்பவை. பாடநூற்கள் வழியாக நமக்குக் கற்றுத் தரப்படுபவை.

இந்தப் புரட்சிப் போரின் பின்னால் வரலாற்று ஆசிரியர்களால் நமக்கு வழங்கப்படாத மறைக்கப்பட்ட மற்றொரு பக்கம் இருக்கிறது.

ஆதி முதல் அந்தம் வரை ஊடுருவி இந்தப் போரின் இரத்தமும்  சதையுமாக மாறிப் போன முஸ்லிம்களின் தியாக பக்கங்கள் அவை.

போராட்ட நாயகர் பகதூர் ஷா.

மொகலாயப் பேரரசின் கடைசிச் சக்கரவர்த்தி பகதூர் ஷா என்றழைக்கப்படும் முஹம்மது சிராஜீத்தீன் பகதூர் ஷா ஜஃபர். இவரது உதவியும் ஒத்துழைப்பும்தான் வீரர்களைப் போராட்ட களத்தை நோக்கி உந்தித் தள்ளியது.

புரட்சியைக் கையிலெடுத்த வங்கத்துப் படையணியில் இந்துக்களும் முஸ்லிம்களுமாக 1,39,807 இந்தியச் சிப்பாய்கள் இருந்தனர். அவர்கள் அனைவருமே பகதூர் ஷாவே தங்களுக்கு தலைமையேற்று வழி நடத்த வேண்டும் என கோரிக்கை வைத்தனர்.(1857 எழுச்சி இர்ஃபான் ஹபீப் பக் 3, தமிழில் .குமரேசன் வெளியீடு பாரதி புத்தகாலயம் 2006)

ஆங்கிலேயர்கள் மீது சிப்பாய்களுக்கு இருந்த கோபத்தைவிட பகதூர் ஷாவுக்கு இருந்தது அதிகம். மாமன்னராக வாழ்ந்த ஒருவரை அதிகாரங்கள் அனைத்தையும் பறித்துக் கொண்டு ஒரு அடிமையைப் போல ஆக்கியிருந்தார்கள் ஆங்கிலேயர்கள். (R.C..மஜும்தார், H.C..ராய்சௌதுரி, K.தத்தா, தமிழில் A.பாண்டுரங்கன் இந்தியாவின் சிறப்பு வரலாறு மூன்றாம் பகுதி சென்னை 1978 பக்கம் 109)...

இதனால் மனம் உடைந்த பாதுஷா ஆங்கிலயரை எதிர்ப்பதற்குரிய வாய்ப்பை எதிர்பார்த்துக் காத்தி ருந்தார். மறைமுகமாக பல்வேறு முயற்சிகளையும் எடுத்து வந்தார்.

உலக அரங்கில் ஆங்கிலேயர்களை அழிக்கத் துடிக்கும் பல்வேறு நாடுகளுக்கு ஆதரவு கேட்டு தபால் எழுதினார். குறிப்பாக பாரசீகம் மற்றும் ரஷ்ய அரசுகளுக்கு உதவிகள் கேட்டு கடிதம் எழுதினார்.(Sir John Kaye, Edited by Colonel Malleson, Kayes and Malleson History of Indian Mutiny of 1857-8 Vol.2, 1906 p.30)

பல்வேறு சமஸ்தான அரசுகளிடமும் ஆங்கில ஆதிக்கத்தை முறியடிக்க கோரிக்கை வைத்தார். குறிப்பாக ஜெசால்பூர், கட்ச்பூர், ஜெய்ப்பூர், ஜோத்பூர், இந்தூர், குவாலியர், பாட்டியாலா, ஜம்மு, பிகானிர், ஆலூர் ஜாஜர், பாலபக், பெரய்லி, ஆகிய சிற்றரசுகளுக்கு மடல் எழுதி புரட்சிக்கு ஒத்துழைப்புக் கோரினார்.(R.C. Majumdar, The Sepoy Mutiny and the Revolt of 1857, Calcutta 1957, pp.124-126

Sir C.Metcalfe Two Native Narratives of the Mutiny, West minister, 1898, pp. 219-220

A Royal letter from the superior

(.சு.பெ..) பக். 122-125)

இந்தப் போர் ஏன்? எதற்கு? என்பதை தெளிவுபடுத்தும் ஒரு பிரகடனத்தையும் வெளியிட்டார்.

இந்தியாவிலிருந்து ஐரோப்பியர்கள் வெளியேற்றப்பட வேண்டும் என்பதே என் ஆசை. அதற்காக என்ன விலையும் கொடுக்கலாம். இந்தியாவை ஆளும் ஆசையெல்லாம் எனக்கு இல்லை. மனிதனுக்கு இறைவன் கொடுத்துள்ள ஆகச் சிறந்த வெகுமதி சுதந்திரம். எப்பாடு பட்டாவது அதைக் காத்துக் கொள்ள வேண்டும்.

ஆண்டவன் சாட்சியாக இங்கிருந்து ஆங்கிலேயர்அகற்றப்பட்ட பின் உங்களால் தேர்ந்தெடுக்கப் படுபவரிடம் எனது அரச அதிகாரங்கள் அனைத்தையும் ஒப்படைத்து விடுவேன் இது உறுதி என்று அதில் குறிப்பிட்டிருந்தார்.( காஸிம் ரிஸ்வி இந்தியாவின் சுதந்திர போரட்ட வீரர். பஹதூர் ஷா. புதுடில்லி 1983, பக்கம் 5, செ.திவான் (.சு.பெ..) பக். 173,174)

பகதூர் ஷாவின் முயற்சிகள் வீண் போகவில்லை. புரட்சி துவங்கியதும் பல்வேறு பகுதிகளில் இருந்தும் உதவிகள் கிடைக்க ஆரம்பித்தன. சிப்பாய்ப் புரட்சி தேசத்தின்  பேரெழுச்சியாக மாறியது. போராட்டத்தில் அவரது பங்கின் முக்கியத்துவத்தை உணர்ந்த காரணத்தால்தான் புரட்சி வென்றபோது, புரட்சியாளர்கள் அனைவரும் சேர்ந்து அவரை அரியணையில் அமர வைத்து அழகு பார்த்தனர்.

பரவிய தீயைப் பாதுகாத்தவர்கள்

இந்தியாவில் ஆங்கிலேயர்களுக்கு எதிராகவும், பிரஞ்சு, டச்சு என இன்னபிற ஆதிக்க சக்திகளுக்கு எதிராகவும் ஏராளமான போர்கள் நடந்திருக்கின்றன. அவற்றில் 1857-ல் நடைபெற்ற புரட்சிப் போருக்குத் தான் இந்தியப் போர் என்ற தேசியச் சாயல் முதன் முதலாகக் கிடைத்திருக்கிறது. அதுவரை நடைபெற்ற எல்லா போர்களும் பகுதிவாரியான பெயர்களிலே அழைக்கப்பட்டன. ஏனெனில் மற்ற போர்கள் அனைத்தும் வெற்றி தோல்வி என எதுவாயினும் துவங்கிய இடத்திலேயே முடிந்து விடும்

ஓரிடத்தில் துவங்கி ஊரெல்லாம் பரவி தேசத்தின் பெரும் பகுதியை ஆட்கொண்டு ஆர்ப்பரித்தது என்பது தான் 1857- ஏனைய போர்களிலிருந்து  வித்தியாசப்படுத்திக் காட்டுகிறது.

இதற்கு முழுக்க முழுக்க சொந்தம் கொண்டாட தகுதியுடையவர்கள் முஸ்லிம்கள். ஏனெனில் போர் நடைபெற்ற அனைத்து இடங்களிலும் அதற்குத் தலைமை தாங்கி வழி நடத்தியவர்களும்,அதற்குரிய தண்டனைகளை ஏந்தி உயிர் நீத்தவர்களும்  முஸ்லிம்களே.

பாட்னா.

வங்காள இராணுவப் பிரிவின் முக்கியத் தளமான தானாப்பூருக்கு அருகில் உள்ள ஊர். பாட்னா புரட்சியை ஒடுக்க நினைத்த டிவிஷன் கமிஷனர் வில்லியம் டைலர், முக்கிய புள்ளியைப் பிடித்து விட்டால் புரட்சிக்கு மூடு விழா நடத்தி விடலாம் என எண்ணினார். அதற்காக, பாட்னா போரை வழி நடத்திய போராளி மௌலவி. அலீ கரீமை உடனடியாகக் கைது செய்து சிறையிலடையுங்கள் என அதிகாரிகளுக்கு உத்தரவிட்டார்.

அவர் எங்கிருந்து இயக்குகிறார் என்பதே தெரியவில்லை! பிறகெப்படி கைது செய்வது? அப்படியானால் அவரது சொத்துக்களை முடக்கி பறி முதல் செய்யுங்கள் என்றார். அலீ கரீமை உயிருடனோ, பிணமாகவோ ஒப்படைப்பவருக்கு ரூபாய் 5,000 சன்மானம் வழங்கப்படும் என்று அறிவித்தார். இவ்வாறு அரக்கப்பரக்க ஆணைகளிட்டும் அவரது அனைத்து  முயற்சிகளும் தோல்வியிலே முடிந்தன. கடைசிவரை ஆங்கிலேயரின்  கண்ணில் படாமல், கலங்கவைத்து ஆட்டம் காட்டியவர் பாட்னா மௌலவி. அலீ கரீம். (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 13-25).

அலகாபாத்.

அலகாபாத்தில்புரட்சியை வார்த்தெடுத்து வழி நடத்தியவர் மௌலவி லியாகத் அலி அவர்கள். இவரை அடக்க ஜெனரல் நீல் தலைமையில் ஒரு காட்டுப்படை வந்தது.

இவரது தலைக்கும் ஆங்கில அரசு 5,000 ரூபாய் விலை நிர்ணயித்தது. பிறகு அதே ஆண்டு ஜூலை 24ல் மும்பையில் வைத்து கம்பெனிப் படை அவரைக் கைது செய்தது. ஆங்கிலேயருக்கு எதிராக ஆள்திரட்டிப் போராடிய குற்றத்திற்காக ஆயுள் முழுவதும் நாடு கடத்தி தீர்ப்பளித்தது ஆங்கில அரசு. (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு) வி.என். சாமி பக் 161-166 - (.சு.பெ..) பக். 820)

ரோஹில்கண்ட்

மீரத்தில் துவங்கிய புரட்சி இருபது நாட்களாகியும் ரோஹில் கண்டில் எந்தச்  சலசலப்பும் இல்லாமல் அமைதியாகவே இருந்தது. கான் பகதூர் கான் சிப்பாய்களைச் சந்தித்து புரட்சிக்குத் தூபமிட்டார், தூண்டி விட்டார், பற்றிக் கொண்டது போர். மே31ல் யுத்தம் துவங்கியது. ஆங்கிலேய அதிகாரிகள் ஊரைக் காலி செய்துவிட்டு நைனிடாலுக்கு ஓடும் அளவுக்குப் போராளிகள் தமது வீரத்தை வெளிப்படுத்தினர்.

ரோஹில்கண்டில் பிரிட்டிஷ் கொடி இறக்கப்பட்டு டில்லி அரசரின் பச்சைக் கொடி பறக்க விடப்பட்டது. மன்னரின் பிரதிநிதியாக கான் பகதூர் கான் பொறுப்பேற்றுக் கொண்டார்.

ரோஹில்கண்ட்மீண்டும்  ஆங்கிலேயர் வசம் வந்தபோது  தேசத்துரோக குற்றச்சாட்டின் பேரில் கான் பகதூர் கான் ஆங்கிலேயர்களால் தூக்கிலிட்டுக் கொல்லப்பட்டார்.(விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 167-168 - (.சு.பெ..) பக். 790-793).

பதேபூர் புரட்சி, உதவி மாஜிஸ் திரேட்டாக இருந்த ஹிக்மதுல்லாஹ் தலைமையில். கான்பூர் புரட்சி, அஸீமுல்லா கான் தலைமையில். மேவார் புரட்சி, பிரோஸ் ஷா தலைமையில். ஆக்ரா புரட்சி, முராத் அலி தலைமையில்,. இப்படிப் புரட்சியின் வழியெங்கும் பூத்துக் குலுங்கிய நறுமலர்கள் இஸ்லாமிய இளவல்களே! (விடுதலைப் போரில் முஸ்லிம்கள் (வி.போ.மு)வி.என். சாமி பக் 204 - (.சு.பெ..) பக். 813,804,816,817,821)...

தூக்கிச் சுமந்த துயரங்கள்

நான்கு மாதத்திற்குப் பின் பல நவீன ஆயுதங்களோடு பறங்கியர்கள், மீண்டும் படைக் களத்திற்கு வந்தார்கள். நடந்து முடிந்த நிகழ்வுகளுக்குத் தகுந்த பதிலடி கொடுக்க வேண்டும் என்ற தீர்மானத்தோடு வந்தார்கள். திட்டமிட்ட ஏற்பாடு, கச்சிதமான அணி வகுப்பு, மரத்தின் கிளைகளுக்கிடையில் தன் இரையை மட்டுமே குறி வைக்கும் வேடனைப் போல முஸ்லிம்கள் மீது மட்டுமே கண் வைத்தார்கள்.

புரட்சியை ஆய்வு செய்த இராணுவக் குழுத் தலைவர் மேஜர்  எஃப்.ஜே. ஹரியட், அரசுக்கு வழங்கிய அறிக்கையில் இவ்வாறு குறிப்பிட்டார்.

புரட்சியின் எந்தப் பக்கத்தைப் புரட்டினாலும் முஸ்லிம்களின் சூழ்ச்சி ரேகைகளே தென்பட்டன, இந்துக்கள் ஒரு குழுவாகச் சேர்ந்து சதித்திட்டம் தீட்டியதாகவோ பிராமணர்களும் கோவில் குருக்களும் கிறிஸ்தவர்களுக்கெதிரான சமயப்போர் நடத்தியதாகவோ எந்தச் சான்றும்  கிடைக்கவில்லை.

பாரசீகம், துருக்கி போன்ற முஸ்லிம் நாடுகளிடம் ஆங்கிலேயர்களுக்கு எதிராக உதவி கேட்டு ஆளனுப் பியவர்களும், ஆங்கிலேயரை வீழ்த்திய பின் ஆட்சி நடத்தக் காத்திருப்பவர்களும் முஸ்லிம்களே.

புரட்சியின் எந்தக் கட்டத்திலும் சமய ரீதியில் இந்துக்கள் ஒன்றிணையவே இல்லை. ஒன்றிணைந்ததாகவும் சம்பந்தப்பட்டதாகவும் கூறப்படுகிற இடங்கள்கூடமுஸ்லிம்களின் தூண்டுதலின் பேரில் முஸ்லிம்களை அடிப்படையாகக் கொண்டே நடந்துள்ளது என்றார். (Proceedings of The Trial Bahadhur Sha  Calcutta, 1895 p.160 ).சு.பெ.... பக் 985,986

அதனால்தான் ஆங்கிலேயர்கள் தமது இலக்கு முழுவதையும் இஸ்லாமியர்களாகக் கொண்டு தலைநகர்டெல்லியையே  தலைகீழாகப்புரட்டினார்கள். காளையர் முதல் கர்ப்பிணிகள் வரை, மாளிகை முதல் மண்மேடு வரை எந்தவித வித்தியாசமுமின்றி அனைத்தையும் வேரறுத்தார்கள்...

தலைநகர் டில்லியை மனித இரத்தத்தால் மாசுபடுத்தினார்கள். டெல்லியில் மட்டும் 27,000 பேரை  தூக்கிலிட்டுக் கொன்றார்கள்,  கொல்லப்பட்டசடலத்தைக் கூட கோரமாகச் சிதைத்தார்கள்.((.சு.பெ..) பக். 713 - (வி.போ.மு)வி.என். சாமி பக் 219)

பகதூருக்குப் பக்கபலமாக படைய னுப்பினார்கள் என்று காரணம் கூறி பக்கத்து அரசின் நவாபுகள் பலரைக் காலி செய்தார்கள். டில்லியை ஒட்டியிருந்த ஜஜ்ஜார், பகதூர்கர், வல்லப்கர், லோஹாரு,  பரூக் நகர், துஜானா, பட்டோடி ஆகிய ஏழு சமஸ்தான சிற்றரசர்களை முதலில் சிறை பிடித்தார்கள், பின்னர் சிரசையும் எடுத்தார்கள்.(குல்லியத் காலிப் லக்னோ 1872 பக் 403-404)

பரூக் நகரின் சிற்றரசர் அஹமது அலீகானைக் கைது செய்து ஒரு கயவனைப் போல கைகளில் விலங்கு மாட்டி அழைத்து வந்தார்கள். குரூரமான முறையில் அவரைக் கொலையும் செய்தார்கள். உயிரற்ற அவரது உடலைக் கூட உறவினர்களிடம் ஒப்படைக்காமல் உரிய முறையில் அடக்கமும் செய்யாமல் செங்கோட்டையின் அகழியில் வீசியெறிந்தார்கள்.(எப்போதாவது எண்ணிப் பாருங்கள் தியாகச் செம்மல்களின் கடிதங்கள் மொழியாக்கம் சரோஜ் நாராயண சாமி புது டில்லி, 1998 பக். 18-20 (.சு.பெ..) பக். 978)

மொகல் குடும்பத்து இளவரசர்கள் இருபத்தி ஆறு பேரை அவசர அவசரமாகத் தூக்கிலிட்டார்கள். (Memo of The Siege of the Delhi, by E.Hare, kaye manuscripts The India Office Library (Common Wealth Office) Home Miscellaneous No.726 pp. 1377-1457

மீர்ஜா நாதிர் பக்த் மீர்ஜா மெல பக்ஷ் மீர்ஜா அபூ அப்பாஸ் முஹம்மது ஷேக்கோ மீர்ஜா ஹுசைன் பக்ஷ் மீர்ஜா அஹமது பக்ஷ் மீர்ஜா அபுயுத்தீன் அப்பாஸ் மீர்ஜா மொகருத்தீன் மீர்ஜா மொயினுத்தீன் மீர்ஜா காதிர் பக்ஷ் மீர்ஜா குதுப்தீன் மீர்ஜா நூருத்தீன் மொய்சுத்தீன் மீர்ஜா இனாயத் ஹுஸைன்  மீர்ஜா முஹம்மது பக்ஷ் குலாம் முஹம்மதி மீர்ஜா குலாம் பக்ருத்தீன் மீர்கா குலாம் அப்பாஸ் மீர்ஜா கபருத்தீன் மீர்ஜா பகதுர் மீர்ஜா வாலா ஷேக்கோ மீர்ஜா நாக்ஹி மீர்ஜா முபாரக் மீர்ஜா முபாரக் மீர்ஜா புல்லாண்டி மீர்ஜா கலி)

கூட்டம் கூட்டமாக பெண்கள் மீது விழுந்து பாய்ந்து பிராண்டினார்கள்.(சுதந்திரப் போரளிகள் நடத்திய தாக்குதலில் ஒரேயொரு மகளிர் கூட மானபங்கப்படுத்தப்படவில்லை என்பது குறிப்பிடத் தகுந்தது. புரட்சி நடந்து கொண்டிருந்த நேரத்தில் போராளிகள் ஐரோப்பியப் பெண்களை கற்பழித்ததாக ஒரு வதந்தி கிளம்பியது. பின்னால் அது குறித்து விசாரித்த சாண்டர்ஸ் குழு அப்படி எந்த ஒரு நிகழ்ச்சியும் நடக்கவில்லை என அறிக்கை தந்தது. Oriental And India Office Collections British Library London Eur Mss e 185 Saunder papers No 104 Muir to Saundres Agra 2-12-1857 (.சு.பெ..) பக். 905) அரச குடும்பத்துப் பெண்களை அளவுக்கு அதிகமாகவே அவமானப் படுத்தினார்கள்.

அப்போது டில்லி தலைநகரமாக அல்ல, சாவு நகரமாகக் காட்சி தந்தது என்கிறார் ஆங்கிலப் பெண்மணி ஹேரியட் டைலர்.(Harriet Tyher An English woman in India The Memories of Harriet Tyher 1828  Edited Anthony Sattin, Oxford, 1986)...

அழிக்கப்பட்ட அடையாளங்கள்

நகரில் வாழ்ந்த மனிதர்களை மட்டுமல்ல. அவர்களின் கல்வி, கலாச்சாரம், பாரம்பரியம், பொருளாதாரம், வரலாற்றுச் சின்னம் என்று அவர்களின் வாழ்வோடு சம்பந்தப்பட்ட அனைத்தையும் அழித்தார்கள்.                      

தில்லி. திரும்பிய பக்கமெல்லாம் எண்ணூறாண்டு கால இஸ்லாமி யர்களின் சரித்திரத்தை எடுத்துச் சொல்லும் சுவடுகள் நிறைந்த பூமி. கட்டிடங்கள் முதல் கலைப் பொருட்கள் வரை அனைத்திலும் அது பிரதிபலிக்கும். எந்தவொன்றும் மிச்சமிருக்கக் கூடாது என்று கங்கணம் கட்டிக் கொண்டு தகர்த்தார்கள்

மஸ்ஜிதே அக்பராபாதி, மஸ்ஜிதே கஷ்மீரி கத்ரா ஆகிய பள்ளிவாசல்களை இடித்துத் தரைமட்டமாக்கினார்கள்.((.சு.பெ..) பக். 900) பகதூர்கர், பரூக் நகர், பாலப்கர், ஜாஜர் ஆகிய நவாப்களின் பெரும்  பெரும் அரண்மனைகளைக் கூட பேரழிவின் சின்னங்களாக மாற்றினார்கள்.(Narayani Gupta Delhi between Empires New Delhi 1991 p. 127 (.சு.பெ..) பக். 901)

மன்னர் ஔரங்கஜேப் முடிசூட்டிக் கொண்ட சாலிமர்பாக் எனும் பசுமைக்குடில் சோட்டா ரங் மஹால், ஹயாத் பக்ஷ் தோட்டம், மெஹ்தப் தோட்டம் அனைத்தும் அடியோடு சாய்க்கப்பட்டது. அழிக்க மனம் வராத இடங்களில்கூட குறைந்த பட்சம் அதிலிருந்த முஸ்லிம்களின் அடையாளங்களையாவது அழித்தார்கள். (James fergussaon History of Indian, Eastern Archiitecture London 1876 p 311  (.சு.பெ..) பக். 901-902)

பேகம் பாக் என்ற அரசியாரின் தோட்டம் குயின்ஸ் கார்டன் - ராணியின் தோட்டம் எனப் பெயர் மாற்றம் செய்யப்பட்டது. லாகூர் தர்வஸா, விக்டோரியா வாசலானது. விலையுயர்ந்த கலைப் பொருட்கள் அனைத்தும் கொள்ளையடிக்கப்பட்டது.