முரண்பாடுகள் தோன்றியது எப்படி?

முரண்பாடுகள் தோன்றியது எப்படி?

எம்.ஐ. சுலைமான்

1400 ஆண்டுகளுக்கு முன் இறுதித் தூதராக இவ்வுலகத்திற்கு வருகை தந்த நபி (ஸல்) அவர்கள், அன்றைய அரபுலகத்தில் இருந்த அறியாமை இருளை நீக்கி, இஸ்லாம் என்ற ஒளியை ஏற்றி வைத்தார்கள். இவ்வுலகத்தில் வாழும் அனைவரும் இறைவனின் வேதமான திருக்குர்ஆன் அடிப்படையிலும் தனது வழிமுறையின் அடிப்படையிலும் மட்டுமே வாழ வேண்டும் என்று கட்டளையிட்டு மனித வாழ்க்கைக்குத் தேவையான அனைத்து சட்டங்களின் அடிப்படைகளையும் விளக்கிச் சென்றார்கள்.

அவர்களின் இருபத்து மூன்று ஆண்டு கால நபித்துவ வாழ்க்கையில் இலட்சக்கணக்கான தொண்டர்களை, தோழர்களை உருவாக்கிச் சென்றார்கள். அந்த அன்புத் தோழர்களின் அறப் பணியால் இன்று உலகம் முழுவதும் இஸ்லாத்தை ஏற்றுக் கொண்ட முஸ்லிம்கள் பரவி உள்ளனர்.

இன்று உலகம் முழுவதும் முஸ்லிம்கள் இருந்தாலும் அனைவரும் ஒரே முறையில் அனைத்துக் காரியங்களையும் நிறைவேற்றுவதில்லை. ஒவ்வொருவரும் ஒவ்வொரு வகையில் வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொண்டு பல புதிய பெயர்களில் செயல்படுகின்றனர்.

இவ்வாறு பல பிரிவாகி ஒவ்வொரு பிரிவினரும் புதிய புதிய வணக்க வழிபாடுகளை அமைத்துக் கொள்ள நபி (ஸல்) அவர்கள் அனுமதியளித்துள்ளார்களா? அறவே இல்லையே! அப்படியானால் முஸ்-ம்களில் ஏராளமான பிரிவுகள் வந்ததன் காரணம் என்ன?

அல்லாஹ்வுக்கும், இத்தூதருக்கும் கட்டுப்படுங்கள்! இதனால் அருள் செய்யப்படுவீர்கள்.

(அல்குர்ஆன் 3:132)

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்படுவோரை சொர்க்கச் சோலைகளில் அவன் நுழையச் செய்வான். அவற்றின் கீழ்ப்பகுதியில் ஆறுகள் ஓடும். அதில் நிரந்தரமாக இருப்பார்கள். இதுவே மகத்தான வெற்றி.

அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்து அவனது வரம்புகளை மீறுபவனை நரகில் நுழையச் செய்வான். அதில் அவன் நிரந்தரமாக இருப்பான். அவனுக்கு இழிவு தரும் வேதனை உண்டு.

(அல்குர்ஆன் 4:13,14)

அவர்களிடையே தீர்ப்பு வழங்கு வதற்காக அல்லாஹ்விடமும், அவனது தூதரிடமும் அழைக்கப்படும் போது "செவியுற்றோம்; கட்டுப்பட்டோம்'' என்பதே நம்பிக்கை கொண்டோரின் கூற்றாக இருக்க வேண்டும். அவர்களே வெற்றி பெற்றோர். அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் கட்டுப்பட்டு, அல்லாஹ்வை அஞ்சி பயப்படுவோரே வெற்றி பெற்றோர்.

(அல்குர்ஆன் 24:51,52)

அல்லாஹ்வும், அவனது தூதரும் ஒரு காரியத்தை முடிவு செய்யும் போது நம்பிக்கை கொண்ட ஆணுக்கும், பெண்ணுக்கும் தமது அக்காரியத்தில் சுய விருப்பம் கொள்ளுதல் இல்லை. அல்லாஹ்வுக்கும், அவனது தூதருக்கும் மாறு செய்பவர் தெளிவாக வழி கெட்டு விட்டார்.

(அல்குர்ஆன் 33:36)

"என் சமுதாயத்தினர் அனைவரும் சொர்க்கம் செல்வார்கள். ஏற்க மறுத்தவரைத் தவிர'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள். "அல்லாஹ்வின் தூதரே! ஏற்க மறுத்தவர் யார்?'' என்று மக்கள் கேட்டார்கள். அதற்கு நபி (ஸல்) அவர்கள், "எனக்குக் கீழ்ப்படிந்தவர் சுவர்க்கம் புகுவார். எனக்கு மாறு செய்தவர் ஏற்க மறுத்தவர் ஆவார்'' என்று பதிலளித்தார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி),

நூல் : புகாரி (7280)

நம்முடைய அங்கீகாரம் இல்லாத ஒரு செயலை (மார்க்கக் கடமையெனக் கருதி) செய்தால் அது நிராகரிக்கப்படும் என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (3243)

"(மார்க்கத்தில்) புதிதாக உருவாக்கப்படும் ஒவ்வொன்றும் பித்அத் (நூதனப் பழக்கம்) ஆகும். ஒவ்வொரு பித்அத்தும் வழிகேடாகும். ஒவ்வொரு வழிகேடும் நரகத்தில் கொண்டு போய் சேர்க்கும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி),

நூல் : நஸயீ (1560)

இவ்வாறு திருமறைக் குர்ஆனும் நபிமொழிகளும் குர்ஆன் ஹதீஸை மட்டும் அடிப்படையாக வைத்து வாழ வேண்டும் என்று மிகத் தெளிவாகக் கட்டளையிடுகின்றன. ஆனால் மக்கள் இஷ்டப்படி தங்கள் மார்க்கக் கடமைகளைப் பலவிதமாக அமைத்துக் கொண்டு இவ்வாறு பல பிரிவுகளாக மாறியதற்குக் காரணம் என்ன?

இக்கேள்விக்குப் பவலவிதமான பதில்களைக் கூறலாம். அதில் முக்கியமான காரணம்,முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் மார்க்கத்தின் அளவுகோலாக எடுத்துக் கொண்டது தான்.

இவ்வாறு முன்னோர்களையும் ஊர்ப்பழக்கங்களையும் முன்மாதிரியாக எடுத்துக் கொள்வதால் இஸ்லாத்தில் பல பிரிவுகள் உண்டாயின. ஆனால் சில பிரிவினர் தாங்கள் செய்யும் காரியங்களுக்கு நபிமொழிகளையும் திருக்குர்ஆன் வசனங்களையும் ஆதாரம் காட்டுகின்றர்.

முரண்பட்ட கொள்கைகளுக்கும் மாறுபட்ட சட்டங்களுக்கும் நபிமொழிகளில் ஆதாரம் இருக்குமா? என்ற நியாயமான கேள்வி எழலாம். இருக்காது என்று நாம் கூறினாலும் மாறுபட்ட சட்டங்களுக்கு ஒவ்வொருவரும் சில நபிமொழிகளை ஆதாரம் காட்டத் தான் செய்கின்றனர். இப்படிப்பட்ட நிலை எதனால் ஏற்படுகின்றது? இதற்குப் பல காரணங்கள் உள்ளன.

நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் ஒரு சட்டத்தைக் கூறியிருப்பார்கள். பின்னர் நபி (ஸல்) அவர்களாலேயே அது மாற்றப்பட்டிருக்கும். இந்நிலையில் மாற்றப்பட்ட செய்தியை அறியாதவர் நபி (ஸல்) அவர்களின் முந்தைய காலச் சட்டத்தை அறிவிப்பார். சிலர் இதை மட்டும் வைத்து சட்டம் சொல்லி விடுவர்.

நபி (ஸல்) அவர்களிடம், "அல்லாஹ்வின் தூதரே! ஒருவர் தமது மனைவியிடம் உடலுறவு கொண்ட பின்னரும் இந்திரியம் வெளியாகாமல் இருந்தால் அவர் மீது குளிப்பு கடமையாகுமா?'' என்று கேட்டேன். அதற்கு "மனைவியிடமிருந்து பட்ட இடத்தைக் கழுவ வேண்டும். பின்னர் உளூச் செய்து தொழுது கொள்ளலாம்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : உபை பின் கஅப் (ரலி), 

நூல் : புகாரி (293)

உடலுறவு கொண்ட பின்னர் இந்திரியம் வெளியாகா விட்டால் குளிப்பு கடமை இல்லை என்பது நபி (ஸல்) அவர்கள் ஆரம்ப காலத்தில் இட்ட கட்டளையாகும். பின்னர் இச்சட்டத்தை நபி (ஸல்) அவர்கள் மாற்றி விட்டார்கள்.

"பெண்ணுறுப்பை ஆணுறுப்பு கடந்து விட்டால் குளிப்பு கடமையாகும்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (526), திர்மிதீ (102)

இந்த இரண்டு செய்திகளையும் கவனத்தில் கொள்ளாதவர்கள் ஆரம்ப காலச் சட்டத்தைக் கூறி அதற்குரிய சான்றை மட்டும் கூறுவதால் மாறுபட்ட சட்டத்திற்கு நபிமொழியில் ஆதாரம் இருப்பதைப் போன்று தோற்றம் ஏற்படுகின்றது.

இதைப் போன்று நெருப்பால் சமைக்கப்பட்ட உணவுகளைச் சாப்பிட்டவரின் உளூ முறியுமா? அல்லது முறியாதா? என்பதிலும் இரண்டு கருத்துக்கள் இரண்டு நபிமொழிகளை எடுத்துரைத்து ஆதாரம் காட்டுகின்றன.

"நெருப்பு தீண்டியவற்றில் உளூச் செய்யுங்கள்'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : முஸ்லிம் (527, 529), இப்னுமாஜா (478), அஹ்மத் (23439)

நபி (ஸல்) அவர்கள் வெளியே புறப்பட்ட போது நானும் அவர்களுடன் சென்றேன். அன்சாரிகளைச் சேர்ந்த ஒரு பெண்மணியின் இல்லத்தில் அவர்கள் நுழைந்தார்கள். அந்தப் பெண் நபி (ஸல்) அவர்களுக்காக ஓர் ஆட்டை அறுத்து விருந்து படைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்டார்கள். பேரீச்சம்பழங்கள் நிறைந்த தட்டு ஒன்றையும் அந்தப் பெண் வைத்தார். அதையும் சாப்பிட்டார்கள். பின்னர் லுஹர் தொழுகைக்காக உளூச் செய்து தொழுதார்கள். பின்பு (மீதமிருந்த) இறைச்சியில் சிறிதளவை அந்தப் பெண் வைத்தார். நபி (ஸல்) அவர்கள் அதைச் சாப்பிட்ட பின் உளூச் செய்யாமல் அஸர் தொழுதார்கள்.

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல்கள் : திர்மிதீ (75), அபூதாவூத் 163), அஹ்மத் (13931)

இந்த இரண்டு செய்திகளில் ஒருவர் ஒரு செய்தியையும் மற்றொருவர் இன்னொரு செய்தியையும் வைத்து சட்டம் சொல்லியுள்ளனர். ஆனால் பின்வரும் செய்தியை கவனிக்கத் தவறி விட்டனர்.

"இரண்டு விஷயங்களில் நெருப்பு தீண்டியவைகளில் உளூச் செய்யாமல் இருப்பது தான் நபி (ஸல்) அவர்களின் கடைசியான செயலாகும்''

அறிவிப்பவர் : ஜாபிர் (ரலி)

நூல்கள் : நஸயீ (185), இப்னு ஹுஸைமா (43), இப்னு ஹிப்பான் (1134)

ஒரே சட்டம் தொடர்பான சில ஹதீஸ்கள் ஆதாரப் பூர்வமானவையாகவும் சில ஹதீஸ்கள் பலவீனமானவையாகவும் இடம் பெற்றிருக்கும். சிலர் தமது மத்ஹபை நிலைநாட்ட பலவீனமான ஹதீஸ்களை ஆதாரமாக எடுத்துக் கொள்கின்றனர்.

ஸஹ்ல் பின் பைளா (ரலி) அவர்களுக்கு நபி (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில் தான் (ஜனாஸா) தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர் : ஆயிஷா (ரலி),

நூல் : முஸ்லிம் (1615)

"யார் பள்ளியில் மய்யித்திற்குத் தொழுவிப்பாரோ அவருக்கு எந்த ஒன்றும் கிடையாது'' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல்கள் : அபூதாவூத் (2776), இப்னுமாஜா (1506), அஹ்மத் (9353)

இந்த செய்தி பலவீனமானதாகும். இதில் இடம் பெற்றுள்ள ஸாலிஹ் என்பவர் பலவீனமானவர் என்று ஹதீஸ் கலை அறிஞர்களால் விமர்சிக்கப்பட்டவர்.

ஆதாரப்பூர்வமான செய்தியை எடுத்துக் கொள்ளாமல் பலவீனமான செய்திகளை எடுப்பதால் சட்டத்தில் இரு வேறுபட்ட வடிவங்கள் தெரிகின்றன.

திருக்குர்ஆன் நபிமொழியின் அடிப்படையில் தான் சட்டங்களை வகுக்க வேண்டுமென்ற நிலையிலிருந்து இறங்கி, நபித்தோழர்களின் கூற்றுக்களையும் ஏற்றுக் கொள்வதால் முரண்பட்ட சட்டங்கள் ஏற்படுகின்றன.

நபி(ஸல்) அவர்கள் காலத்திலும் அபூபக்ர் (ரலி) அவர்களின் ஆட்சிக் காலத்திலும் உமர் (ரலி) அவர்களின் முதல் இரண்டு ஆண்டு காலத்திலும் முத்தலாக் என்பது ஒரு தலாக்காகவே கருதப்பட்டு வந்தது. உமர் (ரலி) அவர்கள், "நிதானத்தைக் கடைப்பிடிக்க வேண்டிய ஒரு விஷயத்தில் மக்கள் அவசரப்படுகின்றனர். அவர்கள் மீது நாம் சட்டமாக்கி விட்டால் (என்ன செய்வார்கள்?)'' என்று கூறி சட்டமாக்கி விட்டார்கள்.

அறிவிப்பவர் : இப்னு அப்பாஸ் (ரலி),

நூல் : முஸ்லிம் (2689)

முத்தலாக் என்று கூறினால் அதை நபி (ஸல்) அவர்கள் ஒரு தலாக்காகவே எடுத்திருக்கின்றார்கள் என்று தெளிவாகக் கூறப்பட்ட பின்னர் சிலர், உமர் (ரலி) அவர்களின் சட்டத்தின் அடிப்படையில் முத்தலாக் என்று கூறினாலும் மூன்று தலாக்காகவே எடுக்கப்படும் என்று கூறுகின்றனர்.

நபித்தோழர்களும் மனிதர்கள் தாம். அவர்களிடமும் தவறுகள் ஏற்படும் என்பதைக் கவனிக்கத் தவறிவிட்டனர். ஆனால் நபி (ஸல்) அவர்களிடம் பாடம் பயின்ற நபித்தோழர்கள் இதைக் கவனித்து செயல்பட்டுள்ளனர்.

நான் உஸ்மான் (ரலி) உடனும், அலீ (ரலி) உடனும் ஹஜ் செய்துள்ளேன். உஸ்மான் (ரலி) அவர்கள் ஹஜ், உம்ரா இரண்டையும் சேர்த்து (கிரான்) செய்வதையும், உம்ரா முடித்து ஹஜ் (தமத்துஉ) செய்வதையும் தடுத்தார்கள். இதைக் கண்ட அலீ (ரலி) ஹஜ், உம்ரா இரண்டிற்கும் இஹ்ராம் அணிந்து, "லப்பைக்க பி உம்ரதின் வஹஜ்ஜதின்'' என்று கூறிவிட்டு, "நபி (ஸல்) அவர்களுடைய வழிமுறையை யாருடைய சொல்லிற்காகவும் நான் விட்டு விட மாட்டேன்''என்று கூறினார்கள்.

அறிவிப்பவர் : மர்வான் பின் ஹகம்,

நூல் : புகாரி (1563)

அன்றைய ஜனாதிபதியாக இருந்த உஸ்மான் (ரலி) அவர்கள், தமத்துஉ என்ற ஹஜ் செய்யக் கூடாது என்று கூறிய போது, "நபி (ஸல்) அவர்கள் செய்த செயலை எந்த மனிதரின் சொல்லிற்காகவும் விட மாட்டேன்' என்று கூறி நபி (ஸல்) அவர்களின் கூற்றே முதன்மையானது, பின்பற்ற ஏற்றது என்பதை அலீ (ரலி) தெளிவுபடுத்துகின்றார்கள்.

ஹஜ் மாதத்தில் உம்ராவை முடித்து இஹ்ராமைக் களைந்து ஹஜ்ஜுக்காக தனியாக இஹ்ராம் கட்டுவது பற்றி அப்துல்லாஹ் பின் உமர் (ரலி) இடம் ஷாம் நாட்டைச் சேர்ந்த மனிதர் கேட்டார். அதற்கு அவர், "அது அனுமதிக்கப்பட்டதே!'' என்று கூறினார். அதற்கு ஷாம் நாட்டைச் சேர்ந்த அம்மனிதர், "உங்கள் தந்தை (உமர்) அதைத் தடை செய்திருக்கின்றாரே!''என்று கூறினார்.

அதற்கு இப்னு உமர் (ரலி), "என் தந்தை ஒரு காரியத்தைத் தடுத்து அதை நபி (ஸல்) அவர்கள் செய்திருந்தால் அப்போது என் தந்தையின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?அல்லது நபி (ஸல்) அவர்களின் கட்டளையைப் பின்பற்ற வேண்டுமா?'' என்று கேட்டார். அதற்கு அம்மனிதர், "நபி (ஸல்) அவர்களின் கட்டளையைத் தான் பின்பற்ற வேண்டும்''என்றார். அப்போது இப்னு உமர் (ரலி), "நபி (ஸல்) அவர்கள் அவ்வாறு செய்துள்ளார்கள்''என்று விடையளித்தார்.

அறிவிப்பவர் : ஸாலிம்,

நூல் : திர்மிதீ (753)

அன்றைய ஜனாதிபதியும் தமது தந்தையுமான உமர் (ரலி) அவர்களின் கூற்றை இப்னு உமர் (ரலி) புறக்கணித்ததிலிருந்து நபித்தோழர்களின் கூற்று ஆதாரமாகாது என்பதை விளங்கிக் கொள்ள முடிகின்றது.

இது போன்ற காரணத்துக்காகத் தான் இஸ்லாமிய சட்டங்களில் மாறுபட்ட கருத்துக்களைக் காண்கின்றோம். இந்நிலையில் உண்மையில் நாம் பின்பற்ற வேண்டிய நபிமொழிகள் எவை?என்பதைத் தெளிவாக அறிவதற்காகத் தான் இந்தப் பகுதி ஆரம்பம் செய்யப்படுகின்றது.

இத்தொடரில் நம்மிடம் மாறுபட்ட கருத்துள்ள சட்டங்களின் ஹதீஸ்களை எடுத்துரைத்து அதில் சரியான கருத்து என்னவென்பதை இன்ஷா அல்லாஹ் தெளிவுபடுத்துவோம்.

மேலும் அந்த ஹதீஸ்களின் அரபி மூலத்தையும் வெளியிட்டு தெளிவு படுத்துவோம். இதனால் சரியான சட்டங்களை அறிந்து நாம் செயல்படுத்த மிக உதவியாக இருக்கும் என்று நம்புகின்றோம்.

(குறிப்பு: 2003 மார்ச் மாத ஏகத்துவம் இதழில் வெளிவந்த கட்டுரை)

December 14, 2014, 8:01 AM

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி!

ஹிஜ்ரா கமிட்டியின் வரட்டுக் கொள்கைக்கு மரண அடி!

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்...

வருடந்தோறும் நடக்கும் திருவிழாக்களின் போது கடை விரித்தால் வியாபாரம் போணி ஆகும் என்று மிட்டாய்கடைக்காரர் எண்ணுவது போல், ஹிஜ்ரா கமிட்டி என்கிற பெயரில் பிறை வியாபாரம் செய்யும் ஒரு கூட்டம், ஒவ்வொரு வருடமும் ரமலானுக்கும் துல் ஹஜ்ஜுக்குமிடையே தங்கள் "கடையை" விரித்து வாடிக்கையாளர்களைக் கவர முடியுமா என்று முயற்சி செய்து வருவது வழமையாகி வருகிறது.

தமிழ் பேசும் இஸ்லாமிய சமூகம், இவர்கள் கருதுவது போல் சிந்திக்காத கூட்டமாக இருந்திருந்தால் இவர்களது "வியாபாரமும்" போணி ஆகியிருக்கும் தான்.

ஆனால்,எந்த மார்க்க மசாயில்களையும் சுயசிந்தனை செய்து, ஆய்வுகளிலும் விவாதங்களிலும் ஈடுபட்டு, உள்ளச்சத்துடன் பின்பற்றுகின்ற சமூகமாக இந்தச் சமூகம் மாறிவிட்ட பிறகு, இது போன்ற "பகட்டு" வியாபாரங்களுக்கு இடமில்லாமல் போனது.

மார்க்க விஷயங்களில் நபி (ஸல்) அவர்களை முழுமையாகப் பின்பற்ற வேண்டும் என்பதை கொள்கையாகக் கொண்ட முஸ்லிம்கள் மத்தியில் பிறையைப் பார்த்து மாதங்களைத் தீர்மானிக்கும் செயலும் மார்க்க விஷயமே என்கிற கருத்து உள்ளத்தின் ஆழத்தில் பதிந்துள்ளது.

இந்த அடிப்படையை மக்கள் மனதிலிருந்து நீக்காமல் இது போன்ற குழப்பவாதி கூட்டங்கள் என்னதான் கணிப்பு, விஞ்ஞானம் என்று பேசினாலும், அடிப்படையை உள்ளத்தில் சரியாக அமர்த்திக் கொண்ட மக்கள் மத்தியில் அவை எந்த பாதிப்பையும் ஏற்படுத்தாது.
விவாதத்தில் இருந்து ஓடி ஒளியும் கூட்டம்

தர்காவாதிகள், தரீக்காவாதிகள், கிறித்தவர்கள், ஏன், காதியானிகள் கூட தங்கள் கொள்கைதான் சரியானது என்கிற குருட்டு நம்பிக்கையில் நம்முடன் நேருக்கு நேராக விவாதிக்க முன் வந்து விட்ட நிலையில் இந்த விஞ்ஞான பிறைக் கூட்டமானது அன்று முதல் இன்று வரை விவாதத்திற்கு முன்வராமல் ஓடி ஒளிவதிலேயே குறியாய் இருந்து வருகிறது.

இவர்களுக்கென்று எந்த ஒரு நிலையான கொள்கையும் ஒருகாலத்திலும் இருந்ததில்லை என்பதை இவர்களே உணர்ந்துள்ள காரணத்தால் இவர்களால் விவாதத்தில் பங்கு கொள்ள இயலாது.

விவாதங்கள் மூலம் மக்களைக் கவர வேண்டுமென்றால் சஹாபியை சஹாபி இல்லை என்று மறுப்பார்கள், ஹதீஸை ஹதீஸ் இல்லை என்று கூறி மறுப்பார்கள், எழுத்து மூலமான மின்னஞ்சல் விவாதத்தில் ஈடுபட்டுக் கொண்டே விவாதித்து தான் சத்தியத்தை அறிய வேண்டுமோ?? என்று கேள்வி எழுப்புவார்கள்.

இவ்வாறு, தங்களின் இருப்பைத் தக்க வைத்துக் கொள்வதற்காக எத்தகைய பொய்யையும் துணிந்து சொல்வார்கள் இந்த ஹிஜ்ரா கூட்டத்தார். மேலும் விவாத அழைப்புகளிலிருந்து ஓட்டமெடுப்பதும் இவர்களுக்கு வழக்கம்.

இவர்களின் வாதங்களுக்கு வரிக்கு வரி மறுப்பு சொல்வதற்கு முன்னால் இவர்கள் விவாத சவடால் விட்டு ஒட்டம் எடுத்த வரலாறை முதலில் முன்வைக்கிறோம்.

சர்வதேசப் பிறை என்று இவர்கள் உளறுவதை எதிர்த்து பல கேள்விகளை தவ்ஹீத் சகோதரர்கள் எழுப்பினார்கள்.

உங்கள் வாதம் அபத்தமானது. பொய்யானது ஆதாரமற்றது என்று நம் சகோதரர்கள் கேள்வியால் துளைத்த போது அதற்கான பதிலை அவர்களின் இணைய தளத்தில் தந்திருக்க வேண்டுமல்லவா?

ஒரு கேள்விக்கும் பதில் சொல்ல இயலாத இவர்கள் பின்வரும் பதிலைத் தந்தார்கள்.

கூடிய விரைவில் அனைத்து கருத்துகளையும் பரீசீலித்து அதன் பிறகு முழுமையான பதில் வெளியிடுவோம். இன்ஷாஅல்லாஹ். இப்படிக்கு தள நிர்வாகி July 15, 2010

இவர்கள் என்னதான் பரிசீலித்தாலும் தவ்ஹீத் சகோதரர்களின் கேள்விகளுக்கு இவர்களிடம் பதில் இல்லை என்பது தான் உண்மை. தவ்ஹீத் சகோதரர்களின் கேள்விகள் சரியாகத் தான் உள்ளன. நாங்கள் தான் உளறி விட்டோம் என்று எழுதினால் ஏதோ கொஞ்சமாவது இவர்களுக்கு இறையச்சம் உள்ளது என்பதற்கு அடையாளமாக அதை நாம் எடுத்துக் கொள்ளலாம்.

மக்களுக்கு பதில் சொல்லாமல் எப்படி தப்பிக்கலாம் என்று சிந்தித்துப் பார்த்து பின்வரும் பதிலை அளித்தனர்.

பி.ஜே விற்கு பகிரங்க விவாத அழைப்பு!

டி.என்.டி.ஜே யையும் ஜாக் மாநிலத் தலைவரையும், ஏர்வாடி ஜாக் ஒரு சேர பகிரங்க விவாதத்திற்கு அழைக்கிறது. நீலிக்கண்ணீர் வடிக்கும் பி.ஜே, ஜாக் தலைவரை அழைத்து பேசி, ஒரு சேர விவாதத்திற்கு வந்தால் நாங்கள் மேற்கண்ட இரு தலைப்பில் விவாதம் செய்யத்தயார்.

- ஹிஜ்ரா கமிட்டி - ஜூலை, 2010

தவ்ஹீத் சகோதரர்களின் கேள்விக்குப் பதில் சொல்லாமல் தப்பிக்க இது போதுமான காரணமாகுமா?

நீங்கள் பீஜேயுடன் விவாதம் நடத்தினால் எங்களுக்கு என்ன? நடத்தாவிட்டால் எங்களுக்கு என்ன? நாங்கள் கேட்ட ஆதாரங்களை எடுத்து வையுங்கள்! எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்லுங்கள் என்று மீண்டும் கிடுக்கிப்பிடி போட்டனர் தவ்ஹீத் சகோதரர்கள்.

இந்தக் கூறுகெட்டவர்கள் இதற்கு அளித்த பதில் என்ன? இதோ அந்தப் பதிலைப் பாருங்கள்!

பி.ஜேயும், எஸ்.கே யும் பதிலளித்தால் மட்டும் தான் அடுத்த கட்ட நடவடிக்கை என்ன என்பதை முடிவு செய்ய முடியும் என்பதை உங்களுக்கு மீண்டும் நினைவுபடுத்தி முடித்துக் கொள்கிறோம். எங்கள் இமெயில் முகவரி:admin@jaqh.net <mailto:admin@jaqh.net> (August 14 2010

ஜாக் என்பது தவ்ஹீத் ஜமாஅத்துக்கு எதிரான அமைப்பு. பீஜேக்கும் ஜாக்குக்கும் எந்த நட்பும் உறவும் இல்லை. ஆனால் ஹிஜ்ரா கமிட்டி என்பது ஜாக்கின் கள்ளக் குழந்தை. இவர்களை இந்த நிலைக்கு ஆளாக்கியதே ஜாக்கின் அறிவற்ற செயல்பாடுகள் தான்.

பிறை விஷயத்தில் கூட ஜாக்குக்கும் தவ்ஹீத் ஜமாஅத்துக்கும் முரண்பாடு உள்ளது. அப்படி இருக்கும் போது பீஜே போய் ஜாக் தலைவரை அழைத்துக் கொண்டு இவர்களுடன் விவாதிக்க அழைத்து வரவேண்டுமாம்! மூளையுள்ள ஒருவர் இப்படி ஒரு அறைகூவல் விட முடியுமா?

இவர்களின் விவாத அழைப்பு என்பதே ஓடி ஒளிவதற்காக கையாளும் தந்திரம் என்பதால் பீஜே ஆரம்பத்தில் இதைக் கண்டு கொள்ளவில்லை. இரண்டாவதாகவும் அதையே ஹிஜ்ரா கும்பல் கூறியதால் இவர்களை விவாதக் களத்தில் சிக்க வைக்க வேண்டும்; தப்பிக்க விடக்கூடாது என்பதற்காக பீஜெ தனது இணையதளத்தில் பின்வருமாறு அந்த அழைப்பை ஏற்றுக் கொண்டார்.
இந்த அறைகூவலுக்கு பீஜே பின்வருமாறு பதிலளித்து அழைப்பை ஏற்றுக் கொண்டார்.பிறை குறித்த அனைத்து அம்சங்களையும் உள்ளடக்கும் வகையில் இரு சாராரும் பேசி ஒப்பந்தம் செய்து அதனடிப்படையில் விவாதிக்கத் தயார் என்றால் அதைக் குறிப்பிட்டு தவ்ஹீத் ஜமாஅத் தலைமைக்கு கடிதம் எழுதி அனுப்பட்டும். மேலும் கருத்து வேறுபாடுள்ள அனைத்து பிரச்சனைகள் குறித்தும் விவாதிக்க தயார் என்றும் ஒப்புக் கொண்டு கடிதம் எழுதினால் தவ்ஹீத் ஜமாஅத் உடனே அதை ஏற்று ஒப்பந்தம் செய்வதற்கான நாளை அறிவிக்கும்.

மடமையைத் தான் நிபந்தனையாக்கியுள்ளனர். விவாதத்துக்கு அழைப்பதாகக் காட்டிக் கொள்ள வேண்டும்; ஆனால் ஓடி ஒளியும் வகையில் அந்த அழைப்பு இருக்க வேண்டும் என்று பாமரனும் புரிந்து கொள்ளக் கூடிய வகையில் விவாத அழைப்பு இருந்ததால் தான் இதை நாம் கண்டு கொள்ளவில்லை. கீழ்க்கண்டவாறு அவர்கள் தெளிவு பட எழுதி கடிதம் எழுதினால் உடனே விவாத ஒப்பந்தத்துக்கான ஏற்பாடுகளைச் செய்வோம். எங்களுக்கும் உங்களுக்கும் இடையே முரண்பாடாகவுள்ள பிறை தொடர்பான அனைத்து விஷயங்கள் குறித்தும் மேலும் நமக்கிடையே கருத்து வேறுபாடுள்ள பாரதூரமான அனைத்து விஷயங்கள் குறித்தும் விவாதிக்க நாங்கள் தயார். மேற்கண்டவாறு எழுதி விவாதக் குழுத் தலைவர், தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத், 30 அரண்மனைக்காரன் தெரு, மண்ணடி சென்னை-1 என்ற முகவரிக்கு கடிதம் மூலம் எழுதி விவாதத்துக்கு சவடால் விடுவதை மெய்யாக்கட்டும்

அன்புடன் பீ.ஜைனுல் ஆபிதீன் September 20 , 2010

செப்டம்பர் 2010ல் விவாத அழைப்பை பீஜே ஏற்று ஆண்டுகள் கடந்த பின்னரும் இன்று வரை கடிதம் வரவில்லை. மாறாக அந்தர்பல்டி தான் இதற்குப் பதிலாக வந்தது.

இப்படி பீஜே எழுதியதும் இவர்களின் இணையதளத்துக்கு மக்கள் கேள்விக்கு மேல் கேள்விகளைக் கேட்கலானார்கள்.

நீங்கள் விட்ட விவாத அழைப்பை பீஜே ஏற்றுக் கொண்டாரே? எப்போது கடிதம் அனுப்பி விவாதத்தை நடத்தப் போகிறீர்கள்? என்று அவர்களது ஆதரவாளர்களே அவர்களது இணையதளத்தில் "எப்போ விவாதம்? எப்போ விவாதம்? என இவர்களை நச்சரித்து இவர்களைத் திக்கு முக்காடச் செய்தனர்.

இதற்கு அவர்கள் அவ்வப்போது பதில் அளித்தனர். செப்டம்பர் 20 அன்று அளித்த பதில் இதுதான்:

உங்கள் முயற்சிக்கு நன்றி சகோதரரே. இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் பதில் வெளியாகும். மற்றவை பின் adminjaqh.net <http://jaqh.net/> September 20 2010

கடிதம் எழுத ஏன் தயக்கம்? உடனே பீஜேக்கு கடிதம் எழுதி விவாத அறைகூவலை உண்மைப்படுத்த வேண்டியதுதானே என்று மீண்டும் மக்கள் நச்சரிக்க ஆரம்பித்தனர்.

இதற்கு செப்டம்பர் 22 அன்று அளித்த பதில் இதுதான்

இன்ஷாஅல்லாஹ் விரைவில் பதில் எழுதுவோம். பொறுமையாளர்களுடன் அல்லாஹ் இருக்கிறான் என்பதை நினைவுபடுத்தி கொள்கிறேன். இப்படிக்கு நிர்வாகி September 22 2010

மீண்டும் அதே நாளில் மற்றொரு பதிலையும் போட்டனர்

இந்த பதிலில் இவர்களின் ஆதரவாளர்களே திருப்தி அடையாததால் நீண்ட நாள் தள்ளிப்போட்டால் மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்து செப்டம்பர் 23 அன்று பின்வரும் பதிலைத் தந்தனர்.

பகிரங்க விவாதம் என்பதால் அனைவரின் கருத்துகளையும் பெற்று பரீசீலிக்க வேண்டியது அவசியம் தானே? நாங்கள் ஹஜ் பிரயாணம் மேற்கொள்ள இருப்பதால் ஹஜ்ஜிற்கு பிறகு தான் எங்களால் இன்ஷாஅல்லாஹ் இதில் முழு கவனம் செலுத்த முடியும் என்பதையும் தாங்களின் மேலான கவனத்திற்கு தருகிறேன். எனவே தாங்கள் பொறுத்திருந்து கவனியுங்கள். இன்ஷாஅல்லாஹ் கூடிய விரைவில் எங்கள் பதில் வெளிவரும். இப்படிக்கு தள நிர்வாகி September 23 2010

ஹஜ் பயணம் என்ற காரணத்துக்கும் கடிதம் போடுவதற்கும் எந்தவொரு சம்மந்தமும் இல்லை. விவாதத்துக்கு வருகிறோம்; ஆனால் ஹஜ் முடிந்த பின்னர் இந்த தேதிக்கு வருகிறோம் என்று பதில் எழுதலாம். அல்லது உடனே கடிதம் எழுதிவிட்டு உடனே ஒப்பந்தம் போட்டு விவாதத்தை ஹஜ்ஜுக்குப் பின் நடத்துவதாக ஒப்பந்தம் செய்ய முடியும். ஓடி ஒளிவது தான் நோக்கம் என்பதால் ஹஜ்ஜின் மீது பழிபோட்டு தற்காலிகமாக நிம்மதிப் பெருமூச்சு விட்டனர்.

ஹஜ் வேலைகள் எல்லாம் முடிந்தவுடன் இதை மக்கள் மறந்து விடுவார்கள் என்று நினைத்தனர். ஆனால் மக்கள் மீண்டும் நெருக்கடி கொடுக்கலானார்கள்.

2011 ஜனவரி 22 அன்று இதற்கு அளித்த பதிலைப் பாருங்கள்

விவாதம் அல்லாஹ் நாடினால் கூடிய விரைவில் நடைபெறும். அதற்கான வேலைகள் நடைபெற்று வருகிறது என்பதை தெரியப்படுத்திக் கொள்கின்றேன். இப்படிக்கு நிர்வாகி January 22 , 2011

கடிதம் அனுப்புவோம்; இதோ அனுப்பப்போகிறோம். வேலை நடக்கிறது; ஹஜ் முடிந்ததும் அனுப்பி விடுவோம் என்றெல்லாம் எழுதி வந்தவர்கள் கடைசியாக எழுதிய ஒரு பதிலே இவர்களின் அயோக்கியத்தனத்தை முழுமையாக அம்பலமாக்கியது.

நேரடி விவாத்திற்கு எங்களால் வர இயலாது. நாங்கள் தெரியாமல் பி.ஜேவை நேரடி விவாதத்திற்கு அழைத்து விட்டோம் என பகிரங்கமாக இதன் மூலம் அறிவித்து விடுகின்றோம்

Hijra Committee (Yervadi) - 29 March, 2011

இந்த அறிவீனர்களை - பொய்யையும் புரட்டையும் துணிந்து சொல்லக் கூடியவர்களை அந்தர் பல்டி அடிக்கக் கூடியவர்களை மார்க்க விஷயத்தில் எந்த அளவுக்கு நம்பலாம் என்பதை முடிவு செய்து கொள்ளுங்கள்.

இவர்களிடம் இணையதளத்தில் கேள்வி கேட்டால் நேரடி விவாதத்தில் பார்த்துக் கொள்வோம் என்பார்கள். நேரடி விவாதத்து அழைத்தால் மின்னஞ்சல் மூலம் விவாதிப்போம் என்பார்கள். இப்படி ஒரு கேடு கெட்ட கும்பலை 72 கூட்டங்களில் எந்தக் கூட்டத்திலாவது நீங்கள் பார்த்திருக்க முடியுமா?

சிறிது காலம் அமைதியாய் கழித்து பின் மக்களின் ஞாபகமறதி மீது அபார நம்பிக்கை கொண்டு, ஆங்காங்கே நோட்டீஸ் வெளியீடு, கருத்தரங்கம் என தங்களது வழக்கமான வியாபாரத்தை மீண்டும் ஆரம்பித்துள்ளனர்.

அந்த வரிசையில், சமீபத்தில் பிறை குறித்த ஆக்கம் என்கிற பெயரில் நம்மை வசை பாடி ஏர்வாடியில் இவர்கள் பரப்பி வந்த நோட்டீஸ் நம் கைகளை எட்டியது.

என்னதான் தாம் கேட்ட கேள்விகளுக்கு எதிர்த் தரப்பினர் தக்க பதில்களைச் சொன்னாலும், புதிதாக வேறு கேள்விகளைக் கேட்பதற்கு ஞானமில்லாத காரணத்தால் பதில் சொல்லப்பட்ட கேள்விகளையே மீண்டும் மீண்டும் கேட்டு வருவது சிலரைப் பீடித்திருக்கும் நோய்.

அத்தகைய நோய் தான் இந்த ஹிஜ்ரா கமிட்டியினரையும் தாக்கியுள்ளது என்பதை இவர்கள் பரப்பி வரும் நோட்டீசைப் படித்தாலே அறிந்து கொள்ளலாம்.

ஒரே கேள்வியை மீண்டும் மீண்டும் கேட்டு வருவது, அந்தக் கேள்விகளுக்கு பதில் சொல்லப்படவில்லை என்பதால் அல்ல, மாறாக அந்தக் கேள்விகள் தான் இவர்களுக்குத் தெரியும் என்பதால்.

பகிரங்க அறைகூவல் :

இவர்களது இந்த நோட்டீஸ் உட்பட, இத்தனை வருடங்களாக இவர்களுக்கும் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத்திற்கும் இடையே நிலவி வரும் எல்லா கருத்து வேறுபாடுகள் குறித்தும் தெளிவான தீர்வைக் காண தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் இவர்களை நேரடி விவாதத்திற்கு முன் வருமாறு இந்த பிரசுரம் மூலமாக பகிரங்கமாக அழைப்பு விடுக்கிறது.

எழுத்து விவாதம் என்கிற அறிவுக்குப் பொருத்தமில்லா வாதங்களை நிறுத்தி, ஒரே சபையில் நேருக்கு நேராக சந்திக்கும் திராணியை இவர்கள் பெற்றிருந்தால் இந்த அழைப்பை ஏற்கட்டும்.

இந்த பகிரங்க அறைகூவலை எங்களது அடிப்படை பதிலாய் இவர்களுக்கு கூறிக்கொண்டு, இவர்களது மதிகெட்ட நோட்டீஸ் குறித்த விளக்கத்திற்கு அடுத்துச் செல்கிறோம்.

மடமைவாதம் ஒன்று

இவர்களது மறுப்புரையின் துவக்கத்திலேயே மதி கெட்ட கேள்வி ஒன்றைக் கேட்டு அனைவரையும் வியப்பில் (?) ஆழ்த்தியுள்ளனர்.

அதாவது, சுன்னத் (?) ஜமாஅத் போன்ற மற்ற மற்ற இயக்கங்களை உங்கள் மேடைகளில் ஏற்ற மாட்டீர்கள், அவர்களுடன் சேர்ந்து சமுதாயப் பிரச்சனைகளுக்காக போராட மாட்டீர்கள், ஆனால் அவர்கள் பெருநாள் கொண்டாடும் தினத்தில் அவர்களுடன் சேர்ந்து கொண்டாடுவீர்களோ? இது முரண்பாடில்லையா?

என்பது தான் அந்த அசத்தல் கேள்வி.

நமது பதில்

சுன்னத் (?) ஜமாஅத்தினர் ஒரு தினத்தில் ஒன்றைச் செய்தால் அதே தினத்தில் நாமும் அதையே செய்வது இவர்கள் பார்வையில் ஒரே மேடையில் இணைந்து போராட்டங்களைச் சந்திப்பது போன்றதாம்.

சுன்னத் (?) ஜமாஅத்தினர் காலையில் எழுந்ததும் பல் விளக்குவார்கள், தவ்ஹீத் ஜமாஅத்தினரும் பல் விளக்குகிறார்கள்..

ஒரே மேடையில் இணைந்து போராட்டங்களைச் சந்திக்க மாட்டார்களாம், ஆனால் அவர்கள் பல் விளக்கும் அதே நாளில் இவர்கள் பல் மட்டும் விளக்குவார்களோ??

இந்த முரண்பாட்டை தவ்ஹீத் ஜமாஅத்தினர் விளக்குவார்களா? என்று அடுத்து இந்த கூறு கெட்டவர்கள் அறிக்கை விட்டாலும் விடுவார்கள் போல..

இதற்கு நாம் கூடுதல் விளக்கம் எதையும் சொல்லத் தேவையில்லை.

சுன்னத் ஜமாஅத்தினர் ஐந்து வேளை தொழுவது போல் நீங்களும் தொழுகிறீர்களே என்பது போன்ற அறிவுப்பூர்வமான கேள்விகளை கேட்டாலும் கேட்பார்கள்.
மடமை வாதம் இரண்டு

தொடர்ந்து இவர்களது மற்றுமொரு உளறலை பாருங்கள்.

அதாவது, சுன்னத் (?) ஜமாஅத்தினருடன் நாம் ஒரே தினத்தில் பெருநாள் கொண்டாடுவதே தொழுகையின் போது நம் திடலில் அவர்களும் கலந்து கொண்டு அதன் மூலம் அதிகக் கூட்டம் வர வேண்டும் என்பதால் தானாம்.

நமது பதில்

இவர்களுக்கு மார்க்கமும் தெரியவில்லை. உலகத்தில் தங்களைச் சுற்றி என்ன நடக்கிறது என்கிற விபரமும் இல்லை என்பதற்கு இவர்களது இத்தகைய கூன் விழுந்த வாதமே சான்று.

சுன்னத் (?) ஜமாத்தினர் எவரும் திடலில் தொழுகை நடத்த வேண்டும் என்பதில் உறுதியான நிலைபாட்டைக் கொண்டவர்கள் கிடையாது. எந்தப் பெருநாட்களிலும் பெருவாரியான ஜமாத்தார்கள் அவரவர்களுக்கு இருக்கும் பள்ளிவாசல்களில் தான் பெருநாள் தொழுகை நடத்துகின்றனர்.

நபி வழியைப் பேண வேண்டும் என்கிற கொள்கை கொண்ட தவ்ஹீத் ஜமாஅத் தான் ஒவ்வொரு வருடமும் தொழுகைக்காக திடல் ஏற்பாடு செய்வதற்கு அதிகப் பிரயத்தனம் எடுக்கிறார்கள். அவ்வாறு ஏற்பாடு செய்யப்படும் திடலில் வந்து குழுமும் முஸ்லிம்கள் அனைவரும் ஏகத்துவ கொள்கையுடையவர்கள் தானே தவிர, சுன்னத் (?) ஜமாஅத்தினர் கிடையாது.

கூட்டத்தைக் காட்டுவதற்காகத் தான் நாம் இவ்வாறு அவர்கள் பெருநாள் கொண்டாடும் தினத்தில் கொண்டாடுகிறோம் என்று இவர்கள் கூறியிருப்பதன் மூலம், இது நாள் வரை இவர்களது உள்ளத்தில் ஒளிந்திருந்த கெட்ட எண்ணமொன்று இவர்களையும் அறியாமல் வெளியே தலை காட்டியுள்ளது.

ஹிஜ்ரி என்றும், காலண்டர் என்றும், விஞ்ஞானம் என்றும் அமாவாசை என்றும் மக்களிடையே குழப்பம் விளைவித்து, ஒட்டு மொத்த சமுதாயம் அனுசரிக்கும் நாளுக்கு ஒரு நாள் முன்னதாக இவர்கள் மாதங்களைத் துவங்குவதன் நோக்கமெல்லாம் குர்ஆன் ஹதீஸ் இல்லை, மாறாக, நாங்களும் இருக்கிறோம், எங்களுக்கு என்று இயக்கம் இருக்கிறது, லெட்டர் பேடெல்லாம் உள்ளது, எங்களுடன் தனியாகத் தொழுவதற்கும் கூட்டம் சேரும் என்பதைச் சமுதாயத்திற்குக் காட்ட வேண்டும். அது தான் நோக்கம் என்பது இவர்கள் நம்மை நோக்கி வைத்த விமர்சனத்தின் மூலம் நிரூபணம் ஆகிறது - பூனைக்குட்டி வெளியே வந்து விட்டது !

அதோடு மட்டுமல்லாமல் பிறை விஷயத்தில் தவ்ஹீத் ஜமாஅத்தின் நிலைப்பாடுதான் சரி என்பதை ஆய்வு செய்து உணர்ந்த மக்கள் வெள்ளத்தை திடலில் வந்து பெருநாள் தொழுகை தொழும் கூட்டத்தைக் கண்டு இவர்களது வயிற்றெரிச்சல் அதிகமாகியுள்ளது என்பதும் இதன் மூலம் வெளிப்பட்டுவிட்டது.

அவர்களோடு இணைந்து பெருநாள் கொண்டாடுவது கூட்டம் காட்டுவதற்காகத்தான் என்பது உண்மையாக இருக்குமேயானால் சில வருடங்களுக்கு முன்பாக டவுன் ஹாஜி குல்பர்காவிலும், மாலேகானிலும் பிறை பார்த்ததாக தகவல் சொன்ன போது தமிழகத்திற்கு உட்பட்ட பகுதிகளிலிருந்து அதாவது தத்தமது பகுதியிலிருந்து பிறை பார்க்கப்பட்டால்தான் அதை ஏற்றுக்கொள்வோம் என்று கூறி உறுதியாக நின்று தவ்ஹீத் ஜமாஅத் சகோதரர்கள் ஹஜ்ஜுப்பெருநாளை கொண்டாடினார்களா? இல்லையா?

இது இந்த மூளை வெந்த கூட்டத்திற்கு தெரியுமா? தெரியாதா? இந்த நிகழ்வே இவர்கள் பொய்யர்கள் என்பதை உண்மைப்படுத்திவிட்டது.
மடமைவாதம் மூன்று

ருஃயத் என்றால் என்ன ?

தங்களது வலுவான வாதமாக இவர்கள் முதலில் எடுத்து வைத்திருப்பது ருஃயத் என்கிற வார்த்தை குறித்த சில தகிடுதத்தங்கள்.

பிறை பார்த்து நோன்பு வையுங்கள், பிறை பார்த்து நோன்பை விடுங்கள் என்பதாக வரக்கூடிய ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது.

இந்த வார்த்தைக்கு நாம் கொடுப்பது போன்று "பார்த்தல்" என்கிற அர்த்தம் கொடுக்க கூடாது என்றும் அதற்கு சிந்தித்தல் என்கிற அர்த்தம் தான் கொடுக்க வேண்டும் எனவும், குர்ஆனிலும் பல இடங்களில் அந்த அர்த்தத்தில்தான் ருஃயத் என்கிற வார்த்தை பொருள் செய்யப்பட்டுள்ளது எனவும் கூறி, தவ்ஹீத் ஜமாஅத் தமிழாக்கத்திலும், மொழியறிவிலும் மிகப்பெரிய தவறை செய்துள்ளது என்பது போன்ற தோற்றத்தை ஏற்படுத்தியுள்ளனர்.
நமது பதில் மூன்று

உண்மையில் யார் மிகப்பெரிய தவறைச் செய்கிறார்? யாருக்கு மொழியறிவும் இலக்கண அறிவும், குர்ஆன் பற்றிய ஞானமும் இல்லை? என்பதற்கான சான்றுகளை

தொடர்ந்து படியுங்கள்.

குர்ஆனிலோ ஹதீஸிலோ ஒரு வார்த்தை என்ன அர்த்தத்தில் பயன்படுத்தப்பட்டுள்ளதோ அந்த அர்த்தத்தை வைத்து நமது நிலைபாட்டினை அமைத்துக் கொள்வது தான் புத்திசாலித்தனம்.

ஆனால், இந்த பிறை வியாபாரிகளின் கொள்கையானது, நிலைபாட்டினை முதலில் எடுத்து விட்டு, அதன் பிறகு அந்த நிலைபாட்டிற்கு ஏற்றார் போல குர்ஆன் ஹதீஸ் வசனங்களுக்கு பொருள் கொடுக்க முடியுமா? எனச் சிந்திப்பார்கள்.

இதை நாம் காரண காரியங்களுடனேயே சொல்கிறோம் என்பதை இவ்வாக்கத்தைப் படிப்பவர்கள் புரிந்து கொள்வார்கள்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள் என்கிற ஹதீஸில் வரக்கூடிய ருஃயத் என்கிற வார்த்தைக்கு கண்ணால் பார்த்தல் என்கிற அர்த்தத்தை நாம் கொடுக்கிறோம்.

இதை விமர்சித்துள்ள இந்தக் கூட்டம், தங்களை அறிவாளிகள் என்று காட்டிக் கொள்ள முயற்சித்து, ருஃயத் என்பதற்கு பார்த்தல் என்கிற அர்த்தம் மட்டும் கிடையாது; அறிவால் அறிதல், புரிந்து கொள்ளுதல் எனப் பல அர்த்தங்கள் உள்ளன; அகராதிப்படியும் உள்ளன; குர்ஆனிலேயே கூட ஏராளமான வசனங்களில் அறிதல் என்கிற பொருளில் இந்த வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது என்று கூறி, பிறை பார்த்து முடிவு செய்யுங்கள் என்றால் கண்ணால்தான் பார்க்க வேண்டும் என்ற அர்த்தமில்லை, அறிவால் சிந்தித்து புரிந்து கொள்வதைத் தான் குறிக்கும் என்று வியாக்கியானம் கொடுக்கின்றனர்.

இந்த வியாக்கியானம் புதிதல்ல. பல வருடங்களுக்கு முன்பும் இதே வறட்டு வாதத்தை இவர்கள் வைத்து, அதிலுள்ள அபத்தங்களுக்கு தெளிவான முறையில் நம்மால் விளக்கமும் கொடுக்கப்பட்டன.

ஆனால் வேடிக்கை, அன்று ருஃயத் என்கிற வார்த்தைக்கு சிந்தித்து அறிதல் என்று பொருள் செய்ய வேண்டும் என்பதை நிலைநாட்ட அவர்கள் வேறொரு வாதத்தை வைத்திருந்தார்கள்!

அதாவது பார்த்தல் என்கிற வார்த்தையுடன் (ருஃயத்) "கண்ணால்" என்கிற சொல் (ஐன்) என்பது சேர வேண்டும், அப்படிச் சேர்ந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று பொருள் வரும். வெறுமனே ருஃயத் என்றால் சிந்தித்தல் என்று தான் அர்த்தம் வைக்க வேண்டும் என்பது தான் அன்றைக்கு இவர்களது வாதமாக இருந்தது.

இந்த மடமைத் தனத்திற்கு அன்றைக்கே கீழ்கண்டவாறு மறுப்பு கொடுக்கப்பட்டது.

இவர்களின் மதியீனத்தைக் காட்டும் வகையில் ரஃயல் ஐன் என்ற வார்த்தை வந்தால் தான் புறக்கண்ணால் பார்த்ததாக அர்த்தம் வருமாம். அதாவது ரஃய் என்றால் பார்த்தல் என்பது பொருள். ஐன் என்றால் கண் என்பது பொருள். பார்த்தல் என்பதுடன் கண்னைச் சேர்த்து கண்ணால் பார்த்தல் என்று ஆதாரம் உண்டா எனக் கேட்கின்றனர்.

சாப்பிட வேண்டும் என்றாலும் வாயால் சாப்பிட வேண்டும் என்றாலும் ஒரே அர்த்தம் தான். அது போல் பார்த்தல் என்றாலும் கண்ணால் பார்த்தல் என்றாலும் ஒரே அர்த்தம் தான்.

ஆனால் எந்த மொழியாக இருந்தாலும் பார்த்தல் என்பதற்கு கண்ணால் பார்த்தல் என்றுதான் பொருள் செய்ய வேண்டும். அந்த அர்த்தம் பொருந்தாத இடத்தில் மட்டும் தான் வேறு பொருத்தமான அர்த்தம் செய்ய வேண்டும் என்ற அடிப்படை அறிவு கூட இல்லாமல் ரஃயல் ஐன் என்ற வார்த்தை இருந்தால் தான் கண்ணால் பார்த்தல் என்று அர்த்தம் செய்வார்களாம்.

அல்லாஹவைக் காட்டு என்று மூஸா நபி சமுதாயம் கேட்ட போது வெறும் ரஃய் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. கண்ணுக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா? கருத்துக்குக் காட்டு என்று அர்த்தம் செய்வார்களா?

இது போல் நூற்றுக் கணக்கான வசனங்களில் ஐன் என்ற வார்த்தை சேராமல் தான் ரஃய் என்பது பயன்படுத்தப்பட்டுள்ளது. அதனால் அதற்கு கண்களால் பார்த்தல் என்று பொருள் இல்லை என்று சொல்வார்களா?

இந்த கேள்விக்கு விடை சொல்ல இயலாத இந்தக் கூட்டம், மீண்டும் அதே ருஃயத் என்பதை எடுத்துக் கொண்டு, வேறு என்ன வகையில் வியாக்கியானம் கொடுப்பது என்று இத்தனை வருடங்கள் தலையைப் பிய்த்து மேலே நாம் சுட்டிக்காட்டிய இந்த வாதத்தைக் கண்டுபிடித்துள்ளது.

இது குறித்து விளக்கமாகவே பார்ப்போம்.


لسان العرب - (ج 14 / ص 291)

( رأي ) الرُّؤيَة بالعَيْن تَتَعدَّى إلى مفعول واحد وبمعنى العِلْم تتعدَّى إلى مفعولين يقال رأَى زيداً عالماً ورَأَى رَأْياً ورُؤْيَةً ورَاءَةً مثل راعَة وقال ابن سيده الرُّؤيَةُ النَّظَرُ بالعَيْن والقَلْب

ருஃயத் என்பது கண்ணால் காண்பது என்ற பொருளில் வந்தால் அதற்கு ஒரு மஃப்வூல் (object) தான் வரும். ”அறிதல்” என்ற பொருளில் வரும்போது அதற்கு இரண்டு மஃப்வூல் (object) வரும்.

நூல் லிஸானுல் அரப் பாகம் 14 பக்கம் 291

உதாரணம்

رأيت محمدا

முகம்மதைப் பார்த்தேன்

رأيت محمدا عالما

முகம்மதை ஆலிமாகப் பார்த்தேன்

முதலாவது உதாரணத்தில் பார்த்தல் என்பதற்கு முகம்மத் என்ற ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது.

ஒரு ஆப்ஜக்ட் வந்தால் கண்ணால் காண்பது என்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.இரண்டாவது உதாரணத்தில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு 1. முகம்மத் 2. ஆலிம் என்ற இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

இவ்வாறு இரண்டு ஆப்ஜெக்ட் வந்தால் தான் அறிதல் என்ற பொருள் வரும். சில நேரங்களில் அரிதாக இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது கண்ணால் பார்த்தல் என்ற பொருளும் வரலாம்.

ஆனால் ”பார்த்தல்” என்ற சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் கண்டிப்பாக அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்கும்.

பிறை பார்த்தல் என்பதில் ”பார்த்தல்” என்ற செயலுக்கு ஒரு ஆப்ஜெக்ட்தான் வந்துள்ளது. எனவே இதற்கு கண்ணால் காண்பதைத் தவிர வேறு பொருள் கொடுக்க முடியாது.

பிறையை பார்த்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பாதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

என்கிற ஹதீஸில் ”பார்த்தல்” என்பதற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது.

”பிறை என்பது, “சந்திரனில் தோன்றும் முதல் ஒளி வடிவம் ஆகும்”. எனவே இங்கே கண்ணால் காணுதல் என்ற பொருளை மட்டும்தான் கொடுக்க முடியும். அறிதல் என்ற பொருளைக் கொடுப்பது மார்க்கத்தின் அடிப்படையிலும், அரபி மொழி அகராதி அடிப்படையிலும் தவறானதாகும்.

திருமறைக்குர்ஆனில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல் அதிகமாக இரண்டு ஆப்ஜெக்டுகளைக் கொண்டுதான் பயன்படுத்தப்பட்டுள்ளது. இரண்டு ஆப்ஜக்டுகள் வரும் போது அறிதல் என்ற பொருள்தான் பெரும்பாலும் வரும்.

யானைப் படையை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா? (அல்குர்ஆன் 105 : 1)

மேற்கண்ட வசனத்தில் யானையைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் அல்லாஹ் கூறியிருந்தால் அது கண்ணால் பார்ப்பதை மட்டும்தான் குறிக்கும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. யானைப்படையை (பார்த்தல்)

2. எப்படி அழித்தான் என்ற செயலைப் (பார்த்தல்).

எனவே இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு ருஃயத் என்பதின் பொருள் அறிதல் என்பதாகும்.

வானங்களையும், பூமியையும் படைத்தவன் இவர்களைப் போன்ற (அற்பமான)வர்களைப் படைக்க ஆற்றலுடையவன் என்பதை அவர்கள் அறியவில்லையா?

அல்குர்ஆன் 17 : 99

மேற்கண்ட வசனத்தில் அல்லாஹ்வைப் பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் அது கண்ணால் பார்த்தல் என்ற பொருளை மட்டும்தான் தரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. அல்லாஹ்வை (பார்த்தல்)

2. அவனுடைய படைப்பாற்றலைப் (பார்த்தல்)


இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இதற்கு அறிதல் என்ற பொருள் தான் கொடுக்க வேண்டும்.

மரணத்திற்கு அஞ்சி தமது ஊர்களை விட்டு வெளியேறியோரை நீர் அறியவில்லையா?

(அல்குர்ஆன் 2 : 243)

மேற்கண்ட வசனத்தில் ஊர்களை விட்டு வெளியேறியோரை பார்க்கவில்லையா? என்று மட்டும் வந்தால் கண்ணால் பார்த்தல் என்று பொருள் மட்டும்தான் வரும்.

ஆனால் மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச்சொல்லுக்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளது.

1. ஊரை விட்டு வெளியோரை (பார்த்தல்)

2. மரணத்திற்கு அஞ்சுவதை (பார்த்தல்)

இங்கு இரண்டு ஆப்ஜெக்ட் வந்துள்ளதால் இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

ஆது, தூண்களையுடைய இரம் சமுதாயங்களை உமது இறைவன் எப்படி ஆக்கினான் என்பதை நீர் அறியவில்லையா?

அல்குர்ஆன் 89 : 6, 7

மேற்கண்ட வசனத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லுக்கு இரண்டு ஆப்ஜக்டுகள் வந்துள்ளது.

1. ஆது, இரம் சமுதாயத்தைப் (பார்த்தல்)

2. அவர்களை எப்படி ஆக்கினான் என்பதை (பார்த்தல்)

எனவே இங்கு அறிதல் என்ற பொருள்தான் கொடுக்க வேண்டும்.

அதே சமயம், கீழ்க்காணும் வசனங்களைப் பாருங்கள்..

அவ்வாறில்லை! நீங்கள் உறுதியாக அறிவீர்களாயின் நரகத்தைக் காண்பீர்கள்.

அல்குர்ஆன் 102 : 5,6

மேற்கண்ட வசனத்தில் பார்த்தல் என்ற வினைச் சொல்லுக்கு ஒரு ஆப்ஜெக்ட்டு தான் வந்துள்ளது எனவே இது கண்ணால் காண்பதை மட்டும் தான் குறிக்கும்.

மொத்தத்தில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ஒரு ஆப்ஜெக்ட் வந்தால் அதற்கு கண்ணால் பார்த்தல் என்ற பொருள் மட்டும்தான் வரும். வேறு பொருள் வராது.

இரண்டு ஆப்ஜெக்ட் வரும் போது தான் அங்கே அறிதல் என்ற பொருள் வரும். திருமறைக்குர்ஆனில் அறிதல் என்ற பொருள் கொள்வதற்கு சான்றாக அவர்கள் எடுத்துக் காட்டும் வசனங்கள் அனைத்தும் இரண்டு ஆப்ஜெக்ட்டாக வரக்கூடியவை தான்.

பிறைபார்த்தல் பற்றிய ஹதீஸ்களில் ”பார்த்தல்” என்ற வினைச் சொல்லிற்கு ”பிறை” என்ற ஒரு ஆப்ஜக்ட்டு தான் வந்துள்ளது. எனவே இது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

குர்ஆனில் கண்ணால் காணுதல் என்ற பொருளில் பயன்படுத்தப்பட்ட சில இடங்கள்.

நட்சத்திரத்தைப் பார்த்தார் (6 : 76)

சந்திரனைப் பார்த்தார் (6 : 77)

சூரியனைப் பார்த்தார் (6 : 78)

ஆதாரத்தைப் பார்த்தார் (11 : 70)

சட்டையைப் பார்த்தார் 12 : 28

இணைக் கடவுள்களைப் பார்த்தல்

(16 : 86)

நரகத்தைப் பார்த்தல் 16 : 83, 20 : 10

கூட்டுப் படையைப் பார்த்தல் 33 : 22

இறை அத்தாட்சியில் மிகப் பெரியதைப் பார்த்தல் 53 : 18

தெளிவான அடிவானத்தில் கண்டார்

81 : 23

இப்படி பார்த்தல் என்ற ரீதியில் ஆய்வு செய்தால் கண்ணால் பார்த்தல் என்பதற்கு ஏராளமான ஆதாரங்களை குர்ஆனில் காணமுடியும்

ஆக, இவர்களது இந்த வாதமும் தவிடு பொடியாகிப்போனது !

பிறையை பார்த்தல் - என்பது கண்ணால் பார்த்தலைத் தான் குறிக்கும் என்பது தெள்ளத் தெளிவாக நிரூபணம் ஆகி விட்ட நிலையில் பிறையைக் கணக்கிடலாம், விஞ்ஞான ரீதியாகச் சிந்திக்கலாம் என்பன போன்ற வாதங்கள் அனைத்தும் விழுந்து நொறுங்கி விட்டன.

தங்களது இந்த வாதத்தில் தாங்களே நம்பிக்கை கொள்ளவில்லை என்பதை, தொடர்ந்து இவர்கள் வைக்கும் அடுத்தடுத்த கேள்விகள் நிரூபிக்கின்றன.

மடமைவாதம் நான்கு

கிராமவாசிகள் சம்மந்தமான ஹதீஸில் இது போல பிறை பார்த்தல் பற்றி கூறப்பட்டுள்ளதே, இங்கு ருஃயத் என்கிற சொல் எங்கே உள்ளது என்பது இவர்களது முதல் கேள்வி.

இந்த ஹதீஸ் முர்ஸல் வகையைச் சார்ந்தது, இதை எப்படி ஆதாரமாகக் கொள்ளலாம் என்பது இவர்களது அடுத்த கேள்வி.

பதில் நான்கு
உச்சகட்டமாக, மேலும் சில வினோதமான கேள்விகளை முன் வைத்து, சிந்தனைக்கும் தங்களுக்கும் வெகுதூரம் என்பதை வெட்கமின்றி வெளிக் காட்டியுள்ளனர்.

அதில் ஒன்று, பிறையை தான் கண்ணால் காண வேண்டும் என்றும் காணவில்லை என்றால் 30 ஆக பூர்த்தி செய்ய வேண்டும் என்றும் உங்கள் கருத்துப்படி சொல்லப்பட்டு விட்டதே, பிறகு ஏன் சஹாபாக்கள் மத்தியில் குழப்பம் ஏற்பட்டது? ஏன் கருத்து வேறுபாடு கொண்டனர்? என்கிற கேள்வி.
ஒரு ஊரார் பார்த்த நாளுக்கு மறுநாள் இன்னொரு ஊரார் பிறை பார்த்தால் முப்பது எது என்பதில் இருவருக்கும் கருத்து வேறுபாடு வரும் என்ற சாதாரண அறிவு கூட இல்லாமல் இப்படி கேட்கின்றனர்.

இவர்களின் இந்தக் கேள்விக்கு நம்மிடம் உள்ள பதிலைக் கூறிவிட்டோம்.

இவர்களின் வாதத்தின் படி இந்தக் கேள்விக்கு இவர்களால் பதில் சொல்ல முடியுமா?

பிறையைப் பார்க்கவே அவசியமில்லை, நாமே கணித்து, சிந்தித்து, ஆய்வு செய்து, கணக்கிட்டு முடிவு செய்து கொள்ளலாம் என்றால், பிறையை பார்த்தவுடன் இன்று நோன்பை விட வேண்டுமா தேவையில்லையா? என்பதை அறியாமலும், வானத்தில் தலையுயர்த்தி இது இரண்டாவது பிறையாக இருக்குமோ? மூன்றாவதாக இருக்குமோ? என்று குழம்பிக் கொள்ளும் நிலையும் சஹாபாக்களுக்கு ஏன் ஏற்பட்டது? என்கிற கேள்வியை நாம் இவர்களை நோக்கி கேட்கிறோம்.

தலை பிறை குறித்து சஹாபாக்கள் தங்களுக்கிடையே விவாதித்துக் கொண்டனர், அதில் கருத்து வேறுபாடு கொண்டனர் என்பதே, அவர்கள் இந்த ஹிஜ்ரா கூட்டம் கொண்டிருப்பதைப் போன்ற கொள்கையை கொண்டிருக்கவில்லை என்பதைத் தான் காட்டுகிறது.

எது இவர்களுக்கு எதிரான கேள்வியோ அந்தக் கேள்வியை நம்மிடம் கேட்பது உச்சகட்ட வினோதம்.

மேலும் மற்றுமொரு வினோதமான கேள்வியை முன் வைக்கிறார்கள்.

அதாவது, மாதத்தின் இறுதி பற்றி மக்களுக்கு கருத்து வேறுபாடு வந்தது என்று வாகனக்கூட்டம் ஹதீஸில் சொல்லப்பட்டிருப்பதில் இருந்து, அவர்களுக்கு முன் கூட்டியே மாதத்தின் இறுதி தெரிந்திருக்கிறது என்று தானே அர்த்தம்? அதனால் தானே கருத்து வேறுபாடு கொள்ள நேர்ந்தது? என்று கேட்கிறார்கள்.

இவர்கள் எந்த அளவுக்கு குறுமதி கொண்டவர்களாக உள்ளனர் என்பதற்கு இதுவும் ஆதாரமாக உள்ளது.
மாதத்தின் இறுதி பற்றி கருத்து வேறுபாடு ஏற்பட்டது என்றால் அதைப் பற்றி சர்வதேசப் பிறை என்ற கிறுக்குத்தனம் அந்த மக்களிடம் இல்லை என்பதற்குத் தான் ஆதாரமாக உள்ளது. ஒருவர் பார்த்து மற்றவர் பார்க்காததால் எது கடைசி என்று கருத்து வேறுபாடு வரத்தானே செய்யும்.

ஒரு மாத இறுதியில் மக்கள் முதல் பிறை குறித்து கருத்து வேறுபாடு கொள்வது விஞ்ஞான ரீதியாக பிறையை கணிக்கலாம் என்பதற்கு ஆதாரமா?

முன்கூட்டியே மாதம் முடியும் கணக்கை அறிந்திருந்தால் தானே ஒரு சாராருக்கும் மற்றொரு சாராருக்கும் கருத்து வேறுபாடு வரும்? என்று கேட்கிறார்கள்.
தங்களது சிந்தனை அடகு வைக்கப்பட்டு விட்டது என்பதற்கு இவர்களது இந்த ஒரு கேள்வியே சான்று பகர்கிறது.

தலைப்பிறை பார்த்து ஒரு மாதத்தை துவங்கி விட்டார்கள் என்றால் ஒவ்வொரு நாளையும் எண்ணுவதற்கு சஹாபாக்களுக்குத் தெரியும். இது முதல் பிறை, இது இரண்டாவது பிறை என்று எண்ணி ,இறுதியில் 29 பிறைகள் முடிந்தால் மறு பிறை தென்பட்டதா இல்லையா? என்கிற கருத்து வேறுபாடுகள் வரும். இது ஒவ்வொரு மாதமும் பிறையைக் கண்ணால் பார்த்து மாதங்களை தீர்மானிப்பவர்களிடையே ஏற்படும். இதற்கும் பிறையை முன்கூட்டியே கணிக்க வேண்டும் என்பதற்கும் என்ன சம்மந்தம் உள்ளது?
அல்லது இதிலிருந்து முன் கூட்டியே பிறையை / மாதங்களை முடிவு செய்ய என்ன சான்று இருக்கிறது?

இந்த வாதங்கள் எல்லாம் அர்த்தமற்றது என்று இவர்களுக்கே தெரியும் என்பதால், இடையிடையே சம்மந்தப்பட்ட இந்த ஹதீஸ் (வாகனக்கூடம்) பலகீனமானது என்று வேறு கூறிக் கொள்கிறார்கள். அதற்கு, இந்த செய்தி முர்ஸல் வகையைச் சேர்ந்தது என்று காரணம் கூறுகிறார்கள்.

இவர்களுக்கு மொழியறிவும் இல்லை, அரபு இலக்கணமும் தெரியாது, குர்ஆன் ஹதீஸை அணுகும் முறையும் தெரியாது, இப்போது ஹதீஸ் கலையும் தெரியாது என்று நிரூபிப்பதற்காகவே இது போன்ற வாதத்தை வைத்திருக்கிறார்கள்.

முர்ஸல் என்பது இரண்டாம் தலைமுறையினர் (தாபியி) நபியவர்கள் கூறியதாக அறிவிப்பதாகும். நபிக்கும், தாபியிக்கும் மத்தியில் நபித்தோழரோ அல்லது தாபியீயும் நபித்தோழருமோ விடுபட்டிருப்பர்.
விடுபட்டவர் தாபியீயாக இருந்தால் அவர் யார் என்று தெரிய வேண்டும். எனவே அது பலவீனமானதாகும்.

அபூதாவூதில் பதிவாகியுள்ள கிராமவாசிகள் பற்றிய செய்தியில் நபித்தோழர் விடுபடவில்லை. மாறாக அந்த நபித்தோழரின் பெயரைக் குறிப்பிட்டவில்லை என்பதே உண்மையாகும்.
1992 حَدَّثَنَا مُسَدَّدٌ وَخَلَفُ بْنُ هِشَامٍ الْمُقْرِئُ قَالَا حَدَّثَنَا أَبُو عَوَانَةَ عَنْ مَنْصُورٍ عَنْ رِبْعِيِّ بْنِ حِرَاشٍ عَنْ رَجُلٍ مِنْ أَصْحَابِ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ قَالَ اخْتَلَفَ النَّاسُ فِي آخِرِ يَوْمٍ مِنْ رَمَضَانَ فَقَدِمَ أَعْرَابِيَّانِ فَشَهِدَا عِنْدَ النَّبِيِّ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ بِاللَّهِ لَأَهَلَّا الْهِلَالَ أَمْسِ عَشِيَّةً فَأَمَرَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهم عَلَيْهِ وَسَلَّمَ النَّاسَ أَنْ يُفْطِرُوا زَادَ خَلَفٌ فِي حَدِيثِهِ وَأَنْ يَغْدُوا إِلَى مُصَلَّاهُمْ * رواه ابوداود
அதாவது ”ரிப்யீ பின் ஹிராஷ்” (தாபியீ) என்பவர் நபித்தோழர்களில் ஒருவரிடமிருந்து அறிவிக்கிறார் என்றே இடம் பெற்றுள்ளது.
எனவே இது முர்ஸல் என்று கூறுவது அறியாமையாகும்.
ஸஹாபாக்கள் அனைவரும் நீதமானவர்கள் என்பதால் அவர்களின் பெயர் குறிப்பிடப்படாவிட்டாலும் நபித்தோழரிடமிருந்து கேட்டேன் என்று நம்பகமான தாபியீ சொன்னாலே அது ஆதாரப்பூர்வமானதாகும். இதுதான் ஹதீஸ் கலை விதியாகும்.
முர்ஸல் என்பதில் ஸஹாபி விடுபட்டாரா சஹாபியும் தாபியீயும் விடுபட்டாரா என்ற சந்தேகம் இருக்கும்.
இங்கு ஸஹாபி தான் அற்விக்கிறார் என்று தெளிவாக சொல்லப்பட்டுள்ளதால் இது முர்சல் கிடையாது. இது போன்ற அறிவீனர்கள் எல்லாம் ஆய்வு செய்யப் புகுந்தால் அல்லாஹ் தான் காப்பாற்ற வேண்டும்.

அடுத்ததாக, ருஃயத் என்றால் பார்த்தல் என்று பொருள் இருப்பதாகச் சொல்பவர்கள் இந்த வாகனக்கூட்டம் ஹதீஸில் ருஃயத் என்கிற வார்த்தை எங்குள்ளது? என்று காட்டுவார்களா எனக் கேட்கிறார்கள்.

""அப்துல்லாஹ்வை நான் கண்டேன்"" என்று ஒருவர் தனது நூலில் எழுதுகிறார் என்று வைப்போம். சில காலங்களுக்குப் பிறகு மற்றொரு சபையில் அது பற்றி பேசும் போது அப்துல்லாஹ்வை நான் பார்த்தேன், இதை நான் பல வருடங்களுக்கு முன்பே இந்த நூலில் எழுதியுள்ளேனே? என்று சொல்லும் போது, எங்கே அவ்வாறு எழுதியுள்ளீர்கள்?? உங்கள் எழுத்தில் "பார்த்தேன்" என்கிற வார்த்தை எங்கே உள்ளது?? எடுத்துக் காட்ட முடியுமா?? என்று ஒருவர் கேட்டால் அவரது அறிவின் ஆழத்தை (?) குறித்து நாம் என்ன எடை போடுவோம்??
கிராமவாசிகள் பிறை பார்த்தது தொடர்பாக வரக்கூடிய ஹதீஸில் ”ருஃயத்” என்ற வார்த்தை இடம் பெறவில்லை. ஆனால் ”அஹல்ல” என்ற வார்த்தை இடம் பெற்றுள்ளது.
المحكم والمحيط الأعظم - (ج 2 / ص 126) وأهَلَّ الرجل: نظر إلى الهِلال. وأهلَلنا هِلال شهر كذا، واستَهْلَلناه: رأيناه
”அஹல்ல” என்று சொன்னால் ”பிறையை நோக்கிப் பார்த்தான்” ”பிறையைக் கண்களால் பார்த்தான்” என்பதாகும்.
நூல் அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளமு. பாகம் 2 பக்கம் 126
மேற்கண்ட கிராமவாசிகள் பற்றிய ஹதீஸில் ”அஹல்லா அல்ஹிலால” என்று இடம் பெற்றுள்ளது. இதன் பொருள் ”அந்த இருவரும் பிறையை கண்களால் பார்த்தார்கள்” என்பதாகும்.
இந்த வகையிலும் இவர்களது வறட்டு சிந்தனை சந்தி சிரிப்பதை காணலாம்.
மடமை வாதம் ஐந்து
கும்ம என்பதன் பொருள் என்ன?

அடுத்ததாக, "உங்களுக்கு மேகமூட்டம் ஏற்பட்டால் 30 ஆகப் பூர்த்தி செய்து கொள்ளுங்கள் என்பதாக வரும் ஹதீஸில் மேகமூட்டம் என்று நாம் மொழியாக்கம் செய்த இடத்தில் "கும்ம" என்கிற சொல் உள்ளது, இதற்கு மேகமூட்டம் என்கிற பொருள் வராது, அறிவிற்கு எட்டாத, சிந்தனை விட்டும் மறைந்த.. என்பதாகத் தான் பொருள் கொள்ள வேண்டும் என்று கூறுகின்றனர்.

நமது பதில் ஐந்து
கும்ம” என்ற சொல்லிற்கு மறைக்கப்படுதல் என்பது பொருளாகும். இது ”ஹிலால்” என்ற வார்த்தையோடு இணைத்து கூறப்படும் போது மேகமூட்டத்தால் மறைக்கப்படுதல் என்பது பொருளாகும்.
المحكم والمحيط الأعظم - (ج 2 / ص 390) وغُمّ الهلالُ غَماًّ: ستره الغيمُ فلم يُرَ.
”கும்ம அல்ஹிலாலு கம்மன்” என்பதின் பொருள் ”பிறையை மேகம் மறைத்தது. அது பார்க்கப்படவில்லை” என்பதாகும்.

நூல் அல்முஹ்கம் வல் முஹீத்துல் அஃளம் என்ற அரபி அகராதி நூல் . பாகம் 2 பக்கம் 390

ஒரு வாதத்திற்கு ”மேக மூட்டம்” என்ற வார்த்தையை நீக்கிவிட்டு ”பிறை மறைக்கப்பட்டது” என்று மட்டும் பொருள் செய்தால் கூட இது கண்பார்வைக்கு மறைந்திருப்பதைத்தான் குறிக்கும்.
”அறிதலை” விட்டும் மறைதல் என்று பொருள் வராது.

ஏனென்றால் பார்த்தல் என்பதற்கு ஒரு ஆப்ஜக்ட் வருமென்றால் அது கண்ணால் காண்பதை மட்டும்தான் குறிக்கும்.

பிறையைப் பார்த்து நோன்பு வையுங்கள். பிறையை பார்த்து நோன்பை விடுங்கள். உங்களுக்கு மேகமூட்டமாக இருந்தால் முப்பாதாக பூர்த்தி செய்து கொள்ளுங்கள்.

என்ற ஹதீஸில் பார்த்தல் என்பதற்கு பிறை என்ற ஒரு ஆப்ஜெக்ட் மட்டும் வந்துள்ளதால் அது கண்பார்வைக்கு மறைக்கப்படுவதை மட்டும்தான் குறிக்கும்.
இதை ஏற்கனவே நாம் விளக்கியுள்ளோம்.

அந்த வகையில், கும்ம என்கிற சொல்லுக்கு இந்த இடத்தில் கண்களை விட்டும் மறைதல் என்கிற பொருள் மட்டும் தான் கொடுக்க முடியும். வானத்தில் உள்ள ஒன்றைப் பற்றி பேசுகிற பொழுது, அது கண்களை விட்டு மறையும் என்றால் மேகமூட்டம், புகை மூட்டம், பனிமூட்டம் போன்றவை மறைப்பதை தான் குறிக்க முடியும்.

இதற்கு வலுசேர்க்கும் விதமாக கீழ்க்காணும் இறைவசனங்களிலும் கும்ம என்கிற சொல்லின் வேர் சொல்லான கமாம் என்கிற வார்த்தை - மேகமூட்டம் என்கிற அர்த்தத்திலேயே பயன்படுத்தப்பட்டுள்ளது.

உங்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். 2:57

ஒவ்வொரு கூட்டத்தினரும் தமக்குரிய நீர்த்துறையை அறிந்து கொண்டனர். அவர்கள் மீது மேகத்தை நிழலிடச் செய்தோம். அவர்களுக்கு மன்னு, ஸல்வா (எனும் உண)வை இறக்கினோம். 7:160

மேகத்தால் வானம் பிளக்கப்பட்டு, வானவர்கள் உறுதியாக இறக்கி வைக்கப்படும் நாள் 25:25
மேற்கண்ட வசனங்களில் மேகம் என்கிற வார்த்தையைக் குறிக்க கமாம் என்கிற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது, அதிலிருந்து பிறந்த சொல்லே "கும்ம".
இந்த விளக்கமும் நாம் புதிதாக கொடுக்கும் விளக்கமல்ல.. இதை நமது முந்தைய மறுப்புகளின் போதே தெள்ளத்தெளிவாக குறிப்பிட்டிருந்தோம்.

ஆனால், இதற்கு முறையான எந்தப் பதிலையும் சொல்லாத இந்தக் கூட்டம், மீண்டும் கும்ம என்றால் அறிவுக்கு எட்டாதது, என்கிற பழைய பல்லவியையே பாடி வருகிறது.
இவர்களது மதியீனத்தை வெளிக்காட்டும் முகமாக இன்னும் ஒரு படி மேலே சென்று கும்ம என்பதற்கும் கமாம் என்பதற்கும் எந்தத் தொடர்புமில்லை, என்றும் நாம் தான் சம்மந்தமேயில்லாமல் கமாம் என்கிற சொல் வருகிற வசனங்களை எடுத்து வைப்பதாகவும், தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு மொழியறிவு கிடையாது என்றும் நம்மை விமர்சித்துள்ளது இந்த வியாபாரிகள் கூட்டம்.

இவர்கள் எழுதவதை எல்லாம் படித்து விசில் அடிப்பதற்கென்றே சில மூளை மழுங்கிய கூட்டத்தை உடன் வைத்திருப்பதால் இது போன்ற வடிகட்டிய முட்டாள்தனத்தை கூட தங்களது கொள்கையாக நிலைநிறுத்தி வாதிட்டாலும் இவர்களது ரசிகர் கூட்டம் விசில் அடிப்பதில் குறைவு காட்ட மாட்டார்கள் என்கிற அபார நம்பிக்கை இவர்களுக்கு.

கமாம் என்பது கும்ம என்ற சொல்லிலிருந்து வந்தது தான். இது பல அரபி அகராதி நூற்களில் கூறப்பட்டுள்ளது.

இரண்டு நூற்களில் உள்ள ஆதாரங்கள் சுருக்கமாகத் தரப்பட்டுள்ளது..

உம்தத்துல் காரி என்பது புகாரியின் விரிவுரை நூல். இதே கருத்து அரபி அகராதி நூற்களிலும் உள்ளது.
عمدة القاري شرح صحيح البخاري - (ج 16 / ص 268)
قوله فإن غم عليكم أي فإن ستر الهلال عليكم ومنه الغم لأنه يستر القلب والرجل الأغم المستور الجبهة بالشعر وسمي السحاب غيما لأنه يستر السماء ويقال غم الهلال إذا استتر ولم ير لاستتاره بغيم ونحوه وغممت الشيء أي غطيته

”கும்ம அலைக்கும்” என்றால் ”சுதிரல் ஹிலாலு அலைக்கும்” (பிறை உங்களுக்கு மறைக்கப்பட்டால்) என்பது பொருள். கவலைக்கு ”அல்கம்மு” என்று கூறப்படும். ஏனென்றால் அது உள்ளத்தை மறைக்கிறது.

முடியினால் நெற்றி மறைக்கப்பட்ட மனிதனுக்கு ”அர்ரஜூலுல் அகம்மு” என்று கூறுவார்கள்.
மேகத்திற்கு ”கய்முன்” என்று கூறுவார்கள். ஏனென்றால் அது வானத்தை மறைக்கிறது.
”கும்ம அல்ஹிலாலு” என்றால் பிறை மறைக்கப்பட்டது என்பது பொருள். அதாவது மேகத்தினால் அது மறைக்கப்பட்டதினால் காணப்படவில்லை என்பதாகும்.
நூல் ; உம்தத்துல் காரீ

தம்ஹீத் என்பது ஃபிக்ஹூ நூல். இதில் கூறப்பட்டுள்ள விஷயம் அரபி அகராதி நூற்களிலும் உள்ளது.
التمهيد - (ج 2 / ص 38)
وأما قوله فإن غم عليكم فذلك من الغيم والغمام وهو السحاب يقال منه يوم غم وليلة غمة وذلك أن تكون السماء مغيمة

”கும்ம அலைக்கும்” (இதன் பொருள் ”உங்களுக்கு மறைக்கப்பட்டது” என்பதாகும்.)
இதில் மறைத்தல் என்பது ”கைம்” இன்னும் ”கமாம்” மூலம் ஏற்படுதலாகும்.
”கைம்” ”கமாம்” என்பது மேகம் ஆகும்.

வானம் மேகமூட்டமாக இருக்கும் போது ”யவ்முன் கம்முன்” (மேகமூட்டமான நாள்) லைலத்துன் கம்மத்துன் (மேகமூட்டமான இரவு) என்று கூறுவார்கள்.
நூல் அத்தம்ஹீத் பாகம் 2 பக்கம் 38

ஆக, மூளை மழுங்கி சிந்திப்பது யார் என்பது நிரூபணம் ஆகி விட்டது.
கமாம் என்கிற வார்த்தைக்கு மேகம் என்கிற பொருள் இருக்கிறதா? கும்ம என்பதன் வேர்ச்சொல் தான் கமாமா? என்கிற கேள்விகளுக்கு விடை அறிய அகராதி நூற்களையும் அரபுப் புலமையின் தேவையும் உள்ளது.

இந்த வியாபாரக் கூட்டதிற்கு அந்தத் திறன் இல்லை எனில், நம்மிடம் சந்தேகத்தைத் தீர்க்கின்ற தொனியில் கேட்டு தெரிந்திருக்கலாம். அதை விடுத்து, வாதம் என்கிற பெயரில் இவர்கள் எதை உளறிக் கொட்டினாலும் வாசித்து விட்டு மாலை போடும் கூட்டம் என்று இஸ்லாமிய சமூகத்தை எண்ணி விட வேண்டாம் என்று நாம் அறிவுரை கூறுகிறோம்.

மடமைவாதம் ஆறு

நாளின் துவக்கம் எது ?

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதை நாம் பல சந்தர்ப்பங்களில் பல சான்றுகளுடன் விளக்கியிருக்கிறோம். இதற்கு மறுப்பு கொடுப்பவர்களின் கடமையானது, நாம் பட்டியலிட்டிருக்கிற சான்றுகள் அனைத்திற்கும் மறுப்பு கொடுத்து விட்டு நாளின் துவக்கம் மக்ரிப் இல்லை என்று கூற வேண்டும். நாம் ஒரு பத்து சான்றுகளை காட்டி நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்று நிரூபித்தால் அதில் இரண்டு ஹதீஸ்கள் பலகீனமானவை என்று சொல்லி விட்டு, இதன் மூலம் நாளின் துவக்கம் மக்ரிப் இல்லை என்று நிரூபணம் ஆகிறது என்று வாதம் வைத்தால், இது அறிவார்ந்த சபையில் எடுபடுமா?

இந்தக் கூட்டம் அதைத் தான் செய்துள்ளது.

பலகீனமான ஹதீஸ்கள் என இவர்கள் தங்களது மறுப்பில் குறிப்பிட்டிருக்கும் செய்திகள் கீழ்க்காணும் இரு ஹதீஸ்கள் ஆகும்.

லைலத்துல் கத்ர் இரவு பற்றி நபிகள் நாயகம் (ஸல்) அவர்களிடம் யார் விளக்கம் கேட்பது என்று பேசிக்கொண்டோம். இது ரமலான் மாதம் 21 ம் நாள் காலையில் நடந்தது நான் புறப்பட்டு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுடன் மஹ்ரிப் தொழுகையில் பங்கு கொண்டேன். லைலத்துல் கத்ர் பற்றி கேட்டுவர என்னை பனூ ஸலமா கூட்டத்தினர் அனுப்பியதைத் தெரிவித்தேன். இது எத்தனையாவது இரவு என்று கேட்டனர். 22 ஆம் இரவு என்று நான் குறிப்பிட்டேன் இது தான் அந்த இரவு என்று கூறினார்கள். பின்னர் திரும்பி வந்து அடுத்த இரவும் எனக் கூறி 23 ஆம் இரவைக் குறிப்பிட்டனர்.

அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் உனைஸ் (ரழி) நூல்: அபூதாவூத் 1171

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி)

நூற்கள்: அஹ்மத்(9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)
வேடிக்கை என்னவெனில், நாம் நாளின் ஆரம்பம் மக்ரிப் தான் என்பதற்கு அபூதாவூத் 1174 ஹதீஸை சான்றாகக் காட்டினால் இவர்களோ அபூதாவூத் 1171 பலகீனம் என்கின்றனர். வெங்காயம் கிலோ 30 ருபாய் என்றால், இல்லை தக்காளி 20 ருபாய் என்றல்லவா எழுதப்பட்டுள்ளது? என்று கேட்கின்றனர்.

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு அடுக்கடுக்காக பல சான்றுகளை நாம் நிரூபித்திருக்கும் நிலையில், அவர்களுக்கு பலகீனம் என்று சொல்ல வசதியாய் தெரிந்த இரு ஹதீஸ்களை மட்டும் எடுத்துக்கொண்டு பதில் சொல்லி விட்டோம்; பதில் சொல்லி விட்டோம் என்று கூச்சலிட்டால் இது சிறு பிள்ளைத்தனமா இல்லையா?

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு நாம் பலமுறை முன் வைத்திருக்கும் அபூதாவூத் 1174 ஹதீஸ் ( இதே செய்தி புஹாரி 2027இலும் பதிவாகியுள்ளது) இதோ..
அபூசயீத் அல்குத்ரீ (ரலி) கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் ரமளானில் நடுப்பத்து நாட்களில் இஃதிகாஃப் இருப்பார்கள். ஓர் ஆண்டு அவர்கள் இஃதிகாஃப் இருந்து இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும் -அந்த இரவின் காலையின்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள்- , யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாட்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்! இந்த (லைலத்துல் கத்ர்) இரவு எனக்கு (கனவில்) காட்டப்பட்டது; பின்னர் அது எனக்கு மறக்கடிக்கப்பட்டு விட்டது! (அந்தக் கனவில்) காலை நேரத்தில் ஈரமான மண்ணில் நான் சஜ்தா செய்யக் கண்டேன். எனவே, அதைக் கடைசிப் பத்து நாட்களில் தேடுங்கள். (அந்த நாட்களின்) ஒவ்வோர் ஒற்றைப்படை இரவிலும் அதைத் தேடுங்கள்! எனக் கூறினார்கள். அன்றிரவு மழை பொழிந்தது. அன்றைய பள்ளிவாசல் (பேரீச்ச ஓலையால்) கூரை வேயப்பட்டதாக இருந்தது. எனவே பள்ளிவாசல் ஒழுகியது. இருபத்தொன்றாம் நாள் சுப்ஹுத் தொழுகையில் நபி (ஸல்) அவர்களின் நெற்றியில் ஈரமான களிமண் படிந்திருந்ததை எனது இரு கண்களும் பார்த்தன.
நாளின் துவக்கம் குறித்து நாம் ஏராளமான சான்றுகளை முன் வைத்திருந்த போதும், சிந்திப்பவர்களுக்கு இந்த ஒரு ஹதீஸிலேயே பல கோணங்களில் விடை கிடைக்கும்.
நபி (ஸல்) அவர்கள் ரமளானின் நடு பத்தில் இஃதிகாஃப் இருந்து விட்டு 21 ஆம் இரவை அடைந்ததும் இஃதிகாஃபை முடிக்காமல் தொடர்ந்து வரக்கூடிய பகலில் முடித்து விட்டு வெளியேறுகிறார்கள் என்று அந்த ஹதீஸ் சொல்கிறது.

அதாவது நடு பத்து நாட்கள் என்பது இருபதாம் நாளுடன் முடியும்.
ஆகவே இருபத்தி ஒன்றாம் இரவு வந்ததும் அதை முடிக்க எண்ணுகிறார்கள், ஆனால் தொடர்ந்து வரக்கூடிய பகலில் தான் வெளியேறுகிறார்கள் என்று அந்த சஹாபி சொல்கிறார்கள்.
21 ஆம் இரவை அடைந்த பிறகு அந்த இரவின் பகலில் வெளியேறினார்கள் என்றால் அந்த இரவு கழிந்து தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகலைத் தான் இது குறிக்க முடியும். அந்தப் பகலை அந்த இரவின் பகல் என்று தான் சொல்கிறார்கள்.

நாளின் துவக்கம் பகல் என்றால் தூங்கி எழுந்ததும் வரக்கூடிய பகல் அடுத்த நாள் ஆகி விடும். அந்த இரவின் பகல் என்று அதைச் சொல்ல முடியாது.

இது, நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு அந்த ஹதீஸ் சொல்லும் முதல் ஆதாரம்.
இருபத்தொன்றாவது இரவை அடைந்ததும். அந்த இரவின் காலையில்தான் இஃதிகாபிலிருந்து வெளியேறுவார்கள். 'யார் என்னுடன் இஃதிகாஃப் இருந்தார்களோ அவர்கள் கடைசிப் பத்து நாள்களிலும் இஃதிகாஃப் இருக்கட்டும்!

என்பது ஹதீஸ் வாசகம் !

இருபத்தி ஒன்றாம் இரவை அடைந்த பிறகு தான் அடுத்த பத்து நாட்களுக்கு நபி அவர்கள் அழைப்பு விடுக்கிறார்களே தவிர மறுநாள் காலை வெளியேறியதும் அவ்வாறு அழைக்கவில்லை.

மறுநாள் காலை வெளியேறிய பிறகு இவ்வாறு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுத்திருந்தால் 10 நாள் என்கிற கணக்கு சரியாக வராது தான்.
ஆனால், அந்த ஹதீஸில், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள் என்று தான் உள்ளது.

வெளியேறுவது தான் அடுத்த பகலிலேயே தவிர, அழைப்பு விடுப்பது என்பது அந்த இரவில் தான்.

அதாவது, 21 ஆம் இரவை அடைந்தால் அதன் பொருள், 20 நாட்கள் முடிந்து விட்டன. 20 நாட்களை முடித்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை விடுக்கிறார்கள்.

இதன் மூலமும் முந்தைய நாளின் முடிவு என்பது மக்ரிப் தான் என்பதும் புலனாகிறது.

மேலும், 21 ஆம் இரவை அடைந்த பிறகு அடுத்த பத்து நாட்களுக்கான அழைப்பை நபி (ஸல்) அவர்கள் விடுக்கிறார்கள். அதைத் தொடர்ந்து அந்த இரவு மழை பெய்கிறது !!!

எந்த இரவு? 21 ஆம் இரவு !

21 ஆம் இரவு மழை பெய்ததை தொடர்ந்து வரும் பஜர் தொழுகையில் நபியின் நெற்றியில் களி மண் படுகிறது என்று அந்த சஹாபி சொல்கிறார்.

ஒரு இரவைக் கடந்த பிறகு வரக்கூடிய பஜர் என்பது இந்த ஹிஜ்ரா கூட்டத்தாரின் கொள்கையின்படி மறுநாள்.

ஆனால், இந்த ஹதீஸில், இரவை 21 ஆம் இரவு என்றும் தொடர்ந்து வரக்கூடிய பகலையும் 21 ஆம் பகல் என்று தான் சொல்கிறார்கள், 22 ஆம் பகல் என்று சொல்லவில்லை.

இந்த அடிப்படையிலும் நாளின் துவக்கம் மக்ரிப் என்பது நிரூபணமாகிறது.

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு மிக வலுவான சான்றாக இந்த ஹதீஸ் திகழ்கிறது.

இது தவிர, மேலும் பல சான்றுகளை நாம் எடுத்து வைத்திருந்தும் கூட அவற்றையெல்லாம் இந்தக் கூட்டம் கண்டுகொள்ளவேயில்லை. பதில் சொல்ல இயன்றால் தானே கண்டு கொள்வதற்கு...

நாளின் துவக்கம் மக்ரிப் தான் என்பதற்கு நாம் வைக்கும் மேலும் பல ஆதாரங்கள் :
திங்கட்கிழமை இரவு நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்காகத் தண்ணீரில் பேரீச்சம்பழத்தை நாங்கள் ஊற வைப்போம். அதைத் திங்கள்கிழமையும், செவ்வாய்க்கிழமை அஸர் வரையும் அருந்துவார்கள். (நூல்: முஸ்லிம் 5345)

நான், அபூபக்ர் (ரலி) அவர்களிடம் சென்ற போது "நபி (ஸல்) அவர்களை எத்தனை துணிகளில் கஃபன் செய்திருந்தீர்கள்?'' என்று அவர் கேட்டார். "வெண்மையான மூன்று பருத்தித் துணிகளில் கஃபன் செய்தோம். அவற்றில் சட்டையோ தலைப்பாகையோ இல்லை என்றேன்'. அபூபக்ர் (ரலி) அவர்கள் என்னிடம் "நபி (ஸல்) அவர்கள் எந்தக் கிழமையில் மரணமடைந்தார்கள்? எனக் கேட்டார்கள். நான் திங்கள் கிழமை என்றேன். "இன்று என்ன கிழமை? என்று கேட்டதும் நான் திங்கள் கிழமை என்றேன். அதற்கவர்கள் "இன்றிரவுக்குள் (எனது மரணம்) நிகழும் என நான் எண்ணுகிறேன்.' என்று கூறிவிட்டு, தாம் நோயுற்றிருந்த போது அணிந்திருந்த ஆடையைப் பார்த்தார்கள். அதில் குங்குமப்பூவின் கறை படிந்திருந்தது. "இதைக் கழுவி இத்துடன் இன்னும் இரு துணிகளையும் சேர்த்து அவற்றில் என்னைக் கஃபனிடுங்கள் எனக் கூறினார்கள். நான், இது பழையதாயிற்றே என்றேன். அதற்கவர்கள் "இறந்தவரை விட உயிருடனிருப்பவரே புத்தாடை அணிய அதிகத் தகுதி படைத்தவர். மேலும் அது (இறந்த) உடலிலிருந்து வழியும் சீழுக்குத் தான் போகும் என்றார்கள். பிறகு அன்று மாலை வரை மரணிக்கவில்லை. (அன்று) செவ்வாய் இரவில் தான் மரணித்தார்கள். காலை விடிவதற்கு முன் அடக்கம் செய்யப்பட்டார்கள்.

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: புகாரி(1384)

அபூபக்ர் (ரலி) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் இறந்த திங்கட்கிழமை இறக்க ஆசைப்பட்டார்கள். அன்று திங்கள் பகல் பொழுதில் இன்று இரவு முடிவதற்குள் மரணித்தால் திங்கள் கிழமை மரணித்தவராக ஆகலாம் என்று ஆசைப்பட்டார்கள். ஆனால் அந்தப் பகலில் மரணிக்காமல் இரவு வந்த பின் தான் மரணித்தார்கள். அந்த இரவுக்குப் பெயரிடும் போது ஆயிஷா ரலி அவர்கள் திங்கள் இரவு எனக் கூறவில்லை. மாறாக செவ்வாய் இரவு என்று குறிப்பிடுகிறார்கள்.

ஒரு நாளில் பகல் முடிந்து விட்டால் அடுத்து வரும் இரவு அடுத்த நாளின் இரவே தவிர முந்திய நாளின் இரவு அல்ல என்பது இதில் இருந்து தெளிவாக விளங்குகிறது.
நாளின் துவக்கம் பகல் என்றிருக்குமானால் அபூபக்ர் (ரலி) அவர்கள் இன்றிரவுக்குள் மரணித்து விடுவேன் என்று சொல்ல வேண்டிய அவசியமில்லை. மேலும் அன்றிரவு மரணமடைந்த அபூபக்ர் (ரலி) அவர்களை, செவ்வாய் இரவு மரணமடைந்தார்கள் என்று கூறவும் கூடாது. எனவே நாளின் ஆரம்பம் இரவு தான் என்பதை இந்தச் செய்தியிலிருந்தும் விளங்க முடிகிறது.

அப்துல்லாஹ் பின் மஸ்வூத் (ரலி) அவர்கள் வெள்ளிக் கிழமை இரவிற்குரிய வியாழன் மாலை ஆகும் போது எழுந்து "சொல்லில் மிக உண்மையான சொல் அல்லாஹ்வின் சொல்லாகும்....'' என்று கூறுவார்.

அறிவிப்பவர்: பிலாத் பின் இஸ்மா நூல்: தாரமீ(209)

நபித்தோழர்கள் காலத்திலும் நாளின் ஆரம்பம் இரவாகவே எடுத்துக் கொள்ளப்பட்டுள்ளது என்பதற்கு இச்செய்தி சிறந்த சான்றாகும்.
இதைப் போன்ற வாசகம் நபி (ஸல்) அவர்கள் பொன்மொழியிலும் பயன்படுத்தப்பட்டுள்ளது.

ஒவ்வொரு வியாழனின் மாலை வெள்ளி இரவன்று ஆதமுடைய மக்களின் அமல்கள் அல்லாஹ்விடம் எடுத்துக்காட்டப்படும். (அப்போது) குடும்ப உறவை முறித்தவனின் அமலை அல்லாஹ் ஏற்றுக் கொள்ள மாட்டான் என்று நபி(ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: அபூஹுரைரா (ரலி) நூற்கள்: அஹ்மத்(9883), அல்அதபுல் முஃப்ரத்(61), ஷுஅபுல் ஈமான்(7966)

இதைப் போன்று அன்னை ஆயிஷா (ரலி) அவர்களின் சொல்லும் இதற்குச் சான்றாக அமைந்துள்ளது.

நீ வெள்ளிக் கிழமை இரவை அடைந்து விட்டால் ஜும்ஆத் தொழாமல் (பயணமாக) வெளியே செல்லாதே!

அறிவிப்பவர்: ஆயிஷா (ரலி) நூல்: முஸன்னஃப் இப்னு அபீ ஷைபா(5114)

இது போன்ற ஏராளமான ஹதீஸ்கள் நமது வாதத்தை நிலை நிறுத்துவதாக இருந்தும், இவற்றையெல்லாம் பல வருடங்களுக்கு முன்னரே நாம் மக்கள் முன் வைத்திருந்தும், இவற்றுக்கெல்லாம் பதில் சொல்ல திராணியற்றவர்கள், கீறல் விழுந்த கிராமஃபோன் போல் சொன்னதையே சொல்லிக்கொண்டு திரிகின்றனர்.

இவர்களது கீறல் விழுந்த கேள்விகளில் ஒன்று,

பிறைச் செய்தியைச் சொல்வதற்கு மாலை வந்தடைந்த அந்த வாகனக் கூட்டம் "நேற்று" பிறை பார்த்தோம் என்று ஏன் கூறினார்கள்? நாளின் துவக்கம் பஜர் என்பதால் தானே?? என்கின்றனர்.

மேலே நாம் அடுக்கியுள்ள சான்றுகள் எதுவும் இவர்களுக்கு ஒரு பொருட்டில்லையாம்.. "நேற்று" என்று அந்த வாகனக் கூட்டம் சொன்னது தான் இவர்கள் கைவசம் உள்ள ஒரே சரக்காம்..

சரி அந்த சரக்காவது சரியான சரக்கா?? இவர்களது கொள்கையை தூக்கி நிறுத்தவல்ல சரக்கா?? இல்லவேயில்லை !

இவ்வாதம் அரபி மொழியில் உள்ள சொல்லுக்குரிய சரியான பொருளை அறியாததால் வந்த வினையாகும்.

அவர்கள் "நேற்று' என்று மொழி பெயர்த்த இடத்தில் அரபி மூலத்தில் "அம்ஸி' என்ற சொல் இடம் பெற்றுள்ளது.

இதற்கு தமிழில் பரவலாக நேற்று என்று மொழி பெயர்க்கப்படுகிறது. இதனுடைய சரியான பொருள் என்ன? அரபி அகராதி நூலில் பார்வையிடுவோம்.

"ஒரு இரவைக் கொண்டு கடந்து விட்ட நாள்'' (அல்காமூஸுல் முஹீத்).

நடப்பில் உள்ள நாளுக்கு முந்திய நாள், சில நேரங்களில் பொதுவாகக் கடந்து விட்டவைகளையும் குறிக்கும். (அல் முஃஜமுல் வஸீத்)

இவ்வுலக வாழ்க்கைக்கு உதாரணம், வானிலிருந்து நாம் இறக்கிய தண்ணீரைப் போன்றது. மனிதர்களும், கால்நடைகளும் உண்ணுகிற பூமியின் தாவரங்களுடன் அத்தண்ணீர் கலக்கிறது. முடிவில் பூமி அலங்காரம் பெற்று கவர்ச்சியாக ஆகிறது. அதன் உரிமையாளர்கள் அதன் மீது தமக்குச் சக்தியிருப்பதாக நினைக்கும் போது நமது கட்டளை இரவிலோ, பகலிலோ அதற்கு (பூமிக்கு) கிடைக்கிறது. உடனே நேற்று அவ்விடத்தில் இல்லாதிருந்தது போல் அறுக்கப்பட்டதாக அதை ஆக்கினோம். சிந்திக்கிற சமுதாயத்திற்கு இவ்வாறே சான்றுகளைத் தெளிவுபடுத்துகிறோம். (அல்குர்ஆன் 10:24).

இவ்வசனத்தில் நேற்று என்று மொழிபெயர்த்த இடத்தில் "அம்ஸி' என்ற சொல்லே இடம் பெற்றுள்ளது. இதற்கு 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருள் அல்ல!

கடந்த நாட்கள் என்ற பொருளே கொள்ள வேண்டும். அதுவே இவ்விடத்தில் பொருத்தமாக அமையும். நேற்று என்ற தமிழ்ச் சொல்லும் கடந்து விட்டவைகளைக் குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

"நேற்று எப்படி இருந்தான்? இன்று எப்படி இருக்கிறான்?' என்று தமிழ் வழக்கில் பயன்படுத்துவதைப் பார்க்கிறோம். இந்த “நேற்றுக்கு” 24 மணி நேரத்திற்கு முந்திய நாள் என்று பொருளில்லை என்பதை நாம் அறிவோம்.
இதைப் போன்று அரபி மொழியில் "அம்ஸி' என்ற சொல் ஒரு இரவு கடந்த நாளையும் குறிக்கவும், பொதுவாகக் கடந்து விட்ட காலத்தை குறிக்கவும் பயன்படுத்தப்படுகிறது.

இதன் அடிப்படையில் இரவில் பிறை பார்த்தவர்கள் ஒரு இரவைக் கடந்து வந்து கூறியுள்ளதால் "அம்ஸி' நேற்று என்று பயன்படுத்தியுள்ளனர்.

இங்கே இவர்களுக்கு சான்று எதுவும் இல்லை.


அடுத்ததாக மற்றுமொரு ஹதீஸை பஜர் தான் நாளின் துவக்கம் என்பதற்கு சான்று எனக்கூறி வைத்துள்ளனர்.

அந்த ஹதீஸ் .இதோ.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: நீங்கள் உங்கள் மனைவியரை அடிமையை அடிப்பது போல அடிக்க வேண்டாம். (ஏனெனில்,) பிறகு அதே நாளின் இறுதியில் (இரவில்) அவளுடனேயே (நாணமில்லாமல்) உறவுகொள்வீர்கள்.
நூல் : புகாரி (5204)
இந்த ஹதீஸில் இரவை அந்த நாளின் இறுதி.. என்று சொல்லப்பட்டிருப்பதால் ஒரு நாளின் துவக்கம் பஜர் தான் என்று வாதிடுகின்றனர்.

இதுவும் நுனிப்புல் மேய்வதால் கிடைத்திருக்கும் முடிவே !

இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஒரு போதும் ஆதாரமாகாது. இங்கே இறுதி என்று கூறப்படுவது இஷாத் தொழுகைக்குப் பிறகு படுக்கைக்குச் செல்லும் நேரம்தான். வேண்டுமானால் இரவு பத்து மணிக்கு பிறகு 11 மணிக்கு நாளின் துவக்கம் என்று தான் இவர்கள் கூறவேண்டும்.

இங்கே இறுதி என்று கூறப்படுவதின் உண்மையான பொருள் ஒரு மனிதன் கண்விழித்ததிலிருந்து அவன் இறுதியாக தூங்கச் செல்லும் நேரம் என்ற கருத்தில் தான்.

ஒரு பள்ளிக் கூடம் காலை எட்டு மணிக்கு ஆரம்பமாகி மாலை 5 மணிக்கு முடிகிறதென்றால் கடைசி வகுப்பை அந்த நாளின் இறுதி வகுப்பு என்று கூறுவார்கள். இதனால் மாலை ஐந்து மணிதான் நாளின் கடைசி என்றாகி விடாது.

ஒரு வருடம் ஜனவரி மாதம் தான் ஆரம்பமாகிறது என்று நாம் அறிவோம். ஆனால் பள்ளிக்கூடத்தில் பாட நாட்கள் மார்ச் மாதத்தில் முடிவடையும் போது அதனை வருடத்தின் கடைசி நாள் என்பார்கள்.

இங்கே கவனிக்க வேண்டியது மார்ச் என்பது வருடத்திற்கே கடைசி அல்ல. மாறாக அந்தப் பள்ளியின் ஆரம்ப பாட நாட்களை கவனிக்கும் போது அது பாடநாட்களுக்கு வருடக் கடைசியாக இருக்கும்.

அது போன்று இங்கு ஒரு மனிதன் விழிப்பது அவனுக்கு ஆரம்பம், அவன் மீண்டும் படுக்கைக்குச் செல்வது அவனுக்கு கடைசி. இதன் அடிப்படையில்தான் இங்கே நாளின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.

இதே ஹதீஸ் அஹ்மதில் பின்வருமாறு இடம் பெற்றுள்ளது.
مسند أحمد بن حنبل (4/

17)
16269 - حدثنا عبد الله حدثني أبي ثنا سفيان بن عيينة عن هشام عن أبيه عن عبد الله بن زمعة وعظهم في النساء وقال : علام يضرب أحدكم امرأته ضرب العبد ثم يضاجعها من آخر الليل
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.
நூல் அஹ்மத் (16269)

இரவின் கடைசி ஃபஜ்ர் வரை உள்ளது என்பதுதான் சரியானது ஆனால் இங்கே இரவில் தூங்கச் செல்லும் நேரத்தை இரவின் கடைசி என்று கூறப்பட்டுள்ளது.

இதிலிருந்தே இந்த ஹதீஸ் நாளின் துவக்கத்தைப் பற்றிக் கூறப்படவில்லை. மாறாக ஒரு மனிதன் தூங்கச் செல்லும் கடைசி நேரத்தைப் பற்றி குறிப்பிடுகிறது என்பதை தெளிவாக அறிந்து கொள்ளலாம்.

இதே செய்தி பின்வருமாறும் இடம் பெற்றுள்ளது.

مسند أحمد بن حنبل (4/ 17)
16266 - قال حدثنا عبد الله حدثني أبي ثنا وكيع عن هشام عن أبيه عن عبد الله بن زمعة قال : سمعت النبي صلى الله عليه و سلم يذكر النساء فوعظ فيهن وقال علام يضرب أحدكم امرأته ولعله ان يضاجعها من آخر النهار أو آخر الليل قال
تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

உங்களில் ஒருவர் தன்னுடைய மனைவியை அடிமையை அடிப்பதைப் போன்று எதற்காக அடிக்க வேண்டும். பிறகு பகலின் கடைசியில் அல்லது இரவின் கடைசியில் அவளுடனேயே உறவு கொள்வீர்கள்.
நூல் அஹ்மத் (16266)

பகலின் கடைசி , அல்லது இரவின் கடைசி என்று வந்துள்ளது. பகல் இரவு ஆகியவற்றில் எது முதலாவது என்பது கூறப்படவில்லை. எனவே இந்தச் செய்தி நாளின் ஆரம்பம் ஃபஜ்ர் என்பதற்கு ஒரு போதும் ஆதாரம் ஆகாது.

அடுத்ததாக, 17:12 இறை வசனமும் நாளின் துவக்கம் பஜ்ர் என்று சான்று பகர்கிறது என்று கூறி, தங்கள் தரப்பிலும் ஆதாரங்கள் வைக்கத்தான் செய்கிறோம் என்று காட்ட முயற்சிக்கிறது இந்த கூட்டம்.

இவர்கள் நிஜமாகவே சுய அறிவுடன் தான் இதை எழுதுகிறார்களா அல்லது பிறை, பிறை, கணிப்பு, ஆய்வு, விஞ்ஞானம், மெய்ஞானம் என்று தூக்கத்திலும் அதையே சிந்தித்து (ஆம், இவர்களுக்கென்று உருப்படியான வேறு எந்த மார்க்க தாவாப்பணிகளும் கிடையாதே) சிந்தனை மழுங்கிப் போனதா என்று நிஜமாகவே நாம் சந்தேகம் கொள்கிறோம்.

இவர்கள் சுட்டிக்காட்டும் வசனத்திற்கும் நாளின் துவக்கத்திற்கும் ஏதாவது தொடர்பு உள்ளதா?
இரவையும், பகலையும் இரண்டு சான்றுகளாக்கினோம். உங்கள் இறைவனிடமிருந்து அருளைத் தேடவும், ஆண்டுகளின் எண்ணிக்கையையும், காலக் கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காகவும் இரவின் சான்றை ஒளியிழக்கச் செய்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம். ஒவ்வொரு பொருளையும் நன்கு தெளிவு படுத்தியுள்ளோம். 17:12
இது தான் இவர்கள் சுட்டிக்காட்டும் வசனம்.

இரவின் சான்றைக் குறைத்து பகலின் சான்றை வெளிச்சமாக்கினோம் என்று வருகிறது. ஆகவே ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிவதற்கு பகலின் சான்றை வெளிச்சமாக்கியதாக அல்லாஹ் சொல்வதிலிருந்து பகல் தான் நாளின் துவக்கம் என்று இவர்களது ஏழாவது அறிவுக்கு எட்டுகிறதாம்.

.அதை விட, தங்களது இந்த மலட்டு சிந்தனை எப்படி தோன்றியது என்பதை விளக்க, அல்லாஹ்வின் மீதே பொய் கூறி இட்டுக்கட்டுகின்றனர் என்பதே இங்குள்ள உச்சகட்ட ஹைலைட் !

அதாவது, ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிய வேண்டும் என்று அல்லாஹ் கூறி விட்டான்.

அல்லாஹ் இப்படி மொட்டையாக சொல்வானா?? ஆண்டுகளின் எண்ணிக்கையையும் காலக்கணக்கையும் அறிய வேண்டும் என்றால் எப்படி அறிவது என்பதையும் அல்லாஹ் சொல்வான். அது தான் பகலிலிருந்து கணக்கை துவங்குவது... அதனால் தான் பகலின் அத்தாட்சியை வெளிச்சமாக்கினோம் என்கிறான்...
என்று,..அல்லாஹ் சொல்லாத செய்திகளை இவர்களாக திணித்து அல்லாஹ்வின் மீதே பொய்யுரைக்கிறார்கள் என்றால் தங்களது நிலையை நியாயப்படுத்த எத்தகைய தகுதிக்கும் இறங்குவார்கள் என்பது இதன் மூலம் நிரூபணம் ஆகவில்லையா?
நாளின் துவக்கத்தைச் சொல்வதற்கா அல்லாஹ் இந்த வசனத்தை இறக்கியுள்ளான் ?
காலக்கணக்கை அறிவதற்கு சூரியனை அல்லாஹ் படைத்திருக்கிறான் என்கிற விஷயத்தைச்
சொல்வதற்கு இறக்கப்பட்ட வசனம் தான் இது.

ஆகவே தான் பகலைத் தந்திருக்கிறேன் என்று சொல்லாமல் பகலின் சான்றைத் தந்திருக்கிறேன் என்கிறான். பகலின் சான்று என்பது சூரியன். சூரியனை பிரகாசமாக்கியதன் மூலம் வியாபாரம், இன்னபிற தொழில்கள் என அல்லாஹ்வின் அருளை தேடி செல்லலாம், அத்துடன் காலத்தையும் அறிந்து கொள்ளலாம்.

இந்த கருத்து தான் இவ்வசனத்திலிருந்து கிடைக்குமே தவிர, பகல் தான் முதன்மை என்பதற்கோ, ஃபஜர் தான் ஆரம்பம் என்பதற்கோ இவ்விடம் எந்த சான்றுமில்லை !

இவர்கள் வரிந்து கட்டிக்கொண்டு எழுதிய 24 பக்க நோட்டீசில், நாளின் துவக்கம் ஃபஜ்ர் தான் என்பதற்கு சான்றாக இவர்கள் வைத்த ஆதாரங்கள் மேலே உள்ள மூன்று தான். அந்த மூன்றின் லட்சணத்தை நாம் பார்த்துக் கொண்டோம்.

அது போல், நமது நிலைபாடான மக்ரிப் தான் நாளின் துவக்கம் என்கிற கருத்தை முறியடிக்கிறேன் பேர்வழி என்று புகுந்த இவர்கள், இரண்டு செய்திகளை பலகீனம் என்று அறிவிப்பு செய்து செய்து விட்டு, நாம் அடுக்கிய ஏனைய சான்றுகள் குறித்து வாய் திறக்காத அவலநிலையையும் நாம் கண்டோம்.

கைவசம் சரக்கு இல்லையென்றாலும் எதையாவது உளறி பக்கங்களை நிரப்பி வைத்தால்தான் பாஸ் மார்க்காவது இடுவார்கள் என்று எண்ணுகிற பள்ளிக்கூட மாணவன் போல், 24 பக்கம் நிரப்ப வேண்டும் என்பதற்காக சந்தையில் அழகுக்கு வைத்தும் வருடக்கணக்கில் விலை போகாத பழைய அழுகிய கேள்விகளை தூசு தட்டி மீண்டும் பட்டியலிட்டுள்ளனர்.

பொதுக்கூட்டங்கள், துண்டு பிரசுரங்கள், இணையதளங்கள், நூல்கள், கேள்வி பதில்கள் என பல வருடங்களாக எந்தெந்த கேள்விகளுக்கெல்லாம் விளக்கம் கொடுத்து வருகிறோமோ அந்தக் கேள்விகளையே சுருதி மாறாமல் அப்படியே இங்கு ஒப்புவிக்கிறார்கள் என்றால், இவர்களை மிஞ்சிய ஒரு அறிவாளிகள் வேறு எவராவது இருக்க முடியுமா?

மடமை வாதம்

இவர்களது அழுகிப்போன அந்த கேள்விகளையும் அவைகளுக்கான விடைகளையும் கீழே தருகிறோம்.

நாளின் துவக்கம் தொடர்பாக நாம் வைத்த லைல் என்பதற்கு இரவு என்று மொழியாக்கம் செய்திருந்தோம். இதை விமர்சனம் செய்த இந்த கூட்டம், லைல் என்றால் நாள் என்றல்லவா பல ஹதீஸ்களில் அர்த்தம் உள்ளது, நீங்கள் ஏன் இரவு என்று மொழியாக்கம் செய்துள்ளீர்கள் ? என்று வழக்கமான கேள்வியைக் கேட்டுள்ளது.

நமது பதில்

எந்த அரபி மொழி அகராதியிலும் ”லைல்” என்ற சொல் ”நாள்” என்ற பொருளில் பயன்படுத்தப்படவில்லை.

”லைல்” என்ற சொல்லுக்கு ”நாள்” என்று பொருள் இருப்பதாக்க் கூறுவது அறியாமை ஆகும்.
لمعجم الوسيط - (ج 2 / ص 619)
( الليل ) ما يعقب النهار من الظلام وهو من مغرب الشمس إلى طلوعها وفي لسان الشرع من مغربها إلى طلوع الفجر ويقابل النهار

”லைல்” என்பது பகலைத் தொடர்ந்து வரும் இருள் ஆகும். ”லைல்” (இரவு) என்பது சூரியன் மறைந்ததிலிருந்து அது உதிக்கும் வரை ஆகும். (இஸ்லாமிய) ஷரியத்தின் மொழிவழக்கிலே ”சூரியன் மறைந்ததிலிருந்து ஃபஜ்ர் உதயமாகும் வரை ஆகும். ”லைல்” (இரவு) என்பது ”நஹார்” (பகல்) என்பதற்கு எதிர்ச் சொல் ஆகும்.
நூல் அல் முஃஜமுல் வஸீத் பாகம் 2 பக்கம் 619
المعجم الوسيط - (ج 2 / ص 620)
( الليلة ) واحدة الليل ( ج ) ليال وليائل

”லைலத்” என்பதாகிறது ”லைல்” என்பதற்கு ஒருமையாகும். இதன் பன்மைச் சொல் ”லயால்” ”லயாயில்” என்பதாகும்.
நூல் அல் முஃஜமுல் வஸீத் பாகம் 2 பக்கம் 619

ஒருவர் ”நான் இரண்டு இரவுகளாகத் தூங்கவில்லை” என்று கூறுகிறார் என வைத்துக் கொள்வோம்.

இந்த வாசகத்தின் பொருள் இரண்டு இரவுகள் அவர் தூங்கவில்லை என்பதுதான்.
இரண்டு இரவுகள் என்பது தொடர்ச்சியாக வராது. ஒரு இரவிற்கு அடுத்து ஒரு பகல் அடுத்துதான் மற்றொரு இரவு வரும்.

இதன் அடிப்படையில் அதில் நாள் என்ற கருத்து அடங்கியுள்ளது என்று கூறலாம். அதாவது இரண்டு நாட்களுக்குரிய இரண்டு இரவுகளில் அவர் தூங்கவில்லை என்பதுதான் அதன் பொருள். மாறாக ”லைல்” என்பதற்கு ”நாள்” என்று பொருள் இருப்பதாகக் கூறுவது முட்டாள் தனமாகும்.
உதரணமாக ஒருவர் ”நான் நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன்” எனக் கூறுகிறார். நெல்லையிலிருந்து சென்னை வரை செல்லும் போது அவர் தாம்பரத்தை தாண்டித்தான் செல்ல முடியும். எனவே ”நெல்லையிலிருந்து சென்னை வரை சென்றேன்” என்ற வாசகத்தில் தாம்பரமும் உள்ளடங்கியுள்ளது என்றுதான் விளங்கிக் கொள்ள முடியும். மாறாக ”சென்னை” என்ற வார்த்தைக்கே ஒருவர் ”தாம்பரம்” என்றுதான் பொருள் என ஒருவர் கூறினால் அது முட்டாள் தனமானதாகும்.

அது போன்று தான் ”மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் ” என்றால் நாற்பது இரவு என்பது தொடர்ச்சியாக வராது. ஒவ்வொரு இரவும் ஒரு பகலைத் தாண்டித்தான் வரும் என்ற அடிப்படையில் இதில் நாற்பது நாள் அடங்கியுள்ளது.

அதாவது நாற்பது நாட்களில் அடங்கியுள்ள நாற்பது இரவுகளை அல்லாஹ் வாக்களித்தான் என்று கூறலாமே தவிர ”இரவு” என்பதின் பொருளே ”நாள்” என்பது தவறானதாகும்.

மேலும் ” ”மூஸா நபிக்கு அல்லாஹ் நாற்பது இரவுகளை வாக்களித்தான் ” என்ற வாசகத்தின் மூலம் மூஸா நபிக்கும், இறைவனுக்கும் உள்ள சம்பாசனைகள் இரவில் தான் நடந்ததே தவிர பகலில் நடந்தது என்ற பொருள் வராது.

ஒருவர் ”நான் நாற்பது இரவுகள் வேலை பார்த்தேன்” என்று சொன்னால் அவர் பகலில் வேலை பார்க்கவில்லை என்பதுதான் உண்மை. அதே நேரத்தில் நாற்பது இரவுகள் என்று சொல்வதிலிருந்து அதில் ஒவ்வொரு இரவிற்குரிய பகலும் உள்ளடங்கியிருப்பதால் நாற்பது நாட்களிலுள்ள நாற்பது இரவுகள் என்று தான் விளங்கிக் கொள்ள வேண்டுமே தவிர ”இரவு” என்பதற்கு ”நாள்” என்ற பொருள் உள்ளதாகக் கூறுவது தவறானதாகும்.

லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் பின்வரும் வசனங்களின் பொருளே தலைகீழாக புரண்டு விடும்.

நோன்பின் இரவில் உங்கள் மனைவியரிடம் கூடுவது உங்களுக்கு அனுமதிக்கப்பட்டுள்ளது.
அல்குர்ஆன் 2 : 187

இங்கே லைலத் என்பதற்கு இரவு என பொருள் செய்தால் ”நோன்பின் நாளில் மனைவியுடன் கூடுவது அனுமதிக்கப்பட்டுள்ளது என்று வந்து விடும்.

நபி (ஸல்) அவர்கள் நோய்வாய்ப்பட்ட போது ஓர் இரவோ அல்லது இரண்டு இரவுகளோ (இரவுத் தொழுகைக்காக) அவர்கள் எழவில்லை.
அறிவிப்பவர் : ஜுன்துப் பின் அப்தில்லாஹ் (ரலி)
புகாரி 1124

இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் நபியவர்கள் ஒரு நாள் அல்லது இரண்டு நாள் தொழுகைக்கு எழவில்லை என்ற பாரதூரமான கருத்து வரும்.
இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்கள் தமது குடும்பத்திலுள்ள பலவீனர்களை முஸ்தலிஃபாவில் தங்கும் இரவில் (மினாவுக்கு) முன் கூட்டியே அனுப்பிவைத்தார்கள். அப்படி அவர்கள் அனுப்பி வைத்தவர்களில் நானும் ஒருவன். புகாரி 1678

இங்கே முஸ்தலிஃபா இரவு என்பதற்கு முஸ்தலிஃபா நாள் என்று பொருள் செய்தால் ஹஜ்ஜின் வணக்கமே தலைகீழாகிவிடும்.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

எவர் நம்பிக்கை கொண்டவராகவும் நன்மையை எதிர்பார்த்தவராகவும் லைலத்துல் கத்ர் இரவில் நின்றுவணங்குகிறாரோ அவரது முந்தைய பாவங்கள் மன்னிக்கப்பட்டுவிடும்.
இதை அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.
புகாரி 35

இங்கே லைலத் என்பதற்கு நாள் எனப் பொருள் செய்தால் இரமலான் பகலிலும் நின்று தொழலாம் என்று வரும். இது நபியவர்களின் நடைமுறைக்கு நேர் எதிரானதாகும்.

அனஸ் (ரலி) அவர்கள் கூறியதாவது:

நபி (ஸல்) அவர்களின் தோழர்களில் இருவர் நபி (ஸல்) அவர்களிடமிருந்து (விடைபெற்று) இருள் கப்பிய ஓர் இரவில் (தம் இல்லங்களுக்கு) நடந்துசென்றனர். அவ்விருவருடனும் இரு விளக்குகளைப் போன்றவை அவர்களுக்கு முன்னால் ஒளி வீசிச் சென்றன. அவர்கள் (வழியில்) பிரிந்து சென்றபோது, அவர்கள் தம் வீட்டாரிடம் போய்ச் சேரும் வரை ஒவ்வொருவருடனும் ஓர் ஒளி (மற்றறொன்றை விட்டுப் பிரிந்து அவர்களுடன்) சென்றது. புகாரி (465)

இங்கே லைலத் என்பதற்கு நாள் என்று பொருள் செய்தால் இருள் கப்பிய ஒரு நாள் என்று வரும்.
ஆக, லைல் என்பதன் நேரடி அர்த்தம் இரவு தானே தவிர இவர்கள் கூறுவது போல் பகல் இல்லை என்பது நிரூபிக்கப்பட்டு விட்டது.

மடமை வாதம்

இவர்களது அழுகிப்போன கேள்விப்பட்டியலில் அடுத்ததாக வருவது,
சவுதிக்கும் இந்தியாவுக்கும் 2 1/2 மணி நேர வேறுபாடு இருக்கும் போது பிறை கணக்கில் மட்டும் 21 1/2 மணி நேர வேறுபாடு எப்படி வந்தது? என்கிற கேள்வி.

நமது பதில்

அவர்கள் பிறை பார்த்ததன் அடிப்படையில் அவர்களுக்கு மாதம் துவங்கியது, நாம் பிறை பார்த்ததன் மூலம் நமக்கு மாதம் துவங்கியது, பிறை பார்க்க வேண்டும் என்கிற ஹதீஸை செயல்படுத்தினால் இந்த வேறுபாடு வரத்தான் செய்யும்.

சவுதியில் பிறை தென்படும் போது இந்தியாவில் பிறை தென்படவும் செய்யலாம், தென்படாமலும் போகலாம். தென்படாமல் போகுமேயானால் அதே பிறையானது மறுநாள் மக்ரிபின் போது நமக்கு தென்படும். அந்த வகையில் வேறுபாடு வரத்தான் செய்யும்.

மடமை வாதம்

அப்படியே வேறுபாடு என்றாலும் நேர வித்தியாசம் தானே ஏற்பட வேண்டும், ஒரு நாள் எப்படி மாறுபடும்? என்கிற அடுத்த கேள்வி இவர்களிடமிருந்து எழுகிறது.

நமது பதில்

இதற்கு, குறைப் (ரலி) அவர்கள் அறிவிக்கின்ற சிரியா - மதினா தொடர்பான ஹதீஸே இவர்களுக்கு பதிலாகும். சிரியாவில் வெள்ளிக்கிழமை மாதம் துவங்கியதையும் மதினாவில் சனிக்கிழமை தான் துவங்கியது என்பதையும் அந்த ஹதீசிலிருந்தே அறிந்து கொள்ளலாம்.
முக்கியமாக, இந்த வேறுபாடு நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் அங்கீகரித்த வேறுபாடு தான் எனவும் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்கள் விளக்கியதிலிருந்து மாதம் பிறப்பதில் நாள் வேறுபாடு ஏற்படுவது மார்க்கத்தில் அனுமதிக்கப்பட்டது தான் என்பதை அறிந்து கொள்ளலாம்.

மடமை வாதம்

சூரியனை கணக்கிட்டு முடிவு செய்வீர்களாம், சந்திரனை மட்டும் கணக்கிட மாட்டீர்களோ? என்பது இவர்களது அடுத்த கேள்வி.

நமது பதில்

இந்த கேள்வியை கேட்டு விட்டு, சூரியனை நபிகள் நாயகம் (ஸல்) அவர்களும் கணக்கிட்டிருக்கிறார்கள் என்பதற்கு நம் சார்பாக அவர்களே ஆதாரங்களுடன் விளக்கவும் செய்துள்ளனர் என்பது உச்சகட்ட வேடிக்கை.

நம் சார்பாக இவர்களே அளித்திருக்கும் சான்று இதோ..
அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.

நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது. புஹாரி 1959

நமது பதில்

மேற்கண்ட ஹதீஸ் இவர்களுக்கு சாதகமா அல்லது நமது நிலைபாட்டுக்கு ஆதாரமா?
மேகம் சூழப்பட்ட தினம் ஒன்றில் சூரியன் கண்களுக்குத் தெரியவில்லை. சூரியனை மேகம் மறைத்து விட்டதால் அசர் நேரமே தொடர்கிறது என்று சொல்லாமல், அவர்களாக மக்ரிப் நேரம் எதுவாக இருக்கும் என்பதை கணித்து முடிவு செய்து நோன்பு திறந்து விடுகிறார்கள்.

பிறை பற்றி சொல்கின்ற போது மேகம் காரணமாக வானில் பிறை மறைக்கப்படுமேயானால், மாதத்தின் இறுதியைக் கணித்து முடிவு செய்யுங்கள் என்று சொல்லாமல் முந்தைய மாதமே தொடர்கிறது என்று கூறினார்கள்.

வேறுபாடு தெளிவாகத் தான் உள்ளது, நம் சார்பாக சான்றுகளை வைத்து இவர்களே அந்த வேறுபாட்டையும் விளக்கி, தங்கள் விஞ்ஞான (?) அறிவை நிரூபித்திருக்கிறார்கள்.

மடமை வாதம்

தொடர்ந்து, சூரியன் விஷயமாக தொழுகை நேரங்களை முடிவு செய்ய நிழலை வைத்து அறிந்து கொண்டார்கள். இப்போது ஏன் முன்கூட்டியே கணக்கிட்டு வைத்திருக்கிறீர்கள்? என்று அடுத்த பழைய சரக்கொன்றை கேள்வியாக வடித்துள்ளனர்.

நமது பதில்

இது போன்ற சொத்தை வாதங்களை இவர்கள் மீண்டும் மீண்டும் எழுப்பி வருவதால் இவர்களது முரண்பாடுகளை விளக்கும் வண்ணம், இது குறித்து சற்று விளக்கமாகவே பார்ப்போம்.
முதலில், இதற்கு பதில் சொல்வதற்கு முன்னால், இது போன்ற கேள்விகளை எழுப்புவோருக்கென்று எந்த நிலைபாடாவது இருக்கிறதா என்பதை மக்களுக்கு அறியத்தர விரும்புகிறோம்.

ஹதீஸில் சூரியனையும் கணிக்காமல் கண்ணால் பார்க்க தானே சொல்லி இருக்கிறது, நீங்கள் ஏன் கணிக்கிறீர்கள் என்று கேட்பதன் மூலம் இவர்கள் ஒப்புக்கொள்ளும் ஒரு விஷயம் என்ன? நாங்கள் சூரியனை கணிக்கத்தான் செய்கிறோம் என்பதாகும்.

அதாவது, ஹதீஸில் கணிக்க்க் கூடாது என்று தான் உள்ளதாம், ஆனால் நாங்கள் கணிப்போம் என்று, ஹதீஸுக்கு முரணாக நாங்கள் நடப்போம் என்று ஒப்புக்கொள்கிறார்கள்.

ஆனால், நம்மை நோக்கி, நீங்கள் மட்டும் ஹதீஸுக்கு முரணாக நடக்கலாமா? என்கிற கேள்வியைக் கேட்க வேண்டும் என்பது தான் இவர்களது ஒரே குறிக்கோள் என்பதால் தாங்கள் இந்த ஹதீஸை மறுத்து செயல்படுவதை வெளிப்படையாக ஒப்புக்கொள்வதற்கு கூட சங்கூஜம் அடைகிறார்களல்லர்.

எப்போதுமே ஒரேயொரு இறை வசனத்தை அல்லது ஹதீஸை வைத்து எந்தச் சட்டமும் எடுக்க கூடாது. ஒரு செய்திக்கு துணையாக அல்லது விளக்கமாக வேறு ஏதேனும் செய்திகள் இருக்குமானால் இரண்டையும் இணைத்து தான் பொருள் செய்ய வேண்டும், இரண்டுக்கும் அர்த்தம் கொடுக்கின்ற வகையில் தான் சட்டம் எடுக்க வேண்டும். இது மார்க்கத்தை அணுக வேண்டிய சாதாரண முறை.

மது அருந்தி விட்டு தொழாதீர்கள் என்று ஒரு இறை வசனம் உள்ளது. அதை எடுத்து வைத்துக்கொண்டு, பார்த்தீர்களா, அல்லாஹ் தொழும் போது மட்டும் தான் மது அருந்தாதீர்கள் என்கிறான், இதன் மூலம் தொழுகை அல்லாத நேரங்களில் மது அருந்துவது கூடும் என்று , இந்த ஒரு வசனத்தை வைத்து மட்டும் சட்டம் இயற்றக்கூடாது. காரணம், இந்த சட்டம் ஒரு குறிப்பிட்ட காலகட்டத்தில் இறங்கியது. இதன் பிறகு, பொதுவாக எல்லா நேரங்களிலும் மது அருந்துவது தடை என்கிற வசனமும் வந்து விட்ட காரணத்தால் முந்தைய வசனம் தற்காலிகமான சட்டமாக இருந்தது என்று கருத வேண்டும்.

அது போல, தொழுகை நேரத்தை அறிய சூரியனைக் கண்டு அதனால் ஏற்படும் நிழலை வைத்து மட்டும் முடிவு செய்யுங்கள் என்கிற ஒரேயொரு செய்தி மட்டும் தான் ஒட்டு மொத்த குர்ஆன் ஹதீஸில் இருக்கிறது என்றால், இன்றைக்கு நாம் சூரியனைக் கண்ணால் கண்டு தான் முடிவு செய்தாக வேண்டும். ஆனால், சூரியன் விஷயமாக இந்த ஒரு செய்தி மட்டும் இல்லை, நிழலை பார்த்து முடிவு செய்வது என்கிற ஒரேயொரு வழிகாட்டுதல் மட்டுமில்லை, இன்னும் ஏராளமான சட்டங்கள் உள்ளன.

தொழுகை நேரங்களை பற்றியும் குறிப்பாக நோன்பு திறக்கும் நேரமான மக்ரிப் நேரம் பற்றியும் பல்வேறு வார்த்தை அமைப்புகளை கொண்டு ஹதீஸ்கள் உள்ளன.

மக்ரிப் தொழுகையின் நேரம் சூரியன் மறைந்தது முதல் செம்மை மறையும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076

இஷாத் தொழுகையின் நேரம் இரவின் பாதி வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1074

அஸ்ர் தொழுகையின் நேரம் சூரியன் பொன்னிறமாகி அதன் நுனி மறைவதற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1076

ஒவ்வொரு பொருளின் நிழலும் அப்பொருளின் அளவுக்கு வந்த போது அஸ்ரை தொழுவித்தார்கள்.

அறிவிப்பவர்: இப்னு அப்பாஸ் (ரலி) நூல்: திர்மிதீ 138

லுஹர் தொழுகையின் நேரம் சூரியன் உச்சி சாய்ந்ததிலிருந்து ஒரு மனிதனின் நிழல் அவனது உயரம் அளவுக்கு ஆகும் வரை, அதாவது அஸ்ர் நேரத்திற்கு முன்பு வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறையிலிருந்து சூரியன் உதிக்கும் வரை உண்டு. 'சுப்ஹுத் தொழுகையின் நேரம் வைகறை நேரம் முதல் சூரியன் உதிக்கும் வரை உண்டு' என்று நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்.
அறிவிப்பவர்: அப்துல்லாஹ் பின் அம்ர் (ரலி) நூல்: முஸ்லிம் 1075

இது போன்ற எல்லா செய்திகளும் சூரியனை அடிப்படையாக கொண்டு நேரத்தை முடிவு செய்வது பற்றி தான் பேசுகிறது. ஆனால் இவற்றில் கண்ணால் கண்டு முடிவு செய்யுங்கள் என்று சொல்லப்படவில்லை,
மாறாக,

"அந்த நேரம் வந்தால்" அல்லது அதன் நிழல் இந்த அளவிற்கு வந்தால்" என்று பொதுவாகவே சொல்லப்பட்டுள்ளது.

அப்படியானால் அந்த நேரம் வந்ததை எப்படி வேண்டுமானாலும் அறிந்து கொள்ளலாம் என்பது பொருள். அந்த நிழலின் அளவை எப்படி வேண்டுமானாலும் முடிவு செய்து கொள்ளலாம் என்பது பொருள்.

மேலும், நோன்பு திறக்கும் நேரத்தை பற்றி சொல்கிற மற்றொரு செய்தியில் "சூரியன் மறைந்து விட்டால்" என்றே இருக்கிறது, மறைந்ததை கண்டால் என்று சொல்லப்படவில்லை.

இரவு வந்து, பகல் போய், சூரியன் மறைந்துவிட்டால் நோன்பாளி நோன்பு துறப்பார்” என்று அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

அறிவிப்பவர்: உமர் (ரலி)
நூல்: முஸ்லிம் 2006

அதே சமயம், இது போல பிறை குறித்து, பிறையை கண்டு நோன்பு வையுங்கள் என்று ஒரு பக்கமும், பிறை உதித்தால் நோன்பு வையுங்கள் என்று இன்னொரு பக்கமும் என பல்வேறு வாசக அமைப்புடன் ஹதீஸ்களில் இருக்குமானால் அப்போது, சூரியனுக்கு என்ன நிலைபாட்டை சொல்கிறோமோ அதையே தான் பிறைக்கும் எடுத்திருப்போம்.

ஆனால் பிறை பற்றி சொல்லப்படும் எந்தச் செய்தியிலும் "பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள்" என்று சொல்லப்படவில்லை, பிறையைக் கண்டால் இதை செய்யுங்கள் என்று மட்டும் தான் உள்ளது.

பிறை உதித்தால் இதைச் செய்யுங்கள் என்று சொல்வதற்கும் பிறையைப் பார்த்தால் இதைச் செய்யுங்கள் என்பதற்கும் வேறுபாடு உண்டு.

நிழல் இந்த அளவிற்கு வந்தால் இந்த நேரத்தை முடிவு செய்யுங்கள் என்று சொல்வதற்கும் நிழலை பார்த்து இந்த நேரத்தை முடிவு செய்யுங்கள் என்று சொல்வதற்கும் வேறுபாடு உள்ளது.
ஒன்றை பற்றி ஒரேயொரு விதமாகவும் இன்னொன்றை பற்றி பல்வேறு விதங்களாகவும் சட்டம் சொல்லப்படுமானால் முதலாவது விஷயத்தை அந்த ஒரு விதமாக தான் செய்ய வேண்டும், இரண்டாவதை பல்வேறு வழிகளில் செய்யலாம் என்பது சாதாரண சிந்தனை.

இன்னும் சொல்லப்போனால், இவர்கள் வாதப்படியே பார்ப்பதாக இருந்தாலும் மக்ரிப் நேரத்தை கண்ணால் கண்டு தான் முடிவு செய்ய வேண்டும் என்றால், நபி (ஸல்) அவர்களோ சஹாபாக்களோ கண்ணால் கண்டு முடிவு செய்யாமல் குச்சிகளின் நிழலை பார்த்து தான் அறிந்து கொண்டார்கள். ஹதீஸில் சூரியனைக் கண்டு அல்லது இரவு முன்னோக்கி வருவதைக் கண்டு முடிவு செய்ய சொல்லி இருக்கும் போது அவர்கள் குச்சியின் நிழலை பார்த்து முடிவு செய்தது மார்க்க முரண் என்று இவர்கள் சொல்வார்களா?

மேலும், சூரியன் கண்களுக்கு புலப்படாத மேக மூட்டமான காலகட்டத்தில், சூரியனை கண்ணாலும் காணாமல், நிழல் வைத்தும் தீர்மானிக்காமல் அவர்களே சுயமாக கணித்து முடிவு செய்திருக்கிறார்கள் . இதற்கும் ஹதீஸ்களில் சான்றுகள் உள்ளன.

அதை நம் சார்பாக இவர்களே வைத்து விட்டதை மேலே விளக்கியிருந்தோம்.

இது நிர்பந்தமான நிலை தானே என்று சிலர் கேள்வி எழுப்பலாம். ஆனால் அதுவும் அடிப்படையற்ற கேள்வி. காரணம், இந்த நிர்பந்தமான நிலையில் அவர்கள் சூரியனைக் கணித்து போல பிறை தென்படாத நிர்பந்தமான சூழலில் அவ்வாறு பிறையைக் கணிக்கவில்லை. நாட்களை முழுமைப்படுத்தி கொள்ளவே செய்தார்கள்.

நிர்பந்தமான இரு சூழல்களில் சூரியனுக்கு ஒரு விதமாகவும் பிறைக்கு இன்னொரு விதமாகவும் அவர்கள் செயல்பட்டது, சூரியன் விஷயத்தில் வரம்புகளின்றி செயல்படுவதற்கும், பிறை விஷயத்தில் வரம்புக்கு உட்பட்டு செயல்படுவதற்கும் நபி அவர்கள் காட்டிய முன் மாதிரியாகவே நாம் எடுத்துக்கொள்ள வேண்டுமே அல்லாமல், இது நிர்பந்தத்திற்கு மட்டும் உரியது என்று தனியாக பார்க்க கூடாது, நிர்பந்தம் என்பது காரணம் என்றால் பிறை பற்றிய நிர்பந்தம் வந்த பொழுதும் இதையே அவர்கள் செய்திருக்க வேண்டும், ஆனால் அவ்வாறு அவர்கள் செய்யவில்லை.

மடமைவாதம்

அடுத்ததாக, தங்களது கணிப்பு சித்தாந்தம் தான் சரி என்பதை நிலைநாட்டுவதற்காக எத்தகைய தகுதிக்கும் இவர்கள் இறங்குவார்கள் என்று முன்னரே நாம் சொல்லியிருந்ததை மெய்ப்பிக்கும் வகையில் இவர்கள் வைக்கும் அடுத்த வாதமானது, நபி (ஸல்) அவர்களே தவறு செய்திருப்பதாகவும் அவர்களை விட நாங்கள் தான் சரியாக நடக்கிறோம் என்றும் கூறுகிற இவர்களது அறிவிப்பு !

நபி (ஸல்) அவர்கள் சூரியன் தென்படாத நேரத்தில் கணித்து நேரத்தை முடிவு செய்தார்கள் என்று இவர்களே நம் சார்பாக சான்று ஒன்றை காட்டியுள்ளார்கள் என்று சொன்னோமே, அந்த சான்றை காட்டி விட்டு இவர்கள் அதிலிருந்து வைக்கும் வாதம் என்ன தெரியுமா?

அஸ்மா பின்த் அபீ பக்ர்(ரலி) அறிவித்தார்.
நபி(ஸல்) அவர்கள் காலத்தில் மேகம் சூழ்ந்த ஒரு நாளில் நாங்கள் நோன்பை நிறைவு செய்த பின்னர் சூரியன் தென்பட்டது. புஹாரி 1959

முன்கூட்டியே கணித்துக்கொள்ளும் வசதி கொண்ட இந்தக் காலத்தில் இப்படியொரு நிலை ஏற்படுமா? எனக் கேட்கிறார்கள்.

ஏற்படாது தான்.

நபி காலத்தில் சூரியனை எவ்வாறு கணிப்பது அவர்களுக்கு இயன்றதாக இருந்ததோ அவ்வாறு அவர்கள் கணித்தார்கள். இன்று எது நமக்கு இயலுமோ அதை நாம் செய்யலாம்.

அதே சமயம், பிறையை இயன்ற அளவிற்கு கூட அவர்கள் கணிக்கவில்லை, நாமும் இயன்ற அளவிற்கு கூட கணிக்கக் கூடாது !

குர்ஆன் இது பற்றி என்ன சொல்கிறது என்பதைப் பார்ப்போம்.

சூரியன் விஷயமாக பல்வேறு வழிமுறைகள் உள்ளன என்று ஹதீஸ்கள் இருந்தாலும், குர்ஆனில் சூரியனைக் கணிப்பது கட்டாயம் என்று சொல்லப்பட்டுள்ளது.

(முஹம்மதே!) நீரும், உம்முடன் உள்ள ஒரு தொகையினரும் இரவில் மூன் றில் இரு பகுதிக்கு நெருக்கமாகவும், இரவில் பாதியும், இரவில் மூன்றில் ஒரு பகுதியும் நின்று வணங்குகின்றீர்கள்' என்பதை உமது இறைவன் அறிவான். அல்லாஹ்வே இரவையும், பகலையும் அளவுடன் அமைத்துள்ளான். நீங்கள் அதைச் சரியாகக் கணிக்க மாட்டீர்கள் என்பதையும் அவன் அறிவான். எனவே அவன் உங்களை மன்னித்தான். 73:20

இந்த வசனத்தில் நேரத்தை துல்லியமாக அறிந்து கொள்ள இயலாத நிலையில் நபி (ஸல்) அவர்கள் இருந்தார்கள் எனவும், அது தவறு எனவும், அதை துல்லியமாக்க் கணிக்க அவர்களால் இயலாது என்பதால் அவர்களை தான் மன்னித்ததாகவும் அல்லாஹ் சொல்கிறான்.

துல்லியமாகக் கணிக்காமல் இருப்பது தவறு என்றும், அது இயலாது என்பதால் அல்லாஹ் மன்னித்தான் எனவும் அல்லாஹ் சொன்னால், அதை துல்லியமாக அறிவதற்குரிய ஆற்றலை பெற்றவர்கள் அவ்வாறு கட்டாயம் செய்ய வேண்டும் என்று பொருள்.

ஆக, இறை வசனங்களின் அடிப்படையில் நாம் சிந்திக்கையில், சூரியனை இன்றைய காலகட்டத்தில் கணித்து, துல்லியமான முறையில் நேரத்தை கணிக்க வேண்டும் என்று புரிகிறோம்.

இத்தகைய விதி எதுவும் பிறை விஷயமாக குர்ஆனிலோ ஹதீஸிலோ சொல்லப்படவில்லை எனும் போது, இப்போதும், சூரியனை ஏன் கணிக்கிறீர்கள், அது போல பிறையை ஏன் கணிப்பதில்லை என்கிற பாமரத்தனமான கேள்விகள் அர்த்தமற்றதாகின்றன.

குர்ஆன், சூரியனைக் கணித்துத் தான் முடிவு செய்ய வேண்டும் என்று கட்டளையிட்டு விட்ட பிறகு, இந்தக் கட்டளைக்கு முரணில்லாத வகையிலும், இது தொடர்பாக மேலே நாம் சுட்டிக்காட்டிய இன்னபிற ஹதீஸ்களுக்கு அர்த்தம் கொடுக்கின்ற வகையிலும் தான், இவர்கள் சுட்டிக்காட்டும் நோன்பு திறத்தல் பற்றிய ஹதீஸைப் புரிய வேண்டும்.

மேலும், ஹதீஸில் இரவு வருவதைக் கண்டால் நோன்பை விடுங்கள் என்று சொல்லப்பட்டாலும், இந்த நோன்பை விடுதல் தொடர்பாக குர்ஆனிலும் சட்டம் உள்ளது.

ஆனால், அதில், ஹதீஸில் சொல்லப்பட்டது போல இரவு முன்னோக்கி வருவதைக் கண்ணால் கண்டு முடிவு செய்யுமாறு சொல்லப்படவில்லை.

இரவு வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள்! 2:187

இரவு வரை முழுமைப்படுத்த வேண்டும், என்று தான் குர்ஆன் சொல்கிறதே தவிர இரவு வருவதை காண்பது வரை நோன்பை முழுமைப்படுத்துங்கள் என்று சொல்லப்படவில்லை. இரவு வருவதை எந்த வகையிலும் தீர்மானித்துக் கொள்ளலாம் என்பது இதன் பொருள்.

ஆக, எந்த அடிப்படையிலும் சூரியனுக்குரிய பார்வை வேறு சந்திரனுக்குரிய பார்வை வேறு என்பது சந்தேகத்திற்கிடமில்லாத வகையில் நிரூபணம் ஆகின்றது.

அனைத்திற்கும் முத்தாய்ப்பாக, பிறையைக் கணிக்கலாம், கணக்கிடலாம், சிந்திக்கலாம், ஆய்வு செய்யலாம் என்பதற்கு திருக்குர்ஆன் 55:5 10:5 மற்றும் வசனங்களை மட்டுமே இவர்கள் தங்களது ஆதாரமாக சமர்ப்பிக்கின்றனர்.

சூரியனும், சந்திரனும் கணக்கின் படி இயங்குகின்றன (55:5)

ஆண்டுகளின் எண்ணிக்கையையும், (காலக்) கணக்கையும் நீங்கள் அறிந்து கொள்வதற்காக அவனே சூரியனை வெளிச்சமாகவும், சந்திரனை ஒளியாகவும் அமைத்தான். சந்திரனுக்குப் பல நிலைகளை ஏற்படுத்தினான். (10:5)

சந்திரன் கணக்கின் படி இயங்குகின்றது என்பதால் நாம் 3000 வருடக் காலண்டரையும் இன்றே அடிக்க வேண்டும் என்று கூறுவது அறிவுள்ளவர் ஏற்றுக் கொள்ளும் வாதமா??
ஆண்டுகளின் கணக்கை அறிந்து கொள்ள முடியும் என்று சொல்வதற்கும், அல்லது சந்திரன் கணக்கின் படி இயங்குகிறது என்று சொல்வதற்கும் கட்டாயம் முன்கூட்டியே அறிந்து கொள்ள வேண்டும் என்பதற்கும் வேறுபாடு தெரியாதவர்கள் தான் இந்த ஹிஜ்ரா கூட்டத்தினர்.
ஆண்டுகளின் எண்ணிக்கையை அறிய சூரியனும் உதவுகிறது, சந்திரனும் உதவுகிறது.
முன்கூட்டியே கணக்கிட்டாலும், இந்த வசனத்தை நீங்கள் மீறியவர்கள் ஆக மாட்டீர்கள். நான் ஒவ்வொரு மாதமும் பிறையைப் பார்த்தாலும் இந்த வசனத்தை மீறியவர்கள் ஆக மாட்டோம். முன்கூட்டியே காலண்டர் அடிப்பவர்களுக்கும் சந்திரன் காலம் காட்டும், ஒவ்வொரு மாதமும் தலைப்பிறையை கண்ணால் கண்டு மாதங்களை தீர்மானிக்கும் எங்களுக்கும் சந்திரன் காலம் காட்டிக்கொண்டு தான் இருக்கிறது.

அப்படியானால் இது இருவருக்கும் பொதுவான வசனம்.

இருவருக்கும் பொதுவான வசனத்தை ஒருவருக்கு சாதகமாக பேசமுடியாது.

இப்போது இதிலுள்ள சரி, தவறுகளை எப்படி அலசுவது? குர்ஆன் வசனங்களுக்கு விளக்கமாக அமைந்த நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் இது பற்றி என்ன சொல்லியிருக்கிறார்கள், என்ன நிலையை எடுத்திருக்கிறார்கள் என்று பார்த்து, அதிலிருந்து எந்த வழிகாட்டுதல் சரியானது என்பதை முடிவு செய்ய வேண்டும்.

அந்த வழிகாட்டுல்கள் அனைத்தும் தெள்ளத் தெளிவான முறையில் புறக்கண்ணால் பிறையை பார்த்து மாதங்களை துவக்க வேண்டும் என்கிற சட்டத்தை தான் சொல்கிறது என்பதில் கிஞ்சிற்றும் சந்தேகமில்லை !

இறுதியாக..

மார்க்கத்தின் ஒரு அடிப்படையான நிலைபாட்டினை நாம் மனதினுள் நிறுத்திக்கொண்டால் பிறை விஷயம் மாத்திரமல்ல, ஏனைய எல்லா சர்ச்சைகளுக்கும் ஒரு எளிய தீர்வு கிடைத்து விடும்.

எப்போதுமே மார்க்கத்தில் ஒன்றை உலக விஷயம் - மார்க்க விஷயம் என்று பிரிப்பதாக இருந்தால் அதில் இரண்டு அளவுகோலை கொண்டு பார்க்க வேண்டும்.

• நபி (ஸல் அவர்கள் சொன்னது
• நபி (ஸல்) அவர்கள் செய்தது.
ஒரு காரியத்தை நபி அவர்கள் செய்யுமாறு சொல்லுகிறார்கள் இன்னொரு காரியத்தை வெறுமனே செய்ய மட்டும் செய்கிறார்கள் (சொல்லவில்லை) என்றால், எதை நபி அவர்கள் சொன்னார்களோ அதற்கு தான் முக்கியத்துவம் தரப்பட வேண்டும்.

எதை அவர்கள் சொன்னார்களோ, அதை நாம் செய்வது கடமை, அது சுன்னத் என்கிற தரஜாவிற்கு எடுத்து செல்லும்.

எதை அவர்கள் சொல்லாமல் வெறுமனே செய்ய மட்டும் செய்தார்களோ அது மார்க்கம் சார்ந்த விஷயமாக இல்லாமல் உலகம் சார்ந்த விஷயமாக மட்டுமே இருக்கும்.

உதாரணமாக நபி அவர்கள் எப்போதும் பேரீத்தம் பழத்தை சாப்பிடக்கூடிய பழக்கமுள்ளவர்கள். எப்போதும் அவர்கள் அதை சாப்பிடுவதால் அது சுன்னத் ஆகி விடவில்லை அதே சமயம் நோன்பு திறக்கும் பொது பேரீத்தம்பழத்தை கொண்டு திறங்கள் என்று அவர்கள் சொல்லியதன் காரணத்தால் அப்போது அதை சாப்பிடுவது மட்டும் மார்க்க விஷயமாகி (சுன்னத்தாகி ) விடுகிறது.

சில மசாயில்களில், அவர்கள் செய்தது ஒன்றும் சொன்னது வேறொன்றுமாக இருந்தால் அப்போது நாம் மார்க்கமாக எடுத்துக்கொள்ள வேண்டியது அவர்கள் சொன்னதை தான் !

நபி அவர்கள் நான்கு ரக்காத் தொழ வேண்டும் என்று கட்டளையிடுகிறார்கள் அதற்கு மாற்றமாக மூன்றுடன் ஒரு சமயம் சலாம் விட்டு விடுகிறார்கள். அவர்கள் மூன்று ரக்காத் தொழுதது அவர்களது செயல் , நான்கு ரக்காத் தொழ வேண்டும் என்பது அவர்களது சொல்.
அவர்களது சொல்லும் செயலும் சில இடங்களில் வேறுபட்டால் சொல்லை தான் எடுக்க வேண்டும், அது தான் மார்க்கமாக கருதப்படும்.

பிறை பார்க்க வேண்டும் என்கிற கட்டளை நபியிடம் இருந்து கிடைத்த போது, அது மார்க்கமல்ல, உலக விஷயம் தான், அதை எப்படி வேண்டுமானாலும் செய்யலாம் என்கிற தவறான எண்ணம் இது போன்ற கொள்கை கொண்டவர்கள் மனதில் இவர்களையும் அறியாமல் பதிந்திருப்பதால்தான் பிறை தொடர்பாக இந்த அளவிற்கு குழம்பிப் போய் நிற்கின்றனர்.
ஆனால், இதே அளவுகோலின் படி தான் அனைத்தையும் அலசுகிறார்களா? என்றால் இல்லை.

மாதத்தை தீர்மானிக்க எப்படி பிறை பார்க்க சொன்னார்களோ அதே போல தொழுகையை அறிவிக்க பாங்கு சொல்ல சொன்னார்கள்.

தொழுகை கடமையான ஆரம்ப காலத்தில் வரக்கூடிய ஒரு சம்பவத்தில், நபி அவர்கள் சஹாபாக்கள் அனைவரையும் ஒன்று திரட்டி தொழுகை நேரத்தை அறியவும் மக்களுக்கு அறிவிக்கவும் என்ன செய்யலாம் என்பதாக மஷூரா செய்கிறார்கள். ஒவ்வொரு சஹாபியும் ஒவ்வொரு விதமான முடிவை சொல்கிறார்கள். ஒரு சஹாபி, மலை உச்சியில் நின்று தீப்பந்தத்தை காட்டலாம், அதை பார்க்கும் ஊர் மக்கள் தொழுகைக்கான நேரம் ஆகி விடத்தை அறிந்து கொள்வார்கள் என்கிறார்கள். இன்னொரு சஹாபி, தெருக்களில் தம்பட்டம் அடிக்க சொல்லலாம், அதை கேட்டு மக்கள் தொழுகை நேரத்தை அறிந்து கொள்வார்கள் என்கிறார்கள். இப்படி ஆளுக்கொரு கருத்தை சொல்ல சொல்லி இறுதியாக ஒரு சஹாபி சொன்ன இந்த "அல்லாஹு அக்பர்" முழக்கத்தையே நபி அவர்கள் உறுதி செய்கிறார்கள் என்பது வரலாறு ! ஆக, பாங்கிற்கான நோக்கம் என்ன என்பது தெளிவு. தொழுகையின் நேரத்தை அறிய !

ஆனால், இன்றைக்கு பாங்கை கேட்டு தான் நாம் தொழுகை நேரத்தை அறிகிற நிலையில் இருக்கிறோமா? என்றால் இல்லை. பாங்கே சொல்லப்படவில்லை என்றாலும் நாம் கடிகாரத்தை பார்த்து தொழுது கொள்கிறோம்.

பிறை விஷயமாக, அது உலக விஷயம், அன்றைக்கு வேறு சாத்தியக்கூறுகள் இல்லை ,
இப்போது அது தேவையில்லை என்று வாதம் வைப்பவர்கள் , தங்கள் வாதத்தில் உண்மையாளர்கள் என்றால், அதே அளவுகோலின் படி பாங்கும் தேவையில்லை என்று தானே சொல் வேண்டும்? அதில் மட்டும், நபி என்ன சொன்னார்களோ அதை செய்ய வேண்டும் என்று கூறுவது முரண்பாடல்லவா?

ஆக, நபி (ஸல்) அவர்கள் ஒன்றை இப்படி செய்யுங்கள் என்று சொல்லி விட்டால் அதை அப்படி தான் செய்ய வேண்டும். நமது விருப்பத்திற்கு விட வேண்டிய காரியம் என்று இருக்குமானால் அது நபி (ஸல்) அவர்களுக்கு தெரியும், அதை அதற்கு ஏற்ற வாசகங்களுடன் சொல்லியிருப்பார்கள் , இவ்வாறு செய்யுங்கள் என்று நேரடியாக கட்டளையிட்டிருக்க மாட்டார்கள்.

எதில் நமது விருப்பப்படி செய்ய இடம் இருக்கிறது என்று அவர்கள் கருதுவார்களோ, அதில் நேரடி கட்டளையாக இல்லாமல் மறைமுக வார்த்தைகளை கொண்டு அவர்கள் பேசியிருப்பார்கள், அந்த வார்த்தையில் இருந்தே, அந்த காரியத்தை நபி செய்த முறையில் தான் செய்ய வேண்டும் என்று இல்லை, நாமாக மாற்றியும் செய்யலாம் என்கிற விளக்கத்தை எடுக்க முடியும்.
இதற்கு சான்று தான் தொழுகை நேரத்தை கணக்கிடுவதை பற்றிய நபியின் அறிவிப்புகள்.

இந்த நுணுக்கமான, அதே சமயம், மார்க்கத்தின் அடிப்படையான விஷயத்தை நாம் மனதில் நிறுத்தினோமேயானால் இது போன்ற குழப்பவாதிகளிடமிருந்து நாம் எளிதில் தப்பித்துக்கொள்ளலாம்.

ஆக, என்னதான் குட்டிக்கரணங்கள் அடித்து ஆகாயத்திற்கும் பூமிக்குமாய் துள்ளினாலும், பிறையை விஞ்ஞான ரீதியாக முன்கூட்டியே கணித்து மாதங்களை தீர்மானிக்கலாம் என்கிற சித்தாந்தத்தை ஒரு காலத்திலும் இவர்களால் நிறுவவே இயலாது !

அல்லாஹ் காட்டிய சத்திய ஒளியை வாய்களால் ஊதி அணைக்க இவர்கள் செய்யும் முயற்சிகள் அனைத்துமே தோல்வியில் முடியும் என்பதோடு, அந்த சத்திய ஜோதியின் வெப்பம் தாளாமல் ஹிஜ்ரா கமிட்டி என்கிற இந்த பொய்யர்களின் கூடாரம் எரிந்து சாம்பலாகித்தான் போகும் என்பதில் ஐயமில்லை !!
 

October 12, 2013, 11:24 AM

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா?

மாதவிடாய் பெண்கள் பள்ளிக்குள் வரலாமா?

இறையில்லங்களாகிய பள்ளிவாசல்கள் மிகவும் புனிதம் வாய்ந்த இடங்களாகும். பள்ளிவாசல்களில் எத்தகைய ஒழுங்குகளைப் பேணி நடக்க வேண்டும் என்று திருக்குர்ஆனும், நபிகள் நாயகம் (ஸல்) அவர்களின் போதனைகளும் தெளிவான வழிகாட்டுதல்களை வழங்கியுள்ளன.

பள்ளிவாசல் அல்லாத இடங்களில் நாம் நடந்து கொள்வதைப் போன்று பள்ளிவாசல்களில் நடந்து கொள்வது கூடாது.

பள்ளிவாசல்களில் அசுத்தம் செய்வது கூடாது.

பள்ளிவாசல்களுக்குள் நுழைந்தால் இரண்டு ரக்அத் தொழாமல் அமர்வது கூடாது.

பள்ளிவாசல்களில் வியாபாரம் செய்வது கூடாது.

பள்ளிவாசல்களில் இல்லறம் தொடர்பான எந்தக் காரியங்களிலும் ஈடுபடக் கூடாது.

பள்ளிவாசல்களில் தொழுபவர்களுக்கு இடையூறாக சப்தமிடக் கூடாது.

என்பன போன்ற பல ஒழுக்கங்களை மார்க்கம் நமக்கு வழிகாட்டித் தந்துள்ளது.

அது போன்ற ஒழுக்கங்களில் ஒன்றுதான் குளிப்புக் கடமையான ஆண்களாக இருந்தாலும், பெண்களாக இருந்தாலும், மாதவிடாய் ஏற்பட்ட பெண்களாக இருந்தாலும் அவர்கள் தங்களுடைய குளிப்புக் கடமை நீங்கி சுத்தமாகின்ற வரை பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்ற ஒழுக்கமாகும்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசல்களுக்குள் நுழைவது கூடாது என்பதற்கு திருக்குர்ஆன் மற்றும் ஆதாரப்பூர்வமான நபிமொழிகள் சான்றாக உள்ளன.

சில மார்க்க அறிஞர்கள் இந்த ஆதாரங்கள் தொடர்பாக மாற்றுக் கருத்துக்களை எடுத்து வைத்து மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் எனக் கருதுகின்றனர்.

ஆனால் மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் என்ற தங்களுடைய நிலைப்பாட்டிற்கு ஆதரவாக அவர்கள் என்ன வாதங்களை எடுத்து வைக்கின்றார்களோ அவை அவர்களின் நிலைப்பாட்டை உறுதிப்படுத்தக் கூடிய வகையில் இல்லை. மாறாக பலவீனமான வாதங்களாகவே இருக்கின்றன.

அது தொடர்பான விவரங்களை நாம் விரிவாகக் காண்போம்.

மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்ற கருத்துடையவர்கள் 4:3 வசனத்தை முதல் ஆதாரமாக எடுத்து வைக்கின்றனர்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரை (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக) பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர. நீங்கள் நோயாளிகளாகவோ, பயணிகளாகவோ இருந்தால் அல்லது உங்களில் ஒருவர் கழிவறையிலிருந்து வந்தால் அல்லது பெண்களை (உடலுறவு மூலம்) தீண்டினால் தண்ணீரைப் பெற்றுக் கொள்ளாத போது தூய்மையான மண்ணைத் தொட்டு உங்கள் முகங்களிலும், கைகளிலும் தடவிக் கொள்ளுங்கள்! அல்லாஹ் பிழைகளைப் பொறுப்பவனாகவும், மன்னிப்பவனாகவும் இருக்கிறான்.

அல்குர்ஆன் (4 : 43)

இவ்வசனத்தில் பள்ளிவாசல் என்ற சொல் இடம் பெறவில்லை. அதன் கருத்தை விளக்கும் வகையில் அடைப்புக் குறிக்குள் (தொழுகைக்காக பள்ளிவாசலுக்குச் செல்லாதீர்கள்! பள்ளிவாசல் வழியாக)  என்று நாம் சேர்த்துள்ளோம்.

அந்த அடைப்புக்குறியை நீக்கி விட்டுப் பார்த்தால்

“நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரையும், குளிப்புக் கடமையாக இருக்கும் போது குளிக்கும் வரையும்  பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர தொழுகைக்கு நெருங்காதீர்கள்!“

என்பது இதன் நேரடி மொழிபெயர்ப்பாகும்.

பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று இவ்வசனம் கூறுகிறது. தொழாதீர்கள் என்று சொல்லாமல் தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்று கூறப்படுகிறது. பள்ளிவாசலுக்கு வருவது தான் தொழுகைக்கு நெருங்குதல் என்ற சொல்லால் இங்கே சுட்டிக்காட்டப்படுகிறது. கடந்து செல்வோராகவே தவிர என்று இதனுடன் சேர்த்து சொல்லப்படுவதால் இது இடத்தைத் தான் குறிக்கும். தொழுகைக்கு நெருங்காதீர்கள் என்பதுடன் கடந்து செல்லுதல் என்று சேர்த்துக் கூறப்படுவதால் பள்ளிவாசலுக்குள் குளிப்புக் கடமையானவர்கள் செல்லக் கூடாது என்பது தான் இவ்வசனத்தின் பொருள் என்று அதிகமான அறிஞர்கள் கூறுகின்றனர். நாமும் இக்கருத்தில் உடன்படுகிறோம்.

ஆனால் இவ்வசனத்தின் பொருள் இதுவல்ல. இதற்கு வேறு பொருள் தான் கொடுக்க வேண்டும் என்று சிலர் வாதிடுகின்றனர். நாம் செய்யும் பொருளோ அல்லது அவர்கள் செய்யும் பொருளோ இரண்டில் ஒன்று தான் சரியானதாக இருக்க முடியும்.

எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிவாசலுக்கு வரலாம் என்ற கருத்து உள்ளவர்கள் இவ்வசனத்துக்கு எவ்வாறு பொருள் கொடுக்கின்றனர் என்பதை இப்போது பார்ப்போம்.

நம்பிக்கை கொண்டோரே! போதையாக இருக்கும் போது நீங்கள் கூறுவது உங்களுக்கு விளங்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்! குளிப்புக் கடமையாக இருக்கும் போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்

(அல்குர்ஆன் 4 ; 43)

பாதையைக் கடந்து செல்வோராகவே தவிர என்று நாம் பொருள் செய்த இடத்தில் வழிப்போக்கர்களைத் தவிர என்று பொருள் கொள்கின்றனர்.

நாம் செய்தது நேரடிப் பொருள் என்றாலும் பாதையைக் கடந்து செல்பவர் என்பதற்கு வழிப்போக்கர் என்று பொருள் கொள்ளவும் அகராதி அனுமதிக்கிறது.

அகராதியில் இடம் இருந்து அது பொருந்தாமல் போனால் அந்தப் பொருளை விடுத்து பொருந்தக் கூடிய பொருளைத் தான் கொடுக்க வேண்டும்.

இவர்கள் செய்யும் பொருள் பொருத்தமானது தானா? என்பதை அறிவதற்கு முன்னால் இவ்வாறு பொருள் செய்தால் இதிலிருந்து கிடைக்கும் சட்டங்கள் என்ன என்பதை அறிந்து கொள்ள வேண்டும்.

குளிப்புக் கடமையாக இருக்கும் போது வழிப்போக்கர்களைத் தவிர (மற்றவர்கள்) குளிக்கும் வரை தொழுகைக்கு நெருங்காதீர்கள்.

இவர்கள் செய்துள்ள இந்தப் பொருளின் படி வழிப்போக்கர்களுக்கு ஒரு சட்டமும் வழிப்போக்கர் அல்லாதவருக்கு ஒரு சட்டமும் உள்ளதாகத் தெரிகிறது.

வழிப்போக்கர்களாக இருப்பவர்கள் -அதாவது பயணத்தில் இருப்பவர்கள்- தண்ணீர் கிடைக்காவிட்டால் குளிக்காமல் தயம்மும் செய்து தொழலாம்; வழிப்போக்கர்களாக இல்லாவிட்டால் அவர்கள் குளித்து விட்டுத்தான் தொழ வேண்டும்; தயம்மும் செய்து தொழக் கூடாது என்பது தான் இவர்கள் கொடுக்கும் பொருளின்படி கிடைக்கும் சட்டமாகும்.

வேறு வார்த்தையில் இதைச் சொல்வதாக இருந்தால் பயணிகளைத் தவிர மற்றவர்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் குளித்தே ஆக வேண்டும். பயணிகளாக இருந்து அவர்களுக்குத் தண்ணீர் கிடைக்காவிட்டால் அவர்கள் குளிப்பதற்குப் பதிலாக தயம்மும் செய்யலாம் என்ற கருத்து இவர்கள் செய்யும் அர்த்தத்தில் இருந்து பெறப்படுகிறது.

தயம்மும் என்ற சட்டம் பயணிகளுக்கு மாத்திரம் உரியது. மற்றவர்களுக்கு அல்ல என்பது இதன் சுருக்கமாகும்.

குளிப்பு கடமையானவர்கள் பள்ளிவாசலுக்கு வரக்கூடாது என்று இவ்வசனம் பேசவில்லை என்றும்,  பாதையைக் கடந்து செல்வோராக தவிர என்ற சொற்றொடருக்கு வழிப்போக்கர்களைத் தவிர என்பதுதான் பொருள் எனவும் இவர்கள் வாதிட்டனர். இப்படி வாதிட்டவர்கள் தாங்கள் செய்த பொருளுக்கு ஏற்ப சட்டம் இயற்ற வேண்டுமல்லவா?

பயணிகளாக இருந்தாலும் பயணிகளாக இல்லாவிட்டாலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்யலாமா என்று இவர்களிடம் கேட்டால் இருவரும் தயம்மும் செய்யலாம் என்று கூறுகிறார்கள்.

தண்ணீர் கிடைக்காவிட்டால் வழிப்போக்கரும் தயம்மும் செய்யலாம்; வழிப்போக்கர் அல்லாதவரும் தயம்மும் செய்யலாம் என்று இவர்கள் சட்டம் சொல்கின்றனர். அப்படியானால் வழிப்போக்கரைத் தவிர என்று அல்லாஹ் கூறியது அர்த்தமற்றது என்று இவர்கள் ஆக்குகிறார்கள்.

பள்ளிவாசலைக் கடப்பது பற்றி இவ்வசனம் பேசவில்லை என்பதற்காக வழிப்போக்கர்களைத் தவிர என்று பொருள் செய்தவர்கள் தாங்கள் செய்த பொருளின் படி என்ன கருத்து வருகிறதோ அதை மறுக்கிறார்கள். வழிப்போக்கர்களைத் தவிர என்ற விதிவிலக்கை பொருளற்றதாக ஆக்குகின்றனர்.

எனவே வழிப்போக்கர்களைத் தவிர என்ற அர்த்தம் பொருத்தமற்றதாகவுள்ளதால் நாம் செய்த அர்த்தத்தைத் தான் செய்தாக வேண்டும்.

நாம் செய்த அர்த்தம் தான் இங்கே செய்ய முடியும் எனும்போது இவ்வசனம் பள்ளிவாசலைக் கடந்து செல்வது பற்றியே பேசுகிறது என்பதில் சந்தேகமில்லை.

குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிவாசலைக் கடந்து செல்லலாமே தவிர பள்ளிவாசலில் தங்கக் கூடாது என்ற கருத்தை மிகத் தெளிவாகச் சொல்லும் வசனமாக இது அமைந்து விடுகிறது.

அதாவது குளிப்புக் கடமையானவர்கள் தொழுவதும் கூடாது. தொழுமிடத்திற்குள் தங்குவதும் கூடாது. ஆனால் தொழுமிடம் வழியாகக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் இருந்தால் அவர்கள் தொழுமிடத்திற்குள்  நுழைந்து கடந்து செல்வதில் எவ்விதக் குற்றமும் இல்லை என்பதே மேற்கண்ட வசனத்தின் பொருளாகும்.

Ø      குளிப்புக் கடமையானவர் உள்ளூரில் இருந்தாலும், பயணியாக இருந்தாலும் தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்து கொள்ளலாம்.

Ø      தண்ணீர் கிடைத்து விட்டால் உள்ளூரில் உள்ளவர்களும், பயணிகளும் தண்ணீரைக் கொண்டுதான் குளிப்புக் கடமையை நிறைவேற்ற வேண்டும்.

என்பதுதான் மார்க்கத்தின் நிலைப்பாடு.

இவ்வாறு இருக்கையில்

தண்ணீர் கிடைக்காவிட்டால் தயம்மும் செய்கின்ற சட்டம் பயணிகளுக்கு மட்டும் உரியது என்ற கருத்தைத் தரும் வகையில் பொருள் செய்வது தவறானதாகும்.

எனவே மேற்கண்ட வசனத்தில் ஆபிரீ சபீல் என்ற வார்த்தைக்கு வழிப்போக்கர்கள் அல்லது பயணிகள் என்று பொருள் செய்வது மிகவும் தவறானது என்பது இதில் இருந்து உறுதியாகிறது.

எனவே ஆபிரீ சபீல் என்பதற்கு (பள்ளிவாசலை) பாதையாகக் கடந்து செல்வோர் என்று நாம் கொடுக்கும் பொருளே சரியானதாகும்.

இங்கே மற்றொரு சந்தேகம் எழலாம்.

மேற்கண்ட வசனத்தில் குளிப்பு கடமையானவர்கள் என்று தான் சொல்லப்பட்டுள்ளது. மாதவிடாய்ப் பெண்கள் என்று சொல்லப்படவில்லையே என்பது தான் அந்தச் சந்தேகம்.

குளிப்புக் கடமையானவர்கள் என்று நாம் பொருள் செய்த இடத்தில் ஜுனுப் என்ற சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது.

இதில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்களும் உள்ளடங்குவர்.

معجم لغة الفقهاء (ص: 167)

الجنابة: مص جنب، التباعد / / - المني / / - النجاسة. * النجاسة المعنوية الناشئة عن وطئ أو إنزال مني بشهوة أو حيض أو نفاس...

ஜனாபத் - ஜுனுப் என்பதின் பொருள் தூரமாகுதல் என்பதாகும். இதற்கு இந்திரியம், அசுத்தம் என்ற பொருளும் உண்டு. உடலுறவு கொள்ளுதல், இச்சையுடன் இந்திரியத்தை வெளியேற்றுதல், மாதவிலக்கு ஏற்படுதல், பிரசவத்தீட்டு ஆகியவற்றின் மூலம் ஏற்படும் மறைமுக அசுத்தத்திற்கும் இச்சொல் பயன்படுத்தப்படும்.

நூல்  : முஃஜமு லுகதில் ஃபுகாஹாயி)

பொதுவாக எந்தக் காரியங்களுக்கு குளித்தால் மட்டுமே தூய்மை ஏற்படும் என்று நம்முடைய மார்க்கம் சட்டமாக்கியுள்ளதோ அந்தக் காரியங்களுக்கு ஜனாபத் என்று நாம் விளங்கிக் கொள்ளலாம்.

மாதவிடாய்க்கென்று பிரத்யோகமாக சில சட்டங்களைக் கூறும் இடத்தில் ஏனைய காரியங்களிலிருந்து இது தனியாகப் பிரித்துப் பார்க்கப்படுமே தவிர மற்ற அனைத்திலும் குளிப்புக் கடமையை ஏற்படுத்தும் பிற காரியங்களுடன் இணைந்ததாகத்தான் மாதவிலக்கிற்கான அனைத்து சட்டங்களும் அமைந்துள்ளன.

ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிலக்குடன் பள்ளிக்குள் சென்றார்களா?

மாதவிடாய் ஏற்பட்டவர்கள் பள்ளிவாசலுக்குச் செல்லலாம் என்று கூறுவோர் ஆயிஷா (ரலி) அவர்கள் தொடர்பான பின்வரும் ஹதீஸையும் ஆதாரமாகக் காட்டுகின்றனர்.

450 و حَدَّثَنَا يَحْيَى بْنُ يَحْيَى وَأَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ وَأَبُو كُرَيْبٍ قَالَ يَحْيَى أَخْبَرَنَا وَقَالَ الْآخَرَانِ حَدَّثَنَا أَبُو مُعَاوِيَةَ عَنْ الْأَعْمَشِ عَنْ ثَابِتِ بْنِ عُبَيْدٍ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ قَالَ لِي رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ نَاوِلِينِي الْخُمْرَةَ مِنْ الْمَسْجِدِ قَالَتْ فَقُلْتُ إِنِّي حَائِضٌ فَقَالَ إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِي يَدِكِ رواه مسلم

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறியதாவது: “பள்ளிவாசலில்  உள்ள தொழுகை விரிப்பை எடுத்து என்னிடம் கொடு'' என்று  அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் சொன்னார்கள். அதற்கு நான் "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றேன். அப்போது அவர்கள் "மாதவிடாய் என்பது உனது கையில் இல்லை'' என்று கூறினார்கள்.

நூல் : முஸ்லிம் (502, 503,)

அபூஹுரைரா (ரலி) அவர்கள் பின்வருமாறு அறிவிக்கிறார்கள்.

صحيح مسلم (1/ 168(

717 - وَحَدَّثَنِى زُهَيْرُ بْنُ حَرْبٍ وَأَبُو كَامِلٍ وَمُحَمَّدُ بْنُ حَاتِمٍ كُلُّهُمْ عَنْ يَحْيَى بْنِ سَعِيدٍ - قَالَ زُهَيْرٌ حَدَّثَنَا يَحْيَى - عَنْ يَزِيدَ بْنِ كَيْسَانَ عَنْ أَبِى حَازِمٍ عَنْ أَبِى هُرَيْرَةَ قَالَ بَيْنَمَا رَسُولُ اللَّهِ -صلى الله عليه وسلم- فِى الْمَسْجِدِ فَقَالَ « يَا عَائِشَةُ نَاوِلِينِى الثَّوْبَ ». فَقَالَتْ إِنِّى حَائِضٌ. فَقَالَ « إِنَّ حَيْضَتَكِ لَيْسَتْ فِى يَدِكِ » فَنَاوَلَتْهُ.

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் பள்ளிவாசலில்  இருந்து கொண்டிருக்கும் போது (தம் துணைவியாரிடம்), "ஆயிஷா! அந்தத் துணியை எடுத்து என்னிடம் தா!'' என்றார்கள். ஆயிஷா (ரலி) அவர்கள், "எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுள்ளதே!'' என்றார்கள். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள், "மாதவிடாய் உனது கையிலில்லை'' என்று சொன்னார்கள். அதையடுத்து அந்தத் துணியை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொடுத்தார்கள்.

நூல் : முஸ்லிம் (504)

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் செல்லலாம் என்ற கருத்தில் உள்ளவர்கள் அதற்குச் சான்றாக மேற்கண்ட இரு ஹதீஸ்களையும் முன்வைக்கின்றனர்.

முதல் ஹதீஸில் பள்ளிவாசலில் உள்ள தொழுகை விரிப்பை எடுத்துத் தா என்று நபியவர்கள் கேட்டதாகக் கூறப்பட்டுள்ளது. தொழுகை விரிப்பு பள்ளிவாசலில் இருந்துள்ளது என்பது இதில் இருந்து தெரிகிறது.

பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று நபியவர்கள் கேட்டதால் நபியவர்கள் வீட்டில் தான் இருந்திருக்கிறார்கள் என்பதை விளங்கலாம். பள்ளிவாசலுக்குள் இருந்து கொண்டு பள்ளிவாசலில் உள்ள விரிப்பை எடுத்துத் தா என்று யாரும் கூற மாட்டார்கள்.

பள்ளிவாசலில் தொழுகை விரிப்பு இருந்துள்ளது. வீட்டில் நபியவர்கள் இருந்துள்ளதால் ஆயிஷா (ரலி) அவர்களும் வீட்டில் தான் இருந்துள்ளனர். வீட்டில் இருந்த நபியவர்கள் பள்ளியில் இருந்த விரிப்பை எடுத்துத் தருமாறு ஆயிஷா (ரலி) அவர்களிடம் கேட்டனர். ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்து இருக்கலாம். அல்லது பள்ளிக்குள் கையை நீட்டி எடுத்து இருக்கலாம். ஏனெனில் பள்ளியும் வீடும் அருகருகில் தான் இருந்தன. 

مسند أحمد بن حنبل (6/ 86)

24608 - حدثنا عبد الله حدثني أبي ثنا أبو المغيرة قال ثنا الأوزاعي قال ثنا الزهري عن عروة عن عائشة قالت : كان رسول الله صلى الله عليه و سلم يأتيني وهو معتكف في المسجد حتى يتكئ على باب حجرتي فاغسل رأسه وأنا في حجرتي وسائر جسده في المسجد

تعليق شعيب الأرنؤوط : إسناده صحيح على شرط الشيخين

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நபியவர்கள் பள்ளியில் இஃதிகாஃப் இருக்கும் போது என்னிடத்தில் வருபவர்களாக இருந்தார்கள். எந்த அளவிற்கென்றால் என்னுடைய அறையின் கதவில் சாய்ந்து இருந்து கொள்வார்கள். நான் என்னுடைய அறையில் இருந்தவளாக அவர்களின் தலையை கழுவி விடுவேண். நபியவர்களின் ஏனைய உடல் பகுதி பள்ளியிலே இருக்கும்.

நூல்  அஹ்மத் (24608)

இது பள்ளிவாசலும் , ஆயிஷா (ரலி) அவர்களின் வீடும் ஒன்றாகத்தான் இருந்தது என்பதைத் தெளிவாகப் படம் பிடித்துக் காட்டுகிறது.

ஆயிஷா (ரலி) அவர்கள் பள்ளிக்குள் சென்று அந்த விரிப்பை எடுத்து வந்தார்கள் என்று வைத்துக் கொண்டாலும் இது நமது நிலைபாட்டுக்கு எதிராக ஆகாது. நமது நிலைபாட்டை ஒட்டியதாகத் தான் அமையும்.

பள்ளியில் மாதவிடாய்ப் பெண்களும் குளிப்புக் கடமையானவர்களும் தங்கக் கூடாது; ஆனால் கடந்து செல்வதற்காக பள்ளிக்குள் போகலாம் என்பது தான் நமது நிலைபாடு. குர்ஆன் வசனமும் அதைத்தான் சொல்கிறது.

இரண்டாவது ஹதீஸில் நபியவர்கள் பள்ளிவாசலில் இருந்து கொண்டு தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டனர் என்று சொல்லப்பட்டுள்ளது. வீட்டில் இருந்த தொழுகை விரிப்பை ஆயிஷா (ரலி) அவர்கள் எடுத்துக் கொண்டு வந்து பள்ளியில் இருந்த நபியவர்களிடம் கொடுத்தார்கள் என்று இதை விளங்கினாலும் இதுவும் நமது நிலைபாட்டுக்கு ஏற்றதாகத் தான் உள்ளது.

பள்ளிக்கும் இருக்கும் பொருளை மாதவிடாய் ஏற்பட்டவர்கள் நுழைந்து எடுத்து வரலாம் என்ற கருத்து மேற்கண்ட வசனத்தில் இருந்து தெரிவதால் அதற்கு விளக்கமாக இந்தச் செயல் அமைந்துள்ளது.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிவாசலில் தங்குவதற்கு இது ஆதாரமாக ஆகாது.

மாதவிடாய் உன் கையில் இல்லையே என்று நபியவர்கள் ஏன் சொன்னார்கள் என்பதையும் நாம் சிந்திக்க வேண்டும்.

பள்ளிக்கும் நுழையாமல் கையை மட்டும் பள்ளிக்குள் நீட்டி விரிப்பை எடுத்துக் கொடுத்திருப்பார்கள் என்பதை இதில் இருந்து விளங்கலாம். உன் கையில் மாதவிடாய் இல்லையே என்று நபியவர்கள் கூறியதில் இருந்து இப்படி விளங்கலாம். இப்படி விளங்கினால் பள்ளிக்குள் கையை மட்டும் தான் நீட்டினார்கள் என்பதற்குத் தான் இது ஆதாரமாக அமையும்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் தொழக் கூடாது என்பதால் தொழுகைக்கான விரிப்பையும் தொடக் கூடாது என்று ஆயிஷா (ரலி) அவர்கள் தயங்கி இருக்கலாம்.  அந்த்த் தயக்கத்தை நீக்குவதற்காக உன் கையில் மாதவிடாய் இல்லை என்று சொல்லி இருக்கலாம்.

சில அறிவிப்புகளில் நபியவர்கள் தொழுகை விரிப்பை எடுத்துக் கேட்டபோது ஆயிஷா (ரலி) அவர்கள் நான் தொழக்கூடியவளாக இல்லையே என்று பதில் கூறியதாக இடம் பெற்றுள்ளது. இது ஆயிஷா (ரலி) அவர்கள் மாதவிடாய் ஏற்பட்டுள்ள பெண்கள் தொழுகை விரிப்பைத் தொடுவதை தவறு என்று எண்ணினார்கள் என்ற கருத்தையும் தரலாம்.

கருப்பு நிறப்  பெண் தங்கியது பள்ளிவாசலிலா?

மாதவிடாய் நிலையிலுள்ள பெண்கள் பள்ளிக்குள் செல்லலாம் என்று கருதுபவர்கள் பின்வரும் செய்தியையும் ஆதாரமாக முன்வைக்கின்றனர்.

439حَدَّثَنَا عُبَيْدُ بْنُ إِسْمَاعِيلَ قَالَ حَدَّثَنَا أَبُو أُسَامَةَ عَنْ هِشَامِ بْنِ عُرْوَةَ عَنْ أَبِيهِ عَنْ عَائِشَةَ أَنَّ وَلِيدَةً كَانَتْ سَوْدَاءَ لِحَيٍّ مِنْ الْعَرَبِ فَأَعْتَقُوهَا فَكَانَتْ مَعَهُمْ قَالَتْ فَخَرَجَتْ صَبِيَّةٌ لَهُمْ عَلَيْهَا وِشَاحٌ أَحْمَرُ مِنْ سُيُورٍ قَالَتْ فَوَضَعَتْهُ أَوْ وَقَعَ مِنْهَا فَمَرَّتْ بِهِ حُدَيَّاةٌ وَهُوَ مُلْقًى فَحَسِبَتْهُ لَحْمًا فَخَطِفَتْهُ قَالَتْ فَالْتَمَسُوهُ فَلَمْ يَجِدُوهُ قَالَتْ فَاتَّهَمُونِي بِهِ قَالَتْ فَطَفِقُوا يُفَتِّشُونَ حَتَّى فَتَّشُوا قُبُلَهَا قَالَتْ وَاللَّهِ إِنِّي لَقَائِمَةٌ مَعَهُمْ إِذْ مَرَّتْ الْحُدَيَّاةُ فَأَلْقَتْهُ قَالَتْ فَوَقَعَ بَيْنَهُمْ قَالَتْ فَقُلْتُ هَذَا الَّذِي اتَّهَمْتُمُونِي بِهِ زَعَمْتُمْ وَأَنَا مِنْهُ بَرِيئَةٌ وَهُوَ ذَا هُوَ قَالَتْ فَجَاءَتْ إِلَى رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ فَأَسْلَمَتْ قَالَتْ عَائِشَةُ فَكَانَ لَهَا خِبَاءٌ فِي الْمَسْجِدِ أَوْ حِفْشٌ قَالَتْ فَكَانَتْ تَأْتِينِي فَتَحَدَّثُ عِنْدِي قَالَتْ فَلَا تَجْلِسُ عِنْدِي مَجْلِسًا إِلَّا قَالَتْ وَيَوْمَ الْوِشَاحِ مِنْ أَعَاجِيبِ رَبِّنَا أَلَا إِنَّهُ مِنْ بَلْدَةِ الْكُفْرِ أَنْجَانِي قَالَتْ عَائِشَةُ فَقُلْتُ لَهَا مَا شَأْنُكِ لَا تَقْعُدِينَ مَعِي مَقْعَدًا إِلَّا قُلْتِ هَذَا قَالَتْ فَحَدَّثَتْنِي بِهَذَا الْحَدِيثِ رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

ஒரு கருப்பு நிற அடிமைப்பெண் அரபுகளில் ஒரு குடும்பத்தாருக்குச் சொந்தமானவளாயிருந்தாள். ,,,,,(நீண்ட சம்பவம்)

ஆயிஷா (ரலி) அவர்கள் கூறுகின்றார்கள்: (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளி வாசலில் அந்தப் பெண்ணுக்கென ரோமத்தினாலான ஒரு கூடாரம்' அல்லது சிறிய குடில்' இருந்தது.

நூல் ; புகாரி (429)

மேற்கண்ட செய்தியில் ஒரு கருப்பு நிற அடிமைப் பெண்ணிற்கு நபியவர்கள் பள்ளியில் ஒரு கூடாரம் அமைத்துத் தங்குமாறு கூறினார்கள் என்று இடம் பெற்றுள்ளது.

பெண்களுக்கு மாதவிடாய் ஏற்படும் எனத் தெரிந்திருந்தும் நபியவர்கள் இந்தப் பெண்ணிற்கு பள்ளியில் கூடாரம் அமைத்துக் கொடுத்திருக்கிறார்கள்.

மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வருவது கூடாது என்றிருக்குமானால் நபியவர்கள் இவ்வாறு செய்திருப்பார்களா? எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளிக்கு வரலாம் என வாதிப்பவர்கள் தங்களுடைய வாதத்தினை வைக்கின்றனர்.

ஆனால் மேற்கண்ட செய்தியில் மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வரலாம் என்பதற்கு எந்தச் சான்றும் இல்லை.

மேற்கண்ட செய்தியை அவர்கள் புரிந்து கொண்டதில்தான் தவறு ஏற்பட்டுள்ளது.

ஹதீஸ்களில் பள்ளிவாசல் என்ற சொல் தொழுகை நடக்கும் இட்த்துக்கும் சொல்லப்படும். பள்ளிவாசலுக்கு உரிமையாக உள்ள தொழுகை நடக்காத இடங்களுக்கும் சொல்லப்படும்.

இந்த வேறுபாட்டைப் புரிந்து கொள்ளாமல் தான் இதை ஆதாரமாக காட்டுகின்றனர்.

இதற்கு உதாரணமாக சில ஹதீஸ்களை முன்வைக்கிறோம்.

صحيح البخاري رقم فتح الباري (1/ 23)

63 - حدثنا عبد الله بن يوسف، قال: حدثنا الليث، عن سعيد هو المقبري، عن شريك بن عبد الله بن أبي نمر، أنه سمع أنس بن مالك، يقول: بينما نحن جلوس مع النبي صلى الله عليه وسلم في المسجد، دخل رجل على جمل، فأناخه في المسجد ثم عقله، ثم قال لهم: أيكم محمد؟ والنبي صلى الله عليه وسلم متكئ بين ظهرانيهم، فقلنا: هذا الرجل الأبيض المتكئ. فقال له الرجل: يا ابن عبد المطلب فقال له النبي صلى الله عليه وسلم: «قد أجبتك». فقال الرجل للنبي صلى الله عليه وسلم: إني سائلك فمشدد عليك في المسألة، فلا تجد علي في نفسك؟ فقال: «سل عما بدا لك» فقال: أسألك بربك ورب من قبلك، آلله أرسلك إلى الناس كلهم؟ فقال: «اللهم نعم». قال: أنشدك بالله، آلله أمرك أن نصلي الصلوات الخمس في اليوم والليلة؟ قال: «اللهم نعم». قال: أنشدك بالله، آلله أمرك أن نصوم هذا الشهر من السنة؟ قال: «اللهم نعم». قال: أنشدك بالله، آلله أمرك أن تأخذ هذه الصدقة من أغنيائنا فتقسمها على فقرائنا؟ فقال النبي صلى الله عليه وسلم: «اللهم نعم». فقال الرجل: آمنت بما جئت به، وأنا رسول من ورائي من قومي، وأنا ضمام بن ثعلبة أخو بني سعد بن بكر ورواه موسى بن إسماعيل، وعلي بن عبد الحميد، عن سليمان بن المغيرة، عن ثابت، عن أنس، عن النبي صلى الله عليه وسلم بهذا

நாங்கள் நபியவர்களுடன் இருக்கும் போது ஒரு மனிதர் ஒட்டகத்தில் ஏறி வந்தார். ஒட்டகத்தைப் பள்ளிவாசலில் படுக்கவைத்து அதைக் கட்டிப்போட்டார்.

பார்க்க : புகாரி 63

ஒட்டகத்தை பள்ளிவாசலுக்குள் தொழுகை நடத்தும் இட்த்தில் கொண்டு வந்து கட்டினார் என்று இதை நாம் புரிந்து கொள்ள மாட்டோம். மாறாக பள்ளிவாசலுக்குச் சொந்தமான வளாகத்தில் ஒட்டகத்தைக் கட்டினார் என்று தான் புரிந்து கொள்வோம்.

இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டி பள்ளிவாசலுக்குள் ஒட்டகத்தைக் கட்டிப் போடலாம் என்று யாரும் சொல்ல மாட்டார்கள்.

صحيح البخاري رقم فتح الباري (1/ 98)

454 - حدثنا عبد العزيز بن عبد الله، قال: حدثنا إبراهيم بن سعد، عن صالح بن كيسان، عن ابن شهاب، قال: أخبرني عروة بن الزبير، أن عائشة، قالت: «لقد رأيت رسول الله صلى الله عليه وسلم يوما على باب حجرتي والحبشة يلعبون في المسجد، ورسول الله صلى الله عليه وسلم يسترني بردائه، أنظر إلى لعبهم

அபீசீனியர்கள் பள்ளிவாசலில் வீர விளையாட்டு விளையாடினார்கள். அதை நான் பார்க்கும் வகையில் நபிகள் நாயகம் ஸல் அவர்கள் என்னை மறைத்துக் கொண்டார்கள் என்று ஆயிஷா (ரலி) கூறுகிறார்கள்.

பார்க்க :புகாரி 455, 988

அபீசீனியர்கள் பள்ளிவாசலுக்குள் அம்பெய்து வீர விளையாட்டுக்கள் விளையாடினார்கள் என்று இதைப் புரிந்து கொள்ள மாட்டோம். மாறாக பள்ளிவாசலுக்குச் சொந்தமான வளாகத்தில் இது நடந்தது என்று தான் புரிந்து கொள்வோம்.

صحيح البخاري رقم فتح الباري (2/ 88)

1329 - حدثنا إبراهيم بن المنذر، حدثنا أبو ضمرة، حدثنا موسى بن عقبة، عن نافع، عن عبد الله بن عمر رضي الله عنهما: أن اليهود، جاءوا إلى النبي صلى الله عليه وسلم برجل منهم وامرأة زنيا «فأمر بهما، فرجما قريبا من موضع الجنائز عند المسجد

விபச்சாரம் செய்த யூத ஆணும் யூதப் பெண்ணும் பள்ளிவாசலில் ஜனாசா வைக்கும் இடத்தில் கல்லெறிந்து கொல்லப்பட்டார்கள்.

பார்க்க புகாரி 1329, 3332, 4556

பள்ளிக்கு அருகில் ஜனாஸா வைப்பதற்கு ஒரு திறந்த வெளி இருந்தது என்றும் அந்த இடத்தில் தான் கல்லெறிந்து தண்டனை நிறைவேற்றப்படட்து என்றும் இதைப் புரிந்து கொள்கிறோம். பள்ளிவாசலுக்குள் கல்லால் எறிந்து கொல்லும் தண்டனையை நிறைவேற்றலாம் என்று புரிந்து கொள்ள மாட்டோம்.

صحيح البخاري رقم فتح الباري (1/ 100)

463 - حدثنا زكرياء بن يحيى، قال: حدثنا عبد الله بن نمير، قال: حدثنا هشام، عن أبيه، عن عائشة، قالت: أصيب سعد يوم الخندق في الأكحل، «فضرب النبي صلى الله عليه وسلم خيمة في المسجد، ليعوده من قريب فلم يرعهم» وفي المسجد خيمة من بني غفار، إلا الدم يسيل إليهم، فقالوا: يا أهل الخيمة، ما هذا الذي يأتينا من قبلكم؟ فإذا سعد يغذو جرحه دما، فمات فيها

அகழ்ப்போரின் போது சஅது (ரலி) அவர்கள் காயம் பட்ட போது அவர்களை அருகில் இருந்து விசாரிப்பதற்காக பள்ளியில் ஒரு கூடாரம் அமைக்கப்பட்ட்து. அவரது காயத்தில் இருந்து வெளியேறிக் கொண்டு இருந்தது.

பார்க்க புகாரி 463, 4122

காயம்பட்டவருக்காக எப்போது ஒரு கூடாரம் பள்ளிக்குச் சொந்தமான இட்த்தில் எழுப்ப்பட்டு விட்டதோ அப்போது அது பள்ளிவாசல் என்ற நிலையில் இருந்து நீங்கி விடும்.

صحيح البخاري رقم فتح الباري (1/ 147)

731 - حدثنا عبد الأعلى بن حماد، قال: حدثنا وهيب، قال: حدثنا موسى بن عقبة، عن سالم أبي النضر، عن بسر بن سعيد، عن زيد بن ثابت: أن رسول الله صلى الله عليه وسلم اتخذ حجرة - قال: حسبت أنه قال من حصير - في رمضان، فصلى فيها ليالي، فصلى بصلاته ناس من أصحابه، فلما علم بهم جعل يقعد، فخرج إليهم فقال: «قد عرفت الذي رأيت من صنيعكم، فصلوا أيها الناس في بيوتكم، فإن أفضل الصلاة صلاة المرء في بيته إلا المكتوبة» قال عفان: حدثنا وهيب، حدثنا موسى، سمعت أبا النضر، عن بسر، عن زيد، عن النبي صلى الله عليه وسلم

நபியவர்கள் பள்ளியில் பாயினால் ஒரு கூடாரத்தை அமைத்து தொழுதார்கள். மக்கள் அவர்களைப் பின்பற்றி தொழுதார்கள். பிறகு நபியவர்களின் சப்தம் கேட்காததால் நபியவர்கள் வெளியே வருவதற்காக கனைத்துப் பார்த்தனர். பிறகு நபியவர்கள் வெளியே வந்து நீங்கள் உங்கள் வீடுகளில் தொழுங்கள். கடமையான தொழுகை தவிர மற்ற தொழுகைகளை வீட்டில் தொழுவதே சிறந்தது எனக் கூறினார்கள்.

பார்க்க புகாரி 731, 7290

பள்ளிவாசலுக்குள் கூடாரத்தை அமைத்துக் கொண்ட நபியவர்கள் கூடாரம் அமைத்த பின் அதைப் பள்ளிவாசலாக கருதவில்லை என்பது இதில் இருந்து தெரிகிறது. உபரித் தொழுகைகளை பள்ளியில் தொழுவது சிறந்த்து அல்ல என்று நபியவர்கள் அறிவுரை கூறினார்கள்.

அவர்கள் கூறிய அறிவுரையை அவர்கள் தான் முதலில் பேணுவார்கள். பள்ளிக்குள் கூடாரம் அமைத்த பின்னர் அதை அவர்கள் பள்ளியாகக் கருதவில்லை. தனது வீடு என்ற நிலையில் வைத்து உபரித் தொழுகையைத் தொழுதுள்ளார்கள்.

இதில் இருந்து தெரிய வரும் உண்மை என்ன?

பள்ளிவாசலில் அனைவருக்கும் பொது என்ற நிலையை மாற்றி குறிப்பிட்ட ஒரு நபருக்காக அல்லது குறிப்பிட்ட பணிக்காக ஒதுக்கப்பட்ட இடம் பள்ளி என்று சொல்லப்பட்டாலும் பள்ளியில் சட்டங்கள் அதற்கு இல்லை என்பது தான் இதில் இருந்து தெரிய வரும் உண்மையாகும்.

ஒரு பெண்மணிக்கு கூடாரமாக அமைக்கப்பட்டு விட்டால் அது அந்தப் பெண்ணின் தனி உரிமையாகி விடும். அதில் யாரும் நினைத்த நேரத்தில் நுழைந்து விட முடியாது. பள்ளிவாசல் என்றால் அது எல்லா நேரத்திலும் யாரும் நுழையும் உரிமை இருக்கும்.

எனவே இந்த ஹதீஸை ஆதாரமாக காட்டுவது ஏற்புடையது அல்ல.

பள்ளிவாசலில் போய் சிறு நீர்கழித்து விட்டு வந்தேன் என்று ஒருவர் கூறினால் அதை எப்படி புரிந்து கொள்வோம்? பள்ளிவாசலில் சிறு நீர் கழிப்பதற்காக ஒதுக்கப்பட்ட இடம் என்று தான் புரிந்து கொள்வோம். தொழுகை நடக்கும் இடம் என்று புரிந்து கொள்ள மாட்டோம்.

திண்ணைத் தோழர்கள் குளிப்புக் கடமையுடன் பள்ளியில் தங்கியிருந்தார்களா?

இதுவும் மேற்கண்ட செய்திகளைப் போன்றது தான். அவர்கள் திண்ணைத் தோழர்கள் என்று குறிப்பிடப்பட்ட்தில் இருந்து பள்ளிவாசல் அல்லாத ஒரு திண்ணை பள்ளிவாசல் வளாகத்தில் இருந்துள்ளது என்று அறியலாம். அதில் நபித்தோழர்கள் தமது வீடுகளைப் போல் பயன்படுத்திக் கொள்ள அனுமதிக்கப்பட்டு இருந்தார்கள். பள்ளிக்குச் சொந்தமான ஆனால் பள்ளிவாசலாக இல்லாத ஒரு திண்ணையில் தங்கும் போது ஸ்கலிதம் ஏற்பட்டால் அது பள்ளிவாசலில் ஏற்பட்டதாக ஆகாது.

மாற்று மதத்தவர்கள் பள்ளிக்குள் வரலாமா?

469 - حَدَّثَنَا قُتَيْبَةُ قَالَ حَدَّثَنَا اللَّيْثُ عَنْ سَعِيدِ بْنِ أَبِي سَعِيدٍ أَنَّهُ سَمِعَ أَبَا هُرَيْرَةَ يَقُولُ بَعَثَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَيْلًا قِبَلَ نَجْدٍ فَجَاءَتْ بِرَجُلٍ مِنْ بَنِي حَنِيفَةَ يُقَالُ لَهُ ثُمَامَةُ بْنُ أُثَالٍ فَرَبَطُوهُ بِسَارِيَةٍ مِنْ سَوَارِي الْمَسْجِدِ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நஜ்த் பகுதியை நோக்கி குதிரைப்படைப் பிரிவொன்றை அனுப்பி வைத்தார்கள். அவர்கள் (சென்று) பனூஹனீஃபா குலத்தாரைச் சேர்ந்த (யமாமாவாசிகளின் தலைவர்) ஸுமாமா பின் உஸால் எனப்படும் ஒரு மனிதரைக் கொண்டு வந்தார்கள். அவரை (மஸ்ஜிதுந் நபவீ) பள்ளிவாசலின் தூண்களில் ஒன்றில் கட்டி வைத்தனர்.

நூல் : புகாரி (469)

இதுவும் மேலே சொன்னவாறு அமைந்த செய்திதான். எந்த இடம் தொழுகை நடத்துவதற்காக ஒதுக்கப்பட்டதோ அந்த இடத்தில் கட்டப்பட்டார் என்று இதைப் புரிந்து கொள்ளக் கூடாது. பள்ளிவளாகத்தில் பல்வேறு பணிகளுக்காக இடம் ஒதுக்கப்பட்டது போல் கைதிகளைக் கட்டிப்போடுவதற்கும் தூண்கள் இருந்தன. இதில் தான் அவர் கட்டப்பட்டார் என்பதுதான் இதன் கருத்தாக இருக்க முடியும்.

صحيح البخاري رقم فتح الباري (1/ 99)

462 - حدثنا عبد الله بن يوسف، قال: حدثنا الليث، قال: حدثنا سعيد بن أبي سعيد، سمع أبا هريرة، قال: بعث النبي صلى الله عليه وسلم خيلا قبل نجد، فجاءت برجل من بني حنيفة يقال له: ثمامة بن أثال، فربطوه بسارية من سواري المسجد، فخرج إليه النبي صلى الله عليه وسلم فقال: «أطلقوا ثمامة»، فانطلق إلى نخل قريب من [ص:100] المسجد، فاغتسل، ثم دخل المسجد، فقال: أشهد أن لا إله إلا الله وأن محمدا رسول الله

புகாரி 462, 2422, 4372 ஆகிய ஹதீஸ்களில் அவர் பள்ளியின் தூனில் கட்டப்பட்டார்; அவரை நோக்கி நபியவர்கள் வெளியேறினார்கள் என்று சொல்லப்பட்டதில் இருந்து பள்ளிக்கு வெளியில் உள்ள தூணில் தான் அவர் கட்டப்பட்டார்; பள்ளிக்கு உள்ளே அல்ல என்பதை அறிந்து கொள்ளலாம்.

தவாஃபைத் தவிர அனைத்தையும் செய் என்பதின் பொருள் என்ன?

حَدَّثَنَا أَبُو نُعَيْمٍ قَالَ حَدَّثَنَا عَبْدُ الْعَزِيزِ بْنُ أَبِي سَلَمَةَ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ الْقَاسِمِ عَنْ الْقَاسِمِ بْنِ مُحَمَّدٍ عَنْ عَائِشَةَ قَالَتْ خَرَجْنَا مَعَ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَا نَذْكُرُ إِلَّا الْحَجَّ فَلَمَّا جِئْنَا سَرِفَ طَمِثْتُ فَدَخَلَ عَلَيَّ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ وَأَنَا أَبْكِي فَقَالَ مَا يُبْكِيكِ قُلْتُ لَوَدِدْتُ وَاللَّهِ أَنِّي لَمْ أَحُجَّ الْعَامَ قَالَ لَعَلَّكِ نُفِسْتِ قُلْتُ نَعَمْ قَالَ فَإِنَّ ذَلِكِ شَيْءٌ كَتَبَهُ اللَّهُ عَلَى بَنَاتِ آدَمَ فَافْعَلِي مَا يَفْعَلُ الْحَاجُّ غَيْرَ أَنْ لَا تَطُوفِي بِالْبَيْتِ حَتَّى تَطْهُرِي رواه البخاري

ஆயிஷா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

நாங்கள் ஹஜ்(ஜத்துல் வதாஉ) செய்யும் எண்ணத்தில் நபி (ஸல்) அவர்களுடன் (மதீனாவிலிருந்து) புறப்பட்டுச் சென்றோம். (மக்காவிற்கு அருகிலுள்ள) சரிஃப்' என்ற இடத்தில் நாங்கள் வந்த போது எனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டது. இந்நிலையில் நான் அழுதுகெண்டிருந்தேன். அப்போது என்னிடம் நபி (ஸல்) அவர்கள் வந்து, ஏன் அழுகிறாய்? என்று கேட் டார்கள். நான், இந்த வருடம் அல்லாஹ்வின் மீதானையாக என்னால் ஹஜ் செய்ய முடியாது என்று நினைக்கிறேன் என்றேன். உனக்கு மாதவிடாய் ஏற்பட்டுவிட்டதா? என்று கேட்டார்கள். நான் ஆம் என்றேன் நபி (ஸல்) அவர்கள், இது அல்லாஹ் ஆதமின் பெண்மக்களுக்கு விதியாக்கிவிட்ட ஒன்றாகும். ஆகவே, ஹஜ் செய்பவர் நிறைவேற்றும் அனைத்தையும் நீயும் நிறைவேற்றிக்கொள். ஆயினும் தூய்மை யாகும் வரை இறையில்லம் கஅபாவைச் சுற்றி (தவாஃப்) வராதே! என்றார்கள்

நூல்  : புகாரி (305)

மேற்கண்ட ஹதீஸில் மாதவிடாய் ஏற்பட்டிருந்த ஆயிஷா (ரலி) அவர்களுக்கு நபியவர்கள் தவாஃப் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்வதற்கு அனுமதி கொடுத்து விட்டார்கள். எனவே மாதவிடாய்ப் பெண்கள் பள்ளியில் சென்று தங்குவது குற்றமாகாது என்று ஒரு பிரிவினர் தங்களது வாதங்களை எடுத்து வைக்கின்றனர்.

அவர்களது இந்த வாதமும் தவறானதே !

நபியவர்கள் மாதவிடாய் ஏற்பட்டிருந்த அன்னை ஆயிஷா (ரலி) அவர்களுக்கு தவாஃபைத் தவிர மற்ற அனைத்தையும் செய்து கொள்வதற்கு அனுமதி கொடுக்கின்றார்கள்.

மற்ற அனைத்தையும் செய்யலாம் என்றால் மாதவிடாய்ப் பெண் கஅபாவில் தொழலாமா? என்ற கேள்வி ஏற்படும்.

தவாஃபதை தவிர அனைத்தையும் செய்யலாம் என்றால் மாதவிலக்கு ஏற்பட்ட பெண் நோன்பு நோற்கலாமா? என்ற கேள்வி ஏற்படும்.

மாதவிடாய் பெண் தொழக்கூடாது, நோன்பு நோற்கக் கூடாது என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் இருப்பதால் தவாஃப் தவிர அனைத்தையும் செய் என்பதில் தொழுகை, நோன்பு அடங்காது என்று நாம் விளங்கிக் கொள்வோம்.

அது போன்று குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குள் நுழையக் கூடாது என்று திருமறை வசனம் கூறுவதால் தவாஃப் தவிர அனைத்தையும் செய் என்பதில் பள்ளிக்குள் நுழைவது அடங்காது.

நபியவர்கள் தவாஃபைத் தவிர ஹாஜிகள் செய்யும் அனைத்தையும் செய் என்று குறிப்பிட்டது ஹஜ் சம்மபந்தப்பட்ட விசயத்தில்தான். இதில் ஹஜ் தொடர்பில்லாத அனைத்துக் காரியங்களும் அடங்கும் என்று முடிவெடுப்பது அடிப்படைக்கே எதிரானதாகும்.

ஹஜ் தொடர்பில்லாத காரியங்களில் மாதவிடாய்ப் பெண்கள் எதை எதைச் செய்யலாம் என்று பொதுவான அனுமதி இருக்கிறதோ அவற்றை ஹஜ்ஜின் போது செய்வதற்குத் தடை இல்லை என்றால் அவர்கள் செய்து கொள்ளலாம். இது பொதுவான அனுமதியின் அடிப்படையில் ஆகும்.

மாதவிலக்கு ஏற்பட்ட பெண்ணை அவளுடைய கணவன் உடலுறவு கொள்ளாமல் கட்டி அணைத்துக் கொள்வதற்கும், அவளுடைய மடியில் தலைவைத்து படுத்துக் கொள்வதற்கும் மார்க்கத்தில் அனுமதி உள்ளது.

ஆனால் ஹஜ்ஜில் உள்ளவர்கள் இவ்வாறு செய்வது கூடாது. ஏனெனில் ஹஜ்ஜின் போது இவை தடுக்கப்பட்டுள்ளன.

எனவே நபியவர்கள் ஆயிஷா (ரலி) அவர்களுக்கு கூறிய வாசகம் ஹஜ் தொடர்பான விசயங்களில் தவாஃபைத் தவிர அனைத்தையும் செய்து கொள்ளலாம் என்பதுதான். ஹஜ் தொடர்பில்லாத விசயங்களுக்கும் அனுமதி கொடுத்தார்கள் என்று அதிலிருந்து புரிந்து கொள்வது மிகவும் தவறானதாகும்.

எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளியில் தங்கயிருப்பது கூடாது என்பதற்கு ஏனைய ஆதாரங்கள் இருக்கின்ற காரணத்தினால் அவர்கள் கஅபாவிற்குள்ளும் தங்கியிருப்பது கூடாது,

முஃமின் அசுத்தமாவாரா?

صحيح البخاري ت (1/ 293)

283 - حَدَّثَنَا عَلِيُّ بْنُ عَبْدِ اللَّهِ قَالَ حَدَّثَنَا يَحْيَى قَالَ حَدَّثَنَا حُمَيْدٌ قَالَ حَدَّثَنَا بَكْرٌ عَنْ أَبِي رَافِعٍ عَنْ أَبِي هُرَيْرَةَ أَنَّ النَّبِيَّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ لَقِيَهُ فِي بَعْضِ طَرِيقِ الْمَدِينَةِ وَهُوَ جُنُبٌ فَانْخَنَسْتُ مِنْهُ فَذَهَبَ فَاغْتَسَلَ ثُمَّ جَاءَ فَقَالَ أَيْنَ كُنْتَ يَا أَبَا هُرَيْرَةَ قَالَ كُنْتُ جُنُبًا فَكَرِهْتُ أَنْ أُجَالِسَكَ وَأَنَا عَلَى غَيْرِ طَهَارَةٍ فَقَالَ سُبْحَانَ اللَّهِ إِنَّ الْمُسْلِمَ لَا يَنْجُسُ

அபூஹுரைரா (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள் :

பெருந்துடக்கு ஏற்பட்டவனாய் (குளிப்பு கடமையான நிலையில்) நான் மதீனாவின் ஒரு சாலையில் நான் நின்று கொண்டிருந்தேன். அப்போது நபி (ஸல்) அவர்கள் என்னைச் சந்தித்தார்கள். உடனே நான் அவர்களிடமிருந்து (நழுவிச்) சென்று மறைந்து கொண்டேன். உடனே நான் (வீட்டிற்குச்) சென்று குளித்துவிட்டு வந்தேன். (இவ்வளவு நேரம்) எங்கிருந்தாய், அபூஹுரைரா? என்று நபி (ஸல்) அவர்கள் கேட்டார்கள். நான் பெருந்துடக்குடைவனாய் இருந்தேன். சுத்தமில்லாமல் தங்கள் அருகே அமர்வதை நான் வெறுத்தேன் என்று சொன்னேன். அப்போது நபி (ஸல்) அவர்கள், சுப்ஹானல்லாஹ் (அல்லாஹ் தூயவன்) ஒரு முஸ்லிம் (பெருந்துடக்கு ஏற்பட்டதால்) அசுத்தமாகி விட மாட்டார் என்று கூறினார்கள்.

புகாரி (283)

மேற்கண்ட ஹதீஸில் ” ஒரு முஸ்லிம் பெருந்தொடக்கு ஏற்பட்டதால் அசுத்தமாகிவிட மாட்டார்” என்று நபியவர்கள் கூறியுள்ளார்கள்.

எனவே குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்கு வருவதில் தவறில்லை. என ஒருசில அறிஞர்கள் கருதுகின்றனர்.

மேற்கண்ட செய்தியில் ”ஒரு முஃமின் அசுத்தமாக மாட்டார்” எ்னறு நபியவர்கள் கூறுவது குளிப்புக் கடமை ஏற்பட்டவர் சுத்தமாகாமல் தொழலாம் என்ற அர்த்தத்தில் அல்ல.

ஏனெனில் குளிப்புக் கடமையானவர்கள் பரிசுத்தமாகிக் கொள்ள வேண்டும் திருமறைக் குர்ஆனே கட்டளையிடுகிறது.

{وَإِنْ كُنْتُمْ جُنُبًا فَاطَّهَّرُوا} [المائدة: 6]

நீங்கள் குளிப்புக் கடமையானவர்களாக இருந்தால் பரிசுத்தமாகிக் கொள்ளுங்கள்.

(அல்குர்ஆன் 5 : 6)

மேற்கண்ட வசனத்தில் குளிப்புக் கடமையானவர்கள் குளித்து பரிசுத்தமாக வேண்டும் என்று அல்லாஹ் கட்டளையிடுகிறான்.

அதாவது எந்தெந்த காரியங்களைக் குளிப்புக் கடமையுடன் செய்வது கூடாது என்று இஸ்லாம் கட்டளையிடுகிறதோ அந்தக் காரியங்ளை குளிப்புக் கடமையுடன் செய்தால் அது அசுத்தமாகத்தான் கருதப்படும்.

தொழுவது, பள்ளிவாசலுக்கு வருவது , தவாஃப் செய்வது போன்ற சில காரியங்களைக் குளிப்புக் கடமையுடன் செய்வது கூடாது என்று மார்க்கம் தடுத்துள்ளது.

முஸ்லிம் அசுத்தமாக மாட்டான் என்பதை வைத்து இது போன்ற காரியங்களைச் செய்வது கூடும் என்று யாரும் வாதிட மாட்டார்கள். வாதிடக் கூடாது.

உதாரணமாக பச்சைப்  பூண்டு, வெங்காயம் சாப்பிட்டவர்கள் அந்த வாடை நீங்கும் வரை தொழுகைக்காக பள்ளிக்கு வரக்கூடாது என்று நபியவர்கள் கட்டளை பிறப்பித்துள்ளார்கள்.

முஃமின் அசுத்தமாக மாட்டான் என்பதை வைத்து பூண்டு சாப்பிட்டவர்கள் பள்ளிக்கு வந்து தொழுகையில் கலந்து கொள்ளலாம் என்று வாதிடுவது கூடாது.

முஸ்லிம் அசுத்தமாகமாட்டான் என்று நபியவர்கள் கூறியது இந்தப் பொருளில் அல்ல.

குளிப்புக் கடமையானவர்கள் ஒருவரைத் தொட்டாலோ, அல்லது ஒரு பொருளைத் தொட்டாலோ அந்தப் பொருளும் அசுத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகத்தான்.

இந்த நம்பிக்கையைத் தகர்ப்பதற்காகத்தான் நபியவர்கள் மாதவிலக்கு நிலையில் இருந்த ஆயிஷா (ரலி) அவர்களின் மடியில் தலைவைத்துப் படுத்தார்கள். குர்ஆன் ஓதினார்கள், மாதவிலக்கான மனைவிமார்களுடன் ஒரே போர்வையில் போர்த்திக் கொண்டார்கள், பாத்திரத்தில் அவர்கள் வாய் வைத்த இடத்தில் தாம் வாய் வைத்து அருந்தினார்கள். கட்டியணைத்தார்கள், அவர்கள் வாய்வைத்து கடித்த இறைச்சித் துண்டை நபியவர்கள் சாப்பிட்டார்கள்.

குளிப்புக் கடமையாகிவிட்டால் அவன் எதைத் தொட்டாலும் அசுத்தமாகிவிடும் என்ற நம்பிக்கையை தகர்ப்பதற்காகத்தான் நபியவர்கள் ஒரு முஃமின் அசுத்தமாக மாட்டான் என்று கூறுகிறார்கள்.

அதே நேரத்தில் குளிப்புக் கடமையுடன் எந்தெந்த காரியங்களைச் செய்வது கூடாது என்று இஸ்லாம் வழிகாட்டியுள்ளதோ அது போன்ற காரியங்களைச் செய்வதற்கு இதனை ஆதாரமாகக் கொள்வது கூடாது.

குளிப்புக் கடமையானவர்களுடன் பள்ளி அல்லாத இடங்களில் நெருங்கிப் பழகுவதில் தவறில்லை என்பதற்கே மேற்கண்ட செய்தி ஆதாரமாகும்.

முடிவுரை

எனவே குளிப்புக் கடமையானவர்கள் பள்ளிக்குள் நுழைவது கூடாது என்பதற்கு திருமறை வசனம் சான்றாக உள்ளது. மாதவிலக்கு பெண்கள் பள்ளிவாசலுக்குள் நுழையலாம் என்பதற்கு நேரடியான எந்தச் சான்றும் இல்லை. எனவே மாதவிடாய் ஏற்பட்ட பெண்கள் பள்ளிக்குள் வருவது கூடாது என்பதே சரியானதாகும். அதே ஏதாவது தேவைக்கு பள்ளியைக் கடந்து செல்ல வேண்டிய அவசியம் ஏற்பட்டால் அவர்கள் உள்ளே சென்று உடனடியாக வெளியே வருவதில் எந்தத் தவறும் இல்லை

 

 

 

 

September 25, 2013, 5:15 PM

மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

மனிதர்கள் ஆனைவரும் தவறு செய்பவர்களே!

பி. ஜைனுல் ஆபிதீன்

كل بني آدم خطاء . وخير الخطائين التوابون குல்லு பனீ ஆதம கத்தாவுன். வகைருல் கத்தாயீனத் தவ்வாபூன்

ஆதமுடைய மக்கள் அனைவரும் தவறு செய்பவர்கள். தவறு செய்பவர்களில் சிறந்தவர்கள் மன்னிப்புக் கேட்டு திருந்துபவர்களே!

இந்த நபிமொழி ஏகத்துவப் பிரச்சாரத்தின் போது அடிக்கடி எடுத்து வைக்கப்பட்டு வருகின்றது.

தொடர்ந்து படிக்க March 24, 2010, 3:56 AM

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?

ஜனநாயகம்நவீன இணை வைத்தலா?

பி. ஜைனுல் ஆபிதீன்

இந்தியா உள்ளிட்ட உலகின் பெரும்பான்மையான நாடுகளில் ஆட்சியாளர்களைத் தேர்வு செய்வதற்கு ஜனநாயக முறை பின்பற்றப்படுகின்றது. மக்களில் பெரும்பான்மையினர் யாருக்கு வாக்களிக்கின்றனரோ அவர்களைத் தேர்வு செய்வது தான் ஜனநாயகம் என்றழைக்கப்படுகிறது.

தொடர்ந்து படிக்க March 11, 2010, 10:39 AM

தாடி ஓர் ஆய்வு

தாடி ஓர் ஆய்வு

ஆண்கள் தாடி வைக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் வலியுறுத்திக் கூறியுள்ளதால் தாடி வைப்பது நபிவழி என்பதை அனைவரும் அறிந்து வைத்துள்ளனர்.

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه 

இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளரவிடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 5892 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

 حدثني أبو بكر بن إسحق أخبرنا ابن أبي مريم أخبرنا محمد بن جعفر أخبرني العلاء بن عبد الرحمن بن يعقوب مولى الحرقة عن أبيه عن أبي هريرة قال قال رسول الله صلى الله عليه وسلم جزوا الشوارب وأرخوا اللحى خالفوا المجوس 

மீசையை ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள். மஜூசி (நெருப்பு வணங்கிகளுக்கு)களுக்கு மாறு செய்யுங்கள். 

அறிவிப்பவர் : அபூ ஹுரைரா (ரலி)

நூல் : முஸ்லிம் 435 

மேற்கண்ட செய்தியில் நபி (ஸல்) அவர்கள் தாடிகளை வளர விடுங்கள் என்ற ஒரு உத்தரவை மட்டும் இடவில்லை. தாடியை வளர விடுவதன் மூலம் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் மாறு செய்ய வேண்டும் என்ற உத்தரவையும் இட்டிருக்கின்றார்கள்.  

ஒருவர் தாடியை அகற்றிவிட்டால் அவர் இணை வைப்பாளர்களுக்கும் நெருப்பு வணங்கிகளுக்கும் ஒப்ப நடந்தவராவார். மாற்றுக் கொள்கையில் உள்ளவர்களுக்கு ஒப்ப நடப்பவர்களுக்கும் இஸ்லாத்திற்கும் சம்பந்தம் இல்லை என நபி (ஸல்) அவர்கள் கூறியுள்ளார்கள்.  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

யார் (மாற்றுக் கொள்கையில் உள்ள) ஒரு கூட்டத்தாருக்கு ஒப்ப நடக்கின்றாரோ அவர் அவர்களையேச் சார்ந்தவர்.

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி) அவர்கள்

நூல் : அபூதாவுத் 3512 

எனவே தாடி வைப்பது வலியுறுத்தப்பட்ட நபிவழி என்று இதன் மூலம் அறிய முடிகிறது. இந்த சுன்னத்தை நிறைவேற்றுவதற்காக நாம் எந்த முயற்சியும் செய்ய வேண்டியதில்லை. நமது முயற்சியில்லாம் தானாக வளரும் தாடியை அகற்றாமல் இருந்தாலே சுன்னத்தை நிறைவேற்றிய நன்மை நமக்கு கிடைக்கின்றது.  

அது மட்டுமின்றி தாடியைப் பொறுத்த வரை அது நமது உடலில் ஒரு அங்கமாக இருக்கின்றது. நமது வாழ்நாள் முழுவதும் இந்த சுன்னத்தைத் தொடர்ந்து நிறைவேற்றும் பாக்கியம் இதன் மூலம் நமக்குக் கிடைக்கின்றது. எனவே நாம் ஒவ்வொருவரும் தாடி வைக்க வேண்டும்.

தாடியை மழிப்பதும் ஒட்ட நறுக்குவதும் 

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் இணை வைப்பாளர்கள் அதாவது மஜூசிகள் (நெருப்பு வணங்கிகள்) தங்களது தாடிகளை மழித்து வந்தனர். இச்செயலை நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.

இப்னு உமர் (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்

  صحيح ابن حبان - (ج 12 / ص 289)

5476 - أخبرنا الحسين بن محمد بن أبي معشر بحران قال : حدثنا محمد بن معدان الحراني قال : حدثنا الحسن بن محمد بن أعين قال : حدثنا معقل بن عبيد الله عن ميمون بن مهران عن ابن عمر قال : ذكر لرسول الله صلى الله عليه و سلم المجوس فقال : ( إنهم يوفون سبالهم ويحلقون لحاهم فخالفوهم ) فكان ابن عمر يجز سباله كما تجز الشاة أو البعير 

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களிடம் மஜூசிகளைப் பற்றி கூறப்பட்ட போது மஜூசிகள் தங்களது மீசைகளை அதிகமாக வைக்கிறார்கள். தாடிகளை மழிக்கிறார்கள். எனவே அவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.

நூல் : சஹீஹு இப்னி ஹிப்பான்  

நபி (ஸல்) அவர்கள் காலத்தில் வேதமுடையவர்கள் அதாவது யூதர்களும் கிரிஸ்தவர்களும் தங்களது தாடிகளை (மழிக்காமல்) ஒட்ட வெட்டி வந்தனர். இவர்கள் தாடியை விட மீசையை அதிகமாக வளர்த்தார்கள். இதையும் நபி (ஸல்) அவர்கள் தடை செய்தார்கள்.    

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்: 

حدثنا زيد بن يحيى حدثنا عبد الله بن العلاء بن زبر حدثني القاسم قال سمعت أبا أمامة يقول خرج رسول الله صلى الله عليه وسلم على مشيخة من الأنصار بيض لحاهم فقال يا معشر الأنصار حمروا وصفروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله إن أهل الكتاب يتسرولون ولا يأتزرون فقال رسول الله صلى الله عليه وسلم تسرولوا وائتزروا وخالفوا أهل الكتاب قال فقلت يا رسول الله إن أهل الكتاب يتخففون ولا ينتعلون قال فقال النبي صلى الله عليه وسلم فتخففوا وانتعلوا وخالفوا أهل الكتاب قال فقلنا يا رسول الله إن أهل الكتاب يقصون عثانينهم ويوفرون سبالهم قال فقال النبي صلى الله عليه وسلم قصوا سبالكم ووفروا عثانينكم وخالفوا أهل الكتاب  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் முதிர்ந்த வயதுடைய அன்சாரிகள் சிலரைக் கடந்து சென்றார்கள். அவர்களின் தாடிகள் வெண்மையாக இருந்தன. அப்போது நபி (ஸல்) அவர்கள் அன்சாரிக் கூட்டத்தாரே (உங்கள் தாடிகளை) சிவப்பு நிறத்தில் அல்லது மஞ்சள் நிறத்தில் வைத்துக் கொள்ளுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் முழுக்கால் சட்டை அணிகிறார்கள். வேட்டி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் நீங்கள் முழுக்கால் சட்டையும் வேட்டியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் காலுறை அணிகிறார்கள். காலணி அணிவதில்லை என்று நான் கூறினேன். அதற்கு நபி (ஸல்) அவர்கள் நீங்கள் காலுறையும் காலணியும் அணியுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று நாங்கள் கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் (ஒட்ட) கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள். 

நூல் : அஹ்மது 21252  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்: 

حدثنا محمد بن منهال حدثنا يزيد بن زريع حدثنا عمر بن محمد بن زيد عن نافع عن ابن عمر عن النبي صلى الله عليه وسلم قال خالفوا المشركين وفروا اللحى وأحفوا الشوارب وكان ابن عمر إذا حج أو اعتمر قبض على لحيته فما فضل أخذه  

இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளர விடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 5892  

இணை வைப்பாளர்கள் தங்களது மீசையை வளரவிட்டு தாடியை ஒட்ட நறுக்கி வந்தார்கள் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.    

தாடிகளை வளர விட வேண்டும். மீசையை ஒட்ட நறுக்க வேண்டும் என்பதே நமக்கு இடப்பட்ட கட்டளை. இவ்வாறு செய்தால் தான் நாம் இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்ய முடியும்.   

எனவே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளை தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்திற்காகப் பிறப்பிக்கப்பட்டுள்ளது.   

தாடியை மழிப்பதற்கும் ஒட்ட வெட்டுவதற்கும் இடையில் வித்தியாசம் இருந்தாலும் இவ்விரு செயல்களால் தாடி அகற்றப்பட்டு தாடி வைக்கவில்லை என்ற தோற்றமே ஏற்படுகிறது. எனவே மார்க்கம் இவ்விரு செயல்களையும் தடை செய்கிறது.  

தாடியை வெட்டுவதற்குத் தடையில்லை

நபி (ஸல்) அவர்கள் தாடியை மழிப்பதையும் அதை ஒட்ட வெட்டுவதை மட்டுமே தடை செய்துள்ளார்கள். தாடியை வெட்டவே கூடாது என்று தடை விதிக்கவில்லை.   

ஒருவர் தாடியை ஒட்ட வெட்டமால் சிறிது நீளமாக விட்டு வெட்டினால் அதை மார்க்கம் தடை செய்யவில்லை.   

ஆனால் இன்றைக்கு இலங்கையைச் சார்ந்த சில அறிஞர்கள் தாடியை வெட்டவே கூடாது என்று கூறி வருகின்றனர். சில ஹதீஸ்களைத் தவறாகப் புரிந்து கொண்டே இவர்கள் இவ்வாறு கூறுகின்றனர்.  

5893حَدَّثَنِي مُحَمَّدٌ أَخْبَرَنَا عَبْدَةُ أَخْبَرَنَا عُبَيْدُ اللَّهِ بْنُ عُمَرَ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ رَضِيَ اللَّهُ عَنْهُمَا قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ انْهَكُوا الشَّوَارِبَ وَأَعْفُوا اللِّحَى رواه البخاري

382حَدَّثَنَا سَهْلُ بْنُ عُثْمَانَ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ عَنْ عُمَرَ بْنِ مُحَمَّدٍ حَدَّثَنَا نَافِعٌ عَنْ ابْنِ عُمَرَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ خَالِفُوا الْمُشْرِكِينَ أَحْفُوا الشَّوَارِبَ وَأَوْفُوا اللِّحَى رواه مسلم

5892حَدَّثَنَا مُحَمَّدُ بْنُ مِنْهَالٍ حَدَّثَنَا يَزِيدُ بْنُ زُرَيْعٍ حَدَّثَنَا عُمَرُ بْنُ مُحَمَّدِ بْنِ زَيْدٍ عَنْ نَافِعٍ عَنْ ابْنِ عُمَرَ عَنْ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ خَالِفُوا الْمُشْرِكِينَ وَفِّرُوا اللِّحَى وَأَحْفُوا الشَّوَارِبَ وَكَانَ ابْنُ عُمَرَ إِذَا حَجَّ أَوْ اعْتَمَرَ قَبَضَ عَلَى لِحْيَتِهِ فَمَا فَضَلَ أَخَذَهُ رواه البخاري

383حَدَّثَنِي أَبُو بَكْرِ بْنُ إِسْحَقَ أَخْبَرَنَا ابْنُ أَبِي مَرْيَمَ أَخْبَرَنَا مُحَمَّدُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي الْعَلَاءُ بْنُ عَبْدِ الرَّحْمَنِ بْنِ يَعْقُوبَ مَوْلَى الْحُرَقَةِ عَنْ أَبِيهِ عَنْ أَبِي هُرَيْرَةَ قَالَ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ جُزُّوا الشَّوَارِبَ وَأَرْخُوا اللِّحَى خَالِفُوا الْمَجُوسَ رواه مسلم  

அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்கள் கூறினார்கள் : மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளரவிடுங்கள். 

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நூல் : புகாரி 5893  

மேற்கண்ட ஹதீஸில் தாடியை வளர விடுங்கள் என்று மொழிபெயர்த்துள்ள இடத்தில் أَعْفُواஅஉஃபூ என்ற அரபுச் சொல் இடம் பெற்றுள்ளது. சில அறிவிப்புகளில் أَوْفُواஅவ்ஃபூ, وَفِّرُواவஃப்பிரூ மற்றும் أَرْخُواஅர்கூ ஆகிய வார்த்தைகள் இடம் பெற்றுள்ளன.   

ஹதீஸில் கூறப்பட்டுள்ள அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ மற்றும் அர்கூ ஆகிய வார்த்தைகளுக்கு தாடியை வெட்டவே கூடாது என அகராதியில் பொருள் இருப்பதாக தாடியை வெட்டக் கூடாது என்று கூறுவோர் வாதிடுகிறார்கள்.  

மீசையைக் குறைப்பது போன்று தாடியைக் குறைக்கக் கூடாது  

இவர்கள் கூறுவது போல் இச்சொற்களுக்கு இந்த அர்த்தம் இருப்பதாக எந்த அரபி அகராதி நூலும் கூறவில்லை. மாறாக தாடியை அதிகமாக வைக்க வேண்டும். மீசையைக் குறைப்பது போன்று குறைத்து விடக் கூடாது என்றே லிசானுல் அரப் எனும் அரபு அகராதியில் கூறப்பட்டுள்ளது.  

لسان العرب - (ج 15 / ص 72)

وفي الحديث أَنه صلى الله عليه وسلم أَمَرَ بإعْفاء اللِّحَى هو أَن يُوفَّر شَعَرُها ويُكَثَّر ولا يُقَصَر كالشَّوارِبِ  

நபி (ஸல்) அவர்கள் தாடியை இஃபாச் செய்யுமாறு உத்தரவிட்டதாக ஹதீஸில் உள்ளது. இஃபா என்றால் தாடியை அதிகமாக வைப்பதும் மீசையை குறைப்பதைப் போன்று குறைக்காமல் இருப்பதாகும்.    

லிசானுல் அரப் பாகம் : 15 பக்கம் : 72 

அவுஃபூ என்ற சொல்லுக்கு தாடியை அறவே வெட்டக் கூடாது என்பது பொருள் இல்லை. மாறாக மீசையை ஒட்டக் கத்தரிப்பது போல் கத்தரிக்கக் கூடாது என்பதே பொருள் என்று லிஸானுல் அரப் ஆசிரியர் பொருள் கொள்கிறார்.  

மீசையை ஒட்ட வெட்டுவதைப் போன்று தாடியை ஒட்ட வெட்டக் கூடாது. இதை விடவும் கூடுதலாக தாடியை வைக்க வேண்டும் என்றே நாமும் அகராதியின் பொருளுக்கு உட்பட்டு கூறுகிறோம்.  

வளர விடுங்கள் என்ற சொல்லுக்கு சிறிதளவு கூட வெட்டக் கூடாது என்பது பொருளா? அல்லது ஒட்டக் கத்தரிக்காத அளவுக்கு இருந்தால் போதும் என்பது பொருளா? இதை வேறு நபிமொழிகளில் இருந்தும் நாம் அறிந்து கொள்ளலாம்.  

மேலும் (வளர விடுங்கள் என்ற அர்த்தத்தில்) தாடி தொடர்பான ஹதீஸ்களில் கூறப்பட்டுள்ள சொற்கள் வேறு சில ஹதீஸ்களில் வெட்டப்பட்ட தலை முடி விஷயத்திலும் கூறப்பட்டிருக்கின்றது.  

4191حَدَّثَنِي مُحَمَّدُ بْنُ هِشَامٍ أَبُو عَبْدِ اللَّهِ حَدَّثَنَا هُشَيْمٌ عَنْ أَبِي بِشْرٍ عَنْ مُجَاهِدٍ عَنْ عَبْدِ الرَّحْمَنِ بْنِ أَبِي لَيْلَى عَنْ كَعْبِ بْنِ عُجْرَةَ قَالَ كُنَّا مَعَ رَسُولِ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِالْحُدَيْبِيَةِ وَنَحْنُ مُحْرِمُونَ وَقَدْ حَصَرَنَا الْمُشْرِكُونَ قَالَ وَكَانَتْ لِي وَفْرَة رواه البخاري  

கஅப் பின் உஜ்ரா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:   

நாங்கள் இஹ்ராம் அணிந்தவர்களாக ஹுதைபிய்யாவில் அல்லாஹ்வின் தூதர் (ஸல்) அவர்களுடன் இருந்தோம். எங்களை (கஅபாவிற்குச் செல்ல விடாமல்) இணை வைப்பவர்கள் தடுத்து விட்டிருந்தனர். எனக்கு (காது சோணை வரை) நிறைய தலைமுடி இருந்தது.  

புகாரி 4191  

மேற்கண்ட ஹதீஸில் நிறைய தலைமுடி என்று பொருள் செய்துள்ள இடத்தில் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடி விஷயத்தில் கூறப்பட்ட வஃப்பிரூ என்ற சொல்லும் வஃப்ரத் என்ற இச்சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை.  

கஅப் (ரலி) அவர்களுக்கு நிறைய தலைமுடி இருந்தது எனக் கூறப்பட்டிருப்பதால் கஅப் (ரலி) அவர்கள் தலைமுடியை வெட்டவே இல்லை என்று விளங்க மாட்டோம். தாடி விஷயத்தில் இதே சொல் தான் பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே தாடியை வெட்டவே கூடாது என்று விளங்குவது இச்சொல்லின் அகராதிப் பொருளுக்கு எதிரானதாகும்.

481 و حَدَّثَنِي عُبَيْدُ اللَّهِ بْنُ مُعَاذٍ الْعَنْبَرِيُّ قَالَ حَدَّثَنَا أَبِي قَالَ حَدَّثَنَا شُعْبَةُ عَنْ أَبِي بَكْرِ بْنِ حَفْصٍ عَنْ أَبِي سَلَمَةَ بْنِ عَبْدِ الرَّحْمَنِ وَكَانَ أَزْوَاجُ النَّبِيِّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَأْخُذْنَ مِنْ رُءُوسِهِنَّ حَتَّى تَكُونَ كَالْوَفْرَةِ رواه مسلم  

அபூ சலமா பின் அப்திர் ரஹ்மான் பின் அவ்ஃப் (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:   

நபி (ஸல்) அவர்களுடைய துணைவியர், காதின் சோனைவரை இருக்கும் அளவிற்குத் தம் தலை முடியிலிலிருந்து சிறிதளவை(க் கத்தரித்து) எடுத்து விடுவார்கள். 

முஸ்லிம் 533  

மேற்கண்ட ஹதீஸிலும் வஃப்ரத் என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. காதின் சோனை வரை இருக்கும் அளவுக்கு கத்தரிக்கப்பட்ட முடிக்கு இவ்வார்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. எனவே இதிலிருந்து இந்த வார்த்தைக்கு முடியை வெட்டவே கூடாது என்ற பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பது தெளிவாகிறது.  

அபூ உமாமா (ரலி) அவர்கள் கூறுகிறார்கள்:  

فَقُلْنَا يَا رَسُولَ اللَّهِ إِنَّ أَهْلَ الْكِتَابِ يَقُصُّونَ عَثَانِينَهُمْ وَيُوَفِّرُونَ سِبَالَهُمْ قَالَ فَقَالَ النَّبِيُّ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قُصُّوا سِبَالَكُمْ وَوَفِّرُوا عَثَانِينَكُمْ وَخَالِفُوا أَهْلَ الْكِتَابِ رواه أحمد   

நாங்கள் அல்லாஹ்வின் தூதரே வேதமுடையவர்கள் தங்களது தாடிகளை (ஒட்ட) கத்தரித்துக் கொள்கிறார்கள் மீசைகளை வளர விடுகிறார்கள் என்று கூறினோம். அதற்கு நபி (ஸல்) அவர்கள் உங்களது மீசைகளை நீங்கள் கத்தரியுங்கள். தாடிகளை வளர விடுங்கள். வேதமுடையவர்களுக்கு மாறு செய்யுங்கள் என்று கூறினார்கள்.  

நூல் : அஹ்மது 21252

மேற்கண்ட ஹதீஸில் வேதமுடையவர்கள் மீசையை வளர விடுகிறார்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் َيُوَفِّرُونَயுவஃப்பிரூன என்ற வார்த்தை பயன்படுத்தப்பட்டுள்ளது. தாடியை வளர விடுங்கள் என்பதற்கு பயன்படுத்தப்பட்ட அதே சொல் தான் இது. மீசைகளை வளர விடுகிறார்கள் என்ற மேற்கண்ட சொல்லுக்கு நாம் எவ்வாறு பொருள் கொள்வோம்? வேதமுடையவர்கள் தங்களது மீசையை வெட்டாமல் இருந்தார்கள் என்று நாம் புரிந்து கொள்ள மாட்டோம். ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைத்திருந்தார்கள் என்றே புரிந்து கொள்வோம். தாடியை வளர விடுங்கள் என்பதையும் இப்படித்தான் புரிந்து கொள்ள வேண்டும்.  

தாடி தொடர்பான ஹதீஸில் வளர விடுங்கள் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபூ என்ற வார்த்தையும் பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபா என்ற வார்த்தை ஹதீஸில் நபி (ஸல்) அவர்களின் தலைமுடியைக் குறிக்க பயன்படுத்தப்பட்டுள்ளது. அவ்ஃபூ என்ற சொல்லும் அவ்ஃபா என்ற சொல்லும் ஒரே வேர்ச்சொல்லிலிருந்து உருவானவை. இதைப் பின்வரும் ஹதீஸிலிருந்து புரியலாம்.  

252 حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ مُحَمَّدٍ قَالَ حَدَّثَنَا يَحْيَى بْنُ آدَمَ قَالَ حَدَّثَنَا زُهَيْرٌ عَنْ أَبِي إِسْحَاقَ قَالَ حَدَّثَنَا أَبُو جَعْفَرٍ أَنَّهُ كَانَ عِنْدَ جَابِرِ بْنِ عَبْدِ اللَّهِ هُوَ وَأَبُوهُ وَعِنْدَهُ قَوْمٌ فَسَأَلُوهُ عَنْ الْغُسْلِ فَقَالَ يَكْفِيكَ صَاعٌ فَقَالَ رَجُلٌ مَا يَكْفِينِي فَقَالَ جَابِرٌ كَانَ يَكْفِي مَنْ هُوَ أَوْفَى مِنْكَ شَعَرًا وَخَيْرٌ مِنْكَ ثُمَّ أَمَّنَا فِي ثَوْبٍ رواه البخاري  

அபூஜஅஃபர் (அல்பாக்கிர் முஹம்மத் பின் அலீ-ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:   

ஜாபிர் பின் அப்தில்லாஹ் (ரலி) அவர்கள் அருகில் நானும் என் தந்தை (அலீ பின் ஹுசைன்) அவர்களும் வேறு சிலரும் இருந்தோம். அப்போது ஜாபிர் (ரலி) அவர்களிடம் குளியல் பற்றிக் கேட்டோம். ஒரு ஸாஉத் தண்ணீர் போதும் என்று ஜாபிர் (ரலி) அவர்கள் கூறினார்கள். அப்போது ஒருவர்,அந்தத் தண்ணீர் எனக்குப் போதாது என்றார். அதற்கு ஜாபிர் (ரலி) அவர்கள், உன்னை விட அதிக முடியுள்ளவரும் உன்னை விடச் சிறந்தவரு(மான அல்லாஹ்வின் தூதர் அவர்களு)க்கு அந்த அளவு தண்ணீர் போதுமானதாக இருந்தது எனக் கூறினார்கள். பிறகு ஒரே ஆடை அணிந்தவர்களாக எங்களுக்குத் தலைமை தாங்கித் தொழுவித்தார்கள். 

புகாரி 252  

அதிக முடியுள்ளவர் என்று பொருள் செய்துள்ள இடத்தில் அவ்ஃபா என்ற அரபுச் சொல் பயன்படுத்தப்பட்டுள்ளது. இந்த வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்ற பொருள் இருக்குமேயானால் நபி (ஸல்) அவர்கள் தலைமுடியை வெட்டியதே இல்லை என்ற தவறான கருத்து ஏற்படும்.    

ஏனென்றால் நபி (ஸல்) அவர்கள் தமது தலைமுடியை வெட்டியதற்கு ஆதாரங்கள் உள்ளன. எனவே இவ்வார்த்தைக்கு முடியை வெட்டாமல் இருத்தல் என்று பொருள் இருப்பதாக வாதிடுவது தவறு என்பதைச் சந்தேகமற உணரலாம்.   

இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் நபிமொழிக்கு எதிரானதா?   

அஉஃபூ, அவ்ஃபூ, வஃப்பிரூ ஆகிய வார்த்தைகளைக் கொண்டு தாடியை வளர விடுங்கள் என்ற கருத்தில் வரக்கூடிய ஹதீஸ்களை இப்னு உமர் (ரலி) அவர்களே அறிவிக்கிறார்கள். இந்த ஹதீஸை அறிவித்த இப்னு உமர் (ரலி) அவர்களே தாடியை வெட்டியுள்ளார்கள்.   

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:   

இணை வைப்பாளர்களுக்கு மாறு செய்யுங்கள்: தாடிகளை வளர விடுங்கள். மீசையை ஒட்ட நறுக்குங்கள்.   

இதை இப்னு உமர் (ரலி) அவர்கள் அறிவிக்கிறார்கள்.  

இதன் அறிவிப்பாளர்களில் ஒருவரான நாஃபிஉ (ரஹ்) அவர்கள் கூறுகிறார்கள்:   

இப்னு உமர் (ரலி) அவர்கள் ஹஜ் அல்லது உம்ராச் செய்தால் தமது தாடியைப் பிடித்துப் பார்ப்பார்கள். (ஒரு பிடிக்கு) மேலதிகமாக உள்ளதை (கத்தரித்து) எடுத்து விடுவார்கள். 

புகாரி 5892  

இப்னு உமர் (ரலி) அவர்கள் தாடியை வெட்டிய தகவல் தனியான செய்தி அல்ல. மாறாக நபி (ஸல்) அவர்களின் சொல்லுடன் இதுவும் இணைத்து அறிவிக்கப்படுகின்றது.  

இப்னு உமர் (ரலி) அவர்களைப் போல் இப்னு அப்பாஸ் (ரலி) அவர்களும் முஹம்மது பின் கஅப் (ரலி) அவர்களும் தாடியை வெட்டலாம் என்ற கருத்தைக் கொண்டுள்ளனர். இதையெல்லாம் நாம் இங்கே எடுத்துக் காட்டாமல் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை மட்டும் இங்கே குறிப்பிடுவதற்கு முக்கிய காரணம் உள்ளது.   

இப்னு உமர் (ரலி) அவர்களின் செயலை நாம் ஆதாரமாக இங்கே குறிப்பிடவில்லை. ஒருவரின் சொல்லையும் செயலையும் முரண்பாடில்லாமல் விளங்கிக் கொள்ள வாய்ப்பிருக்கின்ற போது அவ்விரண்டிற்கும் இடையே முரண்பாடு கற்பிக்கக் கூடாது என்பதே நமது வாதம்.   

தாடியை வெட்டவே கூடாது என்று ஹதீஸ் கூறுகிறது என வாதிடுபவர்கள் இப்னு உமர் (ரலி) அவர்கள் தமது தாடியை வெட்டிய செயல் இந்த ஹதீஸிற்கு எதிரானது என்றும் தவறானது என்றும் கூறுகிறார்கள்.  

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை ஹதீஸ் தரவில்லை என்பதை முன்பே நாம் நிரூபித்து விட்டோம். இந்த ஹதீஸின் அறிவிப்பாளர் இப்னு உமர் (ரலி) அவர்கள் தனது தாடியை வெட்டியிருப்பது நமது கருத்தை மேலும் வலுப்படுத்துகிறது.   

ஒரு ஹதீஸை அறிவிக்கும் அறிவிப்பாளரே அந்த ஹதீஸைப் பற்றி நன்கறிந்தவராக இருப்பார் என்று ஹதீஸ் கலையில் ஒரு விதி கூறப்படும். இந்த அடிப்படையில் பார்த்தாலும் இப்னு உமர் (ரலி) அவர்களின் செயல் தாடியை வெட்டுவது தவறில்லை என்ற நமது கருத்தை உறுதிபடுத்துகிறது.   

குறிப்பாக இப்னு உமர் (ரலி) அவர்களைப் பொறுத்த வரை நபிமொழியை ஜானுக்கு ஜான் கடைப்பிடிப்பதில் மிகுந்த ஆர்வம் உடையவர். இப்படிப்பட்ட ஒரு நபித்தோழரின் அறிவிப்புக்கும் செயலுக்கும் இடையே முரண்பாடைக் கொண்டு வருவது ஏற்புடையதல்ல.  

சிக்கல்களை உருவாக்கும் கருத்து

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தால் சில சிக்கல்களும் ஏற்படுகின்றன. சிலருக்கு தாடி எல்லையில்லாமல் மிக நீளமாக வளர்ந்து கொண்டே இருக்கின்றன. இவர்கள் என்ன செய்வது? என்று கேட்டால் மாற்றுக் கருத்தில் இருப்பவர்களிடம் முறையான எந்தப் பதிலும் இல்லை.   

மேலும் தாடியைப் பொறுத்த வரை அது ஒரே அளவில் சீராக வளருவதில்லை. ஓரிடத்தில் அதிகமாகவும் ஓரிடத்தில் குறைவாகவும் சில முடிகள் நீளமாகவும் சில முடிகள் நீளம் குறைவாகவும் வளருகின்றன.  

தாடியை வெட்டக் கூடாது என்று கூறினால் அலங்கோலமாக இருக்கும் தாடியைச் சரி செய்ய முடியாது. நமது தோற்றத்தை அழகுற வைத்துக் கொள்ள வேண்டும் என இஸ்லாம் கூறும் ஒழுங்கு முறையை மீறும் நிலை தான் இதனால் ஏற்படும்.  

பொருத்தமற்ற ஆதாரங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்ற கருத்தை முகவை அப்பாஸ் என்பவரும் தற்போது பரப்பிக் கொண்டு வருகிறார். இவர் அரபு மூலத்தை அறிந்தவர் இல்லை. மற்றவர்கள் எழுதியதை நம்பி எதையாவது எழுதுபவர். இதனால் இவரது கருத்து அறிவு சார்ந்ததாக இருக்கவில்லை.  

இது தொடர்பாக இவர் எழுதிய கட்டுரையில் இவர் ஆதாரமாகக் கருதும் வசனத்தையும் சில ஹதீஸ்களையும் குறிப்பிட்டிருந்தார்.   

விபரம் உள்ளவர்கள் இவரது கட்டுரையைப் பார்த்த உடனே இவரது கருத்துக்கும் இவர் எடுத்துக் காட்டிய ஆதாரங்களுக்கும் எள்ளளவு கூட சம்பந்தம் இல்லை என்பதைத் தெளிவாகப் புரிந்து கொள்வார்கள்.   

தாடியை வெட்டவே கூடாது என்பது இவரது நிலைபாடு. இந்த நிலைபாட்டிற்கு ஆதாரம் காட்டுவதாக இருந்தால் தாடியை வெட்டக் கூடாது என நபி (ஸல்) அவர்கள் தடை விதித்தாக ஒரு ஹதீஸையாவது இவர் கூறியிருக்க வேண்டும். இந்தக் கருத்துப்பட ஒரு ஆதாரத்தையும் அவர் சுட்டிக் காட்டவில்லை.    

மார்க்கத்தில் ஒரு விஷயம் தடுக்கப்பட்டிருந்தால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யாமல் இருக்க மாட்டார்கள்.  

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

حدثنا إسماعيل حدثني مالك عن أبي الزناد عن الأعرج عن أبي هريرة عن النبي صلى الله عليه وسلم قال دعوني ما تركتكم إنما هلك من كان قبلكم بسؤالهم واختلافهم على أنبيائهم فإذا نهيتكم عن شيء فاجتنبوه وإذا أمرتكم بأمر فأتوا منه ما استطعتم  

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத் தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும் தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள். 

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 7288  

ஒரு விஷயத்தை நாம் தவிர்ந்து கொள்ள வேண்டுமென்றால் அதை நபி (ஸல்) தடுத்திருக்க வேண்டும் என்று மேற்கண்ட ஹதீஸ் கூறுகிறது. எனவே தாடியை வெட்டவே கூடாது என்றால் இதை நபி (ஸல்) அவர்கள் தடுத்திருக்க வேண்டும். நபி (ஸல்) அவர்கள் இதைத் தடுத்ததாக ஒரு ஆதாரம் கூட இல்லை.  

நபி (ஸல்) அவர்கள் ஒன்றைத் தடுக்காமல் இருக்கும் போது முகவை அப்பாஸ் அதைத் தடை செய்தால் ஈமான் உள்ள யாரும் இத்தடையை ஏற்க மாட்டார்கள். ஏற்க முடியாது.   

மீசையை நன்கு ஒட்டக் கத்தரியுங்கள். தாடியை வளர விடுங்கள் என்று நபி (ஸல்) அவர்கள் கூறிய செய்தியை சுட்டிக்காட்டி பின்வருமாறு தன் வாதத்தை வைக்கிறார்.  

இந்தப் பொன்மொழியில் இரண்டு விஷயங்களை சொன்ன நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள். மற்றொன்றை வளரவிடச் சொல்கிறார்கள். எனில் தாடியில் கை வைக்கக் கூடாது என்பது தெளிவு.   

ஹதீஸில் உள்ளவாறு விளங்காமல் தன் மனோ இச்சையின் அடிப்படையில் விளங்கியதால் இவர் தானும் குழம்பி மற்ற மக்களையும் குழப்பத்தில் ஆழ்த்த முயற்சிக்கிறார்.    

ஹதீஸில் கூறப்பட்ட வாசகத்தையும் இவர் ஹதீஸிற்கு கூறிய தவறான விளக்கத்தையும் நன்கு கவனித்தால் இவர் எங்கே தவறு செய்கிறார் என்பதை அறியலாம்.   

நபி (ஸல்) அவர்கள் ஒன்றை நறுக்கச் சொல்கிறார்கள் எனக் கூறி ஹதீஸில் இல்லாத கருத்தை சொருகப் பார்க்கிறார்.  

மீசையை நறுக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் உத்தரவிடவில்லை. மீசையை நன்கு ஒட்ட நறுக்க வேண்டும் என்றே உத்தரவிட்டார்கள்.  

இந்த உத்தரவுடன் தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவும் இணைத்து கூறப்படுகிறது. அப்படியானால் மீசையை ஒட்ட நறுக்குவதைப் போன்று தாடியை ஒட்ட நறுக்கி விடாதீர்கள் என்ற தடையைத் தான் ஹதீஸ் கூறுகிறதே தவிர இவர் கூறுவது போல் தாடியை வெட்டவே கூடாது என்ற தடையை ஹதீஸ் பிறப்பிக்கவே இல்லை.   

எனவே தாடியில் கை வைக்கக் கூடாது என்று இவர் தன் மனோ இச்சையின் அடிப்படையில் தான் கூறியிருக்கிறார் என்பது தெளிவாகிறது.  

அடுத்து இவர் தனது வாதத்திற்கு சில விஷயங்களை ஆதாரமாக முன்வைக்கிறார். ஹாரூன் (அலை) அவர்களின் தாடி பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருந்தது. நபி (ஸல்) அவர்களின் தாடி பிடிக்கும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. மழை நீர் அத்தாடியில் வழிந்தோடும் அளவிற்கு அது அமைந்திருந்தது. ஓதும் போது அசையும் அளவிற்குப் பெரிதாக இருந்தது. நபித்தோழர்களின் தாடியும் பெரிதாக இருந்தது. இவ்வாறு கூறி தாடியை வெட்டக் கூடாது என்று வாதிடுகிறார்.    

தாடியில் கை வைக்கக் கூடாது என்பது இவரது வாதம். இவர் சுட்டிக் காட்டிய ஆதாரங்களில் ஏதாவது ஒன்றிலாவது தாடியை வெட்டக் கூடாது என்ற கருத்து அடங்கியிருக்கிறதா? என்று சிந்தித்துப் பாருங்கள்.  

இவர்கள் குறிப்பிட்ட நபர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருப்பதால் இவர்கள் யாரும் தாடியை வெட்டவே இல்லை என்று எப்படிக் கூற முடியும்? இவர்கள் தாடியை வெட்டினாலும் அது பிடிக்கும் அளவுக்கு வளர்ந்து விடுமே? எனவே இந்த ஆதாரங்களை வைத்து தாடியை வெட்டக் கூடாது என்று இவர் கூறுவது அறிவுடமையல்ல.   

ஒரு பேச்சிற்கு இவர் குறிப்பிட்ட ஹாரூன் (அலை) அவர்கள் நபி (ஸல்) அவர்கள் நபித்தோழர்கள் அயோக்கியன் அபூ ஜஹ்ல் ஆகியோர் தாடியை வெட்டியதே இல்லை என்று வைத்துக் கொண்டாலும் அப்போதாவது தாடியை வெட்டக் கூடாது என்று இதிலிருந்து சட்டம் எடுக்க முடியுமா? என்றால் அதுவும் முடியாது.  

தாடியை வெட்டித் தான் ஆக வேண்டும்; பெரிதாக வைக்கக் கூடாது. தாடியைப் பிடிக்கும் அளவிற்கு வைக்கக் கூடாது என்று நாம் கூறவில்லை. இவையெல்லாம் கூடாது என்று நாம் கூறினாலே மேற்கண்ட ஆதாரங்களை காட்டி நமது நிலைபாடு தவறு என்று கூற முடியும்.   

ஒருவர் தாடியை வெட்டாமல் இருப்பதும் அதைப் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக வளர்ப்பதும் அவரவரது விருப்பம். இவ்வாறு செய்வதற்கு மார்க்கத்தில் அனுமதி உண்டு என்றே நாம் கூறுகிறோம்.   

எனவே இவர் சுட்டிக்காட்டிய ஆதாரங்கள் எதுவும் நமது நிலைபாட்டிற்கு எதிரானைவை அல்ல. மாறாக தாடியை இவ்வாறெல்லாம் வைத்துக் கொள்ளலாம் என்ற நமது நிலைபாட்டிற்கு இவை சான்றுகளாக உள்ளன.   

ஹதீஸ்களிலிருந்து எவ்வாறு சட்டம் எடுக்க வேண்டும் என்ற ஒழுங்கு முறையை இவர் அறியாத காரணத்தினால் தன் வாதத்திற்கு சம்பந்தமில்லாத செய்திகளை எல்லாம் கூறியுள்ளார்.  

நபிகள் நாயகம் ஸல் அவர்கள் ஒன்றைத் தடை செய்துள்ளார்கள் என்றால் அது மட்டும் தடை என்று நாம் புரிந்து கொள்ள வேண்டும். அவர்கள் ஒன்றைச் செய்கிறார்கள் என்றால் அது மட்டும் தான் அனுமதி என்று விளங்கக் கூடாது. அனுமதிக்கப் பட்ட பல காரியங்களில் ஒன்றை அவர்கள் செய்துள்ளார்கள் என்றே புரிந்து கொள்ள வேண்டும்.  

ஆனால் ஒருவர் இதற்கு மாற்றமாக நபி (ஸல்) அவர்கள் தேர்வு செய்தது மட்டும் தான் அனுமதிக்கப்பட்டது. மற்றனைத்தும் தடுக்கப்பட்டது என்று கூறினால் அவரது நிலைபாடு தவறு என்று கூறுவோம்.  

ஏனென்றால் எது தடை செய்யப்பட்டது என்பதை நபி (ஸல்) அவர்களின் கட்டளை மூலமே அறிய முடியும். எது அனுமதிக்கப்பட்டது என்பதை அவர்களின் உத்தரவின் மூலமும் அவர்களின் செயலின் மூலமாகவும் அறிய முடியும். நபி (ஸல்) அவர்கள் ஒரு காரியத்தைச் செய்திருப்பதை மட்டும் வைத்து மற்றனைத்தும் தடை செய்யப்பட்டது என்று முடிவு செய்யக் கூடாது.   

உதாரணமாக வேட்டியைத் தரையில் இழுபடாமல் கரண்டைக் கால் வரை உடுத்திக் கொள்வதற்கு மார்க்கத்தில் அனுமதியுள்ளது. ஆனால் நபி (ஸல்) அவர்கள் தன் கெண்டைக்கால் தெரியும் அளவிற்கு கீழாடையை உயர்த்தி அணிந்ததாக திர்மிதியில் இடம்பெற்ற 181 வது ஹதீஸ் கூறுகிறது.   

நபி (ஸல்) அவர்கள் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு ஆடை உடுத்தியிருப்பதால் இவ்வாறு தான் ஆடை உடுத்த வேண்டும் என்று நாம் கூற மாட்டோம். கரண்டை வரை ஆடை உடுத்திக் கொள்வதை ஹதீஸ்கள் அனுமதிப்பதால் கரண்டை வரை உடுத்தலாம். நபி (ஸல்) அவர்கள் உடுத்தியது போல் கெண்டைக் கால் தெரியும் அளவிற்கு உயர்த்தியும் உடுத்தலாம் என்றே கூறுவோம்.   

மேலும் காவி நிற ஆடையை ஆண்கள் உடுத்தக் கூடாது என்று நபி (ஸல்) அவர்கள் தடை செய்துள்ளார்கள். எனவே மற்ற நிற ஆடைகள் அனுமதிக்கப்பட்டவை என்பதை நாம் இதிலிருந்து அறிந்து கொள்வோம்.  

நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணிந்ததாக எந்த ஆதாரமும் இல்லை. இப்போது நபி (ஸல்) அவர்கள் ஊதா நிற ஆடையை அணியாத காரணத்தால் அந்த நிற ஆடையை நாமும் அணியக் கூடாது என்று கூற மாட்டோம்.

இதேப் போன்று தான் தாடி விஷயத்திலும் நாம் கூறுகிறோம். அதாவது தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்றே நபி (ஸல்) அவர்கள் தடுத்தார்கள். வெட்டுவதை அவர்கள் தடுக்கவில்லை. எனவே ஒட்ட நறுக்காமல் கூடுதலாக தாடியை வைத்து வெட்டினால் அதை நபி (ஸல்) அவர்கள் தடை செய்யவில்லை. அது அனுமதிக்கப்பட்டது தான்.  

நபி (ஸல்) அவர்கள் தாடியைப் பிடிக்கும் அளவிற்கு பெரிதாக வைத்திருக்கிறார்கள் என்றால் இது அவர்களின் விருப்பம். இது போன்று நாமும் வைத்துக் கொள்ளலாம். இப்படித் தான் வைக்க வேண்டும் என்று அவர்கள் நமக்கு உத்தரவிடவில்லை என்பதால் இவ்வாறு வைக்க வேண்டும் என்று நாமும் கூற மாட்டோம்.   

இதை முகவை அப்பாஸ் விளங்காத காரணத்தினால் தாடியைப் பிடிக்கும் அளவுக்கு பெரிதாகத் தான் வைக்க வேண்டும் என்று ஹதீஸில் கூறப்படாத உத்தரவை சுயமாகக் கூறிவருகிறார்

தலை முடி சம்பந்தப்பட்ட ஹதீஸ் ஆதாரமாகுமா? 

தலையின் ஒரு பகுதி சிரைக்கப்பட்டு மறு பகுதி சிரைக்கப்படாமலிருந்த ஒரு சிறுவனை நபி (ஸல்) அவர்கள் பார்த்தார்கள். அப்போது இவ்வாறு செய்வதை அவர்கள் தடை செய்தார்கள். (சிரைத்தால்) முழுமையாகச் சிரைத்து விடுங்கள். (முடியை வைக்க நினைத்தால்) முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறினார்கள்

அறிவிப்பவர் : இப்னு உமர் (ரலி)

நஸயீ 4962  

தாடி தொடர்பான சட்டத்தை மக்களுக்கு நாம் விளக்கும் போது மேற்கண்ட ஹதீஸை நாம் குறிப்பிடுவதுண்டு.   

மேற்கண்ட ஹதீஸில் தலை முடி தொடர்பாகத் தானே பேசப்படுகிறது. இதில் தாடியைப் பற்றி பேசப்படவில்லையே? எனவே தாடியை வெட்டலாம் என்பதற்கு இது எப்படி ஆதாரமாக முடியும்? என்று முகவை அப்பாஸ் கேள்வி எழுப்பியுள்ளார்.  

இவரது இக்கேள்வி அறியாமையின் வெளிப்பாடாக இருக்கிறது. மேற்கண்ட ஹதீஸை நாம் எதற்கு சுட்டிக் காட்டினோம் என்பதை இவர் விளங்காத காரணத்தால் இக்கேள்வியைக் கேட்டுள்ளார்.   

மேற்கண்ட ஹதீஸை மட்டும் வைத்து தாடியை வெட்டலாம் என்று நாம் கூறவில்லை. அவ்வாறு யாராலும் கூற முடியாது.   

மீசையை ஒட்ட நறுக்குங்கள். தாடியை வளர விடுங்கள் என்பதே தாடி தொடர்பான ஹதீஸாகும். இந்த ஹதீஸிலிருந்தே தாடியை வெட்டலாம் என்று நாம் சட்டம் கூறுகிறோம். இவர் கூறுவது போல் தலை முடி தொடர்பான ஹதீஸிலிருந்து அல்ல.  

மேற்கண்ட தலை முடி தொடர்பான ஹதீஸில் தலை முடியை முழுமையாக விடுங்கள்! அல்லது முழுமையாக சிரையுங்கள் என்று கூறப்படுகிறது. முழுமையாக விடுங்கள் என்றால் தலை முடியை அறவே வெட்டக் கூடாது என்று நாம் புரிந்து கொள்வதில்லை. சில இடங்களில் சிறைத்து சில இடங்களில் சிறைக்காமல் விடக் கூடாது என்று புரிந்து கொள்கிறோம். தலை முடி தொடர்பான ஹதீஸை எப்படி நாம் புரிந்து கொள்கிறோமோ அப்படித்தான் தாடியை வளர விடுங்கள் என்பதையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது சிறைக்காமல் விட வேண்டும். இதற்காகத் தான் தலை முடி பற்றிய ஹதீஸை நாம் குறிப்பிட்டோம்.  

இந்த அடிப்படையயை விளக்குவதற்காகவே தலை முடி தொடர்பான செய்தியை நாம் குறிப்பிட்டோம். அந்த ஹதீஸில் தலைமுடியை முழுமையாக விட்டுவிடுங்கள் என்று கூறப்பட்டுள்ளது. முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற கட்டளையை மட்டும் கவனத்தில் கொண்டு தலைமுடியை வெட்டவே கூடாது என்று நாம் கூற மாட்டோம். ஏனென்றால் தலைமுடியை வெட்டுவதைப் பற்றி இந்த ஹதீஸ் பேசவில்லை.   

இக்கட்டளை எந்த காரணத்திற்காக பிறப்பிக்கப்பட்டது. எந்த சூழ்நிலையில் கூறப்பட்டது என்று பார்ப்போம். மழித்தால் முழுமையாக மழிக்க வேண்டும். வைத்தால் முழுமையாக வைக்க வேண்டும் என்ற கருத்திலே முழுமையாக விட்டுவிடுங்கள் என்ற வாசகம் கூறப்பட்டுள்ளது.    

இதை புரிந்து கொள்வதைப் போன்றே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையையும் புரிந்து கொள்ள வேண்டும். அதாவது தாடியை ஒட்ட நறுக்காமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளர விடுங்கள் என்ற கட்டளையின் பொருள்.  

தடுமாற்றங்கள்

தாடியை வெட்டவே கூடாது என்ற நிலைபாட்டின் காரணத்தால் இவரிடம் பல தடுமாற்றங்கள் ஏற்பட்டுள்ளது. இத்தடுமாற்றங்கள் இவரது நிலைபாடு தவறு என்பதை தெள்ளத் தெளிவாக எடுத்துரைக்கின்றது.    

தாடியை வெட்டக் கூடாது என்று கூறிய இவர் அதை எவ்வளவு நீளமாக வைக்க வேண்டும் என்பதற்கு எந்த அளவையும் முறைப்படி இவரால் கூற முடியவில்லை. எனவே இவ்விஷயத்தில் இவரிடம் பல முரண்பாடுகள் வந்துள்ளது. இவர் கூறிய பின்வரும் வாசகத்தை கவனியுங்கள்.   

எவருக்கேனும் தரையை தொடும் அளவுக்கு தாடி வருமேயானால் அவர் வெட்டினால் அது அவரது நிர்பந்தம் என்று சொல்லலாம்.   

மேற்கண்ட இவரது கூற்றுப்படி தரையைத் தொடும் அளவுக்கு தாடி வளர்ந்தாலே நிர்பந்தம். அப்போது மட்டுமே தாடியை வெட்டுவதற்கு அனுமதி உண்டு. நெஞ்சு வரை தாடி வளர்ந்தாலோ இடுப்பு வரை தாடி வளர்ந்தாலோ முட்டி வரை தாடி வளர்ந்தாலோ ஏன் கரண்டைக்கால் வரை தாடி வளர்ந்தாலோ அது நிர்பந்தம் இல்லை. அதை வெட்டவும் கூடாது என்று இவர் கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைக் கவனியுங்கள். 

தாடி என்றால் பிடிக்கும் அளவுக்குப் பெரிதாக இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கியது கூட குர்ஆன் ஹதீஸ் பேசும் இந்த மேதைக்கு விளங்கவில்லை.   

அயோக்கியன் அபூ ஜஹ்லுக்கு வக்காலத்து வாங்கும் நிலைக்கு இவர் சென்றிருப்பது மிகவும் கேவலமான செயல். தாடி என்றால் பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என அபூ ஜஹ்ல் விளங்கி இருந்தானாம்? அபூ ஜஹ்ல் இவ்வாறு விளங்கித் தான் பிடிக்கும் அளவுக்கு தாடி வைத்தான் என்பதை இவர் எப்படி அறிந்து கொண்டார்?   

அவன் வடிகட்டிய காஃபிராகவும் நரகவாதியாகவும் இருக்கும் போது அவனுடன் தூய நபிவழியை இவர் இணைத்து பேசுவதும் மதுரை ஆதீனம் நபி (ஸல்) அவர்களை அயோக்கியன் சங்கராச்சாரியாருடன் இணைத்து பேசியதும் ஒன்றே.   

இவர் தனது வாதத்தை நிலைநாட்ட கேடுகெட்டவனையெல்லாம் முன்மாதிரியாக எடுத்துக்காட்ட தயங்க மாட்டார் என்பதை இதன் மூலம் நாம் புரிந்து கொள்ள முடிகிறது.   

அத்துடன் இங்கே தாடி என்றால் அது பிடிக்கும் அளவுக்கு இருக்க வேண்டும் என்று தாடிக்கு ஒரு அளவை கூறுகிறார். அடுத்து பின்வரும் இவரது கூற்றைப் பாருங்கள்.   

நபித்தோழர்கள் இந்த நவீனவாதிகள் போன்று முகத்தில் தாடி எங்கிருக்கிறது என்று தேடும் அளவுக்குத் தாடி வைக்கவில்லை என்பது தெளிவாகிறது.    

மேற்கண்ட இவரது கூற்றைப் பாருங்கள். முகத்தில் தாடி இருக்கிறது என்று அறிந்து கொள்ளும் அளவுக்குத் தாடி இருக்க வேண்டும் என வாதிடுகிறார்.   

தரையில் படும் வரை தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் ஒரு பிடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார். அதே கட்டுரையில் பார்த்தால் தாடி தெரியும் அளவிற்கு தாடி வைக்க வேண்டும் என்று கூறுகிறார்.    

அரைகுறை மதியுடன் ஆய்வு செய்யப் புறப்பட்டவரின் நிலை இப்படித் தான் இருக்கும் என்பதற்கு இவர் சிறந்த உதாரணமாக ஆகிவிட்டார்.  

ஆய்வின் சுருக்கம்  

தாடியை ஒட்ட வெட்டக் கூடாது என்ற காரணத்துக்காகவே தாடியை வளர விடுங்கள் என்ற உத்தரவு பிறப்பிக்கப்பட்டது. தாடியை ஒட்ட வெட்டாமல் கூடுதலாக வைக்க வேண்டும் என்பதே தாடியை வளரவிடுங்கள் என்ற கட்டளையின் கருத்து. எனவே தாடியை வெட்டுவதற்கு மார்க்கத்தில் தடையில்லை.    

தாடி இவ்வளவு அளவு கூடுதலாக இருக்க வேண்டும் என நபி (ஸல்) அவர்கள் எந்த எல்லையும் இடவில்லை. அவர்கள் இதற்கு எந்த அளவையும் கூறாமல் விட்டிருப்பதால் நாமும் இதற்கு எந்த அளவையும் கூறக்கூடாது. 

நபி (ஸல்) அவர்கள் கூறினார்கள்:

நான் எதை (செய்யுங்கள் என்றோ, செய்ய வேண்டாமென்றோ ஒன்றும் கூறாமல்) உங்களு(டைய முடிவு)க்கு விட்டு விட்டேனோ அதை(ப் பற்றி எதுவும் கேட்காமல்) நீங்களும் விட்டு விடுங்கள். உங்களுக்கு முன் வாழ்ந்தவர்களை அழித்ததெல்லாம் அவர்கள் தங்கள் இறைத்தூதர்கடம் (அதிகமாகக்) கேள்வி கேட்டதும் அவர்களுடன் கருத்து வேறுபாடு கொண்டதும்தான். ஒன்றைச் செய்ய வேண்டாமென உங்களுக்கு நான் தடை விதித்தால் அதி-ருந்து நீங்கள் தவிர்ந்து கொள்ளுங்கள். ஒன்றைச் செய்யுமாறு உங்களுக்கு நான் கட்டளையிட்டால் அதை உங்களால் முடிந்த அளவிற்குச் செய்யுங்கள்<

அறிவிப்பவர் : அபூஹுரைரா (ரலி)

நூல் : புகாரி 7288

தனது தாடியை எவ்வளவு நீளமாக வைக்கலாம் என்பதை அவரவரே முடிவு செய்து கொள்ள வேண்டும். ஆனால் தாடியை ஒட்ட நறுக்கி அதை அகற்றியது போன்ற தோற்றத்தை ஏற்படுத்திவிடக் கூடாது

அல்லாஹ் மிக அறிந்தவன்

February 25, 2010, 2:30 AM

அனைவரும் ஒன்று பட முடியாதா?

அனைவரும் ஒன்று பட முடியாதா?

உங்கள் கேள்வியில் உங்கள் நல்ல எண்ணம் தெரிகிறது. நாம் எதை ஆசைப்பட்டாலும் அது சத்தியமாகுமா என்பதை அடிப்படையாக வைத்துத் தான் ஆசைப்பட வேண்டும். அறிவுப்பூர்வமாக சிந்தித்துப்பார்த்துத் தான் ஆசைப்பட வேண்டும்.

தொடர்ந்து படிக்க January 23, 2010, 10:52 AM

ஸிஹ்ர் ஓர் ஆய்வு9

ஸிஹ்ர் ஓர் ஆய்வு

சூனியத்தின் மூலம் பாரதூரமான விளைவுகளை ஏற்படுத்த முடியும் என்பதை ஒரு வாதத்துக்கு ஒப்புக் கொண்டாலும் நபிகள் நாயகம் (ஸல்) அவர்களுக்குச் சூனியம் வைத்திருக்க முடியாது. அப்படிக் கூறும் ஹதீஸ்கள் எந்த நூலில் இடம் பெற்றிருந்தாலும் அது பொய்யான செய்தி தான் என்பதற்கு நாம் எடுத்து வைத்த ஆதாரங்கள் வருமாறு:

தொடர்ந்து படிக்க January 12, 2010, 6:32 AM

ஸிஹ்ர் ஓர் விளக்கம்-1

ஒன்று முதல் ஒன்பது தொடர்களும் ஸிஹ்ர் ஓர் விளக்கம் தொடர் 1

(ஸிஹ்ர் பற்றிய ஆய்வாக இது இருப்பதால் இது தனித் தொடராக வெளிவரும்)

மறுக்கப்படும் ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் என்ற தலைப்பில் கட்டுரை எழுதப் புகுந்த இஸ்மாயில் ஸலஃபி அந்தத் தலைப்பின் கீழ் தனது வாதத்தை அறவே நிரூபிக்காமல் ஸிஹ்ர் என்ற தலைப்பில் தான் முழுத்தொடரையும் அமைத்திருந்தார்.

தொடர்ந்து படிக்க November 18, 2009, 10:19 PM

பெண்கள் தங்க நகை அணியலாமா முழுமை

பெண்கள் தங்க நகைகள் அணியலாமா?

பெண்கள் தங்க நகை அணியக் கூடாது என்று இலங்கையைச் சேர்ந்த சிலர் அர்த்தமற்ற வாதங்களைச் செய்து வருவது நம் கவனத்துக்குக் கொண்டு வரப்பட்டது. அவர்களின் ஆய்வு முற்றிலும் அபத்தமாகவும் உளறலாகவும் அமைந்திருந்ததால் மக்களுக்கு உண்மையை விளக்குவதற்காக இரண்டு மறுப்புத் தொடர்கள் வெளியிட்டோம். அந்த மறுப்புகளுக்கு எதிராக நன்பர் என்பவர் அபத்தமான மறுப்புக் கட்டுரையை மூன்று தொடர்களாக வெளியிட்டிருந்தார். அவரது மறுப்பு அவரது ஆய்வைப்போலவே அபத்தமாக உள்ளது என்பதை தெளிவுபடுத்தும் வகையில் அந்த மூன்று தொடர்களுக்கும் தக்க மறுப்பு வெளியிட்டோம். இவை அனைத்தும் தனித் தனி கட்டுரைகளாக இடம்பெற்றதால் வாசிக்க சிரமம் ஏற்படும் என்பதைக் கவணத்தில் கொண்டு அனைத்தயும் ஒன்றன் பின் ஒன்றாக தொகுத்து வெளியிட்டுள்ளோம்.

தொடர்ந்து படிக்க December 31, 2009, 7:28 AM

இரண்டாம் ஜமாஅத்

இரண்டாம் ஜமாஅத்

ஹதீஸ்களில் இல்லாத கருத்தை ஹதீஸ்களில் உள்ளது போல் காட்டுவதில் கைதேர்ந்த (தங்க நகை கட்டுரையில் இதை அம்பலப்படுத்தியுள்ளோம்.) இலங்கை நவ்பர் என்பார் ஒரு ஜமாஅத் முடிந்து மற்றொரு ஜமாஅத் நடத்துவது கூடாது என்றும் வாதிட்டு வருகிறார்.

தொடர்ந்து படிக்க November 23, 2009, 9:58 PM

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓதலாமா?

பாங்குக்குப் பின் ஸலவாத் ஓத வேண்டும் என்ற ஹதீஸ் பலவீனமானதா?

பாங்குக்குப் பின் நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் மீது ஸலவாத் சொல்ல வேண்டும் என்று ஹதீஸ்கள் உள்ளன. இதன் படி நாம் ஸலவாத் சொல்லி வருகிறோம். ஆனால் இந்த ஹதீஸ்களில் இடம் பெறும் கஅப் பின் அல்கமா என்பவர் பலவீனமானவர் என்றும் அதனால் பாங்குக்குப் பிறகு ஸலவாத் சொல்லக் கூடாது என்றும் ஒரு அறிஞர் கூறுகின்றார். இது சரியா? பாங்குக்குப் பின் ஸவலாத் சொல்வதற்கு ஆதாரப்பூர்வமான ஹதீஸ்கள் உள்ளதா? விளக்கவும்.

தொடர்ந்து படிக்க November 8, 2009, 11:04 PM

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டும�

பெருங்கூட்டத்தைப் பின்பற்ற வேண்டுமா

பெருங்கூட்டத்தைப் பின்பற்றுங்கள்;எவன் தனித்து விடுகின்றானோ அவன் தனித்து நரகத்தில் போடப்படுவான் என்று மிஷ்காத்தில் இடம் பெற்றுள்ளது. இந்த ஹதீஸ் அடிப்படையில் மத்ஹபுகளை விட்டு வெளியேறுவது நரகத்திற்குரிய செயல் என்று விளக்கம் தருகிறார்கள். உண்மையா?


தொடர்ந்து படிக்க October 18, 2009, 9:32 AM

நெஞ்சின் மீது கை கட்டுதல்

நெஞ்சின் மீது கைகளைக் கட்டுதல் வீடியோ ஆடியோ வடிவில் அறிந்து கொள்ள இங்கே கிளிக் செய்யவும்

பி. ஜைனுல் ஆபிதீன்

தொழுகையில் நிற்கும் போது இடது கையின் மீது வலது கையை வைத்து, இரு கைகளையும் நெஞ்சின் மீது வைக்க வேண்டும் என்று ஆரம்பம் முதல் நாம் கூறி வருகிறோம்.

தொடர்ந்து படிக்க September 24, 2009, 5:52 AM

தஸ்பீஹ் தொழுகை ஓர் ஆய்வு

தஸ்பீஹ் தொழுகை ஓர் ஆய்வு

வீடியோ ஆடியோ வடிவில் அறிய தஸ்பீஹ் தொழுகை என்ற பெயரில் ஒரு ரக்அத்துக்கு75தஸ்பீஹ்கள் வீதம் நான்கு ரக்அத்களில்300தஸ்பீஹ்கள் ஓதி தொழும் வழக்கம் சில பகுதிகளில் காணப்படுகிறது.

தொடர்ந்து படிக்க September 23, 2009, 6:16 AM

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஆறு நோன்பு ஆதாரமற்றதா?

ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு வைப்பது நபிகள் நாயகம் (ஸல்) அவர்களால் சிறப்பித்துச் சொல்லப்பட்டுள்ளது. ஆனால் சமீபகாலமாகச் சிலர் ஆறு நோன்பு குறித்த ஹதீஸ் பலவீனமானது என்று வாதிட்டு சில வாதங்களையும் முன்வைக்கிறார்கள். 

அந்த ஹதீஸ் இதுதான்:

 حَدَّثَنَا يَحْيَى بْنُ أَيُّوبَ وَقُتَيْبَةُ بْنُ سَعِيدٍ وَعَلِيُّ بْنُ حُجْرٍ جَمِيعًا عَنْ إِسْمَعِيلَ قَالَ ابْنُ أَيُّوبَ حَدَّثَنَا إِسْمَعِيلُ بْنُ جَعْفَرٍ أَخْبَرَنِي سَعْدُ بْنُ سَعِيدِ بْنِ قَيْسٍ عَنْ عُمَرَ بْنِ ثَابِتِ بْنِ الْحَارِثِ الْخَزْرَجِيِّ عَنْ أَبِي أَيُّوبَ الْأَنْصَارِيِّ رَضِيَ اللَّهُ عَنْهُ أَنَّهُ حَدَّثَهُ أَنَّ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ قَالَ مَنْ صَامَ رَمَضَانَ ثُمَّ أَتْبَعَهُ سِتًّا مِنْ شَوَّالٍ كَانَ كَصِيَامِ الدَّهْرِ و حَدَّثَنَا ابْنُ نُمَيْرٍ حَدَّثَنَا أَبِي حَدَّثَنَا سَعْدُ بْنُ سَعِيدٍ أَخُو يَحْيَى بْنِ سَعِيدٍ أَخْبَرَنَا عُمَرُ بْنُ ثَابِتٍ أَخْبَرَنَا أَبُو أَيُّوبَ الْأَنْصَارِيُّ رَضِيَ اللَّهُ عَنْهُ قَالَ سَمِعْتُ رَسُولَ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ يَقُولُ بِمِثْلِهِ و حَدَّثَنَاه أَبُو بَكْرِ بْنُ أَبِي شَيْبَةَ حَدَّثَنَا عَبْدُ اللَّهِ بْنُ الْمُبَارَكِ عَنْ سَعْدِ بْنِ سَعِيدٍ قَالَ سَمِعْتُ عُمَرَ بْنَ ثَابِتٍ قَالَ سَمِعْتُ أَبَا أَيُّوبَ رَضِيَ اللَّهُ عَنْهُ يَقُولُ قَالَ رَسُولُ اللَّهِ صَلَّى اللَّهُ عَلَيْهِ وَسَلَّمَ بِمِثْلِهِ

யார் ரமளானில் நோன்பு நோற்று பின்னர் அதைத் தொடர்ந்து ஷவ்வால் மாதத்தில் ஆறு நோன்பு நோற்கிறாரோ அவர் காலமெல்லாம் நோன்பு நோற்றவரைப் போன்றவராவார் என்று நபிகள் நாயகம் (ஸல்) அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து படிக்க September 17, 2009, 9:20 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top