அத்தியாயம் : 95

அத்தியாயம் : 95

அத்தீன்- அத்தி

மொத்த வசனங்கள் : 8

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் அத்தி என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் இந்த அத்தியாயத்திற்கு இவ்வாறு பெயரிடப்பட்டது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. அத்தியின் மீதும், ஒலிவ மரத்தின் மீதும் சத்தியமாக!379

2. தூர் ஸீனீன் மலையின் மீதும் சத்தியமாக!379

3. அபயமளிக்கும் இவ்வூர்34 மீதும் சத்தியமாக!379

4. மனிதனை அழகிய வடிவில் படைத்தோம்.368

5. பின்னர் அவனை இழிந்தவனிலும் இழிந்தவனாக்கினோம்.

6. நம்பிக்கை கொண்டு நல்லறம் செய்தோரைத் தவிர. அவர்களுக்கு முடிவு இல்லாத கூலி உண்டு.

7. இதன் பின்னர் தீர்ப்பு நாளை1 உம்மால் எப்படிப் பொய்யெனக் கருத முடியும்?

8. தீர்ப்பளிப்போரில் அல்லாஹ் மேலான தீர்ப்பளிப்பவன் இல்லையா?

To read this Chapter in English click here.

(குறிப்பு : இன்ஷா அல்லாஹ் 2015 ஜூனில் வெளியாகவுள்ள 14ஆம் பதிப்பின் படி மாற்றப்பட்டது.)

Published on: July 9, 2009, 5:54 PM Views: 1799

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top