அலர்ஜியைத் தடுக்கும் மீன்

 அலர்ஜியைத் தடுக்கும் மீன்

மீன் சாப்பிடும் குழந்தைகளை அலர்ஜி நோய் தாக்காது: விஞ்ஞானிகள் தகவல்!

கடலிலிருந்து பசுமையான இறைச்சியை நீங்கள் உண்பதற்காகவும், அணிந்து கொள்ளும் நகையை நீங்கள் அதிலிருந்து வெளிப்படுத்திடவும், அவனது அருளைத் தேடவும், நீங்கள் நன்றி செலுத்திடவும் கடலை உங்களுக்கு அவனே பயன்படச் செய்தான். கப்பல்கள் அதைக் கிழித்துச் செல்வதை நீர் பார்க்கிறீர்!

திருக்குர்ஆன் 16:14 

கடந்த வார உணர்வு இதழில், “சைவ, அசைவ உணவுகள் - ஓர் ஒப்பீடுஎன்ற தலைப்பில் சைவ உணவுகளை வெறுத்து அசைவ உணவுகளை மட்டுமே ஒருவர் உட்கொண்டால் அதனால் ஏற்படும் கேடுகள் குறித்து விரிவாக விளக்கியிருந்தோம். அதை உண்மைப்படுத்தும் வகையில் சமீபத்தில் வெளியான ஆய்வில் விஞ்ஞானிகள் கருத்து தெரிவித்துள்ளனர்.

ஒரு வயதிற்குள் மீன் சாப்பிடும் குழந்தைகள் பிற்காலத்தில் அலர்ஜி  நோய்களுக்கு ஆளாகமாட்டார்கள் என்பது விஞ்ஞானிகளின் புதிய கண்டுபிடிப்பாக உள்ளது.

குழந்தைகளின் உணவு முறைகளைக் கண்காணித்த இவர்கள், ஆரம்பகாலத்தில் மீன் சாப்பிட்ட குழந்தைகள் 12 வயதிற்கு மேல் அலர்ஜியினால் வரும் பிரச்சினைகள் எதுவுமின்றி இருந்ததைக் கண்டறிந்தனர். இத்தகைய குழந்தைகளுக்குத் தோல்நோய் வருவது 22 சதவிகிதமும், தூசியினால் வரும் சளிக்காய்ச்சல் 26 சதவிகிதமும் குறைந்திருந்தன.

அமெரிக்கப் பத்திரிகையான கிளினிகல் நியூட்ரிஷியனில் இது குறித்த கட்டுரை வெளியிடப்பட்டுள்ளது. அதில், மாதத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை குழந்தைகளுக்கு மீன் கொடுத்தால், அவர்கள் அலர்ஜிப் பிரச்சினை இல்லாமல் இருப்பார்கள் என்று தெரிவிக்கப்பட்டுள்ளது. இங்கிலாந்தில் எட்டு பிள்ளைகளில் ஒருவர் தோல் நோயினால் பாதிக்கப்படுகின்றார்கள்.

உடம்பின் மேல் முழுவதும் வரும் சிவப்புத் திட்டுகள் அவர்களுக்கு எரிச்சலைக் கொடுக்கும். ஒரு சில மருந்துகளே இந்த நோயை முற்றிலும் குணப்படுத்தும் தன்மை கொண்டவையாக இருக்கின்றன. சிலருக்கு நோயின் தீவிரம் காரணமாக, உடல் முழுவதும் துணிக்கட்டுகள் போடவேண்டியிருக்கும். தூசியினால் வரும் சளிக்காய்ச்சல்கள், ஐந்து பிள்ளைகளில் ஒருவருக்கு வருவதாகக் கூறப்படுகின்றது. இவை இரண்டுமே நாட்பட்ட நிலையில் ஆஸ்துமா நோயை வரவழைக்கக்கூடிய அபாயம் கொண்டவை ஆகும்.

மீன் உணவு கொடுப்பது நான்கு வயது வரை மட்டுமே பலனளிக்கும் என்று முந்தைய ஆராய்ச்சியின் முடிவு தெரிவித்துள்ளது. இருப்பினும், சுவீடன் நாட்டில் உள்ள கரோலின்ஸ்கா நிறுவனத்தின் வல்லுனர்கள், 3,285 குழந்தைகளை அவர்களின் 1,2,4,8 மற்றும் 12 வயதுகளில் ஆய்வு செய்தனர். இவர்களில் 80 சதவிகிதம் பிள்ளைகள் குறைந்தது மாதம் இரண்டு முறை மீன் உட்கொள்ளுபவர்களாக இருந்தார்கள். மற்றவர்களைவிட இவர்களின் ஆரோக்கியத்தில் தெரிந்த வளர்ச்சி, உணவுப் பழக்கங்களில் மீன் ஒரு முக்கிய இடத்தைப் பிடிக்கின்றது என்பதை உணர்த்தியது.

மீன் என்பது அசைவம் என்று சொல்லி அதை ஒதுக்குபவர்கள் இதுபோன்ற பல நன்மைகளை இழக்க நேரிடும் என்பதை கவனத்தில் கொள்ள வேண்டும்.

June 26, 2013, 12:37 AM

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை

சீனாவில் குட்டைப்பாவாடைக்குத் தடை

எதிரிகளால் உண்மைப்படுத்தப்படும் இஸ்லாம்!!

பெண்களைப் பாலியல் தொந்தரவுகளிலிருந்து தடுக்க குட்டைப்பாவாடை மற்றும் உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தக்கூடிய லெகின்ஸ் மற்றும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்று சீனப் பெண்களுக்கு பெய்ஜிங்கில் காவல்துறை எச்சரிக்கை விடுத்துள்ளது.

சீனாவில் சமீபகாலமாக பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு அதிக அளவில் ஆளாவதாக காவல்துறைக்கு புகார்கள் குவியத் தொடங்கின. அந்தப் புகார்கள் மீது பல்வேறு நடவடிக்கைகள் எடுத்தும், புகார்கள் குறைந்தபாடில்லை. அந்தப் புகார்களைப் பெற்றுக்கொண்ட காவல்துறை பெண்கள் அதிக அளவில் பாலியல் தொந்தரவுக்கு ஆளாகக் காரணம் என்ன என்பதை ஆய்வு செய்து அதிரடியாக ஒரு உத்தரவு பிறப்பித்தது.

பாலியல் ரீதியான தொந்தரவுகளுக்குப் பெண்கள் ஆளாவதைத் தடுக்கும் வகையில் பெண்கள் கவர்ச்சிகரமான உடைகளான ஸ்கர்ட், லெகின்ஸ், உடல் அமைப்பை வெளிப்படுத்திக் காட்டும் இறுக்கமான உடைகளை அணிய வேண்டாம் என்பதே சீனப் பெண்களுக்கு சீனப் போலீசார் விடுத்த எச்சரிக்கை.

பெண்கள் பாலியல் தொந்தரவுகளுக்கு ஆளாகாமல் இருக்க குட்டைப்பாவாடை, உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் உடைகள், மார்பு தெரியும் பனியன்கள், உடல் அமைப்பை அப்படியே வெளிப்படுத்தும் லெக்கின்ஸ் பேன்ட் போன்றவற்றை அணியக்கூடாது என்றும் எச்சரிக்கை விடுத்துள்ளனர்.

அரசுப்பேருந்துகள் பாதியளவுக்கு உயரமாகவும் இன்னொரு பாதி தாழ்வாகவும் அமைந்துள்ளன. உயரமான பகுதியில் பெண்கள் அமரும் தாழ்வான பகுதியில் உள்ள ஆண்கள் பெண்களின் தொடைகளையும் அதைத் தாண்டியும் செல்போனில் படம் எடுக்கின்றனர். பார்த்து ரசிக்கின்றனர். இதைத் தவிர்ப்பதற்காக அரசுப் பேருந்துகளில் உயரமாக உள்ள பேருந்தின் பின்புறத்தில் பெண்கள் அமரக் கூடாது; தாழ்வாக உள்ள  முன்புறத்தில் தான் அமர வேண்டும் எனவும் காவல்துறை எச்சரித்துள்ளது.

இதே போல மாடிப் பேருந்துகளில் உள்படியில் நிற்கும் பெண்களை கீழ்தளப்பேருந்தில் இருந்து ஆபாசமாக செல்போனில் படம் பிடிப்பபதைத் தவிர்க்க உள்படியில்  பெண்கள் நிற்க்க் கூடாது எனவும் சீன காவல்துறை எச்சரித்துள்ளது.

இதைப் பிரசுரமாக அச்சிட்டு பேருந்துகளிலும், பொது இடங்களிலும் ஒட்டி உள்ளனர்.

அரைகுறை ஆடை அணிந்து செல்லும் பெண்களை தவறான முறையில் புகைப்படம் எடுப்பதைத் தவிர்க்க தங்கள் உடல்களை பெண்கள் அவரவர் கொண்டு செல்லும் பத்திரிகைகள் மற்றும் கைப்பைகளை வைத்து மறைத்துக் கொள்ளுமாறும் போலீசார் அறிவுறுத்தியுள்ளனர்.

இதுபோல ஆஸ்திரேலியாவில் குட்டைப்பாவாடை அணிந்து சென்ற மாணவிகள் பேருந்தில் ஏறுவதை பேருந்துப் படிகளில் மறைத்து வைத்திருந்த ரகசிய கேமரா மூலம் படம் பிடித்த பேருந்து ஓட்டுநரை ஆஸ்திரேலியப் போலீசார் கைது செய்து வழக்குத்தொடர்ந்து அவருக்கு 7மாத சிறைத்தண்டனை கொடுத்த சம்பவமும் சிலமாதங்களுக்கு முன்பு பரபரப்பை ஏற்படுத்தியது.

அதுபோல "அரியானாவில், மேல்நிலைப் பள்ளிகளில் படிக்கும் மாணவியர், குட்டைப் பாவாடை அணியத் தடை விதிக்க வேண்டும்' என, மாநிலக் கல்விக் குழு அதிகாரியை, அம்மாநிலத்தின் மகளிர் ஆணையம் கேட்டுக் கொண்டது.

திருமணமாகாத பெண்கள் மொபைல் பயன்படுத்தவும் ஜீன்ஸ் அணியவும் தடைவிதிக்கக் கோரி பா.ஜ.க. எம்.பி. வலியுறுத்திய சம்பவமும் சென்ற வாரம் பத்திரிக்கைகளில் வெளியாகி பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.

பெண்களுக்கு எதிரான பாலியல் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெண்கள் திருமணத்திற்கு முன் மொபைல் போன் பயன்படுத்தவும், ஜீன்ஸ் அணியவும் அனுமதிக்கக் கூடாது என மத்தியப் பிரதேச பா.ஜ.க. துணைத் தலைவரும் ராஜ்யசபா எம்.பி.,யுமான ரகுநந்தன் சர்மா கடந்த வாரம் மத்திய பிரதேசத்தின் ரட்லம் மாவட்டத்தில் நடைபெற்ற பொதுக்கூட்டம் ஒன்றில் பேசியிருந்தார்.

மாணவர்கள் குறிப்பாக இளம் பெண்கள் மொபைல் போன் பயன்படுத்துவதாலேயே பெரும்பாலான அச்சுறுத்தல்களும், குற்றங்களும் நடைபெறுவதாக அவர் தெரிவித்தார்.

அவருக்கு கண்டனக் குரல்களும், எதிர்ப்புக் குரல்களும் பறந்தன.

பெண்கள் கவர்ச்சி ஆடை அணிவது கூடாது; அதனால் ஆண்கள் பாதிக்கப்படுகின்றார்கள் என்ற கருத்து மோலோங்கியதோடு மட்டுமல்லாமல் ஜவுளிக்கடையில் வைக்கப்பட்டுள்ள பொம்மைகளுக்குக்கூட கவர்ச்சி ஆடை அணிவித்து ஆடவர்கள் கண்களில் படுமாறு வைக்க எதிர்ப்புக் குரல் கிளம்பியுள்ளது.

மும்பை மாநகராட்சியின், 121வது வார்டு உறுப்பினர், ரிது தாவ்டே (39). பாரதிய, ஜனதாவைச் சேர்ந்த இவர், செல்லும் பாதையில், பெண் பொம்மைகள் காட்சிக்கு வைக்கப்பட்டிருந்தால், அவற்றை அப்புறப்படுத்தாமல், அந்த இடத்தை விட்டு நகர மாட்டார்.

துணிக் கடைகள் மற்றும் நடைபாதைக் கடைகளில், பெண் பொம்மைகளை வைத்திருப்பதைப் பார்ப்பதால், ஆண்களிடம் பாலியல் வக்கிரம் வெளிப்படுகிறது. எனவே, உள்ளாடை விற்பனை கடைகளில் வைக்கப்பட்டிருக்கும், பெண் பொம்மைகளுக்கு தடை விதிக்க வேண்டும் என, மும்பை மாநகராட்சியில் இவர் மற்றும் 227 உறுப்பினர்கள் கையெழுத்திட்டு, தீர்மானம் கொண்டு வந்துள்ளனர்.

இதுகுறித்து, ரிது தாவ்டே கூறியதாவது: பெண்களின் உள்ளாடை விற்பனைக்காக, கடைக்காரர்கள், இத்தகைய பொம்மைகளை, தங்கள் கடைகளின் வெளிப்புறமாக வைக்கின்றனர். அதில், பிரா, ஜட்டியுடன் காட்சியளிக்கும் பொம்மைகளைப் பார்க்கும் ஆண்கள், அவற்றை பொம்மைகளாகப் பார்ப்பதில்லை; பெண்களாகவே பார்க்கின்றனர்.

இதனால், நல்ல எண்ணம் கொண்ட ஆண்களுக்கும், வக்கிர புத்தி ஏற்படுகிறது. மக்கள் நடமாட்டம் மிகுந்த, ஆண், பெண் என, அனைத்து தரப்பினரும் பயன்படுத்தும் சாலைகளில், இத்தகைய கவர்ச்சி பொம்மைகள் வைத்திருப்பது, நம் நாட்டின் பாரம்பரியம், கலாசாரத்திற்கு எதிரானது. எனவே, அவற்றை அகற்றுவது என்ற முடிவை எடுத்தேன்.

தீர்மானம் :

நாடு முழுவதும், பெண்களுக்கு எதிரான பாலியல் பலாத்காரங்கள் அதிகரித்துள்ள நிலையில், இத்தகைய பொம்மைகள், பிரச்னையை மேலும் தீவிரப்படுத்தும் என்பது என் எண்ணம். எனவே, நாடு முழுவதும், பெண்கள் கவர்ச்சி பொம்மைக்கு தடை விதிக்க வேண்டும் அவர் கூறினார்.

மேற்கண்ட செய்திகள் நமக்கு உணர்த்துவது என்ன?

பெண்களுக்கு எதிரான தொல்லைகள் அதிகமாவதற்கு அவர்களது ஆடைக் கலாச்சாரம்தான் காரணம். அவர்கள் ஆடைகளை ஒழுங்காக அணிந்தால் அதுவே அவர்களுக்கு சரியான பாதுகாப்பு என்று இஸ்லாம் சொல்லக்கூடிய கட்டளைகளைக் கடைப்பிடிக்காததே அதற்கு முழுமுதற்காரணம்.

இந்தக்கருத்தை இஸ்லாம் கூறும் கட்டளையாகச் சொன்னபோது இஸ்லாம் பெண்களை அடிமைப்படுத்துகின்றது; அவர்களைச் சித்ரவதை செய்கின்றது; பெண்களை பர்தா அணியச் சொல்லும் இவர்கள் பழமைவாதிகள்; அடிப்படைவாதிகள்; பிற்போக்குவாதிகள்; காட்டுமிராண்டிகள் என்று கதையளந்தனர் இஸ்லாமிய எதிரிகள்.

ஆனால் தற்போது நிலை என்ன?

யார் தங்களை முற்போக்குவாதிகள் என்று சொல்லிக் கொண்டார்களோ அந்த முற்போக்கு(?)வாதிகளது வாயிலிருந்தே இஸ்லாம் கூறும் சட்டதிட்டங்களை அல்லாஹ் வழிமொழிய வைத்துள்ளான்.

சீனக் காவல்துறை இந்தச் சட்டத்தை கொண்டுவரும் என்று யாரும் கனவிலும் கூட நினைத்துப் பார்த்திருக்க மாட்டார்கள்.

இஸ்லாத்தை இழிவுபடுத்துவதையே முழுமுதற் குறிக்கோளாகக் கொண்டுள்ள பா.ஜ.க.வினரது வாயிலிருந்தே பர்தாவின் அவசியத்தை இறைவன் விளங்க வைத்துள்ளான்.

இவ்வளவு பிரச்சனைகளுக்குப் பிறகுதான் பெண்கள் பாலியல் தொல்லைகளுக்கு ஆளாவதற்கு அவர்கள் அணியும் ஆடைகள்தான் காரணம் என்பதை இப்போதுதான் மிகவும் காலம் தாழ்ந்து ஆய்வு செய்து கண்டு பிடித்துள்ளனர்.

இதை 1400 ஆண்டுகளுக்கு முன்பே திருக்குர் ஆன் தெளிவுபடுத்தியுள்ளதைப் பாருங்கள் :

நபியே! (முஹம்மதே!) உமது மனைவியருக்கும், உமது புதல்வியருக்கும், (ஏனைய) நம்பிக்கை கொண்ட பெண்களுக்கும் முக்காடுகளைத் தொங்க விடுமாறு கூறுவீராக! அவர்கள் (ஒழுக்கமுடைய பெண்கள் என்று) அறியப்படவும், தொல்லைப்படுத்தப்படாமல் இருக்கவும் இது ஏற்றது.'' அல்லாஹ் மன்னிப்பவனாகவும், நிகரற்ற அன்புடையோனாகவும் இருக்கிறான்.

அல்குர் ஆன் 33 : 59 

June 23, 2013, 12:36 AM

எறும்புக்கு அறிவு உண்டா?

எறும்புக்கு அறிவு உண்டா?

சுலைமான் நபி வருவதை எறும்புகள் அறிந்து கொண்டதாக குர்ஆன் கூறுகிறது. அப்படியானால் எறும்புகள் மிதிபட்டு சாவது ஏன்? என்று சிலர் விதண்டாவாதம் செய்கிறார்கள். ஆனால் இன்று இவர்களின் விதண்டாவதத்துக்கு மரண அடி கொடுக்கும் வகையில் ஒரு ஆய்வின் முடிவு அமைந்துள்ளது.

இது குறித்து திருக்குர்ஆன் தமிழாக்கம் 12வது பதிப்புக்காக விரிவுபடுத்தப்பட்டுள்ள பதிப்பில் பின்வருமாறு விளக்கம் அளித்துள்ளோம். (இப்பதிப்பு ஜூலையில் வெளியாக உள்ளது)

470 எறும்புகளுக்கும் அறிவு உண்டு

இவ்வசனத்தில் (27:18) எறும்புகள் தமக்கு ஏற்படவிருக்கும் ஆபத்தை முன்கூட்டியே அறிந்து கொண்டு ஸுலைமானும் அவரது படையினரும் நம்மை மிதித்து விடுவார்கள் என்று சக எறும்புகளுக்கு எச்சரிக்கை செய்தது பற்றி கூறப்படுகிறது.

அப்படியானால் எறும்புகள் மனிதனின் கால்களில் மிதிபட்டுச் சாவது ஏன்? சுலைமான் நபி வருவதை அறிந்து மிதிபடாமல் தப்பித்தது போல்  இப்போதும் தப்பிக்க வேண்டியதுதானே என்று சிலர் விதண்டாவாதம் செய்வார்கள்.

அந்த எறும்புகள் எதை அறிந்து கொண்டதாக இவ்வசனம் கூறுகிறதோ அதை எறும்புகள் இப்போதும் அறிந்து கொள்ளத்தான் செய்கின்றன.

ஸுலைமான் என்ற தனி மனிதர் வருவதை எறும்புகள் அறியவில்லை. ஸுலைமானும் அவரது படையினரும் வருவதைத் தான் அறிந்து கொண்டன. பெரிய படைகள் படைகளுக்கே உரிய அதிர்வுகளை எழுப்பித்தான் நடைபோடுவார்கள். அவர்களுடன் உள்ள யானை மற்றும் குதிரைப்படைகளாலும் நிலத்தில் மிகப்பெரிய அதிர்வுகள் ஏற்படும். இப்படி நிலத்தில் ஏற்படும் கடுமையான அதிர்வுகளையும் அந்த அதிர்வுகள் எந்தத் திசை நோக்கி நகர்கின்றது என்பதையும் மிக விரைவாக அறிந்து கொள்ளும் ஆற்றல் எறும்புகளுக்கு உண்டு என்று இப்போது விஞ்ஞானிகள் கண்டுபிடித்துள்ளனர்.

அந்தக் கண்டுபிடிப்பு இதுதான்

நியூயார்க்: பூகம்பம் ஏற்படப் போவதைசிறிய உயிரினமானஎறும்புகள் ஒரு நாளுக்கு முன்பே அறிந்து கொள்வதாகஆராய்ச்சியாளர்கள் கண்டுபிடித்துள்ளனர். பூகம்பத்தை முன்கூட்டியே துல்லியமாக அறியக்கூடிய கருவி இன்னும் கண்டுபிடிக்கப்படவில்லை. ஜெர்மனியில் உள்ள டிஸ்பர்க் பல்கலைக்கழகஉயிர் அறிவியல் துறை ஆய்வாளர்கேப்ரியல் பார்பெரிக்தன்னுடைய சக ஆய்வாளருடன், 3 ஆண்டுகள் சிவப்பு நிற சிற்றெறும்புகள் குறித்து ஆய்வு செய்தார்.

இதற்காகபிரத்யேக மென்பொருளில் உருவானவீடியோ காமிரா துணையுடன் இந்த ஆய்வை மேற்கொண்டார். அவர் தனது ஆய்வறிக்கையில் கூறியிருப்பதாவது:

சாதாரண நாட்களில்பகல் நேரம் முழுவதும் இரை சேகரிப்பதில் ஈடுபடும் எறும்புகள்இரவு நேரங்களில் தன்னுடைய இடமான புற்றில் ஓய்வெடுக்கும். ஆனால்பூகம்பம் வருவதற்கு ஒரு நாளுக்கு முன்புஇரவு நேரத்தில்புற்றில் இருந்து வெளியேறி விடுகின்றன. பூகம்பம் ஏற்பட்ட பின்புசாதாரண நிலைக்கு திரும்பி விடுகின்றன. பூகம்ப நேரத்தில் பூமிக்கடியில் தோன்றும் வாயுக்கள் மற்றும் இயக்கங்கள் காரணமாகஎறும்புகள் வெளியேறுகின்றன. இவ்வாறு ஆய்வறிக்கையில் கூறப்பட்டுள்ளது.

இந்த ஆய்வை அப்படியே 1400 ஆண்டுகளுக்கு முன்னர் சொல்வதாக இருந்தால் அது படைத்த இறைவனால் தான் இயலும்.

May 30, 2013, 5:11 PM

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான ��

இஸ்லாம் கூறும் தீர்வு தான் இறுதியான தீர்வு இஸ்லாம் அல்லாத மார்க்கத்தை யாரேனும் விரும்பினால் அவரிடமிருந்து அது ஏற்கப்படாது. அவர் மறுமையில் இழப்பை அடைந்தவராக இருப்பார்.

தொடர்ந்து படிக்க January 12, 2013, 2:13 PM

உண்மையை உணர மறுக்கும் உலகம்

உண்மையை உணர மறுக்கும் உலகம் மனிதர்களுக்காக இக்குர்ஆனில் ஒவ்வொரு முன்மாதிரியையும் தெளிவுபடுத்தியுள்ளோம். மனிதன் அதிகம் தர்க்கம் செய்பவனாகவுள்ளான். (அல்குர் ஆன் 18 : 54)

தொடர்ந்து படிக்க January 5, 2013, 12:59 PM

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு

பர்தாதான் பெண்களுக்கு பாதுகாப்பு : இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டு பெண்கருத்து! உடலை மறைத்தால்தான் ஆண்களின் தொல்லைகளிலிருந்து தப்பிக்க முடியும். ஆண்களிடம் குலைந்து பேசக்கூடாது. அப்போதுதான் பாதுகாப்பாக ஒரு பெண் இருக்க முடியும் என இந்தியாவில் வசிக்கும் வெளிநாட்டுப் பெண்கள் கருத்துத் தெரிவித்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க December 25, 2012, 7:37 PM

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா!

இஸ்லாமிய சட்டத்தை நோக்கி இந்தியா! விபச்சாரம் செய்யும் பெண்ணையும், விபச்சாரம் செய்யும் ஆணையும் அவர்கள் ஒவ்வொருவரையும் நூறு கசையடி அடியுங்கள்! அல்லாஹ்வையும், இறுதி நாளையும் நீங்கள் நம்பினால் அல்லாஹ்வின் சட்டத்தில் அவ்விருவர் மீதும் உங்களுக்கு இரக்கம் ஏற்பட வேண்டாம். அவ்விருவரும் தண்டிக்கப்படுவதை நம்பிக்கை கொண்டோரில் ஒரு கூட்டம் பார்த்துக் கொண்டிருக்கட்டும்.

தொடர்ந்து படிக்க December 25, 2012, 7:33 PM

தாடியின் நன்மைகள்

தாடியின் நன்மைகள் : அறிவியல் சான்றுகள் – இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டுநடப்புகள் – டாக்டர் த.முஹம்மது கிஸார் அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின் சமூக உளவியல் துறையைச் சேர்ந்த டாக்டர் டேனியல் நி பிரீட்மான் (Daniel G.Freeman) என்பவர் தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (Reproductive Value) பற்றி ஓர் ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து படிக்க December 19, 2012, 9:02 AM

இஸ்லாத்தை உண்மைபடுத்தும் நாட்டு நடப

தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் டெங்கு பரவுகிறது: ஆய்வில் தகவல்!  இஸ்லாத்தை  உண்மைபடுத்தும் நாட்டு நடப்புகள் தவளைகள் எண்ணிக்கை  குறைந்ததால் கொசுக்கள்  கட்டுக்கடங்காமல் பெருகி டெங்கு உள்ளிட்ட நோய்கள்  வேகமாக பரவி வருவதாக சுற்றுச்சூழல்  ஆர்வலர்கள் தெரிவித்துள்ளனர்.  

தொடர்ந்து படிக்க December 17, 2012, 3:55 PM

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள

தாடியின் நன்மைகள் -அறிவியல் சான்றுகள்

டாக்டர் த முஹம்மது கிஸார்

தாடி பற்றி பிறமத அறிஞர்களின் ஆய்வுகள், கருத்துகள்

அமெரிக்காவில் உள்ள சிகாகோ பல்கலைக்கழகத்தின்  சமூக உளவியல் துறையைச்  சேர்ந்த டாக்டர் டேனியல் G பிரீட்மான் (Daniel G. Freeman) என்பவர்  தாடி வளர்ப்பதால் உண்டாகும் இனப்பெருக்க மதிப்பு (reproductive value) பற்றி ஓர்  ஆய்வு மேற்கொண்டார்.

தொடர்ந்து படிக்க December 17, 2012, 8:45 AM

வட்டி இல்லா வங்கியே தீர்வு

வட்டி இல்லா வங்கியே தீர்வு விதர்பா பிரச்சினையைத் தீர்க்க இஸ்லாமிய வங்கியே தீர்வு- எம்.எஸ்.சுவாமிநாதன் 

சென்னை: விதர்பாவில் விவசாயிகள் தற்கொலை தொடர் கதையாகியுள்ளதைத் தீர்க்க இஸ்லாமிய வங்கி முறை சரியான தீர்வாக அமையும் என்று இந்திய பசுமைப் புரட்சியின் தந்தை என புகழப்படும் டாக்டர் எம்.எஸ்.சுவாமிநாதன் கூறியுள்ளார்.

தொடர்ந்து படிக்க April 10, 2010, 5:33 AM

பெருவெடிப்பு சோதனை வெற்றி

பெருவெடிப்பு சோதனை வெற்றி இந்தப் பிரபஞ்சம் எங்கிருந்து தோன்றியது? எப்படி தோன்றியது? என்பதை ஆய்வு செய்த விஞ்ஞானிகள் பல்வேறு காரணங்களை ஒவ்வொரு காலகட்டத்திலும் கூறி வந்தனர். இறுதியாக பிக் பாங் எனப்படும் பெருவெடிப்பின் மூலம் தான் இப்பிரபஞ்சம் உருவானது என்ற முடிவுக்கு வந்துள்ளனர்.

தொடர்ந்து படிக்க March 31, 2010, 9:43 PM

மூக்கில் போடப்பட்ட அடையாளம்.

மூக்கில் போடப்பட்ட அடையாளம்.

ஒரு மனிதனைத் துல்லியமாக வேறுபடுத்தி அறிந்திட கைரேகையைத் தான் நிபுணர்கள் பயன்படுத்தி வருகின்றனர். ஒருவரது கைரேகையைப் போல் இன்னொருவரின் கைரேகை இருப்பதில்லை என்பது தான் இதற்குக் காரணம். முக்கியமான ஆவணங்களில் கைரேகை வாங்குவதும் இதற்காகவே.

தொடர்ந்து படிக்க March 9, 2010, 1:58 AM

பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் கார

பெருகி வரும் கற்பழிப்புக்கு யார் காரணம்?  முற்போக்கு பெண்கள் வாக்குமூலம்

பெண்கள் அன்னிய ஆண்களைக் கவரும் வகையில் ஆடை அணியக் கூடாது என்று இஸ்லாம் வழி காட்டுகிறது. ஆண்களும் தமது கற்பைப் பேணிக்கொள்ளுமாறு கட்டளை பிறப்பிக்கிறது.

தொடர்ந்து படிக்க February 21, 2010, 7:53 PM

தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமி

தற்காப்புக்காக கொலை செய்வது குற்றமில்லை

உச்ச நீதி மன்றம் தீர்ப்பு

யார் தன்னுடைய உயிரைக் காப்பாற்றும் போது நடக்கும் சண்டையில் கொல்லப்பட்கிறாரோ அவர் உயிர் தியாகியாவார். யார் தனது உடமையைப் பாதுகாக்கும் சண்டையில் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர் தியாகியாவார். யார் தனது குடும்பத்தினரைக் காக்கும் சண்டையில் கொல்லப்படுகிறாரோ அவரும் உயிர் தியாகியாவார் என்று நபிகள் நாயகம் ஸல் அவர்கள் கூறினார்கள்.

தொடர்ந்து படிக்க January 18, 2010, 11:22 PM

www.onlinepj.com © 2013 Developed by Mwinsys

Scroll To Top