உங்கள் கருத்து

  • இந்தப் பகுதி கேள்வி கேட்பதற்கான பகுதி அல்ல. எனவே இந்தப் பகுதியில் கேள்வியைப் பதிவு செய்தால் அது பரிசீலணைக்கு எடுக்கப்படாது.
  • உங்கள் கேள்வி என்று தனிப்பகுதி உள்ளது அதில் கேள்விகளைப் பதிவு செய்யவும்
  • இணைய தளத்தின் நிறை குறைகளைச் சுட்டிக்காட்டுங்கள்
  • ஏதாவது லின்க் வேலை செய்யா விட்டால் சுட்டிக் காட்டுங்கள்
  • நமது இணைய தளத்துக்கு எதிராகச் செய்யப்படும் விமர்சங்கள் பற்றி விளக்கம் கேளுங்கள். 
  • இணைய தளத்தில் குர்ஆன் ஹதீசுக்கு முரணான விஷயங்கள் இருப்பதாகத் தெரிந்தால் அதைச் சுட்டிக் காட்டுங்கள்

20.08.2009. 05:39

இதுவரை பதியப்பட்ட நேயர்களின் கருத்துக்கள்/கேள்விகள்

SR-No: #13209 Sirajdeen 26.01.2012. 05:27

உன்னதப்பாட்டு என்ற காமத்துப்ப்பால் பாட்டு சம்பந்தமாக நாம் கேள்வியெழுப்ப, இப்படியெல்லாம் எழுதி வைக்காவிட்டால் மற்றவர்கள் வேறு எங்காவது சுத்த ஆரம்பித்துவிடுவார்கள் என்பதற்காகத்தான் இப்படியெல்லாம் எழுதப்பட்டுள்ளது என்று சுதாகர் என்ற கிறுஸ்த அறிஞர் விவாதத்தின் போது குறிப்பிட்டார்.

இது போல அண்ணா! அண்ணா! என்று அழைத்து அவன் இவளை சகோதரியே! தங்கச்சி என்று அழைத்து பனைமரம் ஏறி திராட்சை குலைபறிக்கும் சம்பவங்கள் எல்லாம் ஆணும் பெண்ணும் ஜெபக்கூட்டங்களில் ஒன்று சேர்ந்து படிப்பார்களானால், என்ன நடக்கும்? நடக்கக்கூடாதது எல்லாம் நடக்கும்.

இதைப்படித்தால்தான் சுத்தக்கிளம்புவார்கள் என்பதை அவர்கள் அறியவில்லையா?

இதை அந்த அறிஞர்கள் தங்களது குடும்ப பெண்களுக்கு பாடமாக படித்துக்கொடுப்பார்களா?

இதுதான் இறைவேதமா?

உண்மையை உலகுக்கு உணரச்செய்த தவ்ஹீத் ஜமாஅத்தின் உன்னதப்பணி தொடரட்டும்

நாமக்கல் - சிராஜ்தீன்

SR-No: #13208 ஹமீத் 26.01.2012. 05:27

ஒருகட்டத்தில் ஜெர்ரி தாமஸ் அவர்கள், பைபிளின் மூலப்பிரதிகள் இரண்டு மட்டுமல்ல, 27000 க்கும் மேல் உள்ளது என்று கூறி பைபிளுக்கு எதிரான கருத்தை முவைக்க, ஜெர்ரி தாமஸ் அவர்கள் எங்கள் தரப்பு அல்ல; அவர் எதிர் தரப்பு என்று கலீல்ரசூல் அறிவிப்பு செய்தார். இரண்டு மூலப்பிரதியிலேயே இத்தனை தவறு என்றால், 27000 த்தில் எத்தனை தவறு இருக்குமோ என்று கேள்வி கேட்டார்.

இதுதான் உச்சகட்ட காமொடி

ஹமீது
ராசல்கைமா

SR-No: #13207 Asfak 26.01.2012. 05:22

குர்-ஆன் கூறக்கூடிய தவ்ராத்தும், இன்சீலும், இவர்கள் தற்போது வைத்திருக்கும் பழைய ஏற்பாடும், புதிய ஏற்பாடும்தான் என்று திரித்துக்கூற முயற்சிக்க, விவாதத்தின் ஆரம்பத்திலிருந்தே அதே கேள்வியையே கேட்டுக் கொண்டிருக்க, அவர்களுக்கு பீஜே நறுக்குத்தெரித்தாற்போல, தவ்ராத்திலும், இன்சீலிலும் இருப்பது என்ன? இருந்தது என்ன என்று பட்டியல் போட்டாரே! அல்ஹம்துலில்லாஹ்

அஷ்ஃபாக்-
குவைத்

SR-No: #13206 absar 26.01.2012. 05:21

உன்னதப்பாட்டு என்ற அசிங்கத்தில் அண்ணா! அண்ணா! என்று அழைத்து காமக்களியாட்டங்கள் புரியம் விபச்சாரியின் வாசகங்களை எழுதி வைத்துக் கொண்டு அதையெல்லாம் இறைவேதம் என்று வாசித்து கொண்டிருக்கும் இவர்களை எந்த கணக்கில் சேர்ப்பது?
அப்சர்

SR-No: #13205 rahmathullah 26.01.2012. 05:20

ஹீப்ரு மொழியும், கிரேக்க மொழியும் எங்களுக்கு தெரியும்; வாருங்கள் மூலமொழியிலிருந்து வாசித்துக்காட்டி பைபிளில் நீங்கள் செய்துள்ள தில்லுமுல்லுகளை நாங்கள் நிரூபிக்கின்றோம். அதற்கு நீங்கள் தயாரா? என்று கேட்க இங்கிலீஷ், மலையாளம் என்று பன்மொழி விற்பன்னர்கள், பைபிள் ஆய்வாளர்கள் என்று தங்களை சொல்லிக் கொண்டவர்கள் திருதிரு என்று முழித்தது அது பற்றிய அறிவு தங்களுக்கு சிறிதும் இல்லை என்பதை வெளிச்சப்போட்டுக் காட்டியது
ரஹ்மதுல்லாஹ்

SR-No: #13204 raja 26.01.2012. 05:19

பனைமரம் ஏறி திராட்சை குலை பறிப்பதாக ஒரு பைபிள் வசனத்தில் உள்ள அசிங்கத்தை வாசித்து காண்பித்தார்கள். பைபிளில் நிறைய அற்புதங்கள் உள்ளதாக கேள்விப்பட்டுள்ளேன். பனை மரத்தில் திராட்சை குலை பறிக்கலாம் என்பதும் அந்த அற்புதங்களில் ஒன்றாக இருக்குமோ என நான் சந்தேகப்படுகின்றேன்.

நல்ல பரிசுத்த (?) வேதா காமம் போங்கள்

ராஜா முஹம்மது – நாகர்கோவில்

SR-No: #13203 Mohamed 26.01.2012. 05:18

உன்னதப்பாட்டு என்ற அந்த மன்மதப்பாட்டு பகுதியை வாசித்துக்காட்டிய போது ஏதோ செக்ஸ் புத்தகத்தை வாசித்துக்காட்டியது போலத்தான் இருந்தது.

இது போல 600 சிலேடுகளுக்கு மேல் வைத்திருப்பதாகவும் பீஜே குறிப்பிட்டார்.

அதையெல்லாம் போட்டுக்காண்பித்தால் என்னவாகுமோ!

என்னுடைய தாழ்மையான வேண்டுகோள்; இது போல காமபுத்தகத்தை எந்த சிறுவர்கள் கையிலும் தெரியாமல்கூட கொடுத்துவிட வேண்டாம்.

அசத்தியத்தை அக்குவேறு ஆணிவேறாக நொருக்கிய

அல்லாஹ்வுக்கே எல்லாபுகழும்

முஹம்மது சிஹாப் – மேலப்பாளையம்

SR-No: #13202 rafeek 26.01.2012. 05:17

ஆபாச வர்ணனைகளை மனிதர்கள் சொல்வதற்கே கேட்க கேவலமாக உள்ளது என்றால், அதை இறைவேதம் என்று சொல்லி வைத்துக் கொண்டு அதை பயபக்தியுடன் வைத்து ஆணும், பெண்ணும் ஒன்றாக உட்கார்ந்து வாசித்தால் எவ்வளவு கேவலமாக இருக்கும்.

ஆபாசத்தை வெட்ட வெளிச்சமாக்கிய தவ்ஹீத் ஜமாஅத்தின் பணி இறையருளால் தொடரட்டும்.

ரஃபீக் – கோழிகோடு

SR-No: #13201 Noorullah 26.01.2012. 05:09

கடுகளவு விசுவாசம் இருந்தால்கூட ஒரு மலையைப்பார்த்து நீ கடலில் போய் விழு என்று சொன்னால், அது கடலில் போய் விழுந்துவிடும் என்று இயேசு சொன்னது உண்மையானால், பைபிள் இறைவேதம் என்பது உண்மையானால், என்னுடைய அறைகூவலை ஏற்று நாங்கள் சொல்வதை செய்து காட்டுங்கள் என்று பீஜே ஒரு சவால்விட்டாரே!

கிறுஸ்த பாதிரிகளின் அடிவயிறு அப்போதே கலங்கியிருக்கும்!

மலையை நீங்கள் பெயர்த்து ஆற்புதம் செய்ய வேண்டாம். இதோ இந்த பேப்பர் வெயிட்டை மட்டும் ஃபூ என்று ஊதி நகர்த்திக்காட்டுங்கள் என்று பீஜே கேட்டதற்கு கடைசி வரைக்கும் அவர்கள் வாய்திறக்கவில்லை என்பதே இது ஒரு மனித கற்பனை என்பதும், அது உளறல் என்பதற்கும் தெளிவான சான்றாக அமைந்துள்ளது

நூருல்லாஹ் - லண்டன்

SR-No: #13200 Ubaidullah 26.01.2012. 05:08

ஓமனிலிருந்து உபைதுல்லாஹ்

அல்ஹம்துலில்லாஹ்

எல்லாபுகழும் அல்லாஹ்வுக்கே…

விவாதத்தின் பரபரப்பான பகுதி

கிறுஸ்தவ பாதிரிகளுக்கு பீஜே வைத்த விஷப்பரீட்சைத்தான்

பைபிள் இறைவேதமில்லை என்பதற்கு கிறுஸ்தவ பாதிரிமார்களை வைத்தே நிரூபித்த விதம் அருமை.

இதற்கு பெயர்தான் விஷப்பரீட்சை எனபதோ!

SR-No: #13197 நாஷித் அஹமத் 26.01.2012. 02:20

அஸ்ஸலாமு அலைக்கும்..

வரலாற்று சிறப்புமிக்க ஒரு விவாதம் இனிதே நிறைவேறியுள்ளது. கிறிஸ்தவர்களுடனான இந்த விவாதம் பல வகையில் முக்கியதுவம் வாய்ந்ததாகும்.
மற்ற கிறிஸ்தவ பாதிரிமார்களுடன் நடைபெறும் விவாதம் போலல்லாமல், இந்த SAN அமைப்பினர் என்று சொல்லப்படக்கூடியவர்கள் பல வகையில் வேறுபட்டு நிற்கின்றனர்.

பொதுவாக, கிறிஸ்தவர்கள் தங்கள் கொள்கை தான் சரி என்றும், பிறரது கொள்கைகள் தவறு என்றும் பொது மேடைகளில் அதிகமாக பிரச்சாரங்கள் செய்கிற வழக்கம் உடையவர்களல்லர். தாங்கள் உண்டு, தங்கள் மார்க்கம் உண்டு என்று இருப்பவர்கள் தான்.
ஆனால், இந்த SAN அமைப்பினரும், அதன் தலைவரான திரு. ஜெர்ரி தாமஸ் அவர்களும் தங்கள் மார்க்கத்தை பிரச்சாரம் செய்வதோடு மட்டும் நிறுத்திக்கொள்ளாமல், பிற மதங்களை, அதிலும் குறிப்பாக இஸ்லாமிய மார்க்கத்தை கடுமையாக விமர்சித்தும் சாடியும் பிரச்சாரம் செய்து வருகின்றனர்.
சாகிர் நாயக், மதங்களை ஒப்பீட்டு நோக்கும் அறிவை (comparitive study) பெற்றிருக்கிறார் என்பதை அறிந்து, சாகிர் நாயக்கை வீழ்த்த வேண்டும், அவரிடம் எந்த ஞானமும் கிடையாது என்பதை நிரூபிக்க வேண்டும் என்று கங்கணம் கட்டிக்கொண்டு அவரை போன்று நாங்களும் comparitive study செய்துள்ளோம், இஸ்லாம் பொய்யான மார்க்கம் என்பதை அவருடன் நேருக்கு நேரான விவாதம் மூலம் நிரூபிப்போம் என்று பகிரங்கமாக சவால் விடுத்தனர். அதோடு, தாங்கள் விடுத்த விவாத அறைகூவலை ஏற்றுக்கொள்ளாமல் சாகிர் நாயக் பின்வாங்கி ஓடி விட்டார் என்று அவர்களது எழுத்துக்களிலும் அவர்கள் நடத்தும் இணையதளத்திலும் செய்தி வெளியிட்டு தாங்கள் தான் சத்திய மார்க்கத்தை சொல்கிறோம் என்று தம்பட்டம் அடித்துக்கொண்டனர் இவர்கள்.

(உண்மையில், சாகிர் நாயக் இவர்களுடன் விவாதிக்க முன்வரவில்லை என்றால், அதற்கான காரணம் என்ன என்பதை இந்த விவாதத்தை முழுமையாக கவனிக்கும் அனைவரும் புரிந்து கொள்ளலாம். அதை குறித்து இந்த கட்டுரையின் இறுதியில் பார்ப்போம்.)

ஆக, இந்த SAN அமைப்பினர், தங்கள் மதத்தை பரப்புகிற தொழிலை செய்வதுடன் நிறுத்திக்கொள்ளாமல், இஸ்லாமிய மதத்தையும், இஸ்லாமியர்களையும் அதிக அளவில் சீண்டி பார்க்கும் வேலையை பல காலமாக செய்து வந்துள்ளது. விவாதம் என்கிற பெயரில், இஸ்லாத்தை அதிக அளவில் விமர்சனம் செய்து, கிறிஸ்தவம் தான் தூய்மையான மார்க்கம் என்று நிலைநாட்ட முயல்வது இவர்களால் சர்வ சாதாரணமாக செய்யப்படும் வழிமுறை.
சாகிர் நாயகின் அமைப்பில் இருந்து விலகி தனி இயக்கம் (IREF) நடத்திக்கொண்டிருக்கும் அவரது மாணவர் இம்ரான் என்பவருக்கும் இந்த ஜெர்ரி தாமசுக்கும் நடந்த விவாதத்தை இதற்கு உதாரணமாக சொல்லலாம்.
மேலும், கேரளா மாநிலத்தில், அதிகமான திருச்சபைகளை கொண்டவர்களாக தங்களை சொல்லிக்கொள்ளும் இவர்கள், கேரளா இஸ்லாமிய அமைப்புகள் மத்தியிலும் பல விவாதங்களை நிகழ்த்தியுள்ளது, குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில் தான் தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாத்துடன் விவாதிக்க இவர்கள் ஆயத்தமானார்கள்.

எது இறை வேதம் என்கிற தலைப்பில் முதலில் விவாதிப்பது என்று, இவர்கள் இடையே நிகழ்ந்த முதல் கலந்துரையாடலில் முடிவு எடுக்கப்பட்டது. எது இறை வேதம் , குர் ஆனா பைபிளா என்பதை ஒரே தலைப்பாக வைக்காமல், இரண்டையும் இரண்டு வெவ்வேறு தலைப்புகளாக மாற்றலாம் என்று தவ்ஹீத் ஜமாஅத் வலியுறுத்தியது.

அந்த அடிப்படையில் , பைபிள் இறை வேதமா இல்லையா? என்கிற தலைப்பில் கடந்த 21 மற்றும் 22 ஆகிய தேதிகளிலும், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் வருகிற 28 , 29 ஆகிய தேதிகளிலும் விவாதிப்பது என்று முடிவு செய்யப்பட்டுள்ளது.
இது தவிர, இன்னும் ஆறு தலைப்புகள் அடுத்தடுத்த மாதங்களில் விவாதிக்கப்பட வேண்டும் எனவும் முடிவு செய்யப்பட்டிருக்கிறது.


தமிழ்நாடு தவ்ஹீத் ஜமாஅத் சந்தித்த விவாதங்களில் இந்த விவாதம் முக்கியமான ஒரு வேறுபாட்டை கொண்டிருந்தது. தங்கள் வாதங்கள் ஒவ்வொன்றையும் தமிழில் சொல்வதுடன் அதை ஆங்கிலத்திலும் மொழியாக்கம் செய்ய வேண்டும் என்கிற விதி ஒப்பந்தத்தில் உள்ளது என்கிற வகையில், தவ்ஹீத் ஜமாஅத் அன்பர்களுக்கு இந்த விதி புதிய ஒன்று என்றாலும், சத்தியத்தை மேலோங்க செய்ய வேண்டும் என்கிற நோக்கில், ஆங்கில புலமை அதிகம் பெற்றிராத தவ்ஹீத் ஜமாத்தினர், அதற்கும் தயாரானார்கள்.


விவாதத்தை குறித்து அறிந்து வைத்துள்ள எவருக்கும் புரியக்கூடிய ஒரு அடிப்படையான விஷயம், பைபிள் இறை வேதமா என்கிற விவாதம் என்றால், அதில் முஸ்லிம்கள் கேள்வி கேட்கக்கூடியவர்களாகவும், கிறிஸ்தவர்கள் பதில் சொல்லக்கூடியவர்களாகவும் இருக்க வேண்டும் என்பதாகும்.

என்ன காரணத்தால் பைபிளை இறை வேதம் என்று சொல்கிறீர்கள்?
மனித கையாடல் பல, பைபிளில் இருப்பதாக ஆதாரங்கள் தந்திருக்கிறோமே, இவைகளுக்கு என்ன பதில்?
இவையெல்லாம் கடவுள் வார்த்தையாக இருக்க முடியுமா?


என்றெல்லாம் முஸ்லிம்கள் கேட்கின்ற கேள்விகளுக்கு பதில் சொல்லி, பைபிளை இறை வேதம் தான் என்று நிலைநாட்ட வேண்டிய கடமை கிறிஸ்தவர்களுக்கு உண்டு. இதற்கு ஏற்றார்ப்போல தான் தலைப்பையும் நாம் ஒப்பந்தத்தின் போது முடிவு செய்திருந்தோம்.


ஆனால், இந்த விவாதத்தின் துவக்கத்தில் இருந்தே, கிறிஸ்தவர்கள் கடைப்பிடித்த முறையானது, முஸ்லிம்களை மட்டுமல்லாது, அவர்கள் அழைத்து வந்த கிறிஸ்தவ பார்வையாளர்களையும் கூட வியப்பிலும், அதிர்ச்சியிலும் ஆழ்த்தியது.
ஏனெனில், இரண்டு நாட்கள் நடைபெற்ற விவாதத்தில், துவக்கம் முதல் இறுதி அமர்வு வரை, இன்னின்ன காரணத்தால் தாங்கள் புனிதம் என்று கருதும் பைபிள் இறை வேதம் தான் என்பதை இவர்கள் சொல்லவேயில்லை!

ஒரே ஒரு காரணத்தை கூட சொல்லாமல், இரண்டு நாட்களையும் கடத்தினார்கள் என்பது, தங்கள் பரமபிதாவின் நாமத்தை போற்றுவார்கள் என்று யாரை நம்பி அந்த பார்வையாளர்கள் வந்தார்களோ, அவர்கள் அனைவரையும் மிகுந்த ஏமாற்றமடைய செய்தது!! இதற்கு, இரண்டாம் நாளில் அவர்கள் அணியில் காலியாகி விட்ட கிட்டத்தட்ட 85 இருக்கைகளே சாட்சி பகர்ந்தது !!

சரி, பைபிள் இறை வேதமா இல்லையா என்கிற தலைப்பில் பேச வந்து விட்டு, பைபிள் இறை வேதம் தான் என்பதற்கு ஆதாரம் சொல்லாமல், இரண்டு நாட்கள் கடத்துவதற்கும் ஒரு திறமை வேண்டுமா இல்லையா? அந்த திறமையை அழகாக அவர்கள் காட்டினார்கள்.
எப்படி?

தவ்ஹீத் ஜமாஅத் தரப்பில், பைபிளில் இன்னின்ன வசனங்களில், அகோரமான, ஆபாசமான வார்த்தைகளும் கதைகளும் சம்பவங்களும் சொல்லப்பட்டிருக்கின்றனவே, இதை ஒரு மனிதன் சொன்னான் என்று சொன்னாலே எங்களை செருப்பால் அடிக்க வருவார்களே, நீங்கள் என்னவென்றால், இதை இறைவன் சொன்னான் என்று சொல்கிறீர்களே, உங்கள் இறைவன் இவ்வளவு மட்டரகமா? என்று அடுக்கடுக்காக பல கேள்விகளும் ஆதாரங்களும் முன்வைக்கப்பட்டது.

இவைகளுக்கு முறையான பதில்களை சொல்லி, இந்த வசனத்தில் நீங்கள் சொல்வது போல இல்லை என்றோ, அல்லது இந்த வசனம் இப்படி தான் சொல்கிறது, அதற்கு இன்ன விளக்கம் என்றோ சொல்லி, தங்கள் வேத நூலை பாதுகாக்க கடமைப்பட்டவர்கள், அதற்க்கெல்லாம் மூச்சு விடாமல், உங்கள் குர் ஆனிலும் தானே விந்து என்கிற வார்த்தை உள்ளது, உங்கள் குர் ஆனிலும் தான் விபச்சாரம் பற்றி சொல்லப்பட்டிருக்கிறது, ஹதீஸிலும் தானே இப்படி உள்ளது என்று சிறு பிள்ளை விளையாட்டை விளையாடிக்கொண்டிருந்தனர்.

அடப்பாவிகளா! உங்கள் பைபிளில், காம களியாட்டங்கள், பெண்களின் மார்புகளை மாதுளைப்பழங்களாக ஒப்பீடு செய்யும் ஒப்பீடுகள், அண்ணன்-தங்கை தகாத உறவு, கள்ளக்காதல் கதைகள் என்று உங்கள் பைபிள் என்பது ஒரு முழு நீள காமக்கதை புத்தகத்தை ஒத்து இருக்கிறதே என்று கேட்டால், அதற்கு பதில் சொல்லி தங்கள் தூய்மையை நிலைநாட்ட வேண்டிய கட்டாயத்தில் இருப்பவர்கள், குர் ஆனிலும் தானே விந்து என்று வருகிறது, அதிலும் தானே விபச்சாரம் குறித்து பேசப்படுகிறது என்று சொல்கிறீர்களே, விந்து வந்தால் குளிப்பது கடமை, விந்து வந்தால் சுத்தம் செய்துக்கொள்ளாமல் தொழுகைக்கு வராதீர்கள், விபச்சாரம் செய்தால் மரண தண்டனை என்று சொல்வது ஆபாசமா? இப்படி தான் பைபிளிலும் ஆபாசம் இருக்கிறது என்று நாங்கள் சொல்கிறோமா?

இதை கேட்டால் அதற்கும் பதில் இல்லை. சமாளித்து சமாளித்து பார்த்து ஒன்றும் வேலைக்காகாது என்றவுடன், குர் ஆனிலும் தானே அடிமைப்பெண்களுடன் உறவு வைத்துக்கொள்ளலாம் என்று உள்ளது என்று அடுத்து சொல்லலாயினர். பைபிளில் இத்தனை வண்டவாளங்கள் இருக்கின்றன என்று குற்றம் சுமத்தி உள்ள தவ்ஹீத் ஜமாஅத்தினருக்கு, பதிலை சொல்லாமல், குர் ஆனிலும் தானே இருக்கிறது என்று வறட்டு வாதம் புரிந்து கொண்டிருந்தனர் இந்த கிறிஸ்தவர் பாதிரிக்கூட்டம். இவ்வாறு சமாளிப்பீர்கள் என்று தெரிந்தே தான், குர் ஆன் இறை வேதமா இல்லையா என்பதை தனி தலைப்பாக விவாதிப்பதற்கு ஏதுவாக அடுத்த வாரம் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கிறது, அந்த விவாதத்தின் போது குர் ஆனை குறித்து கேளுங்கள், இப்போது பைபிளுக்கு பதில் சொல்லுங்கள் என்று ஒரே முடிவுடன் தவ்ஹீத் ஜமாஅத் இருந்தனர்.

இருப்பினும், ஓரிரு ஹதீஸ்களை அவர்களது மனம் போல திரிபு வேலை செய்து, வார்த்தைகளை மாற்றியமைத்து விவாதத்தில் சமர்ப்பித்த போது, வெகுண்டெழுந்த சகோ. பிஜே, இதற்குரிய மூல ஆதாரங்களை தர வேண்டும், இல்லையேல், பகிரங்கமாக மன்னிப்பு கேட்க வேண்டும் என்று ஆவேசப்பட்டார்.

ஹதீஸ் என்று எதை சொன்னாலும் நம்பி விடுவார்கள் என்று தப்புக்கணக்கு போட்டுக்கொண்டு வந்த பாதிரிக்கூட்டம், மார்க்க ஞானத்தில் உச்சாணிக்கொம்பில் இருக்கிற தவ்ஹீத் ஜமாஅத் ஆலிம்களிடம் இவர்களது திரிபு வேலை எடுபடாது என்று ஆனவுடன் செய்வதறியாது திகைத்தனர். பின்னர், சுதாரித்து, நாங்கள் ரஹ்மத் ட்ரஸ்டில் எடுத்தோம் என்று ஒரு ஆதாரத்தை தந்தனர்.

அந்த ஆதாரமாவது உண்மையா என்று பார்த்தால் இல்லை. விடாமல், சகோ. பிஜே, அது ரஹ்மத் ட்ரஸ்டில் இவர்கள் சொல்லும் பாகத்தில் இல்லை - பொய் சொல்கிறார்கள் என்றனர்.
பின்னர், இல்லை, நாங்கள் onlinepj தளத்தில் பார்த்தோம் என்றனர். onlinepj தளத்திலும் அவ்வாறு இல்லை, தற்போது நேரடி ஒளிபரப்பு ஓடிக்கொண்டிருக்கிறது என்பதால் இணையதளத்தை திறப்பது முடியாது , தவிர, இதை பேசி நேரத்தை கடத்தினால், பைபிள் கறித்து நாங்கள் அள்ளிப்போட வேண்டிய இன்னும் பல செய்திகளுக்கு நேரமில்லாமல் போய் விடும், ஆகவே உங்களை அடுத்த வார தலைப்பின் போது கவனித்துக்கொள்கிறேன் என்று கூறி, இந்த விஷயத்தை முடிவுக்கு கொண்டு வந்தார் சகோ. பிஜே.

அடுத்து, பைபிள் இறை வேதம் தான் என்பதை தாங்கள் வைத்திருக்கிற பைபிளின் மூலமே நிரூபிக்க கடமைப்பட்டவர்கள், அதை செய்யாமல், உங்கள் குர் ஆனில் தவ்ராத்தை பற்றி சொல்லப்பட்டிருக்கிறதே, இன்ஜீலை குறித்து சொல்லப்பட்டிருக்கிறதே, அவை அனைத்தையும் அல்லாஹ் தான் ஈசா நபிக்கு (ஜீசுஸ்) கொடுத்ததாக சொல்கிறானே, அப்படியானால், இந்த கால பைபிளில் மனித கையாடல் உள்ளது என்று சொல்வது, அல்லாஹ், தவ்ராத்தையும் இன்ஜீலையும் பாதுகாக்கவில்லை என்று தானே ஆகிறது என்று கேள்வி வைத்தனர்.

ஆனால், இந்த வாதமாவது சரியா என்று பார்த்தால் அதுவும் சரியில்லை !
பைபிள் இறை வேதம் தான் என்பதை பைபிளை கொண்டே நிரூபிக்க வேண்டியவர்கள், அதை கூட குர் ஆனை கொண்டு நிரூபிக்கிற கட்டாயத்தில் தான் உள்ளனர் என்று ஒரு போடு போட்டார் சகோ. பிஜே.
மேலும், குர் ஆனில் அல்லாஹ் சொல்லியுள்ள தவ்ராத் மற்றும் இன்ஜீலுக்கும் இன்று உங்கள் கைகளில் இருக்கிற பைபிளுக்கும் எந்த சம்மந்தமும் இல்லை என்று விளக்கினார்.

இது உங்கள் சுயக்கருத்து, இதற்கான ஆதாரத்தை தர முடியுமா என்று மறு வாதம் வைத்தவர்களை நோக்கி, எந்த குர் ஆனில் தவ்ராத்தையும் இன்ஜீலையும் குறித்து சொல்லப்பட்டிருக்கிறதோ, அதே குர் ஆனில் தான், ஈசா நபிக்கு வழங்கப்பட்ட இன்ஜீலுக்கான சில அடையாளங்களை குறித்தும் சொல்லபட்டிருக்கிறது என்றார்.
ஈசா நபிக்கு வழங்கப்பட்ட அந்த இன்ஜீலில் இருப்பதாக ஓரிரு வசனங்களை அல்லாஹ் குர் ஆனில் மேற்கோள் காட்டுகிறான் என்று அதற்குரிய வசனங்களை வாசித்தார் சகோ. பிஜே.
இந்த வசனம், நீங்கள் வைத்திருக்கிற பைபிளில் இருக்கிறது என்று காட்டி விட்டால், அந்த கால தவ்ராத், இன்ஜீலும் இன்றைய பைபிளும் ஒன்று தான் என்பதை நானே ஒப்புக்கொள்கிறேன் என்று அறைகூவல் விடுத்தார்.

இதை சற்றும் எதிர்ப்பார்க்காத பாதிரிகள், மீண்டும் தலைப்பை திசை திருப்பி, சகோ, பிஜே எழுதிய இது தான் பைபிள் நூலில் அது தவறு, இது தவறு என்று சம்மந்தமில்லாமல் பேச துவங்கினர்.

இதில் வேடிக்கை என்னவென்றால், குர் ஆனில், தவ்ராத் குறித்தும் இன்ஜீல் குறித்தும் எந்த வசனதிலேல்லாம் சொல்லப்பட்டிருக்கிறதோ, அவைகளை எல்லாம் நீண்ட பட்டியலாக தயாரித்துக்கொண்டு வந்து, ஒவ்வொரு வசனத்தை வாசித்து முதல் கேள்வி, இரண்டாம் கேள்வி என்று பட்டியல் போட்டனர்.
நீங்கள் ஆயிரம் கேள்விகள் என்று பட்டியல் போட்டாலும், அதன் மூலம் நீங்கள் எடுத்து வைக்கும் வாதம் ஒன்றே ஒன்று தான் - குர் ஆனில் சொல்லப்பட்டிருக்கிற தவ்ராத்தும் இன்ஜீலும் நாங்கள் இன்று வைத்திருக்கும் பைபிளும் ஒன்று என்பது தான் நீங்கள் சொல்ல வருகிற விஷயம். அது தவறு என்று நீங்கள் எடுத்துக்காட்டுகிற குர் ஆனில் இருந்தே நிரூபித்து விட்டோம். நீங்கள் அடுக்கிய பதினைந்து கேள்விகளின் நிலை இது தான் என்று மிக எளிதாக விளக்கமளித்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.


முதல் நாளின் இறுதி அமர்வில், சகோ. அப்பாஸ் அலியும், சகோ. செய்து இப்ராஹீமும் பைபிளில் உள்ள ஆபாசங்களை ஒரு பக்கம் பட்டியல் இட, மற்றொரு பக்கம், சகோ. கலீல் ரசூல் அவர்கள், பைபிளின் மூலப்ப்ரதிகள் எவ்வாற இருந்தன, ஒவ்வொரு நூற்றாண்டுகளிலும் அது எவ்வாறு மனித கையாடல்கள் மூலம் திருத்தப்பட்டன, எத்தனை எத்தனை முரண்பாடுகள் தோன்றின என்பதையெல்லாம் தக்க ஆதாரங்களுடனும், மூல பிரதிகளை ப்ரஜக்டரின் மூலம் காண்பித்தும் அழகிய முறையில் விளக்கினார்.

ஏற்கனவே இந்த பாதிரிகள் எதிர்க்கொண்ட விவாதங்களில் இப்படிப்பட்ட ஆதாரங்களை எதிர் கொள்ளாததால், தவ்ஹீத் ஜமாத்தின் இந்த ஆழமான ஆதாரங்களை கண்டு குலை நடுங்க துவங்கினர் என்பது, விவாதத்தை கண்டு வந்த அனைவருக்கும் புரிய துவங்கியது .

எதற்கும் பதில் இல்லை என்று ஆனவுடன், இப்படியெல்லாம் ஆதாரம் என்ற பெயரில் சொல்வீர்கள் என்று எங்களுக்கு தெரியும், உங்களை எல்லாம் விட மிகப்பெரிய முஸ்லிம் அறிஞர்கள் எழுதிய "பைபிளில் நூறு தவறுகள்" போன்ற நூல்களுக்கு எல்லாம் பல மறுப்பு நூல்கள் இருக்கின்றன. அவைகளையும் கொண்டு தான் வந்துள்ளோம் என்றனர் பாதிரிகள்.

சரி, மறுப்பு நூல்களை தான் கொண்டு வந்திருக்கிறீர்களல்லவா? அப்படியானால், அந்த நூல்களில் இருந்து வாசித்து எங்களுக்கு மறுப்பு தர வேண்டியது தானே என்று தவ்ஹீத் ஜமாத்தினர் கேட்டனர். அதற்கும் பதில் இல்லை!

உங்கள் சுய சிந்தனையை உபயோகித்து தான் எங்கள் கேள்விகளுக்கு பதில் சொல்ல இயலவில்லை , குறைந்த பட்சம், வேறு அறிஞர்கள் எழுதிய நூல்களில் இருந்தாவது மறுப்பு தர வேண்டியது தானே? அதையும் உங்களால் செய்ய இயலவில்லை என்றால் இதன் பொருள் என்ன ?, உங்களிடம் மறுப்பு இல்லை ! எந்த முஸ்லிம் அறிஞர்கள் பைபிளில் நூறு தவறுகள் என்று நூல் எழுதியதாக சொல்கிறீர்களோ, அந்த நூலில், நாங்கள் இப்போது காட்டியிருக்கிற குற்றச்சாட்டுகள் இல்லை ! அதனால் தான் எங்களின் இந்த குற்றச்சாட்டுகளுக்கு உங்கள் அறிஞர்களின் மறுப்பு நூல்களில் பதில் இல்லை, என்று ஆணித்தரமாக வாதம் வைத்தனர் தவ்ஹீத் ஜமாத்தினர்.

இரண்டாம் நாளின் இறுதியில், சரி, பைபிளில் இருந்து நீங்கள் தான் எந்த ஆதாரத்தையும் காட்டி அதை இறை வேதம் என்று நிரூபிக்கவில்லை, நானே same side goal போட்டு, உங்களுக்கு பாயின்ட் எடுத்து தருகிறேன் என்று துவங்கினார் சகோ. பிஜே.

என்ன வித்தியாசமாக சொல்கிறாரே என்று பார்த்தால்,

பைபிளில், எவருக்காவது கடுகளவு இறை நம்பிக்கை இருக்கிறதோ, அவர் பூ என்று ஊதினால் மலை பறந்து விடும், கொடிய விஷம் கொண்ட சர்ப்பம் (பாம்பு) தீண்டினாலும் சாக மாட்டார், கொடிய விஷயத்தை அருந்தினாலும் உயிர் பிழைத்த கொள்வார், என்று சொல்லப்பட்டிருக்கிறது.
இங்கு வந்திருக்கிற அனைவருக்கும் கடுகளவாவது இறை நம்பிக்கை இருக்கும். எனக்கு மலையை எல்லாம் இங்கு கொண்டு வர முடியாது - இதோ இந்த பேப்பர் வெயிட் - இதை பூ என்று ஊதி தள்ளி விடுங்கள், நான் பைபிளை இறை வேதம் என்று ஒப்புக்கொள்கிறேன் என்றார்.

அதோடு நிறுத்திக்கொள்ளாமல், கையோடு ஒரு விஷ பாட்டில் ஒன்றையும் எடுத்துக்கொண்டு வந்த சகோ. பிஜே, இதை ஜெர்ரி தாமஸ் அணியினரிடம் கொடுத்து இதை அருந்தி விட்டு உயிருடன் இருந்து காட்டுங்கள் என்றார்.

இந்நேரம் வயிற்றில் புலியை கரைத்தது அவர்களுக்கு ! ஆத்திரத்தில் எடுத்து குடித்தாலும் குடித்து விடுவார்கள் என்று தான் நாமும் எண்ணினோம். ஆனால், அவர்கள் வழக்கம் போல, உங்கள் குர் ஆனிலும் ஹதீஸிலும், நோய் ஏற்பட்டாலோ , எந்த விஷம் உடம்பில் ஏறினாலோ, இந்த பேரீச்சம் பழத்தை ஒற்றைப்படை எண்ணிக்கையில் சாப்பிட்டால் உயிர் பிழைப்பார் என்று இருக்கிறதே , நீங்களே இந்த விஷத்தையும் குடித்து இந்த பேரீச்சம் பழத்தையும் சாப்பிட்டு காட்டுங்கள் என்று திருப்பி கொடுத்தார்.

இதை ஏற்கனவே எதிர்பார்த்த தவ்ஹீத் ஜமாத்தினர், நீங்கள் ஹதீஸ் என்று எதை சொல்கிறீர்களோ, அது ஹதீஸ் அல்ல, அது பொய், கட்டுக்கதை ! இதை அடுத்த வார தலைப்பில் கேளுங்கள், அக்கு வேறு ஆணி வேறாக அன்றைக்கு விளக்குகிறோம். அதே நேரம், இது தான் உங்கள் வாதம் என்றால், நாங்கள் எப்படி இந்த ஹதீசை பொய் என்று அறிவிக்கிறோமோ, அதே போன்று பைபிளையும் பொய் என்று அறிவித்து விடுங்கள், பிரச்னையை முடித்துக்கொள்ளலாம் என்றனர் !

இதற்கு பதில் சொன்னவர்கள், பைபிளில், இயேசுவை யாரும் பரீட்சித்து பார்க்க கூடாது என்று சொல்லப்பட்டுள்ளது, ஆகவே நாங்கள் இந்த பரீட்சைக்கு வர மாட்டோம் என்று பின் வாங்கினர்.

விடாமல் சுற்றி வளைத்த சகோ. பிஜே, இயேசுவை நாங்கள் பரீட்சிக்கவில்லை, உங்களை தான் பரீட்சிக்கிறோம், இது இயேசுவின் வார்த்தையா அல்லது நீங்கள் திரித்துள்ளீர்களா என்பதை தான் பரீட்சிக்கிறோம் என்று கூறினார்.
அதோடு, எந்த பைபிள் வசனத்தில், இயேசுவை பரீட்சித்து பார்க்க கூடாது என்று ஏசுவே சொல்கிறாரோ, அதே வசனத்தின் கடைசியில், இயேசு அந்த பரீட்சையில் கலந்து கொள்கிறார் என்று தான் வருகிறது என்பதையும் சகோ. பிஜே சுட்டிக்காட்டினார்.
அதாவது, என்னை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே, அந்த பரீட்சையில் கலந்து கொண்டுள்ளார் இயேசு. அதே போன்று, எங்களை பரீட்சிக்காதீர்கள் என்று சொல்லிக்கொண்டே அந்த விஷத்தை நீங்கள் அருந்தத்தான் வேண்டும், பைபிளும் அருந்த தான் சொல்கிறது என்று ஒரே போடாக போட்டார் பிஜே.
வெலெவெலெத்துப் போன பாதிரிகூட்டம், செய்வதறியாது திகைத நிலையிலேயே விவாதத்தின் இறுதி அமர்வு வந்தது..

இறுதியாக பேசிய சகோ. பிஜே, தலைப்பை நிலைநாட்ட வேண்டி ஒரே ஒரு ஆதாரத்தை கூட எதிர் அணி வைக்காமல் இருப்பது மிகவும் ஆச்சர்யமான ஒரு விஷயமாக உள்ளது. நாங்கள் எதிர்க்கொண்ட விவாதங்களிலேயே இந்த விவாதம் தான் மிகவும் அதிசயமானது என்றார்.
பைபிளில் உள்ள ஆபாசங்கள் என்றும் முரண்பாடுகள், பொய்கள், கட்டுக்கதைகள் என்றும் எத்தனை விஷயங்களை அள்ளிப்போட்டோம், அவைகளுக்கெல்லாம் பதிலை சொல்லாமல் உங்கள் குர் ஆனிலும் தானே இப்படி உள்ளது, ஹதீஸிலும் தானே அப்படி உள்ளது என்று இப்படி சமாளிக்கிறீர்களே, குர் ஆன் குறித்தோ, ஹதீஸ் குறித்தோ கேட்பதாக இருந்தால் அடுத்த வாரம் வாருங்கள், இன்றைக்கு நீங்கள் தலை குனிந்து நிற்பதை போன்று அன்றைக்கு நாங்கள் தலை குனிந்து நிற்க மாட்டோம். ஆணித்தரமான பதில்களை தருவோம் என்று கூறி முடித்தார்.
ஆங்கிலத்தில் Clean Sweep என்று சொல்கிற அளவிற்கு, முழுமையான வெற்றியை நமக்கு பெற்றுதந்த அந்த அல்லாஹ்வுக்கே எல்லா புகழும் !!

இந்த விவாதத்தின் மூலம் ஏகத்துவவாதிகளுக்கு சில படிப்பினைகள் உள்ளன.
இது போன்ற விவாதத்தை சந்திக்க தவ்ஹீத் ஜமாஅத் முன்வந்துள்ள நிலையில், சாகிர் நாயக் போன்ற மற்ற இஸ்லாமிய அறிஞர்கள் ஏன் பின்வாங்கினர் என்பதற்கான காரணத்தை நாம் அறிந்து கொள்ள வேண்டும்.

இஸ்லாமிய அடிப்படை கொள்கை என்றால் என்ன என்பதை அதன் ஆணி வேரிலிருந்தே தெளிவாக புரிந்து வைத்திருக்கிற நம்மை போன்ற ஒருவரால் தான் குர் ஆனை குறித்தோ, ஹதீசை குறித்தோ எந்த கேள்வி என்றாலும் கேள், என்று துணிச்சலாக விவாதத்திற்கு அழைக்க முடியும். காரணம், குர்ஆன் எப்படி இறை வார்த்தையோ, அதே போன்று ஹதீசும் இறை வார்த்தை தான் என்பதை தெளிவாக புரிந்து வைத்துள்ள நாம், இரண்டும் சமமான அந்தஸ்தில் ஆனவை இல்லை என்பதையும் சேர்த்தே புரிந்து வைத்துள்ளோம். ! இதன் மூலம், குர் ஆனுக்குரிய முக்கியத்துவமும், ஹதீசுக்குரிய முக்கியத்துவமும் ஒரே நேர்கோட்டில் வைத்து அலசப்பட முடியாது என்பதையும் நாம் அறிந்து வைத்துள்ளோம்.

குர் ஆனை பாதுகாக்க நபி (ஸல்) அவர்களின் அன்றைய சஹாபாக்கள் அத்தனை பேரும் ஒன்று திரண்டு செய்த முயற்சிகளை போன்று ஹதீஸ்கள் விஷயத்தில் செய்யவில்லை என்கிற போது, ஹதீஸ் என்ற பெயரில் சில பொய்களும் கட்டுக்கதையும் கூட இடைசொருகல்களாக மார்க்கத்தின் உள்ளே நுழைய ஆரம்பித்தது. இந்த தூய மார்க்கத்தை அழித்து ஒழிப்பதையே தங்கள் ஒரே குறிக்கோளாக கொண்டு செயல்பட்டு வரும் அல்லாஹ்வின் எதிரிகள், இது போன்ற கட்டுக்கதைகளை ஹதீஸ் என்று கூறி நம்மை நம்ப வைக்க முயற்சி செய்தனர். இதன் மூலம், உண்மையான இந்த மார்க்கத்தில் களங்கத்தை ஏற்படுத்தி விடலாம் என்று கணக்கு போட்டனர்.
அவர்களின் அந்த கணக்கிற்கு பலியான நம் சமூகத்தில் சிலர், ஹதீஸ் என்கிற பெயரில் எதை சொன்னாலும் அதை நம்புவதற்கு தயாராயினர்.
அந்த வகையில், குர் ஆனிலேயே சில வசனங்கள் மாற்றப்பட்டு விட்டன என்று ஹதீஸில் இடை சொருகலாக சேர்த்து விட்டால், அதையும் ஹதீஸ் என்று நம்பினர்.
அல்லாஹ்வுக்கு இணையாக நபிமார்களுக்கும் மறைவான ஞானம் உண்டு என்று கூறி, குர் ஆனுக்கு எதிராக யுத்தம் செய்தாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.
நபி (ஸல்) அவர்கள் அந்நிய பெண்களுடன் தனியாக இருந்தார்கள் என்று சில பொய்களை கட்டவிழ்த்து விட்டாலும், அதையும் ஹதீஸ் என்றே நம்பினர்.
இன்னும் சொல்லப்போனால், நபி (ஸல்) அவர்கள் ஆறு மாதம் பைத்தியமாக இருந்தார்கள் என்று சொன்னாலும் கூட, சொல்லப்படும் செய்தியை குறித்து சிந்திக்காத இவர்கள், ஹதீஸ் நூல்களில் அல்லவா இது பதியப்பட்டுள்ளது, ஆகவே இதுவும் ஹதீஸ் தான் என்று கூறி, சொல்லப்படுகிற செய்தி உண்மையா, அது குர் ஆனுக்கு முரணா? அது நபிகளாரின் தன்மைக்கு உகந்த செய்தியா என்றெல்லாம் தங்கள் சிந்தனையை செலுத்த கடமைப்பட்டவர்கள், அதற்கு கொடுக்கும் முக்கியத்துவத்தை விட தாங்கள் இமாம்களாக நம்பிக்கொண்டு வந்தவர்கள் வழியாக அறிவிக்கப்படுகிறது என்கிற ஒரே அளவுகோலை கொண்டு பார்க்கலாயினர்.!!
இத்தகையோரால், குர் ஆனுக்கு எதிரான விமர்சனங்கள் என்று கூறி தொடுக்கப்படும் மேற்கண்ட கேள்விகளை எதிர் கொள்ள இயலுமா? நிச்சயமாக இயலாது.
குர் ஆன் மட்டும் தான் மார்க்கம் , குர் ஆனை உறுதி செய்கிற, குர் ஆனின் வரம்புகளை தாண்டாத ஹதீஸ்கள் மட்டுமே ஏற்கத்தக்கவை , இந்த இரண்டு அளவுகோல்கள் அல்லாத வேறு எதுவும் இஸ்லாமாகாது என்கிற கொள்கையை யார் கொண்டிருக்கிறாரோ, அவர்களால் தான் நெஞ்சுறுதியுடன் குர் ஆன் , ஹதீஸ் குறித்த எந்த விவாதத்திற்கும் தயாராக முடியும் என்பதற்கு நடந்து முடிந்த இந்த விவாதமே சாட்சி.

மேலும், எது இறை வேதம் ? பைபிளா குர் ஆனா? என்று ஒரே தலைப்பாக விவாதம் செய்வதையே வழக்கமாக கொண்ட நம் சமூகத்தினர் மத்தியில், பைபிள் குறித்த அலசலை தனி தலைப்பாகவும், குர் ஆன் குறித்த அலசலை தனி தலைப்பாகவும் தவ்ஹீத் ஜமாஅத் பிரித்து விவாதிக்க அழைத்ததன் மூலம், எதிர் அணியினருக்கு மிகப்பெரிய பின்னடைவை ஏற்படுத்த முடிந்தது என்பதும் இந்த விவாதத்தின் மூலம் தெரிகிற உண்மை.

ஆக, எல்லா வகையிலும் இந்த விவாதத்தின் மூலமாக இஸ்லாமிய சமுதாயத்தை தலை நிமிர செய்திருக்கிறான் அந்த ஏக இறைவன் ! எல்லா புகழும் அவனுக்கே !!

SR-No: #13196 ziyavudeen 26.01.2012. 01:39

அஸ்ஸலாமு அழைக்கும் ,

எல்லா புகழும் அல்லா ஒருவனுக்கே,

நான் ஜெர்ரி தாமஸ் அவர்களுடைய வெப் பேஜ் சென்று பார்த்தேன், அவர்களுடைய தோல்வியை ஒப்பு கொண்டதற்கும் இணங்க அவர்கள் *அப்டேட்* செய்யாமல் இருப்பதை கண்டு மிகவும் ஆச்சரியப்பட்டேன் .

சாகிர் நாயக்கை விமர்சனம் செய்தவன், விவாதம் முடிந்து 72 மணி நேரம் ஆகியும் *அப்டேட்* செய்யாமல் இருக்கிறான்.

அசத்தியம் அழியுயம் ..........அசாத்தியம் அழிந்தே தீரும்.............

Nothing to update, about their foolishness........................


Thanks and Regards,
M.Ziyavudeen

SR-No: #13194 syedkaja 25.01.2012. 18:00

அஸ்ஸலாமு அழைக்கும்
சத்யம் வென்றது அசத்தியம் அழிந்துபோனது இன்ஷால்லாஹ் மீண்டும் அல்லாஹ் வெற்றி கொடுப்பான் அல்ஹம்துலில்லா

SR-No: #13188 aashiqraja 25.01.2012. 12:10

அஸ்ஸலாமு அலைக்கும்,

விவாதத்தில் இஸ்லாம் வெற்றி பெற்றுள்ளது.

அவர்கள் பொய்யை அமைதியாக பேசுகிறார்கள்.

நீங்கள் உண்மையை பேசும் போது உணர்ச்சிவசப்படுகிறீர்கள்.

செம்மையான தமிழ் மொழி நடை தேவை.

மைக்ரோபோன் தனி தனியாக வைத்துகொள்ள வேண்டும்.

அல்ஹம்துலில்லாஹ்.

SR-No: #13178 Mohamed Rizwan 25.01.2012. 04:24

Assalamu Alaikum wr wb.......

Alhamdillah ... Really it was a fantastic debate with them and they were mum like a Monkey in giving their answer, Infact always they are beating arround the bush when we ask question with authentic proof... Inshaallah I will pray allah subhanuvathalah to continue this journey ...Though it s not a Feedback, I wanted share this.

I Really proud to be in following Thowheethism ...

Assalamu Alaikum wr wb.......

M Mohamed Rizwan

SR-No: #13177 Shahul Hameed 25.01.2012. 04:23

Assalamalaikum

We saw the debate through online it was very pleasant to see and everybody in our family watched it and was useful for everyone.
May allah bless you all success for you team members.

Shahul hameed
Chennai.

SR-No: #13176 Abdullah 25.01.2012. 04:13

அஸ்ஸலாமு அலைக்கும் அல்லாஹ்வுக்கே எல்லா புகழும்!

அன்புச் சகோதரர் P ஜைனுல் ஆப்தீன் அவர்களுக்கு அல்லாஹ் அருள் புரிவானாக, மேலும் கலீல் ரசூல் தொடங்கி இந்த விவாதத்திற்கு துணை நின்ற அனைத்து சகோதரர்களுக்கும் அல்லாஹ் அருள் செய்வானாக! இன்ஷா அல்லாஹ் வரும் விவாதங்களிலும் அல்லாஹ் நமக்கு வெற்றியைத் தர துஆ செய்கிறேன்.

பிரார்தனைகளுடன்

அப்துல்லா ஃபாயிஸ்

SR-No: #13175 AjmalKhan 25.01.2012. 04:11

ASSALAMU ALAYIKKUM BROTHERS,

I SAW OUR DEBATE .IT IS AWESOME ............ ALHAMTHUILLAH . INSHAALLAH VERY NEAR TO WIN. GO HEAD .............

Allah! show us the straight way
THANKS AND REGARDS
BY
A.AJMALKHAN

SR-No: #13174 Mohamed Nisam 25.01.2012. 04:11

Perfect Debate never seen like this debate before. Thanks for PJ Annan.

Mohamed Nisam

SR-No: #13173 Azarudeen 25.01.2012. 04:09

Alhamdhulillah . Very super debate . If christians think truely , they will get hidayah. But concentrate more on English Translation. Because this is historical event. And it should speak after long years also. Still we succeeded. Thanks to Allah.
இந்த விவாதத்தின் முலம் நிறைய மக்கள் பயன் அடைந்து உள்ளார்கள். குறிப்பாக நம் மக்கள் கிருத்துவத்தின் முட நம்பிக்கையே தெரிந்து கொள்வதுடன் இதை (விவாதத்தை கேட்ட கிருத்துவர்களும் உண்மையாக சிந்தித்தால் திருந்துவார்கள் இன்ஷா அல்லாஹ். அல்லாஹ் நாடினால் அவர்களுக்கு நேர்வழி கிடைக்கட்டும். இந்த பணி தொடர அல்லாஹ்விடம் என்றும் பிரார்த்தித்தவனாக

<< First < Previous [1 / 172] Next > Last >>

உங்கள் கருத்து/கேள்வி ஐ பதிவு செய்யுங்கள்

* = கட்டாயம் தேவையான தகவல்
Press CTRL+G For Tamil and English

:

:

:


7 + 4 =




செய்திகளை உடனுக்குடன் அறிய

நமது இணையதளத்தின்RSS Feed கிடைக்க பின் வரும் இணைப்பை பயன்படுத்தவும்!
எவ்வாறு பயன்படுத்தவது ?

கேள்வி? பதில்!

Search..

பார்வையாளர்

பார்வையாளர் எண்ணிக்கை

தற்போது ஆன்லைனில் பார்த்துக் கொண்டிருப்பவர்கள்
83 நபர்கள்

புது வரவுகள்

மேலும் புதியவைகள் ..

PJ Books & Quran Tharjuma

பி.ஜே அவர்களின் புத்தகங்கள் மற்றும் திருக்குர்ஆன் தமிழாக்கம் வாங்க பின் வரும் முகவரியில் உள்ள மூன் பப்ளிகேஷனைத் தொடர்பு கொள்ளவும்.

 Moon Publication

83, மூர் தெரு, மண்ணடி, சென்னை-1

போன்-044 65690810 , செல்-9444276341,9976223885

 நூல்கள் மற்றும் DVDகளின் முழுமையான பட்டியலைக் காண Click Here

Tamil Type

இணைதளத்தில் கேள்வி மற்றும் கருத்துக்கள் அனுப்புபவர்கள் தமிழில் அனுப்புவதற்கு இந்த தங்லீஷ் டைப் ஐ பயன்படுத்திக் கொள்ளவும் (amma என டைப் செய்தால் அம்மா என இடம் பெறும்):


நேயர்களின் கருத்து மற்றும் கேள்வி