உங்கள் கருத்து

  • இந்தப் பகுதி கேள்வி கேட்பதற்கான பகுதி அல்ல. எனவே இந்தப் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்தால் அது பரிசீலணைக்கு எடுக்கப்படாது.
  • உங்கள் கேள்வி என்று தனிப்பகுதி உள்ளது அதில் கேள்விகளைப் பதிவு செய்யவும்
  • இணைய தளத்தின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
  • ஏதாவது லின்க் வேலை செய்யா விட்டால் சுட்டிக் காட்டுங்கள்
  • நமது இணைய தளத்துக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சங்கள் பற்றி விளக்கம் கேளுங்கள். 
  • இணைய தளத்தில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்

20.08.2009. 05:39

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

SR-No: #1647 KAJA MOHIDHEEN 17.12.2009. 12:42

அல்லைக்கும்,
தற்போது வுள்ள கால கட்டத்தில் பிறப்பு விகிதத்தை பார்த்தால் ஆண்கள் அதிகமாகவும், பெண்கள் குறைவாகவும் பிறக்கிறார்கள் இது பற்றி இஸ்லாம் குறும் கருத்து என்ன,
இப்பட்டிக்கு,
காஜா மொஹிதீன்

<br> <br> <b> Admin Rpl </b> va alaikumus salam

இப்போது பெண்கள் சதவிகிதம் அதிகமாகி வருகிறது. இந்தப் புள்ளிவிபரங்களில் மிகப்பெரிய சதி இருப்பது போல் தெரிகிறது. பெண்கள் குறைவாக இருந்தால் அடுத்த நொடியே வரதட்சனை ஒழிந்து விடும். பெண் கிடைக்காத மாப்பிளையை விட மாப்பிள்ளை கிடைக்காத் பெண்கள் தான் பலமடங்கு உள்ளனர் என்பதைக் கண் கூடாகக் காண்கிறோம். பெண்கள் அதிகமாக இருப்பதால் எவ்வளவு ஒழுக்கங்கெட்ட உதவாக்கரைகலுக்கும் பெண் கொடுக்க வரிசையில் நிறகிறார்கள். இதெல்லாம் நம்து நாட்டின் புள்ளி வ்பரம் முழுப்பொய் என்பதைக் காட்டுகின்றன. ஆண்களை விட பெண்கள் எட்டு வருத்துக்கு முன்பே திரும்ணத்துக்கு தயாராகி விடுகிறார்கள் என்றாலும் அதையும் தாண்டி பெண்கள் மிக அதிகமாக உள்ளதை ஒவ்வ்ருவரும் தானே உணரலாம். பெண்கள் எண்ணிக்கை அதிகரிப்பது கியாம் நாளின் அடையாளம் என்று நபிகள் நாயகம் கூறியுள்ளனர். அது தான் இப்பொது நடக்கிறது

SR-No: #1646 Mohamed Hasan Ali 17.12.2009. 11:48

Assalamu Alaikum,
Dear brother,

Could you reply to the article which has been published in Thinakaran(www.thinakaran.lk), Sri lanka newspaper (Aanmeehe kurukkel viyaafaarihelalle) on 16.12.2009 & 17.12.2009

Mohamed Hasan Ali
Riyadh (Sri Lankan)

Admin Rpl ? வ அலைகுமுஸ் ஸலாம் நீங்கள் கூறுவது புரியவில்லை.புரியும் படி எழுதவும்

SR-No: #1642 ziath rahiman 16.12.2009. 21:28

அஸ்ஸலாமு அலைக்கும்.விடுதலை புலிகள் தோற்கடிக்கப்பட்டதில் அங்கு வாழும் முஸ்லீம்களுக்கும், நமக்கும் உண்மையிலே சந்தோஷம் தான். அல்ஹம்துலில்லாஹ்.ஆனால் விடுதலை புலிகளை அளிக்கிறோம் என்ற பெயரில் எத்தனையோ அப்பாவி குழந்தைகளையும்,தமிழர்களையும் கொத்து,கொத்தாக கொன்று குவித்த இலங்கை அரசாங்கத்தை எதிர்த்து நாம் அந்த அளவிற்கு வீரியமாக குரல் குடுக்க வில்லையே.ஏன்.கொல்லப்பட்டவர்களும் மனிதர்கள் தானே.இது இஸ்லாத்தின் பார்வையில் சரியா.(பிரபாகரன் பிடித்து வைத்து இருந்ததால் தான் அவர்களை கொல்ல வேண்டிய நிலை உருவானது என்ற வாதமும் எடுத்து வைக்கப்படுகிறது.எனவே இந்த வாதத்திற்கும் சேர்த்து பதில் தாருங்கள்.)

Admin Rpl ? வ அலைகுமுஸ் ஸலாம். அநியாயமாக யார் கொல்லப்பட்டாலும் யாரால் கொல்லப்பட்டாலும் அது கண்டனத்துக்கு உரியது தான். அது உண்மையாக இருக்கும் பட்சத்தில் இலங்கை முஸ்லிமகள் தங்கள் கண்டனத்தைப் பதிவு செய்திருக்க வேண்டும். ஆனால் அந்தச் செய்தி எந்த அளவுக்கு உண்மை என்பது தெரியவில்லை.

SR-No: #1641 Ahamed Shameem 16.12.2009. 21:20

Salamu Alaikkum Varahmathullah,
Nabimarhal varalaru yendra thodaril Allah nam anivaridamum oru vaakurudi vanginan adu namakku inda ulahil ninaivu varaadu yendru pesineerhal, appadi yendral Issa Alaivasalm poomiku meendum varum podu avarhal idu naal vari yengu irundarhal yendru avarhalukku theriyuma, idu kurithu hadeeth ullada.

Admin Rpl ? வ அலைகுமுஸ் ஸலாம். ஒரு உலகத்தில் இருந்து மறு உலகுக்கு வரும் போது முந்தைய உலகில் நடந்தவை தெரியாது என்று நாம் கூறியதை நீங்கள் தவறாக விளங்கியுள்ளீர்கள். நபிகள் நாயகம் ஸல் அவர்கள் மிஃராஜ் சென்றனர். அவ்வுலகில் உள்ளதைப் பாருத்து விட்டு வந்து அதை அப்படியே கூறினார்கள். எதையும் அவர்கள் மறக்கவில்லை. ஒரு உலக்த்தில் இருந்து மறு உலகுக்கு பயணம் செய்வது வேறு. மறு படைப்பாக மாற்றப்பட்டு படைக்கப்படுவது வேறு. மறு படைப்பாக மாற்றப்படும் போது தான் முந்தைய உலகத்தில் நடந்தவை தெரியாது. அதற்குத் தான் ஆதாரம் உள்ளது. ஈஸா நபி மறுபடைப்பாக படைக்கப்பட மாட்டார்கள்.

SR-No: #1632 Yusuf 16.12.2009. 14:22

Assalamu allaikum

இஸ்திகாரா தொழுகை எப்பொழுது தொழ வேண்டும் ? எடுத்த முடிவு சரியாய் தவறா என்பதற்காகவா ? அல்லது முடிவு எடுபதற்கு முன்பும் பின்பும் எப்பொழுது வேண்டுமானாலும் தொழலாமா ?
உதாரணத்திற்கு ஒரு வியாபாரம் செய்ய போகிறோம் என்றால் நாம் முன்னரே காரண காரியங்களை வைத்து இது சரியாய் வருமா வராதா என்று ஓரளவிற்கு முடிவுக்கு வந்து விடுகிறோம் .
இஸ்திகாரா தொழுகை பற்றி தெளிவு படுத்தவும்

Jazakallah

பதில்

வஅலைக்குமுஸ்ஸலாம்

கேள்வி பதில் பகுதியில் பதியவும்

SR-No: #1631 A.M.S.Hameed (Kalmunai, Sri Lanka) 16.12.2009. 13:33

அஸ்ஸலாமு அலைக்கும். எதூரிலுள்ள தவ்ஹீத் கொள்கையில் (JASM) செயல்படும் பள்ளியில் அய்யாமுல் தஸ்ரிக் (ஹஜ் பிறை 8 முதல் 13 வரை) தினங்களில் நடைபெறும் ஜமா அத் தொழுகைகளில் சலாம் கொடுத்த உடன் தக்பீர் என்று சில வாசகங்களை (அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் அல்லாஹ் அக்பர் வலில்லாஹ் ஹில் ஹம்து) இரைந்து கூறிக்கொண்டு இருக்கின்றனர். இது நபி(ஸல்) அவர்கள் காட்டித்தந்த சுன்னாவா? என்பதை தெளிவாக விளக்கவும்.

பதில் 

வஅலைக்குமுஸ்ஸலாம்

கேள்வி பதில் பகுதியில் பதியவும்

SR-No: #1628 A.M.S.Hameed (Kalmunai, Sri Lanka) 16.12.2009. 13:13

அஸ்ஸலாமு அலைக்கும். ஜும்ஆ வினுடைய சுன்னத்தை வீட்டில் தொழுதுவிட்டு பள்ளிக்கு நேரகாலத்தோடு (இமாம் மிம்பரில் அமர்வதற்கு முன்) வருபவர் பள்ளியில் எதுவும் தொழாமல் அமரவேண்டுமா?
அப்படி அமரும்போது நபி(ஸல்) அவர்களின் (பள்ளியில் நுழைந்தால் இரண்டு ரக்க அத்துக்கள் தொழாமல் அமரவேண்டாம் எனும்) ஹதீஸை புறக்கணித்த நிலை ஏற்படாதா? இரண்டையும் செயல்படுத்தினால் நபி(ஸல்) அவர்கள் அந்த சஹாபியிடம் வீட்டில் தொழுதாயா? என்று வினவியதை எப்படி விளங்குவது என்பதை தெளிவுபடுத்தவும்.

Admin Rpl ? வ அலைகுமுஸ் ஸலாம். உங்கள் கருத்து பகுதியில் கேள்விகளும் அனுப்பபடுவதால் உங்கள் கருத்து தேங்கி விடுகிறது. எனவே இனிமேல் கேள்வி அனுப்புவோர் உங்கள் கேள்வி என்ற பகுதிக்கு கேள்விகள் அனுப்பலாம். உங்கள் கருத்து பகுதியில் நீங்கள் பதிவு செய்த இந்தக் கேள்வியையும் உங்கள் கேள்வி பகுதிக்கு அனுப்பவும். இப்பகுதியில் இணைய தளம் தொடர்பாக குறைகள் மற்றும் ஆலோசனைகளை மட்டும் எழுதவும். தனி நபர் பற்றி எந்தக் கருத்தையும் பதிவு செய்ய வேண்டாம்.

SR-No: #1624 d.a.mohamad rafi 16.12.2009. 11:18

அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்... பீ ஜே ஜி அவர்களுக்கு , இணை வைப்பவர்களுக்கு பாவ மன்னிப்பு கேட்க்க கூடாது என அல்லாஹ் கூறுகிறான். ஆனால் நமது முஸ்லிம்களில் எத்தனையோ பேர் , தர்காவுக்கு வழிபாடும், மற்றும் பாத்தியா, மௌலூது என செய்ய கூடியவர்களாக வாழ்ந்து மௌதாகி விடுகிறார்கள் , இவர்களுடைய ஜனாசா தொழுகையில் கலந்து கொள்வது தவறுதானே ..? இவர்களுக்கு ஜனாசா தொழுகை உண்டா..? மேலும் தற்கொலை செய்து கொள்ளும் முஸ்லிம்கள் , தொழுகையே இல்லாத முஸ்லிம்கள் ஜனாசா தொழுகையில் நாம் கலந்து கொள்ள வேண்டுமா..? முஸ்லிம்கள் மரணித்து விட்டால் நமகென்று உள்ள தனியான மைய வாடியில்தான் அடக்கம் செய்ய வேண்டுமா..? அல்லது ஊருக்கு பொதுவாக இருக்கும் மைய வாடியிலும் அடக்கம் செய்யலாமா ..?

Admin Rpl ? va alaikumus salam ஜனாஸாவின் சட்டங்கள் என்ற முழு நூல் வெளியிடப்பட்டுள்ளது. அதை வாசிக்கவும்.

SR-No: #1622 abul aurs 16.12.2009. 10:06

please go to this link and take necessary action becuase lot of people writing bad about islam on the site, and if they tell to news or paper they know it will be a big issue so they are using website and blogs to spoil islam. this is the link

Admin Rpl ? va alaikumus salam திருக்குர்ஆனில் அறிவியல் உண்மைகள் உள்ளன என்பதில் சந்தேகம் இல்லை. ஆனால் ஒரு வசனம் சொல்லாத கருத்தை அதனுள் தினித்து சிலர் தவறாக வாதம் செய்வதால் சரியான அறிவிய்ல் முன்னறிவிப்புகளிலும் இஸ்லாத்தின் எதிரிகள் சந்தேகத்தை ஏற்படுத்துகின்றனர். இன்னும் சிலர் குர்ஆன் சொல்லி இருக்கும் அறிவியல் உண்மைகளையும் ஒப்புக் கொள்ள மறுக்கின்றனர். எனவே தான் இது போன்றவர்களை நேருக்கு நேர் விவாதத்தில் சந்தித்து நிரூபித்துக் காட்டியுள்ளோம். அதன் பிறகு வெளியில் நின்று கொண்டு ஒப்பாரி வைக்கின்றனர். இவர்களூக்கு நாத்திகருடன் நடந்த விவாதத்தை அனுப்பி வையுங்கள். அல்லது அதன் லின்கை அனுப்புங்கள். நீங்கள் சுட்டிக்காட்டிய இணைய் தளத்தில் பீஜே என்ற தனி மனிதனைத் திட்டுவதாக எண்ணிக் கொண்டு குர்ஆனைப் பொய்யாக்கும் முர்தத்களின் கருத்தையும் வாசிக்க முடிந்தது.

SR-No: #1619 ”துளசி”அபுஹாதி 16.12.2009. 01:43

அஸ்ஸலாமு அலைக்கும் (வரஹ்)
நமது TNTJ.Net இணைய தளத்தில் ஏற்படுத்தப்பட்ட “நீங்கள் பார்த்துக்கொண்டிருக்கும் செய்தியை உங்கள் நண்பர்களுக்கு அனுப்ப” என்ற ஏற்பாட்டை நமது Onlinepj.com இணைய தள்த்திலும் ஏற்படுத்தப்பட்டுள்ளது வரவேற்கத்தக்கது நன்றி!

SR-No: #1617 Basheer ahmed 16.12.2009. 00:24

assalmu alykkum
mufthi umar sharif kasimi avrhal thelivana aatharngaludan ungal kuran tharjumavil ulla thavaruhaly vilakiullar. athy oppukolveerhala? athrkana bathil enna? keel kanda addressil avarathu bayan idampetru ullathu

Admin Rpl ? வ அலைகுமுஸ் ஸலாம். நீங்கள் குறிப்பிடும் நபர் என்ன சொல்கிறார் என்று எழுத்து வடிவில் கேள்வியாகத் தொகுத்து அனுப்பினால் பதி தரப்படும். ஒவ்வொருவரின் வீடியோக்களையும் கேட்க நமக்கு நேரம் இல்லை.

SR-No: #1610 inimai 15.12.2009. 20:27

அஸ்ஸலாமு அலைக்கும்,

உங்கள் பகுதயில் உள்ள font கலர் மற்ற பகுதியில் உள்ளதைப்போல் டார்க்கான கலர் கொடுத்தால் என்ன?

Admin Rpl ? va alaikumus salam நீங்கள் எதைக் குறிப்பிடுகிறீர்கள் என்று புரியவில்லை.

SR-No: #1607 riyaz 15.12.2009. 18:14

ஸிஹ்ர் ஆய்வு தொடரிலிருந்து நபி (ஸல்) அவர்களுக்கு சூனியம் வைக்க பட வில்லை என்றே விளங்க முடியும்.சூனியம் என்பதே கிடையாது என்று முடிவுக்கு வர இயலாது. விளக்கம் அதிகம் எதிர்பார்க்கிறேன்

Admin Rpl ? va alaikumus salam நீங்கள் கூறுவது சரிதான். சூனியம் உண்மை என்று வைத்துக் கொண்டாலும் நபிகள் நாயகத்துக்கு சூனியம் வைக்க முடியாது என்பதை முதலில் விளக்கி விட்டு பின்னர் சூனியம் என்பது என்ன என்று விளக்கப்படும் என்று தான் நாமே குறிப்பிட்டிருந்தோம். இன்ஷா அல்லாஹ் அது குறித்து விளக்கப்படும்

SR-No: #1605 Mohamed Rafi 15.12.2009. 15:38

தெலுங்கானா பிரச்சனை பற்றி ஆதியும் அந்தமும் தெரியாமல் எல்லாரையும் போல் தேவை இல்லாமல் எதற்கு புது மாநிலம் என்று மேதாவித்தனத்தோடு எண்ணம் கொண்டிருந்த என்(னை) போன்றோர்களுக்கு எல்லாம் உண்மை நிலையை மொத்தமாய் விளங்கவைத்தீர்கள். இதிலும் வழக்கம் போல் முஸ்லிம்களை குறி வைத்து அரசியல்வாதிகள் இளைத்த துரோகம் கண்டு உறைந்து போனோம்.

SR-No: #1604 mohamed ziya ul haq (malaysia) 15.12.2009. 14:47

assalamu alaikkum(varah)
plz update (AMERICA VIN POR ANITHIYANATHU) this speach

Admin Rpl ? va alaikumus salam இன்ஷா அல்லாஹ் இன்று இரவுக்குள் வெளியிடப்படும்

SR-No: #1603 ziath rahiman 15.12.2009. 13:27

அஸ்ஸலாமு அலைக்கும்.நான் நேற்று பெண்ணின் திருமணம் சம்மந்தமாக ஒரு கேள்வி கேட்டு இருந்தேன்.அதற்க்கு ஒரு பகுதிக்கு மட்டும் பெண்ணின் கல்வி சம்மந்தமாக விடை அளித்து இருந்தீர்கள்.திருப்திகரமான பதில். அல்ஹம்துலில்லாஹ்.ஆனால் இன்னொரு பகுதி கேள்விக்கு விடை கிடைக்கவில்லை.அதற்கும் உங்கள் பதிலை இஸ்லாமிய அடிப்படையில் எதிர்ப்பார்க்கிறேன். கேள்வி:"மாப்பிள்ளை முழுக்க,முழுக்க தீவிரமாக தவ்ஹீதில் இருந்தாலும்,பெண் வீட்டார் அந்த மாப்பிளையின் குடும்ப பின்னணி,நம் குடும்பத்திற்கு சரி வராது என்று காரணம் காட்டி அந்த மாப்பிளையை வெறுக்கின்றனர்.குடும்ப பின்னணியையும் பார்த்துதான் அந்த மாப்பிள்ளையை இஸ்லாமிய அடிப்படையில் ஏற்று கொள்ள வேண்டுமா.இந்த வாதம் இஸ்லாமிய அடிப்படையில் தவறு என்று அவர்களுக்கு எப்படி புரிய வைப்பது.இரண்டாவது,அவர்கள் ஒரு மாவட்டத்திற்குள் அமைவது போல மாப்ளை தேடும்போது தவ்ஹீத் மாப்பிள்ளைகள் கிடைக்காத நிலையில் தவ்ஹீதில் அவ்வளவாக ஈடுபாடு இல்லாத மாப்பிள்ளையை தேடி போகிறார்கள்.இதுவும் தவறு என்று இஸ்லாமிய அடிப்படையில் எப்படி புரிய வைப்பது".(இன்ஷா அல்லா இதற்க்கு உங்கள் பதில் கிடைத்தால் மிகவும் உபயோகமாக இருக்கும்.நேற்று என் பெயரை seyed என்று அனுப்பி விட்டேன் மன்னிக்கவும்)

Admin Rpl ? va alaikumus salam அல்லாஹ்வுக்கு இணை கற்பிப்பவர்களுடன் திருமண உறவு வைத்துக் கொள்ளக் கூடாது என்று திருக்குர்ஆன் கட்டளையை எந்தக் காரணத்துக்காகவும் மீறக் கூடாது.

SR-No: #1602 Ansari 15.12.2009. 13:06

In the name of ALLAH.Nanmayai naadi unmayai sollaamal irupathu enru sollugeergal itharke hadith vaayilaaga ethavathu seydhi ullatha.poi solluvathu munafikaragal gunam, atharku enna thandanai enbathu ungaluku theriyum,appadi irukkum pothu poi solla vendiya avasiyam illai.itharku thaangal vilakkam tharavum.inna anna lakadh alldhi sambathamaga thaangal alitha bathil OK.but entha dictionary thaangal padikireergal enbathu koncham kuripidungale,antha dictionaryai thoguthavar ithai pol molipeyarthullara,thervikkavum,jasakkallahhayr.plz reply

Admin Rpl ? va alaikumus salam திருக்குர் ஆன் தமிழாக்கத்தில் விளக்கம் பகுதியில் கீழ்க்காணும் தலைப்புகளை வாசிக்கவும். 162. மார்க்கத்தைப் பரப்ப பொய் சொல்லுதல் 336. தீமையில் பங்கெடுக்காதிருக்க பொய் சொல்லுதல் 432. இப்ராஹீம் நபி பொய் சொன்னது ஏன்?

SR-No: #1601 Abdulhameed 15.12.2009. 12:51

அஸ்ஸலாம் அலைக்கும் (வரஹ்)

தெலுங்கான கட்டுரை மேலும் ஓரு வரலாற்று உண்மை வெளிவர உதவியது. பல்லாண்டுகளாக காங்கிரஸ் செயல்கள் எல்லாம் முஸ்லிம்களை முதுகிலும் நெஞ்சிலும் குத்தி ஏமாற்றுவதும் துரோகம் செய்வதும் தான் என்பதை மீண்டும் ஒருமுறை இளைய சமுதாயத்திற்கு எடுத்து காட்டி இருக்கிறீர்கள்.

உங்கள் பணி மேலும் வளர வல்ல ரஹ்மான் அல்லாஹ் துனைபுறியட்டும்.

SR-No: #1594 althaf sri lanka 15.12.2009. 06:51

அஸ்ஸலாமு அழைக்கும் ,
p.j இன் பிறை ஓர் ஆய்வு என்ற நூலுக்கு மறு ஆய்வாக இந்த புத்தகத்தை எழுதுகிறேன் என்று ஒரு புத்தகத்தை வெலிட்டுள்ளார் புத்தளத்தை சேர்ந்த மௌலவி அர்ஹம் என்பவர் , இவர் சென்ற ஜும்மாவில் 11/12/2009 அன்று என்னை சந்தித்தபோது கூறியதாவது நான் அண்ணனை மிகவும் கண்ணியத்துடன் விமர்சித்துள்ளேன் புத்தகத்தை படித்துப்பாருங்கள் மிகவும் யோசித்து எழுதியுள்ளேன்...இந்த புத்தகத்தின் தலைப்பு , "நபி ஸல் அவர்கள் இன்று நம்மத்தியில் இருந்திருந்தால் கணிப்பீட்டு பிறையையா ? தேசிய பிறையா? ஊர் பிறையா? சர்வதேச பிறையா? ஆதரித்திருப்பார்கள் "
இது தான் புத்தகத்தின் பெயர் . புத்தகத்தின் தலைப்பை பார்த்த உடன் இந்த தலைப்பு இஸ்லாமிய அடிப்படையை தகர்ப்பதாக உள்ளது நபி ஸல் அவர்கள் இன்று இருந்திருந்தால் எதை செய்திருப்பார்கள் என்று நாம் எப்படி ஓர் உறுதி இல்லாத விடயத்தில் கூறமுடியும் என்று நான் அவரிடம் கேட்டேன் அதற்கு அவர் ஒரு ஹதீஸை எடுத்து காட்டி ஆதாரமாக காட்டுகிறார் அந்த ஹதீஸ் மூசா நபி இப்போது இருந்திருந்தால் அவரும் என்னை தான் பின்பற்றி இருப்பார் என்று நபி ஸல் அவர்கள் கூறினார்கள் இந்த அடிப்படையில் இந்த தலைப்பில் எந்த தவறும் கிடையாது என்கிறார் இந்த புத்தகத்தை பெரு முயற்சி எடுத்து விற்பனை செய்கின்றனர் இந்த புத்தகம் tntj இலங்கை கிளை உங்களுக்கு அனுப்பி இருக்கும் என்று நினைக்கிறேன் இந்த புத்தகத்திற்கான மறுப்புக்கு முதலிடம் கொடுக்குமாறு கேட்டுக்கொள்கிறேன். சர்வதேச பிறை தான் சரி என்கிறார் புத்தகத்தை படித்த எனக்கு இவர் அதில் கண்ணியம் பேனுவாதாக எனக்கு தென்படவில்லை உங்கள் மறுப்புக்காக காத்திருக்கிறோம் இன்ஷா அல்லாஹ் .

Admin Rpl ? va alaikumus salam அந்த நூல் நமக்கு கிடைக்கவில்லை. அதில் கூறப்படும் வாதங்கள் ஏதும் இருந்தால் குறிப்பிட்டு எழுதுங்கள். பதில் தருகிறோம். ஆனால் நீங்கள் சுட்டிக் காட்டும் பதிலை அவர் சொல்லி இருந்தால் அது பயங்கரமான தவறாகும். நபிகள் நாயகம் ஸல் இப்போது இருந்தால் இப்படிச் செய்திருப்பார்கள் என்று கூறுவது இரண்டு வகைப்படும். நபிகள் நாய்கம் ஸல் அவர்கள் இப்போது இருந்தால் ஒட்டகத்தில் பயணம் செய்வதற்கு பதிலாக நவீன வாகனங்களில் பயணம் செய்வார்கள் என்பது போல் கூறலாம். ஏனெனில் யாராக இருந்தாலும் தன் காலத்தில் உள்ள வாழ்க்கை வசதிகளைத் தான் பயன்படுத்துவது இயல்பு. ஆனால் நபிகள் நாயகம் ஸல் இப்போது இருந்திருந்தால் அவர்கள் எங்கள் கொள்கையில் தான் இருப்பார்கள் என்று கூறுவது அயோக்கியத் தனம். அர்ஹம் அவ்வாறு க்ஜூறியிருந்தால் அதுவும் அந்த வகையில் தான் சேரும். அதைவிட அவர் நபிகள் நாயகம் ஸல் அவர்களை ஆதாரமாகக் காட்டீருப்பது அவரது ஆபத்தான் சிந்தனைப் போக்கை வெளிப்ப்டுத்துகிறது. மூஸா நபி இப்போது இருந்தால் என்னைத் தான் பின்பற்றுவார்கள் என்று நபிகள் நாயகம் ஸ்ல் கூறினார்கள் என்றால் அது வஹியின் அடிப்படியில் கூறியது. அர்ஹமுக்கும் வஹீ மூலம் அறிவிக்கப்பட்டால் தான் இவ்வாறு கூற முடியும். இன்னும் சொல்லப்போனால் இவர்களின் உளறலுக்கு எதிராக நபிஅக்ல் நாயகத்தின் போதனை தெளிவாக இருக்கும் பொது அதற்கு எதிராக நபிகள் நாயகம் அவர்கள் நடப்பார்கள் எனக் கூறுவது மட்மையாகும். எந்தக் காலத்தில் நபிகள் நாய்கம் இருந்தாலும் மார்க்க நடைமுறையில் மாற்றம் வராது. இது போன்று வாதம் செய்பவரின் நூல் எந்த இலட்சனத்தில் இருக்கும் என்று தெரிகிறது. நபிகள் நாயகம் இப்போது இருந்தால் பெண்கள் பள்ளிக்கு வருவதைத் தடை செய்திருப்பார்கள்; இப்போது பயணம் எளிதாக இருப்பதால் க்ஸர் தொழுகை சட்டத்தை ரத்துச் செய்திருப்பார்கள் என்றெல்லாம் வாதிடுவொருக்கு ஏகத்துவம் இதழில் தக்க மறுப்பு அளீக்கப்பட்ட்தை பார்க்கவும்

SR-No: #1592 hussain 15.12.2009. 02:01

அஸ்ஸலாமு அலைக்கும்
பழனி பாபாவை பற்றி தங்களிம் அபிப்ராயம் என்ன?
அவரைப் பற்றி நீங்கள் அவர் கடையனல்லூரில் தங்கியிருக்கும்போது தங்கியிருந்தவர் வீட்டிலுள்ள பெண்ணை இழுத்து சென்றுவிட்டார் என பேசியதால்க அவரே பேசிய உரை இணையதளத்தில் உள்ளது?
youtube ல் PJ VS BABA என search செய்து பாருங்கள்...

அதற்கு விளக்கம் தேவை!

Admin Rpl ? va alaikumus salam பழனிபாபாவின் மார்க்க சம்மந்தமான நிலைபாட்டிலும் அவரது சில நடவடிக்கைகளிலும் நமக்கு மறுப்பு இருந்தது. அதை நான் வெளிப்படையாகச் சொல்லி இருக்கிறேன். அவர் கொல்லப்பட்டதையும் கொலையாளிகளைக் கண்டுபிடிப்பதில் அரசின் அலட்சியப்போககயும் கண்டித்தும் இருக்கிறேன். எல்லாமே வெளிப்படையானது. ஆனால் அவர் இறந்த பின்னர் அவரது தனிப்பட்ட வாழ்க்கை பற்றி கடந்த காலத்தில் நான் பேசியதை பேச மாட்டேன். பேசக் கூடாது. ஆனால் தேவை ஏற்படும் போது மார்க்க அடிப்படையில் அவரது தவறான கொள்கையை விமர்சனம் செய்வதில் எனக்கு மறுப்பு இல்லை.

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English

:

:

:


4 + 6 =




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
78 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி