மனித நேய மக்கள் கட்சி இரண்டாக உடைந்துள்ளது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?

?கேள்வி:
தமுமுகவின் அரசியல் பிரிவான மனித நேய மக்கள் கட்சி இரண்டாக உடைந்துள்ளது குறித்து தவ்ஹீத் ஜமாஅத்தின் கருத்து என்ன?
-இப்ராஹீம், கடையநல்லூர்
!
இரண்டாக ஒரு அமைப்பு பிளவுபடுமானால் எதற்காக அந்தப் பிளவு ஏற்பட்டது என்பதைப் பொருத்து நாம் நிலைப்பாட்டை எடுக்க வேண்டும்.
 இந்து முன்னணி என்ற மதவெறிக் கட்சியில் இருந்து அர்ஜுன் சம்பத் என்பவர் விலகி இந்து மக்கள் கட்சி ஆரம்பித்தார். சங்பரிவாரத்தின் ஒரு பிரிவு பலவீனப்பட்டுள்ளது என்று நாம் இதை எடுத்துக் கொள்ள மாட்டோம். ஏனெனில் இந்து முன்னணியின் அதே கொள்கையைத்தான் இந்து மக்கள் கட்சியும் வைத்துள்ளது.

 இந்து முன்னணிக்கு தயானந்த சரஸ்வதி உள்ளிட்ட பணக்கார மடாலயங்களில் இருந்து கோடிக் கணக்கில் பணம் வருவதையும், அந்தப் பணத்தில் தனக்கு பங்கு தராமல் ராம கோபாலனே எடுத்துக் கொள்வதையும் அர்ஜுன் சம்பத் கவனித்தார். இவரை விட வீரியமாக நாம் செயல்பட்டுக் காட்டினால் அந்தப் பணத்தை நாம் பெற்றுக் கொள்ளலாமே என்று கருதி ராமகோபாலனை விட்டு விலகி இந்து மக்கள் கட்சி ஆரம்பித்தார்.

 சமீபத்தில் மரணித்த தயானந்த சரஸ்வதி என்ற மடாதிபதியின் ஆதரவுடன் இந்து முன்னணியை விட வீரியமாக முஸ்லிம் விரோதப் போக்கைக் கையில் எடுத்தார்.
 தயானந்த சரஸ்வதி நோய்வாய்ப் பட்டுக் கிடக்கும்போது அர்ஜுன் சம்பத் அவரைச் சந்திக்கிறார். அப்போது அவர் தயானந்த சரஸ்வதியிடம் பேசியதை வீடியோவாக எடுத்து அவருக்கு வேண்டப்படாதவர்கள் பரப்பி விட்டனர்.
 அந்த உரையாடலில்,
 கர் வாப்ஸி என்ற தாய் மதத்துக்கு மக்களை அழைக்கும் திட்டத்துக்கு நீங்கள் தாராளமாக உதவினீர்கள். இப்போதும் உதவிக் கொண்டு இருக்கிறீர்கள். கோவையில் எனக்கு அச்சுறுத்தல் உள்ளது சுவாமி. கோவையில் எனக்கொரு வீடு வாங்கித் தாருங்கள். கண்டிப்பா நீங்கள் செய்யனும் சாமி
என்று பேசுகிறார்.
 (அந்த வீடியோ தேவைப்படுவோர் வாட்சப் நம்பரை 9789030302 என்ற எண்ணுக்கு அனுப்பி பெற்றுக் கொள்ளலாம்)
 இந்து மதத்தில் தலித்துகள் ஒடுக்கப்படுகிறார்கள் என்பதை நன்றாக அறிந்துள்ள அர்ஜுன் சம்பத், தயானந்த சரஸ்வதி சுவாமியிடமிருந்து கொட்டப்படும் பணத்துக்காக முஸ்லிம் விரோதப் போக்கில் ராம கோபாலனையும் மிஞ்சினார்.
 இந்த வீடியோ வெளியான பின் அர்ஜுன் சம்பத்தை அவரது இயக்கத்தினரே காரித்துப்பும் நிலை ஏற்பட்டுள்ளது.
 கொள்கையில் எந்த மாற்றமும் இல்லாமல் அதே முஸ்லிம் விரோதக் கொள்கையை மக்களிடம் கொண்டு செல்ல நான் தகுதியானவனா? நீ தகுதியானவனா? என்ற போட்டிக்காக இந்து முன்னணி பிளவுபட்டதால் முஸ்லிம்கள் மகிழ்ச்சி அடைய இதில் ஒன்றும் இல்லை.
 பார்ப்பணர்கள் நாட்டின் அதிகாரத் தைக் கையில் எடுப்பதற்காக தலித்துகளாகிய எங்களைப் பயன்படுத்துகின்றனர். இதை நாங்கள் வெறுத்து விலகுகிறோம் என்று சொல்லி அதன்படி அர்ஜுன் சம்பத் செயல்பட்டால் அதை நாம் வரவேற்க முடியும்.
 மனித நேய மக்கள் கட்சியில் ஏற்பட்ட பிளவுக்கும் இந்து முன்னணி பிளவுக்கும் கடுகளவும் வித்தியாசம் இல்லை.
 இதன் தலைவர்கள் சுனாமியிலும், பித்ராவிலும் ஊழல் செய்துள்ளனர்; வக்பு சொத்தை பண முதலைகளுக்குத் தாரை வார்த்து பல கோடிகள் சுருட்டிக் கொண்டார்கள். பதவி ஆசை பிடித்து அலைகிறார்கள். பெரிய கட்சிகளிடம் கூனிக் குறுகி நிற்கிறார்கள். இராமேஸ்வரத்தைப் புனித நகராக ஆக்க வேண்டும் என்ற சங்பரிவாரின் கொள்கையைப் பேசுகிறார்கள். செத்தவனுக்கு நினைவு மண்டபம் எழுப்புகிறார்கள். இவற்றைக் கண்டித்து வெளியேறுகிறோம் என்று கூறி இந்தப் பிளவு ஏற்பட்டு இருந்தால் இது நன்மை பயக்குமா என்று நாம் கருத்துக் கூறலாம்.
 மேற்கண்ட அயோக்கியத்தனங்களை நீ செய்வதா? நான் செய்வதா? இதற்கான தகுதி உனக்கு உள்ளதா? எனக்கு உள்ளதா? என்பதற்குத்தான் இந்தப் பிளவு ஏற்பட்டுள்ளது. இரு தரப்பினரும் விடும் அறிக்கைகளே இதைத் தெளிவாக சொல்கின்றன. வா! பேச்சுவார்த்தை நடத்துவோம். சேர்ந்து கொள்வோம் என்று ஒருவருக்கொருவர் விட்டுக் கொள்ளும் மானம் கெட்ட அழைப்பின் அர்த்தம் இதுதான்.
 இதுவரை இணைந்து சமுதாயத் துக்குச் செய்த துரோகத்தை இனிமேல் பிரிந்து செய்யப் போகிறார்கள். இதில் நாம் என்ன கருத்தைச் சொல்வது?
 கொள்கைக்காகப் பிளவுபடுவதற்குச் சரியான உதாரணமாக தமுமுகவில் இருந்து தவ்ஹீத் சகோதரர்கள் விலகியதைக் குறிப்பிடலாம்.
 பீஜேயும் தமுமுகவில் இருந்த மற்ற ஆலிம்களும் தவ்ஹீத் பிரச்சாரம் செய்வதால் தமுமுக வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை ஏற்பட்டுள்ளது. சுன்னத் ஜமாஅத்தினர் நமது இயக்கத்துக்கு வருவதற்குத் தடையாக உள்ளது. நீங்கள் செய்யும் தவ்ஹீத் பிரசாரத்தைக் கைவிட வேண்டும் என்று மாநில நிர்வாகக் குழுவில் மூன்றில் இரு பங்கினர் பீஜேயிடம் கூறினார்கள்.
 தவ்ஹீத் பிரச்சாரத்தைக் கைவிட முடியாது. தவ்ஹீத் பிரச்சாரம்தான் முட்டுக்கட்டை என்று நீங்கள் கூறுவதை எழுதிக் கையெழுத்துப் போட்டுத் தந்தால் தமுமுகவில் இருந்து முற்றாக விலகிக் கொள்கிறேன் என்று பீஜே கூறினார். அவ்வாறு கையெழுத்தும் போட்டுத் தந்தார்கள். அந்த அறிக்கை இதுதான்:
 
 
 கொள்கைக்காக இந்தப் பிரிவு ஏற்பட்ட பின்னர் தமுமுகவின் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்; நாம் அமைப்பைக் கைப்பற்ற வேண்டும் என்று பல சகோதரர்கள் கூறினார்கள். அப்படி முடிவு செய்தால் அது எளிதானதாகவே இருந்திருக்கும். அன்றைய தமுமுகவில் பீஜேயை மதிப்பவர்கள் தான் அதிகம் இருந்தார்கள். ஆனால் பெரும்பான்மை என்ற அடிப்படையில் நாம் அந்த இயக்கத்தைக் கைப்பற்றினாலும் கொள்கையற்றவர்களும் அதில் இருப்பார்கள். சில நாட்களில் மீண்டும் இதே பிரச்சனையை எழுப்புவார்கள். அந்த இயக்கம் நமக்கு வேண்டாம். தவ்ஹீத் கொள்கைக்காகவே இயக்கம் காண்போம் என்று நாம் முடிவு செய்தோம்.
 எனவே தமுமுகவில் உள்ள தவ்ஹீத் சகோதரர்களைத் திருச்சியில் கூட்டினோம். அங்கும் பல ஆலோசணைகள் முன் வைக்கப்பட்டன.
 தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் பதிவு செய்யப்பட்ட இயக்கம் அல்ல. அதற்குப் பதிவு எண் கிடையாது. அதற்கு இன்று வரை பதிவு எண் வழங்கப்படவில்லை. எனவே யார் வேண்டுமானாலும் இப்பெயரைப் பயன்படுத்தலாம். தமுமுக என்ற பெயரில் நாமும் செயல்படுவோம் என்று சிலர் கூறினார்கள். அப்படிச் செய்திருந்தால் அதை யாராலும் தடுக்க முடியாது. நாங்கள்தான் உண்மையான தமுமுக என்று பிரச்சாரம் செய்து மக்களை வென்றெடுக்கலாம் என்று சிலர் ஆலோசணை கூறினார்கள்.
 இன்னும் சிலர் தமிழ் நாடு முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்பதற்குப் பதிலாக தமிழக முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று பெயர் வைத்துச் செயல்படுவோம் என்றனர்.
 இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற பெயரில் செயல்படுவோம் என்றும் சிலர் ஆலோசணை கூறினார்.
 தமுமுக, தடம் மாறி கேடுகெட்ட இயக்கமாக மாறிவிட்டதாக நாம் கருதும்போது அதே பெயரை அல்லது அதற்கு இணயான பெயரை வைக்க வேண்டாம். இப்படி மக்களைக் குழப்பத் தேவை இல்லை என விளக்கியதை மக்கள் ஏற்றுக் கொண்டனர்.
 (இந்திய முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்று வைத்து மக்களைக் குழப்ப வேண்டாம் என்று கூறியவர்களில் முக்கியமானவர் பாக்கர் ஆவார். ஆனால் அவரே தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரில் குழப்பம் விளைவிப்பதற்காக இந்திய தவ்ஹீத் ஜமாத் என்று இயக்கம் கட்டிக் கொண்டார்.)
 முஸ்லிம் முன்னேற்றக் கழகம் என்ற சொற்களில் ஒரு சொல் கூட இடம் பெறாமல், அது வேறு இது வேறு தெளிவாகக் காட்டும் செய்யும் வகையில்தான் பெயர் வைக்க வேண்டும் என்ற முடிவுக்கு வந்தோம்.
 தவ்ஹீத் பிரச்சாரம் செய்வது வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை என்ற காரணத்தைச் சொன்னதால் நாம் வெளியேறி உள்ளோம். எனவே தவ்ஹீத் என்ற பெயரில் செயல்பட்டு வளர்ச்சிக்கு முட்டுக்கட்டை அல்ல என்று நிரூபித்துக் காட்டுவோம் என முடிவு செய்து தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் என்ற பெயரைத் தேர்வு செய்தோம்.
 அல்லாஹ்வின் அருளால் தவ்ஹீத் என்ற பெயரில் சமுதாயப் பணிக்கு நாம் அழைத்த போதெல்லாம் மக்கள் கட்டுக்கடங்காமல் திரண்டனர்.
 கும்பகோணம், தஞ்சை, தீவுத்திடல், ராஜரத்தின  ஸ்டேடியம் என ஏராளமான மாநாடுகளை நாம் நடத்தினோம். தமுமுகவில் நாம் இணைந்து இருந்தபோது நடத்திய மாநாடுகளைவிட பல மடங்கு மக்கள் திரண்டனர். ஆனால் நாம் பிரிந்த பின்னர் இவர்களால் ஒரே ஒரு மாநில மாநாட்டைக் கூட நடத்த முடியவில்லை. 
 நீங்கள் போனபின் சுன்னத் ஜமாஅத் மக்கள் எங்கள் பின்னால் திரண்டு வருவதைப் பாருங்கள் என்று காட்டுவதற்காகக் கூட இவர்கள் எந்த மாநாட்டையும் நடத்திக் காட்ட முடியாத அளவுக்கு அல்லாஹ் இழிவைக் கொடுத்தான். தனித்துப் போட்டியிடுவதாகக் கூறி சில சில்லறை இயக்கங்களின் ஆதரவைப் பெற்று சுயேட்சைகள் அளவுக்குத் தான் வாக்குகளைப் பெற்றனர்.
 ஏற்கனவே கடுகாக சிறுத்துவிட்ட இவர்கள் இப்போது பாதிக் கடுகாக ஆகிவிட்டார்கள். அதனால் இருதரப்பினரின் கொள்கை பதவி வெறி ஆகியவற்றில் எந்த மாற்றமும் ஏற்படாது.

October 14, 2015, 6:08 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top