உங்கள் கேள்வி

மார்க்க சட்டங்கள் தொடர்பான உங்கள் கேள்விகளை இந்த பகுதியின் மூலம் அனுப்பலாம்.உங்கள் கேள்வி பகுதியில் 7 ஆயிரத்திற்கும் மேறப்பட்ட கேள்விகள் தேங்கியுள்ளதால் தற்போது அவைகளுக்கு பதில் அளிக்கும் பணி நடந்து கொண்டிருக்கின்றது. இதுவரை கேட்கப்பட்ட 7 ஆயிரத்திற்கும் மேற்பட்ட கேள்விகளுக்கு பதில் அளிக்கும் வரை உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது. முன்னர் கேட்டப்பட்ட அனைத்து கேள்விகளுக்கு பதில் அளிக்கப்பட்ட பின்னர் அறிவிப்பு வெளியிடப்பட்டு உங்கள் கேள்வி பகுதியில் கேள்வி கேட்கும் வசதி மீண்டும் துவங்கப்படும் என்பதை தெரிவித்துக் கொள்கின்றோம்.

Published on: December 15, 2009, 8:23 AM Views: 165782

இதுவரை பதிவு செய்யப்பட்டவைகள்:

 • SR-No: #2188 mohamed ziya ul haq (malaysia) 10.01.2010. 18:59 PM

  அஸ்ஸலாமு அழைக்கும்
  தஸ்பிஹ் மணி வைத்து திக்ரு செய்யலாமா?குரான் ஹதீஸ் ஆதாரத்துடன் விளக்குங்கள்.இந்த பதிலை நான் பிரிண்ட் (ஹதீஸ் நம்பர் உடன்) செய்யும்மாறு அனுப்புங்கள்,ஏனென்றால் என்னுடைய நண்பர் சொல்லுகிறார் சவுதி இல் தஸ்பிஹ் மணி விற்கப்படுகிறதே!

  அஸ்ஸலாமு அலைக்கும்  உங்கள் கேள்விக்கு பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2187 Mansoor-Dammam 10.01.2010. 18:39 PM

  அன்புள்ள அண்னன் அவர்களுக்கு

  அஸ்ஸலாமு அலைக்கும் வரஹ்மதுல்லாஹ்...

  சலாம் முல்லுமையாக சொனால் பதிலும் முல்லுமையாக சொல்லவேண்டுமா?

  Mansoor-Dammam

  அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கேள்விக்கு பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2185 rosmin 10.01.2010. 14:50 PM

  assalamu alaikkum
  naan srilanka y serndawan. ivvalavu kalamahavum ungalin web ilirundey fathwaakkalai print out eduththu dayriyamaha dahwa seydu wanden. aanal ippoadu copy seyya mudiyavillai. idarku edaawadu oru wali pannavum.please please.

  அஸ்ஸலாமு அலைக்கும் ஒவ்வொரு செய்தியின் அடியில் இடது புறம் பிரண்டர் படம் இடம் பெற்றுள்ளது அதை கிளீக் செய்தால் அந்தப் பக்கம் பிரிண்ட் ஆகும். இந்த வசதியை பயன்படுத்திக் கொள்ளவும்

 • SR-No: #2184 rinoos 10.01.2010. 13:11 PM

  assalamu alaikum
  நின்றவாறு சிறுநீர் கழிக்கலாமா?

  அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கேள்விக்கு பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2183 shaila baanu 10.01.2010. 12:32 PM

  அஸ்ஸலாமு அழைக்கும்
  நான் கால் கொலுசு அணிந்திருக்கிறேன் அதில் நடக்கும் பொது சிறு ஓசை எழுகிறது இப்படி அணிவது கூடுமா? நடக்கும் போது கொலுசிலிருந்து ஓசை வரும் கொலுசுகளை அணிவது மார்க்கத்தில் தடையா?
  இல்லை சொந்த வீட்டுக்குள் இருக்கும் போதாவது இப்படி அணியலாமா? அதுவும் கூடாதா?

  அஸ்ஸலாமு அலைக்கும் உங்கள் கேள்விக்கு பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2182 Mohamed Bilal 10.01.2010. 12:31 PM

  aangal platinum aniyalam

  அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கேள்விக்கு பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2181 சகோதரன் 10.01.2010. 12:23 PM

  அஸ்ஸலாமு அழைக்கும் ,
  என்னிடம் ஒருவர் ஒரு மார்க்கத்தீர்ப்பு கேட்கிறார் அதாவது அவர் சில வருடங்களுக்கு முன் மேலை நாடொன்றில் வேலை பார்த்துக்கொண்டிருந்தார் அந்த காலத்தில் அவர் தன்னுடைய கடன் அட்டையை பயன்படுத்தி சில லட்சம் ருபாய் பெறுமதியான பொருட்களை வாங்கி சொந்த நாட்டுக்கு திரும்பிவிட்டார் பல வருடங்கள் ஓடிவிட்டன அனால் இது இவருக்கு இப்போது மிக உறுத்தலாக இருக்கிறது அதனால் என்ன செய்வது தெரியாமல் தத்தளிக்கிறார் . அந்த ரூபாய்களை அதே வங்கிக்கு திருப்பி அனுப்பிவிட நினைக்கிறார் முஸ்லிம்களை கருவறுக்கும் இத்தகைய நாடுகளின் வங்கிக்கு பணத்தை திருப்பி அனுப்ப நினைக்கும் பொது கஷ்டமாக இருக்கிறது இந்த பணத்தை சத்தியத்தை சொல்வதற்காக பயன்படுத்தலாமா தயவு செய்து பதில் சொல்லவும் .

  அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கேள்விக்கு பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2178 Arifin 10.01.2010. 6:12 AM

   

  அஸ்ஸலாமு அழைக்கும்
  முஸ்லிமில் ஒருவர் வட்டியின் பக்கம்  போனாலோ? குடித்தாலோ? அல்லது விபச்சாரத்தை தொழிலாக செய்தாலோ? இப்படி பட்ட நபரை நாம்
  எந்த அளவிற்குதண்டிக்க முடியும்? தண்டிக்க அதிகாரம் இஸ்லாம் வழங்கி இருக்கா? விபச்சாரம் செய்தார் என்பதற்காக "உயிரை" எடுபதற்கு
  இஸ்லாம் அதிகாரம் வழங்கி இருக்கா?

  அஸ்ஸலாமு அலைக்கும். இது போன்ற அதிகாரம் இஸ்லாமிய அரசுகளூகுத் தான் உள்ளது தனி மனிதருக்கோ குழுக்களுக்கோ இஸ்லாத்தில் வழங்கப்படவில்லை


 • SR-No: #2176 ashkar mohideen 10.01.2010. 1:53 AM

  assalamu alikkum
  br,pj avarhalukku coca cola,"clvin klein" brand aadai porutkalai muslimgal paavikkak koodaathu. Ivai israel thayaarippuhal endru pala ulamaakkal solhiraarhal, ithu sariyaa? Ithe poandru pala porutkalai pattiyaliduhindraarhal , Vilakkam thevai.
  jazakhallah.
  ASHKAR
  FLORIDA USA

  அஸ்ஸலாமு அலைக்கும். மார்க்கத்தில் த்டுக்கப்பட்டவை என்றால் அதில் இருந்து கண்டிப்பாக நாம் விலகிக் கொள்ள வேண்டும், மார்க்க அடிப்படையில் இல்லாமல் சமுதாய நன்மை என்ற அடிப்படையில் நாம் எடுக்கும் முடிவுகளைப் பொருத்தவரை அதை ஒருவர் மீறினால் அவர் அல்லாஹ்விடம் பாவியாக மாட்டார். பொருளாதார அடிப்படையில் அது நிச்சயம் இஸ்ரேலை பாதிக்கும். இதனால் அவர்களின் கொட்டம் விலகும் என்று கருதுபவர் அதைத் தவிர்க்க வேண்டும். ஏனெனில் கேடு செய்வதை செயக் கூடாது. இது தனி நபர்களுக்குத் தான் பாதிப்பை ஏற்படுத்தும் அரசுகளை பாதிக்காது என்றூ மாற்றுக் கருத்து கொண்டிருப்பவர்கள் அப்படி உண்மையாக நம்பினால அவற்றை அவர் புறக்கணிக்க வேண்டியது அவசியம் இல்லை. 

 • SR-No: #2174 Ahamed Ibrahim 09.01.2010. 22:51 PM

  அஸ்ஸலாமு அலைக்கும்
  டிவி நிகழ்ச்சிகள் நாளுக்கு நாள் மோசம் அடைந்து வருகிறது!!அனால் இதை பார்க்கமால் பலரால் இருக்க முடியவில்லை !! இதை எவ்வகையில் தவிர்க்கலாம் ?
  விளக்கம் தரவும்

  அஸ்ஸலாமு அலைக்கும். ஒவ்வொருவரும் சுயக் கட்டுப்பாடு வித்தித்துக் கொண்டால் தவிர இதற்கு வேறு வழி இல்லை

 • SR-No: #2168 abdul azim 09.01.2010. 20:51 PM

  assalamu alaikkum naan 5 lakhs oru idam vanngi ullen itharkku naan 12.5000 jakath kodekkvendum intha jakath yarukku kodekkvenndum enbathai theriyapatuthauoom

  அஸ்ஸலாமு அலைக்கும் 9:60 வசனத்தில் உள்ளபடி எட்டு வகையிலும் அல்லது அவற்றில் ஏதாவது ஒரு வழியிலும் கொடுக்கலாம்

   

  60. யாசிப்போருக்கும், ஏழைகளுக்கும், அதை வசூலிப்போருக்கும், உள்ளங்கள் ஈர்க்கப்பட வேண்டியவர்களுக்கும்,204அடிமை(களை விடுதலை செய்வதற்)கும், கடன்பட்டோருக்கும், அல்லாஹ்வின் பாதை யிலும்,205நாடோடிகளுக்கும்206தர்மங்கள் உரியனவாகும். இது அல்லாஹ் விதித்த கடமை. அல்லாஹ் அறிந்தவன்; ஞானமிக்கவன்.130

 • SR-No: #2167 yazid 09.01.2010. 20:46 PM

  Assalamu alaikkum, Piranthanaal kondaada koodaathu endru muslimgal arinthu vaythullaargal aanaal vaalthu solvathil entha tavarum illai engiraargal. Hadith galil pirantha naal samanthamaaha vilakkam ullathaa?Athe pol new year vaalthu sonnaal enna badil solvathu? Vilakkam taravum. Jazaakallah.

  அஸ்ஸலாமு அலைக்கும்.

  பார்க்க மேலும் பார்க்க

 • SR-No: #2166 badhar 09.01.2010. 20:27 PM

  assalamu alaikum ,sir, moosa nabi indrum mannarayil tholudhu kondu irukkiraarkal endru hadhees ullladhu endru vaadhiduhiraarkal vilakkam tharavum

  அஸ்ஸலாமு அலைக்கும். முஸ்லிம் நூலிலும் இன்னும் பல நூலக்ளிலும் மூஸா நபி கப்ரில் தொழுததைப் பார்த்தேன் என்று நபிகள் நாயக்ம் கூறிய ஹதீஸ் இடம் பெற்றுள்ளது. 

  حدثنا هداب بن خالد وشيبان بن فروخ قالا حدثنا حماد بن سلمة عن ثابت البناني وسليمان التيمي عن أنس بن مالك أن رسول الله صلى الله عليه وسلم قال أتيت وفي رواية هداب مررت على موسى ليلة أسري بي عند الكثيب الأحمر وهو قائم يصلي في قبره

 • SR-No: #2164 M.Y.சித்திக் 09.01.2010. 19:28 PM

  இலங்கை தமிழர் பிரச்சனையில் நமது நிலை என்ன?

  அஸ்ஸலாமு அலைக்கும். புலிகளின் பிரச்சனை முடிவுக்குக் கொண்டு வரப்பட்டுள்ளதால் பொதுமக்கள் அனைவரும் சம உரிமை பெற்று வாழும் வகையில் நடவடிக்கை எடுக்க வேண்டும்.

 • SR-No: #2163 Mohamed 09.01.2010. 18:20 PM

  தந்தையின் அண்ணனின் மகளின் மகளை திருமணம் செய்யலாமா ?

  அஸ்ஸலாமு அலைக்கும். மணக்கலாம். தடை செய்யப்பட்ட உறவினர் பட்டியலில் இது இல்லை.

 • SR-No: #2161 yousuf 09.01.2010. 13:30 PM

  Assalamu Allaikum, In your kerala islam oru iniya markaum programme you told Moulavi hamdi bakri particpate in the moulid funtcion and also you told you have the cd proof. i asked him but he refuse it .can i know you have it. Wasslam

  அஸ்ஸலாமு அலைக்கும். உங்கள் கேள்வியை பரிசீலனைக்கு எடுப்பதற்குள் ஹாமித் பக்ரி தன்னை தெளிவாக அடையாளப்படுத்திக் கொண்டார். இனி ஆதாரம் தேவைப்படாது என்று நினைக்கிறோம்.

 • SR-No: #2160 ashfaaq 09.01.2010. 13:20 PM

  clonic baby அதாவது எங்களுடைய செல்சை கொன்று ஒரு குழந்தையை உருவாக்குகிறார்கள் என்று சிலர் கூறுகின்றனரே அது உண்மைய? testive baby அல்ல clonic baby.

  அஸ்ஸலாமு அலைக்கும். பார்க்க

 • SR-No: #2157 sha saleem 09.01.2010. 10:00 AM

  மகதி என்பவர் யார் ? ஹதீஸில் இவரை பற்றி இருக்கிறதா ?

  அஸ்ஸலாமு அலைக்கும். பதில் வெளியிடப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2156 MM.ASHMATH 09.01.2010. 10:00 AM

  Assalamu alaikum.
  jamaathay islami pattri ungel karutthu enne?

  அஸ்ஸலாமு அலைக்கும். இது பற்றி முன்னரே விளக்கப்பட்டுள்ளது பார்க்க

 • SR-No: #2152 SamsulAriff 09.01.2010. 6:01 AM

  அஸ்ஸலாமு அழைக்கும் சகோதரர் PJ அவர்களுக்கு ,

  எல்லா சொத்துக்கும் ஜகாத் உண்டென்றால் குடியிருக்கும் சொந்த வீட்டுக்கு ஜகாத் உண்டா? அது போல சொந்த உபயோகத்தில் உள்ள காருக்கும் ஜகாத் உண்டா?

  சொந்த வீட்டுக்கோ அல்லது காருக்கோ ஜகாத் இல்லையென்றால், எனக்கு ஒரு சந்தேகம்.

  1. எனக்கு இப்போது சொந்த வீடு இல்லை ஆனால் நிலம் இருக்கிறது. அதை கட்டுவதற்கு நான் பணம் சேர்த்து கொண்டு இருக்கிறேன். ( இப்போது வாடகை வீட்டில் இருக்கிறேன்)
  ஒரு வருடம் கழித்து நான் சேர்த்து வைத்த பணத்தை கொண்டு அந்த இடத்தை கட்டும் போது, நான் சேர்த்து வைத்த பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டு அதை உபயோக படுத்த வேண்டுமா அல்லது அந்த பணத்தை முழுவதுமாக அந்த இடத்தை கட்டுவதற்கு பயன் படுத்தலாமா
  ஜகாத் குடுத்து விட்டு உபயோக படுத்த வேண்டும் என்றால் உதாரணதுக்கு, ஒரு இருபது லட்சம் அதை கட்டுவதற்கு ஆகும் என்றால் ஐம்பது ஆயிரம் ஜகாத் கொடுக்க வேண்டும். இப்போது எனக்கு ஐம்பது ஆயிரம்
  shortage ஆகி கடன் வாங்கும் நிலமை ஆகும்.

  2. அது போலவே காருக்கும் நான் சேர்த்து வைக்கிறேன் (வட்டி இல்லாமல் வாங்குவதற்கு), ஒரு வருடமோ அல்லது இரண்டு வருடமோ நான் சேர்த்து வைத்து அதை வாங்கும் போது முழுமையாக
  பயன் படுத்தலாமா அல்லது ஜகாத் கொடுத்த பின் உபயோக படுத்த வேண்டுமா. எனது கேள்வியில் / எழுத்திலோ பிழை இருந்தால் அல்லாவுக்காக மன்னிக்கவும்.

  நான் ஜகாத்தை பற்றி ஏற்கனவே எனது கேள்வியினை கடந்த அக்டோபர் மாதத்தில் பதிவு செய்திருந்தேன். சகோதரர் நூர முஹம்மது உடன் நடந்த விவாதத்தில் (வீடியோவில் ) என்னால் விடை காண முடிய வில்லை . விளக்கம் தரவும்.

  Jazakallah Khair
  Regards
  Ariff

  அஸ்ஸலாமு அலைக்கும் சொத்துக்கள் அனைத்துக்கும் ஜகாத் உண்டு. பணத்துக்கு ஜகாத் கொடுத்து விட்டால் அந்த பணத்தின் மூலம் வாங்கப்படும் சொத்துக்கு மீண்டும் ஜகாத் கொடுக்க வேண்டியதில்லை. இன்ஷா அல்லாஹ் அடுத்த மாதம் நடக்கும் ஜகாத் கலந்தாய்வு கூட்டத்திற்குப்பின் விரிவாக விளக்கம் வெளியிடப்படும்.

கேள்வி கேட்கும் வசதி தற்காலிகமாக நிறுத்தப்பட்டுள்ளது!

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top