காபா வடிவில் மதுபான கூடமா?

காபா வடிவில் மதுபான கூடமா?

(காபா வடிவில் மதுபானக் கூடம் என்று ஒரு படத்தைப் போட்டு சில ஆண்டுகளுக்கு முன்னர் சிலர் பொய்களைப் பரப்பினார்கள். இது குறித்து நேரடி ரிப்போர்ட் மூலம் பொய் என்பதை நாம் நிரூபித்ததும் இது அடங்கியது. மீண்டும் அதே படத்துடன் அதே செய்தியைப் பரப்ப ஆரம்பித்துள்ளனர். எனவே அந்த ஆக்கத்தை மீண்டும் இங்கே வெளியிடுகிறோம்.)

- நியூயார்க்கிலிருந்து ஓர் உண்மைச் செய்தி!

கடந்த சில நாட்களாக ஃபேஸ் புக்கில் ஒரு புகைப்படமும், அத்துடன் இணைந்து ஒரு செய்தியும் மிகவேகமாக பரவியது.

அந்த செய்தி இதோ :

கஃபா வடிவிலான மதுகூடத்திற்கு இஸ்லாமியர்கள் எதிர்ப்பு !

நியூயார்க் நகரில் புதிதாக கட்டப்பட்டு வரும் கஃபத்துல்லா வடிவிலான புதிய மதுபான கூடத்திற்கு எதிர்ப்பு தெரிவித்து அமெரிக்கா வாழ் இஸ்லாமியர்கள் கடும் போராட்டம் நடத்தி வருகின்றனர்.

இஸ்லாமியர்களை தொடர்ந்து சீண்டி வரும் ஏகாதிபத்திய அமெரிக்கா தற்பொழுது இஸ்லாமியர்களின் கிப்லாவான கஃபாவை போன்று ஒரு மதுபான கூடத்தை உருவாக்கி வருகின்றது. இந்நிலையில் அங்குள்ள பல்வேறு இஸ்லாமிய அமைப்புகள் இந்த மதுபான கூடத்தை தடுக்க பல்வேறு போராட்டங்களை நடத்தியும் எந்த வித நடவடிகைகளையும் எடுக்காத அமெரிக்கா அரசு மது பான கூடத்தை திறப்பதற்கான பணியை தொடர்ந்து செய்து வருகிறது .

இதைக் கண்டித்து ஈரான் நாட்டில் மிகப்பெரிய அளவில் போராட்டம் வெடித்துள்ளது என்று கூறி

ஈரான் நாட்டில் நடந்த போராட்டத்தின் புகைப்படம் என்று ஒரு புகைப்படத்தையும் பரப்பி வந்தனர்.

இப்படி ஒரு செய்தி ஃபேஸ் புக்கில் பரப்பப்படுவதாகவும், இதன் உண்மை நிலை என்ன என்று கேள்வி எழுப்பியும் மாநிலத் தலைமைக்கு கோரிக்கைகள் வந்தன. ஒரு சிலர் சற்று அதிகமாகவே உணர்ச்சிவசப்பட்டு அமெரிக்காவை சும்மா விடக்கூடாது; அமெரிக்க தூதரகத்தை முற்றுகையிட்டு போராட்டம் நடத்த வேண்டும் என்றும் தலைமை நிர்வாகிகளிடம் கருத்து தெரிவித்தனர்.

அமெரிக்காவின் நியூயார்க் மகாணத்தில்தான் இந்த கட்டடம் கட்டப்படுவதாக தகவல் பரவியுள்ளதால் இது குறித்த உண்மை நிலை என்ன என்று ஆய்வு செய்து சொல்லுமாறு தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்தின் அமெரிக்கா கிளை பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்களுக்கு அந்த புகைப்படங்களும், செய்தியும் ஈமெயில் வாயிலாக அனுப்பி வைக்கப்பட்டன.

பரப்பப்பட்ட பொய்:

அமெரிக்க தவ்ஹீத் ஜமாஅத்தின் பொறுப்பாளர் தஸ்தகீர் அவர்கள் அந்த செய்தியை ஆய்வு செய்து கீழ்க்கண்டவாறு பதிலளித்துள்ளார்.

அஸ்ஸலாமு அலைக்கும்.

அன்புள்ள மாநில நிர்வாகிகளுக்கு,

தாங்கள் அனுப்பிய ஈமெயில் கிடைக்க பெற்றேன். அதில் குறிபிட்டது போல்  அப்படி ஒரு இடம்  நியூயார்க் மகாணத்தில் இருக்கிறது. ஆனால் அந்த இடத்தில அப்படி ஒரு மதுபான கூடமோ அல்லது அதற்காக இங்கு உள்ள இஸ்லாமிய அமைப்புகளோ எந்த விதமான போராட்டமோ நடத்தவில்லை.

இப்படி ஒரு புரளி பல வருடத்திற்கு முன்பிருந்தே, அதாவது ஏறத்தாழ சுமார் 5ஆண்டுகளுக்கு முன்பிருந்தே  சில விஷமிகளால் பரப்பப்பட்டு வருகிறது. அது இன்றளவும் பரவிக்கொண்டே இருக்கின்றது. உண்மையில்  அந்த இடம் ஆப்பிள் நிறுவனத்தின் விற்பனை கூடத்தின் நுழைவாயில்.

இது முற்றிலும் கண்ணாடியால் ஆனது. இதற்கான பணி நடக்கும் போது முடியும் தருவாயில் அதனை சுற்றி கருப்பு நிற போர்வை போன்ற துணியால் அதைப் போர்த்தி வைத்திருந்தனர். அவ்வாறு அந்தக் கட்டிடம் போர்த்தப்பட்ட போது எடுக்கப்பட்ட புகைப்படம் தான் அது.

அதே இடத்தின் முன்பு கடந்த வெள்ளிக்கிழமை (02.05.2014) அன்று நானே நின்று எடுத்த புகைப்படத்தை அனுபியுள்ளேன். இப்படி சில நேரங்களில் நமது மக்களே தேவை இல்லாத பொய்யான தகவல்களைப் பரப்பி  நேரத்தை வீணாக்கி தேவை இல்லாமல் மக்களைக் கொந்தளிக்க விடுவது மிக வருத்தத்தைத் தருகிறது.

-    நியூயார்க்கில் இருந்து

தஸ்தகிர்.

அமெரிக்கா தவ்ஹீத் ஜமாஅத் பொறுப்பாளர்

ஆப்பிள் நிறுவனத்தின் ஒரு கட்டடத்தைப் போர்வையினால் போர்த்தி வைக்கப்பட்டிருந்ததைப் புகைப்படம் எடுத்து கஃபா வடிவில் மதுபானக்கூடம் திறக்கப் போகின்றார்கள்; அதை அமெரிக்க அரசாங்கமே செய்கின்றது என்று புளுகி பொய்யான புரளியை யாரோ கிளப்பி விட அதை அப்படியே நமது சகோதரர்களும் ஃபேஸ் புக் வாயிலாக பரப்பி வருகின்றார்கள் என்றால் இதை என்னவென்று சொல்வது?

இப்படித்தான் தேவையில்லாத பல பொய்யான பீதி கிளப்பக்கூடிய செய்திகளை இஸ்லாத்தைப் பாதுகாக்கின்றோம்; இஸ்லாமியர்களைப் பாதுகாக்கின்றோம் என்று தாங்களாகக் கற்பனை செய்து கொண்டு பரப்பி விடுகின்றனர். நமக்கு வந்த இந்த செய்தி உண்மையா? என்று முறையாக ஆய்வு செய்யாமல் பரப்பிவிடுவதால் வரும் பின்விளைவுகளை யாரும் யோசிப்பது இல்லை.

இதைக் கண்டித்து ஈரானில் மாபெரும் போராட்டம் நடந்ததாக படம் போட்டதுதான் கொடுமையிலும் கொடுமை.

ஆக இதுபோன்ற வேளைகளை நமது சகோதரர்கள் நிறுத்த வேண்டும்.

மேலும் இதுபோல இஸ்லாத்திற்கு வலு சேர்க்கின்றோம் என்ற பெயரில் சில கற்பனைகளையும், பொய்யான செய்திகளையும் பரப்பிவிடுவோரும் உள்ளனர்.

ஆம்!

மேகத்தில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;

தர்பூசணியில் அல்லாஹ் என்ற வாசகம் தெரிகின்றது;

குழந்தையின் உடலில் குர்ஆன் எழுத்து உள்ளது;

மரம் அல்லாஹ்வை ருகூஉ செய்கின்றது;

ஆட்டின் தலையில் முஹம்மத் என்ற எழுத்து உள்ளது;

கோழி முட்டையில் முஹம்மத் என்று உள்ளது;

மீன் வயிற்றில் அல்லாஹ் என்ற எழுத்து உள்ளது;

இப்படியும் இன்னும் பல வகைகளிலும் கிளப்பி விடுகின்றார்கள். இதுவெல்லாம் எதேச்சையாக நடக்கும் நிகழ்வுகள்; இதை நாம் கண்டுகொள்ளத் தேவையில்லை. ஆனால் இது இஸ்லாத்தின் அத்தாட்சி என்று கூறும்போது அல்லாஹ் என்ற எழுத்தையே சூலத்தை போன்று காட்சி தருகின்றது; எனவே இந்து மதமும் உண்மை என்று சொல்ல முடியுமா? இல்லையா?

அப்படி இந்துச் சகோதரர்கள் கூறினால் நாம் என்ன பதில் சொல்ல முடியும்?

இஸ்லாத்தை உண்மைப்படுத்த திருக்குர்ஆனிலும், நபிகளாரின் வழிகாட்டுதல்களிலும் ஆயிரமாயிரம் செய்திகள் புதைந்து கிடக்க அதையெல்லாம் விட்டுவிட்டு சல்லிக்காசிற்கு பிரயோஜனமில்லாத இது போன்ற செய்திகளைப் பரப்புவதால் எவ்விதப் பயனும் இல்லை என்பதையும், இதுபோன்ற செய்திகளைப் பரப்புவது இஸ்லாத்திற்குப் பின்னடைவைத்தான் ஏற்படுத்தும் என்பதையும் இதை பரப்பக்கூடியவர்கள் விளங்கிக்கொள்ள வேண்டும்.

மேலும் தேவையில்லாத பீதி ஏற்படுத்தக்கூடிய செய்திகளை அடுத்தடுத்து பரப்பிவிட்டால் அவை அனைத்தும் பொய் என்று தெரிய வரும் போது உண்மையிலேயே முஸ்லிம்கள் பாதிக்கப்பட்ட செய்திகளை சொன்னால் கூட யாரும் நம்பாத நிலை ஏற்படும்.

அதிசயங்கள் - அற்புதங்கள் என்று பொய்யாகச் சொல்லி ஒன்றுக்கும் உதவாத செய்திகளை இஸ்லாத்தின் பெயரால் பரப்பும் போது, இந்து மதத்திலும், கிறித்தவத்திலும் இதுபோன்ற செட்டிங்குகளையெல்லாம் தூக்கி சாப்பிடக்கூடிய செய்திகளை கைவசம் தயாராக வைத்துள்ளார்கள்.

பிள்ளையார் பால் குடித்தது;

வேப்ப மரத்தில் பால் வடிந்தது;

மாதா சிலையில் கண்ணீர் வந்தது;

மாதா சிலை கண் திறந்தது;

இயேசுவின் சிலையில் புனித நீர் வழிந்தது….

என்று பட்டியல் நீண்டு கொண்டே போகின்றது. அவற்றையெல்லாம் நம்பும் சூழல் ஏற்பட்டு அது இஸ்லாத்தைத் தவறாகப் புரிந்து கொள்ளத்தான் உதவும் என்பதையும் சம்பந்தப்பட்டவர்கள் உணர வேண்டும்.

அதுபோல அவர் இஸ்லாத்தைத் தழுவினார்; இவர் இஸ்லாத்தைத் தழுவினார் என்று பொய்யான பல செய்திகளைப் பரப்பி விடுவோரும்; அதை நம்புவோரும் உரிய முறையில் ஆய்வு செய்தால் உண்மை விளங்கும். சம்பந்தப்பட்டவர்கள் திருந்துவார்களா?

September 11, 2015, 4:28 PM

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?

திமுகவை மமகட்சி ஆதரிப்பது ஏன்?

இடஒதுக்கீட்டிற்காகத்தான் டெல்லி மேல்சபைத் தேர்தலில் திமுகவுக்கு ஆதரவு என்று மமகட்சி கூறுவது சரியா?

முகம்மது இக்பால், கோவை

அரசியல்வாதிகள் தங்கள் நடவடிக்கைகளுக்குச் சொல்லும் காரணம் ஒருகாலத்திலும் உண்மையானதாக இருக்காது.

எங்களின் ஆதாயத்துக்கு எது சரிப்பட்டு வருமோ, அந்த முடிவை எடுத்துள்ளோம் என்று அவர்கள் சொல்வது தான் சரியாக இருக்கும்.

இவர்கள் சொல்லும் போலியான மற்ற காரணங்களை மக்கள் நம்ப மாட்டார்கள் என்றாலும் இந்த நடவடிக்கை சமுதாயத்துக்காக அல்லது நாட்டு மக்களுக்காக அல்லது தமிழுக்காக என்று எதையாவது வெட்கமில்லாமல் சொல்வது அரசியல்வாதிகளின் வாடிக்கையாக இருக்கிறது.

மமகட்சி என்பதும் ஒரு அரசியல் கட்சியாக இருப்பதால், பல வகைகளில் கடைசித் தரத்தில் உள்ள கட்சி என்பதால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்கிறார்கள்.

இடஒதுக்கீட்டிற்காக ஆதரிப்பது என்றால் கருணாநிதி தமிழக முதல்வராகவோ அல்லது பிரதமராகவோ இருக்கிறாரா? அந்த அடிப்படையில் அவர் வாக்குறுதி கொடுத்தால் இடஒதுக்கீட்டிற்காக ஆதரித்தோம் என்பதில்  கொஞ்சமாவது அர்த்தமிருக்கும். மத்திய அரசில் இப்போது அங்கம் வகிக்காத கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக என்ன செய்வார் என்பதற்காக ஆதரித்தார்கள்?

மத்திய அரசை வற்புறுத்துவதற்காக ஆதரித்தார்கள் என்றால், மத்திய அரசில் அங்கம் வகிக்கும்போது கருணாநிதி இடஒதுக்கீட்டிற்காக கடிதம் எழுதினாரே, அப்போது திமுகவை ஆதரிக்கவில்லையே ஏன்?

இரண்டாண்டுகளுக்கும் மேலாக அதிமுகவினரைவிட அதிகமாக ஜெயலலிதாவுக்கு ஜால்ரா அடித்துவிட்டு ஒரே நாளில் அந்தர்பல்டி அடிக்கும் நிலையை அல்லாஹ் இவர்களுக்கு ஏற்படுத்தினான் என்று தான் நமக்குத் தெரிகிறது.

34 சட்டமன்ற உறுப்பினர்களின் வாக்குகளைப் பெற்றால்தான் ஒருவர் ராஜ்யசபா உறுப்பினர் ஆக முடியும். காலியான 6 இடங்களிலும் அதிமுக வெற்றி பெற முடியாது. அதிமுகவிடம் 150 சட்டமன்ற உறுப்பினர்கள் உள்ளனர். ஒரு ராஜ்யசபா  எம்பிக்கு 34 வாக்குகள் வீதம் நான்கு பேரை அதிமுக வெற்றி பெறச் செய்வதற்கு 136 உறுப்பினர்கள் போதும். ஆனால் மேலதிகமாக 14 உறுப்பினர்கள் உள்ளனர்.

ஐந்து பேரை தேர்வு செய்ய அதிமுக விரும்பினால், 170 சட்டமன்ற உறுப்பினர்கள் ஆதரவு தேவைப்படும். ஆனால் அதிமுகவிடம் 150 உறுப்பினர்கள் உள்ளதால் மேலும் 20 உறுப்பினர்கள் ஆதரவு இருந்தால் மட்டுமே அது சாத்தியமாகும். பிறகட்சிகளின் ஆதரவைப் பெற்று ஐந்தாவது உறுப்பினரையும் தேர்வு செய்வது அதிமுகவுக்குச் சிரமமானதல்ல.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் மமகட்சி, புதிய தமிழகம், சரத்குமார், தமிழரசன், கம்யூனிஸ்ட்டுகள் உள்ளிட்ட யாருடைய ஆதரவும் அதிமுகவுக்குத் தேவைப்படாது. நான்கு பேரை தேர்வு செய்வதற்குத் தேவையான உறுப்பினர்களைவிட மேலதிகமாக 14 உறுப்பினர்கள் இக்கட்சியிடம் உள்ளனர்.

நான்கு பேர் போக மீதமுள்ள வாக்குகளை தங்களுக்குத் தரவேண்டும்  என்ற  கோரிக்கைகளை கம்யூனிஸ்ட்டுகள் தொடர்ந்து அதிமுகவிடம் வைத்தனர். டெல்லி சென்ற ஜெயலலிதாவை நேரில் சந்தித்தும் இதை வலியுறுத்தினர்.

அதிமுக ஐந்து பேரை நிறுத்தினால், பற்றாக்குறையான வாக்குகளுக்காக நம்மை அணுகுவார்கள். தகுந்த முறையில் பேரம் பேசலாம், கம்யூனிஸ்ட்டுகளுக்கு விட்டுக் கொடுத்தால் அதிமுகவுக்கு நம் தயவு தேவைப்படாது என்று மம கட்சியினர் கதி கலங்கி நின்றார்கள். ஆனால் கம்யூனிஸ்ட் தலைவர்களைச் சந்தித்த பின்னரும் ஜெயலலிதா ஐந்து வேட்பாளர்களை நிறுத்தினார். மமகட்சி வட்டாரம் மகிழ்ச்சியில் ஆனந்தக் கூத்தாடியது.

அதிமுக அணுகியது, திமுக அணுகியது என்றவாறு செய்திகளைக் கொடுத்தார்கள். ஜெயலலிதாவிடமிருந்து விரைவில் அழைப்பு வரும் என்று வழிமேல் விழி வைத்துக் காத்திருந்தார்கள். இரண்டு  நாட்கள்கூட இந்த மகிழ்ச்சி நீடிக்கவில்லை. ஜெயலலிதா நிறுத்திய ஐவரில் ஒருவரை வாபஸ் பெற்று நால்வர் மட்டுமே அதிமுக வேட்பாளர் என்று முடிவை மாற்றினார். தனது எஞ்சிய வாக்குகளை கம்யூனிஸ்ட்டுகளுக்கு வழங்கப்போவதாகவும் அறிவித்தார்.

ஜெயலலிதா நான்கு பேரை நிறுத்தினால் தனது ஓட்டுக்கள் மூலமாகவே வென்றுவிடுவாரே? அதைவிட அதிகமாகவும் அவரிடம்  ஓட்டுக்கள் உள்ளதே? இனிமேல் நம்மைச் சீண்ட மாட்டார்களே? கம்யூனிஸ்ட்டுகளுக்கு ஜெயலலிதாவின் ஆதரவு கிடைத்தால், கம்யூனிஸ்டுகளிடம் என்ன பேரம் பேச முடியும் என்று குழம்பிப் போனார்கள்.

தனது குடும்பத்தினருக்காக மட்டுமே கட்சி நடத்தும் கருணாநிதிக்கு மட்டுமே இவர்களின் ஆதரவு தேவையாக இருந்தது. மகளை வெற்றி பெறச் செய்வதற்காக அவர் எது வேண்டுமானாலும் செய்வார். எந்த வாக்குறுதியையும் கொடுப்பார். (பின்னர் அல்வாவும் கொடுப்பார்)

ஒரு பொருள் பலருக்கும் தேவைப்படும் போதுதான் எதையும்  நல்ல விலைக்கு விற்க முடியும். ஒரேயொரு நுகர்வோருக்கு மட்டுமே விற்பது என்றால் பெரிய அளவில் பேரம் பேச இயலாது. ஏதோ வந்த வரைக்கும் லாபம் என்ற நிலைக்கு அவர்களின் ஓட்டு மதிப்பை அல்லாஹ் குறைத்து விட்டான்.

ஜெயலலிதா ஐந்து பேரை நிறுத்துவதாக அறிவித்து, ஐந்து பேரை வெற்றி பெற வைக்க முடியும் என்ற நிலையிலும் ஜெயலலிதா அதைச் செய்யவில்லை.

பிறர் தயவால் ஜெயலலிதா ஜெயித்தார் என்ற விமர்சனம்தான் ஜெயலலிதாவை அதிகம் கோபப்படுத்தும் என்பது தான் இதற்குக் காரணமாக இருக்க முடியும்.

காங்கிரஸோடு கூட்டணி வைத்து அவர் ஜெயித்தபின், எங்களால்தான் அதிமுக ஜெயித்தது என்று காங்கிரஸ் சொன்னபோது சோனியாவை அவரது பூர்வீகப் பெயரைச் சொல்லி கிழிகிழி என்று ஜெயலலிதா கிழித்தார்.

தேமுதிகவுடன் கூட்டணி வைத்து ஜெயித்த ஜெயலலிதாவுக்கும், தேமுதிகவுக்கும் பெரிய பிரச்சினை ஏதும் இல்லாமல் இருந்தது. தேமுதிக மூலம்தான் அவர் ஜெயித்தார் என்ற பிரச்சாரம் காரணமாகத்தான் அக்கட்சியை பிரதான எதிரியாக ஆக்கினார்.

பொதுத் தேர்தலைப் பொறுத்தவரை என்னால்தான் நீ ஜெயித்தாய் என்று இருவரும் சொல்லிக் கொள்ள முடியும். வாக்களித்தவர்கள் யாருக்காக வாக்களித்தார்கள் என்று கண்டுபிடிக்க முடியாது. இவரது வாக்கு அவருக்கும் அவரது வாக்கு இவருக்கும் பயன் பட்டிருக்கலாம்.

ஆனால் ராஜ்யசபா தேர்தல் என்பது சட்டமன்ற உறுப்பினர்களால் தேர்வு செய்யப்படுவதாகும். அதிமுக வேட்பாளர்கள் வெற்றி பெற கம்யூனிஸ்டுகள் உதவினாலும், தங்களது தயவில்தான் அதிமுக வென்றது எனக்கூறினால் அதை மறுக்க இயலாது. எங்கள் ஆதரவில்தான் அதிமுக வென்றது என மமகட்சியும் கூறலாம். மமகட்சியின் இருவர் வாக்களித்து இப்படிக் கூறினால் ஜெயலலிதாவால் அதை மறுக்க இயலாது.

பிறர் தயவில் வெற்றி பெற்றுள்ளதை ஒரு போதும் ஒப்புக் கொள்ளாத  ஜெயலலிதா ஒரு ராஜ்யசபா எம்.பி.க்காக அல்லரை சில்லரைகளிடம் ஏன் கெஞ்ச வேண்டும் என்ற ரீதியில்தான் முடிவு எடுப்பார்.

மேலும் இரண்டு எம்.எல்.ஏ.க்கள் ஓட்டுப் போடுவதற்காக நாடாளுமன்றத் தேர்தலில் ஒரு எம்.பி.சீட் கேட்டார்கள் என்றால் இது ரொம்ப ஓவர் என்று அவருக்குத் தெரியாதா என்ன?

ஒருவன் 100 ரூபாய்க்கு ஒரு பொருள் வாங்கச் செல்லும்போது இரண்டு ரூபாய் குறைகிறது. அருகில் இருந்த ஒருவர் நான் அதைத் தருகிறேன் என்று கூறி இரண்டு ரூபாயைத் தருகிறார். இதனால் அந்தப் பொருளை அவரால் வாங்க முடிகிறது. மறுநாள் அதைச் சொல்லிக்காட்டி இந்தப் பொருள் வாங்க உனக்கு நான்தான் உதவினேன். எனவே என்னிடம் 2 ரூபாய் உள்ளது. நீ 98 ரூபாய் போட்டு இதை எனக்கு வாங்கித் தரலாமே என்று கேட்க  முடியுமா?

ராஜ்யசபாவிற்கு, இரண்டு ஓட்டைப் போட்டுவிட்டு ஒரு எம்.பி. (34 எம்.எல்.ஏ.க்கள் மதிப்புடையது) கேட்டால் இது சரிப்பட்டு வராது. இப்படிப் பேரம் பேசும் நிலை சில்லரைக் கட்சிகளுக்கு இருக்கக் கூடாது என்பதற்காக  ஜெயலலிதா இம்முடிவை எடுத்தார். கம்யூனிஸ்ட்டுகளுக்கு தனது 15 எம்.எல்.ஏ.க்களின் ஓட்டுக்களைப் போட்டு அடுத்த நாடாளுமன்றத் தேர்தலில் கூட்டுச் சேர நேர்ந்தால் அவர்களின்  பேரம் பேசும் பலத்தை வெகுவாகக் குறைத்துவிட்டார்.

கருணாநிதிக்கு இது மகளின் பிரச்சினை என்பதால், மமகட்சிக்குத் தேவையானவற்றைச் செய்து கொடுக்கலாம். இரண்டு ஓட்டிற்காக இரண்டு எம்.பி.க்கள் சீட்டு தருவதாகவும் சொல்லியிருக்கலாம். என்ன பேசப்பட்டது என்பது பேசியவர்களுக்குத்தான் தெரியும்,

இவர்கள் என்ன வாங்கியிருந்தாலும், ஜெயலலிதாவின் அதிரடி முடிவால் பெரிய அளவில் பேரம் பேசும் வாய்ப்பை அல்லாஹ் பறித்து விட்டான் என்றுதான் சொல்ல வேண்டும்.

June 26, 2013, 12:55 AM

காவல்துறை மிருகங்களைக் கண்டித்து

விழிப்புணர்வு பிரசுரம் கொடுத்ததற்காக முஸ்லிம் வீடுகளில் நள்ளிரவில் நுழைந்து அப்பாவிகளைக் கைது செய்தும்

வீட்டில் இருந்த முஸ்லிம் பெண்களை புருஷனை வெளியே அனுப்பி விட்டு யாருடன்............ என்று கேவலமாகப் பேசி முஸ்லிம் பெண்களை இழிவுபடுத்திப் பேசியும்

நியாயம் கேட்ட முஸ்லிம்கள் மீது மிருகவெறி தாக்குதல் நடத்தி வெறியாட்டம் போட்டும்

முஸ்லிம்களுக்கு எதிராகப் போர் தொடுத்துள்ள காவல்துறை அதிகாரிகள் போர்வையில் நடமாடும் மனித மிருகங்களைக் கண்டித்தும் அவர்களைக் கைது செய்து நடவடிக்கை எடுக்க வலியுறுத்தியும்

மண்ணடி தம்புசெட்டி தெருவில் 29-12-2012 சனிக்கிழமை கண்டனப் பொதுக் கூட்டம் மாலை 6.30 முதல் 10 மணி வரை நடத்தப்படும்.

பீஜே அவர்கள் கண்டன உரை நிகழ்த்துகிறார்.


இன்ஷா அல்லாஹ் இந்தக் கூட்டம் நேரடி ஒளிபரப்பு செய்யப்படும்

காவல்துறை முஸ்லிம்கள் மீது துவங்கியுள்ள யுத்தத்திற்கு பதிலடி கொடுக்கும் மாபெரும் போராட்டம் அந்தக் கூட்டத்தில் அறிவிக்கப்படும்.

அறிவிக்கப்படும் போராட்டம் போலீசாரின் தடியகளுக்கும் துப்பாக்கித் தோட்டாக்களுக்கும் முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும், சிறைக்கு முஸ்லிம்கள் அஞ்ச மாட்டார்கள் என்பதை உணர்த்தும் வகையிலும் இருக்கும்.

சம்மந்தப்பட்ட அதிகாரிகள் மீது தக்க நடவடிக்கை எடுக்கப்படும் வரை ஓய்வில்லா போராட்டமும் அறிவிக்கப்படும். இன்ஷா அல்லாஹ்

29 -12-2012 அன்று நடைபெறும் கண்டனப் பொதுக் கூட்டத்துக்கும் அதைத் தொடர்ந்து நடக்கும் போராட்டத்திலும் பங்கு கொள்ள தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் அழைக்கிறது.

அமெரிக்க தூதரகம் தாக்கப்பட்டது, அனைத்து முஸ்லிம் இயக்கங்களின் கூட்டமைப்பு நடத்திய போராட்டத்தில் நடந்த அசம்பாவிதங்களால் முஸ்லிம்களின் போராட்டத்தை நாங்கள் இப்படித்தான் எதிர்கொள்வோம் என்று திமிராகப் பேசிய DC கிரி என்பவனையும் AC செந்தில் குமரன் என்பவனையும் பதவி நீக்கம் செய்யாமல் முஸ்லிம் சமுதாயம் ஓயாது என்பதை உணர்த்தி எதிர்காலத்தில் முஸ்லிம் சமுதாயத்தின் மீது இது போன்ற தாக்குதல் நடக்காமல் தடுத்திட அலைகடலென திரண்டுவருமாறு அழைக்கிறது தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்

December 23, 2012, 5:26 PM

தவிர்க்க வேண்டிய தீமைகள்

தவிர்க்க வேண்டிய தீமைகள்

 • விபச்சாரம் மது சூது வீடியோ மற்றும் ஆடியோ

 • வேண்டாம் வரதட்சணை (அதிராம்பட்டிணம்) வீடியோ மற்றும் ஆடியோ

 • வேண்டாம் வரதட்சணை (கோட்டகுப்பம்) வீடியோ மற்றும் ஆடியோ

 • வேண்டாம் வரதட்சணை (பண்டாரவாடை) வீடியோ மற்றும் ஆடியோ

 • வேண்டாம் வரதட்சணை (நெல்லிக்குப்பம்) வீடியோ மற்றும் ஆடியோ

 • வேண்டாம் வரதட்சணை (அம்மாபட்டிணம்) வீடியோ மற்றும் ஆடியோ

 • வட்டியும் வரதட்சணையும் வீடியோ மற்றும் ஆடியோ

 • புகை பிடித்தலும் போதைப் பொருள் பயன்படுத்துவதும் வீடியோ மற்றும் ஆடியோ

 • வட்டி ஓர் வன்கொடுமை வீடியோ மற்றும் ஆடியோ

May 17, 2010, 12:47 AM

பாபர் மஸ்ஜித் சதியும் சூழ்ச்சியும்

பாபர் மஸ்ஜித் சதியும் சூழ்ச்சியும்
6-12-2009 சென்னை சேப்பாக்கத்தில் நடை பெற்ற வரலாறு காணாத கூட்டத்தில் ஆற்றப்பட்ட உரை

December 9, 2009, 9:51 AM

மாற்றுக் கருத்துடையவர்களின் கேள்வி�

மாற்றுக் கருத்துடையவர்களின் கேள்விகள்

 • ஒன்றுபட்ட சமுதாயத்தை பிரிக்கலாமா
 • எடுத்தேன் கவிழ்த்தேன் என்று நடவடிக்கை ஏன்
 • தனிப்பள்ளி அவசியமா
 • தேர்தலில் போட்டி இடக் கூடாது என்றால் இட ஒதுக்கீடு கேட்பது ஏன்
 • மனிதச் சட்டங்களுக்குக் கட்டுப்படலாமா?
 • தேர்தலில் போட்டி இட்டால் தானே சமுதாயத்துக்கு குரல் கொடுக்க முடியும்
 • தமுமுகவை தேர்தலில் ஆதரித்திருக்கலாமே
 • விடியல் வெள்ளி கூட்டத்தை எதிர்ப்பது ஏன்

என்றெல்லாம் பல கேள்விகள் கேட்கப்படுகின்றன. நாம் எந்த முடிவை எடுப்பதாக இருந்தாலும் தக்க காரணத்துடன் தான் எடுத்து வருகிறோம் என்பதை தக்க ஆதாரத்துடன் அறிந்திட இங்கே கிளிக் செய்யவும்.

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

 

September 17, 2009, 12:02 AM

தமுமுக கேள்விகளும் பதில்களும்

தமுமுக கேள்விகளும் பதில்களும்

 • தமுமுகவில் இருந்து தவ்ஹீத் சகோதரர்கள் கூண்டோடு விலகிய பின் தமுமுக சார்பில் பலவிதமான அவதூறுப் பிரச்சாரங்கள் செய்யப்பட்டன.

 • பீஜே தமுமுக சொத்துக்களை எடுத்துக் கொண்டார்

 • உள்ளே இருந்து தான் போராடி இருக்க வேண்டும்

 • சமுதாயத்தை பிளவு படுத்தி விட்டீர்கள்

என்றெல்லாம் பல அவதூறுகள் வாய்மொழியாகவும், மின்னஞ்சல் வழியாகவும் பரப்பப்பட்டன. பீஜே துபை சென்ற போது அங்குள்ள சகோதரர்கள் தெளிவு பெறுவதற்காக நேரடி கேள்வி பதில் நிகழ்ச்சி நடத்தப்பட்டது. இயக்கம் தொடர்பான எந்தக் கேள்வி கேட்கவும் உரிமை வழங்கப்பட்டது. அப்போது கேட்கப்பட்ட கேள்விகளும் பதில்களும்

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ

September 16, 2009, 2:26 PM

தமுமுகவை விட்டும் விலகியது ஏன்?

தமுமுகவை விட்டும் விலகியது ஏன்?

தமுமுக இயக்கத்தை உருவாக்கி அதை வளர்த்தவர்கள் தவ்ஹீதுவாதிகள். தவ்ஹீதுவாதிகள் இயக்கத்தில் இருந்தால் பதவிகளைப் பெறவோ, தேர்தலில் போட்டியிடவோ கட்டப்பஞ்சாயத்து செய்யவோ இயலாது என்பதற்காக சதித்திட்டம் தீட்டி தவ்ஹீத் சகோதரர்கள் வெளியேறும் நிலையை ஏற்படுத்தினார்கள்.

ஆயினும் 2004ல் நடந்த இதன் உண்மை நிலவரம் பலருக்கும் தெரியாது என்பதாலும், இதில் பாடமும் படிப்பினையும் உள்ளதாலும் இது குறித்து நாம் 2004ல் வெளியிட்ட ஆறு சீடிகளை இங்கே வெளியிடுகிறோம்

பாகம்-1

 

ஆடியோ
பாகம்-2

 

 

ஆடியோ

பாகம்-3

 

 

ஆடியோ

பாகம்-4

 

 

 

 
 
 
 
 

September 16, 2009, 2:41 AM

திமுகவை ஆதரித்தது ஏன்

2009 தேர்தலில் திமுகவை ஆதரித்தது ஏன்? சமுதாயத்தின் பெயரால் தேர்தலில் போட்டியிட்ட தமுமுகவை எதிர்த்தது ஏன்
பாகம்-1
Play Without Downloading Download To your computer
 மொபைல் வீடியோ
ஆடியோ
பாகம்-2
Play Without Downloading Download To your computer
 
மொபைல் வீடியோ

ஆடியோ

September 12, 2009, 2:43 AM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top