அத்தியாயம் : 81

அத்தியாயம் : 81

அத்தக்வீர் - சுருட்டுதல்

மொத்த வசனங்கள் : 29

இந்த அத்தியாயத்தின் முதல் வசனத்தில் சூரியன் சுருட்டப்படும் எனக் கூறப்படுவதால் இந்த அத்தியாயத்துக்கு இந்தப் பெயர் வைக்கப்பட்டுள்ளது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்... .

1. சூரியன் சுருட்டப்படும்போது,

2. நட்சத்திரங்கள் உதிரும்போது,

3. மலைகள் பெயர்க்கப்படும்போது,

4. கருவுற்ற ஒட்டகங்கள் கவனிப்பாரற்று விடப்படும்போது,

5. விலங்குகள் ஒன்று திரட்டப்படும்போது,

6. கடல்கள் தீ மூட்டப்படும்போது,

7. உயிர்கள் மீண்டும் (உடல்களுடன்) சேர்க்கப்படும்போது,

8, 9. என்ன பாவத்துக்காகக் கொல்லப்பட்டாள் என்று உயிருடன் புதைக்கப்பட்டவள்487 விசாரிக்கப்படும்போது,26

10. ஏடுகள் விரிக்கப்படும்போது,

11. வானம்507 அகற்றப்படும்போது,

12. நரகம் கொளுத்தப்படும்போது,

13. சொர்க்கம் அருகே கொண்டு வரப்படும்போது,

14. ஒருவன், தான் முற்படுத்தியதை அறிந்து கொள்வான்.

15, 16. மறைந்தும் மறையாமலிருக்கிற, (முழுதும்) மறைகின்ற நட்சத்திரங்கள் மீது சத்தியம் செய்கிறேன்.26

17. பின்னோக்கிச் செல்லும் இரவின் மீது சத்தியமாக379

18. தெளிவாகும் காலைப் பொழுதின் மீது சத்தியமாக!379

19. இது மரியாதைக்குரிய தூதரின் (ஜிப்ரீலின்) சொல்லாகும்.492

20. (அவர்) வலிமை மிக்கவர்; அர்ஷுக்கு488 உரியவனிடத்தில் தகுதி பெற்றவர்.

21. வானவர்களின் தலைவர்; அங்கே நம்பிக்கைக்குரியவர்.

22. உங்கள் தோழர் (முஹம்மது) பைத்தியக்காரர் அல்லர்.468

23. அவரை (ஜிப்ரீலை) தெளிவான அடிவானத்தில் பார்த்தார்.

24. அவர் (முஹம்மது) மறைவானவற்றில் கஞ்சத்தனம் செய்பவரல்லர்.

25. இது விரட்டப்பட்ட ஷைத்தானின் கூற்று அல்ல.

26. எங்கே செல்கிறீர்கள்?

27, 28. இது அகிலத்தாருக்கும், உங்களில் யார் நேராக நடக்க விரும்புகிறாரோ அவருக்கும் அறிவுரை தவிர வேறு இல்லை.26

29. அகிலத்தின் இறைவனாகிய அல்லாஹ் நாடுவதைத் தவிர நீங்கள் நாடுவதில்லை.289

To read this Chapter in English click here.

(குறிப்பு : இன்ஷா அல்லாஹ் 2015 ஜூனில் வெளியாகவுள்ள 14ஆம் பதிப்பின் படி மாற்றப்பட்டது.)

Published on: July 9, 2009, 4:58 PM Views: 2008

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top