அத்தியாயம் : 96

அத்தியாயம் : 96

அல் அலக்- கருவுற்ற சினை முட்டை

மொத்த வசனங்கள் : 19

இந்த அத்தியாயத்தின் இரண்டாவது வசனத்தில் அலக் என்ற சொல் இடம் பெற்றிருப்பதால் அதுவே இந்த அத்தியாயத்தின் பெயராக ஆனது.

அளவற்ற அருளாளனும், நிகரற்ற அன்புடையோனுமாகிய அல்லாஹ்வின் பெயரால்...

1. (முஹம்மதே!) படைத்த உமது இறைவனின் பெயரால் ஓதுவீராக!281

2. அவன் மனிதனை கருவுற்ற சினைமுட்டையிலிருந்து365&506 படைத்தான்.368

3. ஓதுவீராக! உமது இறைவன் கண்ணியமானவன்.

4. அவனே எழுதுகோலால் கற்றுத் தந்தான்.

5. அறியாதவற்றை மனிதனுக்குக் கற்றுத் தந்தான்.

6, 7. அவ்வாறில்லை! தன்னைத் தேவைகளற்றவன் எனக் கருதியதால் மனிதன் வரம்பு மீறுகிறான்.26

8. உமது இறைவனிடமே திரும்பிச் செல்லுதல் உண்டு.

9, 10. தொழும் அடியாரைத் தடுப்பவனைப் பார்க்கவில்லையா? 26&32

11, 12, 13. அவர் நேர்வழியில் இருப்பதையும், அல்லது இறையச்சத்தை ஏவுவதையும் அவன் பொய்யெனக் கருதி அலட்சியம் செய்வதை நீர் கவனித்தீரா?26

14. அல்லாஹ் பார்க்கிறான் என்பதை அவன் அறியவில்லையா?

15. அவ்வாறில்லை! அவன் விலகாவிட்டால் முன் நெற்றியைப் பிடிப்போம்.

16. அது குற்றமிழைத்த, பொய் கூறிய முன் நெற்றி.426

17. அவன் தனது சபையோரை அழைக்கட்டும்.

18. நாம் நரகின் காவலர்களை அழைப்போம்.

19. எனவே, அவனுக்குக் கட்டுப்படாதீர்! ஸஜ்தாச் செய்வீராக! 396 நெருங்குவீராக!

Published on: July 9, 2009, 5:55 PM Views: 2534

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top