ஜாகிர் நாயக்கின் அறியாமை

 ஜாகிர் நாயக்கின் அறியாமை

முஸ்லிமல்லாதவர்களுக்கு இஸ்லாத்தை அறிமுகப்படுத்தும் ஜாகிர் நாயக் அவர்கள் இஸ்லாத்தின் அடிப்படிகளுக்கு முரணானவைகளை இஸ்லாம் என்று சித்தரிப்பதை பல முறை நாம் எடுத்துக் காட்டியுள்ளோம்.

அது போல் ரவி சங்கருடன் நடந்த கலந்துரையாடலின் போது திருக்குர்ஆனுக்கு மாற்றமான கருத்தை இஸ்லாத்தின் கருத்து என்று கூறியுள்ளார்.

கருவறையில் உள்ள குழந்தை செவியுறுமா என்ற கேள்விக்கு அவர் பதில் அளிக்கும் போது 76:2 வசனத்தை ஆதாரமாகக் காட்டி கருவறையில் குழந்தை செவிமடுக்கும் என்று அவர் கூறுகிறார்.

இது குறித்து ஜகிர் நாயக்கின் மொழி மாற்றம் செய்யப்பட்ட உறையைக் கேளுங்கள்.
 
ஜாகிர் நாயக் பதில் டவுன்லோடு

إنا خلقنا الإنسان من نطفة أمشاج نبتليه فجعلناه سميعا بصيرا(2)إنا هديناه السبيل إما شاكرا وإما كفورا(3)

மனிதனைச் சோதிப்பதற்காக கலப்பு விந்துத் துளியிலிருந்து அவனை நாம் படைத்தோம். அவனைக் கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம். அவனுக்கு நாம் நேர்வழி காட்டி னோம். அவன் நன்றி செலுத்துபவனாகவோ, நன்றி கெட்டவனாகவோ இருக்கிறான்.

திருக்குர் ஆன் 76:2, 3

இந்த வசனங்கள் கருவரையில் குழந்தை செவி மடுக்கும் என்று கூறவில்லை. விந்துத் துளியாக இருந்தவனை கேட்பவனாகவும் பார்ப்பவனாகவும் ஆக்கினோம் என்பது கருவறை பற்றி பேசவில்லை. அதைத் தொடர்ந்து நேர்வழி காட்டினோம்; அவன் நன்றி செலுத்துபவனாக அல்லது நன்றி கெட்டவனாக இருக்கிறான் என்று கூறப்படுகிறது. கருவறையிலேயே நேர்வழி கெட்ட வழியை குழந்தை தேர்வு செய்கிறது என்று ஒருவர் கூறுவது எவ்வளவு அறியாமையோ அது போல் தான் கருவறையில் குழந்தை செவி மடுக்கும் என்பதும் அறியாமையாகும்.

இன்னும் சொல்லப் போனால் இதற்கு மாற்றமாக திருக்குர்ஆன் கூறுவதைக் கேளுங்கள்.

وَاللَّهُ أَخْرَجَكُمْ مِنْ بُطُونِ أُمَّهَاتِكُمْ لا تَعْلَمُونَ شَيْئاً وَجَعَلَ لَكُمُ السَّمْعَ وَالْأَبْصَارَ وَالْأَفْئِدَةَ لَعَلَّكُمْ تَشْكُرُونَ) (النحل:78)

நீங்கள் எதையும் அறியாதிருந்த நிலையில் உங்கள் அன்னையரின் வயிறுகளிலிருந்து அல்லாஹ் உங்களை வெளியேற்றினான். நீங்கள் நன்றி செலுத்துவதற்காக செவியையும், பார்வைகளையும், உள்ளங்களையும் உங்களுக்கு ஏற்படுத்தினான்.

திருக்குர்ஆன் 16:78

கருவில் இருந்து வெளிவரும் போது எதையும் அறியாத நிலையில் தான் குழந்தை வெளிவருகிறது எனற் வாசகம் ஜாகிர் நாயக்கின் கருத்தை அடியோடு நிராகரிக்கிறது.

அது மட்டுமின்றி தன்னை மருத்துவர் என்று கூறிக் கொண்டு தாயின் கருவறையில் குழந்தையின் காது கேட்கும் என்பதற்கு விஞ்ஞான முத்திரை குத்துகிறார்.

குழந்தை கருவறையில் இருந்து கொண்டு வெளியில் உள்ளதைக் கேட்கும் என்பது மடமையாகும். இதற்கு எநத அறிவியல் நிரூபணமும் இல்லை.

 

ஒரு வாதத்துக்காக கருவறையில் உள்ள செவிமடுக்கும் கேட்க என்று வைத்துக் கொண்டால் கூட கருவறை என்ற தடுப்பு வெளி உலகில் நடப்பதைக் கேட்க முடியாமல் தடுத்துவிடும் என்பதும் விஞ்ஞான உண்மை.

 

தாய் பாடல்களைக் கேட்டால் அதைக் குழந்தையும் கேட்கும் என்கிறார். அப்படியானால் இவர் மருத்துவத்தையும் ஒழுங்காகப் படிக்கவில்லை என்பது தெளிவாகிறது.
மேலும் கருவறையில் உள்ள குழந்தையைப் பாதுகாப்பதற்காக வெளியில் நடப்பவற்றால் குழந்தைக்கு பாதிப்பு ஏற்படாத வகையில் மூன்று திரைகளைப் போட்டுள்ளதாக அல்லாஹ் கூறுகிறான்.

உங்களை ஒரே ஒருவரிலிருந்து அவன் படைத்தான். பின்னர் அவரிலிருந்து அவரது ஜோடியைப் படைத்தான். கால்நடைகளில் (பலியிடத் தக்கதாக) எட்டு ஜோடிகளை உங்களுக் காக இறக்கினான். உங்கள் அன்னையரின் வயிறுகளில் ஒரு படைப்புக்குப் பின் இன்னொரு படைப்பாக மூன்று இருள்களில் உங்களைப் படைக்கிறான். அவனே அல்லாஹ். உங்கள் இறைவன். அவனுக்கே அதிகாரம் உள்ளது. அவனைத் தவிர வணக்கத்திற்குரியவன் வேறு யாருமில்லை. எங்கே நீங்கள் திசை திருப்பப்படுகின்றீர்கள்?
திருக்குர்ஆன் 39:6

ஆனால் கருவில் உள்ள குழந்தை தொலைக்காட்சி நிகழ்ச்சிகளைக் கேட்கும் என்று குர்ஆனுக்கு எதிராக இவர் வாதம் செய்கிறார்.

பெரிய மனிதன் கூட காற்றுப் புக முடியாத தடுப்புக்குள் இருந்தால் வெளியே நடப்பதைக் கேட்க முடியாது.

எனவே இவர் தக்க அறிவில்லாமல் அப்போதைக்கு சமாளிக்கும் வகையில் எதையாவது கூறி வருவது தெரிகிறது.

 

இதை இங்கே நாம் சுட்டிக்காட்ட காரணம் இதை பிற மத மக்களிடம் யாராவது சொல்லி தானும் மாட்டிக் கொண்டு இஸ்லாத்துக்கும் தவறான வடிவம் தந்து விடக் கூடாது என்பதற்காகவே.

இந்த ஆக்கத்தை ஆங்கிலத்தில் மொழி பெயர்த்து ஜாகிர் நாயக்குக்கு அனுப்பி அவரது விளக்கத்தை யாரேனும் பெற்று அனுப்பினால் அதையும் நாம் வெளியிடத் தயாராக இருக்கிறோம்.

(ஹூருல் ஈன் குறித்தும் அவர் தவறான கருத்தைக் கூறியதை முன்னர் நான் பார்த்துள்ளேன். அந்த ஆக்கம் (தமிழில்) வைத்திருப்பவர்கள் [email protected] mukavarikku அனுப்பினால் அது குறித்தும் விளக்கம் தரப்படும்.)ஆடியோவிவாதங்கள்ஜாகிர் நாயக்அறியாமைகுழந்தைகரு

Published on: April 14, 2010, 12:46 AM Views: 12835

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top