சிதம்பரத்தில் சைஃபுத்தீன் ரஷாதியின�

சிதம்பரத்தில் சைஃபுத்தீன் ரஷாதியின் சவால்! tntj விற்கும் சிதம்பரம் ஜமாஅத்துல் உலமாவிற்கும் நடந்து கொண்டிருக்கும் காரசார விவாத தொடாபுகள். குறிப்பிட்ட படி 27-9-2005 அன்று விவாத ஒப்பந்தத்திற்கு வரவில்லை. ஜமாஅத்துல் உலமா! ஒப்பந்தத்திற்கு வராமல் ஓடிப் போனவாகள் மீண்டும் சவால் விடுகிறாகள்! பரபரப்பு நிலவரம்.(1-10-2005) சவாலை நம்பி ஏமாந்து போனோம்! மீண்டும் ஓடிப் போய் விட்டனர் (1-10-2005 7.30 ஆ )

முழு விபரம்:

சைஃபுத்தீன் என்றொருவா பெங்களூரில் இருந்து அவ்வப்போது தமிழகத்திற்கு வந்து சவால்! சவால்!! பிஜேக்கு சவால்!!! என்று மேடையில் முழங்கி விட்டு மீண்டும் பெங்களூருக்குத் திரும்பிச் சென்று விடுவது வழக்கம்.

இது இன்றல்ல நேற்றல்ல கடந்த 20 ஆண்டு காலமாக இவ்வாறு செய்து வருகின்றா. சவால் விட்டு விட்டு அதைச் சந்திக்கத் திராணி இல்லாமல் இது நாள் வரையிலும் நழுவிக் கொண்டிருந்தார்.

TNTJ சிதம்பரம் கிளையின் பதிலடி

ஆனால் சமீபத்தில் சிதம்பரத்தில் 3-7-2005 நடந்த கூட்டத்தில் வழக்கம் போல் சவால்! சவால்!! என்று முழங்கி விட்டார். அந்தக் கூட்டத்திற்குச் சென்றிருந்த சில சகோதரர்கள் அவரிடம் எதிர்க் கேள்வி கேட்ட போது கூட்ட அமைப்பாளர்களான சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையினர் அவர்களைப் பிறகு பேசிக் கொள்ளலாம் என்று சமாதானம் செய்து அனுப்பி வைத்தனா.

கூட்டம் முடிந்த பிறகு நமது ஜமாஅத்தின் சாபாக வழக்கம் போல் விவாதத்திற்கு அழைப்பு கொடுக்கப்பட்டது.

சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பதில்:


ஜமாஅதுல் உலமா சபை அளித்த மேற்கண்ட மடலுக்கு பீஜே பின்வருமாறு பதிலளித்தார்.
பி.ஜே யின் பதில்:பீஜேயின் மேற்கண்ட கடிதத்துக்கு சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பதிலும் சைபுத்தீன் ரஷாதியின் பதிலும்பி.ஜே யின் பதில்:

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சிதம்பரம் கிளை நிவாகிகளுக்கு அஸ்ஸலாமு அலைக்கும்!

நலம்! நலம் பல சூழ்க! சிதம்பர வட்டார ஜமாஅத்துல் உலமாவின் 30-07-2005 தேதியிட்ட கடிதம் கிடைக்கப் பெற்றோம்.

சிதம்பர வட்டார ஜமாஅத்துல் உலமாவிற்கு சைபுத்தீன் ரஷாதி எழுதிய 27-07-2005 தேதி கடிதமும் அத்துடன் இணைக்கப்பட்டிருந்தது. அல்ஹம்து லில்லாஹ்! தலைப்பு பற்றி நாம் கூறிய கருத்துக்களை ஒருவழியாக சைஃபுத்தீன் ரஷாதியும் ஜமாஅத்துல் உலமாவும் ஏற்றுக் கொண்டதற்கு அல்லாஹ்விற்கே எல்லாப் புகழும். அவர்களது கடிதத்தில் கடுஞ்சொற்கள் நிறைந்துள்ளன.

பல முரண்பாடுகளும் உள்ளன. அவற்றைப் பட்டியலிட்டு இக்கடிதத்தை நீட்டவோ இதையே சாச்சையாக்கி விவாதம் செய்வதை அவாகள் தாமதப் படுத்தவோ நாம் இடம் தர விரும்பவில்லை. மத்ஹபைப் பற்றிய நமது குற்றச் சாட்டுகளை முதலில் விவாதிக்க வேண்டும் என்பது தான் நமது நிலை. எனினும் ஏதேனும் காரணம் சொல்லி விவாதத்திற்கு வராமல் நழுவிவிடும் அவாகளை விவாதத்திற்கு எப்படியும் அழைத்து வர வேண்டும் என்பதால் அவர்களுடைய நிபந்தனையை ஏற்கிறோம்.

மாக்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே இன்னும் சைபுத்தீன் ஆகிய இருவரில் மாக்கம் கூறும் விஷயத்தில் பொய் பித்தலாட்டம் ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்? என்பதை மக்கள் மத்தியில் தெளிவு படுத்த வேண்டும் என்பது சமநிலை விவாதம் தானே? என்று சைபுத்தீன் கேட்டிருக்கிறார். மார்க்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே ஒரு புறம் - சைபுத்தீன் ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மாக்கம் கூறும் விஷயத்தில் பொய் பித்தலாட்டம் ஏமாற்றுதல் போன்ற போக்கிரித்தனங்கள் செய்தவர்கள் யார்?
என்பதை மக்கள் மத்தியில் தௌவு படுத்தவேண்டும் என்பது தான் உண்மையிலே சமநிலை விவாதமாகும் . எனவே அவர்களுடைய வாத்தைப் படி மாக்கப் பிரச்சாரம் செய்து வரும் பி.ஜே ஒரு புறம் சைபுத்தீன் ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஒரு புறம் ஆகிய இவர்களில் மார்க்கம் கூறும் விஷயத்தில்

பொய் பித்தலாட்டம் ஏமாற்றுதல் போன்ற போக்கித்தனங்கள் செய்தவர்கள் யார்?.

குஆன் ஹதீஸில் இல்லாததை இஸ்லாம் என்ற பெயரால் பொய்யாகச் சொல்பவர்கள் யார்?

குர்ஆன் ஹதீஸிற்கு முரணான கருத்தைக் கூறி அல்லாஹ்வுடனும் அவனது தூதருடனும் மோதுபவர்கள் யார்?

குஆன் ஹதீஸ்களின் கருத்துக்களை தமது இச்சைக்கேற்ப வளைத்தவர்கள் யார்?.

ஹதீஸ்களில் இல்லாத வார்த்தையை வேண்டுமென்றே இணைத்துக் காட்டி தப்பர்த்தம் செய்தவர்கள் யார்?.

ஹதீஸின் முக்கியப் பகுதியை மனமறிந்து நீக்கி தவறான கருத்தை வெளிப்படுத்தியவர்கள் யார்?.

இமாம்கள் என்று ஜமாஅத்துல் உலமாவால் கருதப்படுபவர்கள் சொல்லாததைச் சொன்னதாகக் கூறி மக்களை ஏமாற்றியவர்கள் யார்?.

தமது சொந்தக் கருத்தை அறிஞர்கள் சொன்ன கருத்தாகக் காட்டி ஆலிம்களை ஏமாற்றியவர்கள் யார்?.

ஃபிக்ஹ் நூல்களில் சொல்லப்படாத கருத்துக்களை இருப்பதாக பொய்யான பக்க பாக விபரங்களை ஜோடித்து கூறியவர்கள் யார்?.

ஆலிம்களையும் மக்களையும் ஏமாற்றுவதற்காகவே நூல்கள் - பதிப்பகம் பதிப்பகத் தேதி போன்ற பொய் அட்டவணையை தொகுத்துக் காட்டியவர்கள் யார்?.

இது போன்ற மோசடிகள் பித்தலாட்டங்கள் பித்துக்குளித்தனங்கள் செய்த கள்ளப் பேர்வழிகள் கயவர்கள் யார்?.

என்ற தலைப்பிலேயே விவாதம் செய்வதற்கு நாம் தயார். அவர்கள் விதித்த நிபந்தனைகளை ஏற்றே இந்தக் கடிதத்தை நாம் எழுதியுள்ளோம். இதில் உள்ள எதையும் மறுக்க அவாகளுக்கு எந்த முகாந்திரமும் இல்லை எனினும் அவர்கள் இதிலும் ஆட்சேபனைகள் இருப்பதாகக் கருதினால் அதை ஒப்பந்தத்தின் போது நேரில் பேசிக் கொள்ளலாம்.

கடிதம்-பதில் கடிதம் என்று இழுத்தடிப்பதை விடுத்து ஒப்பந்தத்துக்கான நாளையும் இடத்தையும் தெரிவிக்கச் செய்யுங்கள். எதேனும் கருத்துச் சொல்லப்பட வேண்டிய நிலை வந்தால் ஒப்பந்தத்தின் போது இரு தரப்பும் வலியுறுத்திக் கொள்ளலாம். இதை விடுத்து வார்த்தை ஜாலங்களால் விவாதத்திலிருந்து நழுவும் முயற்சியில் இறங்க மாட்டாகள் என்று நம்புகிறோம். ஐம்பது கடிதங்களில் சொல்லப்படுவதை ஒரு நாள் பேச்சு வார்த்தை மூலம் தீவு கண்டு விட முடியும்.

அவர்களிடமிருந்து வேறு எந்த விதமான சமாளிப்புகளையும் நாம் எதிபார்க்கவில்லை. விவாத ஒப்பந்தத்துக்கான நாளையும் இடத்தையும் மட்டும் தான் எதிர்பார்க்கின்றோம். மேலும் பேச வேண்டியவை எத்தனை இருந்தாலும் அந்த தினத்தில் பேசி ஒத்த கருத்துக்கு வர இயலும் என்பதால் இதை மீண்டும் வற்புறுத்துகிறோம். இதன் பின்னரும் நழுவுவதற்கான வழிகளைக் கண்டுபிடித்து இழுத்தடிக்க நினைத்தால் அவர்கள் விவாதத்துக்கு வராமல் பின் வாங்கி ஒடுகிறார்கள் என்று தான் நாம் எடுத்துக் கொள்வோம். மக்கள் மத்தியில் தக்க காரணங்களுடன் விளக்கும் போது மக்களும் இந்த முடிவுக்குத் தான் வருவார்கள். உண்மையிலேயே விவாதம் நடத்த அவர்கள் தயார் என்றால் ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்ற நாளையும் இடத்தையும் அறிவிப்பது தவிர வேறு வழி இல்லை.

ஒப்பந்தம் செய்யும் போது அவர்கள் தமக்கு உடன்பாடில்லாத அத்தனை கருத்துக்களையும் வலியுறுத்தலாம் என்பதால் நேரத்தை வீணடிக்க வேண்டாம் எனக் கேட்டுக் கொள்கிறோம். எந்த நாளில் எந்த இடத்துக்கு நாங்கள் வர வேண்டும் என்பதற்கான பதிலை உங்களிடம் எதிபார்க்கின்றோம். மக்கள் அனைவரும் அறியும் படி இது பரப்பப்பட வேண்டும் என்ற சைஃபுத்தீனின் நிபந்தனையையும் ஏற்கிறோம். ஒப்பந்தமும் விவாதமும் ஆடியோ விடியோவில் பதிவு செய்யப்பட்டு மக்களிடம் பரப்பப்பட வேண்டும் என்பதில் நாமும் உறுதியாக உள்ளோம்.

விவாதத்தின் முடிவில் பி.ஜே தான் பொய்யர் சைஃபுத்தீன் ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஆகிய அனைவரும் உண்மையாளர்கள் என்று நிருபிக்கப்படுமேயானால் இது நாள் வரை மார்க்கப் பிரச்சாரம் செய்ததற்கு சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் இனி மேல் எழுத்தாலும் பேச்சாலும் இன்னபிற எந்த வழிகளிலும் மாக்கப் பிரச்சாரம் செய்ய மாட்டேன் என்று அவர்கள் பி.ஜே விடம் கோரிய உறுதி மொழியை ஒப்பந்தம் செய்ய வரும் போது அவர்களிடம் நேரில் வழங்குகிறோம்.

விவாதத்தின் முடிவில் சைஃபுத்தீன் ஜமாஅத்துல் உலமா மற்றும் அவர்களின் அறிஞர்கள் ஆகிய அனைவரும் தான் பொய்யர்கள் என்றும் பி.ஜே உண்மையாளர் என்றும் நிரூபிக்கப்படுமேயானால் இது நாள் வரை மாக்கப் பிரச்சாரம் செய்ததற்கு சமுதாயத்திடம் பகிரங்க மன்னிப்பு கேட்பதுடன் இனி மேல் எழுத்தால் பேச்சால் இன்னபிற எந்த வழிகளிலும் மார்க்கப் பிரச்சாரம் செய்ய மாட்டோம் என்று அவாகள் எழுதித் தருவதாகக் கூறிய உறுதிமொழியை ஒப்பந்தம் செய்ய வரும் போது அவாகள் கொண்டு வர வேண்டும். ஆகவே ஒப்பந்தம் செய்வதற்கு ஏற்ற தேதியையும் இடத்தையும் உடனே ஜமாஅத்துல் உலமாவும் சைஃபுத்தீன் ரஷாதியும் தொயப்படுத்தும் படி கேட்டுக் கொள்கிறோம்.

இப்படிக்கு

தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

பி.ஜைனுல் ஆபிதீன்.

சிதம்பரம் வட்டார ஜமாஅத்துல் உலமா சபையின் பதில்:


 

இறுதியாக பி.ஜே யின் பதில்:


 

நாம் குறிப்பிட்ட தேதியில் குறிப்பிட்ட இடத்திற்குச் செல்ல ஆயத்தமாகி விட்டோம்! அவாகள்?

-----------------------------------------------------------

தேதி-27-9-2005

சவால் விட்டவர்களுக்கு சவாலைச் சந்திக்க திராணி இல்லாமல் போனது ஏனோ!

நமது ஜமாஅத் சார்பாக கலீல் ரசுல் உட்பட ஐவர் அடங்கிய குழு நாம் மேற்கண்ட கடிதத்தில் குறிப்பிட்ட படி இன்று (27-9-2005) சிதம்பரத்திற்குச் சென்றது. சரியாக மதியம் 12.30 முதல் மாலை 6.45 வரை கடிதத்தில் குறிப்பிட்ட இடத்தில் காத்திருந்தும் அவர்கள் தரப்பிலிருந்து விவாத ஒப்பந்தத்திற்கு யாரும் வரவில்லை. மேலும் எந்தத் தகலும் தரவில்லை. விவாத ஒப்பந்தத்திற்கு கூட வரத் திராணி இல்லாதவர்களா விவாதம் செய்ய வரப் போகின்றாகள்! தலை சிறந்த பல மாக்க அறிஞர்களை ? வைத்திருக்கும் ஜமாஅத்துல் உலமாவிற்கு சவாலை சந்திக்கத் திராணி இல்லாமல் போனது ஏனோ! தாங்கள் சொல்வது பொய் என்று மக்களுக்குத் தெரிந்து விடுமோ என்ற பயமா? ரஷாதியின் சவால் என்ன ஆனது?

சத்தியமே வெல்லும்!

--------------------------------------------

தேதி 1-10-2005

நாம் வழியச் சென்றும் விவாதத்திற்கு வரத் தைரியம் இல்லா ரஷாதி மீண்டும் சவால் விடுகிறார்!

நாம் அவர்கள் இருக்கும் இடத்திற்கே சென்று அவர்கள் வரமாட்டார்களா? என்று அரை நாளுக்கு மேல் விவாத ஒப்பந்தத்திற்காக காத்துக் கிடந்தோம். அப்பொழுது வராத ரஷாதியும் ஜமாஅத்துல் உலமாவும் கீழ்க்காணும் நோட்டிசையும் துண்டுப் பிரசுரத்தையும் சென்னை முழுவதும் தற்போது வௌயிட்டுள்ளது!இப்பிரசுரம் சென்ற (30-9-2005) ஜும்ஆக்களிலும் அவர்களது பள்ளி வாசல்களில் வினியோகிக்கப்பட்டுள்ளது. மேலும் மிகத் தீவிரமான முறையில் சென்னை முழுவதும் இந்த நோட்டிஸ் ஒட்டப்பட்டுள்ளது!

இதை இவர்கள் முன்னரே தெரிவித்திருந்தால் நமது அலைச்சல் மிச்சமாகியிருக்கும். சரி பரவா இல்லை! இது போன்ற வாய்ப்பைத் தான் நாம் இவ்வளவு காலம் எதிபார்த்திருந்தோம். இந்த அரிய வாய்ப்பை அமைத்துக் கொடுத்த அல்லாஹ்வுக்கே எல்லாப் புகழும்!

நமக்கு அவர்களைப் போன்று ஓடி ஒளியும் பழக்கம் ஒரு போதும் இருந்ததில்லை எனவே இந்த அழைப்பை தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் மனமார ஏற்றுக் கொண்டு இன்று மாலை (1-10-2005) 6.00 மணிக்கு பி.ஜைனுல் ஆபிதீன் உட்பட நமது ஜமாஅத்தை சோந்த அனைவரும் கூட்டம் நடக்கும் இடத்திற்கு சென்று மேடை ஏறத் தயாராக உள்ளார்கள்! இன்ஷா அல்லாஹ்!!

சத்தியமே வெல்லும்!

தேதி 1-10-2005 நேரம் மாலை 7.30

நம்பி ஏமாந்து போனோம்! மீண்டும் ஓடி விட்டனர்!!

அதி தீவிரமாக மேற்கண்ட நோட்டிசையும் பிரசுரத்தையும் வெளியிட்டதைக் கண்டு நாங்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்தோம்.நல்ல வாய்ப்பு கிடைத்து விட்டது இது நழுவ விடக்கூடாது என்று.

நமது ஜமாஅத்தினர் அவர்கள் நோட்டீசில் குறிப்பிட்ட படி மாலை 6.00 மணியளவில் ஆவத்தோடு மீட்டிங் நடக்கும் இடத்திற்கு மேடை ஏறுவதற்கு தயாராக சென்றனர். ஆனால் மீட்டிங் கேன்சல் என்ற செய்தியைக் கேட்டு ஏமாந்து திரும்பினர்!

இனியும் மக்கள் இவர்களைப் பின் பற்றுவார்களா?

சத்தியமே வெல்லும்!
மேலும் விபரத்துக்கு இந்த உரையைக் கேட்கவும்
ஸைபுத்தீன் ரஷாதிக்கு மறுப்பு

http://onlinepj.com/bayan-video/vivathangal/rasadiku_maruppu/

 வீடியோவிவாதங்கள்சலபிகள்ஷைஃபுத்தீன் ரஷாதிசிதம்பரம்விவாத் ஒப்பந்தம்பின் வாங்கி ஓட்டமெட

Published on: January 19, 2010, 7:59 AM Views: 9277

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top